வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கிறுக்கன் - கதைதிரி

Status
Not open for further replies.
காதல் -4
"எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா.."


என தனது காதில் இருந்த ஜிமிக்கியை ஆட்டிக்கொண்டு ஃபோனை ரிங் லைட் ஸ்டாண்டில் செட் செய்து டிக் டொக் செய்து கொண்டிருந்தார் மேகலா.

அவரது கெட்ட நேரமோ என்னவோ அன்றைக்கென்று பார்த்து தனது நண்பனை அழைத்து கொண்டு முன்கூட்டியே வீட்டிற்கு கிளம்பி இருந்தான் சஞ்சய்.

அவனது கார் வந்தது கூட தெரியாமல் சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டு தன் கடமையே கண்ணாகவிருந்தார் மேகலா.

"நான்ஸென்ஸ்! இங்க யாரு இவ்வளவு சத்தமா பாட்டு போட்டு இருக்குறது?" என கோபமாக வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டு வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்தான் சஞ்சய்.

"இண்டர்ஸ்டிங்!" என கெளஷிக்கும் அவனை பின்தொடர்ந்தான்.

அங்கு சுற்றுசூழல் மறந்து டிக் டொக் செய்து கொண்டுடிந்த மேகலாவை பார்த்த சஞ்சய் கோபத்தின் உச்சிக்கே சென்று,

"இவங்கள" என பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே செல்ல எத்தனிக்க, அவனது கையை பிடித்து தடுத்தான் கௌஷிக்.

"என்னடா" என கோவமாக புருவம் சுருக்கி கேட்டான் சஞ்சய்.

"கொஞ்சம் இரு மச்சான்... நான் மொத உள்ள போறேன்.. நீ மெதுவா வா" என அவனது முறைப்பை பொருட்படுத்தாமல் அந்த பாடலுக்கு ஏத்தாற்போல நடனமாடிக்கொண்டே உள்ளே சென்றான் கௌஷிக்.

"ஹே ஜிமிக்கி கம்மல்... ஹே ஹே ஜிமிக்கி கம்மல்.." என பாடியபடி அவரது பின்னால் வந்து நின்றான்.

ஃபோன் வழியாக அவனை பார்த்தவர் "எவே(ன்) அவே(ன்)" என எரிச்சலுடன் திரும்பினார்.

"டேய் கெளஷிக்.....! நீயாடா? நா கூட வேற யாரோன்னு நினைச்சி, ஒரு நிமிஷம் டென்ஷன் ஆகிட்டேன்.." என தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டார்.

"எப்படா வந்த? ஆபீஸ் போய்ட்டு சஞ்சய்யை பார்த்துட்டு வாரீயா? இல்லனா நேரா வீட்டுக்கு தான் வாரீயா?" என மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கினார்.

அவரது கேள்விகளை அசட்டையாக உதறி தள்ளி விட்டு,

"என்ன ஆண்ட்டி.... பாட்டி ஆக வேண்டிய வயசுல பாட்டு போட்டு டிக் டொக் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?" என்றான் நக்கல் சிரிப்புடன்.

"யாரு டா பாட்டி?" என அடிக்க கை ஓங்கி விட்டு உடனே பதறியவராக,

"சஞ்சய் உன்கூட வந்து இருக்கானா?" என பயத்துடன் கேட்டார்.

"இல்லை" என்ன தலை ஆட்டினான் அவரது பயத்தை ரசித்தபடி.

'அவன் கூட தான் வந்தேன்னு.... இப்ப தெரிய வேணாம்.. என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்..' என மனதுக்குள் சிரித்துக்கொண்டான் .

"யப்பாடா... அப்ப அந்த ஹிட்லர் ரகுவரன் வரலயா? இப்ப தான்டா நிம்மதியா இருக்கு.." என பெருமூச்சு விட்டார் அந்த ஆசுவாசத்துக்கு அற்ப ஆயுள் என்பது தெரியாமல்.

"யாரு ஆண்ட்டி அந்த ஹிட்லர் ரகுவரன்?" என அவனுக்கு தெரியாதது போல் சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டான்.

"வேற யாரு?... எல்லாம் நான் பெத்த தறுதல தான்" என்றார் மேகலா.

"ஏது தறுதலயா" என அதிர்ச்சியுடன் அவர் அறியாமல் வாசலைப் பார்த்தான் கெளஷிக்.

வாசலில் மறைந்து நின்ற சஞ்சய் "நான் இங்க இருக்குறத சொன்ன கொன்னுருவேன்" என கெளஷிக்கிற்கு மெசேஜ் அனுப்பினான்.

தனது போனுக்கு வந்த மெசேஜை பார்த்த கெளஷிக் "இன்னைக்கு ஆண்ட்டிக்கு நேரம் சரியில்ல" என நினைத்து பெருமூச்சு விட்டான்.


அவனது முகமாற்றத்தை கவனிக்காத மேகலா

"ஆமாம்டா... அவன் எல்லாம் புள்ளையா? கொஞ்சம் கூட பெத்தவன்னு மரியாதை இல்ல.... சரியான சாடிஸ்ட்... ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல... எனக்கு வர்ற கோவத்துக்கு அவனோட முகத்த மூடி ரூமுக்குள்ள தள்ளி நாலு சாத்து சாத்தனும் போல இருக்குதுடா"

"ஏது நாலு சாத்து சாத்தனுமா ?"என்றான் அதிர்ச்சியுடன்.

"என்னடா எல்லாத்துக்கும் ஷாக் குடுத்துகிட்டு இருக்க?" என மீண்டும் தொடர்ந்தார்.

அவரது முகத்தை பாவமாக பார்த்தான் கெளஷிக்.

"கெளஷிக்..... என் செல்லம்... ஆண்ட்டிக்கு ஒரு ஹெல்ப் பண்ணுரியா?" என கேட்டார் பதவிசாக.

"என்ன ஆண்ட்டி?" என்றான் பீதியுடன் இவர் தன் கெட்ட நேரத்தை என்னுடன் பங்கு போட வருகிறாரே என்ற எண்ணத்துடன்.

"ஒரு நாள் நீ அவனோட முகத்த மூடி... கைய கட்டி... என்னோட ரூம்க்கு கொண்டு வா.... நான் அவன ஆசை தீர நாலு சாத்து சாத்துறேன்" என்றார் கண்களில் ஆசை மின்ன,

'ஆத்தி இந்த அம்மா என்ன உயிரோட புதைக்காம விடாது போல இருக்கே' என மனதுக்குள் அலறினான்.

"என்ன டா யோசிக்குற இந்த ஆண்ட்டியோட ஆசைய நிறைவேத்துவியா? மாட்டியா?" என கேட்டார் சோகமாக.

"நா வேண்ணா நிறைவேத்தவா?.... என பின்னால் இருந்து கேட்ட அழுத்தமான குரலில்,

திடுக்கிட்டு திரும்பி பார்த்த மேகலா அங்கு கண்கள் சிவக்க நின்ற சஞ்சயை கண்டதும் ஒரு கணம்
"ஐயையோ !!!" வென வெலவெலத்து போனார்.

"எங்க உங்க திருச்சாத்த இப்போ ஆரம்பிங்க பாக்கலாம்" என்றான் நக்கலாக.

அவர் அப்பாவி போல் பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவனை பார்க்க,

"ஏன்?... என்னோட முகத்துல ஜிமிக்கி கம்மல் பாட்டு ஓடிட்டு இருக்கா என்ன?.... என கேட்டான் அதே நக்கல் தோரணையில்.

அவன் கேட்ட விதத்தில் பக்கென சிரித்தான் கெளஷிக்.

"அட பாதகத்தா" என்ற முணுமுணுப்புடன் ப்ரூடஸ் நீயுமா? என்ற ரீதியில் மேகலா கெளஷிக்கைப் பார்த்து வைக்க, சஞ்சயோ அவனை கண்களில் அனல் தெறிக்க பார்த்தான்.


'பார்வையாலேயே பஸ்பம் ஆக்கிடுவான் போலயேடா' என வாயை கப் என மூடிக்கொண்டான் கெளஷிக்.

மேகலாவை சொடக்கிட்டு அழைத்த சஞ்சய் "அப்புறம் என்ன சொன்னீங்க" என தலையை ஆள்காட்டி விரலால் தட்டி யோசித்தான்.

'பிள்ளையாரப்பா....உனக்கு நூறு தேங்காய் வேணும்னாலும் உடைக்குறேன்..... இவனுக்கு எதுவும் ஞாபகத்துக்கு வரக் கூடாது' என அவசரமாக பிள்ளையாரிடம் டீலிங்க் பேசினார் மேகலா.

"ஆங்.... 'தறுதல'.... ரைட்... "என்றான் விடாக்கண்டனாக.

'சொதப்பிட்டியே பிள்ளையாரப்பா..... உனக்கு அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு அல்வாதான் பாத்துக்க.....'என பிள்ளையாருக்கும் நாமம் சாற்றினாள்.

"ஃபைன்..... அத விடுங்க அம்மாவாச்சேன்னு மன்னிச்சி விடுறேன்" என்க,

"யப்பா..தப்பிச்சோம்...." என அவர் நினைத்துக்கொண்டு பிள்ளையாருக்கு கொடுத்த அல்வாவை வாபஸ் வாங்க,

"உங்க ஃபோன கொஞ்சம் இப்படி தாங்க" என குண்டை தூக்கிப்போட்டான்.

"வச்சான் பாரு செக்கு" என நினைத்தான் கெளஷிக்.

"உன்கிட்ட தான் ஃபோன் இருக்கே.... என்னோட ஃபோன் எதுக்குப்பா?" என பரிதாபமாக கேட்டார் .

"குடுங்க சொல்றேன்..... "என்றான் அழுத்தமான குரலில்.

அவனது அழுத்ததில் 'இப்போ கொடுக்காட்டி இவன் இன்னும் எகிறுவானே' என மேகலா வேகமாக தனது ஃபோனை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார்.

கை நீட்டி ஃபோனைப் பறித்து எடுத்தவனோ அதில் உள்ள வீடியோஸ் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொண்டு தன்னறைக்கு செல்லத் தயாரானான்.

"என்னோட ஃபோன்" என அவனை தடுத்து நிறுத்த பார்த்த மேகலாவிடம் ,

"உங்களுக்கு உங்க ஃபோன் வேணுமா?... இல்லாட்டி உங்க ஃபோன் பத்திரமா இருக்கணுமா? என கேட்டான் அலட்சியமாக.

"என்னடா சொல்லுற?.." என குழப்பத்துடன் கேட்டார் மேகலா.

"இப்ப உங்களுக்கு உங்க ஃபோன் வேணும்னா.... அது சுக்கு நூறா தான் கிடைக்கும்..... இப்ப புரியுதா? ம்ம்ம்.." என நக்கல் குரலில் கேட்டான்.

கப்பென ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு மறு கரத்தால் கிளம்பு கிளம்பு என சைகை காட்டினார் மேகலா.

"அது.."என ஒற்றை விரலால் காட்டி விட்டு விறு விறு வென தனது அறைக்கு சென்று விட்டான்.

அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்த்த கெளஷிக்கோ,

"ஆர் யு ஓகே.... ஆண்ட்டி?" என நக்கல் சிரிப்புடன் கேட்டான்.

"உன்ன.." என அவனை அடிக்க கை ஓங்கியவரிடம் லாவகமாக தப்பித்து சஞ்சய் அறையை நோக்கி ஓடினான்.

"இன்னைக்கு தப்பிச்சிட்டடா மகனே.... ஆனா ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் உனக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்" என்று அவன் போன திசையை நோக்கி பழிப்பு காட்டினார்.

தன் நண்பர்களை சந்தித்து விட்டு மாலை வீடு திரும்பிய சந்திரகுமார் கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக சோபாவில் அமர்ந்து இருந்த மேகலாவை நோக்கி ,

"என்னம்மா நாம கப்பல் கம்பனி ஒன்னும் வச்சிருக்கலியே?" என்றார்.

"என்ன?" என்றார் மேகலா பேந்த பேந்த விழித்தபடி,

"இல்ல கப்பல் கவுந்த மாதிரி உக்காந்து இருக்கியே" என்றார்.

'இப்படி பட்ட புள்ளைய பெத்தா வேற எப்படி உக்கார்ரதாம்' என மனதுக்குள் நினைத்தவர் வெளியே சொல்லவில்லை .

"என்னடி நான் கேட்டுகிட்டே இருக்கேன், செவிடு மாதிரி உக்காந்து இருக்க?" என அதட்டினார்.

அவரது அதட்டலில் நடப்புக்கு வந்த மேகலா,

"என்ன சொன்னீங்க?" என கேட்டார்

"ஆஆஆ..... சுரக்காய்க்கு உப்பு இல்லன்னு சொன்னேன்" என்றார் துடுக்காக.

"அதுக்கு நான் என்ன பண்ண? வேண்ணா உப்பு கொஞ்சம் போடவா?" என கேட்டார் மேகலா அதே துடுக்குடன் .

"என்ன ஆச்சின்னு சொல்லி தொலடி.." என்றார் எரிச்சலுடன்.

"சொன்னா மட்டும் என்ன செஞ்சி கிழிக்க போறீங்க?" என்று நினைத்தபடி பகல் நடந்ததை சோகத்துடன் கூறினார்.

"சபாஷ் உனக்கு நல்லா தேவ... நான் செய்ய வேண்டியத அவன் செஞ்சி இருக்கான்.... எப்ப பாரு அந்த ஃபோன வச்சிகிட்டு, பாட்டு போட்டு பைத்தியம் மாதிரி தனியா ஆடிக்கிட்டு இருப்ப, நான் கூட அடிக்கடி நினைப்பேன்... நீ சாமி வந்து தான் ஆடுறன்னு...அப்புறம் நீ சினிமா பாட்டுக்கு ஆடுறனு தெரிஞ்ச பிறகு, நீ சாமி வந்து ஆடல.... பைத்தியம் புடிச்சி ஆடுறனு முடிவு பண்ணேன்."

என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க "எதே" என பற்களை கடித்துக் கொண்டிருந்தார் மேகலா.

"இந்த பைத்தியத்த தெளிய வைக்க நான் எவ்வலாவோ ட்ரை பண்ணேன்.....என்னால முடியல... ஆனா உன் பையன் வந்து ஆறே மாசத்துல தெளிய வச்சிட்டான்...இனி உன் தொல்லையில் இருந்து எனக்கு விடுதலை.." என நீளமாக மகனுக்கு பாராட்டையும் மேகலாவிற்கு பைத்தியக்காரி என்ற பட்டத்தையும் வழங்கினார் சந்திரகுமார்.

மேகலாவோ "நான் ஒன்னும் பைத்தியம் புடிச்சி ஆடல.... டிக் டொக் செஞ்சேன்"என்றார் கோபத்துடன்.

"அது என்ன கருமமோ.... இனி செய்ய மாட்ட இல்ல... அந்த மட்டும் நா தப்பிச்சேன்" என முடிந்த அளவு அவரை வெறுப்பேற்றிவிட்டு மீண்டும் வெளியே சென்று விட்டார்.

"இந்த மனுஷன் கேட்டாருனு இவர நம்பி இவர்கிட்ட சொன்னேன் பாரு..... என்ன..... நானே செருப்பால அடிச்சிக்கணும்" என கடுப்புடன் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று முடங்கினார் மேகலா.

ஆனால், அவரது கடுப்பிற்கு காரணமான மூவரில் இருவரோ அங்கு பஃப்பில் உல்லாச கடலின் மீன்களாய் நீந்திக் கொண்டிருக்க,


இந்த திமிங்கல மீனின் வலையில் வீழ்ந்திடுமோ அந்த சிறு நிலவு?????
 
Last edited:
Status
Not open for further replies.
Top