வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காவலின் மருத்துவ காதல்😍 - கதை திரி

Status
Not open for further replies.
காதல் 1


"காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட"


என்று சஷ்டி கவசத்தை உதடுகள் முனுமுனுத்த படி கண்களை மூடி இருக்கையில் அமர்ந்திருந்தார் பார்வதி அம்மாள்.

தன் மகனின் இதய அறுவை சி‌கி‌ச்சை நன் முறையில் நடக்க வேண்டி முருகனிடம் மன்றாடி கொண்டிருந்தார்.

அவரது பேரனும் அறுவை சிகிச்சை நிபுணருமான ராஜன் அவர் அருகில் அமர்ந்திருக்க அவன் தோள் மீது சாய்ந்தபடி அவன் அன்னையும் கண்ணீருடன் அறுவை சிகிச்சை நடக்கும் அறையின் முன்பு அமர்ந்திருந்தார்.


ராஜனின் தந்தைக்கு உள்ளே அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது.

அந்த அறையில் இருந்து மூன்று மணிநேரம் கழித்து வெளியே வந்தான் தனஞ்செயன் அந்த மருத்துவமனையின் தலைசிறந்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவர், ராஜன் தனாவை கட்டிக் கொண்டு நன்றி டியூட் என்றதும் தட்ஸ் ஓகே டியூட் நீயே இத செய்திருக்கலாம் என்னவிட உனக்கு இதில் அனுபவம் அதிகம் தானே என்று தனா ராஜனை கேட்க, எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் இரத்த உறவுகள் என்றதும் ஒருவித பயம் வரத்தானே செய்யுது என்றான் அதுவும் சரிதான் ரொம்ப நன்றி டியூட் என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சதுக்கு என்று அவனை கட்டிக் கொண்டான் தனா.

இருவரும் நெருங்கிய நண்பர்கள், லண்டனில் புகழ் பெற்ற மருத்துவமனையில் முதன்மை இதய அறுவை சி‌கி‌ச்சை நிபுணர்களாக பணியாற்றி வந்தனர்,..

ராஜன் அங்கேயே பணியில் இருக்க தனா தன் தாயின் விருப்பத்திற்கிணங்க தாய் நாட்டுக்கு வந்து தன் பணியை தொடர்ந்து வருகிறான்.


தன்னுடன் பணியில் இருக்கும் மற்றொரு அறுவை சிகிச்சை மருத்துவரான அர்ஜுனிடம் ராஜனின் தந்தைக்கு மேற் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு தன் அறைக்கு வந்து சோர்ந்து தன் இருக்கையில் அமர அவன் அலைபேசி தன் இருப்பைக் காட்டியது, தந்தையிடம் இருந்து அழைப்பு வர எடுத்து காதில் வைத்ததும் எப்போ தம்பி வருவ என்று சோர்ந்து ஒலித்தது தாய் லக்ஷ்மி யின் குரல்.

சட்டென இருக்கையில் இருந்து எழுந்து என்னாச்சி அம்மா என்றுக் கேட்டு கொண்டே ஜன்னல் பக்கம் செல்ல அலைபேசியில் அவனுக்கு பதில் அழித்தது என்னவோ அவன் தந்தை நந்தன் தான்.

தனா.. அம்மாக்கு கொஞ்சம் உடம்பு முடியல உன்னை பார்க்கனும் போல இருக்குதாம். இரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கிடாங்க மருத்தவர் வந்து பார்த்துவிட்டு மனஅழுத்தம் தான் இதுக்கு காரணம் என்று சொல்லிடாங்க.

லட்சு உன் கல்யாணத்த நினைச்சி தான் கவலையா இருக்கா உன்னை பார்க்கனும் போல இருக்குதாம் என்றதும் சரி பா திருச்சிக்கு விமான டிக்கெட் இருக்கான்னு பார்க்கிறேன் என்க. இல்ல இல்ல தனா நீ நம்ம கார் எடுத்துட்டு கடலூர் வந்துடு புதுச்சேரி கிட்ட இருக்குதே அங்க என்றதும்,

தனா அதிர்ந்து வாட்..? அம்மா அவுங்க தோழியை பார்க்க திருச்சி போரதா தானே சொன்னாங்க என்றதும், அப்படியா என்கிட்ட மதுரை போரோமுனு சொன்னாலே என்று நந்தன் சொல்லவும், என்ன சொன்னிங்க டாட் மதுரையா என்று கேட்கும் போதே நந்தனிடம் ஆஆஆஆ என்ற அலறல் அவர் லட்சு தான் தொடையில் கிள்ளி இருந்தார், நந்தன் மனைவியை பாவமாக பார்க்க

அந்த பக்கம்
ஹலோ..
ஹலோ..
என்னாச்சி டாட் என்று தனா கேட்கவும் ஒன்னுமில்லை தனா கரப்பான் பூச்சி கடிச்சிடுச்சி என்றார்,

என்ன டாட் கரப்பான் பூச்சி கடிக்குதா..??

இங்க கடிக்குதுபா என்று மனைவியை நந்தன் பார்க்க மனைவியின் கோப முகத்தை கண்டு, ஐயோ இவ ஏன் நம்ம இப்படி பார்த்துட்டு இருக்கா பேச்சினோடே எதும் சொல்லிடேனோ என்று யோசித்துக் கொண்டு டாக்டர் நிறைய பேச வேண்டாம் சொல்லி இருக்காங்க தனா,

ஆமாம் டாட் அம்மா நிறைய பேச கூடாது ஓய்வு எடுக்கட்டும்.

நீங்க சொல்லுங்க கடலூர் எப்போ..?? ஏன்..?? எதுக்கு..?? போனிங்க என்றதும்.. ஐயோ இவன் என்ன நம்மகிட்ட இவ்வளவு கேள்வி கேட்கிறான் என்று நினைத்து கொண்டு.

டாக்டர் என்னை தான் நிறைய பேச வேண்டாம்னு சொல்லி இருக்காங்க தனா,
உங்களையா ஏன்....??
நான் பேசினா தான் லட்சுக்கு மனஅழுத்தம் அதிகம் ஆகுதாம் அதான், நீ வா மகனே சீக்கிரம் என்றதும்

சரி அப்பா நான் வீட்டுக்கு போயிட்டு தினேஷ் அழைச்சிட்டு வரேன் என்று தனா சொல்லவும்.

அவன் எங்க அங்க இருக்கான் இங்க தானே இருக்கான் என்றார் நந்தன் சட்டென.

என்ன அவனும் அங்க தான் இருக்கானா என்று தனா கேட்கவும்.
அச்சோ உலறிட்டேனோ.. சமாளிப்போம்.. லட்சுக்கு உடம்பு சரியில்லை தெரிஞ்சதும் இங்க வந்துட்டான் தனா.

ஓஓஓ.. அப்பா அது என்று தனா எதோ கேட்க வர,
சரி தனா தூக்கம் வருது நீ எதனாலும் இங்க வந்து பேசு மகனே என்றுவிட்டு அந்த பக்கம் பதில் பேச விடாது அழைப்பை அனைத்து விட்டு மனைவியிடம் திரும்பி எப்புபுபுடி என்று மெச்சிக் கொள்ள..

லக்ஷ்மி யும் அவர் இளைய மகன் தினேஷ் இருவரும் நந்தனை பார்த்து அவன் நாளைக்கு வரட்டும் அப்புறம் பார்க்கலாம் என்றுவிட்டு தூங்க சென்றனர்.

தினேஷ் தனா விட ஒரு வருடம் மட்டுமே இளையவன். தன் தந்தையின் தொழிலான இயற்கை உரம் தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் ஆர்வம் கொண்டு அதனை எடுத்து நடத்தி வருகிறான். சென்னை யில் இருக்கும் மிக பிரபலமான டிடி ஃபெர்டெலைஸர்(DD Fertilizer) நிறுவனத்தின் உரிமையாளர்.
மகனின் திறமையில் திருப்திகரமாக இருக்க இப்பொழுது நிறுவன பொறுப்பு முழுவதும் தினேஷ் தான்.

நந்தன் மனைவியின் யோசனை முகத்தை கண்டு சின்ன புன்னகையுடன் அவரை நோக்கி, லட்சு எது பண்ணினாலும் நல்லா யோசிச்சு செய்மா...

நாளைக்கு நீ தான் அவன் கிட்ட பேசணும்.. அதுமட்டுமல்ல தர்ஷினி ரொம்ப நல்ல அமைதியான பெண் போல தெரியுது..

எப்பொழுதும் வேலை வேலை னு இருக்க இவனுக்கு கட்டி வெச்சி தர்ஷி வாழ்க்கைய வீணாக்கிடாத, என்ன இருந்தாலும் அவ உன்னோட அண்ணன் பெண் யோசிச்சு பார்த்துக்கோ இன்னும் நேரம் இருக்கு.

ம்ம்ம்.. தெரியும் மனுஷா நீங்க தூங்குங்க, அவன எப்படி சம்மதம் சொல்ல வைக்கனு நான் யோசிக்கனும் என்றார் லக்ஷ்மி.

இப்படியே ஒரு வழியாக தூக்கத்தை தழுவினர் இருவரும்.

இங்கே தனா அர்ஜுனிடம் செய்ய வேண்டியதை சொல்லி விட்டு யமுனா என்ற செவிலியரை அர்ஜுன் உதவிக்கு வைத்து..

ராஜனுக்கும் அழைத்து அவன் பயணத்தை பற்றி தெரிவித்து விட்டே தாயைத் தேடி கடலூர் நோக்கி பறந்தது அவன் இனோவா....

......
 
Last edited:
காதல் 2




கடலூர் என்னும் வரவேற்பு பலகையை கடந்து ஊரின் உள்ளே வரும்போதே தந்தைக்கு அழைத்து எங்கே வர வேண்டும் என்று கேட்க, விடியற்காலை என்பதால் நல்ல தூக்கத்தில் இருந்தவர் மகன் குரலில் சற்று திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார்.

தனா உண்மையாவே வந்துட்டியா என்று கேட்க, வீடு எங்க சொல்லுங்க டாட் அப்பதானே வரமுடியும் இப்போ தான் கடலூர் வந்திருக்கேன் என்றான்,

தனா நீ அங்க உள்ள புது பேருந்து நிலையம் கேட்டு அங்க போயிட்டு வெயிட் பண்ணு நா ஆள் அனுப்பி வைக்கிறேன் என்றதும் சரி டாட் என்று அலைபேசியை துண்டித்து விட்டு பக்கம் இருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றது அந்த இனோவா.

அலைபேசியை வைத்த நந்தன் மனைவியை எழுப்பி மகன் அழைத்ததை கூறினார் தனா வருகிறான் என்று கேட்டதும், லக்ஷ்மி கண்கள் மின்ன சரி மனுஷா நான் அண்ணன் கிட்ட ஆள் அனுப்ப சொல்றேன் என்று அண்ணன் வீட்டை நோக்கி சென்றார்.

கிராமத்து அதிகாலை என்பதால் அனைவருமே எழுந்து அன்றைய வேலைகளை தொடங்கி இருந்தனர்.

அண்ணி... என்று அழைத்துக் கொண்டே தான் இருக்கும் வீட்டில் இருந்து அந்த பெரிய வீட்டை நோக்கி சென்றார் லக்ஷ்மி, சொல்லுங்க மதனி என்று வெளியே வந்தார் சாரதா.

லக்ஷ்மி யின் தந்தை அந்த ஊரின் முக்கிய தலைகட்டு அவரின் ஆளுமையான தோரணையே நான் சொல்வது மட்டும் தான் என்பது போல் இருக்கும் அதனால் அந்த கிராம மக்கள் அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச மாட்டார்கள், இந்த தோரணைக்கு பயந்து தான் அன்று லக்ஷ்மி காதலை வீட்டில் சொல்ல பயந்து ஓடியது.

லக்ஷ்மி யின் மூத்த அண்ணன் ரங்கா தந்தையின் தோரணை ஆளுமை அப்படியே கொண்டவர், தந்தையின் மரணத்திற்கு பின் அவரின் சாயல் கொண்ட ரங்கா அந்த ஊரின் மரியாதையை ஏற்று வருகிறார், ரங்காவின் மனைவி சாரதா இவர்களுக்கு இரு மகள்கள் தர்ஷினி வர்ஷினி இரட்டையர்.


இரண்டாவது அண்ணன் பாண்டி தாய் சுந்தரியின் சாயல் கொண்டவர் அவர் மனைவி சாந்தி இவர்களின் ஒரே மகன் கதிர்.

லக்ஷ்மி கடைக்குட்டி அந்த வீட்டின் செல்ல பெண். நிறைய சினிமா பார்த்து பார்த்து காதல் என்றாலே வீட்டில் பிரித்து விடுவார்கள் என இவரே தீர்மானித்து சென்று விட்டார்.

ஒரு வாரம் முன்பு சென்னையில் இருக்கும் தன் அண்ணன் மகளை பார்க்க வந்த பாண்டி கண்ணில் லக்ஷ்மி பட்டுவிட, தங்கச்சிமா என்று பாண்டி அழைக்கவும். அண்ணனை கண்டு பயத்திலும் பிரிவின் ஏக்கத்திலும் கண் கலங்க அண்ணா என்னை மன்னிச்சிடு என்றார். பாண்டி தங்கையின் தோற்றத்தை வைத்தே நல்லபடியாக வாழ்கிறார் என்று புரிந்து கொண்டு தங்கையின் தலையை தடவியவாரே, வீட்ல சொல்லி இருக்கலாமே பாப்பா நாங்களே உங்களுக்கு திருமணம் செய்து வெச்சிருப்போமே எங்கள நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா என்றதும்.

என்ன சொல்றிங்க என்று லக்ஷ்மி அதிர்ந்து அப்போ அப்பா என்று கேட்க அவரும் இதான் சொன்னார். நீயும் மாப்பிள்ளையும் ஊர், அலைபேசி எண்.,எல்லாம் மாத்திட்டிங்க.. என் மகள் எங்கிருந்தாலும் நல்லா தான் இருப்பானு சொல்லி தேட வேண்டாம் சொல்லிடாங்க அப்பா.

உன்னைத்தான் அவருக்கு ரொம்ப பிடிக்குமே அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் கடைசி வரை உன்னை உன் கணவர உன் பிள்ளைகள பார்க்க முடியலனு தான் அவருக்கு ஏக்கம் இருந்துச்சு, உன்னைத் தேடி கூப்பிட்டு வரலாம்னு அண்ணன் சொன்னாங்க. அப்பா வேண்டாம் சொல்லிடாங்க ஆனா நீ ஒரு நாள் கண்டிப்பா வருவனு சொன்னாங்க.

அம்மா கூட உன்னை பத்தி நெனச்சி அடிக்கடி அழும், என்கூட ஊருக்கு வா பாப்பா எல்லோரும் ரொம்ப சந்தோஷம் படுவாங்க என்றதும்.

சரிங்க அண்ணன் இப்போ என் கூட வாங்க பக்கம் தான் அவர் அலுவலகம் இருக்கு போகலாம் என்று பாண்டியை அழைத்து கொண்டு சென்றார்.

நந்தனை அண்ணனுக்கு அறிமுகப்படுத்தி., பாண்டி சொல்லியதை நந்தனிடம் பகிர்ந்து கொள்ள, சரி லட்சு போகலாம் என்று அப்போதே பாண்டியோடு ஊருக்கு கிளம்பினார்கள்.

லக்ஷ்மி தினேஷை அழைத்து நந்தனோடு தன் தோழி ஊருக்கு செல்வதாகவும் வர நேரம் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார்.

பாண்டி பெரிய அண்ணனுக்கு அழைத்து நடந்த அனைத்தும் சொல்லி லக்ஷ்மி கணவருடன் வருவதையும் தெரியப்படுத்தி இருந்தார்.

வீடு வந்ததும் தாயிடம் மன்னிப்பு கேட்டு கணவருடன் ஆசிர்வாதம் பெற்றார் லக்ஷ்மி தந்தை மறைவிற்கு வருத்தம் தெரிவித்து, பெரிய அண்ணனிடமும் மன்னிப்பு கேட்டு, பின்னர் அவர் அவர்கள் மனைவி குழந்தைகள் பற்றி பகிர்ந்துக் கொண்டு பாச போராட்டம் முடிந்து.

லக்ஷ்மி கணவரை பார்க்க அவரோ உங்க பாச போராட்டம் தாங்க முடியல ஓடி போனதுக்கு உள்ள மரியாதையே போச்சு என்று அவர் காதில் கிசுகிசுத்தார், கணவருக்கு தன் முறைப்பைக் காட்டி பின் தன் தாயிடம் பேச தொடங்கினார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வர்ஷினியிடம் இருந்து அழைப்பு வர, நாங்க வந்துட்டோம் பாப்பா நீ பத்திரமா இரு என்றார். அதோடு வர்ஷினி தன் அக்காவை பற்றி விசாரிக்கவும், வயலுக்கு போய் இருக்கு பாப்பா என்று
சொல்லி பின்னர் சிலபல பத்திரங்கள் சொல்லி அழைப்பை துண்டித்தார்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி எப்ப பார்த்தாலும் வயல்வெளினு சுத்திட்டு இருக்காளுங்க எப்ப தான் கல்யாணம் பண்ண போறாளுங்கனு தெரியல நின்று சிலாகித்துக் கொண்டார்.


உனக்கு பையனோ பொண்ணோ இருந்தா இவனுங்களோட பிள்ளைகள் யாரையாவது கல்யாணம் பண்ணி கொடுக்க உங்க அப்பா ரொம்ப ஆசைப்பட்டார்
என்று சுந்தரி சொல்லவும்.
எனக்கும் ஆசையா தான் அம்மா இருக்கு ஆனா எங்க இந்த பெரியவன் கல்யாண பேச்சு எடுத்தாலே வேண்டாம் சொல்லிடுறான் என்று கவலையாக சொன்னார் லக்ஷ்மி.
லக்ஷ்மி க்கு சட்டென்று ஏதோ தோன்ற ஏன் அண்ணன் என் பையனுக்கு உன் பொண்ண குடுப்பியா என்று கேட்டார் ரங்காவிடம்.
என் மாப்பிள்ளைக்கு குடுக்காம வேற யாருக்குமா கொடுக்க போறேன் ஆனா தர்ஷினி இப்போ கல்யாணம் வேணாம் சொல்றாமா அக்காவுக்கு பண்ணாம வர்ஷினிக்கு எப்படி மா பண்றது, இப்ப கூட இரண்டு நாள் முன்னாடி கல்யாணம் பேச்சு எடுக்கவும் வயலே கெதின்னு அங்கேயே இருக்குது.

லக்ஷ்மி சட்டென்று முடிவெடுத்தவராய் நா முடிவு பண்ணிட்டேன் அண்ணன் தர்ஷினி தான் என் வீட்டு மருமக இந்தாங்க தனாவோடு புகைப்படம் பாப்பா கிட்ட காமிச்சு சம்மதம் வாங்குங்க மத்தத நான் பாத்துக்குறேன் என்றதும்,
இல்ல தங்கச்சி மா அது வர்ஷினி மாதிரி நிரந்தர இடமான வேலை எல்லாம் இல்ல அது மாப்பிள்ளைக்கு ஒத்துவருமானு தெரியல அதான் என்று ரங்கா சற்று தயங்க.. தன் மகள் வயல்வெளி வேலை என இருப்பதை அண்ணன் சொல்லத் தயங்குவதாக எண்ணி...,
நீங்க இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் அண்ணா பாப்பா கிட்ட சம்மதம் கேளுங்க புடிச்சிருந்தா உடனே நம்ம கல்யாணம் பண்ணி வைக்கிறோம் தனாவ சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு என்று முடித்துக் கொண்டார்.
சரி தங்கச்சி மா என்று கையில் இருந்த தனாவின் புகைப்படத்தை தன் தாயிடம் கொடுத்தார் ரங்கா,
அதனை வாங்கி பார்த்து என்னோட பேரன் ராசா கணக்குல இருக்கான் இல்ல என்றபடி அந்த புகைப்படத்தை சாரதா விடம் கொடுத்தார். பின்னர் அனைவரும் அந்த புகைப்படத்தினை பார்த்து திருப்தி அடைந்தனர்.

தங்கச்சிமா நீ தர்ஷினிய பார்க்கலையே என்றவாறு அருகில் இருந்த ஒரு புகைப்படத்தை ரங்கா லட்சுமியிடம் காண்பித்தார்.
அதில் தர்ஷினி வர்ஷினி இருவரும் புடவை அணிந்து இருந்தனர் உருவ வேறுபாடு இருந்தது இருவருக்கும்.
அந்தா உங்க அண்ணன மாதிரியே அளந்தா போல சிரிக்கிறாளே அவ தான் தர்ஷினி, நல்லா வாய்விட்டு சிரிக்கிறாளே அவதான் வர்ஷினி என்றார் சுந்தரி.
மென் புன்னகையோடு லக்ஷ்மி அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு சரிங்கண்ணே நீங்க பேசிட்டு சொல்லுங்க நாங்க கிளம்புறோம் என்றவாறு நந்தன் லக்ஷ்மி விடை பெற்றனர் அங்கிருந்து.

இரு நாட்கள் கழித்து அண்ணனிடமிருந்து அழைப்பு வர அதில் தர்ஷினி திருமணத்திற்கு சம்மதம் சொன்னது தெரிவிக்கவும்,
நந்தனும் லட்சுமியும் உடனே புறப்பட்டு இருந்தனர் கிராமத்தை நோக்கி.
இடையில் நந்தன் லக்ஷ்மி யிடம் என்னம்மா தனா கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலையே என்று கேட்கவும் நான் பாத்துக்குறேன் அவன கேட்டா எப்படியும் வேணா தான் சொல்லுவான். என் அண்ணன் பொண்ணு மாதிரி ஒரு நல்ல கிராமத்து பொண்ணு கிட்ட மாட்டினா தான் இவன் எல்லாம் உருப்படுவான் அப்போ தான் அவ இவன கட்டி வீட்ல வைப்பா என்றதும்., தன் மனைவி அவள் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார் என்பதை உணர்ந்த நந்தன் அதோடு அமைதியாகிவிட்டார்.
கிராமத்துக்கு வந்ததும் திருமணம் முடியும் வரை தான் பக்கத்தில் இருக்கும் அவர்களது மற்றொரு வீட்டில் தங்கிக் கொள்வதாக சொல்லி இருவரும் அந்த வீட்டிலேயே தங்கி கொண்டனர்.

ஜாதகம் பார்த்து இரண்டு தினங்களில் திருமணம் என்று குறிக்கப்பட்டது.
தினேஷை அழைத்து இங்கு வர சொல்லி அனைத்தும் அவனிடம் தெரிவிக்கப்பட, அதன் பின்னர் தான் தனாவை வரவழைத்தது.

லக்ஷ்மி குரல் கேட்டு வெளியே வந்த சாரதா என்னங்க மதனி இவ்வளவு பரபரப்பா இருக்கிங்க எதும் பிரச்சனை இல்லையே என்று கேட்க,

இல்லை அண்ணி தனா கடலூர் வந்துட்டான், அண்ணன் கிட்ட சொல்லி அவன கூப்பிட்டு வர ஆள் அனுப்பனும் அதான் வந்தன் அண்ணன் வீட்டில் இருக்கா கொஞ்சம் கூப்பிடுரிங்களா என்றதும்... அட மாப்பிள்ளை வந்தாச்சா... இந்தா உங்க அண்ணன் வர சொல்றேன் என்றவாறே கணவனை அழைத்து வந்தார் சாரதா.

ரங்காவிடம் தனா வரவை லக்ஷ்மி சொல்லவும், நானே போயிட்டு என் மாப்பிள்ளைய கூப்பிட்டு வரன் தங்கச்சிமா என்று கிளம்பி இருந்தார்.

அந்த வீடு இரண்டு தளம் அதில் மூன்று படுக்கையறையும் கொண்ட வீடு. கீழ் தளத்தில் பெரிய கூடம் ஒரு படுக்கையறையும் சமையல் அறையும் கொண்டது மேல் தளத்தில் பால்கனியோடு இரு படுக்கையறைகளும் கொண்டது.

நந்தன் லக்ஷ்மி தம்பதியர் கீழ் தளத்தில் இருந்தனர், தினேஷ் மேல் படுக்கையறையில் இருக்க அது அதிகாலை என்பதால் தனா வந்த செய்தி அவனுக்கு தெரிந்திருக்க வில்லை.
வெள்ளை வேட்டி சட்டையில் மிடுக்கோடு வந்தவரின் தோரணையில் சற்றே மிரட்சியோடு அவரோடு அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தான் தனஞ்செயன்...
 
Status
Not open for further replies.
Top