வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ணமலரே கதை திரி

Status
Not open for further replies.
ஹாய் பட்டு குட்டிஸ்...

இதோ நானும் பெயர் சொல்லாம கதை எழுத வந்துட்டேன். நீங்க நான் யாருன்னு கண்டு பிடிச்சா மட்டும் போதும்.
கதை முடியும் வரை பட்டு குட்டிஸ் கருத்துக்காக நான் காத்திருப்பேன்.
 
Last edited:

மலர் 1

சென்னையில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் அந்த குடியிருப்பு பகுதியில் கம்பீரமாக காட்சியளித்தது அந்த பழைமையும் புதுமையும் கலந்த வீடு.


அதை வீடு என்று சொல்வதை விட சிறிய அரண்மனை என்றும் சொல்லலாம். பார்ப்பதற்கு பழங்காலத்து கட்டிடம் போல தோன்றினாலும் அதில் பெரும்பான்மையானவை நவீன காலத்து தொழில் நுட்பங்கள்.


அவ்வீட்டின் ஒவ்வொரு பொருளும் அதை கட்டியவரின் ரசனையையும், செல்வ செழிப்பையும் வெளிக்காட்டக்கூடியதுமாக அமைந்திருந்தது.


அந்த வீடு எந்த அளவிற்கு ஆடம்பரமாக இருந்ததோ அதற்கு நேர்மாறாக அந்த வீட்டில் இருக்கும் நபர்கள் தோற்றமும் அவர்கள் வாழ்க்கையும் எளிமையானதாக இருந்தது.


வீட்டில் மட்டும் அல்ல அதன் உறுப்பினர்களிடமும் பழமை மாறாமல் எஞ்சி இருந்தது.


'ஹே ரங்கா ரங்கா ரங்கா இது தாவணி போட்ட
மங்கா இவகிட்ட வந்து கிங்கா....'


தனது கைப்பேசியில் இசைத்த பாட்டுக்கு ஏற்றவாறு தனது புதிய நண்பனான பாஸ் பேபி பொம்மையை பிடித்தபடி நடனமாடிக் கொண்டிருந்த அமுதரசி, ஆடிக்கொண்டே நேரத்தை பார்க்க அது எட்டு என்று காட்டியது.


"இனிமே நான் இங்கே இருக்க முடியாது பாஸ். நாம ஆடுனத மட்டும் அந்த லேடி ஹிட்லர் வந்து பாத்துட்ட நம்மள தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம்.

சோ நீங்க உங்க மத்த ஃப்ரெண்ட்ஸ் கூட ரெஸ்ட் எடுங்க, நாம ஈவ்னிங் மீட் பண்ணலாம்." என்று அந்த பொம்மையிடம் கூறிக் கொண்டே தான் இது வரை சேகரித்து வைத்திருக்கும் பொம்மை குவியலுக்கு நடுவில் வைத்தாள்.

"டோரா போயிட்டு வரேன்....
மோட்டு பத்துலு போயிட்டு வரேன்....
டாம் அண்ட் ஜெர்ரி பேயிட்டு வரேன்..." என்று தான் வைத்திருக்கும் அனைத்து கார்டூன் பொம்மைகளிடமும் விடை பெற்று வேகமாக கீழே வந்தாள்.



ஹால் சோபாவில் அமர்ந்திருந்த தாயை பார்த்ததும் தன் அறைக்குள் ஆட்டம் போட்டதற்கு நேர்மாறாக அமைதியின் மொத்த உருவமாக பூஜை அறைக்குள் நுழைந்தாள்.


"நைட் பேசினத எல்லாம் மதர் இன்டியா மறக்கல போல. ஆல் காட்ஸ் சேவ் மீ. என்ன மட்டும் டூ டே காப்பாத்தி விட்டுட்ட அந்த ஜெம்ஸ்( மாணிக்கம்) மிட்டாய மொட்ட அடிக்க வைக்கிறேன்." என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டு வெளி நல்ல பிள்ளையாக,


ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

என்று வழக்கம் போல பூஜை அறையில் அணி வகுத்து நின்ற கடவுளின் படத்திற்கு முன்பு இரு கைகளையும் கூப்பி தன் மனதில் தோன்றிய சிவாக்கியர் பாடல் வரிகளை சத்தமாக முனுமுனுத்தாள்.


தன் மகள் அமுதரசியை பார்த்த மாணிக்கத்திற்கு எப்பொழுதும் போல இன்றும் மகளின் அமைதியான அழகு அதிசயிக்க வைத்தது.


சராசரி உயரம், கோதுமை நிறம், அடர்ந்த கருமை நிறக் கூந்தல், கூடவே சேர்ந்து புன்னகைக்க அழைக்கும் முகம் என அழகின் மொத்த உருவமாக, பிரம்மன் படைத்த தன் மகளை பார்த்து எப்பொழுதும் தந்தையாக அவருக்கு பெருமை அதிகம்.


அதிலும் மகள் தன் தந்தையைப் போல புத்திக்கூர்மை உடையவளாக, எதையும் ஆராய்ந்து அறிந்து செயல்படுபவளாக இருப்பதைக் காணும் பொழுதெல்லாம் அவருக்கு பெருமையே.


அதே நேரம் மகளின் விளையாட்டுத்தனத்தையும் அவர் அறிவார். ஆனாலும் மகளை மனைவியின் அறிவுரை மழையிலிருந்து காப்பாற்றுப்பொருட்டு அதை காட்டிக்கொள்ள மாட்டார் .


பூஜை அறையில் தனது வேலையை முடித்துக்கொண்டு வெளியே வந்த அமுதரசி தன் முன் சோகத்தில் மொத்த உருவமாக அமர்ந்து இருந்த தாயைப் பார்த்தும் ஏனோ இரக்கம் வரவில்லை. மாறாக அவள் மனது எச்சரிக்கை ஒலி எழுப்பியது.


"அலார்ட் ஆகிக்க அமுதரசி... அன்பு மழை விடாம உன்ன வெளுத்து வாங்க போகுது." என்று அவள் மூளை கதற ஆரம்பித்தது.


சென்ற வாரம் உறவினர் ஒருவரின் வீட்டு திருமணத்திற்கு சென்ற வந்தது முதல் சோகமாக இருக்கும் தாயை பார்த்து இரக்கம் வருவதற்கு மாறாக தனக்குப் பிடிக்காத ஒன்றை செய்யக் கட்டாயப்படுத்தும் விதமாக, அவர் தன் கண்ணீரை பயன்படுத்துவதை நினைத்து எரிச்சல் மட்டுமே எஞ்சி இருந்தது.


கத்திப் பேசி சண்டையிட்டால் கூட பதிலுக்கு நாமும் பேசி சண்டை இடலாம்.


வார்த்தைகளை உபயோகப் படுத்தாமல் கண்ணீரால் தன் மனதை கரைக்க நினைக்கும் தாயை என்ன செய்வது என்று இன்று வரை அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.


"அமுது டா..." என்று அழைத்த தாயை பார்த்தவள், தான் தனது விளையாட்டு தனத்தை காட்டினால் அன்னையை சாமளிக்க முடியாது என அறிந்த அமுதரசி அமுத்தமான முகத்துடன் தாயின் அருகில் வந்து,


"இப்ப என்ன உங்களுக்கு நான் நீங்கள் எடுத்த முடிவு சரின்னு சொல்லணும்; நான் போய் அவங்க கால்ல விழுந்து எனக்கு வாழ்க்கை கொடுங்கன்னு பிச்ச கேட்கனும்; அதுக்கு தானே இந்த டிராமா.

நீங்க என்ன செய்தாலும் சரி... என் வாயிலிருந்து சரின்னு ஒரு வார்த்தை வராது." என தாயின் எண்ணத்தை முன்கூட்டியே அறிந்து அமுதரசி கூற, பெற்றவளுக்கு தன்னை கண்டு கொண்ட மகளை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டிய நிலை.

"எனக்காக இந்த ஒரு தடவை ஊருக்கு வா அமுது... இது உன்னுடைய வாழ்க்கைப் பிரச்சினை மட்டுமில்ல... அம்மா கௌரவ பிரச்சனை.

நீ சரின்னு சொல்ல போற அந்த ஒரு வார்த்தையில தான் நம்ம குடும்பத்துக்கு கெளரவம் இருக்கு.

அங்க வந்து நீ எதுவும் செய்ய வேண்டாம்.... அண்ணன் கிட்ட என் பெரியப்பா பேசி சம்மதிக்க வைப்பாங்க..." என்று மகளின் மனதை கரைக்க நினைக்க, மகளோ இரும்பின் உறுதியுடன் நின்றாள்.


"அப்படி கஷ்டப்பட்டு உங்க அண்ணனை சம்மதிக்க வைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்ல ம்மா... இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை எனக்கு தேவை இல்லை.

ஒருவேளை என் சம்மதத்தில தான் உங்க கௌரவம் இருக்குன்னு நினைச்ச அந்த கௌரவம் எனக்கும் தேவை இல்லை." என தீட்சன்யமாக தனது மறுப்பை தெரிவித்தாள்.


மகளை எப்படியாவது சம்மதிக்க வைத்து விடலாம் என்ற அன்பரசியின் கற்பனை கோட்டை மகளின் உறுதியான பேச்சின் முன்பு நகர்ந்து விழுந்தது.


தாயின் சிந்தனை படித்த முகமே அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதை காட்ட, இனி எது வந்தாலும் சமாளித்தாக வேண்டும் என்ற முடிவோடு

''அமுது எஸ் ஆகிடு... அப்புறம் அன்பு சென்டிமெனட் சீன் காட்டி உன்ன லாக் பண்ணிடும்." என்ற மூளையின் பேச்சை கேட்ட அமுதரசி தனது கைப்பையையும், ஸ்கூட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.


காலை உணவை கூட உண்ணாமல் கோபமாக செல்லும் மகளின் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அன்பரசிக்கு தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை.


அவர் எண்ணமெல்லாம் தன் அண்ணணிடம் எப்படி பேசுவது, தான் நினைத்ததை எப்படி நடத்திக்காட்டுவது என்பதிலேயே இருந்தது.


மனைவியின் நிலையை உணர்ந்து அவர் தோளைத் தொட்ட அவரது கணவர் மாணிக்கம்

"அன்பு எவ்வளவு நேரம் இப்படியே இருக்கப் போற, எந்திரிச்சு வந்து சாப்பிடு... நீ சாப்பிடாம உன் உடம்ப கெடுத்துக்காத. வா சாப்பிடலாம்." என்று அழைக்க, தனக்கு உதவாத கணவரிடம் பதில் கூற விரும்பாத அன்பரசி எழுந்து சென்று அறைக்குள் அடைந்து கொண்டார்.


தன் மகளை தன் வழிக்கு கொண்டு வர அன்பரசி கடைசியாக எடுக்கும் ஆயுதம் தனிமைச் சிறையும், உண்ணாவிரத போராட்டமும். அதையே இப்போதும் அவர் கையில் எடுத்து விட்டார் என்பது புரிந்து கொண்ட மாணிக்கம் மனைவியை சமாளிக்கும் வழி தெரியாது தன் மகளுக்கு கைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தார்.


"நாம விறைப்பா திரியும்போதே இப்படி கண்ணீரைக் காட்டி நாம்மள கார்னர் பண்ண ட்ரை பண்றாங்க.

இதுல அவங்க முன்னாடி நாம ஜாலியா ஆட்டம் போட்டா அவ்வளவு தான், நம்ம ஜோலி முடிஞ்சுது..." என்று அமுதரசி தன் ஸ்கூட்டி சாவியில் மாட்டியிருந்த ஹலோ கிட்டி பொம்மையிடம் பேசிக்கொண்டே சென்றாலும் அவளுக்குள் கோபம் இருக்க தான் செய்தது.


காற்றை கிழித்துக்கொண்டு அமுதரசி கைகளில் பறந்து கொண்டிருந்த அந்த இரு சக்கர வாகனம், சென்னை வாகன நெரிசலில் பொருட்படுத்தாது வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது.


தாயின் கண்ணீரை கண்ட கோபம் அனைத்தையும் அமுதரசி அவள் தனது வாகனத்தில் காட்டிக்கொண்டிருந்தாள்.


பதிமூன்று வயதிலிருந்து அவளுக்குள் எரிந்து கொண்டிருந்த கோபம் என்னும் அக்கினியை இன்று வரை அணையாமல் காத்துக் கொண்டிருக்கும் பெருமை அவள் அன்னையையே சாரும்.

அவளது கோபம் சிறுபிள்ளை தனமானது தான். அவளாகவே மறந்திருக்க கூடிய ஒன்றை கண்ணீரை காட்டி நினைவூட்டுவதை அன்பரசி அறிந்து கொள்ளவில்லை.

அந்த அறியாமையிலே ஒன்பது வருடங்களாய் தன் மகளின் கோபத்திற்கு எண்ணெய் வார்த்து வளர்த்துக் கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே அமுதரசி தனக்குப் பிடிக்காத எதையும் தாய் தந்தைக்காக கூட செய்தது கிடையாது.


அப்படி குணம் கொண்டவளை அவர்கள் இஷ்டத்திற்கு வளைக்க நினைப்பது எவ்வாறு சாத்தியம்.

சாதாரண பொருள் ஒன்றிற்கே தனது விருப்பத்தை முன்னிறுத்தும் அமுதரசி எவ்வாறு தனது வாழ்க்கையை அவர்கள் வெட்டி கௌரவத்திற்காக பலியிட முடியும்.


பெற்ற மகளை விட மற்றவர்களின் வார்த்தைக்கு முக்கியம் தரும் தாயை நினைக்கும் பொழுதெல்லாம் அவளது மொத்த கோபம் வழக்கம்போல அதற்கு காரணமான அந்த ஒரு நாளில் வந்து நின்றது.


அன்றைய நிகழ்விற்கு காரணமானவன் மட்டும் இப்பொழுது தன் கண் முன்னே இருந்தால் தன் கைகளால் கொன்று விடுவோம் என்னும் அளவிற்கு அவளின் கோபம் பெருகிக் கொண்டே சென்றது.


தன் கோபத்தை தனது ஹலோ கிட்டியிடம் கூறிக்கொண்டே ஸ்கூட்டியை விரட்டிக் கொண்டிருந்த அமுதரசியின் மூளை அவள் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் வழியாக கேட்ட அழைப்புடன் சேர்த்து சாலையில் இருந்த அவளது கவனத்தையும் அலட்சியப்படுத்தியது.



"டமால்..." என்று சத்தத்துடன் அமுதரசி ஸ்கூட்டி எதிரில் வந்த வாகனத்தில் மோத அவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.


பல வருடங்களாக லாவகமாக வண்டி ஓட்டியதன் விளைவாக அவளது கவனம் சாலையில் இல்லாத பொழுதும் அனிச்சையாக விபத்தை உணர்ந்து அவளது கைகள் பிரேக்கை அழுத்திப் பிடித்தது.


அதே சமயம் எதிரே வந்தவனும் தன் வாகனத்தின் மீது மோத இருந்தவளை கண்டு வேகத்தை குறைக்க, பெரிதாக ஏற்பட வேண்டிய விபத்து தவிர்க்கப்பட்டது.



எப்பொழுதும் வண்டி ஓட்டும் பொழுது சாலையில் மட்டுமே கவனத்தை வைப்பவள் இன்று தன் அன்னையை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையை தலைக்குள் ஏற்றிக்கொண்டு பயணம் செய்த தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நிந்தித்து கொண்டாள்.


வண்டியின் வேகத்தை குறைத்ததாலும், தலைக்கவசம் அணிந்து இருந்ததாலும் பெரிதாக எந்த அடியும் படவில்லை. ஆனாலும் கையிலும் காலிலும் சிறுசிறு சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தது.


காயம் தந்த எரிச்சலுடன் அமுதரசி மெல்ல எழுந்து நின்றாள். அதற்குள் தனது கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிய சாகித்யன் அமுதரசியை அழுத்தமாக பார்த்து பேசுவதற்காக தன் வாயைத் திறக்கும் முன்

"சாரி... தப்பு என் மேல தான். மன்னிச்சிடுங்க...." என்று கரம் கூப்பி அவனை நிமிர்ந்து பாராமல் மன்னிப்பு வேண்ட, அது அவனின் மனதின் கோபத்தை சிறிது குறைந்தது.


ஆனாலும் கவனமின்றி வண்டி ஓட்டிக்கொண்டு வந்தவளை சும்மா விடுவதற்கு அவனது மனம் இடம் தரவில்லை.


"ஹலோ மேடம் நான் என்னோட கார் ஸ்பீட கண்ட்ரோல் பண்ண போய் எதுவும் பிரச்சினையாகல, அதுவே நான் வந்த வேகத்திற்கு உங்களை மோதியிருந்தா, இந்நேரம் மன்னிப்பு கேட்கிறதுக்கு நீங்க இருந்திருக்க மாட்டீர்கள்." என்று சாகித்யன் நக்கல் குரலில் பேச, அதற்கு பதில் தர அமுதரசி நாக்கு துடித்தாலும், தன் மீது தவறை வைத்துக்கொண்டு மற்றவனை கடிந்து பேச அவளுக்கு விருப்பமில்லை.


"இனி நான் கவனமாக இருக்கிறேன்." என்று கூறிக் கொண்டே கீழே விழுந்து இருந்த அவளது ஸ்கூட்டியை தூக்க நினைக்க, அவள் உள்ளங்கையில் ஏற்பட்டிருந்த சிராய்ப்பு தந்த வலி அவள் பளிங்கு முகத்தில் பிரதிபலித்து.


சாகித்யன் முகத்தைப் பார்த்து பெண்ணவள் பேசாமல் இருக்க, அவளது முகத்தை மட்டுமே அருகில் இருந்த சாகித்யனும், காரில் அமர்ந்திருந்த சக்கரவர்த்தியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சக்கரவரத்தி அவள் முகத்தில் தோன்றிய வலியை உணர்ந்து, ஸ்கூட்டியை தூக்கி நிறுத்துவதற்காக காரிலிருந்து இறங்கும் முன், அவன் தம்பி சாகித்யன் உதவியிருந்தான்.


சாகித்யன் வண்டியை பிடிக்கும் போது அவனது விரல்கள் லேசாக அமுதரசியின் விரலை உரசிச்சென்றது.


அவனின் அந்த சிறு தொடுக்கையை கூட தாங்கிக்கொள்ள முடிாமல் பட்டென்று அமுதரசி தனது கரங்களை ஸ்கூட்டியில் இருந்து எடுத்துக்கொண்டாள்.



அவளது செய்கை தந்த கோபத்தில் ஸ்கூட்டியை வேகமாக சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு திரும்பியவன்


"என்ன பார்த்தா உனக்கு பொறுக்கி மாதிரி தெரியுதா? எனக்கு உன் கையை தொடணும்னு எந்த ஆசை கிடையாது." என்று கோபமாக கூறிவிட்டு தனது ஃபார்ச்சூன் காரை உயிர்ப்பித்து அங்கிருந்து பறந்து சென்றான்.


காரை உயர் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்த சாகித்யனின் அதிக நாட்கள் கழித்து தன் முன் காட்சியளித்தவளின் தோற்றத்தை மனக்கண் முன்பு கொண்டு வந்து ஆராய்ந்து கொண்டிருந்தது.


"என் அம்மு குட்டிக்கு ஒன்பது வருஷத்துல ஓவர் வளர்ச்சி தான்... என்ன தான் ஆளு வளர்ந்தாலும் உன் நடவடிக்கை மட்டும் அதே பதிமூனு வயசுல தான் இருக்குது.

அவசர கொடுக்கு... சின்ன வயசுல உனக்கு கீழ விழாம நடக்க தெரியாது... இப்போ உனக்கு கீழே போடாமல் வண்டி ஓட்ட தெரியல..." என பல வருடங்களுக்கு பின்பு தான் பார்த்த அமுதரசியை பதிமூன்று வயது சிறுமியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அவள் அபார அழகு அவனை கிறங்க செய்தது.


"அப்பவே பொம்மு குட்டி மாதிரி நீ அழகி தான்... இப்போ ஆளு சும்மா கும்முன்னு பேரழகியாகிட்ட...

எங்க போய்ட போற, எப்படி இருந்தாலும் நீ என்கிட்ட தான வந்தாகணும்." என்று அவனுக்குள் கூறிக்கொண்டான்.


"அம்மு..." என்று அமுதரசியின் நிலைவில் சக்கரவர்த்தி உதடுகள் மெல்ல கூற, தன் நினைவில் மூழ்கியிருந்த சாகித்யன் அதை சரியாக கவனிக்கவில்லை.


"என்ன சொன்ன..." என்று சாகித்யன் தன் அண்ணிடம் கேட்க, தம்பியிடம் அமுதரசி பற்றி பேச விரும்பாமல்,


"ஒன்னுமில்ல... காலையில அம்மா போன் பண்ணங்க. நீ பேசிடு." என்று சக்கரவர்த்தி வேறு பேசி சமாளித்தான்.

இவ்வாறு அண்ணன் தம்பி இருவருமே அமுதரசி பற்றி பேச அடுத்தவர்களிடம் பேசாமல் தவிர்த்தனர்.


பேசியிருக்கலாம்...

விதி யாரை விட்டது.





மலரும்...
 
Last edited:
ஹாய் பட்டு குட்டீஸ

வேறு தளத்தில் கதை எழுதிய எனக்கு இந்த போட்டி கதை களம் புதிது. உங்கள் கருத்து மட்டுமே எனது எழுத்துக்கான பரிசு.

கருத்து சொன்னா தான் அடுத்த எப்பி....

 
மலர் 2


கார் சென்ற வேகத்திலேயே தனக்கு உதவியவனின் கோபம் அமுதரசிக்கு நன்கு புரிந்தது.


தனக்கு உதவி செய்ய வந்தவன் முகத்தை கூட பார்க்காது அப்படி நடந்து கொண்ட தனது மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே குட்டிக்கொண்டாள்.


அமுதரசி தனக்கு தெரிந்த மெக்கானிக் ஒருவரை அழைத்து தனது வண்டி இருக்கும் இடத்தை கூறிவிட்டு, ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.


தனது காயத்திற்கு மருந்திடும் வரையிலும் தந்தையின் அழைப்பை பார்க்கவில்லை.


அதன் பிறகே அழைபேசியை எடுத்து பார்க்க, தந்தையிடமிருந்து எண்ணற்ற தவறிய அழைப்புகள் வந்திருந்தது. தந்தைக்கு அழைத்து என்ன என்று கேட்க,


"நீ போனதும் அம்மா வழக்கம் போல ரூம்க்குள்ள போய் கதவ அடைச்சிக்கிட்ட, இன்னும் சாப்பிடல, பிரஷர் மருந்தும் எடுத்துக்கல." என்று கூற, தாயின் செயலில் சலிப்புற்ற அமுதரசி,


"நான் வீட்டுக்கு வரேன் ப்பா.." என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பினாள்.


கையில் கட்டுகளுடன் வீட்டுக்கு வந்த மகளை பார்த்து பதறிய மாணிக்கம்,


"பாப்பா என்ன ஆச்சு... எப்படி உனக்கு அடிபட்டிச்சு..." என்று விசாரிக்க, கணவனின் குரல் கேட்டு வெளியே வந்த அன்பரசி மகளின் நிலை கண்டு பதறினாள்.


"சின்ன ஆக்சிடன்ட் ..." என்று சாதாரணமாக கூறிவிட, பெற்றவர்களுக்கு தான் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


தங்கள் மகன் எவ்வளவு லாவகமாக வண்டி ஓட்டுவாள் என்பது இருவருக்கும் நன்கு தெரியும்.


அப்படி இருக்க இன்று விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றால் அது எதனால் என்று புரியாத அளவிற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள் அல்லவே.


வழக்கம் போலவே தன் மகளை கண்ணீரை வைத்து மிரட்டி காரியம் சாதிக்க நினைத்த அன்பரசிக்கு, தன்னால் ஏற்பட்ட கவனக்குறைவினால் மகளுக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது என புரிந்தது.


இருப்பினும் அவர் மனம் மகள் தன் விருப்பத்தை ஏற்க மாட்டளோ என்று கவலை கொள்ளவும் செய்தது.


"எனக்கு ரெஸ்ட் வேணும்... அம்மாவ சாப்பிட சொல்லிட்டீங்கன்னா நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்." என்று கூற, வேறு வழியில்லாத அன்பரசி தனது பிடிவாதத்தை தளர்த்தி விட்டு உணவருந்த சென்றார்.


தாய் உணவருந்த தொடங்கியதும் தனது அறைக்கு செல்ல மாடிப்படியில் கால் வைத்த அமுதரசி திரும்பி தன் தாயைப் பார்த்து



"இனி நீங்க வழக்கம்போல உண்ணாவிரதப் போராட்டம் இருந்தாலும், நான் நீங்க சொல்ற எதுக்கும் ஒத்துக்க மாட்டேன்.

இல்லை உண்ணவிரதம் இருக்கணும்னு முடிவு பண்ணிட்ட என் கிட்ட சொல்லுங்க, உங்களுக்கு துணைக்கு நானும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறேன்." என்று கூறி விட்டு தனது அறைக்குள் சென்று மறைந்தாள்.


அவள் சென்றதும் ஓய்ந்து அமர்ந்த அன்பரசி அருகே அமர்ந்த மாணிக்கம்,


"அன்பு நாமும் அவளை ரொம்ப கட்டாயப்படுத்தக்கூடாது... நாம அவளைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கணும் தானே..." என்று தன்மையாக கேட்க, இயலாமையுடன் அவரை ஏறிட்ட அன்பரசி,


"எனக்கு மட்டும் என் பொண்ணு பத்தி கவலை இல்லையா. அவளுடைய வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நான் இவ்வளவு செஞ்சுகிட்டு இருக்கிறேன்.

அது அவளுக்குத் தான் புரிய மாட்டேங்குதுன்னா உங்களுக்கு கூடவா புரியல." என்று வருத்தத்துடன் கேட்க,


"எனக்கு புரியாம இல்ல... ஆனா நீ நல்லதுன்னு நினைக்கிற ஒரு விஷயம் அவளுக்கு பிடிக்கலன்னா நாம கட்டாயப்படுத்தக்கூடாதில்ல." என்று நிதர்சனத்தை எடுத்துரைக்க, அன்பரசிக்கு அப்போதைக்கு அமைதியைக் கடைபிடிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.


மனைவியின் எண்ணப் போக்கை உணர்ந்தாலும் உடனே அதைப் பற்றி பேசி மனைவியை கஷ்டப்படுத்த விரும்பாமல் அத்துடன் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.


தனது அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்த அமுதரசி எண்ணம் முழுவதும்


'அப்பாடி இன்னும் கொஞ்ச நாளைக்கு நாம தப்பிச்சோம்...' என்று ஒரு விடுதலை உணர்விலிருந்தது.


எப்படியும் தனக்கு காயம் பட்டதினால் இன்னும் சில நாளுக்கு தனது தாய் தனக்கு வேண்டாத எதையும் பற்றி பேச மாட்டார் என்று தெரியும். அதனால் நிம்மதியாக தனக்கு பிடித்த கேலிச்சித்திரத்தை பார்க்க ஆரம்பித்தாள்.


சற்று நேரத்தில் மருந்தின் வீரியத்தில் உறக்கம் அவன் கண்களைத் தழுவ அவள் கையிலிருந்து அலைபேசி நழுவியது.


மீண்டும் அவள் விழித்து நழுவி சென்ற போனை தேடி பிடித்து பார்க்கையில் நேரம் இரவை நெருங்கிக் கொண்டிருந்ததை காட்டியது.


உணவருந்துவதற்காக கீழே வந்த அமுதரசி அன்னையைப் பார்க்க, அவர் முகத்தில் கவலை மட்டுமே இருந்தது.


'சம்மதம்' என தான் ஒரு வார்த்தை கூறினால் நிச்சயம் அன்னையின் கவலை காணாமல் போய்விடும் என்று அவளுக்கு தெரியும். ஆனாலும் அதை கூற அவளுக்கு விருப்பமில்லை.

அமைதியாக தனது உணவை முடித்துக்கொண்டு தனது அறைக்கு வந்த அமுதரசியின் எண்ணமெல்லாம் அன்னை தனக்கு அமைத்து தர இருக்கும் வாழ்க்கையை எண்ணி இருந்தது.


"என்னைக்கு இருந்தாலும் என் மக அமுதவாணன் மருமகளாக இந்த வீட்டுக்குள்ள திரும்பவும் காலை எடுத்து வைப்பா.

அப்படி ஒன்னும் நடக்கல நாங்க திரும்பவும் இந்த வீட்டுக்கு வர மாட்டோம்." என்று தனது அன்னை தன் பதிமூன்றாவது வயதில் ஊரார் முன் செய்த சபதத்திலேயே வந்து நின்றது.


அன்று தாய் செய்த சபதம் சரி என்று இன்றளவும் அவளால் எண்ண முடியவில்லை.


"நோ... நெவர்... இந்த அமுதரசி என்னைக்கும் அவ்வளவு தரம் தாழ்ந்து போக மாட்டா...

கல்யாணம்னு ஒன்னு என்னுடைய வாழ்க்கையில இல்லாமல் போனா கூட எனக்கு கவலை இல்லை.


ஆனால் நான் என்னைக்கும் அமுதவாணன் மருமகளாக மாட்டேன்." என்று வழக்கம் போல அவள் மனதுக்குள் ஒரு சபதத்தை ஏற்றுக்கொண்டாள்.

___________________________________________


"சார் அந்த ராம் பில்டர்ஸ் ராமமூர்த்தி கொலை கோஸ் அக்யூஸ்டுக்கு தேர்ட் டிகிரி ரீட்மெண்ட் கொடுத்து கூட விசாரிச்சு பாத்தாச்சு. ஆனா வாய தொறக்க மாட்டிக்கிறான்." என காவல் நிலையத்திற்குள் சாகித்யன் நுழைந்ததும் மூச்சு வாங்க கூறிய பெருமாளை மேலும் கீழும் பார்த்தவன்,


"கொஞ்சம் பொறுமை கன்ஸ் (கான்ஸ்டபில் சுறுக்கம்) எதுக்கு இவ்வளவு சூடா இருக்குறீங்க. கொஞ்சம் தண்ணி குடிச்சு சில் பண்ணிக்கோங்க." என கூறியவன் தன் மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து கொடுக்க, வழக்கம் போல


"வேண்டாம் சார்... இது உங்களோடது." என்று மறுக்க, அதை அவர் கையில் திணித்து


"இத குடிச்சிட்டு பொறுமையா வாங்க." என்று கூறிய சாகித்யன் குற்றவாளி இருந்த அறைக்கு சென்றான்.


செல்லும் சாகித்யனையே பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபில் பெருமாளுக்கு 'இப்படியும் ஒரு ஏசிபியா!' என்று முதல் முறை பார்த்த போது தோன்றிய பிரம்மிம்பு இன்றும் குறையவில்லை.


சாகித்யன் உதட்டில் சதா காலமும் இருக்கும் மாறாத புன்னகையும், அனைவர் மீது அவன் காட்டும் அக்கறையுமே அதற்கு காரணம்.


தனது வேலை பளுவினால் ஏற்படும் எரிச்சல், கோபம் என எதையும் அவன் கடைநிலை ஊழியர்களிடம் காட்டியதில்லை.


சாகித்யனை பற்றி யோசித்துக் கொண்டே குற்றாவளி இருக்கும் அறைக்கு பெருமாள் வர, அங்கு அந்த குற்றவாளி சாகித்யன் முன் பயத்தில் வெளிறிய முகத்துடன்


"சார் நான் உண்மைய சொல்றேன். யார் சொல்லி இத எல்லாம் பண்ணேன்னு கோர்ட்ல சொல்றேன்." என்று கொஞ்சிக்கொண்டிருக்க,


"உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு. ஒரு வேல கோர்ட்ல நீ மாத்தி பேசிட்டா." என்று தாடையை தடவியபடி பேசிய சாகித்யன் முகத்தில் இறக்கம் என்பது சிறிதும் இல்லை.


சற்று நேரத்திற்கு முன் தன்னிடம் சிரித்த முகமாக பேசி சென்றது இவன் தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்து கூறிலும் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு சாகித்யன் முகம் கடுமை நிறைந்து இருந்தது.


சகித்யனை பற்றி சிந்தித்து கொண்டிருந்த வேளையில் அவன் முன் கையை ஆட்டி அவர் சிந்தனையை கலைத்தவன்


"அவன் சொல்ற எல்லாத்தையும் ரெக்காட் பண்ணிடுங்க." என்று கூறிவிட்டு சாகித்யன் செல்ல, கான்ஸ்டபில் பெருமாளும் அவனை புரிந்து கொள்ள முடியாமல் பெரும் மூச்சை வெளிவிட்டபடி தனது வேலையை கவனிக்க சென்றார்.


அன்றைய வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லாம் என வெளியே வந்த சாகித்யனுக்காக சக்கரவர்த்தி காருடன் காத்துக்கொண்டு நின்றான்.


அண்ணனை பார்த்ததும் சிரித்துக் கொண்டே கார் கதவை திறந்து அமர்ந்தவன்


"சரியான நேரத்துக்கு வந்துட்ட. எனக்கு செம பசி. எங்க பசில மயக்கம் வந்துடுமோன்னு நினைச்சேன்." என்று சாகித்யன் சோர்வாக கூற,


"ஒழுங்க போலீஸ் மாதிரி இருடா... சின்ன பிள்ள மாதிரி பசிக்குன்னு சொல்ற." என்று சக்கரவர்த்தி தம்பியை கடிந்து கொள்ள, அண்ணனை முறைத்தவன்,


"ஏன் போலீஸ்னா பசிக்க கூடாதா. மணி என்னன்னு பாத்தியா இந்த நேரம் யாரா இருந்தாலும் பசிக்கத்தான் செய்யும்.


இதுவே அம்மா இருந்தா இந்நேரம் ஸ்டேஷன்கே சாப்பாடு கொடுத்து அனுப்பிருப்பாங்க.

எல்லாம் நம்மல பெத்த மகராசன் அந்த கதர் வேஷ்டிய சொல்லனும். பொண்டாட்டி சென்டிமென்ட் படம் ஓட்டி அம்மாவ கடத்திட்டு போயிட்டாரு.

சமையல் பண்ற சுந்தரி அக்கவும் லீவு." என்று அம்மாவை தன்னுடன் இருக்க விடாமல் அழைத்து சென்ற தந்தையை நினைத்து சாகித்யன் பொறுமிக் கொண்டிருந்தான்.


"கொஞ்சம் வேலை இருந்துச்சு நானும் வீட்டுல சமையல் செய்யல... எந்த ஹோட்டல் சப்பாடு நல்ல இருக்கும்னு சொல்லு. சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்." என்று தம்பிக்கு சக்கரவர்த்தி பதில் கூற, சாகித்யன் கொஞ்சம் தூரமாக இருந்த ஒரு உயர் தர உணவகத்தின் பெயரை கூறினான்.


அந்த உணவகம் இருக்கும் இடத்தை கேட்டுக் கொண்ட சக்கரவர்த்தி, தம்பியை கண்டன பார்வை பார்த்த படி


"பசிக்குதுன்னு சொன்ன." என்று சக்கரவர்த்தி கேள்வி கேட்க,


"அதுக்காக கண்ட இடத்துல சாப்பிட்டு என் வயிற கெடுத்துக்க முடியாதுல்ல." என்று காரில் தாளம் தட்டியபடி சாகித்யன் கூற,


"உன்ன பத்தி தெரிஞ்சும் கேட்டேன் பாரு." என்று சக்கரவர்த்தி தனக்குள் முனுமுனுத்துக் கொண்டான்.


சகோதரர்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருக்கும் போது அவர்கள் மேசைக்கு அருகில் ஒரு குடும்பம் சிறு குழந்தையுடன் உணவருந்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை வாயில் வைத்திருந்த உணவை கீழே துப்பிவிட, அதன் தாய்


"அம்மு இப்படி சாப்பாட்டை துப்ப கூடாதுன்னு எத்தன தடவ சொல்றது." என்று கண்டிக்க, அதன் பிறகு அந்த குழந்தை சமத்தாக உணவை உண்ண ஆரம்பித்தது.


'அம்மு' என்று அழைப்பில் தங்கள் உணவிலிருந்து கவனம் சிதறிய அண்ணன் தம்பி இருவரும் அந்த குழந்தையை பார்த்த பின் தங்கள் 'அம்மு' என்ற அழைப்பிற்கு சொந்தக்காரியான அமுதரசியின் நினைப்பில் ஆழ்ந்தன.


நீண்ட நாட்களுக்கு பின் அருகில் பார்த்த அமுதரசியின் முகம் சாகித்யன் மனதில் மின்னி மறைய அவன் இதழ்களில் மகரந்த சிரிப்பு தோன்றியது.


சிறுவயதில் அவள் செய்த குறும்பு தனத்தை நினைத்து பார்த்வன் தன்னவளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு கதை பேசும் ஆசை எழுந்தது.


பட்டாம்பூச்சியாக படபடத்த அவள் இமையை தன் இதழ் ஒற்றல் மூலம் அமைதிப்படுத்த நினைத்தான்.


அவள் இளம் ரோஜா வண்ண இதழ்களுடன் தன் முறட்டு இதழ்களை இணைத்து கவிதை படிக்க வேண்டும் என்று அவனுடைய மனது அவன் கட்டுப்பாடின்றி கற்பனை வானில் சிறகடிக்க ஆரம்பித்தது.


தன்னவள் தன்னை சிறு வயதில் அழைக்கும் 'சக்தி' என்ற அழைப்பு இப்போதே வேண்டும் என மனம் ஏங்க ஆரம்பித்தது. அந்த ஏக்கம் பெருமூச்சாக வெளியேறியது.


கையில் இருந்த முள் கரண்டியால் உணவை கிளறி கொண்டிருந்த சக்கரவர்த்தி அமுதரசியை பார்த்தும் அருகில் சென்று பேசாமல் வந்திருக்க கூடாது என அன்றைய நாளில் ஆயிரமாவது முறையாக நினைத்து கொண்டான்.


அமுதரசியை பற்றி அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருந்தாலும், அவளை அருகில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.


தனக்கு அவளை அடையாளம் தெரிவது போல, அவளுக்கு தன்னை அடையாளம் தெரியுமா என்ற கேள்வி அவனுக்கு ஒருவித பயத்தை தந்தது.


சாகித்யன் அருகில் நின்றும் அவனை அமுதரசி அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதை அவன் மூளை கூற,


'ஒருவேளை சாகித்யனுக்கு பதில் தான் இருந்திருந்தாலும் தன்னையும் அவள் மூன்றாம் மனிதராய் நடத்திருப்பாளோ.' என நினைத்து தவிக்க ஆரம்பித்தான்.


ஒரே ஒரு முறை தன் அம்மு தன்னை 'சக்தி' என்று அழைத்தாள் மட்டுமே அந்த தவிப்பு தன்னை விட்டு நீங்கும் என நினைத்தவனுக்கு அவனை அறியாமல் பெருமூச்சு வெளியேறியது.


அண்ணன் தம்பி இருவரும் ஒரே நேரத்தில் பெருமூச்சிட்டாலும் ஒருவர் மற்றவரிடம் காரணம் கேட்கவில்லை.


கேட்டால் தானும் காரணம் கூற வேண்டுமே என்ற எண்ணமே இருவரையும் அமைதியாக்கியது.


சகோதரர்கள் இருவர் எண்ணமும் ஒருத்தி மீதிருக்க, அந்த ஒருத்தியோ யாரும் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

இதில் யார் எண்ணம் நிறைவேறும்...


மலரும்...
 
மலர் 3


ஏய் போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு
வங்க கடல் எற போட்டு தாக்கு
ஏய் போட்டு தாக்கு ஏய் சக்கைப்போடு நீதான் போட்டு தாக்கு
ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு


சாகித்யன் யூட்யூபில் குத்து பாடலை கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்றபடி நாற்காலியில் அமர்ந்தபடியே நடனமாடிக் கொண்டிருக்க, அங்கு லாக்கப்பில் ஒருவன் உயிர் பயத்துடன் கத்திக்கொண்டு இருந்தான்.


"சார்... என்ன விட்டுடுங்க சார்...இனி இப்படி பண்ண மாட்டேன் சார்." என்று சக்கரவர்த்தி காலை பிடித்து கதற, அவன் மீது கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் தனது கையில் இருந்த லத்தியால் சரமாரியாக அடித்தும் சக்ரவர்த்திக்கு கோபம் குறையவில்லை.


இப்படியே இன்னும் சிறிது நேரம் அடித்தால் அவன் உயிர் அவனை விட்டு பிரிந்து விடும் என்பதை உணர்ந்த சாகித்யன் பாட்டை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அவனது அண்ணன் சக்கரவர்த்தியை தடுத்து


"டேய் அண்ணா நீ அடிச்சது போதும் விடுடா... அவன இதே மாதிரி நாலு அடி அடிச்சா அவன் செத்துடுவான்." என்று கூற,


"செத்தா சாகட்டும். இந்த நாய் உயிரோடு இருந்து என்ன செய்யப் போது." என்று தனது காலால் எட்டி உதைக்க அவனோ சுருண்டு விழுந்தான்.


இதற்கு மேலும் அண்ணனை இங்கு இருக்க விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து அவனை இழுத்துக் கொண்டு வெளியே வர சக்கரவர்த்தியின் கோபம் கொஞ்சமும் குறையவில்லை.


"இவன் ஒருத்தன் சும்மா சும்மா டீக்கடை பாய்லர் மாதிரி கொதிச்சிட்டே இருப்பான்...." என்று அண்ணனை பற்றி தான் நினைத்ததை மனதிற்குள் வைத்துக்கொண்டன். பின் அவனிடம் யார் வாங்கி கட்டிக் கொள்வது.


சக்ரவர்த்தியை நாற்காலியில் அமர்த்தி குடிப்பதற்கு நீரை எடுத்துக் கொடுக்க, மொத்த தண்ணீரையும் குடித்தும் சக்கரவர்த்தியின் கோபம் குறையும் வழி தெரியவில்லை.


"ஏன்டா இவ்வளவு கோவம், கொஞ்சம் கூலா இருக்க பாரு. நீ இப்படி கோபப்பட்டா மட்டும் இந்த உலகம் திருந்திடுமா." என்று அண்ணனின் கோபத்தை தனிக்க நினைக்க, அவனோ தனது அக்கினிப் பார்வையை தம்பியை நோக்கித் திருப்பி


"நான் எதுக்காக கோபப்படுறேன்னு உனக்கு புரியலயா... சின்ன பொண்ணுடா... அவளைப் போய்." என்று மேலும் வார்த்தைகள் வராமல் தவித்த தொண்டையை தன் கைகளால் தேய்த்துக்கொண்டான்.


அண்ணன் கூற வருவது என்ன என்று புரிந்தாலும் இது போல பல வழக்குகளை கையாண்ட சாகித்யன் சக்கரவர்த்தியின் அளவிற்கு தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டவில்லை.


அவனது துறையை பொறுத்த வரை இது அவன் பார்த்த, ஆயிரக்கணக்கான வழக்குகளில் ஒன்று. அதனாலே அந்த காமுகனை கொல்லும் அளவு கோபம் இருந்த போதும் தன் பதவியை கருத்தில் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.


தன் உணர்வை கட்டுப்படுத்தியவனுக்கு இப்பொழுது உணர்ச்சி வசப்பட்டிருக்கும் அண்ணனை எப்படி தன்னிலைக்கு கொண்டு வருவது என்று யோசித்தான்.


நீண்ட நாட்களுக்கு பிறகு ஓய்வாக இருந்த அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்காக நேரத்தில் அவர்களின் வழியில் செலவழித்துக் கொண்டிருந்தனர்.


வாரமில்லாத சாலையில் இருவரும் அமைதியாக பயணித்துக் கொண்டிருக்க, நீண்ட நேரம் அமைதியாக இருக்க முடியாத சாகித்யன்,


"அப்புறம் அண்ணப் பையா எப்ப கல்யாண சாப்பாடு போட போற... மிஸ்டர் கதர் வேஷ்டி நேரடியா உன் கிட்ட கேட்டா எங்க நீ அவர் வேஷ்டிய கிழிச்சிடுவியோன்னு பம்மி என்ன கேக்க சொன்னாரு." என்று கார் ஓட்டிக்கொண்டு இருந்த அண்ணனை பார்த்து கேட்டான்.


கல்யாணம் என்ற வார்த்தை மனக்கண்ணில் தோற்றவித்த காட்சியில் கொந்தளித்த சக்கரவர்த்தி, அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கார் ஸ்டேரிங்கை இறுகப் பற்றியபடி,


"உன் பேச்ச கேட்டா யாரும் உன்ன போலீஸ்ன்னு சொல்ல மாட்டாங்க.. இதுல ஐயா அசிஸ்டன் கமிஷனர்ன்னு வெளி பீத்திகிறீங்க. கொஞ்சமாச்சும் போலீஸ் மாதிரி பொறுப்பா பேசு." என்று பொறுப்புள்ள அண்ணனாக தம்பியை கண்டிக்க,



"நான் பொறுப்பா பேசினா மட்டும் நம்ம அரசாங்கம் என்ன பாராட்டி ஒரு கிலோ பருப்பு ப்ரீயா தரப் போறாங்களா...

அட போடா இந்த ஊருக்கு என்ன மாதிரி போலீசே அதிகம் தான்." என்று சலித்துக் கொண்ட தம்பியின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்கலாமா என்பது போல சக்கரவர்த்தி தம்பியை பார்க்க, அவன் பார்வையிலேயே அதை புரிந்து கொண்ட சாகித்யன், தலையை இரு கையால் மறைத்துக் கொண்டு


"எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கனும். அதை விட்டுட்டு இந்த பச்ச புள்ளய அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்க கூடாது. மீ பாவம்..." என்று கேலி போல பேச, யாராக இருந்தாலும் அவன் தோற்றத்தில் சிரித்திருப்பார்கள். ஆனால் சக்கரவர்த்தி சிரிக்கவில்லை.


அவன் அப்படித்தான்... தம்பின் நகைச்சுவைக்கு மட்டும் சிரிக்க கூடாது என்று யாரோ சத்தியம் வாங்கியது போல சிரிக்கவே மாட்டான்.


அதுவே மற்றவர்கள் சிறிதாக நகைச்சுவை.செய்தாலும் அதை தன் பங்கிற்கு பெரிதாக்கி கூடவே சேர்ந்து சிரிப்பான்.


"நம்ம ஜோக் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கு..." என்று சாகித்யன் அடிக்கடி தன் மனதுக்குள் புலம்பிக் கொள்வான்.


"உன் தம்பி என்ன கிண்டல் பண்ணி சிரிக்கிறான். இனி அவன் காமெடி பண்ணா நீ சிரிக்க கூடாது." என்று பத்து வயது அமுதரசி கூறியதாலே இன்று வரை சக்கரவர்த்தி சாகித்யன் செய்யும் எதற்கும் சிரிக்கவில்லை என்று அவனுக்கு தெரிய வந்தால் அவன் மனநிலை என்னவாகுமோ?



சக்கரவர்த்தி உறுதி தெரியாமல் சாகித்யன் அண்ணனிடம் தனது கலகலப்பு பேச்சை அள்ளி வீசிக் கொண்டு தான் இருக்கின்றான். ஆனால் அதற்கான பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.


சகோதரர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு பயணிக்க அப்பொழுது காரில் ஏற்பட்ட சிறு பழுது காரணமாக வண்டி நின்றது.


"இது ஒரு டப்பா காரு எப்ப பாரு ரிப்பேர் ஆகுது....." என்று அண்ணனின் புதிய காரை குறை கூற, தம்பியின் வார்த்தையை கண்டு கொள்ளாதவனாக, காருக்கு என்னவென்று இறங்கி பார்த்தான்.


பிரச்சனை என்வென்று கண்டுபிடித்து சரி செய்துவிட்டு நிமிர, அவர்கள் காதில் பலவீனமான ஒரு முனங்கள் சத்தம் கேட்டது.


தவறாக ஏதோ நடைபெறுகின்றது என்ற உள் உணர்வில் இருவரும் சத்தம் வந்த திசையில் சென்று பார்க்கள, அங்கு கை கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமியிடம் ஒருவன் அத்துமீறி கொண்டு இருந்தான்.


அதைப் பார்த்ததும் சகோதரர்கள் இருவருக்கும் கோபம் உச்சத்தை தொட்டது.


வேகமாக அங்கு சென்று இருவரும் அந்த மனித மிருகத்தை அடித்து நொறுக்கி விட்டு சிறுமியை காப்பாற்றினர்.


தவறு நடப்பதற்கு முன்பு சிறுமியை காப்பாற்றிய இருந்தாலும், அச்சிறு பெண்ணை ஆடை நெகிழ்ந்த நிலையில் பார்த்ததிலிருந்து சக்கரவர்த்தியால் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.


நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது. அதை காவல்துறையில் இருக்கும் அவனும் கண்டு கொண்டு தான் இருக்கின்றான்.


குற்றம் செய்யும் ஒவ்வொருவருக்கும் அவர்களை காப்பாற்ற அரசியல், அதிகாரம், பணம் படைத்த யாரோ ஒருவர் இருக்க, சட்டத்திலிருந்து எளிதாக தப்பித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.


அதையெல்லாம் பார்க்கும் பொழுது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கி விட முடியாதா என்று அவன் மனமும் கோபம் கொள்ளத்தான் செய்யும்.

அதிரடியாக எதையும் செய்து குற்றவாளிக்கு தண்டணை வழங்க அவன் ஒன்றும் சினிமாக்கள் காட்டும் நாயகன் அல்லவே. அவனும் சாதாரண மாதச் சம்பளம் வாங்கும் உயர்மட்ட அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட காவலன் மட்டுமே.


தன்னிடம் விசாரணைக்கு வரும் வழக்குகளில் மட்டும் தன்னால் முடிந்த அளவில் போராடி நீதி கிடைக்க அனைத்தையும் செய்வான்.


அப்படியும் சில நேரம் சாட்சிகள் விலைபோய் வழக்குகள் தோற்பதுண்டு. சிலர் குற்றவளிகளுக்கு பயந்து வழக்கை திரும்ப பெற்றதும் உண்டு. அத்தகைய சூழ்நிலையில் அவனாலும் ஒன்று செய்ய முடியாது.


அவன நேர்மையானவன் என்பதற்காக ஒட்டுமொத்த காவல் துறையையும் சீர்திருத்த முடியாதே. அனைத்து காவலர்களும் அவன் ஒருவனின் கட்டுப்பாட்டில் இல்லையே. இதை தன் அண்ணனிடம் கூறினால்


"பிறகு என்ன _____க்கு போலீஸ் ஆகனும்னு ஆசைப்பட்ட..." என்று சக்கரவர்த்ததி வாயிலிருந்து வரும் வார்த்தைகளை யார் கேட்பது என்ற எண்ணத்தில் வார்த்தைகளை தனது மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.


"நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது, இந்த பொறுக்கி வெளியே வரகூடாது." என்று சக்கரவர்த்தி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே காவல் நிலையத்தில் போன் விடாமல் அடிக்க, அதில் வரப்போகும் செய்தி என்னவென்று எடுத்து பேசாமலேயே இருவருக்கும் புரிந்தது.


"டேய் அண்ணா தயவு செஞ்சு ரவ்வுண்ஸ் போயிருக்கிற மத்த போலீஸ் வரும் முன்ன நீ வெளியே போயிடு.

இவன நான் இந்த அடி அடிச்சுருக்கேன்னு தெரிஞ்சாலே விசாரணை கமிஷன் அது இதுன்னு என் மேல ஆக்ஷன் பெருச இருக்கும்.

இதுல நீ வந்து இவன அடிச்சது தெரிஞ்சா என் வேலைாபோயிட்டும். உன் மேலயும் கேஸ் வரும்." என்று அண்ணனிடம் மன்றாட, அவனை அலட்சியமாக பார்த்த சக்கரவர்த்தி


"என்ன காப்பாத்திக்க எனக்கு தெரியும்... அப்புறம் உன் வேலை போன போகட்டும்... உன்னால் அந்த வேலையிலிருந்து ஒன்னையும் புடுங்க முடியல, இதுல நீ இந்த வேலையில இருந்தா என்ன... இல்லாட்டி என்ன..." என்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி கூறிய அண்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சாகித்யனுக்கு நியாயமாகக் கோபம் வந்திருக்க வேண்டும்.


தன்னுடைய மேல் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் இதை விட அதிகமாகவே அவன் இந்த நான்கு வருடங்களில் பேச்சுகள் வாங்கி இருக்கின்றான்,


அவர்களிடம் பேச்சு வாங்கி பழகிக் கொண்டவனுக்கு அண்ணனின் வார்த்தைகள் எதுவும் எளிதாக காயப்படுத்தி விடவில்லை. ஆனாலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் வழக்கம்போல அவரிடம் தோன்றியது.


சாகித்யன் முகத்தை வைத்தே எண்ணத்தைப் புரிந்துகொண்ட சக்கரவர்த்தி தம்பியை காயப்படுத்தி விட்டோமோ என்று வருந்தினாலும் மன்னிப்பு கேட்கவில்லை. மன்னிப்பு கேட்டால் அவன் சக்ரவர்த்தி இல்லயே.


"ஓகே எப்படியும் இவன வெளியே விட தான் போறேன். நீ இவன வெளிய வச்சு கவனிச்சிக்க. எந்த நாய் வந்து இந்த நாயை யார் அடிச்சது என்று கேட்டா உன்ன கைய காட்டுறேன். அந்த நாயையும் சேர்த்து நான் பாத்துக்கோ." என்று கோபமாக சாகித்யன் சக்கரவர்த்தியிடம் கூற, அவனும் அங்கிருந்து வெளியேறினார்.

சக்கரவர்த்தி வெளியேறியதும் சாகித்யன் அருகில் வந்த கான்ஸ்டபிள்

"சார் அக்யூஸ்ட்ட உங்க அண்ண அடிச்சதால ஏதாவது பிரச்சினை வருமா..." என்று அவ்வளவு நேரம் சக்கரவர்த்தியின் ஆவேசத்தில் பயந்து போய் நின்றவன் இப்பொழுது அவன் சென்று விட்ட தைரியத்தில் கேட்க


"வந்தாலும் அவன் பார்த்துப்பான்... நீங்க போங்க. அப்புறம் யார் கிட்டயும் நடந்ததைப் பற்றி சொல்லவேண்டாம்." என்று கூறி விட்டு தன் தலையை இரு கைகளால் தாங்கி பிடித்த வண்ணம் அமர்ந்துவிட்டான்.


சக்கரவர்த்தி சாகித்யன் இருவருக்கும் பதினான்கு மாதமே வித்தியாசம் என்பதால் அண்ணன் தம்பி என்பதை தாண்டி நல்ல நண்பர்கள் போல பழகி வந்தனர்.


சக்ரவர்த்தி எப்பொழுதும் சிறு குற்றம் என்றால் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழும் கோபக்காரன். இதனால் அவனுக்கு நட்பு வட்டாரம் என்பது மிக மிகக் குறைவு என்பதை விட இல்லை என்றே சொல்லலாம்.

அதே சமயம் சாகித்யன் தவறு என்றால் அதை யார் மூலம் தீர்க்க வேண்டும் என்று ஆராய்ந்து அறிந்து செயல்படும் பொறுமைசாலி. அவன் புன்னகை முகமே அவனுக்கு நண்பர்கள் வட்டத்தை அதிகரித்தது.

சாகித்யன் தன் அண்ணன் சக்கரவர்த்தியும் அவன் நட்பு வட்டாரத்தில் கஷ்டப்பட்டே சேர்த்துக்கொண்டான்.

படித்து முடித்த சக்கரவர்த்தி தன் தந்தையின் வழிகாட்டுதலின்படி அவர் தொழிலை எடுத்து நடத்தியதோடு மட்டுமல்லாமல், தனக்கென்று பெங்களூரில் சாஃப்ட்வேர் நிறுவனத்தையும், சென்னையில் சிறிய அளவில் கணினி உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றையும் உருவாக்கி அதை திறம்பட நடத்திக் கொண்டிருக்கின்றான்.


அதேபோல் சாகித்யன் தனது(?) விருப்பத்திற்கு ஏற்ப காவல்துறையை தேர்ந்தெடுத்தான்.


அவன் நேர்மையான அதிகாரியாக இருந்த பொழுதிலும் அவனை சுற்றி இருப்பவர்கள் நேர்மையாக இல்லாததே அவனுக்கு பெருத்த தலைவலியாக இருந்தது.


யாருடைய தலையீடும் இல்லாமல் இன்று வரை ஒரு வழக்கையும் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை என்பதே உண்மை. அதற்காக பயந்து பின் வாங்கினான் என்று சொல்ல முடியாது. எதிர்த்து நின்று நியாயத்திற்காக போராட தூக்கியடிக்கப்பட்டான்.


இப்படி அவன் நான்கு வருடங்களில் ஆறு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு இப்பொழுது சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கின்றான்.


இதில் இரண்டு நாளுக்கு முன்பு 8 வயது சிறுமி காணாமல் போன வழக்கு இவன் கைக்கு வந்திருக்க, இதோ எதிர்பாராதவிதமாக அந்தப் பெண்ணுடன் சேர்த்து மற்றொரு சிறுமியையும் கடத்திருந்த குற்றவாளியையும் கண்டுபிடித்து கைது செய்து இருந்தான்.


அவன்அ விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது வந்த சக்கரவர்த்தி நேற்றிரவு தான் காப்பாற்றிய சிறுமியின் நிலையை எண்ணி தனது மொத்த கோபத்தையும் அவனிடம் காட்டிவிட்டு சென்றிருந்தான்.


"எனக்கு இந்த வேலை தேவை தானா..." என்று வழக்கம் போல சிந்தித்த சாகித்யன்


"சக்தி உனக்கு போலீஸ் யூனிபார்ம் நல்லா இருக்கும் நீங்க போலீஸ் வேலைக்கு போறீங்களா?" என்று கன்னத்தில் குழி விழ தன்னிடம் கூறியளின் நினைவில் தனது எதிர்மறையான சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு


"உனக்காக தான் நான் போலீஸ் ஆனேன். உன்னுடைய ஆசைப்படி நிச்சயம் ஒரு நேர்மையான போலீஸா இருப்பேன், அதே சமயத்தில் என்னுடைய வேலையை திறமையா செஞ்சும் காட்டுவேன்." என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

______________________________________________


தனது அறையில் ஒய்வாக இருந்த அமுதரசிக்கு நேரம் செல்லவே இல்லை. கீழே சென்று பெற்றவர்களுடன் பேசலாம் என்றால் அன்னை தன் திருமணத்தை பற்றி பேசுவரோ என்ற அச்சம்.

சரி அறையிலே இருக்கலாம் என்றால் தொடர்ந்து செல்போன் உபயோகிக்க முடியாதபடி கை வலி தடுத்தது. எவ்வளவு நேரம் சுவரை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்.

தன் அறையை ஒட்டியிருந்த பால்கனிக்கு வந்து நின்றவள் பார்வை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்தது.

கொழுக்மொழுக் என்று இருந்த இரண்டு வயது மதிக்க பெண் குழந்தையை பத்து வயது சிறுவன் கையில் வைத்துக் கொண்டு அவனை சுற்றியிருந்த ஆறு சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.


அதில் ஒருவன் அந்த குழந்தையின் கன்னத்தை தொட வர, அவன் கையை தட்டிவிட்ட அந்த சிறுவன் கோபமாக எதோ கூறிவிட்டு அந்த பெண் குழந்தையுடன் சென்று விட்டான்.


நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த அமுதரசி தன் சிறு வயது நினைவு வந்தவளாக தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.


தன் உடைகளுக்கு நடுவே இருந்த புகைபடத்தை கையில் எடுத்து பார்த்தவள் மனம் கலங்கிப் போனது.


"உனக்கு ஏன் என்ன பிடிக்கல..." என்று வாய்விட்டு கூறியவள்


"நீ என்ன என்னை பிடிக்கலன்னு சொல்றது. நானே சொல்றேன் எனக்கு உன்ன பிடிக்கல." என்று கூறிய அமுதரசி அந்த புகைபடத்தை தூக்கி எறிய அது அவள் துணிகளுக்கிடையே தஞ்சமடைந்தது.


மலரும்...
 
Last edited:
மலர் 4


வீடு வந்து சேரும் வரை சக்கரவர்த்தியின் மனது ஒரு நிலையில் இல்லை.


சிறு வயதிலிருந்தே கண்டிப்பு நிறைந்த தந்தையின் அறிவுரை, ஒழுக்கத்தை மட்டும் போதிக்கும் தாயின் கவனிப்பு என வளர்ந்தவனுக்கு ஒழுக்கம் என்பது உயிருக்கும் மேலான ஒன்றாக இருந்தது.


அப்படிப்பட்டவன் ஒழுக்கக்கேடான செயலை எப்பொழுதும் பொறுத்துக் கொள்வது கிடையாது.


தான் குற்றவாளியை அடித்தது தவறு என்று புத்திக்கு தெரிந்தாலும், தம்பி மூலம் கேள்விப்பட்ட அந்த கயவனின் பின்புலத்தை எண்ணி பார்க்கும் பொழுது அவனை கொல்லாமல் விட்டதே தவறு என்று நினைத்துக் கொண்டான்.


சிந்தனை படிந்த முகத்துடனும், கசங்கிய உடையுடன் வந்தவனை பார்த்து யோசனைக்குள்ளான சக்கரவர்த்தியின் தாய் மணிமேகலை


"என்ன ஆச்சு சக்தி?" என்று கேட்க தாயைக் கண்டதும் தனது உணர்வுகளை மறைத்துக்கொண்டு


"நத்திங் மாம் ஜஸ்ட் என்னுடைய பிசினஸ் பத்தியே யோசிச்சிட்டு இருந்தேன்." என்று கூற, மகன் கூறுவதில் உண்மையில்லை என நொடியில் கண்டு கொண்டார்.


சாகித்யன் என்றுமே அம்மா பிள்ளை. காலையில் எழுந்ததில் இருந்து தூங்க போவது வரை நடந்த அனைத்தையும் அன்னையிடம் கூறாமல் அவன் நாள் முடியாது. ஆனால் சக்கரவர்த்தி தன்னிடம் சொல்லக்கூடிய விஷயமாக இருந்தால் மட்டுமே சொல்லுவான் என்று அனுபவத்தில் புரிந்து கொண்டவராக மகனிடம் வேறு எதுவும் கேட்கவில்லை.


"சரி இரு காபி கொண்டு வரேன்.... " என்று கூறிவிட்டு செல்ல, தனக்கு இருக்கும் தலைவலிக்கு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த சக்கரவர்த்தியும் மறுத்துக் கூறவில்லை.


காபி குடித்து முடித்து விட்டு தனது அறைக்கு வந்த சக்கரவர்த்தி எண்ணங்கள் எங்கெங்கோ பயணித்து விட்டு இறுதியாக ஒருத்தியின் நியாபகத்தை அவனுள் கொண்டு வந்தது.


தன்னை தொந்தரவு செய்வதையே முக்கிய பணியாக வைத்திருந்தவளை நினைத்து அவன் மனது லேசானது.


தனது மன பாரங்களுக்கும், அதில் இருக்கும் கோபத்திற்கும் தீர்வு அவள் ஒருத்தியே என்பது சக்கரவர்த்திக்கு புரியாமல் இல்லை.


கை விட்டு போனதை எட்டி பிடிக்கும் முயற்சியில் அடுத்த படி நோக்கி நகர முடிவு செய்தான்.


____________________________________________


"ஹாப்பி பர்த்டே அமுது..." என வாழ்த்து கூறிய தாய் தந்தை இருவரின் காலை தொட்டு வணங்கிய அமுதரசி, புன்னகையுடன் தனது அடுத்த வேலையை கவனிக்க சென்றாள்.


எத்தனையோ பிள்ளைகள் பிறந்தநாள் என்றால் ஆர்ப்பாட்டமாக கொண்டாட விருப்பப்பட; அமுதரசி அப்படி எதையும் இதுவரை செய்ததில்லை.


அவளுக்கு நினைவு தெரிந்ததிலிருந்தே பிறந்தநாள் என்றால் புது துணி உடுத்துவது, பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு கோவிலுக்கு செல்வது, அன்று தன் தாய் செய்து தரும் உணவை உண்பது என அவளது பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்துவிடும்.


சிறு வயதில் அவர்களிடம் ஆடம்பரமாக செலவு செய்ய வசதி இல்லை. இப்போது வசதி வந்த பின் அவற்றில் அமுதரசி மனம் லயிக்கவில்லை.


பெற்றவர்கள் கூட பணம் வந்த பிறகு ஒரே மகளின் பிறந்தநாளை எப்படி சிறப்பிக்கலாம் என்று யோசிக்க, அவளோ இதுவும் வருடத்தில் ஒரு நாள் தான் என்பது போல கடந்துவிடுவாள்.


அமுதரசின் நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாருக்கும் அவள் பிறந்தநாள் என்ன என்பதே தெரியாது.


வழக்கம் போலவே தாய் தந்தையுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு வந்த அமுதரசி கல்லூரிக்கு செல்ல தயாரானாள்.


ஏற்கனவே கையில் அடிபட்டு இருந்ததால் அவள் மூன்று நாளாக கல்லூரிக்கு செல்லவில்லை.


"அமுது காயம் கூட இன்னும் சரியாகல... இப்போ நீ கையில கட்டோட காலேஜுக்கு போகணுமா..." என்று மாணிக்கம் தன் மகளை தலையை தடவிய படி பாசமாக கேட்க


"அப்பா ப்ளீஸ் இது ஒன்னும் அவ்வளவு பெரிய காயம் இல்ல... சின்னதா ரெண்டு தையல்... இதுக்கு போய் வாரக்கணக்கில் நான் லீவ் போட்டா சிரிக்கப் போறாங்க." என்று ஒரு வழியாக தந்தையிடம் அனுமதி வாங்கி இருக்க, அடுத்து அவள் தாய்


"அம்மு குட்டி...." என ஆரம்பிக்கும் முன்பு


"இப்ப தான் அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கி முடிச்சிருக்கேன். அப்புறம் நீயும் ஆரம்பிக்காத... இன்னும் த்ரீ டூ வீக்ஸ்ல கேம்பஸ் இன்டர்வியூ, அடுத்து கொஞ்ச நாள்லயே செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்க போகுது.
அதுக்குள்ள முடித்துக் கொடுக்க வேண்டிய வேலை வேற எனக்கு நிறைய இருக்குது.

இப்போ போய் நான் லீவு எடுத்தா என்னால என்னுடைய படிப்பில் கவனம் செலுத்த முடியாது ம்மா...என்ன நம்பி ரெண்டு ஜீவன் இருக்கு மறந்துடாதீங்க..." என்று தன் தாயிடமும் வேண்டுகோள் வைத்து கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள்.


கல்லூரிக்கு வந்த வந்ததுமே அமுதரசியின் தோழிகள் கார்த்திகா நளினா இருவரும் அவளை பிடித்துக் கொண்டனர்..


"ஹாப்பி பர்த்டே மை டியர்...
அமுது உனக்கு பொறந்த டே....
இது தான் எங்க ட்ரீட்டா..."

இருவரும் தங்கள் வாழ்த்தை தெரிவிக்கும் முன்பு அமுதரசி தன் கையில் இருந்த கேரட் அல்வாவை இருவர் முன் நீட்டியபடி ராகமாக பாடிக் கொள்ள, அவளை பிடித்திருந்த நளினா


"அடியே டூ டே உனக்கு தான் பொறந்த டே, நாங்க தாண்டி உனக்கு ஆப்பி பொறந்த டே விஷ் பண்ணனும்..." என்று நளினா மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு கூற, அவரின் மூக்கை பிடித்து ஆட்டிய அமுதரசி


"நாலு வருஷமா விகேக் மாதிரி ட்ரை பண்ற முயற்சியில தமிழையும் இங்கிலீஷ்சையும் சேர்த்து கொல பண்ணி விஷ் பண்ணுறவ தான நீ.

இந்த வருசம் மட்டும் என்ன மாத்திட போற, அதான் உனக்கு கஷ்டம் வைக்காமல் நானே சொல்லிட்டேன்." என்று புன்னகையுடன் கூற, அமுதரசியின் ஜடையை பற்றி இழுத்த கார்த்திகா


"வீட்ல புள்ள பூச்சி மாதிரி அமைதியா இருக்கிறது ஆனால் வெளியே வந்துட்ட என்ன ஆட்ட ஆட்டுற.

இவ இப்படி பண்ணுவான்னு யார் கிட்டயாவது சொன்னா நம்புவார்களா?" என்று கார்த்திகா தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூற, அமுதரசி அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள்.


கார்த்திகா கூறுவதும் உண்மையே அமுதரசி வீட்டில் எந்த அளவுக்கு அழுத்தமாக இருக்கின்றாளோ அதே அளவிற்கு தோழிகள் இருவரிடமும் ஆர்ப்பாட்டமாக இருப்பாள்.


அதைப்போல வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் அவளைப் போல ஒரு அமைதியான மாணவியை பார்க்க முடியாது என்று அனைத்து பேராசிரியர்களும் கூறு அளவிற்கு அமுதரசி பாடத்தில் மட்டுமே கவனமாக இருப்பாள்.


வகுப்பு நடைபெறும் போது ஏதாவது சேட்டை செய்து தோழிகள் இருவரையும் சிரிக்க வைத்துவிட்டு அமுதரசி சிரிக்காமல் இருக்க, கார்த்திகா நளினா இருவரும் மாட்டிக் கொள்வார்கள்.


"இந்த சிரிச்சு ஏமாத்துற வேலையை மட்டும் எங்கிட்ட வச்சுக்காத.. எப்பவும் பொறந்த நாளுக்கு எதுவுமே வாங்கிக் கொடுக்காம இருக்கிற மாதிரி இந்த வருஷம் முடியாது.

இந்த தடவை கண்டிப்பா எங்களுக்கு ட்ரீட் தந்தே ஆகணும்." என்று இருவரும் கட்டாயப்படுத்த, அமுதரசி தோழியின் வேண்டுகோளுக்கு ஒத்துக்கொண்டாள்.


"ஓகே வாங்க... இன்னைக்கு மதியம் உங்களுக்கு என்ன வேணுமோ கேண்டீன்ல வாங்கிக்கோங்க... அதுக்கு நான் பணம் கொடுக்கிறேன்." என்று கூற


"ஐயையோ..." என்று அலறிய நளினா


"கேண்டீன் சாப்பாடு, காஞ்சு போன சமோசா, நேத்து சுட்ட வட, இது எல்லாம் எப்போ உனக்கு ட்ரீட் லிஸ்டுல சேர்த்தாங்க...

இன்னைக்கு எங்கள ### ஹோட்டலுக்கு கூட்டிட்டு போ." என்று நளினா சொல்ல, அதை ஆமோதித்த கார்த்திகாவும்


"ஆமா எனக்கும் கேண்டீன் சாப்பாடு எல்லாம் சாப்பிட முடியாது...." என்று கூற, தன் நெஞ்சில் கையை வைத்த அமுதரசி


"அடிப்பாவிகளா நீங்க சொல்ற அந்த ஹோட்டல்ல நாம மூணு பேரும் சாப்பிட்டு வந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா? அதுவும் இல்லாமல் அது இங்க இருந்து அரை மணி நேர தூரத்தில் இருக்கு.

காலேஜ் முடிஞ்சதும் அங்க போய் சாப்பிட்டு வீட்டுக்குப் போகணும்னா லேட் ஆகிடும்." என்று அமுதரசி கூறிக் கொண்டிருக்கும் போதே அவளை தன் புறம் திருப்பிய நளினா


"நாங்க உன்ன மதுரைக்கு போய் பன் பரோட்டா, பொரிச்ச பரோட்டா, மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா வாங்கிட்டு வர சொன்னோமா, இல்ல திருநெல்வேலிக்கு போய் அல்வா வாங்கிட்டு வர சொன்னோமா.

ஜஸ்ட் பக்கத்துல இருக்க ஹோட்டல்ல சாப்பிட கூட்டிப் போக சொன்னா ரெம்பத் தான் பிகு பண்ணிக்கிற. உனக்கு கூட்டிட்டு போக விருப்பமில்லன்னா அத சொல்லு. உன்கிட்ட பேசி வேஸ்டு நான் உங்க அப்பாகிட்ட பேசிக்கிறேன்." என்று அமுதரசி கையிலிருந்து போனை பிடுங்கிய நளினா, அவள் தந்தைக்கு அழைத்தாள்.


"அப்பா நான் உங்க ஒரே ஒரு பொண்ணுக்கு இருக்கிற ஒரே ஒரு பெஸ்ட் பிரண்டு பேசுறேன். தயவு செஞ்சு இன்னைக்கு உங்க பொண்ண எங்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுக்க சொல்லுங்க." என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே அவள் கையில் இருந்து போனை பறித்த கார்த்திகா


"அப்பா நான் உங்க ஒரே ஒரு பொண்ணோட இன்னொரு பிரெண்ட் பேசுறேன். நாங்களெல்லாம் ட்ரீட் சாப்பிட்டு பர்த்டே கொண்டாடி வருஷக்கணக்கா ஆகுது ப்பா.

உங்க பொண்ண எங்க குரூப்ல சேர்த்த நாளிலிருந்து கேண்டில் விக்கிற சமோசாவையும், முந்தின நாள் சுட்ட வடையையும் மட்டுமே ட்ரீட்ன்னு நம்பி எங்க நாக்கு செத்துப் போயி கிடக்குது.

எங்க நாக்குக்கு உயிர் கொடுக்கவாச்சும் அவளை ஹோட்டல்க்கு கூட்டிட்டு போய் ட்ரீட் கொடுக்க சொல்லுங்க ப்பா." என்று கார்த்திகா நளினி இருவரும் மாறி மாறி மாணிக்கத்திடம் பேச, அவர்கள் இருவரையும் அமுதரசி முறைத்துக் கொண்டிருந்தாள்.


இருவரும் பேசி முடித்ததும் அலைபேசியை அமுதரசியிடம் கொடுக்க மாணிக்கம் அவளிடம்


"இன்னைக்கு ஒரு நாளு தான் அமுது. நீ அவங்கள கூட்டிட்டு போயிட்டு வா. ஒரு வேளை லேட் ஆயிடுச்சின்னா அப்பாவுக்கு போன் பண்ணு. நான் உன்ன பிக்கப் பண்ண வரேன்.

உன்னுடைய அக்கவுண்ட்ல பணம் போடுறேன், ஏடிஎம்ல காட்ல எடுத்துக்கோ." என்று அவளுக்கு அனுமதியளித்தார்.


வகுப்பு நேரம் முடியும் வரை தோழிகள் இருவரையும் முறைத்து பார்த்தபடியே அமுதரசி இருந்தாள்.

"இப்ப என்னடி உன் பிரச்சனை... அதான் அப்பாவே ஹோட்டல் போயிட்டு வான்னு சொல்லிட்டாங்க தானே. பின்ன எதுக்கு கண்ணகி மாதிரி முறைச்சு முறைச்சு பார்த்துக்கிட்டு இருக்கிற." என்று நளினா கேட்க,


"இப்படி வேண்டா வெறுப்பா எங்கள நீ.ஹோட்டலுக்கு கூட்டிட்டு போக வேண்டாம்... வாடி நாம போகலாம்." என்று சொல்லி நளினாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கார்த்திகா நடக்க, அமுதரசி இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.


சில அடிகள் நடந்த கார்த்திகா திரும்பி அமுதரசியை பார்க்க அவளோ அதே இடத்திலிருந்து ஒரு அடி கூட அசையாமல் அப்படியே நின்றாள். அவளிடம் வேகமாக வந்த கார்த்திகா


"அடிப்பாவி உன் பிரண்டு நாங்க கோபமா போறோம். எங்கள சமாதானப்படுத்தணும்னு உனக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா." என்று சத்தமாக புலம்ப தோழியின் புலம்பலில் வாய்விட்டு சிரித்த அமுதரசி


"டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருன்னு உனக்கு தெரியும்... நாம யாருன்னு ஊருக்கே தெரியும்...அப்புறம் எதுக்கு தேவையில்லாம இந்த வெட்டி வீராப்பு.


சரி வாங்க போகலாம் ஆனா இதுவே கடைசியாக இருக்கட்டும். எனக்கு இப்படி வெளியே சுத்துறது சுத்தமா பிடிக்காது." என்று கண்டிப்புடன் கூறி விட்டு அவர்களுடன் சென்றார்.


ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த தோழிகள் மூவரும் தங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க,


"அது என்னடி அடிக்கடி எங்கப்பா கிட்ட 'உங்க ஒரே ஒரு பொண்ணோட' அப்படின்னு பேச ஆரம்பிக்கிறீங்க." என்று தனக்கு எப்போதும் தோன்றும் சந்தேகத்தை அமுதரசி கேட்டாள்.


தனது வாயிலிருந்த பிரியாணியை பாதி உள்ளே தள்ளி, மீதியை வெளியில் வைத்தபடி அமுதரசி நிமிர்ந்து பார்த்த கார்த்திகா கஷ்டப்பட்டு அதை முழுவதும் உள்ளே தள்ளி விட்டு,


"அது வேற ஒன்னும் இல்ல... எங்க ரெண்டு பேரையும் பஸ்ட் டைம் உன் கூட பார்க்கும் போது அப்பா தான் 'எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு அவளை நீங்க பத்திரமா பாத்துக்கோங்கம்மா...' அப்படின்னு சொன்னாங்க.

சொன்ன அவரு மறந்திருக்கலாம். ஆனா கேட்ட நாங்க மறப்போமா.. அதான் அன்னையிலிருந்து அவர் சொன்னத அவருக்கே ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கோம்." என்றவள் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்த அமுதரசி


"உனக்கு கிண்டல் பண்ண என் அப்பா தான் கிடைச்சாரா." என அமுதரசி கேட்க, வலி தாங்க முடியாத கார்த்திகா அவள் கையை தட்டி விட, உணவு மேடையிலிருந்த சிக்கன் க்ரேவி தவறி அமுதரசி ஆடையின் மேல் விழுந்தது.


"அச்சச்சோ என் புது ட்ரெஸ்." என்று பதறி எழுந்த அமுதரசி


"இருங்கடி புது ட்ரெஸ்ல க்ரேவி இப்படியே இருந்தா அந்த கறை அப்புறம் போகாது. நான் வாஷ் பண்ணிட்டு வரேன்." என்று எழுந்து கொள்ள,


"தனிய எங்க போற நாங்களும் உன் கூட வரோம்." என்று எழுந்த தோழிகள் இருவரையும் தடுத்துவிட்டு அமுதரசி தனியே வந்தாள்.


ஆடையில் ஒட்டியிருந்த கறையை ஓரளவு சரி செய்த பின்பு வெளியே வந்தவள் அங்கிருந்த ஊஞ்சல் ஒன்றை பார்க்க, அவள் கால்கள் அவளை அறியாமலே அதை நோக்கி சென்றது.


"சக்தி என்ன ஊஞ்சல்ல தூக்கி உட்கார வை." என்று ஆறு வயது அமுதரசி சக்கரவர்த்தியிடம் கேட்க


"ஏய் என்ன கொழுப்பா உனக்கு... நீ தான் அவனுக்கு பேர் வச்ச மாதிரி சக்தின்னு கூப்பிடுற. ஒழுங்கு மரியாதையா அத்தான்னு சொல்லு." என்று மணிமேகலை கண்டிப்புடன் கூற, ஊஞ்சலின் மீது உள்ள ஆர்வத்திலும், அத்தை மீது கொண்ட பயத்திலும்


"சரி அத்தை இனி அத்தான்னு சொல்றேன்." என்று கூறியதும் மணிமேகலை அங்கிருந்து சென்றுவிட, அதன் பிறகு அத்தை மகனிடம்


"ப்ளீஸ் அத்தான் என்ன ஊஞ்சல்ல உக்கார வைங்களேன்." என்று கண்களை சுருக்கி கெஞ்ச, அதில் புன்னகைத்த சக்கரவர்த்தி அவளை தூக்கி அந்த மர ஊஞ்சலின் மீது உட்கார வைத்து, இதமாக ஆட்டி விட ஆரம்பித்தாள். ஊஞ்சலின் மீது உட்கார்ந்ததும்


"சக்தி அந்த பக்கத்து வீட்டு சூறாவளி பாட்டி இருக்காங்கல்ல, அவங்க சொன்னாங்க... நான் வளர்ந்த பிறகு நீ இப்படி எல்லாம் என்னை ஊஞ்சல உட்கார வைச்சு ஆட்டி விட மாட்டியாம்.
சக்தி (சாகித்யன்) தான் ஆட்டணும்னு சொல்றாங்க." என்று அவர் நேற்று தன்னிடம் கூறியதை கூறினாள்.


ஊஞ்சலில் ஏற்றிவிடும் காரியம் ஆகும் வரை அத்தான் என்று அழைத்துவிட்டு, ஊஞ்சலில் உட்கார்ந்து பிறகு அவள் பேச்சில் அத்தான் என்று அழைப்பு காணாமல் போனதை முதலிலேயே உணர்ந்திருந்தாலும் அதை அவன் கண்டு கொள்ளவில்லை.


ஏனோ அவள் பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே சக்கரவர்த்தி, சாகித்யன் இருவரையும் அத்தான் என்று அழைத்ததில்லை.


வீட்டில் மற்றவர்கள் அனைவரும் முறை சொல்லி அழைக்க கூறினாலும் அமுதரசிக்கு மட்டும் அவர்கள் சக்தி தான்.


மற்றவர்கள் எவ்வளவோ எடுத்து கூறினாலும் அவள் அழைக்கும் விதத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யாராவது கட்டாயப்படுத்தினாலும்

"நான் சக்தின்னு தான் கூப்பிடுவேன். என்னல எல்லாம் மாத்திக்க முடியாது." என்று இருவரிடமும் கூறிச்செல்லும் அவள் சிறு பிள்ளை தனத்தை எண்ணி சிரித்தவன்,


"இப்ப என்ன உனக்கு நான் எப்பவும் இதே மாதிரி ஊஞ்சல் ஆட்டி விடுணுமா... சொல்லு..." என்று சக்கரவர்த்தி கேட்க, சில நிமிடம் யோசித்த அமுதரசி


"எப்பவும் இதே மாதிரி ஆட்டி விட வேண்டாம். கொஞ்சம் வேற மாதிரியும் ஆட்டிவிடு. அப்புறம் நான் கொஞ்சம் பெரிய பொண்ணா வளர்ந்து தனியா ஊஞ்சலில ஏறி உட்கார்ந்து ஆட முடியுதோ அதுவரைக்கும் நீ ஆட்டிவிட்டா போதும்." என்று கூறியவளின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்தவன்


"போடி இனி உனக்கு ஊஞ்சல் ஆட்டி விட நான் வர மாட்டேன்...." என்று பொய் கோபம் கொண்டு செல்ல, ஊஞ்சலில் இருந்து குதித்து இறங்கிய அமுதரசி


"போடா டேய் மாங்கா மண்டையா... நீயா இல்லாட்டி என்ன, அதான் இன்னோரு தேங்கா மண்டை இருக்கானே அவன ஆட்ட சொல்லுவேன்.
அவன் வராட்டி நான் எங்க அப்பாவை ஆட்டி விட சொல்லிக்கிறேன்." என்று வேகமாக ஓட,


"கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு நான் தான் ஊஞ்சல் ஆட்டணும். அப்போ உங்க அப்பா எல்லாம் வர மாட்டாங்க." என்று சிரித்த முகமாக கூற, அவனை பார்த்து திரும்பிய அமுதரசி அழகு காட்டி,


"நான் தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேனே. அதுக்கு தான் என் தேங்கா மண்டை சக்தி இருக்கானே." என்று விவரம் புரியாத வயதில் தான் பேசிய வார்த்தையின் அர்த்தம் அறியாது அமுதரசி கூறி விட்டு சக்கரவர்த்தி முகத்தை பார்க்காமல் சிட்டாகப் பறந்தாள்.


ஓடி வந்தவள் சாகித்யன் மீது மேதி அதே வேகத்தில் கீழே விழ, சாகித்யனும் அவளுடன் கீழே விழுந்திருந்தான்.


அமுதரசியை தூக்கி நிறுத்தி உடையில் இருந்த மண்ணை தட்டி விட்டவன் தன்னையும் சரி செய்து கொண்டான்.


"பாத்து வர மாட்டியா... எங்கயாச்சும் அடி பட்டுருக்கா." என்று அமுதரசியை ஆராய்ந்தபடி சாகித்யன் கேட்க,


"நீ எனக்கு ஊஞ்சல் ஆட்டி விடுவியா சக்தி." என்று சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்டவள் முகத்தை பார்க்க, அதில் எனக்கு பதில் வேண்டும் என்ற பாவமே இருந்தது.


"சரி வா ஆட்டி விடுறேன்." என்று சாகித்யன் அழைக்க, அவனுடன் செல்லாமல் அதே இடத்தில் நின்ற அமுதரசி


"எப்பவும் எனக்கு மட்டும் ஊஞ்சல் ஆட்டுவியா." என்று அடுத்த கேள்வி கேட்க,


"வாழ்க முழுக்க ஆட்டுறேன் போதுமா." என்று சிரித்துக் கொண்டே சாகித்யன் கூற, அவன் உயரத்திற்கு எம்பி கன்னத்தில் முத்தம் பதித்த அமுதரசி


"அப்போ நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று கூறிவிட்டு ஓடிவிடட்டாள்.


அன்று தான் அறியா வயதில் பேசிய வார்த்தையை நினைத்து பார்த்து புன்னகைத்த அமுதரசி, அது எந்த வித தாக்கத்தை இருவரிடம் ஏற்படுத்தியது என்று அப்போது அறிந்திருக்கவில்லை.


தனது சிறுவயது நினைவுகளை அசை போட்ட அமுதரசி கைகள் ஆசையுடன் ஊஞ்சலை தொட்டுப் பார்த்தது.


ஊஞ்சல் மீது ஆசை வரும்போதெல்லாம் ஊஞ்சலை தொட்டு பார்ப்பளே தவிர அதில் ஏறி அமர்ந்து ஆட மாட்டாள். ஏனோ தன் சக்தி இல்லாம் ஊஞ்சல் ஆட அவளுக்கு மனதில்லை.


கடந்த காலத்தில் தன்னை கரைத்தவள் தனக்கு பின்னே கேட்ட பேச்சுக்குரலில் திரும்பி பார்க்க அங்கு அவள் யாரை பற்றி நினைத்து கொண்டிருந்தாளோ அவனே அங்கு சென்று கொண்டிருந்தான்.


என்றும் இல்லாத விதமாக இன்று அவன் நியாபகம் அதிகமாக வந்த போது அதை ஒதுக்கி வைத்தவள் அவனை இங்கு சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.


பல வருடம் கழித்து சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒன்பது நீண்ட வருடங்கள்.


கடைசியாக அவனை பார்த்த தோற்றத்திற்கும் இப்போது இருக்கும் தோற்றத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவள் மூளை வேகமாக பட்டியலிட்டது.


அன்று கல்லூரி முதலாம் ஆண்டு மாணவனாக ஐந்தரை அடி உயரத்தில் கருப்பு என்றாலும் களையான முகம் என்னும் படி இருந்தவன், இன்று ஆறடி உயரத்தில் திராவிட நிறத்திற்கும் சற்று கூடுதலாக பார்பதற்கும் மிடுக்காகன தோற்றத்தில் இருந்தான்.


அவன் அணிந்திருந்த உடையே அவனது பதவியை பறைசாற்றியது. காக்கி யூனிஃபம் அணிந்திருந்த ஒருவருடன் நடந்தபடி பேசிக் கொண்டு சென்றதில் சாகித்யன் அமுதரசியை கவனிக்கவில்லை. தன்னை கடந்து சென்றவனை அமுதரசி தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாள்.


எதோ நினைவு வந்தவளாக சுற்றும் முற்றும் பார்க்க சக்கரவர்த்தி தம்பிக்கு குறையாக தோரணையுடன் தனது அழைபேசியில் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.


இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்தில் சந்தோஷமடைந்த அமுதரசி நேரில் சென்று பேசலாம் என அவள் பிள்ளை மனம் கூறிய வேளையில் அசரீரியாக அன்று அவள் அத்தை கூறிய வார்த்தைகளை மூளை எடுத்துக் கூற,


"அமுதவாணன் மகன் கிட்ட நான் எதுக்கு பேசணும்." என்று எண்ணி வந்த வழி திரும்பினாள்.


தோழிகள் கேட்ட பிறந்த நாள் விருந்தை கொடுத்து விட்டு வீடு திரும்பியவள் மனம் முழுவதும் அவளவன் மட்டுமே நிறைந்திருந்தான்.


நினைத்த நொடியிலே சந்தோஷம் துக்கம் என் இரு மாறுபட்ட உணர்வு அவளுள் எழுந்தது.


தன் சொல்லப்படாத விருப்பத்தை எண்ணி தனிமையில் கனவு காண்பவளுக்கு நிச்சயம் தன் விருப்பம் காதலாக மாறி நிறைவேறாது என்று தெரியும்.


ஒரு வேலை நூற்றில் ஒரு பங்காக நிறைவேற வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தன் பெற்றவர்கள் வென்று சிலர் தங்கள் கௌரவத்தை இழந்ததாக நினைக்க கூடும் என்ற எண்ணமே அவளை இத்தணை வருடங்களாக அமைதி கொள்ள செய்தது.


மலரும்....
 
மலர் 5


"அரசி நேத்தில இருந்து ஒரே யோசனையா இருக்க. எதாவது பிரச்சனையா." என்று கார்த்திகா அமுதரசியிடம் கேட்க, யாரிடமாவது கூறினால் தனது மன பாரம் குறையும் என்று எண்ணி,


"நேத்து ஹோட்டல்ல என் மாமா பையனை பாத்தேன்....." என்று ஆரம்பிக்க,


"உனக்கு மாமா பையன் இருக்கிறத சொல்லவே இல்ல கள்ளிடி நீ..." என்று அமுதரசின் இரு கன்னத்தை பிடித்துக் கிள்ள, கார்த்திகா கையை தட்டி விட்ட அமுதரசி,


"குறுக்க பேசாம நான் சொல்றத முழுசா கேளு... இல்லனா ஆள விடு..." என்று எழுந்து கொள்ள,


"ஏய் இரு... இரு... தெரியாம உன்னை கிண்டல் பண்ணிட்டேன். தயவு செஞ்சு சொல்ல வந்ததை சொல்லு.

இல்லன்னா என் தலை வெடிச்சிடும்." என்று கார்த்திகா உடனடியாக சமாதானப்புறாவை பறக்கவிட


"என் அம்மாவுக்கு ரெண்டு அண்ணன் இருக்காங்க பேரு அமுதவாணன், இன்னொருத்தர் ஆதிகேசவன் ." என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் பொழுது,


"சோ உங்க அம்மா அவங்க பெரிய அண்ணன் மேல இருக்கிற பாசத்துல உனக்கு அமுதரசின்னு பேர் வச்சிருக்காங்க. ரைட்?" என கார்த்திகா கூற 'ஆம்' என்று தலையை அசைத்து அதை ஏற்றுக் கொண்ட அமுதரசி


"சின்ன வயசிலேயே எனக்கும் என் மாமா பையனுக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. இடையில் நடந்த ஒரு பிரச்சனையில் இந்த மேரேஜ் பேச்சு வார்த்தை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க.

ஆனாலும் அம்மா என்னைக்கு இருந்தாலும் நான் அந்த வீட்டுக்கு தான் மருமகளா போகணும்னு சபதம் போட்டு இருக்காங்க." என்று சுருக்கமாக தன் கடந்த காலத்தை கூற,


"இப்ப என்ன... உனக்கு நேத்து பாத்த உங்க மாமா பையனை புடிச்சிருக்கா? இல்ல ?" என்று கேட்க, சோகமாக புன்னகைத்த அமுதரசி


"பிடிக்குமான்னு கேட்டா என் அத்தானை ரொம்ப பிடிக்கும்." கண்களில் கனவு மின்ன கூற


"உன் அத்தானுக்கு உன்னை பிடிக்குமா?" என்று கார்த்திகா அடுத்த கேள்வியை கேட்டாள்.


"பிடிக்கும் நான் எவ்வளவு கொடுமை படுத்தினாலும், என்ன கடைசி வரைக்கும் குழந்தை மாதிரி தாங்குற அளவுக்கு பிடிக்கும்." என்று தன் மாமன் மகன் தன் மீது எந்த அளவு பாசம் வைத்திருக்கின்றான் என்று கூற,


"உனக்கும், உன் அத்தானுக்கும் பிடிச்சிருக்கு தான, அப்புறம் என்ன நேரா போறோம்; தட்றோம்; தூக்குறோம்." என்று சினிமா பட வசனம் போல பேச, தனக்குள் இறுகிய அமுதரசி


"எனக்கு மரியாதை இல்லாத வீட்டில என்னால வாழ முடியாது." என்று உணர்ச்சி துடைத்த குரலில் கூற, பிரச்சனை பெரியது என புரிந்து கொண்ட கார்த்திகா


"இங்க பாரு அமுதரசி நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை, சில சமயம் காதல்ல கௌரவமும் பார்க்கக்கூடாது.

அப்படி பார்த்தா காதலும் நாமும் காணாமல் போயிடுவோம்." என்று கூற, அவள் புறம் திரும்பிய அமுதரசி


"காதல்ல கௌவுரவம் பார்க்க கூடாதுன்னு யார் சொன்ன? காதல்ல மட்டும் இல்ல எல்லா உறவுக்குள்ளயும் சுயகௌரவம் ரெம்ப முக்கியம்.

நம்ம கிட்ட இறங்கி போறவங்க கிட்ட நாமும் இறங்கிப் போகலாம். என் ஒட்டு மொத்த குடும்பத்தையும், அவங்க சுயமரியாதையையும் என்ன அசிங்க படுத்தினவங்க கால்ல கொண்டு போய் வைக்க முடியாது.

அது மட்டுமில்லாம எனக்கு என் அத்தான் மேல லவ் இல்லையே... எனக்கு இருக்கிறது பிடித்தம் மட்டும் தான்.

என்ன வேண்டாம்ன்னு சொன்ன கோபம் அவன மறக்க விடாம நியாபக படுத்திட்டு இருக்கு.

இது காதல்ன்னு சொல்ல முடியாது. பிடித்தம் மட்டும் தான். இன்னும் தெளிவா சொல்லன்னும்னா இது பப்பி லவ்ன்னு சொல்லிக்கலாம்.

ஒரு வேளை பேசினபடி கல்யாணம் நடந்திருந்தா பப்பி லவ் நிஜ லவ்வா மாறியிருக்கும். ஆனா இப்பாே அது பப்பி லவ்வா மட்டும் தான் இருக்கு. அது எப்பவும் நிஜமா மாறாது." என்று அமுதரசி கார்த்திகாவிடம் கூறுவது போல தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.


அதன் பிறகு கார்த்திகா அமுரசிடம் அதைப் பற்றி பேசவில்லை என்றாலும் தான் தோழியின் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டாள்.


முடிவெடுத்தவள் அவள் அத்தானின் பெயரை கேட்டிருக்கலாம்...


அவள் செய்வது எந்த அளவு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தால் எதுவும் செய்து இருக்க மாட்டாளோ என்னவோ!


____________________________________________


வீட்டின் மெட்டை மாடியில் வானத்தின் நிலவை ரசித்தபடி நின்று கொண்டிருந்த சாகித்யன் தன்னவள் சிறுவயதில் தனக்கு அளித்த முத்தத்தை நினைத்து, தன் கன்னத்தை தொட்டு பார்த்து சிரித்து கொண்டான்.


"அப்போ நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.' என்று கூறிவிட்டு வண்ணத்து பூச்சியாய் பறந்து சென்றவள் நினைவு மனதை மயிலிறகு கொண்டு வருடுவது போல இதமாக இருந்தது.


பதினென் பருவத்தில் அடியெடுத்து வைத்திருந்த சாகித்யனுக்கு காதல் பற்றியும் கல்யாணத்தை பற்றியும் பெரிதாக சிந்தனை இல்லை. ஆனாலும் அமுதரசி தனக்கானவள் என்ற எண்ணத்தின் விதை அன்று அவன் மனதில் ஆழமாக விழுந்தது.


இடையில் நடந்த பிரச்சனையில் அவளை மறக்கவில்லை என்றாலும் அமுதரசி பற்றிய நினைவை ஒதுக்கி வைத்திருந்தவனுக்கு மீண்டும் அவளை பார்த்த பின்பு அவ்வாறு ஒதுங்கி இருக்க முடியவில்லை.


'பாத்துக்கலாம் எங்க போயிட போறா. அதான் என் அன்பு அத்த இருக்கிறாங்களே. யார் நினைச்சாலும் அம்முவ என் கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுவாங்க.' என்று அத்தையின் சபதத்தின் மீதிருந்த நம்பிக்கையில் கனவு காண ஆரம்பித்தான்.


_____________________________________.


இன்னும் சில நாட்களில் கடைசி வருட மாணவர்களுக்கு இறுதிப் பரீட்சை நடைபெற இருப்பதால் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபச்சார விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.


மாலை ஆரம்பித்த விழா எட்டு மணியை நெருங்கும் அளவிலும் உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் ஒவ்வொன்றிலும் அனைவரும் உற்சாகமாக கலந்து கொள்ள, ஏனோ அமுதரசியால் மட்டும் யாருடனும் ஒன்றித்து போக முடியவில்லை.


அதிகபடியான சத்தம் தலையை வலிக்க வைப்பது போல இருக்க, தன் தோழியிடம் சொல்லி விட்டு விழா நடைபெறும் இடத்திலிருந்து சற்று தள்ளி வந்தாள்.


அமுதரசி கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்க, அவள் எண்ணங்கள் முழுவதும் மீண்டும் அவளை கேட்காமலேயே கடந்த காலத்தை நோக்கி திரும்பியது.


"சக்தி உண்மையிலேயே நிலாவில பாட்டி வடை சுடல தான. புக்ல நீல் ஆம்ஸ்ராங் தான் இருக்காருன்னு போட்டிருக்கு." என்று அமுதரசி ஊஞ்சல் ஆடியபடி தனக்கு தோன்றிய சந்தேகத்தை சாகித்யனிடம் கேட்க, அவனும் ஊஞ்சல் ஆட்டி விட்டபடி,


"ஏன் உனக்கு வடை சாப்பிடனும் போல ஆசை இருக்கா." என்று பதில் கேள்வி கேட்க, அதில் கடுப்பானவள் ஊஞ்சலில் இருந்து குதித்து கீழே இறங்கி


"நான் கேள்வி கேட்டா அதுக்கு பதில் தான் சொல்லணும். நீ ஒரு கேள்வி கேட்கக்கூடாது." என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தபடி பேசினாள்.


தன் இடுப்பு உயரம் கூட இல்லாத அமுதரசியின் கோபம் சாகித்யனுக்கு சிரிப்பை வரவழைக்க, அவளது குட்டி ஜடையை பிடித்து இழுத்தவன்


"ஆழாக்கு சைஸ்ல இருந்துகிட்டு உனக்கு எவ்வளவு கோவம் வருது." என்று கேட்க, தன் ஜடையை பிடித்து இழுத்ததில் வந்தக் கோபத்தில் பேசாமல், அங்கே இருந்த கல் மேடையில் அமர்ந்து கொண்டாள்.


அவளின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தில் சிரித்துக்கொண்டே அருகில் வந்தவன், அவள் முன் மண்டியிட்டு,


"எதுக்கு என் அம்மு இவ்வளவு கோபம்.... சரி இப்ப கோளு உன் கேள்விக்கு சரியா பதில் சொல்றேன்." என்று சமாதான கொடியை பறக்க விட, அவனது சமாதானத்தை அலட்சியப்படுத்திய அமுதரசி


"நீ ஒன்னு எனக்கு பதில் சொல்ல வேண்டாம் போ." என்று அவனிடம் கோபமாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.


"தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு இதுக்கு வர கோபத்தையே சமாளிக்க முடியலயே, வளர்ந்ததுக்கு அப்புறம் என்ன செய்ய போறேனோ?." என்று தனக்கு தானே கூறிக்கொண்டிருக்க, அவனது மனசாட்சியோ


"பிடிக்காத மாதிரி ரெம்ப தான் சலிச்சிக்கிற. உன் அம்மு செய்யிற சேட்டைய ரசிக்கிறதுக்காகவே வெறுப்பேத்துற தான. சமாளிக்க முடியலன்னா பட்டுன்னு கால்ல விழுந்துடு." என்று கூற,


"அது எனக்கு தெரியும் நீ உன் வேலைய பாரு." என்று மனசாட்சியை அடக்க


"ஐயையோ சக்தி தனியா பேசிக்கிறான்." என்று தனக்கு பின்னே கேட்ட அமுதரசி குரலில் சாகித்யன் திரும்பி பார்த்து விளக்கம் தருவதற்கு முன் அவளோ வீட்டிற்குள் ஓடிக்கொண்டிருந்தாள்.


"ஆ .... ஆ...." என்ற அலறல் ஒலியில் தன் சிந்தனையை கலைத்து.


என்ன என்று சத்தம் வந்த திசையை அமுதரசி பார்க்க, தன் கல்லூரி மாணவன் ரமேஷை ஒருவன் கூர்மையான கத்தி கொண்டு வயிற்றில் பலமுறை குத்திக்கொண்டு இருந்தான்.


அக்காட்சியைக் கண்ட அமுதரசி பயத்தில் உறைந்து நிற்க, குத்தியவனாே அமுதரசியை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் அங்கிருந்து மாயமாகியிருந்தான்.


நடந்த சம்பவம் விழா நடைபெறும் இடத்திற்கு அப்பால் வண்ண விளக்குகளின் ஒளிபடாத இருளில் நடந்திருந்ததால் யாரும் அங்கு இல்லை.



நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமுதரசி கல்லூரி முதல்வரிடம் கூற, ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்காமல் தனது வாகனத்திலே ரமேஷே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


காயம் பட்ட மாணவனுக்கு சிகிச்சை ஆரம்பித்த பிறகே அமுதரசி தன் தோழிகளுக்கும், அவள் தந்தைக்கு நடந்ததை தெரியப்படுத்த அவரும் அமுதரசிக்கு துணையாக வந்து விட்டார்.


"சார் போலீஸ் வரும் முன்ன நீங்க உங்க பெண்ண கூட்டிக்கிட்டு புறப்படுங்க. தேவையில்லாம இதுல அமுதரசி பெயர் இன்வால்வ் ஆக வேண்டாம்." என்று பெண்ணை பெற்ற தகப்பனாக கூற, அவரும் மகளை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.


ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர நேரம் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் அன்பரசி


"எதுக்குடீ உனக்கு இந்த வேண்டாத வேலை..." என்று கண்ணீர் மல்க கேட்க,


"அம்மா தயவு செஞ்சு கண்ணுல கட்டி வச்சிருக்கிற டேம்ம திறந்து விட்டுடாதே. ஏற்கெனவே நான் ரெம்ப டயர்ட்டா இருக்கேன்.

இன்னைக்கு என்னால உன்ன சமாளிக்க முடியாது." என்று அமுதரசி கூற, அன்பரசி தன் கண்ணீரை துடைத்து விட்டு


"உனக்கு என் கவலை விளையாட்டா இருக்குதா. நீ இழுத்து வைக்கிற பிரச்சனை இன்னையோட முடிஞ்சிடாது. நீ உதவி பண்ண போனதுக்கே உன்ன போலீஸ் ஸ்டேஷன், கோட்னு அலைய வைப்பாங்க.

அது மட்டுமில்லாம குத்தினவன் யாரு என்னனு தெரியல, அவனால உனக்கு பிரச்சனை வந்தா என்ன செய்ய." என்று ஒரு தாயாக மகளை நினைத்து வருத்தத்தில் பேச ஆரம்பித்து கோபத்தில் முடிக்க,

'ஆத்தி சும்ம இருந்த சிங்கத்த சொறிஞ்சு விட்டுட்டோமோ.... ம்ம் சமாளிப்போம்.' என்று மனதுக்குள் பேசிக்கொண்ட அமுதரசி,


"நீங்க பயப்படற மாதிரி எதுவும் நடக்காது ம்மா. நான் யாருக்காகவும் சாட்சி சொல்ல போக மாட்டேன். என் கண்ணு முன்னாடி ஒரு உயிர் போகக் கூடாதுன்னு நினைச்சு தான் உதவி பண்ணேன்.

யார் வந்து என்ன விசாரிச்சாலும் நான் எதையும் பார்க்கலைன்னு என்று சொல்லிக்கிறேன்." என்று அப்போதைக்கு தாயை சமாதானம் செய்தாள்.


மகள் கண்ணிலிருந்த தீவிரமே அவள் இந்த வழக்கிலிருந்து ஒதுங்கிக்கொள்ள மாட்டாள் என்று மாணிக்கத்திற்கு புரிய, மனைவி தூங்கியது மகளின் அறைக்கு வந்தார்.


"வாங்க ப்பா..." என்று வரவேற்க, தன் மகளை உற்று நோக்கிய மாணிக்கம்


"அமுது எனக்கு நல்லா தெரியும் நீ கண்டிப்பா அம்மா கிட்ட சொன்ன மாதிரி இருக்க மாட்டேன்னு. எதுக்கும் கவனமாயிரு.

எதுனாலும் அப்பாவும் கூட இருக்கிறேன்." என்று மகளுக்கு தனது ஆதரவை தெரிவித்து விட்டு வந்தார்.


எப்போதும் போல தான் எதையும் கூறாமலே தன்னை புரிந்து கொள்ளும் தந்தையை நினைத்து அமுதரசியால் வியக்காமல் இருக்க முடியவில்லை.


இது போல மகளின் செயலுக்கு ஆதரவளிக்கும் ஒரு தந்தை எல்லாருக்கும் கிடைப்பதில்லையே.


____________________________________________



தனது கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி யூனிபார்மில் மாட்டியபடி மிடுக்காக இறங்கி வந்த சாகித்யன் நேராக கல்லூரி முதல்வர் அறைக்கு சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு


"எனக்கு உங்க கூட அன்னைக்கு ஹாஸ்பிட்ல் வந்த பொண்ண விசாரிக்கனும்." என கூற,


"என் கூட யாரும் வரல. நான் தனியா தான் வந்தேன்." என்று கல்லூரி முதல்வர் அமுதரசி பற்றி கூற மறுக்க,


"ஹாஸ்பிடல் சிசிடிவி புட்டேஜ் பாத்துட்டு தான் வந்தேன்." என்னிடம் எதையும் மறைக்க முடியாது என்னும் தோரணையுடன் சாகித்யன் பேச,


"சாரி மிஸ்டர் சாகித்யன் அந்த பொண்ணு எனக்கு துணையா ஹாஸ்பிடலுக்கு வந்ததுக்கா இந்த கேஸ்ல இன்வால்வ் பண்ண முடியாது." என்று முதல்வர் கண்டிப்புடன் கூற,


"சார் இது ஜெஸ்ட் என்கொயரி மட்டும் தான். நிச்சயமா நான் அந்த பொண்ண இந்த கேஸ்ல எங்கயும் இன்வால்வ் பண்ண மாட்டேன்." என்று சாகித்யன் உறுதியளிக்க, முதல்வரின் அழைப்பின் பெயரில் அவரது அறைக்கு வந்த அமுதரசி


"சார் என்ன கூப்பிட்டீங்களா?" என கேட்க, தனக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவனை கையை காட்டிய கல்லூரி முதல்வர்


"அமுதரசி மீட் மிஸ்டர் சாகித்யன் அமுதவாணன். இவர் உங்ககிட்ட ரமேஷ் கேஸ் விஷயமா விசாரிக்கணுமாம்.." என்று கூற,


'சாகித்யன் அமுதவாணன்' என்ற பெயரில் ஒரு நொடி திகைத்த அவனை திரும்பி பார்த்த அமுதரசி அடுத்த சில வினாடிகளிலேயே தறிகெட்டு ஓடிய தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து அந்நிய பார்வை பார்த்து வைத்தாள்.


வந்ததிலிருந்தே அமுதரசி முகத்தை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்த சாகித்யனுக்கு அவள் முகத்தில் தோன்றி மறைந்த திகைப்பை கண்டு கொண்டான்.


தன் பெயருக்கு அவளிடம் தோன்றிய திகைப்பு அவளுக்கு தன்னை யார் என்று தெரியும் என்பதை காட்டிக்கொடுக்க அதில் மகிழ்ந்தவனுக்கு, அடுத்து அவள் அந்நிய பார்வைக்கான அர்த்தம் தான் புரியவில்லை. ஆகவே அவன் தானும் அவளை கண்டு கொண்டதை காட்டிக்கொள்ளவில்லை.

"எனக்கு நேத்து நடந்த சம்பவம் பத்தி கொஞ்சம் டீடைல்ஸ் தேவைப்படுது." என்று விசாரிக்க, கல்லூரி முதல்வரை பார்த்து தயங்கிய அமுதரசி,


"சார் ஏற்கனவே பிரின்சிபல் சார் கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன், அந்த இருட்டில நான் யாரையும் தெளிவா பார்க்கல." என்று கூற,


"நம்புற மாதிரி இல்லையே." என்று தனது தாடையை தடவியபடி கூறிய சாகித்யனை முறைத்து பார்த்த அமுதரசி


"நீங்க நம்பலன்னா அது என்னுடைய பிரச்சனை கிடையாது." என்று துடுக்காக பதில் கூற,


"நீ்ங்க எதுக்காக பங்ஷன் நடக்கும் தனியா போகணும்? என்று சந்தேகத்தை முன் வைக்க


"ஸ்டேஷ்ல லவ் சாங் போட்டதும் எனக்கு என் லவ்வர் நியாபகம் வந்துட்டு... அதான் பேச போனேன்." நக்கலாக பதில் கூற,


"என்ன லவ்வரா?" என்று சாகித்யன் அதிர்ந்து நோக்கும் போதே, கல்லூரி முதல்வர்


"அமுதரசி என்ன ஆச்சு உனக்கு... நீ இப்படி பேசுற பொண்ணு இல்லயே..." என்று சிறு கண்டிப்புடன் கேட்க, அதன் பிறகே அவரை வைத்துக் கொண்டு பேசியதை உணர்ந்த அமுதரசி


"சாரி சார் நேத்துல பார்க்கிற எல்லாரும் ஒரே கேள்விய கேட்டு கேட்டு டார்சர் பண்றாங்க. அதான் என் அறியாம பேசிட்டேன்." என்று அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு


''சார் நான் சொல்ல வேண்டியத எல்லாம் சொல்லிடேன். இதுக்கு மேலயும் என்ன தொந்தரவு பண்ண நினைச்சா நான் உங்க மேல் இடத்தில பேச வேண்டியத இருக்கும்.
ஒருத்தர் ஆபத்தில இருந்தா அவங்கள காப்பாத்துறது மனித தன்மை. அதுக்காக இப்படி விசாரிக்கிறேன்னு டார்சர் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா." என்று அமுதரசி கேட்க அவளைப்பார்த்து சாகித்யன்


"விபத்தில் உதவி பண்ணினா விசாரிக்க அவசியம் கிடையாது. ஆனால் கொலை முயற்சி வழக்கில் சாட்சியங்கள் இருந்தால் விசாரிக்கலாம்." என்ற சாகித்யனின் பார்வையும் பேச்சுமே


'நான் உன்னை மீண்டும் விசாரிக்க வருவேன்' என்று சொல்லாமல் சொன்னது. அவன் பார்வையை தவிர்த்த அமுதரசி கல்லூரி முதல்வரை நோக்கி


"சார் இனி காலேஜ்ல வந்து இவர் என்ன தொந்தரவு பண்ணாம பாத்துக்கோங்க." என்று கூறிவிட்டு சென்றுவிட, கல்லூரி முதல்வர் சாகித்யனிடம்


"சார் அமுதரசி படிக்கிற பொண்ணு. ஏதோ நீங்க தன்மையா கேட்டதால விசாரிக்க ஒத்துக்கிட்டேன். ஆனால் இனியும் ஒரு பொண்ண நீங்க காலேஜ்க்குள்ள வந்து தொந்தரவு பண்ண நான் அனுமதிக்க முடியாது." என்று கூற, சாகித்யனும் அவர் நிலையை புரிந்து கொண்டு வெளியேறினான். ஆனாலும் அமுதரசியை அப்படி விட்டுவிட அவன் நினைக்கவில்லை.


மலரும்...
 
மலர் 6

"வந்துட்டேன் டொன்டொடைன்.... வந்துட்டேன் டொன்டொடைன் .... " என்று ஆர்ப்பாட்டமாக வீட்டிற்குள் வந்த தோழிகள் இருவரையும் பார்த்த அமுதரசிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.


அமுதரசி வீட்டில் எப்போதும் அமைதி விரும்பி. தன் தாயிடம் நினைத்ததை அழுத்தமான அமைதியின் மூலம் சாதிக்க நினைப்பவள்.


அப்படிப்பட்டவள் வீட்டிற்குள் ஆர்ப்பாட்டமாக நுழைந்து, 'நீயும் இப்படி இருந்தால் என்ன' என்று தன் தாயை புலம்ப வைத்துவிட்டு செல்பவர்களை என்ன என்னவென்று சொல்ல.


"ஏய் குரங்கு குட்டீஸ் வீட்டுக்குள்ள வரும் போது அமைதியா வர மாட்டீங்களா... அவ்வளவு சத்தம் அதுவும் டொன்டொடைன் பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம வீட்டுக்குள்ள வர முடியாதா..."


அதிரடியாக வந்த தோழிகளின் காதை திருகிய படி அமுதரசி கேட்க, அவளிடம் இருந்து தங்கள் காதுகளை காப்பாற்றிக் கொண்டு அன்பரசி அருகில் வந்த நளினா, கார்த்திகா இருவரும்


"அம்மா பாத்தீங்களா உங்க முன்னாடியே இவ எங்கள எப்படி கொடுமைப்படுத்துற." என அமுதரசி பற்றி புகார் வாசிக்க,


"அமுது இப்படியா வீட்டுக்கு வந்த பிள்ளைங்க காதை திருகி வைப்ப. இப்ப பாரு அவங்களுக்கு வலிக்குது." என்று அன்பரசி தன் மகளை கண்டித்துவிட்டு,


"அவ கிடக்கிற வேலையில்லாதவ... நீங்க வாங்க, உங்களுக்கு பிடிக்கும்னு காலையிலேயே மீன் குழம்பு செஞ்சு வெச்சிருக்கேன்." என்று அன்பரசி உணவு உண்ண அழைக்க, மீன் குழம்பு என்றதும் தோழியை மறந்துவிட்டு இருவரும் முதல் ஆளாக சென்று டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டனர்.


இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது

ஸ்.. ஆஹா.. ஸ்.. ஆஹா..
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட
அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட

எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள

என்று இருவரும் பாடல் பாடிக் கொண்டே இட்டிலியை மீன் குழம்பில் மிதக்கவிட்டு வயிற்றுக்குள் தள்ளி கொண்டு இருந்தனர்.


தன் தோழிகள் இருவரும் உணவு உண்ணும் அழகை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டே அமுதரசி தனக்கான இட்லியை தட்டில் எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.


"ம்மா நீங்க வைக்கிற மீன் குழம்ப அடிச்சிக்க ஆளே இல்ல." என்று இருவரும் அன்பரசியின் சமையலை பாராட்டி கொண்டே சாப்பிட்டு முடித்தனர். தோழிகள் இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்த அமுதரசி


"உங்க அன்பு ம்மா சமையலை சாப்பிட்டு முடிச்சிட்டீங்கன்னா கொஞ்சம் படிக்க வரீங்களா." என்று கேட்க,


"கொஞ்சம் இரு டி வரோம்." என்று கூறி விட்டு


"அம்மா எனக்கு நீங்க எப்பவுமே செய்வீங்களே மட்டன் கொத்து கறி அதை கொஞ்சம் காரம் தூக்கல செஞ்சு வச்சிருங்க." என்று நளினா கூற


"அம்மா எனக்கு மொறு மொறு கோலா உருண்டை..." என்று கார்த்திகா அவளுக்கு தேவையானதை கூறினாள்.


"நீங்க என் வீட்டுக்கு வந்தது படிக்கவா இல்ல சாப்பிடவா?" என்று அமுதரசி கண்டிப்புடன் கேட்க,


"நீ தான் சாப்பிட மாட்டீக்கிறன்னா உன் கூட படிக்கிற பிள்ளைகளையும் சாப்பிட விட மாட்டியா? நீங்க போங்க, சமைச்சு வச்சிட்டு கூப்பிடுறேன்.
படிக்கும் போது

சின்னதா பசிச்சா இத சாப்பிடுங்க." என்று கூறி ஒரு பெரிய தட்டு நிறைய முந்திரி பக்கோடாவை கொடுக்க, அதை பார்த்த அமுதரசி


"நிச்சயமா இங்க இருந்து போற வரை இது இரண்டும் படிக்கப் போறது இல்லை. இந்த அம்மா கொடுக்கிற எல்லாத்தையும் மூக்கு முட்ட கொட்டிக்க தான் போகுதுங்க." என்று தனக்குள் புலம்பிக்கொண்டு தோழிகள் இருவரையும் இழுத்து கொண்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தாள்.


தன் அன்னை தந்த உணவுகளுக்கு நடுவே அதட்டி மிரட்டி இருவரையும் படிக்க வைத்து முடிப்பதற்குள் அமுதரசி ஒரு வழி ஆகிவிட்டாள்.


"அரசி..." என்று நளினா பாசமாக அழைக்க, அவள் நோக்கம் புரிந்து


"நீ முக்கி மொனங்கினாலும் சரி, தத்தி தாளம் போட்டாலும் சரி நான் உன்ன விட மாட்டேன். ஒழுங்க இந்த கோடிங் மட்டும் படிச்சு முடி விட்டுறேன்." என்று கறாரக கூற


"ராட்சஷி விட மாட்டாளே...." என்று முணுமுணுத்துக் கொண்டு அமுதரசி சொல்லிக் கொடுத்த கோடிங்கை படிக்க ஆரம்பித்தாள்.


அரைமணி நேரம் சென்ற பிறகு இருவரும் தங்களுக்கு சற்று ஓய்வு வேண்டும் என்று கேட்க, இனியும் இவர்களை பிடித்து வைக்க முடியாதென்பதால், முக்கியமான பகுதியை படித்துக்கொண்டிருந்த அமுதரசி


"நீங்க வேணா ரெஸ்ட் எடுங்க... எனக்கு இதை முடிக்க வேண்டியது இருக்கு." என்று தன் புத்தகத்தில் இருந்து கண்ணை எடுக்காமல் கூற, அவள் தங்களை விட்டதே போதும் என்று வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக இருவரும் கீழே ஓடி வந்தன.



கீழே வரும் நேரம் அவர்களை எதிர்கொண்ட அன்பரசி, இருவர் கையிலும் நெய் மிதக்கும் பாதாம் அல்வா கிண்ணத்தை வைக்க, அதை வாங்கிக் கொண்ட நளினா டிவியுடன் ஐக்கியமாகி விட்டாள்.


அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அன்பரசி சமையலறைக்குள் செல்ல, பின்னே வந்த கார்த்திகா மெல்ல அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.


"அம்மா உங்களுக்கு சொந்த ஊரு மதுர பக்கம் தானே. கிராமத்தில பழகின உங்களுக்கு சென்னையில் இருக்கிறது போர் அடிக்கல." என்று கார்த்திகா கேட்டதும், ஊர் ஞாபகம் வர அன்பரசி மடை திறந்த வெள்ளமாக அவர் பேச ஆரம்பித்தரார்.


"எங்க ஊரு மதுரை இல்ல திருநெல்வேலிக்கும் மதுரைக்கும் நடுவுல இருக்கிற கிராமம். இங்க மாதிரி அங்க எல்லாம் தண்ணீர் பஞ்சமே கிடையாது நல்ல செழிப்பா நல்ல தண்ணி எப்பவும் கிடைக்கும்.

அங்க எல்லாம் கூப்பிட்ட குரலுக்கு பதில் சொல்றதுக்கு சொந்தக்காரங்க பக்கத்திலேயே இருப்பாங்க. ஆனா இங்க தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கக்கூட நாதியில்லை." என்று தன் கவலையை முன் வைக்க,

'ஆத்தி அன்பும்மா இதே மாதிரி பேசிட்டு இருந்த அமுதரசி கிட்ட மாட்டிக்க போற. சீக்கிரம் கேக்க வேண்டியத கேளுடி..." என்று மனது அவளை வசைபாட,


"உங்களுக்கு சொந்த அதிகமா?" என்று சுத்தி வளைத்து கார்த்திகா அடுத்த கேள்வியை கேட்க


"என்ன இப்படி சொல்லிட்ட... எங்க குடும்பம் ரொம்ப பெருசு. அங்காளின்னு பங்காளின்னு ஊர்ல இருக்கிற பாதி பேரு எங்க சொந்தம் தான்." என்று தன் உறவுகளை பற்றி பேச ஆரம்பித்தார்.


"த்தூ... நீ தேற மாட்ட..." என்று கார்த்திகா மனசாட்சி அவளை கேவலமாக திட்ட துவங்க, அதில் ரோஷம் வர பெற்றவள்,


"உங்க கூட பிறந்தது எத்தனை பேர் ம்மா." என்று ஒரு வழியாக சரியான கேள்விககு வந்து சேர்ந்தாள்.


"என் கூட பொறந்தது ரெண்டு...." என்று அன்பரசி சொல்லிக் கொண்டு இருக்கும் போது சரியாக அங்கு வந்து சேர்ந்த அமுதரசி


"இன்னும் எவ்வளவு நேரம் வெட்டி கதை பேசிட்டு இருக்க போற. படிக்க வரணும்னு உனக்கு தோணுதா இல்லையா." என்று தோழியை பார்த்து கண்டிப்புடன் கேட்க, அமுதரசி கண்ணில் இருந்த அணலே தான் எதற்காக அவள் அம்மாவிடம் பேச வந்தோம் என்பது அவளுக்கு புரிந்து விட்டது என தெரியப்படுத்த, அதற்கு மேல் பேசாமல் தோழியின் அறைக்கு வந்து சேர்ந்தாள்.


டீவியில் மூழ்கியிருந்த நளினாவையும் படிக்க அழைத்துக் கொண்டு வர, ஆறு மணி வரையிலும் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருந்த நளினா அதை மூடி வைத்து விட்டு,


"அரசி அதுக்கு அப்புறம் நீ அந்த போலீஸா பார்த்தியா..." என்று கேட்க, அதற்கு அமுதரசி


"இல்ல காலேஜ்ல பார்த்ததுக்கப்புறம் பார்க்கல." என பதில் கூறி முடித்தாள்.


ஆனால் அவள் மனது மட்டும் மீண்டும் மீண்டும் தன்னை சாட்சி சொல்ல வற்புறுத்தும் சாகித்யன் பற்றி எண்ணிக் கொண்டிருந்தது.


"இங்க பாருங்க அமுதரசி தயவு செஞ்சு நீங்க சாட்சி சொல்ல வாங்க... இல்லன்னா ஒரு குற்றவாளி வெளியே சுதந்திரமா சுத்துறதுக்கு நீங்க காரணமா இருப்பீங்க." என்று தெரியாத பெண்ணிடம் விசாரிப்பது போல மரியதையுடன் பொறுமையாகவே கேட்க, அமுதரசி சாட்சி சொல்ல மறுத்துவிட்டாள்.


"நீங்க எதுக்காக சாட்சி சொல்ல மறுக்குறீங்க." என்று அடுத்த முறை பேருந்து நிறுத்தத்தில் சந்தித்த போது கேட்டான்.


சாகித்யன் தன்னை தெரியாதது போல காட்டிக் கொள்வது அவளுக்குள் கோபத்தை அதிகரித்தது. அதன் வெளிப்பாடாக


"சாகித்யன்னு பேர் வச்சிருக்கிறவங்க கூப்பிட்டா நான் சாட்சி சொல்ல வர மாட்டேன்." என்று கூறிவிட்டு வந்துவிட்டாள்.


தானும் அவனிடம் தெரிந்தவரிடம் பேசுவது போல பேசவில்லை என்பதை அவள் மூளை நினைவு படுத்தினாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, சாகித்யன் மீதிருந்த கோபத்தை இழுத்து பிடித்தாள்.


சில இடங்களில் எதிர்பாராமல் சந்திக்கும் வேளையில் சாகித்யன் மீண்டும் அதையே கேட்க எதற்கும் அவள் சம்மதிக்கவில்லை.


தனது எண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு தோழிகள் இருவரும் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகவும் அவர்களை வழியனுப்ப வந்த அமுதரசி கார்த்திகாவின் கையை பிடித்து


"உன்னை என் பிரண்டா நெனச்சு தான் என்னுடைய ரகசியத்தை உன்கிட்ட சொன்னேன். அது என்னைக்கும் ரகசியமா மட்டும்தான் இருக்கனும்." என்று கண்டிப்புடன் கூற, கார்த்திகாவின் தலை தானாகவே சரி என்று ஆடியது.


அன்று கல்லூரியின் கத்திக்குத்து பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதையும், அவ்வழக்கில் கொலையாளியை தேடி கொண்டிருப்பதையும் செய்தித்தாள் வழியாக தெரிந்து கொண்ட மாணிக்கத்தின் முகம் யோசனையை சமயத்தை தடுத்தது.


முதலில் இந்த கொலை வழக்கில் தீவிரமாக இருந்த மகள் எதற்காக சாட்சி சொல்லவில்லை என்று அவர் இதுவரை மகளிடம் கேட்டுக் கொள்ளவில்லை.


தந்தையின் யோசனை படிந்த முகத்தை கவனித்த அமுதரசி, எதுவோ சரியில்லை என நினைத்து அவர் கையில் இருந்த செய்தித்தாளை பார்த்துவிட்டு


"அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..." என்று அழைக்க மாணிக்கமும், செய்தித்தாளை மடித்து வைத்து தோட்டத்திற்கு சென்றார்.


தனது அம்மா அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு


"அப்பா நான் எதுக்காக இந்த கேஸ்ல சாட்சி சொல்லலன்னு உங்களுக்கு தெரியணுமா? என்று கேட்க


"நீ எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு எனக்கு தெரியும். இருந்தாலும் ஏன் அமுது? அந்த பையன் வீட்டுல அவன் மட்டும் தான். பாதிக்கப்பட்ட பையன் குடும்பத்தையும் நினைச்சு பாத்திருக்கலாமே." என்ற கேள்வியுடன் நிறுத்த,


"உங்க தங்கச்சி கிட்ட யாராவது தப்பா நடந்துகிட்டா நீங்க என்னப்பா செய்வீங்க?" என்று ஒரே ஒரு கேள்வியை மட்டும் அமுதரசி கேட்க, அதுவே நடந்தது என்னவென்று அவருக்கு புரிய வைத்தது.


"என் ஸ்கூட்டி சர்வீஸ் விட போன அன்னைக்கு நான் ரமேஷ குத்தின அந்த பையன் திரும்ப பார்த்தேன் ப்பா... அவனே எங்கிட்ட வந்து நடந்ததை சொன்னான்.

அந்த பையனுக்கு ஒரு பதினேழு வயசுதான். அந்த பையன் குமார்க்கு அப்பா இல்ல, அம்மாவும் ஒரு நயன்த் படிக்கிற தங்கச்சி மட்டும் தான்.

செத்துப்போன ரமேஷ் வீட்டுக்கு பக்கத்து வீட்டில தான் குடி இருக்காங்க.
பாடத்தில சந்தேகம்ன்னு கேட்க போன பொண்ணு கிட்ட தப்பா நடந்துருக்கான்.

இதுல அந்த பொண்ணு தனக்கு நடந்த வெளிய சொல்ல முடியாம சூசைட் பண்ண பாத்திருக்கு.

நல்வேளையா வீட்டுக்கு வந்த குமார் அவன் தங்கச்சிய காப்பாத்திட்டான். அவன் தங்கச்சிக்கு நடந்த கேள்விப்பட்டதும் அன்னைக்கு பழி வாங்குறேன்னு ரமேஷ கத்தியால் குத்தி இருக்கிறான்.

இது வெளிய தெரிஞ்சா அவங்க மூணு பேரு வாழ்க்கையும் முடிஞ்சுரும். அதனால தான் நான் அது பத்தி பேசல. நான் செய்தது சரிதான ப்பா." என்று அமுதரசி கேட்க,

"நீ என்னிக்கும் தப்பு செய்ய மாட்ட ம்மா..." என்று மாணிக்கம் மகளை பார்த்து பெருமையுடன் கூறினார்.


மலரும்...
 
Status
Not open for further replies.
Top