வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில் கதைக்கான முன்னோட்டம்

Status
Not open for further replies.

Priyanka Muthukumar

Administrator
ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில் கதைக்கான முன்னோட்டங்கள் இங்கே பகிரப்படும்.
 

Priyanka Muthukumar

Administrator
டீசர்:

தொலைக்காட்சியை அணைத்துவிட்டு திரும்பியவள் இருக்கைக்கு பின்னால் வரவேற்பறையில் நடுநாயகமாக தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றிருந்த கணவனை சற்றும் எதிர்ப்பாராமல் பல ஆயிரம் மின்சாரம் ஒரு சேர தாக்கிய உணர்வில் 'ஆத்திஈஈஈ' என அதிர்ச்சியில் வாயில் கைவைத்து கொண்டாள்.

தொலைக்காட்சி முற்றிலும் அணைக்கப்பட்ட ஓசைக்கேட்டு தலையை உலுக்கி சிகையை அழுந்தக்கோதி சுய உணர்விற்கு வந்த துருவ்விற்கோ முட்டை கண்ணை விரித்து அவள் வாய்ப்பொத்தி நின்றிருந்த தோற்றம் கண்டு மற்றைய அனைத்து உணர்வுகளும் பின்னுக்கு தள்ளப்பட்டு அவனது முகத்தில் சிரிப்பை தோற்றுவித்தது.

ஆனாலும் அவளுடன் விளையாடி பார்க்கும் எண்ணம் தோன்றி புன்னகையை இதழோரக்கடையில் மறைத்து மனையாளை கோபத்தோடு பார்ப்பது போல் பார்த்தான்.

அதற்குள் நிகழ்காலத்திற்கு வந்த வடிவோ கைகள் கட்டி அவளை அழுத்தமாக பார்த்தப்படி நின்றிருந்த கணவனை கண்டு 'வடிவு அந்த ஆள் நிற்கறே தோணியே சரியில்லை…நீ மட்டும் மாமா கையில் கிடைச்சே மவளே இன்னைக்கு நீ ஊறுகாய் தான்…தப்பிச்சு ஓடிடு' என விழிகளால் தப்பிச்செல்லும் மார்க்கத்திற்கான சாத்தியக்கூறுகளை அவசரமாக அலசிக்கொண்டே கணவனை பார்க்க,அவனோ 'என்ன' என்பது போல் திமிராக ஒற்றை புருவம் உயர்த்தினான்.

அது உள்ளுக்குள் பீதியை படற விட விழிகள் இரண்டும் விரிய அதிவேகத்தில் துடித்த இதயத்துடன் 'ஹூஹூம்' என்னும் சத்தம் எழுப்பி மறுப்பாக தலையசைத்து ஓரடி பின்னால் வைத்தவளின் சிந்தையில் ஓடிய எண்ணத்தை சரியாக யூகித்த துருவ் கண்ணால் அவளை மேலிருந்து கீழாக பார்த்துக்கொண்டே அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்து 'நில்லுடீ' என நாசி விடைக்க நாக்கை கடித்து முறைத்தான்.

அவளோ மிரட்சியுடன் 'மாட்டேன்' என தலையசைத்து 'ஜூட்' என்னும் விதமாக வலதுப்புறமாக திரும்பி தன் அறையென்னும் இலக்கை அடைவதற்காக உணவு மேசையை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினாள்.

ஆனால் அவள் தோண்டிய புதைக்குழியில் தானே வழியச் சென்று மாட்டிக்கொண்டது போல் அவளின் ஒவ்வொரு அசைவையும் அவளது கண்கள் பயணிக்கும் திசை வழியே அறிந்த துருவ் "ஏய் நில்லுடீ" என உறுமி அவள் அறையினுள் நுழைவதற்கு முன்பே குறுக்கே தாவி பாய்ந்து தன்னவளை பிடித்துவிட்டான்.

பிடிப்பட்ட பயத்தில் அவசரமாக "ஐய்யோ…விடுங்க மாமா" என அலறியவளை விடாமல் பின்னாலிருந்து முன் பக்கமாக கையை செலுத்தி தன்னோடு சேர்த்து இறுக்கிய துருவ் அவளின் காதோரம் குனிந்து வெப்ப அனல் மூச்சுகள் கொண்டு செவியை சிவக்க வைத்தான்.

ஆனால் அவனது செயலுக்கும் வார்த்தைகளுக்கும் தொடர்பின்றி "எருமை மாடு தப்பு செய்திட்டு தப்பிச்சு ஓடலாம்னா பார்க்கிறே…அது என்கிட்ட முடியாதுடீ…இன்னைக்கு நீ பண்ண தப்புக்கு நான் தண்டனை கொடுத்தேயாகணும்" என சீண்டலான குரலில் கூறி அவளின் செவிமடலை நறுக்கென கடித்து எச்சில் செய்தான்.

அதில் "ஆ…ஐய்யோ…" என கூச்சலிட்டு தலையை உலுக்கி திமிறியவளை இரண்டு கையால் வளைத்து பிடித்து "சும்மா இருடீ" என வேட்கையுடன் கூறி தன்னோடு சேர்த்து இறுக்கினான் ஆடவன்.

அவளிடம் விளையாடி பார்க்கும் எண்ணத்தோடு தொடங்கிய அவனது ஆட்டம் எப்போது சூதாட்டமாக மாறியது என்றறியாத வகையில் அவளின் தேகத்தின் வெம்மையும் மேனியின் உரசலும் அவனுள்ளே தாபமென்னும் நெருப்பை கொளுந்துவிட்டு எரிய வைத்தது.

ஆனால் பாவையவளோ ஆண்மகனின் உணர்வுகள் அறியாமல் அவன் தந்த அந்த சுக வலியினால் குழந்தைத்தனமாக "மாமா…பிளீச்…என்னை விட்டுடு…இனிமேட்டுக்கு இப்படி செய்யமாட்டேன்" என அழுக்குரலில் உரைத்து அவனிடம் தப்பிக்க போராடியவளின் காதிலிருந்த ஜிமிக்கி அவளது அசைவிற்கு ஏற்ப கவிதையாய் அசைந்தாடியது.

அதனை ரசித்துக்கொண்டே வெப்பக்காற்று மூச்சுகளுடன் தன் நாவை கொண்டு ஜிமிக்கியை ஆட்டிக்கொண்டே "முடியாதுடீ…இன்னைக்கு நான் உன்னை சும்மா விடறதா இல்லை" என்றான் கிசுகிசுப்பாக.

அவளோ அவனது முன்றைய அணுகுமுறைகளை நினைவில் வைத்து 'இன்னைக்கு அடிச்சிடுவானோ?' என பயந்துப்போய் இருந்ததினால் அவனது செயலுக்கு பிண்ணனியில் இருக்கும் அர்த்தத்தை உணரவேயில்லை.

அதனால் விழிகள் இரண்டும் பீதியில் உறைய தன்னவனை பின்னால் திரும்பி பார்க்க முற்பட்டு "மாமா மன்னிச்சுகிடுங்க…ஏதோ தெரியாமல் பண்ணிட்டேன்" என இறைஞ்ச,

அவனோ அதற்கு மனமில்லாத கொடும் அரக்கனாக வசீகர முறுவலுடன் "ஆனால் நான் தெரிஞ்சே தான் தண்டனை கொடுக்கப்போறேன்" என்றவனின் இதழ்கள் தன்னை நோக்கி திரும்பியிருந்தவளின் ஆப்பிள் கன்னத்தில் மெதுவாக ஊர்வலம் சென்றது.

பாவையவளோ அவன் கூறியதில் வேறு விதமாக அர்த்தம் கொண்டு கன்னத்தை வெடுக்கென்று முன்புறம் திருப்பி இதழை பிதுக்கி "ஐய்யோ மாமா…அந்த மாதிரியெல்லாம் எதுவும் செய்திடாதே…வேணும்னா…நீ சொல்லறதையெல்லாம் நான் ஒண்ணு விடாமல் செய்யறேன்…என்னை விட்டுடு மாமா" என கெஞ்ச ஆரம்பித்தாள்‌.

ஆடவனோ அவள் முன்னால் முகத்தை திருப்பியதினால் தன்னுடைய இதழ் ஊர்வலம் தடைப்பட்ட கடுப்பில் படீரென்று மனையாளை தன்னை நோக்கி திருப்பி "உன்னை விடறத்துக்கா இவ்வளவு தூரம் இறுக்கி பிடிச்சிருக்கேன்…இன்னைக்கு உனக்கு தண்டனை கொடுக்காமல் நான் விடப்போவதில்லை" என்றான் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு.

'இன்னைக்கு நான் செத்தேன்…' என மரணத்திற்கு முன்பு தோன்றிய அச்சத்தோடு அவனை விழி பிதுங்கி மிரட்சியோடு பார்த்தவளை கண்டு உள்ளுக்குள் புன்னகை வெடித்துக்கொண்டு கிளம்பினாலும் வெளியே விறைப்புடன் "அதுமட்டுமில்லாமல் இன்னைக்கு உன் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவு புது விதமான தண்டனையை கொடுக்கப்போகிறேன்" என்றான் விஷமத்துடன் தன்னிதழ் கடித்து.

அவளோ அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் திகிலோடு 'ஏன்டா தப்பு செய்தோம்' என்ற அவஸ்தையோடு கூடவே அவளது இரத்தழுத்தம் பயத்தில் அதிகரிக்க மயங்கி விழும் நிலையில் இமை மூடிக்கொண்டு கீழே விழாமல் இருப்பதற்கு ஆதரவாக அவனது சட்டையின் கழுத்துப்பட்டையை இழுத்துப்பிடித்தாள்.

அதில் மேலும் அவளின் முகம் அருகே நெருங்கி வந்த துருவ் அவளின் மிரட்சியை ரசித்துக்கொண்டே அவளின் காதினோரம் குனிந்தவனின் தேகமெல்லாம் பரபரக்க "தண்டனையை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டவனிற்கு அவளது பதில் தேவையாய் இருக்கவில்லை போலும்.

அதனால் அவளின் புடவையின் வழியாக கையை உள் நுழைத்து வெற்றிடையை பிடித்து தன்னை நோக்கி மேலும் அழுத்திய ஆடவனின் முகம் மிரட்சியோடு விழி மூடியிருந்த புள்ளி மானின் வட்டவடிவ பிறைநிலவை நோக்கி வேட்டையாடும் சிங்கத்தின் வேட்கையோடு குனிந்தது.

முன்பு அந்த மூக்குத்தியை பார்த்து உணர்ச்சிகள் வடிந்தது என்று வெறுத்து அவளை ஒதுக்கியவன்,இன்று அவன் தனது முதல் அன்பு முத்தத்தை அவளின் அந்த அழகிய மூக்குத்திக்கு வழங்கினான்.

அவனது சூடான இதழ்முத்தம் தன் நாசியில் பதிந்ததில் அதன் ஈரத்தையும் அனல் காற்றையும் உணர்ந்து படக்கென்று விழித்திறந்து திருதிருவென முழித்தவளை கண்டு இதழோரம் தோன்றிய வசீகர புன்னகையுடன் 'என்ன' என்று புருவம் உயர்த்தி கண்சிமிட்டியவுடன் அவளது முகம் குப்பென்று சிவந்து விட்டது.

அவனை நேர்க்கொண்டு காண இயலாமல் உணர்ச்சி வசத்துடன் இதழ்கடித்து இமைத்தாழ்த்திய பாவையவளின் தாடையை பற்றி உயர்த்திய துருவ் கள்ளப்புன்னகையுடன் "நான் இன்னும் தண்டனையே கொடுக்க ஆரம்பிக்கலையேடீ" என கிறக்கமாக கூற,அவளின் அடிவயிற்றில் பட்டாம் பூச்சுகள் படபடப்பது போல் இருக்க,அந்த உணர்வுகளை ஏற்க இயலாமல் உணர்ச்சி பெருக்கில் மேனி நடுங்க அவனிடமிருந்து விலக முயன்றாள்.

அவளின் விலகலை அறிந்து முத்துபற்கள் தெரிய தலையசைத்து சிரித்தவனை தயக்கமாக ஏறிட்டவளை பார்த்து "என்கிட்டியிருந்து தப்ப முடியும்னு நினைக்கிறே?" என கேட்டுக்கொண்டே அவள் எதிர்ப்பாராத நேரத்தில் அவளின் இடையே பற்றி தன்னை நோக்கி இழுத்து கழுத்தில் முகம் புதைத்தான்.

அதில் ஒரு நொடி தேகம் தூக்கிவாரிப்போட திகைத்து "மாமா வேணாம்" என சத்தமாக வெளிவந்த அவளது குரல் அவனது நெருக்கத்தில் சிணுங்கலாகவே வந்தது.

அவன் இதழ்களோ கழுத்திலிருந்த படியே மேல் நோக்கி பயணித்து அவளது முகத்தில் முத்த ஊர்வலம் செல்ல ஆரம்பித்தது.

அதில் பெண்ணவள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்து சமநிலை அடைந்தவளின் மேனியெல்லாம் அவனது தீண்டலில் சூடேறி சிவக்க விழிகள் சொருக,உஷ்ண மூச்சுகளை வெளியிட்டு "மா..மா" என உணர்ச்சிகள் ஆர்ப்பரிக்க இதழ் பிளந்தவளின் கரங்கள் அவளையும் அறியாமல் மேலெழுந்து தன்னவனின் கழுத்தை கட்டிக்கொண்டது.

அதை அறிந்த ஆடவனின் இதழ்களில் வசீகர புன்முறுவல் தோன்றி அவளின் விழிகளை பார்த்துக்கொண்டே அவனை முத்தமிட அழைத்த செந்நிற ரோஜா இதழை அழுத்தமாக கவ்விக்கொண்டான்.

கருத்து திரி,

 

Priyanka Muthukumar

Administrator
டீசர்:


துருவ்வின் சந்தோஷங்கள் இன்றோடு பறிக்கப்படுவது போல் இவர்கள் செல்லும் அதே விழாவிற்கு வடிவாம்பாள் அணிந்திருந்த அதே வர்ண அழகிய வேலைப்பாடு கொண்ட சேலை உடுத்தி விழா நடக்கும் நட்சத்திர விடுதி வாசலில் காலடி எடுத்து வைத்தாள் ஒரு அழகிய தேவோலக மங்கை.
 

Priyanka Muthukumar

Administrator
ஹாய் டியர்ஸ்,

ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில் கதை டீசர்,

விருப்பமில்லாத திருமணம்,காதல்,நகைச்சுவை,குடும்பம் என அனைத்தும் கலந்த கலவை!!

"கெட்டிமேளம்…கெட்டிமேளம்" என புரோகிதர் ஒற்றை விரலசைத்து குரல் கொடுக்க,மங்கள வாத்தியங்கள் முழங்க சுற்றத்தாரின் ஆசிர்வாதத்தில் துருவ் அவளின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி தன்னில் சரிப்பாதியாக்கிக்கொண்டான்.

நாணை கர்வத்துடன் பூட்டிவிட்டு தன் இணையானவளின் முகத்தை பார்த்து ரசிப்பதற்காக புன்னகையுடன் திரும்பியவன்,அருகில் கருமை நிறத்தில் நெற்றியில் பெரிய வட்டவடிவ பொட்டு வைத்து மாங்காய் பிஞ்சு முக்குத்தி அணிந்து வெண்ணிற பற்கள் பளீச்சென ஒளிர 'ஈ' என்று இளித்த பெண்ணவளை கண்டு அதிர்ந்து "ஆஆஆஆஆ" என பயத்தில் அலறி பதறி எழுந்தான் துருவ் விக்ரமாதித்தன்.

கட்டிலில் எழுந்து அமர்ந்தவனின் முகங்மெங்கும் வியர்த்திருக்க,பதட்டத்தில் இருந்தவன் அப்போது தான் 'தாம் கண்டது கனவு' என்பதை உணர்ந்து ஆசுவாசமடைந்தவனின் நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பது போல் "மாமா என்னாச்சு??" என பதறியடித்துக்கொண்டு அந்த அறைக்குள் ஓடி வந்தாள் அவனது மனைவி வடிவாம்பாள்.

அதன்பிறகே தனக்கு நடந்தேறிய திருமண நிகழ்வு தினந்தோறும் கனவாக வந்திருக்கிறது என்பதை உணர்ந்த துருவ்வின் தேகமெங்கும் சிவந்து இறுக "ஏய் உன்னை யாரு என் ரூமுக்குள்ள வரச்சொன்னது?முதல்ல வெளிய போடீ" என பற்களை கடித்து துப்ப,

அதில் மேனி தூக்கிவாரிப்போட்டாலும் இயற்கையில் துணிச்சலான பெண் வடிவாம்பாள் என்பதால் "மாமா ஏதோ பயந்து கத்துனீங்கன்னு பாவம் பார்த்து வந்தால் ரொம்ப தான் சிலுப்புக்கிறீங்க?" என்று இடுப்பை சிலுப்பிக் கொள்ள,

வெகுண்டு கட்டிலிலிருந்து எழுந்து அவளின் கழுத்தை நெறிக்க சென்று இறுதியில் சுதாரித்து "ச்சை" என கரத்தை பின்னோக்கி இழுத்த துருவ் "ஆமாடீ…ஆமா உன்னை என்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டனோ அன்னைக்கு என் நிம்மதியெல்லாம் போயிடுச்சு…பட்டிக்காடு…பட்டிக்காடு" என அவளின் தலையில் தட்டி திட்டியவன்,அவள் "ஸ்ஆ" என வலியில் முகச்சுழித்தவளை கண்டுக்கொள்ளாமல்,

"உன்னை பார்த்தால் பதினெட்டு வயசு பொண்ணு மாதிரியா இருக்கு…நாற்பது வயசு ஆன்ட்டி மாதிரி பெரிய பொட்டு வைச்சு கண்டங்கி சிலைக்கட்டி மங்காத்தா மாதிரியே இருக்கே இடியட்…போயும் போயும் உன் கழுத்தில் தாலிக்கட்டினேன் பாரு என்னை செருப்பாலே அடிச்சிக்கணும்…சென்ட்டிமென்ட்டா அதையும் இதையும் பேசி உன்னை என் தலையில் கட்டி வைச்சிட்டாங்க…என் வாழ்க்கையிலிருந்து முதல்ல போய் தொலைடீ எருமை மாடு" என வாயிற்கு வந்தது போல் கண்டப்படி மனைவி என்று பாராமல் அவன் திட்டிக்கொண்டிருக்க,இவளோ முகம் சோர்ந்து அறையிலிருந்து வெளியேறியவுடன் இவனிற்கு தான் பேசியது அதிகப்படி என்றே தோன்றியது.

இப்போது அவளை திட்டிவிட்டு வருந்திக்கொண்டிருந்த வேளையில் வடிவு மீண்டும் அந்த அறையில் நுழைந்தாள்.

அவன் தவறை உணர்ந்து வருத்தத்தில் இருந்ததினால் அவளை நிதானமாக ஏறிட,அவளோ தன் முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்திருந்த பொருளை எடுத்து அவனிற்கு முன்பு நீட்டி "இந்தாங்க மாமா" என்றாள் அப்பாவியாக.

அவள் எடுத்துக்காட்டிய பொருளை கண்டு குழப்பமடைந்த துருவ் விக்ரம் "எதுக்குடீ இது?" என புருவம் சுருக்கி வினவ,

"இல்லை மாமா…என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு செருப்பாலே அடிச்சிக்கணும்னு சொன்னீங்களே…அதான் உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு நானே செருப்பு கொண்டு வந்திருக்கேன்…ஹூம் அடிச்சிக்கோங்க" என பாவமாக இமைக்கொட்டியப்படி பேசி அவனிடம் காலணியை நீட்டியவளை கண்டு ஒரு நொடி அதிர்ந்தவன்,சடுதியில் அவள் கூறிய சொற்களின் அர்த்தம் உணர்ந்து "ஏய்" என கர்ஜித்து அடிக்க கை ஓங்க,

"அய்யோ" என கண்களை மூடி அலறிய வடிவும் காலணியை கையில் எடுத்துக்கொண்டு "வேணாம் மாமா" என அங்கிருந்து ஓட,

"ஏய் நில்லுடீ" என துரத்திக்கொண்டு அவனும் அவளின் பின்னோடு கொலைவெறியோடு ஓடினான்.
 
Status
Not open for further replies.
Top