வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"துரியோதனனின் அருந்ததி(தீ)!!"கதை திரி

Status
Not open for further replies.
அவர் கேட்கும் பொழுது பூஜா பக்கத்தில் இருக்க தாய் தந்தை இழப்பில் அருந்ததிக்கு உடல் நலம் சரியில்லாமல் போக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தார் கனகா.



"ஏம்பா இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா? இப்பதான் என் புள்ளையும் மருமகளையும் பறிகொடுத்தேன் அதுக்குள்ள என் பேத்தியையும் என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறீங்களே இதெல்லாம் உங்களுக்கு நியாயமா படுதா? இதுக்காகத்தான் எங்க பேத்தி மேல பாசமாய் இருக்கிறது மாதிரி அடிக்கடி வீட்டுக்கு வந்து போனீங்களா.."


"ஐயோ மன்னிச்சிடுங்க ஐயா அப்படி எல்லாம் கிடையாது நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க எப்படி வயசான காலத்துல இந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்து படிக்க வச்சு அவர்களுக்கு நல்லபடியாக சீர் சனம் நகை நட்டு எல்லாம் போட்டு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க? எங்களுக்கும் குழந்தையே இல்ல நீங்க கவலைப்படாதீங்க உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டை நான் சொந்தமா வாங்கிட்டேன்..உங்களுக்கு எப்ப எல்லாம் உங்க பேத்திய பாக்கணும்னு தோணுதோ அப்ப எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம நீங்க வந்துடலாம்.."



"வாய மூடு பா உனக்கு எப்ப என் பேத்தியை நான் கொடுக்கிறேன்னு சொன்னேன்?"என்றார் காட்டமக ராமானுஜம்.



"எனக்கு அவரோட போக விருப்பம் தான் தாத்தா.."என்று அவர்கள் இருவரும் வாதிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இடைப் புகுந்தாள் பூஜா.



தான் தூக்கி வளர்த்த பேத்தி பேசியதை கேட்டு அவளை அதிர்ச்சியாக பார்த்த ராமானுஜம் அடுத்து என்ன பேச வேண்டும் என்பதே மறந்து சிலையாக நிற்க, ஈஸ்வர் உதடுகளில் வெற்றி புன்னகை மலர்ந்தது.



"இங்க பாருங்க தாத்தா என் அப்பா அம்மா இருந்த காலத்திலேயே உங்களுக்கு அந்த அருந்ததியை தான் ரொம்ப பிடிக்கும்.. இப்ப அவங்க ரெண்டு பேரும் இல்ல உங்க ரெண்டு பேரோட பாசம் முழுக்க முழுக்க அவளுக்கு மட்டும் தான் கிடைக்கும் காலம் முழுக்க நான் இப்படி எல்லாத்துக்கும் ஏங்கி ஏங்கி சாக முடியாது.. எனக்குன்னு ஒரு ஆசை சொந்த விருப்பம் எல்லாம் இருக்குது.. எல்லாத்துக்கும் மேல நான் கேட்டா எதையும் வாங்கி கொடுக்கிற அளவுக்கு உங்ககிட்ட பணம் இருக்கா? அப்பா அம்மா இல்லாத எனக்கு உமா அம்மாவும் ஈஸ்வர் அப்பாவும் கண்டிப்பா பாசம் கொடுப்பாங்க..நீங்க என்ன சொன்னாலும் நான் கண்டிப்பா கேக்க மாட்டேன் அவங்க ரெண்டு பேர் கூடவும் தான் போக போறேன் போங்க.."என்று சொல்லிவிட,ஏற்கனவே இரு உயிர்களை பலி கொடுத்து மனமுடைந்து போயிருந்த ராமானுஜம் அவள் பேசியதை கேட்டு இன்னும் மனதளவில் மனமுடைந்து போனார்.



"கேட்டீங்களா சார் உங்க பேத்திக்கு சாரி சாரி என்னோட பொண்ணுக்கு என் கூட வர தான் விருப்பம் இனிமே உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.."என்றவர் அப்போதே கையோடு பூஜாவையும் அழைத்துக் கொண்டு செல்ல,ஆரம்பம் முதலே அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருந்த பூஜாவுக்கு பெரும் வாய்ப்பாக ஒரு பணக்கார வீட்டில் அவர்களுக்கு குழந்தையாக வளரப்போவதை நினைத்து மிகவும் சந்தோஷமாக ஈஸ்வரன் அழைக்க யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கிளம்பி சென்று விட்டாள்.



வீட்டிற்கு வந்த கனகா பேத்தியை தேட அவளோ வீட்டில் எங்கும் தென்படாமல் போக, கணவரிடம் சென்று பேத்தியை பற்றி கேட்க அவரை உணர்வுகள் இல்லாது பார்த்த ராமானுஜம் நடந்த அனைத்தையும் சொல்ல, அவர் சொன்னதை கேட்டு தன் நெஞ்சை பிடித்துக் கொண்டார் கனகா.



அதன்பிறகு நாட்கள் செல்லச் செல்ல அனைத்தையும் ஏற்க பழகிக் கொண்டார்கள் வயதான தம்பதிகள் இருவரும்.



உடன்பிறந்த தமக்கை இல்லாமல் துடிதுடித்துப் போனது என்னவோ அருந்ததி மட்டும்தான்.



"பாட்டி தாத்தா அக்கா எங்க?"என்று இருவரிடமும் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனவள் பதில் வராமல் போக அதை அப்படியே விட்டு விட்டாள்.




ஈஸ்வர் சொன்னது போலவே மனைவியையும் தன் தத்து மகளான பூஜாவையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டிற்கு பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.



எதர்ச்சியாக ஒரு நாள் அவ் வீட்டில் இருந்த தன் அக்காவை பார்த்ததும் அருந்ததியின் சந்தோஷம் தாள முடியவில்லை.



வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவள் வீட்டிற்குள் ஓடிவந்து தாத்தாவிடமும் பாட்டியிடமும் "தாத்தா பாட்டி அக்கா பக்கத்து வீட்டுல தான் இருக்காங்க நான் இப்பதான் பார்த்தேன் நம்ம எல்லாரும் இங்கே இருக்கும்போது அவங்க ஏன் அங்கே இருக்காங்க? எனக்கு அக்கா கூட விளையாடனும் அக்காவை பார்க்கணும் கூட்டிட்டு போங்க பாட்டி.."என்று மழலை குரலில் கேட்க, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார் கனகா.



"இங்க பாருடா அருந்ததி இனிமே அவ உனக்கு அக்கா கிடையாது.. எப்ப அவளுக்கு நீ முக்கியமில்ல அவளோட சந்தோசம் மட்டும் தான் அவளுக்கு முக்கியம்னு இந்த வீட்டை விட்டு நம்மள விட்டு அடுத்தவங்களை நம்பி போனாளோ அப்பவே அவளுக்கும் நமக்கும் இருந்த எல்லாம் முடிஞ்சிருச்சு.. உங்க அக்கா அங்கே இருக்கிறது தான் நமக்கும் சந்தோசம் அவகூட நமக்கு இனி எந்த உறவும் இல்லை.."என்று சொல்லிவிட, சிறு குழந்தைக்கு அது புரியவில்லை என்றாலும் தான் அக்காவை பற்றி எல்லாம் பேசும்போது பாட்டி அழுவது பிடிக்காமல் போக பூஜாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டாள்.



ஈஸ்வரும் உமாவும் சொன்னது போலவே பூஜாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள தான் அவர்கள் பிள்ளை தான் தன்னை பெற்றவர்கள் இவர்கள்தான் என்று பூஜா மனதிலும் ஆழ்ந்து பதிந்து போக, சிறுவயதிலேயே அவளுக்கு பணக்கார வாழ்க்கையின் மீது இருந்த ஆசை எல்லாம் சேர்ந்து தன் உடன் பிறந்த தங்கை தாத்தா பாட்டி அனைவரையும் மறந்து வாழ்க்கையில் முன்னேறி போனாள்.



அருந்ததிக்கும் சற்று விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் தான் பூஜா தங்களை விட்டு வேண்டுமென்றே சென்று விட்டாள் என்பதை புரிந்து கொண்டவள் அதன் பிறகு எங்காவது பூஜாவை பார்த்தால் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றுவிடுவாள்.



இப்படி இருக்க ஈஸ்வர் உமா இருவரும் ஒரு விசேஷமாக வெளியூருக்கு சென்று இருக்க அந்த நேரத்தில் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது பூஜாவிற்கு.


அவளுக்குத்தான் தங்கை மீது வெறுப்பே தவிர அருந்ததிக்க அல்லவே!!



பூஜாவிற்கு உடல் நலம் சரியில்லை என்பதை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி மூலம் தெரிந்து கொண்டவள் இரவு முழுவதும் அவள் உடன் இருந்து பார்த்துக் கொள்ள தங்கையாக இருந்தவள் தாயாக மாறி போக, அப்போதும் தன் தங்கை மீது பூஜாவிற்கு பாசம் வரவில்லை.



அவளை தன்னுடைய தங்கை என்று சொல்வதையே பெரும் அவமானமாக கருதியவள் அவள் செய்த பணிவிடைக்கு பணத்தையும் கொடுத்துவிட, அதை புன்னகையுடன் வாங்கிக் கொண்ட அருந்ததி கோவிலில் சுத்தம் செய்யும் நபருக்கு தானமாக கொடுத்து விட்டாள்.



ராமானுஜம் கனகா இருவராலும் பேத்திக்கு அனைத்தையும் வாங்கி கொடுக்க முடியாவிட்டாலும் அவள் கேட்டதை வாங்கி கொடுத்து அவளை நன்றாக படிக்க வைத்தார்கள்.



தாத்தா பாட்டி இருவரின் அரவணைப்பிலும் நன்றாக வளர ஆரம்பித்தாள் அருந்ததி.



"அம்மாடி அருந்ததி உனக்கு வர்ற சனிக்கிழமை ஸ்கூல் இருக்கா?"என்று ராமானுஜம் கேட்க, ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டிருந்த அருந்ததி அதை விட்டுவிட்டு "இல்ல தாத்தா எனக்கு அன்னைக்கு லீவு தான்.."என்றிட, கனகா கணவனை பார்க்க ராமானுஜம் தன் கண்களை மூடி திறந்தார்.



"அது ஒன்னும் இல்லடா அருந்ததி உன்னோட பாட்டு எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு இல்லையா? சனிக்கிழமை பக்கத்துல இருக்க கோவிலில் ஒரு சிறப்பு பூஜை ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம்.. அதுல உன் திருவாயால் பாடல் பாடினால் அவங்க ரொம்ப சந்தோசமா இருக்குனு சொன்னாங்க.. நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன் என்ன சொல்ற?"



"இதுல என்ன இருக்குது தாத்தா என் கிட்ட கேட்க வேண்டிய அவசியம் என்ன நீங்களே அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே? கட்டாயம் சனிக்கிழமை நம்ம எல்லாரும் அந்த கோவிலுக்கு போகலாம்.. சரி தாத்தா நான் இந்த ட்ராயிங் கம்ப்லிட் பண்ணிட்டேன் ஹோம் ஒர்க் இருக்கு போய் பார்க்கிறேன்.."என்று அருந்ததி தான் வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல,அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் கனகா.



"அஞ்சலி தான் அருந்ததி பூஜா ரெண்டு பேரையும் பெற்றெடுத்தா! அவ வயித்துல பிறந்த பூஜா எத பத்தியும் கவலைப்படாம அவ சந்தோஷத்தை மட்டும் நினைச்சுட்டு இந்த சின்ன வயசுலயே நம்மளை விட்டுட்டு போயிட்டா.. அருந்ததி தேவதை மாதிரி நம்ம கூட இருந்து எவ்வளவு சந்தோஷமா நம்மளை பார்த்துக்கிறாள் இவ சந்தோசம் எப்பவுமே இப்படியே இருக்கணும்.."என்று கணவரிடம் சொல்ல அதை ஆமோதிப்பது போல் கண்களை மூடி திறந்தார் ராமானுஜம்.



பாவம் அவர்கள் வேண்டுதல் அந்த கடவுளின் காதில் விழவில்லை போலும்!!



அருந்ததி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போவது அந்த கோவில் தான் என்பது அந்த கணம் அந்த பெரியவர்கள் இருவருக்கும் தெரியாமல் போனது!



அருந்ததி பாடுவதாக சொன்ன அந்த கோவில் தான் துரியோதனன் பாட்டி வேண்டிக்கொண்டு அபிமன்யு, கர்ணன் இவரிடமும் தன் பேரனை அழைத்துக் கொண்டு செல்லும்படி சொன்னதும் அந்த கோவிலுக்கு தான்.



இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திக்கும் பொழுது நடக்கப் போவது தான் என்னவோ??
 
தீ-5



"டேய் மச்சான் நெக்ஸ்ட் சாட்டர்டே எங்க அம்மா என்ன கோவிலுக்கு கூட்டிட்டு போறாங்க அபிமன்யு அம்மா கிட்ட சொல்லி அவனையும் என் கூட கூட்டிட்டு போக அவங்க அம்மா கிட்ட என் அம்மாவை விட்டு பேச சொல்லி பர்மிஷன் வாங்கியாச்சு.. நீயும் என் கூட வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும் இதுவரைக்கும் நம்ம மூணு பேரும் எந்த இடத்துக்கு போனாலும் ஒண்ணா சந்தோஷமா போயிட்டு வருவோம் இந்த இடத்துக்கு மட்டும் உன்னை விட்டுட்டு தனியா போகுறதுக்கு எனக்கு பிடிக்கலை.. உனக்கு விருப்பம் இருந்தா நீயும் என் கூட வா மச்சி.."என்ற கர்ணனை முறைத்து பார்த்தான் துரியோதனன்.



"டேய் மச்சி நான் என்ன உன்னோட முறை பொண்ணா அடிக்கடி மொரச்சி முறைச்சி இப்படி பார்த்துக்கிட்டு இருக்க?"என்று கர்ணன் கண்களை சிமிட்டியபடி வெட்கப்படுவது போல் நடிக்க, முகத்தை அஷ்ட கோணலாக சுளித்தான் துரியோதனன்.



"டேய் மச்சான் உனக்கு போயும் போயும் இவனா கெடைச்சான்? இவன் உன் அளவுக்கு எல்லாம் வொர்த் ஆனவன் கிடையாது"என்று அபிமன்யு கர்ணனை பழிக்க, கோபத்தில் மூச்சு வாங்கினான் கர்ணன்.



"ஏண்டா உனக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது? நான் பாக்குறதுக்கு எவ்வளவு அழகா ஸ்மார்ட்டா இருக்கேன்.. இன்னும் கல்யாண வயசு வராமல் இருப்பதால் தான் சும்மா இருக்கேன்.. என் கிரகம் உங்ககிட்ட வந்து மாட்டிகிட்டேன்.."என்று சீரியஸாக ஆரம்பித்து இறுதியில் கோவை சரளா போல் காமெடியாக முடிக்க, அபிமன்யு நின்றிருந்த இடத்தில் குனிந்து ஏதோ தேட ஆரம்பிக்க, துரியோதனன் அவன் எதற்காக அப்படி செய்கிறான் என்பதை புரிந்து வைத்தவன் இதழ்களில் புன்னகை தவழ அதை எப்பவும் போல உள்ளேயே அடங்கிக் கொண்டவன் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை தெரிந்து கொண்டவனாக சுவற்றில் சாய்ந்த படி மார்பு குறுக்காக இருக்க கைகளையும் கட்டிக் கொண்டவன் ஒரு காலை சுவற்றில் முட்டுக்கொடுத்தபடி மற்றொரு காலை தரையில் வைத்து நடப்பதை சுவாரசியமாக வேடிக்கை பார்க்க, சீரியஸாக பேசிக் கொண்டிருந்த கர்ணன் அபிமன்யு எதையோ சில நிமிடங்களாக தேடுவதைக் கண்டு தன் நடிப்பை கைவிட்டவன் "டேய் மச்சான் எதையும் கீழே போட்டுட்டியா இவ்வளவு சின்சியரா தேடிக்கிட்டு இருக்க? என்கிட்ட சொல்லு நானும் தேடுறேன்.."என்று அபிமன்யுவோடு சேர்ந்து அவனும் எதை தேடுகிறோம் என்றே தெரியாமல் தேட, சுற்று முற்றும் தேடி தேடி ஓய்ந்து போன அபிமன்யு சின்சியராக தேடிக் கொண்டிருந்த கர்ணனின் தோளில் கை போட்டவன் "விடு மச்சான் எங்க தேடியும் எனக்கே அது தெரியல உனக்கு எப்படி தெரிய போகுது?"என வருத்தமாக சொல்ல, நண்பனின் வருத்தம் கர்ணனையும் தொற்றிக்கொள்ள "கவலைப்படாத மச்சான் கண்டிப்பா நீ தேடியது உனக்கு கிடைக்கும் சரி என்ன தேடிகிட்டு இருந்த உனக்கு கிடைக்காமல் போக?"என்று கேட்க, அபிமன்யு துரியோதனனை ஒரு பார்வை பார்க்க அவனோ நடப்பதற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பது போல் வேடிக்கை பார்க்க,'இவன் என்ன டிசைன்னு தெரியல!' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், கர்ணன் தோளிலிருந்து கை எடுத்தவன் சற்று தூரம் அப்பால் நகர்ந்து சென்றவன் "இல்ல மச்சான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கே யாரோ ஒருத்தன் அவன் இருக்க அழகுக்கு கல்யாண வயசு வந்தா உடனே கல்யாணம் பண்ணி இருப்பேன்னு சொன்னான்.. அதான் அந்த ஆணழகன் எங்கே இருக்கான்னு பார்த்தேன் என் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியல உனக்கு யாராவது தெரியுங்களா?"என்ற அபிமன்யு ஒரு கையை தூக்கி கண்களுக்கு மேலாக வைத்தவன் தலையை சற்று எக்கி தூரத்திற்கு அப்பால் யாராவது தெரிகிறார்களா? என்று தேட,அவன் சொன்ன அனைத்தையும் சிறியதாக கேட்டுக் கொண்டிருந்த கர்ணன் இறுதியில் அவன் தன்னை மட்டமாக கலாய்த்து கொண்டிருக்கிறான் என்பதை புரிந்ததுமே முசுமுசுவென கோபம் வந்தது.



"உன்னை.."என்று அவனை துரத்த ஆரம்பிக்க, அபிமன்யு அங்கிருந்து ஓடினான்.



நடப்பதை எல்லாம் இதழ்களில் சிறு புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் தலையை இரு பக்கமாக ஆட்டிக் கொண்டு வகுப்பறைக்கு செல்ல, சரியாக அந்நேரம் மணியும் ஒலிக்க நண்பர்கள் இருவரும் தங்கள் சண்டையை விட்டுவிட்டு துரியோதனனுடன் சேர்ந்து வகுப்பிற்குள் நுழைந்தார்கள்.



அனைத்து மாணவர்களும் உள்ளே நுழைய அந்த பிரிவிற்கான ஆசிரியரும் உள்ளே வந்தவர் "நேத்து வச்ச டெஸ்ட் காண ரிசல்ட்.. இதுல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தது துரியோதனன் தான்.. கமான் துரியோதனன்.."என்று ஆசிரியர் அழைக்க அவரிடம் வந்து நிற்க, அவனுக்கு கை கொடுத்து தன் பாராட்டுக்களை தெரிவித்த ஆசிரியர் மற்ற மாணவர்களையும் கைதட்ட சொல்லி அவனை உற்சாகப்படுத்த, அது எதையும் பெரிதாக கணிக்கில் கொள்ளவில்லை துரியோதனன்.



தன் பேப்பரை வாங்கிக் கொண்டு கர்ணன் பக்கத்தில் வந்த அமர அபிமன்யு கர்ணன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.



இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் அவர்கள் பேசியதை அவன் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டான் அல்லவா?



அதுதான் துரியோதனன் எதையும் பேசாமல் செயலில் செய்து காட்டி முடித்து விடுவான்.



அன்று மாலை எப்போதும் போல் மூவரும் ஒன்றாக தங்கள் சைக்கிளை தள்ளி கொண்டு வீட்டுக்கு செல்ல,"டேய் மச்சான் மதியானம் நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல?"என்று அபிமன்யு மீண்டும் கேட்க, துரியோதனனுக்கு கோவில் போன்ற இடங்களுக்கு போவதெல்லாம் சுத்தமாக பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் நண்பனின் சந்தோஷத்தை தட்டிக் கழிக்க மனம் வராமல் "எந்த டைம் சொல்லு.."என்று கேட்க, அபிமன்யு அவன் தங்களுடன் வருகிறேன் என்று சொன்னதும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தான்.



"அருந்ததி இந்தா உன்னோட ட்ராயிங் வழக்கம்போல உன்னோட டிராயிங் சூப்பர்.."என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அவளிடம் கொடுக்க, அதை ஒரு புன்னகையோடு பெற்றுக் கொண்டாள் துரியோதனனின் தீ.



"உன்னோட திறமைக்கு கண்டிப்பா உனக்கு நல்ல ஃபியூச்சர் இருக்குது அருந்ததி.. உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு கண்டிப்பா நான் செய்றேன்.. பட் நீ இப்படி முயற்சி செய்வதை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கணும்.."என்ற தலைமை ஆசிரியருக்கு இரு கைகளையும் ஒன்றாக குவித்து நன்றி தெரிவித்த அருந்ததி "கண்டிப்பா சார் உங்களோட ஆசிர்வாதமும் கடவுளோட துணையும் என்கிட்ட இருக்கும்போது வாழ்க்கையில் நீங்க ஆசைப்படுவது மாதிரி நான் பெரிய ஆளா வருவேன்.."என்றதும் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் பேசிய குழந்தையை கண்களில் கனிவுடன் பார்த்தார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.



இப்படியே நாட்களும் கடந்து செல்ல அவர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டிய சனிக்கிழமை பொழுதும் நன்றாகவே புலர்ந்தது.




"பாட்டி கண்டிப்பா அந்த கோவிலுக்கு நான் மட்டும் தனியா போய் தான் ஆகவேண்டுமா?"



"அம்மா அருந்ததி குட்டி தாத்தாவுக்கு ரொம்ப உடல் சரியில்லாமல் போயிடுச்சுடா நான் பக்கத்துல இருந்து பார்த்துக்கணும் தாத்தாவை இப்படி நிலைமையில விட்டுட்டு உன் கூட நான் வர முடியாதே? அதே நேரம் உன்னை தனியா அனுப்பவும் கொஞ்சம் பயமாத்தான் இருக்குது..ஆனா அவங்க கிட்ட நாம ஒத்துக்கிட்டோம் இப்ப கடைசி நேரத்துல முடியாதுன்னு சொன்னா பெரிய அசிங்கமா போயிடும் டா.. அந்த கோவில் அர்ச்சகர் கிட்ட நான் பேசிட்டேன் அவரே உன்னை கூட்டிட்டு போய் நல்லபடியா பாட வச்சு பத்திரமா கூட்டிட்டு வந்து விடுறேன்னு சொல்லிட்டாரு..நமக்கு ரொம்ப வேண்டியவர்தான் அவர் அதனால நீ தைரியமா போகலாம் வேணும்னா சொல்லுடா உனக்கு பயமா இருந்தா நீ போக வேண்டாம் அவர்கிட்ட நான் பேசுறேன்.."



"இல்ல பாட்டி கொடுத்த சொல்லு வாக்கு இரண்டையும் காப்பாத்தணும் எதுக்காகவும் அதை விட்டு தரக்கூடாது இத நீங்க தான் எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தீங்க.. இப்ப என்னால அந்த நிலைமை உங்களுக்கு வர வேண்டாம் தாத்தாவை பக்கத்துல இருந்து நீங்க பாத்துக்கோங்க அதுதான் முக்கியம் நான் அங்க போறதுக்கு பயப்படல தாத்தாவை இந்த நிலைமையில உங்ககிட்ட மட்டும் தனியா விட்டுட்டு போறதுக்கு பயமா இருக்கு.. சரி பாட்டி தாத்தாவ பத்திரமா பாத்துக்கங்க நான் சீக்கிரம் போயிட்டு வந்துடறேன்.."
 
"சரிடா கண்ணம்மா இந்த உனக்கு புடிச்ச புளியோதரை செஞ்சு வச்சிருக்கேன் இதையும் எடுத்துக்கிட்டு போ கண்ணா எனக்கு இப்ப கொஞ்சம் பயமா இருக்குது கண்டிப்பா நீ போய் தான் ஆகணுமா? வேண்டாம் விடுவேன்.."



"நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல பாட்டி எனக்கு பத்து வயசு ஆகிடுச்சு நான் பெரிய குழந்தை எல்லாத்தையும் தனியா செய்ற அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கு நீங்க கவலைப்படாதீங்க.."என்றவள் உடல்நலம் சரியில்லாமல் படுத்திருந்த ராமானுஜத்தை பார்த்தவள் அவர் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு விட்டு "கவலைப்படாதீங்க தாத்தா சீக்கிரம் குணம் ஆயிடுவீங்க.."என்று கையோடு கொண்டு வந்திருந்த, விபூதியை அவர் நெற்றியில் சிறு கீற்றாக பூசி விட்டவள் "போயிட்டு வரேன் தாத்தா ரொம்ப முடியலன்னா சொன்னீங்க சாயந்திரம் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துரலாம்.."என்றபடி அங்கிருந்து கிளம்ப,கனகா சொன்னது போலவே அவளை அந்த அர்ச்சகர் வந்து அழைத்துக் கொண்டு செல்ல அவரிடம் தன் பேத்தியை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி ஆயிரம் முறை சொல்லிவிட்டு மனமே இல்லாமல் அவளை கோவிலுக்கு தனியாக அனுப்பி வைத்தார் கனகா.




"ஏன்டா அபிமன்யு உங்க அப்பா அம்மா ஏன் வரல?"என்ற கர்ணனுக்கு ஒரு முறப்பையே பரிசாக கொடுத்தான் அபிமன்யு.



"ஏன்டா தெரியாத மாதிரி அப்படியே கேக்குற? எங்க அம்மாவுக்கு போன் போட்டு ஆன்ட்டி நீங்களும் எங்க கூட கோவிலுக்கு வந்தா அபிமன்யு வர மாட்டேன்னு சொல்லிட்டான்னு போட்டு கொடுத்தது நீதானே!! இப்போ ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி கேக்குற?"



"அது ஒன்னும் இல்லடா நம்மள மாதிரி வயசு பசங்க இந்த மாதிரி இடத்துல எல்லாம் தனியா போகணும் அப்பதான் ஜாலியா இருக்கும்.. அப்பா அம்மா வந்தா தேவையில்லாம ஆயிரம் அட்வைஸ் பண்ணி டென்ஷன் பண்ணுவாங்க.. என்ன துரியோதனா நான் சொல்றது சரிதானே?"என்று முன்னால் டிரைவர் கார் ஓட்டிக் கொண்டிருக்க அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த துரியோதனனிடம் அபிமன்யு கேட்க "இதெல்லாம் அப்பா அம்மா இருந்தா தானே தெரியும்? எனக்கு அப்படி யாரும் இல்லை நீங்க கேட்கிற கேள்விக்கான பதில் என்கிட்ட இல்ல.."என்ற துரியோதனன் தன் கையில் வைத்திருந்த மொபைல் போனில் தொலைந்து போக, அவன் சொன்னதைக் கேட்டு கர்ணன் அபிமன்யு இருவரின் மனமும் கனத்து போனது.




அதன் பிறகு காரினுள் அமைதி மட்டுமே ஆட்சியாக சற்று நேரத்திற்கு எல்லாம் அவர்கள் வரவேண்டிய கோவிலுக்கு வந்து சேர,டிரைவரை அங்கேயே இருக்கும் படி பணித்துவிட்டு துரியோதனன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் செல்ல அங்கிருந்தவற்றை வேடிக்கை பார்த்தபடி கோவிலுக்குள் நுழைந்தான் துரியோதனன்.



"டேய் கர்ணா நான் இங்கே இருக்கேன் நீங்க ரெண்டு பேரும் உள்ள போயி என்ன பண்ணனுமோ அத பண்ணிட்டு வாங்க.."என்ற துரியோதனன் பிரகாரத்தின் நுழைவாயிலில் நின்றபடி சொல்லவும்,எந்தவிதமான பிரச்சினையும் செய்யாமல் அவன் தங்களோடு வருகிறேன் என்று சொன்னதை கேட்டு சந்தோஷம் அடைந்திருந்த அபிமன்யு கர்ணன் இருவரும் அவன் கோவிலுக்குள் வரமாட்டேன் என்று சொன்னதை கேட்டதும் மகிழ்ச்சி மொத்தமும் மறைந்து போனது.



"டேய் நீ பேசறது உனக்கே நியாயமா இருக்காடா?இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வர மாட்டேன்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்?" அபிமன்யு சற்று கோபமாக கேட்க,"நான் சொன்னது தான் இந்த துரியோதனன யாராலையும் கட்டுப்படுத்த முடியாதுன்னு உங்க ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும் இதுக்கு மேல என்னால உள்ள வர முடியாது.."என்றவன் அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல் கோவிலுக்கு எதிர் பக்கம் திரும்பி நிற்க, கர்ணன் அபிமன்யு இதற்கு மேலும் அவனை கட்டாயப்படுத்த முடியாது என்று அவனை திரும்பி பார்த்தபடி கோவிலுக்குள் நுழைந்தார்கள்.



"என்னப்பா நீங்க ரெண்டு பேரும் மட்டும் வந்திருக்கீங்க? என் பேரனை காணோம்!"என்றபடி காயத்ரி அவர்களுக்கு பின்னால் தன் பேரன் வருகிறானா? என்ற நப்பாசையுடன் பார்க்க, அவரைப் பார்க்க பாவமாக இருந்தது இருவருக்கும்.



வயது தளர்ந்து போன அவரது கரங்களை ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்துக் கொண்டவர்கள் "கவலைப்படாதீங்க பாட்டி அவன் கோவில் வாசல்ல தான் நிக்கிறான் இதுக்கு மேல உள்ள வர முடியாதுன்னு சொல்லிட்டான்.. அவன இதுக்கு மேல கட்டாயப்படுத்த எங்க ரெண்டு பேராலயும் முடியல.. அவனுக்கு பதிலா நாங்க ரெண்டு பேரும் நீங்க வேண்டிகிட்ட பரிகாரத்தை செய்கிறோம்..எங்க மூணு பேரையும் பொருத்தவரை நாங்க மூணு பேரும் வேற வேற கிடையாது மூணு பேருமே ஒருத்தர் தான் எங்களுக்குள்ள எந்த பிரிவினையும் கிடையாது.. கட்டாயமா அந்த கடவுள் நாங்க செய்யறத ஏத்துக்குவார் நீங்க கவலைப்படாதீங்க.."என்று அவர் கைகளை மென்மையாக அழுத்தியபடி கர்ணன் சொல்ல, காயத்ரிக்கு தன் பேரன் கோவிலுக்குள் வராமல் போனது மன கஷ்டம் என்றால் தான் வேண்டிக் கொண்ட பரிகாரத்தை அவன் செய்யாமல் போனது அதைவிட அதிகமான மன கஷ்டத்தை கொடுத்தது.



அதே நேரம் அவனுக்காக தாங்கள் அதை செய்கிறோம் என்று சொன்ன அவன் நண்பர்கள் இருவரையும் வாஞ்சையுடன் பார்த்தார் காயத்ரி.



"இந்த கோவில் சன்னதியில் வச்சு சொல்றேன் என் பேரன் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தானோ! இந்த ஜென்மத்துல அவனுக்கு எதுவும் ஒழுங்காக அமையாமல் போனாலும் உங்க ரெண்டு பேரோட நட்பு அவனுக்கு கிடைச்சிருக்கு..நீங்க ரெண்டு பேரும் மட்டும் இல்லன்னா நிச்சயம் என் பேரன் வாழ்க்கை சீரழிந்து போயிருக்கும்..உங்க ரெண்டு பேரையும் கெஞ்சி கேட்டுக்குறேன் தயவு செஞ்சு எக்காரணத்தைக் கொண்டும் அவனை விட்டுடாதீங்க.. சரி வாங்க நாம போய் வேண்டுதலை நிறைவேற்றலாம்.."என்றபடி அரைமனதாக அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு காயத்ரி தன் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உள்ளே செல்ல,வெளியில் நின்று கொண்டிருந்த துரியோதனன் அங்கிருந்தவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.



அவன் வளர்ந்த சூழ்நிலையில் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் கேளிக்கையாக தோன்றும்.



அவரவர் வளரும் சூழ்நிலைகளைப் பொறுத்தே அவரவர் வாழ்க்கை முறை அமைகிறது.



குயவனின் கையில் சிக்கிய மண்பாண்டம் அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல் உரு பெற்று விற்பனைக்கு வரும் பொழுது அது மற்றவர்களுக்கு பிடிக்கிறதா? என்பது அது இருக்கும் தன்மையை பொறுத்து.



அதேபோல தான் துரியோதனனும். அவனை உருவாக்கிய இருவருமே சீரழிந்த நிலையில் இருக்கும் பொழுது அவனும் இப்படி சீரழிந்த ஒருவனாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை!!



வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் காதுகளில் ரீங்காரமாக கேட்டது அந்தப் பாடலில் சத்தம்.



ஆம்.உள்ளே தன் திருவாயை திறந்து இறைவனை போற்றி பாடிக் கொண்டிருந்தாள் அருந்ததி.



அவளின் நல்லிசை கேட்டு எப்போதும் போல் கோவிலுக்கு வந்திருந்தவர்கள் தங்களை மெய் மறந்து நிற்க, கர்ணன் அபிமன்யு இருவரும் கோவிலுக்கு அந்தப் பக்கம் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காக சென்று விட அவர்களுக்கு இந்த சப்தம் கேட்காமல் போனது.



கேட்க வேண்டியவனுக்கு தெளிவாக கேட்க, இதுவரையிலும் எதிலும் லயித்துப் போகாமல் இருந்திருந்த துரியோதனன் தன்னையும் அறியாது அந்த பாடலில் மெய்மறந்து போயிருந்தான்.



அப்பாடலில் இருந்த உயிர்த்தன்மை அவன் இதயத்தில் இதுவரை இல்லாத பக்தியை கூட சற்று தூண்டி தான் விட்டது.



இறைவன் மீது பற்று இல்லாதவருக்கு கூட அருந்ததி பாடலைக் கேட்டால் நிச்சயம் இறை பக்தி தோன்றிவிடும் அளவிற்கு இருந்தது அந்த குரலின் தன்மை.



துரியோதனின் கால்கள் தன் கட்டுப்பாட்டையும் மீறி கோவிலுக்குள் செல்ல, கண்களோ அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தேடியது.




இதோ கிடைத்துவிட்டது. அவன் தேடி வந்த குரலின் கீதம் அவனுக்கு முன்னால் வெள்ளை நிறப்பட்டு பாவாடை சட்டையில் ரெட்டை ஜடை பின்னல் போட்டு அதில் வெள்ளை நிற பூச்சூடி நெற்றியில் கருப்பு நிற மை வைத்து, குழந்தைத் தன்மை மாறாது முகம் கொண்ட அருந்ததி அவனது அகங்காரத்தை அழித்து தீயாக மாறப் போகிற குழந்தையின் கானகத்தை கேட்டு மெய் மறந்து சிலையாக நின்று கொண்டிருந்தான் மகாபாரதத்தையே(போர்) உருவாக்க காரணமாக இருந்த துரியோதனன் என்னும் நாமம் கொண்ட துரியோதனன்.
 
தீ-6




"அண்ணா என்ன நீங்க கோவிலுக்குள்ள செருப்பு போட்டுட்டு வந்து இருக்கீங்க!கோவிலுக்குள்ள செருப்பு போட்டுட்டு வர்றது எல்லாம் ரொம்ப தப்புண்ணா வெளியில் கழட்டி போட்டு வாங்க.."என்ற அருந்ததியின் குரல் கேட்டதும் தான், நினைவுக்கு வந்தான் துரியோதனன்.



இத்தனை நேரம் வேறு ஏதோ லோகத்தில் சஞ்சரித்து விட்டு இப்போதுதான் தன் உடம்பில் வந்து புகுந்தது போல் இருந்தது அவனுக்கு.



வாழ்க்கையில் இதுவரையிலும் எதைக் கண்டும் ஆச்சரியப்படாதவன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக கடந்து செல்பவன் முதன்முதலாக ஒரு பெண்ணை அதுவும் தன்னைவிட வயதில் சிறிய பெண்ணை பெண் என்று சொல்வதை விடவும் குழந்தையை மெய்மறந்து நின்று பார்த்துக் கொண்டிருந்ததை நினைத்து தன்னை தானே அறவே வெறுத்தான்.



எல்லாவற்றிற்கும் மேல அருந்ததியின் "அண்ணா"என்ற அழைப்பு அவனுக்கு பிடிக்காமல் போக, குழந்தையின் சாயல் மாறாமல் கண்கள் இரண்டையும் அகலவிரித்து தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை கண்டு அவனுக்குள் வேறு ஏதேதோ ஒரு உணர்வுகள் தோன்றி மறைய, அதைப் பற்றி அந்த நிமிடம் யோசிக்க விரும்பாதவன் அடுத்த நொடி அருந்ததியை திரும்பி கூட பார்க்காமல் வெளியே சென்று விட்டான்.



போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி அர்ச்சகர் கூப்பிடவும் அவரிடம் சென்று விட்டாள்.



"அப்புறம் பாட்டி உங்க பரிகாரம் நல்லபடியா முடிஞ்சுச்சு..இனிமே நீங்க எதை நினைச்சும் கவலைப்பட வேண்டிய அவசியமும் கிடையாது கண்டிப்பா உங்களுடைய இந்த பரிகாரத்தை அந்த கடவுள் ஏத்துக்குவார் கவலைப்படாதீங்க.."என்ற அபிமன்யு அவர் தங்களோடு வந்தால் துரியோதனன் நிச்சயம் அவரை ஒரு வழி செய்து விடுவான் என்பதை உணர்ந்து வைத்திருந்தவன் அவரை ஆட்டோவில் பத்திரமாக அனுப்பி விட்டு வர,"என்னடா பாட்டி பத்திரமா போய்ட்டாங்களா?"என்று கேட்ட கர்ணனுக்கு கண்களை மூடி திறந்தான்.



"சரி வாடா மச்சான் அவன் வேற ரொம்ப நேரமா நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான் லேட்டா போனா ஏதாவது சொல்வான்.."என்றபடி இருவரும் துரியோதனன் சொன்னது போலவே அங்கிருந்த குளத்திற்கு செல்ல, அங்கு அவர்கள் கண்ட காட்சி இருவரையும் தூக்கி வாரி போட்டது.



அருந்ததியை பார்த்துவிட்டு வெளியில் வந்த துரியோதனன் மெய்மறந்து நின்றதற்காக தன்னைத்தானே சாடி கொண்டவன் கோவிலை ஒட்டி அமர்ந்திருந்த குளக்கரையின் படிகளில் வந்து நின்றவன் என்ன முயற்சித்தும் அருந்ததியின் முகத்தை மறக்க இயலவில்லை.



'சீட் எதுக்காக அந்த குழந்தையோட முகம் மறுபடியும் எனக்கு ஞாபகம் வருது.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லை கமான் துரியோதனா உன்னோட லைஃப்ல ஃபீலிங்ஸ் எதுக்கும் இடமில்லை.. உனக்குன்னு லைஃப்ல எவ்வளவோ பெஸ்ட் இருக்கு அத விட்டுட்டு கண்டிப்பா மறுபடி மறுபடி இதே விஷயத்தை யோசிச்சு டென்ஷன் ஆகாத கூல்..'என்று முடிந்தவரை நடந்ததை மறந்து விட்டு தன் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, குளத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்த மீன்களை வேடிக்கை பார்க்க "அண்ணா நீங்க இங்கதான் இருக்கீங்களா?"என்று அவன் மறக்க நினைத்த அதே குரல் மீண்டும் கேட்டது.
 
தீ-6




"அண்ணா என்ன நீங்க கோவிலுக்குள்ள செருப்பு போட்டுட்டு வந்து இருக்கீங்க!கோவிலுக்குள்ள செருப்பு போட்டுட்டு வர்றது எல்லாம் ரொம்ப தப்புண்ணா வெளியில் கழட்டி போட்டு வாங்க.."என்ற அருந்ததியின் குரல் கேட்டதும் தான், நினைவுக்கு வந்தான் துரியோதனன்.



இத்தனை நேரம் வேறு ஏதோ லோகத்தில் சஞ்சரித்து விட்டு இப்போதுதான் தன் உடம்பில் வந்து புகுந்தது போல் இருந்தது அவனுக்கு.



வாழ்க்கையில் இதுவரையிலும் எதைக் கண்டும் ஆச்சரியப்படாதவன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக கடந்து செல்பவன் முதன்முதலாக ஒரு பெண்ணை அதுவும் தன்னைவிட வயதில் சிறிய பெண்ணை பெண் என்று சொல்வதை விடவும் குழந்தையை மெய்மறந்து நின்று பார்த்துக் கொண்டிருந்ததை நினைத்து தன்னை தானே அறவே வெறுத்தான்.



எல்லாவற்றிற்கும் மேல அருந்ததியின் "அண்ணா"என்ற அழைப்பு அவனுக்கு பிடிக்காமல் போக, குழந்தையின் சாயல் மாறாமல் கண்கள் இரண்டையும் அகலவிரித்து தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை கண்டு அவனுக்குள் வேறு ஏதேதோ ஒரு உணர்வுகள் தோன்றி மறைய, அதைப் பற்றி அந்த நிமிடம் யோசிக்க விரும்பாதவன் அடுத்த நொடி அருந்ததியை திரும்பி கூட பார்க்காமல் வெளியே சென்று விட்டான்.



போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி அர்ச்சகர் கூப்பிடவும் அவரிடம் சென்று விட்டாள்.



"அப்புறம் பாட்டி உங்க பரிகாரம் நல்லபடியா முடிஞ்சுச்சு..இனிமே நீங்க எதை நினைச்சும் கவலைப்பட வேண்டிய அவசியமும் கிடையாது கண்டிப்பா உங்களுடைய இந்த பரிகாரத்தை அந்த கடவுள் ஏத்துக்குவார் கவலைப்படாதீங்க.."என்ற அபிமன்யு அவர் தங்களோடு வந்தால் துரியோதனன் நிச்சயம் அவரை ஒரு வழி செய்து விடுவான் என்பதை உணர்ந்து வைத்திருந்தவன் அவரை ஆட்டோவில் பத்திரமாக அனுப்பி விட்டு வர,"என்னடா பாட்டி பத்திரமா போய்ட்டாங்களா?"என்று கேட்ட கர்ணனுக்கு கண்களை மூடி திறந்தான்.



"சரி வாடா மச்சான் அவன் வேற ரொம்ப நேரமா நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான் லேட்டா போனா ஏதாவது சொல்வான்.."என்றபடி இருவரும் துரியோதனன் சொன்னது போலவே அங்கிருந்த குளத்திற்கு செல்ல, அங்கு அவர்கள் கண்ட காட்சி இருவரையும் தூக்கி வாரி போட்டது.



அருந்ததியை பார்த்துவிட்டு வெளியில் வந்த துரியோதனன் மெய்மறந்து நின்றதற்காக தன்னைத்தானே சாடி கொண்டவன் கோவிலை ஒட்டி அமர்ந்திருந்த குளக்கரையின் படிகளில் வந்து நின்றவன் என்ன முயற்சித்தும் அருந்ததியின் முகத்தை மறக்க இயலவில்லை.



'சீட் எதுக்காக அந்த குழந்தையோட முகம் மறுபடியும் எனக்கு ஞாபகம் வருது.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லை கமான் துரியோதனா உன்னோட லைஃப்ல ஃபீலிங்ஸ் எதுக்கும் இடமில்லை.. உனக்குன்னு லைஃப்ல எவ்வளவோ பெஸ்ட் இருக்கு அத விட்டுட்டு கண்டிப்பா மறுபடி மறுபடி இதே விஷயத்தை யோசிச்சு டென்ஷன் ஆகாத கூல்..'என்று முடிந்தவரை நடந்ததை மறந்து விட்டு தன் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, குளத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்த மீன்களை வேடிக்கை பார்க்க "அண்ணா நீங்க இங்கதான் இருக்கீங்களா?"என்று அவன் மறக்க நினைத்த அதே குரல் மீண்டும் கேட்டது.



தனக்கு பின்னால் கேட்ட குரலில் துரியோதனன் கோபமாக திரும்பி பார்க்க, அவனைப் பார்த்து கண்களை சிமிட்டி கொண்டிருந்த குழந்தையை கண்டதும் அவனது கோபங்கள் யாவும் ஒரு நிமிடங்கள் அவனை விட்டு தூர விலகி ஓடின.



அண்ட சாகரமும் ஒரு நொடி சுற்றுவதை நிறுத்தியது போல் அவனது உலகமும் ஒரே ஒரு நொடி மட்டும் நின்று இயங்கியது.



"என்ன அண்ணா இங்க பண்ணிக்கிட்டு இருக்கீங்க?நான் உங்ககிட்ட முதலிலேயே சொன்னேனே உங்களுக்கு அது மறந்து போச்சா! செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்குள்ள வரக்கூடாது அண்ணா அது பெரிய பாவம்.."என்று தன் மழலை மணம் மாறாத குரலில் சொல்ல, தனக்கு ஒருவர் கட்டளை இடுவதா? என்று அவன் அகங்காரம் தலை தூக்கியது.



"ஏய் யாரடி நீ என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? சும்மா நொய் நொய்யின்னு எனக்கு அட்வைஸ் பண்றது மாதிரி வந்து பேசிகிட்டு இருக்க.."



"இல்ல அண்ணா என்ன விட நீங்க வயசுல பெரியவங்க உங்களுக்கு தெரியும் நினைச்சேன்..செருப்பு போட்டுகிட்டு கோயிலுக்குள்ள வரக்கூடாது கழட்டி போடுங்க அண்ணா.."என்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்று அழைக்க, அந்த அழைப்பு அவனுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது.



அவள் அழைத்த விதமும் தனக்கே கட்டளை இடுவது போல் பேசிய பாங்கும் அக்குழந்தையை கண்டதும் தன்னிலை இழப்பது என அனைத்தும் சேர சற்றும் யோசிக்காமல் அவளை பிடித்து குளத்துக்குள் தள்ளி விட, நீச்சல் தெரியாத அருந்ததி தண்ணீருக்குள் தத்தளிக்க ஆரம்பிக்க அதை வெளியில் நின்று வேடிக்கை பார்த்தவன் குரூர மனம் சந்தோஷமடைய தண்ணீருக்குள் தவிக்கும் அந்த குழந்தையை கண்டதும் என்ன நினைத்தானோ அவனும் அந்த குளத்துக்குள் இறங்கி அவளை தூக்கிக்கொண்டு மேலே வரலாம் என்று நினைக்க அருந்ததி செயலைக் கண்டு அதை அப்படியே நிறுத்தி விட்டான். அவன் செய்த செயலைக் கண்டு அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிலர் அவனை கோபமாக திட்ட ஆரம்பிக்க அது எதையும் பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை அவன் துரியோதனன்.




கர்ணன் அபிமன்யு இருவரும் கண்டது என்னவோ குளத்தில் மூச்சு விட முடியாமல் போராடிக் கொண்டிருந்த அருந்ததியையும் அதை குரூரமாக பார்த்துக் கொண்டிருந்த தங்கள் நண்பனையும் தான்.



அக்கம் பக்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர் துரியோதனன் செயலில் அவனை கோபமாக பார்த்துவிட்டு குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக வர, அனைவரையும் தடுத்து நிறுத்தியது அவனின் ஒற்றை பார்வை.



ஒரு சிறு குழந்தையை சிறிதும் மனசாட்சி இல்லாமல் குளத்தில் தள்ளிவிட்டவன் நிச்சயம் தாங்கள் உதவி செய்ய போய் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்ள விரும்பாமல் தத்தளித்துக் கொண்டிருந்த குழந்தையை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



வேகமாக ஓடி வந்த கர்ணன் முதலாவதாக நீரில் குதித்து அருந்ததியை காப்பாற்ற, அபிமன்யு குழந்தையை தூக்குவதற்கு உதவி செய்தான்.



அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் அப்படியே அருந்ததி மயங்கி விட, தங்களுக்கு தெரிந்த முதலுதவி செய்து அவளை காப்பாற்றி விட்டார்கள் இருவரும்.



தண்ணீரை வெளியில் துப்பி விட்டு இறுமியபடி அருந்ததி எழுந்து நிற்க, குழந்தையின் பார்வையில் முதலில் பட்டது என்னவோ தனக்கு எதிரில் மாட்டுக்கு குறுக்காக இரு கைகளையும் கட்டிக் கொண்டு தன்னையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தவனை தான்.



அவனால் சிறிது நேரத்தில் தன் உயிர் போக இருந்ததை நினைத்து பயத்தில் நடுங்க ஆரம்பித்தது குழந்தையின் உடல்.



அருந்ததியை தேடி அவளை அழைத்து வந்திருந்த அர்ச்சகரும் வந்துவிட, குளக்கரையில் ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்த குழந்தையை கண்டதும் அவர் மனம் பதறி போனது.



"அம்மாடி குழந்தை அருந்ததி என்ன ஆச்சு? எதுக்காக உன் உடம்பு முழுக்க இவ்வளவு ஈரம் தண்ணீரில் விழுந்துட்டியா!"என்று பதறியபடி கேட்க, எதிரில் நின்று தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த துரியோதனனை ஒரு பார்வை பார்த்த அருந்ததி "ஒன்னும் இல்ல பூசாரி தாத்தா நான் தான் நீங்க வர லேட் ஆகும்னு குளத்துல துள்ளி குதிக்கிற மீனை வேடிக்கை பார்க்கலாம்னு இங்கே வந்தேன்.. வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும்போது ஒரு மீன் பக்கத்துல வரவும் ஆசையா இருக்கேன்னு நானும் தண்ணீரில் இறங்கவும் அப்படியே வழுக்கி தண்ணிக்குள்ள விழுந்துட்டேன்.. இந்த ரெண்டு அண்ணாவும் தான் என்னை காப்பாற்றினார்கள்.."என்று கர்ணன் அபிமன்யு இருவரையும் கை காட்ட, அவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்த அர்ச்சகர் அருந்ததியை சற்று கடிந்த படி அங்கிருந்து அழைத்து செல்ல, துரியோதனனை திரும்பி பார்த்தபடி அவரோடு சென்று விட்டாள் அருந்ததி.



கர்ணன் அபிமன்யு இருவரும் துரியோதனனை கோபமாக முறைத்து பார்க்க, அவர்கள் இருவரையும் சட்டை செய்யாது அவன் காரில் சென்று அமர்ந்து விட, டிரைவர் இருப்பதால் அவனை எதுவும் சொல்ல முடியாமல் இருவரும் மௌனியாகிவிட்டார்கள்.




காரில் செல்லும்போது இருந்த மகிழ்ச்சி அவர்கள் மீண்டும் வரும்போது இல்லை.



துரியோதனன் வீட்டில் காரை நிறுத்தியதும் அபிமன்யு கர்ணன் இருவரும் அவனிடம் சொல்லாமலேயே சென்றுவிட, அதை சாதாரணமாக கடந்து விட்டான் துரியோதனன்.


"பூசாரி தாத்தா நான் குளத்தில் விழுந்தது வீட்டில் தாத்தா பாட்டி ரெண்டு பேருக்கும் தெரிய வேண்டாம்! தாத்தாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல இப்ப நான் குளத்துல விழுந்தத நீங்க வீட்ல சொன்னா ரெண்டு பேரும் ரொம்ப பயப்படுவாங்க..கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன் தாத்தா வெயில் நல்லா அடிக்குது டிரஸ் காஞ்சதுக்கு அப்புறம் போகலாம்.."



"ஏன் பாப்பா உன்ன இங்க தானே உட்காரு செத்த நேரத்துல வரேன்னு சொல்லிட்டு தானே போனேன்.. எதுக்கு தேவையில்லாம நீ குளத்துக்கு போன?"



"இல்ல தாத்தா மீனை பார்க்கவும் ஆசையா இருந்துச்சு அதான் போனேன் சாரி.."என்று தலையை குனிந்து கொண்ட அருந்ததியை மனம் கனிய பார்த்த அர்ச்சகர் அவள் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்துவிட்டு எதுவும் பேசாது அவள் பக்கத்திலேயே அமர்ந்தவர் பக்கத்தில் தூக்கு சட்டியில் வைத்திருந்த பிரசாதத்தை எடுத்து அருந்ததியிடம் சாப்பிட கொடுக்க அதை கைகளில் வாங்கிக் கொண்ட அருந்ததி "நீங்க சாப்பிடுங்க தாத்தா உங்களுக்கும் பசிக்கும் தானே!"என்று அவரிடம் முதலில் கொடுக்க, அர்ச்சகரின் கண்களின் ஓரத்தில் சிறுநீர் துளியே வந்துவிட்டது.
 
"நெஜமாலுமே ராமானுஜம் கனகா இரண்டு பேரும் சொன்னது மாதிரி அந்த தெய்வம் அவங்களுக்கு கொடுத்த வரம் தான் நீ.. இந்த வயசிலேயே எவ்வளவு பக்குவம் உனக்கு! என் ராசாத்தி நான் இன்னைக்கு முழுக்க எதுவும் சாப்பிட மாட்டேன்.. அதனால நீ சாப்பிடு பா.."என்றிட, அவருக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு உணவை உண்ண ஆரம்பித்த அருந்ததி மனம் முழுவதும் தன்னை தண்ணீரில் தள்ளிவிட்ட அவன் மீது தான்.



'நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன் எதுக்காக அந்த அண்ணன் ஐயையோ இல்ல இல்ல அந்த முறைச்சு பார்க்கிறவர் என்ன தண்ணில தள்ளிவிட்டாங்கன்னு தெரியவில்லை.. கடவுளே இதுக்கு நீங்க அவங்களுக்கு எந்த தண்டனையும் தர வேண்டாம் பாவம்..'என்று மனதுக்குள் நினைத்தபடி, தூக்குச் சட்டியில் இருந்த உணவை உண்டு முடித்து இருந்தாள்.



"இப்ப எதுக்குடா ரெண்டு பேரும் என்கிட்ட பேசாம இருக்கீங்க? உங்களுக்கு என்ன விட அந்த பேரே தெரியாத குட்டிச்சாத்தான் முக்கியமா?"என்று துரியோதனன் கர்ஜனையாக கேட்க, அவனை முறைத்து பார்த்தான் அபிமன்யு.



"வாய மூடு துரியோதனா தப்பு முழுக்க உன் மேல தான்!நாங்க ரெண்டு பேரும் கூட உன்னோட தாத்தா பாட்டி அப்படி இருக்கிறதால நீ இப்படி இருக்கிறன்னு நினைச்சுகிட்டு இருந்தோம் ஆனா நீ இவ்வளவு கொடூரமான ஒருத்தனா இருப்பேன்னு நாங்க கனவுல கூட நினைச்சு பாக்கல டா.. அந்த குழந்தைக்கு மிஞ்சி போனா ஒரு எட்டு ஒன்பது வயசு தான் இருக்கும் அந்த குழந்தையை தண்ணீரில் தள்ளி விட்டு வேடிக்கை பார்த்து சந்தோஷப்படுற உன்னோட மனசு எவ்வளவு கொடூரமானதாய் இருக்கும்..எங்க அப்பா அம்மா உன்கிட்ட பஸ்ட் பழகும் போது வேண்டாம்னு சொன்னப்ப அதைக் கேட்காம நாங்க ரெண்டு பேரும் உன் கூட மட்டும் தான் பேசுவோம்னு சொல்லி வீட்டில் எத்தனை சண்டை.. ஆனா நீ உனக்கு எப்படி இப்படி எல்லாம் மனசு வருது டா! அந்த குழந்தைக்கு ஏதாவது ஒன்னு ஆகி இருந்தா நீ என்ன பண்ணுவ? ஒரு சின்ன குழந்தையை கொலை பண்ற அளவுக்கு மோசமான ஒருத்தனா நீ இருப்பேன்னு நாங்க கொஞ்சம் கூட கற்பனை பண்ணி பாக்கல தயவு செஞ்சு எங்க ரெண்டு பேரையும் விட்டுடு உனக்கும் எங்களுக்கும் செட் ஆகாது.. பியூச்சர்ல அந்த ஹிட்லரை விட கொடுமையான ஒருத்தனா நீ வருவ போ.."என்ற கர்ணன் துரியோதனன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் அங்கிருந்து செல்ல, அவர்கள் இருவருக்கும் எந்த விளக்கமும் சொல்லவில்லை துரியோதனன்.



"டேய் கர்ணா எதுக்கு இப்ப அவன்கிட்ட கோபப்படுற மாதிரி பேசுற?"



"என்னால முடியல அபி எப்படிடா அவனுக்கு முடியுது அதுவும் ஒரு சின்ன குழந்தைய இப்படி தண்ணியில தள்ளிவிட்டு வேடிக்கை பாக்குற அளவுக்கு அவன் மனசு அவ்வளவு கொடூரமானதாயிருக்கு!"



"புரியாம பேசாத கர்ணா அந்த குட்டி பொண்ணு தண்ணியில தத்தளிக்கிறத நீ பார்த்தியா? எனக்கு தெரிஞ்சு நாம அந்த இடத்துக்கு போறதுக்கு முன்னாடியே அந்த பொண்ணு தண்ணில தான் இருந்திருக்கு.. அந்தப் பொண்ணு இருந்தது வெறும் மூணாவது படி தான் எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு நடிச்சிருக்கு.. அதனாலதான் துரியோதனன் வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கான்.. என்னால கண்டிப்பா அவன தப்பா நினைக்க முடியலடா.."



"நீ என்ன விளக்கம் சொன்னாலும் சரிடா என்னால அவனை மன்னிக்கவே முடியாது அவனுக்கும் எனக்குமான பிரண்ட்ஷிப் இத்தோட முடிஞ்சு.. உனக்கு வேணும்னா அவன் கூட நீ தாராளமா பேசு என்ன விட்டுடு.."என்றவன் அபிமன்யுவை கோபமாக பார்த்துவிட்டு சென்று விட, அவனுக்கும் என்னதான் நண்பனுக்கு ஆதரவாக பேசினாலும் துரியோதனன் செய்தது தவறுதான் என்று மனம் கூற, இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் திகைத்து விட்டான்.



அருந்ததியோ தன்னால் அங்கு மூன்று உயிருக்கு உயிரான நண்பர்கள் பிரிந்து விட்டார்கள் என்பது தெரியாமல் அவள் தாத்தாவுக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.



"அருந்ததி என்ன இன்னைக்கு தண்ணில விழுந்து நல்ல ஸ்விம் பண்ண போல இருக்கு?"என்று நக்கலாக பூஜா கேட்க, தன் தமக்கையை திரும்பி புன்னகையுடன் பார்த்த அருந்ததி "எப்படி இருக்கீங்க அக்கா இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?"என்று கனிவன்போடு கேட்க, அவள் கேட்டதை சிறிதும் சட்டை செய்யவில்லை பூஜா.



"எனக்கு என்ன? என்னை தங்க தட்டுல வச்சு தாங்குற அம்மா இருக்கும்போது
எனக்கு என்ன நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.."



"ஆமாக்கா நல்ல ஸ்விம் பண்ணினேன்.."



"ஆனா உன்ன அங்க பார்த்தப்போ தண்ணீரில் தத்தளிக்கிறது மாதிரி இருந்துச்சு!"




"உண்மைதான் பூஜா அக்கா என்ன தண்ணில்ல தள்ளிவிட்ட அந்த அ.. முறைச்சு பார்க்கிறவரு என்ன தெரியாம தண்ணீரில் தள்ளிவிட்டாரா? இல்ல வேணும்னே தள்ளிவிட்டாரான்னு பார்க்கிறதுக்காக தான் அப்படி நடிச்சுகிட்டு இருந்தேன்?ஒருவேளை அவர் தெரியாமல் தள்ளி இருந்தா கண்டிப்பா என்னை காப்பாற்றி இருப்பார் வேணும்னே தள்ளி விட்டதால் தானே வேடிக்கை பார்த்துட்டு இருந்தார்.. மனுஷங்களோட குணத்தை அவங்களோட ஒரு சின்ன செயலையே நான் கண்டுபிடிச்சிடுவேன்.."என்றவள் பூஜாவை திரும்பியும் பார்க்காது கைகளில் இருந்து மருந்து பொருட்களோடு தன் வீட்டிற்கு செல்ல, அவளை அந்த இடத்திலேயே கொன்று போடும் அளவிற்கு கோபம் வந்தது பூஜாவிற்கு.



'பரவாயில்ல அருந்ததி உன்ன எனக்கு மட்டும்தான் பிடிக்காதுன்னு இத்தனை நாள நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா உன்ன வெறுக்கிற இன்னொரு ஆள் இருக்கான்னு இப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு.. இப்படி இருக்கிற நிலைமையில் கூட நீ எப்படி சந்தோசமா இருக்கலாம் அருந்ததி? அது ரொம்ப தப்பு நான் இருக்கிற வரை நீ சந்தோசமா இருக்கவே கூடாது.. உன்னோட சந்தோசத்தை கெடுக்கிறது தான் எனக்கு ரொம்ப முக்கியம்.. உன்னோட அழுகை தான் எனக்கு சந்தோஷம்..'என்று வெறுப்பாக நினைத்தபடி பூஜா தன் கூட பிறந்த தமக்கையை எப்படி பழிவாங்கி அவள் கண்ணீரில் தான் ஆனந்தம் படலாம் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்.




இப்படியே நாட்களும் கடந்து செல்ல,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடத்தை அருந்ததி பிடிக்க அதை நினைத்து அவளால் ஒரு சிறிதளவு கூட சந்தோஷம் கொள்ள இயலவில்லை.



தன் மதிப்பெண் சான்றிதழை புகைப்படத்திற்குள் புன்னகைத்துக் கொண்டிருந்த தன் தாத்தாவிற்கு முன்பாக வைத்தவள் கண்களில் கண்ணீர் நிலை இல்லாமல் சுரக்க ஆரம்பித்தது.



அவள் தாத்தா அவளை விட்டுச் சென்று இரண்டு மாதங்கள் முழுமையாக முடிந்து விட்டது.


"நான் வாழ்க்கையில சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டது நீங்கதான் தாத்தா.. இப்ப நீங்களே என் பக்கத்தில் இல்லாமல் போயிட்டீங்க எதுக்காக என்ன விட்டு போனீங்க தாத்தா அப்பா அம்மா என்னை விட்டு போனப்ப கூட எனக்கு ஒன்னும் தெரியல! என்ன கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிட்ட நீங்க இப்ப உயிரோட இல்ல ஐயோ கடவுளே இத என்னால ஏத்துக்க முடியலையே.."என்று தன் தாத்தாவை பார்த்து அழுக, அதை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் கனகாம்பாள்.



தன் முதல் பேத்தி தான் தன் கணவன் சாக காரணம் என்ற உண்மையை அருந்ததியிடம் சொல்ல முடியாது கணவருக்கு செய்து கொடுத்த சத்தியம் தடையாக நிற்க, கணவன் இறந்ததும் தானும் செத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கனகாம்பாள் மனம் பெரிய பெண்ணாக மாறியிருந்த தன் பேத்தியை கண்டதும் மாறி இருந்தது அடியோடு!!



பெண்ணவள் தீயாக மாறி அவளுக்குத் தீங்கிழைத்த அனைவரையும் தீயில் பொசுக்க போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
 
Last edited:
தீ-7



"அம்மாடி அருந்ததி இந்தா உனக்கு பிடித்த டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் போட்டுக்கோ.."என்று கனகாம்பாள் அருந்ததியிடம் புத்தம் புதியதாக அவளுக்காக வாங்கி வந்திருந்த பட்டுப்பாவாடை சட்டையை கொடுக்க, அதை சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்ட அருந்ததி கண்களில் கண்ணீர் நிலை இல்லாமல் வழிய ஆரம்பித்தது.


"என்ன அருந்ததி இன்னைக்கும் எப்பவும் போல அழுதுகிட்டே இருக்க! இங்க பாருமா உன்னோட பாட்டி இப்ப கடவுளோட கடவுளாக மாறிட்டாங்க..அவங்களோட ஆசை எல்லாம் உன் வாழ்க்கையில் நீ சந்தோஷமா இருக்கணும் அது ஒன்னு மட்டும் தான் நீ இப்படி கண்கலங்கிகிட்டு இருக்கத அவங்க ஆத்மா பார்த்தா கொஞ்சமாச்சும் அவங்களுக்கு நிம்மதி கிடைக்குமா சொல்லு? உன்னோட தாத்தா பாட்டி ரெண்டு பேரும் எங்கே இருந்தாலும் உன்னை பார்த்து கிட்டு தான் இருப்பாங்க நீ சந்தோஷப்பட்டா அவங்களும் சந்தோஷப்படுவாங்க நீ இப்படி கண்ணீர் விட்டால் அவங்களும் அங்க அழுதுகிட்டு தான் இருப்பாங்க.."என்ற உமா அவளது கண்ணீரை துடைத்து விட, அவர் சொன்னதைக் கேட்டு தன் கண்களை துடைத்துக் கொண்ட அருந்ததி புகைப்படச் சட்டத்தில் இருந்த தன் தாத்தா பாட்டியின் முகத்தை இதயத்துக்குள் சேமித்து வைத்துக் கொண்டாள்.



"நீங்க சொல்றது சரிதான் மேடம் என்னோட பாட்டி தாத்தா ரெண்டு பேரும் எங்கே இருந்தாலும் நிச்சயமா நான் சந்தோசமா இருக்கணும் மட்டும் தான் ஆசைப்படுவாங்க.. அவங்க ரெண்டு பேரும் இங்க என் கூட இருந்தப்போ முடிந்த வரை அவங்கள சந்தோஷமா தான் வச்சு இருந்தேன்..எப்பவுமே என்னோட தாத்தா பாட்டி ரெண்டு பேரும் கஷ்டப்படுறது மாதிரி நான் நடந்துக்க மாட்டேன் இப்பவும் அதே மாதிரி தான்.. கண்டிப்பா நீங்க சொல்றது மாதிரி இனிமே சந்தோஷமா இருக்குறதுக்கு ட்ரை பண்றேன் உமா மேடம்.."என்ற அருந்ததியை கண்டு நேசமாக புன்னகைதார் உமா.




"உன்கிட்ட எத்தன தடவ சொல்லி இருக்கேன் அருந்ததி பூஜாவுக்கு எப்படி நான் அம்மாவோ அதே மாதிரி தான் உனக்கும் அம்மா.. நீங்க ரெண்டு பேரும் என்னோட குழந்தைங்க மாதிரி தான் பூஜா என்னோட உயிர் அந்த பூஜாவோட தங்கச்சி நீயும் எனக்கு அதே மாதிரி தான் மா.. இப்படி மேடம்னு சொல்லி கூப்பிடுவது எல்லாம் நல்லாவா இருக்கு நல்ல அம்மானு தான் சொல்லுவேன்!!"



"சாரி மேடம் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க எங்க அக்கா உங்க மேல நிறைய பாசம் வச்சிருக்காங்க அவங்களுக்கு எப்பவுமே அவங்களுக்கு சொந்தமானது அவங்க கிட்ட மட்டுமே இருக்கணும்னு நினைப்பாங்க..எதுக்காக எங்க அக்காவுக்கு என்னை பிடிக்காமல் போச்சுன்னு எனக்கு சுத்தமா தெரியல மேடம் நான் இப்ப உங்கள அம்மானு கூப்பிட்டா கண்டிப்பா அக்காவுக்கு உங்க மேல கூட கோபம் வரும்.. என்னால எந்த இடத்துலயும் யாருக்கும் பிரச்சனையும் சண்டையும் வரக்கூடாது அடைக்கலம் இல்லாத எனக்கு நீங்க ஆதரவு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.."



"என்ன அருந்ததி நீ பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற!"



"இல்ல மேடம் உங்களுக்கு வேணும்னா இது சாதாரண உதவி மாதிரி தெரியலாம் ஆனா எனக்கு இது ஒரு புது வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கு.."என்ற அருந்ததி கண்களை மூடிக்கொள்ள, அவளை தொந்தரவு செய்யாமல் தனியாக விட்டு விட்டு சென்று விட்டார் உமா.



"பாட்டி இங்க பாருங்க நீங்களும் தாத்தாவும் எதிர்பார்த்தபடி எனக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கு.. நீங்களும் தாத்தாவும் ஆசைப்பட்டதை நான் நிறைவேற்றி வச்சிட்டேன்.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு பாட்டி.."என்று சந்தோசத்தில் திக்கு முக்காடியபடி சத்தம் போட்டுக் கொண்டு உள்ளே வந்த அருந்ததி அங்கு கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த தன் பாட்டியை கண்டதும் அவளுக்குள் இருந்த தாய்மை பெருக்கெடுத்தது.



பெண்மைக்குரிய தாய்மை இயல்புடன் தனக்கு மருத்துவத்துறையில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது எல்லாம் மறந்து போக, அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டவள் அவர் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.



கணவர் இறந்து போனதில் மிகவும் மனம் உடைந்து போயிருந்த கனகா சிறிது காலத்திற்கு முன்பு தான் ஓரளவு அதிலிருந்து தேறி வந்திருந்தார்.



அவருக்கு வயதாகி விட்டது என்பதை தெளிவாக எடுத்து காட்டும் அவரது தளர்ந்த உடலும் வெள்ளை வெள்ளையாக மண்டி போயிருந்த முடிகளும் சொன்னது அவருக்கு வயது மிகவும் அதிகமாகி விட்டது என்பதை.



"இனிமே நீங்க கவலைப்படாதீங்க பாட்டி உங்களை நான் சந்தோஷமா வச்சுக்க என்ன என்ன பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணுவேன்.. என்னோட உலகமே நீங்க மட்டும் தான் எனக்குன்னு இந்த உலகத்தில் இருக்கது நீங்க மட்டும் தான் எனக்கு நீங்க உங்களுக்கு நான் இவ்வளவு தான் நம்ம வாழ்க்கை.."என்றவள் குனிந்து அவர் நெற்றியில் முத்தமிட, அப்படியே அதிர்ந்து போனாள் பெண்ணவள்.



அவர் உடலில் அதிகமாக குளிர்ச்சி இருக்க மிகவும் பயந்து போனவள் "பாட்டி எந்திரிங்க தயவு செஞ்சு எந்திரிங்க பாட்டி.."என்று அவரை எழுப்ப முயற்சிக்க, தலையணையில் இருந்த அவர் தலை தன்னால் சாய்ந்து விழுந்தது.



அவரை அப்படிப்பட்ட நிலைமையில் கண்டதும் உயிரே போய்விட்டது அவளுக்கு!



"பா...ட்...டி"என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்வையாக திக்கித் திணறியபடி அவரை அழைத்துப் பார்த்தவள் கனத்து போயிருந்த தன் கைகளை தூக்கி அவர் மூக்குக்கு அருகே கை வைத்து பார்க்க சுவாசம் இல்லை. அவரது இதயமோ தன் துடிப்பை நிறுத்தி இருந்து வெகுநேரமாகியிருந்தது.



கதறிவிட்டாள் பெண்ணவள்!!


"ஐயோ பாட்டி எனக்குன்னு இந்த உலகத்திலிருந்தது நீங்க மட்டும் தானே! எப்படி என்னை தனியா விட்டு போக உங்களுக்கு மனசு வந்துச்சு.. தாத்தா நம்ம ரெண்டு பேரையும் விட்டுட்டு போனப்ப நீங்க இருக்கீங்கன்னு மனசைத் தேற்றி கிட்டு வாழ்ந்துகிட்டு இருந்தேன் இப்ப நீங்களும் என்னை விட்டு போயிட்டீங்களே.."என்று அழுக அவள் கண்ணீர் சத்தத்தை கேட்டு அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வர, அருந்ததியின் கண்ணீரே அவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்பதை உணர்த்திவிட்டது.
 
நிற்கிறது மாதிரி இங்கே இருக்க யாரும் இனி யாரையும் இழக்கக்கூடாது உங்களோட ஆசிர்வாதம் எப்பவும் போல் எனக்கு கொடுங்க..தாத்தா பாட்டி அப்பா அம்மா நீங்களும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க..'என்றபடி தன் ஆசைகள் அனைத்தையும் எதிர்பார்த்தபடி கல்லூரியில் கால் எடுத்து வைக்க,அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தது இரு ஜோடி கண்கள்.



"உன்னால தாண்டி என்னோட நட்பு இத்தனை வருஷம் என்னை விட்டு பிரிஞ்சு போயிடுச்சு.. அன்னைக்கு என் வாழ்க்கையில நீ வந்துட்டு போன ஒரு நிமிஷம் என் மொத்த வாழ்க்கையும் அப்படியே மாற்றி போட்டுவிட்டது.. நான் நெனச்சது மாதிரியே இந்த காலேஜுக்கு நீ வந்து சேர்ந்துட்ட இனி உன் வாழ்க்கையில் எப்படி நிம்மதி இருக்கிறது என்று நானும் பார்க்கிறேன்.."என்று வாய் விட்டு வன்மமாக உரைத்தது அந்த குரல்.
 
Status
Not open for further replies.
Top