வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீண்டாயோ வண்ணமலரே கதை திரி

Status
Not open for further replies.
மலர் 20


சுதாவிற்கும் அவள் தமக்கை கவிதாவிற்கும் பனிரெண்டு வருட வயது வித்தியாசம். தான் மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு தங்கை சுதாவை எப்போது பிடிக்காது.


இதில் கவிதா தான் வெளியூரில் திருமணமாகி சென்றுவிட்டால் சொத்து அனைத்தும் தங்கைக்கு சென்றுவிடுமோ என்ற பயத்தில் உள்ளூரிலே வரன் பார்க்க சொல்ல, பெற்றோரும் மகளை பிரிய மனமின்றி அருகிலேயே பார்த்த வரன் தான் செந்தில்.


சுதா பருவமடையும் வரை அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு செந்தில் பார்வை சுதாவின் மீது வக்கிரமாக படிய, அதை மனைவி அறியாமல் பார்த்துக் கொண்டான்.


இதில் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தையில்லாததையும், அதிலும் குறை கவிதாவிற்கு தான் என்பதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தனது வக்கிரத்தை தீர்த்து கொள்ள செந்தில் தன் மனைவியை வைத்தே காய் நகர்த்தினான்.


மனைவிக்கு அவள் தங்கையை பிடிக்காது என்பதை புரிந்து கொண்டு,


"நமக்கு தான் குழந்தை இல்ல. நாளைக்கே உன் தங்கச்சிக்கு கல்யாணமாகி குழந்த பிறந்திட்டா எல்லா சொத்து அவளுக்கு தான்...." என்று கூறி அவள் மனதில் பயத்தை விதைத்தான்.


அவள் பயத்தை மேலும் அதிகரிப்பது போல செந்தில் தன் தாயை தூண்டிவிட்டு மறுமணத்தை பற்றி பேச வைக்க, பயத்தில் குழம்பிய நிலையில் இருந்தவளிடம் வாடகை தாய் பற்றி பேசி சம்மதிக்க வைத்தான்.


வாடகை தாய் குழந்தை மீதும், கணவன் மீதும் உரிமை கொண்டாட கூடும் என்ற அச்சத்தையும் விதைத்தான். கூடவே வாடகை தாய் சட்டத்தை பற்றியும் கூறி அவளை தெளிய விடவில்லை. தன் வீட்டிற்கு வந்து செல்லும் சுதாவை பார்த்தும் பார்க்காதது போல


"பிரச்சனை செய்யாத ஒருத்தர் மூலமா நம்ம குழந்தை பிறக்கணும். அந்த பொண்ணும் உனக்கு அடங்கி போகணும்." என்று கூற, நிமிர்ந்து பார்த்த கவிதாவின் பார்வையில் சுதா விழுந்தாள்.


மனைவியின் முகமே அவள் மனநிலையை காட்ட, செந்தில் தன் திட்டத்தை மெதுவாக கூற, மகுடிக்கி மயங்கிய பாம்பாக கவிதாவும் ஏற்றுக் கொண்டாள்.


தங்கள் வீட்டிற்கு வந்து சென்ற சுதாவை வழியில் கடத்தி அவளை வாடகை தாயாக பயன்படுத்த போவதாக கூறி மதுரைக்கு வெளியே இருந்த அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற செந்தில், இருவரும் ஊரில் இல்லை என்றால் சந்தேகம் வர கூடும் என கூறி மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.


"கரு முட்டை தேவைப்படும் போது மட்டும் நீ வந்தாள் போதும்" என கூறி மனைவியை அவள் தங்கை இருந்த வீட்டிற்கு வர விடவில்லை.


சொந்த அத்தான் மூலமே எதற்காக தான் கடத்தப்பட்டிருக்கின்றோம் என்பது புரியும் முன்பே, அந்த சிறு பூ கயவன் கைகளினால் கசக்கப்பட்டது.


"ஐய்யாே அத்தான் விடுங்க... வலி தாங்க முடியல.." என்று அவள் கதறல்கள் எதுவும் அந்த கமுகனின் காதுகளை சென்றடையவில்லை.


வீட்டில் தொழிலையும், மனைவியிடம் சுதாவின் கண்காணிப்பையும் காரணம் காட்டி அவன் வந்து போகும் நாட்கள் எல்லாம் சுதாவிற்கு நரக வேதனை தான்.


தப்பி செல்லவும் முடியாமல், சாகவும் வழி தெரியாமல் தவித்தவள் வயிற்றில் செந்திலின் பாவத்தின் விதை வளர ஆரம்பித்தது. வாடகை தாய் முறை வெற்றியடைந்து விட்டதாக மனைவியிடம் கூறியவன் சுதாவிடம்,


"இங்க பாரு சுதா எதுக்கு மெறண்டு பிடிச்சு உடம்ப புண்ணாக்கிக்கிற. ஒழுங்க இருந்தா நீ தான் என் ஆசை பொண்டாட்டி. இல்ல நான் மல்லுக்கு தான் நிப்பேன்னு சொன்னா என் கள்ள பொண்டாட்டி." என்றவனை தண்டிக்க முடியாமல் அந்த சிறு பெண் தவித்து நின்றாள்.


கணவனின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு சுதாவை காண வந்த கவிதாவை கட்டி பிடித்து அழுதவள் தனக்கு நடந்தை கூற, கவிதாவிற்கு தான் ஏமாற்றபட்ட உணர்வில் தங்கையை அடிக்க அவள் மயங்கி சரிந்தாள்.


வழக்கம் போல சுதாவை காண வந்தவன் மனைவியை எதிர்பாராது திகைக்க, கவிதா தன்னை ஏமாற்றியதற்காக சண்டைபிடித்தாள். அவள் கையை பிடித்து உதறியவன்


"ஆமா உன் தங்கச்சிய ஆசைப்பட்டுதான் கடத்தினேன். இப்ப என்ன செய்ய போற. புள்ள பொறந்ததும் உன் அப்பா வீட்டு சொத்து முழுசா உனக்கு, உன் தங்கச்சி எனக்கு. இல்ல நியாய தர்மம் பேசுன என் கூட சேர்ந்து கம்பி எண்ணனும். நான் ஆம்பள ஆயிரம் தப்பு பண்ணுவேன். ஆனா நீ..."என்று செந்தில் மிரட்ட கவிதா அடங்கி போனாள்.


தமக்கையே தன்னை காக்கக்கவில்லை என்றதும் தன்னை காக்க யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தவளை அந்த நரகத்திலிருந்து மீட்டிருந்தான் சாகித்யன்.


சாகித்யன் நீதிமன்ற விசாரணைக்கு தேவையான விபரங்களை சரிபார்த்துக் கொண்டிருக்க, வேகமாக உள்ளே வந்த காவலர் ஒருவர்


"சார் உங்கள பாக்க சுதா பொண்ணோட அப்பா அம்மா வந்திருக்கிறாங்க." என்று கூற, அவன் புருவங்கள் சுருங்க நிமிர்ந்து பார்த்தவன்


"வர சொல்லுங்க." என்று கூற, அடுத்த சில வினாடிகளால் அவன் முன் இருவரும் வந்து நின்றன.


"கோர்ட் விசாரண நாளைக்கு தான..." என்று கேள்வியாக நிறுத்தியவனை நிமிர்ந்தும் பார்க்காது


"நாங்க கேஸ திரும்ப வாங்க வந்துருக்கோம்." என்று வார்த்தைகளை மென்று விழுங்க, அவர்களை அழுத்தமாக பார்த்தவாறு


"பெத்த பாசம்... மூத்த பொண்ணு மேல இருக்கிற பாசம் சின்ன பொண்ணு மேலயும் இருந்திருக்கலாம்" என்று நக்கலாக கூற,


"நாளைக்கு விசயம் வெளிய தெரிஞ்ச என் சின்ன பொண்ணு வாழ்க்கையும் தான் நாசமா போகும். வேண்டாம் சார் நாங்க வெளிய தல காட்ட முடியாது." என்று சுதாவின் தாய் கெஞ்ச,


"சரி வழக்க வாபஸ் வாங்கிட்டு உங்க சின்ன பொண்ணுக்கு என்ன செய்ய போறீங்க." என்று கேள்வியாக கேட்க அதற்கு இருவரிடமும் பதில் சொல்ல தைரியமில்லை.


சுதாவின் வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் வேகமாக சாகித்யன் காதில் ஏதோ சொல்ல, எதிரில் இருந்தவர்களை பார்த்த பார்வையில் அணல் தெரித்தது. சுதாவின் அம்மாவை உருத்து விழித்தபடி


"அன்னைக்கு கனவுல எம்பொண்ணு கதறி அழறான்னு சொன்னீங்க. காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டேன். எந்த நரகத்தில இருந்து உங்க பொண்ணு தப்பிச்சு வந்திருக்கிறாளோ அதிலே தள்ளி விட பாக்கிறீங்க." என்று ஆவேசமாக பேச, தங்கள் திட்டம் தெரிந்து விட்டதில் முதலில் பதறி, பின் தன்னை திடப்படுத்துக் கொண்டவர்


"எம் பொண்ணுக்கு எது செய்யணும்னு எனக்கு தெரியும். நாளைக்கு அவ கோர்ட்க்கு வந்து நாங்க சொல்றத தான் சொல்லுவா. நாளை மறு நாள் அவளுக்கும் எம் மருமகன் செந்திலுக்கும் கல்யாணம்." என்று கூறிவிட்டு செல்ல, சாகித்யன் இதழ்களில் விஷமப்புன்னகை தோன்றியது.


அடுத்த நாள் நீதிமன்றத்தில் சுதாவின் வழக்கு விசாரணை ஆரம்பிக்க, மொத்த கவனமும் சுதாவின் மீது தான் இருந்தது. ஆனால் அவளோ யாரையும் பார்க்காமல் தனது வயிற்றில் இருக்கும் ஆறு மாத கருவின் முதல் அசைவில் உள்ளுக்குள் பயந்து வயிற்றை வெறித்த பார்த்துக் கொண்டிருந்தாள்.


சுதா பெற்றோர் கூறிய குடும்ப கௌரவம், அக்காவின் வாழ்க்கை, தன் எதிர்காலம், குழந்தையின் நிலை என அனைத்தையும் நினைத்து மௌனமாக நின்றாள். ஒவ்வொரு சாட்சியாக விசாரணை செய்யப்பட, செந்தில் வழக்கறினர்


"இதில் எனது கட்சிக்காரர் சுதாவை கடத்தியதுற்கு எந்த வித ஆதாரமும் இல்லை யுவர் ஆனர். சுதாவே விருப்பப்பட்டு தான் எனது கட்சிகாரருடன் சென்றுள்ளார். இப்போது காவல் துறை செந்தில் மீது வீண் பழியை சுமத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் சுதாவை விசாரித்தாலே தெரிந்து கொள்ளலாம்..." என்று கடத்தலை கள்ளக்காதல் என்று பேச, எதற்கு சுதாவிடம் பதில் இல்லை.


அவள் அமைதியை மற்றவர்கள் புன்னகையுடன் பார்க்க, சாகித்யன் தன் உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அரசு தரப்பு வக்கில் எழுந்து


"சுதாவை விசாரிப்பதற்கு முன் முக்கிய சாட்சி ஒன்றை விசாரிக்க அனுமதி வேண்டும்." என கோரிக்கை வைக்க, அனைவரும் யார் என்று யோசிக்கும் வேலையில், சாட்சி கூண்டில் சந்துரு வந்து நின்றான்.


சந்துவை பார்த்தும் பெற்றோர் பிடியிலிருந்து ஒடி வந்த சுதா அவனை கட்டிக் கொண்டு அழ, அவளை இழுத்து வர முயன்ற அவள் பெற்றோரை சாகித்யன் தடுத்து விட்டான்.


அரசு தரப்பு வக்கீல் சந்துவுவையும் சாதாவையும் சேர்த்தே விசாரிக்க ஆரம்பித்தார். அதில் இருவரும் தங்கள் காதலை ஒத்துக்கொள்ள, பின் சுதா தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் கூறி முடித்தாள்.


"அங்க இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமா தான் இருந்துச்சு. ஒருவழியா தப்பிச்சிட்டேன்னு நினைச்சு சந்தோஷப்படுறதுக்குள் அந்த நாய் கூடவே கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்றாங்க." என்று சுதா கதறி அழ அவளை ஆதரவாக பிடித்துக் கொண்ட சந்துரு,


"எனக்கு சுதாவ சின்னதுல இருந்தே பிடிக்கும். அவ மைனர் பொண்ணுன்னு தான் நான் என் காதல வீட்டுல சொல்ல.

இப்போ அவ மேஜர் என் கூட அனுப்பி வையுங்க நான் பாத்துக்கிறேன். பொறக்க போற குழந்தையும் எங்க குழந்தையா வளரட்டும்." என சந்துரு பேச பேச அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தன.


சந்துரு தன்னுடன் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் ஏற்றுக் கொள்வான் என சுதாவுமே எதிர் பார்க்கவில்லை.


வழக்கு இவ்வாறு மாறக்கூடும் என முன்பே யோசித்து வைத்திருந்த சாகித்யன் சந்துருவிடம் பேசி நீதிமன்றத்திற்கு வரவழைத்தான். அவனுமே காதலில் உறுதியாக இருக்க, சுதா வழக்கில் சம்மந்தப்ட்ட அனைவருக்கும் தண்டணை கிடைத்ததும் காதலியும் தான் வேலை செய்யும் இடம் நோக்கி பறந்துவிட்டான்.


அனைத்தையும் முடித்து வீடு வந்த கணவனை கட்டி தழுவி கண்ணத்தில் முத்தமிட்டு ஆரவாரமாக வரவேற்ற அமுதரசி


"யு ஆர் க்ரேட் சகித்தான்..." என்று கூற, அவளை தூக்கி சுற்று சுற்றி இறக்கி விட்டவன்,


"உனக்கு பிடிக்குமேன்னு தான் இந்த வேலைக்கு வந்ததேன். இப்போ நீ கொடுத்த பரிசுல எனக்குமே பிடிக்க ஆரம்பிச்சிடு." என்று தன்னவள் கண்ணம் கிள்ளி சாகித்யன் கூற,


"எனக்காகவா..." என்று இன்பமாய் அதிர்ந்து அமுதரசி கேட்க,


"நமக்காக..." என்று கொஞ்சியவனின் மொழியில் உலகம் மறந்தாள் பாவையவள்.


நாட்கள் வண்ணமயமாக நகர எட்டு மாதம் எவ்வாறு சென்றது என்று சொல்ல முடியாதபடி வேகமாக சென்றது. அதில் அமுதரசி சாகித்யன் வாழ்வில் கொஞ்சல் செல்ல சண்டை நகர, சக்கரவர்த்தி கார்த்திகா வாழ்வில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.


சக்கரவர்த்தி தன்னில் அமுதரசி தம்பியின் மனைவி என்ற உறவை அழுத்தமாக பதிய வைத்துக் கொண்டு கார்த்திகாவிடம் நட்பாக பழக நினைக்க, கார்த்திகாவிடம் பெரிதாக எந்த எதிர் விணையும் இருப்பதில்லை.


சொல்லப்போனால் இன்னும் இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் ரூம்மேட் என்று நிலையை தாண்டவில்லை. அலுவலக விசயத்தை சாதரணமாக பேசுபவள், சொந்த விஷயம் என்றால் ஓர் இரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்வாள்.


அவளின் மௌனத்திற்கு காரணம் புரியாது தவித்த சக்கரவர்த்தி பொறுமையிழந்து அவளிடமோ காரணம் கேட்க, கார்த்திகா நிதாரனமாக,


"போதையில கூட நான் உங்க கண்ணுக்கு பிடிச்ச மாதிரி இல்ல. பிடிக்காம நீங்க என் கூட வாழ வேண்டாம்." என்று கூற, அவள் கூறியதை கிரகிக்க முயன்றவனுக்கு தான் அன்று போதையில் கூறியதை மனைவி இன்னும் நினைவில் வைத்து கொண்டிருப்பதை நினைத்து


"இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் கடவுள் ஏன் இவ்வளவு நியாபக சக்தியை கொடுத்திருக்கான்னு தெரியல. அவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறதே இந்த அப்பாவி புருஷன்கள் வேலையா போச்சு." என்று மனதுக்குள் புலம்ப மட்டுமே முடிந்தது.


அதன் பிறகு சக்கரவர்த்தி என்ன முயற்சி செய்தாலும் அது கார்த்திகாவை சிறிதும் அசைக்கவில்லை. சக்கரவர்த்தியின் கவனம் முழுவதும் கார்த்திகாவின் மீதிருக்க, அமுதரசியை பற்றிய நினைவே அவனிடம் இல்லை.


இதற்கிடையில் கீர்தனாவிற்கு குழந்தை பிறந்திருக்க, தோழிகள் இருவரும் சென்னை வந்து சேர்ந்தன. திருமணத்திற்கு பின் இருவரும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. அவரவர் வேலை பளு காரணமாக சந்திப்பு நிகழவில்லை.


குழந்தை பிறந்த பதினாறாவது நாள் தொட்டிலிலிட்டு பெயரிட வேண்டும் என பெரியவராகள் முடிவு செய்ய, கீர்த்தனா பெயர் சூட்டுவிழா மதுரையில் தங்கள் வீட்டில் தான் நடைபெற வேண்டும் என அடம்பிடிக்க,


"கீர்த்தி குழந்தை பெறந்த உடனே உன்னால ட்ராவல் பண்ண முடியாது." என்று கார்த்திகா எவ்வளவோ எடுத்து கூறியும் அவள் கேட்பதாக இல்லை.


"இது என் குழந்தை. அவன் பெயர் வைக்கிற பங்ஷன் எங்க நடக்கணும்னு நான் தான் முடிவு செய்வேன். என் உடம்ப பாத்துக்க எனக்கு தெரியும் தேவையில்லாம நீ பேசாத. என்னமோ பத்து புள்ள பெத்தவ மாதிரி பேசுறீங்க." என்று கீர்த்தனா கார்த்திகாவுடன் அமுதரசியையும் சேர்த்து பேச, அது இருவருக்கும் சுருக்கென்று இருந்தது.


கீர்த்தனாவின் விருப்பப்படியே மதுரையில் பெயர் சூட்டுவிழா விமரிசையாக நடைபெற, அதை பார்த்துக் கொண்டிருந்த அன்பரசிக்கு பேசுவதற்கு வாய் பரபரத்தாலும் மகளின் பெருட்டு அமைதியானார்.


அன்பரசி எதாவது பேச நினைத்தாலே அமுதரசி அவர் முன் தோன்றி எச்சரிக்கை செய்ய, அவருக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இல்லாமல் போனது. உறவுகள் அனைத்து நடப்பை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டன.


மணிமேகலை கூட அன்பரசியின் அமைதியில் வியப்படைந்ததுடன் அமுதரசியை மெச்சுதலுடன் பார்த்துவிட்டு சென்றார்.மலரும்...
 
கதை முடிய போகுது பட்டூஸ்

 
மலர் 21


"அப்பா கூட ஒரு நாள் இருந்துட்டு போகலாமே. பங்ஷன் முடிஞ்சதும் கால்ல வெந்நீர் ஊத்தின மாதிரி கிளம்புறீங்க." என்று அமுதரசி குறைபட, அவள் தலையை வாஞ்சையாக தடவிய மாணிக்கம்,


"வேலை இருக்கு டா. அதான் அம்மா உன் கூட இருக்கிறா தான... அடுத்த வாரம் உங்க கூட தங்கிற மாதிரி வரேன். அதுவரை அம்மாவ பாத்துக்கோ." என்று கண்சிமிட்டி கூற, அவர் அருகில் வந்த அமுதரசி


"உங்க பாரத்த என் தலையில இறக்கி வைச்சிட்டு போறீங்க." என்று கூறி சிரிக்க, அதற்கு மாணிக்கம்


"எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கே மீண்டும் கொடுக்கபட்டதுன்னு ஒரு வசனம் உண்டு. அது மாதிரி இங்க இருந்து தான் உங்க அம்மாவ எடுத்துட்டு போனேன். அதான் இப்போ இங்கயே கொடுக்கிறேன். ரெண்டு அண்ணகாரன்களும் தங்கச்சிய சமாளிக்கட்டும்." என்று மனைவிக்கு கேட்கும் படி கூறிவிட்டு அன்பரசியின் முறைப்பை பெற்றுக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.


மாணிக்கம் மனது சக்கரவர்த்தி கார்த்திகா இருவரை பற்றியே நினைத்து கொண்டிருந்தது. தன் மகள் வளமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்க, இன்னொருவரின் மகள் வாழ்க்கை நட்டாற்றில் நிற்பது அவருக்கு கவலையை தந்தது.


தனக்கு புரிந்தது அமுதரசிக்கும் புரிந்திருக்கும். பின் ஏன் அதை சரி செய்ய நினைக்கவில்லை என யோசித்து கொண்டே வந்தவர் எதிரில் வந்த லாரியை கவனிக்க தவறினார்.


மாணிக்கம் கிளம்பிய சிறிது நேரத்திலே சாகித்யனுக்கு அழைப்பு வர எடுத்து பேசியவன் முகம் கலவரமானது. அவனையே பார்த்துக் கொண்டிருந்த அமுதரசி என்னவென்று கேட்க அவளிடம் பதில் கூற முடியாது சக்கரவரத்தியிடம்


"அண்ணா கொஞ்சம் என் கூட வரியா?" என்று சாகித்யன் அழைக்க, அண்ணா என்ற அழைப்பு சக்கரவர்த்தியை கேள்வி எதுவும் கேட்காமல் புறப்பட வைத்தது.


அடுத்த சில மணி நேரத்திலேயே உறவினர்கள் ஒவ்வொருவராக வர அமுதரசியின் அடிவயிற்றில் இனம்புரியாத உணர்வு ஆட்டிப்படைத்தது.


உறவினர்களின் கவலை படர்ந்த முகமும் அமுதரசியின் பயம் உண்மை என்று கூற, அவளின் தலையில் இடியை இறக்குவது போல சாகித்தியனும், சக்கரவர்த்தியும் மாணிக்கத்தின் பூத உடலை வீட்டின் நடுவில் வைத்தன.


காலையில் தன்னிடம் சிரித்த முகமாக விடை பெற்றுச் சென்ற தந்தை சிறிது நேரத்திலேயே உயிரற்ற உடலாய் வீட்டின் நடுவில் கிடைத்தப்பட்டிருப்பதை பார்த்த அமுதரசி அழக் கூட தோன்றாமல் சிலையாக அமர்ந்திருந்தாள்.


அவளுக்கு நேர்மாறாக மாணிக்கத்தின் உடல் அருகே கதறி அழுது கொண்டிருந்த அன்பரசியை யாராலும் தேற்ற முடியவில்லை. மாணிக்கம் உயிரோடு இருக்கும் வரை யாருக்கும் அவருடன் பகையில்லை. அதுவே அவருக்கான மதிப்பை இறுதி பயணத்தில் பெற்று தந்தது.


தாயின் அழுகுரல், வீட்டிற்குள் கூடியிருந்த சொந்தங்கள் புலம்பல், என எதுவும் அமுதரசியின் கருத்தில் படவில்லை. இரு பக்க உறவினர்களும் வந்துவிட சகல மரியாதையுடன் மாணிக்கத்தின் பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டது.


தன் தந்தையை எடுத்துச் செல்லும் பொழுது தன் உணர்வுகளுக்கு வந்த அமுதரசி அவரை கட்டி பிடித்துக்கொண்டு அழ யாராலும் அவளை நெருங்க முடியவில்லை.


ஒரு வழியாக சாகித்யன் அமுதரசி மாணிக்கத்திடம் இருந்து பிரித்தெடுக்க அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது.


மாணிக்கம் இறந்து ஒருவாரம் ஆன பின்பு அமுதரசி தன்னை சமாளித்துக் கொண்டு தன் அம்மாவிடம் வந்தவள்


"அம்மா நீ தனியா சென்னை போக வேண்டாம். என் கூட வந்துடு. சென்னைல எல்லாத்தையும் ஆள் வைச்சு பாத்துக்கலாம்." என்று கேட்க


"நான் உன் கூட வரல." என்று அன்பரசி கூற


"அப்போ நீ மட்டும் சென்னையில தனியாக இருக்க போறியா." என்று தாயின் எண்ணம் புரிந்து அமுதரசி கேட்க


"நான் என் சொந்த ஊருலயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்." என்று அன்பரசி அழுங்காமல் மணிமேகலையின் தலையில இடியை இறக்கினார்.


தோழியையும், மணிமேகலையின் மனநிலையையும் கருத்தில் கொண்டு யோசித்த அமுதரசிக்கு தாயின் முடிவு சரியாகப்படவில்லை. ஏற்கனவே இரண்டு நாள் மட்டும் சொந்த ஊருக்கு வந்து சென்ற போது அவர் கார்த்திகாவிடம் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது கீர்த்தனா மூலம் அவளுக்கு தெரிய வந்தது. அப்போதே அன்பரசி யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை.


அன்பரசியை இங்கு விட்டு சென்றால் அவர் மனக்கஷ்டம் அனைத்தையும் தங்கை குழந்தையை பார்த்துக் கொள்ள தங்கியிருக்கும் கார்த்திகாவிடம் இறக்கி வைப்பார். அன்பரசின் நிலையை கருத்தில் கொண்டு நிச்சயம் அவரை யாரும் தண்டிக்கப் போவதில்லை.


ஒருவேளை யாராவது எதையாவது கூறினால் அதை அன்பரசி பெரிய பிரச்சனை ஆக்காமல் விட மாட்டார். அன்பரசி நடவடிக்கையினால் காயப்பட போவது கார்த்திகா மட்டுமே. அதனால் தன்னால் ஆன மட்டும் தனது தாயை சொந்த ஊரில் தங்க விடாமல் தடுக்க நினைத்தாள். ஆனால் அவரோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.


வேறு வழியில்லாத அமுதரசி தான் இன்னும் சில நாட்களுக்கு மாமியாரின் வீட்டிலே தங்கியிருக்க முடிவு செய்து விட்டதாக சாகித்தியனிடம் கூறிவிட்டு தாயுடன் மாமன் வீட்டில் இருந்து கொண்டாள்.


கணவனை இழந்து தனியாளாக வீட்டிற்கு வந்த சகோதரியை சகோதரர்கள் இருவரும் அன்புடனே தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.


அவருக்கான அனைத்து மரியாதைகளும் கிடைத்தது. ஆனால் கணவன் இறந்த பிறகு தோன்றும் ஒருவித பாதுகாப்பு இல்லாத உணர்வில் தவித்துக்கொண்டிருந்த அன்பரசி பார்ப்பதில் என்ன குற்றம் கண்டு பிடிக்க ஆரம்பித்தார்.


முன்பே அவர் குணம் குற்றம் குறை கூறுவது தான் என்ற போதிலும் அதில் இன்னும் மூர்க்கமாகி போனார். இதில் அவரிடம் அதிகம் மாட்டிக் கொண்டது என்னவோ கார்த்திக் தான்.


மகளின் தோழியாக மட்டும் கார்த்திகா இருந்த போது பாசமாக நடந்து கொண்டவர், என்று அவள் சாகித்யனுக்கு தன் அண்ணி பார்த்த பெண் என்று தெரிந்ததாே அன்றே மணிமேகலையுடன், காரத்திகாவையும் வெறுக்க ஆரம்பித்தார்.


"அம்மா நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. நீயா ம்மா இப்படி மாறிட்ட." என்று தாயிடம் கேட்க, அவரோ அலட்டிக்கொள்ளாமல்


"நான் ஒன்னும் மாறல. உனக்கு நான் மாறிட்ட மாதிரி தெரிஞ்ச அதுக்கு என்னால ஒண்ணும் பண்ண முடியாது." என்று கூறிவிட்டு அன்பரசி மகளை நிமிர்ந்துகூட பார்க்காமல் அங்கிருந்து கட்டிலில் படுத்துக் கொள்ள, அமுதரசி தான் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தபடி கீழே படுத்துக் கொண்டாள்.


தாயை இரவில் கூட தனியே விட அமுதரசிக்கு பயமாக இருந்தது. பகலில் வார்த்தையால் பிறரை காயப்படுத்துபவர், இரவில் கணவரை நினைத்து தன்னை தானே காயப்படுத்து கொள்ள, அதை பார்த்த அமுதரசி தாயுடனே இரவு வேளையில் தங்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.


"ஏன் அண்ணி உங்க மருமகளுக்கு எனக்கு பரிமாற அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? இல்லை எனக்கு இந்த வீட்டில இவ்வளவு மரியாதையே அதிகமும் நீங்களும் உங்க மருமகளும் நினைச்சிங்களா?" என்று அன்பரசி காலையிலேயே தனக்கு வேலையாள் பரிமாற வந்ததை வைத்து குத்தலாக கேட்டு வைத்தார்.


'காலையிலேயே இது என்ன?' என்று நினைத்த மணிமேகலை மசாலா அரைத்த கையையும் காட்டி கார்த்திகாவை கெஞ்சுதலாக பார்த்த பார்வையில் அவள் தன்னிடமிருந்த தங்கை குழந்தையை கூடத்தில் இருந்த பாயில் படுக்க வைத்துவிட்டு வந்து உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். அப்போது ஞ குளித்துவிட்டு வந்த கீர்த்தனா


"அக்கா உன்னால குழந்தைய பாத்துக்க முடியலன்னா சொல்ல வேண்டியதான. இப்படியா என் பிள்ளைய தனியா விட்டுட்டு போவ..." என்று படபட பட்டாசாக பொறிய ஆரம்பிக்க, நடப்பதையெல்லாம் கவனித்தபடி வந்த அமுதரசி, அதற்கு மேல் கீர்த்தனா பேசும் முன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து


"குழந்தையை விட யாரும் எதுவும் பெருசு கிடையாது. நீங்க போய் உங்க வேலையை பாரு... என் அம்மாவுக்கு பரிமாறும் வேலை இந்த வீட்டு மருமகளா நான் பார்க்கிறேன்." எனக்கூறி கார்த்திகாவின் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கிக்கொள்ள, கார்த்திகா அங்கிருந்து செல்லலாமா வேண்டாமா என்னும் நிலையில் நின்று கொண்டிருந்தாள்.


'நீ என்னமோ செய்துகொள்' என்று அமுதரசி தன் அன்னையின் தட்டில் இட்லிகளை அடுக்கிக் கொண்டே இருக்க


"போதும்... போதும்..." என்று அன்பரசி கூறியதைக் கேட்காமல் உணவு மேசையில் இருந்த சட்னி, சாம்பார் எள்ளுப்பொடி, இட்லிபொடி, பொங்கல் என அனைத்து பதார்த்தங்களையும் எடுத்து தட்டில் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.


"இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது அம்மு." என்று அன்பரசி பாவமா கூற


"இல்லம்மா உனக்கு தான் யாரவது பரிமாறினா தான நல்ல சாப்பிட முடியும். அதான் நானே பக்கத்திலிருந்து பரிமாறினேன். அதான் நான் இருக்கிறேனே. என்ன விட வேற யார் உன்ன நல்ல பாத்தக்க போறாங்க." என்று அமுதரசி கூற, தன் மகள் ஒரு முடிவோடு வந்த நிற்பதை கண்டு கொண்ட அன்பரசி வேகமாக தட்டிலே கையை கழுவிவிட்டு எழுந்து சென்றார்.

_________________________


திருமணம் முடிந்த இத்தனை மாதத்தில் சக்கரவர்த்தி ஒரு நாளும் கார்த்திகாவை பிரிந்து இருந்ததே இல்லை என்று சொல்லலாம். அவனுக்கோ மனைவியை விட்டு தனியே இருக்க முடியவில்லை.


பகலில் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும் இரவில் தனிமையில் மனைவியின் அருகாமை வேண்டும் என்று தவிக்க ஆரம்பித்தான்.


சேர்ந்து இருக்கு போது தோன்றாத அவன் இளமை உணர்வுகள் பிரிவில் அவனுள் மோக தீயை பற்ற வைக்க, அதை தனிக்க வேண்டியவளோ அவனை தவிக்கவிட்டுவிட்டு அவள் மாமியார் வீட்டுல் இருப்பதை நினைத்து வேதனையின் உச்சத்தில் இருந்தான்.


அதே போல சாகித்தியனும் மனைவியை தன்னுடன் அழைத்து செல்வதற்காக அன்பரசியையும் தங்களுடன் அழைத்து கொள்ளலாம் என திட்டமிட, அவரோ அண்ணன் வீட்டை விட்டு அசைவதாக இல்லை. அன்னையை அழைத்து வராமல அமுதரசி மட்டும் கணவன் வீட்டிற்கு வருவதாக இல்லை.


என்ன தான் அவன் வேலை மதுரையில் என்றாலும் அவன் கிராமத்திலிருந்து தினமும் சென்று வருவது சாத்தியப்படாது. தன் நிலையை புரிந்து கொள்ளாமல் செயல்படும் மனைவியை நினைத்து கோபம் கொள்ளவும் அவனால் முடியவில்லை. இறுதியில் வேறு வழியின்றி சக்கரவர்த்தியிடமே சரணடைந்தான்.


"டேய் அண்ணா தயவு செஞ்சு அண்ணிய உன் கூட கூட்டிட்டு போ டா. அண்ணிக்கு பாதுகாப்பா அம்மு இருந்து என்ன தவிக்க விடுறா..." என்று சாகித்யன் கெஞ்ச, அதற்கு பெருமூச்சை வெளிவிட்ட சக்கரவர்த்தி


"உன் அண்ணி என்னையும் தான் தவிக்க விடுறா. நானே எப்படி அவளை கூட்டிட்டு வரதுன்னு தெரியாம முழிக்கிறேன்." என்று தன் கவலையை கூற, சிறிது நேரம் யோசித்த சாகித்யன்.


"நம்ம பேச்ச ரெண்டு பேரும் கேட்க மாட்டாங்க. ஆனா அவங்க பேச்ச கேட்பாங்க தான... அதனால நீ அம்மு கிட்ட பேசு, நான் அண்ணிட்ட பேசுறேன்." என்று எளிதாக தனக்கு தோன்றிய திட்டத்தை கூற, சக்கரவர்த்திக்கு அது எளிதில்லையே.


திருமணத்திற்கு முந்தய நாள் அமுதரசியிடம் பேசிய பின் இன்றுவரை தனியே சக்கரவர்த்தி பேசவே இல்லை.


தன் தயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தன் மனைவிக்காக அமுதரசியிடம் பேச முடிவெடுத்தான். தன் மனதில் அமுதரசியை கார்த்திகா வென்றதையும் உணர்ந்தான்.


கார்த்திகாவும் அமுதரசியும் மும்முரமாக சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்க, அவர்களை எட்டி பார்த்த மணிமேகலை ஒன்றும் கூறாது வெளியேறினார்.


"அமுது நம்ம மாமியார்..." என்று கார்த்திகா மணிமேகலை வந்து சென்றதை கண் காட்ட, அலட்சியமாக தோளை குலுக்கிக் கொண்ட அமுதரசி


"இப்ப அதுக்கென்ன..." என்று கேட்டபடி சாம்பாரை ருசி பார்த்துவிட்டு,


"இதுக்கு கொஞ்சம் உப்பு போடு." என்று கூற, அவள் கையை பற்றி தன்புறம் திருப்பிய கார்த்திகா


"உனக்கும் அத்தைக்கும் என்ன பிரச்சனை?" என்று கேட்க, உதட்டை பிதுக்கிய அமுதரசி,


"பிரச்சனைன்னு பார்த்த பெருசா எதுவும் இல்ல. அவங்களுக்கு என் அம்மாவ பிடிக்காது. அம்மா மாதிரி தான் பெண்ணுன்னு அவங்களுக்கு ஒரு நினைப்பு. அதான் இப்படி... அவங்க நினைப்ப மாத்த எனக்கு தோணல.

உன்ன அவங்களுக்கு ரெம்ப பிடிக்கும். ஆனா நீ என் ப்ரெண்டா இருக்கிறதாலே உங்கிட்டயும் மாமியார் கெத்த மெய்ன்டைய்ன் பண்றாங்க. மத்தபடி தங்கமான மாமியார் தான்." என்று சிரித்து கொண்டே கூற,


"நீ எப்போ ஊருக்கு போற..." என்று சம்மந்தமில்லாமல் அடுத்த கேள்விக்கு கார்த்திகா தாவ, அதன் காரணத்தை புரிந்து கொண்டு,


"அம்மா என் கூட வந்தா இன்னைக்கே புறப்பட வேண்டியது தான்." என்று சாதாரணம் போல கூற,


"எனக்காகவா" என்று அழுத்தமாக கேட்டவளிடம்,


"என் அம்மாக்காக. அவங்க மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு நல்ல அம்மா. அவங்கள என்னால விட முடியாது. யாரும் அவங்கள பேசிட்டா என்னால தாங்கிக்க முடியாது. நீ எனக்காக பொறுத்து போகலாம் ஆனா எல்லாரும் எல்லா நேரமும் பொறுமையா இருக்க முடியாது." என்று புன்னகைத்து கூறிய அமுதரசி தோழியின் யோசனையை பார்த்து.


"ரெம்ப யோசிக்காத பாத்துக்கலாம்." என்று கூற, கார்த்திகாவும் அமைதியானாள்.


____________________________


திடிரென்று வந்த அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து வந்ததை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சக்கரவர்த்திக்கு தூரம் அதிகம், சாகித்யனுக்கோ வேலை அதிகம்.


மதிய உணவுக்கு பின் பெரியவர்கள் ஓய்வெடுக்க, சிறியவர்கள் மட்டுமே. அமுதரசி மாடிக்கு காய வைத்தை துணியை எடுக்க செல்ல, அவள் பின்னே சக்கரவர்த்தி வந்து சேர்ந்தான்.


துணியை எடுத்து விட்டு அமுதரசி திரும்ப, அவள் சக்கரவர்த்தியை பார்த்து அதிர்ச்சியடையாமல் இயல்பாய் புன்னகைத்தாள். அந்நேரம் சக்கரவர்த்திக்குமே தன் மனதில் கார்த்திகா இருப்பதாள் அவளை பார்த்து இயல்பாக புன்னகைக்க முடிந்தது.


"சொல்லுங்க சக்தி அத்தான்." என்று கையிலிருந்த துணிகளை கை பிடி சுவரின் மீது வைத்து மடித்தபடி கேட்க,


"கார்த்திகாவ எப்படி லவ் பண்றதுன்னு சொல்லேன்." என்று ஒரு வேகத்தில் கேட்டுவிட்டு அசடு வழிய சக்கரவர்த்தி நிற்க, அமுதரசி சத்தமாக சிரித்துவிட்டாள் அவன் கூறியதில். மெதுவாக அவள் சிரிப்பை நிறுத்திவிட்டு


"என்ன பிரச்சனை, என்னாலயா?..." என்று எங்கே தன் மீதிருந்த பிடித்தத்தை கார்த்திகாவிடம் கூறியிருப்பானோ என்ற பயத்தில் கேட்க


"உன்னால பிரச்சனை இல்ல. என்னால தான். பிரச்சனை கொஞ்சம் பெருசு தான்" என்று முதலிரவு அன்று நடந்ததையும் அதற்கு கார்த்திகாவின் எதிர்விணையையும் கூறினான்.


"இப்போ மனைவியா என் மனசுல கார்த்திகா மட்டும் தான் இருக்கா. வேற எந்த எண்ணமும் இல்ல. எனக்கு எப்படி என் தப்ப சரி பண்றதுன்னு தெரியல." என்று சக்கரவர்த்தி கேட்க,


"கார்த்திக்கு நீங்க மட்டும் தான் முக்கியம்ன்னு புரிய வைங்க. எப்படின்னு நீங்க தான் தெரிஞ்சுக்கணும்." என்று சக்கரவர்த்தியிடம் கூறிவிட்டு மடித்த துணிகளுடன் கீழே இறங்கி சென்றாள்.


சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த கார்த்திகாவிடம் வந்த சாகித்யன் சுற்றி வளைக்காமல்


"அம்மு என் கூட வர உதவி பண்ணுங்க." என்று கேட்க, தீடீரென்று கேட்ட கேள்வியில் திகைத்த கார்த்திகா அவனை புரிந்து கொண்டு


"சரி நீங்க போகும் போது உங்க அம்முவ கூட்டிட்டு போகலாம்." என்று கூறிவிட்டு தங்கையின் அறைக்கு வந்தாள்.


"கீர்த்தி நான் பெங்களுர் போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்." என்று தன் முடிவை தெரிவிக்க, அதில் பதறி எழுந்து கீர்த்தனா


"என்ன விளையாடுறீயா. நீ போயிட்ட என்னையும் குழந்தையையும் யார் பாத்துக்குவா." என்று சுயநலமாக பேச,


"உன்னை யார் பத்து நாள்ல மதுரைக்கு வர சொன்னாங்களோ அவங்கள பாத்துக்க சொல்லு. தனியா சமாளிக்க முடியலன்னா அம்மா வீட்டுக்கு போ." என்று கார்த்திகாவின் பின் நின்று அமுதரசி கூற, மேற்கொண்டு கீர்த்தனா பேசும் முன் கார்த்திகாவை இழுத்துக்கொண்டு அவள் அறைக்கு வந்தவள்.


"நீ கொஞ்சம் சுயநலமா யோசிக்கலாம் கார்த்தி. நான் கூட சில நேரம் சுயநலமா தான் இருக்கிறேன். நல்லவளா இருந்தா உனக்கு யாரும் அவார்ட் தர போறது இல்ல.
கொஞ்சம் உன்ன பத்தி மட்டும் யோசி கார்த்தி. நானும் சாகித்தான் கூட போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்." என்று அமுதரசி கூற,


"என்ன திடீர் முடிவு." என்று கார்த்திகா கேட்க,


"கிட்சன் உரையாடல கேட்டேன். எப்படியும் நீயும் சக்தி அத்தான் கூட புறப்படுவன்னு தெரியும், அப்புறம் எனக்கு இங்க என்ன வேலை. நீ இல்லன்னா கொஞ்ச நாள்ல அம்மா என்கூட வந்திடுவாங்க.." என்று எழுந்து கொள்ள

"
அது என்ன புதுசா சாகித்தான்..." என்று கார்த்திகா கேட்க,


"முன்ன நாலு அத்தானையும் சக்தின்னு தான் சொல்லுவேன். பட் இப்பாே என் ஹஸ் ( husband) எனக்கு ஸ்பெஷல் சோ சாகித்யன் + அத்தான்= சாகித்தான்." என்று கண் சிமிட்டி விளக்கம் கொடுத்தவள் கதவு வரை சென்று திரும்பி பார்த்து


"சக்கரவர்த்தி அத்தானுக்கு உன் லவ் பண்ண ஐடியா வேணுமாம். இப்போதைக்கு என் கிட்ட ஐடியா இல்ல. உன் கிட்ட இருந்தா கொஞ்சம் கொடு." என்று கூறிவிட்டு செல்ல, கார்த்திகா இதழ்களில் அவள் அறியாமலே புன்னகை பூத்தது.


கார்த்திகா தன் உடமைகளை எடுத்து வைக்க, அவள் பின்னிருந்து அணைத்த சக்கரவர்த்தி அவள் தோளில் தனது இதழ்களை பதித்தான்.


ஒரு குருட்டு தைரியத்தில் முத்தமிட்டிருந்தாலும் மனைவி என்ன சொல்லுவாளோ என நினைத்து பயந்து கொண்டிருந்தான்.

"என் கூட வந்துடு கார்த்தி... நீ இல்லாம தனியா முடியல." என்று கிறக்கமாக கேட்க, அதில் அவளுமே கிறங்கிப்போனாள்.


மனைவியின் நிலையை உணர்ந்தவன் அவளை கைகளில் ஏந்தி கட்டிலை அடைய அதில் அவள் அடுக்கி வைத்திருந்த உடைகளுடன் சேர்த்து அவளையும் கலைக்க ஆரம்பித்தான்.


வெளியே கேட்ட அன்பரசி சத்தத்தில் விலகி எழுந்தவன் சிதறிக் கிடந்த உடைகளுக்கு இடையே கலைந்திருந்த மனைவியை பார்க்க, அவளோ கணவன் விலகியதில் மோக வலை அறுந்த ஏமாற்றத்தில் முறைக்க,


"சாரி கார்த்தி உன் பர்மிஷன் இல்லாம..." என்று வார்த்தை கோர்க்க முடியாது வெளியேறினான்.


'கொஞ்சம் பாவம் தான் நீங்க... இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.' என நினைத்தவள், கணவன் தன்னை தீண்டியதும் மனது அதை ஏற்று கொண்டதே அவன் தன்னுள் வந்துவிட்டான் என்பதை உணர்த்த, தனக்குள் சிரித்துக் கொண்டே அனைத்தையும் எடுத்து வைத்தாள்.


______________________________________________


"உனக்கு என் கிட்ட எதாவது சொல்லனுமா." என்று சாகித்யன் கேட்க, சற்றும் யோசியாமல்


"இல்லயே." என்ற பதில் அமுதரசியிடமிருந்து வந்தது.


மாலையே சாகித்யன் முக்கிய வேலை என்று கூறி அமுதரசியுடன் புறப்பட, சக்கரவர்த்தி இரவு ட்ரையின் டிக்கெட்டுடன் வந்தான்.


"திடீர்ன்னு வரீங்க.. உடனே கிளம்புறீங்க. என்னமோ போ... நல்லா இருந்தா சரி தான்." என்று மணிமேகலை முடித்துக் கொள்ள, கீர்த்தனா


"என் பிள்ள மேல அக்கறையே இல்ல உனக்கு, அவன் மேல கொஞ்சம் பாசம் இருந்தாலும் இப்படி கிளம்புவியா." என்று புகார் படிக்க,


"உன் பிள்ளை மேல உனக்கு தான் அக்கறை இருக்கணும். இங்க குழந்தைய பாத்துக்க நாங்க இத்தனை பேரு இருக்கும் போது அண்ணி எதுக்கு." என்று சத்யன் கூறிய பிறகே கீர்த்தனா அமைதியானாள்.


சாகித்யன் அமுதரசியுடன் வீட்டிற்கு வந்த பிறகு இருவரின் நாட்களும் வழக்கம் போல சென்றது. மாலை சீக்கிரம் வீடு திரும்பிய சாகித்யன் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அமுதரசியின் அருகில் இடித்தபடி அமர்ந்தான்.


"அதான் அவ்வளவு இடம் இருக்கு தான. அப்புறம் ஏன் என்ன இடிச்சிக்கிட்டு இருக்கிற." என்று சிடுசிடுக்க, அவளின் சிடுசிடுப்பை வித்தியாசமாக பார்த்த சாகித்யன்


"என்ன ஆச்சு உனக்கு. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன் உனக்கு தான் என்னமோ ஆகிட்டு." என்று கூறியவன்


"உனக்கு என் கிட்ட எதாவது சொல்லணுமா?" என்று வழக்கம் போல கேட்க, இப்போ யோசனையாக கணவனை பார்த்த அமுதரசி


"நானும் ஊருக்கு வந்த நாள்ல இருந்து பாக்கிறேன் அடிக்கடி இதே கேள்விய திரும்ப திரும்ப கேட்கிற." என்று வினவ


"ஊருல வச்சு நீயும் சக்கரவர்த்தியும் மாடில பேசினத கேட்டேன். நீயும் சிரிச்சு பேசினாலுமா தனியே டென்ஷனா இருக்கிறியா அதான் கேட்டேன். உனக்கு என் கிட்ட எதாவது சொல்லணுமா?" என்று அதே கேள்வியை முன் வைக்க, அமுதரசிக்கு பயத்தில் உடல் முழுவதும் நடுங்கி வேர்க்க ஆரம்பித்தது.


அதுவரை சாதாரனமாக பேசிக்கொண்டிருந்த சாகித்யனுக்கு அமுதரசியின் நடுக்கமும் வியர்வையும் பல கேள்விகளை எழுப்பியது.


"என்ன சந்தேகப்பட்டு கேள்வி கேக்குறியா..." என்று மூச்சு வாங்க கேட்டவள் அங்கிருந்து எழுந்து கொள்ள நினைக்க அவள் கையை பிடித்து தடுத்தவன்.


"சந்தேகம்ன்னு பெரிய வார்த்தைய பயன்படுத்தாத அம்மு. உன்னால சக்கரவர்த்திக்கும் அண்ணிக்கும் பிரச்சனையான்னு நீ கேட்ட. அது என்னன்னு தெரிஞ்ச உதவி பண்ணலாமேன்னு தன் கேட்டேன்." என்று விளக்கம் கூறி விட்டு பதிலுக்காக அமுதரசி முகம் பார்த்தான்.


சாகித்யனின் சாதாரன பார்வைக்கே நடுக்கம் கொண்டவளுக்கு அவனது ஆராய்ச்சி பார்வை பயத்தை அதிகரிக்க, கை கால் வெளிப்படையாகவே உதற ஆரம்பித்தது. தனது நடுக்கத்தை மறைக்க அமுதரசி பின்னே செல்ல


"அம்மு என்ன ஆச்சு உனக்கு." என்று சாகித்யன் அவனருகில் வர, அமுதரசி அவன் கைகளில் மயங்கி சரிந்தாள்.

மலரும்....


மலரும்....
 
 
மலர் 22


அமுதரசி மயக்கி விழுந்ததும் அவளை தூக்கிக் கொண்டு காரில் அமர வைத்து அருகில் உள்ள மருத்துவமணைக்கு அழைத்து வந்த சாகித்யன் தன்னவளுக்கு என்ன ஆனதோ என்ற தவிப்பில் காத்திருந்தான். மருத்துவர் அழைத்ததும் அவர் அறைக்கு விரைந்து சென்றவன்


"டாக்டர் என் வெய்ப்க்கு என்ன ஆச்சு. நல்ல பேசிக்கிட்டு இருந்தவ திடீர்ன்னு மயக்கமாகிட்டா." என்று பதட்டமாக கேட்க, அவனை பார்த்து புன்னகைத்தவர்


"மிஸ்டர் சாகித்யன் நத்திங் டு வொரி. உங்க வெய்ப் ப்ரெக்னன்ட்டா இருக்காங்க. கொஞ்சம் பிபி அதிகாமா இருந்ததால மயக்கமாகியிருக்காங்க. இப்போ நார்மல்லா இருக்காங்க. சில டெஸ்ட் எடுத்திருக்கோம் ரிசல்ட் வந்ததும் நீங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்." என்று மருத்துவர் கூறியதும் சாகித்யன் என்ன மாதிரி உணர்ந்தான் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது.


தானும் தந்தையாகிவிட்டோம் என்ற உணர்வே அவனை சிறகில்லாமல் பறக்க வைத்தது. அதே நேரம் அமுதரசியின் சோர்ந்த முகம் கண் முன் தோன்றி அவனை கலவரப்படுத்தியது.


மயக்கம் தெளிந்து எழுந்த அமுதரசியிடம் அவள் பயத்தை பற்றி எதையும் கேட்டுக் கொள்ளாத சாகித்யன் தன் மகிழ்ச்சியை மட்டும் வெளிப்படுத்தினான்.


தன் வயிற்றில் குழந்தையா என்று எண்ணி பூரிப்படைந்த அமுதரசியும் சாகித்யன் தன்னிடம் கேட்ட கேள்வியை தற்காலிகமாக மறந்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.


மணிமேகலைக்கு அழைத்த சாகித்யன் அமுதரசி தாய்மையடைந்த விஷயத்தை கூற, அனைவரும் போனிலே தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.


தாயின் மூலம் விஷயத்தை கேள்விப்பட்ட சக்கரவர்த்தியும் வாழ்த்து தெரிவிக்க நினைத்து அழுதரசியை அழைக்க, அதை பார்த்ததும் மீண்டும் அமுதரசியின் உடல் உதற ஆரம்பித்தது.


இயல்பாக சக்கரவர்த்தியை ஏதிர்கொள்ள வேண்டும் என நினைத்தவளே தன் இயல்பை தொலைத்து குழப்பத்தில் இருந்தாள்.


அமுதரசியின் கையில் இருந்த அழைபேசியையும் அதில் தெரிந்த சக்தி 1 பெயரையும் பார்த்ததும் யோசனையானவன் அதை கண்டு கொள்ளாதது போல


"இன்னைக்கு ரெம்ப நேரம் போன் பேசிட்டே இருந்துட்ட. கொஞ்ச ரெஸ்ட் எடு." என்று கூறி அவள் கையிலிருந்த அழைபேசியை வாங்கி அருகிலிருந்த மேசையில் வைத்தான்.


அமுதரசி விழி மூடி படுத்திருந்தாலும் அவள் மனது மட்டும் உறங்காமல் ஏதேதோ நினைவுகளை அவளுள் கிளப்பியது.


எங்கே சாகித்யன் சக்கரவர்த்தியையும் தன்னையும் சேர்த்து வைத்து சந்தேகம் கொள்வானோ என்கிற அளவு அவள் யோசித்து பயந்து கொண்டிருந்தாள்.


மனம் விட்டு பேசலாம் என்று நினைத்தாலும் அது தங்கள் பிரிவிற்கு காரணமாகிவிடுமோ என்ற அச்சம் அவளை வாய் திறக்க விடவில்லை. மொத்தத்தில் சக்கரவர்த்தி சாகித்யன் இருவரையும் அமுதரசி புரிந்து கொள்ளவில்லை.


அடுத்து வந்த நாட்களில் கிராமத்திலிருந்து யாராவது ஒருவர் அமுதரசியை பார்த்துக் கொள்ள உடனிருக்க ஆரம்பித்தன.


சொந்த ஊரை விட்டு வர மறுத்த அன்பரசி கூட மகள் தாய்மையடைந்திருப்பதை கேள்விப்பட்டதும் தன் ஜகையை மகள் வீட்டிற்கு மாற்றிக் கொண்டார்.


கர்ப காலத்தில் என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அனைவரும் கூறும் அறிவுரைகளை கேட்க ஆரம்பித்த அமுதரசி மனது தற்காலிகமாக சக்கரவர்த்தி பற்றிய பயத்தை ஓரங்கட்டி வைத்தது.


_________________________


கார்த்திகா சக்கரவர்த்தியின் வாழ்க்கையும் முன்பு போல் அல்லாமல் சற்று முன்னேற்றம் கானப்பட்டது. ஊரில் வைத்து அவளிடம் நெருங்கியது போல சக்கரவர்த்தியால் கார்த்திகாவிடம் நெருங்க முடியவில்லை.


கார்த்திகாவும் சக்கரவர்த்தி மேல் இருந்த வருத்தத்தை மறந்து மனவிட்டு பேச ஆரம்பித்தாளும், அவனை தவிக்க விட்டு வேடிக்கை பார்த்தாள்.


கணவனின் கிழிக்கப்பட்ட நாள்குறிப்பு பற்றி கேட்க நினைத்தாலும், அதன் மூலம் வரும் விலகலை கார்த்திகா விரும்பவில்லை.


அதேபோல் ஒன்றுமில்லை என நினைத்து ஒதுக்கவும் முடியவில்லை. அழகான ஓவியத்தில் சிறு பிழை போல அந்த நாட்குறிப்பு கார்த்திகாவின் மனதை உறுத்திக் கொண்டு தான் இருந்தது.


கணவனுடன் ஒன்றித்து வாழ முயற்சி செய்து கொண்டிருந்த கார்த்திகாவிற்கு அமுதரசி போனில் பேசும் போது தென்படும் சோர்வும் கர்ப கால சேர்வாக தெரிய பெரிதாக கேட்டுக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை.


சக்கரவர்த்தி கார்த்திகாவின் கணவராக இல்லாதிருந்திருந்தால் அமுதரசி தன் மன குழப்பத்தை பற்றி கூறி தெளிவு பெற்றிருப்பாள். ஏற்கெனவே தாமரை இலை தண்ணீராக வாழும் தோழியிடம் தன்னை பற்றி கூறி அவள் வாழ்வில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.


திருமணத்திற்கு முன் ஆண் தன்னை பல பெண்கள் காதலித்ததாக கூறினால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் உலகம்; அதையே பெண் கூறினால் அவள் மாபாதகம் செய்ததாக சொல்லி அவளை வதைக்கும். அவள் நடத்தையையே கேள்விக்குறியாக்கும்.


அதுவே அவளிடம் காதலை கூறியது கணவனின் அண்ணன் என்று தெரிந்தால்? அவள் நிலை என்ன என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.


சாகித்யன் தன்னை உயிரிலும் மேலாக காதலிக்கின்றான் என்பதில் துளியும் அமுதரசிக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும் அவளால் சக்கரவர்த்தி விஷயத்தை மனவிட்டு பேச முடியவில்லை.


சாகித்யன அன்றைக்கு பிறகு சக்கரவர்த்தியிடம் தான் என்ன பேசினாய் என்று கேட்கவில்லை என்றாலும் அது அமுதரசி மனதை அரித்துக் கொண்டே இருந்தது.


அவள் மனதின் கவலை முகத்தில் மட்டுமல்லாது உடலிலும் தெரிய ஆரம்பித்தது. அதை பற்றி டாக்டர் குறிப்பிட்டு பேசிய பிறகே அனைவரின் கவனமும் அமுதரசி மீது திரும்பியது.


"அமுதரசிக்கு நான்கு மாதம் முடிஞ்சு ஐஞ்சாவது மாதமும் ஆரம்பம் ஆகிட்டு. ஆனாலும் அவங்க உடல் எடை அதிகரிக்கல. முன்ன விட எடை குறைஞ்சிட்டு போறங்க. பிரஷர் வேற அதிகமா இருக்க. இப்படியே போன அவங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது இல்ல." என எச்சரித்து அனுப்பி வைத்தார்.


அன்று இரவு நேர பணிக்காக வந்தவன் மனது அமுதரசியை சுற்றியே வந்தது. பிரச்சனை என்ன என்று தெரியாத போதும் மனைவியின் பயம் தானாக நீங்கும் என நினைத்த சாகித்யன், அதற்கான சாத்திய கூறுகள் தெரியாததால் தன் அண்ணிடம் இது பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்தான்.


முடிவெடுத்ததும் நேரத்தை பார்க்காமல் தனது அண்ணனுக்கு அழைத்திருந்தான். அப்போதுதான் சக்கரவர்த்தி கார்த்திகா இருவரும் விருந்து ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்குள் வந்தன.


இந்த நேரத்தில் தம்பி தன்னை அழைத்தும் வேகமாக அழைப்பை ஏற்று


"சாகி என்ன ஆச்சு எதுக்காக இந்த நேரம் கூப்பிட்டிருக்க." என்று சக்கரவர்த்தி கூறிய பிறகே மணியை பார்க்க அது பத்து நாற்பது என்று காட்டியது.


"சாரி அண்ணா டைம் என்னன்னு பாக்காம உன்ன தொந்தரவு பண்ணிட்டேன்." என்று சாகித்யன் மன்னிப்பு கேட்க,


"உதை பட போற பாத்துக்கோ மன்னிப்பு கேட்கிற அளவு எதுவும் இல்ல. எதுக்கு போன் பண்ண அத சொல்லு." என்று சக்கரவர்த்தி கேட்க, முதலில் தயக்கியவன் ஒருவாறு அன்று தான் அமுதரசி சக்கரவர்த்தி பேச்சை கேட்டது, அமுதரசியின் பயம், அவள் உடல் நிலை என அனைத்தையும் கூறி,


"எதுக்காக அம்மு இப்படி பயப்படனும். எதுவா இருந்தாலும் சொல்லு நிச்சயமா அதனால அம்முவுக்கு எந்த பிரச்சனையும் வராது." என்று உறுதியாக சாகித்யன் கூற, சில வினாடி யாேசித்த சக்கரவர்த்தி


"தப்பு அம்மு மேல இல்லை. இத பத்தி முழுசா சொன்னா தான் உனக்கு புரியம். நான் சொல்லி முடிக்கிற வரை அமைதியா கேளு." என்று அருகில் இருந்த மனைவியை பார்த்துக் கொண்டே ஒலிபெருக்கியை இயக்கி டேபிள் மேல் வைத்துவிட்டு பேச ஆரம்பிதான்.


"எனக்கு எட்டு வயசு இருக்கும் போது தான் அம்மு பொறந்த. அது வரை நம்ம வீட்டுல பெண் குழந்தை கிடையாது. அதனால தம்பிங்க உங்க எல்லாரை விடவும் எனக்கு அம்முவ பிடிக்கும். அவள என் கூடவே வச்சு பாத்துக்கணும்னு நினைச்சேன்.

எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்த மட்டும் தான் அம்மு என் கூட இருக்கு முடியும்னு அவள கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். பட் வீட்ல அம்முவ உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாங்க. ஆனா நீ முடியாதுன்னு சொல்லிட்ட.

அப்பவே அவகிட்ட என் காதல சொன்னேன். சின்ன பொண்ணு அவளுக்கு புரியல. ஆனாலும் அம்மு எனக்கு தான்னு நினைப்பிலயே இருந்துட்டேன்.

அம்முவ உனக்காக பொண்ணு கேட்டு போனது தெரியாம அம்மா அப்பா எனக்காக பொண்ணு கேட்டு போனதா நினைச்சேன். அம்முவ திட்டம் போட்டு என் கம்பெனிக்கு வேலைக்கு வர வைச்சேன்.

என் காதலையும் சொல்லி புரிய வைக்க நினைச்சேன் ஆனா அவ மனசுல நீ தான் இருக்கிற. உன்ன காதலிக்கிறேன்னு சொல்லி என்ன காயப்படுத்த முடியாமா உன்னையும் மறக்க முடியாம அவ ரெம்ப கஷ்டப்பட்டுட்டா.

உன் மேல அவளுக்கு இருக்கிற காதல் தெரிஞ்ச பிறகு என்னால அம்முவ வேற மாதிரி நினைக்க தோனல. இனி எப்பவும் அம்மு என் தம்பி மனைவி மட்டும் தான். அதே மாதிரி என் வாழ்க்கையில கார்த்திகா மட்டும் தான்." என்று கார்த்திகாவின் கண்களை பார்த்து கூறி முடித்தவன், மேசை இழுப்பறையிலிருந்து ஒரு நாள் குறிப்பை எடுத்து அவள் முன் வைத்தான்.


சக்கரவர்த்தி பேச ஆரம்பித்ததும் அதிர்ச்சியில் உறைந்திருந்த கார்த்திகா அருகில் நாள் குறிப்பை நகர்த்தி வைக்க, அனிச்சை செயலாகா கார்த்திகா அதை கையில் எடுத்து திறந்து பார்த்தாள்.


நாள் குறிப்பை திறந்து பார்த்ததும் அவள் கண்கள் வியப்பில் விரிந்தது. எந்த நாள்குறிப்பில் அமுதரசி பற்றி எழுதியிருந்ததை கிழித்தெறிந்திருந்தானே அதே நாள் குறிப்பில் கிழிந்த பக்கங்களிடையே ஒற்றை சிகப்பு ரோஜாவும் அதன் அடியில் இணைக்கப்பட்டிருந்த காகிதத்தில் "Will you accept my Heart" என்று எழுதியிருந்தது.


சாகித்யனின் அழைப்பை துண்டித்துவிட்டு எழுந்த சக்கரவர்த்தி கார்த்திகாவின் கையை பிடித்துக் கொண்டு


"இன்னைக்கு சாகித்யன் போன் பண்ணலன்னாலும் இத நான் உன் கிட்ட சொல்லியிருப்பேன். என் கடந்த காலம் இனி என் நிகழ் காலத்த தொடர்ந்து வராது.

உன்ன மட்டும் தான் என் மனசு முழுவதும் நிறைச்சு வச்சிருக்கேன். அது காலத்துக்கும் குறையாம இருக்கணும். அதே மாதிரி என்ன உன்னக்குள்ள நிறைச்சு வைக்கணும்.

திகட்ட திகட்ட என் அன்ப உனக்கு மட்டும் புரிய வைக்கணும். என் கண்ணுக்கு எப்படி நீ மட்டும் அழகா தெரியுரியோ அதே மாதிரி உன் கண்ணுக்கு நான் அழகா தெரியனும்; நான் மட்டும் தான் தெரியனும்." என்று கார்த்திகாவிடம் தன் காதலை கூற, அவள் இமைக்கவும் மறந்தாள்.

நடந்து முடிந்ததில் இருவரையும் குறை கூற முடியாது. அதிலும் சக்கரவர்த்தியை தவறு என்று சொல்ல முடியாது.


கார்த்திகாவின் நியாயமான மனது சக்கரவர்த்திக்காக அவன் தரப்பில் நின்று வாதாட, அவள் மூளை எதிர் வாதம் புரியாமல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது.


மனைவியின் கண்களிலே அவள் மனதை படித்தவன் தன் கரங்களினால் அவள் முகத்தை தாங்கி குனிந்தவன் அவள் அனுமதிக்க காத்து நிற்க, தன் இமையிரண்டையும் மூடி கணவன் கேட்ட அனுமதியை அமைதியாக தந்தாள்.


கார்த்திகா அமைதியாக தந்த அனுமதி சக்கரவர்த்தி மனதின் தடைகளை உடைக்க, பொங்கி எழும் கடல் அலையாகி தன்னவளை தனக்குள் சுருட்டிக் கொண்டான்.


தன் முகம் பார்த்து அமைதியாக நிற்கும் கணவனின் அதிரடியை சற்றும் எதிர்பாராதவள் பயத்தில் அவனையே பற்று கோலாக பற்றிக் கொள்ள; அவள் பயத்துடன் சேர்த்து தன் மீது கொண்ட தயக்கத்தையும் கடந்து வர செய்தான்.


சக்கரவர்த்தி அவளை தன்னை விட்டு கடந்து செல்லாமல் தனக்குள்ளே வைத்துக் கொண்டான். விடியற்கால பறவைகளின் சத்தம் கேட்டு விலக நினைத்தவளை முறைத்து பார்த்தவன்


"எங்க போற..." என்று உரிமையாக கேட்க, அவன் முகத்தை நிமிரந்து பார்க்க முடியாது வெக்கம் தடுக்க மார்பில் முகம் புதைத்தபடி


"விடிஞ்சிட்டு..." என்று மெல்ல முணுமுணுக்க,


"அதுக்கு..." என்று கூறியவன் மீண்டும் தன்னவளை தனக்குள் நிரப்பும் வேலையை ஆரம்பித்தான்.


மலரும்....
 
 
மலர் 23


இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தும் சாகித்யன் தன் அறைக்கு செல்ல, அமுதரசி ஒருபுறமாக சாய்ந்து ஓவிய பாவையாக தூங்கிக் கொண்டிருந்தாள்.


அவள் ஒரு கை தலைக்கு அடியில் இருக்க மற்றொரு கை தூக்கத்திலேயே அவள் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையை மெல்ல வருடிக் கொண்டிருந்தது.


சத்தம் எழுப்பாமல் தன் உடையை களைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் அவள் பின் புறம் வந்து படுத்து அவள் கையுடன் தன் கைகளையும் இணைத்து தன் மகவை வருட ஆரம்பித்தான்.


சாகித்யன் உடலின் குளுமை அவள் கதகதப்பு நிறைந்த உடலில் பரவ அதில் தூக்கம் களைந்தவள் கணவனின் அருகாமையை இழக்க மனதின்றி அவன் கைகளை தன்னுடன் மேலும் இறுக்கி கொண்டாள்.


அமுதரசி தன் அருகாமையை நாடுவதை உணர்ந்து தங்களுக்கிடையே உள்ள இடைவெளியை சாகித்யன் குறைத்து அவள் கழுத்தில் முத்திரை பதிக்க, அது அவளை அவன் கட்டுப்பாட்டிற்கு இழுத்து சென்றது.


மனைவியின் மாற்றத்தை உணர்ந்து சாகித்யன் மேலும் முன்னேற, அமுதரசியும் நீண்ட நாட்களுக்கு பின் தன் தயக்கத்தை மறந்து கணவனை அதிகம் நாடினாள்.


இதில் சாகித்யன் தான் அவள் நிலையையும், தங்கள் மகவின் நிலையையும் கருத்தில் கொண்டு கவனமாக செயல்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் அத்தகைய கவனம் எதுவுமின்றி கணவன் மீது கொண்ட காதலில் மொத்தமாக தன்னை அவனுள் புதைத்து கொள்ள முயற்சி செய்தாள்.


கூடல் முடிந்த பின்னும் அவனை விலக மனமில்லாது சாகித்யன் மார்பிலேயே சாய்ந்து அவன் மார்பின் முடிகளின் நடுவே தன் கை விரல்களை விட்டு விளையாட, அவள் கையை பிடித்து தன் இதயத்தில் வைத்தவன்.


"இது உனக்காக மட்டும் தான் துடிக்குதுன்னு உனக்கு புரியலயா?" என்று கேட்க, அவன் கேள்வி மெல்லிய அதிர்வை அமுதரசியிடம் ஏற்படுத்தியது.


மெல்ல அமுதரசியிடமிருந்து விலகி தன் ஆடைகளை அணிந்தவன் அவள் உடைகளையும் எடுத்து கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வந்தாள்.


அமுதரசி வரும் முன் அவளுக்கு பழச்சாறு தயாரித்து வைத்தவன் அவளுக்காக காத்திருந்தான். அமுதரசியை அருகிலேயே அமர வைத்து, அவள் கையில் கொடுத்து


"முதல ஜூச குடி... நாம பொறுமையா பேசலாம்" என்று அமைதியா கூற, அதுவும் அவளுக்கு பயத்தையே தந்தது. இனிப்பான பழச்சாறு கூட ஏதே கசப்பான மருந்து போல தொண்டைக்குள் இறங்க மறுத்தது.


"நேத்து நைட் சக்கரவர்த்திட்ட பேசினேன்." என்று சாகித்யன் கூறி முடிக்கும் முன் அமுதரசியின் முகத்தில் வியர்வை முத்துக்கள் கழுத்து தாண்டி பயணிக்க ஆரம்பித்தது.


அமுதரசியின் அருகில் அமர்ந்து அவள் கையை ஆதரவாக பிடித்துக் கொள்ள, அமுதரசி நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.


"என் மேல உன் நம்பிக்கை அவ்வளவு தானா அம்மு." என்று சாகித்யன் கேட்க, அதிர்ந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவள் முகத்தை பற்றி தன் முகத்தின் அருகில் கொண்டு வந்தவன்


"அம்மு மனசு எனக்கு தெரியும்... ஆனா என் மனசு தான் அம்முக்கு புரியல. சக்கரவர்த்தி உனக்கு முறைப்பையன் அவன் உன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்காக நான் உன்ன சந்தேகப்படுவேன்னு எப்படி நினைச்ச?" என்று சாகித்யன் கேள்வி கேட்க, அதற்கு அமுதரசியிடம் பதில் இல்லை.


நடந்தது சின்ன விஷயம் தான் பெரிதில்லை என மூளை கூறினாலும், எதிர்காலத்தில் இதனால் தங்களுக்குள் பிரச்சனை வருமோ என்ற பயம் அவளுக்குள் அழ பதிந்தது.


அதன் பின் வந்த நாட்களில் அமுதரசி தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டலும் அவள் சாதாரணமாக இல்லை. மனதின் ஓரத்தில் ஒரு முள் தைத்துக் கொண்டு தான் இருந்தது. இப்படி குழப்பம் வர கூடாது என்று தானே அமுதவாணன் மருமகளாக கூடாது என நினைத்தாள்.


முன்பு போல அமுதரசியாக சரியாகி விடுவாள் என ஒதுங்கி இருக்காமல் கக்கரவரத்தி விருப்பம் தன்னை பாதிக்கவில்லை என சாகித்யன் தன்னால் முடிந்த வரை அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.


சாகித்யன் முயற்சி புரிந்தாலும் அமுதரசியால் முன்பு போல கணவனிடம் ஒன்ற முடியவில்லை. அதே போல கார்த்திகாவிடமும் தோழி என்று முழு உரிமையுடன் பேச முடியவில்லை.


அவள் தயக்கம் உணர்ந்து மற்ற மூவரும் அமுதரசியை மாற்ற எவ்வளவோ முயன்றும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.


அமுதரசிக்கு ஐந்தாம் மாதம் முடியும் முன் செய்ய வேண்டிய சடங்கை அன்பரசி நியாபகப்படுத்த, மணிமேகலையும் மகனிடம் பேசுவதற்காக அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.


மாமியரிடம் நலம் விசாரித்து அவருக்கு வேண்டியதை அமுதரசி செய்து கொடுக்க மணிமேகலை அமைதியாக அனைத்தையும் கவனித்து கொண்டிருந்தவர்


"உனக்கும் சாகித்யனுக்கும் என்ன பிரச்சனை?" என்று கேட்க, மாமியாரின் கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாம என யோசித்த அமுதரசி


"பிரச்சனை எதுவும் இல்லையே..." என்று கூற மறுப்பாக தலையசைத்தவர்


"பிரச்சனை இல்லன்னா நான் கேட்டதும் சொல்லியிருப்ப. முன்ன மாதிரி நீ இல்ல." என்று மருமகளின் மாற்றத்தை சரியாக கவனித்து கூற,


"அதெல்லாம் ஒன்னுமில்ல நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன்." என்று மலுப்பலாகவே பதில் வந்தது.


"இங்க பாரு அமுதரசி. உங்க அம்மாவ எனக்கு பிடிக்கலன்கிறது எந்த அளவுக்கு உண்மையே அதே அளவு மாணிக்கம் அண்ணன் மகளா உன்ன எனக்கு பிடிக்கும் என்கிறதும் உண்மை. இடையில எதோ கொஞ்சம் புரிதல் சரியா இல்லாம பிரச்சனை வந்துச்சு அத மறந்திடு." என்று கூற,


"மறக்க தான் நானும் நினைச்சேன்... நானே மறந்திட்டதா நினைச்ச ஒன்னு இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு." என்று கூற, இப்போது அதிர்வது மணிமேகலையின் முறையானது


"எப்படி? யார் சொன்ன? சாகித்யன் உன்ன எதாச்சு கோபமா பேசிட்டானா? நான் அவன் கிட்ட பேசி புரிய வைக்கிறேன்." என்று படபடக்க, அதில் அவருக்கு தன் மீீது உள்ள அன்பை புரிந்து கொண்டு, அனைத்தையும் கூறி முடித்தாள்.


"கார்த்திகாவுக்கும் எல்லாம் தெரியும். யாரும் என் மேல கோபவப்படல. ஆனாலும் என்னால இயல்ப இருக்க முடியல." என்று தன்நிலையை விளக்கிவிட்டு சோர்ந்து அமர, அவள் தலையை ஆதரவாக தடவி கொடுத்தவர்


"சாகித்யன் உன்ன புரிஞ்சிக்கிட்டான், ஆனாலும் சக்கரவர்த்தி உன் கிட்ட விருப்பத்த சொன்னத சாகித்யன் தெரிஞ்சிக்க கூடாதுன்னு ஏன் நினைச்ச. அவன் எந்த காலத்திலயும் உன்ன தப்பா நினைக்க மாட்டான்." என்று மகனை பற்றி சிறிது கர்வத்துடன் கூற, அமுதரசி முகம் தெளிவின்றி இருந்தது.


அமுதரசியிடம் எவ்வளவாே எடுத்து கூறியும் அவள் புரிந்து கொள்ளாமல் தன்னையும் வருத்தி கொண்டு மற்றவர்களையும் வருத்துவதை நினைத்து மணிமேகலையால் கோபம் கொள்ள கூட முடியவில்லை.


உணவு ஊட்டும் சடங்கிற்காக சாகித்யன் அமுதரசியை அழைத்து கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தான். சக்கரவர்த்தியும் கார்த்திகாவ அழைத்துக் கொண்டு வந்திருந்தான். முதலில் வர வேண்டாம் என யோசித்த சக்கரவர்த்தியிடம்


"நீ எவ்வளவு நாள் விலகி இருக்க போற. அம்மு தான் தேவையில்லாம பயந்து சாகுறான்னா நாமளும் அவ பயத்துக்கு தூபம் காட்டணுமா. நீ வா அப்பதான் அவ சரி ஆவ." என்று சாகித்யன் கூற, சக்கரவர்த்தியும் மறுக்காமல் வந்துவிட்டன்.


சக்கரவர்த்தியையும் கார்த்திகாவையும் பார்த்த அமுதரசி முன்பு போல சிரிக்கவும் இல்லை; பேசவுமில்லை. புதிதாக அவளிடம் காணப்படும் விலகல் அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்தது.


அன்பரசியும் மகளுக்காக பார்த்து பார்த்து உணவை தயாரித்திருந்தார். தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், காய்கறி சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், பருப்பு சாதம், சினை இட்லி, கேசரி என தன் கையாலே மகளுக்கு உணவை தயாரித்து வைத்தார்.


அலங்கரிக்கப்பட்ட மணையில் அமுதரசியை அமர வைத்து ஒவ்வொருவராக உணவை ஊட்டி விட ஆரம்பித்தன. கார்த்திகாவும் அமுதரசிக்கு உணவை ஊட்ட வர அவள் பிடித்து தடுத்து அன்பரசி


"இங்க பாரு கார்த்திகா, இந்த சடங்கு எல்லாம் குழந்த பெத்து நல்லா வாழும் பொம்பளைங்க செய்ய வேண்டியது. நீ செய்ய கூடாது." என்று வார்த்தைகளில் விஷம் தடவி பேச கொதித்தெழுந்த சக்கரவர்த்தி


"அத்த வார்த்தைய அளந்து பேசுங்க." என்று கை நீட்டி பேச, அவன் கையை பற்றிய கார்த்திகா வேண்டாம் என்பது போல தலையாட்ட, அவனோ கை முஷ்டியை இறுக்கி தன் கோபத்தை கட்டுபடுத்த முயன்று தோற்றான்.


"நான் என்ன இல்லாததையா சொன்னேன். இதோ இவளுக்கு இவ தங்கச்சிக்கு அமுதரசிக்கு மூணு பேருக்கும் ஒன்னாதான கல்யாணமாச்சு.

இவ தங்கச்சி புள்ளய பெத்துட்ட, எம் பொண்ணு நிறைஞ்ச வயிற இருக்கிற. ஆன கார்த்திகா மட்டும் தன் சும்மா இருக்கா. இவ கண்ணு பட்டு எம்புள்ளைக்கு எதாவது ஆகிட்ட..." என்று அன்பரசி பேச, சக்கரவர்த்தியை முந்திக் கொண்டு வந்த சாகித்யன்


"போது அத்த இதுக்கு மேல ஒரு வார்த்த நீங்க பேசினாலும் நான் மனுசனா இருக்க மாட்டேன். வாழ்த்துததுக்கு நல்ல மனசு இருந்தா போதும். அது அண்ணி கிட்ட நிறைய இருக்கு. சிலரு மாதிரி உள்ளுக்குள்ள அழுக்க வைச்சிக்கிட்டு வெளிய நடிக்கல." என்று பேச,


"இங்க பாரு சாகித்யா கார்த்திகா அமுதரசி ப்ரெண்டு தான. அவ கிட்ட ஏன் அமுதரசி சரியா பேசல? ஏன்னா குழந்தை இல்லாம பொறாமைபடுற இவ குணம் தெரிஞ்சு தான் எம் பொண்ணு கார்த்திகா கிட்ட பேசாம விலகி நிக்கிறா." என்று அமுதரசியின் விலகலுக்கு புதிய காரணம் கூற, சக்கரவர்த்தி, கார்த்திகா, சாகித்தயன், மணிமேகலை தவிர மற்ற அனைவரும் அது தான் உண்மையோ என்பது போல அமுதரசியை பார்த்தனர்.


"அம்மா எதுக்கு இப்போ தேவையில்லாதத பேசிக்கிட்டு இருக்கிற. நான் சொன்னேனா உங்கிட்ட கார்த்திகா பொறாமை படுற... அதான் பேசாம இருக்கிறேன்னு.

நான் கார்த்தி கூட ரெம்ப நேரம் போன் பேசுறேன்னு எனக்கும் சாகித்தான்னுக்கும் சின்ன சண்டை. அதுக்கு சக்தி அத்தானும் அவங்க தம்பி கூட சேர்ந்து ரெம்ப திட்டிட்டாங்க. அதான் நான் மூனு பேரு கூடவும் பேசாம இருந்தேன்.

காரணமே தெரியாம நீயா எதையாச்சும் சொல்லி வைக்காத. கார்த்தி மனசு பத்தி எனக்கு தெரியும். நீ வா கார்த்தி..." என்று கார்த்திகாவையும் உணவு ஊட்ட வைத்துவிட்ட பின்பே அமுதரசி அவளை விட்டாள்.


அதன் பிறகு அன்பரசி எதற்காகவும் வாயை திறக்கவில்லை. அவர் செய்த குழப்பத்தை தவிர விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இரவு உணவிற்கு பின் அறைக்கு வந்த அமுரசியிடம்


"அம்மு நீ சைலன்டா இருந்தது எந்த அளவுக்கு பிரச்னைய கொண்டு வந்து விட்டுருச்சு பாத்தியா. ஒன்னுமே இல்ல ஒன்ன பிடிச்சிக்கிட்டு நீ எதுக்காக எல்லாரையும் கஷ்டப்படுத்துற." என்று சாகித்யன் கண்டிக்க,


"சாரி அத்தான் நான் ஓவர பண்றேன்னு புரியுது ஆனாலும் எதிர்காலத்துல இது உங்க மனச உறுத்துமோன்னு நினைச்சாலே பயம்மா இருக்க." என்று அமுதரசி கூற,


"நடக்கவே நடக்காத ஒரு விஷயத்தக்காக எல்லாரும் வருந்த பட வேண்டாம் அம்மு. இதுக்கு மேல உன் கிட்ட என்ன பேசுறதுன்னு எனக்கு தெரியல." என்று சாகித்யன் தலைக்கு மேல் கையை வைத்தபடி படுத்துக் கொண்டான்.


அடுத்த நாள் காலை தாமதமாக எழுந்த அமுதரசி கீழே வரும் போது வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தன. அமுதரசி சாகித்தயன் அருகில் அமர செல்ல அவளை தடுத்து தன் அருகில் நிறுத்திய சக்திவேல்


"என் செல்ல அம்முக்குட்டி மாதிரி ஒரு பொண்ணு பாத்து சொன்னா எனக்கு ஓகே." என்று கூற, அவன் என்ன சொல்ல வருகின்றான். எதற்காக இதை கூறினான் என தெரியாமல் சாகித்யனை அமுதரசி பார்க்க,


"வீட்டல சக்திவேல்க்கும் கல்யாணம் பண்ணலாம்னு பேசிட்டு இருந்தாங்க. ஆனா இவனுக்கு உன்ன மாதிரி பொண்ணு வேணுமாம்." என்று சாகித்யன் மனைவி வாய் திறந்து கேட்காத கேள்விக்கு பதில் கூற, அருகில் இருந்த பெரியவர் ஒருவர்


"எலேய் அவ உனக்கு அண்ணி அத நியாபகம் வைச்சிக்கிட்டு பேசு. மரியாத இல்லாம தோள்ல கை போட்டு பேசுற." என்று கண்டிக்கும் விதமாக பேச,


"அமுதரசி எங்க நாலு பேருக்கும் முறை பொண்ணு. அப்புறமா தான் எனக்கு அண்ணி. என் முற பொண்ணு கிட்ட பேச எல்ல உரிமையும் எனக்கு இருக்கு." என்று சத்யனும் தம்பியுடன் சேர்ந்து உரிமை குரல் எழுப்பினான்.


கார்த்திகாவிடம் சாகித்யன் கண் ஜாடை காட்டி எதையே கேட்க சொல்ல, அவளும் தான் பார்த்துக் கொள்வதாக கூறி


"என்ன இருந்தாலும் அமுதரசி மேல அவ புருஷனுக்கு தான உரிமை அதிகம்." என்று கார்த்திகா சக்திவேலிடம் கேட்க,


"என்ன அண்ணி இன்னும் நம்ம ஊரு வழக்கம் தெரியாம பேசுறீங்க. முறை பொண்ணு மேல முறை பையனுக்களுக்கு தான் முத உரிமை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு முன்ன அவளுக்கு முறை பையன் இருந்தா அவன் அனுமதி கேட்கணும்.

நாங்க எங்க உரிமை விட்டு கொடுத்ததால தான் சாகித்யன் அண்ணாக்கு அமுதரசி கிடைச்சிருக்கா." என்று சத்யன் விளக்க, அதில் சில நொடியேனும் சாகித்யனுக்கு கடுப்பு வந்தது. அதோடு


"அப்போ நீயே போய் உன் முறை பொண்ண கிட்ட உரிமைய கேட்டிருக்க வேண்டியது தான." என்று பற்களை கடித்த படி கேட்க,


"சில் ப்ரோ... கேட்க விடாத மாதிரி அத்த அவங்க பொண்ண என் கண்ணுல காட்டாம மறைச்சி வைச்சிட்டாங்களே. முன்னே பாத்திருந்தா கேட்டிருப்பேன்." என்று பெரும் மூச்சை விட்டபடி கூற, சாகித்யனிடம் அணல் அடித்தது.


பேச்சு எங்கோ ஆரம்பித்து கடைசியில் அமுதரசியிடம் வந்து நின்றது. கார்த்திகா மீண்டும் அமுதரசிக்கு புரிய வைத்திடும் நோக்கத்தோடு


"இதுலாம் தப்பில்லையா." என்று கேட்க, அதற்கு மணிமேகலை


"இல்லம்மா... உறவு முறையில இப்படி வயசு பசங்க பொண்ணுங்க கிட்ட கேட்க தான் செய்வாங்க." என்று கூற, அப்போது வெற்றிலை உரலை இடித்து கொண்டிருந்த எண்பது வயது கிளவி,


"அத ஏன் கேட்கிற எம் புருசனுக்கு தொண்ணுறு வயசாக போகுது. காடு வா வா வீடு போ போன்னு செல்ற வயசு அவரு மொற பொண்ண பாத்துட்டா போது 'எப்ப புள்ள மாமன கட்டிக்கிறன்னு' கேட்டுட்டு தான் மறு வேலை பாப்பாருன்னா பாத்துக்கோ." என்று தன் கணவரை பற்றி கூற, அவரும் நடுங்கும் தன் கைகளால் மீசையை முறுக்கி கொண்டார்.


அந்த வயதான பாட்டி பேச ஆரம்பித்ததும் சாகித்யன், சக்கரவர்த்தி, கார்த்திகா, மணிமேகலை என நால்வர் பார்வையும் அமுதரசி மீது தான். அவர்கள் தன்னை பார்ப்பதை உணர்ந்தாளும் அமுதரசி யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவளுக்கே முட்டாள் தனமான அவள் செயல் புரிய ஆரம்பித்தது.


அன்று மாலையே சாகித்யன் அமுதரசியுடன் மதுரைக்கு செல்வதாக கூறினான். அதுவரை அமைதியாக இருந்த அமுதரசி கார்த்திகாவிடம் வந்து


"நாம ரெண்டு பேரும் ஒன்னா இருந்து எவ்வளவு நாள் ஆகிட்டு. நீயும் சக்தி அத்தானும் மதுரைக்கு வந்து எங்க கூட ரெண்டு நாள் இருக்கலாமே." என்று தயங்கி கேட்க,


"ரெண்டு நாள் தான் இருக்கணுமா... மூணாவது நாள் தங்குனா என்ன செய்வாங்களாம் உன் ப்ரெண்டு." என்று அமுதரசிக்கு கார்த்திகா மூலம் சக்கரவர்த்தி பதிலளிக்க,


"வேற என்ன செய்வாங்க... மூணு வேளையும் வகை வகையா சமைச்சு போட்டு என் அத்தானையும் அவங்க ஆசை சம்சாரத்தையும் கவனிக்க வேண்டியது தான்னு சொல்லுங்க." என்று அமுதரசியும் சாகித்யன் மூலம் சக்கரவர்த்திக்கு பதிலளித்தாள்.


மாறி மாறி இருவரும் பேச அதை கவனித்த சாகித்யனும் கார்த்திகாவும் மற்றவர்கள் அறியாமல் ரகசியமாய் சிரித்து கொண்டன.


"சாரி அத்தான்..." என்று தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவளை மூவரும் தடுக்க நினைக்க,


"ப்ளீஸ் நான் பேசனும்." என்று இறஞ்சும் குரலில் கேட்க, மற்றவர்கள் மௌனமாகினர்


"எனக்கு நான் புத்திசாலி, நல்லவன்னு ஒரு கர்வம் எப்பவும் உண்டு. ஆனா உண்மையில நான் பெரிய முட்டாள், முழு சுயநலவாதி. சுமுகமா முடிய வேண்டியத பெரிய பிரச்சனை ஆக்கிட்டேன். இதுல அதிகம் பாதிக்கப்பட்டது கார்த்திகாவும், சக்கரவர்த்தி அத்தானும் தான்.

உண்மையிலே நீங்க ரெண்டு பேரும் தான் நட்புக்கும் பாசத்துக்கும் சிறந்த உதாரணம். ஆனா நான் என் மேல பாசம் வைச்ச சக்தி அத்தானுக்கும் உண்மையா இல்ல, என்ன உயிர் தோழிய நினைச்ச கார்த்திகாவுக்கும் உண்மையா இல்ல.

ரெம்ப சுய நலமா என்ன பத்தி மட்டும் யோசிச்சிட்டேன். வெளிப்படையா பேசியிருந்தா நம்ம நாலு பேர் வாழ்க்கையும் இன்னும் சந்தோசமா இருந்திருக்கும்." என்று கூறி மன்னிப்பு வேண்டினாள்.


அமுதரசி செய்தது தவறு என்ற போதிலும் அதை கூறி மேலும் அவளை வருத்தம் கொள்ள செய்ய மூவருக்கும் விருப்பம் இல்லை. அவர்களின் தூய அன்பு அவள் தவறை மன்னித்ததுடன் மறக்கவும் வைத்தது.மலரும்...
 
Last edited:
மலர்ந்த மலர் மாலை (எப்பிலாக்)
ஒரு வருடத்திற்கு பிறகு....


"கார்த்திகா நான் உன் கிட்ட கொடுத்த தாம்பாளம் எங்க? ஐயர் கேக்கிறாரு." என்று தனது ஏழு மாத பெண்ணரசியை இடுப்பில் வைத்துக் கொண்டு அமுதரசி கார்த்திகாவிடம் கேட்க,


"அத அப்பவே உன் சக்தி அத்தான் கிட்ட கொடுத்தனுப்பிட்டேன். தமிழ் பாப்பாவ என் கிட்ட கொடு. சும்மா சும்மா கூட்டத்துக்கு நடுவுல அவள ஏன் இழுத்துட்டு போற என கேட்டக் கொண்டே தமிழரசியை வாங்கிக் கொள்ள,


"சரி அவள கூட்டத்துக்குள்ள கொண்டு போகல. நீயும் ரெம்ப நேரம் நிக்காம உக்காரு. நீ நின்னா என் அத்தானுக்கு தான் கால் வலிக்கும்." என்று அமுதரசி கார்த்திகாவின் ஆறு மாத வயிற்றை காட்டி கூறிக்கொண்டிருக்கும் போதே சக்கவர்த்தி அங்கு வந்து சேர்ந்தான் பழச்சாறுடன்,


"அம்மு நீ இங்க தான் இருக்கிறியா உன்ன நளினா ரெம்ப நேரமா தேடுற..." என்று கூறி விட்டு கார்த்திகா கையிலிருந்த தமிழரசியை வாங்கிவிட்டு, பழச்சாறை அவள் கையில் கொடுத்தான்.


"நடத்துங்க... நடத்துங்க..." என்று கேலி செய்தபடி அமுதரசி நகர, கார்த்திகா வெக்கத்துடன் கணவனை முறைக்க முயன்று தோற்றாள்.


"அதான் வர மாட்டேங்குதே... அப்புறம் ஏன் கஷ்டபடுற." என்று கூறிய சக்கரவர்த்தி மனைவியை தோளோடு அணைக்க, அவளும் கணவன் அணைப்பில் நின்றபடி பழச்சாறை அருந்தினாள்.


மணப்பெண் நளினாவின் அறையை நோக்கி சென்ற அமுதரசியை தூணின் மறைவிற்கு இழுத்து சென்ற சாகித்யன் இரு கைகளுக்கு நடுவே அவளை நிறுத்தியபடி"அம்மு இந்த சேரில சும்மா கும்முன்னு இருக்க. முகூர்த்ததுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு அது வரைக்கும்..." என்று மனைவியின் அழகில் கிறக்கத்துடன் சாகித்யன் வார்த்தைகள் வர


"விவஸ்த கெட்டதுங்க... கல்யாண மண்டபத்துல நாலு பேர் வந்து போற இடத்துல என்ன செய்றீங்க. வளர்ப்பு சரியில்ல." என்று அன்பரசி மீதுள்ள கோபத்தில் கார்த்திகாவின் தாய் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அமுதரசியையும், அவள் தாயையும் மட்டம் தட்டி பேச, அமுதரசியை இன்னும் அழுத்தமாக தன்னோடு சேர்த்து பிடித்தவன்,


"அப்படியா அத்த... கொஞ்சம் அங்க பாருங்க." என்று சாகித்யன் காட்டிய திசையில் கணவனின் தோளில் சாய்ந்தபடி நின்றதென்னவோ கார்த்திகா தான்.


மகள் தன் கணவனுடன் நிற்கும் நிலையை பார்த்த பின் வேறெதுவும் பேச முடியது சாந்தி வேலை இருப்பது போல நகன்று விட,


"அவங்க தான் அம்மாவுக்கு சமம்மா வீம்புக்கு சொல்லறாங்கன்னா நீங்களும் பதிலுக்கு பதில் எதையாவது சொல்லனுமா?" என்று கண்டிப்புடன் அமுதரசி பேச, அவள் முகவாயை பிடித்து தூக்கியவன்


"அடி என் அழகு அம்மு குட்டி இப்படி வம்பிலுக்கிறது ஒரு சுகம். அது உனக்கு தெரிய வேண்டாம். நீ இந்த அத்தான பாரு... நான் மத்தத பாத்துக்கிறேன்." என்று மனைவியிடம் சரசமாக பேச அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள்,


"உங்கள நானும்; என்ன நீங்களும் பாத்தது போதும் போய் கல்யாண வேலைய பாருங்க." என்று கணவனை விரட்டி விட்டு தோழியின் அறைக்கு வர, அவளுடன் கார்த்திகாவும் வந்து சேர்ந்தாள்.


அமுதரசி மற்றும் கார்த்திகாவின் சிவந்த முகத்தை பார்த்த நளினா எழுந்து வந்து இருவரின் முகத்தையும் பார்த்தபடி


"என் அருமை தோழிகளே இன்னைக்கு எனக்கு தான் கல்யாணம் ஆன உங்க முகத்த பாத்தா எனக்கே சந்தேகம் வருது. யாரு கல்யாண பொண்ணுன்னு." என்று அங்கலாய்க்க, செல்லமாக அவள் தோழில் அடித்த அதமுதரசி,


"மப்பிள்ள சக்திவேல் அத்தான்னா பொண்ணு நீ தான். வளவளன்னு பேசாம நெத்தி சுட்டிய சரிய வை முகூர்த்த நேரம் வந்துட்டு." என்று அவசர படுத்த,


"நடத்துங்க நடத்துங்க..." என்று இருவரையும் சேர்த்து நளினா கலாய்க்க, கார்த்திகாவிடம் திரும்பிய அமுதரசி


"நாம இப்ப தான் நடத்துறோம் ஆன இங்க ஒருத்தி கலவரத்துல நடந்த கல்யாண வீட்டுலயே காதல் காவியத்த நடத்தி வச்சிருக்கா." என்று தங்கள் திருமணத்தில் சக்திவேலை பார்த்த சில மணி நேரத்திலே காதலித்து திருமணம் வரை வந்த நளினாவை கிண்டலடிக்க, அவள் முகமும் வெக்கத்தில் சிவந்தது தன்னவன் நினைவில்.


ஒரு வருட போரட்டத்திற்கு பிறகே இருவீட்டாரின் சம்மதத்தை பெற்று திருமணம் வரை கெண்டு வந்தவன் அல்லவா.


"இன்னும் நீங்க ரெடி ஆகலயா? பொண்ண அழைச்சிட்டு வர சொல்றாங்க." என்று கீர்த்தனா வந்து கூற, மூவரும் நளினாவை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு வந்தன.


ஏற்கெனவே மணமேடையில் இருந்த சகோதரர்கள் நால்வரும் தத்தம் இணையை ரசித்து கொண்டிருந்தன. நளினாவை மணமேடையில் அமர வைத்ததும், அவரவர் தம் துணைவியை தங்கள் அருகில் அழைத்து நிறுத்திக் கொண்டனர்.


குறித்த நேரத்தில் மங்களநாணை அணிவத்து சக்திவேல் நளினாவை தன் சரிபாதியா மாற்றிக் கொண்டான். திருமணம் முடிந்ததும் வரவேற்பு ஆரம்பமாகிவிட, அனைவரும் விருந்தினரை கவனிப்பதில் பிஸியாகி விட்டன.


தமிழரசிக்கு தனியாக பருப்பு சேர்த்து மசித்த சாதத்தை கார்த்திகா ஊட்ட, சக்கரவர்த்தி கைகளுக்குள் இருந்தபடி சமத்தாக தன் செப்பு இதழ்கள பிரித்து உணவை வாங்கிக் கொண்டாள்.


"நீயே சாப்பாடு கொடுத்துட்டியா..." என்று கேட்டபடி அமுதரசி வர,


"நான் சும்மா தான இருக்கேன் தமிழ் பாப்பாவ பாத்துகிறேன். நீ வந்தவங்கள கவனி." என்று கார்த்திகா கூற,


"நீ இன்னும் சாப்பிடலயே?." என்று அமுதரசி கூறும் போது, தன் வாயில் இருந்த உணவை கைகளில் எடுத்து கார்த்திகாவின் வாய் அருகில் கொண்டு சென்றாள் தமிழரசி.


"பாப்பா பெரியப்பா வேலைய நீ பாத்தா அவருக்கு கோபம் வந்துடும்." என்று சாகித்யன் அண்ணணை கேலி செய்ய, தந்தை கூறியது என்ன புரிந்ததாே சக்கரவர்த்திக்கும் உணவை ஊட்ட கை நீட்டினாள் தமிழரசி.


"போதும் போதும் சிரிச்சது... இப்படி எல்லாரும் சேர்ந்து சிரிச்சா எம் பேத்திக்கு தான் கண் படும்." என்று கூறிய அன்பரசி தன் பேத்தியை வாங்க கையை நீட்ட, அந்த சின்ன சிட்டாே தன் பெரியப்பாவின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டு பாட்டியிடம் செல்ல மறுத்தது."உருவம் குணம் எல்லாம் அப்படியே அவ அம்மா மாதிரி..." என்று மகளையும் பேத்தியையும் மனதுக்குள் திட்டியபடி அன்பரசி நகர, மீண்டும் அனைவரிடமும் புன்னகை.


உணவு முடிந்தும் குடும்பமாக புகைப்படம் எடுக்க அனைவரும் மேடை ஏற, மண்டபத்தில் இருந்தவர்கள் பார்வை முழுவதும் அவர்கள் மீது தான்.


"வீட்டுக்கு போனதும் சுத்தி போடணும்." என பெரியவர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டனர்.


குடும்ப படம் எடுத்து விட்டு கிழே இறங்கு நேரம் அமுதரசி சாகித்யன், சக்கரவர்த்தி கார்த்திகா ஒருவர் ஒருவரை பார்த்து புன்னகைத்து கொண்டனர்.


அவர்கள் புன்னகை என்றும் நிலைத்திருக்க வாழ்த்தி விடை பெறுவோம்.நிறைவு.
 
Status
Not open for further replies.
Top