அழகு - 3
முந்தைய நாள் நடந்தவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நினைத்து பார்த்தான். அறைக்கு வந்ததும் தன்னை சுத்தம் செய்ய குளியலறைக்குள் நுழைந்தான் வம்சி கிருஷ்ணா.
குளித்து முடித்து வந்தவனுக்கு சூடாக காபி குடிக்க தோன்றியது.
உடனே பேண்ட்ரிக்கு அழைத்து தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தான்.
அந்த நேரம் லேகா அழைக்க, அழைப்பை ஏற்று அவளிடம் பேச ஆரம்பித்தான்.
"டார்லிங் என்ன டி பண்ற?"
"நானும் என் பையனும் பேசிட்டு இருக்கோம்"
"அடியே! என் பொண்ணு டி அது"
"நோ! நோ! எனக்கு பையன் தான் வேணும்"
"சரி உனக்கு பையன் எனக்கு பொண்ணு. நாம் இருவர் நமக்கு இருவர் பாலிசி ஃபாலோ பண்ணலாம்"
"நல்லா இருக்குடா உன் பாலிசி"
"இருக்கணும்ல" என்று பேசிக்கொண்டு இருக்கும் போது அறைக்கதவு தட்டப்பட்டது.
"டேப்லெட் சாப்பிட்டயா?" என்று கேட்டவாறு கதவை திறந்து காபியை வாங்கியவன், பேசிக்கொண்டே அருந்தினான்.
"சாப்பிட்டேன். நீ செட் ஆகிட்டியா?"
"அதெல்லாம் அப்பவே. நீ இல்லாமல் முதல் மீட்டிங், ஏதோ மிஸ்ஸிங்கா பீல் ஆகுது."
"என்ன சார் என்னென்னமோ பேசுறீங்க?"
"நீ பக்கத்துலயே இருக்கணும்னு தோணுது. உன்னை இறுக்கி அணைச்சுட்டு உன் சூடான மூச்சு என் நெஞ்சுல வீசியப்படி தூங்கணும். எனக்கு நீ வேணும்"
"டேய் நாளைக்கு ப்ரெசென்டேசன் ஒழுங்கா பண்ணிட்டு வா. அதுக்கு அப்புறம் உன்னை விட்டு போகவே மாட்டேன். இப்போ போய் தூங்கு." என்று அழைப்பை துண்டித்தாள் லேகா.
தான் கடைசியாக பேசியது எல்லாம் விட்டு விட்டு நினைவு வர, கஷ்டப்பட்டு நினைவுக்கு கொண்டு வந்தான் வம்சி கிருஷ்ணா.
'அந்த காபில தான் ஏதோ கலந்திருக்காங்க.' என்று சரியாக கணிந்தவனுக்கு, ஏன்? எதற்கு? யார்? என்று வரிசையாக கேள்விகள் மனதை குடைந்தது.
அருகே ஏதோ அசைய, திரும்பி பார்த்தவனுக்கு இவள் எப்படி இங்கே வந்தாள் என்ற யோசினை வந்தது. லேகாவிடம் பேசிவிட்டு கட்டிலில் படுத்தவனுக்கு நிழலாக லேகா கூட இருப்பது போல் தோன்றியது. பட்டுப்போன்ற ஒரு கை அவன்மீது தவிழ்ந்து ஒருவித ஏக்கத்தை அவனிடத்தில் ஏற்படுத்தியது.
கனவில் லேகாவோடு பின்னி பிணைவதாக எண்ணி அருகே இருந்த பாவை மீது படர்ந்தான். மறுப்பு ஏதாவது வந்திருந்தால் சுதாரித்து இருப்பானோ என்னவோ? தடையில்லாமல் போக சைந்தவியோடு கூடி கழித்து கூடி கழித்து, விடியல் வரும் வேளையில் தான் அவளை பிரிந்து கண்ணயர்ந்தான்.
எல்லாம் நினைவிற்கு வர மனம் குற்றம் செய்த சிறுபிள்ளையாக தவித்தது. லேகாவென எண்ணி ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளேன் என்ற எண்ணமே அவனை அடியோடு வதைத்தது. எழுந்து இவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே பார்த்திருந்தான்.
அரைமணி நேரத்திற்கு பிறகு எழுந்தவள், தான் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.
"நோ இது ஒரு கெட்ட கனவு தான் வேக் அப் சைந்து" என்று மெதுவாக அவள் கூறி தன்னிலை அடைய பார்த்தாள். அவனுக்கும் கூட இது ஒரு கெட்ட கனவாக இருக்கக்கூடாதா என்ற ஆவல் இருந்தது.
பின் உண்மை சுட, எதிரே யோசனையோடு இருந்த வம்சியை பார்த்ததும் கலக்கம் இருந்ததே தவிர அருவருப்பு ஏற்படவில்லை. சரியான இடத்தில் தான் தன்னை இழந்துள்ளேன் என்பதே அவளுக்கு அந்த நிமிடம் மன அமைதியை கொடுத்தது.
இருந்தும் தனது பெண்மையை தனது சுயநினைவில்லாமல் இழந்ததை எண்ணி கண்ணீர் பூத்தது. அவளை பார்க்க பாவமாக தான் இருந்தது, அவன் மட்டும் என்ன செய்வான் எல்லாம் கைமீறி அல்லவா போய்விட்டது. தன்னை சுதாரித்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.
"சைந்தவி நீ எப்படி என் ரூமுக்கு வந்த?"
"வாட் இது உங்க ரூமா? இது என் ரூம் வம்சி" என்றவள் இத்தனை நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த கண்ணீரை சிந்தி,
"இல்லை இது என் ரூம் நான் தான் முன்னாடி வந்தேன்".
"நைட் பார்ட்டி முடிச்சிட்டு நான் லேட்டா தான் வந்தேன். இப்போ அது முக்கியம் இல்லை என்னை ஏன் இப்படி பண்ணீங்க வம்சி. உங்களை நான் காதலிக்கிறேன் தான் ஆனால் கல்யாணத்துக்கு முன்னாடியான உறவை கனவுல கூட என்னால் நினைச்சு பார்க்க முடியாது. என்னை ஏமாத்திட மாட்டீங்களே. அப்படி ஏதாவது நடந்தால் நான் செத்துருவேன் வம்சி ." என்று அவனுக்கு வாய்பளிக்காமல் பேசிக்கொண்டே போனாள்.
"சட்-அப் சைந்தவி. முதலில் கற்பனையில் இருந்து வெளியே வா. நம்பள யாரோ வேணும்னே ட்ராப் பண்ணி இப்படி மாட்டி விட்டிருக்காங்க. எனக்கு ஆல்ரெடி ஒரு லவ் இருக்கு. நானே அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு இருக்கேன். லவ் கல்யாணம்னு உளறிட்டு இருக்க."
"வம்சி விளையாட்டுக்கு தான இப்படி பேசுறீங்க? நீங்க என்னை லவ் பண்றீங்க தான. நான் தான் போதையில் இருந்தேன். நீங்க தெளிவா தான இருந்திங்க?"
"பைத்தியம் மாதிரி பேசாத. நான் தெளிவா இருந்திருந்தா நீ இந்த ரூம்குள்ள வந்திருக்க மாட்ட!" என்று அவன் கத்த மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்டது.
"ஐயோ! யாரோ கதவு தட்டுறாங்களே?"
"பயப்படாதே இந்த விஷயத்தில் இருந்து உன்னை வெளியே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு. நீ லூசு தனமா எதையும் பேசி வைக்காதே. நம்பள மீடியா ரவுண்டு பண்ணிடுச்சு"
நடப்பது நெற்றிப்பொட்டில் அறைய நிதானமாக, "வம்சி இது சாதாரணமான விசயம் இல்லை. என்னோட லைஃப் மேட்டர். நடந்த எல்லாத்துக்கும் ரெண்டு பேரும் தான் பொறுப்பு. அதில் எனக்கு சம்பந்தம் இல்லை உனக்கு சம்பந்தம் இல்லைனு சொல்ல முடியாது."
"சுத்தி வளைக்காமல் சொல்லு"
ஆழ்ந்து மூச்சை எடுத்து, "என்னை ஏமாத்த நினைச்சா கண்டிப்பா செத்துருவேன்!" என்று மீண்டும் பல்லவியை பாட அவன் பொறுமை காற்றில் பறந்தது. யாரோ தன்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டிருக்கிறார்கள் என்று தனியாக குழம்பி கொண்டிருந்தான். கூட இவள் வேறு சாவை காட்டி தன்னை மடக்குவது போல் தோன்றியது.
ஏதோ அவன் பேச வர அவள் அலைபேசி அடிக்க பயத்தோடு எடுத்து பார்த்தாள். அதில் பிரியா கால்லிங் என்று வர கை நடுங்க அதை ஏற்றாள்.
"ஹே சைந்து! அண்ணா கிட்ட போனை கொடு" என்றதும் யோசனையோடு அவனிடம் நீட்டினாள்.
"ஹலோ!" என்று அவன் சொன்னது தான் தாமதம்.
"ஏன் அண்ணா இப்படி பண்ண? அவளுக்கும் என் வயசு தான? அவளோட அந்தரங்கத்தை இப்போ ஊரே பார்க்கும்படி பண்ணிட்டியே. அவ தாங்கமாட்டா அண்ணா. ஏன் அண்ணா?" என்று பிரியா கதற நிலைமை விபரிதம் ஆகியதை உணர்த்து, தொலைக்காட்சியை உயிர்பித்தான்.
"மீட்டிங் என்ற பெயரில் சொகுசு அறையில் பிஸ்னஸ் டைக்கன் லீலா சௌந்தராஜன் மகளோடு லீலையில் ஏற்பட்டுள்ளார் இளம் தொழிலதிபர் வம்சி கிருஷ்ணா" என்று காலையில் எடுத்த வீடியோ மற்றும் அறையில் தூங்கிகொண்டிருந்த சைந்தவியின் புகைப்படம் என மாறி மாறி வர அதிர்ந்து போனான்.
அவ்வளவு தான் கத்தி கதற ஆரம்பித்தாள் சைந்தவி.
மீண்டும் சைந்தவியின் அலைபேசி அடிக்க இம்முறை அவளது அன்னை அவளுக்கு அழைத்திருந்தார்.
அவளிடம் அவர் ஏதோ பேச கதறி அழுதவள், "அம்மா எனக்கு பயமா இருக்கு வெளியே நான் வரல" என்றாள்.
எதிர்புறம் என்ன சொல்லப்பட்டதோ, கலைந்த கேசத்தை அள்ளி கொண்டையிட்டு உடைகளை சரி செய்து வெளியே செல்ல ஆயத்தமானாள்.
"இப்போ எங்க போற?" என்று அவள் கையை பிடிக்க,
"எங்க அம்மா வெளியே இருக்காங்க. நான் போறேன்" என்றாள் அழுதவாறு.
"சரி இரு நானும் வரேன்" என்று அவனும் கூட செல்ல, மொத்த கேமராவும் இருவரை சரமாரியாக புகைப்படம் எடுத்தது.
தனது அலைபேசிக்கு யாரும் இன்னும் அழைக்கவில்லையே என்று பார்க்க அது சைலன்ட் மோடில் இருந்தது.
நூத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் அதில் தவறி இருந்தது.
இப்போ எதை பார்க்க என்று அவன் யோசிக்கும் போது நிலைமையை கையில் எடுத்த லீலா சௌந்தராஜன் சற்றும் யோசிக்காமல் ஊடகத்தில் பேசினார்.
"அவங்க லவ் பன்றாங்க. இது அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கை. ஒருத்தரோட அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காமிக்கிறதை விட அசிங்கமான விசயம் எதுவும் இல்லை அதைத்தான் நீங்க பண்ணிருக்கீங்க. சீக்கிரம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. இப்போ வழியை விடுங்க" என்று வம்சியை கண்டிக்கும் பார்வை பார்த்து சைந்தவியோடு அவ்விடத்தை விட்டு அகன்றார்.
அடுத்த கேள்விகனைகள் அவனை நோக்கி பாய எதற்கும் பதிலளிக்காமல் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினான். சற்று ஆசுவாசப்படுத்தி அலைபேசியில் லேகாவை தொடர்புக் கொண்டான்.
"வம்சி என்ன ஆச்சு? எப்படி அவளோட நீ?" என்று திக்கித் திணறி பேசினாள்.
"லேகா எதுக்கு நீ இப்படி அழுதுட்டு இருக்க. உன் வயிற்றில் குழந்தை இருக்கிறதை மறந்துட்டியா? நான் நேரில் வறேன். எனக்கே சில விசயம் தெளிவாக தெரியல"
"சீக்கிரம் வா எனக்கு பயமா இருக்கு!"
"நீ எதையும் யோசிக்காமல் இரு நான் வந்துட்டே இருக்கேன்" என்று அழைப்பை துண்டித்தவனுக்கு பிரியா கேட்ட கேள்விகள் நினைவிற்கு வந்தது.
'அப்போ நான் தான் தப்பு பண்ணேன் அப்படினு எல்லாரும் நினைக்கிறாங்க. பட் இது ஒரு அக்சிடேன்ட்டுனு நான் எல்லாருக்கும் எப்படி நிரூபிக்க?'
'இதை சைந்தவியே நம்பள மத்தவங்கல எப்படி நம்ப வைக்க. யாரு எங்க ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல கோர்த்து விட்டது. மீடியாக்கு யாரு சரியான நேரத்தில் நியூஸ் கொடுத்தது.'
'ஏதோ தப்பா தெரியுது ஆனால் எங்கனு தெரியல. இந்த லீலா எதுக்கு நாங்க லவ் பண்றோம்னு சொன்னாங்க. அவங்க பொண்ணோட இமேஜ காப்பாற்ற அப்படி சொல்லியிருக்கலாம்!'
' இந்த சைந்தவி எப்போ இருந்து என்னை காதலிக்கிறா? இதை எப்படி கவனிக்காமல் போனேன்? அப்போ அந்த நியூஸ் லீலா வேலையா? இல்லை சைந்தவி வேலையா? இல்லை மூணாவதா யாராவது இருக்காங்களா? நான் எப்படி சுயநினைவில்லாம சைய்ந்தவியோட இருந்தே?'
'லேகா முகத்தில் எப்படி முழிப்பேன்? அவள் என்கிட்ட எதையும் எதிர்பாக்கல என் காதலை தவிர. அதை கூட அவளுக்கு தர முடியல' என்று பல விஷயங்களை நினைத்து வருந்தினான்.
மீண்டும் லேகாவை அழைத்து பேச கூட மறந்தவன் இயந்திரத்தனமாக விமானத்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தான்.
அங்கே அழுதுக்கொண்டிருந்த லேகாவை ஒரு கும்பல் கத்தி முனையில் கடத்தி சென்றதை அறியாமல் அவளை காண வந்து கொண்டிருந்தான்.
கருத்து திரி
கதையை பற்றி உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்
www.pmtamilnovels.com