Sulochana Suresh
Moderator
கனவு 8
குறுகிய சந்துகள் உள்ள பகுதி என்பதால் ஆட்டோவில் வந்தனர். சிறு சிறு குடிசைகள் அல்லது சிமெண்ட் ஓடுகளினால் ஆன சிறு வீடுகளே பெரும்பாலும் இருந்தன. மாடிவீடுகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்தன. வீட்டுக்குள் இருக்கும் சமையல் அறை குளியல் அறை வீட்டின் முன் பக்கம் தான் இருந்தன.
ஒருபக்கம் விறகு அடுப்பு மண்ணெண்ணெய் ஸ்டவ் சமையல் பாத்திரங்கள் இருக்க மறுபக்கம் சிறு தடுப்புடன் குளியல் அறை பக்கத்தில் துணி துவைக்கும் கல், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் கேன்கள் அதில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. வீட்டிற்கு முன் கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் இல்லாமல் அங்கு இருப்பவர்களே சிறிதாக கால்வாய்கள் வழி செய்திருக்க அதில் கழிவு நீர் ஓடிக்கொண்டு இருந்தது.
அந்த குறுகிய தெருவில் ஆட்டோ வளைந்து நெளிந்து சென்று ஒரு மாடி வீட்டின் முன் நின்றது. இருவரும் இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு
"வாங்க லட்சுமணன்" என்று சேகர் முன்னே செல்ல அவனின் பின் சென்றவனின் பார்வை அந்த இடத்தைத்தான் சுற்றி பார்த்துக்கொண்டே சென்றது. மாலை வேளை என்பதால் அதிக ஆள்நடமாட்டம் இல்லை. ஒரிருவரே லட்சுமணனை வியப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தன.
அந்த குறுகிய மாடிப்படியில் ஏற்றிச்செல்ல அங்கிருந்த அனைத்து அறைக்கதவுகளும் பூட்டி இருந்தன. கடைசியாக இருந்த கதவின் முன் நின்று சாவியை எடுத்து கதவை திறந்த சேகர் "வாங்க லட்சுமணன்" என்று உள்ளே சென்றான். பின் சென்ற லட்சுமணன் அறை சுற்றி பார்க்கவே தேவையே இல்லை. உள்ளே சென்றதும் எதிர் சுவற்றில் மூன்று அடுக்கு அலமாரி இருந்தது. அதில் மேல் அடுக்கில் பழைய சூட்கேஸ் இருந்தது. அடுத்த அடுக்கில் சில புத்தகங்கள் சில பைல்கள் இருந்தன அடுத்த அடுக்கில் இரண்டு தலையணை இரண்டு போர்வை இருந்தது.
அலமாரிக்கு பக்கத்தில் இரண்டு பழைய பாய்கள் சுருட்டி நிற்க வைத்து இருந்தது. அதற்கு பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் குடம் பிளாஸ்டிக் தட்டு போட்டு மூடியிருக்க அதன் மீது இரண்டு டம்ளர் ஒரு தண்ணீர் சொம்பு சில்வரில் இருந்தன. வலது பக்கம் இருந்த சுவரில் ஹாங்கர் ஒன்றில் சில உடைகள் மாட்டப்பட்டு இருக்க அதன் அருகில் முகம் பார்க்கும் கண்ணாடி சிறிய மர அலமாரியில் வைக்கப்பட்டு இருக்க அதனுடன் சீப்பு, தேங்காய் எண்ணெய் பாட்டில், பவுடர் டப்பா இருந்தது மற்ற சுவர் முழுவதும் சினிமா நடிகர் நடிகைகள் படங்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
கதவின் அருகில் ஒரு சிறு ஒற்றை கதவு சன்னல் இருந்தது. அங்கு ஒரு குளியல் சேப் டப்பாவும் துணி துவைக்கும் சேப் ஒன்று அதன் கவரிலேயே சுற்றப்பட்டு இருக்க பக்கத்தில் ஓரு பல் விலக்கும் பிரஸ் சிறு டூத் பேஸ்ட்டும் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது அதன் பக்கத்தில் ஒரு துணி துவைக்க பயன்படுத்தும் பிரஸ் இருந்தது. சன்னலுக்கு கீழே இரண்டு பிளாஸ்டிக் பக்கெட் ஒரு மக்கு இருந்தது. அதுவே அந்த அறையை நிறைத்தது போல் தான் இருந்தது அந்த அளவுக்கு சிறிய அறை ஒருவர் மட்டுமே கைகால்களை விரித்து படுத்தால் சரியாக இருக்கும் இருவர் படுத்தால் கைகால்கள் விரித்து படுக்க முடியாது.
பத்துக்கு எட்டு அளவு இருந்தது அந்த அறை. லட்சுமணனின் முகத்தைத்தான் சேகர் பார்த்துக்கொண்டு இருந்தான்.
லட்சுமணனின் முகம் அந்த அறைக்கண்டு முகச்சுளிப்போ பிடித்தமின்னையையோ காட்டவில்லை. அந்த இடத்தை வியப்புடன் தான் பார்த்தானே தவிர அவன் மனதில் தன் வீட்டையோ தன் அறையையோ ஒப்பிடவில்லை ஏன் அந்த நியாபகம் கூட வரவில்லை. தான் இந்த இடத்தில் பொருந்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தோன்றியது.
சேகரை பார்த்து "நல்லா இருக்கு" என்றான் லட்சுமணன்.
சேகர் தான் புரியாமல் "லட்சுமணன்?..." என்றான் கேள்வியாக
அதை கண்ட லட்சுமணன் மெல்லிய புன்னகை செய்து "இடத்தை நல்லா வச்சு இருக்கிங்க அதை சொன்னேன்" என்றான்.
"லட்சுமணன் இந்த சின்ன இடம் உங்களுக்கு பிடிச்சு இருக்கா?... நீங்க எல்லா வசதிகளும் இருக்கும் பெரிய வீட்டில் இருந்து இருப்பிங்க இந்த இடம் பிடிக்காது என்று நினைத்தேன்" என்றான்.
"சேகர் நீங்க நினைப்பது சரிதான் நான் பெரிய வீட்டில் இருந்தவன் தான் அதனால் இந்த இடம் பிடிக்காது என்று இல்லையே. இந்த இடம் கூட இல்லாமல் எவ்வளவு பேர் பிளாட்பாரத்தில் இருப்பதை பார்த்து இருக்கேன் அப்படி பார்த்தால் இந்த இடம் பெரியது தானே" என்றான்.
"லட்சுமணன் நிஜமாகவே நீங்க இப்படி மெச்சூரா இருப்பிங்க என்று நினைக்கவே இல்லை. உங்களை வெளியுலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்து இருக்காங்க. எப்படியாவது திரும்ப உங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கனும் நினைச்சேன். ஆனால் நீங்க சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல உங்களை மாற்றிக்கொள்ளும் பக்குவம் இருக்கு என்று இப்பத்தான் தெரியுது" என்றான் சேகர்.
"சூழ்நிலைக்கேற்ப மாறும் பச்சோந்தி என்று சொல்லுறீங்களா சேகர்" என்றதும்
"அய்யோ.. அப்படி இல்லை லட்சுமணன் நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை" என்று பதட்டத்துடன் சேகர் சொல்லவும் லட்சுமணன் வாய்விட்டு சிரித்தான்.
சேகர் புரியாமல் பார்க்கவும் அருகில் சென்று அணைத்து விடுவித்தவன் "பச்சோந்தி என்று சொல்லுறது தப்பில்லை சேகர். எல்லோரும் எப்பவுமே ஒரு விஷயத்தில் இருக்கும் பாசிட்டிவ் விசயத்தை விட்டு விட்டு நெகட்டீவை தான் பேசுவாங்க.
பச்சோந்தி இடத்திற்கு ஏற்றார் போல மாறுவதை நாம் நெகட்டிவாக எடுத்துக்கிறோம். ஆனால் அது எதுக்காக அப்படி நிறம் மாறுது தன்னை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்க மாறுது. அதனால் எதிர்த்து போராடமுடியாத போது தன்னை தற்காத்து கொள்ளவும் தனக்கான உணவை பெறவும் அப்படி மாறும் திறனை கொண்டு இருக்கு. அதில் இருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய பாசிட்டிவ் விஷயம் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் வாழ கத்துக்கனும் என்பதைத்தான்."
"இந்த சூழ்நிலை புதுசு அந்த பதட்டத்தில் வந்த போது உங்களை பார்த்ததும் எல்லாம் பேசினேன். அதனால் என்னை அப்படி நினைத்து இருக்கிங்க. உங்களை பார்த்ததும் என் மனசுக்கு நல்லவர் நமக்கு உதவுவார் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தான் சட்டென்று என்னை பற்றி சொன்னேன். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்து இருந்தால் கண்டிப்பாக அப்படி பேசி இருக்கமாட்டேன்."
"எனக்கு இந்த மாதிரி சூழ்நிலையில் வாழ்ந்த அனுபவம் இல்லை என்றாலும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப எப்படி வாழனும் என்று கேள்வி ஞானம் இருக்கு. என் அம்மா எப்பவும் ராமாயணம் மகாபாரதம் கதைகள் சொல்லிட்டு இருப்பாங்க. அதில் அரசனாக வேண்டிய ராமர் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததையும், மகாபாரதத்தில் பாண்டவர்கள் காட்டில் பதிரெண்டு ஆண்டுகளும் நாட்டுக்குள்ள சில காலம் தாங்கள் யார் என்பதை மறைத்து வாழ்ந்தார்கள் என்பதையும் கூறியிருக்காங்க."
"அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்த காலத்தில் காட்டில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருப்பாங்க. இப்ப நாம் இருக்கும் நவின காலத்தில் காட்டிற்கே டூர் போயிட்டு வராங்க. இப்ப போய் இவ்வளவு மக்கள் வாழும் இடத்தில் வாழமுடியாதா என்ன?.... ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும் தான் அதை சரி செய்ய எனக்கு உங்க நட்பு கிடைத்து இருக்கே சேகர் நீங்க உதவமாட்டிங்களா?... என்று லட்சுமணன் கேட்டதும்.
சேகர் லட்சுமணனின் கை பிடித்து "கண்டிப்பாக" என்று கூறினான். பேசிக்கொண்டே வெளியில் இருந்த குளியல் அறை கழிவறை காட்டிவிட்டு மீண்டும் அறைக்கு வந்து அங்கு தங்கி இருப்பவர்கள் வீட்டு உரிமையாளர் அந்த ஏரியா மக்கள் எப்படி என்று பேசிக்கொண்டே இருந்தனர்.
இரவாகிய போது வெளியே சென்றவர்கள் ஒவ்வொருவராக லட்சுமணன் வந்ததை அறிந்து யார் என்று விசாரிக்க சேகர் அறைக்கு வந்தனர். லட்சுமணனை பற்றி விசாரித்து விட்டு சிறிது நேரம் இருவரிடமும் பேசிச்சென்றனர்.
லட்சுமணனக்கு சட்டென்று அவர்களிடம் பேசுவது சங்கடமாக இருப்பதை அறிந்த சேகர் பெரும்பாலும் அவனே பேசி வந்தவர்களை அனுப்பினான்.
"எப்படி சேகர் நாம வரும் போது யாரும் இல்லையே எப்படி என்னை பற்றி தெரிந்து வந்து விசாரிக்கறாங்க" என்றான் ஆச்சரியமாக
சேகர் புன்னகையுடன் "இங்க ஒருத்தர் பார்த்தால் கூட இந்த ஏரியா முழுவதும் தெரிந்திடும். நம்ப வரும் போது ஒரிருவர் பார்த்து இருப்பாங்க அதான். இங்க இருக்கவங்க எல்லாரும் நல்லவங்க என்று சொல்ல முடியாது லட்சுமணன் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கனும். எல்லார்கிட்டையும் அதிகமாக பேசவும் வேண்டாம் பேசாமலும் இருக்கக்கூடாது. சிலர் பக்கத்தில் கூட போகக்கூடாது அதுபோல ஆட்களும் இங்க இருக்காங்க. எப்பவும் எச்சரிக்கையாக இருக்கறது நல்லது. இதை உங்களை பயமுறுத்த சொல்லலை, சினிமா தவிர வேற வேலைக்கு போகமுடியாதவங்க சிலர் வயிற்று பசிக்காக ரவுடித்தனம் பண்ணுவாங்க. அப்படி பட்டவங்க கிட்ட நம்ப ஒதுங்கி இருக்கனும். சிலர் தவறான வேலைகள் செய்யுறவங்களும் இருக்காங்க அவங்களை பார்த்தாலே நீங்களே கண்டுபிடித்திடுவிங்க. நான் எப்படியும் உங்க கூட தானே இருக்கப்போறேன் எல்லாம் பார்த்துக்கலாம்" என்று கூறியவன் நேரத்தை பார்க்க அது ஓன்பதை நெருங்கி இருந்தது.
"லட்சுமணன் நீங்க இருங்க நான் போய் சூடாக பால் வாங்கிட்டு வரேன். ரொட்டி சாப்பிட்டு பால் குடித்தால் நன்றாக இருக்கும்" என்றவன் அங்கிருந்த தண்ணீர் சொம்பை எடுத்துக்கொண்டு சென்றான் சேகர்.
சேகர் கூறியவற்றை அசை போட்ட லட்சுமணன் சேகரை பார்க்காமல் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும். ஒன்று புரியாமல் நிற்பதை பார்த்து வேறு யாராவது உதவிக்கு வந்து இருந்தாலும் இப்படி சேகர் போல உதவி இருப்பார்களா?... சேகர் சொன்னது போல் என்னிடம் பணம் இருப்பதை தெரிந்து இருந்தால் திருடி சென்று கூட இருக்கலாம்.
இப்படி ஒரு நல்ல நண்பன் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். மனதில் தாயின் முகம் வந்தது. தன் தாயின் வேண்டுதல் தான் நல்லது நடக்க காரணம் என்று தோன்றியதும் வேகமாக எழுந்தவன் தன் பெட்டியை திறந்து அதில் இருந்த டைரியை எடுத்தான். அம்மா எப்படி இருக்கிங்க உங்க மனசை வருத்தப்படுத்திட்டு வந்திட்டேன் சாரி அம்மா. இங்க எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்து இருக்கார் அம்மா. நீங்க எனக்காக கடவுள் கிட்ட வேண்டி இருப்பிங்க அதான் எனக்கு நல்ல நண்பர் கிடைத்து இருக்கார். சீக்கிரம் என் ஆசையை நிறைவேற்றி விட்டு உங்களை பார்க்க வரேன்மா. என் சின்ன குட்டியை பத்திரமாக பார்த்துகங்க அம்மா. மிஸ் யூ சின்ன குட்டி என்று எழுதியவன் மீண்டும் பெட்டியில் டைரியை வைத்து மூடியிருந்தான்.