Keerthana letchumanar
Moderator
காதல்-5
அடுத்த நாள் காலை அறை முழுதும் வெளிச்சம் பரவி இருக்க முதல் நாள் இரவு உல்லாச கடலில் மூழ்கியதன் பலனாக விடிந்தும் எழாமல் கட்டிலில் குப்புறப் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான் சஞ்சய்.
"டேய் சஞ்சய் எழும்புடா.." என கதவை தட்டினான் கெளஷிக்.
கதவு தட்டும் சத்ததில் கண்களை கசக்கிகொண்டு வேகமாக எழுந்து சென்று கதவை திறந்த சஞ்சய் புருவம் சுருக்கி "என்னடா" என கேட்டான்.
"டைம பாரு மச்சான்..." என்றான் கௌஷிக்.
"ச்சு... ஏன்டா டேய்... உனக்கெல்லாம் டைம் கூட பார்க்க தெரியாதா..? என்னடா உம் பிரச்சன?" என தன் இடது கையை சுவரில் ஊன்றி வலது கையால் தன் கேசத்தை விரலால் அளைந்த படி கேட்டான் சஞ்சய்.
'இவன் ஒருத்தன் எத சொன்னாலும் எடக்கு மொடக்கா பேசி வைப்பான்' என எரிச்சலுடன் நினைத்தான் கெளஷிக்.
"அது இல்லடா மச்சான்... இப்பவே டைம் டென் ஆகிருச்சி நீ இன்னும் எழும்பாம இருக்க...... அதான் எழுப்பினேன்..."என்றான்.
"ஸோ வாட்?" என அலட்சியமாக கேட்டவனை விழி விரித்து பார்த்தான் கெளஷிக் .
"என்னடா என்னோட முகத்துல பிட்டு படமா ஓடுது.." என கேட்டான் நக்கல் தோரணையில்.
"ஆத்தி இன்னைக்கு நான் தான் பைட்டா" என பதறியவன் ,
"இல்ல மச்சான்.....நீ மெதுவாவே வா" என அங்கிருந்து அகன்றான்.
'யப்பா சாமி..... இதுக்கு மேல நீ அங்க நின்னு இருந்த... என்ன எல்லாம் கேட்டு இருப்பானோ?' என சலிப்பாக நினைத்தபடி சோபாவில் அமர்ந்தான் கெளஷிக்
"பல்ப்பு வாங்கிட்ட மச்சான்... பல்பு வாங்கிட்ட" என நக்கலாக பாடியபடி காப்பியை நீட்டினார் மேகலா.
"தாங்க்ஸ்" வாய் முணுமுணுத்தாலும் "நீங்க வேற ஆன்ட்டி" என முறைத்தபடி காப்பியை வாங்கி பருகினான் கெளஷிக்.
"குட்.....மார்னிங்......யங்மேன்"என அவன் அருகே அமர்ந்தார் சந்திரகுமார்.
"குட்மார்னிங்....அங்கிள்" என அவர் தோள்களில் கை போட்டு அணைத்தான் கெளஷிக்.
"என்ன நேத்து நைட் டின்னர்க்கு கூட இரண்டு பேரையும் பார்க்கல?" என அவன் வாயை பிடுங்கினார் சந்திரகுமார்.
"ஜஸ்ட் சும்மா பஃப்க்கு போய்ட்டு இரண்டு பெக்கு போட்டுட்டு வர இரண்டு மணி ஆகிருச்சி.." என கண்களை சிமிட்டியபடி சொன்னான்.
அவரும் தலையை ஆட்டியப்படி சிரிக்க,
கேட்டு கொண்டு இருந்த மேகலா 'விளங்கிடும்.. இதுல நாம பைத்தியமாம்' என எரிச்சலுடன் நினைத்தார்.
அவரது முகத்தில் இருந்த எரிச்சல் உணர்வை கண்டவன் அவரை வம்பிழுக்கும் பொருட்டு,
"அப்புறம் அங்கிள்..... இவங்கள எப்படி சமாளிக்கிறீங்க?" என மேகலாவை சுட்டிக்காட்டி கெளஷிக் கேட்க,
'எல்லாம் விதி' என்பது போல் தன் நெற்றியில் பெருவிரலால் இடமிருந்து வலமாக கோடிழுத்தார் அவளது கணவர்.
இருவரையும் பார்த்து முறைத்தபடி சமயலறையை நோக்கி சென்றார் மேகலா.
அவர் சென்றதும் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.
தனது காலைக் கடனை முடித்துக்கொண்டு கீழே செல்ல நினைத்த சஞ்சய், போனை கையில் எடுக்க, அதன் திரை புது எண்ணில் இருந்து பத்து மிஸ்டு கால் என்றது.
‘யாராய் இருக்கும்’ என யோசித்தவன் அந்த எண்ணிற்க்கு ‘அழைக்கலாமா? வேண்டாமா?’ என சிந்திக்கையில் எதிர் பாராமல் அவன் விரல் பட்டு கால் சென்று விட, ஒரே ரிங்கில் எடுத்தவளிடம்,
“ஹலோ......ஹூஸ் திஸ்?”என கம்பீரமான குரலில் கேட்டான் சஞ்சய்.
அவனது குரலின் கம்பீரத்தில் மறுபுறம் ஒரு கணம் அமைதியானவள் மதிநிலா.
“ஹலோ.......லைன்ல இருக்கீங்களா??” என மறுமுனையில் அதட்டினான் சஞ்சய், ‘கால் அட்டென்ட் பண்ணா பேச தெரியாத மக்குக எல்லாம் எதுக்கு ஃபோன் யூஸ் பண்ணுதுங்க’ என மனதில் திட்டியவாறே.
அவனது அதட்டலில் நடப்புக்கு வந்தவள் “சார்.... நான் மதிநிலா” என்றாள்.
“ஓ....நீயா ஃபோன பிக் பண்ணிட்டு கனவு கண்டுகிட்டு இருக்கியா என்ன ?” என கேட்டான் கடுப்பாக.
“சாரி....சார் இங்க கவரேஜ் ப்ராப்ளம் போல.... நீங்க பேசுனது கேக்கல” என சமாளித்தாள்.
“ஓகே....ஃபைன் எதுக்கு இத்தன கால் பண்ண?” என கேட்டான் கறாராக.
“சார்......இன்னும் நீங்க ஆபீஸ் வரல....இன்னைக்கான ஷெட்யூல்ஸ் எல்லாம் உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன்....இன்னைக்கு உங்களுக்கு நிறய அப்பாய்ன்மெண்ட்ஸ் இருக்கு” என்றாள் மூச்சுவிடாமல்.
“இதுக்கு தான் கால் பண்ணியா.. நேத்தே சொன்னேன் இல்ல வெட்டியா கால் பண்ணாதனு....அப்புறம் இன்னைக்கு இருக்க அப்பாயின்மெண்ட்ஸ் எல்லாம் கேன்செல் பண்ணிடு” என்றான் சாதாரணமாக.
“சார்.......”என இழுத்தாள் மதிநிலா.
“டூ வாட் ஐ சே” என கத்திவிட்டு அவளது பதிலை எதிர்பாராமல் ஃபோனை வைத்துவிட்டான்.
அவனை முறைப்பது போல் தனது ஃபோனை சில வினாடிகள் முறைத்து பார்த்த மதிநிலா, “சரியான.......ம.....” என்று எதையோ வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு, ‘வெட்டியாவாடா கால் பண்ணினேன்?.....எனக்கு வேற வேலை இல்லை பாரு வெட்டியா கால் பண்ண.....என் டியூட்டியே இது தானேடா..... என்ன சொல்ல வரேன்னு கூட கேக்க முடியாத அளவுக்கு நீங்கல்லாம் என்னடா பிசினஸ் பண்றீங்க?..” என அவனை திட்டி தீர்த்தாள்.
எஏ......அறிவுகெட்ட......நிலா.... இவனோட வாய்ஸ்ல எல்லாம் கேட்டுட்டு மகுடியில மயங்கின பாம்பாட்டம் நிக்கிற....பைத்தியகாரி....பைத்தியகாரி......’என தன்னையும் திட்டிக்கொண்டாள்.
‘சில அப்பாயின்மெண்ட்ஸ் இவன கேட்டுட்டு தானே பிக்ஸ் பண்ணினோம்.... பிறகென்ன .... இதவிட அப்படி என்ன முக்கியமான வேலை.. அதையாவது சொல்லி தொலைத்திருக்கலாமே...... இப்படி புலம்ப தேவையிராது.. இப்படி கிளிய வளர்த்து குரங்கு கையில கொடுத்திட்டீங்களே சார்……’ என சந்திரகுமாரிடம் மானசீகமாக புலம்பினாள்.
சோபாவில் கால் மேல கால் போட்டு டிவி பார்த்து கொண்டு இருந்த கெளஷிக் அருகே வந்து அமர்ந்தான் சஞ்சய்.
அவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்த கௌஷிக் “இன்னைக்கு என்ன பிளான் மச்சான்..... ஆபீஸ் போறமா?” என கேட்டான்
“இப்ப தான் அப்பாயின்மெண்ட்ஸ் எல்லாம் கேன்ஸல் பண்ண சொன்னேன்” என்றான் கூலாக.
“அப்பாயின்மெண்ட்ஸ் எல்லாம் கான்செல் பண்ணிட்டு, சார் இங்கிருந்து என்ன செய்ய போறாராம்?”...... என பின்னால் இருந்து கேட்ட குரலில், அலட்சியமாக திரும்பி பார்த்த சஞ்சய் அங்கு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நின்ற சந்திரகுமாரை பார்த்து கேலியாக “ப்ச்..”உதட்டை பிதுக்கினான்.
“என்ன கேள்வி கேட்டா.... சார் பதில் சொல்ல மாட்டாரோ” என நக்கலாக கெளஷிக்கை பார்த்து கேட்டார்.
“என்ன பார்த்து கேட்டாதான... நான் பதில் சொல்லுறதுக்கு ... நீங்க அவன பார்த்து கேட்டா அவன் தானே பதில் சொல்லணும்” என்றான் அவன் அவருக்கு மிஞ்சிய நக்கல் குரலில்.
‘இப்ப அப்பாவும் புள்ளையும் என்ன வச்சி ஏன் ஃபுட்பால் ஆடுறீங்க.... எஸ்கேப் ஆகிருடா கௌஷிக்’ என நினைத்தவன்,
“கம் ஒன்... சஞ்சய்.. வில் கோ டூ ஆபீஸ்” என அவனது முதுகை பிடித்து தள்ளி இழுத்து சென்றான்.
அவரை முறைத்தபடி அவனுடன் சென்றான் சஞ்சய்.
கெளஷிக்கை விலக்கி தள்ளிய சஞ்சய் அவனை பார்த்து முறைத்தான் .
“ரிலாக்ஸ் மச்சான்.... ஒரு ஒன் ஹவர் ஆபீஸ்ல இருந்துட்டு நாம எங்கயாவது அவுட்டிங் போவோம்.....ஓகே..” என்றான் அவனை சமாதானம் செய்யும் பொருட்டு.
அவனே நேரடியாக டீல் செய்ய வேண்டியதை தவிர்த்து மற்றவற்றை சம்மந்தபட்ட துறை தலைவர்களிடம் சில சாக்குபோக்குகளை சொல்லி ஒப்படைத்து விட்டு, மற்றவர்களிடம் மன்னிப்பை வேண்டி வேறு நாட்களில் நேரம் ஒதுக்கிவிட்டு நிலா தலை நிமிர்வதற்கும், வேக நடையுடன் கௌஷிக் பின்தொடர சஞ்சய் அந்த தளத்தில் பிரவேசிப்பதற்கும் சரியாக இருந்தது.
அவன் கேபின் உள்ளே நுழைவதை பார்த்த மதி நிலாவின் நிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை. ‘சீ இவன் என்ன மனிதன் இவன் சற்று முன் தான் வர முடியாது போடி என்பதுபோல் பேசினான்.. இப்போதானால் இங்கே காட்சி கொடுக்கிறான்.....இவனை நம்பி இவ்வளவு நேரம் இங்கு இருப்பவர்களிடம் ஏதோவொரு காரணத்தை சொல்லி வைத்தால் நேரே வந்து நிற்கிறான்.. ஐயோ ஆண்டவா என்ன காப்பாத்து..’ என்று உண்மையிலேயே கைகளை கூப்பி கும்பிட்டுக் கொண்டிருக்க இன்டர்கொம் அழைத்தது.
காதுக்கு கொடுத்தவள் “குட் ஆஃப்டர் நூன் சார்” என்று விட்டு அடுத்த சில நிமிடங்களில் அவன் முன்னே வந்து நின்றாள் நிலா.
“குட் ஆஃப்டர் நூன் நிலா” என தனது அனைத்து பல்லையும் காட்டி சிரித்தபடி சொன்னது வேறு யாரும் இல்லை கெளஷிக்.
அவனை விசித்திரமாக பார்த்தபடி “குட் ஆஃப்டர் நூன் சார்” என்றாள்.
“க்க்கும்..” என தொண்டையை செருமிய சஞ்சய்,
“நிலா நான் ஜஸ்ட் ஒன் ஹவர் தான் ஆபீஸ்ல இருப்பேன்.... அதுக்குள்ள ஏதாவது அப்டேட் இருந்தா சொல்லு”என்றான்.
“நான் மார்னிங் உங்களுக்கு மெயில் பண்ண ஷெட்யூல் தான் சார்.....பட்....நீங்க சொன்னதால சிலத கேன்ஸல் பண்ணிட்டேன்...அண்ட் மார்னிங் வொர்க்ஸ் சிலத அந்தந்த டிபார்ட்மெண்ட்ஸ் பொறுப்பெடுத்துகிட்டாங்க... இப்போ சில ஃபைல்ஸ் இருக்கு.. அண்ட் CFO…CLO..கூட ஒரு மீட்டிங் இருக்கு ..” என்றாள்.
“தட்ஸ் குட்.... நவ் யு மே லீவ்” என்றான் ‘இவ இவ்வளவு புத்திசாலியா இருந்தா நம்ம பிளானுக்கு ஒத்து வராதே’ என நினைத்தபடி.
“ஓகே சார் ..”என அவளும் வெளியேறிவிட்டாள்.
“மச்சான் இப்ப என்ன பிளான்?” என கேட்டான் கெளஷிக்.
“வெயிட்.... ஐ வில் டெல் யு” என இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
“ம்ம்ம்ம்ம்..”என அவன் தோள்களை குலுக்கிக்கொண்டே “மச்சான் ஒரு மேங்கோ ஜூஸ் சொல்லேன்”என்றான்.
இன்டர்கொம்மின் பட்டனை அழுத்தி “நிலா என்னோட கேபினுக்கு ஒரு மேங்கோ ஜூஸ் கொண்டு வா” என்றான்.
ஜூஸுடன் உள்ளே நுழைந்த நிலா யாரிடம் கொடுப்பதென விழிக்க,
“மிஸ் நிலா......என்ன முழிக்கிறீங்க......ஜூஸ் எனக்கு தான்” என்றான் கெளஷிக் புன்னகையுடன்.
அவளும் சரியென ஜூஸை அவனிடம் நீட்ட, அவன் சாய்ந்து கையை மட்டும் நீட்டி எடுதத்தில் தவறுதலாக ஜூஸ் மொத்தமும் டேபிள் மேலே சரிந்தது .
அதில் அவளுடைய தவறு எதுவும் இல்லாத போதும், அவள் மன்னிப்பு வேண்டுவதற்கு வாயை திறந்த போதே,
“ஸ்டுப்பிட்” என்ற சீறல் கேட்க, கப்பென தன் வாயை மூடிக்கொண்டாள்.
இருக்கையில் இருந்து கோபமாக எழுந்த சஞ்சய் “வாட்ஸ் தி ஹெல்.....உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லயா.... கண்ண என்ன பின்னாலயா வச்சி இருக்க... ஸ்டுப்பிட்” என தாறுமாறாக நிலாவை திட்டினான்.
உண்மையிலே தவறு அவள் பேரில் இல்லை என்பதையும் அவள் கவனமாகவே ஜூஸை நீட்ட, தான் அலட்சியமாக ஜூஸை எடுக்க போய் அது தவறுதலாக கொட்டியது என்பதையும் அறிந்திருந்த கெளஷிக், நிலாவின் கலங்கிய கண்களை கண்டு,
“கூல் மச்சான்..... இட்ஸ் மை மிஸ்டேக்...... அவங்க கவனமா தான் குடுத்தாங்க.....நான் தான் கேர்லெஸ்சா வாங்குனேன்” என்று அவனை சமாதானம் செய்ய போக,
அவனை முறைத்து பார்த்த சஞ்சய்,
“இன்னும் டென் மினிட்ஸ்ல இந்த இடம் கிளீன் ஆகணும்”என கட்டளையிட்டான்.
கலங்கிய கண்களை ஒற்றை விரலால் துடைத்துக்கொண்டே வெளியேறினாள் மதி நிலா.
“ஏன்..மச்சான்..இப்படி திட்டுன....... பாவம் கண் எல்லாம் கலங்கிருச்சி..” என்றான் ஆதங்கத்துடன்.
“மைண்ட் யுவர் பிசினஸ்” என்றான் சற்றும் குறையாத கோபத்துடன்.
அவனது அழுத்தத்தில் வாயை மூடிக்கொண்டான் கெளஷிக் .
உள்ளே வந்த நிலா யாருடய முகத்தையும் பார்க்காமல் விறு விறுவென அவளே அனைத்தயும் சுத்தம் செய்துவிட்டு வெளியே சென்று விட்டாள்.
அவளது அழுகையால் சிவந்த முகத்தை பார்த்த கெளஷிக்கிற்கோ குற்ற உணர்வு வாட்டியது.
தனது இருக்கைக்கு வந்த நிலாவிற்கு கோபம் ஒருபுறம், தன் இயலாமை குறித்த கழிவிரக்கம் ஒருபுறமும் சேர்ந்து கொள்ள அவளது கட்டுபாட்டையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
அவளிடம் வேறுபாட்டை உணர்ந்து அமிர்தா அருகில் வர, தன்னருகில் அசைவை உணர்ந்து, வேகமாக கண்களை துடைத்துக்கொண்டு, நிமிர்ந்து பார்த்த நிலா அவள் எதிரே நின்ற அமிர்தாவை பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்தாள் .
“என்னடி.....ஆச்சு?....அவன் திட்டினானா?...”.என்றாள் அவன் பாஸ் என்பதையும் மறந்து ஒருமையில். அவளது கேள்வியில் மீண்டும் நிலாவின் கண்களில் கண்ணீர் வழிய தொடங்க,
அவள் அருகே வந்து அமர்ந்த அமிர்தா “சொல்லு.... ஏன் அழுற?” என கேட்டாள் ஆதரவாக அவள் தோளில் கை வைத்தபடி.
நடந்ததை அறிந்து கொண்ட பின் “பாரு நிலா.... இவனுக்கு கோபம் வரும்கிறது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தானே.. மற்ற எல்லாரையும் விட இவன் கிட்ட ஏச்சு வாங்குறதுக்கான வாய்ப்பு உனக்குதான் ஜாஸ்திங்கிறதும் நாம எதிர்பார்த்தது தானே..நடந்ததுல தப்பு உன் பேர்ல இல்லனா அந்த திட்டும் உனக்கானது இல்லனு அத கடந்து வர பார்.. நிலா இது தொடக்கம் தான்.. இன்னும் ரொம்ப தூரம் போகணும்.. இப்போவே கால் வலிக்குதுணு இங்கயே நின்னுட்டா அப்புறம் வாழ்க்கையில எப்படி முன்னேர்றது? ம்ம்ம்..”என்று ஒரு குட்டி பிரசங்கமே நடத்தினாள் அமிர்தா.
“சந்திரகுமார் சார் எவ்வளவு நல்லவர்......என்ன அவரோட பொண்ணு மாதிரி தான் பார்த்தாரு..... அவருக்கு போய் இப்படி ஒரு பையன்..” என அழுகை நின்று ஆதங்கமாக பேசினாள் மதி நிலா.
“நீ பேசாம சந்திரகுமார் சார் கிட்ட இன்னைக்கு நடந்தத சொல்லிப் பாரேன்” என்றாள் அமிர்தா.
“வேணாம்டி..... அவரே கம்பெனிய அவரோட பையன் கிட்ட ஒப்படைச்சிட்டு....இப்ப தான் ரிலாக்ஸ்சா இருக்காரு..... அவர டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்....” என்றாள் யோசனையுடன்.
“அதுக்கில்லடி.... இந்த ரெண்டு வருஷத்துல M.D. போஸ்ட்டுன்னா என்ன.... அது வெறும் சீட் மட்டுமில்ல எவ்வளவு கஷ்டமான முழு நேர வேலைங்கறது நமக்கே புரியுது..... இவரு என்னன்னா நினைச்சா வரதும், நினைச்சா போறதுமா இருக்காரே.. அடுத்த போர்ட் மீட்டிங்ல என்ன புரோகிரஸ்ஸ காட்டுவாராம்?.... அப்புறம் சந்திரகுமார் சார் எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும்?.....அத விடு கம்பனி திவாலானா நம்ம நிலைமை என்னாகும்?..” என்று விளக்கமாக ஆரம்பித்து கவலையுடன் முடித்தாள் அமிர்தா.
“இப்ப விடுடி.. ஏதோ நம்பிக்கைல தானே இவர்கிட்ட ஒப்படச்சு இருக்காங்க.....எல்லாம் ஓகே ஆகும்...... பொறுத்திருந்து பார்க்கலாம்” என ஆறுதல் சொன்னாள் நிலா.
“என்னவோடி.... இப்பவே இவரோட வேலையையும் சேர்த்து செய்யிற மத்த சீஃப் எல்லாம் முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்க.... யாராவது ஒருத்தர் ரெஸிக்னேஷன் கொடுத்தா கூட கம்பனி ஆட்டம் கண்டிரும்.... அப்புறம் ஃபீல்ட் வொர்கர்ஸ் பத்தி சொல்லவே வேணாம்...” என்று அமிர்தா புலம்பிக் கொண்டிருக்கும் போதே,
கெளஷிக்கை அழைத்துகொண்டு வெளியே வந்த சஞ்சய் அவனோடு வந்த CFO,CLO விடமும் பேசிக்கொண்டே நிலாவின் அழுது சிவந்த முகத்தை கவனித்திருந்தான்.
அவள் அருகே அமர்ந்து இருந்த அமிர்தா கெளஷிக்கை முறைத்து பார்த்து விட்டு தன் இடத்திற்கு சென்றாள்.
‘என்னடா தலைவியோட தோழிப் பெண் நம்மை முறைக்கிறாள்’ என அமிர்தாவை மேல் இருந்து கீழ் வரை ஆராய்ந்து விட்டு, ‘சூப்பர்!!!... அங்கிள் ரம்பை....ஊர்வசின்னு ஆபீஸ்ல ஒரு தேவலோகமே வைச்சிருக்காரு போல இருக்கே ....மச்சம்டா உனக்கு’ என நண்பனை ஒரு பார்வை பார்க்க,
‘பார்க்குது பாரு எரும..செய்யிறதையும் செய்துவிட்டு ஒண்ணும் தெரியாத பாப்பாவாட்டம்....’ என அவனை மனதுக்குள் திட்டினாள் அமிர்தா.
அவள் எண்ண அலைகளை அறியாத அவன் அவளை ஆர்வமாக பார்வையிட ஆரம்பித்தான்.
அவளோ வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள்.
‘அம்மா.. பார்த்தும்மா..இந்த அழகான கழுத்து சுளுக்கிகிட்டா அய்யா மனசு தாங்காது’ என அவளை ஒரு பார்வை பார்த்து வைக்க,
தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வில் மதிநிலா மெதுவாக தலையை உயர்த்தி பார்க்க, தூரத்தில் தன்னை அழுத்தமாக பார்த்துகொண்டு இருந்த சஞ்சயை கண்டு அதிர்ந்தாள்.
அவளது அதிர்ந்த முகத்தை பார்த்த சஞ்சய் உதட்டோர ஏளன வளைவுடன் வேகமாக கெளஷிக்குடன் அங்கிருந்து வெளியேறினான்.
அந்த பார்வைக்கு அர்த்தம் புரியாது குழம்பிய மதிநிலாவாகிய,
அந்த சிறுமீனும் இரையாகிடுமோ அவ்வலைஞனின் வலையதனுக்கு?????..........