வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

டீஸர் -2

Status
Not open for further replies.
ஊனமென்பது குற்றமா?

டீஸர் ரெண்டு.


விடியற்காலை 4 மணியளவில் உறக்கத்தில் இருந்தவள் திடீர்னு கண் விழித்தாள்.

மார்கழி குளிர்க் காலத்தில் கூட மேலே மின்விசிறி டக் டக் என்ன சத்தமாய் சுற்றிக்கொண்டு இருந்தாலும் பாவையவளின் முகத்தில் என்னவோ முத்து முத்தாக வியர்வையாய் இருந்தது..

அருகில் சற்று தள்ளி நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாயை பார்த்தவள்,


சத்தமில்லாமல் எழுந்து அருகில் இருந்த இருசக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கரத்தால் இரண்டு சக்கரத்தை சுற்றி கொண்டே வீட்டின் வெளியே வந்தவளின் முகத்தில் குளிர் தென்றலின் சாரல் அடித்தது.

நடந்து சிறிது தொலைவு செல்ல வேண்டுமென அடம் பிடித்த மனதை அடங்கி கொண்டாள்..
வீட்டின் வெளியே திண்ணையின் அருகில் வந்தவள்,கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு சோகத்தின் உருவமாய் நேற்று இரவு நடந்ததை நினைத்து பார்த்தவளின் விழியோரத்தில் குற்றால அருவியாய் கண்ணீர் சிந்தியது.இன்று நடக்கப் போகும் பெண் பார்க்கும் படலமாவது நல்லபடியாக முடிய வேண்டும் தங்கையின் வாய் சொல் எதுவும் தடையாக இருக்கக் கூடாது.


எத்தனையோ வரன்கள் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்கள். வந்த வரன்கள் அனைவரும் கேட்கும் கேள்வியின் பட்டியலே அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.


"முகமோ கருப்பு, உடலோ ஊனம் அழகு ஒன்றும் ஏதும் பெரியதாக இல்லை. படித்தால் மட்டும் போதுமா,வேலைக்கு செல்ல வேண்டாமா? இப்படி ஊனமாக இருந்தால் எப்படி நாங்கள் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது, வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண் தான் எங்களுக்கு வேண்டும். இல்லை இந்தப் பெண்ணால் தனியாக நின்று தான் சமைக்க முடியுமா? மனைவி என்பவள் கணவனுக்கு அத்தனையுமாய் இருப்பவள். இவளுக்கு தான் அந்த தகுதியாவது இருக்கிறதா?

ஆனால் இந்தப் பெண்ணால் ஒன்னும் முடியாதே. இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதே வீண், எனவும் மேலும்,

பொண்ணு ஊனமா இருக்கு ஒரு 50 பவுன் ஏத்தி போட்டீங்கன்னா பொண்ணுக்கு கல்யாணம் தாராளமா நடக்கும் நாங்களும் பொண்ண நல்லா பாத்துப்போம் "என பெண் பார்க்கும் போது வந்த வரன்கள் அனைவரும் அவளை குத்திக்காட்டுயும், இடையில் வரதட்சணையை அதிகப்படுத்தி கேட்டுச்செல்லவும், ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தட்டி கழியும் போதும் கூட ஆயந்தியவளின் உள்ளத்தில் வராத வலிகள்,

தங்கையின் வார்த்தைகளால் தான் மிகவும் வலியே உருவாக்கியது.


" இந்த சனியன் ஏன் தான் எனக்கு முன்னாடி பொறந்து தொலைஞ்சதோ. பொறந்த உடனே செத்து இருந்தா கூட நிம்மதியா இருந்து இருப்பேன்.எனக்கு வேற வயசு 25 ஆகுது.. முன்னாடி எல்லாம் எவ்வளவு அழகா இருப்பேன் தெரியுமா. எனக்கு வயசு ஏறவும் அழகும் குறைஞ்சுகிட்டே போகுது..

இதுக்கு வயசு 29 ஆகியும் இன்னும் எவனும் இத கல்யாணம் பண்ணிக்க வரல. சரி இதுதான் ஊனமா இருக்குது, நல்லா இருக்குற நமக்காவது மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க ன்னு பார்த்தா அதுவும் ஒன்னும் நடக்காது போல. பெரியவ வீட்ல இருக்கும்போது சின்னவளுக்கு கல்யாணம் நடக்க கூடாதுன்னு அந்த காலத்துல சொல்ற மாதிரி இந்தக் காலத்துல சட்டம் ஒன்னு இருக்கா என்ன?" என மிருதுவின் செவிகளுக்கு விழும்படி அவள் கத்திக்கொண்டே போக,தாயின் கரங்களோ இனியாவின் கன்னத்தை பதம் பார்த்தது.தீயாய் எரியும் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பெற்றவளை முறைத்துப் பார்த்தாள் இனியா..


" ஏய் வாய் இருக்குன்னு உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பேசுவியா? ஆமா டி உலகத்துல இல்லாத சட்டம் தான், இப்போ சொல்றேன் கேட்டுக்க இந்த வீட்டிலே நான் என்ன சொல்றேனோ அதன்படி தான் நீ கேட்கணும் இதுதான் நான் வைக்கிற சட்டம். வீட்டில மூத்தவ இருக்கும்போது அடுத்தவளுக்கு ஒருபோதும் கல்யாணம் நடக்காது. இது நீ மூத்தவளுக்கு செஞ்ச பாவத்தின் தண்டனையாய் ஏத்துக்கிட்டு திருத்துற வழியை பாரு.


நீ அவளுக்கு தங்கச்சியா பிறந்தது தான் அவ செஞ்ச பெரிய பாவம். நீ அவளை எவ்வளவு கொடுமையா காயப்படுத்திப் பேசி இருப்ப. ஏன் நைட் தூங்கும் போது பூச்சி பிடிச்சி அவ தலைக்காணி உள்ள போடறதுலாம், வார்த்தையாலே அவளை நொண்டி நொண்டி ன்னு சொல்லி அவளை நோக்கடிகறது எல்லாம் தெரிஞ்சும், அவ ஒருவார்த்தை ஒரே ஒரு வார்த்தை உன்னை எதிர்த்து பேசி இருப்பாளா? உன்னை பொறுத்து போயிட்டு இருக்கா ன்னு நினைக்காத, ஒழுங்கா போயிட்டு அக்காகிட்ட மன்னிப்பு கேளு. மன்னிப்பு கேட்டா மட்டும் தான் உனக்கு இன்னைக்கு நைட்டு சோறு. இல்லன்னா பட்டினியா கட "


என ஆவேசமாய் உரைத்து விட்டு சென்ற பெற்றவளை நன்றாக முறைத்துப் பார்க்க மட்டும் தான் முடிந்தது அவளால்..


அருகிலிருக்கும் அறையில் உறங்குவது போல் படுத்துக்கொண்டு இருந்த மிருதுவை கண்டு அவளுக்கோ கோபம் பற்றி கொண்டு வந்தது..


" சைக் இந்த நேரம் பார்த்து இந்த அப்பன் எங்கே போனாரோ, இவ கிட்ட நான் மன்னிப்பு கேட்கணுமா? மன்னிப்பு கேட்டா தான் சோறு போடுவாங்களாம். பாப்போம் என் அப்பா வரட்டும் இந்த செண்பகத்தை நாலு தட்டி அடங்கி வைக்க சொல்லணும்..

இவளால நான் இங்கே அடிவாங்கணுமா? ஏய் என்னையே அடி வாங்க வச்சிட்டல்ல. நீ எப்படி இன்னைக்கு நைட் நல்லா தூங்குற ன்னு நானும் பார்க்குறேன்" என மனதில் முழுவதும் வக்கிர புத்தியை வைத்து கொண்டு, உடன் பிறந்தவளை பழி வாங்க துடித்தது அவளின் பாழப்போனா வில்லங்கமான புத்தி..
அந்தி மாலைப் பொழுதில் வேலையிலிருந்து தந்தை வீட்டுக்கு வந்ததும் ஓடி சென்று தாய் தன்னை அடித்ததை இன்னும் எக்ஸ்ட்ராவாக நிறைய வார்த்தைகளை போட்டு தாயை கோர்த்து விட்டாள் சின்னவள்..


" அப்பா இந்த அம்மா டெய்லி நீ இல்லாத நேரம் பார்த்து என்னை அடிச்சியே கொடுமைப்படுத்தி எடுக்குது. அது செய் இது செய், இந்த நொண்டி துணியை போய் என்னை துவைக்க சொல்லுது. எனக்கு ஒரு சந்தேகம்ப்பா நிஜமாவே என் அம்மா இவங்க தானா? " என்றதும் அதிர்ந்தார் தந்தையானவர்..


இதையெல்லாம் செவியில் கேட்டு கொண்டு உள்ளே சமையலறையில் இருந்த செண்பகத்திற்கு அவளின் கேள்வியில் கோவம் வந்தது..


கையில் தோசை கரண்டியோடு வந்தவர், அவளின் முதுகில் சுளீரென ஒரு அடியை வைத்து,


" பொய்க்கு மேல பொய்யா பேசற, சோத்துல விஷம் வச்சிடுவேன். உன்னை பெத்த உடனே ஒரு குப்பை தொட்டியில போடாதது தான் நான் என் வாழ்க்கையில பண்ண பெரிய தப்பு " என கூறும் மனைவியை விழிகளால் முறைத்தவர்,


" இந்தா டி புள்ள கிட்ட என்ன பேச்சி பேசணும் ன்னு தெரியாதா உனக்கு, பெத்த புள்ளகிட்ட இப்படி பேச உனக்கு எப்படி மனசு வருது " என்றவரின் கேள்விக்கு மனைவி சொன்ன பதிலை கேட்டு வாயை மூடிக்கொண்டார்.


" இதே தானே அன்னைக்கு ஒரு நாள் நான் தவமா தவமிருந்து பெத்த கண்மணியை தூக்கி அனாதையா விட சொன்னிங்க, அது மறந்து போச்சா உங்களுக்கு. இதோ பாருங்க நானும் பழச பேச கூடாதுன்னு இருக்கேன். இந்த எடுப்பட்ட சிறுக்கினால தினமும் சண்டை தான் இங்க. "தாய் தன்னை தான் எடுப்பட்ட சிறுக்கி என்று கூறுகிறார் என அருகில் அமர்ந்திருந்த

இனியாவோ உணர்ந்து கொண்டு வராத கண்ணீரை வரவைத்தே ஆக வேண்டும், அப்போ தான் தந்தை தாயை அடிப்பார் என ஒரு பிளான் போட்டு வேகமாக கூவி அழ ஆரம்பித்து விட்டாள்..
IMG-20230129-WA0009.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top