வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கிறுக்கன் -கதை திரி

Status
Not open for further replies.
காதல் -3

எஸ். கே. கன்ஸ்ட்ரக்ஷன் எண்ட்ரன்சில் வேகமாக வந்து கிரீச்சிட்டு நின்ற கருப்பு ரேஞ்ச் ரோவர் ஜீப்பின்
டிரைவர் சீட்டில் இருந்து தனது கருப்பு நிற சன் கிலாஸ் ஐ கழட்டி தனது டி ஷர்ட்டில் சொருகிக் கொண்டே படு ஸ்டைலாக இறங்கினான் கெளஷிக். ஆறடி உயரம், சிவந்த நிறம், இறுக்கி பிடித்த டி ஷர்ட் காட்டிய சிக்ஸ் பேக் என ஹிந்தி பட கதாநாயகனை நினைவுபடுத்தினான் .

அந்த நவீன கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து "நாட் பேட்" என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

ஆறாவது மாடியில் திறந்த லிப்டிலிருந்து வெளியேறி சுற்றிலும் பார்வையை ஓட்டியவன் M.D. என்ற எழுத்துகள் கண்ணில் பட அதிரடியாக எம் .டியின் அறை உள்ளே நுழைந்தான் .

தனது இருக்கையில் கண்களை மூடி கைகளை தலைக்கு அணைவாக கொடுத்து சாய்ந்து அமர்ந்து சுழல் நாற்காலியை இட வலமாக ஆட்டிக் கொண்டிருந்த சஞ்சய் கதவு திறக்கும் சத்ததில் "ஸ்டுப்பிட்" என சீறியபடி எழுந்து நின்றான்.


எதிரே கைகளை விரித்தபடி முகத்தில் புன்னகையுடன் நின்ற நண்பன் கண்ணில் பட 'ஊப்ஸ்' என சாந்தமாகி கண்களை மூடி திறந்தான். அதற்குள் அவனை நெருங்கி இருந்த கெளஷிக்,

"மச்சான் ஐ மிஸ் யு ஸோ...... மச் " என புன்னகையுடன் இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.


அப்பொழுது பார்த்து அவனது அறைக்குள் நுழைந்த மதி நிலாவின் பார்வையில் இந்த காட்சி தென்பட,

"ஆத்தி.... அவனா நீ" என நினைத்தபடி ஒருகையால் வாயை கப்பென பொத்தி கொண்டாள். தெரியாமல் சத்தமாக வார்த்தைகள் வெளி வந்து விட்டால் தொலைந்தோம் என்ற எண்ணத்துடன்.


கெளஷிக்கின் முதுகுக்கு பின்னால் வாயை பொத்தி விழிகள் விரித்து அதிர்ந்தபடி நின்ற மதி நிலாவை பார்த்த சஞ்சய் "புல்ஷிட்" என கடித்த பற்களுக்கிடையில் வார்த்தையை துப்பி, தனது நண்பனை விலக்கி நிறுத்தி, கன்னத்தை தனது கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.

அவனது செயலில் திரும்பி பார்த்த கெளஷிக் பின்னால் நின்ற மதி நிலாவை பார்த்து அதிர்ந்து,

'ஐயோ இவ எப்ப வந்தா....நான் கிஸ் பண்றத பார்த்தா பேய் அறைஞ்ச மாதிரி இருக்கா?..... ஐயோ! கௌஷிக்.. என்னே காரியம் பண்ணி தொலைச்ச.... ஒரு சூப்பர் பிகர் முன்னாடி உன்னோட மானமே போச்சே கௌஷிக்' என தனது தலையில் மானசீகமாக அடித்துகொண்டான்.

"மிஸ்... டோன்ட் மிஸ்டேக் மீ... ரொம்ப நாள் கழிச்சி என்னோட ஃப்ரெண்ட பார்த்து எக்ஸ்சைட் ஆகிட்டேன் என்றான் சற்றே அசடு வழிந்து,

"நிலா... நீ உன்னோட சீட்டுக்கு போ ....ஐ வில் கால் யு" என்றான் சஞ்சய். அவனுக்கு கௌஷிக்கை தயார்படுத்த வேண்டி இருந்தது.

"ம்ம்ம்ம்.....ஓகே சார்" என இருவரையும் மார்க்கமாக பார்த்தபடி வெளியேறினாள் மதிநிலா .

"வாட் தி ஹெல் ஆர் யு டூயிங்க் கெளஷிக்... திஸ் இஸ் ஆபீஸ்.... பிகேவ் யுவர் செல்ஃப் "என்றான் சஞ்சய் கடுப்புடன்,

"சாரி மச்சி.... உன்ன பார்த்ததுல கொஞ்சம் எக்ஸைட் ஆகிட்டேன்டா " என்றான் பாவமாக,

"வாட் எவர்.... ஜஸ்ட் லீவ் இட்....." என்றான் சலிப்பாக,

"நான் உனக்காகலாம் ஒன்னும் பீல் பண்ணல மச்சி.... அந்த சூப்பர் பிகர் என்ன நெனச்சி இருக்கும்? .. என்றான் சோகமாக,

"ஆமா அவளோட பேர் என்ன சொன்ன?... ஆங்... நிலா ரைட்?"என்றான் நெற்றியை விரலால் தட்டிக்கொண்டு,


கெளஷிக் சூப்பர் பிகர் என்றதை கவனத்தில் கொள்ளாமல் "ம்ம்ம்ம்.... எஸ் நிலா மை பி. ஏ"என்றான் அசட்டையாக,

"சும்மா சொல்ல கூடாது மச்சான்..... பேருக்கு ஏத்த மாதிரி அந்த நிலா மாதிரியே இருக்கா..... அப்புறம்....

அங்கிள் கலா ரசிகர்டா... எப்படி பட்ட பேரழகிய பி.ஏவா செலக்ட் பண்ணி இருக்காரு பாரு...... யு ஆர் ரியல்லி லக்கி.... டெய்லி தேவதை தரிசனம் கிடைக்கும்" என்றான் புன்னகையுடன் சஞ்சயின் தோள்களில் சுற்றி கையை போட்டவாறு,

வேகமாக தன்னை சுற்றி இருந்த கையை விலக்கி கெளஷிக்கின் முதுகுக்கு பின்னால் வளைத்து
முறுக்கினான்.

"ஆஆஆ ....! வலிக்குது கைய விடு மச்சான்"என அலறினான் கெளஷிக்.

அவனது காதருகே குனிந்த சஞ்சய் "வந்த வேலைய மட்டும் பாரு..... தேவையில்லாம பேசி என்னை கொலைகாரனா மாத்தாத..... அண்டர்ஸ்டாண்ட்.." என்றான் ஒவ்வொரு சொல்லாக அழுத்தத்துடன்.

"ஓகே! கூல் லீவ் மீ .."என்றான் கெஞ்சும் குரலில்.

அவனது கைகளை விட்டவன் மறுபடியும் தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கெளஷிக்கை கூர்மையுடன் பார்த்தான்.

தனது கையை வருடிக்கொண்டே அவனது பார்வையை எதிர்கொண்ட கெளஷிக், "நான் உன்னோட உயிர் நண்பன் ஏன்டா இப்படி பண்ண?" என்றான் அழாக்குறையாக.


சஞ்சய் தான் பேசியதிற்காக கையை முறுக்கவில்லை என்பதும், அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கும் என்பதும் அவனுக்கு தெரிந்தே இருந்தது. அவனது பார்வையை புரிந்து கொண்ட அவனும்,

"கைய முறுக்குனது நீ பேசுனதுக்காக இல்ல... அடுத்த நாளே வரேன்னு சொல்லிட்டு டூ டேஸ் டிலே பண்ண இல்ல அதுக்குதான்.... எனக்கு டைமிங் ரொம்ப முக்கியம்.." என்றான் நக்கல் சிரிப்புடன் .

"ஹா... ஹா... ஹா...." என சத்தமாக சிரித்தபடி அவன் அருகில் வந்து "கூல் மச்சான் இம்பார்டண்ட் வொர்க் வந்துருச்சி... அது தான் டூ டேஸ் லேட்... இனி உன்கூட தான்... ஆனாலும் இந்த சின்ன மேட்டர்க்கு கோவபட்டு எனக்கு மாவு கட்டு போடுற லெவலுக்கு கொண்டு வந்துடியே....." என்றான் தனது கைகளை வருடிக்கொண்டே.

அவன் சொன்ன விதத்தில் சஞ்சயின் சிரிக்க மறந்த அழுத்தமான இதழகளும் சிரிப்பில் லேசாக விரிந்தது.

அதை மறைத்தபடி, அவனது வலது புறம் இருந்த தொலைபேசியின் அருகே கையை நீட்டி கொண்டே "வாட் டூ யு லைக் டூ ஹாவ் கோல்ட் ஆர் ஹாட் ?" என்றான்.

"இங்க நீயே ரொம்ப ஹாட்டா தான இருக்க.... ஸோ எனக்கு ஒன் மேங்கோ ஜூஸ் சொல்லு.."என்றான் நக்கலாக.


அவனது முறைப்பில் "ஐ மீன்.....வெரி கோல்ட் பெர்சன்னு" சொல்ல வந்தேன் என்றான். இன்டர்கொம்மின் பட்டனை அழுத்தி "நிலா...என்னோட கேபின்க்கு ஒன் டீ அண்ட் ஒன் மேங்கோ ஜூஸ் கொண்டு வாங்க " என்றான் கட்டளையாக.

ஜூஸ் மற்றும் டீயுடன் கேபின் உள்ளே நுழைந்த நிலா ஜூஸை கௌஷிக்கிடமும் டீயை சஞ்சய்யிடமும் நீட்டினாள்.

டீயை எடுக்கும்போது சஞ்சய் சற்றுமுன் அவள் அங்கு வந்ததற்கான காரணத்தை வினவ,

"இல்ல சார்....இன்னைக்கான ஷெட்யூல் அப்டேட் பண்ண தான் வந்தேன்........ நீங்க பிஸியா இருந்ததால உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன்" என்று அவனை பார்த்து பேசினாலும் பிஸி என்ற வார்த்தையின்போது அவள் கண்கள் கௌஷிக்கை நோக்க,

"ம்ம்ம்ம்.... பை தி வே..... ஹி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட் கெளஷிக் அண்ட் எனக்கு இங்க என்ன மரியாதை குடுக்குறீங்களோ அதே மரியாதை இவனுக்கும் குடுக்கணும்.." என்றான் அழுத்தமாக.

"ம்ம்ம்ம்.... ஓகே சார்.."என சஞ்சயை பார்த்து பணிவாக சொல்லிவிட்டு "வெல்கம் சார்" என கெளஷிக்கை பார்த்து புன்னகைத்தாள்.

"வாவ்!" என விழி விரிய அவளது புன்னகையை பார்த்தான் கெளஷிக்.

"க்க்கும்" என என தொண்டையை செருமியபடி அவனை பார்த்து முறைத்தான் சஞ்சய்.

"ஹி.. ஹி.. ஹி... கொட்டாவி விட்டேன் மச்சான்" என்றான் சமாளிக்கும் விதமாக.


சரியான காமெடி பீஸ் என மனதுக்குள் நினைத்த நிலா தனது சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டாள்.

"நவ் யு கான் லீவ்" என கெளஷிக் உடன் பேச ஆரம்பித்துவிட்டான்.


அவளும் வெளியே வந்து தனது நண்பியான அமிர்தாவிடம் உள்ளே நடந்ததை பகிர்ந்து கொள்ள நினைத்து,

"சாரோட பிரெண்ட் சார பார்த்தாலே நடுங்குறாருடி அவரோட மூஞ்ச பார்க்கணுமே செம்ம காமெடியா இருந்துச்சிடி" என சிரித்தாள்.


அவளது சிரிப்பை கனிவாக பார்த்த அமிர்தா, "நீ இப்படி சிரிச்சி எவளோ நாள் ஆச்சி" என்றாள்.

"ஆமாம்டி வீட்டுல சிரிப்ப தொலைச்ச நான் இங்க தான் வாய்விட்டு சிரிக்குறேன்... இந்த வேல அண்ட் நீ மட்டும் இல்லனா என்னைக்கோ நான் செத்து இருப்பேன்டி.." என்றாள் விரகத்தியுடன்.

"ச்சீ.. பைத்தியம் "என அதட்டியபடி ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டாள் அமிர்தா.

'ஸ்ஸ்' என தன்னை சமனபடுத்திக் கொண்டவள் சூழலை கலகலப்பாக்க நினைத்து, "அப்புறம் காலைல இன்னொரு கூத்து நடந்துச்சி..." என மறுபடியும் சிரித்தாள்.

"சிரிக்காம சொல்லுடி" என்றாள் அமிர்தா.

"காலையில் ஷெட்யூல் அப்டேட் பண்ண போனேன் தானே.... அப்ப..". என காலையில் நடந்ததை கூறி கண்களில் கண்ணீர் வரும் அளவு சிரித்தாள்.

"என்னடி சொல்லுற?" என முதலில் அதிர்ச்சி ஆன அமிர்தா, பிறகு நடந்ததை யூகித்து அவளுடன் சேர்ந்து வாய்விட்டு சிரித்தாள்.

"ஐயோ!.. போதும் வயிறு வலிக்குதுடி... வா லஞ்ச்க்கு போகலாம் "என நிலாவை கேண்டீனுக்கு அழைத்து சென்றாள் அமிர்தா.

கேண்டீன் உள்ளே நுழைந்த இரு பெண்களும் அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்து கொள்ள ,

"இன்னைக்கு என்ன லஞ்ச் நிலா?" என அமிர்தா கேட்டாள்.

"அதே தயிர்சாதம் பச்சை மிளகாய் தான்" என்றாள் பெருமூச்சுடன்.

"ம்ம்ம்ம்..... நான் வெஜ்புலாவ் கொண்டுவந்தேன்... வா ஷேர் பண்ணிக்கலாம்.." என அவளது டப்பாவில் வெஜ் புலாவை வைத்தாள்.

இரண்டு பேரும் பேசியபடியே சாப்பிட்டு விட்டு தத்தமது இருக்கையில் வந்து அமர்ந்து தமது வேலையை பார்க்க தொடங்கினார்கள்.

இன்டர் கொம் அழைக்க அவனது அறைக்குள் நுழைந்து "எஸ் சார்" என்ற நிலாவிடம்,

"நிலா நவ் ஐம் லீவிங்... ஏதாவது இம்பார்டண்ட்னா என்னோட பெர்சனல் நம்பர்க்கு கூப்புடுங்க.. அதுக்குன்னு சில்லி மேட்டர்ஸ்க்கு எல்லாம் என்ன கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணக்கூடாது..... அண்டர்ஸ்டாண்ட்........." என அவளது பதிலுக்கு கூட காத்திருக்காமல் கெளஷிக்கை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான் சஞ்சய்.

செல்லும் அவனது முதுகை வெறித்து பார்த்த மதிநிலா 'சரியான திமிரு புடிச்சவன்... நான் இவன் பொண்டாட்டி பாரு... கால் பண்ணி வேலை வெட்டி இல்லாம இவனிடம் கடலை போட..' என அவனை மனதுக்குள் திட்டி தீர்த்தாள்.

தனது எண்ணம் போகும் போக்கை அப்பொழுது தான் உணர்ந்த மதிநிலா அதிர்ந்து 'இவருக்கு நான் பொண்டாட்டியா? கடவுளே.. அவரது ஸ்டேட்டஸ் என்ன? என்னோட ஸ்டேட்டஸ் என்ன? சும்மா கூட அப்படி நினைக்க கூடாது' என தலையை உலுக்கி கொண்டாள்.

'ஆனாலும் இந்த திமிரு புடிச்ச ஹிட்லர கல்யாணம் பண்ணிக்க போற அந்த பொண்ணு ரொம்ப பாவம்பா' என முகம் தெரியாத அந்த பெண்ணுக்காக பரிதாபபட்ட,

இந்த சிறு நிலவும் சிக்குமோ அந்த கிறுக்கனிடம்...........







 
Last edited:
Status
Not open for further replies.
Top