வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீயினுள் பூத்த மலர் - கதை திரி

Status
Not open for further replies.

அத்தியாயம் -48
ருத்திரன் அக்னியிடம் திரும்பி “அக்னி நான் ஏற்கனவே ஒரு தரம் உனக்கு வார்ன் பண்ணினேன்… என் பெண்ணை அழ வைக்காதே என்று அவள் அழுதால் நான் யார் என்று பார்க்க மாட்டேன்… அவள் என்னை கேட்டால் என் கிட்ட அழைத்து வா அதை விட்டு கை நீட்டும் வேலை வைக்காதே”என.அக்னி“அவள் எனக்கும் பெண்ணு தான் அவள் கேட்கிற எல்லாம் கொடுத்து பழக்கினால் வளர்ந்த பின் அவள் கேட்பதை கொடுக்கா விட்டால் பிரச்சினை வரும்… ஒரு அம்மா இப்படி தான் இருப்பாங்க நல்லது எது கேட்டது எது என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்… அதுவும் பெண் அவள் போகும் வீட்டுக்கு உங்களை அது தான் அப்பாவை ஏதும் சொல்ல மாட்டாங்க.அம்மாவை தான் திட்டுவாங்க அதற்கு தான் இப்பவே பழக்கினால் தான் சரி” என.ருத்திரன்“அப்படி சொல்லும் வீட்டுக்கு என் பெண் போக வேண்டிய அவசியம் இல்லை…அவள் ருத்ரதேவேஷ் பெண்ணு அது மட்டுமல்ல என் வொய்ஃப்வை யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க அப்படி சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியும்” என அக்னி பேச வாய் எடுக்க டோர் பெல் அடித்தது… அக்னி போய் பார்க்க வேலையாள் பால் கொண்டு வந்து இருந்தான் அக்னி அதை எடுத்து கொண்டு ஷிவியை அழைக்க… அவள் கோபமா முகத்தை திருப்பிக் கொண்டாள் அக்னி அப்படியே அப்பன் குணம் பிடிவாதம் அவனும் இப்படி தான் என்று ருத்திரனுக்கு அர்ச்சனை செய்தாள் மனதில். ருத்திரன் ஷிவி அருகில் சென்று“ஏஞ்சல் மம்மி பாவம் தானே அவள் உன் நல்லதுக்கு தான் சொன்னாள் பேபி மில்க் குடித்து விட்டு டாடியை பார்க்க போகலாம் என்று…. பேபி தான் அடம் பண்ணீங்க அது தான் மம்மிக்கு கோபம் இனி பேபி அடம் பண்ண கூடாது ஷிவி குட் கேர்ள் தானே” என. ஷிவி“யஸ் டாதி ஷிவி குட் கேர்ள் ஸாரி மம்மி என்று எழுந்து அக்னி அருகில் செல்ல அக்னி அவளை தூக்கி முத்தமிட்டாள்… பின் பாலை குடிக்க வைத்து விட்டு கிழே கொண்டு செல்ல ருத்திரன் ப்ரெஸ் அப் பண்ண போனான். அக்னி வர பைரவி“ அக்னி மா நாளைக்கு நம்ம எல்லோருக்கும் டிரஸ் வரும் நம்ம தான் செலக்ட் பண்ண வேண்டும் “என்று கூறினாள். மாறன்“ஹரி ,நவீஷ் நீங்க சர்வின் கூட இருந்து மற்ற ஏற்பாடுகள் எல்லாம் பாருங்க பைரவி நீ அக்னி, ஷிவி டிரஸ் எல்லாம் செலக்ட் பண்ணு” என.அப்போது ஹரி“அங்கிள் இப்போது உள்ள பேஷன் எல்லோரும் ஒரேய கலர் டிரஸ் கோட் அணிவது தான் அது மட்டுமல்ல.. அங்கிள் பங்ஷன் நடக்கும் இடத்தையும் அந்த கலருக்கு தான் செட் பண்ண வேண்டும்… இன்விடேஷன் கார்ட் நம்ம மெயில் பண்ணலாம்” என அனைவருக்கும் அது சரி என்று பட்டது பின் அனைவரும் தூங்க சென்றனர். காலையில் வழமையான கடமைகளை செய்து விட்டு அக்னி வர பைரவி“அக்னி மா இன்னும் கொஞ்ச நேரத்தில் கடையில் இருந்து டிரஸ், ஜீவல்ஸ் வரும் உனக்கு பிடித்த கலரை நீயும் ருத்ரனும் செலக்ட் பண்ணுங்க” என .அக்னி
“அக்கா எனக்கு இதை பற்றி தெரியாது நீங்களே செலக்ட் பண்ணி தாங்க” என பைரவி சிரித்து விட்டு“ருத்ரனும் இப்படி தான் மா அண்ணி நீங்களே செலக்ட் பண்னுங்க என்று சொல்வான்” என்றாள் பின் சிறிது நேரத்தில் ருத்திரன் வர கடையில் இருந்து உடைகள், நகைகள் வந்தது உடைகள் தெரிவு செய்யப்பட்டது… அக்னிக்கு லாவண்டர் கலர் மேல் பகுதியில் கீழே பிளாக் கலர் ஹாப் சாரி மாடல் முழுவதும் எம்பிராய்டரி ஒர்க் சேலை கற்கள் வைத்து பிளாக் கிராண்ட் பிளவுஸ் … ருத்திரனுக்கு ஸ்லிம் ஃபிட் வெல்வெட் டபுள் பிரெஸ்டட் கோட் பிளாக் கலர், லாவண்டர் நிற சேட், ஷிவிக்கு அதையே நிறத்தில் பார்ட்டி பிராக் என பைரவி எடுத்தாள். …மற்றவர்களுக்கும் பிளாக், லாவண்டர் கலரில் டிரஸ் எடுத்தாள் அதற்கு தகுந்த மாதிரி வைட் பிளாக் கோல்டன் நிற நெக்லஸ் செட் என அனைத்தும் பைரவி தன் பெண்ணுக்கு செய்வது போல் பார்த்து பார்த்து செய்தாள்.பின் அனைத்து வேலைகளும் முடிய மெயிலில் இன்விடேஷன் அனுப்பினர் ஹரி, நவீஷ், சர்வின் தங்கள் செவன் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றனர் அரேஞ்ச்மென்ட் பண்ண அது முடிந்து வந்து பின்னர் அனைவரும் உணவு உண்டு உறங்க சென்றனர்… அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது வழமையான கடமைகளை அனைவரும் செய்து விட்டு வர சிறிது நேரத்தில் ஜெயராம், அபி, மயூரி குடும்பம், ஜெய் என அனைவரும் வந்தனர்.


அக்னி தாத்து என ஒடி சென்று அவரை கட்டியணைத்தாள் பின் அபி, மயூரி, ஜெய் என அனைவரையும் நலம் விசாரித்தாள் ருத்திரனும் அனைவரையும் விசாரித்து அவர்களை ரெஸ்ட் எடுக்க சொன்னான்… பின் அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு மதியம் குட்டி தூக்கம் போட்டனர். சரியாக மூன்று மணிக்கு பார்லர் ஆட்கள் வந்து அக்னிக்கு மேக்கப் போட தொடங்கினர் மாலை ஆறு மணிக்கு பார்ட்டி ஆரம்பம் அக்னிக்கு மேக்கப் போட்டு பொருத்தமான ஹெயர் ஸ்டைல் போட அக்னி தேவதையாக தெரிந்தாள்… ருத்திரன் தன் மற்றொரு ரூம்மில் இருந்து ரெடியாகி வந்தான். கீழே அவன் பேசி கொண்டு இருக்கும் போது அக்னி வர ருத்திரன் ஒரு கணம் பேச்சு இழந்து போனான்… அக்னியும் அவனை பார்த்த படியே நிற்க பைரவி தான் கண் படும் என்று இருவருக்கும் சுற்றி போட்டாள்.பின் அனைவரும் ஹோட்டல் நோக்கி சென்றனர் அங்கு இறங்கியவுடன் வானவேடிக்கைள் வானில் கலர்புள்ளாக போட்டனர் அவர்கள் வரும் வழி எல்லாம் ரோஜா பூக்களால் பாதை அமைத்து இருந்தனர்…. பார்ட்டி ஹால் முழுவதும் லாவண்டர், பிளாக் டெக்கரேஷன் அன்ட் பூக்கள்,பலூன்களை கொண்டு அமைத்து இருந்தது… அங்கு மேடை பூராவும் அதையே மாதிரி இருந்தது அக்னி ருத்திரன் அமர உயர் வெல்வெட் சோபா லாவண்டர், பிளாக் நிறத்தில் இருந்தது.ஆறு மணி அளவில் ஒவ்வொருவரும் வர ஆரம்பித்தனர் பிசினஸ் பார்ட்னர்கள், சினிமா ஸ்டார்ஸ், விவிஜபி, விஜபி, போலீஸ், நேவி, ஆர்மி உயர் பதவியில் இருப்பவர்கள் மந்திரிகள், விளையாட்டு துறை பிரபலங்கள் என்று வந்து கொண்டு இருந்தனர்… அன்று தான் அக்னி ருத்திரனின் உயரத்தை கண்டாள் அவள் மட்டுமல்ல அக்னியின் குடும்பத்தினர் அனைவரும்... ருத்திரன் ஷிவிக்கு மட்டும் நான்கு கார்ட்ஸ் போட்டு இருந்தான் காரணம் தன் மகள், மாறனின் குல வாரிசு என்றால் கடத்தல் நடவடிக்கை இடம் பெறும் என்று அனைவரும் வந்த பின் ஹரி ஆறு அடுக்கு கேக் ஒன்றை கொண்டு வர சொன்னான்.கேக் வந்ததும் அக்னி ருத்திரனை கட் பண்ண சொல்ல ருத்திரன் ஷிவியை தூக்கி அக்னியுடன் சேர்ந்து வெட்டினான் அக்னிக்கு கண் கலங்கியது ருத்திரனின் செயலை எண்ணி என்ன தான் அண்ணன் மகளாக இருந்தாலும் எல்லோரும் இப்படி செய்வது இல்லை.. ருத்திரன் தன் மகளாக சமூகத்திக்கு ஷிவியை அறிமுகபடுத்தி விட்டான் அங்கு இருந்த அனைவருக்கும் அவனின் செயலை எண்ணி பெருமை ஏற்பட்டது… பின் ருத்திரன் ஷிவிக்கு, அக்னிக்கு ஊட்டி விட அக்னி அது மாதிரி செய்தாள் ஷிவி தானும் என்று தன் அன்னை, தந்தைக்கு ஊட்ட அனைவரும் மகிழ்ச்சியாக கைகளை தட்டினர்… பின் அனைவரும் வந்து வாழ்த்து கூறினர் ருத்திரன் அக்னிக்கு அனைவரையும் அறிமுகபடுத்தி வைத்தான்.அப்போது அங்கு ராகேஷ், சீமா வந்தனர் அவர்களின் தந்தை பாரின் சென்ற படியால் இவர்களை அனுப்பி வைத்து இருந்தார்… இன்னும் சிலர் வரமுடியாத காரணத்தினால் தங்கள் மனைவி, மகன், மகள் அல்லது தங்கள் சார்பாக யாரும் ஒருவரை அனுப்பி இருந்தனர் ராகேஷ், சீமா மேடை ஏறினார்கள்.“ஹாய் ரூத் ஹாவ் ஆ யூ” என சீமா அணைக்க வர ருத்திரன்”ஹாய் சீமா ஜ யம் பைன்” என்று கூறி அருகில் கேக் சாப்பிட்டு கொண்டு இருந்த ஷிவியை தூக்கி கொண்டான்… ராகேஷ் “ஹாய் அக்னி யூ ஆ சோ பியூட்டிபுல்” என்று கை கொடுக்க வர அக்னி கரங்களை குவித்து வணக்கம் சொன்னாள். சீமா“என்ன ரூத் இப்படி பண்ணி விட்டீங்க எங்கேயோ சென்னையில் போய் உங்க வொய்ஃப்வை செலக்ட் பண்ணி இருக்கிறீங்க கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம் நான் வந்து இருப்பேன்” என.ருத்திரன்“சீமா மைண்ட் யுவர் வேர்ட்ஸ் அக்னி என் உயிர் அவளை நாலு வருஷம் லவ் பண்ணினேன் அது மட்டுமல்ல அவள் என் குழந்தையை சுமந்து எனக்கா காத்திருந்தவள்… உன்னை மாதிரியா உன் டாடி என் டாட் கிட்ட உன்னை ப்ரபோஸ் பண்ணி வந்து போ எனக்கு பிடிக்கவில்லை என்று நானும் டாட்டும் சொன்ன பிறகு நீ போய் பாரினில் என்ன செய்தாய் என்று நினைவு படுத்தி பாரு… அண்ட் ராகேஷ் உனக்கு இது தான் லாஸ்ட் வார்னிங் என் வொய்ஃப் கிட்ட ஒழுங்காக பிகேவ் பண்ணு… அவள் நெருப்பு பார்த்து இரு” என .சீமா“ஏய் கூல் ரூத் நான் சும்மா ஜோக்காக தான் சொன்னேன் எனி வே ஹாப்பி மேரீஸ் லைவ்” என்று கூறி ராகேஷ் உடன் இறங்கி சென்றாள். ருத்திரன் அக்னி பக்கம் திரும்பி
“அக்னி அவள் ஏதோ Revenge வைத்து இப்படி பேசி போகிறாள் நீ தப்பாக நினைக்காதே” என .அக்னி“எனக்கு தெரியும் அவள் பொறாமையால் தான் அப்படி பேசினாள் என்று உங்கள் பாஸ்ட் லைவ் பெண்ணுங்க விஷயத்தில் எப்படி என்றும் தெரியும்… ஆனா அவள் சொன்னது உண்மை இல்லை அவள் கண்ணில் பொய் இருந்தது மற்றவங்களுக்கு நீங்க எப்படியோ ஆனா எனக்கு நீங்க உண்மையாக தான் நடக்கிறீங்க… அண்ட் பெண்ணுங்க விஷயம் முதலில் எப்படியோ இனி அப்படி நடந்தால் நீங்க டெட் பாடி தான் ஷிவிக்கு உங்களை விட நல்ல ஒரு அப்பா கிடைக்காது” என.ருத்திரன்“தேங்கியூ அக்னி அவள் என் பெண்ணு அவளும் நீயும் தான் என் உயிர் நான் பெண்ணுங்க விஷயத்தில் சுத்தம் இல்லை தான் அது உன்னை பார்க்க முன்… எப்போ உன்னை பார்த்தேனோ அன்றிலிருந்து நான் மனதால் கூட யாரையும் நினைக்கவில்லை இந்த கைகள் உன்னை தவிர யாரையும் தொடாது… நீ விருப்பட்டால் மாத்திரம் தான் உன்னை நான் தொடுவேன் இது என் பெண்ணு மேல் ப்ராமிஸ் நீ என்னை லவ் பண்ணுவ அக்னி நான் என் லாஸ்ட் பிரித் வரை அதற்காக வெயிட் பண்ணுவேன்”.அக்னி“எனக்கு தெரியாது பட் ஷிவி மேல் வைத்த பாசம் உண்மை அது மட்டும் தெரியும் எனக்கு ஒழுக்கம் இல்லாதவங்களை பிடிக்காது ஆனா அதுவே எனக்கு வாழ்க்கையாக அமைந்துள்ளது… ஷிவிக்காக தான் ஆரம்பித்தோம் ,பார்ப்போம் எப்படி நம்ம லைவ் போக போகிறது என சொன்னாள்… அக்னியும் ருத்திரனும் பேசி கொண்டு இருப்பதை பார்த்து அனைவரும் பெர்பேக்ட் கப்பிள் என்றனர் சீமா அக்னியை கோபமாகவும் ராகேஷ் அக்னி காமமாகவும் பார்த்தனர் ஷிவி ருத்திரனின் தோளில் தூங்கி இருக்க நீதா வந்து ஷிவி வாங்கி கொண்டு போக ருத்திரன் ஷிவியை முத்தமிட்டு அனுப்பி ஷிவி கார்ட்ஸ்யிடம் கண் காட்டினான்…நீதா சிவகாமி மடியில் ஷிவியை படுக்க வைத்தாள் சிவகாமி தான் ஷிவியை வாங்கி விட்டு நீதாவை பார்ட்டியில் கலந்து கொள்ள சொன்னார் அவர் அருகில் ஜெயராம் அமர்ந்து இருந்தார்…. அபி மயூரி, ஹரி நீதா சர்வின் பைரவி அனைவரும் பார்ட்டியில் கலந்து கொண்டனர் மாறன் தன் பிசினஸ் சர்க்கிளுக்கு ஜெயராமை அறிமுகபடுத்த அவர் பேசி கொண்டு இருந்தார் சிவகாமி அருகில் தாயம்மாள் சற்று தள்ளி கார்ட்ஸ் நின்று இருந்தனர்.

தீ மலரும்........
இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 
அத்தியாயம் -49
ருத்திரன் அக்னியின் ரிசப்ஷன் நடந்தது கொண்டு இருந்தது பல உயர் மட்ட ஆட்கள் பிரபலங்களும் வந்து கொண்டு இருந்தனர் ஒரு பக்கம் மது விருந்து இன்னொரு பக்கம் வெஜ், நான்வெஜ்,டெசர்ட் உணவு வகைகள் இருந்தது… எல்லோருக்கும் self save உணவு முறையில் விருந்து நடைபெற்றது சிவகாமி ஷிவியை கொண்டு அங்கு அவர்களுக்கு இருந்த ரூம்க்கு தான் செல்வதாக கூறினார்… ருத்திரனும் அது தான் அவருக்கும் ஷிவிக்கு நல்லது என்று நினைத்து தாயம்மாள், தனது கார்ட்ஸ் உடன் தங்கள் அறைக்கு அனுப்பினான்.அங்கு வந்த இருந்த ருத்திரன் நண்பன் ஒருவன் DJ மியூசிக் ஒலித்தது கொண்டு இருக்க அனைவரையும் ஆட வரும் படி அழைக்க அனைவரும் சென்று ஆடி கொண்டு இருந்தனர் தமிழ், ஹிந்தி பாடல்கள் மாறி மாறி ஒலித்து கொண்டு இருந்தது… அப்போது அவன் ருத்திரனிடம் அக்னியுடன் ஆடவரும் மாறு அழைக்க ருத்திரன் மறுத்தான் எல்லோரும் வற்புறுத்த ருத்திரன் அக்னியை பார்க்க அவள் சரி என்று தலை அசைத்தாள் அழகான தமிழ் பாடல் ஒலித்தது.யாரோ இவன் யாரோ இவன்

என் பூக்களின் வேரோ இவன்

என் பெண்மையை வென்றான் இவன்

அன்பானவன்அக்னி ருத்திரன் தோளில் ஒரு கையும் அவனின் மறு கரத்தில் ஒரு கையும் ருத்திரன் அக்னி கரத்தில் ஒரு கை இடையில் ஒரு கையும் வைத்து ஆட தொடங்கி இருந்தனர்.உன் காதலில் கரைகின்றவன்

உன் பார்வையில் உறைகின்றவன்

உன் பாதையில் நிழலாகவே

வருகின்றவன்ருத்திரன் அக்னியை காதலுடன் பார்த்தவாரே ஆடி கொண்டு இருந்தான்.என் கோடையில் மழையானவன்

என் வாடையில் வெய்யிலானவன்

கண் ஜாடையில் என் தேவையை

அறிவான் இவன்
அக்னி ருத்திரன் கண்களை பார்த்து கொண்டு இருந்தாள்.எங்கே உன்னை கூட்டிச் செல்ல

சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாறவே

உன் மார்பிலே இடம் போதுமே

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

மெதுவாக இதயங்கள் இணைகிறதே

உன் கைவிரல் என் கைவிரல்

கேட்கின்றதே
அக்னி தன்னை மறந்து தன் பெண்மையின் காவலன் தன் மாங்கல்யத்தின் சொந்தகாரன் ருத்திரன் மார்பில் தலைவைத்தாள் ருத்திரன் பிரமித்து போய் விட்டான்… எவளை தன் உயிர் என்று நினைத்தானே எவள் காதலுக்கு அரசகுமாரன் ஆண்டி மாதிரி காதலை யாசித்து இருந்தானே அவளே அவள் மனதில் இருப்பது தான் என்று உணர்த்தி விட்டாள் குனிந்து அக்னியின் நெற்றியில் முத்தமிட்டான்.உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்

என் நாணங்கள் ஏன் தோற்குதோ

உன் வாசனை வரும் வேளையில்

என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே

அலைகளில் மிதந்தது தவழ்கிறதே

கரைசேருமா உன் கைசேருமா

எதிர்காலமே
ருத்திரன் அக்னியின் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து அவளை இடையோடு அணைத்து ஆடி கொண்டு இருந்தான்… இங்கு சீமாவும், ராகேஷ் இருவரும் அக்னி ருத்திரனை கொலை வெறியில் பார்த்து கொண்டு இருந்தனர்.எனக்காவே பிறந்தானிவன்

எனை காக்கவே வருவானிவன்

என் பெண்மையை வென்றான் இவன்

அன்பானவன்

என் கோடையில் மழையானவன்

என் வாடையில் வெய்யிலானவன்

கண் ஜாடையில் என் தேவையை

அறிவான் இவன்
அக்னி ருத்திரன் கழுத்தில் தன் இரு கரங்களையும் கோர்த்து அவன் மார்பில் தலைவைத்து கண் மூடினாள் ருத்திரன் அக்னியை தூக்கி கொண்டு அவள் நெற்றியோடு தன் நெற்றியை வைத்து கொண்டு பாடலை நிறைவு செய்தான்… அனைவரும் மகிழ்ச்சியாக கை தட்ட ருத்திரன் நண்பர்கள் விசில் அடித்தனர் அப்போது தான் ருத்திரன் அக்னிக்கு சுய நினைவும் தங்கள் இருக்கு இடமும் நினைவு வந்தது… ருத்திரன் அக்னியை மெதுவாக இறக்கி விட்டான் அவன் அருகில் அவன் நண்பன் வந்து “சான்ஸ்சே இல்ல மச்சி ஒரு சூப்பர் லவ் சாங் பார்த்து affect டா பெர்பேக்ட் கப்பிள்” என அனைவரும் வாழ்த்து கூறினர்.அக்னிக்கு முகம் நன்றாக சிவந்து விட்டது வெட்கத்தில். அவளுக்கு ருத்திரனை பார்க்க சங்கடமாக இருக்க அதை உணர்ந்த. அவன்


“போது டா ரொம்ப ஒட்டாதீங்க உங்க ரிசப்ஷன்க்கு இதை விட நீங்க free show காட்டினீங்க என்ன டா ஹரி ,நவீ என்று கேட்க… அனைவரும் “ஒ சிஸ்டர்க்கு சப்போட்டா ஒகே மச்சி என்ஜாய் டா” என்று கிண்டல் பண்ணி கொண்டு இருக்க .பைரவி வந்தாள்“ஏய் என்ன டா எல்லோரும் என் பையன், பெண்ணை கிண்டல் பண்றீங்க ஏன் உங்க ரிசப்ஷன்க்கு செய்தை மறந்து விட்டிங்களா இருங்க உங்க வொய்ஃப்வை கேட்டால் தெரியும்”என.“அய்யோ பாபி நாங்க சும்மா தான் கிண்டல் பண்ணினோம் உங்க பையன் பெண்ணை பத்திரமாக நீங்களே பார்த்து கொள்ளுங்கள்” என்று கூறி சிரித்தனர்.பைரவி“இன்னும் உங்கள் வால்தனம் போக இல்லை டா” என்று கூறி சிரித்து விட்டு அக்னியை அழைத்து கொண்டு சாப்பிட சென்றாள் ருத்திரன் குரூப் டிரிங்ஸ் சாப்பிட அவனை வற்புறுத்தி அழைத்து கொண்டு சென்றனர்… முக்கியமான ஆட்கள் அனைவரும் டின்னர் முடிய சென்று இருக்க மிகுதி ஆட்கள் எல்லாம் பிசினஸ் பார்ட்டினர்கள், ப்ரண்ட்ஸ் தான் அதனால் அவர்கள் பேசி கொண்டு இருந்தனர் ருத்திரனின் நண்பர்கள் மனைவிமார்கள் அனைவரும் வந்து இருந்தனர் அனைவருக்கும் ருத்திரன் நல்ல அண்ணன் அதனால் அவர்கள் ருத்திரனை பற்றி அக்னியிடம் உயர்வாக பேசி கொண்டு இருந்தனர்… நீதாவை சுஜா அழைத்து தன் நண்பிகளுக்கு அறிமுகபடுத்தி கொண்டு இருக்க. மயூரி அக்னி கூட இருந்தாள். அபி டாக்டஸ் உடன் கதைக்க மாறன், ஜெயராம் அரசியல்வாதிகள், பிசினஸ் பார்ட்டினர்கள் உடன் பேசி கொண்டு இருந்தனர்.ருத்திரனை வற்புறுத்தி குடிக்க கொடுத்தனர் இன்றைய நாள் சந்தோஷத்திக்காக அவன் மறுத்தான் காரணம் அக்னிக்கு குடிப்பது பிடிக்காது ஹரி, நவீஷ் அளவாக குடிக்க ருத்திரனை வற்புறுத்த வேண்டாம் என்றான்….அவர்களும் சரி என்று விட இதை பார்த்து கொண்டு இருந்த ராகேஷ் ருத்திரனுக்கு ஜுஸ் எடுத்து போகும் போது அதில் டிரிங்ஸ் (மது) கலந்து கொடுத்தான் வெயிட்டருக்கு தெரியாமல் ஏன் என்றால் இது ருத்திரனின் ஹோட்டல். அது தான் அவன் வெயிட்டருக்கு தெரியாமல் கொடுத்தது…. இன்று இவனுக்கும் அக்னிக்கும் சண்டை வரட்டும் என்று பின் ஒவ்வொருவராக கிளம்ப ருத்திரன் ப்ரண்ட்ஸ்ம் கிளம்பினர் ஹரியின் கல்யாணத்தில் சந்திக்கலாம் என்று கூறி சிவகாமியின் ரூம்க்கு சென்று அவரை அழைத்து கொண்டு அனைவரும் பேலஸ்க்கு சென்றனர்.அனைவரும் ரூம்க்கு தூங்க செல்ல அக்னி ஷிவியை தூக்கி கொண்டு வந்து உடை மாற்றி பெட்ல் படுக்க வைக்க ருத்திரன் வந்தான் அவன் குடித்தது. உயர் ரக மது அதனால் வாசனை வரவில்லை… ஆனால் ருத்ரனுக்கு மயக்கம் சிறிது இருந்தது அவன் அருகில் வர அவன் சிறிய தடுமாற்றமே அக்னிக்கு உணர்த்தியது. அவன் குடித்து இருக்கிறான் என்று.“ருத்திரன் டிரிங் பண்ணி இருக்கிறீங்களா” என அக்னி கேட்க.ருத்திரன்“நோ அக்னி நான் டிரிங் பண்ணவே இல்லை ஜுஸ் தான் குடித்தேன்” என.அக்னி“பொய் சொல்லாதீங்க இப்படி தான் பாப்பா இருக்கிற இடத்தில் டிரிங் பண்ணி வருவதா…நல்ல காலம் அவள் தூங்கிட்டாள் இல்லா விட்டால் உங்களை இந்த நிலையில் பார்த்து இருக்க வெறுக்க ஆரம்பிப்பாள்” என.ருத்திரன்“நோ ஐ ப்ராமிஸ் என் ஏஞ்சல் மேலே நான் குடிக்கவில்லை வேணும் என்றால் ஹரி, நவீயை கேட்டு பாரு” என. அக்னி“யாரை அவங்களை நல்ல பார்ட்டினர் தான் அவங்களே டிரிங் பண்ணி விட்டு போகிறாங்க இதில் வேறு உங்களுக்கு சாட்சி சொல்ல நல்ல ஆட்களை பார்த்தீங்க… இதனால் ஷிவி உங்களை வெறுத்தாள்” என கேட்க .ருத்திரன்“நோ அவள் என் ஏஞ்சல் அவள் எனக்கும் காட் (God) கொடுத்த கிப்ட்” என்று கூறி ஷிவியின் கால் அருகில் அமர்ந்து அவள் பாதத்தை முத்தமிட்டவன் பின் அதை நெற்றியில் வைத்து அவள் மலர் பாதத்தில் உள்ள தங்க கொலுசுகளை வருடி. “பேபி நீ டாடியை வெறுப்பாயா உன் மம்மி சொல்கிறாள்… நீ டாடியை வெறுத்தாள் டாடி செத்து போய் விடுவேன் நீ தான் என் லைவ் எனக்கு உன் மம்மியை கொடுத்தவள்…. எனக்கு மம்மி இல்லை பேபி என் தப்பை சொல்ல உன் தாத்தா சொல்வார் தான் ஆனா மம்மி போல் வருமா நீ மம்மி மடியில் தூங்கிற போ எனக்கும் ஆசையாக தான் இருக்கும் உன் மம்மி மடியில் தூங்க… ஆனா உங்க மம்மி தான் அவளை தொட கூடாது என்று சொல்லி விட்டாள் யூ நோ பேபி உங்க மம்மியை நான் எவ்வளவு லவ் பண்ணுகிறேன் தெரியுமா அவள் தான் எனக்கு எல்லாம் பட் அவளுக்கு நான் பேட் பாய் அது உன் மம்மியை பார்க்க முன்… அதற்கு பிறகு இந்த ருத்திரதேவேஷ் லைவ்யில் அவளை தவிர யாரும் இல்லை ஷீஸ் மை ஒன்லி லவ் இன் மை லாஸ்ட் பிரித்” என்று தன் மனதில் உள்ளவற்றை கூறி கொண்டு இருக்க .அக்னி மனதில் பாரம் ஏறியது அவனை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் செய்வதறியாது நின்றாள் அவளுக்கு புரிந்தது. ருத்திரன் உண்மையில் திருத்தி விட்டான் என்று…ஆனால் அவன் பார்ட்ஸ் லைவ் அது தான் அவளை ஊவா முள் போல் உருத்தி கொண்டு இருந்தது தன்னை தொட முன் வேறு பெண்களை தொட்டு இருக்கிறான் என்று அவளுக்கு நன்றாக தெரியும்… அவனின் மொத்த காதலுக்கு உரியவள் தான் என்று ஆனால் என்று ஒன்று வந்து இடையில் நிற்கின்றது ருத்திரன் ஷிவியின் காலடியில் தூங்க ஆரம்பிக்க .அக்னி தன்னை அறியாது மனதில் இருந்து தேவ் என்று அவன் தோளில் கை வைத்து அசைக்க அவன் சிறிது அசைய அக்னி “வாங்க எழுந்து பெட்ல் தூங்குங்க” என்றாள் ருத்திரன் தடுமாறி எழு அக்னி அவன் ஒரு கையை தன் தோளை சுற்றி போட்டு கொண்டு பெட்ல் படுக்க வைக்க முன்…அவன் கோட்டை கழட்டி விட்டு படுக்க வைத்தாள் அப்போது ருத்திரன் அக்னி மை இனி மை லவ் என்று கூறி கொண்டு இருந்தான் அதை கேட்ட அக்னிக்கு மனதில் ஏதோ ஒன்று இனிமையாக வருடியது… தூக்கத்தில் கூட தன்னை அவன் நினைக்கிறான் என்று பெண்களுக்கு உரித்தான பெருமை தன் கணவன் தன்னை மட்டும் தான் நினைக்கிறான்… பின் அவன் ஷுவை கழட்டி விட்டு போர்வையை எடுத்து போர்த்தி விட்டாள் அவன் தலையை தடவி விட்டு உடை மாற்றி வந்து ஷிவியின் அருகில் ருத்திரனை பார்த்தவாரே தூங்க ஆரம்பித்தாள்… ருத்திரன் அவள் மனதில் மெல்ல நுழைய ஆரம்பித்து விட்டான் இனி அக்னி ருத்திரனின் இனியாக மாறும் காலம் விரைந்து வந்து கொண்டு இருந்தது ராகேஷ் வடிவில்.தீ மலரும்…..

இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
 

அத்தியாயம் -50
ருத்திரன் காலையில் எழும் போதே பயங்கரமாக தலை வலித்தது அவனுக்கு நேற்று நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை அவன் குடிக்கவில்லை என்று தெரியும்…பிறகு எப்படி என்று யோசித்து கொண்டு இருக்க அக்னி லைம் ஜுஸ்யுடன் வந்தாள் ருத்திரனிடம் கிளாஸ்சை நீட்டினாள். ருத்திரன் அதை கையில் வாங்கியவாறு.


“அக்னி நேற்று என்ன நடந்தது எனக்கு பயங்கரமாக தலை வலிக்கிறது” என. அக்னி

ஓ அப்போ சாருக்கு நேற்று நடந்தது ஏதுவும் தெரியாது… நேற்று நீங்க டிரிங் பண்ணி வந்தீங்க அதுவும் புல்லாக உங்களுக்கு நினைவு இல்லை”என. ருத்திரன்“நோ அக்னி எனக்கு தெரியும் நேற்று உனக்கு பிடிக்காது என்று நான் டிரிங் பண்ணவில்லை ஜுஸ் மட்டும் தான் சாப்பிட்டேன் அதுவும் பேபி இருக்கிற போ நான் குடிப்பேனா”.அக்னி“ஹலோ சார் நான் ஏன் பொய் சொல்ல வேணும் வேண்டும் என்றால் உங்க பெண்ணு கிட்ட கேட்டு பாருங்க நீங்க செய்ததை சொல்வாள்”என.ருத்திரன்


“வாட் என துள்ளி எழுந்தான் அக்னி பேபிக்கு தெரியுமா நான் டிரிங் பண்ணியது அவள் எங்கே என்று கேட்க.”அக்னி


“ஓ அப்போ எனக்கு தெரிந்தால் பரவாயில்லை பெண்ணுக்கு மட்டும் தெரிய கூடாது அப்படி தானே” என.ருத்திரன்


“அக்னி பீளிஸ் நான் இப்போ பைட் பண்ணும் மூட்டியில் நான் இப்போ இல்லை இனி பீளிஸ் சொல்லு” என.அக்னி


“நீங்க வரும் போது அவள் தூங்கி கொண்டு இருந்தால் அதனால் அவளுக்கு தெரியாது இப்போ உங்களுக்கு ஃபீவர் அதனால் நீங்க தூங்கிறீங்க என்று சொல்லி அவளை விளையாட அனுப்பி இருக்கிறேன்... சீக்கிரமாக ரெடியாகி வாங்க ஹரி அண்ணா நீதா கல்யாண வேலைகள் இருக்கிறது” என கூறி சென்றாள்.


ருத்திரன் யோசனையாக ப்ரெஸ் அப் பண்ண சென்றான் அவன் ரெடியாகி வர நீதாவுடன் விளையாடி கொண்டு இருந்த ஷிவி டாதி என்று ஒடி வந்து…அவன் மடியில் ஏறி அமர்ந்து அவன் நெற்றியை தொட்டு பார்த்து “டாதி ஃபீவர் போயிடுச்சா மம்மி உனக்கு பிங்க் டாபி தந்தவையா” என்று கேட்க…ருத்திரன் அக்னியை பார்க்க.அவள்அது அவளுக்கு ஃபீவர் வந்தால் கொடுக்கிற மெடிசின் அதை தான் சொல்கிறாள்”என.ஷிவி


“யஸ் ஏஞ்சல் மம்மி டாபி தந்தாள் அது தான் டாடிக்கு ஃபீவர் போய் விட்டது என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்… பின் அனைவரும் ஹரி, நீதா திருமணம் விடயமாக பேச தொடங்க அப்போது ஹரி, நவீஷ் வர பின்னால் சுஜா வந்தார் சங்கர் வேலைக்கு சென்று இருந்தார். ஹரி, நவீஷ் வர ருத்திரன் இருவரையும் கொண்டு தன் ஆபிஸ் ரூம்க்கு சென்றவன் கதவை லாக் செய்து விட்டு ஹரி, நவீ இருவரின் முதுகில் அடிக்க.ஹரி“டேய் பாவி ருத்திரா நிறுத்து டா எனக்கு இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் நீ போட்டு இப்படி அடித்தால் என் வோஸ் டேமேசஜ் ஆகி விடும்” என கூற. ருத்திரன்ஆகட்டும் டா நேற்று வேண்டாம் என்று சொல்லியும். எனக்கு ஜுஸ்ல் டிரிங் மிக்ஸ் பண்ணி தந்து இருக்கிறீங்க... நல்ல வேளை ஷிவி தூங்கிட்டள் அவள் தூங்காமல் இருந்தால் என் கதி என்ன… டாடி டிரிங் பண்ணி வருகிறார் என்று என்னை தப்பாக நினைத்து இருப்பாள்”. என நவீஷ்“டேய் ருத்திரா காட் பிராமிஸ் டா நாங்க அப்படி செய்வோமா உனக்கு அவள் பெண்ணு என்றால் எங்களுக்கும் அவள் பெண்ணு தான் பிறகு அவள் உன்னை தப்பாக நினைப்பது மாதிரி நடப்போமா நேற்று டிரிங் கொண்டு தந்தது வெயிட்டர் டா அவனை பிடித்தால் சரி என்று கூற... ருத்திரனுக்கும் அது சரி என்றுபட்டது பின் அனைவரும் கிளம்பி தங்கள் ஹோட்டலுக்கு சென்றனர் அங்கு ருத்திரன் நுழைந்தவுடன் நேற்று சேவ் பண்ணிய வெயிட்டரை வர சொன்னான்… அவன் வர ருத்திரன் எழுந்து அவனுக்கு கன்னத்தில் அறை விட்டவன் பின் அவன் கழுத்தை பிடிக்க ஹரி நவீஷ் வந்து விலகி விட்டனர்.ருத்திரன்


“ஏய் என்ன தைரியம் இருந்தால் என் ஜுஸில் டிரிங்ஸ் கலந்து சாப்பிட கொடுத்து இருப்ப உன்னை இப்பவே போலீஸ் ஹாண்ட் ஒவர் பண்ணுகிறேன்… அது மட்டுமல்ல இனி இங்கே மட்டுமல்ல எங்கேயும் உனக்கு வேலை செய்ய முடியாது” என.வெயிட்டர்“சார் சத்தியமாக நான் செய்யவே இல்லை சார் நீங்க என் முதலாளி அது மட்டுமல்ல மாறன் சார் இப்படி செய்தால்… உங்க முன்னாடி இப்படி நிற்க விடுவாரா…என் பெண்ணு மேல் சத்தியம் சார் என.. ருத்திரனுக்கு அவன் பெண்ணு மேல் சத்தியம் என்றவுடன் ஷிவி ஞாபகம் வர ஹரியை பார்த்து.ருத்திரன்“ஹரி நம்ம சிசிடிவியை புட்டேஜை ஒரு தடவை பார்க்கலாம் என ஹரி அதை செக் பண்ண எதுவும் காட்டவில்லை பின் சீக்ரெட் கேமராவை செக் செய்ய ராகேஷ் ருத்திரனின் டிரிங்ல் ஏதோ கலப்பது தெரிந்தது... ருத்திரனுக்கு கண்கள் சிவக்க கைகள் இறுக்க நரம்பு புடைத்தது ஹரி வெயிட்டரை அழைத்து இவரை தெரியுமா என கேட்க .அவன்


“ஆம் சார் இந்த சார் தான் அவருக்கு கொஞ்சம் ஐஸ் கியூப் தர சொல்லி கேட்க நான் பக்கத்தில் இருந்த கியூப்பை எடுத்து கொடுத்தேன்” என்றான்.ருத்திரன் அவனை போக சொல்லி விட்டு.ருத்திரன்“எவ்வளவு தைரியம் இருந்தா அந்த ராகேஷ் என் விஷயத்தில் விளையாடி இருப்பான் நல்ல காலம் நாங்கள் ஒவ்வொரு இடத்திலும் சீக்ரெட் கேமராவை பிக்ஸ் பண்ணியதால் இவன் தான் என்று தெரிந்தது… இல்லை என்றால் யார் என்று தெரியாமல் நம்ம தடுமாறிக் கொண்டு இருக்க வேண்டும்” என.ஹரி“யஸ் ருத்திரா யூ ஆர் ரைட் பட் ஏன் அவன் இதை செய்தான் நீ டிரிங் பண்ணுவது எல்லோருக்கும் தெரியும்… பின் எதற்கு இப்போ தான் அக்னிக்கு பிடிக்காது என்று நீ டிரிங் பண்ணுவது இல்லை” என.ருத்திரன்வெயிட் ஹரி நீ இப்போ என்ன சொன்ன அக்னிக்கு பிடிக்காது என்று ரைட் ஐ காட் இட் அக்னிக்கு பிடிக்காது என்றால் நான் டிரிங் பண்ணினால் அக்னிக்கு பிடிக்காது அப்போ அவள் என்னை வெறுக்க ஆரம்பிப்பாள்… அது தான் அவன் மோட்டிவ் சோ அக்னியை என்னை வெறுக்க செய்து பிரிந்து போக பிளான் பண்ணி இருக்கிறான் அப்போ தானே அவன் அக்னியை நெருங்க முடியும்… வாரே வா வாட் ஏ பிளான் இடியட் இந்த ருத்திரதேவேஷ் இருக்க மட்டும் என் இனியை நெருங்க முடியாது அவள் என் உயிர் ஹரி அவனுக்கு நான் நாள் குறித்து விட்டேன் டா” என .ஹரி


“நோ டா இப்போ வேணாம் இப்போ தான் அக்னி உன்னை நெருங்கி வாராள் அது மட்டுமல்ல சீமா வந்து இருக்காள் அவள் பிளான் சீப்பாக இருக்கும்… நவீ சொன்னது சரி தான் டா அவனுக்கு அக்னி மேல் ஒரு கண் இருக்கு நீ கார்ட்ஸ் அதிகமாக போடு உனக்கு நான் சொல்ல தேவை இல்லை” என்றான்.ருத்திரன்


“அவள் என் வொய்ஃப் டா என்னில் பாதி அவளை நான் விட்டு கொடுப்பனா ராகேஷ் அவளை நெருங்கினால் அது தான் அவன் லாஸ்ட் டைம் இந்த உலகத்தில் வாழ்வது” என்றான்.நவீஷ்“ஓகே டா நாம இனி வீட்டுக்கு போகலாம் எல்லோரும் பார்த்து கொண்டு இருப்பாங்க” என அனைவரும் பேலஸ்க்கு சென்றனர் அங்கு அனைவரும் ஹரி, நீதா திருமணத்திற்கு தேவையானவற்றை பட்டியல் போட்டு கொண்டு இருந்தனர்... இன்னும் இரு நாட்கள் இருந்து திருமணத்திற்கு அதனால் வேலைகள் அதிகமாக இருந்து.அப்போது அக்னி சுஜாவை பார்த்து“ஆன்டி நீதாவுக்கு வேறு ஏதும் தேவை என்று கூறினால் உங்களுடைய முறை படி எனக்கு செய்ய வசதியாக இருக்கும்” என. சுஜா அக்னியை பார்த்து“அக்னி மா நீ என் மருமகள் உனக்கு என்ன பிடித்து இருக்கோ அதை உன் தங்கைக்கு செய் எனக்கு ஏதுவும் வேண்டாம்” என்றார்.பைரவி“சுஜா அத்தை ஈவினிங் சாரி எல்லாம் வருகிறது அதில் பார்த்து எடுக்கலாம் ஜீவல்ஸ்ம் வருகிறது என்றாள் பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டனர். ஈவினிங் ஷாப்பில் இருந்து அனைத்து துணிகள், நகைகள் வந்தன. அக்னி,பைரவி, சிவகாமி அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்… ஷிவி ருத்திரன் மடியில் அமர்ந்து இருந்து தன் டெடிபியார் உடன் விளையாடி கொண்டு இருந்தாள் நீதாவுக்கு அக்னி பச்சையும், லைட் பிரவுன் கலந்த கோல்டன் வொர்க் டிசைன் கற்கள் நிறைந்த சாரி,டிசைன் பிளவுஸ். அதற்கு ஏற்றாற்போல் பச்சை வெள்ளை நிறைந்த வைர நகைகள் என எடுத்தாள்... சுஜா முகூர்த்தம் புடவை ஆரஞ்சும் கோல்டன் வொர்க்குடன் லைட் ரெட் கலந்து சாரி அதற்கு பொருத்தமான நகைகள்... சிவகாமி தன் பங்குக்கு பட்டு புடவைகள், டிசைன் சாரி, டிஷ்யூ சாரி என்று நிறைய எடுத்தார் பிறகு ஹரிக்கு பட்டு வேட்டி சட்டை என அனைத்தும் எடுத்தனர்.பைரவி நாவல் கலர் பட்டு புடவை எடுக்க ருத்திரன் தான் அக்னிக்கு எடுப்பதாக கூறினான் அனைவரும் சிரிக்க. பைரவி


“ஏன் என் பையன் அவன் வொய்ஃப்க்கு எடுக்கிறான் இதில் சிரிக்க என்ன இருக்கு” என்றாள் ருத்திரனுக்கு இதில் எல்லாம் திருப்தி ஏற்படவில்லை… தன் பெஷனல் டிசைனருக்கு அழைத்து அவனே டிசைன், கலர் என செலக்ட் செய்து சாரி அக்னிக்கு ஷிவிக்கு பிராக் என ஒடர் கொடுத்தான். ..அங்கு இருந்து அனைத்து பெண்களுக்கும் தன் பங்கிற்கு சாரி டிசைன் கொடுத்து கொண்டு வர சொன்னான் பிறகு அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்றனர்.அக்னி ரூம்க்கு வர ருத்திரன் ஷிவியை தூக்கி கொண்டு வந்தான் ஷிவி பெட்ல் இருந்த ருத்திரன் மடியில் அமர்ந்து.“டாதி மம்மி, சித்தி மாதிரி நேக்கு எப்ப அக்னியின் சாரியை காட்டி இது எப்ப தருவ” என கேட்க. ருத்திரன் வாய் விட்டு சிரித்து


“என் பேபிக்கு சாரி வேணுமா ஓகே எத்தனை வேணும் என கேட்க ஷிவி ஒன், டூ என விரல்களை காட்டி கொண்டு இருந்தாள்… ருத்திரன் சிரித்தவாறு“என் ஏஞ்சல் மேரீஸ்யை டாடி எப்படி நடந்த போகிறேன் தெரியுமா இது வரைக்கும் யாரும் இப்படி நடத்தவில்லை என்ற அளவுக்கு…என் பேபி படித்து பிக்கா வர டாடி செய்வேன்” என்றான் அதை கூறும் போது அவன் கண்களில் கனவு மிதந்தது.


அக்னி ருத்திரனின் அபூர்வமான சிரிப்பை பார்த்து பிரமித்து நிற்க ஷிவி மம்மி வா என்று அழைக்க சென்றாள். ஷிவி ருத்திரன் மார்பில் தலைவைத்து படுக்க அக்னி பாடி கொண்டு தட்டி கொடுத்தாள்... ருத்திரனும் அந்த தாலாட்டயில் கண் அயர்ந்தான் அக்னியும் அவனை பார்த்தவாறே தூங்க ஆரம்பித்தாள்.
தீ மலரும்…
இந்த கதை பிடித்து இருந்தால் படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள் போன ud க்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. 
Status
Not open for further replies.
Top