வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஒண்ணும் புரியல சொல்ல தெரியல - கதை திரி

Status
Not open for further replies.

Priyanka Muthukumar

Administrator
ஹாய் டியர்ஸ்,

புது கதை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்...ஆனால் இப்போதைக்கு முடியாது போல...

அதனால் என்னோட முதல் நாவலை ரீரன் பண்ணப்போறேன்....

ஒண்ணும் புரியல சொல்ல தெரியல...

அமேசானில் இருக்கு டவுன்லோட் பண்ண நினைக்கிறவங்க...இப்போவே பண்ணிக்கோங்க..

அமேசானில் இன்ஆக்ட்டிவ் பண்ணிட்டு நாளையிலிருந்து தளத்தில் கதைப்போட ஆரம்பிச்சிடுவேன்...

.in link


.com link

eiRAXZ875158.jpg
 
அத்யாயம்1:
முக்கனிகளின் சிறந்த ஊரான சேலம் மாநகரின் ஒரு பகுதியில் உள்ள நந்தவனம் எனும் இல்லத்தை சுற்றியுள்ள மரத்திலிருந்தவாறு... ஒரு குயில் கூவிக் கொண்டு இருந்தது.

அதற்கு போட்டி போடும் விதமாக,அந்த வீட்டின் முற்றத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.குரல் வந்த திசையில் “ஶ்ரீநிதி...உனக்கு அறிவே இல்லையா...?எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைகளுடன் விளையாடிட்டு இருக்க...?நான் என்ன சொன்னேன்… நீ என்ன பண்ணிட்டு இருக்கே?...நான் சொல்லுறதை கேட்க கூடாதனு முடிவுல இருக்கியா…?ஒழுங்கா போய் நாளைக்கு பண்ண வேண்டிய பிராஜக்ட்டை பாரு” என்ற குரல் கேட்டது.

இதையெல்லாம் பேசி கொண்டிருந்தவள் ஶ்ரீநிதி...ஶ்ரீநிதி அவளை அவளே திட்டிக்கொண்டு இருந்தாள்.அதைக் கேட்டு அந்த இடத்தில் உள்ள அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர்.

உடனே ஶ்ரீநிதி சுற்றி இருக்கும் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து முறைத்தவாறே “எதுக்கு இப்போ எல்லாரும் சிரிக்கிறீங்க…?? என்று கோபமாக கேட்டுவிட்டு

முகத்தை சுருக்கி “எப்பப் பார்த்தாலும் இந்த ஹிட்லர்...இப்படித்தான் வீட்டுக்குள்ள வரும்பொழுது திட்டறாங்க...நான் மட்டும் என்ன பண்ணினேன்…??” என்று கேட்டவள் தொடர்ந்து,

“நீங்க யாருமே இதை கேட்கமாட்டிகிறீங்க...என் கூடப் பிறந்த இரண்டு பேர் இருக்காங்க...ஆனால் அவங்க எல்லாரையும் விட்டு என்னை மட்டும் தான் இந்த அத்தான் திட்டறது...ரிஷியையும் தான்” என சோகமாகக் கூறி முடித்தாள்.

அதற்குள் அவள் அம்மம்மா யசோதா அவளிடம் வந்து “கவலைப்படாதே ஶ்ரீ... அவன் உன்மேலே ரொம்ப அன்பு வச்சிருக்கான்,அதுதான் உன்கிட்ட மட்டும் உரிமை எடுத்துத் திட்டறான்.ரிஷியையும் அதுபோலதாம்மா” என்று அவளுக்கு புரியும்படி கூறிவிட்டு தலையைத் தடவி சமாதானம் செய்தார்.

எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது...எப்போதும் சிரித்துகொண்டிருக்கும் பொண்ணு...இப்படி சோகமாக இருந்ததால்...அவள் சோகத்தைப் பார்த்து வருத்தப்பட்டு...என்ன செய்வது என்று தெரியாமல் தலைக்குனிந்திருந்த நிலையில்,

தீடிரென்று ஶ்ரீ கலகலவெனச் சிரித்தாள்.எல்லாரும் நிமிர்ந்து இவள் என்ன லூசா என்பது போல் விசித்திரமாகப் பார்த்தனர்.அதற்குள் அவள் “எல்லாரும் பயந்திட்டீங்களா?” எனக் கேட்டு கொண்டே பலமாக சிரித்தாள்.

உடனே ஶ்ரீநிதி சிரித்தவாறே “அத்தான்...ஒரு தடவை சொன்னால் வருத்தப்படலாம்...ஆனால் தினமும் சொன்னால்...யார் வருத்தப்படுவா… என்று கூறி தோளைக் குலுக்கிவிட்டு…

“அதற்குதான் நான்...அவருக்கு ஹிட்லர்னு பேர் வச்சிருக்கேன்” எனக் கூறி கண்ணடித்து சிரித்தாள்.

எல்லாரையும் ஒரு நிமிடத்தில் பயம் காட்டிவிட்டு சிரிப்பதை பார் என்று நினைத்து ராதை அவளை நெருங்கி “போடி...கூறு கெட்டவளே…!கொஞ்சம் நேரத்தில் எல்லாரையும் பயப்பட வச்சிட்ட சிறுக்கி...” என்று அவள் கொள்ளு பாட்டி அவளின் மோவாயில் இடித்தார்.


ஶ்ரீநிதி ஆஆஆ… என்று வலியில் கத்துவது போல் நடித்தாள்.ஆனால் அவர் லேசாக தான் அடித்தார்.ஆனால் இவள் கத்துவதைப் பார்த்து உண்மையாகவே வலித்திருக்குமோ என்று நினைத்த பாட்டி “சிரி என்னம்மா…?ரொம்ப வலிக்கிறதா…?”என்று பதட்டத்துடன் வினவினார்.அவருக்கு ஶ்ரீ என்ற வார்த்தை வாயில் நுழையவில்லை.

ஆனால் அங்கு இருக்கும் எல்லாருக்கும் தெரிந்தது.இவள் நடிக்கிறாள் என்று.இருந்தாலும் ஶ்ரீ நடத்தும் நாடகத்தை ரசித்தவாறு பார்த்து கொண்டிருந்தனர்.

ஶ்ரீ “ஆமா பாட்டி…!!” என்று முகத்தைச் சுருக்கி வலிப்பதுபோல் நடித்தாள்.

பாட்டியும் “சாரி கண்ணு” என்றார் வருத்தத்துடன்.

அதற்கு மேல் பொறுக்காமல் “ராது…!!அவள்தான் இப்படி நடிக்கிறாள் என்றால்...அதையும் நீ நம்பிக்கிட்டு வந்து வலிக்குதானு...கேட்டுட்டு இருக்கே…” என்றாள் ஶ்ரீயின் தங்கை வாணி.

அதன்பிறகு தான் பாட்டி நிமிர்ந்து அவளின் முகத்தைப் பார்த்து...அவள் நடிப்பைப் புரிந்து கொண்டு முறைத்தார்.

உடனே அவர் வாய் திறந்து திட்டுவதற்குள் அவசரமாக ஶ்ரீ அவர் கன்னத்தில் முத்தமிட்டு குறும்புடன் “ஐ லவ் யூ ராது…!!” என்றாள் சிரிப்புடன்.ச்சு என்று கன்னத்தை துடைத்துவிட்டாலும் அதில் அவர் கோபம் குறைந்தது.

ஶ்ரீநிதியின் தங்கை வாணி...ஶ்ரீநிதியை பொய்யாக முறைத்து கொண்டே “எவ்வளவு தைரியம் இருந்தால்...நீ கிருஷ் அத்தானை ஹிட்லர்னு சொல்லுவே...இரு...அத்தான் வந்த உடனே...உன்னை மாட்டி விடுறேனா இல்லையானு பாரு...” என்று மிரட்டினாள்.

உடனே ஶ்ரீநிதி பயப்படுவது போல் முகத்தை வைத்து “ஏய் பிளீஸ்டி... மாட்டிவிடாதடி...என் செல்ல தங்கச்சி இல்லை” என்று தங்கையின் தாடையைப் பிடித்து கெஞ்சி கொஞ்சினாள்.

உடனே வாணி “அது அந்த பயம் இருக்கட்டும்… இனிமே இதுமாதிரி பண்ணே...உன்னை கண்டிப்பாக மாட்டி விட்டுவிடுவேன்”என்றாள்.

அவள் மிரட்டிய பிறகு ஶ்ரீநிதி ‘போடி ரொம்பதான்...எனக்கும் ஒரு காலம் வரும்...அப்போ நான் உன்னை பார்த்துகிறேன்’ என்று மனதிற்குள் நொடித்தாள்.

தங்கையை மனதிற்குள் திட்டிய பிறகு கப் சிப்பென்று வாயை இருக்க மூடிவிட்டு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள் ஶ்ரீநிதி.அப்போது வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது.

காரிலிருந்து இறங்கி காரின் கதவை அறைந்து சாற்றிவிட்டு...கையில் பெட்டியுடன் அந்த வீட்டின் வாசலில் உள்ள படிக்கட்டின் வழியே கம்பீரமாக நடந்து வந்து கொண்டு இருந்தான் கிருஷ்நந்தன்.

அவன் ஆறு அடி உயரம்,மாநிறத்திற்கும் கொஞ்சம் அதிகமான நிறம்,நல்ல உடற்கட்டுடன் எல்லாரையும் வசிகரிக்கும் அழகு உடையவன்.அவன் சிரிக்கும் போது விழும் கன்னக்குழியில் அப்படியே அந்த கிருஷ்ணனே நேரில் வந்து சிரிப்பது போல் இருக்கும்.அவன் சிரிப்பிற்கு அந்த வீட்டிலே பல ரசிகர்கள் உள்ளனர்.(உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணுனா...ஹிந்தி ஹீரோ ஷாகித் கபூர் மாதிரி இருப்பான்)

அவன் காரிலிருந்து இறங்கி நேரே சென்ற இடம் ஶ்ரீநிதி குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருக்கும் இடம் தான்.கிருஷ் தன்னை நெருங்குவதைத் தெரிந்தும்...ஶ்ரீநிதி தன் முகத்தைத் திருப்பாமல் இருந்தாள்.

அவன் அவளிடம் சொன்னது வேற என்னவாக இருக்க முடியும்.சற்று முன்னாள் ஶ்ரீநிதி கிருஷ் திட்டுவானென்று சொன்ன அதே வார்த்தைகள்.அவளுடைய நம்பிக்கையைப் பொய்யாக்காமல் அதையே திருப்பி படித்தான் கிருஷ்.

“ஶ்ரீநிதி... உனக்கு அறிவே இல்லையா...?எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைகளுடன் விளையாடிட்டு இருக்கே...?நான் என்ன சொன்னேன்…நீ என்ன பண்ணிட்டு இருக்கே…?நான் சொல்லுறதை கேட்க கூடாதனு முடிவுல இருக்கியா…?ஒழுங்கா போய் நாளைக்கு பண்ண வேண்டிய பிராஜக்ட்டை பாரு” என்று திட்டி விட்டு அங்கு இருக்கும் எல்லாரையும் பார்த்து ஒரு தலையசைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அதற்கு ஶ்ரீ அங்கு இருக்க எல்லாரையும் பார்த்து,எப்படி…?என்று கண்ணடித்தாள்.எல்லாரும் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

எல்லாரும் நமுட்டு சிரிப்பு சிரிப்பதை... ஓரக்கண்ணால் பார்த்த அவனும் சிரித்தான்...ஆனால் எல்லாம் உள்ளுக்குள் தான்.ஏனெனில் அவனுக்கு தெரியும்.கொஞ்சம் சிரிப்பை காட்டினாலும் உடனே அந்த வாண்டு இவன் பேச்சை கேட்காது என்று...இவள் நம்மை பற்றி ஏதோ தப்பாக கூறி இருக்கிறாள்...அதனால் தான் எல்லாரும் சிரிக்கின்றனர் என்று அவனுக்கும் தெரியும் இருந்தும்,

வெளியே அதை மறைத்து “ஶ்ரீ...நீ இன்னும் ரூமுக்கு போகலையா...?” என்றான் கோபமாக இருப்பதைப் போல்

“இதோ...அத்தான் போயிட்டேன்” என்று கத்தி கூறிவிட்டு,அவள் அம்மம்மா யசோதா அருகே சென்று “அம்மம்மா ஹிட்லர் கூப்பிடுது...நான் போய் படிக்கிறேன்...இல்லையென்றால் அடுத்த பஞ்சாயத்து கூட்டிடுவார்” என்றாள் சிரித்து கொண்டு.

யசோதாவும் அவள் குறும்பைப் புரிந்து கொண்டு “யேய் வாலு...இரு கிருஷ் கிட்டே சொல்லுறேன்” என்றார்.

“யேய் ஶ்ரீ...இது உனக்கு தேவையா…?இல்ல இது உனக்கு தேவையானு கேட்கிறேன்…?தேவையில்லாமல் உனக்கு நீயே செல்ப் ஆப்பு வச்சிக்கிறே” என்று ஒரு ஆள்காட்டி விரலை தன் முகத்தின் முன்னால் நீட்டி,தன்னை தானே கேட்டு கொண்டாள்.

அதைக்கேட்ட எல்லாரும் கலகலவெனச் சிரித்தனர்.இதை எல்லாம் ஊஞ்சலில் அமர்ந்து ஒரு சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்த அவளுடைய கொள்ளுதாத்தா நந்தன் பேத்தியை அழைத்து “நீ நல்லா இருக்கணும்மா...இதுபோல எப்போதும்...என்று கூறி சுற்றி இருக்கும் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

நம்முடைய குடும்பமும் அதேபோல் சிரித்துக்கொண்டே இருக்கணும்… அதுதான் எனக்கு வேணும்” என்று அவள் தலையை வாஞ்சயாகத் தடவினார்.

உடனே ஶ்ரீ குறும்புடன் “அப்போ உங்களுக்கு பாட்டி வேணாமா?ஓகே...ஓகே...ரொம்ப தேங்கஸ் தாத்தா.எனக்கும் இந்த பாட்டியை பிடிக்கலை...சோ வேற பாட்டியை பார்த்து...உங்களுக்கு கல்யாணம் பண்ணலாம்” என்றாள்.

“ஏய் வாலு...உன்னை” என்றார் அடிக்க கை ஓங்கி கொண்டு.


நந்தன் இந்த குடும்பத்தின் ஆணிவேர்.அவரைப் பார்க்கும் எல்லாருக்கும் ஒரு மரியாதை ஏற்படும்.அதேபோல் ராதையைப் பார்த்தால் ஒரு தெய்வீக கலை முகத்தில் தெரியும்.நந்தன் ராதை தம்பதியினருக்கு மூன்று மக்கள்.குந்தவை தான் பெரியவள்.அவருக்கு பிறகு ரகுநந்தன்,அடுத்து தனநந்தன்.


முதல் மகன் ரகுநந்தனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்.மூத்தவள் ஜானகி,இரண்டாவது தயாநந்தன்.ஜானகிக்கு இரண்டு மகள்கள்.மூத்தவள் ஶ்ரீநிதி,இளையவள் ஶ்ரீவாணி.

தயாவுக்கு ஒரு மகள்,ஒரு மகன்.


நந்தன் தாத்தாவின் இரண்டாவது மகன் தனநந்தன் தேவகி தம்பதியினருக்கு இரு மகன்கள் மூத்தவன் கிருஷ்,மற்றும் இளையவன் ரிஷி.

கிருஷ் மற்றும் ரிஷிக்கு கல்யாணம் நடக்கவில்லை.கிருஷ் 28வயது,ரிஷிக்கு 24 வயது.

தாத்தா செல்லமாக ஶ்ரீநிதியை அடிக்க கை ஓங்கும் போது மாடிப்படி அருகே சத்தம் கேட்டது.உடனே ஶ்ரீநிதி “ஐய்யையோ…அத்தான் வரார்.நான் இன்னும் இங்க இருக்கிறதைப் பார்த்தால் அவ்வளவுதான் நான்”.என்ன ஶ்ரீ இன்னும் படிக்க போகலையானு கேட்பார் என்றாள்.

தாத்தாவும் தன் பேத்தியை அடிக்க வந்ததை மறந்து “நீ சமையல் கூடத்தில் போய் ஒளிஞ்சிக்கோம்மா...நான் அவன்கிட்ட பேச்சி கொடுக்கறேன்.நீ அப்போ மாடிப்படி ஏறி போயிடு” என்றார் அவளைக் கிருஷிடம் இருந்து காக்கும் பொருட்டு.

ஆனால் அவள் “டாங்கஸுங்க”என்று அந்த நேரமும் தன் பாட்டி ராதாவைப் பார்த்து கிண்டல் பண்ணிவிட்டு சென்றாள்.


ஏனெனில் பாட்டிக்கு தாங்கஸ் சொல்ல வராது...அதனால் தான்.அவளுக்கு பாட்டியை வம்புக்கு இழுக்காமல் இருக்கமுடியாது… அதே மாதிரி பாட்டியும் ஶ்ரீநிதியை வம்புக்கு இழுக்காமல் இருக்கமாட்டார்.இது இவர்களுக்குள் எப்போதும் நடக்கும் செல்ல சண்டை...ஆனால் ஶ்ரீக்கு ஒன்று என்றால் பாட்டியினால் அதனைத் தாங்கி கொள்ள முடியாது...அவள் சென்று சமையல் கூடத்தில் ஒளிவதற்கும்...கிருஷ் தாத்தாவிடம் செல்வதற்கும் சரியாக இருந்தது.அவன் தாத்தாவின் அருகில் ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும்போது அவள் மாடி ஏறிசென்றாள்.

அவள் சென்றவுடன் “என்ன தாத்தா அவள் மாடி ஏறி போயிட்டாளா…?”என்றான் கிருஷ் மெல்லிய முறுவலுடன்.

தாத்தா ஒரு புன்னகையோடு அவனிடம் திரும்பி “ஹும், போய்விட்டாள் கிருஷ்...என்று கூறி மனதில் ...

உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா கண்ணா...அவள் மேலே போவதற்காக தான்...நீ என்னுடன் பேச வந்தாய் என்று அவனைப் பற்றி நினைத்து குறும்புடன் சிரித்துவிட்டு...தீடிரென்று ஒரு யோசனையுடன்

“ஏன் கிருஷ்…?அவள்மேல் இவ்வளவு அன்பு வைத்துக்கொண்டே… அவளிடம் மட்டும் கோபமாக இருப்பது போல் நடிக்கிறே”என்று கேட்டார் வருத்தத்துடன்.


கிருஷ் முகத்தில் சிறு முறுவலுடன் “எல்லாரும் அவள் மேலே பாசமாக இருந்தால் எப்படி…?வீட்டில் ஒருத்தர் மேலே அவளுக்கு பயம் இருக்கணும் தாத்தா… இல்லையானால் அது நிறைய தப்பிற்கு வலி வகுக்கும்…இப்போது என் மேலே அவளுக்கு கொஞ்சம் பயமிருக்கும்… நாம் தப்பு செய்தால்...அத்தான் நம்மை திட்டுவாங்கனு...அப்போதான் என் பேச்சுக்கு கொஞ்சம் பயப்படுவாள்” என்றான் உறுதியாக.

“ஆமா தாத்தா, கிருஷ் சொல்லறதும் கரெக்ட் தான் தாத்தா.எல்லாரும் செல்லம்தான் கொடுக்கிறோம்.வீட்டில் ஒருத்தர் கண்டிப்பு கட்டினால் பரவாயில்லை தாத்தா” என்று கூறினார் ஶ்ரீயின் தந்தை விசுநந்தன்.

விசுநந்தன் வேற யாரும் இல்லை...கிருஷ் உடைய அக்கா ஜானகியின் கணவன்...நந்தன் தாத்தாவின் மகள் குந்தவையின் மகன் இந்த விசுநந்தன்.ஜானகிக்கும் விசுக்கும் சின்ன வயதிலே கல்யாணம் நடந்துவிட்டது.அவங்களுக்கு ஶ்ரீநிதி ஜானகியின் பதினெட்டவது வயதில் பிறந்துவிட்டாள்.


நந்தன் குடும்பம் நிறைய தொழில்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் தொழிலை குடும்பத்தின் ஆண்கள்…ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலின் பொறுப்பை ஏற்று நிர்வகிக்கின்றனர்.கிருஷ் மட்டும் எல்லா தொழிலையும் மேற்பார்வை பார்ப்பது...எல்லா தொழிலைப் பற்றிய முழு விவரமும் கிருஷிற்கு மட்டுமே தெரியும்.

சொல்லப்போனால் எல்லா நிர்வாகமும் கிருஷ் இடத்தில்தான் உள்ளது.அவன் அந்த அளவிற்கு திறமைசாலி.நந்தன் குருப் ஆப் கம்பெனிஸ் என்றால் தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்கமாட்டார்கள்.

ஶ்ரீநிதி அந்த வீட்டின் செல்ல குழந்தை...ரொம்ப அன்பாக நடந்துகொள்வாள். அதுமட்டுமல்லாமல் அவளுடைய பேச்சு திறமையினால் எல்லாரையும் கவர்ந்து இழுக்கும் வல்லமை உடையவள்.இயற்கையாகவே ஶ்ரீநிதி மிகவும் அழகு.அதுவும் எல்லாரையும் கவர்ந்து இழுக்கும்.அவள் மான் விழி கண்கள் எப்போதும்...ஒரு குறும்பு நிறைந்தாய் இருக்கும்.எப்போதும் துருதுருவென்று இருப்பாள்.(ஜெனிலியா மாதிரி)

கிருஷ் சிறிது நேரம் தாத்தாவுடன் பேசிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.அவன் சென்ற சில மணித்துளிகளில் ஶ்ரீநிதி கீழிறங்கி வந்தாள்.வரவேற்பறையில் உள்ள ரிஷியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.

ஶ்ரீ “என்ன ரிஷி…?எப்படி இருக்க தம்பி…!!காலேஜ் முடியபோகுது,நெக்ஸ்ட் என்ன பிளான்?” என்றாள் குறும்புடன்.

அதற்கு ரிஷி “அதென்ன எங்க அண்ணனை மட்டும் அத்தானு கூப்பிடறே...என்னை மட்டும் ரிஷினு சொல்லுறே...இதெல்லாம் நியாயமேயில்லை.நானும் உன்னை விட பெரியவன்தான்...சோ என்னையும் அத்தானு சொல்லு” என்று சின்ன பிள்ளையாய் பிடிவாதம் பிடித்தான்.

“அதெல்லாம் முடியாது போடா” என்றாள் அவளும் சின்ன பிள்ளையாய்.

“ஏய் இரு..இரு...டாவா?இரு உன்னை” என்று கோபமாக அவள் அருகில் நெருங்கியவுடன் அவள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

அவளைத் துரத்திக்கொண்டே போகும்போது வாணி மீது மோதிவிட்டான்.வாணி கீழே விழப்போகும் பொழுது அவள் கையைப் பிடித்து தூக்கிவிட்டான் ரிஷி.

வாணி அவனை முறைத்துப் பார்த்தாள். “சாரி வாணி...என்று கூறிவிட்டு திரும்பி ஶ்ரீயைக் காட்டி,

இதுக்கெல்லாம் காரணம் உன் அக்கா தான்” என்றான் பாவமாக.

“பரவாயில்லை விடு அத்தான்,நான் அதுகெல்லாம் உன்னை முறைக்கலை... எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைகளுடன் விளையாடிட்டு இருக்கியே...என்று இழுத்துவிட்டு...

உனக்கெல்லாம் ஏழு கழுதை வயசு ஆகியும்...உனக்கு அறிவே இல்லையானு தான் பார்த்தேன்” என்று கலகலவெனச் சிரித்தாள்.

“கரெக்டா சொன்ன வாணி” என்று ஶ்ரீ சொல்லி சிரித்துகொண்டே வாணியின் அருகில் வந்து ஹைய் பை கொடுத்தாள்.

“ஏன்...உங்க அக்காவுக்கு ஏழு கழுதை வயசாகலையா…?அவளும்தான் சின்ன பிள்ளைகள் கூட விளையாடுகிறாள்” என்றான் ரிஷி நக்கலாக.

“உங்களை விட கம்மியான வயசு தான்...சோ...அவ சின்ன பொண்ணுதான்” என்றாள் வாணியும் பதிலுக்கு கேலியாக.

“உங்க ரெண்டு பேருக்கும் என்னை கேலி பண்ணலானா...தூக்கமே வராதே...எனக்கு எல்லாம் மீரா தான் கரெக்ட்...அவள் எப்பவும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவா தெரியுமா…?இந்த நேரம் பார்த்து என் மீரா குட்டி வெளிய போயிட்டாளே…!!” என்று ஏக்கமாக கூறி பெரு மூச்சிவிட்டான்.


நந்தன் தாத்தாவின் மூத்த பெண் குந்தவைக்கு இரண்டு மகன்கள்கள்.மூத்தவன் ராம்நந்தன்,இளையவன் விசுநந்தன். அவரது கணவர்... பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும்போதே இயற்கை எய்தினார்.அதன்பிறகு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு...இந்த வீட்டோடு வந்துவிட்டார்.

மூத்தவன் ராமிற்கு ஒரே மகள் பெயர் மீரா.அவளை தான் ரிஷி மீரா குட்டி என்று சொன்னான் இவர்களிடம்.

விசுநந்தன் இளையவர்.அவர் தான் ஶ்ரீநிதி மற்றும் ஶ்ரீவாணியின் தந்தை.

ரிஷி அப்படி கூறியவுடன் வாணியின் முகம் சுருங்கிவிட்டது.ஶ்ரீ அதை பார்த்து விட்டு “ஓகே ரிஷி...உன் கடைசி செமெஸ்டர் பிரப்பரேஷன் எப்படி போகுது” என்று பேச்சை மாற்றினாள்.

அவனும் “ஏதோ போகுது” என்று சலித்தவாறு கூறினான்.

உடனே ஶ்ரீ “பார்த்து ரிஷி...நீ மட்டும் ஒழுங்கா பிராஜக்ட் பண்ணலை… அவ்வளவு தான்...நம்ப ஹிட்லர் ஒரு குத்துடேன்ஸ் ஆடிடும்” என்றாள்.ஆமா என்று ரிஷியும் ஒத்து ஊதினான்.

அதைக்கேட்ட வாணியின் பழைய குறும்பு தலைதூக்க ஆரம்பித்தது. “இரு உங்க ரெண்டு பேரையும் பெரிய அத்தான் கிட்ட சொல்லுறேன்” என்று மிரட்டினாள்.


அவசரமாக இருவரும் “அம்மா தாயே...! எங்களை மன்னிச்சிடு…!!அவர்கிட்ட மட்டும் சொல்லாதா பிளீஸ்…அவர்கிட்ட சொல்லி அவர் திட்டுவதை எங்களால் பார்க்க முடியாது”என்று இருவரும் ஒருசேரக் கூறி கையெடுத்து கும்பிட்டார்கள்.வாணி விரல் நீட்டி அது...அந்த பயம் இருக்கட்டும் என்றாள்.

பிறகு இருவரும் பிரிந்து அவர்வர் அறைக்கு சென்றனர்.பின்னே வாணி கடைகுட்டி என்பதால் அவள் கிருஷின் செல்லம்.அவள் மட்டுமே கிருஷிடம் தைரியமாக பேசுபவள்...அந்த வீட்டின் இளைய தலை முறைகளில்.அவள் ஏதாவது கிருஷிடம் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் அவர்கள் கதி,திட்டியே கொல்லுவான்.
அதை யார் வாங்குவது என்று அமைதியாக சென்று விட்டனர்.

கிருஷுடைய பிறப்புக்கு பிறகு தான் அவர்கள் குடும்பம் தொழிலில் இவ்வளவு முன்னேறி உள்ளனர்.அதனால் இந்த வீட்டில் கிருஷ் உடைய வார்தைக்கு நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்.

அவன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாகவே இருக்கும்.எனவே அந்த வீட்டில் எடுக்கும் அனைத்து முடிவுகளுமே அவனிடம் கலந்து ஆலோசித்துதான் எடுக்கப்படும்,பெரியவர்கள் உட்பட.அதனால் அந்த வீட்டின் இளைய தலைமுறையினருக்கு அவனிடம் பயம் கலந்த மரியாதை உள்ளது.ஶ்ரீக்கும் ரிஷிக்கும் சொல்லவே தேவையில்லை அவ்வளவு பயம் கிருஷிடம்.(அப்பாஆ...இன்ட்ரோ கொடுக்கவே எனக்கு மூச்சிமுட்டுதே...இன்னும் இவங்க கதையைப் பத்தி சொல்லறதுகுள்ள… அப்பப்பப்பபா...ஓகே வாங்க நாம் கதைக்குள் போகலாம்)
 
அத்யாயம் 2:

நந்தன் குருப்ஸ்க்கு ஒரு நகை கடை மற்றும் ஒரு துணி கடை உண்டு.அதற்காகவே ஶ்ரீயை நகை டிசைன் செய்யும் படிப்பைப் படிக்க கிருஷ் வலியுறுத்தியுள்ளான்.


அதுமட்டுமில்லாமல் அவளை நிர்வாகப் படிப்பைப் படிக்கச் செய்து...இந்த இரண்டு நிறுவனத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஶ்ரீ மற்றும் ரிஷி ஏற்று நடத்த வேண்டும் என்பது கிருஷின் எண்ணம்.ஆனால் இது அவர்களுக்கே தெரியாது.தாத்தாவிடம் மட்டும் இதைப் பற்றி பேசிவிட்டான்.


நாளைக்கு கடைசி செமெஸ்டர் ஆரம்பிக்கிறது.அதற்காகவே அவளைப் படிக்கச் சொன்னான்.கிருஷ் இதனை வலுக்கட்டாயமாக எல்லாம் ஶ்ரீயை செய்ய சொல்லவில்லை.அவளுக்குமே இதில் விருப்பம் அதிகம்.அவள் அம்மாவிற்கு சேர வேண்டிய சொத்தைதான்...அவளை நிர்வகிக்க வலியுறுத்தியுள்ளான்.


ஶ்ரீக்கு நகை டிசைன் செய்வது மற்றும் ஆடை வடிவமைப்பதில் விருப்பம் அதிகம்...அதுமட்டுமின்றி டிசைனை மிக அழகாகவும் ஒரு நேர்த்தியுடனும் செய்வாள்.அதைவைத்து தான் கிருஷ் அவளை அதற்கு படிக்க சொன்னான். அவளும் அதற்கு ஒப்புக்கொண்டு படித்து கொண்டு இருக்கிறாள்.


கிருஷுடைய தம்பி ரிஷி மற்றும் மீராவும் அதே கல்லூரியில் எம்.பி.ஏ கடைசி வருடம் படிக்கிறார்கள்.ஶ்ரீயின் தங்கை வாணியும் அதே கல்லூரியில் தன் அத்தான் கிருஷைப் பின்பற்றி பொறியியல் முதல் வருடம் படிக்கிறாள்.


வீட்டில் இரவு உணவை எல்லாரும் சேர்ந்து தான் உண்ண வேண்டும் என்பது அந்த வீட்டின் விதிகளில் ஒன்று.


அப்பொழுது தான் வீட்டின் மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசி கொள்வார்கள் என்று நந்தன் வகுத்த சட்டம் அது. ஏனெனில் காலையிலிருந்து எல்லாரும் வேலை அல்லது கல்லூரிக்கு செல்கின்றனர்.இரவில் மட்டுமே எல்லாரும் வீட்டில் இருக்கின்றனர் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்தார்.


எல்லாரும் இரவு ஒன்பது மணிக்கு சாப்பாட்டு மேசையில் கூடினார்கள்.மேசையின் நடுவில் நந்தன் தாத்தா மற்றும் ராதை பாட்டியும் கம்பீரமாக அமர்ந்து இருந்தனர்.அவர்களை சுற்றி மத்த குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்தனர்.அவர்களுக்கு இந்த வீட்டில் நீண்ட காலமாக வேலை செய்யும்…வள்ளியம்மா மற்றும் சுந்தரி உணவை பரிமாறினார்கள்.


பெரியவர்கள் அனைவரும் அவர்வர் போக்கில் பேசி கொண்டும்… இளைஞர் பட்டாளமும் அவர்களுக்குள் கேலி பேசிக் கொண்டும் சாப்பிட்டனர்.கிருஷ் அவன் அப்பா,தாத்தா மற்றும் பெரியப்பாவிடம் தொழிலைப் பற்றி கலந்தாய்வு நடத்தினான்.


ராதை தான் “சாப்பிடும் போது...தொழிலைப் பத்தி பேசக்கூடாதுனு சொல்லிருக்கேனே...எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டிங்களா…?” என்றார் கணவனை முறைத்துகொண்டே.


“நல்லா கேளுங்கள் ராது...நான் கேட்க நினைக்கிறது எல்லாம் நீங்க கேட்கிறீங்க பாட்டி…?எப்ப பார்த்தாலும் இந்த மொக்கை தான்…என்றவிட்டு சலிப்புடன்,


சோப்பா...என்னாலே முடியல...!” என்றாள் வாணி.


ஆனால் வாணி வெறும் மௌத் பீஸ் மட்டும் தான்.இதெல்லாம் ஶ்ரீ யுடைய வேலை.ஏனெனில் இங்கு தான் கிருஷ் இருக்கிறனே.அவன் முன்னால் ஶ்ரீநிதியால் எதுவும் பேசமுடியாது.


வாணி சொன்னதற்கு அவளுடைய தந்தை விசு “என்னமா வாணி... பெரியவங்கிட்ட எப்படி பேசணும்னு...நான் சொல்லிருக்கேனே..?அப்புறம் எப்படி இப்படி பேசிற?...பாட்டிகிட்ட சாரி கேளு” என்றார் வாணியை அதட்டி.


“சாரி டாடி...சாரி பாட்டி” என்றவளின் மூகம் சுருங்கிவிட்டது.


ஶ்ரீயிடம் குனிந்து “எல்லாம் உன்னால்தான் அக்கா”என்றாள் கோபமாக.


“சாரிடி... எல்லாம் இந்த அத்தானால் வருது …அவர் இல்லானா

நானே சொல்லிருப்பேன்” என்றாள் அவளும் கோபமாக.


ஏனெனில் இதையே ஶ்ரீ சொல்லி இருந்தால் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள்...அவ்வளவு செல்லம்...ஒருத்தருக்கு தவிர.கிருஷ் தான் அது.அவன் மட்டும் தான் ஶ்ரீயைத் திட்ட கூடிய ஒரே ஆள்.


ரிஷி தனது மனதில் ‘பயப்புள்ள எப்படி மாட்டி விடுது...ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா என்ற மாதிரி...அண்ணன் முன்னாடி ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துட்டு என்ன வேலை பண்ணுறா இந்த ஶ்ரீ’ என்று திட்டினான்.


கிருஷ் “மாமா... என்ன இது ?இவள் சின்ன பொண்ணு ...அவளை எதுக்கு திட்டுறீங்க…!!” என்றான் வாணிக்கு சப்போர்ட்டாக.


கிருஷிடம் திரும்பிய விசு “நீ தான்...அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்கிறடா” என்றார் கோபமாக.


“அதெல்லாம் இல்ல மாமா...அவள் சின்ன பொண்ணு” என்றான் மறுபடியும் வாணிக்கு சப்போர்ட்டாக.


நடுவில் “மாமா விடுங்கள்...வாணி இன்னும் பேபி தான்” என்றார் ஜானகி மகளை விட்டுகொடுக்காமல்.


விசு திரும்பி ஜானகியை ஒரு முறை முறைத்தார்.அவ்வளவுதான் ஜானகி அடங்கிவிட்டார்.


தாத்தாவும் “விடுப்பா விசு...அவ இன்னும் சின்ன பொண்ணுதானே...!அவளுக்கு பெரியவங்க முன்னாடி எப்படி பேசணும்னு தெரியவில்லை...போக போக சரியாகிடும்” என்றார் வீட்டின் பெரியவராக.


“சரி தாத்தா...ஆனால் அவள் கிட்ட யாராவது எடுத்து சொன்னால்... தானே தெரியும்...ஏனெனில் இன்னொரு வீட்டிற்கு போக போறே பொண்ணு” என்றார் விசு பிடிவாதமாக.


“ஓகே விடுப்பா...அவளுக்கு இன்னும் அந்த வயசு வரலை...பிறகு தனியாக அவள்கிட்ட எடுத்து சொல்லு...புரிஞ்சிப்பா” என்றார் தாத்தாவும்.


இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த கிருஷ் தாத்தாவின் காதருகே சென்று “ரொம்ப நடிக்காதீங்க தாத்தா...நீங்க தான் வாணியிடம் பாட்டியை ராதுனு கூப்பிட சொன்னீங்க...இப்போது நீங்களே தனியாக போய் அட்வைஸ் பண்ண சொல்லுறீங்களா…?இது உங்களுக்கே நல்லா இருக்கா தாத்தா”என்று குறும்புடன் வினவினான்.


அவன் தோளில் கைப் போட்டு “டேய் படவா...உனக்கு எப்படி தெரியும்டா...சரி தெரிஞ்சிருச்சி இல்லை...அதை விட்டுடூடா பேரான்டி…யார்கிட்டயும் சொல்லதே…!” என்றார் அவரும் குறும்புடன்.


“அதுமட்டுமில்லாமல் இப்போ மாமாக்கிட்ட பேசிட்டு இருக்கும் போது...வாணிகிட்ட கண்ணை காமிச்சீங்களே...அதையும் பார்த்துட்டேன்” என்றான் விரிவான புன்னகையுடன்.


அடியாத்தி...இது எப்போ நடந்தது...நமக்கு தெரியாமே...அப்ப இந்த குடும்பத்துல யாரையும் நம்ப முடியாது போலவே...நாம் இனிமே கண்ணுல வெளக்கெண்ண ஊத்திட்டு பார்க்கணும் போல... என்னமா நடிக்கிறாரு என் புருஷன்...ஆ என்று அவர்களுக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் ராதை பாட்டி மனதிற்குள் புலம்பினார்.


“டேய்…ஏன்டா எல்லாத்தையும் பார்த்துவிடுவியா…?உனக்கு தெரியாமல் ஒண்ணும் பண்ணமுடியாது போல…”என்றார் முறைப்புடன்.கிருஷ் அவரைப் பார்த்து கண்சிமிட்டினான்.


அதன்பிறகு தாத்தா சிரித்துவிட்டு சாப்பிட குனிந்தார்.அனைவரும் அமைதியாக சாப்பிட்டனர்.


தீடிரென்று தாத்தா நிமிர்ந்து “ஆமாம்...மீரா எங்கே காணோம்...” என்றார் மீராவின் தந்தை ராமிடம்.


அதேநேரம் ரிஷி ஶ்ரீயிடம் திரும்பி “மாட்டிகிட்டா மீரா...இன்னைக்கு அவள் அவ்வளவுதான் தாத்தா கையில் தொலைஞ்சா” என்று ஆர்ப்பரித்தான்.உன் மீரா குட்டி தான்டா என்று வாணி மனதில் கவுன்டர் கொடுத்தாள்.


அவன் கையை யாரும் அறியாமல் நறுக்கென கிள்ளிவிட்டு “ஏய்...ச்சு...அத்தான் பார்க்க போறார்...நீ மாட்டணும்னா...தனியாக மாட்டு...என்னை ஏன்டா ஹிட்லர் கிட்ட மாட்டிவிடுறே” என்றாள் ஶ்ரீ பதட்டத்துடன்...அவன் அலறியதைப் பொருள் படுத்தாமல். கிருஷ் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தான் இருவரையும்.


“ஐய்யையோ போச்சு… பார்க்கறரே...பார்க்கறரே...இன்னைக்கு நம்ப முடிஞ்சோம்” என்றாள் ஶ்ரீ பயத்துடன்.ஶ்ரீ திரும்பி ரிஷியை நன்றாக முறைத்தாள்.எல்லாம் உன்னால் தான் என்றவாறு.


மாட்டினீங்களா...ஹாஹா…ஶ்ரீ,ரிஷி அத்தான் நீங்க இன்னைக்கு முடிஞ்சீங்க...என்று வாணி மனதிற்குள் கும்மாளமிட்டாள்.


ராம் அதற்கு “அவள் காலேஜில் ஏதோ டூர்னு போயிருக்கா தாத்தா…!!” என்றார் மெதுவாக.


“நம்முடைய ரிஷி கூட மீரா காலேஜ் தான்…” என்று ராமிடம் கூறிவிட்டு


ரிஷியிடம் “நீ போகவில்லையா ரிஷி…?”என்று குழப்பத்துடன் கேட்டார்.


ரிஷி ரொம்ப நல்லவன் மாதிரி “இல்லை தாத்தா...இது காலேஜில் கூட்டிட்டு போற டூர் இல்லை...அவள் பிரண்ட்ஸ் கூட போயிருக்கா தாத்தா” என்றான்.


அடப்பாவி...மீராகுட்டி மீராகுட்டினு...போட்டு குடுக்கறே... இது என்னவோ வேணும்னு போட்டு கொடுத்தமாதிரி இருக்கு… இருடா மவனே...உனக்கு இருக்கு...மீரா அக்காக் கிட்ட போட்டு கொடுக்கிறேன்...என்று வாணி அவனின் ஒவ்வொரு பேச்சுக்கும் கவுன்டர் கொடுத்தாள் மனதில்.


“ராம் என்னப்பா...இப்படி அவளை தனியாக அனுப்பி இருக்கே…?” என்றார் வந்த கோபத்தை இழுத்து பிடித்து கொண்டு ராமிடம்.


அவர் திரும்பி அம்மாவைப் பார்த்தார்.நீதான் பதில் சொல்ல வேண்டும் என்பதைபோல்.ராம் எவ்வளவு தடுத்தும்...குந்தவைதான் மீராவை அனுப்பி வைத்திருந்தார்.


அதற்கு குந்தவை “அப்பா என்னப்பா…?அவள் ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்லை...என் பேத்தி அமெரிக்காவில் படிச்சிட்டு வந்து இருக்கா...எதுக்காக பயப்படறீங்க...அவளை அவளே பார்த்து கொள்வாள்” என்றார் ராமிடம் கேட்ட கேள்விக்கு பதிலாக.


நந்தன் திரும்பி குந்தவையைப் பார்த்து கடும் கோபத்துடன் “நீதான் அவளுக்கு ரொம்ப செல்லம் குடுத்து கெடுக்கிறே...காலம் ரொம்ப கெட்டு கிடக்கு...எல்லாரும் ஒண்ணு போல இருக்கமாட்டாங்க குந்தவை… அதுவும் வயசுக்கு வந்த பொண்ணை வீட்டில் உள்ளவங்க துணையும் இல்லாமல் வெளியூர் அனுப்பி இருக்கே...அதுவும் நண்பர்களோடு…அப்புறம் பின்னாடி ஏதாவது பிரச்சினை வந்தால்...எனக்கு எதுவும் தெரியாது...நீதான் சமாளிக்கணும்...அப்பவும் இந்த குடும்ப கௌரவுத்துக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது… அதையும் மீறி ஏதாவது பிரச்சினை வந்தால் நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது”என்று குரல் உயர்த்தி கூறிவிட்டு கடைசியில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கர்ஜித்தார்.


இப்போது காமெடி பண்ண தாத்தாவா இது...உங்களுக்குள்ள இப்படி ஒருத்தர் இருக்காங்களா…என்று கிருஷ் மனதிற்குள் நினைத்தான்.


தாத்தாவை இதுவரை இந்தமாதிரி கோபத்தை யாரும் பார்த்தது இல்லை...அவர் எப்போதும் ஒரு வெள்ளை வேட்டி...வெள்ளை ஜிப்பா...நெற்றியில் திருநீறு...பார்க்க அவ்வளவு சாந்தமாக இருப்பார்.அவர் இவ்வளவு கோபப்படுவார் என்று அனைவரும் இன்னைக்கு தான் பார்க்கின்றனர்.ஆதலால் எல்லாரும் ஒரு நிமிடம் பயந்துவிட்டனர்.அவருக்கு குடும்ப கௌரவம் ரொம்ப முக்கியம்.அதனால் தான் இன்று இவ்வளவு கோபத்தைக் காட்டினார்.


அதில் பயந்து “சா...சாரிப்பா...இனிமே இந்தமாதிரி நடக்காமல் பார்த்துகிறேன்...இப்பவும் எந்த பிரச்சினையும் வராது... நான் பா...பார்த்துக்கிறேன்” என்றார் குரலில் சிறு நடுக்கத்துடன்.


ரகுநந்தன் “அப்பா கோபப்படாதீங்க...உங்க உடம்புக்கு நல்லது இல்லை… இனிமே இந்தமாதிரி நடக்காமல் அக்கா பார்த்துக்கொள்வாள்” என்று சமாதானம் படுத்தினார்.


ராதை பாட்டியும் அவர் கையை அழுத்தி கொடுத்தார்.


அதில் கொஞ்சம் கோபத்தைக் குறைத்து “இவங்களும் உன் பேத்திகள் தான்...இவங்களெல்லாம் இப்படி இல்லையே...என்னை கேட்காமல் எங்கேயாவது போராங்களா…?” என்றார் கேள்வியாக.


அதில் எரிச்சலான குந்தவை “இவங்களும் அவளும் ஒன்றா?அவள் அமெரிக்காவுக்கு போய் படிச்சிட்டு வந்து இருக்கா...இவளுங்களாம் இங்கேயே இருந்து குண்டு சட்டியில் குதிரை ஒட்டறாளுகள்… இவங்களைப் போய் மீராக்கூட ஒப்பிடுறீங்க…!!” என்று பயத்திலிருந்து தன்னை மீட்டு எடுத்து பதில் அளித்தார் தைரியமாக.


இப்போது வாணி திரும்பி குந்தவையை முறைத்தாள்.ஶ்ரீக்கும் எப்படி பேசுகிறார் பார் என்று நினைத்து...ஒருமாதிரி ஆகிவிட்டது...அவளுக்கு மட்டும் இல்லை குடும்பம் மொத்தத்திற்கும் அதே எண்ணம் தான்.விசுவிற்கு முகம் சுருங்குவிட்டது.


அதனைப்பார்த்த தாத்தா “போதும்…!அதையே சொல்லாதே குந்தவை…!!எங்க போய் படிக்கிறோம் என்றது முக்கியம் இல்லை...எப்படி படிக்கிறாங்கனுறதுதான் முக்கியம்...அதுவும் ரிஷியும் அமெரிக்கா போனதால் தான்...மீராவை நான் அவனுடன் படிக்க அனுப்பினேன்… இல்லையானால் நான் அனுப்பி இருக்கமாட்டேன் அதனால் அவள் அமெரிக்கா போனானு இனிமே என்கிட்டபெருமை பேசதே...என்ன புரிஞ்சிதா…?” என்றார் பொறுமையாக.


குந்தவை தலையாட்டியதை ஏற்று “ஓகே இதுக்கு மேல மீரா உன் பொறுப்பு...எதுவும் பிரச்சினை வராமல் பார்த்துக்கோ…!!இருந்தாலும் அவள் வந்த உடனே என்னை பார்க்க சொல்லு” என்றார் மறுபடியும் பொறுமையை இழுத்து பிடித்து.


இந்தமுறை ராம் அம்மாவிற்கு பதிலாக “சரி தாத்தா...நான் மீராக்கிட்ட சொல்லுறேன்”என்றார் குறுக்கே புகுந்து.


அதன்பிறகு ராம் தனது அம்மாவிடம் “அம்மா... தாத்தா தான்… அவ்வளவு தூரம் சொல்லுறாங்க தானே...நீ இதோடு இந்த பேச்சை விட்டுவிடு…!!” என்று விட்டு தாத்தாவிடம்,


“இனிமே இந்த மாதிரி நடக்காது…!!” என்று வாக்கும் கொடுத்தார்.சரியென்று தாத்தாவும் அந்த பிரச்சினையை அத்தோடு விட்டு விட்டார்.


“அக்கா இந்த அப்பாயி...எப்பப் பார்த்தாலும் நம்மை மட்டம் தட்டுறதை...வேலையா வச்சிருக்கு அக்கா” என்று வாணி கோபமாக ஶ்ரீயின் காதில் கிசுகிசுத்தாள்.


ஶ்ரீ “அப்படி இல்லை வாணி ,அக்கா அமெரிக்கா போயிட்டு வந்தாள்...அதனால் கொஞ்சம் அக்காவைப் பெருமையாக பேசுறாங்க...அவ்வளவுதான்...மற்றபடி நம்பளை மட்டம் தட்ட இல்லை…


அவளுக்கு பொறுமையாக எடுத்து கூறி “நாளைக்கே நீ ஏதாவது செய்து காட்டு...அப்பாயி உன்னைப் பற்றி பெருமையாக எல்லார்கிட்டயும் சொல்லுவாங்க” என்றாள் அவள் ஆதங்கத்தை மறைத்து.


“அதுக்கு நாமும் அமெரிக்கா தான் போகணுமாக்கா?”என்றாள் நக்கலாக.


ஶ்ரீ வாணியைத் திரும்பி பார்த்து இல்லை என தலையை ஆட்டிவிட்டு “தாத்தா சொன்னதை கேட்டியா...இல்லையா…?


தலையாட்டுவிட்டு “புரியுது ஆனால்...என்று இழுத்து


அக்கா...நீ பிளஸ்டூ படிக்கும்போது மாநிலத்திலேயே முதலாவதாக வந்ததை...அப்பாயி ஒண்ணும் அதை பெரிய விசயமாக எடுத்து… உன்னை வாழ்த்தவில்லை அக்கா...அதையும்விட அமெரிக்கா ஒண்ணும் பெருசுயில்லை” என்று அவளும் ஆதங்கத்துடன் கூறினாள்.


ஶ்ரீக்கும் உள்ளுக்குள் அந்த எண்ணம் உள்ளதுதான்.இருந்தாலும் தங்கை கோபத்தை மனதில் வைத்து “அப்படி இல்லைம்மா... அவங்களுக்கு இதெல்லாம் பெரிய விசயமாக தெரிந்து இருக்காது...அமெரிக்காதான் பெரிய விசயமாக இருக்கும்” என்றாள் குழந்தைக்கு சொல்லுவதுபோல்.


“போக்கா...நீ எப்ப பார்த்தாலும் அப்பாயிக்கு தான் சப்போர்ட் பண்ணுறே” என்றாள் மனதாங்கலுடன்.


வாணியின் கையை ஶ்ரீ சமாதானமாக அழுத்தி கொடுத்தாள்.ரிஷி அந்தநேரம் “அத்தை பத்தி உங்களுக்கு தெரியாதா...அவங்க எப்பவும் இப்படிதானே...இது உங்களுக்கு தெரிஞ்ச விசயம் தானே…அப்புறம் எதுக்கு இரண்டு பேரும் ஃபில் பண்ணிறீங்க...சில் பட்டீஸ்” என்று வாணி மற்றும் ஶ்ரீயிடம் கூறினான்.வாணி திரும்பி ரிஷியை கண்களால் பொசுக்கினாள்.


இவள் எதுக்கு இப்போ காளி ஆத்தா அவதாரம் எடுக்கிறாள்...நான் அப்படி என்ன சொன்னேன்...என்று ரிஷி திருதிருவென்று முழித்தான்.


அவனை அதிலிருந்து காப்பாற்றவென எல்லாரும் சாப்பிட்டு முடித்துவிட்டு இரவு வணக்கம் கூறி அனைவரும் அவர்வர் அறைக்கு சென்றனர்.


ரிஷி அப்பாடா நான் எஸ்கேப் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டான்.


ஶ்ரீயும் மெதுவாக எழுந்து சோகமாகச் சென்றாள்.அதனை

கிருஷ் பார்த்துவிட்டு விசுவிடமும் ஜானகியிடமும் கண்களால் வாணி மற்றும் ஶ்ரீயைக் காட்டினான்.அவர்களைச் சமாதானம் படுத்த சொல்லி.இவ்வளவு நேரம் அம்மாவைப் பற்றி நினைத்து பிள்ளைகளைப் பார்க்கவில்லை என்று வேதனைப்பட்டு கிருஷைப் பார்த்து நான் பார்த்துகிறேன் என்பதை போல் கண்ணை மூடி திறந்தார் விசு.அவர் ஜானகியை அழைத்து சென்று வாணியிடம் என்ன பிரச்சினை என்று விசாரித்தனர்.அவர்களும் பார்த்து கொண்டுதானே இருந்தனர் குந்தவை பேசியதை.அவர்களிடம் அவள் எல்லாவற்றையும் சொன்னாள்.


“நீ அதைப்பற்றி கவலைப்படாதே வாணி…!!அப்பாயிக்கு முதல் பேத்தி மேல் கொஞ்சம் பாசம் அதிகம்...அதனால்தான் இப்படி...அதற்காக உங்கள்மேல் பாசம் இல்லையென்று அர்த்தமில்லை...ஓகே பேபி அம்மாவை நம்பிறியா...இல்லையா…?” என்று ஜானகி கேட்டார்.


ச்சு என்று வாணி சலித்துக் கொண்டாள்.


”வாணிம்மா இங்க பாரு...குடும்பத்தில் எல்லாரும் எவ்வளவு பாசமாக இருக்கீறாங்க.கிருஷ் கூட உனக்கு எவ்வளவு சப்போர்ட் அன்ட் என்கரேஜ் பண்ணுகிறான்...இப்பக்கூட என்கிட்ட உனக்கு சப்போர்ட் பண்ணான்....அதைவிட அப்பாயி உங்களை அப்படி பேசிட்டாங்கனு… இதை பெருசா எடுத்து... வருத்தப்படக் கூடாது...சரியாம்மா” என்றார் விசு.


உடனே கொஞ்சம் தெளிந்து “யெஸ் டாட்...நான் ஏன் கவலைப்படணும்… நீங்கயெல்லாம் எல்லாம் இருக்கும்போது” என்றாள் புன்னகையுடன்.
 
“குட்...தட்ஸ் மை பேபி” என்று கட்டி அணைத்து இருவரும் விடுவித்தனர்.

“ஓகே பேபி... அதேமாதிரி உங்க அக்காவையும் சமாதானம் பண்ணி வச்சிட்டு வரோம்...நீ கொஞ்சம் அதுவரைக்கும்...ஹாலில் வெயிட் பண்ணும்மா” என்றார் விசு கனிவாக.

“டாட்...அக்கா என்கிட்ட அப்பாயிக்கு சப்போர்ட் தான் பண்ணினாள்.அப்புறம் என்னாப்பா…?” என்றாள் தந்தையைப் புரியாமல் பார்த்து.

“சொன்ன கேட்கணும் குட்டிம்மா” என்று சிறு அழுத்தத்துடன் கூறினார்.அந்த குரலை மீற முடியாமல் வாணி அங்கிருந்து சென்றாள்.

“ஏன் மாமா…?இவ்வளவு கடினமாக அவள்கிட்ட பேசினீங்க” என்றாள்.

“இல்லையென்றால்... கேள்விமேல் கேள்வி கேட்டு குடைவாள்… அப்புறம் அவளுக்கு பதில் சொல்லமுடியாது” என்றார் விசு.

“அதுவும் சரி மாமா...வாங்க போகலாம்” என்றார் ஜானகி.

விசுவும் ஜானகியும் சென்றபிறகு கிருஷ் வாணியிடம் என்ன நடந்தது என்றவாறு பேச்சு கொடுத்தான்.வாணி அவளுக்கும் ஶ்ரீக்கும் நடந்த பேச்சு வார்த்தையைப் பற்றி கூறினாள்.

கிருஷ் ‘பரவாயில்லை ஶ்ரீநிதி...குந்தவை அத்தை...இவங்க இரண்டு பேரையும் அவ்வளவு பேசியும்...அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசி இருக்காள்...இதெல்லாம் மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே இப்படி பேச முடியும்…’ என்று ஶ்ரீயைப் பெருமையாக மனதில் நினைத்துவிட்டு வெளியில் வாணியைச் சமாதானம் படுத்திவிட்டு சென்றான்.

இருவரும் அவள் அறைக்குள் சென்றனர்.அவர்கள் நினைத்தமாதிரி அவள் சோகமாக விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள்.அவள் அருகில் சென்று அவள் தலையில் கை வைத்து “ஶ்ரீ என்னம்மா…?” என்றார் ஜானகி உள்ளத்தை உருக்கும் குரலில்.

ஜானகிக்கும் விசுவுக்கும் ஶ்ரீ மேல் அதிகப்பாசம்.அவங்க உயிரே அவள் என்கிற அளவுக்கு பாசம் அதிகம்.அவள் இந்த அளவுக்கு வருத்தப்படுகிறாள் என்பதை நினைக்கும்போது ஜானகிக்கு கண் கலங்கியது.

முதலில் ஶ்ரீ...அவர்கள் இந்த அறைக்குள் வந்ததை கூட அறியாமல்… விட்டத்தை வெறித்திருந்தாள்.அவர் ஶ்ரீ என்று அழைத்தவுடன், அதிலிருந்து மீண்டு “என்னம்மா” என்றாள் மெதுவாக பார்வையைத் அவர்கள் மீது திருப்பி.

அம்மா கண்கலங்கியதைப் பார்த்தவுடன் அவசரமாக “அச்சோ என்னம்மா அச்சு…?ஏன் கண் கலங்குகிறாய்?” என்றபடி கண்களைத் துடைத்துவிட்டாள்.

“ஶ்ரீம்மா...வாணி எல்லா விவரமும் சொன்னாள்...அதைக்கேட்டு இங்கு வந்துப்பார்தால்... நீ விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தியா… அதைப்பார்த்தவுடன் கண் கலங்கிவிட்டது” என்றார் சிறு அழுகையுடன்.

“ச்சு... ஒண்ணும் இல்லைம்மா...கண்ணைத்துடை...நான் நல்லாதான் இருக்கேன்” என்றாள் வரவழைக்கப்பட்ட சிறு முறுவலுடன்.

அதற்குள் சிறு வருத்தம் இழையோடியதைப் பார்த்து...விசு குறுக்கே புகுந்து “உன்னை அப்பாயி அப்படி பேசியதற்காக வருந்ததே கண்ணம்மா...நீ வாணிக்கிட்ட அப்பாயிக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணி பேசிவிட்டு...இங்க வந்து ஏன் வருத்தப்படறேம்மா…?”என்றார் அவளை அணைத்து தந்தையாக.

ஶ்ரீயும் சாதாரண குரலில் “நான் அதற்குயெல்லாம் வருத்தப்பட இல்லைப்பா...போனவாரம் லட்சுமி ஆன்ட்டி ரொம்ப வருஷம் கழித்து வந்தாங்க தானே…

அவங்க உங்க பேத்திங்க எங்கே…?என்று அப்பாயிகிட்ட கேட்டாங்கப்பா...?அப்போ நான் அந்த பக்கம் வந்துட்டு இருந்தேன்… அப்பாயிவும் என்னைப்பார்தாங்க...ஆனா எதுவும் சொல்லாமல் மீரா அக்காவை மட்டும் கூப்பிட்டு காட்டி இவள் என் பேத்தி மீரா… அமெரிக்காவில் படித்துவிட்டு வந்து இருக்காள்...இங்க காலேஜில் படிக்கிறாள் என்றார்.

அதன்பிறகு லட்சுமி ஆன்ட்டி என்னை பார்த்து நான் யாருனு...? கேட்டாங்க அப்பாயிக்கிட்ட…

அதற்கு அப்பாயி இவளா…?என் இரண்டாவது பையன் விசு இருக்கான்தானே...அவனுடைய பொண்ணுனு சொன்னாங்கப்பா.

அதான் ஏன்ப்பா அப்பாயி எங்களை பேத்தினு கூடச் சொல்லமாட்டீகீறாங்க அப்பா.அவங்களுக்கு என்னைப் பிடிக்காதா அப்பா?” என்று கூறி அழுகையில் அவள் உதடு துடிக்க விசுவின் மடியில் தலைவைத்து படுத்து கொண்டாள்.

உடனே இருவரும் அவசரமாக “அப்படியெல்லாம் இல்லை பேபி” என்றனர்.

“அவங்களுக்கு முதல் பேத்திமேல் கொஞ்சம் பாசம் அதிகம் கண்ணம்மா…அதனால் தான்!!.நீ இதை பெரிய விசயமாக எடுத்துக்காதே பேபி… அதுவுமில்லாமல் நீ என்னோடைய பொண்ணு… அப்படினு லட்சுமி ஆன்ட்டி தெரிந்தக்கொள்ளணும்னு கூடச் சொல்லி இருக்கலாம்” என்று இருவரும் ஒருசேர கூறினார்கள்.

“அப்பா...இதுக்கூட பரவயில்லைப்பா...லட்சுமி ஆன்ட்டி அன்றைக்கு அப்பாயி விசுவுடைய பொண்ணுனு சொன்னப்பிறகு...

ஓ... நம்ப விசு அண்ணன் பொண்ணா ரொம்ப லட்சனமான பொண்ண இருக்கு ...என்று என்னை அருகில் அழைத்து மகாலட்சுமி மாதிரி இருக்கேம்மா... என்று நெற்றியில் முத்தம் குடுத்தாங்க.

உடனே மீரா அக்காவின் முகம் சுருங்கிருச்சி...அதைப்பார்த்த அப்பாயி என்ன லட்சுமி இவளைப்போய் மகாலட்சுமினு சொல்லுறா?உனக்கு என்ன கண்ணு தெரியலையா லட்சுமி…?நீ முன்ன பின்ன மகாலட்சுமியை நேரில் பார்த்து இருக்கியா...இல்லையா…??என்று சிரிச்சிட்டு... என்னைப்பார்த்து போய் லட்சுமிக்கு ஏதாவது குடிக்கக் கொண்டு வானு சொல்லுறாங்கம்மா...

நான் என்ன வேலைக்காரியா...?அவங்க என்னை கொஞ்சியதால்... உடனே அப்படி சொல்லுறாங்கப்பா,அதைப்பார்த்து அக்கா சிரிக்கிறா அப்பா.இதையே மீரா அக்காக்கிட்ட லட்சுமி ஆன்ட்டி அப்படி சொல்லிருந்தா...இதனை மீரா அக்காக்கிட்ட சொல்ல முடியுமா… அப்பாயினால்...?.அவ்வளவுதான் வீட்டையே இரண்டு ஆக்கிடுவா.இப்ப சொல்லுங்கப்பா,நீயும் சொல்லும்மா அப்பாயிக்கு ஏன் என்னைப் பிடிக்கலை…?? என்று அழுகையும் கோபமுமாய் தனது பெற்றோரிடம் கேட்டாள் ஶ்ரீநிதி.

ஜானகிக்கும் அழுகை வந்தது.உடனே “ச்சு...எதுக்கு ரெண்டு பேரும் அழுகறீங்க...இங்க பாரு கண்ணம்மா...அம்மாவுக்கு கோபம் உன்மேல் இல்லை...என்மீதுதான் அம்மாவிற்கு கோபம் அதை உங்கள் மீது காட்டுகிறார்” என்றார் பொறுமையாக எடுத்துக்கூறி.

ஶ்ரீ என்ன சொல்லுகிறார் இவர் அப்படியென்று பார்த்தாள்.ஜானகி இவர் ஏதாவது உளறிக் கொட்டப் போகிறார் என்று பயத்துடன் பார்த்தார்.

விசு ஜானகியை ஒரு பார்வைப் பார்த்து கொண்டே ஶ்ரீநிதியிடம் “அம்மா சொல் பேச்சை சின்ன வயதிலிருந்து நான் கேட்கவில்லை...அதனால் தான் அம்மாவிற்கு என்மீது கோபம்டா” என்றார்.அவர் கூறக் கூற ஜானகிக்கு உடல் விறைக்க ஆரம்பித்தது.

“என்னப்பா ...நீங்க ஏன் அப்பாயி பேச்சைக் கேட்கலை...” என்றாள் புரியாமல்.


“அம்மாவைக் கல்யாணம் பண்ணிட்டு மாமாவுடையத் தொழிலைப் பார்க்க சொன்னாங்க...நான் முடியாதுனு சொல்லிட்டு டாக்டருக்கு படித்தேன்.அதனால் என்மேல உள்ள கோபத்தை உங்கமேலே காமிக்கிறாங்கடா...நீ இதைப் பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாதே கண்ணம்மா” என்றார் மனைவி மற்றும் மகளைப் பார்த்து.அதன்பிறகு தான் ஜானகி மூச்சுவிட்டார்.

“சரிப்பா ஆனால் என்மேல் எதுக்குப்பா கோபத்தைக் காமிக்கணும்...நான் என்ன பண்ணினேன்”என்றாள் மீண்டும் ஒரு எதிர்ப்பார்ப்புடன்.

“என்னை சின்ன வயசிலிருந்தே பிடிக்காது.நான் அம்மா பேச்சைக் கேட்கவே மாட்டேன்.அண்ணன்தான் எப்பவும் செல்லம்...சோ... என்னைப் பிடிக்காதனால் என் பிள்ளைகளான உங்களிடம் அப்படி நடந்து கொள்கிறார் அவ்வளவுதான்” என்றார் வருத்தத்துடன்.

“நீ இதைப்பற்றி கவலைப்படாதே பேபி,அப்பாதான் அவ்ளோ சொல்லுறாங்கதானே பேபி” என்றார் ஜானகியும் சமாதானப்படுத்தி.

அப்போதும் சமாதானமாகமல் “ஓகே அம்மா...ஆனால் அதற்காக எங்ககிட்ட இப்படி”என்று அவள் ஆரம்பிக்கும்போதே...

விசு குறுக்கே புகுந்து “கண்ணம்மா...இதை இப்போதே விட்டுவிடு...உனக்கு இத்தனை பேர் இருக்காங்க...நாங்க உனக்கு எப்பவும் சப்போர்ட் பண்ணுவோம். கிருஷ்,தாத்தா இருக்காங்க… அவங்களும் உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க...சரியாம்மா…?” என்றார் விசு.

உடனே அத்தான் சப்போர்ட் எனக்கு பண்ணிட்டாலும் பூமி இரண்டாகப் பிளந்திடும் என்று முணுமுணுத்தாள்.

இருந்தாலும் அதைவிடுத்து “ஓகே அப்பா,ஐயம் கிளியர்”என்று சமாதானம் ஆனதுபோல் சிரித்து மலுப்பினாள்.

அவர்களும் “ஓகே பேபி...நீ தூங்கு குட்நைட்” என்று கூறினார்கள்.

“அம்மா ஒரு நிமிடம்...நான் உங்க மடியில் படுத்துக்கட்டா…?” என்று மெதுவாக கேட்டாள் தாயை ஏறிட்டவாறு.

அதிலே அவர்களுக்கு தெரிந்துவிட்டது அவள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்று,இருந்தும் “வா குட்டிம்மா...படுத்துக்கோ” என்று கூறி கட்டிலில் அமர்ந்தாள்.

ஶ்ரீ அவர் மடியில் தலைவைத்து படுத்து “அம்மா!எனக்கு நீ சின்ன வயசுல ஒரு பாட்டு பாடுவியே அதைப் பாடும்மா...பிளீஸ்” என்றாள் ஶ்ரீ.

ஜானகியும் சரியென்று தலையாட்டிவிட்டு பாட ஆரம்பித்தார்.

“குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா...” என்று பாடிக் கொண்டு இருக்கும்போதே ஶ்ரீநிதி தூங்கிவிட்டாள்.

அதன்பிறகு தூங்கும் மகளை ரசித்துவிட்டு விசு மெதுவாக வெளியேறினார்.நடுவில் வாணி அந்த அறையில் வந்து ஜானகியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு குட்நைட் சொல்லி தூங்கிவிட்டாள்.ஜானகி ஶ்ரீயின் தலையை எடுத்து தலையணையில் வைத்துவிட்டு,விளக்கை அணைத்துவிட்டு தூங்கபோய்விட்டார்.

அவர் போனப்பிறகு ஒரு உருவம் அவள் அருகில் வந்து தலையைத் தடவியது.உடனே கண்ணைத் திறக்காமல் ஶ்ரீ...அவள் அம்மா என்று நினைத்து “அம்மா!கிட்டவா”என்று அழைத்து கன்னத்தில் முத்தமிட்டு குட்நைட் என்றாள்.உடனே அந்த உருவம் முதலில் அதிர்ந்து பின்பு சிரித்துவிட்டு சென்றது.

 
அத்யாயம் 3:
கார்மேககண்ணன் தாமரை மீது நின்று குழலுதும் அழகிலும்...அந்த இனிமையான இசையில் மயங்கியும்...கதிரவன் மெய் மறந்து இருந்த வேளையிலும் தன் கடமையின் பொருட்டு சோம்பலை முறித்து வலுக்கட்டாயமாக தன் கதிர்களை பூலோகத்தில் பதித்த வேளையில் நந்தவனத்தில் கிருஷ் மெதுவாக தன் கண் இமைகளைப் பிரித்தான்.

கீழ் பூஜையறையிலிருந்து,
ஆடாது அசங்காது வா, கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே


ஆடலைக் காணதில்லை – அம்பலத்திறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே – ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ

சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே
பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று – தன்
பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே – குழல்
பாடிவரும் அழகா – உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே

என்று இனிமை நிறைந்த குரலில் பாடியது அவனது பெரியம்மா யசோதா மற்றும் அம்மா தேவகி.அவர்களை நினைத்து ஒரு முறுவலைச் சிந்திவிட்டு எழுந்து இரவு உடையிலிருந்து ட்ராக் ஷூட்டிற்கு மாறி ஜாகிங்கிற்கு சென்றான்.அந்த தெருவைச் சுற்றி வந்தவன் அருகில் அண்ணன் தயா அவனுடன் இணைந்தான்.

“குட்மார்னிங் அண்ணா…” என்றான் காலை உற்சாகத்துடன்.

“குட்மார்னிங் கிருஷ்”

கிருஷ் முதலில் தயங்கி பிறகு “அண்ணா இதை நான் உன்னிடம் கேட்கக்கூடாது...இருந்தாலும் தாத்தா என்னை என்ன விவரம் என்று உன்னிடம் கேட்க சொன்னார்...அதனால் கேட்கிறேன்...அண்ணிக்கும் உனக்கும் நேற்று ஏதாவது சண்டையா...?” என்று வினவினான் தயாவைப் பார்த்தவாறு.

அவன் தயங்கி கிருஷைப் பார்த்து “அப்படியெல்லாம் இல்லை கிருஷ்…சும்மா ஒரு வாக்குவாதம் அவ்வளவுதான்...மற்றபடி ஒண்ணுமில்லை” என்று எதையும் கூறாமல் பூசி முழுகினான்.

கிருஷ் தயாவை ஒரு நம்பாத பார்வைப் பார்த்து “சரி தயா...உனக்கு தெரியாதது ஒண்ணும் இல்லை...நேற்று குழந்தைகள் தாத்தாவிடம் அம்மாக்கும் அப்பாக்கும் டிஷ்யூம் தாத்தா...எனக்கு பயமா இருக்கு என்று அழுதார்கள்...அதனால் தாத்தா என்னவோ ஏதோ என்று பயந்து போய் என்னிடம் சொன்னார்.நான் அவரிடம்... அண்ணாவிடம் என்ன விவரமென்று நான் கேட்கறேனு சொன்னேன்...சோ என்னிடம் சொல்லக்கூடிய பிரச்சினை என்று நீ நினைத்தால் என்கிட்ட சொல்லு” என்று வினவினான்.

“அண்ணியோட அம்மா வீட்டில் ஏதோ பணம் பிரச்சினை போல…அதற்காக அண்ணி...என்னிடம் பணம் கேட்டாள்” என்று சிறிது தயக்கத்துடன் நிறுத்திவிட்டு பிறகு,

“இல்லை கிருஷ்...அவளிடம் நான் இது குடும்பத் தொழில்...சோ பணமெல்லாம் என்னால் தர முடியாது...இது எல்லாரும் கலந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு...அதனால் தனியாக என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சொன்னேன்...அதில் சின்ன வாக்குவாதம்...வேற பிரச்சினை ஒண்ணும் இல்லை” என்றான் தயா பயத்துடன் அவன் தன் மனைவியை தவறாக எதுவும் நினைக்கக் கூடாது என்று நினைத்து.

கிருஷ் அவனை திரும்பி பார்த்து “ஓகே அண்ணா...ரொம்ப பெரிய பிரச்சினை என்றால்...தாத்தாவோடு கலந்து பேசி முடிவு எடுக்கலாம் அண்ணா” என்றான்.

அவன் அவ்வாறு சொல்லவும் மலர்ந்த முகத்துடன் “ஓகே கிருஷ்...நீ சொல்லுவது சரி தான் கிருஷ்…! ஆபிஸ் கிளம்பவதற்கு முன் தாத்தாவோடு பேசி முடிவு எடுக்கலாம்” என்றான் உற்சாகத்துடன்.

இருவரும்பேசிக் கொண்டு வீட்டிற்குள் வந்தனர்.வீட்டிற்குள் நுழையும்போது ரிஷி அப்பொழுதுதான் எழுந்து சோம்பல் முறித்தவாறு வரவேற்பறையில் உள்ள படிக்கட்டுகளின் வழியே இறங்கி வந்து கொண்டு இருந்தான்.

எதிரில் கிருஷ் வரவேற்பறை கதவின் வழியே உள்ளே நுழைந்து வருவதைப் பார்த்து… ‘ஐய்யையோ நான் இன்னைக்கு மாட்டினேன் சைத்தான் சைக்கிளில் தான் வரும்னு சொல்லுவாங்க… !ஆனால் இங்க சைத்தான் நடந்து வருது…!’ என்று மனதில் நினைத்தான் ரிஷி.

அவன் நினைத்த மாதிரியே “ஏன்டா ரிஷி…?எத்தனை தடவை உன்னிடம் சொல்லி இருக்கேன்...காலையில் என்கூட ஜாகிங் வரச் சொல்லி...ஒரு தடவையாவது நான் சொல்லுவதைக் கேட்டு இருக்கியா...?” என்று கிருஷ் ரிஷியை மிரட்டினான்.

அதற்கு பயந்து ரிஷி “சாரி அண்ணா...நாளையிலிருந்து கண்டிப்பாக நான் வரேன்” என்று பவ்யமாய் நல்லபையனைப் போல் கூறினான்.

“ஏன்ப்பா கிருஷ்…?காலையிலே எதற்கு அவனைத் திட்டுகிறாய்” என்றார் அவனுடைய தாய் தேவகி இவர்களை நெருங்கியவாறு.

“நீங்க தான்ம்மா அவனைக் கெடுகிறீங்க…!தினமும் என்கூட ஜாகிங் வர சொன்னேன்...நான் சொல்லுவதை இவன் கேட்டானானு கேளுங்கம்மா...” என்றான் கிருஷ் தாயிடம் முறையிட்டப்படி.

“இவன் சின்ன பையன்ப்பா போக போக சரியாகிடும்” என்றார் தேவகி ரிஷிக்கு சப்போர்ட்டாக.

“அடப்போங்கம்மா...இன்னும் என்ன சின்ன பையன் 24 வயசு ஆகுது… இவனும் என் பேச்சை கேட்க மாட்டான்...அவளும் கேட்கமாட்டாள்” என்று சலித்து கொண்டான்.

“எவள் கண்ணா…?” என்றார் தேவகி புரியாத பாவனையுடன்.

“வேற யாரு…?இந்த ஶ்ரீ தான்” என்றான் சலிப்புடன்.

உடனே தேவகி அவரசரமாக “அவள் நல்ல பொண்ணு கண்ணா...அவள் நீ என்ன சொன்னாலும் செய்வாள்...அவள் மேல் சின்ன குறைக்கூட சொல்லமுடியாது...நீ அவளை திட்டாதே கண்ணா…!” என்றார் படபடவென.

கிருஷ் அம்மாவின் தோளை அணைத்து “அம்மா ரிலக்ஸ்… அக்காக்கூட நான் ஶ்ரீயைத் திட்டினால் இந்த அளவு ஆதரவு கொடுப்பாளானு தெரியலை…நீங்க ஏன்மா இவ்வளவு படபடவென பேசுறீங்க…?என்னம்மா…!உங்க செல்ல பேத்திக்கு சப்போர்ட்டா…?” என்று கூறி புருவம் உயர்த்தினான்.

‘ரிஷிஇஇஇ…!இந்த அம்மா நம்மை திட்டினால் கூட இவ்வளவு படபடப்பா பேச மாட்டாங்க போல...இந்த ஶ்ரீக்கு வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வராங்கப்பா…அப்படி என்னத்தைப் போட்டு மயக்கினாலோ தெரியாலயே...எனக்கு கொஞ்சம் சொன்ன நானும் அதையே ஃபலோ பண்ணுவனே’ என்று மனதிற்குள் புலம்பினான்.

“ஆதரவு இல்லை கண்ணா...நிஜமாவே ஶ்ரீ நல்ல பொண்ணுப்பா...நீ அவளைத் திட்டாதே” என்றார் தேவகி மறுபடியும்...

கிருஷ் இரண்டு கையையும் கட்டி தலையை இடுப்புவரை குனிந்துவாறு “மகாராணி அவர்களே…!!உங்கள் சேவகனாகிய இந்த கிருஷ்நந்தன்...உங்களின் அன்பிற்குரிய பேத்தியை...ஒருபோதும் தாங்களின் அனுமதி இல்லாமல் திட்டமாட்டான்...ஆனால் உங்கள் மகனாகிய மகாகணம் பொருந்திய இந்த வீட்டின் இளவரசன் கிருஷ்நந்தனுக்கு செல்வி ஶ்ரீநிதியைத் திட்ட அனைத்து உரிமையும் இருப்பதாக...அவருடைய தந்தை விசுநந்தன் அவர்கள் அனைத்து வாக்குறுதியும் அளித்துள்ளார்… அதனால் தாங்கள் வாக்கை மீறினால் தன்னை மன்னியும்படி கேட்டு கொள்கிறேன் மகாராணி அவர்களே…!” என்றான் பழைய கால சேவகர் பாணியில் சிரிப்புடன்
கூறினான்.

சிரிக்கும் மகனின் கன்னகுழி அழகை ரசித்தவாறு “போடா…படவா!!” என்றார் அவரும் பூரிப்பான புன்னகையுடன்.

“ஶ்ரீயைத் திட்டினால்...நானே சண்டைக்கு வருவேன்...சித்தி சண்டைக்கு வரமாட்டாங்களா கிருஷ்…?அதனால் அண்ணனாகிய எனக்கும் மரியாதைப் பண்ணுமாறு சேவகன் கிருஷைக் கேட்டு கொள்கிறேன்” என்றான் தயாவும் குறும்புடன்.

அதற்கு நடுவில் ‘பாருப்பா மறுப்படியும்...இந்த ராட்சஸி என்ன பண்ணினால் எல்லாருக்கும்...இப்படி உருகறாங்க’ என்று ரிஷி மனதிற்குள் ஶ்ரீயை நன்றாக வசைப்பாடினான்.

அதை அந்த பக்கம் எதிர்ச்சையாக திரும்பிய கிருஷ் பார்த்துவிட்டு ரிஷியிடம் என்ன என்று ஒற்றை புருவம் உயர்த்தினான்.அதில் பயந்து பதறியவாறு ஒண்ணும் இல்லை என்று அவசரமாக தலையாட்டினான் ரிஷி.

‘ஐய்யோ ஹிட்லர் இருக்கும் போது மைன்ட் வாய்ஸ் கூட பேச முடியாது போலவே...எல்லாத்தையும் கப்கப்னு பிடிச்சராரு’ என்ற தன்னையே நொந்துகொண்டான்.

ரிஷி தலையாட்டிவுடன் தயாவைப் பார்த்து “அச்சோ…!!அடுத்து நீயா அண்ணா...நான் இந்த ஶ்ரீயை திட்டவே இல்லை போதுமா...ப்பா... விட்டால்...எல்லாரும் கத்தி எடுத்துட்டு அவளுக்காக என்கிட்ட சண்டைக்கு வருவீங்கபோல...எல்லோரிடமும் இந்த மாதிரி பக்கம் பக்கமாக வசனம் பேசறதுக்குள்ள எனக்கு வயசாகிடும்...அதனால் என்னால் முடியாதுப்பா...மீ ரொம்ப பாவம்” என்று கூறி பயந்தமாதிரி நடித்தான்.

இப்போது “டேய் படவா” என்று காதைப் பிடித்து திருகியவர் அவனின் பெரியம்மா யசோதா.தயாவும் ரிஷியும் இதைப் பார்த்து பொங்கி பொங்கி சிரித்தனர்.ஆஆஆஆஆ என்றுவாறு வலியில் கத்தினான் கிருஷ்.

“பெரியம்மா நீங்களும் சேர்ந்துட்டீங்களா...?அப்போ விடு ஜூட்” என்று அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.

கிருஷ் செல்லும் திசையைப் பார்த்து கொண்டே “கிருஷ்...இன்னும் சின்ன பையன்மாதிரியே நடந்துகிறான்...இல்லயா தேவகி…?” என்றார் யசோதா பாசம் நிறைந்த குரலில்.

அதற்கு பதில் ரிஷியிடம் இருந்து வந்தது.“அதெல்லாம் உங்களிடம் மட்டும்தான்...என்னிடம் அண்ணா எப்படி நடந்துகிறார்...பாருங்களேன் பெரியம்மா...எப்போ பாரு திட்டிட்டே இருக்கார்” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்.

“அப்படி இல்லாடா ரிஷி…வீட்டில் அனைவரும் உனக்கு செல்லம் தான் கொடுக்கறாங்கடா…!நீ பிளஸ்டூ படிச்சிட்டு இருக்கும்போது உன் நண்பர்களால் வந்த பிரச்சினையைச் சமாளித்து...நீ இப்போது காலேஜில் படிச்சிட்டு இருக்கேனா…?அதற்கு காரணம் கிருஷ்…!!” என்று கூறி நிறுத்தி,

அவன் தோள் மேல் கைப்போட்டு “இப்போது கூட கிருஷ்...இப்படி நடக்க காரணம்...மறுபடியும் அந்த மாதிரி ஒரு தப்பு நடக்க கூடாதுனு தான்...அதை நினைத்து பார் ரிஷி…கிருஷ் இப்படி நடந்துக்கிறது தப்பே இல்லைனு உனக்கே தோணும்?” என்று கூறி ஆறுதல்படுத்தினான் தயா.
 
“ஆமாம்டா கண்ணா…!!நீ படிச்சி முடிச்சி கம்பெனி எடுத்து நடத்த ஆரம்பிச்சவுடன்...கிருஷ் இந்தமாதிரி கடுமையாக உன்னிடம் நடந்துக்கொள்ளமாட்டான்டா...இதெல்லாம் உன் நல்லதுக்காக தான் கண்ணா” என்று யசோதாவும் சமாதானப்படுத்தினார்.

வேதனையில் கசங்கிய முகத்தைப் பார்த்து தேவகி ரிஷியின் அருகில் சென்று,அவன் தலைக்கோதி நெற்றியில் முத்தமிட்டார்.ரிஷியை ஆறுதல் படுத்த அந்த ஒரு செயல் போதுமானதாக இருந்தது. அதன்பிறகு ரிஷி சமாதானமாகி பிறகு அவன் அறைக்கு சென்றான். தேவகியும் யசோதாவும் சமையல் அறைக்குள் சென்றனர்.

தயா,கிருஷ் இருவரும்...கிருஷ் அவன் அறையிலிருந்து வந்தபிறகு தாத்தாவைத் தேடிச் சென்றனர்.அவரிடம் காலையில் தயா கூறிய விவரத்தை தாத்தாவிடம் சொல்லி...என்ன பண்ணலாம் என்று கேட்டனர்.விவரம் எல்லாம் கேட்டு...எல்லாரும் ஒரு மனதாக...தயாவின் மனைவி வம்சி குடும்பத்துக்கு பணம் தர ஒத்துக்கொண்டார்.அதன்பிறகு உங்க அப்பாவிடம் மட்டும் ஒரு வார்த்தை சொல்லிவிடு தயா என்றார் நந்தன்.

தயாவுக்கு தாத்தா சரியென்று சொல்லியவுடன்...மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...அதை உடனே வம்சியிடம் பகிர்ந்து கொள்வதற்காக… அவன் அறைக்குத் துள்ளி குதித்து ஓடினான்...அதைப் பார்த்த கிருஷ் மற்றும் தாத்தாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது...அவர்கள் மகிழ்ச்சியைப் பார்த்து ராதை பாட்டி என்ன விவரமென்று கேட்டார்… அதற்கு கிருஷ் நடந்ததை கூறினான்.

அதைக் கேட்ட பாட்டி கண்ணில் கண்ணீருடன் “ரொம்ப சந்தோசம்ப்பா...இந்த குடும்பம் இதைப்போல எப்பவும் மகிழ்ச்சியாக இருக்கணும்...எங்கள் காலத்துக்கு பிறகு இந்த குடும்பத்தில் யாருக்காவது பிரச்சினை வந்தால்...நீ தான் தீர்த்து வைக்கணும் கண்ணா” என்றார்.

பாட்டியின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைக் துடைத்துவாறு “ச்சு...என்ன பாட்டி...நீங்க என் குழந்தையுடைய கல்யாணத்தையெல்லாம் பார்ப்பீங்க...அப்புறம் அவங்க குழந்தைகளைப் பார்பீங்க...அதன்பிறகு அவங்க கல்யாணத்தைப் பார்ப்பீங்க...அப்புறம் அவங்க குழந்..என்று சொல்லி கொண்டே சென்றவனை இடமறித்த பாட்டி,

“அத்தாடி…!அவ்வளவு காலம் உயிரோடு இருந்து என்ன பண்ணறது...இது ரொம்ப பெரிய பேராசையா இல்ல இருக்கு…” என்று வாய் மேல் கை வைத்தார்.அதைக் கேட்டு தாத்தாவும் பேரனும் புன்னகைத்தனர்.

இவர்கள் சிரித்துக்கொண்டு இருக்கும்போது அந்த அறைக்குள் ஶ்ரீ நேற்று நடந்த நிகழ்வை மறந்து பழைய துள்ளலுடன் ராதுஉஉஉ என்ற அழைப்புடன் உள்ளே நுழைந்தாள்.

அப்போதுதான் கிருஷ் அங்கு இருப்பதைப் பார்த்து ஶ்ரீநிதி... ராது அழைப்பை நிறுத்தி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.உடனே கிருஷின் புன்னகை மறைந்து கடுமையாக “என்ன வேணும்…?” என்று அதட்டினான்.

அவள் பயத்தில் குரல் நடுங்க “அது...அது...வந்து அத்தான்…” என்றவளை இடமறித்து

“அதான் வந்துட்டியே…!அப்புறம் என்ன வந்து போயினு...?...சீக்கிரம் சொல்லு” என்று மறுபடியும் அதட்டினான்.

அவ்வளவுதான் வந்த குரல் உள்ளே அப்படியே தொண்டையில் சிக்கியது.ஶ்ரீ பாவம் போல் தாத்தாவையும் பாட்டியையும் மாறி மாறி பார்த்தாள்...ஏதாவது செய்யுங்களேன் என்பது போல்.

கிருஷின் தோளில் தட்டி “யேய் கிருஷ்...அவள் சொல்லுறதுக்குள்ள...நீ ஏன் அவளை இடமறிக்கிற…?அப்புறம் அவள் எப்படி சொல்லுவா” என்றார் தாத்தா ஶ்ரீக்கு உதவியாக.

உடனே அவளை முறைத்த கிருஷ் “ஓகே தாத்தா...நான் குளிச்சிட்டு ஆபிஸ் கிளம்பிறேன்” என்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

அவனுக்கு தெரியும் அவன் இங்கு இருக்கும்வரை அவள் வந்த விசயத்தைச் சொல்லமாட்டாள் என்று...அதனால் தான் கிளம்பிவிட்டான்.அவன் போகும்போது...இவளை தீர்க்கமான ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சென்றான்... எவ்வளவு நாள் தான் உனக்கு இவங்க ஆதரவு தராங்கனு பார்க்கலாம் என்று சொல்லாமல் சொன்னது அந்த பார்வை.அந்த பார்வையின் வீச்சைத் தாங்கமுடியாமல் தலைக்குனிந்தாள்.

அந்த பார்வையில் இருந்தது என்ன என்று அவளுக்கு தெரியவில்லை. அதில் கண்டிப்பாக கோபம் இல்லை என்று ஶ்ரீக்கு புரிந்தது… ஆனால் அதைப்பற்றி பிறகு யோசிக்கலாம்...இப்போது வந்த விசயத்தைப் பார்ப்போம் என்று திரும்பி தாத்தாவிடம் பேச ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும்போதே “ஏய் கூறு கெட்ட சிறுக்கி…!இங்க என்ன விசயமாக வந்து இருக்கே…??” என்று பாட்டி அவளை வம்புக்கு இழுத்தார்.

அவள் கிருஷைப் பற்றி யோசனையில் இருந்தனால் சிறுக்கியைக் கவனிக்கவில்லை.இல்லையானால் பாட்டியை அவளும் வம்புக்கு இழுத்து இருப்பாள்.

“தாத்தா ராது இரண்டு பேரும் எழுந்து...சேர்ந்து நில்லுங்க” என்றாள் தீவரமான முகத்துடன்.

பாட்டியும் அவள் ஏதோ முக்கியமான விசயம் பேச வந்து இருக்கிறாள் போல் என்று நினைத்து எழுந்தனர்.அவர்கள் எழுந்து நின்றவுடன் அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.அவர்கள் மனதார ஆசிர்வதித்தனர்.

“தாத்தா...இன்றைக்கு கடைசி செமெஸ்டர்... நான் பிராஜக்ட் ஒழுங்காக பண்ண வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணாங்க...” என்றாள்.

“ஓ...ஆமாமில்லை...ஒவ்வொரு தேர்வுக்கும் நீ எங்ககிட்ட … ஆசிர்வாதம் வாங்குவதுதானே...கேட்டால் ஆசிர்வாதம் வாங்காவிட்டால்...ஒழுங்கா எக்ஸாம் எழுத முடியவில்லை…அன்றைக்கு நாளே நல்லயில்லை...என்று வருத்தப்படுவ” என்று அவளை மாதிரியே பேசி கிண்டல் செய்தார் தாத்தா.

அதை கவனித்த ஶ்ரீநிதி “தாத்தா” என்று சிணுங்கியவாறு…

“நான் சொல்லுவது உண்மை தான் தாத்தா...அப்புறம் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கவில்லையானால் எக்ஸாம் ஒழுங்க எழுதமுடியவில்லைதான்…! என்று உங்களிடம் என்ற வார்த்தையை அழுத்தி கூறி...பாட்டியை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைச் சோகமாக வைத்துவாறே,

“ஆனால் நீங்க வருத்தம்படுவீங்க என்று போன போகட்டுமென்று இந்த ராது கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கினேன் தாத்தா” என்றாள்.

உடனே தாத்தா ஹாஹாஹா என்று சிரித்தார்.முதலில் பாட்டியிற்கு ஒன்றும் புரியவில்லை.

புரிந்தப்பிறகு “அடி கழுதை” என்று பாட்டி அடிக்க கை ஓங்கியவுடன். ஶ்ரீ சிரித்துவிட்டு “வெவ்வவெவ்வே” என்று பழித்துக்காட்டி அந்த இடத்தைவிட்டு ஓடினாள்.

அவள் போனப்பிறகு “பாருங்க...இந்த கழுதையை...என்னை எப்படி சொல்லறானு...” என்று கணவனிடம் ராதை பொறுமினார்.

தாத்தாவும் சிரிப்புடன் பாட்டியைக் கட்டிலின் அருகே அழைத்து “சும்மா ஒரு பேச்சுக்கு தானேடி ராது...நீ ஏன் கோபடறே… என்று கூறியவாறு அவர் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தம் ஒன்றைக் கொடுத்தார்.

அதில் திகைத்து எழுந்தவாறு கணவனை முறைத்து கொண்டே “உங்களுக்கு கொஞ்சமாச்சும் கூறு இருக்க...கொள்ளு பேத்திக்கே கல்யாணம் பண்ணும் வயசு வந்திருச்சி...நீங்க இப்போ போய் இப்படி பண்ணுறீங்க…” என்று கோபமாக கூறினார்.

தாத்தாவும் குறும்புடன் “எப்படி பண்ணுறேன்” என்றார் பதில் கேள்வியாக.அந்த கேள்வியில் அவரின் கோபம் குறைந்து...இந்த வயதிலும் பாட்டியின் முகம் சிவந்தது.

சிவந்த முகத்துடன் “ச்சு...போங்க” என்று அறையிலிருந்து வெளியேறினார்.தாத்தாவின் சிரிப்பு அவரைப் பின்தொடர்ந்தது. வயதின் முதிர்ச்சி முகத்தில் இருந்தாலும் அவர் செயலில் காதல் இருந்தது.இதிலிருந்து காதலுக்கு வயசு இல்லை என்பதை நிருபித்தார்கள்.

இதனை வெளியில் இருந்து ஶ்ரீநிதி கேட்டு மகிழ்ச்சியுடன்...இந்த வயதிலும் இவர்கள் அன்னியோயத்தைப் பார்த்து... நமக்கும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றும்...இதேபோல் இவர்கள் காலம் முழுவதும் வாழ வேண்டும் என்றும் அவளின் இஷ்ட தெய்வமான கிருஷ்ணனிடம் வேண்டுதல் வைத்தாள்.பாட்டி உள்ளிருந்து வரும் இருந்து வரும் அரவம் கேட்டவுடன்...சீக்கிரமாக அந்த இடத்தை விட்டு ஓடினாள்.

ஶ்ரீநிதி தாத்தாவின் அறையிலிருந்து ஓடி மாடிப்படி ஏறினாள். அப்பொழுது பார்த்து கிருஷ் இறங்கிவந்து கொண்டு இருந்தான்.ஶ்ரீ வேகமாக போய் கிருஷ் மேல் இடித்துவிட்டாள்.ஶ்ரீநிதி நிமிர்ந்து யாரென்று பார்த்தாள். அவ்வளவுதான் அவள் மூச்சு நின்றது. அச்சச்சோ…!!இன்றைக்கு எனக்கு செம்ம திட்டு விழப்போகுது என்று பயந்துபோய் அவனை கலக்கத்துடன் பார்த்தாள்.

அதைப்பார்த்து கிருஷ் சிரித்துவிட்டு “ஏய்…!இப்போ எதுக்கு பயப்படுறே...சரி சரி பார்த்துபோ...ஆல் தி பெஸ்ட்,ப்ராஜக்ட் நல்லப்பண்ணு” என்றான் வேகமாக.

என்னடா உலக மகா அதிசயமாக இருக்கு...இவரு திட்டுவாருனு பார்த்தால் சிரிக்கறாரு…என்று தன் போக்கில் யோசித்து கொண்டிருந்தாலும்...பதிலுக்கு வாய் தானாக “சரி அத்தான்” என்றது. அவனும் தலையாட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

ஶ்ரீநிதி அவனைத் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவள் அறைக்குள் நுழைந்தாள்.அவள் எதிர்பார்த்தமாதிரி கட்டிலின் மேல் பென்டிரைவ் இருந்தது.அவள் பள்ளி படிக்கும்போதிலிருந்தே… ஒவ்வொரு எக்ஸாமின் போதும் அவளுக்கு இந்தமாதிரி ஏதாவது ஒரு சின்ன பொருள் கட்டிலின்மீது இருக்கும்...இதை யார் முதலில் இங்கு வைப்பது என்று தெரியாமல் இருந்தது...ஆனால் ஒரு முறை இதை கிருஷ்தான் இங்கு வைக்கிறான் என்பதை அவள் அறிந்துக்கொண்டாள்.

இருந்தாலும் இதை நேரடியாக அவனிடம் கேட்க பயம்.அவளும் இதை அடுத்தடுத்த தருணங்களில் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.அவளுக்கு இந்த அவன்தரும் பொருள் ராசியாக இருந்தது, அதனால் அவள் இதை எதிர்ப்பார்த்தாள்.

சிலமுறை அவளே “ஶ்ரீ…!நீ இவ்ளோ படிச்சி இருக்கே…!!இந்த சின்ன விசயத்துக்காக எதுக்கு இவ்வளவு சந்தோஷப் படுறே…?உனக்கு இது ஓவரா இல்லை...நீயெல்லாம் என்னத்தே படிச்சி கிழிச்சி பட்டம் வாங்க போறியோ...என்று மனதிற்குள் அவளை அவளே திட்டயது கூட உண்டு...இருந்தும் அதை ஒதுக்கிவைத்து விட்டு கிருஷ் கொடுத்த இந்த சின்ன பொருளைத் தான் பாஸ் ஆவதற்கு காரணம் என்று நிச்சயமாக நம்பினாள்.

அந்த சந்தோசத்துடன் பெற்றோர் அறைக்கு சென்றாள்.அவர்கள் இன்னும் எழுந்து கொள்ளவில்லை என்பதை தெரிந்து கொண்டு காலேஜிக்கு கிளம்பினாள்.நேற்று இரவு தாமதமாக தூங்கியதால் அவர்கள் இன்னும் எழுந்துகொள்ளவில்லை.

ஶ்ரீநிதி கல்லூரிக்கு செல்லும்முன் யசோதாவிடம் ஜானகியிடம் தான் கல்லூரி சென்று விட்டதை சொல்ல சொல்லி சென்றுவிட்டாள்.

ஒரு 7.30 மணி அளவில்,குந்தவை கைப்பேசியில் “மீராம்மா...எப்ப வரப்போவதாக இருக்கே கண்ணு” என்றார் உருகிய குரலில்.

உடனே மீரா “அப்பாயி...நாளைக்கு வந்துவிடுவேன்...ஏன் கேட்கிறீங்க…?” என்றாள் மீரா புரியாத பாவனையுடன்.

“சீக்கிரம் வந்துவிடு கண்ணு...அப்பா என்னை ரொம்பத் திட்டினார்” என்றவுடன் இடைமறித்து “அவர் எதுக்கு உன்னைத் திட்டினார் அப்பாயி” என்று பரபரத்தாள்.

“நீ பிரெண்ட்ஸ் கூட டிரிப் போனதுக்காகத் தான் மீராம்மா...நான் தான் உன்னை அனுப்பிவைத்தேன் என்று தாத்தாவுக்கு தெரிந்துவிட்டது… அதற்காக தான்” என்றார் குந்தவை.

மீரா கடுப்புடன் “இந்த நந்தன் தாத்தாக்கு வேற வேலையே இல்லையா…?அவருக்கு எப்பவும் ஶ்ரீ தான் செல்லம்...அவள் என்ன பண்ணினாலும் திட்ட மாட்டார்...ஆனால் நான் ஏதாவது செய்தால் மட்டும் அவருக்கு தப்பாக தெரியும்” என்று பொறிந்தாள் வெளியில்.

ஆனால் உள்ளுக்குள் ‘மீரா…!ஶ்ரீ ஒரு நாளும் தாத்தா பேச்சை மீறியது இல்லை...பட் நீ அப்படியா…’ என்று கேள்வி கேட்ட மனதை தட்டி அடக்கினாள்.

அதற்குள் இந்த பக்கம் குந்தவை “அச்சோ கண்ணு...அப்பாவை நான் சமாளிச்சிட்டேன்...நீ ஜாக்கிரதையா இரு…ஆனால் சீக்கிரம் வந்திடு” என்று ஆறுதலாகக் கூறினார்.

கைப்பேசியிலே முத்தம் ஒன்றை கொடுத்தவள் “மை ஸ்வீட் அப்பாயி...எனக்கு தெரியும் நீங்க சமாளிப்பிங்கனு…!தேங்கஸ் ஸ்வீட்டி...ஓகே பை” என்று கொஞ்சுவிட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்தாள்.

அதேநேரம் சமையலறையில் ஜானகி யசோதாவிடம் “ஶ்ரீ எங்கம்மா…?” என்று வினவினார்.

யசோதா “அவள் காலேஜ் கிளம்பிட்டாள்மா...போகும்போது உன்கிட்ட சொல்ல சொல்லிதான் போனாள்...நீ இப்போதான் எழுந்தியா…?” என்று கேட்டார்.

ஜானகி ஓ...கிளம்பிட்டாளா அவ்ளோ நேரமாத் தூங்கி இருக்கோம் என்று மனதிற்குள் நினைத்து வெளியில் “ஆமாம் அம்மா...நைட் தூங்க லேட் ஆச்சு ...அதான் காலையில் நேரம் கழிச்சு எழுந்தேன்” என்றார் ஶ்ரீயைப் பார்க்கமுடியவில்லை என்ற ஏமாற்றத்துடன்.

சுமார் 8.30மணி அளவில் அந்த வீட்டின் வரவேற்பரையில் வீட்டின் ஆண்கள் சோபாவில் அமர்ந்து ஒன்றாக கூடி தீவிர விவாதித்தில் இருந்தனர்.

முதலில் கிருஷ்தான் விவாதத்தை ஆரம்பித்தான்.“தாத்தா இன்றைக்கு ஒரு முக்கிய செய்தி தெரியுமா...?....அடுத்தவாரத்திலிருந்து பெட்ரோல்,டீசல் விலை அதிகமாக போகுது...” என்றான் கிருஷ்.

“ஆமா அப்பா...இதனால் நம்ப டிரான்போர்ட் பிசினஸ் கொஞ்சம் நஷ்டப்பட வாய்ப்பு இருக்கு” என்றார் ரகுநந்தன் ஆதங்கத்துடன்.

“அதனால் விலை நிர்ணயம் அதிகம் பண்ணனுமா கிருஷ்?” என்று கிருஷிடம் வினவினார் நந்தன்.

“ஆமாம் தாத்தா...அதுமட்டுமில்லாமல் பேருந்து கட்டணம் கூட உயரப் போகுது தாத்தா” என்றான் கிருஷ் மற்றுமொரு செய்தியுடன்.

“இதனால் நடுத்தர வர்க்க மக்கள் ரொம்பப் பாதிக்கப்படுவார்கள் அப்பா” என்றார் கிருஷின் அப்பா தனநந்தன் வேதனையுடன்.

அதற்கு பதிலாக “அரசாங்கம் இதன்மூலம் நம்மைப் போல் இருக்கும் தனியார் நிறுவனங்களை...விலையேற்றத்தை அதிகப்படுத்த நிர்ப்பந்தம் படுத்துகிறது தாத்தா...இதனால் கீழ்மட்ட தொழில் செய்யும் ரென்ஸ்போர்ட்க்கு அதிக நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது தாத்தா” என்றான் கிருஷ் ஒரு வித இயலாமையுடன்.

“ஆமா தாத்தா...இதன்மூலம் நேர்மையான பல நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ரொம்பவும் பாதிக்கப்படுவார்கள்” என்றான் தயா மனகுமறலுடன்

அதன்பிறகு அவனே ஒரு யோசனை செய்து “பேசாமல் இதை நாம் பின்பற்றாமல் விட வேண்டியதுதான்...இதுக்கு ஓரே வழி தாத்தா” என்றான் தயா ஒரு வழி கிடைத்த திருப்தியுடன்.

“ஆனால் அண்ணா...நாம் மட்டும் அரசாங்கத்தை ஏதிர்த்து ஒண்ணும் பண்ணமுடியாது...அதுமட்டுமில்லாமல் தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒருமனதாக இந்த சட்டத்தை எதிர்த்தால் மட்டும்தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்” என்று ஒரு வழியை கூறினான் கிருஷ்.

“ஆமா தயா...கிருஷ் சொல்லுவது சரிதான் கண்ணா.ஆனால் நம்மால் முடிந்ததை நமது வாடிக்கையாளருக்கு செய்ய வேண்டியதுதான்.நாம் நம் பேருந்தில் பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டியதைப் பற்றி சங்கத்தில் பேசி முடிவு எடுக்கலாம்” என்றார் முடிவுடன் நந்தன்.

“ஆனால் அப்பா…!பெட்ரோல்,டீசல் விலை அதிகமாக இருக்கு அப்பா… அதனால் நாம் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லையானால் நமக்கு பயங்கர நட்டம் ஏற்படும்” என்றார் ரகு வேதனையான குரலில்.

“பெரியப்பா அதற்காக நாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றமுடியாது… நமக்கு கொஞ்சம் நஷ்டம்தான்...அதை நாம் சமாளிக்கலாம் பெரியப்பா...வெளிநாட்டு
ஏற்றுமதியில் செய்யும் பொருளின் விலையை நாம் கொஞ்சம் அதிகமாக்கினால் நாம் நஷ்டத்தை சமாளிக்கலாம்” என்றான் கிருஷ் ஒரு யோசனையுடன்.
“சரிப்பா கிருஷ்...ஆனால் அதன்பிறகு அவங்க நம்முடைய கான்ரேக்ட்டை நீக்கிவிட்டால் என்னப்பா செய்வது… வாடிக்கையாளர்க்காக பார்த்துட்டு நமக்கு ரொம்ப நஷ்டம் ஆகப்போகுது” என்றார் கிருஷின் பெரியப்பா ரகு கவலையுடன்.


“அப்படியெல்லாம் எதுவும் ஆகாதுப்பா...நாம் அவர்களுக்கு நல்ல தரமான பருத்தி உடைகளைத்தான் ஏற்றுமதி செய்கிறோம். அதுமட்டுமில்லாமல் மார்க்கெட் ரேட்டுக்கு கொஞ்சம் குறைவு தான் நாம் நிர்ணயித்திருக்கும் விலை...சோ...நாம் கொஞ்சம் அதிகமாக நிர்ணயத்தாலும் ஒண்ணும் அவர்களால் சொல்லமுடியாது.அப்படியே எதுவும் பிரச்சினை வந்தால் நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன். அவர்களுக்காக நம் வாடிக்கையாளர்களை கஷ்டப்படுத்த முடியாது பெரியப்பா” என்று முடிவாக கூறினான் கிருஷ்.


“ரகு கிருஷ் சொல்லுவதுதான்...என்னுடைய முடிவும்.அதனால் இதனை இத்துடன் விட்டு விடுவோம்.ஏதோ பிரச்சினை வந்தால் கிருஷ் அதனை சமாளிப்பான்...கிருஷ் நீ சங்கத்தில் மட்டும் பேசிவிட்டு என்னிடம் சொல்லுப்பா” என்றார் நந்தன் முடிவாக.அதன்பிறகு யாரும் எதுவும் பேசவில்லை.


“ஓகே...எல்லாரும் ஆபிஸ் கிளப்புங்க” என்றார் நந்தன்.அனைவரும் பிரிந்து சென்றனர்.கிருஷ் சாப்பாட்டு மேஜைக்கு சென்றான். அப்பொழுது அங்கு வந்து யசோதா கிருஷிற்கு பரிமாறினார்.


கிருஷிற்கு சாப்பாடு பரிமாறிவிட்டு அவன் கன்னத்தைத் தொட்டு வழித்து “உன்னைமாதிரி பிள்ளை பெற ரொம்பக்கொடுத்து வச்சிருக்கணும்ப்பா. நீங்க பேசுவதைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தேன்.நீயும் தயாவும் நம் மக்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசினீங்க.ஆனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நீ சொன்ன யோசனையைக் கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்ணா” என்றார் பெருமை பொங்க.அந்த இடத்தில்தான் தேவகி மற்றும் ஜானகியும் இருந்தார்கள்.இதை பெருமையாக பார்த்திருந்தார்கள்.


தேவகி “அக்கா கிருஷ் நீங்க வளர்த்த பையன் வேற எப்படி இருப்பான்” என்றார் யசோதாவிடம்.


கிருஷ் “அச்சோ அம்மாக்களே…!இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை.இது ஒரு சாதாரண செயல்,நீங்க இதை இவ்வளவு பெருசா பேசிறே அளவுக்கு நான் ஒண்ணும் பண்ணவில்லை” என்றான் சலிப்புடன்.


“அடப்போப்பா...இது எங்களைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா...?.எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கு” என்றனர் ஒரு சேர இருவரும்.


“கிருஷ் இரண்டு பேரும் விட்டால் உனக்கு பாராட்டு விழா நடத்துவார்கள் போலடா...பெரிய மேடைப் போட்டு...மைக் செட் வைத்து...பெரிய பெரிய போஸ்டர் வச்சு...உன்னை தலைவர் ஆக்கிருவாங்கள் போலடா...” என்றாள் ஜானகி நக்கலாக.நக்கல் செய்தாலும் அவளுக்கும் இது பெருமையே என்பது குரலில் தெரிந்தது.


“அக்கா! என்ன கிண்டல் பண்ணுறியா…?தயா அண்ணாதான் முதலில் இதைச் சொன்னது உங்களுடைய பாராட்டு மற்றும் கிண்டல் செல்ல வேண்டியது அவரிடம்.சோ...அவருக்கிட்ட சொல்லுங்கள்.ஓகே நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்...ஆபிஸ் கிளம்பணும்” என்று விடைப்பெற்று மேலே சென்றான்.


கிருஷ் அவனுடைய அறைக்குள் சென்று அவனின் அலமாரியைத் திறந்து அதிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தான்.அதை எடுத்து கையில் வைத்து,தனக்குள் ஏதோ கூறினான்.பிறகு அதை அலமாரியில் பாதுகாப்பாக வைத்து பூட்டிவிட்டு,குளியல் அறைக்குள் நுழைந்தான்.


உடை மாற்றி கீழே இறங்கிவந்து கொண்டிருக்கும் கிருஷ் சாம்பல் நிற பிளேசரும் அதே நிறத்தில் பேன்டும் அணிந்து பிளேசருக்குள் வெள்ளை நிற சட்டையும் அதற்கு ஏற்றார் போல் சிவப்பு நிற டை அணிந்து கம்பீரமாக நடந்து வந்த கொண்டு இருந்த மகனின் அழகை ரசித்து கொண்டு இருந்தார் தேவகி.அதை கவனித்து கண்களால் என்ன என்றான் அம்மாவைப் பார்த்தவாறு.


“ஒண்ணும் இல்லை கண்ணா...என் பையன் எவ்வளவு அழகுனு பார்த்து ரசிச்சிட்டு இருக்கேன்” என்றார் பூரிப்புடன்.


“அம்மா…!போங்கம்மா...உங்களுக்கு வேற வேலையே இல்லை… சரிம்மா பை.அம்மா ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு...அதனால் நான் கிளம்பிடேனு...தாத்தாக்கிட்ட சொல்லிவிடுங்கள்” என்று கூறி அவசரமாக கிளம்பினான்.


அவன் சென்றபிறகு விசு சாப்பிட அமர்ந்தார்.அவருக்கும் விசயம் பரிமாறப்பட்டது.அவருக்கும் கிருஷை நினைத்து பெருமையே. அதன்பிறகு வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.அவர்கள் ஒவ்வொருவராக சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றனர்.


கிருஷ் அவன் அலமாரியில் இருந்தது என்ன…?அதை ஏன் மறைத்து வைத்தான்…?அதனிடம் என்ன கூறினான்...அப்படி அதில் இருந்தது என்ன…?
 
அத்யாயம் 4:
ஶ்ரீ சேலத்தின் மிகப்பெரிய கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி கடைசி வருடம் படிக்கிறாள்.அவளுக்கு நகை வடிவமைப்பதில் மட்டுமல்லாமல் ஆடைவடிவமைப்பதிலும் ஆர்வம் அதிகம்...அதனால் விருப்பத்தோடு இந்த ஆடை வடிவமைப்பு துறையைத் தேர்வு செய்தாள்.நந்தன் டெக்ஸ்டையல்ஸை பார்த்து கொள்ளும் பொறுப்பை ரிஷிக்கும் நகை கடையைப் பாரத்து கொள்ளும் பொறுப்பு ஶ்ரீநிதிக்கும் தர முடிவு செய்துள்ளனர்.இருவரின் படிப்பு முடியும் வரை நகை கடையையும் துணிக்கடையையும் பார்த்து கொள்ளும் பொறுப்பு கிருஷிடம் உள்ளது.

காலை 8.30 மணி அளவில் ஶ்ரீ அவள் கல்லூரிக்குள் நுழைந்தாள். அவளுக்காக அவளுடைய தோழி கீதா அங்கு இருந்த ஒரு மரத்தின் அடியில் உள்ள கல் பெஞ்சில் உட்கார்ந்தவாறு ஶ்ரீநிதிக்காக காத்திருந்தாள்.ஶ்ரீ அவளைப் பார்த்து உற்சாகத்துடன் “ஹாய் கீது” என்றவாறு அவள் அருகில் சென்றவுடன்,

கீதா அவசரமாக பெஞ்சிலிருந்து எழுந்தவாறு “ஶ்ரீ...பிராஜக்ட் அறிக்கை படிச்சிட்டியா...?எனக்கு ரொம்ப பயமா இருக்கு...நமக்கு இது கடைசி செம்...இதில் நான் பாஸானால் தான் நல்ல வேலை கிடைக்கும்… இல்லையெனில் எங்க வீட்டில் எனக்கு கல்யாணம் பண்ணிவச்சிருவாங்க...இந்த கோர்ஸ் எடுக்க வேண்டாம்னு எல்லாரும் சொன்னாங்க...நான் தான் பிடிவாதமாக இந்த கோர்ஸ் எடுத்து படிச்சேன்.நான் பிராஜக்ட்டை விளக்கமாக எடுத்து சொல்லிருவனா…??எனக்கு எதுவும் நினைவு இருக்கறமாதிரி தெரியலைடி...?நா...நான் பாஸ் ஆகிடுவேனா ஶ்ரீ…” என்று படபடப்பாக பேசி கடைசியில் ஒரு வித தவிப்புடன் வினவினாள் ஶ்ரீநிதியுடைய நெருங்கிய தோழி.

ஶ்ரீ அவளைப் புன்னகையுடன் பார்த்து தோளோடு அணைத்து “ஏய்...கூல்...கூல்...எதுக்கு இவ்வளவு பதற்றம்...?இங்க பாரு...நீ இவ்வளவு பயப்பட தேவையில்லை…அடுத்து பயப்பட்டால் உனக்கு தெரிந்தது கூட மறந்திடும்… சோ...நீ தைரியமாக இருந்தால் தான் பிராஜக்ட்டை ஒழுங்கா எடுத்து சொல்லமுடியும்…நாம் பிராஜக்ட் நல்ல பண்ணி இருக்கோம்...சோ...நோ வொரிஸ்...அதுமட்டுமில்லாமல் வேலை பற்றி நீ கவலைப்பட தேவையில்லை...எங்க டெக்ஸ்டைல்ஸில் உனக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும்” என்று அவளுக்கு தைரியம் கூறினாள்.

கீதா அதில் சற்று தெளிந்து ஶ்ரீயை வம்புக்கு இழுத்தாள் “யெஸ்டி...நான் எதுக்கு வருத்தப்படணும் என் கூட தான் யூனிவர்சிட்டி கோல்ட் மெடல் ஸ்டூடண்ட் நீ இருக்கியே...நான் ஏதோ நடுவில் சொதப்பினால் கூட சமாளித்து என்னை தேற்ற நீ என்கூட இருக்கே...அப்புறம் கிருஷும் கூட இருக்கார்” என்று குறும்புடன் கூறினாள்.

அவள் எதிர்பார்த்தமாதிரி கீதாவைப் புரியாமல் ஒரு பார்வைப் பார்த்து “நாம் இன்னும் தேர்வே எழுதவில்லை அப்புறம் எப்படி கோல்டூ மெடல் ஸ்டூடண்ட்னு சொல்லுறே…?அப்புறம் அத்தான் எப்போது நமக்கு உதவி பண்ணறேனு சொன்னார்...இப்ப அவர் ஆபிஸிலில்ல இருப்பார்… அதுவுமில்லாமல் நம்முடைய கல்லூரியில் யாரையும் நமக்கு உதவி பண்ணவதற்கு அனுமதிக்கமாட்டாங்க...அப்புறம் எப்படி அத்தான் நமக்கு உதவி பண்ணுவார்” என்று கூறினாள்.

கீதா எதிர்பார்த்தது இதுதானே அதனால் உதட்டில் குறுஞ்சிரிப்புடன் “ஏய் லூசு...நீ கோல்ட் மெடல் வாங்குவே என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு...அப்புறம் நான் சொன்னது காட் கிருஷ்ணனைப் பற்றி...நீ உங்க அத்தான் கிருஷை நினைச்சிட்டியா...??எப்ப பார்த்தாலும் அவர் நியாபகம் தான்டி உனக்கு...திட்டறாரு திட்டறாருனு சொல்லிட்டு...அவரையே நினைச்சிட்டு இருக்கே” என்றவுடன்,

அவளை கையில் இருக்கும் புத்தகத்தை வைத்து ஒரு அடி அடித்துவிட்டு “ஏய் எருமை…!என்னை கிண்டல் பண்ணறியா...?பாவம் புள்ளை ரொம்ப பயப்படுது என்று ஆறுதல் சொல்ல வந்தால்...என்னையே நீ கிண்டல் பண்ணிறியா…?லூசு,இதை அத்தான் மட்டும் கேட்கணும்...அவ்வளவு தான்டி நீ” என்றாள் கடுப்புடன் அவளை அடித்துகொண்டே.

“ஏய்...போதும்…போதும்...நிறுத்து என்று ஒற்றை கை நீட்டி அவளைத் தடுத்து,

மிஸ் ஶ்ரீநிதி அவர்களே…!ஒன்று மட்டும் உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன்...கிருஷ் உனக்கு தான் அத்தான்...எனக்கு இல்லை...அதனால்...நீ தான் உங்க அத்தானுக்கு பயப்படணும்...நான் எதுக்கு பயப்படணும்...என்னை அவர் ஒண்ணும் பண்ணமுடியாது” என்று கட்டை விரலை மட்டும் நிமிர்த்து காட்டி கையை அவள் முன் ஆட்டி காட்டினாள்.

அதில் ஶ்ரீ அவளைப் பார்த்து நக்கலாக சிரித்து “ஓ...அப்படியா செல்லகுட்டி...அது சரி…கிருஷ் என் அத்தான் தான்…!அதை நான் ஒத்துகிறேன்...அப்பறம் ஏன் நீ என் வீட்டுக்கு வந்தால்...அத்தானைப் பார்த்து அந்த பம்பு பம்பறே…??அதுவுமில்லாமல் உனக்கு வேலை தர போறது கிருஷ் அத்தான் தான்...அதனால் அதை மனதில் வைத்து பேசு செல்லக்குட்டி” என்று வார்த்தைகளில் ஏற்ற இறக்கத்துடன் நக்கலாக கூறினாள்.

கீதா அதிர்ச்சியுடன் “என்னது????கிருஷ் தான் வேலை கொடுப்பாராஆஆஆ…???” என்று பீதியுடன் உறைந்து நின்றாள்.

ஶ்ரீ அவளின் நிலைமைப் பார்த்து ஹாஹாஹா என்று சிரித்தவிட்டு “கீதா” என்று அழைத்து அவளை அதிர்ச்சியிலிருந்து மீட்டு “இப்போ எதுக்கு பயப்படறேடி…??நாம் பிராஜக்ட் நல்லா பண்ணிருக்கோம்… அந்த பிராஜக்ட்டை வைத்து கண்டிப்பாக உனக்கு வேலைக் கிடைக்கும்...நீ நல்ல படியாக இன்டர்வியூ அட்டண்ட் பண்ணுவடி… எனக்கு நம்பிக்கை இருக்கு…ஏனெனில் நீ என் நண்பண்டா…சீச்சி..சீச்சீ..தப்பு நண்பிடி” என்று தோள் மேல் கைப்போட்டு இன்னும் வெறுப்பேற்றினாள்.

கீதா எரிச்சலுடன் “ஏய் போடி...என்று அவள் கையைத் தட்டிவிட்டு

நான் ஒண்ணும் இன்டர்வியூக்கு பயப்படவில்லை...கிருஷை நினைத்தால் தான் பயம்...எல்லாம் உன்னால்தான்...என்னமோ...நீ அவரைப் பற்றி சொல்லி சொல்லி எனக்கும் பயம் வந்துவிட்டது… அவரைப் பார்த்தலே ஏதோ வில்லன் ஃபீலிங் தான் வருது...இந்த லட்சணத்திலே அவர் தான் வேலைக் கொடுப்பாரா??அவர் முன்னாடி போய் நின்னவே எனக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பித்துவிடும்...அப்புறம் எப்படிடி இன்டர்வியூ அட்டன்ட் பண்ணறது…??வேலைக் கிடைக்கிறது…!!” என்றாள்.

ஶ்ரீ அவள் முகத்தைப் பார்த்து கலகலவெனச் சிரித்தாள்.கீதா அவளை முறைப்பதைப் பார்த்து,சிரிப்பை நிறுத்த முயன்றும் முடியாமல் சிரிப்புடன் அவள் கையைப் பிடித்துக்கொண்டு “சரி… சரி ...வா...அதெல்லாம் பயப்படாதே...நான் தாத்தாகிட்டே பேசுகிறேன்...கிருஷ் அத்தானிடம் தாத்தா உனக்காக பேசுவார்” என்று சமாளித்து அழைத்து சென்றாள்.

அதேநேரம் ரிஷி அவன் நண்பர்களுடன் வெளியே சுற்றிக் கொண்டு இருந்தான்.அவன் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.ரிஷி யாரது என்று தன் கைப்பேசியை எடுத்து பார்த்தான்.அதில் மின்னிய பெயரைப் பார்த்தவுடன்,

உடனே நண்பர்களை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு போனை ஆன் செய்து காதில் வைத்து “சொல்லு அண்ணா…”

கிருஷ் “எங்கடா இருக்கே…?”அவன் குரலே சொன்னது அவன் கோபத்தின் அளவை.

அந்த கோபத்தில் பயந்து “அண்ணா...நான் பிரண்ட்ஸ் கூட வெளியே வந்துருக்கேன்...என்ன அண்ணா...எதாவது வேண்டுமா...?”

ரிஷி மனதில் ‘நான் இன்னைக்கு தொலைஞ்சேன்...பிரண்ட்ஸ் கூட சுத்ததேனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்னு அறிவுரைச் சொல்லியே அறுக்க போறான்’ என்று நினைத்தான்.

அதற்குள் கிருஷ் எரிச்சலாக “அது எனக்கு தெரியும்...இப்போது தான் அம்மாக்கு போன் செய்து தெரிஞ்சிக்கிட்டேன்...நான் கேட்டது...இப்போது சரியாக நீ எங்கே இருக்கே…?...”

அடுத்து அவன் எதுவும் கேட்பதற்குள் “அண்ணா...நான் சேலம் டவுன் வந்து இருக்கேன்” என்றான் அவசரமாக.

“அப்போ சரி...இன்னும் நீ அரைமணி நேரத்தில் நம்முடைய அரிசி மில்லுக்கு வரணும்” என்றான் கட்டளையாக.

அவனும் “ஓகே...அண்ணா வரேன்” என்று கூறி காலை கட் செய்தான்.

‘இவர் ஒருத்தர் எப்ப பார்த்தாலும்...நான் பிரண்ட்ஸ் கூட வெளியே வந்தால் போதுமே...மூக்கில் வேர்த்தார் போல...எங்க இருக்கடா ரிஷினு…??கேட்டு போன் பண்ணிருவாரு’ என்று மனதிற்குள் கிருஷைத் திட்டினான்.

இருந்தும் நண்பர்களிடம் அண்ணனை விட்டுக்கொடுக்க விரும்பாமல் தான் பேசுவதைப் பார்த்திருந்த நண்பர்களிடம் “ஓகேடா...பை...சாரி மச்சான்...எனக்கு வீட்டில் ஒரு முக்கியமான வேலை இருக்கு...வில் கெட்ச் யூ கெய்ஸ் லேட்டர்” என்று மட்டும் கூறி விடைப்பெற்று காரில் ஏறி மில்லுக்கு சென்றான்.

கிருஷ் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ரிஷி மில்லில் இருந்தான்.மில்லிற்குள் நுழைந்து கிருஷின் அறை கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

ரிஷி உள்ளே நுழைந்தவுடன் கிருஷ் தன் சுழல் நாற்காலியில் இருந்தவாறே நிமிர்ந்து “ரிஷி ஸ்டடி லீவ் விட்டு இருக்காங்க...இந்த நேரத்தில் நீ ஆபிஸ் வந்தால் தான் பின்னாடி நிர்வாகம் பண்ணும் போது எளிதாக எல்லாம் புரிய ஆரம்பிக்கும்.நீ என்னடானா… லீவ் விட்ட உடனே பிரண்ட்ஸ் கூட சுத்த கிளம்பிட்ட...எப்ப தான்டா உனக்கு பொறுப்பு வரும்.நீ இப்படியே இருந்தால் எப்படி நாங்க உனக்கு பொறுப்பு தர முடியும்…?” என்று வினவினான் தம்பியிடம்.

ரிஷி தலைக்குனிந்தவாறு “சாரி அண்ணா...நாளையிலிருந்து உன் கூட ஆபிஸ் வரேன்” என்றான் மெதுவாக.

‘கொஞ்சநாள் நான் ஜாலியா இருக்கலானா… விடமாட்டார் போலவே...கிருஷ்னு பேரை வைச்சிட்டு...இவரும் என்ஜாய் பண்ணமாட்டார்...நம்பளையும் என்ஜாய் பண்ணவிடமாட்டார்… இவரைக் கூட வச்சிட்டு ஒரு பொண்ணைக்கூட சைட் அடிக்க முடியலை...கடவுளே கிருஷ்ணா! இவருக்கு தம்பியாக எதுக்கு என்னை பிறக்கவச்சே...நீ மட்டும் என் கையில் கிடைச்சே அவ்வளவு தான் நீ…’ என்று முணுமுணுத்து பற்களை நறநறவெனக் கடித்தான்.

ஏதோ வேலையாக கீழே குனிந்து இருந்தவன் இவனின் சம்பாஷனைகளைக் கவனிக்கவில்லை.சிறிது நேரம் கழித்து கிருஷ் அவனை நிமிர்ந்து பார்த்து “சரி...சரி… நாளையிலிருந்து என் கூட ஆபிஸ் வா...கோபியை உனக்கு எல்லாம் கற்று தர சொல்லுறேன்.ஆனால் நீ ஒழுங்கா எல்லாவற்றையும் கவனிக்கணும் சரியாடா…?தேர்வு முடிந்த ஒரு வாரத்தில் நீ முழு பொறுப்பை எடுத்துக்கணும்...அதனால் கவனமாக எல்லாத்தையும் பார்த்து வைத்துக்கொள்...அப்புறம் அது தெரியலை இது தெரியலை அப்படினு என்கிட்ட சொல்லக்கூடாது...ஏதாவது பெரிய விசயமாக இருந்தால் மட்டும் என்கிட்ட வந்து கேளுடா...என்ன புரியுதா…??” என்றான் அதிகாரமாக.

புரியுது என்று ரிஷி தலையை மட்டும் ஆட்டினான்.

தலையாட்டுவதைப் பார்த்து அவன் இருக்கையில் இருந்து எழுந்துவாறு “தலையை மட்டும் ஆட்டு ஆட்டுனு ஆட்டுறே...ஒழுங்காக புரிந்தால் சரி...சரி இன்னைக்கு என் கூடவா…!நான் அப்பாக்கிட்ட உன்னைவிட்டுவிட்டு அப்படியே கோபிகிட்ட உனக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்க சொல்லிவிட்டு வரேன்” என்று கிருஷ் ரிஷியை நந்தன் டெக்ஸ்டைல்ஸ்க்கு அழைத்து சென்றான்.

அன்று மதியவேளையில் ஶ்ரீநிதி மற்றும் கீதா அவர்கள் நண்பர்களுடன் அன்றைய பிராஜக்ட் நன்றாக முடிந்த திருப்தியுடன் பேசிவிட்டு அவர்களிடம் விடைப்பெற்றனர்.

அதன்பிறகு கீதா “ஓகேடி...நாம் திங்கள்கிழமை பார்க்கலாம்” என்று முக மலர்ச்சியுடன் விடைப்பெற்றாள்.

“ஸ்யூர்டி..பை மீட் பண்ணலாம்” என்று விடைப்பெற்றாள் ஶ்ரீ. அவளுக்காக டிரைவர் கேட் அருகில் காருடன் காத்திருந்தார்.இவர் எதற்கு வந்திருக்கார் ரிஷியா தானே வரச்சொன்னேன் என்று அவரை யோசனையுடன் பார்த்தாள் ஶ்ரீ.

பார்த்துவிட்டு காரில் ஏறி டிரைவரிடம் “மணி அண்ணா...ரிஷி எங்கே...??” என்று கேட்டாள்.

“தம்பி...பிரண்ட்ஸ் கூட வெளியே போயிருக்கார் ஶ்ரீம்மா… போகும்போது என்கிட்ட உங்களை கல்லூரியில் இருந்து அழைத்து வர சொன்னார்” என்றார்.

வெளியில் ஓ என்று விட்டு மனதிற்குள் ‘என்னைவிட உன் பிரண்ட்ஸ் கூட சுற்றுவது தான் முக்கியமா??வாடி...உனக்கு இருக்கு இன்னைக்கு’ என்று கறுவினாள்.

இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த ரிஷியிடம் ஶ்ரீநிதி எதுவும் பேசவில்லை. அவனைப் பார்த்த உடனே ஶ்ரீநிதி தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இப்படியாக இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் இரவு 9.30 மணி வரைத் தொடர்ந்தது.எல்லாரும் சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றபிறகு ரிஷி ஶ்ரீயிடம் பேச அவளை பின் தொடர்ந்தான்.வாணி இவர்களின் சம்பாஷனைகளை ரொம்ப நேரமாகக் கவனித்து கொண்டு இருந்தாள்.

ஶ்ரீநிதி அவள் அறைக்கு செல்லுவதற்கு முன் அவளிடம் பேச எண்ணி நகர்ந்த வேளையில் வாணி ரிஷியிடம் “என்ன அத்தான் பண்ணீங்க…??அக்கா ரொம்ப சூடாக இருக்கா...ஏதாச்சும் தப்பு பண்ணிங்களா…? நீங்க பேசாமல் உங்க ரூமுக்கு போங்க… இல்லையெனில் அவள் இருக்கும் கோபத்திற்கு உங்களை எரித்து சாம்பல் ஆக்கிடுவாள்...இது உங்களுக்கு நான் குடுக்கிறே...ஃபிரி அட்வைஸ்...கேட்ட கேளுங்க...கேட்காட்டி போங்க…!!” என்று இன்னும் வெறுப்பேற்றிக் கண்ணடித்தாள்.

ரிஷி அவள் கையை பிடிக்கபோக அதிலிருந்து தப்பிக்க நினைத்து ஓட போனவளின் கையைப் பிடித்து “ஏய்...நீ வேற...நானே அவளை எப்படி சமாளிக்கலாம்னு இருக்கேன்...நீ வேற என்னுடைய நிலைமைத் தெரியாமல் வெறுப்பேத்திட்டு இருக்கே…??” என்று அவன் பால் ஶ்ரீநிதியைப் பார்த்து கொண்டே வாணியிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

ஆனால் இங்கே வாணியின் நிலைமைதான் ரொம்ப மோசமாக இருந்தது.ரிஷி அவள் கையை பிடிப்பதற்காக தனது கையைக் கொண்டு செல்ல, அதிலிருந்து தப்பித்து ஓட நினைத்தவளின் கையை...அவளைச் சுற்றி வளைத்து அவள் கையைப் பிடித்திருந்தான்.கிட்டதட்ட முழுவதுமாக அணைத்த நிலை.அதனால் வாணி திகைத்து போய் நின்றிருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகுதான் தன்னுடைய சுய நினைவிற்கு வந்தாள்.சுயநினைவு வந்தவுடன் அவளின் முகம் செந்தூரமாக சிவந்தது.அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் வெட்கம் தடுத்தது.ஶ்ரீநிதி கொஞ்சம் தூரம் தள்ளி இருந்ததினால் இதனைக் கவனிக்கவில்லை. வாணி ரிஷியிடம் இருந்து வேகமாக தன்னை விடுவித்து அந்த இடத்திலிருந்து ஓடினாள்.

அவள் விலகும்போது தான்...ரிஷிக்கு வாணியின் ஞாபகம் வர...அவளின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.அதற்குள் வாணி மாயமாய் இருந்தாள்.இவள் எதுக்கு இப்போ இப்படி ஓடினாள் என்று யோசித்து...சரி அவளுக்கு ஏதாவது அவசர வேலை வந்து இருக்கும்.அதான் ஓடி இருப்பாள் இப்போ நாம் ஶ்ரீயை மலை இறக்குவோம் என்று அவனுக்கு அவனே முடிவெடுத்தான்.அவனுக்கு இன்னமும் வாணியை அணைத்தது போல் இருந்தது தெரியவில்லை.

ரிஷி...தான் எடுத்த முடிவின்படி அவளிடம் வந்து “சாரி ஶ்ரீ” என்றான் பாவமாக முகத்தை வைத்து.

ஶ்ரீ திரும்பி அவனை ஒரு முறை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ரியலி சாரி ஶ்ரீ...நான் உன்னை கூப்பிட வரலாம்னு தான் நினைச்சேன்.பட்...கிருஷ் அண்ணா தான்...ஆபிஸ் வர சொல்லி போன் பண்ணிணார்” என்று அன்று நடந்த முழுவதும் கூறினான்.

அதன்பிறகு ஶ்ரீநிதி சமாதானம் அடைந்து “ஓ… ஹிட்லர்தான் உன்னை வர சொன்னதா...?நான் உன்னை தப்பா நினைத்து,சாரி ரிஷி…இருந்தும் உன்னைமாதிரி பாவப்பட்ட ஜென்மம் யாரும் இல்லைப்பா” என்றாள் பாவப்படுவது போல் அவனை ஓட்டினாள்.

“ஏய்...போதும் எனக்கு பாவப்படறது இருக்கட்டும்... அடுத்து நீ என்ன பண்ணறதுனு பாரு…!இல்லையெனில் அண்ணா உன்னையும் இந்த பாவப்பட்ட லிஸ்டில் சேர்த்துடுவாறு” என்று கூறி நக்கலாக சிரித்தான்.

ஶ்ரீ கெத்தாக “நான் உன்னைமாதிரி இல்லை...நான் எல்லாம் பிளான் பண்ணிட்டேன்.சோ...நோ பிராப்ளம்...அந்த பாவப்பட்ட ஜென்மம் என்ற பட்டம் மிஸ்டர் ரிஷியை மட்டுமே சேரும்” என்றாள் கேலியாக.

“ஓஹோ…! நீயும் என்னை கிண்டல் பண்ணுறியா…?” என்றான் சோகமாக முகத்தை வைத்து கொண்டு.

“ஏய்...போதும் போதும் ரொம்ப ஃபீல் பண்ணற மாதிரி நடிக்காதே…!” என்று அவன் தலையில் தட்டினாள்.

“ஹிஹிஹி...கண்டுபிடிச்சிட்டியா…?”என்று அசட்டு சிரிப்பு சிரித்தான்.

“போதும் வலியுது...தொடச்சிக்கோ” என்று இவளும் சிரித்தாள்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரிப்பதை அப்போது அங்குவந்த கிருஷ் பார்த்து முறைத்தான்.இருவரும் பேச்சு சுவாரசியத்தில் மூழ்கி இருந்ததினால் கிருஷ் இங்கு வந்ததை சிறிதுநேரம் கழித்துதான் கவனித்தனர். பார்த்தமாத்திரம் இருவரும் திகைத்தனர்.

ஐய்யையோவ் நாம் பேசியதைக் கேட்டுவிட்டான் போலவே என்றவாறு.அதில் கிருஷின் கோபம் இன்னும் தலைக்கேறியது.

கிருஷ் கண்ணில் ஏறிய சிவப்புடன் “ராத்திரி நேரத்தில் இரண்டு பேரும் இங்கு தனியாக நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்க…??” என்று கேட்டான் சூடாக.

“இ...இல்லை அண்ணா...பிராஜக்ட்டை பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்” என்று ரிஷியும்,

“இன்னைக்கு ஆபிஸில் நடந்தது பற்றி பேசிட்டு இருந்தோம்” என்று ஶ்ரீயும் அவன் கோபத்தில் தடுமாறி ஆளுக்கு ஒன்றாக சொன்னார்கள்.

கிருஷ் அதனைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க என்று.அதில் இருவரும் இன்னும் பயந்தனர்.

உடனே முதலில் ரிஷி சுதாரித்து “இல்லை அண்ணா...பிராஜக்ட் எப்படி பிரசன்ட் பண்ணே...பிராஜக்ட் பற்றி மத்தவங்கயெல்லாம் என்ன சொன்னாங்க??அப்புறம் நம் கம்பெனியில் இன்றைக்கு நடந்தது பற்றி தான் பேசிட்டு இருந்தோம்...காலேஜ் முடிச்சிட்டு என்ன பண்ணபோறே...இப்படி எல்லாமே பேசிட்டு இருந்தோம்...வேற ஒண்ணும் இல்லை அண்ணா” என்றான் விளக்கமாக.

அதில் கொஞ்சம் கோபத்தைக் குறைத்து “சரி...அதை எல்லார் முன்னாடி பேச வேண்டியது தானே...ராத்திரியில் தனியாக பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது...??” என்றவுடன் ஶ்ரீ உதட்டை கடித்து தவிப்பை அடக்குவதைப் பார்த்து,

“சரி...சரி இனிமே இந்த மாதிரி நடக்காமல் பார்த்துகோங்க...சரி பேசிட்டீங்கனா…??ரூமுக்கு போங்க” என்று கூறி இருவரையும் கூர்ந்து நோக்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

கிருஷ் நகர்ந்தவுடன் “ஓகே பை ரிஷி...இதுக்கு மேல் நாம் இங்கு இருந்தோம் அத்தான் இன்னும் திட்டுவார்...நாளைக்கு காலையில் மீட் பண்ணுவோம்...குட்நைட்” என்றவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் ஶ்ரீநிதி.

“நீ மட்டும் வீட்டிலிருந்து நல்லா என்ஜாய் பண்ணு...என்னை மட்டும் இப்பவே ஆபிஸ் வரச்சொல்லி இந்த கிருஷ் அண்ணா எரிச்சல் பண்ணறாங்க...ச்சை” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தான்.

அடுத்தநாள் இரவில் ஶ்ரீநிதி அவளின் அறையில் தன்னுடைய தோழி கீதாவிற்கு செல்லில் தொடர்பு கொண்டாள்.தங்களுடைய பேலன்ஸ் தொகை குறைவாக உள்ளது என்று வந்தது.

ச்சு என்று விட்டு அங்கு கட்டிலில் படுத்திருந்த வாணியிடம் “வாணிம்மா உன்னுடைய போன் கொஞ்சம் தருகிறாயா…?என்னுடைய செல்லில் பேலன்ஸ் குறைவாக இருப்பதினால் போன் போகமாட்டிகுது…?” என்றாள்.

“சரி அக்கா” என்றவாறு போனைக் கொடுத்தாள்.வெளியில் தன் தாய் தன்னை அழைப்பதை அறிந்து வாணி படுக்கையில் இருந்து எழுந்து வெளியில் சென்றாள்.

அவள் சென்றபிறகு கீதாவுடன் பேசி வைத்துவிட்டு போனைப் பார்த்தவளின் பார்வை அப்படியே ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது.

அந்தநேரத்தில் கிருஷ் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான்.வந்தவன் பார்வையில் முதலில் விழுந்தது அவள் அணிந்திருந்த உடை.அதனைப் பார்த்து ஒரு நிமிடம் அப்படியே திகைத்து நின்றான்...கருப்பு நிற டீசர்ட் அணிந்து கீழே அதே வண்ணத்தில் கருப்பு நிற வண்ணத்தில் அங்கங்கே மஞ்சள்,சிவப்பு நிற பூக்களால் பச்சை நிற இலைகளோடு பிரண்ட் செய்யப்பட்ட டிசைன்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்கர்ட் அணிந்து இருந்தாள்.இந்த கறுப்பு நிறம் உடை அவளின் வெள்ளை நிறத்தை மேலும் தூக்கி கொடுத்தது.

அவன் அப்படி பார்த்தற்கான காரணம் இதுவல்ல...இரவு நேரம் என்பதால் கணுக்கால் வரையிலான ஸ்கர்ட் மட்டுமே அணிந்து இருந்தாள்.இவ்வளவு நேரம் லாங் ஸ்கர்ட் தானே போட்டு இருந்தாள்...இது எப்போது மாற்றினாள் என்று யோசித்துவிட்டு அதன்பிறகு தான் அவளின் நிலை மனதில் உறுத்த அவள் அருகில் சென்று ஶ்ரீநிதி என்று அழைத்தான்.

தீடிரென்று காதருகில் கேட்கப்பட்ட அழைப்பின் காரணமாக ஶ்ரீநிதி பயந்து ஆ...என்று கத்தி கீழே விழ போனவளின் இடுப்பை அணைத்து பிடித்து தூக்கிவிட்டு வாயைக் கை வைத்து அடைத்தான்.ஶ்ரீயின் கண்கள் இப்போது ஆச்சிரியத்தில் விரிந்தது.முதன்முதலில் கிருஷின் ஸ்பாரிசம் பட்டதால் அவள் தேகம் சிலர்த்தது.

அவள் கண்களைப் பார்த்தவாறு “ஏய்...இப்போ எதுக்கு கத்தப் போறே…!நான் தான்” என்று கிருஷ் அதட்ட நினைத்தாலும் அவன் குரல் குழைந்துதான் வந்தது.அவன் ஒரு வித மயக்கத்தில் ஆழ்ந்து இருந்தான்.அவன் மனதில் இதுவரைத் தட்டி அடக்கி வைக்கப்பட்டுயிருந்த ஆசைகள் அனைத்தும் வெளிவரத் தொடங்கின.

ஶ்ரீக்கு அந்த மாதிரி எண்ணங்கள் எதுவும் இல்லாததால்,ஒரு சில நிமிடங்கள் கழித்து கிருஷ் அவளை இன்னும் விடாமல் பிடித்து கொண்டு இருந்ததை பார்த்து ஶ்ரீநிதி நெளிந்தாள்.அதன்பிறகு தான்
கிருஷ் மயக்கத்திலிருந்து தன் தலையைக் குலுக்கி விடுப்பட்டு...அவளை விட்டு விலகி நின்றான்.அதன்பிறகு அவன் செய்ய நினைத்த காரியத்தின் வீரியம் புரிந்தது.
 
புரிந்த நொடி அவனை அவனே திட்டிவிட்டு,ஶ்ரீயைத் திரும்பி பார்த்தான்.அவள் இது எதை பற்றியும் நினைக்காமல் கையில் இருந்த செல்லைப் பார்த்து கொண்டு இருந்தாள்.எதைப் பார்த்து இப்படி நின்றுகொண்டு இருக்கிறாள் என்று அவள் கையில் இருந்த செல்லை எட்டி பார்த்தான்.பார்த்தவன் புருவத்தின் மத்தியில் மூடிச்சு விழுந்தது.

அதில் ‘ரிஷி மை லவ்’ என்று இருந்தது.அதன்பிறகு அவள் கையில் இருந்த போனை வாங்கி பார்த்துவிட்டு...ஶ்ரீயைக் கண்களால் இது என்ன என்று வினவினான்.ஶ்ரீ பயத்துடன் அந்த அறையில் இருந்த வாணியின் புகைப்படத்தைக் கண்களால் காண்பித்தாள்.

ஓ...என்றவாறு கிருஷ் எதையோ யோசித்தான்.அவன் யோசிப்பதைப் பார்த்து வாணியை ஏதோ சொல்லிவிடுவனோ என்று நினைத்து “அத்தான்” என்று மெதுவாக அழைத்தாள்.

அந்த குரலில் திரும்பி அவளை என்ன என்று பார்த்தான்.அவள் ஒரு வித தயக்கத்துடன் “அது...வந்து...அத்தான்!வாணி ரொம்ப சின்ன பொண்ணு...வீட்டில் கூட எதுவும் சொல்லாதீங்க அத்தான்...அவகிட்ட எடுத்து சொன்னால் புரிஞ்சிக்குவா…!அவளை எதுவும் திட்டாதீங்க அத்தான்...பிளீஸ்” என்று தங்கைக்காக கெஞ்சினாள்.

கிருஷ் திரும்பி அவளைப் பார்த்து ஒரு முறை முறைத்தான்.அதில் ஶ்ரீநிதி மிரண்டு வாயை மூடினாள்.

அதன்பிறகு கிருஷ் ஒரு தீர்க்கமான குரலில் “இங்க பாரு...வாணியைப் பற்றி எனக்கு தெரியும்… அவகிட்ட எப்படி பேசணும்...எப்படி நடக்கணும் என்று எனக்கு நீ சொல்லி தெரிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை புரியுதா…?இதைப் பத்தி நீ யார்கிட்டயும் எதுவும் பேசாமல் இருந்தால் அதுவே போதும்...அவளிடம் கூட இதைப் பற்றி நீ பேசாதே… என்ன புரிஞ்சிதா…?” என்று அதட்டி கேட்டான்.

ஶ்ரீநிதியும் “புரியுது…” என்று தலையாட்டினாள் மனதில் சிறு சுணக்கத்துடன்

அதன்பிறகு அவளிடம் செல்லைக் கொடுத்துவிட்டு “சரி...நான் வந்த விசயத்தை மறந்துவிட்டேன் பாரு...ஆமாம் பிராஜக்ட் எப்படி பண்ணே…??நேற்று இருந்த மனநிலையில் இதுபற்றி கேட்க என்னால் முடியவில்லை அதனால் தான் இப்போது கேட்கிறேன் சொல்லு” என்று வினவினான்.

அதில் ஶ்ரீ தனது சுணக்கத்தை விடுத்து ஒரு ஆர்வத்துடன் “ஹூம் ரொம்ப சூப்பராகப் பண்ணிட்டேன் அத்தான்...இன்விஜிலேடராக வந்தவர் கூட இந்த கைநூலூடைகளை இந்த காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு விதமான டிசைன்களில் தைத்து அதில் கலோக்கி டிசைன்களை வரைவது புதிய யோசனையாக இருப்பதாக கூறி ரொம்பவே பாராட்டினார்…

இந்த பிராஜக்ட் ரைட்ஸ் யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் கொடுக்கதேம்மா என்றார்...அப்புறம் நீ ஏதாவது பெரிய கம்பெனிக்கு ட்ரைப் பண்ணுறியாம்மா என்று கேட்டார்.

நான் அவரிடம் நம்முடைய நந்தன் டெக்ஸ்டைல் பற்றி சொல்லி இது எங்களுடைய டெக்ஸ்டைல்ஸ் நான் அங்கதான் என்னுடைய பிராஜக்ட் ரைட்ஸ் கொடுக்கப்போறேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் ஓ...ஓகேம்மா...அது எவ்வளவு பெரிய டெக்ஸ்டைல்...அது உங்களுடையதா…?உன்னுடைய பிராஜக்ட் அங்கு சென்று சேர்வதுதான் சரி...அங்கு தரமான துணிகள் மட்டும் தான் தயாரிப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று சொன்னார் அத்தான்.அதுமட்டுமில்லாமல் விலை அந்தந்த துணிகளுக்கு ஏற்ற குறைந்த விலைதான் நிர்ணியித்து இருக்கிறார்கள் என்றார்...அவர் நம் டெக்ஸ்டைல்ஸ் பற்றி பாராட்டி சொன்னது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது அத்தான்” என்றாள்.

அவள் தன்னை பாராட்டியதைக் கூட பெரிய விசயமாக எடுக்காமல் இந்த கம்பெனியைப் பாராட்டி சொன்னதைப் பெருமையாக நினைப்பதைப் பார்த்து ஶ்ரீயை நினைத்து அதிசயத்தான்.

அவளின் பேச்சை கேட்டுவிட்டு கிருஷ் “சரி...நீ காலேஜில் செய்த பிராஜக்ட்டை இன்னும் கொஞ்சம் விரிவுப்படுத்தி...நீ யோசித்து வைத்த டிசைன்களை வரைந்து வை...நான் அதை தயாரித்து...ஒரு பேஷன் சோவுக்கு ரெடி பண்ணி...உன்னுடைய புது ஐடியாவை எல்லாருக்கும் வெளியிடலாம்...அப்புறம் எந்த கல்லூரியில் நகை வடிவமைப்பு க்ளாஸ் போகப் போறேனு முடிவுப்பண்ணி வை...நான் அந்த இடத்தில் உனக்கு சீட் வாங்கி தரேன்...அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அந்த செல்லில் உள்ளதை பற்றி வாணியிடம் நான் பேசி கொள்கிறேன்...நீ அதை பற்றி எதுவும் அவளிடம் பேசாதே சரியா…??” என்று வினவினான்.

அவன் பேச பேச ஶ்ரீயின் முகத்தில் மகிழ்ச்சி கூடிக்கொண்டே சென்றது...ஆனால் கடைசியாக சொன்ன விசயத்தைக் கேட்டவுடன் ஶ்ரீயின் மூகம் சுருங்கியது.இருந்தும் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் “சரி அத்தான்...குட்நைட்” என்றாள் அவனை இங்கு இருந்து வெளியனுப்ப நினைத்து.

கிருஷ் அவள் முகத்தைப் பார்த்து “ஶ்ரீ இதை உன் மனதில் வைத்து ரொம்பவும் குழம்பி கொள்ளாதே...எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்…என்றவுடன்,

ஶ்ரீ நிமிர்ந்து கிருஷின் முகத்தை பார்த்தாள்.நீ போய் நிம்மதியாக தூங்கு என்றுவாறு கண் மூடி திறந்து அவளுக்கு கண்ணால் ஆறுதல் அளித்து விடைப்பெற்றான்.

அதன்பிறகு தான் ஶ்ரீயின் முகத்தில் எல்லாம் அத்தான் பார்த்து கொள்வார் என்று நம்பிக்கை ஒளிப்பெற்றது.

இப்படியாக ஒரு வாரம் எப்படி என்று தெரியாமல் பறந்தது.இந்த வாரத்தின் நடுவில் மீரா வந்து தாத்தாவிடம் நன்றாக திட்டுவாங்கிவிட்டு இதற்கு மேல் இப்படி பண்ணமாட்டேன் தாத்தா என்று வாக்குறுதி அளித்தாள்.அதன்பிறகு தான் அவர் கோபம் குறைந்து மீராவை மன்னித்தார்..

அன்று ஶ்ரீ தனது தோழிகளுடன் தேர்வுகள் முடிந்த திருப்தியுடன் சேலத்தில் உள்ள பெரிய ஐஸ்கீரிம் பார்லருக்கு சென்றாள்.அங்கு சென்று ஐஸ்கீரிமுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாள்.

அப்போது “அடுத்து எல்லாருக்கும் என்ன பிளான்…?படிப்பு முடிஞ்சிருச்சு” என்று தோழிகளில் ஒருத்தி கேட்டாள்.

ஒவ்வொருத்தரும் ஒன்று ஒன்று சொன்னார்கள்.அதில் ஒருத்தி “எங்க வீட்டில் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க...” என்றாள்.

“ஹய் ஜாலி…நம்ப பிரண்ட்ஸ் ஒருத்திக்கு கல்யாணம்…”

“எல்லாரும் சேர்ந்து...போய் அவள் கல்யாணத்தில் கூத்து அடிக்கலாம்”

“நல்லா...கல்யாணம் சாப்பாடு சாப்பிடலாம்”

“ஹய்யா…!எல்லாரும் ஒரே மாதிரியாக டிரெஸ் எடுக்கலாம்”

“நல்லா பாசங்களை சைட் அடிக்கலாம்…”

“ஏய் நிஷா…கார்த்திக்கையும் இன்வைட் பண்ணுடி…”

“ஏய்!போதும்...போதும்...நாளைக்கே அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவீங்க போல...அதுக்குள்ள ஒருத்தி அவ ஆளை இன்வைட் பண்ணி... சைட் அடிக்கிற அளவுக்கு போயிட்டா...முதலில் கல்யாணம் முடிவாகட்டும்...அப்புறம் எல்லாம் பிளான் பண்ணுங்கடி” என்றாள் சிரிப்புடன் ஶ்ரீ.

ஐஸ்கீரிமை வாயில் தள்ளிக் கொண்டே “இவளுங்க விட்டால்… அங்கேயே ஒரு பையனைப் பார்த்து சைட் அடிச்சி...அடுத்த நாளே கல்யாணம் பண்ணிக்க போறாங்கனு நினைக்கிறேன்…ஏய் நிஷா!உனக்கு பேஸ்டு அட்வைஸ்...இவங்களைக் கல்யாணத்துக்கு கூப்பிடாதேடி…அதான் உனக்கு நல்லது...இல்லையெனில் உன் மாப்பிள்ளையைக் கரெக்ட் பண்ணிருவாங்க...அப்புறம் உன் வாழ்க்கை அம்பேல்” என்றாள் கீதா சகத் தோழிகளை நக்கல் செய்து.எல்லாரும் ஏய்...என்று சண்டைக்கு வந்தனர் அவளிடம்.

ஶ்ரீ அதைப் பார்த்து சிரித்துவிட்டு “போதும்...நீங்க சண்டை போட்டது… கல்யாணம் பொண்ணைக் கொஞ்சம் ஓட்டலாம் வாங்க...நிஷா எப்போ உனக்கு மேரேஜ்டி…?” என்று கேட்டாள் உற்சாகமாக கல்யாண பெண்ணிடம்.

“இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் இருக்கும்” என்றாள் சோகமாக.

“அதை ஏன்டி...இவ்வளவு சோகமாக சொல்லுறே..?நானெல்லாம் எப்போடா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகலாம்னு நினைச்சிட்டு இருக்கேன்...நீ என்னடானா இவ்வளவு சோகமாக இருக்கே” என்று கேட்டாள் ஶ்ரீயின் தோழிகளில் ஒருத்தி.

அதற்கு அவள் “ச்சு...போடி...எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை...எனக்கு மேலே படிக்கணும்...ஆனால் எங்க வீட்டில் எனக்கு பின்னாடி...இரண்டு தங்கச்சி இருக்காங்க...அதனால்தான் எனக்கு கல்யாணம் பண்ணிவிட முடிவு பண்ணிட்டாங்க” என்றாள் ஆதங்கத்துடன்.

ஶ்ரீ “உங்க அப்பாவிடம் பேச வேண்டியது தானே” என்றாள்.

“கேட்டேன்டி…” என்று இழுத்து சுற்றி எல்லாரையும் ஒரு பார்வை பாவமாக பார்த்துவிட்டு,

அவர் உன்னை மட்டும் படிக்க வைச்சுட்டு இருந்தால்...உன் தங்கைகளை எப்படி படிக்க வைக்கிறது...நாம் ஒண்ணும் பணக்காரங்க கிடையாதும்மா...எனக்கும் வயசு ஆகுது...நான் கண்ணை முடுறதுக்குள்ள இன்னும் இரண்டு பெண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்...அதனால் முடியாது…” என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

“இப்ப சொல்லுங்க...இதுக்கு மேலே நான் என்ன பண்ணறதுடி...எனக்.. எனக்கு என்...என்ன பண்ண...றதுனு தெரியாலடி” என்றாள் கண்ணில் கண்ணீருடன் திக்கியப்படி.

அவசரமாக “ஏய் கண்ணைத் துடை...இது பொது இடம் எல்லாரும் நம்மை பார்க்கறாங்க பார்...அன்ட் தென் சாரிடி...இது எதுவும் தெரியாமல்...நாங்க என்ன என்னவோ பேசிட்டோம்” என்றாள் உண்மையான வருத்தத்துடன் ஶ்ரீ அவள் கைகளைப் பிடித்து கொண்டு.

அவளைத் தொடர்ந்து எல்லாரும் சாரி கேட்டனர்.

நிஷா தன் கண்ணீரைத் துடைத்து கொண்டே “பரவாயில்லப்பா...உங்க கூட பேசியப் பிறகு கொஞ்சம் மனதுக்கு நிம்மதியாக இருக்கு… எல்லாரும் என்ஜாய் பண்ண வந்துட்டு...என்னைப் பற்றி சொல்லி உங்கள் சந்தோஷத்தைக் கெடுத்திட்டேன்...சாரிப்பா எல்லாருக்கும்” என்றாள் முகத்தில் புன்னகையைத் தவழவிட்டப்படி.

“ஏய்...பிரண்ட்ஸ்குள்ள சாரி எல்லாம் வேணாம்டி” என்றாள் ஒருத்தி.

கீதாவும் “அதெல்லாம் வேணாம்டி...எங்கக்கிட்ட சொன்ன பிறகு நிம்மதியாக இருக்குனு சொன்னே தானே...அதுவே எங்களுக்கு போதும்” என்றாள்.

இந்த சூழ்நிலையை மாற்ற எண்ணி ஶ்ரீ “ஓகே...ஓகே...மாப்பிள்ளை பெயர் என்ன…?எப்படி இருப்பார்...என்ன பண்ணறார்…?அவரைப்பற்றி சொல்லு” என்றாள்.

இவ்வளவு நேரம் களை இழந்த இருந்த முகத்தில் ஒரு வெளிச்சம் பரவ “அவர் பெயர் செந்தில்...கே.எம் காலேஜ் இருக்கு இல்லை...அதில் பிரப்பஸராக இருக்கார்” என்றுக் கூறிவிட்டு வெட்கத்தில் தலைக்குனிந்தாள்.

எல்லாரும் ஓ...என்று கூச்சல் எழுப்பினர். அதே வெட்கத்துடன் ச்சூ என்றாள் எல்லாரையும்.

“இங்க பாருங்கப்பா…கொஞ்சம் முன்னாடி…யாரோ கல்யாணம் வேண்டானு சொன்னாங்க...ஆனால் மாப்பிள்ளை பற்றி கேட்ட உடனே...முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்திருச்சி” என்று ஶ்ரீ கூறிக்கொண்டே நிஷாவுடைய முகத்தை நிமிர்த்தினாள்.

அவள் கையைத் தட்டிவிட்டு நிஷா “ஏய்!சும்மா இருங்கப்பா...கல்யாணம் இப்போ வேண்டாம்னு தான் சொன்னனே ஒழிய அவரைப் பிடிக்கவில்லை என்று சொன்னேனா…?” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள்.எல்லாரும் இன்னும் சிரிப்பதைப் பார்த்து அந்த இடத்தைவிட்டு வெட்கத்துடன் எழுந்து ஓடப்போனாள்.

ஏய்...என்று கோரஸாக கூறி அவளை அந்த இருக்கையில் உட்கார வைத்தனர்.அவள் வெட்கத்துடன் அங்கு உட்கார முடியாமல் நெளிந்தாள்.

அதைப்பார்த்து ஶ்ரீ அவளை மேலும் வதைக்க வேண்டாம் என்று முடிவு செய்து “ஓகே போதும்ப்பா...பாவம் விட்டுவிடுவோம்...என்று எல்லாரையும் பார்த்து கூறி விட்டு நிஷாவிடம் திரும்பி

“நிஷா பேசாமல் நீ அவரிடம்...கல்யாணத்திற்கு பிறகு நான் படிக்கட்டுமா என்று கேள்…??அவர் ஒத்துகிட்டால்...நீ படித்த மாதிரியும் இருக்கும்...உங்க அப்பா தன் கடமையைச் செய்தமாதிரியும் இருக்கும்” என்று நிஷாவிற்கு யோசனை வழங்கினாள்.

உடனே நிஷா ஶ்ரீயைக் கட்டி அணைத்து “ஹே வாவ்!சூப்பர் ஐடியாடி...இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...எனக்கு இது தோணலைப் பாரு...ரொம்ப தேங்கஸ்டி” என்று உணர்ச்சி வசத்துடன் கூறினாள்.

“ஏய் நிஷா...இது ஶ்ரீ...உன் அவர் இல்லை...அவளை விடு” என்று கீதா சிரிப்புடன் கூறினாள்.நிஷா ஶ்ரீயிடம் இருந்து பிரிந்து கீதாவை முறைத்தாள்.

ஶ்ரீ சிரிப்புடன் “போதும்...போதும்...எனக்கு நேரம் ஆகுது...நான் வீட்டுக்கு போகணும்ப்பா” என்றாள் எல்லோரையும் பார்த்து.

“ஓஹோ...உன் ஆள் உனக்கு வெயிட் பண்ணுவாரா ஶ்ரீ…?” என்று குறும்புடன் ஒருத்தி கேட்டாள்.

அவளிடம் திரும்பி “அது யாருடி...என்னுடைய ஆள்…?” என்றாள் புருவம் உயர்த்திவாறு.

“வேற யாரு…ரமேஷ் தான்...எங்களுக்கு தெரியாதுனு நினைச்சியா ஶ்ரீ…??” என்றாள் இன்னொருத்தி குறும்புடன்.

ஶ்ரீ திரும்பி கீதாவைப் பார்த்தாள் இதெல்லாம் உன் வேலையா என்பது போல்…

அதேவேளையில் கிருஷ் அவன் அறையில் உள்ள அலமாரியில் இருந்து அவன் மறைத்து வைத்திருந்த பொருளை கையில் எடுத்து “குண்டச்சி...எப்போடி நான் உன்னை கல்யாணம் பண்ணறது…?எத்தனை நாள் இதையே கொஞ்சிட்டு இருக்கறது...சீக்கிரம் வாடி இங்கே” என்று முத்தம் ஒன்றைக் கொடுத்தவன் கையில் இருந்தது...ஒரு பன்னிரெண்டு வயது பெண்ணின் புகைப்படமும் ஒரு ஒற்றை கால் கொலுசும் தான்.

தோழிகளிடம் ஶ்ரீ என்ன பதில் கூறி இருப்பாள்...அந்த ரமேஷ் யாரு...அவளுக்கும் அந்த ரமேஷூக்கும் என்ன சம்பந்தம்...ரமேஷ் ஶ்ரீயுடைய காதலனா…???

கிருஷ் மறைத்து வைத்திருக்கும் புகைப்படத்தில் இருந்த பெண் மற்றும் கொலுசு யாருடையது…????

 
Last edited:
Status
Not open for further replies.
Top