என சிந்தித்தபடியிருக்க அவன் எண்ணத்தை படித்தாளோ என்னவோ
"நான் யார்ட்டையும் சொல்லல தயவு பண்ணி இதெல்லாத்தையும் விட்ருங்க
என் மேல வச்ச காதல் உண்மைன்னா எனக்காக இதெல்லாம் விட்ருங்க"
என அவனை பார்த்து கெஞ்ச
அவன் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே மனதுக்குள்
'பைத்தியக்காரி எனக்கு உன் மேலவுள்ளது காதலேயில்ல இப்போ தான்
வந்துட்டா' என்று இளக்காரமாக நினைத்தவன் மூளையோ
' இந்த காதல வச்சு எப்படி லாபம் பார்க்கலாம்? ' என சிந்தித்தது
உடனே யோசனை தோன்ற அதையே செயற்படுத்தினான்
கவலையாக முகத்தை வைத்துக் கொண்டு அவளருகில் வந்து
அவள் கண்களை பார்த்தபடி
"சாரி இது என் தப்பால தான் நடந்துச்சு இதுக்கு முக்கிய காரணம்
அந்த சாரா பொண்ணு தான் எனக்கு வருத்தம் என்னன்னா
நீ என்ன போய் சந்தேகப்பட்டியேன்னு தான்"
மன்னிப்பு யாசிக்கும் குரலில் கெஞ்ச அவளோ அதையெல்லாம்
பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்
"அப்போ ஏன் மாத்திரை உங்க மேசைல இருந்துச்சு ?"
என்று கேட்க அவனுக்கோ அத்தனை ஆத்திரம் 'எட்டாங்கிளாஸ்
கூட என்னால தான் பாஸ் பண்ணா என்னையவே கேள்வி கேக்குறாளா
இருக்கட்டும் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உனக்கு செய்றேன்'
என கருவிக் கொண்டாலும் வெளியில் கண்கலங்கியபடி
"அது அந்த பொண்ணு அன்னைக்கு தரனுக்கும்`இதே மாதிரி
மாத்திரை கொடுத்து கொல்ல பார்த்தா அதை நான் கண்டுபிடிச்சேன்னு
தான் தூக்குல தொங்கிட்டா"
ஆச்சரியமாக பார்த்த எழிலி மீண்டும்
"நான் டாக்டரம்மாட்ட கேட்ட போது நீங்க தான் எல்லாருக்கும் கொடுக்க
சொன்னதா சொன்னாங்களே ?''
அகனுக்கு வந்த ஆத்திரத்துக்கு இறந்தவளை மீண்டும் எழுப்பி கொல்லலாமா ?
என்ற எண்ணம் வந்தாலும் மனதில் மூண்ட தீயை அடக்கியபடி
"நான் தொற்று நோய் பரவுறனால எக்ஸ்ட்ரா கேர் எடுக்க சொன்னேன்
அத தான் மாட்டிக்க கூடாதுன்னு அப்டி சொல்லிருக்கா"
என்றான் அப்பாவியாக
"அப்போ ஏன் அவங்கள கூட்டிட்டு வந்தீங்க ?" என்றாள் புருவம்
முடிச்சிட
"அவ என் ஜூனியர் நம்பி கூட்டிட்டு வந்தேன்" என்று அவளுக்கு விளக்கம்
சொல்லிக் கொண்டிருந்தவன் மூளையில் ஏதோ மின்னல் வெட்ட
"அப்போ இத கண்டுபிடிச்ச நீ ஏதாவது மாத்திரைய நிப்பாட்ட சொன்னியா ?"
என்றான் கேள்வியாக அவளோ அவனை சந்தேகமாக பார்த்தபடி
"ஏன் கேக்குறீங்க ? " என்றாள் கேள்வியாக அவனோ சமாளிக்கும்
விதமாக
"இல்ல நோயெதிர்ப்பு சக்திய கூட்றதுக்கு புதுசா கல்யாணமான பொண்ணுங்களுக்கு
மருந்து கொடுக்க சொல்லிருந்தேன் அத நிப்பாட்டியிருந்தா பிறக்க போற குழந்தைக்கு
தான் ரத்த சோகை வரும்"
என ஏதோ இட்டுக்கட்டி சொல்ல
அவளோ அவன் சொன்ன எல்லா விடயங்களுக்கும் குறுக்கு கேள்வி கேட்டு
அவனை மூச்சு முட்ட வைத்த பின்னரே தான் செய்த காரியத்தை கூறினாள்.
"நான் எந்த மருந்தையும் யாரையும் சாப்பிட விடல ஹாஸ்ப்பிட்டல்ல வேலை
செய்றவங்கள்ட்ட நீங்க என்கிட்ட மருந்து கொடுக்க சொன்னதா சொல்லி
வாங்கிட்டு போய் குப்பைல கொட்டிட்டு அதுக்கு பதிலா மூலிகை வில்லை கொடுத்துட்டேன் "
என்று கூறி முடிக்க அவனுக்கோ பெருத்த அவமானமாகயிருந்தது. ஒரு சிறுப்பெண்
தன்னை ஏமாற்றி விட்டாளேயென்று நினைக்கும் போதே அவனுக்கு பற்றிக் கொண்டு
வந்தது.
மனதுக்குள்,
'எந்த ஊர் ஜனங்களுக்காக என்ன முட்டாளாக்குனியோ அவங்கள வச்சே
உன் கண்ண குத்துறேன் என் லட்சியத்தை சிதைக்க பார்த்த உன்ன என்ன பன்றேன்னு
பாரு '
வஞ்சித்துக் கொண்டவன் வெளியே புன்னகை முகமாக அவளை இழுத்து
மார்பில் சாய்த்துக் கொண்டு மிருதுவாக முதுகையும் தலையையும் வருடி
விட்டவன்
தன் தேவைக்கு அடிப்போட எழிலியோ அவன் நோக்கமறிந்து விலகிக்
கொள்ள எத்தனிக்க அவள் காதினுள்
"தாரேன்னு சொன்ன கொடுத்த வாக்க மீறக் கூடாது " என மேலும்
முன்னேறியவன் மார்பில் கைவைத்து
"அப்போ நீங்க எனக்கொரு வாக்கு தரணும் எக்காரணம்
கொண்டும் என் சனங்க கண்ணுலயிருந்து கண்ணீர் வரக்
கூடாது "என கையை நீட்ட அவன் மனமோ
'என்ன காதல் கூதல்னாலும் நம்மள மாதிரி காரியத்துல கண்ணாயிருக்கா
இவ மட்டும் மத்தில்ட்டா மாதிரி சொத்தோடயிருந்திருந்தா இவளையே
கட்டியிருக்கலாம்'
என்று எண்ணவும் தவறவில்லை. வாக்கு கொடுக்கிறனென தலையசைத்தவன்
அவளை விடுவித்து காதுக்குள்
"இன்னும் ஒருவாரத்துல கல்யாணம் பண்ணிக்கலாமா ?"
என்று கிசுகிசுக்க அவளோ வெட்க புன்னகையுடன் தலையசைத்து
அவனை காதலுடன் பார்க்க அவனுக்கோ ஜிவ்வென்றானது
என்று அனுப்பிவைக்க அவளோ சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தவுடன்.
மீண்டும் காட்டேரி குணம் தலைத்தூக்க
"முத்தா " என்று கோபத்துடன் கத்த ஓடி
வந்த முத்தனோ
"என்னங்கய்யா " என்று ஓடி வந்தவனை
" போய் அந்த விஷ்வாவையும் அகஸ்த்தாவையும் கூட்டிட்டு வா "
என கட்டளையிட்டபடி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவனருகே
வந்த விஷ்வாவோ
"அண்ணா " என்றழைக்க ஓங்கியறைந்தவன்
"முட்டாள்! முட்டாள்! என்னோட மூணு மாச உழைப்ப ஒரு சின்ன பொண்ணு
வீணாக்கியிருக்கா அது கூட தெரியாம என்ன பண்ணிக்கிட்டிருந்திங்க ?"
என்றான் காட்டமாக அவனுடைய கோபமுகத்தில் பயந்த இருவரும் ஒரு சேர
"என்ன சொல்றிங்க ?" என கேட்க
"உள்ளத சொல்றேன் முட்டாக்கூட்டமே அந்த தாரெழிலி பொண்ணுகிட்ட
கொடுத்தது"
என்றவுடனே விஷ்வாவோ "நான் கொடுக்க சொல்லி தான் அகஸ்த்தா கொடுத்தா "
என்றது தான் தாமதம் கோபத்தினுச்சிக்கே சென்றவன்
"என்ன செஞ்சு வச்சிருக்க தெரியுமா ?" என்று எல்லாவற்றையும் சொல்ல
"அண்ணா இந்த தோட்டத்துல வேலை செய்ற பொண்ணுக்கு இவ்ளோ
அறிவா ?"
என விஷ்வா வியக்க அகனோ எரிச்சலுடன்
"ஆமா உன்னைவிட அதிகம் தான் இனி யார் என் பெயர சொல்லி எது கேட்டாலும்
எனக்கு தகவலனுப்பி கேட்டுட்டு செய் அந்த தாராவ நான் கவனிக்க வேண்டிய
விதத்துல கவனிச்சுக்குறேன்"
என்றவன் முகத்தில் வன்ம புன்னகை பரவியது.
இன்று...
இந்த காட்சிகள் மனக்கண் முன் தோன்றி இம்சிக்க மாலையும் ஆகியிருந்தது. கையில்
லோச்சனாவின் புகைப்படத்தையெடுத்துக் கொண்டவன் கத்தி அழவாரம்பித்தான்.
"ஐயோ! எவ்ளோ பெரிய பாவம் பண்ணி உனக்கும் நம்ம குழந்தைக்கும் நானே எமனாகிட்டேன்
எனக்கு வலிக்குதே என் குழந்தை எப்படி துடிச்சானோ தயவு பண்ணி இந்தப்பாவ
மன்னிச்சிருடா"
என்று கண்ணீரை துடைத்தபடி
"அன்னைக்கு ஏர்போட்ல நீ சொன்னது சரியான விஷயம் தான் என்ன மாதிரி ஈனப்பிறவிகளுக்கு
காதல் கல்யாணம்லாம் வெறும் கனவு மட்டும் தான்"
என்று அழ இங்கு லோச்சுவின் நிலையோ மோசமாகி தான் போனது
"அம்மா என்ன காப்பாத்துமா எனக்கு மூச்சு முட்டுது அப்பாக்கு என்ன ஏன் பிடிக்கல?
என்ன ஏன் கொல்ல சொல்றாரு? எனக்கு வலிக்குதே! அப்பா எரியுதே !"
என ஏதோ குட்டியுருவம் காதுக்குள் கத்துவதை போலிருக்க அவளோ
அடித்து பிடித்து தூக்கத்திலிருந்து "அந்துமா ஆஆ "
என்று விழித்துக் கொண்டு தன் வயிற்றை பிடித்துக் கொண்டு
கதறியழுக அங்கே வந்த சந்தியாவோ "லோச்சு "
என்று உலுக்க
அவர் மீது தலையணையை தூக்கி வீசியவள்
"ஐயோ! எல்லாருமா சேர்ந்து
என் குழந்தைய கொன்னுட்டிங்களே நீங்கல்லாம் நல்லவேயிருக்கமாட்டிங்க
என்ன ஏமாத்துன அந்த துரோகிக்கும் நல்லதே
நடக்காது "
என்று வயிற்றை இறுகப் பற்றிக் கொண்டு அழுதவளை யாராலும்
நெருங்க முடியாமல் தான் போனது.
வதம் தொடரும்.....
**************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
லோச்சனாவின் இரைச்சலையும் அழுகையையும் கண்டு பயந்து போன சந்தியாவோ
உடனடியாக அபிக்கு அழைப்பையேற்படுத்தி விடயத்தை கூற அவனும் உடனடியாக
புறப்பட்டு சத்யாவின் வீட்டிற்கு வந்து விட்டான்.
அனிதாவால் கூட லோச்சனாவினருகில் நெருங்க முடியாது அறைவாசலிலேயே நிற்கஅவர்களை
விலக்கிக் கொண்டு அறையினுள் சென்று பார்த்த அபிஜித்தனுக்கோ உயிரை வேரோடு யாரோ பிடுங்கியெறிவதை போலிருந்தது.
கட்டிலில் அமர்ந்திருந்த லோச்சனாவோ ,
"கடவுளே நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன் எல்லாரும் நல்லாயிருக்கணும்னு
நினைச்சது தப்பா ? ஒரு அரக்கன நல்லவனா மாத்த நினைச்சி என் குழந்தையோட
உயிர நானே பறிச்சிட்டேனே ஐயோ என் வயிறு காந்துதே "
என தலையிலடித்துக் கொண்டு அழுது புலம்ப அதை பார்த்தவனின்
நெஞ்சமோ சில்லுசில்லாக நொறுங்கி போனது ஆனால் தான் அழுது
புலம்பினால் யாரவளை தேற்ற என்று நினைத்தபடி அவளருகில்
சென்று
"சனா தயவுபண்ணி உன்ன வருத்திக்காத எல்லாம் என் பிழை தான் தயவு பண்ணி அழாத"
என்று கெஞ்சியபடி தலையை தடவிக் கொடுத்தவனின் சட்டையைப் பற்றி உலுக்கி ஆவேசமாக அவன்
கன்னத்தில் மாறி மாறி அறைந்தவள்
"ஏன் உனக்கு என் அந்துமாவ பிடிக்கல ?அவன் உன் ரத்தம் தானே ஏன் அவன
பிடிக்கல? என்ன கொன்னுட்டு என் குழந்தையையாவது உயிரோட விட்ருக்கலாமே"
என தரையில் விழுந்தழுபவளை என்ன சொல்லி தேற்றவென தெரியாமல் விழி பிதுங்கி
நின்றவன் நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு
"சரி உன்கிட்ட பணம் பதவியெல்லாமிருக்கில்ல என் குழந்தைய மட்டும் திருப்பிக்
கொடு எனக்கு சொந்தம்பந்தம் பாசம் எதுவும் வேணாம்"
என்றவள் அழுது வடிக்காமல் அழுத்தமாக,
"நீதான் ஆதாயமில்லாம ஒன்னும் செய்யமாட்டியே உனக்கு என்னுயிர் வேணுமா தாரேன் செத்து போன என் குழந்தைய உன் கௌரவம் பணம் பவுச வச்சி திருப்பிக் கொடு"
என்றாள் அவன் கையை பிடித்தழுத்தியபடி அவனோ செய்வதறியாமல்
அமைதியாக கண்ணீர் வடிக்க அவளோ அவன் கையை உதறிவிட்டு
"உன்னால முடியாதில்ல! உன்னால முடியாது! ஏதோ சொன்ன நான் சயின்டிஸ்ட் அப்டினா
கடவுள் மாறின்னு கடவுள்னா வரம் கொடுக்கும் ஆனா உன்ன மாதிரியான அரக்கனுகளால
ஒரு விஷயத்த சாபமா மட்டும் தான் மாத்த முடியும்"
என்று கத்தியவள் முழங்காலில் முகம் புதைத்து அழ அவனது மனசாட்சியோ
உன் ஆசையின் விளைவை பாரென ஓலமிட்டது.
அன்று...
எழிலிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. தன்னவன் திருமணம் செய்துக் கொள்வதாக
கூறியது கூட அவ்வளவு சந்தோஷத்தை தரவில்லை. ஆனால் அவன் கைகளில் கறைப்படியவில்லையென்று
தெரிந்தவுடன் சிறகில்லாமல் வானத்தில் பறந்தாள். ஆனால் அந்த சந்தோஷத்துக்கு ஆயுள்
சொற்ப நாட்களேயென்று அவள் அறியவில்லை இப்படியே ஆடிப்பாடி தனது
வீட்டிற்கு வர
அங்கேயிருந்து தன் அத்தை ரங்கநாயகியும் அவர் மகன் ராமதாசும் ஏதோ பேசிச்
சிரித்தபடி வீட்டிலிருந்து கிளம்புவதை பார்த்தவள் யோசனையாக மெல்ல நடந்து
வீட்டிற்குள் நுழைய
ராசுவோ சிரித்த முகமாக , "வா எழிலி என்ன வேல சீக்கிரம் முடிஞ்சுதா ?"
என்று கேட்க எழிலியோ "ம்ம், என்ன அண்ணே அத்த இந்தபக்கம் ?"
"அதுவா உன்ன தான் பொண்ணு கேட்ருந்தாங்க ரெண்டு வாரத்துல பரிசம்
போட்ரலாம்னு சொன்னேன்"
என்றான் ஸ்டோருக்கு போக தயாராகியபடி, அவளோ
"அண்ணா யார கேட்டு முடிவு பண்ண அதுவும் அந்த குடிகாரன் கூட
என்ன பத்தி ஏதாவது உனக்கு அக்கறையிருக்கா ?"
என்றாள் ஆற்றாமையுடன் அதற்கு ராசுவோ சலனப்படாமல்
"பாவம் உனக்காக குடிக்கிறதெல்லாம்
நிறுத்திட்டான் இந்த கல்யாணம் நடக்கும்னு வாக்கு கொடுத்துட்டேன்
காப்பாத்திரு"
என்றபடி வெளியே செல்ல எழிலியோ தவித்துப் போனாள்.
காதலன் கரம்பிடிக்க ஆசைக் கொண்டவளுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியை
உண்டாக்க, ஆனால் அவள் காதலனாக நினைத்த கயவனோ பாக்டரிக்கு ராமதாசை வரவழைத்து
முன்னால் ஒரு கட்டுப்பணத்தை தூக்கிப் போட்டபடி
"சொன்னபடி செஞ்சதுக்கு காசு இன்னும் பணம் தாரேன் கல்யாணத்துக்கு
அவசரப்படுத்து அதே மாதிரி அந்த எழிலி வீட்ட விட்டு என்கூட வந்தவுடனே
அவள பத்தி மட்டும் புரிஞ்சுதா என் பெயரு வெளிய வராம அவதூறு பரப்பு "
என்று சொல்ல அவனும் வாயெல்லாம் பல்லாக கள்ளுக்கடை
நோக்கி சென்று விட்டான். அகனோ மனதுக்குள்
'தாரா எந்தவூருக்கரங்களுக்காக என்னோட கனவ கலைக்க பார்த்தியா அந்த
ஊருக்காரங்களே உன்ன கல்லால அடிச்சே துரத்த வைக்கல நான் அகனழகனில்ல'
என கருவிக்கொண்டவனுக்கு தெரியவில்லை. இனியொரு ஜென்மம்
எடுத்து வந்தாலும் அவனால் இழந்த நம்பிக்கையையும் காதலையும்
பெற முடியாதென்று
சிந்தனையை கலைக்கும் விதமாக அங்கு வந்த விஷ்வாவோ,
"அண்ணா பெரியப்பா கால் பண்ணாரு, லண்டன்லயிருந்து மாமா
கால் பண்ணிருக்காங்க கல்யாணத்த எப்போ வச்சுக்கலாம்னு? கேட்டாங்கலாம் "
என்றான் பவ்வியமாக, அகனோ எரிச்சலாக
"நான் மேத்தியோட பேசிட்டு சொல்றேன்"
என்று சொல்லிவிட்டு அவனை கவனிக்காமல் மதில்டாவுக்கு பாக்டரியிலிருந்தவாறே
அழைப்பையேற்படுத்தி நடந்தவற்றை கூறி முடிக்க
அவளோ நிமிடம் அமைதிக் காத்தவள்
"ஏன் ஹனி அவள இவ்ளோ நாள் விட்டு வச்சிருக்க ? ஏதாவது ஸ்லோவ் பாய்சன் கொடுத்து கொல்ல
வேண்டியது தானே ?"
என்றாள் கேள்வியாக
"அவ சாதாரணமா சாக கூடாது " என்று தனது
திட்டத்தை கூற
அவளோ, "வாவ் ஹனி நானும் சிலோன்ல வந்து
இந்த காட்சிய பார்த்து ரசிக்கணும் "
"அகன் டார்லிங் தேயிலை தோட்டத்துல வேலை செய்ற
பொண்ணுக்கு இவ்ளோ அறிவா ? இனி நாம ஏதவாத ரெசெர்ச் பண்ண
அது தடையாயிருக்க கூடாது அதனால இனிவார ஜெனரேஷனுக்கு மந்த புத்திய
கூட்டுற மாதிரி மருந்து சாப்பாட்டுக்கெல்லாம் பழக்கப்படுத்தணும் இல்லனா நம்மள மீறி
வளந்துருவாங்க அதுக்கு விடக்கூடாது"
என்றாள் கட்டாயக் குரலில் அவனோ
"நானும் அத தான் யோசிச்சேன் "
என்று கதைத்துக் கொண்டிருந்த சமயம் கதவு தட்டப்பட
ரிசீவரை வைத்தவன் உள்ளே வர அனுமதி கொடுத்து விட்டு
தன்னிடத்தில் அமர்ந்துக் கொள்ள
அவன் முன்னால் கண்கள் வீங்கி கைகளை பிசைந்தபடி
நின்றது என்னவோ அவன் தாரா தான்
மனதில் 'ஐயையோ நம்ம சொன்னத கேட்டுட்டாளோ?'
என நினைத்தபடி, வெளியே வெகுசாதாரணமாக
"வா தாரா எதுவும் பிரச்சனையா ? "என கேட்க
அவளும் தன் காதலனென நம்பி அவனிடம் வீட்டில் நடந்தவற்றை கூற, அகனோ
'ஹப்பாடி நம்மள நம்பிட்டா இத தானே எதிர்ப்பார்த்தேன்'
என மனதுக்குள் நினைத்தவன்
"நான் ராசுகிட்ட பேசலாம் ஆனா அவன் ஜாதி மதம்னு பிரிச்சிட்டா?"
என்றவுடன் மனதில் தன்னையே திட்டிக் கொண்டாலும் சிரித்தபடியே
"அது கல்யாண விஷயம்னா எந்த பெத்தவங்க புள்ளைங்க பேச்ச
கேக்குறாங்க"
என்று இரண்டு வாரங்களாக அவளை நன்றாக மூளை
சலவை செய்து ஒருவாறு யாருக்கும் தெரியாமல்
ஊரை விட்டு நானுஓயாவுக்கு அழைத்து வந்து ரகசிய
திருமணம் புரிந்துக் கொண்டான்.
எழிலி அவனுடன் வந்த அடுத்தகணமே
அவளது நடத்தையை பற்றி ஊராரிடம் அகனின்
கைக்கூலிகள் அவதூறு பரப்பி விட கிட்டத்தட்ட எழிலியை தன் சதிவலையில்
முழுதாக வீழ்த்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டான் அகனழகன்
வதம் தொடரும்...
**************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கடந்திருந்த நிலையில் தாராவோ அகனிடம் சென்று
"ஐயா வீட்ல நாலு நாளாச்சு எல்லாரும் காணாம தவிக்க போறாங்க நாம தான் கல்யாணம்
பண்ணிட்டோமே இப்போவூருக்கு போகலாம் தானே" என்று கேட்க
அவனோ தேநீரை அருந்தியபடியே, மனதுக்குள்
'இந்நேரம் நான் பண்ணிவைச்ச வேலைக்கு
உன்ன ஊரே காறி துப்பும் ஆனா இப்போ கூட்டி போகமாட்டேன் இன்னும் ஒரு மூணு
மாச வேலையிருக்கு அதையும் முடிச்சுட்டு உன்ன கூட்டிகிட்டு போறேன்'
என்று வன்மமாக நினைத்துக் கொண்டவன் வெளியே சிரித்தபடி
"போகலாம் இன்னைக்கு போய்ட்டு ஊர் பக்கம் என்ன நடக்குதுன்னு
பார்த்துட்டு வந்துர்றேன் அதுக்கு பிறகு
போகலாம்"
அவளும் சரியென தலையசைத்து`"ஐயா" என ஏதோ கேட்க போக அவளது`இடையை பிடித்து
சுவரில் சாய்த்தவன் அவளிதழ்களை தன் பெருவிரலால் வருடியபடி
"ஐயா சொல்லாத பாவா சொல்லுடி"
என்றான் கிறக்கமாக, அவளோ காற்றுக்கு கூட கேட்காத குரலில் கிசுகிசுப்பாக
"அப்டினா"என்றவுடன்
"அப்டின்னா அத்தான்னு அர்த்தம்டி"
என்று கூறியபடி அவளை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தவன் மனமோ
'நீ உயிரோடயிருக்க போறதே மூணு
மாசமோ நாலு மாசமோ தான் அது மட்டும் சந்தோஷமா வச்சிக்கணும்
அடுத்தடுத்த மருந்த உன் ஊர்லவுள்ள நாலைஞ்சி பொண்ணுங்களோட பெயர் கூட
உன் பெயரும் அட் ஆக்கிட்டேன் உன் விதி நானும் உன்ன நல்லா வச்சுக்கணும்னு
தான் பார்த்தேன் நீதான் எல்லாத்தையும் கெடுத்துக்கிட்டது'
என்று நினைத்தபடி ஆழமான முத்தத்தை கொடுக்க அவளோ அவனுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல்
தவிக்க அவனோ அவளை கைகளில் ஏந்திக் கொண்டு இரவில் விட்ட விளையாட்டை தொடர்ந்து
முடித்து விட்டு
மதியவேளையில் உடவேறியவுக்கு புறப்பட்டபடி தாராவிடம்
"ஊருக்கு போயிட்டு ரெண்டு நாள்ல வந்துருவேன்டா அது மட்டும்
தேவகியம்மா உனக்கு துணையாயிருப்பங்க"
என சொல்லிக்கொண்டு கிளம்பியவன் எஸ்டேட் பங்களாவிற்கு வந்து சேர்ந்தான்.
எழிலியை பற்றிய அவதூறுகள் அவன் திரித்ததை விட இன்னும் அதிகப்படியாக
பரவ, மனதுக்குள் சிரித்துக் கொண்டவன் ராசுவிடம் மெதுவாக எழிலியை பற்றி
பேச்சுக் கொடுத்தவன் அவளை பற்றிய உண்மைகளை கூறத்தொடங்கியவுடன்
முதலில் சண்டைக்கு வந்தாலும் அதன்பிறகு இவனது பேச்சுக்கும் பணத்துக்கும்
மயங்கி சொந்த தங்கையென்றும் பாராமல்
ராசுவோ அகனுடன் சேர்ந்துக் கொண்டு உறவினவர்களினதும் ஊராரினதும் வெறுப்பை
நன்றாக கிளறி விட
அவர்களும் எழிலியை முழுதாக வெறுத்து போயினர். இதற்கிடையில் இரு நாட்கள் கழித்து
நானுஓயா வந்தவன் எழிலியிடம் அவர்கள் கோபமாகயிருப்பதாகவும் கொஞ்சநாள் கழித்து
செல்லலாமென கூறி தனது மருந்தை பிரயோகப்படுத்தி பார்க்க இரண்டு மூன்று மாதங்களில்
எழிலியின் அதிர்ஷ்டமோ என்னவோ ஓரளவு பக்கவிளைவு வரக் கூடியதென்றலும்
எண்பது சதவீதம் மருந்து வினைத்திறனாக செயற்பட்டது.
அதனால் எழிலிக்கு எந்த பரிதாப நிலையும் ஏற்படவில்லை. ஒருவாறு மருந்துக்கான சான்றிதழை
பெற்று தனது கம்பனியையும் ஆரம்பித்து லாபம் உழைத்துக் கொண்டிருந்தவன்
எழிலியின் ஆசைகளை பார்த்து பார்த்து செய்துக் கொடுத்தான் மனதிலோரத்தில் காதல் துளிர்த்தாலும் அதை கண்டுக்கொள்ளவில்லை.
அவனது மூளையிலிருந்தது ஒரே எண்ணம் மட்டுமே இவளது அதிர்ஷ்டம் தான்தனது வெற்றிக்கு காரணம் அதனால் இறக்க மட்டும் சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டுமென உறுதி பூண்டவன்
என்றும் அவளை வார்தைகளாலோ உடல்ரீதியாகவோ துன்புறுத்தவில்லை
எழிலியும் அவன் மீதுக் கொண்ட கண்மூடித்தனமான நம்பிக்கையாலும் காதலாலும்
அவனை சந்தேகப்படவேயில்லை என்பதை அகன் சந்தேகமேற்பட விடவில்லை என்று தான் கூற
வேண்டும்.
இப்படியே நாட்கள் கழிய அவனுடன் வாழ்க்கையை தொடங்கி ஐந்தாவது மாதம்
அவன் யாரென தெரிந்துக் கொள்ளும் சூழ் நிலை சந்தர்ப்பம் சரியாக அமைந்தது. எப்போதும் போல் எழிலியை பார்க்க நானு ஓயா வந்தவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அவன் வந்தவுடனேயே அவனை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டவளின் தலையை
தடவியவன் கைகள் அவள் சொன்ன செய்தியை கேட்டு அந்தரத்தில் நின்றது.
"பாவா நீங்க அப்பாவாக போறீங்க"
என்றாள் குதூகலமாக அவளை விலக்கி நிறுத்தியவன் மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்து
"நீ அந்த மருந்த போடலையா ? எத்தனை நாளுக்கு முன்ன தெரியும்"
என்றான் எரிச்சலாக அவளோ கண்ணீர் வழிய
"எந்த மருந்து?" என்று கேட்க அவனோ விட்டேற்றியாக
"நான் கொடுப்பேனே அந்த மருந்து"
என்றவுடன் அவளோ கண்கள் கலங்க
"அது முடிஞ்சு ஒரு மாசத்துக்கு மேலேயாகுது"
என்றது தான் தாமதம் ஓங்கி கன்னத்தில் அறைய சுருண்டு
கீழே விழப் போனவளை விழவிடாமல்
தேவகியம்மா பிடித்துக் கொண்டார். அவனோ கோபத்துடன்
"அப்படியே அடிப்பட்டாவது அந்த குழந்தை போய் சேரட்டும் நான்
இப்போ மேத்திக்கு என்ன பதில் சொல்லுவேன் என்ன அப்பவே
வார்ன் பண்ணலே " என்று தலையை பிடிக்க அவளோ
"என்ன பாவா சொல்றீங்க ? இது நம்ம குழந்தை எப்படி உங்களால
இப்டி பேச முடியுது" என அவன் முன் மண்டியிட்டு பேச
"ஏய் என்கிட்டயே விளையாடுறியா ? நான் கொடுத்த மருந்த ஒழுங்கா சாப்பிடாம
ச்சைக் நீயே ஒரு நசை இதுல புதுசா குழந்தைனு ஒரு நசை வேற எனக்கு தேவைதான்"
என்றான் எரிச்சலாக அவளோ காதல் பொய்த்து போன உணர்வில் கண்கலங்க
"பாவா என்ன சொல்றீங்க ? " என்றவளை கோபமாக பார்த்தவன்
என்றதும் அவளது காதல் கொண்ட மனதுக்கோ யாரோ இதயத்தில் சம்மட்டியால்
ஓங்கியடித்த உணர்வு எல்லாம் பொய்த்து போனது ஒரே நாளில்
வாழ்க்கை இருண்ட கண்டமான உணர்வு அவளுக்கு
இன்று...
இப்படியே தேம்பி தேம்பி கதறுபவளை கையாலகாத தனத்துடன் கண்ணீர் பொங்க
பார்த்திருந்தவன் அவளருகே அமர்ந்து தன் தோளில் சாய்த்துக் கொள்ளப் போக
அவனிடமிருந்து விலகி அமர்ந்தவள் அவனை தீர்க்கமாக பார்த்தபடி
"நான் உன்கூட வரமாட்டேன் ஹாஸ்டலுக்கும் போகல இங்கயேயிருக்கேன் மூணு மாசம் உனக்கு டைம் உன்னால முடிஞ்சா என் மனச மாத்திக் காட்டு"
என்றவளின் குரலிலிருந்த 'முடிந்தால் செய்துக் காட்டு'
என்ற உறுதியில் ஆடித்தான் போனான். என்ன செய்து காதலை
பெறுவேன் எப்படி அவள் மனதில் இடம்பிடிப்பேன்
என்று தவித்தது ஆண் மனம்
வதம் தொடரும்.....
*********************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
அவள் சொல்வதை தவிர வேறு எந்த வழியுமிருப்பதாக அவனுக்கும் தெரியவில்லை. எனவே
சரியென ஒப்புக் கொண்டவன் வெளியேப் போக எத்தனிக்க அவளோ புருவம் முடிச்சிட யோசனையாக அவனை சொடுக்கிட்டு அழைத்தாள்.
அவனோ மெதுவாக திரும்பி பார்த்து ஒற்றை புருவமுயர்த்தி என்னவென்று கேட்க,
சனாவோ " இந்த முறை எக்காரணம் கொண்டும் அனிதாவ வச்சு மிரட்டி என்கிட்ட காரியம்
சாதிக்கலாம்னு நினைக்காத அப்படி ஏதாவது எண்ணமிருந்தா தூக்கி குப்பைல போட்ரு
அவள வச்சு மிரட்டினா உன்ன கொலை பண்ணைக் கூட தயங்கமாட்டேன் "
என்றாள் உறுதியாக அவனோ விரக்தியாக புன்னகைத்தபடி,
"எனக்கு தேவை உன்னோட பரிபூரணமான காதல் அதுக்காக நான் எதை வேணும்னாலும்
இழக்க தயாராயிருக்கேன் அதனால அனிய இதுக்குள்ள இழுக்கமாட்டேன்"
என்றவுடன் பயங்கரமாக சிரித்தவள்
"நீ என்ன புடுங்குவன்னு எனக்கு தெரியாதா ? காதல் உண்மைன்னு நிரூபிக்கணும்னா
ஒன்னு செய்றியா ?காரிங்க்டோன் வாட்டர் போல்ஸ் பக்கத்துல தானிருக்கு முடிஞ்சா குதிச்சு செத்து
போயிரு எனக்கும் பிபி லெவல் குறையும்"
என்றாள் எரிச்சலாக அவனோ முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு
"நீ சொல்றது சரி தானிருந்தாலும் எனக்கு என் மகன் முகத்த பார்க்கணும் உன்னோட
காதல கொஞ்சமாவது அனுபவிக்கனும் அதெல்லாம் கிடைச்சா அடுத்த நிமிஷமே
செத்து போக நான் ரெடி "
என்றான் கலக்கமான குரலில்
இதை கேட்டவளுக்கோ சுள்ளென கோபம் வர
"நீயெல்லாம் ஒரு ஆண்பிள்ளை த்தூ
தன்பிள்ளையவும் என் காதலையும் உயிரோட கொன்னு புதைச்சது மட்டுமில்லாம
இப்போ தான் குழந்தைய பார்க்கணுமாம்"
என்றாள் காட்டமாக
அவனுக்கோ தன் ஆண்மையை குறை கூறியவுடன் சட்டென கோபம் வந்து
விட்டது.
"நான் சரியான ஆண்பிள்ளைனு " ஆரம்பிக்க அவளோ நிறுத்து
என்பது போல் சைகை செய்து விட்டு இடுப்பில் கைவைத்து ஏற இறங்க
பார்த்தவள்,
"ஆண்மைங்குறது உடம்புல கிடையாது மனசுலயிருக்கு கைகால் விளங்காம போனாலும்
காதலிய கைவிடாம கைபிடிச்சு அவதான் வேணும்னு நிற்கிறானே அவன் சொல்லலாம்
நான் ஆண்பிள்ளைனு
அம்மா என்ன சொன்னாலும் பரவால்ல உனக்கு பிடிக்காட்டி என்கிட்ட
சொல்லுனு எங்க அம்மா மனசு காயப்பட்ருமோன்னு அம்மாவுக்கு தெரியாம ரகசியமா
என்கிட்ட பேசுற எங்கப்பா சொல்லலாம் நான் ஆண்பிள்ளைனு நீ ஆண்பிள்ளையா ?
ஒரு உலகமறியா பொண்ணோட வாழ்க்கைய அழிச்ச நீ ஆண்பிள்ளைனு வெளில
சொல்லாத நீ ஒரு கேவலமான ஜந்து ஆணினத்துக்கே உன்ன மாதிரி ஒன்னுரெண்டால
தான் அசிங்கம்"
என்று முகத்திலறைந்தது போல் பதில் கொடுக்க அவனுக்கு தன்னை நினைத்தே
அவமானமாகயிருந்தது. தலைக் குனிந்துக் கொண்டே வெளியே சென்று விட
அவளோ பால்கனிக்கு வந்து வெளியே எட்டி பார்த்தாள். அங்கு தூரத்திலொரு
தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு உணவூட்டுவதை பார்த்தபடி காற்றோடு கலந்த தன் குழந்தையின் ஸ்பரிசத்தை தேடி தோற்று தான் போனாள். பெண்ணவள்
வெளியே வந்த அபியின்அழைப்பேசிக்கு பைரவ் அழைக்க அழைப்பையேற்றவனுக்கு
மறுப்பக்கம் என்ன கூறப்பட்டதோ முகம் இறுகி போனது. எல்லா கோபத்தையும்
காரில் காட்டியபடி வேகமாக வண்டியை செலுத்தவாரம்பித்தான்.
அன்று...
அவளிடம் கத்தி விட்டு அவளுக்கு என்னவானதென்று கூட பார்க்காமல் உடவெறியவுக்கு
கிளம்பி வந்தவன் விஷ்வாவிடமும் அகஸ்த்தாவிடமும் நடந்தவற்றை கூற
விஷ்வாவோ "அண்ணா இப்ப அபார்ஷன் பண்ணுனா தான் தப்பிக்கலாம்"
"உங்களுக்கு வேற கல்யாணம் நடக்க போகுது இப்போ என்ன பண்ணலாம்?"
என அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்த சமயம் தரனின் நியாபகம் வர
அவனிடம் நடந்தவற்றை கூற சற்று நேரம் இருவரும் ஏதேதோ பேசி சில
திட்டங்களை வகுத்தவர்களுக்கு தெரியவில்லை இது தங்களுக்கான
சவக்குழியென்று
இப்படியே நாட்கள் கடக்க அன்று திட்டி விட்டு போனவன் வராமல் போனதும் எழிலிக்கு
ஒவ்வொன்றாக புரிப்படவாரம்பித்தது.இருந்தும் அவளவன் மீதுக் கொண்ட காதல்
கண்ணை மறைக்க எப்போதாவது தன்னவன் மனந்திருந்தி தன்னை ஏற்றுக் கொள்வானென்ற நம்பிக்கையில் கைகால்கள் கூட முழுமையாக முளைக்காத வயிற்றுபிள்ளையுடனும்
தேவகியுடனும் பேசியபடி காலத்தை கழித்துக் கொண்டிருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி
காத்திருந்தது.
ஒரு மாதம் கழித்து எழிலியை பார்க்க வந்த அகனோ அவள் முன்னால் தனது திருமணப் பத்திரிகையைதூக்கி போட்டு விட்டு பேசவாரம்பித்தான்.
"இங்க பாரு லைக்க்கும் லவ்வுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு நீயா ஏதாவது யோசிச்சிக்கிட்டு
பேசுனா நான் என்ன செய்வேன்?இந்தா என் கல்யாண பத்திரிகை மண்டபத்துல வந்து எனக்கும் உனக்குமான உறவ கடை பரப்பலாம்னு நினைக்காத அப்படி செஞ்சாலும் அசிங்கம் உனக்கு தான்"
என்றவனை விக்கித்துப் போய் பார்த்தவள் சுதாரித்துக் கொண்டு
"அப்போ என் கழுத்துல கட்டியிருக்க தாலிக்கு என்ன அர்த்தம் ? என் வயித்துல
வளர்ற உங்க வாரிசுக்கு என்ன அர்த்தம் சொல்லிட்டு போங்க ?"
"காசு வேணும்னா வாங்கிக்கோ அதவிட்டுட்டு
தாலி செண்டிமெண்ட் பேசாத அடுத்து உன்ன பார்த்த அன்னைக்கே முடிவுப் பண்ணிட்டேன்
உன்ன என் ப்ரொபேர்ட்டி ஆக்கிக்கணும்"
என அவன் செய்த ஒவ்வொரு திருட்டுத்தனத்தையும்
சொல்லி முடிக்க எழிலிக்கு அவன் மீதிருந்த காதலை விட வெறுப்பு பன்மடங்காக கூடியது.
அவன் விட்டு போன இருவாரங்களில்
தன்னை போல் இன்னொரு பெண் இவனிடம் ஏமாறக் கூடாது என நினைத்தவள் எப்படியாவது
அந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டுமென முடிவெடுத்தாள் அங்கே தனக்கு எல்லோரும்
எமனாக போவதுத் தெரியாமல் தான் நினைத்ததை முடிக்க பெண்ணவள் புறப்பட்டு
தனது ஊருக்கு வந்து சேர்ந்தாள்.
தரனோ பட்டு வேட்டியுடன் நின்றிருந்த அகனை பார்த்து
"மச்சான் அவ வருவாளாடா ?" என்று கேட்க அவனோ
"கண்டிப்பா வருவா " என்று கண்ணடித்து சிரித்தான்.
வதம் தொடரும்....
*******************************************************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
திருமணத்திற்கு பட்டுவேட்டி சட்டையுடன் தயாராகி புது மணமகனாக தன்னையே ஒரு
முறை சரி பார்த்துக் கொண்ட அகனை புரியாத பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் தரன்
அவன் பார்வையை உணர்ந்துக் கொண்டவன் போல
"என்னடா அவ்வளவு அழகாவாயிருக்கேன் ? பொண்டாட்டிய பார்க்குற மாதிரி உத்து உத்து
பார்க்குற "
என்றான் காண்ணாடி முன்நின்று தலையை சீவியபடி ,தரனோ அவனருகே வந்து
சுவற்றில் சாய்ந்தபடி
"ப்ச் அதில்லடா இப்படி ஒரு முடிவெடுத்திருக்கியே உனக்கு அந்த குழந்தை மேல ரத்தபாசமில்லையா ?"
"இல்ல கண்டிப்பா கிடையாது ", என்று உறுதியாக கூறியவன் மீண்டும் நக்கலாக
"ஆனா அதை கேக்குற நீ மட்டும் யோக்கியனா ?
எனக்காக பிறக்காத உன் குழந்தைக்கு குறையிருக்குன்னு சொல்லி
உன் பொண்டாட்டிய ஏமாத்திட்டு எனக்கு ஹெல்ப் பண்ற நீ கேக்குற கேள்வியா மச்சான் இது ?"
என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அறைக் கதவு தட்டப்பட எரிச்சல் பட்டுக்கொண்டே
அகனும் கதவை திறந்தான் அங்கேயிருந்த அவனது தாயோ அவனை நெட்டி முறித்தப்படி
"ராசா கிளம்பிட்டியாப்பா ? ராஜ குமாரனாட்டமிருக்க வா போகலாம் "
என்றழைக்க அங்கு வந்த அவன் தந்தையோ காதுக்குள்
"ஏன்டா நம்ம ஊர்லயில்லாட்டியும் லண்டன்லயாவது
கல்யாணம் பண்ணிருக்கலாம் இந்த முட்டாக் கூட்டம் முன்னாடி
தான் கல்யாணம் கட்டணுமா ?"
என்றவுடன் புன்னகை புரிந்தானே தவிர ஒன்றும் பேசாமல் நகர்த்துக் கொண்டான்.
அவரோ தலையிலடித்தபடி அவன் பின்னாலேயே செல்ல எல்லோரும் இவ்வாறு
பல்வேறு சிந்தனைகளுடன்
மண்டபத்தில் வந்திறங்க ஜார்ஜும் அவரது மனைவியும்
மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றனர்.
இப்படியாக அகன் மதில்டாவின் திருமண நிகழ்வும் இனிதே ஆரம்பிக்க அகனோ வாசலை பார்த்தப்படி எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்தான்
அவனது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் தாரெழியும் வந்து சேர்ந்தாள்
"இந்த கல்யாணத்த நிறுத்துங்க இவன் ஒரு பொய்க்காரன்"
என்றவளை ஊரார் அனைவரும் ஆத்திரம் பொங்க பார்த்தனர். என்றால் அகனும் மேத்தியும் வன்ம
புன்னகையுடன் பார்த்தபடி
'அப்டி தான் இன்னும் நல்லா கத்து ஆனா ஒரு யூசும் கிடையாது ' என வஞ்சமாக நினைத்துக்
கொள்ள
ஆனால் நண்பியின் கதறலைக் கண்ட பூவரசி அவளுக்கு உதவி செய்ய எத்தனிக்க
அவள் முயற்சியை புரிந்துக் கொண்ட தரனோ
பூவராசியின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டு 'பேசாதே பேசினாள் நம்
குழந்தைக்கு தான் ஆபத்தென'
சைகை செய்ய பூவரசியும் சூழ்நிலைக் கைதியாகி
ஏதும் செய்ய முடியாத நிலையில் நிற்க
எழிலியோ கையில் கொண்டு வந்த ஆதாரங்களுடன் அவன் செய்த விடயங்களை புட்டு புட்டு
வைத்ததும் அகனை தெய்வமாக பார்க்கும்
ஊராரனைவரும் இப்போது அகனது முகத்தை ஒருவித சந்தேகத்துடன் பார்த்தபடியிருக்க ஒரு முதியவரோ
"என்ன துரை ஐயா இந்த பொண்ணு சொல்றதெல்லாம் உண்மையா ?" என்றார்
"நீங்க இன்னுமா இந்த ஒழுக்கம் கெட்டவள நம்புறீங்க? நான் உங்களுக்கு தீங்கு நினைப்பேனா
இத்தனை மாசமா என் தங்கச்சி மாதிரியில்லையா படிக்க வச்சேன் என் மேலயே பழி போட்றாளே "
என்றான் பொய்யான கவலையுடன் அதற்கிடையில் அவனுடன் இணைந்துக் கொண்ட
அவனது பெற்றோரும்
"ஏன்மா ஊர் பெயர் தெரியாதவனோட ஓடி போயிட்டு இப்போ பணக்கார வாழ்க்கைக்கு
ஆசைப்பட்டு இப்படி பொய் பேசுறியே உனக்கு வெக்கமாயில்ல ? அதுவும் எங்க பையன்
மத்த விஷயங்கள்ல எப்படியோ பொண்ணுங்க விஷயத்துல சொக்க தங்கம்"
என்று கூவ மத்தில்ட்டாவோ அகனின் இடுப்பை கிள்ளி காதுக்குள்
"ஏன் அத்த இப்படி ஓவரா உனக்காக கூவுறாங்க நீ யார்னு தெரிஞ்சா ஹார்ட் வெடிச்சிறாம
ஹனி " என்றாள் நக்கலாக அவனோ பதிலுக்கு வன்ம புன்னகை புரிந்தபடி
தாரா அவமானப்படுவதை பார்த்து மனதில் ஒரு சிறு உறுத்தல் வந்தாலும் அதையெல்லாம்
புறம் தள்ளிவிட்டு ரசித்தவன் மனதுக்குள்
'அகனழகன எதிர்க்கிற ஒவ்வொருத்தருக்கும் இது தான் நிலைமை'
என்று வஞ்சமாக நினைத்துக் கொண்டவன் அவனது கைக்கூலி ராசுவுக்கு கண்ணை காட்டி
ஏதோ சொல்ல அவனும் புரிந்துக் கொண்டவன் போல் எழிலி அருகில் வந்து
அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டு
என்றழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் "இந்தா குடி" என்று தண்ணீரை
கொடுக்க அவளோ சந்தேகப்படாமல் அண்ணனென நம்பி நீரை அருந்தினாள்.
அந்தோ பரிதாபம் அவளுக்கு தெரியாதே இப்போது அவள் முன் நிற்பது அவளிடம் பாசம்
காட்டிய அண்ணனல்ல அகனின் கைக்கூலியென்று தாண்ணீரை குடித்து முடித்தவள்
அப்படியே தரையில் மயங்கி சரிந்தாள். இரண்டு மணிநேரம் கழித்து பெண்ணவள்
விழித்ததென்னவோ பெருந்தோட்ட வைத்தியசாலையில் அகனுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த
அறையில் தான் அங்கு நின்றிருந்த அகன் மற்றும் அவன் நண்பர்களை உறுத்து
விழித்துக் கொண்டிருந்தவளின் கைகள் தாமாக மணிவயிற்றை அணைவாக
பிடித்துக் கொள்ள கண்களோ மருட்சியுடன் அனைவரையும் நோக்கியது.
அவளருகில் வந்த அகனோ,
"பயப்படாத உன் குழந்தைய நான் இன்னும்
ஒன்னும் செய்யல"
என்றவுடன் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவள்
தலையில் அடுத்த குண்டை வில்லாமல் விரியாமலிறக்கினான்.
"ஏன்னா நீ ஒத்துக்காம உன் குழந்தைய நான் கொன்னா அந்த பாவம்
எனக்கு தானே வரும் அதனால இப்போ நீயே ஒத்துக்குற மாதிரி
ஒரு விஷயம் சொல்லவா ?"
என்றவுடன் பயத்தில் வெளிறியவள்
முகத்தை பார்த்து அடக்கமுடியாமல் சிரித்தவனை பார்த்த எழிலிக்கு
உண்மையான அரக்கனாகவே அகனழகன் தெரிந்தான். சொந்த ரத்தத்தையே
பலிக்கொள்ள போகிறோமென்ற குற்றவுணர்ச்சியில்லை. கண்களில் வேட்டையாடும்
வெறி மட்டுமே நிறைந்திருந்தது.
"இங்கப்பாரு பூவரசியோட குழந்தைக்கு ஒரு குறையிருக்கு அது இந்த உலகத்த பார்க்காம
கூட போகலாம் ஆனா அதுக்கான மருந்து என்கிட்டயிருக்கு அத நான் கொடுக்கணும்னா
நீ உன் குழந்தைய தியாகம் பண்ணனும் "
அவளோ முதலில் புரட்சியாக பேசினாலும் பிறகு கெஞ்சவாரம்பித்தாள்.
"அழகரே எங்கள விட்ருங்க நாங்க உங்க வாழ்க்கைல குறுக்க வரமாட்டோம்
உங்க சொத்து பணம் எதுவுமே வேணாம் தயவு பண்ணி எங்கள வாழ விடுங்க "
அவளருகே வந்த மத்தில்ட்டவோ கன்னத்தில் ஒரு அறை விட்டு,
"இப்ப இப்டி சொல்லுவ நாளைக்கு குழந்தை
பிறந்தவுடனே வந்து சொத்துல பங்கு தானு நிப்ப இது எங்களுக்கு
தேவையா ?"
"அழகரே நீங்களாவது சொல்லுங்க இது உங்க தலைச்சான் பிள்ளை தானே "
என கூறியபடி அவன் கையை பற்றி தன்
வயிற்றில் வைத்து
"தயவு செஞ்சு எங்கள விட்ருங்க " என்று
தாரெழிலி கெஞ்ச சற்று தயங்கியவன் காதில் மதில்ட்டா ஏதோ கூற மீண்டும் அரக்ககுணம் அவன் மனதில் ஒய்யாரமாக அமர்ந்தது.
மீண்டும் இறுகிய குரலில்
"சரி அப்போ உன் பிரெண்டுக்கும் அவளோட குழந்தைக்கும் என்ன ஆனாலும் பரவால்ல
அப்டி தானே உனக்கு கூட அங்கீகாரம் தரமாட்டேன் ஆனா அவளுக்கு குடும்பமிருக்கு
இப்போ குழந்தைக்கு ஏதாவது நடந்துச்சுன்னா தரனுக்கு ரெண்டாம் தாரமா அவங்க
மாமா பொண்ண கட்டி வச்சிருவாங்க "
மிரட்ட தரனும் தன் பங்குக்கு,
"எழிலி உன் கைய கால புடிச்சு கேக்குறேன் என் பூவுக்காக
இது கூட செய்ய மாட்டியா ? இந்த குழந்தை இல்லாட்டி உனக்கு புது வாழ்க்கை
அமைச்சி இன்னொன்னு பெத்துக்கலாம் பூவராசிக்கு இந்த குழந்தை போனா
இனி குழந்தையேயில்ல தயவு பண்ணி இந்த அண்ணனுக்காக தியாகம் பண்ணிருமா "
என்று கெஞ்சி அவள் மனதை ஒருவாறு பேசிக் கலைக்க அவளோ கடைசியில் அவளுடைய நண்பி
பூவராசிக்காக அவளது வாழ்க்கைக்காக மனதில் மூண்ட தீயை எப்படி அணைக்க என தெரியாமல்
ஆனால் அவளது தாய்மையை விட்டுக் கொடுத்தாள். தன் குழந்தையின் உயிரை
தியாகம் செய்தும் அவளது சோதனைக்கலாம் முடியவில்லை.
இன்று
இப்படி ஒவ்வொன்றாக நினைத்த வளுக்கு மனதில் வெறுமை மட்டுமே குடிக் கொண்டது
அதேசமயம் அவலறையினுள் நுழைந்த அனிதாவோ
"லோச்சு உங்கம்மா உன்கூட பேசணுமாம் இந்தா பிடி "
என்று கொடுக்க அதை வாங்க முதலில் மறுத்தவள் பிறகு வாங்கி
காதில் வைத்து
"அன்னைக்கு அப்படித்தான் எங்கள கொலைக்காரங்கன்னு ஏசுன
இப்பயும் எரிஞ்சு விழுகுற நாங்க மாப்பிள்ளையோட சேர்ந்து
வாழ சொன்னதுல உனக்கேதும் பிரச்சனையா ? "
என்றார் கலக்கமாக, அவர் கலக்கம் இவளுக்கு ஏதோ செய்ய
அவ்வுணர்ச்சியை விரும்பாதவள்
"அதைபிறகு சொல்றேன் இப்போ நீங்க எடுத்த விஷயத்த சொல்லுங்க
நாளைக்கு நான் கேம்பஸ் போகணும் அதுக்கு எல்லாம்
ரெடி பண்ணனும் சீக்கிரம் சொல்ல வேண்டியத சொல்லுங்க "
என்றாள் எரிச்சலுடன், "நாளைக்கு உங்க மாமாவோட நினைவுநாள்
அதனால கோயிலுக்கு போய் ஒரு மோட்ச அர்ச்சனை பண்ணிரு "
என்றவுடன் அவளுக்கோ அத்தனை ஆத்திரம் அதை காட்டிக்
கொள்ளாமல்
என்றவுடன் பாதியிலேயே போனை கட் செய்து அனி கையில் கொடுத்து விட்டு நிலவை
வெறித்தபடி நிற்க
அவளருகில் வந்த அனிதாவோ
" லோச் முன்னயெல்லாம் ஆண்ட்டி கூட
சித்தி கூடயெல்லாம் நல்லா தானே பேசுவ இப்போ என்னடி ஆச்சு"
என்றவுடன் பெருமூச்செறிந்தவள்
அனிதாவிடம் அந்துவான் என்ற குழந்தையை பார்த்ததையும் அதற்கு பிறகு
நிழலுருவமாக தெரிந்த சில காட்சிகளும் உருவங்களும் தெளிவாக தெரிந்ததாகவும்
கூற
அனிதாவோ,
"இங்கபாரு லோச்சு அகன் எப்படி உன் வாழ்க்கைலனு எனக்கு
தெரில ஆனா அபிஜித்தன் உனக்காக எதுவென்னாலும் செய்வான் அவன்
கண்ணுல ஒரு இறுக்கம் தெரியுது ஒரு தவிப்பு தெரியுது திருந்தி நல்லவங்களா
மாறனும்னு நினைக்குறவங்களுக்கு ஒரு வாய்ப்பு தாராது தப்பில்லையே "
என்று கூற
லோச்சனா அவளை தலையை சரித்து பார்த்து கோணலாக சிரித்துக் கொண்டே
"அப்ப இதே விஷயத்தை நான் சொன்னா ஏத்துக்குவியா ? அனி" என்றாளே பார்க்கலாம்
அனிதாவின் முகம் கறுத்து சிறுத்து போனது. வதம் தொடரும்.......
*************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
அனிதாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை மனமோ பழைய நினைவுகளின்
தாக்கத்தில் சொல்லென வேதனை பரவ அப்படியே சோபாவில் அமர்ந்தபடி உறங்கியும்
போனாள்
இங்கு தனது ஆட்களால் நன்றாக கவனிக்கப்பட்டு மயக்கத்திலிருந்த ஸ்டெல்லாவையும்
அவளது காதலனையும் கொலைவெறியோடு பார்த்திருந்தான் அபிஜித்தன் சக்ரவர்த்தி
லேசாக மயக்கத்திலிருந்து விழிப்புத் தட்ட இமைகளை கஷ்டப்பட்டு பிரித்த ஸ்டெல்லாவோ முன்னால்
ராட்சசனாக அமர்ந்திருந்தவனை பார்த்து விக்கித்து போய் மலங்க மலங்க விழிக்க
தன் பக்கத்திலிருந்த ஒரு வாளி ஜலத்தை அவள் முகத்தில் ஊற்றியவன்
அவள் முடியை பிடித்திழுத்து கன்னத்தில் மாறி மாறி அறைந்து
"சொன்னா கேட்க மாட்டல்ல ? என் தாரா மேல கைவைக்கதன்னா வைக்க கூடாது புரிஞ்சுதா ?"
என்றவனை உதடு வளைத்து ஏளன பார்வை பார்த்தவள்
"நீ மட்டுமென்னா யோக்கியனா உன் குழந்தையவே சொந்த லாபத்துக்காக கொன்னவன்
தானே ?" என்றவுடன் அவனை ஆராய்ச்சியாக பார்த்தவன்
பார்க்க அபிக்கு கொலை வெறி வந்தது சும்மாவே யார்க் கண்ணும் அவள் மீது
விழுந்தால் பேயாக ஆடுவான் இவள் வேறு சலங்கை கட்டிவிட ரௌத்திரத்தின்
உச்சிக்கே சென்றான்.
அவளது தலையை பிடித்து சுவற்றில் மோதியபடி
"என் தாராடி அவ அவள கொடுமபடுத்தவும் எனக்கு தான்
உரிமையிருக்கு கொண்டாடவும் எனக்கு தான் உரிமையிருக்கு அதே மாதிரி என்ன
காயப்படுத்தவும் காதலிக்கவும் அவளுக்கு மட்டும் தான் உரிமையிருக்கு புரிஞ்சுதா "
என கத்தியவன் அவளது தலையை முழுதாக சிதைத்து தூக்கி தூர போட்டு விட்டு
"இவளையும் இவனையும் உரு தெரியாம அழிச்சிருங்க பாய்ஸ் அப்டியே இதுங்க ரெண்டும்
வழமையா செட் பண்ற மாதிரி ஆதாரம் செட் பண்ணி யாருக்கும்
சந்தேகம் வராம பார்த்துக்கோங்க"
என்று ரத்தத்தை கழுவிக் கொண்டு
கிளம்பியவனுக்கு காதில் அவள் கூறிய 'சொந்த லாபத்துக்காக குழந்தையை
கொன்றவன்' என்ற வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிக்க
கலங்கி தான் போனான்.
அன்று...
பொய்ப்பேசி அவள் குழந்தையை பறித்தவனுக்கு தெரியவில்லை அவளுக்கு
எல்லா உண்மைகளும் தெரிய வரும் போது தன் வாழ்க்கை புயலில் சிக்கிய
கப்பலாகுமென்பதை அறியாதவன் அவளை சாதாரணமாக எடைப் போட்டு
விட்டான்.
அகஸ்த்தா வேலையை முடித்து விட்டு வெளியே வந்து தன் கட்டை விரலை தூக்கிக் காட்டி வெற்றியென அவனிடம் சொல்ல அவன் முகத்திலோ வெற்றிப் புன்னகை தனத்திருக்கையிலிருந்து எழுந்தவன் எல்லோரையும் அனுப்பிவிட்டு
ராசுவின் காதில் மட்டும் ஏதோ கூறி அனுப்பி வைத்தான்.
அவள் கண் திறக்க மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் காத்திருந்தவன் அவன்
கண் விழித்துக் கொண்டதும்
அவளருகில் வந்து நெற்றியில் முட்டி இதழில் முத்தமிட
முகம் சுழித்தவள் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்தபடியிருக்க
அவனோ, "என்னோட அபிஷியல் மேரேஜ்க்கு பேர்பெக்ட் கிப்ட் கொடுத்திருக்க உனக்கு
ஏதாவது ஆபர் தர வேணாம் உன்ன கொல்ல தான் பிளான் பண்ணேன் ஆனா ஏனோ
மனசு ஒப்ப மாட்டிங்குது"
என்றவன் இந்த முறையும் தான் செய்த சூழ்ச்சிகளை கூற அவளுக்கோ
கோபம் உச்சிக்கேறியது இருந்தும் அவன் என்ன கூறுகிறானென
உற்று நோக்கியபடியிருக்க
" உனக்கு தாலி கட்டி தானே இருக்கேன் நீதானெனக்கு மூத்த தாரம்
ஆனா என் குடும்ப வாரிச மட்டும் சுமக்க கூடாது மத்தப்படி எல்லா சொகுசுமிருக்கு
அன்பாவுமிருக்கேன் இந்த ரெண்டு மாசம் நடந்தத வச்சு கணக்கு போடாத நல்லா யோசிச்சு
முடிவெடு நைட்டுக்கு வாரேன்" என்று சொல்லிச் செல்ல
அவளோ அழக்கூட திராணியற்றவளாக விட்டத்தை வெறித்தபடியிருக்க உள்ளே
வந்த அவளது வீட்டாரோ அவளை எல்லா வசைமொழிகளிலும் திட்டி தீர்த்தனர்
தாய் செல்வியோ, "இங்கேபாரு வீட்டுக்கு மட்டும் வரலாம்னு யோசிக்காத ரெண்டு
பொட்ட புள்ளைங்கள வச்சிருக்கேன் அதுங்களுக்கு ஒரு நல்லது கெட்டது பண்ண
முடியுமா உன்னமாதிரி கெட்டு போனவள வச்சுக்கிட்டு ஒன்னு எவன் கூப்பிட்டு
போனானோ அவன் கூடவே போ "
என்றவரை இடைமறித்த ரங்கநாயகியோ
"இல்லாட்டி இந்த நஞ்ச குடிச்சுட்டு போய் சேரு"
என்று நஞ்சு போத்தலை கையில் திணிக்க அவளோ அதை வெறித்து
பார்த்தவள் ஒன்றும் கூறாமல் எல்லோரையும் வெறித்தபடியிருந்தாள்.
அதன்பிறகு அவளருகில் வந்த ராசுவோ,
"எழிலிமா துரை சொல்லிருப்பாருன்னு
நினைக்குறேன் உன்ன ஏத்துக்குற நிலைமை எங்க யாருக்குமில்ல நீ பேசாம
அவர் கூடவே போயிரு இப்போ கூட எல்லாரும் உன் மேல கை வைக்காம
பேச அவரு தான் காரணம்"
என அகன் புகழ் பாட எல்லாவற்றையும் கேட்டாளே
தவிர பதில் பேசவில்லை. அப்படியே கட்டிலில் சாய்ந்து கண்ணை
முடிக் கொள்ள அவள் மனதிலென்ன நினைக்கிறாளென யாருக்கும்
புரியவில்லை ஆனால் அதற்கான விடை
பொழுது சாயும் வேளை அனைவருக்கும் கிடைத்தது.
எழிலியின் அறைக்கு பொறுப்பாகவிருந்த செவிலிப் பெண் விஷுவின் அறைக்கதவை
உடைப்பது போல் தட்ட அங்கு பேசிக்கொண்டிருந்த அகனும் விஷுவும் எரிச்சலுடன் கதவை திறந்தனர்.
செவிலிப் பெண்ணோ பதறியபடி "அந்த பொண்ண காணோம் சார் எங்க போனான்னு
தெரில பயமாயிருக்கு "என்றவுடன் தலையில் கைவைத்த அகனோ
"ஒரு வேலைய கூட உன்னால ஒழுங்கா பார்க்க முடியாதா இன்னிக்கு
தான் அபார்ஷனாச்சு எங்க போய் தேட" என்று சிந்தித்தபடியிருக்க பயங்கரமான
இடி மின்னலுடன் கூடிய மழை ஜோவென பொழிந்தது.
இவர்கள் தேடி அலையும் பெண்ணோ காட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனை உக்கிரமாக
முறைத்தபடி ,
"உன்ன தெய்வம்னு கும்பிட்டதுக்கு நல்ல கைமாறு செஞ்சுட்டாயில்லை இந்த பிரச்சனைய பத்தி தெரிஞ்சிக்கிட்டதும் உன்கிட்ட தானே ஓடி வந்தேன் அப்பவாவது எனக்கு ஏதாவது நல்ல
வழிக் காட்டிருந்தா என் வாழ்க்கை சீரழிஞ்சிருக்காதே "
என்றவள் தனது சேலை முந்தானையை கிழித்தபடி,
"உனக்கு பெயரு ஆயிரகண்ணுடையாளா ? உனக்கு அத்தனை கண்ணிருந்தா ஏன்
எல்லாருமா சேர்ந்து என் குழந்தைய நயவஞ்சமாக கொன்ன போது வரல? என் பெண்மையை
எல்லாரும் கேள்வி கேட்ட போது வரல ? உன்கிட்ட உதவி கேட்டு வந்த போதும்
வரல? உனக்கெதுக்கு பூசை புனஸ்க்காரமெல்லாம் சொல்லு "
என்றபடி
அம்மனின் கழுத்திலிருந்த மாலையை தூக்கி தூரப்போட்டவள் அம்மனுக்கு
அருகில் வைக்கப்பட்டிருந்தா வாளை கையிலெடுத்து தன் கையை கீறி
ரத்தத்தை அம்மனின் பாதத்தில் ஊற்றியவள்
"நான் பத்தினியாயிருந்தா இனி நான் மனசு வச்சாலே தவிர உனக்கு எந்த பூசையும் நடக்கக்
கூடாது உன் கண்ணையும் யாரும் திறக்கக் கூடாது மீறி திறந்தா உயிர் பலியெடுப்பேன் "
என்று உக்கிரமாக கத்தியவள் அம்மனின் கண்ணை கட்டிவிட்டாள்
மூலஸ்த்தான கதவையும் பூட்டி அந்த சாவிக் கொத்தை தூக்கி குளத்தில் போட்டவள்
"எழிலி இது தெய்வக்குத்தம்மா அடுத்து அம்மா மேல நம்பிக்கைல காணிக்கை கட்டியிருக்காங்க
அவங்களுக்கு நல்லது நடக்காம போயிரும்"
என்றவுடன் அவரை ரௌத்திரமாக முறைத்தவள்
"இந்தவூர்ல யாருக்கும் நல்லது நடக்க கூடாது அவங்க நல்லதுக்காக பாடுப்பட்ட எனக்கு வேசி
பட்டம் கட்டுன யாருக்கும் நல்லது நடக்காது அடுத்து அம்மாவா அந்த அம்மாவே இனி
என் அனுமதியிருந்தா தான் ஊர்வலம் வர முடியும் பூசை புனஸ்க்கரத்த ஏத்துக்க முடியும்
போ இத ஊருலவுள்ள முட்டாளுங்கள்ட்ட சொல்லு " என கத்தியவள் அவரை தள்ளிவிட
அவரோ ஊருக்குள் சென்று சோமனிடம் கூற அவரோ புன்னகை மட்டும் புரிந்து
"இதுதானிந்த ஊரோட விதி இத தடுக்க யாராலயும் முடியாது" என்று கையை விரித்து
விட்டார். அதேசமயம் எழிலி எங்கேயிருப்பாள் என்று அறிந்துக் கொண்ட பூவரசியும்
வெப்பமரத்தடிக்கு வர
அவளை பார்த்த தாராவோ தனது வேலையை தொடர்ந்தாளே தவிர பேசவில்லை.
"ஏன்டி என் கூட பேசமாட்டியா ?" என்று கேட்க அதுக்கும் பதிலில்லாமல் போக
"எழிலி நான் சாகப்போறேண்டி கடைசியா உன் மடில இடம் கிடைக்குமாடி "
என்று கேட்க கலங்கிப்போன எழிலியோ நண்பியை ஏறிட்டு
"என்னடி ஆச்சு? "
என்றபடி அவளை மடியில் சாய்த்துக் கொள்ள பூவரசியோ
விரக்தியாக சிரித்தபடி
"என் குழந்தைக்கு குறையிருக்குன்னு தானேடி உன் குழந்தைய
பறிகொடுத்த அதபத்தி இப்பதான் அந்த ஈனப்பயல்க பேசி சிரிச்சானுக என்னால
தாங்க முடிலடி நான் அதுனால அரளி விதைய அரைச்சி சாப்பிட்டேன்"
என்று எழிலியின் மடியில் உயிரை விட அவளும் ஒரே நாளில்
எத்தனை இழப்பை தான் தங்குவாள் வானம் பார்த்து கதறியழுதவள்
"எல்லாம் பொய் சாமியேயில்ல " என்று கதறியவள் கண்களில்
அகன் கட்டிய தாலி பட அதை அறுத்து தூக்கி போட அது
உரியவன் காலடியிலேயே தஞ்சமானது.
வதம் தொடரும்......
*****************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
அவளை தேடி வந்தவனுக்கு அவன் கட்டிய தாலி காலில் விழுந்ததை பார்த்து கோபம்
சுறுசுறுவென வர அவளருகில் சென்றவன்
"என்ன பழக்கம்டி இது கட்டுன புருஷன் இருக்கும் போது தாலியை தூக்கி வீசுற ஒழுங்கு
மரியாதையா இந்த தாலிய போட்டுட்டு என்கூட வா " என்று தன் தோளை தொட்டவனை வெறித்து பார்த்தவள் திரும்பி தன் மடியில் கிடந்த பூவரசியை பார்க்க
அகனோ பூவை பார்த்து அதிர்ந்து போனான்.
"என்னடி ஆச்சு பூவுக்கு? என்ன ஆச்சு?" என்று கேட்க அவளோ
பூவரசியை கீழே கிடத்திவிட்டு எழுந்துக் கொண்டவள்
அகன் எதிர்ப்பார்க்காத சமயம் அவன் கன்னத்தில் பட்டென அறைந்து
என் தங்கச்சி சொல்லி சொல்லியே அவ வாழ்க்கைய கெடுத்து மண்ணோட மண்ணாக்கிட்டியே
இப்போ உனக்கு திருப்தியா ? என்ன சொன்ன புருஷனா ? யார் யாருக்கு புருஷன் கட்டிக்கிட்ட
பொண்டாட்டி புள்ளைய அந்தஸ்த்து கௌரவம் பார்த்து கொல்ற நீ மனுஷனேயில்ல இதுல நீஎனக்கு
புருஷனா ச்சீ த்தூ என்று காறி உமிழ்ந்தவளை
ஏய் வார்த்தைய அளந்து பேசு என்று அறைய போனவனின் கையை பிடித்துத்
தடுத்தவள்
என் மேல கைய வச்ச அறுத்தெறிஞ்சிருவேன் அடுத்து என்னத்த அளக்கனும்
இந்த உலகத்துலயே உன்னப்போல கேடுகெட்ட அயோக்கியன் எங்கேயும் இருக்கமாட்டான்
என்று கூறி அவனை தள்ளி விட்டு தரனருகே சென்றவள்
என சரமாரியாக கன்னத்தில் அறைந்தவளை அகன் பிடிக்க போக
அவன் ஒற்றை கையை வெட்டி வீசியவள்
என்ன தைரியமுனக்கு என் மேலயே கைவைக்குறியா? என்றாள் வெஞ்சினம் பொங்க
அகனோ செங்குருதி பாய தரையில் சரிந்தவன் வலியில் துடிதுடித்து அழுதபடி
"ஆஆ ஏய் ஐயோ அம்மா என்னால முடியலையே "
என்று கத்த அவளோ பொறுமையாக அவனருகில் வந்து
"இப்டி தானே என் குழந்தையும் துடிச்சிருக்கும் நல்லா துடி அப்டி
தான் நல்லா கத்து"
என்று அவனை ரசனையாக பார்த்தவள்
"ஆனா நான் உங்க ரெண்டுபேரையும் இப்போ கொல்லமாட்டேன்"
என்றபடி வானத்தை பார்த்து கைகூப்பியபடி
"அம்மா மின்னல்கொடி எனக்கும் என் தோழிக்கும் நடந்த அராஜகத்துக்கு
தாயே நீ தான் சாட்சி நான் பத்தினியாயிருந்தா சுத்தமானவளாயிருந்தா
எந்த சொத்து சுகம் பதவிக்காக எங்க வாழ்க்கைய சீரழிச்சானுகளோ அது
எதுவும் இவனுகளுக்கு உதவாம போகணும் தொழு நோய் பிடிச்சு தெருத்தெருவா
ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காம
நாயாபேயா அலையனும் எல்லாரும் இவனுகள ஈனப்பிறவியா
பார்த்து கல்லை கொண்டு அடிக்கணும்
செத்தா தூக்கி போட நாதியில்லாமா
காக்கவும் நரியும் இவனுக உடம்ப பிச்சி திங்கணும்
இனி ஒரு பிறவின்னு இவனுங்களுக்கு கிடைச்சாலும் முன்ஜென்ம நியாபகம்
வந்து இவனுகள பாடாய்படுத்தியெடுக்கனும் இப்படி செஞ்சுட்டோமேன்னு தன்னை
தானே சிதைச்சுகிட்டு உயிரை விடணும் "
என்று ஆவேசமாக பேசியவளை பார்த்த ஊர்க்காரர்களும் அகனின் தாய் தந்தையரும்
பயந்து நடுங்கியபடி நிற்க, அவளோ காளி தேவியின் மறுவுருவமாக மரத்தடியில்
நின்றிருந்தாள்
"எந்த பாக்டோரியால ஹாஸ்ப்பிட்டலால அப்பாவி பொண்ணுங்களோட உயிர்போச்சோ
அது இயங்காம போகும் என் சாபத்தை மீறி இயங்குனா அந்த பேக்டரில ரத்தக்காவு
விழும் இது சத்தியம் இந்த குற்றங்களுக்கு உறுதுணையா உதவி செஞ்சவங்களும் சரி
எனக்கு நடந்த கொடுமையை கைக்கட்டி வேடிக்கை பார்த்தவங்களும் சரி அத்தனை
பேரோட வம்சத்துலயும் மூளை வளர்ச்சியில்லாமலும் உடலூனத்தோடயும்
குழந்தை பிறக்கும் எப்படி நான் என் குழந்தயை இழந்து நான் தவிக்கிறேனோ
அதே மாதிரி எல்லோரும் தன் குழந்தயை பார்த்து தினசரி மனம் வெம்பி சாவாங்க"
என்றவளிடம் ஓடி வந்த சோமனோ அவளை ஸாஷ்டாங்கமாக வணங்கியபடி
"எப்போ என் கோபம் தணிஞ்சு மனசு குளிருதோ அப்போ விடிவு வரலாம்" என்றவள்
மீண்டும் வானத்தை பார்த்து வணங்கி
"நான் பத்தினியாயிருந்தா என் தோழி யாருக்கும் தீங்கு செய்யத்தவளாயிருந்தா
எங்க ரெண்டுபேரோட உடம்பும் கொட்டுற
மழையில பத்தி எரிஞ்சு காற்றோட காற்றா கலக்கணும்"
என்று வேண்டியவுடன்
கண்ணை குருடாக்கும் மின்னலுடன் இடிமுழங்க பார்த்திருந்தவர்களாலேயே அவர்கள்
கண்களை நம்ப முடியவில்லை தோழிகளிருவரின் உடலும் பற்றி எரிந்து
காற்றோடு கலந்தது. இதையெல்லாம் பார்த்த அகனின் தந்தையோ
ஊராரிடம் இந்த பொண்ணு யாரு பெயரென்னவென்று கேட்டவர் விக்கித்து
போனார்.
அகனிடம் சென்று
"டேய் என்ன காரியம்டா பண்ணிருக்க உன்னால என்
வம்சத்துக்கே அழிவு தான் அந்த தாரெழிலி யாரு தெரியுமா ?"
என்று தொடங்க காட்டு மாரியம்மன் கோயிலிலிருந்து அசரீரி ஒலிக்கவாரம்பித்தது.
"ஊரை காக்க வந்த என்னோட அம்சமான வனதேவதை தாரெழிலிதேவிய அவமதிச்ச அத்தனை
பேருக்கும் அவள் கொடுத்த சாபம் பலிக்கும் அதேமாதிரி இன்னைலயிருந்து இரண்டாயிராமாம் ஆண்டு
தொடக்கத்துல அவ பிறப்பெடுத்து உங்க சாபங்கள நீக்குவா என் கண்ணை கட்டிப்போட்ட அவள்
கையாலேயே என் கண் கட்டையும் அவிழ்ப்பா கிரிதரன் அகனழகனோட சாபம் அவங்களோட
இணைகளின் தேவைகளை உண்மையான காதலோட பூர்த்தி செய்ற அன்னைக்கு கண்டிப்பா
கிட்டும் ஆனால் உக்கிரமாவும் பழிவெறியோடையும் உயிரை விட்ட தாரெழிலி பொழுது சாய்கிற
வேளைல பிரம்மராக்ஷசியாவும் மற்றைய நேரங்களில் ஊரை காக்கும் தெய்வமாவும் வலம்
வருவா அவள கும்பிடுங்க ஒருபோதும் கைவிடமாட்டா "
என்றபடி அந்த குரலும் காற்றோடு மறைந்து போனது. அவளுடைய சாபங்களால் ஊரே கதிக்
கலங்கி போனதென்றால் அகனும் தரனும் நோய்வாய்ப்பட்டு குப்பை தொட்டியிலுள்ள ஊசிப்போன
உணவுகளை தின்று வாழவுமுடியாமல் சாகவுமுடியாமல் இருட்டுக்குள் ஒழிந்து வாழ்ந்தனர்.
அகன் எந்த பெண்ணை களங்கப்படுத்தினானோ அந்த பெண்ணுக்கு படையலாக வைக்கும் மீந்து
போன உணவை யாராவது ஊர்க்காரர்கள் பாவம் பார்த்து குகைப் பக்கம் தள்ளிவிட்டு
போனாலே தவிர நல்ல உணவு கிடைக்காது. தொழுநோய் முற்ற உடற் பாகங்கள் சீழ் பிடித்து
துர்நாற்றம் வீசியும் இறந்து போனார்கள் நண்பர்களிருவரும்
இரு ஜென்மமாக இவ்வாறான கோரமான தண்டனையை அனுபவித்து
மூன்றாவது ஜென்மத்தில் தங்களுக்கான விமோச்சனத்தை எதிர்பார்த்து பிறந்திருக்கிறார்கள்
அகனும் தரனும்
இன்று...
இப்படியே பல சிந்தனைகளில் உழன்றவனுக்கு அவள் 'செத்து போய் விடு' என்று
சொன்னது நியாபகம் வந்தது. அதை தான் தன்னிடம் காதலாக வேண்டுகிறாளோ
காதலாக எதை செய்தாலும் தனது சாபமும் நீங்கும் ஊரும் செழிக்குமென்றால்
தன் சாவையும் ஏற்றுக் கொள்ள துணிந்தான்.
மனதுக்குள் 'இன்னொரு ஜென்மமெடுத்து உன்னையே துரத்தி துரத்தி காதல்
செஞ்சு கைப்பிடிப்பேன்டி இந்த பிறவில நீ எனக்கானவள் கிடையாது போல'
என்று மனதுக்குள் கூறியவன் மதுவில் கலந்து வைத்திருந்த விஷத்தை கடகடவென
வாயில் சரித்து குடித்து முடித்து தனது இறுதி பயணத்தை நிம்மதியாக
கண் மூடி அனுபவிக்க அந்த பக்கம் வந்த கண்டைனர் லாரியும்
அவனது காரை அடித்து தூக்கி தூரப் போட்டது.
வதம் தொடரும்.....
***************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
அடிப்பட்டு விழுந்தவன் இதழ்கள் கடைசியாக ஒரு முறை "சனா ஐ லவ் யூ "என முணுமுணுத்தபடி
வெட்டி வெட்டியிழுக்கவாரம்பித்தது.அதே சமயம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த லோச்சனாவும்
"ஜீத்து" என்று அலறியபடி விழித்துக் கொண்டவள் அருகிலிருந்த தண்ணீரை மடமடவென குடித்து
விட்டு அனிதாவின் போனையெடுத்தவள் அபிக்கு அழைத்துப் பார்க்க அவனது அழைப்பேசியும்
அனைத்து வைக்கப்பட்டிருந்தது.
மனம் ஒருபக்கம் நெருடினாலும் 'அந்த ராட்சசனுக்கு என்ன நடக்க போகுது செத்தா
நாம தான் சாவோம் அவனெல்லாம் சாகமாட்டானென' நினைத்தவள் திரும்பி படுத்து
தூங்க முயன்று தோற்றுப் போனாள். சரியாக இரவு ஒரு மணியளவில் சத்தியமூர்த்திக்கு
****** வைத்தியசாலையிலிருந்து அழைப்பு வந்தது. அபிஜித்தன் உயிர் போகும் தருவாயிலிருக்கிறானென்று
அவரோ அடித்து பிடித்தெழும்பிக் கொண்டவர் லோச்சனாவிடம் எதுவும் சொல்லவேண்டாமென
கூறிக் கொண்டு புறப்பட போக எல்லாவற்றயும் கேட்ட லோச்சனாவோ முகத்தில்
எந்த சலனத்தயும் காட்டாமல்
"அது வந்து" என்று அவர் ஏதோ கூறப் போக அவரை தடுத்தவள்
"நானும் வாரேன் "அவ்வளவு தான் பேச்சு முடிந்ததென்ற ரீதியில் காரில்
ஏறி அமர்ந்துக் கொண்டாள் வைத்தியசாலைக்கு வரும் வரை இலக்கற்ற
இருளை வெறித்தபடி அமைதியாக வர சத்யாவுக்கோ ஏதோ போலானது.
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருந்த அபிஜித்தனை
வெறுமையாக நோக்கியவள் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில்
தலையை சாய்த்தபடி அமர்ந்துக் கொள்ள தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து
உள்ளேயும் வெளியேயும் பல மருத்துவர்களும் செவிலியர்களும்
ஓடிக் கொண்டிருந்தனர்.
{ஆங்கிலமொழி உரையாடல்களை தமிழில் காண்போம்}
ஒரு செவிலிப் பெண்ணை நிறுத்தி தாங்கள் அவனது உறவினர்கள் எனவும் அவனுக்கு என்னவானது
என விசாரிக்க செவிலிப் பெண் கூறியதை கேட்ட சத்யா ஆடிப் போக அதே சமயம் வெளியே
வந்த ஒரு செவிலியோ "அவசரமா ஏபி நெகட்டிவ் ப்ளாட் குரூப் தேவை பிளாட் லொஸ்ஸோட
நஞ்சும் கலந்துருக்குறதால அர்ஜெண்ட்" என்று அவசரப் படுத்த
லோச்சுவோ ," அவரோட ஒய்ப் நான் தாரேன் எனக்கும் ஏபி நெகட்டிவ் தான் "
என்று அழுத்தமான குரலில் கூறினாள் "ஓகே மேடம் ஸூர் "
என அழைத்துச் சென்றவர்கள் அவளது ரத்த்தையெடுத்து அவனுக்கு செலுத்த பலமணிநேர
போராட்டத்திற்கு பிறகு கூட்டில் உயிர் மட்டும் தங்கியிருக்க கோமாவுக்கு
சென்று விட்டான்.
அபிஜித்தன் விபத்துக்குள்ளானதை கேள்விப்பட்ட பைரவ் மற்றும் அபியினதும் லோச்சுவினதும்
பெற்றோர்கள் உடனடியாக புறப்பட்டு சிட்னி வந்திறங்க அவர்களையும் கண்களில்
சலனற்று வெறித்த லோச்சனா பேசாமல் மறுபடியும் கண்ணை மூடி தனதிருக்கையில்
சாய்ந்துக் கொண்டாள்.
சத்யமூர்த்தியிடம் எல்லோரும் அபிஜித்தனை பற்றி விசாரிக்க அவன் உயிர் பிழைத்தாலும்
கோமாவிலிருப்பதாக கூற இரு வீட்டாரும் கலங்கி தான் போனார்கள்.
அபியின் தாய் வாசுகி "ஐயோ என்புள்ள" என்று கதற
அவரை இறுக்கமான முகத்துடன் பார்த்த லோச்சனாவோ மீண்டும்
தனதிருக்கையில் சாய்ந்தமர்ந்து அவர்களின் செயல்களை பார்த்தப்படியிருக்க
அவளருகில் வந்த நேத்ராவோ
"அழுகுறதுன்னா அழுதுரும்மா இப்படி உட்கார்திருக்காத " என்று அழுதபடி
கூற அவரை ஆழமானப் பார்வை பார்த்த சனாவோ
"ஏன் அழணும் ? உங்கயெல்லாருக்கும் அழனும்னா சித்தாவோட வீடு பக்கத்துல
தானிருக்கு தயவு செஞ்சி அங்க போய் அழுது ஒப்பாரி வச்சிட்டு வாங்க
ஹாஸ்ப்பிட்டல்ல உட்கார்ந்து அழுது எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க "
என்றாள் முகத்திலடித்தாற் போல, அவளது பேச்சை கேட்டவர்கள் கப்சிப்
என மாறிப் போக அதேசமயம் அவர்களை நோக்கி வந்த செவிலிப்
பெண்ணோ,
"இங்க யாரு சனாங்குறது ? பேஷண்ட் கோமா போக முதல்ல அவங்க பெயர
தான் சொன்னாங்க அவங்க கதைச்சா ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் தெரிய
வாய்ப்பிருக்கு "
என்று கூற தனத்திருக்கையிலிருந்து எழுந்துக் கொண்ட சனாவோ
உள்ளே போக எத்தனிக்க அபியின் தாயோ மறுபடியும்
"ஐயோ என்புள்ள" என்று மீண்டும் அழுக அவரினருகில் வந்தவள்
"ஜித்து உங்கபிள்ளனு உங்களுக்கு இன்னைக்கு சாக பிழைக்க கிடக்கும் போது
தான் தெரியுதா ? இவ்வளவு நாள் அவருக்கு ஸ்ட்ரெஸ் இருக்குன்னு தெரிஞ்சு
அவருக்கு ஆறுதலாயிருக்கமா தனிமைப்படுத்தினவங்க தானே நீங்க
இப்ப மட்டுமென்ன திடீர் புள்ள பாசம் உங்களுக்கும் உங்களோட
ஹஸ்பண்டுக்கும் ? "
என்றாள் அழுத்தமான குரலில் அவள் கேட்ட கேள்வியில் விக்கித்து போன
அபிஜித்தனின் தாய் தந்தையர்
"ஆயிரம் தானிருந்தாலும் அவன் " என்று ஏதோ கூற வர
"அவரோட பேரன்ட்ஸ்னா கொஞ்சமாவது அவர் மேல அக்கறையிருக்கணும்
ஒழுங்கா பாசத்தை கொடுக்காம அவர மோசமான பிடிவாத குணத்துக்கு
தள்ளினது நீங்க ரெண்டு பேரும் தான் அதனால இப்போ வந்து ஸீன்
போடமா இருக்குறதுன்னா இங்க இருங்க இல்லன்னா வீட்டுக்கு
கிளம்புங்க "
அங்கு தலைக் கைகால் என அனைத்து உடற்பாகங்களிலும் கட்டுடன்
படுத்திருந்தவனை சலனமில்லாமல் வெறித்தவள்
"நீ கண்டிப்பா பிழைச்சிக்குவ எனக்கு தெரியும் ஏன்னா நீ இன்னும் என் தேவையை
உன் காதலால பூர்த்தி செய்யல சீக்கிரம் எழுந்து வா "
என்றபடி வெளியே சென்று அமர்ந்துக் கொண்டாள். அவளதிருக்கைக்கடுத்திருந்த
இருக்கையில் அமர்ந்த பைரவ்வோ
"லோச்சனா உன்கிட்ட ஒரு விஷயம் காட்டணும் என்கூட வர்றியா ?"
"ம்ம் வாரேன் "என்று பைரவுடன் அபிஜித்தனுடைய வீட்டிற்கு வந்து
சேர அவள் கண்களோ வீட்டிலிருந்த அவன் வரைந்த தனது ஓவியங்களை
சலனமில்லாமல் வெறித்தபடி
"இதையெல்லாம் காட்டினா உன் பிரெண்டு மேல எனக்கு சாப்ட் கார்ணர் வருமா ?
நீங்க ரெண்டுபேரும் எங்க வாழ்க்கைல பண்ண அட்டூழியத்தை நானின்னும்
மறக்கல "
என்று வெளியே திரும்பிச் செல்ல ஏத்தனித்தவள் கால்கள் தாமாக நின்றது.
வதம் தொடரும்.......
****************************************************************
இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much