வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காலகேயனின் காதல் வதம் -கதை திரி

Status
Not open for further replies.

அத்தியாயம் 5


அபியின் வீட்டிலிருந்து அனிதாவை கெஸ்ட் ஹவுசுக்கு அனுப்பி வைத்தவளின்
மனதில் பழைய நினைவலைகளின் ரணங்கள் நினையாதே மனமே நினையாதே என்று
எத்தனை தடவை சொன்னாலும் கேட்காது.அல்லவா மானம் கெட்ட மனது நினைக்க
நினைக்க வலிகள் மட்டுமே அவளது கண்களில் அவளையறியாமலே கண்ணீர்
தாரை தாரையாக வழிந்தது.

அவள் நினைவில்............

{இக்கதையில் வரும் மலையக தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் உண்மையை தழுவி எழுதப்பட்டவையே ஆனால் மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்பான கருத்துக்கள் மட்டுமே
வெறும் கற்பனை }

1958 இல் இறுதி பகுதி, இலங்கை உட வேறிய


காலை ஏழு மணியளவில் லய குடியிருப்புகளில் உடல் விறைக்கும் குளிரிலும் காலையிலேயே
சுறுசுறுப்பாக எழுந்து தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு ஸ்வீட்டார்களை அணிந்து கொண்டும் கொழுந்து கூடைகளை தலையில் மாட்டிக் கொள்வதற்கு தலையில் துணிகளைக் கட்டிக்கொண்டும் கொழுந்து பறிக்கும் வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.


பதின்ம வயது பெண்கள் தொடக்கம் அறுபத்தைந்து வயது பாட்டிகள் வரை, ஆண்கள் பாக்டரி வேலைக்கு ஒரு சாராரும் கொழுந்து பறிக்கும் வேலைக்கு ஒரு சாராரும் கிளம்பி கொண்டிருந்தனர்.


இவர்கள் தான் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் இல்லையில்லை முதலாளித்துவ வர்க்கத்தின் எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அடிமைகள் முதுகெலுப்பிருந்தும் முதுகிலும்பில்லையென்று கூறி கூறி மட்டம்தட்டி எதிர்த்து கேள்வி கேட்கவே கூடாது. என்று வளர்க்கப்படும் கிணற்று தவளைகள், தானும் மனிதன் தான் தன்னையும் பிறர் மதிக்க வேண்டும். என்பதையே மறந்த எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட மறுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்

எவ்வளவு மழை பெய்தால் என்ன? புயல் அடித்தால் என்ன? நோயென்று படுக்க இயலாது அவர்களின்
உழைப்பை அட்டையாக உறிஞ்சு குடிக்கிறது. முதலாளித்துவ வர்க்கம்,


பாவம் அவர்களுக்கு தெரியாது, அவர்கள் அனைவரும் ஒரு நாள் கொழுந்து பறிக்க மலை ஏறாவிட்டால் அரசாங்க வருமானத்தில் எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்படுமென்று,
தன்னை அட்டையாக உறிஞ்சும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆடம்பர வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய சறுக்கலென்று ஒன்றும் தெரியாமல் புரியாமல் அவர்கள் அடிமையாக மட்டுமே வாழ வேண்டுமென்று
முதலாளித்துவ வர்க்கம் எண்ணுகிறது .


லயங்குடியிருப்பில் கடைசி வீட்டிலிருந்து,

" எழிலி, பூவு பத்திரமா இருந்துக்கோங்க புள்ளைங்களா நானும் உங்க அண்ணனும் மலைக்கு போறோம்
இப்போ தான் பெரிய மனுசி ஆயிருக்கீங்க காத்து கருப்பு ஏதும் அண்டிராம " என்றார்.செல்வி

"பொன்னியையும் தாமரையையும் கூட்டி போறீயா ஆத்தா ?" என்று எழிலி கேட்க,

"ஆமா புள்ள என்ன பண்றது உங்களுக்கு துணைக்கு ஆள் விட்டு போக எனக்கும் ஆச தான் ஆனா
உங்க சடங்க அண்ணன் ஓரளவாவது பெருசா செய்யணும்னு ஆசைப்படுது அதுக்கு
காசு வேணுமில்ல" என்றார் செல்வி

"எழிலி உனக்கு துணைக்கு நான் தான் இருக்கேனே பொறவு என்னத்துக்கு
அந்த பொடிசு ரெண்டும்" என்று காதை கடித்தாள் பூவரசி

"நாங்க வேணுன்னா முத வீட்டு மைனா பாட்டிகிட்ட வந்து துணைக்கு இருக்க சொல்லட்டுமா ?"
என்றான் அண்ணன் ராசு

"ஐயோ! வேணாம்ணே நாங்க பார்த்துக்குறோம்" உடனடியாக மறுத்தாள் எழிலி

"சமைச்சாச்சிடி ரெண்டு பேரும் சாப்பிடுங்க காமரா (அறை ) வாசல்ல சாப்பாடு இருக்கு
முட்டையும் நல்லெண்ணெயும் ஒரு பாத்திரத்துல இருக்கு கட்டாயம் குடிச்சிருங்க உளுத்த பருப்பு உருண்ட

இருக்கு எல்லாம் செஞ்சாச்சு காலைல ரொட்டியும் பருப்பு கறியும் தேங்காய் சம்பலுமிருக்கு செந்தமிழ் குடுத்த பொங்கலுமிருக்கு எல்லாம் சாப்புட்ருங்க என்ன அடுக்களை பக்கம் போறதில்ல ஒரு மாசத்துக்கு புரிஞ்சுதா ?கதவ சும்மா சாத்தி வச்சிட்டு போறோம் "

கதவு பூட்டும் சத்தம் கேட்டவுடன்

"ஹப்பாடா" என்று இருவரும் அறையை விட்டு வெளியே எட்டி பார்த்தனர்

அந்த வீடே சிறு அறை அமைப்பில் தான் இவர்கள் குடி வந்த புதிதில் இருந்தது.
எழிலியின் அண்ணன் கணக்கு பிள்ளையாக ( தோட்டத்தில் கொழுந்து பறிப்போர் எத்தனை நாட்கள் வேலை செய்தார்கள் என கணித்து கொடுப்போர் )
வேலைக்கு சேர்ந்த பின்

"மூணு பொம்பிளை புள்ளைங்கள வச்சிருக்கோம். அதனால
தனியறை ஒன்னு காட்டுவோம். பின்னாடி இடமிருக்கு தானே ஆத்திர அவசரத்துக்கு பொதுவுல
உள்ள கழிப்பறைக்கு போனா அதுங்களுக்கு சங்கடமாயிருக்குமில்லையா ஆத்தா அதனால
கழிப்பறை ஒன்னும் காட்டுவோம் ஆத்தா"

என்று எழிலியின் அண்ணன் ராசுக் கட்டியது
தான் அதன் பின்தான் வீடு ஓரளவு விசாலமாக தெரிந்தது

அப்போதும் ராசுவின் அன்னை செல்வி
"நமக்கு சொந்தமில்லாத இடம் அப்பு இருக்க மட்டும் இது நம்ம இடம் ஆத்தா"

என்று சொல்லி ராசு கட்டிய அறையில் தான் இரண்டு குமரிப் பெண்களும் இருந்தனர்.

பூவரசி எழிலின் இணைபிரியா தோழி எங்கே செல்வதாயிருந்தாலும் சரி எந்த திருட்டுத்தனமான வேலையாயிருந்தாலும் சரி கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் ஒன்றாக சேர்ந்தே செய்தவர்கள். கடைசியில் ஒன்றாக சேர்ந்து வயதுக்கும் வர இருவரையும் ஒரே வீட்டில் இருக்க கூடாது என்று சொல்ல கட்டி புரண்டு அழுது ஒருவாறு சாதித்து விட்டார்கள்.,

ராசுவுக்கு தங்கைகளின் கண்கலங்கினால் மனம் தாங்காது
அதுவும் மூத்த தங்கை எழிலி என்றால் அவனுக்கு அவ்வளவு அன்பு அவளும் அப்படித்த்த்தான் வழுக்கி விழுந்தால் என்ன? அடிப்பட்டாள் என்ன? அண்ணன் கூடவே இருக்கணும்

அதனால்

"செந்தமிழக்கா பாவம் ஆசைப்படுத்துங்க இருந்துட்டு போகட்டுமே" இருந்தாலும்
என்று அவர் ஏதோ சொல்ல வர ராசு உடனே "எல்லாம் நம்ம உருவாக்குன சம்பிரதாயம் இருந்துட்டு போகட்டுமே"

"சரி தம்பி " என்று என்ன சொல்லவென்று தெரியாமல் நகர்ந்து கொண்டார். பூவராசியின்
அன்னை செந்தமிலுக்கு ராசுவின் வீட்டில் பெண்ணை விட்டு வைப்பதில் அவருக்கு ஆட்சேபனையே
கிடையாது அவருக்கு தெரியும் ராசு பெண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் ரகம்

பூவரசி எழிலி இருவரும் வாலில்லா வானரங்கள் கிட்டத்தட்ட ஒன்று சேர்ந்து விட்டால்
ஊரே கதிக்கலங்கி போகுமளவுக்கு சேட்டை செய்வார்கள் எழிலி பொதுவாகவே
புத்தி கூர்மை மிக்க பெண் தானே எந்த வம்புக்கும் செல்லவும் மாட்டாள்.

வந்த வம்பை விட்டு வைக்கவும் மாட்டாள். ஏதாவது ஊருக்குள் அடிதடியென்றால்
ஊர் ஆட்கள் ஒன்றுக் கூடுமுன்பே
எழிலி பூவரசி கூட்டணி அங்கே தான் நின்றிருக்கும்.

காரணம் இவர்கள் பண்ணி வைத்த
சேட்டையில் தான் பெண்களுக்கிடையில் குடுமி சண்டை தொடக்கம் ஆண்களுக்கிடையில்
குத்து சண்டை வரை இவர்கள் தயவில்லாமல் நிகழாது.

ஒரு மாதத்திற்கு எந்த வம்பு தும்பும் இருக்காது என்று லயங் குடியிருப்பில் உள்ளவர்கள்
'அப்பாடா' என்று பெருமூச்சு விட அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை என்று இருவரும்
எல்லாரும் வேலைக்கு சென்ற பின் தங்களது திருட்டு வேலைகளை தொடங்கி
விட்டனர்.

யார் கண்ணிலும் பட்டால் தானே பிரச்சனை படாமல் எங்கே செல்வது என்ன செய்வதென்று
பேசிக் கொண்டு நண்பிகளிருவரும் ஒரண்டை இழுக்க கிளம்பி விட்டனர்.

''வாடி அங்க துரை பங்களாவுக்கு மேல காடு இருக்குல்ல அங்க போய் காட்டு
மாங்காவும் காணு கொச்சிக்காவும் திம்போம்''என்றாள் எழிலி

''மாங்கா சரி காணு கொச்சிக்காயும் காட்டுக்குள்ள கிடைக்கும் உப்புக்கு
என்னடி பண்றது உங்க ஆத்தா வேற அடுக்களை பக்கம் ஒரு மாசம்
போக கூடாதுனு சொன்னுச்சேடி?'' என்றாள் கேள்வியாக பூவரசி

''அது சொல்லறதெல்லாம் கேட்டுருந்தா நானும் பொன்னி தாமரை கணக்கா
பொண்ணா அடக்க ஒடுக்கமா மாறியிருப்பேன்டி அதெல்லாம் நமக்கில்லடி
பொம்பள புள்ளைங்களுக்கு வா!'' அடுக்களைக்கு போய் ஒரு பிடி
உப்பெடுத்துட்டு ஓடிருவோம்

என்று திருட்டு பூனை போல் பதுங்கி பதுங்கி அடுப்பறைக்குள் நுழைந்து ஒரு பிடி
உப்புக்கல்லை தூக்கிக் கொண்டு காட்டுப்பகுதியை நோக்கி
ஓட முற்படும் போது

"ஏட்டி யாரது? யாருடி?"என்று மைனா பாட்டி குரல் கொடுக்க

"ஐயோ மைனா பாட்டிடி "என்று அலறினாள் பூவரசி

"ஐயோ அந்த கெழவிக்கு கண்ணு வேற நல்லா
தெரியுமேடி" என்று அலறினாள் எழிலி

"ஆமா நம்ம பண்ற வேலைய சும்மாவே புட்டு புட்டு வைக்கும் உங்க ஆத்தா
எங்க ஆத்தாகிட்ட எல்லாம் இப்போ நம்ம செய்ற வேலையெல்லாம்
சொல்லிக் குடுத்து காய்ச்சி எடுத்துற வச்சிரும்" என்றாள் பூவரசி பயத்தோடு

'என்ன பண்ணலாம் ?' என்று யோசித்த எழிலிக்கு, அங்கே பெருமலை கங்காணி முனியாண்டி வர
எழிலியின் வானர மூளைக்கு அற்புதமான யோசனை தோன்ற அதே செயற்படுத்தினாள்.

பாட்டி வாசலில் வைத்திருந்த கொட்டை பாக்கு பொட்டலத்தை கையில்
எடுத்துக் கொண்டவள் "ஐயோ திருடன் திருடன்" என்று தங்கள் வீட்டிற்கருகில் ஒளிந்துக்
கொண்டு கத்த என்னது 'திருடனா என்று கங்காணி?' மைனா பாட்டி வீட்டருகில் வரவும் சரியாக

எழிலி,"ஐயோ!திருடன் பாட்டி கொட்டைப்பாக்க திருடிட்டான்"என்று சத்தமிட

பாட்டி ஊன்று கோலுடன் வெளியே வந்தவர்,

" ஏண்டா பொசக்கெட்ட பயலே முனியாண்டி என் கொட்டப்பாக்கு தான்
ஒனக்கு கிடச்சதா" என்று வெளுக்க

"ஐயோ !கெழவி நா எடுக்கல" என்றார் வலி தாங்காமல்

"அப்ப நீ எடுக்கலன்னா வீட்டு வாசல்ல வச்சிருந்த கொட்டப்பாக்குக்கு ரெக்க
மொளச்சி பறந்துருச்சாடா ?"

"ஆ எனக்கு புரிஞ்சு போச்சு உன் கடைசி வீட்டு பேத்திக தான் ஏதோ
திருட்டு தனம் பண்ணிட்டு மாட்டி விடுதுக"

"அதுங்க ரெண்டும் சமைஞ்சு இன்னும் ரெண்டு வாரம் கூட ஆகல
அதுக எப்பிடிடா வெளிய வரும்"



"எனக்கு தெரிஞ்சு போச்சு அந்த புள்ளைங்க வீட்டுல யாருமில்லன்னு
தெரிஞ்சுகிட்டு வம்பு பண்ண வந்துருக்க உனக்கு பொண்டாட்டி
வீட்ல இருக்கும் போது புதுசா பொம்பள சோக்கு கேக்குதோ
உனக்கு" என்று வெளுத்து விட்டார் பாட்டி

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தோழிகளிருவரும்

"வாடி அதுக ரெண்டும் அதுக சோலிய பாக்கட்டும் நம்ம
சோலிய பாக்கலாம்னு வாடி"

அசப்பில்லாமல் அங்கிருந்து நகர்ந்து அவர்களுக்கு
மட்டுமே தெரிந்த குறுக்கு பாதையூடாக காட்டை நோக்கி
நடக்க ஆரம்பித்தனர்.

"ஏண்டி எழிலி உனக்கு இந்த காத்து கருப்பு மேல நம்பிக்கை இருக்காடி?" என்றாள் கேள்வியாக
பூவரசி

"ஏண்டி கேக்குற ?" என்றாள் கேள்வியாக எழிலி

"சும்மாத்தாண்டி இப்போ இப்படியெல்லாம் சுத்துறோம் தானே ஆத்த சொன்ன மாதிரி
காத்து கருப்பு எதுவும் அண்டியிருச்சினா என்ன பண்றது?" என்றாள் தலையை சொறிந்த வண்ணம்

"அண்டுன கூட மாட ஒத்தாசைக்கு சேர்த்துக்கிட்டே ஊர சுத்த
வேண்டியது தான்" என்றாள் எழிலி குறும்பாக

"என்னது ?"

"மூடிட்டு வாடி" என்று முன்நோக்கி நடக்கவரம்பித்தாள் எழிலி

பாதி தூரம் நடந்து பங்களா இருக்கும் வீதி அருகே வரும் போது
அவர்கள் முன் ஒரு ஆஸ்டின் கேம்பிரிஜ் கார் வந்து நிற்க

"ஐயோ! பேய் பேய் மாரியாத்தா காப்பாத்து " என்று பூவரசி அலற

"ஹேய் பியூட்டீஸ் பயப்புடாதீங்க நாங்க இங்க இருக்க
எஸ்டேட் பங்களாவுக்கு போனும் எப்டி போறது" என்றான் கேள்வியாக புதியவன்

"யார பார்த்து பாட்டிங்கிற? மைதா மாவு மூஞ்சா வகுந்துடுவேன் வகுந்து" என்றாள் எழிலி

அவள் கேட்ட தினுசில் மிரண்டு போனான் புதியவன்,


"ஏய் ஒழுங்கா பேசுடி துரை வீட்டுக்கு வந்துருக்காங்க போல" என்று பூவரசி எழிலியின்
காதை கடிக்க

பூவரசியை ஆர்வமாக பார்த்தபடி ,"உங்க பின்னுக்கு இருக்குற குட்டி பாப்பா யாரு அழகா இருக்காங்களே"
வினவினான் புதியவன்

அவளோ சட்டென்று,"என்னங்க நான் ஒன்னும் பாப்பா இல்ல இப்ப நான் பெரிய மனுஷியாம்
ஆத்தா சொன்னுச்சு" என்றாள் வெகுளியாக

"பெரிய மனுஷிக்கு எத்தின வயசு?" என்று வினவினான் புதியவன்

"பதினாறு வயசு'' என்றாள் கீழே குனிந்தபடி

அதற்குள் இடையில் புகுந்த, "எழிலி துரைக்கு பொண்ணுங்கள்ட்ட
வயச கேட்க கூடாதுனு யாரும் சொல்லி தரலியா ?" என்றாள் நுனி மூக்கு
சிவக்க

"சரி சரி தங்கச்சி எப்டி பங்களாவுக்கு போகணும் புதுசா வந்த
சுப்ரிண்டன்ட் உள்ள தான் இருக்கார்"

அப்டினா பெரிய துரையா? என்றாள் எழிலி கேள்வியாக

" ஆமா ஆமா" என்றான் புதியவன்

அகனோ தலையை தாழ்த்தி கண்களை உயர்த்தி
தன் முன் நின்ற எழிலியின் வனப்பை தான் ரசித்திருந்தான் .
என்ன பெண்ணிவள்? வெள்ளைக்காரிகள் அத்துணை வெள்ளையாக இருந்தாலும் இவளது சந்தன நிறத்திற்கு ஈடாகுமா ? பதறிச் சிறகடிக்கும் அந்த கண்கள் அவனை கொல்லாமல் கொன்றது.
இப்போது தான் துளிர் விட துவங்கும் பெண்மைக்குரிய அழகுகள் நான் உனக்கே உனக்கு தான் என்றது. அவள் செப்பு உதடுகள் மாமா என்றாள் எப்படியிருக்கும் என்றெல்லாம் எண்ணம் தறிகெட்டு ஓடியது.

ஆனால் அவன் மனதில் மதில்ட்டா என்ற பெண்ணின் நியாபகமேயில்லை அந்த நேரமே
இந்த விடயத்தை ஆராய்ந்திருந்தால் ஈர்ப்புக்கும் காதலுக்குமான வித்யாசம் புரிந்திருக்கும்.
பிற்காலத்தில் ஏற்பட போகும் பிரச்சனைகளிலிருந்து அவன் தலையும்
தப்பியிருக்கும் விதி வலியது தான் போலும்

"இப்டியே நேரா போனா ஒரு சுடுகாடு வரும்,"

"என்னது சுடுகாடா!! ?" என்று அதிர்ந்து விழித்தான் கிரிதரன்

"முழுசா கேட்டுட்டு பேசுங்க அந்த சுடுகாட்டுல இருந்து மேற்கால
ஒரு பாத போகும் அந்த பாதைல போனா பங்களா வரும்

இங்க பாருங்க ஐயா நாங்க உங்களுக்கு உதவி பண்ணிருக்கோம் எங்களுக்கு
நீங்க உதவி பண்ணனும் '

"உதவிக்கு உதவியா சொல்லுமா ?" என்றான் குறும்புடன் தரன்

"இந்த பக்கம் எங்கள பார்த்ததையோ பேசுனதையோ
யார்ட்டயும் சொல்ல கூடாது" என்றாள் தெளிவாக

"அப்ப வேலைய விட்டுட்டு இங்க சுத்தி திரியிறீங்களா?" என்று
அகன் கறார் குரலில் புருவமுயர்த்தி கேட்க
"அப்டியெல்லாமில்ல ஆனா சொல்ல முடியாத காரணம் " என்றாள்
எழிலி சங்கடமாக

''அப்டி என்ன காரணம் பாப்பா?'' என்று பூவரசியை பார்த்து
தரன் கேட்க

"அம்மா ஒரு மாசம் வீட்ட விட்டு" என்று ஏதோ சொல்ல வர

"ஏய் நிறுத்துடி ! அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்றாள் எழிலி
கன்னம் சிவக்க, அவளும் பெண் தானே

என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்துக் கொண்ட
அகன் ஆர்ப்பாட்டமாக சிரித்து விட்டான்.

அப்போது தான் அகனழகனை கவனித்தால்,எழிலி எதிரியை
கூறு போடும் விழிகள் அளவான மீசை தாடியுடன்
வெள்ளையுடன் மஞ்சள் கலந்த சந்தன நிறம் ஆண்மைக்கு இன்னும்
அழகு சேர்ப்பது போல் பெரிய நெற்றி என்று தன் முன் நிற்பவனை கண்டு
மூச்சடைத்து போனாள். பெண்ணவள் அன்றே அவள்
மனதில் கள்வனாக நுழைந்துக் கொண்டான் அவளவன்


"சரிம்மா உன் பெயர் என்ன ?"என்றான் அகன்

அவளும் "எழிலி தாரெழிலி" என்றாள் குறும்புடன்

அந்த பெயரை அவன் ஏற்கனேவ எங்கோ
கேட்டது போல் தோன்றியது. ஆனால் அதை ஒதுக்கி வைத்துவிட்டான்.
அன்றே அதை ஆராய்ந்திருந்தால் இன்று மறுபிறப்பில்
நாயாய் பேயாய் அலைந்திருக்கும் அவசியம் வந்திருக்காது.

"பாப்பா உன் பேரு என்ன ?" என்றான் தரன்

"பூவரசி" என்றாள் மென்மையாக

இருவரும் விட்டால் போதுமென்று அந்த இடத்தை விட்டு
ஓடி மறைந்தனர். ஆனால் அவனது பார்வை தாராவை விடாமல்
துரத்தியது. என்னவோ இருவரும் கவனிக்கவில்லை
கவனித்திருந்தாள் இரு அரக்கர்களின் பார்வையிலிருந்து
இரு மலராத மொட்டுக்கள் தப்பியிருக்கும்.



இன்று,

அவள் நினைவலைகளை கலைக்கும் வண்ணம் அனி பேச தொடங்க
லோச்சு கண்களை துடைத்துக் கொண்டாள்.

"நீ சொன்ன மாதிரியே எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துட்டேன்டி இப்போ
என்னமோ நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்கிறேன்ன, எங்க ஒன்னயும் காணோம்?"
என்றாள் அனி,

அவளோ சற்று கோபமாக, "அது நெஞ்சு வலியில்லடி பைத்தியம் மூச்சு திணறல் கஷ்டப்பட்டு
உயிர கொடுத்து நடிக்க போறேன் பிளான் சொதப்புச்சு அவ்ளோ
தான் ரெண்டு பேரும் காலி ஒழுங்கா நடி"

"அந்த சுடல்லா பைத்தியம் எங்கடி?" என்று எரிச்சலுடன் வினவினாள் லோச்சு

"அவ அப்பயே வீட்ட விட்டு கிளம்பிட்டாளாம்டி
நீ அப்போவே சொன்ன நான் தான் கேக்கல " என்றாள் வருத்தமாக

"அதா முக்கியம் வா நாமளும் தப்பிச்சு ஓடலாம் ஒழுங்கா நடி" என்றாள் கறாராக

"சரிடி " என்று இருவரும் நடிக்க தயாரானார்கள்

"கத்துடி" என லோச்சு சொல்ல

"ஐயோ! என் லோச்சுவுக்கு மூச்சு வாங்குதே மாரி
பிஸ்கேட் ஓடி வாங்க" என்று கத்த

லோச்சு கோபமாக அனிதாவின் குறுக்கிலேயே ஒரு உதை விட்டாள்.

"ஏண்டி உதைச்ச? அம்மா வலிக்குதே " என்று கதறினாள் அனி

"அரை பைத்தியமே ஒழுங்கா நடி மாரி அங்கிள்னு சொல்லு
ஏண்டி இப்டி படுத்துற எப்ப பாரு திங்கிறதுலயே குறியா
இரு" என்றாள் எரிச்சலாக

இவளை பார்த்துக் கொண்டு காத்தாமலிருந்தவளை பார்த்த
லோச்சு

"ஏண்டி இப்போ நிப்பாட்டுன? கத்து கீழ போய் அழுதாவது காலை
புடிச்சாவது ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போகணும்னு சொல்லு
நடி" என்று

ஊக்கப்படுத்தியே லோச்சுவுக்கு உண்மையாக மூச்சு வாங்கியது.

அதற்குள் இவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து சேர்ந்த மாரி,

" என்னமா ஆச்சு?"

"லோச்சுவுக்கு மூச்சு திணறல் அங்கிள் ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போகணும்" என்று பதற்றத்துடன்
அனி கூற

சரிம்மா இருங்க ஐயாக்கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு என்று மாரி ஆரம்பிக்க
அபிக்கு தெரிந்தால் காரியம் கெட்டுவிடும் என்று யூகித்தவள்

அவர் நகரும் முன்பே, " ஐயோ செத்து போன பாட்டி தெரியுதே தாத்தா கூப்புடறாரே"
லோச்சு நன்றாகவே நடிக்க


"கூட்டிட்டு வாங்கம்மா நான் வேண்டிய எடுக்குறேன்
படி இறங்குவாங்களா இல்லனா டாக்டர கூப்பிடட்டுமா பாப்பாம்மா "

அவசரமாக மறுத்த அனியோ, " அதெல்லாம் இறங்குவா இறங்குவா நீங்க வண்டிய ரெடி பண்ணுங்க
கூட்டிட்டு வாரேன் " என்றவுடன் அவரும் அவசரமாக வண்டியை கிளப்பினார்.

வள்ளியம்மை மட்டுமிருந்திருந்தால் இவர்களது திருட்டுத்தனத்தை கண்டுபிடித்து
மூச்சடைத்தால் பரவாயில்லை வீட்டுக்கு வைத்தியரை அழைத்து வர செய்திருப்பார்.
மாரிக்கு மகளை ஒத்த வயது பெண் மீதுள்ள கரிசனை அந்த கரிசனையே
இப்போது அவருக்கே எதிரியாக அமைந்தது தான் மிச்சம்

ஆனால் வைத்தியசாலையில் தான் இருவருக்குமான பெரிய அதிர்ச்சி
காத்திருக்கிறது. என்பதை இருவருமே அறியவில்லை. இவர்கள்
காரில் ஏறி அமர்ந்தவுடனே மாரி யாருக்கோ அழைத்து பேச ஆரம்பித்திருந்தார.

ஹாலோ பைரவ் ஐயா எங்க இருக்கீங்க?

"டவுன் ஆஸ்பத்திரியிலயா ?"

"இருங்க உடனே வாரேன்"

"அங்கிள் இங்கேயிருந்து டவுனுக்கு போக எவ்ளோ நேரமாகும் ?" வினவினாள் அனி

லோச்சுவோ ஐயோ அம்மா என்று கத்தி நடிப்பை தொடர்ந்த வண்ணம் வந்தாள்

"ஒரு அரை மணி நேராமாகும்" என்றார் அவர்

அப்டியா டாக்டர் உங்களுக்கு
தெரிஞ்சவரா? அங்கிள் என்று ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வர

"ஆமாம்மா துரை ஐயாவோட ஸ்நேகிதர்" என்று அவர் கூற

"ஓஹ்ஹ் டாக்டர் பேரு என்ன அங்கிள் ?"

அது ஆ ... இதோ ஹாஸ்பிடல் வந்துருச்சு என்று வைத்தியசாலையின் வாகன
தரிப்பிடத்தில் நிறுத்தியவர்

எறங்குங்க மா

"இல்ல அங்கிள் என்னால முடியாது" என்று இளைத்தபடி லோச்சு கூற


"நீங்க ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு வாங்க அங்கிள் லோச்சுவுக்கு
தலை சுத்துதாம்" என்று அனி இன்னும் இட்டுகட்டி கூற

"சரிம்மா இதோ வரேன்" என்று மாரி இறங்கி ஓட

"ஏய் இறங்குடி அந்த ஆள் வர முன்ன ஓடணும் " என்று
லோச்சு அவசரப்படுத்த

விடு ஜூட் என்று இருவரும் இறங்கி ஓட்டமும்
நடையுமாக ஓட வைத்தியசாலை வாளாகத்திலிருந்து இருந்து
வெளியேறி எதிரே பத்திரிகை வாசித்தபடி

நீல நிற ஷிர்ட்டும் கருப்பு நிற கால்ச்சட்டையும்
அணிந்து நின்ற ஆடவனிடம் வந்து

"எக்ஸ்க்யூஸ் மீ சார் " என்று லோச்சனா அழைக்க

திரும்பியவனை பார்த்து லோச்சு அதிர்ந்து போனால் என்றால்

அனி

"ஹாய்! அங்கிள் பஸ் ஸ்டாப்புக்கு எப்படி போனும்" என்று கண்களை
உருட்டி வினவ

அவனுக்கோ தவுசண்ட் வால்ட் பல்ப் எரிந்தது.

"பூவு எப்படிடி இருக்க உன்னை பார்த்து எவ்ளோ
நாள் கனவுல கூட உம்மா தர போனா மறஞ்சி போயிர்ர" என்றான் சோகமாக

அனியோ யார்ரா நீயென்பதை போல் பார்த்து வைக்க அவனுடைய
முகம் கூம்பியது,

"நான் உன் மாமண்டி என்ன நீ என்று உலுக்கி விட்டு,
மாமாக்கு லிப் டு லிப் கிஸ் தந்து ஸ்பாயில் பண்ண
மூட்ட சரி பண்ணு"என்று
உதடு குவித்துக் காட்ட

அவளுக்கோ ஒரு போத்தல் விளக்கெண்ணெயை குடித்தது போல்
முகம் மாறியது

"ஏய் என்ன இந்த ஊரு பூரா லூசா சுத்துதுங்க வாடி
போலாம்" என்றாள் அனி எரிச்சலாக

எங்க போறீங்க ரெண்டு பேரும் என்று வினவினான் கடுமையான குரலில்

பாவம் அபிக்கு தெரியாதா எழிலி
நீ இங்க இருக்குறது ? என்று வினவ

லோச்சுவோ எரிச்சலுடன்

"நான் எழிலியும் இல்ல இவ பூவும் இல்ல
என் பேரு த்ரிலோச்சனா இவ பேரு அனிதா
நீங்க யாரோனு நினச்சு யார்கிட்டயோ பேசுறீங்க"

அவனோ ஏற இறங்க பார்த்துவிட்டு,

"அப்டி பார்த்தா என் பேரும் கிரிதரனில்ல பைரவ்
அபி பேரும் அகனழகனில்ல அபிஜித்தன் இரு
அவனுக்கு போன் போடுறேன்".

என்று போனை எடுத்தது. தான் தாமதம் அவன் போன் பறந்து
சென்று கழிவுக் கால்வாய்க்குள் விழுந்தது.இருவரும் அவன் கையிலிருந்த
செல்லை தட்டிவிட்டு


"வாடி ஓடிரலாம்" என்று லோச்சுவும் அனியும் பின்னங்கால் பிடரியில்
படுமளவுக்கு

தப்பித்து ஓடிவிட்டனர். இருவரும் அங்கே சுற்றி இங்கே சுற்றி
ஒருவாறு பஸ் நிலையத்துக்கு வந்து கண்டி பஸ்சில்
ஏறி அமர்ந்து பெருமூச்செறிந்தனர்.



வதம் தொடரும்.........
*****************************************

இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ud ல நிறைய தெளிவு கிடைக்கும் ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 
அத்தியாயம் 6(a )


இரு பெண்களையும் காணவில்லை என்று தேடி வந்த மாரியின் கண்களில் பட்டதென்னவோ
கழிவுக் கால்வாயை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்த பைரவ் தான் மாரி அவன் அருகில்
வந்து,

"என்ன பைரவ் ஐயா என்னத்த உத்து பார்க்குறீங்க?" என்றது தான் தாமதம்
அவர் காதில் ங்கொய் என்ற சத்தம் தான் கேட்டது.

"முட்டாள் முட்டாள் ரெண்டு சின்ன பொண்ணுங்கள பார்த்துக்க தெரியல தப்பிச்சு
ஓடின பிறகு என்னய்யா நொன்னாய்யாங்குற

அபிக்கு இதுங்க ரெண்டையும் ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு வந்தது தெரியுமா ?"
என்று கடுப்புடன் கேட்க

"இல்லைங்க ஐயா மூச்சு திணறல் அதிகமாயிருக்குன்னு சொன்னதால தான்
கூட்டிட்டு வந்தேன் " என்றார் அப்பாவியாக

"முட்டாள் மூச்சு திணறல் வந்தா அரை மணிநேரம் காருக்குள்ள தாக்குபிடிக்கிறது
எவ்ளோ கஷ்டம்னு உனக்கு தெரியாதா ? நீ ஏன் அபிக்கிட்ட சொல்லல?" எரிச்சலுடன்
கேட்க


"துரை ஐயாக்கு போன் பேச போகும் போது தானுங்கையா

செத்து போன பாட்டி கூப்புட்ற மாதிரி இருக்குன்னு சொன்னாங்க

சாக போறவங்களுக்கு செத்தவங்க கண்ணுக்கு தெரியும்னு ஊருக்குள்ள

சொல்லுவாங்க" என்றார் மீண்டும் அப்பாவியாக

பைரவுக்கோ சுறுசுறுவென கோபம் தலைக்கேறியது,

"கிழிச்சாங்க பைத்தியமா நீ ? இன்னும் இந்த மாதிரி லூசுத்தனமா பேசிக்கிட்டு
எனக்கு வர ஆத்திரத்துக்கு உன்ன அடிக்கிற அடில செத்து போனவங்க இனிமே
சாக போறவங்க எல்லாம் தெரிவாங்க பாக்குறியா ?"

சற்று ஆசுவாசமடைந்தவன், "சரி அபிக்கு போன் போடு" என்றான்

"ஐயா நான் போன் போட்டா எடுக்குறாருல்ல நீங்க உங்க போன்ல இருந்து "
என்றது தான் தாமதம் மாரியின் மறு கன்னமும் பழுத்தது .

" என்கிட்ட போன் இருந்தா நான் ஏன்டா அபிக்கு
போன் போட சொல்ல போறேன்?

என் ஆளுங்களுக்கு சொல்லி ரெண்டு வானரங்களையும்
தூக்கியிருப்பேனே செல்லை தந்து தொலை"

என்று வாங்கியவன் அபிக்கு அழைப்பை ஏற்படுத்த அவன்
அழைப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருந்தது. காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும்
அவனுக்கு சூட்டை கிளப்ப மாரியின் அழைப்பேசியை தூக்கி நிலத்தில் அடித்திருந்தான்.

தலையை பிடித்துக் கொண்டு அருகேயிருந்த கல்பெஞ்சில் அமர்ந்தவன்,

" அபி இப்ப எங்கயிருப்பான் ?"

"பக்டரிக்கு போறேன்னு சொன்னாருங்க" என்றார் பயந்தபடி

"வண்டிய எடு பக்டரிக்கு போகலாம் " என்று ஒற்றை விரலை நெற்றி
பொட்டில் வைத்து அழுத்தியபடி நின்றிருக்க

மாரியோ அவன் கடுப்பை மீண்டும் கிளப்பும்வண்ணம்

"உங்க வண்டியா இல்ல நாங்க வந்த வண்டியா" கேட்க


அவனுக்கோ ரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறியது.,

" ஏதாவது ஒன்ன எடுத்து தொலை எனக்கு வாச்ச பிரெண்டும் சரியில்ல
அவனுக்கு வாச்ச வேலைக்காரனும் சரியில்ல முதலாவது பூவ கல்யாணம் பண்ணிட்டு
இந்த அபி பயல டிவோர்ஸ் பண்ணனும் அப்ப தான் வாழ்க்கைல உருப்படலாம்"


காரிருக்கையில் சாய்ந்தமர்ந்தவன் நெற்றியின் மேல் கையை வைத்துக் கொண்டு
பழைய நினைவலைகளின் தாக்கத்தில் உழன்றான்.

அன்று ....

அங்கே இரு பெண்களிடமும் வழிக்கேட்டு வந்த ஆண்களும் பதினைந்து நிமிடத்திலேயே
பங்களாவை அடைந்திருந்தனர்.இருவரும் எஸ்டேட் பங்களாவை சுற்றி பார்த்தவண்ணம்
கதைக்க ஆரம்பித்தனர்.

தரன் "அகன் உன் மாமனார் சரியான ஆளுடா பொண்ணு கொடுக்க முன்னே சீதனம்
கொடுத்துட்டாரு" என்றான் நக்கல் குரலில்

"ஹா ஹா அவரு சீதனம் மட்டும் தான் கொடுத்தாரு நான் எப்படி டெவெலப்
பண்ண போறேன்னு பாரு " என்றான் ஒற்றை புருவமுயர்த்தி


"ஹாஸ்பிடலை நல்லா பெருசாக்கணும் நீ சீப் டாக்டரா இருக்கனும்
உன் ஜூனியர்ஸ் என் ஜூனியர்ஸ் தவிர ஹாஸ்ப்பிட்டல்ல இருக்குற

எல்லா ஸ்டாப் டீடைல்ஸ்சும் வேணும் கிட்டத்தட்ட எல்லாரையும்
ட்ரான்ஸ்பெர் பண்ணனும் ரெண்டு அம்புலன்ஸுக்கு ஏற்பாடு பண்ணனும்"


எத்தன பேர் காசுக்கு மடியுறாங்கனு பாரு ஆனா கடைசி மட்டும்
நம்ம பண்ண போற விஷயம் வெளிய தெரியக்கூடாது" என்றான் ஒரு வித
தீவிரத்துடன்

"எல்லாம் சரிடா இப்டி ஒரு விஷயத்த ஆராய்ச்சி பண்ண போறமே
தப்பில்ல ?" என்றான் கேள்வியாக

"எதுடா தப்பு இந்த மக்கு ஜனங்கள விட யாராலயும் நமக்கு
இத்தனை பரிசோதனை எலிங்கள தந்துர முடியுமா?
முதல்ல இந்த ஐடியா எனக்கு வரவேயில்ல மதில்ட்டா தான்
எனக்கு இப்டி பண்ணலாம்னு ஐடியா தந்தா " என்றான் மெச்சுதலாக

தரனுக்கு வந்த ஆத்திரத்துக்கு மதில்ட்டா மட்டும் அவன் முன் இருந்திருந்தால்
கொன்று போட்டிருப்பான் அத்தனை ஆத்திரம் வந்தது. அவள் மீது


"நான் அப்போவே யோசிச்சேன் அந்த வெள்ள பேய தவிர யாராலயும் இப்டி
நம்புனவங்களுக்கு துரோகம் பண்ண முடியாது" என்றான் எரிச்சலுடன்

"உனக்கு ஏன்டா மதில்ட்டாவ கண்டாலே ஆகுதில்ல?, பாவம் என்
ஆராய்ச்சிக்கு எவ்ளோ சப்போர்ட் பண்றா தெரியுமா?" என்றான்
நண்பனின் தோளில் கைபோட்டபடி

கையை எடுத்துவிட்ட தரன், "கிழிக்கிறா நான் சொல்றேன்னு நியாபகம் வச்சுக்கோ
உன்ன பெரிய பிரச்சனைல மாட்டி விட போறா நீயும்
நாயா பேயா அலைய போற "

அகனும் சிரித்தபடி "அது அலையும் போது பார்க்கலாம்"


இப்படி இவர்கள் சம்பாஷணை நடுவே கூரையில் ஏதோ
கற்கள் விழுவது போல் சத்தம் கேட்டது. முதலில் அதை
கருத்திற்கொள்ளாமல் இருந்தவர்கள் பிறகும் தொடர்ந்து
சத்தம் கேட்க,

'யாரது?' என்று எரிச்சலில் வெளியே வந்து பார்க்க
இவ்வளவு நேரம் கூரையில் விழுந்தது கற்களல்ல
மாங்கொட்டைகள் என்று அறிந்து கொள்ளும் வண்ணம்

தூரத்திலிருந்து எறியப்பட்ட மாங்கொட்டையொன்று

தரனின் தலையை நச்சென்று பதம் பார்த்தது.

அதை கண்டுகொண்ட பூவரசி பயத்துடன்,

"அடியே! எழிலி"

"என்னடி? "

"நான் சப்பிப்போட்ட மாங்கா கொட்ட
அந்த மைதா மாவு மூஞ்சன் மண்டைல நச்சுனு
விழுந்துருச்சுடி"

"உசுரோடதானே இருக்கான்"

"அப்டி தான்டி நினைக்குறேன்"

"அப்போ பிரச்சினையில்ல" என்றாள் எழிலி அலட்சியமாக

" இப்போ எங்கடி சப்பி
போட்ட மாங்கொட்டையெல்லாத்தையும் வீசுறது? " என்றாள் பூவரசி
கேள்வியாக

"எவனாவது மாங்கா மடையன் மாட்டுவான் அவன் தலையில தான் உண்டிகோலிருக்குள்ள?"
என்று எழிலி யோசனையாக கேட்க

"இருக்குடி ஏன் கேக்குற ?" என்றாள் பூவரசி கேட்க

"சும்மாவே இந்த பக்கம் பேய் பிசாசு இருக்குனு
கதையிருக்கு "

"அப்டினா காத்து கருப்பு தானே ?"

"லூசு மூடிட்டு கேளு ஒரு மாசம் முடிய மட்டும் யாரும் இந்த
பக்கம் வரக் கூடாது இப்போ நாம என்ன பண்றோம்னா
மரத்து மேல ஏறி இங்க துரை வீட்ல வேலை செய்ற

மாடசாமி,முத்தன், கருப்பன் எல்லாரும் ஓடி வருவாங்க அந்த நேரம்
அவனுக பெயர சொல்லி பேய் மாதிரி பேசியும்
சிரிச்சும் பயமுத்துறோம் " என்றாள் எழிலி கண்கள் மின்ன

"எனக்கு தான் அப்டி பயங்கரமா பேச வராதேடி " என்றாள் தொய்வாக

"யாரு உன்ன பேச சொன்னா? உண்டிக்கோல்ல ஒவ்வொரு
மாங்கொட்டை புளியங்கொட்டைனு வச்சு குறி பார்த்து
அடிக்கிற புரிஞ்சதா?"


சரி சரி அப்பிடியே செய்றேன்
இருவரும் தாவணி முந்தானையில்
மாங்கொட்டைகளையும் புளியங்கொட்டைகளையும் முடிந்துக்
கொண்டு ஆள் மறையக் கூடியளவு அடர்ந்த மரங்களுள்ள
பகுதியில் ஏறி அமர்ந்துக் கொண்டனர்

எழிலியின் கணிப்பு படி வேலையாட்கள் மூவரும் முன்னே வர

அவர்களுடன் சேர்ந்து அகனும் தரனும் பின்னே வர ,

"என்னடி இது மைதாமாவு மூஞ்சனும் புல்லுக்கட்டு மண்டையனும்
சேர்ந்து வாரானுக" என்று பூவரசி யோசனையாக கூற

"நல்லதுக்குதான்டி அவனுக மட்டும் வாய திறந்து பேய் இருக்குனு
சொன்னா ஊரே நம்பிரும் நாமளும் ரெண்டு மூணு கட்டுக்கதைய
பரப்பிட்டா எவனும் இந்தப் பக்கம் வரமாட்டானுக நிம்மதியா
காட்டு மங்கை புளியங்காய்னு தின்னலாம் " எழிலி குஷியாக கூற

"என்ன கருப்பா சௌக்கியமா?" என்றாள் பயங்கரமாக சிரித்தபடி
ஒரு மாங்கொட்டை முத்தன் தலையில் பறந்து வந்து விழ .

கருப்பானோ கோபமாக,

"ஏய் எந்த சிறுக்கி மவ என் பெயர சொல்லி கூப்புட்ற வந்தேன் ஆஞ்சிப்புடுவேன்"

"அப்படியா போன வாரம் தான் என் புருஷன் என்னிய அடிச்சே கொன்னான் "

"யாரு யாரது பயம்காட்ரியா எந்த பொடிக் கழுதை அது ?" பயத்தில்
கருப்பன் உளற

"நாந்தேன் சரசு" என்று கொடூர குரலில் எழிலி கூற

"எ ....எந்த சரசு" என்று தந்தியடித்தபடி கருப்பன் கேட்க

எழிலியோ நக்கலாக, "நொந்த சரசு போன வாரம் புளியம்மரத்துல தூக்கு மாட்டிக்கிட்ட சரசு"
என்று சிரித்தபடி ஆண் குரலிற்கு மாற்றினாள்.

எழிலி பேச பேச பூவும் புளியங்கொட்டையாலும் மாங்கொட்டையாலும்
ஆண்கள் ஒவ்வொருவரையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள்

"என்ன முத்தா நான் இப்போ யார் ஒடம்புல இருக்கேன்னு ஊர்
பக்கம் போய் கண்டுபிடிக்கிறது"

"யாரு நீ ?" என்றான் பயந்தபடி முத்தன்

"ஹா உங்கொப்பன் "

"ஒழுங்கா சொல்லு யார் நீ ?" பயம் கலந்த கோபத்துடன்

எழிலியோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியப்படி "என் பேர சொல்லித்தானே
வேலாயி மக லட்சுமி உச்சி முடிய புடுங்குன" என்றாளே பார்க்கலாம்

"சே சே.... செங்கமலம்" என்றபடி அங்கு சேறு நிறைந்திருந்த குழிக்குள் விழ
நண்பிகளிருவருக்கும் ஒரே சந்தோஷம்

"ஐயா! ஐயா! உண்மைலயே பேய் தான் போலுங்க"

சத்தம் வந்த திசையை
யோசனையுடன் நோக்கியபடி நின்றிருந்த இருவரிடமும் சொல்ல

"எப்படி சொல்ற?" என்ற அகனிடம்

"யாரவது பகிடிக்கு செஞ்சா உங்க ரெண்டு பேரையும்
அடிக்க மாட்டாங்க எங்கள வேணா அடிப்பாங்க"

"ஏன் ஊர்ல ரெண்டு குட்டி சாத்தானுக அலையுங்க அதுக
ரெண்டும் வெளில சுத்தி திரிஞ்சிருந்தாவென்னா உங்க
ரெண்டுபேரில்ல பேய்க்கே பேய் காட்டிருக்குங்க அதுக ரெண்டு
தொல்லையும் கொஞ்ச நாளைக்கு இருக்காது" என்றது
தான் தாமதம்


மாடசாமி தலையில் மாங்கொட்டைக்கு பதிலாக பெரிய மண்ணாங்கட்டி
விழுந்தது

இன்னும் போகலயா என்று ஒரு ஆண் குரல் கர்ணகொடூரமாக உறும
எல்லாரும் விழுந்தடித்து ஓடி விட்டனர்.

எல்லாரும் போய்விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு`
நண்பிகளிருவரும் கீழே இறங்கினர் .


"மாடசாமி உனக்கு இருக்கு" என்றாள் பூவரசி கோபமாக

"யார பார்த்து குட்டி
சாத்தானுக சொல்றான்?" எழிலி நாசி விடைக்க

"உங்க ரெண்டு பேரையும் பார்த்து தான்" கோரசாக ஆண்குரல் பின்னாலிருந்து
ஒலிக்க


தோழிகளிருவரும் ஒருவரையொருவர்
அணைத்துக் கொண்டனர்.

பூவரசியோ, "ஏய் காத்துகருப்புடி பின்னால திரும்பினா புடிச்சிட்டு
போயிரும் எழிலி "

"ஏய்! அரைவேக்காடு காத்துமில்ல கருப்புமில்ல அந்த மைதா மாவு
மூஞ்சனும் புல்லு கட்டு மண்டையனும் திரும்பி பாருடி" என்றாள் கடுப்பாக

"அட ஆமா ! துரை பங்களா கண்டுபிடிச்சிட்டிங்களா ரொம்ப
நேரமா தடுமாறுறீங்களா ?" என்றாள் பூவரசி நீட்டி முழக்கி

"துரையா யாரது ?" என்று தரன் புருவமுயர்த்திக் கேட்க

"நீங்க தான்" என்றாள் பூவரசி உடனடியாக

எழிலியோ சமாளிக்கும் பொருட்டு "சரியா சொல்லுடி இறா மீசைக்காரரு பெரிய துரை
மைதா மூஞ்சு ப்ச் மத்தவரு சின்ன துரை "

"அடிங்க என்ன நக்கலா?" என்று அகன் கிட்டே வர

"இல்லையே ஏதோ தெரியாம பண்ணிட்டோம்

நீங்கப்பாட்டுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்தா
தப்பிக்க அப்டி செஞ்சோம் பேய்யிருக்குனு

சொன்னா இங்க யாரும் வரமாட்டாங்க நாங்களும்
இங்க சுத்திட்டு சமத்து பிள்ளையா வீட்டுக்கு போயிருவோம்
தயவு பண்ணி யார்ட்டையும் சொல்லிறாதீங்க" என்று எழிலியும்
பூவும் ஒப்புவிக்க

ஆண்களிருவரின் பார்வையும் கணவன் பார்வையாக மாறி
அவர்களை வஞ்சனையில்லாமல் ரசித்தது.

அகனோ,"சரி நாங்க யார்ட்டையும் சொல்ல மாட்டோம்
ஆனா நீங்க ஒன்னு செய்யனுமே" என்றான் கைகளை மார்புக்கு
குறுக்காக கட்டியபடி

"என்ன செய்யனும் ?" என்றார்கள் இருவரும் ஒரு சேர


"இந்த ஊர சுத்திக் காட்டணும்

லயத்துக்கு உள்ள போக வெளிய போக எத்தன
வழியிருக்கு எல்லாம் டவுனுக்கு இங்கயிருந்து
போக எத்தன வழி வர எத்தனவழி எல்லாம்
காட்டணும் "

"பண்ணிரலாமுங்க ஆனா இப்ப யாரவது
பார்த்தா தப்பா நினைப்பாங்க நாங்க
ஒரு மாசம் கழிச்சு" என்று தொடங்க

" யோசிச்சு நாளைக்கு இங்க வா எப்பன்னு
நான் சொல்றேன்" என்றபடி அகனும் தரனும் நகர

இருவரும் மண்டையை மண்டையை உருட்டினாலும்
எழிலிக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் உள்மனது
கூற எல்லாருக்கும் மட்டும் தெரிந்த பாதையை மட்டும்
காட்ட வேண்டும்.தனக்கு தெரிந்த சில பாதைகளை
இவனுக்கு சொல்லக் கூடாது. என மனதில் நினைத்துக்
கொண்டாள்.

எழிலிக்கு ஏனோ அகன் மேல் சந்தேகம்
வந்தது. இவன் கேட்பது எதுவும் அவளுக்கு
சரியாகப்படவில்லை.




இன்று

ஒருவாறு பஸ்ஸை பிடித்து நண்பிகளிருவரும் இரண்டு மணிநேர
பிரயாணத்தின் பின்னர் கண்டி மாநகரை அடைந்திருந்தனர்.

மணி மூன்றை காட்ட வாயிறு என்னை கொஞ்சம் கவனியென்
என்றது.

"லோச்சு வயித்துக்குள்ள எலி கத்துதுடி காலைல
குடிச்ச டீயோட சரி உள்ளுக்குள்ள ஒரு பிஸ்கெட் கூட
போகல இப்டியே போனா அந்த தடி தாண்டவராயன்க
வந்து தூக்கிட்டு போயிருவானுகடி" என்றாள் சுரத்தையில்லா
குரலில்

லோச்சுவோ,''வாய கழுவு வா அந்த பக்கம் போனா டெவோன்
பேக்கரி இருக்கு காசு தான் இருக்கே சாப்பிடுவோம்'' என்றாள்


இருவரும் கையில் வைத்திருந்த காசை பார்த்தார்கள்
ஓரளவு நிறையவே பணமிருக்க நிம்மதியாக சாப்பிட்டு
முடித்தனர்.

ஹோட்டலில் இருந்தவண்ணம்,

"இப்போவாச்சு சொல்லுடி அவன்க ஏன் நம்மள
துரத்துறானுக ப்ளீஸ்டி ஏன் அவன் என்ன
பார்த்து பூவுனு சொன்னான் ஏன்டி ?

நம்மள சுத்தி எல்லாம் மர்மமாவே நடக்குது
நேத்து வரை நான் பார்த்த லோச்சு வேற ஊஞ்சல்
கிட்ட போனதுக்கப்புறம் உள்ள லோச்சு வேற

அதுவும் அந்த ஸ்டெல்லாவோட அத்தான்
ஒரு விசித்திரமான ஜந்து எனக்கு
பைத்தியம் பிடிக்குதுடி ப்ளீஸ்
ஏதாவது சொல்லு" என்றாள் குழப்பமாக

லோச்சுவோதயங்கி தயங்கி

"உனக்கு புரியிற
மாதிரி சொல்லனும்னா இது
நம்ம அவனுகள பார்க்குற
முத தடவை கிடையாது" என்றாள்

"அப்டினா ஏற்கனவே அவனுகளுக்கு
நம்மள தெரியுமா ? நம்ம தான் யார்
வம்பு தும்புக்கும் போகமாட்டமே
அப்புறம் எப்டி ?" என்று கேட்டாள்
ஒரு வித குழப்பத்துடன்

"எனக்கு எப்டி சொல்ல்றதுனு
தெரில கேட்க விசித்திரமாயிருக்கும்
ஆனா இது தான் உண்மை"

"என்னடி ஏன் புதிர் போட்ற ?"

"இது நம்மளோட முற்பிறவி சம்மந்தப்பட்டது"

"வாட் யூ மீன் ? ஆர் யூ சீரியஸ்லி இதெல்லாம்
சினிமால தானே நடக்கும்
நம்ம வாழ்க்கைல எப்டி" என்றாள் குழம்பியபடி

"இங்க பாரு அனி எனக்கு இப்போ
இவ்வளவு தான் சொல்ல முடியும்

நீ கேட்டதால நீ இதோட என்ன நம்பாட்டியும்
பரவால்ல பொய் [பேசுறேன்னு சொன்னாலும்

பரவால்ல ஆனா இது தான் உண்மை
ரொம்ப கவனமாயிரு இன்னையோட என்
பிரென்ட்ஷிப் வேணான்னு நினைச்சிருப்ப"

என்றது தான் தாமதம், அனிதாவுக்கு கோபம்
கோபமாக வந்தது.

"இப்டி கதைச்சா உன்ன கடிச்சு வச்சிருவேன்
உனக்கு ஆஸ்த்திரேலியா யூனிவர்சிட்டி தான்
புட் அண்ட் டெக் பண்ண கிடைச்சிருக்குனு தெரிஞ்சதும்


அப்பாஅம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி நானும் எம்பிபிஎஸ்
ஆஸ்திரேலியா படிக்க போகணும்னு உன்
யூனிவர்சிட்டிலயே அட்மிஷன்
வாங்கினா நீ என்ன கழட்டி விட பாக்குறியா ?
போடி உன் கூட டூ" என்றாள் உதட்டை சுழித்தபடி

"அப்படி இல்லடி உனக்கு ஆபத்தா முடிஞ்சுரும்னு
பயத்துல தான்" என்றாள் லோச்சு அவசரமாக

போதும் நிறுத்து என்று சைகை செய்த அனி,

''எத்தன ஜென்மம் எடுத்தாலும் சரி நம்ம
ரெண்டு பேரும் எதையும் சேர்ந்தே
பேஸ் பண்ணா எல்லாம் நல்லபடியா
தான் முடியும்

கண்டதையும் யோசிச்சு மூளைய
வீணாக்காத அங்கிள் ஆன்டிக்கு
கால் பண்ணு இனி இங்கயே
ஷாப்பிங் முடிச்சுட்டு பிலைட்
ஏற ரெடியாகுவோம் "
என்று நண்பிகளிருவரும் ஆரத்தழுவிக்
கொண்டனர்.

அபிஜித்தனின் பங்களா

அபிஜித்தனோ கூண்டுக்குள் அடைப்பட்ட புலியாய் தன்
சினத்தை அடக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

''சனா, சனா நான் சொன்னத கேக்கலயில்ல அதற்கான
பின்விளைவுகள் ரொம்ப மோசமாயிருக்கும் '' என்றபடி
பூச்சாடியை தரையில் தள்ளிவிட்டான்.

படிக்க ஆஸ்திரேலியா போறியா போ போ
பிலைட்லயே வந்து தூக்குறேன். என் இடத்துக்கு

வந்து என் கண்ணுலயே விரல விட்டு ஆட்டியிருக்க
பார்க்கலாம்டி

அடுத்து எப்டி தப்பிக்கிறன்னு ஒரு வாரத்துக்கு
லவ் டார்ச்சர் பண்ணாம இருக்கேன் அதுக்கு பிறகு

தானிருக்கு பார்த்துக்கிறேன்டி உன்ன'' என்று
ஆத்திரமாக கத்திக் கொண்டிருந்தான்.
****************************************

இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு தெரியும்
Post in thread 'காலகேயனின் காதல் வதம்
கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/காலகேயனின்-காதல்-வதம்-கருத்து-திரி.167/post-3564
எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 
Last edited:
அத்தியாயம் 6(b)


காலையிலேயே லோச்சனாவை காயப்படுத்தி விட்டு பக்டரிக்கு வந்த அபிஜித்தனுக்கோ வேலையில்
கவனம் செலுத்தமுடியவில்லை. ஏனென்றால் அவனுக்கு தெரியும் தாரா எவ்வளவு பெரிய
பிடிவாதக்காரியென்று அதுவும் இன்றைய நாள் வாழ்க்கையில் நடந்த கொடூரங்கள்
தன் மனதையே இவ்வளவு தூரம் பாதிக்கிறதென்றால் பாவம் அவள் என்ன பாடுபடுகிறாளோ
என்று நினைத்தவன் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்ப நினைத்திருந்தாலும்
வேலைப்பளு கழுத்தை நெறிக்க பாக்டரியில் இருந்தாலும் வேலையில் கவனம் செலுத்தமுடியாமல்
அமர்ந்திருந்தவனை பார்க்க பைரவ் வந்து சேர்ந்தான். பைரவ் என்றவுடன் உடனடியாக
பார்க்க அனுமதி கொடுத்தவனின்

அறைக்கதவை திறந்து கொண்டு வந்தவன்

''அபி அந்த வானரங்க ரெண்டும் தப்பிச்சு போயிருச்சுங்கடா'' என்றான் அடக்கப்பட்ட
கோபத்துடன்

அபிஜித்தனுக்கோ முதலில் புரியாமல், ''எந்த வானரங்கடா ?''

''உன் வீட்லயிருந்த வானரங்க தான்'' என்றான் பைரவ்

''யாரு லோச்சனாவும் அனிதாவுமா இருக்கதேடா மாரியோட சேர்த்து
தோட்ட வேலை செய்றவங்க கிட்டத்தட்ட பத்து பேர்
இருக்கும் போது எப்பிடிடா ?'' என்றான் தலையை பிடித்துக் கொண்டு

பைரவ் நடந்த விடயங்களை கூற,

''என்னது ?'' என்று வெகுண்டெழுந்துவிட்டான்.

''மாரீ.....'' என்று பல்லைக் கடித்துக் கொண்டு கத்த,

அறைக்கு வெளியே நின்றவர்'' ஐயா கூப்பிட்டிங்களா ?''
என்று ஓடி வர,

எப்போதும் தற்காப்புக்காக தன் கூடவே வைத்திருக்கும் துப்பாக்கியை
எடுத்தவன்,

''பைரவ் உண்மையிலேயே சாகப்போறவங்களுக்கு செத்து போனவங்க தெரிவாங்களா
தெரியமாட்டாங்களானு ரிசெர்ச் பண்ணி பார்த்துருவோமா ?'' என்று ஒரு மார்க்கமாக அபி
வினவ

"எப்புடிடா ?'' என்றான் கேள்வியாக

''மாரி தானே சொன்னான் செத்தவங்க சாகப்போறவங்க கண்ணுக்கு தெரிவாங்கனு''

"ஆமா சொன்னான் " என்றான் பைரவ் புரியாமல்

"அப்ப அவன்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கலாம்"

''மாரி உனக்கு இப்ப யார்யாரெல்லாம் கண்ணுக்கு தெரியிறா ?" என்று ஒற்றை
புருவமுயர்த்தி வினவ

அவரோ அப்பாவியாக, "ஐயா நீங்களும் பைரவ் ஐயாவும் தெரியிறீங்க "

"சரி! அப்போ சாகப்போறவங்க கண்ணுக்கு செத்தவங்க தெரிய மாட்டாங்கடா
ஏன்னா எனக்கு இப்போ வார ஆத்திரத்துக்கு இவன்தான் சாகப்போறான் "

"ஐயா! என்னய ஒன்னும் பண்ணிராதீங்க நானே புள்ளகுட்டிக்காரன்"

அதையெல்லாம் காதில் வாங்காமல் அருகில் நடந்து வந்தவன் நெற்றிபொட்டில்
துப்பாக்கியை வைத்து அழுத்தியபடி ,

"இப்போ யாராவது தெரியிறாங்களா ? கண்ண நல்லா தொறந்து பாரு '' என்று
அடிக்குரலில் சீற

அவரோ அபியின் செயலில் விக்கித்து போய் உறைந்து நிற்க,

பைரவ் அபியின் கையை பிடித்து கீழே இறங்கியவன்.

"டேய் மச்சான் இவன பிறகு பார்த்துக்கலாம் அந்த குட்டி சாத்தானுக
ஒழுங்கா ஊர் போய் சேர்ந்துச்சா இல்லையானு பாப்போம் வா"

என்று கூறி ஒருவாறு மலையிறக்கினான்

தன் அழைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைப்பை ஏற்படுத்தியவன்
சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு தனது நாற்காலியில்
சாய்ந்தமர்ந்தவன் கண்களுக்குள் தன்னவள் பிம்பங்கள்

அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே அவன் அழைப்பேசிக்கு
யாரோ அழைக்க உடனடியாக அழைப்பை ஏற்று கதைக்க
ஆரம்பித்தான்.

''ஹலோ!''


"அப்டியா ! ஓகே"

"இல்ல இல்ல வேணாம்"

"நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும் ''


"அவங்க வீட்டுக்கு சேப்பா ரீச் ஆகிட்டாங்களானு
போன் பண்ணி சொல்ற" அழைப்பை துண்டித்தவன்,

கேள்விப்பட்ட விடயங்களில் கொதிநிலையின் உச்சத்திற்கே சென்று
விட்டான். மேசையிலிருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி சுவற்றில்
விட்டெறிந்தான்.


அபியின் நடவடிக்கையில் குழம்பி போன பைரவ்

"என்னடா ஆச்சு ? ஏதும் பிரச்சினையா ?" என வினவ

"இல்லடா ரெண்டு அரை லூசும் தப்பிச்சாச்சுனு நினைச்சு
கண்டில ஷாப்பிங் பண்ணிட்டு சுத்துதுகளாம் அனிதா

கூட பரவாயில்ல உன்ன பத்தின எந்த நியாபகமுமில்ல
ஆனா அந்த சனாவுக்கு எல்லா நியாபகமுமிருந்தும் ஏன்டா
என்ன மிஸ் பண்ணல" என்று கவலை தோய்ந்த குரலில் கூற

பைரவோ, ''நீ என்ன லூசா ? நீ பண்ணி வச்ச வேலைக்கு
உன்ன பார்த்தாலே அந்த பொண்ணு ஓடிறாம இருக்குறதே பெருசுடா'' என்றான்

"நான் என்ன அப்டி பண்ணிட்டேன்?" என்று யோசனையாக வினவ

பைரவுக்கோ இவனை என்ன செய்தால் தகும் என்ற நிலை

''நீ என்ன பண்ணல ?'' என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்

''அவளும் அதே தான்
கேக்குறா அன்னைக்கு நடந்த பிரச்சினைக்கு நான்
மட்டுமா காரணம் ? !!

அவ மட்டும் அன்னைக்கு நான்
சொன்னத கேட்ருந்தா இவ்ளோ பெரிய பிரச்சினையில்ல

சரி அவ்ளோ பிரச்சனை நடந்த நேரம் நான் கேட்ட கேள்விக்காவது
பதில் சொல்லிருந்தா அவளுக்கும் பிரச்சினையில்ல எனக்கும்
இழப்பில்ல " என்றபடி பொங்கி வந்த அழுகையை அடக்கிக்
கொண்டான்


"யப்பாடேய் எப்பிடிடா? உன்னால மட்டும் குற்றவுணர்ச்சிங்குறது
கொஞ்சம் கூட இல்லாம கதைக்க முடியுது"

அபியோ கொஞ்சம் இறங்கி வந்தவனாக,

"சரி நான் பண்ணத தப்புன்னு ஒத்துக்குறேன் அதுக்குன்னு
இப்ப நான் ஒன்னும் இந்த பிறவியில தப்பு பண்ணலயே!

அவ அன்னைக்கு மட்டும் நான் கேட்ட கேள்விக்கு பதில்
சொல்லிருந்தா நான் எல்லாத்தையும் சரி பண்ணிருப்பேன்" என்றான் வருத்தமாக

'கிழிச்சிருப்ப, நான் சொன்னத கேட்ருந்தா உருப்பட்டுருப்ப
ஆனா இல்லாத பைத்தியக்காரத்தனத்தெல்லாம் பண்ணிட்டு
இப்போ தான் அவ என்ன மிஸ் பண்ணலன்னு வருத்தப்படுற
லூசு மாதிரி ' என்று மனதுக்குள் நினைத்துக் கொள்ள

நிலைமையை இலகுவாக்க என்று நினைத்து அவனை மேலும்
வெறியாக்கும் விதமாக பைரவ்,

"ஆனா ஒன்னு மச்சான் பெருசா என் கோட்டைய தாண்டி
ஒரு ஈ காக்கா என் அனுமதியில்லாம வெளிய
போகமுடியாதுன்னு சொன்ன பாரு " என்று சொல்லிவிட்டு
சிரிக்க

சற்று தணிந்திருந்தவன் மீண்டும் மாரி மீது
பார்வையை திருப்ப போக அவரோ
ஆளை விட்டால் போதுமென ஓடியே விட்டார்.

பைரவுக்கோ தான் செய்து வைத்திருக்கும் காரியத்தின் வீரியம் புரிய

''சரி சரி அந்த ஆள விடு பாவம்
அடுத்து என்ன பண்ணலாம்னு
யோசி'' என்று திசை திருப்ப முயல

அவன் முயற்சியை புரிந்து கொண்டவன் போல் சட்டென

"அஞ்சு வருஷம் நோ
பே லீவு போட்டுரு"

என்றபடி
ஒரு பிலைட் டிக்கெட்டையும்
அப்பொய்ன்மெண்ட் ஆர்டரையும்
தூக்கி போட்டவன்

''நாம ரெண்டுபேரும் அடுத்த வாரம்
ஆஸ்திரேலியா கிளம்புறோம் யூனிவர்சிட்டி ஒப்
சிட்னில ரெண்டு ப்ரோபசர் வேலையிருக்கு
கிளம்பு போகலாம்'' என்றான் கேசுவலாகா

பைரவுக்கோ இவன் என்ன செய்கிறான்
என்ன சொல்கிறான் என்று புரியாமல்,

என்னது லூசா நீ? நான் என்ன
கேக்குறேன் நீ என்ன சொல்ற?

''எல்லாம் தெளிவா புரியும் அப்போயின்மெண்ட்
ஆர்டர எடுத்துக்கோ நான் வீட்டுக்கு
கிளம்புறேன் அடுத்து மாரிய ரெண்டு
நாளைக்கு பிறகு என் வீட்டுக்கு அனுப்பு
இல்லாட்டி அவன் புள்ள குட்டி பாவம்ல"

என்றபடி கண்ணடித்தவன் அவன் பதிலை கேட்க்காமலே
பக்டரியை விட்டு கிளம்பி போக

இப்போது ஒரு விடயம் மட்டும் பைரவுக்கு தெளிவாக புரிந்தது.
கடைசி வரை அவன் தனியாக
தான் எல்லா பைத்தியங்களையும் சமாளிக்க வேண்டுமென்பது

வீட்டிற்குள் நுழைந்த அபிஜித்தனுக்கோ அத்தனை கோபம் தான்
சொல்லி கேட்கவில்லையென்கிற கோபம் ஒரு பக்கமென்றால்
நான்கு பேர் கேலி செய்யும் விதமாக நடந்துகொண்டாளே என்று
நினைக்கும் போது எரி நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல்
அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

அவன் ஆத்திரத்தை மேலும் பல மடங்காக்கும் பொருட்டு அவனது தந்தையிடமிருந்து
அழைப்பு வர 'இவரு ஏன் இப்போ கால் பண்றாரு?' என்று யோசித்தபடி அழைப்பை
ஏற்று காதில் வைத்தவன்,

''ஹாலோ சொல்லுங்க என்ன விஷயம்?'' என்றான் கடுப்பாக

அவரோ அவன் கோபத்திற்கு தூபம் போடும் விதமாக

"என்னடா உன் கூட வாழ முடியாதுனு அந்த பொண்ணு ஓடி போய்ட்டாளாமே"
என்றபடி சிரிக்க

அவனோ பல்லை கடித்தபடி,
''இத சொல்லி சிரிக்க தான் கொழும்புலயிருந்து கால் பண்ணீங்களா ?''

அதை சற்றும் பொருட்படுத்தாமல், "என்னடா? மொத்த காட்டுமிராண்டி தனத்தையும்
அவகிட்ட காட்டுனியா ஒரே நாள்ல ஓடி போய்ட்டா"

"இங்க பாருங்க என்னத்துக்கு கால் பண்ணீங்க அத மட்டும் சொல்லுங்க தேவையில்லாம
புருஷன் பொண்டாட்டி பிரச்சனைல தலையிடாதீங்க சொல்லிட்டேன் " என்றான் அடிக்குரலில்

''என்னடா ?அரை பைத்தியமா போட்டோவ வச்சு தாரா தாரானு கொஞ்சிகிட்டருந்தவன்
முழு பைத்தியமாகிட்டியா?'' என்றார் நக்கலாக,

''இங்க பாரு உனக்கு இவ்ளோ தான் மரியாத சொல்ல வேண்டியத சொல்லிட்டு
போன வை இல்ல சொந்த அப்பன்னும் பார்க்க மாட்டேன் வந்தது ரெண்டு
அப்பு அப்பிருவேன் பார்த்துக்க''



என்றபடி அருகிலிருந்த கண்ணாடி சிலையை
தள்ளி விட கண்ணாடி சிலை உடைந்த சத்தத்திலேயே தெரிந்து கொண்டார்
அபியின் ஆத்திரத்தின் அளவை

அவரோ நிதானமான குரலில், "ஓகே ஓகே நம்ம தாருணி இருக்கால்ல நம்ம குடும்பத்துக்கேத்த பொண்ணு
ஆண்ட்ருஸ்ட்ட பேசவா?"

என்றது தான் தாமதம்,

"பேசி அவ என்ன மறுபடியும் பைத்தியம்னு முத்திரை குத்தவா? அப்டி உங்க குடும்பத்துக்கேத்த பொண்ணுன்னா உங்க பேச்சுக்கு ஆடுற பசங்க ரெண்டு பேர்
இருக்காங்கல்ல அவங்க யாருக்காவது கட்டிக்கொடுங்க இல்ல
நீங்களே அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரிதான் ''என்றான் சீற்றமாக


''நமக்குன்னு ஒரு மரியாதையிருக்கு அதனால அந்த பொண்ண இந்த
வீட்டு மருமகளா நான் ஏத்துக்க மாட்டேன் அந்த நானு ஓயா எஸ்டேட்ட
தவிர என் சொத்துல இருந்து அஞ்சு சதம் தரமாட்டேன்'' அவரும் சற்றும்
குறையாத ஆத்திரத்துடன்


அவனோ நெற்றியை நீவியபடி, ''நான் உங்க கிட்ட என் பொண்டாட்டிக்கு உங்க வீட்டு மருமக அந்தஸ்த்து
வேணும்னு கேட்டனா ? அப்பறோம் நீங்க உழைச்ச உங்க சொத்துல எனக்கு ஒத்த காசு தேவையில்ல
நீங்களே வச்சு சாம்பூராணி காட்டுங்க''

''என் மானம் மரியாதை அந்தஸ்த்து எல்லாம் என்ன ஆனாலும்
பரவால்ல அப்டி தானே'' அவர் மீண்டும் கோபமாக

''உங்க மானம் மரியாதை மண்ணோடு மண்ணா போனாலும்
எனக்கு பிரச்சினையில்ல என் தேவை சனா மட்டும் தான்

அப்டி மானம் போச்சு மரியாதை போச்சுன்னு அழனும்னா
பெரிய சவப்பெட்டி ஆர்டர் போடுறேன் நடுவீட்ல வச்சு
கூட்டமா சேர்ந்து ஒப்பாரி வைங்க ஐ டோன்ட் கேர்''



அழைப்பை துண்டித்தவனை இன்னும்
வெறியாக்கும் பொருட்டு லோச்சனாவின் படம்
அவன் வரைந்த படம் கண்களில் தட்டுப்பட,


''தா....ரா ....'' என்று வீடே அதிரும் வண்ணம் கத்திவிட்டான்.

''ச்சைக் உனக்கிருக்குடி போறவன் வாரவனெல்லாம் என்ன பார்த்து
சிரிக்கும்படி செஞ்சிட்டல்ல இருக்குடி ஆஸ்தேரேலியாவா போற போ
போ எங்க போனாலும் என்ன தாண்டி எங்க போகமுடியும்னு
பார்க்குறேன்''

என்றபடி மதுபானத்தை வெறும் வயிற்றில் காந்த காந்த குடித்து`
தள்ளியவனின் வெறி அடங்கியபாடில்லை

நான் அவ்ளோ சொல்லியும் கேக்கலயில்ல என்ன பார்த்தா கையாலாகாதவன்
மாதிரி தெரிஞ்சிருக்கு உனக்கு அப்பயும் நானில்லாம சந்தோஷமாயிருக்கல்ல
விடமாட்டேன்டி

என்று கத்திக்கொண்டே உறங்கியும் போனான்.


என்ன லோச்சுவின் நிலைமையோ மோசமாகி தான் போனது,

'பாவம் என்ன செய்றானோ? தெரிலயே சாப்பிட்டானோ தெரில
தூங்கியிருப்பானோ'

'பசி தங்கமாட்டான் நான் சொன்னது கேக்காத கோபத்துல வயிறு முட்ட
குடிப்பான். குடிச்சுட்டு நான் வந்து சாப்பாடு செஞ்சு கொடுத்தத்தான்
சாப்புடுவான் இந்த குரங்கு புத்தி இன்னுமிருக்கோ? இல்லையோ?'

என்று அவன் நினைவுகளிலேயே லயித்திருந்தவளை பழைய
நினைவுகள் ஆட்கொள்ள

மூளையோ 'உன் தகுதிக்கு ஏற்றா போல ஆசைப் படு அவன் வேணாம்
உனக்கு போன முறை என்னாச்சுன்னு நியாபகமிருக்குள்ள' என்றதும்
அவள் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.



அன்று

எழிலியும் பூவரசியும் உணவு இடைவேளை விடும் நேரத்தை சரியாக கணித்துக் கொண்டு
சமத்து பிள்ளைகளாக வீட்டுக்குள் வந்து பதுங்கிக் கொண்டனர்.

பூவு இன்னைக்கு காலைல ஊர் பக்கம் புதுசா ரெண்டு பேர பார்த்தோம்ல
உனக்கு அவங்கள பார்த்தா சந்தேகமாயில்ல

''இல்லடி ஏன் கேக்குற ?''

''இது வரைக்கும் எத்தனையோ துரைமார் இந்த தோட்டத்துக்கு வந்திருக்காங்க
அவங்க யாரும் லயத்துக்கு போக எத்தன வழி வர எத்தன வழின்னு கேட்டதுமில்ல

பார்த்ததுமில்ல நம்ம கொழுந்து பறிச்சு கொடுத்தோமா ? அவங்க ஆபிஸ்
தோட்டம் பாக்டரினு பார்த்துட்டு போயிருவாங்க லயம் இருக்க பக்கம்
கூட எட்டி பார்த்ததில்ல சரியா ?''

''ஆமாடி நானும் இத யோசிக்கல பாரேன் அந்த நெட்டையனுக ஏன்
இங்க சுத்தி பார்க்கணும்னு கேக்குறானுக? ''

''எனக்கும் அது தான் புரில''

''ஒரு வேளை தமிழ்க்காரங்கனால நம்மளுக்கு போக்குவரத்து
வசதியேதும் செஞ்சி கொடுக்க கேட்ருப்பாங்களோ''

''இல்லடி அப்ப ஏன் கள்ளத்தனமா நம்மள்ட்ட வந்து கேக்குறாங்க''

''ஒருவேள நம்மளுக்கு தான் எல்லா வழியும் தெரியும்னு கேட்ருப்பாங்களோ''

''இல்லடி என்னவாயிருந்தாலும் நமக்கு மட்டும் தெரிஞ்ச சில பாதைகள
சொல்லி கொடுக்க கூடாது அப்போ தான் ஏதாவது பிரச்சனைன்னா
தப்பும் மார்க்கம் கிடைக்கும்''

''சரிடி நீ சொல்றதுல ஏதோ விஷயமிருக்கு ஆனா என்னான்னு தான்
புரியுதில்ல''

என்று இருவரும் எந்தெந்த வழிகளை காட்டுவதென்று
நண்பிகளிருவரும் பேசிக் கொண்டனர்.

இன்று

''என்னடி ஒரு மாதிரி உட்காந்திருக்க ? '' நேத்ரா வினவ

'' அடுத்த வாரம் ஆஸ்திரேலியா போறேனில்ல
அது தான் கவலையாயிருக்கு '' என்றாள் வெறுமையான குரலில்

''இங்க வந்ததுலயிருந்து நீ என்னவோ மாதிரி தானிருக்க
ஏதாவது பிரச்சனையா ? தாருணிய பத்தி கதைச்சாலே
கோபப்பட்ற''

''இல்லம்மா இப்போ அவ முன்ன மாதிரியில்ல
யார் யாரோ வாரங்க பேசுறாங்க எனக்கும் அனிக்கும் தப்பாப்பட்டதால
விலகிட்டோம்'' என்றாள் பட்டும் படாமல்

யார்டி உங்கள பஸ் ஏத்திவிட்டா ?

''அபிஜித்தன் சக்ரவர்த்தி'' அவன் பெயரை சொல்லி பார்க்கும் போது
உயிர்வரை இனித்தது. ''ஸ்டெல்லாவோட அத்தான்'' என்றவள்

' எனக்கு மட்டும் பாவா' என்றாள் மனதுக்குள்

''என்ன அம்மு என்ன யோசிக்கிற ?'' என்று நேத்ரா கேட்க



''அதெல்லாம் ஒண்ணுமில்ல உங்க மடில படுத்துக்கணும்
போலயிருக்கு'' என்று படுத்துக் கொண்டாள்

''ஏன்டாமா?'' என்ன தான் பிரச்சனை

''தெரிலமா உங்கள பிரிஞ்சிருந்ததில்லயில்ல அதுதான்'' என்றாள்
சமாளிப்பாக

''அம்மு நீயும் அனியும் சேர்ந்து தானே போறீங்க அப்பறோம்
என்ன ?''

''தெரிலம்மா ஏதோ ஒன்ன பெருசா விட்டு போற மாதிரியிருக்கு''
என்றாள் விரக்தியாக

ஒரு வாரமும் ஷாப்பிங் பேக்கிங் என்று கடந்தாலும் அவளால்
மட்டும் அவன் நினைவுகளை விட்டு வெளியே வர முடியவில்லை
மனதெல்லாம் அவன் பிம்பங்கள் மட்டுமே ஒரு வாரமும்

புதுமனை புகுதல் அது இதுவென்று என்ன தான் வேலை
வேலையென ஓடினாலும் அவள் தன்னவன் நினைவிலேயே
லயித்திருந்தாள்.

இதோ புறப்படும் நேரமும் வந்து விட்டது.

''கவனமா இருந்துக்கோ நல்லா சாப்பிடு
போனவுடன ,கால் பண்ணு''

என்று பல விடயங்களை சொல்லி அனுப்பிவிட
அனியும் லோச்சுவும் சரி சரியென்று
தலையை உருட்டி கேட்டுக் கொள்ள,

லோச்சுவுக்கு மனம் கனத்தது வலி
தாங்க முடியவில்லை. ஒரு மனம் அவனுக்காக
பரிந்து கொண்டு வந்தது.

'அவன் போன ஜென்மத்துல
செஞ்ச தப்புக்கு எவ்ளோ நாள் தண்டனை
கொடுப்ப பாவம் அவன் உன்னால பைத்தியமாகி
செத்தா சந்தோஷப்படுவியா ?' என்று
அவன் நினைவுகளில் உழன்றவள்



விமானத்தில் அமர்ந்து இருக்கையில் சாய்ந்து
கண்களை மூடிக்கொண்டவள் கண்களில் கண்ணீர்
வழிய ஒரு கரம் கன்னத்தை தீண்டியது.

''ஆர் யூ மிஸ் மீ பேபி ''

என்றவுடன் கண்களை திறந்து
பார்த்தவளுக்கு சந்தோஷம் கவலை கோபம் என
கலவையான உணர்வுடன்

பாவா என்றாள்.



''என்னடி பாவா ?''அடக்கப்பட்ட கோபத்துடன் அபி கேட்க

''என்ன விட்டு ஓடி போன கழுதை தானே திமிரு பிடிச்ச
கழுதை '' என்றான் சீற்றமாக

அவனது சீற்றத்திலேயே இவன் தன் கனவல்ல நிஜம்
என்று புரிந்துக் கொண்டவள் கப்சிப்பென வாயை
மூடிக் கொண்டாள்.

''இனி மூனு வருஷம் என் லவ் டார்ச்சர தாங்கனும்
எங்கயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

மூனு வருஷம் லிவிங்க் டூ கெதர் நாலாவது
வருஷம் கல்யாணம் ஆறாவது வருஷம் மூனு
குழந்தைங்க ஓகே எப்டி என் பிளான்''

என்று ஒற்றை புருவமுயர்த்தி கண்ணடிக்க
லோச்சுவோ விக்கித்து போனாள் அவன் சொன்ன
விடயங்களில்

வதம் தொடரும் ............
*************************************

இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much

 
அத்தியாயம் 7(a )

அபியோ இருக்கையில் சாய்ந்தமர்ந்தபடி அழைப்பேசியை நோண்ட லோச்சுவோ அவனை
வைத்தக் கண்வாங்காமல் பார்க்க அவளை திரும்பி பார்த்தவன்

''என்ன இவனுக்கு எப்டி தெரியும்னு ? பார்க்குறியா'' என்று வினவினான் ஒற்றை புருவமுயர்த்தி

அவளோ நான்கு பக்கமும் தலையையாட்ட , அனிதாவோ அப்போது தான்
கழிப்பறைக்கு சென்று வெளியே வந்தவள் தன் முன்னால் நின்ற ஆறடி உருவத்தை கவனிக்காமல்
அவ்வுருவத்தில் மோதி நின்றவள்

''சாரி அங்கிள்'' என்றவள் அவனை விலக்கி கொண்டு செல்ல முற்பட

''யாரு அங்கிள் ஒழுங்கா மாமா சொல்லு'' என்று கடுப்புடன் கூற

'எவன்டா அவன்' என்று நினைத்தபடி பார்க்க அவளுக்கு தலை சுற்றிக் கொண்டு
வந்தது. அவள் வாயோ ''பார்ட் டைம் பைத்தியம்'' என்று முணுமுணுக்க ,
அவனது காதில் அவளது வார்த்தைகள் விழ

''யாருடி பைத்தியம் ''? என்று கடுமையாக வினவ

அவளோ அவனை எள்ளலுடன் பார்த்து, ''நீ தான்'' என்றாள் தலையை சரித்தபடி

''பூவு வூ ....''. என்றான் பற்களை கடித்தபடி

"நான் பூ கிடையாது அனிதா " என்றாள் கண்டிப்பான குரலில்

''அப்போ நிதா குட்டி எப்படி அழகாயிருக்கா ?'' என்றான் வாயெல்லாம்
பல்லாக

அவளது முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவள் ஏதோ சொல்ல
வாயெடுக்க அதற்குள் அங்கே வந்த விமான பணிப்பெண்கள்

''சார் மேம் உங்க சீட்ல போய் உட்காருங்க பிலைட் இப்போ
டேக் ஆப் ஆக போகுது''

என்று சொல்ல இருவரும் தங்கள் வாய் தர்க்கங்களை
தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு தங்கள் இருக்கைகளை நோக்கி
நடந்தனர்.

அங்கே இருக்கையின் அருகே சென்றவளுக்கு தங்கள் இருக்கைக்கு
பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அபிஜித்தனை பார்த்ததும்
தலை சுற்றி கீழே விழாத குறை
தான் வாய் விட்டு கேட்டே விட்டாள்

''அடியேய் லோச்சு என் லாச்சு என்னடி நடக்குது இங்க ? இந்த மைதா மாவு
மூஞ்சனும் விசித்திர ஜந்தும் இங்க என்னடி பன்றானுங்க? விடாது கருப்பு போல
இந்த கொள்ளிவாய் பிசாசுகளும் நம்மள விடாம துரத்துறானுக'' என்று எரிச்சலுடன் வினவ

இங்கு அபி பக்கத்தில் அமர்ந்த பைரவ்வோ ''மச்சான் என்ன பார்த்து பூவு
மைதா மாவு மூஞ்சன்னு கூப்புட்டா அப்போ இது அவ என்ன லவ் பன்றானு
அர்த்தம் தானே'' என்றான் வெட்க சிரிப்புடன்

''டேய் மானத்த வாங்காதடா அவ நம்மள வண்ட வண்டையா கழுவி ஊத்துறா நீ என்னன்னா
இழிக்கிற உன்னயெல்லாம் பிரெண்டுன்னு கூட சேர்த்துட்டு சுத்துறேன் பாரு என்ன
சொல்லனும்'' என்றவாறு தலையிலடித்துக் கொண்டான்.

லோச்சுவோ நகத்தை கடித்தபடி எதையோ தீவிரமாக சிந்தித்தபடியிருக்க
அனிதாவோ முழங்கையால் லோச்சுவையிடித்து

''ஏண்டி பிலைட் லேண்ட்டாக போகும் போது உன் நெஞ்சுவலி ஆக்ட்டிங்க
போட்டு இவங்கள்ட்ட இருந்து தப்பிச்சுருவோமா ?''

''லோச்சனாவோ நீ அந்த மைதா மாவு மூஞ்சனுக்கு ஏத்த ஜோடி தான்''

''ஏன்டி?'' என்றாள் அதிர்ச்சியாக

''அவன் முழு லூசு நீ முக்கால் லூசு கடுப்ப கெளப்பமா வாய மூடு''

''அப்டி இல்லன்னா என்ன பண்ணலாம்டி?''

''இனி ஒன்னும் பண்ண முடியாது எயிட் ஹவர்ஸும் நல்லா
தூங்கு''

''அப்போ சாப்பாடு'' என்க

லோச்சனா திரும்பி இவளை விசித்திரமாக பார்க்க,

''அப்போ எனக்கு பசிக்குமில்ல''

இன்னும் கொஞ்ச நேரத்துல தருவாங்க சாப்பாட்ட உள்ள
தள்ளிட்டு உன் மானங்கெட்ட மூளையவும் மூட்ட கட்டி வச்சுட்டு
தூங்கு என்ன தொந்தரவு பண்ணாத என்றவாறு கண்ணை மூடிக்கொள்ள

அனிதாவோ மெதுவாக பின்னால் திரும்பி பைரவ்வை பார்க்க
அவனோ பட்டிக் காட்டான் முட்டாய் கடையை பார்த்தது போல்
அனிதாவை பார்க்க

அவளோ'' ச்சீ'' என்றவாறு முன்னால் திரும்பிக் கொண்டாள்.

லோச்சனாவின் மனதில் பழைய ரணச்சுவடுகள், அவளை மீறி கண்களிலிருந்து நீர்
வழிந்தது.

அன்று ....
காட்டிலிருந்து வந்தபடி நண்பர்களிருவரும் பேசவாரம்பித்தனர்.

தரேன்,''டேய் அந்த ரெண்டு பொண்ணுங்களும் நமக்கு வழியெல்லாம் காட்டிக்
கொடுக்கும்னு நினைக்குற எனக்கு என்னவோ ரெண்டும் கொஞ்சம் படிச்சிருந்தா
இந்த ஊரையே விலை பேசி வித்துருங்கன்னு தோணுது '' என்றான் சந்தேகமாக

அகனோ ஆர்ப்பாட்டமாக சிரித்தபடி, '' டேய் நீ நினைக்குற அளவுக்கெல்லாம்
அதுங்க ரெண்டும் ஒர்த்தில்லடா ஏதோ ஊருக்குள்ள குறளி வித்தை காட்டுற கூட்டம்
அதுக்கு பயந்தா நாளைக்கு ஊருக்குள்ள பண்ண போற விஷயத்துக்கு
முழு ஊரும் நம்மள அடிச்சு சாகடிச்சா என்ன பண்ண போற ?'' என்று அவனுக்கே உரிய
தினுசில் கேட்க

''என்னடா சொல்ற ? நம்ம பண்ண போற விஷயத்த ஊரு ஆளுங்க
கண்டுபிடிச்சுருவாங்களா ?'' என்று வினவினான் தரன் அதிர்ச்சியுடன்

''சும்மா சொன்னேன்டா இந்த முட்டா ஜனங்களுக்கு அவ்ளோ அறிவிருந்தா
தேயிலை வேர காட்டி மாசின்னு சொன்னவுடனே இங்க பஞ்சம் பிழைக்க
கிளம்பியிருக்க போறாங்க அவங்க நம்மள மாதிரி கரப்ட்டட் இல்லடா
தே ஆர் இன்னொசென்ட் '' என்றான் ஆர்ப்பாட்டமாக சிரித்தபடி

''அதனால தான் அவங்கள வச்சு விளையாண்டு பார்க்க போறியா ?''
என்று தரன் ஆழமான குரலில் வினவ

''ஆமா இதே இப்போ தான் உனக்கு விளங்குதா ? நீ தேறின மாதிரி
தான்'' என்று அகன் நக்கலாக கூற

''டேய் சீரியசா கேக்குறேன் இந்த விஷயத்த கண்டிப்பா பண்ணித்தான்
ஆகணுமா ? ''என்றான் கேள்வியாக

''இங்க பாரு தரன் நீ என் பிரண்ட் தான் அதுக்குன்னு என் லட்சியம் கனவு
இதுக்கெல்லாம் குறுக்க வந்தா நான் சும்மாயிருக்கமாட்டேன் பார்த்துக்க''
என்றான் அகன் கண்டிப்பான தொனியில்

தரன்,'' இங்க பாரு மச்சான் நாளைக்கு நம்ம பண்ண போற விஷயம் வெளியே
வந்துச்சு நம்ம மானம் மரியாத டிகிரி செர்டிபிகேட் சொத்துனு எல்லாம்
போயிரும் பார்த்துக்க என்றான் ஆழமான குரலில்

''வார்ல்ட் வார் டூல நாசி வதைமுகாம்கள்ல எவ்வளவோ பரிசோதனைகள்
மனுஷன வச்சு பண்ணிருக்காங்க இல்லையா ? அதுல நிறைய ஆராய்ச்சிகள
நடந்த சுவடில்லாம அழிச்சாங்க எப்டி ? ''என்று புருவமுயர்த்தி அவனுக்கே உரிய
பாணியில் கேட்க

''ரெசெர்ச்சுக்கு யூஸ் பண்ண மனுஷங்கல அதே வதை முகாம்ல புதைச்சு தான்
அவங்க பாடிஸ் கிடைக்காமயிருக்கணும்னு சில அசீட்ஸ் ஊத்தி கரைச்சும் தான்''
என்றான் யோசனையுடன்

''அதே மெதட் தான் இங்கேயும் இப்போ போலோவ் பண்ண போறோம் '' ஒருவித யோசனையுடன்

''இல்ல எனக்கு புரியல அப்ப செத்தவங்க பாடிய அவங்க பேமிலி கொடுக்காம
இருக்க போறமா ? அப்போ நம்ம மேல சந்தேகம் வராதா ?''

ஹா ஹா என்று காடே அதிரும்வண்ணம் சிரித்தவன்,

''நீ என்ன லூசா? பாடிஸ்க்கு
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் முதக்கொண்டு நம்ம கொடுக்கணும் அடுத்து
இங்க தோட்டத்துல வேலை செய்றவங்க செத்தா இங்க தேயிலை தோட்டத்துலவுள்ள
செமெட்ரில தான் புதைப்பாங்க சோ நோ எவிடென்ட்ஸ் அப்டி எவனாவது நம்மள
எதிர்க்க துணிஞ்சாலும் அவன் ஆணி வேரையே புடுங்கிற மாட்டேன்''

என்றான் அரக்கனை போல,

''டேய் மச்சான் நான் சொல்றேன்னு என்ன தப்பா எடுத்துக்காத நாம செய்ய போற
இந்த பாவம் அதாவது ஆராய்ச்சி நம்மள ஜென்ம ஜென்மமா துரத்துமோனு
பயமாயிருக்குடா'' என்று பயந்தபடி கூற

மறுபடியும் இடியிடியென நகைத்தவன், '' அப்டி துரத்துனா துரத்தும் போது பார்த்துக்கலாம்
இப்போ ஆபீஸ் பாய் வந்துருப்பான் நான் எஸ்டேட் ஒர்க்கர்ஸோட டீடெயில்ஸ் கேட்ருந்தேன்
கொண்டு வந்துருப்பான் பஸ்ட் பட்ச்சுக்கு ஆட்கள செலக்ட் பண்ணலாம் வா " என்று பங்களாவுக்கு
அழைத்து சென்றான்.

அவன் கணித்தது போல ஆபீஸ் பாயும் வந்திருக்க தோட்ட தொழிலாளர்கள் பற்றிய
தரவுகள் கொண்ட புத்தகத்தை வாங்கி வந்தவன் அதை தரனிடம் கொடுத்து

''ஏஜ் லிமிட் தெரியுமில்ல செலக்ட் பண்ணு நான் மதில்ட்டா கிட்ட கதைச்சிட்டு வாரேன் "
என்றபடி ரெசிவர் வைத்திருக்கும் அறைக்கு சென்றான்.

தரனுக்கோ நெஞ்செல்லாம் கனத்தது. இதில் 'எத்தனை உயிர் பலியாகுமோ எத்தனை
பேருக்கு மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுமோ' என்று எண்ணி நடுங்கி போனான்.

அந்த மதில்டாவை அடித்து கொல்லுமளவுக்கு கோபம் வந்தது நண்பனின் வாழ்க்கையை
சிதைக்க வந்திருக்கும் ராட்சசி என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. எண்ணங்கள் பல இடங்களுக்கு
அலைப்பாய்ந்தாலும் கைகளும் கண்களும் தன் வேலையை சிறப்பாகவே செய்தது.


இங்கு லயக்குடியிருப்பில்,

நண்பிகளிருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க வெளியே ஒரே சலசலப்பு

வெளியே இருவர் பேசிக்கொண்டிருப்பதை நண்பிகளிருவரும் காதை கூர்மையாக்கிக் கொண்டு
கேட்கவாரம்பித்தனர்.

''டேய் ராமு பொட்டை கண்ணு பூசாரி மாரியாத்தா கோவில்ல உடுக்கடுக்கிறாராம்''

''என்னடா? சொல்ற அவரு விஷயமில்லாம உடுக்க அடிக்கமாட்டாரே என்னவாயிருக்கும் ''

''எனக்கும் தெரியலையே!வா போய் பார்க்கலாம்'' என ஊரே ஓட

பொட்டை கண்ணு பூசாரி என்று ஊராரால் அழைக்கப்படும் சோமன் அம்மை நோயால்
இருக்கண்களையும் இழந்துவிட்டார். அதற்கு பிறகு அவரது பெற்றோர் அவரை வளர்க்க
முடியாதென மாரியம்மன் கோயிலுக்கு தத்துகொடுத்துவிட பிற்காலங்களில் மாரியம்மன்

அவருக்கு ஒன்றை பறித்து ஒன்றை கொடுப்பது போல், அம்மனே அவர் உடலில் இறங்கி அருள்வாக்கு
சொல்லவரம்பித்தார். ஆனால் அவர் ஒன்று சொன்னால் சொன்னது சொன்னபடி நடக்குமென்பது
மறுக்க முடியாத உண்மையாகியிருந்தது.

''ஏன்டி எழிலி அவரு சும்மா உடுக்கடிக்க மாட்டாரே என்னவாயிருக்கும் ஒருவேள நம்ம
வீட்ட விட்டு வெளிய போனத கண்டுபிடிச்சிருப்பாரோ ?'' என்று பூவரசி வினவ


பூவரசியின் உச்சந்தலையில் நச்சென கொட்டியவள், ''வாய வச்சுக்கிட்டு சும்மாயிரு
அவரு அதுக்காகவெல்லாம் உடுக்கடிக்க மாட்டாருடி வேற ஏதோவொன்னு
ஊருக்குள்ள நடக்க போகுது அது தான்'' என்றாள் எழிலி யோசனையாக


இங்கே உடுக்கடித்த பூசாரியோ,

'' நரகவாயில்ல திறந்துகிட்டு அடைச்சிருந்த அரக்கன் புறப்பட்டுட்டான் இனி
ஊருக்குள்ள பிண வாடை வீசும் மரண ஓலம் கேட்கும்
ஆனா அரக்கன அடக்க ஆத்தா தன்னோட மருவுருவத்த அனுப்பி வச்சுட்டா

அவ உங்கள காப்பா செத்தாவது இந்த ஊர் மக்கள காப்பாத்துவா
ஆனா அரக்கனும் சாதாரண அரக்கனில்ல ஆத்தாவையே அன்பால
கட்டி போட பார்ப்பான் ஆத்தா விழிச்சிக்கனும்னு வேண்டிக்கிக்கங்கடா ''

என்றபடி மயங்கி சரிந்தார் பூசாரி,

இன்று ..

''லோச்சு சாப்பிட்டு தூங்குடி''

என்று அனி உலுக்க லோச்சுவோ நினைவுகளிலிருந்து
மீண்டு மலங்க மலங்க விழித்தாள்.

''என்னாச்சுடி ?'' என்று` சற்று பதற்றமாக அனி வினவ

''ஒண்ணுமில்லடி சில விஷயங்கள் நியாபகம் வந்துச்சு அது தான்
லைட்டா தலை வலிக்குது''

''சரி சாப்பிட்டு மெடிசின் போட்டுட்டு தூங்கு ''

''சரிடி''

என்று உணவை வாங்கியவள் மெல்ல பின்னால் திரும்பி
அபியை பார்க்க அவனோ அதை கண்டுகொண்டவன் போல


''என்ன சனா எதுவும் வேணுமா ?'' என்று சத்தமாகவே கேட்டு விட

அவளுக்கோ ஐயோ என ஆனது

''இல்ல சாப்பிட்டீங்களா ?''

என்று இழுக்க

''எனக்கு கேக்கல சனா'' என்றான் வேண்டுமென்றே

''இல்ல பாவா சாப்பிடுங்கன்னு'' சொன்னேன் என்றாள் தயக்கமாக

''நீயும் சாப்பிடு சனா'' என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்

இவர்கள் கதை கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் என அழகாக போக
பைரவின் காதல் கதையோ என் சோக கதைய கேளு தாய்க்குலமே என்பது
போல் ஓடாமல் ஒரேயிடத்தில் நின்றது.

அனியோ கொடுத்த ஒரு உணவு விடாமல் எல்லாவற்றையும் வெளுத்து
வாங்கியவள் அக்கடா என்று நிம்மதியாக படுத்து தூங்க ஆரம்பித்துவிட்டாள்.

அபியோ லோச்சு கேட்ட ஒரு வார்த்தையிலேயே குஷியாகிவிட்டான்.
தான் வழமையாக உள்ளெடுக்குமளவு கலோரிகளை உணவாக உட்கொண்டு விட்டு
லப்டோப்பில் வேலை செய்ய ஆரம்பித்த்தான்.

அபியின் கையை சுரண்டிய பைரவ்வோ,

'' அது எப்டி மச்சான் அப்போவும் சரி இப்பவும் சரி
உன்ன மாதிரி வில்லப்பயலுகளுக்கு மட்டும் வாழ்க்கை அமோகமா ரொமான்டிக்கா போகுது ?
என்ன மாதிரி நல்ல பசங்களுக்கு லெக் பீஸ் வேணாம் நாய்க்கு போட்ற எலும்பு
துண்டாவது கிடைக்க மாட்டிங்குது ?''

என்றவுடன் ஆர்ப்பாட்டமாக சிரித்த அபி,'' எல்லாம் உன் முக ராசி மச்சான் யோசிக்காம தூங்கு
காலைல சிட்னில சந்திப்போம்''

என்றபடி வேலையில் மூழ்கி போனான் அபிஜித்தன்
******************************************

இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 
அத்தியாயம் 7(b)


லோச்சனாவிற்கோ கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் தூக்கம் என்பது ஒரு பொட்டு கூட
வரவில்லை. மனதை சில்லு சில்லாய் நொறுக்கும்`நியாபகங்களே அவள் நெஞ்சத்தை ஆட்சி செய்தது.
அவளின் நினைவடுக்கிலுள்ள எந்த நினைவும் அபிஜித்தன் மீதான காதலை தூண்டவில்லை மாறாக

அவன் மீதான வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் மிகைப்படுத்தியது.

உள்மனமோ அவனை
விட்டு விலகி விடு அவனை நம்பாதே! அவனது காதல் பொய், சாபவிமோச்சனம் கிடைத்துவிட்டால்
உன்னை உதறி தள்ளி விடுவான்., உன் பெண்மைக்கும் விலை பேசுவான். அவனை மறப்பது தான்
உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது என்றது.

எல்லாவற்றையும் யோசித்து ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டாள். ஆனால் இந்த தீர்மானம் காதல்
கொண்டவன் மனதில் எவ்வளவு கொடூரமான வலியை ஏற்படுத்தும் என்றும் சிந்திக்கவில்லை
எப்படி பார்த்தாலும் அவளது ரணம் ஆழமானது அல்லவா சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை
நாடாது என்னும் விதமாக இந்த தீர்மானத்ததை எடுத்துவிட்டாள்.இனி இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளுக்கும் அவளே தான் பொறுப்பு,

அபியோ தாராவை இழந்தது போல் லோச்சனாவை இழந்து விடக்கூடாதென்று மனதில் உறுதி பூண்டுவிட்டான். இனிமேல் லோச்சனாவே வேண்டாமென்றாலும் அவளை விடுவதாகயில்லை.
குறுக்கு வழியோ நேர் வழியோ அவளை தன்னவளாக்கிக் கொள்வதே அவன் எண்ணமாகயிருந்தது.
பைரவின் கனவு நினைவெல்லாம் நிதா குட்டி தான்

''நிதா நிதா'' என கனவில் புலம்பியவன் தன் பக்கத்தில் யோசனையுடன் அமர்ந்திருந்த அபியை
இறுக்கி அணைத்து கொள்ள அபிக்கோ இவன் என்ன செய்ய போகிறான் என யூகித்தவன் போல்

''டேய் கடன்காரா என்னடா பண்ற என்ன விடுடா'' என்று தட்டி விட

''நிதா குட்டி தள்ளிவிட்டாலும் உன்ன விட மாட்டேன்'' என இன்னும் நெருங்கி வர
அபிக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

இப்படியே விட்டால் தப்பாகிவிடும் என எண்ணியவன் ஓங்கி கன்னத்தில் அறை விட,

தூக்கத்திலிருந்து விழித்தவன் மலங்க மலங்க விழித்தபடி,


''ஏன்டா என்ன அடிச்ச ?'' என்றான் பாவமாக

''நீ பண்ண வேலைக்கு உன்ன தூக்கி போட்டு மிதிச்சிருக்கணும்'' என்றான் அபி
கடுப்பாக

''நான் என்னடா பண்ணேன்? கனவுல தானே டூயட் பாடினேன் '' என்று
அப்பாவியாக கூற

அபியோ நெற்றியை தேய்த்தபடி,

"ஆமா நீ கனவுல என்னமும் பண்ணு ஐ டோன்ட் கேர்
என்ன ஏன்டா கட்டிபுடிக்கிற ? லூசு " என்றான் எரிச்சலாக

''ஏதே உன்னயா கட்டி புடிச்சேன்?'' என்றான் நெஞ்சில் கைவைத்தபடி

"அப்போ என் கற்புக்கு களங்கம் வந்துருச்சா ?" என்று கேட்டான்
பயந்தபடி

இவர்கள் இருவரின் கொட்டத்தை நோட்டமிட்டபடி வந்த அனிக்கோ
வாந்தி வராத குறை தான் முகத்தை அஷ்டகோணலாக்கியபடி பைரவை
பார்த்து "ச்சீ தூ" என்றபடி முன்னால் திரும்பிக் கொண்டாள்.

இதை கவனித்த அபி வெளிப்படையாக தலையிலடித்தபடி ,

"டேய் கருமம்பிடிச்சவனே உன்னால தான் அந்த பொண்ணு என்னையும்
பார்த்து காறி துப்புது தயவு பண்ணி குறளி வித்த காட்டாம வா
உன்ன என்னன்னு சொல்றது" என்று நொந்து கொண்டான்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையிலிருக்க விமானமோ
சிட்னி கிங்போர்ட ஸ்மித் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

எல்லாரும் விமானத்திலிருந்து இறங்க எத்தனிக்கும் போது அபிஜித்தன் அருகே
வந்த லோச்சுவோ

''உங்க கூட பேசணும் என் சித்தப்பா என்ன பிக்
பண்ண வர அரை மணிநேரமாகும். உங்களுக்கு பேச
நேரமிருக்கா ?'' என்றாள் கேள்வியாக

''லக்கேஜ் எல்லாம் கிளீயர் பண்ணிட்டு பிரீயா பேசலாம்'' என்றான்
அழுத்தமாக பார்த்தபடி,

அவளும் சரி என்னும் விதமாக தலையையசைத்து வைத்தாள்.

விமான நிலையத்தில் காரியக்கிரமங்களை முடித்துக்கொண்டவர்கள்
செல்ல முற்படும் போது அங்கே வந்த அபியோ

''சனா ஏதோ பேசணும்னு சொன்னியே என்ன விஷயம் ?'' என்றான்
புருவம் முடிச்சிட

''ஆமா தனியா பேசணும்''

என்றவள் அனியை கொஞ்ச நேரம்
நிற்க சொல்லிவிட்டு அபியின் பின்னால் நடந்தாள்.

தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவன்,

''சொல்லு என்ன விஷயம் ?'' என்று வினவினான் அவனுக்கேயுரிய
ஆளுமையில்

''இல்ல நீங்க எதுக்காக என் பின்னாடி வாரீங்கன்னு
எனக்கு தெரியும் '' என்றாள் கீழே குனிந்தபடி

அவனோ புருவ சுளிப்புடன், "எதுக்காக?"என்றான் கேள்வியாக

அவளோ அவனை பார்க்காமலேயே,

"உங்களுக்கு தேவை சாபவிமோச்சனம் நான் அத உங்களுக்கு
தாரேன்" மிடறு விழுங்கியபடி

"அதுக்கு பிறகு நீங்க என் வாழ்க்கைய விட்டு போயிரனும் " என்றாள்
உறுதியான குரலில்

அவனுக்கோ வந்த கோபத்திற்கு 'இவளுக்கு ரெண்டு அறை
விட்டாலென்ன ?' என்று எண்ணம் தோன்றியது.

''நடக்க வேண்டியதெல்லாம் காதலால நடக்கணும்னு
இருக்கே அதுக்கு என்ன பண்ணலாம் காதல் கத்திரிக்காயெல்லாம்
சந்தை கடையில வாங்கலாமா ? ''என்றான் எரிச்சலாக

''நான் அப்போ சொன்னது தான் இப்போவும் சொல்றேன் உங்க
மேல இருக்க காதல் அப்டியே தானிருக்கு அழகரே இன்னும் உங்கள
பைத்தியக்கார தனமா தான் காதலிக்கிறேன் ஆனா...'' என இழுத்தவளை

''ஆனா என்ன ?'' என்றவன் காதுக்கருகில் சென்று
ஏதோ ரகசியம் கூற அவன் கண்களோ ரத்தமென சிவந்தது
அது வலி கோபம் ஆற்றாமை என பல உணர்ச்சிகளை காண்பித்தது.


தனியே யோசனையுடன்
நின்றுக் கொண்டிருந்த அனி அருகில் வந்த பைரவோ,

''நிதா குண்டூஸ்'' என்றபடி அருகில் வர

அவளோ," யாருடா குண்டு? நீயும் தான் நெட்டையா
பனை மரம் மாதிரி வளர்த்துருக்க நான் என்ன சொல்லி கட்டிக்கிட்டா
இருக்கேன்" என்றாள் எரிச்சலுடன்

பின்பு சம்பந்தமேயில்லாமல் ,

''நீ எம்பிபிஎஸ் தானே படிக்க போற '' என்றான் புருவத்தை சுருக்கியபடி

அவளோ எரிச்சலாக, ''இல்ல கல்லோடைக்க போறேன்''என்றவுடன்

பைரவோ நக்கலாக சிரித்தபடி, ''நான் தான் உன் அனாடமி லெக்ச்சரர்''
என்றானே பார்க்கலாம்

அனிக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. ''என்னது நீயா ?''
என்றாள் அதிர்ச்சியாக,

அவனோ கோபமாக, "என்ன வா போங்குற
மரியாதையா மாமானு சொல்லு"


''மரியாதையா சார்னு தானே சொல்லுவாங்க நீ என்ன
வித்தியாசமா சொல்ற ?''என்றாள் குழப்பமாக

"நான் வித்யாசமானவன் தான் குண்டூஸ் அது
தான் பன மரம் மாதிரி இருக்குற நான் சர்வ சட்டி
கணக்கா இருக்க உன்ன லவ் பண்றேன்" என்றான்
வெட்க சிரிப்புடன்,

அவளுடைய முகமோ எரிச்சலை வெளிப்படையாக காட்ட

''என்னது லவ்வா ? எனக்கு பசங்கனாளே அலர்ஜி'' என்றாள் எரிச்சலுடன்

''அது மத்த பசங்கன்னா நான் தான் உன்
மாமனாச்சே''

என்றவுடன் சற்று நேரம் எதையோ யோசித்தவள்

''சரி மாமா உங்க போன் நம்பர கொஞ்சம் தாங்க ?''

''இந்த எடுத்துக்கோ''


என்று தனது தொலைப்பேசி இலக்கத்தை
ஆர்வமாக பகிர்ந்துக்கொண்டவனுக்கு தெரியவில்லை அடுத்ததாக
அவன் சகதர்மினி வில்லாமல் விரியாமல் தலையில் இடியை
இறக்க போகிறாளென்று

''தங்க் யூ மாமா நானும் என் கல்யாணம் பரிசம் எல்லாத்துக்கும்
சீர் செய்ய தாய்மாமா முறைக்கு ஒரு ஆள தேடிட்டு இருந்தேன்
நீங்கதான் எனக்கு எல்லா சீரும் செய்றீங்க '' என்றாள் கண்ணடித்து

"என்னது ?" என்று ஏதோ சொல்ல வாயெடுக்க அதற்குள்
அங்கு வந்த லோச்சுவோ,

''வா அனி'' என்று அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு
விமான நிலையத்தை விட்டு யாரையும் கண்டுகொள்ளாமல்

கண்ணீருடன் வெளியேறினாள் லோச்சு,

அவளுக்கு பின்னால் வந்த அபிஜித்தனின் தாடை இறுக
கழுத்து நரம்புகள் புடைத்திருந்த தோற்றத்திலேயே அவன்
கோபத்தினளவும் அதை அடக்க அவன் படாதபாடுபடுவதும்

வெளிப்படையாக தெரிந்தது.

''மச்சான் வாடா வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்''

என்றபடி அபியை அழைத்துக் கொண்டு
அபிஜித்தனுக்கு சொந்தமான மாடி வீட்டிற்கு வந்து
சேர,

அபியோ, ''எனக்கு லைட்டா தலை வலிக்குதுடா நான் கொஞ்ச
நேரம் தூங்குறேன் ''


என்று வெறும் அறிவிப்பாக கூறியவன்
அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று கதவில்
சாய்ந்தபடி கீழே அமர்ந்துக் கொண்டு வெடித்து அழ ஆரம்பித்தான்.

இங்கு அவனிடம் பேசிவிட்டு வந்த லோச்சுவோ பழைய கசடுகளின்
நினைவில் படுக்கையில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.

அன்று ................


பூசாரி சொன்ன விடயம் லயக்குடியிருப்புக்குள் தீயாக பரவ ஆரம்பித்தது.

அவர் கூறிய விடயங்களை அசைபோட்டு பார்த்த எழிலிக்கு ஏனோ
அகன் மீதும் தரன் மீதும் சந்தேகம் வலுத்தது. இவர்களிடம் ஏதோவொரு
பிரச்சனையிருக்கிறது என்று மட்டும் உறுதியாக உள்மனம் கூற,

பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டாள். அங்கு வந்த
பூவரசியோ,

ஏண்டி எழிலி என்ன கானா காணுறவ ?

ஒண்ணுமில்லடி பூசாரி சொன்னதெல்லாம் யோசிச்சு பார்த்தேன்

ஆமாடி நானும் அது தான் நானும் யோசிச்சேன் அந்த அரக்கன்
நம்மள தின்னுபுட்டா என்ன பண்றது ?

''எவடி அவ அவனுக்கெல்லாம் பயந்தா நாம எப்டி காடு மேடுனு
ஊர் சுத்துறது முக்கியமா இந்த மைனா கெழவி கண்ணுல வெரல
விட்டு ஆட்டுறது சும்மா பயப்புடாத புள்ள''

''ஆமா ஆமா நீயும் நானும் சேர்ந்திருக்க பயமேன்'' என்றாள்
பூவரசி இணைபிரியா தோழியாக

''சரி அத விடு அந்த நெட்டையனுகளுக்கு இத சொல்லணுமாடி ?''

''ஏண்டி அவனுகளுக்கு சொல்லனும் ?''

''இல்ல அரக்கன் அவனுகள புடிச்சு முழுங்கிட்டா பாலும்
பழமும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு மாதிரியிருக்கு
வெள்ளையா வேற இருக்கானுங்க அரக்கனுக்கு புடிச்சு
போய் தின்னுபுட்டா ?''

எழிலியோ ஏதோ யோசித்து விட்டு "சரிடி சொல்லிறலாம்"




அடுத்த நாள் காலை எல்லோருக்கும் அழகாக புலர வழமை போல் எல்லோரும்
கொழுந்து கூடைகளை தூக்கிக் கொண்டு மலைக்கு போக பூவரசியும் எழிலியும்
திருட்டுதனங்களை துவங்கி விட்டனர்.

வழமையாக அவர்கள் உபயோகிக்கும் பாதையை உபயோகித்து காட்டுக்குள்
நுழைந்தனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது போல் நண்பர்களிருவரும்
நின்றிருக்க,



பூவரசி "என்னடி இவனுக நம்மள தான் எதிர்பார்த்து நிக்கிறானுகளோ ?"

"அப்டிதான்டி நானும் நினைக்கிறேன் வா போய் என்னான்னு பார்க்கலாம் ?"


''ஐயா எங்களுக்காக தான் காத்துட்டு இருக்கீங்களோ ? ''என்றாள் எழிலி
துடுக்காக

"இல்ல ஊரப்பத்தி தெரிஞ்சிக்க தான் காத்துட்டு நிக்கிறோம் "

இடையில் புகுந்த பூவராசியோ, "இங்க பாருங்க துரை ஐயா இந்த
ஊருக்கு ஒரு அரக்கன் வந்துருக்கான்" என்றது தான் தாமதம்

அகனின் முகத்தில் கோபமும் அப்பட்டமான மிரட்சியும் தென்பட
இதை பார்த்த எழிலிக்கு ஏதோ பொறித்தட்டி விட்டது.

அகனோ, '' என்ன அரக்கனா ?'' என்றான் சந்தேகம் தொனித்த
குரலில்

"ஆமாம் அரக்கன் தான் பூசாரி தாத்தா சொன்னாரு" என்றவுடன்
பெருமூச்சு விட்ட அகனை பார்த்தபடி

''அதனால ஒரு மாசம் கழிச்சு தான் வழியெல்லாம் காட்டிக்கொடுக்க
முடியும்'' எழிலி கூற




"என்ன அரக்கனா ? என்று சத்தமாக சிரித்தவன், அதெல்லாம் நம்மள ஏமாத்த சொல்ற கதை
இப்ப பாருங்கம்மா உங்க ரெண்டுபேரையும் உங்க அம்மா வெளில ஒரு
மாசம் போகக் கூடாதுனு சொல்லியும்`கேட்டிங்களா ?"

''இல்ல'' என்று இருவரும் ஒருசேர கூற

''ஏன் ? கேட்கல"

''காத்து கருப்புனு பொய் சொல்லி எங்கள வீட்டுக்குள்ள கட்டி வைக்க
யாராலயும் முடியாது அடுத்து எங்களுக்கு ஊருல ஒரண்ட இழுக்காட்டி
நிம்மதியா அந்த நாள்ல இருக்க முடியாது அதுதான்" என்று எழிலி உதட்டை
சுழித்து கூற

அவளது இதழ்களை விழுங்கி விடுவது போல் பார்த்தவன் தொண்டையை
செருமிக் கொண்டு மீண்டும் பேசவாரம்பித்தான்.


''ஏன்னா இதெல்லாம் மூடநம்பிக்கைனு உங்களுக்கு தெரிஞ்சுருக்கு
நீங்க அறிவாளி பொண்ணுங்களாச்சே அது தான்'' என்றான் மெச்சுதலாக

ஏனென்றால் அவனுக்கு தான் அவன் காரியமாக வேண்டுமே அதற்க்காக
யார் காலையும் பிடிக்கவும் தயாராக இருந்தான் யார் தலையையும் எடுக்கவும்
தயாராக இருந்தான். மற்றப்படி அவர்கள் எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன ?

பூவரசியோ ''பாருடி அந்த அண்ணன் நம்மள பார்த்து அறிவாளினு சொல்லிருச்சு
இதுக்கு மேலயும் தயங்கினா'' என்று இழுக்க

"இங்க பாருங்க ஐயா அந்த பூசாரி தாத்தா சொன்னதெல்லாம் சொன்னபடி
நடக்கும். அடுத்து ஏன் எங்கள ஊர சுத்தி காட்ட சொல்றிங்க? முத்தன்
கருப்பன் இவங்கள்ட்ட கேக்கலாமே அவங்களும் லயத்துல தானே இருக்காங்க!"


என்றாள் குரலில் சந்தேகம் தொனிக்க,


அகனோ கோபத்தை அடக்கியபடி,

'தாரா நீ விவரமானவ விவகாரமானவ உனக்கு
வைக்க வேண்டிய இடத்துல செக் வச்சு தட்டி தூக்குறேன்டி'

வஞ்சகமாக நினைத்துக் கொண்டு பிறகு


எதையோ சிந்தித்தவன் போல , ''சரி நீங்க ரெண்டு பேரும் போகலாம்''

என்று மொட்டையாக கூறியவன் தரனையும் அழைத்துக்
கொண்டு எதையும் பேசாமல் பங்களாவுக்கு சென்று விட்டான்

''என்னடி மனுஷன் எதையும் சொல்லாம போறாரு'' என்ற
பூவரசியை பார்த்து

எதையோ யோசித்த எழிலி, ''வா நம்ம நம்ம வேலைய
பார்க்கலாம் அவரு வேலைய பார்க்கட்டும்''

என்று சொல்லியபடி எழிலி மரங்களிலேறி
வந்த வேலையை ஆரம்பித்து விட்டாள்.

இங்கு பங்களாவுக்கு வந்த அகனுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக
வந்தது.

தரனோ, "என்னடா பிரச்சன?" என்றான் சந்தேகமாக

"நீ சொன்னது சரிதான் மச்சான் அந்த
ரெண்டு பொண்ணுங்கள்ல அந்த தாரா பொண்ணு இருக்கால்ல
விவகாரமானவடா " என்றான் எரிச்சலாக


தரனோ குழப்பமாக, " என்ன மச்சான் சொல்ற தெளிவா
புரியுற மாதிரி சொல்லுடா ?"

"ஆமாடா ஏன் எங்கள்ட வந்து கேக்குறீங்க ? முத்தன்ட்ட
கேட்கலாமேனு என்கிட்டயே திருப்பி கேக்குறாடா அவளுக்கு
நம்ம மேல சந்தேகம் வந்துருச்சு அத வளர விட கூடாது
முளையிலேயே கிள்ளி எடுத்துறணும் "என்று தீவிரமாக
கூற

அகனின் தீவிர தன்மை தரனின் வயிற்றிலோ புளியை கரைத்தது.

"டேய் என்னடா பண்ண போற ? ஏற்கனவே பண்ண போற
பாவத்த எங்க போய் தொலைக்கிறதுனு தெரியல இதுல நீ வேற
புதுசா ஏதோ ஏழரைய கிளப்ப போறான்னு மட்டும் தெளிவா
தெரியுது" என்றான் ஒருவித பயத்துடன்,



''அவ மூளைய சிந்திக்க விடாம செய்ய போறேன் ''

''என்னடா சொல்ற ?'' என்று தரன் பீதியாக வினவ

அவ்விடமே அதிரும்படி சிரித்தவன், '' அவள என்னையே
உலகம்னு சுத்தி வர வைக்க போறேன் "

''அப்டினா லவ் பண்ண வைக்க போறியா ?'' என்றான்
தரன் கேள்வியாக

"ச்சீ ச்சீ இல்ல இல்ல என் லஸ்ட்ட அவள
வச்சு தீர்த்துக்க போறேன்" என்றான் அரக்கத்தனமான
புன்னகையுடன்

''அப்ப இவளை கல்யாணம் பண்ணா மதில்ட்டா''
என்றான் தரன் குழப்பமாக


"ஆர் யூ ஜோக்கிங் ? மேத்திக்கும் இவளுக்கும்
ஏணி வச்சாலும் எட்டுமா ?மேத்தி என் வைப்
இவ சும்மா ஜஸ்ட் டைம் பாஸ்க்கு
ரெசெர்ச்சுக்கு வந்துருக்கோம் மண்டை
காயுமில்லையா அதுக்கு எண்டெர்டைமெண்ட்
வேணா அது தான்" என்றான் ஒருவித குரூரத்துடன்

"டேய் வேணாம்டா இது பெரிய பாவம்டா ஏன்டா
இப்டி பண்ற ? வெறும் பதினாறு வயசுதாண்டா
அவளுக்கு" என்றான் தரன் பதறியவாறு


"டேய் நான் அவள பார்த்த அன்னைக்கே
முடிவு பண்ணிட்டேன் அவ எனக்கு தான்னு
எனக்கு அவ வேணும் அவளுக்காக
எந்த எல்லைக்கும் போவேன் நீ
இந்த விஷயத்தில தலையிடாத போய்
உன் வேலைய கவனி " என்றவாறு
தனதறைக்குள் புகுந்துக் கொண்டான்
அகன்

இன்று ........

லோச்சுவின் புகைப்படத்தை கையில் எடுத்து
வைத்துக் கொண்ட அபிஜித்தனோ

"சாரி சனா என்ன மன்னிச்சுரு நீ இல்லாம
நானில்லடி என்ன விட்டுட்டு போயிராதடி
செத்துருவேன் ப்ளீஸ் என்ன
புரிஞ்சுக்கோ" என்று வாய்விட்டு
கதறினான்.
வதம் தொடரும்................
************************************

இதோ அடுத்த episode போட்டுட்டேன் படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 
Last edited:
அத்தியாயம் 8

தன்னிலையை எண்ணி நொந்து போனவன் மனதின் வேதனை தாளாமல்
ஒரு கட்டத்தில் ,


''தாரா தா..ரா.. " என்று வாய்விட்டே அரற்ற ஆரம்பித்து விட்டான்.
தன் நண்பனின் உடல்நிலை தெரிந்த மருத்துவனாக பைரவோ

ஒரு நிமிடம் பதறி விட்டான் ஏதாவது செய்து கொள்வானோ
என்று




''டேய் அபி கதவ தொறடா டேய் மச்சான் கதவ திறடா " என்றபடி
கதவை தட்ட

அவனை மேலும் பயமுறுத்தாமல் கதவை திறந்தவன்

''என்னடா ? ஏதாவது செஞ்சுட்டு ஒரேயடியா மேல போய் சேர்ந்துருவேன்னு யோசிச்சியோ ''
என்றவாறு கண்களில் கண்ணீர் வழிய விரக்தியாக சிரித்தான்.

அதில்லடா என்று ஏதோ சொல்ல முயன்றவனை

ஏதும் பேசாதே என்பது போல் சைகை செய்தவன்

அங்கிருந்த நீள்விருக்கையில் தன்
கைகளால் தலையை தாங்கியபடி அமர்ந்துக்
கொண்டான்.

அவனருகில் சென்ற பைரவோ அபியின் தோளை தட்டி

"லோச்சனா ஏதும் சொன்னாளா ?" என்றவனை உறுத்து
விழித்தான் அபிஜித்தன்

"இல்ல ஏன் கேட்டேனா வந்ததுலேயிருந்து அப்செட்டா இருக்கியே
அது தான் உனக்கு சொல்லணும்னு தோணுனா மட்டும்
சொல்லு"

என்று பைரவ் முடிக்கும் முன்பே, பைரவின் தோளில் சாய்ந்து கொண்ட
அபிஜித்தனின் கண்ணீர் பைரவின் தோளை நனைத்தது.

அவனது கண்ணீரை பார்த்து நல்ல நண்பனாக மேலும்` நொந்து
தான் போனான் பைரவ்

''டேய் அபி என்னதான்டா ஆச்சு சொல்லுடா ? ''என்று
கேட்டவனை பார்த்து

''சொல்றதுக்கு என்னடா இருக்கு எல்லாம் முடிஞ்சு போச்சுடா
என்ன நம்பவோ என்கிட்ட ` நெருங்கவோ பயப்படறடா அவளோட
பயம் என்ன தினசரி கொல்லாமல் கொல்லுதுடா செத்துட்டு
இருக்கேன்டா '' என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே

''சாப விமோச்சனம் தாரேன் என்னையே மறந்துருனு சொல்றாடா
அவள பிரிஞ்சு வாழ்றதுக்காகவா மீசை அரும்ப முன்னாடியிருந்து
அவள பைத்தியமா காதலிச்சேன் சொல்லுடா?" என்று அவன்
சட்டை காலரை பிடித்தபடி ஆவேசமாக வினவ


பெருமூச்செறிந்த பைரவோ,

''இங்க பாருடா அபி இது நம்ம கலங்கி நிற்க வேண்டிய நேரமில்ல
யோசிக்க வேண்டிய நேரம்டா இப்போ உன் முன்னாடி நிக்கிறது

தாரெழிலி கிடையாது இவ த்ரீலோச்சனா அப்படி இருக்கும்
போது



நீ லோச்சனாக்குள்ள தாராவ தேடுறது பெரிய தப்புடா''

"ரெண்டு பேரும் ஒருத்தர் தானேடா?" என்றான் அபி புரியாமல்

"அதுதானில்ல தாராங்குறது அப்பாவி உலகம் தெரியாத சின்ன
பொண்ணு இப்பவுள்ள த்ரிலோச்சனாக்கு உலகம் தெரியும்

அதவிட முக்கியமான விஷயம் இவ ஒன்னும் முட்டாள் கிடையாது
நீ கேட்டதும் ஈஸியா காதல வாங்க அவளோட காயம் ரொம்ப ஆழமானது "
என்றான் ஒருவித யோசனையுடன்

"சரிடா இப்போ என்ன தான் பண்றது நீயே சொல்லு ?" என்று புருவம்
முடிச்சிட அபி வினவ

பைரவோ,"பெருசா ஒன்னுமில்ல அவகிட்ட போய் உனக்குள்ளயிருக்க அரக்கன
காட்டாத அவ நம்பிக்கைய பெற என்னனென்ன செய்ய முடியுமோ
அத செஞ்சு அவள உன் கூட தக்கவச்சிக்க பாரு "

என்றான் நண்பனை பார்த்தவாறு


"நானும் அவள காயப்படுத்தாம நடந்துக்கனும்னு தான் பார்க்குறேன் ஆனா
என்னால சம்டைம்ஸ் கன்ட்ரோல் பண்ண முடியலடா " என்றான் அபி தவிப்பாக



"இங்க பாரு அன்னைக்கு நீ மட்டும் சபிக்கப்படல உன்னால ஒரு
ஊரே சாபம் வாங்குச்சு அது மட்டுமில்ல உன்னோட தாரா அதாவது

லோச்சனா அவளும் தான் சபிக்கப்பட்டிருக்கா இதெல்லாம்
சரி பண்ண நீ ரொம்ப கண்ட்ரோலாயிருக்கணும்

உன்னோட காதலால தான் இதெல்லாம் சரி பண்ண முடியும்
அத மனசுல வச்சுக்கோ புரிஞ்சுதா '' என்றான் பைரவ் கண்டிப்பான
குரலில்

"ம்ம் சரி "என்றபடி தலையையசைத்து வைத்தான் அபிஜித்தான்

அதே சமயம் பைரவின் அழைப்பேசிக்கு புதிய எண்ணிலிருந்து
அழைப்பு வர ' யாரோட நம்பர் இது? ' என்று நினைத்தபடியே
அழைப்பை ஏற்று காதில் வைக்க,

''ஹலோ'' என்றது தான் தாமதம் அந்த பக்கத்திலிருந்த
சரமாரியான வசை மொழி கேட்டது.

''அறிவுன்னு ஒன்னு உனக்கும் உன் பிரெண்டுக்கும்
இருக்கா ? இல்லாட்டி மானம் மரியாதை இப்டி
ஏதாவது ஒன்னு சரி இருக்கா எனக்கு சொல்லு
பார்ப்போம் " என்று அனி பட படவென பொரிய

"என்ன நிதா என்னாச்சு ? லோச்சனாவுக்கு ஏதாவது
பிரச்சனையா ?" என்றான் பைரவ் பதற்றமாக வினவ

"இன்னும் எந்த பிரச்சனையும் எங்க வாழ்க்கைல நடக்கல
எங்க வாழ்க்கைல நீங்க ரெண்டுபேரும் தான் வந்துட்டிங்களே
இனி பிரச்சனைக்கு எந்த குறைவும் இருக்காது "

என்றாள் காட்டமாக,

''அப்ப உனக்கு பழசெல்லாம்'' என்று பைரவ் இழுக்க

''எல்லாம் நியாபகம் வந்துருச்சு உன்னால தான் எல்லா
ஆண்பிள்ளைகளையும் நான் வெறுக்க ஆரம்பிச்சேன் ஏன்

அதோட தாக்கம் இன்னைக்கு மட்டும் எனக்கிருக்கு
அதாவது உனக்கு தெரியுமா ? ''

என்றாள் உடைந்து போன குரலில்

''நிதாம்மா எல்லாத்தையும் நான் சரி
பன்னிருவேன்டா என்ன புரிஞ்சுக்க ட்ரை
பண்ணு ப்ளீஸ்'' என்றான் கெஞ்சும் குரலில்

'' என்னத்தடா சரி பண்ணுவ என் பிரெண்டு மேல
வீண் பழி சுமத்தி''


என்று மீதி வார்த்தைகளை கேவலுடன் விழுங்கி
கொண்டு மேலும் பேச பைரவின் நிலையோ கவலைக்கிடமானது

''அடுத்து உன்னால இன்னைக்கு எத்தன ஜென்மம்
கடந்து வந்தாலும்

பெத்த அப்பா சொந்த அண்ணன் இப்டி என்ன உயிரா நேசிக்கிற ஆண்

உறவுகளோட அருகாமைய கூட சகிச்சுட்டு
பத்து நிமிஷம் இருக்க முடியாம எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமா ? ''


என்றவுடன் அவன் மனதில் குற்றவுணர்ச்சி எட்டி பார்க்க ,

''சாரி இந்த முறை எந்த தப்பும் நடக்காது தயவு பண்ணி
இந்த ஒருவாட்டி எங்கள மன்னிச்சுரு ப்ளீஸ்''என்றான்
கெஞ்சுதலாக,

"இல்ல, உன்ன நான் மன்னிக்க தயாரவேயில்ல நீயும் உன் பிரெண்டும்

எங்க வாழ்க்கைய விட்டு போயிருங்க இத பண்ணுனாலே
போதும் நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமாயிருப்போம்
தயவு பண்ணி எனக்கு மறுபடி கால் பண்ணாத"

என்றபடி பட்டென்று அழைப்பை துண்டித்து விட்டவளுக்கு
பழைய நினைவுகளின் தாக்கம் மனதை பிசைய அருகிலிருந்த
சுவரில் சாய்ந்தபடி கண்களை மூடிக்கொண்டாள்.



வதம் தொடரும்
***********************************************************************
இதோ அடுத்த episode போட்டுட்டேன் குட்டி ud தான் ரெண்டு தடவ type பண்ணி அழிஞ்சு போச்சு ஏன்னா
நமக்கும் நம்பர் 8க்கும் ராசி கிடையாது அதனால அட்ஜெஸ்ட் கரோ அடுத்த எபிசொட் இன்னைக்கு போட்ருவேன் இல்லாட்டி tomorrow மோர்னிங் வந்துரும் ஓகேயா படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 
Last edited:
அத்தியாயம் 9


அன்று...

அன்றையநாளுக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிவிட்டது. அதற்கு பிறகு
அகனழகனையோ கிரிதரனையோ நண்பிகளிருவரும் சந்திக்கவுமில்லை
கிட்டதட்ட மறந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


தற்போது வீட்டிலிருக்கும் காலம் முடிந்து வேலைக்கு செல்லும் நாளும்
வந்தது. தாரெழிலியும் பூவரசியும் தாவணிக் கட்டிக்கொண்டு கொழுந்து கூடைகளை
முதுகில் மாட்டிக் கொண்டு மலைக்கு கிளம்ப தயாரானார்கள்.


''ஏய் புள்ள எழிலி இன்னிக்கு வேலைக்கு தாவணியோட போறோம் எனக்கு
ஒரு மாதிரி இருக்குடி'' என்றவுடன் அவளை விசித்திரமாக பார்த்த எழிலியோ

''இவ்ளோ நாள் வெளிய சுத்தும் போது தாவணி தானேடி போட்டுட்டு
தானேடி வெளிய சுத்தினோம் அப்பறோம் என்னடி வெக்கபடுற?''

என்றாள் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி

"இல்லடி மாமா ஊருக்கு வந்துருக்காங்க அது தான் ஒரு மாதிரி" என்று
இழுக்க எழிலியோ சற்று விளையாடி பார்க்க எண்ணியவள்

''யாரு மாமா ? எந்த மாமா ?'' என்றாள் நக்கலாக எழிலி

''ஏன்`உனக்கு தெரியாதா ?'' என்று முறைக்க முயன்று
தோற்று போனாள் பூவரசி

''சொன்னா தானே தெரியும் இல்லாட்டி சாஸ்திரமா பார்க்க
முடியும் சும்மா வெட்கப்படாம பேர சொல்லு பாப்போம் ''

என்று நண்பியை மேலும் சீண்டி சிவக்க வைத்தாள்

"அது தான் விதுரன் மாமா" என்றாள் வெட்கத்துடன்

"ஓ அவரா ? இன்னிக்கு கொழும்புக்கு பஸ் ஏறுறதா
கேள்விபட்டேன்"

என்று கண்ணுக்கு மையிட்டு கொண்டே
பூவராசியிடம் கூற

அவளோ அதிர்ச்சியாக, "உண்மையாவாடி சொல்ற?"

"ஆமாடி ராசு அண்ணன்கிட்ட பேசிட்டிருந்தத கேட்டேன்
ஏன் உன் அம்மாயி உன் கிட்ட சொல்லலையா ?"

என்றபடி கருப்புநிற சாந்து பொட்டையெடுத்து நெற்றியில்
வைத்துக் கொண்டாள்

"இல்லடி சொல்லலயே இப்ப என்னடி பண்றது ?"
என்றாள் முகம் கூம்பி போக

"சரி அத விடு அவரு பஸ் ஏற முன்ன பார்க்கணும்
அவ்ளோ தானே அத நான் பார்த்துக்குறேன்"

என்று எழிலி கண்ணடித்து கூற

"ஆமாடி பார்க்கணும்" என்று பூவரசி வெட்கப்பட


"என்னடி வெக்கப்படற? இது கூட உனக்கு வருமா! "என்றாள்
தாரா ஆச்சரியமாக

"ஏய் சும்மாயிரு புள்ள என்ன கிண்டல் பண்றதே
உனக்கு வேலையா போச்சு போ" என்று மேலும்
அந்திவானமாய் சிவந்து போனாள் பெண்ணவள்

சரி சரி என் முன்னாடி வெக்கப்பட்டது போதும் உன் மாமனுக்கும்
மிச்சம் வை சரியா, இப்ப உனக்கு உன் மாமன பார்க்கணுமா ?''

"ம்ம் ஆனா எப்பிடிடி ?" என்றாள் பூவரசி கேள்வியாக

''காத கொடு சொல்றேன்''


என்று பூவரசி காதுக்குள் ஏதோ கூறியவுடன் பூவரசி
முகத்தில் அத்துணை சந்தோஷம்

''சரிடி அப்டியே பண்ணலாம் ஆனா யாரவது கண்டுபிடிச்சிட்டா
என்னடி பண்றது ?'' என்றாள் பூவரசி கேள்வியாக

''யாரும் கண்டுபிடிக்கமாட்டாங்க அப்டியே கண்டுபிடிச்சாலும்
பார்த்துக்கலாம்'' என்றாள் எழிலி அசட்டு தைரியத்துடன்

''சரி அப்ப வெரசா வா மலைக்கு போகலாம் ''

என்று இருவருமே கொழுந்து கூடைகளை தூக்கிக்கொண்டு

நடுமலை எனப்படும் "மிடில் டிவிசனுக்கு"
மழையில் நனைந்தவாறு ஓட்டம்பிடிக்க,

சற்று தூரத்தை கடந்து வாகனங்கள் பயணிக்கும் வீதிக்கு வந்தவர்கள்
அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் இடிப்பது போல் வந்து நிறுத்தப்பட

''எவன்டா அவன் கண்ண பொடனில வச்சுட்டு வண்டி ஓட்டுறது'' என்றபடி
எழிலி


திரும்பி பார்க்க பைக்கை விட்டிறங்கி ஸ்டைலலாக
பைக்கில் சாய்ந்தபடி நின்றிருந்த அகனழகன் தென்பட


''துரை ஐயா நீங்களா ?' என்றாள் எழிலி பவ்வியமாக

''ஆமா நான் தான் என்ன ரெண்டு பேரும் வேலைக்கு போகல ''
என்று கறார் குரலில் கேட்டவனின் கண்கள் அப்பட்டமாக
தாரெழியை ரசித்தது.

அவளை எப்படி தன் கண்பார்வைப்படும் இடத்திலேயே வைத்துக்
கொள்ளலாம் என்று மூளை யோசனை செய்ய,

''இப்போதானுங்க நடுமலைக்கு போறோம்'' என்று பூவரசி
கூற

''சரி சரி சீக்கிரம் கிளம்புங்க ''என்றவன் ஏதோ நினைத்தபடி பைக்கில்
ஏறி பறந்துவிட்டான்.

ஒருவாறு இருவரும் நடுமலைக்கு வந்து சேர்ந்தவர்கள்

காலையில் பில்ட் ஆஃபீசர் எத்தனை பேர்

வேலை செய்கிறார்கள்.என கணக்கெடுக்கும் வரை
பொறுத்திருந்து பார்த்து விட்டு

தங்களது சேட்டைகளை தொடங்கி விட்டனர்.

அருகில் கிடந்த நீண்ட மரக் கொப்பை எடுத்து அதை
செங்குத்தாக நிறுத்தியவள் தான் தலைக்கு போட்டுக் கொண்டிருந்த
கோணி சாக்கையும்

கொழுந்து கூடையையும் அதில் மாட்டினாள். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு

கிட்டதட்ட மனிதர்கள் நிற்பது போலவே தென்படும் விதமாக அந்த அமைப்பிருக்க

எழிலியோ மெல்ல மெல்ல நகர்ந்து
பூவராசியின் பக்கம் சென்று

''ஏண்டி என்ன இம்புட்டு நேரமா நவுந்துட்டு இருக்க சட்டுபுட்டுனு
அந்த கோணிய கழட்டி அந்த கம்புகுச்சில மாட்டிட்டு

கெளம்பு இல்லாட்டி உன் மாமன் கொழும்புக்கு
போயிரும் பார்த்துக்க'' என்றாள் மிரட்டலாக

''சரிடி சரி அபசகுணமா பேசாத இப்போ வந்துர்றேன்'' என்றவாறு

விரைவாக செயற்பட்டு ஒருவாறு தப்பித்தோம் பிழைத்தோமென
பேருந்து தரிப்பிடத்திற்கு ஓடி வந்தார்கள்.,

அங்கிருந்த விதுரனை கண்டுக்கொண்ட எழிலியோ,

''அந்த உன் மாமன் நிக்கிது சீக்கிரமா
பேசிட்டு வா நான் யாரவது வாரங்களா னு பார்த்துக்கிறேன்
போ வெரசா போ '' என்று பூவரசியை விரட்டினாள்.

இவர்கள் பேசுவதையும் பூவரசி விதுரன் அருகில் செல்வதையும் ஒரு சோடி
கண்கள் கோபமாகவும் 'நீ எனக்கு மட்டும் தான்' எனும் ஒரு வித வெறியுடன்

நோக்கியதை இரு தோழிகளும் கவனிக்கவில்லை., கவனித்திருந்தால்

எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை ஓரளவாவது சமாளித்திருக்கலாமோ
என்னவோ

''மாமா மாமா'' என்றபடி அவனருகே ஓடி வந்த பூவரசியை பார்த்த
விதுரனின் முகம் பூவாக விரிந்தது.

''பூவு ஏன் புள்ள நீ இன்னைக்கு மலைக்கு போகலையா'' என்றான்
கேள்வியாக

"போனேன் மாமா ஆனா உங்கள பார்க்க தான் வெரசா

ஓடி வந்தேன், மாமா! மாமா! உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் "
என்றாள் அவசரமாக

"என்ன சொல்லு ?''என்றான் விதுரன் விஷமமாக சிரித்தபடி

''அது வந்து மாமா அது ஐயோ எனக்கு வெக்கமாயிருக்கே'''
என்றாள் கீழே குனிந்தபடி

"பரவால்ல சும்மா சொல்லு என்கிட்ட தானே சொல்ல போற அதுக்கெதுக்கு வெக்கம்"

என்று அவளை சிவக்க வைத்தவனை வெட்கம் மேலிட பார்த்தவள்

''அது மாமா'' என்று அவள் தன் காதலை சொல்ல முற்படும் முன்பே
அங்கு பஸ் வண்டி வர, அதை கவனித்த விதுரனோ

''பஸ் வந்துருச்சு புள்ள கேட்க வேண்டியத மாரியாத்தா கோவில் திருவிழாக்கு வரும்போது கட்டாயம் கேக்கணும் சரியா , அப்போ நான் போயிட்டு வாரேன் பூவு ஒடம்ப பத்திரமா பார்த்துக்கோ ஊருக்கு போயிட்டு கடதாசி போடுறேன்"

என்றான் பிரிய மனமில்லாமல்


'அடுத்த தடவ வரும் போது உனக்கு
முடிச்சு போட்டு உன்ன என் பொண்டாட்டியா கூட்டிட்டு போறேன்டி '

என்று`மனதில் நினைத்துக் கொண்டு கையசைத்தபடி பஸ்சில்
ஏறியவனுக்கும் சரி அவனை கண்வெட்டாமல் பார்த்து வைத்த பூவரசிக்கும்`சரி

அடுத்த முறை விதுரன் ஊருக்கு வரும் போது தற்போதைய அமைதியான சூழல்
கானலாக கரைந்திருக்கும் என்பதை இருவரும் அறிந்திருக்கவில்லையென்று தான்
கூற வேண்டும்.

தன் கண் விட்டு மறையும் பேருந்தையே கண் கொட்டாமல் பார்த்திருந்தவளுக்கு
மனதில் பாரமேறிய உணர்வு கண்களில் கண்ணீருடன் திரும்பியவள் கண்களில்
பட்டதென்னவோ தன்னையே ஆர்வமாக பார்த்தபடி நின்ற தோழி தாரெழிலி தான்

''என்னடி சொல்லிட்டியா ? என்ன சொன்னாரு ? அவருக்கும் உன்ன
புடிச்சிருக்கா ? சொல்லுடி'' என்று ஆர்வமாக கேட்க

"நான் அவர்ட்ட ஒன்னும் சொல்லலடி" என்றாள் கூம்பிய முகத்துடன்

"போடி பைத்தியக்காரி உனக்காக திட்டம் போட்டு எல்லாம்
வீணா போச்சு இப்ப இன்னும் ரெண்டு மூணு மாசம் கழிச்சு

மாரியாத்தா கோயில் திருவிழாக்கு தான் வரும் உங்க மாமன்
உன்ன என்னடி பண்ணலாம்?'' என்று கோபமாக எழிலி வினவ,

''எனக்கு மாமன பார்த்தாலே வெக்கம் வந்து தொலைக்குது நான்
என்னத்தடி செய்ய'' என்று முகத்தை மூடிக்கொண்ட பூவரசியை

கனலை உமிழும் கண்களுடன் பார்த்த தரனோ

'என்ன தாண்டி அந்த விதுரன் உன்ன கல்யாணம் பண்ணிருவானா ?அப்டி
பண்ணுனாலும் உயிரோட இருந்துருவானா? நீ பூத்த நேரம்

முதல் முதலா பார்த்த எனக்கு தான் உன் மேல முதலுரிமையும்
முழுவுரிமையும் உன்ன விட மாட்டேனடி நீ எனக்கு தான்
பார்த்துக்கிறேன்'

என்று நினைத்தபடி எஸ்டேட் ஹாஸ்ப்பிட்டலுக்கு வந்தவன்
நோயாளிகள் கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்தலென
வேலைக்குள் மூழ்கி போனான்.


இங்கு திருட்டுத்தனம் செய்து அகப்பட்டுக் கொண்ட தோழிகளிருவரும்
அகன் முன் தலை குனிந்து நகத்தை கடித்தபடி நின்றனர். அவனோ
எழிலியின் மலரத் தொடங்கும் பெண்மைக்குரிய வனப்புகளை
கண்களாலேயே களவாடிக் கொண்டிருந்தான்.

இன்று

''அனிதா லோச்சு சாப்பிட வாங்கம்மா'' என்று லோச்சுவின்
சித்தி சந்தியா குரல் கொடுக்க


''இதோ வாரோம் சித்தி''


என்றபடி லோச்சனா கண்களிலிருந்து
வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள்

அனியை உலுக்க அவளோ நண்பியை கட்டிக்கொண்டு
ஓவென அழ ஆரம்பித்தாள்.

''மன்னிச்சுருடி நான் அப்டி பண்ணிருக்க கூடாதில்ல'' என்றாள்
கேவலுடன்

"என்னடி உளர்ற?" என்று லோச்சு குழப்பமாக
பார்க்க

"அது தான் அன்னைக்கு"

என்று வெளிப்படையாக அவள் உடல் நடுங்க முதுகை தடவிக்
கொடுத்து ஆறுதல் படுத்தியவள்

"விடு விடு எல்லாம் விதி இந்த முறை அப்டியெதுவும் நடக்காது"

என்றபடி ஆறுதல் படுத்திவிட்டு வா சாப்பிடலாம் என
அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்குள் நுழைந்தவளுக்கு
மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வதம் தொடரும்...........
******************************


இதோ அடுத்த episode போட்டுட்டேன் flashback episodes fullah போட பயமாயிருக்கு writer ah திட்டமாட்டோம்னு pinky ப்ரோமிஸ் பண்ணா வேகமா uds தரேன் ஓகேயா tomorrow மோர்னிங் next epi வந்துரும் ஓகேயா படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
 
Last edited:

அத்தியாயம் 10

" வா சாப்பிட கூப்புட்றாங்கயில்ல சாப்பிட போகலாம்"

என்று அனியின் கையை பிடித்திழுக்க
அனியோ எழும்பாமல் லோச்சனாவின் கையை பிடித்தமர்த்தி

"உன்கிட்ட ஒன்னு கேக்கணும் அன்னைக்கு எப்டி உனக்கு அதாவது பழசெல்லாம்
நியாபகம் வந்துச்சு நியாபகம் வந்தும் என்னோட எப்டி உன்னால சாதாரணமா பழக
முடியுது ? தயவு பண்ணி சொல்லு இல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சுரும்
போலாயிருக்கு"

என்றாள் அனி கம்மிய குரலில்,


அவளது கம்மிய குரலை கேட்ட லோச்சுவுக்கோ ஏதோ போலானது

"இரு இரு சொல்றேன் ஏன் பதட்ட படுற" என்றாள் ஆறுதலாக

செருமிக் கொண்டு தனக்கு ஆரம்பக்காலத்திலிருந்து நடந்த
விடயங்களை சொல்லவாரம்பித்தாள்



"ஏஜ் அட்டென்ட் பண்ண டைம்ல இருந்துத் தான் இந்த கனவுகள்ல
சில காட்சிகள் எனக்கு வர ஆரம்பிச்சது அப்போல்லாம் நான் இத
பெருசா எடுத்துக்கல ஜஸ்ட் கனவு தானேனு விட்டுட்டேன் "
என்றதும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது அதை துடைத்தவாறே
மேலும் தொடர்ந்தாள்.


"இந்த கனவுகள் வர ஆரம்பிச்சதுலயிருந்தே எனக்கு தாருணி மேல
இனம்புரியாத வெறுப்பு அப்போவே அவள தள்ளி வச்சுருனு உள்மனசு சொல்லும்
அதுக்கு பிறகு என்னதான் சகஜமா பழகுற மாதிரி பழகினாலும்
அவள பார்க்கும் போதெல்லாம் என் சந்தோஷத்த பறிக்க வந்த
மாதிரியே தெரியும்" என்றாள் கம்மிய குரலில்

"சரிடி அதெல்லாம் ஓகே எப்ப உனக்கு முழுசா நியாபகம் வந்துச்சு ?"
என்று ஆர்வமான குரலில் அனி வினவ.

சிறு மௌனத்திற்கு பின் லோச்சுவோ,

"நானு ஓயா ட்ரிப் போன டைம் தான்" என்றபடி தன் மறக்க
துடிக்கும் விஷயங்களை சொல்லவாரம்பித்தாள்.


எஸ்டேட் பங்களாவை வந்தடைந்தவுடனே லோச்சனாவுக்கு ஏனோ
ரொம்பவும் பரிட்சயமான இடமாக தோன்றவாரம்பித்திருந்தது.

அதிலும் அந்த தேக்கு ஊஞ்சல் அவளுக்காகவே யாரோ பார்த்து
பார்த்து செய்து மாட்டியது போல் தோன்றவும் தான்

அதனருகில் சென்று பாரென உள்மனம் கூச்சலிட ஊஞ்சலருகில்
சென்றவளுக்கோ தலைக்குள் ஆயிரம் பேர் கத்துவது போல்
சத்தம் கேட்டது.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
சில சத்தங்கள் அவளை குற்றம் சாட்டியது ஒரு
ஆணின் குரல் மட்டும் அவளை ஒரு சமயம் காதலாகவும்
இன்னொரு சமயம் அவளை இழிவாக எள்ளி நகையாடியும்
பேச அவளுக்கோ எல்லாம் சேர்ந்து தலைக்குள் பெரும்
குடைச்சலை ஏற்படுத்த அப்படியே மயங்கி சரிந்தாள்.


அதன் பின்பு மாரி கூறிய ஒவ்வொரு விடயமும் பாட்டியின் தாரா என்ற அழைப்பும்
அவளுக்கு ஏதோ ஒரு பொருளை உணர்த்துவதாக உள்ளுணர்வு உந்தி தள்ள
ஏனோ தனக்கு கனவில் வரும் கட்சிகளுக்கும் இந்த இடத்திற்கும்
பெரும் சம்பந்தம் இருக்கின்றது என்று மனமும்

அடித்து கூற, வள்ளியம்மையிடம் பழைய பொருட்களை வைத்திருக்குமிடம்
மேலும் பங்களாவை பற்றிய தகவல்கள் என ஒவ்வொன்றாக பேசிப்பேசியே
கறக்கவரம்பித்திருந்தாள் பெண்ணவள்

இப்படியாக எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டவள் இங்கிருந்து
போகும் முன் எல்லா வினாக்களுக்குமான விடைகளை அறிந்து
தெளிவு பெற வேண்டுமென மனதில் உறுதியாக எண்ணம் கொண்டாள்.


பின்பு நண்பிகளுடன் கொட்டமடித்து விட்டு
பயண களைப்பில் அசந்து உறங்கியவளுக்கு
மீண்டும் சில பழைய நியாபக காட்சிகளின்
தாக்கத்தில் மூன்று மணியளவில் விழிப்புத்தட்ட,

இன்றே இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டுமென
நினைத்தவள் அருகிலிருந்த ஸ்வீட்டரை மாட்டிக்
கொண்டு எங்கிருந்து தொடங்கலாமென
சிந்தித்து கொண்டிருக்க

ஏனோ ஸ்டோர் ரூமிற்கு சென்றால் பல விஷயங்களுக்கான
விளக்கம் கிடைக்குமென மூளையிலுரைக்க துணைக்கு
அனிதாவை கூட்டி போகலாமென நினைத்து

"அனி அனி எழும்பேன்" என்று அனிதாவை எழுப்ப



அனியோ தூக்கத்தின் பிடியிலேயே

"பாத்ரூம் இங்க தாண்டியிருக்கு போயிட்டு வா"

என்று கண்ணை திறவாமல் கூற லோச்சனாவுக்கோ என்றுமில்லாத
அசட்டு தைரியம் மனதுக்குள் தோன்ற எப்படியும் இன்று துப்பு துலக்கி
ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டவள்

'சரி தனியாகவே போய் வரலாம்' என்று மனதிற்குள் நினைத்துக்
கொண்டாள்.,

அடுத்து பங்களாவும் சரி பங்களாவை சூழவுள்ள பிரதேசமும்
சரி அவளுக்கு ஏனோ மனதிற்கு பரிட்சயமான இடமாக தோன்றியதாலோ வள்ளியம்மை எல்லாயிடங்களை
பற்றி கூறி சுற்றி காட்டியதாலோ என்னவோ எல்லா இடங்களும்
அவளுக்கு கிட்டதட்ட அத்துப்படியாக தெரிந்தது என்று தான் கூற வேண்டும்.


ஸ்டோர் ரூமிற்கு செல்ல நடக்கவாரம்பித்தவளுக்கு குளிரில் உடல் விறைத்தது
இருந்தும் மனதில் ஏதோ ஒரு வெறி உந்தித் தள்ள எதையும் பொருட்படுத்தாமல்
ஸ்டோர் ரூமருகில் சென்றவளுக்கு பூட்டியிருந்த`அறையை திறக்க சாவி
வேண்டுமேயென புத்தியிலுறைக்க

'ஐயோ இப்போ என்ன பண்றது எப்படி திறக்க ?' என்று சிந்தித்து கொண்டிருந்தவளின்
கால்களில் ஏதோ ஊருவது போலிருக்க அழைபேசியிலிருந்த பிளாஷை தரையிலடித்து
பார்க்க புற்களிடையில் ஏதோ பொருள் மின்ன கூர்ந்து கவனித்த பின் அது ஒரு சாவியென
இனங்கண்டு கொண்டாள்.

'இதையெடுத்து ட்ரை பண்ணி பார்த்தாயென்ன ?' என்று சிந்தனை தோன்ற உடனடியாக அதை செயற்படுத்தினாள் அவளது துரதிஷ்டமோ என்னவோ கதவும் திறந்துக்
கொண்டது.

மெல்ல உள்ளே நுழைந்தவள் அழைபேசியிலுள்ள பிளேஷின் துணையுடன் ஒருவாறு
அங்கிருந்து மின்குமிழை ஒளிர விட்டு அங்கே இங்கே கண்களை அலைய விட்டவாறு
அலங்கோலமாக கிடந்த அறையில் அடிமேல் அடிவைத்து உள்நோக்கி நடந்தவள்
கண்களில்

மூலையில் கிடந்த தாரெழிலியின் திருமண படம் தட்டுப்பட அதை பார்த்து ஒரு நொடி
ஸ்தம்பித்து போனாள்.

'யாரு இது நம்மள மாதிரியே இருக்காங்க' என்று மனதில் நினைத்தவாறே
அதனருகே சென்று கையிலெடுத்து புகைப்படத்தை உற்று நோக்கினாள்.
பக்கத்தில் நின்றவனை எங்கேயோ பார்த்த பரிட்சயமான முகமாக தோன்ற

தலைக்குள் லேசான வலி ஊடுருவ தலையை பிடித்துக் கொண்டவள் தடுமாறி
அருகிலிருந்த புத்தகங்களும் பழைய ஆல்பங்களும் அடுக்கப்பட்டிருந்த அலமாரியை
பிடித்துக் கொண்டு நிற்க முயன்றாள் பெண்ணவள்

அப்போது அவளது கைத்தட்டுப்பட்டு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த
ஆவணங்கள் ஆல்பங்கள் டைரிக்கள் அனைத்தும் கீழே தள்ளப்பட்டிருந்தது.

அதிலிருந்த வெளியேறிய தூசுக்களால் கொக் கொக் என்று இருமியவள்

ஒரு டைரி திறந்து கிடந்தது அதில் தாரெழிலியின் புகைப்படமிருக்க
அது அவள் கருத்தை கவர எடுத்து படிக்க ஆரம்பித்தாள் அதில்
சொல்லப்பட்டிருந்த விடயங்கள் ஒவ்வொன்றையும் வாசிக்க வாசிக்க
பழைய நியாபகங்கள் கண் முன்னால் படமாக விரிய அப்படியே
லோச்சனாவாக மயங்கி சரிந்தவள் எழும்பும் போது தாரெழிலியாய்
எழுந்துக் கொண்டாள்.


அப்போதே அவளுக்கு அபிஜித்தன் சக்ரவர்த்தி யாராக இருக்க வேண்டும்
என ஒரளவு புரிபட்டு விட்டது. அடுத்து ஸ்டெல்லா இல்லை இல்லை
மதில்டாவும் அகனும் தான் தங்களை அழைத்து வர செய்திருக்க
வேண்டுமென அவளுடைய யூகம் கூற,

எல்லாவற்ற்றிலும் ஓரளவாவது தெளிவு பெறவே அபிஜித்தனின்
வீட்டிற்குள் காலடி யெடுத்து வைத்தது அதன்பிறகு நடந்ததெல்லாம்
அவள் எதிர்பார்த்தவை தான்


எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள் அனியிடம் திரும்பி

"அனி உனக்கு எப்ப எப்டி நியாபகம் வந்துச்சு ?"

"உனக்கு தான் தெரியுமே உனக்கு நியாபகம் வந்து நீ
எனக்கு எப்போ தெரியணும்னு விரும்புறியோ அப்போ
தான் எனக்கு கொஞ்ச கொஞ்சமா நியாபகம் வரும்னு"

"ஆமா நான் தான் உனக்கு நியாபகம் வரணும்னு யோசிக்கவேயில்லயே "
என்றாள். லோச்சு புரியாமல்,

"இப்போ நீ அழுத்திட்டிருக்கும் போது நான் கூட
ஏண்டி அழற கேட்டப்போ நீதானே
கோவமா கத்தின உனக்கு நியாபகம் வந்தா
என் வேதனை புரியும்னு அப்போ தான்
தல கிறுகிறுத்து ஏதோ பண்ணுச்சு
நானும் அப்டியே உக்காந்துட்டேன் அப்போ தான்
நியாபகம் வந்துச்சு"

என்றாள் அனி சோகமாக,

சாரிடி தெரியாம என்று ஏதோ சொல்ல வர

விடுடி எப்போயிருந்தாலும் தெரிஞ்சு தானே
ஆகும் இதுக்கேன் பீல் பண்ற நான் தான்
உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும் அன்னைக்கு
நடந்ததுக்கு

என்றாள் அனிதா குற்றவுணர்ச்சியுடன், இருவரும்
இப்படி பேசிக் கொண்டிருக்க அங்கே வந்த
சந்தியாவோ

"என்ன லோச்சு அனிதா சாப்பிடலையா ?"
என்று லோச்சுவின் சித்தி
கொஞ்சம் கடுப்பாகவே குரல் கொடுக்க


"இதோ சித்தி வாரோம்"

என்று அனியை இழுத்துக் கொண்டு வந்தவளை
இடுப்பில் கைவைத்து முறைத்தபடி சந்தியா
நின்றிருக்க,


"என்ன சித்தி ஏன் இப்டி பாசமா பார்க்குறீங்க ?"

என்றபடி நாக்கை கடித்துக் கொண்டாள் லோச்சு


"லோச்சு நீ இப்போ முன்ன மாதிரியேயில்ல இன்னைக்கு காலைல
நீ வந்ததுலயிருந்து பார்த்துட்டு தானிருக்கேன் உனக்கு என்ன தான்
பிரச்சனை"

"ஒண்ணுமில்ல சித்தி" என்றாள் தலைக் குனிந்தபடி

"உங்க அம்மா தான் கால் பண்ணாங்க நீ வீட்டுக்கு வந்தது
பத்தரைக்கு இன்னும் கால் பண்ணல ஏன்னு கேட்டாங்க ?"
நீ இப்படி பொறுப்பில்லாத பொண்ணு கிடையாதே! என்னதான்டி
உன் பிரச்சனை ? பதில் சொல்லேன்டி?"

என்று வருத்தமாக வினவ


அவள் என்ன சொல்லுவாள் ? முற்பிறவி நியாபகம் வந்தது
என்று சொல்லவா ? அதில் காதலனென ஒரு கயவனை நம்பி
ஏமாற்றமடைந்த கதையை சொல்லவா ? சொன்னாலும்
தான் நம்புவார்களா ?

போய் நல்ல மனநல மருத்துவராக
பார்ப்போம் என்பார்கள். ஏன் உள்ள பிரச்சனையை இன்னும்
பெரிது படுத்த என யோசித்தவள்


"ஒன்னுமில்ல சித்தி போன் ஸ்டோரேஜ் கூடி போன்லயிருந்து கால்
போகமாட்டேங்குது அது தான்" என்றாள் சுவரை வெறித்தபடி

அவரும் வீட்டில் தானேயிருக்க போகிறாள் பிறகு
பார்த்துக் கொள்ளலாமென விட்டுவிட்டார்.

"இந்தா உங்கம்மா கதைக்கிறாங்க இந்தா பேசு
பிடி "

என்று கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர்
அனியை பிடித்துக் கொண்டு

"என்னதான் உன் பிரெண்டுக்கு பிரச்சனை ?
வழமையா துரு துருனு இருப்பா வந்த நேரம்
சித்தி னு சொன்னது மட்டும் தான் எதையோ
பறிகொடுத்த மாதிரியிருக்கா என்ன ப்ரோப்லேம்ன்னு
சொல்லு"

என்று கண்டிப்பான குரலில் வினவ

அனியோ "அது வந்து ஆண்ட்டி " என்று
ஆரம்பிக்க இடையிட்டு தடுத்தவர்

"நிறுத்து யாரு ஆண்ட்டி நானா ஒழுங்கா சித்தின்னு
கூப்புடு லோச்சுவுக்கு சித்தின்னா உனக்கும்
சித்தி தான் புரிஞ்சுதா" என்றார் கண்டிப்புடன்


அனியோ, "சரிங்க சித்தி " என்றவாறு தலையாட்டி வைத்தாள்.

"இப்போ சொல்லு என்ன பிரச்சனை உன் பிரெண்டுக்கு ?
நீங்க நான் ஓயா ட்ரிப் ரெண்டு நாள் நைட் அவுட்னு
சொல்லிட்டு ஏன் உடனே கிளம்பி வந்தீங்க?" கட்டாயம்
சொல்லியே தீரவேண்டும் கடுமை அவர் தொனியில்

அனியோ, "லோச்சு நல்லா தான் சித்தி இருக்குறா கொஞ்சம் ஹோம் சிக்
அது தான் அடுத்து ஒன் வீக்ல இங்க புறப்படணும்னு தெரிஞ்சவுடனே
கொஞ்சம் அப்செட் ஆகிட்டா அவ்ளோதான்" என்றாள் திருட்டு முழியுடன்

"ட்ரிப் பத்தி கேட்டேனே"
என்றார் கூர்மையான பார்வையோடு

"அது ஹான் அது தாருணியோட அம்மாக்கு சுகமில்லாதனால
வந்துட்டோம் சித்தி" என்று சமாளிக்க

"ம்ம் ஏதோ சொல்ற இங்க தானே இருப்பீங்க
பார்த்துக்குறேன்" அவரும் விட்டு பிடிக்கலாமென
நினைத்துக் கொண்டு


அவர்களை நோக்கி வந்த லோச்சுவை நோட்டமிட்டபடியே


"ரெண்டு பேரும் வந்து சாப்பிடுங்க"
என்று இருவரையும் இழுக்காத குறையாக
அழைத்து சென்றார் சந்தியா


அங்கு சென்றவுடனே அனிதாவுக்கு தூக்கிவாரிப் போட்டது
என்றால் லோச்சனாவின் விழிகளோ வெறுப்பை மட்டும் கனலாய்
உமிழ்ந்தது.

"என்னம்மா அப்டியே நின்னுட்டிங்க வாங்க வந்து சாப்பிடுங்க"
என்றார் லோச்சுவின் சிறிய தந்தை சத்யமூர்த்தி

இருந்தும் சமாளித்தபடி,
"இதோ வாரோம் சித்தா" என்று அனிதாவை பார்க்க

அனிதாவுக்கோ பைரவை கண்டவுடனேயே குளிர்காய்ச்சல்
கண்டது போல் உடல் வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தது.

"லோச்சு சாப்பாடு வேணாம்டி போகலாம் ப்ளீஸ்"
என்று கண்ணீர் வழிய லோச்சனாவின் கைகளை இறுக பற்றிக்
கொண்டு ,

"இங்க பாரு அனி தப்பு பண்ணது அவனுக தான்
நம்மயில்ல ஏன் நீ பயப்படுற ?
வா போய் சாப்பிடலாம் அடுத்து இது
நம்ம வீடு இங்க யாரும் உன்ன ஒன்னும்
பண்ண முடியாது "

என்று சமாதானம் சொல்லி அழைத்து வந்தவள்
உணவை பரிமாறி சாப்பிடு என்பது போல்
சைகை செய்தவள் தானும் உணவருந்த
ஆரம்பித்தாள்.

வதம் தொடரும்.......
**********************************************

இதோ அடுத்த episode போட்டுட்டேன் sorry for லேட் episode இப்போ ஒரு கிழமையா கொஞ்சம் உடம்பு சரியில்ல படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க இந்த ஆனா பொங்கி என்ன திட்ட கூடாது இவன கட்டயால அடிச்சாலும் I don 't care இவனோட make அப்டி okyaa plss நல்லதோ கெட்டதோ ரெண்டு வரி comments & likes தான் எனக்கு motivation அப்ப தான் கதை எப்டி இருக்குனு எனக்கும் தெரியும் போன uds க்கு likes and comments கொடுத்த செல்லங்களுக்கு thank you so much
h
ttps://pmtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.167/
 
Status
Not open for further replies.
Top