Writers of Brammastram
Moderator
வணக்கம் நட்பூக்களே,
நான் பிரம்மாஸ்திரம் 5
இது என்னுடைய புது முயற்சி… போட்டியில் கலந்து கொள்கிறேன் என்றதும் எனக்கு வாய்ப்பளித்த பிரியங்கா முத்துக்குமார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்…
ஆன்டி ஹீரோ
ஆன்டி ஹீரோயின்
அப்பாவி பெண்
மனிதன்
வில்லன்
இந்த ஐந்து பேர்களையும் கொண்ட கதைக்களம் தான் இது… இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனை மட்டுமே…
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் அன்பானவர்கள்.. பண்பானவர்கள் இல்லையே.. அப்படி குணாதிசியம் கொண்ட ஐவரை மையப்படுத்தி எழுதும் என்னுடைய முயற்சிக்கு.. தங்கள் கருத்துக்கள் தான் என்னை மேன்மேலும் எழுதுவதற்கு உதவும் என்பதால்.. தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி என்றும் உங்கள் அன்புடன்….
சிறையெடுத்தாய் என்னை!!
கரம் பிடித்தேன் உன்னை!!
டீஸர் :
சிறை :
திகுதிகுவென தீக்கீரையாகி கொண்டிருந்த வீட்டினை அந்த ஊர் மக்கள் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தனர்…
இல்லை… இல்லை… வேடிக்கை பார்க்க வைத்தான் ஒருவன்… அந்த வீடு ஆரம்பத்தில் தீப்பற்றி எரியும் பொழுதே அவன் பார்த்து விட்டான்.. அவன் நினைத்திருந்தால் ஓடிச்சென்று அணைத்திருக்கலாம்…
ஆனால் வேண்டுமென்றே எரிய விட… ஊர்க்காரர்கள் அணைக்க வர, எதிரில் எரியும் தீயை விட… அவன் கண்களில் தெரிந்த ஜுவாலையில் அனைவரும் பின்னால் இரண்டடி வைத்தனர்…
அவனை எதிர்த்து அந்த ஊரில் எவரும் செயல்பட முடியாது.. செயல்படவும் விடமாட்டான் அவன்.. இன்று மதியம் தான், அவன் அரக்கத்தனத்தின் உச்சத்தை நிரூபித்தான்…
மேலும் அவனுடன் சண்டையிட்டு வெல்லவும் முடியாது… கையாலாகாத நிலையில் பார்த்த ஊர் ஜனங்களின் மத்தியில் புழுதி பறக்க ஆடிக் கார் வந்து நின்றது…
அதிலிருந்து இறங்கி… இல்லை.. அதற்குக் கூட நேரமில்லாமல் ஓடினான் ஒருவன்… ஆறடி ஆண்மகன், மார்பளவு சட்டையின் பட்டன் போடாததால், அவன் உடற்கட்டும், முறுக்கேறிய புஜங்களும் அவனின் தேகத்தின் வலிமையை சொல்லியது…
வேகமாக ஓடியவன், எரிந்து கொண்டிருந்த வீட்டின் கதவினை தன் வலிமை கொண்டு ஓங்கி மிதிக்க… கதவோ "டமார்" என்ற சத்தத்துடன் பின்னோக்கி சாய்ந்தது…
அந்த கதவின் மேலே ஒரு காலை தூக்கி வைத்தவன்.. கண்ணிமைக்கும் நொடியில் உள்ளே நுழைந்தான்… ஊர்மக்களே வாயைப் பிளந்து அவன் செய்கையையும், எதிரில் அனல் கக்கும் பார்வையில் கண்கள் சிவக்க நின்றிருந்தவனையும் தான் பார்த்தனர்…
வேகமாக உள்ளே நுழைந்தவனின் இதழ்களோ ஓயாமல், "தாச்சு… தாச்சு" என ஒலித்துக் கொண்டே உள்ளே சென்றிட… எரியும் நெருப்பில் பகையின் உச்சத்தில்… தன்னை தானே நெருப்புக்கு இரையாக்கி கொண்டிருந்தாள்… தாச்சாயினி…
தாச்சு என அழைத்தவன்.. ஓடிச்சென்று அவளை அணைத்தான்… அவளின் வலது கையை பிடித்தவாறே, அங்கு இன்னும் எரியாத போர்வையை கொண்டு அவளுக்கு அணைவாக போர்த்தியவன்… அவளை நெஞ்சாங்கூட்டில் பாதுகாத்தவாறே வெளியே அழைத்து வர, ஊர்மக்களோ ஆளாளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தனர்…
எரியும் வேள்வித்தீயில் வெளிவந்த திரௌபதியை போல், இவளின் பகையும், எதிரில் நின்றிருப்பவனை சுடர்விட்டு எரிக்கும்…
எதிரில் நின்றிருந்தவனை எரிக்கும் பார்வையில் முறைக்க… அவனோ அசால்ட்டாக அவளை பார்த்தான்… இதழில் ஒரு சுழிப்பு, கண்களில் ஒரு திமிர், புருவத்தை ஒற்றை பக்கம் தூக்கி நிறுத்திட.. அவர்கள் இருவரின் பார்வையையும் உணர்ந்த அனங்கன்… தாச்சாவின் இடது கரம் பிடித்து இரண்டடி வைத்திருக்க மாட்டான்…
அதற்கு மேல் அவனால் நடப்பதற்கு ஓர் அடி எடுத்து வைக்க முடியவில்லை… ஏன் என் யோசனையுடன் பக்கவாட்டில் திரும்பி பார்க்க… அங்கு தாச்சாயினியின் இதழ்களை சிறை பிடித்திருந்தான் அவன்…
அவளின் கரம் பிடித்தவன் ஒருவன்… அவளை இதழ்களால் சிறைப்பிடித்தவன் ஒருவன்… இதழுக்கும், கரத்துக்குமிடையில் தாச்சாயினியின் முடிவு தான் என்ன??
Last edited: