வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

டீசர்

Status
Not open for further replies.
#பிரம்மஸ்திரம்_2024


#அஸ்திரம்_01


#என்_உள்ளம்_யான்_நீயே


ஹாய் ஹாய் மக்களே... இதோ அஸ்திரம் ஒன்று என் உள்ளம் யான் நீயே நானும் வந்துவிட்டேன்.


ஒரு குட்டி டீசரோடு நாமளும் ஆரம்பிக்கலாமா?


வாங்க வாங்க டீசர்குள்ள போகலாம்.


வெள்ளிக்கிழமையில் இருந்து அத்தியாயம் பதிவு செய்யப்படும்.


டீசர்- 1


"இப்போ என்னடி உன் பிரச்சனை. ஒரு மனுஷனை நிம்மதியா படுக்க விடுறீயா?" என்று கேட்டவனுக்கு உண்மையாவே கடுப்பாக தான் இருந்தது.


அவளோ "அதே தான் நானும் கேட்கிறேன். உனக்கு என்னடா பிரச்சனை என்னை தூங்க கூட விட மாட்டியா? சும்மா சும்மா வந்து காலை மேல தூக்கி போட்டுகிட்டே இருக்க. கையை என் வயத்துல போடுற" என்று கத்தியவனின் வாயை கப்பென்று பொற்றியவன்,


"ஏய் எதுக்குடி இப்படி கத்துற. யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க" என்றவனுக்கு சற்று சங்கடமாக இருக்க,


"ம்... வெட்கம் மானமே இல்லாமல் என்னை தேடி வந்து நிக்கிறனு நினைப்பாங்க" என்று சொல்ல,


அதை கேட்டவனோ "அது என்னவோ உண்மை தான்டி. நீ என்ன தான் விரட்டி விரட்டி விட்டாலும் உன்னையே தேடி வந்துட்டு இருக்கேன்" என்றவனுக்கு வெட்கம் வேற வந்து தொலைய, அதை பார்த்து நெற்றியில் அடித்துக் கொண்டவள்,


"ஒழுங்கா நல்ல விதமா சொல்லும் போதே நடையை கட்டிடு. இல்லையினு வை நான் மனுஷியா இருக்க மாட்டேன்" என்றாள்.


அவனோ "இப்போ இந்த டைம்ல நீ மனுஷியா இருக்க தேவையில்லை. எனக்கு..." என்று சொல்லி முடிக்காமல் அவளின் கொழுப்பு நிறைந்த இடையை பார்த்து எச்சிலை கூட்டி முழ்கினான்.


அவளோ சட்டென்று தன் புடவையை இழுத்து விட்டு எதிரே நிற்பவனை முறைத்து பார்க்க, அவனோ வெட்கமே இல்லாமல் பல்லை காட்டிக் கொண்டு, "எனக்கு டெடி பியரா இருடி. உன்னை கட்டிபிச்சிட்டே தூங்கி பழகிட்டேன். சரியா தூங்கியே ஒரு வாரம் ஆகுது" என ஏக்கத்துடன் கேட்டவனை கடும் சினத்தோடு பார்த்து,


"நீ கட்டிபிடிச்சி தூங்க நான் தான் டெடி பியரா கிடைச்சினா. அதுக்கு வேற ஆளை பாரு. இப்போ இடத்தை காலி பண்ணு" என்று அவனை வாசலுக்கு வெளியே தள்ளி தாழ்ப் போட்டாள் அந்த பிடிவாதகாரி.


பின் படுக்கையில் உறங்க போனவளின் செவியில் "டக்... டக்.." என்று கதவு தட்டும் சத்தம் மீண்டும் கேட்க, கடுப்பானவள் யானையில் உறங்கிக் கொண்டு இருந்த குழந்தையை பார்த்து விட்டு கோபமாக எழுந்து சென்று கதவை திறந்தாள்.


ஆனால் அவனோ எதிர் வீட்டின் கதவை தட்டிக் கொண்டு இருக்க, புருவம் சுருக்கி அவனை பார்த்து "ஏய் இப்போ எதுக்குடா அந்தம்மா வீட்டு கதவை போட்டு உடைச்சிட்டு இருக்க" என்று அவள் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவன் தட்டிய வீட்டின் கதவுக்கு சொந்தமானவர்கள் கதவை திறந்துக் கொண்டு வெளியே வர,


அவனோ "ம்... நீ தானே கட்டிபிடிச்சி தூங்க வேற ஆளை பார்க்க சொன்ன. உன்னை போலவே நல்லா கொழுக்கு முழுக்குனு இந்தய்யாவோட வீட்டாம்மா தான் இருக்கும். அதான்..." என்று மேலும் பேச போனவனை தீயாய் முறைத்து பார்த்தாள்.


அதை கேட்ட எதிர் வீட்டுக்காரனோ தன் பொண்டாட்டியை அதட்டி உள்ளே அனுப்பி விட்டு "டேய் வர வர உன் தொல்லை தாங்க முடில. ஹவுஸ் ஓனர் கிட்ட சொல்லி சீக்கிரம் உங்களை காலி பண்ண வைக்கிறேன்" என்று திட்டி விட்டு கதவை அடித்து சாத்தினார்.


அவளோ அவனை இன்னும் அனல் கக்கும் பார்வையோடு பார்க்க,


அவனோ சாதாரணமாக "ஏன் பொம்பளைங்க நீங்க மட்டும் தான் எப்போ பார்த்தாலும் ஆம்பளைங்க நாங்க ஏதாவது செய்யலனா உடன் பக்கத்து வீட்டு காரன பாருங்க. எதிர் வீட்டுக்காரனை பாருங்க. அவங்க கிட்டையா போய் கேட்க முடியும் சொல்லுவீங்க. நாங்களும் கேட்கலாம்ல. அதான் கேட்டேன். சரி இதை விடு இப்போ நீ எனக்கு கட்டிபிடிச்சி தூங்க டெடி பியரா இருப்பீயா மாட்டியாடி" என்று கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.


யாரைவது டேக் பண்ணனும்னா கமெண்ட்ல சொல்லுங்க.
 
Status
Not open for further replies.
Top