வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீரா உலா தீரா கனா - கதை திரி

Status
Not open for further replies.
கனா -01

IMG_20240218_212932.jpg

அந்த மலைப் பாதையில் , ஊட்டி ரயில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.அதற்கு இணையாக அருகில் ஜீப் மலைப் பாதையில் வளைந்து நெளிந்து ஏறியது.


ஜீப்பில் இருந்து "தாளாட்டும் காற்றே வா .......
தலை கோதும் விரலே வா......
தொலை தூர நிலவே வா.....
தொட வேண்டும் வானே வா.........
உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீனென்று போவேனோ.........

உன் வண்ணத் திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ.......

உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகிப் போவேனோ.....
என் உயிரே நீதானோ".......என

பாடல் ஒலிக்க அந்தப் பாடலுடன் இணைந்து பாடியவாறு ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான் அபர்ஜித் சிம்ஹ வர்மா. தனது பாதுகாவலர்கள் தவிர்த்து சுற்றிலுமிருந்த இயற்கை காட்சிகள் அனைவரின் இதயத்தையும் கொள்ளையிடக் கூடியதாக இருந்தன்.

இயற்கை காதல் எழுதிய கவிதையாய் மலைமகள்.
தூரத்தில் பச்சை கம்பளம் விரித்தாற் போல் மரங்களும் செடி, கொடிகளும்,வானில் மேகங்கள் கூட படகாய் தெரிய அதற்கு போட்டியாக வெண்புகையாய் அருவியும் போட்டி போடுவதைக் காண்பதே தனி அழகு.

தமிழகத்தினை முழுவதும் முன்னொரு காலத்தில் ஆண்ட அரச குடும்பத்தின் இன்றைய இளவரசன் நாளைய அரசன்
பிசினஸ் உலகின் முடிசூடா மன்னன் "அபர்ஜித் சிம்ஹ வர்மா".

ஆறடிக்கும் சற்று உயரம் அலை அலையான கேசம் காற்றில் பறக்க அதை கையால் முன்னிழுத்து விட்டபடி பாடலுடன் இணைந்து பாடிக் கொண்டு அந்த ஆச்சிரமத்தின் முன் தனது ஜீப்பை நிறுத்தினான்.

ஜீப்பில் இருந்து பாய்ந்து இறங்கியவனோ உள்ளே அலுவலக அறை நோக்கி சென்றவன். அலுவலக அறையினுள் நுழைந்தான்.நிர்வாகியான சாருமதி அம்மா கணிவு ததும்பும் பார்வையுடன் அவனை எதிர் கொண்டார்.

சாருமதி அம்மாவோ.....உள்ள வாங்க சார் என இன்முகத்துடன் அபர்ஜித்தை வரவேற்க . பரஸ்பர நல விசாரிப்பிற்கு பிறகு. வேலை பிசி அதனால வரமுடியாம போய்ட்டு மேடம். என அபர்ஜித் சொல்ல பரவாயில்லை சார்.. என சிறிது நேரம் பேசிவிட்டு ஒரு தொகை பணத்தை ஆசிரம விருத்திக்காக சாருமதியம்மாவிடம் கொடுக்க அவரோ பெல் ஒன்றை அழுத்த அவ்விடம் ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண் வந்தார்.அவரிடம் அப் பணத்தை கொடுத்து விட்டு ரிசிப்ட்டை அபர்ஜித்திடம் வழங்கினார். மேடம் நான் கிளம்புறன் எனக் கூற சாருமதியம்மாவும் நன்றியுடன் விடை கொடுத்தார்.


வரும் வழியில் சரியா? தவறா? எனும் சிந்தனைக்கு மத்தியில் ஜீப்பை ஒரு இடத்தில் நிறுத்தி கண்மூடி இருக்கையில் சாய்ந்தான்.கண்ணக்குழி சிரிப்புடன் கண்ணெதிரில் வந்தாள் அவள் "ஸ்ருதி கீர்த்தனா"

அன்றொரு நாள் ஊட்டியில் எஸ்டேட் விடயமாக தான் நேரில் வர வேண்டிய நிலை ஏற்பட்டதால். ஊட்டிக்கு வருகை தந்தான். அன்று எஸ்டேட் ஒன்றில் தீவிரமான பேச்சுவார்த்தை நடைபெறும் போது அவனது பீ.ஏ அருண் சார்..... இங்க ஊட்டில அன்னை ஆசிரமம் என்ற பேர்ல ஆசிரமம் ஒன்று இருக்கு அதன் நிர்வாகி வந்திருக்காங்க உங்கள சந்திக்க என தயங்கியபடி சொல்ல....... மீட்டிங் முடிய சந்திக்கிறேனு சொல்லு...என முடிந்தவறை அருணிடம் பொறுமையாக பதிலளித்தான்.


இரண்டு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் வெளியே சத்தம் கேட்டு அபர்ஜித் வெளியே வந்தான் அப்போது அருண்..... இங்க பாருங்க மேடம் சார் மீடிங்ல இருக்கார் அவரே சந்திக்கிறதா சொன்னார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என சொல்ல இளம் பெண்ணொருத்தி என் சார் எவ்வளோ நேரம் வெயிட் பண்ணுறது நாங்க வந்தே மூன்று மணித்தியாலம் ஆகிடுச்சி என சத்தம் போட அவளுடன் வந்த அவ் முதுமைப் பெண் ஐம்பதின் பிற்பகுதியில் இருப்பார் கண்ணில் கணிவுடன் அமைதியும் சார்நதமுமாக நேர்த்தியான ஆடை அணிந்து கண்ணியமான தோற்றத்துடன் இருந்தார்.ஸ்ருதி அமைதியாக பேசுமா? இதான் உன்ன நான் அழைச்சிட்டு வர ஏலாது என்றேன். என கடினமாக பேச முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாரி சார்....இன்வைட் பண்ற வேலை இருக்கு லேட் ஆகிறபடியால நாங்க கிளம்புறன்.என கூறி விடைபெறும் பொழுது அவ்விடம் வந்த அபர்ஜித் அருணை முறைத்துப் பார்க்க அது வந்து சார் சாரி...என கை நீட்டி தடுத்து விட்டு...காக்க வைச்சதுக்கு சாரி மேடம் என கூறி விட்டு அருகில் இருந்தவளைப் பார்க்க....அவளோ மூக்கு நுணி கோபத்தில் சிவந்து ....ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.இனி நேரம் தாழ்த்தாது ஆசிரம்த் தலைவியும் தாங்கள் வந்த விடையத்தை கூறி அழைப்பு விடுத்து விட்டு அவ் இளம் பெண்ணுடன் விடை பெற்றார்.....

அருண்....சார் அது வந்து சாரி எர்லியா சொல்லுறதுக்கு என் ஐந்து நிமிசதுல முடிறது...இல்ல நீயே டீல் பண்ணிருக்க வேண்டியது தானே.....இப்பிடியான கேயார்லேஸான விடயத்தாலான் மீடியா வழிய நியூஸ் போறது லாஸ் டைம் என்னாச்சுனு மறந்திடயா???? ஐயோ சார் இனி இப்படி எல்லாம் நடக்காது ......என சொல்லிய அருணின் பார்வை ஒரு இடத்தில் நிலைத்திருப்பதைக் கண்டு அபர்ஜித் திரும்ப அங்கு ஸ்ருதி நின்றிருந்தாள்...பேசினது கேட்டகருக்குமோ..எக்ஸ்கியூஸ் மீ குடை என்றபடி குடையை எடுத்துக் கொண்டு இருவரையும் முறைத்துக் கொண்டு சென்றாள்.


அதன் பின் இரு நாட்கள் சென்றிருக்கும் ....இரு நாட்களுமே ஏதோ வகையில் ஸ்ருதி அபர்ஜித்தை ஈர்த்தாள் .தனது வேலைகளை முடித்து விட்டு ஓய்வாக அந்த ஹோட்டல் பால்கனியில் இருந்து வெளியே இயற்கையை ரசித்தபடி நின்று கொண்டிருந்தான்.

திருத்தமான வட்ட முகம் ஐந்தரை அடி உயரமும் பார்பவரை மறுபடி பார்க்கத் தூண்டும் அழகான பொம்மை போன்ற முகம் . ஸ்ருதி .......எவ்வளவு அழகோ!...அழகோடு சேர்ந்த அறிவும்...குறும்புக்காரி நம் நாயகி "ஸ்ருதி கீர்த்தனா"

பேச்சுச் சத்தத்தில் தனது இனிய கனவு கலைந்தது போல பேச்சு வந்த திசையைப் பார்த்தான் அபர்ஜீத் .இவ அந்த ஆசிரம அம்மாவோட வந்தவளாச்சே .இரு சிறுவர்களுடன் தனது கண்ணக் குழி சிரிப்புடன் ஹோட்டலைக் கடந்து சென்று கொண்டு இருந்தாள்.

இவளைக் காணவும் தான் தனக்கு அழைப்பு விடுத்தது ஞாபகம் வந்த்து. ஓசிட்...... என்றவாறு ரெடியாகி ஆசிரமம் நோக்கி சென்றான்.அப்போது பார்த்து அவனது தொலைபேசி அழைப்பினை புருவச் சுழிப்போடு பார்த்து ஹலோ அம்மா ........ம்ம் ஓகே நாளைக்கு அங்கயிருப்பேன் ஓகே பை டேக் கேர் என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.

சிந்தனையை தள்ளி வைத்து ஸ்ருதியின் சிரிப்பே ப்பா...,..என்ன கண்ணுடா என்றவாறு பாதுகாவலர் யாரும் இன்றி வண்டியை ஆசிரமம் எடுத்துவிட்டான்.ஆசிரமம் வந்தவன் தலைவியிடம் உரிய நேரம் வராததற்கு மன்னிப்பு வேண்டினான. பின் ஆசிரமம் பற்றிய விடையங்களை பற்றி கேட்டறிந்து கொண்டான்.

அதாவது கல்லூரிப் படிப்பு முடியும் வரை மாத்திரமே இங்கு தங்க முடியும் அதன் பின் வேலை ஒன்றை பெற்றுக் கொண்டு வெளியேறுவர்...

ஆசிரம தலைவியிடம் தனக்கு ஸ்ருதியை பிடித்திருப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூற அவரோ சிறிது யோசித்து விட்டு தன் மனதில் சில முடிவுகளை எடுத்து விட்டு...நீங்க பிக் சாட் சேர் அவளுக்கான எதிர் காலம் இது ஸ்ருதிக்கு விருப்பம் என்றால் எனக்கும் சம்மதம் தம்பி என்றார்.

பின் ஸ்ருதியை அழைக்க அங்கு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் மற்றோரு பெண்ணை அழைத்து ஸ்ருதியை அழைத்து வரச் சொல்ல மேடம் நாமளே பார்போம் ஆசிரமத்தையும் பார்த்த போல இருக்கும் என்று அவன் கூற இருவரும் வெளியே வந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி அங்கு உள்ள சிறிய விளையாட்டு திடலில் சிறுவர்களுடன் புழுதியில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள்... தலைவியும் சங்கடத்துடன்.கொஞ்சம் இருப்பா என கூறி விட்டு ஸ்ருதி ரெடியாகி ஆஃபிஸ் ரூம் வா என்றுவிட்டு அபர்ஜித்துடன் மற்றைய இடங்களை பார்க்கப் புறப்பட்டார். பதினைந்து நிமிடத்தில் அலுவலக அறையில் ஸ்ருதி நிற்க தலைவி சாருமதியம்மாவும் அபர்ஜித்தும் அலுவலக அறையை அடைந்தனர். அவளைப் பார்த்தவாறு அவன் அமர ...ஸ்ருதியோ பார்த்த கண்ண நோண்டுவன் என இவள் அசைகை செய்ய இவனுக்கு அவளின் செய்கை சுவாரஸ்யமாக இருந்தது.


ஸ்ருதி இங்க வாமா...இவரத் தெரியும் தானே..
.ஆமாம்மா......அபர்ஜித் சார்...தெரியும் தெரியும்....ம்ம்.நல்லது.இவர் உன்ன பிடிச்சிருக்கு கல்யாணம். செய்ய கேட்காரு என சாருமதியம்மா சொல்ல....இவளோ அதிர்ச்சியுடன் அபர்ஜித்தை நிமிர்ந்து பார்க்க அவனின் பார்வையும் ஒரு எதிர் பார்ப்புடன் அவள் மீதே இருந்தது.

அபர்ஜித்தைப் ஒரு பார்வை பார்த்துவிட்டு தலைவியிடம் இடம் வலமாக தலையாட்டினாள்.. அவன் எதிர் பார்த்தது தான்... இருப்பினும் தம்பி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று விட்டு ஸ்ருதியை அழைத்து வெளியே வந்தவர்.என்ன ஸ்ருதி ?? இல்லம்மா இப்போதானே படிப்பு முடிச்சன் இன்டர்வியூ அட்டன் பன்னிருக்கன்...வேலை செய்யனும் என்னால முடிஞ்ச உதவிய நம்ம ஆசிரமத்துக்கு கொடுக்கனும்.இப்போதைக்கு கல்யாணம் பத்தி என்னம் இல்லமா....அதோட அவங்க ஹை சொசைட்டி ஆட்கள் என தன் மனதில் உள்ளதைச் சொல்ல அவள் தலையை வருடியபடி......எல்லாம் சரி தான்மா நான் உன்னோட எதிர்காலம் பாதுகாப்ப நினைச்சன்.எதுக்கும் யோசிச்சு சொல்லு என்றபடி உள்ளே இருவரும் வர ஸ்ருதியோ.....அபர்ஜித்தை முறைத்தவாறே...வந்தாள்.


நன்றி
✍️ உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து மீண்டும் உலா வருகிறேன் ✍️✍️
 
Last edited:
கனா-02
IMG_20240226_210246.jpg

கனா-02

இவ எதுக்கு நம்மள முறைக்கிறா?
ம்ம்....என யோசிக்க....
தொண்டையை செருமியபடி அபர்ஜித்துடன் பேச ஆரம்பித்தார் சாருமதியம்மா.ஸ்ருதி கூறியதை அவர் கூற .....ஸ்ருதியோட நான் பேசனும் உங்க அனுமதி வேணும் என அவன் கேட்க....திக் என அவள் விழிக்க ...இல்லனு சொல்லங்கம்மா என இவள் மனதில் புலம்ப அவரும் ஓகே என அவரும் அனுமதியளிக்க அடுத்து சில நிமிடங்களில் ஸ்ருதியுடன் வெளியே மர நிழலில் நின்றான் அபர்ஜித்.

அது எப்படி அவள் மறுப்பு சொல்லலாம் தான யார் தனது தகுதி என்ன என கண்ட ,கடந்த பெண்கள் மத்தியில் இவள் தன்னை ஈர்த்தாள்.அத்தோடு வேறு சில காரணங்கள் இருப்பினும் எப்படி இவள் தன்னை மறுக்கலாம் என ஒரு புறம் கோபம் எழ ..அமைதியாகவே பேச ஆரம்பிததான்.

லுக் மிஸ் ஸ்ருதி என்னைப்பற்றி தெரியும் என அவன் ஆரம்பிக்க அவனை அலட்சியமாக பாரத்தாள்.இது இது....... தான் எனக்கு இவள்கிட பிடிச்சிருக்கு....தன்னை பார்க்க தயங்குபவர்கள்... முன்நின்று பேச யோசிப்பவர்கள்.எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமானவன் இவனை அலட்சியமாக பார்கிறாள்... மறுக்க காரணம் அதே அலட்சியமாக பிடிக்கல என இரு கைகளையும் உலுக்க
.அருணுடன் பார்த்த முதல் சந்திப்பு தாங்கள் பேசியதைக் கண்டிருக்கிறாள். அதன் வெளிப்பாடு தான் இது என நொடியில் புரிந்து கொண்டான்.முதலில் இவ் எண்ணத்தை மாற்ற வேண்டும்.இதற்கு இவள் தன்னருகே இருக்க வேண்டும்...ம்ம்..
ஓகே வெல் மிஸ் ஸ்ருதி கிர்த்தனா என தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க அவ் பார்வையை எதிர் கொள்ள முடியாது இவள் குனிந்து கொண்டாள்.டேக் கேர் என்றபடி தலைவியிடம் பேசி விட்டு ஆசிரமத்தை விட்டு வெளியேறினான்.

என்ன இவன் வந்தான் கேட்டான் போரான்....என குழம்பியபடி இவள் தலைவியிடம் வர உன் இஷ்டம் இல்லாம எதுவும் நடக்காது தம்பி நல்லம்...என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டு அன்று வந்த கடிதங்களை பார்வையிட்டார்.

எனக்கானத அவ்வளோ சீக்கிரம் விடமாட்டேன்.வெயிட் பண்ணு செல்லம் எற்படி தனது ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஹோட்டலை அடைந்தான்.

எஸ்கியூஸ் மி சார்.... யெஸ் கமிங் எனும் கம்பீரமான குரலில் , அருண் உள்ளே செல்ல சொன்னது என்னாச்சு
... எல்லாம் ஓகே சார்...அப்போ நைட் டினர் முடிய கிளம்புவம் என்றபடி தனது லேப்டாப்பில் மூழ்கிப் போனான்.அருணும் கிளம்புவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள போனான்.

லேப்டாப்பில் வேலைகளை முடித்து விட்டு கழுத்தில் கைகளே வைத்து நெட்டி முறித்தவாறு எழுந்து ஃபோனைப் பார்க்க "கண்ணக் குழி சிரிப்புடன் கள்ளப் பார்வை பார்த்தபடி ஸ்கிரீனில் தெரிந்தாள் ஸ்ருதி கிர்த்தனா.. ஸ்கிரீனை வருடும் பொழுது .கிரேன்பா காலிங் என திரையில் பெயர் விள ஹலோ என கம்பீரமாக அழைக்க அங்கிருந்தும் அவனுக்கு சளைக்காத குரலில் ஏதோ பேசப்பட ஆமா தாத்தா கட்டாயம் என்றபடி இனி பிளைட் ஏற தான் என்றபடி அழைப்பை துண்டித்தவாறு இவர் வேற...என சலிப்புடன் அலுப்புத் தீர குளித்து உடை மாற்றி தனக்கான தனியார் பிளைடில் அருணுடனும் தனது "தர்மபுரி சமஸ்தானத்தை " நோக்கி பயணமானான் அபர்ஜித் சிம்ஹ வர்மா...........

மறுபுறம் தனது வெங்கலத் தொண்டையை வைத்து யாருகிட்ட ....உன் அப்பனே எனக்குப் பயப்படுவான்டா....என நரசிம்ம வர்மன் சிரிக்க அருகே இருந்த அவர் தர்மபத்தினி என்னங்க எனக் கேட்க ஏண்டி விசா.,...இங்க பாருங்க விசா கிசா என்னாம என்னனு சிரிக்காம சொல்லுங்க உன் பேரன் காதல்ல விழுந்துதான்டி என்னங்க சொல்றீங்க.....அப்போ நம்ம "ரம்மியா".... என அவர் ஏதோ கூற வர "விசா" என தாத்தாவால் அழைக்கப்பட்ட விசாலாட்சி,....உன் பொண்ணால பட்டது போதாதா......என் பேரன் முடிவ நான் எப்பவும் ஆதரிப்பேன் நீயும் நியாய தர்ம்ப்படி நடப்பனு நம்புறன் இதோட இப் பொச்சு முடியட்டும் என்றார்.

விமான நிலையத்தில் இருந்து தனது புதுகாவலர்களுடன் தங்களது சமஸ்தானத்தை நோக்கி பயணமானான். முப்பது நிமிட பயணத்தின் பின் "தர்மபுரி சமஸ்தானம்"எனும் பெயர்பலகையுடன் இருந்த போர்ட்டைப் பார்த்து மனதில் எழும் எண்ணங்களுடன் காரிலிருந்து இறங்கி தனது வேக நடையுடன் உள்ளே சென்றான்.

கண்ணா அஜி.....என தனது தாயின் குரலைக் கேட்டதும் தனது நடையின் வேகத்தை குறைத்து, குரல் வந்த திசையைப் பார்க்க என்னபப்பா......நம்ம ரம்யா அவள் என பேசத் தொடங்க....அவரின் பேச்சில் தனது புருவத்தை உயர்த்தி அவரைப் பார்க்க....தாயின் குரலை இடைமறித்தது மற்றொரு குரல் அஜிப்பா.....நீ குளிச்சிட்டு வா சாப்பிடலாம் அப்புறம் பேசிக்கலாம்.என்றார் விசாலாட்சி பாட்டி....அபர்ஜித்தும் அவ்விடம் விட்டு அகல....என் மருமகளே இது .... வந்ததும் வராததுமா அஜிகிட இப்படி பேசுர என மருகளை கடிந்து கொண்டார்....அவ்வப்போது இப்படி ஏதாவது பேசி தனது அத்தையிடம் கடிந்து பேச்சு வாங்குவதே பரமேஸ்வரி வேலையாக போய்விட்டது.

இல்ல அத்த. அது வந்து...போமா போய் சாப்பாட மகேந்திரன கூப்பிடு என்றபடி இரவுணவை கவணிக்க சென்றார்.எத்தனை வேலைக் காரர்கள் இருந்தாலும் உணவு என்பது விசாலாட்சி மற்றும் பரமேஸ்வரி கண்பார்வையில் தான் சமைக்கப்படும்.இதுவே நியதி அங்கு.....

அந்த பிரமாண்டமான மூன்று அடுக்கு அரண்மனையானது பழங்கால கட்டமைப்புடன் இக்கால தொழினுட்பத்தையும் இனைத்து பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. முற்றிலும் வெண்ணிறத்தினாலான வர்ணப்பூச்சுடன் கலைநயமிக்க பொருட்களை கொண்டும் வாஸ்து சாஸ்த்திர அமைப்போடு அமைக்கப்பட்டுள்ளது.

லிப்டின் உதவியோடு தனதறைக்கு வந்த அபர்ஜித் கதவை திறந்து உள் நுழைந்ததும் கதவை அடைத்து விட்டு தனது ஹோட்டை கழட்டி போட்டு விட்டு அப்படியே பெட்டில் சரிந்தான்.பின் சற்று நேரத்தில் போன் தன் இருப்பை காட்ட அழைப்பை ஏற்று...
"அருண் என அழைக்க மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ.... ஓகே வெல் என்றபடி அழைப்பை துண்டித்தான்."இனி தூங்க முடியாது என எண்ணியபடி எழுந்து குளித்து இலகுவான நெக் டீ சேர்ட் சாட்ஸ் உடன் கீழ் இறங்கி வர யாரும் இன்னும் உணவுன்ன வரவில்லை என தெரிய உணவு மேசையை நெருங்க உணவும் தயாராகி மேசையில் வைக்கப்பட்டது . இனி ஒவ்வொருத்தராக உணவு மேசையை நெருங்கி வர உதவியாளர்கள் விலகிக் கொண்டனர்.

எழுதப்படாத விதி இரவுணவை எட்டரை மணியளவில் அனைவரும் உண்ண வேண்டும்.காலையில் அவரவர் வேலையால் ஒவ்வொரு நேரத்திற்கு உண்பதால் இரவு அனைவரும் சேர்ந்து உண்ண வேண்டும்.தாங்களே பேசி பரிமாரிக் கொள்வர்...ஹாய் அண்ணா..... என்றபடி அவனருகில் வந்தமர்ந்தாள்.தர்மபுரி சமஸ்தான இளவரசி யுகாசினி.

வர்மா பரம்பரையில் வழித்தோன்றலான நரசிம்ம வர்மன் விசாலாட்சியை திருமணம் செய்து செம்மலை கிராமத்தையும் சேர்த்து நல்லாட்சி செய்தனர்.அரசாங்க பங்கேடுப்பினால் பல சொத்துக்களை அரசாங்க வசமானது..தற்போது மன்னராட்சி இல்லாததால் பாரம்பரியத்தை காக்கும் பொருட்டு சில சொத்துக்களை அவர்களே நிர்வகிக்கின்றனர்.

நரசிம்ம வர்மன் விசாலாட்சி தம்பதிக்கு ஒரு ஆண் இரு பெண் பிள்ளைகள். மூத்தவன் மகேந்திர வர்மன்.மூத்த பெண் ருத்ரா தேவி ,இளையவள் நந்தினி தேவி.

மகேந்திர வர்மன் பரமேஸ்வரி என்பவரை திருமணம் செய்து அபர்ஜித் சிம்ஹ வர்மா, மற்றும் யுகாஷினி தேவி என இரு பிள்ளைகள்.ருத்ரா தேவி காதல் திருமணம் செய்து கொள்ள, நரசிம்ம வர்மனின் தறது நண்பனின் மகன் வாசுதேனை நந்தினி தேவிக்கு திருமணம் செய்து வைத்தார்.அவர் வெளிநாட்டு ரிட்டர்ன்.... அவர்களுக்கு ரம்ய லோஜினி,ஆதித்ய வர்மன் , மற்றும் மற்றும் மயூரதி என மூன்று பிள்ளைகள். ரம்யா அமெரிக்காவில் உயர் கல்வியைத் தொடர ஆதித்யன் தற்போது தனது தந்தையின் தொழிலில் ஈடுபடுகிறான். மயூரதி மற்றும் யுகாசினி தனது கல்லூயியில் ஃபேஷன் டிசைன் மற்றும் பொறியியல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடம் பயில்கின்றனர். அனைவரும் தர்மபுரி சமஸ்தானத்திலே இருக்கின்றனர்.

தங்களது தொழில் சில நஷ்டத்தை மறைத்து இங்க வந்தவர்கள் பல வருடங்களாக இங்கு தான் இருக்கின்றனர்.பலகோடி மதிப்புள்ள தங்களது மாளிகை போன்ற வீட்டை விட்டு விருந்நாளியாக வந்தவர்கள் தான் இன்னும் தங்களது இல்லம செல்லவில்லை அதையும் நிறுவனமொன்றில் லீசுக்கு விட்டதாக கதை..... இவை தெரிந்தும் பரமேஸ்வரி மகேந்திர வர்மன் தம்பதி இரு கை நீட்டி வரவேற்றவர்கள் தான்.ஹாய் குட்டிமா என தங்கையை அருகில் அமர்ந்திக் கொண்டாள்.உணவு மேசையில் அமர்ந்ததும் எப்போனா வந்தீங்க காணவே கிடைக்கல என காஷினி சொல்ல ஈவினிங் தான்டா வந்த நான். ஓ...... என்றபடி உண்ணத் தொடங்கினாள். பின் தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் ஊட்டி சென்ற விடயம் தொடர்பாக பேச்சு தொடர்ந்தது.

அஜி கண்ணா சொல்லுங்கம்மா..அது வந்து உனக்கும் கல்யாண வயசு ஆகிடு நம்ம ரம்யா பொருத்தமா இருப்பா இருப்பா என்னப்பா கண்ணா சொல்ற? நம்ம ரம்யாக்கும் நீ என்றால் ரொம்ப இஷ்டம் மகேந்திர வர்மனும் இவனின் பதிலை எதிர்பார்க்க இப்போ இன்ரஸ்ட் இல்லமா என தாயின் மனம் நோகாது பதில் சொன்வன் கை கழுவி விட்டு குட் நைட் என்றபடி தனதறைக்கு ச் சென்றான்.

அந்த சமயம் நந்தினி தேவி குடும்பம் அவ்விடம் இல்லை...
என்னம்மா ரம்யாவா ஏன்மா???என யுகா கேட்க......அண்ணிய இப்படி பெயர் சொல்லியா கூப்பிடுவ என அதட்ட..அட போங்கம்மா அண்ணாக்கு இவளெல்லாம் ஆளா,ரம்யா எவ்வளோ அழகு அஜிக்கு பொருத்தமா இருப்பா... எப்படி மரியாதையான பொண்ணு என பரமேஸ்வரி சொல்ல சோசியல் மீடியாவில் ரம்யா போடும் புகைப்படங்கள் மனக்கண்ணில் வர....ஒரு அசூசையுடம்....ம்மா....பாம்பும் அழகாதாதான் இருக்கும் என்றபடி தனது சாப்பாட்டை முடித்து கொண்டு தனதறைக்கு விரைந்தாள். நந்தினியின் உள் நோக்கம் தெரியாமல் அவளின் வலையில் மெல்ல மெல்ல விழத் தொடங்கினார் பரமேஸ்வரி.


அமெரிக்க கலாச்சாரத்தில் பழக்கப்பட்ட ரம்மியா நாட்டிற்கு வர விரும்பாது அங்கே தங்கிக் கொண்டாள். அறை குறை ஆடை ஆண் நண்பர்கள் பழக்கம் ,பப்,குடி அந்த கலாச்சாயத்திலே கலந்து விட்டாள்.அவ்வப்போது சமீக வலைத்தளஙக்ளில் அவள் பதிவிடும் புகைப்படங்கள் தான் அவளைப் பற்றி தெரிய வைக்கும்.

நந்தினி தேவியின் தொடர் வற்புறுத்தலால் நாட்டிற்கு வந்தாள். தாய் அழைத்ததின் பேரில் வந்தவள் தாயின் பேச்சு அதிர்ச்சி தங்களின் பெரும்பாலான சொத்துக்கள் கடனினால் பறிபோக தந்தையும் மாறி மாறி கடன்பட்ட நிலை அவர்கள் தாத்தா பாட்டியுடன் தனது மாமனின் அரண்மனையில் இருப்பது தெரியும்... அதற்கு பின் இப்படி ஒரு கடன்நிலை இருப்பது தற்போது தான் அவள் அறிகிறாள்...தம்பி எப்போதும் குடி கும்மாளம் என திரிகிறான்..வாசுதேவன் தொழில் நஷ்டம் அபர்ஜித்திடமும் கோடிகளில் கடன்தொழிலை நிலை நிறுத்த முடியாத நிலை எவ்வளவு தான் தனது மனைவியின் தந்தை அண்ணனிடம் உதவி கேட்பது தனது தாய் நாட்டிற்கு சென்றவர் மாதங்களாகியும் வராத நிலை.....கையறு நிலையில் தான் ரம்யாவை வரவழைத்தது.

அபர்ஜித்தை ரம்யா திருமணம் செய்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் என எண்ணியவர். பரமேஸ்வரியுடன் கடந்த மாதத்தில் இருந்து கடும் ஒட்டு ரம்யா மனதில் அபர்ஜித்தை திருமணம் செய்வதே உசிதம் எனும் எண்ணத்தை அவள் மனதில் புகுந்தினார்....

ரம்யா மறுக்கவே...அபர்ஜித்தை ஐந்து ஆண்டுகள் முன் கண்டவளுக்கு இப்போது எப்படி இருப்பானென அவ்வளவாக தெரியாது..... எப்படியோ நந்தினி மூலம் அபர்ஜிதின் தற்போதைய புகைப்படங்களை பாரத்தவள் பார்த்தவள் ..... கம்பீரமும் ஆண்மையும் மிக்க பிஸினஸ் உலகின் டைகூன் அபர்ஜித் சிம்ஹ வர்மாவை இழப்பாளா என்ன....... உலகம் அழியும் வரை அமர்ந்து வாழ அத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களைக் கொண்ட அவன் ஒருவனை..

தனது அழகின் மீது கர்வம் கொண்டவள்.அழகினால் எதுவும் செய்யலாம் என தனது அழகின் மீது அபரீதமான நம்பிக்கை கொண்டாள்.எப்படியும் அபர்ஜித்தை தன் அழகால் கவரலாம் என எண்ணிக் கொண்டாள்....

அதில் முதற் கட்டமாக பரமேஸ்வயோடு இணக்கமாக பழக வைத்து ரம்மியா மட்டுமே அபர்ஜித்திற்கு பொருத்தமானவள் எனும் சூழலை உருவாக்கியுள்ளார். "வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் பரமேஸ்வரியோ ரம்மிய மாலினியின் நடிப்பில் வீழ்ந்து விட்டார்".....

பரேஸ்வரியை மதிக்காத நந்தினி அனைத்தையும் புன்னகையுடன் கடந்து போகும் பரமேஸ்வரியுடன் இப்போது அதிக உறவு தாத்தா பாட்டிக்கு தெரிந்தாலும்...ரம்யாவும் அவர்களது பேத்தி தானே..... திருமணம் நடந்நால் மகிழ்ச்சியே......

நாட்களும் அதன் போக்கில் செல்ல.... "எஸ்கியூஸ் மீ சார் இன்டர்வியூ ஸ்டாட் ஆகப் போகுது"....... " யா...ஓகே அருண் டென் மினிட்ஸ்ல வாரன் நீங்க போங்க "........என்றபடி அருண் சென்றதும் தனது கம்பீரமான நடையோடு லிஃப்ட்டினுள் நுழைந்தவன் பின் தனது கம்பீரமான நடையுடன் இன்டர்வியூ நடைபெறும் அறையைத் திறந்து அவனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர அவனின் எரு புறம் அருணும் மறு புறம் இன்டர்வியூ செய்யும் செக்சன் கெட்டும் இருந்தனர்.....

இன்டர்வியூவிற்கு ஒவ்வொருத்தராக உள்ளே வந்த வண்ணம் இருந்தனர்.அங்கு வெளியே நகத்தை கடித்தபடி பதட்டத்தில் இருந்தது வேறு யாரும் அல்ல நமது ஸ்ருதி தான் நேர்த்தியான காட்டன் சாரியில் எந்தவித ஒப்பனையும் இன்றி அழகாக இருந்தாள்.

அவளின் முறை வரும் போது தனது ஆவணங்கள் அடங்கிய ஃபைல்லுடன் உள்ளே செல்ல அனுமதி கேட்டு உள்ளே நுழைந்ததும் அருண் மற்றும் அபர்ஜித்தைக் கண்டு அதிர்ந்தாலும் முகத்தில் அதைக் காட்டாது அவளை அருண் அமரச் சொல்ல இருக்கையில் அமர்ந்தவளிடம் அபர்ஜித் கையை நீட்ட அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்..பின் தனது ஆவணங்கள் அடங்கிய ஃபைலை அவனிடம் கொடுக்க அதனை வாங்கிப் பார்த்தவன் பார்வை மெச்சுதலுடன் இருந்தது வெல் என்றதோடு அருகில் உள்ள அக் கிளையின் செக்சனல் கெட்டை பார்க்க அவரும் ஒரு சில கேள்விகளை கேட்க ஏதோ சிந்தனையில் இருந்தவள் ஹான்....மிஸ் ஸ்ருதி கீர்த்தனா என அழைக்க அவளோ திருதிரு என விழிக்க அவளது பாவனையில் உதட்டில் பூத்த புன்னகையை மறைத்தபடி ஆன்சர் பன்னுங்க என்றான்.அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு கெட் மறுபடி அதே வினாவை வினவ அவருக்கு பதிலளித்தாள்.அவருக்கும் அவளின் பதில் திருப்தியளித்தது......

பின் அனைவருங்கும் இன்டர்வியூ முடிவடைந்ததும்.. ரிசல்ட் அறிவிக்கபப்டும் என்ற அளிவிப்புடன் விடையளித்தான அருண்........

சிசிடிவியில் தனது பார்வையை பார்க்க ஸ்ருதி ஒரு இளைஞனுடன் பேசியபடி வெளியேறினாள்..... அதனைக் கண்டு பொறாமை கொண்டவன்.வை பேபி என்ன பிடிக்கல என மனதில் கேட்டவன்...... தனது நிலையை சற்று நேரத்தில் மாற்றிக் கொண்டு வேலையில் ஈடுபட்டான்.

ரம்யாவும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பரமேஸ்வரியை ஃப்ரைன் வாஸ் செய்யத் தொடங்கி விட்டாள்.அபர்ஜித்தை கவரவென தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு அவன் வரும் போதும் போகும் போதும் அரண்மனையில் திரியத் தொடங்கி விட்டாள்....ஒரு முறை அவன் தளத்திற்கு சென்றவள் அவன் அறைக்குள் நுழை அவன் போட்ட சத்தத்தில் அனைவரும் கூடினர்..அவளை வெளியே செல்ல வைத்தவன் இனி ஒருமுறை தனதறைக்கு வந்தாள்.. முழுமையாக அரண்மனையில் இருந்து வெளியேற வேண்டி வரும் என எச்சரித்தே அனுப்பினான்.அதனால் பரமேஸ்வரியை டார்கெட் செய்தனர்....பரமேஸ்வரி கேட்டுக் கொண்டாள்.அபர்ஜித் மறுக்க மாட்டான்.அவனின் தாய் மீதான பாசத்தை அவர்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள தொடங்கினர்.

நரசிம்ம வர்மனுக்கும் விசாலாட்சிக்கும் தொழில் நஷ்டம் மற்றும் மருமனின் நதற்போதைய நிலை ஆதித்யனின் போக்கு தெரியும் அதில் அத் தம்பதிக்கு மனவருத்தமே.... தாங்கள் மருமகனிடம் இது தொடர்பாக பேசப் போய் அது மகளின் வாழ்க்கையில் பிரச்சினையை கொண்டு வரும் என பல சிந்தனைகளுக்கு மத்தியில் தங்களது நாட்களை கடத்துகின்றனர்.

இவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது வங்கியில் சொத்துக்களை வைத்து பணம் புரட்டியதால் அத் தகவல் வெளியே சென்றால் தமது குலப் பெருமை என்னாவது அதோடு மீடியாக்கள் பலவாறு எழுதுமே... என பதைபதைத்த நரசிம்மன் மகனிடம் கோரிக்கை வைக்க சில சொத்துக்களை தான் மீட்க முடிந்தது மிகுதி வங்கி தனதுடமையாக்கிக் கொண்டது.பின் மீளப் பெற்ற நூதனசாலை, பழஙக்ஆல அரண்மனை, மற்றும் சில சொத்துக்களை மகேந்திர வர்மன் மீளப் பெற்று தனது சகோதரிக்கு கொடுத்தார்.

சில நாட்கள் நந்தினி தேவி தனது தாய் தந்தையுடன் அங்கு தர்மபுரி சமஸ்தானத்தில் தங்கியிருந்தவர்.... அபர்ஜித் தங்களின் மேல் கோபம் இருப்பதை தெரிந்து கொண்டவர்.... சொத்துக்கள் சில கிடைத்ததும்.....மீண்டும் தங்களுக்கான வீட்டிற்கு சென்று விட்டார்..... அதற்கும் அபர்ஜித் ரம்யாவை காரணமாக்கியே வெளியேறினார்.... வாசுதேவனும் கொஞ்சம் கொஞ்சமாக தனது தொழிலை நிலை நிறுத்திக் கொண்டு வருகிறார்.... அதற்கு உதவியது அபர்ஜித் தான்......

ஒரு வாரம் கடந்த நிலையில் அபாயின் மென்ட் ஆடரை கையில் வைத்துக் கொண்டு இருந்தாள் ஸ்ருதி கீர்த்தனா...... ஆசிரமத் தலைவி அழைத்து கையில் கடிதத்தைக் கொடுக்க அதைப் பார்த்து விட்டு எப்போ ஜாயின் பண்ணணும் எனக் கேட்க...."இரண்டு நாள்ல அம்மா" என ஸ்ருதி சொல்ல ஓகே ரெடியாகுமா என கூற.....ம்மா கட்டாயம் போகனுமா?....நான் இங்கவே ஏதும் வேலை தேடிக் கொள்றேனே என அவள் சொல்ல...அவள் தலையை தடவியபடி இங்கத்தய சூழல் தெரியும் தானே?ஆமாம்மா? இருந்தாலும் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவன், லீவ்னா கண்டிப்பா வருவன் என்றாள் சரிமா என சாருமதியம்மாவும் இன்முகத்துடன் கூற கடிதத்துடன் அறைக்கு சென்றவள்...சுமி ஜாப் கிடைச்சிருக்குப்பா...வாவ் கங்ராட்ஸ் அக்கா என தன்னோடு தங்கியிருக்கும் தற்போது தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சுமியிடம் சொல்லிக் கொண்டு நாளைக்கு போகனும் என்றபடி தனது பொருட்களை பெட்டியில். அடுக்கத் தொடங்கினாள். சுமியின் உதவியோடு......


இப் பயணம் ஸ்ருதியின் வாழ்க்கையை மாற்றுமா பார்க்கலாம்........

நன்றி.....
✍️ உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து மீண்டும் உலா வருகிறேன் ✍️✍️
 
கனா 03
IMG_20240218_212932.jpg
கனா- 03


சூரியன் தன் பொற்பாதங்களை பூமியில் பதித்து அந்நாளை அழகாக்கிக் கொண்டிருந்தது பஸ்ஸில் ஆசிரமத்தில் படித்து தற்போது தர்மபுரியில் பிரபல வங்கி ஒன்றில் பணி புரியும் குகனுடன் தான் தர்மபுரிக்கு வந்தடைந்தாள் ஸ்ருதி.

அண்ணா ஹாஸ்டல் எல்லாம் ஓகேவா...... என ஸ்ருதி கேட்க ஆமாண்டா உன்னோட ஆபிசுக்கு பக்கம் தாண்டா என குகன் கூறிக் கொண்டிருக்கும் போதே..... பஸ்ஸிம் நிறுத்தத்துக்கு வந்தடைந்தது. இருவரும் பஸ்ஸில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஹாஸ்டலை அடைந்தனர். பின் ஸ்ருதியை அங்க சேர்த்துவிட்டு எதுனாலும் கால் பண்ணு ஸ்ருதி என்றபடி குகனும் தனது இடத்திற்கு புறப்பட்டான்.

ஹாஸ்டலில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து தனக்கான இடத்தில் பொருட்களை வைத்துவிட்டு அறையை பார்க்க பாத்ரூம், இரு கட்டில்கள், இரு அலமாரி என இருவர் தங்கும் வசதியோடு இருந்தது அன்றைய நாள் ஸ்ருதிக்கு ஹாஸ்டலில் உள்ளவர்களோடு களிந்தது......இங்கு அலுவலகத்திற்கு வந்து அபர்ஜீத் தனது பி ஏ அருணை அழைத்து இன்றைக்கான வேலைகளை பார்க்க தொடங்கினான். அடுத்த நாள் காலையில் நேரத்திற்கு எழுந்து ஆயத்தமாகி ஹாஸ்டலில் காலை உணவை முடித்துக் கொண்டு அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு சென்றாள் ஸ்ருதி... பஸும்வர ஏறி அமர்ந்தவள் சிறிது நேரத்தில் தனது அலுவலகத்தின் முன் இறங்கிக்கொண்டாள். வானுயர்ந்த பெரிய கட்டிடத்தில் "பர்மா டெக்" எனும் பெயரினை நிமிர்ந்து பார்த்தபடி உள்ளே நுழைந்தாள்... உள்ளே ரிசப்ஷனில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு வந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை காட்ட ரிசப்ஷனிஸ்டும்... மூன்றாம் தளத்துக்கு போங்க ட்ரெய்னிங் நடக்கும் என்றாள் தேங்க்யூ என்றபடி அவ்விடம் நோக்கி சென்றாள் ஸ்ருதி.....

தனது காலை உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறிய அபர்ஜித் குளித்து ஆயத்தமாகி கீழே வர ரம்யா மற்றும் பரமேஸ்வரி பேசிக் கொண்டிருந்தனர். கம்பீரமாக படிகளில் இறங்கி வந்தவன் உணவு உண்ணச் செல்ல அவனுக்கான உணவு பரிமாறப்பட்டதும், சாப்பிட்டு முடித்து வெளியேற அவனைத் தொடர்ந்து அவனது பாதுகாவலர்களும் பின்தொடர்ந்தனர். ரம்யாவோ நிமிர்ந்து பாராமல் கூட சென்ற வனில் கடுப்பில் இருந்தாள், திமிர் பிடித்தவன் என திட்டவும் செய்தாள்.... தன் அழகை அனைவரும் புகழ அதில் விதிவிலக்காக அபர்ஜித். அவளைக் அபர்ஜித் கண்டு கொள்ளாதது அவனை அடைய வேண்டும் என்ற வெறியையே ரம்யாவிற்கு ஏற்படுத்தியது.
"அஜி அத்தான்" என் அழகுல மயங்கி உன்னை கால்ல விழ வைக்கல என எண்ணிக்கொண்டாள்.

இன்று தனது பேபி அலுவலகம் வருவதால் அதே எண்ணத்தில் வெளியேறியவன் அலுவலகத்தை அடைந்தான்.அழுத்தமான காலடி ஓசையுடன் ட்ரெயினிங் நடக்கும் இடத்தை அடைந்தான்..... அபர்ஜீத்தை கண்டதும் அனைவரும் எழுந்து நின்றனர் குட்மார்னிங் லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன் என கண நேர பார்வையை ஸ்ருதியை நோக்கி திருப்பி விட்டு,.....மூன்று நாட்கள் ட்ரைனிங் நடைபெறும் பிறகு உங்களுக்கான பிரிவுகளில் வேலை தரப்படும் குட் லக் என்றபடி தனது அழுத்தமான நடையுடன் வெளியேறினான். அவன் சென்றதும் தான் இலகுவாக உணர்ந்தாள் ஸ்ருதி

ஐந்து பேர் பயிற்சிக்காக வந்திருந்தனர்.... ஹாய்...... ஐ அம் ஹேமா ஹாய் நான் ஸ்ருதி என இருவரும் பேசி சற்று நேரத்திலே நண்பர்கள் ஆயினர். மூன்று நாட்களும் பயிற்சியில் அத்தலத்திலேயே கழிந்தது. ஸ்ருதியை தினமும் சிசி டிவி வழியாக அபர்ஜித்தின் பார்வை தொடர்ந்த வண்ணமே இருந்தது.

பயிற்சி முடிவடைந்ததும் அருண் ஐவருக்கும் அவர்களுக்கான பிரிவினை கூறி அங்கே அனுப்பி வைத்தான் ஸ்ருதியையும் அவளுக்கான பகுதிக்கு அனுப்பினான். ஸ்ருதியும் நன்றி கூறி சென்றாள்......

ஒரு இடத்தில் நிரந்தரமாக அமர்ந்து வேலை செய்யாது உள்நாடு, வெளிநாடு என பறக்கும் அவர் அபர்ஜித் தர்மபுரியிலேயே இருப்பது ஆச்சரியமே அனைவருக்கும்....

அன்று அபர்ஜித் சிம்ஹ வர்மா பவுடர் அண்ட் சிஇஓ என்னும் பேருடன் இருந்த கதவை தட்டியபடி எக்ஸ்க்யூஸ் மீ சார் என ஸ்ருதி அழைக்க எஸ் கம்மிங் எனும் உருமலான அழைப்பில் உள் நுழைந்தாள். எப்போதும் போல் அவன் பார்வை ரசனையாகவே அவளில் படிந்தது இள நீல நிற குர்தி மற்றும் டாப்புடன் இயற்கை அளவோடு இருந்தவளையே அவன் பார்வை தீண்டிச் சென்றது. பின் தனது பார்வையை மாற்றி எஸ் மிஸ் என வினவ அன்று முடிக்கப்பட வேண்டியவை அனைத்தும் முடிக்கப்பட்டு அவர்ஜித்தின் வையொப்பத்திற்காக கொண்டு வந்திருந்தாள். ஃபைலை பார்வையிட்டபடி என்ன மிஸ் ஸ்ருதி இடம் எல்லாம் எப்படி செட் ஆயிட்டீங்களா?... என வினவ இவளும் ஆமாம் சார் லேடிஸ் ஹாஸ்டல்ல தான் ஸ்டே பண்ணிருக்கேன்.பக்கம் தான் என்றாள். ஓகே நான் கேட்டதற்கான பதில் வரல இன்னும் என அவளை ஆழ்ந்து பார்த்து வினவ அவன் பார்வையை சந்திக்க முடியாது படபடப்புடன் சார் வேலை பற்றி பேசுவது நான் மட்டும் பேசுங்க என அவள் சொல்ல...... ஓகே கூல் கூல் என்றபடி அவனும் பைலை அவளிடம் கொடுக்க அவளும் அறையை விட்டு வெளியேறினாள்.

வெளியேறியதும் தான் பிடித்து வைத்த மூச்சை வெளியேற்றிவிட்டு அவனின் பார்வை மாற்றம் அவளுக்கு தெரியுமே..... தனது கேபின் சென்றவள் தண்ணீரை பருகி தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டாள்....... தர்மபுரில அலையுறான் இல்ல யாரும் மந்திரிச்சு விட்டுட்டாங்க போல சுய புத்தியுடன் இருந்தா கல்யாணம் கட்டிக்கணும் பினாத்த மாட்டான். அவளுக்கு வேலை கொடுத்ததற்கு அவன் கையில் ஒரு தாயத்தைக் கட்டிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் அதுவும் சும்மா தாயத்து அல்ல மந்திரித்த தாயத்து அவனைப் பிடித்த காதல் பிசாசு விலகி ஓடும் எனும் நல்லென்னத்தில். பின் வேலை முடிவடைந்தது வெளியேறி பஸ்ஸில் ஹாஸ்டலை அடைந்தாள் அவள் சென்ற பின் தான் அவனும் தனது அரண்மனை நோக்கி சென்றான். அவள் தர்மபுரி வந்ததிலிருந்து அவளுக்கு பாதுகாப்பை அவள் அறியாமலேயே வழங்கினான்.

அரண்மனைக்கு வந்ததும் பிரஷ் ஆகி வந்தவன் தந்தையுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது அஜி மற்ற பிரான்ச் விசிட் போவது குறைஞ்சிட்டு போல என கேட்க..... தந்தை அழுத்தமாக பார்த்துவிட்டு எல்லாம் நல்லா போகுது என்றான். தர்மபுரியில் இருந்து கொண்டே அனைத்து கிளைகளோடும் வெளிநாட்டு கிளைகளின் வேலைகளையும் திறன்பட பார்த்துக் கொண்டிருக்கிறான்.பின் தந்தை இப்படி கேட்டால் கோபம் வராதா என்ன???....... மகனின் குணம் அறிந்த மகேந்திரவர்மனும் வேறு பேச்சுக்கு தாவினார்.

பின் அவ்விடம் வந்த பரமேஸ்வரி என்னங்க சொல்லுங்க என தனது கணவனிடம் கூற அவரும் ஆமா அஜி...... நம்ம ரம்யாவும் படிப்ப முடிச்சிட்டா பர்மா டெக்ல கொஞ்ச நாள் வேலை பார்க்கணும்னு நினைக்கிறார். நல்லது தானே வேலையோட அங்கத்தவங்களோடும். பழக வாய்ப்பு அமையும் என பேச தந்தை சொல்லைத் தட்ட முடியாது நாளைக்கு வர சொல்லுங்க பட் என்ன தெரிஞ்ச போல காட்டிக்கக் கூடாது நானும் சாதாரண ஸ்டாப் போலத்தான் அவளை பார்ப்பேன், எந்த சலுகையும் என்கிட்ட கிடைக்காது சொல்லியபடி அனைவருடனும் இரவு உணவை முடித்து தனது அறைக்குச் சென்றான்.

பரமேஸ்வரி ரம்யாக்கு அழைத்து அஜி அவளை அலுவலகம் வரச் சொன்ன விடயத்தை தெரிவித்தார்.தான் அவனை நெருங்கி இச் சந்தர்ப்ப்ததை பயன்படுத்தி எணண்இக் கொண்டாள் ரம்யா....

இங்கு ஹாஸ்டலில் உணவை முடித்து படுக்கைக்கு வந்தவள் ஆசிரமத் தலைவியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பின் ஸ்ருதியின் நினைவுகளில் அபர்ஜித்தே நிறைந்திருந்தான். தனது மனதிலும் கனவு தனது வருங்காலக் கணவன் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது.

"ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்".....
" கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்"
"பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்"

" ராணியின் முகமே
ரசிப்பதில் சுகமே"...
"ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே".....
"பூரண நிலவோ
புன்னகை மலரோ".......
"அழகினை வடித்தேன்....
அமுதத்தை குடித்தேன்..."
அனைக்கத் துடித்தேன்...

"ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்".....
" கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்"
"பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்"......

எனும் பாடல் தான் கண் முன் வரும்ழ அழகான ராஜகுமாரன் ஒருவன் குதிரையில் வந்து தன்னை தூக்கிக் கொண்டு போக வேண்டும் என ஆசைப்பட்டாள்.கூட்டுக் குடும்பம் ஒன்றில் வாழ ஆசைப்பட்டவள். அந்தக் கனவின் மொத்த உருமாத்தன் கண் முன் ஒருவன் தன்னைப் பிடித்திருப்பதாகவும் திருமணம் செய்ய கேட்கிறான். ஆனால் அவளால் தனதை நம்பவோ ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை ........ அவனின் பணபலமும், பின்புலமும் தான் அனாதை அவன் அழகு என அவளை அதற்கான காரணங்களை கற்பித்துக் கொண்டாள்.


பார்த்ததும் காதல் வருமா? எப்படி சாத்தியம்? காதலிக்கிறேன் என அவன் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை கல்லூரியில் கூட இவற்றை கடந்து வந்தவள். பின் தன் தகுதி நிலை எண்ணி எவ்வாறு இது சாத்தியம் என பல எண்ணங்களுடன் தூங்கிப் போனாள்.

இங்கு அவர்ஜித்திற்கோ தூங்கா இரவாகிப் போனது. அவளின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். பேபி ஏன் ?ஏன்? பிடிக்கல உன்ன பார்த்த முதல் நொடி வர எனக்குள்ள வந்துடடி ஸ்டுப்பிட்..... என் அவளைத் திட்டியும் கொஞ்சியும் அவ்விரவை கழித்தான்.

அடுத்த நாள் காலைப் பொழுதானது புலரத் தொடங்கியது தனது உடற்பயிற்சி முடித்ததும் தனக்கான காபியை பருகிய படி வெளியே பால்கனியில் இன்று இருந்தால் அபர்ஜித் தோட்டத்தில் இரு அணில்கள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது தனது தொலைபேசி இருப்பை காட்டி அவனது மோனநிலையை கலைத்தது.அழைப்பை ஏற்றவன். யா ஓகே அருண் என பதிலளித்து குளித்து ரெடியாகி அலுவலகம் புறப்பட்டான்.

ஸ்ருதியும் அலுவலகம் வந்து சேர்ந்தாள். ஹாய் ஹேமா குட் மார்னிங் என்றபடி அவளுடன் சேர்ந்து கொண்டாள்... குட் மார்னிங் இன்னைக்கு புதுசா யாரோ நம்ம கூட ஜாயிண்ட் பண்றாங்களாம் என பேசியபடி இருவரும் உள் நுழைந்தனர்.

ஹலோ ஸ்ருதி குட் மார்னிங், உங்க டீம்ல இவங்க ரம்யா ஜாயின் பண்றாங்க நீங்க சாரோட நேரடி கண்டக்ட்ல வொர்க் பண்றீங்க இன்றையிலிருந்து. ஓகே..... உங்க கேபின் சார் ரூம்ல ஷிப் பண்ணி இருக்கு..... சோ யூ கேன் கோ என்றபடி ரம்யாவை முதல் ஸ்ருதி வேலை செய்த இடத்தில் அமர்த்த ரம்யா விக்கிய பொறுத்துப் போக வேண்டிய கட்டாயம் அபர்ஜித் இருக்கும் இடம் ஸ்ருதி வேலை செய்வது பிடிக்காத நிலை.....

ஹேமாவிடம் ரம்யாற்கு தேவையான விடயங்களை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு ஸ்ருதியுடன் அபர்ஜீத் அறைக்குள் நுழைந்தான் அருண். எக்ஸ்க்யூஸ் மீ சார் டி கே சீட்ஸ் ஸ்ருதி நீங்க உங்க வேலைய செய்ங்க என்றபடி அபர்ஜீத்தும் லேப்டாப்பில் தன் தலையை கொடுத்தான். பின் அருள் அவரின் வேலையை பார்க்க வெளியே சென்று விட்டான்.

அபர்ஜித்தின் பார்வை ஸ்ருதியை தொடர்ந்தது. இலகுவாக அவளுடன் பேசி பழக விரும்பினான். அவர் அஜித்தின் பார்வை ஸ்ருதியில் படிவரதக் கண்ட அருணுக்கும் க் அபர்ஜிதின் மனம் புரிந்தது.

அமைதியான அமர்ஜித்துக்கும் அதிரடி சரவெடி ஸ்ருதி பேசிப் பழகினால் தெரியும் அவளின் குறும்பு தினமும் அலுவலகத்தில் பார்க்கிறான் தானே.....

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஸ்ருதியுடன் ஒரு சுமுகமான பேச்சு வார்த்தை நிலவியது அபர்ஜித்திக்கு......
அவளின் குறும்பும் அபர்ஜித்திடமும் வெளிப்பட்டது. ரம்யா எவ்வளவு முயன்றும் அபர்ஜீத்தை நெருங்க கூட முடியவில்லை. அதனால் கடுப்பில் இருந்தாள் அவள்....

வெகு நாட்களுக்குப் பின் கிட்டிருக்கும் சந்தோஷம் அவள். எஸ்டேட், ஹோட்டல், வெளிநாட்டு, ஏற்றுமதி இறக்குமதி என்று சர்வாகாலமும் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தவன் முதன் முதலாக வர்த்தகத்தை மறந்து இளைப்பாறுகிறான். நண்பர்களிடமும் குடும்பத்தாரிடம் மட்டுமே தான் இயல்பாக இருக்கக் கூடியவன் மற்றவர்களுக்கு அவன் ஆளுமை நிறைந்த சக்கரவர்த்தி அதிகம் பேசாதவன் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாதவன்.

அன்று அலுவலக நேரம் முடிந்ததும் வெளியேறியவள் பஸ்ஸூற்காக காத்துக் கொண்டிருக்கும் வேளை... அவள அருகில் கார் ஒன்று வந்து நின்றது ஜன்னலை இறக்க ஸ்ருதியும் சார் பஸ் இப்போ வந்துடும் என நேரத்தை பார்த்து கூற..... ஜன நடமாட்டமும் குறைந்து தான் அப்பகுதியில் இருந்தது. அவனும் போகாது வாட்ச்சை பார்த்துவிட்டு அவளை பார்க்க "பிடிவாதம் "என முனுமுனுத்த வாரு காரில் அவன் அருகில் எறியமர்ந்தாள்.

காரும் புறப்பட்டது. யாரு பார்த்த?.... என்ன நினைப்பாங்க சார் என்றுவாரு வர அவனும் புன்னகையுடன் என்னை நினைப்பாங்க என்றான். அவனை முறைத்துவிட்டு உங்களுக்கு தெரியாதா என்ன?.... என்று கண் சிமிட்டி அவள் சிரிக்க அவனின் முகமும் பல்போட்டது போல் பிரகாசமாகியது .அவளுடைய ஹாஸ்டல் வந்ததும் இறங்கியவள் பாய் அண்ட் தேங்க்யூ சார் என்றபடி ஹாஸ்டலினுள் நுழைந்தாள்.

இவ்வாறு தொடங்கிய அவள் நெருக்கம் தங்களை அறியாமலே நெருங்கிக் கொண்டிருந்தனர். இதுவரை அமைதியாக இருந்த ரம்யா படிப்படியாக தனியே வேலையை காட்டத் தொடங்கினாள். அலுவலகத்திற்கு வரும் பொழுது அதிக மேக்கப்.... நாகரீகம் என்ற பெயரில் முட்டி வகையான ஆடைகளை அணிந்து வந்தாள்... அலுவலகத்தில் இவளுக்கு ஜால்ரா தட்டவென்று ஒரு குழுவே இருந்தது. தானும் அவர் சித்தும் உறவினர்கள் தான் அபர்ஜித்தின் அத்தை மகள் என்பதைப் பரப்பினான். அடிக்கடி அவனின் அறைக்குள் சென்று வந்தாள். உள்ளே அவன் திட்டுவதை கூட வெளியே ரொமான்டிக் ஸ்டோரி ஆக பரப்பினாள்...


உள்ளே நடப்பதை அறிந்த ஒரே ஜீவன் ஸ்ருதி மட்டுமே. ரம்யா வந்தாலே அசட்டி சிரிப்புடன் இருப்பாள் ஸ்ருதி.... அவள் சென்றதும் அபர்ஜித் என்ன மிஸ் சிரிப்பெல்லாம் பலமாரிக்கு...என கேட்க..... ரம்யாவின் அலப்பறையை ஹேமா மதிய உணவு இடைவேளைகளில் சொல்வதைக் கேட்டவள்..... சிரிப்பை உதட்டுக்குள் புதைத்துக் கொண்டாள்... அபர்ஜித் பார்வை ஸ்ருதியில் இருப்பதை கணக்கிட்ட ரம்யா... ஆரம்பித்திலேயே இதனை களைய வேண்டும் என எண்ணியவள் செய்த செயல் ஸ்ருதியின் வாழ்க்கையே மாற்றியது.....

✍️ நன்றி
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து மீண்டும் உலா வருகிறேன் ✍️✍️
 
Last edited:
Status
Not open for further replies.
Top