வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

டீஸர் -1

Status
Not open for further replies.
வணக்கம் என் பாசமுள்ள வாசகப் பெருமக்களே,

நான் தான் அஸ்திரம் -10.

உங்களுக்காக இந்த கதையை நான் எழுதுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது..

ஒரே ஒரு விஷயம் உங்களோடு நான் பகிர்ந்துக்கணும்..

நிஜத்திலே இந்தக் கதை தமிழ்நாட்டிலே ஒரு இடத்தில நடந்த கதை தான்..

நிறைய பேர் கற்பனை உலகத்தை வைத்து கதை எழுதுவாங்க. ஆனால் நான் இந்த கதையில உண்மையையும் கற்பனையும் கலந்தே எழுதுகிறேன்..

ஒவ்வொரு ஊனமாய் இருக்கும் பெண்ணுங்களை தான் இந்த சமுதாயமும் சமூகமும் நிறைய குற்றம் சொல்லுது..

இதுவே ஆண்கள் ஊனமாய் இருந்தால் ஒரு போதும் அவர்களை குற்றம் கூறாது இந்த சமூகம்..

கேட்டால் இது ஒரு ஆணதிக்கம் சமூகமாம்..



நிஜத்தில் படிப்பவர்களுக்கு கவலையாகவும் இருக்கும். கண்ணீராகவும் இருக்கும் அழுத்தமாகவும் இருக்கும். அதற்காக நான் யார் என்று முகம் தெரியாத எழுத்தாளரான என்னை நீங்கள் தாராளமாக திட்டலாம். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் கதையின் நாயகியை யாரும் திட்டக்கூடாது 🤣🤣.


மிகவும் ஏழ்மை உள்ள குடும்பத்தின் பெண் தான் நம் கதையின் நாயகி மிருதுளா..

கொடுமைக்காரன் குடிகார தந்தையும், யாருக்கும் அடங்காத அடாவடியாக இருக்கும் தங்கையும், வாழ்க்கை முழுக்க கவலையில் மூழ்கிக் கிடக்கும் ஒரு தாயையும், குடும்பத்திற்கேற்ப்ப தன் ஆசைகளைத் துறத்து சிறிய வயதில் கல்லூரி படித்துக் கொண்டே வேலை செய்யும் ஒரு தம்பியும் தான் மிருதுளாவின் குடும்பத்தில் உள்ளவர்கள்..

மிகவும் ஏழ்மையான குடும்பம்.. மூன்று பக்கம் சுவரில் மட்டும் செங்கல்லை அடுக்கி அதற்கு சிமெண்ட்க்கு பதிலாக சுண்ணாம்பு அடித்து பனைஓலையால் வேயப்பட்ட சிறிய குடிசை அது..

குடிசையில் மூன்று அறை மட்டுமே இருக்கும்.

குடிசை சுற்றி சிறிய சிறிய மலர் செடிகள், அவரை கொடி கொத்தவரைக்காய் கொடி, வெண்டைக்காய் கத்திரிக்காய், மிளகாய், தக்காளி போன்று காய் செடிகளும், பலாமரமும், அத்திப்பழம் மரமும், வாழை மரமும் அழகாக காயோடு நிமிர்ந்து நிற்கிறது..



மிருதுளாவின் தந்தை மோகன் ஓயாத குடிகாரர்.. தினக்கூலியாக வேலைக்கு சென்றாலும் அதில் வரும் பணத்தை முக்கால்வாசியை குடித்துவிட்டு தினமும் 200 ரூபாய் மட்டுமே வீட்டிற்கு கொடுப்பார்..

அவரின் மனைவி செண்பகவல்லி. தினமும் கண்ணீரோடு தான் அவரின் வாழ்க்கையே. அவரின் வாழ்க்கை நினைத்து கண்ணீர் வடிப்பதை விட அவரின் மூத்த மகளான மிருதுவை நினைத்து கண்ணீர் வடித்த நாட்கள் தான் எண்ண முடியாதது.


சிறிய வயதில் போலியோவால் தாக்கப்பட்ட மிருதுளா தற்போது இருபத்தி மூன்று வயது பருவ மங்கையாய் இருசக்கர நாற்காலியில் அமர்ந்தே அவளின் வாழ்க்கை முழுவதும் கழித்து வருகிறாள்..

பிறக்கும்போது நன்றாக தான் பிறந்தாள் மிருதுளா..

குழந்தை வளர வளர குழந்தைக்கான போலியோ தடுப்பூசி போடாமல் விட்டதன் விளைவு,நரம்பு மண்டலத்தின் கடுமையான வைரஸ் தொற்று நோய் பரவ, இரண்டு வயதிலேயே போலியோ நோய் அவளை தொற்றிகொண்டது..

சிறிய வயதிலிருந்து அவளை வளர்க்க முடியாது எங்கேயாவது அனாதை ஆசிரமத்தில் விட்டு விடலாம் என்று அவளின் தந்தை கூறிய போது அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை செண்பகவல்லியால்.
திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்து தவமாய் தவமிருந்து பெற்று பிள்ளை தான் மிருது.



கணவர் கூறிய வார்த்தையை கேட்டு தாயுள்ளம் பதறியது, " முடியாது என்னால் முடியாது. கடவுள் கொடுத்த தவத்தை அனாதை ஆசிரமத்தில் விடுவதற்கும் , அதைக் குப்பைத் தொட்டியில் வீசுவதற்கும் சமம். நான் எப்படி கஷ்டப்பட்டாவது இந்த குழந்தையை வளர்த்து படிக்க வைத்து பெரிய ஆளாக்குவேன்" அன்று மனைவியின் வார்த்தை கேட்டு கணவரால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை.

குழந்தையை வைத்துகொண்டு மனைவி படும் கஷ்டத்தை கண்ணால் பார்த்தாலும் உதவி ஏதும் செய்யாமல் முகம் சுழித்துக் கொண்டு சென்று விடுவார்.

வெளியில் வயல் வேலைக்கு செல்லும்போது மகளை குளிப்பாட்டி உடை உடுத்தி தலைவாரி முகத்தில் பவுடர் அடித்து அலங்காரம் செய்து இடுப்பில் அமர வைத்து கொண்டு செல்வார் தாயானவர்.வீட்டில் எங்கேயும் தனியாக விடமாட்டார் மிருதுளாவை.

மிருது வளர வளர அவளுக்கு மூன்று வயதாகி இருக்கும் போது தான், செண்பகவல்லி மீண்டும் கருவுற்றார்.

தாயின் வயிற்றை ஆசையாக தினமும் தடவிப் பார்த்தே அவளின் நாட்கள் மிகவும் சந்தோஷமாய் சென்றது..

அவளின் தங்கை இனியா தாயின் கருவறை விட்டு உலகத்திற்கு எட்டிப் பார்க்கும் வரை தான் மிருதுவின் இறுதி சந்தோஷமான நாட்கள் ..

குடிகார தந்தையால் மிருதுவுக்கு எந்த கஷ்டமும் இல்லை. குடிகாரனாக இருந்தாலும் குடும்பத்தின் மேலுள்ள அக்கறையை அவருக்கு அதிகம். ஆனால் அவருக்கு மிருதுவை கண்டாலே பிடிக்காது. இரண்டாவது பெண்ணாக பிறந்த இனியாவை தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்.
எந்தக் குறையுமின்றி அழகாய் சிவப்பாய் பிறந்திருக்கிறாள் இனியா.

காலங்கள் செல்ல செல்ல இடையில் ஒரு மகனவனை பெற்றெடுத்தார் செண்பகவல்லி..

குடும்பத்தின் வாரிசாக சிவா பிறந்ததும் கண்டு கொள்ளவில்லை மோகன் .
மகனை விட மகள்
இனியாவிற்கே அதிக சலுகை இருந்தது அந்த வீட்டில்.. காரணம் இரண்டாவது மகள் உலக அழகியாம்.
உலகில் இல்லாத பேரழகியாம்..

அவள் என்ன பொருள் கேட்டாலும் உடனே வாங்கி வந்து கொடுப்பார் மோகன்.

அன்பும் பாசமும் அளவுக்கு அதிகமாகக் கொடுத்து வளர்த்த மகள் தான் தன்னையே கொலை செய்ய துணிய போகிறாள் என அப்போதே தந்தையானவர் அறிந்திருந்தால் மகளவளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்க மாட்டாரோ என்னவோ…


—--------


20 வருடங்களுக்குப் பிறகு..

அந்தத் திருமணம் மண்டபமே இரவில் மின்சார அலங்கார விளக்குகளால் அழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அந்த மின்சார அலங்கார விளக்குகளோடு போட்டி போட்டு நின்று கொண்டிருந்தாள் இனியா..

"நீயெல்லாம் என்ன அழகு உன்னை விட நான் எப்படி நல்லா அழகா ஜொலிக்கிறேன் பாரு. உன்னை விட என்னோட முகம் தான் ரொம்ப பிரைட்டா இருக்கு பாரு.நீ எல்லாம் சுத்த டூப்ளிகேட். என்னை பாரு நான் மனுஷ ஜென்மமா ஒரிஜினலா இருக்கேன்" என அவள் போட்டிருந்த தாவணி பாவாடையை பிடித்து சுற்றி சுற்றி ஆடிக்கொண்டிருந்தவளின் மண்டையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தான் சிவா..IMG-20230129-WA0009.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top