GG writers
Moderator
காதலொன்று கண்டேன்!
தேடல் 38
மீளவும் பையன் கண் விழிக்கையில் இரண்டு மணி நேரங்கள் கடந்து இருந்தது.
சித்தம் கொஞ்சம் தெளிந்து இருக்க,அவருடன் இருக்கப் போகும் இறுதி நிமிடங்களை உறக்கத்தில் கரைத்த தன் மீதே கோபம் அவனுக்கு.
முகம் கசங்கி கன்றி போய் இருக்க,விழிகளில் சிவப்பு.அழவில்லை,அவன்.அழுகையும் வரவில்லை.அழுது தீர்க்க முடியாத வலி என்று கண்ணீரும் அடங்கி விட்டது போலும்.
உண்மை தானே,அழுதால் நிரம்பி விடுமா அவரின் இறப்பின் வெற்றிடம்..?
யார் கொண்டும் நிரப்பப் முடியா இடம் அது,அவள் வாழ்வில் இனி தொடர் வெற்றிடமாய் நீடிக்கும்.
பையனோ,அவரின் சடலத்தின் அருகே அவரின் முகத்தை பார்த்தவாறே அமர்ந்து இருந்தான்.அவரை விட்டு அசைய மறுத்தது,அவன் விழிகள்.
அனைத்தையும் கவனித்துக் கொண்டது சத்யா தான்.ஊரில் இருக்கும் ஆட்களாலே நிரம்பியிருந்தது வீடு.சொந்தமென்று, சொல்லிக் கொண்டு அங்கு வந்திருந்தது ஒரு சிலரே.ஆனாலும்,எதையும் பொறுப்பெடுத்து செய்ய யாரும் முன்வரவில்லை.
பெரிதாய் அழுகுரல் இல்லை அந்த வீட்டில்.அழ வேண்டியவனும் அழுகையை மறந்து, வெறித்த பாவையுடன்,எச்சில் கூட்டி விழுங்கிட,ஏறி இறங்கிய தொண்டைக்குழியுடன் அமர்ந்து இருக்க,அன்றிரவே அவரின் உடலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
"சொந்தம்னு யாரும் இல்லல..கொண்டு போய்ரலாம்டா.." பையனின் கெஞ்சலுக்கு யாரும் எதிர்ப்பேச்சு பேசவில்லை.அவனுக்குமே இயலவில்லை,அவரை மூச்சற்று உடலாய் பார்த்திட.
அவர் தேகம் மூச்சால் ஏறி இறங்குவது போல் தோன்றிற்று..
"அப்பு.." என படுத்திருப்பவர் தன்னை அழைப்பது போல் புலப்பட்டது..
அவரின் முகத்தை பார்த்தவாறு அவன் விழிகளை மூட,அவரின் ஸ்பரிசத்தின் மென்மையை சிகை உணர்ந்திற்று..
என்னென்னவோ ஆக,நிதர்சம் புரிந்தால் பையனும் பயந்தான்.
"அப்பா மூச்சு விட்ற மாதிரி இருக்குடா.." சத்யாவை அழைத்து இரு முறை கூற,அவன் பையனுக்கு ஏதேனுமொ என்று வெகுவாய் பயந்திட,தாமதிக்க விரும்பவில்லை.
எந்த வித உணர்வும் இன்றி,இறுதிக் கிரியையகள் பையன் செய்திட,மழையும் அடித்து ஊற்றியது.அவன் வாழ்வில் எந்த ஒரு இடத்திலும் மழை.
அடக்கம் செய்து விட்டு வீடு வந்தான்,பையன்.தோழன் உடன் வரும் அரவம் கேட்டது.இருளில் மூழ்கி வீடே வெறிச்சோடிப் போயிருந்தது.
ருக்மணியோ,மகனை அழைத்துக் கொண்டு வேறிடம் சென்று விட்டாள்.இன்னும் பையனுக்கு தொந்தரவாக இருக்க,அவள் மனம் விரும்பவில்லை.
எப்போது அவன் வீட்டுக்கு வந்தாலும் விழித்திருந்தால்,வாசல் வந்து விடுவார் மனிதர்.அவனைக் கண்டதும் விழிகள் சிரிக்க,அவர் முகம் விகசிக்கும்.அதை நினைக்கையில் விழிகளில் நீர் சேர்ந்தது.
"இனிமெ அப்பா வரவே மாட்டார்ல.." நலுங்கிய தொனியில் உரைத்தவனுக்கு தானும் செத்து விட்டால் என்னவென்றே தோன்றிற்று.
அவரின்றி அவனின் நாட்களை யோசித்துப் பார்த்ததே இல்லை.யோசிக்கும் தைரியமே பையனுக்கு இருந்தது இல்லை.அப்படித் தவறுதலாக நினைவில் வந்தாலும்,மனிதரை கட்டிக் கொண்டு ஆறுதல் தேடிடுவான்.
அவர் மீள முடியா துயிலுக்கு சென்று விட்டார்,என்கின்ற உண்மையை இன்னும் அவன் மனம் ஏற்காது இருக்க,இதழ்களில் விரக்திச் சிரிப்பு.
அறையின் விளக்கை கூட ஒளிர விடாது,அவர் அறையில் அவரின் சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவனோ, மெதுவாய் அதை தடவிக் கொடுக்க,அவனின் நிலையைக் கண்ட சத்யாவின் விழிகளில் கண்ணீர் எழுந்திற்று.
கண்டவனுக்கே,ஒரு மாதிரியாகிற்று.இயல்பான தந்தை-மகன் பிணைப்பு அல்லவே அது.இயல்பு மீறிய,விதிகள் தோற்கும் ஓர் அழகியலே,அப்புவுக்கும் அவனின் அப்பாவுக்கும் இடையிலான பந்தம்.
இருவரின் பிணைப்பையும் கண்கூடாக கண்டு, மகிழ்ந்து தளர்ந்து நெகிழ்ந்து போனவர்களில், அவனும் ஒருவன்.
அவன் நிலையே அப்படி இருக்கையில்,அதில் வாழ்ந்தவனின்,அத்தோடு ஜீவனை பிணைத்தவனின், நிலையை சொல்ல வார்த்தைகள் போதுமா..?
விழித்தெழுந்ததும், தினத்துக்கு ஆயிரம் தடவை,"அப்பு" என்கின்ற அவரின் அழைப்பு செவியை மோதிக் கொண்டு இருக்கும்.அவரின் இன்மையை,ஏன் ஒரு நொடி கூட அவர் உணரவிட்டது இல்லை,மனிதர்.அப்படி பார்த்துக் கொள்வார்,அவர் பெறா அவரின் உயிரை.
விவரம் தெரியும் முன்னரே அவனின் உலகமாக இருந்தவர், விவரம் அறிந்து முழுதாய் அவரை மட்டும் அவன் நம்பி இருக்கையில் விட்டுச் சென்றதை விதியின் சதி என்பதா..?
இரவு பையன் உண்ணவில்லை.உணவை மறத்துவனை சத்யாவும் வற்புறுத்தவில்லை.வற்புறுத்தவே மனம் வராத அளவு,அத்தனை உடைந்து போயிருந்தான்,பையன்.
"எல்லாத்தயும் ஏத்துகிட்டு பழகனும்ல.." நெஞ்சை நீவி தனக்குத் தானே மொழிந்து கொண்டான்.அதீத அழுத்தத்தில் நெஞ்சுக் கூட இறுகி,வலது புறம் மூச்செடுக்க கூட முடியாமல் வலி.
சத்யா தான்,மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்து,சீர் படுத்தியது.
"இப்போ நிம்மதியா இருக்குடா..நா இல்லன்னா அப்பா எப்டி சமாளிக்க போறாருன்னு யோசிச்சு யோசிச்சு பயந்து கிட்டு இருந்தேன்டா...இப்போ அந்த விஷயத்துல கொஞ்சம் நிம்மதியா இருக்குடா.." விரக்தியாய் கூறியவனுக்கு,என்ன பதில் சொல்லவென்று தெரியாத தோழனின் விழிகளில் நீர் மட்டுமே.
மறுநாள் எழுந்து கொண்டவனோ,வழமை போல் இருவருக்கும் காஃபி கலக்கி முடிக்கையிலேயே, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் விழிகளில் விழ,அவர் இல்லையென்கின்ற நிதர்சனம் புரிந்தது.ஆழ மூச்சிழுத்துக் கொண்டான்.அழுதாலாவது வலி மட்டுப்படம முனையும்.பையனுக்கோ அழுகையின் நாமமே இல்லை.
தொண்டை வரை வந்த விசும்பலை விழுங்கிக் கொண்டது,மொத்தமாய் சேர்த்து அழுதிடத் தானோ..?
வம்படியாய் தோழன் உணவை நீட்ட,ஏனோ தந்தையின் அப்போதும் அவரின் அதட்டலும் அதன் பின்னர் ஊட்டி விடுவதும் நினைவில் வர பையன் செத்துத் தான் போனான்.
பையனின் நிலையைப் பார்த்து தோழனே,"அழுதுரேன்டா.." எனக் கெஞ்ச,அவனோ அசைந்து கொடுத்திடவில்லை.
இரு நாட்கள் கடந்திருக்க,நாளை அவளின் திருமணம்.அது தோழனுக்கு இன்று தான் தெரிய வர,அப்படி ஒரு கோபம்.
"நாளக்கி யாழ்கு கல்யாணமா..?" அவளை தோழனுடன் சேர்த்து வைத்திடலாம் என்று அவனுக்குள் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.
"ஆமாடா.."
"டேய் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணா உனக்குனனு யா்ரா இருக்கா..?"
"நா பேசறது புரியுதாடா உனக்கு..?நாளக்கி நீ தனிச்சிப் போய்ருவடா..சாப்டியா தூங்கனியா கேக்கக் கூட ஆள் இருக்காது..நோய்னு ஏதாச்சும் வந்து யாருடா உன்னப் பாத்துப்பாங்க.. வீட்டுக்கு வந்தா வான்னு கூப்ட கூட ஆள் இருக்காதுடா..என்னடா பேசற நீ..?ஏன்டா புரிஞ்சிக்க மாட்டேங்குற..?"
உண்மை தானே.அவளுக்கும் திருமணமாகி விட்டால் அவனுக்கென்று யாரும் இருக்கப் போவதில்லை.அவன் மட்டும் தான் அவனுக்கு."சாப்பிட்டாயா..?" என்கின்ற கேள்வி கூட,அவன் வாழ்வில இருக்கப் போவதில்லை.இருள் சூழ் வீடும்,அரவமற்ற அமைதியுமே அவனை வரவேற்கும்.அவனுக்கென்று எந்த நிலையிலும் யாரும் இருக்க மாட்டார்கள்.
"அப்போ பாத்துக்கலாம்.." ஜீவனே இல்லாத குரலில் மொழிந்தான்,பையன்.
"என்னடா பேசற நீ.." அவன் கத்த பையனிடம் அமைதி.அந்த அமைதியே அவன் ஏதோ ஒன்றை யோசிப்பதை எடுத்துக் காட்டியது.
"நா சொல்றத கேளு ஆரி.."தோழனின் பேச்சுக்கு செவி சாய்க்காதவனோ,தன் யோசனையில் ஆழ,இங்கு தோழன் முடிவெடுத்து விட்டிருந்தான்,அவளிடம் உண்மையைச் சொல்வதென்று.
பையனா தந்தையின் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள, இங்கு தோழன் அலைபேசியை எடுத்துக்கொண்டு சற்றுத் தள்ளி வெளியே வந்தான்,பையன் காணாமல்.
அவளின் எண்ணை ஏற்கனவே பதிந்து வைத்திருக்க யோசியாது,அவளுக்கு அழைப்பு எடுக்க, அவளின் கையில் இருந்து அலைபேசி பறிக்கப்படவும் தோழனிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாய் இருந்தது.
"யாருன்னு பாத்துட்டு தர்ரேன்.." என்று அவள் கூறியதை பொருட்படுத்தாமல், அலைபேசியை பறித்து ஒளித்து வைத்தனர்,உடன் இருந்தவர்கள்.
"அத்தான் ஃபோன் பண்ணி நீ அவர் கூட பேசப் போனனா.."கலாய்த்தவாறு வெட்கச் சிரிப்புடன் உரைத்த தங்கையோ,திருமணம் முடிந்த கையோடு அலைபேசியை வாங்கிக் கொள் என்று கட்டளையும் இட்டு விட்டாள்.
சிறிது நேரத்தின் பின் அலைபேசி ஜார்ஜ் இருந்து அணைந்து போக,அழைப்பெடுத்து தோற்றுப் போய்,மனம் நொந்து சுவற்றில் ஓங்கி குத்தினான், தோழன்.
சில நேரங்களில் விதியின் விளையாட்டை தடுக்க யாராலும் முடிவதில்லை.அது தான் இங்கு நடந்தேறியது.
இங்கு தன் கையில் இருந்த கோப்பில் இடப்பட்டிருந்த பெயரைக் கண்டதும், டாக்டரின் விழிகளில் அப்பட்டமான அதிர்வு.
"ஆர்யன் துருவேந்திரன்" என பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த பெயரை அவன் விரல்கள் வருட, அப்போது தான் புரிந்தது தன்னை காண அன்று வந்தது பையனின் தோழன் என்பது.
என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான்,டாக்டர். அவனுக்கு பையனின் நடத்தையில் இருந்து ஏதோ ஒன்றை ஊகிக்க முடியுமாக இருக்க, விழிகள் இடுங்கின.
சரியாக அதே நேரம் பார்த்து சத்யாவிடம் இருந்து அழைப்பு வர, அது ஏற்று காதில் வைத்தவனுக்கு,புரிந்து தான் இருந்தது தோழன் பேசப்போவது பையனை பற்றி என்று.
மதியழனிடம் விசாரித்து,யாழ் அவளின் அத்தை மகன் யார் என்று தெரிந்து கொண்டவனுக்கு நிம்மதி தான்.
அவனுக்கு ஏற்கனவே டாக்டரை தெரிந்து இருக்க,அவனின் குணத்தை கணித்தவனுக்கு எப்படியும் அவன் தமக்கு உதவுவான், என்று அசாத்திய நம்பிக்கை இருக்க,அது பொய்த்துப் போகப் போவது தெரிந்திட வாய்ப்பில்லை.
சத்யா அனைத்தையும் ஒப்பிக்க,அதைக் கேட்ட டாக்டருக்கு மனம் கலங்கினாலும் ஏனோ யாழவளை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை.
அவனுக்காக மனம் யோசித்தது.அவளையும் அதனுடன் கூட்டு சேர்த்துக் கொண்டது.
எப்படி என்றாலும் அவனை திருமணம் செய்தால்,அவளின் வாழ்வு அவனுடன் முடிந்து போகும் என மனம் வாதிட,பையன் செய்யப்போகும் செயலை தானே, தானும் செய்யப் போவதாய் நினைத்து தன் செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டான்,டாக்டர்.
அது தானே,மனிதங்களின் இயல்பான குணம்.
அவரவர்க்கு அவரவர் நியாயம்!அடுத்தவருக்கோ,அது அளப்பறிய காயம்!
சரி என்பதாய் கேட்டு அலைபேசியை துண்டித்தவனோ, தீர்மானம் எடுத்திருந்தான், யாழவளிடம் எதையும் கூறப்போவதில்லை என்று.
நொடி நேர சுயநலம்,சிலருக்கு வாழ்க்கை முழுக்க தீரா வலியைத் தரும்.
மறுநாள்,பத்தரை மணிக்கு முகூர்த்தம் என்று இருக்க,நேரத்தை பார்த்துக் கொண்டு தயாராகிக் கொண்டிருந்தாள்,பாவையவள்.
எப்படியும் அவன் வந்திடுவான் என்று உள் மனம் கூறி, உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருக்க,அந்த நம்பிக்கை இது தான் அவள் தயாரானதே.
டாக்டரும் சத்யா பேசியதே மொத்தமாக மறந்து விட்டு திருமணத்தை எதிர்கொள்ள காத்திருக்க,அவன் மனம் மட்டும் கொஞ்சமாய் நெருடிக் கொண்டே இருந்தது.
என்னவென்றாலும் அவள் மீதான சுயநலம் என்பது அவனுக்கு சமீபமாக தோன்றிய உணர்வல்லவா? அவனின் இயல்பு அல்லவே..?
இதே நேரம் சங்கவி வந்து பாவையவளை, கோயிலின் பின்னே அழைத்துச் செல்ல அங்கு இலேசாக தலை சேர்த்து கழுத்தை வருடியவாறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான், பையன்.
வந்து விட்டான்...
வந்து விட்டான்...
என அவள் மனம் கூக்ககுரலிட அந்த மகிழ்வு,அவள் விழிகளில் அப்பட்டமாய் படம் விரிக்க,நேசத்தின் சின்னங்கள் உள்ளுக்குள் வியாபித்து நொடி நேர நிகழ்வை பூகம்பமாய் மாற்றி,நெகிழ்வின் பிரளயத்தை வெடிக்கச் செய்தது.
விழிகளில் கட்டிய கண்ணீருடன்,அவனின் அருகே சென்றாள்.பொய்யாகப் போகும் மகிழ்வில் முகம் விகசித்தது. அவளின் ஒவ்வொரு செயலிலும் தனக்கான காதலைக் கண்டவனின்,இதயம் சிதறிப் போக அவளுக்காகவே அனைத்தையும் மறைத்துக் கொண்டான்,பையன்.
அவன் சொன்னால்,அவனுடன் எப்படியும் கை கோர்த்து அவள் வாழ்வையும் பாழாக்கிக் கொள்வாள் என்று அவனுக்கு நன்கு தெரியும்.அது தானே இந்த நாடகம்.
சில நேசங்கள் அப்படித் தான்.அவறுக்கு ஒரு போதும் தன்னைப் பற்றி யோசிக்கத் தெரியாது.அவளுக்கான அவனின் நேசத்தைப் போல,சில நேசங்கள் அப்படித் தான்.
"நான் எதுக்கு வந்தேன்னா.. இன்னைக்கு உனக்கு கல்யாணம் அதான் சரியா.. சத்தியமா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. அத நம்பு ஃபர்ஸ்டு.. இப்போ போய் அவன கட்டிக்கோ..நீ கூப்பிட்டதுக்காக நான் ஒன்னும் வர்ல..நீ கூப்பிட்டு நான் வர்ற அளவு நீ எனக்கு முக்கியமான ஆளும் இல்ல..
"நான் வரலன்னா நீ கண்டிப்பா முழு மனசா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டன்னு தோணுச்சு..அன்னிக்கிம் உன் ஃப்ரெண்டு சொன்னா..
என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை பாழாக கூடாதுன்னு நான் நினைக்கிறேன்..நீ கல்யாணம் பண்ணாம என்னையும் சுத்தல்ல விடாம தயவு செஞ்சு தாலியை வாங்கிக்கோ.. என்னயும்,என் பொண்டாட்டி பிள்ளைகள் கூட நிம்மதியா வாழ விடு.. என் பொண்டாட்டி கூட என் தலய அரிச்சுக்கிட்டே இருக்கா உன்ன பத்தி பேசி பேசி உன்னால வாழ்க்கை பாழாகுறதா சொல்லி.."
" இதுதான் நம்ம லாஸ்ட்டா மீட் பண்ண போறதா இருக்கும்.." என்று கூறுகையிலேயே, அவன் மனம் சுருக்கின்றது.உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு என மனம் நினைத்தாலும்,அப்படி இருக்க வேண்டும் என்றே வேண்டிக் கொண்டது காதல் கொண்ட நெஞ்சம்.
"அப்றம் எந்த காரணத்துக்காகவும் உன்ன மீட் பண்ண வேண்டிய தேவ எனக்கு வராது...அது மாதிரி என்னை மீட் பண்ண வேண்டி வந்தாலும் தயவு செஞ்சு என்ன பாக்க வராத..நீ யாரோ நா யாரோ உனக்கு கல்யாணமாகப் போகுது..எனக்கு கல்யாணமாகிருச்சு.. நமக்குள்ள எந்த சம்பந்தமும் இல்லை தப்பித்பித்தவறி ஏதாச்சும் உன் மனசுல என்னால சலனம் உண்டாகி இருந்தா தயவு செய்து மன்னிச்சோக்கோ தாயே.. எனவே ஹேப்பி மேரீட் லைஃப்"
உடைய முயன்ற மனதை மொத்தமாய் அடக்கி
ஷஅவளிடம் பாராமுகம் காட்டி விட்டு வெளியேறிட,அவனின் முதுகை வெறித்தது, அவளின் பார்வை.
அவள் விழிகளில் கண்ணீர்.நூலிழை நம்பிக்கையையும் மொத்தமாய் உடைத்துச் சென்று விட,கலங்கிய விழிகளை சிமிட்டியவளோ,மாலையை சரி செய்து கொள்ள அவ்விடம் வந்தான்,டாக்டர்.
"கெட் ரெடி டூ பீ மை வைஃப்.."அழுத்தமான வார்த்தைகளில் அவள் மீதான உரிமை படர்ந்து விரிந்தது.
மனமுருக சாமி சன்னிதியில் வேண்டிக் கொண்ட மருதநாயகத்துக்கு சில விடயங்கள் தெரியும்.அந்த இரகசியங்களை தனக்குள் மட்டுமே புதைத்தி விரும்பினார்,அவர்.அவருடன் அது அடங்கிடட்டும்.
இங்கோ,
பையனைத் தேடி அவனின் வீட்டுக்கு வந்தான்,தோழன். நேற்று இரவு ஏழு மணி போல் தாயாரை மருத்துவமனையில் அனுமதித்திருக்க, அதற்கு அவன் செல்ல வேண்டிய கட்டாயம்.
பையனை தனியாக விட்டுச் செல்ல மனம் இடம் கொடுக்கா விடினும்,வேறு வழியும் இருக்கவில்லை.
பையனின் பிரத்தியே காரியதரிசியை அழைத்து,பையனுடன் சென்று தங்கச் சொல்லிவிட்டு தான் கிளம்பிச் சென்றதே.
வீடு பூட்டப்டிருக்க தட்டிப் பார்த்தான்.சத்தமே இல்லை.வெளியே சிட் அவுட்டில் மேசையும் அதன்மேல் பையனின் அலைபேசியும் இருக்க,எதை எடுத்தவனின் விழிகள் இடுங்கின.
லாக் உடைத்து வைக்கப்பட்டிருக்க யோசனையுடன் எடுத்துப் பார்த்தான்,தோழன்.
ஏனோ விரல்களில் நடுக்கம்.
"சத்யா நீ சொன்னது சரிதான்..அப்பா இசை நீ இல்லனா சத்தியமா நானும் இல்லை.. எனக்கொரு வகையில் நிம்மதி தான் அப்பா எனக்கு முன்னாடி போய் சேர்ந்தது.. இல்லன்னா நான் போனதுக்கு அப்புறம் அவர் எப்படி இருப்பார் என்று யோசிச்சு யோசிச்சு எனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கும்..முன்ன எல்லாம் அப்டி தான்.."
"என்னால அவரில்லாம ஒரு நிமிஷம் கூட யோசிச்சு பார்க்க முடியல இப்போ கூட..அந்த வலி அவருக்கு இல்லன்னு சந்தோஷம் மட்டும்தான் பட முடியுது..அதுவும் இல்லாம சீக்கிரம் அவர் கிட்ட நானும் போயிருவேன் தானே அப்புறம் எதுக்கு நான் பீல் பண்றது.."
" எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் சத்யா.. என்னோட கூட பொறந்த அண்ணன் தம்பி மாதிரி.. உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.. எனக்கு உன்ன பத்தி தெரிஞ்சத விட உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.."
" நான் உன்கிட்ட கோபப்பட்டு கத்தி இருக்கேன்.. சண்டை போட்டு இருக்கேன்.. எல்லாம் உன் மேல இருக்கிற உரிமைனால தான்..அது உன்ன ஹர்ட் பண்ணி இருக்குமா தெரியல.. அப்ப எல்லாம் சாரி கேக்கறதுக்கு தோணல.. ஆனா இப்ப தோணுது ரொம்ப சாரி மச்சான்..எப்பவுமே கடவுள் எனக்கு எல்லாத்தையும் தரலனாலும் தர்ரது எல்லாமே பொக்கிஷம்தான்.. அப்பா அடுத்தது நீ.. அதுக்கப்புறம் இசை.. மூணு பேருமே யாராலும் ரிப்ளை பண்ண முடியாத இடத்தை என் வாழ்க்கையில கொடுத்தவங்க"
"இதுக்கப்புறம் நாம மீட் பண்ணுவோமா என்னன்னு தெரியாது.. நான் இங்க இருந்தா என்ன பத்தி யோசிச்சு உன் வாழ்க்கைய பார்க்காமலே இருப்ப.. கவலைப்படாத தற்கொலை செய்யவெல்லாம் மாட்டேன் நா"
"இருக்கிறவரை எல்லாத்தையும் நினைச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு போய்ருவேன்.. சப்போஸ் நான் செத்துட்டேனு ஏதாச்சும் தகவல் வந்தா என்ன கண்டிப்பா வந்து பாரு.. நான் தான் சொல்ல சொல்லி இருப்பேன்.. என்னோட சொத்து எல்லாத்தையும் திருப்பி கொடுத்துடு தந்தவங்க கிட்டவே.. அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் வேணாம்.."
"இது கடவுள் எனக்கு விதிச்ச வாழ்க்க..என்னோட விதி இது தான்..யாரலயும் அத மாத்த முடியாது..அத நெனச்சி நீ ஃபீல் பண்ணாத..என்ன ஒன்னு தனியா இருக்கும்..வீட்டுக்கு போனா வீடு இருட்டா இருக்கும்..சத்தமே இருக்காது..போகப் போற சுடுகாட்டுக்கு இப்போவே ப்ராக்டிஸ் எடுத்துக்குறேன்னு தேத்திப்பேன்டா..சாவு வாழ்க்க அவ்ளோ தான் மச்சி..எதுவும் நம்ம கைல இல்ல.."
"நாளைக்கு உனக்கு ஒரு பையன் பொறந்தா கண்டிப்பா என் பேர வை.. எப்படியாச்சும் உன் பக்கத்துல நான் இருக்குற மாதிரி நினைச்சுக்கோ.. என்ன விட நீ ரொம்ப கஷ்டப்படுவன்னு நினைக்கிறேன்.. ஆனாலும் சாரி மச்சான் இதை விட்டா எனக்கு வேற வழியும் தெரியல.. எப்பவும் நீதான் என் பெஸ்ட் பிரண்டு அது என்ன நடந்தாலும் மாத்த முடியாதது.. எப்பயாச்சும் என்ன பத்தி ஞாபகம் வந்ததா கவல எல்லாம் படாத.. எங்கிருந்தாலும் நான் சந்தோஷமா தான் இருப்பேன்.. உனக்காக வேண்டிக்கறேன்.. இதுக்கு அப்புறம் என்ன தேடி உன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக்காத"
"நீ கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு தான் நான் போய் இருக்கேன்.. அதுதான் இந்த போன கூட இங்க விட்டு போறேன்..புரியுது தானே உனக்கு..இதுக்கு அப்புறம் எதுவும் இல்லை கல்யாணம் பண்ணி புள்ள குட்டி ஓட சந்தோஷமா வாழு" என்க,தோழனின் கன்னத்தில் கண்ணீர்.
அப்படியே அவனுக்கு கூற வேண்டியதை தட்டச்சு செய்து வைத்திருக்க,ஆத்திரம் அடங்க மறுத்தது.தலையில் கை வைத்துக் கொண்டு அவ்விடத்தில் அமர்ந்து விட்டான்,நிலைகுழைந்து.
கோயிலின் வெளியே நின்று இருந்தால் வாத்தியங்கள் முழங்கும் சத்தம் தெளிவாய் கேட்டது. அவனுக்கோ,அவள் இன்னொருத்தனுக்கு சொந்தமாகிவிட்டாள் என்கின்ற எண்ணமே மனதை துண்டாக்கிட,இதழ் குவித்து ஊதிக் கொண்டான்.
விழிகளில் தன்னால் நீர் சேர்ந்திட,அதை சிமிட்டி அடக்கிக் கொண்டு நடந்தான்.
ஆனாலும் அவன் செய்தது தானே.அதில் என்ன மாற்றம் கொண்டு வந்திட முடியும் இப்போது..?
அவனுக்கென்று இருந்தவர்கள் எல்லோருய் அவனை விட்டு விட்டு வெகு தூரம் சென்று விட்டார்கள்.அவனே விலகி வந்து விட்டான்.இனி அவனுக்கென்று யாரும் இருக்கப் போவதுமில்லை.எ
அவனும் யாரையும் தேட போவதுமில்லை.
அவனையும் யாரும் தேடப்போவதுமில்லை. அவனின் மரணச் செய்து கொடுத்த தோழனே தவிர யாரையும் வந்தடைய போவதுமில்லை.வந்தடைந்தாலும்,யாரோ ஒருவனாக பரிதாபம் மட்டுமே படுவார்கள்.
அவனுக்காக அவன் எதையும் செய்ததில்லை. அவளுக்காக அவன் செய்தது எதுவும் அவருக்குத் தெரியப்போவதுமில்லை.அப்படித் தெரிந்தால்,அது அவளை விட அவனுக்குத் தான் வலிக்கும்.
நேற்றிரவு ஆர்னம் வர முன்பு,வாந்தி எடுத்து தலை சுற்றலுடன் தானே தரையைத் துடைக்கையில் அவனுக்கு புரிந்தது,இனி அவன் வாழப் போகும் வாழ்க்கையின் வலி.
முயன்று தன்னை தேற்றிக் கொண்டான்.யதார்த்த்தை ஏற்கப் பழகிக் கொண்டான்.அவளின் பின் அவனுக்கென்று யாரும் இல்லை என மனதில் பதிய வைத்துக் கொண்டான்.
மழை வலுக்க தொடங்கியது மெல்ல மெல்ல அவனின் நடை தளர்ந்தது.
கோயிலுக்கு பின்னிருக்கும் ஆள் அறவமற்ற வீதியில் நடந்தான்.நடந்து வந்து,எங்கு செல்வதென்று பார்த்திடாமல் பேரூந்து ஒன்றில் ஏறிக் கொண்டான்.
பயணமே எதற்கென்று தெரியாமல்,எங்கென்று புரியாமல் இருக்க,பாதைகளின் போக்கு தெரிந்தது என்னவாகிடுமாம்..?
இமைகளை சிமிட்டி கண்ணீரை அடக்கிக் கொண்டவன், பாக்கெட்டிலிருந்து தன் பர்ஸை எடுக்க, அவனின் தாயுமானவரினதும் அவளினதும் நிழல்.
அதைக் கண்டதும் மெல்லிய புன்னகை அவன் இதழில் தோன்றிற்று. அந்த புன்னகையின் அர்த்தம் என்னவென்று அவனிடம் தான் கேட்க வேண்டும்.
இனி, அவனின் வாழ்க்கை எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை. அதன் போக்கு என்னவென்று அவனுக்கு புரியவில்லை.
யார் வருவார்கள் யார் இருப்பார்கள் எதுவும் தெரியாது.அவன் தனி மரம்,அந்த உண்மை மட்டும் நெஞ்சை சுட்டது.
இனியும் ஒரு காதல்!
அவனால் நினைத்துப் பார்த்திட இயலாது.அவன் காதல்,எப்போதும் அது அவளுக்குத் தான்.அவளுக்கு மட்டுமே தான்.
அவள் வேறு வாழ்வை பார்த்துச் சென்று இருந்தாலும்,அவளுக்கான அவன் காதல் மாறப் போவதில்லை.ஆயுள் தீரும் வரை,அவனின் ஆயுள் ரேகை அவள் தான்.
அவள் காதல் அவனை ஆற்றியிருக்கும் தான்,அவளின் வாழ்வை இல்லாது செய்து விட்டு அந்த ஆறுதல் அவனுக்கு வேண்டாம்.அவளின் அக்கறை அவன் வாழ்வை மாற்றியிருக்கும் தான்.அவளுக்கு நிச்சயமில்லா வாழ்வை தந்து விட்டு,அந்த மாறுதல் அவனுக்கு வேண்டாம்.
விரல் கோர்ப்பது மட்டுமல்ல,விலகி நிற்பதும் காதல் தான்.
என்னென்னவோ ஆயிற்று.யாரையும் குறை கூற முடியாது. அவனின் விதி இப்படித்தான் என்று தனக்குத்தானே கூறியும் கொண்டான்.
மீளவும் ஒரு ஜென்மம் இருந்தால்,அவளுக்கு மகனாக தான் பிறக்க வேண்டும் என்கின்ற ஆசை.அவர் தாயுமானவர் அவனின் மகனாக பிறக்க வேண்டும் என்கின்ற பேராசை.
மரணத்தை நோக்கி அவன் பாதை தொடர, இனி அவனின் நிகழ் மொத்தமும் அவள் நினைவுகள் வசம்.
அந்த நினைவுகளே அவனுக்கு துணை. அந்த நினைவுகளே அவன் நிகழை உயிர்ப்பிக்கும்,அவனை வாழ வைக்கும். அவனை ஜீவிக்க செய்யும்.அவனின் புன்னகையில் வலியுடன் கலந்திருக்கும்.
மௌனமான காதல் அவனது.வார்த்தைகளால் உரைக்க முடியாது என்று தான் மௌனமாகவே அடங்கிப் போனது போலும்.
இனியும் அவன் காதல் காலம் முழுவதும் தேடும்,தொலைத்த அவளையும் தொலைக்காத அவனையும்.
அவள் வாழ்வில் அவனுக்கானே தேடலைப் போலவே,அவன் காதலும் கனவாகிப் போனது.
கனவே உனை வந்து சேர
நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்..
மரணம் நெருங்கிடும் போதும்,
உன் நினைவினில் வாழ்ந்திடுவேனே..
மறு ஜென்மம் எடுத்தால் கூட,
உயிரே உன் கரம் பிடிப்பேனே..
உன் கால் தடம் நான் தொடர்வேனே,
அன்பே...அன்பே...
சிறிது நேரத்தின் பின்னர் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.தூக்கம் விழித்து கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்து வந்த ஆர்னவ்வின் கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டான்,சத்யா.
அறை வாங்கியவனுக்கு அதன் பின்னரே,நிலமை உரைத்திட,படபக்கும் நெஞ்சுடன் பையனின் அறைக் கதவை திறக்க,அதுவும் திறந்து கொண்டது.
அறையில் அவன் இல்லை.நொருங்கி விட்டனர்,இருவரும்.
கீழே காகிதமொன்று விழுந்திருக்க,அதை எடுக்க முயல்கையில் கட்டிலின் கீழே இருந்தது,அவனின் நாட்குறிப்பு.
பேனையுடன் இருந்த பக்கத்தை புரட்டினான்.என்றோ,அவன் எழுதிய கவிதை.அவளுக்கு சென்று சேர்ந்த மாயம் தெரியவில்லை.இறுதி வரி மட்டும்,புதிய மையுடன் மின்னியது.
"அதிகாரத்தின் அர்த்தங்கள் எல்லாம் அவளை அகராதியாக்க..
ஜீவனின் தேடல் முழுவதும் அவளில் மோட்சம் கேட்க...அவள் மேல் நானும் காதல் கொண்டேன்! அவளில் நானும் காதல் கண்டேன்!"
அத்தியாயங்கள் முற்றுப் பெற்றாலும்,காலம் முழுவதும் அவன் காதலின் தேடல் தீராது தொடரும்.
காதலொன்று கண்டேன்,முற்றும்.

Last edited: