வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கிறுக்கன்- கதை திரி

Status
Not open for further replies.காதல் 2

'ஹூ லெட் தி டாக்ஸ் அவுட் ? (வூப் ,வூப் ,வூப் )
ஹூ லெட் தி டாக்ஸ் அவுட் (வூப் ,வூப் ,வூப் ) '

என ஹோம் தியேட்டர் சிஸ்டம் வழியாக சத்தமாக பாடலை ஒலிக்க விட்டு இடுப்பில் துண்டுடனும் தோளில் போட்ட துண்டை தலைக்கு மேல் சுற்றிக்கொண்டும் ஆடிக்கொண்டு இருந்தான் கெளஷிக்.

அப்பொழுது ஒலித்த அவனது ஐபோனை பார்த்து முறைத்து,


"யாருடா இது நேரங்காலம் தெரியாம நம்ம டான்ஸிங் மூடை கெடுக்குறது" என எரிச்சலுடன் முணுமுணுத்தபடி அதை கையில் எடுத்து பார்த்தான்.

"அட! இவனா?" என அட்டென்ட் செய்து காதில் வைத்து,

"ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசு ஆச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு" என கம்பீரமான குரலில் பாடினான்.

"ஷட்அப் கெளஷிக்" என சீறினான் சஞ்ஜய் மறுபுறத்தில் .

'யப்பா நம்ம சவுண்ட் சிஸ்டத்தை விட இந்த சவுண்ட் சிஸ்டம் ஹெவியா இருக்கே' என்று ஃபோன்னை தள்ளிபிடித்து காதை விரலால் குடைந்து கொண்டான் சஞ்ஜயின் உயிர் நண்பன் கௌஷிக்.


"லைன்ல இருக்கியா ஸ்டுப்பிட்" என மறுபடியும் சீற,

"இருக்கேன் மச்சான் நீ கத்துன கத்துல என்னோட ஒரு பக்க ஸ்பீக்கர் அவுட் ஆகிருச்சி" என்று கிண்டலடிக்க,

"இப்ப மட்டும் நான் அங்க இருந்தேன் என் கையால தான் உனக்கு சாவு பார்த்துக்கோ" என்றான் எரிச்சலுடன் .

'யப்பா தப்பிச்சடா கெளஷிக்' என மனதுக்குள் நினைத்து ஆல் இஸ் வெல் விஜய் போல மார்பை தட்டி கொண்டான் கெளஷிக்.

"கூல் மச்சான்... நவ் வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்? டெல் மீ? ஐ வில் சால்வ் ஆல் யுவர் ப்ராப்ளம் "என இங்கிலீஷில் பீட்டர் விட்டான் கெளஷிக்.

"என்னோட அப்பா தான் ப்ராப்ளம்" என்றான் கடுப்பாக.

"அப்பான்னாலே எல்லாருக்கும் ப்ராப்ளம் தான்....உன்னோட ப்ராப்ளம் என்னனு சொல்லு மச்சான்" என கவுண்டர் கொடுத்தான்.

"ஜோக்ஸ் அபார்ட் கெளஷிக்!.. பி சீரியஸ் "

"ஓகே... கூல் கூல்.... என்ன ப்ராப்ளம்னு மொத சொல்லு"

அனைத்தையும் ஒன்று விடமால் கூறினான்.

அவனும் கேட்டு விட்டு நக்கலாக"ம்ம்ம்ம்.....அப்ப ஒன்னோட கனவு கோவிந்தா கோவிந்தாவா மச்சான்? "என்றான் நக்கலாக.

"வில் யு பிளீஸ் ஷட்அப்!.." என கர்ஜித்தான் .

"கூல் மச்சான் கோவபடாத நான் நாளைக்கே தஞ்சாவூர் கிளம்பி வரேன்".

"ம்ம்ம்ம் .." என கால் கட் செய்தான் சஞ்சய்.


இவனோ 'நாளைல இருந்து இவனோட சேர்த்து இவன் ஃபேமிலியயும் சமாளிக்கணும் போல இருக்கே பாவம் டா கெளஷிக் நீ' என போலியாக அலுத்துக்கொண்டான் .

தஞ்சாவூர் பெரியகோவில் கடவுள் சன்னிதானதில் கண்மூடி கைகூப்பி 'கடவுளே இன்னைக்கு சஞ்சய் சார் எம். டி போஸ்ட் சார்ஜ் எடுக்க போராரு. இனி எப்பவும் என்னோட வேலைல எந்த தப்பும் வந்துர கூடாது . நீ தான் என்ன காப்பாத்தணும்' என மனமுருக வேண்டிக் கொண்டிருந்தாள் மதிநிலா.

"இந்தாம்மா குழந்த...." என குருக்கள் பிரசாதம் நீட்டினார்.


புன்னகையுடன் குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டு கொண்டே கையை திருப்பி மணி பார்த்தவள்,

'ஐயோ!.... டைம் ஆகிருச்சே' என வேகமாக கோவிலை விட்டு வெளியேறினாள்.

மதிநிலா அலுவலகத்தை அடைந்த வேளை நவீன முறையில் கட்டப்பட்ட அந்த ஆறு மாடி அடுக்குகளை கொண்ட எஸ் . கே கன்ஸ்ட்ரக்ஷன் வழைமையை விட பரபரப்பாக காணப்பட்டது.


வழைமைக்கு மாறாக அன்று அனைவரும் சுத்தமாகவும் நேரத்ததுடன் வருகைத் தந்தும் இருந்தனர். அவளைக் கண்ட மதன்
"குட் மார்னிங் மேடம் இப்போதான் வரிங்களா "என்று கேட்க ,

"இல்லயே அண்ணா நேத்தே வந்துட்டேன் ..படுத்து தூங்கிட்டு இப்போதான் எழும்பி வரேன்" என்றாள் கிண்டலாக.

" அட போம்மா உனக்கு எப்பவும் தமாஷ் தான்" என்று மதன் தன் போக்கில் சொல்லி கொண்டு சென்றான்.

புதிதாக மாற்றப்பட்ட திரைச்சீலைகளும் அவற்றுக்கு ஏற்ப அலங்கரிக்கபட்ட பூ வேலைப்பாடுகளுமாக கண்களை குளிர்வித்த அந்த ரிசப்ஷனில் ஒட்டு மொத்த எஸ் . கே கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாகிகளும் குழுமி கைகளில் பூங்கொத்துகளுடன் நின்றிருந்தனர்.


எண்ட்ரன்ஸில் மெதுவாக வழுக்கி கொண்டு வந்து நின்ற கருப்பு பென்ஸ் C 300 காரின் பின்புற கதவை டிரைவர் திறக்க நீல நிற சூட்டின் பட்டன்களை பூட்டிக் கொண்டு கம்பீரமாக இறங்கினான் சஞ்ஜய் குமார் .

தன் இடது கையை திருப்பி ஜி எம் டி மாஸ்டர் II ஒயிஸ்டர் ஸ்டீல் அண்ட் யெல்லோ கோல்ட் ரோலெக்ஸ் வாட்ச் காட்டிய நேரத்தை உள்வாங்கிகொண்டு நிமிர்ந்தவன் கண்களில் பூங்கொத்தை நீட்டியபடி "வெல்கம் சார்" என்ற மேனேஜர் கண்ணில் பட்டார்.

பூங்கொத்தை பெற்றுக்கொண்டு "தாங்க்ஸ்" என்றான் சிறு அலட்சியத்துடன் .

"சார்..... நீங்க கடந்த எட்டு வருஷமாக இந்தியாவுல இல்லாததால என்ன தெரியல.. ஐ..ம்... மேனேஜர் பத்ரிநாத் என்று கை குலுக்கினார்.

"வெல்.....மிஸ்டர் பத்ரிநாத் .....என்னோட கேபின் எங்க?" என வேகமாக உள்ளே சென்றான்.

"பட்....சார் .. இவங்க " என மற்றவர்களை அறிமுகப்படுத்த முயல,

"இப்போ அவங்கள இன்ட்ரொடக்ஷன் பணணிக்க டைம் இல்ல ...ஐ வில் சீ தெம் லேட்டர் .."என இன்னும் வேகமாக நகர்ந்து விட அவரும் ஓட்டமாக அவனை பின்தொடர்ந்தார்.


அவனது இந்த செயல் மற்ற நிர்வாகிகளை சங்கடப்படுத்தியது என அவர்களது முக பாவனையிலே தெரிந்தது .

அந்த நவீன லிப்டின் உள்ளே நுழைந்து ஆறாவது தளத்திற்கான பட்டனை அழுத்தினார் பத்ரிநாத்.

லிப்ட் திறந்தவுடன் வேகமான நடையுடன் சென்ற அவனது வேகத்திற்க்கு ஈடு கொடுத்து பின்னாலேயே ஓடினார் பத்ரி.


எம். டி. அறை உள்ளே நுழைந்து அந்த விசாலமான அறையை ஒரு சுற்று நோட்டம் விட்டவன் தனது இருக்கையில் அமர்ந்து லாவகமாக சாய்ந்து,

"மிஸ்டர் பத்ரிநாத் என்னோட பி. ஏவை கொஞ்சம் வர சொல்லுரிங்களா?" என்றான்.


"ஓகே சார்.." என இன்டர்கொம் வழியாக மதிநிலாவை அழைத்தார்.

"இப்ப நீங்க போகலாம் மிஸ்டர் பத்ரி "

"ஓகே.... சார் .. "என சற்று ஏமாற்றதுடன் வெளியேறினார் அவர்.

"எக்ஸ்க்யூஸ் மீ.... மே ஐ கம் இன் சார் ? "என அனுமதி கேட்டு கேபின் கதவை தட்டினாள் மதி.

"எஸ் கம் இன்" என்றான் கம்பீரமான குரலில்.

'வாய்ஸே டெரர் ஆ இருக்கே' என யோசித்தபடி உள்ளே நுழைந்தாள்.

"சார்..... ஐ ம் யுவர் பி ஏ" என்றாள் மெதுவாக.

அவன் தலையை உயர்த்தாமல் விழிகளை மட்டும் உயர்த்தி அவளை பார்வையால் அளவெடுத்தான்.


தனது பி . ஏவாக மார்டன் பெண்ணை எதிர்பார்த்தானோ என்னவோ வந்தவளின் தோற்றத்தில் சற்று திகைத்து தான் போனான். இளஞ்சிவப்பு நிற புடைவை, நெற்றியில் தீற்றிய குங்குமம் என மங்களகரமான அந்த தோற்றம் அவனை என்னவோ செய்தது என்பதே உண்மை .

ஒரு மெல்லிய திடுக்கிடலுடன் தலையை உலுக்கி கொண்டவன் "நேம் பிளீஸ்!"என்றான் சற்று விரைப்பாக , 'பேரைச் சொல்லும்மா முதல்ல... பின்னே வாங்க பி ஏ போங்க பி ஏ ன்னா கூப்பிட முடியும்?' என மனதிற்குள் திட்டிக் கொண்டே .

"சாரி சார்.... ஐ ம் மதிநிலா " என்றாள்.


"ம்ம்ம்ம்...... ஹாவ் யுவர் சீட் மிஸ் மதிநிலா"

"தாங்க்ஸ் சார்.." என இருக்கையில் அமர்ந்தாள் .

"ஓகே! நோட் திஸ் பாயிண்ட்ஸ் "என சில குறிப்புகளை கொடுத்தவன், "ஆஃப்டர் லஞ்ச் வீ வில் ஹாவ் மீட்டிங் வீத் ஆல் டிபார்ட்மெண்ட் ஹெட்ஸ்.... மேக் அரேஞ்ச்மெண்ட்ஸ் போர் தட்..... நவ் யு மே லீவ் " என முடித்தான்.

"ஓகே!... சார் "என வெளியேறினாள்.

அவன் கொடுத்த வேலை ஒவ்வொன்றாக முடித்தவள் மீட்டிங்கான அரேஞ்ச்மெண்ட்ஸையும் முடித்துவிட்டு நேரத்தை பார்த்தாள். அது சரியாக இரண்டு ஐம்பத்து ஐந்தை காட்ட, அவள் ஃபைல்ஸ் மற்றும் லேப்டாப் சகிதம் அவனின் கேபின் நோக்கி சென்றாள்.


மெல்லிய தட்டலுடன் சேர்ந்த "மே ஐ கம் இன் சார் ?" என்ற குரலில் கலைந்து "எஸ்" என்றான் தூக்கத்தில் இருந்து எழுந்தவனைப் போல ,

மதிநிலாவுக்கு கட்டளைகளை கொடுத்து அனுப்பி விட்டு தன் முன்னிருந்த pc ஐ ஒன் செய்து அலட்சியமாக ஒவ்வொரு துறை தொடர்பான விடயங்களை மேலோட்டமாக பார்வையிட்டவனின் MBA மூளை அவனை மறந்து வேலையில் மூழ்கடிக்க செய்திருந்தது.

'ஓ..... சஞ்சய் நீ நினைத்து வந்ததென்ன? இப்போது செய்து கொண்டிருப்பதன்ன ?' என்று தன்னையே கடிந்து கொண்டிருந்தவனிடம்,

"மீட்டிங்ஸ்கான அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணிட்டே சார் " என்றாள் பணிவாக.

"ஓ ...ஓகே ஃபைன்! லெட்ஸ் கோ" என அலட்சிய பாவனையுடன் நிதானமாக கான்ஸ்பரன்ஸ் அறைக்கு வழி காட்டி சென்ற மதியை தொடர்ந்தான் .

கான்பரன்ஸ் ஹால் உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அலட்சியத்துடன் அமர்ந்தவன், நிதானமாக ஒரு கையை மேஜையில் ஊன்றி மறு கையில் மைக்கை பற்றி "குட் ஆஃப்டர் நூன் எவ்ரி ஒன் "என்றான் கம்பீரமாக.

"லிசன் எனக்கு எப்பவும் எல்லாத்தையும் பெர்பெக்ட்டா செய்யனும்... நான் என்ன சொல்லுறனோ அது மட்டும் தான் இங்க நடக்கணும்.. .. நான் என்னோட டாட் மாதிரி இல்ல.... என்ன பத்தி இவ்வளவு நாள்ல கண்டிப்பா கேள்வி பட்டிருப்பீங்க .. ஸ்பெஷலி என்னோட கோவம் பத்தி.. ம்ம்?... நவ் மீட்டிங் இஸ் ஓவர் .... ஆல் மே லீவ் நவ்" என பதிலுக்கு காத்திராமல் விறுவிறுவென வெளியேறினான்.

பாரின் ரிட்டர்ன் மாடர்ன் திங்கிங் என்று இவனிடம் என்னவெல்லாமோ எதிர்பார்த்தால் இவன் என்ன இப்படி பல்டி அடித்துவிட்டான் என்ற எரிச்சலுடன், "இத சொல்ல மட்டும் தான் மீட்டிங் அரேஞ்ச் பண்ணேன்" என்று அவனை போலவே நக்கலாக முணுமுணுத்துவிட்டு, 'யப்பா......இத கேக்கவா மூணு மணி நேரமா மீட்டிங் அரேஞ்ச் பண்ணேன்.... இவர புரிஞ்சிக்கவே முடியலையே' என பெருமூச்செறிந்தாள் மதி நிலா.

இனி இது போல் புலம்புவதே தன் வேலையாகி போகும் என்பது புரியாத,


அந்த சிறு நிலவும் சிக்குமோ இந்த கிறுக்கனிடம்??????......

எவ்ரி சண்டே எபிசொட் அப்லோட் பண்ணுவேன் ஃபிரண்ட்ஸ் ரீட் பண்ணிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

 
Last edited:
Status
Not open for further replies.
Top