டீசர் 1
"அப்போ உனக்கு இந்த குழந்தை வேண்டாம் அப்படித்தானே!" என்று வெறியின் உச்சத்தில் வந்து விழுந்தது அவன் வார்த்தைகள்.
"ஆமாம் எனக்கு வேண்டாம்" என்றவளது குரலில் இருந்த மாற்றத்தை அப்போதும் அவன் கவனிக்கவில்லை.
"சரி அபார்ட் பண்ணிக்கலாம்" என்று உயிரற்ற வார்த்தைகளை அவன் துப்ப,
"கூடவே எனக்கு டிவோர்ஸ் வேண்டும். அதுவும் மியுச்சல் டிவோர்ஸ்" என்றாள் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து.
அப்போது தான் அவளை கவனித்தான். அவளது பார்வையின் மொழி மாற்றத்தை. அவள் அனைத்தையும் உதறி தள்ள முடிவெடுத்தது அவள் முகத்தில் தெரிந்தது. அந்த நொடி அவனின் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதோ என்று தோன்ற,
"எனக்கு இப்பவும் உன் கூட வாழ விருப்பம் இல்லை. இந்த குழந்தைக்காக தான் யோசிச்சேன். அதான் வேண்டாம்னு சொல்லிட்டில. என் லாயர்கிட்ட பேசி பேப்பர்ஸ் ரெடி பண்ண சொல்லுறேன். இப்போ நீ கிளம்பு!" என்று வாயிலை காட்ட நொடியும் தாமதிக்காமல் அவ்விடத்தை விட்டு சென்றாள்.
மொத்தமாய் தோற்றுப்போன உணர்வு, வாழ பிடிக்கவில்லை. யாருக்காக வாழ? தனக்கென்று யாரும் இல்லாத இடத்தில் இருக்க பிடிக்கவில்லை. தாய்மையை ரசிக்க வேண்டியவள் பாரமாக எண்ணி அதை இறக்கி வைக்க நினைக்கின்றாள். அதற்கு காரணமானவனோ விட்டால் போதும் என்று கைகழுவி அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
அழகாய் பூத்த பூ அர்த்தமில்லாமல் நடுத்தெருவில் தன் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கக்கூட மனம் வராது இறுகி நிற்கிறது......
- பூவாக அவள்