வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காலகேயனின் காதல் வதம் -கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 35


அவன் சொன்ன விடயத்தில் உடல் உதறலெடுக்க அவனை திரும்பி என்ன சொன்ன என்பது
போல் பார்க்க

"ஆமா நான் சொல்றது உண்மை தான் தாருணி இப்போ உயிரோடயில்ல அதுக்கு
மூலக் காரணம் அவ உன்மேலேயும் அனிதா மேலயும் கைவச்சது தான் "


"புரியுற மாதிரி சொல்லு"

என்றவுடன் தாருணி பற்றி ஒன்றுவிடாமல்
உண்மைகளை புட்டு புட்டு வைத்தான்

"கடைசியா ஆஸ்திரேலியாவில் அவளோட ஆட்கள வச்சி உங்கள கடத்தி பாங்கொக்குக்கு
விற்க பார்த்தா ஆனா அத கண்டுபிடிச்ச அபி உன்ன காப்பாத்துறதுக்காக கல்யாணம்
பண்ணிக்கிட்டு

பிரெஸ்ல உன்ன தன்னோட ஒய்ப்னு அறிமுகப் படுத்த அபியோட பணபலம்
ஆள் பலம் தெரிஞ்ச அவளோட ஆளுங்க உன்ன எதுவும் செய்யாம விட்டு விலக
அதை கேள்விப்பட்ட தாருணியும் அவளோட பாய் ப்ரெண்டும் நேரடியாக இறங்க
அபி அந்த ரெண்டு பிசாசோட கதையவும் முடிச்சிட்டான் "

என்று நடந்தவற்றை சொல்ல அவனை வெறித்து பார்த்தவள்

"இப்ப இதை நான் நம்பணுமா ? நீங்க மூணு பேரும் கூட்டு சேர்ந்து தானே எங்க வாழ்க்கைய கெடுத்தீங்க அது சரி போன முறை சாரா மாதிரி இந்த முறை தாருணி அந்த கழுதைக்கு தேவைதான் என் வாழ்க்கைய எப்படியெல்லாம் கெடுக்கலாம்னு பிளான் போட்டு கொடுக்குறதே அந்த வெள்ளப்பேய் தானே"

என்று தோளை குலுக்க, பைரவோ "என்ன நம்பு லோச்சனா "

என்றவுடன் அவனை அளக்கும் பார்வை பார்த்தவள்



"அதுவும் உன்ன மாதிரி ஒருத்தன நான் நம்பணுமா ? அந்த அபிஜித்தன கூட
நம்பலாம் உன்ன மாதிரி நல்லவன் வேஷம் போடுற நாயெல்லாம் நம்பவேமுடியாது.
அடுத்து நீங்க ரெண்டு பேரும் இதுக்கு கூட்டுயில்லன்னு நான் எப்படி நம்புறது ?ஏன்னா
நீ பிறக்காத குழந்தைக்கு குறையிருக்குன்னு சொன்னவன் தானே ?"


என்றதும் அவன் முகம் அவமானத்தில் கறுத்து போக அதை ரசித்து பார்த்தவள்

"சரி சொல்லு உன் ப்ரெண்டுக்கு எப்படியெல்லாம் வக்காலத்து வாங்குறன்னு
பார்ப்போம் " என்று ஒற்றை சோபாவில் தன் காலுக்கு மேல் கால் போட்டு
தினுசாக அமர்ந்தவளை பார்த்து அவனுக்கு வியப்பாகயிருந்தது.


"உன் ஹஸ்பண்ட்டுக்கு அடிப்பட்டு ஹாஸ்ப்பிட்டல்லயிருக்கான் நீயென்னன்னா
இப்படி கேஸூவலாயிருக்க ?" என்றதும் அவளோ ஒற்றை புருவமுயர்த்தி

"அவனுக்கு எதுவும் ஆகாதடுத்து ஒரே நாள்ல வாழ்க்கைல மொத்த விஷயத்தையும்
இழந்து நிர்க்கதியா நின்ன போது கூட கலங்கல இப்பயா கலங்க போறேன் "

என்றவளை பார்க்கும் போது எவ்வளவு மென்மையான பெண்ணை தங்களது
கொடூர செயல்கள் கல்நெஞ்சக்காரியாக மாற்றியிருக்கிறது. என்று

நினைத்து அயர்ந்து போனான். ஆனால் அபியை பற்றியும் அவன் காதலை
பற்றியும் கட்டாயம் சொல்லவேண்டுமென்ற நிபந்தனையால் தொடர்ந்து
பேசவாரம்பித்தான்.

"தருணியோட ஸ்வீட் சிக்ஸ்ட்டின் பர்த்டே பார்ட்டில உன்ன பார்த்து அடையாளம் கண்டவன்
ஸ்கூல்ல கிளசஸ்ல உன்ன தூரத்துலயிருந்து ரசிச்சுட்டு உன்
படிப்ப கெடுக்கக் கூடாதுன்னு போயிருவான்"

என்றதும் அவளோ "இதுக்கு பெயர் என்ன தெரியுமா ? சட்டத்துல இதுக்கென்ன
தண்டனைனாவது தெரியுமா ? அவன் வந்தானாம் இவன் அதுக்கு ஒத்து ஊத்துனானாம்"

என்றாள் கடுப்பாக மேலே சொல்லு என்பது போல் பார்க்க அவளது பார்வையில்
திடகாத்திரமான ஆண்மகன் அவனுக்கே வெலவெலத்து போனது இருந்தும் சொல்லவேண்டிய
கட்டாயத்தால் மேலும் தொடர்ந்தான்


"பதினஞ்சு வயசுலயிருந்து அவனுக்கு நீ தான் எல்லாமே உன் ட்ராவிங்கோட
தனியா பேசுவான் சிரிப்பான் வெளில போகும் பொது எங்க போறேன்னு
எங்க கிட்ட சொல்றானோ இல்லையோ உன் போட்டோ கிட்ட சொல்லிட்டு தான் போவான்"

என்றதும் பயங்கரமாக விழுந்து விழுந்து சிரித்தவள் "இதை நீ என் கிட்ட சொல்லக்
கூடாது நல்ல சைக்கோலஜிஸ்ட்டா பார்த்து அவங்க கிட்ட தான் சொல்லணுமடுத்து
இதெல்லாம் சொல்லி அவன்மேலயெனக்கு ஒன்னும் சாப்ட் கோர்னெர் வரப் போறதில்ல
பட் உன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்"


என்றதும் பைரவ் தலையை பிடித்தபடி அமர்ந்துக் கொள்ள அவளோ சொடுக்கிட்டு

"என்ன ப்ரோ அவ்ளோ தானா இன்னுமிருக்கா ?" என்றாள் கேள்வியாக

"இல்ல லோச்சனா இப்போ கூட அவன் உன் காதலுக்காக தான் போய் ஆக்சிடன்ட்
ஆகி "

என்றவுடன் மறுபடியும் பயங்கரமாக சிரித்தவள்

"சாரி ப்ரோ சாரி என் காதலுக்காக
மட்டுமா சாகக் கிடக்கிறான் என் சாபத்துலயிருந்து தன்னை காப்பாத்திக்கணும்னு
தானே சாக கிடக்குறான் ஆனா நான் சாபவிமோச்சனத்துக்கான வழிய அவன்கிட்ட
எத்தனையோ தடவ சொல்லிட்டேன் அவனா கண்டுபிடிக்க மட்டும் என்னால எதுவும்
செய்ய முடியாது வாங்க போகலாம்"

என்று இருவருமே வெளியே வரவும் சத்யமுர்த்தி பைரவுக்கு அழைத்து
அபிஜித்தனுக்கு விழிப்பு வந்துவிட்டதாகவும் உடனே லோச்சனாவை பார்க்கவேண்டுமென
முரண்டு பிடிப்பதாகவும் கூற இருவரும் மறுபடி வைத்தியசாலைக்கு வந்து
சேர்ந்தனர்.

லோச்சனாவினருகே வந்த நேத்ராவோ "எங்ககிட்ட மாதிரி மாப்பிள்ளைக்கிட்ட
எடுத்தெறிஞ்சு பேசாத " என்றதும் லோச்சனா திரும்பி பார்த்த ஒரு பார்வையில்
வாயை மூடிக் கொண்டு ஒதுங்கி விட்டார்.

உள்ளே சென்றவள் அவனை
உணர்ச்சியற்ற பார்வை பார்த்தபடி நிற்க அவன் கண்களோ மன்னிப்பை யாசித்துக்
கண்ணீர் வழிய லோச்சுவை பார்த்தது. அருகில் சென்றவளோ

"அழாத!, அழுது வருத்தத்தை பெருசு படுதிக்காத உனக்கு சாபவிமோச்சனத்துக்கான
வழிய பல தடவ சொல்லிட்டேன். அதை புரிஞ்சுக்காம சாகப்போற அடுத்து உன்ன

கொலை பண்றது என் மோட்டிவ் கிடையாது அப்டி நானும் உன்ன மாதிரி
ரத்தம் குடிக்க ஆசைப்பட்டா உனக்குமெனக்கும் என்ன வித்தியாசம் சொல்லு ? "

என்றவுடன் அவன் 'என்ன வழி?' என்பது போல் பார்க்க, அவளோ பெருமூச்செறிந்தபடி

"எப்படியும் உனக்கு நடந்துருக்க டமேஜ்க்கு எழுந்து நடக்கவே மூணுமாசமாகும்
அது மட்டும் நல்லா மண்டைய காயப்போட்டு யோசி உனக்கே தெரியும் நான்
என்ன கேக்குறேன்னு அடம்பிடிக்காம டிரீட்மென்ட்டுக்கு கோப்ரேட் பண்ணு நான்
பிரெஷாகிட்டு கேம்பஸ் போயிட்டு அந்திக்கு வாரேன் "

என யார் சொல்லியும் கேட்காமல் கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டாள். லோச்சுவை
இனி யாரும் நெருங்கவும் முடியாது. கட்டிப்போடவும் முடியாது. அவளது பயணம்
பாதை எதுவென்பதை அவளே தீர்மானிப்பாள்
.



வதம் தொடரும்...
******************************************************

இந்தா episode போட்டாச்சு பட்டூஸ் அப்டியே கமெண்ட் and likes உம் போட்ருங்க
and போன எபிஸோட்ஸ்க்கு likes and comments பண்ண செல்லங்களுக்கு
thank you very much
 
அத்தியாயம் 36


அவள் சொல்லிவிட்டு சென்ற விடயங்களை அசைபோட்டவனுக்கு அவள் எதை வேண்டுகிறாளென்று
கொஞ்ச நேரத்திலேயே புரிப்பட விக்கித்து போனான். என்ன பெண்ணிவள் என் மீது அளவுக்கடந்த வெறுப்பிருப்பினும் என் குழந்தையை என் வாரிசை சுமக்க நினைக்கிறாளே ஆனால் நானவளுக்கு கொடுத்த காதல் பரிசு வஞ்சமும் துரோகமும் தானேயிருந்தும் என் உயிரை பறிக்க நினைக்கவில்லை. அதற்கு மாறாக உயிரும் உடலுமாக வாழ்க்கைக்கு பிடிப்பை உருவாக்க நினைக்கிறாளே என்று தன்னையும் அவளையும் ஒப்பிட்டு வியந்து போனான்.

தினசரி லோச்சனாவென்ற பெண் வித்யாசமானவளாகவும் புரியாத புதிராகவும் திகழ்ந்து ஆடவனை வியக்க
வைத்தாள். அவனது உடல் நலத்தையும் அவள் படிப்பையும் சமமாக கவனித்துக் கொள்பவளை பார்க்கையில் மனம் நொந்து போகும். அபிஜித்தனுக்கு

இரண்டு வாரங்கள் மட்டுமே அவனை பார்த்துக் கொள்ள தங்கிய இரு வீட்டு பெரியவர்களும் இங்கு தங்கியிருக்கும் வரை அவர்களிடையில் எந்த நெருக்கமும் ஏற்படாது என்று புரிந்துக் கொண்டு
தங்களுக்கு வேலையிருப்பதாக இலங்கைக்கு கிளம்பி விட,

அவன் வேண்டாமென்று எந்த பெண்ணை ஒதுக்கினானோ அப்பெண் மட்டுமே
அவனை அருகிலிருந்து தாதியாக தாயாக கவனித்துக் கொண்டு அவன் உடம்பையும்
மனதையும் தேற்றி அவன் குணமாவதற்கு பெரும்பங்காற்றினாள்.


இதையெல்லாம் பார்த்த அபிஜித்தனுக்கு மனம் குற்றவுணர்ச்சியில் குறுகுறுக்கவாரம்பித்தது.
'எப்பேர்பட்ட சொர்க்கத்தை கால்களால் எட்டி உதைத்து விட்டேன்' என எண்ணியே மனதில் வருந்திக் கொள்வான். மூன்று மாதங்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைய அபிஜித்தனின் உடல் நலமும்
நன்றாக தேறிவிட்டது. ஹாஸ்ப்பிட்டலிலிருந்து நேராக அவன் வீட்டுக்கு
வந்ததும் அனியும் லோச்சனாவும் தான் அவனுடைய வேலைகளுக்கு பெரும்பாலும்
உதவி வந்தனர்.


இதையெல்லாம் பார்க்கும் போது அபிஜித்தனுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வரும்
இதற்கிடையில் பைரவிடம் சில விஷயங்களையெடுத்துக் கூறி அனி வாழ்க்கையிலிருந்து
எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வைத்தான்.

எப்போதாவது லோச்சனாவுடன் பேச சூழ்நிலை அமையுமா என எதிர்ப்பார்த்துக்
காத்திருந்தவனுக்கு இரண்டு நாள் கழித்து லோச்சனா நேரத்தோடு வீட்டுக்கு வரும் போது
அச்சந்தர்ப்பமும் சரியாக அமைந்தது.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த லோச்சுவை பார்த்து

"சனா ஒரு நிமிஷம் ', என்றவுடன் புருவமுடிச்சுடன் அவனை ஏறிட்டவள்

'என்ன ? ' என்பது போல் பார்க்க அவனும் மேலே பேசவரம்பித்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் என்ன பார்த்துக்கிட்டதுக்கு அப்பயும் இப்பயும் நீ நம்ம காதலுக்கு
உண்மையா தானிருக்க ஆனா நான் அப்படியிருக்கல என்ன மன்னிச்சுரு "

அவள் ஏதோ சொல்ல வாய் திறக்க அவனோ அவளைத் தடுத்து

"நான் பேசிர்றேன், என்றவன் தொடர்ந்து பேசவாரம்பித்தான்.

"நான் செஞ்சப்பாவம் மன்னிக்க முடியாதது தானிருந்தும் "
என்று கண் கலங்கியவன் கம்மிய குரலில்

"ஆனா என்னோட சாப விமோச்சனத்துக்காக
என்னோட வாரிசை சுமக்க நினைக்குற நீ உண்மையான
பெண் தெய்வம் தான் "

என்று கூறியபடி அவள் சுதாரிக்குமுன்
காலில் விழுந்து கதறவாரம்பித்தான்.

"தயவு பண்ணி என்ன விட்டு போயிராத உன்னோட
காதலை ஒரு நிமிஷமாவது நான்
நிம்மதியா சந்தோஷமா அனுபவிக்கனும் அந்த காதலுக்கே

தகுதியில்லாதவன் தானிருந்தும் சாதாரண மனுஷனா அந்த
உணர்வை ரசிக்க விரும்புறேன்"

என கண்ணீர் வடித்தவனை தீர்க்கமாக பார்த்த லோச்சனாவோ

"எழும்பு " என்று எழுப்பி விட்டு

ஏன் உன்னோட எஸ்டேட் அதாவது நானு ஓயா பங்களாவை வித்த ?

என்றவளை ' எப்படி உனக்கு தெரியும் ?' என்பது போல்
கேள்வியாக நோக்கியவனை

"உங்கப்பா இன்னைக்கு கால் பண்ணி என்கிட்ட சொன்னார். அதுமட்டுமில்லாம
நீ உன் பங்கு சொத்த முழுசா எஸ்டேட் ஒர்க்கர்ஸ்க்கு டிரஸ்ட் ஆரம்பிக்க
செலவழிச்சிட்டன்னும் சொன்னார் ஏன் இதெல்லாம் பண்ற ?"

அவனோ சட்டென, "உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும்
தான், நான் செஞ்ச பாவங்கள் கொஞ்சநஞ்சம் கிடையாது அந்த
அழுக்க கழுவ இதுக்கு மேலேயும் பண்ணனும் "

"உன் குழந்தைக்காக ஓகே ஏன் எனக்காக ?"

"ஏன்னா நீயென்னோட தேவதை அந்த தேவதைய காயப்படுத்த
கூடிய எந்த பொருளும் பணமும் பதவியும் எனக்கு தேவையில்ல
எனக்கு தேவையானதெல்லாம் என் தேவதையோட சிரிப்பு மட்டும் தான்"

"இப்போதான் இந்த தேவதை உங்க கண்ணுக்கு தெரியுதா ?"

"உண்மைய சொன்னா ஆமா, என்னோட அப்பா அம்மா என்ன
பைத்தியம்னு விலக்கி வச்சப்போ நான் பாசத்துக்காக ஏங்கியிருக்கேன்
அண்ணன் தம்பி கூட சண்டை பிடிச்சு அவங்க கூட விளையாட

ஏங்கியிருக்கேன் இதெல்லாம் சேர்ந்து தான் எனக்கு பழியுணர்ச்சி
வரக் காரணம் ஆனா உன்ன கல்யாணம் பண்ண இத்தனை நாள்ல
கடவுள் எல்லா இழப்புக்கும் ஈடு கட்டுற விதமா தான் உன்ன எனக்கு
கொடுத்திருக்கார்னு புரிஞ்சுக்கிட்டேன்"

என்றவனை,

"எனக்கு இன்னுமே உன்ன முழுசா நம்புறளவுக்கு
மனசு பக்குவப்படல ஆனா இந்த மூணு மாசமா உன்ன அவதனிச்ச வரை

உன் கண்ணுல தெரியுற கர்வம் ஆணவத்துக்கு பதிலா இப்போவெல்லாம்
பரிதவிப்பு பயம் நீ இல்லாட்டி நானில்லைங்குற உணர்ச்சியெல்லாத்தையும்
பார்க்குறேன் ஆனா சூடு கண்ட பூனையா என் மனம் பயப்படுது அதனால"

என்று அவள் ஏதோ கூற வர இடைமறித்தவனோ

"ஆனா நானுன்ன பழிவாங்க நினைச்சதால நீ என்ன விட்டுட்டு போய்
பழிவாங்க போறியா ? "

என்றவுடன் அவனை பார்த்து சாந்தமாக புன்னகைத்தவள்

"சத்தியமா கிடையாது நீ என்ன பழிவாங்க நான் உன்ன பழிவாங்கன்னு
முடியாம இழுத்துட்டு போக இது ஒன்னும் டெம்பிள் ரன் கேம் கிடையாது

எனக்கு உன்னையும் என் குடும்பத்தையும் ஏத்துக்க நாளாகலாம்
ஆனா பழிவெறி ரத்தவெறி எனக்கு இருந்துட்டேயிருந்தா என்னைக்கும்

என்னோட தேவதை வம்சத்தோட என்னால சேர முடியாமா போயிரும்
போன முறையும் என்னோட ரத்தவெறியால தான் நான் பிரம்மராக்ஷஷியா

மாறி பல பேரோட உயிர காவு வாங்குனேன் அந்த பாவத்த போக்கி
நான் சாந்தமாகணும்னா எனக்கு கட்டாயம் காதல் குடும்ப வாழ்க்கை
அவசியம் என்னோட ஆசைகள் நிறைவேறினா நானும் என்னோட
இடத்துக்கு திரும்பி போயிருவேன்"


என்றவுடன் கலக்கமாக அவளை பார்த்தவன், "அப்டினா இந்த பிறவி
தான் நம்மளோட கடைசி மனித பிறவியா ? இதுக்கு பிறகு நம்மளால
சந்திக்க முடியாதா ? "

என்றவனை தீர்க்கமாக பார்த்து
"அதுக்கு காலம் பதில் சொல்லனும் ஜித்து அது நம் கையில இல்ல இந்த பிறவிய
நல்லதுக்காக பயன்படுத்தி முடிஞ்சளவுக்கு நல்லவங்களா வாழலாம்"

என்றபடி அவன் விரல்களை தன் விரல்களுடன் ஆழமாக
பிணைத்துக் கொண்டாள் பெண்ணவள்



வதம் தொடரும்.....
 
அத்தியாயம் 37 (epilogue)

இரண்டு வருடம் கழித்து {பதுளை அபிஜித்தனின் வீடு}

அபிஜித்தன் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்று ஒரு பங்கை வைத்து
ட்ரஸ்ட் தொடங்கியவன் மீதி பணத்தை வைத்து புதிய தொழிலை தொடங்கி அவுஸ்த்திரேலியாவில்
செட்டிலாகி விட்டான்.

அவனுக்கு லோச்சனா ஒரு கண்ணென்றால் தன் உடன்பிறவா சகோதரி
அனிதா ஒரு கண் பைரவுடன் இடைக்கிடையே பேசிக் கொண்டாலும் பெரிதாக அவனது
பேச்சை அனிதாவின் முன்னால் எடுப்பதில்லை.

லோச்சனாவுக்கு முதலில் அவன் செய்த காரியங்கள் நியாபகம் வந்து அவ்வப்போது
அவன் மனம் நோகும்படி நடந்துக் கொண்டாலும் தனது கோபத்தை கட்டுப்படுத்தினாலே

தவிர தனது வம்சத்தினருடன் இணைய முடியாதென நிதர்சனத்தை உணர்ந்து இறந்தக்காலத்தை
நினைத்து நிகழ்க்காலத்தையும் எதிர்காலத்தையும் வீணடிக்க கூடாது என உணர்ந்து
வாழ்க்கையை அதன் போக்கில் விட பழகிக் கொண்டாள்.

அதன் பொருட்டு ஒரு வருடம் அவர்கள் வாழ்ந்த காதல் வாழ்வுக்கு சான்றாக
அந்துவன், அவந்திகா என இரட்டையர்கள் பிறந்து அவர்களது வாழ்வை பூரணமாக்கி விட்டனர்.

குழந்தைகளை முதலில் கையில் ஏந்தியவுடனே பொலபொலவென
கண்ணீர் வழிந்தது அபிஜித்தனுக்கு

எவ்வளவு பெரிய சொர்க்கத்தையிழந்து நரகத்தில் குடிபுகுந்துக் கொண்டமென
நினைத்தே மனதில் பாரமேறிய உணர்வு ஆடவனுக்கு ஆனால் நிகழ்க்காலத்தில் எல்லாப்
பிழையையும் திருத்தி மனிதனாக வாழ பழகிக் கொண்டான்.

எந்த தோட்டத் தொழிலாளர்களை அறிவீலிகள் என்று கூறினானோ இன்று அவர்களுக்காகவே
டிரஸ்ட் அமைத்து கல்வி உதவி மருத்துவ உதவியென அத்தனை செலவுகளையும் ஏற்று நடத்திக்
கொண்டிருக்கிறான்.

அனிதாவும் தனது கல்வியை சிறப்பாக கற்றுக் கொண்டு பைரவ் தரனென்ற
ஜீவன்களையே மறந்து போனாள் அபியின் நண்பியான ஷாந்தி என்ற மனநல மருத்துவரின் உதவியால்
இப்போது ஆண்களை பார்த்து பயப்படமாலிருக்கவும் துணிந்து பேசவும் ஓரளவு பழகிக் கொண்டாள்.


இப்போது இவர்கள் ஊருக்கு வந்திருப்பது காட்டு மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மன் கண்
கட்டை அவிழ்த்து ஊர் சாபத்தை முழுமையாக நீக்க தான் குழந்தைகளின் குடைச்சலால்
காலையில் தான் லோச்சனா அபிஜித்தன் தம்பதியினர் கண்ணயர

மகள் அவந்திகாவோ உங்களை தூங்க விடமாட்டேன் என கங்கணம் காட்டியபடி
உதட்டை பிதுக்கி அழ தொடங்க உடனே அவளை கையில் ஏந்திக்
கொண்ட அபிஜித்தனோ கொஞ்சியபடி,

"என்னாச்சுடா அம்மு உங்கம்மா இப்போ எழுந்த நம்ம ரெண்டுபேரையும் விரட்டி
விரட்டி வெளுப்பா"

என்றவுடன் அவன் மீசையை திருகி விட்டு கிளுக்கி
சிரித்தாள் அவனது அம்மு

"வா அம்மு போய் நாம குளிச்சு ரெடியாகலாம்" என குழந்தையை குளிக்க வைத்து
தானும் குளித்து தயாராகி வெளியே வர அவனை பொறாமையும் காதலும்
போட்டி போட பார்த்தபடி எழுந்துக் கொண்டவள்

"இவரு மட்டும் தான் வயசாக வயசாக
அழகாகிட்டே வாராரு நம்ம இவரோட கம்பர் பண்ணும் போது நம்ம அழகு
கம்மி தான்"

என்று முணுமுணுத்தபடி பெருமூச்செறிந்தாள். அவனது அழகு மனையாள்
அவனோ கண்ணாடி முன் அவந்திகாவை அமர்த்தி பொட்டு வைத்து கொண்டே
அவளை மேலும் சீண்டினான்.

"என்னடி ஒருமாதிரி முணுமுணுத்துட்டே ஆசையா பார்க்குற மூணாவது ரிலீஸ் பண்ணலாமா ?"


என்று மீசையை முறுக்கி விட்டவனை இடித்தபடி

"இந்த இருக்காங்களே உங்க ரெண்டு பசங்க அவங்களுக்கொரு அஞ்சு வயசானதும் யோசிக்கலாம்"

என்று அவனிடயை கிள்ளி விட்டு சிட்டாக பறந்து தயாராகி வர

எல்லோருமாக காட்டுமரியம்மன் கோவிலுக்கு வந்தனர். லோச்சனவே தன் கையால்
கோவில் பிரகாரத்தை திறந்து விளக்கேற்றி எல்லா சடங்குகளையும் செய்து
முடித்து கோவில் திருவிழாவையும் ஆரம்பித்து வைக்க திருவிழாவும்
இனிதே தொடங்கியது.

அவளருகில் வந்த "அபிஜித்தனோ சாரிடி உனக்கு மறுபடியும் பழைய
நியாபகம் வந்துருக்குமில்ல ஐயம் சாரி" என்றவுடன் அவனை இடுப்பில்
கைவைத்து முறைத்தவள்

" நானே எல்லாத்தையும் மறக்கலாம்னு நினைச்சா கூட நீங்க விட்றாதீங்க"

என்று அவன் கையை கிள்ள மகனும் தன் தாயிற்கு துணையாக தந்தையின்
மீசையை வலிக்க இழுத்தான். இப்படி இவர்கள் சந்தோஷமாக விளையாடி
சிரித்துக் கொண்டிருக்க

இவர்களை நோக்கி "அண்ணா அண்ணா"

என்று கூவியபடி ஓடி வந்தாள் அனிதா "இந்தா உங்க பாசமலர் வந்துட்டா"

என்று அவனது இடையை முழங்கையால் இடித்தால் லோச்சு

அதை கேட்ட அனிதாவோ "அண்ணியாரே ஏன் இப்படி எங்க அண்ணன
கொடுமை படுத்துறீங்க ?" என்றாள் நக்கலாக

"இங்க பாரு அனி என்ன பன்னினு கூட கூப்பிடு அண்ணின்னு
மட்டும் சொல்லாத"

என்று லோச்சு சண்டைக்கு வர அனியோ அவளை மேலிருந்து
கீழாக அவளை பார்த்து நக்கலாக

"ஆமா ரெண்டு புள்ள பெத்து பன்னிக் குட்டி மாதிரி தான் இருக்க
ஆனா என்ன பண்ண அண்ணனோட மரியாதை முக்கியமில்லையா ?
அது தான்"

என்று அவள் கைகளில் அகப்படாமல் ஓடியவளை


ஒரு வித ஏக்கத்துடன் ஒரு சோடி கண்கள் நோக்கியது.

'இந்த முறை நீ அந்த தரனுக்குமில்ல விதுரனுக்குமில்ல எனக்கு
மட்டும் தான்' என்று மனதில் நினைத்தவாறு அவளை ஆசை
பார்வை பார்த்தது அந்த ஆணுருவம்


இவற்றை அறியாத மூவரும் திருவிழாவில் சந்தோஷமாக
கலந்துக் கொண்டு நிம்மதியாக தங்கள் ஊருக்கு கிளம்ப விதியோ இவர்களுக்கு வேறு விதத்தில்
குடைச்சல் கொடுக்க தயாராகியது.

(முற்றும்)
 
நன்றி மக்களே.....😍😍😍🥰🥰


ஹாய் மக்களே ஒரு மாதிரி ஸ்டோரிய முடிச்சுட்டேன் பார்ட் டூ போட்டி முடிஞ்சு
ரிசல்ட் வந்ததும் பார்க்கலாம் இப்போ வந்து எப்படி இருக்கு என்னனென்ன நிறை குறைன்னு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க silent readers உம் தான் இது என்னோட
முதல் முயற்சி தான் இதுவரைக்கும் என்ன ஊக்குவிச்சு என் மேல நம்பிக்கை வச்சு அவங்க தளத்துல
எழுத தந்த பிரியங்கா முத்துக்குமார் அக்காக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் and readers
தினசரி time எடுத்து வாசிச்சு காமென்ட் பண்ணி likes போட்டு சப்போர்ட் பண்ணதுக்கு
இனி படிச்சுட்டு வந்து நான் எதையெல்லாம் இன்னும் improve பண்ணனும்னு சொல்லிட்டு
போங்க பட்டூஸ் and love you all guys thanks for supporting and தொடர்ந்து support பண்ணுங்க
 
Status
Not open for further replies.
Top