வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீயினுள் பூத்த மலர் - கதை திரி

Status
Not open for further replies.
அக்னி தான் வந்தது பிரமிட் கம்பெனி ஓனராக மினிஸ்டர் ராஜதுரையை பார்க்க என சொல்ல. ஜெயராம்
சின்ன குட்டி அப்போ இந்த தாத்துவை பார்க்க நீ வரவில்லை மா அப்போ நீ என் பேத்தி இல்லையா கங்காவுக்கு மட்டும் தான் நீ பேத்தியா எனக்கு உன் மேலே உரிமை இல்லையா என கேட்க. அக்னி
தாத்து எனக்கு உங்களுக்கு உள்ள உறவை யாராலும் தடுக்கவே மாற்றவே முடியாது இது நான் உங்களுக்கு தரும் வாக்கு. நீங்க எப்போ நினைத்தாலும் அழைத்தாலும் நான் உங்க முன்னாடி நிற்பேன் ஆனா இந்த வீட்டிற்கு என்ன அழைக்க வேணாம் நான் மறக்க நினைக்கிற விடயத்தை இந்த வீடு எனக்கு நினைவுபடுத்துகிறதுமினிஸ்டர் ராஜதுரை ஒரு நல்ல தலைவன் யார் தெரியுமா தன் நலத்தை பார்க்காமலே அனைவருக்காகவும் சரி சமனாக நீதி வழங்குபவன் தான் அதற்கு தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து இருக்காங்க ஆனா நீங்க ருத்திரன் பக்கம் கையை காட்டி பணக்கார வர்க்கத்திற்கு ஜால்ரா போட்டு கொண்டு இருக்கிறீங்க என. மேனகா
ஏய் என்ன என் புருஷன் கிட்ட கேள்வி கேட்கிற நீ யார் ஆப்ட்ரால் நீ ஒரு பெண்ணு நீ வந்து அவர் கிட்ட கேள்வி கேட்கிற என அப்போது ஜெயராம் பேச வர .அக்னி

தாத்து இது என் போராட்டம் நான் தான் பேச வேணும் உங்க பேத்தியாக இல்லை ப்ளீஸ்என்றவள் மேனகா பக்கமாக திரும்பியவள் யார் நீ முதலில் சொல்லு என்ன சொன்ன புருஷன் இதற்கு அர்த்தம் தெரியுமா உனக்கு. சொத்து சுகத்திற்காக அடுத்தவள் புருஷனை வளைத்துப் போட்ட உனக்கு பேசவே தகுதி இல்லை அதுவும் அவள் உயிரோடு இருக்கும் போதே அடுத்த வார்த்தை பேசின நான் மனுஷியாக இருக்கமாட்டேன் என்றவள் ராஜதுரையிடம்

மிஸ்டர் ராஜதுரை சொல்லுங்க ஏன் அது உங்க லாண்ட் என்று ஸ்டே வாங்குனீங்க. ராஜதுரை
அது என் வொஃய்ப் பவித்திரா ராஜதுரையோட லாண்ட் என் வொஃய்ப்க்கு சொந்தமானது எனக்கு சொந்தம் சட்டம் தெரியா விட்டால் போய் கேட்டு வா என. அக்னி
வாரே வா ராஜதுரை வெல் பிளானிங். உங்களுக்கு இந்த அளவுக்கு மூளை வேலை செய்யாதே. யஸ் மூளை மும்பையில் இருந்து வந்துருக்கு ஐ கரெக்ட் மிஸ்டர் ஹரி என. ஹரிமிஸ் அக்னி நீங்க எதற்கு எடுத்தாலும் எங்களை தப்பு சொல்ல வேணாம் உங்களுக்கு உங்க டாட்டுக்கும் இருக்கும் பிரச்சினையில். எங்களை இன்வால்வ் செய்ய வேணாம் அண்ட் ஜஸ்ட் நைவ் உங்க டாட் தான் மினிஸ்டர் ராஜதுரை என்று இப்ப எங்களுக்கு தெரியும் என. அக்னிரியலி பட் மிஸ்டர் ஹரி உங்க ப்ரண்ட்டை பார்த்த்ல் அப்படி தெரியவில்லையே. முன்னாடியே அவருக்கு தெரிந்து இருக்கு .என் கெஸ் சரி என்றால் சேது சொல்லியிருக்க வேணும் ஐ கரெக்ட் மிஸ்டர் ருத்திரன் என கேட்க. ருத்திரன்வாவ் வை ஏ பிரைன் வொரி ஷாப் யஸ் ஐ நோ எவிரி திங் உன்னை பற்றி மார்னிங் தான் டீட்டெல் கைக்கு வந்தது. ஈவன் என் ப்ரண்ட்ஸ்க்கு கூட தெரியாது பட் யூ ஆர் வொரி க்ளவர் அழகோடு சேர்த்து அறிவு அமைவது இம்பாசிபிள் என. ராஜதுரை
அக்னி நீ என் கிட்ட பேச வந்தால் என் கிட்ட மட்டும் பேசு அவரை ஏன் இதில் இன்வால்வ் செய்கிற. அது என் மனைவி சொத்து அதை நான் யாருக்கு வேணும் என்றாலும் கொடுப்பேன் நீ யாரு அதை கேட்க அக்னி அப்படியா அப்ப இது யாரு என மேனகாவை பார்த்து கேட்டாள். அக்னிஎன் அம்மா உங்க வொய்ஃப் என்றால் மனைவி உயிரோட இருக்கு போது இன்னொரு மேரீஸ் பண்ணினால் அதற்கு பெயர் என்ன தெரியுமா மினிஸ்டர் என ராஜதுரைஏய் அக்னி வார்த்தையை அளந்து பேசு நான் உன் அப்பா அது மட்டுமல்ல மினிஸ்டர் ஆக்சன் எடுத்தேன் உள்ளே கம்பி எண்ண வேணும் என அக்னி அங்கு இருந்த சோபாவில் அமர்ந்துரியலி மினிஸ்டர் ஸார் அப்ப நீங்க ரெடியாக்கி கொள்ளுங்க உங்களை ஏசியா இல்லை நார்மல் ஜெயிலா என்று டிசைட் பண்னுங்க.


தாத்து உங்கிட்ட ஒன்று கேட்க வேணும் தாத்தா சொத்து பேர பசங்களுக்கு தானே என. ஜெயராம்
ஆம் சின்ன குட்டி என் சொத்து பூராவும் உனக்கு தான் என் சுயசம்பாத்தியம் யாரும் கேட்க முடியாது என. அக்னி
ஒகே தாத்து எனக்கு J.K கன்சக்சனை எனக்கு குடு அது உன் சுயசம்பாத்தியம் எனக்கு இப்ப வேணும் என அது முடியாது அக்னி ஏன் என்றால் உன் தாத்து தன் மகனுக்கு எழுதி கொடுத்து விட்டார் என்று கூறி கொண்டு வந்தார் ராஜதுரையின் நண்பன் லாயர் மூர்த்தி.
ஸாரி மூர்த்தி ஸார் யூ ஆர் ராங் இரண்டு பேர் பார்ட்னராக உள்ள கம்பெனியில் ஒருத்தர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது .சட்டத்தில் இடம் இல்லை கிரேட் கிரிமினல் லாயர் மூர்த்திக்கு இது தெரியாமல் இருப்பது. ஆச்சரியம் தான் என வந்தாள் மயூரி மூர்த்தி.அக்னி
அங்கிள் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என் நண்பி உங்க மகள் புலி மயூ நீயே இவருக்கு விளக்கம் கொடு என.மயூரி
ஓகே டீ லாயர் ஸார்,J.K கன்சக்சன் பெயர் விளக்கம் தெரியுமா j மீஸ் ஜெயராம் k மீஸ் கந்தன் கங்காதரன் அக்னியின் தாத்தா. அன்ட் லாண்ட்டை பார்த்தால் ஆன்ட்டி ஐ மீன் பவித்திரா ராஜதுரைக்கு கங்காதரன் எழுதவில்லை .தன் பேத்தி அக்னி பெயரில் அக்னியின் பத்து வயதில் எழுத்தி விட்டார். அவர் சுயசம்பாத்தியம் யாரும் தலையிடமுடியாது சோ அக்னிக்கு J.K கன்ஷக்சன்னில் சரிசமமாக உரிமை இருக்கு என. அக்னிஇப்ப சொல்லுங்க அங்கிள் யாருக்கு உரிமை அதிகம் நான் டிசைட் பண்ணாமல் இவர் எப்படி மும்பை புரஜெக்ட்க்கு அதை கொடுக்க ஒகே பண்ணுவார்.நான் கோர்ட்டில் கேஸ் போட்டால் இந்த கவர்மென்ட் புரஜெக்ட் கைவிட்டு போய் விடும். என்ன மிஸ்டர் ஹரி பண்ண வா ஆமா வர்மா குரூப்ஸ் எந்த புரஜெக்ட்லையும் தோற்றது இல்லையாமே இப்ப நான் உங்களுக்கு தோல்வியை அறிமுகபடுத்த போகிறேன்.
ஹலே மிஸ்டர் ருத்திரன் என்ன சொன்னீங்க. நான் எதிலுமே தோற்றது இல்லை என் பணத்தாலே எதையுமே வாங்கலாம் என்று சி.எம் லெவலுக்கு போனீங்க. இப்ப என்ன செய்ய போறீங்க ஆ சாரி ராஜா ருத்ரதேவேஷ்க்கு இந்த அக்னி தர கிப்ட் இந்த தோல்வி வாழ்க்கையில் நீங்க மறக்க கூடாது என்றவள் மயூரிடம் திரும்பி. அக்னி
மயூ எல்லா வெர்க்கும் முடிந்ததா என கேட்க. மயூரி
யஸ் அகி நம்ம லாண்ட் நம்ம கைக்கு வந்துவிட்டது அண்ட் கம்பெனி

யில் உனக்கும் ஷேர் இருக்கு நீ தான் டிசைட் பண்ண வேணும் என. அக்னிசொல்லு தாத்து நான் என்ன செய்ய வேணும் உன் சின்ன குட்டி எப்பவுமே நியாயமாக தான் நடப்பாள் நீ என்ன சொல்கிறாயோ அதை நான் செய்கிறேன் அண்ட் மிஸ்டர் ராஜதுரை நீங்க பிரஸ் மீட் வைத்து எனக்கு என் செகண்ட் வொஃய்பின் அண்ணன் பசங்க செய்யும் எந்த விஷயத்திற்கும் இனி நான் தலையிட மாட்டேன் .சப்போட் பண்ணவும் மாட்டேன் என்று சொல்ல வேணும். இல்லை ஸாரி கோர்ட்டில் மீட் பண்ணலாம் நாளைக்கு மார்னிங் நீங்க சொல்ல வேணும் இல்லை நெக்ஸ்ட் டே நீங்க என்னை கோர்ட்டில் மீட் பண்ணுங்க டீல் ஒகேயா அங்கிள் கேட்டு சொல்லுங்க என. மூர்த்திடேய் ராஜ் ஒத்துக்க அவளை பற்றி தெரியும் தானே பிறகு நாம பார்க்கலாம் என. ராஜதுரை
சரி நாளைக்கு நான் நீ சொன்னது போல செய்கிறேன் ஆனா அக்னி என்னை ஜெயிச்சி விட்டதாக நினைக்காதே உனக்கு பிறப்பு தந்தவன் நான் என. அக்னி
பிறப்பு தந்தவன் எல்லாம் அப்பா ஆக முடியாது தகப்பனுக்குரிய கடமையையும் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பவனே சிறந்த தந்தையாக இருக்க முடியும். அதை தந்தது என் தாத்தா கங்காதரன் அவர் தான் என் அப்பா அம்மா குரு நண்பன் எல்லாமே இந்த அக்னியை தீயாக உருவாக்கியவர் சாதாரண தீ அல்ல காட்டு தீயாக அணைப்பது கஷ்டம். ஒகே தாத்து நான் வருகிறேன் அங்கிள் நண்பனாக இருந்தால் மட்டும் பத்தாது நல்லதும் சொல்லி கொடுங்க பை என கிளம்ப போக. ஜெயராம்
சின்ன குட்டி இனி எப்போ வருவ என கேட்க. அக்னி
தாத்து இந்த வீட்டு வாசலை கூட மிதிக்க கூடாது என்று இருந்தேன் உங்க மகனால் மிதிக்க வேண்டியதாக போய் விட்டது உங்க நண்பன் கங்காதரன் வீட்டுக்கு வாங்க பை தாத்து என கூறி விட்டு சென்றாள் அவள் சென்ற பிறகு ஹரி லெட்ஸ் கோ நம்ம பிறகு மற்ற விஷயங்களை பேசலாம். என கூறி ருத்திரன் விடை பெற்றான். ருத்ரன் தன் பங்களாவிற்கு வந்தவுடனே சோபாவில் கண் முடி அமர்ந்து இருந்தான். அங்கு காப்பி கப்புடன் ஹரி வந்து ஒன்றை ருத்திரனுக்கும் மற்ற ஒன்றை அவன் எடுத்தான். ஹரி
என்ன டா இது பெரிய ப்ராபிளமாக போக போகிறது நீ சரியாக விசாரித்ததாக தானே சொன்ன .பிறகு எப்படி டா அதுவும் மார்னிங் சேது கூட பேசி இருக்க அங்கிளுக்கு தெரிந்தால் ப்ராபிளம் டா என. ருத்திரன்


என் கெஸ் சரி என்றால் எனக்கு இப்ப கால் பண்ணுவார் என்று அவன் சொல்லி வாய் மூடவில்லை மாறனின் கால் வந்தது. மாறன்
ருத்ரா அங்கே என்ன நடக்கிறது .உன் அஜாக்கிரதையால் பரம்பரையாக வந்த வர்மா குரூப்ஸ்க்கு கெட்ட பெயர் வரும் போல. உன் விளையாட்டு குணத்தை விட்டு ஒழுங்காக சரி பண்ணு எனக்கு வாக்கு தான் முக்கியம் நான் அவங்களுக்கு வாக்கு கொடுத்து இருக்கிறேன் பெர்பெக்ட்டாக முடித்து தருவேன் என்று. அக்னிகா ஸ்மார்ட் கேர்ள் அண்ட் ஸ்மார்ட் மூ நியாயமான பெண்ணு கூட. அவள் செய்தது சரி யூ ஆர் ராங் அவள் கூட பிரச்சினை செய்யாமல் வொர்க்கை முடிக்க பாரு ஹரி கிட்ட கேட்டு செய் அவன் அமைதியாக யோசிப்பான். ஓகே பை என கூறி கால் கட் பண்ண அவர் வைத்ததும் மொபைலை ருத்ரன் தூக்கி எறிந்தான் அது சுவரில் பட்டு துண்டு துண்டாக நொறுங்கியது. ஹரி
ஆர் யூ மேட் ருத்ரா ஏன் இப்படி பிகேவ் பண்ணுகிற அங்கிள் சொன்னது சரிதானே நிதானமாக ஸ்டெப் எடுக்கலாம் என. ருத்திரன்ஸ்டாப் இட் ஹரி அக்னி அக்னி ஏன் யாரை பார்த்தாலும் அவள் நோம் மேன்சன் பண்றீங்க அவ இந்த ருத்திரனையே மிரட்டி விட்டு போகிறாள். டேட் அண்ட் நீ அவள் பெயரை சொல்லியே வெறுப்பேற்றி பார்க்கிறீங்க நான் என் லைவ்வில் இப்படி தோற்றது இல்லை டேட் என்னை லுசர் என்றார் எத்தனையே கேஸ்சை அசால்ட்டா முடித்து இருக்கிறேன். இது எப்படி மிஸ் ஆச்சு என்று தெரிய வில்லை நோ நான் தோற்க மாட்டேன். என்ன சொன்னாள் அவள் காட்டு தீ அணைப்பது கஷ்டம் என்று என்று தானே அந்த தீ அக்னி இந்த ருத்திரனுக்குள் அடங்கும் அடக்க வைப்பேன் ஸ் மை சேலஞ்ச் என. ஹரிருத்ரா நான் சொல்லறதை கேள் நீ நிதானமாக யோசி அவங்க செய்தது சரி என்றுபடும். ருத்திரன்
ஹரி ஸ்டாப் இட் நீ என்று ஆரம்பிக்கும் போது ருத்திரனின் மொபைல் ரிங் ஆனது அவன் அதை எடுத்து ஆன் பண்ணி ஹாய் ஷீத்தல் ஹாவ் ஆர் யூ என கேட்க. மறு முனை
யா ஐ யம் பைன் என ருத்திரன் பேசி விட்டு ஒகே பேபி ஐ யம் கம்மிங் பை என்றவன் ஹரி ஷீத்தல் ஷீட்டிங்க்கு சென்னை வந்து இருக்காள். சோ நான் போக வேணும் நைட் வீட்டுக்கு வரமாட்டேன் என. ஹரிருத்ரா ஆர் யூ மேட் இது இப்பே தேவையா என்ன பிரச்சினை போய் கிட்டு இருக்கு என கோபமாக கேட்க. ருத்திரன்மச்சி எனக்கு இப்ப ரீலிவ் தேவை சோ ப்ளீஸ் ஐ யம் நொவ் லீவ் பை என கிளம்பினான்

ஷீத்தல் மும்பை திரை நட்சத்திரம் பணத்திற்காக நல்ல கலையை பாழ்படுத்தும் ஒருத்தி .இவள் போன்ற ஒருத்தியால் நல்ல நடிகைகளையும் தப்பான கண்டோட்டத்தில் பார்க்கிறது சமூகம். ருத்திரனின் அந்தஸ்து பணபலமும் இவளுக்கு மும்பையில் மட்டும் அல்ல எங்கு சென்றாலும் தேவை அதனால் ருத்திரனை எப்போதும் சுற்றி வருவாள் சென்னையில் ஷூட்டிங் என்றதும் ருத்ரன் ஞாபகம் தான் வந்தது. அவன் புரஜெக்டுக்காக சென்னை வந்தது தெரியும் வந்ததும் ருத்திரனுக்கு கால் பண்ணி விட்டாள்.

ஷீத்தல் ஷீட்டிங்காக தங்கும் பங்களாவில் ருத்திரனுக்காக காத்திருந்தாள் ருத்திரன் வந்தவுடன்ஹாய் டியர் என்று கட்டியணைத்தவள் ஹாய் பேபி எப்படி இருக்க என கேட்க. ருத்திரன்நொட் பாட் டியர் ஐ யம் பைன் வாட் எபோட் யூ பைன் என கேட்டான் பின் ருத்திரனும் ஷீத்தலும் சேர்ந்து மது அருந்தினார்கள். அன்று ஷீத்தல் அதீத மேக்கப் உடன் இருந்தாள் ருத்ரன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் தோளில் கை போட்டு ரூத் நான் ஒன்று கேட்பேன் தருவீங்களா என கேட்க. ருத்திரன்


கேள் பேபி வாட் யூ வான்ட் என கேட்க. அவள்எனக்கு லண்டனில் ஒரு ஹோட்டல் வாங்கி தாங்க என கேட்க. ருத்திரன்


வை நொட் நாளைக்கு உன் பெயரில் ஹோட்டல் இருக்கும் பிராமிஸ் வெயிட் என்று கூறி லண்டனில் உள்ள தன் செகரட்டரியிடம் அதற்கான வேலையை பார்க்க கூறினான். ஷீத்தல்தேங்கியூ ரூத் மை ஸ்வீட் ஹாட் என்று இதழில் முத்தமிட்டாள் ருத்திரன் ஷீத்தலை தூக்கி கொண்டு அறைக்கு சென்றான் கட்டில் அவளை போட்டு அவள் மேல் படர்ந்து கழுத்து வளைவில் முத்தமிட்டு இடை தழுவி இறுக்கினான். முகம் நோக்கி இதழில் முத்தமிடபோகும் போது அக்னியின் முகம் தெரிந்தது கண் மூடி எழ முற்பட்ட போது ஷீத்தல் ருத்திரனின் தோளில் கை போட்டு இழுத்து ருத்திரனின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டு பின் தலைமுடிக்குள் கை விட்டு இறுக்கினாள். ருத்திரனும் அழுத்தமாக முத்தமிட்டு அவளின் மேல் படர்ந்தான் நாளை நடக்கபோகும் விஷயம் தெரியாமல் இரவை உல்லாசமாக கழித்தான்.


தீ மலரும்......
இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி
 
மறுநாள் காலை அழகாக விடிந்தது ஷீத்தல் பங்களாவில் ருத்திரனின் மொபைல் அடித்தது ஹரி தான் அழைத்து இருந்தான் ருத்திரன் அதை ஆன் பண்ணி
குட் மார்னிங் மச்சி ஏன் டா ஏர்லி மார்னிங் கால் பண்ணின நான் வருவேன் என்று தெரியும் தானே என. ஹரி
வொரி பேட் மார்னிங் டா உனக்கு சீக்கிரமாக வீட்டுக்கு வா என்று கூறி கால் கட் பண்ணினான். ஷீத்தல்
யார் டியர் ஏர்லி மார்னிங் கால் பண்ணினாங்க ஸ்பிட் என .ருத்திரன்
ஸ்டாப் இட் ஷீத்து ஸ் மை ப்ரண்ட் ஹரி என்றான். ஷீத்தல்
ஒ ஸாரி டியர் எனக்கு தெரியாது ஆமா என்ன கிளம்பி விட்ட என கேட்க. ருத்திரன்

யா ஹரி அவசரம் சீக்கிரமாக கிளம்பி வா என்று சொன்னான் அது தான். உனக்கு இன்றைக்கு ஷூட்டிங் இருக்கு இல்லை அது முடிய நீ மும்பை கிளம்பு ஹோட்டல் டீட்டெல் எல்லாம் உன்னை தேடி வரும் என. ஷீத்தல் தேங்கியூ டியர் என்று கூறி அவன் இதழில் முத்தமிட்டாள் பின் ருத்திரன் கிளம்பி தன் பங்களாவிற்கு வந்தான். ருத்திரன்

ஹரி ஏன் டா என்னை அவசரமாக வர சொன்ன என கேட்க ஹரி ஒரு பத்திரிகையை அவன் முன்னே தூக்கி போட்டான். அப்போது டியூட்டி முடிந்து வந்த நவீஷ்யும் அதை வாங்கி படித்தான். "மும்பை தொழில் அதிபரின் காதல் லீலை பிரபல நடிகை ஷீத்தலுடன் ஒர் இரவு கொண்டாட்டம் பங்களாவில் ராஜ லீலைகள் " என்று நேற்று இரவு ருத்திரன் ஷீத்தல் பங்களாவுக்கு போன படம் என்று விபரமாக இருந்தது. அதுமட்டுமன்றி இப்படி பட்டவருக்கு கவர்மெண்ட் புரஜெக்ட்டா இதை எவ்வாறு சரியாக செய்து முடிப்பார் என்று கேள்வி அடையாளகுறி போட்டு இருந்தது. ஹரிஏன் டா எத்தனை தடவை சொன்னேன் போக வேணாம் என்று கேட்டாயா. இப்ப பாரு அங்கிளுக்கு என்ன பதில் சொல்ல போகிறே அதுவும் கவர்மெண்ட்புரஜெக்ட்லில் கை வைத்து இருக்காங்க என. நவீஷ்
ஹரி ருத்திரா கிட்ட இல்லாத பணமா எங்க ஒரு புரஜெக்ட்க்கு ஈக்குவல் ஆகுமா இந்த புரஜெக்ட். முதல்ல அந்த ரிப்போர்ட்டரை பிடி பிறகு பத்திரிகை நிறுவனத்தை வாங்கலாம் என்றான் நவீஷ். ஹரிஆர் யூ மேட் நவீ எனக்கு தெரியாதா டீல் பண்ண நமக்கு மணி ஒரு மேட்டர் இல்லை. பட் ரெப்புட்டேஷன் முக்கியம் பிசினஸ்க்கு உனக்கும் ருத்ராவுக்கும் தெரியும் நம்ம இதை எப்படி சால்வ் பண்ணுவது என பார்க்கலாம் என. ருத்திரன்ஒகே டா நான் இதை டீல் பண்ணுகிறேன் இன்று கன்சக்சன் ஓனர்ஸ் மீட்டிங் ஒன்று அரேன்ஞ் பண்ணு. ஆ மிஸ்டர் ஜெயராம் அன்ட் அக்னியை வர சொல்லு அவங்க பார்ட்னர்ஸ் தானே ஒகே இன்னும் ஹாஃப் அண்ட் ஹவரில் நான் இதை டீல் பண்ணி முடிக்கிறேன் என .ஹரி
ஒகே டா நீ இதை முடி நாங்க அங்கிளை சமாளிக்கிறோம் .அப்படியே ஷீத்தலையும் மும்பைக்கு பேக்கப் பண்ணி அனுப்பிவிடு என்று கூறி தன் வேலையை பார்க்க போக ஹரி நவீஷ் தங்கள் வேலைகளை பார்க்க போனார்கள். நீதா


குட் மார்னிங் மேம் மார்னிங் பேப்பர் பார்த்தீர்களா என கேட்க. அக்னி
ஏன் நீதா என்ன மேட்டர் என்று கேட்டவாறே அக்னி பேப்பரை வாங்கி பார்க்க. அதில் ருத்திரன் சரித்திரத்தை விலாவாரியாக விளக்கி எழுதி இருந்தனர் அதுவும் அந்த பத்திரிக்கை நேர்மையாக எழுதும் பத்திரிகை. அக்னி
நீதா தாத்துவை வர்மா குரூப்ஸ்க்கு வர சொல்லு என. நீதாமேம் அதை சொல்ல தான் வந்தேன் .மிஸ்டர் ஹரி கன்சக்சன் ஓனர்கள் எல்லோரையும் மீட்டிங் ஒன்றுக்கு வர சொல்லி கால் பண்ணி இருக்கிறார் என. அக்னி


ஒகே வருவதாக இன்பார்ம் பண்னு லெட்ஸ் கோ என்றாள் வர்மா குரூப்ஸ் மீட்டிங் ஹாலில் அனைவரும் கூடி இருந்தனர். ராஜதுரை ஜெயராம் மேனகா சேது வினிதா சுதாகர் ருத்ரன் ஹரி உட்பட ஆனால் அக்னி இன்னும் வரவில்லை. மேனகா தான் தன் வாயை திறந்தாள்.நாங்க எல்லாம் நேரத்திற்கு வந்து விட்டோம். அவள் மட்டும் வரவில்லை வேணும் என்று நம்மை காக்க வைக்கிறாள் திமிர் பிடித்தவள் என. ஜெயராம்
ராஜதுரை உன் வொய்ஃப் வாயை மூட சொல்லு என் பேத்தி திமிர் பிடித்தவள் இல்லை. அதுவும் என்னை காக்க வைக்க மாட்டாள் கடைசி நிமிடத்தால் ஏதும் வேலை வந்து இருந்திருக்கும் அதுதான் லேட்டாகிறது என அவர் சொல்லி வாய் மூடவில்லை அக்னி கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள்.
ஸாரி எவரி பாடி கொஞ்சம் லேட்டாகி விட்டது. ஸாரி ஏகேன் என சொல்லி கொண்டு.ஹரிஒகே மிஸ் அக்னி நாங்க சில சேன்சஸ் பற்றி சொல்ல வேணும் என்று ஹரி ஆரம்பிக்க. அக்னி வெயிட் மிஸ்டர் ஹரி என்றவள்
நாங்க என்று சொன்னீங்க யாரு யூ நோ மிஸ்டர் ஹரி நாங்க ஐ மீன் J.K கன்ஷக்சன் இனி உங்க கூட வொர்க் பண்ணாது என. ஹரிவாட் மிஸ் அக்னி என்ன சொல்கிறீங்க இவ்வளவு தூரம் வந்த பிறகு டெல் மீ தே ரீசன் என. அக்னி


யூ வான்ட் ரிஷன் ரெப்புட்டேஷன் புரியல்லையா. ஓகே நீதா லாயர் ஸாருக்கு அந்த பத்திரிக்கை கொடு இப்ப புரிகிறதா மிஸ்டர் ஹரி .உங்க ப்ரண்ட் பற்றி எவ்வளவு உயர்ந்த அபிப்ராயம் மக்கள் மத்தியில் என்று. இப்படி பட்ட நீங்க கட்டும் பில்டிங் மட்டும் எப்படி தரமாக இருக்கு பிறகு ஏதும் நடந்து விட்டால் நீங்க மும்பைக்கு பேக்கப் ஆகி விடுவீங்க தண்டனை எங்களுக்கா என. ஹரிமிஸ் அக்னி அது அவன் பெர்ஷனல் லைவ் அதையும் பிசினஸ்யும் மிங்கிள் பண்ன வேணாம் என. அக்னியஸ் ஐ நோ பட் நான் அதை பற்றி பேச வரவில்லை என் இரண்டு தாத்துவும் உருவாக்கின கம்பெனி இது. இங்க வொர்க் பண்றவங்களுக்கு என ஒரு மரியாதை இருக்கு அதை நான் கொடுக்க விரும்பவில்லை சோ நாங்க லீவ் பண்ணுகிறோம் என ஒன் மினிட் மிஸ் அக்னிகா என்று ருத்திரன்அழைத்தான். ருத்திரன்

என் பெர்ஷனல் லைவ் பற்றி தலையிட உங்களுக்கு உரிமை இல்லை அன்ட் சோம் டைம் நான் இதை சரி பண்ணி விட்டு தான் வந்தேன் எனி வே இது மாதிரி இனி நடக்காது என. அக்னிநோ எனக்கு இதில் விருப்பம் இல்லை உங்க கூட வேலை செய்ய .தாத்து வா போகலாம் எனக்கு இங்க நிற்க சாக்கடைக்குள் நிற்கிற மாதிரி இருக்கிறது என ருத்ரன் கண்கள் பயங்கரமாக சிவந்து வந்தது அவனின் முகம் அக்னியின் பேச்சால் மாறியது. ஹரிக்கு ருத்திரனின் கோபம் பற்றி தெரியும் அதனால் உடனே அக்னியுடன் பேச வந்தான். ஹரிமிஸ் அக்னி நீங்க ஒரு தடவை எங்க சைட் இருந்து பாருங்க முதலில் எல்லோருமே சைன் பண்ணி விட்டாங்க . இப்ப தான் தெரியும் உங்களுக்கும் இதில் உரிமை இருக்கு என்று திருப்பி மாற்றுவது என்றால் டைம் ஆகும் என இல்லை எனக்கு என்று அக்னி பேச ஆரம்பிக்கும் போது. ஜெயராம்
சின்ன குட்டி அவங்க தப்பை உணர்ந்து வர போ நம்ம மன்னிக்க வேணும் .அது மட்டுமல்ல இது கவர்மெண்ட் புராஜெக்ட் மிடில் கிளாஸ் பீப்பிள்க்கு கட்டு கொடுக்கம் இடம் .அவங்க பாவம் இல்லையா நம்மால் அவங்களுக்குதான் வீடு கட்ட தள்ளி போகும் என் அக்னிக்கு மற்றவங்களை துன்புறுத்த தெரியாது என. அக்னி


ஒகே தாத்து உனக்காக நான் இதை செய்கிறேன் நீ சொல்வதும் சரி தான் என் சார்பாக நீதா பார்த்து பா தேவை என்றால் நான் வருவேன். ருத்திரனை கை காட்டி எனக்கு இவர் கூட வொர்க் பண்ன பிடிக்க வில்லை ஆனா உனக்காக செய்கிறேன் நீதாக்கு ஏதும் பிரச்சினை ஆச்சு இவங்க சென்னை விட்டு போகமுடியாது மிஸ்டர் ஹரி நீதா உங்க பொறுப்பு ஐ டிரஸ்ட் இன் யூ ஒகே தாத்து நான் வருகிறேன் என சொல்லி விட்டு கிளம்பி போக. ஜெயராம்
மிஸ்டர் ருத்ரன் என் பேத்தி பிடிவாதக்காரி ஆனா நல்லவள் உங்க பெர்ஷனல் எனக்கு தேவை இல்லை. ஆனா நீங்க சென்னையில் இருக்க மட்டும் பார்த்து இருங்க. ஹரி தம்பி நீதாவும் என் பேத்தி தான் அவள் வேலை செய்யும் போது பார்த்து கொள்ளுங்க நான் வருகிறேன் என கூறி கிளம்ப மற்ற அனைவரும் புறப்பட்டனர் நீதாவும் ஹரியிடம் தேவை என்றால் அழைக்கும் படி கூறி விட்டு சென்றாள். அனைவரும் சென்ற பின் ஹரி ருத்திரனின் தோளில் கை வைத்தான். ஹரி
ருத்ரா மச்சி நீ கிளம்பு நான் பார்த்து கொள்ளகிறேன் நீ போய் ரெஸ்ட் எடு என்று கூறி அனுப்பி வைத்தான். பங்களாவிற்கு வந்த ருத்திரன் நேராக ஜிம் அறைக்கு சென்றான்.அங்கு இருந்த பஞ்சிங் பேக்கில் குத்தி கொண்டு இருந்தான். அவனின் மனம் முழுமையாக அக்னியின் வார்த்தைகளே எதிரொலித்து கொண்டு இருந்தது. உன் கூட எனக்கு வொர்க் பண்ண பிடிக்கவில்லை என இத்தனை வருட வாழ்க்கையில் ருத்திரனை பிடிக்கவில்லை என்று சொன்ன ஆண் பெண் கிடையாது. முதல் முறையாக அக்னியின் நிராகரிப்பு அவனுள் தீயாக கொழுந்து விட்டு எரிந்தது ஜிம்ல் இருந்து வந்து குளித்து விட்டு தன் வழமையான மதுபானத்தை கையில் எடுத்தான்.என்ன பிடிக்கவில்லை என்று சொன்ன உன்னை என்னை தான் இந்த உலகத்தில் பிடித்து இருக்கு என்று சொல்ல வைக்க வில்லை நான் ருத்ரதேவேஷ் மாறன் இல்லை ஸ் மை சேலஞ்ச் அக்னிகா என்று சத்தம் போட்டான்.


அன்று சண்டே ஷிவியை அழைத்து கொண்டு அக்னி ,மயூரி,நீதா ஷாப்பிங் மால் சென்றனர் அபினவ் வேலை காரணமாக வரவில்லை. ஷிவி மம்மி மாமூ வரவில்யா என ஷிவி கேட்க. அக்னி
மாமூக்கு வொர்க் குட்டி அதுதான் வரவில்லை என. ஷிவி
போ மம்மி நானு மாமூ கூட கா என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டாள். மயூரி

ஷிவி மா மாமூ டாக்டர் தானே பாவம் அவருக்கு நிறைய வொர்க் இருக்கும் தானே .நொக்ஸ்ட் டைம் மாமூ வருவார். அத்தை கட்டாயமாக அழைத்து வருவேன் பிராமிஸ் என்றாள். ஷிவி ஒகே அத்து என பின் அனைவரும் கடைக்குள் சென்றனர். முதலில் ஷிவிக்கு வேண்டிய உடைகளை தெரிவு செய்து விட்டு பின் அக்னி மயூ நீதாக்குரிய உடைகளை தெரிவு செய்தாள். மயூரி
அகி நீ கட்டாயம் இந்த முறை பேன்சி அல்லது நெகமம் காட்டன் சாரி எடு (நெகமம் அல்லது கோவை காட்டன்) சாரி எடு ஏன் உன் ஏஜ்சுக்கு இப்படி இருக்கிறாய் பாரு வயசானவங்களே எப்படி டிரஸ் பண்றாங்க நீ ஏன் இப்படி இருக்கிறாய் அகி என. அக்னி
ஏன் தெரிந்து கொண்டு கேட்கிற மயூ நான் ஒரு குழந்தைக்கு அம்மா இப்படி இருந்தால் தான் எனக்கு நல்லது என.மயூரி


என்ன சொன்ன குழந்தைக்கு அம்மா உண்மை தெரிந்த என் கிட்ட சொல்கிற நீ ஏன் மற்ற அம்மாக்கள் மாடலாக டிரஸ் பண்ணவில்லையா போ அகி என. அக்னிஅவங்க லைவ் வேற என் லைவ் வேற உனக்கு புரியும் அவங்களுக்கு தன் பிள்ளைகளைக்கு அப்பாவை அடையாளம் காட்டமுடியும். ஷிவிக்கு யாரை நான் அடையாளம் காட்டுவது எனக்கே தெரியாத ஒரு புதிர் இது விடு மயூ. இந்த டாப்பிக் எடுத்தால் காயம் தான் படுவோம் வா ஷிவி விளையாட சில்ரன் செக்சன் அழைத்து போக சொன்னாள் வா என

ஷிவியை அழைத்து கொண்டு சில்ரன் செக்சன் சென்றனர். அங்கு நிறைய குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்க ஷிவியும் அவர்களுடன் சேர்ந்து விளையாடினாள் ஷிவியை நீதாவுடன் விட்டு விட்டு ஸ்நாக்ஸ் வாங்க அக்னி மயூ சென்றனர் சரியாக அதே வேளையில் ருத்திரன் ஹரியுடன் மால்லுக்குள் நுழைந்தான். இன்று டிரஸ் வாங்க ஹரி ருத்திரனை இழுத்து கொண்டு வந்து இருந்தான். பொதுவாக மும்பையில் ருத்திரனின் அரண்மனை தேடியே பொருட்கள் வரும் இங்கும் ஆன்லைனில் பொருட்களை ஆடர் பண்ணலாம் தான் ஹரி தான் நவீ ஹாஸ்பிட்டில் போய் விட்டான் வா வெளியே போகலாம் என்று அழைத்து வந்தான் ருத்திரனுக்கு இதில் விருப்பம் இல்லை தான் ஆனால் நண்பனுக்காக வந்தான். ஹரி


ருத்ரா வா கடைக்குள் போகலாம் என்ற அதையவேளை ருத்திரனுக்கு கால் வந்தது. ருத்திரன்
நீ போ நான் வருகிறேன் என சரி சீக்கிரமாக வா என்று கூறி ஹரி சென்றான். கேஸ் விஷயமாக சென்னை சிபிஜ ஆபீசர் அழைத்து இருந்தார். ருத்திரன் பேசி கொண்டு இருக்கும் போது பின்னால் பந்து ஒன்று வந்து மோதியது ருத்திரன் திரும்பி பார்க்கும் போது அழகிய பிங்க் அன்ட் வைட் பிராக்கில் குட்டி ஏஞ்சல் ஒன்று நடந்து வந்தது. ருத்திரன் கால் கட் பண்ணி விட்டு பால்லை கையில் எடுத்தான்.ஸாரி அங்கிள் ball தா என இரு கைகளையும் அவள் நீட்ட ருத்திரன் அவள் உயரத்திற்கு குனிந்து .யூ வான்ட் பால் ஒகே ஏஞ்சல் அங்கிளுக்கு ஒரு கிஸ் தா ball தருவேன் என அவள் தன் இரு கைகளையும் மார்பில் குறுக்கே கட்டி கொண்டு.


மம்மி சொல்லி இருக்குது பாய்ஸ் கிஸ் கேட்தா பன்னகூடாத என்று என. ருத்திரன்பட் அங்கிள் பிக் பாய் தானே சோ நோ ப்ராபிளம் என. அவள்நோ மம்மி சொன்னா நோ நோ தான் என்று பிடிவாதம் பிடிக்க ருத்திரனும் மேலும் வற்புறுத்தாமல் ball கொடுத்தவன் ஏஞ்சல் யுவர் ஸ்வீட் நேம் என கேட்க அவள் ஷிவி ஷிவன்யா என்று கூறி விட்டு ஓடினாள் விதி அவள் மூலமாக தன் ஆட்டத்தை தொடங்கியது.


தீ மலரும்.....

இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 
அக்னி வந்தவுடன் ஷிவன்யா தன்னிடம் ஒரு அங்கிள் கிஸ் கேட்டதையும் தான் அதற்கு சொன்ன பதிலையும் கூற அதற்கு அக்னி
குட் கேர்ள் மை குட்டிமா மம்மி சொல்லி தந்த மாதிரியே சொல்லியிருக்க என தூக்கி முத்தமிட்டாள் பின் ஷாப்பிங்கை முடித்து கொண்டு அனைவரும் வீட்டுக்கு சென்றனர். ஹரி
ருத்ரா எங்க டா போன இவ்வளவு நேரமாக வா சீக்கிரமாக ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டுக்கு போவோம் என. ருத்திரன்இல்லை மச்சி நான் ஒரு க்யூட் ஏஞ்சலை பார்த்தேன் என்னமா பேசுறா டா பட் அவ ஆட்டியூட் எங்கேயே பார்த்த மாதிரி இருக்கிறது என. ஹரிஏன் டா முடியவில்லை திருப்பி தொடங்கி விட்டாயா இப்ப தான். அந்த அக்னி கிழி கிழி என்று உன்னை கிழித்து தோரணமாக தொங்கவிட்டுருக்கா திரும்பவுமா என கேட்க. ருத்திரன்
ஏய் சீ வாய்மூடு இது குட்டி ஏஞ்சல் டா நான்கு

வயது இருக்கும் ஆமா அவள் என்ன பெரிய தாதாவா. என்னை மிரட்ட ஏதோ நீ சொன்னதால் விட்டேன் இல்லை உனக்கு தெரியும் தானே என்னை பற்றி என. ஹரிபோதும் டா உங்க சண்டையில் எனக்கு தான் பைத்தியம் பிடிக்கிறது வா போகலாம் என ருத்திரனை அழைத்து கொண்டு சென்றான். வினிதாஅண்ணா நீ ஏன் இன்னும் சும்மா இருக்க ருத்திரனை நம் கையில் சிக்க வைக்க ஒரு பிளான் பண்ணு என. சேதுவினி அது தான் நான் போட்ட பிளானை அக்னி கொடுத்து விட்டாள் மும்பை ஹீரோயின் உடன் ருத்திரன் இருந்தை நான் தான் நம்ம பசங்க மூலமாக போட்டோ எடுத்து பத்திரிகைக்கு அனுப்பினேன். ஆனால் இடையில் அக்னி வந்து திசையை திருப்பி விட்டாள் இதை காரணம் காட்டி அவன் பெயரை டேமேஜ் பண்ணி நம்ம பக்கம் இழுக்கலாம் என்று பிளான் பண்ணினால் அக்னி வந்து டீலுக்கு முடியாது என்றுசொல்கிறாள்.நல்ல வேளை அந்த கிழவன் வந்து அவளை ஒத்துக்க வைத்தான் என. வினிதா
அண்ணா நம்ம ஏன் ஒரு பார்ட்டி வைக்க கூடாது ருத்ரனை அதற்கு அழைக்கலாம் பிறகு நம்ம வலையில் விழ வைக்கிறது சுலபம் என. சேதுஒகே வினி என்ன காரணம் சொல்வது என யோசிக்க. வினிதாஅண்ணா அந்த கிழவனுக்கு எழுபத்தைந்தாவது பிறந்த நாள் வருகிறது அதை காட்டி நம்ம பங்களாவில் பெரிதாக பங்ஷன் செய்ய மாமா கிட்ட சொல்வோம். அப்போ விவிஐபிங்க வரும் போது ருத்திரனும் வருவான் எப்படி என் பிளான் ஆனால் மாமாக்கு இந்த மேட்டர் தெரிய கூடாது என. சேது
சூப்பர் வினி அத்தை கிட்ட சொல்லி மாமாகிட்ட பெர்மிஷன் கேட்க சொல்லுவோம் என. வினிதா
ஒகே அண்ணா இப்போவே ஆரம்பி ஆ ருத்திரன் கிட்ட மாமாவ பேச சொல்லு .நம்ம அழைத்தால் வரமாட்டான் ஒகே நான் போகிறேன் என்று போக சேது மேனகாவை பார்க்க சென்றான். ராஜதுரைஅப்பா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் நீங்க இப்போ பீரியா என கேட்க. ஜெயராம்சொல்லு துரை உன் அப்பன் எப்பவுமே உனக்காகவும் கூடவே ஒரு அன்பு சத்தியத்துக்காகவும் தான் இங்கே இருக்கிறேன் என. ராஜதுரைஅப்பா அடுத்த வாரம் உங்க எழுபத்தைந்தாவது பிறந்த நாள் வருகிறது. அதை நான் பெரிதாக செலபிரேட் செய்ய ஆசைப்படுறேன் நீங்க என்ன சொல்றீங்க பா என கேட்க. ஜெயராம்
என் ஒரேய மகன் நீ ஆசைபட்டால் எனக்கு ஒகே ஆனா ஒரு விஷயம் என் பேத்தி வர வேணும் அதற்கு சரி என்றால் எனக்கு ஒகே என. ராஜதுரைஅப்பா அவள் வரமாட்டாள் சரியான திமிர் பிடித்தவள் என. ஜெயராம்அது பற்றி நீ கவலைப்பட வேணாம் நான் சொன்னால் என் பேத்தி வருவாள் என. ராஜதுரை
சரி பா உங்க இஷ்டம் ஆனால் அவள் வந்தால் பிரச்சினை பண்ண கூடாது சொல்லி வைங்க உங்க செல்ல பேத்தியிடம் என்றார். மேனகாசேது டேய் அந்த அக்னி வருகிறாளாம் டா .நான் போய் உங்க மாமா கிட்ட சொல்லி அவளை வரவிடாமல் பண்ணுகிறேன் என. வினிதாஅத்தை உனக்கு பைத்தியமா பிளானை சொதப்பி விடாதே அவள் வந்தால் தான் ருத்திரன் கிட்ட மாட்டுவாள். அவளை பார்ட்டியில் வைத்து அவமான படுத்தலாம் நீ பேசாமல் இரு நானும் அண்ணாவும் பார்த்துக்கிறோம் என. மேனகாசரி டி நான் பார்ட்டிக்கு போட தேவையான டிரஸ் வாங்கி வருகிறேன் என கிளம்ப. வினிதாநல்ல காலம் அண்ணா இந்த பைத்தியம் சொதப்பி இருக்கும். பிறகு கிழவன் பார்ட்டியை கன்சல் பண்ணி இருப்பார் சரி நீ போய் நான் சொன்ன வேலையை பாரு என்றாள்.அக்னியின் பங்களாவுக்கு ஜெயராம்

போன போது அப்போது தான். பூஜை முடிந்து வந்த அக்னி தாத்து என கத்தினாள்.அவளின் சத்தம் கேட்டு அனைவரும் ஹாலில் கூடினர். அக்னிதாத்து எத்தனை தடவை என் கூட வா என்று அழைத்து இருப்பேன். அப்போ வரமுடியாது மகன் கூடதான் இருக்கவேணும் என்ற சரி விடு இப்பவாவது வந்த இப்ப தான் உன் பேத்தி கண்னுக்கு தெரிகிறாளா என கேட்க. சிவகாமிஏய் அக்னி சும்மா இரு வா அண்ணா எப்படி இருக்கிற என கேட்க. ஜெயராம்நல்லா இருக்கிறேன் தாயி நீ எப்படி மா இருக்கிற என கேட்க. சிவகாமி
இருக்கிறேன் அண்ணா உயிரை கையில் பிடித்து கொண்டு அபி, அக்னி ,நீதா இவங்களுக்கு ஒரு வாழ்கையை அமைத்துத் கொடுத்து விட்டேன் என்றால் நான் என் புருஷன், மகள் போன இடத்திற்கே சந்தோஷமாக போய் விடுவேன் என. ஜெயராம்என்ன வார்த்தை தாயி இது நீ இப்படி சொன்னால் எப்படி மா. அதை விடு நான் உங்க எல்லோரையும் என் பர்த்டேக்கு இன்வைட் பண்ண வந்தேன் என. சிவகாமி


அண்ணா நான் எதற்கு அதுவும் இந்த நிலையில் அதுமட்டுமல்ல என் மகள் வாழ்ந்த வாழ்க்கையை அந்த வீடு நினைவுபடுத்தும். நீ நூறு வருஷம் சந்தோஷமாக நோயற்ற வாழ்வு வாழ நான் இங்கே இருந்து பிரார்த்தனை செய்கிறேன் என. அக்னி
தாத்து நான் எதற்கு நான் இங்கிருந்து விஷ் பண்ணுகிறேன் என .சிவகாமி
அக்னி வாயை மூடு நீ தாத்தா பார்ட்டிக்கு போகிற .அபி நீதா உங்களையும் தான் ஷிவியை நானும் பூவும்(சிவகாமி வேலைக்காரி) பார்த்து கொள்கிறோம் என்றார். அக்னி


ஸாரி பாட்டி தாத்து இரு சாப்பிட்டு விட்டு தான் போக வேணும் என சொல்லி கொண்டு இருக்கும் போது. அப்போது ஷிவி மாடியில் இருந்து இறங்கி வந்தவள் ஜெயராமை காண. ஷிவிஹை பிக் தாத்து வா நீ ஏன் ஷிவிய பாத்துக வரல நானு உன் கூட கா என சொல்ல. ஜெயராம்அய்யோ என் தங்க குட்டி இந்த பிக் தாத்துவை மன்னித்து விடு. தாத்துவுக்கு ஜூரம் தங்கம் அது என் தங்கத்துக்கு வந்து விட்டால் மாமூ ஊசி போடுவான் வலிக்கு தானே அது தான் வரவில்லை என. ஷிவி
அய் அப்பிதா வேனா நேக்கு வலிக்கும் பாப்பா பாவம் என்றாள்.ஜெயராம்தங்கம் இந்தா பாப்பாவுக்கு குட்டி டிரஸ் டாய்ஸ் சாக்லேட் எல்லாம் பாப்பாவுக்கு தான் போய் சாப்பிடுங்க என. ஷிவி அதை வாங்கி கொண்டு செல்ல அவர் பின் கண் கலங்கி அப்படியே என் பிரணா தான் வாழ கிடைக்காதவள் என. அக்னி


தாத்து அவள் என் மகள் இந்த அக்னியின் வாரிசு மற்றவங்க கூட சேர்த்து பேசாதே எனக்கு பிடிக்காது சரி விடு வா சாப்பிட என்றாள் ஜெயராமும் சரி சின்ன குட்டி வா என கூறி சாப்பிட்டு விட்டு மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தி விட்டு சென்றார்.

அவர் சென்ற பின் அக்னி தன் கம்பெனிக்கு சென்றாள் நீதாவை இன்று ஹரி வர்மா குரூப்ஸ்க்கு வர சொன்னான். வெங்கிகேபின் கதவை தட்டி விட்டு வெங்கி உள்ளே வந்தான் குட் மார்னிங் பாஸ் மிஸ் நீதா வந்து இருக்காங்க என. ஹரி


ஒகே வெங்கி அவங்களை வர சொல்லு. ருத்திரா நீ எதுவும் பேச வேணாம் நீ பேசுனால் அக்னி என் முதுகில் டின் கட்டுவாங்க பீளிஸ் டா என. ருத்திரன்ஒகே டா நீயே கேளு நான் சும்மா இருக்கிறேன் என கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள். நீதா


குட் மார்னிங் சார் ஐ யம் நீதா என. ஹரி


வெல்கம் மிஸ் நீதா ஒகே நம்ம வொர்க் ஸ்டாட் பண்ணலாமா என கேட்க ஒகே ஸார் என்று நீதா எழ. ருத்திரன்ஒன் மினிட் மிஸ் நீதா அக்னிக்கு உங்களுக்கு என்ன சம்பந்தம் இந்த கம்பெனியை தரும் அளவுக்கு என கேட்க. நீதாஎன் அக்கா ரத்தால் இல்லை என்றாலும் அன்பால் வந்த உறவு அவங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஸாரி டூ சே அவங்க சிகரம் ஐ மீன் மலை அக்னி மலை அதை தொடமுடியாது என் அக்கா போல யாரும் இருக்க முடியாது இந்த உயிர் என் அக்காவுக்கு சொந்தம். அவள் மண்ணில் கிடைக்கும் வைரம் இல்லை ஒளி வீசும் இரத்தினக்கல் வெளிச்சம் மட்டும் தான் தரும் என்று கூறி வெளியே சென்றாள் அவள் சென்ற பிறகு. ருத்திரன்


ஏன் டா ஒரு கேள்வி கேட்டால் இத்தனை பெரிய பதிலா அவளை சேர்ந்த எல்லோரும் திமிர் பிடித்தவங்க என. ஹரிஅவள் சொன்ன அர்த்தம் உனக்கு புரிய இல்லை ருத்திரா அக்னியை நீ நெருங்க முடியாது என்று சொல்லாமல் சொல்கிறாள்

சரி பார்த்து இரு நான் சைட் பார்க்க போகிறேன் பிரச்சினையை இழுத்து விடாத பை என்று கூறி சென்றான் அவன் போன பிறகு. ருத்திரன்இவள் என்ன பெரிய ஆளா நெருங்க முடியாதாம் நெருங்கி விட்டால் என்ன செய்வாள். சேலஞ்ச் அக்னி உன்னை நெருங்க போகிறேன் இந்த ருத்திரனை சுற்றி வர வைக்கிறேன் என்றான்.சைட்க்கு வந்த ஹரி, நீதா வேலை முடித்து விட்டு வெளியே வந்தனர். ஹரி
மிஸ் நீதா இப் யூ டோன்ட் மைண்ட் கான் ஐ ட்ராப் யூ என கேட்க. நீதாதேங்கியூ மிஸ்டர் ஹரி அக்கா கார் அனுப்புவாங்க இல்லை அண்ணா வருவாங்க என. ஹரி


உங்களுக்கு அண்ணா இருக்கிறாரா என கேட்க. நீதாயஸ் அண்ணா,அக்கா, நான் அண்ணா டாக்டர் Gynecologists, (மகப்பேறு மருத்துவர்) பவித்திரா ஹாஸ்பிட்டில் என. ஹரிஓ என் ப்ரண்ட் நவீஷ் கூட அங்கே தான் வொர்க் பண்ணுகிறான் Pediatrician( குழந்தை நல மருத்துவர்) என்றான். நீதாஒகே ஸார் அக்கா கார் அனுப்பி விட்டாங்க நான் கிளம்புகிறேன். ஹரிஒகே பை நீதா என்றவன் செல்லும் நீதாவை பார்த்து கொண்டு இருந்தான் சம் டிப்பிரண்ட் அமைதியான கூடவே வேலை செய்ய தயக்காத பெண்ணு .அவன் சொசைட்டியில் அவன் அம்மா உட்பட அலட்டல், மேக்கப் பெண்கள் நடுவே இவள் வித்தியாசமானவள் ஹரிக்கு எப்பவும் பைரவி மாதிரி பெண்ணு தான் வேண்டும் என்பான் நீதாவை பார்த்தவுடன் அந்த எண்ணம் தான் தோன்றியது.பார்க்கலாம் யாருக்கு யார் என்று இறைவன் முடிச்சுகளை போட்டு வைத்துள்ளான் என்று .


தீ மலரும்….
இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி
 
சூரியன் தன் கரங்களால் பூமி காதலியை தழுவினான். இன்று பல சுவாரசியமான திருப்பங்களை தருவதுக்கு விடிந்தது. இன்று ஜெயராமின் எழுபத்தைந்தாவது பிறந்த நாள் அவரின் பங்களாவில் மாலை விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருந்தது.
ஜெயராமனின் மொபைல் அடிக்க முதல் வாழ்த்து அக்னியிடம் இருந்து வந்தது.அக்னிகுட் மார்னிங் தாத்து ஹேப்பி பர்த்டே என் செல்ல தாத்துக்கு என .ஜெயராம்
தேங்கியூ சின்ன குட்டி எப்பவும் நீ தான் முதல் வாழ்த்து என்றார் அதன் பின் சிவகாமி வாழ்த்தி விட்டு .சிவகாமி
அண்ணா உங்களுக்கு பூஜைக்கு கொடுத்து இருக்கிறேன் ஈவினிங் வரும் போது அக்னி பிரசாதம் கொண்டு வந்து தருவாள் என. ஜெயராம்ஏன் தாயி நீ வரலாம் இல்லையா இந்த கிழவன் அடுத்த முறை இருப்பனே தெரியாது என.சிவகாமி
ஏன் அண்ணா இப்படி பேசுகிற நீ நூறு வருஷம் இருப்ப. நான் வந்தால் பலருக்கு சங்கடம் உன் பிறந்த நாள் அதுவும் தேவையா என கேட்க. ஜெயராம்அப்போ என் கொள்ளு பேத்தியை அனுப்பு மா நான் அறிமுகபடுத்த என. சிவகாமி
அண்ணா இதில் முடிவெடுக்க வேண்டியது அக்னி பார்ப்போம் நீ சங்கடபடாத என்றார் ஜெயராமும்சரி மா என்றார். பின் ஷிவி நீதா ,அபி எல்லோரும் வாழ்த்து தெரிவித்தனர். பின் அக்னி தான் மாலையில் வருவதாக கூறி வைத்தாள்.ஹரி
ருத்ரா மினிஸ்டர் ஸார் தன் அப்பா பர்த்டேக்கு இன்வைட் பண்ணி இருக்கிறார் டா ஈவினிங் ரெடியாகு என. ருத்திரன்போர் ஹரி நான் வரவில்லை எல்லா ஒல்ட் பீப்பிள்ஸ்சும் வருவாங்க political பேசுவாங்க எனக்கு செட் ஆகாது என. ஹரி
சரி டா அப்போ நீ இரு என்ன செய்ய அக்னிகூட நான் தனியாக பைட் பண்ண வேணும் போல ஒகே டா நோ ப்ராபிளம் என. ருத்திரன்
டேய் என்ன சொன்ன அக்னி வருகிறாளா என கேட்க .ஹரிஆமாம் அவ தாத்தா பர்த்டே அவ வராமல் இருப்பாளா ஏன் உனக்கு அதில் என்ன ப்ராபிளம் என கேட்க. ருத்திரன்
இல்லை மச்சி எனக்கு இங்க இருக்க போர் அடிக்கும் நானும் வருகிறேன் என சொல்ல ஹரி சரி டா என்று சொன்னவன் மனதில் சிரித்தான். அப்படி வாடா யாரை சொன்னால் நீ வருவ என்று தெரியும் அவள் கூட உனக்கு சண்டை போட வேணும் அதற்கான நீ வருவ என நினைத்தான்.
அன்று மாலையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட ராஜதுரை பங்களாவுக்கு ஒவ்வொரு விருந்தினராக வர தொடங்கினார்கள். எப்போதும் போல் ஜெயராம் வேட்டி சட்டையில் இருந்தார் ராஜதுரை பட்டு வேட்டி சட்டையில் ,மேனகா பேன்சி சாரி வினிதா modern டிரஸ்சில், சேது கோட் சூட்ல் இருந்தனர். ராஜதுரை மேனகா வாசலில் இருந்து வரவேற்றனர் விஜபிகள் மேல் தட்டு வர்க்கம் வந்து கொண்டு இருந்தனர். ராஜதுரை நண்பன் மூர்த்தி தன் மனைவியுடன் , சுதாகர் தன் மனைவி மகன் கிரிதரன் உடன் வந்து இருந்தனர். கிரி அன்று காலையில் தான் பாரினில் இருந்து வந்து இருந்தான்.சிறிது நேரத்தில் பின் சலசலப்பு கேட்டது வாசலில் ருத்திரன் ,ஹரி ,நவீஷ் உடன் வந்து கொண்டு இருந்தான் ருத்ரன் இன்று டாக் ப்ளு கோட் சூட் லைட் ப்ளு சேட் அணிந்து வந்து இருந்தான். அவன் அழகுக்கு அது மேலும் அழகு சேர்த்தது. அங்கு வந்த பல பெண்களின் கண்கள் ருத்ரனேயே வட்டம் இட்டது. ஏனெனில் அவன் பணபலமும் அதிகாரமும் வம்சபெருமையும் அனைவருக்கும் தெரியும் அவனுக்கு தங்கள் பெண்களை கொடுக்க அனைத்து நாடுகளின் விவிஜபி, விஜபிக்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். இது அனைத்தையும் துச்சமென நினைத்து செயலாற்றும் ஒருத்தி வந்து கொண்டு இருக்கிறாள்.மாலை ஆறுமணியை கடந்து கொண்டு இருக்க இன்னும் அக்னி வந்தபாடு இல்லை. ராஜதுரை
அப்பா அவள் திமிர் பிடித்தவள் வர மாட்டாள் எல்லோரும் வந்து விட்டாங்க கேக் கட் பண்ண வாங்க என்று அழைக்க.ஜெயராம்
இல்லை துரை என் பேத்தி வராமல் நான் கேக் கட் பண்ண மாட்டேன் அவள் வருவாள் அவள் வாக்கு தவறாதவள் என்றார். நவீஷ்

ஹரி ஏன் டா அவங்களுக்கு தான் இங்க பொருத்தம் இல்லை பின்ன இவர் சொல்கிறார் அவங்க வருவாங்க என்று என. ஹரி

அது தான் டா எனக்கும் ஒரு மாதிரி இருக்கு இவர் வேற அவள் மேலே நிறை அன்பு வைத்து இருக்கிறார் ஆனா அவள் வர மாட்டாள் போல டைம் வேற ஆச்சு என. ருத்திரன்இல்லை மச்சி யூ ஆர் ராங் அவள் வருவாள் நிச்சயம் வருவாள் இவர் மேலே அவ்வளவு அன்பு இருக்கு என்றான். அவன் சொன்ன வேளை அக்னியின் கார் நுழைந்தது அங்கு வாசலில் உள்ள பிரஸ் மீடியாக்கள் அனைவரின் கேமிராக்கள் உயிர் பெற்று அக்னியின் பிம்பத்தை உள்வாங்குவதற்காக அக்னி உள்ளே நுழைந்ததும் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமாக பார்த்தனர் ருத்ரனின் மனதில் பிஜிஎம் பாடல் ஒலித்தது .


எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள் எனை நானே தொலைத்து விட்டேன்ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை

நானே எரித்து விட்டேன்


இதழில் ஒரம் இழைந்து ஓடும் அவள்

சிரிப்பில் விழுந்து விட்டேன்அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே

எழந்து விட்டேன்கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்

இது போதும் இது போதும் என் வாழ்வை

வாழ்ந்து விட்டேன்.
அந்த நொடி ருத்திரனின் மனதில் அக்னி இடம் பெற ஆரம்பித்தாள் பின்பு இவ்வளவு நாளும் காட்டன் சாரியில் பார்த்தவள் இன்று மயூரின் பிடிவாதத்தால் அனார்கலி சுடியில் பார்த்தால் விழாமல் இருக்க முடியுமா. அதுவும் மாடர்ன் டிரஸ் அணியும் பெண்களேயே பார்த்து பழக்கப்பட்டவனுக்கு பெண்மையின் நளினமான உடை அதுவும் அக்னி அணிந்தது பிரமிப்பு தந்தது.

அக்னி பீகாக் ப்ளு சுடி ,முத்து பதித்த ஜிமிக்கி மாலை வளையல்கள் அனைத்தும் முத்தால் ஆன செட். இடை வரையுள்ள கூந்தலில் பின்னலிட்டு மல்லிகை பூ வைத்து எளிமையாக இருந்தாள். அவளுக்கு அழகு சேர்ப்பது மையிட்ட பெரிய கண்கள் இதில் ருத்திரன் விழாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அக்னி, மயூரி அபி நீதா காளி அனைவரும் வந்து இருந்தனர். அக்னிஸாரி தாத்து அபி அண்ணா வர லேட் ஆயிற்று என. அபி


ஸாரி தாத்தா இன்று முக்கியமான ஆபரேசன் கொஞ்சம் வர லேட் ஆகி விட்டது என. ஜெயராம்அபி நீ என் பேரன் டா எனக்கு தெரியாதா. உனக்கு இருக்கிற வேலை பற்றி இனி ஸாரி சொல்லாதே என. ராஜதுரைஅப்பா வாங்க அதான் வர வேண்டியவங்க வந்தாச்சு இல்ல வாங்க கேக் கட் பண்ண என ராஜதுரை அழைத்தார். பீரிஸ் ஆக நின்ற ருத்திரனை ஹரி முதுகில் அடித்து சுயநினைவுக்கு கொண்டு வந்தான். பின் பாட்டு பாடி கேக் கட் பண்ணி முதல் துண்டை தன் பேத்திக்கு ஊட்டினார் பின் ராஜதுரை அபி, நீதா ,மயூரி , காளிக்கு கொடுத்தார். பின்பு அனைவரும் வாழ்த்து கூறி பரிசு கொடுத்தனர். ராஜதுரை ரோலக்ஸ் வாட்ஸ் சேது வினிதா தங்க செயின் சுதாகர் பிரேஸ்லெட் மூர்த்தியும் பிரேஸ்லெட் கொடுத்தனர். ருத்ரன் வந்து வாழ்த்து கூறி ஒரு பேப்பர் கொடுத்தான். ருத்திரன்
மிஸ்டர் ஜெயராம் ஒன் இயருக்கு நீங்க வேர்ல்ட்ல எந்த country வேணுமானாலும் போங்க .அங்க உள்ள என் ஆளுங்க உங்களுக்கு எல்லா place யும் சுற்றி காட்டுவாங்க இது என்னோட small gift என்றான். ஜெயராமன்
தேங்கியூ பா ஆனா இந்த கிழவன் இதற்கு மேல் எங்க சுற்றி வருவது உன் அன்பு ஒன்று போதும் ருத்திரா என்றார். மேனகா
ஆமா எல்லோரும் கிப்ட் கொடுத்து விட்டாங்க உங்க செல்ல பேத்தி இன்னும் கொடுக்கவில்லை போல. ஏன் பணம் இல்லையா இல்லை வீடு முழுக்க தர்ம சத்திரம் வைத்து நடத்தி காசு இல்லாமல் போய்விட்டதா என. வினிதாஅத்தை நீ சொன்னது சரிதான் கண்டது எல்லாம்அண்ணா,தங்கச்சி என்று முறை சொல்லி அழைத்து கடைசியில் ஒன்று இல்லாமல் நிக்கிறாள் போல என

அபியும் நீதாவும் கண் கலங்கி தலை குனிந்து நிற்க ஜெயராமன் பேச வர அக்னி கை காட்டி நிறுத்தி விட்டு .அக்னி
காளி, வைத்தி பிரஸ் எல்லாம் அழைத்து போய் சாப்பிட வைங்க என அவர்களும் அழைத்து போக அனைவரும் சென்ற பின் மேனகா வினிதாவை பார்த்து அக்னி என்ன சொன்ன என கேட்க அபிகுட்டி மா வேணாம் டா நாங்க வீட்டுக்கு போகிறோம் என. அக்னிவாய் மூடு அண்ணா இங்கே நான் தான் பேச வேணும் நீ ஒரு அடி எடுத்து வைத்த அடுத்த செக்கன் நான் என் கையை அறுத்து கொள்வேன் என்று கூறி கேக் கட் பண்ண வைத்திருந்த கத்தியை கையில் எடுத்தாள் பின் வினிதாவிடம் திரும்பி .அக்னி

இது என் வீடு நீ தான் என் வீட்டில் நுழைந்தது இந்த நிமிஷம் உன்னை வெளியே போக சொன்னால் நீ போக வேணும். மேனகா மேடம் நீங்க ஒன்றை மறந்து போய்விட்டிங்க போல .இது என் அம்மா பவித்திரா ராஜதுரை உனக்கு போட்ட பிச்சை இந்த வாழ்க்கை நீ யாரு தெரியுமா உன் அண்ணா யாரு தெரியுமா டிரக்ஸ் சப்ளையர், நீ என் தாத்தா கம்பெனியில் டைப்பிஸ்ட் நீங்க என் அண்ணா தங்கச்சி பற்றி பேசுகிறீங்க என

அப்போது ராஜதுரை பேச வர அவரை பார்த்து. அக்னிஉண்மையாக நீங்க எங்க அம்மாவை காதலித்து இருந்தால் உங்க காதலுக்கு பிறந்தவள் நான் என்றால். நீங்க அடுத்த வார்த்தை பேசமாட்டிங்க என ராஜதுரை மறு வார்த்தை பேசவில்லை. அக்னி
என் அண்ணா சிட்டியில் டாப் gynecologists. நீதா சிவில் என்ஜீனியர் நீங்க என்ன படித்து இருக்கிறீங்க சொல்லட்டுமா. சேது நீ டிரக்ஸ் சப்ளை பண்றது எப்படி ,பெண்கள எப்படி விஜபிக்கு சப்ளை பண்ணலாம் என்று. வினிதா நீ எப்படி பணக்கார பசங்களை காதலிக்கிற மாதிரி நடித்து அவன் சொத்தை ஏமாற்றலாம் இன்னும் யாரு சிக்குவாங்க இப்படி உயர்ந்து படிப்பு படித்து இருக்கிறீங்க. ராஜதுரை ஸார் இப்ப தெரிகிறதா ஏன் மீட்டிங் வைத்து உங்களை இவங்க கிட்ட இருந்து விலக சொன்னேன் என்று. போவது தாத்து சேர்த்து வைத்து இருக்கும் மானம் மரியாதை மற்றும் படி உங்களுக்கு எனக்கு ஏதுவும் இல்லை. என்னை பொறுத்த வரை மனைவிக்கு செய்யும் துரோகத்தை கல்யாணத்திற்கு முன்னோ பின்னோ மன்னிக்க மாட்டேன். தாத்து இனி ஒரு நிமிஷம் கூட சேது வினிதா என் அம்மா வாழ்ந்த இந்த வீட்டில் இருக்க கூடாது இது என் மேல் சத்தியம் என. ஜெயராமன்
சின்ன குட்டி என்ன வார்த்தை டா இது ராஜதுரை இந்த பார்ட்டி முடிய சேது வினிதாவை அவுட் ஹவுஸ் போக சொல்லு உன் மனைவி நீ மட்டும் தான் இந்த வீட்டில் இருக்க வேணும் .இது என் மனைவி என் பவித்திரா வாழ்ந்த கோவில் கண்ட சாக்கடைக்கு இடம் இல்லை அக்னி மட்டும் என் பேத்தி இல்லை அபி நீதா இருவருமே என் பேரன் பேத்தி தான் புரிகிறதா இனி அவங்க பற்றி ஒரு வார்த்தை வந்தது தொலைத்து கட்டி விடுவேன் என. அக்னிஸாரி தாத்து உன் பர்த்டே பார்ட்டியில் இப்படி நடத்து கொண்டதற்கு அபி நீதா அருகில் சென்று அவர்களை அணைத்து இவங்க என் உயிர் தாத்து இவங்க இல்லா விட்டால் இந்த அக்னி இல்லை என.அபி


குட்டி மா என்ன பேச்சு பேசுகிற நீ தான் எங்களுக்கு எல்லாமே நீ இல்லா விட்டால் நாங்களும் இல்லை டா என. நீதா


அக்கா எங்களுக்கு உயிர் தந்தவங்க நீங்க உங்களுக்கா உயிரு கூட கொடுப்போம் என்றார். மயூரி
ஒகே அகி இப்படியே பேசி கொண்டு இருக்க போகிறாயா உன் கிப்ட்டை கொடு என்றாள்.அக்னிஇந்தா தாத்து என் கிப்ட் என ஒரு பைல் கொடுத்தவள் நான் ராஜவம்சம் இல்ல தான் உலகை உனக்கு சுற்றி காட்ட ஆனா உன்னை சுற்றி வருபவர்களை காட்ட போகிறேன் படித்து பாரு என ஜெயராமன்

பிரித்துப் படித்து விட்டு .ஜெயராமன்நீ என் குலசாமி டா என் விருப்பத்தை அறிந்து வைப்பதில் என் கங்காக்கு அடுத்து நீ தான் இத்தனை வயதில் இது தான் எனக்கு கிடைத்த பெரிய கிப்ட் என. மூர்த்திமயூரி என்ன மா அப்படி பட்ட கிப்ட் எங்களுக்கும் சொல்லாம் தானே என கேட்க. மயூரி
அப்பா வெயிட் அன்ட் சீ கொஞ்சம் பொறுமையாக இருக்க சொல்கிறேன் என்றாள்.


(நானும் நாளைக்கு சொல்கிறேன் )


தீ மலரும்......
இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள். போன ud க்கு லைக், கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி

 
மயூரி சொன்ன வெயிட் அன்ட் சீ பார்க்கலாம். அப்போது சுதாகர் மனைவி கல்பனா
என்ன பெரிய சிதம்பர ரகசியமா இப்ப தெரிய தானே போகிறது என. ஜெயராமன்


அதை விடபெரிது கல்பனா எல்லாத்தையும் காசு அந்தஸ்தால் வாங்க முடியாது அப்படி பட்ட ஒன்றை தான் என் பேத்தி எனக்கு கிப்ட் பண்ணி இருக்கிறாள். என் பேத்தி இன்று ஐம்பது குழந்தைகளை தத்தெடுத்து இருக்காள் என் பெயரால் அதற்கு உரிய அத்தனை செலவையும் பார்த்து கொள்வது வாழ்நாள் முழுவதும் என் பேத்தி தான் இது மட்டும் அல்ல இருபத்தைந்து பெயருக்கு இலவச திருமண செய்யது வைத்து இருக்காள் என் பெயரால் அவங்க வாழ்நாள் வாழ்த்தை எனக்கு பரிசாக தந்து இருக்கிறாள் என.கல்பனாஅப்ப அங்கிள் நாங்க வாழ்த்தியது வாழ்த்து இல்லையா என கல்பனா கேட்க. ஜெயராமன்
ஏன் மா கல்பனா நான் எப்போ மா அப்படி சொன்னேன் எதற்கும் தப்பாக அர்த்தம் கண்டுபிடிப்பதை முதலில் விடு என்றார் அப்போது. ராஜதுரை

அப்பா வாங்க தோட்டத்தில் டின்னர் அரேன்ஞ் பண்ணி இருக்கு வாங்க போகலாம் என. அக்னிசரி தாத்து நான் கிளம்புகிறேன் பாட்டி காத்து கொண்டு இருப்பாங்க என சொல்ல. ஜெயராமன்ஏன் சின்ன குட்டி பொய் சொல்கிற நீ இங்கு சாப்பிட மாட்ட என்று எனக்கு தெரியும். ஆனா இன்று ஒரு நாள் மட்டும் தாத்துக்காக வா டா இல்லா விட்டால் எனக்கும் வேண்டாம் என. மயூவின் தாய் தாமரை
அகி மா எங்களுக்கு தெரியும் மா உன் பிடிவாதம் பற்றி ஆனா உங்க தாத்துக்காக வா டா என.அபி
குட்டி மா வாடா தாத்தாக்காக என. அக்னி
ஸாரி அண்ணா என் தாத்துக்காக இன்று மட்டும் என்றாள் பின் அனைவரும் தோட்டத்திற்கு சென்றனர் தோட்டம் அழகாக கலர் பல்புகளால் அலங்கரிக்கப்பட்ட இருந்து. ஒவ்வொரு மேஜைக்கு நான்கு கதிரை வீதம் இருந்து. இந்த ஏற்பாடு விஜபிகள் சொந்தகாரர் நண்பர்களுக்கு மட்டும் தான். பக்கத்து பங்களா அதுவும் ஜெயராம் பங்களா தான் சிறியது முதலில் அங்கு வசித்து பின் ராஜதுரை பவித்திரா திருமணம் முடிந்த பின் இங்கு பங்களா கட்டி குடியேறினார்கள். அங்கு தான் பிரஸ், ஆபிஸ் ஸ்டாப்ஸ்க்கு விருந்து நடைபெற்றது ஒரு டேபிள்லில் ஜெயராம் அக்னி, அபி நீதா ,மயூ இருந்தனர் .ருத்திரன், ஹரி நவீஷ் ஒன்றில் மூர்த்தி, தாமரை, சுதாகர் கல்பனா இருந்தனர். கிரி தன் நண்பர்களுடன் இருந்தான் ராஜதுரை, மேனகா சேது வினிதா ஒன்றாக இருந்தனர். தோட்டத்தில் மேடை அமைத்தது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. பாட்டு டான்ஸ் சிறுவர்கான மேஜிக் ஷோ நடைபெற்று கொண்டு இருந்தது. மயூரி


அகி உனக்கு நினைவு இருக்கா முதலில் நாங்க எல்லோரும் சோர்ந்து பாட்டு டான்ஸ் பண்னுவோம். அக்கா பாடினாங்க என்றால் காற்று கூட நிற்கும். நீ கிளாசிக்கல் டான்ஸர் பரதநாட்டியம் உன் காலில் பேசும் .அபி, நீதா காளி, கங்கா தாத்தா பாட்டி எல்லாம் சுற்றி வர இருந்து பார்ப்பாங்க அத நினைத்தாலே ரொம்ப கஷ்டமாக இருக்கு என.அக்னி
மறக்க நினைப்பதை நினைவு படுத்தாதே மயூ இப்ப இந்த அக்னி உயிர் இருந்தும் ஜடமாக வாழ்கிறாள் என. அபி
ஏன் சின்ன குட்டி இப்படி பேசுகிற நீ வாழ வேண்டியவள் உன் தாத்து உயிரோடு இருக்கும் வரைக்கும். உன்ன சுற்றி நீ போட்டு இருக்கிற நெருப்பு வட்டத்தை உடைத்து .உன்னை வெளியே கொண்டு வர வைப்பேன். இது என் கங்கா மேல் சத்தியம் என்றார் பின் ஜெயராம் எழுந்து செல்ல. மயூரி
தாத்தா எங்கே போறார் டீ அவரை நீ வருத்தப்பட வைக்கிற அகி என. அபி
ஆம் குட்டி மா மயூரி சொல்வது தான் சரி .அவர் பாவம் பணம் இருந்தும் எதுவும் இல்லாமல் இருக்கிறார் அகிமா என. நீதா

பாவம் தாத்தா அக்கா என்றாள் அப்போது மேடை ஏறினார் ஜெயராம். மைக் எடுத்து அனைவருக்கும் வணக்கம் இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் என் பர்த்டேவை சொல்லவில்லை என் பேத்தி அக்னிகா கங்காதரன் என் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக தந்து இருக்கிறாள் .அப்படி பட்ட அவளுக்கு நான் கொடுக்கும் சின்ன சந்தோஷம் அவள் கலையை திரும்ப அவளுக்கு மீட்டு கொடுக்க போகிறேன். என்னபுரியலவில்லையா என் பேத்தி ஒரு கிளாசிக்கல் டான்ஸர் ஆம் அவள் கற்றது அந்த ஆதிஈசன் உலகத்திற்கு அருளிய கலை பரதம் என் பேத்தி முறைபடி கற்றவள் அவள் ஆடினாள் சலங்கைகள் பேசும். என்னை சேர்ந்த அனைவருக்கும் இது தெரியும் அக்னி உன் தாத்துக்காக நீ ஆட வேணும் எனக்காக பதினைந்து வருஷத்திற்கு அப்புறம் இந்த பங்களாவில் சலங்கை ஒலி கேட்க வேணும் இது உன் தாத்துவுக்காக இல்லை ஒரு ரசிகனுக்காக ஒரு ரசிகனின் ஆசையை நிறைவேற்றுவது கலைஞனின் கடமை வா மா என்றார்.
அக்னி தீ பிழம்பாக இருந்தாள் ஜெயராம் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை. எதை மறக்க நினைக்கிறாளோ. அதை அவர் நினைவுபடுத்திவிட்டார் அக்னி எழுந்து அண்ணா நான் போகிறேன் நீங்க பார்ட்டி முடிய வாங்க என. மயூரிஆர் யூ மேட் அகி எங்க போகிற அவரை இத்தனை பேர் முன்னாடி இன்சல்ட் பண்ணி விட்டு போகிற என. அபி

யஸ் மயூரி சொன்னது உண்மை கங்கா தாத்தா இருந்தால் இன்று அடி வாங்கி இருப்ப குட்டி என்றான்.நீதா
ஏன் அண்ணா பாட்டிக்கு தெரிந்தால் அவங்களால் தாங்க முடியாது என கூறினாள். அக்னி
சோ அவர் செய்வது சரி நான் பிழை வரே வா சூப்பர் எனக்கு ஒரு டவுட் இது கூட்டு பிளான்னா என்று கேட்க. மயூரிஅகி நாங்க சொல்வதை சொல்லி விட்டோம் இனி முடிவு எடுக்க வேண்டியது நீ ஆனா யோசித்து எடு என்றாள்.அக்னி ஒரு நிமிடம் கண் மூடி இருந்தாள் பின் கண் திறக்க கண் கலங்கி இருந்து. அப்போது அங்கு வந்த ஜெயராம் அக்னியின் தலையை தடவி .ஜெயராமன்
தாத்து செய்வது. உன் நல்லதுக்கு தான் சின்ன குட்டி போ டா உன் சலங்கைகள் தாத்து ரூம்ல் இருக்கு எடுத்து போட்டு வா மா என அக்னி எழுந்து சென்றாள்.
சாப்பிட்டு கொண்டு இருந்த ஜுஸ் புரையேறியது ஹரிக்கு ஏய் பார்த்து டா என்றான் நவீஷ். ஹரி
மச்சி சான்ஸ்சே இல்லை டா இவளுக்கு இத்தனை டேலன்ட்டா சிலம்பு சுற்றுவது பிசினஸ், டான்ஸ் ருத்ரா உன்னை மாதிரியே செம டேலன்ட் மச்சி என்றான். ருத்திரன்யஸ் ஐ நோ ஷீ இஸ் டிப்பிரண்ட் அவள் ஆட்டியூட் சூப்பர் நான் இப்படி பட்ட பெண்ணை பார்த்து இல்லை டா என அவன் கூறிய வேளை மேடையில் லைட் அணைந்தது. டேப்பில் பாடல் ஒலிக்க ஆரம்பித்து.
முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா முகுந்தா முகுந்தா
வெண்ணை உண்ட வாயால் மண்ணை

உண்டவா பெண்ணை உண்ட காதல்

நோய்க்கு மருந்தாக வா

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வனம் தா என்றுஅக்னி ஆட ஆரம்பிக்க மார்பில் இருந்து இடை வரை துப்பட்டாவால் கட்டி சலங்கைகள் அணிந்து ஆட ஆரம்பித்த போது ருத்திரனின் மனமும் ஆட ஆரம்பித்து.

என்ன செய்ய நானோ தோல் பாவை தான்

உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல்

பாவைதான்

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவன் தா வனம் தா
மச்சமாக நேரில் தோன்றி மறைகள்

தன்னை காத்தாய் கூர்மமாக மண்ணில்

தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய் நரன் கலந்த

சிம்மமாகி இரணியனை கொன்றாய்

ராவணன் தன் தலையை கொய்ய

ராமனாக வந்தாய் கண்ணனாக

நீயே வந்து காதலும் தந்தாய்

இங்கு உன் அவதாரம் ஓவ்வொன்றிலும் தான்

உன் தாரம் நானே உன் திருவடி பட்டால் திருமணமாகும் என்றிலே ஏங்குகிறேனே

மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே

மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

முகுந்தா முகந்தா கிருஷ்ணா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தாஅக்னி ஆடியபோது பின்னலும் ஆடியது ருத்திரனின் எண்ணம் அக்னி என்றானது. இப்படி அவள் தன் நாட்டிய திறமையை பிரயோகித்து கொண்டு இருந்தாள் இறுதிபாடல் வரியாக .


இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்

உன் திருவடி பட்டால் திருமாணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே

மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே

மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவன் தா வனம்

தா .
இறுதி வரிகள் ஆடி சரியாக ருத்திரன் இருந்த பக்கமாக ஆட்டத்தை நிறைவு செய்தாள். தன் வாழ்க்கையில் மனைவி என்றால் அது அக்னி தான் இறுதி வரைக்கு என்று தீர்மானித்தான் ருத்திரதேவேஷ்.
டான்ஸ் முடிந்தவுடன் இவ்வளவு நேரமாக அவள் ஆட்டத்தில் கட்டுண்டு இருந்து அனைவரும் கை தட்டி தம் மகிழ்ச்சியை தெரியபடுத்தினர். ஆடி முடித்து நமஸ்காரம் செய்து விட்டு மேடையை விட்டு இறங்கி அக்னி ஜெயராம் இருக்கு இடத்தை நோக்கி சென்றாள் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் ஜெயராம் பின் பிரஸ் அனைவரையுமே வர சொன்னார் அவர்கள் வர. ஜெயராம்
அனைத்து பத்திரிகை துறை நண்பர்களுக்கு வணக்கம் என் வார்த்தையை மதித்து வந்த உங்களுக்கு நன்றி ஒரு கல்வி துறையின் எக்ஸ் மினிஸ்டரான நான். என்னால் செய்ய முடிந்த சேவைகளை அரசாங்கம் மூலமாகவே இல்ல என் தனிப்பட்ட பணம் மூலம் செய்து இருக்குறேன் இப்பவும் இனியும் செய்வேன் ஆனா இனி என் சார்பாக என் வாரிசாக என் பேத்தி அக்னிகா கங்காதரன் இதை செய்வாள். வரும் எலக்சனில் என் தொகுதியில் என் பேத்தி நிற்க போகிறாள் நீங்க என்ன கேட்க போறீங்க என்று தெரிகிறது ஏன் உங்க மகன் இல்லையா என்று என் மகன் பதவியில் இருந்து செய்வதை என் பேத்தி பதவி இல்லாமல் செய்கிறாள் அதுவும் இளைய சமுதாயத்திற்கு நம்ம வழி விட வேணும். என் சார்பாக என் தொகுதி மக்கள் என் பேத்தியை ஆதரிக்க வேணுனம் இது என் பர்த்டேக்கு என் பேத்திக்கு நான் கொடுக்கும் கிப்ட் என்றவர் என்ன குட்டி மா தாத்து சொன்னது சரிதானே டா என கேட்க. அக்னி
நிச்சயமாக தாத்து ஆனா ஒரு சின்ன திருத்தம் நிற்க போவது நான் இல்லை என் சார்பாக என் அண்ணா காளிங்கன் political science படித்து இருக்கிறார். அவர் தான் நிற்க போகிறார் அவர் வேறு யாரும் இல்லை என் தாத்துவோட உண்மை தொண்டன் மருதுவோட மகன் அவருக்கு சப்போட்டா நானும் தாத்தாவும் இருப்போம் இது அக்னி தரும் வாக்கு என்றாள். ஜெயராம்
நிச்சயமாக என் பேத்தி சொன்னால் சரியாக தான் இருக்கும் என் மருதுவோட மகன் என் பேரன் தான்.எனக்காக உயிரை விட்டவன் மருது அவன் மகன் நிற்பது தான் நியாயம் இதுபற்றி டீட்டெல்லாக பிரஸ் மீட் வைத்து இன்பார்ம் பண்ணுகிறேன். வந்த அனைவருக்கும் நன்றி என்றார் எல்லோரும் எழுந்து கிளம்ப போக அக்னி ஒரு நிமிஷம் என்று காளியை பார்த்தாள்.காளி சென்று அனைவருக்கும் ஒரு பேக் கொண்டு வந்து கொடுக்க. அக்னி

இதில் அனைவரின் குழந்தைகளுக்கு தேவையான ஸ்கூல் திங்க்ஸ் இருக்கு. என் தாத்து பர்த்டே கிப்ட் உங்களுக்கு இது என்றாள் அனைவரும் நன்றி கூறினர் அதில் ஒரு நிருபர்

மேம் மினிஸ்டர் ஸார் சும்மா உங்களை நிற்க சொல்லவில்லை சரியாக தான் தன் வாரிசு என்று சொல்லிருக்கிறார் என்று கூறி சென்றனர். அவர்கள் சென்ற பின் காளி
என்ன தாயி இது என் தாயி நீங்க என்ன போய் நிற்க வைக்கிறீங்க நான் உங்க சேவகன் இப்ப மட்டும் இல்ல எப்பவும் அதை தான் நான் விரும்புகிறேன். படித்தது ஜெயராம்,கங்கா ஜயாவுக்காக தான் அதற்காக இது வேணாம். தாயி நீங்க நில்லுங்க நான் என் உயிரை கொடுத்தாவது உங்களை காப்பேன் இது அந்த பரமேஸ்வரன் மீது சத்தியம் என்றான். அக்னிவார்த்தை தான் காளி என அழைப்பது தவிர உன்னை என் அண்ணாக தான் பார்க்கிறேன். என் மீது சத்தியமாக நீ நிற்கிற இது பற்றி பிறகு பேசலாம் வா லேட் நைட் ஆகி விட்டது இப்ப நம்ம கிளம்பலாம் என. ஜெயராம்என் பேத்தி சொன்னது சரிதான் காளி நீ போ பிறகு பேசலாம் அவள் தனக்காக யோசிப்பதை விட மற்றவங்களுக்காக தான் யோசிப்பாள் பேசுவாள். அது எப்பவும் சரியாக தான் இருக்கும் என்றார் பின் அக்னி அனைவரிடமும் விடை பெற்று செல்ல மற்றவர்களும் விடை பெற்று சென்றனர்.

தீ மலரும்…


இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 
காலையில் தன் ஜிம்ல் வொர்க் அவுட் முடித்து வெளியே வந்த ருத்திரனின் படிகட்டு தேகத்தில் வியர்வை ஆறாக ஓடியது. தன் அறையில் உள்ள பால்கனியில் நின்றிருந்த ருத்திரனின் அகம் முழுவதும் நிறைந்து இருந்தவள் தீ மலரவள் அக்னிகா.
அவள் அவனுள் இருந்து ஆட்டி படைக்க ஆரம்பித்து இருந்தாள் அவள் வேண்டும் என்ற தகிப்பு அவன் அணு எங்கும் வியாப்பித்திருந்தது. சூரியனின் கதிர்கள் கூட அவனை சுட்டெரிக்கவில்லை வியர்வை அடங்கிய பின்பு குளித்து விட்டு வந்து இன்று என்ன உடை அணிவது என்று வாட்ரோப்பை திறந்து பார்த்தான். மெரூன் சேர்ட் சாண்டல் கலர் பேண்ட் அவனை அழகனாக காட்டியது. டிரஸ்ஸிங் டேபிள் முன் நின்று தன் அடங்கா சிகையை ஜெல் போட்டு அடக்கி கீழே இறங்கி வந்தான்.கீழே ஹரியும் நவீயும் காப்பி சாப்பிட்டு கொண்டு இருக்க ஹாய் மச்சிஸ் வொரி குட் மார்னிங் என்றான் ருத்திரன்.இருவரும் அவனுக்கு காலை வணக்கம் சொன்னார்கள். ஹரி
ருத்திரா என்ன சீக்கிரமாக ஆபிஸ்க்கு கிளம்பி விட்ட நேரம் இருக்கிறது டா என. ருத்திரன்
நோ ஹரி நான் பாபி கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வேணும நீங்க தான் எனக்கு சப்போர்ட் பண்ணி பேச வேணும். ஹரி
நீ சரியானதை செய்தால் சப்போர்ட் பண்ணும் முதல் ஆளுங்க நாங்க தான் ஆனா இப்ப அவங்களுக்கு நைட் டா அவசரமான விஷயமா என கேட்க. ருத்திரன்
யஸ் என் வாழ்க்கையில் இம்பார்ட்டன் மேட்டர் டா இன்று இதை செய்து முடிக்க வேணும் மிஸ் ஆகி விடும் என்று பயமாக இருக்கு என. நவீஷ்

வாட் தே கிரேட் ருத்திரதேவேஷ்க்கு பயமா என்ன மச்சி கடத்தல் ஏதும் பண்ண போகிறாயா என .ருத்திரன்
கிட்டத்தட்ட அப்படி தான் பட் ஒரு பெண்னை என. ஹரிவாட் என்ன டா சொல்கிற எங்களை கம்பி எண்ண வைக்க போகிறாயா என. ருத்திரன்
ஹரி என்னை பேச விடு டா ஒரு பெண்ணை கடத்த போவதா சொன்னேன் முறை படி என் அரண்மனைக்கு. என் மகாராணியாக இந்த ருத்திரனின் இதய சம்ராஜ்ஜியத்துக்கு என்னையே அவளுக்கு குடுக்க போகிறேன் என் மனைவிக்கு . ஹரி
வாவ் ருத்திரா கிரேட் டா கங்கிராஜீலேசன் டா யாரு அந்த லக்கி பர்சன் என. ருத்திரன்தே கிரேட் அக்னிகா கங்காதரன் என என்ன என்று அதிர்ச்சியாக ஹரி, நவீஷ் இருவரும் எழு ஹரி ஒரு படி மேலே போய் மயக்க நிலையில் இருந்தான். நவீஷ் அதிர்ச்சியில் உயிர் உள்ள சிலையாக மாறி விட்டான் இவர்கள் நிலையை பார்த்த. ருத்திரன்
டேய் சீ முதல்ல சீன்னுக்கு வாங்க டா ஏதோ உலகத்தை கேட்ட மாதிரி சீன் கிரியேட் பண்ன வேணாம் என. ஹரிபாவி நீ உலகத்தை கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை டா. நீ கேட்டது தீ தொட்டா சுடும் என்றுதெரிந்து தொடுகிறவன் மடையன் நீ என்ன முட்டாளா இல்ல நேற்று அடித்த டிரிங் இன்னும் இறங்க வில்லையா என. ருத்திரன்
ஸ்டாப் இட் ஹரி எனக்கு அவள் வேணும் வாழ்நாள் பூராகவும் நான் மனதார நேசித்து ஆசை பட்ட முதல் பெண்ணு அவள் தான். இந்த ருத்திரனுக்காக படைக்கப்பட்ட அக்னி அவளை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். ஏன் அவள் விரும்பவில்லை என்றாலும் கூட அவ தான் என் வொய்ஃப் இதில் எந்த மாற்றமும் இல்லை என. ஹரி
ருத்திரா நீ சொல்வது சரி டா ஆனா அவள் விரும்ப வேணுமே அவளுக்கு ஏ‌ற்கனவே உன்னை பிடிக்காது விரும்பாத வாழ்க்கை கசக்கும் டா என. ருத்திரன்
ஹரி நான் விரும்ப வைப்பேன் நீங்க எனக்கு சப்போர்ட்டாக இருங்க நம்ம இப்ப பாபி கிட்ட பேசலாம் என்றவன் பைரவிக்கு கால் பண்ணினான். இரண்டாவது ரிங்கில் பைரவி எடுத்தவள். பைரவி
கண்ணா எப்படி இருக்க எனக்கு உன்னை பார்க்க வேணும் போல இருக்கு டா. சாப்பாடு எப்படி கண்ணா உனக்கு ஒத்து கொள்கிறதா அது தான் நம்ம சமையல்காரை அனுப்பினேன். ஹரி நவீ எல்லாம் எப்படி இருக்கிறாங்க நவீக்கு ஹாஸ்பிட்டில் பிடித்து இருக்கா ஹரிக்கு வொர்க் எப்படி போகிறது கண்ணா என கேட்க. ருத்திரன்ரிலாக்ஸ் பாபி நாங்க மூன்று பேரும் நன்றாக இருக்கிறோம் இந்தாங்க ஹரி, நவீஷ் கிட்ட பேசுங்க என்று மொபைலை கொடுக்க ஹரி, நவீஷ் பைரவியை நலம் விசாரித்து முடிய ருத்திரன் போனை ஸ்பீக்கரில் போட்டான். ருத்திரன்
பாபி நீங்க சென்னைக்கு வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்து இருக்கிறேன் அண்ணாவையும் அழைத்து வாங்க என.பைரவிஎன்ன கண்ணா இப்ப சொல்லுடா எனக்கு பதற்றமாக இருக்கு என. ருத்திரன்பாபி நோ டென்சன் நீங்க மாமியார் ஆக போகிறீங்க என. ருத்திரன்என்ன டா எனக்கு புரியவில்லை தெளிவாக சொல்லு என. ருத்திரன்நீங்க எனக்கு அம்மா என்றால் என் வொய்ஃப் உங்களுக்கு யாரு பாபி என கேட்க. பைரவிகண்ணா உண்மையாக சொல்கிறாயா எனக்கு சந்தோஷத்திலே பறக்கிற மாதிரி இருக்கிறது. என் எத்தனை வருட கனவு தெரியுமா உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க வேணும் பிறகு உன் பசங்களை நான் தான் வளர்க வேணும் நீயும் என் மகளும் அது தான் உன் வொய்ஃப்பும் உலகத்தை சுற்றி வாங்க .நான் பசங்களை பார்த்து கொள்கிறேன் இப்படி நான் ஆசைப்பட்டேன் நீ தான் எனக்கு கல்யாணம் இப்போ வேணாம் என்று தள்ளி போட்ட ஆமாம் பெண்ணு போட்டோ இருக்கா கண்ணா அத்தான், மாமா கிட்ட காட்ட வேணும் என.ருத்திரன்ஓ காட் பாபி ரிலாக்ஸ் நான் இப்ப தான் அவள் கிட்ட ப்ரபோஸ் பண்ண போகிறேன் நீங்க வாங்க பெண்ணு கேட்டு டாட் கிட்ட இப்ப சொல்ல வேணாம் என. பைரவி


மாமா கிட்ட சொல்லாமல் எப்படி டா ஒரு வார்த்தை சொல்லி வாருகிறேனே என. ருத்திரன்
பாபி பீளிஸ் இப்ப வேணாம் நீங்க வாங்க. உங்க கிட்ட தான் அவளை பர்ஸ்ட் காட்ட போகிறேன் நீங்க நாளை வாங்க நம்ம சார்ட்டர் பிளேனில் என. பைரவிருத்திரா இந்தா உங்க அண்ணா பேச வேணுமாம் என்று மொபைலை சர்வின் கிட்ட கொடுக்க ருத்திரன் பய்யா என்று சர்வின் உடன் சில விடயங்களை பேசி விட்டு மீண்டும் பைரவியிடம் பேச வந்தான். ருத்திரன்
பாபி பாய்யாக்கு வர முடியாத நிலை பிசினஸ் டீல் இருக்கு நீங்க வாங்க நான் ஹரியை அனுப்புகிறேன் என. பைரவிஉங்க அண்ணா இல்லாமல் நான் வருவது ஒரு மாதிரி இருக்கு டா என. ருத்திரன்அப்ப உங்களுக்கு என் மேல் பாசம் இல்லை தானே என. பைரவி
சரி கண்ணா கோபப்படாத அண்ணி வருகிறேன் ஹரி வர வேண்டாம் அவனுக்கு அலைச்சல். என் கூட பாடி கார்ட்ஸ் வாராங்க தானே சோ நோ ப்ராபிளம் சரி டா நான் ரெடியாக வேணும் பை டா என்று கால் கட் பண்ண. ஹரி
மச்சி அண்ணி பாவம் டா ஆசையாக வாறாங்க அக்னி முடியாது என்று சொன்னால் உடைந்து விடுவாங்க.அவங்க சந்தோஷமே உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி உன் பசங்களை கொஞ்ச வேணும் என்பது தான் என. ருத்திரன்
யஸ் ஐ நோ ஹரி என் அண்ணியை நான் தோல்வி அடைய விடமாட்டேன். அவங்க என் அம்மா அவங்க யார் முன்னாடியும் தலை குனிய விடமாட்டேன் அது என் மனைவியாக இருந்தாலும் கூட என. ஹரிசரி டா எல்லாம் நல்லதாக நடக்கட்டும் நவீ நீ வேலைக்கு கிளம்பு என்ன யோசித்து கொண்டு இருக்க என. நவீஷ்ருத்திரா பவித்திரா ஹாஸ்பிட்டில் யார் ஹாஸ்பிட்டல் என்று தெரியுமா என கேட்க. ருத்திரன்யஸ் அக்னிகா கங்காதரன் ஐ யம் ரைட் என. நவீஷ்எப்படி டா எனக்கே பார்ட்டிக்கு வந்ததற்கு பிறகு தான் தெரியும் என. ருத்திரன்மச்சி நான் ஒரு சிபிஐ எல்லா விஷயமும் தெரிய வேணும். உன்னை ஏன் அங்கே ஜாயின் பண்ண சொன்னேன் தெரியுமா. அங்க தான் விந்து அணு கருமுட்டை திருட்டு நடக்கிறது அதுவும் இப்ப தான் ஆரம்பித்து இருக்கிறது அக்னிக்கும் அவள் அண்ணுக்கும் தெரியாமல். ஆனா இப்ப அபி பொறுப்பேற்ற பிறகு அவங்களுக்கு எடுக்க முடியாது உள்ளது அது தான் உன்னை உள்ள அனுப்பினேன் என. ஹரி
டேய் அப்போ நீ அக்னியை கேஸ்காக தான் கல்யாணம் பண்ண போகிற என கேட்க. ருத்திரன்
ஹரி ஆர் யூ மேட் அப்ப நான் எத்தனையோ மேரீஸ் பண்ணி இருக்க வேணும் கேஸ் வேறு லைப் வேறு டா நான் உண்மையாக அக்னியை லவ் பண்ணுகிறேன் என. ஹரிஒகே டா அப்படி இருந்தால் சந்தோஷபடுகிற முதல் ஆளுங்க நாங்க தான் ஒகே டா நீ கிளம்பு நவீ ஹரி வா கம்பெனிக்கு போகலாம் டைம் ஆச்சு வா என்றான் ருத்திரன் ஹரி கம்பெனிக்கும் நவீ ஹாஸ்பிட்டில்க்கும் கிளம்பினார்கள். நீதா
அக்கா இன்று உங்களையும் ஹரி ஸார் வர சொன்னவர் ஏதோ பேச வேணுமாம் என. அக்னிஎன்ன விஷயம் எதை பற்றி பேச நீ தானே பார்த்து கொள்ளகிற பிறகு நான் எதற்கு என. நீதாதெரியாது அக்கா வாங்க போய் என்ன என்று பார்த்து வரலாம் என. அக்னிசரி இன்று மீட்டிங் ஏதும் இருக்கிறதா என கேட்க. நீதாஇல்லை அக்கா ஈவினிங் தான் இருக்கு என அக்னி ஒகே வா போய் என்ன என்று பார்த்து வரலாம் என கிளம்பினாள். ஹரி
ருத்திரா ஏன் அக்னியை வர சொன்ன வேண்டாம் டா அவள் அடித்ததை பார்த்த பிறகுமா அவள் உனக்கு வேணும். ஏன் டா அதான் உன்னை சுற்றி நிறைய கேர்ள்ஸ் வாறாங்க. அதுவும் விவிஜபி பெண்ணுங்க அதில் ஒன்றை மேரேஜ் பண்ணிக்க என. ருத்திரன்

டேய் அவங்க காகித பூ டா இவள் அக்னி பூ இந்த பூவ தான் எனக்கு பிடித்து இருக்கு எனக்கு அவள் வேணும் டா வாழ்நாள் பூராகவும். ஒகே டா அவள் வருகிறாள் நீ நீதாவை அழைத்து கொண்டு சைட்க்கு போ நான் இவள் கிட்ட பேசப் போகிறேன் என. ஹரி
ஒன்று மட்டும் தெரிகிறது டா இன்று உனக்கும் எனக்கும் முதுகில் டின் கட்ட போகிறாங்க சரி மச்சி ஆல் தே பெஸ்ட் என்றான் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் அக்னி. ஹரியிடம்எதற்கு என்னை வர சொன்னீங்க மிஸ்டர் ஹரி நீதா தான் இருக்கிறாள் தானே பிறகு நான் எதற்கு என கேட்க. ஹரிஇல்லை மிஸ் அக்னி நாங்க ஐ மீன் நானும் மிஸ் நீதாவும் சைட்க்கு போகிறோம் .நீங்க ருத்திரன் ஏதோ டிசைன் உங்க கிட்ட காட்டி ஒப்பினியன் கேட்க வேணும் என்றான் சோ அதுபற்றி பேச தான் அழைத்தேன் என. அக்னிஹரி நீங்க தாத்து கூட டிசைன் பற்றி பேசுங்க இல்ல நீதா கூட டிஸ்கஸ் பண்ணுங்க என் கூட வேண்டாம் என. ருத்திரன்மிஸ் அக்னிகா உங்க தாத்தா தான் உங்கிட்ட ஒப்பினியன் கேட்க சொன்னார் நீதா கிட்ட கூட இன்பார்ம் பண்ணி இருக்கிறார் என.நீதாஅக்கா தாத்தா தான் உங்களை இதை டீல் பண்ண சொன்னார் இப்ப தான் கால் வந்தது என்றாள். ஹரி
ஒகே அக்னி நாங்க சைட்க்கு போகிறோம் எங்க வேலை முடிந்ததும் நாங்க வருகிறோம் என்று கூறி நீதாவுடன் சென்றான். அவர்கள் சென்ற பின் அக்னி
மிஸ்டர் ருத்திரன் டிசைன் காட்டுங்க நான் பார்த்து விட்டு கிளம்ப வேணும் என.ருத்திரன்
சூவர் மிஸ் அக்னி என்ன அவசரம் உங்களுக்கு காபி ஜூஸ் எனி திங் என உபசரிக்க. அக்னி
நோ தேங்க்ஸ் மிஸ்டர் ருத்திரன் எனக்கு வொர்க் இருக்கு சீக்கிரமாக சொல்லுங்க. உங்க கூட வெட்டியா எனக்கு பேச பிடிக்க வில்லை என. ருத்திரன்ஒகே கூல் அக்னி ஏன் என்ன பிடிக்கவில்லை. ஆப் கோஸ் நமக்கு பர்ஸ்ட் மீட் ப்ராபிளத்தில் தான் ஆரம்பித்தது. இப்ப தான் நம்ம பார்ட்னர்ஸ் புதுசா நம்ம ரிலேசன்ஷிப்பை ஆரம்பிக்கலாம் தானே என. அக்னிஆரம்பித்து எப்படி எந்த கெஸ்ட் ஹவுஸ் போகலாம் என்றா இல்ல எப்படி லிவிங்டு கெதர் வாழலாம் என்றா என நக்கலாக கேட்க. ருத்திரன்ஸ்டாப் இட் அக்னிகா guard your tongue நீ யாருகிட்ட பேசி கொண்டு இருக்கிற தெரியுமா. ருத்ரதேவேஷ் கிட்ட வார்த்தையை அளந்து பேசு உன்னை ஒரு நாளும் அப்படி நினைத்து இல்லை நான் என. அக்னி
ஓ ரியலி அப்படியா நீ இப்ப என்னை பொய் சொல்லி தானே அழைத்த. உனக்கு எதற்காக மரியாதை நான் கொடுக்க நான் அக்னி வந்து பாரு ஒழுங்காக மும்பை போய் சேர மாட்ட என. ருத்திரன்ஓ ஐ சீ அப்போ உன்னை நெருங்கினால் நான் மும்பைக்கு போய் சேரமாட்டேன் அப்படி தானே அப்ப நெருங்கி பார்க்கலாம் என்று கூறி ரிமேட்டால் கதவை அடைத்தான். அது கண்ணாடியால் ஆன கதவு உள்ளிருந்து ஏதுவும் தெரியாது ஆனால் உள்ளே இருந்து வெளியே நடப்பதை பார்க்க முடியும்.இனி நடப்பதை நாமும் பார்க்கலாம் ருத்திரன் அக்னியின் காதல் காவியம் ஆரம்பிப்பதை நாளை ud யில் பை செல்லம்ஸ்.
தீ மலரும்.......


இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 
கதவை அடைத்து விட்ட வந்த ருத்திரன் அக்னியை நெருங்க அக்னி மார்பில் குறுக்கே கைகளை கட்டி கொண்டு ருத்திரனை நேர் பார்வையாக பார்த்து .அக்னி
என்ன கதவை லாக் பண்ணினால் மற்ற பெண்ணுங்க மாதிரி சத்தம் போடுவேன் இல்லை என்றால் உன் காலில் வீழ்ந்து என்னை விட்டுவிடு என்று யாசகம் கேட்பேன் என்று நினைத்தாயா. நான் அக்னி டா அணு தினமும் அந்த பரமேஸ்வரனை ஆராதிப்பவள் அவர் நெற்றிக்கண் திறந்தால் எப்படி உலகே பஸ்பமாகுமோ அது மாதிரி இந்த அக்னியின் கோப தீயில் நீ பஸ்பமாகாதே. அன்று பார்த்த இல்லையா ஒரு நொடியில் மினிஸ்டர் ஆளுங்களை அடித்த எனக்கு நீ பெரிதா கதவை திற உன் முகத்தில் இனி முழிக்க எனக்கு விருப்பம் இல்லை என. ருத்திரன்
பேசி விட்டாயா இல்ல இன்னும் இருக்கா மற்றவங்களையும் பேச விடு நான் உன்ன தப்பான நோக்கத்தில் பார்க்க இல்ல பார்க்கவும் மாட்டேன். நீ எனக்கு ஸ்பெஷல் அக்னி இன்னும் சொல்லப் போனால் நீ என் உயிர் அக்னி மை லவ் மை சோல் மை எவிரி திங் யூ என கூறியவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஒரு கால் மூட்டி போட்டு கையில் ரிங்கை எடுத்து அதை அக்னியை நோக்கி நீட்டியவாறேமை தும்சே பியார் கர்தாஹீ

நான் உன்னை காதலிக்கிறேன்

I love you


என்று மூன்று மொழியிலும் கூறியவாறே அக்னியின் கையை பற்றி மோதிரத்தை போட போக அவ்வளவு தான் அக்னி மோதிரத்தை பறித்து அதை தூக்கியெறிந்தவள் தன் கைகளை இழுத்து கொண்டு. அக்னி

ஏன் உனக்கு வேறு எந்த பெண்ணும் கிடைக்கவில்லையா இல்ல இவளுக்கு ரிங் கொடுத்தால் நம்ம சொன்ன படி வளைவாள் நம் தேவையை நிறைவேற்றி கொள்ளலாம் என்று திமிரா ஏது உன்னை என்னை நெருங்க வைத்தது என. ருத்திரன் எழுந்தவன் கோபமாக
என்ன டி சொன்ன சீ வாயை மூடு வார்த்தையை அளந்து பேசு நான் உன்னை உண்மையாகவே லவ் பண்ணுகிறேன். ஒத்து கொள்கிறேன் நான் பெண்ணுங்க விஷயத்தில் உத்தமன் இல்லை தான் ஆனா நான் யாரையும் வற்புறுத்தியது இல்லை அவங்களாக தான் வந்தாங்க. நான் இருந்த நாட்டில் இது தப்பு இல்லை ஆனா என்று உன்னை பார்த்தேனோ எனக்கு இது தப்பாக தெரிகிறது. இந்த கை இனி உன்னை தவிர எவளையும் தொடாது இது நம் காதல் மேல் சத்தியம் என. அக்னி
வாரே வா நம் காதல் உனக்கு காதல் கல்யாணம் என்றால் என்ன என்று தெரியுமா ஒருவனுக்கு ஒருத்தி பெற்ற அப்பாவையே தப்பு செய்தவர் என்று தூக்கி எறிந்தவள் நான் தப்பு என்று தெரிந்து செய்கிற உன்னை லவ் பண்ணுவேனா. என்ன சொன்ன நீ இருந்த பாரினில் இது எல்லாம் சகஜம் என்றா அப்போ உன் அப்பா, அண்ணா எல்லாம் இப்படி தானா அப்பவும் உன் அம்மா, அண்ணி எல்லாம் இப்படி தான் இருப்பாங்களா இல்ல அவங்களே தப்புக்கு ஹெல்ப் பண்ணுவாங்களா என கேட்க என்ன டி சொன்ன என்று கண்கள் சிவக்க ருத்திரன் அக்னியின் கைகளை பற்றி சுவரில் சாய்த்தான். ருத்திரன்
ஏய் உனக்கு என்னை பற்றி பேச மட்டும் தான் உரிமை இருக்கு என் அம்மாவை இல்ல அண்ணியை பற்றி பேச உரிமை இல்லை அதை நான் உனக்கு தரவில்லை.உன்னை லவ் பண்ணுகிறேன் என்று சொன்னால் ஏது வேண்டுமானலும் பேசுவாயா. ஆமாம் டி நான் பொறுக்கி தான் womanizer தான் இவனுக்கு தான் நீ சொந்தம் நான் தாண்டவம் ஆடி நீ பார்த்தது இல்லை தானே இப்ப பார்ப்ப

ஒருத்தன் காதலை சொன்னால் மதிக்க பழகு முடியாதா ஐ யம் ஸாரி என்று சொல்லி விலகு என சொல்ல. அக்னிஏய் கையை எடு டா நான் அடித்தால் முகம் பஞ்சர் ஆகிவிடும் ஒழுங்காக உன் ஊரை பார்த்து போ என. ருத்திரன்என்ன டி மரியாதை இல்லாமல் பேசுகிற என் ஸ்டேட்டஸ், என் பதவி என்ன என்று தெரியுமா நான் அடித்தால் நீ தாங்குவாயா டி சும்மா நொய் நொய் என்று சத்தம் போட்டு கொண்டு என்னையும் என்ன அந்த ரவுடி பசங்க என்று நினைத்தாயா. ஒரு அடியில் விழ. ருத்ரதேவேஷ் டி கேட்டு பாரு மும்பையில் என் அடியை பற்றி கராத்தே பிளாக் பெல்ட், குங்பூ, மார்ஷல் ஆர்ட்ஸ் எல்லாம் முறையாக பயிற்சி எடுத்தவன் நீ பார்க்க பூ மாதிரி இருக்க உனக்கு ஏன் இந்த வேலை ஒரு தடவை என் கண்ணை பாரு அதில் உனக்கே உனக்கான என் காதல் மட்டும் தான் தெரியும் என காதலாக சொல்ல. அக்னிநோ சான்ஸ் உன்னை நான் லவ் பண்ண முடியாது நீ தலை கீழாக நின்றாலும் ஐ டோன்ட் லைக் யூ என சொல்ல. ருத்திரன்நோ என்ற வார்த்தைக்கே இந்த ருத்திரனின் அகராதியில் இடம் இல்லை நீ எனக்கே எனக்கானவள் என கர்வமாக சொல்ல அக்னி ருத்திரனின் மார்பில் கை வைத்து தள்ள பார்க்க ஒரு இஞ்ச் கூட தள்ள முடியவில்லை ருத்திரன் சிரித்து விட்டு. அவன்நான் நினைத்தால் மட்டும் தான் நீ நகர முடியும் நீ ஐ லவ் யு சொல்லு நான் நகருகிறேன் என. அக்னிஇப்ப பாரு நீ நகருவ என கூறி அடிக்க கை ஓங்க அவ்வளவு தான் அக்னிக்கு தெரியும். ஓங்கிய கரத்தையும் மறு கரத்தையும் தன் ஒரு கரத்தால் இடையோடு வளைத்து பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் .இழுத்த வேகத்தில் அக்னி ருத்திரனின் மார்போடு மூட்டி நின்றாள் தன் மறு கரத்தால் அக்னியின் முகத்தை தூக்கி கண்களைப் பார்த்து இந்த கண்கள் காதலோடு என்னை பார்த்தால் என்னை போல் அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என. அக்னிஅது உன் கனவில் கூட நடக்காது டா உன்னை போல ஒருத்தனை எந்த பெண்ணும் விரும்பமாட்டாள் உனக்கு ஷீத்தல் போல பெண்ணு தான் சரி யாருக்கு தெரியும் அவ கூட உன்ன விரும்பமாட்டாள் நீ ஒரு பொறுக்கி என. ருத்திரன்
இந்த பொறுக்கி தான் உன் புருஷன் இதை நீ மறக்காமல் இருக்க உனக்கு நான் தர கிப்ட் இது என்று கூறி அவளை நெருங்கி முகத்தோடு முகம் வைத்து அவளின் செவ்விதழ்களில் அழுத்தமாக தன் முதல் முத்திரையை பதித்தான். அதன் மென்மையில் அவளின் வாசத்தில் ருத்திரன் தன்னையே முழுதாக இழந்தான் இதழ் முத்தத்தை நீடித்து கொண்டு இருக்க ருத்திரன் மொபைல் ரிங் ஆக. அதில் சுய நினைவுக்கு வந்த ருத்திரன் அக்னியை விட்டு விலகும் போது அவளின் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டு நீ என்னவள் எப்பவும் நீ இதை மறக்க கூடாது என்றான். பின் அவளை விட்டு விலகி தன் கால் அட்டன் பண்ண மறு பக்கம் எடுத்த. ஹரிமச்சி உன் லவ்வை சொல்லி விட்டாயா நாங்க வரவா என கேட்க. ருத்திரன்

வா வந்து தொலை பூஜை வேளை கரடி டா நீ வா என்று கூறி கால் கட் பண்ணியவன் திரும்பி. ஐ யம் ஸாரி இனி என்று கூறி திரும்ப அக்னி நின்ற இடம் வெற்றிடமாக இருந்து. ருத்திரன் ரிசப்ஷனில் கால் பண்ணி ரிசப்ஷனிஸ்யிடம் அக்னியை கேட்க அவள் இப்போது தான் சென்றதாக கூறினாள். ருத்திரன் அக்னியின் மொபைலுக்க் கால் பண்ண அது நாட் ரீச்சபிள் என்று வந்து ருத்திரன் ஒரு நிமிடம் பயந்தவன் பின் அவள் தைரியம் பற்றி தெரியும் என்பதால் வீட்டுக்கு போய் இருப்பாள் என்று நினைத்தான். நீதா சைட்டில் இருந்து ஹரியிடம் விடை பெற்று சென்றாள். ஹரி வர்மா குரூப்ஸ் வந்தவுடன் ருத்திரனின் கேபின் உள்ளே சென்றான். ஹரி
மச்சி சொல்லி விட்டாயா அக்னி என்ன சொன்னாங்க என்று கேட்க. ருத்திரன்
ஆ அது டா சொல்லி விட்டேன் ஆனா என்று இழுத்தான். ஹரிஎன்னடா சொல்லி தொலை என்ன பண்ணின என கேட்க .ருத்திரன்
பெருசா இல்லை டா என்று முத்த சீன்னை எடிட்டிங் செய்து மற்றது எல்லாவற்றையும். கூறஹரி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.ஹரி
என்ன பண்ணி வைத்திருக்க டா உனக்கு அமைதியாக பேச தெரியாதா டா இப்பவும் அதிகாரமாக பேசி இருக்க. காதல் வற்புறுத்தி வர கூடாது தன்னாலே வர வேணும் இது மட்டுமா இல்லை வேறு எதுவும் மா என கேட்க. ருத்திரன்
நோ டா இது மட்டும் தான் என்று ஹரியின் முகத்தை பார்க்காமல் கூற . ஹரி

ருத்திரா நீ பொய் சொல்கிற என்று தெரிகிறது ஆனா அது உன் பெர்சனல் ப்ரண்ட்டா இருந்தாலும் தலையிட கூடாது. அது தான் மேனர்ஸ் அப்பா ராசா தயவு செய்து அண்ணி வரும் வரைக்கும் அக்னி பக்கம் திரும்பாத அது தான் உனக்கு நல்லது அண்ணி அவள் கிட்ட பேசட்டும் என்றான்

தன் பங்களாவிற்கு வந்த அக்னி நேராக வாஷ் ரூம்க்கு சென்று போட்ட உடையுடன் ஷவரின் கீழ் நின்றாள். பூ சிதறலாக மேனியில் பட்ட நீர் கூட அவளின் உஷ்ணத்தை குறைக்கவில்லை மனம் அக்னி பிழம்பாக கொதித்து கொண்டு இருந்தது ருத்திரன் தொட்ட இடம் எல்லாம் சோப் கொண்டு தேய்த்து தேய்த்து தோல் கிழியும் அளவுக்கு குளித்தாள். பின் அதையே ஈர ஆடையுடனே சிவனின் ஆளுயர சிலை முன் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டாள்.

வீடு வந்த நீதா அக்னியை தேடி பார்த்து விட்டு பின் சிவனின் சிலைக்கு முன்பாக அக்னி இருப்பதை கண்டாள். அதுவும் ஈர ஆடையுடன் பதறி கொண்டு வந்து அக்னியின் தோளில் கை வைத்தாள். கண் திறந்து பார்த்த அக்னியின் விழிகள் கலங்கி சிவந்தது இருந்தது .நீதாஅக்கா உள்ள வாங்க ஈர துணியோடு இருக்கிறீங்க வாங்க அக்கா நீங்க இப்ப வரவில்லை என்றால் நான் அண்ணா மயூ அக்காவ கால் பண்ணி அழைக்க வேண்டி இருக்கும் என தான் அக்னி எழுந்து உள்ளே சென்றாள். பின் நீதா வற்புறுத்தி உடை மாற்ற வைத்து தலையை துவட்டி சூடான பால் கொண்டு வந்து சாப்பிட வைத்து சென்றாள்.ருத்திரன் பங்களாவில் தன் அறையில் படுத்து இருந்த ருத்திரனுக்கு அக்னியின் நினைவாக இருந்து அவளை தொட்ட கைகள் இன்னும் அவளின் ஸ்பரிசம் வேண்டும் வேண்டும் என்ற தாபம் எழுந்தது. ஆனா இது மோகத்தை தாண்டிய காதல் தேடல் அவளை தன்னுடன் எப்போதும் வைத்து இருக்கவேண்டும் என்ற ஆவல் அவளின் ஆளுயர பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அவனின் படுக்கை எதிரே மாட்ட பட்டிருந்தது. பார்ட்டி புகைப்படங்கள் பெற அவன் கொடுத்த விலை பத்து லட்சம் ஏனெனில் போட்டோ கிராபர் பெரிய இடத்து பெண்னு தெரிந்தால் தன் வேலை போய்விடும் என்று தர மறுக்க பணத்தால் அவனை விலைக்கு வாங்கினான். எழுந்து சென்று போட்டோவில் உள்ள அக்னியின் கன்னங்களை வருடி .ருத்திரன்
எப்ப டி என்கிட்ட வர போகிற உனக்கா நான் காத்து கொண்டு இருக்கிறேன் சீக்கிரமாக வா என் அரண்மனைக்கு மகாராணியாக என் இதயத்திற்கு பேரரசியாக வா இந்த ருத்திரன் உனக்காக காத்து கொண்டு இருக்கிறேன் என்றான்இங்கு அக்னியின் உடல் அனலாக கொதித்தது நீதா ஏதோ ஆபிஸ் விஷயமாக பேச வந்தவள் அருகே ஷிவி உறங்கி கொண்டு இருக்க ஜூரத்தால் அக்னி அணத்தி கொண்டு இருந்தாள். நீதா ஷிவி தூக்கி கொண்டு தன் அறையில் உறங்க வைத்து விட்டு அபிக்கு கால் பண்ணி கூறினாள் அபி பதறி கொண்டு வந்தவன் அக்னியை பரிசோதித்து விட்டு மாத்திரைகளை கொடுத்தான் ஏனெனில் அக்னிக்கு அதிக பயம், டென்ஷன் வந்தால் ஜுரம் வந்து விடும் அது மட்டுமில்லை ஈர உடையில் இருந்தது வேறு ஜூரத்தை வர வைத்து இருந்தது. தன்னால் தான் தன்னவளுக்கு இந்த நிலமை என்று அறியாமல் தன்னவள் நினைவுடன் உறங்கி கொண்டு இருந்தான் ருத்திரன் நாளை நடக்க போவதை அறியாமல் நாளைக்கு நாமும் பார்க்கலாம் .


தீ மலரும் ........

 
Status
Not open for further replies.
Top