வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"துரியோதனனின் அருந்ததி(தீ)!!"கதை திரி

Status
Not open for further replies.
தீ-1



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்...
என விநாயகர் பெருமானை வாழ்த்தி பாடிவிட்டு பூஜையை நிறைவு செய்த தேவி வழக்கம் போல் சமையல் கட்டுக்கு சென்று வேலைகளை பார்க்க ஆரம்பிக்க, அவளின் இதழ் ஓரம் மெல்லிய புன்னகை ஒன்று அரும்பியது.



"தேவி இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?நேரமாச்சு சீக்கிரம் கிளம்பு.."என்று அவள் கணவன் ஜனார்த்தனன் குரல் கொடுக்க, தேவியின் புன்னகை இதழ்களில் இன்னும் பெரிதாக விரிந்தது.



இங்கு அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்த ஜனார்த்தன் எப்போதும் உடனடியாக பதில் சொல்லும் மனைவியின் குரல் கேட்காமல் போக, செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு மனைவியை பார்ப்பதற்காக சமையல் கட்டுக்கு செல்ல அங்கு தன் கணவன் பதட்டமாக தன்னை தேடி வருவான் என்பதை அனுமானித்து வைத்திருந்த தேவியின் புன்னகை இன்னும் பெரிதாக விரிய, அவளை இடுப்பில் இரு கைகளையும் வைத்தபடி கோபமாக முறைத்து பார்த்தான் ஜனார்த்தன்.



"ஏய்! உனக்கு என்ன பார்த்தா என்ன சிரிப்பா இருக்குதா? உன்னோட பதில் வராமல் போக ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன் தெரியுமா?"என்று சிடுசிடுப்பாக ஜனார்த்தன் கேட்க, இதழ்களில் மாறாத அதே புன்னகையுடன் செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் விட்ட தேவி கணவனை நெருங்கி அவன் கன்னத்தில் மெலிதாக ஒரு முத்தம் வைக்க, ஆச்சரியத்தில் ஜனார்த்தன் இதழ்கள் விரிய அதைப் பார்த்ததும் தேவியின் சிரிப்போ சத்தமாக மாறியது.



ஜனார்த்தனின் இதழ்களை தன் கை கொண்டு மூடியவள் "எனக்குத் தெரியும் மாமா நீங்க போய் கிளம்புங்க.."என
ஜனார்த்தன் கோபம் முற்றிலுமாக கலைந்தபடி மனைவியை ஏக்கமாக ஒரு பார்வை பார்க்க, தேவி அதை கண்டும் காணாதது போல் அவருக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றவள் இதழ்களோ பழையபடி சின்ன புன்னகையை பூசிக்கொள்ள கைகள் வேலையை விறுவிறுவென பார்க்க ஆரம்பித்தது.



மனைவியை ஏக்கமாக பார்த்தபடி ஜனார்த்தன் திரும்ப, அங்கு இருக்கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்த அவரது எட்டு வயது மகனை கண்டு அதுவரை இருந்த மாயமத்தனையும் அவருக்கு மறந்து போக மகனை கலவரமாக பார்த்தார்.



"நான் சொல்ல சொல்ல கேட்காம இன்னும் இங்கேயே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது ஒழுங்கு மரியாதையா நீங்க போய் கிளம்புங்க நான் சீக்கிரமா வந்துடுவேன்.. சரி சரி விடுங்க மாமா உங்களுக்கு என்ன ஒரு முத்தம் வேணுமா கொடுக்கிறேன்..அதுக்கப்புறம் என்ன எந்த தொந்தரவும் பண்ணாம அமைதியா நீங்க போயிடனும் என்னோட செல்ல மாமா தானே நீங்க!"என்று சொன்னபடி நாணத்துடன் திரும்பிய தேவிக்கு ஜனார்த்தனின் முதுகு புறம் மட்டுமே தெரிய அவருக்கு முன்பாக மகன் இருப்பது தெரியாமல் போனது.



"அதான் நான் சொல்லிட்டேனே அப்புறம் எதுக்காக கோபம்! சரி சரி விடுங்க மாமா என்ன திரும்பி பாருங்க அப்பதான் நீங்க கேட்டது உங்களுக்கு கிடைக்கும்.."என்று குரல் குழைய சொன்ன தேவி தலையை தாழ்த்திக் கொள்ள,ஜனார்த்தனின் நிலைமையோ ரொம்ப பரிதாபமாக இருந்தது.



மனைவி பேசுவதை கேட்டு அவள் மீது நேசம் கொண்ட மனது திரும்பிப் பார்க்கச் சொல்ல, ஆனால் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த மகனின் கூர்மையான பார்வையும் அவன் தாயின் பேச்சைக் கேட்டு அவன் முகத்தில் தோன்றும் உணர்வுகளையும் அவதானித்தபடி ஜனார்த்தன் அப்படியே நிற்க, தேவி அவன் திரும்பாமல் நிற்கவும் தன் மீது கோபம் கொண்டு தான் இப்படி இருக்கிறான் என்று தவறாக எண்ணி அவளாகவே முன்வந்து கணவனின் தோள்பட்டையை தொட்டு தன் பக்கமாக திருப்ப, அப்போதும் மகனை கவனிக்கவில்லை.



"என்னாச்சு மாமா எதுக்காக இப்படி முகம் எல்லாம் வேர்த்திருக்கு!உங்களுக்கு தான் தெரியும் இல்ல எந்த இடத்துக்கு போனாலும் சொன்னபடி நான் உங்க கூட கிளம்பி வந்துடுவேன்னு.. அப்புறம் எதுக்காக நீங்க இங்க வந்தீங்க முதல்ல நீங்க கிளம்பி இருக்கீங்களா?சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிச்சுகிட்டு அப்படியே நிக்க வேண்டியது.."என்றபடி தன் சேலை முந்தானையால் அவர் முகத்தை துடைத்து விட, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ! என்று பதறிய ஜனார்த்தனையின் முகத்தில் வியர்வை சுரப்பி இன்னும் அதிகமாகத்தான் சுரந்தது போலும்.



அவர் முகத்தை பார்க்காமல் வியர்வையை துடைப்பதில் குறியாக இருந்த தேவி ஜனார்த்தனின் கண்ணசைவை கவனிக்காமல் விட்டு விட, ஜனார்த்தனோ தன் அன்பு மனைவி இன்னும் சிறிது நேரத்தில் இந்த சந்தோஷம் மொத்தத்தையும் இழந்து கண்ணீர் வடிக்க போகிறாள் என்பதை அறிந்தவனின் மனம் மனைவிக்காக வருந்தியது.



"ஏய் இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு?"என்ற ஈஸ்வரியின் குரலில் தேவியின் மொத்த தேகமும் தூக்கி வாரி போட, கணவனை விட்டு ஈரடி பின்னே தள்ளி சென்றார்.


ஜனார்த்தனன் நினைத்தது போலவே பிரச்சினை வந்துவிட்டதை எண்ணி வெறுப்புடன் திரும்ப,அங்கு ஈஸ்வரியின் பக்கத்தில் இரு கைகளையும் கோபமாக கட்டிக்கொண்டு அதே நேரத்தில் கண்களில் சந்தோஷம் மின்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.



நம் கதையின் நாயகன் துரியோதனன். மகாபாரதத்தில் பெண்ணிற்கு தீங்கிழைத்து துடிதுடித்து இறந்த துரியோதனனின் அனைத்து கெட்ட செயல்களையும் பெற்றுக் கொண்டே இந்த ஜென்மத்திலும் வந்து பிறந்திருப்பான் போலும்!!



"உன்ன தாண்டி கேட்டுகிட்டு இருக்கேன்.. காலையிலேயே சமையல் கட்டுல இப்படி எல்லாம் கூத்தடிச்சுக்கிட்டு இருக்கிறியே! நீ எல்லாம் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த பொண்ணு தானா? முகரை மூஞ்சியும் பாரு போயும் போயும் உன்ன மாதிரி ஒரு விளங்காதவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறானே இவனை சொல்லணும்.."என்று மகனை வசை பாடிக் கொண்டிருந்த ஈஸ்வரியின் கைகளில் இருந்த மது பாட்டில் சொன்னது அவர் எத்தனை தெய்வீகமான பெண் என்பதை!!



"அம்மா இப்ப எதுக்காக தேவை இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க! நீங்களும் ஒரு குடும்ப பொண்ணு தான உங்க கையில என்ன வச்சுட்டு நிக்கிறீங்க!"என்று அருவருப்பாக ஜனார்த்தன் முகத்தை சுளிக்க, அவருக்கு கோபமாக பதில் சொல்வதற்காக ஈஸ்வரி வாய் திறக்க அவரின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய துரியோதனன் "நீங்க அமைதியா இருங்க கிராண்ட்மா நான் பேசுறேன்.."என்று அவரை பேசிவிடாமல் தடுத்து நிறுத்தியவன் தன் தந்தையின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.



"ஒரு குழந்தை இருக்க வீட்டுல உங்க வைஃப் என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணமானது மாதிரி இப்படி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களே? இது உங்களுக்கு கேவலமா தெரியலையா டாட்.. இவங்கள என்னோட அம்மானு சொல்றதுக்கு எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.. எனக்கு நீங்க இவங்களோட சேர்ந்து இருக்கிறது சுத்தமா பிடிக்கலை டாட்.. இவங்க அம்மா என்னன்னா பின்னாடி மாட்டு கொட்டாயில் இருந்து கிட்டு எனக்கு தேவை இல்லாம அட்வைஸ் என்கிற பெயரில் எரிச்சல் உண்டு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இவங்க கொஞ்சம் கூட சென்ஸ் இல்லாம இப்படி மோசமா பிஹேவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இவங்களை முதலில் இங்க இருந்து துரத்தி விடுங்க.. சரிதா ஆன்ட்டி பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருப்பாங்க அண்ட் இடத்துக்கு தகுந்தாப்ல நடந்துக்கவும் தெரியும்.. இவங்கள மாதிரி மோசமா பிஹேவ் பண்ண மாட்டாங்க கிராண்ட்மா சொன்னதுல என்ன தப்பு இருக்குது டாட்.."என்றவன் ஜனார்த்தனனுக்கு பின்னாடி நின்று கொண்டிருந்த தாயை ஏதோ தீண்ட தகாத பொருள் போல் பார்க்க, மகனின் அந்தப் பார்வையில் சுக்கு நூறாக உடைந்து போனாள் தேவி.



"ஷட் அப் சந்தோஷ்.."



"கால் மீ துரியோதனன் டாட்.. எனக்கு என்னோட பாட்டி வச்ச பேரு அதுதான் அண்ட் எல்லாரும் என்னை கூப்பிடுவது இப்படித்தான்.."



"உன்னோட அப்பா அம்மா நாங்க ரெண்டு பேரும் தான் உனக்கு என்ன பேரு வைக்கணும்னு நாங்க தான் முடிவு பண்ணனும்.. நாங்க உனக்கு ஆசையா வச்ச பேரு சந்தோஷ்.. இப்படி மோசமா பிஹேவ் பண்ண கூடாதுன்னு உன்கிட்ட எத்தன தடவ சொல்லிருக்கேன்.."



"யாரு டேட் நானா மோசமா பிஹேவ் பண்றேன் உங்களுக்கு பின்னாடி நின்னுகிட்டு இருக்க அந்த புவர் லேடி தான் மோசமான லேடி.. அவங்களை தான் நீங்க இந்த வீட்டை விட்டு துரத்தனும்.. நான் சொல்றத நீங்க கேளுங்க டேட்.."



"வாய மூடு சந்தோஷ்.."


"முடியாது டாட் எனக்கு இவங்கள பார்க்க சுத்தமா பிடிக்கல.."என்று ஜனார்த்தன் பின்னால் நின்று கொண்டிருந்த தேவியை சுட்டிக்காட்ட, அவனை என்ன செய்தால் தகும் என்பது போல் கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜனார்த்தன்.
 
"அம்மா தயவு செஞ்சு காலையில பிரச்சனையை உண்டு பண்ணாம முதல்ல இவனை இங்க இருந்து கூட்டிட்டு போங்க.. இன்னைக்கு எங்களுக்கு ரொம்ப முக்கியமான நாள் எங்க ரெண்டு பேரோட கல்யாண நாள்.. எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி எட்டு வருஷம் ஆச்சு.. இந்த எட்டு வருஷத்துல அவளோட கண்ணுல தண்ணி வந்தது எல்லாமே அவ பெத்த அவனோட பையனாலதான்.. என்னோட பையன நான் எந்த குறையும் சொல்ல மாட்டேன்.. அவனை வளர்க்கிற பொறுப்ப உங்ககிட்ட கொடுத்தேன் பாருங்க அதுதான் நான் பண்ண ரொம்ப பெரிய தப்பு.."என்று ஆக்ரோஷமாக ஜனார்த்தன் கூற, மகன் பேசியதை கேட்டு தன் நடிப்பை தொடங்க ஆரம்பித்து விட்டார் ஈஸ்வரி.



"பாத்தியா பாத்தியா துரியோதனா எனக்கு இந்த வீட்டில மரியாதை என்னன்னு உனக்கு இப்ப தெரிஞ்சுதா? இதோ உங்க அம்மா அவ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக் கொடுத்து உங்க அப்பாவை எப்படி கெடுத்து வச்சிருக்கான்னு பாரு.. உன்கிட்ட எத்தனை தடவை நான் சொல்லி இருக்கேன் இவ ஒரு மோசமான விஷப் பாம்பு.. இவளுக்கு சப்போர்ட் பண்ணி உங்க அப்பா என்கிட்டே சண்டை போடுறான் இதுக்கு மேல இந்த வீட்ல இருக்க எனக்கு விருப்பமில்லை நான் போறேன்.."என்று கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை வாய்க்குள் சரித்த படி கோபமாக ஈஸ்வரி அங்கிருந்து நகர, பெற்ற தாயின் கண்ணீர் மகனுக்கு கோபத்தை வரவழைக்க அதே நேரம் அவனைப் பெற்ற தந்தையின் தாயின் கண்ணீரை பார்க்கும் பொழுது அப்படி ஒரு கோபம் வந்தது துரியோதனனுக்கு.



இரண்டுமே கோபம்தான். ஆனால் இரண்டுக்கும் இடையில் மலையளவு வித்தியாசம் இருந்தது.



தேவியின் மேல் அவனுக்கு இருப்பது வெறுப்பான கோபம்.



ஈஸ்வரியின் மீது வருவதோ அன்பான ஒரு கோபம்.



"கமான் கிராண்ட்மா நீங்க எதுக்காக இந்த வீட்டை விட்டு போகணும்.. இந்த மொத்த சொத்தும் என்னோட பேர்ல தான் இருக்கு.. எனக்கு 18 வயசு ஆகுற வரை இந்த சொத்தை யாரும் எதுவும் பண்ண முடியாது.. சோ இங்க யாரு இருக்கணும் இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான்.. ஏதோ டேடுக்காக தான் இந்த லேடியை இங்க விட்டு வச்சிருக்கேன் இல்லாட்டி எப்பவோ இவங்களை இங்கே இருந்து துரத்தி விட்டிருப்பேன்.. கமான் கிராண்ட்மா ச்சில்.. இங்கே இருந்தா எனக்கு இன்னும் கோபம் வரும் வாங்க ரெண்டு பேரும் முதல்ல போவோம்.."என்றவன் ஈஸ்வரி கைகளை பிடித்துக் கொண்டு தேவியை அருவருப்பான ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல, அவளோ அவ்விடத்திலேயே மரணிக்காது ஒன்று மட்டும் தான் குறை.



மகன் அங்கிருந்து சென்றதும் தான் பெருமூச்சு விட்டான் ஜனார்த்தன்.



மகனிடம் சில முக்கியமான விஷயங்களை பேசியாக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் அப்போதைக்கு அதை விடுத்து மனைவியை சமாதானப்படுத்துவதே இப்பொழுது முக்கியம் என்று திரும்பி மனைவியை பார்த்தவன் அவள் கண்களில் எப்போதும் போல் கண்ணீர் அருவி மாலையென தொடுத்துக் கொண்டிருக்க, அதைத் துடைக்கக்கூட முடியாத தன் கையாலாக தனத்தை நினைத்து தன்னை தானே நொந்து கொண்டான் ஜனார்த்தன்.



"ஹே இதுக்கெல்லாம் அழுக கூடாதுடா தேவி.. இது என்ன புதுசா வா நடக்குது ரொம்ப நாளா நடந்துகிட்டு இருக்க விஷயம் தானடா.. ப்ளீஸ் டா உன்னோட கண்ணீரை பார்த்தா என் மனசு என்ன பாடுபடும் உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருக்கும் போது நீ இப்படி அழுதுகிட்டே இருந்தா எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்.. தயவு செஞ்சு இன்னிக்கு நம்மளோட கல்யாண நாள் இன்னைக்கு ஒரு நாளாவது நீ அழுகாமல் இருக்கணும்னு தான் உன்னை காலையிலேயே இவ்வளவு சீக்கிரம் ரெடியாக சொன்னேன்டா.. எனக்காக ப்ளீஸ் டா.."



"தயவு செஞ்சு என்கிட்ட பேசாதீங்க மாமா இன்னைக்கு என்னோட பையன் இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துக்குறதுக்கு காரணம் நீங்க தான்.. என் பையன் அஞ்சு வயசு வரை என் மேல எவ்வளவு பாசமா இருந்தான்னு உங்களுக்கும் நல்லாவே தெரியும்.. நானும் அவன் மேல உயிரையே வச்சிருக்க விஷயம் உங்களுக்கே தெரியும்.. உங்க அம்மாவை பத்தி தெரிஞ்சதுனால தான் அவன இங்க விடக்கூடாதுன்னு நான் அன்னைக்கு உங்ககிட்ட வரமாட்டேன்னு எத்தனையோ தடவை கெஞ்சி கேட்டேன்.. ஆனா நீங்க உங்க கூட வரலன்னா அதுக்கப்புறம் என் கூட பேசவே மாட்டேன்னு கண்டிஷன் போட்டீங்க.. இது எல்லாமே அன்னைக்கு ஒரு நாள் வந்ததால் தான்.."என்ற தேவி வேதனையாக அந்த நாளை நினைத்துப் பார்க்க ஜனார்த்தன் மனதிலும் அதே வேதனை தான்.



"இங்க பாரு தேவி சத்தியமா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் மட்டும் எதிர்பார்த்தேனா? உன்ன மாதிரி நானும் எவ்வளவு அதிர்ச்சி அடைஞ்சேன்னு உனக்கும் தெரியும் தானடா.. நம்ம பையன் பிறந்ததுல இருந்து உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலன்னு தானே உன்னை பத்து நாள் ஊட்டிக்கு கூட்டிட்டு போனேன்.. எனக்கு மட்டும் என் பொண்டாட்டி கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா? இதுல என்ன தப்பு இருக்கு சொல்லு..நான் திரும்பி வரும்போது நம்ம மேல பாசமா இருந்த நம்ம பையன் உன்னை எதிரியா பாக்குற அளவுக்கு அவனை மோசமா எங்க அம்மா மாத்தி வச்சிருப்பாங்கண்ணு நான் என்ன கனவா கண்டேன்.. அவனைக் கண்டுச்சு நான் பேசினாலும் நீ விட மாட்டேங்கிற.."



"ஆமா அவன் சின்ன குழந்தை தாங்க அவனோட மனசுல என்ன பத்தி தப்பான எண்ணத்தை அத்தை விதைச்சிட்டாங்க.. இனிமே அத யாராலும் மாற்ற முடியாது நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணி அவன்கிட்ட பேசினா கண்டிப்பா உங்களையும் வெறுத்திடுவான்.. அதுக்கப்புறம் அவனை இன்னும் ரொம்ப மோசமான சூழ்நிலைக்கு உங்க அம்மா மாத்திடுவாங்க..கண்டிப்பா இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் என் பையன் என்னை புரிஞ்சுகிட்டு என்கிட்டயே மறுபடியும் வந்துடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்குதுங்க.. என்னோட பையன் கண்டிப்பா நம்ம குழந்தையா நம்மகிட்ட வருவான்.."என்று கண்களை துடைத்துக்கொண்ட தேவி சமையல் வேலைகளை விறுவிறுவென பார்க்க ஆரம்பிக்க மனைவியை அதற்கு மேலும் தொந்தரவு செய்யாமல் தனியாக விட்டு விட்டு வெளியே சென்றான் ஜனார்த்தன்.



இங்கு வெளியில் வந்த துரியோதனனும் சந்தோஷமாக ஈஸ்வரியுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்க, போதையில் இருந்த ஈஸ்வரி அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கம் வருவது போல் இருக்கவும் போதையில் தள்ளாடி அங்கு வந்து கொண்டிருந்த ஜனார்த்தன் மேல் விழுக, அவரை பிடித்து தள்ளி விட்டான்.



அவன் பிடித்து தள்ளி விட்டதில் நிலை தடுமாறி சோபா மீது விழ துரியோதனன் தன் தந்தையை கோபமாக பார்த்தான்.


"இங்க பாரு உனக்கு எப்படி உங்க அம்மாவை பிடிக்காதோ அதே மாதிரி எனக்கும் இவங்கள பிடிக்காது.. சோ அவங்களுக்கு நீ சப்போர்ட் பண்ணி பேசாத.."என்று சொல்லிட, அவரை கோபமாக முறைத்து பார்த்தவன் தனதறைக்கு சென்று விட்டான்.



சோபாவில் விழுந்து குடிபோதையில் உலறிக்கொண்டிருந்த தன் தாயை வெறுப்பாக பார்த்த ஜனார்த்தன் "உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இந்த மாதிரி வீட்ல ஒரு சின்ன குழந்தையை வச்சிக்கிட்டு இப்படி எல்லாம் பண்ணாதீங்கன்னு எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்டீங்க.. உங்க இந்த செயல்கள் எல்லாத்துக்கும் என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தானே என் பையனை எனக்கு எதிரா மாத்தி வச்சிருக்கீங்க.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க உங்களை ஏதாவது சொன்னா உடனே அவன் என் பொண்டாட்டி கிட்ட சண்டைக்கு வருவான்..அவளை கூட்டிகிட்டு தனியா போகலாம்னு பார்த்தா ஏற்கனவே நாசமா போயிருக்க என் மகன் உங்க கூட இருந்தா சத்தியமா அவன் வாழ்க்கையே நாசமா போயிடும்..அவன் ஒருத்தனுக்காக தான் இத்தனையும் பொறுத்துக்கிட்டு சும்மா இருக்கேன் ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்களையெல்லாம் என்ன பண்றேன்னு பாருங்க.."என்றவன் கோபமாக கத்தி விட்டு தனதறைக்கு செல்ல, அவனை ஒரு பொருட்டாக மதிக்காத ஈஸ்வரி மேலும் இன்னொரு பாட்டிலை உடைத்து குடிக்க ஆரம்பித்தார்.



தேவி சமையல்கட்டு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வர, அவரை முதல் வேலையாக அங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பினான் ஜனார்த்தன்.



அந்த வீட்டைப் பொறுத்தவரை தேவி சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி மட்டும்தான்.



ஜனார்த்தனனுக்கோ மனைவி அந்த வீட்டில் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் அதே நேரத்தில் தன் இன்னொரு உயிரான மகனையும் அதே வீட்டில் விட்டுச் செல்ல பிடிக்காது அனைத்தையும் சகித்துக் கொண்டு தான் இன்று வரை அந்த வீட்டில் இருக்கிறான்.



எளிய அலங்காரத்தில் அழகான தேவதை போல் கிளம்பி வந்த தன் மனைவியை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த ஜனார்த்தன் மனைவியின் நெற்றியில் இதழ் பதிப்பதற்காக நெருங்க, ஏற்கனவே காயம்பட்டிருந்த தேவி கணவனை தடுத்து நிறுத்த மனைவியின் மனதை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்ட ஜனார்த்தன் இன்று ஒரு நாளாவது அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவியை அழைத்துக்கொண்டு வெளியில் வர சோபாவில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்த துரியோதனன் தாயும் தந்தையும் ஒன்றாக வருவதை பார்த்து வெறுப்புடன் அங்கிருந்து செல்ல, தேவியின் கைகளை அழுத்தமாக பிடித்தபடி அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்த ஜனார்த்தன் அன்று முழுவதும் தேவிக்கு பிடித்தமான இடங்களை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு அவருக்கு பிடித்த உணவுகள் அனைத்தையும் வெளியிலேயே சாப்பிட வாங்கி கொடுத்தவன் முடிந்தவரை அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தான்.



இப்படி வேதனையும் சந்தோஷமாக கழிந்த அன்றைய பொழுதுதான் அவர்கள் இருவரின் கடைசி பொழுதாக அமைந்தது.



ஆம். உயிருடன் அவ்வீட்டை விட்டு சென்ற இருவரும் திரும்பி வந்தது என்னவோ சடலமாகத்தான்.



இருவரின் உடல்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி சிதைந்து உயிரற்ற உடல்களாக வீட்டிற்குள் வந்தார்கள்.



தன் காதல் மனைவி பூமியில் அனுபவிக்க முடியாத சந்தோஷங்கள் அனைத்தையும் மேலோகத்திலாவது கொடுக்கலாம் என்று அவளுடன் சேர்ந்து பயணம் செய்தான் அவள் காதல் கணவன் ஜனார்த்தன்.



தாயும் தந்தையும் இருக்கும் பொழுதே அவனை மோசமாக மாற்றி வைத்திருக்கும் அவன் தாத்தா, பாட்டி இனிமேல் யார் என்று கேள்வி கேட்பதற்கு நாதி இல்லாமல் போக அவனை என்ன செய்யப் போகிறார்கள்??



அனைத்திற்கும் பதில் அவள் ஒருத்தியே!!
 
தீ-2



மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர்அடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி! என தன் அழகிய குரலில் பாடிக்கொண்டிருந்தது அந்த மூன்று வயது குழந்தை.



அந்த குழந்தையின் பாடலில் எப்போதும் போல் மயங்கிய அவளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை பாடும் அழகை கண்ணாரக் கண்டு அவள் பாடலை செவி வழியாக கேட்டு குழந்தை பாடும் பாடலுக்கு பின்ராகம் பாடியபடி இறைவனுக்குண்டான பூஜை செய்து முடிக்க, இறுதியாக கடவுள் புகைப்படங்களுக்கு தீபாரதனை காட்டிய குழந்தை அதை பெற்றவர்களிடம் காட்டி கண்களில் ஒத்தி கொள்ளும்படி சொல்ல, பெற்றோர் இருவரும் அவளை தங்கள் மகளாக அடைந்ததை எண்ணி இறைவனுக்கு மனமார்ந்த நன்றிகளை சொல்லிவிட்டு தீபாராதனை எடுத்துக் கொள்ள, பெற்றோர்களிடம் புன்னகைத்த குழந்தை அப்படியே அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த அவள் தாத்தா, பாட்டி இருவருக்கும் கொடுக்க அவர்களுக்கும் கிட்டத்தட்ட அதே பரவச நிலை தான்.



"என் செல்லப்பேத்தி பாக்குறதுக்கு அப்படியே அந்த மகாலட்சுமி என் கண்ணு முன்னாடி வந்து நின்னு அவங்களே எனக்கு தீபாரதனை காட்டி எடுத்துக் கொள்ளும்படி சொல்றது மாதிரி இருக்கு.. என் பேத்தி மேல யார் கண்ணும் படக்கூடாது.."என்று சொன்னபடி குழந்தையின் கையில் இருந்த தட்டை வாங்கி அவர் மருமகளிடம் கொடுக்க, அதை புன்னகையுடன் வாங்கிய அஞ்சலி தன் அருகில் நின்று கொண்டிருந்த தன் பெரிய மகளுக்கும் அதை காட்டிவிட்டு உள்ளே வைக்க, குழந்தையின் தந்தையோ தன் மகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மையை பரிசாக கொடுப்பதற்கு தன் அறைக்கு விரைந்து சென்றான்.



"என் பட்டு இப்படி வா தாத்தா கிட்ட.. வழக்கம்போல இன்னைக்கும் உங்களோட பூஜை ரொம்ப அருமை.. தாத்தா உங்களோட பூஜையை பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து போயிட்டேன்.. சரி என் செல்ல பேத்திக்கு தாத்தா இன்னைக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன்.."என்றவர் தன் பேத்தியை கைகளில் தூக்கிக்கொண்டு முன்னே செல்ல, அவரை பின்தொடர்ந்து சென்றார் மனைவி கனகா.



தான் இங்கு நிற்பதை பொருட்படுத்தாமல் தன் வீட்டில் உள்ள அனைவரும் தனக்கு பின்னே பிறந்த தன் தங்கையை மட்டும் செல்லம் கொஞ்சுவதை கண்டு எப்போதும் போல் கோபப்பட்டாள் ஏழு வயது நிரம்பிய பூஜா.



'இருக்கட்டும் இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு தான் நானும் பார்க்கிறேன்.. முதல்ல இந்த பிசாசை இங்கே இருந்து துரத்தி விடணும் அப்பதான் எனக்கு சந்தோசம்.. இவங்க எல்லாருக்கும் நான் இங்கே இருக்கிறது கண்ணுக்கு தெரியாது அவ ஒருத்தி மட்டும் போதும்..'என்று தன் தங்கையை மனதுக்குள் திட்டிய பூஜா கோபமாக தன் அறைக்கு சென்றாள்.



"என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரஞ்சித்?"


"நம்ம பொண்ணோட பிறந்தநாள் இன்னைக்கி அவளுக்கு பிடிச்ச பொம்மையை வாங்கிட்டு வந்தேன் அஞ்சலி.. அத வேற எங்கேயாவது வச்சா மறந்து போயிடுவேன்னு பெட்டுக்கு கீழ வச்சேன்..இங்க வச்சது மாதிரி தான் இப்பவும் ஞாபகம் இருக்கு ஆனா இப்ப வந்து தேடிப் பார்த்தால் எனக்கு கிடைக்கல நீ எதுவும் பார்த்தியா?"என்று மனைவிக்கு பதில் சொன்ன ரஞ்சித் தன் மகளுக்காக ஆசை ஆசையாக வாங்கி வந்த பரிசை எங்கேயாவது தவற விட்டு விட்டோமா? என்று பரபரப்புடன் மனைவியை கூட கவனிக்காமல் வீட்டை சல்லடை போட்டு தேட, கணவனின் செயலில் மனைவிக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.



அவளும் அவளுடன் சேர்ந்து தேடிப் பார்க்க எங்கு தேடியும் அந்த பரிசு பொருள் இறுதி வரை கிடைக்காமல் போனது.



கணவன் பரிசு வாங்கி வந்திருப்பான் என்பதால் அஞ்சலி குழந்தைக்கு உடை மட்டும் வாங்கி வந்திருந்தாள்.



பரிசை தொலைத்து விட்டு அது கிடைக்காமல் போக கட்டிலில் வருத்தத்துடன் அமர்ந்திருந்த கணவனின் அருகில் வந்தவள் அவன் தலையை மென்மையாக கோதி கொடுத்தாள்.



"இப்ப எதுக்காக தேவையில்லாம இவ்வளவு பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ரஞ்சித்? சரி விடுங்க அது எங்க போகப்போகுது வீட்ல தான் எங்கயாவது இருக்கும் கண்டிப்பா கிடைக்கும்.."


"இல்லடி எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு இங்கதான் நான் வாங்கிட்டு வந்து வச்சேன்.."



"சரி விடுங்க ரஞ்சித் நான் பாப்பாவுக்கு வாங்கிட்டு வந்து டிரஸ் இது.. இத கொண்டு போய் அவகிட்ட குடுங்க கண்டிப்பா குழந்தை ரொம்ப சந்தோஷப்படுவாள்.."என அவள் வாங்கி வந்திருந்த சிகப்பு நிற அழகிய ப்ராக் ஒன்றை கொடுக்க, அதை வாங்காமல் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் ரஞ்சித்.



அவன் பார்வையில் என்ன பொருளை பெண்ணவள் உணர்ந்து கொண்டாளோ சற்று குனிந்து அவன் நெற்றியில் மென்மையாக இதழ் பதிக்க, அதில் ரஞ்சித்தின் இதழ்கள் தானாக புன்னகையை சிந்தியது.



இங்கு தன்னுடைய அறைக்கு குழந்தையை தூக்கி வந்திருந்த ராமானுஜம் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான கூண்டுகிளியை பரிசாக கொடுக்க, அதை கையில் வாங்கிய குழந்தை அந்த பறவையை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தது.



"ஹாப்பி பர்த்டே பட்டுக்குட்டி.."என்று ராமானுஜம் வாழ்த்து கூற,அவரைத் தொடர்ந்து கனகாவும் பேத்தியின் கன்னங்கள் இரண்டையும் வழித்து நெட்டை முறித்தவர் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா இன்னைக்கு நீ சந்தோசமா இருக்குறது மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கணும்.. உன்னோட வாழ்க்கை முழுக்க உனக்கு எந்த விதமான பிரச்சனைகளையும் கடவுள் கொடுக்காமல் உன் ஆயுளை அதிகமாகி கொடுக்கட்டும்.."என்று குழந்தையின் தலை மீது கை வைத்து ஆசீர்வாதம் செய்தவர், அவளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு சீடையை ஏற்கனவே செய்து வைத்திருந்தவர் அதை குழந்தையின் கைகளில் கொடுக்க,ஒரு கையில் கிளி கூண்டை வைத்திருந்த குழந்தை அதை கீழே வைத்துவிட்டு பாட்டியின் கையில் இருந்த இனிப்பு சீடையை வாங்காமல் அவரை கண்களில் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்க, குழந்தையின் கண்ணீரில் துடித்து விட்டார்கள் பெரியவர்கள் இருவரும்.



கையில் வைத்திருந்த சீடையை அருகில் இருந்த மேஜை மீது வைத்த கனகாம்பாள் என்னும் நாமம் கொண்ட கனகா பதட்டத்துடன் தன் பேத்தியை கைகளில் தூக்கிக் கொள்ள "என்னாச்சுடா உனக்கு எதுக்காக பிறந்தநாள் அதுவுமா இப்படி அழுதுகிட்டு இருக்க?எப்பவுமே என் செல்ல பேத்தி எதுக்காகவும் அழக்கூடாதுன்னு தாத்தா உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. ஏதாவது கொசு எதுவும் கடிச்சு வச்சுருச்சா.."என்று குழந்தையின் உடலை தடவிப் பார்த்தபடி பதட்டமாக ராமானுஜம் கேட்க, குழந்தைக்கு புது உடை அணிவிப்பதற்காக உள்ளே வந்த அஞ்சலி,ரஞ்சித் இருவரும் கூட குழந்தை தேம்பி தேம்பி அழுவதை கண்டு பதற்றத்துடன் வந்தார்கள்.



"ஹே அருந்ததி குட்டிமா உனக்கு என்ன ஆச்சு டா எதுக்காக அழுதுகிட்டு இருக்க?"என்று பதட்டத்துடன் கேட்ட ரஞ்சித் குழந்தையை அவன் அம்மாவின் கைகளில் இருந்து தன் கைகளில் வாங்கிக் கொள்ள, அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்த அருந்ததி என்னும் பேர் கொண்ட நம் நாயகி கண்களில் கண்ணீர் அப்பொழுதும் இன்னும் அதிகம் ஆகிக்கொண்டே போனது.



நால்வரும் மாறி மாறி குழந்தையிடம் காரணம் கேட்டுக் கொண்டே இருக்க அவர்கள் யாருக்கும் பதில் சொல்லாத அருந்ததி அப்படியே அவன் தந்தையோடு ஒட்டிக் கொள்ள "பாப்பா இங்க பாருடா இப்ப மட்டும் நீ சொல்லலனா அம்மா உன் கூட பேச மாட்டேன்.."என கண்ணீருடன் சொன்ன அஞ்சலியை பார்த்த அருந்ததி "மா கிளி பாவம்"என்று அவள் தாத்தா பரிசாக கொடுத்த கூண்டிலிருந்த கிளியை பரிதாபமாக பார்த்தபடி அழுகையுடன் சொல்ல, அதுவரை குழந்தைக்கு என்ன பிரச்சனையோ என்ற பதறிக் கொண்டிருந்த அனைவரும் குழந்தை வாய் திறந்து காரணம் சொன்ன பிறகே சற்று ஆசுவாசமடைந்தார்கள்.



"என் பட்டு குட்டி இதுக்காக போய் அழுதுகிட்டு இருக்கீங்களா அதுவும் பிறந்த நாள் அதுவுமா?"என்று குழந்தையின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரஞ்சித் "அப்பா இப்பவே அந்த கிளியை திறந்து விடுங்க.."என்று சொல்ல,"கண்டிப்பா நீ சொல்லாமல் இருந்தாலும் இப்பவே நான் கிளியை திறந்து விட்டிருப்பேன் ரஞ்சித்.. என் பேத்தி கண்ணீருக்கு காரணமான இந்த கிளியை இனிமே நான் இங்க வச்சிருக்க மாட்டேன்.."என்று சொன்னவர் அந்த நிமிடமே கிளியை கொண்டு வந்து வெளியில் திறந்து விட,"கீச் கீச்"என்று சத்தமாக கத்தியபடி தனக்கு கிடைத்த விடுதலையை நினைத்து ஆனந்தமாக கத்திய கிளி மேலே பறந்து சென்று சற்று நொடிகளில் மறைந்து போனது.



"என்னங்க பாத்தீங்களா! நம்ம பேத்திக்கு இந்த வயசுலையே இவ்வளவு பக்குவம்.. ஒரு கிளி கூண்டுல அடைபட்டு இருக்கிறதை பார்த்து எவ்வளவு அழுகை.. கண்டிப்பா இவ தெய்வ குழந்தை தான்.. போன ஜென்மத்தில் நாம நிறைய புண்ணியம் பண்ணி இருக்கோம் அதனால தான் இப்படி ஒரு அழகான குழந்தை நமக்கு பேத்தியா கிடைத்திருக்கிறாள்.."என்று சொன்ன கனகா, கிளி பறந்து சென்றதும் அதுவரை அழுது கொண்டிருந்த அருந்ததி சிரிக்க ஆரம்பிக்க குழந்தையின் சிரிப்பை ரசித்துப் பார்த்தபடி அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.



அங்கு நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூஜா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.



'இவங்க கண்ணுக்கு எப்பவுமே நான் ஒரு பொருட்டா கூட தெரிய மாட்டேன் போல..எப்ப பாத்தாலும் அந்த பிசாச தூக்கி வச்சுக்கிட்டு அதை மட்டும் செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்காங்க நானும் இந்த வீட்டு குழந்தை தானே ஒரு நாளாவது என்னை இப்படி எல்லாம் கொஞ்சி இருப்பாங்களா! அடியே அருந்ததி முதல்ல உன்னை ஏதாவது ஒரு வழி செஞ்சா தான் எனக்கு சந்தோசமா இருக்கும்..' என்று மனதுக்குள் கருகிக் கொண்ட பூஜா வெளியில் சிரித்தபடி "அருந்ததி இந்தா உன்னோட பிறந்த நாளைக்கு என்னோட பரிசு.."என்று ஒரு பென்சிலை பரிசாக கொடுக்க,"ஐ பெஞ்சில் சூப்பரா இருக்கு அக்கா தேங்க்யூ.."என்று அருந்ததி தன் தமக்கை தனக்கு கொடுத்த பரிசை விலை உயர்ந்த வைரமாக கருதி அவள் அப்பாவிடம் காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மகளின் சந்தோஷத்தை பார்த்த ரஞ்சித் முகத்திலும் சந்தோஷம்தான்.



"பென்சில் ரொம்ப அழகா இருக்கு பூஜா குட்டி.. சரி ஏன் இந்த டிரஸ் போட்டிருக்க உனக்கு கூட அம்மா ஒரு புது டிரஸ் தானே வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க அப்புறம் ஏன் அதை போடாம இத போட்டுருக்க?" என்று கேட்ட தந்தையை முறைத்து பார்த்தாள் பூஜா.


தன் பெரிய மகள் தன்னை பார்த்து முறைக்கவும் புன்னகையுடன் அவளை தன் மறு கைகளில் தூக்கிக் கொள்ள "அச்சோ என்னங்க பார்த்து.. ரெண்டு பேரையும் எப்படி உங்களால தூக்க முடியும் பாப்பாவை என் கிட்ட குடுங்க நான் வச்சுக்கிறேன்.. ஏய் பூஜா நீ பெரிய பொண்ணு தானே இப்படி எல்லாத்துக்கும் சரிக்கு சமமா சின்ன பொண்ணு கிட்ட போய் போட்டி போட்டுகிட்டு இருக்க?"என்று கோபமாக மகளை அஞ்சலி திட்ட, ரஞ்சித் தன்னை தூக்கியதும் சந்தோஷப்பட்ட பூஜா அஞ்சலி திட்டவும் முணுக்கென கண்ணீர் வந்துவிட்டது.
 
தகப்பனின் கைகளில் இருந்து கீழே இறங்கியவள் தாயை அழுகையோடு கூடிய கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் "நான் உங்க மகள் தானே?என்னமோ இந்த அருந்ததி மட்டும்தான் உங்க மக மாதிரியும் என்னை என்னமோ குப்பை தொட்டியில் இருந்து தூக்கிட்டு வந்து வச்சிக்கிறது மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க?நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டு தான் இருக்கேன் இந்த வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் என்ன விட அவளை தான் ரொம்ப பிடிக்குது ஏன் நானும் இந்த வீட்டு பொண்ணு தானே என்னை யாருக்குமே பிடிக்கல?இந்த அருந்ததி பிறக்கிற வரை எல்லாரும் என் மேல எவ்வளவு பாசமா இருந்தீங்க இப்ப எல்லாருமே இவளை மட்டும் தான் பாசமா பார்த்துக்கிறீங்க உங்க யாருக்குமே என் மேல கொஞ்சம் கூட அன்பே இல்லை உங்களுக்கு என் மேல சுத்தமா அன்பே இல்ல..இனிமே நான் உங்ககிட்ட பேச கூட இல்ல நான் உங்க கிட்ட பேசுறது கூட உங்களுக்கு கஷ்டமா இருக்கும் நான் போறேன்.."என்று அழுகையோடு சொல்லிவிட்டு பூஜா தன் அறைக்கு ஓட, மகளை சாதாரணமாக திட்டிய அஞ்சலி அதற்கு அவள் இத்தனை கோபப்படுவதை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டாள்.



"எதுக்காக அஞ்சலி இப்ப அவளை தேவை இல்லாமல் திட்டின? அவளும் நம்மளோட குழந்தைதான் இப்படி குழந்தைகளுக்கு இடையில் பாசியாலிட்டி பார்க்க கூடாது.."



"உங்களுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது ரஞ்சித் நம்ம குழந்தைகளுக்கு இடையில் நான் இப்படி வேறுபாடு பார்ப்பேனா?"


"சரி விடு நீ அருந்ததிய பார்த்துக்கோ நான் போய் பூஜாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரேன்.."என்ற ரஞ்சித் கையில் வைத்திருந்த மகளை மனைவியிடம் கொடுத்துவிட்டு தன் பெரிய மகளை சமாதானப்படுத்துவதற்காக செல்ல "அத்தை அவர் என்ன சொல்லிட்டு போறார்ன்னு நீங்க கேட்டீங்களா? எனக்கு பூஜாவை பிடிக்காதா?"என்று கண்கலங்கியபடி கேட்க, தாயின் கண்ணீரை தன் பிஞ்சு கரங்களால் துடைத்து விட்ட அருந்ததி "அம்மா அக்கா பாவம் தானே இனிமே திட்டாதீங்க.."என்று சொன்ன மகள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்ட அஞ்சலி மகளை மாமியாரிடம் கொடுக்க,"சரி விடுமா அவன் ஏதோ கோபத்தில் சொல்லிட்டு போறான் உனக்கு அருந்ததியை விட பூஜா மேல தான் அதிக பாசம் அவனுக்கும் சரி எங்களுக்கும் சரி நல்லாவே தெரியும்.."என பேத்தியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.



இங்கு பூஜா அறைக்கு வந்த ரஞ்சித் மகளை செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்த, அப்பொழுதும் பாதி சமாதானமாகியும் ஆகாமலும் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்ட மகளை பார்த்தபடி உள்ளே வந்த அஞ்சலி அவள் பங்கிற்கு அவளும் மகளை செல்லம் கொஞ்ச அதில் முற்றிலுமாக கரைந்து போனது அவளது கோபம்.



அதன் பிறகு அஞ்சலி வாங்கி வந்திருந்த உடையை மகளுக்கு அணிவித்து அருந்ததியின் மூன்றாவது பிறந்த நாளை இனிமையாக கொண்டாடி முடிக்க, அந்த தருணத்தை அழகாக உள் வாங்கிக் கொண்டது கேமரா.


ரஞ்சித் ஒரு அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிய அஞ்சலி பக்கத்தில் இருக்கும் கிண்டல் கார்டன் ஒன்றில் வேலை பார்க்க குழந்தைகள் இருவரையும் பார்த்துக் கொள்வது ராமானுஜம், கனகா இருவரும் தான்.


அதிலும் பூஜா பள்ளிக்குச் சென்று விட வயதான தம்பதிகளுக்கு அருந்ததி ஒருவள் மட்டும்தான் பொழுதுபோக்கு.



அருந்ததி அவர்களோடு அதிக நேரம் இருந்ததால் என்னவோ பூஜாவை விட அருந்ததி மீது அவர்களது பாசம் ஒரு படி அதிகம் தான்.



வசதியும் அல்லாத ஏழ்மையும் அல்லாத நடுத்தர வர்க்கம்.


அவர்களுக்கென்று ஒரு சிறிய வீடு அதில் எப்பொழுதும் மகிழ்ச்சி மட்டும்தான்.



மகளின் பிறந்தநாளை இனிமையாக கொண்டாடி முடித்த ரஞ்சித் "அம்மா அப்பா இரண்டு பேரும் குழந்தையை பார்த்துக்கோங்க.. என் பொண்ணுக்காக அவளுக்கு பிடிச்ச ஒரு பொருளை பரிசா வாங்கிட்டு வந்தேன் ஆனா அத எங்க வச்சேன்னு தெரியல இப்ப காணோம்.. கண்டிப்பா என் மகளுக்கு ஏதாவது பிறந்தநாள் பரிசு நான் கொடுத்தே ஆகணும்.. நான் போய் கடையில் வாங்கிட்டு வந்துடறேன்..அஞ்சலி நீயும் கடையில ஏதோ திங்ஸ் எல்லாம் வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தியே வா நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா போயிட்டு வந்துடலாம்.."என்ற ரஞ்சித் உறங்கிக் கொண்டிருந்த தன் இரண்டாவது தேவதையின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு செல்ல, கணவனை புன்னகையுடன் பின்தொடர்ந்தாள் அஞ்சலி.


அதே நேரம் தன் அறையில் அமர்ந்திருந்த பூஜா அருந்ததிக்காக வாங்கி வந்திருந்த பரிசை தன் கைகளில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தவள் 'உங்களோட பரிசு, அன்பு எல்லாமே எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும் ப்பா.. எப்பவுமே உங்களுக்கு நான் மட்டும் தான் செல்லம் அந்த அருந்ததி கிடையாது..' என்று வாய் விட்டு சொன்னவள் அந்த பரிசு பொருளை யாருக்கும் தெரியாதபடி ஒரு இடத்தில் மறைத்து வைத்தாள்.



இங்கு மகளுக்காக பரிசு வாங்க வந்த தந்தையோ எதிர்பாராமல் எதிரில் வந்த காரின் மீது மோத மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் சறுகிக்கொண்டு சென்று பல அடிகளுக்கு அப்பால் நிற்க அவ்விடத்திலேயே கணவன் மனைவி இருவரின் உயிரும் ஒன்றாக பிரிந்தது.



சற்று நேரத்திற்கு எல்லாம் உயிருக்கு உயிரான ஜோடிகள் இருவரும் உயிர்த்துறந்து உயிரற்ற உடல்களாக வீட்டிற்கு வந்து சேர, பெரியவர் இருவரும் அதிர்ச்சியில் அப்படியே சாய பூஜா தன் பெற்றோரைப் பார்த்து அழுது கொண்டிருக்க அருந்ததி என்னும் பிஞ்சு குழந்தையோ தன் தாயும் தந்தையும் இனி திரும்பி தன்னை பார்க்க வர மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டதால் என்னவோ அவர்கள் முகத்தை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தது.



கூடப்பிறந்த அக்கா அவளது எதிரியாக மாற பெற்றோரின் அன்பு இல்லாமல் எப்படி வளர போகிறது அந்த பிஞ்சு?



இங்கு அன்பே உருவான ஒருத்தி அன்பு என்றால் என்ன என்று கேட்கும் ஒருவனிடம் சேரும்போது அவள் நிலை என்ன ஆகும்?


இவை அனைத்திற்கும் அவன் ஒருவனே பதில்.



அவன் துரியோதனன். அன்பே உருவாக கொண்ட அருந்ததியின் வருங்கால மணாளன்.
 
தீ-3

"துரியோதனா எங்க இருக்க நீ?"

"வாட் கிராண்ட்மா?"

"இங்க பாரு உனக்கு கிரான்மா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு!"என்று ஈஸ்வரி தன் கைகளில் வைத்திருந்த பொருளை ஆசையோடு துரியோதனனிடம் கொடுக்க, அதை கைகளில் வாங்கி பார்த்தவன் கண்கள் ஆசையில் மின்னின.

"இட்ஸ் லவ்லி கிராண்ட்மா.."

"எனக்கு அப்பவே தெரியும் துரியோதனா உனக்கு நான் வாங்கிட்டு வந்தது கண்டிப்பா பிடிக்கும்னு.."என்றவர் அவன் தலையை தடவி கொடுத்து விட்டு செல்ல, அவர் கொடுத்த பொருளை அவர் அங்கிருந்து சென்றதும் அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டவன் கைகள் இரண்டையும் தட்டிக் கொண்டு செல்ல, அவன் செய்வதை எல்லாம் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி கோபமாக அவனிடம் வந்தார்.

"என்ன துரியோதனா இது?உனக்கு ரொம்ப பிடிக்கும்னு தானே உன்னோட கிராணி இதை வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க..அவங்க கொடுக்கும்போது ஆசையா வாங்குவது மாதிரி வாங்கிட்டு அவங்க போனதுக்கப்புறம் தூக்கி போடுறது நல்லாவா இருக்கு?"

"கமான் கிராண்ட் பா அவங்க குடுத்துட்டு போனத நான் ஏற்கனவே ட்ரை பண்ணிட்டேன்.. அதுல கொஞ்சம் கூட கிக் இருக்காது.. கிராணி இது தெரியாம வாங்கிட்டு வந்துட்டாங்க.. பாவம் கிராணி அவங்க மனச கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு அதை கையில் வாங்கிட்டேன்.."

"சோ ஸ்வீட் துரியோதனா அத நீ குப்பை தொட்டியில் போடாம என்னிடம் குடுத்திருந்தா நான் குடிச்சிருப்பேன் தானே!!"

"கமான் கிராண்ட் பா நீங்க ஒன்னும் பெக்கர் கிடையாது.. நம்ம கிட்ட இருக்க சொத்துக்கு இதே மாதிரி நிறைய ஐட்டம் வாங்கி அதுல குளிக்கலாம்.. போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க.."என்றவன் அவர் பதிலுக்காக காத்திருக்காமல் உள்ளே சென்றுவிட, அவன் சொன்னதை எல்லாம் பொருட்படுத்தாத மூர்த்தி அவன் தூக்கி எறிந்த சரக்கை குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்துக் கொண்டு சென்றவர் மனைவிக்கு தெரியாமல் மது அருந்த ஆரம்பித்தார்.

"இங்க பாரு துரியோதனா எனக்கு இதெல்லாம் உன்கிட்ட சுத்தமா பிடிக்கவே இல்லை.. நமக்கு இப்ப ஜஸ்ட் வெறும் 15 வயசு தான் ஆகுது இந்த வயசுல நீ இவ்வளவு கெட்ட பையனா இருக்கவே கூடாது.."என்று கண்டிப்புடன் கர்ணன் சொல்ல,இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு தனக்கு நல்லது சொல்லிக் கொண்டிருந்த நண்பனை கோபமாக முறைத்து பார்த்தான் துரியோதனன்.

"அவன் உன்னோட நல்லதுக்கு தான் சொல்றான் துரியோதனா நீ எதுக்காக இப்ப அவனை முறைத்து பார்த்துட்டு இருக்க சொல்லு.."என்ற அபிமன்யுவை சட்டை செய்யாமல் வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான் துரியோதனன்.

"டேய் நாங்க ரெண்டு பேரும் உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம்..எங்க ரெண்டு பேருக்கும் இந்த உலகத்துல நீதான் ஃபர்ஸ்ட் முக்கியம் அதுக்கப்புறம் தான் எங்க அப்பா அம்மா கூட.."என்ற கர்ணனை பார்த்த துரியோதனன் தலையை இரு பக்கமும் ஆட்டினான்.

"தேவையில்லாம எதுக்குடா என் மேல இவ்வளவு கேரிங்கா இருக்கீங்க.. நீங்க ரெண்டு பேரும் இப்படி என் மேல பாசமா இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல.. உங்க ரெண்டு பேரால இப்ப நான் குடிக்கிறதே இல்லை.. யார் என்ன சொன்னாலும் கேட்காத இந்த துரியோதனன் ஏன்னே தெரியல நீங்க ரெண்டு பேர் சொல்றதை மட்டும் கேட்டு நடந்துகிட்டு இருக்கான்.."என்று கோபமாக சொல்லிவிட்டு முன்னே நடந்து செல்ல, அவன் சொன்னதைக் கேட்டு மற்ற இருவர் முகத்திலும் சிறிய புன்னகை.

அவனைப் பின்தொடர்ந்து சென்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக புன்னகைத்துக் கொண்டார்கள்.

"டேய் கர்ணா நாளைக்கு மேக்ஸ் டெஸ்ட் இருக்கு.. அதுல கண்டிப்பா நான் தான் ஃபர்ஸ்ட் மார்க் எடுப்பேன்.."

"டேய் அபிமன்யு என்ன என்ன நெனச்சிட்டு இருக்க நீ? நான் படிப்புல ரொம்ப கெட்டி கண்டிப்பா நீ என்கிட்ட தோத்து தான் போக போற பாரு!"

"இல்ல இல்ல கண்டிப்பா உன்னை விட நான் தான் மார்க் கூட எடுப்பேன் நீ தான் என்கிட்ட தோத்து போக போற.."

"இல்ல நான் தான் உன்ன விட அதிகமா மார்க் எடுக்க போறேன் அபிமன்யு.."

"டேய் வாய மூடுடா கண்டிப்பா நான் தான் உன்னை விட மார்க் கூட எடுப்பேன்.."என்று இருவரும் சைக்கிளை தள்ளி கொண்டு சண்டை போட்டு வர, இவர்களுக்கு முன்பாக சைக்கிளை தள்ளிய படி ஏதோ யோசனையாக சென்று கொண்டிருந்த துரியோதனன் இவர்கள் இருவரையும் பேசுவதை கேட்டு கடுப்பானன்.

"ரெண்டு பேரும் சும்மா இருங்கடா எதுக்கு தேவை இல்லாம ரோட்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க.."

"இதோட நீயும் எங்க ரெண்டு பேர் கூட தானே வந்துகிட்டு இருக்க என்னமோ தெரியாத மாதிரி கேக்குற..?"என்று கர்ணன் அவனை வம்பிழுக்க, முன்னால் சென்று கொண்டிருந்தவன் நின்று திரும்பி இவர்களை முறைக்க இருவரும் அவனைப் பார்த்து ஒன்றாக கண்ணை சிமிட்டினார்கள்.

அவர்கள் செயலிலேயே இருவரும் தன்னை வம்பு இழுப்பதற்காக தான் இப்படி பேசுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட துரியோதனன் அதற்கு மேலும் எதுவும் சொல்லாமல் இருவரையும் முறைத்து பார்த்துவிட்டு முன்னே செல்ல, பின்னால் வந்து கொண்டிருந்த இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொள்ள முன்னால் சென்று கொண்டிருந்த துரியோதனன் இதழ்களில் சின்னதாக ஒரு புன்னகை வீசியது.

"சரிடா மச்சான் எங்களுக்கு டைம் ஆச்சு நாங்களும் கிளம்புறோம்.."என்ற கர்ணன் அபிமன்யுவோடு சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்ல, இருவரையும் பார்த்து இரு பக்கமாக தலையாட்டிபடி துரியோதனன் உள்ளே நுழைய வாசலில் நின்று கொண்டிருந்த காவலாளி இவனை பார்த்ததும் சல்யூட் அடிக்க, இத்தனை சிறிய வயதிலேயே தனக்கு இத்தனை மரியாதை கிடைப்பதை எண்ணி கர்வம் கொண்டான் அவன் துரியோதனன்.

சைக்கிளை வாயிலில் நிறுத்தி வைத்துவிட்டு தனது பேக்கை எடுத்துக் கொண்டு இவன் உள்ளே நுழைய தன் அறுவது வயதை இருபது வயது போல் காட்டுவதற்காக அளவு அதிகமாக மேக்கப் செய்து கொண்டு ஷிபான் புடவை தடுக்கி விழாமல் இருப்பதற்காக அதை ஸ்டைலாக கைகளில் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தார் ஈஸ்வரி.

பேரனை கண்டதும் மகிழ்ச்சியுடன் அவன் பக்கத்தில் வர, அவரை தன் லேசர் கண்களால் எடை போட்டபடி நெருங்கிய துரியோதனன் அவர் பக்கத்தில் வரவும் மது வாடை அளவு அதிகமாகவே வீச அதில் முகத்தை சுளித்தான்.

போதையில் இருந்த ஈஸ்வரிக்கு அவன் முக மாற்றம் தெரியாது போக,"ஹாய் மை கிராண்ட் சன்.. இன்னைக்கு ஒரு முக்கியமான பார்ட்டி ஒன்னு இருக்குது நீயும் வரியா?"என்று கேட்க அவரை ஏற இறங்கப் பார்த்தான் துரியோதனன்.

இதற்கு முன்பு இருந்த துரியோதனனாக இருந்திருந்தால் நிச்சயம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவர் அழைத்ததும் அவருடன் சென்றிருப்பான்.

ஆனால் அபிமன்யு,கர்ணன் இருவரும் அவன் வாழ்க்கையில் வந்த பிறகு இவையெல்லாம் அவனுக்கு தவறாக தோன்ற ஆரம்பித்தது.

ஒவ்வொரு வீட்டிலும் வயதில் மூத்தோர்கள் தன்னுடைய பேர பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களுடைய பிறந்தநாளுக்கு கோவிலுக்கு அழைத்துச் சென்று இருப்பதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஒரு யுகத்தையே தன்னுடைய பெயரால் ஆட்டி வைத்த பெயரைக் கொண்டவன் தன்னுடைய பன்னிரண்டாவது அகவை தினத்திற்கு கூட அவன் சென்றது என்னவோ மிகப்பெரிய பப்பிற்கு தான்.

அங்கு தன்னை விட இரு மடங்கு வயது அதிகமான பெண்கள் என்றும் பார்க்காமல் அவர்களுடன் சேர்ந்து நடனமாடி தன் பிறந்தநாளை கோலகாலமாக கொண்டாடுவது அவன் வழக்கம்.

சிறு வயது முதலே தன்னுடன் இருக்கும் தாத்தா பாட்டி இருவரும் சொல்வது மட்டும் தான் சரியாக இருக்கும் என்று நம்பி கொண்டிருப்பவன் நம்பிக்கை இப்பொழுது சற்று ஆட்டம் காண துவங்கி இருந்தது.

கர்ணனும் அபிமன்யுவும் அவன் வாழ்க்கையில் வந்த பிறகுதான் சில விஷயங்களை புரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

அவன் புரிந்து கொண்ட விஷயங்கள் அவன் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சரியாக அவன் கற்றுக்கொடுக்குமா? என்பது காலத்தின் கைகளில்!!

"நோ கிரான்மா எனக்கு கொஞ்சம் ஹோம் ஒர்க் இருக்கு முடிச்சிட்டு என் பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போகப்போறேன்.."எனவும் இப்போது முகத்தை சுளிப்பது ஈஸ்வரியின் முறை ஆயிற்று.

"என்னவோ போ துரி கண்ணா எனக்கு நம்மள விட ஸ்டேட்டஸ்ல கம்மியா இருக்க அந்த ரெண்டு பசங்க கூட நீ பேசுறது சுத்தமா பிடிக்கல.. நம்ம வீட்டுல எத்தனை கார் இருக்கு அத்தனையும் விட்டுட்டு சாதாரண பீப்புள் மாதிரி சைக்கிள்ல போயிட்டு வர்ற.. நம்மளோட கெப்பாசிட்டி என்னென்ன உனக்கு தெரியாதா?முதல்ல அவங்க ரெண்டு பேரோட பிரண்ட்ஷிப்பை கட் பண்ணு.."

"ஸ்டாப்பிட் கிராண்ட்மா.."

"நீ அமைதியா இரு துரியோ நான் சொல்றதை நீ கேளு.. நான் உன்னை விட வயசுல பெரியவ உனக்கு நல்லது மட்டும் தான் நான் சொல்லுவேன் அது உனக்கு தெரியாதா?"
 
"ஐ நோ கிராணி இந்த விஷயத்துல அவங்க ரெண்டு பேரையும் என்னால விட முடியாது.."என்றான் அழுத்தமாக.



அவன் குரலில்லிருந்த அழுத்தம் இதற்கு மேலும் இந்த விஷயத்தை பேச விரும்பவில்லை என்பதை ஈஸ்வரிக்கு சொல்லாமல் புரிய வைக்க, முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டார்.



"என்னவோ எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பிடிக்கல.."



"எனக்கு அதைப் பத்தி எந்த கவலையும் இல்லை கிராணி.."


"சரி விடு துரியோதனா உன்னோட சந்தோஷத்துக்கு என்னைக்கி நான் தடையாய் இருந்து இருக்கேன் சந்தோசமா இரு நான் போயிட்டு வரேன்.."என்று அங்கிருந்து செல்ல, புருவம் இரண்டும் ஏறி இறங்க அவரை கண்டும் காணாது தன் அறைக்கு சென்று விட்டான்.



பல கோடி சொத்துக்களின் ஒரே வாரிசு அவன்.



எத்தனை சொத்துக்கள் இருந்தும் எத்தனை பணங்கள் இருந்தும் எத்தனை ஆடம்பரங்கள் இருந்தும் என்ன பயன்?




"சாப்பிட்டாயா?" என்று அவனிடம் கேள்வி கேட்பதற்கு கூட வீட்டில் நாதி இல்லை.



எப்போதும் துரியோதனன் அவன் வேலைகளை அவனே செய்து கொள்ள வேண்டும்.



தப்பி தவறி வீட்டிற்கு சேரும் ஏதாவது ஒரு புதிய வேலைக்காரன் அவன் வேலையை செய்து விட்டால் அவ்வளவுதான் அவன் நிலைமை.



சொன்னது போலவே தன்னுடைய ஹோம் ஒர்க்கை முடித்தவன் நண்பர்கள் இருவருடனும் சேர்ந்து அவனுக்கு மிகவும் பிடித்தமான டேபிள் டென்னிஸ் விளையாட கிளம்பி விட்டான்.



"ஹே ஈஸ்வரி பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்குடி.."என்ற 60 வயது ஈஸ்வரியின் ஒரே நெருங்கிய தோழி கண்ணம்மா என்ற பெயரை சுருக்கமாக கமா என்று மாற்றி வைத்திருந்த அவருடைய தோழி ஈஸ்வரிக்கு ஐஸ் வைக்க, எப்போதும் போல் அதில் அகமகிழ்ந்து போன ஈஸ்வரி தோழிக்கு தன் நன்றியை தெரிவித்தார்.



துரியோதனன் தாயும் தந்தையும் மிகவும் சிரமப்பட்டு கட்டி காத்து வந்த நற்பெயரையும் பணத்தையும் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் அவர்களால் முடிந்த வரை அழிக்க ஆரம்பித்தார்கள்.



ஈஸ்வரியை சுற்றி இருப்பது என்னவோ காக்க கூட்டம் தான்.



தங்களால் முடிந்தவரை அவரிடம் ஆதாயம் பார்க்கும் ஆட்கள் தான் அவரிடம் அதிகம்.



பண போதையிலும் குடி போதையிலும் மிதந்து கிடந்த அந்த வயதான பழத்திற்கு தெரியவில்லை தன்னுடைய மதிப்பு தனக்கானது அல்ல தன்னிடம் இருக்கும் பணத்திற்கானது என்பது மட்டுமே!



"கமான் கமா நீ சொன்னது மாதிரியே இன்னைக்கு டிரஸ் பண்ணிட்டு வந்துட்டேன் எனக்கு அந்த பையன் கூட டேட் போகணும்.."என்று சுட்டுவிரலை நீட்டி ஒரு பையனை சுட்டிக்காட்ட அவனோ இருபதின் தொடக்கத்தில் இருந்தான்.



"நீ கவலைப்படாத ஈஸ் அந்தப் பையனை நான் கரெக்ட் பண்ணிட்டேன்.. ஜஸ்ட் அவனுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் கொடுத்தா போதும்.."



"உனக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது கமா?"



"என்னாச்சு ஈஸ் நான் சொன்ன தொகை ரொம்ப அதிகமா சொல்லிட்டேனா? சரி ஓகே நான் அந்த பையன் கிட்ட பேசுறேன் குடுக்குற அமௌன்ட் ஐ பாதியாக கூட கொடுக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை.."



"ஷட்டப் கமா என்னோட ஒரு மணி நேர வொர்த் ஜஸ்ட் ஒரு லட்சம் தானா? நோ பத்து லட்சம் கொடுக்கறேன்னு சொல்லு.. எனக்கு 10 லட்சம் பிச்சை போடுற காசு தூக்கி போடுறேன் அவனை பொறுக்கிட்டு போக சொல்லு.."என்றவரை கண்டு புன்னகைத்தார் கமா.



"ஹே கமா இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? பார்ட்டி ஸ்டார்ட் ஆயிடுச்சு வா என்ஜாய் பண்ணலாம்.."என்று கமா தோளில் கை போட்டபடி அவரை நடனமாட அழைத்தது சாட்சாத் மூர்த்தியே தான்.



தன் கணவன் இன்னொரு பெண்ணின் தோளில் கை போட்டபடி தன்னுடன் நடனமாட அழைப்பதை கண்டு சாதாரணமாக அமர்ந்திருந்த ஈஸ்வரி பார்வை முழுவதும் அந்த இருபதின் தொடக்கத்தில் இருந்த வாலிபன் மீதுதான்.



கண்ணம்மா என்ற பெயர் கொண்ட கமாவும் தன் தோழியின் கணவன் என்கிற எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காது அவர் மீது சாய்ந்த படி நடனமாட சென்று விட்டார்.



குடும்பத்தில் ஆணி வேரான பெரியவர்கள் இருவரும் இப்படி தறிக்கெட்டு திரியும் நிலையில் அவர்களிடம் வளரும் அருந்ததியின் வருங்கால மனாளனாக இல்லை இல்லை நரகமாக விளங்கப் போகும் அவன் வளர்ப்பைப் பற்றி யார் தான் குறை கூற முடியும்??



அவள் ஒருத்தியைத் தவிர அவனை மாற்றும் சக்தி வல்லமை கொண்ட பெண் தான் இப்பரலோகத்தில் உண்டோ?





அன்று ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் சாவகாசமாக எழுந்து குளித்து முடித்துவிட்டு தன் வேலைகளை தொடர, வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை அவன் வீட்டிற்கு வந்து விட்டார்கள் அவன் உயிர் தோழர்கள் இருவரும்.



கர்ணன் அபிமன்யு இருவரும் வீட்டு வாசலுக்குள் நுழைந்தவர்கள் முதலாவதாக சென்றது என்னவோ துரியோதனனின் தாய் வழி சொந்தமான அவனது அம்மாச்சி காயத்ரியை பார்க்கத்தான்.



தேவிக்கு கால்நடை வளர்ப்பு மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால் கணவரிடம் சொல்லி எல்லாவற்றிலும் ஒன்றொன்றை வாங்கி வீட்டிற்கு பின்புறமாக வைத்திருக்க,அதில் முதலாவதாக அவன் பெற்றோர்கள் இருவரும் எதிர்ப்பு காட்டி தங்கள் அருவருப்பையும் காட்ட அதை மறுத்து விட்டவன் தன் மனைவியின் சந்தோஷத்திற்காக அவள் கேட்டது போலவே வீட்டிற்கு பின்னால் ஒரு சிறிய கொட்டகை அமைத்து கால்நடை வளர்ப்பை ஏற்பாடு செய்து கொடுத்தான்.



அத்துடன் தன் உயிரானவளை தனக்கு பரிசாக கொடுத்த அவளது தாயாரையும் தனியாக விடக்கூடாது என்பதற்காக தன் பெற்றோரையும் பற்றி தெரிந்து கொண்டவன் தன் மாமியாரை இந்த வீட்டிற்குள் சேர்த்தால் தன் மனைவியோடு அவரும் சேர்ந்து இங்கு நரகத்தை அனுபவிக்க நேரிடும் என்பதற்காக வயதான காலத்தில் அவர் சற்று நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக கால்நடை வளர்ப்புக்காக அமர்ந்திருந்த குடிசையிலேயே அவரை தங்க வைத்து விட்டான்.




யாரையும் அதிர்ந்து கூட பேச தெரியாத காயத்ரியும் தன் மகள் முகத்தை நித்தமும் பார்த்தால் மட்டும் போதும் என்பதற்காக மருமகன் சொன்னது போல் அவ் வீட்டிலேயே குடியேறிவிட்டார்.



துரியோதனன் அவரை எப்பொழுதும் மதிக்க மாட்டான்.



அவன் எவ்வளவுதான் அவரை துச்சமாக அவமானப் படுத்தினாலும் அத்தனையும் தாண்டி தன் பேரன் மீது உண்மையான அக்கறை கொண்ட அந்த மனதிற்கு தன் பேரன் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே இறைவனிடம் பெரும் பிரார்த்தனையாக இருந்தது.




துரியோதனனின் வீட்டிற்கு முதன்முதலாக வந்த கர்ணன், அபிமன்யு இருவருமே தங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இந்த வீட்டில் இருக்கும் பெரியவர்களின் வித்தியாசத்தையும் கண்டு கொண்டவர்கள் துரியோதனனின் தாத்தா பாட்டி இருவரையும் பிடிக்காமல் போனது.



அதே நேரம் ஒரு நாள் இருவரும் வீட்டை சுற்றி பார்க்கும் பொழுது எதிர்ச்சியாக காயத்ரியை பார்த்தார்கள்.




அப்போதுதான் அப்படி ஒரு நபர் அங்கு இருப்பதே அவர்களுக்கு தெரிந்தது.



கடுமையான வேலைகளை பார்த்து பார்த்து அவர் உடலில் இருந்த நரம்புகள் முதற்கொண்டு தோல் அனைத்தும் சுருங்கி போயிருக்க தங்கள் வீட்டு மூத்தோர்களை போலவே இருந்த காயத்ரி பாட்டியை அவ்விருவருக்கும் பார்த்ததுமே பிடித்து போனது.



அவருக்கும் தன் பேர பிள்ளையின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தன் பேரன் மீது வைத்த பாசத்தை அவர்கள் மீதும் வைத்தார்.




எப்போதுமே துரியோதனன் வீட்டிற்கு வந்ததும் கர்ணனும் அபிமன்யுவும் முதலாவதாக செல்வது என்னவோ அவன் வீட்டின் பிரம்மாண்டத்திற்கு திருஷ்டி புள்ளி வைப்பது போல வீட்டின் பின்னால் இருக்கும் அந்த மாட்டு கொட்டகைக்கு தான்.



அன்றும் அப்போது போல் வர இவர்கள் இருவருக்காகவும் காத்திருந்த காயத்ரி தள்ளாத வயதிலும் கூன் போட்டிருந்த முதுகோடு கைப்பிடி குச்சியின் உதவியோடு எழுந்து நின்றவர் இவர்கள் இருவரும் கிட்டே வந்ததும் உச்சி முகர்ந்து பார்த்தார்.



"பாட்டி உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கோம் எதுக்காக இப்படி கஷ்டப்பட்டு எந்திரிச்சு நிக்கிறீங்க?"என்று கர்ணன் தன் பாட்டியின் மீது உள்ள அவாவால் கோபமாக கேட்க, பற்கள் விழுந்த தன் பொக்கை வாயை கொண்டு குழந்தை போல் சிரித்தார் காயத்ரி.



"என்னோட ராசா இந்த கெழவி இன்னும் உயிரோட இருக்கிறது என் பேரனுக்கு தான்..இதுவரைக்கும் என்னை யாரும் இங்கு வந்து பார்த்தது கிடையாது என் மகள் இருக்கும் வரை வந்து பார்த்துட்டு போவா.. எப்பயாவது என் மருமகன் வந்துட்டு போவாரு அவங்க ரெண்டு பேரும் போனதுக்கு அப்புறம் இந்த கிழவியை திரும்பி பார்க்க ஒரு நாதி கூட இல்லை.. என்னை பார்க்க வர்றது நீங்க ரெண்டு பேரும் தான் உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி.."



"எதுக்காக பாட்டி எங்ககிட்ட இப்படியெல்லாம் பேசுறீங்க?"என்று அபிமன்யு சற்று வருத்தம் இழையோடிய குரலில் கேட்க,அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்த காயத்ரி அவர்கள் இருவருக்காகவும் செய்து வைத்திருந்த பலகாரத்தை கொடுக்க இருவரும் புன்னகையுடன் உண்ண ஆரம்பித்தார்கள்.



"கண்ணுங்களா உங்க கூட்டானுக்கு உடம்பு சரியில்லாம இருந்தபோது அவன் உடம்பு நல்லா வரணும்னு இங்க பக்கத்துல இருக்க கோயில்ல வேண்டிகிட்டேன்.. நான் நெனச்சது மாதிரியே என் பேரன் இப்ப நல்லா இருக்கான் அவனை நீங்க ரெண்டு பேரும் அந்த கோவிலுக்கு கூட்டிட்டு போகணும் ராசாக்கலா.. உங்களை இந்த கிழவி கெஞ்சி கேட்டுக்குறேன்.."என்று தடியை பிடித்திருந்த ஒரு கையை சற்று தூக்கி மற்றொரு கையையும் அதோடு சேர்த்து அனைத்த படி பாட்டி யாசகம் கேட்க, உருகிப் போய்விட்டார்கள் இருவரும்.



அவர் கையை கீழே இறக்கி விட்ட கர்ணன் "நீங்க எங்க கிட்ட இப்படி பேசக்கூடாது..நாங்களும் உங்களுக்கு இன்னொரு பேரன் மாதிரி தான் தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாதீங்க பாட்டி.. இப்ப என்ன உங்களுக்கு துரியோதனன் கோவிலுக்கு வரணும் அவ்வளவுதானே? பிளான் போட்டுவிடலாம் விடுங்க.."என்று கர்ணன் அபிமன்யுவிடன் சைகை காட்ட, புரிந்தது என்பது போல் தன் கண்களை மூடி திறந்தான் அபிமன்யு.



இவர்கள் இங்கே திட்டம் தீட்டிக் கொண்டிருக்க அன்பே உருவான அருந்ததி என்னும் துரியோதனனின் வருங்கால காதலியும் அந்த கோவிலில் தான் சந்தித்துக் கொள்ளப் போகிறார்களோ?



விதி தன் ஆட்டத்தை இனிதே துவங்கி விட்டது.
 
தீ-4



மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர்அடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி! என்று மூன்று வயதில் பாடிய அந்தப் பாடலை அதே ஸ்ருதி தாளம் லயம் மாறாமல் அப்படியே பாடிக் கொண்டிருந்தாள் பத்து வயதில் அடி எடுத்து வைத்திருந்த அருந்ததி.



பேத்தியின் கானகத்தில் எப்போதும் போல் மயங்கிய ராமானுஜம் கனகாம்பாள் தங்களை மறந்து அவள் பாடிய பாடலை கேட்டுக் கொண்டிருக்க அவர்களோடு சேர்ந்து அந்த கோவிலுக்கு வருகை தந்திருந்த பலரும் ஒரு சிறு சப்தமும் செய்யாமல் அவள் குரலில் மயங்கி பாடலை அமைதியாக கேட்டு இறைவனை கண்ணாரக் கண்டு மனதால் வணங்கி அவள் பாடலில் மயங்கி தங்கள் மனதில் உள்ள சோகங்கள் அத்தனையும் துறந்து மனம் நிம்மதியடைய ஆழ்ந்து லயித்து போயிருந்தார்கள்.



எப்போதும் போல் அருந்ததி பாடலை நிறைவு செய்து முடித்ததும் அவளைப் பாராட்டிவிட்டு இறைவனை வணங்கியபடி அங்கு வந்திருந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது.



"அருந்ததி குழந்தை இப்படி வாமா.. உன்னோட குரல் இருக்கிற வசீகரம் சாட்சாத் அந்த இறைவனே வந்து நேர்ல பாடி எங்களோட கவலை எல்லாத்தையும் மறக்க வைக்கிறது மாதிரி இருக்குது.. கடவுள் உனக்கு அழகான உருவத்தையும் மனத்தையும் மட்டும் இல்ல அழகான குரலையும் சேர்த்துக் கொடுத்திருக்காரு.."என்று கோவிலுக்கு வந்திருந்த பெண்மணி ஒருவர் அவளை பாராட்டி சொல்ல, அவருக்கு தன் புன்னகையே பதிலாக கொடுத்தாள்.



"உன்னோட சிரிப்பு கூட பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்குது அந்த கடவுள் உனக்கு எந்த குறையும் இல்லாமல் சந்தோஷத்தை அள்ளி அள்ளி தரணும்.."என்றபடி அவள் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தபடி அவர் செல்ல, தங்கள் செல்ல பேத்தி இப்படி வளர்வதை எல்லாம் கண்ணாரக் கண்டு புழங்காங்கீதம் அடைய அவள் பெற்றோர் உயிரோடு இல்லாமல் போய்விட்டதை நினைத்து வயதில் மூத்த தம்பதியர் வருந்தினார்கள்.



வந்திருந்தவர்களில் இன்னும் சிலர் கூட அவளை பாராட்டி விட்டுச் செல்ல இது எப்போதும் நடக்கும் ஒன்று என்பதால் அவர்கள் அனைவருக்கும் புன்னகையுடன் ஓரிரு வார்த்தைகளில் பதில் அளித்து முடித்துவிட்டு தன் தாத்தா பாட்டியிடம் வர அருந்ததிக்கு கால் மணி நேரம் கடந்து சென்று விட்டது.



"தாத்தா பாட்டி இன்னைக்கு என் பாட்டு எப்படி இருந்துச்சு?"



"அதுக்கு என்னடா கண்ணா எப்போதும் போல உன்னோட பாட்டு கேட்டு மெய் சிலிர்த்து போச்சு.."என்ற கனகா அவள் நெற்றியை வலித்து திருஷ்டி கழிக்க, வாய் வார்த்தைகள் எதுவும் பேசாமல் அவளை மௌனமாக அணைத்துக் கொண்டார் ராமானுஜம்.



"எங்களோட தேவதை நீதான்டா..உன்ன மாதிரி ஒரு குழந்தையை பெத்து எடுத்ததுக்கு உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் பெருமைப்பட்டு பூரிச்சு நிக்கணும்.. அந்தக் கடவுளுக்கு உன் மேல கருணை இல்லாமல் போக தான் உங்க அப்பா அம்மா ரெண்டு பேரையும் சின்ன வயசுலயே எடுத்துக்கிட்டாரு.."என்று வேதனையுடன் சொல்ல அந்த வேதனை அவளையும் தொற்றிக் கொண்டது.



"கவலைப்படாதீங்க தாத்தா எது நடந்தாலும் நல்லதுக்கு தான்.. கடவுளுக்கு ரொம்ப பிடிச்சவங்களை தன் பக்கத்திலேயே வச்சுக்கணும்னு ஆசைப்படுவாங்களாம்..அவங்களுக்கு என்னோட அப்பா அம்மா ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சு போச்சு போல அதனால தான் அவங்க ரெண்டு பேரையும் தன் பக்கத்துல வச்சுக்க ஆசைப்பட்டு கூட்டிட்டு போயிட்டாரு.. அப்பா அம்மா போனாலும் என்னையும் அக்காவையும் நல்லா பாத்துக்க தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே!"என்று சொல்ல, ராமானுஜம் பேத்தியை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.



சில வினாடிகள் வரை அங்கு ஒரு பாச போராட்டம் நிகழ அதன் பிறகு தன் உணர்விற்கு வந்த ராமானுஜம் அவளை விடுவித்து விட்டு கோவில் அர்ச்சகரை காண்பதற்காக சென்று விட்டார்.


"இன்னைக்கு என்ன என்ன பிரசாதம் செஞ்சிங்க பாட்டி.."



"வழக்கம் போல தான் அருந்ததி பொங்கலும் புளியோதரையும் சேர்த்து தேங்காய் சாதமும் அதோட மிளகு வடை.."



"சாரி பாட்டி என்ன மன்னிச்சிடுங்க நேத்து நைட்டு பூரா அக்கா முடியலன்னு சொல்லி ரொம்ப அனத்தி எடுத்துட்டாங்க..அதனால தான் உங்களுக்கு வந்து உதவி செய்ய முடியாமல் போயிடுச்சு மன்னிச்சிடுங்க.."



"என் பேத்திக்கு இந்த வயசுலையே வயசுக்கு மீறிய முதிர்ச்சியும் பக்குவமும் வந்துடுச்சு.. இந்த சின்ன வயசுலையே எல்லாத்தையும் நீ சரியா செய்யறது நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல உன்னோட குழந்தை பருவத்தை தொலைச்சிட்டு இப்படி எங்களோட சேர்ந்து கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படுவதானே தெரியல?"



"எதுக்கு பாட்டி வருத்தம்? இதுல என்ன இருக்கு என்னோட சந்தோஷம் நீங்க தாத்தா அக்கா மூணு பேரும் மட்டும் தான்..அதுக்கு அடுத்தபடியா நான் உயிருக்கு உயிரா நேசிக்கிற என்னோட படிப்பு.. எனக்கு இது மட்டும் போதும்.."



"உன் அக்கா மேல நீ உயிரையே வச்சிருக்க ஆனா உன் அக்கா உன்னை எதிரியா பாக்குறாளே அருந்ததி.."



"சீக்கிரம் எல்லாம் சரியாயிடும் பாட்டி கவலைப்படாதீங்க.."



"எப்படித்தான் உன்னை விட்டு அவளுக்கு போக மனசு வந்துச்சோ.."என்றவர் கடந்த கால நினைவில் வருத்தத்தோடு மூழ்கி போனார்.



ரஞ்சித் அஞ்சலி இருவரும் விபத்தில் இறந்த பிறகு பூஜாவின் நடவடிக்கையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது.



தந்தையையும் தாயையும் இழந்து வயதான காலத்தில் தனியாக இருக்கும் பாட்டியையும் தாத்தாவையும் பிடிக்காமல் போக, அங்கிருந்து செல்ல முடிவெடுத்தவளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.



ஆம்.அஞ்சலியின் நெருங்கிய தோழி உமாவிற்கு திருமணமாகி ஒன்பது வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை இல்லாமல் போக சொத்து சுகம் எதிலும் குறை இல்லாத அவருக்கு குழந்தை இல்லாதது பெரும் குறையாகி போனது.



உமாவின் கணவர் மனைவி மீது உயிரையே வைத்திருந்தாலும் அவள் சதா சர்வமும் குழந்தையை நினைத்து கவலைப்படுவதை கண்டவர் தன் மனைவியோடு அஞ்சலி மரணத்திற்கு வந்திருந்தார்.



தாய் தந்தை இல்லாமல் அழுது கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தது இயல்பாக உமாவின் தாய்மை சுரக்க, அவர்தான் குழந்தைகளை அணைத்து ஆறுதல் படுத்தினார்.



குழந்தை இல்லாத அவருக்கு இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் மிகவும் பிடித்த போக அடிக்கடி குழந்தைகளை பார்க்க வர ஆரம்பித்தார்.


உமாவின் கணவர் ஈஸ்வரன்
தாய் தந்தை இல்லாமல் வளரும் இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையை தான் ஏன் தத்து எடுத்துக் கொள்ள கூடாது என்ற எண்ணம் உண்டானது.



அப்படியே ராமானுஜத்திடம் தன் மனதில் உள்ளதை மறையாமல் வெளிப்படையாக கேட்டு விட அவர்க் கேட்டதை கேட்டு முதலில் அதிர்ச்சியாகி விட்டார்.
 
Status
Not open for further replies.
Top