வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஒண்ணும் புரியல சொல்ல தெரியல - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 18:

ஶ்ரீநிதி குழந்தை தூங்கியவுடன்...அறையை மெதுவாக சாற்றிவிட்டு...கிருஷைத் தேடி வந்து பார்த்தால்...அவன் சோபாவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்.

ஶ்ரீநிதி சிரிப்புடன்...அவன் அருகில் வந்து...அவன் தூங்குவதை ரசித்துவிட்டு திரும்புகையில்...அவளின் கை...பிடித்து இழுக்கப்பட்டு… அவள் என்னவென்று அறியும் முன்...கிருஷின் மேல் விழுந்து கிடந்தாள்.

விழுந்த உடன் ஶ்ரீநிதி பொய்யான முறைப்போடு “ஷிவ் இவ்வளவு நேரம் தூங்காமல்...என்னை ஏமாற்றினீங்களா…??” என்று கேட்டவளின்,

இடையை இறுக்கியபடி கிருஷ் புன்னகையுடன் “ஆமாம் குண்டச்சி… அப்புறம் நீ தான் என் பக்கத்திலே...வர மாட்டிக்கிறியே…!!அதான் நானே வர வைத்தேன்” என்று கூறினான்.

“ரொம்பத்தான்…” என்று நொடித்தாள்.

தீடிரென்று ஞாபகம் வந்தவளாக “ஷிவ்...நான் உங்களிடம் ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்...நிஷா என்னிடம் நீ காலேஜ் படிக்கும்போது கிருஷ் அத்தான்னு தானே கூப்பிடுவே...இப்போ எதுக்கு ஷிவ்னு கூப்பிடறனு கேட்டாள்…” என்றவுடன்,

கிருஷ் “அதற்கு நீ என்ன சொன்னே…” என்று கேட்டான்.

ஶ்ரீநிதி அசால்ட்டாக “எல்லாவற்றையும் சொன்னேன்…!!” என்றவுடன்,

கிருஷ் அதிர்ந்து “என்னது எல்லாத்தையும் சொன்னியா...லூசு அதெல்லாம் யாராவது சொல்லுவாங்களா…??” என்றவாறு அலறினான்.

ஶ்ரீநிதி அவன் மீது படுத்திருந்த வாக்கிலே அவனை முறைத்தவாறு “லூசு அத்தான்...அதெல்லாம்மா சொல்லுவாங்க…??” என்று கேட்டாள்.

“பின்னே என்ன தான் சொன்னே…??” என்றவுடன்,

ஶ்ரீநிதி அவளிடம் சொன்னதை கூறி முடித்தவுடன்...அவர்களின் செல் போன் அலறியது...அதில் வீட்டு எண் ஒளிர்ந்தது.அவர்களிடம் பேசிவிட்டு போனை வைத்துவிட்டு சிறிது நேரம் பேசி கொண்டிருந்த கிருஷ்...அவளிடம் எந்த சத்தமும் வராதிதினால் அவளை குனிந்து பார்த்தவன்...அவள் அவன் மீது படுத்திருந்த வாக்கிலே தூங்கிக் கொண்டிருந்தாள்.அதைப்பார்த்து கிருஷ் அவளின் நெற்றியில் முத்தமிட்டுக் கண்களை மூடினான்.

அடுத்தநாள் சென்னையிலிருந்து புறப்பட்டு...மாலை 7மணி அளவில்...தன் வீட்டை அடைந்தனர்.அனைவரும் அவர்களை அன்புடன் வரவேற்று...ஶ்ரீநிதியை அறையில் ரெஸ்ட் எடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.

கிருஷ் மட்டும் தன் வீட்டு ஆண்களிடம் தொழிலைப் பற்றி பேசிவிட்டு...இரவு 9.30 மணிக்கு சாப்பிட்டுவிட்டு அவன் அறைக்கு செல்ல திரும்பியவனை தடுத்த தேவகி “கிருஷ் நீ ரிஷி கூட படுத்துக்கோப்பா…” என்றவுடன் கிருஷ் அதிர்ச்சியடைந்து “என்னது...நான் எதுக்கு அவன் கூட படுக்கணும்…??” என்று கூறி அவனைப் பார்த்தான்.

அவனும் அதே அதிர்ச்சியில் தான் கிருஷைப் பார்த்து கொண்டிருந்தான்.வாணியும் ஶ்ரீநிதியும் இருவரின் நிலைமையைப் பார்த்து சிரித்து கொண்டுயிருந்தனர்.

அதைப்பார்த்து கடுப்பான ரிஷி “எதுக்கும்மா…??” என்றான்.

இரண்டு மகன்களின் அதிர்ச்சியைப் பார்த்த தேவகி “இல்லைடா...வாணிக்கு இப்போது 9 மாசம்...அதனால் தான் ஶ்ரீநிதி அவளுக்கு துணையாக இருக்கட்டும்...நீங்க இரண்டு பேரும்...ஒன்றாக கட்டிப்பிடித்து தூங்குங்க” என்று நமுட்டு சிரிப்புடன் கூற மற்ற அனைவரும் வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தனர்.

கிருஷும் ரிஷியும் இதைக்கேட்டு எரிச்சலடைந்தனர்.

ரிஷி ஒரு படி மேலே போகி டென்ஷனாகி “அம்மா...அதெல்லாம் நான் அவளைப் பார்த்துப்பேன்… வாணி நீ வா…” என்று கையைப் பிடித்து இழுத்தவனை உதறிய வாணி,

“நான் சின்ன அம்மு சொல்லறதை தான் கேட்பேன்…” என்று கூறியவளை ரிஷி ‘நீயா பேசியது என் அன்பே...நீயா பேசியது’ என்ற ரேஞ்சில் பார்த்து கொண்டிருந்தான்.அதைப் பார்த்த வாணிக்கும் ஶ்ரீநிதிக்கும் சரிப்பு பீறிட்டு வந்தது.

தயா “என்னங்கடா நடக்குது இங்கே...இரண்டு பேரும் இந்த ரேஞ்சுக்கு பொண்டாட்டியிடம் கவுந்து கிடக்கிறீங்களா…??” என்று கிண்டல் பண்ணினான்.

கிருஷூம் ரிஷியும் மனதில் ‘இவன் பொண்டாட்டியை ஒரு மாதம் ஊருக்கு அனுப்பி வைத்தால்...இவன் நிலைமை தெரியும்...இதில் பெருசா நம்மை கிண்டல் பண்ண வந்துட்டான்’ என்று திட்டி வெளியில் அவனை முறைத்தனர்.

பாட்டி தாத்தாவின் காதில் “என்னங்க கிஷு...இவளை அடக்குவான்னு பார்த்தால்...இவன் தான் அவளிடம் அடங்கியிருக்கான்...என் பேரான்டியையே சாச்சுப்புட்ட போலேங்க…!!” என்று பாவமாக கூறியவரைப் பார்த்த தாத்தா இன்னும் சத்தமாக சிரித்தார்.

அவர்களின் இருவரின் நிலையை அறிந்த யசோதா சிரிப்புடன் “அதெல்லாம் வேண்டாம் தேவகி...அவங்களை எதுக்கு பிரிச்சு வைக்கிறே…?எல்லோரும் அவங்க அவங்க அறைக்கு போங்க…??” என்றவுடன் ரிஷி வேகமாக வந்து அவரை அணைத்துவிட்டு

“தேங்கஸ் பெரியம்மா…!!” என்று கூறியவுடன் அனைவரும் நகைக்க ஆரம்பித்தனர்.

அதன்பிறகு அவர்வர் ஜோடிகளோடு அவர் அவரின் அறைக்கு சென்றனர்.

ஶ்ரீநிதியும் குழந்தைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து நகர போனவளைத் தடுத்த குந்தவை “ஶ்ரீம்மா...குழந்தையை என்னிடம் கொடு...அவன் இன்றைக்கு என் கூட தூங்கட்டும்” என்று கை நீட்டி கேட்டவரிடம்,

ஶ்ரீநிதி தயக்கத்துடன் “அப்பாயி அவன் இருப்பானானு தெரியலையே…!!”என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே குழந்தை அவரிடம் பாய்ந்து தாவியது.

குந்தவை குழந்தையை வாங்கிவிட்டு சிரிப்புடன் “இப்போது சரியாம்மா…!!” என்றவுடன் வேறு வழியில்லாமல் குழந்தையை அவரிடம் விட்டுவிட்டு மாடி ஏறினாள்.

ஶ்ரீநிதிக்கு அப்போது தான் கல்யாணமான புது மணப்பொண்ணை போல் இனிய படப்படப்புடன்...தன் அறையில் காலடி எடுத்துவைத்தவளின் கால் தரையில் இல்லை...ஏனெனில் கிருஷ் அவளை அணைத்து தூக்கியிருந்தான்.

தூக்கியவாறு கதவை...ஒற்றை காலால் உதைத்து சாற்றிவிட்டு… அவளை கட்டிலில் விட்டான்…கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஒன்றரை வருட தாபத்தை தீர்த்து கொள்ள அவளின் மீது படர்ந்தான்.

அவர்களின் கூடல் முடிந்தவுடன்...கிருஷ் பிரிந்து தலையணையில் தன் தலை வைத்தவுடன்...ஶ்ரீநிதி அவன் தோள் வளைவில் முகத்தை வைத்து அவனிடம் “ஷிவ்...நான் ரொம்ப நாளாக உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்கிறேன்...நீங்க பிறகு பதில் சொல்லுறேன்னு... சொல்லி மழுப்பிட்டு இருக்கீங்க...இன்றைக்கு நீங்க சொல்லியே ஆகணும்” என்று கேட்டவளின் நெற்றியில் முத்தமிட்ட கிருஷ்,

“கேளுடி குண்டச்சி….!” என்று கூறி நெற்றியில் முட்டினான்.

“அத்தான்...நீங்க எப்படி முதலில் காதலை உணர்ந்தீங்க…??அதை முதலில் சொல்லுங்க…?மீரா அக்காவும் உங்களை காதலிச்சாங்க...அவங்க மேலே வராத காதல் என்மேலே எப்படி வந்துச்சு...அப்புறம் சொல்லுறேன்னு மழுப்பக்கூடாது…??” என்று கேட்டாள்.

கிருஷ் “மீரா பற்றி இப்போது எதுக்கும்மா...அவள் தான் கல்யாணமாகி...அமெரிக்காவில் செட்டிலாகிட்டாள்...அதனால் அவளைப் பற்றி இனிமே பேசாதே…!!” என்று கோபமாக பேசியவுடன் ஶ்ரீநிதி பயத்தில் மிரண்டு அவனிடமிருந்து தள்ள முயற்சித்தவளைத் தடுத்த கிருஷ்

“இது தான்...என்று அவளின் கண்களைக் காண்பித்து “நீ பயப்படும்போது...உன் மருண்ட விழிகளில் ஒரு அழகு தெரியும்..அதை முதல் முதலில் நீ பெரிய மனசியாகும் போது...என்னை பயந்து ஒரு பார்வை பார்த்தே...அதில் விழுந்தவன் தான் நான்…!அப்புறம் எழுந்திரிக்கவேயில்லை…!அது ஏன்னு இன்றுவரை எனக்கே புரியலை!அதைப்பார்ப்பதற்காகவே...பல நாள் உன்னை திட்டி இந்த விழிகளை ரசிப்பேன்!!!” என்று ரசித்து கூறியவனிடம்,

ஶ்ரீநிதி “அந்த நிமிடத்தில் நீங்க என்ன நினைச்சீங்க ஷிவ்….??” என்று கேட்டவளைப் பார்த்து மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்.

“ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல (ஆ)
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே

உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே

நெத்திப் பொட்டுத் தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே

மனம் புத்தித் தாவியே
தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹே ஹே.. ஏலே…" என்று தனது அனுபவித்து பாடியவனைப் பார்த்த ஶ்ரீநிதி...தன் மனதில் ‘அத்தான்...பத்து வருடங்களுக்கு மேலாக...என்னை மட்டுமே மனதில் சுமந்து… காதலித்து வந்தவர் நீங்கள்...அதுமட்டுமில்லாமல் நான் எத்தனை கஷ்டங்கள் உங்களுக்கு கொடுத்தும்...என்னை வெறுக்காமல்… எனக்காக காத்திருந்த உங்களின் அன்புக்கு... ஏற்றவள் நானா என்று தெரியவில்லை அத்தான்...ஆனால் ஒரு போதும்...உங்களை எந்த நேரத்திலும் பிரியமாட்டேன்...வாழ்க்கை முழுதும் உங்களுக்கு சந்தோஷம் மட்டுமே தருவேன் அத்தான்…!சாவுக்கூட எனக்கு தான் முதலில் வரணும் அத்தான்…!!!’ என்று நினைத்து ஆனந்த கண்ணீருடன் அவனை அணைத்து கொண்டாள் ஶ்ரீநிதி.

இவர்களின் வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்தி விடைப்பெறுவோம்.

———நிறைவுற்றது———

கருத்து திரி,

 
Last edited:
Status
Not open for further replies.
Top