தானும் கோசலையம்மாவும் சேர்ந்து சமைத்த உணவினை அனைவரும் இன்பமோடு மகிழ்ந்து பாராட்டி அவனுக்கு கோசலை ஒரு வாய் ஊட்டி விட, கண்டவாறு நின்றான் விஜயநேத்ரன்.
மகிழினியோ பெருமை பொங்க கர்வமோடு காண, பதிலுக்கு இதழ் பிரித்து புன்னகையோடு பார்த்தவண்ணம் பரிமாறினான். கடவுளே அந்த நெகிழ்ச்சியான நேரத்தில் கண் வைத்தாரோ என்னவோ ஒன்றின் பின் ஒன்றாய் இரு புல்லட் அவனின் தோள்பட்டையிலும், வயிற்றிலும் பதிந்தது.
நொடியில் உதிரமோ மேனியிலிருந்து பெருக்கெடுத்து அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையோ ரத்தகரையாய் மாற, அனைவரும் பதறி கீழே சரிந்தவனை தாங்கினர்.
“விஜய்..! விஜய் கண்ணா..! விஜயன்..மாமா...” என்று அவனின் குடும்பத்தாரின் ஓலக்குரல் தான் அவனின் செவியில் விழுந்தது.
கோசலையோ தன் மடியில் தாங்க, தன்னவனின் கரங்களுக்கு தன் கரங்களை புதைத்தவளுக்கு விழிகளின் கண்ணீர். அவனின் உருவத்தையே மறைக்கும் அளவு அழுது கரைய, விஜய் வலியோடு துடிப்பினை போலே அவளும் துடித்தாள்.
ஆம்புலன்ஸ்சை அழைத்து அதற்கு எல்லாம் காத்திருக்க நேரமில்லாது சட்டென அங்கிருந்த அனைவரும் சேர்ந்து அவனை தூக்கி காரில் கிடத்தினர். வேந்தன் காரினை செலுத்த விஜய்யை தாங்கிக் கொண்டு வந்தாள் மகிழினி.
அவனின் மேனியில் இருந்து பெருக்கெடுத்து வெளிவரும் உதிரம் காண அப்படியொரு பயம். சிறிது சிறிதாக சுயவுணர்வை இழந்துக் கொண்டே இருக்க, தன் தோள்பட்டையை சாய்ந்திருந்தவனின் கன்னம் தட்டி நிதானத்திற்கு வரவழைக்க முயன்றாள்.
எங்கே தன் மனதிலிருப்பதை கூற முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் அவனின் கரங்களோ அவளின் கரங்களை இறுகப் பற்ற அதன் மூலம் தவிப்பையும் வலியையும் உணர்ந்துக் கொண்டவளோ, “சீக்கிரம் போ அண்ணா...” கத்தினாள்.
பின்னே ஒரு ஆட்டோவில் கோசலையும், உத்ராவும் அவளின் மகளும் வந்துக் கொண்டிருக்க, பதினைந்து நிமிடத்திலே அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
தான் ஒரு போலீஸ் என வேந்தன் கூறிய பின்னே விஜயை உள்ளே அழைத்துச் சென்று ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுத்தனர்.
பெரும் தவிப்போடு மொத்த குடும்பமும் காத்திருக்க, அண்ணியின் தோளில் சாய்ந்து அழுது கரைந்தாள் மகிழினி. இந்த சில நாட்களாக விஜய் தன்னிடம் பழகும் அணுகுமுறை காந்தத்தை போல் தன்னை அவனிடம் ஈர்த்தது. வழியும் கண்ணீரை கட்டுப்படுத்த கூட சக்தியில்லை. உதடுகளும், மனமும், விஜயை மட்டுமே சுற்றி வந்தது.
பகலிலே ஒருவனின் மீது துப்பாக்கி சூடு நடந்த விசியம் அனைவரையும் பதற வைத்ததும் இல்லாமல் மீடியாவுக்கும் தெரிந்து விட, அடுத்தநொடி யாரென செய்தியை பிரேக்கிங் நியூஸ்சாக போட்டு விட்டு மருத்துவமனையின் முன்னே வந்து காத்திருந்தனர்.
அடுத்த தகவல் என்ன என்பது தான் செய்தியாளர்களின் நினைப்பாக இருக்க, வேந்தன் கூறியதால் போலீஸ்சார்கள் கோசலை உணகவத்தில் விசாரிக்க கூடி விட்டனர்.
பிரேக்கிங் நியூஸ்சை கேட்ட ஆதிகேசவனுக்கோ அதிர்ச்சி. இது யாரின் செயலாக இருக்குமென யோசனை தோன்ற ஒரு வேலை தன்னோட பாட்னர்ஸ் செயலாக இருக்குமோ எண்ணினார்.
பின் வரதன், விநாயகம் இருவரையும் சந்தித்தார். அவர்கள் மூவரும் மாறிமாறி தாங்கள் இல்லையென கூறிவிட்டனர். ஆதிகேசவன் அறியாத ஒன்று தன் மகன் தான் இதுக்கு காரணம் என்று.
தங்களின் புது வீட்டில் அமர்ந்திருந்த ஒருவன் தொலைக்காட்சியில் ஓடிய விஜயநேத்ரன் செய்தியைக் கண்டு, இது தனக்கு சம்மந்தம் இல்லையெனத் தெரிந்தும் வெற்றிச் சிரிப்பு சிரித்தான். காரணம் இவர்கள் அனைவரும் நினைத்தது இப்போதைக்கு நடக்காது அல்லவா !
மாலை நேரம் போல் மகிழினியின் கைபேசி ஓசை எழுப்ப அதனை எடுக்கும் நிலையில் கூட அவளில்லை. மாறி மாறி அடிக்கவே உத்ரா தான் அட்டன் செய்தாள்.
“ஹலோ..! நான் மகிழினியோட அண்ணி பேசுறேன்...” எடுத்தும் கூறிவிட,
“அவ கிட்ட கொடுங்க நான் முக்கியமா பேசணும்...” என்றதும்,
“உன்கிட்ட தான் யாரோ பேசணுமா இந்தா மகிழ் பேசு...” எனக் கூறியதும் உணர்ச்சியே இல்லாமல் செவியில் வாங்கி வைத்தாள்.
“சொல்லுங்க..?”
“நான் தான் பேசுறேன். உன்னோட விஜய் இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இந்த நிலைமைக்கு இருக்குறது காரணம் ஆதிகேசவன் மகன் தருண். அவன் தான் ஆளுங்களை வச்சி சூட் பண்ணிருக்கான். விஜய்க்கு தருணுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா ஏன் அவன் இப்படி பண்ணுனான். என்ன நடக்குது..?” சீற்றமோடு கேட்கவே,
“எல்லாத்தைகும் காரணம் நான் தான். என்னால தான் விஜய் இப்படி ஹாஸ்பிட்டல்ல இருக்காரு...”
“நீ தானா சீக்கிரம் சரி பண்ணுற வழியை பாரு. இன்னொரு தடவை இப்படி நடக்க கூடாது, நான் ஏற்கனவே சொல்லிருந்தேன்ல நீங்க ரெண்டு பேரும் கவனமாக இருங்கன்னு...”
“அது..அது வந்து...”
“இப்போ உன் அண்ணன் கிட்ட சொல்லி விஜய்யோட பிரெண்ட் ரவி நம்பர் வாங்கி எனக்கு மெசேஜ் அனுப்பு...” எனக் கூறி அழைப்பினை துண்டித்து விட, வேந்தனிடம் அனைத்தையும் கூற உடனே அந்த நம்பருக்கு குறிஞ்செய்தி அனுப்பினர்.
பின் தன் ஆட்களை விட்டு உடனே தொழிலதிபர் ஆதிகேசவனின் மகன் தருணை கைது செய்யுமாறு உத்திரவிட்டான்.
இரவினை நெருங்கும் நேரம் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து மருத்துவர் வெளியே வர, “டாக்டர், விஜய் இப்போ எப்படி இருக்காங்க..?” முன்னே வந்து முதலில் கேட்டாள் மகிழினி.
“அவரோட உடம்புல பட்ட ரெண்டு புல்லட்டையும் எடுத்தாச்சு. ஆனா இப்போதைக்கு எங்களால எதுவும் சொல்ல முடியாது. சீரியஸ் கன்டிஷன்ல தான் இருக்காங்க. சுயநினைவையும் முழுசா இழந்துட்டாங்க...”
“ஐயோ..! ஆத்தா என் பிள்ளை...” நெஞ்சிலடித்துக் கொண்டு கோசலை கதற, தன் தோளோடு அணைத்துக் கொண்டாள் உத்ரா.
கடவுளாய் நினைத்த மருத்துவரே இப்படி கூறிச் சென்று விட இனி யாரை நம்புவது. கடவுளை தான் தங்களின் துணைக்கு அழைத்து விஜய்க்காக வேண்டுதல் வைத்தனர்.
சில வினாடிச் சென்று எங்கு தேடியும் தருண் கிடைக்கவில்லை என அழைப்பு வரவே, கூடுதல் படையை அழைத்து தேடுமாறு கூறினான். ஆதாரம் இல்லாமல் மீடியாவிடம் எதையும் கூற முடியாது என்பதால் எப்படி கண்டு பிடிக்க யோசனையிலிருந்தான்.
தன் அண்ணனை கண்ட மகிழினி அங்கிருந்து விரைந்துச் செல்ல அவளை தடுக்க முயற்சி செய்யது எல்லாம் பலனில்லாமல் போனது.
“டாக்டர் ஏதாவது சொன்னா கால் பண்ணு உத்ரா...” எனக் கூறி தங்கையின் பின்னே அவனும் செல்ல, வெளியே மீடியாக்காரர்கள் இருப்பது புரிந்தது.
அப்படியே தேங்கி நிற்க, அருகில் வந்த வேந்தன், “நீ போ நான் பார்த்துக்குறேன். உன்னை, நானும் எங்க போலீஸ் டீம் பாலோ பண்ணிட்டு வரோம். இப்போ நீ தருணை தேடி தான் போறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவனை பிடிக்க இது தான் வாய்ப்பு. அவன் கிட்ட இருந்து கவனமா இரு. நாங்க சீக்கிரம் வந்துறோம்...” எனக் கூறி அனுப்பி வைக்க, முகத்தை மூடிக் கொண்டு அங்கிருந்துச் சென்று விட்டாள்.
யாருமறியா வண்ணம் வெளியே வந்தவளோ ஓரமாக நின்றிருந்த விஜய்யின் காரில் ஏறிச் செல்ல தங்கையை தான் கண்டான் வேந்தன்.
பின் நேராக வெளியேறி வர அவனை பிடித்துக் கொண்டு செய்தியாளர்கள் கேட்க, காரணம் யாரென தெரியவில்லை எனக் கூறினான்.
விஜயனின் உடல்நிலையை பற்றிக் கேட்க இப்போதைக்கு மருத்துவராலே எதுவும் கூற முடியவில்லை எனக் கூறி விலகி வந்தான்.
அருகிலிருந்த ஆட்டோ ஒன்றை அழைக்க, அதில் ஏறிக் கொண்டு தங்கை எங்குச் செல்கிறாள் என தெரியாது பின் தொடர்ந்தான்.
மகிழினியின் மனமோ, ‘விஜய்யோட இந்த நிலைமைக்கு தருண் தான் காரணமா அவனை நான் சும்மா விட மாட்டேன். என்ன தைரியம் இருந்தா என் விஜய் மேல அவன் கை வச்சிருப்பான்...’ அழுகை முழுவதும் அடங்கிப் போய் கோவம் மட்டுமே தீயாய் எரிந்துக் கொண்டிருந்தது.
தருணின் கைபேசியிற்கு அழைக்க, அதே நேரம் இங்கே தான் போட்ட திட்டத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு ஹோட்டல் அறை ஒன்றில் அமர்ந்திருந்தான் தருண்.
கைபேசி ஓசை எழுப்ப அதுவும் மகிழினியிடமிருந்து அழைப்பு வர நொடியில் சந்தோஷமாக அதனை எடுத்து, “ஹாய் செல்லம். இவ்வளோ சீக்கிரம் கூப்பிடுவேன்னு நான் நினைக்கலை. எப்படி இருக்கான் கல்யாணமே பண்ணிக்காத உன்னோட புருஷன்...” எகத்தாளத்தோடு கேட்க,
“உன்னால அவ்வளோ சீக்கிரம் என் விஜய்யை என்கிட்டே இருந்து பறிக்க முடியாது. உன்னை தேடி தான் இப்போ வந்துக்கிட்டு இருக்கேன்...”
“என்னது உன்னோட விஜய்யா..! நீ எப்போ என் கண்ணுல பட்டையோ அப்போல இருந்து எனக்கு தான் சொந்தம். உன்னை என்கிட்டே வரவழைக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இதோ இப்போ என்னை தேடி வரீல வா...”
“ச்சி நீயெல்லாம் ஒரு மனுஷன்னா..?”
“எனக்கு தேவை நீ இப்போ வா என்னை தேடி. லொகேஷன் அனுப்புறேன். நம்ம சாந்தி மூகூர்த்ததுக்கான நேரத்தை குறிச்சி வைக்குறேன்...” எனக் கூறி கட் செய்ய, தானாகச் சென்று அவனே மீன் வலையில் சிக்கப் போவதை அறியவில்லை.
தன் அண்ணனுக்கு அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவளோ முகவரியில் இருந்த ஹோட்டலை நோக்கி விரைந்தாள்.
நன்கு இருள் சூழ்ந்த நேரம் தருண் கூறிய லொகேஷனுக்கு வந்தவளோ காரினை நிறுத்த, சட்டென யாரோ அவளின் வாயினை மூடி காருக்குள் தள்ளினர். பின் அந்த இடத்தினை விட்டு மறைந்துச் சென்றனர்.
மேலும் அரை மணி நேரம் மகிழினியை வைத்து பயணித்த அந்த கார் ஆள் நடமாட்டம் இல்லாத இரும்புக்குடவுன் ஒன்றின் முன்னே வந்து நின்றது.
கைகள் இரண்டும் கட்டப்பட்டு வாயையும் இறுக்கமாக மூடி காரிலிருந்து இறங்கி உள்ளே அழைத்து வர, “வெல்கம் ஸ்வீட்ஹார்ட்...” இன்பமாய் தன் கரங்களை விரித்து வரவேற்றான் தருண்.
அவனை முறைப்போடு காண அருகில் வந்து வாயிலிருந்த துணியை அகற்றியவனோ மற்றவர்களை காண, அங்கிருந்துச் சென்றனர்.
“என்ன செல்லமே நான் கூப்பிட்டதும் வந்துட்டே அதுவும் தனியா வந்திருக்கே..? இது என்ன கோலம்..?” விஜய்யின் ரத்தம் அவளின் புடவையில் படிந்திருக்க அதனைக் கண்டு கேட்டான்.
“உயிரோட மதிப்பு என்னென்னு உனக்கு தெரியுமா..? இன்னைக்கு விஜய்க்கு நடந்த மாதிரி உனக்கு நடந்திருந்தா உன் வீட்டுல எப்படி துடிப்பாங்க. என் மேல ஆசை உனக்கு இருக்குன்னா ஒன்னா ஒரே ரூம்ல தானே இருந்தே. அன்னைக்கே தீர்த்திருக்க வேண்டியது தானே..? அப்போ வேண்டான்னு விட்டே உனக்கு இப்போ மட்டும் நான் வேணுமா..? உண்மையில என் மேல காதல் இருக்கா இல்லை விஜய்க்கு என்னை விட்டு தரக் கூடாதுன்னு எண்ணமா சொல்லு..?”
“ரெண்டு தாண்டி என்னடி அதுக்கு இப்போ.? அதென்ன வீரமங்கை மாதிரி நான் சொன்ன ஹோட்டலுக்கு தனியா வந்து நிக்கிற..? உன்னை நம்ப நான் என்ன இளிச்சவாயனா..? பின்னாடியே உன் அண்ணனும், அவனோட ஆளுங்களும் வருவாங்கன்னு தெரியும் அதான் இடத்தை மாத்துனேன். இப்போ எல்லாரும் உன்னை தேடிட்டு தான் இருப்பாங்க. ஆனா நீ என் கையில. இன்னும் கொஞ்சம் நேரத்துல என் பொண்டாட்டியா..?”
“ச்சே நீயெல்லாம் ஒரு மனுஷன்டா. பொறுக்கி இப்போ மட்டும் விஜய் இருந்தா உன்னால என் கிட்ட நெருங்க முடியமா..?” கத்த,
“அதான் இல்லையே..! அவனோட அம்மா நெஞ்சுவலில செத்த மாதிரி அவனும் இன்னும் கொஞ்சம் நேரத்துல துடிச்சி அவங்க அம்மா கிட்ட போயிருவான். பிழைச்சிருவானா என்ன..? அதெல்லாம் பத்தி பேசி என்ன பண்ண..? இப்போ உன்னை காப்பாத்த படத்துல வர்ற மாதிரி நாயகனோ, அண்ணனோ இல்ல வேற எவனும் வர்றப் போறதில்லை. அதுனால எனக்கு அடங்கி போய் என் ஆசை மோகத்தை தீர்த்து காலம் முழுக்க என் காலடில பொண்டாட்டியா இரு...” கூறியவாறு குரோதம் கலந்த மையலோடு அவளின் அருகே நெருங்கினான்.
தீராக்காதல் : 25
தருணின் செய்கையைக் கண்டவளுக்கோ இருந்த ஆத்திரம் அனைத்தும் காணாமல் போய் பதட்டம் குடிக் கொண்டது. வெளிக்காட்டாது தைரியமாக இருக்க முயற்சித்தாலும் முடியாது தான் போனது.
“என் ஆசைக்கு நீ முதல ஒத்துப் போ. அப்பறம் உன்னை பொண்டாட்டியாக்குறேன். உன் அழகு என் உணர்ச்சியெல்லாம் தூண்ட வைக்குது. எந்த பொண்ணு கிட்டையும் நான் இப்படியெல்லாம் நினைச்சு கூட பார்த்ததில்லை. ஆனா நீ...” ஆசையோடு கூறியவாறு அருகில் நெருங்கி வர்ற, அவனை தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள்
மிகப்பரிய குடவுன் என்றாலும் எங்குச் செல்ல முடியாது வழி கூட இல்லாது அரை வெளிச்சமோடு தான் இருந்தது.
அவசரபட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி தன்னையே நொந்துக் கொண்டு அவனிடமிருந்து தப்ப முயற்சி செய்ய, “எங்க செல்லம் இப்படி ஓடிக்கிட்டு இருக்கே..? உன்னாலையோ ஏன் என்னால கூட நினைச்சா வெளியே போக முடியாது. ஏன்னா என்னோட ஆளுங்க வெளியே இருக்காங்க. டைம் வேஸ்ட் பண்ணாதே செல்லம். இப்போ மட்டும் என் ஆசைக்கு அடிபணியல அங்கே விஜய் உயிர் ஒரேடியா போக வச்சிருவேன். என்ன பார்க்குறே அங்கையும் என் ஆளுங்க இருக்காங்க...” என்க,
அதனைக் கேட்டு திகைத்தவளோ கோவமோடு அங்கிருந்த ஒரு இரும்புத் துண்டினை எடுத்து வந்து தாக்க முயற்சித்தாள். புலியை தாக்க குச்சி போதுமா என்ன..? நொடியில் அவளின் கரங்களை பற்றி தடுத்து அதனை பிடிங்கி வீசி எறிந்தான்.
“ச்சி..! விடுடா என்னை. நீயெல்லாம் ஒரு மனுஷனா..? விஜய்க்கு மட்டும் ஏதாவது நடந்தா உன்னை சும்மா விட மாட்டேன்...”
“இப்பவும் அப்படி தான் சொல்லுறே..? உன்னால என்ன பண்ண முடியும். முடிஞ்சா பண்ணி தான் பாரேன். முதல என்கிட்டே இருந்து எப்படி தப்பிக்கேன்னு பார்த்துரலாம்...” கூறியவாறு இறுகப் பிடித்த கரங்களை மடக்கினான்.
அருகில் இருந்த சுவரில் அவளின் முகம் பதிய கரங்களை இரண்டையும் இறுக்கிப் பிடித்து மேலே தூக்கியவனோ அவளின் பின்னே தன் தேகம் தீண்ட உரசினான்.
“சும்மா இந்த புடவையில நச்சுன்னு தான் இருக்கே..? அவன் எடுத்து கொடுத்தானோ..? அப்படின்னா இது இருக்க கூடாதே...” ரசனையோடு ஒற்றை கையால் அவளின் இரு கரங்களை பற்றியவாறு முன்னே திருப்பியவனோ மற்றொரு கரங்களை அவளின் மேனியில் படர விட்டான்.
புழுவாய் துடித்தவளோ பல்லை கடித்துக் கொண்டு விலகப் போராட அவளின் கழுத்து வளைவில் தன் முகம் வைத்து உரசி இதழினை பதிய விடவே விழிகளோ கண்ணீர் வழிந்தோடியது.
தருணின் செய்கையால் தன் பெண்மையை காக்க முடியாது தவிக்க, முன்னேறியவனின் கரங்களோ மேனியில் தழுவிய புடவையை உருவ முயற்சித்தது.
அந்த நொடி திடீரென அந்த அறை இருட்டு குடவுனில் வெளிச்சம் பரவ, விழிகள் கூசவே தருண் திரும்பிக் காணும் நொடி அவனை தள்ளி ஓட முயற்சித்தாள் மகிழினி.
அதனை அறிந்த தருணோ அருகிலிருந்த ஒரு கம்பியை எடுத்து அவளின் பின்னந்தலையில் சட்டென தாக்கினான். உதிரம் கொட்ட விழிகள் சொருக திரும்பி தருணைக் கண்டவாறு கீழே சரியப் போனவளை வேகமாய் வந்து நரம்புகள் சிவந்து புடைத்த ஒரு கரம் தாங்கியது.
அந்த வலிய கரம் அண்ணனோ, விஜய்யோ இல்லை என்பது புரிந்து அவனைக் காண கருப்பு மாக்ஸ் அணிந்திருக்க முழுதாய் மயங்கினாள்.
“எவன்டா நீ..? எப்படி உள்ளக்க வந்தே..?” கேட்டவாறு அதே கம்பியால் அவனைத் தாக்க வர, அந்த இரும்புக்கம்பியை பிடித்தவனின் விழிகளோ சுட்டெரிக்கும் கதிரவனை விட பல மடங்கு அக்னியை வீசியது.
தன் காலினை தூக்கி ஓங்கி ஒரு எத்து விட மூன்றடி பின்னேச் சென்று தரையில் விழுந்தான். ஓரடியில் முடிந்து விடுமா என்ன ? ஆத்திரமோடு தருணின் சட்டையை பிடித்து தூக்கியவனோ அவனின் முகத்திலே குத்து விட உதட்டினை கீறிக் கொண்டு உதிரம் வழிந்தது.
ஒற்றை குத்திலே பாக்ஸ்சிங் பயின்றவன் என்பது புரிந்து விட எதிர்த்து அடிக்கவும் முடியாது அவன் கொடுக்கும் அடியை வாங்கி தடுக்கவும் முடியாது சிதைந்துப் போனான்.
அப்போது வேந்தன், ரவி இன்னும் சில காவல் அதிகாரிகள் உள்ளே வர, பிடியிலிருந்த தருணை விட கீழே விழுந்தான். மயங்கி கிடந்த தன் தங்கையைக் கண்ட வேந்தனோ வேகமாய்ச் சென்று முதலில் காண, கீழே விழுந்த தருணை நோக்கி வந்தான் ரவி.
அங்கே கருப்பு உடையில் பயில்வான் போன்று திடமான உடல்கற்றோடு ஒருவன் நிற்கவே, அவனைக் கண்டவனோ, “நீங்க யார்..? இந்த லொகேஷன் அனுப்புனது நீங்க தானே..?” என்க,
ரவியைக் கண்டவனோ, “ஆமா...” என இதழ் திறக்காது தலையை அசைக்க, அதே நேரம் தடுமாறி தருண் எழ முயன்றான். ஓடி விடுவானோ என்ற எண்ணத்தில் தருணை பிடிக்க, அதே நேரம் அங்கிருந்து வெளியேறினான் வந்தவன்.
ஜீப் வரவே ரவி திரும்பி நின்றவனைக் காண அவனோ இப்போது இல்லாததுப் போனான். மகிழினியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைச் செல்ல மற்றவர்கள் தருணை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.
ஆதவன் விழி திறந்த காலைப் பொழுதில் பரபரப்பாக தருணை பற்றிய செய்தி தான் ஒலிபரப்பானது. சொந்த, சொத்து பகை தான் காரணம் என வேந்தன் செய்தியாளர்களுக்கு கூறியிருந்தான்.
ஆதிகேசவனுக்கோ அதிர்ச்சி தான். ‘தன்னை மீறி தன்னிடம் ஒரு வார்த்தை கூட மகன் ஏன் இவ்வாறு செய்தான்..? ச்சே..! ஏற்கனவே அந்த சத்தியவதனி கேஸ்சை விசாரிக்க இவன் ஏன் இதில் போய் இப்படி சிக்கிக் கொண்டான்..? அப்படி என்ன அவசரம் இவனுக்கு. புத்தி கெட்டவனே..!’
மூத்த மகன் கிஷோரை அழைத்து வக்கிலீடம் பேசி ஜாமீன் வாங்கி தன் மகனை முதலில் வெளியேக் கொண்டு வர நினைத்தார் ஆதிகேசவன். யாரின் அனுமதி ஏன் தன் மேலதிகாரியே அனுமதித்தாலும் விட மாட்டேன் என்பதில் உறுதியாய் இருந்தான் வேந்தன்.
தங்கையை அதே மருத்துவமனையில் இரவு சேர்த்து விட்டு வந்தவன் தான். பின் எங்கே தான் இல்லாத ஜாமீன் பெற்று தருணை அழைத்துச் சென்று விடுவார்களோ என்ற எண்ணத்தில் காவல் நிலையத்திலே இருந்தான்.
மருத்துவமனையில் இரு கண்களாக இருவரையும் எண்ணி அழுகையோடு தனியாளாக தவித்துக் கொண்டிருந்தார் கோசலை.
மதிய நேரம் போல் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு மாமியாருக்கு உணவோடு வந்த உத்ரா அடம்பிடித்து போராடி உண்ண வைத்து மகளாய் அரவணைத்துக் கொண்டாள்.
மகிழினிக்கு அடி பலமாக இல்லை லேசானது தான் எனக் கூறி பின் மண்டையில் இருந்து நெற்றியோடு சேர்த்து கட்டுப் போட்டிருந்தனர். இப்போதைக்கு மயக்கத்தில் இருக்க சீக்கிரம் கண் விழித்து விடுவாள் என்றனர்.
விஜயநேத்ரனை பற்றி மருத்துவராலே கூற முடியாது சுயவுணர்வினை முழுமையாக இழந்து போய் இருக்க, கடவுளை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆதிகேசவன் தங்களின் வக்கீல்லை அழைத்துக் கொண்டு மகனை வெளிக்கொண்டு வர ஸ்டேஷன் வந்திருந்தார்.
வக்கீல் பேப்பரைக் காட்ட வேந்தனோ அதனை வாங்கி ஓரமாக வைத்து, “எப்.ஐ.ஆர் போட்டாச்சு..? நீங்க யார் கிட்ட பேசுனாலும் ஒரு பிரோஜனமுமில்லை. திங்கள்கிழமை கோர்ட்ல வச்சி உங்க மகனை பார்த்துக்கோங்க. அப்போ என்ன பேசணும் நினைக்கிறீங்களோ பேசுங்க...” முடிவாய் சீற்றம் கொண்டு கூறினான்.
“ஏய் நான் யாருன்னு தெரியுமா..?” ஆதிகேசவன் மிரட்ட,
“நல்லாவே தெரியும். நான் யாருன்னு தெரியுமா..? விஜயநேத்ரனோட மச்சான். மகிழினியோட அண்ணன்டா. கடைமையா மட்டும் இந்த கேஸ்சை எடுக்கலை. பெர்சனலும் தான்...”
“என் மகன் தான் விஜயனை சுட்டதுக்கு காரணம் நீ எப்படி சொல்லலாம். எந்த ஆதாரம்லே இருக்கு உன் கிட்ட..? அதுவும் சொத்து சொந்த பிரச்சனைன்னு எதை வச்சிலே நீ சொல்லலாம்...”
“இங்கே பாருங்க உங்க மகனோட மானம் போயிற கூடாதுன்னு தான் அப்படி சொன்னேன். உண்மை என்னென்னு தெரியுமா உங்களுக்கு..?” எனக் கூறி தருண் மகிழினியின் மீது ஆசைப்பட்டது, மிரட்டியது, விஜய்யை கொல்ல நினைத்தது இப்போது கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றது, காயப்படுத்தியது, தான் வாயாலே ஒத்துக் கொண்டது வரை அனைத்தையும் கூறினான்.
“இப்போ சொல்லுங்க உங்களால என்ன பண்ண முடியும்..?” என்க,
ஜெயிலுள் அடிவாங்கி தலையை குனிந்த அமர்ந்திருந்த மகனை கண்டவரோ எதுவும் கூற முடியாது எழுந்துச் சென்று விட்டார். பணபலம், ஆள்பலம் இருந்து இந்த உலகமே தனக்கு கீழ் வர வைக்க முடியாது என்பதை உணர்ந்துக் கொண்டார் ஆதிகேசவன்.
“அப்பா..! என்னப்பா அப்படியே தருணை விட்டுட்டு போகவா..?”
“வேற என்ன பண்ண முடியும். எல்லாமே நமக்கு கீழே தான்னு ஆணவத்துல ஆடுன ஒரு நாள் இப்படி தான் தலைகீழா மாறும்ன்னு தெரிஞ்சு போச்சுல. இவனால இருந்து மானமும் போச்சு இனி அந்த சட்டமே தண்டனையை கொடுக்கட்டும்...” கத்திவிட்டு காரில் ஏறினார்.
அன்னை, மனைவி இருவரையும் இரவு வீட்டுக்கு அனுப்பி வைத்து தானே மருத்துமவனையில் துணையாய் இருந்தான் வேந்தன்.
தனிமையில் இருக்கும் நொடி தான் தங்களுக்கு தகவல் கொடுத்தது தன் தங்கையை காப்பாற்றியது யாராக இருக்குமென யோசித்தான்.
ரவியை கைபேசியில் அழைக்க, தூக்க கலக்கத்தோடு அவனும் எடுத்து என்னவென்று கேட்க தன் சந்தேகத்தை கேட்டான்.
“நேத்து ஈவினிங் எனக்கு ஒரு கால் வந்து நீங்க தான் விஜய் பிரெண்ட் ரவியான்னு கேட்டாங்க. நானும் ஆமா சொன்னேன். அப்போ இதுவரைக்கும் என்ன விசாரிச்சீங்கன்னு கேட்டிட்டு வச்சிட்டாங்க. அப்பறம் நம்ம எல்லாரும் மகிழினியை காணோம்ன்னு தேடும் போது மறுபடியும் கால் வந்தது குரலை வச்சி ஈவினிங் பேசுனவன் புரிஞ்சுக்கிட்டேன். லொகேஷன் சொல்லிட்டு டக்குன்னு வச்சிட்டான். அந்த இடத்துக்கு போகும் போது நீங்க தானா அது கேட்க தலையை ஆட்டிட்டு போய்ட்டான். யாருன்னு தெரியல..?” என்க,
‘தன் தங்கையிடம் அடிக்கடி கைபேசியில் பேசுவன் தான் நேற்று காப்பாற்றியவன் என்பது புரிந்தது. ஆனால் ஏன் மறைமுகமாக இருக்கிறான்..? அவனின் உடலமைப்பை வைத்து பார்க்கும் போது பாடிபில்டர் மாதிரி அல்லவா இருந்தான். ஒரு வேலை சத்தியவதனி மேடம் பாதுகாப்புக்காக யாரையும் அனுமதித்திருந்தார்களா..? விஜய்க்கு ஆபத்து வரும் போது வராதவன் எப்படி தங்கைக்கு ஆபத்து நிகழும் போது வந்தான்..? மகிழினிக்கு தெரிந்தவனாக இருக்குமா..? அவளிடம் மட்டும் தானே அடிக்கடி பேசுகிறான்..? முன்னே இருந்தவனை விட்டு விட்டு. விட்டேன்னே..?’ இரவு முழுவதும் அதையே நினைத்து புலம்பி யோசித்தான்.
மறுநாள் விடியலில் கண் விழித்த மகிழினி தன் அண்ணனிடம் முதலில் விஜய்யை பற்றி தான் விசாரித்தாள். வலியோ சுல்லென்று எரிய, தனக்கே இப்படி என்றால் இரு புல்லட்டினையும் மேனியில் தாங்கியவனுக்கு எப்படி இருக்கும்..?
“கவலைப்பாடதே விஜய்க்கு ஒன்னுமாகாது நம்ம நம்பிக்கையோட இருக்கலாம்...” என்க, விஜய் பார்க்க வேண்டுமென கூறி அண்ணனின் உதவியோடு அவனைக் காண சென்றாள்.
சுவாசக்குழாய் மாட்டி நெஞ்சிலும், வயிற்றிலும் கட்டுக்கள் கட்டியிருக்க, உணர்வே இல்லாமல் இருக்கும் விஜய்யை கண்டு கண்ணீர் புகுத்தவளோ தன் அத்தையை துணையாய் அழைத்து மனதோடு மன்றாடினாள்.
காயங்கள் கொண்ட தேகமும், உள்ளமும் ஒருவரை ஒருவர் நேசிக்க, கூற முடியாது விதி செய்த சதியால் சிக்கிக் கொண்டனர்.
விஜயனின் உடல்நிலையை எண்ணி குடும்பத்தார் அனைவரும் கதிகலங்கிப் போய் காத்திருந்தனர். முழுதாக அவனை அனுமதித்து நான்கு நாட்கள் கடந்திருக்க, மெல்ல அவனிடம் அசைவு வர ஆரம்பித்தது.
செவிலிப்பெண் மருத்துவரை அழைக்க, உடனே மருத்துவரும் வந்து பரிசோதிக்க, என்னவோ ஏதோ என்ற தவிப்போடு வீட்டார்கள் இருந்தனர்.
சிறிது நேரம் சென்று வெளியே வந்தவர்களோ விஜய்க்கு சுயவுணர்வு வந்து விட்டதாக கூறி இனி உயிருக்கு ஆபத்தில்லை எனக் கூறிவிட, தன் அத்தைக்கே முதலில் நன்றி கூறினாள் மகிழினி.
இறந்தவர்கள் தெய்வமாக இருந்து தன்னை வழிநடத்துவார்கள் என்பது எத்தகைய உண்மை என்பதை போல் இருந்தது அவளுக்கு.
அவன் விழி திறந்து தங்களை காணும் நொடிக்கு காத்திருக்க, மாலை நேரம் போலே மெல்லே விழி திறந்தான். செவிலியர் கூறியதும் சத்தமில்லாது அனைவரும் உள்ளே வந்து அவனைக் கண்டனர்.
வேந்தன் இல்லாதது பெண்கள் மூவரும் இருக்க, “விஜய்..!” நெஞ்சினை வதைக்கும் உருகிய அழைப்பில் மொத்த காதலையும், கவலையும் ஒரே சேரக் கண்டான்.
அவனின் விழிகளும் நெற்றியில் போடப்பட்டிருந்த கட்டினை கண்டதே தவிர எதுவும் பேச முடியவில்லை. பின் மெல்ல போராடி கோசலையும், மகிழினியும் அவனுக்கு பழச்சாறினை பருக வைத்தனர்.
தன்னவளிடம் மனம் விட்டு பேச மனமோ துடிக்க வார்த்தைகளோ வரவில்லை. பார்வையாளே அவளை மட்டுமே கண்டான். அதே போல் எப்படி இந்த வலியை தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதை போல் அவளுமே அவனை மட்டுமே நினைத்தாள்.
தருணை கோர்ட்டில் ஆஜார்ப்படுத்தி நீதிபதின் முன் தீர்ப்பினை விசாரிக்க, மகிழினியிடம் பேசிய ஆடியோ ரெகார்ட், அவன் வாயாலே தங்களிடம் உண்மையை கூறியது அனைத்தையும் போட்டு காட்டினர்.
பின் மருத்துவமனையில் இருந்து வேந்தனின் உதவியோடு கோர்ட்டுக்கு வந்து தன் பெண்மையை பறிக்க முயற்சித்து, தன் கணவனுக்கு ஆபத்து கொடுத்ததையும் கூறினாள். அனைத்து சாட்சியங்களும் தருணுக்கு எதிராக இருக்க, நீதிபதியோ விசாரித்து பின் அவனுக்கு கொலை செய்த முயன்ற குற்றத்துக்காவும், பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்துக்காகவும், ஐம்பதாயிரம் பணம் கட்டி, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையென தீர்ப்பு கொடுக்க, அனைவரின் முன்னே மானம் போக தலை குனிந்தான். தவறு செய்து தண்டனை கிடைத்த பின்னே உணர்ந்துக் கொண்டான்.
காலை உணவு நேரம் போல் மகிழினி மட்டும் இருக்க மெல்ல அமர வைத்து அவனை வெது வெதுப்பான தண்ணீரில் சுத்தம் செய்தாள். பின் உணவினை எடுத்து இஸ்பூனால் விஜயனுக்கு ஊட்ட முயல, அன்னையின் வார்த்தைகளோ நினைவில் ஒலித்தது.
“உன் நெத்தில எப்படி கட்டு என்ன நடந்தது..? எனக்கு எப்படி இப்படி..?” என்று கண் விழித்து மூன்று நாட்களாக இல்லாதது இப்போது தனிமையில் இருக்கும் நொடி கேட்டான்.
“அது வந்து...” என தயங்கியவளோ தருணின் செய்கை அனைத்தையும் கூறி தண்டனை பெற்றதையும் கூறினாள்.
“அண்ணன் சொன்னா என்னை காப்பாத்தா வந்தவனும், என் கிட்ட மொபைல்ல பேசுறவனும் ஒன்னாம். எப்படி சரியா எனக்கு ஆபத்து வர்ற நேரத்துல வந்தாங்கன்னு தெரியல. அப்படின்னா நம்மளை பார்த்துக்கிட்டே இருக்காங்களா என்ன..?”
“நீ அவங்க முகத்தை பார்க்கலையா..?”
“இல்ல. ஆனா அவனோட உருவம்...” என்று அண்ணன் கூறியதை வைத்து கூறவே, மனதிலே ஒன்றை நினைத்துக் கொண்டான்.
பின் வந்த நாட்களில் எல்லாம் கோசலை, மகிழினி இருவரும் அவனை மாறி மாறி பார்த்துக் கொண்டனர். மாலை நேரம் போல் அவனை கை தாங்கலாக வீல் சேரில் அமர வைத்து வாக்கிங் அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் வந்து சேர்ந்து பத்து நாட்களான நிலையில் அன்று வீட்டுக்கு அழைத்துச் செல்ல கூறினர். காயம் முழுதாக சரியாகவில்லை கட்டு மாத்த அடிக்கடி வர வேண்டுமென மருத்துவர் அவனை முழுதாக பரிசோதித்து கூறவே கேட்டுக் கொண்டு கிளம்பினர்.
‘தாங்கள் வாழும் குவாட்டர்ஸ் வீடு இவனுக்கு எப்படி செட்டாகும்..? அதுவும் காயங்களோடு இருப்பவனுக்கு. என்ன தான் கவனமாக கவனித்துக் கொண்டாலும் ஒரு சில நேரங்களில் அவனுக்கு தங்கள் வீட்டில் இருப்பது கஷ்டமாக தோன்றி விடுமென நினைத்து விட்டால்...’ மகிழினி மனம் நினைக்க,
“கோசலைம்மா..! நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க. எல்லாரும் ஒன்னா இருக்கலாம். அன்னைக்கு நான் உங்களை வீட்டை விட்டு அனுப்புனது தான் எனக்கு இந்த தண்டனையோ என்னவோ..?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை. சரி வாங்க வீட்டுக்கு போவோம்...” கூறிவிட்டு கிளம்ப, வேந்தன் வர அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துச் சேர்ந்தனர்.
மகிழினியின் அறையிலே விஜய்யை கை தாங்கலாக அழைத்துக் கொண்டு வந்து படுக்க வைக்க, “நான் போய் உனக்கு ஜீஸ் போட்டு கொண்டு வரேன்...” எனக் கூறி கோசலை சென்று விட, மகிழினியோ விஜய்யைக் கண்டாள்.
அவன் ஏதோ தன்னிடம் பேச நினைக்கிறான் என்பது காரில் ஏறிய நொடியிலிருந்து புரிய கவனித்துக் கொண்டிருந்தவளோ இப்போது, “என்னாச்சு என்கிட்டே ஏதாவது பேசணுமா..?” கேட்க,
“உன் அண்ணனை கொஞ்சம் வரச் சொல்லேன்...”
“ஏன் நான் இருக்கேன்ல. சொல்லுங்க ரெஸ்ட் ரூம் போகனுமா..?”
“இல்லை...”
“அப்பறம் என்ன..?”
“நீ வர சொல்லு..” என்றதும் வெளியேறியவளோ பின் வேந்தனை அழைத்துக் கொண்டு மறுபடியும் வர கதவினை சாத்தி உள்ளே நுழைந்தனர்.
“என்ன விஜயன்..?”
“அன்னைக்கு இவளை ஒருத்தன் கார்ல இடிக்க முயற்சி பண்ணுனான்னு சொல்லி விசாரிக்க சொன்னேன்ல. என்னாச்சு..?”
“நானும், ரவியும் நீ சொன்ன அந்த அப்பார்ட்மென்ட் போனோம். ஆனா அவங்க கொஞ்சம் நாளுக்கு முன்னாடி தான் காலி பண்ணிட்டு போனாங்கன்னு அக்கம் பக்கத்துல இருக்குறவங்க சொன்னாங்க...”
“அதுக்கு அப்பறம் அவனை தேடலையா..?”
“இல்லை. இதான் அவனோட போட்டோ..?” என்று தன் கைபேசியில் அவனின் புகைப்படத்தை காட்ட,
“இவனே தான். இன்னைக்கு நம்ம ஹாஸ்பிட்டல்ல விட்டு வெளியே வரும் போது எதிர்தாப்புல இருக்குற ஒரு ரெஸ்டாரெண்ட்ல உட்கார்ந்து நம்மளையே பார்த்துக்கிட்டு இருந்தான். இவன் நம்மளை எந்த நேரமும் பின் தொடருறான். இவன் மேல தான் சந்தேகமா இருக்கு. கேசவனை பத்தி விசாரிச்சீங்களா..? அவன் ஓடி போனதுக்கு இவன் கூட காரணமா இருக்கலாம் “
“இல்லை. இங்கேயிருந்து தகவல்லை அடிக்கடி தருணுக்கு சேர் பண்ணிருக்கான். எஸ்டிடி கால் அதிகமா வந்திருக்கு. தேடிட்டு தான் இருக்கோம்...” என்கவே,
“அதெல்லாம் இப்போதைக்கு ரவியும், என் அண்ணனும் பார்த்துப்பாங்க. நீங்க இதை பத்தி நினைச்சி கவலைப்படாதீங்க..? தப்பு பண்ணுனவன் எங்க போக போறான். என்னைக்கா இருந்தாலும் தண்டனை கிடைக்க தான் போகுது...” என்றோ விஜய் கூறியதை இன்று அவள் கூறினாள்.
கோசலை சில நாட்களுக்கு இவர்களோடு இருப்பதாக கூற சரியென வேந்தன் மட்டும் சென்று விட்டான். இரவு உணவினை சமைத்து தன் கரங்களாலே கோசலை ஊட்டி விட்டார்.
“நீங்க ஹோட்டலுக்கு போகலையா கோசலையம்மா..?”
“நீ இல்லாம எப்படி..? என்னைக்கும் நீ வரையோ அன்னைக்கு நம்ம ரெண்டு சேர்ந்து போகலாம்...” என்க, உணவருந்தி முடித்து சிறிது நேரம் அமர்ந்து பேசி மாத்திரையைக் கொடுத்து விட்டு கோசலையோ வெளியேற முயன்றார்.
அன்னையை பின் தொடர்ந்து அவளும் வெளியே வர, “ஏய்..! நீ எங்க வர்ற..? விஜய் கூட இருந்து கவனிச்சிக்கோ. திடீருன்னு நைட் ஏதாவது தேவைப்பட்டா..?” என்றதும், சரியென ஒத்துக் கொண்டாள்.
கோசலை சென்ற பின் கதவினை மூடி விட்டு. திரும்ப இதழோரம் புன்னகை மின்ன அவளைக் கண்டவாறு இருந்தான். நீண்ட நாட்களுக்கு பின் அவனின் புன்னகையை கண்டு ஒரே ஒரு நொடி ரசித்து பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
“பெட் நீளமான தானே இருக்கு. இங்கே வந்து படுக்கலாம்ல...”
“தேவையில்லை..”
“ஏன் பயமா..?”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. தூங்கும் போது உருண்டு படுக்குற பழக்கம் இருக்கு. அதான் நான் இங்கையே படுத்துக்குறேன். ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க...” கூறியவளோ பெட்சீட் ஒன்றை எடுக்க,
“அப்போ பியூச்சர்ல எனக்கு நல்லா வசதியா போச்சு..?” புருவம் உயர்த்தி கூறவே, நொடியில் புரிந்துக் கொண்டவளோ முறைப்போடு படுத்து விட்டாள். உள்ளுக்குள் சிரிக்கும் வெட்கச்சிரிப்பினை அவளின் முகமோ அவனுக்கு தெளிவாக காட்டிக் கொடுத்தது.
இப்போது அந்த அறையின் அரை வெளிச்ச மட்டுமே சூழந்திருக்க ஏனோ இருவருக்கும் உறக்கம் என்பதே வரவில்லை. திரும்பி படுக்க விழித்திருக்கும் தன்னவனைக் கண்டவளோ அவனைக் கண்டாள்.
மௌனமோடு அந்த தனிமையில் சத்தமில்லா நேரத்திலே இருவரின் மனங்கள் ஒன்றினைய விழியால் காதலை பரிமாறிக் கொண்டனர்.
‘உன் கண்களை கண்டவுடன் என் கண்களின் கண் சிமிட்டும் தன்மை கொள்ளையடித்து விட்டது. என் கண்ணே..! உன் கண்கள் செய்த மாயம் காயமானதடி என் இதயம். எப்போது மாறாத அன்பின் மௌன மொழியாய் நீ..! என்று என் வாழ்வில் உரிமையாய் வலம் வர போகிறாய்...’
‘என் மனச்சிறையில் இருக்கும் எண்ணங்களோ இன்னுமா என் விழித்திரை மூலம் உனக்கு புரியவில்லை...’
‘எதற்காக என் விழிகள் உன்னை தேடுகிறது..?’
‘என் மனமே உன்னை நாடுகிறதே..!’
இருவரும் கண்களாலே பார்த்து பேசிக் கொண்டு எப்போது தான் நித்திரைக்குச் சென்றார்கள் என்றே தெரியவில்லை. மறுநாள் இருவருமே தாமதமாக தான் எழுந்தனர்.
மகிழினியிடம் மட்டுமே அழைப்பு விடுத்தவனோ அன்று வேந்தனுக்கு அழைப்பு விடுத்து அலுவலகத்தில் சென்று விசாரிக்குமாறு கூறினான்.
“யார் நீங்க..? எங்களுக்கு ஹெல்ப் பண்ணுறீங்கன்னு புரியுது..? ஆனா ஏன் மறைஞ்சி இருந்து பண்ணுறீங்க..?”
“சொன்னது மட்டும் செய்ங்க வேந்தன். ஆபிஸ்ல போய் விசாரிங்க...” என்றதும், சரியென வைத்து விட்டான்.
பின் மகிழினியிடம் கைபேசியில் கூற, விஜய்யோ ரவியையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கூறினான்.
ஆர்.எஸ் நிறுவனத்தின் முன்னே வந்து வேந்தன், ரவி இருவரும் இறங்க, தாங்கள் வருவதை யாரிடமும் கூற வேண்டாமென கூறியிருந்தான் வேந்தன். உள்ளே நுழைய எதுவும் ஆதாரம் கிடைக்குமா..? எதற்காக அப்படி கூறினான்..? என்ற எண்ணத்தில் வரவேற்ப்பில் நின்று பார்வையால் அலசினர்.
வரவேற்ப்பில் இருந்த பணிப்பெண் யாரை சந்திக்க வந்திருப்பதாக கேட்க, மகிழினி அண்ணன், விஜயின் தோழன் எனக் கூறி உள்ளேச் சென்றனர்.
ரவியோ வேலை செய்யும் அனைவரையும் சந்தேகப் பார்வையோடுக் காண, அந்த நொடி ரவிக்கு அழைப்பு வந்தது அவனிடமிருந்து.
“ஆபிஸ் போயிட்டீங்களா..? பழைய டீடைல்ஸ் இருக்குற பைல் எடுத்து இதுக்கு முன்னாடி எதுவும் டெத்கேஸ், சூசைடுகேஸ் இந்த நிறுவனத்துல நடந்திருக்கா..? யாராவது வெறுத்துப் போய் ஆபிஸ்சை விட்டு போனாங்களா..? இல்லை பழிவாங்குவேன்னு ஆத்திரத்தோடு போனாங்களா..? இப்படி ஏதாவது நடந்ததா தேடி பார்த்து விசாரிங்க...” எனக் கூறி வைத்து விட, அதே மாதிரியே இருவரும் நடந்துக் கொண்டனர்.
முதலில் கோப்புகளை அனைத்தையும் சரி பார்க்க, பின் அங்கே பல வருடமாக வேலை பார்த்தவர்களிடம் விசாரிக்க, ராமமூர்த்தியின் பேச்சிலும், பார்வையிலும் சந்தேகம் இருப்பது போல் தோன்றியது.
வேந்தன், ரவி இருவரும் சேர்ந்து விசாரிக்க அதே நேரம் ராமமூர்த்தியின் வார்த்தையில் ஏதோ ஒரு மறைமுகம் இருப்பதை போல் உணர்ந்தனர்.
பின் அவரை மட்டும் தனியாக கான்பிரன்ஸ் அறை ஒன்றிருக்க அழைத்துச் சென்று, “சார் உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. உண்மையை சொல்லுங்க. எதுக்காக பதட்டப்படுறீங்க..? யாருக்கு பயப்பிடுறீங்க..? நீங்க எதுவும் தப்பு பண்ணிருக்கீங்களா..? ஒரு வேலை சத்தியவதனி மேடம் இறந்ததுக்கு காரணம் நீங்க தானோ..?” மாறி மாறி கேட்க, பயந்து நடுங்கியே போனார்.
சில நொடி மௌனமாக அமர்ந்திருந்தவரோ, “என் குடும்பம் இப்போ அவங்களோட கட்டுப்பாட்டுல இருக்கு. நான் ஏதாவது சொன்னா என் குடும்பத்தாளுங்களை எதுவும் பண்ணிருவாங்க...” வியர்வை சிந்த கூற,
“யாரோட கட்டுப்பாட்டுல இருக்காங்க. யாருக்கு இப்படி பயப்பிடுறீங்க..? இங்கே பாருங்க தைரியமா சொல்லுங்க. இவர் கிரைம் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர், நான் போலீஸ் நாங்க பார்மல் டிரஸ்ல வந்ததுக்கு காரணம் யாருக்கும் தெரியாம தான் விசாரிக்கிறோம். பிரச்சனை வராது சொல்லுங்க நாங்க பார்த்துக்குறோம்...”
“இந்த ஆபிஸ்ல நடக்குற எல்லா விசியமும், அப்பறம் சத்தியவதனி மேடம் பத்தி எல்லாமே வரதன்னு ஒருத்தர் இருக்காரு. அவர் கிட்ட சொல்லணும்..?”
“ஏன் அவர் யாரு..?”
“சத்தியவதனி மேடம் பார்க்குற அதே தொழில் தான் அவருமே பார்க்குறாரு. முதல பணத்துக்கு ஆசைப்பட்டு இங்கேயிருக்கிற தகவல் எல்லாத்தையும் கொடுத்தேன். தொழில் போட்டி நினைச்ச எனக்கு அப்பறம் தான் அவர் ஏதோ தப்பு பண்ணுனாருன்னு புரிஞ்சது..? எனக்கு பயமா இருக்கு நான் எந்த தகவலையும் சொல்ல மாட்டேன்னு சொல்லும் போது என் மனைவி பிள்ளைகளை கொன்னுருவேன்னு சொல்லி மிரட்டினாங்க. ஆபிஸ் விசியத்தை எப்போயாவது தான் கேட்டாங்க. ஆனா சத்தியவதனி மேடம் எப்போ எந்த நிமிஷம் எங்கே இருப்பாங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நானும் தகவல்லை கொடுத்துட்டே இருந்தேன்...”
“எத்தனை வருசமா இது நடக்குது..?”
“நாலு வருஷம் கிட்ட ஆச்சு சார்...”
“அவ்வளோ நாளா நீங்க எல்லா தகவலையும் சொல்லிருக்கீங்க..? இதை ஏன் நீங்க போலீஸ் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை. மிரட்டுனா அவங்க சொன்னதை செஞ்சிருவீங்களோ..?”
“நான் எங்க போலீஸ் கிட்ட போயிருவேன்னு நினைப்புல என் பொண்ணு, மனைவியை தப்பா வீடியோ எடுத்து வச்சி...” அதற்குள் மேல் அவரால் கூற முடியாது தலைகுனிந்து கலங்க, தோளில் ஆதரவாய் கை வைத்தனர்.
“சரி அந்த வரதன் சத்தியவதனி மேடம் இறந்ததுக்கு அப்பறம் எதுவும் இன்பர்மேஷன் கேட்டானா..?”
“இருக்கு சார்...” எனக் கூறி வாட்ஸ்அப்பில் வரதனின் எண்ணில் டிபியாக இருந்த அவரின் புகைப்படத்தை காட்டினார்.
“இவரோட குடும்பம் பத்தி ஏதாவது தெரியுமா..?”
“இவரு தொழில் மட்டும் தான் இங்கே பார்க்குறாரு. இவரோட குடும்பம் எல்லாரும் கோயம்புத்தூர்ல இருக்குறதா சொன்னாங்க. யாரெல்லாம் இருக்காங்க தெரியாது..? ஆனா இங்கே பேக்டரி வச்சிருக்காங்க. அதுல அவரோட பாட்னர்ஸ் ஆதிகேசவன், விநாயகம் ரெண்டு பேர் இருக்காங்க. ஆதிகேசவங்குறது விஜயநேத்ரனோட பெரியப்பா..?” என்க,
‘ஏதோ இடிக்கிறதே..? இவர்கள் இதற்கு காரணமில்லை என நினைத்தால் மறுபடியும் இவர்களிடமே வந்து நிக்கிறதே..?’ யோசித்தனர் இருவரும்.
“சரி இது இருக்கட்டும். இந்த நிறுவனத்துல நீங்க வந்ததுக்கு அப்பறம் யாராவது இறந்து போயிருக்காங்களா..? பேக்டரிலையும் தான். விபத்து, சூசைடு, இல்லை யார் மேலையாவது கம்பிளைன்ட் இப்படி..?”
“எனக்கு தெரிஞ்சி ஒரு நாலைஞ்சு கேஸ் இருக்கு. பேக்டரில பவர்ஷாக் பட்டு இறந்து போனாங்க. இங்கையும் பேமிலில பிரச்சனை தாங்க முடியாம ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிட்டாங்க. அப்பறம் அக்கவுண்ஸ் ப்ராபளம் ஒன்னு வந்து அதுல ஒருத்தன் சிக்கி பெரிய பிரச்சனை வந்து மனசு தாங்காம சூசைடு பண்ணிட்டான்...” என்க,
“அப்படியா இவங்க எல்லாரோட டீடைல்ஸ் எப்படி எப்போ இறந்தாங்க. உண்மையான காரணம் என்னென்னு எனக்கு ரிப்போர்ட்டா தாங்க..?”
“சரி சார். ஆனா அதுக்கு நேரம் வேணும்..?”
“ரெண்டு நாளுல ரெடி பண்ணி தாங்க. இது எங்களோட பெர்சனல் நம்பர். அந்த வரதன் கால் பண்ணி வேற ஏதாவது கேட்டா எங்க கிட்ட சொல்லுங்க. உங்க பேமிலிக்கு எந்த பிரச்சனையும் வராம நாங்க பார்த்துக்குறோம். எங்க ஆளுங்க உங்க குடும்பத்தை கண்காணிப்பாங்க...” எனக் கூறி அவரின் முகவரியையும் வாங்கிக் கொண்டு இருவரும் சென்றனர்.
மாலை நேரம் போல் விஜயநேத்ரன், மகிழினி இருவரோடு அமர்ந்து, இன்று விசாரித்ததை பற்றி கூறினார்.
‘அத்தையின் உதவியாளாராக இருந்த ராமமூர்த்தியா உடனிருந்து தகவல்லை கொடுத்திருக்கிறார்..?’ நம்ப முடியாது அமர்ந்திருந்தாள்.
“இப்போ என்ன பண்ண எப்படி விசாரிக்க..?”
“அப்போ வரதன் தான் சத்தியவதனி இறந்ததுக்கு காரணம்மா..?” மகிழினி கேட்க,
“அப்படியும் சொல்ல முடியாது. இன்பர்மேஷன் கேட்டிருக்கானே தவிர அவன் தான் முழுக்காரணமும் சொல்ல முடியாது. ஏன் இந்த வீட்டுல வேலை பார்த்த கேசவன் அவனும் தான் அடிக்கடி தருணுக்கு இன்பர்மேஷன் ஷேர் பண்ணிருக்கான். அப்போ தான் சத்தியவதனி மேடம்மை கொன்னவன்னு சொல்லிற முடியுமா என்ன..?” வேந்தன் சிந்தனையோடு கூறினான்.
“நீங்க ரெண்டு பேரும் எனக்காக ஒரு உதவி பண்ணுறீங்களா..?”
“என்ன விஜயன் சொல்லு..?”
“கோயம்புத்தூர் போய் கொஞ்சம் விசாரிச்சிட்டு வரீங்களா..? வரதனோடு குடும்பத்தை பத்தி. எனக்கு என்னமோ அந்த வரதன் இவ்வளோ டீப்பா இறங்கிருக்காங்கன்னா ஏதோ இருக்குன்னு தோணுது...”
“சரி. அப்போ நாளைக்கே கிளம்புறோம்...”
“பார்த்து அண்ணா ரெண்டு பேரும் கவனமா இருங்க. நீங்க போற விசியம் விசாரிக்கிறது எதுவுமே வரதனுக்கு தெரியாம பார்த்துக்கோங்க...” மகிழினி கூற சரியெனக் கேட்டுக் கொண்டனர்.
மாலை நேரம் தன் கைபேசியை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஒருவனின் முன்னே கையில் காபீயோடு வந்தாள் ஒரு பெண்.
“ காஃபீ...”
“தேங்க்ஸ்...” கூறியவாறு வாங்கிக் கொள்ள,
“அப்பா..!” அழைத்து ஓடி வந்து அணைத்துக் கொண்டு மடியில் அமர்ந்தாள் ஐந்து வயது சிறுமி.
“ஏஞ்சல் குட்டி. இன்னைக்கு விளையாட போகலையா..?”
“அப்பா..! எனக்கு இந்த வீடு வேண்டாம். நம்ம பழைய வீட்டுக்கு போவோம். அங்கே தான் என் பிரெண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க...”
“இல்லடா செல்லம். அங்கே நம்மளால போக முடியாது. கொஞ்சம் நாளுல இங்கே உனக்கு புதுபுது பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க. ஜாலியா என்ஜாய் பண்ணலாம். வா அதுவரைக்கும் அப்பா கூட விளையாடு...” கொஞ்சிக் கொண்டு கூறியவனோ தன்னோடு சேர்த்து தூக்கிக் கொள்ள, காஃபி கொடுத்த அந்த பெண்ணோ கண்டவாறு இருந்தாள்.
“நானும், பாப்பாவும் வெளியே போய் விளையாடிட்டு வரோம்...”
“கவலைப்பட வேண்டாம். ஒன்னும் ஆகாது...” எனக் கூறிவிட்டு வெளியே குழைந்தையோடு வந்தவனோ ஊஞ்சலும், சிறு சிறு விளையாட்டு பொருட்களும் இருந்த இடத்தில் குழைந்தையை விட்டிட்டு யாருக்கோ அழைத்து பேச ஆரம்பித்தான்.
மறுநாள் விஜயநேத்ரனின் சொல் கேட்டு விசாரிக்க வேந்தன், ரவி இருவரும் சென்று விட, இப்போது மகிழினிக்கு போடப்பட்டிருந்த கட்டினை பிடித்து பேண்டேஜ் மட்டும் போட்டிருந்தாள்.
பேத்திக்கு திடீரென காய்ச்சல் வந்து விட விஜயிடம் சொல்லிவிட்டு மகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறி கோசலை தன் வீட்டுக்குச் சென்று விட்டார்.
விஜய்க்கு தேவையான பழச்சாறினை கொண்டு வந்து கொடுத்தவளோ மடிக்கணினியை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டாள். முடிந்தளவு விஜய் முகத்தை பாராது தவிர்த்து இருக்க அதனை புரிந்தே அமைதியாக இருந்தவனோ அன்று கேட்டே விட்டான்.
“என் முகத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளோ கேவலமாவா இருக்கே..?”
“எதுக்கு இப்படி பேசுறீங்க..?”
“பின்ன நீ பார்க்கவே மாட்டிகே...”
“பார்க்கணும். அவ்வளோ தானா சொல்லுங்க என்ன விசியம்..?” அவனுக்கு நேராக திரும்பி அமர்ந்துக் கேட்க, குறும்போடு ஒற்றை கண்ணை சிமிட்டி இதழ் குவித்தான்.
அவனின் இந்த திடீர் செய்கையில் திகைத்து விழிகள் விரிய மிரண்டவளோ பின் முறைக்க, “இப்போயெல்லாம் என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா இருக்கே..? உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. பிக்ஸ் பண்ணுன நாளுல நம்ம கல்யாணம் நடக்க முடியாம போகுன்னு நான் நினைச்சி பார்க்கல...” ஏக்கமாய் பெருமூச்சு விட்டு கூற,
“உங்களுக்கு இப்படி எல்லாம் பேச தெரியும்மா. மத்தவங்களை என்னைக்கும் நீங்க நினைச்சதே கிடையாது இதுல ரசிக்கிறீங்களா அதுவும் என்னை போய்..? என் மேல உங்களுக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததே இல்லையே..? என் அம்மா இறந்ததுக்கு காரணம் நீ தான்டி வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவீங்களே மிஸ்டர் விஜயநேத்ரன். இப்போ கொஞ்சம் நாள்லா ஏன் வித்தியாசமா பீகேவ் பண்ணுறீங்க..? ஆமா எப்படி திடீருன்னு உங்களுக்கு பிடிக்க ஆரம்பிடிச்சது. முன்னே இருந்த மாதிரி தானே இப்பவும் இருக்கேன். ஒரு வேலை உங்களுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு உங்க காலுக்கு கீழே அடிமையா நீங்க சொல்லுறதை மட்டுமே கேட்குறதால மனசு மாறிடுச்சோ..?” கோவத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வார்த்தையால் மட்டும் வாதாடினாள்.
முகம் சுருங்க நொடியில் விஜயநேத்ரனோ வாடிவிட, “என்னாச்சு..? முன்னாடி எல்லாம் நான் ஏதாவது சொன்னாலே சண்டைக்கு முறைச்சிட்டு வந்து நிப்பீங்க இன்னைக்கு என்ன அமைதியாக இருக்கீங்க..? ஓ அடிபட்டதுனால எழுந்திருச்சி வந்து என் கழுத்தை பிடிக்க முடியலையோ..! நான் வேணா உங்க கிட்ட வரட்டா. சின்ன வயசுல இருந்து நான் காயம்பட்டா குளிர்காயிற ஆள் தானே நீங்க..? இப்போ மட்டும் என்ன..?” என்க,
“போதும் மகிழினி..! ஏதோ தெரியாம சொல்லிட்டேன். இனி உன் முகத்தை கூட பார்க்காம இருக்கேன் போதுமா.? நான் இத்தனை நாள் உன்கிட்ட கடினமா நடந்துக்கிட்டு என் தப்பு தான் மன்னிச்சிரும்மா மன்னிச்சிரு...” இரு கரம் குவித்து கூறியவளோ படுக்கையின் பின்னே சாய்ந்து அமர்ந்தவாறே விழி மூடினான்.
பட்டென பேசிவிட்ட பின்னே தவறினை உணர்ந்தவளோ தன்னவனைக் காண, அமைதியாக வருத்தமோடு விழி மூடிக் கொண்டிருப்பவனை காண முடியவில்லை.
“ச்சே..! இப்படி பண்ணிட்டியே மகிழ். அவனுக்கு மனசுல நேசம் வந்ததே அபூர்வம். நீ என்னடானா புசுக்குன்னு இப்படி சொல்லிட்டே..? எவ்வளோ அழகா கண்ணடிச்சி ஆசையா பேசி இத்தனை நாள் மென்மையாய் நடந்துக்கிட்டா ஆனா நீ..?” தன்னை தானே திட்டிக் கொண்டவள், அவனை அழைத்தாள்.
“விஜய்..! விஜய்..!” மௌனம் மட்டுமே,
“ஐயோ..! இப்படி கெஞ்ச வைக்கான்னே..? போடா சொல்லிட்டு போக மனசும் வர மாட்டிங்குது...” மனமோ புலம்ப, அவனின் அருகில் வந்து அமர்ந்தவளோ கரங்களை பற்றினாள்.
“சாரி விஜய்..! ஏதோ டக்குன்னு அப்படி பேசிட்டேன்...”
“நீ பேசுனதும் சரி தானே..? தப்பு என் மேல தான். என்னை மன்னிச்சிரு. உன்னை ஒவ்வொரு நொடியும் காயப்படுத்துனது என் தப்பு தான். என் அம்மா கூட இல்லாம போனதுனால தானே என்னை விட்டு போனாங்க. இப்போ நான்...” கூறிக் கொண்டிருக்கும், அவனின் அதரங்களை தன் கரங்களால் மூடினாள்.
“இந்த நேரம் நீங்க எதையும் நினைச்சி மனசை போட்டு குழப்பிக்காதீங்க சரியா..? எல்லாம் சரியாகிரும்...” மென்மையாய் நம்பிகையோடு கூறவே, சில நாட்களாகவே அவளிடம் தான் உருகுவது உணர்ந்துக் கொண்டான்.
தீராக்காதல் : 28
வரதனின் குடும்பத்தார் கோயம்புத்தூரில் எங்கு இருக்கிறார் என்பதை பற்றி ஒரு வாரமாக விசாரித்த ரவி, வேந்தன் இருவருமே அங்கு பயணித்தனர்.
அங்கு தங்களுக்கு டிபார்ட்மெண்டில் தெரிந்த ஆட்கள் இருக்கவே அவர்களிடம், “என்னாச்சு நான் போட்டோ அனுப்புனேன்ல அவரை பத்தி இங்கே விசாரிச்சீங்களா..?” கேட்க,
“எஸ் சார் விசாரிச்சோம். நீங்க அனுப்புன போட்டோல இருந்த வரதனோட சித்தப்பா, இங்கே கட்சில பெரிய பதவில இருக்காங்க. அதுவும் போக அந்த வரதனே பினாமியா இருக்கான்னு கேள்விப்பட்டோம். ஆனா ஆதாரம் தான் எங்களுக்கு கிடைக்கல..”
“அப்படியா வீட்டு அட்ரெஸ் கொடுங்க...”
“சார் அவங்க ஜாய்ன் பேமிலியா இருக்காங்க. ஒரு படையே அவங்க வீட்டுல இருக்கு. எல்லாரும் பெரிய பெரிய ஆளு கூட டச் வச்சிருக்காங்க...” என்றதுமே, புரிந்து விட்டது தங்களின் பதவியை வைத்து இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று.
வருமானவரி சோதனையை ஆட்களை ஏவிட்ட ரவி, அவர்களிடம் தங்களின் விசாரணைக்கு உதவுமாறு கூறி தானும் வேந்தனும் அந்த வீட்டுக்கு மற்ற ஆட்களோடு ரைடு சென்றனர்.
திடீரென சில கார்கள் வந்து நிற்க, வரதனின் சித்தப்பா சவுந்தராஜன் அப்போது கட்சி,வேஷ்டி சட்டையில் வெளியேச் செல்ல கிளம்பி வந்தார். அந்த வீட்டில் வெளியே கட்சி ஆட்களும் சிலர் சுவுந்தராஜனுக்கு கூஜா தூக்க நின்றிருந்தனர்.
தங்களின் அடையாள அட்டையை காட்டி ரைடு என்று கூறி, வெளியே யாரும் செல்லக் கூடாது என்று கூறினார். குடும்பத்தார் அனைவரையும் ஹாலுக்கு வர கூறவே படையே வந்து நின்றது.
சுவுந்தராஜன் மகன், மகள், மருமகன், பேரன்,பேத்தி, வரதனின் மனைவி, மகள் என்று வந்து என்னவோ ஏதோவென்று நின்றனர்.
சவுந்தராஜன் மனமோ, ‘திடீரென எந்த முன்னறிவுப்பு இல்லாதது எப்படி வந்தனர். இதுக்கு தான் அரசாங்க அதிகாரிக்கு ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கொடுக்கிறானே..? இப்போது எப்படி..? முடித்து விட்டு கணக்கு கேட்பார்கள் என்ன சொல்வது..?’ யோசனையோடு அமர்ந்திருந்தார்.
மற்றவர்களும் வேந்தனும், ரவி தனித்தனியாக அங்கிருந்த அறைக்குச் சென்று சோதனை செய்ய, இதில் இவர்களின் சந்தேகம் அதிகரித்தது. காரணம் பேரன், பேத்திகளின் புகைப்படம் தவிர ஒரு போட்டோ கூட எங்கையும் இல்லாமல் போனது.
‘இது எப்படி சாத்தியமாகும்..? கூட்டு குடும்பமாக வாழ்பவர்கள் ஏன் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை...’ நினைத்து தேடலை துடங்கினர். அப்படி தேடிக் கொண்டிருக்கும் போது பல மணி நேரம் கழித்து கப்போர்ட் ஒன்று மூட்டப்பட்டது தெரிந்தது.
“இதை யாரோடது வந்து திறங்க...” குடும்பத்தாரை கண்டு கூற, வரதனின் அன்னை, வயதான பாட்டியின் அறை அது.
“அதுல ஒன்னுமில்லை...” சவுந்தராஜன் கூறவே,
“திறந்து காட்டுங்க. இல்ல நாங்க உடைக்க வேண்டியதா இருக்கும்...” என்றதும், பாட்டியும் தளர்ந்த நடையோடுச் சென்று தன்னிடம் இருந்த சாவியை வைத்து திறக்க, அதில் புத்தங்களும், போட்டோ பிரேமும் தான் இருந்தது.
“பார்த்தீங்களே இது எல்லாம் நான் எழுதிய என்னோட பொக்கிஷமும், என் குடும்பத்தாளுங்க போட்டோவும் தான்...” என்க, வேந்தன், ரவியை ஒரு பார்வை பார்க்க, மற்றவர்களை உள்ளே அனுமதிக்காது அங்கையே தேடுவது போல் சைகை செய்தான்.
குடும்ப புகைப்படம் ஒன்றினை எடுத்து அதனைக் காண அதில் நினைத்தது போன்று வரதன் இருந்தான். எதிர்பார்க்காத ஒன்று என்னவென்றால் மீசை அரும்பி துடிக்கும் இளம் வாலிபனாய் அன்று மகிழினியின் மீது காரினை ஏற்றுவது போல் வந்ததாக கூறியவனும் இதில் இருந்தான்.
“இது என் மகன், இது என் மகனோட மகன் என் பேரன்...” என்க, அந்த நேரம் உள்ளே சட்டென நுழைந்தார் சவுந்தராஜன்.
“சோதனை பண்ண வந்தா அதை மட்டும் பண்ணாம எதுக்கு இந்த விவகாரம் எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க..?”
“இதுவும் எங்களுக்கு தேவை...”
“என்ன தேவை..? என்னை நினைச்சிக்கிட்டு இருக்கீங்க..? நான் நினைச்சா இப்போ இந்த நிமிஷம் உங்களை ஒன்னுமில்லாம பண்ண முடியும். பண்ணட்டா...”
“உங்க வீட்டு வாசல் பக்கம் மீடியா ஆளுங்க இருக்காங்க, நீங்க எங்களுக்கு ஒத்துப் போக மாட்டிக்கீங்க..? எங்களையே மிரட்டுறீங்க சொல்லட்டா..?” என்றதும், பேச முடியாது பல்லை கடித்து அமைதியானார்.
“இவன் இவங்க எங்க இருக்காங்க இவங்களோட பேர் என்ன..?” தெரிந்தே உறுதிபடுத்த கேட்க,
“சென்னையில என் மகன் ஏதோ தொழில் பண்ணுறான்...”
“அம்மா...” அடக்குவது போல் சவுந்தராஜன் கூற, மற்றவர்களை அழைத்து இவரை வெளியே அழைத்துச் செல்ல கூறினான்.
“வரதன்ப்பா இவன் பேர்...”
“இவரோட பேமிலி...” என்க,
கண் கலங்கியவரோ, “மருமக,மக இங்கே தான் இருக்காங்க. இவனும், பேரனும் சென்னையில இருக்காங்க. ஆனா ஒரு நாளும் என் மூத்த பேரன் வந்ததில்லை...” கவலையோடு கூற,
“ஏன்..?”
“அவன் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவங்க யாரையும் அவனுக்கு பிடிக்காது. இவங்களுக்கும் அவனை பிடிக்காது...”
“ஓ அப்படியா..? இதுல யார் மூத்த பேரன்...”
“இதோ இவன் தான் சசி. இவன் ரெண்டாவது பேரன் சீலன். இவங்க ரெண்டு பேருமே வரதனோட பிள்ளைகள் தான்...” என்க, தன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க வெளியே ஹாலில் அமர்ந்திருந்த சவுந்தராஜனோ திடீரென தன்னை மடக்கிய ஆத்திரத்திலும், வரதனுக்கு தகவல் கொடுக்க முடியாத கடுப்பிலும் அமர்ந்திருந்தார். அவருக்கோ சந்தேகம் வந்தது இவர்கள் உண்மையில சோதனை செய்ய தான் வந்தார்களா என்று..?
‘ஐயோ..! இந்த ஆத்தா கிழவி வேற விபரம் தெரியாம எல்லாத்தையும் உளறிட்டு இருக்கே..? பெரிய பிரச்சனையை இழுத்து விடுதே. என்ன பண்ண..? என்ன பண்ண..?’ யோசிக்க,
பின் வேந்தன் மாடியேறி அங்கே சோதனை செய்ய போவது போல் மற்றவர்கள் அறியாது தன்னுடைய காவல் அதிகாரிகளுக்கு உடனே அழைத்து வரதனை எங்கும் செல்ல விடாது கைது செய்யுமாறு கூறினார்.
“ஆதாரம் என்கிட்டே இருக்கு. யாரும் தடுக்க வர மாட்டாங்க. சொன்னதை செய்யுங்க உடனே...” என்றதும் அவர்களும் சரி என்றனர்.
பின் வந்தவர்கள் மொத்த நகை, பணம் அனைத்தையும் கொண்டு வந்து வைத்து கணக்கு கேட்டுக் கொண்டிருக்க, ரவியோ வெளியே சோதனை செய்ய செல்லும் போது வெளியே செட்டில் பல வேன்களும், கார்களும் நிற்பது புரிந்தது.
அவர்களிடம் சென்று விசாரிக்க உள்ளே இருந்த குடும்பத்தாளுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. சிறிது நேரம் சென்று ரவி உள்ளே வந்து வேந்தனை கண்டு தலையசைத்தான். அதே நேரம் இங்கே திடீரென வரதன் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்த உடனே அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இரண்டும் ஒரே நேரத்தில் நடப்பதால் எதுவும் தகவல் கூற முடியாதுப் போனது. அதற்காகவே தான் ஒரே நேரத்தில் இதனை செய்தனர்.
மாலை நேரம் போல் அனைத்தும் முடிந்து கிளம்ப, அடுத்தநொடி சவுந்தராஜனோ தன் அன்னை பெரியவர் என்றும் பாராது திட்டி தீர்த்தார். வந்தவர்கள் வெளியேச் சென்ற கணமே வரதனை காவல் அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தகவல் வந்தது.
“ஐயோ..! இது வேறையா..?ச்சே..!” புலம்பியவரோ உடனே தன் கட்சி ஆட்களை அழைத்து தகவல் கூறி, மற்ற தகவல்கள் கசிவதற்குள் வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர்.
வேந்தன் இதில் தெளிவாக இருந்தான். மற்ற தன் மேலதிகாரியிடம் கூறினால் இதனை செய்ய விட மாட்டார்கள் என்று. அதனாலே ஒவ்வொரு விசயத்தை மறைமுகமாக செய்து மீடியாவில் மட்டும் தகவலை வெளிப்படுத்தினான்.
மீடியா சென்று வெளியுலகம் வந்தால் அவ்வளோ எளிதில் வெளிக்கொண்டு வருவது சிக்கல் என்பது புரிந்தது.
விரைவுச் செய்தியில், ‘ஆளுங்கட்சி ஆட்களிடம் பினாமியாக இருந்து வருகிறார் வரதன்...’ என்ற தலைப்பு செய்தி மட்டும் முதலில் வெளிவந்தது.
விஜயநேத்ரன், மகிழினி இருவருமே ஒரு வித தவிப்போடு தான் இருந்தனர். ஏன் என்றால் இதனை சரியாக செய்யாவிடில் பிரச்சனை வேந்தனுக்கும், ரவிக்கும் தான். உயிருக்கே கூட ஆபத்து வர வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்தனர்.
மகிழினியின் பயத்தை அறிந்தவனோ, “கவலைப்படாதே ஒன்னுமாகாது..?” கரங்களை பற்றிக் கொண்டு ஆறுதல் கூற, மென்மையாய் அவனின் தோளில் சாய்ந்தாள்.
வரதனை பற்றிய செய்தியைக் கேட்ட பின் ஆதிகேசவன், விநாயகம் இருவருமே அதிர்ந்தே விட்டனர். இல்லீகல் பணத்தினை வைத்தா தங்களோடு தொழில் தொடங்கினான். இப்போது இதனால் தங்களுக்கும் அல்லவா பிரச்சனை சூழ்ந்தது.
வரதனை பற்றிய ஒரு உருவமே தெரிந்ததிற்கே இப்படி என்றால் சத்தியவதனியின் கொலைக்கு இவர் தான் காரணமாக இருந்து அது தெரிய வந்தால் பின் என்னாகும்..?
அதே நேரம் செய்தியைக் கேட்ட வரதனின் மகன் சீலனுக்கு நம்பவே முடியவில்லை. எப்படி தந்தைக்கு இப்படியொரு நிகழ்வு நடந்தது..? உடனே யாருக்கோ அழைப்பு விடுத்து என்னவென்று கேட்டு பின் தங்களின் வீட்டுக்குள் நுழைந்தான்.
வழக்கம் போல் அந்த சிறுமியோ, “அப்பா..!” அழைத்தவாறு ஓடி வர அத்தனை பிரச்சனை இருந்தும் வெளிக்காட்டாது குழைந்தையை தூக்கி கொஞ்சினான்.
சமையலறை வாசலில் நின்று அதனை கண்ட அந்த மங்கையின் விழிகளை கரித்துக் கொண்டு வர, “எதுக்கு அழுகுறீங்க..? இதெல்லாம் நான் பார்த்துக்குறேன். உங்களுக்கும் பாப்பாவுக்கும் எந்த பிரச்சனையும் வராது..” என்க,
“இதெல்லாம் வேண்டான்னு நிம்மதியா இருந்திரலாம். நானும் என் பிள்ளையும் எங்கையாவது போயிறோம்ன்னு சொன்னேன். நீங்க தான் கேட்கல. இப்போ பாருங்க பிரச்சனை வெடிக்க ஆரம்பிடிச்சிரு. நீங்க கொலை பண்ணிருக்கீங்க அது மிகப்பெரிய தப்பு..?”
“அப்படியா..! அவங்க பண்ணினது கொலை தானே..? எப்படி சும்மா விட முடியும்...”
“இருந்தாலும்...”
“நீங்க உள்ளக்க போங்க முதல. நாளைக்கே பாப்பாவும், நீங்களும் கோயம்புத்தூர் கிளம்புங்க. எல்லா ஏற்பாடும் நான் உடனே பண்ணுறேன்...” என்றதும், அமைதியோடு மகளை வாங்கிக் கொண்டு அறைக்குள் சென்றவளோ அழுது கரைந்தாள்.
மறுநாள் விசாரனை அலுவலகத்தில் வரதனின் முன்னே சில அதிகாரிகளும் அமர்ந்திருக்க, வேந்தன்,ரவி இருவரும் ஒரமாக நின்றிருந்தனர். அனைத்து ஆதாரங்களும் கொடுத்திருக்க அதனை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் கொண்டு செல்லக் கூடாது என்று கட்சியாட்கள், மேலதிகாரிகள் பிரச்சனை செய்யவே இந்த விசாரனை நடைபெற்றது.
ஒவ்வொன்றாக பார்த்தவரோ அதிகாரிகள் அதிர்ந்தே விட்டனர். ஆறு வருடங்களுக்கு மேல பிளாக்மணி பணமாற்றம் நடந்து கொண்டிருப்பது புரிந்தது. சவுந்தராஜனும் தன் கட்சி ஆட்களிலும் சம்பாரிக்கும் பணத்தினை ட்ரஸ்டி கொடுக்கிறேன் என்ற பெயரிலும், கோவிலுக்கு கொடுக்குறேன் என்ற பெயரிலும் வரதனிடம் கொடுத்து தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள் என்பது தெளிவாக இருந்தது.
வங்கிகளில் மூலம் அல்லாது ஆட்களை வைத்தே பணத்தினை பரிமாற்றம் செய்திருப்பதை அவர்களின் வீட்டில் வேலை பார்க்கும் டிரைவரின் வாக்குமூலம் கொடுத்ததை வீடியோவாக இருந்தது. இதனை இரவோடு இரவாக வேந்தன், ரவி இருவரும் தங்களின் ஆட்களை வைத்து விசாரித்திருந்தனர்.
அதன் பின் ராமமூர்த்தி வாக்கு மூலத்தினைக் கேட்டு சத்தியவதனியின் இறப்பில் சந்தேகம் எனக் மகனான விஜயநேத்ரன் கொடுத்த கம்பிளைன்ட் அதனால் தாங்கள் விசாரித்தோம் என்பதை வேந்தனை எழுத்தாக கூறி இதுவரை விசாரித்த அனைத்தையும் அதில் கொடுத்திருந்தான்.
இனி வரதனுக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்பதை விசாரனை செய்த அதிகாரிகள் கூறி விட, என்ன செய்தார்கள்..? எப்படி சத்தியவதனியை இவர் கொலை செய்ததிற்கான காரணம் என்ன என்பதை விசாரிக்க அனுமதி வாங்கி வரதனை தன் பிடிக்கு கொண்டு வந்தான் வேந்தன்.
இருந்தும் என்ன செய்ய இங்கே கோயம்புத்தூர் செல்ல இரண்டு டிக்கெட்டை அழுதுக் கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு தலைமறைவானான் சீலன். தன் நெஞ்சோடு குழைந்தையை அணைத்த பெண்ணின் விழிகள் கண்ணீர் வழிந்தோடியது.
தன் இரண்டு வயது செல்ல மகள் கிஷ்மி தூங்க, இரவு உணவினை சமைத்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி.
ஹாலிங் பெல் அடிக்கும் ஓசை கேட்க, “அவங்க வந்துட்டாரு போல..? அதுக்குள்ளவா வந்துட்டாங்க...?” நினைத்துக் கொண்டு சென்று திறக்க, வாசலில் அயர்வோடு நின்றிருந்தான் சசி.
“வாங்க..! என்னங்க சீக்கிரம் வந்துட்டீங்க..?”
“ஒன்னுமில்லை...” கூறியவாறு மனைவியின் முகத்தை கூட காணாது விலகிச் சென்று விட, காதலித்து உருகி திருமணம் செய்த தன்னவனிடம் இருக்கும் வித்தியாசத்தை நொடியில் கண்டுக் கொண்டாள் தர்ஷினி.
உண்பதை கூட தவிர்த்து நெற்றியில் கைவைத்து அறையில் அமர்ந்திருந்தவனிடம் வந்து என்னவென்று கேட்க, “நான் எந்த தப்பும் பண்ணலடி. ஆனா ஆபிஸ்ல என்னை பேப்பர் போட சொல்லிட்டாங்க. அதுக்கு முன்னாடி...” கூற முடியாது கலங்க,
“முழுசா சொல்லுங்க..? என்ன பிரச்சனை..?”
“எங்க ஆபிஸ் எம்.டி சத்தியதவனி மேடம் திடீருன்னு என்னை கூப்பிட்டாங்க. நானும் சரின்னு போனேன். அவங்க என்கிட்டே..” எனக் கூற ஆரம்பித்தான்.
சத்தியவதனி தன் நிறுவனத்தில் கணக்கியல் துறையில் பணிபுரியும் சசியை அழைக்க, உள்ளே வந்தவனிடம், “அகவுண்ட்ஸ்ல பிரச்சனை இருக்கு. என்பது லட்சம் கிட்ட டேலியாகமா இருக்குன்னு ஆடிட்டிங் வந்தவங்க சொல்லிட்டு போறாங்க. என்ன இதெல்லாம்..? அந்த பணம் எங்கே..? பதிவு பண்ணி சரியா என்கிட்டே கொடுக்குறது தானே உன்னோட வேலை. இங்கே பாரு என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது என்ன காரணம் எப்படி காணாம போச்சு அப்படிங்குறதை கண்டுபிடிச்சி சொல்லு உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன்...” என உறுதியோடு கூறினார்.
இரண்டு நாட்கள் முடிந்த பின்னும் கூட எப்படி காணாமல் போனது என்பது தெரியாது தவித்தவனோ தனக்கு கொடுத்த நேரம் முடிந்ததும் மறுபடியும் சத்தியவதனி முன்னே வந்து நின்றான்.
“என்னாச்சு..?”
“சாரி மேடம். என்னால கண்டு பிடிக்க முடியல..?”
“அப்போ இன்னைக்கே நீ ரிசைன் பண்ணு. நோட்டி ஸ்பிரியர்ட்டு முடியுறதுக்குள்ள அந்த பணத்தை கொடுக்கணும் இல்லை அப்படின்னா பிளாக் மார்க் வாங்கி எந்த கம்பெனிலையும் வேலை பார்க்க முடியாம பண்ணிருவேன்...” என்றதும் மௌனமோடு வெளியேறினான்.
இப்போது மனைவியிடம் என்ன செய்வதென தெரியாது கலங்கிக் கூற, “நீங்க உங்க அப்பா, சித்தப்பா கிட்ட பணம் கேட்டு அதை கொடுத்துறலாம்ல...” ஆறுதல் உரைக்க கூறவே,
“ஏற்கனவே நம்ம காதலிச்சி கல்யாணம் பண்ணினது அவங்களுக்கு பிடிக்கலை. ரெண்டு வீட்டுலையும் ஏத்துக்கிடல. அவங்களுக்கு இந்த பணம் சாதாரணம். ஆனா நான் போய் கேட்டா எப்படி கொடுப்பாங்க..? ஆமா நான் ஏன் கொடுக்கணும் நான் தான் அந்த பணத்தை எடுக்கவேயில்லையே..?”
“அப்போ நோட்டிஸ் பீரியர்டு முடியிறதுக்குள்ள கண்டு பிடிச்சிரலாம். கவலைப்படாதீங்க..? தூங்குங்க...” எனக் கூறி தூங்க வைத்து விட, மறுநாள் அலுவலகம் சென்றான்.
அவனும் எவ்வளோ தேடி முயற்சி செய்து பார்த்து பலனில்லாது போக, அலுவலகத்தில் வேலை பார்த்த அனைவருமே அவனை குற்றமோடு அற்பமாய் காண, மனமோ தாங்க முடியவில்லை. ஒரு சிலர் நேரடியாக தவறுதலாக கேட்டு விட, மனைவியிடம் மறைத்தவனோ வேதனையில் தவறான முடிவு எடுத்து விட்டான்.
மதிய நேரம் உணவருந்த வராமல் டேபிளில் தலை சாய்ந்திருந்த சசி உடன் வேலை பார்பவர்கள் எழுப்ப, பட்டென கீழே விழுந்தான். உடனே மருத்துவனையில் சேர்க்க தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு இறந்து விட்டதாக தகவல் கொடுத்தனர்.
தர்ஷினிக்கு இந்த செய்தி பரவ உடன் யாரை அழைப்பதென தெரியாது சசியின் தம்பி சீலனுக்கு அழைத்து கூறிவிட்டு மருத்துவமனைக்கு வர, சடலமாக கொடுத்தனர் சசியை.
அழுது கரைந்து தனிமையில் தன்னை கூட நினைக்காது தவிக்க விட்டுச் சென்ற காதல் கணவனை எண்ணி உருகி ஒப்பாரி வைத்தாள்.
செய்தியறிந்து சத்தியவதனி காண வர, வேதனையில் அவரை திட்டி சாபமிட்டு தன் கணவன் உத்தமன் என்பதை வார்த்தையால் நிரூபவிக்க, சத்தியவதனி அந்த பெண்ணின் நிலைமை தன்னை போன்ற தான் கணவனை இழந்த நொடி எப்படி இருந்தோம்மோ அப்படி தான் தோன்றியது.
பின் சீலன் வந்து அண்ணியையும், அண்ணனின் உடலையும் இரவோடு இரவாக வாங்கிக் கொண்டுச் சென்று விட்டான். காரியம் முடிந்த பின் சவுந்தராஜனின் வீட்டில் யாருமே ஏன் வரதனின் மனைவி கூட ஏற்றுக் கொள்ளவில்லை.
இதே தங்கள் வீட்டுக்கு ஆண் வாரிசு இருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களோ என்னவோ..!
இப்போது கடந்த கால வாழ்க்கை அனைத்தையும் கவலையோடு நினைத்த தர்ஷினி மகளோடு கோயம்புத்தூர் செல்ல ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தாள்.
அந்த நொடி, “நீங்க தான் தர்ஷினியா..?” யாரோ தன்னை அழைக்க பின்னே திரும்பினாள்.
இங்கே சீலன் ஹோட்டல் அறை ஒன்றில் அமர்ந்திருக்க, திட்டமிட்டது எல்லாம் இப்படியாகி விட்டதே என்ற நினைப்பில் கடுப்போடு தீராத ஆத்திரமோடு அமர்ந்திருந்தான்.
சீலனுக்கு மனமோ கேட்கவில்லை. கடந்த கால நினைவுகள் அவனையும் சூழ்ந்தது. வீட்டில் ஏற்காது போக அண்ணியை மறுபடியும் சென்னைக்கே அழைத்து வந்தவனோ அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்க வைத்தான். சத்தியவதனியை மட்டும் முழுமையாக அறிந்து அவரின் நடவடிக்கைகள் தெரிந்து, சத்தியவதனி குடும்பத்தார் முக்கியமனாவர்கள் அறிந்து நாகப்பாம்பினை போல் பழிவாங்க முயற்சி செய்து இரண்டு வருடம் காத்திருந்தது கேசவனை தன் கட்டுப் பாட்டில் வைத்து பழி வாங்கினான்.
அவன் எடுத்த பல முயற்சிகள் தோல்வியை தழுவ சத்தியவதனி தனக்கு ஏதோ ஆபத்து என்பதை யூகித்தே மறைமுகமான ஏற்பாட்டையும் செய்து வைத்தார்.
சத்தியவதனி இறந்த செய்திக் கேட்டு வரதனோ அதிர்ச்சியோடு மகன் சீலனுக்கு அழைத்துக் கேட்க, அவனோ தானே காரணம் என்றான்.
அண்ணன் தன்னை நிரூபவிக்காமல் கோழையாக எல்லாம் இறந்தது எல்லாம் அவனின் கண்ணுக்கு தெரியவில்லை. இறந்ததுக்கு காரணம் சத்தியவதனி என்பது மட்டுமே அவனுக்குள் புதைத்து இருந்தது. அதற்கு முன் இவன் பழிவாங்க துடிப்பது யாருக்குமே தெரியாது. இடைப்பட்ட நாட்களில் தன் அண்ணியையும் தன் குடும்பத்தோடு பேசி வைத்து சேர்த்திருந்தான்.
“அடேய் லூசு பயலே..! இதுக்கு தான் சத்தியவதனி பத்தி எல்லாமே கேட்டியா என் கிட்ட..?” வரதனோ மகனை திட்டி தீர்க்க,
“ஆமாப்பா...”
“கொலைக்கார பாவி. எவ்வளோ பெரிய இடத்துல நீ கைவச்சிருக்கே. இந்த உண்மை மட்டும் வெளியே தெரிஞ்சா..?”
“தெரிஞ்சா பார்த்துக்கலாம். தப்பே பண்ணாத என் அண்ணன் சாக நான் சும்மா விடுவேன்னா..? உங்களுக்கு தெரியுமாப்பா. அண்ணன் இறந்த இரண்டாவது வாரமே அந்த பணம் காணாம போனதுக்கு காரணம் அந்த ஆபிஸ்ல வேலை பார்ககுற இன்னொருத்தன். ஆனா தப்பும் பலியும் மட்டும் அண்ணன் மேலையா..? இது என்ன நியாயம்..?”
“பண்ணுறதை எல்லாம் பண்ணி தொலைஞ்சிட்டே. இனி இந்த விசியத்துல தலையிடாம இரு. நானும், சித்தப்பாவும் சேர்ந்து பார்த்துக்குறோம்...”எனக் கூறி வைத்து விட, அப்போதைக்கு அவனும் சரி என்றான்.
பின் சத்தியவதனி இறந்ததை மாற்றி, மேலதிகாரியிடம் பணத்தைக் கொடுத்து, கேசவனையும் தங்களின் கைக்குள் வைத்துக் கொண்டு ஆக வேண்டிய அனைத்தையும் செய்து, இப்போது மகிழினி மருமகளானதில் மாட்டிக் கொண்டனர்.
மகிழினி இதனை விசாரிக்க முயற்சி செய்கிறாள் என்பது தெரிந்தே அவளை பயமுறுத்தி, அவமானப்படுத்தி, எவ்வளோ முடியுமோ அந்த அளவுக்கு விசாரிக்க விடாது செய்ய, எங்கையோ வந்த வேந்தன், ரவி மூலமாக பிடிபட்டனர்.
தன் காயங்கள் சரியாக, ஓரளவு விஜயும் தடியை ஊன்றி நடக்கவே, அன்று அலுவலகத்திற்கு வந்த மகிழினி ராமமூர்த்தியிடம் பேச அவரோ மன்னிப்பு வேண்டினார்.
“விடுங்க உங்களோட சூழ்நிலை அப்படி பண்ணிட்டீங்க..?”
“மகிழினி மேடம். உங்க அண்ணன் வந்து ஒரு ரிப்போர்ட் கேட்டாரு. ரெடி பண்ணி கொடுத்தேன். ஆனா இப்போ தான் ஒரு விசியம் அதுல நோட் பண்ணுனேன்...” என்க,
“ஆமா. அதுல என்ன..?”
“அகவுண்ட் பிராபளம் வந்து ஒரு பையன் இந்த கம்பெனில இறந்து போயிட்டான்...”
“எப்படி..?” என்றதும் நடந்த அனைத்தையும் கூறவே, யாரின் மீது தவறு என்றே அந்த நொடி அவளால் கூற முடியவில்லை.
“சத்தியவதனி மேடம் இறந்தவனோட மனைவிக்கு இருபது லட்சம் கொடுத்ததா பில் இருக்கு...”
“ஓ அப்படியா..?”
“ஆனா அந்த பணம் அப்படியே தான் இருக்கு. நான் பேங்க் கால் பண்ணி கேட்டதுக்கு ரிசிவர் இன்னும் அதை வாங்கிடல சொன்னாங்க. இரண்டு வருஷமா இது அது கிடைப்புல தான் கிடைக்கு...”
“காண்டக் நம்பர் எதுவும் இருக்கா..?”
“பேங்க் மூலமா அகவுண்ட் ஹோல்டர் நம்பர் வாங்கிருக்கேன் இருக்கு மேடம்...” எனக் கூறி அதனை கொடுக்கவே, வாங்கிக் கொண்டு தன்னறைக்குச் சென்றாள்.
‘தன் அத்தை சரியாக செய்தாரா அல்லது தவறாக செய்தாரா..? இல்லை அவன் தான் அவசரப்பட்டு விட்டானா..?’ யோசிக்க, அந்த நொடி விஜயநேத்ரனிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்ன பண்ணுற..?”
“விஜய். ராமமூர்த்தி என்கிட்டே ஒரு விசியம் சொன்னாரு...” எனக் கூறி அதனை கூறவே, விஜயநேத்ரனுக்கோ நடந்த அனைத்தும் கூறாமலே புரிந்து விட்டது.
இருந்தும் தெளிவுபடுத்த நினைத்து, “அந்த நம்பரை எனக்கு சென்ட் பண்ணி விட்டிட்டு இதை உன் அண்ணன் கிட்ட சொல்லிரு...” என்றதும் சரி எனக் கூறி அதன் படியே செய்தாள்.
வரதனை விசாரிக்க அனுமதி கிடைத்தும் மூன்று நாட்களாகியும் ஒரு வார்த்தை கூட அவரின் அதரங்களில் இருந்து வெளிவரவில்லை. அந்த நொடி தங்கையிடமிருந்து அழைப்பு வரவே, எடுத்து பேசினான்.
அதில் அவள் கூறியதை செய்தியைக் கேட்டவளோ உடனே வரதனின் மகன் புகைப்படம் அனுப்பி இது தான் அலுவலகத்தில் வேலை பார்த்தவனா எனக் கேட்க, அவளும் ராமமூர்த்தியிடம் கேட்டு ஆம்மென்றாள்.
இப்போது அவர்களுக்கு வரதன் கூறாமலே அனைத்தும் தெரிந்து விட, ஆதாரத்தை திரட்டி வரதனிடமே அதனைக் காட்டி கூற, உள்ளம் நடுங்க அதிர்ந்துப் போனார்.
‘சிறிய மகனை இதிலிருந்து காக்க அவர் பட்டபாடு அவருக்கு தானே தெரியும்..?’
ஹோட்டல் அறையில் அமர்ந்திருந்த சீலனுக்கு தன் அண்ணியிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்ன அண்ணி சொல்லுறீங்க..? இப்போ எங்கே இருக்கீங்க..? பயப்பிடாதீங்க..? பாப்பா உங்க கூட தானே இருக்காங்க..? இடம் சொல்லுங்க நான் உடனே வரேன். ஒன்னுமாகாது. யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க...” என வேகமோடு கூறியவனோ அறையிலிருந்து வெளியேறினான்.
காரினை எடுத்து தன் சித்தப்பாவிற்கு அழைத்து, “அண்ணியையும், பாப்பாவையும் யாரோ கடத்திட்டு போயிட்டாங்க. நம்ம ஆளுங்களை என் கூட நான் சொல்லுற இடத்துக்கு அனுப்புங்க...” என்றதும்,
அங்கே அவரோ, “சரிடா. ஆனா எனக்கு தெரிஞ்சி சத்தியவதனி கேஸ் சம்மந்தப்பட்ட யாராவது தான் இருப்பாங்க. இது உன்னை அவங்க வலையில சிக்க வைக்குறதுக்கான வழின்னு நினைக்குறேன். கவனமா இருடா..?” என்க,
“எனக்கு என்ன ஆனாலும் பராவாயில்லை. நான் நினைச்சதை முடிச்சிட்டேன். ஆனா அண்ணி, பாப்பாக்கு மட்டும் எதுவும் நடக்க கூடாது. அது தான் எனக்கு இப்போ முக்கியம்...” கூறிவிட்டு காரினை சீறிட்டு எடுத்து விரைந்தான் சீலன்.
தர்ஷினிக்கு தான் செல்ல வேண்டிய டிரைன் வந்து விட, மகளை தூக்கிக் கொண்டு கடந்த நினைவிலிருந்து மீள நினைக்கும் நொடி யாரோ அழைக்க திரும்பினாள்.
அங்கே விஜயநேத்ரனும், அவனோடு இன்னொருவனும் நிற்க, “நீங்க தான் தர்ஷினியா..?” கேட்க, அவளோ ஆமென தலையசைத்தாள்.
“சீலன் யார்..?”
“ஏன் கேட்குறீங்க..? என் ஹஸ்பண்ட்டோட தம்பி தான் அவங்களுக்கு என்ன..?” பிரச்சனை அவனுக்கு சூழ்ந்திருக்கிறது என்பதால் தவிப்போடு கேட்க,
“அவங்க இப்போ பிரச்சனையில மாட்டிட்டு இருக்காங்க. நீங்க வாங்க..” என்றதும், அவளும் தன் குழைந்தையை அழைத்துக் கொண்டு உடன் செல்ல, விஜயநேத்ரனும் உடன் இருந்தவனும் காரில் அழைத்துச் சென்றனர்.
ஒரு வீட்டின் முன் காரினை நிறுத்த, “இது யாரோட வீடு..? எதுக்கு இங்கே நிறுத்துறீங்க..? சீலனுக்கு என்னாச்சு..?” விடாது கேட்கவே,
“நீங்க சீலனுக்கு கால் பண்ணுங்க சிஸ்டர். பிரச்சனையில்லை. இந்த அட்ரெஸ் சொல்லுங்க. உள்ளே வாங்க...” பயத்தோடு நின்றாள்.
பின் கூறியது போல் சீலனுக்கு அழைத்து தகவல் கூற, குழைந்தையோடு சேர்ந்து அந்த வீட்டுக்குள் நுழைய, தான் யாரென விஜயநேத்ரன் கூறினான்.
“என் அம்மா இறந்ததுக்கு காரணம் அந்த சீலன் தான் எனக்கு நல்லாவே தெரியும். அதுக்காக ஆதாரமும் இருக்கு. அப்படியே இதை விட எனக்கு மனசு கேட்கல. உண்மை தெரிஞ்சும் என் அம்மா சாவுக்கு நான் நீதி வாங்கிக் கொடுக்காம இருக்க முடியாதுல. என்னை மன்னிச்சிருங்க சிஸ்டர். சீலனை பிடிக்க தான் உங்களை இங்கே கூட்டிட்டு வந்தோம். உங்களோட பாஸ்ட் லைப் பத்தி இப்போ தான் நான் கேள்விப்பட்டேன். உங்க ஹஸ்பண்ட் சசி கொஞ்சம் அவசரப்படமா இருந்திருக்கலாம்...”
“இங்கே பாருங்க அண்ணா..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் இப்போ தான் அதையே மறந்துருக்கேன். தப்பு முழுக்க என் ஹஸ்பண்ட் மேல தான். சத்தியவதனி மேடம் அவங்க பொறுப்புல சரியா தான் இருந்தாங்க. என் ஹஸ்பண்ட் உண்மையை கண்டுபிடிக்க முடியலைன்னா பேசி பார்த்திருக்கணும். அப்படி செய்யாம எங்களை விட்டிட்டு போயிட்டாரு. என்னோட பேரெண்ட்ஸ் நாங்க காதலிச்சி கல்யாணம் பண்ணும் போதே ஏத்துக்கலை. சசி இறந்ததுக்கு அப்பறம் துணையா இருந்தது சீலனும் அவங்க குடும்பமும் தான். அதுனால தான் என்னால ஒன்னும் பண்ண முடியல. உங்க அம்மா இறப்புக்கு நாங்க தான் காரணமும் நினைக்கும் போது இன்னும் வேதனையா நெஞ்செல்லாம் வலிக்குது அண்ணா. உங்க அம்மா ரொம்ப நல்லவங்க. சசி இறந்தப்பா என்கிட்டே வந்து ஆறுதலா பேசி பணமெல்லாம் கொடுத்தாங்க. என்னால அந்த பணத்தை ஏத்துக்க முடியலை. பணத்தை விட என் குழைந்தைக்கு சொந்தம், உறவு வேணும்ன்னு நினைச்சேன். ஆனா இப்போ அந்த குடும்பத்துல என் பொண்ணு வாழ எனக்கு விருப்பமில்லை..?” நடந்ததை நினைத்து அழுகையோடு தன் குழைந்தையை அணைத்துக் கொண்டாள்.
“எங்களால முடிஞ்ச உதவியை உங்களுக்கு நாங்க பண்ணுறோம். இந்த வீடு புதுசா வாங்கினது. இனி நீங்க இந்த வீட்டுல உங்க பொண்ணோட தாராளமா இருக்கலாம். உங்களுக்கு ஜாப் ஆபர் வாங்கி தரேன். வசந்த வாழ்க்கையா உங்க பொண்ணு கூட வாழ ஆரம்பிங்க சிஸ்டர். பணமா என் அம்மா கொடுத்தப்பே ஏத்துக்கலைன்னு தெரிஞ்சு தான் இந்த ஏற்பாடு பண்ணுனேன்...” என்க,
சில வினாடி மௌனமோடு இருந்தவளோ, “சீலன் ரொம்ப நல்ல பையன். எங்களை புரிஞ்சுக்கிட்டது அவன் ஒருத்தன் தான். அவனை விட்டிருங்களேன்...” கையெடுத்து கும்மிடவே,
“அண்ணி..! அண்ணி...” அழைப்போடு உள்ளே சீலன் வர, உடன் சில அடியாட்களும் வந்தனர்.
“டேய் நீயா..! உன்னை சும்மா விட மாட்டேன்டா...” கத்திய சீலன் தன் ஆட்களிடம் தாக்க கூற, தர்ஷினி தடுக்க வர கேட்ட பாடில்லை.
விஜயநேத்ரன் காயமோ இன்னும் முழுதாக குணமாகவில்லை. இதில் எங்கே அவன் சண்டையிட..? அவனுக்கு பதிலாக அந்த நொடி அரணாக இருந்தது உடன் இருந்தவனே..!
‘பத்து பேர் என்ன பத்தாராயிரம் பேரே வந்தாலும் சமாளிப்போம்டா...’ எண்ணியவனோ, தன் உருமேறிய தேக்கு மர தேகத்தை வைத்துக் கொண்டு சண்டையிட்டான்.
அதனைக் கண்ட விஜயநேத்ரன், “தன் அன்னை தனக்கு இவனை துணையாக வைத்தது சரி தான்...” என்ற நினைப்போடு,
“டேய் தம்பி பார்த்துடா..?” கூற, அவனோ திரும்பி இவனை பார்த்து சிரித்து விட்டு சண்டையிட்டான்.
காவல் அதிகாரிகள் என்று தான் சரியான நேரத்துக்கு வந்தார்கள். அடித்து முடிந்து ஓய்ந்த நேரம் வேந்தனும், சில காவல் அதிகாரிகளும் ரவியும் வந்தனர்.
வேந்தனும், ரவியும் பயில்வான் போல் நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தனர். முதல் முறையாக அவனின் முகத்தை கண்டாலும் அன்று மகிழினியை காப்பாற்றியது இவன் தான் என்பது புரிந்தது.
“நீங்க தானே அன்னைக்கு..?” வேந்தன் கூற வர,
“மச்சான்..! முதல இவனுங்களை கூட்டிட்டு போய் என்னென்னு பாருங்க. மத்ததை நைட் வீட்டுல பேசிக்குவோம்...” என்றதும், அனைவரையும் அழைத்துக் கொண்டுச் சென்றனர்.
தர்ஷினியை கண்டு ஆறுதல் உரைத்து சொந்தமாக தங்களை எண்ணிக் கொள்ளுமாறு கூறி அடிக்கடி வந்து பார்ப்பதாக நம்பிக்கையூட்டி உடன் இருந்த தம்பியை அழைத்துக் கொண்டு சென்றான் விஜயநேத்ரன்.
இரவு நேரம் ஹாலில் மொத்த குடும்பமும் கூடியிருக்க விஜயநேத்ரனும், உடன் இருந்தவனும் குற்றவாளியாக நின்றுக் கொண்டிருந்தனர்.
“என்ன நடக்குது இங்கே..? யார் இவங்க..?” விஜயனைக் கண்டு கோவமாக மகிழினி ஆரம்பிக்க,
“உன்னையும் சேர்த்து சொல்லிருவா அண்ணா...” என்க, அவனோ ஆமென தலையசைத்தான்.
“அப்போ நீங்க ரெண்டு பேருமே கூட்டு களவானிகளா..?”
“ஆமா அண்ணி. ஆனா சித்தி இறந்ததுக்கு அப்பறம் தான் நான் இவன் கிட்டவே பேச ஆரம்பிடிச்சேன். என் அப்பா பண்ணுற தொழில் சரி பேசுறது சரி எதுவுமே எனக்கு பிடிக்காது. இல்லீகலா நிறைய வேலை பண்ணிருக்காரு, அடுத்து என்னோட டார்கெட் அவர் தான். காலேஜ் முடிச்சதுமே வீட்டை விட்டு போயிட்டேன். நான் எங்கே இருக்கேன் என்ன பண்ணுறேன்னு யாருக்குமே தெரியாது. என் அம்மாவுக்கு கூட என்னை நினைச்சி கவலையில்லை. ஆரம்பத்துல இருந்து சித்தின்னா எனக்கு உசுரு. நான் காணாம போனதை நினைச்சி கவலைப்பட்டு ஆளை விட்டு என்னை தேடி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. அப்போ விஜய் தனியா வெளிநாட்டுல இருக்கான் அவன் கூட போய் இரு சொன்னாங்க. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன் லண்டன் போயிட்டேன். என்னை படிக்க வச்சது எல்லாமே சித்தி தான். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் படிச்சி முடிச்சதும், எனக்கு ஏதோ ஆபத்து இருக்குற மாதிரியே எனக்கு தோணுது. விஜய்யை சில ஆளுங்களை விட்டு கண்காணிக்கிறேன். அவனை நினைச்சா கவலையா இருக்கு. அவன் கூட போய் இருடா அப்படின்னு சொன்னாங்க. அப்போ தொழில் போட்டி பிரச்சனை உங்க கல்யாணம் முடிஞ்சது எல்லாமே என்கிட்டே சொல்லி ஏதோ மறைமுகமா என்னை சுத்தி நடக்குதுன்னு சொல்ல நானும் இவன் கிட்ட போனேன். ஆனா இவனுக்கு நான் யாருன்னே தெரியல. நான் வேற டாப்ஸ்ட் பெஸ்ட் பாடிகார்டா இருக்கணும் தான் என்னோட குறிக்கோளாவே இருந்தது. அப்போ சித்தி கிட்ட சொல்லி இவனுக்கே தெரியாம இவனை பாதுகாக்குற வேலையை பார்த்து இன்பர்மேஷன் சொல்ல சித்தி இறந்தது பெரிய ஷாக்காகிட்டு. என்னால நம்பவே முடியல. உடனே நான் இங்கே வர்ற இவனும் இங்கே வர சந்திச்சு பேசி புரிய வச்சேன். கவலைப்பட்டு ரொம்ப குடிக்க ஆரம்பிடிச்சான். கண்டுபிடிக்கிறதுல தீவிரமாக அப்போ இவன் தான் உங்க எல்லாரையும் இதுல இழுத்து விட சொன்னான். சரி அப்படின்னு நினைச்சிக்கிட்டு ரெண்டு பேருக்கும் மெசேஜ் போட்டு விட்டேன். இதுல இவனை இல்லாத மாறி காட்டிக்கிடணுமாம். இது நாள் வரை ரெண்டு பேரும் சேர்ந்தே தான் எல்லாத்தையும் பண்ணுனோம். ஆனா அண்ணி உங்க ரெண்டு பேருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சது முன்னவே தெரியும். தெரிஞ்சும் உங்க கிட்ட எதுக்கு கொடுமையா நடந்துக்கிட்டான்னு நீங்க தான் கேட்கணும்...” என நடந்த அனைத்தையும் கூறி போட்டு கொடுத்து விட, தீப்பார்வையில் பொசுக்கி தலையில் அடித்துக் கொண்டான்.
“அடேய் சொல்ல சொன்னதை மட்டும் சொன்னா எல்லாத்தையும் சொல்லிட்ட..?”
“உன்கிட்ட தான் உன்னை பத்தியும் சேர்த்து சொல்லவா கேட்டேன்ல...“ என்ற நொடி, மகிழினியோ பாய்ந்து வந்து தாக்கி விட்டு அறைக்குள் சென்று கோவத்தோடு கதவினை படாரென சாத்த, பொத்தென சோபாவில் சரிந்தான் விஜய்.
இரவு நேரம் போல் விஜயநேத்ரனுக்கு மாத்திரையை கொடுத்துச் செல்ல நினைக்க, அவளின் கரங்களை அழுத்தப் பற்றி தன்னருகில் அமர்த்திக் கொண்டான். பிடித்த கரங்களை மட்டும் விடவில்லை.
“சாரி அம்மு...”
“ஒன்னும் தேவையில்லை...”
“உண்மையான காரணமே எனக்கு உன் மேல பொறாமை தான். அதுனால தான் அப்படி கோவப்பட்டேன். என் அம்மா எப்போ உன்னை நம்புனாங்களோ அப்பவே உன்னை நான் புரிஞ்சிக்கிட்டேன். அவங்க இல்லை அப்படிங்குறதை என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. சுத்தி யார் நல்லவங்க யார் கெட்டவங்க எதையுமே கண்டு பிடிக்க முடியல. அம்மாவோட இறப்பை என்னால மட்டும் கண்டு பிடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் உங்க எல்லாரையும் இழுத்தேன். இதுனால சீக்கிரம் கண்டுபிடிச்சிரலாம். இன்னும் அதிக ஐடியா கிடைக்குன்னு நினைச்சேன். என் தம்பி சுதர்ஷன் அவன் எப்பவும் உன் பின்னாடி உன்னை பத்திரமா பார்த்துக்கிட வச்சேன். நான் இல்லாத நேரங்கள்ல உன்னை கண்கானிக்க அவன் இருந்தான். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கண்டுபிடிக்க நினைச்சு ரெண்டு பேருக்கும் பாதிப்பு வந்துட்டா. அதான் ஒரு ஆள் மறைமுகமா இருந்தா நல்லதுன்னு நினைச்சேன். நீ எங்க வாழ்க்கைக்குள்ள வர்ற நாங்க கொடுத்து வச்சிருக்கணும். எவ்வளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா ?”
“எனக்கு ஒன்னு மட்டும் சொல்லுங்க ? நீங்க என்னை காதலிக்கிறீங்களா ?”
“ஆமா. நீ என் மனைவியானதுக்கு பிறகு. அன்னைக்கு ஒரு நாள் நீ என்னை புரிஞ்சிக்கிடவே மாட்டீங்களா சொல்லி உன் கண்ணு கலங்கினது அந்த நொடி தான் என் காதலை உணர்ந்தேன். உன் கிட்ட பணம் கேட்டு உனக்கு கீழே நான் இருக்குற விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சது. நம்மளை பிரிக்க தருண் என்கிட்டே வந்து பேசி சதி வேலையெல்லாம் பார்த்தான். உண்மையை சொல்லணும்ன்னா நான் இன்னும் உன்னை முழுசா புரிஞ்சிக்கிடல. என் காதலை உனக்கு காட்டணும் நினைக்கிறேன். என்னோட தீராதகாதலா நீ இருக்கணும் நினைக்கிறேன். வில் யூ மேரீடு மீ ?” விழியோடு விழிகள் கலக்க கேட்க, அவனிடம் மட்டும் தன் கோவத்தை மறைக்க முடியாததை உணர்ந்தாள்.
“பிரச்சனை முடிஞ்சி தீர்ப்பு வந்ததும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்க, கரம் பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள, தன் நேசத்தைக் காட்டி அவனின் காதலை பெற காத்திருந்தாள் மகிழினி .
மண்டபவம் முழுவதும் ஆட்கள் நிறைந்திருக்க விஜயநேத்ரன், மகிழினி இருவரையும் வாழ்த்த வந்திருந்தனர்.
மணமேடையில் ஐயர் ஹோமகுண்டம் தயாரித்து மணமக்களை அழைத்து வரக் கூற, இருவரையும் அழைத்து வந்து அமர வைத்தனர்.
அவனின் கரங்களோடு தன் கரம் பதிந்து ஐயர் கூறச் சொன்ன மந்திரங்களை கவனமோடு கூற, அனைவரின் ஆசிர்வாதம் பெற்று வந்த பொன்தாலி அவனின் கரங்களில் கொடுத்தனர்.
அதனை வாங்கி கள்வனவன் தீராக்காதலோடு நேசம் பொங்க தன்னவளின் கழுத்தில் அணிவித்து விட்டான். கோசலை, உத்ரா, சுதர்ஷன், ரவி, வேந்தன், அலுவலகத்தில் இருந்து வந்தவர்களென அனைவருமே அர்ச்சதை தூவி வாழ்த்தினர்.
தர்ஷினிக்கு இப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்திருக்க, தன் மகளோடு சந்தோஷமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறாள். நண்பர்களாய், உறவாய் இவர்கள் கிடைக்க மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொண்டாள்.
சீலனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்க, வரதனுக்கு இல்லீகல் பணம் பயன்படுத்தியதால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தனர். சுதர்ஷன் இப்போது பிரபல கிரிகெட் வீரன் ஒருவனுக்கு பாடிகார்டாக வேலை பார்த்து வருகிறான், அனைவரின் வாழ்க்கையும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாகச் சென்றுக் கொண்டிருந்தது.
அதே போல் கோசலையும், விஜயநேத்ரனும் தங்களின் உணவகத்தை திறன்பட நடத்தி வந்தனர். மகிழினியும் ஆர்.எஸ் நிறுவனத்தையும் நல்லபடியாக நடத்திக் கொடுக்க, அவளுக்கு காதலோடு பாதுகாப்பாய் இருந்த கள்வனும் இப்போது அந்த தொழிலை வழிநடத்துவது பற்றியும் கற்றுக் கொண்டு வந்தான்.
சத்தியவதனி தன் மகனை எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென நினைத்தாரோ அந்த அளவுக்கு விஜய் சற்று மாறியிருக்க, நேரடியாக காணத் தான் இல்லாமல் போனார்.
மாலையில் வரவேற்பு ஏற்பாடு செய்திருக்க திருமணத்திற்கு வராதவர்கள் கூட மாலை நேரம் வந்து வாழ்த்து கூறினர். இன்பக்கடலில் தம்பதிகளாக இருவரும் மூழ்கி காட்சிக் கொடுத்தனர்.
மலர்களின் வாசம் தான் முதலில் அவளை வரவேற்றது. உள்ளே நுழைந்தவளோ தயக்கத்தோடு நிமிர்ந்துக் காண, அறைக் கதவினை சாத்தும் சத்தம் மட்டும் அவளின் செவியில் விழுந்தது.
விஜயனின் விழிகளில் சந்தனபட்டில் கூந்தலில் மல்லிகை சூடி, உள்ளங்கையிலிருந்து விரல் முழுவதும் பூசிய மருதாணியை தொட்டு தழுவிய கண்ணாடி வளையல்களை காண, ‘மணம் வீசும் மலர்களுக்கு நடுவில் அவள் ஒரு மலராய். மலர் அழகா அவள் அழகா ?’ என்றே எண்ணினான்.
தன்னை நெருங்கும் அவனின் சுவாசமும், காலடி ஓசையும் செவி தீண்டவே உள்ளத்தில் படபடப்பு. அண்ணனை தவிர எந்த ஆண்மகனின் வாசமும் உணராதவளுக்கு இருதயமோ திக்திக்கென்று துடிக்க, அவளின் துடிப்பே அவளுக்கு கேட்டதை உணர்ந்தாள்.
முதுகில் படரும் உஷ்ணக்காற்றில் விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டவளின் கரங்கள் ஒன்றாக பிசைந்துக் கொள்ள, தன் பின் நெருங்கி நின்று இடையை உரசிய அவனின் வலிமை கரங்களை தன் கரங்களோடு முன்னே வந்து கோர்த்துக் கொண்டது.
தன்னவனின் அதரங்களின் அழுத்தம் தோள்பட்டையில் கீழ் பட்டு, இதமான குளிரினை உணர, அதனை தொடர்ந்து அவனின் தாடையும் தன் தோள்பட்டையில் சாய்ந்ததை உணர்ந்தாள். விழி மூடியவாறு கள்வனின் ஒவ்வொரு செய்கையும் ரசித்து சிலிர்த்துக் கொண்டிருந்தாள். காதல் கொண்ட மங்கை மனம் மயங்க ஆரம்பித்தது.
“அழகா இருக்கேடி அம்மு. அப்படியே அதுவும் இப்பவே உன்னை அள்ளி அணைச்சிக்கணும் போல இருக்கு. உன்னை பார்த்ததிலிருந்து என் மனசுல தோணுற உணர்ச்சியெல்லாம் புதுசா இருக்கு. எனக்கு நீ வேணும்ன்னு ஒவ்வொரு அணுவும் துடிக்குது. இந்த தருணத்துக்காக தான் காத்துக்கிட்டு இருந்தேன். என்னை பொறுத்துப்பையா கொஞ்சம் நேரத்துக்கு ?” மனத்தில் தோன்றிய உணர்வினை கிசுகிசுப்பாக செவி தீண்ட காதோரம் முத்தமிட்டு கூறவே, சிணுங்கலாய் தலையசைத்தாள்.
அணைப்பினை விலக்கி தன் முன்னே திருப்பியவன் தன் ஒற்றை விரல் கொண்டு மனைவியின் தாடையை பற்றி தன் முகம் காண நிமிர்த்த மூடிய சிப்பி விழிகள் திறக்காமலே இருந்தது.
“என்னை பார்க்க மாட்டியா அம்மு ?” விழிகளில் முத்தமிட்டவனின் அதரங்கள் பிரிந்து வார்த்தைகள் விழ, கருவிழிகள் உள்ளுக்குள் சுழல விழி திறந்தவளின் முன்னே அவனின் முகம் தான்.
தன்னையே விழிகளுக்குள் அடக்குபவனை காண முடியாது நெஞ்சில் சாய, செவிகளோ தன்னவன் துடிப்பில் தான் இருக்கிறோம்மோ என்பதை அறிய முயன்றது. புடவை நழுவிய வெற்றிடையில் வலிய கரம் பூவின் மென்மையை போல் படர்ந்து தீண்டியது.
கால்கள் தரையில் பதிக்க முடியாது தன்னவன் தழுவலில் சிணுங்கி தடுமாற, நெஞ்சிலிருந்து பிரித்தெடுத்து கழுத்து வளைவில் முகம் உரச இதழ்களால் முத்தமிட்டான்.
அணிருந்திருந்த நகைகளோ தொந்தரவாய் தெரிய அதனை அவளின் கழுத்திலிருந்து பிரித்தெடுக்கவே, அவன் கட்டிய மஞ்சள் கயிறினை தவிர மற்ற நகை அனைத்தையும் பிரிக்க அனுமதி கொடுத்தாள். இச்செய்கையை முடிப்பதற்குள்ளே எண்ணிலடங்காத முத்தங்கள் பரிசளித்திருந்தான்.
கண்ணாடி வளையல்களின் ஓசை கூட அவனுக்கு தொந்தரவாய் இருப்பது போல் தோன்றவே அதனையும் பிரிக்க முயல, அவளோ சிணுங்கலாய் என்னவென்று கேட்டாள்.
“என்னோட காதுக்கு உன்னோட சிணுங்கலும், முணுங்கலும் சத்தம் மட்டும் தான் கேட்கணும் “ மாயம் செய்யும் கள்வனாய் மாறி கூறவே,
அவனின் தீண்டலை சுகமாய் பெற்றுக் கொண்டே, “கல்யாண வளையல் கழட்ட கூடாதுன்னு சொல்லிருக்காங்க “ வார்த்தைகள் வர போராடி கூறினாள்.
“அதெல்லாம் இந்த நேரம் இல்லை. காலையில போட்டுக்கோ அம்மு பிளீஸ் “ கொஞ்சியவனோ இருகரங்களிலும் கழட்டினான்.
அவனின் வார்த்தைகளின் முத்து வெண்பற்கள் தெரிய மார்பில் கைவைத்து லேசாக சிணுங்கல் ஒலியில், “விஜய் “ ஆசையோடு அழைக்க, அவளை தன்னோடு சேர்ந்து அணைத்தான்.
இந்த இடைப்பட்ட நாட்களில் பலமுறை அவனின் காதலை வார்த்தையாலும், செய்கையாலும் காட்டி சொல்லிருக்க அவளோ அதற்கு எல்லாம் மெளனமாக ஏற்றுக் கொண்டு வெட்கமோடு தான் வலம் வந்தாள். ஆனால் செவ்விதழ் திறந்து ஒரு முறை கூட கூறியதில்லை.
“உன் காதலை வார்த்தையால சொல்ல மாட்டையா அம்மு. ஒரே ஒரு தடவை கேட்கணும் நினைக்கிறேன்...” ஆசையும் ஏக்கமும் கலந்துக் கேட்க,
“ஐ லவ் யூ விஜய் ” கூறி அவனின் தோள்பட்டை உயரத்துக்கு கூட வளராமல் இருந்தவளோ கணவனின் காலில் மேல் தன் காலினை வைத்து கழுத்தோடு கட்டிக் கொண்டு ஏக்கி அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
கேட்டது என்னவோ காதலை தான். உடன் சேர்ந்து முதல் முத்தமும் கிடைத்து விட ஏக குசி. வானில் பறக்கும் எண்ணம் தான். இப்போது வார்த்தையால் கூற தன் உள்ளம் குளிர்வதை போல் உணர்ந்தான். ஏனோ மறுபடியும் அதனை கேட்க செவிகள் துடித்தது.
அவனின் அணைப்பு இறுக, “ஸ்டில் ஐ நீடு யூ அம்மு ப்ளீஸ்...” ஏக்கமாய் காதலோடு கேட்க, மௌனமாய் தலையசைத்தாள்.
அடுத்தநொடி அள்ளி அணைத்து படுக்கையில் கிடத்தியவன், தன்னவளையும் மட்டுமல்லாது விளக்கொளியையும் அமர்த்தினான்
மலர்களின் வாசத்தின் அறை இருள் வெளிச்சத்தில் மின்மினியை போன்ற மின்னிய தன்னவளின் தேகம் உணர்ச்சிகளை தூண்டவே, தனக்குள் நிறைத்து விட்டு அள்ளி அணைத்து முத்தங்களை கூட்டினான்.
பெண்மையவளின் பெண்மையை மனம் கவர்ந்த மன்னவனுக்கு பேதையவளோ கொடுக்க தயாராகினாள். தேன் உண்டும் தாராத தித்திப்பு அவளின் இதழில் தெகிட்டாது கிடைக்க, வண்டாய் மாறி விட்டான்.
கரங்கள் நான்கும் பிணைந்துக் கொள்ள, நாவிதழ்கள் சேர்ந்து ஈர முத்தங்கள் பகிர, ஆடைகள் களைய வெட்கம் கொண்டு தேகங்கள் பிணைய, மங்கையவளின் ஒலி செவி தீண்டிய நொடி போதையை கிளறியது.
அதரமும், தேகமும் தீண்டுதலில் உருவான வெப்பத்தில் பற்றிக் கொண்ட பஞ்சாய் பெண்ணவள் மாற விழிகளோ சொக்க, கொஞ்சலுக்கோ பஞ்சமில்லாதது போனது.
மலர் படுக்கையில் நடந்த காதல் யுத்தம் அந்த அறைக்கு மட்டுமே அவர்களின் ரகசியமறிய, மேனி முழவதும் கரங்களும், அதனை தொடர்ந்து இதழ்களும் ஊர்வலம் நடத்த தொடங்கியது. பெண்மை அடங்க ஆண்மையோ துடிக்க இரு உயிர்களும் உருகி வழிய நாணமோ இதற்கிடையில் தோற்று ஒதுங்கி போனது. தீராத காதல் தீயாக மோகம் போதாத இரவாக வேண்டுமென உள்ளமோ துடிக்க இருவருமே அவர்களின் உலகத்தில் தொலைந்து போயினர்.
உன்னுள் நானும் என்னுள் நீயும் மாற, காமமில்லா காதல் வாழ்க்கை இருக்கா என்ன ? என்பதை போன்றே உரிமையாவளை தானாக மாற்றிக் கொண்டான் விஜய்
தேமமெங்கும் பரிசம் தீண்டிய இடம் காயங்களாக ஆன போதும் இன்பமாய் ஏற்க ஈருடல்கள் ஒருடலாய் மாறியது. மீண்டும் மீண்டும் இணையவே ஆசை துடிக்க கசங்கிய மலரினை போன்றே சிக்கி கசங்கினாள் மகிழினி
தன் கொடுத்த காயங்களை சகித்து தனக்கு இன்பம் கொடுத்த மனைவியைக் காண, வியர்வை துளியில் விழி திறக்க முடியாது அணத்தவே, இழுத்து தன் நெஞ்சத்தில் சாய்த்துக் கொண்டான்.
விஜயின் நெஞ்சியில் நீண்ட நாள்களுக்கு பின் நிம்மதியான நித்திரையை ஆரம்பித்து விடவே, அன்னை தனக்கு கொடுத்த இன்பமாக பரிசனை பொக்கிஷமாக ஏற்றான்.
அசதியில் மகிழினி சட்டென உறங்கியதை உணர்ந்தவனோ அவளின் கலைந்த கூந்தலை வருடியவாறு தானும் புது உலகத்தில் பயணிக்க காலடி எடுத்து வைத்தான்.
இனி இவர்கள் ஒன்றினைந்து ஆரம்பித்த வாழ்க்கை இன்பமாய் தீராதகாதல் கொண்ட நேசமாய் வளரும் என்ற நம்பிக்கையில் சென்று வருவோம்.
முற்றும்
இப்படிக்கு
அஸ்திரம் - 35
(எனக்கு வாய்ப்பு கொடுத்த இத்தளத்திற்கு, கதைக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்.)