வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சொல்லாத காதலைச் சொல்லவா? - டீசர்

அன்று விடுமுறை நாளாதலால் வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மிருதுளா.

ஹாலில் ஒரு ஸ்டூலில் ஏறி நின்று ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தவள் கண்களில் பட்டான் வருண்.

ஒரு வேலையாக வெளியே கிளம்பியவனோ தன் வேக நடையில் வர, கணவனைக் கண்டு எப்போதும் போல அவள் விழிகள் அனைத்தும் மறந்து ரசித்தன.

அவன் கிட்டே வர வர சட்டென நிற்பதில் கவனம் இன்றி தடுமாறியவள் கீழே விழப் பார்க்க, நொடியில் அதை கவனித்தவன் மிரு கீழே விழும் முன் வேகமாக அவளை நெருங்கி கைகளில் அள்ளியிருந்தான்.

விழப் போகிறோம் என்ற பயத்தில் கண்களை இறுகி மூடிக் கொண்டவளோ, அவளவன் இறுகிய பிடியில் கண்களை மெல்ல திறக்க, வருணோ அவளை கண்டிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

'அச்சோ... வாத்தி முறைக்க ஆரம்பிச்சுட்டாரு.' என அவள் மனம் உள்ளே கேலியாக சொல்ல,

"ஸ்டூல்ல நிக்குறல்ல.
கொஞ்சம் கூட கவனம் இல்லாம எப்படி தடுமாறி கீழ விழற நீ?
வேலை செய்யும் போது அப்படி என்ன அலட்சியம்?" என அவன் திட்ட ஆரம்பித்தான்.

நிலைமை புரியாமல், 'உங்கள பாத்துதான் தடுமாறிட்டேன். வழக்கம் போல.' என்று அவள் மனம் காதல் வசனம் பேச, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

பதில் பேசாமல் அமுக்கணியாய் நிற்பவளைக் கண்டு அவனுக்கு இன்னும் கோபம் வர, அவளை இறக்கி விட்டவன் திட்டல் அதிகம் ஆகியது.

====


சொல்லாத காதலைச் சொல்லவா?
எபி 1 to 5 😍:


5 epis poyiruku. Padikadha yarum irundhaa try panni paarunga 💞

Really sry everyone .😔

Regular epi post pannala. Sila pala naal ah indha pakame varala.

Some reasons naala amaithiya utkandhu eludha time kidaikala.

Ini weekly 2 or 3 epi oda vara pola try panren ❤

Enna thedi ketadhuku romba thanks 😍😍
And sry too. 😔💞

Pinnadi vara scene la irundhu kutti tee potruken 😍

Epdi iruku. Feedback sollunga. 😍

Episode oda sekrm varen makkale 🥰💞

Again sry. 🤧

See u soon 💞

With love,
Asthiram 56
 
"ஏன் நான் டைம் தாண்டி தூங்கினா எழுப்பிவிடுன்னு சொல்லியும் எழுப்பிவிட மாட்டுற மிரு?" என வருண் கொஞ்சமே கோபக் குரலில் கேட்க, அவளோ கள்ள விழிவிழித்தாள்.

நேரம் காலை எட்டை நெருங்கியிருக்க, இன்று வெளியே ஒரு வேலையாக கிளம்ப வேண்டி இருக்கவும், அதனாலே இரவு தூங்கும்முன், 'மார்னிங் ஒருவேளை டைமுக்கு நான் எழுந்துக்கலன்னா எழுப்பிவிடு.' என சொல்லியும் எழுப்பாது போனாளே என கொஞ்சம் கடுப்பாகி அவன் கேட்க, அவளின் அந்த திருட்டு முழியில் என்னவோ விஷயம் என புரிந்துகொண்டவன்,

"சொல்லு ஒழுங்கா..." என கட்டிலிற்க்கு அருகே நின்றிருந்தவளை அவன் கைப்பிடித்து இழுக்க, அதை எதிர்பாராது தடுமாறியபடி அவனருகே அமர்ந்தவள்,

"அது நீங்க டயர்டா தூங்கிட்டு..." என ஆரம்பிக்க,

"உண்மைய மட்டும் சொல்லு." என முறைப்பாக சொல்லியனிடம்,

"சொல்லியே ஆகணுமா?" என கேட்டவள் திருதிருவென விழிக்கவும்,

"ம்ம்..." என்றான் அவளின் முகம் காட்டும் பாவனையில் என்ன விஷயம் என அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்.

"அது..." என இழுத்தவளுக்கு அவன் தூங்கிக்கொண்டிருக்கும் சமத்தான தோற்றம் நினைவிற்கு வர,

"நீங்க தூங்கிட்டு இருக்கும்போது குட்டி பையன் போல பார்க்க கியூட் ஆஹ் சமத்தா இருப்பீங்களா... அதான் எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம உங்கள சைட்..." என அந்த நினைப்பின் தாக்கத்திலேயே மொழிய ஆரம்பித்தவள், உண்மையை உளறிவிட்டோம் என புரிந்து கையால் வாயை மூடிக்கொள்ள, ஒருநொடி அவளை இமைக்காது பார்த்தவன் வந்த சிரிப்பை கட்டுப்படுத்தாது சத்தமாக சிரித்துவிட்டான்.

அவன் கோபம் போன இடம் தெரியவில்லை. உண்மையில் இந்த பதிலை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

மனைவி தன்னை ரசிக்கிறாள் என்ற விடயம் அவனுக்கு கேட்க இனிக்கவே செய்தது. திருமணம் முடிந்து மாதங்களாகியும், இதுவரை ஒருமுறை கூட அவள் தன்னை எழுப்பவில்லை என்பது நினைவிற்கு வர, அவள் சொல்லியதைக் கேட்டதில் குட்டி வெட்கம் கூட வந்தது.

»»»»
டீ எப்படி இருக்கு drs...😍

இன்னைக்கு எபி இல்ல அதான் ஒரு டீ ஆத்திருக்கேன்...😁
நாளைக்கு எபியோட வரேன்... 😍

கதையின் போக்கு எப்படி இருக்குன்னு டவுட்டாவே இருந்துச்சு. அதான் முதல்ல இருந்து ஸ்டோரிய படிச்சு பாத்தேன். ஓகேதான்... 😍

நீங்களும் கதை எப்படி போகுதுன்னு டெல்லுங்க ப்ளீஸ்... ✨

கதை கம்ப்ளீட் ஆக போகுது... 😍

எனக்கு ஒரு பதட்டமாவே இருக்கு...🤧
அதான் கேட்டேன் ப்பா...😊

தேங்க் யூ... 😍
 
Top