வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சிறையெடுத்தாய் என்னை!! கரம் பிடித்தேன் உன்னை!! - கதை திரி

Status
Not open for further replies.
சிறை : 14


இசக்கியால் ஜீரணிக்கவே முடியாமல் போனது. இத்தனை பார்க்கும் பொழுதே தன்னை ஒருத்தி அதுவும் செருப்பால் அறைந்து விட்டால் என்பதை நினைக்கும் பொழுதே அவமானத்தை தாண்டி அவளை கொன்று போடும் வேகம் அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது.



எதிரில் இருப்பவளை கொன்று போட விடுமா?? அவன் காதல்... அவளுக்கு ஒன்றென்றால் அவனுக்கும் உயிர் போகும் வலியல்லவா வலிக்கும்.


இப்படி ஒரு சூழ்நிலையில் அவன் நிற்பான் என கனவில் கூட நினைத்தது இல்லை... வலியுடன் அவளை பார்க்க... தாச்சாயினிக்கு சற்று பயம் தான்.


"அவசரப்பட்டு விட்டோமோ?" என நினைத்த மனதுக்கு பிடிவாதமாக இவன் செய்த கெட்டதை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவள்,


"இசக்" என்பதற்குள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைய... அவன் அறைந்த வேகத்தில் தொப்பென கீழே போய் விழுந்தாள்.


அத்தோடு விட்டானா அவன்?... கீழே விழுந்தவளின் முடியை கொத்தாக பிடித்து தூக்கியவன்... "உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா? என்னையே செருப்பால அடிச்சிருப்ப?" என உறுமியவனின் காதல் உள்ளம் தவித்தாலும்...


அவன் வகிக்கும் பதவியும், ஊரில் அவனுக்கு இருக்கும் மரியாதையும் கெடுத்துக் கொள்ள அவன் எப்பொழுதும் விரும்பவில்லை.


"ப்ப்ச்ச்.. வலிக்குது இசக்கி" என வலியுடன் சொல்லி முடிப்பதற்குள் கைகளை சற்று தளர்த்தியிருந்தான்.


அப்பொழுது தான் செல்வி மயக்கத்தில் இருந்து எழுந்தாள்... இசக்கியின் கையில் சிக்கி தவிக்கும் பெண்ணை காப்பாற்றும் பொருட்டு... நேராக இசக்கியின் முன்பாக சென்று நின்றவர்...


"எம் பொண்ணை விடுடா" என அவன் இத்தனை நாள் கட்டி காப்பாத்திய மரியாதையை காற்றில் ஏற்றி விட... தீயென தகித்தவனின் உள்ளம் கண்களை ஜுவாலை கொண்டு செல்வியை முறைக்க...


அவன் பார்வைக்கே உள்ளுக்குள் குளிர் ஜுரம் எடுத்தது. அவன் அடி பணிவது அனைத்துமே தாச்சாயினியிடம் மட்டுமே... அவளை தவிர வேறு யாருக்கும் அவன் அடிபணியவும் மாட்டான். அடிபணிய விரும்பவும் மாட்டான்.


"என்ன சவுண்டு ஓவரா வருது?"


"ஆமா அப்படித்தான்டா பேசுவேன்... என்‌ பொண்ணை விடு... இல்லை போலீஸ் மீடியான்னு எங்கே வேணும்னாலும் போவேன்.. உன்னை பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லுவேன்" என மிரட்டியவருக்கு எதிராக இடியென சிரிப்பு தோன்றிட...‌


நிமிர்ந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி இசக்கி தான் சிரித்து கொண்டிருந்தான்... "என்ன சொன்ன?? போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பீயா?"... ஓஹ்ஹ்.. தாராளமா கொடு...


"யாரு நம்பர் வேணும் உனக்கு? பிரெஸ்ஸோட நம்பர் வேணுமா".. என நக்கலுடன் கேட்டவனை எரிக்கும் பார்வை பார்த்தார்...


"இசக்கி என் பொண்ணை விடு... அவளை நல்ல பையனுக்கு கட்டி வைக்கணும்.. உன்னை மாதிரி ஊர் பொறுக்கிக்கு இல்லை" என வார்த்தைகளை விட...


இசக்கியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை... ஆனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை ஜனங்களுக்கும் ஏகப்பட்ட வியப்பு, செல்வியின் பேச்சு, தாச்சாயினியின் நடவடிக்கை என ஒன்று மாற்றி ஒன்றை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்..


இசக்கியை தடுக்கவோ, சூழ்நிலையை விலக்கவோ யாருமே முயற்சி செய்யவே இல்லை...


அழுத்தமாக இரண்டு நிமிடங்கள் நின்றிருந்தவன்... யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தாச்சாயினியை தூக்கி தோளில் துண்டினை எடுத்து போடுவது போல் போட்டவன்...


"இனி இந்த ஊர்பொறுக்கி தான் உன் பொண்ணோட புருஷன்... எழுதி வச்சிக்கோ" என கணீர் குரலில் கர்ஜித்தவன்... தான் கொண்டு வந்த காரில் தாச்சாயினியை தூக்கி போட...


இறங்க முயற்சி செய்தவளின் பலன் பூஜ்ஜியமே... அனைத்து டோர்களையும் லாக் பண்ணியிருந்தான்...


"இசக்கி எங்கே கூப்பிட்டு போற??" விடு என்னை" என அரற்றியவளின் குரல் அவன் காதில் விழுந்தாள் தானே...



"தாச்சா... தாச்சா... அக்கா... அக்கா" என செல்வி, பரிதி இருவரின் குரல் கேட்காத வண்ணம்... புழுதியை கிளப்பிய படி கார் பறந்து சென்றது...


வசந்தி வெற்றி புன்னகையுடன் பார்க்க... செல்வியோ அனாதரவான நிலையில் நின்றிருந்தார்...


தன் பெண்ணின் வாழ்க்கை மொத்தமாக முடிந்தே விட்டதே... பத்தோடு பதினொன்றாக தன் பெண்ணும் இனி வாழ போகிறாளே என நினைத்தவருக்கு உள்ளம் பதைபதைத்துப் போக..


கார் போன திசையில் பின்னாடியே ஓடினார்...


எப்படியும் அவன் வீட்டிற்கு தான் அழைத்து செல்வான் என நினைத்தவர்... அவன் வீட்டுக்கு செல்ல... ஆனால் கில்லாடி கீரைவடை அவனோ, தாச்சாயினி வீட்டில் தான் காரை விட்டிருந்தான்...


ஊரெல்லாம் வலைவீசி தேடியவர்... அவர் வீட்டில் தேட மறந்தது விதியின் சதியே... நேராக தாச்சாயினியின் வீட்டிற்குளளே நுழைய… இரண்டு படுக்கையறை கொண்ட வீடல்லவா அது... சுத்தமாக இருந்தது...


அப்பொழுதும் அவளை மிரட்டி விட்டு விடலாம் என எண்ணியவன்... அவளை வீட்டினுள் விட்டு கதவினை லாக் பண்ணிட... இசக்கியுடன் தனிமையில் அதுவும் அவன் கோபத்தில் இருக்கும் பொழுது ஒருவித பயம் தாச்சாயினிக்கு உண்டாக்கிட...


"எங்க வீட்டை விட்டு வெளியே போ... முதல்ல என்ன நடந்தது என்று புரிஞ்சிக்கோ?"


"என்ன நடந்திச்சி?" என அழுத்தமாக சற்று நிதானமாக கேட்ட இசக்கியின் ஊடுருவும் பார்வையில்... அவள் சென்றது... தன் தாயை வசந்தி அறைந்தது... தன் ஆடையை கிழித்தது... அந்த கோபத்தில் தான் அறைந்தது... நீ வந்ததும் என்ன நடந்தது என அறியாமல் நீ என்னை அடித்தது...


அந்த கோபத்தில் நான் உன்னை அடித்தது... என அனைத்தையும் சொல்லி முடிப்பதற்குள் இசக்கி மின் முகமோ செவ்வானமாய் கோபத்தில் சிவந்து நின்றது...


வசந்தியை நினைக்க நினைக்க ஆத்திரம் தாளவில்லை அவனுக்கு... பலபேர் இருக்கும் இடத்தில் தாச்சாயினியின் ஆடையை பிடித்து இழுத்தவள் மீது கோபம் பல்மடங்கு பெருகியது...


அவனின் முகத்தை பார்த்த தாச்சாயினி தன் மேல் தான் கோபமாக இருக்கிறான் என தப்பாக அர்த்தம் புரிந்தவளுக்கு...


தவறு பண்ணிய இவனுக்கு இவ்வளவு கோபம் வருகிறதா?" என நினைத்தவளுக்கு எரிச்சல் மேலோங்கிட... அவனை முதலில் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மட்டுமே உள்ளம் துடித்தது...


"நடந்தது நடந்திருச்சி... நீ வீட்டை விட்டு வெளியே போ?" என்றவளை பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன்... அவளின் அருகில் வர வர.. உள்ளுக்குள் குளிர் ஜுரமே வந்தது தாச்சாயினிக்கு...


அவனோ அவளின் முதுகின் பின்னால் வர.. அதுவரை பரிதியின் சட்டையை பிடித்து வைத்திருந்தவளுக்கு... காரினுள் இவன் தூக்கிப் போட்ட வேகத்தில் சட்டை எங்கேயோ தவறி விழுந்து விட... இப்பொழுது ஆடை கிழிந்தது அப்பட்டமாக அவளின் புறமுதுகை காட்டியது...


அவளின் முதுகின் பின்னால் வந்து நின்றவனின் மேல் கோபம் தோன்றிட... "ப்ளீஸ்.. தள்ளிப் போ" என்பதற்குள்... தாச்சாயினியை தன் புறம் திருப்பியவன்...


இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்... சற்று அழுத்தமாக வேகத்துடன் அவளை நாடிட... அவளோ முதல் முத்தத்தில் ஸதம்பித்து நின்றவளின் கரங்கள்...


அவனை விட்டு விலகிட முயற்சி செய்தவளின் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்...


அவனை விட்டு பிரிய முயற்சி செய்தவளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய... சில நிமிடங்களுக்கு பிறகு அவளை விட்டவன்...



தன் கழுத்தில் எப்பொழுதும் உறவாடிக் கொண்டிருக்கும் தாலி போன்ற முறுக்கு செயினை வெளியே எடுக்க... அதனுடன் தாலியும் கோர்க்கப்பட்டிருந்தது...


அதை பார்த்து விழி விரித்தவளை பார்த்து புன்னகைத்தவன்... "என்ன பார்க்கிற?... இது எங்க அம்மா தாலி.. எப்போ நான் உன்னை கட்டிக்கிறீயான்னு? கேட்டேனோ அப்பவே இந்த தாலி என் கிட்ட வந்திருச்சி... இப்போ இது உன் கழுத்துக்கு வரப்போகுது"


எவ்வளவு கெட்டது நடந்தாலும் அவனுக்கு என்ன நல்லது என ஆராயும் அவன் புத்தி... இவ்வளவு கலவரத்திற்கு பிறகு தாச்சாயினியை விட்டு விட அவன் என்ன முட்டாளா??...


இது தக்க சூழ்நிலை இல்லை என அறிந்தாலும்... தாச்சாவை விட மனமில்லாமல்... தன் மனம் சொல்லும் பேச்சை முதல் முறை கேட்டான்...


தாச்சாயினி தவிப்புடன் பார்க்கும் பொழுதே அவள் கழுத்தில் மாங்கல்யத்தை மாலை போல் சூட்டிட.. அதிர்ந்து போனது பெண் உள்ளம்.


தன் நெஞ்சில் உறவாடிய தாலிச் செயினை பார்த்தவளுக்கு எரிச்சல் தான் தோன்றியதே தவிர, காதல் தோன்றவில்லை...


மறுநிமிடமே அவன் கன்னத்தில் அறைய போன கைகள் அந்தரத்திலே தடுத்து நிப்பாட்டப்பட்டது இசக்கியின் வலுவான கரங்களால்...


"என்னடி.. அடிக்க அடிக்க வாங்கிக்கிட்டே இருப்பேன்னு நினைச்சீயா?" என இதழை சுழிக்க...


அவளோ தீக்கிரையாக்கப்பட்ட புழுவினை போல் துடித்தாள்.. "நீ தாலி கட்டிட்டா உன் கூட நான் வாழுவேனனு நினைச்சீயா?"...


"வாழ்ந்து தான்டி ஆகணும்... இசக்கி ஒரு முடிவு எடுத்தா எடுத்தது தான்... நீ என் கூட வாழ்ந்து தான் ஆகணும்" என்றவளை

இரு கைகளில் ஏந்திட..


அடுத்து நடக்கப் போவதை அறிந்த பெண் உள்ளம் அவளை எச்சரிக்க... அவன்‌ கைகளில் இருந்து இறங்க முயற்சிக்க...


"தாலியே கட்டியாச்சி எங்கே ஓடப்பாக்குற?" அவளை வலுவான கரங்கள் கொண்டு தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வர...


கணவனின் முதல் தொடுகை கசந்தது பெண்ணுக்கு...

முதல் உறவு பெண்ணுக்கு வலி தான்... ஆனால் இங்கு பெண்ணவளுக்கு உடல் வலியை தாண்டி உள்ளமும் வலித்தது...


அவனின் முத்தங்களும், அழுத்தமும் இனிக்கவில்லை... வேப்பங்காயை மென்று முழுங்குவது போல் கசங்கி போன காகிதமாய் கசங்கியது அவள் பெண்மை...


அவனின் தொடுகையில் சூரியன் கண்ட பனியாக உறையவில்லை ... அனலில் இட்ட மெழுகாக துடித்தாள்... அவளின் கண்ணீர் என்ற சுரப்பி என்ற ஒன்றே அவள் இன்று தான் கண்டாள்...


தன் வலியை பல் கடித்து பொறுப்பவளை விசித்திரமாக பார்த்தான்... அவன் இதுவரை பழகிய பெண்கள் யாரும் கன்னிப்பெண்கள் இல்லையே... தன் வலிமை கொண்டு அவளை ஆண்டு முடித்தவன்... அவளை விட்டு விலகிட...



"இதுக்கெல்லாம் நீ ரொம்ப வருத்தப்படுவ?"...


"வருத்தப்படும் போது பட்டுக்கலாம்" என்றவன்.. கதவு தட்டும் சத்தத்தில் வேகமாக எழுந்தான்...


*உங்கம்மா வந்துட்டாங்க... நான் என் வீட்டுக்கு போறேன்.. என் கூட வாழ இஷ்டம் இருந்தா.. என்னைத் தேடி நீ வா" என கணீர் குரலில் சொன்னவன்..


அங்கு இருந்த அலமாரியை திறந்து அதில் இருந்து ஒரு நைட்டியை எடுத்தவன்... அவளுக்கு அணிவித்து விட்டே வெளியே சென்றான்...


வேகமாக சென்று கதவை திறக்க... பேரதிர்ச்சியில் உறைந்து நின்றார் செல்வி...


மேலாடையற்ற அவனின் மேனி, கண்களில் கூலிங்கிளாஸ்.. என சகல விகிதமாக வெளியேறியவன்.. காரை எடுத்துக் கொண்டு கிளம்பிட..


தன் மகளின் நிலையை எண்ணி கலக்கமுற்றவர்... அறையினுள் தேட... அங்கு யாருமேயில்லை...


"தாச்சா.. தாச்சா??" என்ற குரலுக்கு


"நான் குளிச்சிட்டு இருக்கேன்" என கரகரத்து ஒலித்த கண்ணீர்க்குரலை அந்த தண்ணீர் மட்டுமே அறியும்..


குளித்து முடித்து அழகுப் பதுமையாக வெளியே வந்த மகளை பார்த்த செல்விக்கு நெஞ்சே அடைத்துப் போனது...


நீண்ட நேரத்திற்கு பின் கண் விழித்தாள் அகன்முகிழி.. தான் இருக்கும் இடம் தெரியாமல் திருதிருவென முழித்தவள்.. மெத்தையில் திரும்பியபடி தன் இறகுகளை தன் அலகால் தடவி கொண்டு பாவமாக உட்கார்ந்திருந்த அழகி தான் கண்களுக்கு பட்டது..


"அழகி" மெல்லிய குரலில் அவள் அழைக்க,


"பொண்ணாடி நீ?" என ஏகபோகமாக திட்ட ஆரம்பிக்க,


"ஏன் அழகி திட்டுற"


"ஏன் திட்டுறேனா‌? உன் வாழ்க்கையை இங்க அந்தல்சிந்தலாகி போய் கிடக்கு ஏன் கத்துறேன்னு கேட்குற?"


" அந்த வளந்து கெட்டவன் முத்தம் கொடுத்ததுக்கு பஞ்சாயத்து கூட்டியிருக்காங்க பக்கி…" என வருத்தம் மிகுந்த குரலில் சொல்லிட.. திடுக்கிட்டு போய் அமர்ந்தாள் அகன்முகிழி


"பஞ்சாயத்தாஆஆ… அதுவும் அவளுக்கா???.‌‌யார் அந்த வளந்து கெட்டவன்?" என யோசித்தவளுக்கு, எதிரில் யாரும் இல்லா வெறுமையான இடம் மட்டுமே காட்சியளித்தது.


கரம்பிடிப்பான் ...
 


சிறை : 15


காரில் வந்து கொண்டிருந்த அச்யுதனுக்கு சற்று முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கண் முன்னால் விரிந்தது.

அகன்முகிழியை காப்பாற்ற மட்டுமே அவளுக்கு தன் மூச்சு காற்றினை அளித்தானே தவிர, அவள் மீது காதல் வயப்பட்டோ, அல்லது ஆசைப்பட்டோ கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.

சாவித்திரி அச்யுதனின் புறமுதுகை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவருக்கு, அவர் கண்ட காட்சியில் கோபம் வந்தாலும், அவன் செய்துக் கொண்டிருந்த காரியத்திற்கு அவர் நிலைமையில் வேறு ஒரு பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயம் அகன்முகிழிக்கு நியாயம் செய்திருப்பார்.

ஆனால் சாவித்திரி அப்படிப்பட்டவர் இல்லையே! அவருக்கு பின்னால் நுழைந்த கணபதி அங்கு பார்த்த காட்சியில் முதன்முறையாக அகன்முகிழிக்கு நடக்கும் அநியாயத்தை எதிர்த்து நின்றார்.

"டேய்…" என்ற கணீர் குரலில் அச்யுதன் உள்பட அனைவரும் திரும்பி பார்க்க, அங்கு கோபத்துடன் நின்றிருந்தார் கணபதி.

"என் பொண்ணை என்னடா பண்ணுற?" என்று கோபமாக கேட்டுக் கொண்டே அவனை நெருங்க,

"உங்க பொண்ண நான் ஒன்னும் பண்ணல, என குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணத்துல குதிச்ச உங்க பொண்ணு பேச்சு மூச்சு இல்லாம மயங்கி கிடந்தா, மூச்சு கொடுத்தேன்" என எந்தவித சலனமும் இன்றி சொல்லிவிட்டு வெளியே செல்ல முயன்றவனை வழிமறித்து வந்து நின்றார் சாவித்திரி.

அவரை அவன் முறைத்து பார்க்க, சாவித்திரியும் எதிரில் இருந்தவனை அளவெடுக்கும் பார்வை பார்த்தார்.

ஆறடியை தாண்டிய உயரம், அடர்த்தியான சிகையோ... காற்றில் பறந்து அவன் நெற்றியில் படர்ந்து விழுந்தது.

கழுகு போல் மற்றவர்களை கொத்தி தின்னும் கூர்மையான பார்வை, கூர்மையான மூக்கு, சற்று அழுத்தமான உதவிகளின் மேல் அழகாக கத்திரிக்கப்பட்ட அடர்த்தியான மீசையும் அதனோடு ஒட்டி உறவாடியபடி இருந்த தாடியும், கிறுதாவும் அவனை பேரழகனாகவே காட்டியது.

தன்னை அளவெடுப்பதை போல் பார்த்துக் கொண்டிருக்கும் சாவித்திரியே முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது அவனுக்கு.

"ப்ச்…" என ஒருவித எரிச்சலுடன் அவரை விட்டு விலக முயற்சிக்க, அதற்கும் அவர் விட்டால் தானே!

"உன்னால அசிங்கப்பட்டு நிற்கிற என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லுடா" என நல்லவள் போல் பேசும் சாவித்திரியை பார்த்த அழகிகோ ஒன்னுமே புரியவில்லை.

"சாவித்ரியா இவர்?" என ஊரே குழப்பத்துடன் பார்க்க,

"இப்போ உங்க பொண்ணை என்ன பண்ணிட்டேன்?"

" இன்னும் என்ன பண்ணனும்? ஒரு வயசு பொண்ணுக்கு முத்தம் கொடுத்து இருக்கீயே... அது தப்பு இல்ல?" என சற்று காட்டமாக கேட்க,

அவனும் அவரை எரிப்பது போல் பார்த்தான். "என்ன விளையாடுறீங்களா? நான் அவளை காப்பாத்த தான் செய்தேன். இது ஒரு மெடிக்கல் ட்ரீட்மெண்ட். சினிமா பார்த்து ரொம்ப கெட்டுப்போகாதீங்க" என எச்சரித்துவிட்டு வெளியே செல்ல முயற்சித்தான்.

அவ்வளவுதான் அவன் வாசலில் கால் வைக்கும் முன்பே ஊர் கேட்கும் அளவிற்கு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார் சாவித்திரி.

"அய்யய்யோ! இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா? கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பொண்ண ஒருத்தன் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு தெனாவட்டாக போறான்., அவனை தட்டிக் கேட்க இந்த ஊர்ல ஒருநாதி இல்லையே!!!" என வெடித்து அழுதிட,

அவரின் அழுகை சத்தத்தில் ஊர் பெரியவர்கள் சிலர் சாவித்திரிக்கு சாதகமாக பேச... அச்யுதன் அவர்களை எதிர்த்திட, இரு தரப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் தான் நீண்டது.

"தம்பி நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ எங்களுக்கு தெரியாது...

"நாளைக்கு காலையில் 10 மணிக்கு வண்டியூர் மாரியம்மன் கோவில்கிட்ட இருக்குற மண்டபத்துக்கு வந்துடுங்க. மீதியை அங்க வச்சு பேசிக்கலாம்" என ஊர் பெரியவர் ஒருவர் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்று விட,

அச்யுதனுக்கு கோபத்தில் முகம் செந்தணலை அள்ளி வீசியதை போல் முகம் ஜொலிக்க, கவினோ கைகளை பிசைந்தபடி தான் நின்று இருந்தான்.

அழகியோ தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டது. நடந்ததையே பற்றி யோசித்துக் கொண்டிருந்த அச்யுதன் யாருக்கோ போன் போட்டிட,

எதிர் முனையில் "ஹலோ" என்று குரல் கேட்ட, அடுத்த நிமிடமே "அவங்க ரெண்டு பேரையும் இன்னைக்கு நைட்டுக்குள்ள முடிச்சிடுங்க" என கட்டளையிடும் குரலில் சொன்னவன் தெருவிற்கு வர,

இசக்கி தாட்சாயினி வீட்டில் இருந்து சட்டை இல்லாமல் வெளியே வந்து காரில் ஏறிச் செல்லும் காட்சி தான் அச்யுதன் கண்ணில் பட்டது.

பலத்த யோசனையுடன் கவினை பார்க்க, கவின் மெல்ல இறங்கி, அக்கம் பக்கத்தினர்களிடம் நடந்தவற்றை விசாரித்தான். அவனுக்கு பேரதிர்ச்சி தான்.

அதை அப்படியே சென்று அச்யுதனிடம் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தவனோ, இகழ்ச்சியான ஒரு புன்னகையுடன் கடந்து சென்றான்.

மாலை மங்கும் நேரத்தில் அனங்கனை பற்றி மனதில் நினைத்தவாறே துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் ரதி...

அவனிடம் எதையும் மனசு விட்டு பேசும் தைரியம் அவளுக்கு இல்லை... அவளை புரிந்து கொள்ளும் பொறுமையும் அவனுக்கில்லை என்பதால் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தாள் ரதி...

ஆனாலும் ஏதோ ஒரு ஓரத்தில் அனங்கன் எப்படியும் தன்னை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது…

மனதில் பலவித சிந்தனைகளை ஓடவிட்டவாறே இருந்தவள்.. பின்னால் வந்து நின்ற அனங்கனை கவனிக்கவில்லை...

அனங்கனுக்கு, என்று இவளை தொட்டோமோ அப்பொழுதே இவள் மட்டும் தான் தன் வாழ்வின் துணைவி என்பதை உறுதியுடன் எண்ணினான்...

காதல் சேர்வதும் சேராததும் விதியின் சதி... ஆனால் கல்யாணம் அப்படியில்லையே.. தன் தந்தைக்காக ஏற்றுக் கொண்டாலும், ரதியை தன் மனதில் ஒரு ஓரமாக நினைத்ததால் மட்டுமே அவளை ஏற்றுக் கொள்ள முடிந்தது..

துணி மடித்துக் கொண்டிருந்தவள் கபோர்டில் துணியை எடுத்து வைக்க,

பின்னால் இருந்து அணைத்தான் அனங்கன்... அவனின் அணைப்பில் ஒரு நிமிடம் துள்ளி எழுந்தவள் .. "மாமாஆஆஆ" என்றவாறே அவனை விட்டு விலகிட முயன்றிட...

அனங்கன்
மேலும் அவளை நெருங்க முயல... ரதியோ சட்டென அவனை விட்டு பின்னால் விலகி நின்றாள்...

தன் மனது புரியாமல் வெறும் இளமையின் தேடலுக்காக மட்டும் தன்னை தேடும் இந்த அனங்கனை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை...


 
"தன்னிடம் ஒரு வார்த்தை நான் உன்னை மனைவியாக நினைத்து தான் வாழ்ந்தேன்" என சொல்லியிருந்தால் கூட ரதி அவனை ஏற்றிருப்பாள் ..

"ப்ளீஸ்.. மாமா... நான் தாச்சாயினி இல்லை.. முத்தம் கொடுக்கிறதுக்கு... நான் ரதி" கெஞ்சல் குரலில் அவனிடம் இருந்து விலகி அறையில் இருந்து வெளியேற முயல... அனங்கனுக்கோ சட்டென கோபம் தான் வந்தது...

ரதி தள்ளி தள்ளி போவதை விட தாச்சாயினியின் பேரை இழுத்தது மேலும் கோபத்தை தூண்டியது...

"ஆமா... நான் தான் தாச்சாயினிக்கு முத்தம் கொடுத்தேன். அதுக்கு என்ன இப்போ?" என்றவனின் வாய்மொழியாக வந்த வார்த்தையில் விக்கித்து நின்றாள் ரதி...

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது…

எப்பேற்பட்ட வார்த்தை… எந்த மனைவிக்கும் இப்பேற்பட்ட சூழ்நிலை வரக்கூடாது…

தன் கணவன் இன்னொரு பெண்ணை முத்தமிட்டான் என்பதை... தன்னவன் வாய்மொழியாக கேட்டதும்… நெஞ்சில் சுருக்கென்று முள் தைக்க…

"மாமாஆஆ" என கலங்கிய குரலில் அழைத்த ரதியை மிதமிஞ்சிய வெறுப்புடன் பார்த்தவன்…

"என்னடி சிம்பதி கிரியேட் பண்றீயா?? எப்போ பார்த்தாலும் கண்ணுல டேம் வச்சிருக்கிற மாதிரி… லேசா ஏதாவது சொல்லிட்டா போதும்… உடனே கண்ணுல கண்ணீர் பொங்கிடும்" என்றவனின் வார்த்தையில் உள்மனம் சிதைந்து உடைந்தே போனது…

"அவன் உதிர்த்த வார்த்தையில் தவறில்லையாம்.. ஆனால் அவன் வார்த்தையில் உடைந்து போன என் கண்களும், மனமும் மட்டும் தவறா??" என சிந்தித்துக் கொண்டிருந்தவளின் அருகாமையில் அவன் முகம் தோன்றிட, ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.

"ப்ச்ச்.. என்னை காதலிக்கிறல்ல??.." என்றவனை விட்டு மௌனமாக விலக முயன்றிட…

அவளின் விலகலை விரும்பாதவன்… இரு தோள்பட்டைகளையும் அழுத்தமாக பற்றிக் கொண்டு "பொண்டாட்டின்னா என்ன அர்த்தம் தெரியுமா??" என்றவனின் அழுத்தத்தில்…

தோள்பட்டை கழன்று விடுவதை போல் வலிக்க ஆரம்பிக்க…


"தெரியும்" என சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பாமல் "தெரியாது" என்றவளின் கழுத்தில் பல் பதிய கடித்தவன்…

"புருஷனை திருப்திபடுத்துறது தான்" என்றவனை தீயாய் முறைக்க ஆரம்பித்தாள்..

கட்டில் இன்பம் மட்டுமே இன்பம் இல்லையே… அதையும் தாண்டி பெண்ணவள் எதிர்பார்ப்பது தனி மனித ஒழுக்கம்… அதுவுமின்றி நிலைகுலைந்து நிற்கும் அனங்கனை வலியுடன் பார்த்தாள் ரதி…

ரதியிடம் என்னதான் கீழ்த்தரமாக பேசினாலும் அவன் சொல்லிய வார்த்தையே அவனுக்கும் வலித்தது...

ஆறுதல் சொல்ல விளைந்த கைகளை அடக்கியவன்... காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிட, அவன் காரை எடுத்துச் செல்லும் சத்தம் அறைக்குள் இருந்தவளுக்கு கேட்க தான் செய்தது.

அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் ஒன்று சேர ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

கோபமாக காரை எடுத்தவன்... ஆளில்லாத சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு, சீட்டில் கண்களை மூடி சாய்ந்தான்.

கண்களை மூடினாலே கனவில் தோன்றும் தாட்சாயினியின் இப்பொழுது முகம் வரவில்லை. மாறாக அழுத முகத்துடன் தோன்றிய ரதிதான் கண் முன்னால் தோன்றினாள்.

"ப்ச்…" என ஒரு வித சலிப்புடன் அவனின் பர்ஸை திறந்து பார்த்தான் அது ஒரு குடும்ப போட்டோ ஆனந்தமும், அதிர்ஷ்டமும் சேரில் இருக்க பின்னால் சிரித்த முகத்துடன் முகத்துடன் நின்றிருந்தனர் ரதியும் அனங்கனும்.

அவளின் சிரித்த முகமும், இப்பொழுது அழுத முகமும் மாறி மாறி கண்ணில் தோன்றிட, முதன்முதலாய் காதல் வலியை உணர்ந்தான்.

தாச்சாயினி தன்னை காதலிக்கவில்லை என சொல்லும் போது கூட... இப்படி ஒரு வலியை அவன் அனுபவித்ததில்லை...

ரதியை பார்த்து முறைக்கும் பொழுதெல்லாம் தன்னையும் அறியாது மனதில் ஒரு உற்சாகம் தோன்றிடும்.

முறைத்தாலும் அவளைப் பார்த்து விட்டே அவன் வேலைக்கு செல்லும் அளவிற்கு அவளின் மேல் காதல் இருக்கிறது என்பதையே அவன் அந்த நிமிடம் தான் உணர்ந்து கொண்டான்.

எப்படியாவது ரதியிடம் தன் காதலை சொல்லி இனியாவது சுமூகமான வாழ்க்கை அவளுடன் வாழ வேண்டும் என்று எண்ணினான்...
"ரதி கண்டிப்பாக அழுது கொண்டிருப்பாள்" என்பதை உணர்ந்தவன்...

அவளுக்கு ஏதாவது வாங்கி செல்லலாம் என நினைத்து, காரை எடுத்துக்கொண்டு கிளம்பிட... வழியில் ஒரு பேக் கடையில் வண்டியை நிறுத்தினான்...

ரதிக்கு பர்ஸ் என்றால் மிகவும் விருப்பமான ஒன்று. எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பர்ஸை வாங்கிக் கொண்டே வருவாள்.

"அவளை சமாதானம் செய்ய அழகான பர்ஸ் ஒன்றை அவளுக்கு வாங்கி கொடுத்தால், அவள் முகம் எப்படி மலரும்?... அப்படியே தன் காதலையும் கூறினால்?" என கற்பனை செய்து பார்க்கவும், உள்ளம் குதூகளிக்க, அழகான இளம்பச்சை நிறத்தில் ஒன்றை வாங்கினான்.

பார்க்கும்பொழுதே மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மணிகள் கோர்க்கப்பட்டு அழகாக இருந்தது.

அதில் ஏ என்ற எழுத்தில் ஒரு ஸ்டிக்கர் வாங்கி ஒட்டியவனுக்கு, தன்னை நினைத்தே சற்று வியப்பாக தான் இருந்தது.

அங்கிருந்து பார்க்கிங் ஏரியா வந்தவனுக்கு, சில அடி தூரத்தில் ஒருவன் தாச்சாயினி போட்டோவை வைத்து போனில் ஏதோ பேசிட... கேட்டுக் கொண்டிருந்தவன் உடலோடு சேர்ந்து உள்ளமும் பதறியது.

"யார் அது?தாச்சாயினி கொல்ல நினைப்பது ஏன்?" என யோசனை மூளையில் ஓடினாலும்...


இந்த நொடி தாச்சாயினியை காப்பாற்ற வேண்டும் என்ற வேகமும் பிறந்தது.

காரை எடுத்துக் கொண்டே கிளம்பியவனுக்கு, தாச்சாயினியின் வீடு எந்த திசையில் இருக்கிறது என்பது கூட தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை...

உடனே ரதிக்கு போன் பண்ணிட, அவளோ இவன் மேல் இருந்த கோபத்தில் போனை எடுக்கவே இல்லை...

அவள் போன் எடுக்கவில்லை என்றதும் என்ன செய்வது என்றே புரியவில்லை. தாச்சாயினுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற பரபரப்பும்... பதட்டமும் அதிகமாகவே இருந்தது.

"மதுரையில் சென்று விசாரித்து கொள்வோம்" என யோசித்தவனுக்கு பதில் தான் கிடைக்கவில்லை. ரதிக்கு போன் போட்டுக் கொண்டே தான் வந்தான்.

இப்படியே போனால் தாச்சாயினியை காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்று எண்ணி வீட்டு லேன்ட்லைனுக்கு போன் போட... சில நிமிடங்களில் போன் அட்டெண்ட் ஆகியது.

அதிர்ஷ்டம் தான் போனை எடுத்திருந்தார்.

"ஹலோ" என்பதற்குள்...

"அம்மா போனை ரதிகிட்ட குடுங்க" என பதட்டமாக சொல்ல...

"என்ன ஆச்சுடா" என்று கேட்டவரிடம்... இப்போது எதையும் விளக்கும் நிலையில் அவன் இல்லையே,

"ப்ளீஸ்மா அவ கிட்ட குடுங்க" என்று அவசரபடுத்த,

" சரி இருடா ரதிகிட்ட கொடுக்கிறேன்" என்றவரும்,

"ரதி" என்று உரக்க அழைக்க, அழுது கொண்டிருந்தவளும்...

தன் அத்தையின் குரல் கேட்டு அழுத முகத்தை மறைக்க, வாஷ்பேஷனில் முகத்தை கழுவி விட்டே, மெதுவாக கீழிறங்கி வந்தாள்.

"அத்தை கூப்பிட்டீங்களா?" என்று கேட்டுக் கேட்டுக் கொண்டே வந்த ரதியிடன்,

"ஆமா மா… உன் புருஷன் தான் லைன்ல இருக்கான். என்னனு கேட்டா கூட சொல்ல மாட்டேங்கிறான். உன்கிட்ட தான் பேசணுமாம்" என கோபமாக சொல்வதைப் போல் சொன்னவர் முகத்தில் சந்தோஷம் தான் இருந்தது.

போனை வாங்கி தயக்கத்துடன் காதில் வைத்தவள் ஹலோ என்று சொல்ல, ரதி… என்று ஆரம்பித்தவன் குரலின் பதட்டமே அவளை வேறு எதையும் யோசிக்க விடவில்லை.

சற்று முன் இருந்த வருத்தம், கோபம் கூட காணா தூரம் போனது கணவனின் கவலையில்.

அனங்கனும், தான் அறிந்த செய்தியை அவளுக்கு சொல்ல, தாச்சு அவன் முன்னால் காதலி மட்டுமல்ல, ரதியின் உயிர் தோழியும் அல்லவா...


"ஐயோ மாமா! என்ன சொல்றீங்க? பிளீஸ் தாச்சுவ காப்பாத்துங்க மாமா" என்று கண்ணீர் குரலில் கெஞ்ச,

"நீ அழாத, அவ வீட்டு அட்ரஸ் மட்டும் சொல்லு நான் பாத்துக்கிறேன்" என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தவன்...

அவள் முகவரியை வாங்கி கொண்டு அவள் வீட்டை நோக்கி பறந்தவன்... காரோ வரும் வழியில் ரிப்பேர் ஆகிவிட, இறங்கி பார்த்தவனுக்கு தலையே வெடிக்கும் உணர்வு.

ஏதாவது செய்து தாச்சா யினிக்கு நடக்க விருக்கும் ஆபத்தில் இருந்து அவளை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பே அதிகம் இருந்தது அவனுக்கு.

இங்கே குளியலறையில் இருந்து வெளியே வந்த தாச்சாயினியை, செல்வி ஆராயும் பார்வை பார்த்தார் செல்வி.

அவள் முகத்தில் ஏதாவது கன்றல்கள், காயங்கள், பல் தடங்கள் இருக்கிறதா?? என்று ஆராய, தாச்சாயினி முகமோ புதிதாக பறித்த மலர்கள் போல் பொலிவுடன் தான் இருந்தது.

தன் தாயின் ஆராய்ச்சியான பார்வையை பார்த்த தாச்சுவுக்கு சிரிப்பு தான் வந்தது.

"என்னம்மா மேல வந்து பாஞ்சிட்டானான்னு பார்க்கிறீயா?" என கேட்டப்படியே தலையை துவட்டியவள்...


தாயின் முகத்தில் தோன்றிய சிந்தனையையும் வேதனையையும் அழுத்தமாக பார்த்துவிட்டு, "இப்போ நான் உன் பொண்ணு இல்ல மா" என்று ஒன்றை வார்த்தையில் உண்மையை உடைத்தே விட்டாள்.

"என்னடி சொல்ற? அவன் தொட்டுட்டானா?" என கேட்டவருக்கு தூக்கம் தொண்டையை அடைத்தது.

"ஆமா புருஷன்ங்கிற உரிமையோட தொட்டான்." என்று தன் கழுத்தில் அவன் போட்டு விட்ட தாலி சங்கிலியை எடுத்து காட்டினாள்.

"இந்த கருமத்தை ஏண்டி கழுத்துல மாட்டி இருக்க? முதல்ல நீ தூக்கி போடு. இதை பார்த்தாலே அவன் உன் பக்கத்திலேயே நிக்கிற மாதிரி இருக்கு" என்று பயத்துடனும், பதட்டத்துடனும் சொன்னவரை பார்த்து அர்த்தமுள்ள சிரிப்பொன்றை உதிர்த்தவள்,


"அம்மா நான் உன் பொண்ணு மா. உனக்கே இப்படி இருக்கும் போது, எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?" என கேட்டவளின் முகத்தில் கண்ணீரைத் தாண்டி கோபத்தின் சாயலே அதிகம் இருந்தது.

"இப்போ என்ன தான் டி முடிவு எடுத்திருக்க? அவனோட சேர்ந்து வாழ போறியா?" எனக் கேட்டவரின் உடலும் உள்ளமும் சேர்ந்தே நடுங்க,

"அவன் கூடலாம் என்னால வாழ முடியாது. அவனை பார்த்தாலே எனக்கு பிடிக்கல…" என்று பேசிவிட்டு திரும்பிட, பரிதி அங்கு நடக்கும் விவாதத்தை கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

பரிதி என்று அழைத்தவள் குரலில் இருந்த வேதனை, அவனுக்கும் நன்றாக புரிந்தது.

"அக்கா" என்றவன் தாச்சாவின் கையை பிடித்துக் கொண்டே அங்கிருந்த ஊஞ்சலில் அவளுடன் அமர்ந்தான்.

அதுவரை நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த வலிகளை எல்லாம் கண்ணீருடன் சிறுவன் மடியில் கொட்டி தீர்த்தாள் பெண்ணவள்.

ரத்தம் இல்லா பந்தமிது. இருவரின் உறவிலும் அன்பே புதைந்திருந்தது.

அவனுக்கு அவள் ஆதரவு கொடுக்க,
அவனோ அவளுக்கு தந்தை பாசத்தை கொடுத்தான்…
சகோதர பாசத்தை கொடுத்தான்.


நீண்ட நேரம் கண்ணீருடன் படுத்திருந்தவளின் தலையே கோதி விட, உடலில் ஏற்பட்ட வலியிலும், உள்ளத்தில் ஏற்பட்ட கலக்கத்திலும் நித்திராதேவி வந்து அணைத்துக் கொள்ள விழிகளை மூடி உறங்க ஆரம்பித்தாள்...
 
Last edited:
செல்விக்கு இருவரின் அன்பையும் பார்க்கும் போது நெகிழ்ச்சியே…

"கடவுளே இவனை கடைசி வரைக்கும் என் பொண்ணுக்கு துணையா கொடு" என வேண்டுதலுடன் வெளியே புழக்க்கடையில் சென்று அமர்ந்தார்...

என்ன தான் வெளியில் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் தூக்கம் தொண்டையை அடைத்தது.

"அடுத்தது என்ன?" என்ற கேள்வியே அவரை அச்சுறுத்தியது. இந்த ஊரில் இருந்தால் தானே பயப்பட வேண்டும் என எண்ணியவர்... வேறு ஊருக்கு செல்லலாம் என முடிவெடுத்தார்.

சில முக்கியமான தேவை உள்ள பொருட்களை மட்டுமே பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

காலையில் சென்றால் கண்டிப்பாக ஊராரின் பார்வை தங்களை மொய்த்திடும் என்பதை அறிந்தவர், நடுசாம இரவில் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

தாச்சாவிடம் இரவு சாப்பிடும் வேலையில் அதை சொல்லிவிட... அவளுக்கு உள்ளுக்குள் சிறு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது...

வெளியில் அதை காட்டிக் கொள்ளாமல் தாயின் செயலுக்கு உடன்பட்டாள்.

நினைப்பது எளிது. அதையெல்லாம் செயல்படுத்த வேண்டுமே! முடிவு அவர்கள் கையில் விடுவானோ! அவர்களின் அசுரவேந்தன் அவன்.

வீட்டிற்குள் நுழைந்த இசக்கியால் தாளமுடியவில்லை, எப்படி எல்லாம் அவளுடன் வாழ வேண்டுமென கற்பனை கோட்டை கட்டி வைத்திருந்தான்.

அது எல்லாம் நிமிடத்தில் உடைந்து போனது என மனம் ஒருபுறம் வலிக்க, "கண்கள் கலங்கி விடுவோமோ??" என ஆறடி ஆண் மகன் அஞ்சிய நிமிடங்கள் சில…..

கோபத்தில் கண்ணில் கண்ட பொருள்களை எல்லாம் தூக்கிப் போட்டது அனைத்தும் விலை உயர்ந்த பொருட்கள் தான்….

அவன் பொருள்களை போட்டு உடைத்த சத்தத்தின் அறையை விட்டு வேகமாக வெளியே வந்தார் பாலச்சந்திரன்.

நேருக்கு நேர் அவரை பார்க்க தயங்கியவன் தலையை குனிந்து கொள்ள,

"ஏதோ நடக்கக்கூடாது நடந்திருக்கிறது"... என்பதை புரிந்து கொண்டு...

"என்னாச்சுப்பா" என கேட்டவரிடம்,

ஒன்று விடாமல் அனைத்தையும் கூறினான் இசக்கி.

"அந்த மாதிரி பொண்ணுக்கெல்லாம் இப்படி தான் டா நடக்கணும்" என்ற குரலில் நிமிர்ந்து பார்க்க அவனின் பின்னால் வந்த வசந்தியை தான் ஓங்கி அறைந்திருந்தார் பெரியவர்.

அவரின் அறையில் சர்வமும் அடங்கி ஒடுங்கி தான் போய் நின்று இருந்தால் வசந்தி.

நான் இல்லை என்ன தப்பா சொல்லிட்டேன் என்றவள், சொல்லி முடிப்பதற்குள் அடுத்த அடி இசக்கியின் கன்னத்தில் விழுந்தது.

"இப்படி ஒரு நல்ல பொண்ண, கேவலப்படுத்திவிட்டு வந்திருக்க?"... என்றவருக்கு கோபம் இன்னும் குறையவில்லை...

"இத்தனை நாள் நீ பழகின பொண்ணுங்க எல்லாம் அப்படி இப்படி வாழுறவங்க... அதுனால தான் ஒரு வயசுக்கு மேல உன்னை கண்டிக்கவும் எனக்கு மனசு இல்ல"... என்றவரின் கலங்கிய குரலில்...

அமைதியாக நின்றிருந்தவன் எதுவும் பேசாமல் மௌனமாக மாடி ஏறினான்... மாடியேறி கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ?? பாலச்சந்திரனை அழுத்தமாக பார்த்தான்...

"நீங்க சொல்றது உண்மைதான்... நான் இதுவரைக்கும் எந்த பொண்ணையும் விருப்பம் இல்லாமல் தொட்டதில்லை"...

"தாச்சாயினிக்கு என் பொண்டாட்டிங்கிற அந்தஸ்தை கொடுத்து தான் தொட்டேன்... அவ தான் இந்த வாழ்க்கை முழுவதும் எனக்கு பொண்டாட்டி" என கம்பீரக்குரலில் சொல்லியவன் உள்ளே சென்றுவிட...

இருவரின் தலையிலும் செல்லாமல் முழுங்காமல் இடியை இறக்கிவிட்டே சென்றான்...

பெரியவருக்கு பேரதிர்ச்சியில் சட்டென திரும்பி அவனை பார்க்க... "அவன் நெஞ்சில் உறவாடிக் கொண்டிருந்த முறுக்கு செயின்... இருந்த இடம் இப்போது காலியிடமாக தான் இருந்தது"....

இத்தனை நாட்கள் பார்க்கும் பெண்களை எல்லாம் தட்டி கழித்தது இவளை மனதில் வைத்துக் கொண்டு தானா?? என்ற பேரதிர்ச்சியிலும், பெரும் குழப்பத்திலும் தவித்தார்...

"வசந்திக்கோ பேரதிர்ச்சி தாலி கட்டிட்டானா? " தாட்சாயினியை வெட்டி போட்டிருந்தாள் கூட... வசந்தி இத்தனை அதிர்ச்சியாகியிருக்க மாட்டார்...

"இத்தனை நடந்த பிறகும் மனைவி என்று அந்தஸ்தை கொடுத்தானா??" என மிரளும் பார்வையில் பாலசந்திரனை பார்க்க...

அவரோ வசந்தியை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தார்...

அத்தனை கலவரத்திலும் நிமிடங்களும் வினாடிகளும் யாருக்காகவும் நிற்காதே...

சூரியன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு செல்ல... நிலவு மகள் தன் வேலை செய்ய வந்த நேரம்...

இசக்கியோ அறையை விட்டே வெளிவரவில்லை.

தாட்சாயணி மதியம் உறங்கியதால் இரவெல்லாம் விழித்தே கிடந்தாள்.
பரிதி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

செல்வி பக்கத்து அறையில் ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் விழித்திருந்தார். இரவு 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டி வைத்திருந்தார்.

இசக்கியோ சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க... "அண்ணா அண்ணா" என்ற கூக்குரலில் அனைவரும் ஓடி வர..

"அண்ணா செல்வி அக்கா இறந்துட்டாங்கண்ணா... அண்ணி வீடு தீப்புடிச்சி எரியுது" என் பதட்டத்துடன் சொல்ல இசக்கிக்கோ ஒன்றும் புரியவில்லை

"தீ புடிக்குதுண்ணா அணைக்காம இங்க ஏன்டா ம**த்துக்கு ஓடிவந்த" என எரிந்து விழ

"உங்களுக்கு தகவல் சொல்லத்தான் வந்தேன்... நீங்க வாங்கண்ணேன்" என்பதற்கு முன்னே காரை எடுத்துக்கொண்டு விருட்டென கிளம்பியவன்... தாட்சானியின் வீட்டின் முன்பு தான் பிரேக்கே அடித்தான்.

வேகமாக உள்ளே நுழைந்தவனுக்கு அழுது கொண்டிருந்த பரிதி தான் வெளியே தெரிந்தது.

நீ வேறு அங்குமிங்கும் இப்பொழுது தான் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது...

"டேய்... வெளியே போடா" என்ற கட்டை குரலில் பயந்தாலும் தாட்சாயனியை விட்டு சிறிதும் விலகவில்லை அவன்...

"அக்கா" என தாட்சாயிணின் கைகளை பிடிக்க...

"அவளையும் கூட்டிட்டு வாரேன் டா வெளிய போ"... என அவனை வெளியே அனுப்பியவன்... இறந்து கிடந்த செல்வியின் உடலை பார்த்தவனுக்கு தன்னைத் தானே வெறுக்கும் நிலையில் இருந்தான்...

செல்வியை தோளில் தூக்கிப் போட்டவன் வெளியே அழைத்துக் கொண்டு வந்தான்.

அனைவரையும் அழைத்து வந்தாயிச்சி என அவன் நினைக்க..

"பிடிவாதத்திற்கென பிறந்தவள் ஒருத்தி இருக்கிறாளே" எரிந்து கொண்டிருந்த வீட்டினுள் இருந்து வெளியே வர மறுத்தாள்.

"தாச்சா வெளிய வா" என்று வலுகட்டாயமாக இழுக்க அவளோ எரிந்து கொண்டிருந்த மரத்தூணை பிடிக்க செல்ல...

எரியும் நெருப்பு அவளை எதுவும் செய்யக் கூடாது என்று நினைத்தாலும் அவளின் பிடிவாதம் எரிச்சலை கூட்டியது

"இங்கயே கிடந்து செத்துத் தொலை... உன்னை என்னைக்கு மாந்தோப்புல பார்த்தேனோ?? அன்னைக்கு புடிச்சது எனக்கு ஏழரை நாட்டுச்சனி" என வாய்க்கு வந்ததெல்லாம் திட்டிவிட்டு தீர்த்து வெளியே வந்து தன் காரில் சாய்ந்து நின்றான்.

திகுதிகுவென தீக்கீரையாகி கொண்டிருந்த வீட்டினை அந்த ஊர் மக்கள் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தனர்…

இல்லை… இல்லை… வேடிக்கை பார்க்க வைத்தான் இசக்கி… அவன் அழைத்து அவள் வரவில்லை அல்லவா.. அவனுக்குள் இருக்கும் முறட்டுப் பிடிவாதம்.. அவ்வாறு நடந்து கொள்ள வைத்தது அவனை..

அந்த வீடு ஆரம்பத்தில் தீப்பற்றி எரியும் பொழுதே அச்யுதன் பார்த்து விட்டான்.. மொட்டை மாடியில் உலாத்தி கொண்டிருந்தவன்... நினைத்திருந்தால் ஓடிச்சென்று அணைத்திருக்கலாம்…

அவர்களை பற்றியெல்லாம் கவலைப்பட அவன் ஒன்றும் உத்தமனில்லையே... நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தான்...

ஊர்க்காரர்கள் அணைக்க வர, எதிரில் எரியும் தீயை விட… இசக்கியின் கண்களில் தெரிந்த ஜுவாலையில் அனைவரும் பின்னால் இரண்டடி வைத்தனர்…

அவனை எதிர்த்து அந்த ஊரில் எவரும் செயல்பட முடியாது.. செயல்படவும் விடமாட்டான் அவன்..

இன்று மதியம் தான், அவன் அரக்கத்தனத்தின் உச்சத்தை நிரூபித்தான்…

மேலும் அவனுடன் சண்டையிட்டு வெல்லவும் முடியாது… கையாலாகாத நிலையில் பார்த்த ஊர் ஜனங்களின் மத்தியில் புழுதி பறக்க ஆடிக் கார் வந்து நின்றது…

அதிலிருந்து இறங்கி… இல்லை.. அதற்குக் கூட நேரமில்லாமல் ஓடி வந்தான் அனங்கன்…

இறங்கியை அனங்கனை கண்கள் இடுங்க பார்த்தான் இசக்கி...

ஆறடி ஆண்மகன், மார்பளவு சட்டையின் பட்டன் போடாததால், அவன் உடற்கட்டும், முறுக்கேறிய புஜங்களும் அவனின் தேகத்தின் வலிமையை சொல்லியது…

வேகமாக ஓடியவன், எரிந்து கொண்டிருந்த வீட்டின் கதவினை தன் வலிமை கொண்டு ஓங்கி மிதிக்க… கதவோ "டமார்" என்ற சத்தத்துடன் பின்னோக்கி சாய்ந்தது…

அந்த கதவின் மேலே ஒரு காலை தூக்கி வைத்தவன்.. கண்ணிமைக்கும் நொடியில் உள்ளே நுழைந்தான்… ஊர்மக்களே வாயைப் பிளந்து அவன் செய்கையையும், எதிரில் அனல் கக்கும் பார்வையில் கண்கள் சிவக்க நின்றிருந்தவனையும் தான் பார்த்தனர்…

வேகமாக உள்ளே நுழைந்தவனின் இதழ்களோ ஓயாமல், "தாச்சு… தாச்சு" என ஒலித்துக் கொண்டே உள்ளே சென்றிட… எரியும் நெருப்பில் பகையின் உச்சத்தில்… தன்னை தானே நெருப்புக்கு இரையாக்கி கொண்டிருந்தாள்… தாச்சாயினி…

தாச்சு என அழைத்தவன்.. ஓடிச்சென்று அவளை அணைத்தான்… அவளின் வலது கையை பிடித்தவாறே, அங்கு இன்னும் எரியாத போர்வையை கொண்டு அவளுக்கு அணைவாக போர்த்தியவன்…

அவளை நெஞ்சாங்கூட்டில் பாதுகாத்தவாறே வெளியே அழைத்து வர, ஊர்மக்களோ ஆளாளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தனர்…

எரியும் வேள்வித்தீயில் வெளிவந்த திரௌபதியை போல், இவளின் பகையும், எதிரில் நின்றிருப்பவனை சுடர்விட்டு எரிக்கும்…

எதிரில் நின்றிருந்தவனை எரிக்கும் பார்வையில் முறைக்க… அவனோ அசால்ட்டாக அவளை பார்த்தான்… இதழில் ஒரு சுழிப்பு, கண்களில் ஒரு திமிர், புருவத்தை ஒற்றை பக்கம் தூக்கி நிறுத்திட..

அவர்கள் இருவரின் பார்வையையும் உணர்ந்த அனங்கன்… தாச்சாவின் இடது கரம் பிடித்து இரண்டடி வைத்திருக்க மாட்டான்…

அதற்கு மேல் அவனால் நடப்பதற்கு ஓர் அடி எடுத்து வைக்க முடியவில்லை… ஏன் என் யோசனையுடன் பக்கவாட்டில் திரும்பி பார்க்க…

அங்கு தாச்சாயினியின் இதழ்களை சிறை பிடித்திருந்தான் இசக்கி… அவள் மேல் இருந்த கோபத்திலும்... அவனின் உரிமையை அனைவரின் முன்பு காட்டுவதற்காக மட்டுமே முத்தம் கொடுத்தான்..

அவளின் கரம் பிடித்தவன் ஒருவன்… அவளை இதழ்களால் சிறைப்பிடித்தவன் ஒருவன்… இதழுக்கும், கரத்துக்குமிடையில் தாச்சாயினியின் முடிவு தான் என்ன??

கரம் பிடிப்பான்...
 
Last edited:
சிறை 16,


அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் ஊர்மக்கள் அனைவரும்... தாச்சாயினிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தததோ இசக்கி தான்..‌‌.


இசக்கி அடாவடித்தனம் பண்ணுவதை மட்டுமே பார்த்த ஊர்மக்களுக்கு... இப்படி ஒரு பெண்ணிடம் அத்துமீறுவதை பார்க்க முடியவில்லை...


அவனை பொறுக்கி என பலர் கூறினாலும்.. அவன் எந்த பொண்ணு டன் குலாவுவதையோ? கொஞ்சுவதையோ யாருமே பார்த்ததில்லை…


அவனின் வீட்டு வேலையாட்களை தவிர…


தன்னிடம் அத்துமீறுபவனை தடுக்க நினைத்து அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்றிட... அவளின் முயற்சிக்கு அவளை விட்டு விலகினாலும்...


அவள் மேல் அவனுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட அல்லவா முத்தம் கொடுத்தான்...



"தாலி எங்கேடி?" என பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினான்...


"கழட்டி போட்டுட்டேன்" என அவனை விட சீற்றமாக வெளிவந்தன வார்த்தைகள்...


அவன் மேல் இருந்த கோபத்தில் தாலியை எப்பொழுதோ கழற்றி எறிந்து விட்டாள்...


அவள் சொல்லிய வார்த்தையில் அவன் முகம் கறுத்து மாறுவதை… வன்மம் நிறைந்த மனதுடன் அவனை பார்த்து புன்னகைக்க...


அவனுக்கோ ஆத்திரத்திலும், கோபத்திலும் தாச்சாயினியை அடித்துக் கொன்று விடும் வேகம் தான் வந்தது...


தன் கைகளை கோபத்தில் மடக்கியவன், "உன்னைய்யயய" என்றபடி அவளை பார்த்து முறைக்க...


"நீ ஆசை... ஆசையா... உன் ஆசையை தீர்த்துக்கிறதுக்காக மட்டுமே என் கழுத்துல போட்ட தாலி... இந்த எரியுற நெருப்புக்குள்ள தான் இருக்கு.. போய் எடுத்துட்டு வா.. அப்புறம் நான் உன்னை புருஷனா ஏத்துக்கிட்டு சந்தோஷமா கழுத்துல போட்டுக்கிறேன்" என சுடர் விட்டு எரியும் நெருப்பாய் வார்த்தைகளை கக்க...


அவளை முழுதாய் ஒரு நிமிடம் பார்த்தான்...அவள் கண்களில் தெரிந்த ஏளன சிரிப்பு இவன் கோபத்தை தூண்டிட... யாருமே எதிர்பாரா வண்ணம் வீட்டிற்குள் சட்டென இசக்கி உள்ளே நுழைய... அவன் செய்கையில் புருவம் நெருங்க பார்த்தாள் தாச்சாயினி...


ஆசைக்கு தானே கல்யாணம் பண்ணினான்.. அப்புறமும் ஏன் இந்த நடிப்பு? என மனதுக்குள் நினைத்தவாறே திரும்பிட.. அங்கு அனங்கன் இருப்பதே அப்பொழுது தான் அவளுக்கு தெரிந்தது...


"நீங்க.. இங்கே?" என இழுப்பதற்குள்...


"யார் அவன்?.. உன்கிட்ட அத்துமீறி நடந்துக்கிறான்" என சுள்ளென கேட்டவனுக்கு தாச்சாயினியிடம் ஒருவன் அத்துமீறுவது எரிச்சலை தான் கொடுத்தது…


"ப்ச்ச்.. அவனை விடுங்க.. அவன் தான் எனக்கு தாலி கட்டுனான்" என எந்தவித சலனமின்றி சொல்லியவளை வெறித்துப் பார்த்தான்...


"தாலி கட்டுனானா?... இப்பேற்பட்டவனை எப்படி தாச்சா நீ ஏத்துக்கிட்ட?"...


"நான் ஏத்துக்கிட்டேன்னு யார் சொன்னா?...

நீ நெருப்புக்குள்ள இருக்கும் போது கூட உன்னை காப்பாத்த அவனுக்கு தோணலை"..


"அவன் என்னை காப்பாத்த தான் வந்தான்.. ஆனா நான்தான் அவன் கூட வரலை"...


"நீ வரலைன்னா.. வலுக்கட்டாயமா இழுத்துட்டு வரலாமே.. நீ எப்படியோ செத்துப் போன்னு விடணும்??" என்றவனை அர்த்தமுள்ள புன்னகை ஒன்றை உதிர்த்தவள்…


"உங்களுக்கெல்லாம் இசக்கியை எப்படி தெரியும்னு எனக்கு தெரியாது… ஆனா எனக்கு அவனை ரொம்ப நல்லாவே தெரியும்… கொஞ்சம் திரும்பி வீட்டை பாரு" என்றவளின் வார்த்தையில் எரிந்து கொண்டிருந்த வீட்டை பார்க்க…


அங்கே வீட்டின் தீ அணைக்கப்பட்டு, புகையும், அனலும் மட்டுமே இருந்தது… ஆம்.. இசக்கி வரும் போதே ஃபயர் ஸ்டேஷனுக்கு போன் பண்ணியதால்… வீட்டின் பின்பக்கம் இருந்து நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தனர் தீயணைப்பு வீரர்கள்…


"நீங்க என்னை காப்பாத்தலைன்னாலும்.. இப்போதைக்கு தீ அணைஞ்சிருக்கும்… ஏன்னா… அவன் இசக்கி"..


"அவனுக்கு ஒன்னு புடிச்சிருச்சின்னா.. அதை எவன் கையில மட்டுமில்ல.. எமன் கையிலை கூட கொடுக்க மாட்டான்… அவனை பத்தி எனக்கு தெரியும்… நீங்க போங்க" என எஃகு போன்ற உறுதியான குரலில் சொல்லிய வளை அதிர்ச்சியுடன் பார்த்தான் அனங்கன்…


தன்னை காதலிக்கவில்லை என சொல்லும் போது இருந்த அதே உறுதி… அவனை பற்றி எனக்கு தெரியும் என சொல்லும் போதும் இருந்தது… அப்படியென்றால் என தன் போக்கில் சிந்தித்தவனுக்கு கிடைத்த பதில் அவ்வளவு உவப்பானதாக இல்லை…


"நீ அவனை காதலிக்கிறீயா?" என பட்டென கேட்க…


அதுவரை பரிதியை கூட்டத்தில் தேடியவள்… சட்டென திரும்பி… "தெரியலை" என்ற பதில் சொன்னாளே தவிர.. "இல்லை" என்ற பதில் சொல்லவில்லையே…


பரிதி கூட்டத்தின் நடுவே நிற்பதை பார்த்தவள்… அங்கு செல்ல… மீண்டும் அவளை நோக்கி வந்தவன் தன் போனை நீட்டினான்.. ரதி லைன்ல இருக்கா என்னும் தகவலுடன்...


"ஹலோ... ரதி" என்பதற்குள் மறுபுறம் கேவல் சத்தம் தான் கேட்டது...


ரதி அழுது கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது...


"ரதி.. எதுக்கு இப்போ அழுகிற??"


"உன்னை யாரோ கொல்ல பார்க்குறாங்கன்னு சொன்னதும் மனசு உடம்பும் எப்படி பதறிடுச்சி தெரியுமா?... நீ எப்படி இருக்க?...


கொலை என்றதுமே தாச்சாயினிக்கு நன்றாக புரிந்துவிட்டது.. தன் வீடு தீப்பிடித்தது சாதாரணமாக அல்ல... அதுவும் தன்னை கொலை பண்ணுவதற்கான முயற்சியில் ஒன்று என்று...


"நான் நல்லா இருக்கேன் ரதி.. எனக்கு ஒன்னும் ஆகலை" என தன் தோழியின் கவலை அறிந்து அவளை சமாதானப்படுத்த...


"இல்லை எனக்கு பயமா இருக்கு... நீ அம்மாவையும் தம்பியையும் கூப்பிட்டுட்டு வீட்டுக்கு வா... நாம போலீஸ்ல கம்ப்ளெயின் பண்ணலாம்" என சொன்ன ரதியின் கள்ளம் கபடமில்லாத அன்பில் சற்று நெகிழ்ந்தாள்...


"தூய நட்பு கிடைப்பது அரிதான வைரத்தை போன்றதல்லவா... அப்படியொரு வைரம் கிடைத்தும் யாராவது அதை கொண்டாடாமல் விடுவார்களா?"


"ரதி" என அழுத்தமாக கூப்பிட்டவள்... " எனக்கு ஒன்றுமில்லை டா.. நீயும் உன் மாமாவும் பதறாதிங்க... அம்மா" என்றவளுக்கு அப்பொழுது தான் செல்வியின் இறப்பு நினைவிற்கு வந்தது...


தன் கையிலிருந்த போன் நழுவுவதையோ? அதை அனங்கன் பிடித்ததையோ? எதையுமே அறியாமல் செல்வியை படுக்க வைத்திருக்கும் இடத்திற்கு கால்கள் தன்னால் முன்னேறி செல்ல...


அங்கு அவளை வழிமறித்தாற் போல வந்து நின்றான் இசக்கி... கண்களில் கண்ணீருடன் அவனை ஏறிட்டுப் பார்க்க.. அவளின் கண்ணீர் இவனுக்கு உயிர் போகும் வலியை கொடுத்தாலும்...


தன் உள்ளத்தினை வெளியே சொல்லாமல் மெல்ல அவளை ஏறிட்டுப் பார்த்தவன்... கையில் அவன் காட்டிய தாலி தான் இருந்தது...


"தாலியை கழற்றி போட்டவளால்... தூக்கிப் போட முடியவில்லை.. பழைய டிரங்குபெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்தாள்"...


அது அவள் தந்தையின் நினைவுகள் உள்ள பெட்டி இது... அவளுக்காக அவள் தந்தை வாங்கித் தந்த பாவடை, சட்டை... அவளுக்காக வாங்கி கொடுத்த பொம்மைகள், சிலேட்டு என அனைத்தும் அந்த பெட்டிக்குள் தான் இருந்தது...


அது தீக்கிரையாகி விட்டதே என வருத்தத்துடன் வீட்டை பார்க்க... அவளின் உள்ளுணர்வு இசக்கிக்கு புரிந்ததோ என்னவோ அவன் அந்த பெட்டியையும் தூக்கி கொண்டு தான் வந்திருந்தான்...


"கையை நீட்டு" என்றவனை பார்த்து தாச்சாயினி முறைக்க...


அவளின் முறைப்பையெல்லாம் பார்த்து பயப்பட அவன் ஒன்றும் அனங்கன் இல்லையே... இசக்கி அல்லவா எளிதாக புறந்தள்ளியவன்... அவளின் கைகளை பிடித்து அவள் கையின் மேல் தன் கையிலிருந்த பெட்டியை வைத்தான்...


அந்த பெட்டியை பார்த்ததும் மலர்ந்த முகம்.... நிமிர்ந்து அவனை பார்த்ததும் சுருங்கி விட்டது...


"ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறீயா?.. எங்கம்மாவை கொன்னுட்டு நல்லவன் வேஷம் போட்டா நான் நம்பிருவேனா?" என வெறுப்பு உமிழ்ந்த வார்த்தைகளை கக்க...


அவனோ அவளை அழுத்தமாக பார்த்தான்... அந்த பார்வை சொல்லியது "தான் தவறு செய்யவில்லை" என்று...


அவனின் பார்வையில் மயங்கும் தன் விழிகளை அறவே வெறுத்தவள்.. அவன் பார்க்காத வண்ணம் முகத்தை திருப்பி கொண்டாள்...


தன் கையில் இருந்த தாலியை அவள் கழுத்தில் போட்டவன்... தாலிச்செயினை பற்றி இழுத்தவன்.. அவளும் அவன் இழுத்த இழுப்பில் அவன் அருகில் செல்ல…


"இன்னொரு தடவை இந்த தாலி உன் கழுத்தை விட்டு இறங்கிச்சி" என்றவனின் பார்வை நிலைத்து நின்றதோ பரிதியின் மீது வன்மமாக...


பரிதியை கண் காட்டவுமே பதறிவிட்டாள்... அவளை முறைத்துக் கொண்டே செல்வி இருக்கும் இடத்திற்கு சென்றான்... செல்வியை அப்படியே வைத்திருக்க முடியாதே...


அவரின் இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்தையும் செய்ய ஆரம்பித்தான்...


செல்வியின் உடலை தன் வீட்டில் வைக்க சொல்லிவிட்டான்... ஊர் முழுவதும் அவருக்கு சொந்தம் இருப்பதால்... அவரின் கணவர் வீட்டு வழி சொந்தங்கள் சிலர் மட்டுமே இறுதி சடங்கிற்கு வந்தனர்...


தாச்சாயினிக்கோ நேற்று வரை தன்னுடன் வாழ்ந்த உறவு.. இன்று ஆடாமல், அசையாமல் படுத்திருப்பதை பார்க்க பார்க்க இதயம் கனத்துப் போனது...


ஆனாலும் வாய்விட்டு அழ முடியவில்லை.. இயல்பிலேயே அவளுக்கு தைரியம் கொடுத்தது செல்வி அல்லவா... அடுத்த நாள் காலை செல்வியின் இறுதிச்சடங்கு எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி நல்லபடியாகவே நடந்தேறியது...


செல்விக்கு யார் கொள்ளி வைப்பது? என பேச்சு வந்த அடுத்த நிமிடம் பரிதியை முன் நிறுத்தி விட்டாள் தாச்சாயினி...


ஊரில் சிலர்... "அனாதை பையன் எப்படி ரத்த சொந்தமாகும்?" என நாக்கென்னும் தேள் கொடுக்கால் கொட்டிட... இசக்கியின் தீப்பார்வையில் அனைவரையும் அடக்கியவன்... பரிதி தான் மகனுக்கான அத்தனை சடங்கையும் செய்ய வைத்தான்...


ஆண்கள் அனைவரும் அருகில் இருந்த குளத்தில் குளிக்க... பெண்கள் வீட்டினை கழுவி விட்டு, வீட்டுக்குள் குளித்து விட்டனர்...


நேற்று இரவு இருந்த அதே ஆடையில் தான் இருந்தாள் தாச்சாயினி... குளிக்க வேண்டும் என்றாலும் அவளிடம் மாற்று ஆடை கிடையாது...


"எப்படி குளிப்பது?" என திருதிருவென முழித்தவாறே... திரும்பியவளின் நேர் எதிரில் வேலைக்கார பெண் ஒருத்தி சற்று பம்மியவாறே நின்றிருந்தாள்...


"என்ன வேணும்?"


"சின்னம்மா... இது ஐயா கொடுத்து விட்டாரு?" என கையிலிருந்த கவரை கொடுக்க...


எடுத்துப் பார்த்தவளுக்கு உள்ளே ஒரு செட் சுடிதார் இருந்தது... அவளின் அளவுக்கு தைத்தவாறே ரெடிமேட் சுடிதாரை சற்று திருப்தியுடன் பார்த்தவள்... யோசனையுடன் அந்த வீட்டை தான் பார்த்தாள்...


"உடை மாற்ற வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு அறை வேண்டுமே... ஹாலில் வைத்தா உடை மாற்ற முடியும்" என தவிப்புடன் அங்குமிங்கும் கண்களை சுழற்றிட...


"என்னம்மா தேடுற?.. இசக்கி அறையையா?" என தெரியாமல் கேட்டுவிட...


எதிரில் இருந்த பெரியவரை பார்த்து தீயாய் முறைத்தாள்... "நான் ஒன்னும் என் ஆசை புருஷன் ரூமை தேடலை... டிரஸ் மாத்துறதுக்கு ஒரு ரூம் தேடுறேன்... போதுமா??" என சுள்ளென கேட்டவளை பார்த்து மீசையின் நடுவே பெரியதாக சிரிக்க...


அவரின் சிரிப்பு இவளுக்கு கோபத்தை தூண்டிட...


"எதுக்கு சிரிக்குறீங்க?"...


"நான் உன் புருஷனை பத்தி எதுவுமே கேட்கலையேம்மா... இசக்கி ரூமையா தேடுறேன்னு கேட்டேன்" என அவளை வாரி விட...


அவரை முறைத்துக் கொண்டே கீழே இருந்த ஒரு அறையை வேகமாக போய் திறந்தவள்... படாரென்று கதவை அடித்து சாத்தினாள்...


அவளின் கோபத்தை சிறு பிள்ளை செய்கையாக எடுத்தவர் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து அகன்றார்...


இசக்கி மேலே நின்று கொண்டே கீழே நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்தான்.. ஈடுகாட்டிற்கு பரிதியை அனுப்பி வைத்ததால் இவன் சம்பிராதயத்திற்கு மட்டுமே சென்று விட்டு உடனே வந்து விட்டான்...


அங்கேயே குளித்ததால் ஆடை மட்டும் மாற்றி விட... உள்ளே நுழைந்தவன்... இன்னும் குளிக்காமல் இருந்த தாச்சாயினியை பார்த்து புருவம் சுருக்கியவன்...


அவனுக்கு மட்டுமில்லை பரிதிக்கும் சேர்த்தே ஆடையை வாங்கியிருந்தான்... இருவருக்கும் ரெடிமேட் ஆடைகளை தேர்ந்தேடுத்தான்...


அதை தான் கொடுத்தாள் வாங்க மாட்டாள் என அறிந்தவன்... வேலைக்காரியிடம் கொடுத்து விட.. அவள் வாங்கி விட்டாலும்...


அங்குமிங்கும் தேடுவதை உணர்ந்து அவளுக்கு ஒரு அறையை ஒதுக்குவதற்குள்... தாத்தா வந்தது அவர்கள் பேசியது அனைத்தும் கேட்க நேர்ந்தது...


அவளின் கோபம் தெரியும் என்பதால் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளே சென்றிட...


ஈடுகாட்டில் இருந்து வந்த பரிதியை பார்த்த பின்பு நான் அவளுக்கு மூச்சே வந்தது... மகனுக்குரிய சடங்கு செய்ததால் அவனுக்கு மொட்டை அடித்திருந்தனர்...


தன் தமக்கையை பார்த்து வலியுடன் சிரிக்க... அவளோ அவன் மட்டுமே தன் ஆறுதல் என்று எண்ணினாள்...


இருவரும் கீழ் அறையிலேயே படுத்து உறங்கினர்.. தாச்சாயினியை பொறுத்தவரை அவளின் உடன் பிறந்தவனும் பரிதியே.. அவளின் முதல் குழந்தையும் பரிதியே…


இரவு நள்ளிரவு வேளையில் விதுரவிஷியை தூங்க வைத்து விட்டு மெல்ல அறையை விட்டு வெளியே வந்தான் அச்யுதன்...


"கவின்" என்ற ஒற்றை குரலுக்கே பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்தான்...


"சார்??"...


"நான் கேட்டிருந்த டீட்டெய்ல்?"


"அந்த பொண்ணு பேரு அகன்முகிழி சார்"


"அகன்முகிழி" என தனக்குள்ளே சொல்லி பார்த்தவனுக்கு இவ்வளவு நீளமா கூப்பிட பிடிக்கவில்லையோ என்னவோ.. "அஹா" என ஹஸ்கி வாய்ஸில் கூப்பிட்டவனை வித்தியாசமாக பார்த்தான் கவின்...


"சார்" என தயங்கி நின்ற கவினை பார்த்தவாறே சோபாவில் அமர்ந்தவன்...


"ம்ம்ம்.. மேலே சொல்லு"


"அவுங்க அம்மா பேரு செம்மலர்... அப்பா பேரு கணபதி.. அகி சின்ன வயசா இருக்கும்" என்றவனின் செல்ல அழைப்பில்... அவனை கூர் பார்வையில் துளைக்கெடுக்க...


"அகி யாரு??"


"அகன்முகிழி தான் சார்??.. எல்லாரும் செல்லமா அவளை அப்படித்தான் கூப்பிடுவாங்க"


"யார் எப்படி கூப்பிட்டாலும் பரவாயில்லை... நீ முழுப்பேர் சொல்லு... அகியாம்.. அகி" என பல்லிடுக்கில் முணுமுணுத்துக் கொண்டே அவனை ஏறிட்டுப் பார்க்க...


"அகன்முகிழி பிறந்ததுமே அவுங்க அப்பாவுக்கு அவளை பிடிக்காம போயிடுச்சி" என்றவனை கண்கள் இடுங்க பார்த்தான் அச்யுதன்...


"ஏன்"


"அது வந்து சார்.. பொம்பளை புள்ளைங்கிறதுனால... ஆம்பிளை புள்ளை தான் வாரிசு.. ஆம்புளை புள்ளை தான் எல்லாம் அப்படின்னு நினைக்குற அகன்முகிழியோட அப்பா... அகன்முகிழியை இதுவரைக்கும் ஆசையா தூக்கி கொஞ்சினது கூட இல்லை சார்… ஒரு வார்த்தை சாப்டியான்னு கூட கேட்டதில்லை"...


"ம்ம்ம்"....


"அவுங்க அம்மா கூட வாழ்ந்துட்டு இருக்கும் போதே சாவித்திரி கூட வாழ ஆரம்பிச்சிருக்காரு"


"ஓஹ்ஹ்ஹ்"...


"உங்களை ஒரு பொம்பளை மேலும் கீழும் பார்த்து எம் பொண்ணுக்கு என்ன வழின்னு கேட்டுச்சி.. அது தான் சார் அவரோட செட்டப்"


"ம்ம்ம்ம்… பார்த்தாலே புரியுது"


"பாவம் சார் அந்த பொண்ணு... சித்தியோட கொடுமை தாங்க முடியாம… வாழவும் முடியாம... சாகுறதுக்கு துணிவும் இல்லாமல் வாழ்ந்துட்டு இருக்கு... அறுபது வயசு உள்ள ஒருத்தனுக்கு அந்த பொண்ணை கட்டி வைக்கப் போறாங்க" என்றவனின் வார்த்தையில் இரும்பு இதயத்தில் சிறு வலி தோன்றிட..


"அவ மைனர் பொண்ணு தானே... எப்படி கல்யாணம் பண்ண முடியும்?"


"இல்லை சார் அவுங்க அம்மா இறந்ததுனால ரெண்டு வருஷம் அந்த பொண்ணு பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் போகலை.. அப்புறம் ஒரு டீச்சரோட ஹெல்ப்னாலே தான்… இப்போ பள்ளிக்கூடத்துக்கு போக ஆரம்பிச்சிருக்கா"


"ம்ம்ம்.. சரி கவின்.. நாளைக்கு பஞ்சாயத்துக்கு நான் ரெடி.. காலையில பத்து மணிக்கு நாம போய்க்கலாம்.. அதுக்குள்ள நான் சொல்ற பொருளை வாங்கிட்டு வந்திடு" என அவன் சொல்லிய பொருளில் உச்சகட்ட பேரதிர்ச்சியில் உறைந்து நின்றான்...


"சார்ர்ர்ர" என தயங்கியவாறே இழுக்க...


"நான் சொன்னதை செய் கவின்" என கட்டளையிட்டவன்... தன்னறைக்குள் நுழைந்து தன் மகளை தான் பார்த்தாள்...


முதன் முதலாய் இவளை கையில் ஏந்தும் போது தீக்ஷிதாவும் நானும் எவ்வளவு சந்தோஷப்பட்டோம்... பெண்ணோ? ஆணோ? தன் உயிரணுவில் உதிர்த்தது என்று தான் அவன் நினைத்தானே? தவிர.. மற்ற எண்ணங்கள் எதுவும் வரவில்லையே...


இவர்களால் மட்டும் எப்படி இப்படி ஒரு பேதமை கொண்டு வாழ முடிகிறது... என்று தான் இந்த பேதமை ஒழியுமோ? என்று எண்ணியவனுக்கு...


இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் செய்யும் செயலில் ஒரு சிறு பெண்ணின் உள்ளத்தை முழுதாய் சிறையெடுப்போம் என அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான் தான்...


அடுத்த நாள் காலை வேளையில் ஊர் சனங்கள் ஒன்று கூடி நின்றிருக்க... அகன்முகிழியும் அதன் நடுவே நின்றிருந்தாள்...


அழகிக்கோ கோபம் இன்னும் சற்று விடவில்லை... முத்தம் கொடுத்ததை அத்தோடு விட்டு சென்றிருந்தாள் கூட… இன்று தன் தோழி இந்த அவமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பாளா? என சிந்தித்தபடி இருந்தவளுக்கு...


மனதில் சிறு வலி தோன்றிட.. அகன்முகிழி தோளில் தான் அமர்ந்தது...


"அகி"


"ம்ம்ம்.. சொல்லு"


"இப்படி பஞ்சாயத்துல வந்து நிக்கிறீயே?... உனக்கு கொஞ்சமும் வெட்கமா இல்லை"


"அதுக்கு என்ன பண்ண சொல்ற??.. சாகுறதுன்னு முடிவாகிடுச்சி.. அது எப்படி செத்தா என்ன??" என கசப்பான குரலில் உரைத்தவள்...


நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் கால் வேறு வலித்தது... வலியுடன் திரும்பி பார்க்க.. அங்கு சாவித்திரி தூபம் போட.. அதற்கெல்லாம் மண்டையாட்டிக் கொண்டிருந்தார் கணபதி..


"இவர் எப்போ தான் மூளைன்னு இருக்கிறதை பத்தி யோசிப்பாரா?" என நினைத்துக் கொண்டே மெல்ல பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே திரும்பிட... அங்கு தன் கம்பீரம் மாறா நடையில் எதிரில் வந்து கொண்டிருந்தான் அச்யுத தேவராயன்...


அவனை பார்த்து திகைத்து நின்றவள் கலங்கிய விழிகளுடன் அழகியை பார்க்க... அழகி அச்யுதனை தான் முறைத்துப் பார்த்தது...


"அழகி.. அழகி... இவன் தான் என் கனவுல முத்தம் கொடுத்தான்" என்றவளை திரும்பி முறைத்த முறைப்பில் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டாள் அகி...


"ஏன் அழகி முறைக்கிற?"..


"கனவுல மட்டுமில்ல.. நேர்லையும் இவன் தான் முத்தம் கொடுத்தான்" என்ற அழகியை வெடுக்கென திரும்பி பார்க்க... திரும்பியவளின் கன்னத்தில் வேகமாக கொத்தி விட்டது அழகி...


அது கொத்திய வேகத்தில் "ஆஆஆ" என அலறிட... ஒட்டுமொத்த ஊர்சனமும் அவளை தான் திரும்பி பார்த்தது... அச்யுதன் உள்பட...


அனைவரும் தன்னை திரும்பி பார்ப்பதை உணர்ந்தவள்... சட்டென கீழே தலையை குனிந்து கொண்டாள்...


இரு தரப்பினரும் வந்து சேர்ந்ததால்... "ஆஆஆ.. சொல்லுங்கப்பா.. என்ன நடந்தது என்று??" என பஞ்சாயத்தில் அமர்ந்திருப்பவர் ஒருவர் கேட்க...


அகன்முகிழி எதுவும் பேசவில்லை... சாவித்திரி தான் ஆரம்பித்தார்...


"இங்கே பாருங்கய்யா... இவன் தான் என் பொண்ணுக்கிட்ட அத்துமீறி நடந்தது.. இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் ஆகப்போற பொண்ணுக்கு.. ஊர் பார்க்க முத்தம் கொடுத்தது இவன் தான்... இவன் வேற யாருமில்லை.. இவளோட கள்ளக்காதலன் தான்.. ஊர் பார்க்க ஓடிப்போகணும்னு நினைச்சாங்க.."


"இப்போ வசமா மாட்டிக்கிட்டாங்க.. அவனோட சேர்த்து இந்த சிறுக்கி மவளுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்… அவளால நான் ஊருக்குள்ள தலை காட்ட முடியாம தவிக்கிறேன்… அதுனால அதுக்கு நஷ்டஈடா அவ பேர்ல இருக்கிற அந்த வீட்டை என பேர்ல மாத்திக் கொடுக்கணும்னு சொல்லிடுறேன்" என வன்மத்துடன் கூறி முடிக்க...


கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் திகைப்பு தான் அகன்முகிழியை தவிர... அவளுக்கு தெரியாத நல்லபாம்பின் குணம்.‌ ஒரு நாள் இல்லை ஒரு நாள் தன் விஷத்தை கக்க தானே செய்யும்...


இன்று அதன் நாள் தன் மேல் உள்ள கோபத்தை ஒட்டு மொத்தமாக கக்கி விட்டது" என நினைத்துக் கொண்டே கண்ணீருடன் தலைகுனிந்து நிற்க...


அச்யுதனுக்கு அவள் முகம் தெரியாவிடிலும்... அவள் குனிந்த விதத்திலேயே தெரிந்தது அழுகிறாள் என்று...


"ஒரு நிமிஷம்" என்ற கம்பீரக்குரலில் அனைவரும் திரும்பி பார்க்க.. அச்யுதனோ அகியை தான் பார்த்தான்...


தன் கையில் இருந்த விஷியை கவின் கையில் கொடுத்தவன்... அகியின் அருகில் வந்து நிற்க... அவளோ தன்னருகில் வந்து நின்றவனை பார்த்து திகைத்து போய் நின்றாள்...


எது பேசவேண்டுமென்றாலும் பெரியவர்களிடம் தானே பேச வேண்டும்... தன்னருகில் ஏன் நிற்கிறான் என கண்கள் இடுங்க பார்க்க...


அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் வலது கையினை பிடித்தவன்... தன் கையில் இருந்த வெட்டிங் ரிங் என அழைக்கப்படும் மோதிரத்தை எடுத்தவன்... அகியின் கையில் ஏந்தியவன்.. அவளின் சம்மதம் அறியாமலே போட்டு விட்டான்....


"உங்க ஊர்ல தாலிக்கு இருக்கிற அதே மதிப்பு... இந்த வெட்டிங் ரிங்குக்கும் இருக்கு" என‌ கம்பீரக்குரலில் சொல்லியவன்... தன் கை நீட்டிட..


அவனின் வார்த்தை கொடுத்த நம்பிக்கையில் தானாக மோதிரத்தை அணிவித்து விட்டாள்...


ஊரில் இருந்த அனைவரையும் ஏளனமாக பார்த்தவன்... "பஞ்சாயத்து முடிஞ்சிடுச்சி.. இனி நாங்க ஹஸ்பென்ட் அன்ட் ஒய்ஃப்... சோ எங்க பிரச்சினையை நாங்களே பார்த்துக்கிறோம்"... என அவன் ஒரு பஞ்சாயத்தை முடித்துக் கொண்டு திரும்பினான்…


ஊர் வேடிக்கை பார்க்க.. சாவித்திரியின் அருகில் வந்தவன்… அவரை ஆழமாக பார்த்துக் கொண்டே… அழுத்தமாக ஒரு புன்னகை ஒன்றை சிந்தினான்…


அந்த புன்னைகயில் சாவித்திரி விறைத்து நின்றார்… ஒருவன் புன்னகையால் மிரட்ட முடியுமா? மிரட்டி விட்டே சென்றான்…


மூன்று நாட்கள் எந்தவித சலனமும் இன்றி சாதாரணமாக சென்றது…


இசக்கி தன் வெளிவேலையை பார்க்க சென்று விட… நள்ளிரவை தாண்டும் வேளையிலும்… இன்னும் தூங்காமல்அரக்க பரக்க ஓடிவந்த பரிதியை கண்கள் இடுங்க பார்த்தான் இசக்கி…


அவனின் முகத்தில் தெரிந்த கவலையும், பதட்டமும் இவனையும் புருவம் சுருக்க வைத்தது…


“என்னாச்சி?”


“அக்காவை காணும் மாமா” என கண் கலங்கி நின்றவனை அழுத்தமாக பார்த்தான்..


பாலச்சந்திரனின் அறிவுரைப்படி தான் இசக்கியை மாமா என்று அழைப்பது… தாச்சாயினியும் தடுப்பதில்லை என்பதால் பரிதிக்கு அழைப்பதில் எந்த சிரமும் ஏற்படவில்லை…


“இங்கே எங்கேயாவது தான் இருப்பா போய் தேடு” என விட்டேற்றியாக வந்த பதிலில் மேலும் கண் கலங்கினான்…


“இல்லை மாமா… எல்லா இடத்திலையும் தேடிட்டேன்… கிடைக்கலை மாமா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்ற சின்னஞ்சிறுவனின் அழுகை அவனின் இரும்பு மனதினை இளக்கிட…


“சரி… வா” என அவனையும் அழைத்துக் கொண்டே ஊர் முழுவதும் தேடினான்.. அவனின் மாந்தோப்பு உள்பட எங்கேயும் தாச்சாயினி இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை…


எங்கும் தேடியும் கிடைக்கவில்லை என்றதுமே இசக்கிக்கே சற்று பயம் கொடுத்தாலும்… முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் வந்தவனின் நேர் எதிரே வந்து நின்றான் சுடுகாட்டில் வாழும் வெட்டியான் மருது…


வெட்டியானுக்கு சரியாக பேச்சு வராது என்பதால் இசக்கியை பார்த்தவாறே ஓரிடத்தில் கை நீட்ட… கை நீட்டிய திசையில் பார்த்த இசக்கியும், பரிதியும் அதிர்ந்து விட்டனர்….
 
Last edited:





















சிறை 17,


தாச்சாயினியை இப்படி ஒரு கோலத்தில் பார்ப்போம் என கனவில் கூட நினைத்ததில்லை இசக்கி…


எப்பொழுதும் நேர்த்தியாக ஆடை அணிவதில் தாச்சாயினி என்றுமே முதலிடம் தான்.. இருக்கும் ஆடையையே எந்தவித கசங்கலும் இல்லாமல் அணிவாள்…


ஆனால் இன்று தான் அணிந்திருக்கும் ஆடை கசங்கி, அழுத விழிகளுடன் சோர்ந்து.. தன் தாயின் சமாதியின் மேல் மண் பரப்பில் படுத்திடுந்தவளை பார்க்க… பார்க்க நெஞ்செல்லாம் அடைத்தது…


அவள் தன்னுடன் சண்டை போடும் பொழுதெல்லாம் ரசித்த மனம்… அவள் துவழும் வேளையில் ஏந்திக் கொள்ளவா தயங்கும்…


தன் போனை எடுத்து பழனியை காரை எடுத்துக் கொண்டு வர சொல்லினான்.. அப்படியே தனக்கு தெரிந்த டாக்டருக்கும் போன் பண்ணினான்…


பணம் பத்தும் செய்யும் அல்லவா… அவன் விஷயத்தில் சரியாக வேலை செய்தது..


தாச்சாயினியை தன் இரு கைகளில் ஏந்தியவன்… பழனி கொண்டு வந்த காரில் ஏற்றிட… முத்து முத்தாக வேர்த்து இருந்தவளை பார்த்தவன்… "ஏசியை ஆன் பண்ணு" என்றவனின் கட்டளைக்கேற்ப புல் ஏசியை ஆன் பண்ணிட…


சற்று நேரத்தில் வண்டியில் வீசிய குளுமையில்… மெல்ல விழிகளை திருப்பி பார்த்திட… அவள் உடலோ நடுநடுங்கவே ஆரம்பித்து விட்டது…


"இப்பொழுது தானே வேர்த்தது?" என சந்தேகத்துடன் அவள் நெற்றியில் கை வைக்க.. தீயாய் தகிக்க ஆரம்பித்தது உடல்…


"வேண்டாத இடத்துக்கெல்லாம் போய்ட்டு… காய்ச்சலை இழுத்து வச்சிட்டு வந்திருக்கா" என உரிமையுடன் திட்டியவன்… நிமிர்ந்து பார்க்க… பரிதியோ கண்களில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தான்…


"இங்கே பாரு.. உனக்கு முதலும்.. கடைசியுமா சொல்றேன்… எனக்கு யாராவது அழுதாலே புடிக்காது… அதுலையும் ஆம்பிளை பையன் அழுதா சுத்தமா புடிக்காது.. இன்னொரு தடவை கண்ணு கலங்கிச்சு… கண்ணாமுழி ரெண்டையும் நோண்டிருவேன் பார்த்துக்கோ" என்றவனின் சிம்மக்குரலில்…


பரிதிக்கு ஜுரம் வருவதை போல் இருந்தது… ஏனோ அவன் மனதில் என்ன இருப்பது என்பதை தாச்சாயினியை தாண்டி யாரும் அறிய மாட்டார்…


அதனால் தான் முப்பொழுதும் அவன் தாச்சாயினியின் பின்னால் அலைவது…


வீட்டிற்குள் கார் நுழைவதற்கும்… அவன் வீட்டு வாசலில் வேறு கார் நிற்பதற்கும் சரியாக இருந்தது…


காரில் இருந்து தாச்சாயினியை தூக்கியவன்… தனதறைக்கு எடுத்துச் செல்ல… பரிதியோ விக்கித்து போய் நின்றான்…


இரண்டு நாட்களாக கீழே இருந்த அறையை தான் தாச்சாயினியும், பரிதியும் பயன்படுத்தி வந்தனர்… ஆனால் இன்று இசக்கியின் அறைக்கு தூக்கி செல்வதை தடுக்க நினைத்திட மனம் நினைத்தாலும்…


இசக்கியை நினைத்தாலே பயத்தில் பேச்சே வரவில்லை அவனுக்கு.. இதில் எங்கிருந்து அவனை தடுப்பது…


இசக்கியுடன் அவனுடைய அறைக்கு பரிதியும் சென்றான்… உள்ளே சென்றவன் அறையில் உள்ள கட்டிலில் படுக்க வைத்தான்…


டாக்டர் அவளை செக் பண்ணியவர்.. "ஃபீவர் நார்மலா தான் இருக்கு… தூங்காம சாப்பிடாம இருந்துருப்பாங்க போல.. பீபி லெவல் ரொம்ப லோவா இருக்கு… கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க.. பீவருக்கு மட்டும் இன்ஜெக்சன் போடுறேன்" என மருந்தை ஊசியினுள் செலுத்தி…‌ தாச்சாவிற்கு போட்டு விட்டு அவர் பீஸை வாங்கிக் கொண்டு கிளம்பி சென்று விட்டார்…


பரிதி தான் அடுத்து என்ன செய்வது என அறியாமல் நின்றான்…


"தாச்சாயினி அருகில் செல்ல வேண்டும்… ஆனால் இசக்கி என்ற இரும்புக்கோட்டையை தாண்டி உள்ளே நுழைய முடியாதே" தவிப்புடன் இசக்கியை பார்க்க…


அவளின் பார்வையை உணர்ந்தாற் போன்று…


"நீ இங்கே இருந்துக்கோ… நான் கீழே ரூம்ல படுத்துக்கிறேன்.. ஏதாவது தேவைன்னா என்னை கூப்பிடு" என்றவனுக்கு உடனடியாக தலையாட்டியவன்… தன் தமக்கை அருகில் ஓடினான்… தாய்ப்பசுவை தேடும் கன்றுக்குட்டியாக…


அவர்கள் இருவரின் பாசப் பிணைப்பை பார்த்தவனின் இதழ்களில் மெல்லிய கீற்றுப் புன்னகை… அதே நேரம் பரிதியை ஊடுருவும் பார்வை பார்த்தான்…


அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வெளியேறினான்… அவனுக்குள் இருக்கும்‌ அலைபாய்ந்த மனதினை யாருக்கும் தெரியாமல் மறைத்தவனுக்கு… சற்று தனிமை தேவைப்பட்டது..


நிஜத்திற்கு தெரியாத உண்மைகள் பல நிழலிற்கு தெரியும் என்பதை போல்… தாச்சாயினியை சுற்றி எதுவோ நடக்கிறது என்பது மட்டும் நன்றாக புரிந்நது…


ஆனால் என்ன நடக்கிறது என்பது சற்று மர்மமாகவே இருந்தது… நள்ளிரவை கடந்த பின்பும் தூக்கம் என்பது சிறிதுமில்லாமல் வீட்டில் இருந்த தோட்டத்தில் நடக்க ஆரம்பித்தான்…


மெல்லிய கானகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு… "இசக்கி" என்ற குரலில்.. திரும்பாமலே அழைப்பது யார் என புரிந்தது…


அவனின் விசுவாசியான பழனி தான்… "ஏன் அண்ணேன் தூங்காம முழிச்சி இருக்கீங்க… நான் வேணும்னா ஆட்டக்காரி ரோசாமணியை வர சொல்லவா" என்ற வார்த்தையில்.. அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவனின் முகம் கோபத்தில் ஜொலிக்க….


"நீ கொஞ்சம் இப்படி வாயேன்" என பாசமாக அழைத்த அழைப்பை உண்மை என நம்பி அவன் அருகில் செல்ல… அவனோ நறுக்கென்று அவன் மண்டையில் கொட்டு வைத்து விட்டான்…


"ஆஆஆ‌‌.. ஏன் அண்ணேன்.. என்னை அடிச்ச??"


"பின்னே நீ சொன்ன வார்த்தைக்கு உன்னை தூக்கி வச்சி கொஞ்சணுமாக்கும்… அவன் அவன் வாழ்க்கையை அந்தரத்துல ஊஞ்சல் கட்டி ஆடுற மாதிரி ஆடிட்டடு இருக்குது… இப்போ தான் ரோசாமணி.. ராசாமணின்னு சொல்லிட்டு இருக்க… தாச்சாவுக்கு நான் உண்மையா இருக்கணும்னு எப்பவோ முடிவெடுத்துட்டேன் " என கலங்கிய குரலில் சொன்ன இசக்கி.. பழனிக்கு புதிதாக தான் தெரிந்தான்…


"ம்ம்ம்.. ஆமா டா‌. அவளை பார்த்ததுல இருந்து எந்த பொண்ணு மேலையும் நான் கை வச்சதே இல்லை… ஏதோ ஒரு நினைப்பு டா.. அவ என் நெஞ்சுக்குள்ள கிடந்து உறுத்திக்கிட்டே இருக்கா" என காதல் கலந்து சொல்லிய மோகனக்குரல் அவனுக்கு வித்தியாசமாக தான் தெரிந்தது…


"இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது… நீ போ"


"இம்புட்டு ஆசையை வச்சிட்டு… ஏன் அண்ணேன்.. ரெண்டு நாளா அண்ணி பக்கம் கூட போகலை"


"அவளை ஏற்கனவே ரொம்ப காயப்படுத்திட்டேன்.. இனிமேலும் காதலுங்கிற பேர்ல படுத்துனா.. அவ தாங்க மாட்டா" என வருத்தம் நிறைந்த குரலில் சொல்லியவன்… அங்கிருந்த தென்னை மரத்தின் மேல் சாய்ந்து நிற்க…


"பழனி.. இந்த பரிதியை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?? செல்வி அக்கா எப்படி இறந்தாங்க??"


"செல்வியக்கா தூக்கு போட்டு இறந்தாங்களாம்"


"தூக்கா" அந்த வார்த்தையே அவனுக்கு இடித்தது… தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என நினைப்பவர் தூக்கில் தொங்குவாரா?" என சிந்தித்தவனுக்கு…


சிலந்தி வலை பின்னுவதை போல்… தாச்சாயினியை சுற்றி பல வலைகள் பின்னப்பட்டிருப்பது புரிந்தது…


பரிதியை அவனால் சாதாரணமா எடுத்துக் கொள்ள ஏனோ மனம் மறுத்தது… சிறு வயது பாலகன் என அவனை ஒதுக்கிவிட முடியவில்லை…


அகி அச்யுதன் வீட்டில் தான் இருந்தாள்…அவளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருந்தான்…


குழந்தையை பார்த்ததுமே அவளுக்கு மற்றது எல்லாம் மறந்துவிட… குழந்தையோடு குழந்தையாக குதூகலித்து போனாள் அகி…


அழகிக்கு அகியின் மேலே சற்று கோபம் தான்… ஒருவனை பற்றி எதுவுமே அறியாமல் அவனை கல்யாணம் பண்ணிக் கொண்டாளே..


இப்படி வெகுளிப் பெண்ணை பார்த்து பரிதாப்படுவதா? இல்லை அவளின் வாழ்க்கையை நினைத்து பயப்படுவதா? என்றே தெரியவில்லை..


அகிக்கு இதை பற்றி எந்த யோசனையும் இல்லை.. அவளுக்கு வெட்டிங் ரிங் போட்டதால் அவள் பள்ளிக்கூடத்திற்கு போவதிலும் எந்தவித சிரமமும் ஏற்படவில்லை…


பள்ளிக்கூடம் முடிந்ததும் விஷியுடன் விளையாட ஆரம்பிப்பவள்… விஷியின் அறையிலேயே தூங்கிவிட… ஏனோ தன் மகளுக்கும் தனக்கும் இடையில் இருப்பவளை… அடுத்த அறைக்கு கடத்தி விடுவான்…


குழந்தையின் விஷயத்தில் அவன் சற்று கறார் பேர்வழிதான்…


இன்றும் பள்ளிக்கூடம் முடிந்து, கை கால்களை அலம்பிக் கொண்டு குழந்தையின் அறைக்குள் நுழைய.. விஷியோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்…


தூங்கும் குழந்தையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் அகி…


"அகி"


"ம்ம்ம்.. சொல்லு அழகி"


"அவன் ஏன் உன்னை கல்யாணம் பண்ணினான்னு போய் கேளு" என சற்று கோபத்துடன் உரைக்க…


"நானா??.. அவர்கிட்டையா?? எனக்கு பயமா இருக்கு.. நீ போய் கேளு"


"எனக்குத்தானே அவன் மோதிரம் போட்டான்… நான் போய் கேட்குறதுக்கு.. லூசு மாதிரி பண்ணாதே அகி… போ போய்க் கேளு" என வற்புறுத்த…


அவளும் அழகியின் பேச்சை கேட்டுக் கொண்டே தளிர்நடையிட்டு, அச்யுதன் இருந்த அறைக்குள் நுழைந்தாள்…


லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவனை பார்த்து சற்று பயம் வந்தாலும்… அழகி சொன்னதை கேட்டுவிடலாம் என சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டு,


"சார்ர்ர்ர்" என சொல்லப் போனவளின் வாயை தன் இறக்கையால் மூடியது அழகி…


"ஏன் அழகி??" என பரிதாபமாக கேட்க…


"என்ன சாரு.. மோருன்னு சொல்லிட்டு இருக்க.. அவர் உனக்கு புருஷன் தான்… ஒழுங்கா வேற எப்படியாவது கூப்பிடு.. வர வர சீரியல் பார்த்து கெட்டுப் போய் திரியுற நீ" என அவளை குற்றஞ்சாட்டி விட்டு… கதவின் மேல் பறந்து சென்று அமர ‌…


முதுகு காட்டி அமர்ந்திருந்தவனுக்கு இவர்கள் சம்பாஷனை எதுவும் கேட்கவில்லை…


"ஏங்க" என மெல்லிய குரலில் அழைக்க… அவனுக்கு குரல் கேட்டால் தான் திரும்பிட…


அவன் திரும்பாதது ஏமாற்றமாக இருந்தாலும்… "என்னங்க" என மறுபடியும் அழைக்க…


"டேய்ய்ய்ய்.. வளந்து கெட்டவனே" என்ற குரலில் அகி திகைக்க… சட்டென திரும்பினான் அச்யுதன்… அழகியோ பறந்து வெளியே சென்று விட்டது…


தன் முன்னால் பதட்டத்துடன் கைகளை பிசைந்து கொண்டு நின்ற அகியை கண்கள் இடுங்க பார்த்தவன்… "என்னை எப்படி கூப்பிட்ட?"


"அய்யோ நான் உங்களை அப்படி கூப்பிடலை‌‌. அழகி தான் உங்களை வளந்து கெட்டவனேன்னு கூப்பிட்டுச்சி" என அழகியை அழகாக கோர்த்து விட…


"அந்த கிளியை ஒரு நாள் இல்ல ஒரு நாள் சூப் வச்சி குடிக்க போறேன் பாரு" என கோபத்தில் பற்களை நறநறவென கடிக்க..


அவனின் கோபத்தில் பயந்தே போனாள் அகி… அழகியை ஏதும் செய்து விடுவானா? என அஞ்சியவள்…


"என்னங்க ப்ளீஸ்… அழகி கொஞ்சம் வாய்த்துடுக்கு தான்.. மத்தபடி ரொம்ப சமத்து" என்றவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்…


"எப்பேற்பட்ட பெண்ணிவள்…தன் வாழ்க்கையை பற்றி சிறிதும் கவலையில்லை.. ஆனால் அடுத்தவர்களின் வாழ்க்கையை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்" என நினைத்தவன்.. வாய் விட்டு கேட்கும் நிலைமையில் அவர்கள் உறவில்லையே… தாமரை இலை தண்ணீர் போல் அல்லவா.. ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்றது‌‌…


"சரி நான் அதை ஒன்னும் பண்ண மாட்டேன்.. நீ.. போ" என்றவனிடம் மெல்ல தலையாட்டியபடி அறையை விட்டு வெளியேற முயன்றிட…


"உனக்கு பாஸ்போர்ட் இருக்கா? என்ற குரலில் சட்டென்று நின்றாள்…


"பாஸ்போர்ட்டாஆஆ… அது எதுக்கு?"


"பின்னே இங்கேயே தங்கிக்கலாம்னு நினைப்பா.. இன்னும் சில மாசம் மட்டுந்தான் மதுரையில் நான் இருப்பேன்… அப்புறம் அமெரிக்கா போயிடுவேன்… நீயும் என்கூட தான் வர்ற" என்றவனின் வார்த்தையை கேட்ட பின்பு தான் அழகிக்கு சற்று நிம்மதியான மூச்சு வந்தது…


"எங்கே தன் தோழியின் வாழ்க்கை பாழாகி விடுமோ?" என கவலைப்பட்டதற்கு ஒரே வார்த்தையில் பதிலளித்து விட்டான் அல்லவா…


"ம்ம்ம்" என சிந்தித்தவன்… "சனிக்கிழமை ரெடியா இரு.. நம்ம கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணனும்"


அவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டியவள்… "என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?" என்றவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன்…


"நீ என் பொண்ணை காப்பாத்துன… அதுனால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… என் பொண்ணை நீ ஏதாவது பண்ணினா… உன்னை கொல்லவும் நான் தயங்கமாட்டேன்" என்றவனின் பதிலில் சிறு பெண்ணின் இதயத்தில் சுருக்கென வலி தோன்றிட… கண்கள் கலங்கிட அவனை ஏறிட்டுப் பார்த்தாள்…


கரம் பிடிப்பான்….
 
Status
Not open for further replies.
Top