வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி - கதை திரி

Status
Not open for further replies.

GG writers

Moderator
கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி
 
"கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி❤️"




அத்தியாயம் 1



கரியபெருமாள்வலசை அழகான கிராம்

அந்த ஊரில் கோயில் கொண்டு இருக்கும் தெய்வத்தின் பெயரே ஊரின் பெயர் கரியபெருமாள்வலசை



வாங்க பிரண்ட்ஸ் நாமும் அந்த ஊரை சுற்றி பார்த்துட்டு வரலாம்.

சென்னையில் இருந்து 240 கிலோமீட்டர் பிரயாணம் செய்து வந்தாச்சு. பஸ்சவிட்டு இறங்கின, "வாவ்வ்... அப்படி தான் எல்லோரும் சொல்லுவாங்க ஏன்னா காதலன் படத்தில் பிரபு தேவா பாடுவார்",

"ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சு போச்சு டா" என்று பாடுவார்.

இப்ப சென்னை மட்டும் இல்லாமல் சென்னையை சுற்றி பல கிலோமீட்டர் தூரம் பசுமையே பார்க்கமுடியல அதுல என்ன மாதிரி ஆளுங்க மாடியில் பத்து இருபது தொட்டியில் செடி வைத்து மாடித்தோட்டம் வளர்த்தாதான் கொஞ்சம் பசுமையை பார்க்க முடியும். அந்த அளவு கட்டிடங்கள் நிறைந்து இருக்கு பசுமையே பார்க்க முடியலை.


அப்படிப்பட்ட ஊரில் இருந்து இந்த ஊருக்கு வந்தா கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயல்கள் காய்கறி தோட்டம், பழத்தோட்டம், தென்னை தோப்புகள் பூந்தோட்டம் பார்க்கும் போது "வாவ்வ்...." என்று சொல்லத்தான் செய்வாங்க.

ஊருக்குள்ள போக கொஞ்சதூரம் நடக்கனும். சென்னை மாதிரி பத்தடி நடக்கிறதுக்குள்ள பத்து ஆட்டோ வந்து "சவாரி போகனுமா" கேட்கமாட்டாங்க அதனால் நடந்துட்டே இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துட்டு போகலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் இந்த ஊர் இருக்கு அப்ப விதவிதமான மாம்பழ தோட்டங்களை பார்க்கலாம். நம்ப நவம்பர் மாதத்தில் போவதால் எல்லா மரங்களிலும் மாம்பழம் பார்க்க முடியாது சில மரங்களில் மட்டும் மாங்காய் காய்த்து தொங்கிக்கொண்டு இருக்கு.


மாங்காய் பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்குது ஊரை விட்டு போகும் போது சுட்டுட்டு போயிடலாம். அடுத்து முந்திரி தோட்டம் பழங்களை பறிச்சு நெருப்பில் சுட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும் கேள்வி பட்டு இருக்கேன் இதுவரை சாப்பிட்டது இல்லை அதையும் போகறதுக்குள்ள சாப்பிட்டு பார்த்திடலாம்.

தென்னை தோப்புகள், பப்பாளி, சீதாப்பழம், சப்போட்டா இன்னும் பல பழமரங்கள், காய்கறி தோட்டங்கள், நெல் வயல்கள், பூந்தோட்டம் ஊரை சுற்றி இருக்கு ஊர் ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்தாச்சு அதான் என்னென்ன இருக்கு என்று சுருக்கமாக சொல்லிவிட்டேன்.

ஊர் ஆரம்பம் ஆகும் இடத்தில் கரியபெருமாள் கோயில் இருக்கு, அரசர்கள் காலத்தில் கட்டிய கோயில் இது. பெருமாள் தன் இரு துணைவிகள் உடன் இருக்கிறார்.


கோயில் சுற்றி விட்டு வெளியே வந்த ஒரு பக்கம் பார்வதியம்மாள் திருமண மண்டபம் அதற்கு அடுத்த சில கட்டிடங்கள் இருந்தது அதையும் தாண்டி சென்றால் வீடுகள் வரிசையாக இருக்கின்றன.

இன்னொரு பக்கத்தில் இருபது தூண்கள் கொண்ட கல்தூண் மண்டபம் இருந்தது. அதற்கு அடுத்த பெரிய ஆலமரம் இருக்கு அந்த மரத்தை சுற்றி கல் மேடை அதில் ஐந்து பேர் உட்கார்ந்து இருந்தனர். நிறைய பேர் நின்னுட்டு இருக்காங்க அப்படின்னா நம்ப சினிமாவில் பார்க்கிற மாதிரி பஞ்சாயத்து நடக்குதே?

நான் இதுவரை பஞ்சாயத்து நடக்கிறதை நேரில் பார்த்தது இல்லை அதனால் வாங்க நம்ப போய் பார்க்கலாம்.

வயது முதிர்ந்த ஐந்து பேர் கல் மேடையில் அமர்ந்து இருந்தனர். அதில் நடுவில் அமர்ந்து இருப்பவர் தான் தலைவர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் அவ்வளவு கம்பீர தோற்றத்தில் எப்படியும் 70 வயது இருக்கும், இந்த வயதிலும் இப்படியிருந்தால் அவரின் இளமை காலத்தில் எப்படி இருந்திருப்பார்.

அவரைப்பற்றியும் அங்கு நடக்கும் பஞ்சாயத்து பற்றியும் யார்கிட்டையாவது கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இவ்வளவு கூட்டத்தில் யார்கிட்ட கேட்கலாம் என்று சுற்றி பார்த்திட்டு வந்தா அங்க ஒருத்தர் 45 வயது இருக்கும் நினைக்கிறேன். அவர் யார் பக்கத்தில் நின்னாலும் அவர் பக்கத்தில் இருப்பவங்க வேகமாக வேறு இடத்துக்கு போய்யிட்டு இருந்தாங்க.

என்னடா.... இது... அவரைப்பார்த்த அப்படி ஒன்றும் டெரர் பீஸ் மாதிரி தெரியவில்லை அப்பாவி போலத்தான் தெரியுது. எதுக்கு அவரைப் பார்த்து எல்லாம் தூரமாக போறாங்க என்று தெரிந்துகொள்ள பக்கத்தில் இருந்த தம்பியிடம்

"தம்பி அவரைப்பார்த்து ஏன் எல்லாரும் இப்படி தூரம் போறாங்க" என்று கேட்டேன்.

என்னை பார்த்து "ஊருக்கு புதுசா"

"ஆமாம் தம்பி"

"அவர் பேச ஆரம்பித்தா நிறுத்தவேமாட்டார் காதுல இரத்தம் வரும் அளவுக்கு பேசுவார். நிறைய பேர் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க அதனால் தப்பித்தவறி அவர் பக்கம் போகிடாதிங்க."

"அப்படியா தம்பி சரி எனக்கு இந்த ஊரைப்பத்தி சொல்லுங்களேன்."

"அக்கா இங்க முக்கியமான பஞ்சாயத்து நடக்க இருக்கு அதைவிட்டு இப்ப எதுவும் சொல்ல முடியாது பஞ்சாயத்து முடியட்டும் அதுக்கு அப்புறம் சொல்லுறேன்."

"சரி தம்பி"

உடனே தெரியலைனா நம்மளுக்கு தலை வெடித்துவிடும் என்ன பண்ணலாம், பேசாமல் அவர்கிட்டே போயி கேட்டுடலாம் அப்படி என்ன தான் அவரு பேசுறாருனு பாத்திடலாம்.

"அண்ணே வணக்கம்"

"வணக்கம் தங்கச்சி யாரு நீங்க?... இந்த ஊரில் உங்களை பார்த்தது போல தெரியலையே?.. ஊருக்கு புதுசா?... எந்த ஊரில் இருந்து வரிங்க?... எதுக்காக வந்து இருக்கிங்க?... இங்க உங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா?????........


(மைண்ட் வாய்ஸ்) "அடேய் இப்ப தெரியுது ஏன் எல்லாரும் ஓடுறாங்க என்று ஆரம்பமே கண்ண கட்டுதே பெருமாளே உன் ஊருக்கு வந்த இந்த பக்தைய காப்பாற்று."

"அண்ணே அண்ணே போதும் அண்ணே இவ்வளவு கேள்வி கேட்ட எப்படி பதில் சொல்லுறது, நான் வேற கொஞ்சம் ஞாபகம் மறதி ஆளுங்க அண்ணே, எல்லா கேள்விக்கும் மொத்தமா பதில் சொல்ல வராது அதனால் முதலில் என்ன பற்றி சொல்லிடுறேன். அப்புறம் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமல் விட்டு இருந்தா கேளுங்க அண்ணா.

"சரி தங்கச்சி உன்னை பற்றி சொல்லு"

"நான் சென்னையில் இருந்து வந்து இந்த ஊரைப்பத்தி தெரிந்துட்டு கதை எழுதலாம் வந்து இருக்கேன். இங்க எனக்கு யாரையும் தெரியாது, விசாரித்ததில் உங்களுக்கு தான் இந்த ஊரை பற்றி எல்லாம் தெரியும் சொன்னாங்க அண்ணே அதான் ஊரைப்பத்தி சொன்னிங்கனா நல்லா இருக்கும்."

" அப்படியா தங்கச்சி உனக்கு இந்த ஊரைப்பத்தி தெரியனும் அவ்வளவு தானே சொல்லிட்டா பேச்சு"


" கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு அணை தென்பெண்ணை ஆறு சேரும் இடமான பாவக்கல் ஊராட்சியில் அமைந்துள்ளது கரியபெருமாள்வலசை கிராமம். இங்க இருந்து ஊத்தங்கரை எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு."

" இங்க விவசாயம் தான் முக்கிய தொழில். இந்த பக்கம் எல்லா ஊரும் மலைப்பாங்கான ஊர், பக்கத்தில் தான் ஜவ்வாது மலைத்தொடர் இருக்கு பொருபாலான இடங்களில் பெரிய பெரிய பாறைகள் பார்க்கலாம். கொஞ்சம் வறண்ட பூமி தான். பாறைகள் நிறைந்த பூமியா இருக்கிறதால் பாறையில் மழை நீர் பூமியில் ஊராது கிணறு எடுத்தாலும் நீர் சுரக்கிறது கம்மிதான்."

"அதனால் இந்த பகுதியில் தென்னை, பழத்தோட்டம் தான் அதிகம், ஆரம்பத்தில் தான் தண்ணி கொடுக்கனும் மரம் வளர்ந்துட்டா தண்ணீர் அதிகம் தேவைப்படாது."

"ஆனால்... இப்ப நிறைய பூச்செடி தோட்டம், காய்கறி தோட்டம், நெல் வயல் கூட வர வழியில் பார்த்தேனே அண்ணனே"

"அதுவா தங்கச்சி பஞ்சாயத்து மேடையில் நடுவில் உட்கார்ந்து இருக்காரே எங்கய்யா அவரும் அவர் குடும்பம் தான் காரணம்"

"அவரா அண்ணே முதலில் பார்க்கும் போதே தெரிந்தது ராஜா மாதிரி கம்பீரமாக இருக்காருன்னு நினைச்சேன்."

" நீ நினைச்சது சரிதான் தங்கச்சி பரம்பரை பரம்பரையாக அவங்கதான் இந்த ஊர் பெரிய குடும்பம். அவர் குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும் நினைக்காமல் அந்த காலத்தில் இருந்தே நிறைய நல்லது பண்ணியிருக்கார்."

"தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் இருந்தவங்களுக்கு தன் சொந்த பணத்தில் அங்காங்கே கிணறு தோண்டினார். இவர் பிள்ளைகள் அதே தெரியுதே கல்யாண மண்டபம் அதை அவர்கள் தான் கட்டினாங்க."

எந்த விசேஷம் என்றாலும் இந்த காலி இடத்தில் தான் பண்ணனும், கல்யாணம் கோயிலுக்கு உள்ள பண்ணிட்டு இங்க பந்தி போடனும், அதுவே பெண் பிள்ளைகளுக்கு சடங்கு பண்ணனும் என்ற கோயில் உள்ள போகமுடியாது. காதுகுத்து வளைகாப்பு இப்படி விசேஷங்கள் மழை நாளில் இங்க வைக்கமுடியாது அதனால் இங்கிருந்து ஊத்தங்கரை போய் தான் மண்டபத்தில் செய்யனும்."

"அதனால் அய்யா பிள்ளைகள் இங்க மண்டபம் கட்டிக்கொடுத்து இருக்காங்க. இப்ப எல்லா விசேஷமும் இங்க தான் செய்கிறோம் மண்டபத்துக்கு வாடகை வாங்குறது இல்லை. இதுமட்டுமா இங்க விளையறதை ஊத்தங்கரை போய் தான் விற்றுவிட்டு வரனும் அதுக்கு இரண்டு டெம்போ வண்டி வாங்கிவிட்டாங்க வண்டிக்கு பெட்ரோல் செலவு மட்டும் எல்லோரும் பகிர்ந்துக்கனும் இப்படி எவ்வளவு சொல்லலாம்."

"இப்ப பேரப்பிள்ளைகள் அதுக்கு ஒரு படி மேலே போய் எவ்வளவு செய்து இருக்காங்க தெரியுமா?

"செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போட்டு மண்ணின் தன்மையை அழிச்சுட்டு இருந்தவங்களை இயற்கை உரங்களையும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி அதிக மகசூல் கிடைக்கும் என்று செய்து காட்டி மத்தவங்களையும் அந்த முறை செய்ய வைத்து இப்ப சுத்துபத்து எல்லா ஊர்களிலும் இயற்கை விவசாயம் பண்ண வச்சு இருக்கார். அதுமட்டும் இல்லாமல் இங்க விளையறதை இவங்களே வாங்கி மண்டபம் பக்கத்தில் இருக்கே அது அவங்களுதுதான் இங்க அதை சுத்தப்படுத்தி தரம் பிரித்து ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் வரைக்கும் இங்கிருந்துதான் போகுது, ஏன் இங்க விளையறதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுறாரு கண்ணன் ஐயா."

"வெயில் காலத்தில் விவசாயம் பண்ண தண்ணீர் பற்றாக்குறையை போக்க சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்து இருக்கார். மழை காலத்தில் மழைநீரை சேமிக்க நிறைய குளங்கள், குட்டைகள் உருவாக்கி இருக்கார்."

"இப்படி பலதும் இந்த ஊருக்கு எங்க பெரிய ஐயா குடும்பம் செய்துட்டு இருக்காங்க."

"உண்மையிலே இராஜா தான் அண்ணே உங்க பெரியய்யா. அப்புறம் கண்ணன் ஐயா என்று சொன்னிங்களே யார் அண்ணே அவரு?..."

"அவர் தான் எங்க சின்ன ஐயா அதே ஒசரமா பெரியய்யாவை உரிச்சு வச்ச மாதிரி இருக்கரே அவர் தான் கண்ணன் ஐயா."

" அண்ணே கொஞ்ச நேரத்திற்கு முன்னர்தான் நினைச்சேன் 70 வயசுல இப்படி இருக்கார் சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பார் என்று ஆனால் அவரையே சின்ன வயதில் பார்த்த மாதிரி இருக்கார்."

" எங்க பெரியய்யாவுக்கு 83 வயசு மூன்று வருஷத்துக்கு முன்னாடி 80 கல்யாணம் நடந்தது."

"உருவத்தில் மட்டும் இல்லை குணத்திலும் பெரியய்யா தான்."

"விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் தன் மக்களை பாதுகாத்தவன் அந்த கார்முகில் வர்ணன் கருநீல வண்ணன் கண்ணன்."

"அவனைப்போல் இந்த கண்ணனும் ஊரை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திட்டு இருக்கார்."

அந்த நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு கேட்க திரும்பி பார்த்த போது மூன்று பேர் காரில் இருந்து இறங்கி வந்தனர்.

"வா தங்கச்சி அந்த தடி தாண்டவராயன் குடும்பம் வந்திடுச்சு பஞ்சாயத்து ஆரம்பித்துவிடுவாங்க மிச்சத்தை பஞ்சாயத்து முடிந்ததும் பேசலாம்.

"சரி அண்ணனே"

"அப்புறம் தடி தாண்டவராயன் குடும்பம் சொன்னிங்களே யாரு அண்ணே அவங்க."

"அவங்களை பத்தி சொல்ல அவங்க ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை பஞ்சாயத்தை பார்த்தா உனக்கே தெரிந்திடும்."
 
அத்தியாயம் 2



அழகான விடியல் பொழுதில் சூரியனின் வரவினை அறிவுறுத்தும் பறவைகளின் கீச் கீச் ஒலிகள்.... சூரிய கதிர்கள் தன் மேல் பட்டு மலர துடிக்கும் பூக்களின் நறுமணம்.... ஆர்பறிக்கும் கடல் அலைகளின் ஓசை....

இவை அனைத்தையும் தன் அறை பால்கனியில் அமர்ந்து ரசித்து கொண்டு டீ அருந்திக்கொண்டு இருந்தாள் லத்திகா ஸ்ரீ.

கூந்தல் கலைந்து முகம் கழுவி சரியாக துடைக்காமல் விட்டதால் நெற்றி காதோரங்களில் முத்து முத்தாக நீர் திவலைகள். நீர் பட்டு முன் நெற்றி கூந்தல் நனைந்து நெற்றியில் ஒட்டி இருந்தது அவளை பேரழகியாக காட்டியது. வில் போன்று வலைந்த அடர்ந்த புருவங்கள் கூரான நாசி அதில் சிறிய ஒற்றை வெள்ளை வைரக்கல் மூக்குத்தி. எப்போதும் சிரிக்கும் அழகான சிவந்த உதடுகள்
தோள் வரை வெட்டப்பட்ட அடர்ந்த கூந்தல் தங்கத்தை குழைத்து பூசியது போன்ற மஞ்சள் நிறத்தழகி பிரம்மன் படைத்த பேரழகியவள். ஒல்லியான தேகம் ஐந்தடிக்கு மேல் உயரம் கொண்டு பார்ப்பவரை பொறாமை கொள்ளக்கூடிய அழகி அவள். தான் அழகி என்ற கர்வம் சிறிது இல்லாதவள். பழக இனிமையானவள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களிடம் தோழமையோடு பழகுபவள். தவறு செய்தவர்களை அவர்கள் எந்த சூழ்நிலையில் செய்தார்கள் என்று ஆய்ந்து தண்டடிக்கவே மன்னிக்கவே செய்வாள். இது அவளின் தந்தை அவளுக்கு சொல்லியது.

"பசிக்காக திருடுபவனுக்கு பகட்டுக்காக திருடுபவனுக்கு உள்ள வித்தியாசம்."


பசிக்காக திருடுபவனை மன்னித்து அவனுக்கு நல்வழி காட்டினால் திரும்ப தவறு செய்ய மாட்டான்.

ஆனால் பகட்டுக்காக திருடுபவனுக்கு மன்னிப்பு கொடுத்தால் அவன் திரும்ப வேறு வழியில் திருட முயற்சி செய்வான்.

எனவே ஆய்ந்து அறிந்தே
தண்டனை கொடுக்க வேண்டும் என்று தந்தை கூறியதை கடைபிடிப்பவள். ஆனால் இரண்டாம் முறை தவறு செய்யும் போது மன்னிப்பு என்பதே கிடையாது கண்டிப்பாக தண்டனை இருக்கும்.

தந்தை முத்துவேல், தாய் கண்மணி தம்பதிகளின் மூத்த பெண் லத்திகா ஸ்ரீ. தம்பி கார்த்திக் BE Civil Engineer நான்காவது ஆண்டு டெல்லியில் புகழ்பெற்ற கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் மாணவன்.


சூரியனின் வரவிற்க்காக அந்த அதிகாலை நேரத்தில் காத்திருக்க சட்டென்று வானிலை மாற்றம் அடைந்து கருமேகங்கள் சூழ்ந்து மழை தூறலாக வந்து போகப்போக வேகமாக பெய்யத்தொடங்கியது.

பால்கனி சுவர் பக்கம் வந்து மழை சாரலில் கை நீட்டினாள். கையில் மழை நீர்த்துளி பட்டதும் உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தது.

அவள் உதடுகள் தானாக பாடத்துவங்கின

"மேகம் கருக்குது"
"மின்னல் சிரிக்குது"
"சாரல் அடிக்குது"
"இதயம் பறக்குது"


"மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்குது என் மேனியில் ஆடிய மிச்சம் துளிகள் நதியாய் பேகிறதே"


இனிய குரலில் பாடி மழையை ரசித்துக்கொண்டு இருந்தவளை தாயின் குரல் கலைத்தது.

" லல்லு என்னடி மழையில் நனைந்துட்டு இருக்க உடம்புக்கு ஒத்துக்காம போகப்போது" என்று கூறி அவளை தன் பக்கமாக இழுத்து நிறுத்தினார்.

" அம்மா விடுமா எவ்வளவு ஜாலியா இருக்கு மழையில் நனைவது. சின்ன வயதில் தான் விடமாட்ட உடம்புக்கு ஆகாது என்று இப்பதான் நான் பெரிய பெண்ணு தானே எதுவும் ஆகாது அம்மா".

" மழைக்கு தெரியுமாடி சின்னவங்க பெரியவங்க என்று எந்த வயதிலும் மழையில் நனைந்தா உன் உடம்புக்கு ஒத்துக்காது. உடம்பு சரியில்லாமல் போனா என்னதான் படுத்தி எடுப்ப இன்னைக்கு வேற நீ உன் பிரண்ட்டு நித்தியா கல்யாணத்துக்கு ஊருக்கு போகனும் அதனால் மழையில் நனைய வேண்டாம்."

" அச்சச்சே மறந்தே போயிட்டேன் அம்மா இன்னும் மேரேஜிக்கு போடவேண்டிய டிரஸ் கூட எடுத்து வைக்கவில்லை. நல்ல வேளையாக ஞாபகம் செய்திங்க இரண்டு நாளாக நிறைய வேலையில் மறந்தே போயிட்டேன். வாங்க அம்மா எந்த டிரஸ் மேரேஜிக்கு போடுறது செலக்ட் பண்ணி தாங்க" என்று அம்மா கை பற்றி அறைக்குள் சென்றாள்.

"லல்லுமா நான் ஏற்கனவே எடுத்து வைத்து விட்டேன். " டவலை எடுத்து கொடுத்து முதலில் துடைத்துக்கே. நீ கடைசி நேரத்தில் டென்ஷன் ஆகி எதாவது விட்டு விடுவ அதனால் உனக்கு தேவையானதை நேத்தே எடுத்து வைத்து விட்டேன்."

"வாவ்வ்.... அம்மான அம்மா" தான் என்று கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

"சரி சரி போதும் நான் எடுத்து வைத்தது எல்லாம் சரியா இருக்கா பாரு, பார்த்திட்டா பெட்டியில் அடுக்கி வைச்சுடுறேன். அப்பா வேற உன்னை சீக்கிரம் கிளம்ப சொன்னார்."

"ஏம்மா அப்பா.... லஞ்ச் முடித்து தானே கிளம்ப சொன்னார் காரில் போகுறதால ஐந்து மணி நேரத்தில் போகலாம் என்றாரேமா இப்ப ஏம்மா சீக்கிரம் கிளம்ப சொல்லுறார்"

" அதுவா இரண்டு நாளா மழை இல்லாமல் இருந்தது ஆனா இப்ப திரும்ப மழை ஆரம்பித்து விட்டது. நவம்பர் மாதத்தில் எப்ப மழை வரும் என்று சொல்ல முடியாது இல்லையா. நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரில் எல்லாம் மழை பெய்யுதாம். காரில் வேகமாக போகமுடியாது. சீக்கிரம் கிளம்பினால் மத்தியமே திருவண்ணாமலை போகிடலாம்."


" நீ கோவிலுக்கு இன்னைக்கே
போயிட்டு வந்திட்டு அப்புறம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துட்டுட்டு நாளை காலை முகூர்த்தம் முடிந்ததும் பெங்களூர் கிளம்பினால் சரியா இருக்கும் என்று சொன்னார்."

" மழை அதிகமாக இருந்தா நின்னு நிதானமாக போக வசதியாக இருக்கும் என்றுதான் அப்பா சீக்கிரம் கிளம்ப சொன்னார்."

" சரிமா அப்படியே செய்கிறேன் நான் இப்போய் குளித்து விட்டு வரேன்."

" லல்லுமா கொஞ்சம் இரு நான் எடுத்து வைத்த டிரஸ், ஜூவல்ஸ் எல்லாம் ஓகே வா என்று பார்த்துவிட்டா பேக் பண்ணிடுவேன்."

" அம்மா நீங்க எல்லாம் சரியாதான் வச்சு இருப்பிங்க பேக் பண்ணிடுங்க."

" லல்லுமா நீ ஒரு முறை பார்த்திடு நான் எதாவது மிஸ் பண்ணியிருந்தா ஒரு முறை பார்க்கிறது நல்லது அதுமட்டும் இல்லாமல் எந்த நேரத்தில் எந்த டிரஸ் போடனும் என்று பார்த்துக்க வா" என்றார்.

அவளும் சரி என்று கட்டிலில் அமர்ந்தாள். கபோர்டில் தனியாக எடுத்து வைத்ததை கட்டிலில் வைக்க

" அம்மா என்ன இவ்வளவு டிரஸ் எடுத்து வைச்சு இருக்கிங்க"

" மழை டைமில் இரண்டு டிரஸ் அதிகமாக எடுத்துட்டு போகுறது நல்லதுடா." மயில் வண்ண பட்டு சுடிதார் கையில் எடுத்து காட்டி "இதை கோயிலுக்கு போகும் போது போட்டுக்க லல்லுமா"

"அம்மா சுடிதார் எதற்கு நான் ஜீன்ஸ் பேண்ட் குர்தா போட்டுட்டு போரேனே அது தான் எனக்கு கம்பர்ட்டபிளா இருக்கும்"

" கோயிலுக்கு போகும் போது பட்டு உடுத்திட்டு போறது நல்லது. மழை பெய்கிறதால சேலை கட்டிட்டு நடக்கிறது உனக்கு கஷ்டமாக இருக்கும் அதான் சுடிதார் போடச்சொல்லுறேன். இந்த டிரஸ்சுக்கு இந்த ஜுவல்ஸ் போட்டுக்க" என்று நகை பெட்டியை திறந்து காட்டினார். அதில் பச்சைக்கல் பதித்த கம்மல், செயின் வளையல் மோதிரம் இருந்தது.

அடுத்து லெஹங்கா ரிஷப்ஷன் டிரஸ் அதற்குரிய நகைகளை காட்ட

" அம்மா இந்த டிரஸ்சுக்கு இந்த ஜுவல்ஸ் வேண்டாம்."

" ஏன் லல்லு இந்த டிரஸ்சுக்கு இந்த ஜுவல்ஸ் போட்டா நல்லா இருக்கும்"

"இல்லமா நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் ஒரே மாதிரி போடனும் என்று தான் ரிஷப்ஷன் டிரஸ் ஒரே மாடலில் ரெடி பண்ணி இருக்கேம். அதே மாதிரி ஜுவல்ஸ்சும் இருக்கனும் கரிஷ்மா ஒரே மாதிரி அனுப்பி இருக்க" என்று எழுந்து சென்று எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்தாள்.

"ஏய் ரொம்ப நல்ல இருக்கு ஓரினல் ஜுவல்ஸ் மாதிரியே இருக்கு நான்கு பேருக்கும் ஒரே மாதிரியா வாங்கி இருக்காளா கரிஷ்மா."

" இது வாங்கியது இல்லை அம்மா கரிஷ்மா தங்கை ஆயிஷா போஷன் டிசைனர் அவதான் டிரஸ் ஜூவல்ஸ் எல்லாம் டிசைன் பண்ணி ரெடி பண்ணி எங்க நான்கு பேருக்கு கொடுத்து இருக்கா. இப்ப நாங்க மூன்று பேரும் போடமுடியும் நித்தியா கல்யாணப்பெண் என்பதால் போடமுடியாது. ரிஷப்ஷன் முடிந்ததும் நித்தியும் அந்த டிரஸ் போட்டு போட்டோ எடுக்க பிளான் பண்ணியிருக்கேம் டைம் கிடைக்குமா என்று தெரியவில்லை."

"ரொம்ப நல்லா இருக்கு சீக்கிரம் போனா ரிஷப்ஷனுக்கு ரெடி பண்ணுறதுக்கு முன்னாடி இந்த டிரஸ் போட்டு போட்டோ எடுக்கலாம் இல்லையா?..... "

" அப்படி தான் அம்மா நினைத்தோம் ஆனா கரிஷ்மாவுக்கு பிளைட் மதியம் தான் பெங்களூருக்கு கிடைத்து இருக்கு அங்கிருந்து திருவண்ணாமலை வர லேட்டாகிடும். வசுந்தராவுக்கு கொச்சியில் இருந்து மதியம் பெங்களூர் வந்து கரிஷ்மா வரும் வரை அங்கேயே இருந்து இருவரும் ஒன்றாக வருவதாக பிளான் பண்ணியிருக்காங்க அம்மா."

" சரி லல்லு டைம் ஆச்சு இந்த பட்டு சேலை காலையில் கட்டிக்க அதற்கான ஜுவல்ஸ் இதில் இருக்கு, இன்னொரு பட்டு சேலையும் இருக்கு அதுக்கும் இதே ஜுவல்ஸ் தான் அதனால் உனக்கு எந்த சேலை பிடிக்குதே அதை கட்டிக்க கல்யாணம் முடிந்து உடனே கிளம்பிடு அப்ப போட்டுக்க நீ எப்பவும் போடுற ஜீன்ஸ் குர்தா இதில் இரண்டு இருக்கு இன்னும் உனக்கு வேறு எதாவது வேண்டும் என்றால் சொல்லு எல்லாம் எடுத்து வைக்கிறேன் நீ போய் குளித்து விட்டு வா."

" அப்புறம் போன் லேப்டாப் சார்ஜர் எல்லாம் எடுத்து வச்சுக்க, மேக்கப் அயிட்டம் எல்லாம் இந்த பாக்ஸ்சில் இருக்கு அதில் எதாவது இல்லையா என்று ஒரு முறை பார்த்துக்க" என்று சொல்லிக்கொண்டு போக

" அம்மா போதும் நீங்க இது எல்லாம் பேக் பண்ணிடுங்க. ஏற்கனவே ஒரு நாளைக்கு இவ்வளவு எடுத்து வச்சு இருக்கிங்க இதுக்கு மேல எதுவும் வேண்டாம். நான் போய் குளித்து விட்டு வரேன், அப்பாகிட்ட வேற வேலை பற்றி பேசவேண்டியது இருக்கு" என்று கூறிக் கொண்டு குளியல் அறை புகுந்தாள்.

குளித்து முடித்து வெளியே வந்த போது தாய் அங்கு இல்லை. பெட்டியையும் எடுத்து சென்று இருந்தார்.

தலைமுடியை ஏர் டையர் மூலம் உலர்த்தி சென்டர் கிளிப் போட்டு முடியை விரித்து விட்டு எப்போதும் அணியும் கருப்பு நிற ஜீன்ஸ் சாம்பல் நிறத்தில் டாப்ஸ் அணிந்து இரு புருவ மத்தியில் சிறிய கருப்பு நிறத்தில் பொட்டு, கண்ணுக்கு ஐலைனர், லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்த உதடுகளுக்கு லிப் கிளாஸ், காதுகளில் சிறிய வைரக்கம்மல் கழுத்துஒட்டி சிறிய டாலர் வைத்த செயின் வலது கையில் பிரேசிலேட் இடது கையில் வாட்ச் அதுவே அவளை பேரழகியாக காட்டியது. இதுதான் அவளின் அன்றாட அலங்காரம் அதிக மேக்கப் அவளுக்கு பிடிக்காத ஒன்று இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சேப் மற்றும் அழகு சாதன பொருட்கள் மட்டுமே பயன்படுத்துவாள்.

தன் லேப்டாப், போன், சார்ஜர் சில பைல்கள் அனைத்து எடுத்து கொண்டு மாடியில் இருந்து இறங்கி வந்தாள் லத்திகா ஸ்ரீ.
 
அத்தியாயம் 3



சலசலத்துக்கொண்டு இருந்த கூட்டம் தொண்டை கணைப்பு சத்தம் கேட்டதும் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதியாகிவிட்டது.

சுற்றி ஓரு பார்வை பார்த்துவிட்டு "யாருப்பா பிராது கொடுத்தது?.." கம்பீரக்குரலில் கேட்டார் பெரியய்யா.

"ஐயா நான் தான் பிராது கொடுத்தது" என்று கை கூப்பி கும்பிட்டு கொண்டு முன்னால் வந்தார் 50 வயதான ஒருவர்.

"கந்தா நீதானா என்ன பிராது யார் மேல கொடுத்து இருக்க?"

"ஐயா தாண்டவராயன் ஐயா பேரன் ஷங்கர் தம்பி மேலையும் அவங்க தோட்டத்தில் வேலை செய்யும் குப்பன் மேலையும் பிராது கொடுத்து இருக்கேன். அவங்க நிலத்துக்கு பக்கத்துல இருக்கிற என் நிலத்தில் பூச்சி மருந்து அடிச்சு காய்கறி செடி எல்லாம் கருகி போச்சு ஐயா" என்றார் கந்தன்.

" யோவ் என் நிலத்தில் நான் பூச்சி மருந்து அடிச்சேன் அது எப்படி உன் நிலத்துக்கு வரும் அப்படியே காத்துல அந்தப்பக்கம் கொஞ்சம் வந்திருந்தாக்கூட என் நிலத்தில் எல்லா செடியும் நல்லா இருக்கும் போது உன் செடி எப்படி கருகி போயிருக்கும். ஒன்னு நீயே எதாவது பண்ணிட்டு என் மேல் பழி போடனும் இல்லை உனக்கு யாராவது சொல்லி கொடுத்து என் மேல் பழி போட்டு இருக்கே" என்று கண்ணனை பார்த்துக் கொண்டு சொன்னான் ஷங்கர்.

கண்ணன் கைமுஷ்டி இருக நின்று இருந்தான்.

மேடையில் அமர்ந்து இருந்தவரில் ஒருவர் "ஷங்கர் தம்பி பெரியய்யா இப்ப கந்தனைத்தான் கேட்டுட்டு இருக்கார். அவன் பேசிமுடித்ததும் உங்கிட்ட கேட்பார் அப்ப நீ பதில் சொன்னா போதும்."

"பெருசுங்க உங்களுக்குத்தான் வேலை வெட்டி இல்லாமல் மரத்தடியில் உட்கார்ந்து ஊர்கதை கேட்டுட்டு இருக்கிங்க. எங்களுக்கு ஊரப்பட்ட வேலையிருக்கு வா சித்தப்பா நம்ப போகலாம்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே நீண்ட கால்கள் அவன் வயிற்றை பதம்பார்த்தது.

ஒரு உதையில் "அம்மாமாமா...." வயிற்றை பிடித்துக்கொண்டு ஐந்து அடி தள்ளிப்போய் விழுந்தான்.

" எங்க வந்து என்ன பேச்சு பேசற... அன்னைக்கே நீ கையில் கிடைத்து இருந்தா இன்னேரம் ஆஸ்பத்திரியில் கை கால் கட்டு போட்டு படுத்து இருப்ப, எங்கையே போய் பத்து நாளா ஒளிந்து இருந்துட்டு இப்ப வந்து பேச்சா பேசுற, இங்க எல்லாரும் வெட்டியா உட்கார்த்துட்டு இருக்கேம் இவருதான் வெட்டி முறிக்கப் போறாரு, எம்எல்ஏ மாமன் கூட சேர்ந்து அடுத்து யார் குடியை கெடுக்கலாம் என்று பார்ப்பிங்க" என்று கூறிக் கொண்டு தன்னை நகரவிடாமல் பிடித்துக்கொண்டு இருந்த ஷங்கரின் சித்தப்பா முருகானந்தம் மற்றும் ஷங்கரின் தம்பி சரணையும் உதறிக்கொண்டு மீண்டும் ஒரு உதை அவன் காலில் விழுந்தது.

" அம்மாமாமா....." என்று மீண்டும் காலைபிடித்துக்கொண்டான். வலி மிகுந்த குரலில் "மாப்பிள்ளை வேண்டாம் நீ என் தங்கச்சி புருஷனாகப்போற என்றதால் தான் திருப்பி அடிக்காமல் இருக்கேன்."

அதுவரை அவன் செய்த செயலுக்கு தண்டிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தவன். இப்போது அவன் வார்த்தைகள் அவனை கொல்லும் அளவுக்கு கோபத்தை ஏற்படுத்த விடுவானா? ஷங்கரை புரட்டி எடுக்க ஆரம்பித்து விட்டான்.

அதுவரை நடப்பதை அந்த ஊர் மக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஏனெனில் ஷங்கர் செய்த செயல் அப்படி, இப்போது ஷங்கர் பேசிய வார்த்தைகள் கண்ணனை ருத்ர மூர்த்தியாக மாற்றி அவனை புரட்டி எடுத்துக் கொண்டு இருந்தான். இப்போது அவன் அருகில் செல்பவருக்கும் அடிவிழும் என்று யாரும் அருகில் சொல்லாமல் ஷங்கரை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அதில் கண்ணனின் நண்பன் வேல்முருகன் "மாப்பிள்ளைகளா உங்க அண்ணன் ஏற்கனவே அவன் மேல் கொலை வெறியில் பத்து நாளா சுத்திட்டு இருந்தான் இன்னைக்கு மாட்டிட்டான். கைகாலை உடைச்சு மட்டும் விட்டுவிடுவான் பார்த்தா இந்த ஷங்கர் பய வாயைமூடிட்டு இல்லாமல் அவனுக்கு பிடிக்காததை சொல்லி அவனே அவனுக்கு வாய்க்கரிசி போட்டுக்கிட்டானே."

"மாமா கொஞ்சம் வாயைமூடிட்டு இருக்கியா எவ்வளவு இன்ட்ரஸ்டா பார்த்துட்டு இருக்கேம் நீ டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கே?..."

"அடேய்... இங்க என்ன கபடி மேட்ச்சா நடந்துட்டு இருக்கு உங்க அண்ணன் ஒருத்தனை போட்டு புரட்டிட்டு இருக்கான் அதை தடுக்காமல் இப்படி என்ஜாய் பண்ணிட்டு இருக்கிங்க... "

" உங்க பிரண்டுதானே அவரு நீங்க போய் தடுக்கிறது?......"

"அடேய் என் கை கால் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?.. "

" உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா நாங்களும் அதனால் தான் பக்கத்துல போகாமல் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு இருக்கேம். அதுவும் இல்லாம அண்ணனை இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு."

" என்னடா சொல்லுறிங்க??.. "

" ஆமாம் மாமா நாலு மாசத்துக்கு முன்ன அந்த கருவாயன் கண்ணாயிரம் குடித்துவிட்டு வந்து அவன் பொண்டாட்டியை அடிச்ச அன்னைக்கு அவனை புரட்டி எடுத்ததை பார்த்தேம் அதுக்கு அப்புறம் இன்னைக்கு தான் பார்க்கிறேம்."

"அட கொலைகாரப்பயலுகளா அன்னைக்கு அடிவாங்கினவன் நாலு நாளைக்கு முன்னாடி தான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தான் அதுவும் நடக்கமுடியாம இரண்டு பேர் தூக்கிட்டு வந்தானுங்க அவன் நடக்க இன்னும் ஒரு வருஷம் ஆகும் என்று சொல்லுறாங்க."

"இப்ப இவன் உசுர எடுத்துட்டு தான் விடுவான் போல நீங்க தான் இப்படியின் பார்த்தா அங்க பாரு உங்க தாத்தா மீசையை முறுக்கிட்டு உட்கார்ந்து ரசிச்சிட்டு இருக்கார்."

ஆம் பஞ்சாயத்து மேடையில் அமர்ந்து இருந்த பெரியய்யா என்று எல்லோராலும் அழைக்கப்படும் திருஞானவேந்தன் ஐயா தன் பேரனின் ருத்ர தாண்டவத்தை ரசிச்சிட்டு இருந்தார்.

அடித்தது போதும் என்று நினைத்த திருஞானவேந்தன் ஐயா தன் கம்பீரக்குரலில் "கண்ணா" என்றதும் அதுவரை ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தவன் அடிப்பதை நிறுத்தி விட்டு தன் நண்பனின் பக்கத்தில் எதுவுமே நடவாதது போல வந்து நின்றான்.

அதுவரை அங்கு நடப்பதை பார்த்து விட்டு "என்ன அண்ணே நடக்குது இவ்வளவு நேரம் ஒருத்தனை உயிர் போகும் அளவுக்கு அடிச்சாரு உங்க சின்ன ஐயா யாரும் ஒரு வார்த்தை பேசவும் இல்லை தடுக்கவும் இல்லை, பெரியய்யாவும் இவ்வளவு நேரம் அமைதியாக பார்த்துட்டு இருந்தாங்க. இப்ப அவரு ஒர் குரல் கொடுத்ததும் எதுவுமே நடக்காதது போல நிக்கிறாரு சின்ன ஐயா?... "

"அதுவா தங்கச்சி அவன் தாத்தா, அப்பன், மாமன் பண்ணதுக்கு தான் இந்த அடி உதை இப்படி ஒரு நாளுக்காக ரொம்ப வருஷமா காத்திட்டு இருக்காரு சின்ன ஐயா."

"அப்படி என்ன அண்ணே பண்ணாங்க அவங்க?..."

"ஒன்னா ரொண்டா அவங்க பண்ணது இவனுங்க நிறைய பேரை மிரட்டி அடிச்சு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிடுவாங்க. இவன் மாமன் வேற எம்எல்ஏ வாக இருக்கான் அதை வைத்து இவனுங்க அக்கிரமம் பண்ணிட்டு இருக்கானுங்க."

"கொஞ்ச நாளா கந்தனை மிரட்டிட்டு இருந்தானுங்க. சின்ன ஐயா நான் பார்த்துகிறேன் இதுக்கு பிறகு எதாவது பேசினா எனக்கு சொல்லு என்று சொல்லி இருந்தார். அது தெரிந்ததால் மிரட்டிறதை விட்டுட்டு யாருக்கும் தெரியாமல் இராத்திரி 11 மணிக்கு மேல் கந்தன் வயலில் அதிக அளவில் பூச்சி மருந்தை தெளிச்சு விட்டுட்டாங்க."

" அடப்பாவிகளா இவனுங்க ஆசைக்கு விளையுற நிலத்தையா அழிப்பானுங்க அண்ணே?..."

"ஊரைச் சுற்றி பார்க்க வந்த உனக்கே இப்படி இருக்கும் போது விவசாயம் செய்யும் நிலத்தை தெய்வமாக நினைக்கும் எங்களுக்கு எப்படி இருக்கும் தங்கச்சி?.."

"சின்ன ஐயா பண்ணது தப்பே இல்லை அண்ணே."

"அண்ணே அது யாரு அந்த ஷங்கர் கூட இருக்கிறவங்க அவனை அப்படியே விடாமல் அவனை தூக்கி உட்கார வைத்து தண்ணீர் கொடுக்கிறாங்க."

"அதுவா தங்கச்சி அவன் சித்தப்பா முருகானந்தம் அவன் தம்பி சரண்."

"அவங்க கூட ஒரு வார்த்தை அவனுக்காக பேசவில்லையே அண்ணே."

"அவங்க இவனைப் போல இல்லை ரொம்ப நல்லவங்க. அதான் அவன் செய்ததற்கு இது தேவை என்று அமைதியா இருக்காங்க."

அந்த நேரத்தில் மீண்டும் பெரியய்யா தன் தொண்டையை செரும அனைவரும் அமைதி ஆகினர்.

"கந்தா அவன் தான் உன் நிலத்தில் பூச்சி மருந்து அடித்தான் என்று உனக்கு எப்படி தெரியும்?.."

"நேரில் பார்த்த சாட்சிகள் இருக்காங்க ஐயா... "

அதுவரை ஊராரின் முன்பு தன்னை அடித்தவனை திருப்பி அடிக்கமுடியாமல் அடி உதை வாங்கி உடல் முழுவதும் உள்காயங்கள் பட்டு அமர்ந்து இருந்தவன் சாட்சி இருக்கிறது என்றது விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தான் ஷங்கர்.

யாருக்கும் தெரியாமல் நடு இரவில் தானும் வேலை ஆள் ஒருவனை அழைத்து சென்று செய்ததை யாரும் பார்த்து இருக்கமாட்டார்கள் என்று நினைத்து இருந்தான். ஆனால் இருவர் முன் வந்து நின்றனர்.

"என்னப்பா பார்த்திங்க அந்த நேரத்தில் நீங்க எங்க அங்க போனிங்க?."

"ஐயா கந்தன் அண்ணன் நிலத்திற்கு அடுத்த நிலம் எங்களது நானும் என் தம்பியும் குடும்பத்தோடு எங்க நிலத்திலே தான் வீடு கட்டி இருக்கேம்."

"அன்னைக்கு ராத்திரி தம்பிக்கு வயிறு சரியில்லை என்று தூக்கம் வராமல் உட்கார்ந்து இருந்தான். என் மனைவி கசாயம் வைத்து கொடுத்தா, அதை குடித்துவிட்டு வாசலில் உட்கார்ந்து பேசிட்டு இருந்தேம் கொஞ்ச நேரம் கழித்து தம்பி கால்வாய்க்கறைக்கு போயிட்டு வரலாம் என்று கூப்பிட்டான்."

"இரண்டு பேரும் போனோம் என் நிலத்துக்கும் கந்தன் அண்ணன் நிலத்துக்கும் நடுவில் தான் கால்வாய் போகுது.."

"நாங்க போன கொஞ்ச நேரத்திலே கந்தன் அண்ணன் நிலத்தில் வெளிச்சம் தெரிந்தது என்ன என்று பார்க்கும் போது இரண்டு பேர் பெரிய டார்ச் லைட் அடித்துக்கொண்டு வந்திட்டு இருந்தாங்க யாருன்னு பார்த்தா ஷங்கரும் அந்த குப்பனும். "

கந்தன் அண்ணன் நிலத்தில் இவங்களுக்கு என்ன வேலை என்று நினைத்தேன். அப்ப தம்பி தான் "அண்ணா இவனுங்க என்னவே பண்ணப்போறாங்க நம்மால் கால்வாய் நிறைய தண்ணீர் போவதால் அந்த பக்கம் போகமுடியாது அதனால் இவங்க செய்யறதை எல்லாருக்கும் சாட்சியோட காட்ட வழியிருக்கு."

"நீ என்னடா சொல்லுற எனக்கு புரியவில்லை."

"அண்ணா உன் கையில் போன் இருக்கு அதில் படம் எப்படி எடுக்க வேண்டும் என்று நம்ம சின்ன ஐயா சொல்லி இருக்கார் இல்லையா அதை இப்ப செய், நானும் என் போனில் படம் எடுத்து சின்ன ஐயாவுக்கு அனுப்பலாம்."

" அதே மாதிரி இரண்டு பேரும் படம் எடுத்து சின்ன ஐயாவுக்கு அனுப்பி வைத்தேம் ஐயா. இந்த படம் பார்த்தா உங்களுக்கே தெரியும்" என்று தன் போனை பெரியய்யா இடம் கொடுக்க அதனை வாங்கி அவரும் அவரின் அருகில் அமர்ந்து இருந்தவர்களும் பார்த்தனர்.

அதில் ஷங்கரும் குப்பனும் நடந்து வந்து ஓர் இடத்தில் தன் கையில் இருந்த பூச்சி மருந்து தெளிப்பானை கீழே வைத்து விட்டு துணியை தன் முகத்தில் கண் மட்டும் தெரியும் படி கட்டிக்கொண்டு பூச்சி மருந்து தெளிப்பானை முதுகில் மாட்டிக் கொண்டு குப்பன் செடிகளுக்கு தெளித்தான் ஷங்கர் தள்ளி நின்று அங்க அடி இங்கு அடி என்று சொன்னது போனில் மெதுவாக கேட்டது.

முழுவதும் பார்த்து விட்டு அதை ஷங்கர் அவன் சித்தப்பா மற்றும் தம்பியிடமும் காட்டினர் அதில் அனைத்தும் தெளிவாக இருந்தது.

ஷங்கரின் சித்தப்பா முருகானந்தம் அவனை முறைக்க ஷங்கர் தலை குனிந்து கொண்டான்.

 
அத்தியாயம் 4



"நீ இப்படி ஒரு செயலை செய்து இருப்ப என்று நான் நினைக்கவில்லை நீ அவங்க வாரிசு என்று நிருபித்துவிட்ட யாரையாவது மிரட்டி இருப்ப அதுக்கு தான் பஞ்சாயத்து வரசொல்லுறாங்க என்று தான் நீ வரமாட்டேன் என்று சொல்லியும் உன்னை கூப்பிட்டு வந்தேன் ஆனால் நீ என்ன பண்ணியிருக்க தெய்வமாக நினைக்கும் நிலத்தை அழிச்சு இருக்க இதுக்கு உனக்கு கண்டிப்பா தண்டனை கொடுக்கனும்."

"இந்த வீடியோவை வைத்து உன்னை ஜெயிலில் போட்டு இருக்கலாம் ஆனால் அவங்க நீ செய்த தவறுகளை திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் கொடுக்கறாங்க, அதனால் இங்க கொடுக்கிற தண்டனை ஏற்றுக்கொண்டு இனிமே இப்படி செய்யமாட்டேன் என்று மன்னிப்புக்கேள்."

" சித்தப்பா...." என்றான் மெல்லிய குரலில்

"இந்த சித்தப்பா மேல் உனக்கு உண்மையான பாசம் இருந்தா நான் சொல்லுறதை கேள் ஷங்கர், உன் தாத்தா அப்பா மாமன் பேச்சு கேட்டா இப்படி தான் ஊரார்கிட்ட அசிங்கப்படனும் அவங்க பண்ணுற பாவத்திற்கு என் வாழ்க்கை பலியானது போதும், உங்க மூன்று பேர் வாழ்க்கை நல்லா அமையனும்."

"உன் தங்கச்சி காவியா இந்த கண்ணன் மேல் உயிரா இருக்கா அவள் ஆசையை உன்னால் நிறைவேற்ற முடியுமா? இப்படி ஊரை ஏமாற்றி செத்து சேர்த்து என்ன பிரியேஜனம்."

"நீ ரொம்ப வருஷமா வெளியூரில் இருந்து படித்து முடித்து வந்து இருக்க இந்த ஊர்பத்தி உனக்கு எதுவும் தெரியாது, உன் மாமன் தான் உன்னை தூண்டி விட்டு செய்ய வைத்து இருக்கான். ஆனால் அவன் மாட்டவில்லை நீ தான் இங்க மாட்டியிருக்க, தெய்வமாக நினைக்கும் நிலத்தை இப்படி பாழ்படுத்தி இருக்க.."

" இந்த ஊரே உன் மேல் கொலைவெறியில் இருக்கு உன் தாத்தா அப்பா மாமா எல்லாம் இதுவரை செய்ததற்கு எந்த சாட்சி இல்லாமல் செய்துட்டு இருக்காங்க, ஆனா நீ செய்ததற்கு சாட்சி இருக்கு இப்ப நீ உன் தவறை உணர்ந்து திருந்தினால் உண்டு. இல்லை என்றால் உனக்கு என்ன மாதிரி தண்டனை தருவாங்க என்று சொல்ல முடியாது அதுக்கு பிறகு நீ ஊர் எல்லையைக்கூட தொடமுடியாது இனி நீ தான் முடிவு செய்ய வேண்டும்" என்று மெல்லிய குரலில் இதுவரை ஷங்கரிடம் பேசிக்கொண்டு இருந்தவர் அவனை விட்டு தள்ளி சென்றார்.

அந்த வீடியோவை பார்த்து விட்டு தலைவர் குழு ஐவரும் கலந்துரையாடல் செய்து கொண்டுயிருந்தனர். ஊர் மக்களும் அந்த வீடியோவை பார்த்து விட்டு ஷங்கரின் மீது கொலைவெறி கொண்டிருந்தனர். பஞ்சாயத்து குழுவின் தீர்ப்புக்காக காத்துயிருந்தனர்.

தன் சித்தப்பா கூறியவற்றை மனதில் ஓட்டிய ஷங்கருக்கு தன் தவறு புரிந்தது. அந்த வீடியோவை வைத்து தன்னை என்ன வேண்டும் என்றாலும் செய்யக்கூடும் தன் எதிர்காலமே கூட பாதிக்கப்படலாம் இது நடந்து பத்து நாட்கள் ஆகிறது அப்போதே அதை வைத்து என் மீது நடவடிக்கை எடுத்து இருக்கலாம், ஆனால் அதை எதுவும் செய்யவில்லை. அப்படி என்றால் என் தவறை உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறார்கள் என்று சித்தப்பா சொல்வது உண்மையா?...

மாமா சொல்லி தான் இதை செய்தேன் ஆனால் இங்கு நான் தான் மாட்டிக்கொண்டேன். அவரிடம் பஞ்சாயத்துக்கு அழைத்தபோது எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்று நழுவவிட்டார். சித்தப்பா அவரைப் பற்றி இதற்கு முன்பு சொன்னவைகளை நம்பவில்லை இப்போது தெரிகிறது என்று சிந்தனையில் இருந்தவனை அந்த குரல் கலைத்தது.

மீண்டும் பஞ்சாயத்து ஆரம்பிக்கும் அறிகுறியாக கல் மேடையில் அமர்ந்து ஐவரில் ஒருவர்

"எல்லாரும் அமைதியாகுங்கப்பா" என்று குரல் கொடுக்க அதுவரை பேசிக்கொண்டு இருந்த மக்கள் அமைதியாகினர்.

ஷங்கரின் சித்தப்பாவை பார்த்து "முருகானந்தம் நீயும் அந்த படத்தை பார்த்துயிருப்ப நீயே சொல்லு உன் அண்ணன் பையன் செய்த காரியத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?... "

" ஐயா அவன் சின்னப்பையன் இவ்வளவு வருஷமா வெளியூரில் படித்துவிட்டு இப்ப தான் வந்தான். அவனா இதை பண்ணவில்லை அவனை தூண்டி விட்டு செய்து இருக்காங்க."

"அவனுக்கு கொடுக்கும் தண்டனை எனக்கு கொடுங்கய்யா நான் ஏத்துக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது "சித்தப்பா நான் செய்த தப்புக்கு நீங்க ஏன் தண்டனை அனுபவிக்கனும்" என்று சித்தப்பாவிடம் கூறியவன்,

பஞ்சாயத்து தலைவர்களை நோக்கி தன் கரம் குவித்து "ஐயா எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் நான் தான் தப்பு செய்தது எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்" என்றான்.

மேலும் கந்தன் அருகில் சென்று" மன்னிச்சுடுங்க ஐயா" என்று அவரை பார்த்து கைகூப்பினான். "சித்தப்பா சொன்ன பிறகு தான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கேன் தெரியுது. நானே உங்க நிலத்தை சரி செய்து கொடுத்து விடுகிறேன்" என்றான் ஷங்கர்.

கந்தன் என்ன சொல்வது என்று தெரியாமல் பெரியய்யாவை பார்க்க அவர் தலையசைத்து நான் பார்த்துகொள்கிறேன் என்று கண்ஜாடை செய்து அருகில் அழைத்தார்.

ஐவர் குழுவும் கந்தனிடம் சில கேள்விகள் கேட்க கந்தனும் அதற்கு பதில் கொடுக்க இறுதியாக தங்கள் முடிவை கந்தனிடம் சொல்லி சம்மதமா என்று கேட்க கந்தனும் சம்மதம் தெரிவித்தார்.

தன் சிம்மக்குரலை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார் பெரியய்யா.

"இந்த பஞ்சாயத்து எதற்காக என்று எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் கந்தன் நிலத்தில் ஷங்கரும் குப்பனும் பூச்சி மருந்து அதிகமாக தெளிச்சதால் செடி எல்லாம் பட்டு பேச்சு, அந்த நிலத்தில் வரும் வருமானத்தை வைத்து தான் அவன் குடும்பம் நடக்குது அதுவும் இல்லாமல் அவன் இரண்டு பெண்ணுக்கும் கடன் வாங்கி தான் கல்யாணம் செய்து இருக்கான் இன்னும் கடன் கட்டிட்டு தான் இருக்கான்.."

"இப்ப நிலம் பாழ் ஆனதோட அவன் வருமானமும் நின்னு பேச்சு. நிலத்தை சரி பண்ணி திரும்ப விதைச்சு அறுவடை பண்ண இரண்டு மாதமாகும்."

"இப்ப நிலத்தை சீர் மட்டும் தான் பண்ணமுடியும் அதையும் கண்ணன் சரி பண்ணி தந்துவிட்டதா கந்தன் சொல்லுறான். ஆனால் இப்ப விதைக்க முடியாது மழையில் முளைக்காது தை மாதம் விதைக்க முடியும் அதுக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கு மொத்தத்தில் நான்கு மாதங்கள் கந்தனுக்கு வருமானம் இல்லை கடனையும் கட்ட முடியாது."

"ஷங்கர் இந்த ஊரில் பிறந்து இருந்தாலும் படிக்க சின்ன வயதிலேயே தாய்மாமன் வீட்டுக்கு போய் இப்ப இரண்டு மாசத்துக்கு முன்பு தான் இங்க வந்ததால் நம்ப ஊரப்பற்றியும் விவசாயத்தை பற்றியும் எதுவும் தெரியாது வேறு ஒருவரின் தூண்டுதலில் தான் இந்த தப்பை பண்ணியிருக்கான் என்று அவனுடைய சித்தப்பா சொல்லுறார்.."

" அப்படி வேறு ஒருவரின் தூண்டுதலில் செய்தாலும் அதற்கு ஆதாரம் இல்லை ஷங்கரும் குப்பனும் செய்ததற்குத்தான் ஆதாரம் இருக்கு. இந்த ஆதாரம் தான் செல்லும் தூண்டினவங்க சுலபமாக தப்பித்தாச்சு அவங்களுக்கு ஆதாரம் இல்லாமல் தண்டனை கொடுக்க முடியாது."

"குப்பன் இந்த ஊர்க்காரன் அவனுக்கு நம்ம ஊர் பற்றியும் விவசாயம் பற்றியும் தெரியும் எல்லாம் தெரிந்தும் தப்பு செய்து இருக்கான். பஞ்சாயத்து கூடுறதை பற்றி தெரிந்ததும் மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு ஊரைவிட்டே ஓடிட்டான். "

"ஷங்கரும் தூண்டுதலில் தான் செய்ததாகவும் தான் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கந்தனுக்கு நிலத்தை சரி செய்து கொடுப்பதாக சொல்லி இருக்கான். "

"இந்த பஞ்சாயத்தோட தீர்ப்பு என்ன என்றால் ஷங்கர் மன்னிப்பு கேட்டு நஷ்ட ஈடு கொடுப்பதாக சொன்னதால் ஷங்கரை இந்த ஒரு முறை மன்னித்து இனி எந்த தப்பும் செய்யக்கூடாது என்று கண்டித்தும் கந்தனுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் இரண்டு இலட்சம் கொடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து முடிவு செய்து உள்ளது."

"இந்த தீர்ப்பு கந்தா உனக்கு முழு சம்மதமா" என்று கந்தனிடம் பெரியய்யா கேட்க.

"முழு சம்மதம் ஐயா" என்றார் கந்தன்.

"இங்க இருக்கிற யாருக்காவது இந்த தீர்ப்பில் ஆட்சேபனை இருக்கா" என்று கேட்டார் பெரியய்யா.

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

"சரிப்பா யாரும் ஆட்சேபனை பண்ணவில்லை."

" ஷங்கர் உனக்கு நஷ்ட ஈடு கொடுக்க சம்மதமா" என்று கேட்டார்.

" ஐயா சம்மதம் இப்பவே பணம் கொடுத்துவிடுகிறேன்" என்று சொல்லினான் ஷங்கர்.

பின்பு தன் தம்பி சரணின் காதில் எதுவே சொல்ல அவன் வேகமாக காருக்குள் இருந்து சிறிய பை எடுத்து வந்து ஷங்கரிடம் கொடுக்க அதிலிருந்து ஐந்து ஐநூறு ரூபாய் கட்டுக்களை எடுத்து கொண்டு பெரியய்யா கையில் கொடுத்தான்.

அதை பார்த்து "இரண்டரை லட்சம் இருக்கே ஷங்கர்" என்றார் பெரியய்யா.

"ஆமாம் ஐயா என்னிடம் அவ்வளவு தான் பணம் இருக்கு இன்னும் இருந்தால் கொடுத்து இருப்பேன். இது என் தாய் மாமா நான் ஊரில் இருந்து வரும்போது எனக்கு கொடுத்தது. சித்தப்பா சொன்ன பிறகு தான் தெரிந்தது நான் எவ்வளவு பெரிய பாவம் பண்ணி இருக்கேன் என்று அதற்கு நீங்கள் என்னை தண்டிக்காமல் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து இருக்கிங்க இனிமேல் கண்டிப்பா இந்த மாதிரி தவறுகளை செய்யமாட்டேன்.. "

பெரியய்யா கந்தனிடம் அந்த பணத்தை கொடுக்க கந்தனும் பஞ்சாயத்துக்கு நன்றி சொல்லி பணத்தை வாங்கிக்கொண்டார்.

மீண்டும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு தன் சித்தப்பா அருகில் சென்று சித்தப்பா என்றதும் அவர் அவனை கட்டிக்கொண்டார்.

" சித்தப்பா என்னை மன்னித்து விடுங்கள் இனிமே எந்த தப்பும் பண்ணமாட்டான்" என்றான்.

அவருக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது எங்கே அவனும் தவறான வழியில் சென்று விடுவானே என்று ஆனால் ஷங்கர் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டதோடு நஷ்ட ஈடாக அதிகமாக பணம் அதுவும் தாத்தா அப்பா, மாமா பணத்தை கொடுக்காமல் தாய்மாமன் செலவுக்கு கொடுத்த பணத்தை கொடுத்த போதே இனி தவறான வழியில் செல்லமாட்டான் என்று நம்பிக்கை வந்திருந்தது.

அவனை தட்டிக்கொடுத்துவிட்டு பஞ்சாயத்து தலைவர்களுக்கு நன்றி கூறி அண்ணன் மகன்களை அழைத்து சென்றுவிட்டார்.

பஞ்சாயத்து பார்க்க வந்தவர்களும் கலைந்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதுவரை கருத்தமேகங்கள் பஞ்சாயத்து பார்ப்பதற்காக தன் வேலையை நிறுத்தியிருக்க இப்போது தன் பணியை சிறுதூறலாக பெய்ய ஆரம்பித்தது.

"சூப்பர் தீர்ப்பு அண்ணே"

"ஆமாம் தங்கச்சி எப்போதும் இப்படி தான் பெரியய்யா அவங்க தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்க வைத்து விடுவார் அப்ப தான் இன்னொரு முறை தப்பு பண்ணமாட்டாங்க. ஆனால் தெரிஞ்சே தப்பு பண்ணா அவ்வளவு தான். அந்த குப்பன் அதனால் தான் இராத்திரியோட இராத்திரியா ஊரைவிட்டு ஓடிட்டான். இனி இந்த ஊர்பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டான்" என்றார்.

" சரி அண்ணே இந்த ஊரைப்பற்றி எல்லாம் சொன்னதற்கு ரொம்ப நன்றி, நான் இப்படியே கிளம்பறேன் அண்ணே".

" அட என்ன தங்கச்சி இவ்வளவு தூரம் பயணம் செய்து எங்க ஊருக்கு வந்து இருக்க வெறும் வயிற்றோட போகலாமா வந்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போ தங்கச்சி மழை வேற வலுக்க ஆரம்பித்தவிட்டது" என்றார்.

வீட்டுக்கு அழைத்து சென்று மதிய உணவு முடிந்ததும்.

" அண்ணே சாப்பாடு ரொம்ப அருமையாக இருந்தது இப்படி ஒரு சாப்பாட்டை நான் சின்ன வயதில் பாட்டி வீட்டில் சாப்பிட்டது அதுக்கு பிறகு இப்ப தான் சாப்பிடுகிறேன்."

" அந்த காலத்தில் இயற்கையான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ததால் உணவு அவ்வளவு ருசியாக இருந்தது. இப்ப எல்லாம் விளைச்சல் நிறைய வரனும் என்று செயற்கை மருந்துகளை பயன்படுத்தி விளையறதால் சாப்பாடு ருசி இல்லாமல் பேச்சு. இப்ப எங்க கண்ணன் படித்துவிட்டு வந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகு நாங்களும் நல்ல ருசியான சாப்பாடு சாப்பிடுகிறேம் தங்கச்சி."

" ரொம்ப சந்தோஷம் அப்ப நான் கிளம்பறேன் அண்ணே, இப்ப கிளம்பினால் தான் இராத்திரிக்குள் வீடு போகமுடியும். இவ்வளவு நேரம் இந்த ஊரைப்பற்றி எல்லாம் எனக்கு சொன்னிங்க ஆனால் உங்களை பற்றி எதுவும் சொல்லவே இல்லை அண்ணே."

" உங்க பேர் சொல்லுங்க அண்ணே"

"என் பேர் பாண்டு தங்கச்சி".

" அண்ணே போக்கிரி படத்தில் வடிவேலு அண்ணன் சொல்லுவாரே மூஞ்சி(வாய்) மட்டும் தான் வேலை செய்து அப்படியினு அந்த பாண்டுவா நீங்க??.. "

அவரின் பார்வை முறைப்பை காட்ட

" ஹிஹி ஹிஹி அது இல்ல அண்ணே சும்மா காமெடிக்கு சொன்னேன்."

" ஊரைப்பற்றி கேட்க வந்ததால் உன்கிட்ட பேசினேன். நீ என்னையே காமெடி பீஸ் ஆக்குற போனாப்போகுது இந்த ஒரு முறை விடுகிறேன் அடுத்த முறை இங்க வந்து இப்படி பேசினால் உன்னை பஞ்சாயத்தில் நிற்க வைத்து விடுவேன்."

" அய்யய்யே அண்ணே இனி இந்த ஊர்பக்கம் வரவேமாட்டேன்" என்று கையெடுத்துக் கும்பிட

" ஹாஹா ஹா ஹா ஹா" என்று சிரித்தார் பாண்டு.

" அண்ணேணே..... "

" பயந்திட்டையா தங்கச்சி"

" இந்த ஊரே என் பேச்சை கேட்க பயந்துகிட்டு ஓடும் போது தைரியமாக வந்து என்கிட்ட பேசின உன்னை போய் அப்படி சொல்வேனா தங்கச்சி ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். அடிக்கடி வந்துபோ தங்கச்சி."

"சரி அண்ணனே நான் கிளம்பறேன். "

" ஒரு நிமிடம் தங்கச்சி" என்று உள்ளே சென்று இரண்டு பைகளை தூக்கி வந்து" இந்தா தங்கச்சி இதை எடுத்துட்டு போ"

" என்னது அண்ணே" என்று பையை வாங்கி பார்க்க மாங்காய், முந்திரி பழம், சப்போட்டா, காய்கறி என்று இரண்டு பைகளில் இருந்தது.

" இவ்வளவு தூரம் எங்க ஊரைப்பார்க்க வந்த உன்னை வெறும் கையோடு எப்படி அனுப்புவது அதுவும் இல்லாமல் என்னை வாய்க்கு வாய் அண்ணே என்று கூப்பிடுற இந்த தங்கச்சிக்கு இந்த அண்ணன் கொடுக்கிறது."

"ரொம்ப நன்றி அண்ணே"

"சரி வாமா பஸ் வந்திடும் அடுத்த பஸ் சாயங்காலம் தான் மழை வேற கொஞ்சம் விட்டு இருக்கு."

அவரின் குடும்பத்தினருக்கு சொல்லி விட்டு பேருந்து நிலையம் சென்றனர்.

" ஏன் தங்கச்சி இவ்வளவு பேசனேம் ஆனால் நீ கூட உன் பேரை சொல்லவே இல்லையே?.. "

" அதுவா அண்ணே இந்த கதையை போட்டிக்கு எழுதறேன் கதை யாரு எழுதறது என்று பேர் சொல்லக்கூடாது. "

" சரி தங்கச்சி இந்த அண்ணனுக்கு மட்டும் காதுல சொல்லு நான் யாருக்கு சொல்லமாட்டேன்."

"அண்ணே நீங்க சொல்ல மாட்டிங்க ஆனால் காற்றுக்கூட காது இருக்கு காத்து வாக்கில் என் பேர் தெரிந்திடுச்சுன்னா என்ன பண்ணுறது அதனால் இப்போதைக்கு என் பெயர்"

"கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி".

"பஸ் வந்திடுச்சு நான் வரேன் அண்ணே".

" பாண்டு தான் வாயடைத்து போய் நின்று இருந்தார். இந்த தங்கச்சி நம்மகிட்ட எல்லா விசயத்தையும் தெரிந்துட்டு ஒரு பேர் கேட்டதற்கு காற்றுக்கு கூட காது இருக்கு என்று சொல்லி என்னையே வாயடைத்து நிக்கவைத்து விட்டு போகிடுச்சே?.... "
 
Last edited:
அத்தியாயம் 5


முத்துவேல் K M Building Construction company உரிமையாளர். படித்து முடித்து சில வருடம் வேறு நிறுவனத்தில் பணிபுரிந்து திருமணத்திற்கு பிறகு சிறிய அளவில் கம்பெனி ஆரம்பித்தபோது இவரின் திறமையை பார்த்திருந்த சிலர் இவருக்கு சிறு சிறு வாய்ப்புகள் கொடுக்க அதனை நல்ல முறையில் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி இன்றைக்கு பெரிய மால்கள், அடுக்குமாடி குடியிருப்பு, ஓட்டல் என பெரிய அளவில் கட்டிக்கொடுக்கும் அளவில் முன்னேறி இருக்கிறார். சென்னையில் சிறந்த 10 கம்பெனிகளில் ஒன்றாக இவர்கள் கம்பெனி உயர்ந்து உள்ளது. இருபது வருடங்களாக சென்னையிலும், ஐந்து வருடங்களாக பெங்களூரிலும் இவரின் K M Building Construction company இருக்கிறது. இரண்டு இடங்களிலும் நிறைய ப்ராஜக்ட் போய் கொண்டு இருக்கிறது.

லத்திகாவும் தந்தையின் தொழிலில் அதிக ஈடுபாடு ஏற்பட்டதால் அவளும் M E cvil engineer படித்துமுடித்து ஒரு வருடமாக தந்தையுடன் சேர்ந்து பணிபுரிகிறாள்.

இப்போது கூட பெங்களூரில் N&V Company மால் கட்ட அறிவித்துள்ளது. அந்த கம்பெனி ஏற்கனவே இரண்டு ஓட்டல், இரண்டு மால், பெங்களூரில் மூன்று சூப்பர் மார்க்கெட், ஓசூரில் இரண்டு சூப்பர் மார்க்கெட் கொண்ட மிகப்பெரிய நிறுவனம் பெங்களூரில் புதிதாக வளர்ந்து வரும் பகுதியில் மால் கட்ட உள்ளார்கள், அவர்களின் எதிர்பார்ப்பு பற்றி கூற ஒரு மீட்டிங் அறிவித்து உள்ளனர் அதில் நிறைய கம்பெனிகள் கலந்து கொள்வார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் அறிந்து அதற்கேற்ப டிசைன் அமைத்து கொடுக்க வேண்டும். அதில் அவர்கள் தேர்வு செய்பவர்களுக்கு அந்த காண்ட்ராக்ட் கிடைக்கும். இவர்களும் அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.

லத்திகா தோழியின் திருமணத்திற்கு செல்வதால் திருமண விழாவில் கலந்து விட்டு பெங்களூர் சொல்வதாகவும், முத்துவேல் கண்மணி தம்பதிகள் நாளை விமானம் மூலம் பெங்களூர் செல்வதாகவும் முடிவு செய்து உள்ளார்கள்.

பெங்களூரிலும் அவர்கள் ப்ராஜக்ட் நடப்பதால் சென்னை பெங்களூர் என்று தந்தை மகள் மாற்றி மாற்றி பறந்து கொண்டு தான் இருப்பார்கள். இந்த முறை இருவரும் செல்வதால் தாயை அழைத்து சென்று சிறிது நாட்கள் அங்கேயே தங்கி புதிய ப்ராஜக்ட்டுக்கான இடத்தை பார்வையிட்டு அதற்கு ஏற்ப டிசைன் செய்ய அங்கேயே இருக்க முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு அங்கும் வீடு இருப்பதால் இந்த ஏற்பாடு.


முத்துவேல் சோபாவில் அமர்ந்து டீபாய் மீது லேப்டாப் வைத்து வேலை செய்து கொண்டு இருக்க கண்மணி காலை டிபன் அயிட்டங்களை டைனிங் டேபிளில் கிச்சனில் இருந்து எடுத்து வந்து வைத்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மாடிப்படியில் காலடி ஓசை கேட்க நிமிர்ந்து பார்த்த கண்மணி வானத்து தேவதையே இறங்கிவருவது போல எளிய அலங்காரத்திலே பேரழகியாக திகழும் தன் மகளை கண்டு பூரித்துப் போன அதே நேரத்தில் அச்சமும் தோன்றத்தான் செய்தது இவளுக்கு ஏற்ற ஒருவனிடம் விரைவில் ஓப்படைக்க வேண்டும். அறுபடை முருகா இவளுக்கு ஏற்ற ஒருவனை சீக்கிரம் காட்டு என்று மனம் வேண்டியது.

"குட்மார்னிங் டாட்" என்று தந்தையின் அருகில் அமர்ந்தாள்.

"குட்மார்னிங் லல்லுமா அம்மா எல்லாம் சொன்னாளாமா."

"எஸ் டாடி அம்மா சொன்னாங்க அதான் ரெடியாகி வந்துட்டேன். டிரைவர் காளிதாஸ் அண்ணாகிட்ட சொல்லிட்டிங்களா டாடி."

"சொல்லிட்டேன் லல்லுமா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான். வா டிபன் முடித்து விட்டால் அவன் வந்ததும் கிளம்பிட சரியாக இருக்கும்."

"நித்தியாக்கு கிப்ட் வாங்கினாயே எடுத்து வைத்துகொண்டாயாடா?... "

" எடுத்து வைத்துவிட்டேன் டாடி" என்று பேசிக்கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்து டிபன் சாப்பிட்டு முடித்தனர்.

மீண்டும் சோபாவில் அமர்ந்து கம்பெனி வேலை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

" டாடி இந்த பைல் எல்லாம் செக் பண்ணிட்டேன். அடுத்து செய்ய வேண்டியதும் குறித்து வைத்து இருக்கேன் நீங்க ஒரு முறை செக் செய்துவிட்டு பெங்களூர் வரும் போது எடுத்து வந்திருங்க. அப்புறம் அந்த பூந்தமல்லி ப்ராஜக்ட்டில் கொஞ்சம் சேஞ்ச் பண்ணனும் சொன்னாங்க."

"அவங்க கிட்ட பிளான் ஸ்டார்ட் பண்ணியாச்சு இப்ப வந்து மாற்றுவது எப்படி என்றேன். அவர்கள் உங்களிடம் பேசுவதாக சொன்னாங்க பேசினாங்களா டாட்....? "

" பேசினாங்கடா... அவங்க கேட்டது சின்ன சின்ன மாற்றம் தான் பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டேன்" பேசிக்கொண்டு இருக்கும் போது டிரைவர் வந்துவிட

" சரிடா காளி வந்துட்டான் நீ கிளம்பு"

" சரி டாட்" தன் லேப்டாப் பேகை எடுத்துக் கொண்டு சென்றாள்.

கண்மணி அவளின் அருகில் வந்து "லல்லுமா பத்திரம் எங்க போனாலும் காளி அழைச்சிட்டு போகனும் தனியா எங்கயும் போகாதே" என்று பத்திரம் சொல்லிக்கொண்டு வந்தார்.

" அம்மா நான் எங்கயும் தனியா போகலை கோயிலுக்கு போகும் போது காளி அண்ணனை கூட்டிட்டு தான் போகுவேன். திருமணமண்டபம் பக்கத்திலேயே நாங்க மூன்று பிரண்ட்ஸ் ஒன்றாக தான் தங்க ஓட்டல் அறை ஏற்படும் பண்ணியிருக்கு அதனால் பயம் வேண்டாம்" என்று அவரை கட்டி கன்னத்தில் முத்தமிட்டால் "நீங்க இரண்டு பேரும் நாளை பெங்களூர் பத்திரமாக வந்து சேருங்க பாய் அம்மா" என்று அன்னையிடம் விடைபெற்று காரின் அருகில் காளிதாஸ் இடம் பேசிக்கொண்டு இருந்த தந்தை அருகில் சொல்ல அங்கு அவரும்

" பத்திரம் காளி மழை அதிகமாக இருக்கும் போது டிரைவ் பண்ண வேண்டாம் வழியில் எதாவது நல்ல இடமாக பார்த்து நின்று மழை நின்னதும் கிளம்பனும். டைம் ஆச்சுன்னு வேகமாக வண்டி ஓட்டாதே மெதுவாக ஓட்டு."

"அப்புறம் நீங்க அங்க போய் சேர லேட் ஆகிட்டா கோயிலுக்கு போகவேண்டாம். இன்னொரு முறை வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளலாம். நாளை காலை முகூர்த்தம் முடிந்ததும் பெங்களூர் கிளம்பிடுங்க" என்று கூறிக் கொண்டு இருக்க காளிதாஸ் எல்லாவற்றிற்கும் தலை ஆட்டி கொண்டு "சரிங்க ஐயா சரிங்க ஐயா" என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

அதை கண்ட லத்திகா "டாட் போதும் அண்ணன் பாவம் தலை ஆட்டி ஆட்டி கழுத்து சுளிச்சுக்க போகுது பாருங்க இப்பவே தலை கொஞ்சம் ஒரே பக்கமாக திரும்பின மாதிரி இருக்குல்ல" என்று கிண்டலாக சொல்ல

அதை கேட்டு முத்து வேல்
"லல்லுமா....." என்க

"போதும் டாட் அண்ணன் என்னை பத்திரமாக கூட்டிட்டு வந்து பெங்களூர் விடுவார். நாளை மாலை பெங்களூரில் பார்க்கலாம்.."

" அண்ணா கார் எடுங்க" என்று கூறிவிட்டு தாய் தந்தை இருவரிடமும் விடை பெற்று காரில் அமர கார் நகர்ந்தது.

கார் சென்னை நகரை விட்டு வெளியேறும் வரை அமைதியாக போன் பார்த்து வந்தவள் நொடுந்சாலை வந்ததும் அண்ணா என்று குரல் கொடுத்ததும் சிடி பிளேயர் ஆன் செய்தார். அதில் 90's பாடல்கள் பாட ஆரம்பித்தது. விருப்பமான பாடல்களை காளிதாஸ் தொகுத்து வைத்து இருந்தார். அது லத்திகாவுக்கும் பிடித்து இருக்க பயணங்களில் அவளும் கேட்பாள்.

முத்து வேல் தொழிலில் முன்னேற்றம் அடைந்த சமயத்தில் மனைவி பிள்ளைகளுக்காக கார் வாங்கிய போது வந்து சேர்ந்தவர் தான் இருபத்தி ஐந்து வயது ஆன காளிதாஸ் அன்றில் இருந்து இவர்களிடம் தான் பணிபுரிகிறார். திருமணம் முடித்து அவருக்கும் 17 வயதில் ஒரு மகள் 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். மனைவி ரத்னா அவளும் இவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்கிறார்.

பள்ளியில் இருந்து கல்லூரி வரை லத்திகாவிற்கு கார்த்திக்கும் கார் ஓட்டியாக அவர்மட்டுமே இருக்கிறார். இப்போது பணியிடங்களுக்கும் அவர்தான் லத்திகாவை அழைத்து செல்வது வேறு கார் ஓட்டுநர் இருந்தாலும் லத்திகாவிற்கு இவர் மட்டுமே கார் ஓட்டியாக இருக்கிறார்.


கார் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது மழை தூறலாக இருந்ததால் வழியில் எங்கும் நிற்காமல் சென்று கொண்டு இருந்தது. லத்திகாவும் போனில் தோழிகளிடம் தான் சீக்கிரம் கிளம்பியதை மொசேஜ் மூலம் தெரிவித்து விட்டு மனதுக்கு இதமாக ஒலித்துக் கொண்டு இருந்த பாடல்களை கண் மூடி கேட்டு கொண்டு இருந்தாள்.

அந்நேரம் அவளின் போன் ஒலித்தது. திரையில் தம்பியின் பெயர் வரவும் ஆன் செய்து "ஏய் காதி (கார்த்திக்) அதுக்குள்ள உனக்கு நான் கிளம்பின நியூஸ் வந்திடுச்சா."

"ஆமாம் லத்தி நல்லா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிவிட்டுட்டாங்க அம்மா."

"ஏண்டா மணி பத்து ஆகப்போகுது இன்னும் என்ன தூக்கம்?.... காதி... நைட் எங்க போன?..." என்றாள் கோபமாக

" அது... அது... லத்தி" என்று கார்த்திக் தயங்க

" காதி ஒழுங்கா சொல்லு நைட் கிளப் போனையா?.. "

" அய்யோ அக்கா அங்க எல்லாம் போகலை. நான் தான் உன் மேல் ப்ராமிஸ் பண்ணியிருக்கேன் இல்ல ஒரே ஒரு முறை போனேன் அதையும் உன்கிட்ட சொல்லி நீயும் அங்க எல்லாம் போகக்கூடாது என்று ப்ராமிஸ் பண்ண சொன்ன நானும் பண்ணிட்டேன் அதுக்கு பிறகு நான் போவேனா?... "

" அப்ப எங்க போன?"

" எங்கயும் போகலை என் பிரண்ட் பாஸ்கருக்கு பர்த்டே அதை ரூமிலே செலிபிரேட் பண்ணோம்."

"ஹாஸ்டல் ரூமிலேயா?..... வார்டன் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு செலிபிரேட் பண்ணிங்களா?..... "

"அதுது...... இல்லக்கா அவருக்கு தெரியாமல் தான் பண்ணேம்....."

"அவருக்கு தெரியாமல் எப்படிடா? "

"அது.... அக்கா அவரு நைட் குடிக்கும் பாலில் இரண்டு தூக்கமாத்திரை கலந்து கொடுத்திட்டாங்க....."

"கார்த்திதி......". என்றாள் அதிர்ச்சியில்

"நான் இல்லக்கா பிரண்ட்ஸ்" உள்ளே போன குரலில் சொல்ல

" கார்த்தி என்ன பண்ணியிருக்க என்று தெரியுதா பிரண்ட்ஸ் தப்பு செய்தால் அதை தடுத்து இருக்கனும் ஆனா நீ அவங்களுக்கு துணை போகியிருக்க. வார்டனுக்கு உடம்புக்கு எதாவது ஆச்சுனா என்ன ஆகும் என்று யோசித்து பார்த்தியா?.."

"அக்கா பிரண்ட்ஸ் தான்" என்று தயங்க

" தப்பு கார்த்தி தப்பு பிரண்ட்ஸ் கிட்ட எடுத்து சொல்லி இருக்கனும் ஆனா நீ சேர்ந்து தப்பு பண்ணி இருக்க"

" அக்கா சாரி சாரி அக்கா இனிமே கண்டிப்பா இப்படி பண்ணமாட்டேன். பிரண்ட்ஸ்சையும் பண்ணவிடாம பார்த்துக்கிறேன்."

" கார்த்திக் இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இதுக்கு மேல இப்படி பண்ணால் நான் என்ன பண்ணுவேன் உனக்கு தெரியும் இல்லையா?"

" சாரிக்கா இனிமே கண்டிப்பா பண்ண மாட்டேன்."

" சரி அப்புறம் இன்னும் என்ன எல்லாம் பண்ணிங்க அதை சொல்லிடு"

" அது... அது...."

" நீ தயங்குவது பார்த்தா இன்னும் என்னவே பண்ணியிருக்க கார்த்தி..."

"கார்த்தி.... டிரிங்க் பண்ணியா?....." கோபமாக கேட்டாள்.

"அது வந்து அக்கா பிரண்ட்ஸ் கம்பெல் பண்ணி" என்று தயக்கமாக சொல்லி கொண்டு இருக்கும் போதே,

"கார்த்திக் குடிச்சியா இல்லையா அது மட்டும் சொல்லு மத்தது எல்லாம் தேவை இல்லை" என்றாள் கோபமாக,

"ஆமாம் அக்கா" என்று கார்த்திக் தயக்கமாக சொல்லும் போதே இந்த பக்கம் போனை கட் செய்து விட்டாள் லத்திகா.

அக்கா போனை கட் செய்து விட்டதை பார்த்த கார்த்திக் திரும்ப போன் செய்ய அதை கட் செய்தாள் லத்திகா.

திரும்ப திரும்ப போன் செய்ய அவள் கட் செய்து கொண்டே இருந்தாள்.

இதற்கு மேல் அக்கா போன் எடுக்கமாட்டாள் என்று அறிந்து வாட்ஸ்அப் மொசேஜ் அனுப்பினான்..

அக்கா சாரி சாரி என்றும் பிளிஸ் பேசு அக்கா என்றும் அனுப்பிக்கொண்டே இருந்தான்.

அரை மணி நேரம் அவள் அதை திறந்து பார்க்காமல் கோபமாக வர

அதுவரை அமைதியாக அக்கா தம்பி உரையாடலை கோட்டுக்கொண்டு வந்த காளிதாஸ் "

" சின்னம்மா சின்னய்யா கண்டிப்பா அவரா குடித்து இருக்க மாட்டார் அவர் உங்க மேலே சத்தியம் பண்ணியிருக்கார். கண்டிப்பாக எதாவது கூட இருக்க பசங்க பண்ணியிருப்பாங்க சின்னய்யா கிட்ட பேசுங்கம்மா" என்று கூறவும்.

அதுவரை தம்பி வார்த்தை தவறிவிட்டான் என்று கோபத்தில் இருந்தவள் காளிதாஸ் பேசிய பிறகு அப்படி இருக்குமே என்று வேகமாக வாட்ஸ்அப் திறந்து பார்க்க அதில் பல மொசேஜ் சாரி கேட்டு வந்து இருக்க கடைசி மொசேஜ்,

வாய்ஸ் மெசேஜ் வந்து இருந்தது அதை டச் செய்ய

"அக்கா நான் குடிக்கலக்கா பிரண்ட்ஸ் இரண்டு பேர் பிடித்துக் கொண்டு என் வாயில் ஊற்றி விட்டாங்க" என்று அழும் குரலில் கூறியிருந்தான்.

அதை கேட்டவள் உடனே தம்பிக்கு போன் செய்ய ஒரு ரிங்கில் எடுத்து "அக்கா" என்னும் போதே,

"யாரு அவங்க போனை அவங்க கிட்ட கொடு" என்றாள்.

" அக்கா எல்லாரும் தூங்கறாங்க பிளிஸ் அக்கா இந்த ஒரு வாட்டி விட்டுங்க இன்னும் ஐந்து மாதம் படிப்பு இருக்கு அதுவரை எந்த பிரச்சினையும் வேண்டாம் அக்கா" என்றான் கார்த்திக்.

"அப்ப ஒன்று செய் அவங்க பிரண்ட்ஸிப்பை கட் பண்ணு அடுத்து வேற ரூமுக்கு மாறிவிடு சரியா"

"அக்கா பிளிஸ் இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன் படிப்பு முடியுற நேரத்தில் எந்த பிரச்சினையும் வேண்டாம் இனி நான் பார்த்து நடந்துக்கிறேன்" என்று பலவாறு கூறி சமாதானம் செய்து ஒரு வழியாக போனை வைத்தனர்.

சிறு வயதில் இருந்தே அம்மா அப்பாவை விட அக்காவிடமே அதிக பாசம் கொண்டவன் அன்றாட நடப்புகளை அக்காவிடம் கூறிவிடுவான் தவறு செய்தால் கூட அதை அக்காவிடம் மறக்காமல் சொல்லிவிடுவான். இன்று அப்படி அனனத்தும் சொல்லி இருந்தான்.

ஒரு வழியாக எங்கும் நிற்காமல் இரண்டரை மணி அளவில் திருவண்ணாமலை வந்தடைந்தனர்.

 
அத்தியாயம் 6


திருவண்ணாமலை நெருங்கியது தன் தோழி நித்தியாவிற்கு போன் செய்து அருகில் வந்துவிட்டதை கூறியிருந்தாள் அவளும் ஹோட்டல் முகவரி அறை எண் அனைத்து அனுப்பி இருந்தாள்.

இவள் காரில் இருந்து இறங்கும் போதே வேகமாக அருகில் வந்தான் நித்தியாவின் தம்பி ராம்

"ஹாய் அக்கா" என்றான் ராம்.

"ஏய் ராம் எப்படி இருக்க?.. இங்க என்ன பண்ணிட்டு இருக்க" என்றாள்.

"அக்கா தான் நீங்க வந்திட்டு இருக்கிங்க உங்க அறை சாவி கொடுத்து விட்டு எல்லாம் சரியா இருக்கா பார்த்துட்டு வர சொன்னாங்க அக்கா" என்றான்.

"உனக்கு மண்டபத்தில் எவ்வளவு வேலை இருக்கும் இங்க வந்து வெயிட் பண்ணிட்டு இருக்க சாவி நாங்களே வந்து வாங்கிட்டு வந்து இருப்போம் இல்லையா" என்றாள் லத்திகா.

"எந்த வேலையும் இல்லை அக்கா இங்கிருந்து பத்து கடை தள்ளி தான் மண்டபம் இருக்கு, இப்ப தான் வந்தேன் வாங்க உள்ள போகலாம்." காரில் இருந்து அவளின் பெட்டியை காளிதாஸ் எடுக்க அதை வாங்கிக்கொண்டு அவரிடம் ஒரு சாவியை கொடுத்து "அண்ணா இது உங்க அறை சாவி இரண்டாம் மாடியில் இருக்கு, அக்கா தங்கும் அறை மூன்றாவது மாடியில் இருக்கு" என்றான்.

அவரும் சரி என்று சாவியை வாங்கிக் கொண்டு காரை லாக் செய்துவிட்டு உடன் நடந்தார்.

லத்திகாவும் அவளின் தோழிகளும் தங்கும் அறை சென்று அனைத்து சரிபார்த்துவிட்டு

" அக்கா ஓகே தானே?... " என்றான்.

" ஓகே ராம்" என்றாள்.

"அப்புறம் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு நான்கு மணிக்கு மேல் கோயில் போங்க அக்கா. வசுந்தரா அக்கா, கரிஷ்மா அக்கா பெங்களூரில் இருந்து காரில் வந்துட்டு இருக்காங்க. ஆறு மணிக்கு இங்க வந்திடுவாங்க."

"ஆறுமணிக்கு மேல் மாப்பிள்ளை பெண் ஊர்வலம் இருக்கு அக்கா, அதுக்கு வரவேண்டாம் என்று நித்தியா அக்கா சொன்னாங்க.

"ஏன் ராம்?.."

"கோயிலில் இருந்து காரில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஊர்வலம் வருவாங்க நம்ப தெருவில் நடந்துதான் வரனும், மழை டைமா இருக்கிறதால் உங்க டிரஸ் அழுக்காகிடும் என்றுதான் செவன் தேர்ட்டிக்கு மண்டபம் வந்தா போதும் என்று சொன்னாங்க அக்கா" என்றான்.


"ஓகே ராம் அப்படியே செய்கிறேன்" என்றாள்.


அவர்களிடம் விடை பெற்று சென்றுவிட்டான் ராம்.

" அண்ணா நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு நாலு மணிக்கு வாங்க நான் ரெடியா இருக்கேன் அப்பே நம்ப கோயிலுக்கு போகலாம்" என்றாள்.

சரி என்று காளிதாஸ் சென்றதும்
கதவை தாளிட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தந்தைக்கு போனில் அழைப்பு விடுத்தாள்.

மறுமுனை எடுத்ததும் "ஹாய் டாட்"

" ஹேய் லல்லுமா ரீச் ஆகிவிட்டாயா?"

" எஸ் டாட் டென் மினிட்ஸ் பிபேர் தான் ரீச் ஆனேன்."

"வழியில் மழை இல்லையாடா?.. "

"லைட்டா தூரல் தான் இருந்தது அதான் சீக்கிரம் வந்து விட்டோம் டாடி."

"ஓகே லல்லுமா மழை இல்லாமல் இருந்தா கோவில் போயிட்டு வந்திடு, அப்புறம் கரிஷ்மாவும், வசுந்தராவும் பெங்களூர் ரீச் ஆகிட்டாங்களா?..."

"எஸ் டாட் சிக்ஸ் ஓ கிளாக் இங்க வந்துடுவாங்களாம்" மேலும் சிறிது பேசிவிட்டு போனை அனைத்துவிட்டு மெல்லிய இசை ஒலிக்க செய்து கண்மூடி அமர்ந்து இருந்தாள்.


மணி நான்கை தொடும்போது குளித்து மயில் வண்ண பட்டு சுடிதார் அணிந்து காதில் அழகிய மயில்தோகை விரித்தது போல் கம்பல், அதே டிசைனில் பெரிய டாலர் வைத்த செயின், வளையல் அணிந்து கொண்டு முடியை விரித்து விடாமல் பேண்ட் கொண்டு அடக்கி இருந்தாள். ஒப்பனையை முடித்து வெளியே வந்த போது காளிதாஸ் வந்து கொண்டு இருந்தார்.

"கிளம்பலாமா சின்னம்மா" என்றார் காளிதாஸ்.

"கிளம்பலாம் அண்ணா நடந்தே போகலாம் தானே" என்றாள் லத்திகா.

"இல்லைமா காரிலேயே போகலாம் ரோடு சரியில்லை" என்றார் காளிதாஸ்.

"ஓகே அண்ணா"

காரில் ஏறி இரண்டு நிமிடங்களில் கோயில் வந்து இருந்தனர்.

காரில் இருந்து இறங்கி "அண்ணா பார்க் பண்ணிட்டு வாங்க நான் அர்ச்சனை சாமான்கள் வாங்குகிறேன்" என்றாள் லத்திகா.

" சரி சின்னம்மா" என்றார் காளிதாஸ்.

அர்ச்சனை சாமான்கள் வாங்கிக் கொண்டு நடந்தவள் நிமிர்ந்து பார்க்க உயர்ந்து நின்ற கோபுரமும் அதன் பின்னனியில் பரந்து விரிந்த மலையும் அவ்வளவு அழகாக இருந்தது. நித்தியா இந்த ஊர் என்பதால் அடிக்கடி இந்த காட்சியை பற்றி விவரிப்பாள். அப்போதே காணவேண்டும் என்பது போல் இருக்கும் நித்தியா கூறுவது. இன்று தான் அவளின் எண்ணம் பூர்த்தியடைந்தது. கோபுரவாசலை அடைந்ததும் வாசற்படியை தொட்டு வணங்கி விட்டு உள்ளே நுழைந்தாள். கோயில் மணி டங் டங் என்று ஒலித்தது.

25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் இது தமிழ் நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் கொண்ட கோயில் என்று தோழி அடிக்கடி சொல்வது எல்லாம் மனதில் வந்து போனது.

நித்தியா சொல்லும் போது அவளின் ஊர் என்பதால் அதிகப்படியாக சொல்வதாக நினைத்து இருந்தாள். ஆனால் இப்போது தான் தோழி அதிகப்படியாக எதுவும் சொல்லவில்லை அவள் கூறியதும் அனைத்தையும் பார்க்க பார்க்க அவளுள் இனம்புரியாத பரவசம் ஏற்பட்டது.

ஒவ்வொன்றாக ரசித்து கொண்டு மெதுவாக நடந்தவளை காளிதாஸ் குரல் கலைத்தது.

"சின்னம்மா இன்னும் கொஞ்ச நேரம் போனால் கூட்டம் அதிகமாக வந்துவிடும் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து மற்றதை பார்க்கலாம் அம்மா" என்றார்.


"ஓஓ... ஆமாம் அண்ணா வாங்க" என்று உள்ளே சென்றாள். அண்ணாமலை உண்ணாமலை அம்மனை தரிசனம் முடித்து வந்தபோது மணி ஐந்தை நெருங்கி இருந்தது. நித்தியா கூறியவைகளை நியாபகம் செய்து அந்த இடங்களை பார்த்து ரசித்துக்கொண்டு வந்தாள்.

காளிதாஸ்சும் சில அடிகள் பின்னே வந்தார்.


அப்போது தான் அவளுக்கு நித்தியா சொன்னது ஞாபகம் வந்தது.

அந்த காலத்திலேயே ஆங்கிலேயர் வருகையை அறிவுறுத்தும்படி ஆங்கிலேயர் உருவம் ஒரு கோபுரத்தில் இருக்கும் என்று கூறியிருந்தாள் நித்தியா. எந்த கோபுரத்தில் எங்கு உள்ளது என்று நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

அந்த நேரத்தில் காளிதாஸ் போன் ஒலிக்க சற்று மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்று பேசிக்கொண்டு இருந்தார்.

கோபுரம் உச்சி தெரியும் இடம் சென்று பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் தான் அது நிகழ்ந்தது. லத்திகா கண்ணில் அந்த ஆங்கிலேயர் உருவம் தெரிந்துவிட மனது ஏய் நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த து.

அப்போது ஓடி விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளை இவளை கவனிக்காமல் ஓடி வந்து பின்னால் இடித்து விட அதை எதிர்பார்க்காதவள் தடுமாறி முன்புறம் விழப்போக பயத்தில் இறுக கண்மூடி இருந்தவளை ஒரு வலியகரம் முன் நீண்டு கீழே விழாமல் தடுத்தது. அந்த வலியகரத்தில் வேகமாக தன் மென்பகுதிகள் மோதியதால் அவளுக்கு வலி ஏற்பட "ஸ்ஸ்ஆஆ..." என்ற முனகல் வந்தது அப்போது தன்னை தாங்கி நிற்பது ஓர் ஆண் என்பதை உணர்ந்தவள் கண் திறந்து பார்க்காமல் விலகி நின்றாள்.

"தேங்க்ஸ்" என்று குனிந்து நின்று சொல்லி விட்டு வேறுபுறம் திரும்பி வேகமாக ஒதுக்குப்புறமாக சென்று தன் வலித்த நெஞ்சுப்பகுதியை கைகள் கொண்டு பிடித்து நின்றாள். இரும்பு கம்பியில் இடித்தது போல் இருந்தது. சிறிது நேரம் கழித்தே வலி குறைந்தது.

அப்போது தான் தன் உடன் வந்த காளிதாஸ் பற்றி ஞாபகம் வர அண்ணன் எங்கு சென்றார் என்று பார்க்க சிறிது தொலைவில் வந்து கொண்டு இருந்தார் காளிதாஸ்.

"சின்னம்மா" என்று அருகில் வந்தார்.

"எங்க போனிங்க அண்ணா?..."

"பசங்க போன் பண்ணாங்க சின்னம்மா அதான் பேசிட்டு வந்தேன். உங்க போனுக்குத்தான் முதலில் போட்டு இருக்காங்க நீங்க எடுக்கவில்லை என்றது எனக்கு போன் பண்ணாங்கம்மா" என்றார்.

"ஓஓ.. அப்படியா நான் கோயில் உள்ள போன் வேண்டாம் என்று காரிலேயே வைத்து விட்டு வந்தேன். என்ன பஞ்சாயத்து இன்னைக்கு வந்தது" என்றாள் புன்னகையுடன்.

" எப்போதும் போல் தான் சின்னம்மா" என்று அவரும் சிரிக்க

" சரி அண்ணா நாம கிளம்பலாம் பிரண்ட்ஸ் இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துவிடுவாங்க நீங்க சொல்லிட்டே வாங்க இன்னைக்கு என்ன பஞ்சாயத்து எப்படியும் என்கிட்ட இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும்" என்று சிரித்தாள்.

காளிதாஸிசும் சிரித்துக்கொண்டே தன் பிள்ளைகள் பேசியதை செல்லிக்கொண்டு வந்தார். அதை கேட்டு கொண்டு வந்தவளின் மனது யாரே தன்னை பார்த்துக் கொண்டு இருப்பது போல தோன்றியது.

எப்போதும் பல விதமான பார்வைகள் தன் மீது படிவதை உணர்ந்து இருக்கிறாள். அவளின் தாய் சிறுவயதிலேயே இது மாதிரி பார்வைகள் படுவது தெரிந்தால் திரும்பி பார்க்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதனால் எப்போதும் அதை கண்டு கொள்ளாமல் சென்று விடுவாள், ஆனால் இந்த பார்வை அவளை என்னவே செய்தது திரும்பி பார்க்க தோன்றிய மனதை கட்டுப்படுத்திக்கொண்டு கோயில் விட்டு வெளியே வந்து திரும்ப அன்னாந்து கோபுரம் உச்சியை வணங்கி விட்டு வேகமாக கார் இருக்கும் இடம் வந்தாள்.

காளிதாஸ் கார் லாக்கை திறந்ததும் உள்ளே அமர்ந்து தன் போனை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள். அந்த பார்வை இன்னும் தொடர்ந்ததை உணர்ந்ததால் நிமிர்ந்து பார்க்கவில்லை.

கார் நகர்ந்த பிறகே அப்பாடி என்று ஆசுவாசம் அடைந்தாள். காளிதாஸின் பிள்ளைகளுக்கு போன் செய்து பேச ஆரம்பித்துவிட்டாள். அறைக்கு வந்த பிறகும் அவர்களின் பஞ்சாயத்து முடிந்தபாடு இல்லை. இதற்கு மேலும் முடியாது என்று நினைத்து அவர்களிடம்

"ஏய் இப்ப உங்க சண்டையை நிறுத்த போறிங்களா இல்லை டாடிக்கு கான்பரன்ஸ் கால் போட்டு உங்க சண்டையை கேட்கவைக்கவா" என்றதும்.

"அய்யய்யே..... அக்கா நான் சண்டை போடவில்லை" என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறினர்.

"அவ்வளவு பயமா டாடி மேல்" என்றாள் லத்திகா.

" அக்கா பெரியப்பா மேல பயம் இல்லைக்கா ஆனா அவர் கொடுக்கிற பனிஷ்மென்ட் மேல தான் பயம்" என்றாள் காளிதாஸின் மகள் கீர்த்தனா.

" ஆமாம் அக்கா போன முறை இருநூறு தோப்புக்கரணம் போட வைத்தார். அடுத்த முறை ஐநூறு தோப்புக்கரணம் போடனும் என்று பெரியப்பா சொல்லி இருக்கார்" என்றான் மணிகண்டன் காளிதாஸின் மகன்.

" அப்படியா அப்ப இப்பவே டாடிக்கிட்ட சொல்லிட்டாப்போச்சு" என்று கூறினாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

" அக்கா உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை எல்லாம், பிரண்டு கல்யாணத்துக்கு தானே போயி இருக்கிங்க அதுக்கு கிளம்பாம வெட்டியா உட்கார்ந்து பேசிட்டு இருக்கிங்க" என்று கீர்த்தனா சொல்ல

" அடிப்பாவி பத்துக்கு மேற்பட்ட மிஸ் கால் இருக்கே என்று போன் பண்ணா இவ்வளவு நேரம் உங்க பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்லச்சொல்லி என் காதுல ரத்தம் வர அளவுக்கு பேசினது நீங்க இரண்டு பேரும் இப்ப நான் வெட்டியா உட்கார்ந்து பேசிட்டு இருக்கேனா?..."

"அக்கா இப்பவும் தேவை இல்லாததை தான் பேசிட்டு இருக்கிங்க எங்களுக்கு நிறைய படிக்க இருக்கு அதனால் உங்க பேச்சை கேட்க டைம் இல்லை நாங்க போனை கட் பண்ணுகிறோம்" என்று கூறி போனை கட் செய்தான் மணிகண்டன்.

" அடப்பாவிகளா கடைசியில் நம்மள வெட்டி ஆபிசர் என்று சொல்லிடுச்சுங்களே இருங்க நேரில் வரும் போது இருக்கு உங்க இரண்டு பேருக்கு" என்று சிரித்துக்கொண்டாள்.
 
அத்தியாயம் 7



காளிதாஸ் திருமணம் முடித்து வந்தபோது அவர்களை தன் வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த சிறிய வீட்டில் இருக்க சொல்லிவிட்டார் முத்துவேல். காஸிதாஸின் மனைவி ரத்னாவும் கிராமத்து பெண் சென்னை அவருக்கு புதிது எனவே அவர்கள் அங்கேயே குடிபுகுந்தனர். ரத்னாவை சமையல் செய்ய உதவியாக வைத்து கொண்டார் கண்மணி.

ரத்னா குழந்தை பிறக்க ஊருக்கு சென்று திரும்பிய பிறகு லத்திகாவும் கார்த்திக்கும் கீர்த்தனாவை விட்டு பிரியவில்லை பள்ளி சொல்லும் போது தவிர மற்ற சமயங்களில் குழந்தை உடனே இருந்தனர். தங்கச்சி பாப்பா என்று கொஞ்சிக்கொண்டு இருப்பர்.

கீர்த்தனா நடக்க ஆரம்பித்த பிறகு அவளும் அவர்களை தேடிவந்து விடுவாள். அக்கா, அண்ணா என்று சொல்லி கொடுத்தவர்கள். தன் தாய் தந்தையை எப்படி அழைக்க சொல்வது என்று தந்தையிடம் கேட்டபோது

உன்னை அக்கா என்றும் தம்பியை அண்ணன் என்கிறாள் அப்பே நான் பெரியப்பா உன் அம்மா பெரியம்மா என்று அழைக்க சொல்லிக்கொடு என்று சொன்னார் முத்துவேல்.

அன்றிலிருந்து கீர்த்தனாவுக்கு தன் தாய் தந்தையை பெரியம்மா பெரியப்பா என்று சொல்லிக்கொடுத்தனர் லத்திகாவும் கார்த்திக்கும்.

அதை அறிந்த காளிதாஸ் ரத்னா தம்பதிகள் நெகிழ்ந்து போயினர். மணிகண்டன் பிறந்தபோதும் இதுவே நடந்தது. பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா என்றபோதும் காளிதாஸ் ரத்னா தம்பதிகள் அந்த வீட்டின் உண்மையான வேலைகாரர்களாக மட்டுமே நடந்தனர்.


இன்று வரை அதுவே நடக்கின்றது. பிள்ளைகளும் தங்கள் நிலை தெரிந்து நடந்துகொண்டனர். படிப்பிலும் இரண்டு பிள்ளைகளும் நன்றாக படித்தனர். லத்திகாவும் கார்த்திக்கும் படித்த பள்ளியிலேயே சேர்த்துவிட்டு இருந்தார் முத்துவேல்.

அவர்களின் படிப்பு செலவு எங்களுடையது அவர்களுக்கு பிடித்தமான படிப்பு படிக்கவைக்கிறேன் என்று கூறிவிட்டார் முத்துவேல்.

லத்திகா, கார்த்திக் படிக்கும் போது அவர்களை அமரவைத்து படிக்க சொல்லிக்கொடுப்பார்கள். அதனால் இவர்களைப்போல் கீர்த்தனாவும் மணிகண்டனும் நன்றாக படித்தனர்.


தன் நினைவுகளில் இருந்தவளை கதவு தட்டும் ஓசை கேட்டு கலைத்தது வேகமாக சென்று கதவை திறந்தாள். அங்கு கரிஷ்மாவும், வசுந்தராவும் நின்று இருந்தனர்.

"ஏய்ய்... வந்திட்டிங்களா" என்று அவர்களை கட்டிக்கொண்டாள். "ஸ்ஆஆ...." என்று அவர்களிடம் இருந்து விலகி தன் நெஞ்சுப்பகுதியை கைகளால் வருடினாள் லத்திகா.

அதை கண்ட தோழிகள் "ஏய் லத்து என்னாச்சு" என்றனர்.

"இடித்து கொண்டேன் அது வலிக்குது" என்றாள் லத்திகா.

" எங்கடி இடித்துக்கொண்டாய்?..." என்றாள் கரிஷ்மா.

கோயிலுக்கு போன இடத்தில் பிள்ளை இடித்து விட்டதையும் அதில் பேலன்ஸ் தவறி விழப்போனபோது ஒரு கை விழாமல் தடுத்ததையும் கூறினாள் லத்திகா.

"ஏன் லத்து கையில் தானே இடிச்சுட்ட என்னவே இரும்பில் இடிச்ச மாதிரி வலிக்குது என்கிறாய்" என்றாள் வசுந்தரா.

"அந்த கை அப்படி தான் இருந்தது வசு, அந்த ஆள் பிடிக்காமல் கீழே விழுந்து இருந்தால் கூட இப்படி வலிச்சு இருக்காது" என்றாள் லத்திகா.

"ஹாஹா ஹாஹா.. " என்று சிரித்தனர் கரிஷ்மாவும், வசுந்தராவும்

"ஏண்டி சிரிக்கிறிங்க" என்றாள் லத்திகா.

"இல்ல அந்த ஆள் பிடிக்காமல் விட்டு இருந்தால் நிஜமாகவே பாறையில் முட்டி மூக்கு சப்பையாகி ஒன்னு ரெண்டு பல்லு போயி இருக்கும் அது எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப்பார்த்தோம் அதான் சிரிப்பு வந்தது" என்றாள் கரிஷ்மா சிரிப்புடன்.

இடுப்பில் கை வைத்து தோழிகளை முறைத்து "அப்ப நான் அடிபட்டு வந்து இருந்தா பார்த்து சிரிப்பு தான் வருமா" என்று அவர்களை அடிக்க போக இவளிடம் மாட்டாமல் ஓடினார்கள் கரிஷ்மாவும் வசுந்தராவும்.

அந்த நேரம் கரிஷ்மாவின் போன் ஒலிக்க கட்டிலின் மேல் இருந்த போனை எடுத்து பார்க்க அதில் நித்தி என்று இருக்கவும் ஆன் செய்து

" கல்யாணப்பெண்ணுக்கு எங்க ஞாபகம் கூட இருக்கா இந்நேரம் அத்தானோட டூயட் பாடாமல் எங்களுக்கு போன் பண்ணியிருக்க" என்றாள் கரிஷ்மா.

"அடியேய் கரிஷ் உதைபடுவ நானே இங்க கஷ்டப்பட்டு கொஞ்சி போன் வாங்கி பேசிட்டு இருக்கேன். ஒழுங்கா கிளம்பி மண்டபத்திற்கு போங்க நான் இங்க கோயிலில் இருக்கேன். அங்க மூன்று பேரும் சேர்ந்தா நேரம் போகிறது தெரியாமல் ஓடி பிடித்து விளையாடிட்டு இருப்பிங்க" என்றாள் நித்தியா.

வசுந்தரா, " ஏய் நித்தி உனக்கு எப்படி தெரிந்தது நாங்க ஓடி பிடித்து விளையாடிட்டு இருக்கோம் என்று"

அவள் பேசியதை கேட்ட மற்ற இருவரும் வசுந்தராவின் தலையில் குட்டு வைத்தனர்.

" ஏய் பிசாசுங்களா வலிக்குதுடி" என்று தலையை தேய்த்துக்கொண்டாள் வசுந்தரா.

"ஏய் திருப்ப ஆரம்பிக்காதிங்க ஆறு வருஷம் உங்க கூட குப்பை கொட்டினேன் உங்களைப்பற்றி தெரியாதா?.." என்றாள் நித்தியா

"ஏய் அப்ப நீ படிக்க வரலையா குப்பை கொட்டத்தான் வந்தியா" என்றாள் லத்திகா.

அந்த பக்கம் யாரே "நித்தியா இந்த நேரத்தில் போனில் என்ன பேச்சு அங்க மாப்பிள்ளை வந்தாச்சு" என்று குரல் கேட்கவும்.

ஓகே நித்தி நாங்க கிளம்பி வரோம் நீ எங்களை பற்றி நினைக்காமல் உன் அத்தான் உடன் உங்க பங்ஷனை என்ஜாய் பண்ணு பாய்" என்று கூறி போனை கட் செய்தாள் லத்திகா.

" போங்கடி யாராவது ஒருத்தர் குளிக்க நான் டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கிறேன்" என்றாள் லத்திகா.

கரிஷ்மா நான் குளிக்க போகிறேன் என்று கூறி தேவையானவற்றை எடுத்துக் கொண்டு குளியல் அறை புகுந்தாள்.

லத்திகாவும், வசுந்தராவும் தாங்கள் அணியவேண்டிய உடைகள் நகைகள் அனைத்தும் எடுத்து கட்டில் மீது வைத்துவிட்டு கரிஷ்மாவின் உடை அணிகலன்களை எடுத்து வைத்து விட்டு சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

கரிஷ்மா குளித்து வந்தபிறகு வசுந்தராவும் குளித்து வந்தாள். கரிஷ்மா மேக்கப் நன்றாக செய்வாள் அதனால் அவளே மற்ற இருவருக்கும் செய்து விட்டு தானும் செய்து கொண்டாள்.

லத்திகா மேக்கப் வேண்டாம் என்றாள் தான் ஆனால் தோழிகள் விடவில்லை வற்புறுத்தி செய்து விட்டனர். பேச்சும் கிண்டலுமாக ரெடியாகினர்.

நாவல்பழம் கலரில் சில்வர் கலர் பாடரும் அதே கலரில் உடை முழுவதும் பூக்களும் கொடிகளுமாக இருந்தது லத்திகாவின் உடை

கரிஷ்மாவின் உடை மெரூன் கலரில் சில்வர் கலர் டிசைனில் இருந்தது. வசுந்தராவின் உடை கருநீல கலரில் சில்வர் கலர் டிசைனில் இருந்தது. உடையின் நிறம் மட்டுமே வேறு வேறாக இருந்தது டிசைன் ஒரே மாதிரியாக இருந்தது.

மூவரும் நல்ல கலராக இருந்ததால் மூவருமே அந்த உடையில் தேவதையாக மிளிர்ந்தனர்.

லத்திகா தன் முடியை உச்சியில் கிளிப் கொண்டு அடக்கி விரித்து விட்டிருந்தாள். கரிஷ்மா, வசுந்தராவும் அதே போல விரித்து விட்டிருந்தனர்.

உடையில் இருந்த டிசைனிலேயே ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது. கிளிப்பில் இருந்து கம்மல், நெக்லஸ், வளையல், ஒட்டியாணம் கால்கொலுசு என்று எல்லாமே ஒரே டிசைனில் அழகாக இருந்தன.

லெஹங்கா டிரஸில் வரும் தாவணியை பின்னிருந்து முந்தானை முன்னாள் வருவது போல அழகான மடிப்புகள் வைத்து கட்டியிருந்தனர்.

மூவரில் யார் அழகு என்று பிரித்து சொல்ல முடியாது மூவருக்குமே அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தது. விதவிதமான செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது.

"ஏய் வாங்கடி காளி அண்ணன் தான் வந்து இருப்பார்" என்று கூறிக் கொண்டே சென்று கதவை திறந்தாள் லத்திகா.

காளிதாஸ் தான் நின்று இருந்தார். "சின்னம்மா" என்றவர் அதற்கு மேல் பேசமுடியாமல் திகைத்து நின்றார்.

மூன்று பெண்களும் கலகலவென சிரித்தனர். அந்த சிரிப்பொலியில் கலைந்தவர் "சின்னம்மா" என்றார் மீண்டும்.

கரிஷ்மா "என்ன காளி அண்ணா திகைத்து நின்னிட்டிங்க எங்க டிரஸ் நல்லா இல்லையா" என்றாள் சிரித்துக்கொண்டே.

"என்னம்மா அப்படி சொல்லுறிங்க மூனுபேரும் அப்படியே கோயிலில் இருக்கும் அம்மன் மாதிரி இருக்கிங்க அதை பார்த்து திகைத்து நின்னா நல்லா இல்லையா என்று கேட்கறீங்க" என்றார் காளிதாஸ்.

" ஏய் சும்மா இருடி" என்று கரிஷ்மாவிடம் சொன்னவள், "அண்ணா அவள் சும்மா உங்களை கலாய்கிறாள். நாங்க ரெடி கிளம்பலாம் அண்ணா" என்று கூறி தங்கள் பரிசுகளை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

கார் பார்க்கிங் வந்த போது " சின்னம்மா கொஞ்சம் இருங்க வரேன்" என்று சொல்லி விட்டு அருகில் இருந்த கடைக்கு சென்று வந்தார்.

" அம்மா இப்படி வந்து நில்லுங்கள்" என்றார். மூவரும் ஓன்றாக நிற்க வைத்து கையில் இருந்த தேங்காயில் கற்பூரம் வைத்து ஏற்றி திருஷ்டி கழித்து வீதியில் உடைத்து விட்டு வந்தார். " இப்ப காரில் ஏறுங்கம்மா" என்றார் காளிதாஸ்.

மூன்று பெண்களும் ஏறியமர்ந்ததும் கார் திருமணமண்டபம் நோக்கி சென்றது. அருகிலேயே இருந்தால் ஒரே நிமிடத்தில் வந்து விட

"ஏன்டி லத்து நடந்தே வந்து இருக்கலாம் இல்லையா ஒரு நிமிடத்திற்கு காரா" என்றாள் வசுந்தரா.

" ஏய் நல்லா உன் கண்ணைத்திறந்து பாரு ரோடு எப்படி இருக்கு என்று இதில் இந்த டிரஸ் போட்டுட்டு நடந்து வந்தா ரோடில் போற வண்டியில் இருந்து தெறிக்கும் சேர் எல்லாம் நம்ம டிரஸ்சில் தான் இருக்கும்" என்றாள் லத்திகா.

லத்திகா, "அண்ணா கார் பார்க்கிங்கில் விட்டுட்டு உள்ள வாங்க" என்று கூறி காரில் இருந்து இறங்கி மூவரும் உள்ளே சொல்ல வரவேற்பு பகுதியில் ராமும் அவன் நண்பன் ஒருவனும் வரவேற்பில் நின்று இருந்த இரண்டு பெண்கள் உடன் நின்று இருந்தனர்.

இவர்களை பார்த்து ராம் வேகமாக வந்து "ஹாய் அக்காஸ்" என்றான்.

" ஏய் ராம் என்னடா இப்படி வளர்ந்துட்ட ஆளே அடையாளம் தெரியலை" என்றாள் கரிஷ்மா.

"நீங்க என்னைப்பார்த்து ஒன்னரை வருஷம் ஆச்சு நான் பைனல் இயர் படிக்கிறேன் அக்கா" என்றான் ராம்.

"அதுக்குன்னு இப்படியா அன்னாந்து பார்த்து பேசுகிற அளவுக்கு வளருவது" என்றாள் கரிஷ்மா.

" ஏய் போதும்டி அவனுக்கு நிறைய வேலை இருக்கும் நீ அப்புறம் அவன் பிரியானதும் எப்படி உயரமாவது என்று கேளு டிப்ஸ் கொடுப்பான் அதை ஃபாலோ பண்ணி நீயும் கொஞ்சம் உயரமாகலாம்" என்று கரிஷ்மாவிடம் கூறிவிட்டு ராமிடம்

" நித்தி கோவிலில் இருந்து வந்து விட்டாளா?" என்றாள் லத்திகா.

" இன்னும் இல்லைக்கா பத்து நிமிடம் ஆகும் நீங்க வாங்க உள்ளே அக்கா ரூமில் இருங்க" என்று அழைத்த சென்றான் ராம்.

சிறிது நேரத்தில் நித்தியா வந்து விட அவளை மூவரும் ஒரு வழி செய்தனர். மாப்பிள்ளை நித்தியாவின் அத்தை மகன் என்பதால் ஏற்கனவே தோழிகளுக்கும் தெரியும் என்பதால் அங்கு கேலி கிண்டலுக்கு பஞ்சம் இல்லாமல் போனது.

சிறிது நேரத்தில் ரிசப்ஷன் மேடைக்கு நித்தியா சென்று விட தோழிகளும் வெளியே வந்து ஓரமாக சேரில் அமர்ந்தபடி பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர்.

ஓரளவுக்கு ஆட்கள் குறைந்ததும் நித்தியா இவர்களை மேடைக்கு அழைக்க அங்கே சென்று மாப்பிள்ளை ஆனந்த் நித்தியா இருவரையும் கலாட்டா செய்தனர்.

ரிஷப்ஷன் முடிய பத்து மணிக்கு மேல் ஆக அதன் பிறகு சாப்பிட்டு விட்டு வந்து நித்தியாவின் உடைகளை மாற்ற வைத்தனர். அவளின் லெஹங்கா டார்க் பிங்க் நிறத்தில் இருந்தது. இவர்கள் போல அலங்காரம் செய்து மேடைக்கு அழைத்து வந்து போட்டோக்கள் எடுத்தனர்.

ஹாலில் நிறைய பேர் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, சிலர் இவர்களை பார்த்து கொண்டுயிருந்தனர் அதில் மாப்பிள்ளையும் அவரின் தோழர்களும் அடக்கம் அவர்கள் சத்தமாகவே மாப்பிள்ளையும் நித்தியாவையும் கிண்டல் செய்து கொண்டு இருந்ததால் அவர்கள் பக்கம் திரும்பாமல் இருந்தனர் தோழிகள்.

லத்திகாவிற்கு இங்கேயும் கோவிலில் ஏற்பட்டது போல் தன்னை யாரே பார்ப்பது போல இருந்தது ஆனால் அவள் எதிரில் நிறைய ஆண்கள் பெண்கள் என்று அமர்ந்து தங்களை பார்ப்பது தெரிந்ததால் அவள் அந்த பக்கம் பார்வையைத் திருப்பவே இல்லை.

அனைத்தும் முடிய பன்னிரண்டு மணி தாண்டி இருந்தது. மூவரும் அனைவரிடமும் விடை பெற்று கிளம்பும் போது நித்தியா

"ஏய் முகூர்த்தம் ஒன்பது பத்தரை மணி என்று மெதுவாக வராதிங்க சீக்கிரம் வாங்க" என்று சொல்லி அனுப்பினாள்.

வெளியே வந்த போது தான் தெரிந்தது மழை ஜோ என்று பெய்து கொண்டிருந்தது.
 
Status
Not open for further replies.
Top