வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதலை களவாடும் ராட்சசியே - கதை திரி

Status
Not open for further replies.
ei23KHH79493.jpg
ராட்சசி - 1

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா!


என்று மழலைக் குரலில் வார்த்தைகளை சரிவர இல்லாமல் சரியும் தவறுமாக சொல்லி முடித்தாள் இரண்டரை வயதேயான ருத்ரப்ரியா.

அதுவரை பொறுமையாக ரசித்துக் கொண்டிருந்த மகளை மென்னகையுடன், "ருத்ரா பாப்பா... சாமி கும்பிட்டு முடிச்சாச்சா..." என்று சொல்ல,

"முச்சாச்சு மா..." எனக் கூறி முத்து பற்களை காட்டி சிரித்தாள் குழந்தை.

"ஹேய்! சூப்பர்... வெரி குட் ரா தங்க புள்ள..." என்று சொல்லி மூக்கை பிடித்து ஆட்டினாள் அவளது அன்னை கிருஷ்ணப்ரியா.

"ம்மா... வேலைக்கு ரெடியா?"

"கிளம்பிட்டேன் பட்டு..."

"சாயங்காலம் சீக்கிரமா வந்துரு ம்மா... இல்லன்னா ருத்ரா பாப்பா அம்மாவ ரொம்ப தேடுவா..." என்று முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டு சொன்னாள் குழந்தை.

"அச்சோ... அப்படியா... அப்ப சரி அம்மா பர்மிஷன் போட்டுட்டு சீக்கிரமே பாப்பா கிட்ட வரேன்... இப்ப நான் போகவா?"

அதற்கு சம்மதமாக தலையாட்டி, "ம்ம்... ஓகே ம்மா..." என்றாள் ருத்ரா.

கிருஷ்ணாவோ மகளை புன்னகையுடன் பார்த்து கொண்டே, "அம்மா... அம்மா..." என்று தாயை அழைக்க,

உள்ளிருந்து வெளியே வந்தார் சுமித்ரா.

"நான் ஆஃபிஸ் போறேன்... பாப்பாவை பத்து மணிக்கு பால்வாடி கூட்டிட்டு போய் விட்டு வாங்கம்மா..." என்றாள் தன்னுடைய மதிய உணவை எடுத்துக் கொண்டே!

"சரி ப்ரியா... அப்பாவுக்கு வரும் போது மாத்திரை வாங்கி வந்து குடு டி..." என்று அவர் கூறவும், தாயை முறைத்து விட்டு,

ருத்ராவிடம், "பட்டு... உள்ளே போய் விளையாடு... ஆச்சி இப்ப வந்து பாப்பாக்கு மம்மு குடுப்பாங்க... இப்ப அம்மாக்கு பை சொல்லி முத்தா தாங்க..." என்று மென்மையாக சொல்ல, அவளும் அன்னையின் பேச்சை மறுக்காமல் செய்து உள்ளே ஓடி விட்டாள்.

அதன் பின்னர்,

ப்ரியாவோ, "நான் வாங்கிட்டு வந்து கொடுத்தா தான் உங்க வீட்டுக்காரர் எடுத்து போய் குப்பை தொட்டியில போடுவாரே மா... அப்பறம் நான் எதுக்காக வாங்கி வரணும்?"

"நீயே இப்படி பேசினா எப்படி ப்ரியா..."

"வேற எப்படி பேசன்னு எனக்கும் தெரியல ம்மா... தான் செய்றது மட்டும் தான் எப்பவும் சரின்ற எண்ணம் மட்டும் யாருக்கும் இருந்திட கூடாது... ஆனா, அந்த எண்ணத்துல ஊறி போய் இருப்பவர் தானே உங்க வீட்டுக்காரர்..." என்று சலித்துப் போய் சொன்னாள் கிருஷ்ணா.

"எனக்கு எல்லாம் புரியுது... ஆனா, நான் யார் பக்கம் இருந்து டி பேசுறது?" என்று பாவமாக சொன்னார் சுமித்ரா.

"இத்தனை வருஷமும் எதுக்கும் பேசாம தலையாட்டிட்டு தானே ம்மா இருந்தீங்க... இனிமேலும் அப்படியே இருந்துக்கோங்க... அப்ப தான் உங்க வீட்டுக்காரருக்கு பிடிக்கும்..." என்றவள் கை கடிகாரத்தை பார்த்து விட்டு,

"இதுக்கு தான்மா... காலங்காத்தால உங்க கிட்ட பேச்சை வளர்கிறதே கிடையாது... எனக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்..." என்று அவசரமாக சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டாள் கிருஷ்ணப்ரியா.

சுமித்ராவோ செல்லும் மகளையே வெறிக்க, மனமோ, "என் பிள்ளைக்கு எதுக்கு பிள்ளையாரப்பா இந்த நிலைமை... அவளை சந்தோஷமா வாழ வைக்காம போனாலும் பரவாயில்ல... தயவு செய்து மேலும் மேலும் கஷ்டத்தை குடுத்து இன்னும் நரகமாக்கி விட்றாத..." என்று கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்து பேத்திக்கு காலை உணவை கொடுக்க சென்று விட்டார்.

விஜய் டிரேட்ஸ் என்ற பெயர் பலகை தாங்கி இருந்தது அந்த அலுவலகம். அந்த அலுவலகம் முழுக்க முழுக்க வெள்ளி பொருட்களையும், வெள்ளி நவீன ஆபரணங்களையும் (Silver Fashion Jewellery) கொண்டு தான் செயல்பட்டு வருகிறது.

"குட் மார்னிங் ப்ரியா..." என்று உள்ளே நுழையும் போதே வரவேற்றாள் அனிதா.

"ம்ம்... மார்னிங் அனி..." என்று சொல்லிக் கொண்டே அவளது இருக்கையில் அமர்ந்துக் கொண்டு கணினியை உயிர்ப்பித்தாள் அவள்.

"என்ன மேடமுக்கு முகம் டல்லா இருக்கு..." என்று தோழி கேட்க,

ப்ரியாவோ அதற்கு சரியான பதிலளிக்காமல், "ஒன்னுமில்ல அனி... ஆமா... நேத்து நான் லீவ் வேற போட்டேன்... அப்போ யார் யாருக்கு ஸ்டாக் போச்சு? ஆர்டர் ஏதாவது வந்ததா? யாருக்கு புதுசா ஸ்கேன் செஞ்சிங்க? ப்ரோபர்மா (proforma) போட்ட பொருளுக்கு எவனாச்சும் பேமெண்ட் பண்ணானா?" என்று வேலையை பற்றி அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு வைக்க,

அனிதாவும் அதை புரிந்துக்கொண்டு, "ம்ம்... நேத்து சிவகாசி ஸ்டாக்கிஸ்ட் (stockist) மட்டும் தான் பேமெண்ட் பண்ணான்... சோ, அவனுக்கு மட்டும் சீக்வேல் (sequel) அனுப்பி விட்டோம்... நேத்து எல்லாம் எதுவும் ஆர்டர் வரல... புது ஸ்டாக் மட்டும் தான் வந்துச்சு... அது சரி பார்த்து அக்கௌன்ட்ஸுக்கு கொடுத்தாச்சு... எம்.டி. சார் நேத்து ஆஃபிஸுக்கே வரல... நேத்து இது மட்டும் தான் நடந்துச்சு... போதுமா... இல்ல வேற ஏதாவது டீடெயில்ஸ் தேவை படுதா?" என்று அனைத்தையும் பொறுமையாகவே சொன்னாள்.

"இல்லை... எதுவும் இல்ல தாயே... நீ உன் வேலைய பாரு... நான் என்னோட வேலைய பார்க்கறேன்..." என்று விட்டு அவளது பணிகளில் மூழ்க,

"ப்ரியா... இங்க கொஞ்சம் வாயேன்..." என்று கூப்பிட்டார் அவளது மேனேஜர் நிவேதா.

"வரேன் மேம்..." என்று சொல்லி விட்டு அங்கு செல்ல,

"ப்ரியா... இவங்க தாரணி... நம்ம ஆஃபிஸுக்கு புதுசா ஜாயின் பண்ண போறாங்க... அதனால், நம்ம வொர்க்கை பத்தி ஃபுல் அண்ட் ஃபுல் எக்ஸ்பிளைன் பண்ணி விடு... நானே சொல்லி இருப்பேன் இப்ப எமர்லட் ல இருந்து கால் பண்ணுவாங்க... அதான் மா..." என்றார் அவர்.

"இட்ஸ் ஓகே மேம்... எல்லாத்தையும் நானே சொல்லி தந்திடுறேன்..." என்று அவரிடம் கூறி, அந்த பெண்ணையும் அழைத்து கொண்டு காட்சி அறைக்கு (Display room) சென்றாள் கிருஷ்ணப்ரியா.

"ஹெலோ தாரிணி... வெல்கம்... என் பேர் கிருஷ்ணப்ரியா..." என்று தன்னையும் சேர்த்து அறிமுகப்படுத்திக் கொண்டு வேலையை பற்றி பேச தொடங்கினாள்.

"பர்ஸ்ட் ஆஃப் ஆல்... உங்களுக்கு இந்த ஆஃபிஸை பார்த்ததும் என்ன தோணுது மா?" என்று கேட்க,

அந்த புதிய பெண்ணோ சுற்றி முற்றி பார்த்து விட்டு, "எல்லா இடத்திலும் சில்வரும்... சில்வர் ஜுவல்லரியும் தான் மேம் இருக்கு..." என பதில் கொடுக்க,

"குட்... இந்த சில்வர் ஃபேஷன் ஜுவல்லரி இருக்கு இல்லையா... அதுக்கு பேரு சிலாரா (Zilara)... ஃபேஷனமல் சில்வர் நகைகளுக்கு வச்சி இருக்கும் பேர் தான் சிலாரா... இதோட தயாரிப்பாளர் யாருன்னா... எமர்லட் தான்... கோயம்புத்தூரில் கேள்விப்பட்டு இருப்பீங்க... (Emerald Jewel Industry) அப்படின்னு... உலகத்துல மிகப்பெரிய கோல்ட் தயாரிப்பாளர் (manufacturing) நிறுவனம் அது...

அங்க கோல்ட், சில்வர், பிளாட்டினம், டைமண்ட், இப்படி எல்லா வகைகளும் இருக்கு... அதுல நம்ம விஜய் டிரேட்ஸ் டிஸ்டிபியூட் பண்ண போறது தான் சிலாரா ப்ரான்ட் சில்வர் ஜுவல்லரி... நம்ம விஜய் டிரேட்ஸ் தான் ஆல் ஓவர் தமிழ்நாட்டுக்கு பங்குதாரர்... அதாவது சிம்பளா Super Stockist ன்னு சொல்வோம்... எமர்லட் கிட்ட இருந்து பொருளை வாங்கி நாம தான் எல்லாருக்கும் சப்ளை பண்ணுவோம்...

நமக்கு கீழே ரெண்டு பேர் இருப்பாங்க... ஒன்னு ஸ்டாக்கிஸ்ட் (Stockist)... இன்னொன்னு ரிடெயிலர் (Retailer)..." என்று சொல்லி விட்டு அப்பெண்ணின் முகம் பார்த்தாள் கிருஷ்ணா.

"என்னம்மா புரியுதா?"

"கொஞ்சம் கொஞ்சம் தான் மேம்..."

"ஒன்னும் இல்ல... எல்லாமே சிம்பல் தான்... போக போக எல்லாமே புரிஞ்சிப்பீங்க... இப்ப ஜஸ்ட் ஒரு இன்ட்ரோ மட்டும் கொடுக்கிறேன்.‌.."

"சரி நீங்க கண்டியூ பண்ணுங்க மேம்..."

"ம்ம்... ஸ்டாக்கிஸட் நமக்கு அடுத்து இருப்பவங்க... இவங்க கிட்ட ஒரு பத்து பதினைந்து ரிடெயிலர்ஸ் இருப்பாங்க..."

"ரிடெயிலர்ஸ் னா யாரு மேம்?"

"நகை கடைகளை தான் ரிடெயிலர் ஷாப்ஸ் அப்படின்னு சொல்வோம்... ஸ்டாக்கிஸ்ட் அவங்களுக்கு சப்ளை செய்வாங்க..."

"அப்போ நாம ரிடெயிலருக்கு ஸ்டாக் தர முடியாதா மேம்?"

"முடியும்... நமக்கு கீழே ஸ்டாக்கிஸ்ட் அண்ட் ரிடெலியர் ரெண்டு பேருமே இருப்பாங்க... அவங்களுக்கு ரெண்டு பேருக்குமே நாம சப்ளை பண்ணலாம்..."

"ஓகே மேம்..."

"'சிலாரா' ல இருக்கும் எல்லா பொருள்களுமே 92.5 பியூரிட்டில இருக்கும்... இந்த சில்வர் கொஞ்சம் காஸ்லி தான்... பிகாஸ், அதுல இருக்கும் எந்த ஒரு பொருளுமே அவ்வளவு சீக்கிரத்துல கருத்து போகவே போகாது... ஏன்னா, இதுல Palladium அண்ட் Rhodium கோட்டிங்கும்... கருத்து போகாம இருக்க ஆன்ட்டி டார்னிஷ் கோட்டிங்கும் தருவாங்க... அப்பறம் இது எல்லாமே மெஷின் மேட் மட்டும் தான்... இப்படி இதுக்கு ஏகப்பட்ட குட் ஃபீச்சர்ஸ் இருக்கு..." என்று அவள் எளிதாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கவும் கிருஷ்ணாவையே ஆவென பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிணி.

அனிதாவோ, "ஏய்! ப்ரியா மொத நாளே இந்த பிள்ளையை இப்படி பயம் காட்டி எல்லாம் சொல்லுவீயா..." என்க,

"அச்சோ, இல்ல மேம்... இவங்க சொல்றது நல்லா இன்ரெஸ்ட்டா தான் இருக்கு..."

"சரி தான் மா..." என்று விட்டு அவளது வேலையை கவனித்தாள் அனிதா.

"சிலாரா... ஜுவல்லரி எல்லாம் ரொம்ப தரமானதா இருக்கும்... அதனால அது நார்மல் சில்வர் ரேட்டுக்கு வராது... அது விலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும்... சோ, இந்த ப்ரைஸ் டீடெயில்ஸ் பத்தி எல்லாம் போக போக தெரிஞ்சிப்ப மா... இப்போதைக்கு இது வரைக்கும் தெரிஞ்சிக்க... இங்க ஜாலியா தான் இருக்கும்... ஸ்டாக் மெயின்டெய்ன், ஸ்கேனிங்க, செக்கிங், கவுன்டிங், பேக்கிங்... இந்த வேலைகள் மட்டும் தான் இங்க... அதனால நீ டென்ஷன் இல்லாம இருக்கலாம்... எனக்கு கொஞ்சம் ரிப்போர்ட் போடுற வேலை இருக்கு... அத முடிச்சிட்டு வரேன் தாரிணி..." என்று புன்னகை முகமாக சொல்லி கணனி திரையில் மூழ்கினாள் ப்ரியா.

தன்னுடைய மனதை திசை திருப்ப அவள் மேற்கொள்ளும் செயல் தான் அவள் மனதிற்கு பிடித்தமான இவ்வேலை. ஆகவே, வேலை என்று தொடங்கி விட்டால் ப்ரியாவிற்கு நேரம் போவதே தெரியாது!

********

அந்த காவல் நிலையமே ஒருவனின் வரவால் சற்று பதட்டத்தை தாங்கியபடி இருந்தது. அங்கிருந்த காவலர்களின் முகமோ வெளிறி போய் காணப்பட்டது.

"அய்யோ... இன்னைக்கு ன்னு போய் சொல்லாம கொல்லாம சார் வந்துட்டார்... வர போறத முன்னாடியே சொல்லி இருந்தா எல்லாத்துக்கும் தயாரா இருந்து இருக்கலாம்..." என்று ஒரு காவலர் மற்றொருவரிடம் கிசுகிசுக்க,

"ஆமா... இன்னைக்கு மட்டும் எல்லா வேலையும் சரி செஞ்சி... லஞ்சம் வாங்காம இருந்திருக்கலாம்..." என்று அவர் பங்குக்கு ஒன்று சொல்ல, முதலில் பேசியவரோ முறைத்து விட்டு அமைதியாகினார்.

"விமல்... உன்ன நான் கவனிக்க சொன்னேன் ல... அந்த கேஸ் என்னாச்சு?" என்று அழுத்தமாக கேட்டான் திருச்சியின் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் வாசுதேவ கிருஷ்ணன்.

அந்த கேள்வியில் பயந்து போய், அதற்கு சரியான பதிலை இன்னமும் கண்டுப் பிடிக்காமல் அவன் முன்னே நின்றிருந்தான் விமல் என்பவன்.


*********

உங்கள் கருத்துக்களை பதிய இங்கே சொடுக்கவும் 👇👇

 
ராட்சசி - 2

அந்த காவல் நிலையத்தில் போடப்பட்டு இருந்த மேசையில் மீது அமர்ந்த படி, லத்தியை வைத்து டொக் டொக் என தட்டி கொண்டிருந்தான் வாசு.

அவனுக்கு எதிரே நின்றிருந்த விமலிடம் இருந்து எந்த பதிலும் வராமலிருக்க, "ஐ நீட் ஆன் ஆன்சர் விமல்..." என்று இறுக்கமான முக பாவனையுடன் கேட்க,

அவனோ, "இல்ல... இல்ல சார்... நானும் விசாரிச்சிட்டு தான் இருக்கேன் சார்..." என்று பம்மி கொண்டு சொல்ல,

"எப்படி விமல் விசாரிச்சீங்க?"

"அது சார்..."

"ஹ்ம்ம்... நானே சொல்லவா? விசாரணை ன்ற பேர்ல ஸ்டேஷன்ல இருந்து வெளியே போய் உன் காதலி கூட பார்க், பீச், தியேட்டர் எல்லாம் சுத்தி, அதுக்கெல்லாம் ஸ்டேஷன் காசையே செலவு செஞ்சு... ரொம்ப அழகா விசாரணை பண்றீங்க மிஸ்டர் விமல்..." என்று நக்கலாக சொல்லவும் விமலுக்கு தொண்டைக்குள் எதுவோ உருண்டு கொண்டிருந்த உணர்வு.

அவனது பயந்த முகத்தை பார்த்து, "இது உன்னோட முதல் வேலை விமல்... மாங்கு மாங்கு ன்னு படிச்சு வேலை வாங்கினது பெருசு கிடையாது... கிடைச்ச வேலைக்கு மதிப்பு தந்து, அதுக்கு உண்மையா இருந்து வேலையும் செய்யணும்... மத்தவங்களை போல ஓபி அடிச்சிட்டும் லஞ்சம் வாங்கிட்டும் வேலை பார்க்க உன்ன மாதிரி இளம் தலைமுறையில் உள்ள போலீஸுக்கு அழகில்ல... எவனுக்கும் பயப்படாம தப்புன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் யாரா இருந்தாலும் சரி வெளு வெளுன்னு வெளுத்து விட்டுடனும்... அவன் தான் உண்மையான போலீஸ்காரன்..." என்று அனைவரையும் பார்த்து சொன்னான் வாசுதேவ கிருஷ்ணன்.

"ஓகே சார்... இனி அப்படி எல்லாம் இருக்க மாட்டேன் சார்..." என்று அரண்டு போய் சொன்னான் விமல்.

வாசுவோ, "உன்ன நான் காதலிக்க வேணாம்னு சொல்லல... காதல் ஒரு பக்கம் இருந்தாலும் வேலையும் ரொம்ப முக்கியம்... ரெண்டையும் ஒரு தராசுல வச்சி பார்க்க கத்துக்க... அப்ப தான் உன்னால நிலையா இருக்க முடியும்..." என்று ஆழ்ந்த மூச்செடுத்து சொல்லவும் அமைதியாக கேட்டு கொண்டான்.

"ஹ்ம்ம்... அந்த கேஸை முடிச்சு அந்த அம்மா கிட்ட நானே நகையை ஒப்படைச்சிட்டேன்... அந்த பொறுக்கியையும் லாக்கப்பில் போட்டாச்சு... அடுத்த கேஸ்ஸிலும் இது போல அலட்சியமா இருக்காத விமல்... இது போல பொறுமையா எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன்... என்ன செய்யணுமோ அத செய்வேன்... அதுக்கு பிறகு குத்துதே குடையுதே ன்னு எல்லாம் என் கிட்ட வந்து நிற்க கூடாது..." என்று அழுத்தமாக சொல்லி விட்டு சென்றான் வாசுதேவ கிருஷ்ணன்.

அதன் பின்னர், அவனது பணிகளை முடித்து விட்டே அவனுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த காவலர் குடியிருப்புக்கு சென்றான்.

வாசுவோ வீட்டிற்குள் நுழையும் முன்னரே அவனின் தனிப்பட்ட கைபேசி சத்தம் போடவும், அழைப்பை ஏற்றபடி உள்ளே போய், "ஹெலோ ம்மா..." என்றான் பளிச்சென்று குரலில்!

"வாசு... என்னடா பண்ற? வீட்டுக்கு வந்துட்டீயா? சாப்பிட்டியா இல்லையா வாசு?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார் வாசுவின் அன்னை வானதி.

"ம்மா... ம்மா... பொறுமை மா... இப்ப தான் வீட்டுக்குள்ள நுழைய இருந்தேன்... அதுக்குள்ள கால் அடிச்சிட்டிங்க... அப்படி எங்க தான் சிசிடிவி வச்சி இருக்கீங்களோ? ஒரு போலீஸ்காரன் என்னாலயே அத கண்டுபிடிக்க முடியல..." என்று சலித்து கொண்டே சொல்லவும் அந்த பக்கம் சிரிப்பு சத்தம் தான் கேட்டது.

"ம்மா... நல்லா சிரிங்க...."

"சிரிக்காம அழ சொல்றியா வாசு..."

"நான் போய் அப்படி சொல்வேனா ம்மா..."

"நீ சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும் கண்ணா..." என்று பெருமூச்சுடன் சொன்னார் வானதி.

"அப்பா என்ன பண்றார் ம்மா..." என்று வாசு கேட்க,

"சும்மா ஒரு வாக் போறேன்னு போய் இருக்கார் பா..." என்று விட்டு, "டேய்! மணி பத்து ஆக போகுதே நீ சாப்பிட்டு முடிச்சியா?" என்று தாயின் அக்கறையில் கேட்க,

"உங்க கிட்ட பேசிட்டே தான் தோசை ஊத்திட்டு இருக்கேன் மா..."

"சரி சரி... நீ என் கிட்ட பேசிட்டே சாப்பிடு கண்ணா..."

"சரி ம்மா... நீங்க என்ன செஞ்சிங்க?"

"நானா இட்லி ஊத்திட்டு புதினா சட்னி அரைச்சு... ரெண்டு பேரும் ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டோம்..."

"ம்ம்..."

"அப்பறம் வாசு வேலை எல்லாம் எப்படி போகுது..."

"ஆஷ்யூல்வல் தான் மா... எனக்கு புடிச்ச மாதிரி போயிட்டு இருக்கு... இங்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல... நல்லா இருக்கேன்..." என்று நிதானமாகவே சொன்னான் வாசுதேவ கிருஷ்ணன்.

வானதியோ கொஞ்சம் தயக்கமாக, "கண்ணா..." என்று அழைக்க,

"ம்ம்... சொல்லுங்க..." என்றான் சாப்பிட்டுக் கொண்டே!

அவரோ மனம் கேட்காமல், "ஏதாவது என் கிட்ட கேட்கணுமா வாசு?" என்று எதிர்பார்ப்புடன் கேட்க,

"இல்ல மா... கேட்க எதுவும் இல்ல..." என்று பட்டென பதில் கொடுத்தான் வாசு.

"இல்ல... இல்லாட்டி...‌ நானாவது ஏதாவது சொல்லட்டுமா பா...‌ அத... அத கேட்க மட்டும் செய்யறியா?" என்று பயந்து பயந்தே கேட்டார் வானதி.

"அம்மா... நான் ஃபோனை வைக்கட்டுமா?" என்று கடுமையான குரலில் பேசினான் வாசுதேவன்.

"ஏன் வாசு? நான் என்ன சொல்ல வரேன்னு ஒரு முறை... ஒரே முறை கேட்டு தான் பாரேன் வாசு..." என்று ஆதங்கத்துடன் பேச,

"இதுக்கு தான் மா... அப்பா இல்லாம உங்க கூட பேசுறதே கிடையாது... அவர் இருந்தா உங்களை இது எல்லாம் பேச விட்டிருக்கவே மாட்டார்... தேவையானத மட்டும் பேசிட்டு வச்சி இருப்பீங்க... உங்க பேச்சை எல்லாம் கேட்டா எனக்கு தான் மா டென்ஷன் அதிகம் ஆகுது... நான் இப்ப கால் கட் பண்றேன்... இப்ப நான் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவேன்... என்ன பேசுறதா இருந்தாலும் காலையில ஃபோன் பண்ணுங்க... அப்பா கிட்டயும் சொல்லிடுங்க... பை... குட் நைட் அம்மா... நீங்க எதையும் நினைக்காம போய் தூங்குங்க... நானே கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் மறந்துட்டு வரேன்..." என்று கத்தி விட்டு அழைப்பை துண்டித்து விட்டான் வாசுதேவ கிருஷ்ணன்.

வானதிக்கோ மகன் அப்படி பேசியதை கேட்டு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அவன் பேசியது கூட அத்தனை வலிக்கவில்லை! அவனது வாழ்க்கையை பற்றிய நினைப்பில் தான் அத்தனை வருத்தமாக இருந்தது.

******

"ருத்ரா... வந்து சாப்பிட்டு போடி... நேரமாச்சு..." என்று வரவேற்பறையில் இருந்து கத்திய படி அமர்ந்திருந்தாள் கிருஷ்ணப்ரியா.

குழந்தையோ, "ம்மா... பசிக்கல... அப்பதம் சாப்புடுறேன்..." என்று பதில் கொடுக்க,

"ருத்ரா... சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சா... நம்ம ரூமுக்கு போய் படுக்கலாம்... நீ சீக்கிரம் வந்தா அம்மா ஃபோன் வச்சி தரேன் பட்டும்மா... நீ குட் கேர்ள் தானே வாம்மா..." என்று செல்லமாகவே அழைத்தாள் அவள்.

"நோ மா... தாத்தா வரட்டும் அப்போ சாப்புடுறேன்... பீஸ்ஸ்ஸ்ஸ் மா..." என்று பாவமாக சொல்லவும்,

"இப்ப நீ வரலை... நான் போய் ரூமில் தூங்கிடுவேன்... நீ உன் தாத்தா ஆச்சி கூட தான் தூங்கணும்... நைட் தூக்கத்துல அழுது கதவை தட்டின... திறக்கவே மாட்டேன் பாப்பா..." என்று கோபத்தில் ப்ரியா கத்தி விடவும் ருத்ரா மிரண்டு விட்டாள்.

"இப்ப எதுக்கு புள்ளையை திட்டிட்டு இருக்க... யார் மேல இருக்கும் கோபத்தை பிள்ளை கிட்ட காட்டிட்டு இருக்க ப்ரியா?" என்று சத்தம் போட்டபடி உள்ளே நுழைந்தார் பரதன்.

"அம்மா... ருத்ராக்கு என்ன ஊட்ட போறிங்களோ ஊட்டி... உங்க கூடவே படுக்க வச்சக்கோங்க ம்மா... எனக்கு தூக்கம் வருது... நான் போய் படுக்கறேன்..." என்று சொல்லிக் கொண்டே கையை கழுவிய படி எழுந்து கொள்ள, பாப்பாவோ ஓடி வந்து தாயின் காலை கட்டிக் கொண்டாள்.

"ம்மா... ம்மா..." என்று பயத்துடன் அழைக்க,

"ஒன்னுமில்ல பட்டு..." என்று ப்ரியாவும் தூக்கிக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைய,

"ப்ரியா... கொஞ்சம் நில்லு... உன் கூட பேசணும்..." என்றார் பரதன்.

"எனக்கு உங்க கிட்ட ன்னு பேச ஒன்னுமே இல்ல பா..." என்று சொல்லியபடி, சுமித்ராவிடம் சென்று பிள்ளையை கொடுத்து விட்டு, "ம்மா... இப்ப என்ன தான் உங்க வீட்டுக்காரருக்கு பிரச்சனையாம்... ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க விட மாட்டாரா? ருத்ரா முகத்தை பாருங்க... இப்படி தினம் தினம் சண்டை போடுறத பார்த்தே அவ ரொம்ப பயந்து போறா... தயவு செய்து என் கூட எதும் பேச வேணாம்னு சொல்லுங்க ம்மா... இல்ல... என் வழியில ஆச்சு போக விடுங்க... எதையும் செய்ய விடாம எதுக்கு தான் நந்தி போல இருந்து என்னோட கொஞ்சநஞ்ச நிம்மதியையும் அறுத்து எறிஞ்சிட்டு போறாரோ தெரியல..." என்று மெல்லிய குரலில் சீறி விட்டு தாயின் பதிலை காது கொடுத்தும் கேளாமல் மொட்டை மாடிக்கு தனித்து சென்று விட்டாள் கிருஷ்ணப்ரியா.

அந்த இருளின் குளுமையில் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த பெண்ணவளின் மனமெல்லாம் ரணமாய் மாறி போய் இருந்தது! அவளின் ரணங்களை மனம் விட்டு பகிற கூட ஒரு நாதியும் இல்லை! பக்கத்தில் சொந்தங்கள் என்று பெயர் சொல்லும் அளவிற்கு இருந்தாலும், அவள் உணர்ந்த ஒன்றே ஒன்று தனிமை மட்டுமே! அந்த தனிமையே சில நேரங்களில் அவளின் அரணாகவும் அமைந்திருக்கும்! பல நேரங்களில் தீப்பிழம்பாகவும் மாறியிருக்கும்!

அவளது வாழ்க்கையை பற்றிய சிந்தனையில் மூழ்கி விட்டால் தூயவளின் நித்திரை தொலைப்பது தான் மிச்சம்!

இப்படி எவ்வித ஒழுங்கின பாதையும் இல்லாது வாழ்க்கை செல்லும் பாதையில் பயணிக்கும் கிருஷ்ண பாவையின் வாழ்வு எப்படி வளைந்து நெளிந்து செல்லும் என நாமும் அவளுடனே பயணித்து ஒவ்வொன்றாய் தெரிந்துக்கொள்வோம்!

**********


உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும் 👇

 
ராட்சசி - 3

கிருஷ்ணப்ரியாவோ உறங்கிக் கொண்டிருக்க, தீடிரென அவளின் ஆழ்மனதில் பதிந்து போயிருந்த தேவையற்ற காட்சிகள் எல்லாம் எப்போதும் போல கனவிலும் தொடர்ந்து வர, அடித்துப் பிடித்து பதறி போய் எழுந்து அமர, சுற்றும் முற்றும் அரண்டு போய் விழிக்க, அப்போது தான் மனம் அமைதி அடைந்து மூச்சே சீராக வந்தது.

"எத்தனை நாளைக்கு தான் இது போல தூக்கத்தை தொலைச்சு... பைத்தியக்காரி போல எழுந்து புலம்ப போறேனோ! கடவுளே! எனக்கு சந்தோஷத்தை கொடுன்னு கேட்கல... எனக்கு எந்த ஒரு பழைய ஞாபகமும் தேவை இல்ல... எல்லாத்தையும் மறக்க வச்சிடு... இப்படி தினம் தினம் தூங்காம அலறி போய் எழறேன்னு தான் பாப்பாவை கூட பக்கத்துல படுக்க வைக்க பயந்து... ஏதோ ஒரு சாக்கு சொல்லி அம்மா கூடவே இருக்க வச்சிடறேன்... இதுக்கெல்லாம் ஒரு தீர்வே இல்லையா ஆண்டவா?" என்று வாய் விட்டே புலம்ப கண்களிலோ கண்ணீர் பெருகியது!

பெண்ணவளுக்கு இந்த நிம்மதியில்லா தூக்கமும் புதிதல்ல! புலம்பலும் புதிதல்ல! அழுகையும் புதிதல்ல! அவளது ஒவ்வொரு ராத்திரிகளும் தூங்கா இரவுகள் தான்! அவளின் கடந்த காலம் கொஞ்சமும் தூங்க விடுவதில்லை என்பதே முற்றிலும் உண்மை!

பகலில் அவள் தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், இரவு அவளது மன அமைதியை கெடுத்து கிறுக்கியாய் மாற்றி விடும்!

தனக்கு தானே புலம்பிக் கொண்டிருந்த கிருஷ்ணவோ விடியற்காலையில் தான் கொஞ்சம் கண்ணசந்தாள்.

"ம்மா... ம்மா... எந்தி ம்மா... ம்மா..." என்று அவளது பெண்ணரசி கத்தி பிஞ்சு விரல்களால் கதவை தட்டிய படி இருக்க, அதில் விழித்து விட்டாள் அன்னை!

"இதோ அம்மா ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன் பட்டு..." என குரல் கொடுத்தபடி நேராக குளியலறை சென்று முகத்தை கழுவி விட்டே கதவை திறந்தாள் ப்ரியா.

"ம்மா... குட் மாயிங்..." என்று கள்ளமில்லா சிரிப்பில் சொன்னாள் ருத்ரா.

"ஹேப்பி மார்னிங் ருத்ரா பாப்பா..." எனக் கூறி அணைத்து நெற்றியில் இதழ் பதிக்க,

"ம்மா... நானு..." என்றபடி தாயின் கன்னத்தில் இச் கொடுத்து ஓடி விட்டாள் குழந்தை.

அதன் பின்னர், அந்த நாளை துவங்க நினைத்து குளியலறைக்குள் புகுந்து கொண்டு, தன்னை தயார்படுத்திக் கொண்டே வெளியே வர,

"ம்மா... தூக்குங்க..." என்று இரு கைகளையும் விரித்து காட்டி சொன்னாள் பாப்பா.

ப்ரியாவும் புன்முறுவலுடன் தூக்கி, "ருத்ரா... அம்மா ரெடி ஆகிட்டேன்... நீ ஆச்சி கிட்ட குளிச்சிக்க... இன்னைக்கு எனக்கு எம்.டி தாத்தா கூட மீட்டிங் வேற இருக்கு... நீ சமத்தா இருந்துக்கணும்... ஆச்சியை தொந்தரவு பண்ண வேணாம்... சரியா..." என்று பக்குவமாய் மகளின் குணம் அறிந்து சொல்ல, அவளும் சரி எனும் விதத்தில் தலையசைத்து கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளின் தலையை வருடிக் கொண்டே, 'நான் உனக்கு நல்ல அம்மாவா இருக்கேனா டி... உன்ன ரொம்ப ஏங்க விடறேன்னு எனக்கே தெரியுது பாப்பா... ஆனா என்ன பண்றது... அம்மாவும் உனக்காகவாவது மாற முயற்சி பண்றேன்... ஆனாலும் கஷ்டமா தான் இருக்கு... இருந்தும் உனக்காக மாறிட்டே இருக்கேன்... நீ மட்டும் தான்டி என்னோட வாழ்க்கையே! உன்னால மட்டும் தான் நான் உயிரோடவே இருக்கேன்... நீயும் இல்லாம போனா எனக்குன்னு யாருமே இல்லம்மா...' என்று தனக்குள் எண்ணி மருகி விட்டு, அவளது தந்தை வீட்டில் இருக்கிறாரா என்று கண்களை சுழற்றி தேட, அவர் இல்லாமல் போகவும் சிறிது நிம்மதியாக இருந்தது.

"அம்மா... நான் கிளம்பறேன்... சாயங்காலம் வீட்டுக்கு வர நேரமெடுக்கும்னு நினைக்கிறேன்... ஏன்னா மதியம் ஒரு ஜுவல்லரி ஷாப்புக்கு போக வேண்டிய வேலை இருக்கு... அதுக்கு நானும் நிவேதா மேமும் தான் போயாகணும்... அதுவரை இவளை கொஞ்சம் சமாளிச்சிக்கோ ம்மா... குழந்தையும் பாவம்! நான் நாளைக்கு லீவ் சொல்லிட்டு இவளோடவே இருந்துக்கறேன்..." என்று தாயிடம் சொல்லி விட்டு,

"ருத்ரா... அம்மாக்கு நாளைக்கு லீவ்... நீயும் நானும் வெளியே போய் ரொம்ப நாள் ஆச்சு தானே... நம்ம ஜாலியா போலாம் டா... இப்ப சமத்து குட்டியா இரு... உம்மா..." என்று கன்னத்தில் முத்தம் இட்டாள் கிருஷ்ணப்ரியா.

"சாப்பாடு எடுத்துட்டு போலயா ப்ரியா?" என்று சுமித்ரா கேட்க,

"ம்ஹூம்... நான் ஆஃபிஸ்ல பாத்துக்கறேன் ம்மா..." எனக் கூறி அலுவலகத்திற்கு கிளம்பி விட்டாள் ப்ரியா.

அவளின் கெட்ட நேரமோ என்னவோ அன்று ஆட்டோ கிடைக்கவே இல்லை!

ப்ரியா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு, "ச்சே! டைம் வேற ஆச்சு..." என்று முணுமுணுத்தபடி இருந்தாள்.

பெண்ணவளோ ஒரு மரத்தின் நிழலில் நின்று சாலையை வெறித்து கொண்டிருந்த வேளையில், அவள் கண்ட காட்சியில் உள்ளம் மறித்து போய், தான் பார்த்ததை மன பிரம்மை என ஒதுக்க நினைத்தாலும், ஒருவித பித்து நிலையில் தான் இருந்தாள்.

"ப்ரியா... எப்படி மா இருக்க?" என்ற குரலில் தான் அவள் சுயம் பெற்றாள்.

"அ... அத்..தை..." என்று வார்த்தை தடுமாறி தான் வந்தன.

"நல்லா இருக்கியா ப்ரியா? குட்டி எப்படி இருக்கா?" என்று சிரித்த முகமாக கேட்டார் வானதி.

"ம்ம்... பாப்பா நல்லா இருக்கா அத்தை..." என்று சொல்லி சிரிக்க முயல... அவளால் சுத்தமாக முடியவில்லை!

"வேலைக்கு போக வெயிட் பண்றியா மா?"

"ஆமா த்தை..." என்று விட்டு, அடுத்த என்ன பேசவென தெரியாமல், "ஏன் அத்தை வீட்டுக்கு வர்றது இல்ல..." எனக் கேட்டாள் கிருஷ்ணா.

அதற்கோ பதில் கூறாமல் சிரித்து வைத்து, "மாமாக்கு நேரம் கிடைக்கறது இல்ல ப்ரியா..." என்று மழுப்ப,

"மாமாவோட கோவம் புரியுது அத்தை..." என்று கசந்த புன்னகையுடன் கூறினாள் பெண்.

வானதியோ இதற்கு மேல் பேசினால் இருவருக்கும் வீண் கஷ்டம் தான் என்று நினைக்கும் பொழுதில் ஒரு ஆட்டோவும் வந்தது.

"சரி மா... ஆட்டோ வந்துருச்சு... உனக்கு நேரம் ஆகுது போல கிளம்புமா..." என்றார் வானதி.

"சரி அத்தை..." எனச் சொல்லி விட்டு சென்றவள் மீண்டும் திரும்பி, "அத்தை..." என்றழைக்க, வானதியும் கேள்வியுடன் பார்த்தார்.

"ஒன்னுமில்ல அத்தை... நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வாங்க..." என்று சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டாள் கிருஷ்ணப்ரியா.

இவை‌ அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்தபடி வந்த ராமனோ கோபமாக, "அவ கூட உனக்கு என்ன பேச்சு வானதி..." என்று கத்தினார்.

"ஏங்க... நம்ம ப்ரியா ங்க... அவ மேல கோபமா இருந்து என்ன பிரயோஜனம்... பாவம் அவளே வாழ்க்கையே இழந்துட்டு... எந்த சந்தோஷமும் இல்லாம என்னத்தையோ வாழ்ந்துட்டு இருக்கா..." என்று வானதி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

சாலையென்றும் பாராமல், "அப்பன் பண்ண பாவத்துக்கு தான் இவ இப்படி அனுபவிச்சிட்டு இருக்கா... இன்னும் நல்லாவே அனுபவிக்கட்டும் விடு..." என்று வார்த்தைகளை கடித்து துப்பினார் ராமன்.

"எப்படி ங்க உங்களால இப்படி யோசிக்க முடியுது... அவ உங்க தங்கச்சி பொண்ணு... ஒருகாலத்துல உங்க செல்ல பொண்ணா இருந்தவ அவ... அவளுக்கு போய் சாபத்தை கொடுக்கறீங்க... வேணாம் ங்க... பாவம் அநத புள்ள..." என்று வானதி கணவரை கண்டிக்க,

"உனக்கெல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தி வராது வானதி... அந்த பரதனோட வரட்டு கௌரவத்தால பெத்த பொண்ணோட வாழ்க்கையவே நாசம் பண்ணான்... நம்மை இம்மி அளவுக்கு கூட மதிக்காம எவ்வளவு ஆட்டம் ஆடினான்... இப்பவும் அடங்கினானா? ம்ஹூம்... இல்லையே! மனசாட்சி இல்லாத ஜென்மம்..." என்று ஆல் இந்தியா ரேடியோ போல பேசிக் கொண்டிருக்க,

வானதியோ, 'இவர் அடங்க மாட்டார் போலவே! ம்ம்... இப்படி வேணா பேசிப் பார்க்கலாம்...' என மனதில் எண்ணி, "நீங்க இப்படியே கத்திட்டு இருங்க... எனக்கு அப்படியே படபடன்னு வருது... இருங்க... என் பிள்ளை கிட்ட ஃபோன் போட்டு 'உன் அப்பா எனக்கு ஹார்ட் அட்டாக்கை வர வைக்க பார்க்கிறார் கண்ணா' ன்னு அவன் கிட்ட சொல்றேன்... அப்ப தான் நீங்க அடங்குவீங்க..." என்று கிண்டலாக பேசவும், மேலும் எதுவும் பேசாமல் முறைக்க மட்டும் செய்து அமைதியாகி விட்டார்.

அதன் பின்னர், மேலும் எந்த ஒரு வாக்குவாதமும் இல்லாது இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

"இந்தாங்க... மோர்... குடிங்க... டென்ஷன் குறையும்..." என்றபடி மோர் சொம்பை நீட்டினார் வானதி.

மனைவியை முறைத்து விட்டு அதை வாங்கி பருக ஆரம்பித்தார் ராமன்.

"வாசு அப்பா..." என்று பீடிகையுடன் அழைக்க, அதற்கு பதில் கூறாமலே இருந்தார் அவர்.

"உங்கள தான் கூப்பிடுறேன்... காது செவிடு இல்லல... நல்லா தானங்க இருக்கு..." என்று சலித்துக் கொள்ள,

"போய் மதியத்துக்கு சமையல் பண்ற வழியை பாரு வானதி..."

"அந்த கழுதை எல்லாம் எனக்கே தெரியும்..."

"தெரிஞ்சா சரிதான்..." என்று நிறுத்திக் கொண்டார் ராமன்.

வானதியோ கைகளை பிசைந்த படி, "என்னங்க... நான் இத பேசறேன்னு நீங்க கோபப் பட்டாலும் பரவாயில்லை... ஒரு முறை‌ ப்ரியாவோட வாழ்க்கையை பத்தி நம்ம வாசு கிட்ட சொல்லி தான் பார்ப்போமே... அந்த பிள்ளை வாழ்க்கையில என்ன பிரச்சனை ஆச்சு ன்னு நமக்கும் தெரியல... அவளை பெத்தவங்க கிட்டயும் மூச்சு விடல... ப்ச்... எனக்கு என்ன சொல்றது ன்னு தெரியல ங்க... இவ்வளவு நாளும் நீங்க என் வாயை கட்டி போட்டு வச்சி இருந்தீங்க... அவன் கிட்ட எல்லாம் சொல்லிடலாம்... அப்பறம் அவன் என்ன முடிவு எடுக்கறான்னு பார்க்கலாம் வாசு அப்பா... என் மகன் வாழ்க்கையும் எனக்கு ரொம்ப முக்கியம்..." என்று தாயானவர் கவலையுடன் பேசிக் கொண்டிருக்க,

"வாயை மூடு வானதி... என் மகன் அனுபவிச்ச நரகத்தை எல்லாம் நீயும் கூட இருந்து பார்த்த தானே... எனக்கு யாரை பத்தியும் கவலை இல்ல... நான் கவலை பட்டது எல்லாம் போதும்... எனக்கு வாசு மட்டும் தான் முக்கியம்... அவனுக்கு எதை பத்தியும் சொல்ல தேவல... அவ இப்ப நிம்மதியா இருக்கான்... அதை கெடுக்க நினைக்காத... அப்பறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..." என்று ருத்ரா மூர்த்தியாக மாறினார் ராமன்.

"வாசு நிம்மதியா இருக்கான்னு நீங்க கூட இருந்து பார்த்தீங்களா? சரி ஒருவேளை நிம்மதியா இருக்கான்னே வச்சிப்போம்... அப்போ, அவனுக்கு ஒரு பொண்ணை பார்த்து... கல்யாணம் செஞ்சி வச்சு... பத்து மாசத்துல ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து குடுக்க சொல்லுங்க... நான் வாயை மூடிட்டு என பேரப்பிள்ளைகளை கொஞ்சிட்டு அமைதியா கிடக்குறேன்..."

"அதை நம்ம சொல்லி தான் தெரியும்ன்னு இல்ல... அவனுக்கு தோணும் போது அவனே கல்யாணம் பண்ணிப்பான்..."

"எப்போ? நமக்கு எண்பதாம் கல்யாணம் பண்ணிட்டு அவன் அறுபதாம் கல்யாணம் பண்ணிப்பானாமா?"

"புரியாம பேசாத வானதி!"

"உங்களுக்கு அவனை பத்தி புரியாம இருந்த போய் தான்... நான் உங்க கூட மல்லுக்கு நின்னுட்டு இருக்கேன்... வாசுவோட மனசுல இப்பவும் கிருஷ்ணப்ரியா தான் இருக்கா... இப்ப இல்லங்க எப்பவுமே அவ ஒருத்தி மட்டும் தான் அவனுக்குள்ள இருப்பா... அவன் மனசை தெரியாம என் கிட்ட சண்டைக்கு நின்னு என் வாயை அடைச்சு வச்சு இருக்கீங்க... நான் நூறு சதவீதம் நம்பிக்கையோட சொல்லுவேன்... ப்ரியாவோட வாழ்க்கை... எப்படி எந்த சூழ்நிலை இருக்குன்னு சொன்னா மட்டும் போதும்... அடுத்த செகண்ட் அவ முன்னாடி போய் நிற்பான்... ஏன்னா, என் மகனோட காதல் அப்படிப்பட்டது... நீங்க இதை எல்லாம் யோசிக்காம கோபத்துல ரொம்பவே தப்பு பண்றீங்க..." என்று அழுகையுடனே தன் ஆதங்கத்தை கொட்டினார் வாசுவின் அன்னை.

ராமனோ மனைவியின் அழுகையை பொறுக்க முடியாமல், "ப்ச்... வானதி இப்ப என்னத்துக்கு இப்படி கண்ணை கசக்கிட்டு நிக்கிற?" என்று அமைதியான குரலில் கேட்க,

"இந்த பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் ஆண்டவன் ரெண்டாவது வாய்ப்பை கூட கொடுக்க நினைச்சி இருக்கலாம்... தயவு செய்து அதை தடுக்க நினைக்காதீங்க வாசு அப்பா... இன்னைக்கு ப்ரியாவ பார்த்தப்ப நம்ம வாசுவை பார்க்கிற போலவே இருந்துச்சு... எவ்வளவு துக்கம் இருந்தாலூம் அத வெளியே காட்டிடாம திமிராவே இருந்து தைரியமா தன்னை காட்டிகிட்டாலும் உள்ளுக்குள் சுக்கு நூறா உடைஞ்சு போய் இருக்காங்க... என்னங்க... ப்ளீஸ்ங்க... உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுகிறேன்... நம்ம பையன் கிட்ட நேர்ல போய் பேசலாம்... அதுக்கு பிறகு, நான் வாயே திறக்க மாட்டேன்... இது அவன் வாழ்க்கை... என்ன வேணாலும் முடிவு எடுத்துக்கட்டும்னு விட்டுடலாம்..." என்றவர் கணவரை ஒருவித எதிர்பார்ப்புடன் நோக்கினார்.

தன் செல்ல மகனுக்காக, "என்னங்க... நல்லா யோசிங்க... இந்த கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு உங்க வாசுவோட எதிர்கால வாழ்க்கையை மட்டும் நினைச்சு பாருங்க... " என்று ராமனிடம் மன்றாடி நின்றிருந்தார் வானதி.

***********

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும் 👇

 
ராட்சசி - 4

வானதியோ கணவனிடம் மன்றாடிக் கொண்டிருக்க, அவர் மனமும் மகனது நலனை எண்ணியே கலங்கியது.

ராமனுக்கும் ப்ரியா மீது கோபம் எல்லாம் இல்லை! ஆனால், வருத்தம் மட்டும் நிர்மபவே இருந்தது. அவரது சினத்திற்கு முக்கிய காரணமே பரதன் தான்!

இன்று ப்ரியாவை நேரில் பார்க்கவும் அவருக்கே அதீத கவலையை கொடுத்தது என்னவோ உண்மை தான்!

'வாழ வேண்டிய பொண்ணு... இப்படி போய் கஷ்டப்படுதே... பாவம்... ப்ரியா பாப்பா என்ன தப்பு செஞ்சது... அதுக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை ஆண்டவா?' என்று தங்கை மகளை எண்ணி மனம் பிசைந்தது.

மனைவியோ கணவன் யோசிப்பதை தெரிந்து கொண்டு, "ஏங்க! நாலு வருஷம் போயே போச்சு ங்க... இத்தன வருஷத்துல பிள்ளைகளோட காயம் ஒரேயடியா காணாம போகலன்னாலும் ஓரளவு குறைஞ்சாவது போய் இருக்கும்... அதுங்களோட அனுபவத்துல கொஞ்சமே கொஞ்சம் பக்குவம் வந்திருக்கும்... நம்ம பிள்ளையார் சுழியை மட்டும் போட்டு வைப்போம்... பாக்கிய நம்ம பிள்ளைகளே பாத்துக்கட்டும்... நாம நினைக்கிறது மட்டுமே நடக்க போறது இல்லைங்க... நமக்கு முன்னாடியே அந்த ஆண்டவன் யாருக்கு என்னென்ன நடக்கும்... நடக்க போகும்னு எழுதி வைத்திருப்பான்... அதுபடி தானே இங்க நித்தமும் நடக்கும்... அதனால நீங்க ஒரு நல்ல முடிவை சொல்லுங்க பா..." என்று மேலும் நாலு நல்ல வார்த்தைகளை சொல்லி வைத்தார்.

யார் செய்த புண்ணியமோ? அந்த நேரம் துணைவி சொல்லிய அனைத்தும் தெய்வ வாக்காகவே அவருக்கு பட்டது.

"சரி வானதி... நாம வேணும்னா இந்த வாரம் ஊருக்கு போய் வாசு கிட்ட பேசலாம்... நானே பேச்ச ஆரம்பிக்கிறேன்... அவன் கிட்ட பேசலாம்... அவனே முடிவு எடுக்கட்டும்..." என்று சமத்தாய் சொல்லி விட,

"ரொம்ப சந்தோஷங்க..." என்று பூரித்துப் போனார்.

"ஆனா ஒரு கண்டிஷன்..."

"என்னங்க புதுசா?"

"நம்ம விஷயத்தை சொல்றதா மட்டும் தான் இருக்கணும்... அவனை கட்டாயப்படுத்தி பேச கூடாது... நீ இத தான் செய்யணும்னு சொல்லி செண்டிமெண்ட் காட்டி பிளாக்மெயில் பண்ண கூடாது... அவனோட போக்குல விட்டு... அவனே முடிவு எடுக்கட்டும்னு வேற எதையும் பேசாம அமைதியா இருந்திடணும்... என்ன இதுக்கெல்லாம் சம்மதமா வானதி..." என்று சீரியஸாக கேட்டு வைத்தார் ராமன்.

'அட! பாவி மனுஷா... இத்தனை வருஷமும் இதை தானே இராப் பகலா சொல்லிட்டு இருக்கேன்... அப்பல்லாம் தாம் தூம்னு குதிப்பாரு... ஹ்ம்ம்... அததுக்கு ஒரு கால நேரம் வந்தா அதுவே தானா நடக்கும்னு சும்மாவா சொல்லிட்டு போய் இருக்காங்க பெரியவங்க? திரௌபதி அம்மா தாயே! எங்களுக்கு துணையா இருந்து எல்லா விஷயத்தையும் நல்ல படியா முடிச்சி குடு ஆத்தா... என் மகன் மருமகளோட உன் சன்னதிக்கு வந்து பொங்க வைக்கிறேன்...' என்று மனதில் நினைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொண்டிருக்க,

"வானதி நான் சொன்னது எல்லாத்தையும் காதுல வாங்கனீயா இல்லையா?" என்று கடுகடுத்தார் அவர்.

"ஹான்! ஹான்! கேட்டுச்சு பா... எனக்கு இது எல்லாத்துக்கும் சம்மதம் தான்... நீங்க சொல்ற போலவே நடந்துக்கிறேன்... என் பையன் குடும்பமா சந்தோஷமா வாழ்ந்தாலே எனக்கு போதும்..." என்று மனதார சொன்னார் தாயானவர்.

அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு திருச்சிக்கு போக இணையத்தில் பயணச்சீட்டுகளை பதிவு செய்தார் ராமன்.

வானதியோ அமைதியாக இருக்காமல், "ஏங்க... நாம வர்றத பத்தி உங்க மகன் கிட்ட சொல்லலையா?" என்று கணவரை சீண்டி வேண்டுமென்றே கேள்வி கேட்க,

"சொல்லல..."

"ஏன்?"

"என்ன வானதி வம்பு பண்ணிட்டு இருக்கியா? நாம வரோம்னு சொன்னா ஆயிரத்தெட்டு கேள்வி ஃபோனிலேயே கேட்பான்... அதுக்கு எல்லாம் என்னால பதில் சொல்லி சமாளிக்க முடியாது... நேர்ல போய் பார்த்துக்கலாம்... அதான் அந்த டிரைவர் நம்பர் இருக்குல்ல... ஒன்னும் பிரச்சனை இருக்காது..." என்று நொந்து போய் சொன்னார் ராமன்.

வானதியோ இதற்கு மேல் ஏதேனும் பேசினால் வேதாளம் முருங்கை மரம் ஏறி விடும் என பயந்து நல்ல பிள்ளையாக மாறி சமைக்க தொடங்கி விட்டார்.

********

சுமித்ராவோ பரதன் சாப்பிடும் வரையில் எதையும் பேசாமல் மௌனம் காத்தவர், "என்னங்க?" என்று மெல்லமாக அழைக்க,

அவரோ என்ன எனும் தோரணையில் பார்த்து வைக்க,

"ப்ரியா கிட்ட எதுவும் பேச்சு வச்சுக்காதீங்க... பாவம் புள்ள..." என்று ஆரம்பிக்கவும்,

"பேச்சு வேணாம்னா அப்படியே விட்டுட சொல்றியா? இப்படியே எவ்வளவு காலம் இங்கேயே இருந்துப்பா?" என்று பொரிய தொடங்க,

'கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாத மனுஷன்...' என்று நினைப்புடன் வெறித்துப் பார்த்தார்.

"ஏங்க இப்படி யாரோ போல பேசறீங்க?"

"என் பேச்சை கேட்காம போனா இப்படி தான் பேசுவேன் சுமித்ரா..."

"ஹ்ம்ம்... உங்க பேச்சை கேட்டு தானே ங்க அவளோட வாழ்க்கை ஒன்னும் இல்லாம கிடக்குது... இதுக்கு மேல என்ன வேணும்..." என்றார் சுமித்ரா.

அதற்குள் இடையில் புகுந்த பரதனோ,

"என் பேச்சை கேட்டு தான் வாழ்க்கை கெட்டு போச்சோ! உன் பொண்ணு தான் வயித்து பிள்ளையோட... என் அக்கா மகன் கூட வாழ மாட்டேன்னு அடமா வந்து நின்னா... அந்த அடத்தோடவே யார் பேச்சையும் காது கொடுத்து கேட்காம திமிரா இருந்து... அந்த பய கிட்ட இருந்து விவாகரத்தும் வாங்கி... இப்ப ஒரு பெண் குழந்தையை பெத்துக்கிட்டு தனியாவே வாழ்ந்துட்டு இருக்கா?" என்று வியாக்கியானம் பேச,

"என்ன நான் பெத்த குழந்தை அடமா வந்து உங்க கிட்ட வாழ மாட்டேன்னு நின்னுட்டாலா?" என்று வெகுந்து விட்ட சுமித்ராவோ, மேலும் தொடர்ந்து,

"அவளை ஹாஸ்பிடலில் இருந்து குத்துயிரும் கொலை உயிருமா தானே நிறை மாச வயித்து புள்ளக்காரியா அழைச்சு வந்தோம்... இன்னைக்கு வர என்னாச்சு? என்ன பிரச்சனை நடந்துச்சு ன்னு என் பொண்ணு வாயை திறந்து சொல்லி இருப்பாளா? அவ மேல தப்பு இருந்திருந்தா இன்னைக்கு இவ்வளவு தைரியமா பிறந்த வீட்டுக்கு வந்து... என் பேத்தியை வச்சுட்டு யார் தயவும் இல்லாம வாழ்ந்திருப்பாளா? அவ சொக்க தங்கம் ங்க... அந்த படுபாவி என் பொண்ண என்ன கொடுமை செய்தான்னு கூட இதுவரை தெரியல... என் அக்கா மகன்னு சொல்லி அவனை அவ்வளவு பெருமை பேசறீங்களே! அப்படி யோக்கியனா இருக்கவன் தான் விவாகரத்து ஆன ஒரு மாசத்துல வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கூத்தடிப்பனா?" என்று வெறுப்புடன் சொல்லவும்,

"பின்ன, இவ வேணாம்னு சொன்னா கால்ல விழுந்து கெஞ்சுவாங்களா? அதான், அவனுக்கு ஏத்த ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் கட்டிக்கிட்டான்..." என்று விட்டுக் கொடுக்காமல் பேசினார் பரதன்.

"ச்சீ! என்ன நியாயம் ங்க உங்க நியாயம்? பொல்லாத நியாயம்... ஹ்ம்ம்... கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்... என்னன்னு தான் கேட்போம்... ஹ்ம்ம் சொல்லுங்க?" என்று எரிச்சலாக கேட்க,

"ஆமா டி... எனக்கு என்னோட நியாயம் உசத்தி தான்... அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல..."

"அப்போ ப்ரியாவை கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயப் படுத்திட்டு இருக்குறதுக்கு காரணமும் கூட... அவ மேல இருக்கும் அக்கறையில இல்ல... உங்க தலையில எந்த பாரமும் இருக்க கூடாது... உங்க மேல எந்த ஒரு தப்பான பேச்சும் வந்திட கூடாது... அதுக்கு தானே இப்படி எல்லாம் பண்றீங்க... சரியான சுயநலவாதி... இல்ல இல்ல... காரியவாதி...‌ இனி உங்க கிட்ட பேசறது எல்லாம் வீண் தான்..." என்று முகச் சுழிப்புடன் சொல்லி விட்டு பால்வாடியில் விட்டிருக்கும் பேத்தியை அழைத்து வர சென்று விட்டார் சுமித்ரா.

********

கிருஷ்ணப்ரியாவோ ஜன்னலை வெறித்துப் படி அவளது உயரதிகாரி நிவேதாவுடன் பயணித்துக் கொண்டிருந்தாள்‌.

"ப்ரியா... என்ன ரொம்ப நல்லா இருக்க?" என்று அன்பாக கேட்க,

"நத்திங் மேம்..."

"வாய் தான் நத்திங் சொல்லுது... மனசோ மெனிதிங் ன்னு சொல்லி கதறுது போலயே மா..."

"உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல மேம்... ரொம்ப மெண்டல் ப்ரஷரா இருக்கு வீட்டுல... இதனாலேயே பாப்பாவை கூட சரியா கவனிச்சுக்க முடியாம போகுது... ப்ச்... ருத்ரா பாவம் மேடம்... குழந்தை என்னை ரொம்ப தேடறா... ஆனா, என்னால ஒன்னும் பண்ண முடியல... கஷ்டமா இருக்கு மேம்..." என்று சொல்லவும் கண்களில் இருந்து சொட்டு சொட்டாக கண்ணீர்.

நிவேதாவோ அவளது கைகளை பற்றிக் கொண்டு, "ப்ரியா... ஒரு சிங்கள் பேர்ணட்டோட பெயின் என்னன்னு எனக்கும் தெரியும்... ஏன்னா, நானும் அதை அனுபவிச்சி இருக்கேன்... உன் கிட்ட எப்போதும் சொல்ற ஒன்னு தான்... மொதல்ல அமைஞ்ச வாழ்க்கை சரி இல்லாம போனால் நாமும் அங்கேயே தேங்கி நிற்கணும்னு அவசியம் இல்ல... நம்மோட பாதையில நம்மோட சரியான துணை தேடி வரும்... அப்போ அந்த ஆப்ஷனை சூஸ் பண்ணி அடுத்த வாழ்க்கைய தேடி போகலாம்... அது தப்பில்ல ப்ரியா..." என்று விட்டு,

"இன்னும் சொல்ல போனா... உன்னோட சரியான வாழ்க்கையை தேடி நீ போக தேவை இல்ல ப்ரியா... காலமும் நேரமும் உன்னை தேடி வர வைக்கும்... அப்போ அடையாளம் கண்டுக்கிட்டு இறுக்கமா பிடிச்சிக்கோ... வாழ்க்கை நீ நினைப்பதை விடவும் அழகா போவும்..." என்று தன் அனுபவத்தில் தோழிக்கு தைரியம் சொன்னார்.

ஆனால், கிருஷ்ணாவோ அவற்றை எல்லாம் தலை அசைத்து கேட்டாலே ஒழிய மனதிற்கும் மூளைக்கும் கொண்டு செல்லவே இல்லை!

"மேடம்... நாளைக்கு மட்டும் லீவ் வேணும்... ருத்ராவை எங்கயாவது வெளியே கூட்டி போகலாம்னு இருக்கேன்... அதான் மேம்..." என்று விடுமுறை எடுத்து அனுமதி கேட்டாள் பெண்.

நிவேதாவும் மறுப்பேதும் கூறாது, "ஒன்னும் பிரச்சனை இல்ல ப்ரியா... நாங்க பாத்துக்கறோம்... நீ எதை பத்தியும் யோசிக்காம உன் பொண்ணு கூட என்ஜாய் பண்ணு..." என்றார்.

"ம்ம்... ஓகே மேடம்..." என்று அவரிடம் சொல்லி விட்டு, மனதிற்குள் மட்டும் நன்றியை கூறிக் கொண்டாள் கிருஷ்ணப்ரியா.

********

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும் நட்புகளே!

 
காதலை களவாடும் ராட்சசியே!

ராட்சசி - 5

கிருஷ்ணப்ரியாவும் ருத்ரப்ரியாவும் காலையிலேயே நேரத்துடன் சாப்பிட்டு விட்டு வெளியில் செல்ல தயாராகி விட்டனர்.

அழகு பொம்மை இருந்த பெண் குட்டியோ, "ம்மா... பாப்பாவும் ரெடி... நீங்களும் ரெடி..." என்று கூற,

மகளின் அழகை கண்டு கைகளால் திருஷ்டி எடுத்து, "ஆமாம் டி பட்டு..." என்றாள் கிருஷ்ணா.

"ம்மா... எங்களோட நீங்களும் வரலாம் தானே..." என்று குறையாக சொல்ல,

சுமித்ராவோ மனதின் காயங்களை மகளிடம் காட்டிக் கொள்ளாமல், "இல்ல ப்ரியா... நீயும் ருத்ராவும் போய்ட்டு வாங்க... எனக்கு ரேஷன் போய் சாமான் எல்லாம் வாங்கிட்டு வரணும்... நீயே எப்பவாவது தான் லீவ் போடற... உன் பொண்ணை கூட்டிட்டு போய் இஷ்டப்பட்டது எல்லாம் செஞ்சி கொடு..." என்று மட்டும் சொல்லி விட்டார்.

அதற்கு மேல் ப்ரியாவிற்கும் கட்டாயப்படுத்த தோன்றவில்லை!

"சரி மா... அப்போ நாங்க கிளம்பறோம்..."

"ப்ரியா... இந்தா புடி... இதுல பிளாஸ்கில் சுடு தண்ணீரும்... அவளுக்கு பிடிச்ச வெண்ணெய் பிஸ்கட்டும் இருக்கு... தேவைப்பட்டா கொடு..." என்று சொல்லி அவளது பையில் வைத்து விட்டார் சுமித்ரா.

அதன் பின்னர் தாயும் மகளும் நேராக சென்று என்னவோ பாபா கோவிலுக்கு தான்!

பாபா என்றால் ப்ரியாவிற்கு அவ்வளவு இஷ்டம்! அவளை போலவே ருத்ராவிற்கு பாபா தாத்தா என்றால் அவ்வளவு பிடிக்கும்! தாயை போல பிள்ளை நூலைப் போல சேலைன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க... இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ருத்ரா அன்னையையே உரித்து வைத்தபடி இருந்தாள்.

அங்கு பிரத்யேகமாக அளிக்கப்படும் பிரசாதமான கிச்சடியை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் குழந்தை!

அதை கண் இமைக்காமல் பார்த்தபடி இருந்தவளின் எண்ணமோ கடந்த காலத்தை ஞாபகப் படுத்தியது. அதனை முயன்று விரட்டி அடித்தாள் தெரிவைப் பெண்.

அந்த கோவிலிலேயே ஒரு மணி நேரம் கடந்து விட்டது.

"ருத்ரா... நாம இன்னைக்கு எங்க போலாம்னு நீயே சொல்லு..."

"ம்மா... ம்மா... நாம சிங்கம் புலி மயிலு எல்லாம் பாக்க போகலாமா?" என்று சிறியவள் ஆசையாக கேட்க,

"அச்சோ! அதெல்லாம் பார்க்க வேற ஊருக்கு போகணும் பட்டு... ஹ்ம்ம்... நம்ம கூட பெரியார் பார்க் போலாமா? அங்க முயல் கிளி எல்லாம் இருக்கும்... கார்... ஊஞ்சல் எல்லாம் கூட இருக்கும்..."

"அப்போ சேரி... அங்கயே போலாம்.." என்றாள் சமத்தாக!

அதன் பின்னர் இருவரும் தங்களை மறந்து அவர்களது உலகத்தில் புகுந்து நேரம் செலவிட்டனர்.

*******

அப்பாவி குழந்தைகளை போல்‌ பாவமாக நின்றிருந்த தந்தையும் தாயையும் முறைத்து பார்த்தபடி இருந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.

"எதுக்கு கண்ணா... இவ்வளவு நேரமும் திருடன பார்க்கிற மாதிரியே பார்த்ததுட்டு இருக்க... நாங்க அக்யூஸ்ட் இல்ல கண்ணா... உன்னை பெத்தவங்க..." என்று பாவம் போல கூறினார் வானதி.

"சரோஜா தேவியவே மிஞ்சி போய்டுவீங்க போல... அப்படி இருக்கு உங்க நடிப்பு..." என்றான் கடுமையாக!

ராமரோ அமைதி காக்காமல், "அம்மாவ ஏன் பா இப்படி சொல்ற..." என்று மனைவிக்கு பரிந்து பேசினார்.

"ஹ்ம்ம்... முதல்ல உங்க பேச்சும் நடவடிக்கையுமே சரியில்ல அப்பா... என்ன தான் ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்! திடுதிப்பென்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம திருச்சி கிளம்பி வந்து இருக்கீங்களே! அவ்வளவு என்ன முக்கியமான விஷயம் பேசணும்..." என்றான் கடும் யோசனையுடன்!

"அது வந்து வாசு..." என்று ராமன் இழுக்க, அவரை கூர்மையுடன் நோக்கினான்.

"நீங்க இப்படி பேசக்கூடிய ஆளே இல்லையேப்பா... ஏன் இந்த தயக்கம்... அம்மா ஏதாச்சு உங்க கிட்ட பேசினாங்களோ?" என்று சரியாக கணித்து சொன்னான் போலீஸ்காரன்.

"ஆமா பேசினேன் தான் வாசு... அதுக்கு என்ன இப்போ?" என்று சுற்றி வளைக்க விரும்பாமல் விஷயத்திற்கு வந்தார் வானதி.

"இதுக்கு தான் வந்த உடனே லீவ் போட சொல்லி சொன்னீங்களா ம்மா?" என்று தாயை முறைக்க,

"ப்ச்... இந்த பிசாத்து போலீஸ்கார தோரணையை எல்லாம் என்கிட்ட காட்டாத வாசு... மொத நான் உனக்கு அம்மா.. அப்புறம் தான் இது எல்லாமே! சின்ன வயசுல உன்னையே அதட்டி உருட்டி வளர்த்தவ நான்! உன்கிட்ட பயம் எல்லாம் இல்லவே இல்ல! ஃப்ர்ஸ்ட் இந்த சாக்கி சட்டைய கழட்டி போட்டுட்டு வா..." என்று பேசியவர் அகத்தில் பயம் இருந்தாலும் முகத்தில் எதையும் வெளி காட்டவே இல்லை. இந்த போலீஸ்கார அம்மாவிற்கு அவ்வளவு கெத்து!

அதன் பின்னர், வாசுவோ ஒரு பெருமூச்சுடன் அவன் அறைக்கு சென்று உடையை மாற்றி விட்டு அரை கை டி-ஷர்ட்டும் டிராக் பேண்டடும் போட்டுக் கொண்டு வந்தான்.

அவன் மனமோ தாயின் வரவு எதற்கென ஒரு பட்டிமன்றமே நடத்திக் கொண்டு இருந்தது.

அதற்குள் இங்கே கணவரிடம், "என்னங்க... நீங்க பேச்சு ஆரம்பிச்சு ஒரு கோடு மட்டும் போடுங்க... அதுவே போதும்...‌ நானே இந்த ரோடு போடுறது... பெயிண்ட் அடிக்கிற வேலை எல்லாம் பார்த்துக்கிறேன்..." என்று படு சிரியஸாக சொன்னார் மனைவி.

அதற்கு துணைவனோ, "வாய் அதிகமா தான் இருக்கு... இரு இரு... உன் மவன் கிட்டயே கோர்த்து விடறேன்... அப்ப தான் நீ அடங்குவ..." என்று சிறுபிள்ளை போல இருவரும் சண்டை பிடிக்க, குட்டி டீச்சர் வெளியே வந்ததும் வாய் மீது விரல் வைக்காத பிள்ளையாக மாறி விட்டனர்.

"அப்பா... உங்களை ஏன் வந்தீங்க ன்னு கேட்கல... ஏன் சொல்லாம அவசரமா வந்தீங்க... ப்ச்... அதுவும் உங்க ஸ்வீட் டார்லிங் ஆட்டம் தான் அடங்காம போய்ட்டு இருக்கு.... அவங்க செய்கையும் சரியில்ல... உங்க திருட்டு முடியும் சரியில்ல..." என்று தன்மையாகவே பேசினான் கிருஷ்ணன்.

"கண்ணா... கொஞ்சம் வா... இப்படி வந்து உட்கார்... அம்மா காஃபி போட்டு கொண்டு வரேன்..." என்று சொல்லி... கணவனிடம் கண் ஜாடை காட்டி... சமையல் அறைக்குள் போய் விட்டார் அவன் தாய்.

"வாசு... வேலை எல்லாம் நல்லா போகுதா?" என்று பேச்சை தொடங்கினார் ராமன்.

"ஆவ்சம் ப்பா..."

"சரி... தம்பி உனக்கு வயசு 29 ஆகுது டா..."

"எனக்கு தெரியுமே ப்பா..."

'என்ன பேசினாலும் முட்டு கட்டை போடுறானே!' என்று தனக்குள் நொந்து, "வயசு கூட்டிட்டே போகுது வாசு..." என்றார் தந்தை.

"வருஷம் போய்ட்டே இருக்குல்ல... அப்படி தான் ஆகும்..." என்று சளைக்காமல் பதில் கொடுத்தான் கிருஷ்ணன்.

வானதியோ காஃபியை எடுத்து வந்தவர், மேசையில் வைதது விட்டு, "டேய்! என்னை உங்க அப்பாவை ரொம்ப தான் கலாய்ச்சிட்டு இருக்க... உன்னைய கல்யாணம் பண்ணிக்க சொல்லி தான் பேசிட்டு இருக்கார் வாசு..." என்று பட்டென்று திட்டுவது போல கூறினார்.

"இப்ப வேணாம் டார்லிங்... இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்... நானே பொண்ணு பார்க்க சொல்லி சொல்றேன்..." என்று பட்டும் படாமல் சொன்னான் ஆடவன்.

பெரியவர்கள் இருவரும் அவனது பதிலில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"சரிப்பா... நீ தோணும் போது கல்யாணம் பண்ணிக்க... ஆனா, நாங்க இப்ப இருந்தே உனக்கு பொண்ணு தேடறோம்... அதுக்கு ஒரு வருஷம் மேல ஆகிடும்... அதுக்கு பிறகு கல்யாணம் பண்ணிக்க கண்ணா..." என்று இலகுவாக திட்டம் வகுத்தார் வானதி.

அதை கேட்டு ராமனே குழம்பி, 'நம்ம ப்ரியாவை பத்தி பேச தானே‌ இங்க வந்தா... இப்ப இப்படி பேசிட்டு இருக்காலே!' என்று நினைத்தாலும் வெளியே மௌனமாக இருந்தார்.

"என்ன கண்ணா... இதுக்கு மறுபேச்சையே காணோம்..."

"அது கூட இப்போதைக்கு வேணாம் ம்மா... நான் சொல்றேன்... அப்ப பார்க்க ஆரம்பிங்க... அது தான் சரியா இருக்கும்..." என்று கடுமையாக சொல்ல,

அதற்கு அசராத அன்னையோ, "இதுல மட்டும் உன் இஷ்டத்துக்கு விட முடியாது கண்ணா..." என்க,

"இது நான் வாழ போற வாழ்க்கை ம்மா... அதுல முடிவு எடுக்க எனக்கு விருப்பம் இருக்கு..."

"பெத்தவங்க எங்களுக்கும் சம பங்கு இருக்கே கண்ணா..."

"ப்ச்... இதுக்கு தான் என்கிட்ட சொல்லாம வந்து என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்கீங்களா?"

"நீ தான் அப்படி நினைச்சிக்கணும்..." என்று உம்மென சொன்னார் வானதி.

அதற்கு வாசுவோ தாயை முறைத்து விட்டு, அவரது மடியிலேயே தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.

தாய் அறியாத சூல் இல்லை என்பதற்கிணங்க, மகனை நன்கு படித்து வைத்திருந்தார் வானதி.

அவரோ தன் சிறு குழந்தையின் சிரத்தை கோதிக் கொண்டே, "கண்ணா... நான் சொல்றத மட்டும் கேட்டுக்கோ மா... எனக்கு தெரியும் நீ எதையும் தெரிஞ்சிக்க விரும்பல... எதுவும் உன் காதுக்கு வர கூடாதுன்னு நினைக்கிற... எல்லாம் சரி தான் மா...

ஆனா, உனக்குள்ள புதைந்து இருக்கும் உண்மை என்ன தெரியுமா? இந்த அம்மா உனக்கு சொல்லட்டுமா? நீ எல்லாத்தையும் மறக்க நினைக்கிற... ஹ்ம்ம்... நீ பயந்து ஓடிப் போற... அப்படின்னும் சொல்லலாம் கண்ணா..." என்று அனைத்தையும் ராகம் போல மீட்டிக் கொண்டிருந்தார்.

இதை கேட்ட அடுத்த நொடியில் அன்னையை முறைப்புடனும் இயலாமையுடனும் நோக்கினான் வாசுதேவ கிருஷ்ணன்.

"நான் சொன்னது எல்லாம் பொய்யின்னு.. உன் மனசாட்சியை தொட்டு சொல்லு கண்ணா?" என்றதற்கு அவனிடம் இருந்து பதில் இல்லை.

"இதை எல்லாம் உன் கிட்ட எப்பவோ பேச நினைச்சது வாசு... இத்தனை நாளும் முட்டுக் கட்டை போல இருந்தது என்னவோ உன் அப்பா தான்... ஆனா, இன்னைக்கு எனக்கு துணை நின்னுட்டு இருக்கார்... இது தான் கால நேரத்தோட மாற்றம்... எல்லாரோட மனநிலையும் ஒரே போல இருக்காது மா... காலத்துக்கு தகுந்த போல மாறிட்டே வரும்..." என்று அவரது அனுபவத்தில் உணர்ந்து மகனிடம் ஒரு தோழி போல சொன்னார் வானதி.

"சரி கண்ணா... நான் ஒன்னு கேட்கிற... உன் மனசுக்கு என்ன தோணுது அந்த பதிலை சொல்றியா?" என்று சிறுபிள்ளையிடம் கேட்பது போல் கேட்க,

அவனுமே தாயின் கட்டுக்குள் அடங்கி, ம்ம்... சொல்றேன்..." என்றான் குழந்தை தனமாக!

"கிருஷ்ணப்ரியா இப்ப எப்படி இருப்பா? எப்படி வாழ்ந்துட்டு இருப்பான்னு நினைக்கிற நீ?" என்று இயல்பாக கேட்டு விட்டார்.

வாசுவோ ஒருசில வினாடிகளுக்கு பின், "எப்படி இருப்பாங்க? நல்லா தான் இருப்பாங்க? புருஷன் கூட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருப்பாங்க... இத்தனை வருஷத்துல ஒரு பையனோ பொண்ணோ பொறந்து குடும்பத்தோட கவலை எல்லாம் இல்லாம... எந்த ஒரு குறையும் இல்லாத வாழ்க்கையா வாழ்ந்துட்டு இருப்பாங்க..." என்று தன் மனதில் பதிந்து இருப்பதை அப்படியே சொன்னான்.

வானதியோ ஒரு பரிகாச புன்னகையுடன் மகனை பார்த்துக் கொண்டே, "ப்ரியாவோட வாழ்க்கை நீ சொல்ற போல தான் இருக்கா என்ன?" என்று கேள்வியாக வினவினார்‌.

மகனோ அன்னை புரியாத மொழி பேசுவது போல் பார்த்து வைத்தான்.

********

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும் 👇


 
Last edited:
காதலை களவாடும் ராட்சசியே!

ராட்சசி - 6

சுமித்ராவோ அரை மணி நேரமாக பேத்தியிடம் கதை கேட்டுக் கொண்டு இருந்தார்.‌ அதை கேட்க அவருக்குமே சலித்துப் போகாமல் இருக்க... அம்மழலை மொழியை இன்னும் இன்னும் கேட்க தோன்றியது.

அதற்குள் கிருஷ்ணவோ குழந்தைக்கு பருப்பு சாதத்தை பிணைந்து எடுத்து வந்து பேச்சின் ஊடேயே ஊட்டி முடித்தாள்.

ருத்ராவோ இன்று நாள் முழுக்க ஆடிய களைப்பில் சாப்பிட்டதும் உறங்கி விட்டாள்.

"ம்மா... குட்டிம்மா தூங்கிட்டா... அவள நீங்களே வச்சிக்கோங்க..." என்று ப்ரியாவும் சொல்லவும் அவளையே பார்த்தபடி இருந்தார் சுமித்ரா.

"என்ன ம்மா?" என்று சாதாரணம் போல பெண் கேட்க, அதற்கு ஒன்றுமில்லை என தலை அசைக்க,

"ப்ரியா... செத்த நேரம் இப்படி வந்து உட்காரேன்..."

"உங்க வீட்டுக்காரர் பத்தி பேச போறதா இருந்தா நான் வரவே மாட்டேன்..."

"அவர பத்தி எல்லாம் நான் பேச போறதே இல்ல... உன்னை பத்தி முக்கியமா பேசணும்... இப்படி வந்து உட்கார்..." என்று அழுத்தமாக கூறவும் தான் அவளும் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

"ப்ரியா... பேசாம நீ இங்க இருக்காம வேற வீட்டை பார்த்து... இல்லன்னா வேற ஊரை பார்த்து போய்... உன் தகப்பனார் கண்ணுல படாம நிம்மதியா இரேன் மா..."

"என்னம்மா... எப்போதும் உங்க வீட்டுக்காரருக்கு பரிஞ்சு பேசுவீங்க... இப்ப என்ன புதுசா?"

"தோணிச்சு டா... அதான் சொன்னேன்..."

"ம்மா... என்ன தான் அப்பா அப்படி பேசினாலும் எங்க மேல பாசமா தான் இருக்கார் போல... அதான்... எங்களை வெளியே கூட போக விடாமல் அவர் கண் பார்வையிலேயே வச்சிக்க பார்க்கிறார்... அவரும் பொண்ணோட நலனை எதிர்ப்பார்ப்பார் தானே ம்மா... அதனால தான், அவரோட சண்டை போட்டாலும் இங்கேயே இருக்கேன்..." என்று கள்ளமில்லாமல் சொன்னாள் கிருஷ்ணப்ரியா.

இப்படி சொல்லும் மகளை வேதனையாக பார்த்துக் கொண்டிருந்த சுமியோ வேறெதையும் பேச விரும்பாமல், "எத்தனை நாளைக்கு தான் உன் மகளை என்கிட்ட அனுப்பிட்டு... தூக்கத்துல அலறி அடிச்சி எழுந்துட்டு இருப்ப..." என்று பதிலை எதிர்பார்க்காமல் கேள்வியை மட்டும் கேட்டு விட்டு சமையல் அறைக்குள் புகுந்தார்.

மகள் இதுபோன்ற எவ்வித வினாக்களுக்கும் விடை அளிக்க மாட்டாள் என்பது அன்னையான அவருக்கும் தெரியுமே! அதனாலேயே விடையை வேண்டி நிற்காமல் மௌனமாக இருந்து கொண்டார் போலும்!

*******

அவன் தாயோ ஒரு பரிகாச புன்னகையுடன் மகனை வெறுமையாக பார்த்து, "ப்ரியாவோட வாழ்க்கை நீ சொல்ற போல தான் இருக்கா என்ன? அப்படி தான் அவ வாழறா ன்னு பகல் கனவு கண்டுட்டு இருக்கியா வாசு?" என்று கேள்வியாக வினவினார்‌.

புதல்வனோ அன்னை புரியாத மொழி பேசுவது போல் பார்த்து வைத்தான்.

அவர் மடி மீதிருந்து எழுந்து கொண்டவன், "அம்மா... எதுக்கு இப்படி தலை சுத்தி மூக்கை தொடுற போல பேசிட்டு இருக்கீங்க..." எனக் கூற,

"உனக்கு புரியும் படியாகவே சொல்றேன் கண்ணா... அதுக்கு முன்ன ஒரு நிமிஷம்..." என்று விட்டு அவரது கைபேசியை எடுத்து எதையோ தேடியவர், 'இதை பார்' என்பது போல மகன் புறம் நீட்டினார் வானதி.

அதில் கொழு கொழுவென ரசகுல்லா போன்றதொரு நிறத்தில்... இரண்டை குடுமியுடன் இருந்து... இரு கன்னங்களிலும் அழகாக கைகளை வைத்து புன்னகையுடன் நின்றிருந்தாள் கிருஷ்ணப்ரியா அழகிய வார்ப்பான ருத்ரப்ரியா.

ஆடவனுக்கு அதை பார்த்ததும் தானாகவே இதழ் வளைந்தது.

"ரொம்ப கியூட்டா இருக்கு ம்மா இந்த பாப்பா... நேர்ல பார்த்தா இன்னும் அழகா இருப்பா போல..." என்று ரசித்துச் சொல்ல,

"இது ருத்ரப்ரியா... ப்ரியாவோட பொண்ணு..." என்க,

அப்புகைப்படத்தில் இருந்து பார்வையை அகற்றாமல், "ம்மா... நிஜமாவா?" என மெல்லிய குரலில் கேட்க,

"ம்ம்... ஆமாப்பா..."

"ப்ச்... இதெல்லாம் என் கிட்ட எதுக்கு காட்றீங்க? நான் எதுவும் வேணாம்னு தானே சொல்லுவேன்..." என்று வாய் சொன்னாலும் கண்களோ கைபேசியை தான் பார்த்தபடி இருந்தது.

"ப்ரியாவ பத்தி கொஞ்சம் பேசணும் கண்ணா... ஹ்ம்ம்... இன்னைக்கு உன்கிட்ட பேசியே தீரணும்... நீ உன் மனசுக்குள்ள பொய்யா கற்பனை செய்து வச்சிருக்கும் பிம்பத்தை உடைச்சே ஆகணும்..." என்றார் பிடிவாதக் குரலில்!

அங்கிருந்து எழுத்துக் கொண்டவன், "ம்மா... எத்தனை முறை சொன்னாலும் புரியாதா உங்களுக்கு... எனக்கு எதையும் கேட்க பிடிக்கல... ப்பா... நீங்களும் ஏன் இப்படி பண்ணி என்னை கஷ்டப் படுத்தறீங்க..." என்று கத்தவே செய்தான் வாசு.

"ப்ச்... கத்தாத வாசு... மூச்ச்ச்ச்ச!" என்று மகனுக்கு ஈடுகொடுத்து கத்தினார் வானதி.

"வானதி... வாசு... இது வீடா இல்ல வேற ஏதாச்சுமா? எதுக்காக ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கத்திட்டு இருக்கீங்க?" என்று இருவருக்கும் இடையே புகுந்து சமாதானம் செய்தார் ராமன்.

"கத்தாம என்னங்க பண்றது... நான் என்ன சொல்ல வர்றேன்னு காது கொடுத்து கேட்டா தானே புரியும்..." என்று வருத்தமாக சொன்னார் வானதி.

"அம்மாடி... அவன் கிட்ட தான் பொறுமை இல்ல... பக்குவம் இல்ல... நீயாவது அமைதி பேசு மா..." என்று மனைவிக்கு தான் அறிவுரை சொன்னார் அவர்.

"நான் உன்கிட்ட சில விஷயங்களை பத்தி தெளிவா சொல்ல வேண்டிய கடமை இருக்கு வாசு... அதை எல்லாம் காதுல வாங்கிக்கிட்டு போறதும்... அப்படியே இடிச்ச வைச்ச பிள்ளையாராட்டம் இருக்கிறது எல்லாம் உன் சமத்து கண்ணா... எனக்கு ஒரு அரை மணி நேரம் தா... என் பக்கத்துல மட்டும் உட்கார்... போதும் பா..." என்று கடைசியாக கெஞ்சவே செய்தார் வானதி.

அவன் மறுப்பேதும் கூறாது அங்கிருந்து இருக்கையில் மௌனமாக அமர்ந்து விட்டான்.

கிருஷ்ணாவுக்கும் உள்ளுக்குள் ப்ரியாவை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கவே செய்தது... இத்தனை நாட்களும் அவளது நினைவை துறந்து ஓடியவனோ, இன்று நடுங்கும் மனதுடன் அவளை பற்றி அறிய நினைத்தான்.

வானதியும் மகனின் ஒவ்வொரு செய்கைகளையும் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டே கிருஷ்ணப்ரியாவின் நான்கு வருட வாழ்க்கையை சொல்ல தொடங்கினார்.

"ப்ரியாவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி... அது நடந்து முடிஞ்சது மட்டும் தானே கண்ணா உனக்கு தெரியும்... அதுக்கு பின்னாடி அவ வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்ல... எப்பவாவது நெருங்கின சொந்தக்காரங்க பங்ஷனுக்கு வருவா... ஆனாலும் வாயவே திறக்க மாட்டா... கல்யாணத்துக்கு முன்னாடி இந்த பொண்ணு எவ்வளவு வாலா இருப்பா... அத்தனை சேட்டை செய்வா... ஆனா, கல்யாணத்துக்கு அப்பறம், அத்தனை அமைதி... அந்த கண்ணுல கொஞ்சம் கூட உயிர்ப்பு இல்ல... எப்பவும் எதையோ பறிகொடுத்த போல தான் இருந்தா... கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல உண்டாகிட்டா ன்ற செய்தி காதுக்கு வந்துச்சு... நானும் நல்ல மாறி வாழட்டும்னு நினைச்சி கம்மனு விட்டுட்டேன்... அப்பறம் என்னாச்சு ன்னு சரியா தெரியல...

அந்த நேரத்துல ப்ரியா நிறை மாச புள்ளதாச்சியா இருந்தா... ரெண்டு மூணு நாளைக்கு பேச்சு மூச்சு இல்லாம ஹாஸ்பிடலில் வாசம் தான்... அதுக்கு பிறகு, அவ புகுந்த வீட்டுக்கு போகவே இல்ல... எனக்கே இதெல்லாம் ரெண்டு மாசம் கழிஞ்ச பின்னாடி தான் தெரிஞ்சது... இதெல்லாம் எப்ப தெரியுமா நடந்துச்சு... உனக்கு இடது கையில குண்டடி பட்ட சமயம்... நானும் உன் அப்பாவும் உன்னோடவே இருந்துட்டோமே! அப்ப தான் ஆச்சு..." என்று அதற்கு தக்க விளக்கத்தையும் கொடுத்தார் வானதி.

வாசுதேவ கிருஷ்ணனின் முகமோ கடுமையாக மாறி... அவனது ப்ரியமானவளின் யோசனைக்கு தாவியது.

"இந்த ப்ரியா பொண்ணு... சுமித்ரா அண்ணி கிட்ட கூட அவ பிரச்சனை எதையும் சொல்லாம இருந்து இருக்கா... அவங்களும் எவ்வளவோ கேட்டு பார்த்து இருக்காங்க... இருந்தும் இந்த புள்ள வாயே தொறக்கலையாம்... அவ்வளவு அழுத்தமா இருந்திருக்கா... அது மட்டும் இல்லாம டிவோஸும் வாங்கிட்டா..." என்று தான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"என்னம்மா சொல்றீங்க... டிவோஸா? எப்படி ம்மா? அப்படி என்ன பிரச்சனை நடநது இருக்கும்?" என்று பதட்டமாக கேட்டான் கிருஷ்ணன்.

"தெரியல..."

"என்ன ம்மா இப்படி சொல்றீங்க?"

"வேற எப்படி கண்ணா சொல்லணும்... உனக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுது..."

"......."

"ப்ரியா பொண்ணு ரொம்பவே பாவம்... கட்டின புருஷனும் சரியா இருக்கல... பெத்த அப்பாவும் அவளுக்கு துணையா நிக்கல... அங்க தான் ஏதோ பிரச்சனை ஆகி இங்க பிறந்த வீட்டுக்கு வந்துட்டா... ஆனா, பிறந்த வீட்டுக்கு வந்த பின்னாடியும் அவங்க அப்பாவால நிம்மதி இல்லாம போச்சு... ஒருநாளும் மகளுக்காக பரிஞ்சி பேசல அந்த உத்தம பெரிய மனுஷர்... நிறை மாசத்துலயும் டிவோஸுக்காக கோர்ட்டு படி ஏறி இறங்கிட்டு இருப்பா... பிள்ளை பெத்த பின்னாடியும்... அதையும் வச்சி கஷ்டபட்டு டிவோஸ் வாங்கினா...

இதோ, ருத்ரா பிறந்து ரெண்டரை வருஷம் ஓடிப் போச்சு... இதுவரை அவ புள்ளையையும் பார்த்துட்டு... வேலைக்கும் போய்கிட்டு ஒத்தையாவே அல்லல் பட்டுட்டு இருக்கா... ஹ்ம்ம்... அவ குழந்தையோட தேவைகளையும்... அவளோட செலவுகளையும் தனியாவே இருந்து பார்த்ததுட்டு இருக்கா... இதுக்கு நடுவுல அவ அப்பாவோட ப்ரஷர்... ஹ்ம்ம்... அவளை தினம் தினம் நச்சரிச்சிட்டே இருக்கார்..." என்று விட்டு, சிறு அமைதி காத்தவர்,

"பொண்ணுக்கு கல்யாணம் பண்ணினதிலும் அவ்வளவு அவசரம்! அவ்வளவு பிடிவாதம்! அவ்வளவு இறுமாப்பு! அவர் பொண்ணு வாழ்க்கை கெட்ட போனதையும் ஏத்துக்கல... முழு தப்பையும் இவ மேல போட்டார்... இப்போ வேற ஒரு கல்யாணத்தை பண்ணி இந்த வீட்டை விட்டு போக சொல்லி ஒரே அட்டூழியம் பண்ணிட்டு இருக்காரு...

'நான் உங்களுக்கு தொல்லையா இருக்க விரும்பல... என் வாழ்க்கையை பார்த்ததுட்டு தனியாவே வாழ்ந்துகிறேன்' அப்படின்னு ப்ரியா சொன்னாலும் அதுக்கும் ஒத்து வராம தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான்னு வரட்டு கௌரவம் பார்த்துட்டு... அந்த பொண்ணு நிம்மதியை கெடுத்துட்டு இருக்கார்... பாவம் அந்த குழந்தையும் எவ்வளவு கஷ்டத்தை தான் பொறுத்து பொறுத்து போவா... ஆனா, இத்தனை பிரச்சனைகளை சமாளிச்சாலும் எந்த கஷ்டத்தையும் வெளியே சொல்லாம... முகமூடி போட்டுட்டு இறும்பாட்டமே இருக்கா உன்னோட கியா பாப்பா..." என்று சொன்ன வானதிக்கோ துக்கம் தொண்டையை அடைத்தது.

அதற்கு மேல் எதையும் கேட்க விரும்பாமல் அதிவேகத்துடன் அங்கிருந்து வெளியேறி விட்டான் வாசுதேவ கிருஷ்ணன்.

"வாசு... வாசு... டேய் கண்ணா... நில்லு பா..." என்று வானதி அழைத்தது எல்லாம் காற்றோடு காற்றாய் கலந்து விட்டன.

"வானதி விடு... அவனுக்கு கொஞ்சம் தனிமை தேவைபடும் போல... அவனை இதுக்கு மேல டிஸ்டர்ப் பண்ணாம விட்டுடு... நீ பேச வேண்டியது எல்லாம் அவனோட பேசிட்ட தானே... அத்தோட நிறுத்துக்கோ... இதுக்கு மேல நீ வாயை திறந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்... உனக்கு எல்லாம் சொல்லி தானே இங்க அழைச்சிட்டு வந்தேன்... அது படி நடந்துக்கிட்டா எல்லாருக்கும் நல்லது... இனி அவன் கிட்ட தேவை இல்லாத பேச்செல்லாம் பேசாத... இதுக்கு அப்பறம் எந்த முடிவா இருந்தாலும் நம்ம பையன் தான் எடுக்கணும்... அதுல நமக்கே கூட எந்த உரிமையும் இல்ல... நல்லா ஞாபகம் வச்சிக்கோ வானதி..." என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார் ராமன்.

*******

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும் 👇

 
காதலை களவாடும் ராட்சசியே!

ராட்சசி - 7

****ஒரு மாதம் கழித்து***

அன்றைய காலைப் பொழுதில் பரபரப்புடன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணப்ரியா.

நேற்றைய இரவெல்லாம் ருத்ராவிற்கு காய்ச்சலாக இருந்தது. அதில் குழந்தை அனத்திக் கொண்டே இருக்க, அவளை கவனித்துக் கொண்டே துளியும் உறங்கவில்லை பெண்.

காலை எழுந்ததில் இருந்து மடியில் இருந்து இறங்காமல் குழந்தை படுத்துக் கொண்டே இருக்க, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி விடலாம் என நினைத்தாலும் அன்று ஒரு முக்கிய ரிடெயிலர் ஒருவரும் வந்து வெள்ளி பொருட்களை பார்வையிட வரவிருக்க, விடுமுறை எடுக்க முடியாத நிலை!

அதனாலேயே பிள்ளையை மனம் கேட்காமல் தாயிடம் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு விரைந்தாள்.

அன்றும் ஒரு ஆட்டோ கூட வராமல் அவளின் கோபத்தை அதிகரிக்க செய்ய, அவளுக்கு நேராக கருப்பு நிற மாருதி ஆல்டோ வந்து நின்றது.

அந்த மகிழுந்தின் ஜன்னல் மெது மெதுவாய் திறக்கப்படவும், அதில் இருந்தவனை கண்ட மாதுவின் பூவிதழ்களோ, 'கிச்சா...' என்று முணு முணுத்துக் கொண்டன.

வாசுதேவ கிருஷ்ணனோ ஜன்னல் ஊடே தெரியும் பெண்ணவளை பார்த்தபடி கூலர்ஸை கழட்டியவன், "எவ்வளவு நேரம் தான் இப்படியே நின்னுட்டு போற கிருஷ்ணப்ரியா... வண்டியில ஏறு... உன் ஆஃபிஸில் கொண்டு போய் விடறேன்..." என்று அழுத்தமாக சொல்ல,

கிருஷ்ணாவோ இதுவெல்லாம் கனவா நிஜமா என பிரித்தறிய இயலாமல் விழித்து நிற்க, ஆணவனே வெளியே எழுந்து வந்தான்.

"என்ன கனவா இருக்கும்னு நினைக்கறியா ?" என்று கேட்க,

அவளோ ஆமாம் இல்லை எனும் விதத்தில் எல்லாப் பக்கத்திலும் தலை ஆட்டி, அவளுக்கு சொல்லி வைக்கப்பட்ட தகவலின் பொருட்டு, "நீ... நீ... எப்போ அமெரிக்காவில் இருந்து வந்த கிச்சா..." என்று குரல் கம்ம பேசினாள்.

அவனுமே அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "மூணு நாள் ஆச்சு..." என்றான் பொய்யாக!

"ஓஹ்!" என்ற மங்கையளுக்கு வேற என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஆனால், மனதிற்கு பேச ஓராயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடந்தன!

ஏனெனில், பெண்ணவளின் உற்ற நண்பன் இந்த வாசுதேவ கிருஷ்ணன் தானே! அவனை பார்த்த இந்த கணத்தில் மடி சாய்ந்து கதறி அழ தோன்றியது! அவளது மனதின் கொடும் காயங்களை அவனிடம் பகிர்ந்து, வலிகளை குறைக்க சொல்லி ஏங்கியது.

"ப்ச்! நேரமாச்சு...‌ வண்டில ஏறு கிருஷ்ணப்ரியா..." என்று அவர் சொல்லும் பொழுதே, ஒரு ஆட்டோ வந்து நிற்கவும்,

"நான் ஆட்டோவில போய்க்கிறேனே..." என்று மெல்லமாக முணு முணுப்பு போல சொன்னாள் பெண்.

"உன்ன கார்ல ஏற சொல்லிட்டேன்..." என்று கோபத்துடன் சொல்ல... அதை மறுக்க முடியாத நிலையில் அவளுமே ஏறிக் கொண்டாள்.

ப்ரியாவோ, "இப்பல்லாம் ரொம்ப கோபம் வருது போல!" என்று உம்மென கேட்க,

"அப்படியா?" என்றான் பொய்யான ஆச்சரியத்துடன்!

"அப்படி தான்..." என்று விட்டு, "நீ என் கிட்ட சொல்லாம கொல்லாம அமெரிக்கா போனதுக்கு ரொம்ப ரொம்ப கோபமா இருந்தேன்... உன்ன பார்த்த பின்னாடி பேசவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன் கிச்சா...‌ ஏனோ! உன்ன பார்த்த பின்னாடி என் கோவம் கூட நினைவுல இல்லாம டக்குனு பேசி தொலைச்சிட்டேன்..." என்று உணர்ந்து சொன்னாள்.

"என்ன பண்றது என் சிட்டியேஷன் அப்படி..." என்றான் வெறுமையாக குரலில்!

"அப்படி என்ன பொல்லாத சிட்டியேஷன்..." என்று கடுப்புடன் சொல்லும் பொழுதே, அவளது அலுவலகம் வந்து விடவும், தலைக்கு மேலே வேலைகள் கிடப்பது ஞாபகத்திற்கு வர,

"கிச்சா... எனக்கு இன்னைக்கு வேலை ஜாஸ்தி... நீ இங்க தானே இருப்ப..‌. அப்ப பேசறேன்... பை..." என்று அவசர அவசரமாக சொல்லிச் சென்றாள் கிருஷ்ணப்ரியா.

*******

அங்கு வாசுவின் வீட்டிலோ வானதி தான் ராமனின் காதுகள் வலிக்க வலிக்க புலம்பிக் கொண்டிருந்தார்.

அன்று விடியற்காலை ஐந்து மணிக்கு தான் மூவரும் வீட்டிற்கே வந்து சேர்ந்தனர்.

"ஏங்க! இந்த பையன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்? எதை பத்தியும் மூச்சு விட மாட்டேங்கிறானே? இந்த ஒரு மாசமும் புள்ள ஏதாவது பதில் சொல்லுவான்னு நித்தமும் அவன் முகத்தை பார்த்துகிட்டே தவம் கிடந்தேன்... ஆனா, நான் பெத்த வைரத்தோட முகத்துல இருந்து எந்த ஒரு மண்ணையும் கண்டு பிடிக்க முடியாம தவிச்சு போய் இருந்தேன்... இப்ப என்னனா திடுதிடுப்புன்னு ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டான்... எதுக்கு நாம போறோம்னு கேட்டாலும் பதில் வரல உங்க மகன் கிட்ட இருந்து... இதோ இப்ப வெளியே கிளம்பி போய்ட்டான்..‌‌. எங்க போறன்னு கேட்டாலும் பதில் வரல? அய்யோ! உங்க மகனை நினைச்சு எனக்கு தலையே வலிக்குதுங்க..." என்று மனம் தாங்காமல் கணவரிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.

"தலை வலிக்குது ன்னா மாத்திரை ஏதாவது போட்டுக்க மா..." என்று ராமன் கூறவும்,

"நான் என் ஜோக்கா அடிக்கிற... என் கவலை உங்களுக்கு கொஞ்சமும் தெரியலயா? க்கும்... பெத்த மகன் மேல அக்கறையே இல்ல... அக்கறையில கவலை படுற என்னையும் கோமாளியா பார்க்க வேண்டியது..." என்று மகன் மேலுள்ள சினத்தில் தன் இணையை சாடினார் பேரிளம் பெண்.

"நான் என்னம்மா பண்ணேன்... என்னை திட்டிட்டு இருக்க..." என்றார் பாவமாக!

"நீங்க ஒன்னுமே பண்ணல... அதான்... ப்ச்! எல்லாம் என் நேரம்! செல்லம் குடுத்து குடுத்து அவன் ரொம்ப தான் பண்றான்..." என்று அன்னை திட்டும் பொழுதே புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.

"டார்லிங்... என்ன அப்பாவை பார்த்து லவ் டைலாக் நிறைய பேசறீங்க போலயே!" என்றான் பொய்யான ஆச்சரியத்துடன்!

"க்கும்... இப்ப அது ஒன்னு தான் குறைச்சல்..." என்று முணுமுணுத்துக் கொண்டார் ராமன்.

வானதியோ தன் பதியை கண்களால் பொசுக்கி விட்டு, "எங்க கண்ணா போய்ட்டு வந்த? நீ எதுக்கு லீவ் போட்ட... அதுவும் மெடிக்கல் லீவ்னு சொல்லிட்டு வந்துட்ட... ஏன் இப்ப நாம எல்லாரும் இங்க வந்தோம்? ப்ச்! நீ வந்தத நல்ல விஷயத்துக்கா? இல்ல வேற ஏதாச்சுமா கண்ணா? சொல்லேன் கண்ணா? எனக்கு ரொம்ப படபடன்னு இருக்குடா?" என்று மகனிடம் பொரிந்து தள்ளினார்.

"டார்லிங் டார்லிங்... முதல்ல பொறுமையா இருங்க... வாங்க... இப்படி வந்து உட்காருங்க..." என்று சொல்லி அவரை இருக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்துக் கொண்டான்.

"ஏன் ம்மா... கோபமா என்ன?" என வேண்டுமென்றே சீண்டி விட்டு,

"இப்ப என்ன உங்களுக்கு? நான் எங்கே போனேன்னு தெரியும்னு அவ்வளவு தானே... ரொம்ப முக்கியமா பெர்சனை மீட் பண்ண தான் போனேன்..." என்று மொட்டையாக சொல்லவும், அவனை கேள்வியுடன் பார்த்து வைத்தனர் பெற்றவர்கள்!

"என்ன லுக்கெல்லாம் ரொம்ப பலமா இருக்கு..." எனக் கூறி வாய் விட்டு சிரித்தவன்,

"உங்க மருமகளை தான் பார்க்க போனேன்..." என்க,

அதை கேட்ட முகம் மலர்ந்த வானதியோ, "நம்ம ப்ரியாவையா பார்க்க போன கண்ணா?" என்று கேட்க, ஆமென தலை ஆட்டி வைத்தான் ஆடவன்.

"என்ன சொன்ன?"

"அமெரிக்காவில் இருந்து எப்போ வந்தேன்னு கேட்டா?"

அவரோ தவிப்புடன், "நீ... நீ என்னப்பா சொன்ன?" எனக் கேட்டார் கேட்கவும்,

"மூணு நாள் ஆச்சுன்னு சொன்னேன்... மேடம் என் மேல கோபமா இருந்தாங்களாம்... ஆனா, என்னை பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சாம்... அதான் என்னோட பேசிட்டாங்களாம்... தென், ஆஃபிஸ் வந்துச்சு... பை சொல்லிட்டு போய்ட்டா..." என்று கதை போல சொன்னான் வாசு.

"வேற எதையுமே உன் கிட்ட பேசலயா பா?"

"அவ தான் அழுத்தம் பிடிச்சவளாச்சே! எதையும் என் கிட்ட காட்டிக்கல... ரொம்ப தைரியம் தான் உங்க மருமகளுக்கு!"

"ஏற்கனவே ரொம்ப தைரியமான புள்ள... இப்ப எல்லாத்தையும் அனுபவிச்சு அனுபவிச்சு... நிறையவே இறுக்கமாகிட்டா..." என்றார் அதீத வருத்தத்துடன்!

"சீக்கிரமே உருகி வச்சிடலாம் ம்மா..." என்றான் கள்ளன்.

வானதியோ மகனை யோசனையுடன் பார்த்து, "உருக வச்சிடலாம்னா என்னப்பா அர்த்தம்?" என்கவும்,

"உங்க பாறாங்கல் மருமகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்... இனி அவளுக்கு உங்க மகன் வீட்டு சிறை வாசம் தான்... ஹ்ம்ம்... என்ன குற்றவாளி தண்டனையை ஏத்துக்காம முரண்டு பிடிப்பா தான்... நான் தான் கட்டாயப் படுத்தி எல்லா பண்ணனும்..." என்று தன் மன எண்ணங்களை அவன் பாஷையில் சொல்லி முடித்தான் வாசுதேவ கிருஷ்ணன்.

அத்தனை நேரமும் அமைதியாக இருந்த ராமனோ, "நிஜமாவா வாசு... பொய் எல்லாம் சொல்லலையே! எந்த ஒரு குழப்பமும் இல்லாம தெளிவா தானேடா சொல்ற?" என்று மகனின் முடிவை பற்றிக் கேட்டார்.

"எஸ் ப்பா... ஐம் க்ளியர்... கியா தான் எப்பவும் எனக்கு! இந்த முறை அதுல எந்த வித மாற்றமும் இல்லை... அவ என்னை புருஷனா எல்லாம் என்னைக்கும் நினைக்க தேவை இல்ல... எப்பவும் நான் அவளோட நண்பனா இருக்கேன் போதும்! பட், என் கூடவே இருக்கட்டும்..." என்று தன்நிலை விளக்கம் அளித்தான் கிருஷ்ணன்.

"ஆனா கண்ணா, இதுக்கு ப்ரியா என்ன சொல்வான்னு தெரியலையே? ப்ச்... அவளுக்கு மறுபடியும் கல்யாணம் பத்தின பேச்சை கேட்டாலே அவ்வளவு கோபம் வருதாம்... இப்ப போய் உன்ன புருஷனா நினைச்சு பார்க்க சொன்னா... அவ மனநிலை எப்படி இருக்கும் கண்ணா! உள்ளுக்குள்ள ரொம்ப உடைஞ்சு போய்டும் அந்த பொண்ணு!" என்று இப்போதே ப்ரியாவை எண்ணி கவலை கொண்டார் வானதி.

"மாத்தலாம் ம்மா... கூடிய சீக்கிரமே எல்லாத்தையும் மாத்தலாம்... என் கியா பாப்பா மனசையும் மாத்தலாம்... அதுக்கு மொதல்ல அவ பிரச்சனை என்னன்னு கண்டு பிடிக்கணும்... அவ வாழ்கையில என்ன தான் நடந்துச்சு ன்னு தெரிஞ்சிக்கணும்... அதை அவளால மட்டும் தான் சொல்ல முடியும்..." என்றான் தீவிரக் குரலில்!

வானதியோ, "ஏன் பா..‌. அதை பத்தி எல்லாம் நீயே கண்டு பிடிச்சி இருக்கலாமே? நீயும் ஒரே பெரிய போலீஸ் தானே..." என்றார் அப்பாவியாக!

தாயை முறைத்து விட்டு, "இந்த ஒரு மாசமும் சும்மா இருந்தேன்னு நினைச்சீங்களா ம்மா? சித்தேஷ் பத்தி அக்குவேறா ஆணிவேறா விசாரிச்சு பார்த்துட்டேன்... ஆனா, எல்லாருமே அவனை பத்தி நல்ல விதமா தான் சொல்றாங்க... அதுல தான் எனக்கு ரொம்பவும் குழப்பமா இருக்கு..."

"ஆனா, எனக்கு அந்த சித்தேஷை பார்க்கும் போது நல்ல விதமாவே தெரியல வாசு... பெத்த பிள்ளை பிறந்து இவ்வளவு நாளாச்சு... வந்து எட்டி கூட பார்க்கல... அவன் செய்கையும் சரியில்ல... ஏனோ இந்த விஷயத்துல எனக்குமே குழப்பம் தான்..." என்று தன் கருத்தை பகிர்ந்தார் ராமன்.

"சரி விடுங்க... இதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்... இப்ப எல்லாரும் சாப்பிடலாம்..." என்று சொல்லி மகனையும் கணவரையும் சாப்பிட வைத்தார் வானதி.

வாசுதேவ கிருஷ்ணனின் எண்ணம் முற்றிலும் நிறைந்து இருந்தது என்னவோ கியா பாப்பா தான்! அவளின் காயங்களை முற்றிலும் குணப்படுத்த எண்ணி, மனம் சஞ்சலம் கொண்டு, அவனை அணுஅணுவாய் கொன்றது.

*********

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும் 👇

 
Status
Not open for further replies.
Top