Vizhi Saravanan
Moderator
பள்ளியில் மதிய இடைவேளையில் மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். தாமரை இன்னைக்கு சாப்பாடு கொண்டுவரவில்லை. செவ்வந்தி மதியம் கொண்டு வருகிறேன் என்று சொல்லியதால் மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தாள். அவளை பார்த்த விஷ்ணு "டிச்சர் நீங்க சாப்பிடலையா? இங்க உட்கார்ந்து இருக்கிங்க" என கேட்க.
இல்ல விஷ்ணு , செவ்வந்தி சாப்பாடு கொண்டு வருவாள், நீ சாப்பிடு.
அக்கா கொண்டு வரட்டும், நீங்க வாங்க நம்ம சாப்பிடலாம். சப்பாத்தி குருமா சூப்பரா இருக்கும் டிச்சர்.
இல்ல விஷ்ணு, நீ சாப்பிடு எனக்கு வேணாம்.
ஏன் டிச்சர் எங்க சாப்பாடு சாப்பிட மாட்டிங்களா, ஒரு வாய் சாப்பிடுங்க டிச்சர் எனக்காக, அப்போதான் நான் சாப்பிடுவேன்.
சரி குடு..
விஷ்ணு தாமரைக்கு சப்பாத்தி பிச்சு ஊட்டி விட்டவள். அவளும் சாப்பிட அதன் சுவையில் கண்கள் விரிந்தது.
விஷ்ணு சப்பாத்தி சூப்பரா இருக்கு . உங்க அம்மா சூப்பரா சமைப்பாங்களா விஷ்ணு,
டிச்சர் இது அம்மா பண்ணல.எங்க மாமா பண்ணுணது. எப்பவுமே மாமா தான் சாப்பாடு பண்ணுவாங்க.
எந்த மாமாடா.?
எங்க வெற்றி மாமா தான் பண்ணுவாங்க. நானு ,எங்க பரணி மாமா ,முரளி சித்தப்பா நல்லா சாப்பிடுவோம்.
உங்க அம்மா எங்க விஷ்ணு..?
சாமிக்கிட்ட போய்ட்டாங்க டிச்சர். அப்பா , அம்மா, பாட்டி மூணு பேரும் சாமிகிட்ட போய்ட்டாங்க. தாத்தா நான் 3 கிளாஸ் படிக்கும் போது சாமிக்கிட்ட போனாங்க. இப்போ நான் வெற்றி மாமா, பரணி மாமா தான் இருக்கோம் டிச்சர்.
இது உனக்கு யாரு சொன்னா விஷ்ணு.?
பரணி மாமா கிட்ட அம்மா, அப்பா வேணும் அழுதேனா அப்போதான் பரணி மாமா இது எல்லாம் சொன்னாங்க. அப்புறம் நம்ம இரண்டு பேருக்கும் அப்பா ,அம்மா எல்லாம் வெற்றி மாமா தான் சொன்னாங்க.
இதை கேட்டதும் தாமரை கண்களில் இருந்து கண்ணிர் அவள் அறியாமலே வந்தது. விஷ்ணு பார்க்கும் முன் துடைத்து கொண்டாள்.
சரி நீ சாப்பிடு விஷ்ணு.
டிச்சர். அன்னைக்கு உடம்பு சரியில்லாதபோ எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டிங்கள்ளா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்து .இப்போ எனக்கு ஊட்டி விடுறிங்களா?
தாமரை சிரிச்சிட்டே குடு நான் ஊட்டி விடுறேன். இனிமே டெய்லி நான் வந்து ஊட்டிவிடுறேன் சரியா
ம்ம் சரி டிச்சர் என்றான் சந்தோஷமாக
கொஞ்ச நேரத்தில் செவ்வந்தியும் சாப்பாடு கொண்டு வர மூன்று பேரும் ஒன்றாக சாப்பிட்டனர்.
வெற்றியும் முரளியும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கல்யாண தரகர் வந்தார்.
வெற்றி தம்பி நல்லா இருக்கிங்களா..?
நல்லா இருக்கேன் அண்ணா.
தம்பி திடிர்னு வர சொல்லிருக்கிங்களே ? என்ன விஷயம் தம்பி...?
மாடு மேய்க்க..! என்றான் முரளி
என்ன தம்பி இப்படி சொல்றிங்க.?
பின்ன என்னண்ணா .உங்களை எதுக்கு வர சொல்லுவாங்க. பொண்ணு பார்க்கதான் என்றான் முரளி.
அண்ணா நான் சொன்னேன்ல, அந்த வீட்டுல நாளைக்கு பொண்ணு பாக்க வாரோம்னு சொல்லிடுங்க.
சரி தம்பி . நான் சொல்லிடுறேன். அப்புறம் நான் கிளம்புறேன் தம்பி.
சரின்ணே . நாளைக்கு நீங்களும் அங்கே வந்துடுங்க. சாயங்காலம் ஒரு 5மணிக்கு சொல்லிடுங்கண்ணா
சரி தம்பி வாரேன்.
ம்ம்
முரளி உம்மென்று முகத்தை வைத்தபடி உட்கார்ந்து இருந்தான்.
ஏன்டா இப்படி மூஞ்ச வச்சிருக்க, யாராவது அழகா இருக்கன்னு சொன்னங்களா உன்ன.
உனக்கு ஏன்டா இந்த வேலை. நீ கல்யாணம் பண்ணுணாதான் நான் பண்ணுவேன். நீ எந்த பொண்ணு காமிச்சாலும் சரி, உனக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணுவேன்.
சரி நாளைக்கு பொண்ணு பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம். அத்தை, மாமா கிட்ட பேசிட்டேன். நாளைக்கு 5மணிக்கு உன் மாமியார் வீட்டுக்கு போகனும். பார்லர் எதுவும் போகனும்னா போடா.
ஏன் வெற்றி. நீ இப்படி இருக்கும் போது நான் எப்படி சந்தோஷமா கல்யாணம் பண்ணுவேன்னு நினைக்கிற?.
உனக்கு என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் .உன் வேலையை பாரு.
அப்போ வெற்றியின் போன் அடித்தது.
ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
உன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே......
முரளி வெற்றியை ஒரு மாதிரி பார்க்க. இதுலாம் எப்படிடா பண்றிங்க. வேணாம்னு சொல்றிங்க. சைட் கேப்ல கிடா வெட்டுறிங்க. வெற்றி சிரிச்சிட்டே நான் எப்போ மச்சான் வேணாம்னு சொன்னேன்.
அந்த போன் அட்டென் பண்ணு புது நம்பரா இருக்கு
ஹலோ யாரு...?
மாமாஆஆ..! குரல் புதியதாக இருந்தது.
மாமாவா யார் நீங்க.?
நீங்க வெற்றிதானே..?
ம்ம் ஆமா,
அப்போ சரியாத்தான் சொல்றேன். நீங்க என் மாமா தான்.
நீங்க எனக்கு யாருன்னு தெரியலை.
அதுக்குள்ள மறந்துட்டிங்களா. சரி பரவாயில்லை வந்து நியாபக படுத்திகிறேன். யு கவுண்டவுன் ஸ்டார்ட் மாமா. கம்மிங் சூன். பை மாமா
யாருடா மாப்ள..?
தெரியல மச்சான். ஆனா என்ன தெரிஞ்ச மாதிரி பேசுறாங்க. சீக்கிரம் வாரேனு சொல்றாங்க பாக்கலாம்.
வழக்கம்போல தாமரையும் விஷ்ணுவும் அவர்கள் அழைக்க வருபவர்களுக்காக காத்து இருக்க.வெற்றிதான் முதலில் வந்தான்.முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு இல்ல..
டேய் விஷ்ணு உங்க மாமா சட்டைக்கு போடுற கஞ்சியை வாயில ரெண்டு கிளாஸ் ஊத்துவாரோ..?
ஏன் டிச்சர்...?
முகத்தை உர்ருனு வச்சிருக்காருல அதான் கேட்டேன்.
அங்கே வந்த செவ்வந்தி" கொழுப்பு ரொம்ப ஆயிடுச்சி" உனக்கு என்றாள் தாமரையை பார்த்து .
வேணும்னா என்கிட்ட வர சொல்லு விஷ்ணு எப்படி சிரிக்கனும்னு சொல்லி. குடுக்குறேன்.
"ஆமா மேடம் பெரிய
சிரிப்பழகி" என்றாள் செவ்வந்தி
எனக்கென்ன நான் நல்லாதான் சிரிக்கேன் பாரு இஇஇஇஇ என்றவள், உங்க அண்ணாக்குதான் சிரிக்க தெரியல.
ஆமாமா மேடம் இப்போதான் சிரிக்கிங்க. இதுக்கு முன்னாடி உங்க மாமானை நினைச்சி சோகமாதான சுத்திட்டு இருந்திங்க
செவ்வந்தி அப்படி சொன்னதும் தாமரையின் முகம் வாடிவிட்டது. நம்ம கூட இருந்தவளே சொல்லிக்காமிக்கிறாலேனு கண்ணில் வலியோடு வராத சிரிப்பை வரவைத்து கொண்டு நான் கிளம்புறேன்னு சொல்லிட்டு நிற்க்காமல் போய்விட்டாள். வெற்றிக்கு புரிந்தது அவள் நிலமை. செவ்வந்திக்கு அப்போதான் புரிந்தது தான் விட்ட வார்த்தையின் வீரியம். அண்ணா சாரிண்ணா நான் வேணும்ணு சொல்லல விளையாட்டு வாக்குல பேசிட்டேன். என் தாமரை கஷ்டப்பட்டு போறாண்ணே .
எனக்கு புரியிது மா .நீ அவள சமாதானம் பண்ணு போம்மா..
ம்ம் சரிண்ணா
செவ்வந்தி தாமரையும் வீட்டிற்குள் செல்லவும் தெய்வானை தாமரையை துணியை மாத்திட்டு வாடா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொல்ல. செவ்வந்தி இங்க வானு கூப்பிட்டு பக்கத்துல உட்கார வைத்து பேசிட்டு இருக்காங்க. செவ்வந்தி மனமோ தாமரையை நினைத்து கஷ்டமாகியது. தாமரை கிட்ட மன்னிப்பு கூட கேட்கமுடியலைனு. தாமரையும் ப்ரேஷ்ஷாகி வந்து விட்டாள். தாமரையை அழைத்து தன் அருகே இருக்க சொன்னார் தெய்வானை.
தாமரை அம்மா மேல கோவமா இருக்கியாடா..?
ஐயோ ! ஏன் மா நான் உங்கமேல கோவமா இருக்கேன்... நீங்க எது பண்ணுணாலும் எனக்கு நல்லாதான் இருக்கும்.
உன்கிட்ட எதுவுமே கேட்காம நானே பண்ணுறேன் அதுக்காகதான்டா கேக்குறேன்.
நாங்க இந்த கல்யாணம் பேச போகலை தாமரை, நாங்க கல்யாண வீட்டுக்கு தான் போனோம். அங்கதான் உங்க அத்தை வந்து பேசுனாங்க. பையனை நாங்க அங்க போட்டோல பாத்தோம். அப்புறம் அவுங்க தான் பொண்ணு கேட்டாங்க . அவுங்களும் கூடவே வந்துட்டாங்க உன்ன பார்க்க. என் மருமகள யாருக்குதான் பிடிக்காது. பாத்ததும் பிடிச்சிட்டு அவுங்க கால் பண்ணிட்டே இருக்காங்க அதான் உங்கிட்ட ஒருவார்த்தை பேசிட்டு நிச்சயம் பண்ண வர சொல்லலாம்னு பாத்தேம் .நீ என்ன சொல்லுற தாமரை என்றார் லெட்சுமி
செவ்வந்தி வேண்டாம்னு சொல்லு கண்ண காமிக்கிறாள்.
தாமரை சிரிச்சிட்டே" எனக்கு முழு சம்மதம் அம்மா" னு சொல்லிவிட்டாள். செவ்வந்தி தான் ஒருமாதிரி ஆகிவிட்டாள்
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நாளைக்கு செவ்வந்தியை பொண்ணு பார்க்க வறாங்க.
ரொம்ப சந்தோஷம் எங்க ரெண்டு பேருக்கு ஒரே டைம்ல கல்யாணம் எனக்கு ஓகேம்மா . எனக்கு கொஞ்சம் தலைவழியா இருக்கும்மா நான் தூங்குறேன்.
"சரிம்மா. போ தூங்கு .செவ்வந்தி இங்க வா இன்னைக்கு சீக்கிரமே தூங்கு பொண்ணு வீட்டுக்காரங்க வர்றப்போ, அப்போதான் அழகா இருப்ப என் தங்கமே" என்றார் தெய்வானை.
சரி அத்தை.
சரி தெய்வானை நாங்க கிளம்புறோம். நாளைக்கு மதியம் போல செவ்வந்தியை கூப்பிட்டு வாறேன். வா செவ்வந்தி போலாம்.
செவ்வந்தி எதுவும் சொல்லாமல் அவள் தாயுடனே சென்று விட்டாள். தாமரையை சமாதானம் படுத்த முடியாத கஷ்டம் ஒருபுறம் அவள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள் என்ற கஷ்டம் மறுபுறம். அமைதியாகவே அவள் தாயுடன் சென்று விட்டாள்.
தாமரை தூங்கிவிட்டாள் .திடிரேன போன் அடிக்கவும் பார்த்தால் அவளின் ஐய்யனார் தான் போனை எடுக்கவில்லை. போனை பார்த்தபடியே தூங்கிவிட்டாள்
காலை யாருக்கும் காத்திருக்காமல் தன் வேலையே ஆரம்பித்தான் ஆதவன். வழக்கம்போல தாமரை பள்ளிக்கு கிளம்பினாள். அவள் தாயிடம் சென்று அம்மா இன்னைக்கு செவ்வந்தி வர வேண்டாம்னு சொல்லுங்க. இன்னைக்கு பொண்ணு பாக்க வாறாங்கள்ளா அதான் சொல்றேன். நான் சொன்னால் கேக்க மாட்டாள், நீங்க சொன்னாதான் கேட்பாள் சொல்லுங்கமா.
தெய்வானையோ சரிம்மா நான் பார்த்துக்குறேன். நீ பார்த்து போ என்றார்.
தாமரை கிளம்பி விட்டாள். தெய்வானை செவ்வந்தியிடம் சொல்லிவிட்டார். அவளுக்கு புரிந்தது தாமரை நம்மை விட்டு விலகுகிறாளோ என நினைத்து அழுகையாக வந்தது செவ்வந்திக்கு.
காலையில் விஷ்ணுவை விட வந்த வெற்றி தாமரையை தான் தேடினான். இல்லை என்றதும் வீட்டுக்கு சென்று விட்டான். சாயந்திரம் அதே மாதிரி பாக்கவே வரவில்லை. அவள் ஸ்கூலின் பின்னாடி வாசல் வழியில் வந்து வீட்டிற்கு சென்று விட்டாள். வெற்றியும் காத்திருந்து பின் நேரமானதும் கிளம்பிவிட்டான். அவனால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.