வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காலகேயனின் காதல் வதம் -கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 1(b).

"த்ரிலோச்சனா லோச்சு அடி லாச்சு எங்க போனா போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறா பெருசா எல்லாரும் கேம்பஸ் போக முன்ன நான் ஓயா போக ப்ளான் பண்ணிட்டு பன்னி குட்டி படுத்து தூங்கிட்டாளா ? சும்மாயிருந்த எங்களையும் சொறிஞ்சு விட்டுட்டா" என்று அனிதா கத்திக்கொண்டு
மீண்டும் மீண்டும் லோச்சனாவின் தொலைபேசிக்கு அழைத்து பார்த்து சோர்ந்தவள்,

அடுத்து அழைத்தது என்னவோ லோச்சனாவின் தாயாருக்கு தான்,

"ஹலோ ஆண்ட்டி நான் அனி பேசுறேன்"

"சொல்லுமா உங்க ப்ரிண்ட் இன்னும் எழும்பல "

"ஏதே இன்னும் எழும்பலயா "

"ஏன்மா ? எத்தன மணிக்கு ட்ரெயின்"

"ஆண்ட்டி பைவ் பிப்ட்டிபைவ்க்கு ட்ரெயின்"

"இப்போ நாலரை ஆகுதே அட கடவுளே ! நீங்க எங்கம்மா நிக்கிறீங்க?"

"உங்க வீட்டு வாசல்ல தான் ஆண்ட்டி"

"இருங்க வர்றேன் " என்றவாறு வீட்டுக் கதவை திறக்க'

"குட் மார்னிங் ஆண்ட்டி", "குட் மார்னிங் அங்கிள்" என்று கோரசாக கத்தியபடி வீட்டினுள் நுழைந்தனர்.,இரு பெண்களும்

குட் மார்னிங் மா உள்ள வாங்க என்று வரவேற்றார்., த்ரிலோச்சனாவின் தந்தையான திருவேந்திரன்


"ஆண்ட்டி இன்னிக்கு மோர்னிங் ப்ரெஃபாஸ்ட் என்ன ? கோதுமை ரொட்டி தானே!" என்று ஆர்வமாக கேட்டபடி நேத்ராவின் முகத்தை பார்த்தாள். தாருணி

"ஆமாம்மா எப்டி கண்டுபிடிச்ச?"

"அந்த ஆராய்ச்சிய பிறகு வச்சுக்கலாம். இப்போ போய் அந்த லாச்ச எழுப்பலாம் வா !"இவர்கள் மூவர் கொண்ட குழு த்ரிலோச்சனா, தாருணிக்க ஆண்ட்ருவ்ஸ், அனிதா பாலர் வகுப்பிலிருந்து தொடங்கிய நட்பு இருபது வயதிலும் தொடர்கிறது. இவர்கள் மூவரை பற்றி பார்க்கலாம். தாருணி பர்கர் இனப் பெண் (ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலகட்டத்திலே இலங்கையிலுள்ள சுதேச இனத்தவர்களை திருமணம் செய்து கொண்டனர்.இவர்களின் சந்ததிகளே பர்கர்கள்) பால் போன்ற நிறமும் ஹேசல் நிற விழிகளும் குட்டை முடியுமாய் நவநாகரீக மங்கையாய் காட்சியளிப்பாள்.

அனிதா துருதுரு கண்களும் குழந்தைத்தனமான முகமும் கரு மாநிறமும் இடையளவு நீண்ட கூந்தல் பருமனான உடல்வாகுடன் சற்று உயரம் குறைந்த தோற்றம் அது கூட அவளுக்கு அழகு தான், த்ரிலோச்சனா மாநிறம் கரு கருவென முட்டி வரை நீண்ட கூந்தல் பூசினாற் போல உடல்வாகு நேர் கொண்ட பார்வை செப்பு இதழ்கள்
நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவள்.

பணத்தில் சற்று குறை வைத்த ஆண்டவன் அழகில் அக்குறையை நிவர்த்தி செய்துவிட்டான். அனிதா இவளை விட சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவள்.
தாருணி பணத்தில் பிறந்து பணத்தில் வளர்ந்தவள்., என்றாலும் எல்லோரையும் சமமாகவே நடத்துவாள். ஆனால் லோச்சனாவின் மீதும் அனிதாவின் மீதும் தனிப்பாசமுண்டு அவர்களிடம் மட்டும் சகஜமாக பழகுவாள். மற்றபடி யாருடனும் அளவுக்கதிகமாக பேசமாட்டாள்.

லோச்சனாவின் அன்னை நேத்ரா லோச்சனாவை எழுப்ப படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார். "அம்மு நேரத்தோட எழும்பி போனா தான் ரெண்டு நாள் நைட் அவுட் ல ஓரளவாவது ஊர சுத்தி பார்க்க முடியும்.
அந்த பசங்க உனக்காக தான் வைட்டிங்""அம்மா இங்கன உள்ள இடத்துக்கு யாரு அவங்கள நேரத்தோட புறப்பட சொன்னது போம்மா எனக்கு தூக்கம் தூக்கமா வருது" என்றவாறு போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு நித்திரையை தொடர ஆரம்பிக்கும் முன்னரே

ஒரு வாளி ஜலம் அவள் தலையில் அபிஷேகம் செய்யப்பட்டது. யார் அது ? தன்னை எழுப்பியது. என்று கண்ணை கசக்கிக் கொண்டு பார்க்க அவள் முன் ருத்ர தாண்டவம் ஆட காத்திருந்தார்கள்., லோச்சனாவின் ஆரூயிர் தோழிகள்

என்னம்மா ரெண்டு பேரும் ரெடியா ? நான் மட்டும் தான் ரெடியாகி இருக்கேன்னு நினச்சேன் இப்டி குத்துக்கல்லாட்டம் நின்னா இலங்கை எப்போ வல்லரசாகுறது என்றபடி குளியலறைக்குள் நுழைய போனவளை

"அது எப்டி ? நீ கோழி கொக்கரிக்க முன்ன எழும்பி ரெடியாகுற மாதிரியும் நாங்க பத்து மணிக்கு ரெடியாகி வர மாறியும் ட்ரிப் பிளான் பண்ண நேரம் உதார் விட்டுட்டு, இப்போ போனே எடுக்காம தூங்கிட்டு இலங்கை வல்லரசாகுறத பத்தி கதைக்குறியா ?"

என்று அனிதா ஆரூயிர் தோழியின் தலையில் நங்கென குட்டு வைக்க , "ஹீ ...ஹீ ..ஹீ எல்லாம் சகவாச தோஷம்டி போய் ரெடியாகுறேன்". தாருவோ "சரி சீக்கிரம் ரெடியாகி வாம்மா ரெண்டு நாள் தான் செம்மயா ஜாலி பண்ண கிடைச்சிருக்கு." என்றபடி லோச்சனாவின் அறையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.


ஒருவாறு லோச்சனா ஆட்டம் போட்டு கிளம்பி வர, கடிகாரம் ஐந்தை மணி காட்டியது. லோச்சனா சல்வார் டாப்ஸும் டெனிமும் அணிந்து நெற்றியில் சிறு பொட்டும் நீண்ட கூந்தலை பின்னலிட்டு ஹேர் பாண்டில் அடக்கியிருந்தாள். தாருணி பேண்ட் டீ ஷர்ட் அணிந்து குட்டை முடியை கேட்ச் க்ளிப்பில் அடக்கியிருந்தாள்.


அனிதா நீளமான ஸ்கிர்ட்டும் அதற்கேற்ற பிளவுஸும் அணிந்து குட்டி தேவதையாக காட்சியளித்தாள். லோச்சு தாருணி இருவரும் பருவ பெண்ணின் அழகென்றால் அனி குழந்தைத்தனமான அழகு மூவரும் கிளம்பி வர நேத்ராவும் திருவேந்திரனும் மூவருக்கும் விபூதி வைத்துவிட்டு பல பத்திரங்களை கூறி மூன்று பெண்களையும் அனுப்பிவைத்தனர்.

திருவேந்திரனுக்கு லோச்சனாவை அவளது நண்பர்களுடன் அனுப்புவதில் பெரிதாக உடன்பாடில்லை. இருந்தும் மகளின் விருப்பத்திற்காக அனுப்பி வைத்தார்.நேத்ரா திரு இருவருமே லோச்சனாவை தனியாக தங்க விட்டதில்லை. வீட்டிற்கு ஒரே மகள் என்பதாலோ என்னவோ மகளை பிரிந்திருக்க விருப்பமில்லை என்று தான் கூற வேண்டும்.

மூவரும் தாருணியின் காரில் கிளம்பி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர். இவர்கள் கொழும்பிலிருந்து நான் ஓயா வரை ரயிலில் பயணித்து தாருணியின் மாமன் மகன் அபிஜித்தன் சக்கரவர்த்தியின் கெஸ்ட் ஹவுசில் தங்கி ஊரை சுற்றி பார்த்து விட்டு இரண்டு நாட்களில் கொழும்புக்கு புறப்படுவதாக தான் திட்டம் தீட்டியிருந்தனர்.எனினும் விதி இவர்களுக்கு வேறு விதமான திட்டத்தை தீட்டி வைத்திருப்பதை இவர்களுக்கு யார் கூற?


நண்பிகள் மூவரும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். ஆண்ட்ருசின் நம்பிக்கைக்குரிய வேலையாளான திஸ்ஸ இவர்களின் ரயில் புறப்படும் வரை நின்று நண்பிகள் மூவரினதும் தேவையை நிறைவேற்றிய பின்னரே இடத்தை விட்டு நகர்ந்தார்.


கொழும்பு நான் ஓயா ரயில் பயணமானது இயற்கை ரசிகர்களுக்கு கிடைக்கும் அற்புதமான பொக்கிஷம் தான் ரயிலானது தாழ் நில பிரதேசத்திலிருந்து உயரமான மலைப்பகுதியை நோக்கி பயணிக்கும் போது பள்ளத்தாக்கில் பச்சை பசலேன தேயிலை தோட்டங்களும் மரம் அடர்ந்த பகுதிகளும் அத்தனை அழகு தான்


"அனி ,தாரு அங்க தூரத்துல ஒரு வாட்டர்போல்ஸ் தெரியுதில்ல அது ட்ரெயின் ல இருந்து பார்த்தா மட்டும் தான் தெரியுமாம் அங்க போக வழி கிடையாதாம் கேள்விபட்ருக்கேன்"

"அம்மாடி புத்தகப்பூச்சி நீ புத்தகம் வாசிச்சதுல இப்டி பல நன்மை இருக்குடிம்மா" என்று நண்பர்கள் இருவரும் லோச்சனாவை நக்கல் செய்ய

"போங்கடி நான் ஒன்னும் சொல்லமாட்டேன்"

"சரி சரி மலையிறங்கு தாயி" என்று தாரு லோச்சனாவை சமாதானம் செய்தாள்."ஏய் அங்க பாருடா சிவனொளி பாதமலை தானே எவ்வளவு அழகாயிருக்கு இங்கேயிருந்து பார்க்க " என்று பிரமித்துப் போய் பார்த்தாள் லோச்சனா


" வாவ் அமேசிங் டாடி கிட்ட எத்தனையோ முறை கெஞ்சி கூத்தாடி இந்த முறை உங்களோட தான் வரேன்"
என்று ஆர்வமாய் தொடங்கி சோகமாக முடித்தாள் தாரு

"சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாம எல்லா நேரமும் செல்பி எடுத்து ஜமாய்ப்போம் ஓகே" என்று அனி இறுக்கமான மன நிலையை இலகுவாக்கினாள்.


"யாஹூ சிங்கமலை குகைடி இது 562 மீட்டராம் கடக்க எட்டு நிமிஷம் ஆகுமாம் இத டிசைன் பண்ணுனவரு கில்போர்ட் லின்டேஸி மோல்ஸ்வீர்த் (Guilford Lindsey Molesworth) ங்கற ஆளுநராம் புக்ஸ்ல படிச்சிருக்கேன்."

"சூப்பர்டி " என்று அனி கூவ

"ட்ரைனுக்கு செலவு பண்ண காசு ஒர்த் தான்பா இந்த டாடிக்கு தான் இதெல்லாம் எப்போ புரிய போகுதோ" என்று தாரு அழுத்துக் கொண்டாள்.

.


"அதெல்லாம் ஒன்னும் யோசிக்காத இன்னையோட சேர்த்து இந்த மூணு நாள் ஒன்லி என்ஜோய்மேன்ட் தான் நோ சோகக் கதைகள் ஓகே ப்ரெண்ட்ஸ் " என்றவாறு லோச்சனா தாருணி மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர் .


, ஆனால் இந்த சுற்றுலா தங்களின் வாழ்க்கையில் புயல் வீச காரணமாக போகிறது என்பதை நண்பர்கள்மூவரும்அறிந்திருக்கவில்லை அறிந்திருந்தால் வந்திருக்க மாட்டார்களோ என்னவோ.

ஆனால் ஒருவனின் வாழ்க்கைக்கு மாத்திரம் விடிவை ஏற்படுத்தும். அவனின் சாபத்திற்கு விமோச்சனம் அளிக்கும்., ஆனால் அந்த சாப விமோச்சனம் மலராத மொட்டின் வாழ்க்கையை முழுதாக அழிக்கும் என்பதை யாரும் அறிந்திலர்.


நண்பர்கள் மூவரும் ஆடிப்பாடி இரண்டரை மணியளவில் நான் ஓயாவை அடைந்தனர். நான் ஓயா ரயில் நிலையத்தை அடைந்தவுடன் அபிஜித்தனின் நம்பிக்கைக்குரிய சேவகனான "மாரி" என்கிற மாரிமுத்து இவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தான்.


வந்திருந்தவனின் விழிகள் பேசி சிரித்த படி நடந்து வந்த மூன்று பெண்களில் ஒருத்தியை பார்த்து பயங்கரமாக இடுங்கியதை மூவரும் கவனிக்கவில்லை.

கவனித்திருந்தால் தனது நண்பியை ஒரு ராட்சசனின் பார்வைபடாமல் காத்திருப்பார்களோ என்னவோ? விதி வலியது தான் போலும் மாரியின் நடவடிக்கைகளை நண்பர்கள் மூவரும் கூர்ந்து கவனித்திருக்கலாம்.
கவனித்திருந்தால் பிற்காலத்தில் வரும் பிரச்சனைகளை இன்றே தவிர்த்திருக்கலாம்.


வதம் தொடரும் ......
***********************************************
ud போட லேட் ஆகிருச்சு சாரி dears வாசிச்சுட்டு உங்க கருத்துக்களை தெரிவிச்சுட்டு போங்க ப்பா ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க திருத்திக்கிறேன் போன udkku லைக் அண்ட் கமெண்ட்ஸ் தந்த செல்லங்களுக்கு thanks alot hero and heroine பெயர் இதுக்குள்ள தான் இருக்கு கண்டுபிடிச்சு comment section ல comment பண்ணிட்டு போங்க dears
 
Last edited:
அத்தியாயம் 2(a)

மாரி நண்பிகள் மூவரையும் பார்த்து, "வாங்கம்மா வாங்க துரை ஐயா சொன்னாரு நீங்க ஊருலயிருந்து வாரீங்கன்னு உங்கள ஒரு குறையில்லாமா கவனிச்சிக்க சொல்லியிருக்காரும்மா"

"அப்போ அபி அத்தான் ஊர்ல இல்லையா ? மாரி அங்கிள்" என்றவாறு சந்தேக பார்வை ஒன்றை மாரியை நோக்கி வீசினாள் தாரு

"இல்லம்மா துரை ஐயா வேலை முடிஞ்சு வர நேரமாகும், உங்களுக்கே தெரியும் ஐயா அவ்வளவு சீக்கிரம் யாரோடையும் ஒட்டி உறவாட மாட்டார்.அதனால...."

"அதனால என்ன ? என்னையும் என் பிரண்ட்ஸையும் பார்க்க வரமாட்டார். அப்டி தானே ! "

"அது வந்து ..ம்மா" என்று இழுத்தவனை

பார்த்து, "விடுங்க மாரி இதெல்லாம் எனக்கு பழகி போனது தானே" என்று கேசுவலாக தோளை குலுக்கி விட்டு தனது பயணப் பொதியை தூக்க போன தாராவை பார்த்து,

"கொடுங்க சின்னம்மா நீங்க எங்க விருந்தாளி உங்க மனம் கோணாம நடக்க வேண்டியது எங்க பொறுப்பு"

"சாரிடா , எங்க வீட்டு ஆளுங்க குணம் தெரிஞ்சும் தேவை இல்லாம உங்களையும் கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்துறனோ தெரில"என்று நண்பிகளை கவலையாக ஏறிட்டாள் தாருணி

சட்டென்று நிலைமையை இலகுவாக்கும் பொருட்டு லோச்சனா,

"ச்சே ச்சே அப்டியெல்லாம் இல்ல அனிய பாரு உங்க அத்தான் வரமாட்டாருனு சொன்னவுடனே அவ முகத்தில தவுசண்ட் வால்ட் பல்ப் எரியுது"

"ஏண்டாம்மா லோச்சு நான் பாட்டுக்கு சிவனேனு தானே இருக்கேன் சும்மா என்ன கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்குற " என்று வடிவேல்பாணியில் அனி பேச

"ஓஹோ! இவ தானே அந்த ஆண்களில்லாத உலகம் கேட்டேன்னு பாடினது மறந்தே போச்சு பாரு" என்று தாருவும் தன் பங்கிற்கு அனிதாவின் காலை வார மூவரும் இணைந்து நகைத்தவாறே,

ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர்.

நண்பர்கள் மூவரும் நான் ஓயாவின் எழிலை ரசித்த வண்ணம் கதை அளந்தபடி காரில் அபிஜித்தன் சக்கரவர்த்தியின் கெஸ்ட் ஹவுஸ் பங்களாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

லோச்சனா, " அங்கிள் இங்கிருந்து உடவேறியா டீ பாக்டரி எத்தின கிலோ மீட்டர் ? இங்கிருந்து போக எவ்வளவு நேரம் ஆகும் ?" என்றது தான் தாமதம் காரை சடன் பிரேக் அடித்து நிப்பாட்டிய மாரி உட்பட அனைவரும் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தனர்.

"ஹேய் எல்லாரும் ஏன் என்ன ஒரு மாதிரி பார்க்குறீங்க ? ஒரு முறை தாரு தான் சொல்லிக்கிட்டு இருந்தா அந்த பாக்டரி இவங்க குடும்பத்துக்கு தான் சொந்தம் ஆனா மூடியிருக்குனு சொன்னா அது தான் சும்மா பார்க்கலாமேனு கேட்டேன் அதுக்கு ஏன் எல்லாரும் ஷாக் ஆகுறீங்க?" என்றபடி கேசுவலாக தோளை குலுக்கினாள். லோச்சனா ,


பிறகு கெஸ்ட் ஹவுஸ் பங்களா வரும் வரை காரில் பலத்த அமைதியே ஆட்சி செய்தது.


"சக்கரவர்த்தி டீ எஸ்டேட்" (பெயர் வெறும் கற்பனையே ) என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகைகள் பச்சை பசேலென பறந்து விரிந்த தேயிலை தோட்டத்தில் ஆங்காங்கே காணப்பட்டது.அந்த தேயிலை தோட்டத்தை தாண்டி உள்நோக்கி சற்று மேடான விரிந்த பாதையினுள் சென்ற காரானது பெரிய கருப்பு கேட்டினுள் நுழைந்தது.

வெளியே தேயிலை தோட்டங்கள் ஒரு விதமான சொர்க்கலோகமாக காட்சியளித்தது. என்றால் உள்ளே விதவிதமான ரோஜா, ஓர்கிட், பார்பன்டேஸ் ,சீனியாஸ் ,செம்பருத்தி, அந்தூரியும் என கண்ணுகிதமாய் பல பூக்களும் ஸ்ட்ராவ்பெரி, ப்ளூ பெரி,ராஸ்பெர்ரி என வெளிநாட்டு பழங்கள் பூக்கள் என அந்த பதினைந்தாயிரம் சதுர அடி நிலமும் ஒரு சிறிய சொர்க்கத்தையே உள்ளடக்கியிருந்தது.


இயற்கையிலேயே லோச்சனா சிறந்த கலா ரசிகை அவளுக்கு ஏனோ இந்த தோட்டத்தில் ஒவ்வொரு பகுதியும் தனக்காக யாரோ பார்த்து பார்த்து செதுக்கியது. போல்அவளுக்கு தோன்றியது ஒவ்வொரு இடமாய் பார்வையிட்டு கொண்டு வந்தவள் கண்ணில் பட்டது என்னவோ அழகிய தேக்கு ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த மரம் தான் , அந்த மரத்திற்கருகில் செல்ல செல்ல லோச்சனாவின் இதயம் வேகமாக படபடத்தது

'ஏய் கிறுக்கி இதெல்லாம் உனக்கு தான் என்ன பிடிச்சிருக்கா ?'

'நம்ம பாப்பா உன்ன மாதிரி இருக்குமா ? இல்லாட்டி என்ன மாதிரியா ?'

'மறுபடி அவனை நம்பாத!!' எனப் பல குரல்கள் ,கூச்சல்கள் அவள் தலைக்குள் கேட்பது போல் ஒரு மாயை தோன்ற லோச்சனா தலையை பற்றிக் கொண்டு

"ஐயோ ஆ.... ம்மாஆ ...... பேசாதீங்க ப்ளீஸ் தலைக்குள்ள என்னமோ பண்ணுது" என்றபடி காதை இறுக மூடி பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்தாள் லோச்சனா

லோச்சனாவை காணவில்லையே என தேடிக் கொண்டு வந்த அனிதா கண்ணில் இந்த காட்சி பட

"லோச்சு லோச்சு ஏய் இங்க பாரு", என தட்டிக் கொண்டே,

"தாரு தாருணி லோச்சனா மயங்கிட்டா இங்க வாயேன்" என்று கத்தி கூப்பிட ஆரம்பித்தாள் லோச்சனாவின்
ஆரூயிர் தோழி அனிதா

அந்த இடத்தை நோக்கி ஓடி வந்த தாருணி,

"என்னாச்சுடி ?நல்லா தானே இருந்தா"

"எனக்கெப்படி தெரியும்? நானும் இப்போ தான் இவளை காணோமேனு தேடி வந்தேன் பார்த்தா மயங்கி விழுந்துட்டா"

"தண்ணீ கொண்டு வா! தெளிச்சு பார்ப்போம்"

அங்கிள் டாக்டருக்கு கால் பண்ணுங்க ப்ளீஸ் என்று தாருணி கூற

மாரியும் டாக்டருக்கு அழைக்க முன்பே தண்ணீர் தெளித்து லோச்சனாவை எழுப்பியிருந்தனர்

தண்ணீர் தெளித்தவுடன் சற்றே தெளிந்த லோச்சு சுற்றி முற்றி பார்வையை சுழற்றினாள் கண்களில் அந்த ஊஞ்சல் தொங்க விடப்பட்டிருந்த மரத்தை பார்த்தவுடன் அப்பட்டமான மிரட்சி தெரிய

"ஏன் பாப்பா அந்த மரத்துக்கிட்ட ஏதும் போனீங்களா ?" ஆமாம் என்பதை போல் தலையசைத்தவளை பார்த்து
மாரி பெரு மூச்சை இழுத்து விட்டான்.
அங்கிள் டாக்டருக்கு கால் பண்ணல

இல்லடி எனக்கு ஒன்னுமில்ல டயர்டுக்கு இப்டி ஆகிருச்சு டாக்டர்லாம் வேணாம் ஐயம் ஓகே நவ்

இது பயத்துல வந்த மயக்கம்தானே தவிர வேற ஒண்ணுமில்ல சின்னம்மா

தாரு ஏதோ சொல்ல வர , ப்ளீஸ் டி இது சின்ன விஷயம் தான் பெருசு பண்ணாத எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன கூட்டிட்டு போயிருவாங்க என்று இறைஞ்சியவளை பார்த்து சரியென்று தலையசைத்தாள். தாருணி,

"இங்க பாருங்கம்மா இங்க இருக்குற மூணு நாட்களுக்கு சில விஷயங்கள் இருக்கு அதுப்படி தான் நடந்துக்கணும்"

"நீங்க காலைல ஊர சுத்தி பார்க்க நம்ம கார் ஜீப் எதுனாலும் எடுத்துட்டு போகலாம் ஆனா டிரைவரா சுசில் இல்லாட்டி நான் கட்டாயம் உங்க கூட வந்தே ஆவோம் இது துரை ஐயாவோட கட்டளை "

"எங்க போனாலும் அந்தி ஆறு மணிக்குள்ள இந்த வீட்டுக்கு வந்துரனும் ஆறரை மணிக்கு வள்ளியம்மை உங்களுக்கு ரா சாப்பாடு செஞ்சு வச்சிருப்பாங்க அதை சாப்புட்டு, எட்டு மணிக்குள்ள படுத்துறனும்"

"ஒன்பது மணிக்கு மேல முழிச்சிருந்தா என்ன சத்தம் கேட்டாலும் உங்க ரூம்ல இருந்து வெளிய வாரதோ, இல்லாட்டி ஜன்னல் வழியா எட்டி பார்குறதோ கூடவே கூடாது."

"முக்கியமா கெஸ்ட் ஹவுஸ் தான் உங்க வீடு அதை தாண்டி இந்த தோட்டத்துல கெஸ்ட் ஹவுஸ் பக்கம் இருக்கும் இடத்த சுத்தி பாருங்க துரையோட பங்களா, அந்த ஊஞ்சல் ,காராஜ் எதுகிட்டயும் நெருங்க கூட முயற்சிக்காதீங்க அது உங்களுக்கே ஆபத்தா முடிஞ்சிரும் இப்போ மாறி, அந்த பக்கம் வரவேக்கூடாது சின்னம்மா இது உங்களுக்கும் சேர்த்து தான் ஐயா சொல்ல சொன்னாங்க"
கறாராக கூறினார். மாரிமுத்து

ஏன் மச்சி உங்க பொத்தான் ஹாஸ்டல் வார்டனா ஏதும் வேலை செஞ்சாரா ? இல்லனா மிலிட்டரி காமண்டரா ஏதும் வேலை பார்த்தாரா?

இல்லையே, ஏன் கேக்குற ?

பின்ன என்னடி இத்தன மணிக்கு சாப்பிடணும் இத்தன மணிக்கு தூங்கணும்னு ரூல்ஸ் போட்றாரு அதான் கேட்டேன்

ஏன் அங்கிள் இங்க லைப்ரரி இருக்கா ?

'இங்கயும் வந்து ஆரம்பிச்சிட்டியா? ' என்பதை போல் நண்பிகள் இருவரும் பார்த்து வைக்க

"அது துரை ஐயா ரூம் பக்கத்துல இருக்கு பாப்பா அங்கயெல்லாம் உங்களுக்கு அனுமதியில்லம்மா"

ஓ சரி அங்கிள் என்றவளின் குரல் சுரத்தை இல்லாமல் ஒலித்தது.

"ஹப்பாடா எங்களுக்கு பரம திருப்தி இப்போ தான்" என்று நண்பிகள் இருவரும் ஒரு போல் கூறி

லோச்சனாவின் முறைப்பை பரிசாக வாங்கினர் நண்பிகள் இருவரும்

இவர்களின் சிரிப்பு முறைப்பு எல்லாவற்றையும் ஒரு வித பொறாமையுடனும் ஏக்கத்துடனும் இரு கண்கள் நோக்கியதை மூவரும் கவனிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். கவனித்திருந்தாலும் இனிமேல் தப்பிக்க வழியில்லை மூன்று புறாக்களையும் பொறி வைத்து பிடித்திருக்கிறான் வேடன் தன் காதல் மாட புறாவை வேட்டையாட அதற்கு மற்றைய இரு மணிப்புறாக்களும் அவன் வசம் வேண்டும்."அங்கே வந்த வள்ளியம்மை சின்னம்மா எப்டி இருக்கீங்க ?", கண்டு எவ்வளவு நாளாச்சு என்றவுடன் தாரு லேசாக முறுவலித்தாள்.

"சரி சரி வாங்க பிரயாண களைப்பாயிருக்கும் டீ ஊத்தி தாரேன் உள்ள போவோம்" என்றவுடன்
மூவரும் கெஸ்ட் ஹவுசினுள் நூழையும் போது மாரி கடைசியாக நூழைந்த லோச்சனாவை அழைத்தார்.

"லோச்சனாம்மா இங்க இருக்க மட்டும் நீங்க தான் அவங்க ரெண்டு பேரையும் விட கவனமாயிருக்கணும்
முக்கியமா துரை ஐயா கண்ணுல பட்டுறாதீங்க, உங்க வயசுல எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா அது தான் சொல்றேன் இப்ப உங்கள்ட சொன்ன எதையும் உங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட கூட சொல்லாதீங்க இப்ப போங்க"

லோச்சனாவும் ஒரு வித குழப்பத்துடனேயே பங்காளவினுள் நுழைந்தாள்.


பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதால் புதுமையும் பழையமையும் கலந்து வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. சுவர்கள் செங்கற்களும் கருங்கற்களும் பதிக்கப்பட்டும் தரை ஹார்ட்வுட் பிளோரிங் செய்யப்பட்டிருந்தது. வேலையாள் அறை உட்பட ஆறு அறைகள் ஆறு அறைகளும் ஒரே தளத்தில் அமைந்திருந்தது.அபிஜித்தன் விருந்தினர் மாளிகையிலும் சரி அவனது வீடான எஸ்டேட் பங்களாவிலும் சரி நிறைய மாற்றங்கள் செய்திருந்தான்.

ஆனால் அவை பழைமை மாறா புதுமையுடன் புதுப்பித்திருந்தான். நானு ஓயா பிரதேசம் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த பகுதி என்பதால் பொதுவாக குளிரான சீதோஷ்ணத்தையே கொண்டிருக்கும் அதனாலேயே அபிஜித்தனுக்கு சிறு வயது முதல் நானு ஓயா பிடித்தமான இடமாக மாறிப்போனது.

மாதத்தில் இரண்டு நாட்களில் மட்டுமே கொழும்பிலிருக்கும் தன் தாய் தகப்பனுடன் தங்குவான். மீதி நாட்களெல்லாம் இந்த ஊரே கதியென கிடப்பான். இந்த தேயிலை தோட்டங்கள் பொழுது போக்குக்காக சேர்த்து வைத்திருக்கும் பழமையான பிரித்தானியர் கால கார்கள் அதிலும் அவன் பூட்டன் வைத்திருந்த"ஆஸ்டின் கம்பிரிட்ஜ்" இந்த பூக்கள் இவை மட்டுமே அவனை உயிர்ப்போடு வைத்திருக்கும் காரணிகள் இவை இல்லையென்றால் என்றோ மரித்திருப்பான். மன்னவன்,

நண்பர்கள் மூவரும் வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டிருந்த தருணம் வள்ளியம்மை மூவருக்கும் தேவையான சிற்றுண்டிகளையும் சூடான தேநீரையும் தயார் செய்திருந்தார்.

"சின்னம்மா ,பப்பாம்மா ,தாராம்மா வாங்க டீ குடிங்க" என்று அழைத்தார்

"ஏய் வள்ளி உனக்கு என்ன பைத்தியமா ? துரை ஐயாவோட பிரச்சனை தெரிஞ்சும் இப்டி கூப்புட்டு அந்த பொண்ண மாட்டிவிட பாக்குறியா ?"

"உனக்கு ஒரு பேத்தி இருந்தா இப்படி செய்வியா ?"

என்று கேட்ட மாரியை பார்த்து,

"இங்க பாரும் கட்டாயம் இப்டி தான் செய்வேன் என் பேராண்டிக்கு என்ன குறைவு சீமராசா கணக்கா இருக்கார் ஏதோ போதாத காலம் இப்டி ஆகி போச்சு அதுவும் தாராம்மா நினைவால தான் இப்பயும் அந்த நாட்கள் தவிர மத்த நேரம் எல்லாம் அபி ஐயா கம்பீரமா தான் இருக்காங்க "


"இருந்தாலும் கிழவி" என்று ஏதோ சொல்ல வர , சட்டென்று இடையிட்டவள்ளியம்மை,

"யோவ் நீர் வாய மூடும் அது நம்ம தாராம்மா தான் அவங்களுக்கு பழசெல்லாம் நியாபகத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா வந்து நம்ம அபி ஐய்யாவோட சேர்ந்து வாழுவாங்க இந்த பங்களா முழுக்க ஐயாவோட பசங்களா சுத்தி வருவாங்க நீ வேணும்னா பாரும் நான் சொல்லுறேன்" என்று உணர்ச்சி பெருக்கோடு கூறினாள் அம்மூதாட்டி


"வள்ளி நீ பாட்டுக்கு வந்ததும் வாராததுமா அந்த பொண்ண தாராம்மா னு கூப்பிட்டா என்ன நினைக்கும் ?"

"இப்போ எப்பிடி சமாளிக்கிறேன்னு மட்டும் பாரு"

"பாட்டிமா யார தாரானு கூப்பிட்டீங்க ?" என்று கனிவோடு கேட்டாள் லோச்சனா

"உங்கள தான்மா" என்றவுடன்

"பாட்டிமா என் பேரு தாரா கிடையாது லோச்சனா சரியா நீங்க யாரோனு நினைச்சு என்ன தாரானு கூப்பிடறீங்க"


"ஆமாம்மா எனக்கு ஒரு பேத்தி இருந்தா பேரு தாமரை அவள தாரானு தான் கூப்பிடுவோம் அந்த நியாபகத்துல தான்" என்றபடி வாயை பொத்திக் கொண்டு வள்ளியம்மை அழ ஆரம்பித்து விட்டார்.

'அடிப்பாவி கிழவி என்ன அவார்டா குடுக்குறாங்க? இந்த மாறி நடிக்குற! அஞ்சு ரூபாய்க்கு நடிப்பானு பார்த்தா ஐம்பதாயிரத்துக்கு ஆக்ட்டிங் பண்ற சினிமாக்கு போயிருந்தா சாவித்ரிய ஓரங்கட்டிருக்கும்'

என்று வள்ளியம்மையின் நடிப்பை விழிவிரித்து பார்த்திருந்தார். மாரி

லோச்சனா கிழவியை அணைத்தபடியே, "ஏன் அங்கிள் அழுகுறாங்க இவங்க பேத்திக்கு என்னாச்சு ?" என்று மாரியிடம் கேட்க அவரோ என்னத்தை சொல்ல என்றபடி விழிக்க

அவருக்கு தான் தெரியுமே கிழவிக்கு யாருமில்லை அபிதான் அடைக்கலம் கொடுத்து "பாட்டி"," பாட்டி" என்று வாய்க்கு வாய் கூப்பிட்டு உனக்கு பேரனாக நானிருக்கிறேன். என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு திரிகிறான். ரத்த சம்மந்தம் இல்லாத பேரனுக்காக தான் பாட்டியும் ஆஸ்க்கார் லெவல் ஆக்ட்டிங் எல்லாம் போடுகிறார்

மாரி பேந்த பேந்த விழிப்பதை பார்த்த பாட்டி காரியத்தை கெடுத்து விடுவான் என்று எண்ணி தானே களத்தில் குதித்தார்.

"அத ஏன்மா கேக்குற அவ அல்பாயுசுலயே போய்ட்டா" என்றபடி மறுபடியும் லோச்சனாவை அணைத்தபடி அழ ஆரம்பித்தார்.

"அழாதீங்க பாட்டிமா இங்க இருக்க ரெண்டு நாளும் நான்தான் உங்க தாரா சரியா அழாதீங்க வாங்க போகலாம்" என்று அணைத்தபடி அழைத்து சென்றாள் லோச்சு

இதையெல்லாம் பார்த்த தாரு ஏனோ இவற்றை சாதாரணமாக கடந்து சென்றாலும் அனிதாவுக்கு ஏனோ இவற்றை சாதாரண விஷயமாக எடுத்து கொள்ளமுடியவில்லை ஏதோ ஒரு ஆபத்து லோச்சனாவை சூழ்வதாக
உணர்ந்தாள்.

'கடவுளே என் தோழி எப்போதும்சந்தோஷமாக இருக்க வேண்டும் அவள பத்திரமாவும் இருக்க வேண்டும்' என மானசீகமாக பிரார்தித்துக் கொண்டாள் இருந்தும் அனிதாவின் பிரார்த்தனைகள் எதுவும் துரதிஷ்டவசமாக கடவுளை அடையாமல் தான் போனது போலும் லோச்சனாவின் சந்தோஷங்கள் கண்ணீராக மாறும் நாட்கள் தொலைவில் இல்லையேஅபிஜித்தனின் வீட்டில்

"ஆ ..........ஆ...... தாரா ...... இங்க என்கிட்ட வந்துரு என்ன வெறி பிடிச்சவனா மாத்தாத தாரா ஏய் உன்ன விட மாட்டேன்டி" என்று கத்தியபடி தன் கையிலிருந்த மது பாட்டிலை ஓங்கி தரையில் அடித்து உடைத்தான் அபிஜித்தன் சக்ரவர்த்தி, அப்படியே கையில் வைத்திருந்த புகைப்படத்துடன் பேச ஆரம்பித்தான்.


"தாரா உன்ன நாயா பேயா கிட்டத்தட்ட வருஷக்கணக்கா தேடி அலைஞ்சேன் என் கண்ணுல படாம ஆட்டம் காட்டிட்டு இருந்திருக்க" என்று ஆச்சரியமாகவும் ஒரு வித அழுத்தத்துடனும் பேச ஆரம்பித்தான்.

"இப்ப நீ எங்கேயிருக்க என்ன பண்றனு எல்லாம் எனக்கு தெரியும்டி , இவ்வளவு நாள் என் கோட்டைக்குள்ள ஒரு ஈ எறும்பு நுழைஞ்சதில்ல சொந்தக்காரன்னு ஒரு பயலையும் நுழைய விட்டதுமில்ல இப்போ உன்னையும் உன் ப்ரெண்ட்ஸையும் நுழைய விட்டேன் ஏன்னு தெரியுமா ? புருவம் உயர்த்தி ஒரு வித கேலியுடன் புகைப்படத்திலிருந்த லோச்சனாவிடம் பேச ஆரம்பித்தான்.

"உனக்காக உனக்காக மட்டும் தாண்டி அந்த ஊஞ்சல் மட்டும் நியாபகமிருக்கு உனக்காக ஊஞ்சல் மாட்டினவன நியாபகம் இல்லையா?" இவனது செயல்களை பார்த்தால் எவ்வளவு தைரியமானவருக்கும் ஒரு வித கிலி பரவுவதை நிச்சயமாக தடுக்க இயலாது .

"பார்த்தேன் நீ மயங்கி விழுந்ததையும் பார்த்தேன் உனக்காக உன் ப்ரெண்ட்ஸ் துடிக்கிறாங்க, உன் அம்மா அப்பா துடிக்கிறாங்க எனக்காக துடிச்ச ஒருத்தி நீ தான் நீயும் இப்ப தூரமா போயிட்ட ஏண்டி எனக்கு மட்டும் எந்த உறவும் நிலைக்குதில்ல? என்று கலக்கத்துடன் முடித்தான். அபிஜித்தன்

பிறகு ஒருவித நிமிர்வுடன் "விடமாட்டேன்டி விடவேமாட்டேன் இது ஒரு வழி பாதை என்கிட்ட வந்துட்ட இனி என் கோட்டையை விட்டு உன் உயிரென்ன ? ம *ரு கூட என் அனுமதியில்லாம போக முடியாதுடீ ......." ஆங்காரமாக ஒலித்தது அபிஜித்தனின் குரல் அக்குரலிலிருந்த உறுதி ஏதோ ஒரு விடயத்தை சொல்லாமல் சொல்லியது


******************************************************************************************

இப்ப தான் type பண்ணி முடிச்சேன் மக்கா கண்ணு கையெல்லாம் செம்ம வலி அடுத்த episode நாளைக்கு தான் டெய்லி ஒரு ud தாரேன் கதை உங்களுக்கு பிடிச்சிருக்கா மக்களே plss சொல்லிட்டு போங்க நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் எனக்கும் ஒரு வேகம் வரும் ஒரு நாளைக்கு 2 episodes ஆவது தர try பண்ணுவேன் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 

Attachments

  • 20230215_082008.jpg
    20230215_082008.jpg
    756.2 KB · Views: 8
Last edited:
அத்தியாயம் 2(b)


தாருவுக்கும் அவளது நண்பிகளுக்கும் கெஸ்ட் ஹவுசில் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு எஸ்டேட் பங்களாவின் வாசலில் கால் வைத்த மாரியை பார்த்த அபி,

"மாரி அங்கேயே நில்லு" என்ற சன்னமான குரலில் உறைந்து நின்றான் மாரி

"மாரி நீ தாரா கிட்ட கடைசியா என்ன சொன்ன ?"

"அது வந்துங்க ஐயா இங்க இருக்க மட்டும் எப்டி இருக்கனும்னு சொன்னேங்க"

"பொய், என்கிட்டயே பொய் சொல்றியா ? சொல்லு மாரி" என்று வெறி பிடித்தவன் போல் கத்தினான்.
அபிஜித்தன்

"இல்லைங்க ஐயா "

"அப்போ என்ன சொன்னனு சொல்லு மாரி" இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து தடவியபடியே கேட்க

மாரியும் மிடறு விழுங்கியபடி , "அது வந்து ஐயா" என ஆரம்பிக்க மீதி வார்த்தைகளை தனதாக்கிக் கொண்டான்

"அவங்க ரெண்டு பேரையும் விட நீங்க தான் கவனமா இருக்கணும் முக்கியமா துரை ஐயா கண்ணுலயே படக்கூடாது ஏன் சொல்லறேனா எனக்கும் உங்க வயசுல ஒரு பொண்ணு இருக்கு அப்டித்தானே மாரி ?"என்று புருவத்தை ஏற்றி இறக்கி ஒரு தினுசாக கேட்க

மாரி பயத்தில் வெலவெலத்து போனார்., "என்ன மாரி கரெக்ட்டா கண்டுபிடிச்சேனா ?" என்று ஒரு மார்க்கமாக சிரிக்க,

'எப்படி இவருக்கு தெரியும் நாம அங்க பேசுனது இங்க மட்டுமா கேட்டுச்சு' என்று யோசித்தபடியே பயத்தில் உறைந்து நிற்க

"என்ன மாரி இவனுக்கு எப்டி தெரியும்னு பார்க்குறியா ? இது அபிஜித்தன் சக்ரவர்த்தியோட கோட்டை இங்க உள்ள செங்கல்ல இருந்து வீசுற காத்து மட்டும் இந்த அபிஜித்தனுக்கு மட்டும் தான் விசுவாசத்தை காட்டும்
என்ன மாரி புரிஞ்சுதா ?" என்றபடி அசுர சிரிப்பு சிரித்தான். அபிஜித்தன்,

"அப்புறம் நீ மட்டும் ஏன் மாரி எனக்கு விசுவாசமில்லாம நடந்துக்குற ? இன்னைக்கு வந்த எஜமானிக்காக இந்த எஜமானுக்கு விசுவாசமில்லாம போகலாமா மாரி, சொல்லு மாரி சொல்லு?" என்றபடியே

உடைந்த கண்ணாடி போத்தலுடன் அபிஜித்தன் நெருங்கி வந்த தினுசில் மாரி பயத்தில் செய்வதறியாது உறைந்து நின்றிருந்தார்.மாரிமுத்து

மாரியின் அருகே வந்த அபி, அவரது சட்டையை கொத்தாக தூக்கி பிடித்து சுவரில் சாய்த்த வண்ணம்

"அது எப்டி எப்டி லோச்சனாம்மா ஐயா கண்ணு முன்னாடி வந்துராதீங்களா ? நான் போட்ட உப்பையே தின்னுட்டு எனக்கே நீ துரோகம் செய்வ இதெல்லாம் பார்த்துட்டு நான் வெரல் சூப்பணுமா" உடைந்த கண்ணாடி போத்தலின் கூர் முனையை மாரியின் கண்களை குறி பார்த்து வைத்தவன்

"சொல்லு மாரி உன் கண்ணுக்கும் நான் பைத்தியக்காரனாவ தெரியுறேன் இந்த வரைஞ்ச போட்டோவ வச்சிக்கிட்டு பதினைஞ்சு பதினாறு வருஷமா தெரு தெருவா அலைஞ்சுருக்கேன் யார தேடி இவள தேடி" என்று உடைந்த குரலில் பேசியவன் சட்டென்று ,

"நீயும் தானேடா என்னோட தேடி அலைஞ்ச இப்போ கையில வந்து வசமா சிக்கும் போது விட்ருவேனா?" என்று புலியாக உறும அபிஜித்தனின் இரு வேறு செயற்பாடுகளில் குழம்பி திகிலின் உச்சத்துக்கே சென்றார்.
மாரி,

"மன்னிச்சிடுங்க ஐயா ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன் நான் புள்ளகுட்டி காரன் இனிமே தப்பு நடக்காதுங்க ஐயா" என்று அழவே ஆரம்பித்துவிட்டார் மனிதர் ,

வீட்டினுள் நுழைந்த வள்ளியம்மையின் கண்ணில் இந்த காட்சி பட வயதையும் கருத்தில் கொள்ளாமல் ஓடோடிச் சென்று அபிஜித்தனின் கையை பிடித்து,

"அப்பு சொன்னா கேளுங்க அத கீழ போடுங்க இப்போ தான் உங்களுக்கு வாழ்வு வந்துருக்கு அப்டி இருக்கும் போது நீங்க உங்க கைய கரையாக்கிக்காதீங்க விடுங்க" என்று வள்ளியம்மை கெஞ்ச

ஏதோ நினைத்தவனாக மாரியின் சட்டையை விட்டவன் உடைந்த கண்ணாடி போத்தலையும் தரையில் விட்டெறிந்த வண்ணம் அருகே கிடந்த நீள்விருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.அமர்ந்தவனது எண்ணங்களை ஆட்சி செய்தது என்னவோ அவன் செல்ல ராட்சசி தான்

"என்ன அப்பு யோசிக்கிறீங்க ?" என்று`தலையை வருடியபடி கேட்ட மூதாட்டியை பாட்டி என்றபடி மடியில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான் அந்த ஆறடி ஆண்மகன்

"இல்ல பாட்டி என்ன பைத்தியம்னு சொல்லி தாராவும் வேணானு சொல்லிருவாளோனு பயமாயிருக்கு" என்று மறுபடியும் அழ ஆரம்பித்தான் அபிஜித்தன்

"என் ராசா ஆழாதப்பா அப்டி என் பேரனுக்கு என்ன குறைச்சல்? ஏன் வேணான்னு சொல்லுவா? என் பேரன் சீமராசா கணக்கா இருக்கும் போது எப்டி வேணான்னு சொல்லுவா ? எப்போவும் நீங்க கம்பீரமாயிருக்கணும் அப்பு சரியா" என்று தேற்றியவர்

"நாளைக்கு வந்துருக்க உன் அத்த பொண்ணுக்கிட்டயும் அவ ஸ்நேகிதிங்கள்டயும் பேசுப்பா உனக்கும் தாராம்மாவ பார்த்த மாறியும் இருக்கும் பேசுன மாறியும் இருக்கும்" என்று பாட்டி யோசனை பேரனும் சந்தோஷமாக அதற்கு சம்மதம் சொல்ல இடமே குதூகலமாக மாறியது.


"சரி பாட்டி அப்டியே செய்வோம் " என்று டீன் ஏஜ் பையன் போல துள்ளலுடன் எழுந்து தனதறைக்கு சென்றான்.

"கிழவி நல்ல வேலை என்ன காப்பாத்துன இல்லனா ஐயா இந்நேரம் என்ன கொன்னு புதைச்சிருப்பாரு""

"ரொம்ப நன்றி கிழவி"

"இங்க பாரும், மாரி நீங்க ரெண்டு பேரும் பேசுனத நானும் கேட்டேன் நானும் உன்ன ரெண்டு மொத்து மொத்தி முலைல போடட்டும்னு தான் பேசாம நின்னேன்"

"என்ன கிழவி சொல்ற?"

"ஆமா அப்டிதான் யோசிச்சேன்"

"என்ன கொல்ல பார்த்ததும் பாவமேனு காப்பாத்துனியா கெழவி?"

"இல்லடா விளங்காதவனே என் பேராண்டி கை ஏன் கறையாகணும்னு தான் உன்ன காப்பாத்தி விட்டேன் இனிமே இப்டி ஏதாவது ஏடாகூடம் பண்ண நானே கத்திய எடுத்து சொருகிருவேன் பார்த்துக்க" என்று பத்திரம் என ஆள்க்காட்டி விரலை நீட்டி எச்சரித்து விட்டுச் சென்றார் வள்ளியம்மை

'அப்ப பாட்டியும் பேரனும் ஒரு முடிவோட தான் இருக்கீங்களா நடத்துங்க நடத்துங்க, மாரி மண்டபத்திரம்' என நினைத்தவர் அதன் பிறகு வாய் திறக்கவில்லை.

கெஸ்ட் ஹவுஸ் பங்களாவில்

"உங்க அருமை நொத்தான் எப்பிடிடா" என்று லோச்சு கேட்க

"புரியுற மாதிரி கேளுடி " என்றாள் தாரு

"அதுவா எத்தன வயசு? ஆள் நல்லவரா? கெட்டவரா? இப்டி எக்ஸெற்றா எக்ஸெற்றா" இப்படி ஏதாவது சொல்லுடி

"ஓ அதுவா அவருக்கு இப்ப முப்பத்தைஞ்சு வயசுடி "என்று தாரு கூற

"ஓ அப்ப மனுஷன் அரை கிழவனா ?" என்று அனி நக்கல் செய்ய

" நான் இப்போ ஒன்னும் சொல்லமாட்டேன் அவள சும்மா இருக்க சொல்லு" தாரு முறுக்கி கொள்ள

"அனி கொஞ்சம் சும்மா இரேன்டி" என்று அனிதாவின் வாயை அடக்கியவள்

"சரி நீ சொல்லு தாரு" என்று இன்னும் ஆர்வமாக அவனை பற்றி கேட்க ஆரம்பித்தாள்

"இன்னும் கல்யாணம் பண்ணல அதுக்குனு பொண்ணுங்க சகவாசம் அப்டி இப்டினு ஒண்ணுமில்ல"

"ரொம்ப நல்ல மனுஷன் எப்பயும் சிரிச்சு கலகலனு பேசுவார்"

"இப்போ அவங்க வீட்டுக்கே போறதில்ல வீட்டு ஆளுங்க மேல ஏதோ கோவம்னு தெரியும் என்ன
கோவம்னு தான் எனக்கும் தெரில"

"ஓ அப்டியா சங்கதி" என்று அந்த கதைக்கு முற்று புள்ளி வைத்தாள் லோச்சனா

"சரிடி நான் என் ரூமுக்கு போறேன் குட் நைட் எனக்கு டையார்ட் ஆ இருக்கு அப்டியே மைக்கல்டையும்
பேசணும்" என்று தாரு அங்கிருந்து நகர

"மச்சி இவ்ளோ பெரிய வீட்ல தனியா இருக்க ஒரு மாதிரி பயமாயிருக்கு அடுத்து அந்த தாரு பொண்ணுக்கு
மைக்கல் ஜாக்சன்னு ஏதாவது வெள்ள பணியாரம் கம்பெனி கொடுக்கும் நம்மளுக்கு யாரிருக்கா" என்று அனி லோச்சனாவின் தோளை சுரண்ட

லோச்சனா சிந்திப்பது போல் பாவனை செய்து விட்டு ,"நம்மளுக்கு தானே மச்சி எனக்கு நீ உனக்கு நான்"

"நண்பிடா ஆமான்டா" என்று அனியும் லோச்சனாவும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்

அப்படியே கொஞ்ச நேரம் கூத்தடித்து விட்டு பயண களைப்பில் உறங்கியும் போனார்கள்.இவர்கள் உறங்கி
போனதை உறுதி செய்து கொண்ட தாருணிக்கவோ பூனை போல் பதுங்கி பதுங்கி அபியின் வீட்டை அடைந்தாள்.


நீள்விருக்கையில் காலுக்கு மேல் கால் போட்டு ராஜதோரணையில் அமர்ந்திருந்த அபிஜித்தோ,

"வாங்க மேடம் வாங்க எங்க வாராமல் போயிருவீங்களோனு நினச்சேன்" என்றான் கேலியாக

அவனருகில் வந்த தாருவோ மண்டியிட்டு இரு கைகளையும் கூப்பிய வண்ணம்,

"அத்தான் ப்ளீஸ் அத்தான் நீங்க சொன்னபடி தானே எல்லாம் பண்றேன் மைக்க விட்ருங்க"என்று
கெஞ்சினாள்

"அந்த மைக்கல ஏன் விட சொல்றன்னு எனக்கு நல்லா தெரியும்டி சும்மா லவ் பன்றேன்னு ரீல் விடாத" என்று காதை குடைந்து கொண்டே அபி கூற

தன் குட்டு வெளிப்பட்டு விட்டதை எண்ணி வெட்கினாள் தாருணிக்கா

"இல்ல அத்தான் அது வந்து..." என்று தயங்கியவளை பார்த்து இடி இடியென சிரித்தான் அபிஜித்தன்

"ஏதே அத்தானா ? உனக்கு இப்டி மரியாதையா கூட கதைக்க வருமா தாருணிக்கா ச்சீ ச்சீ இல்ல
இல்ல தாருணிக்கா ஸ்டெல்லா ஆண்ட்ருவ்ஸ் மரியம் அது தானே உன் பேரு இனி உன்ன ஸ்டெல்லானு

கூப்பிடுறேன் அதுல கூட என் தாராம்மா பெயர் வாரது எனக்கு பிடிக்கல முடிஞ்சா இங்கேயிருந்து
போனவுடனே தாருணிக்காவதூக்கிட்டு ஸ்டெல்லா ஆண்ட்ருஸ்னு மாத்திக்க, ஓகே காட் இட் " என்று அழுத்தமாக
இதை செய்தே ஆகவேண்டும் என்பது போல் அவன் குரல் மிரட்டியது.


"இங்க பாரு ஸ்டெல்லா எனக்கு இந்த எல்லா விஷயத்துலயும் ஹெல்ப் பண்ணி தான் ஆகணும் முடியாதுனு
அடம்பிடிச்ச உன்னோட சுயரூபம் எல்லாம் உன் வீட்டு ஆளுங்களுக்கு தெரியவரும் பார்த்துக்க அப்புறம் உனக்கே தெரியும் உன்ன என்ன பண்ணுவாங்கனு "

"ஐயோ! அத்தான் அப்டி எதுவும் செஞ்சுராதிங்க நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்"

"கொழும்புல இருந்து உங்கள இங்க வரவைக்க தெரிஞ்ச எனக்கு, உன் பாய் பிரண்ட் யாரு நீ யாரு நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து என்ன கூட்டு களவாணித்தனம் பண்றீங்கனு எல்லாத்தையும் ஒருமணி நேரத்துல தெரிஞ்சிக்க முடிஞ்ச எனக்கு உன் கதைய முடிக்க எனக்கு பைவ் மினிட்ஸ் போதும் அது உனக்கே தெரியும் எல்லாம் நீ நடந்துக்குற விதத்த பொறுத்து தங்கியிருக்கு"

என்றபடி தாருணியை நெருங்கி வந்த அபிஜித்தன் தாருவின் இரு கன்னங்களிலும் பளார் பளாரென இரு

அறைகளை பரிசாக வழங்கினான்.

"முதல் அரை என்ன பார்த்து பைத்தியத்த நான் ஏன் கல்யாணம் பண்ணனும்னு ? கேட்டதுக்கு அடுத்த அறை இப்போ என் த்ரிலோச்சனாவ ஏமாத்துறதுக்கு" என்றவனை பார்த்து'

"நீங்க சொல்லி தானே அத்தான் நான் செய்றேன்" என்றவளை கேவலமாக பார்த்தவன்

"ஏன் நான் சொன்னா எல்லாத்தையும் செஞ்சி கிழிச்சிருவியா? உன் நட்புக்கு எவ்ளோ பெரிய துரோகம் பண்ற
அந்த குற்றவுணர்ச்சி இல்ல நீ ஒரு சுயநல பிசாசு உன் நன்மைக்காக யாரையும் காவுக்கொடுப்ப" என்றான் ஒருவித எரிச்சலுடன்

அந்த வார்த்தையை கேட்டவுடன் தாருணி கண்களிலிருந்து கண்ணீர் அருவி போல வழிந்தது.

"என்ன அழுது சீன் கிரீயேட் பண்றியா சும்மா நடிக்காத நீ எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடினு எனக்கு தெரியும்"

"இல்ல அத்தான் லோச்சு நல்ல பொண்ணு உங்க கூட இருந்தா நல்லா இருக்கும்னு தான்" என்றவளை மேலே சொல்லு உன் கதையை கேட்போம் என்பதை போல் பார்த்த்தான் அபிஜித்தன் சக்கரவர்த்தி

அவனது பார்வையை உணர்ந்தவள் கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள் தாருணி

"என்னமா கதைய நிப்பாட்டிட்ட மேல சொல்லு கேப்போம்" என்று சொல்லிவிட்டு பெரிய ஜோக் சொன்னது போல் இடி இடியென சிரிக்க ஆரம்பித்தான்

அபி ,"அது எப்டி எப்டி உனக்கு மட்டும் பைத்தியக்காரன் வேண்டாம் ஆனா உன் பிரண்டுக்கு பைத்தியக்காரனோ பிச்சைக்காரனோ எவனா இருந்தாலும் சரி இனி இப்டி ஏதாவது முட்டாள்தனமா கதைச்சு என்கிட்ட அடி வாங்கி செத்துறாத" என்றவன் நக்கல் தொனியில் ஆரம்பித்து கடுமையான தொனியில் முடித்தான்

"சரி நீ போகலாம் நாளைக்கு நான் கெஸ்ட் ஹவுசுக்கு காலைலயே வருவேன். மறந்தும் நீ வந்து கதவை திறந்துறாத லோச்சனாவையே அனுப்பி வை புரிஞ்சுதா? , பிறகு அடுத்து என்ன செய்யணும்னு நாளைக்கு சொல்றேன் போ" என்று தன் அறையை நோக்கி போக போனவனை மாரியின் குரல் தடுத்தது.

மாரி , "நான் வேணும்னா சின்னம்மா கூட துணைக்கு போகட்டுங்களா இருட்டிருச்சு வேற மணி வேற பத்தாகுது" என்று இழுக்க


"பார்டன் ரிபீட் அகைன்", "அது தானுங்க ஐயா சின்னம்மாவ" என்று ஆரம்பித்தவனை பார்த்து

"இவ உனக்கு சின்னம்மாவா ? இவளுக்கும் எனக்குமே சம்மந்தமில்ல இதுல இவ உனக்கு சின்னம்மாவா ஸ்டெல்லானு கூப்பிடு இவளுக்கு அது போதும் அம்மா சும்மான்னு மரியாதை எல்லாம் இவளுக்கு தேவையில்ல, அடுத்து இவளுக்கு துணைக்கெல்லாம் ஆள் தேவையில்ல சுடுகாட்டு பேயே இவள பார்த்தா விழுந்தடிச்சு துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடிரும் நீ உள்ள போ"

"சொடக்கிட்டு ஏய் நீ இன்னும் போகல உன்ன போக சொல்லி பத்து நிமிஷம் ஆகுது ஓடு" என்று விரட்டி விட்டு தனதறைக்கு வந்தவன் அடுத்த நாள் விடியலை எண்ணி பல கனவுகளுடன் தூங்கியும் போனான்
.வதம் தொடரும்.............................................

********************************************************************************************


இப்ப தான் type பண்ணி முடிச்சேன் மக்கா அடுத்த episode நாளைக்கு தான் டெய்லி ஒரு ud ok , கதை இனி தான் பயங்கரமா சூடு பிடிக்கும் உங்களுக்கு அபிஜித்& லோச்சனவ பிடிச்சிருக்கா மக்களே plss சொல்லிட்டு போங்க நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
Thread 'காலகேயனின் காதல் வதம்
கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/காலகேயனின்-காதல்-வதம்-கருத்து-திரி.167/

Screenshot_20230112-160418_Chrome.jpgScreenshot_20230112-155644_Chrome.jpg
 
Last edited:
அத்தியாயம் 3(a)
Screenshot_20230112-155423_Chrome.jpg
அபிஜித்தனின் வீட்டிலிருந்து கிளம்பி வந்த ஸ்டெல்லாவின் மனமோ உலைக்களமாக கொதிக்க ஆரம்பித்தது. அபியை ஏதாவது செய்ய வேண்டும் என மனம் முரண்டியது. யாருக்கும் தெரியாத தன்னுடைய ரகசியம் எப்படி இவனுக்கு தெரிந்தது? யாரோ தன்னை தொடர்ந்து கவனிக்கிறார்கள். தனது
நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் தெரிந்தால் கூட அபி தன்னை உண்டு இல்லை என ஆக்கிவிடுவான்.
என்று தனக்கான நேரம் வரும் வரை காத்திருந்து அவனை எப்படியாவது பழி தீர்க்க வேண்டுமென கர்வம் வைத்து காத்திருந்தாள் அந்த விஷ நாகம் ஆனால் ஒன்றை மறந்துவிட்டாள், அவன் ஜித்தன் எதையும் இவள் நினைக்கும் முன் செய்து முடித்து விடுவானென்று

இப்படி பலதரப்பட்ட சிந்தனையில் உழன்றவள் நேரே தன் அறைக்கு வந்து கைப்பையினுள் இருந்த ஊசியையும் அதனுள் செலுத்த வேண்டிய போதை மருந்தையும் கையில் எடுத்தவள் நிமிடம் தாமதிக்காமல் தன் கையில் செலுத்திக் கொண்டாள்.

போதை ஏறிய பின் அபியிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சந்தர்ப்பத்தை அவளது மனம் அசைபோட ஆரம்பித்தது,


அன்று, உயர்தர மாணவர்களின் வாழ்க்கையில் பாடசாலைக்கு வரும் கடைசி நாள்
பரீட்சைகள் முடிந்து விட்டன. பன்னிரெண்டு வருடங்கள் நட்பு பாராட்டிய நட்புக்களும் வெவ்வேறு திசைகளில் பறந்து விட்டன. எல்லாருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு நண்பிகள் மூவரும் ஊர்க் கதை உலக கதையெல்லாம் அளந்த வண்ணம் நடந்து வந்து கொண்டிருக்கையில்

லோச்சனாவும் அனிதாவும் தாங்கள் வழமையாக பிரயாணம் செய்யும் பஸ் வரவும்,

"ஹேய் தாரு நீ மட்டும் தானியா நிக்கணும் பரவல்லயா ? இல்ல நாங்க ரெண்டு பேரும் நிக்கட்டுமா:" என்று
அனி கேட்க

"இல்லடி நீங்க ரெண்டு பேரும் போங்க நான் நிப்பேன்"

"ஸுரா ?",அங்க டாடியோட கார் வர மாதிரி தெரியுது நீங்க போங்க நான் போய்க்கிறேன் என சொல்லிச்
சென்றாள் தாரு

பிறகு அனியிடம் திரும்பிய லோச்சு, "அவ தான் போய்க்கிறேன்னு சொல்லுறாளே நீ ஏன் நிக்கட்டுமா ?நடக்கட்டுமானு கேட்டுகிட்டு இருக்க ?" ஒருவித எரிச்சலுடன்

"அவளும் நம்ம பிரெண்ட் தானேடி " என்றாள் அனி அப்பாவியாக

"இங்க பாரு அனி இப்பயெல்லாம் இந்த தாருணியோட நடவடிக்கையெல்லாம் எனக்கு
சரியா படல யார்யாரோ வாரங்க பேசுறாங்க எதுவும் எனக்கு சரியாபடல "


"நீ ஏண்டி அவள சந்தேக கண்ணோடயே பாக்குற ?"

"இல்லடி ஏனோ தாரு தவறான பாதைல போற மாதிரி எனக்கு தோணுது"


'இப்போல்லாம் எனக்கு நண்பியாபார்க்க தோணல என் சந்தோஷத்தை பறிக்க வந்த மாறி தோணுது' என்பதை மனதில் சொல்லிக் கொண்டாள்.

" சரி சரி வா போய் பஸ்ல ஏறுவோம் இல்லாட்டி சீட் இருக்காது வா!" என்று அனி தற்காலிகமாக லோச்சுவின் சம்பாஷணைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட ஸ்டெல்லாவுக்கு எரிச்சல் மண்டியது.
எப்போதும் லோச்சனாவை பொறாமையுணர்வுடன் நோக்கும் ஸ்டெல்லாவுக்கு தன்னை பற்றி
சரியாக கணிக்கும் தோழியின் கற்பூர புத்தி இன்னும் சூட்டை கிளப்ப,

காரில் ஏறியவரே தனது தொலைப் பேசியை எடுத்து மைக்கலுக்கு அழைத்தாள்,

"ஹலோ மைக்கல் ஏதோ போதை பொருள் ஆராய்ச்சிக்கு ரெண்டு விர்ஜின் பொண்ணுங்க வேணும்னு
கேட்டிருந்த இல்ல ரெண்டும் ரெடி'' என்று குரூர புன்னகையுடன் கூறினாள்

"என்ன சொல்ற எப்டி ரெடி பண்ண ? அநாதைங்க தானே என்ன நடந்தாலும் கேக்குறதுக்கு நாதி இல்லைல" என்று மைக்கல் பதறியவாறு கேட்க

இடி இடியென அரக்கியை போல் சிரித்தவள்,

"அது தான் இல்ல ரெண்டு பேரும் என்னோட உயிர் தோஸ்த்துங்க"

"யாரு லோச்சனாவும் அனிதாவுமா ?" என்றான் கேள்வியாக

"அதுங்க ரெண்டையும் தான் கடத்தி வித்துரு அதுக்கு பிறகு ரெண்டும் ஓடி போன மாறி ஆதாரம் காட்டி
நம்ம வழமையான பிளான் படி, தப்பிச்சுரலாம் என்ன எப்டி என் ஐடியா ?"

"ரொம்ப கேவலாமா இருக்கு உன்ன மாதிரியே, உனக்கு மட்டும்தான்டி இப்டி நம்புனவங்களுக்கு துரோகம் பண்ண முடியும்" என அடக்கப்பட்ட கோபத்துடன் ஆண் குரல் ஒலித்தது.


குரலை கேட்டு அதிர்ந்தவள் சாரதி இருக்கையை எட்டி பார்க்க, அதிர்ந்து போனாள் அங்கே கழுத்து நரம்புகள் புடைக்க ருத்ர சிவனாக அமர்ந்திருந்தான். அபிஜித்தன் சக்ரவர்த்தி

"அ..அ அ...பி..அபி அத்தான் நீங்களா ?" என்று தந்தியடித்தவளை பார்த்து,

"ஆமாடி நானே தான்" என்றவனை பார்த்து நடுநடுங்கியவள் பின்னிருக்கையில் பல்லி என ஒட்டி அமர்ந்தாள்

பின்னிருக்கையிலிருந்தவளின் முடியை எட்டி, பிடித்திழுத்து பளார்
பளாரென ஆத்திரம் தீரும் வரை அறைந்தான்

"தெருவுல போற பொண்ணுனாலே உன்ன சும்மா விட்ருக்க மாட்டேன் இதுல என் ராணியவே கடத்த சொல்ற
உன்ன ஓங்கி மிதிச்சேனு வை செத்து போவ " என்றவனின் குரலில் நடுநடுங்கி போனாள். ஸ்டெல்லா

அதில் ஏதோ அர்த்தம் புரிந்தவளாக "என்ன ? யார் ராணி "

"உனக்கு கட்டாயம் விளக்கமாத்தாலயே விளக்கம் சொல்றேன் " என தனது பாழடைந்த பாக்டரிக்கு இழுத்து
சென்றான் அது அபியின் எதிரிகளை உரு தெரியாமல் சிதைக்குமிடம் என்பதால் மேலும் நடுநடுங்கி போனாள் ஸ்டெல்லா

"உன்னோட சரித்திரத்தை தெரிஞ்சுக்கிட்டு தானடி இங்க வந்தேன் பப்பு பாறுனு
போய் சேர கூடாதவனோட சேர்ந்து ச்சீ என்னெல்லாம் பண்ற பணம் தான் கொட்டிக்கிடக்கே அது உனக்கு
போதாதா என்ன ?" என்று உறும


" நிறம் குறைவு அழகில்லனு நினைக்குற பொண்ணுங்க படிக்க முடியலனு வருத்தப்படற பசங்க , ஏதாவது குடும்ப பிரச்சனைல உள்ள ஸ்கூல் பசங்கள டார்கெட் பண்ணி போதை பொருள் சப்லை பண்ணிருக்க"
இதெல்லாம் எப்படி இவனுக்கு தெரியும் என்று விழி பிதுங்கி நின்றாள் ஸ்டெல்லா

"அது மட்டுமா பண்ண வசதி குறைஞ்ச பதினாறு பதினேழு வயசு ஸ்கூல் பொண்ணுங்களா டார்கெட் பண்ணி
நீயும் உன் பாய் பிரண்டும் பாங்கொக் தாய்லாந்து னு வித்தது மட்டுமில்லாம,

அந்த பொண்ணுங்களோட கேரக்டரையும் ஸ்பாயில் பண்ற மாதிரி ஆதரங்கள செட் பண்றது
மீறி ஏதாவது போலீஸ் கேஸுன்னு போனா அடியாளுங்கள வச்சு மிரட்டி அடிபணிய வைக்கிறது வெறும்
இருபது வயசுல ஏன் இப்டி இருக்க ?" என கர்ஜிக்க மேலும் பயத்தில் வெலவெலத்து போனாள் அரக்கி

தன்னை பற்றிய விடயங்களை புட்டு புட்டு வைத்த அபிஜித்தனை விழிகள் தெறித்து விடும் அளவுக்கு
பார்த்து வைத்தாள்.

"உன்ன பத்தின ஆதாரம்எல்லாம் என்கிட்ட இருக்கு எல்லாத்தையும் போலீஸ் ல ஒப்படைச்சேன்னு
வை காலத்துக்கும் களி தின்ன வேண்டியது தான் நான் சொல்றத கேக்குறியா ஜெயிலுக்கு போய்
கம்பி எண்ணுறியா?" என்று புருவத்தை ஏற்றி இறக்கியவனை

"அத்தான் நீங்க சொல்லறபடி கேக்குறேன்", "நீ என்ன பண்ற லோச்சனவ"

"சேப் பண்ணனுமா அத்தான்" என்று முந்திரி கொட்டையாக முந்தியவளை பார்த்து

உன் திருவாயை மூடு என்பது போல் சைகை செய்தவன்

"அவ ஆல்ரெடி சேப் தான் ஆனா உன் மைக்கல் தான் என் ஆளுங்க காட்டுன காட்டுல இப்ப
அப்ருவரா மாற போறான் அவன தான் காப்பாத்தணும்"

"என்னது! என்ன செய்யனும்? அத்தான் எதுனாலும் செய்றேன்" என்று பதறியவளை ஒரு வித
குரூர திருப்தியுடன் பார்த்தவன் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

"அட அட என்ன ஒரு ஆர்வம் உன் ஆர்வத்த கண்டு வியக்கேன் அடுத்து என்ன சொன்ன
அத்தானா ? நான் பைத்தியம்னு இல்ல கேள்விப்பட்டேன் " என்று இகழ்ச்சியாக புருவத்தை ஏற்றி இறக்க

"இல்ல அது வந்து" என்று இழுத்தவளை பார்த்து

"சரி பொழச்சி போ விட்டுறேன்" என்றவனை பார்த்து இவன் இப்படி விடுகின்ற ஆளில்லையே என
சிந்தித்தவளின் சிந்தனையை பொய்யாக்காமல் மேலும் தொடர்ந்து பேசவாரம்பித்தான்.

"நீ லோச்சனவ என் இடத்துக்கு கூட்டிட்டு வார ஏதாவது கோக்குமாக்கு பண்ணணும்னு
நினைச்ச சாவடிச்சுருவேன்" சொன்னதை செய்வேன் என்று அந்த குரல் மிரட்டியது என்னவோ உண்மை

"அடுத்து ஊருக்கே புரோக்கர் வேல பார்த்த மாறி எனக்கு கொஞ்ச நாள் புரோக்கர் வேலை பாரு என்ன ?

என் அத்தான் நல்லவரு, வல்லவரு,
நாலும் தெரிஞ்சவருனு சொல்லி லோச்சனா மனசுல எனக்கான லவ்வ உரம் போட்டு
தண்ணீர் ஊத்தி வளக்குற வளக்கணும் இனி உன் புள் டைம் டியூட்டி அது தான்"
என்று மிரட்டி அனுப்பி வைத்தான்.

நினைவிலிருந்து மீண்டவள் அபிஜித்தா எனக்கு காலம் வராமலா போகும் அப்ப இருக்குடா உனக்கு
என்று நினைத்தபடி உறங்கியும் போனாள்


அடுத்த நாள் எல்லோருக்கும் அழகாக பொழுது புலர்ந்தது. அபியின் மனதில் சந்தோஷமிருந்தாலும்
ஏனோ ஒரு இறுக்கமும் சூழ்ந்திருந்தது என்னவோ நிதர்சனமான உண்மை ஏனென்றால் இன்றைய திகதி அவன் வாழ்நாளில் கறுப்பு திகதியல்லவா!

ஆறுமணியளவில் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு கீழே தேநீர் அருந்த வந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கீழே தேநீர் குடிக்க வந்தவனுக்கு தேநீர் கொடுத்தது என்னவோ அவன் சகதர்மினி தான் அதை கவனிக்காமல்

அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டே

"தேங்க்ஸ் பாட்டிமா" என்று தேநீரை எடுத்து கொண்டான்.

எதிரில் நிற்பவரை கவனிக்கவில்லை.

"என்ன டீ இன்னைக்கு வழமைய விட நல்லா இருக்கு என்ன கலந்தீங்க?" என்று ஆர்வமாக கேட்க

"அதுவா ரெண்டு போத்தல் கோமியம் " என்று கடுப்பாக லோச்சனா கூற

"வாட் ?" என்று அதிர்ந்தவன் நிமிர்ந்து பார்க்க தன்னையே பாசமாக பார்த்தபடி நின்றிருந்த
தன் காதலியை தான் முதலில் கண்டான்.

'இவ ஏன் நம்மள இவ்ளோ பாசமா பாக்குறா ஒரு வேளை பழசெல்லாம் நியாபகம்
வந்துருச்சோ'

'அப்டி நியாபகம் வந்தாலும் பரவால்ல கட்டி போட்டாச்சு காதல் பண்றோம் தட்டுறோம் தூக்குறோம்' என்று
நினைத்தபடி ஒரு வித துள்ளலுடன் அருகில் வந்தவன்குரலை கடுமையாக மாற்றிக்கொண்டு, "இங்கெல்லாம் வரக் கூடாதுனு உனக்கு தெரியாதா?" என காலையிலேயே வல்லென பாய்ந்தவனை


நெருங்கி வந்து ஏற இறங்க பார்த்து விட்டு கன்னத்தில் பளாரென ஒரு அறை அறைந்திருந்தாள். அறைந்தவள் மீண்டும் அவன் வெற்று மார்பிலேயே விழுந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்
**************************************************************************
இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க நாளைக்கு next ud தரேன் உங்களுக்கு அபிஜித்& லோச்சனவ பிடிச்சிருக்கா மக்களே plss சொல்லிட்டு போங்க நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 

Attachments

  • Screenshot_20230112-160533_Chrome.jpg
    Screenshot_20230112-160533_Chrome.jpg
    150.1 KB · Views: 0
Last edited:
அத்தியாயம் 3(b )


தன் மார்பில் விழுந்து அழுபவளை என்ன சொல்லி தேற்ற என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றான்
அபிஜித்தன், தீடீரென அவனது மார்பில் கை வைத்து தள்ளியவள் குற்றம் சாட்டும் பார்வையோடு
அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

"ஏண்டா ஏன் இப்படி உன்ன உயிருக்கு மேல நேசிச்ச எனக்கு பெரிய பரிசா கொடுத்திட்ட
இல்ல ?
அழகரே உன் மேல வச்ச காதலால நம்பிக்கையால எல்லாத்தையும் இழந்து நிர்க்கதியா
நிக்கிறேன் அழகரே இப்ப உமக்கு திருப்தி தானே அழகரே ?"

"தாரா நான் சொல்றத கொஞ்சம் கேளு ப்ளீஸ்" என்று கெஞ்சலுடன் நோக்கியவனை

நோக்கி ஆவேசம் வந்தவள் போல் ,"

"தாராவா ? யாரு தாரா அவ செத்து பல வருஷம் ஆகுது அவ செத்து அவளுக்கு
காரியம் பண்ணுன அன்னிக்கே உன்னோட காதலுக்கும் மன்னிச்சுரு உன்னோட பொய்யிற்க்கும்
பித்தலாட்டத்திற்கும் துரோகத்திற்கும் சமாதி கட்டியாச்சு"

என்றது தான் தாமதம் லோச்சனாவின் கழுத்தை சுவரோடு அழுத்தி பிடித்து ஒரு அடிக்கு தூக்கியவன் பேச ஆரம்பித்தான்.,


"ஏய்! என்ன துரோகினு சொல்லு ஏமாத்துக்காரன்னு சொல்லு அடி திட்டு கொலை கூட பண்ணு
ஆனா என் காதலை பொய்னு சொல்லாத, அடுத்து என் தாரா சாகல உனக்குள்ள உயிரோட்டமா தான் இருக்கா என்ன புரிஞ்சுதா "

என்றவாறு அவளது கழுத்தில் மேலும் அழுத்தம் கொடுக்க லோச்சனா சுவாசத்திற்காக ஏங்க ஆரம்பிக்க,

"ச்சே அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி உன்னோட இந்த வாய்தான் உனக்கு முதல் எதிரிடி"

என்றவன் அவளை விட்டுவிட்டு அங்கிருந்த நீள்விருக்கையில் தலையை பின்னால் சாய்ந்தவாறு
அமர்ந்துக் கொண்டான்.

"கொக்.. கொக்.." என்று இருமியவாறே கழுத்தை தடவியபடி தொடர்ந்து பேசவாரம்பித்தாள்.

"உண்மைகள் சில நேரம் கசக்க தான் செய்யும் அழகரே " என்றாள் அவனுக்கு
சற்றும் குறையாத திமிருடன்

"எதுடி உண்மை எது உண்மை என் காதல் உண்மையில்லங்குறத நீ உள்ள புகுந்து
பார்த்தியா ? ஹான் சொல்லுடி என்ன மிருகமாக்காத " என்று உறும

"அழகரே மிருகத்துக்கிட்ட உள்ள உண்மையும் நேர்மையும் கூட உன்கிட்ட இல்ல நீர்
மிருகத்த விடவும் கீழானவன்"

என்று அவனுக்கு கொஞ்சம் கூட குறையாமல் அவனுடன்
சரிக்கு சமமாக வாயாடினாள். அவளது குறையாத சினத்தை குறைக்க அவளருகில்
மண்டியிட்டு அமர்ந்தவன்

சரிடி எப்பவோ ஒரு நாள் செஞ்ச தவறுக்கு உன் பாஷைல நம்பிக்கை துரோகத்துக்கு
எத்தன ஜென்மத்துக்குடி என்னை வதைப்ப? என்று ஏக்கமாக கேட்டிட,

அவளோ அடக்கப்பட்ட சீற்றத்துடன்
"எத்தனை ஜென்மத்துக்குனா கேட்ட ?நானும் நீயும் பிறக்கும் வரை இந்த உலக முடிவு வரை

நான் உன்ன வெறுப்பேன்" என்றவளை கண்ணீர் வழிய ஏறிட்டவன் ஒரு முடிவுடன் அருகிலிருந்த
கத்தியை நீட்டினான்.

"இந்தா பிடி இந்த கத்தியால குத்தி கொன்னுட்டு இங்கேயிருந்து போய் யாரவது நல்ல
மனுஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயாவது சந்தோஷமாயிரு நான் உயிரோட இருக்க மட்டும்
உன்ன இன்னொருத்தன் கூட சேர்த்து வச்சு பார்க்க முடியாது உன்ன யாருக்கும்
விட்டு கொடுக்கவும் முடியாதுடி"

என்று உணர்ச்சி பெருக்குடன் கூறியவன் அவளது கையில் கத்தியை திணித்திருந்தான்.

"ஒவ்வொரு முறையும் உன் காதல் கிடைக்கும் கிடைக்கும்னு நினைச்சு ஆசையா வந்து
உன்கிட்ட நிற்கும் போதெல்லாம் இல்லடா மடையா அது நடக்காதுனு நீ செருப்பால அறைஞ்ச மாதிரி சொல்லும் போதெல்லாம் ஆயிரம் முறை சாகுறேன்டி,
அதை விட காதலி கையால சாகுற வலி சுகமான வலி தான்"

அவன் கொடுத்த கத்தியை வெறித்து பார்த்தவள், பின்பு உற்றவனின் விழிகளையும் உற்று
நோக்கினாள். அதில் கண்ட காதல் பரிதவிப்பு விரக்தி ஒரு முறை இந்த ஒரு முறை மட்டும் என் காதலை உணர்த்திட உணர்ந்திட ஒரு சந்தர்ப்பம் தந்து விடு என்று விழி நிறைய காதலை தேக்கி நின்றவனின் கோலத்தை கண்டு அவளது மனம் ஏனோ சற்று தடுமாறியது.

மீண்டும் மனக்கண் முன் சில காட்சிகள் தோன்ற அவளின் இதழினோரம் விரக்தி சிரிப்பு என்றோ
ஒரு நாள் இதெல்லாம் இந்த கண்களில் கண்டு தன்னையே தொலைக்க வேண்டுமென ஆசை
கொண்டவளுக்கு இன்று அத்தனையும் கண்டுக்கொண்டாலும், வஞ்சியவள் மனதில் வெறுமை மட்டுமே
எஞ்சியது.

கையிலிருந்த கத்திய தூக்கி தூரயெறிந்தவளுக்கு ஏனோ தன் வாழ்க்கையை எண்ணி சிரிப்பு சிரிப்பாக
வந்தது. அன்று அவன் கண்களில் தனக்கான காதலை காண வேண்டுமென்று ஓடோடி வந்தபோது அவன் கண்களில் தெரிந்தது என்னவோ ஏளனம் நிறைந்த நக்கல் பார்வை இன்று அவன் வேண்டவே வேண்டாமென்று வெறுத்தொதுக்கும் போது அவன் கண்களில் அத்தனை காதல் தெரிகிறது.

இதையெல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சுற்றம்
மறந்து கண்களில் கண்ணீர் வருமளவுக்கு ஒரு பிச்சியை போல் சிரிக்க ஆரம்பித்தாள். லோச்சனாவின்
இரு வேறான செயற்பாடுகளை பார்த்து குழம்பி போயிருந்த அபிஜித்தன் என்னவானது இவளுக்கு
என்பதை போல் தன்னவளை நோக்க

அவளோ அவனது பார்வையை உணர்ந்து கொண்டவள் போல் பேசவாரம்பித்தாள்.

"என்ன அழகரே இவளுக்கு சித்தம் கலங்கி விட்டதா என்றா பார்க்கிறீர் ?" என்று மீண்டும் சிரிக்கவாரம்பித்தவள் நிறுத்தி நிதானமாக,

"அழகரே அன்னைக்கு உன்னோட கண்ணுல எனக்கான காதலை மட்டுமே காண வந்த எனக்கு
கிடைச்சது எல்லாம் என்னவோ ஏமாற்றமும் அவமானமும் சில மீள முடியாதா இழப்புகளும் தான்"
என்றாள் ஆழமான அழுத்தமான குரலில்

"ஆனா இன்னைக்கு நான் நினைச்ச கேட்ட எனக்கான காதலும் தவிப்பும் உன்னோட கண்கள்ல
கொட்டி கிடக்குது ஆனா அத மனசார அனுபவிக்கவும் முடில ஏத்துக்கவும் முடில அது தான் நினச்சேன்
சிரிச்சேன்" என்று விரக்தி சிரிப்பை இதழோரம் படரவிட்டாள்

"இன்னைக்கு என்ன நாள்னு நியாபகமிருக்கோ அழகரே ?" என்றவுடன் அபியின் முகம் வேதனையால் சுணங்கியது., கண்ணெதிரே இருந்த சொர்க்கத்தை அழித்து நரகத்தில் குடிபுகுந்த நாளல்லவா ? எப்படி
மறப்பான்.

"ஆனா ஒன்னு அழகரே நான் அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி அதே கிறுக்கி தான் உங்கள மட்டுமே
காதலிச்ச உங்களுக்காகவே உயிரையும் விட்ட அதே கிறுக்கி தான் எந்த மாற்றமுமில்ல' என்றவளை

கண்கொட்டாமல் பார்த்தான் அபிஜித்தன், அவனுக்கு ஏதோவொன்று புரிந்தது போலிருக்க அவனிதழ்களில் கண்ணுக்கெட்டா புன்னகை தோன்றியது.

"தாரா தாராம்மா " என்று தவிப்புடன் அழைக்க அவனுடைய அழைப்பை சட்டை செய்யாமல் வாயிலை நோக்கி ஒரு வித நிமிர்வுடன் நடக்க ஆரம்பித்திருந்தாள்.

"தாரா நில்லு எங்கே போற நிக்க போறியா இல்லையா?"

நின்றே ஆகவேண்டுமென்று அவன் தொனி மிரட்டினாலும் அதற்கெல்லாம் அசருபவளா அவள் ?

மேலும் வேகம் கூடியதே தவிர குறைந்தபாடில்லை அவள் வாயிலை நெருங்குகையில் அபிஜித்தனின் பொறுமை காற்றிலிட்ட கற்பூரமாய் கரைந்திருந்தது.

"ஏய் த்ரிலோச்சனா நில்லுடி!" என்றவுடன் தான் அவளது நடை தடைப்பட்டது.

"ஓ! என் பேரு கூட தெரியுமா என்ன ? அழகருக்கு" அந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொண்டவன்,

"என் பேரும் அழகரில்ல அபிஜித்தன் சக்ரவர்த்தி புரிஞ்சுதா ?" என்றவாறே
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி வாசலை மறித்து நின்று கொண்டான்

"ஓஹ் அப்படியா இன்னும் அதே மாதிரி பித்தலாட்டக்காரனாவா திரியிற
இல்ல திருந்திட்டியா ?" என்றாள் படு நக்கலாக,

"பல்ல தட்டிருவேன் பார்த்துக்க ஒழுங்கா மரியாதையா கதைச்சு பழகு " என்றான்
அடக்கப்பட்ட கோபத்துடன்

"மரியாதைனா எப்படி வாங்க எஜமான் போங்க எஜமான்னு கதைக்கட்டுமா ?
இந்த மரியாதை போதுமா" என்றாள் நக்கலுடன்

"வாய் கொழுப்பு கூடி போச்சுடி"

"ஆமா எங்க அப்பன் காசுல தின்னு தின்னு கூடி போச்சு"

"சரி இப்ப எங்க போற", "எங்க தானே நம்ம கதை எங்க ஆரம்பிச்சுச்சோ
அங்க போய் இந்த கதைய முடிச்சு வைக்க போறேன்" என்றவளை

ஏற இறங்க பார்த்துவிட்டு பிடறியை வருடிக் கொண்டே நக்கல்
சிரிப்பை உதிர்க்க

'இவன் பார்வை சரியில்லை சரியான நொள்ளை கண்ணன் ஆளப் பாரு என் அழகப் பாருன்னு இந்த
குளிர்லயும் மேல் சட்டை இல்லாம நிக்கிறத, இவன் கட்டி கட்டியா வீங்கி
போயிருக்கத உலகத்துக்கே காட்டணுமா ?'
என்று யோசித்துக் கொண்டு நிற்க, அவளை புரிந்து
கொண்டவன் போல்

"உலகத்துக்கே காட்ட தேவையில்ல உரிமையானவளுக்கு காட்டலாம்
தப்பில்ல"என்று நக்கலாக கூறியவனை உறுத்து விழிக்க,


"அடுத்து, எதை முடிச்சு வைக்கிறதுனாலும் என்னை தாண்டி என் வீட்டை தாண்டி தானே
போகணும் நீ கத்திய எடுத்து என்ன குத்தி சாச்சிருந்தா கூட என் மேல காதலில்லைனு ஒத்துக்கிட்டு
விலகி போயிருப்பேன், உன் கண்ணுல வெறுமை இருந்தாலும் உன் மனசுல நான்தான் இருக்கேனு
நீ பேசுனா பேச்சுல தெரியுது " என்று ஆழமான குரலில் கூற,

"இங்க என் இடத்திற்கு வர வச்சது உன்னோட சேர்ந்து வாழ தானே தவிர உன்ன
உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கயில்ல சும்மா இங்கேயிருந்து தப்பிச்சு போறேன்னு
சர்க்கஸ் கட்டாம சமத்து பிள்ளையா நம்ம வீட்டுக்குள்ள போவியாம் "

அவளுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வர,


"என்ன அழகரே உன் பேச்ச கேட்டு அடங்கி போக நான் ஒன்னும் பழைய தாராயில்ல
த்ரிலோச்சனா "

"நானும் உன் பேச்சு கேட்டு உனக்கு வழி விட்டு நிக்க பழைய அழகரில்ல அபிஜித்தன்"

"அழகருக்குள்ளயாவது ஒரு நல்லவனிருந்தான்
அபிஜித்தன்ஒன்னா நம்பர்

பொறுக்கி இப்போ மட்டும்
நீ உள்ள போகலனா என்ன பண்ணுவேன் தெரியுமா ?"

"என்ன என்னடா பண்ணுவ?" என்று சண்டைக்கோழியாக சிலிர்த்தவளை தூக்கி
தோளில் போட்டபடி படிகளில் தாவி ஏறியவன் இப்டி தான் பண்ணுவேன்

அவனிடமிருந்து விடுபட போராடியவள் அவனை தன் பிஞ்சு கரங்களால் அடித்தபடி


"இறக்கி விடுடா பத்துமணி பிசாசே கொரில்லா மலை மாடு ச்சைக் ஏன்டா இப்டி படுத்துற"

"இப்ப மட்டும் நீ வாய மூடல வாய்க்கும் என் ஸ்டைல்ல தண்டனை கொடுத்துருவேன்"


அதற்கு மேல் பேசாமல் வாயை மூடிக் கொண்டவளை தொப்பென்று மெத்தையில் போட்டவன்
அவளை நெருங்கி வந்து கண்களை ஊடுருவி பார்த்த வண்ணம் .

"என்னடா உனக்கு பிரச்சனை ஏன் இப்டி கிட்ட வார"

என்று காற்றுக்கு கூட கேட்காத குரலில் அவனுடன்
சண்டையிட்டு கொண்டே மேலும் மெத்தைக்குள் புதைந்து விடுவது
போல் மெத்தையுடன் ஒன்றியவளை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி கண்ணடித்து

"மறுபடியும் இந்த அரக்கன லவ் பண்ண ரெடியா மேடம் ?" என்று அவன் விஷமமாக
கேட்க

"உன் மூஞ்ச பார்த்தா லவ்வும் வராது ஒரு மண்ணும் வராதுடா பாவி"


என்று கண்களை மூடி அவன் ஆண்மை வாசத்தையும் வியர்வை மணத்தையும் ஆழ சுவாசித்துக் கொண்டே
ஒரு வித மோகக் குரலில் கூற

"அப்ப கூடிய சீக்கிரம் வந்துரும்" என்று சிரித்தபடியே அவளை பார்த்து கண்ணடித்து விட்டு
குளியலறைக்குள் நுழைந்துக் கொள்ள தவிப்பது என்னவோ அவள் முறையாகிப் போனது


வதம் தொடரும் .........................
************************************


இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இன்னைக்குக்கு next ud தரேன் plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 
Last edited:
அத்தியாயம் 4(a )


அவன் விட்டு சென்ற இடத்தில் சிலையாக சமைந்திருந்தவள் சுரணை வரப் பெற்றவளாக
அறையை நோட்டமிட்டாள். அங்கே அவளது கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. என்னவோ
வரையப்பட்ட அவள் ஓவியம் தான் அத்தனை அழகாக அத்துணை அம்சமாக இருந்தது.
அதில் தாரா அழகர் என கையொப்பம் இடப்பட்டிருந்தது. அதை பார்த்தவளுக்கு மன வேதனை
தாங்கிக்கொள்ள முடியவில்லை குளியலறையினுள்ளே நீர் விழும் சத்தம் கேட்டது.சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொள் என்று மூளை கட்டளையிட


குளித்து கொண்டிருக்கும் போதே கெஸ்ட் ஹவுஸிற்கு போய் விட வேண்டும். அங்கிருந்து
அனிதாவை அழைத்துக் கொண்டு பஸ் பிடித்து ஊருக்கு சென்றிட வேண்டும் இவன்
முகத்தில் எக்காலமும் விழிக்க கூடாது என்று எண்ணியவள் ஒவ்வொரு படியாக
இறங்கினாள் எண்ணங்களோ பின்நோக்கி சென்றது

ஸ்டெல்லா என்ற பேயை தோழியாக பாவித்து சுற்றி திரிந்ததெல்லாம் மனக்கண் முன்
வந்து இம்சித்தது அனிதாவிடம் எல்லாவற்றையும் சொல்லி அழ வேண்டும் போலயிருந்தது.
வாழ்க்கையே ஒரு நாளில் வெறுத்து போனது

நிழலுருவமாக கனவில் தோன்றிய ஒவ்வொன்றும் நிஜமென்பது பொட்டில் அறைந்தது
போல் உரைத்தது. ஒவ்வொரு நியாபகங்களிலும் எஞ்சியது என்னவோ வலியும் ஏமாற்றமும்
மட்டும் தான்
இரண்டு படி இறங்கியிருப்பாள்

"என்ன சனா எங்கே போறதா உத்தேசம் ?" என்ற குரலில் அத்தனை கோபம்

"நான் சனா கிடையாது த்ரிலோச்சனா" என்றாள் திருப்பிக் கொண்டு

"எனக்கு மட்டும் சனா" என்றான் மென்மையாக

"அதை பிறகு கவனிக்கலாம், இப்போ பாவாவுக்கு ட்ரெஸ் போட்டு விடு
வா" என்றான் கட்டளையாக

"முடியாது போடா" என்றவளை

"பார்த்து பேசு மேல வா புருஷன் பொண்டாட்டி சண்டை
நாலு சுவத்துக்குள்ள நடக்கணும் வெளில போனா
அசிங்கம்" என்றான் தன்மையாக

"யாரு பொண்டாட்டி ? யாருடா பொண்டாட்டி? நீ கூட படுக்க
ஒருத்தியும் ஊருக்கு ஒருத்தியும் வச்சிட்டு அலைவ நான் உனக்கு
சேவகம் செய்யணுமா ?"

என்றது தான் தாமதம் அவன் கைகள் அவள் பிஞ்சு கன்னங்களில்
இறங்கியது.

"நானும் பொறுமையா போகணும்னு பார்த்தா ரொம்ப பேசுற
தொலைச்சிருவேன் என்ன கேட்காம இந்த வாசல்ப் படிய தாண்டின
என்ன வேற மாறி பார்ப்ப உள்ள போடி" என்று அடிக்குரலில் சீறினான்.

கண்களிலிருந்து கண்ணீர் வழிய மெல்ல படியேறினாள்.

"அடுத்து வா போ ன்னு கூப்புடுற வேலை வச்சிக்காத எனக்கு பிடிக்காது மரியாதை
முக்கியம்,
நான் மனுஷனா இருக்குறதும் மிருகமா மாறுறதும் உன் கையில தான்
இருக்கு" என்றான் கன்னத்திற்கு மருந்திட்டவாறே

'மனுஷன் ம்ம் மனுஷனா இருக்குறதா நீ எப்போவும் மிருகம் தான் ஆசை வார்த்தை பேசி
என் வாழ்க்கைய கேள்வி குறியாக்கிய ராட்சஸன்' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்

"என்ன யோசிக்கிற" கன்னத்தை பற்றி மருந்திட்டவாறே வினவ

அவளிடம் பதிலில்லை, "நான் கேட்டா பதிலுடனே வரணும் " என்றான் அழுத்தமாக

"ஒன்னுமில்ல" என்றாள் எங்கோ வெறித்தபடி

மருந்திட்டு விட்டு எழுந்தவன் "நான் இன்னைக்கு பக்டரிக்கு போகணும் சேன்ஜ் பண்ணிட்டு
வாரேன்" என்று ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைந்து கொள்ள


அவளுக்கோ மனமெல்லாம் வலி வலி எல்லாம் வலி
வாழ்க்கையை முடித்து கொள்ளலாமா என்று எண்ணினாள்.

ஒரு காலத்தில் எத்தனை எதிர்ப்பார்ப்புடன் இந்த வீட்டுக்கு மருமகளாக வர இவன் இதயத்தில் ராணியாக
குடிப் புக இன்று வெறுமை வெறுமை எல்லா இடத்திலும் வெறுமை மட்டுமே, மனம் கனத்தது.

அவனது அலைபேசி ஓயாமல் அலற

"சனா போன் ஸ்டூல்ல இருக்கு எடுத்துட்டு வா" என்று குரல் கொடுத்தான்

அலைபேசியில் வந்த பெயரை பார்த்தவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அத்துணை ஆத்திரத்திலும்

இதழினோரம்விரக்தி புன்னகை, அவனது தொலைபேசி தொடு திரையில்

தோன்றிய பெயரை கட்டியவண்ணம் அவனருகில் சென்றாள். பெண்ணவள்


அவனருகில் சென்றவள் அவனிடம் கேட்ட கேள்வியில் அவனை முழு அரக்கனாக மாற்றியிருந்தாள்


"அன்னைக்கு மாதிரியே நான் இன்னைக்கும் ஊருக்கு தெரியாம
கல்யாணம் பண்ணி உனக்கு தொடுப்பா இருக்கணுமா ?" என்றாள் விரக்தியாக


"பார்டன் கம் அகைன்", என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்

"அதுதான் உனக்கு தாலி கட்டின வ*பா*டியா இருக்கணுமா ?"என்றாள் ஒரு வித
சீற்றத்துடன்

அவனும் பொறுமையாக ,"இங்க பாரு நடந்தது நடந்துருச்சு எல்லாத்தையும் மறந்துடு ப்ளீஸ் உன்ன
நீயே அசிங்கமா பேசாத நீ அப்டி பட்டவளா? இல்லவே இல்லை நீ கோவில்ல உள்ள கருவறை மாதிரி
ஒரு கருவறைல ஒரு சாமி தான் இருக்கணும் அது நானா மட்டும் தான் இருக்கும்"


"இதை அன்னைக்கே சொல்லி இருக்கலாமே ஏன் என்ன எல்லாரும் திட்ட மட்டும்
பார்த்துட்டு இருந்தீங்க இதோ இவளுக்காக தானே இன்னிக்கு மட்டும் என்ன
புதுசா ?" என்றாள் காட்டமாக

"அவ எனக்கு.... அதாவது என் வாழ்க்கைல முடிஞ்சு போன அத்தியாயம் அவள பத்தி
பேசாத நீ என் வாழ்க்கைல தொடரும் அத்தியாயம் நம்மள பத்தி மட்டும் பேசு" என்றான் அழுத்தமாக

"முடிஞ்சு போன கதைக்கு பார்ட் வன் பார்ட் டூ மாதிரியா" என்றாள் ஏளனமாக

அவளிடம் என்ன சொல்லி தான் அவனும் புரிய வைக்க

"சரி இப்போ என்ன சொல்ல வர்ற எதையும் எனக்கு இறந்த காலத்துக்கு
போய் மாற்றமுடியாது ஆனா நம்ம எதிர்காலத்த அழகா மாத்தலாம் ஆன
அதுக்கு நீ என்ன அழகரா பார்க்க கூடாது அபிஜித்தனா பார்த்தா என்
காதல் உனக்கு தெரியும் புரியும்" என்றான் அமைதியாக

"எவனா பார்த்தாலும் நீ ஒரு முதுகெலும்பில்லாத ஆண்பிள்ளை தனமில்லாத
ஜந்து தான்" என்றாள் கோபமாக

அவனது பொறுமைக்கும் எல்லையுண்டல்லவா தனது தன்மானத்தை
அல்லவா சீண்டி விட்டாள். எத்தனை அவமானம் மனைவியோ காதலியோ
ஆண்மையில்லாதவன் என்று கூறுவது அடிப்பட்ட புலியாக பாய்ந்து,


அவள் உடைகளை கிழித்தெறிந்து கட்டிலில் தள்ளி
அவள் மேனியில் படரப் போனவனை ஒற்றை சொல்
தடுத்தது.


"அந்த பிள்ஸும் தரல நீ அந்த ஊசியும் போடல சேத்துக்குள்ள விழுந்தாலும்
எழுந்து போகும் போது விழுந்த சுவடில்லாம எழுந்துக்கணும் இல்லையா "என்றபடி
கண்ணீர் வடிக்க

அவனுக்கோ அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை இதயம் கனத்தது
என்றோ விட்ட வார்த்தைகள் இன்று அவனை சட்டையாக சுழன்று அடித்தது.
அவளிடமிருந்து விலகியவன் போர்வையால் அவளை போர்த்தி விட்டான்.


"சாரிடி" என்று கூறி விட்டு உடைகளை அணிந்துக் கொண்டு பக்டரிக்கு
கிளம்பி விட்டான். எங்கே இங்கு இருந்தால் அவளை காயப்படுத்தி விடுவோமோ
என்று எண்ணி ஓடி விட்டான்

அதற்குள் கெஸ்ட் ஹவுஸ் சென்றவன்
அனிதாவிடம் ,

"உன் ப்ரண்ட் மன உளைச்சல்ல இருக்கா போய் பத்திரமா பார்த்துக்கோ
அவளுக்கு ஏதாவது சாப்பிட கொடு வேணான்னு சொன்னா அதட்டி உருட்டியாவது
சாப்பிட வை நான் நைட் குள்ள வீட்டுக்கு வந்துருவேன் அது மட்டும் பார்த்துக்க
நீ மட்டும் போ யாரையும் கூட்டிட்டு போகாத முக்கியமா இவள"

என்று ஸ்டெல்லாவை சுட்டி காட்டினான். ஸ்டெல்லாவின் முன்
சொடக்கிட்டவன் "இங்க நான் வரும் போது நீ இருக்க கூடாது புரிஞ்சுதா ?
வெளிய போ!" என்றபடி காரில் ஏறியவனின் முன் அவன் இறந்த காலம்
படமாக விரிந்தது
**********************************************

இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க next ud flash back தான் அதுல நிறைய தெளிவு கிடைக்கும் ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன் make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 
Last edited:
அத்தியாயம் 4(b )


அவன் நினைவில் .........

{ இங்கு சொல்லப்படும் விடயங்கள்,பெயர்கள் வெறும் கற்பனையே எந்தவொரு நபரையும் எந்தவொரு

சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டதல்ல, இது வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளை அடிப்படையாக கொண்டதும் அல்ல இவை கற்பனை மட்டுமே }

1958 இன் இறுதி பகுதி

ஆங்கிலேயர்கள் இலங்கை இந்தியா ஆகிய நாடுகளை வெளியேறியிருந்தாலும் அவர்களின்
சொத்துக்களான தேயிலை தோட்டங்கள், பங்களாக்கள் என சொத்துக்கள் மலைநாட்டில் கொட்டிக்கிடக்க
அதை பராமரிக்க நிர்வாகிக்க நம்பகமான சுதேசவாசிகள் தேவைப்பட்டனர்.


இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலுள்ள பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயரின் விசுவாசிகளாக
தொழிற்பட்ட பிரபுக்கள் செல்வந்தர்கள் ஜமீன்தார்கள் போன்றவர்களின் உதவியை நாடினர்.

லண்டனில்,

" ஸ்டெல்லோனியா வில்லா" (கற்பனை பெயர் ) என்று பொற்றகட்டில் பெயர் பொறிக்கப்பட்டிருந்த
பல ஏக்கர்களை தனக்குள் வளைத்து போட்டிருந்த அந்த மாளிகை பார்ப்போரை பிரம்மிக்க வைக்கும்.
அத்தனை பிரம்மாண்டம் வெளியில் வெள்ளைநிற பூச்சுகள் பூசப்பட்டிருந்தது.

அங்கே ஹேசல் நிற கண்கள் வெள்ளை நிறத்தழகி சந்தான நிற கவுனை அணிந்திருந்தாள். அத்துணை
அழகு பதுமையாக நின்றவள் தன் தந்தையிடம்

காலையிலேயே தேநீர் அருந்தும் போது எதற்கோ சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.
தமிழ்நாட்டில் நீண்ட காலம் வசித்ததாலும் தன் அன்னை தமிழ் என்பதாலும் மத்தில்டாவுக்கு
இலகுவாக தமிழ் பேச முடிந்தது ஜார்ஜும் தனது மகளுடனும் மனைவியுடனும் பேசிப் பேசியே இலகுவாக தமிழ் பேசவரம்பித்திருந்தார்

"டாடி ப்ளீஸ் எனக்கு அகனை தான் பிடிச்சிருக்கு ஐ லவ் ஹிம் சோ மச்"

"இங்க பாரு மத்தில்டா அவங்க கல்ச்சுரலான பேமிலி நமக்கு ஒத்துவராது ஹனி"

"நோ டாடி ஐ நீட் ஹிம் என்னோட குட் பிரெண்ட் அவன் அடுத்து உங்க பிரண்டோட சன்
தானே பேசி பாருங்க"

இப்படி மத்தில்டாவுடன்பேசிக் கொண்டிருக்கையில்,

அங்கே வந்து சேர்ந்தான் அகன் என்கிற அகனழகன் ,

"ஹாய் அங்கிள்!", "ஹாய் மத்தில்டா! "

"ஏதோ பேசணும்னு கூப்பிட்டிங்க?"


பெருமூச்செறிந்த ஜார்ஜ் ஹாய் அகன் உன்கிட்ட நிறைய விஷயம் கேட்கணும்
அண்ட் பேசணும்

"என்ன அங்கிள் ?"

"பஸ்ட் நீயும் மத்தில்ட்டாவும் லவ் பண்றது உண்மையா ?"

புன்னகை புரிந்தவன்,

" யெஸ் அங்கிள் ஐயம் இன் லவ் வித் ஹர் உங்க
ப்ரோபெர்டிஸ் எதுவும் எனக்கு தேவல எங்கப்பாவோடது கூட வேணாம்
நான் படிச்ச படிப்பு அவள காப்பாத்த போதுமானது எனக்கு
உங்க மகள் மட்டும் தான் வேணும் "

மை சன் நீ என் மகள லவ் பண்றியான்னு மட்டும்தான் கேட்டேன்
நீ என்ன பேசுற ?

"எதையும் தெளிவா பேசிரனும் அங்கிள் இல்லனா தேவையில்லாத
பிரச்சனை வரும் உங்க ப்ரொபேர்ட்டிஸ்க்கு ஆசை படற மாதிரி
இருக்கும் அதுதான் முதல்லயே சொல்லிட்டேன்" என்றான் அழுத்தமாக

"உன்னோட இந்த நேர்மை தான் எனக்கு பிடிச்சிருக்கு" என்றார் புன்னகையுடன்

"அடுத்து என்னோட ப்ரொபேர்ட்டி ஒரு டீ எஸ்டேட் ஒன்னு சிலோன் ல
இருக்கு அத மைன்ட்டைன் பண்ண ஆள் தேவை சோ நீ ஏன் கொஞ்ச
நாள் சிலோன்ல ஸ்டே பண்ணி அந்த பிசினெஸ்ஸ பார்த்துக்க
கூடாது"

"இப்போ தான் சொன்னேன் அங்கிள் எனக்கு உங்க மகள்
மட்டும் தான் வேணும் உங்க ப்ரொபேர்ட்டிஸ் எனக்கு
வேணாம்"

"இங்க பாரு அகன் இது எனக்கு நீ படிக்கும் போதே வந்த
ஐடியா "

"அங்கிள் பட் நான் படிச்ச படிப்புக்கும் இந்த பிஸினஸ்க்கும் எந்த
சம்மந்தமும் இல்லையே ஹொவ் கேன் ஐ ?"

"உன்னால முடியும் ஏன்னா உங்க அப்பாவோட ப்ரோபெர்டிசாயும் என்னோட
பாதி ப்ரோபெர்டிசாயும் நீ தான் பார்த்துக்கணும் அதுக்கு ட்ரெய்னிங்ன்னு
நினச்சுக்கிட்டாலும் ஓகே உன் ஓன் கம்பெனி ஸ்டார்ட் பண்ண ட்ரெய்னிங்கா
நினைச்சாலும் ஓகே"


"ஆனாலும் அங்கிள்" என்று தயங்கியவனை, " நோ யூ ஹவ் டு கோ" என்றபடி
வீட்டினுள் சென்று விட்டார்.

"மத்தில்ட்டா நாம என்னத்த பத்தி ரிசெர்ச் பண்றோம்னு உங்க
அப்பாவுக்கு தெரியுமா தெரிஞ்சுக்கிட்டு என்ன போக சொல்றாரா?"

"இங்க பாரு அகன் இங்கேயிருந்து நம்ம பண்ற வேலைய
ரொம்ப நாள் பார்த்தோம்னா கவெர்மென்ட்க்கிட்ட
மாட்டிக்கிற வீதம் அதிகம்"

"ஆனா சிலோன் இந்தியா ஆப்பிரிக்கா மாதிரி நாடுகள்ல இந்த
விஷயத்த பத்தியோ இந்த ரீசேர்ச்ச பத்தின அவார்னேஸ்
இன்னும் அறவேயில்ல சோ நாம சேப் அடுத்து டீ எஸ்டேட்ஸ்
றப்பர் எஸ்டேட்டஸ்ல வேர்க்கர்ஸ் எல்லாம் நம்ம வச்சுருக்க ஹாஸ்பிடல்ஸ்ல தான்
மெடிசின்ஸ் வாங்குவாங்க சோ சந்தேகம் வராம வேலைய கச்சிதமா
முடிச்சு நமக்கு தேவையான பொருட்களையும் எடுத்துக்கலாம்."

"ஆர் யூ ஸுர்"

"யெஸ் ஐ யம் ஸுர்"


"அப்ப நான் நாளைக்கே கிளம்புறேன்
நம்ம நினைச்சதை கண்டுப்பிடிக்க குறைஞ்சது டூ இயர்ஸ் ஆகலாம்" என்றான்
ஒரு வித யோசனையுடன்

"நானும் முடிஞ்சளவு சீக்கிரம் உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன் அகன்"
என்றவள் அவனை கட்டிப்பிடித்து கன்னத்தில் இதழ் பதித்து

"டேக் கேர் ஹனீ" என்று விலகி சென்றாள்

அகனழகன் கப்பலிலேறி சிலோனுக்கு புறப்பட்டான்.

அகனழகன் இந்தியாவில் நாகபுரி என்கிற ஊரில் செல்வந்த
குடும்பத்தின் இரண்டாவது ஆண் வாரிசாவன். இயற்க்கையிலேயே
சிறந்த புத்திக் கூர்மையும் மருத்துவ அறிவியல் மீது அதீத பற்றும்
ஆர்வமும் கொண்டவனாக வளர்ந்தான்.இவனது தாத்தா நாகேஸ்வர செட்டியார் (பெயர்கள் அனைத்தும் கற்பனையே) பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் வியாபாரங்களுக்கும் அரசியல் சார்ந்த விடயங்களுக்கும்
உதவி புரிந்தவர்.

இவனது தந்தை நாகராஜ செட்டியாரின் ஸ்நேகிதனே ஜார்ஜ் வில்லியம்,
மத்தில்டா மரியத்தின் தந்தை அகனழகனின் ஆசையெல்லாம் சொந்தமாக
மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும். என்பது மட்டுமே,


அதற்கான பட்டப்படிப்பை லண்டனில் பிரபல பல்கலைக்கழகத்தில் முடித்தவன் தனது ஆராய்ச்சிக்காக
எதையும் செய்ய துணிந்து விட்டான். இவனது அசாத்திய துணிவு
அவன் வாழ்க்கையின் வரமல்ல ஜென்மம் ஜென்மமாக துரத்தும்
சாபம் அதுவும் ஒரு பெண்ணால் என்று யார் அப்போது சொல்லிருந்தாலும் கேட்டிருக்கவும்
மாட்டான்.


வேலையை பார்த்துக் கொண்டு போ என்றிருப்பான்.
'அதுவும் ஒரு பெண்ணாளா ?' என்று கேலி செய்து விட்டு
இடத்தை காலி செய்திருப்பான.

அகனழகன் தனது பிடிவாதத்தால் அவன் வாழ்க்கையின்
உண்மையான காதலை இழக்க போகிறான் என்பதையும் அறிந்திருக்கவில்லை அதை
மீண்டும் பெறுவது மிகவும் கடினமான நடக்க முடியாத காரியம் என்பதையும்
அறிந்திருக்கவில்லை.

இன்று,

தனது நண்பிக்கு என்னவானதோ ஏதானோதோ என்று ஓடி வந்தவள் கண்ட காட்சியில்
கண்கலங்கி போனாள்.

"என்னடி ஆச்சு அவன் உன்ன?" என்று ஆரம்பிக்கும் முன்பே

"இல்லடி ஒன்னும் பண்ணல" என்று மறுபடியும் அழ


"ஏண்டி அழற?" என்றவுடன்

தறிகெட்டு ஓடிய நினைவலைகளுக்கு இயன்றளவு கடிவாளமிட்டு அடக்கியவள்

"அந்த ட்ராயர்ல உடுப்பு இருக்கு எடுத்து தா அனி"அதை எடுத்து கொடுத்த அனிதா

"உனக்கெப்படித் தெரியும் எது எங்கேயிருக்கும்னு ?" சந்தேகமாக கேட்க

விரக்த்தியாக சிரித்தவள் "தெரியும்டி"

"அனி எனக்கு ஒரு உதவி செய்வியா ?"

"என்னடி சொல்லு?"

"நம்ம ரெண்டு பேரும் உடனடியா இங்கேயிருந்து கண்டில இருக்க மாமா வீட்டுக்கு

போயாகணும்"

"சரிடி எப்டி போறது? நமக்கு தான் ஊர் தெரியாதே!"

"போன்ல கூகிள் மேப் இருக்கே உனக்கு நியாபகமிருக்கா ?"

"ஐயோ மறந்துட்டேன்டி ஆனா இங்கேயிருந்து எப்டி
வெளிய போறது?"

"அடுத்து தாருணிய விட்டுட்டு எப்படிடி ?" என்றாள் அனி
தயக்கமாக

"ஆமா இப்போ அந்த பிசாசை பத்தின கவலை ரொம்ப
அவசியம் " என்றாள் எரிச்சலுடன்

"என்னதாண்டி ஆச்சு உனக்கு இன்னைக்கு காலைல அந்த ஊஞ்சல் கிட்ட
போறேன்னு போனவ எங்க காணோம்னு பார்த்தா இப்டி இங்க ஏதாவது
தெளிவா புரியிற மாதிரி சொல்லு"

"எல்லாத்தயும் விளக்கமா சொல்றேன் அதுக்கு முதல்ல இங்கேயிருந்து தப்பிக்கணும்"ஒருவித தீவிரத்துடன்

"அடுத்து, அந்த ஸ்டெல்லா பேய் இனி நம்ம பிரண்ட் கிடையாது. அவளுக்கும்
எதுவும் தெரிய கூடாது" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே

அனிதாவின் தொலைபேசி அலறியது.

"லோச்சு உன் அம்மா தான்" என்றாள் அனி

"தா பேசுறேன் அவங்கள்ட எதுவும் நடந்த மாதிரி காட்டிக்க
கூடாது " என்றவாறு தொலைப்பேசி அழைப்பை ஏற்றாள்

"ஹலோ அம்மா"

"உன் போன் ஆஃப்னு காட்டுதே சார்ஜ்க்கு போடலையா?"

"இல்லம்மா போன்ல சின்ன அப்செட் அது தான்"

"நானும் அப்பாவும் கண்டிக்கு வாரோம்"

"ஏன்மா ?"

"உன் படிப்பும் முடிஞ்சு போச்சு அப்பாவும் நானும் ட்ரான்ஸபெர் அப்ளை பண்ணியிருந்தோமில்ல
அதுவும் கிடைக்குற மாதிரி இருக்கு

கண்டி வீட்டை ரெண்ட்டுக்கு விட்டிருந்தோமில்ல அவங்க வேற
வீடு பார்த்துட்டு போய்ட்டாங்க திருப்பி கண்டிக்கே
வந்துரலாம்னு பிளான் பண்ணிருந்தோம்ல கொஞ்சம் ரிப்பேர் பண்ணவேண்டியிருக்கு

நீ இருக்க நேரமே பால் காய்ச்சிட்டா நல்லம் தானே அதுதான் உடனே
புறப்பட்டோம்"

"எத்தன மணிக்கு கண்டிக்கு ரீச்சாகுவீங்க?"

"என்ன, ஓரு ஈவினிங் த்ரீக்கெல்லாம் ரீச் ஆகுவோம்மா"

"தாருணி இருக்காளா அவ கிட்ட போன கொடு"

"அம்மா இனி தாருணிய பத்தி கதைக்காதீங்க
என்னோட பேசணும்னா ஒன்னு எனக்கு கால் பண்ணுங்க
இல்லனா அனிக்கு கால் பண்ணுங்க தாருணிக்கு கால் பண்ணாதிங்க. அடுத்து தயவு பண்ணி
தாருணிக்கு நீங்க இங்க வாராத சொல்லாதீங்க ப்ளீஸ்
நான் வந்து எல்லாத்தையும் விவரமா சொல்றேன்" என்றாள் கோபமாக


"சரிம்மா பார்த்து பத்திரமா இருந்துக்கோ
ஏனோ இன்னிக்கு எனக்கு மனசு சரியில்ல ஏதோ
நடக்க கூடாதது நடந்த மாதிரியிருக்கு" என்றார்
ஒருவித வருத்தத்துடன்


லோச்சுவோ பெரும்பாடு பட்டு அழுகையை
அடக்கினாள்

"சரி மா வைக்கிறேன்" என்று தொலைப்பேசியை அணைத்து விட்டு

"இங்க பாரு அனி நம்ம இங்கிருந்து எப்படியாவது
தப்பிக்கணும் என்ன பண்ணலாம்னு யோசி"
என்றாள் ஒரு வித தீவிரத்துடன்

"எனக்கொரு ஐடியா நாம வெளில சுத்தி பாக்க போகணும்னு
கேட்டு ஏதாவது கடைக்குள்ள போய் அப்டியே எஸ் ஆகிறளாம்" அனி கேட்க

"லூசா நீ? அவன் நம்மள கடத்திருக்கான் எப்படியும்
நம்ம தப்பிக்க தான் இந்த மாதிரி சொல்றோம்னு தெரியும் அவன்
கில்லாடி" என்ன பண்ணலாம் என்று யோசித்தவளுக்கு

"நம்மள அவன் கடத்தலையே நாம தானே இங்க சுத்தி பார்க்க
வந்தோம் " என்றாள் அனி யோசனையுடன்

"இல்ல அவன் தான் அந்த ஸ்டெல்லா மூலமா பிளான் பண்ணி வர
வச்சிருக்கான்" புருவம் முடிச்சுடன்

"அது சரி அவன் ஏன் நம்மள பிளான் பண்ணி வரவச்சுருக்கான் ?
நம்ம என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ?, எல்லாம் ஓகே
நீ இன்டெலிஜென்ஸ் ல வேலை செய்றீயா? உனக்கு மட்டும்
எப்டி எல்லாம் தெரியுது !!!" என்றாள் அனி ஒருவித யோசனையுடன்

"இங்க பாரு இப்டியே பேசிட்டு இருந்தோம்னா ஒன்னும்
கழட்ட முடியாது உனக்கு மறுபடி மறுபடி சொல்றேன் இங்கயிருந்து
போனதும் எல்லாம் விளக்கமா சொல்றேன்" என்றாள் லோச்சனா

"ஐடியா! எனக்கு மூச்சு திணறல் ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போகணும்னு ட்ராமா போடலாம் ஹாஸ்ப்பிட்டலயிருந்து தப்பிச்சு பஸ் பிடிச்சு ஊருக்கு போயிருவோம். உன் ஹாண்ட் பாக்லயும் என் ஹாண்ட் பாக்லயும் ரெண்டு மூணு டிரஸ் பணம் இவ்ளோத்தையும் எடுத்துட்டு வா"

"மீதியெல்லாம் என்னடி பண்றது ?"

"ட்ரெஸ் முக்கியமா? நான் முக்கியமா ?"

"நீதாண்டி முக்கியம்"

"அப்போ நான் சொல்றத மட்டும் செய்" என்றாள் லோச்சு எரிச்சலாக

"ஓகே டி " என்று தலையாட்டினாள் அனி

"இங்க பாரு நம்ம தப்பிச்ச பிறகு என்ன எப்படியும் கண்டுபிடிக்க
ட்ரை பண்ணுவான் அவன எப்படியாவது ஒன் வீக்குக்கு திசை
திருப்பி அலைக்கழிச்சோம்னா போதும் நாம தப்பிச்சுருலாம்.


அடுத்து நமக்குன்னு ஒரு வாழ்க்கை காத்திருக்கு நீ யூ எஸ்க்கு
நான் ஆஸ்திரேலியா போயிருவேன் ஓகே ஒரு கிழமை
நாம கவனமாயிருந்தா போதும் புரிஞ்சுதா?"

பாவம், லோச்சுவுக்கு தெரியவில்லை உலகத்தில் எங்கே சென்றாலும்
அவளை தூக்கி வந்து அவனின் நெஞ்சுக்குள் பதுக்கி கொள்வானென்று
அவள் பிறந்தது பழிதீர்க்கவென்றால் இவன் பிறந்தது அவனுடைய
இறந்த காதலை உயிர்ப்பிற்க மட்டுமே ,

"அவனும் அரை பைத்தியமா சுத்துறவன் முழு பைத்தியமாகி
சுய நினைவ இழப்பான்" என்று குரூரமாக புன்னகைக்க

"எப்படிடா அது சாத்தியம்?" என்றாள் அனி ஆச்சரியமாக

" நான் பக்கத்துல இருக்க மட்டும் தான்
அவன் தெளிவாயிருப்பான் அவன் கண் பார்வைலயிருந்து தப்புனாலே
போதும் அவனே அவன சிதைச்சுக்கிட்டு மேல போயிருவான்" என்றாள்
குரூர திருப்தியுடன்

"இவ்ளோ நாள் நீ அவன் கூடவா இருந்த எப்டி நீ விட்டு போனதும்
பைத்தியமாகுவான்?"

'ஏன்னா அவன் வாங்குன சாபம் அப்டி' என்று மனதினுள்
நினைத்துக் கொண்டாள்

"என்னடி யோசிக்கிற?" என்றவுடன் நினைவிலிருந்து மீண்டவள்"ஒண்ணுமில்லடி, நாம நம்ம வேலைய பார்க்கலாம்"


"என்ன அவன் தப்பு பண்ணிருந்தாலும் நாம அப்டி
செய்ய கூடாதுடி தப்பு "

"அவன் என்ன செஞ்சான்னு சொல்லும் போது நான் பண்ணது
சரினு நீயே சொல்லுவ"

"ஆமாடி அவன் அப்டி என்ன செஞ்சான் ? காலைல கெஸ்ட் ஹவுஸ்
வந்து என்னமோ அவன் அக்கா தங்கச்சிக்கிட்ட உரிமையா பேசுற
மாதிரி பேசிட்டு இச்சு இல்ல ஆர்டர் போட்டுட்டு போனான் என்னதாண்டி
நடக்குது ?"

"அவன பத்தி நம்மள பத்தி எல்லாம் உனக்கு டீடைலா சொல்லறேன்
அது மட்டும் நீ நான் சொல்லறத கேளு "

"நம்ம போன் மட்டுமில்ல தாருணி இருந்தா அவளோட போனையும்
தூக்கிரு புரிஞ்சுதா ? "

"எல்லாம் ஓகே எனக்கு கள்ளத்தனம் பண்ண வரதேடி" என்றாள் தலையை சொறிந்தபடி

"இங்க பாரு உனக்கு மானம் உயிர் இதெல்லாம் முக்கியம்ன்னா
மட்டும் இதெல்லாம் பண்ணு இல்லைனா வேணா " என்றாள்
அழுத்தமான குரலில்

"சரிடி பண்றேன்" என்று ஒருவாறு ஒத்துக்கொண்டாள் அனி


தப்பிக்க எப்படி நடிக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும்
என்பதை நண்பிகளிருவரும் திட்டம் தீட்டி முடித்திருந்தனர். ஆனால்
அபிஜித்தனிடம் இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை என்பது நண்பிகளிருவருக்கும்
தெரியவில்லை.

வதம் தொடரும்.........
*********************************************

இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ud ல flash back ஆரம்பம் அதுல நிறைய தெளிவு கிடைக்கும் ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much

 
Last edited:
Hi மக்களே மர கழண்டவன் வந்துட்டான்
இன்னைக்கு ud இல்ல நாளைக்கு morning வரும் ஒரு குட்டிTeaser


"ஏய் பதில் சொல்லிட்டு போடி "

"என்னத்த சொல்ல ?"

"இப்ப கேட்டதுக்கு"

"நீங்க சீமை துரை கணக்கா இருக்கீக

நான் பழைய செப்பு பாத்திரம் மாதிரி
இருக்கேன் எப்டி ஒத்து வரும் ?"

"அத நான் பார்த்துக்கிறேன்டி கிறுக்கி"

"என்னத்த பார்த்துக்குவீக "

"எல்லாத்தையும் டி "

************

"இங்க பாருடா அம்மு நல்ல இடம்
மாப்பிள்ளையும் நல்ல மனுஷனா
தெரியுறார் பேசட்டுமா ?"

"பேசுங்க அப்பா உங்க இஷ்டம்
தான் என் இஷ்டம் " அவனை வெறுப்பேற்ற
வேண்டுமென்றே

இதை தொலைபேசி அழைப்பில் கேட்டு
கொண்டிருந்தவனுக்கு புருஷன் நான் குத்து கல்லு மாதிரி இருக்கயில
இன்னொரு கல்யாணமா ?என்று அவனுக்கு
கோபம் கோபமாக வந்தது.

தந்தை போன பிறகு அவனிடம் மீண்டும் கதைக்க ஆரம்பித்த சனாவிடம் பொறிய ஆரம்பித்தான்.

"சனா என்கிட்டயே விளையாட்ரியா
அப்ப அவ்ளோ நாள் வாழ்ந்த
வாழ்க்கை க்கு அர்த்தம் என்னடி?" என்று காட்டமாக கேட்க

"ஒண்ணுமில்லனு அர்த்தம் "

"அப்ப உனக்குள்ள உயிரா இருக்க என் குழந்தைய என்ன செய்ரதா உத்தேசம்"

"குழந்தைய என்ன எடைக்கு போட்டு
பேரீச்சம்பழமா வாங்கி தின்ன முடியும் ?
நான் வளர்ப்பேன் " என்றாள் சன்னமான குரலில்

"அப்ப கல்யாணம்"என்றான் கேள்வியாக

"அதையும் பண்ணிப்பேன்" என்றாள் புன்னகையுடன்

"அப்பானு யார காட்டுவ?"என்றான் எரிச்சல் மேலிட

"கல்யாணம் முடிஞ்சா சந்தோஷ காட்டுவேன் "

"இல்லைனா சூரியன காட்டுவேன்" என்றாள் நக்கலாக

"என்னது சூரியனையா ?" என்றான் குழப்பமாக

"ஆமா கர்ணன குந்தி தேவி பெத்தெடுத்த
மாதிரி பெத்து எடுத்தேன் னு சொல்வேன் "என்றாள் விட்டேற்றியாக

அபிஜித்தனுக்கோ காதிலிருந்து புகை
வராத குறை தான்
 
Status
Not open for further replies.
Top