வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீயினுள் பூத்த மலர் - கதை திரி

Status
Not open for further replies.
மும்பை மாறரேந்திரனின் கோட்டை அவர்கள் தமிழ் மரபில் வந்தவர்கள் தான் ஆனால் பூர்வீகம் மும்பை வாழ் தமிழர்கள் மும்பையில் மாறனுக்கு இல்லாத தொழில்களே இல்லை எல்லாவற்றிலும் அவரின் பார்ட்டினர் ஷிப் இருக்கும் மும்பையில் அவர் சொன்னால் யாரும் மறு வார்த்தை பேச மாட்டார்கள். இந்தியாவின் நிதித்துறை தலைமையிடமாக மும்பை கருதப்படுகிறது மாறனின் அரண்மனையே பத்து நகரங்களை உள்ளடக்கியதாக காணபடும் பரம்பரை பரம்பரையாக அவர்கள் அரண்மனைவாசிகள். ஆனால் துளி கூட அவர்களிடம் கர்வம் இருக்காது நீதி நியாயம் பார்பவர்கள் அது தான் இன்னும் அவர்களின் அரண்மனை வாழ்க்கை அழியாமல் இருக்க காரணம்.


மாறனுக்கு என்று கம்பெனிஸ், ஹோட்டல், ஸ்கூல், ஹாஸ்பிட்டில் இருக்கிறது தன் அனைத்து வொர்க்கர்ஸ் மற்றும் அரண்மனையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் சகல விதமான வசதிகளையும் செய்து கொடுத்து இருக்கிறார். வீடு,பிள்ளைகள் படிக்க தனது பாடசாலையில் இடம், மாதம் ஒருமுறை free மெடிக்கல் செக்கப் தனது ஹாஸ்பிட்டிலில் சகல விதமான வசதிகளையும் அவர்கள் வழி வழியாக செய்து வருகின்றனர். வர்மா குரூப்ஸ் மும்பை மட்டும் அன்றி எல்லா நாடுகளிலும் அவர்களின் தொழில் பரந்து விரிந்து உள்ளது. மாறன் ருத்திரன், ஹரி நவீஷ் அனைவரும் மும்பைக்கு வந்து விட்டனர். இன்று அக்னி வருகிறாள். தங்கள் சின்ன மகாராணியை வரவேற்க அரண்மனை தயார் ஆகி கொண்டு இருந்தது.


அக்னி வரபோவது அவர்களின் இன்னொரு அரண்மனைக்கு தான் திருமணம் முடித்த பின் தான் அவர்களின் அரண்மனைக்கு வர வேண்டும் என்ற சம்பிரதாயம் காரணமாக அக்னி மற்றொரு அரண்மனையில் இருந்தாள். அதற்கே ருத்திரன் ஆர்பாட்டம் பண்ணி விட்டான் அவனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் சிவகாமி, மாறனின் நம்பிக்கை காரணமாக அவனால் ஏதும் செய்ய முடியவில்லை அவளை தனது ராஜ்யத்திற்கு வரவேற்க சில வேலைகளை செய்து இருந்தான். அக்னி, ஷிவி, சிவகாமி, நீதா முதலில் வர பிறகு அபி, ஜெயராம், ராஜதுரை வருவார்கள்.அக்னி கம்பெனியை தனது ஜெனரல் மேனேஜரிடம் ஒப்படைத்து விட்டு வந்து இருந்தாள்.



அக்னி மறுத்தும் சிவகாமியை வைத்து தங்கள் பிரைவெட் சார்ட்டர் பிளேனில் வர வைத்து இருந்தான் ருத்திரன் பிளேன் தரை இறங்கியதும் ஹெலிகாப்டர் மூலமாக பூக்கள் தூவ ஆரம்பித்தது. பின் அவள் நடக்கும் தரை முழுவதும் சிவப்பு நிற பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது அனைவரும் வர மாறன், சர்வின், பைரவி ருத்திரன்,ஹரி வரவேற்றனர். பின் ஒவ்வொருவரும் பூக்கள் குடுத்து வரவேற்றனர். ருத்திரன் ஷிவிக்கு பிங் நிற ரோஜாக்கள் அக்னிக்கு சிவப்பு நிற ரோஜாக்கள் கொடுத்தான் அக்னி வேண்டா வெறுப்பாக பெற்று கொண்டாள் இல்லா விட்டால் சிவகாமியிடம் யாரு பேச்சு வாங்குவது. ஷிவி டாதி என்று ருத்திரனை கட்டி அணைத்தாள். மை ஏஞ்சல் என அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு அவளை தூக்கி கொண்டான். அனைவரும் அரண்மனைக்கு செல்ல பைரவி ஆரத்தி எடுத்து வரவேற்றாள் பின் அனைவருக்கும் வசதிகளை பார்த்து விட்டு மாறன், சர்வின் பைரவி கிளம்ப ருத்திரன், ஹரி தயங்கி நின்றனர் மாறன் அதை பார்த்து விட்டு நீங்க இரண்டு பேரும் இன்னும் கிளம்பவில்லையா என கேட்டார். அதற்கு ருத்திரன்



டாட் ஷிவி வந்து இருக்கிறாள் நாங்க லேட்டாக வருகிறோம் என மாறன் சிரித்து விட்டு சரி சீக்கிரமாக கிளம்பி வாங்க என்று கூறி விட்டு சிவகாமியிடம் விடை பெற்றார். சிவகாமி தனக்கு சோர்வாக இருப்பதாகவும் தான் ரெஸ்ட் எடுப்பதாக கூறி தாயம்மாள் உடன் சென்றார். ஹரி நீதாவுடன் பேச அவளை அழைத்து கொண்டு ஸ்மிங் பூல் அருகே போக அக்னி ஷிவியிடம் ஷிவி உன் டாடி உடன் பேசி விட்டு வா மம்மி மேலே போகுறேன் என கூறி செல்ல போக ருத்திரன் ஒன் செக்கன்ட் அக்னி என கூறி ஒரு கிப்ட் பாக்ஸ் கொடுக்க அக்னி அதை வாங்காமல்.அவள்



எனக்கு இது வேண்டாம் பிறகு இந்த பூ போடுவது கிப்ட் தருவது இதுக்கு எல்லாம் அக்னி மயக்க மாட்டாள் அதற்கு வேறு மாதிரி ஆளை பாரு ஒ நீ பார்க்க தேவையில்லை அது தான் உனக்கு இருக்கிறதே என நக்கலாக கூற ருத்ரனுக்கு பயங்கரமாக கோபம் வந்தது ஏய் சீ வாய்மூடு டி என சத்தம் போட ஷிவி டாதி என பயத்தில் அழ ஆரம்பிக்க. ருத்திரன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு




இல்ல பேபி டாடி மம்மி கூட பேசிட்டு தான் இருந்தேன் பேபி ஏன் அழுகிறாங்க என கேட்க .ஷிவி



நோ டாதி உன் ஜஸ் ரெட்டா வந்துதா ஷிவி பயந்து என கூறினாள். ருத்திரன்




நோ என் ஏஞ்சல் எதற்கும் பயப்பட கூடாது டாடிக்கு கண்ணில தூசி விழுந்து ரெட்டாக இருக்கு என. ஷிவி காட்டு டாதி என கூறி ஊதி விட்டாள். அவள் அன்பை பார்த்து ருத்திரனுக்கு கண் கலங்கியது. பின் அங்கு இருந்த வேலைகாரியிடம் ஷிவியை சிறிது நேரம் வைத்து இருக்கு படி கூறி விட்டு. அக்னியிடம் திரும்பி




நான் உனக்கு பல தடவை கூறி விட்டேன் அக்னி என்னை கோபபடுத்தி பார்க்காதே நான் எப்பவுமே அமைதியாக இருக்க மாட்டேன் நீ இப்ப கேட்ட கேள்வியால் என்னை மட்டுமல்ல உன்னையும் சேர்த்து அசிங்கபடுத்தி இருக்க. நான் உண்மையை மறைத்தோ இல்ல ஏமாற்றியோ உன்னை லவ் பண்ணவில்லை தப்பு செய்தேன் தான் அது முன்பு. எப்ப உன்னை பார்த்தேனே அப்போ என் தப்பு எல்லாம் உணர்ந்து உன்னை உண்மையாக லவ் பண்ணுகிறேன் இனி இது மாதிரி நீ பேச கூடாது மீறி பேசின என் உண்மையான கோபத்தை பார்ப்ப. என் பெண்ணு சந்தோஷம் எனக்கு முக்கியம் அவள் அழுதால் அது நீ என்றாலும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என் காதலை பார்த்த நீ கோபத்தை பார்க்காதே தாங்க மாட்டாய். நீயாக வருவ அப்படி வருகிற போ நீ என்னை இழந்து இருப்ப உங்களுக்கு எல்லாம் எங்கே உண்மையான லவ் புரியும் பார்த்து நடந்துக்க நான் போய் வருகிறேன் என ருத்திரன் கூறி சென்றான்.



அவன் சென்ற பின் அக்னி ஷிவியை தூக்கி கொண்டு தனது அறைக்கு சென்றாள் பின் குளித்து ஓய்வு எடுத்த பின் கீழே இறங்கி வர சிவகாமி பைரவியுடன் பேசி கொண்டு இருந்தாள் அக்னி வர .பைரவி



எப்படி மா இருக்கு எல்லாம் உனக்கு ஒகே வா ஏதும் தேவை என்றால் என் கிட்ட சொல்லு என. அக்னி அது என பேச வர சிவகாமி



அக்னி பைரவி உனக்கு அக்கா முறை அதனால் அக்கா என்று அழை என அக்னியும் சரி அக்கா என அழைத்து.



எங்களுக்கு எல்லாம் ஒகே தான் அக்கா என்றாள் பின் பைரவி சிறிது நேரம் ஷிவியுடன் விளையாடி விட்டு சென்றாள்.



ருத்திரா மச்சி என்ன யோசனையாக இருக்கிறாய் டா என ஹரி கேட்க. ருத்திரன்




அது ஒன்றும் இல்லை டா நம்ம ப்ரண்ட்ஸ் எல்லோரும் அக்னியை பார்க்க வேண்டும் என்று கேட்கிறாங்க டா தங்களுக்கு பார்ட்டி தர வேண்டுமா என்று அது தான் யோசித்து கொண்டு இருக்கிறேன்.ஹரி



டேய் உனக்குமா எனக்கும் கால் பண்ணி உன் கிட்ட சொல்ல சொன்னாங்க டா அது மட்டுமா நீதாவையும் அழைத்து வர வேண்டுமாம் தங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னாங்க எனக்கும் அது தான் யோசனையாக இருக்கு. நவீஷ்




இதில் என்ன யோசிக்க என்ன இருக்கு நிச்சயம் அக்னி கிட்ட இருந்து ருத்திரனுக்கு அடி நிச்சயம் உனக்கு ஹரி நீதா அனேகமாக அபி கிட்ட சொல்லுவாள். அவன் ஏற்கனவே உங்க இரண்டு பேர் கூடவும் கோபமா இருக்கிறான் நிச்சயம் மாறன் அங்கிள் கிட்ட மாட்டி விடுவான் என. ஹரி



ஏய் உன்னை நாங்களே என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் நீ வேறு ஏன் டா என்றான்.ருத்திரன்



நோ மச்சி நவீ ஸ் ரைட் அவள் அப்படி தான் செய்வாள் நான் அழைத்தால் என் கூட வரமாட்டாள் பட் ஒரு வழி இருக்கு .என்ன வழி டா என ஹரி கேட்க .ருத்திரன்




சிவகாமி பாட்டி கிட்ட கேட்டால் எங்களுக்கு ஹெல்ப் பண்னுவாங்க என்றான். சுப்பர் ஐடியா மச்சி கேளு டா என்றான் ஹரி. ருத்திரன் அக்னிக்கு தெரியாமல் சிவகாமியிடமும் சம்மதம் வாங்கினான். அக்னி, நீதா இருவரும் தாங்களுடன் வர சிவகாமி பத்திரமாக தன் பேத்திகளை அழைத்து போய் கொண்டு வர வேண்டும் என்ற கட்டளையுடன் அக்னி, நீதா இருவரிடமும் சொல்ல அக்னி வர முடியாது என பிடிவாதம் பிடிக்க மிரட்டி அக்னியை போக சொன்னார் சிவகாமி. பின் ருத்திரன், ஹரி இருவரும் அனுப்பிய உடையை கொடுத்து அணிந்து வர சொன்னார் தான் ஷிவியை பார்த்து கொள்வதாக கூறினார்.



ருத்திரனும் ஹரியும் தங்கள் பிரைவேட் டிசைனரை வைத்து வடிவமைத்த உடை இருவருக்கும் அவ்வளவு அழகாக இருந்தது. அக்னி சாரி தான் அணிவாள் என்று அவளுக்கு ஹாப் சாரி மாடல் அதாவது மேலே கருப்பு நெட்லானது கிழே கோல்டன் கலர் சில்க் கருப்பில் கோல்ட் மணிகளை கோர்த்து இருந்தது. கிழே கோல்டல் கருப்பு மணிகள் விட்டு விட்டு இருந்து முந்தானனை அடியில் கருப்பு கோல்ட் மணிகள் சேர்ந்து கோர்த்து இருந்தது. அதற்கு பொருத்தமாக கழுத்தை ஒட்டிய நகை செட் நடுவில் வைரக்கல் சுற்றி வர கருப்பு கற்கள் வட்டமாக இருந்தது காதணி வைரமும் கருப்பு கல் சேர்ந்து வட்ட வடிவமான காதணி வளையல்கள், ரிங் எல்லாம் வைரம், கருப்பு கலந்த கலவையாக ஒளி வீசியது. அக்னி கூந்தலை பின்னாமல் இன்று விரித்து விட்டு இருபக்க முடியையும் எடுத்து கிளிப் பண்ணி இருந்தாள். நீதா அனார்கலி சுடி பிங்க் நெட் கோல்டன் வொக்கிலான டிசைன் பண்ணி இருந்த சுடி .அதற்கு பொருத்தமான பிங்க் கற்கள் கொண்டு ரோஸ் மாடலில் நெக்லஸ் காதணி வளையல்கள் என இருந்தது. ருத்திரன், ஹரி இருவரும் தங்கள் மனைவிக்கு பார்த்து பார்த்து வடிவமைத்து இருந்தனர்.



மாலை ஆறு மணி அளவில் ருத்திரன், ஹரி இருவரும் வர அக்னி நீதா இருவரையும் பார்த்து பேச்சற்று போய் விட்டனர் இருவருக்கும் அவ்வளவு அழகாக இருந்தனர். ருத்திரன் பிளாக் சேட் சாண்டில் நிற பேண்ட் மேலே பிளாக் நிற டபுள் பிரெஸ்டட் கோட் .ஹரி லைட் பிங் சேட் வைட் கோட் சூட் என கலக்கி இருந்தனர் இருவரும் .அனைவரும் சிவகாமியிடம் விடை பெற்று ஷிவி தெரியாமல் சென்றனர் இல்லாவிட்டால் தானும் வர போவதாக அடம் பிடிப்பாள். ருத்திரனுக்கு அவளை அழைத்து சொல்ல விருப்பம் இல்லை காரணம் அங்கு மது அருந்துதல் நடை பெறும் அது அவளுக்கு நல்லது இல்லை என்று தான் அதிக காவலை அவளுக்கு வைத்து சென்றான். தங்கள் ஹோட்டலில் பார்ட்டி வைக்காது ஹோட்டல் தாஜ் மஹால் பேலஸ்லில் வைத்து இருந்தான் ஏன் என்றால் ஒரு அளவுக்கு மேல் அங்கு கட்டுபாடுகள் மாறன் விதித்து இருந்தார் அதனால் தான் தாஜ் மஹால் பேலஸ்க்கு சென்றனர்.





தீ மலரும்….









இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 
ஹோட்டல் தாஜ் மஹால் பேலஸ் இரவை பகலாக்கி விளக்குகள் ஒளிந்து கொண்டு இருந்தது அது விஜபி ,விவிஜபிகள் வரும் இடம் அவர்களின் பிறந்தநாள் தொடக்கம் கம்பெனி வெற்றி விழா வரை கொண்டாடும் இடம் ஏன் நடிகர், நடிகைகள் கூட அங்கு தான் தங்கள் விழாக்களை கொண்டாடுவார்கள். அங்கு தான் ருத்திரன், ஹரி, நவீஷ் பார்ட்டியை அரேன்ஸ் பண்ணி இருந்தனர் தங்கள் கூட படித்த நண்பர்கள், நண்பிகள், கம்பெனி பார்ட்டினர் பிள்ளைகள் என இளைய தலைமுறைக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அவர்கள் அங்கு நுழைய மேலே இருந்து பூக்கள் தூவப்பட்டது அவர்களின் நண்பர்கள் பொக்கே குடுத்து வரவேற்றனர் அனைவரும் பார்ட்டி ஹால் நோக்கி சென்றனர் பின் அனைவருக்கும் தங்கள் வருங்கால மனைவியை இருவரும் அறிமுகபடுத்தினர்.



அக்னி, நீதா இருவருக்கும் பெரிதாக ஹிந்தி தெரியாததால் அவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் உரையாடினார்கள் அப்போது அங்கு ஒருவன் தன் நண்பர்கள் இருவருடன் வந்தான். அவன் தான் ராகேஷ் குப்தா மும்பை நகர பெரும் புள்ளி குப்தாவின் வாரிசு அவனுக்கு ஒரு தங்கை சீமா அவளுக்கு ருத்திரன் மேல் அப்படி ஒரு பைத்தியம் காரணம் அவன் பணம் அவனின் திறமை, அழகு எல்லாம் அவளுக்கு பிடித்து தந்தை மூலமாக மாறனிடம் கேட்க அவர் மறுத்துவிட்டார். ஏன் என்றால் அவளின் பழக்க வழக்கங்கள் சரி இல்லை என்று அதன் பின் அவள் கோபித்துக் கொண்டு அமெரிக்கா போய் விட்டாள் அங்கு அவள் உல்லாசமாக வாழ்கிறாள் என்பது வேறு கதை.



ராகேஷ்க்கும் ருத்திரன், ஹரி நவீஷ் மூவருக்கும் எட்டாம் பொருத்தம் காரணம் அவன் படிக்கும் போதே செய்யாத பிரச்சினைகள் கிடையாது காலேஜ்ல் டிரக்ஸ் சப்பளை பண்ணுவது பெண்களை கிட்னாப் செய்து ரேப் செய்வது பின் அதை வைத்து வீடியோ எடுத்து அவர்கள் மிரட்டி தன் ஆசைக்கு இணங்க வைப்பது. ஆசிரியர்களை மிரட்டுவது எப்படி ஏக பட்ட குற்றங்கள் அதை எல்லாம் தன் தந்தையின் பணம் மூலம் சரி கட்டி இருந்தான் ருத்திரன் எத்தனையே தடவை எச்சரிக்கை செய்தும் அடித்தும் ஏன் ஒரு முறை போலீஸ்ல் பிடித்து கொடுக்க ஆதாரத்தை அழித்து வெளியே வந்துவிட்டான். பின் மாறனை வைத்து மிரட்ட ஒழுங்காக இருப்பதாக நடித்து விட்டு மீண்டும் தன் லீலைகளை தொடங்கி விடுவான் அதனால் அவனை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து ருத்திரன், ஹரி நவீஷ் பாரினில் படிக்க போய் விட்டனர். இன்று அவனை வேறு வழி இல்லாமல் அழைத்து இருந்தனர் ஏன் என்றால் அவனும் பார்ட்டினர் மகன் எப்படி இருந்தாலும் குப்தா தொழில் விடயத்தில் நேர்மையான மனிதர் அதனால் தான் மாறன் அவரை தொடர்ந்து பார்ட்டினராக வைத்து இருந்தார்.



ராகேஷ் அவன் நண்பர்கள் ரிச்சி, மணிஷ் இருவரும் பிசினஸ் மேன் பசங்க அவர்களும் வந்து இருந்தனர் ருத்திரன், ஹரி, நவீஷ் மூவருக்கும் அவன் வந்தது பிடிக்கவில்லை தான் வந்தவரை வரவேற்கும் பண்பு காரணமாக நவீஷ் வரவேற்றான். ராகேஷ் எதிர் பார்க்கவில்லை அக்னியின் அழகை அவள் கம்பீரத்தை அவன் நினைத்தது ஏதோ ஒரு மாடன் பெண் என்று ஆனால் அக்னி ருத்திரனுக்கு ஏற்ற ஜோடியாக நின்றாள். காகித மலர்களை கண்டவனுக்கு பூஜைக்கு உரிய மலரை பார்த்து பிரமிப்பாக இருந்தது அதுவும் ருத்திரன் லவ் பண்ணி ஒரு குழந்தையும் இருப்பது அவனால் நம்ப முடியவில்லை. ராகேஷ் வந்து ருத்திரனுக்கு கை கொடுத்து வாழ்த்து சொன்னான் பின் அக்னியிடம் கையை நீட்ட அக்னி இரு கரம் குவித்து வணக்கம் சொன்னாள் ருத்திரனுக்கு சிரிப்பா இருந்து அவன் முகம் போன போக்கை பார்த்து பின் ஹரிக்கு வாழ்த்து சொல்ல நீதாவும் கரம் குவித்தாள். அக்னிக்கு ராகேஷ் பார்வை பிடிக்கவில்லை அவன் பார்வை தன்னை துகில் உருவதாக இருந்து என்ன தான் ருத்திரன் கூட கோபம் இருந்தாலும் அவன் பார்வை தன் கண்ணை தாண்டி பார்த்தது இல்லை இவன் யார் என்னை பார்க்க என்று வந்த கோபத்தை அடக்கினாள்.



பின் அனைவரும் மது அருந்துவது ,சிலர் ஜுஸ் என்று இருக்க DJ மியூசிக் ஒலித்தது. அனைவரும் டான்ஸ் ஆடி கொண்டு இருக்க ருத்திரனின் நண்பர்கள் ருத்திரன், ஹரி இருவரையும் கப்பிள் டான்ஸ் ஆட அழைத்தனர். ஹரி செல்ல ருத்திரனுக்கு யோசனையாக இருந்தது அக்னி வருவாளா என்று அக்னியை பார்க்க அவள் ஏதும் பேசாமல் வந்தாள். காரணம் பாட்டியிடம் ருத்திரன் சொல்வான் மற்றது பொது இடத்தில் அவனை அவமானப்படுத்த விரும்பவில்லை மியூசிக் ஒலித்தது அழகாக தமிழ் பாடல் ருத்திரனின் விருப்பதுக்கேற்ப ஒலித்தது.



உன் கைகள் கோர்த்து உன்னோடு போக

என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம்

உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து கண்மூடி வாழ

என் உள்ளம் அலைபாயுதே ஜயோ தடுமாறுதே



ருத்திரன் அக்னியின் இடையில் கை வைக்க அக்னிக்குள் ஒரு வேதியியல் மாற்றம் உருவானது. ருத்திரனின் தோளில் ஒரு கையும் மறு கை அவனின் கையோடு கை கோர்த்து நடனத்தை ஆரம்பித்து இருந்தனர்.



உன் கன்னம் மேலே மழை நீரைப் போல

முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே

நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு

எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே



ருத்திரன் அக்னியின் வலது தோளில் தன் முகத்தை வைத்து கைகளை அவளின் கைகளின் மேல் வைத்து அவளின் இடையை அணைத்தவாறு வயிற்றின் மேல் வைத்தான். அக்னியின் தேகம் நடுக்க ஆரம்பித்து.



ஒ பெண்ணே பெண்னே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன

உன்னை தந்தால் என்ன


ருத்திரன் அக்னியின் உடன் ஆடி கொண்டு இருக்க ராகேஷ் அக்னியை பார்த்தவாறு மது அருந்தி கொண்டு இருந்தான் ஹரி நீதாவுடன் ஆடி கொண்டு இருந்தான்.



ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே

இந்த நதி வந்து கடல் சேருதே

வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள்

செய்வேனே அது உனைச் சேர ஒளி வீசுதே


அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண் மீனிலே

வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே

இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே

ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே



ருத்திரன் அனைவரும் முன்பும் ஒற்றை காலை மடக்கி அமர்ந்து தன் வலது கையை நீட்டினான் அக்னியின் இடது கையை ஏந்த. அக்னியும் தன்னை அறியாமல் கையை கொடுக்க அதை பற்றி ஐ லவ் யூ இனி யூ ஆ மை லவ் இன் மை லாஸ்ட் பிரித் என்று கூறி மிக அரிதாகவே கிடைக்கும் பேன்சி வண்ணங்களை கொண்ட வைரத்திலான மோதிரத்தை அவளின் கையில் அணிவித்தான். இந்த நிறம் பச்சை, நீலம், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, இளஞ்சிவப்பு வண்ணங்கள் தான் பேன்சி வண்ணம் என்று குறிப்பிடுவார்கள். அழகான டிசைன் ஏ அன்ட் ஆர் தங்கள் முதல் எழுத்தை இணைப்பது எஸ் என ஷிவி என்று வடிவமைத்து இருந்தான் தன் டிசைனரை கொண்டு அனைவரும் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க ருத்திரன் வித் யூ வே ஏ பெர்மிஷன் என கேட்க அக்னி தலை அசைக்க அவள் கரம் பற்றி முத்தமிட்டான். அவர்கள் இருவரும் மேலும் மேல் இருந்து ரோஜா பூ இதழ்கள் விழுந்தது. ஹரி, நீதா, நவீஷ் மூவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது காரணம் ருத்திரன் அக்னியின் போர் பற்றி அறிந்தவர்கள் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தா தான் நன்றாக இருக்கும் என நினைக்கும் அன்பு உள்ளங்கள்.



பின் அனைவரும் பார்ட்டி நிறைவு அடைய நன்றி சொல்லி கட்டாயம் திருமணத்திற்கு வர வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டு சென்றனர் பின் ருத்திரன் அக்னி ஒரு காரிலும் ஹரி நீதா ஒன்றிலும் நவீஷ் அப்படியே தான் ஹாஸ்பிட்டில் செல்ல வேண்டும். என சென்று இருக்க தனிமை பயணமாக இருந்தது அது ஹரி நீதாவுக்கு இனிமையான பயணமாகவும் ருத்திரன் அக்னிக்கு சங்கடமாகவும் இருந்தது அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். சிவகாமி தன் பேத்திகளுக்காக காத்து இருக்க அவரிடம் விடை பெற்று ருத்திரன், ஹரி சென்றனர்.



ஷிவி அன்னையை தேடி அழுது விட்டு உறங்கி இருந்தாள் சிவகாமி அறையில் இருந்து அவளை தூக்கி கொண்டு அக்னி செல்ல மற்றவர்களும் உறங்க சென்றனர் அக்னி ஷிவியை பெட்ல் படுக்க வைத்து விட்டு தன் உடையை மாற்றி நைட் டிரஸ் அணிந்து வந்து பெட்ல் அமர்ந்து இன்றைய நிகழ்வுகளை நினைத்து பார்த்தாள். தான் எப்படி ருத்திரனை நெருங்க விட்டோம் என்று ஏன் ருத்திரன் தொட்டவுடன் தன் உடல் சிலிர்க்க வேண்டும். நான் எப்படி மாறி போனேன் ஆண்களை பார்க்காதவளா நான் தினமும் ஒரு போராட்டம் என் வாழ்வில் பிசினஸ்சில் எவ்வளவு பேருடன் கதைத்து இருக்கிறேன். அடித்து இருக்கிறேன். ஏன் இந்த மாற்றம் என்னில் அதுவும் என் எதிரி உடன்,என் அக்கா சாவுக்கு காரணம் அவன் அண்ணன். அவன் பார்க்காத பெண்களா ஏன் அவனை என்னை தொட அனுமதித்தேன் என்று யோசித்து கொண்டு இருந்தாள்.



அக்னி ஒன்றை மறந்து விட்டாள் மனம் ஒருவரை ஏற்றால் தான் உடல் தொடவிடும் அதுவும் கூறுவார்களே மஞ்சள் கயிற்றின் மாயம் என்று இதை தான் போல் கணவனாக நினைத்து தான் ருத்திரனை அக்னி நெருங்க விட்டாள் இந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்தால் நிச்சயம் அடித்து பின்னி இருப்பாள். பொதுவாக தமிழ் பெண்கள் தாலிக்கு கொடுக்கும் மரியாதை தாலி பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் வேலி தான் இந்த தாலி என்ற பந்தமே இருவரையும் இணைக்கிறது. அக்னியும் தமிழ் மரபில் வந்தவள் அவளையும் மஞ்சள் கயிறு மாயம் செய்ய ஆரம்பித்தது. உரிமை இருந்தும் சொன்ன வாக்குகாக ருத்திரன் அவளை தொட அனுமதி கேட்ட பிறகு டான்ஸ் ஆடி மோதிரம் போட்டான் அக்னி அவனின் நினைவுடன் தூங்கினாள்.



இங்கு ருத்திரன் பிரமிப்பு மாறாமல் தன் ரூம்மில் அமர்ந்து இருந்தான் இன்று அக்னி நடந்தது கொண்ட விதம் அவனுக்கு நம்பிக்கையை விதைத்து இருந்தது அவள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று அவளின் நினைவுடனே ருத்திரனும் தூங்கினான். இங்கு தூங்காமல் ஒருவன் அக்னியை அடைய காத்து இருந்தான் அவன் ராகேஷ் இன்று அக்னியை பார்த்த பின்பு தனக்கு அவள் வேண்டும் என்று தீர்மானித்து அதற்குரிய வழிகளை ஆராய்ந்தான். அதன் முதல் கட்டமாக தன் தங்கை சீமாவை இந்தியா வர சொன்னான் காரணம் அவளுக்கு மூளை அதிகம் ஒருவரை அழிக்க எந்த எல்லை வரையும் போவாள். தன்னால் ருத்திரன் உடன் தனியாக மோத முடியாது இது அவனின் ராஜ்ஜியம் மேலும் அவனுக்கு தெரிந்தால் தன் உயிர் உடலில் தங்காது அதனால் சீமாவை வரவழைத்தான். இது எதுவும் தெரியாமல் தன்னை ஒருவன் அடைய கட்டம் கட்டி இருப்பதை அறியாமல் அக்னி தூங்கி கொண்டு இருந்தாள்.





தீ மலரும்…..









இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 
மறுநாள் காலை பைரவி மாறனிடம் வந்து இன்று நலங்கு வைப்பதற்கும் இரவு மெஹந்தி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்து உள்ளதாகவும் கூறினாள் சில சொந்தகாரர்கள் வருவதாகவும், ப்ரண்ட்ஸ் சிலர் வருவதாகவும் ருத்திரனுக்கு இங்கும் அக்னிக்கு அங்கு ஏற்பாடு செய்து உள்ளதாகவும் கூறினாள் அதற்கு. மாறன்




பைரவி மா எல்லாம் சரி ஆனால் அவங்க சொந்தகாரர்கள் சென்னையில், பெரிதாக இதற்கு எல்லாம் வர மாட்டார்கள் நீ அக்னி இருக்கு இடத்திற்கு ருத்திரனை கொண்டு போ யாரும் இப்ப பெரிதாக இதை பார்க்க மாட்டார்கள். இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து நலங்கு செய்யலாம் அக்னி தனியாக இருப்பா மா என்றார். பைரவியும்



நானும் இதை தான் நினைத்தேன் மாமா பிறகு யாரும் ஏதும் சொல்வாங்களோ என்று தான் இதை அரேன்ஸ் பண்ணினேன் என. மாறன்




பைரவி பேசுகிறவங்க பேசி கொண்டு தான் இருப்பாங்க நீ நான் சொன்னதை செய் யாரும் கேட்டால் என்னை வந்து பார்க்க சொல்லு மற்றதை நான் பார்க்கிறேன் என.பைரவி



சரி மாமா நான் போய் ஏற்பாடுகளை பார்க்கிறேன் என்று கூறி சென்றாள் சிவகாமியிடமும் கூறி விட்டு அக்னியை தயார்படுத்த சொன்னாள் பின் ருத்திரனை தயார் ஆகும்மாறு கூறி விட்டு சென்றாள். ருத்திரனை காண ஹரி நவீஷ் வந்தனர் ருத்திரன் தன் அறையில் தயார் ஆகி கொண்டு இருந்தான் அவர்கள் சில சடங்குகளை மும்பை வழக்கபடியே ஏற்பாடு செய்து இருந்தனர்.



அங்கு வந்த ஹரி நவீஷ் ருத்ரனிடம் பேசி கொண்டு இருக்கும் போது நவீஷ் யோசனையாக இருக்க ருத்திரன் அதை பார்த்து விட்டு என்ன என்று கேட்க முதலில் ஒன்று இல்லை என்று மறுக்க ருத்திரன் வற்புறுத்தி கேட்க .நவீஷ்



அது டா நீ ராகேஷ் பற்றி என்ன நினைக்கிற என்று கேட்க. ஹரி



ஏன் டா நல்ல நேரத்தில் அவனை பற்றி பேசற என.நவீஷ்



இல்லை ஹரி இது இம்பாட்டன் மேட்டர் டா என. ருத்திரன்



நவீ என்ன மேட்டர் சொல்லு டா என்றான் .நவீஷ்



அது ராகேஷ் அக்னியை பார்க்கும் பார்வை சரி இல்லை என . ருத்திரன் வாட் என கோபத்துடன் எழ ஹரி ருத்திரா காம் டவுண் என்று கூறி முதலில் நவீ விஷயத்தை சொல்லு என்றான்.




நேற்று பார்ட்டி முழுவதும் அவன் அக்னியை தான் பார்த்து கொண்டு இருந்தான் நானும் அது எதார்த்தமா நடந்தது என்று தான் நினைத்தேன் பட் நேற்று பார்ட்டி போட்டோக்களை, போட்டோகிராபர்கள் இடம் கேட்டு இருக்கிறான் அதுவும் அதில் உள்ள ஒருவனை அடித்து மிரட்டி அக்னியின் போட்டோவை மட்டும் பெரிதாக்கி வாங்கி இருக்கிறான். அவன் இப்ப நம்ம ஹாஸ்பிட்டிலில் தான் டிரிட்மெண்ட் எடுக்கிறான் அவன் சொல்லி தான் எனக்கு நேற்றைய விஷயம் விளங்கிறது என்றான். ருத்திரன் ருத்திரஅவதாரம் எடுத்து நின்றான் ராகேஷ்யை சம்ஹாரம் செய்ய. ஹரி



ஏய் ருத்திரா பொறு டா எங்களை மீறி அவனால் ஏதும் செய்ய முடியாது. நீ இப்ப நலங்குக்கு ரெடியாகு நானும் நவீயும் இதை பார்க்கிறோம். ருத்திரனும் கோபத்தை அடக்கி கிளம்ப தயார் ஆனான் பின் அனைவரும் அக்னி இருக்கு பேலஸ்க்கு சென்றனர்.



அக்னி மஞ்சள் நிற பாவாடை தாவணியில் மஞ்சள் சிறிய ரோஜா பூ டிசைனில் வெள்ளை முத்துகளால் ஆன ஆபரணம் அணிந்து கூந்தலை பிஷ் டெயில் பிளைட்ஸ் ஹேர் ஸ்டைலில் நம் வழக்கில் ஆயிரங்கால் ஜடை என்று சொல்வார்கள் அப்படி கூந்தலை பின்னி நடு நடுவே முத்துக்களால் அலகரித்து இருந்தனர் பார்லர் ஆட்கள் இது எல்லாம் பைரவியின் ஏற்பாடுகள் ருத்திரன் மஞ்சள் நிற குர்தாவில் வந்தான். பைரவி ஹாலின் மேடை அமைத்து அதனை அலங்கரித்து இரு சிறு மேடைகள் அவர்கள் அமர்வதற்கு போட்டு இருந்தால் ருத்திரன், பைரவி வந்து அமர்ந்தனர் ஷிவி ருத்திரன் கூடவே அமர்ந்து இருந்தாள். அவளுக்கு ருத்திரன் மஞ்சள் நிற பிராக் எடுத்து வந்து கொடுத்து இருந்தான் அவளை தன் மடியில் வைத்து இருந்தான் சிவகாமி எவ்வளவு சொல்லியும் தன் பெண் தன் கூடவே இருக்கட்டும் என்று சொல்லி இருந்தான். ஜெயராம்,அபி ,மயூரி வந்து இருந்தார்கள் ருத்திரன் தான் அவர்கள் வருவதுக்கு வற்புறுத்தி தன் பிரைவெட் சார்ட்டர் பிளேனில் வரவழைத்து இருந்தான்.



முதலில் நலங்கு வைக்க ஒரு சுமங்கலி பெண்னை அழைத்தனர் மாறனின் பக்கம் இருந்து அவரின் பெரியம்மா முறை உள்ள ஒருவர் வந்து ஆரம்பித்து வைத்தார் பின் பைரவியை நலங்கு வைக்க அழைக்க பைரவியின் அண்ணன் மனைவி கலா அவளுக்கு பைரவியை பிடிக்காது. ஏன் என்றால் அவள் மாறன் வம்சத்தில் திருமணம் முடித்தது அவளுக்கு இங்கு உள்ள மரியாதை இது எல்லாம் அவளுக்கு பொறாமை தீயை உருவாக்கி இருந்தது. அதேபோல்தான் பைரவியின் அக்கா சுமதிக்கும் அவளை பிடிக்காது காரணம் தன் புகுந்த வீட்டில் கட்டாடுகள் அதிகம் இங்கு இவள் சுதந்திரமாக வாழ்கிறாள் என்ற எண்ணம் தன் தங்கையை எதிரியாக நினைக்க வைத்தது. கலா, சுமதி இருவருக்கும் ஒத்துபோகாது ஆனால் பைரவியை அவமானபடுத்த ஒன்று சேர்ந்தனர். பைரவிக்கு தாய் இல்லை அவள் திருமணம் முடித்த பிறகு இறந்து விட்டார் தந்தை வரவில்லை திருமணத்திற்கு வருவதாக கூறினார் பைரவியை அழைக்க பைரவி நலங்கு வைக்க செல்ல. கலா



பைரவி என்ன செய்கிறாய் ஏன் உனக்கு தெரியாதா இதை பற்றி என்று கேட்க. பைரவி கேள்வியாக பார்க்க. சுமதி



ஏன் பைரவி உனக்கு தெரியாதா உனக்கு தான் குழந்தை இல்லை பிறகு நீ வைத்தால் அவங்க வாழ்க்கை நல்லா இருக்குமா ஏன் நீ இதை யோசிக்கவில்லை என்று அத்தனை பேர் முன்னாடியும் கேட்க பைரவி கூனி கூறுகி கண் கலங்கி நின்றாள் .அப்போது அங்கு இருந்த இன்னுமொரு பெண்



அது தானே பைரவி உனக்கு தான் ஐந்து வருஷமாக பிள்ளை இல்லை தானே நீ இப்படி பட்ட விஷயத்திற்கு முன்னே வரலாமா என கேட்க .கலா



அது எப்படி அவளுக்கு தெரியும் அவள் தான் இதை பற்றி கவலை படாமல் இருக்கிறாள் மற்றவங்க தானே சொல்ல வேண்டும் என. மாறனின் உறவு பெண்




இதை தான் மாறனிடம் நான் சொன்னேன் சர்வினுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வை என்று கேட்டானா இல்லை இவள் மட்டும் தான் என் மூத்த மருமகள் என்றான் இப்ப சபையில் அசிங்கபடுவது அவன் குடும்பம் தான் என்றார்.


ருத்திரன் கோபத்துடன் எழ போக ஹரி அவனை பிடித்து வைத்து இருந்தான் அப்போது தான் மாறன், சர்வின் உள்ளே வந்தனர். அவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது. சிவகாமி, அபி, நீதா, நவீ, ஜெயராம் அனைவரும் செய்வதறியாது நின்றனர். பைரவி அழுதவாறு மேடையை விட்டு இறங்க போக, நில்லுங்கள் அக்கா என்று அழைத்தவாறு அக்னி எழுந்தாள் எங்கே போறீங்க என கேட்க. பைரவி



அது மா அவங்க வைக்கட்டும் அவங்க சொல்வது சரி தானே என்றாள். அக்னி




ஏன் அக்கா பொய் சொல்கிறீங்க உங்களுக்கு தான் பிள்ளை இருக்கே என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க. ருத்திரன் இவள் ஷிவியை சொல்கிறாளா என பார்க்க அக்னி ருத்திரனை காட்டி



ஏன் இவர் உங்க பிள்ளை தானே அப்படி தான் இத்தனை நாளாக வளர்த்தீங்க பிறகு நீங்க ஏன் மற்றவங்க சொல்வதை கேட்கிறீங்க என்றாள். பிறகு கலா பக்கம் திரும்பி உங்களுக்கு எத்தனை பசங்க என்று கேட்க ஒரு பெண்ணு என. நீ ஒரு அம்மா வா இதையே மாதிரி உன் பெண்ணு நின்றால் உனக்கு அந்த வலி தெரியும். சுமதியை பார்த்து ஒரு அக்கா அம்மாக்கு சமம் நீ சீ அவங்க கூட சேர்ந்து உன் சொந்த தங்கச்சியை அவமானபடுத்த இப்படி மனசு வந்தது. குழந்தை பெத்தா மட்டும் அம்மா இல்ல உள் அன்போடு எவர் ஒருவர் மற்றவங்களுங்கு அன்பு காட்டுகிறாங்களே அவங்க தான் அம்மா. ஏன் அன்னை தெரசா அவங்க என்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெற்றவங்களா உலகமே அவங்களை அன்னை என்று தான் அழைக்கிறது ஒன்று தெரியுமா மனதால் எவர் ஒருவருக்கு அன்பை காட்ட தெரியாதே அவங்க தான் குழந்தை இருந்தும் பாக்கியம் இல்லாதவங்க கலா இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் நீங்க பைரவி அக்காவை மட்டும் இல்லை எவருக்கும் இப்படி பேசாதீங்க நீங்க அக்காவோட அண்ணி என்று தான் இதோடு விட்டேன் இல்லை. நீங்க வேற அக்னியை பார்த்து இருப்பீங்க.



கலா சும்மா இல்லாமல் ஏன் அக்னி நீ கூட கல்யாணம் பண்ண முன்னாடி குழந்தை பெற்றவள் தானே அது தான் இவளுக்கு சப்போர்ட் பண்ற என .அக்னி



ஆ நான் என் புருஷனுக்கு தான் என் பெண்ணை பெத்தேன் வேறு யாருக்கும் இல்லை இது என் பெர்சனல் இதை பார்க்க வேண்டியது நீ இல்லை என் குடும்பம் என்றாள் கலா பேச வர பைரவி



போதும் அண்ணி நீங்க நிறையவே பேசி விட்டீங்க நீங்க யாரு என் பெண்ணை பற்றியும், பையன் பற்றியும் பேச ஷிவி என் குடும்ப வாரிசு என் பையன் பெண்ணு எனக்கும் பெண்ணு தான். இதை நான் அப்பாவுக்கு சொன்னால் நினைத்து பாருங்கள் உங்க நிலமையை நீங்க எப்படி வந்தீங்க என்று பழையதை நினைத்தால் இப்படி பேச மாட்டீங்க தயவு செய்து கிளம்புங்க வந்தவங்களை போக சொல்ல கூடாது தான் ஆனா உங்களை தாராளமாக சொல்லலாம் என்றாள்.



கலா கோபத்துடன் போக அவள் பின்னால் சுமதியும் போனாள் பைரவி விரக்தியாக சிரித்தாள் தன் உறவுகளை நினைத்து அக்னி பைரவியின் கையை பிடித்து அக்கா வாங்க வந்து நலங்கு வைங்க என அழைக்க பைரவி தயங்க. ருத்திரன்



பாபி நான் உங்க பையன் என்றா எனக்கும் என் வொய்ஃப்க்கும் நலங்கு வைங்க என பைரவி சிரித்தவாறு சென்று நலங்கு வைத்தாள் பின் அனைவரும் வைத்து முடிய ருத்திரன் அக்னி சிவகாமி, மாறன், ஜெயராமிடம் ஆசிர்வாதம் வாங்கினர். அக்னி



அக்கா வாங்க என அழைக்க பைரவி நானா மா வேண்டாம் என மறுக்க அக்னி



நீங்களும் எனக்கு அம்மா தான் வாங்க அக்கா என்றாள் பைரவி கண் கலங்கியவாறு வர ருத்திரன் அண்ணா வா அண்ணா நீ எனக்கு அப்பா மாதிரி என அழைக்க சர்வினும் கண் கலங்கி வந்தான் அக்னி, ருத்திரன் இருவரும் ஆசிர்வாதம் வாங்கினர். அக்னி சர்வின் மீது கோபம் இருந்தாலும் அவள் அவனை எப்பொழுதும் அவமானபடுத்த விரும்பவில்லை காரணம் அவனுக்கும் ஏதும் நினைவில்லை. பின் அக்னி



அபியிடம் அண்ணா நீ எனக்கு அப்பா போல அண்ணா என்னுடைய எல்லா கஷ்டத்திலும் இருந்தவன் நீ எனக்கு ஆசிர்வாதம் பண்ணு அண்ணா என்றாள். அபி



பதறி போய் நீ என் குட்டி மா டா என் பாப்பா நீ எப்பவும் நல்லா நூறு வருஷம் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றான் .



பின் ருத்திரன், அக்னி இருவரையும் சென்று உடை மாற்றி வந்தனர் அனைவரிடமும் விடை பெற்று மாறன்,ருத்திரன், ஹரி, நவீஷ் செல்ல பைரவி மற்றும் சொந்தகார பெண்கள் சிலர் இருந்தனர். இரவு மெஹந்தி பங்க்ஷன் என்ற படியால் இரவு இன்னுமொரு கலகலப்பு இருக்கு செல்லம்ஸ்.




தீ மலரும்…….







இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 



அத்தியாயம்- 43




ருத்திரன் தன் பேலஸ்க்கு வந்ததும் ஹரி, நவீஷ் அவன் ஆபிஸ் ரூம்க்கு வந்தனர் ருத்திரன் ஹரியை பார்க்க. ஹரி




“ருத்திரா மேட்டர் வேற மாதிரி போகிறது டா” என்றான். ருத்திரன்



“என்ன சொல்கிற ஹரி நம்ம இன்பார்மர் என்ன சொன்னான்” என கேட்க. ஹரி



“ருத்திரா சீமா இந்தியாவிற்கு வாரா எவ்வளவு நாள் வராது இப்ப ஏன் வரா தெரியுமா ராகேஷ் வர சொல்லி இருக்கிறான். சம் திங் ராங் அது மட்டும் இல்லை டா அக்னியின் டீட்டெல் கலெக்ட் பண்ண சொல்லி சென்னைக்கு தன் ஆள் ஒருவனை அனுப்பி இருக்கிறான்” என. நவீஷ்



“அது மட்டும் இல்லை ருத்திரா உனக்கும் அவளுக்கும் எத்தனை வருஷ பழக்கம் ஷிவி எங்கே பிறந்தாள் அக்னி சொந்தகாரர்கள், எதிரிகள் என அவள் மொத்த டீட்டெல் கலெக்ட் பண்ணி இருக்கான்” என்றான் ருத்திரன் கை மூஷ்டி இறுக கண்கள் சிவக்க ஹரியை பார்த்து




“எவ்வளவு தைரியம் இருந்தால் என் வொய்ஃப் பற்றி டீட்டெல் கலெக்ட் பண்ணி இருப்பான். அவனுக்கு ருத்திரன் யார் என்று காட்ட வேண்டும் டா” என்றான். ஹரி



“ருத்திரா இப்போ வேண்டாம் நாளைக்கு கல்யாணத்தை வைத்து விட்டு பிரச்சினை வேண்டாம் எல்லாம் முடியட்டும் பிறகு பார்ப்போம். இப்போ வா நமக்கு கல்யாண வேலைகள் இருக்கு நானும் நவீயும் கிளம்புறோம். நீ டென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸா இரு பார்லர் ஆட்கள் வருவாங்க வேணாம் என்று சொல்லாமல் மேக்கப் செய் நாங்க வருகிறோம்” என்று கூறி சென்றனர்.



ருத்திரன் அக்னி திருமணம் அவர்கள் வழக்கபடியே பேலஸ்ல் வைத்து இருந்தனர் நெருங்கிய உறவு தவிர பெரிதாக யாரும் வர மாட்டார்கள் ரிசப்ஷன்னுக்கு தான் எல்லோரும் வருவார்கள் அதனால் பேலஸ்லில் திருமணத்தை வைத்து இருந்தனர். கிட்டத்தட்ட அந்த ஹாலில் ஐயாயிரத்திற்கு அதிகமாக ஆட்களை இருக்கதக்க வகையில் அமைந்திருந்தது தரை முழுவதும் பாரினில் இருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. நடுவில் மேடை அமைத்தது சுற்றி வர சிவப்பு, வெள்ளை உயர்தர ரோஜாக்களால் முத்துகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது சென்ட்ரல் ஏசி குளிர் பிரதேசமாக ஹாலை மாற்றி கொண்டு இருந்தது. குஷன் இட்ட வெள்ளை நிற சோபாக்கள் இடைவெளி விட்டு ஆட்கள் அமர்வதற்கு போடப்பட்டு இருந்தது. மேலே உயர் ரக விளக்கு கள் தொங்கி கொண்டு இருந்தது அந்த இடம் தேவலோகத்தை தோற்கடிக்கும் விதமாக மாறன் தன் மகனின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் பண்ணி இருந்தார்.



அக்னி மெஹந்தி பங்ஷனுக்கு தயார் ஆகி கொண்டு இருந்தாள் பைரவி மும்பையில் டாப் பார்லரில் இருந்து ஆட்களை வர சொல்லி இருந்தாள் அக்னி பப்பிள் நிற பாவாடை சட்டை தாவணி குங்கும நிற கலரில் அணிந்து இருந்தாள் பார்லர் ஆட்கள் வந்தவுடன் தங்கள் வேலையை தொடங்கினர். அங்கு இருந்த சிலரையும் தவிர அனைவரும். மெஹந்தி போட்டு கொண்டனர் அங்கு இருந்த மாறனின் சொந்தகார இளம் பெண்கள் டான்ஸ் இல்லாமல் மெஹந்தியா என்று டான்ஸ் ஆட தொடங்கினர். அதுவும் நம்ப தமிழ் பாட்டுக்கு அவர்களுடன் ஷிவி, மயூரி, நீதாவும் ஆட தொடங்கினர் சிவகாமி இதை எல்லாம் ரசித்து கொண்டு இருந்தார். பைரவி அக்னி அருகில் இருந்து அவளுக்கு பிடித்த டிசைனில் மெஹந்தி போட சொன்னாள்.



யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்



ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு



தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க

சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ

முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க

முத்தமிட்டு எங்கே தொடுங்க

மொத்தமாக சொல்லிக் குடுங்க

சொல்லி குடுங்க குடுங்க குடுங்க குடுங்க

கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா

கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா



என்று பாடலுக்கு டான்ஸ் ஆடி கொண்டு இருந்தனர் மெஹந்தி வைக்கும் பெண் வருங்கால கணவணின் முதல் எழுத்தை கேட்க அக்னி தேவ் என்று கூறி டி முதல் எழுத்து என்றாள். பைரவி சிரித்து விட்டு



“அக்னி அவங்க நீ ருத்திரனை கூப்பிடும் செல்ல பேரை கேட்க இல்லை அவனின் பெயரை கேட்டாங்க என்று கூறி ஆர்” என்று கூறினாள் பார்லர் பெண் அதனை டிசைன் நடுவே போட்டாள். பின் அனைவரும் மெஹந்தி போட்டனர் ஷிவியும் தனக்கும் என்று பிடிவாதம் பிடித்து போட்டாள் பின் அனைவரும் விடை பெற்று கிளம்ப பைரவியும் அக்னியை நேரத்துக்கு தூங்கும் மாறு கூறி விட்டு சென்றாள்.



ஷிவியை மயூரி தானும் நீதாவும் பார்த்து கொள்வதாகவும் அக்னி கை,கால் எல்லாம் மெஹந்தி போட்ட படியால் ஷிவியை பார்த்து கொள்ள முடியாது என்று அவளை அழைத்து சென்றனர் அக்னி சிவகாமி ரூம்க்கு சென்றாள். சிவகாமி



“வா மா அக்னி ஏன்டா இன்னும் தூங்கவில்லையா” என்று கேட்க அக்னி சிவகாமி மடியில் தலை வைத்து படுத்தாள். அவளின் மனநிலை உணர்ந்து அவளின் தலையை தடவிய படி இருக்க “பாட்டி நீ என் கூட வந்து இரு” என்றாள். சிவகாமி சிரித்து விட்டு



“பெண் கூட அவள் வீட்டிற்கு யாரும் போய் இருக்க மாட்டாங்க மா நான், உன் அம்மா அப்படி தான் இருந்தோம் அது மட்டுமல்ல என் புருஷன் வாழ்ந்த வீட்டில் தான் என் கடைசி காலம் கழிக்க வேண்டும் என்று என் ஆசை மா அபி மயூ கல்யாணம் பண்ணி வரப்போ நான் என் பேரன் கூட இருக்கிறது தான் முறை… பாவம் மா அவன் தனக்கு யாரும் இல்லை என்று வருத்தப்படுவான் உன் கல்யாணம் முடிந்து இன்னும் மூன்று நாளில் நீதா கல்யாணம் இருக்கு அதையும் நல்ல படியாக முடித்து விட்டு நாங்க சென்னைக்கு போனால் தான் அபி கல்யாணம் பண்ண சரியாக இருக்கும்… பிறகு உனக்கு, நீதாவுக்கு பாப்பா பிறக்க பாட்டி உங்களை பார்க்க வருவேன் இப்ப நீ எதையும் யோசிக்காமல் தூங்கு மா நாளைக்கு அப்போ தான் பிரஸ்ஸாக இருக்க முடியும்” என்று தலையை தடவி விட அக்னி கண்ணீர் உடன் தூங்கி போனாள் சிவகாமி அவளை பார்த்தவாரே கண் கலங்கியவாறு தூங்கினார்.



காலை எழுந்து அக்னி தன் காலை கடமைகளை முடித்து விட்டு ஈர கூந்தலை ஹேர் ட்ரையர் கொண்டு உலர்த்தி கொண்டு இருந்தாள் அப்போது மயூரி வந்து பார்லரில் இருந்து ஆட்கள் வந்து விட்டார்கள் என கூறினாள் நீதா ஷிவிக்கு உடை மாற்றி கொண்டு இருந்தாள். அவளுக்கு ருத்திரன் தான் ஸ்பெஷல் டிசைன் பண்ணிய தங்க நிற பாவாடை குங்கும நிற சட்டை எல்லாம் தங்க நூல்களை கொண்டு செய்வித்து இருந்தான் அதற்கு ஏற்றாற்போல் ரூபி கற்கள் கொண்டு பூக்கள் டிசைன் நகைகள் செய்து அனுப்பி இருந்தான். அக்னி குங்கும நிறமும் தங்க நிறமும் கலந்த பட்டு புடவை உடுத்தி வைர ஆபரணங்கள் போட்டு அழகாக இருந்தாள் கூந்தலை பின்னி சிவப்பு, வெள்ளைநிற பூக்களில் தங்கம், முத்து கலந்து கூந்தல் அலகரித்து இருந்தனர். வைர நெற்றி சூட்டி, மூக்குத்தி, நெக்லஸ் வைரபதக்கம், வைர வங்கி, ஒட்டியாணம், காசு மாலை, ஜிமிக்கி, வளையல்கள் என அனைத்தும் வைரத்தில் அணிந்து தங்க கொலுசு அணிந்து நடந்தது வந்தபோது சிவகாமி அழுது விட்டார். காரணம் தன் மகள் பவித்திராவை பார்ப்பது போல் இருந்தது ஜெயராமும் கண் கலங்கியவாறு இருந்தார். தன் மருமகள் நினைவில் அபிக்கு தன் தங்கை தானா இது என்று நினைத்து இன்னும் சிறிது நேரத்தில் அவள் வேறு ஒருவர் சொத்து என்ற நினைவில் கண் கலங்கினான். அப்போது தான் வந்து இறங்கினான் ஜெய் அவசரமாக தங்கையை பார்த்து மகிழ்ச்சி அடைத்தான் காளி தன் தாயிக்கு நல்ல படியாக வாழ்க்கை அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டினான்.



இன்னும் ராஜதுரை வரவில்லை வந்து கொண்டு இருப்பதாக தகவல் வந்தது காரணம் மேனகா வேண்டும் என்று கடைசி நேரத்தில் லேட்டாக வர பிளான் பண்ணினாள். ஷிவி “மம்மி யூ ஆ சோ பியூட்டிபுல்” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டாள். பின் அக்னி தன் தாத்தா, தாய், அக்கா படங்களின் முன்னால் விழுந்து வணங்கினாள். பின் சிவகாமி, ஜெயராம், அபி ஜெய்டமும் ஆசி பெற்று காளியிடம் வர அவன்



“தாயி என்ன இது நான் உங்க சேவகன் தாயி நீங்க போய் என் கிட்ட” என்று பதற .அக்னி



“நீங்க என் அண்ணா தான் உள் அன்போடு தான் நான் அந்த வார்த்தை சொன்னேன் என்னை ஆசிர்வாதம் பண்ணு அண்ணா” என்றாள். காளி கண் கலங்கி



“நீங்க நூறு வருஷம் தீர்க்க சுமங்கலியாக இருக்கனும் தாயி” என்றான் பின் அனைவரும் ருத்திரனின் பேலஸ்க்கு சென்றனர். பைரவி ஆரத்தி எடுத்து வரவேற்றாள் பின் அக்னி அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள் சிறிது நேரத்தில் அக்னியை அழைத்து சபை நடுவே அவர்கள் வழக்கபடியே மாறன் தன் மனைவி ரத்னாவின் பாரம்பரிய நகைகளை வைடூரியம் பதிக்கப்பட்ட நகைகள் கொடுத்தார் ஏனெனில் பைரவிக்கு தோஷம் இருந்தது அதனால் அவளால் ரத்னா நகைகளை அணிய முடியவில்லை. ஏன் அவரின் வைர முகப்பு பதித்த தாலி கூட அணிய முடியவில்லை அதனால் அவளுக்கு மாறனின் தாய்யின் நகைகள், தாலியை கொடுத்தனர் பின் அவளுக்கு தோஷ நிவர்த்தி செய்து தான் அவர்களின் திருமணம் நடைபெற்றது. அதனால் தான் அக்னிக்கு ரத்னாவின் நகைகள், தாலி என்று அனைத்தும் புது மெருகூட்டி வந்தது இதில் பைரவிக்கு சிறிதும் வருத்தம் இல்லை அக்னியை அவள் தன் மகளாக பார்க்கும் நல்ல இதயம் கொண்டவள் பின் முகூர்த்த புடவை கொடுத்து அக்னியை அழைத்து சென்றனர். புடவை மாற்றி வர, ஷிவியை ருத்திரன் அருகில் வைத்து கொண்டு இருந்தான் அவளுக்கு ரத்னா மாதிரி புகை எல்லாம் அலர்ஜி அதனால் அவளை மறைத்த வாறு இருந்தான். ருத்திரன் இண்டோ வெஸ்டர்ன் வடிவமைப்பில் உள்ள ஷெர்வாணி இது நவீன மாடல் மட்டும் இன்றி அவர்களின் ராஜவம்சத்திற்கு ஏற்றவாறு இருந்தது. கிழே மெரூன் பட்டு வண்ணபேண்ட், மேலே தங்க நிற பட்டில் ஆனா மேற்சட்டை தங்கநிற மணிகள், கற்கள் கொண்டு பட்டன்கள், தலையில் பட்டிலான தங்க நிற தலைப்பாகை அணிந்து வைர பதக்கம், மோதிரம் பிரேஸ்லெட், வாட்ச் என அணிந்து ராஐ குமாரனாக இருந்தான்.




அருகில் ஹரி நவீஷ் இருந்தனர் அவர்களும் ஷெர்வாணியில் இருந்தனர் ஐயர் சொல்லும் மந்திரத்தை ருத்திரன் திருப்பி சொல்லி கொண்டு இருந்தான் இன்னும் ராஜதுரை வரவில்லை. அக்னியை தாரைவார்த்து கொடுப்பதற்கு நேரம் ஆகி கொண்டு இருந்தது. ஜெயராமும், சிவகாமியும் செய்வதறியாது நின்றனர் அபி, ஜெய் கோபத்துடன் நின்று இருந்தனர். ஏன் என்றால் தந்தை இருக்கு போது அவர் தாரைவார்த்து கொடுப்பது தான் அக்னிக்கும் , ருத்திரன் குடும்பத்திற்கும் மரியாதை அதனால் தான் அவரை அனைவரும் எதிர்பார்த்தபடி நின்றனர் ராஜதுரை வருவாரா பார்ப்போம் செல்லம்ஸ் நோ டென்சன் நாளைக்கு அக்னி ருத்திரன் கல்யாணம் நல்லபடியாக முடியும் கட்டாயம் அனைவரும் வர வேண்டும்.




தீ மலரும்.......





இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 



அத்தியாயம் - 44



அக்னி புடவை மாற்றி விட்டு வந்தாள் மெரூனும் தங்கநிற நூல் கொண்டு கொடி கொடியாக தங்க நிற பூக்களால் ஜொலிக்கும் படி இருந்தது முந்தானை முழுவதும் தங்க நிறமும், கற்கள் கொண்டு நெய்யப்பட்ட புடவை ,பொருத்தமான நகைகள் அக்னியை ரதி என காட்டியது. ருத்திரன் அக்னியை கண் இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருக்க ஹரி அவனின் தோளில் தட்டினான்…அக்னி வந்து ருத்திரன் அருகில் அமர வைக்கப்பட்டாள் பின் சில சடங்குகளை செய்து விட்டு ஜயர் தாரை வார்த்து (கன்னிகா தானம்)கொடுக்க அழைக்க மாறன் பைரவி சர்வினை போக சொன்னார் இன்னும் ராஜதுரை வரவில்லை ஜெயராம் கடும் கோபத்துடன் இருக்க அப்போது தான் ராஜதுரை மேனகாவுடன் வந்தார். மேனகா தானும் வருவதாக பிடிவாதம் பிடித்து வந்தாள். காரணம் கன்னிகா தானம் செய்யும் போது தான் தான் அக்னியின் தாய் என்று ஊருக்கு அறிவிக்க. அப்போது தான் மாறனின் ஆதரவு கிடைக்கும் ஜெயராம் எதுவும் பேசாமல்” துரை சீக்கிரமாக வா டைம் ஆகுது” என்றார்.



ராஜதுரை வர பின்னால் மேனகா வந்தாள். சபையில் யாராலும் எதுவும் பேச முடியாது போக ஜயர் ராஜதுரை, மேனகா கையை நீட்ட சொல்ல அக்னி ஒரு நிமிடம் சாமி என்று கூறி தன் தாத்தாவிடம் திரும்பி .அவள்



“தாத்து இவங்க என் அம்மா இல்லை இவங்க என்னை தாரை வார்ப்பது எனக்கு பிடிக்க இல்லை” என. மேனகா



“அக்னி உன் அம்மா தான் இந்த உலகத்தில் இல்லையே பின் என்ன உன் அப்பாவுக்கு வொய்ஃப் நான் அப்போ நான் தானே உன் அப்பா பக்கத்தில் நிற்க வேண்டும். பின் என்ன உன் அம்மாவா வருவா” என நக்கலாக கேட்க. அக்னி



“என் அப்பா செகண்ட் வொய்ஃப் தான் நீங்க என் அம்மா இல்லை இந்த அக்னி நினைத்தால் என் அம்மா வருவாங்க” என கூறி “காளி அண்ணா அதை கொண்டு வாங்க” என்றாள்.



காளி ஒரு கலர் பேப்பர் சுற்றிய ஒரு பேக்ஸ் கொண்டு வந்தான். அக்னி “அண்ணா அதை ஓபன் பண்ணுங்க” என. காளி அதை பிரிக்க அதில் பவித்திரா ராஜதுரை அழகான புன்னகை சிந்தி கொண்டு இருந்தாள் அந்த போட்டோவில். அக்னி




“இது தான் என் அம்மா என் அப்பா பக்கத்தில் உட்காரும் தகுதி இவங்களை தவிர யாருக்கும் கிடையாது இந்த அக்னி அதை கொடுக்க மாட்டாள்… தாத்து உங்க பையனை இப்போ செய்ய சொல்லுங்க” என்றாள் அனைவரும் அக்னியை பிரமிப்பாக பார்த்தனர் ஐயர் ஏதோ சொல்ல வர. மாறன்




“அது தான் என் மருமகள் சொல்லி விட்டாள் பிறகு என்ன நான் சாஸ்திர சம்பிரதாயங்களை மதிக்கிறவன் தான் அதை விட எனக்கு என் மருமகள் பாசம் பெரிது நீங்க ஆரம்பிக்க ஜயரே” என்றார். பின் பவித்திரா போட்டோ ராஜதுரை அருகில் இருக்க அவர் அக்னியை கன்னிகா தானம் செய்து கொடுக்க அதை ருத்திரன் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து பைரவி,சர்வின் பெற்று கொண்டனர்… பின் மாங்கல்ய தட்டை ஆசி பெற்று வரும் படி கூற மயூரி எடுத்து சென்று அனைவரிடமும் ஆசி பெற்று வர ஜயர் அதை வேண்டி ருத்திரன் கையில் மாங்கல்யத்தை கொடுக்க மூக்கோடி தேவர்கள் சாட்சியாக உற்றார் உறவினர்கள் வாழ்த்தோடு "மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனேஹதுநா கண்டே பத்தாமி ஸீபகே ஸஞ்ஜிவசரதசதம் என்று ஜயர் சொல்ல அந்த பரமேஸ்வரன் பார்வதி தேவி ஆசியுடனும்,அக்னி மேல் காதல் உடனும் இவளே நீ என் ஜீவன் என்று தாலியை அக்னியின் கழுத்தில் கட்டினான்… பின் பைரவி மூன்றாவது முடிச்சை போட்டு ருத்திரன் அக்னி பந்தத்தை உறுதிபடுத்தினாள் ருத்திரன் அக்னியின் தோளை சுற்றி அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்து தாலியிலும் வைத்தான் பின் மாலை மாற்றி ஏழடி நடந்தது அம்மி மிதித்து அருத்ததி பார்த்து தங்கமெட்டியை அணிவித்தான்.



முதலில் ருத்திரன்,அக்னி மாறனிடம் ஆசி வாங்கினான் பின் சிவகாமி, ஜெயராம், ராஜதுரை, பைரவி, சர்வின் அனைவரிடமும் ஆசி வாங்கினார்கள். அக்னி அபி, ஜெய்,காளிடம் ஆசி வாங்கினாள். சிவகாமி, ஜெயராம் சில பைல்லை ருத்திரனிடம் கொடுத்தனர். சிவகாமி சில நிலங்களின் பத்திரங்களையும் அவரின் பரம்பரையாக வந்த நகைகளையும் கொடுத்தார் ஜெயராம் தனக்கு சொந்தமான ஹோட்டல், இரண்டு பங்களா இன்னும் சில சொத்து பத்திரத்தையும் கொடுத்து இருந்தார்… ருத்திரன் அனைத்தையும் அவர்களிடம் திருப்பி கொடுதவன்.அவன்



“ஏன் தாத்தா இதை தந்து தான் உங்க அன்பை நிரூபிக்க வேண்டுமா இல்லை மனமார உங்க ஆசி ஒன்றே எங்களுக்கு போதும் எனக்கு என் அக்னி, ஷிவியை முழுதாக தந்து இருக்கிறீங்க இதுவே எனக்கு பெரிய கிப்ட்” என சிவகாமி ஏதோ பேச வர வேண்டாம்.ருத்திரன்




“பாட்டி இது உங்களிடமே இருக்கட்டும் அக்னி இதை என்ன செய்ய முடிவு செய்ய நினைக்கிறாளே அது அவள் இஷ்டம் நான் தலையிட மாட்டேன்... என் வொய்ஃப், பெண்ணு இருவரையும் நான் கண் கலங்காமல் பார்க்க வேண்டியது என்னோட பொறுப்பு என.சிவகாமி



“இது போதும் பா அக்னி பணம் இருந்தும் கஷ்டபட்டவள் பா நீ தான் இனி அவளுக்கு எல்லாம்” என்றார். அப்போது அபி வந்து அக்னியிடம் ஒரு பாக்ஸ் கொடுத்தான். அக்னி “என்ன அண்ணா இது” என “திறந்து பாரு மா” என்றான். அக்னி திறக்க அதில் நகைகள் இருந்தது.அபி




“இது என்னோட சொந்த காசில் நான் சேர்த்து வைத்து வேண்டியது மா உனக்கும் நீதாவுக்கு திருமணத்தின் போது கொடுக்க… இது உனக்கு பெரிது இல்லை தான் ஆனா என் தங்கச்சிகளுக்கு கொடுக்க தான் இதை பார்த்து பார்த்து வேண்டியது இதில் இருபத்தைந்து பவுண் இருக்கு மா” என்றான்.



“அக்னி அபியை அணைத்து இது தான் எனக்கு இந்த உலகத்தில் பெரிய கிப்ட் அண்ணா” என்றாள். பின் ஜெய், காளி இருவரையும் நகைகள் பரிசாக கொடுத்தனர் மயூரி, நீதா அவர்களும் பரிசு கொடுத்தனர். அப்போது ஜெயராம் ராஜதுரை பார்த்து



“துரை என்ன உன் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கிப்ட் கொடுக்க இல்லையா” என கேட்க .மேனகா




“அது தான் அவள் அப்பாவை மதிக்க மாட்டாளே பிறகு என்ன நாங்க வந்ததே பெரிது இதில் கிப்ட் வேறா அது தான் நீங்க கொடுத்து இருக்கிறீங்க தானே அது போதும்” என ஜெயராம் பேச வாய் எடுக்க.ராஐதுரை



“வாயை மூடு மேனகா இது எனக்கும் என் பெண்ணுக்கும் உள்ள உறவு இதில் நீ தலையிடாதே” என்று கூறி அக்னியிடமும் சென்று ஒரு நகை பாக்ஸ்யை கொடுத்தவர்.



“இது நீ வயிற்றில் இருக்கு போது உன் அம்மாவுக்கு நான் கொடுத்தது இது உனக்கு சொந்தம் எங்க இருவர் உடைய பந்தம் மாறாது உனக்கு சில விஷயம் புரியாது… நீ நல்ல இடத்தில் தான் வாழ போய் இருக்க நல்லா இரு மா” என்றார். பின் ருத்திரனிடம் “மாப்பிள்ளை என் பெண்ணை, பேத்தியை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் அவள் உங்களுக்கு பொக்கிஷம் என்று கூறி கிளம்ப. அக்னி “நில்லுங்க சாப்பிட்டு போங்க” என “நீ சொன்னதே எனக்கு போதும் சின்ன பாப்பா” என்று. அவளை சிறு வயதில் அழைக்கும் பெயரைக் சொல்லி அழைக்க அக்னி கண் கலங்கினாள்.



அப்போது ஷிவி “சுமால் (small) தாத்து எங்க போற வா ஜஸ் சாப்பிட” என. ராஜதுரை குனிந்து அவளை தூக்கி முத்தமிட்டு



தாத்து போய் பிறகு வரேன் சித்தி கல்யாணம் இருக்கு தானே வார போ பாப்பாக்கு ஐஸ் வாங்கி வாரேன்” என ஷிவியும் அவர் கன்னத்தில் முத்தமிட்டு விடை கொடுத்தாள். பின் சிலரை தவிர அனைவரும் கிளம்ப பைரவி அக்னியை வாசலுக்கு அழைத்து போய் அரிசி நிறைந்த சிறு குடம் வைத்து அதை தட்டி விட்டு உள்ளே வர சொன்னாள்... அப்படியே அக்னி செய்ய பின் பெரிய தட்டில் சிவப்பு குங்கும் கரைத்து அதில் பாதங்களை வைத்து வர சொல்ல அக்னி தன் பாதங்களை வைத்து வர அவள் பாத சுவடு தரையில் பதிந்தது. பின் பூஜை அறைக்கு கொண்டு சென்று விளக்கு ஏற்றி அங்கு இருந்த ரத்னாவின் படத்திற்கு பூ போட்டு வணங்கி பின் பால் பழம் சாப்பிட்டு முடிய, ருத்திரன் அக்னிக்கு அப்பாடா என்று இருந்தது. பைரவி அனைவரையும் ஓய்வு எடுக்க ரூம்க்கு அனுப்பி விட்டு மிகுதி வேலையை பார்க்க சென்றாள்.



அக்னி உடை மாற்றி நகைகளை கலட்டி விட்டு ஒரு சின்ன குளியல் போட்டு விட்டு வர,ஷிவி “மம்மி டாதி பார்கனும்” என கேட்க .அக்னி



ஷிவி குட்டி டாடி இப்ப ப்ரெஸ் அப் பண்ணி கொண்டு இருப்பார் நம்ம பிறகு பார்க்கலாம்” என. ஷிவி அழ ஆரம்பிக்க அக்னிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. புது இடம் எங்கே போய் அவனை தேடுவது இங்கு தேடவே ஒரு நாள் போதாது என்ன செய்ய என்று நினைத்து கொண்டு இருக்க… சரியாக ரூம் டோர் தட்ட பட அக்னி போய் கதவை திறக்க வெளியே ருத்திரன் உடை மாற்றி நின்று இருந்தான் அவனை காண



ஷிவி டாதி என அழ ஆரம்பிக்க ருத்திரன் அக்னியை பார்த்து விட்டு “ஏன் என் ஏஞ்சல் அழுகிறாங்க” என கேட்க.ஷிவி



“டாதி எங்க போன நானு கேட்க மம்மி சொன்னா நீ வாஷ் பண்ண போன” என்று தன் மழலை மொழியில் கூறினாள். ருத்திரன் ஷிவியை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு



“அது தான் டாடி வந்து விட்டேன் பேபி அழ கூடாது வாங்க நம்ம விளையாட போகலாம் என்று அவளை தூக்கி கொண்டு அக்னி பார்த்து “நீ ரெஸ்ட் எடு நான் பேபியை பார்த்து கொள்கிறேன்” என கூறி சென்றான்.


அக்னி காலையில் எழுந்த அசதி ஒம புகை எல்லாம் சேர்ந்து களைப்பாக இருக்க தூங்க சென்றாள்.


ருத்திரன் ஷிவியை தூக்கி கொண்டு சென்றவன் அவளுக்கு ஏற்கெனவே அக்னி உணவு ஊட்டி விட்டு இருந்ததால் அவளின் பிளே ரூம்க்கு அழைத்து சென்றான்… அது குழந்தை விளையாடும் இடம் சர்வின், ருத்திரன் விளையாடிய இடம் இப்போது ஷிவியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தயார் செய்து இருந்தான்… லைட் பிங்க் வண்ண சுவரில் பூக்கள், பறவைகள், டெடிபியார்,பார்பி பொம்மைகள், டோரா, புஜ்ஜி என வரைந்து இருக்க உயர் ரக பிங்க் வண்ண திரை சீலைகள் ஜன்னலில் தொங்கி கொண்டு இருந்தது… அங்கு அவளுக்கு சகல விதமான டாய்ஸ் கொட்டி வைத்து இருந்தான் ருத்திரன் அவள் உடன் விளையாடிக் கொண்டு இருக்க மாலை ஆனது. பைரவி வந்து அழைக்க ஷிவியை தூக்கி கொண்டு வர அவளை தன்னிடம் தருமாறு கேட்க “ஷிவி வர மாட்டேன்” என்று ருத்திரனின் கழுத்தை கட்டி கொண்டாள் பைரவியின் முகம் வாடிவிட .ருத்திரன்



“பேபி இது பிக் மம்மி போடா” என கூற வர மாட்டேன் என்று மீண்டும் அழுத்தமாக அவன் மார்பில் முகத்தை புதைந்தாள். அப்போது அங்கு வந்த நீதா “நீங்க போங்க மாமா நான் ஷிவியை பார்த்து கொள்கிறேன் என்று கூறி தூக்கி சென்றாள். அவள் போன பின் ருத்திரன் பைரவியை



“பார்த்து பாபி அவள் குழந்தை உங்களோடு பழகிய பின் என் கிட்ட கூட வரமாட்டாள்” என.பைரவி



“எனக்கு புரியும் கண்ணா நீ போய் ரெடியாகி வா” என ருத்திரன் யோசனையாக செல்ல அப்போது தான் நினைவு வந்தது இன்றைக்கு பர்ஸ்ட் நைட் என்று… கடவுளே இது வேறா அக்னி என்னை எரித்து விடுவாளே என்று நினைத்து சென்றான். பார்க்கலாம் செல்லம்ஸ் நாளைக்கு அக்னி ருத்திரன் ஆட்டம் ஆரம்பம்.





தீ மலரும்……








இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 


அத்தியாயம் -45




ருத்திரன் சென்றவுடன் பைரவி அக்னியை காண அவள் ரூம்க்கு சென்றாள் கதவை தட்டி விட்டு காத்திருக்க அக்னி “உள்ளே வாங்க” என்றாள். பைரவி



“என்ன மா நல்லா தூங்கினாயா புது இடம் போக போக பழகிடும் என்றவள் பின் ஒரு தட்டை வேலைக்காரி கொண்டு வந்து வைத்து விட்டு சென்ற பிறகு. அக்னி இதில் காபி, டிபன் இருக்கு… நீ ப்ரெஸ் அப் செய்த பிறகு இதை சாப்பிடு மா நைட் சடங்கு இருக்கு” என்று கூறி சென்றாள். அக்னி நைட் சடங்கா என்று யோசிக்க அப்போது தான் நினைவு வந்தது இன்று தங்கள் முதல் இரவு என்று அக்னிக்கு ருத்திரன் மேல் கோபம் வந்தது… இவன் தான் அக்காவிடம் சொல்லி இதை செய்ய சொல்லி இருக்கிறான் இருடா நைட் இருக்கு உனக்கு என்று, பாவம் ருத்ரனுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருந்தாள்.



பின் அக்னி குளித்து விட்டு காப்பி, டிபன் சாப்பிட்டு விட்டு வர சிவகாமி, பைரவி,சுஜா, மாதுரி இன்னும் சில சொந்தகாரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்… நீதா ஷிவியை தூக்கி கொண்டு வர ஷிவி மம்மி “டாதி நேக்கு பிக் ரூம் புல்லா டாய்ஸ்” என்று ருத்திரன் தன்னை அழைத்து சென்று அறையை பற்றியே கூறி கொண்டு இருந்தாள் மாறன், சர்வின் கம்பெனி விடயமாக சென்று இருந்தனர். அப்போது ஹரி,நவீ வர பைரவி “வாங்க டா இரண்டு பேரும் எங்கே போய் இருந்தீங்க” என கேட்க. ஹரி



“ஒரு சின்ன வேலை பாபி அது தான் வந்து விட்டோம் தானே பிறகு என்ன”. என கேட்க



பைரவி “சரி டா இருங்க” என்று கூறி அவர்களுக்கு காப்பி, டிபன் வரவழைத்தாள். ஹரி, நவீஷ் சிவகாமிடம் நலம் விசாரித்து விட்டு அக்னிடம் கேட்க அவள் “ஒகே அண்ணா” என்றாள். ஹரி, நவீஷ் அவளை பார்க்க. பைரவி



“அவள் சரியாக தான் கூப்பிடுகிறாள் முதலில் மிஸ்டர் போட்டு அழைப்பாள் இப்போ அப்படி அழைக்க முடியாது தானே அது தான் உங்களை அண்ணா என்று கூப்பிடுகிறாள்” என்றாள். அப்போது ருத்திரன் அங்கே வர ஷிவி டாதி என்று கூறி கொண்டு அக்னியின் மடியில் இருந்து இறங்கி அவனிடம் சென்றாள்... ருத்திரன் அவளை தூக்கி தன் மடியில் வைத்து கொண்டான் ருத்திரனுக்கு காப்பி பிடிக்காது அவனுக்கு ஜுஸ் தான் பிடிக்கும் என்று பைரவி அவனுக்கு வரவழைக்க ஷிவி “டாதி எனக்கு தா” என்று அதை பறிக்க… அக்னி



“ஷிவி என்ன இது பேட் மேனர்ஸ் கொடு டாடி கிட்ட” என. ஷிவி உதடு பிதுங்கி கண் கலங்கியவாறு “இந்தா டாதி” என. ருத்திரன் அக்னியை பார்த்து விட்டு



“பேபி டோன்ட் க்ரை டாடியும் ஏஞ்சலும் இப்போ ஜுஸ் சாப்பிடலாமா” என்று ஜுஸ் கிளாஸ்சினை உயர்த்தி தான் சிறிது சாப்பிட்டு விட்டு ஷிவியை சாப்பிட வைத்தான். ஷிவி சாப்பிட்டு முடிய “ஜ லவ் டாதி” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டாள்.



இதை அங்கிருந்து அனைவரும் மகிழ்ச்சியாக பார்க்க அக்னி கோபத்துடன் பார்த்தாள் பின் ருத்திரன் ஷிவியை அக்னியிடம் கொடுத்து விட்டு ஹரி, நவீஷ் உடன் மாறனின் ஆபிஸ் ரூம்க்கு சென்றான்… ஹரி




“மச்சி நீ இப்போ பெர்பேக்ட் அப்பா டா உனக்கு சாப்பிடும் போது டிஸ்டப் பண்ணினால் பிடிக்காது இப்போ டோட்டலாக சேன்ஸ் ஆகிட்ட டா” என. ருத்திரன்




“டேய் அவள் என் பெண்ணு டா அவள் கேட்டால் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் அவள் காலடியில் வைப்பேன் இது என்ன டா பெரிய விஷயமா” என்றான்.ஹரி



“ஆ மச்சி சொல்ல வந்ததை மறந்து விட்டேன் ராகேஷ், சீமா இரண்டு பேரையும் பாலோ பண்ண நம்ம இன்பார்மர் கிட்ட சொல்லி இருக்கிறேன் மற்றதை பிறகு பார்ப்போம்” என.ருத்திரன்



“ஹரி, நவீ அவங்க இரண்டு பேரால் என் அக்னிக்கோ, ஷிவிக்கோ ப்ராபிளம் வந்தால் ஸாரி டா ஐ வீல் கில் தேம்” என்றான். ஹரி




“ருத்திரன் இதை விட இப்போ மெயின் மேட்டர் இருக்கு டா” என.நவீஷ்




“என்ன விஷயம் டா அப்படி முக்கியமானது” என. ஹரி




“ருத்திரன் பர்ஸ்ட் நைட் அதாஃவது ருத்திரன் அக்னி கிட்ட அடி, உதை வாங்க போகிற டைம்” என கூறி சிரிக்க. ருத்திரன்




“வாயை மூடு டா நானே அதை தான் யோசித்தேன் வெளியே பாட்டி, டாட் நீங்க எல்லாம் இருக்க நல்ல மாதிரியாக இருக்கிறாள் ரூம்க்கு போனால் தான் தெரியும் எப்படி என்று”.என நவீஷ்



“ஆல் தே பெஸ்ட் மச்சி நாளைக்கு பார்க்கலாம் நீ எப்படி இருக்க” என்று கூறி இருவரும் கிளம்ப அவர்கள் உடன் அவர்கள் அன்னையர்களும் கிளம்பினார்கள்.



மாலை நேரம் சிவகாமி அக்னியை குளித்து விட்டு வர சொன்னார் அக்னி குளிக்க கிளம்ப பைரவி புடவை, நகைகள் எடுத்து கொண்டு ரூம்க்கு சென்றாள் அக்னி குளித்து விட்டு வர புடவை கொடுத்து மாற்றி விட்டு வர சொல்ல அக்னி மாற்றி விட்டு வந்தாள்… பின் பைரவி சில மெல்லிய நகைகளை அணிவித்து கூந்தல் பின்னி தலை நிறைய பூ வைத்து அவளை அழைத்து கொண்டு பூஜை ரூம்க்கு சென்றாள். அக்னியை பார்த்து



“மா அக்னி புது வாழ்க்கை தொடங்க போகிற கடவுளை வேண்டிக்க மா” என அக்னி வணங்கி விட்டு வர சிவகாமி வந்தார் அக்னி அவரிடம் ஆசி பெற செல்ல. அவர்



“வேண்டாம் மா அக்னி. நீ பைரவி கிட்ட ஆசிர்வாதம் வாங்கிகோ பாட்டி கிட்ட வேண்டாம். பைரவி சுமங்கலி மா” என அக்னி




“பாட்டி நீ தான் எனக்கு எல்லாம் நல்ல மனசு யாருக்கு இருக்கோ அவங்க வாழ்த்து என்னை வாழ வைக்கும்” என கூறி ஆசி பெற்றாள் பின் பைரவியிடம் ஆசி வாங்கினாள். சிவகாமி




“அக்னி மா உன் பாட்டிக்கும், அம்மாவுக்கு நீ பெருமை சேர்க்கனும் ருத்திரன் கூட நீ அனுசரித்து வாழ வேணும் அது தான் நீ எங்களுக்கு செய்கிற மரியாதை” என்றார். பைரவி



“அக்னி நான் உனக்கு அக்காவாக இருந்தாலும் உனக்கு எப்பவும் அம்மா தான் ருத்திரன் ரொம்ப நல்லவன் மா அவனை நீ புரிந்து கொண்டால் தான் அவன் நல்ல குணம் தெரியும். உங்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது… ஆனால் நீயும் அவனும் நல்லா வாழும் வாழ்க்கை தான் எங்களுக்கு சந்தோஷம் தரும் என்று கூறி வெள்ளி பால் சொம்பை குடுத்து அனுப்பினாள்… அக்னி லிப்ட் மூலம் நான்காம் தளம் சென்றாள் ருத்திரனின் பேலஸ்ல் தரை தளத்தில் பூஜை அறை, டைனிங் ஹால், கிச்சன்,ஸ்டோர் ரூம் இன்னும் சில ரூம் உள்ளது… முதல் தளம் முழுவதும் விருந்தினர் அறைகள் இரண்டாவது முழுவதும் மாறனுக்கு உரியது மூன்றாம் தளம் சர்வின், பைரவிக்கு உரியது… நான்காம் தளம் முழுவதும் ருத்திரனுக்கு உரியது அதில் அவன் அறை, ஜிம் ரூம், ஆபிஸ் ரூம், இன்டோர் ஸ்மிங் பூல், இன்னும் இரு அறைகள் அவன் குழந்தைகளுக்கு என்று ஏற்றவாறு ஒவ்வொரு தளமும் அமைக்கப்பட்டு இருந்தது… ருத்திரன் நீச்சலில் ஆர்வம் உள்ளவன் அதனால் தான் இன்டோர் ஸ்மிங் பூல், அவுட் டோர் ஸ்மிங் பூல் உள்ளது கீழே பெரிய நீச்சல் தடாகம் உள்ளது மேலே பிளேன் வந்து இறங்க லான்ட்டிங் பிளேஸ் அக்னி ருத்திரனின் ரூம் முன்னால் வந்து நின்றாள். அந்த டோர் பாஸ் வேர்ட் கேட்க அக்னி என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்க ரூம் கதவு உள்ளிருந்து திறக்கப்பட்டது.



அக்னி உள்ளே செல்ல மேல் இருந்து பூக்கள் தூவப்பட்டது ருத்திரனின் ரூம் பிஸ்கெட் கலர் அன்ட் கோல்ட் கலரில் இருந்து முதலில் ஹால் அங்கு டாக் பிரவுன் சோபாக்கள் போடப்பட்டு அதற்கு பொருத்தமான டேபிள் இருந்தது… பின் பெட்ரூம் அதில் வலது பக்கம் இரு அறைகள் ஒன்று வாஷ் ரூம், டிரசிங் ரூம் இடது புறம் இரு அறைகள் ஒன்று ஷிவியின் அறைக்கு போகும் வழி மற்றது ஸ்மிங் பூல்க்கு போகும் வழி என இருந்தது... நடுவில் ஆறு பேர் தூங்க கூடிய வகையில் கட்டில் அதை சுற்றி மெல்லிய வெள்ளையும், பிரவுன் கலர் சேர்ந்த திரை சீலைகள், அழகான பூக்கள் கொண்ட வாஷ்கள் பொருத்தமாக ஐன்னல் திரை சீலைகள், மேலே தொங்கும் உயர் ரக விளக்குகள், பிஸ்கெட் நிற சோபாக்கள் தரை முழுவதும் பிரவுன் நிற கம்பளம். பரந்த பால்கனி அதில் வெள்ளை நிற சோபாக்கள் ஒரு பக்கம் மறு பக்கம் யானைகள் சங்கிலி அமைப்பில் உயிர் ரக ஊஞ்சல் சுற்றி வர வண்ணமும், வாசனையும் கொண்ட பூக்கள் என ஒரு பூங்காவை நினைவுபடுத்தியது. அக்னி வர ருத்திரனை காணவில்லை. அக்னி சுற்றி பார்க்க வெல் கம் ஆவர் ரூம் என கூறி கொண்டு ருத்திரன் பால்கனியில் இருந்து வந்தான். அக்னி அங்கிருந்து டேபிள் பால் சொம்பை வைத்து விட்டு கோபமா ருத்திரனை பார்த்து



“இது எல்லாம் உன் என கூற எடுத்து பின்பு உங்க வேலை தானா” என்று கேட்க

ருத்திரன் சிரித்தவாறு



“அப்பாடா ஒரு மாதிரி அக்னி மேடம் என்னை அவங்க ஹஸ்பெண்ட்டாக ஏற்று கொண்டாங்க போல மரியாதை எல்லாம் வருகிறது”என.அக்னி



“அது எல்லாம் இல்லை நீங்க என் ஹஸ்பெண்ட் அந்த மரியாதை தான் வேறு ஏதுவும் நமக்குள் இல்லை”.என.ருத்திரன்



“அப்படி யா அப்போ நமக்குள்ளே ஏதுவும் இல்லை யா ஓ காட் நான் நம்ம பர்ஸ்ட் நைட் எப்படி எல்லாம் பிளான் பண்ணினேன் தெரியுமா... இந்த படத்தில் வருவது போல நீ வெட்கப்பட்டு கொண்டு வருவ… காலில் விழுவ நான் தூக்குவேன் பிறகு நீ மில்க் தருவ பிறகு உன்னை அணைத்து முத்தம் கொடுத்து அதற்கு மேலே” என்று மனதில் சிரித்தவாறு அக்னியை வெறுப்பேற்ற கூறி கொண்டு போக.அக்னி



“என்ன சொன்னீங்க என்னை நீங்க டச் பண்ணுவீங்களா கிட்ட வந்தீங்க என்னை பற்றி தெரியும் தானே பிறகு நான் பொறுப்பு இல்லை…இந்த பெட்ல் இல்லை ஹாஸ்பிட்டில் பெட்ல் தான் இருக்க வேண்டும்” என்று கோபமா கூற.ருத்திரன்




“எப்படி எப்படி நான் ஹாஸ்பிட்டில் பெட்ல் ஆ அதை இப்போ டெஸ்ட் பண்ணி பார்ப்போமா என்று கூறி கொண்டு அக்னி அருகில் வர அக்னி பின்னால் போக சுவர் தட்டு பட அக்னி ருத்திரனை முறைத்து கொண்டு இருந்தாள்… ருத்திரன் அருகில் வர கையை அடிக்க ஓங்க ருத்திரன் ஒரு கையால் அவள் இரு கைகளையும் வளைத்து பின்னால் கொண்டு சென்று அவளை தன்னை நோக்கி இழுத்தான்… அக்னி ருத்திரனின் மார்போடு முட்டி நிற்க ருத்திரன் தன் மறு கையால அவள் முகத்தை நிமிர்ந்து அவள் கண்களை பார்த்தது.




“இந்த விழிகள் என்னை காதலோடு பார்த்தால்”, என்றவன் அவள் மென் இதழ்களை தன் ஒரு விரலால் தடவி அதற்கு மேல் உள்ள அவள் உதட்டு மச்சத்தை தடவி “இந்த இதழ்கள் ஆசையாக என்னை அத்தான் என்று அழைத்தால் அந்த நொடி தான் இந்த அக்னியை முழுதாக ருத்திரன் தொடுவான் அது வரைக்கும் நோ மோ டச்சிங்” என்றான். அக்னி அவனில் இருந்து விடுபட முயற்சிக்க முடியவில்லை பாறையில் மோதுவது போல் இருந்தது.



“நான் நினைத்தால் மட்டும் தான் நீ என்னை விட்டு விலக முடியும் அக்னி அது இந்த ஜென்மத்தில் நடக்காது”.என. அக்னி



“ஏன் நடக்காது மிஸ்டர் ருத்திரதேவேஸ் இந்த அக்னி நினைத்தால் முடியும்” என.ருத்திரன்




“ரியலி மிஸஸ் ருத்ரதேவேஷ் உங்களால் முடியாது ஏன் தெரியுமா உன் கழுத்தில் நான் கட்டிய தாலி இருக்கு…அதை விட நம்மை இணைக்கிற பந்தம் நம்ம பெண்ணு இருக்கிறாள் நீ உறவுக்கு மதிப்பு கொடுக்கிறவள் உன்னை விட எனக்கு தெரியும் உன்னை பற்றி” என்றவன் அக்னி அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருக்க அவள் நெற்றியில் முத்தமிட்டு



“போய் தூங்கு எதையும் நினைக்காத ஆ பெரிய பெட் தான் உன் பெர்மிஷன் இல்லாமல் உன்னை நான் எடுத்துக்க மாட்டேன் நான் ஜென்டில்மேன் ஹனி இது கூட சும்மா உன் கூட விளையாடினேன்... போய் தூங்கு நாளையில் இருந்து நம்ம பெண்ணு நம்ம கூட தூங்குவாள் அவளை விட்டு ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க முடியாது அவள் ருத்திரதேவேஷ் பெண்ணு தைரியமாக உன்னை மாதிரி வளர வேண்டும்… எனக்கு ஆபிஸ் வொர்க் இருக்கு நான் வர லேட் ஆகும் நீ தூங்கு” என்று கூறி தன் ஆபிஸ் ரூம்க்கு செல்ல அக்னி யோசனையாக அவனை பற்றியே நினைத்து கொண்டு தூங்கினாள்.





தீ மலரும்.........



இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 


அத்தியாயம் -46



அக்னி தூங்கிய பிறகு ருத்திரன் தன் ஆபிஸ் வொர்க் எல்லாம் முடித்து விட்டு வர நேரமானது ருத்திரன் வரும் போது அக்னி தூங்கி கொண்டு இருந்தாள்… ருத்திரன் நேராக டிரசிங் ரூம் சென்று நைட் அணியும் சாட்டின் பைஜாமா, பேண்ட் அதன் மேல் அதற்குரிய கோட் அணிந்து வந்தான். அக்னி தூங்கி கொண்டு இருக்கும் அழகை ரசித்து விட்டு நைட் லாம்ப்பை போட்டு விட்டு தூங்கினான்.



காலையில் முதலில் கண் விழித்தது ருத்திரன் தான் அவன் வழமையாக ஆறு மணிக்கு எழுந்து ஜிம் ரூம் செல்பவன் இன்று வழமை போல் எழ அக்னி தூங்கி கொண்டு இருக்க வெளிச்சம் வர ஆரம்பித்தது…. ருத்திரன் ரிமேட்டால் ஜன்னல் திரைகளை இன்னும் மூடி விட்டு ப்ரெஸ் அப் செய்த பின் ஜிம்க்கு சென்றான்... ருத்திரன் சென்று சிறிது நேரத்தில் அக்னி கண் விழித்தவள் முதலில் எங்கே இருக்கிறோம் என்று குழம்பிய பின் பிறகு நினைவு வந்து அருகில் பார்க்க ருத்திரனை காணவில்லை…. அவள் ப்ரெஸ் அப் ஆகி சிவகாமியின் கட்டளை படி இன்று சில்க் நாவல் நிற சாரியில் சில்வர் கரையிட்ட புடவையும் அதற்கு பொருத்தமான நகைகளும் அணிந்து நெற்றியிலும், வகுட்டில் குங்கும் வைத்து கிழே வந்தாள்.



அப்போது தான் பைரவியும், சிவகாமியும் எழுந்து காப்பி குடித்து கொண்டு இருந்தனர். பைரவி “வா மா அக்னி குட் மார்னிங்” என அக்னி “குட் மார்னிங் அக்கா” என்றவள் சிவகாமி, பைரவி காலில் வீழ்ந்து வணங்கினாள்…. பைரவி அவளை தூக்கி



“என்ன மா இது பாட்டிக்கு சரி எனக்கு ஏன் மா மரியாதை நான் உன் அம்மா தானே” என. அக்னி



“அது தான் அக்கா நீங்க என் அம்மா அது தான் நான் உங்களை வணங்கினேன்” என பைரவி அவளை அணைத்து விட்டு



“அக்னி காலையில் என்ன மா சாப்பிடுவ காபி,டீ, பால் வேற என்ன வேண்டும் மா” என.அக்னி



“எனக்கு காபி போது அக்கா அதற்கு முதலில் நான் பூஜை செய்ய வேண்டும் எனக்கு கொஞ்சம் பூ வேண்டும் சாமிக்கு போட” என.பைரவி



“என்ன மா இது உன் அரண்மனை நீ கட்டளை இட்டால் வேலை செய்ய காத்து இருக்கிறாங்க…. என்று கூறியவள் அவள் கேட்ட மாதிரி ஒவ்வொரு வண்ணத்திலும் தோட்டத்தில் இருந்து பூக்களை பறித்து வர சொன்னாள்…. பூக்கள் வந்த பின் அதை எடுத்து அக்னி செல்ல போக… ஒரு நிமிஷம் அக்னி என்று கூறி பைரவி அவள் கூந்தலில் மல்லிகை பூவை வைத்து விட்டு “இப்போ போ மா” என்றாள்.



அக்னி பூஜை அறைக்கு நுழைய மிக பிரமாண்டமான பூஜை அறை அது தங்கத்திலான பரம்பரையான தெய்வ சிலைகளும், வெள்ளி சட்டம் போட்ட படங்களும் ,வெள்ளி ஆளுயர குத்துவிளக்குகள், சிலைகளும், படங்களையும் அலங்கரித்து கொண்டு இருக்கும் பூ மாலைகள், நறுமணம் கமழும் ஊதுபத்திகள், என பார்க்க தெய்வீக தன்மை ஒளிந்தது…. அக்னி அங்கு பூஜை செய்ய போடப்பட்ட சிறு மேடை மேல் அமைந்து கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து ஒம் நமசிவாயம் என்று கூறி கொண்டு இருந்தாள் அக்னி கண் திறந்து பூக்களை போட்டு சாமிக்கு ஆரத்தி காட்டி சிவகாமி, பைரவிக்கு காட்ட அவர்களும் தொட்டு கண்ணில் வைத்து வணங்கினார்கள்…. அப்போது அக்னி அங்கு இருந்த வீணையை பார்க்க. பைரவி



“அது அத்தையின் வீணை அவங்க நல்ல வீணை வாசிப்பாங்கலாம் அவங்க போன பிறகு யாரு இருக்காங்க வீணை வாசிக்க அது தான் இப்படி கிடக்கிறது என.அக்னி



“அக்கா நான் வசிக்கட்டுமா” என கேட்க.பைரவி



“இது என்ன மா அனுமதி கேட்கிறாய் உனக்கும் உரிமை இருக்கு ஆமாம் உனக்கு வாசிக்க தெரியுமா” என கேட்க .சிவகாமி




என்ன பைரவி இப்படி கேட்கிற இவள் பரதம், பாட்டு, வீணை எல்லாவற்றிலும் பட்டம் பெற்றவள்… அவள் நேரம் இதில் ஈடுபாடு காட்ட அவளுக்கு டைம் இல்லை... அவள் அம்மா வீணை வாசிப்பாள் ,அக்கா நல்லா பாடுவாள் இவளுக்கு மூன்று தெரியும் மா” என்றாள்.




அக்னி வீணைக்கு சாம்பிராணி காட்டி வணங்கி விட்டு வாசிக்க ஆரம்பித்தாள் சிவனின் பாடலை வாசிக்க ஆரம்பித்தாள்.



ஓம்....ஓம்....ஓம்

ஓம் நவசிவாய

ஓம் நவசிவாய

தங்க நிலாவினை அணிந்தவா

ஆடுகிறேன் பூர்ணோதயா அருளில்லையா

ஓம் நவசிவாய




பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்

ஆறு காலங்களும் ஆடைகளாகும்

மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க

ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க

ஸா,கா, மா,தா, நீ, ஸா, க், கா, மா,தா,நீ ஸா க்

க்க்க் ஸ்ஸ்ஸ்



உன் பார்வையே எட்டு திசைகளே


உன் சொற்களே நவரசங்களே

கங்கையின் மணவாளா

ஆ….ஆ….ஆ…ஆ

ஓம் நமசிவாயா




மூன்று காலங்களும் உந்தன் விழிகள்


சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்

கணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுவதும்

இறைவா உன்னடி தொழுதே துதிக்கும்

அத்வைத்யமும் நீ ஆதி அந்தம் நீ

நீ எங்கும் இல்லை புவனம் முழுதும் நீ

கைலாச மலை வாசா கலையாகவும் நீ

புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ

ஓம் …ஓம் நமசிவாயா…




என்று தன்னை மறந்து, சுற்றம் மறந்து வாசித்து கொண்டு இருக்க வீணையின் நாதம் கேட்டு மாறன், சர்வின் இருவரும் கிழே இறங்கி வந்தனர்… அப்போது தான் தன் ஜிம்ல் இருந்து வந்த ருத்ரனும் கீழே வந்தான் மாறன் கண்கள் கலங்கி அக்னியே பார்த்து கொண்டு இருந்தார்… வாசித்து முடித்த பின் அதற்கு உரிய இடத்தில் வைத்து விட்டு வர அனைவரும் இருப்பதை அக்னி பார்க்க .மாறன்



“இத்தனை வருஷத்திற்கு பிறகு இந்த வீணை வாசிப்பை கேட்கிறேன் மா என் ரத்னா இருக்கிற போ அவள் தினமும் இப்படி தான் பூஜை முடிய வாசிப்பாள் நாங்க எல்லோரும் கேட்டு கொண்டு இருப்போம்…. சர்வின், ருத்திரன் சின்ன பசங்க அதுவும் ருத்திரன் அவள் பக்கத்தில் இருந்து கேட்டு கொண்டு இருப்பான்… அவள் போன பிறகு இந்த வீணையும் உயிர் அற்று இருந்தது இப்போ தான் அதற்கு உயிர் கொடுத்து இருக்க மா என்றவர் அக்னி அருகில் வந்து தலையில் கை வந்து உனக்கு வேண்டியதை கேள் மா என் ரத்னாக்கு உயிர் கொடுத்து இருக்க” என .அக்னி



“மாமா ஸாரி கலைக்கு எப்பவும் விலை இல்லை அதை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது…. நான் உயிர் கொடுத்தது அத்தைக்கு என்றால் அவருக்கு விலை இல்லை மாமா” என. மாறன்



“பெருமையாக இருக்கு மா அக்னி நான் போன ஜென்மத்தில் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் உன்னையும் பைரவியும் போல் மருமகள்கள் அமைய…. உனக்கு ஒரு வாக்கு தருகிறேன் மா நீ என்ன கேட்டாலும் இந்த மாறரேந்திரன் உனக்கு தருவான்” என.அக்னி




“தேங்கியூ மாமா ஆனா எனக்கு இப்போ தேவைபடாது ஆனால் நீங்க தருவதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றால் அப்போது மம்மி என்று ஷிவி ஒடி வர அக்னி அவளை தூக்கி முத்தமிட்டவள். அக்னி



“அட என் பட்டு ரெடியாகிட்டா போல” என. ஷிவி



“மம்மி சித்தி தான் டிரஸ் பண்ணா நீ சாங் பாடினாயா, டான்ஸ், பைட் பண்ணினாயா” என கேட்க மற்றவர்கள் புரியாமல் பார்க்க.சிவகாமி



“அது அக்னி காலையில் பூஜை முடிய பாடி ,டான்ஸ் ஆடுவாள் பிறகு சிலம்பு சுற்றுவாள் அதை தான் கேட்கிறாள் என.ருத்திரன்



“டோன்ட் வொரி பேபி இப்போ மம்மி பாடி விட்டாள் நெக்ஸ்ட் டாடி கூட பைட் பண்னுவாள் என .ஷிவி



“ஹைய் ஜாலி ஜாலி மம்மி, டாதி கூட பைட் பண்னு வா” என.மாறன்



“என்ன ருத்திரா இது அக்னி கூட போய் நீ போய் ரெடியாகு” என. சர்வின்



“என்ன டா விளையாட ஒரு அளவு இருக்க வேணும்” என.பைரவி



“கண்ணா அவள் இப்போ தான் எழுந்தாள் காப்பி கூட சாப்பிடவில்லை…பிறகு சில சடங்கு இருக்கு கண்ணா கோவிலுக்கு போக வேண்டும் பிறகு பார்க்கலாம்” என. ருத்திரன்



“டைம் இருக்கு பாபி நம்ம கோயில் தானே இன்னும் ஹரி. நவீஷ் வரவில்லை… மற்றவங்க இன்னும் எழுப்பவில்லை அது மட்டும் நான் என் வொய்ஃப் கூட சிலம்பு சுற்றுகிறேன்” என.அக்னி



“ஐ யம் ரெடி ஆமாம் மும்பைகாரங்களுக்கு சிலம்பு சுற்ற தெரியுமா ஏன் என்றால் நான் நினைக்கிறேன்… உங்களுக்கு தெரியாது என்று இது கராத்தே இல்லை கம்பு முகத்தில் பட்டால் தெரியும் அதற்கு பிறகு” என.ருத்திரன்



“ஐ யம் வெயிட்டிங் பேபி, கெட் ரெடி மிஸஸ் ருத்ரதேவேஷ்” என.சிவகாமி



“அக்னி என்ன மா இது அவருக்கு தான் தெரியாது உனக்கு கூடவா வேணாம் மா விளையாட்டு விபரீதம் ஆகிவிடும்” என்றார்



இருவரும் யாரும் சொல்லியும் கேட்காமல் களத்தில் இறங்க தயார் ஆகினார்கள் மாறனின் பேலஸ்லில் ஒரு பக்கத்தில் பிளே கிரவுண்ட் இருந்தது அது சுத்தமான புல்வெளி அதை பராமரிக்க தனி ஆட்கள் ஒரு பக்கம் இருப்பதற்குரிய டெண்ட் என்று சகலதும் இருந்தது… சிறு வயதில் ருத்திரன், சர்வின், ஹரி நவீஷ் அனைவரின் நண்பர்கள் விளையாட இங்கு தான் வருவார்கள்… அனைவரும் பெரும் புள்ளிகளின் பிள்ளைகள் அதனால் பாதுகாப்பும் பலப்படுத்தபட்டிருக்கும் இங்கு தான் அக்னி ருத்திரன் சிலம்பு சுற்ற வந்தனர்.



அப்போது தான் ஹரி, நவீஷ் குடும்பமாக வந்தார்கள் மாறனின் அரண்மனையில் இருந்த சொந்தகாரர்கள் சிலரும் இவர்களின் விளையாட்டை பார்க்க வந்தார்கள் இருவரும் இரண்டு பக்கம் நின்றனர்…. அக்னி புடவையை தூக்கி சொருகி இருந்தாள் ருத்திரன் டிராக் பேண்ட் பிளாக் கலர், வைட் டி ஷர்ட் என நின்று இருந்தான்… கேம் ஆரம்பித்தது வட்டம் போட்டு அதற்கு வெளியே சென்றால் அவுட் என பந்தயம் வைத்து விளையாடினார்கள்…. அக்னி ஆரம்பிக்க ருத்திரன் அதற்கு ஏற்றாற்போல் சிலம்பை சுற்ற , நின்று, தடுத்து,இருந்து என அவள் ஒவ்வொரு அடியையும் கட் செய்தான்.



இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலிக்காமல் விளையாடினார்கள் அக்னியின் சாரி பிளவுஸ் ருத்திரனின் டி சஷர்ட்டும் தொப்பலாக வேர்வையில் நனைத்து விட்டது ஷிவி கை தட்டி ஆர்ப்பரித்து கொண்டு இருந்தாள் தன் அன்னை, தந்தையின் விளையாட்டை பார்த்து… மாறனுக்கும் பெருமையாக இருந்தது தன் மகன், மருமகள் இருவரும் வீரர்கள் தன் வம்சத்திற்கு ஏற்ற மருமகள் தான் அக்னி என்று… அக்னி அசையும் போது எல்லாம் அவளின் நீண்ட கூந்தலும் சேர்ந்து ஆடி ருத்திரனின் மனதை ஆட வைத்தது… வேர்வையில் நனைந்த அவள் உடல் அவள் எழில் வளைவுகளை பறைசாற்றி கொண்டு இருந்தது அக்னி ருத்திரனின் கண்கள், மனதை அவள் வசம் இழுத்து கொண்டு இருந்தாள்.



ருத்திரனால் இதற்கு மேல் அவளை பார்த்து இருக்க முடியாமல் ஒரு அடி தான் அக்னி கம்பு மேல் நோக்கி பறக்க அக்னி அடியின் அதிர்வு தாங்காமல் விழ போக ருத்திரன் தன் ஒரு கையை அவள் இடையை அணைத்து அவள் வட்டத்தை விட்டு வெளியே செல்லாமல் அவளை தன் மார்போடு அணைத்து தூக்கி கொண்டான்…. மேலே சென்று வந்த கம்பை தன் மறு கையால் பிடித்து கொண்டான் அக்னியையும் கம்பையும் ஒன்றாக தூக்கினான்… அக்னி அதிர்ச்சியாக ருத்திரனை பார்த்து கொண்டு இருந்தாள் அவள் வாழ்க்கையில் முதல் முறையாக கம்பை தவற விட்டு இருக்கிறாள்….அதை விட ருத்திரனின் அணைப்பு அவளுக்கு ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது ருத்திரனும் அவள் கண்களில் கட்டுண்டு இருந்தான்.




கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம்

ஸ்பரிஷமோ துளி விஷம் ஸ்பரிஷமோ

துளி விஷம்

நானில்லை என் வசம் …




என்று அக்னிக்குள் பிரளயம் நடந்து கொண்டு இருந்தது ருத்திரனின் அணைப்பில் அனைவரும் கை தட்ட தான் இருவரும் சுய நினைவுக்கு வந்தனர் ருத்திரன் அக்னியை தூக்கி கொண்டு டெண்ட் அருகே கொண்டு வந்து இறக்கி விட்டான்…. ஹரி தான் அங்கிள் “யாரு வின்” என்று கேட்க .மாறன் சிரித்து விட்டு



“அது தான் ருத்திரன் தன் வொய்ஃப் தோற்க கூடாது என்று தூக்கி விட்டானே பிறகு என்ன இருவரும் தான் வின் என்று கூறினார்….அது முடிய அனைவரும் உள்ளே செல்ல ருத்திரனும் அக்னியும் கனவில் நடப்பது போன்று நடந்து உள்ளே சென்றனர்.




தீ மலரும்.......



இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 

அத்தியாயம் -47




பைரவி கோயிலுக்கு போக அக்னி ருத்திரன் இருவரையும் ரெடியாக சொல்லி சென்றாள் இருவரும் தயார் ஆக சென்றனர் ஷிவியை அக்னி தூக்கி கொண்டு சென்றாள் அவளை குளிக்க வைத்து உடை மாற்றினாள்…. ஷிவிக்கு பச்சை நிற சட்டை,கோல்ட் நிற பாவாடை போட்டு அதற்கு பொருத்தமாக இரண்டு பக்கமும் போனிடைல் போட்டு பூ வைத்து சிறிய வைரத்திலான நகைகளை அணிவித்தாள்… அப்போது உள்ளே ருத்திரன் வர டாதி என் டிரஸ் எப்படி இருக்கு என தன் உடையை சுற்றி காட்டியவாறு கேட்க. ருத்திரன் அருகில் வந்து அவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு என் பெண்ணு எப்பவும் அழகு தான் என்று கூறி அவள் கன்னத்தில் தாடியால் உரசி கீச்சு கீச்சு மூட்ட ஷிவி கிளுங்கி சிரித்து டாதி குத்து என அப்போ டாடி இதை எடுக்கவா என்று கேட்க….அவள் சிறிது யோசித்து விட்டு “நோ டாதி இது உனக்கு சூப்பர்” என ருத்திரன் வாய் விட்டு சிரிக்க அவன் கன்னத்தில் குழி வீழ்ந்தது.



ஷிவி அதை தொட்டு பார்த்து விட்டு டாதி எனக்கு இது மாதிரி வேணும் என்றாள் அதற்கு. ருத்திரன்



“பேபி பிக் கேர்ள் ஆ வளர்ந்த பின் வரும்” என.அவள் அப்போ மம்மி போல எனக்கு வருமா என்று அக்னியின் உதட்டு மச்சத்தை காட்டி கேட்க.ருத்திரன்



“யஸ் ஏஞ்சல் நீங்க வளர்ந்த பின் வரும் இப்போ வாங்க நம்ம கீழே போகலாம் மம்மி ரெடியாகி வரட்டும் என்று கூறி அக்னியின் உதட்டை பார்த்து சிரித்தவாறு சென்றான்…அக்னிக்கு ஷிவி மேலும் அதற்கு மேல் ருத்திரன் மேலும் கோபம் வந்தது அவள் கேட்டால் இவன் என்ன தைரியம் இருந்தால் என்னை பார்ப்பான் வரட்டும் என்று அர்ச்சனை செய்து கொண்டு ப்ரெஸ் அப் ஆக சென்றாள். இன்று அக்னி டாபிள் சேடட் சாரி டாக் கிரீன் அன்ட் மெரூன் கலர் சாரி அதற்கு பொருத்தமான நகைகள் புது தாலி கழுத்தில் மின்ன பூ வைத்து, குங்கும் வைத்து பார்ப்பதற்கு தெய்வீக அழகுடன் இறங்கி வர… அவள் வரும் வரை ஷிவியுடன் விளையாடி கொண்டு இருந்த ருத்திரன் லிப்ட் திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அவள் அழகில் பிரமித்து போய் இருந்தான்… அனைவரும் ருத்திரனை பார்த்து சிரிக்க அக்னிக்கு சங்கடமாக போனது ஏன் என்றால் அங்கு எல்லோரும் இருந்தனர்… சிவகாமி, மாறன், சர்வின், பைரவி, ஹரி குடும்பம், நவீஷ் குடும்பம், நீதா இவர்களுக்கு முன் அவன் தன்னை இப்படி பார்த்தது அவளுக்கு வெட்கத்தை கொடுத்தது.ஹரி



“ருத்திரன் தோளில் தட்டி மச்சி உன் வாட்டர் பால்ஸ்சை மூடு டா எல்லோரும் இருக்கிறாங்க போய் நீ ரெடியாகி வா என ருத்திரன் ஒரு மாதிரி அசடு வழிந்து விட்டு உடை மாற்ற சென்றான்… அனைவரும் கோயிலுக்கு போக ரெடி ஆனார்கள் சிவகாமி முதலில் தான் வரவில்லை என்று மறுக்க அனைவரும் வற்புறுத்தி வரவழைத்தனர்.. ருத்திரன் இன்று அக்னியின் சாரிக்கு மேட்ச்சாக டாக் கிரீன் சேட், பிஸ்கெட் நிற பேண்ட் அணிந்து ஆணழகனாக வர அக்னி ஒரு நிமிடம் பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பினாள்… ருத்திரன் சிரித்து விட்டு ஷிவியை தூக்க டாதி நீ, நான், மம்மி டிரஸ் மேட்ச் என்று கூற அனைவரும் பார்க்க அப்படி தான் இருந்தது.




பின் அனைவரும் கோயில் நோக்கி சென்றனர் ருத்திரன் அக்னி, ஷிவி ஒரு காரிலும் நீதா, சிவகாமி, மாறனின் பெரியம்மா, சித்தி ஒன்றிலும் மாறன் சர்வின் பைரவி ஒன்றிலும் ஹரி நவீஷ் குடும்பமாகவும் வந்தனர்… அவர்களுக்கு முன், பின் ஆறு கார்கள் கார்ட்ஸ் உடன் வந்தது அது மும்பை சிட்டியை விட்டு சிறிது தொலைவில் உள்ள கோயில் அங்கு சென்று ருத்திரன் அக்னி கையால் பூஜை செய்து தானம் கொடுத்து வந்தனர்… அவர்கள் வர மாலையாகி விட்டது பின் அனைவரும் உணவு உண்ட பின் பைரவி தான் ருத்திரன், அக்னி ரிசப்ஷன் பற்றி மாறனிடம் கேட்டாள். மாறன்



“பைரவி நீ சொல்வது சரி தான் அக்னி ருத்திரன் ரிசப்ஷன் சீக்கிரமாக வைக்க வேண்டும் அதற்கு பின் தான் ஹரி நீதா கல்யாணம் வைக்க வேண்டும் என. சிவகாமி



“அதுமட்டுமல்ல மாறன் தம்பி அக்னி ருத்திரனுக்கு சென்னையிலும் சின்னதாக ஒரு ரிசப்ஷன் வைக்க வேண்டும் அக்னி ஆபீஸ் வொக்கர்ஸ் பிறகு எங்கள் சொந்தகாரர் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்… அவங்களுக்காகவும் வைக்க வேண்டும்” என்றார். மாறன்



“சரி மா இப்போ இங்கு முடித்து விட்டு பின் ஹரி நீதா கல்யாணத்தையும் முடித்து விட்டு ஒன்றாக சென்னைக்கு போகலாம்” என்றார் அவர் சொன்னது சரியாக இருக்க அனைவரும் சரி என்றனர்.



அக்னி ருத்திரன் ரிசப்ஷன் நாளை மறுநாள் என்றும் ஹரி நீதா திருமணம் மூன்று நாட்களின் பின் என்றும் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது பின் அனைவரும் தூங்க சென்றனர்… ருத்திரன் ஷிவியை தூக்கி கொண்டு முதலில் சென்றான் பின்னால் அக்னி ஷிவிக்கும் பாலும் ருத்திரனுக்கு ஆப்பிள் ஜுஸ் சாப்பிட எடுத்து சென்றாள்… ருத்திரன் பால்கனியில் இருந்து கால் பேசி கொண்டு இருக்க ஷிவி தன் டெடிபியார் உடன் விளையாடி கொண்டு இருந்தாள்… அக்னி ஷிவி தூங்குவதற்கு ஸ்லீவ் பைஜாமா நைட் டிரஸ் அணிவித்தாள் பின் அவளுக்கு பால் கொடுத்து தூங்க வைக்க முயற்சி செய்ய அப்போது ருத்திரன் உடை மாற்றி வர ஷிவி



“மம்மி நீ போ டிரஸ் மாத்து” என. அக்னி




“குட்டி மம்மி பிறகு சேன்ஸ் பண்ணுகிறேன் பாப்பா இப்போ தூங்கு” என .ஷிவி



“நோ மம்மி நீ டாக் பிறகு ஷிவி மாதிரி தானே டிரஸ் பண்னுவ என்றாள் . ருத்திரன்



“பேபி என்ன அது டாக் என கேட்க அக்னி



“அது அவள் நைட் டைம்மை சொல்கிறாள்” என.ருத்திரன்



“ஒகே பிறகு இன்னொன்றும் சொன்னாள்” என சிரித்தவாறு கேட்க.அக்னி அவனை முறைத்து விட்டு வேறு ஒன்றுமில்லை என .ருத்திரன் அக்னியை பார்த்து




“அக்னி நீ கல்யாணத்துக்கு முன்பு எப்படி இருந்தாயோ அப்படி இரு அந்த அக்னியை தான் எனக்கு பிடிக்கும் யாருக்காகவும் நீ மாற வேண்டாம்… நீ நைட் டிரஸ் போடுவதற்கு ஏன் தயக்கம் நான் இருப்பதாலா… லுக் நீ என் வொய்ஃப் நம்ம லைவ் ஸ்டாட் பண்ண இல்லை தான்…. அதற்கா நீ இப்படி உனக்கு பிடித்த டிரஸ் போட தயங்க வேண்டாம்… போய் உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் பண்னு இது நம்ம ரூம் நான் நீ பேபி மூன்று பேருக்கும் மட்டும் தான் இந்த இடம்” என்றான்.



அக்னி தயக்கமாக சென்று அரை ஸ்லீவ் டாப் கேப்ரி பேண்ட் முழங்கால் கீழ் வரை இருக்கும் வகையான உடை அவளை இன்னும் சிறு பெண்ணாக காட்டியது ருத்திரன் ஒரு கணம் அவளை பார்த்து விட்டு ஜுஸ் குடித்தான்… ஷிவி அக்னி வந்தவுடன் மம்மி சாங் பாடு என்று கேட்க அவளை தூக்கி மடியில் தூங்க வைக்க போக நோ நான் டாதி கூட தூங்குவேன். என்று ருத்திரன் அருகில் செல்ல அவன் படுக்க அவன் மேல் ஏறி படுத்தாள்… ருத்திரன் மார்பில் தலைவைத்து படுத்தபடி மம்மி கிட்ட வா என… அக்னி ருத்திரன் அருகில் வர பாடு மம்மி என அக்னி பாட ஆரம்பித்தாள் அவளின் ஒரு கை ஷிவியை தட்டி கொண்டு இருக்க ருத்திரன் ஷிவியின் தலையை தடவி கொண்டு இருக்க ஷிவி தூங்கி போனாள்… அவள் தூங்கிய பிறகு அவளை அக்னி தூக்க போக ருத்திரன் வேணாம் அவள் இப்படி தூங்கட்டும் என் பெண்ணு என் மேல் தூங்கட்டும்… இது தான் இனி அவள் இடம் என்று தன் மார்பை காட்டினான்….அக்னி ஏதும் போசாமல் மறுபக்கம் சென்று தூக்க ஆரம்பித்தாள்.



மறுநாள் ருத்திரன் எழும் போது ஷிவி ருத்திரன் கழுத்தை கட்டி கொண்டு தூங்கி கொண்டு இருந்தாள் அவளை மெதுவாக தூக்கி அக்னி அருகில் படுக்க வைத்து விட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தான்… அக்னி இன்னும் உறங்கி கொண்டு இருக்க ருத்திரன் தன் ஜிம்க்கு சென்றான் சிறிது நேரத்தில் அக்னி எழுந்து ப்ரெஸ் அப் ஆகி வர ஷிவி மம்மி என எழுந்தாள்… அக்னி அவளை குளிக்க வைத்து விட்டு வர டாதி எங்க மம்மி என்று கேட்க “டாடி ஜிம்க்கு போய் இருக்கிறார்… வா மா நம்ம கீழே போய் சாமி கும்பிட்டு பாப்பா பால் சாப்பிடுவோம்” என்று சொல்ல நோ நானு டாதி பார்கனும் என ஷிவி அழு ஆரம்பிக்க…அக்னி



“ஷிவி நீ வர வர ரொம்ப அடம் பிடிக்கிற மம்மி கிட்ட அடி வாங்காத வா டாடி வருவார் என .ஷிவி



“போ நீ என்ன திட்டிற நானு டாதி கிட்ட சொல்றன்” என.அக்னி



“சரி உன் டாடி வந்த பிறகு சொல்லு இப்போ வா பால் சாப்பிட என ஷிவி வர மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க அக்னி அடிக்க கை ஓங்க .அக்னி என்று கோபத்துடன் ருத்திரன் வந்தான் ஷிவி டாதி என்று அழுதவாறு அவனிடம் போக அவளை “தூக்கி ஏன் என் பேபி அழுதீங்க” என. ஷிவி “ நீ இல்ல டாதி அது தான் ஷிவி க்ரை பண்னுன” என்றாள்.ருத்திரன்



“ஸாரி பேபி டாடி இனி பேபியை அழைத்து போகிறேன் நான் மம்மி கிட்ட சொல்கிறேன் பேபி டாடியை கேட்டால் அழைத்தால் வர சொல்கிறேன்” என.ஷிவி


“ஐ லவ் டாதி என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டாள் பின் ருத்திரன் இன்டர்கம்ல் பால் கொண்டு வர சொல்லி விட்டு ஷிவியை பெட்ல் விளையாட விட்டு அக்னியிடம் திரும்பினான்.





தீ மலரும்….









இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 
Status
Not open for further replies.
Top