வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காலகேயனின் காதல் வதம் -கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 19


எல்லோரும் அபிஜித்தனை தூக்கிக் கொண்டாடுவதை பார்த்த லோச்சனாவுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக
வந்தது. தன் பக்கம் சாய்ந்திருந்த அனிதாவையும் அவன் பக்கம் இழுத்துக் கொண்டானென நினைக்கும் போதே லோச்சுவுக்கு அவன் மேல் கொலை வெறி வந்தது. இருந்தும் மனதில் மூண்ட எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தவளை அழைத்த சந்தியாவோ


"சீக்கிரமா போய் ரெடியாகுடா மாப்பிள்ளையோட போய்ட்டு வா "
என்று துரத்தி விட அவளும் வேறு வழியின்றி அவனை வஞ்சிக் கொட்டியபடியே
தயாராகி வர, எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு

அவளை வெளியே நின்றிருந்த காரினுள் ஏற்றி காரை கிளப்பியபடி அவளிடம்
பேச்சுக் கொடுக்கவாரம்பித்தான்.


"ஏன் அனிதாவ இப்போ நீ திட்டின ?" என்றான் காட்டமாக


அவளோ எரிச்சலாக

"ம்ம் உன்ன மாதிரி கொலைகாரன்ட்ட எதுவும் வாங்க கூடாதுன்னுதான் "

"ஏய் அப்டி சொல்லாத எனக்கு வலிக்குது " என்று
கோபமாக ஆரம்பித்தவன் ஆற்றாமையுடன் முடிக்க

"எனக்கும் தான் தினசரி வலிக்குது உனக்கு தெரியுமா இந்த மனவலி
தாங்க முடியாம பதின்முனு வயசுல தற்கொலை பண்ண போயிருக்கேன்
அடிக்கடி உன்னோட வாய்ஸ் வந்து காதுக்குள்ள

நீ ஒண்ணுக்கு லயிக்கில்ல செத்துரு செத்துருன்னு
சொல்லும் தெரியுமா ?அப்படியே போய் சேர்ந்துருக்கலாம் நிம்மதியாவாச்சு
இருந்திருக்கும் "

என்றாள் விரக்தியாக,


அவனோ
"ஏன்டி உன்னையும் காயப்படுத்திக்கிட்டு என்னையும்
கொல்லாமல் கொல்ற" என்றான் வலி நிறைந்த குரலில்




"அதுக்கு தானே என்ன கட்டிக்கிட்ட நல்லா அனுபவி அப்பறோம்
என்ன தீடீர்னு அனி மேல புது அக்கறை பாசமெல்லாம் ?"

என்று ஏதோ சிந்திப்பது போல் பாவனை செய்தவள்

"ஓஹ் இந்த முறையும் எப்படி அந்த
பொறுக்கி பயல இவ தலையில கட்டி வைக்கலாம்னு புதுசா
பிளான் பண்றியா ?"


அவனோ உடனடியாக

"கிடையாது இந்த முறை அனி விரும்பினாளே தவிர நான் எதுவும்
பண்ண போறதில்ல" என்றான் இறுகிய குரலில்

"ஏன் ?"

"ஏன்னா அவ என் தங்கச்சி" என்றான் பாதையில் கவனம்
செலுத்தியபடியே

அவளோ நக்கல் சிரிப்புடன்,

"ஓஹோ அப்டியா! இப்டி தான் போன முறையும் சொல்லி அவள
கசாப்பு கடைக்கு விக்கிற மாதிரி உங்க ஆருயிர் நண்பனுக்கு
கட்டி வைச்சீங்க " என்று கூற

"இங்க பாரு தாரா என் பொறுமைக்கும் எல்லையுண்டு அதை
தாண்டுனா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன் பார்த்துக்க"


என்றவன் மொத்த கோபத்தையும் வண்டியில் காட்டியபடி
இறுகி போக அந்த கதைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தவள்

"ஓகே நம்ம கதைக்கு வருவோம் என்ன ?
எல்லாரையும் மயக்கி உங்க கைக்குள்ள போட்டாச்சு போல
கடத்தி கட்டாய தாலி கட்டின உன்கூட வாழ சொல்லி எங்க
அம்மா அட்வைஸ் பண்றங்க" என்றாள் படுநக்கலாக


அவனோ விரக்தி புன்னகையுடன்

"எல்லாரும் என் காதல புரிஞ்சிக்கிட்டாங்க உன்ன தவிர மற்றவங்களுக்கு
நான் யாருன்னு புரியுது"

என்றானே பார்க்கலாம் லோச்சுவோ
அடக்க முடியாமல் சிரித்தவள்

"ஆமா ஆமா புரிஞ்சிகிட்டாங்க "

என்று மறுபடியும் கண்ணீர் வருமளவுக்கு
சிரித்தவளை பார்த்த அபிஜித்தனோ


"ஏன் இப்போ லூசு மாதிரி சிரிக்கிற? " என்றான் எரிச்சலாக

"இல்ல நீயொரு கொலைகாரன் தன் ரத்தத்தை கூட அடிச்சு புசிக்க
கூடிய ஒநாய்ன்னு எனக்கு தானே தெரியும் அதெல்லாம் அவங்களுக்கு
தெரியாதில்ல அது தான் நினைச்சேன் சிரிச்சேன்"

என்று மறுபடி சிரிக்க அதில் கொதிநிலையின் உச்சத்திற்கே சென்றவன்

ஓங்கி அவள் கன்னத்தில் அறைய

காலையிலிருந்து காணப்பட்ட மனவழுத்தத்தினாலோ
என்னவோ பெண்ணவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

கண்களில் சலனமில்லாமல் அவளை வெறித்த அபிஜித்தனோ

"அப்படியே கிட எப்பப்பாரு மனுஷனை எரிச்சல்ப்படுத்திக்கிட்டு"
என்று கோபமாக கூறியவன் மீண்டும் பாதையில் கவனம் செலுத்தினாலும்
கண்ணினோரம் நீர் துளிகள் கசிந்தபடி தானிருந்தது.


அன்று...


தரனுடன் கதைத்து கொண்டிருந்தவனுக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு
உடனே கதவை திறக்க அங்கே அகஸ்த்தா நின்றிருந்தாள்.

"சார் என்னை வரச் சொன்னிங்களாம்"

என்று பவ்வியமாக
நின்றவளை வீட்டினுள் அழைத்தவன் தனது ஆய்வுக்கூடத்துக்கு
சென்று ஒரு மருந்தை அவள் முன்னால் வைத்து

" ஒரு ஆளுக்கு இதை கொடுக்கணும்" என்றான் கூறுபோடும்
பார்வையோடு

"சார் இது வாசத்தாலேயே தற்கொலைக்கு தூண்டுற மருந்தில்ல
இதை யார் மேல ஐ மீன் வழமையா பெர்பியூம்ல தான்
கலப்போம் அது தான்"

என்று கோர்வையாக பேசமுடியாது
தடுமாறிய அகஸ்த்தாவை பார்த்து பேசாதே என்பது போல்
சைகை செய்தவன்

"இதை சாராவோட பெர்பியூம்ல கலந்துரு"

"ஆனா சார் "என்று தடுமாறியவள் அவள் பார்வையிலேயே
கப்சிப்பென வாயை மூடிக் கொண்டாள்

"பிரெண்டு குடும்பம்னு செண்டிமெண்ட் பார்க்குறதுனா நீ
இந்த வேலைக்கே வந்துருக்க கூடாது அடுத்து ஏன் எதுக்குன்னு

கேள்வி கேட்காத எனக்கு பிடிக்காது இப்போ போய்ட்டு நான்
சொன்னத செய் " அதிலிருந்த நடந்தே ஆகவேண்டுமென்ற
தொனியில் சரியென தலையசைத்தவளை

அனுப்பிவிட்டு கதவை அடைத்தவன் தரன் அருகே
அமர்ந்தான். அவனோ பயந்தபடி அகனை பார்க்க


"என்ன மச்சான் அப்படி பார்க்குற உன்ன நான் ஒன்னும் பண்ண
மாட்டேன் ஏன் தெரியுமா ? "

என்றான் ஒரு சிகாரை எடுத்து வெட்டியபடியே

தரனோ, தெரியவில்லையே என்பது போல்
தலையசைக்க அவனை
பார்த்தபடி தன்னிடமிருந்த சிகாரை
பற்றவைத்தவன் அதை ஊதியபடியே

"ஏன்னா உனக்கும் பூவரசிக்கும் கல்யாணம் பண்ணிவைக்க போறேன்"

"என்னது ?" அதிர்ந்த தரனை பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன்

"ஷாக் ஆகாத கல்யாணம் முடிஞ்ச அடுத்தநாளே நீங்க ரெண்டு பேரும்
ஊருக்கு போறீங்க அதாவது தாரெழிலிக்கிட்டயிருந்து பூவரசிய மொத்தமா
பிரிக்க போறேன்"

என்றவுடன் அதிர்ந்து விழித்த தரனோ

"எப்படிடா இதெல்லாம் சாத்தியமாகும் ? அடுத்து பூவு எப்படி எழிலிய விட்டுட்டு
வருவா ?" என்றான் புரியாமல்

"புருஷன் நீ என்னத்துக்கு இருக்க ? கல்யாணம் காட்டினா ஒரு பொண்ணு
அவ புருஷன் வீட்டுக்கு தானே போகணும் அதை வச்சு நாடு கடத்திற வேண்டியது தான் "

என்று எரிச்சலாக ஆரம்பித்தவன் வெற்றி குரலில் முடிக்க


"சரி இதனால உனக்கென்ன லாபம் ?"


"எனக்கு எல்லாமே லாபம் தான்டா முதலாவது பூவரசி விட்டுட்டு போன தாரா கவலையா
இருப்பா அதை பயன்படுத்தி அவ மனசுக்குள்ள நான் நுழைஞ்சிட்டேன்னு வை காதல்
வந்தா ஆட்டோமெட்டிக்கா மந்தபுத்தியும் சேர்ந்து வந்துரும் அதுக்கு பிறகு முடிஞ்சளவு
என்னோட வேலையெல்லாம் சுலபமாகிரும்"

என்றான் வேட்டையாடும் தொனியில்

தரனோ மெச்சுதலாக "எப்பிடிடா ஒரே கல்லுல மூணு மாங்காய்?"

இடைவெளிவிட்டு சந்தேக குரலில்

" ஆனா எனக்கெப்படி அவங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வைப்பாங்க ?"

"அதுக்கு தான் இருக்கவேயிருக்கான் இழிச்சவாய் விதுரன் அவன வச்சு ஒத்துக்க
வைப்பேன் " என்றான் அகன் யோசனையாக


"அது தான் எப்படினு கேக்குறேன் ? "

"எல்லாத்தையும் சொன்னா சுவாரஸ்யம் இருக்காதில்ல வைட் அண்ட் வாட்ச்"

என்றான் தரனின் தோளில் கைப்போட்டபடி, அகன் புறம்
திரும்பிய தரனோ

"ஆனா சாராவ ஏன்டா கொல்ல சொன்ன ? "

அகனோ நக்கலாக

" நான் எங்கடா கொல்ல சொன்னேன் அவ தானே
தற்கொலை பண்ணிக்க போறா"

என்றான் புருவத்தை சுருக்கியபடி


"டேய் மச்சான் ப்ளீஸ்டா சொல்லுடா இல்லாட்டி எனக்கு
பைத்தியம் பிடிச்சிரும்டா"

அசுர புன்னகை புரிந்தவனோ

"ஓகே ஓகே நல்லா கேட்டுக்கோ பஸ்ட் அவ நான்
ஜூனியர்ஸ் கொண்டுவரக்கூடாதுன்னு சொன்ன xxxx மருந்த
கொண்டு வந்துருக்கா" என்றான் யோசனையாக

தரனோ

"அத நான் தானேடா ரிப்ளேஸ் பண்ணேன் அப்பறோம்
எப்படி அவ" சந்தேகத்துடன் தடுமாற

"ஹா.. ஹா "என்று வாய் விட்டு சிரித்தவன்

"அது தான் மச்சான் நான் ஹெட்டாயிருக்கேன் நீ இன்னும் எனக்கு அசிஸ்டன்ட்டா
இருக்குற " என்று மறுபடியும் அரக்க சிரிப்பு சிரித்தவன்

இரையை வேட்டையாடும் ஓநாயின் பார்வையோடு

"அப்பறம் ஏன்டா உன் ரிப்போர்ட்ட என்கிட்ட காட்டாம
மறைக்கணும் அப்டினா என் கண்ண மறைச்சு அத
கொண்டு வந்துருக்கா அதை எந்த பொண்ணுக்காவது இஞ்செக்ட் பண்ணிருந்தா
அப்பறம் எப்படி எனக்கு ப்ரொபரான
ரிசல்ட் கிடைக்கும் "

என்றவனை பார்த்து தரன்

"அப்பறம் ஏன்டா என்ன மட்டும்" மீதி வார்த்தைகளை
தனதாக்கிக் கொண்டவன்


"ஒன்னும் செய்யலையா ? ஏன்னா நீயென் நண்பன்டா
நான் கெட்டவன் தான் ஆனா கொஞ்சமே கொஞ்சம்
நல்லவன் உன்ன மாதிரி நண்பன இழக்க நான்
என்ன முட்டாளா ?" என்றான் ஆஷ்ட்ரேயில் சிகாரை தட்டியபடி

தரனோ மீண்டும் சந்தேகமாக,

"அப்பறம் நான் எப்பிடிடா கோமாக்கு போகாம தப்பிச்சேன்?"

மறுபடியும் சிரித்த அகனோ,


"நீ எடுத்தது நான் வச்சிருந்த மருந்து அதோட வீரியம்
ரொம்பவும் கம்மியானது அதாவது வீரியமேயில்லன்னு வச்சிக்கயேன்

அது தான் உனக்கு போதை ஏறவேயில்ல அடுத்து அட்ரனலின்
நீ விழுதானால ரொம்ப அதிகமாவே சுரந்து தற்காலிகமா

கோமாவுக்கு போகாம தப்பிச்சிட்ட அதுக்கு பிறகு
தான் உனக்கே தெரியுமே ''

என்று எல்லாவற்றுக்கும் விடையளித்து விட்டு சோம்பல் முறித்தவன்


"சரி இப்போ ரெஸ்ட் எடு நாளைக்கு விஷு வேற
வரேன்னு சொன்னான் அவனை வேற பார்க்கணும் "

என்றபடி நண்பர்களிருவரும் சம்பாஷணைகளை முடித்துக் கொண்டு
தங்கள் அறைக்கு சென்று நித்திரை கொண்டனர். அடுத்தநாள் விடியலை ஆர்வமாக
எதிர்ப்பார்த்தபடி

இன்று


இறந்த காலத்தின் கசடுகளை நினைத்தபடியே பல்பொருள் அங்காடியுனுள்
அபிஜித்தனின் கார் நூழையவும்
பக்கத்திலிருந்த லோச்சனாவிடம் அசைவு தெரியவும் நேரம் சரியாகயிருந்தது.
கண்ணீரை துடைத்துக் கொண்டவன் அருகிலிருந்த தண்ணீர் போத்தலிலிருந்த
நீரயெடுத்து லோச்சனாவின் முகத்தில் தெளிக்க

அவளோ கஷ்டப்பட்டு இமைகளை திறந்தவள் தன்னையே வைத்தக்கண்
வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனை வெட்டும் பார்வை
பார்த்தபடி திருப்பிக் கொண்டாள்.


"மால் வந்துருச்சு இறங்குறீங்களா மகாராணியாரே ?"
என்றவுடன் ஒன்றும் பேசாமல் இறங்கிக்கொள்ள

அந்த பக்கம் ஒரு பெண்

"அந்துவன் இங்க வா" என்றழைக்க

லோச்சனாவின் இதயமோ வேகமாக படபடக்க கண்களோ
அப்பையனை தேடி அலைப்பாய்ந்தது.

'எங்கே அவன்? அந்துவன்
என் அந்துவன்' என மனம் பரபரக்க

அதே சமயம் யாரோ அவள் கால்களை
சுரண்ட கீழே குனிந்து பார்த்தவளின் கண்ணில் கண்ணீர்
இதழிலோ கண்ணுக்கெட்டா புன்னகை

"நீ தான் அந்துவனா ?"

"ம்ம் ஆமா நான் தான் ஆந்தி " என்றான் அச்சிறுவன்
மழலை மொழியில்

லோச்சுவின் கண்களிலோ ஆனந்த கண்ணீர் தூக்கி தன்
மார்போடு அணைத்துக் கொண்டவள் அப்பாலகனை முத்தமழையில்
குளிப்பாட்டியபடியிருக்க . இதையெல்லாம்
ஓரமாய் நின்று பார்த்த அபிஜித்தனுக்கோ இதயத்தை
யாரோ கத்திக்கொண்டு அறுப்பது போல் வலித்தது
வதம் தொடரும்..........
************************************************

இந்தா episode போட்டாச்சு மக்கா அப்டியே அந்துவன் யாருன்னு சொல்லிட்டு
போங்க பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much

 
அத்தியாயம் 20



அந்துவனென்ற பெயரை கேட்டவளுக்கு நாடி நரம்பெல்லாம் பூப்பூத்தது போலிருக்க அச்சிறுவனை
இறக்கி விடாமல் கைகளினுள்ளேயே அணைவாக பிடித்துக் கொண்டபடி
கண்ணீர் வடிக்கவாரம்பித்தாள். இதைக் கண்ட அபிஜித்தனின் இதயமோ சில்லு சில்லாக
நொறுங்கி தான் போனது இருந்தும் கடினப்பட்டு குரலை சரிசெய்துக் கொண்டு

"சனா குழந்தைய அவங்க பேரண்ட்ஸ்ட்ட கொடுக்கணும் இங்க கொடுடா "

என்றவாறு அவளருகில் வர அவளோ பின்நோக்கி நகர்ந்தபடி தரமாட்டேனென தலையசைக்க
அவனோ மேலும் நொந்து தான் போனான். என்றோ செய்த வினைகள் இன்று தன்னை சாட்டையாக
சுழன்றடிப்பதை உணர்ந்தவன்

மறுபடியும் பிசிறு தட்டிய குரலில்

"தாரா இது நம்ம பாப்பாயில்லமா தா கொடுத்துருவோம்" என்று தன்

கையை நீட்ட அவளோ அவன் கையை தட்டி விட்டவள் குழந்தையை
இறுக அணைத்துக் கொண்டே


"நான் யாருக்கும் என் அந்து பாப்பாவ தரமாட்டேன் முக்கியமா
உன்கிட்ட கொடுக்கவே மாட்டேன் விட்டுரு ப்ளீஸ் நாங்க எங்கயாவது
போய் பொழைச்சுக்குறோம் அழகரே எங்கள விட்ருங்க"



என்றபடி நிகழ்காலத்துக்கும் இறந்தக்காலத்துக்கும்
இடையே தாயாக மாறி சிக்கித்தவிக்க அபிஜித்தனின் நிலையோ ஐயோவென்றானது

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே லோச்சனாவின் அருகே
வந்த அச்சிறுவனின் தாயோ

"எக்ஸ்கியூஸ் மீ சிஸ்டர் அது என் குழந்தை" என வாங்க லோச்சனாவுக்கோ
தன்னிலை அப்போது தான் உரைத்தது. அப்பெண்ணை பார்த்து புன்னகைத்தவள்
கண்ணீர் வடித்தபடி

"ஒரே ஒருவாட்டி கிஸ் பண்ணிட்டு தந்துரட்டுமா ?ப்ளீஸ்"
என கெஞ்ச

அப்பெண்ணுக்கு இவளது நிலை புரிய சரியென்னும் விதமாக தலையசைக்க


இறுக்கி அணைத்துக் அச்சிறுவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு
அவன் அம்மாவிடமே கையளித்தாலும் பிரியமனமின்றி அப்பாலகன் சென்ற வழியையே
வெறித்தபடி கண்ணீர் வடித்தவள் தன் மணிவயிற்றை அழுத்தி பிடித்துக்
கொண்டாள்.

அபிஜித்தனுக்கோ அவளை சந்தோஷப்படுத்த வெளியே அழைத்து
வந்து இப்படியா ஒரு நிலை அமைய வேண்டுமென மனதில் நொந்துக்
கொண்டே அவளருகே நெருங்கி

"சனா வா போகலாம்" என்று அவள் கையை பிடிக்க அவளோ

அபியின் மார்பிலேயே விழுந்து கதறவாரம்பித்தாள்.

"பாவா எனக்கு நம்ம அந்து பாப்பா வேணும் எனக்கு இப்போவே வேணும்
ஐயோ நான் என்ன செய்வேன் ஐயோ ஐயோ
என் குழந்தைக்கு வலிச்சிருக்குமே" என்று புலம்ப

"சனா காம் டவுன் நீ நல்லாயிருந்தா தான் நம்ம குழந்தை நம்மகிட்ட
சீக்கிரம் வருவான் " என்று ஆறுதல் படுத்த

பெண்ணவளோ விலுக்கென நிமிர்ந்து

"என்னது சீக்கிரமே வருவானா ? என் புள்ளைய கொன்ன கொலைகாரப்பாவி
நீ சொல்றியா ? உன்னால தான் என் வாழ்க்கையே போச்சு ஆசை வார்த்தை பேசி
என்ன மயக்கி " அதற்கு மேல் பேசமுடியாமல் கதற அபியின் இதயத்திலோ ரத்தக்கண்ணீர்
வடிந்தது.


லோச்சனாவின் தலைக்குள் அன்றொருநாள் அவன் விட்ட வார்த்தைகள் ஒலித்தது.

"ஏய் என்கிட்டயே விளையாடுறியா ? நான் கொடுத்த மருந்த ஒழுங்கா சாப்பிடாம
ச்சைக் நீயே ஒரு நசை இதுல புதுசா குழந்தைனு ஒரு நசை வேற எனக்கு தேவைதான்"

"பாவா என்ன சொல்றீங்க ? "

"சேத்துல விழுந்தாலும் விழுந்த தடயமில்லாம எழுந்துக்கணும்னு சொல்றேன்டி "

அவனை தள்ளிவிட்டவளின் தலைக்குள்
அவன் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க ஐயோ பேசாதீங்க
தலை வலிக்குது என்று கத்தியபடி தலையைப் பிடித்துக் கொண்டு
தரையில் அமர்ந்தவள் அப்படியே மயங்கி சரிய

அவளை குழந்தையாக கையில் ஏந்திக் கொண்டவன்

"சனாம்மா ப்ளீஸ்டீ எழுந்துக்கோ செத்துட்டுருக்கேன்டி எழுந்துக்கோ சாரிடி
ஒரே ஒரு தடவை இந்த பாவிய மன்னிச்சிருடி எல்லாத்தையும் சரி பண்ணுறேன்"

என்று அழுதுக் கொண்டே அவளை பின்னிருக்கையில் கிடத்தியவன் வைத்தியசாலைக்கு
அழைத்துச் சென்றாலும் மனமென்னவோ பழைய கசடுகளை நினைத்து
நினைத்து கண்ணீர் வடித்தது


அன்று...

பொழுது விடிந்தும் விடியாமலிருக்கும் சமயத்தில் எஸ்டேட் பங்களாவிற்கு வந்த முத்தன் பங்களாவின்
கதவை விடாமல் தட்ட அந்த

சத்தத்தில் எழுந்துக் கொண்ட அகனோ

'யாரிந்த நேரம் தூங்க விடாம' என்று நினைத்துக்
கதவை எரிச்சலுடன் திறக்க அங்கே நின்றிருந்த முத்தனை பார்த்து

"என்ன ?" என்று வல்லென பாய்ந்தான்.

"ஐயா அது வந்துங்க சின்ன டாக்டரம்மா தூக்கு மாட்டிக்கிட்டாங்களாம் இப்போ
தானுங்க தகவல் வந்துச்சு'' என்று பதட்டமாக கூற

அவனோ

"போலீஸ்க்கு சொல்லியாச்சா ?" என்றான் சோம்பல் முறித்தபடியே

"ஆமாங்க இப்போதானுங்க முத்தன் ஓஐசி மஹத்தயாகிட்ட சொல்லத்தானுங்க
பியாகமக்கி போயிருக்கான்"

"சரி போ நான் ரெடியாகி வாரேன்"

என்று கதவையடைத்தவன் முகத்தில் ரத்தம் குடிக்கும் காட்டேரியின் புன்னகை மனமோ
'என்னை யாரெதிர்த்தாலும் அவங்களோட நிலைமை இது தான்' என்று வன்மமாக நினைக்கவும் தவறவில்லை உள்ளே சென்றவனுக்கு மறுபடியும் கதவு

தட்டப்படும் சத்தம் கேட்க ப்ச் என்று சளித்தபடி கதவை திறந்தவன் முகமோ
ஒரு நொடியில் அத்தனை மகிழ்ச்சியாக மாறியது

"தாரா " என வாய்விட்டு அழைத்தவன் பூவரசி வந்திருக்கவில்லையென்பதையும்
அவதானிக்க தவறவில்லை இருந்தும் அந்த இனிய சூழலை கெடுத்துக் கொள்ள
விரும்பாமல் தன் காதல் அத்தியாயத்துக்கு அடிப்போடவாரம்பித்தான்.

இடத்தை விட்டால் தானே உள்ளே செல்லவென்று நினைத்தபடி
கையைப்பிசைந்துக் கொண்டு நின்றவளை இடையினூடு கைகொடுத்து
தூக்கி உள்ளே நிறுத்த அதிர்ந்து விழித்த தாரெழிலியோ

"ஐயா என்ன செய்றீங்க ?"

என்றாள் அதிர்ச்சியாக அவனோ ஒற்றை கண்ணை சிமிட்டி

"உன்ன கல்யாணம் செஞ்சிக்க போறேன் சம்மதமா ?"


என்றவுடன் அவளோ விளையாடுகிறான் என்ற எண்ணத்தில்
பதிலேதும் பேசாமல் விறுவிறுவென சமயலறையை நோக்கி
நடக்க அவனோ

"ஏய் கிறுக்கி பதில் சொல்லிட்டு போடி ?"

என கத்த

அவளோ சமயலறையினுள் நுழைந்தபடி

"என்னத்த சொல்ல ?" என்று குரல் கொடுக்க

"இப்போ கேட்டதுக்கு பதில் "
என மீண்டும் கூவ


அவளோ நக்கல் தொனிக்க,


"ஆமா நீங்க சீமை துரைக்கணக்கா இருக்கீக நான் ஒடிசலான
மண்பானைக்கணக்கா கிடக்குறேன் எப்படி பொருந்தி போகும்
பேசாம ஏதாவது வெள்ளைத்தோல் பிள்ளையா கல்யாணம் பண்ணிக்கோங்க "

என்றவுடன் மனதில் கோபம் மூண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

"அதெல்லாம் பொருந்தி போகும் நான் பார்த்துகிறேன் "
என்றான் தீவிரமாக,


அவளோ மீண்டும் விளையாட்டாக

"என்னத்த பார்த்துக்குவீக ?"

"எல்லாத்தையும்டி கிறுக்கி "

என்று கூறியவன் எதிர்க் கேள்வி வரவில்லையே என உருப்போட்டபடி
சமையலறை நோக்கி போக


தாரெழிலியோ என்னத்தான் பகிடியாக பதில் பேசி விளையாடினாலும் மனதிற்குள்


'பூவரசிய பத்தி ஏன் இவரு ஒண்ணுமே கேட்கல? அப்டினா அவளுக்கு
எதனால காய்ச்சல் வந்துச்சுன்னு ஏதோ ஒரு விஷயம் இவருக்கு
தெரிஞ்சித்தானிருக்கனும் இல்லாட்டி ஏன் கேட்காம இருக்காரு '

என சிந்தித்தபடி தேநீர் ஊற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருக்க

அவளது வெற்றிடையை யாரோ அழுத்தமாக வருடுவதை உணர்ந்து
வெடுக்கென திரும்பியவள் யாரென கவனிக்காமலே ஓங்கி
அறைந்திருந்தாள்.


அவள் கொடுத்த அறையின் வேகத்தில் ஒரு நிமிடம் திடகாத்திரமான
ஆண்மகனான அகனுக்கே கண் முன் பூச்சி பறந்தது.மனதுக்குள்

'ஹப்பா சாமி என்ன அறை ? கைக்காலை வச்சுக்கிட்டு சும்மவேயிருந்துருக்கலாம்'
என நினைக்கவும் தவறவில்லை.

அவனருகில் பதறியப்படி வந்தவளோ

" ஐயையோ தொரை நீங்களா ? மன்னிச்சுக்கோங்க" என்று வெளியே
கூறினாலும் மனதுக்குள் கூத்தாட்டம் போட்டப்படி

'யாருக்கிட்ட என்கிட்டயேவா இனி என்மேல கைவைப்ப வச்சா
இப்டி தான் நடக்கும் சாவுடா உன் கொள்ளிக் கண்ண அன்னைலயிருந்து
பார்த்துட்டு தானேயிருக்கேன் என்னைக்காவது
வாங்குவன்னு தெரியும் இவ்வளவு சீக்கிரம் வாங்குவன்னு தெரியாது'


நினைத்தவள் பொங்கி வந்த சிரிப்பை
அடக்கிக் கொண்டு

"ஐயோ உதட்டுல ரத்தம் வருதுங்க" என்று மெல்ல தன் தாவணி
தலைப்பால் துடைத்து விட போக அவள் கையை பிடித்து தடுத்தவன்

மனமோ ' இரு இரு எல்லாத்துக்கும்
சேர்த்து வச்சு உனக்கு பெருசா நல்லது
பண்றேன்'

வன்மமாக நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட
தாரெழிலியோ தான் சீண்டிவிட்டது ராஜநாகமென்பதை
அறியாமல் வழமைபோல துள்ளலுடன் தனது தினசரி
வேலையை கவனிக்கவாரம்பித்தாள்.

தரனுக்கும் அகனுக்குமான தேநீரை தயாரித்துக் கொண்டவள் வரவேற்பறைக்கு
வர இருவரும் வெளியே செல்லத் தயாராகியிருப்பதையும் கண்டுகொண்டு

எங்கே செல்கிறார்கள் என்று கேட்காமல் மெதுவாக அகனருகில் குனிந்து

"ஐயா என்ன காலைல சமைக்கட்டுங்க " என்று கேட்க

"காலை சாப்பாடு வேணாம் பகல் சாப்பாடு செஞ்சுரு பகலைக்கு
தான் வருவோம் " என்றான் ஆளுமையான குரலில்

"சரிங்க"


அவளோ பூனையை போல் அங்கிருந்து வந்த அசப்பில்லாமல் தரனின்
தேநீர்க்கோப்பையையெடுத்துக் கொண்டு நகரப் போக

அவளை சொடக்கிட்டு அழைத்தவன்

"ஏன் இன்னைக்கு பூவரசி வரல ? " என்றான் அதே தொனியில்

அவளோ மெல்லமாக திரும்பி தரனை பார்த்தபடி

"காய்ச்சலுங்க"

என்றவுடன் தரனின் முகம் வெளுப்பதை கவனித்து விட்டு
மீண்டும் குனிந்துக் கொள்ள


"சரி நீ போகலாம் நான் டீய குடிச்சுட்டு கப்பை கொண்டுவாரேன்"


என்று ஒற்றை கண்ணடித்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்பவன்
தலையில் அம்மிக்கல்லை தூக்கிப் போடலாமா
குழவிக் கல்லை தூக்கி போடலாமா என சிந்தித்து

கொண்டே சமையலறை திண்டில் தன்னை மறந்து அவள் ஏறி அமர்ந்துக் கொள்ளவும்
அகனுள்ளே வரவும் நேரம் சரியாகயிருந்தது.
பூனை நடைபோட்டு தாரெழியின் அருகே வந்தவன்

உரிமையாகவும் அழுத்தமாகவும் அவள் வெற்றிடையில் விரல்களால் கோலமிட்டபடியே

''என்னடி வானரமே என் தலையில எதை தூக்கிப் போடலாம்னு யோசிக்கிறீயா ?"
என்றான் நக்கலாக


அவளோ அதிர்ந்து அவனையும் அவன் கையையும் பார்க்க, அவன் பிடி இறுகியதே
தவிர இளகிய பாடில்லை மேலும் நக்கல் தொனிக்கும் குரலில்

"அதெல்லாம் யோசிக்காம எப்ப கல்யாணம்
பண்ணிக்கலாம்னு யோசி"


என்று அவள் கன்னத்தை தட்டிவிட்டுச் செல்ல
வாயடைத்து நிற்பது இப்போது எழிலி முறையாகி போனது


இன்று...

நினைவுகளிலிருந்து மீண்ட அபிஜித்தனோ வைத்தியசாலை வளாகத்தில்
நுழைந்து விரைவாக செயற்பட்டு லோச்சனாவை அனுமதிக்க
அவளை பரிசோதித்த மருத்துவரோ சத்துக் குறைப்பாட்டால் ஏற்பட்ட சாதாரண மயக்கம்
ட்ரிப்ஸ் ஏற்றினால் விழித்துக் கொள்வாள்.


என்று கூறிய பிறகு தான் ஓரளவு நிம்மதியாக உணர்ந்தான்.
நாற்காலியில் தலையை தாங்கியபடி அமர்ந்துக்
கொண்ட சமயம் லோச்சனா அனுமதிக்கப்பட்டிருந்த
அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்க,

அங்கு சென்றவனின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக
வழிந்தது. ஒரு தந்தையாகவும் கணவனாகவும் அன்று செய்த
தவறுக்கு இன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறான். தன்னவளின்
நிலைக்கு தனது சுயநலம் தான் காரணமென்று எண்ணியவன்
மேலும் நொந்து போனான்.


வதம் தொடரும்....
**************************************

இந்தா episode போட்டாச்சு மக்கா அனிதா அடுத்த episodela வருவா
பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
 
Last edited:
அத்தியாயம் 21



அலறி அடித்துக் கொண்டு எழுந்த லோச்சனாவுக்கு நிகழ்காலம் புரிபட மனதில் இனம்புரியாத
வேதனை தாக்கியது கையில் ஏற்றப்பட்டிருந்த ட்ரிப்சையும் வாசலில் நின்றிருந்த அபிஜித்தனையும்
மாறி மாறி பார்த்தவள் கண்களை மூடி கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.



அவளது நினைவடுக்கில் தப்பியிருந்த ஒரு சில உருவங்களின் அமைப்புகளும் முழுமையாக வந்து விட அபிஜித்தன் மீதிருந்த கொஞ்சநஞ்ச காதலும் காணாமல் போனது.
குடும்பத்தின் மீதிருந்த கரிசனையும் பாசமும் அடியோடழிந்து
காணாமல் போனது மனிதர்கள் மீதிருந்த நம்பிக்கையும் மண்ணோடு மண்ணாய் போனது



இனி இந்த உலகத்தில் யாரும் தேவையில்லை. கணவனும் வேண்டாம்.பெற்றோரும் வேண்டாம்.
எந்த உறவும் வேண்டாம். இது வரை எல்லோரையும் நம்பி ஏமாற்றமடைந்ததே போதுமென்ற
மனநிலைக்கு தள்ளப்பட்டவள் தீர்க்கமாக ஒரு மனதாக மாற்றுக் கருத்தில்லாத
முடிவையெடுத்து விட்டாள்.

அவள் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்த அபியோ


"தாரா"

என்று உருக்கமாக அழைக்க அவனை தீர்க்கமாக பார்த்தபடி

"என்ன ?" என்று சலனமற்ற குரலில் கேட்க அவனோ அதிலிருந்த மாற்றத்தை கவனித்தப்படியே

"சாரி தாரா என்ன மன்னிச்சுரு என் மேல தான் எல்லா பிழையும் என் சுயநலமான முடிவுகள் தான் எல்லாத்துக்கும் காரணம் "

என்றவனை பார்த்து விரக்தி புன்னகை சிந்தியவள்


"இல்ல அழகரே நீங்க மட்டும் காரணமில்ல உன் பேச்ச கேட்டு ஆடின என்ன ஆணவக்
கொலை பண்ண எல்லோரும் தான் காரணம் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா
தெரியுது" என்றாள் புருவச் சுளிப்புடன்


"என்ன தாரா ?" என்றான் கண்கலங்க அவளோ உணர்வுகள் மரித்த குரலில்

"நீயும் சரி என் குடும்பமும் சரி எனக்கு எப்போவுமே உண்மையான பாசத்த கொடுக்க
மாட்டிங்கல்ல எப்போவுமே நான் உங்க தேவைக்கு மட்டும் தானில்ல"

கூற அவனோ அவசரமாக மறுத்தபடி

"இல்ல தாரா அப்படியில்ல நான் உன்ன உண்மையாவே காதலிக்கிறேன் "

என்றவுடன் அவன் விழிகளை ஆழ்ந்து நோக்கியபடி


"இல்ல அழகரே உன் கண்ணு ஆயிரம் காதல் கதை பேசலாம் ஆனா அதுக்குள்ள ஒரு திமிரும்
தெனாவெட்டும் இருக்குது ஒரு முறை உனக்கு அடிமையா இருப்பேன்னு சொல்ற
இந்த கண்ணு தான் இன்னொரு முறை என்ன பார்க்கும் போது எனக்கு மட்டும்
விமோச்சனம் கிடைக்கட்டும் அதுக்கு பிறகு உனக்கிருக்கு என்பது போலவும்
பார்க்குது "

என்றாள் கண்ணீரை துடைத்தபடி , அவளை அதிர்ச்சியாக
பார்த்தவன் மனமோ





' இத்தனை வருடத்தில் இவளின் சாபத்தால் நான் கொஞ்சமா நஞ்சமா அனுபவித்தேன். இரு பிறவிகளிலும்
தொழு நோய் பிடித்து அத்தனை சொத்துக்களுக்கு சொந்தக்காரனாகயிருந்தும்

ஒன்றையும் அனுபவிக்க முடியாமல் பிச்சையெடுத்து காட்டுக்குள் மறைந்து
வாழ்ந்து இறந்த பின்னரும் புதைக்க கூட ஆளின்றி கிடந்தேனேயென்று
காதலை விட அவள் மீதான பழியுணர்ச்சி மிகையாகவே வளர்த்தேனே'

என கூக்குரலிட அவனுக்கே ஆச்சரியமாகயிருந்தது என்னை பற்றியெல்லாம்
அறிந்து வைத்திருக்கிறாளேயென



அவளோ சிரித்தபடி

"எனக்கு தெரியும் அழகரே எனக்கு தெரியும்
புலி எப்போதும் தன் புள்ளிகளை மாற்றிக் கொள்வதில்லைனு
எனக்கு தெரியும் நீ ஒவ்வொரு முறையும் என்ன அறையும் போதும்
உன் கண்ணுல தெரியுற வெறியும் நீயெல்லாம் என் கால் தூசுக்கு
சமம்டிங்குற பார்வையும் நான் அவதானிக்கலனு நினைச்சியா"


அதிர்ச்சியாக அவள் முகத்தை ஏறிட அவன் தலையை கலைத்து விளையாடியவள்

"அழகரே எனக்கு ஒரு உதவி பண்ணுறியா ?" என்றாள் தீர்க்கமான குரலில்


அவனுக்கு ஒன்று மட்டும் புத்தியிலுரைத்தது தேவதைகளும் அசுரர்களும்
என்றுமே ஒன்றிணைய முடியாது தருணியிடமிருந்து காப்பாற்ற தான்
லோச்சுவை கரம் பிடித்தேன் என்று ஊரை ஏமாற்ற கூறினாலும்
உண்மையில் தனக்கான விமோச்சனத்தை பெற்றுக் கொண்டு எப்படியாவது
இரு ஜென்மங்களாக அனுபவித்ததற்கு பழி தீர்க்க வேண்டுமென்ற எண்ணமும்
இருக்க தானே செய்தது.


"என்ன தாரா? எதுன்னாலும் பண்றேன்"

என்றான் சுரத்தையே இல்லாமல் அவளோ

"பெருசா ஒண்ணுமில்ல எந்த சாப விமோச்சனத்துக்காக என் பின்னாடி
வந்துட்டிருக்கியோ அத நான் உனக்கு தாரேன் என்ன திரும்பி நீ
எப்பயும் பார்க்க வரக் கூடாது அதே மாதிரி அனிதா வாழ்க்கையிலயும்
மூக்க நுழைக்க கூடாது"

என்றாள் உறுதியான குரலில் அவனுக்கோ ஐயோவென்றானது
பணத்தையும் பதவியையும் தேனுரும் பேச்சுக்களையும் காட்டி
லோச்சனாவின் பெற்றோரை மயக்கியது போல் இவளையும்
மயக்கி விடலாமென தன் கேவலமாக சிந்தித்தையெண்ணி
இப்போது ரத்தக் கண்ணீர் வடித்தான்.

இருந்தும் விடுவதாகயில்லை என நினைத்து


"தாரா அப்டி மட்டும் சொல்லதடா எல்லாத்தையும் சரி பண்ணிர்றேன்"

என்றான் உண்மையான கவலையுடன்

அவளோ விரக்தியாக புன்னகைத்தபடி

"எதையும் உன்னால சரி பண்ண முடியாது அழகரே
நான் சொல்றத செஞ்சுட்டு என் பாதையை விட்டு விலகிப் போ
அவ்வளவு தான்"

நான் சொல்வதை மட்டும் கேள் என்னும் விதமாக


அவனோ அவளை விட்டுத்தர கூடாது எனும் விதமாக உறுதியான
குரலில்

"தாரா நான் உன் கழுத்துல தாலி கட்டிருக்கேன் அதுவும் ஊரறிய அது மட்டுமில்லாம
பதினஞ்சு வயசுலயிருந்து காதலிக்கிறேன் என்ன விட்டு போயிராத"

என்றவனை நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாத என்பதை
போல் பார்த்தவள்

"பதினஞ்சா நானும் தான் உன்ன பதின்மூணு வயசுலயிருந்து காதலிக்கிறேன்
ஆனா எனக்கு எந்த லாபமும் கிடைக்கல கிடைச்சதெல்லாம் ஏமாற்றமும்
இழப்புக்களும் துரோகங்களும் மட்டும் தான் வேணாம் எல்லாத்தையும்
முடிச்சுக்குவோம் "

என்றாள் உறுதியாக


"என்ன வெறுத்துட்டியா தாரா ?" என்றான் உடைந்து போன குரலில்

அதற்கு பெருமூச்சு விட்ட லோச்சுவோ அவன் கண்களை தீர்க்கமாக
பார்த்தபடி


"கண்டிப்பா கிடையாது அதுவும் உன்ன என்னால எப்படி வெறுக்க முடியும்
ஒருத்தர வெறுக்கணும்னா அவங்கள பத்தி யோசிக்கணும் ஆனா என்
வாழ்நாள்ல இனி உன்ன பத்தி ஒரு போதும் நான் நினைக்க போறதில்ல"



அப்போ உன் அப்பா அம்மா ?

"அவங்கள கவனிக்க வேண்டிய கடமை பொறுப்பு எனக்கிருக்கு கண்டிப்பா
அதை செய்வேன் ஆனா அவங்களையும் என்னால மன்னிக்க முடியாது"

என்றபடி கண்ணீரை துடைத்துக் கொண்டவள்

"உனக்கொன்னு தெரியுமா ? நீ கைப்பாவையா ஆட்டி வச்ச ராசு
அதாவது என்னோட இந்நாள் தாய்மாமா விஷத்தினால தான்
கொல்லப்பட்டாரு எத்தனை பிறவியெடுத்தாலும் நம்ம செஞ்ச
தப்புக்கான தண்டனைய அனுபவிச்சு தான் ஆகணும் அந்தவகையில
உன்ன காதலிச்ச பாவத்துக்கு நீ பண்ணுனதுக்கெல்லாம் குறைவான
தண்டனை தான் உனக்கு கொடுத்திருக்கேன் "

என்றாள் விரக்தியாக சிரித்தபடி


அபிஜித்தனின் மனமோ இன்று தான் உண்மையாகவே குற்றவுணர்ச்சியில்
குறுகுறுத்தது. தான் தப்பிக்கும்
நோக்குடன் செய்த கொடூரங்கள் தன்னவளை தனக்கு
யாரும் வேண்டாமென்ற மனநிலைக்கே தள்ளிவிட்டதே விட்டு
போகிறேன் என்கிறாளே எப்படி சமாளித்து தக்கவைத்துக்
கொள்வேன் என்று யோசித்தபடியிருக்க


"என்ன வீட்ல விடு அழகரே " அவளோ இதற்கு மேல் முடியாது என்பது
போல் சோகமாக


பிறகு பார்த்துக் கொள்ளலாமென நினைத்தானோ என்னவோ
சத்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்தான்

"என்னடா ஷாப்பிங் போய்ட்டு வந்துட்டிங்களா ?" என்று
கேட்டவுடன் அவரை உறுத்து விழித்தவளுக்கு

தன் முன்னே நஞ்சை நீட்டி

"இதை குடிச்சுட்டு வலிக்காம செத்து போ"

என்ற ரங்கநாயகியின் மறுவுருவமாக தெரிந்த தன் சித்தியை
உறுத்தவள் கேலியாக இதழை வளைத்தபடி

"ஏன் சித்தி என்கிட்ட கேக்குறீங்க வழமை போல உங்க மருமகன்ட்ட
கேட்கலாமே எப்போதும் அவர் பேச்சு தானே கேப்பீங்க இப்பயும்
கேளுங்க எல்லாம் சொல்லுவார்"

என்றபடி அனியை பார்க்க
தனதறைக்குள் நுழைந்து விட்டாள். அவருக்கோ இம்மையும்
புரியவில்லை மறுமையும் புரியவில்லை என்ன நடந்தது
என்பதை போல் அபிஜித்தனை பார்க்க அவனோ கண்ணீருடன்
அவள் சென்ற வழியை பார்த்தபடியிருந்தான்


காலம் கடந்த ஞானோதயம் எதற்கும் உதவாது என்று அவனுக்கு
யார் கூற எல்லாம் முடிந்து விட்டது அவளுக்கு இனி யாரும்
தேவையில்லை வாழ்க்கையின் கசப்புகள் எல்லோரையும்
வெறுக்க வைத்து விட்டது.



இதே சமயம் தூக்கத்திலிருந்த அனியோ
"ஐயோ என்னை அடிக்காதீங்க எனக்கு வலிக்குது ஐயோ
நான் யாரையும் காதலிக்கல "

"தயவு பண்ணுங்க ஆச்சி ஆத்தா யாராவது இவுகள்ட்ட
இருந்து என்ன காப்பாத்துங்க"

என்று வாய் உளற அவளை பார்க்க வந்த லோச்சனாவோ

"அனி எழுந்துக்கோ அனி! அனி!" என்று உலுக்க எழுந்துக் கொண்டவள்

கனவின் தாக்கத்திலிருந்து மீளாமல்

"ஐயோ! எழிலி என்ன காப்பாத்து
மாமா ஏதேதோ சொல்லி அடிக்குதுடி" என்று அழ

லோச்சனாவுக்கோ மறுத்து போயிருந்த கண்ணீர் சுரப்பிகள்
மீண்டும் சுரக்க ஆரம்பித்தது. என்னை போல் தானே அவளும்
உறவுகளால் மறுக்கப்பட்டு நல்லவனா கெட்டவனா என்று
கூட விசாரிக்காமல் ஒருவன் கையில் பலியாடாக நேர்ந்து
விடப்பட்டாள். என நினைக்கும் போதே மனம் நொந்தது
பெண்ணவளுக்கு



வதம் தொடரும்....
**************************************************

இந்தா episode போட்டாச்சு அரக்கன் எப்போதும் அரக்கன் தான் அப்டிங்குறத
மனசுல வச்சிக்கிட்டு படிங்க பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very muchhttps://pmtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.167/
 
Last edited:
அத்தியாயம் 22

அலறி துடித்த அனிதாவை இறுக்கி அணைத்துக் கொண்டவள்

"ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல யாரும் உன்ன அடிக்க மாட்டாங்க சரியா " என்று
அழுத அனிதாவை சமாதானம் செய்த லோச்சுவோ அவளை மடியில் படுக்க வைத்து
தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள்.

ஆனால் லோச்சனாவுக்கோ தூக்கம் தூரமாக தான் போனது. மனமோ

'நீ அனிக்கு இருக்க உனக்கு ஆறுதல் கூற கூட நாதியில்ல பார்த்தியா'

என்று ஓலமிட விரக்தி புன்னகையும் உதட்டில் அழையா விருந்தாளியாக பொருந்தி
கொள்ள கண்களிலோ கண்ணீர் நதி பெருக்கெடுத்தோடியது.

அன்றே சுதாரித்திருக்கலாமோ என்று மனம் அரற்ற நினைவுகளோ பழைய
கசடுகளை நோக்கி பிரயாணித்தது.

அன்று....


அகனின் கார் கிளம்பும் சத்தம் கேட்டு வெளியே வந்தவள் முத்தனிடம்
"அண்ணே நேத்து பூவு வேலை முடிஞ்சு எத்தின மணிக்கு இங்கேயிருந்து புறப்பட்டா
என்றவாறு பேச்சுக் கொடுக்க

முத்தனோ "தெரிலமா ஆனா " எனத் தொடங்கி அன்று நடந்த சம்பவங்கள்
அனைத்தையும் கூற

அவளோ மனதில் எதையோ உருப்போட்டபடியே "அப்படியா" என
புதினம் கேட்பது போல் அவரது வாயை மேலும் கிளறி விட அவரும்

சாராவின் மரணம் வரை எல்லாவற்றையும் கூற எழிலியின்
சந்தேகங்கள் மேலும் மேலும் தூண்டப்பட அவன் வரும் முன் வீட்டை சோதனையிட
வேண்டுமென நினைத்துக் கொண்டவள்.

"சரியண்ணே நீங்க வேலையா ? இல்லாட்டி
வாங்களேன் எனக்கு அந்த மீன துப்பராக்கி தந்துட்டு குசினில
(சமையலறை) கொஞ்சம் ஒத்தாசையா இருங்களேன் "

என இன்னும் பங்களாவையும் அகனையும் பற்றிய
விடயங்களை கறப்பதற்க்காக அவரை அழைக்க அவரும் இவளுக்கு
உதவுவதாக எண்ணி அகனின் ஒரு சில மர்மமான நடவடிக்கைகளை
பற்றி அவரும் கூறி விட இவளுக்கோ

'யார்டா நீ எங்க ஊருக்குள்ள வந்து என்ன பண்ணுற ?'என்ற
சந்தேகம் மனதை பிராண்ட முத்தன் வேலையாக பங்களாவை
விட்டு வெளியேறியவுடன்

சுத்தம் செய்யும் சாக்கில் ஒவ்வொரு அறையாக அலசி ஆராய
ஆரம்பித்தவளின் கண்களில் அவனது மேசையில் கிடந்த
மாத்திரையை உற்று நோக்கியவளுக்கு சாராவின் மருந்து பெட்டியிலிருந்த அதே மாத்திரை
நாராயணியின் வீட்டிலிருந்த அதே மாத்திரையென உறுதிப்படுத்தியபடியே


அதை கையில் எடுத்துக் கொள்ள,

அதே சமயம் அகனின் காரும் பங்காளவினுள் நுழைந்தது.

சுத்தம் செய்வது போன்ற பாவனையில் மாடிக்கு வந்தவள் அவன் காரை அவதானித்ததும்
சீக்கிரமாக அந்த மருந்தை தாவணி தலைப்பில் முடிந்து கொண்டு அவன்
அறையை விட்டு வந்த அசப்பில்லாமல் நகர்ந்து படியிலிறங்கி வரவும் அகன்
வீட்டினுள் நுழையவும் சரியாகயிருந்தது.


"என்ன தாரா எல்லா வேலையும் முடிஞ்சதா ?" என்றான்
அவளருகில் வந்தபடியே

"ஆமாங்க ஐயா" என்றவள் சுவரோடு ஒன்றியபடி நிற்க

"இப்போ வீட்டுக்கு போறியா ?"

"ஆமாங்க வீட்டுக்கு போகணும் பூவுக்கு வேற காய்ச்சல்
நான் தான் பார்த்துக்கணும்"என்றாள் எந்த பாவத்தையும்
முகத்தில் காட்டாமல்


அவனோ ஆராய்ச்சியாக,

"ம்ம் ஓகே நேத்து கொடுத்துட்டு போன ஹோம் வர்க் பண்ணியா ?"
என வினவ

"அது வந்துங்க பூவுக்கு வேற சுகமில்லையா" என்று இழுக்க

"அப்போ செய்யல அப்டி தானே" அவன் கடுமையான தொனியில்
சற்று தடுமாறிப் போனவள் நான்கு பக்கமும் தலையாட்டி வைக்க

அவளது செயலை கண்டு கண்ணுக்கெட்டா புன்னகை புரிந்தபடியே

"சொன்னத கேட்கலான தண்டனை கொடுக்கணுமில்ல"

என்றவன் கண்கள் அவளது ஈர இதழ்களை மொய்த்தபடி
அவளுக்கு கைகளால் அணையிட்டு இதழில் வன்முத்தம் பதிக்க எழிலியோ

அவன் தோள்களிலும் மார்பிலும் மாறி மாறி அடிக்க தேக்கு
உடம்புக்காரனுக்கு ஏதோ தூசி தட்டுவது போல் தானிருந்தது.
அவன் தேவைகளை நிறைவு செய்துக் கொண்டு விலகியவன்

கண்களில் காதலை தேக்கியபடி ஒற்றை புருவமுயர்த்தி

" என்ன கல்யாணம் பண்ணிக்கலாமா ? "

என்றவனை பார்த்து பதறியபடி விலகப் போனவளை
தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தபடியே கண்களை பார்த்து

"நான் உனக்காக என்னுயிரையே கொடுப்பேன் எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுப்பேன்"

என்று கூறியபடி தனதறைக்குள் புகுந்து கொள்ள

இன்று...

அந்த காட்சி இன்றும் கூட லோச்சனாவின் கண் முன் பசுமையாக விரிய
கலங்கி தான் போனாள். அவன் கூறிய ஒரு வார்த்தையை நம்பி
எல்லாம் சின்னா பின்னமாகி போனதே என நினைக்கும்
போது பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் அவனை பழிவாங்குவதை
விட அனியின் எதிர்காலமே லோச்சுவுக்கு பிரதானமாக பட
இந்த பழி பகை பாசம் எதுவும் வேண்டாமென்ற தீர்மானத்தில்
உறுதியாக இருந்து விட்டாள்.


லோச்சனாவை வீட்டில் விட்டு விட்டு அபிஜித்தனுக்கோ மனம் சோர்ந்து தான்
போனது இன்று வரைக்கும் காதல் பாதி பழிவெறி பாதியென அலைந்தவனுக்கு இப்போது
ஒன்றுமே புரியவில்லை. அவளை இந்த பிறவியில் முதன்முதலில் பார்த்த போது
அவனுக்கு காதல் துளிர் விட்டாலும் மனதினோரத்தில் வஞ்சமும் பிறக்க தான் செய்தது.

'நான் எவ்ளோ பெரிய பணக்காரன் எனக்கு சாபம் கொடுத்து தொழு நோய் வரவச்சு
பிச்சைக்காரன் வேஷம் போடவிட்ட உன்ன சும்மா விடக் கூடாது'

என நினைக்கவும் தவறவில்லை. இதற்கிடையில் தான்
தாருணியுடனான திருமண பேச்சும் எடுக்கப்பட்டது.

அதற்கு இடையூறாக அமைந்தது என்னவோ அவனது அதீத மனவழுத்தம் தான் இவனுக்கு
கிட்டத்தட்ட பதினோரு வயதில் ஏற்பட்ட மனவழுத்தமானது அவன் வளர வளர் அதீத நிலைக்கு கொண்டு

சென்றதே தவிர குறைந்தபாடில்லை இப்படியாக இவனது காலம் கழிந்துக் கொண்டிருக்கையில்
ஒருநாள் அவனது ஜாதகத்தை பற்றிய செய்தி அவன் காதுக்கெட்டியது.

அதில் ஒரு பெண்ணின் சாபம் தான் இவனது அதீத மனவழுத்தத்துக்கு காரணம்

எனவும் அப்பெண்ணே மனமுவந்து அவனுக்கு விமோச்சனம் தந்தாலேயன்றி
வேறு எந்த பரிகாரமும் இல்லையென கூறவும் பெற்றோர்களாலும் சகோதரர்களாலும்

பைத்தியக்காரன் என்ற முத்திரையுடன் வெறுத்தொதுக்க பட அதை தாங்கிக்
கொள்ள முடியாத அவனது பிஞ்சு இதயம் அப்பெண்ணின் மீது வஞ்சம் வைத்து
பழி தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தை வேரூன்றி வளரச் செய்தது.



இருந்தும் கனவில் தோன்றி இதமளித்த தேவதை பெண்ணை
முழுதாக வெறுத்தொதுக்கவும் முடியாது காதல் பழிவெறி என்று
மாறி மாறி இரு எண்ணங்களிலும் உழன்றுக் கொண்டிருந்தான்.
கடைசியாக ஓரளவு காதலிருந்தாலும்


அவளை பழி தீர்க்க வேண்டுமென்ற எண்ணமே பிரதானமாக வந்து இப்பிறவியிலும் உண்மையான
காதலை இழக்க வழி வகுத்து விட்டது. இப்போது மனதிலுள்ள பழிவெறி நீங்கி காதல்

முழுதாக குடிக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லையென
நினைக்கும் போது நெஞ்சம் கனத்து தான் போனது ஆடவனுக்கு
வதம் தொடரும்.....
**************************************************

இந்தா episode போட்டாச்சு அரக்கன் எப்போதும் அரக்கன் தான் அப்டிங்குறத
மனசுல வச்சிக்கிட்டு படிங்க பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
 
அத்தியாயம் 23


காலையில் துயில் கலைந்து முதலில் எழும்பிய அனிதா அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த
நண்பியை மெல்ல உலுக்கி எழுப்ப விழித்துக் கொண்ட லோச்சுவை பார்த்து


"என்னடி அப்படியே தூங்கிட்ட ? அண்ணா கூட வெளியே போனியே எப்படி டைம் போச்சு
சொல்லு சொல்லு " என குழந்தையை போல் வினவ லோச்சுவுக்கு மனம் கொஞ்சமாக
கனத்து தான் போனது திடுமென எதையோ சிந்தித்த லோச்சுவோ

"அனி நீ எப்படி அபிஜித்தன் கூட மட்டும் நடுக்கமில்லாம பேசுற ? ஆனா உங்க அப்பா
அண்ணன் அதாவது உன் பெரியப்பா பையன் இவங்க பேசினா பயந்து நடுங்குற ?"
என்றாள் கேள்வியாக


"ஆமாடி நானும் அத யோசிக்கவேயில்ல பாரேன் ஏன்னு தெரில அவன நீ ராட்சசன்னு
சொன்னாலும் எனக்கு அப்படி ஒரு பீல் வருதில்லடி உன்னோட சேர்ந்து ஏசினாலும்
ஏதோ ஒரு சகோதரத்துவமும் சேர்ந்து வருது அவன் மேல"


"இதுக்குள்ள ஏதோவொரு காரணம் மறைஞ்சிருக்கு நல்லா யோசி "


"ஹான் அது வந்து ஆமா அன்னைக்கு பிரச்சனை நியாபகமிருக்குள்ள "

"என்ன பிரச்சனைடி ?"

என்றவுடன் அனி விளக்கமாக கூறவாரம்பித்த அதே சமயம் லோச்சனாவை
எப்படியாவது தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன்
சத்யாவின் வீட்டிற்கு கிளம்பிய அபிக்கு இப்போது தனது உடன்பிறவா சகோதரியின்
துணையும் அவசியமென புரிந்தது.

அதே சமயம் ஒரு நல்ல சகோதரனாக தீர்க்கமான ஒரு முடிவையுமெடுத்தான் இப்பிறவியில் விதுரனுக்கும் சரி பைரவுக்கும் சரி அனியின் வாழ்க்கையில் இடமில்லை ஒரு நல்லவனையே மணமுடித்து வைக்கவேண்டுமென தீர்மானித்தவன் பைரவ் அனியை நெருங்கும் வழிகள் அத்தனையும் அழகாக அடைத்து
விட்டான் அதே சமயம் தரன் செய்த ஒவ்வொரு விடயமும் நியாபகம் வந்து அவன் மனதை இறுகச்
செய்தது.


அன்று...


அன்றைய பிரச்சனைக்கு பிறகு ஒரு வாரம் பூவரசி பங்களா வேலைக்கும் போகவில்லை.
வீட்டிலிருந்து வெளியேயும் செல்லவேயில்லை. மனதளவில் மிகவும் ஒடுங்கி தான் போனாள்.
எழிலியிடம் மட்டும் ஓரிரு வார்த்தை பேசுபவள் யாரிடமும் முகங்கொடுத்து கூட
பேச பயந்தாள். அப்படியிருக்கையில் தான் அகன் பக்டரிக்கு கட்டாயம் வரும்படி
அழைக்க பயந்து மறுத்து விட்டவளை மீண்டும் அகஸ்த்தாவை விட்டு கையோடு
அழைத்து வரச் செய்தவன்


பூவரசியுடன் தரனை வைத்துக் கொண்டே பேசவாரம்பித்தான்.

"பூவரசி நான் உன் அண்ணனா நினைச்சுகிட்டு அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு
சொல்லும்மா ?" என்று முதலில் காரியத்துக்காக கதைக்க தொடங்கியவன்
அவளது கலங்கி போன தோற்றத்தில் மனம் நொந்து தான் போனான்.


"அது வந்து" என்று கண் கலங்கி போனவளின் தலையை தடவிக் கொடுத்த அகனோ


"பயப்படாத சொல்லும்மா இது உன் தப்பில்ல உன்ன நான் திட்ட மாட்டேன் சொல்லு"
என்று ஊக்கப்படுத்த எல்லாவற்றையும் ஓரளவு தட்டுதடுமாறி கூறியவளை

பார்க்க அவனுக்கு உண்மையாகவே ஓரளவு வேதனையாகயிருந்தாலும்
இப்போது அதற்காக வருந்தும் நேரமல்ல என்று யோசித்தாலும் தரனை
பார்க்கும் போது ஆத்திரம் ஆத்திரமாக வர ஓங்கி நான்கு அறை விட்டான்.

"என்ன காரியம் பண்ணிருக்க ? அவ ஒன்னும் தாரா அளவுக்கு பக்குவப்பட்டவ
கிடையாது அவள போய் எப்பிடிடா ? இப்போ என் தங்கச்சி சொன்னா கூட
உன்ன வெட்டி கொலை பண்ணுவேன் பார்க்குறியா ?"

என்று ஆத்திரமாக கூறினாலும் உண்மையாக அவன்
மனதிலிருந்து தோன்றிய வார்த்தைகள் தான் அதை
கண்டுகொண்ட தரனோ குழம்பி தான் போனான்.

'நாலு நாளைக்கு முதல்ல நீ என் நண்பன் உயிரு மயிருனு வசனம்
பேசின' என்பது போல் பார்க்க அகனோ பிடரியை நீவிக் கொண்டு

பூவரசியை பார்த்து "சொல்லுமா என்ன பண்ணட்டும் இவன ?"
என்று கேட்க

"ஒன்னும் பண்ணாதீங்க ஐயா பாவம் விட்டுருங்க நான்
எங்கயாவது என் மாமன் கூட போய் வாழ்ந்துக்குறேன்" என்று
கண்ணீருடன் கூற

"சரிம்மா நீ போ!", என்றவன் தரனிடம் " இனிமே அவ பக்கம் திரும்பின அவ்ளோ தான்"
என்று கூற தரனோ பூவரசியை பார்த்து

'என்னய மீறி நீ உன் மாமன் கூட எப்படி வாழ்றங்குறத நானும் பார்க்குறேன்' என்பது
போல் பார்வையால் மிரட்ட அவளும் பயந்தபடி அவ்விடத்தை விட்டு
பயந்து ஓடியே விட்டாள் .



அன்றிலிருந்து அகன் கொடுத்த தைரியத்தால்

மறுபடியும் வேலைக்கும் வழமைப் போல் வரவாரம்பித்தவளுக்கு
தரனால் எந்த பிரச்சனையும் இருக்கவில்லையென்று தான் கூற வேண்டும்.

இதற்கிடையில் தாரெழிலியோ அகன் மேசையில் கண்டுபிடித்த மாத்திரையுடன்
எப்படியாவது மருத்துவிச்சியை சந்திக்க வேண்டும். என்று துடியாய் துடித்துக்
கொண்டிருக்க அதற்கான சந்தர்ப்பம் அன்று அமைய

எழிலியோ லயங் குடியிருப்பு வரை வந்து பூவரசியை விட்டுவிட்டு

"பூவு நான் ஒரு விஷயமா கழுபஹான ஆச்சி வீடு மட்டும் போயிட்டு வந்துர்றேன்
இப்பயே போனா தான் சீக்கிரம் வரமுடியும் நீ பத்திரமா இரு அடுத்து அந்த
டாக்டரம்மா எது கொடுத்தாலும் சாப்பிடாதயென்ன இப்போ தான்
பஸ்சு வரும் நான் போயிட்டு வாரேன்" என்று விடைபெற்றுக் கொண்டு கிளம்ப



பூவரசியிடம் வழமையான துள்ளல் இல்லாத போதும் ஓரளவு சாதாரணமாக
தானிருந்தாள். அவளை இன்னும் முடக்கிப்போடும் சம்பவமொன்று நடக்கப்
போவதறியாமல் வீட்டிற்கு வந்தவளை வீட்டில் கூடியிருந்த சொந்தங்கள்
அனைவரும் முக்கியமாக விதுரன் முதற்கொண்டு ஆண்கள் அனைவரும் அனல் வீசும் பார்வை
பார்க்க, அதில் பயந்தவளோ பேசாமல் சமயலறையினுள் நுழையப் போக


அவள் முடியை பிடித்திழுத்த விதுரனோ ஓங்கி கன்னத்தில் அறைந்து

"கோ**டி சி**கி என்ன நெஞ்சழுத்தமிருந்தா அந்த டாக்டர் கூட
படுத்திருப்ப மாமா மாமானு என்ன ஏமாத்திட்டு " என்று ஆரம்பித்து
ஒரு பெண் எதெல்லாம் கேட்கக்கூடாதோ அதையெல்லாம் சொல்லித்
திட்டி

சித்தப்பா ,பெரியப்பா ,மாமன் என்று அத்தனை சொந்தமும் அவளை
அடித்து நொறுக்க

பூவராசியோ "ஐயோ மாமா நான் யாருக்கும் எந்த தீங்கும் பண்ணல
என்ன விட்ருங்க உன்ன தான் காதலிச்சேன்"

"பொட்ட கழுதை என்னையே ஏமாத்த பார்க்குறியா ?"

"அப்போ ஏன் அந்த டாக்டர் அப்டி சொல்றாரு அவரு படிச்சவரு
பொய் சொல்லுவாரா ? உனக்கு வெள்ள தோலை பார்த்ததும்
ஆச வந்துருக்கும்"

என்று விதுரன் ஓங்கி கரண்டை காலில்
மிதிக்க

அவளுக்கோ கண்ணீர் உடைப்பெடுத்தோடியது.

இதற்கிடையில் பூவின் பெரியப்பாவோ

" செந்தமிழு அப்போவே சொன்னோம்
பிறந்ததும் இந்த சனியனுக்கு கள்ளிப் பால்
ஊத்த சொல்லி கேட்டியா அது தான் ஒழுக்கம்
கேட்டு நிற்குது "

என்றவுடன் வாயை பொத்திக் கொண்டு அழுத செந்தமிழோ
பதில் பேசவில்லை.






அப்போது தான் தரன் செய்த காரியம்
அகனுக்கு ராசு மூலம் தெரிய வர தரனை திட்டி தீர்த்தான்.

"ஏன்டா நான் தான் அப்போவே விதுரன்ட்ட சமாதானமா எடுத்து
சொல்லி பூவரசிய கட்டி வைக்கிறேன்னு சொன்னனே அதுக்குள்ள
ஏன்டா இப்டி பண்ண ? "

என்றான் எரிச்சலுடன்

"எனக்கு பூவரசி வேணும் நீ தான் முந்தநாள் சொன்னியே பூவு
பக்கம் போகக்கூடாதுன்னு அது தான் அவன்கிட்ட
பூவரசியும் நானும் ஒன்னாயிருந்தோம்னு சொன்னேன்
பைத்தியக்காரன் உடனே நம்பிட்டான் "

என்றான் அலட்சியமாக


"டேய் இப்போ அந்த பொண்ண என்ன பண்ணிருப்பாங்களோ
தெரிலயே லூசா நீ "என்று அவனை திட்டியவன் மனம் உடனடியாக பூவரசியை
காப்பாற்ற வேண்டுமென ஓலமிட

சீக்கிரமாக லயங்குடியிருப்புக்கு வந்து ஒருவாறு அவர்களின் அடியிலிருந்து
பூவரசியை காப்பாற்றினான்.


இன்று...

என்று அனி கூறி முடிக்க லோச்சுவோ
"
அதனால தான் உன்னால அவன் கூட சகஜமா பழக முடியுதா ?"

"ஆமாம்டி அன்னைக்கு அபி அண்ணன் மட்டும் என்ன சரியான சமயத்துல
வந்து காப்பாத்திருக்காட்டி அந்த விதுரன் என்
சித்தப்பா எல்லாரும் என்ன அடிச்சே கொன்னுருப்பாங்க"

என்று நடுநடுங்கி அழ அவளை சமாதானபடுத்திய லோச்சனா


"இங்கப்பாரு" என்று ஏதோ சொல்ல வரவும் அபியும்
அதேசமயம் வீட்டிற்குள் நுழைந்து

"நான் இப்போவே சனாவையும் அனியையும் என் வீட்டுக்கு கூட்டிட்டு போக
போறேன் " என்று அறிவிப்பாக கூற

இதை கேட்ட லோச்சுவுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

வதம் தொடரும்....
*******************************************

இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
 
Last edited:

அத்தியாயம் 24


அவன் கூறியதை கேட்டு லோச்சுவுக்கு எரிச்சல் தலைக்கேற வெளியே வந்தவள்


'ஆமா இப்போ அது ஒன்னு தான் குறைச்சல்' என்று மனதில் வசைப்பாடிக்
கொண்டே "நாங்க ஹாஸ்ட்டல்" என்று ஏதோ பேசப் போக அவளை விலக்கி தள்ளிக் கொண்டு குட்டையான உருவம்
முன்னால் பாய்ந்து "அண்ணா நான் ரெடி ஆகிட்டேன் வா லோச்சு போகலாம்."என்று அவள்
கையைப் பிடித்திழுக்க லோச்சுவோ நேற்றிலிருந்தே எல்லார் மீதும் கடுப்பிலிருந்தவள்

"அறிவிருக்க உனக்கு யார் கூப்பிட்டாலும் போயிருவியா ? " என்று வசைப்பாட ஆரம்பிக்க
அனிதாவோ உதட்டை பிதுக்கி அழத் தயாரானாள்.

அபிக்கோ சுர்ரென்று கோபம் உச்சத்துக்கேற

"இங்க பாரு சனா என் மேலவுள்ள கோபத்தை பாப்பாக்கிட்ட காட்டாத
சொல்லிட்டேன்" என்றான் காட்டமாக

"அவ என் ப்ரெண்ட் அவளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எனக்கு தெரியும்
நீ உள்ள போ" என்று விரட்ட அனியோ பாவமாக அபியை பார்த்தாள்

அதற்குள் இடையில் புகுந்த சந்தியாவோ

"என்ன லோச்சு இதெல்லாம் மாப்பிள்ளைக்கிட்ட
மரியாதையா பேசு"

என்றது தான் தாமதம்

"ஆமா என்னைக்கு நான் சொல்றத கேட்ருக்கீங்க எப்போவும் அவன்
சொல்றது தான் சரின்னு சொல்லுவீங்க " என்று கோபமாக
கத்தியவள்

உள்ளே போய் கட்டிலில் அமர்ந்துக் கொள்ள அவள் தாயிடமிருந்து அழைப்பு
வர எரி நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாகிப் போனது.

எரிச்சலுடன் அழைப்பையேற்று காதில் வைத்தவள்

"என்ன ?" என்று வல்லென பாய்ந்தாள்

அவரோ சற்று தணிவாக அதேசமயம் கண்டிப்பான குரலில்

"அம்மு எல்லார்ட்டையும் எரிஞ்சி விழுகுறியாம்
என்னத்தான் பிரச்சனை உனக்கு ?"

என்று கேட்க மேலும் கோபத்திற்காளானவள்

"யாரு உங்க மருமகன் உங்களுக்கு கால் பண்ணி சொல்லிட்டாரா ?
அவர்ட்டயே கேளுங்க சொலுஷன் சொல்லுவாரு சரியா,இந்த முறை
எப்படி என்ன கொல்லலாம்னு பிளான் போட்டு என்கிட்டயே சொல்லிருங்க
மைண்ட் செட் பண்ணிக்கிறேன்" என்று காந்தித் தள்ள

நேத்ராவோ மருமகனுடன் இணைந்து வாழ சொன்னதுக்காகவா கொலைகாரர்கள்
அளவுக்கு வஞ்சி கொட்டுகிறாளென்று எண்ணி
துக்கத்தில் உழன்றவர்.

"என்ன பேசுற நீ? பெத்த வயிறு பத்தி எரியுதுடி " என்றார் அழுகையினுடே

"ஆமா எனக்கும் தான் எரியுது உங்க குடும்பத்துல திரும்பி
வந்து பிறந்துருக்கேன் பாருங்க என் விதி எல்லாரும்
துரோகிங்க யாரும் நல்லவர்களே கிடையாது"

என்று குறையாத கோபத்துடன் கத்தி அழுதவள் போனை தூக்கி நிலத்திலடித்திருந்தாள்.
அப்படியே மெத்தையில் அமர்ந்தவள் தன் மணி வயிற்றை மெல்ல வருடிக் கொடுத்தபடி மானசீகமாக

'உன்ன சுமந்த உன் அம்மாவோட வயிறும் தான்டா காந்துது
உன்ன காப்பாத்த முடியலையேன்னு ' என்று நினைத்தபடி
கண்ணீர் வடித்தவளின் மனதினுள் பழைய கசடுகளின்
பிம்பங்கள்

அன்று...

பூவரசியை விட்டுவிட்டு வேகமாக பஸ் ஏறியவள் கழுபஹான வந்திறங்கி
மருத்துவிச்சியின் வீட்டிற்கு வந்து

"ஆச்சி ஆச்சி " என்று குரல் கொடுக்க

அவரோ "வா ஆத்தா நீ வருவன்னு தெரியும் ஆனா இம்புட்டு சீக்கிரம்
வருவன்னு தெரியாதுத்தா "

"என்ன ஆச்சி சொல்றிங்க? எல்லாம் புரியும்த்தா உள்ள வா"

என்றழைத்தவர் உள்ளே அமர வைத்து தண்ணீர் கொடுக்க
அதை குடித்தவள்

"ஆச்சி இந்த கலர் குளிசை என்ன மாதிரியானதுன்னு தெரியணும் "
என்று உடனே நீட்ட

அவரோ அதை வாங்கி பார்வையிட்டபடியே

"ஆத்தா இது இங்கிலிஷூ மருந்து தானே" என்றார் ஆராய்ச்சியாக

ஆமாம் என தலையாட்டியவளை தீர்க்கமாக பார்த்து

" இது என்ன மருந்துன்னு என்னால
கண்டுபிடிக்க முடியாது"

என்றவுடன் தாரெழிலிக்கு முகம்
கூம்பி போயிற்று

"ஆனா இது விஷமா இல்லையான்னு சொல்லமுடியும்" என்று
கூற

"அவசரமா பார்த்து சொல்லுங்களேன் ஆச்சி" என்று அவள்
பதற

"பதறாத தாயி நான் பார்த்து சொல்றேன்."

என்று அவள் கொண்டு வந்த மாத்திரையின் ஒன்றையெடுத்து
ஏதோவொரு பச்சை நிற திரவத்தில் போட அந்த திரவமோ
நீல ஊதா நிறத்திற்கு சடுதியாக மாறியது.

"ஆத்தா இது மலட்டுத்தன்மைய கூட்டுற விஷம்
இதனால உயிராபத்தும் வரலாம்."

என்றார் அந்த திரவத்தை பார்த்தபடியே

"என்ன பாட்டி சொல்றீங்க ?" என்றாள் எழிலி
அதிர்ச்சியுடன்

"ஆமா தாயி இந்த விஷம் பயங்கரமானது ஒவ்வொரு
உடற்பாகமா அழுக வச்சு உசுர புடிங்கிரும் "

என்றார் உறுதியான குரலில்

"இதுக்கு மாத்து மருந்திருக்கா ஆச்சி ?"

இருக்கு ஆத்தா என்று ஏதோ ஒரு பொட்டலத்தை
கொடுத்தவர்

"இது தான் ஆத்தா அந்த மருந்து இத கொஞ்சம்
சாப்பாடு தண்ணீ ஏதாவதுல கலந்துட்டா போதும்
விஷம் முறிஞ்சிரும்" என்று கூற

"நிரந்தரமா முறிஞ்சிருமா? ஆச்சி இல்லாட்டி
தற்காலிகம் தானா ?"


"தற்காலிகமா முறியும் ஆத்தா நிரந்தரமா
முறிக்கனும்னா பொட்டைக்கண்ணு பூசாரிக்கிட்ட
கேளு ஏதாவது வழி சொல்லுவாரு "

என்று சொல்ல எழிலியோ "சரி ஆச்சி நான் இப்பயே
பூசாரி தாத்தாட்ட போறேன்" என்று அடுத்த
டைம் பஸ்சில் ஏறியபடியே

'இவன் ஏன் மலட்டுத்தன்மைய
கூட்ட மருந்து கொடுக்குறான் ? இவனுக்கு என்ன தான்
வேணும் ? ஏன் அந்த டாக்டரம்மா தூக்கு போட்டுக்கிட்டாங்க? '

என்று பல கேள்விகள் மண்டையை குடைய
ஊருக்கு வந்தவுடனே பூசாரியை சந்திக்க காட்டு மாரியம்மன் கோவிலுக்கு
சென்றவள் வாசலிலேயே போகவா வேண்டாமா என்று தயங்கியபடி நிற்க

உள்ளிருந்து "எழிலி ஏன் தாயீ உன்னிடத்துக்கு
வர இவ்வளவு தயங்குற ?" என்றவுடன் எழிலி மெல்ல
காலடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.

தன் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்ட பூசாரியோ

"ஆத்தா நீ வந்த காரியம் எனக்கு தெரியும்
ஆனா அதுக்கான தீர்வு உன் கண் முன்னாடி தானிருக்கு"

என்று சொன்னவுடன் எழிலியோ

"தாத்தா நீங்க ஏதாவது புரியுற மாதிரி சொன்னாத்தானே
எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்" என்று அவரை
கேள்வியாக நோக்க

அவரோ சிரித்துக் கொண்டே

"உடுக்கடிக்கிறேன்த்தா என் ஆத்தாக்காக அருள்
வாக்கு சொல்றேன் "

என்றவர் உடுக்கடித்தபடி

"பாசம் உக்ரம் வக்ரம் அடையாட்டி காலக்கேயன் அழியான் ஊர்
தூற்றி உறவு தூற்றி பாசானம் பாசானத்தால முறிஞ்சு
அங்காரகன் தோன்றி வசுவை விழுங்கிய பிறகே
வனதேவதை உயிர்பெற்று தன் கொடுஞ் சாபங்கொண்டு
ஊரை காப்பாள்"

என்று சொல்லி முடித்து மயங்கி விழுந்தவரை தண்ணீர்
தெளித்து எழுப்பிய எழிலி ஒன்றும் புரியாது விழித்தபடியே

"என்ன தாத்தா சொல்றிங்க ? எனக்கு ஒன்னும் புரியல " என்க

"எல்லாம் தெரிஞ்ச உனக்கே புரியலன்னா நான் என்ன பண்ணுவேன்த்தா "

என்றவுடனே மேலும் குழம்பி தான் போனாள்.

"ஆத்தா போற பாதைல போ உனக்காக ஒரு ஒளி
காத்துட்டிருக்கு"

என்று கூறியவர் மாரியம்மன்
சந்நிதியிலுள்ள குங்குமத்தை கையில்
கொடுத்தார்.


.

இன்று...


இப்படியாக சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தவளின் மணி வயிற்றை வலிய ஆண்கரம்
தடவிக் கொடுத்தது. பட்டென கண் விழித்தவள் ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.

"துரோகி துரோகி எப்படி உன்னால கொஞ்சம் கூட கூச்சமேயில்லாம என்ன
தொட முடியுது" என்றாள் காட்டமாக

அவனோ அடி வாங்கியும் சுரனையேயில்லாமல் "இனி என் மனசுல பழிக்கு இடமில்ல ஆனால் "
என்று நகங்கடித்து வெட்கப்பட்டவனை எரிச்சல் பொங்க பார்த்தவள்

"ஆனால் என்ன ?" என்றாள் காட்டமாக,

"ஆனால் உனக்கு புளி வாங்கிக் கொடுக்க மட்டும் ஐடியா இருக்கு "

என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து
வைக்க அவனோ நாக்கை சுழட்டி ஒற்றை புருவமுயர்த்தி
கண்ணடித்து வைத்தான்.
வதம் தொடரும்....
*********************************************************

இந்தா episode போட்டாச்சுanti hero அபிய இனி lover boy அபிய பார்க்கலாமா ? பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much

 
அத்தியாயம் 25


அவன் கூறிய விடயத்தில் ஆத்திரம் வந்தாலும் வெளியே சிரித்துக் கொண்டே

"அது தான் போன ஜென்மத்துல புளி வாங்க காசில்லாம
பேமிலி பிளானிங் டாப்லெட்ஸ் கொடுத்தீங்களோ ?"

என்றாள் படு நக்கலாக அவனுக்கோ சுணங்கி தான் போனது
ஆனால் 'அப்படியாவது என்னுடன் இருந்து விடமாட்டாயா ?'
என்ற எண்ணத்துடன்

" நான் செஞ்சத சொல்லிக் காட்டினா உனக்கு வலி
குறையுதுன்னா பரவாயில்ல என்ன குத்தி கிழிச்சாவது உன் காயத்துக்கு
மருந்து போட்டுக்கோ " என்றான் சிரித்தபடி

லோச்சுவோ மனதுக்குள் 'இந்த நாய் இப்படி கதைக்குற ஆளேயில்லையே
என்னவாயிருக்கும் ? ஒருவேளை பைத்தியம் முத்திருச்சோ ?'

அவனோ மெத்தையில் சொகுசாக கையை தலைக்கு கீழ் கொடுத்து
படுத்துக் கொண்டே

"ஆமா காதல்
பைத்தியம் முத்திப் போச்சு" என்றானே பார்க்கலாம்

அவளோ எழும்பி அவனை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு

"யாரை ஏமாத்த புது நாடகம் ?" என்றாள் எரிச்சலாக

"சனாம்மா யாரையும் ஏமாத்த வேண்டிய அவசியமெனக்கில்ல
முன்னயிருந்து உன்மேல காதலிருக்கு"

பெருமூச்சை வெளியிட்டு

"அதேயளவு பழிவெறியும் இருந்துச்சு
அதை மறைக்க வேண்டிய அவசியமும் எனக்கில்ல உள்ளத
உள்ளபடி சொல்லிட்டேன்" என்றான் அவளை தீர்க்கமாக
பார்த்தப்படி

"ஆமா உள்ளத உள்ளபடி சொல்ற உத்தமரு தான் போன
ஜென்மத்துல ஊர் முன்னாடி என்ன ஒழுக்கம்
கெட்டவன்னு சொன்னிங்களோ ? "

என்று கேள்வியாக வினவியவள் நிதானமாகவும்
ஆழ்ந்த குரலில்

"அப்பறம் பழிவெறி எனக்கு தான் இருக்கணும் உங்களுக்கில்ல
குழந்தைய இழந்து மானத்த இழந்து நிர்க்கதியா
நின்னது நான் நீங்கயில்ல"

என்று பேசியவளை கண்கொட்டாமல்
பார்த்தவன்

"அப்போ அது என் குழந்தயில்லயா ?உனக்கு மட்டும்
தான் குழந்தயா ?" என்றான் வலியுடன்

"ஆமா என் குழந்தை மட்டும் தான்
உங்க குழந்தைனு நீங்க நினைச்சிருந்தா அன்னைக்கு
நடந்த பிரச்சினையில்ல ஏதாவது பண்ணிருப்பீங்க குறைஞ்சது
நான் நடத்த கெட்டவயில்லனு சொல்லிருப்பீங்க ஆனா
நீங்க தான் என் குழந்தைய நசைனு சொன்னவராச்சே"

என்று ஆவேசமாக பேசியவள் தன் கண்ணீரை உள்ளிழுத்துக்
கொண்டாள்.

"சரிடி எல்லாம் என்னால தான் வந்துச்சு ஒத்துக்குறேன் அதுக்குன்னு
தயவு பண்ணி உன்ன காயப்படுத்திக்காத இப்போ என்ன பண்ணி
நான் என் காதல நிரூபிக்கணும்னு சொல்லு செய்றேன் "

என்றான் கண்ணீருடன்

"அதை தான் நேத்தே சொன்னனே
எனக்கு நீங்க வேணாம் என் வாழ்க்கைலயும் சரி
அனியோட வாழ்க்கையிலயும் சரி
நீங்க தேவையில்லாத குப்பை மட்டும் தான் "

என்று கூறியபடி குளியலறைக்குள் புகுந்து கதவை அறைந்து
சாத்தியவள் குளியலறை தரையிலேயே மடிந்தமர்ந்து
கதறவாரம்பிக்க அபியோ தான் செய்த தவறுகளை எப்படி
சரி செய்யவென்று தெரியாமல் விக்கித்து போனான்.

அன்று ...


பூசாரி சொன்ன விடயங்களை அசைப்போட்டப்படி நடந்து வந்த எழிலியை
நோக்கி ஓடி வந்த தாமரையோ,

"அக்காச்சி அக்காச்சி எங்கன போய்ட்டு வர? பூவக்கவ " என்று தொடங்கி
அனைத்தையும் சொல்லி முடிக்க எழிலிக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை
ஒரு பக்கம் தரனையும் விதுரனையும் வெட்டிக் கொல்லலாமா ? "

என்ற எண்ணம் துளிர்த்தாலும்

இப்போதைக்கு எல்லாவற்றையும் ஒரு புறம் மூட்டை கட்டி வைத்தவள்

"பூவு எங்கடி ?" என்றாள் எழிலி பதறியவாறு


" அண்ணனும் தொரை ஐயாவும் மருந்து கட்ட கூட்டி போனாக" என்றது
தான் தாமதம் பெருந்தோட்ட வைத்தியசாலைக்கு விரைவாக ஓடோடிச்
சென்றவளை வாசலில் மறித்தப்படி நின்ற அகன்

சரமாரியாக திட்டவாரம்பித்தான்.

"எங்க போய் இவ்ளோ நேரம் லாத்திட்டு வர்ற உன் ப்ரெண்டு அடிப்பட்டு
இவ்வளவு நேரமும் உன் பெயர சொல்லித்தான் பினாத்திட்டு இருந்தா
போய் பாரு "

என்று வழிவிட்டவன் மனமோ இப்போது இரக்கம்
பாவம் புண்ணியம் எல்லாவற்றையும் கடந்து மிருக புத்தியால் சில பல
கணக்குகளை போட்டு முடித்துக் கொண்டு தரனிடம் சென்றான்.


இங்கு பூவரசியோ,

"எழிலி மாமா என்ன அடிச்சிருச்சுடி எனக்கு உடம்பெல்லாம்
கடுக்குதடி ஆத்தா அப்பத்தா யாரும் என்ன பார்க்க வரலையாடி ? மாமா பசி
தாங்காதுடி என்னிய அடிச்சதுல சாப்புட்ருக்காது நீ சாப்பிட சொல்றியாடி ?"

என்று குழந்தையை போல் சொல்ல எழிலிக்கு மனம் கனத்து தான்
போனது குழந்தை மனங்கொண்ட இவளுக்கா இந்த நிலையென்று
சிந்தித்தபடியிருக்க அங்கு வந்த அகன் எழிலியை வைத்துக்
கொண்டே

"பூவு உன் அண்ணன் உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்
என்ன சொன்னாலும் கேட்பியா ?"

என்றான் தேனொழுகும் குரலில்

"சொல்லுங்க ஐயா நான் கேட்குறேன்"

என்றாள் பூவரசி அறியா குழந்தையாக எழிலியோ
இப்போ என்ன ஆப்பு வைக்க போறானோ என்று
நினைத்தபடி பார்த்திருக்க

"உன் வீட்டாளுங்க இனி உன்ன சேர்த்துக்க மாட்டாங்க
அதே மாதிரி உனக்கும் பாதுகாப்பான இடம் வேணும்
நீ தரன கல்யாணம் பண்ணிக்கிறியா ? உன்ன நல்லா
பார்த்துப்பான்" என்றான் பட்டென்று

பூவராசியோ பயத்தில் நடுங்கியபடி

"அப்ப விதுரன் மாமா அவரோட தானே கல்யாணம்னு வீட்ல
பேசுனாக ?" என்றாள் கேள்வியாக


"இங்க பாரு பூவு எந்த நாயோ நீயும் தரனும்" என்று
ஆரம்பித்தவன் அவள் புரியாத பார்வையை உள்வங்கியபடி
நிறுத்தி நிதானமாக


"பூவு உன்மேல தப்புன்னு சொல்றதால யாரும்
உன்ன வீட்ல சேர்த்துக்க மாட்டாங்க அப்படியே
சேர்த்துக்கிட்டாலும் உன்ன கொல்லக்
கூட தயங்கமாட்டாங்க நான் சொல்றத
புரிஞ்சிக்கோ"



என `தனது சொந்த லாபத்திற்காக பேசியே மயக்கி
தரனிடம் பூவரசியை பலியாடாக்கினான். பூவரசியும் அகன் மேலிருந்த நம்பிக்கையில் அவன்
சொன்ன
விடயங்களுக்கு தலையாட்டி வைக்க எழிலிக்கோ ஐயோவென்றானது.

பூவரசி சரியென்று சொன்ன அடுத்தக்கணமே திருமண வேலைகளும்
மளமளவென தொடங்கியது. ஒரு கிழமை கழிந்திருந்தாலும் எழிலிக்கோ எதையும் ஏற்றுக் கொள்ள
முடியாமல் போக நேரே அகன் முன்னே சென்று 'நீ யார் என கேட்டு
விடலாமா?' என்று நினைத்தாலும்

மனமோ

'பூசாரி தாத்தா சொன்னபடி பார்த்தா விஷத்த விஷத்தால தான் முறிக்கனும்
அப்டினா அதுக்கான மாற்று விஷம் அவன்கிட்ட தான் இருக்கணும் அதே மாதிரி
அத என் காதலால தான் வாங்க முடியும் என் காதலால அவனுக்குள்ளயிருக்க அரக்ககுணம்
அழிஞ்சிரும்னு சொல்லறாரோ அவனும் நம்மள காதலிக்கிறதா தானே சொல்றான்
என் பாசம் அவன முழுசா மாத்திரும் நம்ம ஊரு ஜனங்களுக்கும் ஆபத்தில்ல'

என நினைத்தவள் சரியான நேரத்தில்
தவறான முடிவை சரியாக எடுத்தாள் அவளறியாதவொன்று அரக்கன் எப்போதும்
அரக்கன் மட்டுமேயென்பது .

இப்போதைக்கு சம்பள நாளன்று கொடுக்கும் சீனியில் மருத்துவிச்சி கொடுத்த மருந்தை
கலந்தவளுக்கு தெரியவில்லை இவள் செய்த வேலையால் தான் தனது ஆராய்ச்சிக்கு குந்தகம் ஏற்பட்டதென தெரிந்தால் யக்க்ஷனாக மாறி அவளையே வதம் புரிந்துவிடுவானென்று .

அதன் பிறகு ஒரு வாரத்தில் பூவரசி தரனின் திருமணம் முடிந்து இருநாட்களிலேயே
தரனின் சொந்த ஊருக்கு பூவரசியுடன் சென்று விட இதற்கு பிறகு தான் தனக்கு
சோதனைகாலமென அறியாமல் எழிலியும் எப்படி தன் மக்களை காப்பதென
எண்ணிக் கொண்டிருந்தாள்.


இன்று...


குளியலறை கதவு தட்டப்பட வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு
"என்ன?" கடுப்புடன் குரல் கொடுக்க

"நீ இப்ப என்னோட என் வீட்டுக்கு வரனும் வந்தேயாகணும் அப்படி என்
கூட வரமுடியாதுன்னு சொன்னா போன முறை மாதிரி தூக்கிட்டு
போவேன் " என்று கடினக் குரலில் சொன்னவனுக்கு

இப்போதுள்ள எண்ணம் இலட்சியம் ஒன்று மட்டுமே எப்படியாவது
தன்னவளை தன்னுடன் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமென்பது
வதம் தொடரும் ....
***************************************************************

இந்தா episode போட்டாச்சு lover boy அபிய பார்க்கலாமா ? பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
 
அத்தியாயம் 26



அவளோ உடனடியாக வெளியே வந்தவள் ஏதோ கணக்குகளை மனதில் போட்டப்படி


"இல்ல உங்க காதல் உண்மை அப்டின்னா
எங்க ரெண்டுபேரையும் விட்ருங்க இதெல்லாம் போதும் நாங்க ஹாஸ்டல்ல ஸ்டே
பண்ணிக்கிறோம் இன்னும் மூணு மாசத்துல கேம்பஸ் லீவு வரும் அப்போ
ஊருக்கு போயிட்டு எல்லா பிரச்சனையும் முடிச்சிக்கலாம் "


என்றவளை மேலிருந்து கீழாக நக்கலாக பார்த்தவன்

"சனாம்மா என்னோட வில்லத்தனமும் நரி புத்தியும் உனக்கு எப்போவுமே வராது
அத வரவைக்கவும் ட்ரை பண்ணாத அது எனக்கு மட்டும் வாச்சது எல்லாத்தையும்
விட்ருவோம் எனக்கு இந்த ஜென்மத்துல ரெண்டாவது சான்ஸ் தரலாமே
அப்போவும் உனக்கு என் மேல நம்பிக்கையில்லன்னா ஓகே
இன்னும் நாலு மாசத்துல எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்"


என்றான் உறுதியான குரலில் அவளோ எங்கோ பார்த்தபடி

"எனக்கு எத்தனை மாசமானாலும் உன் மேல பீலிங் வராது
அதையும் தாண்டி நான் யாரு உங்களுக்கு சான்ஸ் கொடுக்க ?"

அவளை இடைவெட்டும் குரலில்

"என்னோட மனைவி எனக்குரியவள் அப்போ சான்ஸ் தரலாமே"

என்றவனை இளக்காரமாக பார்த்தவள்

"நான் உன் மனைவி கிடையாதுன்னு நேத்தே சொல்லிட்டேன்
அதனால சான்சும் கிடையாது நீங்க போகலாம் வழி அந்தப் பக்கம்"

என்று வாயில் பக்கம் கைகாட்ட

"சரி இது எனக்கான சான்ஸ் கிடையாது ஆனா நீ எனக்கு ப்ரூவ் பண்ணனும்
என் மேல எந்த பீலிங்க்ஸும் இல்லன்னு"

அவளோ புருவம் சுருக்கி 'என்ன சொல்கிறாய் ?'என்பது போல் பார்க்க
அவனோ செருமிக் கொண்டு


"உனக்கும் எனக்குமிடையில எதுவும் இல்லன்னு ப்ரூவ் பண்ணா
நான் இனி வாழ் நாள்ல உன்னையும் அனியையும் டிஸ்டர்ப்
பண்ணவே மாட்டேன் கண்டிப்பா கொடுத்த வாக்க மாறமாட்டேன் என்ன நீ நம்பலாம்"

என அழுத்த குரலில் கூற அவளோ வெடுக்கென

"ஆமா போன ஜென்மத்துல குருட்டுத்தனமா நம்பி தெருவுல நின்ன மாதிரியா ?
ஒன்னும் தேவையில்ல,

எனக்கு யாருக்கும் எதுவும் ப்ரூவ்
பண்ண வேண்டிய அவசியமுமில்ல நீ மூடிட்டு கிளம்பு"

என சாளரப் பக்கம் திரும்பிக் கொண்டவள் அருகில் வந்தவன்


"யாருக்கும் ப்ரூவ் பண்ண தேவையில்ல சம்மந்தப்பட்ட
எனக்கு ப்ரூவ் பண்ணித்தான் ஆகணும்"

என்றான் சாளரத்தில் சாய்ந்து அவள் முகத்தை பார்த்தபடி
அவளோ திரைசீலையை இறுக பற்றியபடி

"என்னால முடியாது அதுவும் உன் கூட ஒன்னா
இருக்கணுமா ? நெவெர் என்னால கண்டிப்பா
முடியாது"

என்றாள் உறுதியாக, அவனோ


"ஓகே நம்ம ரெண்டு பேரும் காண்ட்ராக்ட் போட்டுக்கலாம்
அந்த காண்ட்ராக்ட் படி போர் மன்த்ஸ் நீ என் கூட
இருக்கணும் பிடிக்கலைன்னா பிரிஞ்சிரலாம் உனக்கும் ஈஸியா
டிவோர்ஸ் கிடைச்சிரும் இன்னிக்கு அந்திக்கு வாரேன்
கண்டிப்பா நல்ல முடிவெடுப்பன்னு நினைக்குறேன்"

என்றபடி விறுவிறுவென கார் சாவியையெடுத்துக் கொண்டு
அவள் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டான்.

"எப்போ கேட்டாலும் என் முடிவு ஒன்னு தான்
அது நீ எனக்கு வேணாம்ங்குறது மட்டும்
தான்"

என்று கத்தியவளின் குரல் காற்றோடு தான் கரைந்து போனது
அவள் கூறிய வார்த்தைகள் மீண்டுமீண்டும் தலைக்குள் ஒலித்தபடியிருக்க
கண்கள் கரித்துக் கொண்டு வந்தது அவள் என்ன காரணத்தால்
அனியுடன் தன் வீட்டிற்கு வரமாட்டேன் என்கிறாளென்று அவனுக்கா
தெரியாது.

அந்த நினைவலைகளின் தாக்கம் இன்றும் உயிரை உருக்குவது போல்
வலித்தது.

அன்று...


பூவரசியின் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது.
எப்போதாவது அகன் எழிலிக்கு மட்டும் அழைப்பேற்படுத்தி கொடுப்பான்.என்பதை விட எழிலி மட்டுமே பூவரசியுடன் கதைக்க காத்திருப்பாள். பூவரசியின் குடும்ப உறுப்பினர்கள் எப்போது தரனுடன் கல்யாணம்

முடிந்ததோ அப்போதே அவளுடனான உறவை முறித்து விட்டனர். செந்தமிழ் மட்டும் எப்போதாவது ''உன் சிநேகிதி எப்படியிருக்கா ?'' என்று கேட்டு கொள்வார். உறவுப் பாராட்டி விதுரனுக்கு
தெரிந்தால் அக்காவென்றும் பார்க்க மாட்டான் கொலையே செய்து விடுவானல்லவா

எவ்வளவு தான் சாதாரணமாக கதைக்க முயன்றாலும் பூவரசியின் குரலில் ஏதோ நடுக்கமிருந்துக் கொண்டேயிருப்பதை எழிலி கவனிக்காமலில்லை.

இதை பற்றி அகனிடம் கேட்டால் சின்ன பெண் புது ஊர் என ஏதாவது காரணம் சொல்லி நாசுக்காக தவிர்த்து விடுவான்.

அகன் எழிலி மீது ஒரு கண் வைத்துக் கொண்டாலும் அவன் முழுக் கவனமும் ஆராய்ச்சியில் தான்

இதற்கிடையில் மதில்ட்டாவும் அகனுக்கு தேவையான
மருத்துவ உபகரணங்கள் மருந்து தயாரிக்க தேவையான இரசாயனங்கள்
என்பவற்றை அனுப்பி வைத்திருக்க புது புது முயற்சிகளை மேற்கொண்டபடியிருந்தான்.

அன்று பாக்டரிக்கும் போகாமல் காலையிலேயே மருந்துகள் கொடுத்து பரிசோதித்த நோயாளிகளின்
அறிக்கைகளையெடுத்து படித்தவனுக்கு அத்தனை ஆத்திரம் அவனுடைய எந்த மருந்தும்
பலனளிக்காமல் போக கிட்டத்தட்ட பைத்தியமாகி போனான் என்று தான் கூற வேண்டும்.

"என்னதான் நடக்குது ஏன் எந்த மருந்துமே வர்க்காகுதில்ல ? முன்ன கொடுத்த மருந்த விட வீரியமாயிருக்கு
குரங்குல எபக்ட்டாகுதுன்னா கட்டாயம் மனுஷ உடம்புல ஏதாவது மாற்றம் தெரியனுமே ஏன் ஒன்னும்
தெரியுதில்ல " என்று தலையை பிடித்துக் கொண்டு கத்தவரம்பித்திருந்தான்

அவனருகே வந்த அகஸ்தாவோ
"சார் காம்டவுன் நான் என்ன விஷயம்னு செக் பண்றேன்"

"இவ்ளோ நாள் அத செக் பண்ணாம என்ன புடுங்கிட்டிருந்த போ "
என்று விரட்டியடித்தவன் மனமோ உலைக்களமாக கொதித்தது.

இப்போது யாரை தூக்கி போட்டு மிதிக்கலாம் என சிந்தித்து கொண்டிருந்தவனிடம்
வந்த விஷ்வாவோ

"அண்ணா அந்த நாராயணி பொண்ணு போய் சேர்ந்துருச்சு உங்களுக்கு
ஏதாவது டெஸ்ட் எடுத்து பார்க்கணுமா ?"

என்றான் கேள்வியாக

"ம்ம் ஆமா அதோட இப்போ நாம கொடுத்த மருந்து
அன்ஸ்வர் பண்ணாம குழந்தை உண்டாகியிருக்கே
ரெண்டு பொண்ணுங்க அதுல ஒன்ன போட்டு தள்ளனும்"

என்றான் அகன் அரக்கனாக

"ஏன் அண்ணா அந்த பொண்ணுங்க?"

என்றான் விஷு புரியாமல்

"எனக்கு எப்படி இது சாத்தியம்னு
தெரிஞ்சாகணும் என்னோட புது மருந்து
பழச விட ரொம்ப வீரியம் ஆனா ஹொவ் இஸ் இட்
பொசிபில் ஒரு சைடு எபக்ட்டும் இல்லாம "

என்று புலம்பியபடி தலையை பிடித்துக் கொண்டவனுக்கு
தலை வின்வினென்று தெறித்தது.

"அதுக்கு ஜஸ்ட் பிளட் டெஸ்ட் எடுத்தா போதுமே ஏன் கொலை பண்ணனும்?"

என்றான் விஷு குழப்பமாக

"இடியட் பிளட் டெஸ்ட் எடுக்காமலா கொலை பண்ண
சொல்றேன் அதுல எந்த டேட்டாவும் எனக்கு கிடைக்கல"

என்று கோபத்தில் கத்தியவன் சற்று ஆசுவாசமடைந்தபடி

"இல்ல என் மருந்துக்கு ஸ்டார்டிங்லயாவது கருச்சிதைவாவது
நடந்துச்சு அதோட ஓர்கன்ஸ்சும் பெயிலியராகுச்சு ஆனா இப்போ ஒரு
டிபரென்ஸும் தெரியல பைத்தியம் பிடிக்குது"

என்றான் சந்தேக குரலில், மீண்டும் விஷு கேள்வியாக

"ஓகே ஆனா எப்படி கொல்றது கொல்லும் போது அந்த மருந்தால ஏதாவது
சின்ன குளறுபடியானாலும் சரியான தீர்மானத்துக்கு வர முடியாதே?"

என்றவுடன் சற்று யோசித்த அகன்

"ம்ம் அதுவும் உண்மை தான் நீ ஜஸ்ட் மயக்க மருந்து கொடு டூ ஹவர்ஸ்க்கு
நான் வந்து மீதி என்ன பண்ணலாம்னு பார்க்குறேன்"

"ஓகே முடிச்சுட்டு சொல்லி அனுப்புறேன்"

என விஷ்வாவும் கிளம்பி விட


அகனுக்கு இப்போது தாரெழிலியின் நியாபகம் வந்து சேர்ந்தது. தன் மனதின்
வெம்மையை தணிக்க எழிலியால் மட்டுமே முடியுமென நினைத்தானோ
என்னவோ மாடியிலிருந்து சமையலறைக்குள் நுழைந்தவன் எழிலியை
வம்பிழுக்க தொடங்கினான்


"என்ன தாரா சாப்பாடு ஆச்சா ?"

"இல்லங்கய்யா இன்னும் முடில உங்களுக்கு வேற ஏதாவது
வேணுமா ?"

என்றவுடன் அவளது இடையை பற்றி பிடித்து சுவரில் சாய்த்தவன்
தன் மொத்த பாரத்தையும் அவள் மீது போட்டபடி காதுக்குள்
கிசுகிசுப்பாக



"எனக்கு நீ தான் வேணும் இப்போவே இந்த நிமிஷமே தர முடியுமா ?"

அவளது மூளை 'அவனுக்கு இசையாதே' என கட்டளையிட்டாலும் மனமோ
அவனை 'உன் காதலால மாற்றலாம் உன் பாசத்தால இந்த ஊர் ஜனங்கள
காப்பாத்தலாம்னா தப்பில்ல'

என்று மனம் கூக்குரலிட ஊருக்காக
தன்னையே இழக்க தயாரான தாரெழிலியின் தலை தாமாக
சரியென அசைய

அவனுக்கோ அத்தனை சந்தோஷம் முகங்கொள்ளா புன்னகையுடன் அவளை
ஆயிரம் முத்தங்களால் அர்ச்சித்தவன்

" நீ இவ்ளோ சீக்கிரமா என் வழிக்கு
வருவன்னு எதிர்பார்க்கவேயில்ல தாரா
ஐ லைக் யூ டி"

என்று காமப்பித்தம் தலைக்கேறி புலம்பியவன்
அவள் கேட்ட விடயத்தில் உச்ச பச்ச
கொதிநிலைக்கு சென்று விட்டான்.
வதம் தொடரும்............
*****************************************************

இந்தா episode போட்டாச்சு lover boy அபிய பார்க்கலாமா ? பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
 
Status
Not open for further replies.
Top