வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஒண்ணும் புரியல சொல்ல தெரியல - கதை திரி

Status
Not open for further replies.
அத்யாயம் 13:கிருஷ் மனதில் ஶ்ரீநிதியை நன்றாக வறுத்து எடுத்து கொண்டிருந்தான். ‘ஏய் குண்டச்சி...உனக்கு மனசிலே பெரிய இவள் நினைப்பா…??சரியான திமிரு பிடிச்சவே…??எத்தனை நாளைக்கு இதை எங்களிடமிருந்து மறைக்க முடியுனு நினைக்கிறே...ஒரு நாள் இல்லைனா...ஒரு நாள் இது வெளியே வர தான் போகுது...அப்போ இருக்குடி உனக்கு…!!பாட்டி அடிக்கடி சொல்லுவாங்களே...கூறு கெட்டவனு...அது கண்டிப்பாக உனக்கு ஏற்றப்பெயர் தான்’ என்று அவளை மனதார வைதான்.


ஆனாலும் அவனின் இன்னோரு மனம் ‘அவள் இதனால் ஏதாவது பிரிச்சினையில் மாட்டிக்கொண்டாள்...என்ன செய்வது…?’ என்று மனம் வருந்தினாலும்,


அடுத்த நிமிடமே ‘இந்த குண்டச்சி வந்து எதைப் பற்றியும் சொல்ல மாட்டாள்...நான் அவளை நினைத்து எதுக்கு வருத்தப்படணும்…நானே வழிய போய் அவளிடம் கேட்கணுமா...நான் கேட்கமாட்டேன்…!!’ என்று மறுபடியும் முறுக்கினான்.


சிறிதுநேரத்திலே ‘இரண்டு நாளாக ஏதோ தப்பாக நடக்கப் போவது போல்...என் மனசு சொல்லுதே...இந்த ஶ்ரீநிதி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வாளா…??’ என்று மறுபடியும் வருத்தப்பட்டான்.


இப்படி மாறி மாறி யோசித்து அவளிடம் தாழ்ந்து போய் கேட்கவும் முடியாமல்...அவளை எப்படியோ போ என்று விடவும் முடியாமல் இருத்தலைக்கொள்ளி எறும்பாக தவித்தான்.தன்னை இந்த நிலைக்கு தள்ளிய ஶ்ரீநிதியின் மீது கோபம் கோபமாக வந்தது.


‘இந்த லட்சணத்தில் இவங்க அப்பா அம்மாவிடம்...அவள் டெல்லி போவதைப் பற்றி பேசி சம்மதம் வாங்கணுமாம்...ஒண்ணும் இல்லாத விசயத்தை எல்லாம் என்னிடம் சொல்லுவாள்...ஆனால் முக்கியமான விசயத்தை மட்டும் சொல்லமாட்டாள்...ஏன் இதையும் அவளே சென்று அவங்க அப்பா அம்மாவிடம் சொல்ல வேண்டியது தானே...சரியான கிறுக்கிடி...நீ குண்டச்சி…!!’ என்று ஆசைதீர திட்டி பற்களை நறநறவெனக் கடித்தான்.


அவள் மட்டும் இங்கே இருந்தால் கடித்து குதறிவிடும் நோக்கத்தில் இருந்தான்.


இப்படியாக கிருஷின் எண்ணம் முழுவதும் ஶ்ரீநிதியைச் சுற்றி இருக்க... ஶ்ரீநிதி முற்றிலும் இவன் நினைவே இல்லாமல் தனக்கு வந்த கைப்பேசி அழைப்பை பற்றி யோசித்து கொண்டிருந்தாள்.


‘எப்படி இந்த பார்சல் இங்கிருந்து காணாமல் போனது…?இந்த வீட்டிற்குள் புகுந்து இந்த பார்சலை எடுத்து கொண்டும் போகும் அளவுக்கு...அப்படி யாரும் சுலபமாக இத்தனை பேரையும் மீறி...என்னுடைய அறைக்கு வரமுடியாது…!!ரமேஷ் தான் செய்திருப்பான் என்று யோசித்தால்...அவன் இந்த வீட்டிற்குள் வரமுடியாதே…!அப்போது கண்டிப்பாக யாரோ இந்த வீட்டிலே இருக்கவாங்க தான்...இதையெல்லாம் செய்திருக்கணும்...அந்த ஒருத்தர் யாரு…??’ என்று பலமான சிந்தனையில் இருந்தவளின் யோசனையைக் கலைக்கவென அவள் போன் அடித்தது.


அதையெடுத்து காதில் வைத்தவள் “இதோ வருகிறேன்…!!” என்று கூறி தன் கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பினாள்.


அதேநேரம் ரிஷி வாணியின் காதலை ஏற்று கொள்வதா…??வேண்டாமா…?? என்ற பலத்த யோசனையில் இருப்பதால்...சுற்றி இருக்கும் யாரிடமும் பேசாமல்...பெரும்பாலும் அவன் அறையிலேயே நேரத்தைக் கழித்தான்.


இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த வாணி ‘என்னச்சு இந்த ரிஷி அத்தானுக்கு…??ஒரே நேரத்தில் பத்து பேருக்கு சேர்த்து வைத்து...இவர் ஒருத்தரே பேசுவார்...ஆனால் இப்போது ரூமைவிட்டு வெளியே வரதேயில்லை’ என்று யோசித்தோடு மட்டும் இல்லாமல் கிருஷ் ஶ்ரீநிதியும் கூட ஏதோ ஒரு மாதிரி இருப்பதையும் கவனித்தாள்…


அதுமட்டுமில்லாமல் இந்த மீரா அக்கா போக்கே சரியில்லையே…!!எப்போது பார்த்தாலும்...ஶ்ரீ அக்காவை ஏதோ எதிரியைப் பார்ப்பதை போல் முறைத்து பார்த்து கொண்டிருப்பதையும் சேர்த்து கவனித்தாள்.


வாணிக்கு இதையெல்லாம் பார்த்து தலைமுடியைப் பிய்த்து கொள்ளலாம் போல் குழப்பமாக இருந்தது.இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்று யோசித்து கொண்டிருந்தாள்.


கடைசியாக ரிஷியிடமே கேட்கலாம் என்று அவன் அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.அவள் உள்ளே வந்தது கூட தெரியாமல் சுவற்றை வெறித்து கொண்டிருந்தவனின் அருகில் சென்று,அவன் தோள் தொட்டு “அத்தான்” என்று அழைத்தாள்.


ரிஷி திரும்பி அவளின் முகத்தை பார்த்தான்.அவன் தன்னை அப்படி பார்ப்பதைப் பார்த்த வாணி “அத்தான்...என்னச்சு எதுக்கு என்னை அப்படி பார்க்கிறீங்க…??” என்று வினவினாள்.


“ஒண்ணுமில்லை...இத்தனை நாள் நீ ரொம்ப சின்ன பொண்ணுனு நினைச்சேன்...ஆனால் நீ வளர்த்திட்டேனு...இப்போ உன்னை பார்த்த பிறகு தான் புரியுது…” என்று சம்பந்தம் சம்பந்தமில்லாமல் கூறினான்.


“அத்தான்…! நான் வளர்த்திட்டேனு இப்போ தான் உங்களுக்கு தெரியுமா…?நான் உயரமாகி ரொம்ப நாளாச்சு…??” என்று குறும்புடன் கூறி அவன் முகத்தைப் பார்த்தாள்


அவன் “ச்சு” என்று சலித்தானே தவிர...வேற எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டான்.ரிஷி தன்னை ஏதாவது கேலி செய்வான் என்று காத்திருந்த வாணி...அவன் முகத்தை திருப்பியவுடன்…ரொம்பவும் ஏமாற்றமாக உணர்ந்தாள்.


சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்த ரிஷி தீடிரென்று “நீ ஏன் இப்படி பண்ணினே வாணி…??உன்னிடமிருந்து இதை நான் சத்தியமாக எதிர்ப்பார்க்கலை…!!” என்றான் வருத்தத்துடன்.


வாணி குழப்பத்துடன் “நான் என்ன பண்ணினேன் அத்தான்…??எதுவாக இருந்தாலும் நேரடியாக சொல்லுங்க அத்தான்…!!” என்றாள்.


நீ என்னை காதலிக்கிறீயா என்று எப்படி நேரடியாக கேட்பது என்று ரிஷி தயங்கினான்.


வாணி அவன் தயக்கத்தைப் பார்த்து “அத்தான் எதுவாக இருந்தாலும் கேளுங்க…!நீங்க அதை மனதிற்குள் வைத்து வருத்தப்படுவதை விட...அதை கேட்டுவிடுவது நல்லது அத்தான்…!!” என்று அவனை ஊக்கப்படுத்தினாள்.


ரிஷி ‘எப்போதாக இருந்தாலும் அவளிடம் இதைப் பற்றி கேட்டு தான் ஆகணும்’ என்று யோசித்து...தன் தயக்கத்தை முழுவதுமாக விடுத்து...அவள் கையில் இருக்கும் செல்போனைப் பிடுங்கி...அதில் அவள் தன் பெயருக்கு பதிலாக சேமித்து வைத்திருக்கும் தொடர்பு பெயர் பட்டியலை எடுத்து காண்பித்து “இதுக்கு என்ன அர்த்தம்…??” என்று தெளிவான குரலில் கேட்டான்.


அதைப் பார்த்தவுடன் என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள்.அதனைப் பார்த்த ரிஷி “சொல்லு...இதுக்கு என்ன அர்த்தம்…??” என்று மறுபடியும் கடுமையாக கேட்டான்.


இதுவரை இந்த அளவு கடுமையாக யாரும் வாணியிடம் நடந்து கொண்டதில்லை...அதனால் தீடிரென்று இவ்வளவு கடுமை இவனிடம் இருந்து வந்ததால் வாணியின் கண் கலங்க ஆரம்பித்தது.


இவள் கண் கலங்க ஆரம்பித்ததைப் பார்த்தவுடன் தன் கடுமையைக் குறைத்து மென்குரலில் “முதலில் அந்த கண்ணீரைத் துடை…” என்று கூறினான்.


அவள் கண்ணீரைத் துடைத்தவுடன் “இங்க பாரு வாணி...உனக்கு காதலிக்கிற வயசு இன்னும் வரவில்லை…!!அதுவும் இந்த வயதிலே வருவது வெறும் ஒரு ஈர்ப்பு தானே தவிறே...அது காதல் இல்லை… !!!அதனால் இந்த விசயத்தை மறந்துவிட்டு...படிக்கும் வழியை மட்டும் பாரு...புரியுதா…??” என்று அறிவுரை கூறினான்.


அவன் பேசுவதை இதுவரை அமைதியாக கேட்டு கொண்டிருந்த வாணி தீர்க்கமான குரலில் “அத்தான்...நீங்க சொல்லுவது ஒரு விதத்தில் சரி...எனக்கு இது காதலிக்கும் வயசுயில்லை தான்…!ஆனால் எனக்கு உங்கள் மேல் எனக்கு இருப்பது காதல் தானே ஒழிய ஈர்ப்பு இல்லை…!அது மட்டும் என்னால் உறுதியாக நம்ப முடியும்…!!” என்று அவன் முகத்தைப் பார்த்து தைரியமாக கூறினாள்.


ரிஷி ஏளனக்குரலில் “அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்லுறே…??” என்று வினவினான்.


வாணி ஒரு சிறுமுறுவலை உதிர்த்துவிட்டு “அத்தான்...அதெல்லாம் சொல்லி புரிய வைக்கமுடியாது…!அதை உணர்ந்து தான் தெரிந்து கொள்ளணும்...எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குனு...என் உள் உணர்வு இரண்டு வருஷத்திற்கு முன்னால் உணர்த்தியது…!அதேபோல் நீங்க எப்போ உணருகிறீங்களோ…?அப்போ தான்...என்னை புரிஞ்சிக்க முடியும் அத்தான்...அதுமட்டுமில்லாமல்...உங்களுக்கு எப்படி என் காதலைப் பற்றி தெரியும் என்று கேட்கமாட்டேன்...ஏனால் என் காதலைப் பற்றி எப்படி உங்களிடம் சொல்வது என்று நானே யோசித்துக் கொண்டிருந்தேன்…இப்போது உங்களுக்கு தெரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்” என்று கூறி அவன் கையில் இருக்கும் தன் கைப்பேசியை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.


ரிஷி தன் மனதில் ‘நான் இவளை சின்ன பொண்ணு என்று நினைத்தால்… இவள் இந்த அளவுக்கு எனக்கே காதலனா என்னவென்று புரிஞ்சிக்க சொல்லிட்டு போறா…??’ என்று யோசித்து அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தான்.


கதவு வரை சென்றவள்...என்ன நினைத்தாளோ திரும்பி அவன் அருகில் வந்து “அத்தான்...உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் பேசணும்… அதற்காக தான்...உங்களிடம் பேச வந்தேன்” என்றாள்.


“என்ன வாணி…??” என்று கேட்டான்.


“அத்தான்...இந்த கிருஷ் அத்தான்...ஶ்ரீ அக்கா...மீராக்கா இவங்களுக்குள்ள ஏதாவது சண்டையா…??” என்று குழப்பத்துடன் கேட்டாள்.


ரிஷியும் புரியாமல் “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே…??ஏன் கேட்கிறே…??” என்று கேட்டான்.


வாணி அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி கூறிவிட்டு “ஏன் இப்படி இருக்காங்கனு எனக்கு புரியவில்லை...நீங்களும் ஒரு மாதிரி சோகமாக இருந்தீங்களா…??அதைவைத்து தான் உங்களுக்கு ஏதோ தெரியும் போலே என்று நினைத்து... கேட்கலாம்னு வந்தேன்…!ஆனால் நீங்க சோகமாக இருந்த காரணமே வேறு என்று இப்போது புரியுது…!அதனால் கொஞ்சம் ஶ்ரீ அக்காவிடம் என்ன பிரச்சினை என்று கேளுங்க…??அவங்க கண்டிப்பாக உங்களிடம் சொல்லுவாங்க…??” என்று யோசனை வழங்கினாள்.


இவளின் பேச்சு மற்றும் மற்றவர்களின் மீது உள்ள அக்கறையைப் பார்த்து...முதல் முதலாக ரிஷியின் மனதில் வாணியின் மீது காதல் விதை விழுந்தது…


பதிலுக்காக வாணி தன்னை பார்த்து கொண்டிருப்பதைப் பார்த்து “சரி… நான் ஶ்ரீயிடம் பேசுகிறேன்” என்று கூறி மெல்லிதாக புன்னகைத்தான்.


வாணி அதன்பிறகு அவனை ஏக்கமாக ஒரு பார்வைப் பார்த்து “பை அத்தான்” என்று கூறி சென்றாள்.


இப்போது அவளின் ஏக்கப் பார்வை தன்னை ஏதோ செய்வதை ரிஷி உணர்ந்தான்.ஒரு வேளை அவள் சொன்ன உள் உணர்வு இது தானா...என்று யோசித்து கொண்டிருந்தவன்...அவன் மண்டையில் அவனே தட்டி ‘ஏய் லூசு…!முதலில் ஶ்ரீயிடம் போய் பேசு...அது தான்...இப்போது முக்கியம்’ என்று கூறி அவளைப் பார்க்க சென்றான்.


அங்கு சென்று பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது...ஏனெனில் ஶ்ரீநிதி அங்கு இல்லை...சரி அக்காவிடம் கேட்போம் என்று நினைத்து ஜானகியிடம் கேட்டான்.


அதற்கு ஜானகி “ஶ்ரீ யாரோ ஒரு பிரண்ட்டைப் பார்க்கப் போறேன்னு… இப்போ தான்டா போனாள்...ஏன் ஏதாவது அவளிடம் பேசணுமா…??” என்று கேட்டார்.


ரிஷி “இல்லை அக்கா...ஒண்ணுமில்லை சும்மா எப்பவும் போல தான்…!!” என்று கூறி சமாளித்து அவன் அறைக்கு சென்றான்.


ஆனால் அவன் மனதிற்குள் ஒரு சந்தேகவிதை விழுந்தது. ‘இந்த ஶ்ரீநிதி எப்போதும்...என்னை இல்லையென்றால்...கீதா கூட தானே...பிரண்ட்ஸைப் பார்க்க போவாள்...ஆனால் கீதா ஊருக்கு போயிருக்கானா...என்னைக் கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே...இவளே தனியாக போயிருக்கானாள்...ஏதோ இடிக்குதே...என்னவாக இருக்கும்’ என்று யோசித்து அவன் பங்குக்கு ஒரு பக்கம் குழம்பினான்.


சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மீரா அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக கோபத்தில் நடந்து கொண்டிருந்தாள்.அவள் எண்ணம் நிறைவேறாமல் போனதால் சரியான எரிச்சலில் இருந்தாள்.


கிருஷிடம் ஶ்ரீநிதியின் காதலைப் பற்றி கூறினால்...கிருஷ் ஶ்ரீநிதியை கண்டிப்பாக சந்தேகப்படுவான்...அதனால் இருவருக்கும் பெரிய பிரச்சினை நடக்கும் என்று நினைத்தால்...அப்படி எதுவும் நடக்காமல் இருவரும் அவர்கள் வேலையைப் பார்த்துகொண்டிருப்பது…பிறகு கிருஷ் வாயால் மட்டும் சொன்னால் நம்ப மாட்டான் என்று தான்...அந்த பார்சல் மற்றும் கடிதத்தை காண்பித்தேன்...அதன்பிறகு ரமேஷை தன்னுடன் கூட்டு சேர்த்து...இதையெல்லாம் செய்து இருந்தும்...கிருஷ் அவளிடம் எதுவும் சண்டைப்போடாமல் இருப்பது தான் அவளுக்கு இன்னும் எரிச்சலாக வந்தது.


இதற்கெல்லாம் மேலாக ரமேஷின் நம்பரை கஷ்டப்பட்டு அவனின் தம்பி சுரேஷிடம் கெஞ்சி வாங்கி...அவனைத் தொடர்பு கொண்டால்...அவன் இவளின் பேச்சை கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை… ஶ்ரீநிதி உங்களுக்கு வேணும்னா...நான் சொல்லறப்படி செய்ங்க என்று எவ்வளவு தந்திரமாக பேசி சம்மதிக்க வைத்தால்...இதற்கும் ஒரு பலனுமே காணுமே என்று இன்னும் எரிச்சலில் இருந்தாள்.


இவ்வளவு யோசித்தவளுக்கு கிருஷின் காதலின் ஆழத்தைப் பற்றி தெரியவில்லை...அவன் ஒரு காலத்திலும் தன் காதலியைச் சந்தேகப்படமாட்டான்...எத்தனை முறை இதை முயற்சி செய்தாலும்… அவன் மனசிலிருந்து அவளை வெளியேற்ற முடியாது என்பதை பாவம் அவள் அறியவில்லை.


இனிமே என்ன பண்ணுவது என்று மீரா யோசித்து கொண்டிருந்தாள்… அப்போது பார்த்து மீராவின் செல் போன் அலறியது...அந்த நம்பரைப் பார்த்தவுடன் இன்னும் எரிச்சல் தான் வந்தது.


இருந்தும் அதை எடுத்து காதில் வைத்து எரிச்சலாக “சொல்லு??” என்றாள்.


அந்தப்பக்கம் “மீரா என்னச்சுங்க…?ஏன் கோபமாக பேசிறீங்க...?” என்றான் ரமேஷ்.


“பேசாமல் போனை வைங்க...அப்புறம் ஏதாவது திட்டிட போறேன்” என்றாள் இன்னும் எரிச்சலாக.


ரமேஷ் இப்போது டென்ஷனாகி “இப்போது... உங்களுக்கு என்ன தான் பிரச்சினை…??” என்றான் அவனும் எரிச்சலுடன்.


மீரா திமிராக “இங்க ஒண்ணும் நடக்கலை அதுதான் என் பிரச்சினை…?நீ சரியான வேஸ்ட்...நீ மட்டும் ஒழுங்க நடித்திருந்தால் இந்நேரம் இரண்டு பேருக்கும் பலமான சண்டை வந்து பிரிஞ்சிருப்பாங்க...ஆனால் இங்க அப்படி ஒண்ணும் நடக்கலை…?உன்னை போய் என்கூட சேர்த்துக்கிட்டேன் பாரு...என்னை தான் ……..ஆல் அடிக்கணும்...?” என்று அவனை மரியாதையில்லாமல் பேசினாள்.


அவள் சொல்லாமல் விட்ட வார்த்தையை அறிந்த ரமேஷ் கோபமாக “ஏய்!!உனக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியாதா…?இப்படியெல்லாம் உன் பேச்சுக்கு தலையாட்டினேன் பாரு...எனக்கு இதுவும் வேணும்...இன்னுமும் வேணும்…!!” என்று உறுமினான்.
 

‘ஏய்...மீரா கொஞ்சம் அமைதியாக இருடி...அவனிடம் இன்னும் காரியமாக வேண்டியது நிறைய இருக்கு...அதனால் அமைதியாக பேசு…’என்று யோசித்து,


மீரா கொஞ்சம் தன் கோபத்திலிருந்து இறங்கிவந்து “சாரிப்பா…!நாம் போட்ட பிளான் ஓர்க் அவுட் ஆகலைனு...நான் ஏதோ கோபத்தில் பேசிட்டேன்…” என்றாள்.


அவனும் கோபத்தைக் குறைத்து “சரி...சரி...இனிமே இந்த மாதிரியாகமல் பார்த்துகோங்க...இந்த பிளான் தான் ஓர்க் ஆகலை...வேறே ஏதாவது ஐடியா வைத்திருக்கீங்களா…??” என்றான்.


“இல்லை... இனிமே தான் யோசிக்கணும்…” என்றவுடன்,


ரமேஷ் “சரி அப்போ யோசித்து சொல்லுங்க...நான் போனை வைக்கிறேன்…!!” என்று கட் செய்தான்.


அதன்பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்து மீரா ஒரு ஐடியாவைக் கண்டுபிடித்து அதைப் பற்றி சொல்ல ரமேஷிற்கு போன் செய்தாள்.


அவன் எடுத்துவுடன் மடமடவென எல்லாம் ஐடியாவையும் கூறினாள்.அவள் கூறியதைக் கேட்டுவிட்டு “இதன்மூலம் ஏதாவது பெரிய பிரச்சினையாகப் போகுதுங்க...இது நாம் நினைத்தமாதிரி சரியாக நடக்குமா…??” என்று சந்தேகத்துடன் கேட்டான்.


மீரா “அதெல்லாம் சரியாக நடக்கும்...நான் சொன்ன மாதிரி...நீங்க சரியாக நடந்தால்…அதுக்கு பிறகு எங்க வீட்டிலே...உங்க இரண்டு பேருக்கும் சேர்த்து கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க…நாம் நினைச்சது...இஸியாக நடந்திரும்” என்றவுடன்,வேறு வழியில்லாமல் சரி என்றான்.


அவர்களின் திட்டத்தின் முதல்படியாக ரமேஷ் ஶ்ரீநிதிக்கு போன் செய்து “நமக்கு போன் செய்தது...யாருனு கண்டுபிடிச்சீட்டேன்...நீங்க அன்றைக்கு வந்த ரெஸிடன்ஸிக்கு வந்திடுங்க...அங்கு வந்தால் எல்லா விவரமும் நான் சொல்லுறேன்…” என்றவுடன் ஶ்ரீநிதிக்கும் அது யாரென்று தெரிய வேண்டி இருப்பதால் சரியென்று கூறி கிளம்பினாள்.


ஶ்ரீநிதி அந்த ஹோட்டலின் உள்ளே நுழைந்தாள்.அங்கே ரமேஷ் இவளுக்காக காத்திருக்கும் டேபிளின் அருகே சென்றவுடன்...அவளின் கால் தடுக்கி...கீழே விழப்போனவளை ரமேஷ் ஓடி வந்து அவளை தாங்கிப்பிடித்தான்.


பிடித்தவன் அவளை விடும் எண்ணமில்லாமல் ரொம்ப நேரமாக பிடித்துக்கொண்டிருக்கவும்...ஶ்ரீநிதி அருவறுப்பாக இருந்தது...அதனால் அவனை தள்ளிவிட்டு முறைத்தாள்.

ரமேஷ் தன் தவறை உணர்ந்து “சாரிங்க” என்றுவிட்டு டேபிளில் அமர்ந்தான்.


ஶ்ரீநிதி சென்று அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள். அமர்ந்தவுடன் நேரடியாக விசயத்திற்கு வந்தாள். “சொல்லுங்க...யார் இப்படி பண்ணியது…??” என்று கேட்டாள்.


அவன் “முதலில் ஏதாவது சாப்பிடுங்க…??” என்றவனை,


“நான் ஒண்ணும் இங்க சாப்பிட வரவில்லை...நீங்க விசயத்தைச் சொல்லுங்க...நான் கிளம்பணும்…!!” என்று தீர்க்கமாக கூறினாள்.


ரமேஷ் வேறு வழியில்லாமல் பேச வந்த விசயத்தை ஆரம்பித்தான். “இதற்கெல்லாம் காரணம்...என் பிரண்டு தாங்க...அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் தொழில் ஒரு பிரச்சினை…அதை மனதில் வைத்து தான் இப்படி செய்துவிட்டான்” என்றவனை நம்பாத பார்வைப் பார்த்தாள்.


உடனே ரமேஷ் அவசரமாக “நான் சொல்லறது உண்மைதாங்க...என் தம்பி எதார்த்தமாக என் காதல் விசயத்தை சொல்லியிருப்பான் போல...அவன் அதை வைத்து உங்களுடைய நம்பரைக் கண்டுபிடித்து நமக்கு இரண்டு பேருக்கும் போன் செய்து...உங்களிடம் என்னை மாட்டி கம்பி எண்ண வைக்க பிளான் பண்ணியிருக்கான் ஶ்ரீநிதி…??நேற்று இதை குடிபோதையில் என்னுடைய இன்னொரு நண்பரிடம் சொல்லியிருக்கான்...அவன் வந்து என்னிடம் சொன்னான்…” என்று நீளமாக பேசி முடித்தான்.


“சரி...ஆனால் இனிமே நீங்க என்னை மறந்திட்டு வேற நல்லா பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிகோங்க...அதேமாதிரி என்னை காதலித்த விசயத்தை ஊர்பூராவும் தண்டோரா போடாமல் இருங்க...இதுக்குமேலே உங்களால் ஏதாவது பிரச்சினை வந்தால்… நான் சும்மா இருக்கமாட்டேன்...ஜாக்கிரதை…!!” என்று மிரட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.


அவள் சென்றபிறகு மீராவுக்கு வெற்றி என்று செய்தி அனுப்பினான். அதன்பிறகு சில போன் கால் செய்து சிலரிடம் பேசிவிட்டு அவனும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.


ஶ்ரீநிதியிடம் பேசுவதற்காக ரிஷி ரொம்ப நேரமாக அவளுக்காக வீட்டில் காத்திருந்தான்.அவள் வீடு வந்தவுடன் ரிஷி அவளை செல்லில் அழைத்து “ஒரு நிமிடம்...என் அறைக்கு வா…!!” என்று கூறி வைத்துவிட்டான்.


அவள் உள்ளே நுழைந்தவுடன் “எங்க போயிட்டு வர…??” என்று கோபமாக தன் முதல் கேள்வியாக கேட்டான்.


ஶ்ரீநிதி அசராமல் “பிரண்ட்டைப் பார்த்திட்டு வரேன்…” என்றாள்.


“எந்த பிரண்ட்...அதுவும் எனக்கு தெரியாமல்…??” என்று அவள் கண்களைப் பார்த்து வினவினான்.


இப்போது ஶ்ரீநிதி தடுமாறி “உனக்கு தெரியாது...அந்த பிரண்டைப் பற்றி…” என்றாள்.


“எனக்கு தெரியாது தான்...இருந்தும் என்னை கூட்டிட்டு போயிருக்க வேண்டியது தானே...தனியாக எதுக்கு போனே…??” என்று மறுபடியும் கேட்டான்.


ஶ்ரீநிதி தான் மனதில் ‘இவனுக்கு கிருஷ் அத்தானே பரவாயில்லை போல’ என்று எண்ணினாள்.


ரிஷி கண்டிப்புடன் “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ஶ்ரீ…??” என்றான்.


“சாரிடா…!!ஏதோ அவசரத்தில் போயிட்டேன்...இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டேன்…!!” என்று முகத்தைச் சுருக்கி சாரி சொன்னாள்.


“சரி...இனிமே என்னை கூட்டிட்டு போ…!!இப்போ போனதுக்கு பதில் சொல்லு… யாரைப் பார்க்க போனே…??யார் அந்த பிரண்ட்… சொல்லு…??” என்று விடாமல் கேட்டான்.


ஶ்ரீநிதி ரிஷியிடம் இதை எப்படி என்னவென்று சொல்லுவது என்று யோசித்தாள்.


அவளின் யோசனையைக் கலைப்பது போல் ரிஷி “ஶ்ரீஇஇஇஇ….” என்று கத்தினான்.


அவன் கோபத்தில் இருப்பதைப் பார்த்து ஏதோ ஒன்று கூறி சமாளிக்க எண்ணி “அன்றைக்கு ஹாஸ்பிட்டல் போன தானே...ஒரு பொண்ணுக்கு விபத்துனு...அந்த பொண்ணை பார்க்க தான்டா போனே…!!” என்று பொய் கூறினாள்.


ரிஷி அவளின் கண்களை உற்று பார்த்தவாறு “ஶ்ரீநிதி...உனக்கு பொய் சொல்ல வரலை…!!” என்று கூறினான்.


இப்போது ஶ்ரீநிதி தலைகுனிந்தாள்.


“ஶ்ரீ இப்போவாச்சும் உண்மையை சொல்லு...நான் உன்னுடைய நண்பன்னு தோணுச்சுனா சொல்லு...இல்லைனா வேண்டாம்…” என்று கூறி அவளின் முகத்தைப் பார்த்தான்.


அவள் குனிந்த தலையை நிமர்த்தவில்லை என்றவுடன் ரிஷி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு “சரி நீ கிளம்பு” என்றான்.


அவள் அப்பவும் அங்கிருந்து நகராமல் இருக்கவும் “சரி நான் போகிறேன்” என்று கூறி கிளம்பியவனை ஶ்ரீநிதி அவனின் கைப்பிடித்து நிறுத்தினாள்.


அவன் திரும்பி அவள் முகத்தைப் பார்க்கவும் ஶ்ரீநிதி ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் கூறினாள்.


அவள் முழுவதும் கூறியவுடன் ரிஷி ஆத்திரத்தில் நரம்பு புடைக்க “ராஸ்கல்...நல்லவன் மாதிரி இருந்திட்டு எப்படி பண்ணியிருக்கான் பாரு...அவனை என்ன செய்கிறேன் பாரு…” என்று உறுமிவிட்டு நகரப்போனவனை ஶ்ரீநிதி கையைப் பிடித்து தடுத்து,


“வேண்டாம் ரிஷி...அவனை நான் வார்ன் பண்ணிட்டு தான் வந்திருக்கேன்...இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டான்...ஆனால் எனக்கு புரியாத ஒரு விசயம்...அந்த பார்சல் எங்கே போனது என்று தான்…??” என்று கூறி யோசித்தாள்.


அதைக்கேட்டவனின் புருவத்தின் மத்தியில் மூடிச்சு விழுந்தது… அவனும் அதைப்பற்றி யோசித்து “ஶ்ரீநிதி அந்த பார்சல் என்ன கலர் கவரால் சுற்றி இருக்கும்…” என்று கேட்டான்.


ஶ்ரீநிதி “அது பிங்க் கலரில் வெள்ளை நிற ஹார்ட்டின் போட்டு இருக்கும்…!!” என்றவுடன்,


ரிஷி கண்டிப்பாக இது அந்த பார்சல் தான் என்று முடிவெடுத்து “ஶ்ரீநிதி இரண்டு நாளைக்கு முன்னால் அண்ணனின் டேபிள் மீது...நீ சொன்ன மாதிரி கவரில் பேக் செய்யப்பட்ட ஒரு பார்சல் இருந்தது...ஆனால் இது எப்படி அண்ணன் கைக்கு போனது…??” என்று கூறி யோசனையில் ஆழ்ந்தான்.


ஶ்ரீநிதி கொஞ்சம் கூட கிருஷன் மேல் சந்தேகப்படாமல் ஒரு வழி கண்டுபிடித்த ஆர்வத்துடன் “ரிஷி...இந்த பார்சலை யார் போஸ்ட் மேனிடம் வாங்கனாங்கனு கண்டுபிடிச்சா...இது யார் எடுத்தாங்கனு கண்டுபிடிச்சிடலாம்...ஏனால் இந்த பார்சல் என்னை கீதாவைத் தவிர வேறு யாருக்கும் இதைப் பற்றி தெரியாது…!!சோ...கண்டிப்பாக யாரிடம் வாட்ச்மென் அண்ணா இந்த பார்சலைக் கொடுத்தாங்களோ… அவங்க தான்...இதெல்லாம் செஞ்சாங்க…!அய்யாஆஆ நான் கண்டுபிடிச்சிட்டேனே…!!” என்று கூறி குதுகலித்தாள்.


ரிஷி அவள் குதுகலிப்பதைப் பார்த்து சிரிப்புடன் “லூசு...போதும் போதும் வா...வாட்ச்மென் அண்ணாவிடம் விசாரிப்போம்…” என்று அவளை அழைத்துக்கொண்டு அவரிடம் விசாரித்தனர்.


அந்த பார்சலை யாரிடம் கொடுத்தேன் என்று அவர் கூறியதைக் கேட்டவுடன் இருவரும் அதிர்ந்தனர்.
 
அத்யாயம் 14:வாட்ச்மென் அதை மீராவிடம் தான் கொடுத்தேன் என்று கூறியவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து...அடுத்த நிமிடம்...ஶ்ரீநிதி தெளிவுடன் ‘இது கண்டிப்பாக மீரா...தான் செய்திருப்பாள்’ என்று நம்பினாள்.


ஏனெனில் அவளின் அறைக்கு அனுமதி இல்லாமல் நுழையக் கூடியவர்கள் வாணி,ரிஷி,கீதா அடுத்து மீரா...மற்றவர்கள் யாரும் இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை...அதனால் மீரா தான் செய்திருப்பாள் என்று உறுதியாக நம்பினாள்.


அதையே ரிஷியிடமும் கூறினாள்.ஆனால் அவன் ஶ்ரீநிதியிடம் “அவள் எதற்கு இதை எடுத்திட்டு போய் அண்ணாவிடம் கொடுக்கணும்…?அதற்கான அவசியம் தான் என்ன…???” என்று குழப்பத்துடன் கேட்டான்.


ஶ்ரீநிதிக்கே அது தெரியவில்லை.இருந்தும் அவனிடம் “ரிஷி...அதை அக்கா தான் சொல்லணும்…!இப்போ இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் ரிஷி…!!சமயம் கிடைக்கும் போது நாம் அக்காவிடம் கேட்கலாம்…!!!” என்று கூறியவுடன் ரிஷி தலையாட்டினான்.


ஶ்ரீநிதி அன்று இரவில் படுக்கையில் விழுந்து “ஓ...ஐயாவுக்கு ரமேஷைப் பற்றி சொல்லைனு தான் கோபம் போல...அதற்கு என்னிடம் பேசாமல் இருந்தால் எல்லாம் சரியாகிடுமா…??சரியான லூசு அத்தான் நீங்க…?சரி சரி நாளைக்கு அவனைப் பற்றி எல்லாமே நான் உங்களிடம் சொல்லுறேன் சரியா அத்தான்…?ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் வரக்கூடாது அத்தான்…?பட் எனக்கு உங்க கோபமும் ரொம்ப பிடிச்சிருக்கு…???” என்று தனக்குள் பேசி சிரித்துவிட்டு அவனை கண்களுக்குள் நிரப்பி கண்மூடினாள்.


ஶ்ரீ மறந்தும் கிருஷ் தன்னை சந்தேகப்பட்டிருப்பான் என்று நினைக்கவில்லை...அவளுக்கே அவனின் காதலின் மீது அதீத நம்பிக்கை இருந்தது.


அடுத்தநாள் காலை 8 மணிக்கு ஶ்ரீநிதியை அவளின் அன்னை பதட்டத்துடன் எழுப்பினார்.


ஶ்ரீநிதி தூக்கத்துடனே “அம்மா…!!பிளீஸ்ம்மா இன்னும் கொஞ்சம் நேரம்…!!!” என்று கூறி போர்வையை இழுத்து போத்தினாள்.


அவர் அவளின் போர்வையை இழுத்தவாறு “ஶ்ரீம்மா எழுந்திரி...உன்னிடம் பேசுவதற்காக தாத்தா உன்னை உடனடியாக கீழே வர சொன்னார்…சீக்கிரம் வாம்மா...தாத்தா ரொம்பவும் கோபமாக இருக்கார்…!!” என்றவுடன்,


ஶ்ரீநிதி படக்கென எழுந்து “என்னச்சும்மா…??” என்று வினவினாள்.


“தெரியலைம்மா...உன்னிடம் ஏதோ முக்கியமான விசயம் பேசணும்னு உடனடியாக உன்னை எழுப்பி கூட்டிட்டு வர சொன்னார்...தாத்தா ரொம்ப கோபமாக இருக்கார்டா…அவரைப் பார்த்தால் எனக்கே பயமாக இருக்கு…!!” என்று கண்களில் மிரட்சியுடன் கூறினார்.


ஶ்ரீநிதி “சரிம்மா நீங்க போங்க...நான் முகம் கழுவிட்டு வரேன்…!!” என்று கூறி அவரை கீழே அனுப்பினாள்.


என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு காலை கடன்களை முடித்துவிட்டு கீழே இறங்கி சென்றாள்.


கீழே குடும்பத்தின் உறுப்பினர் அனைவரும் ஒன்றாக கூடி இருப்பதைப் பார்த்துவிட்டு...அதுவும் தாத்தா மிகவும் கோபமாக அமர்ந்து இருப்பதைப் பார்த்து மனதில் ஒரு கிலி பரவியது.


இருந்தும் அவர் அருகில் சென்று “என்ன விசயம் தாத்தா...எதுக்கு கூப்பிட்டீங்க…??” என்று தைரியத்தை வரவழைத்து வினவினாள்.


அதற்கு தாத்தா அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு...விசுவிடம் கண்களால் ‘நீயே கேளு’ என்று சைகை செய்தார்.


விசு “என்னம்மா இப்படி பண்ணியிருக்கே…??எங்களிடம் சொல்லி இருந்தால்...நாங்க என்ன தடுக்கவா போறோம்...உனக்கு நாங்க எல்லா உரிமையும் கொடுத்திருக்கோம்...இருந்தும் நீ எப்படி பண்ணுவே என்று நாங்க கொஞ்சம் கூட நினைக்கலைம்மா…??” என்று வருத்தத்துடன் கூறினார்.


ஶ்ரீநிதிக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் திருதிருவென்று முழித்தாள். அதேபோல் சுற்றியிருக்கும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.


அவள் முழிப்பதைப் பார்த்து அவளின் தந்தை ஒரு செய்தித்தாளை எடுத்து அவளின் முன் போட்டுவிட்டு “அதை எடுத்துப்பாரு…!!” என்றார்.


அதையெடுத்து பார்த்த ஶ்ரீநிதி...அதிலிருந்த ஓர் செய்தியைப் படித்தவளின் பார்வை...அதிலே நிலைகுத்தி நின்றது...அந்த செய்தியின் விவரம் இது தான்...சஞ்சீவ் குருப் ஆப் கம்பெனியின் வாரிசான ரமேஷ் சஞ்சீவ் சக்கரவர்த்தியும்...நந்தன் குருப் ஆப் கம்பெனியின் வாரிசான ஶ்ரீநிதி விசுநந்தனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவதால் கூடிய சீக்கிரம் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்று கூறி,அதில் ரமேஷ் ஶ்ரீநிதியை அணைத்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை அந்த செய்தியுடன் இணைத்திருந்தார்கள்.


அதைப்பார்த்த ஶ்ரீநிதி இன்னும் அதிர்ச்சியடைந்தாள்.


அதற்குள் விசு “இதற்கு என்னம்மா சொல்ல போறே…?நாங்க உன் ஆசைக்கு குறுக்கே நிற்கவா போகிறோம்…??நீ இந்த விசயத்தை முதலிலே எங்களிடம் சொல்லியிருக்கலாம்மா…??இப்படி ஊர் பூராவும் தெரிந்தப்பிறகு எங்களுக்கு தெரியறமாதிரி செய்திருக்கியே…!!இது எங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம்…?இதிலிருந்தே நீ எந்த அளவு மதிக்கிறேன்னு தெரியுதும்மா...??” என்று வேதனையுடன் வினவினார்.அவர் கூற கூற ஶ்ரீநிதியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.


இதைப் பார்த்த எல்லோருக்கும் ஶ்ரீநிதியைப் பார்க்க பாவமாக இருந்தது...ஆனால் இதில் மீராவுக்கு மட்டும் மனதில் மகிழ்ச்சி ஊற்று எடுத்து பெருகியது.இதை தானே எதிர்ப்பார்த்தாள்.


ஶ்ரீ “அப்பா...நான்...” என்று கண்ணீருடன் ஆரம்பித்தவளை “ஶ்ரீநிதி...ஒரு நிமிடம் அந்த பேப்பரைக் கொடு” என்று தடுத்த கிருஷ் அந்த பேப்பரை வாங்கிப்பார்த்தான்.


அதைப்படித்துவிட்டு கிருஷ் ஶ்ரீநிதியை ஒரு முறை முறைத்தான். இருந்தும் அவன் மனதில் இது அன்று ஶ்ரீநிதி அணிந்திருந்த உடை கிடையாதே…!!இந்த போட்டா எப்போ எடுத்தது...என்று யோசித்து கொண்டிருந்தவனை தடைச்செய்வதைப் போல் வாசலில் சர் சரென்று கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.


அனைவரின் பார்வையும் வாசல் புறம் திரும்பியது.அதிலிருந்து இரண்டு வாட்டசாட்டமான இளைஞர்களும்... நான்கு நடுத்தர வயது ஆண்களும்...நான்கு நடுத்தர வயது பெண்களும்...ஒரே ஒரு வயதான மூதாட்டியும் இறங்கி நின்றார்கள்.


வந்தவர்கள் யார்…?என்ன…? என்று தெரியவில்லை என்றாலும் வீடு தேடி வந்தோரை எப்படி வரவேற்காமல் இருப்பது என்று யோசித்து அனைவரையும் வரவேற்று உட்காரவைத்து உபசரித்தார்கள் நந்தன் குடும்பத்தினர்.


அந்த செய்தித்தாளைப் பார்த்தவர்கள்...ரமேஷை மட்டும் அடையாளம் கண்டு கொண்டனர்....கிருஷிற்கு சுர்ரென்று கோபமேறியது...இருந்தும் வீட்டின் பெரியவர்கள் முன் எதையும் செய்யமுடியாத நிலையில் இருந்தான்.ரிஷி தன் நண்பன் சுரேஷை முறைத்துகொண்டிருந்தான்… அவனுக்கும் சுரேஷை அடித்து துவைக்கும் அளவு ஆத்திரம் இருந்தது...ஆனால் அவனும் பெரியவர்கள் முன் எதுவும் செய்ய முடியாமல் வாலாயிருந்தான்.


ஶ்ரீநிதி வெளியாட்களின் முன் கண்ணீர் சிந்த விரும்பாமல் தன் கண்ணீரை துடைத்துவிட்டு அவளின் தங்கையின் அருகில் நின்றாள்.


அப்போது பார்த்து மீரா ரமேஷுக்கு சைகை செய்வதையும்...மீரா அதற்கு ஏதோ சைகை செய்வதையும் பார்த்த ஶ்ரீநிதிக்கு முன்பு புரியாமல் இருந்த விசயங்கள்...எல்லாம் இப்போது விளங்கியது… இதெல்லாம் மீராவும் ரமேஷூம் திட்டமிட்டு செயல்படுத்திய செயல் என்பது தெளிவாகப் புரிந்தது...இந்த திட்டத்தை வெற்றியடைய செய்த தன்னையே நொந்து கொண்டாள்.


ரமேஷின் அப்பா சஞ்சீவ்சக்கரவர்த்தி நந்தனிடம் பேச ஆரம்பித்தார். “நாங்க உங்களின் குடும்பத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்… நீங்க காலையில் வந்த நியூஸ் பேப்பரைப் பார்த்துயிருப்பீங்க...நம்முடைய பிள்ளைகள் நமக்கு தெரியாமல் அவசரப்பட்டுட்டாங்க… இப்படி ஊர் பூராவும் தெரியும் அளவுக்கு சுற்றியிருக்காங்க...அவங்க செய்தது தப்புதான்...ஏதோ தெரியாமல் பண்ணீட்டாங்க...நாம் தானே பெரிய மனசு பண்ணி இவங்களை மன்னிக்கணும்…” என்று பேச்சை மெதுவாக ஆரம்பித்தார்.


தாத்தாவும் “நாங்க எங்க பொண்ணை ரொம்ப சுதந்திரமாக தான் வளர்த்திருக்கோம்...அவள் என்ன கேட்டாலும் இல்லையென்று சொன்னதில்லை...ஆனால் இப்படி எங்க பொண்ணு பண்ணுவனு நாங்களும் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலை...என்ன எங்க பொண்ணு… கொஞ்சம் முன்னாடியே சொல்லிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று வருத்தமே ஒழிய...மற்றபடி எங்க பொண்ணு வாழ்க்கைக்கு குறுக்கே...நாங்க எப்பவும் நிற்கமாட்டோம்” என்று வருத்தத்துடன் கூறினாள்.


“அப்போ சரிங்க ஐயா...உங்களுக்கு இதில் சம்மதம் என்றால் நாம் இப்போ உறுதி மட்டும் செய்து கொள்வோமா…?அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாண தேதி முடிவு பண்ணுவோம்...?” என்று நேரடியாக கேட்டவுடன்...அனைவரும் அதிர்ந்தனர்.


தாத்தா எந்த பதிலும் சொல்லாமல்...நந்தன் விசுவையும் ஜானகியையும் திரும்பி பார்த்தார்.


இவர்கள் தீடிரென்று இப்படி கேட்பார்கள் என்று எதிர்ப்பார்க்காதிதினால் விசுவும் ஜானகியும் என்ன முடிவு செய்வது என்று குழம்பினார்கள்.


தீடிரென்று திருமணம் என்றவுடன் ஶ்ரீநிதிக்கு கண் கலங்க ஆரம்பித்தது.


விசுவும் ஜானகியும் குழம்பி இருப்பதைப் பார்த்த நந்தன்...கிருஷைப் பார்த்தார்.கிருஷ் எதுவும் சொல்லாமல் திரும்பி ஶ்ரீநிதியை ஒரு பார்வை பார்த்தான்...அந்த பார்வையே சொல்லாமல் சொல்லியது...இதெல்லாம் உன்னால் தான்...அதனால் நீயே பதில் சொல்லு என்றவாறு.தாத்தா ஶ்ரீநிதியின் பக்கம் கூட திரும்பாமல் மறுபடியும் விசுவின் பக்கமே திரும்பி பார்த்தார்.


அவரின் நிராகரிப்பு...இன்னும் ஶ்ரீநிதியின் கண்ணீரை என்ன முயன்றும் தடுக்கமுடியாமல் பொங்கி வர ஆரம்பித்தது...ஶ்ரீநிதி கிருஷை ஏதாவது செய்யுங்களேன்...என்றவாறு அவனிடம் கண்களால் கெஞ்சினாள். அவனுக்கு அவளின் கண்ணீரைப் பார்த்தவுடன் மனம் வலித்தது… இருந்தும் எல்லா விசயத்தையும் நீயே பார்த்துப்பே...இப்ப மட்டும்...நான் உனக்கு எதற்கு சப்போர்ட் பண்ணணும்…? என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.


ஶ்ரீநிதிக்கு தீடிரென்று எல்லாரும் இருந்தும்...யாரும் இல்லாத அனாதைப் போல் ஓர் தனிமை உணர்வு ஏற்பட்டது...அதைப்பார்த்த மீராவுக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் போனது.


ரிஷிக்கு தான் ஶ்ரீநிதி எந்த தப்பும் செய்யவில்லை என்று தெரியுமே… !!ஆனால் இந்த இடத்தில் உதவி செய்யமுடியாத நிலையில் இருந்தான்.


மற்ற அனைவரும்...நந்தனிடம் தைரியமாக பேசக்கூடிய ஒரே ஆள்... கிருஷ் தான்...அவனே அமைதியாக இருக்கும்போது...மற்றவர்கள் பேச தயங்கினார்கள்.


ரமேஷின் அப்பா தாத்தாவின் முகத்தையே பார்த்து கொண்டிருக்கவும்…வேறு வழியில்லாமல் “பொண்ணை பெற்றவர்கள் என்ன சொல்லுறாங்களோ...அதுப்படி தாங்க செய்ய முடியும்...நீங்க தீடிரென்று இப்படி கேட்கவும்...அவங்க குழப்பத்தில் இருக்காங்க… அதனால் எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க…!!” என்றவுடன்,


அந்த பக்கம் வந்திருந்த ரமேஷின் உறவினர்கள் சலசலக்க ஆரம்பித்தார்கள்.பையனைப் பெற்ற நாங்களே மானம் போய்விடும் என்று சீக்கிரம் இவங்க வீட்டில் பேச வந்தால்…பொண்ணை பெத்த இவங்களுக்கு யோசிக்கணுமா…??எங்களுக்கு ஊர் உலகத்திலே வேற பொண்ணா கிடைக்காது பாரு...இப்படி கல்யாணத்துக்கு முன்னால்...ஒரு ஆம்பிளை கூட சுத்தற பொண்ண வச்சிட்டே...இப்படியெல்லாம் ஆடுறாங்க...அதுவும் நல்ல பொண்ண இருந்தால் அவ்வளவு தான்...இவங்களை கையிலே பிடிக்கமுடியது...என்று ஆளாளுக்கு புரளி பேச ஆரம்பித்தார்கள்.


இப்படியெல்லாம் பேச ஆரம்பித்தவுடன் நந்தனுக்கு என்ன பேசுவது என்று புரியாமல் தலைகுனிந்தார்.


இதுவரை பேசாமல் இருந்த கிருஷ் கோபத்துடன் “என்ன ஆளாளுக்கு பேசிறீங்க...அந்த பொண்ணு உங்க பையன் கூட சுத்தியதை பார்த்தீங்களா…??ஏதோ பேப்பரில் வந்த ஒரு செய்தியைப் பார்த்து சந்தேகப்படற குடும்பம் இது இல்லை...என்ன நடந்துச்சினு...உங்கள் பையனைக் கொஞ்சம் கேளுங்க...ஏனால் எங்கள் பொண்ணு மேலே எந்த தப்பும் இல்லை...அவளை அந்த மாதிரி நாங்க வளர்க்கவும் இல்லை...!எல்லா தப்பும் உங்கள் பையன் மேலே தான்...இப்படி கேடுகெட்ட பையனைப் பெத்துவச்சுட்டு...இந்த அளவுக்கு ஆடுறீங்க…??உங்களை யாரு எங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க சொன்னது…முதலில் எல்லாரும் இங்கிருந்து எழுந்து வெளியே போங்க…!!” என்று உறுமி வாசல் பக்கம் கை காட்டினான்.


அதில் இன்னும் எரிச்சலடைந்த ரமேஷ் வீட்டினர் ‘ச்சை சுத்தம் மரியாதை தெரியாத குடும்பமாக இருக்கு...மரியாதையில்லாமல் ஒரு சின்ன பையன் வீட்டை விட்டு வெளிய போக சொல்லுறான்...இவங்க எல்லாரும் வாயை முடிட்டு இருக்காங்க...இந்த ரமேஷ் போயும் போயும் தேடி பிடிச்சிருக்கான் பாரு பொண்ணை...இந்த லட்சணத்தில் நம்ப பையனை பேச வந்திட்டாங்க...இந்த பொண்ணு இது மாதிரி எத்தனை பசங்களோடு சுத்துச்சோ…!இல்லை உறவு வச்சிக்கிச்சோ…!!! என்றவுடன்,


ஶ்ரீநிதி ‘அய்யோ கிருஷ்ணா...என்னை இந்த உலகத்திலே...எதுக்கு வச்சிருக்கே…என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடு…’ என்று காதைப் பொத்தியவாறு அலறி மயங்கி சரிந்தாள்.


அதைப்பார்த்தவுடன் எல்லோரும் ஶ்ரீநிதி என்று அவளை தாங்கிப்பிடித்தனர்.


அவ்வளவுதான் எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ கிருஷிற்கு அவளைத் தப்பாக பேசியவனையும்...அந்த ரமேஷையும் அடித்து துவைத்தான்.கூடவே ரிஷியும் தயாவும் சேர்ந்து கொண்டார்கள். பெண்களைத் தவிர மற்றவர்களை ஒரு கைப்பார்த்தனர் இருவரும்.


ரிஷி அவன் நண்பனின் சட்டையைப் பிடித்து “ஏன்டா...துரோகி இப்படி பண்ணினே…??உன்னை எப்படி நம்பினேன்…??உங்க அண்ணன் ஶ்ரீநிதியைக் காதலிக்கிறாருனு முன்னாடியே சொல்லிருந்தால்...நான் எங்க வீட்டில் பொறுமையாக எடுத்து சொல்லியிருப்பனே...ஆனால் ஏன்டா இப்படி பண்ணினே…!!” என்று கூறி அவனை அறைந்தான்.


தாத்தா தான் நடுவில் வந்து “விடுங்கப்பா...அவங்க போகட்டும்… இனிமே இந்த மாதிரி தப்பு தப்பாக நடந்துக்காதீங்க…!வெளியே போங்க...!” என்று கூறினார்.


அவர்கள் போகும்போது “உன்னை இருடா பார்த்துகிறேன்...எங்களை அவமானப்படுத்திய உன்னை சும்மாவே விடமாட்டோம்…” என்று கூறிவிட்டு சென்றனர்.
 
“ஏய் போங்கடா…” என்று கூறிவிட்டு ஶ்ரீநிதியைப் பார்க்க சென்றனர் கிருஷும் ரிஷியும்.


அங்கே அறையின் வெளியே நின்று கொண்டிருந்த யசோதாவிடம் “பெரியம்மா ஶ்ரீநிதிக்கு இப்போது எப்படி இருக்கு…” என்று தவிப்புடன் கேட்டான் கிருஷ்.


“தெரியலைப்பா...விசு மாப்பிள்ளை தான் பார்த்துட்டு இருக்காரு…!!” என்றார் அவரும் பதட்டத்துடன்.


விசு அறைக்கு வெளியேவந்து “ஒண்ணுமில்லை சாதாரண மயக்கம் தான்...ஆனால் காய்ச்சல் வர மாதிரி இருக்கு...நான் ஊசிப் போட்டுயிருக்கேன்...கொஞ்சம் நேரம் தூங்குவா...அவளை யாரும் போய் பார்க்கவேணாம்…அவளுக்கு துணையாக வாணியும் ஜானகியும் இருக்காங்க...” என்று கூறிவிட்டு தாத்தாவைப் பார்க்க சென்றார்.அவரைப் பின்பற்றி கிருஷும் ரிஷியும் சேர்ந்தே வந்தனர்.


தாத்தா அவர் அறையில் யோசனையுடன் படுத்திருந்தார்.விசு கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்.


தாத்தா விசுவைப் பார்த்துவிட்டு அவர் அருகில் நெருங்கியவுடன் “நான் தப்புப்பண்ணிட்டேன்ப்பா...என் பேத்தி இந்த மாதிரி தப்பு பண்ணமாட்டானு நான் நம்பியிருக்கணும்...அவள் மேலே சந்தேகப்பட்டு இருக்கவே கூடாது...நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா… என் பேத்தியை பற்றி இவ்வளவு தெரிஞ்ச நானே...அவளை இந்த மாதிரி நிலைமையில் நானே தள்ளிவிட்டுடேனே...அவள் என்னை மன்னிப்பாளா…??” என்று கண் கலங்க கேட்டார்.


எதற்கும் கலங்காதவர் கலங்கியவுடன் கிருஷ் அவரின் அருகில் சென்று “தாத்தா…!!இது தெரியாமல் நடந்த தப்பு...இதில் உங்க தப்பு ஒண்ணுமில்லை...எல்லோரிடமும் ரமேஷைப் பற்றி மறைச்சு வைச்சது...அவளோட தப்பு...அதனால் நீங்க வருத்தப்படாதீங்க…!!” என்று ஆறுதல் கூறினான்.


“இருந்தாலும்...என்று ஆரம்பித்தவரை தடுத்து விசு “தாத்தா என் மேலே தான் தப்பு...என் பொண்ணை நான் நம்பியிருக்கணும்...நானே நம்பாத போது நீங்க எப்படி நம்புவீங்க...எல்லா தப்பும் என் மேலே தான்…!!” என்று அவரும் வேதனையுடன் கூறினார்.


“அச்சோ…!!அடுத்து நீங்களா மாமா…??உங்க இரண்டு பேர் மேலேயும் எந்த தப்பும் இல்லை...சரி இது வரைக்கும் நடந்ததை விடுங்க...இனிமே நடக்கப் போவதைப் பாருங்க…!!” என்று ஆறுதல் கூறினான்.


“ஆனாலும் என் பொண்ணு மேலே... நீ வச்சிருக்கே நம்பிக்கை கூட எங்களுக்கு இல்லாமல் போச்சே…!!” என்று கூறியவுடன்,


“அதெப்படி நம்பிக்கை இல்லாமல் போகும்...ஏனென்றால் அவ்வளவு காதல்...” என்று கூறியவாறு விசுவின் அண்ணன் ராம் உள்ளே நுழைந்தார்.


“என்ன காதலா…??” என்று கிருஷைத் தவிர அனைவரும் அதிர்ந்தனர்.


ராம் சிரிப்புடன் “ஆமாம்...காதலே தான்…!!” என்றார்.


ரிஷி தான் முதலில் அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்டு “யாருக்கு யார் மேல் காதல்…??” என்று குழப்பத்துடன் கேட்டான்.


அவர் குறும்புடன் “கிருஷுக்கு ஶ்ரீநிதி மேலையும்...ஶ்ரீநிதிக்கு கிருஷுன் மேலையும் காதல்…!!” என்று கூறியவாறு கிருஷின் தோளில் கைப்போட்டு,


“என்னடா மாப்பிள்ளை…!!எப்போ என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப்போறே…???” என்றார் புன்னகையுடன்.


கிருஷ் எதுவும் சொல்லாமல் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்… ஆனால் ரிஷி “என்னது...ஶ்ரீநிதி மேல் காதல்னு சொன்னீங்க...ஆனால் மீராவையா கிருஷ் அண்ணா கல்யாணம் பண்ணனும்…??” என்று புரியாமல் வினவினான்.


“டேய்...சின்ன மாப்பிள்ளை…!!மீரா மட்டும் என் பொண்ணுயில்லை… ஶ்ரீநிதியும் வாணியும் கூட என் பொண்ணுங்க தான்...இப்படியே நீ பேசிட்டு இருந்தே...அப்புறம் என் பொண்ணு வாணியை உனக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேன்…!!!” என்று கண்டிப்பது போல் கூறி உண்மையைப் போட்டு உடைத்து சிரித்தார்.


இப்போது ஆவென்று வாயைப் பிளந்து நிற்பது ரிஷியின் முறையானது. இதுவரை இவர் பேசுவதைப் புரியாமல் பார்த்து கொண்டிருந்த தாத்தாவுக்கும் விசுவுக்கும் இப்போது விளங்கியது.விளங்கியவுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.


விசு எழுந்து கிருஷை அணைத்து கொண்டு நன்றி செலுத்தினார்.


கிருஷும் குறும்புடன் “உங்கள் நன்றியெல்லாம் வேணாம் மாமா...உங்கள் பொண்ணை மட்டும் கல்யாணம் பண்ணிக் கொடுங்க போதும்…!!” என்று கூறி சிரித்தான்.


விசுவும் மகிழ்ச்சியுடன் “என் பொண்ணு ஶ்ரீநிதியை கண்டிப்பாக உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்...ஆனால் உன் தம்பிக்கு வாணியை கல்யாணம் பண்ணிக் கொடுக்கமாட்டேன்ப்பா…!!” என்று கூறி ரிஷியை வம்புக்கு இழுத்தார்.


ரிஷி இதற்கெல்லாம் அசராமல் “நீங்க என்ன கல்யாணம் பண்ணி வைக்கிறது...நாங்களே கல்யாணம் பண்ணிப்போம்…!!” என்று அசல்ட்டாக கூறினான்.


உடனே ராம் “தம்பி...அதுக்கு நாமே...இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சி...நம்முடைய மானத்தை காப்பாற்றிக்கலாம்டா…!!” என்று பயந்தமாதிரி கூறினார்.


அதைக்கேட்டு எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.


தாத்தா இருவரையும் அருகே அழைத்து அவர்களின் தலையில் கைவைத்து “இரண்டு பேரும் நல்லா இருங்க…” என்று கூறி ஆசிர்வதித்து அவர்களை அணைத்து கொண்டார்.


சிறிதுநேரத்தில் குடும்ப அனைவருக்கும் விசயம் பரிமாறப்பட்டது… அனைவருக்கும் மகிழ்ச்சியான மகிழ்ச்சி...குந்தவை கூட ஶ்ரீநிதியின் மேல் பரிதாபப்பட்டார்.ஆனால் மீரா கொஞ்சம் கூட இளகாமல் இருந்தாள்.அதுவும் இந்த கல்யாணம் விசயம் கேள்விப்பட்டவுடன் இன்னும் அதிகப்படியான எரிச்சலில் இருந்தாள்.


கல்யாணத்தை நிறுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தாள்.ஆனால் கல்யாணம் விசயம் அறிந்த ஶ்ரீநிதி ரொம்பவும் வருத்தப்பட்டாள்.


‘என்னால் இந்த குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய அவமானம்...அதுவும் தாத்தாவை தலைகுனிய வைத்த எனக்கு இந்த குடும்பத்தில் இருக்கவே தகுதியில்லை...அதற்கும் மேலாக கிருஷ் அத்தானை கல்யாணம் பண்ணிக்க...அவரின் காதலைப் பெற...எனக்கு துளி கூட தகுதியில்லை…’ என்று யோசித்து எப்படி இந்த கல்யாணத்தை தடுக்கலாம் என்று யோசித்து ஒரு முடிவெடுத்து கிருஷின் அறைக்கு சென்றாள்.


அவளை பார்த்த கிருஷ் “வா...வா...ஶ்ரீ இப்போது உடம்பு பரவாயில்லையா…??” என்று அவளின் நலம் விசாரித்தான்.


“நல்லாயிருக்கேன் அத்தான்…” என்றாள்.


“சரி…சரி...இங்க வந்து உட்காரு…!” என்று கட்டிலைக் காட்டினான்.


அவள் கட்டிலில் வந்து அமர்ந்து எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தாள்.


கிருஷ் “என்னம்மா…?ஏதாவது வேணுமா…??தண்ணீ ஏதாவது கொண்டு வரட்டுமா…???” என்று அக்கறையாக விசாரித்தான்.


இந்த அக்கறையான கவனிப்புக்கு எனக்கு தகுதியில்லை என்று நினைத்தவுடன் ஶ்ரீநிதிக்கு கண்களில் கண்ணீர் நிறைந்தது.


அதைப்பார்த்தவுடன் கிருஷ் பதறி “எதுக்கு அழுகிறே…??” என்று கூறி அவளின் முகத்தை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்து ஆறுதல் படுத்தினான்.


சிறிதுநேரம் அழுகையில் கரைந்தவளை எழுப்பி நிறுத்தியவன் அவளை அப்படியே சேர்த்து அணைத்தான்.அவளும் இப்போது சேர்த்து அணைத்து கொண்டாள்.


சிறிதுநேரத்தில் அவளே தெளிந்து அவன் அணைப்பிலிருந்து வெளியே வந்தவாறு “சாரி அத்தான்…” என்றாள்.


கிருஷ் குறும்புடன் “இதற்கு நான் உனக்கு தேங்கஸ் தான் சொல்லணும்...நீ எதுக்கு சாரி சொல்லுறே…??” என்று கூறி கண்சிமிட்டினான்.


அதில் வெட்கம் வர சிவந்த முகத்துடன் தலைகுனிந்தாள்.கிருஷ் அவளின் அழகை ரசித்தவாறு அவளின் முகத்தை நிமிர்த்தி “நீ வெட்கப்பட்ட ரொம்ப அழகாக இருக்கே…!!” என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.


அவள் முகம் இன்னும் சிவக்க...அவன் அவளின் முகத்தை இன்னும் உற்றுப்பார்க்கவும்...அவள் அவனிடமிருந்து தப்பிக்க எண்ணி அவன் நெஞ்சிலே முகத்தை மறைத்தாள்.


கிருஷ் சிரிப்புடன் அவளின் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்தான்… ஆனால் அவளின் முகத்தை நிமிர்த்த முடியாமல் போகவே… அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.


“இந்த நிமிடம்

இந்த நிமிடம்

இப்படியே உறையாதா?


இந்த நெருக்கம்

இந்த நெருக்கம்

இப்படியே தொடராதா?


இந்த மௌனம்

இந்த மௌனம்

இப்படியே உடையாதா?


இந்த மயக்கம்

இந்த மயக்கம்

இப்படியே நீளாதா?கிழக்கும் மேற்கும்

வடக்கும் தெற்கும்

மனிதன் வகுத்த

திசை ஆகும்


உன் முகம் இருக்கும்

திசையே எந்தன்

கண்களில் பார்க்கும்

திசை ஆகும்


கோடையும் வாடயும்

இலையுதிர் காலமும்

இயற்கை வகுத்த நெறியாகும்


உன்னுடன் இருக்கும்

காலத்தில் தானே

எந்தன் நாட்கள்

உருவாகும்


உந்தன் நிழல் அருகே

ஒய்வுகள் எடுத்திடுவேன்

இது காதல் இல்லை

இது காமம் இல்லை


தேகத்தை தாண்டியோ

மோகத்தை தாண்டியோ

உறவும் இது தானோ


இந்த நிமிடம்

இந்த நிமிடம்

இப்படியே உறையாதா?


இந்த நெருக்கம்

இந்த நெருக்கம்

இப்படியே தொடராதா?என்ற பாடல் வரிகள் இருவரின் மனதிலும் எழுந்தது.உடனே ஶ்ரீநிதி அவனை இனி ஒரு போதும் பிரியமாட்டேன் என்பது போல்...அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.


இருவரும் அப்படியே வேறொரு உலகத்திற்குள் பயணிக்க ஆரம்பித்தனர்.


இப்படியே சில நிமிடங்கள் நீண்ட இந்த அணைப்பிலிருந்து வெளியே வந்த ஶ்ரீநிதி தீடிரென்று “அத்தான்...நீங்க என்னை எப்போதிலிருந்து காதலிக்கீறிங்க…??” என்று சம்பந்தமில்லாமல் கேட்டாள்.


அப்படி அவள் கேட்டவுடன் கிருஷ் அவள் தலையில் செல்லமாக தட்டி “லூசு...இந்த கேள்வியை இப்போ தான் கேட்கணும்...அப்புறம் கேட்க வேண்டியது தானே…!!” என்று சலிப்புடன் கூறி சென்றான்.அவனுக்கு தன் கனவை பதியிலே கலைத்த கவலை.


‘எங்கே போகிறார் இவர்…?’ என்று நினைத்து ஶ்ரீநிதி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.


அவன் அலமாரியை திறந்து ஏதோ ஒன்றை எடுத்து...அதைப் பின்னால் மறைத்தவாறு...அவள் அருகில் வந்து “உனக்கு நான் எப்போதிலிருந்து காதலிக்கறேனு தெரியணுமா…??” என்று கேட்டவனிடம் ஆமாம் என்று தலையாட்டினாள்.


“சரி...இந்த இதைப் பார்த்து தெரிஞ்சிக்கோ…!!” என்று கூறி அவளிடம் அவன் கொண்டு வந்ததை கொடுத்தான்.


அவள் அதை வாங்கி ஆர்வமாக பார்த்தாள்...அதைப் பார்த்தவளின் விழி ஆச்சரியத்தில் விரிந்தது...அது அவளின் சின்ன வயது புகைப்படமும் கொலுசும் என்பதை பார்த்தமாத்திரத்தில் புரிந்துகொண்டாள்.


“அப்போதிலிருந்தே என்னை காதலிக்கிறீங்களா…??” என்று ஆச்சரியமாக கேட்டவளின் இடுப்பில் கைகொடுத்து அருகே இழுத்தவன் “ஆமாண்டி...குண்டச்சி…!!” என்று கூறி மூக்கோடு மூக்கு உரசி...செல்லமாக நெற்றியில் முட்டினான்.


“என்னது குண்டச்சியா…!!நான் என்ன குண்டவா இருக்கேன்…!!” என்று கூறி சிணுங்கினாள்.


அதைப்பார்த்து கிருஷ் தன் இதயம் இடம் பெயருவதை அறிந்து… தாங்க முடியாமல் அவளின் கன்னத்தில் முத்தமொன்றைக் கொடுத்தான்.


அந்த முத்தத்தை கண்களை மூடி அனுப்பவித்தாள்.


இத்தனை அன்பிற்கும் கண்டிப்பாக நான் தகுதியானவள் இல்லையே… என்னால் உங்களை ஒரு நாளும் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது...சாரி அத்தான்...என்று கூறி...எவ்வளவு சீக்கிரம் முடியுமோ...அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போகணும் என்று முடிவெடுத்தாள்.


உடனே அந்த முடிவின்படி ஶ்ரீநிதி “அத்தான்...நம் கல்யாணத்தை இரண்டு வருடம் கழித்து வைச்சிக்கலாமா…??” என்று கேட்டவளை,


அவனின் அணைப்பிலிருந்து தள்ளி நிறுத்தி அவளின் முகத்தை பார்த்து “ஏன்…??” என்று குழப்பத்துடன் கேட்டான்.


“நான் முதலில் படிச்சு முடிக்கிறேன் அத்தான்...நீங்க தானே… அதைப்படி...இதைப்படினு சொன்னீங்க...இதெல்லாம் உங்கள் ஆசை தானே...அதனால் உங்கள் ஆசையை முதலில் நிறைவேற்றணும்…அதுக்கு பிறகு தான் கல்யாணம்...சோ… பிளீஸ் அத்தான்…!!” என்று கெஞ்சியவுடன்,


கிருஷ் “நீ இப்படி கெஞ்சினால்...நான் எப்படி வேணாம்னு சொல்லறது…??சரி படி…!!” என்று கூறி பெருமூச்சுவிட்டான்.


“தேங்கஸ் அத்தான்…” என்று கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடினாள்.


இதை எதிர்பார்க்காத கிருஷ் “ஏய்…!!நில்லுடி குண்டச்சி…!!” என்று கத்தியவனைக் கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு ஓடினாள்.


தன் அறைக்குள் சென்று எதற்கு என்று தெரியாமல் ஒரு மூச்சு அழுதாள்.


கிருஷ் எல்லோரிடமும் அவளின் படிப்பிற்காக பேசி அனுமதி வாங்கிக்கொடுத்தான்.முதலில் யாரும் ஒத்துக்கொள்ளமாட்டோம் என்றவர்களை...எப்படியோ பேசி பேசி சம்மதிக்க வைத்தான்.


வீட்டைவிட்டு செல்லும் நாள் வந்தவுடன்...எல்லோரையும் பார்த்து கொண்டே அழுகையோடு கட்டியணைத்து விடைப்பெற்றாள்.


கிருஷ் தான் தன் மனதில்,


“என்னால் உன்னை அழவைக்கவும்…!

சிரிக்க வைக்கவும் மட்டும் தான் முடியும்…!!

ஆனால் உன்னால் என்னை சாகாடிக்கவும் முடிகிறது…!!!

பிரிவு என்னும் வார்த்தையால்…!!!!”


என்று அவளின் பிரிவு துயரில் வருந்தினான்.


ஶ்ரீநிதி மனதில் ‘இதற்கு மேல் நான் இந்த வீட்டிற்கு வரமாட்டேன்… படிப்பு முடிந்தவுடன்...அங்கே ஏதாவது வேலையில் சேர்ந்துவிடுவேன்… அதேபோல் கிருஷ் அத்தானை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை என்று சொல்லிவிடலாம்’ என்று முடிவுடன் அந்த வீட்டிலிருந்து விடைப்பெற்றாள்.


சாரி அத்தான்...என்று மனதிற்குள் அழுதவாறு...அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே அவனை மனதினுள் நிரப்பியவாறு மனதில் பாரத்துடன் வெளியேறினாள்.


“ஏய்...ஏய்...வெயிட்...ஶ்ரீநிதி…!!” என்ற குரல் கேட்டு 4 வருடங்களுக்கு முன்பிருந்த பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்த ஶ்ரீநிதி “என்னடி நிஷா…??” என்று வினவினாள்.


“ஏன்டி...ஶ்ரீநிதி இந்த ஒரு சப்பை விசயத்திற்காகவாக...நீ கிருஷ் அண்ணாவைப் பிரிஞ்சு...ஷிவ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே…?நீ சொல்லறதைப் பார்த்தால் கிருஷ் அண்ணா உன்னை உருகி உருகி காதலிச்சிருப்பாங்க போல…!!அப்படி பட்டவரை ஏன்டி பிரிஞ்சே…??” என்று வருத்தத்துடன் வினவினாள் நிஷா.


ஶ்ரீநிதி “அதுமட்டும் காரணமில்லை…” என்றவளை,


“இதுக்கு என்ன அர்த்தம்…??” என்று புரியாமல் கேட்டவளிடம்,


4 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு கசப்பான நிகழ்வை நினைத்து இப்போது கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது.


அப்போது பார்த்து ஶ்ரீநிதியின் ஒரு வயது குழந்தை அழுதவுடன் தன் கண்ணீரைத் துடைத்து குழந்தையைத் தூக்கியவளின் அருகில் வந்த அவளுடைய கணவன் “ஶ்ரீம்மா...உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...பழசை நினைச்சிப் பார்க்கக்கூடாது… அதில் உன் தப்பு ஒண்ணுமில்லை...நாளைக்கு ஊருக்கு போகணும் அது ஞாபகம் இருக்கா…??” என்று கேட்டவனைப் பார்த்து புன்னகைத்த ஶ்ரீநிதி,


“இல்லை ஷிவ்...நிஷா இப்போது தான் நான்கு வருடம் கழித்து என்னைப் பார்க்கிறாள்… அவளிடம் என் பழைய கதையைப் பற்றி சொல்லி கொண்டு இருக்கேன்…!!” என்று கூறினாள்.


அப்போது தான் அங்கிருக்கும் இன்னொரு பொண்ணைப் பார்த்த ஷிவ் “சாரி வாங்க...நான் உங்களை கவனிக்கவேயில்லை...ஏதாவது சாப்பிட்டீங்களா…??” என்று சம்பிர்தாயமாக பேசிவிட்டு,


ஶ்ரீயிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு “ஓகே நீங்க பேசுங்க...என்றவிட்டு,


ஶ்ரீயிடம் திரும்பிய ஷிவ் “ஆனால் ஶ்ரீ...நீ அழுகாமல் எதுவாக இருந்தாலும் பேசணும்…!!” என்று கண்டிப்புடன் கூறி குழந்தையுடன் வேறொரு அறைக்குள் சென்றான்.


நிஷா இதற்கு மேல் தாங்க முடியாமல் “சரி...சரி...இப்போது சொல்லு...என்னச்சுனு…??” என்று கேட்டவளைப் பார்த்து,


விரக்தியுடன் புன்னகைத்த ஶ்ரீநிதி 4 வருடத்திற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளைக் கூற ஆரம்பித்தாள்.


அவள் கூறுவதைக் கேட்க கேட்க நிஷாவுக்கே கண் கலங்க ஆரம்பித்ததோடு...அதிர்ச்சியும் சேர்த்து அடைந்தாள்.
 
அத்தியாயம் 15:
ஶ்ரீநிதி தன் தோழி நிஷாவிடம் தன் கடந்த கால கதையைக் கூறி கொண்டிருந்தாள்.அதில் கிருஷை ஶ்ரீநிதி பிரிந்து வந்ததைப் பற்றி கூறியவுடன் எரிச்சலான நிஷா “ஏன்டி...ஶ்ரீநிதி இந்த ஒரு சப்பை விசயத்திற்காகவாக...நீ கிருஷ் அண்ணாவைப் பிரிஞ்சு...ஷிவ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே…?நீ சொல்லறதைப் பார்த்தால் கிருஷ் அண்ணா உன்னை உருகி உருகி காதலிச்சிருப்பாங்க போல…!!அப்படி பட்டவரை ஏன்டி பிரிஞ்சே…??” என்று வினவினாள் நிஷா.

அதே கேட்டவுடன் அதற்கான காரணத்தை யோசித்து பார்த்த ஶ்ரீநிதியின் கண் கலங்கியது…

அப்போது பார்த்து ஶ்ரீநிதியின் ஒரு வயது குழந்தை அழுதவுடன் தன் கண்ணீரைத் துடைத்து குழந்தையைத் தூக்கியவளின் அருகில் அப்போது தான் வெளியிலிருந்து வந்த அவளுடைய கணவன் “ஶ்ரீம்மா...உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...பழசை நினைச்சிப் பார்த்து கண் கலங்ககூடாதுனு… அதில் உன் தப்பு ஒண்ணுமில்லை புரியுதா...நாளைக்கு ஊருக்கு போகணும் அது ஞாபகம் இருக்கா இல்லையா…??” என்று கேட்டவனைப் பார்த்து புன்னகைத்த ஶ்ரீநிதி,

“இல்லை ஷிவ்...நிஷா இப்போ தான் நான்கு வருடம் கழித்து என்னைப் பார்க்கிறாள்… அவளிடம் என் பழைய கதையைப் பற்றி சொல்லி கொண்டு இருக்கேன்…!என்ன தான் அதற்கு காரணம் நான் இல்லை என்று தெரிந்தாலும்...என்னால் முடியலைங்க…!!!” என்று கூறினாள்.

ச்சு என்று வாய் மேல் விரல் வைத்து காண்பித்தவன்,அப்போது தான் அங்கிருக்கும் இன்னொரு பொண்ணும் அங்கே இருப்பதைப் பார்த்து “சாரி வாங்க...என்று முறையாக அழைத்துவிட்டு,

“நான் உங்களை கவனிக்கவேயில்லை...ஏதாவது சாப்பிட்டீங்களா…??” என்று சம்பிர்தாயமாக கேட்டுவிட்டு,

ஶ்ரீயிடமிருந்து குழந்தையை வாங்கியவாறே “ஓகே நீங்க பேசுங்க...என்றவிட்டு,

ஶ்ரீநிதியிடம் திரும்பிய ஷிவ் “ஆனால் ஶ்ரீ...நீ அழுவாமல் எதுவாக இருந்தாலும் பேசணும்…!!” என்று கண்டிப்புடன் கூறி குழந்தையுடன் வேறொரு அறைக்குள் சென்றான்.

நிஷா இதற்கு மேல் தாங்க முடியாமல் “சரி...சரி...இப்போது சொல்லு...என்னச்சுனு…??” என்று கேட்டவளைப் பார்த்து,

விரக்தியுடன் புன்னகைத்த ஶ்ரீநிதி 4 வருடத்திற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளைக் கூற ஆரம்பித்தாள்.

ரமேஷ் வீட்டினர் வந்த அன்று மயங்கி விழுந்த ஶ்ரீநிதிக்கு இன்னும் சில அதிர்ச்சிகள் காத்திருப்பது தெரியவில்லை...அதை எதையுமே எதிர்ப்பார்க்காமல் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் ஜானகியும் வாணியும் சேரில் உட்கார்ந்தவாறு அவளையே கண்ணீரோடு பார்த்து கொண்டிருந்தனர்.

தீடிரென்று கதவு திறக்கப்பட...இருவரும் வேகமாக திரும்பி பார்த்தனர்.திறந்திருந்த கதவின் வழியே உள்ளே வந்த விசு...இருவரையும் எழுந்து வெளியே வருமாறு சைகை செய்தார்.

அதன்படி இருவரும் வெளியே வந்தவுடன்...அவர்களை அழைத்து ஶ்ரீநிதி மற்றும் கிருஷின் காதலைப் பற்றி கூறினார்.அதைக்கேட்டவுடன் இருவருக்கும் அளவிடமுடியாத மகிழ்ச்சி...உடனே கிருஷைப் பார்க்க கீழே விரைந்தனர்.விசு மட்டும் ஶ்ரீநிதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு...கதவை சத்தம் கேட்காத அளவு இறுக்கி சாற்றிவிட்டு சென்றார்.

மீரா அவள் அறையில் தன் திட்டம் நிறைவேறாததால் அங்கு இருக்கும் தன் பொருளையெல்லாம் எடுத்து தூக்கிப்போட்டு உடைத்துக்கொண்டிருந்தாள். அதுமட்டுமல்லாமல் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவுசெய்ததை அறிந்ததிலிருந்து...கண்முன் தெரியாத அளவு கோபத்தில் இருந்தாள்.

இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதாவது செய்யணும்...என்னைப் பற்றி யோசிக்காமல் எல்லாரும் சந்தோஷமாக இருக்காங்க...இவங்க எல்லாரும் வருத்தப்படுவது போல்...ஏதாவது செய்யணும்...என்று யோசித்து நடந்து கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனையும் வராததால்...ஆஆஆஆவென்று வெறிப் பிடித்தமாதிரி கத்தினாள்.அவள் அறை ஏசி அறை என்பதால் சவுண்ட் புரூப்...அதனால் சத்தம் வெளியே கேட்கவில்லை.

யோசி...யோசி...யோசி...என்று அவளுக்கு அவளே...வெறிப்பிடித்த மாதிரி கத்தி ஒரு கொடூரமான ஐடியாவைக் கண்டுபிடித்தாள்.

அதன்படி தன் அறையை விட்டு வெளியே வந்து...யாராவது இங்கே இருக்கிறார்களா…?? என்று எட்டிப்பார்த்து மெதுவாக பூனை நடைப்போட்டு...ஶ்ரீநிதியின் அறையை நெருங்கினாள்.அவளின் அறை கதவை மெல்லமாக திறந்து உள்ளே யாரேனும் இருக்கிறார்களா…?? என்று ஆராய்ந்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.

மீரா ஶ்ரீநிதி படுத்திருக்கும் கட்டிலின் அருகே சென்று “ஏன்டி…?? என் சந்தோஷத்தை அழிச்சுட்டு நீ கிருஷ் அத்தானை கல்யாணம் பண்ணி அவர் கூட வாழப்போறியா…??நான் கண்டிப்பாக இதற்கு விடமாட்டேன்டி…??நீ உயிரோடு இருந்தால் தானே...நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்பீங்க...நீ இந்த உலகத்தை விட்டு போடி…??” என்று அவளின் தலையணையை அவள் முகத்தில் வைத்து மூச்சுவிடாதவாறு அழுத்தினாள்.

ஶ்ரீநிதிக்கு மீரா அவளின் அறையினுள் நுழையும் போதே...நினைவு திரும்பிவிட்டது...ஆனால் கண்களை திறக்கமுடியாமல் படுத்து கொண்டிருந்தாள்...மீரா அவள் அருகில் வந்து பேசியவுடன் ஶ்ரீநிதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘மீரா ஏன் இவ்வாறு செய்தாள் என்ற கேள்விக்கு ஶ்ரீநிதிக்கு விடைக்கிடைத்தது...ஆனால் அவள் மேலும் பேச பேச ஶ்ரீநிதிக்கு மனதில் ஒரு கிலி பரவியது...ஆனால் எதுவும் செய்ய உடம்பு ஒத்துழைக்காததால்...அவள் அப்படியே பயத்துடன் என்ன செய்யப்போறாளோ’ என்று யோசித்தவாறு படுத்திருந்தாள்.

அவள் தலையணை வைத்து அழுத்தியவுடன் அதைத் தடுக்கும் வழியறியாமல் துடிக்க மட்டுமே செய்தாள்.அவள் துடிப்பதைப் பார்த்து இன்னும் அழுத்தம் கொடுத்து வேகமாக அழுத்த முனைந்தவளிடமிருந்து தலையணைப் பறிக்கப்பட்டது.

யாரது என்று திரும்பிப் பார்த்தவள்...அங்கே குந்தவை கோபமாக நின்றிருப்பதைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் “அப்பாயி...அதை கொடுங்க...அவளை நான் கொல்லணும்...கொடுங்க...கொடுங்க…” என்று அவரிடம் தலையணையைப் பறிக்க முயன்றவாறு கேட்டாள்.

குந்தவை “நீ பண்ணறது தப்பும்மா மீரா...இப்படியெல்லாம் பண்ணக்கூடாது...என்ன இருந்தாலும் அவளும் உயிர்ம்மா…” என்று கூறினார்.

மீரா எரிச்சலுடன் “அப்பாயி...உயிரோ வேறே ஏதோ ஒன்றோ...நீங்க தலையணையைக் கொடுங்க...அவளை கொன்றால் தான்...என் ஆத்திரம் அடங்கும்…!!!” என்று வெறிப்பிடித்தது போல் கத்தியவளை அடக்கும்வழி தெரியாமல் என்ன செய்து அடக்குவது என்று தெரியாமல் முழித்தார்.

தீடிரென்று ஶ்ரீநிதியின் ஞாபகம் வர என்னச்சு என்று அவளின் அருகில் சென்று மூக்கில் கை வைத்துப் பார்த்தார்.சுவாசம் நன்றாக வருவதை அறிந்தப்பிறகு தான் குந்தவைக்கு மூச்சு வர ஆரம்பித்தது. இப்போதும் ஶ்ரீநிதி பாதி மயங்கிய நிலையில் விழிப்போடு தான் இருந்தாள்.

அப்போதும் மீரா விடாமல் அவரிடம் தலையணை வாங்க பிடிவாதம் பிடித்தவுடன்...குந்தவை கோபத்துடன் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.அவர் அப்படி அறைந்தப் பிறகு தான்...மீரா கொஞ்சம் சுயநினைவு வந்தாள்.ஆனால் தன் அப்பாயி தன்னை அடித்தது தெரிந்தவுடன்...கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.

அதைப்பார்த்த குந்தவை அவளை கட்டியணைத்து “மீரா...நீ செய்வது தப்பும்மா...நான் தான் பார்த்துகிறேன்னு சொன்னனே...அப்புறம் எதுக்கு இப்படி பண்ணுறே…??” என்று வருத்தத்துடன் வினவினார்.

மீரா கண்ணீருடன் “அப்பாயி... எனக்கு கிருஷ் அத்தான் வேணும்...அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்...நான் எப்பவுமே எதிலுமே தோற்கக்கூடாது…!!” என்றாள் அப்போதும் திமிரோடு.

“மீராம்மா நான் சொல்லறதை கேளு...கிருஷ் உனக்… என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே…

இடமறித்த மீரா எரிச்சலுடன் “சும்மா அதையே சொல்லாதே…!!நீ இப்படியே சொல்லிட்டு இரு...அதுக்குள்ள இரண்டு பேருக்கும் கல்யாணமாகி குழந்தை பிறந்திடும்…” என்று கூறி முகத்தைத் திருப்பினாள்.

“மீராம்மா கண்டிப்பாக உன் கல்யாணம் நடக்கும்...அதுக்கு ஒரு துருப்பு சீட்டு என்னிடம் இருக்கு…?அந்த நம்பிக்கையில் தான்... நான் கண்டிப்பாக சொல்லுறேன்…!!!” என்றார் பிடீகையுடன்.

இப்போது திரும்பி தனது அப்பாயியைப் புரியாமல் பார்த்த மீராவை பார்த்து “ஆமாம் மீராம்மா…!!” என்றார் புன்னகையுடன்.

அவர் பேச்சில் இப்போது கொஞ்சம் நம்பிக்கை வந்த மீரா “என்ன அது... சொல்லு அப்பாயி…!!” என்றாள் ஆர்வமாக.

இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த ஶ்ரீநிதி என்னவாக இருக்கும்...இந்த கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு என்ன துருப்பு சீட்டு இருக்கமுடியும் என்று குழப்பத்துடன் காதைத் தீட்டி கவனிக்க ஆரம்பித்தாள்.

குந்தவை புன்னகையுடன் “இந்த ஶ்ரீநிதி உங்க சித்தப்பா விசுவோட சொந்த பொண்ணுயில்லை…!!” என்றவுடன்,

“என்னது….!!!” என்று மீரா அதிர்ந்துவிட்டாள்.

ஆனால் அடுத்தநிமிடமே முகம் முழுவதும் புன்னகையுடன் “அப்பாயி அப்போ இவள் யாரு…..??” என்றாள் ஆர்வமாக.

“அது எனக்கே தெரியாது மீராம்மா...தீடிரென்று விசு ஒரு நாள் இவளைத் தூக்கி கொண்டு வீட்டிற்கு வந்தான்...நாங்கள் எல்லாம் யாருனு கேட்டதுக்கு...இனிமே இந்த குழந்தை என் பொண்ணு… அதனால் இவளை நான் தான் வளர்க்க போகிறேன்...வேறு எதைப் பற்றியும் யாரும் கேட்க வேண்டாம் என்றான்...ஆனால் எனக்கு பிடிக்கலை...இந்த குழந்தை யாரு...இதோட அப்பா அம்மா யாரு...இது உன் குழந்தையானு…??நாங்க எப்படி எப்படியோ கேள்வி கேட்டோம்...ஆனால் ஒன்றுக்குமே பதில் சொல்லலை...அதனால் நான்... அந்த குழந்தையைக் கொண்டு சென்று அனாதை விடுதியில் விடு...இல்லைனா வீட்டை விட்டு போனு சொல்லிட்டேன்…!!

“ஆனால் இதில் என்னவொரு அதிசயம்னா...உங்கள் நந்தன் தாத்தா விசுவுக்கு சப்போர்ட்டாக பேசின கையோடு...உடனே ஜானகியையும் கல்யாணம் பண்ணிவச்சிட்டார்...இந்த விசயம் யாருக்கும் தெரியக் கூடாது...முக்கியமாக ஶ்ரீநிதியிடம் சொல்லக்கூடாதுனு… எல்லார்க்கிட்டயும் சத்தியம் வாங்கிவிட்டார்...ஆனால் இப்போது வேற வழியில்லை...அதை வைத்துதான் அப்பாவிடம் பேசி கட்டாயப்படுத்தி உனக்கும் கிருஷூக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிலாம்னு யோசித்து இருக்கேன்...அதுக்குள்ள நீ ஏன் இப்படி அவசரப்படறே…??” என்று கேவலமான தன் திட்டத்தை கூறினார்.

அதைக்கேட்டவுடன் மீரா வானத்துக்கும் மேகத்திற்கும் குதித்தாள். “அய்யோ அப்பாயி…!!இப்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு...ஆனாலும் அப்பாயி இந்த அனாதை கழுதையை எல்லாரும்... எப்படி தலையில் தூக்கிவச்சு ஆடுறாங்க...இன்னும் கொஞ்சநாள் தான்...கிருஷ் அத்தானுக்கும் எனக்கும் கல்யாணம் மட்டும் நடக்கட்டும்...அப்புறம் இருக்கு இவளுக்கு...நான் படுத்தும் பாட்டில்...இவளோட சந்தோஷம் நிம்மதி எல்லாம் பறிபோகணும்…!!” என்று கொடூரமாக பேசிவிட்டு இருவரும் வெளியேறினார்.

ஆனால் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஶ்ரீநிதியினுள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது. ‘கடவுளே…!!இதையெல்லாம் என்னை எதற்கு கேட்க வச்சே…!!இத்தனை நாளாக என்னை சந்தோஷமாகப் பார்த்து கொண்டிருந்த இந்த குடும்பம் என் குடும்பம் இல்லையா…??இந்த அப்பா அம்மா...என்னை பெத்தவங்க இல்லையா…??கிருஷ் அத்தானிடம் எனக்கு எந்த உரிமையும் இல்லையா…??அப்பாயி இத்தனை நாளாக என்னிடம் இப்படி நடந்ததுக்கு இது தான் காரணமா…??என்னை பெற்றவங்களுக்கு என்னைப்பிடிக்காமல் விட்டுட்டு போயிட்டாங்களா…??” என்று பலவாறாக சிந்தித்து அவளை அவளே வதைத்து கொண்டிருந்தாள்.

இதற்கெல்லாம் மேலாக இன்றைக்கு இந்த குடும்பத்தின் தலைகுனிவிற்கு காரணமான தன்னையே வெறுத்துக் கொண்டு… இதற்கு மேலும் தாத்தாவைக் கஷ்டப்படுத்த விரும்பாமல்...கிருஷை மீராவே கல்யாணம் பண்ணிக்கொள்ளட்டும்...இதற்கு தனக்கு எந்த தகுதியும் இல்லை...உரிமையும் இல்லை...தானே ஒரு அனாதை...இதெல்லாம் தெரிந்தால் கிருஷ் அத்தானே...தன்னை விரும்பமாட்டார் என்று தப்பு தப்பாக யோசித்து இந்த குடும்பத்தைப் பிரிய முடிவெடுத்தாள்.அதன்படி கிருஷிடம் பேசி இந்த வீட்டிலிருந்து பிரிய முடிவெடுத்து அவனிடம் பேசி சம்மதம் வாங்கினாள்.

யாரும் இல்லாத தனிமையில் தன் துக்கத்தை அழுகையில் கரைத்தாள்.மற்றவர் முன் உள்ளுக்குள் அழுதுக்கொண்டே...வெளியில் சிரித்தது போல் நடித்து கொண்டிருந்தாள்.பெரும்பாலும் கிருஷின் முன் செல்வதை தவிர்த்தாள்.

கிருஷும் அவளின் ஒதுக்கத்தைக் கவனித்து கொண்டிருந்தான்.ஆனால் அவன் இதையெல்லாம் வெட்கம் என்று நினைத்து விட்டுவிட்டான்.

அதன்பிறகு ஶ்ரீநிதி பிரிந்து டெல்லி சென்று 4 நான்கு நாள் கழித்து,
ஒரு நாள் கிருஷ் அவன் அறையில் ஶ்ரீநிதியின் புகைப்படத்தை வைத்து பேசிக்கொண்டிருந்தான்.

“ஏய் குண்டச்சி…!!என்னடி என்னை இப்படி தவிக்கவிடுறே…??நான் சொன்ன வார்த்தையை வைத்து...என் வாழ்க்கையை இப்படி டீலில் விட்டுட்டியே…??இன்னும் இரண்டு வருஷம்…??முன்னாடி மாதிரி எனக்கு தெரியாமல் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லையே...ஆனால் இப்படி எல்லாருக்கும் தெரிந்தப்பிறகு இரண்டு வருடம் எப்படி பிரிந்து இருக்கிறது…??போடி குண்டச்சி…!!கொஞ்சம் கூட என் நிலைமையைப் புரிஞ்சிக்க மாட்டிக்கிறே…!சரி நீ படித்து முடிச்சு வர வரைக்கும் இது தான் என்னோட துணை…!!!” என்று கூறி பெருமூச்சுவிட்டு...அந்த புகைப்படத்திற்கு முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு நிமிர்ந்தவன் முன்னால் ராம் குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தார்.

அவரைப் பார்த்த கிருஷ் கொஞ்சம் கூட தடுமாறாமல் “வாங்க மாமா...எப்போது வந்தீங்க…??” என்று அப்போதும் கம்பீரமாகவே வினவினான்.

அதைக்கவனித்த ராமிற்கு தன் மாப்பிள்ளையை நினைத்து ரொம்பவும் பெருமையாக இருந்தது.இப்படி ஒரு அன்பானவன் மற்றும் கம்பீரமானவன் ஶ்ரீநிதிக்கு கிடைக்க ரொம்பவும் குடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர் எதுவும் பேசாமல் அவனை அணைத்து கொண்டார்.

“மாமா என்னச்சு தீடிரென வந்து கட்டிப்பிடிச்சிட்டீங்க…??” என்று வினவினான்.

அவர் மறுபடியும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தார்.கிருஷ் தான் ‘இவருக்கு என்னச்சு…??’ என்று குழுப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.

அவர் அவனை பார்த்துக்கொண்டே “உன்னிடம் ஶ்ரீநிதியைப் பற்றி ஒரு முக்கியமான விசயம் பேசணும்ப்பா…??ஆனால் இதைச் சொல்லி முடித்தப்பிறகும் நீ ஶ்ரீநிதியை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ளணும்ப்பா…??” என்று வேண்டுதலுடன் ஶ்ரீநிதியைப் பற்றி எல்லா உண்மையையும் கூறினார்.

அப்படி என்ன இருக்கப்போகிறது என்று அசல்ட்டாக இருந்த கிருஷ் அவர் கூறியதைக் கேட்க கேட்க அதிர்ச்சியடைந்தான்.

“இப்போது சொல்லுப்பா...இப்போதும் ஶ்ரீநிதியை ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கியா…??” என்று தவிப்புடன் கேட்டார்.

அவரின் தவிப்பிற்கு அவசியமேயில்லை என்பது போல்...கிருஷ் புன்னகையுடன் “மாமா நீங்க கவலையேப்பட வேண்டாம்…!!இப்போது நீங்க சொன்ன எந்த விசயத்தாலும் ஶ்ரீநிதியின் மேல் எனக்கு இருக்கும்... காதல் குறையாது…!!இந்த ஜென்மத்தில் ஶ்ரீநிதி தான் என்னோட மனைவி” என்று கூறியவனை,

கண்ணில் ஆனந்த கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டார். அவரை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்ட கிருஷ் அவரின் முதுகைத் தடவிக்கொடுத்தான்.

அப்போது பார்த்து ரிஷி கதவைத் தட்டிவிட்டு கிருஷின் அறைக்குள் நுழைந்தான்.உடனே தன்னை சமாளித்து கொண்ட ராம் அவனின் அணைப்பிலிருந்து வெளியில் வந்து ரிஷியைத் திரும்பி பார்த்தார்.

ரிஷி “ராம் மாமா...நீங்களும் இங்க தான் இருக்கீங்களா…??உங்கள் இரண்டு பேரிடமும் ஒரு முக்கியமான விசயம் பேசணும்…” என்று அனுமதிக் கேட்டான்.

இருவரும் ஒரு சேர “சொல்லு ரிஷி…!!” என்று கூறினார்கள்.

ரிஷி “அண்ணா...மாமா...நான் சொல்லறதைக் கேட்டு நீங்க கோபப்படக் கூடாது…!!” என்று ஆரம்பித்து…

“ஶ்ரீநிதிக்கு வந்த பார்சலிலிருந்து...பொய்யான போன் கால் வந்த வரைக்கும்...நடந்த எல்லாவற்றையும் கூறிய ரிஷி “ஆனால் இதற்கெல்லாம் முக்கிய காரணம் மீரா…!!” என்று கூறி அவர்கள் தன்னை தப்பாக நினைக்கக்கூடாது என்று தவிப்புடன் பார்த்தான்.

ராம் அதிர்ந்து ரிஷியைப் பார்த்து கொண்டிருந்தார்...ஆனால் கிருஷ் “எப்படி டா மீரா தான் காரணம்னு சொல்லுறே…!!இதனால் மீராவுக்கு என்ன லாபம்…??” என்று அவனையே திருப்பிக் கேள்வி கேட்டான்.

“அதுவந்து அத்தான்...சுரேஷ் இருக்கான் தானே...அவன் நேற்று எனக்கு போன் பண்ணி...ரமேஷை இந்த மாதிரி செய்ய சொல்லியது...உங்க வீட்டு பொண்ணு மீரா தான்...அவள் தான் ரமேஷ் அண்ணாவிடம் நீங்க இப்படி செய்தால் தான் ஶ்ரீநிதி உங்களுக்கு கிடைப்பாள்னு சொல்லி அவனை இந்த மாதிரி செய்ய வைத்திருக்கிறாள்...இந்த லட்சணத்தில் எங்க குடும்பத்தைப் பற்றி தப்பு தப்பாக பேசி...அவமானம் படுத்தியிருக்கீங்க...என்று மூஞ்சியில் காறித் துப்பாத குறையாகப் பேசி போனை வைத்துவிட்டான் அண்ணா…!!” என்று முகக்கன்றலுடன் கூறினான்.

அதைக்கேட்ட கிருஷ் “அவன் சொல்லுறானு...நீ அதை நம்பிட்டு வந்து என்கிட்டேயே சொல்லுறியாடா…??” என்று சீறினான்.

அவன் சீறலைப் பார்த்து பயந்தவன் “இல்லை அண்ணா...இதுகெல்லாம் ஆதாரம் என்னிடம் இருக்கு அண்ணா...அவன் அப்படி கூறியவுடன் முதல் வேலையாக நான் அந்த செய்தி வந்த நாளிதழ் அலுவலகத்திற்கு போன் செய்து அந்த செய்தியை யார்க் கொடுத்தது என்று கேட்டான் அண்ணா...அதை ஒரு பொண்ணு வந்து தான் கொடுத்தது என்று சொன்னார்கள் அண்ணா...அதற்கு முன்பே ஶ்ரீநிதியும் நானும் அன்று வாட்ச்மெனிடம் விசாரித்து...அவரும் மீரானு தான் அண்ணா சொன்னார்...ஆனால் இதெல்லாம் ஏன் செய்தாள் என்று தான் எங்களுக்கு புரியவில்லை…” என்று நீளமாக கூறி முடித்தான்.

அதைக்கேட்டவனின் முகம் யோசனையில் சுருங்கியது...ஆனால் ராமிற்கு ஏகப்பட்ட கோபம் மீராவின் மேல் வந்தது.

அவர் கோபத்துடன் “அந்த கழுதை தான் எல்லாத்திற்கும் காரணமா…??அவளை என்ன செய்யறேனு பாரு…??” என்று கூறி வேகமாக நகர்ந்தவரைத் தடுத்த கிருஷ் “மாமா...பொறுமையாக இருங்க...இப்போது நீங்க போய் கேட்டால்...வீட்டில் எல்லாருக்கும் இந்த விசயம் தெரிந்துவிடும்...அதனால் அவளை வெளியில் அழைத்துக் கொண்டு போய் விசாரிக்கலாம்…!!” என்று கூறினான்.

அதன்படி இருவரும் மீராவை அழைத்து கொண்டு காரில் பயணம் செய்தனர் என்று கூறி கொண்டிருந்தவள் தீடிரென்று தேம்பி தேம்பி அழுகவும் என்னவென்று புரியாமல் நிஷா பதறி “ஶ்ரீ என்னச்சு…??” கேட்டாள்.

உள்ளே குழந்தை வைத்து கொண்டிருந்த ஷிவ்விற்கு இந்த சத்தம் கேட்கவில்லை.

ஶ்ரீநிதியே கண்களை துடைத்து கொண்டு பழசை சொல்ல ஆரம்பித்தாள்.

“ஒரு லீவ் நாளில் ஹாஸ்ட்டலில் தூங்கிக் கொண்டிருந்த எனக்கு ஒரு போன் வந்தது...அதை எடுத்து பேசிய எனக்கு என் உயிரே போய்விட்டது போல் இருந்ததுடி…” என்று கூறியவுடன் ,

நிஷாவும் பதட்டத்துடன் “அப்படி என்ன நடந்தது…??” என்று கேட்டாள்.

அதற்கு ஶ்ரீநிதி கண்ணீரோடு “வீட்டிலிருந்து மீராவைக் கூட்டிக் கொண்டு போன கிருஷ் அத்தான் காருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு…!!” என்றவுடன்,

“வாட் ஆக்ஸிடென்ட்டா…??” என்று அதிர்ந்தாள் நிஷா.
 
அத்தியாயம் 16:

ஶ்ரீநிதி கண்ணீரோடு “வீட்டிலிருந்து மீராவைக் கூட்டிட்டு போன கிருஷ் அத்தான் காருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு…!!” என்றவுடன்,

“வாட் ஆக்ஸிடென்ட்டா…??” என்று அதிர்ந்தாள் நிஷா.

ஶ்ரீநிதி ஆமாம் என தலையாட்டி மறுபடியும் பழைய கதையைக் கூற ஆரம்பித்தாள்.

கிருஷ்...ராம்...மீரா மூவரும் காரில் பயணித்து கொண்டிருந்தனரே ஒழிய எதுவும் பேசாமல்...அமைதியாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சிந்தனையில் மூழ்கியிருந்தனர்.

கிருஷ் ‘மீரா எதுக்கு ஶ்ரீநிதிக்கு இந்த அநியாயம் செய்தாள்.அப்படி அவளை எதிரியாக நினைக்கும் அளவு என்ன நடந்தது…??’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

ராம் ‘இவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தால் இந்த மாதிரி பண்ணியிருப்பாள்...எல்லாம் இந்த அம்மாவால் வருது...அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்காங்க’ என்று அவளையும் தன் அம்மாவையும் மனதில் வைது கொண்டிருந்தார்.

மீரா தன் மனதில் ‘இந்த அப்பாவும் கிருஷ் அத்தானும் என்ன பேச போறாங்க...ஒரு வேளை எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சா…??’ என்று பயத்துடன் உட்கார்ந்திருந்தாள்.

இப்படியாக மூவரும் வெவ்வேறு நிலையில் யோசித்துக் கொண்டிருக்கும்போது...தீடிரென்று பக்கவாட்டிலிருந்து வந்த ஒரு லாரி இவர்களின் கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது.

அப்படி இடித்ததினால் மீரா காரின் வெளியே தூக்கி எறியப்பட்டாள்.கிருஷூம் ராமும் சீட் பெல்ட் போட்டிருந்ததால் அப்படியே காரிலே இரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்தனர்.

பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.விசயம் கேள்விப்பட்ட குடும்ப உறுப்பினர் அனைவரும் பதறி மருத்துவமனையை அடைந்தனர்.அப்படியே ஶ்ரீநிதிக்கு போனில் விசயத்தை கூறினார்கள்.அவளும் பதறியடித்து டெல்லியிலிருந்து கிளம்பினாள்.அவள் மனதில்,

“உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே
கண்ணீர்த் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே

பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
புன்னகையாலே முகவரி தந்தாயே

ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகினில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே

புல் மேல் வாழும் பனி தான்
காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம்
கொஞ்சம்
ஆனால் பொற்காலம்

உன் அருகாமை அதை நான்
இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே
சந்தோசம்

கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில்
மூழ்கிவிட்டேன்


உன் கை கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே

உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிக்கிறதே

நிழல் நம்பிடும் என் தனிமை
உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே


உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எரியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே
கண்ணீர்த் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே”

என்று அவனுக்காக மனம் உருகி வழிய ஆரம்பித்தது...கிருஷ்ணா…!அவர் எனக்கு வேணும்...அவர் இல்லாமல் நான் இல்லை...பிளீஸ் எனக்கு அவர் வேணும்...என் உயிரை வேண்டுமானால் எடுத்துக்கோ… அவரை எப்படியோ பிழைக்க வைச்சிடு என்று வேண்டிக்கொண்டிருந்தாள்.

அவசரமாக விமானம் டிக்கெட் எடுத்து கோயம்புத்தூர் வந்து… அங்கிருந்து டாக்ஸி பிடித்து சேலம் வந்தடைந்தாள்.அவளுக்கே எப்படி இதெல்லாம் கடந்து வந்தாள் என்றே தெரியவில்லை...பொது இடத்தில் அழுக முடியாததால்...தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வந்த ஶ்ரீநிதி...மருத்துவமனையில் தன் அம்மாவைப் பார்த்தவுடன் அழுகைப் பீறிட்டு வந்தது.

மூச்சுவிடாமல் அழுதுக்கொண்டிருந்தவளின் அருகில் வந்த அவளின் தந்தை விசு “கிருஷூக்கு ஒண்ணுமாகாதும்மா...கவலைப்படாதே…!!” என்று சமாதானப்படுத்தினார்.

அழுது அழுது மாய்ந்து கொண்டிருந்த ஶ்ரீநிதியின் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி ஆபிரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த மருத்துவர் “கிருஷ் சீட் பெல்ட் போட்டு இருந்ததால்...அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை...ஆனால்...என்று கூறிவிட்டு,

கவலைப்படிந்த முகத்துடன் “அந்த பொண்ணு மீரா கோமாக்கு போயிட்டாங்க...அவங்களைப் பற்றி 24 மணி நேரம் கழித்து தான்...எதுவாக இருந்தாலும் சொல்லமுடியும்...அந்த பெரியவர் ராமின் கால் பலமாக நசுங்கி இருக்கு...அதனால் அவரால் நடக்கமுடியுமா என்று அவரின் காயங்கள் சரியான பிறகு தான் கூறமுடியும்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் கூறியதை கேட்ட ஶ்ரீநிதி தன் அக்கா மீராவுக்காக கண்ணீர் வடித்தாள்.24 மணிநேரம் கழித்து மீரா பிழைத்துவிட்டாள் என்று செய்தி கிடைத்தது.ஆனால் அவள் கோமாவிற்கு சென்றுவிட்டதால் எப்போதும் வேண்டுமானாலும் நினைவு திரும்பலாம்...இல்லை திரும்பாமாலும் போகலாம் என்ற குண்டை தூக்கிபோட்டார் மருத்துவர்.

எல்லோரும் அவளின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டனர்.மீரா எவ்வளவு தான் கெடுதல் செய்திருந்தாலும்...ஶ்ரீநிதி அவளை அக்காவாகவே நினைத்து...அவளுக்காக கண்ணீர்விட்டாள்.

காவலர்கள் இந்த விபத்தைப் பற்றி விசாரித்துவிட்டு இதை செய்தவர்கள் ரமேஷ் வீட்டினர் என்று கூறினார்.அன்று கிருஷ் அவர்களை அடித்ததிற்காக அவனைப் பழிவாங்க தான்...இப்படி செய்தார்கள் என்று தெரிந்தவுடன் ஶ்ரீநிதி மனதால் ரொம்பவும் அடிப்பட்டு போனாள்.

கிருஷ் சரியான பிறகு இந்த வீட்டை விட்டு போய்விடலாம் என்று மறுபடியும் தப்பாகவே முடிவெடுத்தாள்.

கிருஷ் மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்து...அவனை கவனித்து கொள்ளும் முழுப்பொறுப்பும்...ஶ்ரீயே எடுத்துக் கொண்டாள்.கிருஷ் அவளின் அருகாமையை அமைதியாக ரசித்து கொண்டிருந்தான்.

ராமுக்கு கால் சரியாக இன்னும் இரண்டு மாதமாகும் என்று கூறியதால்...வீல் சேரைப் பயன்படுத்தினார்.மீரா இன்னும் கோமாவிலே இருந்தாள்.

இப்படியாக ஒரு மாதம் முடிந்தபின்பும் குந்தவை கவலையாக இருப்பதைப் பார்த்த ஶ்ரீநிதி மனசு கேட்காமல் அவரை ஆறுதல்படுத்த சென்றாள்.

அவரின் அருகில் சென்ற ஶ்ரீநிதி “அப்பாயி...மீரா அக்காவை நினைச்சு வருத்தப்படாதீங்க...அக்காவுக்கு சீக்கிரம் குணமாகி வீட்டிற்கு வந்திடுவாங்க…!!” என்றவுடன்,

மீராவின் அம்மா ஜோதி ஆங்காரத்துடன் “ஏய்…!எல்லா பிரச்சினையும்…உன்னால் தான்டி...நீ மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால்… அவங்க ஏன் உன்னை திட்ட போறாங்க…??அப்புறம் கிருஷ் உனக்காக சண்டைக்குப் போனதாலே தானே...அவங்க கிருஷை கொலைப்பண்ண முயற்சி பண்ணாங்க...இதில் என் பொண்ணும்...என் புருஷனும் தான் மாட்டிக்கீட்டாங்க...நீங்கயெல்லாம் நல்லாயிருக்கீங்க…” என்று வெடித்தார்.

அவர் அப்படி கூறியவுடன் ஶ்ரீநிதியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.அவளுக்கு சப்போர்ட்டாக யசோதா “என்ன ஜோதி இப்படி பேசிறே...இதெல்லாம் தப்பு...அவங்க சூழ்ச்சி பண்ணி இதையெல்லாம் செய்ததற்கு ஶ்ரீநிதி என்ன பண்ணுவாள்…!!” என்றார்.

“ஆமாம்...இன்னும் என்ன பண்ணலை…இந்த அனாதை கழுதை என்ன தான் பண்ணலை… முதலில் என் பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையை இவள் பிடுங்கி அவளை சாகாமல் சாகடித்தாள்...அடுத்து என் பொண்ணை உண்மையாக சாகடிக்க செய்கிறாள்...இத்தனைக்கு காரணமான இவளை நான் ஒண்ணுமே சொல்லக்கூடாது…!!” என்று ஜோதி தன் போக்கில் உண்மையை உளறிக்கொண்டே சென்றவரை,

“அண்ணிஈஈஈஈ... போதும் நிறுத்துங்க!!!!!” என்று கர்ஜித்து நிறுத்தினார் அப்போது அங்கு வந்த விசுநந்தன்.

அப்போது தான் தான் உளறிக்கொட்டியதை உணர்ந்தார்.ஶ்ரீநிதி கண்ணீல் இன்னும் கண்ணீர் சுரந்தது.

அதற்குள் விசு “என் பொண்ணுக்கு நாங்க இருக்கும் போது...யாரைப் பார்த்து அனாதைனு சொன்னீங்க...அதன்பிறகு என்ன சொன்னீங்க… உங்க பொண்ணு வாழ்க்கையைப் பிடிங்கிட்டளா…??அவளாக ஒண்ணும் உங்கள் பொண்ணு வாழ்க்கையைப் பிடுங்கவில்லை… கிருஷும் ஶ்ரீநிதியை தான் காதலிக்கிறான்...அதை முதலில் புரிஞ்சிக்கோங்க...அடுத்து இந்த பிரச்சினைக்கு காரணம் ரமேஷ் தானே ஒழிய ஶ்ரீநிதி கிடையாது...புரியுதா…?இதுக்கு மேலேயும் ஏதாவது பேசுனீங்க...நான் சும்மாவே இருக்கமாட்டேன்…!!!!” என்று சீறிவிட்டு தன் மகளை அணைத்துவாறு,

“கண்ணம்மா…!!அவங்க சொல்லறதையெல்லாம் நீ கேட்காதேடா…!நீ என் பொண்ணு தான்…!!எப்போதுமே நீ தான் என்னோட மூத்த பொண்ணு…!அவங்க சொல்லறதையெல்லாம் மனசில் வைச்சிக்காதேடா…!நல்லவேளை உங்க அம்மா இங்கு இல்லை கேட்டிருந்தால் உடைந்து போயிருப்பாள்…இந்த உண்மை உனக்கு ஒரு போதும் தெரியக்கூடாதுனு...அவள் எப்போதும் கூறுவாள்…!!!” என்று கவலைத்தொய்ந்த முகத்துடன் கூறிக்கொண்டிருக்கும் போதே டொம் என்ற சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தைக் கேட்ட அனைவரும் திரும்பி பார்த்தனர்.அங்கு ஜானகி இடிந்துப்போய் நின்று கொண்டிருந்தார்.அவரின் அருகில் வாணி கண்ணீருடன் நின்றிருந்தாள்.அதுவே சொல்லாமல் சொல்லியது அனைத்தையும் கேட்டுவிட்டனர் என்று.அய்யோ என்றானது விசுவிற்கு.

உடனடியாக மகளைவிட்டு ஜானகியிடம் சென்ற விசு ஜானகியை உலுக்கினார்...ஆனால் அவர் அப்படியே நின்றிருந்தாரே ஒழிய அசையவேயில்லை...விசு இன்னும் அவரை பலமாக உலுக்க ஆரம்பித்தார்.அப்போதும் அசையவேயில்லை.உடனே அவர் மனதில் கிலி பரவியது.அவர் தவிப்புடன் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார்.

கீழே கேட்கும் சத்தத்தைக் கேட்டு கிருஷும் ரிஷியும் இறங்கி வந்தனர்.இறங்கி வந்தவன் பார்வையில் அழுது அழுது சிவந்த முகத்துடன் நின்றிருந்த ஶ்ரீநிதியும்...தவிப்புடன் நின்றிருந்த யசோதாவும் வாணியும்...எல்லாம் தன்னால் தான் என்பது போல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்த ஜோதி அத்தையையும்… உறைந்து போய் நின்றிருந்த அக்காவும்...அவரையே தவிப்புடன் பார்த்து கொண்டிருந்த விசு மாமாவையும்...இதையெல்லாம் அமைதியாக பார்த்து கொண்டிருந்த குந்தவையையும்...எல்லோரின் மனநிலையையும்… ஒரே நேரத்தில் கணித்த கிருஷ் ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கீழே இறங்கிவந்தான்.

இறங்கிவந்தவன் முதலில் ஶ்ரீநிதியின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு போய் ஜானகியின் முன் நிறுத்தினான்.அவனை நிமிர்ந்து பார்த்தவளை ஜானகியிடம் பேசுமாறு கண்களைக் காட்டினான்.

அவள் ஜானகியைப் பார்த்து “அம்மா…!!” என்று அழைத்தவுடன்...இதுவரை விசு எப்படி உலுக்கியும் சுயநினைவிற்கு வராதவர்...ஶ்ரீநிதியின் அந்த ஒரு சொல்லில் சுயவுணர்வடைந்து ஶ்ரீநிதியை ஆவேசமாக அழுகையுடன் கட்டியணைத்துவாறு “ஆமாம்மா...நான் தான் உனக்கு அம்மா...நான் அம்மாயில்லைனு தெரிஞ்சவுடனே என்னை வெறுக்கமாட்டியேம்மா...நீ என் மூத்த பொண்ணு...நீ என்னை விட்டு போகக்கூடாது...நீ எனக்கு வேணும் பேபி...என்னை விட்டு போயிடதே...என் வயிற்றில் சுமக்கவில்லைனாலும்… நீ தான் என் மூத்த பொண்ணு...யாரும் சொல்லறதையும் கேட்காதேம்மா...நீ தான் எனக்கு முக்கியம்...நீ தான் என் பொண்ணு….!நீ எனக்கு வேணும்!!என்னைவிட்டு போகதே பேபி...!!!” என்று சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி புலம்பி கொண்டிருந்தார்.

ஶ்ரீநிதியும் தன் தாயின் தவிப்பை புரிந்து கொண்டு அதைப் போக்க எண்ணி “அம்மா…!!நான் எப்போதுமே உங்க பொண்ணுதான்… உங்களைவிட்டு பிரியவேமாட்டேன்…!!என்னை பெற்றது வேண்டுமானால் அவர்களாக இருக்கலாம்...ஆனால் என்னை பெறாமலே...இத்தனை வருஷம் என்னை பெற்றவர்களுக்கு மேல் பாசம் காண்பித்த உங்களை எப்படிம்மா பிரிவேன்…!!சின்ன வயதிலிருந்தே எனக்கு என்ன பிடிக்கும்...என்ன பிடிக்காதுனு...பார்த்து பார்த்து செய்தவங்க நீங்க...நான் சின்னதாக வேதனையில் முகத்தைச் சுருக்கினாலும் அதை தாங்காமல் எனக்காக வந்து என்னை சமாதானப்படுத்தி… என்னை சந்தோஷப்படுத்தி நீங்களும் சந்தோஷப்படுவீங்களே...உங்களை எப்படிம்மா விட்டுட்டு போவேன்… !!அதையெல்லாம் மீறி நான் உங்க பொண்ணு இல்லைனு தெரிஞ்சும்...எனக்கு ஒண்ணுனா துடிச்சு போற இந்த குடும்பத்தை விட்டு என்னால் பிரிந்து போகமுடியாதும்மா… நீங்க தான் என்னோட அப்பா அம்மா...இது தான் என் குடும்பம்...இப்போது மட்டுமில்லை… ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்...பிகாஸ் ஐ லவ் மை பெமலி...ஐ லவ் மை அப்பா அம்மா…!!” என்று உணர்ச்சி வசத்துடன் கூறி தன் தாயையும் தந்தையையும் கட்டியணைத்தாள்.

கூடவே தன் தங்கை வாணியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

முதலில் அவரின் தாய் பாசத்தைப் பார்த்த அனைவரின் கண்ணும் கலங்கியது.ஆனால் அதன்பிறகு பேசிய ஶ்ரீநிதியின் ஒவ்வொரு வார்த்தையைக் கேட்டப்பிறகு...எதற்கும் கலங்காத கிருஷிற்கே கண் கலங்க ஆரம்பித்தது.

அங்கே அனைவரும் பாசப்போராட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தனர்.

இதுவரை அமைதியாக இருந்த ராம் “உங்கள் எல்லோரிடமும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்...இந்த குடும்பத்தில் நடந்த அத்தனை குழப்பத்திற்கும் காரணம் மீரா தான்… என்று தொடங்கி முதலிலிருந்து அனைத்தையும் கூறி முடித்தவர்…

“அதனால் யாரும் ஶ்ரீநிதியைத் தப்பாக பேசாதீங்க...அது என்னால் தாங்கமுடியாது… ஏன் என்றால்… என்று ஆரம்பித்தவர்…

தொண்டையைச் செருமி கொண்டு “ஶ்ரீநிதி… என்றவரை விசு அவசரமாக இடமறித்து

“அவளும் உங்களுக்கு பொண்ணுமாதிரி தான்...அதை தானே சொல்லவரீங்க...எங்களுக்கு புரியுது அண்ணா...மீராவும் எங்களுக்கும் பொண்ணு தான்” என்று கூறி முடித்தார்.

ராம் அவரைப் பார்த்து விரக்தியாக சிரித்துவிட்டு “இதுக்கு மேலே நான் எதையும் மறைக்க விரும்பவில்லை விசு...நான் செஞ்ச பாவத்துக்கு தான் கடவுள் எனக்கு தண்டனைக் கொடுத்திருக்கார்… இப்போ கூட சொல்லைனா...கடவுள் என்னை மன்னிக்கவே மாட்டார்...எல்லோரும் நல்ல கேளுங்க…!! என்று எல்லோரையும் பார்த்து கூறியவர்…

“முக்கியமாக நீங்க இரண்டு பேரும்” என்று தன் தாயையும் தன் தாரத்தையும் சுட்டி காண்பித்துவிட்டு “ஶ்ரீநிதி என் பொண்ணு தான்...புரியலை…??அவள் பிறப்பதற்கு காரணமானவன் நான் தான்…” என்றவுடன் விசயம் தெரிந்தவர்களை தவிர...மற்ற எல்லோரும் சேர்ந்து அதிர்ந்தனர்.

குந்தவையே “என்னடா சொல்லுறே…??” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

ராம் தலைகுனிந்தவாறு “ஆமாம் அம்மா...நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணை விரும்பினேன்...அவள் பெயர் சீதாலட்சுமி...அதை உங்களிடம் சொல்ல எனக்கு பயமாக இருந்தது அம்மா...சரி காலேஜ் முடிஞ்சவுடன் உங்களிடம் சொல்லாம்னு இங்கு வந்து பார்த்தால்… எனக்கும் ஜோதிக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணியிருந்தீங்க...நாளை கல்யாணம் என்ற நிலையில் எப்படி சொல்வதுனு...நானும் சொல்லாமல் விட்டுவிட்டேன்...அதன்பிறகு அவளிடம் எந்தவொரு தொடர்புமில்லை… ஆனால் ஒரு நாள் சீதா போன் செய்து...என்னை பார்க்கணும் என்று கூறினாள்...நானும் சரியென்று போனேன்...அவள் என்னைப் பார்த்தவுடன் எனக்கு கேன்சர்...இன்னும் கொஞ்சநாள் தான்...உயிரோடு இருப்பேன்...அதுவரைக்கும் நீங்க என்கூடவே இருக்கீங்களா…?? என்று கேட்டவளின் கடைசி ஆசையை நிறைவேற்ற விரும்பி...என்று கூறிக்கொண்டிருந்தவர்,

முகக்கன்றலுடன் “அவளும் நானும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்...எல்லாமே நல்லப்படியாக சென்று கொண்டிருந்த சமயம்...அப்போது மீராவிற்கு ஒரு வயசுயாகியிருந்த போது...சீதாவும் கருவுற்றிருந்தாள்...அதை கேட்ட எனக்கு கோபமாக வந்தது...நீ இப்படி இருக்கும் சமயத்தில் குழந்தை வேண்டாம்...கலைச்சிடலாம்னு எவ்வளவோ தடவை எடுத்து சொன்னேன்...ஆனால் அவள் கேட்கவில்லை...அதனால் அவள் ஊருக்கு செல்வதையே நிறுத்திவிட்டேன்...ஒரு நாள்...அந்த ஊரிலிருந்த ஒரு மருத்துவமனையிலிருந்து போன் கால் வந்தது...அவர்கள் உங்களுக்கு பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது...உங்கள் மனைவி சாகும் நிலைமையில் இருக்கிறார்...கடைசியாக உங்களை பார்க்க விரும்புகிறார் என்று சொன்னவுடன் பதறியடித்து...அவளைப் பார்க்க போனேன்...பார்த்தவுடன் அவள் கடைசியாக நம் குழந்தையைக் கை விட்டுடாதீங்க என்று மட்டும் தான் கூறி கண்ணைமூடிவிட்டாள்…

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...வீட்டிற்கு கூட்டிவந்தால்... உங்கள் முகத்தில் எப்படி முழிப்பது என்று யோசித்து...சரி இந்த குழந்தையை ஒரு அனாதை ஆசிர்மத்தில் விட்டுவிடுவோம்...அவளின் பொறுப்பை மட்டும் நாம் ஏற்று கொள்வோம் என்று நினைத்து...அவளை அந்த ஆசிர்மத்தில் சேர்த்துவிட்டேன்… மாதம் ஒரு முறை போய் குழந்தையைப் பார்க்கலாம் என்று நினைத்து...முதல் மாதம் அங்கு போய்பார்த்தால் யாரோ குழந்தையை தத்து எடுத்துட்டாங்கனு சொன்னாங்க…

சரி எங்கேயாவது நல்லா இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்...ஆனால் அதே இரண்டு நாள் கழித்து...விசு குழந்தையுடன் வீட்டிற்கு வந்தான்...எனக்கு ஒரு வேளை நம் குழந்தையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது...அதை உறுதிப்படுத்த அந்த ஆசிரமத்தில் விசாரித்து பார்த்தேன்...அவர்கள் கூறியது நந்தன் தாத்தாவின் பெயர்...எனக்கு அதிர்ச்சியாக இருந்தது...அதன்பிறகு ஒரு நாள் விசுவிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன்...விசு அந்த மருத்துவமனைக்கு பிராடிக்ஸ்க்காக அங்கு வந்திருந்திருக்கிறான்… அப்போது அங்கே என்னைப் பார்த்து எல்லா விசயத்தையும் தெரிந்து கொண்டு தாத்தாவிடம் கூறி...குழந்தை தத்து எடுத்த விசயத்தை கூறினான்..சரி நானும் நம் கண் முன்னால்...நம் பொண்ணு வளர்ந்தால் சரி என்று விட்டுவிட்டேன்...ஆனால் அதிலிருந்து தாத்தாவும் விசுவும் என்னிடம் பேசுவதில்லை...உங்கள் எல்லார் முன்னால் பேசுவதோடு சரி….” என்று மறைத்து வைத்திருந்த எல்லா உண்மையையும் கூறியவர்,

ஶ்ரீநிதியிடம் “என்னை மன்னிச்சிடும்மா...நான் செய்தது தப்பு தான்...அதற்கான தண்டனை கடவுள் எனக்கு கொடுத்துவிட்டார்… இந்த அப்பாவை மன்னிச்சிடுவியாம்மா…??” என்று தவிப்போடு வினவினார்.

எல்லாவற்றையும் கேட்டு உச்சக்கட்ட
அதிர்ச்சியில் அனைவரும் மூழ்கியிருந்தனர்.அதுவும் குந்தவை இத்தனை நாளாக தன் சொந்த பேத்தியையா…?ஒதுக்கி வைத்திருந்தோம் என்று நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
 
ஜோதிக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை...தன் கணவன் தனக்கு துரோகம் இழைத்தாரா…?? என்பதை இன்னும் நம்பமுடியாமல் உறைந்து நின்றிருந்தார்.

மற்றவர் இப்படியொரு தப்பு பண்ணினாரா…?என்று ராமை நினைத்து சங்கடமாகவும்...விசுவை நினைத்து பெருமையாகவும் யோசித்து கொண்டிருந்தார்.

ஜானகி இத்தனை வருடம் என் கூட வாழ்ந்திருக்கார்...ஆனால் ஒரு நாள் கூட ஶ்ரீநிதி...ராம் மாமா பொண்ணு என்று சொல்லவேயில்லை… என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

தன்னை தவிப்போடு வில் சேரில் உட்கார்ந்தவாறு பார்த்து கொண்டிருப்பவரைப் பார்த்த ஶ்ரீநிதி “பெரியப்பா உங்களை மன்னிக்கும் அளவு பெரிய ஆள் நானில்லை...உங்கள் மேல் எனக்கு கோபமில்லை...ஏனெனில் இப்படியொரு அப்பா அம்மா எனக்கு உங்க மூலமாக தான் கிடைச்சிருக்காங்க...அதனால் எனக்கு எந்த கோபமும் இல்லை…??” என்று கூறி புன்னகை புரிய முயன்றாள்.

ராம் “இன்னும் என்ன பெரியப்பா...அப்பானு சொல்லுமா…??” என்றவரை,

“இல்லை பெரியப்பா...உங்களுக்கு மீரா அக்கா மட்டும் தான் பொண்ணு...நான் இவங்களோட பொண்ணாக இருக்கமட்டும் தான் ஆசைப்படுகிறேன்...என்று விசுவையும் ஜானகியையும் காண்பித்துவிட்டு,

“நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியது...பெரியம்மாவிடமும் அப்பாயி இடமும் தான்...அதனால் அவங்களிடம் மன்னிப்பு கேளுங்கள்…!!” என்று பெருந்தன்மையுடன் கூறினாள்.

அதைக்கேட்ட ஜோதிக்கும் குந்தவைக்கும் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.இப்படிப்பட்ட பொண்ணையா நாம் தப்பாக பேசினோம்...நடத்தினோம் என்று வேதனைப்பட்டனர்.

ராமிற்கு ஶ்ரீநிதி அப்பா என்று கூப்பிடவில்லை என்ற வருத்தம் இருந்தது...இருந்தும் அவள் சொல்லவதும் சரி தான் என்று முடிவு செய்து தன் தாயிடமும் தாரமிடமும் மன்னிப்பு வேண்டினார்...அவர்களும் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டு ஶ்ரீநிதியிடம் அவர்கள் மன்னிப்பு வேண்ட அவளும் மன்னித்துவிட்டாள்.

இதையெல்லாம் கோவிலிருந்து வந்த மற்ற குடும்பத்தினருடன் பகிர்ந்தவுடன் அனைவருக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சியாக இருந்தது.எல்லோரும் ஒன்று கூடி பேசி கொண்டிருக்கும்போது ரிஷி தீடிரென்று “என்னப்பா...ஓரே சினிமா டிராமா மாதிரி எல்லோரும் அழுது வடிஞ்சிட்டு இருக்கீங்க...சீக்கிரம் இந்த ஶ்ரீநிதியை எனக்கு அண்ணியாக்குங்க…!!” என்று கூறியவுடன்,

தயா “அதற்கு என்னடா அவசரம்…” என்றவுடன்,

ரிஷி குறும்புடன் “அப்போ தானே என் ரூட்டு கிளியராகும்…!!” என்று வாணியைப் பார்த்து கண்சிமிட்டினான்.வாணி அதைப்பார்த்து வெட்கப்பட்டாள்.அதை கவனித்த எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

உடனே தாத்தா சிரிப்புடன் கிருஷையும் ஶ்ரீநிதியையும் பார்த்து “சொல்லுங்க...எப்போ கல்யாணம் வச்சிக்கலாம்…??” என்று கேட்டார்.

கிருஷ் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தான்.ஆனால் ஶ்ரீநிதி தீவிரமான முகத்துடன் “மீரா அக்கா...எப்போது எழுந்து என் கல்யாணத்திற்கு சம்மதம் தராங்களோ…!!அப்போது தான் எனக்கு கல்யாணம்…!!” என்றவுடன் எல்லோரும் சிரிப்பை நிறுத்திவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தனர்.

“ஆமாம் தாத்தா...மீரா அக்கா...கிருஷ் அத்தானை ரொம்பவும் விரும்பனாங்க...அதனால் தான்...இதையெல்லாம் செய்தார்கள்...சோ அவங்க எப்போது எழுந்து வந்து என் கல்யாணத்திற்கு முழு சம்மதம் சொல்லுறாங்களோ…??அப்போது தான் எனக்கு கல்யாணம்…!!” என்று முடிவுடன் கூறிவிட்டு மடமடவென்று தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

இதையாரும் எதிர்ப்பார்க்காதிதினால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தனர்.கிருஷ் ஶ்ரீநிதியின் மனநிலையைப் புரிந்து கொண்டான்.அதனால் அவளின் முடிவை ஏற்று கொண்டான். குடும்பத்தினர் எல்லோரும் மீரா கண் விழுப்பதற்காக காத்திருந்தனர். குந்தவை குற்றவுணர்ச்சியுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.ஶ்ரீநிதி தன் படிப்பைத் தொடர்ந்தாள்.

இப்படியாக காலம் யாருக்கும் காத்திருக்காமல் இரண்டு வருடம் எப்படி என்று தெரியாமல் உருண்டது...ஶ்ரீநிதி தன் படிப்பை முடித்துவிட்டாள்...ஆனால் மீரா கண்விழிக்கவேயில்லை...நடுவில் ஒரு நாள் ரமேஷின் குடும்பத்தினர் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றனர்...ரமேஷ் யாரையும் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்றுவிட்டான்...தொழிலில் எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம்...எங்க சின்ன பையனுக்கு அடிப்பட்டு ஆஸ்பெட்டலில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறான்...இதெல்லாம் உங்கள் குடும்பத்திற்கு நாங்கள் செய்த பாவம்...என்று மன்னிப்பு வேண்டியவர்களை வேறு வழியில்லாமல் மன்னித்துவிட்டனர்… எல்லோரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஶ்ரீநிதி தன் பிடியிலே இருந்தாள். எல்லோருக்கும் ஶ்ரீநிதியையும் கிருஷையும் நினைத்து கவலையாக இருந்தது.

அவர்களை சோதித்தது போதும் என்று நினைத்தவள் போல் மீரா கண்விழித்தாள்.அதன்பிறகு ஒரு மாதத்தில் கொஞ்சம் தேறிவிட்டாள்.அவளிடம் எல்லா விசயமும் பரிமாறப்பட்டது.அவளுக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் குற்ற உணர்ச்சியையும் கொடுத்தது…

அதன்பிறகு ஶ்ரீநிதியை அழைத்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி கிருஷை கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லி கூறினாள்.

அதற்கு ஶ்ரீநிதி “அப்போ உன் நிலைமை அக்கா…!!” என்றவளைப் பார்த்த,

மீரா குற்றவுணர்ச்சியுடன் “எனக்கு அத்தான் மேல் காதல் எல்லாம் இல்லை ஶ்ரீ...அவரை கல்யாணம் பண்ணிக்கொண்டால்...இந்த வீட்டில் என் மதிப்பு மரியாதை உயரும் ...யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது என்று நினைத்தேனே ஒழிய அவர் மேல் எனக்கு காதலில்லை...இதற்காக நான் என்ன என்னவோ தப்பு பண்ணிட்டேன் ஶ்ரீநிதி என்னை மன்னி… என்று முடிப்பதற்குள்,

ஶ்ரீநிதி அவளின் வாயை மூடி “அதெல்லாம் தேவையில்லை அக்கா…” என்றவளை மீரா முகக்கன்றலுடன் “உனக்கு தெரியாது...நான் எவ்வளவு பெரிய ராட்சஸினு...உன்னையவே ஒரு தடவை கொ…கொ… என்று தடுமாறி முழுவதும் கூறி முடிப்பதற்குள்,

ஶ்ரீநிதி “எனக்கு தெரியும் அக்கா…!!” என்று கூறி சிரித்தாள்.

இப்போது மீரா அதிர்ந்து “என்ன உனக்கு தெரிஞ்சுமா...இத்தனை நாள் எனக்காக கிருஷ் அத்தானை கல்யாணம் பண்ணாமல் இருந்தே…!!” என்று வினவினாள்.

“அக்கா...நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரு...நான் எப்போதோ அதையெல்லாம் மறந்துவிட்டேன்...பிளீஸ் அக்கா…” என்று அவளை சமாதானப்படுத்தினாள்.

அதன்பிறகு ஆறுமாதம் கழித்து ஒரு சுபயோக சுபத்தினத்தில் கிருஷ் ஶ்ரீநிதியின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டினான்.அதேநேரம் மற்றொரு மணவறையில் மீராவின் கழுத்தில் ரமேஷ் தாலிக் கட்டினான்.இதுயெல்லாம் ஶ்ரீநிதியின் யோசனை தான்.ரமேஷிடம் மீராவிடமும் பேசி...இதற்கான சம்மதத்தை வாங்கினாள் ஶ்ரீநிதி.

நடப்பில் இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த நிஷா “ஏய் ஶ்ரீநிதி…” என்று சத்தமாக அழைத்தாள்.

அந்த நாளின் இனிமையான நினைவுகளில் சஞ்சரித்து கொண்டிருந்தவளின் நினைவுகளை நிஷா தடைச்செய்தவுடன் “என்னடி…??” என்று எரிச்சலுடன் வினவினாள்.

“என்னடி...இவ்வளவு சாதாரணமாக இருக்கே...நான் இங்க குழம்பிட்டு இருக்கேன்…!!” என்றவளைப் பார்த்த ஶ்ரீநிதி,

“என்ன குழப்பம்…!!”

“நீ கிருஷ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னே… !!ஆனால் இப்போது ஷிவ் அண்ணாக் கூட இருக்கே…??” என்று கேட்டு முடித்தவளைப் பார்த்து ஶ்ரீநிதி முறைத்தாள்.

அந்த முறைப்பே சொல்லியது...நாம் ஏதோ தப்பாக கேட்டுவிட்டோம் என்று...ஆனால் என்னவென்று விளங்காமல் ஶ்ரீநிதியைப் பார்த்தாள்.

அப்போதும் அதே முறைப்போடு ஶ்ரீநிதி “ஏன்டி...என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது...ஒருத்தரைக் காதலிச்சிட்டு இன்னோர்த்தரை கல்யாணம் பண்ணிப்பது போல் தெரியுதா…??” என்று கோபமாக வினவினாள்.

நிஷா பாவமாக “நீ தான்டி முன்னாடி சொன்னே…??” என்றாள்.

“என்ன சொன்னேன்…??”

“ஶ்ரீநிதி இந்த ஒரு சப்பை விசயத்திற்காகவாக...நீ கிருஷ் அண்ணாவைப் பிரிஞ்சு...ஷிவ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே…?நீ சொல்லறதைப் பார்த்தால் கிருஷ் அண்ணா உன்னை உருகி உருகி காதலிச்சிருப்பாங்க போல…!!அப்படி பட்டவரை ஏன்டி பிரிஞ்சேனு நான் கேட்டதுக்கு நீ என்ன பதில் சொன்னே…??

அதுமட்டும் காரணமில்லை என்று சொன்ன தானே...அதுக்கு என்ன அர்த்தம்...நான் கிருஷைவிட்டுட்டு ஷிவ்வை கல்யாணம் பண்ணியதற்கு அதுமட்டும்காரணம்யில்லை என்று தானே அர்த்தம்…??” என்று கேட்டவளை நன்றாக முறைத்த ஶ்ரீநிதி,

“லூசு கிறுக்கி...நான் சொன்னது கிருஷ் அத்தானை அப்போது பிரிந்தற்கான காரணத்தை வைத்துதான் சொன்னேன்...நான் அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுவதற்குள் குழந்தை அழுதுச்சா…??நான் அந்த கேள்வியை மறந்து விட்டேன்...அதற்காக என்னை இப்படி நினைப்பியா…??” என்று அவளிடம் சண்டைப் பிடித்தாள்.

நிஷா இப்போது பாவமாக “சாரிடி...நீயே சொல்லு...நீ கல்யாணம் செய்தவரின் பெயரைச் சொல்லு…??” என்று கேட்டவுடன்,

ஶ்ரீநிதி மெதுவாக அந்த பெயரை உச்சரித்தாள்.

அது “கிருஷிவ் நந்தன்”.

இப்போது நிஷா அதிர்ந்தாள்.
 
அத்தியாயம் 17:


நிஷா உன்னுடைய கணவன் பெயரைச் சொல்லு என்றவுடன்...ஶ்ரீநிதி மெதுவாக தன் கணவன் பெயரை உச்சரித்தாள்.

அது “கி..ரு..ஷி..வ்..ந..ந்..த..ன்” என்று கூறியவுடன்,நிஷா அதிர்ந்தாள்.

இரண்டு முறை ஶ்ரீநிதி “நிஷா...நிஷா” என்று அழைத்தப்பிறகு தான் நிஷா சுயநினைவு வந்தாள்.

சுயநினைவு வந்தவுடன் நிஷா கோபத்துடன் “இதை முன்னாடியே சொல்ல வேண்டியது தானேடி...நான் வேறே நீ கிருஷ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கலை என்ற கோபத்தில்...இவ்வளவு நேரமும் உன்னை...மனசுகுள்ளே திட்டிட்டே இருந்தேன்…” என்று கூறியவள் தொடர்ந்து,

“ஏன்டி...நாம் அன்றைக்கு ஸ்பென்சர் பிளாசாவில் பார்க்கும் போது நீ உன் ஹாஸ்பென்ட் பேரு ஷிவ்னு தானே சொன்னே…??” என்றாள் சந்தேகத்தோடு.

ஶ்ரீநிதி நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தாள்.

அதுவே சொல்லாமல் சொல்லியது நீ தப்பாக புரிஞ்சிக்கிட்டு என்ன சொல்லுறியா…?? என்று,அதன்பிறகு நிஷா நன்றாக யோசித்து மனதில் ‘ஆமாமில்லை ஶ்ரீநிதி அன்றைக்கு அவள் கணவனை அறிமுகப்படுத்தவேயில்லையே… அவள் ஷிவ்னு கூப்பிட்டதை வைத்து...நாம் தானே ஶ்ரீநிதி ஹஸ்பென்ட் பேரு...ஷிவ்னு நினைச்சோம்’ என்று தன்னையே திட்டி கொண்டு ஶ்ரீநிதியிடம் அசடு வழிந்தவாறு,

“சாரிடி...நான் கிருஷ் அண்ணாவைப் பார்த்ததேயில்லையே...அதனால் தான் தப்பாக நினைச்சிட்டேன்” என்றவுடன் ஶ்ரீநிதி அவள் தலையில் கொட்டு வைத்துவிட்டு “நீ இன்னும் மாறவேயில்லைடி…!!” என்று சிரிப்புடன் கூறினாள்.

இப்போது நிஷா குழப்பத்துடன் “ஆமாம்...நீ காலேஜ் படிக்கும்போது கிருஷ் அத்தான்னு தானே கூப்பிடுவே...இப்போ எதுக்கு ஷிவ்னு சொல்லுறே… அதனால் தான் எனக்கு குழப்பமாகிடுச்சு...சோ எல்லாத் தப்பும் உன்னோடுது தான்” என்று பிளேட்டை அவள் பக்கம் திருப்பினாள்.

ஶ்ரீநிதி அவளை முறைத்துவிட்டு...அந்த நாள் இனிமையான நினைவுகளை ஞாபகப்படுத்தி முகம் முழுக்க புன்னகையுடன் பழைய நினைவைக் கூற ஆரம்பித்தாள்.

4 வருடங்களுக்கு முன்,

ஶ்ரீநிதி மற்றும் கிருஷின் திருமணம் முடிந்த திருப்தியுடன்...குடும்ப மொத்தமும் சந்தோஷத்தில் திளைத்திருந்தனர்...கிருஷ் தாலிக் கட்டி முடித்தவுடன் பிடித்த ஶ்ரீநிதியின் கையை...வரவேற்பு முடியும் வரை விடாமல் பிடித்து கொண்டிருந்தான்.

மணப்பெண் தோழியாக அருகில் நின்றுக்கொண்டிருந்த கீதா...இவர்களின் ரோமென்ஸ்களையெல்லாம் பார்த்து எரிச்சலடைந்து அவளின் காதில் “ஶ்ரீ இங்க நாங்களும் கொஞ்சம் இருக்கோம்...எங்களையும் கொஞ்சம் கவனி…!!” என்றாள்.

அதைக்கேட்ட ஶ்ரீநிதி குறும்புடன் “உனக்கு அவ்வளவு பிலீங்கஸா இருந்தால்...நீயும் கல்யாணம் பண்ணி ரோமென்ஸ் பண்ணு…!இப்போது கீழே போய் வாணி கூட பேசிட்டி இரு போ…!!” என்று கூறி அவளை அங்கிருந்து துரத்தினாள்.

கீதா பயத்துடன் “வாணிக்கிட்டயா...அங்கே அதுக்கு மேலே ரோமென்ஸ் போயிட்டு இருக்கு...நான் பேசாமல் நம் பிரண்ட்ஸ் கூட உட்கார்ந்துக்கிறேன்…!!” என்று கூறி மேடையிலிருந்து கீழே இறங்கினாள்.

இங்கே கிருஷ் காலையில் தாலிக்கட்டும் போது...அவள் கட்டியிருந்த...அந்த எளிமையான கூரைப் புடவையில் மிளிர்ந்த அழகிலும்...வரவேற்பின் போது அவள் அணிந்திருந்த சிவப்பு நிற லெஹன்கா சோளியில்...கொஞ்சம் ஒப்பனையில் மிளிர்ந்த அழகிலும் தன்னையே தொலைத்து அவளை பார்வையால் விழுங்கி கொண்டே...இரவில் கிடைக்கும் தனிமைக்காகவும்... மனம் முழுக்க ஏக்கத்துடன் காத்திருந்தான்.

ஶ்ரீநிதியும் அவனின் விழுங்கிவிடும் பார்வையில்...தன் உடையின் நிறத்திற்கு நிகராக சிவந்த...தன் முகத்தை மறைக்கமுடியாமல் இருந்தும்...அவளும் சந்தன நிற ஷெர்வானியில் இருந்தவனின் அழகை ரசித்து கொண்டிருந்தாள்.

அதனைப் பார்த்த குடும்ப மொத்தத்திற்கும் மகிழ்ச்சியாக இருந்தது...வந்திருந்த அனைவரின் கண்ணும் கிருஷ் ஶ்ரீநிதியின் மேல் தான் இருந்தது...மீராவை அவளுடைய புகுந்த வீட்டிற்கு...அனுப்பி வைத்துவிட்டு...கிருஷையும் ஶ்ரீநிதியையும் நந்தவனத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போதும்...கிருஷ் விடாமல்...ஶ்ரீநிதியின் கையைப் பிடித்து கொண்டிருந்தான்...ஶ்ரீநிதிக்கு தான் ஒரு மாதிரி வெட்கமாக இருந்தது...இருந்தும் அவளும் விடாமல் அவன் கையைப் பிடித்து கொண்டிருந்தாள்.

வாணி தான் “அய்யோ அத்தான்...அக்கா கையைக் கொஞ்சம்விடுங்க…அக்கா உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டாள்… இங்கே தான் இருக்கப் போகிறாள்...என்று தன் அத்தானை கிண்டல் செய்துவிட்டு,

“அக்கா...நீ ரொம்ப கொடுத்து வைத்தவள்...எனக்கும் தான் ஒண்ணு இருக்கே...ரொமான்ஸ்னா என்னனு கேட்கும் போல...வேஸ்ட் ஃபேலோ...பேசாமல் ஆளை மாத்திக்கலாமா…??” என்று கண்ணடித்து கூறியவளை...ரிஷி முறைத்து கொண்டே...அவளை துரத்த ஆரம்பித்தான்.

அப்படியே துரத்தி கொண்டே இருவரும் மாடிப்படி ஏறி மேலே ஓடினார்கள்.

எல்லோரும் அவர்களைச் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.ஜானகி “தம்பி...உன்னை என்னவோ நினைச்சேன்டா...ஆனால் நீ இப்படி ரொமேன்ஸ் மன்னனாக இருப்பேன்னு நினைக்கவேயில்லைடா…” என்று குறும்புடன் கூறி தன் மகளின் கையைப் பிடித்தவாறு,

“தம்பி...கொஞ்ச நேரத்திற்கு உன் பொண்டாட்டியை இங்கிருந்து கூட்டிட்டு போறேன்…!!” என்று கூறி சிரிப்புடனே அழைத்து சென்றார்.

கிருஷ் தன் மனதில் ‘உங்களுக்கு என்ன தெரியும்...எத்தனை வருடம் காத்திருப்பு இது...இதற்காக இந்த நிமிடத்திற்காக தான்...நான் காத்திருந்தேன்...அதனால் என் பொண்டாட்டி கையைப் பிடிச்சிருக்கேன்...இது உங்களுக்கு பொறுக்காதே…!!’ என்று எல்லோரையும் வைதான்.

ஶ்ரீநிதி சென்ற பிறகு மற்றவர்களிடம் பேசி கொண்டிருந்தான் கிருஷ்.ஆனால் அவன் எண்ணம் முழுவதும் ஶ்ரீநிதியைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது.

மேலே வாணியை ரிஷி பிடிக்கப்போகும் போது...வாணி அவளின் அறைக்குள் ஓடி...கதவைச் சாற்றப் போனவளைத் தடுத்த ரிஷி...அவளைத் தள்ளி அந்த அறைக்குள் நுழைந்து...கதவைத் தாளிட்டுவிட்டு...மெதுவாக அவள் பக்கம் திரும்பினான்.

வாணிக்கு இப்போது படப்படப்பு அதிகமாகியது...ரிஷி “கீழே என்ன சொன்ன மறுபடியும் சொல்லு…” என்று கேட்டவாறு அவளை நெருங்கினான்.

வாணிக்கு படப்படப்பு அதிகமாக பின்னால் நகர்ந்தவாறு “நா...நான் என்..ன சொ..சொன்னேன்…??” என்று திக்கி தடுமாறினாள்.

ரிஷி இன்னும் அவள் அருகில் நெருங்கிய வாறு “எனக்கு ரொமென்ஸ்னா என்னனு தெரியாதுனு தானே சொன்னே...இதுக்கு எல்லாம் மேலே...வேஸ்ட் ஃபேலோ வா...ஹூம்…!!” என்று கேட்டு ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

வாணி இப்போது இன்னும் பின்னால் நகர்ந்தவள்...கட்டிலின் கால் தடுக்கி மெத்தையில் விழுந்தாள்.

ரிஷி இன்னும் வேகமாக அவளை நெருங்கினான்.

இப்போது வாணி அதிலிருந்து எழுந்தவாறு “சாரி அத்தான்...நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்…” என்று இதயம் படப்படக்க அவசரமாக கூறி முடித்தாள்.

அதற்குள் அவளை நெருங்கிய ரிஷி...அவளின் இடுப்பில் கைக்கொடுத்து தூக்கியவன்… அவள் விலகும் முன் அவளின் இதழோடு தன் இதழை இணைத்ததோடு...அணைப்பையும் இறுக்கினான்.

முதலில் திமிறியவள் பின்பு...அந்த முத்தம் தந்த கிறக்கத்தில்...அதை அனுபவிக்க ஆரம்பித்தாள்.தன்னையறியாமலே... அவளின் கை அவனை அணைத்திருந்தது.

அவள் சுவாசத்திற்கு தடுமாறியவுடன்...அவளை விடுவித்தவன் “இனிமே நீ என்னை வேஸ்ட்ஃபேலோனு சொல்லுவே…!!” என்று சிரிப்புடன் கைநீட்டி எச்சரித்தவனைப் பார்த்த வாணி...சிவந்த முகத்துடன் தலைக்குனிந்தவாறு இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

அவளின் வெட்கத்தை ரசித்து கொண்டே...ரிஷி அவளின் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தி...அவளின் கண்களை உற்றுப் பார்த்தான்.

வாணியும் அவனின் கண்களை உற்று பார்த்தாள்.இருவரின் கண்ணும் ஒன்றோடு ஒன்று கலந்தது.அது தந்த மயக்கத்தில் அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்தாள் வாணி.

இரவு 10 மணிக்கு...கிருஷ் தன் அறையில்...தன் மனம் கவர்ந்தவளின் வருகைக்காக காத்திருந்தான்.

ஶ்ரீநிதி எப்போதும் போல் தன் தாத்தா பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கி நிமிர்ந்தவளை கன்னத்தில் இடித்த பாட்டி “ஏன்டி சிறுக்கி...உன்னை அடக்க ஒருத்தன் வருவன்னு சொன்னேன் தானே...பாரு மகராசன் மாதிரி என் பேரனே வந்திருக்கான்….இனிமேலாவது பொம்பளை புள்ளையா அடக்க ஒடுக்கமாக இரு…!!” என்று வஞ்சித்தவரை பார்த்த ஶ்ரீநிதி,

நக்கலாக “எப்படி பாட்டி…??இப்படியா…?? என்றவாறு வாயைப் பொத்தி உடலை குறுக்கி காண்பித்தாள்.

அதைப்பார்த்த தாத்தா சத்தமாக சிரித்தார்.

பாட்டி கோபத்துடன் “உனக்கெல்லாம் வாய்கொழுப்பு அடங்குதானு பாரு...உனக்கெல்லாம் என் பேரான்டி கிஷூ தான் சரி…!!” என்று சரி நொடித்தவருக்கு,

ஶ்ரீநிதி திமிராக “பாட்டி...அத்தான் பேரு கிஷூ இல்லை… கிருஷ்… அதை முதலில் சரியாக சொல்லுங்க...அப்புறம் வந்து உங்கள் பேரன் என்னை அடக்கறதைப் பார்த்துக்கலாம்...அவரால் என்னை என்ன பண்ணமுடியும்…??” என்று கேட்டு பதிலடிக் கொடுத்தாள்.

பாட்டியும் விடாமல் “என்ன பண்ணமுடியும்னு...என் பேரன் காட்டுவான்…” என்று தன் பேரனைப் பற்றி தெரியாமல் கூறினார்.

ஶ்ரீநிதி கிருஷின் விழுங்கும் பார்வையை மனதில் வைத்து “சரி பாட்டி...யாரை யார் அடக்கறான்னு பார்க்கலாம்” என்று சவால் விட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

அதில் ஒளிந்திருக்கும் சுட்சமத்தை அறியாமல் பாட்டியும் ஒத்து கொண்டார்.

தாத்தா சிரிப்புடன் “சபாஷ்...சரியான போட்டி” என்று கூறி பாட்டியிடம் முறைப்பையும்...பேத்தியிடமிருந்து ஹைப்பையும் வாங்கினார்.

அதன்பிறகு முதலிரவு அறையில் கண்களில் கனவு மின்ன அடியெடுத்து வைத்தாள் ஶ்ரீநிதி...அறையின் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டுவிட்டு திரும்பிய ஶ்ரீநிதி...கிருஷின் கையணைப்பில் இருந்தாள்.

ஶ்ரீநிதி அவன் அணைப்பிலிருந்து விலகியவாறே “அத்தான் விடுங்க… நான் உங்களிடம் கொஞ்சம் பேசணும்…!!” என்று கூறியவுடன்,

கிருஷ் கோபமாக “இங்கயெல்லாம் பேசக் கூடாது...எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்…” என்று அணைக்கப் போனவனின் கைகளைத் தட்டிவிட்ட ஶ்ரீநிதி,

“அத்தான் பிளீஸ்...பிளீஸ்…!!” என்று முகத்தைச் சுருக்கி கெஞ்சியவளை வேறு வழியில்லாமல் விலகிவிட்டு கட்டிலில் போய் அமர்ந்தான்.

ஶ்ரீநிதி அவனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே அவனை ஒட்டி அமர்ந்தவாறு “அத்தான்...என் மேல் கோபமா…??” என்று கேட்டவளைப் பார்த்து முறைத்தவன்…

“இல்லை...உன் மேலே ஆசையாய் இருக்கேன்…” என்றவுடன்,

ஶ்ரீநிதி “அது தான் எல்லாருக்குமே தெரியுமே…!!” என்றாள் குறும்புடன்.

கிருஷ் முறைப்புடன் “அதுதான் தெரியுதே...அப்புறம் எதுக்கு இந்த நேரத்தில் வந்து பேசணும்… அது இதுனு சொல்லிட்டு இருக்கே…??” என்றான் எரிச்சலுடன்.

ஶ்ரீநிதி அவனின் கன்னகுழியில் விரல்விட்டு “அத்தான்...வெறும் பத்து நிமிடம் தான்...பிளீஸ்…” என்று குழைந்தவளிடம் மறுக்க மனமில்லாமல் சரி என்றான்.

“அத்தான்...நான் உங்களை காதலிக்கிறேன் என்று யார் உங்களிடம் சொன்னது...ஏனெனில் இதைப் பற்றி என்னை...கீதாவை தவிர...வேறு யாருக்கும் தெரியாது...அப்புறம் யார் சொன்னது உங்களிடம்…??” என்று கேட்டவளைப் பார்த்து சிரித்த கிருஷ்,

“அதை ராம் மாமா தான் என்னிடம் சொன்னாங்க...நீ ஏதோ மாதிரி இருந்தபோல...அதைப் பார்த்துவிட்டு மனசு கேட்காமல்...உன் அறைக்கு வந்திருக்காரு...அன்றுமட்டுமில்லாமல் நீ எப்போதெல்லாம் சோகமாக இருக்கியோ...அப்போதெல்லாம் உன்னை உன் அறையில் வந்து பார்த்துவிட்டு தான் போவாராம் குண்டச்சி...அப்போ தான் நீ கீதாவிடம் என்னை காதலிக்கிறதைப் பற்றி பேசிட்டு இருந்திருக்கே...அதைக் கேட்டுவிட்டு சந்தோஷத்துடன் என்னிடம் வந்து சொன்னாரு...ஆனால் என்னால் அன்றைக்கு சந்தோஷப்பட முடியலை குண்டச்சி...” என்றவுடன் விழிவிரித்து ஆச்சரியத்துடன் பார்த்தவளை அருகில் இழுத்து தன் அணைப்பில் வைத்தவாறு,

“ஏனால் நீ ரமேஷ் பற்றி என்னிடம் சொல்லாத கோபத்தில் இருந்தேன்...நீ ஏன் அவனைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை… ??” என்று கோபமாக கேட்டவனை,

ஶ்ரீநிதி பாவமாக பார்த்து “எல்லாத்தையும் நானே பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன் அத்தான்...உங்களிடம் சொல்லி...எதற்கு வீண் சிரமம்னு தான் விட்டுட்டேன்...சாரி அத்தான்…!!” என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு,

“இட்ஸ் ஓகே குண்டச்சி…!!” என்றான் மலர்ந்த முகத்துடன்.

எப்போதும் போல்...அவன் சிரிக்கும் போது விழும் கன்னக்குழி அழகில் தன்னை தொலைத்த ஶ்ரீநிதி...அவனிடம் இன்னும் வாகாகப் பொருந்தி அவன் கன்னக்குழியில் முத்தமிட்டு...வெட்கத்தில் அவன் நெஞ்சில் முகத்தை மறைத்தாள்.

கிருஷ் இப்போது சிரிப்புடன் “குண்டச்சி...இப்போ நாம் பேசினது போதும்னு சொல்லுறியா...தேங்கஸ்டா...இது தான் எனக்கும் வேணும்…!!” என்று கணவனாக அவளை உணர வைக்கும் வேலையைத் தொடங்கினான்.

அதில் மயங்கிய ஶ்ரீநிதியும்...அவனிடம் தன்னை தொலைக்க ஆரம்பித்த வேளையில்...ஶ்ரீநிதியின் செல் போன் அலறியது...அதைக்கேட்டவுடன் அவர்களின் மயக்கநிலை நீங்க...கிருஷ் எரிச்சலுடன் இந்த நேரத்தில் யாரது என்றவாறு படுத்திருந்தப்படியே செல்லை எடுத்து பார்த்தான்.

பார்த்தவன் எரிச்சலுடன் “இது என்னது…??” என்று அவளிடம் காண்பித்து கேட்டான்.

அதைப்பார்த்த ஶ்ரீநிதி அசடுவழிந்தவாறு “சாரி அத்தான்...இன்றைக்கு கீதாவிற்கு பிறந்தநாள் அத்தான்...அதனால் அவளுக்கு மறக்காமல் வாழ்த்து சொல்லறதுக்காக அத்தான்...அலர்ட் வைச்சிருந்தேன் அத்தான்...இப்போ நான் அவளுக்கு வாழ்த்து சொல்லட்டுமா அத்தான்...பிளீஸ் அத்தான்…!!” என்று வார்த்தைக்கு வார்த்தை அத்தான் போட்டவளை முறைத்த கிருஷ்,

“இன்னொரு வாட்டி என்னை அத்தான் பொத்தான்னு சொன்னே… நான் செம்ம கடுப்பாகிடுவேன்...” என்றான் கோபத்துடன்.

ஶ்ரீநிதி வேண்டுமென்றே பாவமாக “அத்தான்...வேறே எப்படி அத்தான்...உங்களை கூப்பிடறது அத்தான்...நீங்களே சொல்லுங்க அத்...என்று கூறி கொண்டே சென்றவளை தடுத்த கிருஷ்,

“அம்மா தாயே…!!நீ எப்படி வேணாலும் கூப்பிடு...ஆனால் அத்தான்னு சொல்லாதே...என்றவுடன் அவளின் கண்களில் குறும்பு தென்படவும்,

கிருஷ் உஷாராக “அதுக்குனு போடா வாடானு சொல்லாதே…!!” என்று கையெடுத்து கூம்பிட்டான்.

ஶ்ரீநிதி அவனைச் சிரிப்புடன் பார்த்து “அப்போது நான் இனிமே கிருஷ்னு சொல்லட்டா...என்று சொன்னவள் அவளே “வேணாம் எல்லாரும் உங்களை அப்படி தானே கூப்பிடறாங்க...வேற ஏதாவது என்று யோசித்து கண்டுப்பிடித்த புன்னகையுடன் “ஷிவ்...இது எப்படி இருக்கு ...நல்லாயிருக்கா அத்தான்…??” என்று ஆர்வமாக கேட்டவளிடம்,

“சூப்பர் குண்டச்சி...ஆனால் மற்றவர்கள் முன்னால் அத்தான்னு கூப்பிடு...நமக்குள்ளே மட்டும் இந்த ஷிவ் இருக்கட்டும்” என்று கூறி ஆசையாய்...அவளின் முகத்தை நெருங்கியவனிடம்,

“ஷிவ்...நான் கீதாவிடம் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிடட்டா...நான் ஒரு தடவைக் கூட...அவள் பிறந்தநாளுக்கு விஷ் பண்ணாமல் இருந்தது இல்லை…” என்று கூறியவளை,

இவள் இதெல்லாம் தெரிஞ்சு பண்ணறாளா…??இல்லை தெரியாமல் பண்ணுறாளா…?? என்று நினைத்து பாவமாக அவளை பார்த்தவன்...அவள் கண்களில் குறும்பும்...உதடுகளில் சிரிப்பும் தெரிய அவளின் விளையாட்டைப் புரிந்துக்கொண்ட கிருஷ்...அதன்பிறகு அவளை பேசவிடாமல் செய்ய...அவளின் இதழில் கவிதை எழுத ஆரம்பித்தான்.அவளை கொஞ்சம் கொஞ்சமாக காதலால்... தாம்பத்தியம் என்னும் வாழ்க்கையில்...தன் பக்கம் இழுத்து கொண்டிருந்தான்.

இதையெல்லாம் சொல்லிமுடித்த ஶ்ரீநிதி...தன் தோழி இன்னும் ஆர்வமாக தன் கதைக் கேட்டு கொண்டிருப்பதைப் பார்த்து ஶ்ரீநிதி சிரிப்புடன் “ஏய்...போதும்...போதும்...ஸ்டாப்...இதுக்கு மேல் சென்சார் பண்ணியாச்சு...இதெல்லாம் உன்னிடம் சொல்லமாட்டாங்க...அப்புறம் இன்னும் என்ன ஜொள்ளு ஊத்திக்கிட்டே...கதைக் கேட்டுட்டு இருக்கே…!!” என்று அவளை கிண்டல் செய்தாள்.

உடனே நிஷா “போடி லூசு...நான் ஜொள்ளு ஊத்தறதை நீ பார்த்தியா…??ஆனாலும் உன் குறும்புத்தனத்தை முதலிரவிலுமாடி காட்டுவே…” என்றவளைப் பார்த்து கண்ணடித்த ஶ்ரீநிதி,

“அதெல்லாம் சும்மா ஒரு என்ஜாய் மென்ட்க்கு” என்றவுடன் நிஷா முறைத்தாள்.அவளைப் பேசி சமாதானம் செய்து...சாப்பிட வைத்து அனுப்பிவிட்டு...கிருஷைத் தேடி சென்றாள்.

கிருஷ் குழந்தைக்கு விளையாட்டு காட்டி சிரிக்க வைத்து கொண்டிருந்தான்.

ஶ்ரீநிதி அதைப் பார்த்து கொண்டே சிரிப்புடன் “ஷிவ் என்ன பண்ணுரீங்க...உங்கள் பையன் ரொம்ப குறும்பு பண்றானா…??” என்று கேட்டவாறு குழந்தையின் அருகில் கட்டிலில் படுத்தாள்.

கிருஷ் ஶ்ரீநிதியைப் பார்த்தவாறு “ஆமாம்...அப்படியே அவங்க அம்மா மாதிரி...எப்போது பார்த்தாலும் சேட்டைப் பண்ணுறான்” என்று சலிப்புடன் கூறியவனின் முகத்தில் குறும்பு கூத்தாடியது.

அதைக்கண்டு கொண்ட ஶ்ரீநிதி குறும்புடன் “என் பையன் அப்படி தான் பண்ணுவான்...நீங்க எத்தனை நாள் அவனுடைய அம்மாவை அதட்டி மிரட்டுயிருப்பீங்க...இப்போது நீங்க அவன் குறும்பை சமாளிங்க…!!” என்று தெனாவட்டாக கூறினாள்.

உடனே கிருஷ் “ஏய் குண்டச்சி…!!ரொம்ப தான் பண்ணுறே...குழந்தை நடுவில் இருந்தனாலே தப்பிச்சே...இல்லைனா… என்றவுடன்,

ஶ்ரீநிதி குறும்புடன் “இல்லைனா...என்ன பண்ணுவீங்க ஷிவ்…” என்றாள் கிறக்கமாக.

கிருஷ் “ஏய் குண்டச்சி...என்னைப் பார்த்தால் உனக்கு பாவமாக தெரியலையாடி...அங்க இருக்கும்போது தான் குழந்தை பிறந்துச்சுனு...உன்னை சுற்றி வீட்டு ஆளுங்க இருந்துட்டே இருக்காங்கனு...சரி ஒரு வாரம் ஜாலியாக இருக்கலாம்னு...உன்னை இங்க கூட்டிட்டு வந்தால்...இங்க எனக்கு வேலை இருந்துட்டே இருக்கு...ஒன்றரை வருஷமாச்சு உன் பக்கத்திலே வந்து… என்று ஏக்கத்துடன் கூறிவிட்டு மேலும்,

விரல் நீட்டி எச்சரித்தவாறு “இத்தனை நாளாக என்னிடமிருந்து தப்பிச்சிட்டே...அதனால் நாளைக்கு ஊருக்கு போனப் பிறகு...இருக்கு உனக்கு...அப்புறம் எப்படி தப்பிக்கிறேனு பார்க்கிறேன்…” என்று போலியாக மிரட்டினான்.

அதைக்கேட்டவுடன்...ஶ்ரீநிதியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.அந்த சிவந்த முகத்தைப் பார்த்தவுடன்...கிருஷ் தன்னைக் கட்டுபடுத்தி கொள்ள முடியாமல்...அப்படியே படுத்திருந்த வாக்கிலே அவளை அருகில் இழுத்து அணைத்து...வெட்கத்தில் சிவந்திருந்த அவளின் இதழோடு இதழ் சேர்த்து... நீண்டதொரு மூத்தத்தில் திளைத்திருந்த வேளையில்...அவர்களின் புதல்வன் நான் இங்கு தான் இருக்கிறேன் என்பது போல்...மழலை மொழியில் அம்மா என்று கூறி...அவர்களின் கவனத்தை இங்கே திருப்பினான்.

ஶ்ரீநிதி சிரிப்புடன் கிருஷைப் பார்க்க “என் நிலைமையைப் பார்த்து சிரிக்கிறியா… என்றவாறு அவளின் இதழை நறுக்கென கடித்து அவளை விடுவித்தான்.

அதன்பிறகு இருவரும் சிரிப்புடன் பிரிந்து குழந்தைக்கு பசியாற்றி...கொஞ்சி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.அவன் தூங்கினால் தானே...தூங்காமல் தன் தந்தையைப் பார்த்து…புக்கை வாயைக் காட்டி சிரித்து கொண்டிருந்தது.

“ஷிவ் இங்கே பாருங்களேன் இவனை...தூங்காமல் உங்களைப் பார்த்து சிரித்து கொண்டிருக்கிறான்...நான் இப்போது என்ன பண்ணறது… என்று கூறி கிருஷைப் பார்த்தவள்...அவன் தன்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கவும், “அத்தான்…!!” என்று சிணுங்கினாள்.

கிருஷ் தன் பார்வையை மாற்றவும் ஶ்ரீநிதி அவசரமாக “எனக்கு அவனை எப்படி தூங்க வைக்கணும்னு தெரியும்...நீங்க முதலில் வெளியே போய் இருங்க…போங்க…!!” என்று அவனை வெளியே துரத்திவிட்டு...மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள்.

“ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…!!
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…!
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…!

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…!!

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…!!
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…!!
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ…!!
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ…!!

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…!!

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ…!!
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ…!!
அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ…!!
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ…!!"

என்று அவள் பாடி முடித்த வேளையில் அவளுடைய புதல்வன் பிரத்யுவ் நந்தன் துயிலில் ஆழ்ந்திருந்தான்.ஶ்ரீநிதி குழந்தை தூங்கியவுடன் கிருஷை பார்க்க வெளியே வந்து பார்த்தால்...அவளுடைய இன்னொரு குழந்தை சோபாவில் படுத்து தூங்கி கொண்டுயிருந்தது.
 
Status
Not open for further replies.
Top