வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஒண்ணும் புரியல சொல்ல தெரியல - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 9:

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் இன்றைய விடுமுறை தினம் ரிஷியுடையது...ஆனால் அவன் இன்றைய தினத்தை ஶ்ரீநிதிக்கு பிறந்தநாள் என்பதால்...அவள் விருப்பத்திற்கு விட்டு கொடுத்தான்.


ஶ்ரீநிதி அந்த தினத்திற்கான திட்டத்தை வகுக்கும் முடிவைத் தாத்தாவிடமே விட்டாள்.அவர் ஒருமனதாக எல்லோரும் கோயிலுக்கு சென்றுவிட்டு...மாலையில் வீட்டிலே ஒரு சின்ன பார்ட்டி மாதிரி வைக்கலாம் என்று தன் திட்டத்தைக் கூறினார்.அதன்படி ஶ்ரீநிதி அந்த புடவையிலே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து அனைவருடன் பிரகாரத்தில் உட்கார்ந்தாள்.எல்லாரும் அமர்ந்து ரொம்ப நேரம் பேசி கொண்டிருக்கவும் போர் அடித்து...ஶ்ரீ அவர்களிடம் நான் சும்மா இந்த பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வருகிறேன் என்று கூறி எழுந்தாள்.


அவளுடன் வாணி,கீதா ரிஷி,அப்புறம் தயாவின் குழந்தைகள் எல்லோரும் வரோம் என்றவுடன் எல்லோரையும் அழைத்து கொண்டு புறப்பட்டு பிரகாரத்தைச் சுற்றி வரும் போது...அங்கே ஒரு கிளி ஜோசியர் இருப்பதைப் பார்த்த ஶ்ரீ முகத்தைச் சுருக்கி “அவரிடம் ஜோசியம் பார்க்கலாம்ப்பா பிளீஸ்…!!” என்று ரிஷியிடம் கெஞ்சினாள்.


ரிஷியும் வேற வழியில்லாமல் சரி என்று தலையாட்டினான்.ஶ்ரீநிதி சின்ன பிள்ளைகளின் துள்ளலுடன் அவரிடம் சென்று அவருக்கு நேராக உட்கார்ந்தாள்.


கீதாவும் வாணியும் ‘இவள் என்ன சின்ன குழந்தையா…?’ என்று பார்த்து கொண்டிருந்தனர்.


தயாவின் குழந்தைகள் இருவரும் ‘அய்...கிளி...கிளி…’ என்று தனது மழலையில் ஆர்பரித்து அந்த கூண்டிற்கு அருகில்போய் சமர்த்தாக உட்கார்ந்தனர்.


ஜோசியர் இவளைப் பார்த்து “உன் பேரு என்னம்மா…??” என்று கேட்டார்.


“ஶ்ரீநிதி”


அவர் கிளியின் கூண்டை திறந்தவாறு “ஶ்ரீநிதி...என்ற பேருக்கு ஒரு சீட்டு எடு மீனு…” என்று கிளியிடம் கூறினார்.


ரிஷி அருகில் இருக்கும் வாணியிடம் நக்கலாக “இங்க பாரு வாணி...கிளிக்கு மீனுனு பெயர் வைச்சிருக்காங்க இல்லை…!!” என்று கூறி சிரித்தவனை…


எந்தவொரு உணர்ச்சியுமில்லாமல் பார்த்த வாணி “இது ஒண்ணும் அவ்வளவு பெரிய காமெடியில்லை…!!” என்று கூறினாள்.


அதற்குள் அந்த கிளியும் சமர்த்தாக வெளியே வந்து ஒரு ஒரு சீட்டாக எடுத்து போட்டு கடைசியாக ஒரு சீட்டை எடுத்து அவரிடம் தந்தது.


அவர் அந்த சீட்டை பிரித்தார்.ஶ்ரீ ஆர்வமாக அவர் என்ன சொல்ல போகிறார் என்று அவர் முகத்தையே பார்த்தாள்.


மற்ற மூவரும் அவர் என்ன சொல்ல போகிறார் என்று உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.


அதில் இருந்தது ஒரு கிருஷ்ணர் படம்...கிளி ஜோசியர் “உனக்கு கிருஷ்ணர் படம் வந்திருக்கும்மா...நீ ரொம்ப ராசியான பொண்ணும்மா...நீ தொட்டது எல்லாம் துலங்கும்...நீ இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் தாயி...நீ எதையுமே மறந்து மன்னிக்ககூடிய இரக்க குணம் கொண்டவள்...விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டவள்…உனக்கு அந்த கிருஷ்ணனே மணமகனாக வருவான் தாயி...பெயருக்கு தான் கிருஷ்ணனே தவிர...ஆனால் குணத்தில் ராமன்...அவன் உன்னை தேடி கூடிய சீக்கிரம் வந்திடுவான்…!! என்று சொல்லி கொண்டிருக்கும்போதே கிருஷ் இவர்களைத் தேடி இங்கே வந்துகொண்டிருந்தான்.


ஜோசியர் “ஆனால் தாயி… என்று நிறுத்திவிட்டு அவளின் முகத்தை ஒரு வருத்தத்துடன் பார்த்துவிட்டு “இனிமே உன் வாழ்க்கையில் நிறைய பிரச்சினை வரப் போகுது தாயி...உன்னை சுத்தி இருக்கிறவர்களால் தான் பிரச்சினை வர போகுது… கொஞ்சம் ஜாக்கிரதையாக இரும்மா” என்று சொல்லவும் கிருஷ் அந்த இடத்திற்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.


கிருஷ் ரிஷியைப் பார்த்து முறைப்புடன் “இது யார் வேலை…?” என்று கேட்டான்.


ரிஷி அவசரமாக ஶ்ரீயைக் கைகாட்டினான்.கிருஷ் திரும்பி ஶ்ரீயை முறைத்துவிட்டு அவள் முகம் வாடி இருப்பதைப் பார்த்து “ஶ்ரீநிதி…!முதலில் நீ அங்கிருந்து எழுந்திருச்சு இங்கே வா…!!” என்று அதட்டினான்.


ஶ்ரீ அவன் அதட்டியதால் அவசரமாக எழுந்து அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.


குழந்தைகளைத் தூக்கி வாணி மற்றும் கீதாவிடம் கொடுத்து நீங்க இரண்டு பேரும் முன்னாடி போயிட்டு இருங்க,நாங்க வரோம் என்றுவிட்டு ரிஷியிடம் திரும்பி “நீ இவருக்கு காசு கொடுத்துட்டு அவங்களை எல்லாம் பார்த்து கூட்டிட்டு போ…!!உன்னை அப்புறம் பார்த்துகிறேன்” என்றான் கோபமாக.


‘ஐய்யையோ நான் மாட்டினேன் எல்லாம் இந்த ஶ்ரீயால் வருது… அவளுக்கு வேறே இன்னைக்கு பிறந்தநாள்...அவளை எதுவும் திட்டவும் முடியாது’ என்று அவளை பாவமாக பார்த்துவிட்டு சென்றான்.


ஶ்ரீ இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.அவள் மனது அவர் கூறியதையே சுற்றி சுற்றி வந்தது.


அவர்கள் சென்ற பிறகு கிருஷ் ஶ்ரீயைத் திட்டுவதற்காக அவள் பக்கம் திரும்பியவன்,அவள் முகம் வாடி இருப்பதைப் பார்த்து தன் கோப எண்ணத்தை மாற்றி ஶ்ரீநிதி என்று மெதுவாக அழைத்தான்.


கிருஷ் அவளை அழைத்தது துளிக்கூட...ஶ்ரீயின் காதில் விழவே இல்லை என்பதை அறிந்து அவள் கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பி ஶ்ரீநிதி என்று முறுபடியும் அழைத்தான்.


அதில் சுயநினைவிற்கு வந்து “என்ன அத்தான்…??” என்று தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல் கேட்டாள்.


“இங்க பாரு ஶ்ரீ...அவர் சொல்லறதுயெல்லாம் நீ மனசுல வைச்சிக்காதே புரியுதா…??அவங்கயெல்லாம் காசுக்காக இப்படித்தான் சொல்லுவாங்க...அப்படியே அவங்க சொல்லறதுயெல்லாம் நடத்திடுமா என்ன…??ஒரு கிளி சீட்டு எடுத்து போட்டு அது சொல்லறதுயெல்லாம் நடக்கும்னா...அப்புறம் யாருக்கும் கடவுளே தேவையில்லை...இந்த கிளியையே கடவுளாக கூம்பிடலாமே...யாராலும் யாருடைய எதிர்காலத்தையும் கணிச்சி சொல்ல முடியாது...என்ன நடக்கணும்னு இருக்கோ...அதுதான் நடக்கும்...நாம் என்ன தான்...மாற்ற நினைத்தாலும் எதையுமே மாற்ற முடியாது” என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தான்.


அப்போதும் அவள் சோகமாக இருப்பதைப் பார்த்து “ஶ்ரீ என் முகத்தைப் பாரு...என்று அவளை தன் முகத்தைப் பார்க்க செய்து,
 

“அப்படியே உனக்கு எதுவும் பிரச்சினை வந்தால் நான் உன் கூட இருக்கிறேன்” என்று ஆறுதல் கூறி பிடித்திருந்த கையை விடாமல் அழுத்தி கொடுத்தான்.


அவளுக்கு வரும் பிரச்சினைக்கு தானே காரணமாக போவதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


அவன் கூறிய ஆறுதலைக் கேட்டு அவள் முகத்தில் நம்பிக்கை ஒளி படர்ந்தது...அதன்பிறகு ஶ்ரீ சிறு புன்னகையுடன் “தேங்கஸ் அத்தான்” என்றாள் உண்மையான மலர்ச்சியுடன்.


அந்த மலர்ச்சி அவனையும் தோற்றிகொள்ள “சரி வா” என்று புன்னகையுடன் அழைத்து சென்றான்.


கோவில் தூணின் ஒரமாக நடக்கும் போது ஶ்ரீ கிருஷின் முகத்தை பார்ப்பதும் பின்பு தலைக்குனிவதுமாக இருப்பதைப் பார்த்த கிருஷ் அடுத்தமுறை அவள் தன்னை நிமிர்ந்து பார்க்கும் போது என்ன என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.


அதில் தடுமாறி “அது...வந்து...வந்த...அத்தான்…” என்று அவள் திரும்பவும் பழைய புராணத்தை ஆரம்பிக்கவும்,


கிருஷ் அவசரமாக “நீ அப்புறம் வந்து வந்து போ...இப்போ சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி முடி…!!” என்று குறும்புடன் கூறினான்.


கிருஷ் அத்தான் திட்டறாங்களோ என்று பயந்து அவனைப் பார்த்தவள் அவன் முகத்தில் கோபம் இல்லை என்றவுடன் நிம்மதியடைந்து தான் அணிந்திருந்த உடையைக் கண்களால் காட்டி “அத்தான்...இந்த புடவை,இந்த நகையெல்லாம் நீங்களா வாங்கிக் கொடுத்தீங்க…??” என்று ஒரு வழியாக கேட்டுவிட்டாள்.


கிருஷ் அதற்கு அவளை நக்கலாக பார்த்து “அதை ஒரு வழியாக கண்டுப்பிடிச்சி தான் கேட்கிறியோ என்று நினைத்தால் இப்போதும் ஒரு சந்தேகத்தோடு தான் கேட்கிறே…??நீ ரொம்ப புத்திசாலினு நினைச்சினே…??நீங்க அப்படியெல்லாம் தப்பா நினைக்காக்கூடாது அத்தான்...நானே ஒரு மரமண்டை...என்று சொல்லாமல் சொல்லிட்டே…??” என்று அவள் தலையில் மெதுவாக தட்டி சிரித்தான்.


“ச்சு...போங்க அத்தான்…” என்று சிணுங்கிவிட்டு வழக்கம்போல் அவன் சிரிக்கும்போது விழும் கன்னக்குழி அழகை ரசித்தாள்.அவள் சிணுங்கலைப் பார்த்து கிருஷ் தான் தடுமாறி,அவனின் இதயம் வேக வேகமாகத் துடித்தது.


ஆனால் மனதிற்குள் அய்யோ இவள் சும்மாவே இருக்க மாட்டாள் போலவே...எப்போ பார்த்தாலும் மனுசனை சாவடிக்கிறாளே...கிருஷ் இதுக்குயெல்லாம் உன் மனசைத் தளரவிடக் கூடாது என்று அவனுக்கு அவனே கூறி கொண்டு அவளைப் பார்த்து “நான் தான் வாங்கினேன்… ஆனால் இதெல்லாம் உனக்கு தாத்தா கொடுத்த கிப்ட்…அவர் உனக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னார்...ஆனால் நீ என்னை கேட்டதினால் சொல்ல வேண்டியதாகி போய்விட்டது...இது உனக்கு பிடிச்சிருக்கா…??” என்று வாய் கூசாமல் பொய் சொல்லி கேட்டான்.


இவன் வாங்கவில்லை என்றவுடன் ஶ்ரீக்கு சப்பென்றானது.இருந்தாலும் தன் தாத்தாவை மனதில் வைத்து “நல்லா இருக்கு அத்தான்” என்றாள்.


“சரி சரி வா...எல்லாரும் ரொம்ப நேரமாக நமக்கு காத்துகொண்டு இருப்பாங்க” என்று கூறி அவளை அழைத்து சென்றான்.


கொஞ்சம் தூரம் நடந்தப்பிறகு தான் இருவரும் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்து...அவசரமாக ஒரே நேரத்தில் கீழே குனிந்து பார்த்தனர்.குனிந்து பார்த்தே இருவரும் திகைத்தனர்.ஏனெனில் கிருஷ் முன்னாடி ஆறுதல் சொல்ல பிடித்த ஶ்ரீயின் கைகளை இப்போது வரை விடாமல் பிடித்திருந்தான்.அதில் இன்னுமொரு மாற்றமாக ஶ்ரீயும் அவன் கையை இறுக்கிப் பிடித்திருந்தாள்.எப்போது இந்த மாதிரி நடந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை.


இப்போது தெரிந்தும்...ஒருவரின் கையை மற்றவர் விடாமல் பிடித்து கொண்டிருந்தனர்.இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று தழுவியதோடு மட்டுமல்லாமல் கையையும் விடாமல் பிடித்து கொண்டே ஒரு அடி எடுத்து வைத்தனர்.தூரத்தில் ஶ்ரீ,அண்ணா என்று அழைத்துக்கொண்டு வரும் ரிஷியும் கீதாவும் கண்ணில் பட அவசரமாக இருவரும் பிரிந்து நடந்தனர்.


கிருஷும் ஶ்ரீநிதியும் நல்லவேளை இவர்கள் நம்மை பார்க்கவில்லை என்பது போல் திருப்தியடைந்தனர்.


ஆனால் இருவரின் திருப்தி ரொம்ப நேரம் நீடிக்காது என்பதை இருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...ஏனெனில் ரிஷியும் கீதாவும் தூரத்தில் வரும்போதே இவர்களின் செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து திரும்பி இங்கு என்ன நடக்குது என்று ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென்று முழித்தனர்.


அவர்கள் வேறொரு உலகத்தில் இருக்கின்றனர் என்பதை அறிந்த ரிஷியும் கீதாவும் வேண்டுமென்றே...அவர்களை இவ்வுலகத்திற்கு கொண்டு வர...அவர்களைத் தேடுவதுபோல் அண்ணா,ஶ்ரீ என்று கூப்பிட்டு கொண்டே அவர்களை நெருங்கினார்கள்.


நினைத்த மாதிரி இருவரும் கையை விட்டு விட்டு தனியாகப் பிரிந்து நின்றனர்.


ரிஷி அவர்களை நெருங்கி “அண்ணா…!எல்லாரும் ஶ்ரீயைப் பார்க்கணும் என்று அவளைக் கூப்பிட்டு வரசொன்னாங்க...அதனால் தான் வந்தோம்” என்றான்.


கிருஷ் அவனை முறைத்தவாறு “நீ போய் ஜோசியர் சொன்னதை எல்லார்கிட்டயும் சொன்னியாடா…??” என்று சரியாக கணித்து கேட்டான்.


உடனே ரிஷி தலைக்குனிந்தவாறு “நான் இல்லை அண்ணா...அர்ஜூன் சொல்லிட்டான் அண்ணா…!!” என்றான் மெதுவாக.


கிருஷ் இன்னும் அவனை முறைத்து “எப்படி 3 வயசு பையன் போய் அவங்கிட்ட இதெல்லாம் சொல்லிட்டனா…??உனக்கே இது அபந்தமா தெரியலைடா…” என்று கேட்டான் சூடாக.


இப்போது பதில் கீதாவிடமிருந்து வந்தது “அண்ணா அர்ஜூன் கிளி...சித்தப்பா...வந்து சித்தி...திட்டி...கிருஷ் சாமி வந்துச்சு... என்று உளறியதும் எல்லோரும் எங்களை என்ன என்ன என்று கேட்டாங்களா…??வாணி எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் அண்ணா…!!” என்றாள் ரிஷிக்கு சப்போர்ட்டாக.


“அந்த வாலு தான் சொன்னிச்சா…!சரி சரி வாங்க” என்று மூவரையும் அழைத்து சென்றான்.


அந்த இடத்தை அடைந்தவுடன் எல்லாரும் அவளின் முகத்தைப் பார்த்து பதறி என்னச்சு…??அதெல்லாம் நம்பக்ககூடாதும்மா…!உனக்கு கஷ்டம் வர அப்படியெல்லாம் நாங்க சும்மா விட மாட்டோம் என்று ஆளாளுக்கு அவள் கன்னத்தைப் பிடித்து ஆறுதல் கூறினார்கள்.


ஶ்ரீ பாவமாக திரும்பி கிருஷைப் பார்த்தாள்.கிருஷ் கண்ணால் நான் பார்த்துகிறேன் என்று கண்மூடி திறந்து மற்றவர்களிடம் “போதும் போதும் வாங்க...இப்போ தான் நான் அவளைச் சமாதானம் படுத்தி கூட்டிட்டு வந்தேன்...மறுபடியும் அதேகேட்டு நீங்கலெல்லாம் நியாகப்படுத்தி இன்னும் வருத்திறீங்க...அதனால் யாரும் இதைப் பற்றி கேட்க வேண்டாம்…!நேரமாச்சு கிளம்பலாம்” என்று பெரிய மனிதன் தோரணையில் சொன்னான்.


ரிஷி உடனே மனதில் ‘ஒரு வேளை ஆறுதல் படுத்த தான் அண்ணா அவள் கையைப் பிடித்திருந்தரோ,நாம் தான் அவசரப்பட்டு தப்பாக நினைச்சிட்டோமோ’ என்று யோசித்து குழம்பினான்.


கிருஷ் கூறுவது சரி தான் என்று அனைவரும் கிளம்பினார்கள்.


அவர்கள் சமிக்ஞையைப் பார்த்து மீரா எரிச்சலடைந்து கோபத்தில் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்தது...அதனை யாரும் பார்க்கும் முன் அவளை தூணின் மறைவில் நிறுத்திய குந்தவை “மீராம்மா எதுக்கு இப்போ இவ்வளவு கோபம் அழுகையெல்லாம்…?” என்றவாறு அவளின் கண்ணீரைத் துடைத்தார்.


“அப்பாயி...நீங்க பார்த்தீங்க தானே...கிருஷ் அத்தான் அவளுக்கு சப்போர்ட் பண்ணற மாதிரி பேசுவதை...அதுவும் இரண்டு பேரும் கண்ணால் பேசிகீறாங்க அப்பாயி...இதெல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை” என்றாள் எரிச்சலுடன்.


அவளின் முகத்தை நிமிர்த்திய குந்தவை “இங்க பாரும்மா…!நான் தான் எல்லாம் பார்த்துகிறேன்னு சொன்னேனா...இல்லையா…?இன்னும் எத்தனை நாள் தான் இதெல்லாம் நடக்கும்னு பார்க்கலாம்...கொஞ்சம் பொறுத்துக்கம்மா...அப்பாயி எல்லாம் பார்த்துபேன்” என்று ஆறுதல் கூறியவர் மனதில் இதுக்கு மேலே தாமதப்படுத்தினால் சரிப்படாது…இதுக்கு ஒரு முடிவு சீக்கிரம் எடுத்தேயாகணும் என்று உறுதி கொண்டார்.


மாலையில் வீட்டினை சாதாரணமாக அலங்கரித்து ஒரு சின்ன பார்ட்டி மாதிரி செய்தனர்.


காலையில் எவ்வளவுக்கு எவ்வளவு பாரம்பரிய உடை உடுத்தியிருந்தளோ மாலையில் அதற்கு நேரெதிராக நவீன உடையை அணிந்திருந்தாள் ஶ்ரீநிதி.


இளஞ்சிவப்பு நிற கலரில் பொன்னிற ஜமக்கியால் டிசைன் செய்யப்பட்ட லேஹன்கா சோளி அணிந்திருந்தாள்.இதுவும் அவள் நிறத்திற்கு பாந்தமாக பொருந்தியது.


யசோதா தன் பேத்தியின் அழகை கண்டு பூரித்து “இத்தனை அழகும் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ…?” என்று கூறி அவளுக்கு தீர்ஷ்டி கழித்தார்.


அவர் அப்படி கூறியவுடன் அவள் கண்ணுக்கு முன்னால் தோன்றிய முகம் கிருஷ்.உடனே அவள் முகம் சிவந்தது.


அவளின் சிவந்த முகத்தைப் பார்த்த யசோதா இன்னும் பூரித்து அவளைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.


அதன்பிறகு ஒரு ஆறு மணி அளவில் வீட்டு ஆட்களோடு சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினாள்.


அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எண்ணி அவளது தாய் ஜானகி தன் இனிமையான குரலில்,


“தேவதை வம்சம் நீயோ,

தேனிலா அம்சம் நீயோ,

பூமிக்கு ஊர்வலம் வந்த வானிவில் நீயோ,


பூக்களின் வாசம் நீயோ,

பூங்குயில் பாஷை நீயோ,

சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ…”என்ற பாடலைப் பாடினார்.


அவர் பாடி முடித்தவுடன் “தேங்கஸ் அம்மா…” என்று அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.


இப்படியாக அனைவரும் ஶ்ரீயின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி அவளை மகிழ்வித்தனர்.


இரவு பதினொரு மணிக்கு கிருஷ் தன் படுக்கையில் படுத்திருந்தவாறு அந்த புகைப்படத்தை கையில் வைத்து மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தான்.


அவன் பெரியம்மா “கிருஷ் அவளின் நெற்றியில் பொட்டு வைத்து மாலைப்போடுப்பா…” என்றவுடன்,


எரிச்சலுடன் பொட்டு வைக்க கை உயர்த்தி அவளைப் பார்த்தவன் அதிர்ந்தான்.


ஏனெனில் ஒரு வருடத்திற்கு முன் பார்த்தவள் நன்றாக குண்டாகவும், கன்னங்கள் இரண்டு சப்பியாகவும் ரொம்ப சின்ன பொண்ணாகவும், பார்த்தவுடன் அவளைக் கன்னத்தைக் கடித்து திண்ண வேண்டும் போல் இருப்பவள்...இப்போது கொஞ்சம் பெரிய பொண்ணாகவும் கொஞ்சம் சப்பியாகவும்...பருவம் அடைந்த மங்கையாரின் சாயலுடன் மாறி இருந்தாள்.ஆனால் அவளுடைய அழகு மட்டும் அப்படியே இருந்தது.ஒரு வருடத்தில் இவ்வளவு மாற்றமா என்றதுமட்டுமல்லாமல், அவளின் அலங்காரத்தைப் பார்த்து ஒரு நிமிடம் அவனே அசந்துவிட்டான்.


அப்போது அவன் பெரியம்மா “கிருஷ் பொட்டு வைப்பா...என்ன யோசிச்சிட்டு இருக்கே…??” என்று கேட்டவுடன் அவசரமாக அவள் நெற்றியில் பொட்டு வைத்து மாலைப் போட்டு அவர்கள் சொன்னதைச் செய்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.


இவ்வளவு செய்து முடிக்கும் வரைக்கும் அவள் இவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.அது அவனுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது.


இருப்பினும் கிருஷ் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தானே ஒழிய ஏன் என்றே தெரியாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.


அவளை வீட்டின் மூளையில் உட்கார வைத்து உலக்கை ஒன்றைப் போட்டுவிட்டு குடிசை கட்ட சொன்னார்கள்.அந்த முறையையும் கிருஷை செய்ய சொன்னார்கள்.


இந்த முறை எரிச்சலெல்லாம் இல்லை...விருப்பத்துடனே இதையெல்லாம் செய்தான்.குடிசைக் கட்டி முடிப்பதற்குள்...அவளை ஓர் ஆயிரம் முறை...அந்த ஓட்டைகளின் வழியே...அவளின் அழகைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்...குடிசை மாதிரி அமைத்து அதில் அவளை உட்கார வைத்துவிட்டு “நீ போப்பா” என்றவுடன்,


கிருஷ் அவள் ஏதாவது தன்னை நிமிர்ந்து பார்ப்பாளா என்று பார்த்தான்.அவள் தலையை நிமிர்த்தவே இல்லை…


கிருஷ் எரிச்சலுடன் “போடி குண்டச்சி...நீ பார்த்தால் என்ன பார்க்கவிட்டால் என்ன…?மனசிலே பேரழகினு நினைப்பு” என்று நினைத்து தன் தாத்தாவிடம் பேச்சைத் தொடங்கினான்.


இருந்தும் பார்வை அவனை அறியாமல் அங்கே தான் சென்றது… இப்படியே சிறிதுநேரம் சென்றது...இவனைக் காக்க வைத்தது போதும் என்று நினைத்தவள் போல் அவனை அந்த ஓலைகளின் ஓட்டை வழியே பார்த்தாள்...அதைப்பார்த்து அந்த மான்விழி கண்களின் அழகில் மயங்கியவனுக்கு… அவ்வளவு தான் ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போல் தோன்றியது...உடனே அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டான்… அதனைப் பார்த்தவள் பயத்தில் மிரண்டாள்…


அதனைப் பார்த்த கிருஷ் ‘கிருஷ்..!கொஞ்சம் அடக்கிவாசிடா…!அவள் சின்ன பொண்ணு பயந்திடுவாள்…!’ என்று தனக்கு தானே கூறி...மனதை அடக்கினான்.


அதன்பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவிலிருந்து வந்துவிடுவான்.அப்படி வரும்போது தான் ஒரு முறை அவள் தவறவிட்ட கொலுசை எடுத்து எதற்கேன்றே தெரியாமல் பத்திரப்படுத்தினான்.


அந்த வயதில் அவனுக்கு இது காதல் என்ற உணர்வு எல்லாம் இல்லை...ஏதோ அவளைப் பார்த்தால் நன்றாக இருக்கிறது...வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது என்ற ஒரு இனகவர்ச்சி மட்டுமே இருந்தது...ஆனால் வயதாக வயதாக இது எப்படி காதலாக மாறியது என்பது அவனுக்குமே புரியாத புதிர்...இப்படி தன்னை அந்த வயதிலே கவர்ந்த தன் குண்டச்சியை நினைத்து பார்த்து அவள் புகைப்படத்திற்கு முத்தம் ஒன்றைக் கொடுத்தான்.இப்போதும் அவள் மிரண்ட விழிகள் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது.அந்த மிரண்ட விழிகளைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி அவளை அதட்டி கொண்டே இருந்தான்.


“குண்டச்சி…!என்ன இருந்தாலும் எனக்கு இப்போது இருக்கும்...இந்த ஶ்ரீயை விட...அந்த சின்ன வயதிலே...என் மனதை கவர்ந்த அந்த குண்டச்சி தான் பிடிச்சிருக்கு…!!” என்றவாறு மறுபடியும் அவளின் புகைப்படத்திற்கு முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு,


“ஆனாலும் நீ என்ன ரொம்ப சோதிக்கிறடி...ஒரு நாள் இல்லனா...ஒரு நாள் நான் எல்லை மீறப் போறேன் பாரு...அப்புறம் என்னை குத்தம் சொல்லி ஒண்ணுமாகாது” என்று அவளை மிரட்டிவிட்டு அவளின் போட்டாவைப் பார்த்து போலியாக முறைத்தான்.அது ஒரு புகைப்படம் என்பதை கூட மறந்து ஏதோ நேரில் அவளிடம் உரையாடுவது போலும்,ஒரு 28 வயது வாலிபன் என்பதை கூட மறந்தும் அவளிடம் உரையாடி கொண்டிருந்தான்.


உடனே கிருஷ் முகத்தில் சிரிப்புடன் “நீயும் என்னை காதலிக்கிறேடி...அது உன் கண்ணில் தெரியுதுடி குண்டச்சி...எத்தனை வருடம் உனக்காக நான் காத்திருந்தேன்...இப்போது தான்...நான் உனக்கு கண்ணுக்கு தெரிஞ்சனா குண்டச்சி…??இன்னும் கொஞ்ச நாள் தான்...அதுவரை பொறுமையாக தான் இருக்கணும்” என்று கூறி பெருமூச்சுவிட்டு அந்த போட்டாவைப் பத்திரப்படுத்திவிட்டு தன் கண்களை மூடி தூங்கினான்.


அடுத்தநாள் காலையில் எழுந்த ஶ்ரீ தன் மேசையின் மேல் ஒரு கவர் இருப்பதைப் பார்த்தவள் அதை ஆசையாகப் பிரித்தாள்.பிரித்து அதில் இருந்தவற்றை பார்த்து பதறியடித்து ஓடி தனது தோழியின் முன்னால் நின்று இருந்தாள்.


குந்தவை தனது முதல் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதன் விளைவாக...ஶ்ரீநிதி இந்த வீட்டை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள்.
 
அத்தியாயம் 10:அடுத்தநாள் காலையில் எழுந்த ஶ்ரீநிதி தன் மேசையின் மேல் ஒரு கவர் இருப்பதைப் பார்த்தவள்...அதை ஆசை ஆசையாகப் பிரித்தாள்.பிரித்து அதில் இருந்தவற்றை பார்த்து பதறியடித்து ஓடி தனது தோழியை வேகமாக தன் அறைக்கு இழுத்து வந்தாள்.


கீதா அவளிடமிருந்து தன் கையை இழுத்து கொண்டே “ஏய் லூசு...கையை விடுடி...எதுக்கு என்னை இப்படி இழுத்திட்டு வரே…!!” என்று எரிச்சலோடு கேட்டாள்.


ஶ்ரீயும் அதே எரிச்சலுடன் “இதை முதலில் பாருடி...அதைப் பார்த்தவுடனே நீ...இப்போது விட இன்னும் அதிகமாக டென்ஷன் ஆகுவே…!!” என்றவாறு கையில் அந்த பார்சலை திணித்தாள்.


கீதா வாங்கி அந்த பார்சலைப் பிரித்து அதில் இருந்த பொருளைப் பார்த்து அதை கையில் எடுத்தாள்.அது ஒரு கொலுசு என்று பார்த்துவிட்டு ஶ்ரீயைத் திரும்பி முறைத்தாள்.


“இதைப் பார்த்திட்டு தான்...என்னை இப்படி இழுத்திட்டு வந்தியா கிறுக்கி…?இதில் என்ன இருக்கு...நேற்று மாதிரி யாரவது இதை வச்சிருப்பாங்க…?” என்றாள் கோபமாக.


“நீ தான்டி லூசு…” என்று திட்டிவிட்டு,


நக்கலாக “மேடம்…!!கொஞ்சம்...அதிலே ஒரு பேப்பர் இருக்கு பாரு…!அதை எடுத்து கொஞ்சம் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுறியா…??” என்று வினவினாள்.


அந்த பேப்பரில் என்ன இருக்கபோகுது என்று திமிராக...அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு...அதை விரித்தவள் முகம் அப்பட்டமாக அதிர்ச்சியைக் காண்பித்தது…


ஏனெனில் அதில்,


“என் இதயத்தில் குடியிருக்கும்...என் இதயராணி ஶ்ரீநிதிக்கு...என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”


இப்படிக்கு,

உன் இதயக்கூட்டில் ஒரு இடத்தை எதிர்பார்க்கும் அன்பன்,

ரமேஷ்❤️


என்று அந்த கடிதம் முடிந்திருந்தது.


‘இப்போது இதுக்கு என்ன சொல்லப் போறீங்க மேடம்…??’ என்று கண்களால் ஶ்ரீநிதி வினவினாள்.


கீதா அவளை பாவமாக பார்த்து “சாரிடி...இவன் எதுக்கு இப்போ இந்த கிப்ட் அனுப்பி இருக்கான்…அதுவும் இங்கே பாரேன்...ஹார்ட்டின் போட்டு அம்பெலெல்லாம் விட்டிருக்கான்” என்று வினவினாள்.


ஶ்ரீநிதி அவளை முறைத்தவாறு “அது ரொம்ப இப்போ முக்கியம்...நானே அவனுக்கு எப்படி எனக்கு பிறந்தநாள்னு தெரியும்னு…?யோச்சிட்டு இருக்கேன்…?


“அதுமட்டுமில்லாமல் இந்த கிப்ட்டை இங்கு கொண்டு வந்து வைத்தது யாரு…??” என்று முகத்தை சுருக்கி யோசித்தாள்.


கீதாவும் அதே யோசனையில் தான் இருந்தாள்.அவர்களின் யோசனை கலைப்பதற்கேன்றே ரிஷி “ஹாய் கேர்ள்ஸ்...என்ன பண்ணுரீங்க…??” என்று கேட்டவாறு அந்த இடத்திற்கு வந்தான்.


அவசரமாக இருவரும் அந்த கிப்ட்டை தலையணையின் அடியில் மறைத்து வைத்துவிட்டு அவனிடம் ‘ஹாய்’ என்றனர்.


இருந்தும் கீதாவின் முகத்தில் ஒரு பதட்டம் இருந்தது.அதனைப் பார்த்த ரிஷி அவளைப் பார்த்துவாறே “இஸ் எவ்ரி தீங் ஓகே…??” என்று இருவரையும் கேட்டான்.


ஶ்ரீ கீதா எதுவும் சொதப்புவதற்குள் அவளை முந்திக்கொண்டு “எல்லாம் ஓகே...ஆமாம் நீ என்ன விசயமாக இங்கு வந்தே...அதை முதலில் சொல்லு…??” என்று பேச்சை மாற்றினாள்.


“ஹான்...வந்த விசயத்தை மறந்துட்டேன் பாரு...கிருஷ் அண்ணா நீங்க இரண்டு பேரும் ரெடியானு பார்த்திட்டு வர சொன்னாங்க…?” என்றான்.


“எதுக்கு ரிஷி…?” என்று கேட்டாள் ஶ்ரீநிதி.


ரிஷி தோளைக் குலுக்கி “யாருக்கு தெரியும்…?அண்ணா கேட்க சொன்னாங்க...நான் கேட்டேன் அவ்வளவு தான்!!” என்றான்.


“உனக்கு என்ன தான் தெரியும்...ஹிட்லரிடம் மைண்ட் வாய்ஸ் பேச தெரியும்...நல்லா பிரண்ட்ஸ் கூட சுத்த தெரியும்...எங்களிடம் வாயடிக்க தெரியும்…ஆளு மட்டும் தான்...பனை மரமாட்டாம் வளர்ந்திருக்கே…!...என்று கூறி மூளை இருக்கும் பகுதியைத் தொட்டு காட்டி,


“ஆனால் இங்க ஒண்ணும் இல்லை...வெறும் களிமண்தான் இருக்கு” என்று குறும்புடன் கூறி அங்கிருந்து குளியலறைக்குள் புகுந்தாள்.பின்னே அவன் அவளை துரத்தி துரத்தி அடிக்க வருவனே அதை யார் வாங்குவது என்று குளியலறைக்குள் புகுந்தாள்.


அதைகேட்டு கீதா ஹாஹாஹா வென்று சிரித்து “தொப்பி!தொப்பி!” என்று கூறி அடக்கமுடியாமல் சிரித்தாள்.


அதைப் பார்த்த ரிஷி இன்னும் கடுப்பாகி அவள் பாத்ரூமிற்குள் சென்றுவிட்டாள்...அதனால் போனால் போகட்டும் என்று விடாமல் ரிஷி கதவைத் தட்டியவாறு “ஏய்…!!ஒழுங்கா இப்பவே வந்துவிட்டால் ஒரு அடியோடு தப்பிச்சிடுவே…இல்லை நீ எப்போ என் கையில் சிக்கினாலும் அவ்வளவு தான்…ஒழுங்கா வெளியே வா ஶ்ரீ…!நீ வரும் வரை நான் இங்கே தான் இருப்பேன்” என்று இன்னும் பலமாக தட்டினான்.


ஶ்ரீ உள்ளிருந்து கூலாக “ஒண்ணும் பிரச்சினையில்லைடா...நான்வரும் வரை நீ இங்கே இரு...கிருஷ் அத்தான் வந்து...அவங்க ரெடியானு பார்த்துட்டு வர சொன்ன...நீ இங்கு என்ன பண்ணிட்டு இருக்கே…?என்று கேட்டு உன்னை திட்ட போகிறார்…!!” என்றவுடன்,


“ஐய்யையோ ஆமாம்...என்றுவிட்டு உன்னை இரு...அப்புறம் பார்த்து கொள்கிறேன் என்று மனதில் கறுவிவிட்டு,


ஶ்ரீயிடம் “ஆமாம் அண்ணா நீங்க ரெடியானு கேட்டால்...நான் என்ன சொல்லறது…??” என்று எரிச்சலுடன் வினவினான்.


அதற்கு ஶ்ரீ “இன்னும் பத்து நிமிடத்தில் ரெடியாகிடுவோம் என்று சொல்லு” என்று அவனை அனுப்பினான்.


இந்த பக்கம் கீதா இன்னும் சிரிப்பதை கண்ட ரிஷி அவளிடம் தன் கோபத்தைக் காட்டமுடியாமல்...இதற்கு காரணமானவளை நன்றாக மனதில் வைதுவிட்டு கிருஷிடம் சென்று அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.


ஶ்ரீநிதி சொன்ன மாதிரி பத்து நிமிடத்தில் கீழிறங்கி தன் தோழியோடு வந்தாள்.அந்த கிப்ட்டை எடுத்து அவள் அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு வந்தாள்.


கிருஷ் வரவேற்பறையின் சோபாவில் உட்கார்ந்தவாறு தன் பெரியப்பாவுடன் பேசி கொண்டிருந்தான்.


ஶ்ரீயும் கீதாவும் அவர்களை நெருங்கியவுடன் கிருஷ் வேண்டுமென்றே ஶ்ரீயை விட்டுவிட்டு கீதாவைப் பார்த்து “போய் இரண்டு பேரும் சாப்பிட்டு வாங்க...இன்னைக்கு என் கூடவே ஆபிஸ் வந்திடுங்க…நைட் ரொம்ப லேட்டாகுது...அதனால் இரண்டு பேரும் தனியாக போக வேண்டாம்...என்கூடவே வந்திடுங்க...கீதா நீ இந்த பிராஜக்ட் முடியும் வரை இங்கே இரும்மா...நைட் 10 மணிக்கு போய் ஹாஸ்டல் கதவை தட்ட வேண்டாம்” என்று கூறினான்.


கீதா தயக்கமாக “பரவாயில்லை அண்ணா...நான் போயிடுவேன்...ஒண்ணும் பிரச்சினையில்லை அண்ணா…!!” என்றாள்.


“உன் அப்பா எங்களை நம்பி தான்ம்மா இங்கே விட்டிருக்காங்க...உன் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...அதனால் நான் சொன்னதை செய்ம்மா… என்று உறுதியாக அவளிடம் கூறிவிட்டு,


ஶ்ரீயிடம் திரும்பி “ஶ்ரீ நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்...நீ ஏன் உன் பிரண்ட்டிடம் எதுவும் சொல்லாமல் அப்படியே நிக்கிறே…??” என்று அவளை அதட்டினான்.


ஶ்ரீ பயத்துடன் “சொல்லுகிறேன் அத்தான்…” என்று விட்டு கீதாவிடம் “இங்கே இருடி...அத்தான் அவ்வளவு தூரம் சொல்லுறாங்க தானே…” என்று பேசி பேசியே அவளை ஒத்துக்கொள்ள செய்துவிட்டு சாப்பிட்டுவிட்டு கிருஷுடன் காரில் கிளம்பினர்கள்.


ரிஷியையும் அதே காரில் ஏற்றிக்கொண்டு நால்வரும் ஒரே காரில் பயணித்தனர்.


ரிஷி ஶ்ரீயிடம் சண்டைப் போட்டதைக் கூட மறந்துவிட்டு லொட லொடவென்று பேசிக் கொண்டே வந்தான்.அவனுடன் கீதாவும் ஶ்ரீயும் அவனுக்கு ஒன்றும் சலித்தவர்கள் இல்லை என்பது போல் பேசிக்கொண்டே வந்தார்கள்.கிருஷ் மட்டும் அமைதியாக வந்தான்.


ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் முக்கை தாங்கமுடியாமல் கிருஷ் அவர்களை அமைதிப்படுத்த ஒலிநாடவை ஒளிக்க செய்து அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக் கசியவிட்டான்.


எடுத்தவுடன் முதல் பாடலாக,

“என்னவளே அடி என்னவளே” என்ற பாடல் ஒலித்தது...அதைக் கேட்டவுடன் மற்ற மூவரும் பேசுவதை நிறுத்திவிட்டு அந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தனர்.


இந்த பாடல் இசைத்தவுடன் கிருஷ் ரோட்டில் ஒரு கண் வைத்து கொண்டே,கண்ணாடியின் வழியாக பின்னாடி உட்கார்ந்திருக்கும் ஶ்ரீயை தான் பார்த்தான்.அவளும் அதேபோல் இவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.இருவர் கண்ணும் ஒன்றோடு ஒன்று கலந்தது.அப்படியே அந்த பாடலின் ஒவ்வொரு வரியும் தங்களுக்காகவே வடித்ததுபோல் இருவரும் அதில் மூழ்கி ரசித்து கொண்டிருந்தனர்.


“என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்

கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்

காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்

கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று

கழுத்து வரை இன்று காதல் வந்து இரு

கண்விழி பிதுங்கி நின்றேன்


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று

வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்

உருலுதடி

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு

நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்

தோன்றுதடி – இது

சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்

வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்

வார்த்தையில் உள்ளதடி…


என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்

கண்ணடிப்பேன்

கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்

மீன் பிடிப்பேன்

வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு

சொடுக்கெடுப்பேன்

வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி

அனுப்பிவைப்பேன் – என்

காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்

காலடி எழுதிய கோலங்கள் புதுக்

கவிதைகள் என்றுரைப்பேன்…


என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்

கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்

காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்

கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று

கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு

கண்விழி பிதுங்கி நின்றேன்” என்று பாடல் முடியவும் ஆபிஸ் வருவதற்கும் சரியாக இருந்தது.


ரிஷி இதனையெல்லாம் கவனிக்காமல் பாடலை ரசித்து கொண்டே...தன் செல்போனை நோண்டி கொண்டிருந்தான்.ஆனால் கீதா மட்டும் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு ‘அய்யோ இதுங்க ரொமேன்ஸ் வர வர தாங்க முடியாலைடா சாமி...அதுவும் இந்த கிருஷ் அண்ணா வீட்டிலே இருக்கும் போது ஶ்ரீயை அப்படி அதட்டி மிரட்டி பேசனாங்க...ஆனால் இங்கே அப்படியே தலைகீழாக இருக்கு… ஆனாலும் ஒரு சின்ன பொண்ணு...இங்க இருக்காளே...அவள் முன்னாடி இப்படி பண்ணறது தப்புனு தோணுதானு பாரு...இரண்டு பேருக்கும் விவஸ்தையே இல்லை’ என்றவாறு மானசீகமாக தலையில் அடித்து கொண்டு,


ஶ்ரீயை மனதில் இருடி உனக்கு இருக்கு...இன்றைக்கு நைட்...என் கூட தானே இருப்பே...அப்போ வச்சிக்கிறேன் கச்சேரி...என்று கறுவிகொண்டிருக்கும் போதே ஆபிஸ் வரவும்...அப்பாடி ஆபிஸ் வந்திடுச்சி...இவங்களிடம் இருந்து நான் தப்பித்தேன் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.


கார் நின்றவுடன் இருவரும் தங்களின் பார்வையை மாற்றிவிட்டு சகஜமாக இருக்க முயன்று அதில் வெற்றியும் கண்டனர்.


அதன்பிறகு அலுலகத்திற்குள் நுழைந்து...அவரவரின் வேலைகளை மற்ற எதைப் பற்றியும் நினைக்காமல் செவ்வனே செய்தனர்.


அதேநேரம் வீட்டில் குந்தவை தன் முதல் திட்டத்தை செயல்படுத்த எண்ணி சில பல வேலைகளைச் செய்துவிட்டு ஶ்ரீநிதிக்காகக் காத்துகொண்டிருந்தார்.


அன்று பார்த்து ஶ்ரீநிதி இரவு 9 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தாள்.வந்தவளை அவள் அறைக்கு கூட செல்லவிடாமல் “ஶ்ரீநிதி இங்கே வாம்மா…!” என்று அவர் அறையில் இருந்தாவாறே அழைத்தார்.


ஶ்ரீநிதி முதன்முதலாக தன்னை வாம்மா என்று அழைத்ததில் மனமுருகி கீதாவை உட்கார்ந்து சாப்படுமாறு பணித்துவிட்டு தன் அப்பாயியை ஒரு மலர்ச்சியுடன் பார்க்க போனாள்.


அவர் முகம் ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்த ஶ்ரீ,அவர் அறையின் உட்சென்று அங்கே கட்டிலில் அமர்ந்திருக்கும் தன் அப்பாயியின் அருகில் சென்று நின்று “என்ன விசயம் அப்பாயி...எதுக்கு கூப்பிட்டிங்க…??ஏதாவது வேணுமா…??உங்க முகமே சரியில்லையே...ஏதாவது உங்களுக்கு உடம்பு சரியில்லையா…??நான் வேண்டுமானால் கால் கை அமுக்கி விடவா அப்பாயி...ரொம்ப முடியலைனா...ஆஸ்பத்திரி வேண்டுமானால் போகலாமா…??இல்லை அப்பாவைக் கூப்பிடட்டுமா...எதாவது சொல்லுங்கள் அப்பாயி...எனக்கு பயமாக இருக்கு??” என்று படப்படவென அனைத்து கேள்விகளும் அவருக்கு உடம்பு முடியவில்லையோ என்று நினைத்து ஒரு வித பதட்டத்துடன் கேட்டாள்.


இவளின் பாசத்தைப் பார்த்து குந்தவை நெகிழ்ந்தது என்பதோ உண்மை...ஆனால் அடுத்த நிமிடம் தன் செல்லப்பேத்தி மீராவை நினைத்து தன் மனதை கடுமையாக்கியபடி சிரித்த முகத்துடன் அவளிடம் பேச ஆரம்பித்துவிட்டு அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தார்.


அவர் பேச ஆரம்பிக்கும் போது இருந்த மலர்ச்சி முடித்தப்போது இல்லை...இருந்தும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் புன்னகையுடன் “சரி அப்பாயி...அப்பாவிடம் பேசி சம்மதிக்க வேண்டியது என் பொறுப்பு” என்றுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.


அவள் வெளியேறியவுடன் தன் முதல் திட்டம் வெற்றியடைந்தினால் அவர் முகத்தில் மலர்ச்சி கூடியது.அடுத்த தன் திட்டத்தை எப்படி எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தார்.


வெளியே வந்த ஶ்ரீநிதி தன் அம்மாவிடம் “எனக்கு பசிக்கவில்லை அம்மா...அதனால் கொஞ்சம் மட்டும் சாப்பாடு வைங்க” என்றுவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.


அவள் அப்படி சொன்னவுடன் கிருஷ்,கீதா மற்றும் ரிஷி எல்லாரும் திகைத்து அவளைப் பார்த்தனர்.ஏனெனில் காரில் வரும்போது ஶ்ரீ “எனக்கு ரொம்ப பசிக்கிறது...வீட்டிற்கு போய் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டணும்” என்று சொன்னவள் இங்கு வந்து பசிக்கவே இல்லை என்று சொன்னால் எல்லாரும் இப்படி தான் பார்ப்பார்கள்.


ஆனால் ரிஷி கொஞ்சம் முன்னேறி “ஶ்ரீ நீ…” என்று ஆரம்பிக்க போனவனைக் கிருஷ் பார்வையால் அதட்டி சாப்பிட சொன்னான்.அதைப்பார்த்த கீதாவும் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டை கவனித்தாள்.


அவள் முகமே ஏதோ சரியில்லை என்பதை அறிந்த ஜானகி “என்னம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கே…??” என்று கேட்டார்.


“ஒண்ணும் இல்லைம்மா...கொஞ்சம் தலைவலிக்கிறது போல் இருக்கும்மா...வேறே ஒண்ணும் இல்லை...என்றவுடன்,


ஜானகி பதறி அவள் கழுத்து தலையைத் தொட்டு பார்த்து சூடு இல்லை என்றவுடன் தான் அப்பா என்று பெருமூச்சை வெளியிட்டு “சரிம்மா...நீ வேலை அதிகமாக செய்ததினால் தலைவலி வந்திருக்கும்...அப்போது சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு...எல்லாம் சரியாகிடும்” என்றார்.


“சரி அம்மா” என்றுவிட்டு பெயருக்கு ஏதோ கொறித்துவிட்டு தன் அறைக்கு கீதாவுடன் சென்றாள்.


கிருஷ் தான் மனதிற்குள் இவள் அத்தை அறைக்குள் போகும் போது நல்லா தானே இருந்தாள்...ஆனால் திரும்பி வரும்போது அவள் முகமே சரியில்லையே...என்னாச்சு என்று யோசித்துவிட்டு அத்தை ஏதாவது ஶ்ரீநிதியைத் திட்டி இருப்பாங்களோ? என்று நினைத்து சரி அவளிடம் நாளைக்கு கேட்டு கொள்ளலாம் என்று தூங்குவதற்காக தன் மெத்தையில் விழுந்தான்.


படுத்திருந்தனே ஒழிய அவனுக்கு தூக்கமே வரவில்லை...வரும் போது நல்லாதானே இருந்தாள்...இப்போது என்னச்சு...என்று யோசித்துவிட்டு என்ன இருந்தாலும்...எப்போது என்னை இந்த குண்டச்சி விரும்ப ஆரம்பித்தளோ...அப்பவே நீ தான் என் பொண்டாட்டினு நான் முடிவு பண்ணிட்டேன்... அதனால் இனிமே நீ எதற்கும் கலங்கக்கூடாது… கலங்கவும் விடமாட்டேன் என்று அவனுக்கு அவனே உறுதியளித்தான்.


அன்றைய இரவில் படுப்பதற்கு முன்...கீதா ஶ்ரீநிதியின் முகத்தைப் பார்த்து...ஏதோ சரியில்லை என்று நினைத்து...அவளிடம் பேச எண்ணி... ஒருமுறை வாணி நன்றாக தூங்கிவிட்டளா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு...ஶ்ரீநிதியிடம் “ஶ்ரீ ஒரு ஐந்து நிமிடம் உன்கூட பேசணும்...கொஞ்சம் முக்கியமான விசயம்டி...பால்கனிக்கு வரியா…??” என்று தீவரமான முக பாவனையுடன் கேட்டாள்.


ஶ்ரீயும் அவளின் தீவர முகப்பாவத்தைப் பார்த்து “ஒரு 5 மினிட்ஸ்டி...நான் ஃபிரஸ் அப்பாகிட்டு வரேன்” என்று அவள் அறையில் உள்ள அட்டாச்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.


அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவரும் பால்கனியில் நின்று இருந்தனர்.


ஆனால் இருவரும் எதுவும் பேசாமல் அங்கிருந்த நிலவைப் பார்த்து கொண்டிருந்தனர்.


முதலில் ஶ்ரீ தான் “கீதா ஏதோ முக்கியமான விசயம் பேசணும்னு சொல்லிட்டு...வந்ததிலிருந்து வானத்தையே பார்த்திட்டு இருக்கே…??” என்று கீதாவைப் பார்த்து கேட்டாள்.


கீதா ஶ்ரீயைத் திரும்பி பார்த்து எதுவும் பேசாமல் அவளின் கண்களை மட்டும் பார்த்து கொண்டிருந்தாள்.அது ஒரு குற்றம் சாட்டும் பார்வை என்று ஶ்ரீநிதிக்கு புரிந்தது.


அதனால் அவளின் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் “என்னடி ஏதோ பேசணும்னு சொல்லிட்டு வந்து ஒண்ணும் பேசாமல் இருக்கே…??” என்று வினவினாள்.


“இத்தனை நாளாக என் பிரண்ட் என்னிடம் இருந்து எதுவும் மறைக்கமாட்டாள்னு நினைச்சேன்...ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று நீ எனக்கு புரியவச்சிட்டேடி…!!” என்று ஒரு மாதிரியான குரலில் கூறினாள்.


அதில் ஶ்ரீநிதி தடுமாறி “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைடி...நான் உன்கிட்ட இருந்து எதுவும் மறைக்கலைடி...நீ எதை பற்றி பேசுறேனு எனக்கு புரியலைடி” என்று சொல்லும் போதே அவளிடம் ஒரு உண்மையைப் பேசும் உறுதி இல்லை என்பதை கீதா கவனித்தாள்.


அதைக்கவனித்த கீதா ஒரு வருத்தமான முறுவலுடன் “சரி...நீ சொல்லுவதும் சொல்லாததும் உன் விருப்பம்...ஆனால் என் பிரண்ட் நல்லாதுக்காக கடைசியாக ஒரு அட்வைஸ் சொல்லிறேன்...அதைக் கேட்பதும் கேட்கக்காததும் உன் விருப்பம்...என்று விட்டு,


ஶ்ரீ ஏதோ சொல்லவருவதைப் பார்த்து அவளை “ஒரு நிமிடம் இரு...நான் சொல்லி முடித்துவிடுறேன்...நீ ரமேஷிடம் கிருஷ் அண்ணாவை காதலிக்கறதைப் பற்றி சொல்லிவிடுவது பெட்டர்...ஏனெனில் இன்னோருத்தர் என் தோழியை நினைத்து தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்வது எனக்கு பிடிக்கவில்லை...என் தோழி எப்போதும்...எல்லாருக்கும் நல்லது தான் செய்வாள்” என்று முடித்துவிட்டு தான் வந்த வேலை முடிந்தது என்பது போல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவளை ஶ்ரீநிதி தவிப்புடன் பிடித்து இழுத்தாள்.


ஶ்ரீநிதி கண்களில் கண்ணீருடன் “சாரிடி கீதா...நான் உன்னிடம் மறைக்கணும்னு மறைக்கலைடி...எனக்கே...இது சரிவர தெரியாத போது உன்னிடம் எப்படிடி சொல்ல முடியும்” என்றாள்.


எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் தன் தோழியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அவளை இழுத்து அணைத்து ஆறுதல் படுத்தியவாறு “உனக்கு என்ன சரிவர புரியவில்லை…??” என்று கேட்டாள்.


அவள் அணைப்பில் இருந்தவாறே “அவரைப் பார்த்தாலே ஒரு படப்படப்பு வருதுடி...அவர் கண்களைப் பார்த்தால் பார்த்துகொண்டே இருக்கணும் போல இருக்குடி...அவர் சிரிக்கும் போது விழும் அந்த கன்னகுழி அழகில் நான் அந்த குழியில் விழந்து விடமாட்டேனா…?? என்று இருக்கிறதுடி…!!ஆனால் இதுக்கு பெயர் காதலா...இல்லை ஈர்ப்பானு…?என்று கண்களில் கனவு மின்ன கூறி,


ஆனால் முடிவில் ஆதங்கத்துடன் “எனக்கே இது முழுதாக புரியவில்லை...இந்த லட்சணத்தில் நான் வந்து உன்னிடம் என்னவென்று சொல்லுவது…?” என்று அவள் அணைப்பிலிருந்து வெளிவந்தவாறு கூறினாள்.


“இது காதல் என்று தெரியாத போதே இப்படி ரொமென்ஸ்னா...அப்போ காதல்னு தெரிஞ்சா அவ்வளவு தான் நாங்க...எல்லோரும் தண்ணீரில் தான் நீந்தணும்” என்று சூழ்நிலையை மாற்றினாள்.


அதற்கு தகுந்த மாதிரி ஶ்ரீ வெட்கத்தில் சிவந்த முகத்துடன் “ச்சு போடி” என்று சிணுங்கினாள்.


தீடிரென்று கீதா “ஐய்யையோ…!” என்று அலறினாள்.


இவள் அலறலைக் கேட்டு “என்னச்சுடி கீது” என்று பதறினாள்.


கீதா “இல்லை...நைட் நான் எப்படி உன் பக்கத்தில் தூங்கிறதுனு யோசித்து பார்த்து அலறினேன்…என்றவளை இதில் என்ன இருக்கு என்று ஶ்ரீ புரியாமல் பார்த்தாள்.அவளை அலட்சியம் செய்துவிட்டு,


கீதா “நீ பாட்டுக்கு கிருஷ் அண்ணானு நினைச்சி என்னை ஏதாவது பண்ணிட்டினால்...அப்புறம் எனக்கு யார் பாதுகாப்பு…??அதை நினைச்சுப்பார்த்து அலறினேன்” என்று சிரியாமல் கூறியவளைப் பார்த்து ஶ்ரீநிதி நன்றாக முறைத்துவிட்டு,


“ஏய் எருமை…!!உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை...எனக்கு அத்தான் என்னை காதலிக்கிறாரா இல்லையானே தெரியலை...இதில் நீ வேறே போடி லூசு” என்று திட்டினாள்.


கீதா உறுதியாக “கிருஷ் அண்ணா…உன்னை காதலிக்கிறாங்க...நான் அதை உறுதியாக சொல்லுகிறேன்…” என்றாள்.


“அது எப்படிடி சொல்லுறே…??”


“கிருஷ் அண்ணா உன்னை பார்க்கிறே பார்வையில் ஒரு காதல் இருக்குடி...அதுமட்டுமில்லாமல் உன்னை அதட்டும் போதும் சரி...திட்டும் போதும் சரி...உன் மூகம் கொஞ்சம் மாறினாலும் அதைப் பார்த்து அதற்கு தகுந்த மாதிரி நடக்கும் போதும் சரி...அவர் உன்னை ரசிக்கும்போதும் சரி...அவர் கண்களில் காதல் தெரியும்...அவர் திட்டும் போது நீ எனக்கானவள்...உன்னை திட்டும் உரிமை எனக்கு இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் அவர் நடவடிக்கை” என்று நீளமாக எடுத்துரைத்தாள்.


ஶ்ரீதான் இவளை ஆவென்று பார்த்து கொண்டிருந்தாள்.
 

அவளைப் பார்த்த கீதா அவள் வாயை கையால் மூடிவிட்டு சிரிப்புடனே “சரி...உங்க அப்பாயி என்ன சொன்னாங்கடி…?” என்று கேட்டாள்.


உடனே ஶ்ரீநிதியின் முகம் மாறியது.கீதா மறுபடியும் “என்னடி…??” என்று வினவினாள்.


ஶ்ரீநிதி மெதுவான குரலில் “டெல்லியில் ஜே.கே காலேஜ் பத்தி கேள்விப்பட்டு இருக்கே தானே…??” என்று கேட்டவுடன்,


கீதா ஆர்வமாக “அதுவா ரொம்ப பெரிய காலேஜ்டி அது...அதில் சீட் கிடைச்சவாங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும்...ஆமாம் நீ ஏன் அதைப் பற்றி கேட்கிறே…” என்று வினவினாள்.


“எனக்கு அதில் அட்மிஷன் கிடைச்சிருக்கு...அப்பாயி அதை எனக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்திருக்காங்க…” என்று சுரத்தேயில்லாமல் கூறினாள்.


அவள் சொன்ன விசயத்தைக் கேட்டவுடன் “வாவ்!!சூப்பர்டி கை கொடுடி” என்றவாறு அவள் கையைப் பிடித்து குலுக்கினாள்.


ச்சு என்று சலித்தாள் ஶ்ரீ.அதன்பிறகு தான் கீதா அவள் முகத்தைப் பார்த்து ஏதோ சரியில்லை என்று புரிந்து “என்னச்சுடி” என்று வினவினாள்.


ஶ்ரீநிதி வருத்தமாக “அப்பா அம்மா…உன்னை…வாணி…ரிஷி… அப்புறம் இந்த குடும்பத்தை... எல்லாரையும் விட்டுவிட்டு எப்படிடி நான் மட்டும் தனியாக போய் இருக்க முடியும்…அதை நினைச்சாதான்… வருத்தமாக இருக்கு” என்றாள்.


கீதா அவளைச் சந்தேகமாகப் பார்த்து “நீ எங்க எல்லாரையும் விட்டு பிரிந்து போவதற்கு வருத்தப்படற மாதிரி தெரியலை...கிருஷ் அண்ணாவை விட்டு பிரிந்து போவதற்கு தான்...வருத்தப்படற மாதிரி இருக்கு” என்று உண்மையைப் போட்டு உடைத்தாள்.


ஶ்ரீநிதி அவசரமாக “அப்படியெல்லாம் இல்லை” என்று சொன்ன தினுசிலே அப்படிதான் என்பது தெளிவாக தெரிந்தது.


கீதா இன்னும் அவளை உற்று பார்க்கவும் ஶ்ரீநிதிக்கு கண்களில் கண்ணீரே வர ஆரம்பித்தது.


“லூசு...எதற்கு இப்போ அழுகறே...ஒரு வருடம் தான்டி...சொடக்கு போடறதுகுள்ள போய்விடும்டி...அப்புறம் கல்யாணம் தான்...டும்டும்டும் தான்…” என்று அவளைக் கலகலப்பாக முனைந்தாள்.


ஶ்ரீயும் கண்ணீருடனே “போடி” என்று வெட்கச் சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள்.


அவளைப் பார்த்த கீதா தன் தோழி இதே மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனைச் செய்துவிட்டு அவளும் தூங்கப் போனாள்.


இவர்கள் பேசுவதை இன்னும் இருவர் கேட்டு கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் மகிழ்ச்சியுடனும்...இன்னொருவர் வன்மத்துடன் கேட்டதை கீதாவும் ஶ்ரீநிதியும் அறியவில்லை.


அதனால் அடுத்தநாள் இருவரின் காதலைச் சோதிப்பதைப் போல் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை இருவரும் அறியாமல் தன் கனவுகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தார்கள்.
 
அத்யாயம் 11:கிருஷும் தன்னை காதலிக்கிறார் என்று...கீதா சொன்னதிலிருந்து ஶ்ரீநிதி வானில் பறந்துகொண்டிருந்தாள்...காலையில் எழுந்ததிலிருந்து அவள் அங்கு அங்கு நின்று கனவு கண்டு கொண்டிருப்பதை பார்த்த...கீதாவிற்கு தான்...அவளை சமாளிப்பது...பெரும் பாடாக இருந்தது.


இதற்கெல்லாம் மேல் குளிக்க சென்றவள்...ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வெளியில் வராமல் இருக்கவும்...கீதா என்னவோ ஏதோ என்று பயந்து கதவைத் தட்டினாள்.முதலில் ஶ்ரீநிதி எதுவும் பதில் சொல்லவில்லை...ஆதலால் கீதா பதட்டம் அடைந்து...ஶ்ரீநிதியை அழைத்து கொண்டே இன்னும் வேகமாக கதவைத் தட்டினாள்.


இப்போது ஶ்ரீநிதி கதவை வேகமாக திறந்து “என்னடி…??எதுக்கு இப்போது கதவு உடையும் அளவுக்கு தட்டிட்டு இருக்கே…??” என்று எரிச்சலுடன் கேட்டாள்.


கீதாவிற்கு இப்போது பயம் குறைந்து ஶ்ரீநிதியை முறைத்துக்கொண்டே “நான் எத்தனை தடவை கதவை தட்டினேன் என்று தெரியுமா…??நீ பதிலே சொல்லலை...அதனால் தான் வேகமாக கதவைத் தட்டினான்...ஆமாம் அது இருக்கட்டும்...என்று அவளை மேலிருந்து கீழே வரை சந்தேகமாக பார்த்து பார்த்துவிட்டு,


“நீ உள்ளே குளிக்க போய் ஒரு மணி நேரமாகுது...ஆனால் உன்னை பார்த்தால் குளிச்ச மாதிரி தெரியலையே...நீ ஒரு மணி நேரமாக...குளிக்காமல் என்ன பண்ணினே…??” என்று வினவினாள்.


ஏனெனில் ஶ்ரீநிதி உள்ளே குளிக்கப்போகும் போது போட்டிருந்த அதே இரவு உடையுடனே இப்போதும் இருந்தாள்.அதை வைத்து தான் கீதா ஶ்ரீநிதியை கேட்டாள்.


ஶ்ரீநிதி அதே எரிச்சலுடன் “ஏய் லூசு...நான் குளிக்க போகி 5 நிமிடம் தான் ஆகுது...நீ ஒரு மணி நேரம்னு பொய் சொல்லுறியா…??நான் போகும்போது 7.30...இப்போது என்ன மணி…??” என்றவாறு பாத்ரூமை அடைத்து நின்றிருந்தவளைத் தள்ளிவிட்டு கடிகாரத்தை எட்டி பார்த்து திகைத்தாள்.ஏனெனில் மணி 8.40.


கீதா ஶ்ரீநிதியை இப்போ என்ன சொல்ல போறீங்க மேடம் என்றவாறு நக்கலாக பார்த்து கொண்டிருந்தாள்.சில நொடிகளில் கட்டுக்குள் வந்த ஶ்ரீநிதி “சாரிடி...நான் இப்போது தான் போன மாதிரி இருந்தது… ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆகிடுச்சுனு...என்னால் நம்பவே முடியலைடி...அது தெரியாமல் உன்னை வேறே திட்டிட்டேன்டி...” என்று அசடு வழிந்தவாறு,


“சரிடி...நான் போய் வேகமாக குளிச்சிட்டு வந்திடுறேன்டி…” என்று கூறிவிட்டு கதவை சாற்றப்போனவளைத் தடுத்த கீதா “ஆமாம் இவ்வளவு நேரம் உள்ளே என்ன பண்ணிட்டு இருந்தே…??அதை முதலில் சொல்லு” என்று பிடிவாதமாக கேட்டாள்.


ஶ்ரீநிதி திருதிருவென்று முழித்தாள்.ஏனெனில் இவ்வளவு நேரமும் குளிக்காமல் கிருஷை நினைத்து கனவு கண்டு கொண்டிருந்தேன் என்று எப்படி தன் தோழியிடம் கூறுவாள்.அவளின் முகத்தை வைத்தே கண்டுப்பிடித்த கீதா சிரிப்புடன் “லூசு...கனவு காணாமல் சீக்கிரம் போய் குளித்துவிட்டு வா...9 மணிக்கு கிருஷ் அண்ணா...ஆபிஸ் கிளம்பிட்டிங்களா என்று கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க…நான் வேறே இன்னும் குளிக்கணு...” என்று சொல்லி முடிப்பதற்குள் ஶ்ரீநிதி பதட்டத்துடன் “ஆமாம்...ஆமாம் நான் போய் சீக்கிரம் குளிச்சிட்டு வரேன்” என்று அவசரமாக உள்ளே நுழைந்தாள்.


சரியான சமயத்திற்கு ஶ்ரீநிதி தயாராகி கீழே வந்தாள்.கீழே கிருஷூடன் பாட்டி தாத்தா அமர்ந்து இருப்பதைப் பார்த்த ஶ்ரீநிதி தன் பாட்டியை வம்பிழுக்க எண்ணி “தாத்தா...இந்த ராது...சரியே இல்லை…எப்போ பார்த்தாலும் என்னை திட்டிட்டே இருக்கறாங்க...இவங்க அவ்ளோ ஒண்ணும் அழகும் இல்லை...அப்புறம் எப்படி அவங்களை கல்யாணம் பண்ணீங்க தாத்தா...பேசாமல் பாட்டியை விவாகரத்து பண்ணிடுங்க… நான் உங்களுக்கு இளமையா அழகா ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிவைச்சிடுறேன்” என்று குறும்புடன் கூறினாள்.


தாத்தா அதற்கு பலமாக சிரித்துவிட்டு “என்ன பண்ணிறது ஶ்ரீம்மா...எங்க அம்மா இவளை தான் நீ கல்யாணம் பண்ணணும் என்று ஒற்றைகாலில் நின்று என் தலையில் கட்டி வச்சிட்டாங்க…!!” என்று வம்பிழுத்தரை,


குமட்டில் ஒரு இடி இடித்து “ஆமாம்...அப்படியே உங்க தாத்தாரு எம்.ஜி.யாரு கணக்கா இருக்காரு...இவரை கல்யாணம் பண்ணிக்க எல்லாரும் வரிசையில் நின்னாங்க...நான் மட்டும் போனால் போகட்டும்னு...பாவப்பட்டு கல்யாணம் பண்ணலைனா… உங்க தாத்தாரு காலம் பூராவும்… கல்யாணம் பண்ணாமல் கட்ட பிரம்மசாரியா தான் இருந்திருக்கணும்… அப்புறம் நீயும் என் பேத்தியா வந்திருக்கே மாட்டே...நானும் இந்த உன் தொந்தரவு இல்லாமல் நிம்மதியா இருந்திருப்பேன்” என்று அவரும் இதில் நான் ஒண்ணும் உங்களுக்கு சலித்தவாரில்லை என்று நிரூபித்தார்.


இப்போது எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.


ஆனாலும் விடாமல் ஶ்ரீ சிரிப்புடன் “என்ன ராது...நீ ஓவரா பேசிறே…?எங்க தாத்தா மாதிரி புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்… இதுக்காக நீ தினமும் காலையில் அவர் காலை தொட்டு வணங்கணும் புரிஞ்சிக்கோ…!அப்புறம் இந்த அழகான இளவரசி கிடைக்க நீ இன்னும் கொடுத்து வச்சிருக்கணும்!” என்றாள் தன் சுடிதாரில் இல்லாத காலரைத் தூக்கியவாறு.


தாத்தா “மற்றதெல்லாம் சரிம்மா...ஆனால் கடைசியாக ஏதோ இளவரசினு சொன்னியே...அது யாரும்மா…?அதுமட்டுமில்லாமல் நம்முடைய வீட்டில் அப்படி யாரும் இருக்கிற மாதிரி தெரியலையே...?” என்று புரியாமல் கேட்பதுபோல் கேட்டு அந்த நேரத்தில் அவள் காலை வாரினார்.


இவ்வளவு நேரம் பாட்டியை வம்பிழுத்ததை மறந்து ஶ்ரீ சிணுங்கயவாறு “பாருங்க பாட்டி இந்த தாத்தாவை…!!” என்று தன் பாட்டியிடம் சரணடைந்தாள்.


பாட்டி “இப்போது புரியுதா உங்க தாத்தாரை பற்றி…” என்றார் சிரிப்புடன்.


“ஆமாம் பாட்டி...நீங்க தான் குட் பாட்டி...தாத்தா பேட் தாத்தா…!!” என்று சலுகையாக கூறி தன் தாத்தாவைப் பார்த்து “வெவ்வெவ்வே…!” என்று பழித்து காட்டிவிட்டு பாட்டியின் தோளில் சாய்ந்தாள்.


தாத்தா கிண்டல் பண்ணியவுடன் பாட்டி அருகில் உட்கார்ந்த ஶ்ரீநிதி தெரியாமல் ஒரு தவறு செய்திருந்தாள்.பாட்டியும் கிருஷும் ஒரே சோபாவில் சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.ஶ்ரீநிதி பேச்சு சுவாரசியத்தில் பாட்டிக்கு அந்த பக்கம் உட்காருவதற்கு பதில்...கிருஷ் இருக்கும் பக்கம் உட்கார்ந்திருந்தாள்.


இவ்வளவு நேரம் இதையெல்லாம் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த கிருஷிற்கு இவள் அருகில் வந்து உட்கார்ந்ததும் ஒரு கூடைப் பூக்களை தலையில் கொட்டியது போல் இருந்தது.ஆனால் ஶ்ரீக்கு தான் அவன் அருகில் உட்காருவதற்கு ஒரு மாதிரி இருந்தது.


அதனால் ஶ்ரீ அதிலிருந்து தப்பிக்க எண்ணி “சரி தாத்தா...நேரம் ஆகிடுச்சு… கீதா வந்தவடனே... நாங்க சாப்பிட்டு விட்டு கிளம்புறோம்” என்றுவாறு எழுந்தாள்.


ஆனால் எழுந்தவளால் உடனடியாக எழுந்த கொள்ள முடியவில்லை… ஏனெனில் அவள் சுடிதார் துப்பட்டாவின் குஞ்சம் ஒன்று கிருஷின் பட்டனில் மாட்டியிருந்தது.துப்பட்டாவை எடுத்துவிட்டு எழுந்து கொள்ளலாம் தான்...இருந்தும் தாத்தா பாட்டி அருகில் இருக்கும்போது எப்படி எடுப்பது என்று தயக்கமாக இருந்ததினால் அங்கேயே உட்கார்ந்துவிட்டாள்.


கிளம்புகிறேன் என்று சொன்னவள் இன்னும் இங்கே இருப்பதைப் பார்த்த தாத்தா என்னவென்று கேட்கலாம் என்று நினைக்கும் போது தான்...கிருஷ் கண்ணை காட்டி கொஞ்சம் உள்ளே போறீங்களா தாத்தா…??என்று கேட்டவுடன் எதுக்கு…?என்று பதிலுக்கு அவரும் கண்ணால் கேட்டார்.


கிருஷ் கண்களால் தன் சட்டையைக் காண்பித்தான்.அவனுக்கு எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்ததால் அவருக்கும் இது தெரிந்தது...அதன்பிறகு தான் ஶ்ரீநிதி சங்கோஜப்படுவதைப் பார்த்து “ராதும்மா…!!கொஞ்சம் ரூம் வரைக்கும் வரியா...என் மூக்கு கண்ணாடி எங்க இருக்குனு தெரியலை வந்து எடுத்து தா…!!” என்று ராதையை அழைத்து சென்றார்.


அவர்கள் சென்ற பிறகும்...ஶ்ரீநிதி அப்படியே தான் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு கிருஷின் முகத்தை திரும்பி பார்க்க வெட்கம் தடுத்தது.கிருஷூம் அவளே திரும்பி எடுக்கட்டும் என்று அவளை ரசித்து கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.


ஶ்ரீநிதி தான் “என்ன செய்வது…?” என்று தெரியாமல் தவித்து போனாள்.


“இந்த கீதா லூசு வருதானு பாரு...நான் இப்படி தனிமையில் மாட்டிக்கிட்டேன்…இந்த அத்தானும் கொஞ்சம் எடுத்துவிடாமல் ஜாலியா கால் மேலே கால் போட்டு உட்கார்ந்திருக்காரு… ஹிட்லர்…!!” என்று தன் தோழியையும் தன் அத்தானையும் மனதில் நன்றாக திட்டினாள்.


சரி வேறு வழியில்லை நாம் தான் எடுக்கணும் என்று திரும்பி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல்...அதை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.இன்னும் நெருக்கமாக இருந்திதினால் அவளின் முகம் நன்றாக சிவந்தது.


கிருஷ் வேண்டுமென்றே “சீக்கிரம் எடுடி...நேரமாகுது” என்று அதட்டுவது போல் கூறினான்.
 
அந்த நேரத்தில் அவன் அவளை டி என்று அழைத்தது கூட கவனிக்காமல்,ஶ்ரீநிதி பதட்டத்துடன் “இதோ அத்தான்” என்று கூறினாளே ஒழிய அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.இப்போது ஶ்ரீநிதிக்கு வெட்கமெல்லாம் போகி பயம் குடி வந்தது.அவன் ஏதோ திட்டிவிடுவனோ என்று.


கிருஷிற்கு இதனை கண்டு சிரிப்பு தான் வந்தது.ஶ்ரீநிதி பதட்டமானதால் அதை எடுக்க முடியாமல் போக தவிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


அவன் முகத்தில் புன்னகை இருப்பதை கண்டவுடன் மறுபடியும் ஶ்ரீநிதி முகம் சிவந்து தலைகுனிந்தாள்.அதனால் மூளை அவளை எழுந்து போகச் சொல்லி அறிவுறுத்த...ஆனால் அவள் மனம் இன்னும் அவனிடம் நெருங்க சொல்லியது.


கடைசியில் யாரோ வரும் அரவம் கேட்டு ஶ்ரீநிதி தான் அவன் சட்டையிலிருந்து தன் துப்பட்டாவை பலமாக இழுத்து கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடினாள்.


கிருஷ் சிரிப்புடன் குனிந்து தன் சட்டையைப் பார்த்தான்.அவன் பட்டனில் அவள் துப்பட்டாவின் நூல் சிறிது இருந்தது.அதை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு எழுந்தான்.


தன் அறைக்கு சென்றபிறகு தான் ஶ்ரீநிதி அவன் தன்னை “டி” என்று சொன்னது உறைத்தது. ‘அத்தான்...நான் என்ன உங்களுக்கு பொண்டாட்டியா...டி...சொல்லுறீங்க...அதுக்கெல்லாம் இன்னும் நேரம் இருக்கு அத்தான்...அதுவரைக்கும் பொறுமையாக இருக்கணும் புரியுதா…??’ என்று தனியாக பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்து கீதா தலையில் அடித்து கொண்டாள்.


கிருஷையும் ஶ்ரீநிதியையும் பார்த்து கொண்டிருந்த...மீராவுக்கு வயிறு எரிந்தது.இதற்கு மேல் அப்பாயியை நம்பினால் வேலைக்கு ஆகாது…நாமே இதில் இறங்கிவிட வேண்டியது தான் என்று முடிவு செய்தாள்.


நேற்று இரவில் தூக்கம் வராமல்...சிறிதுநேரம் பால்கனியில் போய் இருக்கலாம்...என்று வெளியே வந்தவளின் காதில்...கீதாவும் ஶ்ரீயும் பேசியது...விழுந்து...ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது.


அதை கேட்டதிலிருந்து அவள் மனம் எரித்தணல் போல் எரிந்து கொண்டிருந்தது. ‘எனக்கு தான் கிருஷ் அத்தான் சொந்தம்...அவர் கிடைப்பதற்காக நான் எந்த லெவலுக்கும் போவேன்...உன்னை கிருஷ் அத்தானிடமிருந்து பிரிக்கலை...என் பெயர் மீரா இல்லைடி…’ என்று சூழுரைத்தாள்.


அதன்பிறகு தான் மீராவுக்கு ஒன்று உறைத்தது.அன்று ஶ்ரீநிதியின் பெயருக்கு ஒரு பார்சல் வந்ததே...அதை அனுப்பியது யாரு...அதை வைத்து ஏதாவது செய்ய முடியுதானு பார்ப்போம் என்று யோசித்து...ஶ்ரீநிதி அலுவலகம் கிளம்பியப்பிறகு...அவள் அறைக்கு சென்று அவள் அறை முழுவதும் தேடினாள்.


கடைசியில் அவள் தேடியது...ஶ்ரீநிதியின் அலமாரியிலிருந்து கிடைத்தது...வேகமாக அதனைப் பிரித்து பார்த்தவளுக்கு...சந்தோஷம் பிடிப்படவில்லை...இருடி...இதை வைத்தே உன்னையும் கிருஷ் அத்தானையும் பிரிக்கிறேன் என்று கறுவிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினாள்.


ரிஷி காலையிலிருந்து மிகுந்த அதிர்ச்சியில் இருந்தான்.காலையில் சீக்கிரமாக எழுந்து கிருஷுடன் ஜாகிங் போய்விட்டு வந்தவன்...தன் அறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்து தன் செல்போனைத் தேடினான்.


தேடியவனுக்கு தன் செல்போனை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை...அதனால் ஶ்ரீநிதியிடமிருந்து அவள் போனை வாங்கி தன் செல்லுக்கு அழைக்க எண்ணி அவள் அறையின் கதவைத் தட்டினான்.


ஆனால் கதவை வந்து திறந்தது வாணி…ரிஷி அவளிடம் “ஶ்ரீ என்ன பண்ணுறா…??” என்று கேட்டான்.


வாணி தூக்க கலக்கத்திலே “அக்கா...தூங்கிட்டு இருக்காள்...என்ன வேண்டும் அத்தான்…??” என்று வினவினாள்.


“தூங்கறாளா...அப்போ சரி உன் போன் கொஞ்சம் கொடுக்கிறீயா…??”


வாணியும் நல்ல தூக்கத்தில் இருந்ததினால் என்ன ஏது என்று கேட்காமல் தன் போனைக் கொடுத்துவிட்டு தன் படுக்கையில் விழுந்தாள்.


ரிஷி தான் ‘சரியான கும்பகர்ணி…!’ என்று திட்டிவிட்டு...அவன் அறைக்கு வந்தான்.பிறகு அவள் மொபைலில் தன் பெயர் இருக்கிறதா...என்று பார்த்தான்.ரிஷி என்று எதுவுமில்லை என்றவுடன்...இவள் என் பெயரை எதுவோ கேவலமாக சேவ் பண்ணிவச்சுருப்பா போலவே...என்று நினைத்து தன் நம்பரை அதில் போட்டு...அழைப்பு பொத்தானை அழுத்தினான்.


அழுத்தியவன் அதில் வரும் பெயரைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றான்.அதற்குள் தன் போனின் மணி அடிப்பதைக் கேட்டு...அதை எடுத்து அணைத்து வைத்துவிட்டு... நாம் ஏதோ தப்பாக நம்பரை அழுத்திவிட்டோமோ என்று மறுபடியும் அவன் நம்பரை வாணியின் மொபைலில் அழுத்தினான்...ஆனால் மறுபடியும் “மை பெட்டர் ஹாப்” என்றே வந்தது.அந்த வார்த்தையின் பொருளை அறிந்த ரிஷி... அதிர்ச்சியடைந்து வாணியின் செல்லை...அவள் அறையில் வைத்துவிட்டு...அப்போதே ஆபிஸ் கிளம்பிவிட்டான்.


வாணியும் தூக்கக்கலக்கத்தில் இருந்ததினால் அவளுக்கு ரிஷியிடம் மொபைல் கொடுத்தது தெரியவில்லை.


ஶ்ரீநிதி தான் அவன் குழப்பத்தில் இருப்பதைப் பார்த்து “என்னப்பா ஆச்சு...ஏன் ஒரு மாதிரி இருக்கே…??அதுமட்டுமில்லாமல் காலையில் சீக்கிரம் ஆபிஸ் கிளம்பி வந்துட்டேனு சின்ன அம்மு சொன்னாங்க…?எனி திங்க் பிராப்ளம்??” என்று புரியாமல் வினவினாள்.


ரிஷி இவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் யோசித்து பிறகு சொல்லலாம் என்று முடிவெடுத்து காலையில் நடந்ததைப் பற்றி கூறினான்.


அதைக்கேட்டவுடன் ஶ்ரீநிதி சப்தமாக சிரித்தாள்.ஆனால் ரிஷி... ‘நானே என்ன பண்ணுறதுனு தெரியாமல் காலையிலிருந்து டென்ஷனாக இருக்கேன்...ஆனால் இவள் நான் ஏதோ பெரிய ஜோக் சொன்னமாதிரி சிரிச்சிட்டு இருக்கா…’ என்று மனதில் திட்டிவிட்டு அவளை முறைத்தான்.


“ஏய் லூசு...நீ எதுக்கு இப்போ சிரிச்சிட்டு இருக்கே...சொல்லிட்டு சிரி…” என்று எரிந்து விழுந்தான்.


ஶ்ரீ சிரிப்பை அடக்காமல் சிரிப்புடனே “டேய்...டியூப் லைட்...இந்த விசயம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும்...நீ ரொம்ப லேட்… அதுவுமில்லாமல் அவள் உனக்கு ரிஷி மை லவ்லிருந்து மை பெட்டர் ஹாப் என்று உனக்கு போரோமாஷன் வேற கொடுத்திருக்கா…அதை நினைச்சா...எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…!!” என்று சொல்லிவிட்டு இன்னும் பலமாக சிரித்து கொண்டே அவன் தலையில் முதல் குண்டை தூக்கிப்போட்டாள்.


“என்னது!!உனக்கு ஏற்கனவே தெரியுமா…??” என்று ரிஷி அதிர்ச்சியில் கத்தி தன் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.


ஶ்ரீ உடனே சிரிப்பை அடக்கி “டேய் கத்தாதே…!!அத்தான் வந்து இரண்டு பேரையும் திட்டுவார்” என்றவுடன்,


ரிஷி அவளை முறைத்துக் கொண்டே “ஏய்...உனக்கு அறிவில்லை...இதை ஏற்கனவே என்னிடம் சொல்ல வேண்டியது தானே...இதுமட்டும் அண்ணாவுக்கு தெரிந்தது...என்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்...எருமை எருமை” என்று கூறி பற்களை நறநறவெனக் கடித்தான்.


ஶ்ரீ லேசான புன்னகையுடன் “அத்தானுக்கு ஏற்கனவே தெரியும்” என்று கூறி இரண்டாவது குண்டை தூக்கிப் போட்டாள்.


“என்னது….????” என்று சிலையென உறைந்து நின்றான்.


ஶ்ரீ சிரிப்புடனே அவன் அருகில் வந்து அவன் தோளைத் தொட்டு “ரிஷி பயப்படாதே...அத்தான் உன்னை ஒண்ணும் சொல்லமாட்டார்...வாணி உன்னை ரொம்ப அதிகமாக காதலிக்கிறாள் ரிஷி...நீயும் வேற யாரையும் காதலிக்கலைனு எனக்கு தெரியும்...உனக்கு அவளைப் பிடிச்சிருந்த சொல்லு...சப்போஸ் உனக்கு அவளை பிடிக்கலைனா… அவள் மனசை இப்போதே மாற்றிவிடுகிறேன்...பிறகு அவள் உன் மேல் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துவிட்டால்...அவளின் மனசை மாற்றுவது கஷ்டம்ப்பா…!!” என்று நீளமாக பேசி முடித்தாள்.


ரிஷி பிடிக்குடுக்காமல் “ஶ்ரீநிதி...நான் வாணியை அந்த மாதிரி எண்ணத்தில் இதுவரைப் பார்த்ததில்லை...இனிமேலும் பார்ப்பேனா என்று எனக்கே தெரியாது...அதனால் எனக்கு யோசிக்க ஒரு இரண்டு நாள் டைம் வேணும்” என்றவுடன்,


ஶ்ரீயின் முகம் சுருங்கிவிட்டது.இருந்தும் அவன் சூழ்நிலையிலிருந்து பார்த்துவிட்டு “சரிப்பா...நீ யோசித்து சொல்லு...ஆனால் எந்த முடிவாகயிருந்தாலும் என்னிடம் சொல்லு” என்ற வாக்கை அவனிடமிருந்து பெற்றுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.


ரிஷியிடம் பேசிவிட்டு அவளும் கீதாவும் இருக்கும் அறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தவுடன் ஶ்ரீயுடைய செல்லுக்கு ஒரு கால் வந்தது.


அதை எடுத்து பேசியவளுக்கு சத்தியமாக யார் பேசியது என்று தெரியவில்லை...அவன் கூறிய சாராஹம்சம் இது தான்...ரமேஷிக்கு ஆக்ஸிடன்ட்டாகி கே.என்.ரா ஆஸ்பத்திரியில் இருக்கிறான்...அவன் உங்களை கடைசியாக ஒருமுறைப் பார்க்க வேண்டும் என்கிறான்...பிளீஸ் வாங்க என்று அவன் நண்பன் ஒருவன் கூறி போனை வைத்துவிட்டான்.


தன் தொலைப்பேசியை வைத்துவிட்டு அவனைப் பார்க்கப் போகலாமா…?வேண்டாமா…?என்று யோசித்துக் கடைசியாக போகலாம் என்று முடிவெடுத்து...கீதாவையும் அழைத்துக் கொண்டு...ரிஷியிடம் மட்டும் கூறிவிட்டு...ஆஸ்பத்திரியை நோக்கி சென்றாள்.


கிருஷ்...இவர்கள் இருவரும் வெளியேறியதை...ஜன்னலின் வழியே பார்த்து...ஶ்ரீநிதிக்கு போன் செய்தான்.அவள் தன் போனை கட் செய்வதினால் எரிச்சலோடு தன் தம்பி ரிஷிக்கு போன் செய்தான்.


அவனிடம் “எங்கடா இரண்டு பேரும் தனியாக போறாங்க…??” என்று மொட்டையாக வினவினான்.


முதலில் ரிஷிக்கு யார் இரண்டு பேரும் என்று புரியவில்லை…புரிந்தபிறகு “ஓ...ஶ்ரீநிதியா…!!ஶ்ரீநிதி அவளுடைய பிரண்ட் யாருக்கோ ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சாம் அண்ணா...அதனால் நான் போய் பார்த்துவிட்டு வரேன் என்று என்னிடம் சொல்லிவிட்டு போனாள் அண்ணா...ஏன் அண்ணா உங்களிடம் எதுவும் சொல்லலையா…??” என்று கேட்டான்.


ஏற்கனவே என்னிடம் சொல்லாமல் இவனிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள் என்று நினைத்து கொண்டிருந்தவன் மனதில் இந்த கேள்வியைக் கேட்டு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினான்.


கிருஷ் சூடாக “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டே தானே...இனிமே உன் வேலையைப் பாரு” என்று சீறிவிட்டு போனைப் பட்டென்று வைப்பதற்கும்...மீரா கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.


மீரா உள்ளே நுழைந்தவுடன் “என்ன…??இங்கு எதற்கு வந்தே…?எதுவாக இருந்தாலும் அப்புறம் வந்து பேசு?” என்று அவளிடமும் சீறினான்.


இருந்தும் மீரா அங்கிருந்து நகராமல் “அத்தான்...உங்களிடம் ஶ்ரீயைப் பற்றி ஒரு முக்கியமான விசயம் பேசணும்…?நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளுங்க அத்தான்...பிளீஸ் அத்தான்…!!” என்று கெஞ்சினாள்.


ஶ்ரீநிதி என்றவுடன் கிருஷ் கொஞ்சம் அமைதியாகி “சரி சொல்லு” என்றவுடன்,மீரா மடமடவென்று எல்லாவற்றையும் கூறிவிட்டு...வந்த வேலை முடிந்ததுபோல் அறையைவிட்டு வெளியேறினாள்.


வெளியே சென்றவளின் முகத்தில் வெற்றி புன்னகை இருந்தது.


மீரா கூறியதைக் கேட்டவுடன் கிருஷிற்கு கொஞ்சநஞ்சம் இறங்கிருந்த கோபம் மீண்டும் தலைக்கேறியது.


அந்த கோபத்தில் தன் கார் சாவியை எடுத்து கொண்டு காரில் ஏறி சீறி பாய்ந்தான்.
 
அத்யாயம் 12:

ஶ்ரீநிதி கீதாவை அழைத்து கொண்டு...ஆட்டோ ஒன்றை பிடித்து கே.என்.ரா மருத்துவமனைக்கு சென்றாள்.நடுவில் கீதா என்னடி என்னச்சு…??என்று நிறைய முறை கேட்டும் ஒன்றும் பதில் சொல்லாமல் “கீதா...கொஞ்சம் அமைதியாக வாடி...நான் அங்கே போய் எல்லா விவரமும் சொல்லுகிறேன்” என்று பதட்டத்துடன் கூறியவளை அதற்கும் மேல் கேள்வி கேட்டு தவிக்கவிடாமல்...கீதா வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.


ஆட்டோ சென்று...மருத்துவமனையில் நின்றவுடன்...ஶ்ரீநிதி அவசரமாக அதிலிருந்து இறங்கி...பணம் கொடுத்துவிட்டு… மருத்துவமனையின் உள்ளே நுழையும்போது...எதிரில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது.


அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அடுத்த நிமிடம் நிம்மதி பரவியது.ஆனால் அந்த நிம்மதி சிறிது நேரத்தில் கோபமாக மாறி இருக்க...அடுத்த நிமிடம் கோபத்தில் முகம் சிவக்க அவன் அருகில் சென்று அவன் சட்டையைப் பிடித்து “ஏய்...நீ நல்லா தானே இருக்கே...அப்புறம் எதுக்கு உனக்கு ஆக்ஸிடென்ட்னு சொல்லி வரவச்சிருக்கே…??அப்போ நீ என்னை பொய் சொல்லி வரவச்சிருக்கே அப்படிதானே…?எதுக்கு உனக்கு இந்த பொய் பித்தலாட்டமெல்லாம்…??” என்று அவன் சட்டை பிடித்து உலுக்கினாள்.


‘இங்கு என்ன நடக்குது...இவர் எதுக்கு இங்க வந்திருக்கார்...இவளும் இங்க வந்திருக்கா…’ என்று கீதா யோசித்து கொண்டிருக்கும்போதே ஶ்ரீ அவனின் சட்டையைப் பிடித்திருந்தாள்.அதில் கீதா அதிர்ச்சியடைந்து நின்றிருந்தாள்.


ரமேஷ் தான் சுற்றி எல்லோரும் தங்களையே பார்ப்பதை பார்த்து “ஶ்ரீநிதி...ஒரு நிமிடம் நான் சொல்லறதை கேளுங்க பிளீஸ்…!!” என்றவனை மதிக்காமல் அவள் பிடியிலேயே நின்றாள்.அவளுக்கு தன்னை ஏமாற்றியவனை சும்மா விட மனசில்லை.


கீதா கொஞ்சம் சுய உணர்வு பெற்றவுடன் அவசரமாக ஶ்ரீயின் அருகில் வந்து அவள் கையை தன் பக்கம் இழுத்துவாறு “ஶ்ரீ கையை எடுடி...எல்லோரும் நம்மையே பார்க்கறாங்க…” என்றவுடன் தான் ஶ்ரீநிதி வேறு வழியில்லாமல் கையை எடுத்தாள்.


ஶ்ரீநிதி கையை எடுத்தாளே ஒழிய அவனை கண்களால் பொசுக்கி கொண்டிருந்தாள்.


ரமேஷ் தவிப்புடன் “ஶ்ரீநிதி கொஞ்சம் ஓரமாக நின்று பேசுவோமா…??மற்றவங்களுக்கு காட்சி பொருளா இருக்க வேண்டாம்...பிளீஸ்ங்க…” என்று கெஞ்சியவுடன் கீதா தான் வேறு வழியில்லாமல் ஶ்ரீநிதியைக் கையைப் பிடித்து அழைத்து சென்றாள்.


அவர்களைப் பின்பற்றி ரமேஷூம் வந்தான்.அவர்களை நெருங்கியவுடன் “இங்கே வேணாங்க...பக்கத்தில் தான் ஹோட்டல் ரிஸடென்ஸி இருக்கு அங்க போய் அமைதியாக உட்கார்ந்து பேசுவோம்” என்றவுடன் ஶ்ரீநிதி “டேய் என்னடா நினைச்சிட்டு இருக்கே...நீ எங்க கூப்பிட்டாலும் வராதுக்கு உன் லவ்ர்னு நினைச்சியா…இல்லை பொண்டாட்டினு நினைச்சியா...??என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது...நீ சொல்வது மாதிரியெல்லாம் என்னால் கேட்கமுடியாது…!!” என்று சீறினாள்.


அவன் அவளை பாவமாக பார்ப்பதை பார்த்து இன்னும் கடுப்பாகி “என்ன நான் இப்படியெல்லாம் பேச மாட்டேனு நினைச்சியா…??” என்று கேட்டவுடன்,


அவன் ஆமாம் என்று தலையாட்டினான்.


ஶ்ரீநிதி “என்னை பொய் சொல்லி...வரவழைத்த உனக்கு...இந்த மரியாதை போதும்…நீ எப்படி நடந்துகிறியோ அப்படி தான் நானும் நடந்துப்பேன்” என்றாள் எரிச்சலோடு.


ரமேஷ் மறுபடியும் தன் கெஞ்சல் படலத்தை ஆரம்பித்தான். “பிளீஸ்ங்க...எனக்கும் நீங்க ஆஸ்பத்திரியில் இருங்கீங்கனு தான் போன் வந்தது...அதனால் தான்...நான் உங்களை தேடி வந்தேன்...யார் இப்படி பண்ணியதுனு எனக்கும் தெரியாதுங்க…!!” என்று அவன் கூறியவுடன்,


அவனை நம்பாத பார்வைப் பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள் ஶ்ரீநிதி.


“ஶ்ரீநிதி நீங்க ரொம்ப நல்லவங்கனு கேள்விப்பட்டு இருக்கேன்… என்னை உங்களிடம் நிரூபிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க...பிளீஸ் நாம் அங்க போய் விவரமாக பேசுவோம்” என்று அவளிடம் கெஞ்சினான்.ஶ்ரீநிதி ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.


அதைப் பார்த்த கீதா தான் அவனுக்காக மனமுருகி ஶ்ரீநிதியிடம் “பிளீஸ்டி வாடி...இங்க எல்லாரும் நம்மையே பார்க்கறாங்க...நாம் ஹோட்டல் போவோம்...அவர் என்ன தான் சொல்லறாருனு ஒரு முறை கேட்போமே…!!” என்று அவளை அந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள்.


ஶ்ரீநிதிக்கு இது ஏதோ தப்பு போல் மனதை நெருடியது...இருந்தும் தன் தோழிக்காக அவனுடன் சென்றாள்.


காரில் கீதாவும் ஶ்ரீநிதியும் பின் சீட்டில் அமர்ந்தனர்...ரமேஷ் வண்டியை ஒட்டி சென்றான்.கார் ஹோட்டலை அடையும் வரை காரில் பலத்த அமைதி நிலவியது.


மூவரும் ஹோட்டலை அடைந்து ஒரு டேபிளில் அமர்ந்தவுடன் ரமேஷ் “நீங்க இரண்டு பேரும் என்ன சாப்பிடுறீங்க…??” என்று கேட்டவனை ஶ்ரீநிதி நன்றாக முறைத்தாள்.


அவள் முறைப்பைப் பார்த்து “நாம் இங்க பேச தான் வந்திருக்கோம் தெரியுதுங்க...இருந்தும் ஏதோ ஒன்று அர்டர் கொடுத்துட்டு அப்புறம் பேசுவோமே...வேண்டுமானால் நீங்களே பில் பே பண்ணுங்க…??” என்றவுடன் வேற வழியில்லாமல் உணவுக்கு அர்டர் கொடுத்துவிட்டு இப்போது சொல் என்பது போல் அவன் முகத்தை பார்த்தாள் ஶ்ரீநிதி.


அவனும் அவளின் பார்வையை புரிந்து “ஒரு அரைமணி நேரத்திற்கு முன்னால் ஒரு போன் வந்தது...அதில் உங்களுக்கு ஆக்ஸிடென்ட்டாகி இருப்பதாகவும்...நீங்க கடைசியாக என்னை பார்க்க இருப்பதாகவும் போன் செய்து சொன்னாங்க…” என்றவுடன் ,


“நீங்க அதை நம்பிட்டு இங்க வந்தீட்டிங்க...இதை நாங்க நம்பணும்…??” என்று நக்கலாக கூறி அவனை பார்த்தாள்.


உடனே ரமேஷ் அவசரமாக “இல்லைங்க ஶ்ரீநிதி...நான் உடனே நம்பவில்லை...எனக்கு போன் செய்தது ஒரு பொண்ணுங்க… என்றுவிட்டு கீதாவைக் காட்டி,


“அவங்க என்னிடம் உங்க தோழி கீதா பேசுறேனு தான் சொன்னாங்க… அதனால் தாங்க...நான் நம்பிட்டேன்” என்று கூறினான்.


இவ்வளவு நேரம் இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்த கீதா இப்போது அதிர்ச்சியடைந்து தன் தோழி ஶ்ரீயிடம் “ஶ்ரீ சத்தியமாக நான் எதுவும் பண்ணலைடி...இவருக்கு நான் போன் பண்ணலைடி… பிளீஸ்டி என்னை நம்புடி” என்று தவிப்புடன் அவள் கையைப் பிடித்து கேட்டாள்.


ஶ்ரீநிதி அவள் கையை உதறிவிட்டு அவளை பார்த்து முறைத்தாள்.தன் தோழி தன்னை நம்பவில்லை என்று கீதாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்ட ஆரம்பித்தது.


அதைப்பார்த்தவுடன் ஶ்ரீநிதி “ஏய்...கீது லூசு...நான் உன்னை போய் சந்தேகப்படுவனா…??அப்புறம் நம்முடைய இத்தனை வருடம் நட்பிற்கு அர்த்தமே இல்லைடி...நான் கோபப்பட்டது கூட...நீ என்னை நம்புடி என்று கையைப் பிடித்து...சொன்னதுக்காக தானே ஒழிய...உன்னை சந்தேகப்பட்டதினால் இல்லை…புரியுதா லூசு…??” என்று கேட்டுவிட்டு அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
 

“தேங்கஸ்டி” என்றவளை ஒரு முறை முறைத்துவிட்டு தன் பார்வையை இவனை நோக்கி திருப்பி “என் பிரண்ட் கீதா பண்ணலைனு எனக்கு தெரியும்...இப்போ எதுக்கு பொய் சொல்லி சமாளிச்சிட்டு இருக்கீங்க...ஒழுங்கா உண்மையை சொல்ல போறிங்களா...இல்லை கம்பி எண்ண போறீங்களா…??” என்று ஶ்ரீநிதி அவனை மிரட்டினாள்.


“என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க...நான் சொல்லறது உண்மைதாங்க...நீங்க நம்பலைனா...என்று தன் செல்போனை எடுத்து அவளிடம் கொடுத்து,


“நீங்க என்னை நம்பலைனா...கடைசியாக ஒரு அரைமணி நேரத்திற்கு முன் ஒரு கால் வந்திருக்கு பாருங்க...அந்த நம்பரிலிருந்து தாங்க பேசனாங்க...இப்போவாச்சும் நான் சொல்லறதை நம்புங்க பிளீஸ்” என்று கெஞ்சினான்.


அந்த நம்பரைப் பார்த்தவுடன் ஶ்ரீநிதியின் புருவத்தின் மத்தியில் முடிச்சு விழுந்தது.உடனடியாக தன் மொபைலை எடுத்து பார்த்தாள்… அவளுக்கு கடைசியாக வந்த கால் கிருஷிடமிருந்து வந்து இருந்தது...அதற்கு முன்பு தான் அந்த போலி அழைப்பு வந்திருந்தது.அந்த நம்பரும்... ரமேஷின் செல் நம்பருக்கு வந்திருந்த போன் காலின் நம்பரும் ஒன்று என்பதை ஶ்ரீநிதி அறிந்து...இன்னும் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.


இவள் முகம் குழப்பத்தில் இருப்பதைப் பார்த்த கீதா “என்னடி...என்ன ஒரு மாதிரி இருக்கே…??” என்று கேட்டாள்.


“ஒண்ணும் இல்லை சொல்லுறேன்டி” என்று அவளிடம் கூறிவிட்டு அவனிடம் பேச வாய் எடுக்கும்போது,


ரமேஷ் அவளை இடமறித்து “ஶ்ரீநிதி பிளீஸ் நம்புங்க...நான் எதுவும் பண்ணவில்லை…” என்று தவிப்புடன் சொன்னான்.


‘ஐய்யோ…!இவன் ஒருத்தன் நேரங்காலம் தெரியாமா…??நம்புங்க நம்புங்க என்று தேய்ஞ்சு போன ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கான்…’என்று எரிச்சலடைந்து அவனை திட்டுவதற்குள் அவளுடைய இன்னொரு மனம் நீ இப்போ கோபப்படக்கூடாது ஶ்ரீ...நிதானமாக தான் செயல்படணும்...என்று கூறி அமைதியடைய செய்தது.


அதன்படி ஶ்ரீநிதி “நான் உங்களை நம்பறேன்…” என்றவுடன் ரமேஷின் முகம் பொலிவடைந்தது.


“ஆனால் நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க…??” என்றவுடன் அவன் முகம் சுருங்கியது.


இருந்தும் “ஹூம் கேளுங்க…??” என்றான்.


“நீங்க என்னை லவ் பண்ணுறீங்களா…??”


ரமேஷ் இதுக்கு என்ன பதில் சொல்லவது என்றவாறு திருதிருவென்று முழித்தான்.கூடவே கீதாவும் இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தாள்.


“பரவாயில்லை சொல்லுங்க...நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்று அவனை உண்மையைச் சொல்ல ஊக்கப்படுத்தினாள்.


அது தந்த தைரியத்தில் ‘ஆமாம்’ என தலையாட்டினான்.


ஶ்ரீ தன் அடுத்த கேள்வியைக் கேட்க ஆரம்பித்தாள். “சரி நீங்க யார்கிட்டயாவது என்னை காதலிக்கறதை பற்றி சொல்லி இருக்கீங்களா…??” என்று கேட்டாள்.


ரமேஷ் அதற்கு இல்லை என்பது போல் தலையாட்டினான்.


“நல்ல யோசித்து சொல்லுங்க…” என்று மறுபடியும் கேட்டாள்.


ரமேஷ் புருவத்தை சுருக்கி நன்றாக யோசித்து “நான் என் தம்பியை தவிர வேறே யார்க்கும் இதைப் பற்றி சொல்லவில்லை” என்றவுடன் ஶ்ரீநிதியின் முகம் அப்பட்டமாக ஏமாற்றத்தைக் காண்பித்தது.


உடனே ஶ்ரீநிதி “நாங்க கிளம்புகிறோம்” என்று கூறி டேபிளின் மேல் 1000 ரூபாயை வைத்துவிட்டு கிளம்ப தயாரானவளைத் ரமேஷ் கேட்ட கேள்வி தடுத்து நிறுத்தியது.


இப்போது அவன் தைரியமாக “ஜ லவ் யூ ஶ்ரீநிதி...இதுக்கு பதில் சொல்லிட்டு போங்க…??” என்று ஒரு வழியாக தன் காதலை. சொல்லிவிட்டான்.


அவனை முறைத்துகொண்டே “எனக்கு உங்களைப் பிடிக்கலை… அதுமட்டுமில்லாமல் எங்க அப்பா அம்மா சொல்லற பையனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்...போதுமா…??” என்று முகத்திற்கு நேரே கூறிவிட்டு தன் தோழியை இழுத்துக்கொண்டு புறப்பட்டாள்.


இதைக்கேட்டவுடன் ரமேஷின் முகம் கறுத்தது. ‘நீ எங்க போயிட போறே... நான் உன்னை அப்புறம் பார்த்துகிறேன்’ என்று மனதிற்குள் கறுவினான்.


இதையெல்லாம் தூரத்திலிருந்து கிருஷ் பார்த்து கொண்டிருந்தான். அவன் மனம் உலைக்கலமாக கொதித்து கொண்டிருந்தது.


அலுவலகத்தில் ரிஷியிடம் பேசி...போனை வைத்தவுடன்... மீரா உள்ளே வந்து ஶ்ரீநிதியைப் பற்றி பேச வேண்டும் என்று கூறி...அவன் இருக்கைக்கு எதிரே அமர்ந்து...பேச ஆரம்பித்தாள்.


“அத்தான்...நான் சொல்லுற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்...ஆனால் இதை நீங்க நம்பணும் அத்தான்…” என்று பிடிகையுடன் ஆரம்பித்தாள்.


கிருஷ் எரிச்சலுடன் “முதலில் விசயத்தை சொல்லு...அப்புறம் நான் அதிர்ச்சியாகிறேனா...இல்லையானு பார்ப்போம்” என்றான்.


“அத்தான்...ஶ்ரீநிதி ஒருத்தரைக் காதலிக்கிறாள்” என்று கூறி அவன் முகத்தைப் பார்த்தாள்.ஆனால் அவன் முகத்தில்...இதில் என்ன இருக்கிறது என்ற முகபாவம் இருந்தது.அதைப் பார்த்து இவர் என்ன கோபப்படுவாருனு பார்த்தால் அமைதியாக இருக்காரு என்று எரிச்சலடைந்தாள்.


இருந்தும் விடாமல் தன் கைபையில் இருக்கும் அந்த லெட்டர் மற்றும் பார்சலை எடுத்து...அவனிடம் கொடுத்து “என்னை நம்பலைனா… இதைப் படிச்சு பாருங்க” என்றாள்.


இவ்வளவு நேரமும் ஶ்ரீநிதி தன்னை தான் விரும்புகிறாள் என்று லேசாக இருந்தவன் இந்த பார்சலையும் கடிதத்தையும் பார்த்துவிட்டு கோபமடைந்தான்.


கிருஷ் “ஏய்...இது எப்படி உன் கையில் கிடைச்சது…??அவளுக்கு தெரியாமல் எடுத்திட்டு வந்தியா…?சொல்லு…???” என்று கர்ஜித்தான்.


இந்த குரலில் ஒரு நிமிடம் அவளே பயந்து நடுங்கிவிட்டாள்.இருந்தும் “அது...வந்து...அத்தான்...போஸ்ட்மேன் என்னிடம் கொடுத்த பார்சலைக்...கொ...கொண்டு போய்...ஶ்ரீநிதியின் அறையில் வைத்தது...நா...நான் தான் அத்தான்...அதனால் தான்...அதில் என்ன இருக்கு என்று தெரி...ஞ்சிக்க...ஆர்வமாக பிரித்து பார்த்தேன் அத்தான்…” என்று திக்கி திக்கி கூறி முடித்தாள்.


“அவளுக்கு தெரியாமல் எடுத்திட்டு வந்தியா…??அதை சொல்லு??” என்று மறுபடியும் கர்ஜித்தான்.


பயத்தில் “ஆமாம்” என்று தலையாட்டினாள்.


“ஏய் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா…??அடுத்தவங்க அனுமதி இல்லாமல் அவங்க பொருளை எடுத்திட்டு வந்தது உனக்கு தப்புனு தெரியலையா...நானும் போனால் போகட்டும்...சின்ன பொண்ணாச்சே என்று பொறுத்து போனால்...நீ திருந்துவதுபோல தெரியலை...நான் தாத்தாவிடம்...என்று அவன் பேசி கொண்டிருக்கும் போதே,


மீரா அவனை இடைவெட்டி கண்களில் பொய்யான கண்ணீருடன் “சாரி அத்தான்...ஏதோ ஆர்வத்தில் இப்படி பண்ணிவிட்டேன்...இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டேன் அத்தான்...பிளீஸ் அத்தான்...தாத்தாவிடம் சொல்ல வேண்டாம்” என்று அவன் கையைப்பிடித்து கெஞ்சினாள்.


கிருஷ் தன் கோபத்தை கொஞ்சம் குறைத்து “இனிமே இந்த மாதிரி பண்ணாதே புரியுதா…??” என்று கேட்டான்.


“சரி அத்தான்...ஆனால் இதை மட்டும் உங்களிடம் சொல்லிட்டு போயிவிடுறேன் அத்தான்...என்று அவன் சரி என்று ஒப்புதல் தருவதற்குள் “அத்தான் அன்னைக்கு சினிமா போய் இருந்தோம் தானே...அன்று இந்த ரமேஷை தியேட்டரில் பார்த்தேன் அத்தான்… அதன்பிறகு ஶ்ரீயின் பிறந்தநாளின் போதும் இவனை கோயிலில் பார்த்தேன்…அப்புறம் இந்த பார்சலை வேற யாருக்கும் தெரியாமல் ஶ்ரீநிதி மறைச்சு வைத்திருக்கறதைப் பார்த்தால் எனக்கு சந்தேகமாக இருக்கு அத்தான்...அதன்பிறகு இன்று வீட்டில் இருக்கும்போது ஶ்ரீநிதி யாரையோ 12 மணிக்கு ஹோட்டல் ரிஸிடென்ஸியில் மீட் பண்றேன் என்று பேசிக்கொண்டு இருந்தாள்...அதை என் காதாலே கேட்டேன் அத்தான்...எனக்கு என்னவோ ஶ்ரீ...ரமேஷை தான் பார்க்க போறானு நினைக்கிறேன்...இதை உங்களிடம் சொல்லனும்னு நினைச்சேன்…சொல்லிட்டேன்...பை அத்தான்” என்று மடமடவென்று சொல்லிவிட்டு...அவன் எதுவும் திட்டுவதற்குள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினாள்.


அவள் வெளியேறிய பின் கிருஷ் பயங்கர கோபத்தில் இருந்தான். அவனுக்கு ஶ்ரீயின் மீது சந்தோகமெல்லாம் இல்லை.ஆனால் இவ்வளவு பெரிய விசயத்தை எதற்கு மறைத்தாள் என்று தான் கோபமாக வந்தது.


‘இந்த குண்டச்சிக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை...எவ்வளவு பெரிய விசயத்தை எல்லாரிடமும் இருந்து மறைச்சி வச்சிருக்கா… இடியட்… ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன பண்ணறதுனு அதை யோசித்து பார்த்தாளா…??சரியான லூசு’ என்று திட்டிவிட்டு கோபத்துடன் தன் காரை எடுத்து கொண்டு ஹோட்டல் ரிஸிடென்ஸியை நோக்கி தன் காரை வேகமாக செலுத்தினான்.அவன் அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்து பயந்தான்.


அந்த ஹோட்டலுக்கு சென்று பார்த்தபோது ஶ்ரீநிதி அங்கு இல்லை...இந்த மீராவுக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை...இப்போது தான் அந்த அளவுக்கு திட்டினேன்...ஆனால் மறுபடியும் பொய் தான் சொல்லியிருக்கிறாள் என்று அவளை எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை நினைத்து பற்களைக் கடித்தான்.


சரி நாம் போவோம் என்று தனக்குள் கூறி...அந்த இடத்தைவிட்டு போகலாம் என்று திரும்பியவனின் பார்வையில் ஒரு ஆணின் காரில் இருந்து இறங்கி கொண்டிருந்த கீதாவும் ஶ்ரீநிதியும் பட்டனர்.உடனே அவன் அங்கே இருக்கும் டேபிளில்...அவர்களுக்கு தெரியாமல் அமர்ந்து கொண்டான்.


அங்கே இருந்தவாறு இவர்களை கவனித்து கொண்டே இருந்தான்.நடுவில் ஶ்ரீநிதி கோபமாக பேசுவதையும்...அவன் அவளிடம் கெஞ்சுவதையும் பார்த்து கொண்டிருந்தான்.ஏதாவது வரம்பு மீறி நடந்தால் நாம் போவோம் என்று அங்கிருந்தவறே பார்த்தான்.


தீடிரென்றி கீதா அழுவதையும்...ஶ்ரீ அவளை முறைப்பதையும் பார்த்து என்னச்சு எதற்கு இந்த ஶ்ரீநிதி அவளை முறைக்கிறாள் என்று யோசித்து கொண்டு...அங்கே கவனிக்கும்போது...அந்த ரமேஷ் ஏதோ ஒன்று கூறி போன் தருவதையும்...ஶ்ரீநிதி அதை பார்த்து தன் மொபைலையும் எடுத்து இரண்டையும் மாறி மாறி பார்ப்பதையும் பார்த்து குழம்பினான்.


அதன்பிறகு ஶ்ரீநிதி ஏதோ பேசிவிட்டு கிளம்பும் போது...அவன் ஏதோ ஒன்று சொல்லவும்...அவனை தீர்க்கமாக பார்த்து ஶ்ரீநிதி பதில் கொடுப்பதையும் பார்த்து கொண்டிருந்தான்.அவள் சென்றபிறகு அவன் முகம் கறுப்பதைப் பார்த்து என்ன சொன்னாள் இந்த ஶ்ரீநிதி...என்று யோசித்து குழம்பி அங்கிருந்து வெளியேறினான்.


கிருஷ் அங்கிருந்து வெளியேறியவுடன் ரமேஷ் தன் செல்போனை எடுத்து யாரிடமோ பேசி முடித்துவிட்டு வைத்து அவனும் அங்கிருந்து கிளம்பினான்.


கிருஷ் காரை...குழம்பியபடியே ஓட்டி கொண்டிருந்தான். ‘இந்த குண்டச்சி எதுக்கு இங்க வந்தால்...அதுவும் என்னிடம் கூட சொல்லாமல்...அவள் மட்டும் இந்த விசயத்தை பற்றி என்னிடம் சொல்லாமல் இருக்கட்டும்...அப்புறம் இருக்கு அவளுக்கு…’ என்று அவளை திட்டிவிட்டு காரை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.


அதேநேரம் கீதாவும் ஶ்ரீநிதியும் வீட்டின் வெளிக்கேட்டை திறந்து கொண்டிருந்தனர்...வாயிற்காவலர் அவர்களுக்கு கதவை திறந்துவிட்டு ஶ்ரீநிதியைப் பார்த்து சிரித்தார்.ஶ்ரீயும் வேறு வழியில்லாமல் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.வீட்டிற்குள் வரும்போது எப்போதும் ரசிக்கும்...தன் ரோஜா தோட்டத்தை ரசிக்காமல் குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளுக்கு இப்போது யாரிடமும் பேச விருப்பமில்லை.


ஆனால் தேவகி இவர்கள் இருவரின் முகத்தைப் பார்த்து “என்னச்சும்மா ஶ்ரீநிதி…??ஏன் ஒரு மாதிரி இருக்கே…??அதுவும் இந்த நேரத்தில் ஆபிஸிலிருந்து வந்திருக்கே…??” என்று வாஞ்சையாக கேட்டவரை அலட்சியப்படுத்த முடியாமல் “என் பிரண்ட் ஒருத்தருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு...அதனால் ஆஸ்பெட்டல் போயிட்டு வீட்டிற்கு வந்திட்டோம் சின்ன அம்மு” என்றாள்.


தேவகி அதை உண்மையென்று நம்பி “இப்போ எப்படி இருக்காங்க ஶ்ரீம்மா…??” என்று அக்கறையுடன் வினவினார்.


ஶ்ரீநிதி அதற்கு நக்கலான புன்னகையுடன் “இப்போது ரொம்பவே பரவாயில்லை...சரி சின்ன அம்மு...நான் என் ரூமிற்கு போகிறேன்…!” என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றாள்.


தன் அறைக்குள் சென்ற ஶ்ரீநிதி அங்கிருக்கும் கட்டிலில் அமர்ந்தாள்.அவளை பின்பற்றி கீதாவும் அவள் அருகில் உட்கார்ந்தாள்.இருவரும் எதுவும் பேசாமல் அவர்களுக்குள் குழம்பி கொண்டிருந்தனர்.


அதற்கு மேல் கீதா தாங்க முடியாமல் ஶ்ரீயிடம் “இங்கு என்ன நடக்குதுனு எனக்கு கொஞ்சம் சொல்லுப்பா பிளீஸ்…எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு” என்று தலையைப் பிய்த்து கொள்ளாத குறையாக கேட்டாள்.


அதன்பிறகு ஶ்ரீநிதி காலையில்...அவளுக்கு வந்த போன் காலைப் பற்றி கூறிவிட்டு “அப்புறம் நடத்தது தான்...உனக்கே தெரியுமே...ஆனால் எனக்கு புரியாத ஒரு விசயம்...எங்க இரண்டு பேருக்கும் போன் பண்ணி ஆஸ்பிட்டல் வர சொன்னது யாருனு தான் தெரியலை…” என்று யோசனையுடன் கூறினாள்.


“ஆமாண்டி...எனக்கும் அதே சந்தேகம் தான்…”


“இந்த ரமேஷிடம் கேட்டால் யாரிடமும் என்னை லவ் பண்ணறதைப் பற்றி சொல்லலைனு சொல்லுறான்...நாமும் யார்கிட்டயும் சொல்லை...அப்புறம் யார் எப்படி பண்ணது…??” என்று குழப்பத்துடன் வினவினாள்.


“சரி விடுடி...ஆனால் நான் இதை உன்னிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லைடி” என்று கீதா கூறியவுடன் ஶ்ரீநிதி புரியாமல் கீதாவைத் திரும்பி பார்த்தாள்.


கீதா குறும்புடன் “இவ்வளவு நாள் அன்னைதெரசா மாதிரி இருந்தே...தீடிரென்று விஜயசாந்தி மாதிரி மாறிட்டே...உன் சீக்ரெட்டின் ரகசியம் என்ன…??” என்று கேட்டு கண்ணடித்தாள்.


ஶ்ரீநிதி குழப்பத்திலிருந்து மனம் தெளிந்து லேசாகச் சிரித்தாள்.ஶ்ரீ சிரிப்புடன் “ஆனால் இந்த ரமேஷ் சரியான பயந்தங்கொளியா இருக்கான்டி” என்றாள்.


“ஆமாண்டி...ஆள் தான் பார்க்க ஜிம் பாடி மாதிரி இருக்கார்...ஆனால் நீ சட்டையைப் பிடித்ததும் அவர் மூஞ்சியைப் பார்க்கணுமே...அப்படியே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி” என்று கூறி கீதா சிரித்தாள்.


அதன்பிறகு அதைப் பற்றி ரொம்பவும் யோசிக்காமல் எப்பவும் போல் இருக்க ஆரம்பித்தாள் ஶ்ரீநிதி.ஆனால் மனதில் ஓரத்தில் யார் இதை பண்ணியது என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது.


இவர்களால் பயந்தங்கோளினு என்று சொல்லப்படுபவன் ஶ்ரீநிதியை அடைய..மீராவுடன் திட்டமிட்டு இருப்பதை இருவரும் அறியவில்லை.


கிருஷ்...ஶ்ரீநிதி வந்து தன்னிடம் எல்லா உண்மையும் சொல்லுவாள் என்று எதிர்ப்பார்த்தான்...ஆனால் இரண்டு நாளுக்கு மேலாகியும் ஶ்ரீ அதைப்பற்றி பேசாமல் இருக்கவும் கிருஷிற்கு கோபம் வந்தது.


அதன்பிறகு கிருஷ் அவள் மீது உள்ள கோபத்தால்...அவளிடம் பேசுவதைத் தவிர்த்தான்.அவனே சென்று கேட்க...அவன் ஈகோ இடம் கொடுக்கவில்லை...முதலில் ஶ்ரீ இதனைப் பெரிய விசயமாக எடுத்து கொள்ளவில்லை...ஆனால் இரண்டு நாளுக்கு மேலாக கிருஷ் தன்னிடம் பேசவில்லை என்பதை யோசித்தவள்...அவனிடம் நாமே ஏதோ ஒன்று பேசுவோம் என்று அவனைத் தேடி சென்றாள்.


அவன் அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.அப்போது தான் குளித்துவிட்டு துண்டுடன் வெளியே வந்தவன் இவளைப் பார்த்தவுடன் கொஞ்சம் மறைந்திருந்த கோபம் வெளியே வர ஆரம்பித்தது.


ஆனால் அவளுக்கு அவனின் மார்பில் சாய்ந்து...அந்த மார்பில் இருக்கும் முடியோடு தன் கன்னத்தை உரசி...அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டும்...என்ற ஆசை எழுந்தது.அதை அடக்கும் வழி தெரியாமல் ஶ்ரீநிதி திணறி அவனைப் பார்க்கமுடியாமல் வெட்கத்தோடு தலைக்குனிந்தாள்.


கிருஷூம் அவள் முகத்தைப் பார்க்காமல்... தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல்...தன் கைவிரலை மடக்கி கோபத்தை அடக்கி “என்ன ஶ்ரீநிதி” என்று கேட்டான்.


ஶ்ரீ தன் வெட்கத்தை அடக்கி “அத்தான்...அப்பாயி இருக்காங்க தானே...அவங்க… என்று கூறி குந்தவை அவள் படிப்பு பற்றி கூறியதை முழுவதும் கூறிவிட்டு “நீங்க தான் அத்தான்...அப்பா அம்மாவிடம் இதைப் பற்றி பேசி...அனுமதி வாங்கி தரணும்” என்றவுடன்,


கிருஷ் ஓ என்று சொல்லிவிட்டு சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை…


அப்புறம் பெருமூச்சு ஒன்று விட்டு “சரி நான் பேசறேன்” என்று கூறிவிட்டு...நீ போகலாம் என்று சொல்லாமல்...அவன் துணி இருக்கும் அலமாரி பக்கம் சென்றவுடன்...ஶ்ரீநிதி முகம் சுருங்கி வெளியேறினாள்.


அவள் வெளியேறியவுடன் ‘நீ இப்போது கூட...அவனைப் பற்றி என்னிடம் சொல்லலை...நான் தான் உன்னை என் பொண்டாட்டியா நினைக்கிறேன்…ஆனால் நீ அப்படி என்னை நினைக்கலைனு… சொல்லாமல் சொல்லிட்டே…நீ எப்போ இதைப் பற்றி சொல்லுறியோ… அப்போ தான் நீ என்னை உண்மையாக காதலிக்கிறேனு அர்த்தம்…’ என்று கூறி அலமாரியின் கதவை குத்தினான்.


ஶ்ரீநிதி முகம் சுருங்கி அவள் அறைக்கு சென்று...தன் அலமாரியை திறந்து பார்த்தாள்.இப்போது தான் அவளுக்கு ஒன்று உறுத்தியது...உடனடியாக அவசரமாக அலமாரி முழுவதும் அதனை தேடினாள்.அன்று ரமேஷ் கொடுத்த பார்சல் எங்கே என்று புருவம் சுருக்கி யோசித்தவளுக்கு எங்கே என்று தெரியவில்லை.


ஆனால் அவளுக்கு ஒன்றும் மட்டும் விளங்கியது...இதனை இந்த வீட்டிலிருந்து தான் யாரோ செய்திருக்கிறார்கள் என்று...ஏனெனில் இந்த பார்சல் கை கால் முளைத்து எங்கயும் போயிருக்காது...ஆனால் இங்கு இந்த அளவு பண்ணுவதற்கு யார் இருக்கா…??என்று யோசித்துவிட்டு சீக்கிரம் இதைக் கண்டுபிடிக்கணும் என்று முடிவெடுத்தாள்.


ஶ்ரீநிதி எடுத்த முடிவினால்...கிருஷின் கோபத்திற்கு உள்ளாகி…ஶ்ரீநிதியே கிருஷை விட்டு பிரிந்து போக முடிவெடுப்பாள் என்பதை அவள் அறியவில்லை.
 
Status
Not open for further replies.
Top