வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கள்வனின் தீராக்காதல் (KT) கதை திரி

Status
Not open for further replies.
கள்வன் : 16

நாட்கள் சென்று அன்று வெள்ளிக்கிழமை வந்து விட, அலுவலகத்தில் இருந்து மாலை நேரம் போல் பரபரப்போடு வீட்டுக்குள் வந்தாள் மகிழினி.

ஒரு மணி நேரம் கடந்து விநாயகம் மகனின் வரவேற்புக்குச் செல்ல டிசைனர் புடவை ஒன்றை நேர்த்தியாக உடுத்தி எளிமையான புடவைக்கு ஏற்ற அழகான ஒப்பனைகள் செய்து கீழே வர அதே நேரம் உள்ளே நுழைந்தான் விஜயநேத்ரன்.

இது நாள் வரை ஜீன்ஸ், டாப், லாங் குர்தி இப்படியே அணிந்தவளைக் கண்டவனோ முதல் முறையாக இப்போது தான் புடவையில் கண்டான்.

‘நீ உடுத்திய புடவையாலோ என்னவோ என் மனம் உன் அழகினை வர்ணிக்க நினைக்கிறதே..! மெல்லிய கொடியிடையில் விழிகள் தவழ்வது போல் என் கரங்கள் தவழாதா..! எந்த உலகத்தில் இருந்து இன்று பிறந்து வந்தாய் நீ..! இத்தனை நாள் எங்கிருந்தாய் பெண்ணே..!’ மனமோ அவளை கண்டு என்னவோ நினைக்க, ஒரு நொடி ரசித்த பார்வையை சட்டென தாழ்த்திக் கொண்டான்.

அவன் தன்னைக் கண்டதை கண்டும் காணாதது போல் அவனை தாண்டிச் சென்றாளே, தவிர ஒரு வார்த்தை கூட எங்குச் செல்கிறேன் எனக் கூறவில்லை மகிழினி.

மெல்லிய கொலுசொலி ஓசையோடு வீட்டினை விட்டு வெளியேறிவிட, சோஃபாவில் சரிந்து பின்னே சாய்ந்து விழி மூடியவனுக்கு முதலில் அவளின் அழகு கொள்ளையடிக்க வைத்தது.

இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட முகத்தினை தவிர அவளின் அழகினை கண்டதில்லை. ஆனால் இன்றேனோ அவளின் பேரழகு போதை ஏற்றும் உணர்வு தான்.

‘இவ்வளவு அழகா கிளம்பி அப்படி எங்க போறா..? என்னை தாண்டி தானே போறா ஒரு வார்த்தை சொல்லிட்டு போறாளா..? திமிர்பிடிச்சவ, அதிகாரம் தான் கிட்ட இருக்குற ஆணவத்துல தானே பணத்தை தூக்கி கொடுக்குற.? இருக்கட்டும்...’ மனமோ நொடியில் மாறி அவளை எண்ணி கருக,

அதற்கு மனசாட்சியோ, ‘அடேய் நீ தானே கேட்டே பணம் வேணுன்னு. இப்போ இப்படி சொல்லுற..?’ எதிராய் வாதிட்டது.

‘ஆமா கேட்டேன் ஆனா அதுக்கு ரெண்டு வழி கொடுத்தேன்ல அதை தேர்ந்தெடுக்கலாம்ல..? பிடிக்கலைன்னா இவளை யார் இதெல்லாம் பார்க்க சொன்னா போக வேண்டியது தானே..? கடமையுணர்ச்சில பொங்குறதுன்னு நினைப்பு...’ தன் மனப்போக்கில் திட்டிக் கொண்டான்.

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விநாயகம் தன் மகனின் வரவேற்ப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்க, சொந்தங்கள், தெரிந்தவர்கள், தொழில் சார்ந்தவர்கள் அனைவருமே வந்திருந்தனர்.

வரதன், ஆதிகேசவன் இருவருமே வந்திருக்க அவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருக்க, “என்ன ஆதிகேசவன் சார் உங்க மருமகளை காணோம்..?” சட்டென வரதன் கேட்கவே, குழம்பினார்.

“என்ன சார் இப்படி விழிக்கிறீங்க..?”

“என் மருமகளை எப்போ இன்வைட் பண்ணுனீங்க..?”

“அந்த சத்தியவதனியோட மருமக உங்களுக்கும் மருமக தானே. அதை சொன்னேன்...” என்றதும்,

“குடும்ப உறவெல்லாம் என்னைக்கோ முடிஞ்சு போனது. இதை நான் பலமுறை சொல்லிட்டேன்ல...” என்றார் ஆதிகேசவன்.

“சும்மா கேட்டோம் சார். உங்களை பத்தி எங்களுக்கு தெரியாதா..? இன்வைட் பண்ணிருந்தோம்ல அதான் கேட்டேன். மீடியாக்காரங்களை வேற கூப்பிட்டிருக்கேன்...” என விநாயகம் கூற, அதே நேரம் உள்ளே அழகிய வண்ணக்குயிலாய் நுழைந்தாள் மகிழினி.

அவளைக் கண்ட அங்கிருந்த ஒருவனின் விழிகளோ மையல் குடிக்கொண்டு மனமும் சேர்ந்து அவளிடம் மயங்க துடித்தது.

“இதோ வந்துட்டா அந்த பொண்ணு..!” என்க, அப்போது தான் தொழில் போட்டியளார்களான வரதன், ஆதிகேசவன் இருவரும் அவளை சந்தித்தனர்.
விநாயகம் வரவேற்கும் அனைவரையும் மீடியாக்காரர்கள், போட்டோஸ் எடுத்து கேள்விகள் என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
“அடடா..! வாங்க..வாங்க...” இன்முகமாய் முன்னேச் சென்று தன் கரம் நீட்டி வரவேற்க, பதிலுக்கு கரத்தினைக் கொடுத்து குலுக்கிக் கொண்டாள்.

“நீங்க வந்தது சத்தியவதனி மேடம் வந்தது மாதிரியே இருக்கு. வாங்க உள்ளே...” என வரவேற்று விநாயகம் செய்தியாளார் ஒருவனிடம் சைகை செய்ய அவனோ படைகளை அழைத்துக் கொண்டு முன்னே வந்தான்.

அவனை தொடர்ந்து மற்ற செய்தியாளர்களும் முன்னே வந்து கேள்வியாய் கேட்க ஆரம்பித்தனர். ஒரு நொடி அவர்களின் வருவை எதிர்பாராது திடுக்கிட்டாள்.

“ஹலோ மேடம்..! இப்போ நீங்க ஆர்.எஸ் குரூப் ஆப் கம்பெனி எம்.டி யா எப்படி பீல் பண்ணுறீங்க..? உங்களோட அத்தை போல நீங்களும் இதை சிறப்பா ரன் பண்ணுவீங்களா..? புதுசா ஏதாவது அப்டேட் கொண்டு வந்திருக்கீங்களா..? உங்களை மாதிரி பிசினஸ் பண்ணுறவங்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க..?” என்று மாறி மாறி கேள்வியாய் கேட்டு, போட்டோவும் வளைத்து எடுக்க, தடுமாறி தான் போனாள்.

தன்னை அறிமுகப்படுத்தும் போது கூட முதலில் ஏற்பாடு செய்து அதற்கு தயாராக இருந்தாள். ஆனால் இன்றோ இப்போது திடுக்கிட்டு கேட்கவும் ஒன்றும் பதில் கூற முடியாது திகைத்தாள்.

அதனைக் கண்ட வரதன், விநாயகம், ஆதிகேசவன் மூவருக்குமே அப்படியொரு ஆனந்தம். கண்டவாறு இருக்க ஒரு நொடி தான் பின் தன்னை திடப்படுத்திக் கொண்டாள்.

“இப்படி எல்லாரும் ஒரே நேரமா கேட்டா நான் எப்படி பதில் சொல்லுவேன். ஒவ்வொருத்தரா கேளுங்க கண்டிப்பா சொல்லுறேன்...” புன்னகை முகமாக கூறவே, மறுபடியும் அதே கேள்வியை கேட்க ஆரம்பித்தனர்.

அவளும் அதற்கு ஒவ்வொன்றாக பதில் கூறிக் கொண்டிருக்க திடிரென, “நீங்க சத்தியவதனியோட மருமக அப்படின்னா எதுக்காக மேடம் இருக்கும் போதே பிசினஸ் பார்க்க வரல. நீங்க எதுக்காக ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க..? ஒரே மகனான உங்களோட ஹஸ்பன்ட் இருக்கும் போது எதுக்காக நீங்க தொழில் பார்க்குறீங்க..?” கேட்க, அதிர்வினை தனக்குள் மறைத்துக் கொண்டாள்.

‘தன்னுடைய பர்சனல் பற்றி இவர்கள் எவ்வாறு கேட்கலாம்..?’ உள்ளுக்குள் உதித்த எரிச்சலை அடக்கிக் கொண்டு, “அதான் என் அத்தை நல்லபடியா பார்த்துக்கிட்டு இருக்கும் போது நான் ஏன் வரணும். அதுவுமில்லாம நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல. முதல ஏத்துக்கலை அதுக்கு அப்பறம் தான் ஏத்துக்கிட்டாங்க. என்னோட ஹஸ்பன்ட்க்கு பிசினஸ்சை பார்க்குறது விருப்பமில்லை. ஏன் ஒரு பொண்ணா இருந்தா எதையும் பண்ண முடியாதா என்ன..? என் அத்தை அவங்களுக்கு இருந்த தைரியம், தன்னம்பிக்கை எனக்கு இருக்கு. நிச்சியம்மா நான் ஜெயிப்பேன்...” உறுதியோடு கூறினாள்.

“இந்த வருஷம் நடக்க போற தி டைம்ஸ் பிசினஸ் அவார்ட்டுக்கு நீங்க செலெக்ட் ஆகிருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம். அதை பத்தி நீங்க என்னை நினைக்கிறீங்க..?”

“இது எல்லாத்தைக்கும் காரணம் என் அத்தை தான். உறுதியா சொல்லுறேன் அவங்களுக்கு இந்த அவார்ட் கிடைக்கும்...” என அத்தையை நினைத்துக் கொண்டு கர்வமோடு கூறினாள்.

என்ன கேள்வி கேட்டாலும் அவள் மடக்கி விடுவதைக் கண்ட ரிப்போர்ட்டர் ஒருவன், “உங்களோட ஹஸ்பன்ட் எங்கன்னு தெரிஞ்சுக்கலாம்மா. ஏன் அவங்க இங்கே வரல..?” என்க,

“என் அத்தையோட இழப்பை அவரால இன்னும் தாங்க முடியல. அதனால தான் எங்கையும் வெளியேவர மாட்டிக்காரு...” எனக் கூறி நின்றால் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள் என்ற எண்ணத்தில் சற்று விலகக் கூறி சென்று விட்டாள்.

விநாயகம் ஏற்பாடு செய்து வைத்திருந்த ரிப்போட்டரைக் கண்டு முறைக்க, அவனோ தலையை தாழ்த்திக் கொண்டான். பின் விழா ஆரம்பிக்க அனைவருக்கும் மேடையில் தன் மகன், மருமகளை அறிமுகப்படுத்தி வைத்தார். சிறிது நேரம் சென்று வந்தவர்களும் வாழ்த்து கூற, கூட்டம் சற்று அதிகமாக இருப்பதால் பொறுத்திருந்து வாழ்த்து கூறலாம் என்ற எண்ணத்தோடு காத்திருந்தாள்.

“ஹலோ மகிழினி..! எப்படி இருக்கே..?” என்ற குரல் தனக்கு பின்னே கேட்க, திரும்ப அங்கே சர்வாணி உடையில் நின்றிருந்தான் தருண்.

“இவனா..! இவனை எப்படி நான் இத்தனை நாள் மறந்து போனேன். அன்னைக்கு வந்து ஆபிஸ்ல மிரட்டிட்டு போனான்ல. ஒரு வேலை அத்தை இறந்ததுக்கு இவன் காரணமா இருக்குமோ..? இந்த பிசினஸ் எதுக்கு உனக்கு தேவையா விட்டு போயிருன்னு சொல்லி தான் குடும்பத்தை சொல்லியெல்லாம் மிரட்டுனானே..?” எண்ணிக் கொண்டு அமர்ந்திருக்க,

“என்ன மகிழினி அப்படியே ஷாக்கா பார்த்த மாதிரி இருக்கே..? என்னை இங்கே பார்ப்பேன்னு எதிர்பார்க்கலைல? இந்த சேரி செம்ம அழகு, கார்ஜியஸ்சா இருக்க...” வர்ணித்து அவளின் வதனம் கண்டு கூறவே, அருவருப்பாய் உணர்ந்தாள்.
“ஸ்டாப் பிட் இப்படி பேசுறதை நிறுத்துங்க...”

“ஏன் உன்மையை தானே சொன்னேன். விஜய்க்கு பதிலா நான் மட்டும் உன் ஹஸ்பன்ட்டா இருந்திருந்தா இந்த நேரம் அப்படியே உன்னை முழுசா எனக்கானவளா மாத்திருப்பேன்...” கூறியவாறு அவளின் கரத்தினை பற்ற, பட்டென உதறி எழுந்தவளோ சகிக்க முடியாது அங்கிருந்துச் சென்றாள்.

மேடையை நோக்கிச் சென்றவளோ கொண்டு வந்த பரிசுப் பொருட்களை கொடுத்து வாழ்த்தை கூறி கீழே இறங்கி வர விநாயகம் முன்னே வந்து எதிர்க்கொண்டார்.

“என்னம்மா..?அதுக்குள்ள கிளம்பிட்டீங்க போல..?”

“ஆமா சார்...”

“இருங்க சாப்பிட்டு போங்க. அதுக்கு முன்னாடி என்னோட பாட்னர்ஸ் எல்லாரையும் நான் அறிமுகப்படுத்தி வைக்குறேன் வாங்க...” எனக் கூறி ஆதிகேசவன், வரதன் இருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.

அருகில் மகிழினி வருவதைக் கண்டதுமே வேகமாய் போலியான இன்முகத்தோடு எழுந்து அவளை வரவேற்றனர்.

“வெல்கம் வாங்க வாங்க...” வரவேற்க இருவரின் குரல் ஒன்றாக கேட்டதில் வித்தியாசம் தெரியாது அவளும் புன்னகைத்தாள்.

பெரியவர்களாக இருக்கும் இவர்களுக்கு மத்தியில் தான் சமமாக நிற்பது கர்வமாக இருந்தாலும் இன்னும் தன்னை துளைக்கும் தருணின் பார்வையில் எரிச்சலானாள்.

“இந்தாங்க இந்த ஜீஸ் குடிங்க...” வரதன் கூறி தங்களின் முன்னிருந்த மதுபானம் கலந்த ஜீஸ் ஒன்றினை ஊத்திக் கொடுக்க, அவளும் அதனை வாங்கிப் பருக ஆரம்பித்தாள்.

இங்கிருந்துச் செல்வது மட்டுமே அவளின் எண்ணமாக இருக்க, குடிக்கும் போது வித்தியாசம் கூட கண்டறிய முடியவில்லை.

“நான் யாருன்னு உனக்கு தெரியுமா..?” ஆதிகேசவன் கேட்க, அவளோ தெரியாதென தலையசைத்தாலும் அந்த குரலை கேட்டது போல் உணர்ந்தாள்.

“உன் மாமனாரோட அண்ணன் ஆதிகேசவன்...” என்க, அதன் பின்னே அன்னை கூறியது சொந்தம் என்பது எல்லாம் நினைவுக்கு வந்தது.

“சாரி சார். இதுக்கு முன்னாடி மீட் பண்ணலை அதான் தெரியாம இருந்துட்டேன்...”

“இட்ஸ் ஓகேம்மா. அப்பறம் கம்பெனி எப்படி போகுது..?” அவளைச் செல்ல விடாது பேச்சுக் கொடுக்க, நினைத்தது போன்று அடித்த போதை மேனியில் வேலை செய்ய ஆரம்பித்தது.

அதனை குடிக்காரர்களான இவர்களால் நன்கு உணர முடிந்தது. அவளிடம் இருக்கும் தடுமாற்றத்தையும் கவனித்துக் கொள்ள, விஜயநேத்ரன் வராதது வேறு அவர்களுக்கு தோதுவாக இருந்தது.

“சரி சார் நான் கிளம்புறேன்...” என்க,

“சாப்பிட்டு தான் போகணும்...” பவே முறையில் வைத்திருந்த உணவினை கண்டு விநாயகம் கூற, சரி என்றவாறு அவளும் மெல்ல எழுந்து தடுமாறிச் சென்றாள். சிரிப்போடு அவளையே கண்டவாறு இருக்க, பிளேட்டினை எடுத்து உணவினை பரிமாறி திரும்பும் போதே அதனை கொட்டி விட்டாள்.

உடனே அங்கிருந்த அனைவருமே அவளைக் காண, அங்கிருந்த இருக்கையை இறுக பற்றியவளோ விழியை கூட திறக்க முடியாது கால்களோ தரையில் நில்லாது போல் தத்தளித்தாள்.

“என்னம்மா என்னாச்சு..?” கேட்டவாறு வந்த விநாயகத்திடம் வார்த்தைகள் உளற, மன்னிப்பு வேண்டவே, அவரோ அனைவருக்கும் கேட்கும்வண்ணம் அவள் மது அருந்தியிருப்பதை அவளிடமே கேட்டார்.

“சத்தியவதனி மருமக சத்தியவதனி மாதிரியே இருப்பேன்னு நாங்க எல்லாரும் நினைச்சா இப்படி சரக்கடிக்கிற பொண்ணா இருக்கே..? என் பொண்ணு மாதிரி நீ சொல்லுறேன்னு தப்பா நினைச்சிக்காதே என்ன பழக்கம்மா இதெல்லாம்..?”

“இல்லை.நான்..நான்...”தடுமாற, அனைத்து மீடியாக்காரர்கள் அவளை தான் புகைப்படம் எடுத்தனர்.

அதனை உணர்ந்தவளோ விலகிச் செல்ல நினைக்க, நடக்க கூட முடியவில்லை அணிந்திருந்த புடவை வேறு தடுக்கியது. இரண்டடி வைத்தவளோ தலை சுற்ற கீழே விழப் போக, ஒரு வலிய கரம் அவளை விழ விடாது தாங்கியது.


🙏 நன்றி 🙏

கருத்துகளை பகிர

 
கள்வன் : 17

முதல்முறையாக அவளறியாது குடித்த மது மேனி முழுவதும் பரவே தலை சுற்ற, விழிகளோ சொருகியது. தன்னை நோக்கி அடிக்கும் பிளாஸ் லைட்டின் வெளிச்சம் தாங்க முடியாது செல்ல நினைத்து விலகியவளோ தடுமாறினாள்.

சரியாக அந்த நொடி அங்கே வந்த தருண் அவளை தாங்கி பிடித்து தன் தோளோடு அணைக்க, யாரென தெரியாது தாங்கி பிடித்தவர்களை நிமிர்ந்துக் காண கூட முடியவில்லை.

“கொஞ்சம் வழிவிடுங்க. வழிவிடுங்க...” கூறிய தருண் அவளை தாங்கிப் பிடித்தவாறு அந்த வரவேற்ப்பு அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல, தான் ஏற்பாடு செய்த ரிப்போர்ட்டை கண்டு தலையசைத்தார் விநாயகம்.

“என்னாச்சு எனக்கு ஏன் தலை சுத்துது..?” அந்த நொடியிலும் அழைத்துச் செல்பவனிடமிருந்து விலக, தான் எண்ணினாள்.

“என்னை விடு..” திறக்க முடியாத கண்களை சிரமப்பட்டு திறக்க முயல, அவளை தாங்கிய பிடியை அழுத்தப் பற்றினானே தவிர ஒரு வார்த்தை கூட அவனோ பேசவில்லை.

அவளின் உதடுகளோ, “விஜய் உங்க அம்மாவை நான் கொலை பண்ணலை. ஏன் என்னை நம்ப மாட்டிகீங்க..?” புலம்ப,

‘போதை ஏறினால் பெண்களுக்கும் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் வெளிவரும் போல...’ நினைத்தவாறு அந்த ஹோட்டலில் இருந்த ஒரு அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.

உள்ளேச் சென்று படுக்கையில் படுக்க வைத்தவனின் விழிகளோ புடவை நழுவிய அவளின் பால்வண்ண பஞ்சு மெல்லியடையில் பதிந்தது. சில தினங்கள் முன் வேலைக்காரன் கேசவன் மூலம் அவன் அறிந்த ஒன்று இருவருக்கும் இன்னும் முறைப்படி திருமணம் நடக்கவில்லை என்று. எலியும், பூனையுமாக தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்தான். அதை விட சிறு துளி கூட இருவருக்கும் மற்றவரின் மீது எண்ணம் இல்லை என்பதையும் அறிந்தே வைத்தானே தவிர தந்தையிடம் கூட கூறவில்லை.

அந்த நொடியே அவனின் மனமோ மகிழினியின் அழகினை ரசிக்கத் தான் செய்தது. அந்த அழுகு அவனுக்கு மது அருந்தியும் தராத போதையைக் கொடுத்தது.

இப்போது அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருக்க தன் தாடையை தடவியவாறு இருந்தவனின் பார்வையோ அவளை முழுவதும் ஆராய, எண்ணங்களும் எங்கெங்கோச் சென்றது.

அதனை கலைப்பது போல், படுக்கையில் விழுந்தாலும் உதடுகளோ விஜயநேத்ரனை எண்ணி முனுங்கிக் கொண்டே இருந்தது.

“எதுக்காக என்னை உனக்கு பிடிக்க மாட்டிங்குது..? என் அம்மாவை ஏன்டா மறந்தே..? நீ ஒரு சீட்டர். நீ கேட்ட பணத்தை நான் கொடுக்கலைன்னா என்ன வேணாலும் பண்ணுவையோ சொல்லுடா சொல்லு...” புலம்ப, தருணின் செவியில் நன்றாகவே அந்த வார்த்தைகள் விழுந்தது.

“மகிழ்..! நான் தான் விஜய். கண்ணை திற...” எனக் கூறி அவளின் கண்ணங்களை தட்ட, உதறி விட்டு திரும்பிக் கொண்டாள்.

“என் கிட்ட பேசாதே போ...”

விழிகளின் ஏறிய மையல் அவளிடம் கிறங்க வைத்து மனமோ அவளை தனதாக்கிக் கொள்ள நினைத்தது. இந்த நொடி அவளை தான் என்ன செய்தாலும் அவளால் எதிர்க்க முடியாது இருந்தும் ஏனோ உள்ளமோ கேட்கவில்லை. முதல் முறையாக ஆண்மகன் உணர்ச்சியை தூண்டி விட்டதுமில்லாமல் உள்ளத்திலும் பதிந்தவளாக மாறினாள்.

விஜயின் மீது இவளுக்கு காதல் இல்லை என்பது நன்றாக புரியவே, தன் காதலை வளர்க்க நினைத்தான். பெட்சீட்டினை எடுத்து முழுதாக மூடியவனோ தனித்து இப்படியே இவளை விட்டுச் செல்ல மனமில்லாமல் சோஃபாவில் அமர்ந்தான்.

இவன் நினைத்தால் இப்போதே விஜயநேத்ரனை அழைத்து கூற முடியும். அல்லது இவனேச் சென்று வீட்டில் விட முடியும். அப்படி செய்ய மனமில்லை. இவளோடு இருக்க வேண்டும்..? இவளை பார்த்தவண்ணமே இருக்க வேண்டும்..? தன்னருகில் இவள் வேண்டுமென ஒவ்வொரு அணுவும் துடித்தது.

இனிப்பு கூட உண்ண உண்ண திகட்டி விடும். ஆனால் அவளின் அழகோ பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. மணியைக் காண இரவு ஒன்பது. இப்போது அயர்ந்து அவள் உறங்கியும் விட, அமர்ந்தவாறு தன் கைபேசியை எடுத்தவனுக்கு செய்திகளோ நோட்டிபிகேஷனில் காட்ட என்னவென்றுக் காண, மகிழினியை பற்றிய செய்தி தான் பரவிக் கொண்டிருந்தது.

ஒரு மணி நேரம் கூட முழுதாக முடியவில்லை அதற்குள்ளவா இவளை பற்றிய செய்தி பரவியது. இது நிச்சியம் தன் தந்தையின் பாட்னர்ஸ் ஏற்பாடு என்பது தெரிந்தும் அவனோ அதனைக் கண்டுக் கொள்ளவில்லை.

விஜயநேத்ரனோ இரவு உணவினை முடித்து விட்டு மாடியேற அவனின் கைபேசியிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. புதிதாக ஒரு நம்பர். என்னவென்று பார்க்க அதில் தருண் தன் மனைவியை தாங்கி பிடித்து அறைக்குள் அழைத்துச் செல்லும் புகைப்படம் இருந்தது. அதனைக் கண்ட நொடியே விழிகளோ அனலாய் சிவக்க, சூரியனை விட அக்னியின் உட்சத்தில் இருந்தான்.

தருணின் மீதில்ல அவனின் கோவம் மகிழினியின் மீதே இருக்க அவளின் அலைபேசிக்கு அழைக்க, நினைக்கும் போது தான் நம்பர் இல்லாதது நினைவுக்கு வந்தது.

அப்போது அவனது கைபேசியில், ‘ஆர்.எஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இறந்த சத்தியவதனியின் மருமகள் போதையில் இருக்கும் காட்சி ஒளிபரப்பப்படுகிறது..’ என்ற வார்த்தைகளை கண்டவனோ வேகமாய் திறந்து பார்த்தான்.

அதில் மகிழினி போதையில் தள்ளாடியது பிளேட்டினை கீழே போட்டது தருண் தாங்கி பிடித்து அழைத்துச் செல்லும் காட்சி வரை ஒளிப்பராகி இருந்தது. அதை விட அவளையும் இழிவுபடுத்தி சத்தியவதனி பெயரையும் கெடுப்பது போல் சிலர் கருத்துகளை தெரிவித்திருக்க கடுகாய் வெடிக்க தயாரானான்.

இவள் கெட்டது இல்லாமல் கஷ்டப்பட்டு சம்பாரித்து வைத்த தன் அன்னையின் பெயரையும் கெடுத்து வைத்திருக்க, உதவியாளர் ராமமூர்த்திக்கு அழைத்து இப்போது மகிழினி இருக்கும் ஹோட்டல் பற்றி விசாரித்தான்.

தருண் தாங்கிப் பிடித்து அறைக்குள் அழைத்துச் செல்லும் புகைப்படமும், போதையில் தடுமாறிய அவளின் செயலும் நினைவுக்கு வந்து சினத்தை ஏற்ற காரினை எடுத்து சீறிட்டு விரைந்தான்.

அரை மணி நேரத்திலே அந்த ஹோட்டலில் முன்னே வந்து நின்றவனோ வரவேற்ப்பில் விசாரித்து ரிசப்ஷன் நடந்த இடத்திற்குச் சென்றான்.

அங்கே இப்போது ஒரு சிலர் மட்டுமே இருக்க அவனின் பார்வையோ மகிழினி எங்கே எனக் காண, முன்னே வந்து நின்றார் ஆதிகேசவன்.

மற்றவர்களுக்கு கேட்காது, “என்னடா நீ இப்படிபட்ட ஒரு பொண்ணை கட்டிட்டு வந்திருக்கே..? குடும்ப மானமே போச்சு. நல்லவேளை தருண் வந்து கூட்டிட்டு போயிட்டான். இல்லை இன்னும் என்னெல்லாம் பண்ணி வச்சிருப்பாளோ..? பார்க்க கண்ணுக்கு லட்சனமா இருந்திட்டு இப்படி சரக்கடிக்கிறா. வீட்டுல வச்சி குடிச்சா சரி பொதுயிடத்துல வச்சி உன் பொண்டாட்டி என் அப்பன், உன் அம்மா சம்பாரிச்ச பெயரையே கெட்டு போக வைச்சிட்டா போ...” ஏற்றி விடுவது போல் இன்னும் கூறிக் கொண்டே இருக்க,

“இப்போ அவ எங்கே இருக்கா..?”

“தருண் வீட்டுக்கு கூட்டிட்டு வரலையா..?”

“இல்ல...” என்றதும், தன் மகனுக்கு அழைத்துக் கேட்க, அவனோ ஒரு அறை நம்பரை கூறினான்.

அதனை விஜயநேத்ரனிடம் கூறும் போதே அங்கிருந்து விரைந்தவனோ அந்த அறையை தேடிச் செல்ல, “நீயேன்டா அவளை வீட்டுல விடாம. ரூம் போட்டு அந்த பொண்ணு கூட இருக்கே..?” மகனிடம் கத்த,

“வேற எதுக்கு..? அந்த விஜயை கடுப்பாக்கி பிரச்சனையை உண்டு பண்ண தான்...”
“என்னமோ பண்ணி தொலை. உன்னை தேடி தான் வரான்...” எனக் கூறி கைபேசியை வைத்து விட, இங்கே மகிழினியின் அருகில் வந்து அவளின் கன்னத்தை தட்டி எழுப்பினான்.

“மகிழினி..மகிழினி. எழுந்திரு. இங்கே பாரு...” தட்டி உலுக்கி எழுந்தமர வைக்க, விழித்தவளுக்கு இன்னும் போதை தெளியவில்லை.

தூக்க கலக்கத்தில் சிணுங்கும் சிறுமியை போல் சிணுங்கிக் கொண்டு மறுபடியும் பொத்தென சாய, அதே நேரம் ஹாலிங் பெல் சத்தம் கேட்க அவளின் நிலையைக் கண்டுச் சென்றான் தருண்.

அறைக்கதவினை திறக்க சட்டென புயல் வேகத்தில் உள்ளே நுழைந்த விஜயநேத்ரன் படுக்கையில் குறுக்காக படுத்து பிதறிக் கொண்டிருக்கும் மகிழினியை தான் கண்டான்.

“எதுக்கு டக்குன்னு உள்ளே வந்தே..?”

“உனக்கு சொல்லணும் அவசியமில்லை...”அக்னியின் அரசனாக உறுமியவனோ அவளருகில் சென்று, அவளை எழுப்ப முயற்சித்தான்.

“மகிழ் எழுந்திரு...” கரம் பற்றி தன்னை நோக்கி பலம் கொண்டு இழுக்க,

“போ..! நான் இங்கே தான் இருப்பேன் வர மாட்டேன். எனக்கு நீ வேண்டாம் போ...” தன் பூக்கரங்களால் அவனின் நெஞ்சில் அடித்து கூறவே, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் என்ன எண்ணெய் பெட்ரோலையே ஊற்றியது போல் தீச்சுவலையானான்.

“உன் பொண்டாட்டிக்கு என் கூட இருக்குறது தான் ரொம்ப பிடிச்சிருக்கு போலையே..?” என விஜயனை வெறுப்பேற்றுவது போல் நக்கலோடு கூற, சட்டென தன் உருமேறிய கரம் கொண்ட மகிழினியின் கன்னத்தில் பதித்தான்.

அதனைக் கண்டு ஒரு நொடி திடுக்கிட்ட தருணோ, “விஜயன்...” கோவமோடு கத்த,

அவனை விட உட்ச கோவத்தில் இருந்தவனோ, “வாயை மூடு...” கர்ஜித்தவன் அடித்த அடியில் மயங்கியவளை தன் கரங்களில் பஞ்சு பொதியாகத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

தன்னவளை அடித்ததிற்கு பழி தீர்ப்பேன் என்ற எண்ணத்தோடு தூக்கிக் கொண்டு செல்பவனைக் கண்டவாறு விழிகள் சிவக்க நின்றிருந்தான் தருண்.

காரில் பின் சீட்டில் மயங்கிய நிலையில் இருந்தவளை கிடத்தியவனோ வீறிட்டு காரினை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவனின் ஆத்திரம், கோவம், அனைத்தையும் ஸ்டேரிங்கில் செலுத்தினான்.

வீட்டில் வந்து நிறுத்தியவனோ மறுபடியும் அவளை தூக்கிக் கொண்டு வந்து அவளின் அறையில் படுக்கையில் வைத்தவனோ, அங்கிருந்த பொருட்களை அனைத்தையும் வீசி எரிந்து தன் ஆத்திரத்தை மட்டுப்படுத்த முயற்சி செய்தான்.

‘இவளால் இன்று அன்னைக்கு நிகழ்ந்த கெட்ட பெயர். சுயவுணர்வு இல்லாமல் இவள் இருக்க உடன் ஒரே அறையில் அந்த தருணும். இவளை அடித்தால் அவனுக்கு என்ன அப்படியொரு தவிப்பும் தன் மீது கோவமும்..? இவள் என் மனைவியா அல்லது அவனின் மனைவியா..? இவளை..’ பல்லை கடித்து புலம்பியவனோ அவளை ஒன்றும் செய்ய முடியாது படாரென கதவினை சாத்தி வெளியேறினான்.

மகளை பற்றி தவறான செய்தி பரவியதைக் கண்ட கோசலையோ தாங்க முடியாது வேதனையோடு அழுது தவித்தார்.

மருமகளும், மகனும் ஆறுதல் கூறியும் கோசலையின் மனம் அடங்கவில்லை. தன் மகளை இப்போதே காண வேண்டும். அவளுக்கு என்னாச்சோ தெரியவில்லையே..? புலம்பி தவிக்க, யோசித்து ஒரு வழியாக முடிவினை எடுத்தான் வேந்தன்.

“அம்மா..! நான் விஜயனுக்கு கால் பண்ணி கொடுக்குறேன். நீங்க பேசுங்க...” என்றதும், அவரும் சரி என்க, விஜயநேத்ரனுக்கு அழைத்தான்.

அப்போது தான் மகிழினியின் அறையை விட்டு வெளியேறியவனோ அழைப்பு வருவதை பார்த்து எடுத்து, “ஹலோ...” என்றான்.

“விஜய் நான் கோசலை பேசுறேன்ப்பா. மகிழ் இப்போ எங்கப்பா..?” அழுகையோடு கேட்க, கோவத்தில் இருந்தவனுக்கு அவரின் தவிப்பும், அழுகையும் கரைய வைத்தது.
“இங்கே வீட்டுல தான் இருக்கா...”

“செய்தில வர்றது எல்லாம் பொய் தான்ப்பா. நான் அவளை அப்படி வளர்க்கலைப்பா. உனக்கு அவளை பத்தி நல்லா தெரியும்ல விஜய்...” என்க, எதுவும் கூற முடியாது தன் தலையில் தானே அடித்துக் கொண்டான்.

“விஜய்..! கண்ணா..! விஜய்...” உருகிய குரலில் அழைக்க,

“உங்க பொண்ணுக்கு நான் இருக்குற வரைக்கும் ஒன்னுமாகாது. நீங்க எதையும் நினைக்காம நிம்மதியா தூங்குங்க. நான் பார்த்துக்குறேன்...” கூறியவுடனே அழைப்பினையும் துண்டித்து விட்டான்.

தன் தவறு என்னவென்று அப்போது தான் புரிந்தது. கோவத்தில் மூர்க்கத்தனமாய் இருந்துவிட்டு காயப்படுத்தி விட்டேனே..! எரிச்சல். கோவம், இயலாமை, தவிப்பு விட்டால் சித்தமே குழம்பி விடும் நிலையில் இருந்தான் விஜயநேத்ரன்.

🙏 நன்றி 🙏

கருத்துகளை பகிர:

 
கள்வன் : 18

கனவுகள் காணாமல் போகும் காலை நேரம் கீழே இறங்கி உணவுண்ண டைனிங் டேபிளில் வந்து அமர்ந்த விஜயநேத்ரனுக்கு மகிழினியின் நினைவு வர, உடன் சேர்ந்து நேற்று அவளை அடித்ததும் நினைவுக்கு வந்தது.

‘ச்சே..! எவ்வளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் ஏன் அவ கிட்ட மட்டும் கண்ட்ரோல் இல்லாம இருக்கேன். என் மனசு என்ன தான் எதிர்பார்க்குது...?’ தன்னையேக் கேட்டு குழம்பியவனோ பரிமாறும் கேசவனிடம் அவளை பற்றி விசாரித்தான்.

“மேடம் இன்னும் ஆபிஸ் போகலை. ரூமை விட்டு வெளியே வரவே இல்லை...” என்றதும், உணவே இறங்க மறுக்க அப்படியே கரம் கழுவி விட்டு அவளின் அறை நோக்கிச் சென்றான்.

தான் சாத்தி விட்டுச் சென்ற அறை இன்னும் அப்படியே இருக்க, உள்ளே நுழைந்தவனின் விழிகளில் விழுந்தது ஆழ்ந்த நித்திரையில் துயில் கொள்பவனின் முகம் மட்டும் தான்.

போர்வையை முழுவதும் இழுத்து மூடியிருக்க, தான் அடித்த கைதடம் பதிந்த அவளின் கன்னமோ இன்னும் சிவந்திருக்க, நெற்றியில் அடித்துக் கொண்டான்.

அருகில் சென்று தொடாமலே, “ம..! மகிழ்..! மகிழினி...” அழைக்க, அவளிடம் எந்த உணர்வுமில்லை. ஒரு நொடி எதுவும் ஆகி விட்டதோ மனமோ பதற, சட்டென அவளை தொட்டு உலுக்கும் நேரம் அனல் கொதிப்பை அவளின் வதனத்தில் உணர்ந்தான்.

‘என்ன இவளுக்கு இப்படி கொதிக்குது.? ஒரு நாள் அடிச்ச போதையா..?’ மனம் நினைக்க,

மனசாட்சியோ, ‘ஏன்டா அவளை எப்போ பார்த்தாலும் தப்பாவே புரிஞ்சுக்கிட்டு இருக்கே..? அவ எங்க சரக்கடிச்சா யாரோ அடிக்க வச்சிருக்காங்கன்னு சொல்லு...’ திருத்திச் கூறவே கேட்கும் மனநிலையில் அவனில்லை.

அறையை விட்டு வெளியேறியவனோ கேசவனை அழைத்து தெரிந்த மருத்துவர் யாராவது இருக்கிறார்களா எனக் கேட்டு நம்பரை வாங்கி வீட்டுக்கு வரக் கூறி அழைத்தான்.

மருத்துவரிடம் பேசிய அடுத்த அரை அணி நேரத்தில் மருத்துவர் வந்து விட, மகிழினி அறைக்குள் அழைத்துச் சென்றார்.

மகிழினி பார்த்ததுமே நேற்று அந்த இரவு ஒளிபரப்பான செய்தி வந்தது நினைவுக்கு வர, “இந்த பொண்ணு தானே நேத்து டிரிங்க்ஸ் பண்ணினது..” மருத்துவரை பரிசோதித்தவாறு கேட்க,

உள்ளுக்குள் பற்றிய கோவத்தீயை கட்டுப்படுத்தியவனோ, “இந்த ஜெனரேசன்ல பொண்ணுங்களும் குடிக்க தானே செய்யுறாங்க இதுல என்ன தப்பு..? என்னாச்சு டாக்டர் இவளுக்கு..?” என்றான்.

“சாதாராண காய்ச்சல் தான். ஊசி போட்டிருக்கேன். மாத்திரை எழுதி தரேன். நேத்து டிரிங்க்ஸ் பண்ணினது இவங்களுக்கு ஒத்துக்கலை போல...” எனக் கூறி அவளுக்கு ஊசி போட்டு எழுந்து முடிக்க, அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

பின் கேசவனிடம் சொல்லி அனுப்பி வைத்து மறுபடியும் மகிழினி அறைக்குள் நுழைந்தவனுக்கு, ‘நேற்று ஒளிபரப்பான செய்தியை எப்படி இவள் சாமாளிக்க போறா..? இவ இந்த வீட்டை விட்டு வெளியே போனாலே இதை தானே பேசுவாங்க. ஆனா இது உண்மை இல்லை அப்டிங்குறதை நிரூபவிச்சா தான் இவளால வெளியே நிம்மதியா நடமாட முடியும். முதல்ல இவ கண்ணு விழிக்கட்டும் கேட்போம்...’ என்ற எண்ணத்தில் வெளியேச் சென்று விட்டான்.

உடன் இருந்து அவளை கவனிக்க வேண்டுமென்பதால் அவனுக்கு தெரியவில்லை. நேரம் சென்று மாலை நேரம் வந்து விட மெல்ல மெல்ல கண் விழித்த மகிழினிக்கு மேனி முழுவதும் அடித்து போட்டது போன்று அப்படியொரு வலி. ஒரு நாள் முழுக்க படுக்கையில் இருந்தது வேறு கை,கால் எல்லாம் சட்டென மரத்துப் போக, திடப்படுத்திப் போராடி நெற்றியை தேய்த்து எழுந்து அமர்ந்தாள்.

காய்ச்சல் சற்று குறைந்திருக்க, பசியோ வயிற்றை கிள்ள, அருகிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்தவளோ இன்டார்காமை எடுத்து கேசவனுக்கு அழைப்பு விடுத்து காஃபீ கூறினாள்.
அடுத்த பத்தாவது நிமிஷத்தில் வேலை செய்யும் பெண்மணி காஃபீயை அவளின் அறைக்கு கொண்டு வந்துக் கொடுக்க அதனை குடித்த பின்னே சற்று தெம்பும், தெளிவும் வந்ததை போல் உணர்ந்தாள்.

ரிசப்ஷன் செல்லும் போது கட்டிய புடவையில் இன்னும் இருக்க மணியைக் காண ஆறு. நெற்றியை தேய்த்து புருவத்தை சுருக்கியவளுக்கு நேற்று இரவு நடந்த நிகழ்ச்சிகள் நினைவுக்கு வர, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பது புரிந்தது.

விநாயகம் தன்னிடம் போதையில் இருக்கிறாய் என கூறியதும் தன்னை ஃபோட்டோ எடுத்தது வரை தான் நினைவில் இருக்க, தலையை சிலுப்பியவளோ கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

அவளைப் பற்றிய சித்தரிப்பு செய்திகளாக இருக்கவே, கரங்களை முறிக்கி கோவம் கொண்டவளின் விழிகளில் கண்ணீர். அதுவும் கடைசியில் தருண் தன்னை தாங்கி பிடித்து அழைத்துச் செல்வது இருக்கவே, அவன் தொட்ட இடமெல்லாம் அருவருப்பாய் உணர்ந்தாள். அவன் தன் அழகினை ரசித்து கூறியது வேறு மனதினை எரிக்க, குளியலறை சென்றவளோ தன்னையே குளிர் நீரில் தணிக்க முயன்றாள்.

பின் உடை மாற்றி படுக்கையில் அமர மருத்துவர் வந்து தன்னை பரிசோதனை செய்த அறிகுறி தெரியவே, எப்படி வீட்டுக்கு வந்தோம் என்பதை பற்றி யோசிக்க, தருணின் மீது நம்பிக்கை இல்லை.

‘அப்படியென்றால் யார் தன்னை இங்கு அழைத்து வந்தார்கள்..?’ நினைத்துக் கொண்டிருக்க, அவளின் அன்னையிடமிருந்து அழைப்பு.

அதனை எடுத்து தவிப்போடு பேசியவரிடம் சிறிது நேரம் ஆறுதலாய் தனக்கு ஒன்னுமில்லை என்பதை பற்றியும் கூறி வைக்க நினைக்க, அவரோ விஜயநேத்ரனிடம் பேசியதை பற்றி கூறினார்.

‘அப்படின்னா இவன் தான் என்னை கூட்டிட்டு வந்தானா..? எப்படி வந்தான்...’ யோசனையாய் வெளியே வர, அவனில்லை.

சுத்தம் செய்யும் பெண்மணியிடம் நேற்று நடந்ததை பற்றிக் கேட்க, “சார் தான் நேத்து உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. அப்போ நீங்க மயக்கத்துல இருந்தீங்க.? காலையில உங்களுக்கு காய்ச்சல் டாக்டரை கூட்டிட்டு வந்து பார்க்க வைச்சாங்க...” எனக் கூறி தன் வேலையை பார்க்கச் சென்றார்.

கேட்ட மகிழினிக்கோ அலையாய் ஆர்பரித்தது மனம். இவ்விசியத்தில் யார் என்ன கூறினால் என்ன..? அவன் தன்னை நம்பினானே அதுவே போதும். அந்த நொடி பட்டமாய் வானத்தில் பறப்பது போன்ற உணர்வு. அவன் மட்டும் தன் முன்னே இருந்தால் ஓடிச் சென்று அணைத்திருப்பேன் நினைக்க புன்னகையோடு தானே நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

வெளியேச் சென்றவனும் இரவு நேரம் போல் வீட்டுக்குள் நுழைய ஹாலில் அவனுக்காகவே காத்திருந்தாள் மகிழினி. ஆனால் வழக்கம் போல் அவளைக் கண்டும் காணாது போல் வேலைக்காரனிடம் உணவினை எடுத்து வைக்க கூறி மாடியேறினான்.

அவன் வரும் நேரம் பார்த்து தானும் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொள்ள, கீழே இறங்கி உணவருந்த வந்தவனோ அவளைக் கண்டு அமர்ந்தான்.

கேசவன் இருவருக்கும் சேர்ந்தே பரிமாறி முடிக்க. “நீங்க போங்க இனி நானே பார்த்துக்குறேன்...” மகிழினி கூறியதும், வேலைக்காரன் சென்று விட, புதிதாக பார்ப்பவனிடம் பேச தயங்குவது போல் உணவினை கூட அளந்தவண்ணமே இருந்தாள்.

அவள் பேச வாய் திறப்பதற்குள் அவனே முதலில், “உனக்கு தருணை எப்போ தெரியும்..?” என்க, ஒரு நொடி குழம்பினாள்,

“உன்னை தான் கேட்குறேன்...” அதட்டலாக வார்த்தைகளை தெளிக்க,

“ஏன்..? எதுக்கு..? என்னாச்சு..?”

“காரணம் சொன்னா தான் சொல்லுவையோ..?”

“இல்ல. அது வந்து ஒரு நாள் ஆபிஸ்க்கு வந்தாங்க. அப்போ தான் அவங்க உங்களோட சொந்தம்ன்னு தெரியும். அதுக்கு முன்னாடி பார்த்ததில்லை...”

“என்னைக்கு வந்தான்..?”

“த்ரீ வீக்ஸ் முன்னாடி...”

“அப்போ ஏன் என்கிட்டே சொல்லலை...”

“உங்களை பத்தி எதுவுமே பேசலையே..? அதான் சொல்லலை...”

“என்னை பத்தி பேசலைன்னாலும் அவன் வந்ததை நீ சொல்லிருக்கணும். சரி அன்னைக்கு வந்து அவன் என்ன பேசுனான்...” என்க, அவனின் மிரட்டல் பற்றி கூறினாள்.

“அதுக்கு அப்பறம் வேற எப்போ மீட் பண்ணுனீங்க..?” கேட்க, சுல்லென கோவமேறியது. அவனின் கேள்விகளோ தன்னை சந்தேகப்படுவது போன்று இருந்தது.

“சொல்லு...” கத்தவே,

“நேத்து அந்த ரிசப்ஷன்ல...”


“அப்போ என்ன பேசுனான் அதையும் சொல்லு..?” என்றதும், அப்போதும் தன் அழகினை குறிப்பிட்டு பேசியதை கூறவும், விஜயநேத்ரனுக்கு தருணின் எண்ணம் என்னவென்று இப்போது முழுமையாக புரிந்தது.

“ஏன் கேட்குறீங்க..?”

“நீ நேத்து நைட் அந்த தருணோட ஒரே ரூம்ல இருந்தே...” என்றதும், அதிர்ச்சியாகி எழுந்தே விட்டாள்.

“இல்ல. நோவே அதுக்கு சான்ஸ்சே இல்லை...” முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு கூற,

அதனைக் கண்டவனோ, “அப்போ நீ சேப்பா தான் இருந்தே..? ஆனா என் அம்மா பேரை எவ்வளோ கெடுக்கணும்மோ அவ்வளோ கெடுத்துட்டே வெற்றிகரமா. யார் என்ன கொடுத்தாலும் வாங்கி குடிச்சிடுவியா..? டேஸ்ட் கூடவா பார்க்க மாட்டே.?” என்க, அதன் பின் தான் எப்படி மது அருந்தினேன் என்ற விசியம் புரிய வந்தது.

“இன்னும் ரெண்டு.வாரத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் கோவில்ல வச்சி. அன்னைக்கு ஈவனிங் எல்லாருக்கும் தெரியப்படுத்துற மாதிரியும் வரவேற்பும் இருக்கு. உனக்கு தேவையான ஏற்பாட்டை நீயே பண்ணிக்கோ. மத்ததை நான் பார்த்துக்குறேன்...”

“கல்யாணாம்மா என்னால முடியாது. ஆல்ரெடி நான் சொல்லிருக்கேன்ல உங்களை எனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு...”

“நான் உன்கிட்ட விரும்பமான்னு கேட்கலை சரியா? நான் சொன்னதை கேட்கணும்னா கேளு. இல்லை அப்படின்னா எல்லாத்தையும் விட்டிட்டு, உன் வீட்டை பார்த்து ஓடிடு. இந்த தொழில், வீடு இதெல்லாம் என்ன பண்ணனும் எனக்கு தெரியும்...” இதுவே தன் முடிவென கூறி அங்கிருந்துச் சென்று விட, யோசனையாய் அமர்ந்தாள்.

‘எதுக்கு இவன் திடீருன்னு இப்படி முடிவெடுத்தான்? வெளியுலகம் என்ன தப்பா பேசிட்டு இருக்குறதுனால இந்த முடிவை எடுத்தானா..? நான் இன்னும் அத்தை இறந்தது எப்படி அப்படிங்குறதையே கண்டு பிடிக்கலையே..?’ புலம்ப வைத்துச் சென்றவனை நினைத்து திட்டித் தீர்த்தாள்.

ஆதிகேசவன், வரதன், விநாயகம் மூவரும் ஒன்றாக அமர்திருக்க, நேற்று மகிழினி அவமானப்பட்டதை பற்றி தான் பேசினார்.

“உன் மகன் மட்டும் குறுக்கே வாராம இருந்திருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும். இன்னைக்கு முழுக்க அந்த பொண்ணு ஆபிஸ் பக்கம் கூட எட்டி பார்க்கலை போல. நம்ம நினைச்ச மாதிரி அவமானத்துல வீட்டுக்குள்ளே கிடைக்கா...” என வரதனோ சிரிப்போடு கூற,

“ஆமா. நான் இன்னொன்னு கேள்விப்பட்டேன். கொஞ்சம் நாளுல நடக்கப் போற அந்த அவார்டு விழால இருந்து ஆர்.எஸ் கம்பெனி பெயர் பின்னாடி போச்சாம்..?” என விநாயகமும் கூறினார்.

“நம்ம ஏற்பாடு பண்ணுன இந்த சின்ன விசியதுக்கே இவ்வளோ நடக்குன்னா இன்னும் ஏதாவது பண்ணனும். முழுசா அந்த கம்பெனி பெயரையே அழிக்கணும். அப்போ தான் நம்ம ஸ்டெடியா நிக்க முடியும். எப்படியாவது அந்த நிறுவனத்துல பிரச்சனையை கிளப்பி விடணும். சத்தியவதனி கிட்ட இருந்த ஆளுமை, அதிகாரம், திமிர்த்தனம், வீராப்பு தொழில்யுக்தி எதுவுமே இந்த பொண்ணு கிட்ட முழுசா இல்லை. இது தான் நமக்கு பலமே..! வொர்க்கர்ஸ் பிரச்சனை, வருமானவரித்துறை பிரச்சனை, அந்த கம்பெனி சைட் பிரச்சனை இப்படி எல்லாத்தையும் இறக்கணும்...” கூற, ஆதிகேசவனின் உள்ளமோ அதனைக் கேட்டு குளிர்ந்தது.

இவர்கள் இருவரும் ஒரு மாங்காயை நோக்கி குறி வைத்தால் அவர் மட்டும் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை குறி வைத்தார். தொழிலால் தான் இழந்த கோடிகளை இதன் மூலம் திரும்ப பெற நினைத்தார்.

அலுவலகத்தில் இனி தனக்கு பிரச்சனை சூழப் போகிறது என்பதை அறியாது, சத்தியவதனி இறப்பிற்கு யார் காரணம் என்பதையும் இதுவரை அறிய முடியாது இருக்க இடையில் இப்போது விஜயநேத்ரனோடு திருமணம்.

இது மட்டும் தருணுக்கு தெரிந்தால் பின் என்னாகும்..?

🙏 நன்றி 🙏

கருத்துகளை பகிர
 
தீராக்காதல் : 19

மகிழினி, விஜயநேத்ரன் அறியாதவாறு அவர்களை பற்றி தருண் விசாரித்து வேண்டிய தகவல்கள் அனைத்தையும் சேகரித்தான்.

அதில் வேலை பார்க்கும் கேசவன் மூலம் சில விசியங்கள் தெரிய வந்தது.
கேசவன் ஒரு நாள், “சத்தியவதனி மேடம் இறந்ததை அப்படியே விடாம அவங்க மருமக அதான் இந்த மகிழினி விசாரிக்காங்க. ஒரு நாள் மொபைல்ல யார் கிட்டையோ பேசிக்கிட்டு இருந்தாங்க. அதுல ரிஜிஸ்டர் மேரேஜ் விஜய்க்கு தெரியாம வேலைக்காரி பொண்ணான மகிழினியை கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க அந்த சத்தியவதனி. ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டியே கிடையாது. மத்தவங்க பார்வைக்கு நல்லா விளையாட்டு காட்டிட்டு இருக்காங்க. அதுவும் போக தன்னோட அத்தை இறந்ததுக்கு யார் காரணம் அப்படிங்குறதை மகிழினி விசாரிச்சிட்டு இருக்காங்க. எலியும் பூனையுமா தான் இருக்காங்க...” என தனக்கு தெரிந்ததை பற்றி கூற, அதனை நினைத்துக் கொண்டிருந்தான் தருண்.

மகிழினி அன்று அலுவலகம் செல்ல அனைவருமே அவளை வித்தியாசமாக தான் கண்டனர்.

ஏன் இந்த பார்வை எனக் காரணம் தெரிந்தும் அவர்கள் ஒவ்வொரிடமும் நான் அப்படி பண்ணலைன்னு சொல்லிக்கொண்டா இருக்க முடியும்?
இருக்கையில் அமர்ந்து முதலில் தனக்கு வந்த மெயில்லை பார்க்க பின் அகவுண்ட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிந்தது.

தான் கொடுத்த இரண்டு கோடியை விஜயநேத்ரன் எடுத்து விட்டான் என்று.

“இவனுக்கு கார் வாங்க ரெண்டு கோடியா..? ஏன் அத்தை இப்படி இந்த கிராதகன் கிட்ட என்னை மாட்டி விட்டிட்டு போயிட்டீங்க? நீங்க கொடுத்த இந்த பொறுப்பை சமாளிச்சிடலாம். ஆனா உங்க மகனை நான் எப்படி ஹேண்டில் பண்ணுவேன் சொல்லுங்க? கல்யாணம் பண்ண போறானாம் என்னை ! சின்ன பிள்ளை மாதிரி அவனை நீ தான் பார்த்துக்கணும் சொல்லிட்டீங்க..? இருந்தாலும் மனசுல அடிக்கடி ஒரு எண்ணம் வருது அத்தை. நானும் உங்களை மாதிரியே விஜய்க்கு செல்லம் கொடுக்கேனோ? அக்கவுண்ட் பிளாக் பண்ணுனேன் மறுபடியும் ஓபன் பண்ணிட்டேன். ரெண்டு கோடி தர மாட்டேன்னு சொன்னேன் கொடுத்துட்டேன். இங்கே பாருங்க நீங்க எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தானே இருக்கீங்க ஒழுங்கா உதவி பண்ணுங்க சொல்லிட்டேன்...” செல்ல மிரட்டல் ஒன்றை மனதோடு அத்தையிடம் வைத்து விட்டு,வேலையை கவனித்தாள்.

மாலை நேரம் போல் அனுமதி வாங்கி ராமமூர்த்தி உள்ளே நுழைய, “என்னாச்சு..? எதுக்கு ஒரு மாதிரி பதட்டமா இருக்கீங்க..?” கேட்க,

“மேடம் ஸ்டீல் பேக்டரில வேலை பார்குறவங்க எல்லாரும் சம்பளத்தை ரெண்டு மூணு வருஷமா ஏத்திக் கொடுக்கலை இந்த வருஷமாவது ஏத்திக் கொடுங்கன்னு சொல்லி பிரச்சனை பண்ணுறாங்க...”

“எப்போலிருந்து பிரச்சனை பண்ணுறாங்க..?”

“இன்னைக்கு காலையில இருந்து யாருமே வேலை பார்க்கல...”

“மேனேஜர், சூப்பர்வைசர் எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்காங்க. யூனியன் லீடர்கிட்ட பேசி பார்க்க வேண்டியது தானே.?”

“எல்லாரும் பேசி பார்த்தாச்சு ஒரு நாள் வேலையே போச்சு மேடம்...”

“அப்போ நீங்க இதை காலையில என்கிட்டே வந்து சொல்லிருக்கணும். இப்போ சொல்லுறீங்க..?”

“சாரி மேடம் எனக்கே இன்பர்மேஷன் இப்போ தான் வந்தது...”

“நம்மளோட பேக்டரி சின்னது தானே பில்டிங்கான இரும்பு கம்பி மட்டும் தானா தயாரிக்கிறோம். சர்குலேசன் எப்படி..? மொத்தம் எத்தனை பேர் ஸ்டீல் பேக்டரில வொர்க் பண்ணுறாங்க...”

“அது எப்படியும் இரண்டாயிரம் பேருக்கு மேல வேலை பார்ப்பாங்க...”

“அப்போ உங்களுக்கே உறுதியா தெரியாது..?”

“இல்ல மேடம் அது...” தயங்க,

“நீங்க நாளைக்கு வொர்க்கர்ஸ்சோட டீடைல்ஸ் எல்லாமே என்கிட்டே மேனேஜரை கொண்டு வர சொல்லுங்க. சரியா.? நான் பிராசஸ் பண்ணுறேன்னு கால் பண்ணி வேலை பார்க்கிறவங்க கிட்ட சொல்லுங்க ...”

“ஓகே மேடம்...” எனக் கூறி வெளியேச் சென்று விட்டார் ராமமூர்த்தி.

வெளியே வந்து மேனேஜரை அழைத்து டீடைல்ஸ் கொண்டு வர சொன்னதாக மட்டும் கூறியவர் பின் பாதியை வேணுமென்றே கூறவில்லை.
இப்போதெல்லாம் வெகு தமாதமாகவே வீட்டுக்கு வந்தவாறு இருந்தான் விஜயநேத்ரன். அதுவும் முன்புக்கு இப்போது குடிப்பது நின்றது போல் இருக்க, கள்ளத்தனமாக எதுவும் செய்கிறானா? என்ற யோசனை தான் அவனை நினைக்கும் போதெல்லாம்!

அன்றும் அப்படியே அவன் வராது போக, ஹாலில் இருந்த சோஃபாவில் உண்டு முடித்து யோசனையோடு அமர்ந்திருந்தாள் மகிழினி.

‘ஒரு இடத்துல பிரச்சனை பண்ணுறாங்க சம்பளத்தை கூட்டிரலாம் சரி ஆனா இப்படி பண்ணுனா அதை பார்த்திட்டு பேப்பர் பேக்டரி, ஆபிஸ் எம்பிளாயி எல்லாருமே கேட்டா என்ன பண்ண..? நான் இந்த இடத்துல இருந்து யோசிக்கிறதை விட அத்தை இருந்தா இப்போ என்ன பண்ணிருப்பாங்க...?’ மனம் நினைக்க,

மனசாட்சியோ, “என்ன பண்ணிருப்பாங்க முதல மிரட்டி பார்த்திருப்பாங்க. அப்பறம் பேசி பார்த்திருப்பாங்க. ரெண்டுமே சரிபட்டு வரலைன்னா சொன்னதை செஞ்சிருப்பாங்க. வேலை பார்க்குறவங்க ரொம்ப முக்கியம். இதுனால நமக்கு நஷ்டமும் வரப் போறதில்லை. பேர், புகழ் இருந்தா லாபம் தன்னால வரப் போகுதுன்னு சொல்லுவாங்க...” பதில் கூறியது.

“ஆனா நான் உங்க பெயரையே கெடுத்துட்டேன்ல அத்தை. இப்போ எப்படி என்னால நீங்க சம்பாரிச்ச பெயரை திரும்ப எடுக்க முடியும். என்னை ட்ரிங்க்ஸ் பண்ண வச்சதே அவங்க மூணு பேர் தான் நல்லாவே தெரியும். என்ன பண்ணி நிரூபவிக்கலாம்...” யோசிக்க,

“அடியேய்..! நீ என்னத்த நினைச்சிக்கிட்டு இருக்கே இருக்குற பிரச்சனையை சரி பண்ணு...” மனம் குரலிட, மறுபடியும் யோசனைக்குள்ளே புகுந்தாள்.

அந்த நேரம் உள்ளே வந்த விஜயநேத்ரன் அவளைக் கண்டு அருகில் வந்தான்.

“ஹாய் டார்லிங் எனக்கு பணம் வேணும்..?” என்க,

முறைத்தவாறு பெருமூச்சு விட்டவளோ, ‘இருக்குற பிரச்சனையில இது வேறையா..?’ மனதிற்குள் நினைத்து,

“நீங்க ஆபிஸ் பக்கம் வந்து இந்த பொறுப்பை எடுத்து பார்க்க வேண்டியது தானே..?” அயர்வோடு கூறினாள்.

“அது ஒன்னும் நானா கஷ்டப்பட்டு உருவாக்கினது இல்லை. என் தாத்தா, அப்பா, அம்மா உருவாக்குனது...”

“அதுனால என்ன..?”

“விருப்பமில்லைன்னா விட்டிரு. என் அம்மாவே இந்த விசியத்துல கட்டயாப்படுத்துனது இல்லை. நம்மளோட மேரேஜ் அரேஜ்மென்ட்க்கு செக்ல சைன் பண்ணி பணம் கொடு...”

“எவ்வளோ வேணும்..?” எனக் கேட்டதிலே திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதை அவன் அறிந்து விட்டான். ஆனால் அவளோ உணரவில்லை.

“நீ சைன் பண்ணி கொடு. எவ்வளோ அப்படிங்குறதை நான் பார்த்துக்குறேன்...”

“சரி. இன்னைக்கு அந்த ரெண்டு கோடியை நீங்க வித்ட்ரா பண்ணிருக்கீங்க..? கார் வாங்கிட்டீங்களா...?”

“அது உனக்கு தேவையில்லை விசியம்...” கூறிவிட்டு விலகிச் சென்றவனோ பின் என்ன நினைத்தானோ மறுபடியும் அவளின் முன்னே வந்தான்.

“என்னாச்சு ஏதாவது பிரச்சனையா..?” எதார்த்தமாக கேட்டாலுமே, அவனின் இந்த சின்ன அக்கறையான வார்த்தை மகிழினியின் மனதினை வருடியது.

“ஆமா..!”

“என்ன பிரச்சனை..? நீ ட்ரிங்க்ஸ் பண்ணுனதை பார்த்து வெளியே யாரும் எதுவும் சொன்னாங்களா..?”

“அதெல்லாம் பிரச்சனையே இல்லை. இப்போ பேக்டரில...” என ஆரம்பித்தது தன் மனதில் இருந்த குழப்பம் வரை கூறினாள்.

“இவ்வளோ தானே வெரி சிம்பிள். பணம் நமக்கு முக்கியம் இல்லை அப்படி இருக்கும் போது சம்பளத்தை உயர்த்தி கொடுக்கலாம். வாங்குற சம்பளத்துல ஜஸ்ட் பைவ் பெர்சென்ட் மட்டும் ஏத்திக் கொடு. பத்தாதுன்னு சொல்ல வரும் போது எல்லாருக்கும் அவங்களோட பேமிலி மெம்பர்ஸ்சும் சேர்த்து இன்சுரன்ஸ் பண்ணி தரேன்னு சொல்லிரு. சடன்னா தங்களோட குடும்பத்துக்கு ஏதாவது ஆனா ஒரு செக்கியூர் இருக்கும் அப்படிங்குற நம்பிக்கையை கொடு. வேலை பார்க்குற எல்லாருக்கும் இதை பண்ணு. அப்பறம் பேக்டரில தேவையான வசதிகள் என்னென்ன வேணும்ன்னு நீயே நேர்ல போய் கேட்டு அதையும் செஞ்சிக் கொடு. இதை நீ பண்ணி அவங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தா வொர்கர்ஸ் ஸ்ட்ரைக் பிராபளம் என்னைக்கும் வராது. ரொம்ப சம்பாரிச்சா இன்கம்டாக்ஸ் கூட கொஞ்சம் கட்டுறதுக்கு இப்படி பண்ணிரலாம்...” என எளிதாக யோசிக்காது நொடியில் கூறிவிட்டு மாடியேறிச் சென்று விட, பிரம்பிப்பாய் உணர்ந்தாள்.

‘பாறைக்குள்ளே ஈரம் இருக்கும் என்பதை போல் மற்றவர்களை பற்றியும் இவன் நினைப்பானா..? தொழிலாளிகளுக்கு மட்டுமில்லாது அவர்களின் குடும்பத்துக்கு சேர்த்து அல்லவா செய்ய சொல்கிறான்? அதை விட சட்டென ஏதோ அனுபவம் இருப்பது போல் கூறுகிறானா அது எப்படி..?’
அலுவலகத்தை பற்றிய டென்ஷன் முடிந்து விட மனமோ அவனால் இலகுவானதை போல் உணர்ந்தது.

தன்னறையில் வந்து படுக்கையில் விழுந்தவனுக்கு அப்படியொரு அசைதியும் அயர்வும். திரும்பி படுக்க அன்னையின் புகைப்படம்.

“சீக்கிரமே எல்லாம் நல்லபடியா முடியும் நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு நல்ல மகனா இல்லாம போய் உங்களை இழந்துட்டேன். ஆனா நீங்க அமைச்சி கொடுத்த இந்த வாழ்க்கை என் அம்முவை நான் இழக்க மாட்டேன்ம்மா “ மனதோடு கூறிக் கொண்டான்.

அன்னையின் இறந்ததிற்கு பின் ஒரு காரணம் இருக்கிறது. அதனை கண்டுபிடிக்க வேண்டும். அன்னையின் ஆசையும் நிறைவேற்ற வேண்டும். இத்தனை நாட்களில் மகிழினி மட்டும் உடன் துணையாக இல்லாமல் இருந்திருந்தால் அனைத்தையும் எப்படி சமாளித்திருப்பார்.

மலர்ந்த நினைவாய் முதல் முறையாக அவளாக தன்னை அழைத்த அழைப்பும் நினைவுக்கு வந்தது.

“விஜய் அண்ணா..! அம்மா உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க... என்க, அண்ணா என்ற வார்த்தையில் எரிச்சல் கொண்டவனின் விழிகள் தன் சிறு வயது உடையை அவள் அணிந்திருப்பதைக் கண்டது.

“உன்னை யார் என் ட்ரெஸ் போட சொன்னது. கழட்டு முதல...” என மிரட்டி, அவளின் ரெட்டை ஜடையை பிடித்து இழுக்க, பயந்து நடுங்கி அழுகையோடு ஓடி விட்டாள்.

விஜயின் தாத்தா அவனுக்காக நகை தேர்ந்தெடுக்க நகைக்கடைக்காரரை வரக் கூற, அப்போது தோடு அணியாதிருந்த மகிழினிக்கு மறுபடியும் காது குத்தி கம்மல் போட நினைத்தனர்.

அவளோ அதனைக் கேட்டு பயத்தோடு வீடு முழுவதும் ஓட உள்ளே நுழைந்த விஜயனின் பின்னால் அவனை இறுகப் பிடித்து ஒழிந்து நிற்கவே பிடித்துக் கொடுத்தான்.

“தம்பி நல்லா இறுக்கமா பாப்பாவை பிடிச்சிக்கோ...” எனக் கூற, அவளுக்கு வலிக்கட்டும் என்ற நினைப்பில் அவனும் பிடிக்க, கம்மல் போட்டு விட ஒரே அழுகை. விஜயின் மனமோ குதூகலித்தது.

மெல்லிய கொலுசொலி ஓசைக் கேட்க மாடிப்படியில் ஏறி, இறங்கி விளையாடும் அவளின் செயல், தன் அன்னையின் மடியில் அமர்ந்து அவருக்கு எழுத சொல்லிக் கொடுக்கும் பாவனை இதெல்லாம் இப்போது கண்களுக்கு முன்னே நடப்பது போல் இருக்க இதழில் புன்னகை அரும்ப சிரித்தான்.

🙏 நன்றி 🙏

கருத்துகளை பகிர

https://pmtamilnovels.com/index.php?threads/கள்வனின்-தீராக்காதல்-kt-கருத்து-திரி.32/









 
தீராக்காதல் : 20

விஜயநேத்ரன் கூறியது போன்றே தொழிலாளிகளிடம் தானே சென்று நேரில் பேசி சம்பள உயர்வையும், நிறுவனம் சார்பான இன்சுரன்ஸ் இரண்டையும் கூறினாள்.

அதனைக் கேட்ட அடுத்தநொடியே தொழிலாளி மனம் நிறைவு பெற, வேலையை தொடர ஆரம்பித்தனர்.

கொழுந்து விட்டு எரியுமென நினைத்த நெருப்பு புஸ்பானமாகியதில், வரதன், விநாயம், ஆதிகேசவன் மூவருக்கும் ஆத்திரம் தான்.

அடுத்து வருமானத்துறையை ஏவி விட்டுப் பார்க்க, அவர்கள் அறியாத ஒன்று மகிழினிக்கு ஆடிட்டிங் வேலையும் நன்றாக தெரியும் என்று. வீடு முதற்கொண்டு பேக்டரி, அலுவலகம் வரை இரண்டு நாட்கள் சோதனை செய்தனர்.

இதில் சிக்கி விடுவார்கள் ஆர்.எஸ் பெயர் கெட்டு விடும் என்று எதிர்பார்த்திருக்க, மூணாவது நாள் அனைத்து செய்திகளிலும் வருமான வரித்துறையினர் அதரங்களில் இருந்து நற்பெயர் தான் வந்தது.

விஜயநேத்ரன் முற்றிலும் வேறொருவனாக மாறியிருந்தான். கள்வனாய் இருந்தவனோ இப்போது மகிழினிக்கு தீராக் காதலனாய் மாறியிருந்தான். அதன் முதற்படி தான் திருமண ஏற்பாடு. தருணின் நினைப்பு என்ன என்பதை அறிந்தே விரைவில் தங்களின் திருமணத்தை முறைப்படி நடத்த முடிவு செய்தான்.

இனி இவர்களை நம்பி பிரோஜனமில்லை என நினைத்தவனோ, தன்னோடு பள்ளியில் படித்த நண்பன் ஒருவன் கிரைம் இன்வஸ்டிகேஷன் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரிய அவனிடம் தனக்கு வந்த குறுஞ்செய்தி அன்னையின் காகிதம், அவரின் மொபைல், ஹெல்த்ரிப்போர்ட் மிஸ்சானது அனைத்தையும் கூறி விசாரனை செய்ய வைத்தான்.

பின் விநாயகம் மகன் வரவேற்ப்பு நடந்த ஹோட்டலுக்குச் சென்றவனோ, பணத்தினை பயன்படுத்தி மிரட்டி அன்று நடந்த அனைத்தையும் சிசிடிவி வழியாக மகிழினியின் நடவடிக்கையைக் கண்டான்.

தருண் வந்து பேசும் காட்சியும் இருக்க அதன் பின் தான் பெரியப்பா மற்றும் இன்னும் இருவரோடு பேசிக் கொண்டிருக்க, ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவன் வந்து ஜூஸ் கொடுக்க வாங்கினர்.

ஆதிகேசவன் ஒன்றை எடுத்து மகிழினியிடம் கொடுக்க அதனை வாங்கி அவர்களோடு சேர்ந்து அவளும் பருக, அதுவரை அங்கு சென்று தண்ணீர் கூட குடிக்கவில்லை.

அதன் பின்பும் அப்படி தான் இருந்தது. அப்படியென்றால் அதில் தான் கலந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

‘பேரை கெடுக்க மட்டமான யோசனை பண்ணிருக்காக...’ மனதில் நினைத்து கோசலை பேசிய நம்பரான வேந்தனின் கைபேசியிற்கு அழைத்து தகவல் சொல்லி வரக் கூறினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் வேந்தனும் வந்து தன் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரிக்க, ஜீஸ் கொடுத்தவனோ விநாயகம் குடிப்பதற்கு கேட்டார் அதனாலே எடுத்து வந்தேன்னென அடி தாங்காது கூறினான்.

“அப்போ மீடியா முன்னாடி அன்னைக்கு நடந்ததை சொல்லு அப்போ தான் உன்னை விடுவேன்...” வேந்தன் மிரட்ட,

செய்தியாளர்கள் அனைவரின் முன் விஜயநேத்ரன் சொன்னது போன்றே கூறினான்.

“ஆர்.எஸ் நிறுவனத்தோட எம்.டி மேடம் அவங்களுக்கு சரக்கு கொடுத்தது நான் தான். வேற ஒருத்தர் மது வேனும்ன்னு சொல்லி ஜீஸ் கலந்து கொடுக்க சொன்னாரு. அதை கொடுக்க போகும் போது தான் தெரியாம நான் கொடுத்துட்டேன். என்னை மன்னிச்சிருங்க மேடம்...” என மகிழினியிடம் மீடியா வழியாக மன்னிப்பு கேட்டான்.

இதனால் மகிழினிக்கு மட்டுமல்லாது அனைவருக்குமே தெரிய வேண்டுமென நினைத்தான் விஜயநேத்ரன்.

வேந்தனோ அவனிடம், “எதுக்கு நீ இவன் கிட்ட இப்படி சொல்ல சொன்னே..? ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணுன விநாயகம் தான் பண்ண சொன்னான்னு உண்மையை சொன்னா அவனையும் சேர்த்து ஜெயிலுக்கு தள்ளுவேன்ல...” ஆத்திரமாய் கேட்க,

“வேண்டாம். அப்பறம் அதை மனசுல வச்சிக்கிட்டு மகிழினிக்கு தான் பிரச்சனை கொடுப்பாங்க...” என்க,

விஜயனை ஆர்ச்சிரியமாக தான் கண்டான் வேந்தன்.

எப்படியாவது ஆர்.எஸ் நிறுவனத்தை கீழ் தள்ளவேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கும் நொடி, மகிழினியையும் அவளின் நிறுவனத்தையும் உயர்த்தி விடுவது போல் இந்த செய்தி வெளியாக, கடுகடுப்போடு இருந்தனர்.

இதில் நல்லவேலை தங்களின் பெயர் அடிபடவில்லை என்ற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது. இனி என்ன செய்ய..? திட்டம் தீட்ட ஆரம்பித்தனர் மூவரும்.

அலுவலகத்தில் அமர்ந்து வேலையில் இருந்த மகிழினி செய்தியில் தன்னை பற்றி வெளியான விசியத்தைக் கண்டாள். ஹோட்டலில் வேலை செய்பவன் கூற அருகில் தன் அண்ணன் நிற்கவே, உடனே தன் அண்ணனுக்கு அழைத்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..! ஏகப்பட்ட பிரச்சனை என்ன சுத்தி ஓடுது நல்ல வேலை எனக்கு கொஞ்சம் ரிலீப் ஆன மாதிரி இருக்கு நியூஸ் கேட்டு..”

“விஜயன் தான் இதெல்லாம் பண்ணினது நான் இல்லை...”

“என்ன சொல்லுற விஜய்யா..? உன் பக்கத்துல தான் இருக்காங்களா இப்போ..?”

“இல்லம்மா போயிட்டான். ஆனா அவன் கிட்ட இப்போ ரொம்ப மாற்றம் வந்தது மாதிரி இருக்கு. என்கிட்டே பிரெண்ட்லியா பேசுனான்...”

“உண்மையாவா..?”

“ஆமா மகிழ் எனக்கு வேலை இருக்கு நைட் பேசுறேன்...” எனக் கூறி அழைப்பினை துண்டித்து விட, இந்த ஒரு வாரத்தில் அவனிடம் இருந்த மாற்றம் உடன் இருந்த அவளும் அறிந்தே இருந்தாள்.

‘வீட்டுக்கு தமாதமாக வருகிறான். தன்னிடம் முன்பு போல் கோவப்படவில்லை.

பணம் வேணுமென்றாலும் என்ன தேவை எனக் கேட்டு வாங்குகிறான். எப்படி திடீரென இந்த மாற்றம்...’ தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

இரவில் அவனுக்காக காத்திருக்க பத்து மணி போல் அசதியோடு விஜயநேத்ரன் உள்ளே நுழைய நன்றி கூறினாள்.

“தேங்க்ஸ்...”

“எதுக்கு ?”

“இல்ல இன்னைக்கு அந்த நியூஸ். அதுக்கு நீங்க தானே காரணம்...”

“ஓ சரி...” எனக் கூறி அங்கிருந்துச் சென்று விட,
ஏமாற்ற உணர்வோடு நின்றாள் மகிழினி. அவனிடம் என்ன எதிர்பார்த்தோம் எதுக்கு இந்த ஏமாற்ற உணர்வு தெரியவில்லை. ஆனால் அவன் விலகிச் சென்றது காயம் கொண்டதை போல் கண்ணீரில் நின்றாள்.

நாட்கள் செல்ல இருள் சூழப் போகும் நேரம் போல் வீட்டுக்குச் செல்வதற்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மகிழினியின் முன்னால் வந்து தன் காரினை சடன் பிரேக்கிட்டு நிறுத்தினான் தருண்.

ஒரு நொடி பயந்து அதிர்ந்தவளோ திரும்பிக் காண வந்த வேகத்தோடு இறங்கியவனோ, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா...” கரம் தொட்டு உரிமையாய் அழைக்க,

“என்ன பண்ணுறீங்க விடுங்க..?”

இவனைக் கண்டாலே ஒரு அருவருப்பு இதில் தொட்டு பேசி அழைத்தால் ஏற்க முடியுமா என்ன..?
தன் பலம் கொண்டு உதறியவளோ, “இப்படி தான் பீகேவ் பண்ணுவீங்களா..?” எரிந்து விழ,

இருவருக்கும் திருமணம் என்ற செய்தியை கேசவன் மூலம் கேட்டதிலே உச்சத்தில் இருந்தவன் இப்போது இவள் உதாசீனப்படுத்தவும் சீற ஆரம்பித்தான்.

“ஓ நான் தொட்டா மட்டும் கசக்குது. அவன் தொட்டா இனிக்குமா..?”

“வார்த்தையை பார்த்து பேசுங்க...”

“என்னத்த பார்த்து பேசு. உன்னையெல்லாம் அன்னைக்கு ராத்திரியே என் கட்டுப்பாட்டுல கொண்டு வந்து அனுபவிச்சிருக்கணும். போனா போகுதுன்னு விட்டேன் பாரு என்னை சொல்லணும். இங்கே பாரு இப்போ சொல்லுறேன் நீ மட்டும் அந்த விஜயனை கல்யாணம் பண்ணுன அவன் உயிரோட இருக்க மாட்டேன். அப்பறம் அவன் அம்மாவை அனுப்பி வச்ச இடத்துக்கு அவனையும் அனுப்ப வேண்டியதா இருக்கும் பார்த்துக்கோ. நீ எப்போ என் பார்வையில விழுந்தையோ அப்பவே எனக்கு சொந்தம். சும்மா எல்லார் மாதிரியும் என் காதலை புரிய வச்சி உன்னை கல்யாணம் பண்ணனும் நினைச்சது தப்புன்னு புரிஞ்சிக்கிட்டேன். இன்னும் ஒரு வாரத்துல நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுற. அப்படி சொல்லலை அந்த விஜய்யை துடிக்க வச்சு கொல்லுவேன்...” மிரட்டலாய் கர்ஜித்து விட்டு காரில் ஏறிச் சென்றான்.

‘இது என்ன புது பிரச்சனை..?

தருண் பேசி சென்றது மழை பொலிந்து ஓய்ந்தது போல் இருந்தது. நானா விஜய்யை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன். அவனாக தானே இந்த திருமணத்தை ஏற்பாடு செய்கிறான். இதில் இவன் தன்னை...’ நினைக்கும் போது அவன் அம்மா மாதிரியே என்ற வார்த்தை செவியையும், மனதையும் தீண்டியது.

வேகமாய் மறுபடியும் அலுவலகத்திற்கு நுழைந்தவளோ அன்று தன் அண்ணன் கொடுத்த ஆடியோ கிளிப்பை போட்டுப் பார்த்தாள். அதில் இரண்டாவது கால் ஆதிகேசவனின் குரல் என்பதையும் இப்போது புரிந்துக் கொண்டாள்.

‘இதை ஏன் அன்னைக்கு அவர் கிட்ட நேர்ல பேசும் போது என்னால கண்டு பிடிக்க முடியல. அப்போ இப்போ தருண் சொன்ன மாதிரி இவங்க தான் அத்தை இறந்ததுக்கு காரணமா..?’ அதிர்வோடு திகைத்து போனவளோ உடனே தன் அண்ணனுக்கு அழைத்தாள்.

வேந்தனும் அழைப்பினை எடுத்ததும் நடந்த அனைத்தையும் கூறி, “அண்ணா..! எனக்கு இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு. முதல் முறையா தருணை பார்க்கும் போது உனக்கு எதுக்கு இதெல்லாம் ஒழுங்கா இந்த தொழிலை விட்டு போயிருன்னு மிரட்டுனான் சொன்னேன்ல. இப்போ கூட விஜய்யை அவங்க அம்மாவை அனுப்புன மாதிரி அனுப்பிருவேன்னு சொல்லி மிரட்டிட்டு போறான்...” என தவிப்போடு கூறினாள்.

“திடீருன்னு எதுக்காக வந்தான்.?”

“அது வந்து அண்ணா...” என்று அண்ணனிடமும் தருணின் மிரட்டலை பற்றி கூற,
ஆத்திரமோடுஅதனைக் கேட்டான்.

“சரிம்மா. ரகசியமா இருக்குற ஆளுங்க விட்டு முதல பாலோ பண்ண சொல்லுறேன். நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. விஜயன் கிட்ட இதை சொல்லிரு...”

“எதுக்கு அண்ணா..?”

“சொன்னதை மட்டும் செய்டா...”
என்றதும் அவளும் சரி என்றாள்.

வேந்தனின் மனமோ தருணை பற்றி மகிழினி விஜயநேத்ரனிடம் கூறினால் தன்னை விட அவன் தங்கையை கவனித்துக் கொள்வான் என்ற எண்ணம். எப்படி விஜய் மீது நம்பிக்கை வந்தது எல்லாம் தெரியாது ஆனால் நம்பினான்.

இரவு நேரம் போல் விஜயநேத்ரன் வீட்டுக்கு வந்ததுமே தருண் வந்து பேசி மிரட்டிச் சென்றதை கூறியவளோ, “கொஞ்சம் கவனமா இருங்க விஜய்...” தவிப்போடு கூற, தன்னை நினைத்து அவள் தவிக்கும் தவிப்பு குளிர் நீருக்குள் குதித்தது போன்று உணர்ந்தான்.

அமைதியைக் கண்டவளோ, “என்னாச்சு உங்களுக்கு..?” விழிகள் துடிக்க கேட்க,

அவளின் கரங்களை இதமாக பற்றியவனோ, “ஒன்னுமில்லை. என்னை மன்னிச்சிரு...” என்க,

“எதுக்கு..?”

“உன்னை நம்பாம புரிஞ்சிக்காம இதுநாள் வரை இருந்ததுக்கு. என் அம்மாவோட இறப்பை பத்தி நீ என்ன நினைக்கிற..? ஏன்னா நீ இதை விசாரிக்கிறேன்னு எனக்கு தெரியும். உனக்கு தெரிஞ்சதை சொல்லு..?” என்க,

அவனின் மனமோ மாலையில் அழைப்பு விடுத்த இன்வஸ்டிகேஷன் நண்பன் கூறியதை நினைத்து இப்போது இவளிடம் கேட்டதை நினைத்தது.

‘விசாரிக்கிறேன் என்ற பெயரில் இவனுக்கு எதுவும் ஆபத்து வந்து விட்டால்..?’ தருண் மிரட்டிச் சென்ற வார்த்தைகள் அவளுக்குள் ஆழமாக பதிந்திருந்தது.

‘ஆதிகேசவனும், அவர்களின் மகன்கள் சேர்ந்து தான் அத்தையின் இறப்பிற்கு காரணம் எனக் கூறி பின் இவன் சென்று பிரச்சனை செய்து அவர்கள் எதுவும் செய்து விட்டால்...’ நினைக்கும் நொடியே ஈரக்குலையே நடுங்கும் உணர்வு.

வேந்தனும் தானும் சேர்ந்து என்னென்ன முயற்சி மேற்கொண்டோம் இன்னும் முதல்படியே நிற்கிறோம் என்பதை மட்டும் கூறினாள்.

உண்மை தெரியாமல் எதுவும் முழுமையாக கூறவேண்டாமென நினைத்து விட்டாள்.

“சரி ஓகே. குட் நைட்...” கூறியவனோ மாடியேறிச் சென்று விட, நிம்மதியாய் மூச்சு விட்டாள் மகிழினி.

விஜயநேத்ரனுக்கு இவள் முழு உண்மையை கூறவில்லை என்பது அவளின் முக அசைவிலே நன்கு புரிந்தது.

மறுநாள் காலைப் பொழுதில் அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த மகிழினிக்கு அவளின் அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது.

முக்கியமான தகவல் ஒன்று கிடைத்திருக்க உடனே தான் கூறும் இடத்திற்கு விஜயையும் உடன் அழைத்துக் கொண்டு அவசரமாக வருமாறு கூற, குழம்பி போய் நின்றாள் மகிழினி.

🙏 நன்றி 🙏

கருத்துகளை பகிர




 
தீராக்காதல் : 21

வேந்தன் அழைப்பு விடுத்து விஜயையும் உடன் அழைத்து வருமாறு கூற சரியென கூறினாள். பின் விஜயநேத்ரன் அறைக்குச் சென்று அண்ணன் கூறியதை கூறி அழைத்தாள்.

“என்ன சொல்லுற நீ முக்கியமான தகவல் கிடைச்சிருக்கா..?” அவளோடு தானும் படிகளில் இறங்கியவாறுக் கேட்க,

“ஆமா அண்ணா தான் சொன்னேங்க. இந்த லொகேஷன் தான் போனா தான் தெரியும்...” என்க, அதனை வாங்கி பார்த்தவனோ தன் காரில் ஏறினான்.

இருவரும் ஏறிக் கொள்ள தன் நண்பனுக்கு அந்த முகவரியை அனுப்பிவிட்டு காரினை எடுத்து அந்த இடத்திற்கு விரைந்தான். விரைந்துச் செல்ல வேண்டுமென எண்ணம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கூறிய இடத்திற்கு வந்து நிற்க, அந்த இடத்தில் ஒரு தனி வீடு ஒன்று தான் இருந்தது.

“இந்த வீடு தானா..?” யோசனையாய் முகவரியை கண்டுக் கேட்க,

“ஆமா. இந்த அட்ரெஸ் தான். அதோ அது உள்ள இருக்குறது அண்ணன் பைக் தான், இங்கே தான் இருக்காங்க. வாங்க போகலாம்...” என்றதும், இறங்கி அவளையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் சென்றான்.

உள்ளேச் சென்றதும் அவர்களை வரவேற்றது சத்தியவதனி இறந்த போது பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தான் கயிறால் கட்டப்பட்ட நிலையில் இருந்தார்.

“வாங்க...” வேந்தன் வரவேற்க,

அந்த அறையை சுற்றிக் காண அது குடியிருக்கும் வீடு போன்று தான். ஆனால் கம்ப்யூட்டர், பிரிண்டர், இருக்க இன்னும் சிலர் அங்கே தங்கியிருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய் துணிமணிகள் இருக்க சிலரும் விரைப்பாய் நின்றிருந்தனர்.

“என்ன அண்ணா என்னாச்சு..?” என்க,

“யாரிவங்க...” இருவரும் மாறி மாறி வேந்தனிடம் கேட்டனர்,

“என்கிட்டே சொன்ன உண்மையை இப்போ இவங்க கிட்ட சொல்ல போறையா இல்லையா..?” கத்த, அந்த நாற்பது வயது மருத்துவரானவன் அடிவாங்கிய காயங்கள் தாங்க முடியாது பயத்தில் உண்மையை கூற ஆரம்பித்தான்.

“சத்தியவதனி மேடம் இறந்தது ஹார்ட்அட்டாக் இல்லை. ஸ்லோ பாயிஷன் சாப்பிட்டதுனால தான் இறந்தாங்க. அவங்களை நான் போஸ்மார்ட்டம் பண்ண செக் பண்ண போகும் போது யாரோ என்னோட சின்ன பொண்ணை கடத்தி வச்சி மிரட்டுனாங்க. ஒழுங்கா ரிப்போர்ட்ல ஹார்ட்அட்டாக் எழுதி கொடுத்திரு. இல்லைன்னு வை உன் பொண்ணை கொன்னுருவேன்னு. நான் சொன்னது மாதிரி பண்ணுனா உன் பொண்ணோட சேர்ந்து உனக்காக பணத்தையும் அனுப்பி விடுவேன்னு சொன்னாங்க. எனக்கும் அந்த நிமிஷம் வேற வழி தெரியல. அப்போ அவங்க ஏற்கனவே ஹார்ட்அட்டாக் வந்திருக்குன்னு சொல்லி சத்தியதவனி மேடம்மோட ரிப்போர்ட் எனக்கு அனுப்பி விட்டாங்க அதை பார்த்து தான் நானும் இப்போ ஹார்ட்அட்டாக்ன்னு எழுதி கொடுத்தேன். ஆனா உண்மையில அவங்க நைட் சாப்பிட்ட புட்ல பாயிஷன் இருந்திருக்கு. ஸ்லோ பாயிஷன் அப்படிங்குறதுனால அடுத்த ஏழு மணி நேரத்துல அவங்க இறந்துட்டாங்க. அன்னைக்கு நீங்க வந்து கேட்டதுக்கு அப்பறம் அந்த நம்பருக்கு கால் பண்ணி விசாரிக்க வந்துட்டாங்க என் வேலைக்கு பிரச்சனை வந்திராம சொன்னதும் நான் பார்த்துக்குறேன் சொன்னாங்க...” என தனக்கு தெரிந்ததை வேந்தனிடம் கூறியது போல் இவர்களிடமும் கூறினான்.

அதனைக் கேட்ட விஜயநேத்ரனோ கடுங்கோவத்தில் அவனை பிடித்து அடித்து துவம்சம் செய்தவாறு, “மருத்துவம் படிச்சவங்களை தெய்வமா பார்த்தா நீ இப்படி ஒரு காரியம் பண்ணிருக்கையே உன்னை...” கத்தியவாறு வெளுத்துக்கட்ட வேந்தனும், மகிழினியும் சேர்ந்து பிடித்து தடுத்து நிறுத்தினர்.

“விஜய் போதும் விடுங்க. இவரை அடிக்க போறதுனால அத்தை திரும்ப வரப் போறதில்லை. முதல்ல யார் காரணம் கண்டு பிடிக்கலாம். இங்கே பாரு அந்த ஆள் யாருன்னு உங்களுக்கு தெரியுமா..? நீ அவனோட முகத்தை பார்த்திருக்கையா...” மருத்துவரிடம் கேட்க,


அதுக்கு வேந்தனோ, “இல்ல இவனுக்கு அவங்க யாருன்னு தெரியல. கால்ல, வீடியோ கால்ல பேசியிருக்காங்க. முகத்தை பார்த்தது கிடையாது. அந்த நம்பருக்கு கால் பண்ணி பார்த்தா எடுக்க மாட்டிக்காங்க...” என்க,

“அப்போ அந்த நம்பரோட சிக்னல் எங்கெங்க இருக்குன்னு செக் பண்ணி பார்க்க வேண்டியது தானே..?” கூறியவாறு உள்ளே புதிதாக ஒருத்தன் ஆறடி உயரத்தில் நுழைந்தான்.


இவன் யாரு என்ற எண்ணத்தில் அனைவரும் காண, “வா ரவி...” வரவேற்றான் விஜயநேத்ரன்.


“இவன் என்னோட ஸ்கூல் பிரெண்டு ரவிக்குமார். அம்மவோட இறப்புல எனக்கும் சந்தேகம் இருந்தது. அதான் இவன் கிட்ட சொல்லி விசாரிக்கச் சொன்னேன். கிரைம் இன்வஸ்டிகேஷன் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்குறான்...” என்றதும், வேந்தனும், அவனும் கைகுலுக்கிக் கொண்டனர்.

“என்னால ட்ரேஸ் பண்ண முடியல. இவன் மட்டும் தான் ஒரே ஒரு தடவை அந்த நம்பருக்கு கால் பண்ணிருக்கான். அவன் பண்ணுன நம்பர் இவன் கிட்ட இல்லையாம். இந்த நம்பரை கூட மேசெஜ்ல தான் அனுப்பியிருக்காங்க...”

“அப்போ சத்தியவதனி மேடம் இறந்த அன்னைக்கு இந்த டாக்டர் பேசுன அந்த கால் ஹிஸ்டரி எடுத்து பாருங்க அதுல இருக்கும். அப்பறம் மேடம்மோட மொபைல் சிக்னல் கடைசியா எங்கே க்குளோஸ் ஆகிருக்கு பாருங்க. அதை விட இப்போ முக்கியமான விசியம் ஸ்லோ பாயிஷன் நைட் சாப்பிட்ட உணவுல அப்படின்னா அந்த உணவை சமைச்சது, பரிமாறுனது எல்லாம் யார் அவங்களை முதல விசாரிக்கணும்...”

“கேசவன் தான் பண்ணிருக்கணும்...” பட்டென கூறினாள் மகிழினி.

“அது யாரு..” ரவி கேட்க,

“வீட்டுல வேலை பார்க்குற சர்வெண்ட். ஒரு நாள் நான் அத்தை ரூமுக்கு போனதுக்கு அவன் என்னை தடுத்தான். மேடம் ரூமுக்கு யாரும் போக கூடாதுன்னு சொன்னான். எப்பவும் அவன் திமிராவே இருப்பான். ஆளுங்களை பார்த்தா ஒரு பேச்சு இல்லைன்னா ஒரு பேச்சா தான் இருக்கும் அவன் கிட்ட. மத்த வேலைக்காரங்க கிட்ட அவன் இல்லாத நேரம் அவனை பத்தி விசாரிக்கும் போது குறையா தான் சொல்லிட்டு இருந்தாக. பணத்தாசை பிடிச்சவன் சொன்னாங்க. ஒரு வேலை பணத்துக்காக இதை பண்ணிருக்கலாம்மோ...” மகிழினி அவனை பற்றி கூறி சந்தேகிக்க,

“ஆமா. இவ எப்போ எல்லாம் என்னோட அம்மா ரூமுக்கு போறாளோ அப்போ எல்லாம் என்கிட்ட வந்து இன்பார்ம் பண்ணுவான். ஆரம்பத்துல இவளை நான் நம்பாம இருக்கேன் அப்படிங்குற விசியம் கூட அவனுக்கு தெரியும்...” என விஜயநேத்ரன் கூற, அப்போது தான் அத்தையின் அறைக்குள் இருக்கும் போதெல்லாம் சரியான நேரத்துக்கு எப்படி வந்தான் என்பது புரிந்தது.

“அப்போ சீக்கிரம் வாங்க அவனுக்கு உண்மை தெரியிறதுக்குள்ள அவனை பிடிக்கலாம்...” என்றதும், நால்வரும் வேகமாய் அந்த இடத்தினை விட்டு வீட்டுக்கு விரைந்தனர்.

ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்ததுமே உள்ளே நுழைந்து கேசவனை தேட அவனோ அங்கில்லை. மற்ற வேலைக்காரர்களை அழைத்துக் கேட்க தங்களுக்குள் தெரியாது என்றே கூறினார். மகிழினி மாட்டிய சிசிடிவி வழியாக எங்குச் சென்றான் என்பதைக் காண, ஏதோ ஒரு அழைப்பு வர உடனே வீட்டினை விட்டு அவசரமாக வெளியேறுவது புரிந்தது.

“அப்படின்னா நம்ம பண்ணுற ஒவ்வொரு விசியத்தை நோட் பண்ணிட்டு தான் இருக்காங்களோ...” பயமோடு மகிழினி கேட்க, அனைவருக்குமே புரிந்தது.

விழிகள் கலங்க அப்படியே சோபாவில் அமர, வேந்தனும், ரவியும் சேர்ந்து மற்ற வேலைக்காரர்களிடம் சத்தியவதனி மேடம் இறந்த அன்று என்னவெல்லாம் நடந்தது யாராவது புதிதாக சந்திக்க வந்தார்களா என்பதை பற்றி விசாரித்தனர்.

கவலையோடு இடிந்துப் போய் அமர்ந்த மகிழினியைக் கண்ட விஜயநேத்ரன் அவளின் அருகில் அமர்ந்தான்.


“அம்மு...” மென்மையாய் அழைத்து அவளின் கரங்களை பற்ற,

“அத்தை கடைசியா என்கிட்டே தான் பேசுனாங்க. அப்போ அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. தனக்கு என்னவோ ஆகப் போகுதுன்னு. அவங்க குரல் கூட அப்போ வித்தியாசமா தான் இருந்தது. என்னால தான் அப்போ கண்டுபிடிக்க முடியாம போச்சு. நான் கொஞ்சம் சுதாரிச்சி அப்பவே வந்து பார்த்திருந்தா அத்தையை காப்பாத்திருக்கலாம் எல்லாம் என்னோட தப்பு தான்...” விழி நீர் சொட்ட அழுகையோடு கூறவே, கரங்களை அழுத்தப் பற்றினான்.

“அங்கே பாரு உன்னோட அத்தை எவ்வளோ கம்பீரமா சிரிச்ச முகமா இருக்காங்க. ஆனா நீ இப்படி இருந்தா நல்லாயிருக்கும்மா சொல்லு. தப்பு உன் மேல இல்லை என் மேல தான். நான் எதிர்பார்த்ததை அன்பை தர்றல அப்படிங்குற கோவத்துல தள்ளி வைக்க போய் தான் இன்னைக்கு என்னை ஒரேடியா விட்டு போயிட்டாங்க. அப்போ என்னோட தப்பு தானே..?”என்க, என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை இருவருக்கும்.

பின் வேந்தன், ரவி இருவரும் விசாரித்தது வரை அனைத்தையும் கேட்டுக் கொண்டு அவர்களின் முன்னே வந்து அமர்ந்தனர்.

“அந்த கருப்பு ஆடு பக்கவா பிளான் பண்ணி பண்ணிருக்கு...” ரவி கூற,

“பெரிய இடத்துல எல்லாம் காண்டக் வச்சி இந்த கேஸ்சை விசாரிக்க விடாம பண்ணிருக்கான்...” என வேந்தனும், தன் உயர் அதிகாரிகளை நினைத்துக் கொண்டு கூறினான்.

“ஆதிகேசவன் அவரோட பையங்க வேலையா இருக்குமோ. அவங்களுக்கு எல்லா இடத்திலையும் பவர் இருக்குல...” மகிழினி கூற,

“உறுதியா சொல்ல முடியாது. எப்பவும் கொலை பண்ணுனவன் நேரடியா எதிர்த்து இருக்க மாட்டேன். மறைமுகமா தான் இருப்பான் அப்படியில்லை அப்படின்னா பக்கத்துலே இருப்பான். இதுல எந்த ரகம் அவன்னு தெரியல. நீங்க ஆபிஸ்ல யார் மேலையாவது சந்தேகப்படுறீங்களா..?” ரவி மகிழினியிடம் கேட்க, அவளோ இல்லையென்று தான் கூறினாள்.

மறைமுகம் என்ற பின்னே விஜயநேத்ரனுக்கு ஒரு நாள் கார் ஒன்று இவளை இடிக்க வருவது போன்று நடந்தது நினைவுக்கு வந்து அதனை கூறினான்.

“ஆமா..! அப்போ கூட நான் தான் இவளை பிடிச்சி இழுத்தேன். அப்போ அந்த கார் இவளை குறி வச்சி தான் வந்ததா..?” வேந்தன் சந்தேகமாய் கேட்க,

“அப்போ தெரியல. ஆனா இப்போ இருக்குமோ யோசனையா இருக்கு...” என்றதும்,

“சரி சீக்கிரமே நாம்ம இதை கண்டுபிடிச்சிரலாம்...” உறுதியாய் இருவரும் கூற, சிறிது நம்பிக்கை தான் கொண்டாள் மகிழினி.

“அப்பறம் விஜயன் உனக்கு மெசேஜ் அனுப்புனாங்க சொன்னேல அந்த நம்பரை செக் பண்ணுனேன். அது உன் அம்மா பேர்ல தான் இருக்கு...”

“என் அம்மா பேருலையா..?” விஜயநேத்ரன் அதிர்ச்சியாய் கேட்க,

“ஆமா...”

“அந்த மெசேஜ் அனுப்பினவங்க யாருன்னு தெரியாது ஆனா அத்தைக்கு சம்மந்தப்பட்டவங்க தான் என்னால உறுதியா சொல்ல முடியும்...” மகிழனி கூற,

"இப்போ நமக்கு அது முக்கியம் இல்லை. குற்றவாளி கண்டு பிடிக்கலாம்..." விஜயநேத்ரன் வேகமோடு கூறினான்.

"இல்ல இது முக்கியம். நீ எப்படி சொல்லுற மகிழ்..?” வேந்தன் சந்தேகமாய் கேட்க,

“நான் அவங்க கிட்ட பேசியிருக்கேன். எனக்கும் இதே மாதிரி தான் மெசேஜ் அனுப்புனாங்க. அதுக்கு அப்பறம் தான் நான் அத்தையோட ஆபிஸ் வீடு...” என்று அந்த அழைப்பில் பேசுபவனை பற்றி அனைத்தையும் கூறினாள்.

“இதை ஏன் என்கிட்டே இத்தனை நாள்லா சொல்லலை...” வேந்தன் சீற்றமாய் கேட்க,

“ஏன்னா அவங்களுக்கே தெரியாது. ஐடியா மட்டும் தான் கொடுக்குறாங்க. நான் உன்கிட்ட சொல்லி அவங்க மறுபடியும் எனக்கு எதுவும் ஹெல்ப் பண்ண போயிட்டாங்கன்னா அதான். மெசேஜ் அனுப்புனதை விஜய் சீரியஸா எடுக்கலைன்னு சொன்னாங்க...” என்க, அனைவருமே யோசித்தனர்.

‘இந்த இருவர் யாராக இருக்கும். ஒருத்தனுக்கு சில விசியங்களை தெரிந்திருக்கிறது. இன்னொருத்தனோ ஏதோ தீராத பகையோடு தான் இதனை செய்திருக்கிறான்..’ என்பது புரிய யாரென தேடலில் இறங்கினர்.

🙏 நன்றி 🙏
கருத்துகளை பகிர


 
தீராக்காதல் : 22

வானும், மண்ணும் மேகம் கொள்ளும் இரவு நேரத்தில் அறையில் அமர்ந்து இன்று நடந்த அனைத்தையும் யோசித்தவாறே இருந்தாள் மகிழினி.

அதே நேரம் வெளியே விஜயநேத்ரன் காலையிலிருந்து உண்ணாது இரவு உணவு உண்ண டைனிங் டேபிளில் அருகே வரும் போது கேசவன் இல்லை என்பது புரிந்தது.

வீடு சுத்தம் செய்யும் பெண்ணும் சென்றிருக்க, நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் வீட்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தான்.

கால் வாய்த்த நொடியே அவனுக்கு நினைவுக்கு வந்தது கோசலை தான். இங்கே தானே தங்கள் அன்பின் உறவு நிலைபெற்றது.

“விஜய்..! வா..கண்ணா வா..! உனக்கு இப்போ என்ன ஸ்னாக்ஸ் செஞ்சி தர்ற..?”

“உருளைகிழங்கு சிப்ஸ் வேணும் கோசலைம்மா...”

“சரி பண்ணி தரேன். அதுக்கு முன்னாடி ட்ரெஸ் மாத்திட்டு வரலாமா வா...” என பாசமோடு அழைத்து கரங்களில் தூக்கிக் கொண்டுச் செல்வார்.

“விஜய் குட்டி இங்கே பார் ஸ்டார் தோசை சுட்டிருக்கேன். சாப்பிட்டு எப்படி இருக்கு சொல்லு பார்போம். ஆஆ காட்டு...”

“கோசலைம்மா கேசரி கட்டியா இருக்கு. தண்ணி ஊத்துங்க...” டேபிளை எடுத்துப் போட்டு அவர் செய்யும் சமையலை வேடிக்கை பார்த்து தண்ணீரை ஊற்றி பாயாசம் போல் ஆக்கிவிட, திட்டாது தன்னை தூக்கி கொஞ்சுவார்.

“இது என்ன சிகப்பு கலர்ல இருக்கு. இதுல என்ன மஞ்சள் கலர்ல இருக்கு...” என சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் காட்டி காட்டி கேட்க சளிக்காது ஆசிரியராய் பதில் சொல்லி, சமையலையும் கத்துக் கொடுத்தார்.

“கோசலையோட கைபக்குத்தை அடிச்சிக்க யாரும் இந்த உலகத்துலே இல்லை...” என தாத்தா கூறும் குரலில் இருக்கும் கூற்று எத்தகைய உண்மை என்பது போல் தினமும் புதிதாக எதையாவது செய்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை மதியம் வெயில் என்றும் பாராது தனக்காக தன் பள்ளிக்கு வந்து உணவினை ஊட்டி விட்டு, வாயை துடைத்து, கண்ணத்தில் முத்தம் வைக்கும் அந்த பாசம் இருக்கே..? என்ன ஒரு தித்திப்பு. செடிக்கு தண்ணீர் ஊற்ற அவரையும் நனைத்து தானும் நனைத்து பின் தனக்கு உடைமாற்றி தலை துவட்டும் அன்பு. அன்னையின் அன்பு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்ததே கோசலையம்மாவிடம் தான்.

காலையில் ஏழு மணிக்கு அலுவலகம் சென்றால் இரவு ஒன்பது மணிக்கு தான் சத்தியவதனி வர சந்தோஷமான தருணமோ, கவலையோ எதுவாக இருந்தாலும் கோசலையிடம் தான் கூறுவான். தினமும் இரவு வந்து தூங்கிய தன்னைக் கண்டு குட் நைட் கூறும் அன்னையை விட, தன்னை தூங்க வைக்கும் கோசலையே அவனுக்கு அதிக பிரியம்.

விஜய் வீட்டில் இருக்கும் நேரங்கள் எல்லாம் அவனின் பொழுதுகள் முழுவதும் கோசலையும் அவர் ஆட்சி செய்யும் சமையல்கட்டும் தான். வளர்ந்து வரும் பருவத்தில் மாற்றம் கொண்டு அவரிடமே கேட்டு சமையல் கத்துக் கொள்வான். பள்ளி பருவத்திலே பத்து பேருக்கு சமைக்க சொன்னாலே சமைக்கும் திறமையை கத்துக் கொடுத்தார் கோசலை. அதுவே அவனுக்கு வளர்ந்த பின்னும் பிடித்தமாகி விட சமையல் சார்ந்த படிப்பினை தான் தேர்ந்தெடுத்து படித்தான் முழுக்க முழுக்க கோசலையே அதுக்கு பொறுப்பு.

அடுப்பின் அருகேச் சென்றவனோ இரவு உணவு சமைக்க பூரிக்கு மாவினை பிசைய ஆரம்பித்தான். இந்த மாவினை தான் அவரின் மீது பூசி விட அவர் தன் உதட்டின் மேல மீசை வரைந்து விடுவார். இந்த சமையல் மேடையை தன் சாசன இருக்கையாய் தன்னை அமர வைத்து, புடைத்து ஊதி வரும் பூரியை பிளேட்டில் போட்டு தர, தான் உடனே அதனை நொறுக்க அதிலிருந்து வரும் சத்தம் கேட்டு இருவரும் சிரிப்பது இப்படி மகிழ்ச்சியான தருணங்கள் ஒவ்வொரு நொடியும்.

அதனை இப்போது நினைத்து சந்தோஷமாக நீண்ட நாட்களுக்கு பின் ஏனோ மனம் நிறைந்த உணர்வாய் ஒரு வழியாக பூரியும், வெஜிடேபிள் குருமாவும் வைத்து முடித்தான்.

மணியோ இரவு ஒன்பது செய்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து மகிழினி இருந்த அறையைக் காண, விளக்கோ எரிந்த வண்ணம் இருந்தது.

அந்த அறைக்குள் நுழைய தலையணையை மடியில் வைத்து தான் வந்தது கூட தெரியாது யோசிப்பவளை கண்டவனோ அருகில் வந்து நின்றான்.

“அம்மு..!” தன் அன்னையும், அவள் அன்னையும் சிறு வயதில் அவளை அழைக்கும் வார்த்தையை நினைவில் வைத்தே அழைத்தான்.

“ஹே அம்மு..!” தொட்ட பின்னே நிதானத்திற்கு வந்தவளோ சட்டென எழுந்து விலகி நின்றாள்.

“காலையில இருந்து ரெண்டு பேருமே சாப்பிடல...”

“ஓ..ஆமால. ஆனா கேசவன் இல்லையே. நாளைக்கு நான் ஆள் அரேஞ் பண்ணிறேன். இப்போ ஆன்லைன்ல ஆடர் பண்ணிக்கலாம்...” வேகமோடு கூறவே,

“பஸ்ட் ரிலாக்ஸ் பண்ணு. இன்னும் நீ அந்த நிகழ்வுல இருந்து வெளியே வா. தப்பு பண்ணுனவன் எவ்வளோ நாள் மறைஞ்சிருக்க முடியும் சொல்லு. அதை இப்போதைக்கு விட்டிட்டு சாப்பிடா வா...”

“சாப்பாடு..”

“நான் ஆடர் பண்ணிட்டேன். வந்திட்டு வா...” எனக் கூறி முன்னேச் சென்று விட அவளும் வர, ஒன்றாக அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.

ஒரு வாய் வைத்ததுமே தன் அன்னையின் நினைவு தான் மகிழினிக்கு. அவளின் விழிகள் மின்னுவதைக் கண்டவனோ ஏதாவது சொல்லு எதிர்பார்போடு இருக்க, “ஆன்லைன்ல வாங்குற சாப்பாடு கூட கேசவன் சமைக்கிறதை விட பெஸ்டா இருக்கு...” என கூறி உண்டுக் கொண்டிருந்தாள்.

“ஒரு செப்க்கு வந்த சோதனை தான் போ...” மனதில் நினைத்து மௌனமோடு உண்ண,

“எந்த ஆன்லைன்ல வாங்குனீங்க. ரொம்ப நல்லாயிருக்கு அடிக்கடி இதே மாதிரி வாங்குவோம் சரியா..?”

“உனக்கு சமைக்க தெரியுமா..?” திடீரென முறைப்போடு கேட்க, விழி விரிய அவனைக் கண்டாள்.

“என்ன தெரியுமா தெரியாதா..?”

“தெரியாது...” எனக் கூறி தலையை ஆட்ட, தன் தலையிலே கை வைத்து விட்டான்.

'ஆஹா இப்போ மட்டும் நான் தான் இதை செஞ்சேன்னு சொன்னேன்னு வச்சிக்கோ அவ்வளோ தான் தினமும் நம்மளையே பண்ண வச்சிருவா போலையே..?' உள்மனம் நினைக்க,

“அடேய்..! இவ உன்னோட வருங்கால பொண்டாட்டி இவளுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ணி தர போற..?” மனசாட்சி கேட்டது.

'என்னது வருங்கால பொண்டாட்டியா..? இப்போவவே அவ என்னோட பொண்டாட்டி தான்..'

“பொண்டாட்டின்னா ஏன் அவளை நம்பாம இருந்தே இத்தனை நாள். இவ யாருன்னு தெரியாம இருந்த போது நம்பலை கோசலை மகள்ன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் நம்பாதது ஏன்..? ”

“அது அப்படி இல்லை...” என்க,

“போதும் போதும் உங்களுக்குள்ள பேசிக்கிட்டது. நீங்க சமைச்ச சாப்பாடு ரொம்ப அருமையா இருந்தது. அப்படியே என் அம்மா கை பக்குவம். ஒரு வாய் வைக்கும் போதே புரிஞ்சிக்கிட்டேன். தேங்க்ஸ்...” கூறியவளோ உண்டு முடித்து பிளேட்டோடு சமையலறைச் செல்ல, கால்களோ தரையில் இல்லை.

அவளிடமிருந்து பாராட்டு இதற்கு முன் இதில் எத்தனையோ மெடல் வாங்கினாலும் வராத சந்தோஷம் இவள் அதரங்களில் இருந்து வந்தது மிதப்பது போன்ற உணர்வு.

காரிருள் நீக்க கதிரவன் பூக்க, மலர்ந்த காலைப் பொழுதில் தேனீர் சுவையை போல் இனிய எண்ணங்களை நினைத்துக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான் விஜயநேத்ரன்.

அப்போது வேகவேகமாக அலுவலகம் செல்ல வாசலை அடைந்த மகிழினியைக் கண்டவனோ, “அம்மு..! நில்லு...” என்க, சட்டென அழைப்பினை உணர்ந்து திரும்பினாள்.

அருகில் வந்தவனோ, “ஆபிஸ் தானே போறே..! வா நானே ட்ராப் பண்ணுறேன்...” என்க,

“என்ன எதுக்கு அம்முன்னு கூப்பிடுறீங்க..? எல்லார் போல மகிழினி கூப்பிடுங்க...” வளர்ந்த பின் அனைவரும் அவளை அப்படியே அழைக்க அந்த நினைப்பில் கூறினாள்.

“எனக்கு அம்மு தான் பிடிச்சிருக்கு கூப்பிடுறேன்...”

“எனக்கு பிடிக்கலை..?” உர்ரென முகத்தை வைத்துக் கொண்டு திரும்ப அப்படியே தன்னோடு அணைத்துக் கொள்ள கரங்களோ பரபரபத்தது.

'அடேய் கொஞ்சம் அடங்குடா..' தனக்குத் தானே கூறிக் கொண்டு காரினை எடுத்தவனோ அவளையும் அழைத்துக் கொண்டுச் சென்றான்.

அலுவகத்தில் வந்து இறக்கி விட்டவனோ, ”எங்கையும் தனியா போகாதே..? ஏதாவது எமெர்ஜென்சினா கால் பண்ணு...” கூறிய பின்னும் அவளின் கைபேசி என் தன்னிடம் இல்லை என்பது புரிந்தது.

சட்டென அவளின் கையிலிருந்த கைபேசியை பறித்தவனோ தன் நம்பரை அழுத்தி அழைக்க அதன் திரையிலோ ஆங்கிரிமேன் என்று வரவே, அவளைக் கண்டு முறைத்தான்.

“இப்போ எதுக்கு என்னை பார்த்து முறைக்கிறான்..? மறுபடியும் வேதாளம் ஏறப் போறானா என்ன..?” நினைக்க, கைபேசியை திரும்பி அவளிடம் காட்டினான்.

“அடியாத்தி..! போச்சு செத்தேன்...” பதறியவளோ பட்டென பிடிங்கி அங்கிருந்து ஓடி விட, இதழில் புன்னகை தவழ சிரிப்போடு அவள் செல்வதைக் கண்டான்.

பின் தன் நண்பனைச் சென்று சந்தித்து கேசவன் பற்றி விசாரிக்க சில நாட்களில் கண்டு பிடித்து விடுவதாக கூறினான். பின் வெளியே வந்து யாருக்குகோ அழைத்து எதையோ கூறினான்.

இரண்டு கோடியை எடுத்திற்க்கான வேலையை சிறிது நேரம் பார்த்துவிட்டு மாலை நேரம் போல் மகிழினியின் வீட்டுக்கு கோசலையை சந்திக்கச் சென்றான்.

அதே மாலை நேரம் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மகிழினியின் கைபேசி ஓசை எழுப்பியது. புதிதாக ஒரு நம்பர் எடுத்து, ‘ஹலோ..’ என்றாள்.

“நான் தான் பேசுறேன். என்னாச்சு விசாரிச்சியா யார் காரணம் கண்டு பிடிச்சிட்டையா..?” கேட்க,

“இன்னும் இல்லை. ஆனா ஒரு ஆதாரம் கிடைச்சிருக்கு. அத்தைக்கு யாரோ விஷவைக்க போய் தான் இறந்திருக்காக...”

“நான் தான் உன்கிட்ட முன்னவே வீட்டுல வேலை பார்க்குறவங்களை கவனி சொன்னேன்ல. சரி விஜயன் கிட்ட சொன்னையா அவனுக்கு இது தெரியுமா..?”

“தெரியும்...”

“சரி அப்போ இனிமே நீயும், அவனும் கவனமா இருங்க. நிச்சியம் இந்த நேரம் தப்பு பண்ணுனவன் உசாராகிருப்பான். உங்களை விசாரிக்க விடமா டார்கெட் பண்ணுவான். உனக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்குதா..?”

“ஆதிகேசவன் அவரோட பையன் மேல சந்தேகம் இருக்கு...”

“அவங்களுக்கு மிரட்டுற தைரியம் இருக்குற அளவுக்கு கொல்லை நினைக்கிற தைரியம் இல்லை. அவனுங்க உறுதியா காரணமா இருக்க மாட்டாங்க. ஆனா தொழில் சம்மந்தப்பட்ட யாரோ தான். ஏன்னா உங்க அத்தைக்கு மத்தபடி வெளியே எந்த பிரச்சனையும் கிடையாது...”

“நான் உங்களை பார்க்கலாம்மா. என் அத்தையோட பிரெண்டா நீங்க..?”

“இல்லை. சீக்கிரம் உங்க எல்லாரையும் நான் மீட் பண்ணுறேன்...” எனக் கூறி நொடியில் அழைப்பினை துண்டித்து விட, யாரென முகம் தெரியாதவனிடம் பேசிய பின் அப்படியொரு நிம்மதியை உணர்ந்தாள்.

‘தொழில் சம்மந்தமா எந்த பிரச்சனையா இருக்கும்..? வரதன், விநாயகம், ஆதிகேசவன் இவர்கள் இல்லையா..?’ நெற்றியில் கைவைத்து யோசிக்க ஆரம்பித்தாள்.



🙏 நன்றி 🙏

கருத்துகளை பகிர

 
கள்வன் : 23

வேந்தனுக்கு கொடுத்த குவாட்டர்ஸ்சில் மகிழினியின் வீட்டின் முன் தன் காரினை நிறுத்தினான் விஜயநேத்ரன். உள்ளே செல்வதற்கு அப்படியொரு தயக்கம், தடுமாற்றம்.

‘அன்று வீடு வரை வந்தவர்களை காயப்படுத்தி அனுப்பி விட்டது அவர்களை எவ்வாறு பாதித்திருக்கும்.? அதுவும் கோசலையம்மாவின் மனதினையே நொறுக்கி விட்டோமே.! அவரின் அன்பையே தவறாக்கி விட்டோம்மே..!’ சஞ்சலத்தோடு காரினை விட்டு இறங்கி நிற்க,

அப்போது வேந்தனின் செல்வச்சிறுமி கையில் பந்தோடு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர, தன் வீட்டு வாசலில் ஒருவர் நிற்பதை பார்த்ததுமே பயத்தோடு வீட்டுக்குள்ளே ஓடி விட்டாள்.

“எதுக்கு இந்த பாப்பா இப்படி ஓடுது..?” யோசனையாய் தயங்கிக் கொண்டு வந்தவனோ படியின் அருகே நிற்க, தன் பாட்டியின் கரம் பற்றி அந்த சின்னப்பெண் அழைத்து வந்தாள்.

“என்ன அம்மு..! யாருடா..?” கேட்டவாறு அவரும் வர, வாசலில் நின்ற விஜய்யை பார்த்தவருக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

“விஜய் கண்ணா..! வா..வா...” இன்னும் அதே அன்பான அழைப்பு அவரிடம். அவனின் அருகில் வந்து கரம் பற்றி உள்ளே அழைத்து வந்தார்.

சத்தம் கேட்டு உத்ராவும் வர, “வாங்க...” மென்மையாய் கூறி வரவேற்க,
“வேந்தனோடு பொண்டாட்டி என் மருமக பேர் உத்ரா...” என்க, அவரின் அந்த சகஜமான பேச்சு விஜயநேத்ரனை நிலை குலைய வைத்தது.

“நான் போய் காஃபி போட்டு கொண்டு வரேன்...” கூறிய உத்ரா சென்று விட, விஜய் அமர வைத்து அவரும் அமர்ந்து அவனையே தான் கண்டார்.

“என்னப்பா இப்படி கருத்து இளைச்சி போயிட்டே..?” தாயுள்ளத்தோடு அவனின் கன்னம் தொட்டுக் கேட்க,

கோசலையின் கரங்களை பற்றி தன் கரங்களுக்கு அடக்கியவனோ, “கோசலைம்மா..! என்னை மன்னிச்சிருங்க. அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்தப்பா நான் அப்படி பேசிருக்க கூடாது. எனக்கு உங்களை நல்லாவே நியாபகம் இருந்தது. ஆனா அப்போ...” கூற வர,

“அதெல்லாம் எதுக்கு விடுப்பா. அம்மா இறந்ததை நினைச்சி வருத்தப்படாதே, நான் இருக்கேன் சரியா. திடீருன்னு ஹார்ட்அட்டாக் வரும்ன்னு யாரும் எதிர்ப்பார்க்கல விதி இப்படியெல்லாம் நடந்து போச்சு...” வேதனையோடு பெருமூச்சினை விட்டு விஜயை வருடிக் கொடுத்தார்.

உத்ரா வந்து காஃபி கொடுக்க, அதனை வாங்கி பருகியவனோ மனதோடு பேசிக் கொண்டான்.

“நான் அன்னைக்கு உங்களை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதுக்கு காரணம் இருக்கிற பிரச்சினையில நீங்க தலையிட்டு எந்த பாதிப்பும் வந்திரக் கூடாதுன்னு தான்...” அருந்தியவாறு தனக்குள்ளே கூறினான்.

சில வினாடிச் சென்று, “கோசலையம்மா..! நான் கொஞ்சம் உங்க கிட்ட பேசணும்...” தயங்க,

“சொல்லுப்பா..?”

“அம்மா ஆசைப்பட்ட மாதிரியே அம்முவை நான் முறைப்படி கல்யாணம் பண்ணனும் நினைக்கிறேன். அதுவும் எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் பண்ணனும். இந்த உலகத்துல எல்லாரோட பார்வையில என் மனைவி அப்படிங்குற அங்கீகாரத்தோட இருக்கணும். அதான் நானே ஒரு தேதியை முடிவு பண்ணி இருக்கேன். நீங்க சம்மதம் சொல்லுவீங்களா..?”

“என்னப்பா நீ இப்படி கேட்குற.? அந்த பேப்பர்ல என்னைக்கு கையெழுத்து போட்டீங்களோ அப்பவே என் பொண்ணுக்கு நீ தான் புருஷன்னு முடிவாகிருச்சி. நான் கூட எங்க நீங்க ரெண்டு பேரும் இப்படியே இருந்திருவீங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். என் பொண்ணு கழுத்துல உன் கையால தாலி ஏறுனா கோடி புண்ணியம்ப்பா..”

“நான் அவளுக்கு தகுதியானவன்னா தெரியல. ஆனா இப்போ சொல்லுறேன் இனி உங்க பொண்ணை என் அம்முவை நான் நல்லபடியா பார்த்துப்பேன். நீங்க, என் அம்மா எதிர்பார்த்த மாதிரி நாங்க இருப்போம்...”

“சந்தோஷம்ப்பா...”

“அப்பறம் நாளைக்கு ஒன்பது மணிக்கு நான் வரேன். எல்லாரும் கிளம்பி ரெடியா இருங்க. ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் சரியா. அக்கா நீங்களும் தான்..?”

“சரிங்க தம்பி நீங்க சொன்ன மாதிரியே கிளம்பிரலாம். எந்த இடமுன்னு சொன்ன அதுக்கு தகுந்த மாதிரி கிளம்புவோம்...” உரிமையோடு உத்ராவும் பேச ஆரம்பிக்க, அக்கா, தம்பி உறவு அவனுக்குள் தித்திப்பைக் கொடுத்தது.

“அது சர்பிரைஸ் சொல்ல மாட்டேன். மச்சான் கிட்ட நான் பேசிக்கிறேன். எல்லாரும் தயாரா சும்மா ஜம்ன்னு கிளம்பி இருந்தா போதும்...” என்க, சரியென ஒத்துக் கொண்டனர்.

நேரம் செல்வது கூட தெரியாது வேந்தனின் நான்கு வயது மகளோடு விளையாடி தன் மடியில் அமர்த்திக் கொண்டு கதைகள் பேச, கோசலையின் உள்ளமோ நிறைந்துப் போனது.

மாலை சிற்றுண்டி நீண்ட வருடங்கள் பின் கோசலையின் கரங்களால் செய்து கொடுத்ததை உண்ண, வார்த்தைகளால் அதனின் சுவையை கூற முடியுமா என்ன..? தனக்கே குருவானவரே..!

இரவு உணவு இருவருக்கும் சமைத்து பேக் செய்துக் கொடுக்க, அதே நேரம் மகிழினியிடம் வேலை முடிந்ததென குறுஞ்செய்தி வர வாங்கிக் கொண்டு கூறிவிட்டு கிளம்பினான்.

தங்களின் அலுவலகத்தின் முன் காரினை நிறுத்திய விஜயநேத்ரன் மகிழினிக்கு அழைத்து வந்து விட்டதாக கூற, அவளும் வெளியே வந்தாள்.

காலையில் சென்ற தோற்றம் தான். ஆனால் மேனியிலும், முகத்திலும் அப்படியொரு அயர்வு. எவ்வளோ கஷ்டமான எந்நொடியும் யோசனையோடு பிரச்சனையிலே இருக்கும் வேலையல்லவா..!

காரில் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தவளோ கழுத்தினை வலியோடு தடவ, வழக்கத்திற்கு மாறாக மென்மையாய் காரினை செலுத்தினான். முதல் முறையாக அவனின் கைகளுக்கு அகப்பட்ட ஸ்டேரிங் அழாமல் இருப்பது அன்று தான் என்றே கூறலாம்.

வீட்டுக்குள் வந்து நின்றதும் இறங்க முயன்றவளின் கைபேசியை பறித்தவன் அவனின் நம்பரை சேவ் செய்ததை எடுத்து சோல்மெட் என்ற பெயரில் பதிவு செய்தான்.

அவளிடம் கொடுக்க அதனை வாங்கிப் பார்த்தவளோ அவனை ஒரு முறை ஆழமாக பார்த்துவிட்டு உள்ளேச் சென்றாள். தன் அறைக்குள் சென்று முடங்க அரை மணி நேரம் கழித்து இரவு உணவிற்கு வெளியே வந்தாள். டைனிங் டேபிளில் விஜயனோடு சேர்ந்து அவளின் வீட்டு கேரியர் காத்துக் கொண்டிருக்க, ஆர்ச்சிரியமோடு வந்து அமர்ந்தாள்.

“எங்க வீட்டுக்கு போனீங்களா..?”

“இல்லையே..! அப்பறம் இது எப்படி..?”

“உன் அண்ணன் யார் கிட்டையோ கொடுத்து விட்டிருக்காங்க...” என்றதும், வேகமாய் ஆவலோடு அதனை திறக்க, முழுவதுமே அவனுக்கு பிடித்த உணவு தான்.

“இதெல்லாம் உங்களுக்கு சமைச்சது...”

“ஆமா. உனக்கும் தான்...” இதழ் புன்னகையோடு கூறியவனோ அதனை எடுத்து அவனே சேர்த்து பரிமாற உண்டு முடித்தனர். விஜயநேத்ரனின் செய்கை, இந்த மென்மையான குணம் அனைத்துமே மெல்ல மகிழினியை ஈர்க்க ஆரம்பித்தது.

“சரி நாளைக்கு உனக்கு எந்த வேலையா இருந்தாலும் கேன்சல் பண்ணு...”

“ஏன்..?”

“எல்லாரும் ஒரு இடத்துக்கு போறோம்...”

“எல்லாரும்ன்னா...”

“எல்லாரும் தான். காலையில எட்டு மணிக்கு கிளம்பி இரு. அப்பறம் உன்னோட வீட்டுக்கு போய்ட்டு அங்கே ஒன்பது மணிக்கு போக சரியா இருக்கும்...” எனக் கூறிவிட்டு எழுந்துச் சென்றான்.

“எங்க போகணும் சொல்லுறான். என்னோட வீட்டுக்கு போனானா என்ன..?” யோசித்தவளோ அறைக்குள் வந்த பின் அன்னையை அழைத்துக் கேட்க, அவரோ மனநிறைவாய் விஜய் பற்றியே பேசினார். அவனின் செய்கையால் மகிழினியின் உள்ளத்திலோ நேச மலர் மொட்டவிழ ஆரம்பித்தது.

மறுநாள் அதிகாலையிலே சாப்ட்சில்க் சேரி ஒன்றை அவளின் கரங்களில் கொடுத்தவனோ கட்டிக் கொண்டு வரக் கூற, சந்தேகமாய் வாங்கிக் கொண்டாள்.

“என்ன இவன் சேரி கட்டிட்டு வர சொல்லுறான். பேமிலி மெம்பர்ஸ்சை கூப்பிட்டிருக்கான். ஒரு வேலை இன்னைக்கு என்னை கல்யாணம் பண்ண போறானோ..?” யோசனையாய் கூறியது போன்றே அதனை உடுத்தி கிளம்பினாள்.

அன்று அவளை அவளே கண்ணாடியின் பார்க்கும் போது கூடுதல் அழகானவளாய் மாறியது போன்ற எண்ணம். முகமோ பிரகாசமாக ஜொலிக்க, வெளியே விஜய் அழைக்கும் குரலில் நேரமானதை உணர்ந்தாள்.

“இதோ வரேன்...” எனக் கூறி தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டவளோ பின் அறையை விட்டு வெளியேறி வர கோட்சூட் உடையோடு காத்திருந்தான்.

அன்று முதல் முறையாக புடவையில் கண்ட நொடி எப்படி இருந்தாலோ அதே விட பேரழகு. கரங்களோ கொஞ்சத் துடிக்க கட்டுபடுத்தி பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவாறு இருந்தான்.

“போகலாம்...” என்றதும் அவளை அழைத்துக் கொண்டு காரிலிருந்து கிளம்பியவனோ நேராக மகிழியின் வீட்டின் முன்னே நிறுத்தினான்.
அங்கே வாசலிலே அனைவரும் காத்திருந்து இன்பமாய் வரவேற்றனர். ஆனால் அவனோ நேரமில்லை வாங்க எனக் கூறி காரினை கிளப்பினான்.
“டேய் எங்கடா போறோம்..?” வேந்தன் தன் மகளை மடியில் வைத்து முன்னே அமர்ந்திருந்தவாறுக் கேட்க,

“அரை மணி நேரம் தான் எங்கேன்னு உங்களுக்கே தெரிஞ்சிரும்...” கூறிக் கொண்டு குதூகலமாக காரினை செலுத்தினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் காரினை பார்க் செய்ய இறங்கிய அனைவரின் விழிகளிலும் ஆர்ச்சிரியம் தான். கோசலையோ விஜய்யைக் காண, அவரின் அருகில் வந்து தோளின் மீது கைபோட்டு அவரோடு சேர்ந்து முன்னேக் கண்டான்.

“இது என் கோசலைம்மாவோட நான் என்னைக்கு இருக்குறதுக்காக. எப்படி இருக்கும்மா..?” கண் சிமிட்டி ஆனந்தமாய் கேட்க, அவனின் கன்னத்தை தடவிக் கொடுக்க அதிலே அவனுக்கான பதில் கிடைத்தது.

முன்னே மிகப்பெரிய எழுத்துக்களால், ‘கோசலை உணகவம்...’ என்ற பெயரும் அதற்கு கீழே சிறிய எழுத்தால் மக்களை கவரும் வார்த்தைகளும், உணவின் புகைப்படமும்.

“வாங்கம்மா ரிப்பன் கட் பண்ணுங்க. இனி இது உங்களோட ராஜ்ஜியம். இந்த மிகப்பெரிய ஹோட்டலையும் என்னையும் சேர்த்து ரன் பண்ண போறது நீங்க தான்...” எனக் கூறி அவரை அழைத்து முன்னே வந்து ரிப்பனை கட் பண்ண வைத்தான்.
கோசலையின் கரங்களாலே ‘கோசலை உணவகத்தை’ திறக்க வைத்தவன் உள்ளே அழைத்துச் செல்ல, அலங்காரம் செய்த மலர்க் கோலத்தின் நடுவில் குத்து விளக்கு ஒன்று இருந்தது.

வேலைக்கு கேட்ரிங் படித்த பலரினை சேர்த்திருக்க அனைவருமே இருந்தனர். பிரம்பிப்பாய் அந்த ஹோட்டலைக் காண, ப்ரைவசியாக, பேமிலியாக உணவருந்த நினைப்பவர்களை கூட தனித்தனி ஏற்பாடு செய்திருந்தனர்.

மெழுவர்த்தியை கொடுத்து விளக்கினை ஏற்றக் கூற, “இல்ல வேண்டாப்பா இருக்கட்டும். நீ ஏத்து...” விலக முயற்சிக்க, அவனோ பிடிவாதமாய் அவரின் கரங்களை பற்றி தானும் சேர்ந்தே ஏற்றினான்.

பின் இன்னொரு புறம் மகிழினி, உத்ரா ஏற்ற ஐஞ்சு முககுத்துவிளக்கு மஞ்சள் ஒலியில் மின்ன ஆரம்பித்தது. பின் சமையலறை அழைத்துச் சென்று கோசலையை வைத்து முதல் முறையாக இனிப்பு தயாரித்து அவரை மட்டும் ஒவ்வொரு நொடியும் முன்னுரிமை கொள்ள வைத்தான்.

சமையல்கட்டு மட்டும் தங்களின் பொறுப்பு அல்ல இதுவும் தான் என்பது போல் கேஸ் கவுண்டரில் அமர வைத்து, செய்த இனிப்புக்கான பணத்தினை கஸ்டமர் கரங்களால் கொடுக்க வைக்க வாங்கிக் கொண்டார்.

மகிழினிக்கு எப்படி இதனை செய்தான் என்ற யோசனை. ‘இரண்டு கோடியில் இவ்வொரு பெரிய ஹோட்டலை ஏற்பாடு செய்திருக்க முடியாதா..?’ அவனை கண்டவாறு யோசிக்க, அன்னையின் அவனும் சேர்ந்தே சமைத்தான்.

புது வகையான மதிய உணவினை சமைத்து மூன்று மணி போல் டேபிளில் கொண்டு வந்து தன் வீட்டாள்களை உணவருந்த அமர்த்தினான்.

கோசலையையும் அமர வைத்து அவனே அனைவருக்கும் பரிமாற, தரமான உணவு. ஒருவரின் திறமையே எச்சி ஊரும். இதில் திறமை வாய்ந்த இருவர் ஒன்றாக சமைத்தால் சொல்லவா வேண்டும்.

மனநிறைவாய் பாராட்டாய் உண்டுக் கொண்டிருக்க, விஜயநேத்ரன் கண்டவாறு நிற்க திடீரென அவனின் மீது இரண்டு புல்லட் எத்திசையிலிருந்தோ வந்து பாய்ந்ததோ அனைவரையும் நிலைகுலைய வைத்தது.

கோட்டை கழட்டிய தூய வெள்ளை முழுவதும் உதிரம் வெளியேறி ரத்தமாய் மாறியது.

🙏 நன்றி 🙏

கருத்துக்களை பகிர


 
Status
Not open for further replies.
Top