வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீயினுள் பூத்த மலர் - கதை திரி

Status
Not open for further replies.
காலை சூரியன் தனது கரங்களால் உலகினை தழுவும் அழகிய காலை வேளை சென்னை நகரில் உள்ள அரண்மனையை ஒத்த பங்களாவில் 'ஒம் நமச்சிவாயம் ' என்னும் உலகிற்கே மூல மந்திரம் இனிமையான பெண் குரலால் ஒலித்து கொண்டு இருக்கிறது. அந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரி நம் நாயகி அக்னிகா( என்ன ஒரு அமைதியான பெண் என்று நினைக்க வேணாம் அதற்கு நான் பொறுப்பில்லை . சரி வாங்க நாயகியை வர்ணிக்கப்போகின்றேன்).
ஐந்தரைஅடி உயரம், எலுமிச்சைநிறம் சொப்பு உதடுகள், அதற்கு மேல் சிறிய மச்சம் அழகிய மூக்கு அதன் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் வைர மூக்குத்தி. இடை வரை நீண்டு இருக்கும் கூந்தலை அழகாக பின்னல் இட்டு இருந்தாள். காட்டன் புடவை கட்டிய அழகிய சிலை ஆனால் இங்கு ஒரு விடயத்தை கூறவில்லை என்று நீங்கள் கேட்க மறந்துவிட்டிர்கள் .ஆனால் நான் மறக்கவில்லை சொல்கிறேன்அவள் கண்கள். ஒரு முகத்தின் உயிரோட்டமானவை கண்கள் அழகிய கருமையான பெரிய விழிகள் சதா பொழிவது பெயருக்கு ஏற்ற போல் அக்கினியை தான். ஆனாலும் அது நபருக்கு ஏற்ப மாறுபடும்.அந்த இருள் பிரியா காலை வேளையிலும் தலைக்கு குளித்து தோட்டத்தில் அமைந்துள்ள ஆள் உயர சிவன் சிலை முன்னால் அமர்ந்து ஓம் நமச்சிவாயம் என கூறி கொண்டு இருந்தாள்.சிறிது நேரத்தின் பின்பு உடலுக்கும் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய யோகாசனம் செய்த பின்பு,சிலம்பு சுற்றிய பின்பு தான் அவள் காலை வேளை முழுமையாக அமையும். அதன் பின்பு தான் அவள் அன்றாட கடமைகள் ஆரம்பமாகும். அக்னிகா பல கோடி சொத்துக்கு சொந்தகாரி கிராமத்தில் உள்ள தோப்பு துறவு பல வீடுகள் , வயல்கள் பல பரம்பரை பரம்பரையான வைர நகைகள். இது தவிர பல நகரங்களில் ஹோட்டல்கள் , shopping complexes , இது எல்லாவற்றையும் விட அவளின் பிரமிட் கம்பெனி. அவளின் பலநாள் விடா முயற்சியாலும் வைராக்கியத்துடனும் அவளின் தாத்தா பண்னையார் கங்காதரன் உதவியுடன் உருவாகிய அவளின் முதல் குழந்தை. சாக்லேட் கம்பெனி பிரமிட் தரமான சில இயற்கையான மூல பொருட்களை கொண்டு செய்யப்பட்ட கோகேமிட்டாய் என்று அழைக்கபடும் சாக்லேட்டை .சில குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறாள் .


அக்னிகா தன் காலை கடமைகள் முடிந்தவுடன் வீட்டிற்குள் உள்ளே சென்றாள் .மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவினை மிக மெதுவாக திறந்தாள். அங்கே உயர்ரக பஞ்சு மெத்தையில் ஒரு உருவம் உறங்கி கொண்டு இருந்தது. அவள் போர்வையை விலக்கி அதன் காதருகே மிக மென்மையாக ஷிவி குட்டி எழுந்திரு டா கண்ணா வெரி வெரி குட் மார்னிங் பட்டு குட்டி என்றாள். அதுவும் எழுந்து வெரி வெரி குட் மார்னிங் மம்மி என்றது. அந்த குட்டி தேவதையின் பெயர் ஷிவன்யா. அக்னிகாவின் தவ புதல்வி நான்கு வயதே ஆன குட்டி பூ அக்னிகாவுக்கு கேளாமல் கிடைத்த வரம் அவள் உயிர் உலகம் எல்லாம் ஷிவன்யாதான் வாழ்க்கை முடிந்தது என நினைத்தபோது இல்லை நான் இருக்கிறேன் என நினைவுறுத்தியவள் அவளுக்காகவே அக்னிகா வாழ்கின்றாள்.
ஷிவன்யாவை எழுப்பி குளிக்க வைத்து உடை அணிவித்து கிழே தூக்கி கொண்டு வந்தாள். அப்போது அக்னிகாவின் மற்றொரு ரத்த சொந்தமான அக்னிகாவின் தாய் வழி பாட்டியான சிவகாமியை வீல்சாரில் தள்ளி கொண்டு அவரின் விசுவாசமான வேலைக்காரி தங்கம் வந்தார். அப்போது தாயின் கைகளில் இருந்து இறங்கி ஷிவன்யா, பாட்டியிடம் சென்று குட் மார்னிங் பாட்டி என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டாள். சிவகாமியும் குட் மார்னிங் என் பட்டு குட்டி என்றார். பின் அக்னிகாவும் அவரின் காலில் வீழ்ந்து வணங்கி குட்மார்னிங் பாட்டி என்று கன்னத்தில் முத்தமிட்டாள். பின்பு அனைவரும் காலை உணவு உண்ண டைனிங் டேபிள் சென்றனர். அப்போது அங்கு வந்த அக்னிகாவின் செகரட்டரி நீதா குட் மார்னிங் மேடம் என்றும், குட் மார்னிங் பாட்டி, குட் மார்னிங் பேபி என்றாள்.
அக்னிகா அவளிடம் உணவு உண்ணும்மாறு கூறினாள் ஏனெனில் நீதாவுக்கு சொந்தபந்தம் என்று யாருமே இல்லை கங்காதரன் தயவால் படித்த பட்டம் பெற்று அக்னிகாவின் கூடவே வேலை செய்கிறாள். அக்னிகா அப்போது அங்கு வந்த சமையல்காரி வள்ளியிடம் .அக்னிகா
வள்ளி அக்கா அண்ணா சாப்பிட்டு விட்டாரா என்று கேட்டாள்.அதற்கு வள்ளி
இல்லை சின்னம்மா தம்பி காலையிலே நேரத்திற்கு முன்னே ஹாஸ்பிட்டில் போய்விட்டார் என்றாள். அக்னிகா

சரி அக்கா அண்ணாவுக்கு சாப்பாட்டை டிரைவரிடம் கொடுத்து அனுப்பி விடுங்க என சொன்னாள்.
டாக்டர் அபினவ் அக்னிகாவின் அண்ணன் உடன் பிறப்பு அல்ல அதற்கு மேல் இவனும் ஒரு யாருமற்ற ஒருவன் தான் ஆனால் அக்னிகாவின் துயர் பொழுதுகளில் அவன் தான் துயர் போக்கியவன் .அக்னிகா கூடவே வளர்ந்தவன் கங்காதரனின் செல்ல பிள்ளை இவன் அக்னிகாவுக்கு சொந்தமான ஹாஸ்பிட்டலில் தான் வேலை செய்கின்றான். அக்னிகா உணவு சாப்பிட்ட பிறகு பாட்டியிடமும் மகளிடமும் விடை பெற்று தனது கம்பெனிக்கு சென்றாள்.தீ மலரும்...
Hi friends உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தினை தெரிவியுங்கள்.
 
லண்டன் நகரில் இரவை பகலாக காட்டி கொண்டு இருந்தது அந்த உயர் தர நைட் கிளப். அங்கு பல தரப்பட்ட இன, வயது வேறுபாடுயின்றி ஆண்கள் பெண்களை காணலாம் அங்கு இருந்த ஒரு மேஜையில் ஒரு ஆண், பெண் இருவர் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
அந்த பெண் வெள்ளை இன பெண் ஆண் தான் நமது நாயகன் ருத்ரதேவேஷ் ஆறடி உயரம் பரந்த நெற்றி, அடர்ந்த புருவம் கூரியவிழிகள், தடித்த உதடுகள் அழகிய பியட் தினமும் ஜிம் சென்று சிக்ஸ் பேக் கொண்ட மாநிறமான உடல், மொத்தத்தில் பெண்கள் விரும்பும் ஆணழகன் ஒரு விடயத்தை மறந்து விட்டேன் சிரித்தால் கன்னத்தில் விழும் அந்த குழியில் பல பெண்கள் இதயம் தடம் மாறும். அப்படி பட்ட நம் நாயகனின் ஒழுக்கம் என்பது கேள்வி குறியாகும். ருத்ரதேவேஷ்யின் சொந்த ஊர் மும்பை பம்பாய் இருந்து மும்பையாக மாற்றம் பெற்ற இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் தலைநகர் ஆகும். ருத்ரதேவேஷ் பாரம்பரிய ராஜவம்சத்தை சேர்ந்தவன் இக்காலத்தில் ராஜவம்சம் ஒழிக்கப்பட்டாலும் சில இடங்களில் இன்னும் அதன் ஆதிக்கம் இருக்கதான் செய்கிறது. அவன் தந்தை வர்மா அரசபாரம்பரியத்தை சேர்ந்தவர் மாறேந்திர வர்மா ருத்ரதேவேஷ்யின் தந்தை. உலகெங்கிலும் உள்ள வர்மா குரூப்ஸ் சொந்தகாரர் .
பல தரப்பட்ட இந்தியாவில் உள்ள உயர் தரப் பொருட்களை ஆடைகள், மண்ணால் ஆன பொருட்கள் , பூக்கள், ஏற்றுமதி செய்கின்றனர். இதைவிட Software companies உள்ளது. மும்பை நகரிலே பல ஏக்கர்களை கொண்டு கட்ட பட்ட அரண்மனை. ருத்ரதேவேஷ்க்கு ஒரு அண்ணன் மட்டுமே அண்ணன் சர்வின் அண்ணி பைரவி தஞ்சாவூர் அரண்மனை பெண் அமைதி

யான அழகான பெண் அரண்மனை வாரிசு என்று துளி கூட கர்வம் இல்லை. ஆனாலும் ஒரு கவலை தான் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தையில்லை பார்க்காத மருத்துவம் இல்லை ஏறாத கோயில் இல்லை பலன்தான் இன்னும் இல்லை.

சர்வின் பைரவிக்கு ருத்திரன் இன்னும் குழந்தைதான் ருத்திரனும் இவர்கள் மீது உயிரே வைத்து உள்ளான் ஆனால் மாறவர்மன் ருத்திரனிடம் கடுமையாக இருப்பார். காரணம் தனது ஐந்து வயதிலே அன்னையை இழந்தவன் அப்போது இருந்த மாறனின் தாய் தந்தையின் அளவுக்கு மீறிய பாசம் அவன் தடம் மாற காரணம். அப்போது மாறவர்மன் பிசினஸ் பிசினஸ் என்று மனைவியின் இழப்பை அதில் செலுத்தினார். மாறவர்மனின் தாய் தந்தை இறந்த பின்பு ருத்திரன் பதினைந்து வயது அதன் பின்பு ஏதும் செய்ய முடியாத நிலை. அதன் பின்பு வெளிநாடு சென்று விட்டான் படிக்க இப்போது முப்பதிரெண்டு வயது. ஆனாலும் ருத்திரன் விடயத்தில் மிகுந்த கண்டிப்பு உடையவர். ருத்ரதேவேஷ் ஒரு சி.பி.ஜ (c.b.i ) officer பிறர் முடிக்க முடியாத பல வழக்குகளை தன் அதிரடி ஆக்ஸனால் முடித்து கொடுத்தவன் பல திறமைகளை கொண்டவன் ஆனால் பெண்கள் விடயம் பூஜ்யம் ஆகும்.
இந்த விஷயத்தில் எத்தனையே முறை மாறன் கண்டித்தாலும் அவன் சொல்லும் பதில் don't interfere my personal life (தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம்) என்பதேயாகும். ஆனாலும் அவன் கட்டுபடுவது அவன் அண்ணி பைரவிக்குமட்டுமே. சர்வினுக்கும் ருத்திரனுக்கும் ஐந்து வயது இடைவெளி ஒரு அண்ணாக கண்டித்தாலும் சர்வின் தம்பியை தன் பிள்ளையாக நினைப்பவன். அண்ணி பைரவி தன் முதல் மகவுவாக ருத்திரனை கருதுபவள் பெரும்பாலும் ஆண் பிள்ளைகள் அன்னையிடம் உள்ள சலுகைகளை அனுபவிப்பது அது போல தான் ருத்திரனும் ஆனாலும் பெண்கள்விஷயத்தை அண்ணி வரை போகாமல் மறைந்து விடுவான்.பைரவி மிக கட்டுபாடு உடையவள் இந்த விஷயத்தில் இவனுக்கு உதவும் அடிமைகள் இருவர் உண்டு ஆருயிர் நண்பர்கள் நவீஷ், ஹரி நவீஷ் டாக்டர் ஹரி வக்கீல் இருவரும் மாறனின் பிசினஸ் partner பிள்ளைகள் சிறுவயது முதல் இப்போது வரை தொடரும் உண்மையான நட்பு. இருவருமே எவ்வளவு எடுத்து சொல்லியும் அவன் இந்த விடயத்தை ஏற்பதாக இல்லை. ஆனாலும் அவனுக்கு ஒரு பழக்கம் உண்டு ஒன்லி வீக் என்ட் மட்டும் தன்னை தேடி வரும் பெண்களிடம் மட்டும் உறவை பகிர்ந்து கொள்வான்.


இப்போது கூட தன் லண்டனில் உள்ள பெண் தோழியுடன் நைட் கிளப் வந்து உள்ளான். அதன் பின்பு தனக்கு சொந்தமான லண்டனில் சகல வசதிகளையும் அமையபெற்ற பங்களாக்கு இரவை கழிக்க அந்த பெண்ணுடன் சென்றுவிடுவான் இதுவே இவன் வார இறுதியில் இடம் பெறும் நிகழ்வு .

Heaven is the beauty of wine

The thrill of alcohol is the thrill of it all

Pleasure is night and everything is relationship

Pleasure is night and everything is relationship

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே

மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்

இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்

இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்
இதுதான் அவனுடைய வாழ்க்கை முறை இப்படி பட்ட இரு துருவங்களாக இருக்கும். நம் நாயகன் நாயகியை இணைப்பதற்கு விதி தயார் ஆகியது இனி வரும் அத்தியாயங்களில் நாம் காண்போம்.
தீ மலரும்...


இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 
அக்னிகா தன் பிரமிட் கம்பெனிக்கு சென்று கொண்டு இருந்த வேளை அங்கு ஸ்டிரைக் ஆரம்பித்து இருந்து காரணம் போனஸ் பிரச்சினை இதனை துண்டிவிட்டது வேறு ஒருவர் அந்த நபர் அக்னிகாவின் பரம எதிரியான மந்திரி ராஜதுரை இவரை பற்றி இனி வரும் அத்தியாயங்களில் நாம் பார்ப்போம்.
அக்னிகாவின் பல வருட உழைப்பு இந்த பிரமிட் கம்பெனி தன் தாத்தா கங்காதரனின் துணை கொண்டு ஆரம்பித்து இன்று வரை தனது 26வயது வரை படி படியாக உயர்ந்தவள் தன் அருகில் இருக்கும் தன் PA நீதாவிடம் கேட்டால் இதற்கு என்ன காரணம் என்று அதற்கு. நீதா
மேடம் இது ஒரு சாதாரண பிரச்சினை ஆனால் இதை தூண்டி விட்டது மந்திரி ராஜதுரை என்றாள் இப்போது தான் நமக்கு தகவல் வந்தது முதலில் 9 வீதம் சரி என்ற யூனியன் லீடர் இப்போ மந்திரியிடம் காசை வாங்கிக் கொண்டு இப்போ 12 வீதம் கேட்கிறாங்க மேடம் என்றாள். கண்கள் மூடிக் கொண்டு அவள் சொன்னதை கேட்டு கொண்ட அக்னிகா.
நீதா சரி நான் இதை டீல் செய்கிறேன் நீ நான் சொன்ன விஷயத்தை செய் என்றாள்.


அக்னிகாவின் BMW கார் பிரமிட் கம்பெனிக்குள் நுழைந்ததும் ஆர்பாட்டம் தொடங்கியது. முதலாளி வர்க்கம் ஒழிக ஒழிக

ஏழையின் வயிற்றில் அடிக்காதே

செய்யும் வேலைக்கு நியாயமான கூலி கொடு

இப்படி கோஷம் எழுப்பி கொண்டு இருந்தனர்.அக்னிகா கம்பீரமாக இறங்கினாள் அவளின் கம்பீரமாக நடையை பார்த்து ஒரு நிமிடம் சத்தம் இறங்கியது அக்னிகா முன்னால் வந்து .அக்னிகா

சரி உங்களுக்கு இப்ப என்ன தேவையோ

சொல்லுங்கள் ஆனால் வேலை நேரத்தில் இப்படி ஸ்டிரைக் செய்கிறது சரியில்லை நீங்கள் எல்லோரும் சரி என்ற பிறகு தான் நியாயமாக 9வீதம் சரி என்று சொன்னேன் இப்ப ஏன் ஸ்டிரைக் என்று எனக்கு தெரியவில்லை. காரணம் சொல்லுங்க என்றாள்.

அதற்கு ஒருவரும் ஒன்று பேசவில்லை. ஆனால் யூனியன் லீடர் முத்து முன்னால் வந்து .முத்து
மேடம் உங்களுக்கே தெரியும். இப்ப விலைவாசி உயர்வு அதனால் தான் இந்த ஸ்டிரைக் என்றான். அக்னிகாசரி யூனியன் லீடர் இது நாம தீர்மானித்தது இரண்டு நாளைக்கு முன் அதுவும் நீங்கள் எல்லாம் சரி என்ற பின் அப்போ இல்லாத விலைவாசி உயர்வு இப்ப எப்படி எனக்கு கொஞ்சம் சொல்லு என கேட்க. முத்து


மேடம் அது எதற்கு உங்களுக்கு எங்களுக்கு 12வீதம் போனஸ் வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் யாரும் வேலை செய்ய மாட்டோம் என்றான். அக்னிகா
வெல் உங்களால் காரணம் சொல்ல முடியாது ஆனா போனஸ் வேணும் ரைட் யூனியன் லீடர் என கேட்க.


முத்துவும் ஆம் என்று சொல்லி வாய் மூடவில்லை பளார் என்று ஒரு சத்தம் கேட்டது அனைவரும் அதிர்ச்சியாக நின்றனர். அக்னிகா முத்துவை கை நீட்டி அடித்து இருந்தாள் நீதா கூட ஒரு நிமிடம் திகைத்து நின்றாள். முத்துவும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு .முத்து
நீ யார் மேலே கை வைத்திருக்க தெரியுமா. யூனியன் லீடர் மேலே இத நான் சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னா உன் கம்பெனிய இழுத்து மூட வேண்டி வரும் என. அக்னிகா
ரியலி யாருகிட்ட மந்திரி ராஜதுரையிடமா ஐ யம கரெக்ட் என கேட்க முத்து ஒரு நிமிஷம் ஷாக் ஆகி நின்றவன் பிறகு. முத்து
என்ன சொல்றீங்க அவர் யார் என்று எனக்கு தெரியாது என்றான். அக்னிகா
அப்படியா மிஸ்டர் யூனியன் லீடர் நான் இப்ப ஒரு மூவி காட்ட போறேன் அதாவது படம் நீங்க தியேட்டருக்கு போக தேவையில்லை இப்ப காசு கொடுக்காமல் பார்க்கலாம் நீதா லெட்ஸ் ஸ்டாட் (let's start) என்றாள். நீதா போன்னில் உள்ள ஒரு ரெக்கார்ட்டை ஆன் செய்ய மந்திரி ராஜதுரையும் முத்துவும் பேசிய அனைத்து விஷயங்களும் ஒலிப்பதிவு ஆகியது. முத்துவுக்கு வியர்வை ஆறாக ஓடியது. முதல் காரணம் அக்னிகாவுக்கு உண்மை தெரியும், இரண்டாவது தன் சக தொழிலாளர்கள் முன் தன் இன்னொரு முகம் வெளிப்பட்டது. முத்துவுக்கு நன்றாக தெரியும் அக்னிகாவின் குணம் அவள் நல்லவளுக்கு நல்லவள் துரோகம் செய்தால் அவளை மாதிரி ஒரு எதிரி யாரும் இல்லை என்று தன் சக தொழிலாளர்கள் வேற ஒன்று கூடி தங்களுக்குள் கிசு கிசுக்க ஆரம்பித்தனர். அக்னிகா
I say stop it என்ற கர்ஜனை குரலில் முத்து முதல் கொண்டு நீதா வரை சர்வமும் பதறினார்கள். அக்னிகா
என்ன எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறீங்க இவ ஒரு பெண்ணுதானே நாம நினைத்த எதையும் செய்யலாம் என்று எல்லோரும் நல்லா நியாபகம் வைங்க நான் அக்னிகா எனக்கு துரோகம் பிடிக்காது அதுவும் நம்பிக்கை துரோகத்திற்கு என் அகராதியில் இடம் இல்லை. முத்து தன் சுயலாபத்துக்காக செய்தது தப்பு என்றால் நீங்கள் செய்ததற்கு என்ன பெயர் சொல்லுங்க என்ன பேச்சு வரவில்லையா .எப்படி வரும் முதலாளி தப்பு செய்தால் ஆர்பாட்டம் பண்ண தெரியும். ஆனா நீங்க பண்ணினால் நாங்க மன்னிக்கனும் அப்படி தானே மிஸ்டர் யூனியன் லீடர் ஸாரி ஸாரி முத்து நம்பிக்கை துரோகி முத்து. i am right என கேட்க. முத்து
அது மேடம் ஐயா தான் என்னை மிரட்டி செய்ய சொன்னார் என்றான். அக்னிகா தன் வலது கையை உயர்த்தி
போதும் நீ பேசாத உன் கிட்ட நான் பேச விரும்பவில்லை நீதா உடனடியாக போலீசுக்கு கால் பண்னு. இவனை அவங்களிடம் ஹான்ட் ஒவர் (handover) பண்னு மற்றதை நான் கமிஷனரிடம் பேசுகிறேன்.அண்ட் இவர்களுக்கு பத்து நாள் சஸ்பெண்ட் மெமே ஆர்டர் குடு பிறகு பத்து நாள் சம்பளத்தை கழி அப்ப தான் இனி தப்பு செய்ய யோசிப்பாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு அதை எனக்கு எப்படி பார்கணும் என தெரியும். இப்ப வா மற்ற வெர்க் எல்லாம் இருக்கு எனக்கு டைம் வேஸ்ட் பண்ணினால் பிடிக்காது let's go என்று கூறி சென்றாள்.
தீ மலரும்….

உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 
லண்டன் நகரில் மெல்ல மெல்ல சூரிய தேவன் உதயமாகிய வேளை.அந்த பங்களாவில் உள்ள அறை ஒன்றில் போன் மணி விடாது அடித்தது அங்கு ருத்திரனின் மார்பில் தலைவைத்து உறங்கி கொண்டு இருந்தாள் லண்டனில் உள்ள வர்மா குரூப்ஸ்ஸின் பார்ட்டினர் மிஸ்டர் கெவின் பீட்டரின் மகளும் சிறந்த மெடல் அழகியான அலீசா.

இவளும் ருத்திரன் மாதிரி தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல் இருக்கிறதே அதை அறியாதவள். போன் மணி சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்த ருத்திரன் போன் திரையில் தன் வளர்ப்பு அன்னையான அண்ணி பெயர் பார்த்தவுடன் பதறினான். ஏனெனில் பைரவிக்கு ருத்திரன் வீக் என்ட் லீலைகள் தெரியாது. அப்போது அலீசா தூக்க கலக்கத்தில் .
யார் டியர் இந்த டைம் கால் பண்ணுவது. ஸ்டுப்பிட் என்றாள் அதற்கு ருத்திரன்ஷாட் அப் அலீசா அவங்க என் பாபி( அண்ணி) எனக்கு இன்னொரு அம்மா so give respect என்றான். பின் போன் அட்டன் பண்ணி குட் மார்னிங் பாபி என்றான் அதற்கு பைரவி .
குட் மார்னிங் பேட்டா (மகன்) ருத்திரா சாரி கண்ணா மார்னிங் நான் டிஸ்டப் பண்ணி விட்டேன் எங்களுக்கு இப்ப நைட் ஸாரி கண்ணா நான் மறந்து போய் உனக்கு கால் பண்ணிவிட்டேன் நான் பிறகு கால் பண்ணுகிறேன் என்றாள். ருத்திரன்

பாபி நீங்க எனக்கு அம்மா நீங்க டிஸ்டர்ப்பா எனக்கு நீங்க எப்ப வேணும் என்றாலும் எனி டைம் எனக்கு கால் பண்ணலாம் No disturb u are my mom என்றான். பைரவி

ருத்திரா அண்ணி ஒன்னு சொன்னா கேட்பாயா கண்ணா எனக்கு உன்னை பார்க்க ஆசையாக இருக்கு ஒரு தடவை இந்தியாவுக்கு வாடா கண்ணா என கேட்க. ருத்திரன்No chance பாபி ஐ கான்ட் எனக்கு interest இல்லை இந்தியா வர.நீங்க பய்யா (அண்ணா) கூட லண்டன் வாங்க ஜாலியா நாம சுற்றலாம் என்றான். பைரவி
அப்ப அண்ணிக்கு ஏதும் நடந்தான் வருவாயா அப்போ உனக்கு அண்ணி மேலே பாசம் இல்லை நான் அண்ணிதானே அம்மா இல்லையே என்று பைரவி அழ. ருத்திரன்
பாபி பாபி ஏன் இப்படி பேசுகிறீங்க எனக்கு இந்த வேல்ட்டிலேயே பிடித்தது நீங்க தான் இப்ப என்ன நான் இந்தியா வரணும் ஒகே ஐ யம் கம்மிங் பட் பாபி உங்களை இப்படி சொல்ல சொன்ன மிஸ்டர் மாறன் கிட்ட சொல்லுங்க.நான் வருவது உங்களுக்காக மட்டும் தான் அவர் என் விஷயத்தில் தலையிட கூடாது பீளிஸ் இதை அவர் கிட்ட சொல்லுங்க ஒகே பாபி டேக் கேயார் என சொல்லி விட்டு

அவன் போனை வைத்ததும் அலீசா அவன் தோள் வளைவில் தலை வைத்து .அலீசா
ஏன் டியர் கட்டாயமாக இந்தியா போகனுமா. அப்படி என்ன important உங்க அண்ணிக்கு என கேட்க ருத்திரன் அவள் தலையை தள்ளி விட்டு அவள் இரு தோள்களில் கை வைத்து. ருத்திரன்
லுக் அலீசா நம்ம ரிலேசன்ஷிப் இந்த பெட் வரைக்கு தான் அது உனக்கு தெரியும் எனக்கு தெரியும். உனக்கு நான் first இல்ல எனக்கும் அப்படி தான் உன் லிமிட்யோட நீ இரு அதை தாண்டினால் நீ வேற ருத்திரனை பார்ப்ப என்றான்.அலீசாக்கு அது நன்றாக தெரியும். ஏனென்றால் அவள் பல முறை பார்த்து இருக்கிறாள். ருத்திரனின் ருத்திர அவதாரத்தை ஒருவரை அழிக்க வேண்டும். என்றால் உயிர் தவிர அனைத்தையும் எடுத்து விடுவான். அதனால் இதற்கு மேல் அவள் ஏதுவும் பேசவில்லை. அதனால் அவனை திசை திருப்ப அவன் இதழில் முத்தமிட்டாள். ருத்திரனும் அவளை தழுவி கழுத்து வளைவில் முத்தமிட்டு இடையில் தன் கரங்களை படர விட்டு தன் ஆதிக்கத்தை செலுத்தி இன்னுமொரு கூடலை ஆரம்பித்தான் அதேவேளையில் மும்பையில். மாறன்என்ன மா பைரவி உன் பையன் என்ன சொன்னான் மும்பை வருகிறானா இல்லையா என்று கேட்டார் அதற்கு பைரவி.
வருகிறான் மாமா என் பையன் என் பேச்சை தட்ட மாட்டான் என கேட்க. மாறன்
சரி மா ஆனா என் கணிப்பு சரி என்றால் நான் தான் உன் கிட்ட சொல்லி அவனை வர சொன்னேன் என்று கண்டு பிடித்து இருப்பான் என. மாறன்
எப்படி மாமா சரியாக சொல்றீங்க நான் அவன் அப்பன் மா எனக்கு தெரியாதா என் பசங்க குணம். ஏதோ நல்லது நடந்தால் முதலில் சந்தோஷபடுறது நான் தான் என்றார் அதற்கு .பைரவி

நிச்சயம் மாமா என் பையனுக்கு நல்ல பெண்ணாக பார்த்து கட்டி வைக்கனும் . அவனுக்கு பிறக்கிற பிள்ளையை நான் தூக்கி வளர்க்க வேணும் மாமா இது தான் என் ஆசை மாமா என்றாள்.

ருத்திரன் தன் கூடலை முடித்த பின் தனது அறைக்கு செல்ல எழுந்தான் அப்போ அலீசா .
ஏன் டியர் மே ஐ ஆஸ் யூ சம்திங் ( may i ask u something) என கேட்க. ருத்திரன்
Ya sure baby என .அலீசா
இல்லை ஏன் எப்பவும் உன் ரும்முக்கு நீ என்ன அழைப்பது இல்லை இந்த பெரிய பங்களாவில் எப்பவும் நான் கீழ் ரூம்ல் தான் ஸ்டே பன்ணுகிறேன். I also royal family what the reason என கேட்க. ருத்திரன்
i don't like it come to my room eney one because my room waiting for spl person என்றான். ருத்திரன்
லுக் அலீசா நம்ம ரிலேசன்ஷிப்புக்கு ரூம் இம்பார்ட்டன் இல்லை சோ லீவ் இட் ஒகே நான் இன்று நைட் மும்பை போறேன். So i am leaving now this is your gift diamond set என கூற. அலீசா
ஏன் டியர் என் கிட்ட இல்லாத மணியா, ஜீவல்ஸ்சா நான் உன் கூட ஸ்டே பண்ண மட்டும் தான் வந்தேன் டியர் யு இன்சல்ட் மீ என .ருத்திரன்
ஸாரி பேபி எனக்கு free பிடிக்காது என்றான்.

பின்பு அலீசா சென்ற பின்பு தன் அறைக்கு சென்று குளித்து ரெடியாகி தன் பிரைவெட் சார்ட்டர் பிளேனில் மும்பைக்கு பயணம் ஆனான்.


தீ மலரும்...


உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 
சென்னை நகரில் மிக பிரமாண்டமாக அமைந்த பங்களாவில் காலை வேளையின் அமைதியை கொடுத்து கொண்டு இருந்தது அங்கு இருந்த தொண்டர் படை வாழ்த்து கோஷங்களை எழுப்பி கொண்டு இருந்தனர். பிரமாண்டமான ஹாலின் மத்தியில் சோபாவில் அமர்ந்து இருந்தார் அமைச்சர் ராஜதுரை அவர் அருகில் அவர் அல்லகைகள் நின்றுகொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த அவரது வலது கையான பி.ஏ வைத்தி ராஜதுரையிடம் வந்து ஐயா என்றார். ராஜதுரை

என்ன வைத்தி ஏன் இப்படி ஒடி வந்த என்ன விஷயம் என கேட்க. வைத்தி அது ஜயா என விஷயத்தை எவ்வாறு சொல்வது என்று திக்கி திணறி கொண்டு இருந்தார். ராஜதுரை
சொல்ல வந்ததை சொல் என்றார். வைத்தி ஒருவாறாக
ஜயா நம்ம சாராய கடையை சீல் வைத்து விட்டாங்க ஜயா சாராயத்திலே கலப்படம் இருக்கிறதாம் அதுவும் கள்ள சாராயமாம் என்றார். ராஜதுரைஎன்னடா சொல்ற இந்த ராஜதுரையோட கடையை முட எவனுக்கு தைரியம் என்றார்.

வைத்திஐயா நம்ம கடை சாராயம் குடித்து விட்டு இருபது பேர் ஹாஸ்பிடலில் அது தான் அந்த ஏரியா மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி கடையை முட வைத்தாங்க .நான் எவ்வளவு முயற்சி பண்ணியும் பணம் கொடுத்து சரி பண்ணியும் முடியவில்லை ஜயா ஏன் என்றால் இதற்கு பின்னால் இருப்பது என்று கூற வரும் போது. ராஜதுரையின் பெர்ஷனல் மொபைல் அடித்தது .அவர் அதை எடுத்து பார்த்தவர் முகம் மாற அதை ஆன் பண்ணி காதில் வைக்க வணக்கம் ஜயா ராஜதுரை அவர்களே நலமா என்று நக்கல் குரல் ஒலித்தது . ராஜதுரை அக்னிகா என்று அந்த பங்களா அதிரும் படி கத்தினார். அக்னிகா

ஷ் மெல்ல ராஜதுரை வயசு ஆச்சி இல்லையா மெல்ல பேச வேணும் பிறகு இந்த எலக்சன்ல நீங்க நிற்காமலே மேலே போய்விடுவீங்க. பிறகு உங்க கனவு ஆசை இன்னும் சம்பாதிக்கனும் என்ற பேராசை இல்லாமல் போய்விடும். பிறகு உங்க ஆசை மனைவியின் கனவு கனவாகவே போய்விடும். சோ பி கூல் என்றாள். ராஜதுரை

நீ ஆழம் தெரியாம கால் வைக்கிற அக்னிகா நான் ராஜதுரை பின் விளைவுகள் மோசமாக இருக்கும் நீ ஒரு பெண்ணு அதை மறந்து விடாதே என்றார். அக்னிகா

நீங்க ஒன்றை மறந்து விட்டிங்க ராஜதுரை நான் அக்னிகா கங்காதரன் சுயம்புவாக உருவானவள். என்னை அழிக்க உங்களால் முடியாது நீங்க எனக்கு ஐ மீன் என் கம்பெனிக்கு செய்ததற்கு ப‌திலடி இது.நீங்க என்னை ஒரு அடி அடித்தா நான் அதை பத்தாக திரும்ப தருவேன். சோ இனி செய்வதக்கு முன் யோசித்து செய்ய வேணும். எனி வே எனக்கு வேலை இருக்கு உங்கள மாதிரி நான் வெட்டி ஆள் இல்ல பை என்று கூறி கால் கட் பண்ணினாள். வைத்தி
ஐயா நான் சொல்ல வந்தது இதை தான் என .ராஜதுரை
பார்ப்போம் இவள் இன்னும் எவ்வளவு தூரம் போகிறாள் என்று எலக்சன் மட்டும் அமைதியாக இருப்போம் பிறகு அவளை அடியோடு அழிக்கிறேன் என்றார்.

மும்பை ...


பிரமாண்டமான அரண்மனையின் மேல்தளத்தில் விமானம் இறங்கியது அங்கு இருந்து லிப்ட் மூலம் ருத்திரன் வரவேற்பு அறைக்கு வந்தான். பைரவி தயாராக வைத்திருந்த ஆரத்தியை கொண்டு வந்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டியிட்டாள். ருத்திரன் பைரவியின் காலில் வீழ்ந்து வணங்கி பைரவியை கட்டியனைத்து ஐ மிஸ் யூ பாபி என்றான். பைரவியும்
நானும் தான் கண்ணா இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன் பாரு என் சாப்பாடு இல்லாம எப்படி மெலிந்து போய் இருக்கிறாய் என்று. இனி பாரு அண்ணி எப்படி உன் உடம்பை தேற்றுகிறேன் என கூற. ருத்திரன்

பாபி நான் சரியான வெயிட்டிலே தான் இருக்கிறேன் சோ நோ வொரிஸ் என பைரவி பட் என்று ருத்திரனின் வாயில் மெல்ல அடிகொடுத்தாள். ருத்திரன்
இது எதற்கு பாபி என கேட்டான். பைரவி

நான் எத்தனை தடவை சொன்னேன் தமிழ் தான்பேச வேண்டும் என்று பிறகு என்ன பாபி ஒழுங்காக அண்ணி என்று சொல்லு கண்ணா என்றாள். ருத்திரன்
ஓகே பாபி ஸாரி அண்ணி பட் ஸ் டூ மச் அண்ணி பிறந்து மும்பை ஆனா நான் தமிழ் பேச வேணும் ஓ காட் நீங்க தமிழ் நாடு என்று என்ன டார்ச்சர் செய்கிறீங்க அண்ணி. எனிவே ட்ரை மை பெஸ்ட் அண்ணி என தமிழில் பேசியவன் பிறகு பைரவியிடம். பய்யா எங்கே ஸாரி ஸாரி அண்ணா எங்கே அண்ணி காணவில்லை நான் வர முன் நிற்பாரே என கேட்க. பைரவி
அத்தான் எவ்வளவு நேரம் உனக்காக தான் ருத்திரா காத்து இருந்தார்.இப்ப தான் மாமா இம்பார்ட்டன் மீட்டிங் என்று வர சொன்னார் என. ருத்திரன்
வேணும் என்று வர சொல்லி இருப்பார் உங்க மாமா என் அண்ணா என்னை ரிசீவ் பண்ணாமல் இருக்க என. பைரவி
ருத்திரா என்ன இது அவர் உன் அப்பா தப்பு செய்தால் கண்டிப்பாக இருப்பது சகஜம் கண்ணா அதற்கு மரியாதை இல்லாம பேசுவதா அவர் உன் நல்லதற்கு தானே சொன்னார் என. ருத்திரன்சரி அண்ணி இல்லை பாபி நான் என் ரூம்க்கு போகிறேன் டயர்டாக இருக்கு என ரூம்க்கு ஓடினான். பைரவியும்சரியான வாலு பையன் அழைக்க வேணாம் என்றால் திரும்ப அழைப்பான் என சிரித்து கொண்டு பைரவி வேலை பார்க்க சொன்றாள். ஈவினிங் போல வேலை முடிந்து வந்த சர்வின், மாறன் இருவருமே ருத்திரனிடம நலம் விசாரித்து விட்டு சென்றனர் ருத்திரனும் தான் டயர்டாக இருப்பதாக கூறி தூங்க சென்றான்.

தீ மலரும்…..
உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள். போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 
காலையில் எட்டு மணியளவில் சகல வசதிகளோடு ஒரு குட்டி வீட்டையே உள்ளடக்கியதாக இருந்த அந்த பிரமாண்டமான அறையின் மத்தியில் தாராளமாக ஆறு பேர் தூங்க கூடிய கட்டிலில் நம் நாயகன் தூங்கி கொண்டு இருந்தான்.
அவன் துயில் கலைப்பதக்காகவே அவன் உயர் ரக மொபைல் போன் அழகாக இசைத்தது. சோம்பலுடன் கண்னை திறந்து திரையில் பெயரை பார்த்தான் ஹரி என்று மின்னி மின்னி பெயர் மறைந்தது. இவன் போனை ஆன் பண்ணி அட்டன் பண்ணியவுடன் எதிர் பக்கம் இருந்து உற்சாகமாக மேரா தோஸ்த் என குரல் ஒலித்தது. ருத்திரன்
உற்சாகமாக ஏ துஷ்மன் நீயா என்றான். ஹரி

ஏன் டா நான் உனக்கு எதிரியா பரவாயில்ல டா நீ எல்லாம் நல்லா வருவ டா என சந்தனம் பட டயலாக்கை எடுத்து விட்டான் சிரித்து விட்டு .ருத்திரன்
ஸாரி மச்சி நேற்று ஈவினிங் தான் வந்தேன். எப்படியும் நான் கால் பண்ணி இருப்பேன் நீ கால் பண்ணி விட்ட டேய் இருடா மற்ற துஷ்மன் கான்பரன்ஸ் காலில் வருகிறான் அதற்குள். நவீஷ்


நமஸ்தே சாப் எப்படி இருக்கிறது உங்க ஹாப்பி லைவ் என கேட்டான் லண்டன் போனா சார் ஒரேய பிஸி தான் பார்ட்டி என்ன கேர்ள்ஸ் என்ன. அது எப்படி மச்சி உனக்கு உடம்பு பூரா மச்சம் தான் ஆனா ஒன்று மச்சி நாங்க எல்லாம் ஏக பத்தினி விரதன் ஆனா நீ ஏகப்பட்ட பத்தினி விரதன் மச்சி பார்த்து டா உன் பத்தினி பாடிய பஞ்சர் பண்ணாமல் இருந்ததால் சரி. நாங்க இரண்டு பேரும் சொல்லி சொல்லியே எங்களுக்கு டயலாக் பாடம் மச்சி மும்பை வந்துவிட்ட பாபி இருக்கிறாங்க பார்த்து உன் கிருஷ்ண லீலைகளை சுருட்டி வை அவங்களுக்கு தெரிந்தா அப்செட் ஆகிடுவாங்க. ருத்திரன்
ஐ நோ மை லிமிட் மச்சி நான் பார்க்கிற கேர்ள்ஸ் எல்லாம் டார்ச்சர் பண்ற ஆள் இல்லை. தானா வருகிறவங்க கூட ஷோரிங் மை பெட் மற்றும் படி நோ மோர் ஒகே கைஸ் ஈவினிங் ஹோட்டல் தாஜ் மஹால் பேலஸில் மீட் பண்ணலாம் பை மச்சிஸ் என ஹரி நவீஷ்யும் பை டா என கால் கட் பண்ணினார்கள்.பின் ருத்திரன் குளித்து விட்டு வர டைனிங் ஹாலில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.ருத்திரன் குட் மார்னிங் அண்ணி அண்ணா, டாட் என சொல்லி கொண்டு வர .பைரவி
கண்ணா இன்று உனக்கு பிடித்த டிஷ் எல்லாம் நானே என் கையாலேயே சமைத்தேன்.ஆ காட்டு நானே உனக்கு ஊட்டி விடுறேன் என ருத்திரனும் பைரவி அன்பில் அன்னையின் பாசத்தை உணர்ந்தான். அப்போது பைரவி என மாறன் அழைக்க மாமா என்றாள். மாறன்
அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு என்னும் போது அன்பு. பார்த்து நடந்துக்கோ அவன் உருப்படாத காரணம் நீ அதிக பாசம் வேண்டாம் மா விபரீதம் ஆகிவிடும் என. பைரவி
என்ன மாமா சொல்கிறீங்க அவன் படித்து நல்ல வேலையில் தானேஇருக்கிறான் அதுவும் சி.பி.ஜ .மற்றவங்க முடிக்க முடியாத கேஸ் எல்லாம் முடித்து இருக்கிறான் நீங்க ஏன் இப்படி மாமா என வார்த்தையை முடிக்க முடியாமல் கண் கலங்கி கேட்டாள்.தன் அன்னைக்கு ஒத்த அண்ணி கண்கலங்கியதும் டைனிங் டேபிள்ளில் இருந்த தட்டு தூர போய் விழுந்தது. ருத்திரன் தான் தட்டுகளை தள்ளி விட்டு தன் பெயருக்கேற்ப கடும் கோபமாக நின்றவன் தன் தந்தையை பார்த்து. ருத்திரன்

டேட் யூ ஆர் குராசிங் யுவர் லிமிட் ஐ நோ எனக்கு தெரியும் என் லைவ்வை பார்க்க லாஸ்ட் வார்னிங் உங்களுக்கு இது. அண்ணி இனி கண் கலங்கினாங்க ஸாரி டூ சே நீங்க பனிஷ்மென்ட் அனுபவிப்பிங்க. அது டேட் ஓ பய்யாவோ யாராக இருந்தாலும் என கூறி விட்டு சாப்பிடாமல் தன் அறைக்கு சென்றான்.பைரவி

ஏன் மாமா அவன் சாப்பிடாமல் போய்விட்டான் சாப்பிட்ட பிறகு பேசி இருக்கலாம் தானே என. மாறன்

மா பைரவி நீ என் மருமகள் இல்லை மகள் மா உனக்கு தெரியும் என்னை பற்றி உன் மாமா நியாயமான விஷயத்தை தான் சொல்வேன் என.பைரவி

மாமா அவன் சின்ன பையன் என. மாறன்
அது உனக்கு தான் மா ஊருக்கு இல்ல 32 வயசு கல்யாணம் செய்ய வேணும் மா அது தான் நான் அவனை திருத்த சொன்னேன் என. பைரவி
சரி மாமா அவன் சாப்பிடாமல் போய்விட்டான் நான் சாப்பாடு கொண்டு போறேன் என உணவு தட்டினை கொண்டு சொன்றாள். பைரவி சென்ற பின் சர்வின் தந்தையை பார்த்து. சர்வின்


வாட் தே மேட்டர் டேட் நீங்க இப்படி அவன் முன் பிகேவ் பண்ண மாட்டிங்க சோ டெல் தே ரியல் ரீசன் என கேட்க. மாறன்
நான் பிறப்பிலே ராஜ வம்சமாக இருந்தாலும் நான் உங்க அம்மா ரத்னாவை தவிர என் கைகளும் சரி மனசும் சரி அவளை தவிர யாரையும் தொட்டதும் இல்லை நினைச்சதும் இல்லை நீயும் அப்படி தான்.ஆனால் ருத்திரன் ஐ மீ ன் ஐ நோ எவிரி திங் மை சன் .நான் உங்க டேட் அதையும் தாண்டி ராஜா மாறரேந்திரன் ஒரு ராஜாவுக்கு எல்லா பக்கமும் கண் இருக்க வேணும் இல்லை மக்களையோ பிள்ளைகளையோ கட்டி காக்க முடியாது இது பைரவிக்கு தெரியாது. அதை நீயும் உன் தம்பியும் மறைக்கிறீங்க என்றும் தெரியும் ஒன்றை நல்லா நினைவு வை சர்வி. ஜமீனோ மிடில் கிளாஸ்சோ எந்த பெண்ணும் தன் புருஷன் தனக்கு மட்டும் சொந்தம் என நினைப்பாங்க .நான் எப்பவும் நியாயத்து பக்கம் தான் நிற்பேன் சோஉன் சோட்டா பாய்யை திருத்தும் வழியை பாரு இல்லை என் கிட்ட விடு எனக்கு தெரியும் எப்படி இதை ஹாண்டில் பண்ண வேணும் என்று .ஓகே சன் ஐயம் லீவிங் பை என்று சொல்லி சென்ற தந்தையை கண் கலங்கி பார்த்தவாறே சர்வின் நான் தெரியாமல் செய்த தப்புக்கு மன்னிப்பு இல்லையா டேட் என மனதில் நினைத்தான்.

தீ மலரும்…..

உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள். போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 
ஒழுக்கம் இல்லாதவனுக்கு இந்த அக்னிகாவின் வாழ்கையிலோ ஆபிஸ்யிலே இடம் இல்லை. you got it நீதா இமிடியட்டாக டிஸ்மிஸ் ஆடரை டைப் பண்ணி கொண்டு வா இவனுக்கு நான் யார் என்று காட்டுறேன். அக்னி பிழம்பாக அக்னிகா கொதித்து கொண்டு இருந்தாள். அப்போது அக்னியின் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் தி பேமஸ் கிரிமினல் லாயர் மயூரி அக்னியின் உயிர் நண்பி. மயூரி
என்ன செல்லம் சவுண்ட் காதை பிளக்குது இன்றைக்கு யார் உன் கிட்ட மாட்டினான் என கேட்க. அக்னி
வாடி வா இப்ப தான் கண் தெரிந்ததா உனக்கு தே பேமஸ் கிரிமினல் லாயர் மயூரி என்ன இந்த பக்கம் சம்திங் ராங் சொல்லு டி என கேட்க. மயூரி

அகி அப்பா எனக்கு ப்ரோபோசல் பார்கிறார். உனக்கு தெரியும் அகி நான் அவரை தவிர யாரும் நினைக்க மாட்டேன் என .அக்னிகா
எஸ் ஜ நோ மயூ பட் அண்ணா ஏன் மெளனமாக இருக்கிறார்என்று தெரியவில்லையா என. மயூரி
ஓ டாக்டர் அபினவ்க்கு ஏன் என்ன பிடிக்கவில்லை தெரியுமா ஏன் என்றால் நான் பணக்கார பெண்ணாம். அது மட்டுமல்ல தி கிரேட் பேமஸ் கிரிமினல் லாயர் மூர்த்தியின் பெண்ணு .பைத்தியம் மாதிரி நாலு வருஷம் உன் அண்ணா பின்னால் சுத்துகிறேன் பலன் பூஜ்யம் .பாரு அகி ஒன்று உனக்கு அண்ணியாக வரனும் இல்லை நான் என்னை அழிச்சுக்குவேன் என. அக்னிகா
மயூ ஆர் யூ மேட் ஒரு லாயர் பேசுற மாதிரியாக பேசுகிற நான் அண்ணா கிட்ட பேசுறேன். முட்டாள் மாதிரி எதையும் செய்யாத புரிகிறதா என. மயூரி

ஒகே ஜ வில் ட்ரை மை பெஸ்ட் அகி சரி நான் வரும்போது யாருக்கு டிஸ்மிஸ் ஆடர் கொடுத்த என கேட்க. அக்னிகா

அதை பற்றி பேசாதே எவ்வளவு கஷ்டநிலையில் வர பெண் கிட்ட இவன் தப்பா நடக்க பார்த்தான் என் கம்பெனி முழுக்க சிசிடிவி இருக்கு. இந்த விஷயம் அந்த பொறுக்கிக்கு தெரியாது ஏன் நீ ,நான், நீதா தவிர யாருக்குமே தெரியாது. அதான் பார்த்ததும் டிஸ்மிஸ் பண்ணிவிட்டேன். கம்பெனியில் சேரும் போதே சொன்னேன். ஒழுக்கம் தவறினால் உடனடியாக டிஸ்மிஸ் செய்யபடும் என்று சோ நோ வொரிஸ் சட்ட நடவடிக்கைக்கு என்றாள் . மயூரி
ஒகே செல்லம் ஐ யம் லீவிங் நைட் கால் பண்ணு பை என அக்னியும் ஒகே டி பை என கூறி தன் வேலையை பார்த்தாள்.
மும்பை...


ஹோட்டல் தாஜ் மஹால் பேலஸ்
Dum maro dum mit

Jaaya gham

bolo subah shaam hare

Krishna hare Ram


என பாடல் ஒலித்து கொண்டு இருந்தது. பாடலுக்கு ஏற்ப பெண்கள் நடனம் ஆடி கொண்டு இருந்தனர். அங்கு இருப்பவர்கள் அனைவரும் பெரும் குடியில் வந்த குடி மக்கள் அனைவரும் கையில் விலை உயர்ந்த மதுபான வகைகள் விளையாடிகொண்டு இருந்தது.அங்கு ஒரு உயர் தர மேஜையில் ருத்திரன், ஹரி, நவீஷ் இருந்தனர் ருத்திரன் கையில் ஓட்கா கிளாஸ்சினை ஏந்தியிருந்தான் மற்ற இருவர் விஸ்கி பீர் என குடித்து கொண்டு இருந்தனர். ஹரி


ஏன் மச்சி டல்லாக இருக்கிறா எனி திங் சீரியஸ் மேட்டர் என கேட்க. ருத்திரன்
வழமையான மேட்டர் டா மார்னிங் எனக்கு டாட்க்கும் சண்டை அண்ணி தான் பாவம் எனக்காக டாட் கிட்ட பைட் பண்ணினாங்க.டாட் என் மேட்டரில் ஒவரா இன்டர்வியூ பண்ணுறார் மச்சி நான் திருத்த வேணுமாம் Worldல் யாருமே செய்யாத தப்பையா நான் செய்கிறேன். ஒன்லி வீக் என்ட் மட்டும் என் stress ரிலீப் மச்சி பிசினஸ்வேக் என் வேலை எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு ரிலீப் ஒவ்வொருக்கும் ஒரு ரிலீப் வேணும் டா நான் இதை யுஸ் பண்ணிறேன் தஸ் ஆல் என சொல்லி கொண்டு இருக்கும் போது ஹாய் டியர் என கூறி கொண்டு வந்தாள் மும்பையில் வளர்ந்து வரும் நடிகை ஷீத்தல். அவள்
what a surprise ரூத் after long time என ருத்திரனை கட்டி அணைத்தாள். ருத்திரன்

யா பேபி ஜ ஹவ் சம் வொர்க் எப்படி இருக்க பேபி என கேட்க. ஷீத்தல்
நாட் பாட் டியர் என கூறி மற்ற இருவரை பார்த்து ஹாய் என்றாள் ஹரி நவீஷ் இருவருமே ஹாய் மிஸ் ஷீத்தல் என்றனர். ருத்திரனும் ஷீத்தலும் பேசி கொண்டு இருக்க ஹரி நவீஷ் காதில். ஹரி
மச்சி இன்று முடிந்த கதை டா பைரவி பாபி கிட்ட எங்களை மாட்டிவிட போகிறான் மாறன் அங்கிளை நினைத்தாலே நடுங்குகிறது விதி வலியது மச்சி என .நவீயும்மச்சி இவனுக்கு எங்கே இருந்து வருகிறதே இப்படி பட்ட கூட்டம் ஹே கடவுளே காப்பாற்று என்றான். ஹரி ருத்திரனை பார்த்து
மச்சி டைம் ஒவர் லெட்ஸ் மூவ் என்றான். ருத்திரன்
மச்சி ஐ யம் நாட் கம்மிங் டா நீ நவீ தான் பாபியை அஜெஸ் பண்ண வேணும் ப்ளீஸ் டா.

ஷீத்தலை ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன் சோ ப்ளீஸ் மச்சி என. ஹரி
first and last ருத்திரா இனி எங்களை இப்படி செய்ய சொல்லாதே எனி வே வீ ஆர் லிவீங் பை டா என கோபத்துடன் சென்றனர். அவர்கள் கிளம்ப. ஷீத்தல்எவ்வளவு திமிர் டியர் இவங்க ப்ரண்ட் ஷிப்பை கட் பண்ணுங்க என. ருத்திரன்ஷட் அப் ஷீத்து ஜ நோ எவெரி திங் அவங்க என் best friends சோ நீ வந்த வேலையை மட்டும் பாரு என கோபமாக கூற ஷீத்தலும் அவன் கோபம் தணிக்க ருத்திரனை ஒகே ஸாரி டியர் என கூறி அணைத்தாள். ருத்திரனுக்கு ஹோட்டலில் permanent room உள்ளது. இந்த ஹோட்டலில் உலகில் உள்ள VIP, VVIP தங்கும் இடம் ருத்திரனுக்கு நிரந்தரமாக ராயல் சூட் உள்ளது. அன்று இரவுக்கு ஷீத்தலுக்கு கிடைக்கும் லாபம் ரொம்ப பெரிது ருத்திரன் அள்ளி கொடுக்கும் வம்சம் அவன் தன் அறைக்கு ஷீத்தலை அணைத்தவாறு சென்றான்.

தீ மலரும்….
உங்களுக்கு இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள். போன எபிக்கு விமர்சித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 
Status
Not open for further replies.
Top