வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கிறுக்கன் -கதை திரி

Status
Not open for further replies.
மக்களே என்னுடய முதல் கதையோடு வந்துவிட்டேன். ஏதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னித்து விடுங்கள். கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி 🙏

மக்களே புதன்கிழமை தான் முதல் எபிசோட் தரதாக சொன்னேன் ஆனால் கொஞ்சம் அட்வான்ஸாக இருக்கட்டுமேனு இன்னைக்கே அப்லோட் பண்ணிட்டேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவிடவும்.


WhatsApp Image 2023-06-04 at 17.34.19.jpgWhatsApp Image 2023-06-04 at 17.34.17.jpg

காதல் -1

அழகான காலை பொழுது பறவைகளின் இசையோடு மெல்ல கண்களை திறந்தாள் மதிநிலா. பெயருக்கு ஏற்றால் போல அழகிய நிலவு முகம்....இருபத்தி மூன்று வயது அழகு மங்கை.... மானின் விழி போன்ற நீண்ட கண்கள், செவ்விதழ்கள், கூரான நீண்ட நாசி அதில் சிறிய வெள்ளைகல் மூக்குத்தி, வில் போன்ற புருவங்கள், மொத்ததில் அவள் ஒரு பேரழகி. ஆனால் முகத்தில் எப்போதும் படிந்திருக்கும் மெல்லிய சோகம்.

விழித்தவள் சிறிது நேரம் அப்படியே கண்மூடி படுத்திருக்க அவளது சித்தி அமுதாவின் கனமான குரல் "அடியே மூதேவி இன்னும் உனக்கு விடியலயா? எழும்புடி சீக்கிரம் "என அதட்டியது .

பதறி அடித்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தாள் மதி. அந்த குரலின் சக்தி அப்படிப்பட்டது.

"இதோ வரேன் சித்தி" என வேகமாக வரவேற்பறையை நோக்கி விரைந்தாள்.

"வாடியம்மா வா இது தான் நீ எழும்புற நேரமா?.... நீ எல்லாம் ஏன் தான் பூமிக்கு பாரமா பொறந்து தொலைச்சியோ?... என்னோட உயிர வாங்கவே பொறந்து இருக்க நீ..பொறந்து உன்னோட அப்பா அம்மாவை முழுங்குன.... எங்க வீட்டுக்கு நீ வந்த நேரம் என் புருஷனும் போய் சேர்ந்துடாரு... இனி நான் மட்டும் தானே இருக்கே எப்ப என்னயும் காவு வாங்க போகுதோ தெரியல ஒன்னோட ராசி"

"ஏன் சித்தி இப்படி எல்லாம் பேசுறீங்க" என்ன அழுகையுடன் கேட்டாள்.

"ஆரம்பிச்சிட்டியா நீலி கண்ணீர வடிக்க.... அழுதது போதும் போய் வேலைய பாரு..... அப்புறம் நேரம் ஆயிருச்சினா ஆபீஸ்ல அரநாள் சம்பளத்த புடிச்சிருவாங்க.."

"சரி சித்தி"என வேகமாக வீட்டு வேலையை பார்க்க சென்றாள்.

"ஐயோ! இப்பவே மணி 7.30 ஆகிருச்சி... சீக்கிரம் வீட்டு வேலையை முடிச்சிட்டு ஆபீஸ் வேற போகனுமே"

அவசரமாக வீட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு ஆபீஸ் செல்ல தயாரானாள் மதிநிலா.

யார் இந்த மதிநிலா ?

தஞ்சாவூரை சேர்ந்த அருணாசலம் கனகா தம்பதியினரின் தவபுதல்வி....சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்து அவளது தந்தையின் தம்பியான மனோகரனிடம் அடைக்கலம் புகுந்தவள்... அவளது போதாத காலம் மனோகரனின் மனைவி அமுதா வடிவில் வந்தது ... அவளை வாய் வில்லானது சொல்லம்பை பொழிந்த வண்ணமே இருக்கும் ... மனோகரன் இருந்த வரை அவர் முன்னிலையில் கொஞ்சம் தணிந்தே இருந்தாள். அவர் மறைவுக்குப் பிறகு அவளது நிம்மதியும் சேர்ந்து இறந்து விட்டது எனும் அளவிற்கு மாறிப்போனாள் அமுதா . ஆனால் நல்ல வேளையாக மனோகரன் அமுதா தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாததால் அவளை பி. கொம் வரை படிக்க வைத்தாள் . கடந்த இரண்டு வருடங்களாக மதிநிலா எஸ். கே கன்ஸ்ட்ரக்ஷன் எம். டியிடம் பி .ஏவாக பணிபுரிகிறாள்.. நல்ல வேலை. நல்ல சம்பளம். அதனால் தான் அமுதா மதிநிலாவை இன்னும் தன்னுடன் வைத்து கொண்டிருக்கிறாள்.

"சித்தி நான் ஆபீஸ் போய்ட்டு வரேன்" என்றவளிடம்

"போய்ட்டு சீக்கிரம் வா ஊர சுத்தாம" என்றாள் அமுதா குத்தலாக.

"சரி சித்தி" என்றுவிட்டு விட்டால் போதும் விரைந்தாள்.

மதிநிலா தான் வேலை செய்யும் S.K கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியின் நிர்வாக அலுவலகத்தில் உள்ள தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அவள் அமர்ந்த சில விநாடிகளிலேயே "நிலா மேடம் உங்களை எம் டி அவரோட ரூம்க்கு வர சொன்னாரு" என்றான் பியூன் மதன்.

"இதோ வரேன் மதன் அண்ணா" என தேவையான சில பொருட்களை வாரிக்கொண்டு கிளம்பினாலும் என்ன அவசரமாயிருக்கும் என மனதில் கேள்வியும் பிறந்தது.

"இன்டர்கொம்மில் கூட கூப்பிடவில்லயே.. மம் என்னவாயிருக்கும்?" என்ற எண்ணத்துடன் எம் டியின் அறை கதவை தட்டி "மே ஐ கம் இன் சார்" என அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள் மதிநிலா.

"குட் மார்னிங் சார்..... எனி எமர்ஜென்சி ?"

"ஆமாம்மா ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் வர சொன்னேன்"

"சொல்லுங்க சார் "

"ம்ம் மதி .... என்னோட ஒரே பையன் சஞ்ஜய் பத்தி சொல்லி இருக்கேன் தானே" என்று ஒரு பெருமூச்செறிய

நிலா யோசனையுடன் அவரை பார்த்தாள். அவரே மீண்டும் தொடர்ந்தார்.

"நாளைல இருந்து அவன் தான் என்னோட பிசினஸ் எல்லாத்தயும் பார்த்துக்க போறான் மா...ஹி இஸ் தி நெக்ஸ்ட் மேனேஜிங் டைரக்டர் ஆஃப் எஸ். கே கன்ஸ்ட்ரக்ஷன்.... நாளைல இருந்து நீ தா அவனுக்கும் பி.ஏ..."

"சார்!" என்றாள் அதிர்ச்சியுடன்.


"என்ன மாதிரி இல்லமா... அவன் ரொம்ப கோபக்காரன்... அது மட்டும் இல்லமா... இன்னும் அவனுக்கு இந்த விஷயத்த நான் சொல்லல... தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்...மேனேஜர் கிட்ட தான் சொல்ல சொல்லி இருக்கேன் ... வீட்டுக்கு போனா தான் தெரியும் என்ன நடக்கும்ன்னு "

"என்ன சார் திடீர்னு இந்த முடிவு "

"ஆமா மா இந்த விஷயம் தெரிஞ்சா அவன் என்ன ரியாக்ட் பண்ணுவானே தெரியல... மே பி என்மேல் உள்ள கோவத்த உன் மேல கூட காட்ட சான்ஸ் இருக்கு.. எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போமா அவசரப்பட்டு வேலைய ரிசைன் பண்ணிராத"

"ஐயோ! நீங்க சொல்லுறத பார்த்தா என்ன வச்சி செய்வாரு போல இருக்கே சார் " என்றாள் வீட்டு நரகத்தில் இருந்து காப்பாற்றிய இந்த ஆபீஸ் சொர்க்கம் இனி கேள்விகுறிதானோ என்ற ஏக்கம் அவள் குரலில் அப்பட்டமாய் ஒலிக்க.

"ஹி.. ஹி.. பயப்படாத மா உன்னால சமாளிக்க முடியுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சரி. பெஸ்ட் ஆஃப் லக் .. அவனோட போஸ்டிங்க்கு தேவையான ஏற்பாட்ட கவனி ".

"ஓகே சார்" என பாவமான முகத்துடன் வெளியேறினாள்.

எம் டியிடம் சொல்லிவிட்டு தனது சீட்டுக்கு வந்த அவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. அவளும் சஞ்சய் குமாரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறாள் அவன் மிகவும் கோபக்காரன் என்று. இனி அவனிடம் தான் வேலை செய்யவேண்டும் என்ற நினைப்பே அவளின் வயிற்றை கலக்கியது.

அந்த பெரிய பங்களாவின் மாடிப் படிகளில் இருந்து தட தடவென வேக நடையுடன் இறங்கி வந்தான் நம் கதையின் நாயகன் சஞ்சய் குமார்... சந்திரகுமார் மற்றும் மேகலா தம்பதியினரின் ஒற்றைப் புதல்வன்... முப்பது வயது இளங்காளை... ஆறடிக்கு குறையாத உயரம் தினமும் உடற்பயிற்சி செய்வதின் பலனாக முறுக்கேரிய தேகம்.. மாநிறத்தை விட சற்று சிவந்த நிறம்.. தீர்க்கமான கண்கள், கூறிய நாசி, அழுத்தமான சிரிக்க மறந்த உதடு, அழகன் தான்.... ஆனாலும் கடுகடுவென முகம், அந்த கோப முகம் தான் நம்ம ஹீரோக்கு மைனஸ்.

"அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா..... " என வீடே அதிரும் படி கத்தினான் சஞ்ஜய் .

"ஏன் பா இப்படி கத்துற"என கேட்டு கொண்டே காதை விரலால் குடைந்தபடி வந்தார் அவனது அன்னை மேகலா.


"கத்தாம என்ன செய்ய சொல்லுரிங்க... யார கேட்டு நான் நாளைக்கு கம்பெனி டேக்ஓவர் பண்ண போறேன்னு ஆபீஸ் முழுக்க சொன்னரு உங்க புருஷன்... நான் இப்போ ஆபீஸ் போறேன்னு சொன்னனா இவர்கிட்ட .. யார கேட்டு இவரு இந்த முடிவு எடுத்தாரு... என்ன பத்தி இவருக்கு என்ன தெரியும்... சொல்லி வைங்க உங்க புருஷன் கிட்ட" என்று கர்ஜித்தது சஞ்ஜயின் குரல்.

"வாய மூடுடா" என பதிலுக்கு கத்தினார் அவனது தந்தை சந்திரகுமார். நானும் பார்த்துகிட்டே இருக்கே... ரொம்ப எகுறுற.. உனக்கு மட்டும் தான் பேச தெரியுமா? நான் உனக்கு அப்பன்டா"

அவன் தனது தந்தையை முறைத்து பார்த்தான்.

"ஏங்க கொஞ்சம் அமைதியா இருங்க" என மேகலா சமாதானத்துக்கு விளைய,

"நீ வாய மூடு டி எல்லாம் நீ குடுக்குற செல்லம்.. நீ ஒரு அம்மா மாதிரி நடந்துக்க... முன்னமே அவன் இப்படி பேசும் போது இரண்டு அற விட்டு இருந்தீனா இப்போ இப்படி எகுற மாட்டான்... எல்லாம் உன்ன சொல்லனும்... என்னடி புள்ள வளர்த்து வச்சி இருக்க"

ஏன் நீங்க ஒழுங்கா புள்ளய வளர்த்திருக்க வேண்டியது தானே...அவன் எனக்கு மட்டுமா புள்ள ..உங்களுக்கும் புள்ள தானே.. எப்படியும் அப்பன் புத்தி தானே புள்ளைக்கு வரும் என்று அந்த ஒழுங்காவில் சற்று அழுத்தம் கொடுத்து மனதிற்குள் நினைக்க (மைண்ட் வாய்ஸ் தான் மற்றபடி நேராக சொல்லி விட்டாலும்)

"இப்போ நீ என்ன தான் சொலுற.... ஆபீஸ் டேக்ஓவர் பண்ண முடியுமா? முடியாதா?"

"நீங்க என்கிட்ட நேரடியா சொன்னீங்களா? நீங்க பாட்டுக்கு ஆபீஸ் டேக்ஓவர் பண்ண சொல்லி ஏதோ மூனாம் மனுஷன் மாதிரி மேனேஜர் கிட்ட சொல்ல சொல்லி இருக்கீங்க... நீங்க செஞ்சது சரியா? என அவனும் பதிலுக்கு கத்தினான்.

"ஆமா அப்படியே நான் சொன்னத கேட்டு நீ கிழிச்ச மாதிரி பேசுற " என்க,

"ஆமா...இவரு சொன்னத கேட்டு எத கிழிக்கணும்? எத கிழிக்க சொல்லுறாருனு ஒன்னும் புரியலயே" என தலையை சொறிந்தார் மேகலா.

தந்தை மகன் இருவரும் ஒரே நேரத்தில் அவரை பார்த்துப் பல்லைக் கடித்தனர்

ஐயையோ!... மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சி சத்தமா பேசிட்டனோ? அடியே மேகலா இன்னைக்கு உனக்கு சந்திராஷ்டமம் போலயேடி.. சீக்கிரம் இடத்த காலி பண்ணு... என மனதில் நினைத்து கொண்டு சமயலறைக்கு ஒரே ஓட்டமாக ஓடி விட்டார்.

"கடைசியா கேக்குறேன். உன்னோட முடிவு என்ன? ஆபீஸ் டேக்ஓவர் பண்ண முடியுமா? முடியாதா?" என்ற தந்தையிடம்

"உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது" என்றான்.

"அப்போ சரிடா... நீதான் நாளைக்கு ஆபீஸ் டேக்ஓவர் பண்ணணும்ரது போர்ட் டிரெக்டர்ஸோட முடிவு. ஸோ நான் போர்டுக்கும் மெனேஜ்மென்ட்டுக்கும் இன்பார்ம் பண்ணிர்ரேன். ஆனா ஒன்னு இது ஒன்னும் உன்னோட பாட்டன் சம்பாரிச்ச சொத்து இல்ல... முழுக்க முழுக்க என்னோட சொந்த உழைப்புல வந்த சொத்து... இதுல நயா பைசா கூட தர மாட்டேன் பார்த்துக்க... எனக்கு என் தொழிலோட எதிர்காலம் முக்கியம் நல்லா யோசிச்சி உன்னோட முடிவ சொல்ற .." என்று கண்டிப்புடன் முடித்தார்.

சஞ்சய் குமார் சில கணங்கள் தனது கண்களை இறுகமூடி யோசித்தான். அவனுக்கு தந்தையின் சொத்து ஒரு பொருட்டில்லை. ஆனால் அவனது கனவை நிறைவேற்ற தேவையான பணம் தந்தையிடம் இருந்தே வந்தாகவேண்டும் என்கிற நிலைமை. இப்போதைக்கு அவரை பகைத்து கொண்டால் அவனது கனவு நனவாகாமலே போய்விடலாம். அதனால் ஒரு முடிவுடன் கண்களை திறந்தான்.

"ப்ச்..சரி நான் நாளைக்கு கம்பனிக்கு வரேன். ஆனா என்னோட ப்ரீடம் எந்த விதத்திலும் பாதிக்கிறத நான் விரும்ப மாட்டேன்." என நிர்பந்தத்துக்கு ஒத்து கொண்டதைப் போல நடித்தான்.

"யப்பா..... சொத்துனு சொன்னா தா பெத்த புள்ள கூட நம்ம பேச்ச கேக்குது... கடவுளே இப்ப சரி இவனுக்கு நல்ல புத்திய குடுத்தியே" என தனக்குள் பேசுவது போல வேண்டுமென்றே சத்தமாக முணுமுனணுத்தார்.

கேட்கவேண்டியவனும் அதை கேட்டுவிட்டு திரும்பி தன் பங்குக்கு அவரை முறைத்து விட்டு தன் அறைக்கு வேகமாக செல்ல, செல்லும் தன் மகனை பார்த்து ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றைவிட்டார் தந்தை. தன் சொத்தை காட்டிதான் மகனை பணியவைக்க வேண்டும் என அவரும் விரும்பவில்லை. தனக்கு பின் தன் தொழிலை அவனே வழி நடத்தி செல்ல வேண்டும் என்பதாலும் அதற்கான சமயம் இதுவே என்பதாலும் அவனது கனவு தெரிந்தே இப்படி ஒரு சுயநலமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.

"அப்பா புயல் அடிச்சி ஓய்ந்த மாதிரி இருக்கு ஆனாலும் அப்பனும் மகனும் பல்லை கடிக்குறதுல மட்டும் ஒரே மாதிரி இருக்காங்க. சரி நம்ம வேலையை போய் பார்போம்" என வடிவேலு பாணியில் சொல்லிவிட்டு மேகலா தனது சமயல்வேலையை தொடர்ந்தார்.

தனது அறைக்கு வந்த சஞ்சய் குமார் கோபத்தை கட்டுப்படுத்த மடமடவென கிலாஸில் இருந்த தண்ணீரை குடித்தான். இருந்தும் அவனது கோவம் தணியவில்லை .அவனது கோவத்திற்கான காரணம் தனது கனவை பற்றி தெரிந்தும் தந்தை சொத்தை காட்டி மிரட்டியது தான்.

ஆபீஸ் தானே போகணும். போறேன். ஆனா உங்க வாயாலயே நீ ஆபீஸ் போகவேணாம் உன்னோட கனவை தேடி போன்னு சொல்ல வைக்கல, நான் தி கிரேட் சஞ்சய் குமார் இல்லை என மனதுக்குள் சபதமெடுத்தான் உதட்டில் ஒரு ஏளன வளைவுடன்.

ஆனால் பாவம் அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை அவன் தனது கனவை தேடி போகாமல் தனது காதலை தேடி போக போறான் என்பது. விதி யாரைவிட்டது. மாறன் அங்கு மலர் கணைகளை ஏவ தயாராகிவிட்டான்.

கிறுக்கனிடம் சிக்குமா? அந்த சிறு நிலவு?

அடுத்த ஏபி இனி நெக்ஸ்ட் சண்டேதான் வரும்.
கதைக்கான கருத்துக்களை கருத்து திரியில் பதிவிடுங்கள்.

























































 
Last edited:
Status
Not open for further replies.
Top