GG writers
Moderator
காதலொன்று கண்டேன்!
தேடல் 30
பையனின் கட்டளையின் பேரில் யாழவளிடம் நடந்த எதுவும் தெரிவிக்கப்படாமலே போயிருந்தது.
"நீ மயங்கி விழுந்தட்டடி..நாங்க எல்லாரும் சேந்து தான் கூட்டிட்டு வந்தோம்.." பொய்யை அடித்து விட்டு,அதை உண்மை என நம்ப வைத்த பெருமை மித்ராவையே சாரும்.
இப்படியே நாட்கள் நகர்ந்திட,ஒரு மழை நாளில்!
நிலைக்கண்ணாடியின் முன்னே நின்று நெற்றியில் பொட்டு வைத்து,துப்பட்டாவை சீர் செய்தவாறு நிமிர்ந்தவளின் விழிகளில் கோபக்கனல்.
எல்லாவற்றுக்கும் முழு முதற்காரணம்,வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தை எடுத்தது தான்.தந்தை,இவனைப் போய் சந்தித்து வா என்று கட்டளையாய் சொல்லியிருக்க,வேறு வழியின்றி அதை நிறைவேற்றத் தான்,அவள் கிளம்பிக் கொண்டிருப்பது.
வேலையொன்றில் அமரும் வரை,திருமணம் வேண்டாமென்று அவள் இருக்க,அதற்கு மதிப்பு கொடுத்தவரோ,அதன் பின்னர் அவளுக்கு பிடி கொடுக்கவில்லை.
பின்னிருந்து,அவரை தூண்டி விட்ட பையனின் பிடிவாதம்,பிடி கொடுக்க இடம் தந்திருக்கவும் செய்யாது.
முதலில் அசட்டையாய் இருந்தவள்,திருமணப் பேச்சை துவங்குகையில் பையனின் முகம் தனக்குள் மின்னலடித்ததை கண்டு அதிர்ந்து விட்டாள்.
அதுவும்,அன்று இறுதியாக அவர்களின் கல்லூரி முடியும் நாளில் அவனை சந்தித்த நினைவுகளும்,ஏதோ ஒன்றை வார்த்தையின்றி உணர்த்திக் கொண்டிருந்த விழிகளும் அவளை கொஞ்சம் இம்சிக்க,இது என்ன குழப்பமென்று தன்னை நிந்தித்துக் கொண்டவளுக்கு,அதில் இருந்து மீள்வது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை.
"உனக்கு எப்டி மாப்ள பாக்கனும்..?" என்று ஒரு பேச்சுக்காக அவளின் தந்தை வினவியிருக்க,அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் விக்கித்து நின்றதன் அடித்தளம்,பையனின் விம்பம் மனதை ஆட்படுத்தியதே.
"இது என்னடா புதுசா ஒரு ரோதணயா போச்சு.." முணகியவளோ,அதைக் குறித்து கடவுளிடம் வேண்டுதல் வைப்பதும் வாடிக்கையாய் இருந்தது.
அவளால் விவரிக்க முடியாமல்,ஏதேதோ ஆகிப் போனது அவளுக்குள்.அது என்னவென்று உரைத்திட,அவளுக்கு புரிந்திடவில்லை.
காதல் இல்லையென்றாலும்,எதுவும் இல்லையென்று கடந்திடவும் முடியவில்லை,அவளால்.
இப்போதும் கூட கடுப்புடனேயே,தயாராகியவளோ வெளியே வர,அங்கு கூடத்தில் எதிர்ப்பட்டார்,தாயார்.
"மாப்ள டார்க் ப்ளூ ஷர்ட் போட்டு இருப்பாராம் டி.."என்க,அலட்சியத்துடன் அதை ஒப்புக் கொண்டு விட்டு,விடுவிடுவென நடையைக் கட்டி இருந்தாள்,அந்த உணவகத்தை நோக்கி.
அவர்களின் வீட்டில் இருந்து பத்து நிமிட தூரம்.அவ்விடம் வரை வந்து,அவளை விட்டுத் தான் சென்றார்,அவளின் தந்தை.
"இசைய தனியா அனுப்பாதீங்க.." பையனின் கடுப்படித்த,வார்த்தைகளும் அதற்கு ஒரு காரணம்.
மழையில் இலேசாக அவள் நனைந்திருக்க,மயிரிழைகள் ஓரிரண்டு முகத்துடன் முகாமிட்டிருக்க,அதை எரிச்சலுடன் பின்னே தள்ளியவாறு கண்ணாடிக் கதவை திறந்தவளின் விம்பத்தை,அவன் விழிகள் நிமிர்ந்து களவாட முயன்றன.
களவு கொள்ள முயன்ற அவனின் கருவிழிகள், அவளின் கருத்தை கவர்ந்திடவில்லை.
அவளுக்கோ கடுப்பு.சுற்றும் முற்றும் எங்கும் தேட,பையனோ அவளை சீண்டும் முனைப்பில்,கருநீல நிற சட்டைக்கு மேலாய்,தன் சாம்பல் நிற ப்ளேசரை அணிந்து கொள்ள,அவனிதழோரம் புன்னகை துளிர்த்தது.
"டைமாச்சு டார்க் ப்ளூ ஷர்ட்ல யாரயும் காணோம்.." திட்டியவாறு விழிகளை சுழற்றியவளுக்கு,அங்கு பையனக் கண்டதும் ஐயோவென்றானது.
"ஐயோ இவரா..நாமலே வந்து சிக்கிட்டோம் போல..இப்போ போய் பேசுனா அதோட எஃபெக்ட் எத்தன நாள் இருக்கும்னு தெரிலியே.." உள்ளுக்குள் புலம்பியவளுக்கு,அவனைக் கண்டு கொள்ளாதது போல் கடந்திடவும் இயலாதே.
அவனைப் பார்த்து புன்னகைத்திட,அவனும் எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு,அவளை அந்தக் கணம் காண்பது போன்ற பாவனையுடன் புன்னகைக்க,இவளுக்கு தான் சத்தியமாய் ஏதோ,ஆனது.
"என்ர விநாயகா.." என்கின்ற புலம்பலுடன்,அவனை நோக்கி வர,அவனோ "இசை" என்க,இவளும் அதே புன்னகையுடன் அவனருகே வந்தாள்.
"என்ன இசை..? இந்தப் பக்கம்..? நைஸ் சர்ப்ரைஸ்.." எதையும் காட்டிக் கொள்ளவில்லை,பையன்.
அவளுக்கோ பதில் சொல்லத் தயக்கம்.அவனோ,இருக்கையைக் காட்ட,அவனுக்கு விளக்கம் சொல்ல சங்கடப்பட்டு,அவள் அமர்ந்து கொள்ள,புன்னகையை அடக்க அரும்பாடு பட்டான்,கள்வன்.
"என்ன இசை..? யார பாக்க வந்து இருக்க..? யாராச்சும் ஃப்ரெண்டா..?"அவன் கேட்க,பொய்யுரைத்திட முடியாமல் திருதிருவென விழித்தாள்,அவள்.
அவள் பாவனையில் அவன் விழியோரம்,சின்னச் சின்ன இரசனைப் பூக்கள் மொட்டு விரிய,இமைகளும் அதற்கு தோதாய் அசைந்து கொடுத்தன.
"என்ன பதில காணோம்.."
"அது மித்ரா வர்ரன்னா.."
"உனக்கு பொய் சொல்ல முடியாதுன்னு தெரிஞ்சும் எதுக்கு ட்ரை பண்ற..?" அவன் புருவமுயர்த்தி கேட்க,அவளுக்கு உண்மையச் சொல்ல வேண்டிய கட்டாயம்.
"அது வீட்ல மாப்ள பாக்கறாங்க..அவன பாக்க இங்க வர சொன்னாங்க..அந்தப் பயல இன்னும் காணோம்..அதான்.." கடகடவென ஒப்பித்தவளின் விழிகள் மீண்டும் சுழன்று நீல நிற சட்டையத் தேடி,தோற்றுப் போயின.
"ஓஹ்..சரி அவன் வர்ர வர ஒரு காஃபி குடிக்கலாம்.." என்றவனோ,இருவருக்கும் காஃபி எடுத்து வரச் சொன்னான்,பேரரிடம்.
"உனக்கு ஃபில்டர் காஃபின்னா ரொம்ப புடிக்கும்ல.."
"ஆமா சீனியர்..உங்களுக்கு எப்டி தெரியும்..?"
"அது நீ மித்ரா கிட்ட இருந்து பறிச்சு குடிக்கிறத நா பாத்து இருக்கேன்..அவ சின்ன வயசுல இருந்தே உன்னோட க்ளோஸ் தானா..?"
"சின்ன வயசுன்னு இல்ல..ஒரு செவன்த் ஸ்டேன்டர்ட்ல இருந்து ரொம்ப க்ளோஸ்.."
"ம்ம்..நீ அவ கூட ரொம்ப உரிமயா பழகுவல..?"
"ம்ம் கொஞ்சம் உரிமயா தான் இருப்பேன் அவ கூட.."
"நீ மத்தவங்க பொருள எப்பவும் எடுக்க மாட்ட தான..? ஆனா மித்ரா விஷயத்துல அது தலகீழ்..அது நல்ல ஹைலட்டா தெர்யும்.." சின்னப் புன்னகையுடன் மொழிந்தான்,அவன்.
"அவளும் தப்பா எடுத்துக்க மாட்டா..அந்த நம்பிக்க இருக்கு..அவ்ளோ உரியமா பொஸஸிவ்வா பழகுற அளவு அவ எனக்கு ஸ்பெஷல்..ரொம்ப புடிக்கும் அவள.." நெகிழ்வாய் உரைத்தாள்,அவள்.
"சரி உனக்கு கல்யாணத்துல இஷ்டமா..? அந்த பையன் ஃபோட்டோவயாச்சும் பாத்தியா..?" அவனுக்கு தெரிந்தும்,அவளிடம் கேட்டிருந்தான்.
"இல்ல சீனியர்..பாக்க மனசு வர்ல.."
"சரி தப்பித் தவறி அவன் என்னோட நீ பேசிட்டு இருக்குறத பாத்து தப்பா நெனச்சிட்டான்னா..?"
"அப்டி நெனச்சிட்டு போய் கல்யாணத்த அவன் நிறுத்திட்டாலும் எனக்கு டபுள் ஓகே.."
"ஏன் இப்டி பேசற..? நல்ல பையன்னா பாக்க வேண்டியது தான..உன் மனசுல ஏதாச்சும் ஹோப் இருக்கா..? யார மாதிரி இருக்கனும் அப்டி ஏதாச்சும்..?" என்க,அவன் முகம் மின்னலடிக்க,சட்டென உறைந்து போனாள்,அவள்.
"ஐயோயோ.." உள்ளுக்குள் அலறியவளுக்கு,அவனைப் பார்த்திடவே,முடியவில்லை.
"என்ன பதில் சொல்ல மாட்டேங்குற..?"
"இதுக்கு நா என்ன பதில் சொல்றது..?" அவனிடமே,மறு கேள்வி கேட்க,மீசைநுனியை கடித்து புன்னகையை அடக்கினான்,அவன்.
"அத நீ தான் சொல்லனும்.."
"அப்டிலாம் எதுவும் இல்ல..இப்போ கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல.." விழிகள் அலைபாய,அவள் மறுத்திட,பையனுக்கும் ஏதோ பிடிபட்டது.
"அப்போ உன் மனசுல யாராச்சும் இருக்காங்க ரைட்.."
"ஐயோயோ..விநாயகா அப்டிலாம் யாரும் இல்ல..யாருமே இல்ல.."பதறிக் கொண்டு மறுத்தவளின் விழிகளில்,அவன் கண்டு கொண்டிருப்பானோ என்கின்ற தவிப்பு அப்பட்டமாய்.
அவனுக்குமே,முதலில் சந்தேகம் இருந்தாலும்,அவன் விழிகளை சந்திக்க மறுத்த அவள் பார்வையும்,தன்னைக் கண்டவுடன் அவள் விழிகளில் தோன்றி மறைந்த அதிர்வும்,அவனுக்கு வேறு செய்தி கூறிற்று.
"நெஜமாவே யாரும் இல்லயா..?"
"யாரும் இல்ல..கண்டிப்பா அது நீங்களும் இல்ல.." அவளிதழ்கள் மெல்லமாய் அசைய,அதனுடன் இயைந்த அவன் விழிகள் அர்த்தம் தேடி இசைந்து அலைய,அவளின் வார்த்தைகள் புரிந்ததும் அவனின் இதயத்தில் மத்தாப்புக்கள் வெடித்துச் சிதறின.
அவள் மனதில் யாரும் இல்லை என்று அவன் எண்ணியிருக்க,அதில் தன்னால் சிறு பாதிப்பு உண்டாகி இருப்பது அவனை நிறைத்திட போதுமானதாய்.
"ரியலி.." தலை சரித்து கழுத்தை வருடியவாறு மந்தாகசப் புன்னகையுடன் கேட்டவனின் மேனரிசத்தில்,இவளுக்கு இதயம் படபடத்தது.
"நா போறேன் சீனியர்..அந்த கிறுக்கு வர்ல போல.." படபபடத்து விட்டு அவள் எழுந்து திரும்பி நடக்கப் பார்த்திட,பையனின் குரல் இவன் செவியை உரசியது.
"இசை உக்காரு ரெண்டு நிமிஷம் பேசனும்.."அவனின் கட்டளையை மீற முடியாமல் அவள் அமர,பார்வையோ அவனைத் தொடவேயில்லை.
"அப்போ உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லயா.."
"இப்போ இல்ல.." என்றவளின் பார்வையே,மடியில் இருந்த தன் பையை ஆராய்ந்தது.
அவனோ,அவளின் தடுமாற்றத்தை விழிகளுக்கு அள்ளித் தீர்த்தான்.
மெதுவாய் குரலை செருமிட,அவள் இமைகள் உயர்ந்தாலும்,கருமணிகள் தாழ்ந்து இருக்க,மீண்டும் தொண்டையைச் செருமிட,கோர்ட்டை கழற்றி விட்டு அமர்ந்து இருந்தவனின் மாற்றம் அவளுக்கு புரிந்திடவில்லை.அதை புரிந்து கொள்ளும் நிலையிலும்,அவள் இல்லை.
இத்தனை நேரம் அவனை அவள் கவனிக்க மறந்து போயிருக்க,இப்போதும் அதையே செய்பவளை எண்ணி,மெல்லிய புன்னகை அவனிதழ்களில்.
"இசை.." என்ற அவன் குரலில் அவள் நிமிர,"என் கிட்ட ஏதாச்சும் டிஃபரன்ட் தெரியுதா..?" என்ற அவனின் கேள்விக்கு,மறுப்பாய் தலையசைத்து விட்டு தலை தாழ்த்தியவளின் விழிகள் மறுமுறை உயர்ந்து,அதிர்வில் குளித்தன.
இமைக்காத பார்வையுடன்,தன்னை தீண்டுபவளை வெகு இரசனையாய் ஏறிட்டவன்,கொள்ளை கொள்ளும் புன்னகையுடன்,என்னவென்று கேட்டிட,அவளுக்கோ பதட்டம்.
சுற்றும் முற்றும் விழிகளை அலைய விட்டு,கருநீல நிற சட்டையைத் தேடித் தோற்று,தன் முன்னே அமர்ந்து இருப்பவனை நம்பவும் முடியாமல்,முட்டை முழியுடன் அவனை பாவமாய் பார்த்திட,மீசையில் ஒளிந்தோடிய புன்னகை விழிகளில் மினுமினுத்து ஒளிர்ந்தது.
"நீ தேட்ற நீல சட்ட நா தான்.." கைகளை பின்னே நீட்டி,சோம்பல் முறித்தவாறு அவன் மொழிய,பதட்டத்தில் அருகில் இருந்த நீர்க்குவளையை எடுத்து மடமடவென வாயில் சரித்தாள்,அவள்.
கருமணிகள் முனைக்கு வந்த அவனை தீண்ட,அவனை உரசிய ஓரப்பார்வையுடன் அவள் இருக்க,அவன் தான் அவளில் தொலைந்து போனான்.
"ரிலாக்ஸ் இசை..ரிலாக்ஸ் நா என்ன பேயா இப்டி பதறுற..?" அவன் தன்மையாய் உரைத்திடவுமே,அவள் கொஞ்சம் இயல்பானாள்.
"எனக்கு உன்ன புடிச்சி இருக்கு..அதுக்காக உனக்கு என்ன புடிக்கனும்னு எந்த அவசியமும் இல்ல..உனக்கு புடிச்சி இருந்தா நாம அடுத்தத யோசிக்கலாம்.." கூறுகையிலேயே,அவன் உயிருக்குள் நடுக்கம்.காதல் கொண்ட இதயம் ஆயிற்றே.
"உன் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது..அதுக்காக நீ ஒத்துக்கனும்னு எந்தக் கட்டாயமும் இல்ல..உன் விருப்பம் என்னன்னு யோசிச்சு சொல்லு..உன் முடிவு என்னவா இருந்தாலும் பரவால..பாத்துக்கலாம்.."என்றாலும்,அவன் மனம் தவித்ததை அவன் மட்டுமே அறிவான்.
"கல்யாணம்னு வந்துட்டா உன்னோடது எல்லாம் என்னோடது மாதிரி..என்னோடது எல்லாம் உன்னோடது மாதிரி..எதுவா இருந்தாலும்..பிரச்சினன்னா கூட அப்டி தான்.."
"சேந்து ட்ராவல் பண்ணனும்..உன்னோடது என்னோடதுன்னு எதுவும் இல்ல..நம்மளோடதுங்குற தாட் தான் முக்கியம்..அந்த தாட் வரனும்னு கண்டிப்பா ஏதோ ஒரு வகைல ரெண்டு பேரும் ஒத்துப் போகனும்..அப்டி ஒத்துப் போகும்னு தோணுனா நீ சரின்னு சொல்லு..தட்ஸ் ஆல்..யாரும் எதுவும் ஃபோர்ஸ் பண்ணல.."அமைதியாய் உரைத்தான்,அவன்.
அவனைப் போன்ற ஒருவன் கணவனாய் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தாலும்,அவனை அவ்விடத்தில் வைத்து யோசிப்பதில்லை.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,அவள் தடுமாற,அவனுக்கு அவளைப் பார்க்கவும் பாவமாய் இருந்தது.
அதற்குள் பேரர் வந்து காபியையும் இதர உணவுகளையும் வைத்து விட்டுப் போக,அவளோ பதில் சொல்லாமல் அமர்ந்திருக்க,அவனுக்கும் இதற்கு மேல் பேசுவது உவப்பாய்த் தோன்றவில்லை.
அவனின் அலைபேசி ஒலித்திட,அதை எடுத்துக் கொண்டு எழுந்தவனோ,அவளிடம் சைகை காட்டி விட்டு நகரப் போக,ஆடவர் கூட்டம் அவளைக் கடக்க,அணையாய் நின்றவனோ,அவர்கள் கடந்து சென்றதும் தான்,அவ்விடம் விட்டு அகன்றான்.
அதுவே,அவளை ஏதோ செய்திட,சற்றுத் தள்ளி நின்று கதைத்துக் கொண்டிருந்தவனின் விழிகள் அவளையே சுற்றி வர,அதில் தெரிந்த பாதுகாப்புணர்வில் அவளும் உறைந்து போனாள்.
அவளோ சட்டென அவனை ஏறிட,பயப்பட வேண்டாம் என அவன் விழிகள் கூறிய செய்தி,அவளுள் ஆழமாய் இறங்கிட,அவன் மீதான மரியாதை எல்லாம் காதலாக மாறியது,அந்த ஒற்றைப் பார்வை வருடலில் தான்.
என்ன பார்வையிது..?
அவளை மொத்தமாய் ஆசுவாசப்படுத்தி இத்தனை இதத்தை தந்திடுது..?
என்ன பார்வையென்று புரியாவிடினும்,அந்த ஒற்றைப் பார்வைக்குள் மடிந்து சுருண்டு கொள்ளத் தோன்றிற்று,அவளுக்கு.அந்த பார்வை வருடலில் அவள் உறைந்தாலும்,பரவாயில்லை என்கின்ற எண்ணம்.
எந்த காரணத்துக்காக காதல் பிறக்கும் என்று தெரியாது.அவள் எதுவும் கூறாமல்,அவள் விழி வழி அவள் மனதை புரிந்து,அவன் பார்வை மொழிந்த ஆறுதல்,கொள்ளையளவு நேசப் பூக்களை அவளுக்குள் தூவி விட்டதன் மாயம் அவள் அறியவில்லை.
சட்டென,பார்வையை தாழ்த்தியவளுக்கு இதயம் வேகமெடுக்க,முகத்தில் மெல்லிய புன்னகை வேறு.
"சரி இசை அவசரம் எதுவும் இல்ல..நீ டைம் எடுத்து பதில் சொல்லு.." என்க,அவளுக்குள் தவிப்பும் சிறு பரபரப்பும்.
விருப்பத்தை உடனே தெரிவிக்க,மனம் குறுகுறுக்க,அந்த ஒற்றை மாய நொடியில் ஆயிரம் மாற்றங்கள் அவளில்.
"சரி அப்போ காஃபிய குடிச்சிட்டு கெளம்பலாம்.." என்க,அப்போது தான் கவனித்தான்,அவள் காஃபியை குடித்து முடித்திருப்பதை.
"காஃபி குடிச்சிட்டியோ அப்போ இந்தா கேக் சாப்பிடு.." அவள் தட்டை தள்ளி வைக்க,அவளோ வேண்டாம் என்றாள்.
"ஏன் நீ கேக் சாப்டுவ தான..?" அவனின் கேள்விக்கு விழி உயர்த்தாமால் ஆமென்று சைகையில் சொன்னவளோ,அவன் எடுக்கப் போன காஃபி கப்பை எடுத்து ஒரே தடவையில் வாய்க்குள் சரித்துக் கொள்ள,இவனுக்கு எதுவும் புரியவில்லை.
"இன்னொரு காஃபி வேணுமா உனக்கு..?" அவளுக்கு ஃபில்டர் காஃபி பிடிக்கும் என்பதால் கேட்டு வைத்திட இவளோ,"ட்யூப் லைட்"என்றாள்,வாய்க்குள்ளால்.
"கேட்டா நானே தந்துருப்பேனே இசை.." சின்னப் புன்னகையுடன் அவன் கூறும் போதே,கோர்த்த நினைவலைகளில் அவன் விழிகள் விரிய,அவனை நேருக்கு நேர் பார்த்தாள்,அவள்.
"மத்தவங்களோடத தான் கேட்டுட்டு எடுக்கனும்..நம்மளோடத இல்ல.." அழுத்தமாய் மொழிந்தவளோ,சட்டென்று எழுந்து சென்றிட,அவனுக்கு இயல்பு மீள சில நொடிகள் பிடித்தது.
"அடியேய்!" அவன் சன்னமாய் தலை சரித்து கழுத்தை வருடி மொழிந்திட,அதற்குள் வாயிலில் நின்று இருந்தாள்,அவள்.
ஒரு கணம் திரும்பி அவனைப் பார்த்திட,இதழ் நிறைத்த புன்னகையுடன் கண் சிமிட்டியவனோ,"கொன்னுட்ட" என்பது போல் சைகை செய்ய,அவளுக்கு அத்தனை தவிப்பு.
வெளியில் மழை அடித்து ஊற்ற,தந்தைக்கு அழைத்தவளுக்கு அவனை எதிர் கொள்ள அவ்வளவு தடுமாற்றம்.என்ன தைரியத்தில் அப்படி சொன்னாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
கள்வனும் மெதுவாய் எழுந்து வந்து,சற்று இடைவெளியில் நிற்க,கொட்டும் மழையில் நிலைத்தது,இருவரின் பார்வை.
"எதுல போகப் போற..?"
"அப்பாவ வர சொல்லி இருக்கேன்.."துப்பட்டா நுனியை திருகியவளோ,நிமிர்ந்து அவனைப் பார்க்கவே இல்லை.பையனுக்கு சிரிப்பு அவனின் பயத்தைக் கண்டு.
அவளின் பதட்டத்தை போக்கவென்றே தள்ளி நிற்க,அவளுக்கோ இன்னுமின்னும் அவனைப் பிடித்துப் போனது.
காதல் தேடும்.
2025.04.27

Last edited: