ஆதவனின் வெளிச்சம் பட்ட காலைப் பொழுதில் அறையிலிருந்து வெளியே வந்த மகிழினி தன் அத்தையின் அறை நோக்கிச் சென்றாள்.
இரவெல்லாம் யோசித்ததில் சில விசியங்கள் புரிந்தது. அதனை தான் தீர்க்க வேண்டுமென்றால் அத்தையின் அறைக்குச் சென்று பார்க்க வேண்டுமென முடிவெடுத்திருந்தாள்.
அறையின் அருகே வந்து திறக்கப் போகும் நேரம், “மேடம்..!” எனக் குரல் வந்து தடுக்க, திரும்பிப் பார்க்க சர்வெண்ட் கேசவன் நின்றிருந்தான்.
“சொல்லுங்க..?”
“மேடம் இறந்ததுக்கு அப்பறம் இந்த ரூமுக்கு யாரும் போகலை. சார் கூட போகலை...”
“அதுனால என்ன..? யாராவது இல்லை போலீஸ் போக கூடாதுன்னு சொல்லிருக்காங்களா..?”
“இல்ல மேடம்..”
“அப்பறம் என்ன நீங்க போங்க நான் கொஞ்சம் பையில் அத்தையோட ரூம்ல எடுக்க வேண்டியது இருக்கு. எடுத்திட்டு ஆபிஸ் போகணும்...” என்றதும் அவனும் சென்று விட உள்ளே நுழைந்தாள்.
சத்தியவதனி இறந்ததுக்கு பின் காவல் அதிகாரிகள், பாரன்சிடீம் தவிர அவள் தான் முதல் முறையாக உள்ளே வர விழிகளோ அறையை தான் கண்டது.
நேர்த்தியான அறை, பொருட்கள் கூட ஆங்காங்கு அப்படியே இருக்க விழிகளோ அவளையும் உணராது அத்தையின் நினைவில் கண்ணீர் விட்டது. கரங்களில் அவரின் புகைப்படம் இருந்தது.
“என் கிட்ட எல்லாமே சொன்ன நீங்க உங்க பிரச்சனையை மட்டும் ஏன் சொல்லலை அத்தே..? அப்படி திடீருன்னு நெஞ்சுவலி வர்ற அளவுக்கு உங்களுக்கு என்ன நடந்தது. எதுக்காக ராத்திரி கால் பண்ணி ரொம்ப நேரம் பேசுனீங்க..? அப்போ கூட சொல்லிருக்கலாம் உங்க மனசை போட்டு அரிச்ச விசியத்தை. விட மாட்டேன் அத்தே உங்களுக்குள்ள என்ன பிரச்சனை இருந்தது. நீங்க எப்படி திடீருன்னு எங்களை விட்டு போனீங்க எல்லாமே கண்டு பிடிக்கிறேன் நான்...” என அவரைக் கண்டு தனக்குள்ளே கூறிக் கொண்டவளோ அறையை பார்வையால் அலசினாள்.
அவளின் விரல்களும், விழிகளும் இரண்டு பொருட்களை தேடியது. ஒன்று தன் அத்தையின் கைபேசி மற்றொன்று அவரின் ஹெல்த் ரிப்போர்ட்.நேரம் தான் சென்றதே தவிர அறை முழுவதும் அலசிப் பார்க்க இரண்டுமே கிடைக்கவில்லை.
‘இது எப்படி சாத்தியமாகும்..? அத்தையின் பொருட்கள் இங்கு தானே இருக்க வேண்டும். உடனே அவரின் கைபேசியிற்கு அழைத்து பார்க்க வழக்கமாக வரும் ஸ்விட்ச் ஆப் என்ற பதில் தான் வந்தது. இருந்தால் இங்கு மட்டும் இருக்க வேண்டும் அவரின் கடைசி நொடிகள் இங்கு தானே..? பின் எங்குச் சென்றது. ஒரு வேலை விஜயின் அறையில் இருக்குமோ..? ஹெல்த் ரிப்போர்ட் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மொபைல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தால் தொடர்பில் தானே இருக்கும்...’ யோசனையாய் நின்றிருக்க,
“என் அம்மாவோட ரூம்ல நீ என்ன பண்ணுற..?” அதிகாரமாக ஒலித்த கோவக்குரலில் திரும்பினாள்.
“அத்தையோட ஹெல்த் ரிப்போர்ட்டும், மொபைலும் இருக்கான்னு பார்க்க வந்தேன்...”
“எதுக்கு ஆதாரத்தை அழிக்கவா..? நீ என் அம்மாவை கொன்னது வெளியே தெரியாம இருக்கவா..?” கடிந்து விட, அந்த வார்த்தையோ நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
“இஸ்டாப் பிட். நான் ஒன்னும் உங்க அம்மாவை கொல்லலை...”
“அப்போ எதுக்கு இங்கே வந்து தேடிட்டு இருக்கே..? என் அம்மா இறப்புக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லைன்னா அதை நிரூபவிச்சி காட்டு...”
“எனக்கு எந்த அவசியமில்லை...”
“அப்போ நான் அப்படி தான் சொல்லுவேன். நீ ஒரு வேஷக்காரி...” கத்த, இவனிடம் பேசுவதே வீண் என்ற நினைப்போடு விலகிச் செல்ல முயல, அழுத்தமாக அவனின் கரம் பற்றி தடுத்தான்.
“விடுங்க என்ன..?”
“இங்கே பாரு நான் மறுபடியும் சொல்லுறேன். குறுக்கே வந்தே அப்பறம் நான் நானா இருக்க மாட்டேன். ஒழுங்கா பிளாக் பண்ண அகவுண்ட்டை எடுத்து விடுற வழியை பாரு...” என அவளின் காதருகே குனிந்து மிரட்டவே,
“என்ன பண்ணுவீங்க நீங்க..? உங்களுக்கு பயப்பிடுற ஆள் இல்லை. அடிப்பீங்க, துன்புறுத்துவீங்க, அதிகாரத்தை காட்டுவீங்க இதெல்லாம் சின்ன வயசுல இருந்தே உங்க கிட்ட பார்த்துட்டேன்...” கூறியவளோ உதறிச் சென்று விட, அவள் கூறிய வார்த்தை அவனின் மனதினை அசைத்து விட்டது.
சிறு வயதிலிருந்தே என்ற வார்த்தை அவனுக்குள் பிரளயத்தையே உருவாக்கியது. ஹாலில் வந்து கைபேசியை எடுத்து அந்த குறுஞ்செய்தியை கண்டவனோ யோசனையோடு அமர்ந்தான்.
நேரம் சென்று கிளம்பி அவளின் கை பையோடு வந்த மகிழினி அவன் அமர்ந்திருப்பதை கண்டும் காணாதவாறுச் சென்று விட்டாள்.
அதனை கண்டவனும் யோசனையாய் இருக்கவே உணவு உண்ண வருமாறு சர்வெண்ட் வந்து கூற டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தான்.
ஒரு பெண் பரிமாற அவனுக்கு பின்னே கேசவன் நின்று கொண்டிருக்க, “அம்...மகிழினி சாப்பிட்டாளா..?” அம்மு எனக் கூற வந்து பின் மகிழினி என அழைத்துக் கேட்டாள்.
சிறுவயதிலிருந்தே தனக்கு தெரிந்த வரை மகிழினியை அனைவரும் அம்மு என்று தான் அழைப்பார்கள். அதனாலே அவளின் பெயரை கூட தெரிந்து வைத்திருக்கவில்லை. பெயர் என்ன அவளை பற்றியே தெரியாமல் தான் இருந்தான். தாய்க்கு தன்னை விட பிடித்த ஒரு பெண் வேலை செய்பவரின் மகள் அம்மு என்பது மட்டுமே அவனுக்கு தெரிந்தது.
“இல்லை சார். மேடம் இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து சாப்பிட்டது இல்லை. காஃபி மட்டும் தான் குடிப்பாங்க...” என்க, கேட்டுக் கொண்டானே தவிர அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.
பத்து மணி போல் அவனின் கைபேசியிற்கு வங்கிக்கணக்கு பண பரிவத்தனை செய்யப்பட்டது என குறுஞ்செய்தி வரவே சிரித்துக் கொண்டான்.
“வெளியே நீ மிதப்பா இருந்தா உள்ளுக்குள்ள இருக்குற பயம் தெரியாதுன்னு நினைப்போ.. பார்த்திரலாம் உன் ஆட்டம் எத்தனை நாளைக்கு..? உண்மையில என் அம்மா தான் உன் கிட்ட இந்த பொறுப்பை கொடுத்ததா இல்லை நீயே அபகரிச்சிட்டையா..? எனக்கு பொண்டாட்டி என் அம்மா எப்படி உன்னை யோசிச்சிருக்கும்...” குழம்பி தான் போனான்.
மனமோ தெளியாத நீரோடையாக இருக்க, மகிழினி தனக்கு சிறிது பணம் மட்டுமே அனுப்பி வைத்திருந்தால் என்பதை அப்போது விஜயநேத்ரன் அறியவில்லை.
அலுவலகத்தில் அன்றைய வேலைக்கான நேர அட்டவனையை மகிழினியிடம் கூறிய உதவியாளர் ராமமூர்த்தி, அறையை விட்டு வெளியே வந்து அவரின் அறைக்குச் சென்றார்.
தன் கைபேசியை எடுத்தவரோ வரதன் சார் என பதிந்து வைத்திருந்த எண்ணிற்கு அழைக்க, தொழில் எதிரியான வரதன் அதனை எடுத்தார்.
“என்ன ராமமூர்த்தி ஏதாவது முக்கியமான விசியம்மா..?”
“ஆமா சார். இந்த மேடம் என்கிட்டே தொழில் பத்தி மட்டுமில்லாம சத்தியவதனி மேடம் பத்தி கேட்டாங்க...”
“என்ன கேட்டா..?”
“என் அத்தைக்கு தொழில்ல யாராவது எதிரி இருக்காங்களா..? ஆபிஸ்ல, பேக்டரில பிரச்சனை எதுவும் நடந்ததா..? பயமுறுத்திற மாதிரி கொலை மிரட்டல் இப்படி எதுவும் நடந்ததா..? வேற ஏதாவது உங்களுக்கு தெரியுமான்னு கேட்டாங்க. அதுவுமில்லாம இந்த பொண்ணு ரொம்ப ஷார்ப்பா இருக்கு. ஏதோ சந்தேகத்தோட தான் இருக்கு சார்..."
“அப்படியா..! சரி நான் பார்த்துக்குறேன். வேற ஏதாவது இவ பண்ணுனா என் கிட்ட சொல்லிக்கிட்டே இரு. புதுசா எதுவும் காண்ட்ராக் போட்டிருக்கீங்களா..? உங்க நிறுவனத்தோட பினாஸ்சியல், அகவுண்ட் ஷேர் எல்லா டீடைய்ல்சும் எனக்கு அனுப்பி விடு. இதுல நீ ஏதாவது பண்ணனும் நினைச்சா அப்பறம்...” கூறிக் கொண்டிருக்கும் போதே,
“இல்ல சார். இல்ல நான் எப்பவும் உங்களுக்கு விசுவாசமா தான் இருப்பேன்..” பயத்தோடு பிதற்றினார்.
“சரி. பாலோ பண்ணி சொல்லிக்கிட்டே இரு. சந்தேகம் வர்ற அளவுக்கு வந்துட்டாளா கவனிச்சிக்கிறேன்...” கூறிய வரதன் கைபேசியை வைத்து விட்டு யோசிக்க ஆரம்பத்தார்.
பின் தொழில் போட்டியாளராய் இருந்த விநாயகம், ஆதிகேசவனையும்(விஜயநேத்ரன் பெரியப்பா ) தொடர்புக் கொண்டு இரவு பாரில் சந்திக்க வருமாறு கூறினார்.
ஆதிகேசவன் தொழிலில் சத்தியவதனியை வீழ்ச்சியடைய வைக்க வேண்டுமென நினைத்தது போன்றே, தன் கட்டுப்பாட்டுக்குள் அந்த நிறுவனத்தை கொண்டு வரவும் எண்ணினார்.
இருள் சூழப் போகும் நேரம் கேப் புக் செய்துவிட்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பிய மகிழினிக்கு எண்ணங்கள் முழுவதும் அத்தையை மட்டுமே சுற்றி வந்தது.
“மேடமுக்கு கால் வச்ச இடமெல்லாம் பிரச்சனை வந்துக்கிட்டு தான் இருந்தது. பொண்ணா இருந்து தொழில் எழுந்துருச்சி இவ்வளோ பெரிய இடத்துல வந்து நிற்கிறது சாதாரண விசியமில்லைல மேடம். அடிக்கடி யார் கிட்டோ இருந்து கால் வரும். தனியா யாரையோ போய் சந்திப்பாங்க. பெரிய பதவில இருக்குற ஆள் கிட்ட எல்லாம் டச்ல தான் இருப்பாங்க. அவங்களும் உதவி பண்ண மேடமும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. இப்போ கொஞ்சம் வருஷமா சினிமா துறைக்கு பினாசியரா இருந்தாங்க...” என்று இன்னும் அந்த ராமமூர்த்தி கூறிக் கொண்டே போக, இதில் ஒரு சில விசியங்களை அவளுக்கு தெரிந்தது இன்னும் சில விசியங்கள் தெரியாதது. தொழில் என்று வந்தால் பிரச்சனைகள் இல்லாமலா இருக்கும்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்து புக் செய்த கேப்காக காத்திருக்க, “அத்தையோட மொபைல், ஹெல்த் ரிப்போர்ட் எங்கே போச்சு..? அதை வச்சு தான் முதல் படியை அடையணும் நினைச்சேன். ஆபிஸ் ரூம்லையும் இன்னைக்கு முழுக்க தேடி பார்த்தாச்சு இல்லையே..! பேமிலி டாக்டர் கிட்ட போய் கேட்டு பார்க்கலாமா..! ஆனா அந்த டாக்டர் டீடைல்ஸ்சும் தெரியாதே..! கடைசியா போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் யார் கிட்ட கொடுத்தாங்க. அந்த நேரம் நானும் ஹாஸ்பிட்டல்ல இருந்துட்டேன்னோ. அண்ணன் கிட்ட கேட்டு பார்க்கலாமா இல்லை விஜய் கிட்ட இருக்குமா..?” யோசனையாய் தலையே வெடித்து விடும் நிலையில் சாலையில் ஓரமாக நிற்பதைக் கூட நினைக்க மறந்திருந்தாள்.
பள்ளி நண்பர்கள் தவிர மற்ற யாரும் அதிகமாக இல்லாது போக, தன்னந்தனியாக ரெஸ்டாரெண்ட், கிளப், பார், லாங் ட்ரைவ் என பகல் பொழுதெல்லாம் சுற்றி வந்த விஜயநேத்ரனுக்கு சில நாட்களிலே வெறுமை உணர்வு.
வெளிநாட்டில் இருக்கும் போதெல்லாம் தோன்றாத வெறுமை உணர்வு இப்போது தோன்றுவது போல் எண்ணம். ஒரு வேலை அன்னை இல்லாத காரணமா அல்லது தன்னோடு உடன் இருந்த நட்புகள் இல்லையென காரணமா தெரியவில்லை.
அன்றும் அப்படியே சுற்றி விட்டு இருள் சூழப் போகும் அவனறியாது அவனின் அலுவகத்தின் சாலையில் வந்து விட, எதையோ நினைத்து தனியாக நின்றுக் கொண்டிருக்கும் மகிழினியைக் கண்டு ஓரமாக காரினை நிறுத்தினான்.
‘இவ எதுக்கு இங்கே நிக்கிற ஆபிஸ்ல வீட்டுல எவ்வளோ கார் இருக்கு அப்போ ஏன் அதை யூஸ் பண்ண மாட்டிக்கா..? ஒரு வேலை யாருக்கோ காத்துக்கிட்டு இருக்காளோ..? இவ என்ன பண்ணுற பார்க்கலாம்...’ நினைத்து அமர்ந்தவாறு பார்த்தவண்ணம் இருக்க, சிலையாய் நின்றாலே தவிர நகரக் கூடவில்லை.
அவளுக்கு நேராய் சற்று தொலைவில் நின்றிருந்த கார் திடீரென இவளை நோக்கி வருவது போன்று விஜயநேத்ரனின் விழிகளுக்கு தெரிந்தது. வாகனங்கள் மிகப்பெரிய கட்டிடங்கள், பொதுமக்கள் போக வர்றவென இருக்கும் பரபரப்பான சாலை தான். அதுவும் மாலை நேரம் சொல்லவா வேண்டும்..? இரைச்சலோடு தான் அனைத்து வாகனமும் சென்றுக் கொண்டிருந்தது.
அந்த இரைச்சல் சத்தம் கூட கேட்காது யோசனையில் இருந்த மகிழினிக்கு தன்னையே குறி வைத்து வரும் கார் மட்டும் விழிகளில் பட்டு விடுமா என்ன..?
சாலையில் ஓரமாக மகிழினி புக் செய்த கேப்பிற்க்காக காத்துக் கொண்டிருக்க, அவளை நோக்கி ஒரு கார் வருவதை அவள் அறியவில்லை.
ஆனால் அவளையே பார்த்த வண்ணம் இருந்த விஜயநேத்ரன் கண்டு விட, காரினை விட்டு வேகமாய் இறங்கும் நொடியே அவளின் அருகில் அந்த கார் வந்து விட்டது. சாலையை கடந்தால் மட்டுமே அவளருகே நெருங்க முடியும்.
“ஹே..! அம்மு...” எதிர்புறம் இருந்தவாறு கடக்க முயற்சி செய்து கத்த, அதற்குள் அந்த காரும் அவளை நெருங்கி விட, இவனின் முன்பு அலாரம் அடித்துக் கொண்டு ஒரு வேன் கடந்துச் சென்றது.
அதில் வேன் குறுக்கே சென்றதில் அவளின் உருவம் மறந்து விட, ஒரு நொடி அவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பதபதைப்பு, இதயத்துடிப்போ வேகமெடுத்து துடித்தது. அவனின் விழிகளுக்கு அவளை காணவேண்டுமென எதிர்பார்ப்பு.
வேன் விலகிச் செல்ல, காக்கி யூனிபார்ம் அணிந்த அவளின் அண்ணன் அவளுடைய கரம் பற்றி இழுத்தது தெரிந்தது.
அவளுக்கு ஒன்றுமில்லை என தெரிந்ததும் நிற்காதுச் சென்ற அந்த காரினை கண்டவனுக்கோ ஏதோ ஒரு உந்துதல் மனதில் தோன்ற சட்டென தன் காரினை திரும்பி வேகமெடுத்து பின் தொடர ஆரம்பித்தான்.
விஜயநேத்ரனோ தான் ஒரு கார்ரேஸர் என்பதை இப்போது காட்டிக் கொண்டிருந்தான். அந்த கார் மட்டுமே அவனின் விழிகளுக்கு குறிக்கோளாக இருக்க, பின் தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் செல்ல அது ஒரு அப்பார்ட்மெண்ட் ஒன்றில் உள்ளேச் சென்று நின்றது.
பின் தொடர்ந்து வந்த விஜயும் சற்று தொலைவிலே நின்று விட, காரிலிருந்து இறங்கிய ஒருவன் லாக் செய்து விட்டு நடந்தான். பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த குழைந்தைகளில் ஒரு பெண் குழைந்தை வேகமாய் அவனை நோக்கி நொடி ஓடி வர, கரங்களில் தூக்கிக் கொஞ்சுக் கொண்டு உள்ளே செல்வது தெரிந்தது.
இத்தனைக்கும் விஜயநேத்ரன் அவனை பின்னால் மட்டுமே கண்டானே தவிர நேராக முகத்தினை காணவில்லை.
“யாராக இருக்கும்..? பார்த்தா பேமிலிமேன் மாதிரி இருக்கான். எதார்த்தமா கார்ல ரோட்டை கிராஸ் பண்ணி போறதை தான் நம்ம தப்பா நினைச்சிக்கிட்டோம்மோ. இவன் உண்மையில தப்பான நோக்கத்தோட இருந்தா இப்படி பதட்டமில்லாம இருக்க மாட்டான்ல. ச்சே..! அடேய் என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே..?” தன்னை தானே திட்டிக் கொண்டு காரினை எடுத்துச் சென்றான்.
அதே நேரம் இங்கே மகிழினி நின்றுக் கொண்டிருக்கும் நொடி தன்னை நோக்கி தான் வருகிறான் என்பதை அறியாது இருந்தவளோ அருகே நெருங்கும் நொடி உணர்ந்து விட்டாள்.
யாரோ தன்னை அழைப்பது போல் இருக்க திரும்பி பார்க்கும் போது காரினை உணர்ந்தாள். அதற்குள் வெகு அருகில் நெருங்கி விட சட்டென யாரோ கரத்தினை வலுவாக பிடித்து பின்னே இழுத்தனர்.
விழிகளை ஒரு நொடி பயத்தில் மூடி திறந்தவளோ தன் அண்ணன்னை கண்டதும், “அண்ணா..!” என்க,
“அறிவேயில்லையா உனக்கு. ரோட்டுல நிக்கிற கார் வர்றது கூட தெரியாம அப்படி என்ன யோசனை..? இப்போ மட்டும் நான் வராம இருந்திருந்தா...” பாசமலர் அண்ணனோ கோவத்தில் அனலாய் கத்த,
“சாரி அண்ணா..! அத்தையை பத்தி நினைச்சுக்கிட்டு இருந்தேன். அதான்...”
“சரி வா...” அழைத்துக் கொண்டு அருகிலிருந்த காஃபி ஷாப்பிற்கு நுழைந்து இருவரும் அமர்ந்தனர்.
“நீ எப்படிண்ணா திடீருன்னு வந்தே..?”
“பக்கத்துல ஒரு கேஸ் விசியமா வந்தேன். அப்படியே உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருந்தது...”
“நானும் உன் கிட்ட பேசணும் நினைச்சிருந்தேன் நீயே வந்துட்டே..?”
“என்னடா சொல்லு..?”
“அது வந்து அண்ணா..! அத்தையோட போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் யார் கிட்ட இருக்கு. நான் அந்த நேரம் இல்லைல. நீ இருந்திருப்பேல உனக்கு தெரிஞ்சிருக்கும்ல. எனக்கு போஸ்ட்மாடம் பண்ணுன டாக்டர் அப்பறம் அத்தையோட பேமிலி டாக்டர் டீடைல்ஸ் வேணும்...”
“ரிப்போர்ட் அன்னைக்கு ஹாஸ்பிட்டல் வச்சி விஜயநேத்ரன் கிட்ட தான் கொடுத்தாங்க. அது வச்சி நீ என்ன பண்ண போறே..? நான் தான் இந்த கேஸ் பார்த்துக்குறேன்னு சொல்லிருக்கேன். நீ ஏன் தேவையில்லாம இதை நினைச்சி உன்னை இஸ்பாயில் பண்ணிருக்கே. உன்னை நினைச்சி தான் நாங்க எல்லாரும் கவலைப்படுறோம். நீ நம்ம வீட்டுக்கு வந்திரு. அவன் கூட எல்லாம் இருக்க வேண்டாம்...”
“இல்லைண்ணா என்னால வர முடியாது. அத்தை கொடுத்த பொறுப்பை நான் நல்லபடியா பார்க்கணும். அதுவும் போக அத்தைக்கு என்ன நடந்ததுன்னு கண்டு பிடிச்சாகணும்...”
“அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா மகிழ்...”
“இருக்கு அண்ணா..! ஆனா நான் சீக்கிரம் கண்டு பிடிக்கணும் நினைக்கிறேன்...”
“உன் வாழ்க்கையை நீ வீணடிக்கிற. நாம்ம சத்தியவதனி மேடம்க்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம் இல்லைன்னு சொல்லலை. உன் வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம்டா. உனக்கு அந்த வீட்டுல இருக்க பிடிச்சிருக்கா அதுவும் அவன் கூட...” கேட்க, அந்த நொடி மௌனம் தான் பதிலாக கொடுத்தாள்.
தங்கையின் கரங்களை ஆதரவாய் பற்ற, சில துளிக் கண்ணீர் அவளின் சிப்பி விழிகளில் இருந்து விழுந்தது.
பின் தன்னை மீட்டுக் கொண்டவளோ, “நீ என்ன சொல்ல வந்தே என் கிட்ட..?” என்றாள்.
“சத்தியவதனி மேடம் கால் ஹிஸ்டரி செக் பண்ணுனேன். ஏகப்பட்ட கால்ஸ் இருந்தது. அதுல ஒரு சில நம்பர் அடிக்கடி வந்திருக்கு. அதுவும் வந்ததே தவிர இவங்க ஒரு நாளும் அதுக்கு பண்ணதில்லை. கடைசியா இறந்த அப்போ கூட வந்திருக்கு...”
“அத்தை கிட்ட நான் தான் கடைசியா பேசுனேன்...”
“ஆமா அதுக்கு முன்னாடி வந்திருக்கு...”
“என்ன பேசுனாங்க கண்டு பிடிக்க பிடிக்குமா அண்ணா..? அத்தையோட மொபைல் இப்போ காணோம். யார் கிட்ட இருக்குன்னு தெரியல. அது மாதிரி ஹெல்த் ரிப்போர்ட் காணோம். எனக்கு சந்தேகமா இருக்கு. இதுக்கு பின்னாடி ஏதோ இருக்கு...”
“சரிம்மா நான் பார்த்துக்குறேன். நீ கொஞ்சம் கவனமா இரு. ஏன்னா இப்போ நீ சத்தியவதனி மேடம்மோட இடத்துல இருக்குற. உனக்கும் ஆபத்து வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்பறம் அவன் கிட்ட இருந்து கவனமா இரு. என்னால அவனை நம்ப முடியல. ஏதாவது பிரச்சனை சந்தேகம் இருந்தா எனக்கு கால் பண்ணு. தேவையில்லாம எதுலையும் போய் மாட்டிக்காதே. எப்படி மொபைல் அன்ட் ரிப்போர்ட் மிஸ்சனாது நான் பார்க்குறேன்...”
“சரிண்ணா..! கேப் வெயிட் பண்ணுது நானும் கிளம்புறேன்...”
“கவனமா போ. அந்த வீட்டுல கார் தான் இருக்குல. உனக்கு ட்ரைவிங் தெரியும்ல அப்பறம் என்ன..?”
“என்னென்னு தெரியல. இன்னும் என்னால முழுசா உரிமை எடுத்துக்க முடியல...” எனக் கூறவிட்டு எழுந்துச் செல்ல, அவளோடு வந்த வேந்தனும் தங்கை செல்லும் வரை காத்திருந்து பின் சென்றான்.
இரவு நேரம் வீட்டுக்குள் நுழைந்த மகிழினியை வேலைக்காரர்கள் மட்டுமே வரவேற்றாரே தவிர விஜயநேத்ரன் இல்லை.
அவனில்லாதது நல்லது என நினைத்தாலும் என்று பேச நினைக்கிறோமோ அன்று அவன் இல்லாது போனது கடுப்பாகியது.
‘எதுக்கு தான் இப்படி பொறுப்பில்லாம இருக்கானோ..? கொஞ்சமாவது அம்மா இறந்ததை நினைச்சி கவலைப்படுறானோ..? இந்த தொழிலை தான் பார்க்க தெரியாது விருப்பமில்லாம இருக்கான் சரி, விருப்பட்டதை பார்க்கலாம். அப்படியில்லைன்னா மறுபடியும் பாரின்னாவது போய் தொலைய வேண்டியது தானே..?’ நினைத்து புலம்பிக் கொண்டு அறைக்குச் சென்றாள்.
அலைபேசியை எடுத்து இரவு உணவினை ஆடர் செய்து குளியலறைக்குச் சென்றாள். மனமோ ஒவ்வொரு நொடியும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருந்தது.
உணவு வந்து விட்டதாக தகவல் வந்ததும் வெளியே வந்து வாசல் சென்று உணவினை வாங்கி திரும்பி வர, அப்போது தான் அவன் ஹாலில் அமர்ந்து டிவி ரிமோட்டோடு சண்டையிடுவது புரிந்தது.
‘அதுக்கு வாய் இருந்தா அழுதிரும் இந்த நிமிஷம்...’ மனதுக்குள் நினைத்து நடக்க,
“அதான் வாய் இல்லையே..?” அவள் மனதில் நினைத்ததிற்கு வெளிப்படையாக பதில் கூறவே, ஒரு நொடி அப்படியே நின்று விழிகள் இரண்டையும் பெரிதாக விரித்து முறைத்தவளோ பின் நகர்ந்தாள்.
‘இவனுக்கு என்கிட்டே வம்பிழுக்கமா இருக்க முடியாது போல...’
“ஆமா இருக்க முடியல அதுக்கு என்ன இப்போ..?” புருவம் உயர்த்தி கேட்கவே,
‘மனசுக்குள்ள நினைக்கிறது இவனுக்கு எப்படி...’
“அது தான் உன் கண்ணு வெளிச்சம் போட்டு காட்டிருதே..? நான் ஒன்னும் கொடுமைக்காரன் இல்லை. இங்கே வேலை பார்க்குற எல்லாரும் இங்கே தான் சாப்பிடுறாங்க. அதே மாதிரி தான் நீயும். இப்படி வெளியே ஆடர் பண்ணி சாப்பிடணும் அவசியமில்லை. நாளையிலிருந்து இங்க சாப்பிடலாம்...” என்க,
“இதை நீங்க சொல்லி தான் நான் கேட்கணுமா? நான் ஒன்னும் வேலைக்காரி இல்லை. இந்த வீட்டு மருமக. எப்போ எதை எப்படி பண்ணனும் எங்களுக்கு தெரியும்..? நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி...” இதழ்களை சுழித்து கூறியவளோ தாண்டிச் செல்ல, மறுபடியும் அக்னியின் உடன் பிறப்பாய் மாறினான்.
‘இருடி உன்னை கவனிச்சிக்கிறேன்..’ மனதில் கருவ, அவளோ இதழில் புன்னகை பூக்கச் சென்றாள்.
நீண்ட நாட்களுக்கு பின் ஏன்யென்று உணர முடியாது ஒரு நிம்மதி. அது இவனாளா நிச்சியம் தெரியாது..?
மாடியேறி அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தவனின் மனமோ நெருப்பாய் கொதித்தது. கைபேசியில் வந்த அந்த குறுஞ்செய்தி மேலும் மேலும் இம்சிக்க ஏனோ இதில் இவளுக்கு சம்மந்தம் இருப்பதாக உள்மனம் குரலிட்டது.
இரவு நேரம் ஆதிகேசவன் ஹாலில் அமர்ந்திருக்க இளைய மகன் தருண் தந்தையின் முன்னே வந்து அமர்ந்தான்.
“அவ அந்த வீட்டோட வேலைக்காரி பொண்ணுப்பா. இப்போ அவளோட அண்ணன்...” என்று அவளின் அண்ணன், அன்னை குடும்பம் பற்றி வெளிப்புறமாக தெரிந்த விசியத்தை மட்டும் கூறினான்.
“சரிடா..! எப்படி மருமகள்ன்னு சொல்லி வந்தா..? இவனும் வீட்டுக்கு கூட்டிட்டு போய் வச்சிருக்கான்...”
“ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டதா சொல்லுறாங்க. உண்மையான்னு தெரியல. அதை இன்னும் விசாரிக்கணும். இவன் காதலிச்சி கல்யாணம் பண்ணுன மாதிரி தெரியல. இவன் வெளிநாடுல இருந்திருக்கான். அந்த குடும்பமும் பல வருசமா சத்தியவதினி வீட்டுக்கு வந்ததில்லை. ஏதோ உள்குத்து இருக்குப்பா...”
“எப்படி சொல்லுற..?”
“அந்த வீட்டுல நம்ம ஆள் ஒருத்தனை வேலைக்கு வச்சிருக்கேன். அந்த ஆள் மூலமா தான் இத்தனை நாள் சத்தியவதனி பத்தின தகவல்ல சேகரிச்சி வச்சிருந்தேன். வீட்டுக்குள்ள எலியும் பூனையுமா சுத்துன்னு கேள்விப்பட்டேன்...”
“சரி..சரி சீக்கிரம் என்னென்னு முழுசா விசாரி. அப்போ தான் அந்த பொண்ணை விரட்டிட்டு இவனை நம்ம கைக்குள்ள வச்சி அந்த ராஜ்ஜியத்தையே புடுங்க முடியும்...”
“சரிப்பா. நான் பார்த்துக்குறேன்...” கூறியவனோ அடுத்த திட்டத்தை தீட்டிக் கொண்டு எழுந்துச் செல்ல, சத்தியவதனி தான் நினைத்ததை விட மாறாக இருந்திருக்கிறார் என்பது புரிய ஆதிகேசவன் யோசனையாய் அமர்ந்திருந்தார்.
(சொன்னது மாதிரி இந்த வாரம் 5 எபி முடிஞ்சது. விகெண்ட் நேரமே இருக்காது. திங்கள் கிழமை அடுத்த பதிவோடு வரேன். )
நாட்கள் செல்ல ஒரு நாள் இரவு நேர பணியில் வேந்தனும், சில கான்ஸ்டபிளும் இருந்தனர். மறுநாள் அந்த இடத்தில் கல்லூரி ஒன்று திறக்க எம்.பி வருவதால் பாதுகாப்பு பணியை அப்போதே தொடங்கியிருந்தனர்.
இரவிலும் கூட செல்பவர்கள், வருபவர்கள் யாராக இருந்தாலும் கண்காணித்துக் கொண்டே இருக்க, அந்த நொடி வேந்தனுக்கு அழைப்பு வந்தது.
திரையில் வந்த நம்பரைக் கண்டதும் அதனை எடுத்தவனோ, “அடிக்கடி என் நம்பருக்கு கால் பண்ணாதே சொல்லிருக்கேன்ல. அப்படியே இம்பார்ட்டென்ட்னா மெசேஜ் பண்ண வேண்டியது தானே..?” மற்றவர்களுக்கு கேட்காது மெல்ல எரிந்து விழ,
அதில் என்ன செய்தி யார் கூறினாரோ, “அப்படியா..! உண்மையாவா? சரி நான் இதோ சீக்கிரம் வரேன். அப்பறம் இந்த விசியத்துல என் தங்கச்சி ரொம்ப தீவிரமா இருக்கா. கவனமா தான் நம்ம இருக்கணும். வெளியில இந்த தகவல் மட்டும் போச்சு அப்பறம் நமக்கு தான் கஷ்டம்...” எனக் கூறி வைத்து விட்டான்.
“சரி ஓகே நீங்க எல்லாரும் இங்கே பார்த்துக்கோங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துறேன்...” என அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் கூறிவிட்டு ஜீப்பினை எடுத்துக் கொண்டு கிளம்பினான் வேந்தன்.
அன்று வாரயிறுதி நாள் இருந்தாலும் அலுவலகத்திற்கு வந்த மகிழினி பினான்ஸ்டீம், அகவுன்ட்ஸ்டீம் கொடுத்த கோப்புகளை பார்த்த வண்ணம் இருந்தாள்.
நேரம் சென்றதே தெரியவில்லை அந்த அளவுக்கு அதில் மூழ்கியே இருக்க, “எப்படி தான் அத்தே..! இதெல்லாம் நீங்க இத்தனை நாள் ரன் பண்ணிட்டு இருந்தீங்களோ..? இந்த ரெண்டு வாரத்துலே பைத்தியம் பிடிச்சிரும் போல இருக்கு...” மனதுக்குள் அத்தையை நினைத்துக் கொண்டு வேலையை பார்த்தாள்.
அப்போது தான் இருக்கும் அறைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்க நிமிர்ந்துக் காண, முன்னே புதிதாக விஜய் வயதை உடைய ஒரு இளைஞ்சன் வருவதைக் கண்டாள்.
“ஹலோ யார் நீங்க..? என்னோட பெர்மிஷன் இல்லாம எப்படி நீங்க உள்ளக்க வரலாம்...”
“அப்படியா அப்போ நீ மட்டும் எப்படி பெர்மிஷன் இல்லாம இந்த கம்பெனிக்குள்ள வரலாம்...” கேட்டவாறு அவளின் முன்னே இருந்த இருக்கையில் காலின் மீது கால் போட்டு அமர்ந்தான் தருண்.
அவன் கேட்ட கேள்வியும் செயலும் எரிச்சல் கொள்ள தான் வைத்தது. தன்னை கேள்வி கேட்க இவன் யார் என்ற எண்ணம் கோவத்தில் கொதித்தவளோ, “ஸ்டாப் பிட் என்ன பேசுறீங்க நீங்க..? முதல வெளியே போங்க...” ஏனோ அவனைக் கண்டதுமே சுத்தமாக பிடிக்கவில்லை. படித்தவன் போல் இருந்தாலும் அவனின் நடவடிக்கை, பேச்சு எதுவுமே சரியாக படவில்லை.
“என்னம்மா இப்படி புசுக்குன்னு போக சொல்லுற..? நான் யாருன்னு தெரியுமா..?”
“நீங்க யாரா வேணா இருந்திட்டு போங்க. எனக்கு என்ன..?”
“அதானே உனக்கு என்ன..? உனக்கு ஒன்னுமில்லை. அப்பறம் எதுக்கு நீ இங்கே இருக்கே..?”
“அதை கேட்க நீங்க யாரு..?”
“இப்போ தானே நீ யாரா வேணா இருந்திட்டு போன்னு சொன்னே...” சிரிப்போடு புருவம் உயர்த்தி திமிராய் கூறவே, காவலாளியை அழைத்தாள்.
அவனோ அமைதியாக இருக்க உள்ளே வந்த காவலனிடம், “இவங்களை முதல வெளியே கூட்டிட்டு போங்க. என்னோட அனுமதி இல்லாம யாரையும் உள்ள விடாதீங்க..?” கத்தவே, அவரோ பயத்தோடு அமர்ந்திருந்த தருனைக் கண்டார்.
“உங்க மேடம் சொன்னா செஞ்சிருவியா நீ..?” அதிர்வது போல் மிரட்டிக் கொண்டு காவலனிடம் தருண் கேட்க,
“மேடம், இவர் சத்தியவதனி மேடம்மை அடிக்கடி பார்க்க வருவாங்க. அதான் உள்ளே விட்டேன்...” என்க, யோசனையான பார்வையோடுக் கண்டாள்.
“போங்க அதான் உங்க மேடம் யோசிக்காங்கல இனி உங்களை கூப்பிட மாட்டாங்க...” என்றதும் காவலன் சென்று விட, முறைத்த பார்வையோடு அமர்ந்திருந்தாள் மகிழினி.
“ஹாய், ஐ ஆம் தருண். உன் மாமியாரோட மகன்...” எனக் கூறி தன் கரங்களை நீட்ட, அதிர்ந்தே விட்டாள்.
‘மகனா இது எப்படி சாத்தியமாகும்..? விஜய் மட்டும் தானே அவருக்கு மகன். இது என்ன புதுக்கதை...’ ஓராயிரம் குழப்பங்களோடு காண,
“ஓ சாரி. வார்த்தை தவறிட்டு. உன் மாமனாரோட அண்ணன் மகன், அப்படின்னா உன் மாமியாருக்கு மகன் தானே..? நீ மருமக சொல்லிக்கிட்டு இருக்கும் போது நான் மகன்னு சொன்னா தப்பில்லையே..! கேட்குறதுக்கு தான் அந்த சத்தியவதனி உயிரோட இல்லையே இப்போ..? ” நக்கல் குரலில் கூறவே, ஏக கடுப்பானாள்.
“இப்போ எதுக்கு இந்த உறவு முறையை என் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்க..?”
“என்ன நீ இப்படி கேட்டுட்டே எவ்வளோ முக்கியமான உறவு...”
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு..?”
“வெரி சிம்பிள். இங்கே பாரு நான் உனக்கு இப்போ ஒரு வார்னிங் கொடுத்திட்டு போகலாம் தான் வந்தேன். இதை விட்டு ஒழுங்கா ஓடிப்போயிரு. உனக்கெல்லாம் இது சுத்தமா செட்டாகாது. போக மாட்டேன்னு சொல்லி அடம்பிடிச்சேன்னு வை அப்பறம் உன் அத்தை இப்போ எங்கே இருக்காங்களோ அங்கே போக வேண்டியதா இருக்கும்...”
“என்ன பயமுறுத்தி பார்க்கிறீங்களா..? இதுக்கெல்லாம் நான் பயப்பிடுறவ இல்லை...”
“அதானே...நீ ஏசிபி வேந்தனோட தங்கச்சியாச்சே..! சத்தியவதனி வீட்டு உப்பை தின்னு வளர்ந்தவங்கள பயம் எப்படி இருக்கும்..? என்ன நான் சொல்லுறது சரி தானே..?” என்க, இவன் எதற்காக தன்னிடம் இப்படி வந்து பேசிக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கண்டாள்.
“இங்கே பாரு..! உன்னோட குடும்பம் அப்பறம் நீ யாருன்னு எனக்கு தெரியும்..? உன் அண்ணன் ஏசிபியா இருக்கலாம். ஆனா அந்த கமிஷனரே எங்க பக்கம்..? இந்த ராஜ்ஜியம் எங்களுக்கு வந்து சேர வேண்டியது. எவ்வளோ சீக்கிரம் நீ விலகி போக முடியுமோ அந்த அளவுக்கு உனக்கு நல்லது போய்ட்டு வரேன்...” எனக் கூறி விலகிச் சென்றவன்,
பின் திரும்பி, “உன்னோட வீட்டு அட்ரெஸ் முதற்கொண்டு எனக்கு எல்லாமே தெரியும்...” என மிரட்டல் தோணியில் கூறி சிரித்து விட்டுச் சென்றான்.
இருக்கையில் அமர்ந்திருந்தவளின் மனதிலோ குழப்பங்கள் சூழ்ந்திருந்தது.
“அத்தை எதுக்காக என் கிட்ட இதை பத்தி சொல்லலை. அத்தைக்கு சொந்தங்காரங்க இருக்காங்களா..? ஒரு வேலை இப்போ வந்து இவன் என்னை மிரட்டுன மாதிரி தான் அத்தை கிட்டையும் நடந்திருப்பானோ..? இவனுக்கு பயந்திருப்பாங்களா என்ன..? அதுனால தான் சொல்லாம இருந்தாங்களா..?” குழம்பியவளோ தன் அண்ணனுக்கு அழைத்து இப்போது நடந்ததை கூறினாள்.
“நீ இதை பத்தியெல்லாம் எல்லாம் கவலைப்படாதே..!” என வேந்தன் கூற,
“நம்ம பேமிலி பத்தின தகவல் எல்லாமே வச்சிருக்கான். அம்மாவை, அண்ணியை கொஞ்சம் ஜாக்கிரிதையா இருக்க சொல்லுண்ணா..? இவன் பேசிட்டு போனதை பார்த்தா ஏதோ தீவிரமா இருப்பான்னு தான் தோணுது. இவனோட குடும்பம் அத்தையை பிளாக்மையில் பண்ணிருப்பாங்களோ..? கால் ஹிஸ்டரி பார்த்தேன்னு சொன்னேல அதுலஸ் இவங்க சம்மந்தப்பட்டதா இருக்குமா..? வேற யாரும் சொந்தங்காரங்க இருக்காங்களா அத்தைக்கு..? ” மனதில் எழும் கேள்விகள் அனைத்தையும் கூறிக் கேட்டாள்.
“தெரியலடா. நான் விசாரிக்கிறேன்...” எனக் கூறி வைத்து விட, அன்னையிடம் இதனை பற்றி கேட்கலாம் என நினைத்து வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தாள்.
அன்று வாரயிறுதி நாள் தானே மாலை நேரம் போல் தன் வீட்டுக்கு மகிழினி வர, அவளை இன்பமாய் வரவேற்றனர் அன்னையும், அண்ணியும்.
“அம்மா..! ஏதோ உன்னை அங்கே தான் இருக்கணும் சொன்னேன் சரி. அதுக்காக இங்கே வரக் கூடாதுன்னு சொல்லலையே..? இரண்டு வாரமாச்சு உன்னை பார்த்து. நல்லாயிருக்கையா அம்மு..?”
“நல்லாயிருக்கேன்ம்மா. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க..? எங்க அண்ணி குட்டி தேவதையை காணோம்...”
“தூங்குறா மகிழ்...”
“சரி அண்ணி...”என்க, மூன்று பெண்களும் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்படியே தான் கேட்க வந்ததையும் கேட்டாள் மகிழினி.
“அம்மா..! அத்தைக்கு சொந்தக்காரங்க யாரும் இருக்காங்களா..?”
“என்னடா திடீருன்னு கேட்குற..?” என்றதும் அலுவலகத்தில் தருண் என்ற ஒருவன் வந்து சொந்தம் என்பதை பற்றியே கூறினாள்.
“ஆமாடா. செல்வராகவன் அதான் உன் மாமனார் அவரும் ஆதிசேகவன் ரெண்டு பேருமே கூட பிறந்தவங்க தான். அந்த ஆதிகேசவன் ஐயாவுக்கு நாலு பிள்ளைகள். ஒன்னா தான் முன்னாடி இருந்தாக. அப்போ உன் மாமனார் இறந்ததும் பெரியவர் சொத்தை பிரிச்சி வைக்க அதுக்கு அப்பறம் எந்த சொந்தமும் பந்தமுமில்லை. எல்லாமே முடிஞ்சி போச்சு. உன் மாமனார் சின்னவரு. அவர் பெரியவரு ஆனா பரம்பரையா வாழ்ந்த வீட்டை சின்னவருக்கு கொடுத்து கூடவே இருந்துட்டாங்க. ஆதிகேசவன் ஐயாவுக்கு இதை விட பெரிய வீட்டை கட்டி கொடுத்திருக்க அப்பவே தனியா போயிட்டாரு. தொழிலும் தனித்தனியா தான் பார்க்குறதா கேள்விப்பட்டேன். முதல் கொஞ்சம் நாள் உறவுல தான் இருந்தாக, பெரியம்மா இறக்க ஐயாவும் அதுக்கு அப்பறம் படுத்த படுக்கையில விழ, அவங்க வர்றதே இல்லை. இருக்கும் போது கூட வந்து பார்க்காதவங்க இறந்ததுக்கு தான் வந்தாங்க...” என அவர்களைப் பற்றி தனக்கு தெரிந்ததை கூறினார் கோசலை.
“நீங்க எப்போலயிருந்து அங்கே வேலை பார்த்தீங்கம்மா..?”
“விஜய் பிறந்த போதுல இருந்து பார்க்க ஆரம்பிடிச்சேன். அப்போ ஒன்னா தான் இருந்தாக. அதான் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன். ஆதிகேசவன் ஐயாவோட மகன் வந்து என்னம்மா சொன்னேன்..?”
“ஒன்னுமில்லை. சும்மா தான் வந்து பார்த்திட்டு போனாங்க. அவங்களை பத்தி அத்தை என்கிட்டே சொல்லாத மாதிரி என்னை பத்தியும் அவங்க கிட்ட சொல்லலை போல...”
“எனக்கு தெரிஞ்சி பேசிக்கிட மாட்டாங்க. சத்தியவதனி அம்மாவோட வளர்ச்சி அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது. பொம்பளையா இருந்திட்டு எப்படி வளரலாம்ன்னு எண்ணம் அவங்களுக்கு..?”
“எதை வச்சிம்மா சொல்லுற..?”
“ஒரு மாதிரி மிதப்பா இருப்பாரு. அம்மாவை துச்சமா பார்ப்பாரு. இவையெல்லாம் கால் தூசிக்கு சமம் சொல்லுறது மாதிரி நடந்திருப்பாரு. அது எதுக்கு நமக்கு விடும்மா. உன் கிட்ட பேச வந்தா என்னென்ன என்ன மட்டும் கேட்டிட்டு விட்டுரு சரியா.. வா சாப்பிடலாம். உன் ஸ்கூட்டி வீட்டுல சும்மா தானே இருக்கு எடுத்திட்டு போகலாம்டா...”
“மறந்தே போயிட்டேன். சரி இப்பவே போகும் போது எடுத்திட்டு போறேன்...” எனக் கூறியவாறு அன்னை,அண்ணி இருவரோடும் கலந்துக் கொண்டாள்.
இருள் சூழப் போகும் நேரம் தன் அறைக்குச் சென்று சில தேவையான முக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்ப, மகளைக் கண்டு தயங்கினார் கோசலை.
“என்னம்மா ஏதாவது என்கிட்டே சொல்லணுமா..?”
“அம்மாடி அது வந்து விஜய் தம்பி கிட்ட பேசுனையா...”
“என்ன பேசணும்..?”
“இல்லடா உங்க கல்யாணம். விஜய் ஏத்துக்கிட்டானா..? சத்தியவதனி அம்மா பண்ணுன காரியத்தை அவனுக்கு சொல்லி புரிய வச்சியா..? ஏதாவது சொன்னானா ஊரறிய கல்யாணம் பண்ணுன தானே மத்தவங்க வாய்ல விழாம இருக்க முடியும்...” என்க,
அன்னை கூறியதை கேட்டவளின் மனமோ, ‘ஆரம்பத்திலிருந்து இப்போது வரை விஜயநேத்ரனும் தானும் இருக்கும் நிலை, அவன் தன்னை குற்றம்சாட்டும் வார்த்தைகள், தன்னை நம்பாத அவனின் செயல், கண்ட போதெல்லாம் நிகழும் வாக்குவாதம்...’ எண்ணிப் பார்த்தவளோ விரக்தியோடு இதழ் சிரிப்பை ஒன்றை வீசினாள்.
“என்னம்மா சிரிக்கிற..?”
“ஒன்னுமில்லை. நீங்க எங்களை நினைச்சி கவலைப்பாடதீங்க..? அத்தை துணையா இருந்தா நீங்க சொன்னது அவங்களோட ஆசைப்படியே நடக்கும். பார்க்கலாம்...” கூறிவிட்டு அண்ணியிடமும் சொல்லிக் கொண்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
மகள் செல்வதையேக் கண்டவாறு இருந்த கோசலைக்கு தன்னையே மறந்த விஜயநேத்ரனின் எண்ணங்கள் மட்டுமே..!
நட்சத்திரங்கள் சூழந்த இருள் வானத்தில் அழகாய் காட்சி தரும் நிலவினை போல், டைனிங் டேபிளில் தன் கைபேசியை நோண்டியவாறு அமர்ந்திருந்தாள் மகிழினி.
இப்போது சில நாட்களாக வீட்டில் உணவருந்த ஆரம்பித்து விட்டாள். அவன் கூறியதற்காக அல்ல கடையில் வாங்கி உண்பது உடலுக்கு ஒத்துப் போகவில்லை என்பதால் மட்டுமே..!
மகிழினி கூறிய உணவினை சமைக்க, அமர்ந்தவளின் பின்னே சற்று தள்ளி கேசவன் நின்றுக் கொண்டிருந்தான். அவனை சிறிது நேரம் கண்டவாறு இருந்தவளோ பின் அவனின் புறம் திரும்பினாள்.
“என்னாச்சு நீங்க ஏன் இங்கேயே நின்னுக்கிட்டு இருக்கீங்க..?”
“என்னோட வேலையே இந்த வீட்டையும் வேலைக்காரங்களையும் பார்த்துக்க வேண்டியது தான் மேடம். ...”
“வாட்..! இந்த வீட்டுல என்ன பத்து பேரா இருக்காங்க. சமைக்க ஒரு ஆள், பரிமாற ஒரு ஆள், என்ன வேணும்ன்னு கேட்டு சொல்ல ஒரு ஆள். எப்பவுமே இப்படி தானா..? இல்ல அத்தை இறந்ததுக்கு அப்பறம் உங்க சார் இப்படி வச்சிருக்காரா..?”
“மேடம் இருக்கும் போதே இப்படி தான்...”
“மொத்தம் எத்தனை வேலைக்காரங்க இருக்கீங்க..? என்னென்ன வேலை பார்ப்பாங்க. சேலரி பிராசஸ் எல்லாம் எப்படி..?”
“இந்த வீட்டுல என்னை சேர்க்காம ஏழு வேலைக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு மந்தலி சேலரி தான். மேடம் என்கிட்டே மொத்தமாக கொடுத்திடுவாங்க. நான் அவங்களுக்கு கணக்கு பார்த்து கொடுத்திடுவேன்...”
“அப்படியா..? அப்போ இந்த மாசம் இன்னும் வந்திருக்காதுல...”
“ஆமா மேடம்...”
“சரி எவ்வளோ சொல்லுங்க நானே எல்லாரோட அகவுன்ட் ட்ரான்ஸ்வர் பண்ணிறேன்...” என்றதும், ஒரு நொடி கேசவன் முகம் மாறியதை அவள் கவனித்துக் கொள்ளவில்லை.
மொத்தமாக சத்தியவதனி கேசவனிடம் கொடுக்கும் பணத்தில் அவனுக்காக பங்குப் போக, இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொண்டே வேலைக்காரர்களுக்கு கொடுப்பான். இப்போது மகிழினி தானே கொடுத்து விடுவதாக கூறியதும் புஸ்பானமாகியது அவனின் முகம்.
“சரிங்க மேடம்...” என்க, அதே நேரம் அவளுக்காக உணவும் வர உண்ண ஆரம்பித்தாள்.
உண்டுக் கொண்டிருக்கும் போதே சிலவற்றை யோசித்தவளோ உண்டு முடித்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து வேலைக்காரர்கள் அனைவரையும் அழைத்தாள்.
கேசவன் உடன் சேர்ந்து மொத்தம் எட்டு பேர் அவளின் முன்னே நிற்க, அவர்களின் சிலர் பிரோபசனல்லாக இந்த வேலையை செய்வது போல் இருந்தது.
“வாட்ச்மென் ரெண்டு பேருல ஒரு ஆள் மட்டும் இருந்தா போதும். கேட் கிட்ட ஏன் கேமரா மாட்டாம வச்சிருக்கீங்க..? நாளைக்கு ஆளுங்க வருவாங்க வீட்டை சுத்தி கேமரா பிக்ஸ் பண்ணிருங்க. அப்பறம் குக்கிங் மூணு பேர்ல ஒரு ஆள் போதும். ஹவுஸ் கிளினிங் உள்ளே,வெளியே ரெண்டு பேர் போதும். மொத்தத்துல நாலு பேர் மட்டும் இந்த வீட்டை மெயின்டைன் பண்ணா போதும்....”
“உங்களை நான் எங்கே போக சொன்னேன். பிராஞ்ச் ஆபிஸ் கிளினிங், ஆபிஸ் கேண்டீன் ஆளுங்க தேவைப்படுது. நீங்க அதை கவனிங்க. சேலரி இங்கிரீமென்ட் பண்ணிறேன். கேசவன் நீங்க வேலைக்காரங்க கவனிக்க இனி தேவையில்லை. குக்கிங் மட்டும் பார்க்குறது உங்களோட வேலையா இருக்கட்டும் சரியா...” என்க, சம்பள உயர்வு இருக்கு என்பதால் அனைவரும் சரி என்றனர்.
அதுவும் போக மற்றவர்கள் மனதில் இனி கேசவனிடமிருந்து தங்களுக்கு விடுதலை என்ற எண்ணம் தான். தங்கள் சம்பாத்தியதிற்கான முழு பணமும் தங்களிடம் வந்து சேருமென்ற நம்பிக்கை பிறந்தது.
“ஒரு ஆள் பார்க்க வேண்டிய வேலையை நாலு பேர் பாரக்குறீங்களா..? அப்போ சம்பளத்தை ஒரு ஆள் மட்டும் வாங்கிக்கோங்க...” என்று சத்தியவதனிக்கு தெரியாது கூறி கொடுத்து துன்புறுத்துவான் கேசவன்.
“என்னாச்சு கேசவன் எல்லாரும் போய்ட்டாங்க. நீங்க அப்படியே நின்னுக்கிட்டு இருக்கீங்க..?”
“வேலைக்காரங்க எல்லாருக்கும் என்னால எப்படி சேர்த்து சமைக்க முடியும்...”
“அப்பறம் என்ன..? போங்க...” என்றதும், அவனும் அமைதியோடு கடுகடுவென சென்று விட, சிறிது நேரம் சென்று ஒன்பது மணி போல் வீட்டுக்குள் நுழைந்தான் விஜயநேத்ரன்.
அவனைக் கண்டதும் ஹாலில் அமர்ந்திருந்தவளோ எழுந்துச் செல்ல முயல, “ஏய்..! நில்லு...” தடுத்தான்.
திரும்பி அவனைக் காண செக்லீப் ஒன்றை கொடுக்க யோசனையோடு வாங்கி பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஏன் என்றால் இரண்டு கோடி அதில் போட்டிருக்க விழி விரிய முறைப்போடு அவனைக் கண்டாள்.
“இதுல சைன் பண்ணு...”
“எதுக்கு பண்ணணும்..? என்ன காரணம்..?”
“ரேஸ்கார் வாங்க...”
“முடியாது...”
“இது ஒன்னும் உன் பணம் இல்லை...”
“ஆமா இல்ல தான் அதுக்கு என்ன இப்போ..? முடியவே முடியாது. இந்த பணத்தை வச்சி தொழில் தொடங்குனா சரி கொடுக்குறேன். அதை விட்டிட்டு சும்மா கார் வாங்க எல்லாம் என்னால தர முடியாது. அல்ரெடி நீங்க அத்தை கிட்ட பணம் வாங்கி ரெண்டு மூணு கார் இத்தனை வருஷத்துல வாங்கிருக்கீக..? ஆனா ஒரு தடவை கூட அது என்னாச்சுன்னு அத்தை கிட்ட சொல்லலை. அவங்களும் கேட்கலை நான் அப்படி இருப்பேன்னு நினைக்காதீங்க..? இத்தனை வருஷத்துக்கு பாரின்ல சார் என்ன பண்ணுனீங்க..?” என்க, உள்ளுக்குள் எழுந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு அவனைக் கண்டான்.
‘இதையெல்லாம் அம்மா தான் சொல்லிருப்பாங்களா..? நான் கார் வாங்குன விசியம் தெரிஞ்சிருக்குன்னா அம்மா கூட இவ டச்ல இருந்தாளா..? அப்படி இருந்து அம்மாவை நம்ப வச்சி தான் மருமகளாகிட்டாலோ..? அம்மாவும் இவளோட ஆக்டிங் நம்பிட்டாங்களோ...’ மனதில் நினைக்க,
“என்னாச்சு பதில் சொல்லுங்க விஜயநேத்ரன்..? பாரின்ல இவ்வளோ நாள் என்ன பண்ணுனீங்க..? நீங்க ஏன் இங்கே இருக்கீங்க மறுபடியும் அதே பாரின் போக வேண்டியது தானே..?”
“போக மாட்டேன்...”
“ஏன்..?”
“உன்னோட சுயரூபத்தை வெளியே கொண்டு வரணும்ல...”
“அதெப்படி உங்க அம்மா இருன்னு சொல்லும் போது இருக்கல. இப்போ இருப்பேன்னு சொல்லுறீங்க..? என்னோட சுயரூபம் நீங்க வெளியே கொண்டு வரதுக்கு பதில் உங்களை நீங்க மாத்திக்க முயற்சி பண்ணுங்க. இத்தனை நாள் நீங்க பண்ணிக்கிட்டு இருந்த தப்பு என்னென்னு புரிஞ்சிக்கோங்க. உங்க அம்மாவோட கடைசி ஆசை என்னென்னு தெரிஞ்சி அதையாவது ஒரு மகனா இருந்து நிறைவேத்த பாருங்க...” கூறிவிட்டு விலகிச் செல்ல,
“நான் எப்படி இருக்கணும் நீ சொல்ல வேண்டாம். உன்னால இப்போ இதுல சைன் பண்ண முடியுமா முடியாதா..?”
“ஏதாவது பிஸ்னஸ் பண்ணுறேன்னு சொல்லுங்க சைன் பண்ணுறேன். அப்படி இல்லைல்ல உங்க அம்மாவோட கடைசி ஆசை நிறைவேத்தி வைங்க அப்போ நானே ஒன்னு என்ன பத்து ரேஸ்கார் கூட வாங்கி தரேன்...” எனக் கூறி அவளின் அறைக்குச் சென்று விட, கையில் இருந்த செக்கினை ஆத்திரமோடு கிழித்து கீழே வீசி எரிந்தான். எந்த நொடியும் எப்போதும் அவள் தன்னை மட்டமாக நினைத்து தள்ளி விடுவதாக நினைத்து சீறிக் கொண்டிருந்தான்.
அறையில் வந்து தன் கோவத்தினை பொருள்களில் மீது காட்டியவனுக்கு அன்னையின் புகைப்படம் இருக்க கொலைவெறியில் அதனை எடுத்தான்.
“எதுக்காக நீங்க இப்படி பண்ணுனீங்க..? நீங்க தான் பண்ணுனீங்களா இல்லை இவ இப்படி உங்களை பண்ண வச்சாளா..? இவளே அப்படி உங்களை பிரைன்வாஸ் பண்ணிருந்தாலும் நீங்க எப்படிம்மா இவளை நம்பலாம். உங்களுக்கு என் மேல ஏன் நம்பிக்கை இல்லாம போச்சு...” கோவமாய் கத்தவே,
“நம்பிக்கை இருக்குற அளவுக்கு நீ ஏதாவது பண்ணுனியா..?” அவனின் அன்னையே அவனிடம் கேட்பது போல் தோன்ற, படுக்கையில் புகைப்படத்தை வீசியவன் அறைக்குள்ளே குறுக்கு நெருக்குமாக நடந்தான்.
நினைத்த எதையும் செய்ய முடியாது அவளுக்கு கட்டுப்பட்டு போவதை போல் எண்ணம். அப்போது கூட அவனுக்கு பணத்தினை சேமித்து வைப்பது என்றால் என்ன என்பதை உணரவில்லை. வெளிநாட்டில் அவள் வாழ்ந்த வாழ்க்கை அவன் மட்டுமே அறிந்தது. தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்து சிறிது நேரம் பேசினான்.
இரவில் பணிகளை முடித்து விட்டு வீட்டினை விட்டு வெளியே வந்த கேசவன் தன் கைபேசியை எடுத்து தருணுக்கு அழைத்தான்.
“ஹலோ சார்...”
“சொல்லு..? ஏதாவது சுவராசியமா நடந்ததா..?”
‘ஆமா சார்...”
“என்ன அது..?” என்க,
மகிழினி வேலைக்காரர்களுக்கு எடுத்த முடிவு அதன் பின் விஜயநேத்ரன் பணம் கேட்டு அவள் கொடுக்க முடியாதென கூறி இருவரும் சண்டையிட்டது அனைத்தையும் கூறினான்.
“நீ கவலைப்பாடதே உனக்காக பணம் டபுள் மடங்கா உன்கிட்ட வந்து சேரும். நாளைக்கு அந்த விஜயநேத்ரன் வெளியே கிளம்பும் போது எனக்கு கால் பண்ணி சொல்லு..?” எனக் கூறி கைபேசியை வைத்தான்.
தருண் முன்னே இது அனைத்தையும் கேட்டவாறு அவனின் அண்ணன் கிஷோரும், தந்தை ஆதிகேசவன் இருவரும் அமர்ந்திருந்தனர்.
“எதுக்குடா இப்படி சொன்னே..?”
“அந்த விஜயநேத்ரன் நம்ம கைக்குள்ள வச்சிக்க இது தான் சரியான நேரம். அவன் ஒரு கார் பைத்தியம்...”
“அப்போ அவனுக்கு அவன் கேட்குற கார் வாங்கி தரணும் சொல்லுறையா..?”
“இல்லப்பா..! அதுமேல உள்ள மோகத்தை குறைக்க விடாம பண்ணி அதை எதிரா அவனோட பொண்டாட்டி மேல சாரி..சாரி அந்த வீட்டுல இருக்குற மகிழினி கிட்ட திரும்பி விடணும். ரெண்டு பேருக்கும் பூகம்பகம் வெடிக்கணும்...” குரோதம் கொண்ட வெற்று புன்னகையோடு இப்போதே அது கண் முன் போல் நடந்ததை போல் நினைத்து கூறினான்.
“அவனோட பொண்டாட்டி தானேடா அவ..?” கிஷோர் கேட்க,
“இல்லடா. அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச மாதிரியே இல்லை. அந்த பொண்ணு ஏமாத்துற..? நான் நேர்ல போய் பார்க்க தானே செஞ்சேன்...”
“இது எப்போடா...”
“போன வாரம் தான்...” என்க, இனி என்னசெய்யப் போகிறேன் என்பதை பற்றி கூறினான் தருண்.
மறுநாள் கூறியது போன்றே வீட்டினை சுற்றி சிசிடிவி கேமிரா மாட்டுவதற்கு ஆட்களை வரவழைத்திருக்க அவர்களும் வந்திருக்க அதனை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தனியா இந்த வீட்டுல இருந்த அத்தை ஏன் இதை பண்ணலை இத்தனை நாள்..?” யோசித்து ஆழ்மனதில் அதையும் பூட்டிக் கொண்டாள்.
வாசலில் இருந்த காவலாளி அறையில் அதனை எப்படி கண்காணிப்பது என்பதை பற்றி வந்து பிக்ஸ் செய்தவர்களுக்கு கூற அவளும் அதனை உடனிருந்து கேட்டுக் கொண்டாள். இதிலே மதியம் நேரம் வந்திருக்க ஆரம்பித்த உடன் மாடியில் இருந்த பால்கனியில் இருந்துக் கண்டானே தவிர விஜயநேத்ரன் எதுவும் கூறவில்லை.
பின் விஜயநேத்ரன் அவளை கண்டுக் கொள்ளாதது தன் காரினை எடுத்துக் கொண்டுச் சென்று விட, அவளும் அனைத்து வேலைகளையும் முடித்து அலுவலகம் சென்று விட்டாள்.
இருவரும் சென்ற நொடி கேசவன் தன் கைபேசியை எடுத்து தருணுக்கு அழைத்து கூற, அதே போல் இங்கே அலுவலகத்தில் ராமமூர்த்தி மகிழினி செய்யும் வேலைகளையும் பற்றி தொழில் போட்டியாளராக இருந்து வரதனுக்கு கூறினார்.
“இட்ஸ் ஓகே நோ பிராபளம். வந்திருந்தாலும் என்னால கவனிச்சிருக்க முடியாது. அப்பறம் இப்போ என்ன பண்ணிட்டுக்கிட்டு இருக்கே..? வாழ்க்கையெல்லாம் எப்படி போகுது..?” என சிறிது நேரம் பொதுவாக பேசினர். விஜயநேத்ரனுக்கு ஒரு வயது மூத்தவன் தான் தருண். இருவரும் சிறு வயதில் பார்த்துக் கொண்டது பின் இவனுக்கு டார்கெட்டாக இருந்தது எல்லாம் சத்தியவதனி மட்டுமே..!
“அப்பறம் உனக்கு கார் ரேஸ் ரொம்ப பிடிக்கும்ன்னு கேள்விப்பட்டேன். இன்னும் ரெண்டு மாசத்துல இங்கே கூட அது சம்மந்தமா ஒரு காம்படீசன் நடக்க போகுதாம். இப்பவே ஜாயின் பண்ணிக்கோ. உன்னோட திறமைக்கு ட்ரைனிங் எடுக்கணும் கூட அவசியமில்லை. உனக்கு பிரைட் பியூச்சர் இருக்குப்பா. ஒரு நாள் ஆபிஸ் போயிருந்தேன் இப்போ உன் வைப் தான் ரன் பண்ணிட்டு இருக்கா போல..? அப்படியே சித்தி மாதிரியே..! ஆமா உன்கிட்ட கொடுக்காம சித்தி ஏன் பொறுப்பை உன் பொண்டாட்டி கிட்ட கொடுத்தாங்க. இப்போ அவளுக்கு கீழே நீ இருக்குறது போல ஆகிரும்ல. தொழிலை நீ எடுத்து பார்க்க வேண்டியது தானே..?” சந்தேகம் போல் தெரிந்துக் கொண்டே கேட்க,
“எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாதே...”
“கத்துக்க வேண்டியது தானே இல்லை. தொழில் பத்தி தெரிஞ்ச ஒருத்தனை நீ கைக்குள்ள வச்சிக்க வேண்டியது தானே..? ஒரு வேலை உன் ஆசை மனைவி பார்த்துக்குறது தான் பிடிச்சிருக்கோ..? இருந்தாலும் எங்க யார் கிட்டையும் சொல்லாம ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டே ப்ரோ..?” ஆழமாக அவனின் முகபாவனையை கவனித்தவாறுக் கேட்டான்.
“சந்தர்ப்ப சூழ்நிலையில அவசரமா நடந்துருச்சி எங்க கல்யாணம்...” என்க, ஏமார்ந்த உணர்வு தருணுக்கு.
“ஓ அப்படியா..! சரி ரெண்டு பேரும் நல்லபடியா இருந்தா எங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புறேன். ஏதாவது ஹெல்ப் வேணும்னா என் கிட்ட கேளு..? இதான் என்னோட விசிட்டிங் கார்டு...” எனக் கூறி விஜயநேத்ரனிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
தருண் செல்லவே அவனைக் கண்டு எள்ளலோடு புன்னகைத்தான். தன் பெரியப்பா குடும்பத்தை பற்றி மறந்தது போல் காட்டிக் கொண்டாலும் நினைவில் தான் வைத்திருந்தான். அன்னை இறந்தபோது கூட வாராது இப்போது கூட இவன் வந்து பேசியது எதனால் என்பதை புரிந்துக் கொண்டான் விஜயநேத்ரன்.
நேராக தங்களுடைய அலுவலகம் செல்ல, மகிழினி இருந்த அறைக்குள் நுழைய, அப்போது அவளில்லை. எம்.,டி இருக்கையில் சென்று அமர முன்னே இன்னும் மாறாத அன்னையின் பெயர்பலகை.
நேரம் செல்ல மீட்டிங் ஒன்றை கான்பிரன்ஸ் அறையில் முடித்துக் கொண்டு அறைக்கு நுழைந்த மகிழினியின் விழிகளில் விழுந்தது விஜயநேத்ரன் வந்து அமர்ந்திருப்பது தான்.
அமைதியாக எதுவும் பேசாதது மடிக்கணினியை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
“ஒருத்தன் வந்து உட்கார்ந்திருக்கான்னே என்ன ஏதுன்னு கேட்குறாளா பாரு..?” மனதுக்குள் நினைத்து எழுந்து அவள் அமர்ந்த சோபாவிலே அவனும் அமர நிமிர்ந்து முறைப்போடுக் கண்டாள்.
‘சும்மா..! சும்மா முறைச்சா பயந்திருவோம்மோ...’ நினைத்தவாறு, “இப்போ நீ சொன்ன மாதிரி நான் ஏதாவது தொழில் பண்ணுனா எனக்கு ரெண்டு கொடி ரூபாய் தந்துருவையா..?” கேட்க,
‘இப்போ எதுக்கு இங்கே வந்து இப்படி கத்தாமே மெல்ல கேட்குறான். ஏதோ சரியில்லை...’ நினைத்தவாறு இருந்தாள்.
“உன்னை தானே கேட்குறேன்...”
“என்ன தொழில் பண்ண போறீங்க..?”
“அது உனக்கு சொல்லணும் அவசியமில்லை...”
“அப்போ நீங்க உண்மையை தான் சொல்லுறீங்கன்னு நான் எப்படி நம்ப..?”
“என்ன பண்ணனும் சொல்லுற..?”
“கொஞ்சம் பணம் தரேன். அதை வச்சி ஸ்டார்ட்அப் பண்ணுங்க. அதுக்கு அப்பறம் எப்படிங்குறதை நான் பார்த்து சொல்லுறேன்...” என்க, கடுந்தீயில் எரிந்துக் கொண்டிருந்தான்.
“இது எல்லாமே உங்களோடது நான் நீங்க சொன்ன மாதிரி ஒரு வேலைக்காரி தான். ஆனா என்னை நம்பி கொடுத்த பொறுப்பை நான் சரியா செய்யணும். அதுனால நீங்க என்ன தொழில் பார்க்க போறீங்கன்னு எனக்கு உறுதியா சொல்லுங்க. நான் அடுத்த நிமிஷமே பணம் கொடுக்குறேன்...” என்க,
“உன்னை நம்பி கொடுத்த பொறுப்பா..? இல்லை நீயே வேணும்ன்னு சொல்லி எடுத்துக்கிட்ட பொறுப்பா..?”
“உங்களுக்கு என்ன தான் பிரச்சனை..?”
“உண்மையை சொல்லு...”
“என்ன உண்மை..?”
“நீ எப்படி எனக்கு வைப்பா என் அம்மாவுக்கு மருமகளா ஆனா...”
“உங்க அம்மா தானே இதை செஞ்சாங்க. அவங்க கிட்ட கேளுங்க..? கேட்க முடியாதுன்னு தெரியும்ல அப்போ கண்டுபிடிங்க. ஆனா ஒன்னு நான் விருப்பப்பட்டு இதை ஏத்துக்கல போதுமா..?” கூறிவிட்டு இருக்கையில் சென்று அமர, யோசித்தவாறு அப்படியே அமர்ந்திருந்தான் விஜயநேத்ரன்.
அந்த நொடி மகிழினிக்கு அவளின் அண்ணனிடமிருந்து அழைப்பு வர, அதனைக் கண்டவளோ விஜய் இருப்பதை உணர்ந்து எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
“எதுக்கு இவ இப்போ வெளியே போறா..? அப்படி யார் கால் பண்ணிருப்பாங்க. இவளை பார்த்தா வித்தியாசமா தெரியுதே..? எதையோ திருட்டுத்தனமா பண்ணுறாளா..?” எண்ணியவாறு அமர்ந்திருந்தவனோ தருண் இவளிடம் பேசிச் சென்றதை கேட்கவே மறந்தான்.
வெளியே வந்த மகிழினி அலைபேசியை எடுத்து, “சொல்லுண்ணா..?” என்க,
வேந்தனோ, “ஆபிஸ்ல தானே இருக்கே மகிழ்..?” என்றான்.
“ஆமாண்ணே..! என்ன விசியம்..?”
“வீட்டுல எல்லா இடத்துலையும் சத்தியவதனி மேடம்மோட மொபைல் செக் பண்ணி பார்த்தையா..?”
“விஜய் ரூம் தவிர எல்லா ரூம்லையும் பார்த்துட்டேன். இல்ல அண்ணே..?”
“அப்படியா..! ஆனா அன்னைக்கு ரூம்ல டேபிளில்ல தான் மொபைல் இருந்திருக்கு. இறந்ததுக்கு அப்பறம் உடலை ஆம்புலன்ஸ்ல கொண்டு போக தூக்கும் போது லைவ் வீடியோ போலீஸ் எடுத்திருக்காங்க. அதுல இருக்கு ஆனா அதுக்கு அப்பறம் பாரென்சி டீம் வந்து செக் பண்ணும் போது இல்ல. அந்த கேப்ல மிஸ்சாகிருச்சி. மீடியா ஆளுங்க வீட்டை வெளியே தான் இருக்க, வீட்டாளுங்க, போலீஸ் டீம் மட்டும் தான் உள்ளே இருந்திருக்காங்க...”
“அப்போ யாரோ பிளான் பண்ணியே எடுத்திருக்காங்களா..? இதுல ஏதோ இருக்கு தானே அண்ணா..! அது சரி ஆனா மெடிக்கல் ரிப்போர்ட் அது எப்படி மிஸ்சானது...”
“அந்த வீட்டுல இருக்குற யாரோ தான் இதை பண்ணிருக்கணும். அது யாருன்னு கொஞ்சம் கண்டுபிடிம்மா. வேலை பார்க்குறவங்க எல்லாரும் எப்படி..?”
“எல்லாரும் நல்லவிதமா தான் தெரியுறாங்க. இப்போ கொஞ்சம் பேர் தான் வேலை பார்க்குறாங்க...”
“ஏன்..?”
“நான் தான் அண்ணன் அவங்களை...” என்று அவள் செய்ததை பற்றியும், இப்போது சிசிடிவி மாட்டியதும் கூறினாள்.
“சரி அப்போ..! நீ மெல்ல விசாரிச்சி பாரு. வீட்டுக்குள்ள யாராவது அன்னைக்கு வந்தாங்களா வாட்ச்மென் கிட்ட கேளு...”
“சரிண்ணா நான் பார்த்துக்குறேன். அப்பறம் அத்தையை வழக்கமா செக் பண்ணுற டாக்டர் ஹாஸ்பிட்டல் மாறிட்டாருன்னு சொல்லி எங்க இருக்காருன்னு கேட்டேனே அதை பத்தி விசாரிச்சியா..?”
“இல்லடா அவரோட நேம் அன்ட் விசிட்டிங்கார்டு ஏதாவது வீட்டுல இருக்கான்னு பாரு...” என்றதும் சரி எனக் கூறி கைபேசியை வைத்து யோசித்தாள்.
‘தன் அத்தையின் அறையின் வேறெதாவது காணாமல் போனதா..?’ யோசனையோடு திரும்ப, அவளுக்கு பின்னே அறையின் வாசலில் கரங்களை கட்டிக் கொண்டு சாய்ந்து நின்று இருந்தான் விஜய்.
ஒரு நொடி திக்கென்று ஆனவளோ பின் முகத்தை மாற்றிக் கொண்டு, அவனை கடக்க அவனும் வழிவிட உள்ளேச் சென்று விட்டாள்.
இரவு நேரம் போல் தன் அத்தையின் அறைக்குச் சென்ற மகிழினி என்ன தேடுகிறோம் என தெரியாது தேடினாள். வித்தியாசமாக எதுவும் விழிகளில் படுகிறதா எனத் தேட எதுவுமில்லை. அவரின் மருந்து, மாத்திரை இருக்கும் பாக்ஸ் படவே அதனை எடுத்தாள். அதில் மருத்தகம் பெயர் மட்டுமே இருக்க அதை எடுத்துக் கொண்டு வெளியே வர, வழக்கம் போல் குறுக்கே வந்து நின்றான்.
‘இவனுக்கு எப்படி நான் அத்தை ரூமுக்கு வரும்போதெல்லாம் தெரியுது. இப்படி மோப்பம் பிடிச்சி வந்துறான்...’ நினைக்க,
“என்ன பண்ணுற நீ..? இதை எதுக்கு எடுத்தே..? இந்த பாக்ஸ் வச்சி என்ன பண்ண போறே..?”
“உங்களுக்கு சொல்லணும் அவசியமில்லை...” கூறியவளோ விலகிச் செல்ல முயல, அவளின் கரத்தினை அழுத்தப் பற்றி எடுத்து சுவரோடு சாய்த்தான்.
“சத்தியம்மா உங்களை மட்டும் நினைக்கலை...” முகத்தை திருப்பிக் கொண்டு கூறினாள்.
“நானும் உன்னை நினைக்க சொல்லலை. ஏதோ மறைக்கிற..? என்னென்னு சொல்லு..? பேசுறது கூட மறைமுகமாவே இருக்கே..?”
“இதுவரைக்கும் உங்களுக்கு புரிஞ்சதே அதுவே சந்தோஷம் தான். உங்க அம்மா இறந்ததுக்கு நான் தான்னு நீங்க நினைக்கீங்கல. இல்லைன்னு நான் நிரூபச்சி காட்ட வேண்டாமா..? நீங்க ஒவ்வொரு தடவையும் நீ தான் காரணம், நீ தான் காரணம் சொல்லும் போது எனக்கு மனசு வலிக்குது விஜய். என்னால தாங்க முடியல. நான் இல்லைன்னு சொல்லியும் நீங்க நம்ப மாட்டிக்கீங்க..? அன்னைக்கு என் குடும்பத்தையே நீங்க அவமானப்படுத்தி அனுப்பிட்டீங்க..? என் அம்மா ஒரு நாளும் உங்களை மறந்தது கிடையாது. எதுக்கு உங்களுக்கு என் மேல நம்பிக்கை வராம போச்சு. நாங்க வேலைக்காரங்க தான் ஆனா கொலைகாரங்க இல்லை. உங்க அம்மா தான் எங்களை வாழ வச்ச தெய்வம். இன்னைக்கு நான் படிச்சி இந்த நிலைமைக்கு வந்ததுக்கு காரணம் கூட உங்க அம்மா தான். எவ்வளோ சீக்கிரம் முடியுமா அவ்வளோ சீக்கிரம் நான் காரணமில்லைன்னு நிரூபச்சிட்டு போயிறேன்...” என உள்ளத்தின் வலியோடு வார்த்தைகள் சிதறி விழிகளில் இருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொள்ள, அருகில் நெருங்கி தடுத்து நின்றிருந்த விஜயநேத்ரனுக்கு அவளின் கண்ணீர் தன் இதயத்தை பிழிந்தது போன்ற உணர்வு.
முதல் முதலாக அவளின் கண்ணீர் கண்டு கரங்களோ விலக, அங்கிருந்து மகிழினி சென்று விட, ஒரு விதமான இறுக்கம் அவனை சூழ்ந்தது.
அலுவலகத்தில் அமர்ந்து வழக்கம் போல் தன் வேலையை மகிழினி பார்த்துக் கொண்டிருக்க, அனுமதி வாங்கி உள்ளே வந்தார் ராமமூர்த்தி.
“சொல்லுங்க ராமமூர்த்தி என்ன விசியம்..?”
“வி.எம் குரூப் ஆப் கம்பெனியோட எம்.டி வரதன் சார் வந்திருக்காங்க...”
“அவங்க யாரு என்ன வேணுமாம்..?”
“ஏதாவது தொழில் சம்மந்தமா பேச வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அடிக்கடி வருவாங்க மேடம்...”
“அப்படியா சரி வரச் சொல்லுங்க...” எனக் கூற வெளியே வந்த ராமமூர்த்தி வரதனை அழைத்துக் கொண்டு மறுபடியும் உள்ளே நுழைந்தார்.
கோட்சூட் உடையோடு உள்ளே நுழைந்த வரதனைக் கண்டு எழுந்து நின்றவளோ, “வெல்கம் சார்..! உட்காருங்க...” என்றதும் புன்னகை ஒன்றை உதிர்த்தவரும் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது..? உங்களோட அத்தை டாப் பிஸ்னஸ் விமன் அவங்களோட பேரை நிலைச்சி இருக்க வைக்குறது உங்களோட பொறுப்பும்மா. நான் கூட எவ்வளவோ தடவை உங்க அத்தையை முந்தணும் நினைப்பேன். ஆனா முடியவே முடியாது. அவ்வளோ திறமையானவங்க உங்க அத்தை. உங்களோட பேர் என்னம்மா..?”
“மகிழினி. தேங்க்ஸ் சார். என்ன விசியம் சார் இங்கே வந்திருக்கீங்க..?” நேராக அவர் வந்ததிற்கான விசியத்தை அறிய நினைத்தார்.
“அடுத்த வாரம் பிரைடே என் மகனுக்கு வரவேற்ப்பு இருக்கு. அதான் இன்வைட் பண்ணிட்டு போகலாம் வந்தேன். கண்டிப்பா நீங்களும், உங்க ஹஸ்பண்ட்டும் வந்திருங்க...” எனக் கூறி அழைப்பிதலை கொடுக்க வாங்கிக் கொண்டாள்.
பின் சிறிது நேரம் பொதுவான விசியங்களை பேசியவர் அங்கிருந்து கிளம்பி விட, யோசனையாய் இன்விடேஷனை கண்டாள்.
அருகில் இருந்த ராமமூர்த்தியிடம், “இதுக்கு முன்னாடி இப்படி பிஸ்னஸ் பண்ணுறவங்க வந்து இன்விடேஷன் கொடுத்தா எங்க அத்தை போயிருக்காங்களா..? எனக்கு இது புதுசா தெரியுதே..?” சந்தேகமாய் கேட்க,
“இதெல்லாம் இப்போ சஜகம் தான் மேடம். தொழில் பத்தி அந்த நேரம் தான் பேசிக்கிடுவாங்க. அடிக்கடி பெரிய மேடம் கூட இப்படி இன்வைட் பண்ணுனா போவாங்க...”
“அப்படியா..! அப்போ நானும் இதுக்கு போகணுமோ..?”
“ஆமா மேடம். என்ன தான் இருந்தாலும் நமக்கு ஒரு சில நேரங்கள்ல இவங்க எல்லாரும் தேவைப்படுவாங்க...” என்றதும், சரி எனக் கேட்டுக் கொண்டாள்.
அன்றிரவு பார் ஒன்றில் அமர்ந்திருந்த வரதன் மற்ற இருவருக்காக காத்திருக்க, அவர்களும் வந்து முன்னே அமர, மூவரும் மது அருந்த ஆரம்பித்தனர்.
“என்ன வரதன் சார் மீட் பண்ணனும் வர சொல்லிருக்கீக..? என்ன விசியம்..?”
“இன்னைக்கு நான் ஆர்.எஸ் நிறுவனத்துக்கு போயிருந்தேன். சத்தியவதனி மருமகளா நேரா பார்த்தேன். ஷார்ப்பான பொண்ணா தான் இருக்கா..? என் மகனோட வரவேற்ப்புக்கு இன்வைட் பண்ணிருக்கேன்...”
“தொழில் சங்கத்துல இந்த முறை டாப் பிஸ்னஸ் அவார்டு அந்த ஆர்.எஸ் க்ரூப் தான் போக போகுதுன்னு கேள்விப்பட்டேன். நம்ம ஏதாவது பண்ணனும். இது மட்டும் நடந்தா சத்தியவதனி மாதிரி இந்த பொண்ணும் எல்லாருக்கும் தெரிய ஆரம்பிடிச்சிருவா..? இவளோட திறமைகள் அந்த நிமிஷம் எல்லாருக்கும் தெரிய வந்தா அப்பறம் மறுபடியும் நம்ம சரிவை தான் பார்க்கணும். அந்த சத்தியவதனி இருக்குறதே எனக்கு பிடிக்கலை இதுல மருமக வேற..?”
“அப்படி ஒன்னு நடந்தா தானே ஆதிகேசவன் சார்..?”
“என்ன சொல்ல வரீங்க விநாயகம் சார் ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா..?”
“ஆமா..! அந்த பொண்ணை இந்த உலகத்தோட பார்வைக்கு கெட்டவளா காட்டணும். அதுக்காக இப்போ கிடைச்ச வாய்ப்பு உங்க மகனோட வரவேற்பு தான்...” எனக் கூறி தன் திட்டத்தை பற்றி கூறினார்.
“இதை நாம சரியா செஞ்சா போதும். அந்த பொண்ணே வெளியே தலை காட்டாம இருந்துக்குவ. நமக்கு பிரச்சனை இல்லை...” என்க,
அதனைக் கேட்டு மற்ற இருவருமே வெற்றி சிரிப்பு சிரிக்க, சீயர்ஸ் அடித்து மது அருந்தினர்.
இங்கே தன் அறையில் அமர்ந்திருந்த மகிழினியின் மனமோ கண்ணாம்பூச்சி விளையாடும் தங்கள் இருவரை பற்றி தான் நினைத்தது.
அன்றிரவு அவனோடு பேசியது தான் பின் அவனும் சரி இவளும் சரி ஒருத்தர்கொருத்தர் பார்த்தாலும் பேசிக் கொள்ளவேயில்லை. எப்போதும் தன்னை ஏதாவது கூறிக் கொண்டே இருப்பவன் அமைதியாக இருப்பது கூட என்னவோ செய்தது.
சரி இது தான் நேரம் இப்போது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்து அறையை விட்டு வெளியேறி வர ஹாலில் அவன் இல்லை.
‘எப்போதும் உணவுண்ண இந்த நேரம் வருவான் தானே..? இன்று என்ன இன்னும் காணோம்..?’ நினைத்துக் கொண்டு டைனிங்டேபிளிலை சுத்தம் செய்த கேசவனிடம் வந்தாள்.
“விஜய் எங்கே..?”
“சார் அப்பவே சாப்பிட்டு ரூமுக்கு போயிட்டாங்க...”
“அப்படியா சரி..!” என்றவளோ ஒரு நொடி யோசித்து பின் முதல் முறையாக மாடியேறியனாள்.
இங்கே அறையில் அமர்ந்திருந்த விஜயநேத்ரனுக்கோ அவனின் மனம் என்ன நினைக்கிறது என்பதை சொல்ல முடியவில்லை. வீட்டில் அவள் இருக்கும் போதெல்லாம் அவனின் நினைவு அவளின் விழிக் கண்ணீரை தான் நினைக்கும்.
‘இத்தனை நாட்கள் தான் எதிர்க்கும் போது தன்னை எதிர்த்தவள் தானே..? எதற்காக கண்ணீர் வடித்தாள். அவளின் மனதினை வெகுவாய் காயப்படுத்தி இருக்கப் போய் தானே அப்படி செய்தாள்..? ஏதோ தான் தவறு செய்தாகவே தோன்றியது. அவள் எப்படியோ தெரியாது ஆனால் தன் அன்னையை பற்றி தனக்கு தெரியும் தானே..? எப்படி இவளின் மீது தான் சந்தேகம் கொண்டேன். ஒரு வேலை இவள் கூறியது எல்லாம் உண்மை தானா..? அன்னை தான் இதெல்லாம் செய்தாரா..? என் விருப்பமில்லாமல் எப்படி இதனை செய்தார்.?’ நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தான்.
திறந்திருந்த அறையின் வாசலில் மகிழினி நிற்பது புரிய, ‘இவ எதுக்கு இங்கே வந்தா..?’ யோசனையாய் வந்தது நிஜம் தானா என்ற நினைப்பில் கண்டான்.
“எனக்கு உங்க அம்மாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேணும்..?” தன்னை காண்பவனை கண்டுக் கேட்க,
“எதுக்கு..?”
“உங்களால தர முடியுமா முடியாதா..?” சிடுசிடுவென முறைப்போடு கேட்கவே, மனமோ நொடியில் லேசாக ஊஞ்சலாடும் உணர்வு. அவளிடம் எப்போதும் இந்த எதிர்ப்பும், கோவமும் தான் தனக்கு வேண்டுமென அவனின் மனம் அறியவில்லை.
“அப்போ நீ உண்மையை சொல்லு..? நமக்கு கல்யாணம் முடிஞ்சதுன்னு ஏன் சொன்னே..? அப்போ நீ காட்டுன மேரேஜ் சர்டிவிகேட் உண்மை தானா..? என் அம்மாவா இதை பண்ணுனாங்க..? எதுக்காக பண்ணுனாங்க..?” கேள்வியாய் அடுக்க,
“இத்தனை நாள் நான் தான் உங்க அம்மாவை பிளாக்மையில் பண்ணி இதெல்லாம் பண்ணேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க இப்போ என்ன டக்குன்னு மாறி இப்படி கேட்குறீங்க..?”
“உனக்கு தேவையானது வேணுமா வேண்டாமா..?”
“வேணும்...”
“அப்போ உண்மை என்னென்னு சொல்லு..?” என்க, இவன் இல்லாத வருடங்கள் நடந்த அனைத்தையும் சத்தியவதனி தன்னை ஏன் மருமகளாக்கினார் என்பதையும் கூறினாள்.
“அத்தைக்கு என் மேல ரொம்ப நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை நான் பொய்யாக்க விரும்பலை. அதுவுமில்லாம நீங்க அத்தை கூட இல்லாதது அவங்க தனிமையை உணர்ந்தாங்க. அவங்களுக்குள்ள ஏதோ ஒன்னு இருந்துக்கிட்டே இருந்திருக்கு அது என்னென்னு இன்னும் என்னால கண்டு பிடிக்க முடியல. எதுக்காக உங்க அம்மாவை விட்டுட்டு நீங்க இவ்வளோ வருஷம் பாரின்ல இருந்தீங்க..? அவங்களுக்கு இருக்குற ஒரே உறவு நீங்க தானே..?
நடுவுல நீங்க வந்திட்டு போனப்பா தான் அத்தை நம்ம கல்யாணம் பத்தின முடிவு எடுத்தாங்க. நான் நன்றிக்கடனுக்காக மட்டும் தான் ஒத்துக்கிட்டேன்னே தவிர என் மனசுல வேற எந்த எண்ணமும் இல்லை. உங்களுக்கு தெரியாம உங்க கிட்ட அத்தை கையெழுத்து வாங்குனாலுமே நான் தெரிஞ்சி தான் கையெழுத்து போட்டேன்.
இப்போதைக்கு சட்டப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். கொஞ்சம் நாள் அப்பறம் ஊரறிய கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாங்க. என்னோட நிறுவனத்தையும், வீட்டையும், என் மகனையும், என்னையும் நல்லபடியா பார்த்துக்கணும் சொன்னாங்களே தவிர இப்பவே வந்து பாருன்னு அவங்க அந்த நேரம் சொல்லலை. ஏன் சொல்லலை இப்போ அத்தை இறந்ததுக்கு அப்பறம் தான் என்னால யோசிக்க முடிஞ்சது. அப்போ அத்தைக்கு அப்பவே ஏதோ பிரச்சனை இருந்திருக்கு அதுனால தான் அந்த முடிவை எடுத்திருக்காங்க...” என்று தன் மனதில் இருந்த சந்தேகம் அனைத்தையும் அவனிடம் மனம் விட்டு கூறினாள்.
“உங்க அம்மா இறந்ததுக்கு இன்னும் நான் தான் காரணம்ன்னு நீங்க நினைச்சிக்கிட்டு இருக்குறதை தப்புன்னு நான் நிரூபவிச்சி காட்டிறேன். எனக்கு அந்த ரிப்போர்ட் கொடுங்க நான் டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணனும்...” என்றதும், அவனும் பேசமால் மௌனமோடு அதனை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
‘இவன் கேட்டதும் நான் தான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்ல அப்பவும் அமைதியாவே இருக்கான். அப்போ என்னை இவன் இன்னும் நம்பலைன்னு தானே அர்த்தம்..?’ மனமோ வேதனையோடு நினைக்க, வாங்கிக் கொண்டுச் சென்று விட்டாள்.
அறையை சாத்தி விட்டு படுக்கையில் விழுந்த விஜயநேத்ரன் மனம் முழுவதுமே அன்னையை தான் சுற்றி வந்தது.
‘தான் சுதந்திரமாக தனியாக தன் விருப்பம் போல் வாழ வேண்டுமென நினைத்து அன்னையை தவிக்க விட்டது இப்போது தான் புரிந்தது. ஒரு நாளும் எந்த விதத்திலும் தன்னை கட்டாயப்படுத்தியதில்லை. அப்படி இருக்கும் போது அவருக்காக இருக்கும் ஒரே ஜீவனான தான் அவரை தவிக்க விட்டது எவ்வளோ பெரிய தவறு முட்டாள்தனம். அதனால் தான் தன்னை நம்பவில்லையா..? நம்பவில்லை என்பதை விட தன்னை நினைத்து கவலைக் கொண்டதால் தானே தனக்காக துணையையும் தேர்ந்தெடுத்து வைத்து சென்றிருக்கிறார்..? அவளின் கண்ணீரை கண்ட பின் தானே தன் மனம் அவளின் மீது கொண்ட எண்ணங்களை மாற்றியது.
அதற்கு முன் வரை அவளை தான் துரோகி, கெட்டவள், சூழ்ச்சி செய்திருக்கிறாள் என்ற பார்வையில் தானே கண்டோம். அவள் யாரென தெரியாத நேரம் இப்படி நினைத்திருந்தால் சரி ஆனால் அவளின் குடும்பத்தாரைக் கண்ட பின்னும் தான் நம்பாதது எவ்வளோ பெரிய குற்றம். ச்சே..! அப்படி என்ன அவளின் மீது தனக்கு வன்மமும் கோவமும். சிறு வயதில் கொண்ட பொறாமை தானா..?
ஆனால் அவள் தன் அன்னை கூறிய வார்த்தைக்காக, அவரின் மீது கொண்ட நம்பிக்கையும், நன்றிக்கடனுக்காக தானே அவளின் வாழ்க்கையை கூட தங்களுக்காக கொடுத்திருக்கிறாள்..? அன்னை எதற்காக அன்றே அவளை அவரோடு ஈடுபடுத்திக் கொள்ளவில்லை..? அவருக்கு பிரச்சனை இருக்கப் போய் தன் மருமகளுக்கு எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்ற நினைப்பில் இதனை செய்திருக்கிறார். அவருக்கு அப்படி என்ன பிரச்சனை இருந்திருக்கும். என்னிடம் மனம் விட்டு கூறியிருக்கலாமே..? மனதோடு மருகிக் கொண்டு இருக்க போய் தானே பயம் என்றே அறியாதவருக்கு பயம் வந்திருக்கிறது..?
அன்னையின் இறப்பிற்கு ஏதாவது காரணம் இருக்குமா..? நெஞ்சுவலியில் சாகவில்லையா..? இத்தனை பேர் இருந்தும் ஏன் இன்னும் இத்தனை கண்டு பிடிக்க முடியவில்லை..?' குற்றவுணர்வு நெஞ்சினை அழுத்த விழி மூடியும் உறக்கம் என்பது வாராமல் நித்திரையை தொலைத்தான். உடன் தன்னையும் சேர்த்து தொலைத்துக் கொண்டான்.
கள்வன் : 14
விஜயநேத்ரன் கொடுத்த ரிப்போர்ட் இருக்கவே அதனை வைத்துக் கொண்டு முதலில் அவரினை பிரேதபரிசோதனை செய்த மருத்துவரிடமே சென்றாள் மகிழினி.
மதிய நேரம் நோயாளிகள் அதிகம் இல்லாத அந்த மருத்துவமனையில் அனுமதி வாங்கி சிறிது நேரம் காத்திருந்தது பின் மருத்துவரை சந்திக்க உள்ளேச் சென்றாள்.
“ஹலோ டாக்டர். ஐ ஆம் மகிழினி...”
“சொல்லுங்க..? என் கிட்ட என்ன கேட்கணும்..?”
“என் அத்தை சத்தியவதனி இறந்ததுக்கு அப்பறம் அவங்களை நீங்க தான் போஸ்மாட்டம் பண்ணுனீங்க..? அதுல எனக்கு சந்தேகம் இருக்கு...” கேட்ட நொடி அவரின் உள்ளம் பதறுவதை அவளால் அறிய முடியவில்லை.
“என்ன சந்தேகம்..? அதான் ரிப்போர்ட் போலீஸ் கிட்ட கொடுத்து இந்த நேரம் உங்களுக்கு வந்திருக்குமே..?”
“ஆமா..! ஆனா என் அத்தை ஹார்ட்அட்டாக்ல தான் இறந்தாங்கன்னு அந்த ரிப்போர்ட்ல இருந்தது. அது உண்மைன்னு உங்களால கன்பார்ம் பண்ணி சொல்ல முடியுமா..?”
“என்னம்மா நீ..? மருத்துவரா இருக்குற என்னையே சந்தேகப்படுற மாதிரி கேட்குற..? அப்போ தான் ரிப்போர்ட்ல எல்லாம் தெளிவா சொல்லி சப்மிட் பண்ணிட்டோம்ல. போலீஸ் கூட இந்த கேஸ் உண்மைன்னு சொல்லிட்டாங்களே..? அப்பறம் என்ன இப்படி வந்து கேட்குற..?” என வேகத்தோடும், பதட்டம் கொண்ட கோவத்தோடும் கேட்டார். அவரின் இந்த நடவடிக்கை நொடியில் சந்தேகம் கொள்ள வைத்தது.
“இல்ல டாக்டர் நான் சந்தேகத்துல கேட்கல. திடிருன்னு ஹார்ட்அட்டாக் வந்தது நம்ப முடியல அதான் கேட்டேன். மத்தபடி உங்களை நான் சந்தேகப்படலை. நீங்க உயிரை காக்குற உன்னதமான தொழிலை பார்க்குறீங்க..? கடவுளுக்கு சமம் நீங்க.! என் அத்தை திடீருன்னு எங்களை விட்டு போனது மனசு தாங்க முடியல அதான் இப்படி உங்க கிட்ட வந்து கேட்டேன்... ”
“ஹார்ட்அட்டாக் எப்போ எந்த நிமிஷம் வரும்ன்னு யாராலையும் சொல்ல முடியாது. என் மேல உங்களுக்கு சந்தேகம் இருந்ததுன்னா அந்த ரிப்போர்ட்டை கொடுத்து வேற டாக்டர் கிட்ட கூட நீங்க கேட்டு பாருங்க. அவங்களும் அதை தான் சொல்லுவாங்க...”
“சாரி டாக்டர். உங்களோட நேரத்தை வீணாக்குனதுக்கு என்னை மன்னிச்சிருங்க. நான் கிளம்புறேன்...” எனக் கூறி மன்னிப்பு வேண்டி வெளியே வந்தாள்.
‘இவர் கிட்ட ஏதோ மறைமுகம் இருக்குற மாதிரியே இருக்குதே..? பேசுனது கூட சரியில்லை. ஜஸ்ட் கேட்டதுக்கே பதட்டபடுறாரே அப்போ என்னமோ இருக்கு..? வேற டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிக்கிற இவரே சொல்லுறாரு அப்படின்னா நிச்சியம்மா ரிபோர்ட்டை தெளிவா ரெடி பண்ணி வச்சிருக்காருன்னு அப்படி தானே அர்த்தம்..? இனி இவர் கிட்ட அண்ணனை விட்டு விசாரிக்க சொல்லலாம்...’ நினைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டுச் சென்றாள்.
மகிழினி சென்று விட்டத்தை விண்டோ வழியாகக் கண்ட அந்த மருத்துவர் யாருக்கோ கைபேசியில் அழைத்தார்.
“சார் நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க..? அன்னைக்கு அந்த ரிப்போர்ட்ல நீங்க தானே ஹார்ட்அட்டாக் சொல்லி கொடுக்க சொன்னேங்க..? அதே மாதிரி நானும் பண்ணுனேன். கேள்வி கேட்கவோ உங்களுக்கு பிரச்சனை பண்ணவோ யாரும் வர மாட்டாங்கன்னு சொன்னீங்க இப்போ ஒரு பொண்ணு வந்து கேட்டுக்கிட்டு போகுது. எனக்கு பிரச்சனை வந்து என் வேலை போயிறாம சார்...” என யாரிடமோ கூற,
அதற்கும் அவரும், “இல்லை இனி இப்படி நடக்காது. விசாரிச்சாலும் உண்மையை கண்டு பிடிக்க முடியாது. நான் பார்த்துக்குறேன்...” எனக் கூறி வைத்து விட, மருத்துவரோ தேவையில்லாத பிரச்சனையில் தான் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணத்தில் தலையில் கைவைத்து விட்டார்.
மகிழினியின் மனமோ அடங்கவில்லை. அலுவலகத்தில் வந்து அமர்ந்தவளோ தன் அண்ணனுக்கு அழைத்து மருத்துவனை சென்று விசாரித்த விசியத்தை கூறினாள்.
“என்னால அந்த டாக்டரை நம்ப முடியவில்லை. ஏதோ மறைக்கிறாரு. நீ விசாரிச்சி பாருண்ணா..!” என்க, ஒரு நொடி அவனிடமிருந்து அமைதி.
“என்ன அண்ணா என்னாச்சு..?”
“சரி நான் விசாரிக்கிறேன்...” என்றதும் கைபேசியை வைத்து விட்டாள்.
இரவு நேரம் ஹாலில் அமர்ந்திருந்த ஆதிகேசவனின் முன்னே வந்து அமர்ந்தனர் இரு மகன்களும்.
“என்னடா இன்னைக்கு பேக்டரிக்கு போனையா..?” மூத்த மகனிடம் கேட்க,
“ஆமாப்பா போனேன். அப்பறம் என் மனைவியோட தங்கச்சிக்கு நெக்ஸ்ட் வீக் கல்யாணம் இருக்கு. நாளைக்கு நான் கிளம்புறேன்...”
“சரி போய்ட்டு வா. வர்ற வெள்ளிக்கிழமை நம்மளோட பார்ட்னர்ஸ் விநாயகம் மகனுக்கு வரவேற்பு இருக்கு. போகணும் அங்கே சத்தியவதனியோட மருமகளும் வருவா...” என்க,
“வந்தா வந்திட்டு போகட்டும் நமக்கு என்னப்பா..?” தருண் கேட்க,
“சிறப்பான சம்பவம் ஒன்னு நடக்க போகுது. ஆமா நீ விஜயநேத்ரனை போய் பார்த்தையே என்னாச்சு..?”
“அதை ஏன் கேட்குறீங்க சரியா கடுப்பாகிருச்சி. ரெண்டு பேரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கலாம். உண்மை தானாம் அவங்க கல்யாணம். கொளுத்தி விடலாம் பார்த்தா முடியாம போச்சு. காதல்ல மூழ்கி புது பொண்டாட்டி கீழே அடிமையா உல்லாசமா இருக்கான் போல. ஆனா கல்யாணம் முடிஞ்சதுக்கான அந்த அறிகுறியும் ரெண்டு பேர் கிட்டையும் இல்ல...”
“அப்படியா அதுவும் நல்லது தான். எவ்வளோ காதலோட இப்போ இருக்கான்னோ அந்த அளவுக்கு வெறுப்பை காட்டுவான் பாருடா...” என ஆதிகேசவன் தாங்கள் போட்ட திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு கூறினார்.
“என்னப்பா ஏதோ பண்ணுறீங்க போல உங்க பார்ட்னரஸ் கூட சேர்ந்துக்கிட்டு...”
“ஆமாடா. வெள்ளிக்கிழமை நடக்கப் போற நிகழ்வுக்கு பிறகு அந்த பொண்ணு வெளியே தலைகாட்டவே பயப்பிடுவா. ஆபிஸ் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டா பார்த்துக்கலாம்டா...” எனக் கூறி அன்று அவளை எப்படி அவமானப்படுத்தப் போகிறோம் என்பதை பற்றி கூறினார் ஆதிகேசவன்.
தருணோ அதனைக் கேட்டுக் கொண்டானே தவிர தந்தைக்கு ஒத்துப் போகவில்லை. எதிர்க்கவும் இல்லை. நடப்பது நடக்கட்டுமென விட்டுவிட்டான்.
நாட்கள் செல்ல மகிழினியின் மனமோ அத்தை இறந்தது எப்படி என்பதை பற்றியே சுற்றி வந்தது. இத்தனை நாட்களாகியும் தன்னால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற எண்ணத்தில் மனதினை போட்டு குழப்பிக் கொண்டாள். அலுவலகத்தில் கூட மனம் செலுத்த முடியாது தடுமாறினாள்.
யோசனையிலிருந்தவளின் அலைபேசி ஓசை எழுப்ப, அந்த நம்பரைக் கண்டதும் வேகமாய் எடுத்தாள்.
“ஹலோ...! நான் தான் மகிழினி...”
“என்னாச்சு..? கண்டுபிடிச்சிட்டையா..?”
“இல்ல எவ்வளோ முயற்சி பண்ணுனேன் முடியல. ஆபிஸ்குள்ள வந்த மாதிரி வீட்டுக்கு போனேன். ரெண்டு இடத்துல பார்த்திட்டேன். எந்த ஆதாரமும் இல்லை. இனி நான் என்ன பண்ண சொல்லுங்க..? நான் சத்தியவதனி மருமக தான் ஆனா எனக்கு இதுல விருப்பமில்லைன்னு சொன்னேன். நீங்க உன் அத்தை இறந்தது கொலைன்னு சொல்லி இந்த வழில போய் விசாரிச்சி பாரு சொன்னேங்க. நானும் அது மாதிரியே பண்ணேன். ஆனா இதுவரைக்கும் எதுவுமே முடியல. நீங்க யாரு..? உங்களுக்கு எப்படி என் அத்தை இறப்பு கொலைன்னு தெரியும். அப்போ அதை பண்ணினது யாரு. என்னோட ஹஸ்பண்ட் விஜய்க்கு மெசேஜ் அனுப்புனது நீங்க தானா சொல்லுங்க..?” முகம் காணாதது குரல் மட்டுமே கேட்பவனிடம் கேட்டாள்.
“ஆமா விஜய்க்கு மெசேஜ் அனுப்புனது நான் தான். ஆனா உன்னை மாதிரி அவன் இன்னும் எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. கொலையாளி யாருன்னு தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட இப்படி சொல்லப் போறேன். சரி நீ இதுவரைக்கும் என்ன பண்ணுன சொல்லு..? இதுக்கு அப்பறம் என்ன பண்ணனும் நான் சொல்லுறேன்...” என்றதும்,
விஜயிடம் பேசியது, மருத்துவரிடம் பேசியது, அண்ணனிடம் பேசியது தன் மனதில் இருப்பது அனைத்தையும் கூறினாள். யாரென தெரியாதவனிடம் ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. அவன் தன்னிடம் பேசுவதிலே அத்தைக்கு தெரிந்தவன் என்பது புரிந்தது. ஆனால் யாரென பலமுறை கேட்டு அவனோ கூறவில்லை.
“சரி இனி நீ உன் அண்ணன் கிட்ட கால்ஹிஸ்டரி கண்டுபிடிச்ச மாதிரி பேசுனா ஆடியோவை சீக்கிரம் எடுக்க சொல்லு..? எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் இதை பண்ணு. அப்பறம் விஜயநேத்ரன் கிட்ட அவன் அம்மாவோட இறப்பை பத்தி பேசி அவனுக்கு தெரிஞ்ச இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணு. எந்த நேரமும் உன் அத்தை கூடவே இருக்குறவங்க யாரு அவங்களை நீ நோட் பண்ணு. ஏன்னா உனக்கு தெரியாத விசியங்கள் நிச்சியம் கூடவே இருக்குறவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்...”
“சரி நான் அப்படியே பண்ணுறேன். ஆனா நீங்க யாருன்னு தான் சொல்ல மாட்டிக்கீங்க..? எங்கே இருக்கீங்கன்னு கூடவா சொல்லக் கூடாது...”
“அது உனக்கு தேவையில்லாத விசியம். சொன்னதை மட்டும் செய்...” எனக் கூறி அழைப்பினை துண்டித்து விட, ஏதோ ஒரு விதத்தில் அவன் தங்களுக்கு நல்லது செய்வது மட்டும் புரிந்தது.
இருள் சூழந்த நேரம் மகிழினி வீட்டுக்கு வர ஹாலில் அமர்ந்திருந்தான் விஜயநேத்ரன். விழிகள் சிவந்து தலைமுடி கலந்திருக்கவே குடித்திருப்பதை நொடியில் அறிந்துக் கொண்டாள்.
‘இவனுக்கு அப்படி என்ன துக்கம், கொண்டாட்டமோ இப்படி அடிக்கடி குடிக்கிறானே..?’ மனதில் புலம்பியவளோ செல்லப் பார்க்க, தடுத்தான்.
“இன்னைக்கு என்ன பஞ்சாயத்து பண்ண போறான். இப்போ கொஞ்சம் நாள்லா நல்லா தானே இருந்தான்? மறுபடியும் ஆரம்பிடிச்சிட்டானா..?”
“மை டியர் பொண்டாட்டி. உன்னால நான் கொடுத்த செக்ல கையெழுத்து போட முடியுமா முடியாதா...?” மூன்றாவது முறையாக அவளிடம் கேட்கவே,
“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா. இல்ல குடிச்சா எல்லாத்தையும் மறந்துருவீங்களா..?”
“நல்லாவே நியாபகம் இருக்கு...”
“அப்பறம் என்ன வேணும் உங்களுக்கு..?” என்க, அருகில் நெருங்கியவனோ அவளின் இரு கண்ணங்களையும் இருகைகளில் ஏந்தினான்.
“பொண்டாட்டி..! நான் சொல்லுறதை இப்போ நீ செஞ்சா உனக்கு நல்லது இல்லைன்னு வை, பின் விளைவுகளை நினைச்சி என்னை எதுவும் சொல்லக் கூடாது...” போதையோடு வெற்றிப்பிடியில் நின்று விழிகள் மிளிர கூறவே,
“அப்படி என்ன சொல்ல போறீங்க..? உங்களால என்ன பண்ண முடியும் சொல்லுங்க..?”
“இந்த திமிர், அதிகாரம் இது தான் உன்னை நான் நம்பாததுக்கு முதல் காரணமே..? சொல்லுறேன் கேட்குக்கோ ஒன்னு என்னை கல்யாணம் பண்ணி பொண்டாட்டிங்குற பேர்ல அடிமையா எனக்கு இரு. இல்லை அப்படின்னா என் அம்மா சொத்தை நான் வித்து எனக்கு தேவையானதை நிறைவேத்திப்பேன். ரெண்டுமே நடக்காது அப்படின்னா செக்ல கையெழுத்து போடு. இப்போ என்னை பண்ண போறே..? கல்யாணம் பண்ண போறையா இல்லை என் அம்மா சொத்தை ஒவ்வொன்னா நான் விக்க பார்த்துக்கிட்டு இருக்க போறியா..?”
“அது என் விருப்பம். நான் என்னமோ பண்ணுவேன் உன் முடிவுல தான் இந்த சொத்தை காப்பாத்துறது இருக்கு. அம்மாவுக்கு அப்பறம் எப்பவும் பிள்ளைகளுக்கு தான் போகும். நான் ஒரே மகன்...”
“அப்போ ஏன் அன்னைக்கு தெரிஞ்சே அந்த மேரேஜ் சர்டிவிகேட்ல சைன் பண்ணுனா..? நான் இப்போ இருக்குற மாதிரி தானே அப்பாவும் இருந்தேன்...” கேட்க பெரும் மௌனம் மட்டுமே குடிக்கொண்டது அவளிடத்தில்.
அவனை அறியாது அவன் மனம் எதிர்பார்த்த பதில் அவளோடான திருமணம். ஆனால் அவளின் மௌனம் என்னவோ செய்தது ?
அவனின் மனமோ அனலாய் எரிந்தது. எதன் அடிப்படையில் தன்னை இவள் இப்படி கூறினாள்..? அன்னையும் தன் மீது நம்பிக்கை வைக்காது போய் விட, இவளும் தன்னை இளக்காரமாக நடத்த கொந்தளித்தான்.
“சொல்லுடி சொல்லு...” உறுமலாய் கர்ஜிக்க, சர்வமும் நடுங்க அதிர்ந்து தான் போனாள். வார்த்தைகள் வராது தடுமாற, அழுத்தப் பற்றியதில் தோள்பட்டை இரண்டும் வலியெடுத்தது.
“விடுங்க...” விலக முயற்சிக்க,
“சொல்லுன்னு சொல்லுறேன்ல. அப்போ இந்த சொத்து, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் சைன் போட்டியா..? நீ அமைதியாக இருக்குறதை பார்த்தா அது தான் உண்மை போல..? நான் கூட உன் கண்ணீர் நாடகத்தை பார்த்து இந்த சில நாளுல நம்பி தொலைச்சிட்டேன். இப்படி தான் என் அம்மாவை உன் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிக்கிட்டே அப்படி தானே..?” கத்தவே, அவளுக்கும் அந்த நொடி சினம் ஏறியது.
‘பலமுறை கூறியும் தன்னை எப்படி இவன் நம்பாமல் போகலாம். அப்படி என்ன இவனுக்கு தன்னைக் கண்டால் மட்டமான எண்ணம்...’ மனமோ குமறியது.
சட்டென தன் பலம் கொண்டு தடுத்து உதறியவளோ, “அத்தைக்காக மட்டும் தான் கையெழுத்து போட்டேனே தவிர, வேற எந்த எண்ணமும் இல்லை. மறுபடியும் சொல்லுறேன் நான் ஒன்னும் விரும்பி இந்த இடத்துக்கு வரல. எப்போ பார்த்தாலும் மனசு என்ன சொல்லுதோ அதை மட்டுமே செய்ற நீங்க மிருகத்தனம் கொண்டவங்க தானே..? உங்க மனசுல கொஞ்சமாவது மத்தவங்களை நினைச்சி ஏதாவது ஒரு நல்ல எண்ணம் இருக்கா..? மத்தவங்களை விடுங்க உங்க அம்மா அவங்களை நினைச்சி பார்த்தீங்களா..? அவங்க இப்போ...” கூற வந்தவளோ பின் தன்னை திடப்படுத்திக் கொண்டு இப்போது பேசுவது வீண் என்ற எண்ணத்தில் அறைக்குச் சென்று விட்டாள்.
‘ஒவ்வொரு நொடியும் அவளிடம் தான் தோற்றுப் போவதை போல் எண்ணம். எதற்கு இப்படி நடக்கிறது..? ' இதழிலோ புதிதாய் புன்னகை அரும்பியது.
சோஃபாவில் சரிந்தவனோ அதற்கு மேல் எதையும் யோசிக்க முடியவில்லை. கடந்த காலத்தில் மலர்ந்து கசந்து போன நினைவுகளுக்கு செல்ல மனமில்லை.
‘இனியவளே நீ என் வாழ்வில் நுழைந்த நாள் முதல் என்றும் எனக்கு விடியல் தான்...’ என்பது போல் ஆதவன் விழி திறந்து விட, இரவு அடித்த போதையில் தலைவலியோ கின்னென்று அலறியது.
நெற்றியை தேய்த்த விஜயநேத்ரன் கீழே இறங்கி வந்தவாறு, “கேசவன் காஃபி கொண்டு வா...” குரல் கொடுத்து சோஃபாவில் சரிந்தான்.
அவனின் முன்னே விழிகளுக்கு காகிதம் ஒன்று காற்றிலாட, ‘என்ன இது..?’ யோசனையோடு எடுக்க, அதற்கு கீழ் செக்சிலீப் இருந்தது. அதில் அவன் கூறியது போன்றே இரண்டு கோடி எழுதி அவளின் கையெழுத்தும் இருக்கவே, வேண்டியது கிடைத்து விட்ட சந்தோஷம் கொள்ளாது சிடுசிடுப்பு தான் அதிகரித்தது.
தன்னையே அவள் நிராகரித்து விட, ' எப்படி அவள் இப்படி செய்யலாம்..? மனமோ உலைகலனாய் கொதித்தது.
அலுவலகத்தில் அமர்ந்து தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த மகிழினியின் அறைக்குள் சீருடையில் இல்லாதது பார்மல் உடையில் நுழைந்தான் வேந்தன்.
“ஆமா. நீ அந்த லேப்டாப் எடுத்திட்டு வா...” என்றதும் அவளும் எடுத்துக் கொண்டு வந்து அண்ணனின் அருகில் அமர்ந்தாள்.
“நீ என்னண்ணா இந்த நேரம் யூனிபார்ம்ல இல்லாம இருக்கே..?”
“அதை அப்பறம் சொல்லுறேன். அதை கொடு...” எனக் கூறி லேட்டாப்பை வாங்கிக் கொண்டு வந்த பென்ட்ரைவ்வை அதில் பொருத்தி எதையோ செய்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ணுற..?”
“சத்தியவதனி மேடம் இறந்த அன்னைக்கு யார் கிட்ட பேசுனாங்க அப்படிங்குற கால் டீடைல்ஸ் கண்டுபிடிச்சி அதோட ஆடியோ எடுத்துட்டு வந்திருக்கேன்...”
“உண்மையாவா சீக்கிரம் போடு...”
“இதோ ஒரு நிமிஷம்...” எனக் கூறி அதனை போட்டு காட்ட,
அதில் முதலில் அலுவலகம் தொழில் சம்மந்தப்பட்ட கால்ஸ் வந்திருக்க, பின் சிலரிடமிருந்து மிரட்டல் கால்ஸ் வந்திருந்தது.
“இங்கே பாருங்க சத்தியவதனி மேடம். உங்களுக்கு எதுக்கு அந்த கவர்மென்ட் டெண்டர். ஏற்கனவே நீங்க அதிகமா எடுத்துட்டீங்கள இதை ஒழுங்கா விட்டிருங்க. இல்லை அப்படின்னா அப்பறம் பின்னாடி நீங்க தான் கஷ்டப்பட வேண்டியதா இருக்கும். என்னை பத்தி உங்களுக்கு தெரியும் எப்படி பிரச்சனை பண்ணுவேன்னு..? ஒரு நிமிஷத்துல உங்களை காலி பண்ண முடியும் அதையும் பார்த்துக்கோங்க. அதுவும் போக தீராத பகை ஒன்னு இருக்கு...”
“உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க. என்கிட்டே அதிகாரம், பணபலம், ஆள்பலம் எல்லாமே இருக்கு...” என சிறு துளி கூட பயமில்லாது கூறி வைத்தார் சத்தியவதனி.
அவருக்கு இந்த மாதிரி அழைப்பு அடிக்கடி வருவது தான் என்பது அவரின் குரலி,லே தெரிந்து விட்டது.
பின் மாலை நேரம் போல், “என்ன சத்தியவதனி எப்போ நான் சொன்னதை செய்ய போறே. உன் மகனோட உயிர் என் கையில இருக்கு பார்த்துக்கோங்க. ஒரு நிமிஷத்துல இப்போ நினைச்சா கூட நான் போட்டு தள்ளிருவேன். அப்பறம் நீ ஆசையா வளர்த்த மகன் உனக்கு இருக்க மாட்டான். இப்போ உனக்கு உன் மகன் எங்கே இருக்கான் என்ன பண்ணுறான் அப்படிங்குற வீடியோ அனுப்புறேன். நம்பலைன்னா அதை வேணா பாரு..?” எனக் கூறி அலைபேசியை கட் பண்ண,
அடுத்த பத்து நிமிசத்தில் சத்தியவதனியிடமிருந்து அழைப்பு சென்றிருக்கிறது.
அதில், “எதுக்கு நீங்க என்னை இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க..? என் மகனை மட்டும் ஒன்னும் பண்ணாதீங்க..? அவனுக்கு இந்த பிஸ்னஸ் மேல ஆர்வமே இல்லை. அதுனால தான் பாரின் போறேன் சொன்னதும் நானும் அனுப்பி வச்சேன். அவனுக்கு எதுவுமே தெரியாது அவனை ஏதாவது பண்ணுன அப்பறம் நான் சும்மா இருக்க மாட்டேன்...” என தவிப்பு கலந்த மிரட்டலோடு கூற,
“இப்படி தான் செய்யுறேன்னு சொல்லுற ஆனா செய்ய மாட்டிக்கே ஒரு வேலை நீ உயிரோட இல்லாம இருந்தா நடந்திருமோ..? இப்போ உனக்கு உன் உயிர் முக்கியமா. உன் மகன் உயிர் முக்கியமா..? ரெண்டுமே முக்கியம்ன்னா நான் கேட்டதை கொடுத்திரு...”
“முடியாது. நீங்க நினைக்கிறது நான் செத்தாலும் நடக்காது. என் மகனுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க எவ்வளோ முயற்சி எடுத்தாலும் சின்ன கல் கூட என் மகன் மேல படாது. அப்படி இருக்க நீங்க அனுப்புன இந்த பிளாக்மெயில் வீடியோ பார்த்து ஏன் கால் பண்ணுனேன்னு நினைக்கீங்களா..? முடிஞ்சா என்னை விட ஒரு ஸ்டெப் முன்னேறி காட்டுங்க பார்த்திறலாம்.
இந்த சத்தியவதனி எப்பவும் முன்னேறிக்கிட்டு தான் இருப்பாளே தவிர ஒரு நாளும் கீழே இறங்க மாட்டா. நான் பின் தங்கி தோல்வியடைஞ்சதா சரித்திரமே இல்லை. உங்க நேரத்தை வீணாக்காதீங்க..? எங்கையோ இருக்குற என் மகனை நீங்க டார்கெட் பண்ணும் போது உங்க கூடவே பக்கத்துல இருக்குற உங்க குடும்பத்தாளுங்களை என்ன பண்ணனும் எனக்கு தெரியாமலா இருக்கும். இந்த சத்தியவதனி எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டா வச்சிறேன்...” எனக் கூறி சத்தியவதனியின் அழைப்பு துண்டித்தது.
அதன் பிறகு இரவு கேசவன் உணவுண்ண அழைத்தது மகனிடம் அக்கறையாய் பேசியது, பின் தன்னிடம் நீண்ட நேரம் பேசியது இதுவே ஆடியோவாக பதிவாகி இருக்க, முழுவதையும் இருவரும் கேட்டு முடித்தனர்.
“என்ன அண்ணா ஏதாவது குளூ கிடைக்கும் நினைச்சா எதுவுமே முடியல..?”
“ரெண்டு காலுமே தொழில் போட்டியாளர்கள் மிரட்டுனது தான். இதுக்கு சத்தியவதனி மேடம் பயப்பிடல. எதிர்த்து தான் இருந்திருக்காங்க..? அப்படி எப்படி எதை நினைச்சி அவங்களுக்கு ஹார்ட்அட்டாக் வந்திருக்கும் இறந்திருப்பாங்க. அதை விட இதுல ஏதோ இருக்கு மகிழ்...”
“ஆமா அண்ணா..! அத்தை ஹார்ட்அட்டாக்ல இறந்தது மாதிரி இல்லை. அந்த டாக்டர் சொல்லுறதும் பொய் மாதிரி தான் இருக்கு. ரிப்போர்ட் கூட பக்கவா பொய்யா ரெடி பண்ணிருக்காங்க. எந்த டாக்டர்ஸ் கிட்ட போய் கேட்டாலும் இதை தான் சொல்லுவாங்க.
நேத்து கூட பேமிலி டாக்டர் நம்பர் கண்டுபிடிச்சு கால் பண்ணி கேட்டா, அவர் கூட சடன்னா வர்ற வாய்ப்பு இருக்கு. அல்ரெடி ஒரு தடவை உங்க அத்தைக்கு வந்திருக்குன்னு சொல்லுறாங்க..? ஆனா என்னால நூறு சதவீதம் சொல்ல முடியும் அத்தை இறந்தது ஹார்ட்அட்டாக்ல இல்லை. சரி அதை விடு நீ எதுக்கு அண்ணா ஏதோ இருக்குன்னு சொல்லுற..?”
“மகிழ் இப்போ நான் விசாரிக்கிறது என்னோட ஹையர் ஆபிசர் யாருக்கும் தெரியாம மறைமுகமா தான் இந்த கேஸ் கேண்டில் பண்ணுறேன்...”
“எதுக்கு அண்ணா..?”
“சத்தியவதனி மேடம் இறந்த ஒரு வாரத்துல நான் இந்த கேஸ் விசாரிக்கக் போறேன் சந்தேகமா இருக்குன்னு சொன்னதுக்கு டிபார்ட்மெண்ட் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. முடிஞ்சதை தோண்டி என்ன பண்ண போறே..? இருக்குறதை முடி முதல. தேவையில்லாததை செய்ய வேண்டாம்ன்னு கட்டளையா சொல்லி என்னை கட்டி போட்டாங்க. அதையும் மீறி நான் விசாரிச்சதை கண்டுபிடிச்சு வார்னிங் கொடுத்தாங்க. அதான் இப்போ மறைமுகமா டீம் உருவாக்கி பண்ணிட்டு இருக்கேன்...”
“அண்ணா..! என்னை மன்னிச்சிரு. எனக்காக தானே நீ உன்னோட வேலையே ரிக்ஸ்ல வச்சி பண்ணிட்டு இருக்கே..?”
“என்ன மகிழ் நீ இப்படி சொல்லுற..? சத்தியவதனி மேடம் இல்லைன்னா நீ, நான், அம்மா எல்லாரும் இருந்திருப்போம்மா. அப்பா இறந்ததுக்கு அப்பறம் மேடம் அம்மாவை வேலைக்காரியாவா பார்த்தாங்களா சொல்லு. நான் இந்த இடத்துக்கு வர்றதுக்கு காரணம், உன்னை படிக்க வச்சது எல்லாமே அவங்க தான். அவங்க எப்படி இருந்தாலும் நமக்கு நல்லது தானே பண்ணிருக்காங்க. அதுக்கு நீ இப்போ விசுவாசமா உன் வாழ்க்கையையே கொடுத்த மாதிரி நான் என் உயிரை கொடுத்தாலும் தப்பில்லை. நிச்சியம்மா இதை கண்டுபிடிச்சி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம். சரி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே..?”
“எனக்கா? ஏன் அண்ணா அப்படி கேட்குற..?”
“இல்ல ஆரம்பத்துல இருந்தே விஜய்க்கு உன்னை பிடிக்காது. இப்போ வேற நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்கீங்க..? அவன் ஏதாவது உன்னை டார்ச்சர் படுத்துனா என் கிட்ட சொல்லு..?” எனக் கூறிய நொடி சிரித்தே விட்டாள்.
“என்னாச்சுடா..?”
“ஒன்னுமில்லை. விஜய் நம்ம நினைக்கிற மாதிரி இல்லண்ணா. அவனுக்குள்ள ஏதோ இருக்கு அது என்னென்னு நான் கண்டு பிடிக்கணும். அதை நான் பார்த்துக்குறேன்...”
“சரிடா நான் கிளம்புறேன். நானும் அந்த டாக்டர் கிட்ட ஒரு தடவை மப்டில போய் விசாரிச்சிட்டு சொல்லுறேன்...” எனக் கூறிச் சென்று விட,
விஜயநேத்ரனை நினைத்தவளின் இதழிலோ அவனைப் போன்றே புன்னகை அரும்பியது. ஏன் இந்த மாற்றமென இவளுக்கு தெரியவில்லை. அவனுக்கோ தெரிந்திருந்தது.