சந்தேகமாக தன் மகனை பார்க்க.. அவனோ அவரை எங்கே பார்த்தான்?? அவன் பார்வை மொத்தமும் இருந்தது ரதியின் மேல்… ப்ளூ கலர் ஜீன்ஸ், பிங்க் கலர் குர்தி அணிந்திருந்தவளின் கழுத்தில் மிக மிக மெல்லிய சங்கிலி ஒன்று அவளின் கழுத்தோடு சேர்ந்து கவிபாடியது…
காதில் சின்னதாக ஸ்டட் ஒன்றை அணிந்திருந்தாள்… அவள் கையிலிருந்த ப்ரெஸ்லெட்டை தான் பார்த்தான் அவன்… அவன் வாங்கிக் கொடுத்தது என்பதற்காகவே மூன்று வருடங்களாய் அதை எந்த சூழ்நிலையிலும் கழற்றாமல் அணிந்து கொண்டிருக்கிறாள்..
தங்கமோ, வைரமோ இல்லை அது… வெள்ளி ப்ரெஸ்லெட் தான் அது… அவன் வாங்கிக் கொடுத்தான் என்பதற்காகவே கழற்றாமல் அணிந்திருக்கிறாள்… ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அவளின் கையிலிருக்கும் ப்ரெஸ்லெட்டை பார்த்து விடுவான்…
அவனளித்த விலையில்லா பரிசு அது.. அதை எந்நாளும் பொக்கிஷமாய் பாதுகாக்கிறாள் ரதி..
என்னவோ அந்த பிரெஸ்லெட்டை பார்த்த பின் அவளை திட்ட தோன்றாமல் வெளியே செல்ல… அவளும் "அப்பாடாஆஆ" என நீண்ட பெருமூச்சு விட்டபடி.. ஹாலில் வைத்திருந்த பேக்கை எடுத்து தோளில் மாட்டியவள்… காலேஜ் செல்ல வீட்டின் வாசலை தான் நெருங்கியிருப்பாள்…
"நில்லு" என்ற கம்பீரக்குரலில் கால்கள் தானாக நிற்க.. பின்னால் திரும்பி பார்க்கக்கூட முடியாதபடி.. அவளின் உடலோடு உரசியபடி வந்து நின்றான் அனங்கன்…
"காலேஜுக்கு தானே போற?? நான் ட்ராப் பண்றேன்??" என காதோரம் கிசுகிசுத்தவாறே, காரின் சாவியை கையில் சுழற்றியபடி செல்ல… ரதியோ பேச்சற்று மௌனமாய் நின்றாள்…
அவன் அழைத்து செல்வதாய் சொன்னது சந்தோஷம் என்றாலும்… அவன் இப்படியெல்லாம் அழைத்து செல்லும் ரகமில்லையே.. என இன்னொரு புறம் சந்தேகமாகவும் இருந்தது…
எது எப்படியாக இருந்தாலும்.. அவனுடன் பயணிப்பது பிடித்தே இருந்தது அவளுக்கு… மெல்ல மெல்ல அவனை ரசித்தவாறே பயணத்தை முடித்தாள் ரதி…
கரம் பிடிப்பான்…