வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"துரியோதனனின் அருந்ததி(தீ)!!"கதை திரி

Status
Not open for further replies.
அருந்ததி அந்த தெருவில் பல வருடங்களாக இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவருக்கும் பரிச்சயம்.



அவளை தனியாக விடாமல் அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவர்களால் முடிந்ததை செய்து கனகாவின் உடலை நல்லபடியாக அடக்கம் செய்து முடித்தார்கள்.



தன் சொந்த பாட்டியின் இறப்பிற்கு கூட பூஜா வரவில்லை.



விஷயம் கேள்விப்பட்டு உமா கண்ணீருடன் பூஜாவிடம் விஷயத்தை தெரிவிக்க, அவளோ சாதாரணமாக "எனக்கு இன்னைக்கு காலேஜ்ல முக்கியமான வொர்க் இருக்கு நான் போறேன்.."என்று சென்ற மகளை அதிர்ச்சியாக பார்த்தார்.



தான் தாய்மை ஊட்டி அன்போடு நல்லபடியாக வளர்த்த குழந்தை இன்று தன் சொந்த பாட்டி இறந்ததை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக கடந்து செல்வதை அதிர்ச்சியுடன் பார்த்தவர் அவளை கடிந்து கொள்ள முடியாமல் அவர் மட்டும் கனகாவின் இறப்பில் கலந்து கொண்டார்.



அருந்ததிக்கு ஆதரவாக அவரும் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து முடித்து விட்டார்.



அடுத்த மூன்று நாட்களும் உமா முடிந்தவரை அவளுடன் வந்து தங்கி விட்டு சென்றார்.



"இங்க பாரு அருந்ததி ஆனது ஆகிப்போச்சு பழசையே நினைச்சுகிட்டு இருந்தா எதுவும் ஆகப்போவதில்லை உன்னோட பாட்டி இப்ப தெய்வமா மாறிட்டாங்க.. எங்க இருந்தாலும் அவங்க உன்னை பார்த்துக்கொண்டு தான் இருப்பாங்க நீயும் என் கூட என் வீட்டுக்கு வந்துடு அருந்ததி.."



"வேண்டாம் மேடம் எனக்கு நீங்க நிறைய உதவி செஞ்சி இருக்கீங்க அதுக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..இந்த வீட்ல தான் நான் என் அப்பா அம்மா என் தாத்தா பாட்டி எல்லோரும் சந்தோஷமா இருந்தோம்.. இப்ப அவங்க யாரும் என் கூட இல்லாமல் போயிருந்தாலும் அவங்க கூட நான் சந்தோஷமா வாழ்ந்த நினைவு இந்த இடத்துல ஒவ்வொரு மூலை முடுக்கும் இருக்கு அந்த சந்தோஷத்தை விட்டுட்டு என்னால எங்கேயும் வர முடியாது.."என்றவள் இதழ்களில் அதை நினைத்து ஒரு சிறிய புன்னகையும் கண்களில் தாங்க முடியாத கண்ணீருமாக நின்று கொண்டிருந்த அருந்ததியை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை உமாவிற்கு.



எல்லாவற்றிற்கும் மேல் அவளும் தன் உயிர் தோழியின் இரண்டாவது மகள் தன் மகளின் சொந்த தங்கை அவளை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை.



உமா எவ்வளவு எடுத்து சொல்லியும் அருந்ததி வர முடியாது என்பதில் உறுதியாக இருந்து விட்டாள்.



இந்தக் காலத்தில் யாரும் இல்லாத வீட்டில் வயதுக்கு வந்த பெண்ணை தனியாக விட பயந்த உமா அடுத்து இதைப் பற்றி எடுத்து சொன்னது பூஜாவிடம் தான்.



"இங்க பாருங்க அம்மா அருந்ததி ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு அவளுக்கு எப்படி தன்னோட லைஃபை அடுத்து கண்டினியூ பண்ணனும்னு அவளுக்கே தெரியும்..நீங்க இந்த விஷயத்துல தேவையில்லாம தலையிடாதீங்க என்ன இதுல இன்டெர்ஃபி பண்ணாதீங்க.."என்று முடித்துக் கொள்ள, இதுவரை அவளை ஒரு கடும் சொல் சொல்லாத உமா அன்று நன்றாக திட்டி விட்டார்.



"இது என்ன பழக்கம் பூஜா உன்னை இப்படி தான் நான் வளர்த்தேனா? அன்னைக்கு உன்னோட சொந்த பாட்டி செத்துப் போனது கேட்டு கொஞ்சம் கூட கவலையே இல்லாம போயிட்ட!இன்னைக்கு உன் கூட பிறந்த தங்கச்சி யாருமே இல்லாம அனாதையா இருக்கும்போது அவளை ஆதரவளிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு தானே! இது ரொம்ப தப்பான பழக்கம் பூஜா நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கலை.."என்று கண்டிப்பாக சொல்ல, அவரை வெறித்துப் பார்த்தாள் பூஜா.



"இப்படி நீங்க மாறுவீங்கன்னு எதிர்பார்த்தேன் அந்த அருந்ததி கூட யார் போய் சேர்ந்தாலும் கடைசில இப்படித்தான் மாறி போயிடுறாங்க அதனாலதான் எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல..இங்க பாருங்க நீங்க என்னோட அம்மா உங்களை யாருக்கும் நான் விட்டு தர மாட்டேன் அவளுக்காக என்கிட்ட நீங்க இப்படி கோபமா பேசுறது இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும் மறுபடியும் இப்படி செஞ்சா அப்புறம் நான் உங்க பொண்ணா இருக்கறதைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கும்.."என்று சொல்லிவிட்டு சாதாரணமாக செல்ல, அவள் சொன்னதைக் கேட்டு விக்கித்து போய்விட்டார் உமா.



பூஜா அப்படி சொன்ன பிறகும் அருந்ததியையே அந்த வீட்டிற்கு கூட்டி வரும் தைரியம் அவருக்கு இல்லை.



அதே நேரம் அருந்ததியை அப்படியே தனியாக விடவும் மனம் வராமல், தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை அருந்ததிக்கு துணையாக அந்த வீட்டில் தங்க வைத்தார்.



முதலில் அருந்ததி வேண்டாம் என்று மறுத்து சொன்னாலும் உமா அவளை கெஞ்சி கொஞ்சி ஒத்துக்க வைத்தார்.



பூஜா வீட்டில் இல்லாத நேரம் அருந்ததியை அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வார்.


இப்படியே நாட்களும் கடந்து சென்றிருக்க, அருந்ததி கல்லூரிக்கு செல்லும் முதல் நாளும் வந்தது.



தன்னிடமிருந்து எளிமையான வெள்ளை நிற காட்டன் சுடிதார் அணிந்து கொண்டவள் முதல் நாள் கல்லூரிக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோஷத்தோடு புகைப்படமாக இருந்த தன் தாய் தந்தை தாத்தா பாட்டி அனைவரையும் கண்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்ப,"அருந்ததி இந்தாமா உனக்கு பிடிச்ச லெமன் சாதம் செஞ்சி இருக்கேன் சாப்பிட்டு அப்படியே காலேஜுக்கு எடுத்துட்டு போ.."என்றார் மரகதம்.



கணவனின் கொடுமையால் அவரை விட்டு பிரிந்து வந்தவர் கணவன் என்ன செய்தாலும் அவர் கூடவே சேர்ந்து வாழ வேண்டும் என்று சொன்ன பெற்றோரையும் முழுமையாக வெறுத்துவிட்டு வாழ்க்கையில் பற்று இல்லாமல் இருந்தவரிடம் உமா அருந்ததியை பற்றி சுருக்கமாக எடுத்துச் சொல்ல, இந்த பூமியில் தான் வாழ்வதற்கு இது ஒரு காரணமாக அமையட்டும் என்று மரகதம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.



யாரும் இல்லாத பெண் அவளுக்கு அவரே அனைத்தும்மாக மாறிப்போனார்.



"உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத கஷ்டம் மரகதம் அம்மா நான் ஏதாவது செஞ்சிருப்பென்ல"



"இதில் எனக்கு என்ன கஷ்டம் இருக்க போகுது அருந்ததி நீ சந்தோஷமா இருந்தா அது மட்டும் எனக்கு போதும்.. உனக்கு இப்படி என் கையால உனக்கு புடிச்ச சாப்பாடு எல்லாத்தையும் செஞ்சு தரணும்.. யாருமே இல்லாத உனக்கு நான் அம்மாவாகவும் யாருமே இல்லாத எனக்கு நீ மகளாகவும் இருக்கணும்னு ஆசைப்படுறேன் அது தப்புன்னா சாரி.."



"என்னம்மா இது ஒரு சாதாரண விஷயம் இதுக்கு போய் இவ்வளவு கோச்சிக்கிறீங்க! சரி விடுங்க நான் இனிமே எதுவும் பண்ணல உங்க விருப்பப்படி என்ன வேணாலும் எனக்கு செஞ்சு கொடுங்க.."என்று அவரை தோளோடு அணைத்துக் கொண்டு புன்னகைத்தாள் அருந்ததி.



அவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்த அருந்ததி தன் வீட்டு வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்த தமக்கையை கண்டதும் அவளுக்கு எரிச்சலாகி போனது.


தான் பிறந்தது முதல் தன்னோடு பகைமை பூண்டிருந்த தன் தமக்கையை முடிந்தவரை பேசி அவளிடம் அன்பாக இருந்த அருந்ததி தங்கள் பாட்டி இறந்ததுக்கு கூட அவள் வராமல் போனதும் அந்த நிமிடம் அவள் மீது அளவற்ற வெறுப்பு தோன்ற அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்.



பூஜாவை பார்த்தும் பார்க்காதது போல் அவளை கடந்து செல்ல, போனில் சிரித்து பேசிக் கொண்டிருந்த பூஜா தன் தங்கை தன்னை தாண்டி செல்வதை கண்டதும் அழைப்பை துண்டித்து விட்டு செல்லும் தங்கையை பார்த்தாள்.



வெள்ளை நிற உடையில் தேவதை போல் நடந்து சென்றவளை கண்டதும் அவளுக்குள் எப்போதும் போல் உள்ளுக்குள் இருந்த வெறுப்பு அவளை தூண்டி விட்டது.



'பணக்கார அப்பா அம்மாவுக்கு மகளா வாழ்கிற நான் கூட இவ்வளவு அழகா இல்லாம இருக்கும்போது இவள் மட்டும் எப்படி இந்த நிலைமையிலும் அழகா இருக்கா! ஓ மறந்து போச்சு இன்னைக்கு தானே இவளுக்கு முதல் நாள் காலேஜ் அதான் மேடம் ரொம்ப சந்தோசமா என்னை கூட கண்டுக்காம கிளம்பி போறாங்க போல இருக்கு.. உன்னோட சந்தோசம் நான் இருக்கிற வரை உன் கூட இருக்காது அருந்ததி..'என்று வன்மமாக மனதுக்குள் நினைத்துக் கொண்ட பூஜா மழை பெய்து தேங்கியிருந்த தண்ணீரில் தன் ஸ்கூட்டரை விட அவள் எதிர்பார்த்தது போலவே அருந்ததியின் வெள்ளை நிற உடை கரையாகி போயிருந்தது.



ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவள் தன் வண்டியை நிறுத்தி இவளை திரும்பிப் பார்த்து நக்கலாக புன்னகைத்தபடி "இப்பதான் நீ பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருக்க இப்படியே இன்னைக்கு முதல் நாள் காலேஜுக்கு போனா உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் ஆச்சரியப்பட்டு போவாங்க.."என்று கிண்டலடித்து விட்டு செல்ல தன் உடையை குனிந்து பார்த்த அருந்ததி அது முழுவதுமாக கரையாகி போயிருந்ததை கண்டு எதுவும் சொல்ல முடியாது மீண்டும் தன் வீட்டுக்கு சென்று உடைமாற்ற, மரகதம் அவள் உடையை கண்டதும் கேள்வி கேட்க அவரிடம் ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு கல்லூரிக்கு நேரமாகிவிட்டதை உணர்த்து வேகமாக கிளம்பி கல்லூரிக்கு சென்றாள்.



'துரியோதனன் மெடிக்கல் காலேஜ்'என்று தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த கல்லூரியின் வாயிலில் இறங்கி அந்த கல்லூரியை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.



'கடவுளே நான் எடுத்துருக்க இந்த மருத்துவத் துறையில் நான் நிறைய சாதிக்கணும் என்னால முடிஞ்ச வரை எல்லாரும் உயிரையும் காப்பாற்ற வேண்டும் இன்றைக்கு நான் எல்லாரையும் இழந்துட்டு நிற்கிறது மாதிரி இங்கே இருக்க யாரும் இனி யாரையும் இழக்கக்கூடாது உங்களோட ஆசிர்வாதம் எப்பவும் போல் எனக்கு கொடுங்க..தாத்தா பாட்டி அப்பா அம்மா நீங்களும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க..'என்றபடி தன் ஆசைகள் அனைத்தையும் எதிர்பார்த்தபடி கல்லூரியில் கால் எடுத்து வைக்க,அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தது இரு ஜோடி கண்கள்.



"உன்னால தாண்டி என்னோட நட்பு இத்தனை வருஷம் என்னை விட்டு பிரிஞ்சு போயிடுச்சு.. அன்னைக்கு என் வாழ்க்கையில நீ வந்துட்டு போன ஒரு நிமிஷம் என் மொத்த வாழ்க்கையும் அப்படியே மாற்றி போட்டுவிட்டது.. நான் நெனச்சது மாதிரியே இந்த காலேஜுக்கு நீ வந்து சேர்ந்துட்ட இனி உன் வாழ்க்கையில் எப்படி நிம்மதி இருக்கிறது என்று நானும் பார்க்கிறேன்.."என்று வாய் விட்டு வன்மமாக உரைத்தது அந்த குரல்.
 

தீ-8

அருந்ததி எதிர்பார்த்து போலவே முதல் நாள் கல்லூரி அவளுக்கு நல்லபடியாக நடந்து முடிந்தது.

முதன் முதலாக தன் கூட்டை விட்டு வெளியில் வந்தவள் இனி தன்னுடைய படிப்பு மட்டுமே தன் லட்சியம் என்று அதை மட்டுமே கணக்கில் கொண்டு தன் வாழ்க்கையில் முன்னேறி போவதற்கு ஆயத்தமானாள்.

கல்லூரி நல்லபடியாக முடிந்ததும் இதழ்களில் உறைந்த சிறு புன்னகையுடன் கல்லூரியை விட்டு வெளியில் வர,காரில் ஸ்டைலாக சாய்ந்து நின்ற துரியோதனன் அபிமன்யு வயிற்றில் குத்தியபடி விளையாட்டாக பேசி கொண்டிருக்க, அவர்களை ஒரு நொடி தன்னை மறந்து புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற, துரியோதனன் பார்வையை அப்படியே சுழட்ட, அவனுக்கு நேராக அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த அருந்ததி அவன் பார்வை வட்டத்தில் பட, அவன் சிரிப்பு நொடியில் மாயமாகி போய் இருந்தது.

"டேய் மச்சான் அந்த கர்ணன் நேத்து என்ன பண்ணான்னு தெரியுமா? அவங்க வீட்ல அவங்க அம்மா அப்பா கிட்ட எல்லாம் நம்ம கூட ஸ்டே பண்றேன்னு சொல்லிட்டு அந்த ஊர்மிளா கூட டேட்டிங் போய் இருக்கான்..அந்த விஷயம் அவங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சு போயி அவனை வச்சு செஞ்சுட்டாங்க.. ஒரு நாள் முழுக்க வீட்டு வேலை செய்ய வச்சு இனிமே இதே மாதிரி அடிக்கடி தப்பு பண்ணு அதே மாதிரி வீட்டு வேலையும் நிறைய கிடைக்கும் நீ எவ்வளவு வேணும்னாலும் பண்ணிக்கிட்டே இருக்கலாம்னு சொல்ல பையன் அரண்டு போயிட்டான்..இனிமே அந்த ஊர்மிளா இல்ல எந்த பொண்ணு இருக்க பக்கமும் கூட திரும்பி கூட பாக்க மாட்டான்.."என்று சொல்லிவிட்டு அபிமன்யு சத்தமாக சிரித்தவன், தான் சொன்னதற்கு எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த தன் நண்பனை புரியாமல் பார்த்தான்.

"டேய் உன் கிட்ட தானே பேசிக்கிட்டே இருக்கேன்?"உன் கிட்ட தாண்டா பேசிகிட்டு இருக்கேன் பதில் சொல்லு.."என்ற அபிமன்யு அப்போதும் தன் நண்பன் தன்னை பார்க்காமல் வேறு ஏதோ ஒரு திசையில் சிரிப்பை தொலைத்து விட்டு எதிரியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டு,தன் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு விட்டு துரியோதனன் பார்த்த திசையில் தன் பார்வையை பதித்தான்.

எதிரில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் தங்கள் இருவரையும் குழந்தையை பார்ப்பது போல் பரிவுடன் பார்த்துக் கொண்டிருக்க, அபிமன்யு புருவங்கள் இரண்டும் உயர்ந்தது.

"டேய் மச்சான் யார் இந்த பொண்ணு? உன்னையும் என்னையும் இப்படி குறுகுறுன்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கு.."என அபிமன்யு பார்வையை அருந்ததியிடம் வைத்து கேள்வியை துரியோதனனிடம் கேட்க, அவனோ கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் அருந்ததி ஒருத்தியைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை என்பது போல் அவளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அருந்ததி சிரித்து பேசிக் கொண்டிருந்த இருவரில் ஒருவன் தன்னை முறைத்துப் பார்ப்பதை கண்டு 'எதுக்காக என்னை இவங்க இப்படி முறைச்சு பார்க்கிறாங்க! சிரிச்சு பேசிகிட்டு இருக்காங்கன்னு சாதாரணமா தானே நான் பார்த்தேன் இதுக்கு ஏன் இவங்க முறைச்சு பார்க்கிறாங்க!!'என சிந்தித்துக் கொண்டிருந்தவள் துரியோதனன் பார்வை தன்னை எரிப்பது போல் பார்க்கவும், அந்தப் பார்வையில் ஒரு நிமிடம் பயந்துவிட்டாள்.

அடுத்த நொடி அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்ப்பதற்கு பயந்து கொண்டு கல்லூரியை விட்டு கடந்து செல்ல,அவள் தன் பார்வை வட்டத்திலிருந்து விலகும் வரை பார்வையை வேறு எந்த பக்கமும் திசை திருப்பாது அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் துரியோதனன்.

"துரியோதனா உனக்கு என்ன ஆச்சு? எதற்காக அந்த பொண்ண இப்படி பார்த்துகிட்டு இருக்க?உன்னை பார்த்ததும் அந்த பொண்ணு கூட இப்படி பயந்து ஓடுது உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதாவது பிரச்சனையா என்ன? நான் இதுவரைக்கும் அந்த பொண்ணை பார்த்ததே இல்லை உன்னை அந்த பொண்ணு ரொம்ப ரசித்து பார்க்கிறது மாதிரி இருக்கு நீ அந்த பொண்ண இப்படி எரிக்கிறது மாதிரி பார்க்கிற! என்னடா எனக்கு தெரியாம அந்த பொண்ண எதுவும்.."

"வாய மூடுடா பஃபல்லோ இந்த துரியோதனன் ஒரு பொண்ண பார்க்கறதுக்கு கூட அவளுக்கு ஒரு தகுதி இருக்கணும்.. அது எந்த தகுதியும் இல்லாத இவள நான் ஒரு மனுஷியா கூட மதிக்க மாட்டேன் நம்ம ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கும் போது நம்ம ரெண்டு பேரை மட்டும் தான் அவ குறுகுறுன்னு பார்த்துகிட்டு இருந்தா! என்னை பல பொண்ணுங்க இப்படி பார்க்கிறது வழக்கம்தான் இருந்தாலும் அந்த பொண்ணோட பார்வையில் ஏதோ ஒரு ஸ்பார்க் இருந்துச்சு என்னால அதை சட்டுனு மீற முடியல! எதுக்காக இப்படி நடக்குதுன்னு எனக்கு தெரியல ஆனா என்னால இதை கண்ட்ரோல் பண்ண முடியல.. சரிப்பா வா டைம் ஆயிடுச்சு கிளம்பலாம் பார்ட்டி இருக்கு.."என்ற துரியோதனன் கார் கதவை திறக்க, அதுவரை அவன் பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அபிமன்யு இப்போது அவன் எங்கு அழைக்கிறான் என்பதை தெரிந்து கொண்டு அவனோடு செல்ல விரும்பாது, அதேநேரம் அவனை தட்டி கழிக்கவும் மனம் வராமல் "மச்சி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறதடா இப்பதான் எனக்கு ஞாபகம் வருது நான் அப்புறமா வந்து உன் கூட ஜாயின் பண்ணிக்கிறேன் இப்ப நீ போ.."என அவன் வேண்டுமென்றே தன்னை தவிக்கிறான் என்பதை உணர்ந்து வைத்திருந்த துரியோதனன் கண்டும் காணாதது போல் அங்கேயே நிற்க, அபிமன்யு அவன் எதற்காக காரில் ஏறாமல் இருக்கிறான் என்பதை உணர்ந்தவனாக தன் பைக்கில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தவன் "சரிடா மச்சான் நான் கிளம்புறேன் முடிஞ்சா கர்ணனை கூட்டிக்கிட்டு வர்றேன்.."என்றவன் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு சென்று விட, துரியோதனன் இதழ்களில் ஒரு நக்கல் புன்னகை.

இதுபோல் எங்காவது அவன் பார்ட்டிக்குச் செல்ல வேண்டும் என்று நண்பர்கள் இருவரையும் அழைத்தால் போதும் அதுவரை அவனுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் இருவருக்கும் அவன் அழைத்ததும் மறந்த வேலை ஞாபகம் வந்துவிடும் அல்லது அவர்களாக ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொண்டு சென்று விடுவார்கள்.

எப்போதும் எதற்காகவும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத துரியோதனன் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே தன்னை தவிக்கிறார்கள் என்பதை உணர்ந்தவனாக இருந்தாலும் எப்போதும் போல் பார்ட்டிக்கு அழைத்துக் கொண்டுதான் இருப்பான்.

மீண்டும் காரில் ஏறுவதற்காக அவன் கார்க்கதவை திறக்க "மிஸ்டர் துரியோதனன் ஒரு நிமிஷம் நில்லுங்க.."என்று ஒரு பெண் குரல் அவனுக்கு பின்னால் கேட்க, திரும்பிப் பார்த்தவன் ஒரு பெண் தன்னை நோக்கி ஓடி வருவதை கண்டு எரிச்சலுடன் தலையை இரு பக்கமும் அசைத்தபடி காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அவனை இன்றாவது பார்த்து விட வேண்டும் என்று ஓடி வந்த பூஜா அவன் தன்னை கண்டு கொள்ளாமல் காரில் ஏறி செல்வதை கண்டு அப்படி ஒரு கோபம் வந்தது.

'இவ்வளவு நேரம் அந்த அருந்ததிய நின்னு ரசித்து பார்க்க மட்டும் உங்களால முடிஞ்சது மிஸ்டர் துரியோதனன் ஆனா நான் கூப்பிட்டா கண்டும் காணாம இப்படி போறீங்க!அந்த அருந்ததி உங்க வாழ்க்கையில எப்பவும் எதிரியா மட்டும் தான் இருக்கணும் அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.. உங்களுக்கு அவளைப் பற்றி மறந்து போயிருக்கும்னு ஞாபகப்படுத்துவதற்காக தான் நான் வந்தேன் ஆனா நீங்க இப்படி விட்டுட்டு போயிட்டீங்க இதுக்காக துவண்டு அப்படியே விட்டுற மாட்டேன் கண்டிப்பா உங்களை வந்து மீட் பண்ணி அவ யாருன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தியே தீருவேன்..' என்று தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டு சென்றாள்.

"இன்னைக்கு முதல் நாள் காலேஜ் உனக்கு எப்படி இருந்தது? அருந்ததி மா.."என்ற மரகதம் அவளுக்கு மிகவும் பிடித்த இஞ்சி டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, அதை இதழ்களில் ஒரு சின்ன புன்னகையுடன் வாங்கிக் கொண்ட அருந்ததி "ரொம்ப நன்றி மா நான் எதிர்பார்த்ததை விட காலேஜ் இன்னிக்கி ரொம்ப நல்லாவே போச்சு.. கண்டிப்பா இந்த அளவுக்கு காலேஜ் நல்லா போகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ரொம்ப சந்தோஷமா இருந்தேன்ம்மா.."

"இதே மாதிரி எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் உன்னோட சந்தோசத்துக்கு அந்த ஆண்டவன் எந்த குறையும் வைக்க கூடாதுன்னு அந்த கடவுளிடம் நான் மனசார வேண்டிக்கிறேன் அருந்ததி.."

"ரொம்ப சந்தோசம் மரகதம் அம்மா யாருமே இல்லாம இருந்த எனக்கு கடவுள் அனுப்பி வச்ச அம்மா நீங்க.."

"அப்படி எல்லாம் இல்ல டா நான் கூட அதை சொல்லலாம் எனக்குன்னு கூட இந்த உலகத்துல யாருமே இல்ல இப்ப எனக்குன்னு ஒரு பொண்ணு இருக்கிறான்னு நான் எல்லார்கிட்டயும் சொல்ல முடியும்.. ரொம்ப சந்தோஷமா இருக்குது அருந்ததி.."எனவும் அந்த தருணத்தை ரசித்தபடி அந்த டீயை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தாள் 18 வயது பாவையவள்.

 

அன்றோடு கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதங்கள் கடந்து சென்றிருக்க, அருந்ததிக்கு ஒரு நொடி போல் ஒரு மாதம் கடந்து சென்று இருந்தது.​

என்னதான் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து மருத்துவத் துறையில் மாணவர்கள் சேர்ந்து இருந்தாலும் அதிலும் ஒரு சிலருக்கு ஆரம்பம் சற்று கடினமாக தான் இருந்தது.​

எந்த ஒரு விஷயமும் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்.​

அதுபோலவே மற்ற மாணவர்களுக்கு ஆரம்பம் சற்று சிரமமாக இருந்தாலும் ஓரளவுக்கு தன்னை அந்த படிப்பில் பழகிக் கொண்டார்கள்.​

"அருந்ததி கிளாஸ்ல இருக்க ரொம்ப போர் அடிக்குது வா கேண்டீன் போய்ட்டு வரலாமா?"என்று அருந்ததியின் நெருங்கிய தோழி சங்கீதா கேட்க, அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தாள்.​

அருந்ததி தாத்தா பாட்டி இருவரும் இறந்ததும் அவளுக்கு பண உதவியை செய்வதற்காக உமா முன்வர அதை வேண்டாம் என்று முதலில் மறுத்து விட்டாள்.​

உமா எவ்வளவோ அவளிடம் எடுத்து சொல்லியும் வேண்டாம் என்ற ஒற்ற வார்த்தையில் மறுத்து விட்டவள் பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது மரகதம் சேர்த்து வைத்திருந்த பணத்தை அருந்ததியிடம் கொடுக்க அதையும் அவள் மறுத்து விட்டாள்.​

"ஏம்மா இதுவே உங்க அம்மா இப்படி கொடுத்திருந்தா வேண்டாம் என்று சொல்லுவியா? அப்ப வாய் வார்த்தைக்கு தான் என்னை அம்மான்னு நீ கூப்பிடுறியா மனசார கூப்பிடவில்லையா?"என்று முகம் வாடி கேட்க, யாரையும் கஷ்டப்படுத்தி பார்த்திடாத அருந்ததியின் மனம் மரகதத்தின் முகம் வாடி விட, அப்போதைக்கு அதை கடனாக வாங்கிக்கொண்டு தனக்கு வேலை கிடைத்ததும் அவரிடம் அதை திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக நன்றாக அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாங்கிக் கொண்டாள்.​

"சரி வா கீதா போகலாம் கிளாஸ்க்குள்ளே இருக்கிறதுக்கு பதிலா கொஞ்சம் வெளியில போயிட்டு வந்தா பிரெஷா இருக்கும்.."என்றபடி இருவரும் கேண்டின்க்கு செல்ல, அங்கு துரியோதனன் ஒரு மாணவனை முகத்தில் ரத்தம் வர அடித்துக் கொண்டிருக்க, அதை பார்த்ததும் அருந்ததி அதிர்ந்து விட்டாள்.​

"சார் தெரியாம பண்ணிட்டேன் இந்த ஒரே ஒரு தடவை விட்டுடுங்க இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன் தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க எங்க வீட்டுக்கு நான் ஒரே பையன் எங்க அப்பா அம்மா என்னை நம்பி தான் இருக்காங்க இனிமே நான் இந்த பக்கம் கூட வர மாட்டேன் விட்டுடுங்க ப்ளீஸ் உங்க கால்ல வேணாலும் விழுந்து கும்பிடுறேன்.."என துரியோதனன் இரக்கம் கொள்ளாமல் தன்னால் முடிந்தவரை கைகளில் அழுத்தம் கூட்டி அவன் கன்னத்தில் ஒரு அரை விட, அவன் விட்ட அறையில் அடி வாங்கிக் கொண்டிருந்தவனுக்கு மயக்கமே வந்து விட்டது.​

சுற்றிலும் கல்லூரி மாணவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கல்லூரி பேராசிரியர்கள் கூட அவனை தடுத்து நிறுத்தாமல் ஒரு மாணவனை அடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கோபம் வந்தது அருந்ததிக்கு.​

இன்னும் ஒரு அடி அவன் மீது விழுந்தால் கூட அதே இடத்தில் அவன் செத்து விடும் வாய்ப்பு அதிகமாக இருந்ததால் அதற்கு மேலும் வேடிக்கை பார்க்க அருந்ததிக்கு மனம் வராது நேரடியாக களத்தில் இறங்கினாள்.​

"நிப்பாட்டுங்க சார் நீங்க என்ன மனுஷனா இல்ல மிருகமா?அவர்தான் உங்ககிட்ட எத்தனை தடவை கெஞ்சி கேட்டுக்கிட்டு இருக்காரு கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாம எப்படி ரத்தம் வர அளவுக்கு போட்டு அடிக்கிறீங்க?"என்று துரியோதனன் கைகளை பிடித்தபடி கோபமாக கேட்க,துரியோதனன் அந்த மாணவனை போட்டு அடித்துக் கொண்டிருக்கும் பொழுது சாதாரணமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அருந்ததி அவன் கையைப் பிடித்ததும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.​

தன் கைகளைப் பிடித்துக் கொண்டு தன் கண்களை நேருக்கு நேராக பார்த்து கேள்வி கேட்ட பெண்ணை தீயாக உறுத்து விழித்தான் துரியோதனன்.​

"நானும் அப்பயிலிருந்து பாத்துகிட்டு இருக்கேன் இந்த அடி அடிக்கிறீங்க நீங்க என்ன மனுசனா இல்ல மிருகமா? இப்படி யாரை வேணும்னாலும் நீங்க உங்க இஷ்டத்துக்கு கைநீட்டி அடிப்பீங்களா?"என்று அவனிடம் கோபமாக கேட்டவள் பிடித்த கைகளை கீழே விடாது சுற்றி நின்று கொண்டிருந்த பேராசிரியர்களை கண்டு "ஏன் சார் உங்களை நம்பி தானே நாங்க இந்த காலேஜுக்கு படிக்க வருகிறோம்? இந்த மாதிரி ஒரு ரவுடி பையன் இந்த காலேஜ் ஸ்டூடெண்டை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கும்போது நீங்க யாரோ ஒருத்தர் மாதிரி வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தா அதுக்கு என்ன அர்த்தம்?அப்ப இங்க படிக்கிற எங்களுக்கு எல்லாம் என்ன பாதுகாப்பு இந்த மாதிரி ரவுடி பையன் இருக்கிற காலேஜ்ல எங்களுக்கு என்ன பாதுகாப்பு ஒரு பையனை இந்த அடி அடிக்கிறவன் எப்படி பெண்களை எல்லாம் விட்டு வைப்பான்!"என்று பேராசிரியர்களிடம் கேட்க, சூழ்நிலை இன்னது என அறியாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் அருந்ததியை அங்கிருந்த பேராசிரியர்கள் ஒரு சிலர் பரிதாபத்துடனும் ஒரு சிலர் தங்களையே கேள்வி கேட்கிறாள்? என்ற கோபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.​

அனைவரிடமும் கேள்வி கேட்டு முடித்த அருந்ததி பார்வை மீண்டும் துரியோதனிடம் வலம் வர, அப்போதுதான் அவன் கைகளை பிடித்து இருப்பதே அவளுக்கு உரைத்தது.​

அவன் கைகளை விட்டவள் "கொஞ்சமாச்சும் மனுஷன் போல நடந்துக்கோங்க இப்படி உங்க இஷ்டத்துக்கு நடக்க இது ஒன்னும் உங்க காலேஜ் கிடையாது.."என்று கோபமாக சொன்னவள் கீழே அடிபட்டு கிடந்தவனை கை தாங்கலாக தூக்கி அருகில் இருந்த கட்டையில் அமர வைக்க,"ஏம்மா நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க உனக்கு தெரியுமா?"என்று அங்கிருந்த பேராசிரியர்களில் ஒருவர் கோபமாக கேட்க, துரியோதனன் கண்களாலேயே வேண்டாம் என்று செய்கை செய்தான்.​

அவன் அப்படி சொன்னதும் அதையும் மீறி பேசும் தைரியம் இல்லாத அந்த பேராசிரியர் வாய் தன்னால் மூடிக்கொண்டது.​

"நீங்க கவலைப்படாதீங்க அண்ணா இருங்க நான் இப்பவே போய் உங்களுக்கு குடிக்க தண்ணி கொண்டு வரேன்.."என்றபடி சென்று தண்ணீர் வாங்கிக் கொண்டு வர, அவளை அழுத்தமாக பார்த்தபடி துரியோதனன் அங்கிருந்து நகர அவனையே பார்த்தபடி நடந்து வந்த அருந்ததி தன் தீ விழியால் அவனை சுட்டுப் பொசுக்கவும்​

தவறவில்லை.​

"இப்ப எப்படி இருக்குது அண்ணா உங்களுக்கு?"என்றபடி அருந்ததி அவனைப் பார்த்து பரிதாபமாக கேட்க, அத்தனை பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் பொழுது தன் மேல் கழிவிரக்கம் கொண்டு காப்பாற்றிய அந்த பெண்ணுக்கு இரு கைகளையும் கூப்பி நன்றி தெரிவித்தவன் நடக்க முடியாது சிரமப்பட்டவன் எப்படியோ அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று அடி மீது அடி எடுத்து வைத்து சென்று விட்டான்.​

அதன் பிறகு கேண்டின் போக மனம் வராத அருந்ததி மீண்டும் தன் வகுப்பறைக்கு வர, அவளையே அதிர்ச்சியுடன் பார்த்தபடி அவள் பக்கத்தில் வந்து அமர்ந்த சங்கீதா "ஏன் இப்படி பண்ண நீ யார் கூட மோதி இருக்க தெரியுமா?"என்று கவலையாக கேட்க, அவளை கோபமாக பார்த்த அருந்ததி "அவன் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும் அதுக்காக இப்படியா ஒருத்தனை போட்டு அடிக்கிறது? நான் இந்த விஷயத்தை இத்தோட விடுறதா இல்லை இந்த காலேஜ் ஓனர் கிட்ட இதைப்பற்றி கம்ப்ளைன்ட் பண்ண போறேன்.."என்று ஆவேசமாக சொல்ல,"நீ சண்டை போட்டு வந்திருக்கவர்தான் இந்த கல்லூரி ஓனர்.."என்ற சங்கீதாவின் பதிலில் அவள் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விழுந்து விடும் அளவிற்கு விரிந்தது.​

 
தீ_9



"அவர் இந்த காலேஜ் ஓனரா இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ணலாமா? இப்படியெல்லாம் நடந்துக்கொள்கிற அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?"



"உனக்கு இது தேவையே இல்லாத விஷயம் அதான் அவரை அங்கேயே கோபமா திட்டிட்டு வந்துட்டியே அப்புறம் எதுக்காக மறுபடியும் அதையே பேசி பிரச்சனையை இன்னும் அதிகமாகிக் கிட்டு இருக்க செவனேன்னு உட்காரு.."என்று அவள் கைகளை இழுத்து பிடித்து சங்கீதா தன் பக்கத்தில் அமர வைக்க, அருந்ததிக்கும் அதுவே சரியாக பட அமைதியாகிவிட்டாள்.



அதன் பிறகு வகுப்புகள் தொடங்க ஆசிரியர்கள் அவரவர் பாடத்தை எடுத்து விட்டுச் செல்ல, அனைவரும் துரியோதனன் சொன்னது போலவே அருந்ததியிடம் வாயை திறக்கவில்லை.



அவனே அவளுக்கு பேராசிரியர்கள் யாரின் மூலமாகவும் தொந்தரவு வரக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டதால் அனைவரும் தங்கள் கடமையை செய்து விட்டு அதே நேரம் அவளை சற்று முறைத்து பார்த்து விட்டு செல்லவும் தயங்கவில்லை.



பேராசிரியர்கள் தன்னை முறைத்துப் பார்ப்பதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அருந்ததி.



"அருந்ததி நீ தான் எனக்கு எப்படியாவது உதவி செய்யணும் தயவு செஞ்சு என்னை காப்பாத்து.."என்று அவள் காலில் விழுகாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவள் தமக்கை பூஜா.



அவள் எதற்காக இப்படி தன்னிடம் கெஞ்சி கொண்டிருக்கிறாள் என்பது புரியாத அருந்ததி அவளை குழப்பமாக பார்த்தாள்.



தங்கையின் பார்வையில் அவள் என்ன யோசித்து கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட பூஜா மனதுக்குள் சிரித்தபடி வெளியில் முகத்தை பயமாக வைத்துக் கொண்டாள்.


"உன்கிட்ட தானே கேட்டுகிட்டு இருக்கேன் எந்த பதிலும் சொல்லாம இப்படி அமைதியா இருக்க?"



"இல்லக்கா நீங்க என்ன சொல்றீங்க! எனக்கு ஒன்னும் புரியல உங்களுக்கு என்ன பிரச்சனை?அதுவும் நீங்க ரொம்ப பெரிய பணக்காரங்க என்கிட்ட வந்து உதவி கேட்கிற அளவுக்கு உங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை வந்திருக்கும்.."



"தயவு செஞ்சு நான் கெஞ்சி கேக்குறேன் அருந்ததி இதற்கு முன்னாடி உன்கிட்ட நடந்துக்கிட்டதை எல்லாம் மனசுல வச்சிக்கிட்டு எனக்கு உதவி செய்ய முடியாதுன்னு சொல்லாத.."



"இல்ல நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் என்கிட்ட உதவி கேட்டு வர எல்லாருக்கும் என்னால் முடிந்தால் கண்டிப்பா செய்வேன் நீங்களும் என்கிட்ட உதவி கேட்கிறீங்க நீங்க வேணா என்னை உங்க தங்கச்சியா நினைகிறத கவுரவ குறைச்சலா நினைக்கலாம் நான் அப்படி நினைக்கலை நீங்க எப்பவுமே என்னோட அக்கா மட்டும்தான்.."



"என்ன மன்னிச்சுடு அருந்ததி உன்னுடைய இந்த நல்ல மனசு புரியாமல் உன்னை எத்தனையோ தடவை காயப்படுத்தி இருக்கேன் அதை எல்லாம் நினைச்சு பார்த்தா எனக்கு இப்ப ரொம்ப அசிங்கமா இருக்கு.."



"சரிக்கா விஷயம் என்னன்னு சொல்லுங்க?"


"சொல்ல மறந்துட்டேன் பாரு இந்த காலேஜ் ஓனர் துரியோதனன் இருக்காருல்ல.."என்று இழுக்க துரியோதனன் என்ற பெயரை கேட்டதுமே தன் தமக்கையை சந்தேகமாக பார்த்தாள் அருந்ததி.



அவளது சந்தேகமான பார்வையில் சொல்ல வந்ததை சொல்லாமல் பாதியிலேயே நிறுத்திய பூஜா மனதுக்குள் தங்கையை கோபமாக முறைத்து பார்த்தாலும் தனது காரியமாக வேண்டும் அதனால் வெளியில் கோபப்பட முடியாமல் தங்கையை பாவமாக பார்த்து வைத்தாள்.



"அதான் ஆரம்பிச்சிட்டீங்களே அப்புறம் எதுக்கு முடிக்காம அப்படியே இருக்கீங்க மனசுல இருக்கறதை கொட்டிடுங்க.."



"நீ இவ்வளவு தூரம் கேட்கிறதால உன்கிட்ட சொல்றேன் அருந்ததி.. அந்த துரியோதனன் சார் என்னை தப்பான ரிலேஷன்ஷிப்புக்கு கூப்பிடுறார்..நான் அவர்கிட்ட எத்தனையோ தடவை என்னால முடியாதுன்னு மறுத்து சொல்லிட்டேன் ஆனா அவர் அதை எல்லாம் கொஞ்சம் கூட காதுல வாங்காம அவர் சொன்னது போல நான் வரலைன்னா இந்த காலேஜ்ல இதுக்கு மேல படிக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.."



"நீங்க என்ன சொல்றீங்க நீங்களும் இந்த காலேஜ்லயா படிக்கிறீங்க?"



"ஆமா அருந்ததி நான் உன்கிட்ட சொல்லவே இல்லை நான் லாஸ்ட் இயர் உன்கிட்ட பேச நேரம் கிடைக்கலை அதனால் இதைப் பற்றி நான் உன்கிட்ட சொல்லல நானும் டாக்டருக்கு தான் படிக்கிறேன்.."



"ஆனா உமா அம்மா வேற என்னமோ சொன்னார்கள்.."



"என்னது உமா அம்மாவா?"என்று கோபமாக கேட்டாள் பூஜா.



அவள் கேட்ட பிறகு தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்து தன் நாக்கை கடித்துக் கொண்டாள் அருந்ததி.


உள்ளுக்குள் அவள் தன் அம்மாவை அவள் அம்மா என்று சொன்னதும் இன்னும் கோபம் வந்தது பூஜாவுக்கு.



'காரியமாக வேண்டுமானால் காலையும் பிடிக்கலாம்'என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, வெளியில் அவளிடம் சாதாரணமாக பேசினாள்.



"உனக்கு தான் தெரியுமே? நான் இந்த பார்ட்டி எல்லாம் போவேன்னு அப்படி ஒரு நாள் போகும்போது இவரும் அந்த பார்ட்டிக்கு வந்திருந்தார் இவர் போகாத பார்ட்டி எதுவும் இருக்காதாம்.. எந்த இடத்தில வேணும்னாலும் இவரை தாராளமா பார்க்கலாமாம்..அப்படி ஒரு நாள் நான் பார்ட்டிக்கு போயிருக்கும் போது தான் இவர் என்னை பார்த்தார் சரி நம்ம காலேஜ் ஓனர் முகத்தை திருப்பி கிட்டுப் போனா நல்லா இருக்காதுன்னு நானும் அவரை பார்த்து சிரிச்சேன்..அதுதான் இப்ப பிரச்சனையா மாறிடுச்சு அருந்ததி அவர் என்னை அவர் கூட தப்பான உறவுக்கு அழைக்கிறார் முடியாதுன்னு சொன்னா என்ன இந்த காலேஜ்ல படிக்க முடியாது துரத்தி விட்டுவிடுவேன்னு பயமுறுத்துறார்..இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு படிச்சு கடைசி நேரத்துல எப்படி என்னால இதையெல்லாம் விட்டுட்டு போக முடியும் அருந்ததி? உமா அம்மா கிட்ட இந்த விஷயத்தை சொன்னா அவங்க கண்டிப்பா சும்மா விட மாட்டாங்க என்னதான் நாங்க பணக்காரங்களா இருந்தாலும் துரியோதனன் சார் அளவுக்கு வர முடியாது.. அவர்கிட்ட இருக்க பணத்தோட அளவு அவருக்கே தெரியாதாம்.. உமா அம்மா ஈஸ்வர் அப்பா எனக்கு மட்டும் இந்த மாதிரி ஒரு பிரச்சனை வந்திருக்கிறது தெரிஞ்சா கண்டிப்பா நொறுங்கி போய்டுவாங்க.. உன்னை கெஞ்சி கேட்கிறேன் அருந்ததி நீதான் என்னை காப்பாற்ற வேண்டும் யார் யாருக்கோ உதவி செய்ற நீ உன் கூட பிறந்த அக்கா எனக்கு உதவி செய்தால் கோடி புண்ணியமாக போகும்.. இதுவரைக்கும் உனக்கு நான் செஞ்ச கெடுதல் எதையும் மனசுல வச்சிக்கிட்டு முடியாதுன்னு மறுத்திடாதே.."என்று நீலி கண்ணீர் வடிக்க அதை உண்மை என்று நம்பிவிட்டாள் அருந்ததி.



"கவலைப்படாதீங்க அக்கா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா நடக்காது.."



"இல்ல அருந்ததி எனக்கு ரொம்ப பயமா இருக்கு அன்னைக்கு நாம எல்லாரும் பாத்துகிட்டு இருக்கும்போதே ஒரு பையனை போட்டு எவ்வளவு அடி அடிச்சுகிட்டு இருந்தாரு அவர எதிர்த்து கேள்வி கேட்க யாராவது ஒருத்தராவது முன்னாடி வந்தாங்களா?"



"எனக்கும் அந்த விஷயம் ஞாபகம் இருக்குது அக்கா நீங்க கவலைப்படாதீங்க.."என்று அருந்ததி பூஜாவை அணைத்துக் கொள்ள, நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த பூஜா முகத்தில் வெற்றிக்கான புன்னகை மின்னியது.



"இங்க பாரு துரியோதனா இது எல்லாம் எக்ஸ்பிரியான மாத்திரை இதோட விலை எல்லாம் ரொம்பவே சீப் இதை நம்ம எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் விக்கலாம் யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் வராது நீ என்ன சொல்ற? நீ மட்டும் ஒத்துக்கிட்டா நம்ம பல கோடி இதுல லாபம் பார்க்கலாம்.."என்றார் அவன் தாத்தா மூர்த்தி.



தன் கண் முன்னே இருந்த மாத்திரைகள் அனைத்தையும் கோபத்துடன் பார்த்த துரியோதனன் "இத மட்டும் நீங்க அழிக்காமல் விட்டால் உங்களை அழிக்க வேண்டி இருக்கும்.. எனக்கு இப்படி தப்பான வழியில் வர்ற பணம் எதுவும் தேவையில்லை எனக்கு தேவையான பணம் என்னால சம்பாதிக்க முடியும் இந்த மாதிரி கெட்ட வழியில் சம்பாதிக்கிற புத்தி என்கிட்ட இல்ல கிராண்ட் பா.. பிகாஸ் ஐ யம் ஜனார்த்தன் தேவி சன்.. அவங்களோட ரத்தம் தான் எனக்குள்ளே ஓடிக்கிட்டு இருக்கு.."என்றவன் தன் சன் கிளாஸை அணிந்து கொண்டு விறு விறு வெளியில் நடந்து செல்ல,மூர்த்தி கண்ணம்மா இருவரும் ஒருவரை ஒருவர் வெறித்து பார்த்துக் கொண்டார்கள்.



வெளியில் வந்த துரியோதனன் கண்களில் முதலில் பட்டது என்னவோ அந்த இடத்தை கூட்ட முடியாமல் கூட்டி பெருக்கிக் கொண்டிருந்த காயத்ரியை தான்.



இந்த வயதிலும் உழைத்து உண்ண நினைக்கும் இவரும் உள்ளே உழைக்காமல் குறுக்கும் வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் தன் தந்தையின் தாய் தந்தையையும் ஒரே தட்டில் இணைத்துப் பார்த்தவன் காயத்ரி இருந்த பக்கமே தராசு இறங்க,இதுவரை அவரிடம் ஒரு வார்த்தை கூட பாசமாக பேசி பழக்கம் இல்லாதவனுக்கு இப்போதும் அவரிடம் பேச தோன்றவில்லை.



நல்ல உள்ளம் கொண்ட காயத்ரிக்கு அவன் தன்னிடம் பேசாமல் இருந்தாலும் தன் கண்முன்னே நல்லபடியாக இருப்பது ஒன்று மட்டுமே போதுமானதாக இருந்தது.



அவரை நின்று ஒரு நொடி பார்த்தவன் அதன் பிறகு தன் காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட, தன் பேரனை பார்த்த சந்தோஷத்தில் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார் காயத்ரி.



"என்ன கமா இது? இவன் இப்படி சொல்லிட்டு போறான் இவனை நம்பி நான் இதுல நிறைய பணம் போட்டேன் அது இல்லாம என் பிரண்ட்ஸ் வேற நிறைய பேரு என்னை நம்பி பார்ட்னர்ஷிப் போட்டு இருக்காங்க.. இப்ப அவங்களுக்கு எல்லாம் நா என்ன பதில் சொல்றது?"என்று தலையை பிடித்துக் கொண்டார் மூர்த்தி.



கணவனின் கவலையெல்லாம் பெரிதாக பாதிக்கவில்லை கண்ணம்மாவை.



அவர் கணவர் மட்டும் அவர் நினைத்தது போலவே இந்த மாத்திரைகள் அனைத்தையும் விற்பனை செய்தால் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் அவருக்கு என்று அக்ரீமெண்ட் போட்டு வைத்திருந்தார்.



அதில் வரும் பணத்தை வைத்து எப்படி எல்லாம் தன் வாழ்க்கையை உல்லாசமாக வாழலாம் என்று கற்பனை கோட்டை கட்டி வைத்திருந்த கண்ணம்மாவுக்கு அது அத்தனையும் கண்முன்னே நொடியில் தூள் தூளாக உடையும் உணர்வு.



"நீங்க கவலைப் படாதீங்க கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் எதிர்பார்த்தது நடக்கும் இந்த விஷயம் துரியோதனனுக்கு தெரியக்கூடாது.."



"அவனுக்கு தெரியாம எப்படி நம்ம செய்ய முடியும்? இதுக்கு அவனோட சிக்னேச்சர் கண்டிப்பா நமக்கு வேணும்.."



"அவன் உயிரோட இருந்தா தானே அவனோட அனுமதி கையெழுத்து எல்லாமே நமக்கு தேவைப்படும் அவன் இல்லாமல் போய்ட்டா!"என்று வன்மமாக சொன்ன கண்ணமாவை அதிர்ச்சியாக பார்த்தார் மூர்த்தி.



"நீயா இப்படி பேசுற கண்ணம்மா? அவன உனக்கு ரொம்ப பிடிக்குமே இப்படி நீயா அவனை கொல்ல சொல்லி சொல்ற என்னால நம்பவே முடியல!"



"பாசமா அது எல்லாம் வேசம்!அவன் பேர்ல இருக்க கோடிக்கணக்கான சொத்து எல்லாமே நம்ம பேர்ல வர்றதுக்கான என்னோட நடிப்பு தான் அது.. நீங்க என்ன நினைச்சீங்க நம்ம பெத்த மகன் ஜனார்த்தன் செத்தது இயற்கையான சாவுனு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? கிடையவே கிடையாது அவனை நான் தான் போட்டு தள்ளினேன்.."என்றவரை கண்டு அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார் மூர்த்தி.



"என்ன அப்படி அதிர்ச்சியா பாக்கறீங்க மூர்த்தி! அவன்கிட்ட அடிக்கடி நானும் எத்தனையோ தடவை சொல்லி பாத்துட்டேன் அந்த தேவியை விரட்டி விடு இதைவிட நல்ல பணக்கார பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி நம்ம சொத்தை இன்னும் அதிகமாக்கலாம்னு.. முடியாதுன்னு சொல்லி மறுத்திட்டான் சரின்னு நானும் போனா போதேன்னு விட்டா என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியுமா!மொத்த பணத்தையும் அவனோட அனுமதி இல்லாம நாம எடுத்து செலவு பண்ண முடியாதபடி அத்தனையும் மாற்றி வைத்திருந்தான்.. எனக்கு பணமா இல்லை பெத்த மகனா அப்படின்னு வரும்போது பணம்தான் உயர்வாக தெரிஞ்சது அதான் கொஞ்சம் கூட யோசிச்சு பாக்காம அவன் ஆசைப்பட்ட அவன் பொண்டாட்டி கூட அவனை பரலோகம் அனுப்பி வெச்சேன்.. துரியோதனன் நம்ம சொல்றதை கேட்டு நடந்தா தான் அவன் பேர்ல இருக்க சொத்து எதையும் பிரச்சனை இல்லாமல் நம்ம பேருக்கு மாத்திக்க முடியும்னு அவனையும் நம்ம கைக்குள்ள போட்டுக்கிட்டேன்..இனிமே நடக்குற எல்லாத்தையும் பொறுத்திருந்து வேடிக்கை மட்டும் பாருங்க மூர்த்தி.."என்ற கண்ணம்மா இதழ்களில் வஞ்சப்புன்னகை மின்ன அதை பயத்துடன் பார்த்தார் மூர்த்தி.



தன் மனைவியின் இந்த புதிய முகம் அவருக்குமே புதிது!!



பெத்த பிள்ளை உயிரையே வைத்திருந்த பேரனுக்கும் இந்த நிலைமை என்றால் தன் நிலைமை எல்லாம் சொல்லவே தேவையில்லை.



கண்ணம்மாவிடம் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார் மூர்த்தி.



இவர்கள் இருவரும் பேசுவதை வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி எதர்ச்சியாக உள்ளே வர,அவர் காதுகளில் கண்ணம்மா பேசிய அனைத்தும் ஒன்று தவறாமல் விழுந்து விட அதிர்ச்சியில் சத்தம் செய்யாமல் பின்னால் இருந்த தன் குடிசை வீட்டுக்குச் சென்றவர் தன் சம்மந்தியின் புதிய முகத்தை நினைத்து அதிர்ச்சியில் அப்படியே இருந்தவர் பின் வேண்டுமென்றே தன் மகளையும் மருமகனையும் இந்த உலகத்தை விட்டு அனுப்பியதை நினைத்து துடிதுடித்து அழுது கொண்டிருந்தார்.



தன் பேரனிடம் இவர்கள் இருவரும் பேசிய விஷயத்தை சொல்ல வேண்டும் என்று அவர் மனம் உந்தினாலும் நிச்சயம் தான் சொல்வதை தன் பேரன் நம்ப மாட்டான் என்று தெரிந்து வைத்தவருக்கு தெரிந்தே தன் மகளையும் மருமகனையும் கொலை செய்த கொலைகாரர்கள் இருவரையும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.



அவர்களிடம் இருக்கும் பண வசதிக்கு அவரால் என்ன செய்ய முடியும்?



தன் மகனையும் மருமகளையும் கொலை செய்ய துணிந்தவருக்கு தன்னை கொலை செய்வது ஒரு பொருட்டே அல்ல!!




இந்த இடத்தில் காயத்ரி பயந்தது தன் உயிருக்காக அல்ல..



எங்கே இந்த பணத்தை பிடித்த மிருகங்கள் இருவராலும் தன் பேரனுக்கும் ஆபத்து வந்துவிடுமோ! என்று மனதுக்குள் மிகவும் பயந்து போனவர் கடவுளை துணைக்கழைக்க, அந்தக் கடவுள் அவர் துணைக்கு அருந்ததியை அனுப்பி வைத்தார்.


இரவு முழுவதும் தனது அறையில் உறங்காமல் கண்களை கொட்ட கொட்ட விழித்திருந்தாள் அருந்ததி.



மனம் முழுவதும் அவள் அக்காவுடன் பேசிய பேச்சுக்கள் மட்டுமே நிறைந்திருந்தது.



'எனக்கு இந்த உலகத்துல இருக்குறது நீ மட்டும் தான் உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..நம்ம அப்பா அம்மா இருந்திருந்தால் கண்டிப்பா உன்ன இந்த நிலைமையில் தள்ளிவிட்டு இருக்க மாட்டாங்க அவங்க இடத்துல இருந்து கண்டிப்பா உன்னை காப்பாற்ற வேண்டியது என்னோட பொறுப்பு தான் நீ எதுக்கும் கவலைப்படாதே..'என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் துரியோதனன் பக்கமும் நியாயம் ஒன்று இருப்பதை மறந்து போனாள்.



அவனை அவள் கடைசியாக பார்த்தது என்னவோ அந்த சண்டையில் தான்.



அதன் பிறகு அவளுக்கு படிப்பு வீட்டு வேலைகள் என்று நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க, துரியோதனன் எதற்காக அவனை அடித்தான் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே விட்டுவிட்டாள்.



"ஹலோ துரியோதனன் சார் உங்களை பார்க்க தான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.."என்று உருகியபடி பூஜா பேச, அவளை முறைத்து பார்த்தான் துரியோதனன்.



"சாரி சார் தேவையில்லாமல் உங்கள் டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் சார்.."



"எனக்கு என்ன வேலை இல்லன்னு நினைச்சுகிட்டு இருக்கியா எனக்கு நிறைய வேலை இருக்கு சொல்ல வந்தத சொல்லிட்டு உன் கிளாசுக்கு போ.."



"சாரி சார் அன்னைக்கு நீங்க ஒரு பையனை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கும்போது உங்களை எதிர்த்து பேசினா அந்த பொண்ணு என் பக்கத்து வீட்டு பொண்ணு தான்.. உங்களுக்கு மறந்து இருக்கும்னு நினைக்கிறேன் சின்ன வயசுல நீங்க ஒரு குட்டிசாத்தானை பிடித்து குளத்துல தள்ளி விட்டீங்களே அவ தான் அந்த பொண்ணு.. அவளுக்கு உங்களை நல்ல ஞாபகம் இருக்கு உங்களை பழி வாங்கணும்னு தான் அன்னைக்கு அப்படி நடந்து கிட்டதா என்கிட்ட சொன்னா.."



"அந்த பொண்ணு உன் கிட்ட வந்து நீ சொன்னாளா?" என்று நம்ப முடியாத பாவனையுடன் துரியோதனன் கேட்க,தன் பேச்சில் அவன் சந்தேகம் கொண்டு விட்டதை உணர்ந்த பூஜா அவன் அவள் சொன்ன அனைத்தையும் உண்மை என்று நம்பியே ஆக வேண்டும் என்று அவளும் அருந்ததியும் பேசியதை வீடியோ எடுத்து வைத்திருந்தாள்.



அதில் முன் பாதியில் பூஜா பேசிய வசனங்கள் மறைந்து போயிருக்க பின் பாதியில் அருந்ததி "பேர பாரு துரியோதனன் அப்படியே மகாபாரதத்தில் வர துரியோதனன் பேரு தான்.. அந்த ஆள் எல்லாம் ஒரு மனுஷனே இல்லை.."என்று பூஜாவுக்காக அவனை கோபத்தில் திட்டிய அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்திருந்தவள் அதை அப்படியே துரியோதனனிடம் போட்டு காட்ட, அதை பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் கண்கள் சிவக்க ஆரம்பித்தது.



யுத்தம் ஆரம்பம்...
 

தீ-10​

அருந்ததி பேசியதை கேட்டுக் கொண்டிருந்த துரியோதனன் கண்கள் கோபத்தில் சிவந்து போக அதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பூஜாவுக்கு கொண்டாட்டமாகி போனது.​

"பாத்தீங்களா சார் இவள் எப்படி எல்லாம் உங்களை கேவலமா பேசுறா! இதை பார்க்கும் போது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு அதனாலதான் உங்ககிட்ட கொண்டு வந்து காட்டினேன்.. அந்த பொண்ணுக்கு எப்பவுமே திமிர் ரொம்ப கூட அதனாலதான் நீங்க இந்த காலேஜ் ஓனர்ன்னு தெரிந்தும் கூட உங்ககிட்ட வந்து இன்னும் மன்னிப்பு கேட்கல.."என்றவளை கூர்மையாக பார்த்தான் துரியோதனன்.​

அவனது கூர்மையான பார்வையில் பூஜா ஒரு நிமிடம் தான் சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு பின் தயக்கத்தோடு மீண்டும் தொடர்ந்தாள்.​

"நீங்க என்னை எதுக்காக இப்படி பாக்குறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் சார்..அருந்ததி பற்றிய தகவல் எல்லாம் எப்படி எனக்கு சரியா தெரியுது உங்ககிட்ட வந்து சொல்றேன் தானே பாக்குறீங்க.. இவ என் பக்கத்து வீட்டுல தான் இருக்கா எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போவா அதனால இவளை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் துரியோதனன் சார் உங்களை தப்பா பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல அதனால் தான் உங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் சொன்னேன் இதுக்கு மேல இவளை என்ன பண்ணனுமோ அது உங்க விருப்பம்.."என்ற பூஜா திரையில் தோன்றும் கதாநாயகன்கள் அனைவரையும் தோற்கடித்து விடுவது போல் அமர்ந்திருந்த துரியோதனனை விட்டு அவள் கண்ணை எங்கும் அகற்ற முடியவில்லை.​

பூஜா மட்டும் இல்லை அந்த கல்லூரியில் படிக்கும் பெரும்பான்மையான பெண்கள் அனைவருக்கும் துரியோதனன் தான் அவர்கள் ஹீரோ.​

தங்கள் கல்லூரியின் டீன் அவன் தான் என்று சொல்லிக் கொள்வதில் அங்கிருந்த பெண்கள் அனைவருக்கும் அலாதி விருப்பம் தான்.​

அங்கு படிக்கும் மாணவர்கள் யாராவது பெண்களிடம் சென்று தங்கள் காதலை தெரிவித்தால் அவர்கள் முதலாவதாக சொல்வது "பாக்குறதுக்கு துரியோதனன் சார் மாதிரி இருந்தா நான் உன்னை கண்டிப்பா மறுக்காமல் அப்படியே ஏத்துக்கவே துரியோதனன் சார் தான் என்னோட கனவு கண்ணன்.."என்று வார்த்தைக்கு வார்த்தை துரியோதனன் பற்றி பேசி மாணவர்கள் காதில் புகையை வர வைப்பார்கள்.​

அவன் கல்லூரிக்கு வருவது பெரும்பாலும் மாதங்களில் ஐந்து ஆறு நாட்கள் மட்டும்தான்.​

தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பூஜாவை எரிச்சலோடு பார்த்த துரியோதனன் அங்கிருந்த மேஜையை சத்தமாக தட்ட, அதன் சத்தத்தில் சுயநினைவிற்கு வந்த பூஜா அப்போதுதான் தான் அவனை அசடு வழிய சைட் அடித்துக் கொண்டிருப்பது புரிய அவனை நிமிர்ந்து பார்க்க முடியாது "நான் வரேன் சார்.."என்றபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் செல்ல, இருக்கையில் பின்னால் சாய்ந்தமர்ந்த துரியோதனன் இதழ்களில் ஒரு நக்கல் புன்னகை.​

அவன் பார்த்த பெண்களில் யாவரும் அவனை ரசித்துப் பார்த்தவர்கள் அல்லது இவனைப் போல் தனக்கு ஒருவன் கிடைக்க மாட்டானா? என்று ஏக்கம் கொண்டு பார்க்கும் பெண்களின் ஏக்க பார்வையை தான் அதிகம் கண்டது.​

இவன் செல்லும் பப்பில் கூட பெண்கள் இவனை கண்டதும் ஈ மொய்ப்பது போல் இவன் பின்னே மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள்.​

இப்படி எங்கு சுற்றிலும் தன்னை அனைத்து பெண்களும் விருப்பத்துடன் பார்ப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்து போயிருந்தவன் முதன்முதலாக அருந்ததி தன்னை எதிர்த்து பேசியதும் சரி இப்பொழுது பூஜா காட்டிய வீடியோவில் தன்னை திட்டி பேசிய போதும். மற்ற பெண்களை வேற்றுமைப்படுத்தி வித்தியாசமாக அவன் கண்களுக்கு தெரிய அவன் மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு வளர ஆரம்பித்தது.​

உணர்வுகளுக்கு எப்பவும் மதிப்பு கொடுத்து பழக்கம் இல்லாதவனுக்கு தன் மனதில் தோன்றிய உணர்வு இன்னதென்ன அடையாளம் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட, அதுதான் வாழ்க்கையில் அவன் செய்த தவறாகிப் போனது.​

'என்ன தான் இருந்தாலும் நீ என்னை அப்படி பேசி இருக்கக் கூடாது..' என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்ட துரியோதனன் அருந்ததியை தண்டிப்பதற்கு உரிய வழியை தேர்ந்தெடுக்க அந்தோ பரிதாபம் அவனுக்கு முன்பாக அவனை தண்டிக்கும் வழியை தேர்ந்தெடுத்து விட்டாள் அவனது தீ அருந்ததி.​

அருந்ததிக்கும் துரியோதனனுக்கும் இடையே இருக்கும் பகையை எப்படியாவது அதிகம் ஆக்கி அதில் தான் விரும்பியதைப் போல காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதில் துடிப்பாக இருந்தாள் பூஜா.​

"அருந்ததி துரியோதனன் சார் என்னை ரொம்ப வற்புறுத்துகிறார் இன்னைக்கு ஈவினிங் என்னை வந்து மீட் பண்ணி கூட்டிட்டு போறதா சொல்றாரு நீ தான் காப்பாத்தணும்.."என்று வராத கண்ணீரை துடைத்தபடி பூஜா சொல்ல, உடன் பிறந்தவளை சந்தேகிக்க அருந்ததிக்கும் மனம் வரவில்லை.​

"கவலைப்படாதீங்க அக்கா அந்த மாதிரி பெரிய ஆளுங்க எல்லாம் தப்பான வழியில் போறவங்களா இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு ஒரு பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி அவங்க விருப்பத்துக்கு உடன்படுத்த மாட்டாங்க.."என்ற தங்கையை கொல்லும் அளவிற்கு ஆத்திரம் வந்துவிட்டது பூஜாவிற்கு.​

"அப்போ எனக்கு என்ன ஆனாலும் உனக்கு கவலை இல்லை அப்படித்தானே அருந்ததி? கூட பிறந்த தங்கச்சி எனக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ வந்து நிற்பேனு உன்னை நம்புனது என்னோட தப்பு தான் தயவு செஞ்சு என்னை மன்னித்துவிடு.."என்றவள் அழுது கொண்டே அங்கிருந்து செல்ல,உடன் பிறந்தவள் கண்ணீர் அவளை சுட்டாலும் தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று மரகதம் ஏற்கனவே எச்சரித்து வைத்திருந்ததால் அவளும் அதை அப்படியே விட்டு விட்டாள்.​

மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் இவள் கல்லூரி வர, சரியாக அவள் வரவிற்காக காத்துக் கொண்டிருந்த பூஜா அந்த பக்கம் போன் பேசிக் கொண்டிருந்த துரியோதனனை கண்டதும் அவனிடம் சென்றாள்.​

அன்று விதி அவளுக்கு சாதகமாக இருந்தது போலும்!!​

"ஹலோ துரியோதனன் சார் என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.."என்று அவனுக்கு முன்பாக சிரித்துக் கொண்டு நிற்க, அங்கிருந்த ஒரு சில மாணவர்களும் அவர்களைப் பார்த்தும் பாராதது போல் கடந்து செல்ல துரியோதனன் பூஜா இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்ததும் அருந்ததியின் ஐம்புலன்களும் செயல்படலாயின..​

"ஹூ ஆர் யூ?எதுக்கு பெண்ணே அடிக்கடி வந்து என்னை தேவையில்லாமல் தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்க.."என்று கோபமாக கத்த, பூஜாவுக்கும் தேவையானது இந்த கோபம் தானே.​

அந்த கோபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தவள் "எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு துரியோதனன் சார் ஐ ஹோப் நான் உங்கள லவ் பண்றேன் என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க கண்டிப்பா உங்களுக்கு பெஸ்ட் பார்ட்னரா நான் இருப்பேன்.. எந்த விதத்திலும் உங்களுக்கு கொறை வைக்க மாட்டேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லவ் யூ.."என்று சொல்ல, துரியோதனன் அவள் சொன்னதை கேட்டதுமே கையில் இருந்த ஃபோனை கீழே விசிறி அடிக்க போன் சுக்கு நூறாக உடைந்தது.​

அந்த சத்தத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த மாணவர்கள் இவர்களை திரும்பி பார்க்க, அதை எல்லாம் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளாத துரியோதனன் அவள் முன்பாக ஒற்றை விரலை நீட்டியவன் "எனக்கு பிடிச்ச விஷயம் எதுவாயிருந்தாலும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் அதே நேரம் எனக்கு பிடிக்காத விஷயம் ஏதாவது என் முன்னாடி வந்தா அதை அழிக்கவும் தயங்க மாட்டேன் பி கேர்ஃபுல் இடியட்.."என்று சொல்லி விட்டு செல்ல, அவளையே சில மாணவர்கள் பரிதாபத்துடன் பார்த்திருந்தார்கள்.​

பூஜா தான் எதிர்பார்த்தது போலவே துரியோதனன் தன் மீது கோபப்பட்டு செல்லவும் உள்ளுக்குள் சந்தோஷமாகவும் வெளியில் கண்ணீருடனும் பரிதாபமாக நின்று கொண்டிருக்க, அவளிடம் வந்தாள் அருந்ததி.​

பூஜாவின் நல்ல நேரம் அவள் எதிர்பார்த்தது போலவே அனைத்தும் நடந்து முடிக்க அவளுக்கு பேசுவதற்கோ வார்த்தைகள் எதுவும் இல்லை.​

"அக்கா"என்று அருந்ததி அவள் கைகளை தொட, அவள் கைகளை தட்டி விட்டாள் பூஜா.​

அருந்ததியின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் அவள் தன் வகுப்பிற்கு சென்று விட, அருந்ததியும் தன் வகுப்பிற்கு நேரமாவதை உணர்ந்து இதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனமே இல்லாமல் தன் வகுப்புக்கு சென்றாள்.​

வகுப்பு முடிந்ததும் அருந்ததி தமக்கையை பார்ப்பதற்காக செல்ல, அவளது அக்காவோ அருந்ததி வருவாள் என்பதை எதிர்பார்க்க காத்திருந்த அவள் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அருந்ததியும் அந்த இடத்திற்கு சரியாக வந்து சேர, கண்களை கசக்கியபடி தன் தோழியிடம் அழுது கொண்டிருந்தாள் பூஜா.​

"பாத்தியா துளசி நான் உன்கிட்ட சொன்னேன் தானே துரியோதனன் சார் என்னை வலுக்கட்டாயமா அவர் கூட இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல இருக்க கூப்பிடுறார் அவருக்கு இப்ப நான் என்ன பதில் சொல்றது? சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியலை போல என்னை இந்த நிலைமையில் இருந்து காப்பாத்த எனக்குன்னு யாருமே இல்லை..வீட்ல மட்டும் எங்க அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா உயிரோடவே இருக்க மாட்டாங்க நானும் அவங்களோட சேர்ந்து சாகுறேன் அது ஒன்னு தான் இப்போதைக்கு நான் செய்ய முடியும் எனக்குன்னு இனிமே யாரும் இல்லை.."என்று போலி கண்ணீர் வடிக்க,அவளிடம் பேசுவதற்காக வந்த அருந்ததி காதில் பூஜா எதிர்பார்த்தது போலவே அனைத்தும் ஒன்று தவறாமல் விழுந்து விட, அவளிடம் பேச மனம் இல்லாமல் அருந்ததி வந்த வழியே திரும்பி விட துளசி கட்டை விரலை உயர்த்தி பூஜாவிடம் காட்ட அதை கண்டு தன் போலி கண்ணீரை சுண்டி எறிந்த பூஜா திரும்பி தங்கையை பார்க்க.. அவள் கோபமாக நடந்து செல்வதை கண்டதும் அப்படி ஒரு பரவசம் கொண்டாள் பூஜா.​

"இருந்தாலும் பூஜா உன்னோட சொந்த தங்கை இப்படி கஷ்டப்படுவதை பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு அவள் ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் இருக்கும்போது எதுக்கு தேவையில்லாமல் அவளை நீ இப்படி பிரச்சனையில் மாட்டி விடுற எனக்கு என்னமோ இது கொஞ்சம் கூட சரியா படலை.."என்ற துளசியை அலட்சியமாக பார்த்தாள் பூஜா.​

"இதோ நீ இப்ப பேசுறியே துளசி இதுதான் எனக்கு சுத்தமா பிடிக்கலை.. அவ என்னோட தங்கச்சியா இருந்தாலும் என்னைய விட எல்லாருக்கும் அவளை மட்டும் தான் ரொம்ப பிடிக்குது இம்புட்டுக்கும் அவளை விட எல்லாமே என்கிட்ட கூட தான் இருக்கு எதுவுமே இல்லாத அவளை எல்லாருக்கும் பிடிக்கும் போது எல்லாம் இருக்கும் என்னை ஏன் யாருக்கும் பிடிக்காமல் போகுது? இந்த ஒரே ஒரு கேள்விதான் அவளை இந்த அளவுக்கு பழிவாங்க என்னை தூண்டி விடுது..எது எப்படியா இருந்தாலும் கண்டிப்பா அந்த துரியோதனன் கிட்ட அவள் மாட்டிகிட்டு அவஸ்தை படுவதை கூட இருந்து பார்த்து சந்தோஷப்பட போகிறேன்.. எனக்கு கிடைத்த எல்லாமே அவளுக்கு கிடைக்காமல் போனாலும் சந்தோசமா இருக்கிறாள் அந்த சந்தோஷம் இனிமே அவளுக்கு இருக்க கூடாது.."என்று பாம்பு போல் விஷத்தைக் கக்கிய பூஜாவை பயத்துடன் பார்த்தாள் துளசி.​

'இனிமேல் இவ கிட்ட பார்த்து தான் பழகணும் சொந்த தங்கச்சி சந்தோசமா இருக்கிறதை பார்த்து பொறாமைப்படும் இவள் நாளைக்கு நம்மையும் ஏதாவது செஞ்சாலும் செஞ்சுடுவாள் இனிமேல் இவ பிரண்ட்ஷிப்பை கட் பண்ணி விடனும்..' என்று துளசி மனதுக்குள் நினைத்துக் கொண்டு வெளியில் அவளை பார்த்து சிரித்து வைத்தாள்.​

யாரும் பார்க்காது கண்களை கசக்கியபடி அழுது கொண்டே நடந்து வந்த அருந்ததி காதில் பூஜா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.​

முதலில் பூஜா சொன்னதை அருந்ததி நம்பவில்லை என்பது உண்மைதான்.​

நேரில் துரியோதனன் அவளிடம் அப்படி கோபமாக பேசியதை கண்டதும் பூஜா சொல்வதில் நிச்சயம் உண்மை இருக்கும் என்று பேதை மனம் நம்பியது.​

தன் சொந்த அக்காவை அழ வைத்தவன் அத்தனை பேரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தியவனுக்கு நிச்சயம் தக்க தண்டனை கொடுத்தாக வேண்டும் என்று நினைத்தவள் கைகள் தன் பையில் இருந்த பொருள் மீது நிலைத்தது.​

அந்த பொருளை தனது கைகளுக்குள் பத்திரமாக மறைத்து வைத்துக் கொண்டவள் கைகள் மீது ஷாலை விரித்து விட்டு தான் இப்பொழுது செய்ய போகும் விஷயம் சரியா? தவறா? என்று யோசிக்கும் மனநிலை கூட இல்லாமல் துரியோதனன் இருக்கும் அறைக்கு சென்றாள்.​

"டேய் கர்ணா வரவர உனக்கு கொழுப்பு ரொம்ப கூடி போச்சு நீ ரொம்ப பேசுற மேன் உன்னை என்ன பண்றேன் மட்டும் பாரு.."என்று தன் நண்பனை பொய்யாக மிரட்ட, அருந்ததி இருந்த மனநிலையில் 'இவன் இப்படி தான் எல்லாரையும் மிரட்டி தன் காரியத்தை சாதிப்பான் போல இருக்கு அன்னைக்கு சும்மா பார்த்த என்னை அப்படி முறைச்சு வச்சவன் கண்டிப்பா பூஜாவையும் விட மாட்டான்..என் அக்கா மாதிரி இன்னும் எத்தனை பொண்ணுங்களை இவன் நாசம் பண்ண காத்துகிட்டு இருக்கானோ கண்டிப்பா இவனை சும்மா விடக்கூடாது..'என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் தனக்குள் உழன்ற படி அப்படியே நின்று கொண்டிருக்க, அவள் பக்கத்தில் வந்தான் துரியோதனன்.​

"ஏய் யார் நீ? பாக்குறதுக்கு காலேஜ் ஸ்டுடென்ட் மாதிரி இருக்க இந்த நேரம் கிளாஸ்ல இருக்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்க!"என்று அவளை தெரிந்தும் தெரியாதது போல் கோபமாக கேட்க, அவன் கேள்வியில் திடுக்கிட்டு விழித்தாள் பாவையவள்.​

அவன் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.​

வகுப்பு நேரமாக இருந்ததால் மாணவர்கள் ஆசிரியர்கள் என்று அவரவரும் அவரவர் வகுப்பில் பிஸியாக இருக்க, இவர்கள் இருவரையும் யாரும் கவனிக்கவில்லை.​

அதோடு துரியோதனன் இருக்கும் அறைக்கு வருவதற்கு தைரியம் யாருக்கும் கிடையாது.​

ஏதாவது மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டும் பேராசிரியர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து தான் வந்து போவார்கள்.​

துரியோதனன் தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை விழிகளால் அளவெடுக்க ஆரம்பித்தான்.​

மற்ற பெண்கள் அனைவரும் தன்னை கவர்வது போல் காந்த பார்வை பார்க்க, அருந்ததியின் பார்வை முழுவதும் வித்தியாசமாக இருந்தது அவன் மீது.​

அவள் விழிகளில் வித்தியாசத்தை கண்டு கொண்டவன் விழிகளிலும் சுவாரசியம் குடிகொள்ள, எவர் மீதும் எரிந்து விழுந்து கொண்டிருப்பவன் யாரையும் அலட்சியமாக ஒதுக்கிவிட்டு செல்பவன் பார்வை முதன்முதலாக அனைத்தையும் தாண்டி வேறுவிதமான ஒரு உணர்வுகளை பிரதிபலித்தது.​

"ஆமாண்டா கர்ணா துரியோதனன் காலேஜ்ல தான் இருக்கேன்.. சரிடா முக்கியமான கேஸ்னா நீ ஹேண்டில் பண்ணிக்கிட்டு இரு நான் மச்சானை கூட்டிட்டு வரேன்.. ஓகே நீயும் உன்னோட வேலையை முடித்துவிட்டு ஈவினிங் வந்தடு நம்ம எல்லாரும் ஒண்ணா வெளியில போய் ரொம்ப நாளாகுது இவனை எப்படியாவது இழுத்துகிட்டு வரேன்.."என்று அழைப்பை துண்டித்த அபிமன்யு துரியோதனன் அறைக்கென இருக்கும் மற்றொரு வழியாக உள்ளே வந்தான்.​

துரியோதனன் எந்த நேரம் கல்லூரியில் இருக்கிறான் எந்த நேரம் வெளியில் செல்கிறான் என்று யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக அவன் செய்து வைத்த பிரத்தியேக வேலைப்பாடு கொண்ட வழி அது.​

அப்போதுதான் அவன் கல்லூரியில் இருக்கிறான் என்று உணர்ந்து கொண்டு மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி அவர்களை கடமைகளை சரியாக செய்வார்கள் என்று அவன் வகுத்து வைத்த யுக்தி அது.​

மற்ற கல்லூரிகளைப் போல் மருத்துவக் கல்லூரியில் பெரிதாக எந்த பிரச்சனையும் உருவாகாது என்றாலும் சில மாணவர்களும் ஆசிரியர்களும் கல்லூரியின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே பல தேவையில்லாத பிரச்சினைகளை துரியோதனன் கல்லூரியில் இல்லாத சமயங்களில் கிளப்பி விட்டு கல்லூரியின் மதிப்பை குறைக்க பார்க்க, அத்தனையும் ஒரு நொடியில் தலையிட்டு சரி செய்து விட்டான்.​

பிரச்சனை செய்தவர்களுக்கும் சரி தூண்டி விட்டவர்களுக்கும் தக்க தண்டனை கொடுக்க, அது முதல் கல்லூரியில் யாரும் தேவையில்லாத பிரச்சினை எதுவும் செய்து தாங்களும் அந்த பிரச்சனையில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.​

மற்ற கல்லூரிகளில் கொடுக்கும் சம்பளத்தை விட ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் அதிகமாக இருப்பதால் ஆசிரியர்கள் யாருக்கும் அங்கிருந்து செல்வதற்கும் மனமில்லை.​

 

அதேபோல் மாணவர்களும் அரசு கல்லூரிக்கு இணையான கல்லூரி என்பதால் தாங்கள் படிக்க வந்த வேலையை மட்டும் கணக்கில் கொண்டு முழுமூச்சாக எதிர்காலத்தில் தாங்களும் ஒரு மருத்துவராகி பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று அவா கொண்டு பெரும்பான்மையான மாணவர்கள் தங்கள் படிப்பில் மட்டும் தான் கவனத்தை செலுத்தி இருந்தார்கள்.​

துரியோதனன் இருக்கும் மற்றொரு அறை வழியாக வந்து போவதற்கு அவனுக்கும் கர்ணன் அபிமன்யு இவருக்கு மட்டும்தான் உரிமையுண்டு.​

அபிமன்யு அந்த வழியாக வந்தவன் கண்டது என்னவோ தன் நண்பனையே ஒரு பெண் முறைத்து பார்க்க அவளை விழிகளில் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த தன் நண்பனையும் தான்.​

தன் நண்பன் ஒரு பெண்ணை இப்படி ஆச்சரியமாக பார்க்கிறானா? என்பதை ஆச்சரியமாக பார்த்த அபிமன்யு ஒரு சின்ன சத்தம் கூட செய்யாது அதை அப்படியே தன் போனில் படம் பிடித்துக் கொள்ள, இறுதியாக தன் நண்பனையும் காதல் நோய் பிடித்து விட்டது என்று நினைத்தான்.​

சத்தம் செய்யாமல் அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி ஒரு ஓரமாக நின்று விட்டான்.​

"ஓய் உனக்கு வேற வேலை இல்லையா? எதுக்கு என்ன இப்படி பாத்துட்டு இருக்க ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போ.."என்று துரியோதனன் கோபமாக சொல்ல, அவனை அதே இடத்தில் நகராமல் அழுத்தமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.​

தான் சொல்லியும் தன் சொல் பேச்சு கேட்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்த அருந்ததியை முடிந்தவரை முறைத்து பார்த்தான் துரியோதனன்.​

"ஏய் உன் கிளாஸ் இன்சார்ஜ் யாரு அவங்களுக்கு போன் பண்ணி இங்க வர வைக்கட்டுமா? இந்த நேரத்தில் நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? உன் கிளாஸ்ல இருக்க ப்ரொபசர் உன்னை வெளியில விட்டுட்டு அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கார்.."என்று கோபமாக கேட்டவன் அவள் எந்த வருடத்தை சேர்ந்தவள்! அவள் இன்சார்ஜ் யார்? என்பதை விரல் நுனியில் வைத்திருந்தவன் அவருக்கு போன் செய்வதற்காக போனை எடுக்க, அதை ஒரே நொடியில் தன் கைகளில் பிடுங்கிக் கொண்டாள் அருந்ததி.​

அவள் செயலில் மிகவும் கோபம் கொண்ட துரியோதனன் "ஒழுங்கு மரியாதையா என் போனை குடுடி பொண்ணுன்னு பார்த்தா என் போனையே பிடுங்குற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா?"என்று கோபமாக அவளை அடிப்பதற்காக கைகளை உயர்த்த அருந்ததி சற்றும் தாமதிக்காமல் தன் கைகளில் கொண்டு வந்திருந்த அந்த பொருளை அவன் கண்களில் தெளித்து விட, ஒரு நொடி துரியோதனன் என்ன நடந்தது என்று தெரியாமல் அப்படியே நின்றவன் கண்கள் எரிச்சலால் சிவந்து போக, கைகள் கொண்டு கண்களை தேய்த்து விட்டான்.​

இருக்க இருக்க எரிச்சல் அதிகமாக "ஏய் என்ன பண்ண எனக்கு இப்படி கண்ணு ரொம்ப எரியுது!"என்று கோபமாக கேட்டபடி கண்களை தேய்த்து விட, இருக்க இருக்க எரிச்சல் அதிகம் ஆகி ஒரு கட்டத்தில் அவன் கண்களையே பிடுங்கி எறிந்து விடும் அளவிற்கு வேதனையை கொடுக்க,"ஆஆ"என்று கத்தியபடி தரையில் முட்டி போட்டு அமர்ந்தவன் கண்கள் இரண்டையும் முகத்தில் இருந்து பிய்த்து எறிந்து விடுவது போல் இழுக்க, முதலில் அங்கு நடந்து கொண்டிருப்பது ஒன்றும் புரியாமல் குழப்பமாக நின்று கொண்டிருந்த அபிமன்யு துரியோதனன் வேதனையில் துடிப்பதை கண்டதும் வேகமாக அவன் பக்கத்தில் ஓடி வந்தான்.​

துரியோதனின் வலியில் துடிப்பதை கண்ட பிறகு அருந்ததிக்கு தான் செய்த தவறு உணர்ந்தது.​

'ஐயோ என்ன காரியம் பண்ணி வச்சிருக்க அருந்ததி ஒருத்தரோட பார்வையை அவர்கிட்ட இருந்து பறிக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு அங்க பாரு அவர் வலியில் துடிச்சுக்கிட்டு இருக்கார் இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்..' என்று அவள் மனசாட்சி அவளை குத்தி கிழித்தது.​

மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது வலியில் துடித்துக் கொண்டிருந்த துரியோதனனை பார்த்தபடி அவள் அப்படியே சிலையாக சமைந்து நிற்க, நண்பனின் வேதனையை தாங்க முடியாது அபிமன்யு கண்களில் நீர் வந்துவிட்டது.​

அவன் இருந்த அறையில் சவுண்ட் ப்ரூப் இருந்ததால் உள்ளே அவன் கத்தும் சத்தம் வெளியில் கேட்காமல் போனது.​

"டேய் மச்சான் உனக்கு என்ன ஆச்சுடா எதுக்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க? ஐயோ கையை மூஞ்சியிலிருந்து எடுடா விட்டா கண்ணை பிச்சி எறிஞ்சிடுவ போல இருக்கு!"என்று அழுகையோடு அபிமன்யு அவன் கைகளை தன் கைகளுக்குள் பிடித்து வைத்துக் கொள்ள, வேதனையில் துடித்துக் கொண்டிருந்த துரியோதனன் அபிமன்யு கைகளுக்குள் சிக்கியிருந்த தன் கைகளை விடுவிக்க போராடினான்.​

"அபி நீயும் இங்கதான் இருக்கியா டா? என்னால முடியல டா! கண்ணு ரொம்ப எரியுது அப்படியே இரண்டு கண்ணையும் பிச்சு தூக்கி எறியனும் போல இருக்குது என்னால கண்ணை சுத்தமா திறக்க முடியல எதையும் பார்க்க முடியல ஏதாவது பண்ணுடா ஐயோ என்னால இந்த வேதனையை தாங்கிக்கவே முடியவில்லை.."என்று வேதனையில் அரற்ற, நண்பனின் வேதனையை பார்க்க முடியாத அபிமன்யு அவனை அப்படியே கை தாங்கலாக அழைத்துக் கொண்டு அதுவே மருத்துவக் கல்லூரி என்பதால் அதோடு இணைந்திருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.​

துரியோதனன் படும் வேதனைகளைக் கண்டு அருந்ததி கண்களிலும் கண்ணீர் வர,என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தவள் அபிமன்யு துரியோதனனை அழைத்துச் செல்லவும் அவளும் அவன் பின்னே வர, அவளை கோபமாக திரும்பி பார்த்த அபிமன்யு "இப்ப எதுக்கு தேவையில்லாம எங்க பின்னாடி வர்ற ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போ நீ மட்டும் இப்படி பண்ணது யாருக்காவது தெரிஞ்சா உன்னை உயிரோட விட மாட்டாங்க போய்டு.."என்று கோபமாக கத்தி விட்டு துரியோதனனை அழைத்துச் செல்ல கண்களில் கண்ணீருடன் வேதனையில் துடித்தபடி சென்று கொண்டிருந்த துரியோதனையே பார்த்துக் கொண்டிருந்தாள் துரியோதனனின் அருந்ததி.​

துரியோதனனை பக்கத்திலேயே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு வந்து அட்மின் செய்த அபிமன்யுவே அவனுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தான்.​

துரியோதனனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட,வேதனையில் துடித்துக் கொண்டிருந்தவன் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்தின் பிடியில் சென்று வலியை மறந்து ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டான்.​

மருத்துவர்கள் முதல் வார்டு பாய் வரை துரியோதனனை பார்த்தாலே அங்கு எழுந்து நிற்பவர்கள் இப்பொழுது துரியோதனனே நோயாளியாக அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆயிருக்க மருத்துவமனையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.​

அனைத்து மருத்துவர்களும் துரியோதனனுக்கு என்ன ஆயிற்று? என்பதை தெரிந்து கொள்வதற்காக தங்கள் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்தவர்கள் அபிமன்யுவிடம் தங்கள் உதவி தேவையா! என்று கேட்க, அவனும் பதட்டத்தில் இருந்ததால் மற்ற மருத்துவரின் உதவியோடு துரியோதனனை பரிசோதிக்க அவனுக்கு என்ன ஆயிற்று என்பதை தெரிந்து கொண்ட அபிமன்யு அப்படியே இடிந்து போய் விட்டான்.​

அந்த மருத்துவமனையிலேயே சிறந்த மகப்பேறு மருத்துவரான கர்ணன் ஒரு பெண்ணிற்கு பிரசவம் முடித்துவிட்டு வெளியில் வர அவன் காதிலும் இந்த செய்தி விழ, அதிர்ச்சியோடு துரியோதனன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து சேர்ந்தான்.​

இங்கு இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமான அருந்ததி தன் சுய உணர்வுகள் என்பதே சிறிதும் இல்லாமல் அபிமன்யு சொன்னதையும் மீறி துரியோதனன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தாள் அதுவும் யாருக்கும் தெரியாமல் நடுநிசியில்.​

இவள் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கு படுக்கையில் சாய்ந்தபடி விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் துரியோதனன்.​

கதவு திறக்கும் சத்தம் கேட்க,"ஏன்டா உங்க கிட்ட சொன்னா என்னை தனியா விடவே மாட்டீங்களா? எனக்கு கண்ணு தான் குருடா போயிடுச்சு நான் இன்னும் அதே துரியோதனன் தான் பார்வை போனாலும் இருந்தாலும் எனக்கு அதப்பத்தி எல்லாம் கவலை இல்லை எப்போதுமே நான் துரியோதனன் மட்டும் தான் உங்களோட பரிதாபம் எனக்கு தேவையில்லை மரியாதையா ரெண்டு பேரும் இங்கிருந்து போங்க.."என்றவன் கோபமாக அங்கிருந்த மேஜை ஓரத்தில் குத்த, அதன் மீது இருந்த பொருட்கள் இவன் குத்திய வேகத்தில் துள்ளி அடங்கியது.​

அவன் போட்ட சத்தத்தில் அருந்ததி உடல் நடுங்க ஆரம்பித்தது.​

இயல்பாகவே நல்லவர்கள் தவறு செய்து விட்டால் வரும் நடுக்கம் அது.​

அதிலும் அவன் மீது எந்த தவறும் இல்லை என்ற போதில் அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தனக்கு அவன் என்ன தண்டனை கொடுத்தாலும் அது சரிதான் என்று முடிந்தவரை தன் நடுக்கத்தை குறைத்துக் கொண்டு அவன் பக்கத்தில் வந்தாள்.​

பார்வையை இழந்திருந்தாலும் அவன் செவிகள் கூர்மையாக இருந்ததால் வந்தது அவன் நண்பர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டவன் "ஏய் யார் வந்திருக்கது இந்த நிலைமையில என்னை மொத்தமா போட்டு தள்ள வந்திருக்கீங்களா? ஹா ஹா அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது நான் துரியோதனன் என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது ஒழுங்கு மரியாதையா வந்த வழியை பார்த்துகிட்டு போங்க.."என்றவன் இன்னும் சத்தம் போட,எங்கே அவன் போடும் சத்தத்தில் வெளியில் இருந்து யாராவது வந்து விடுவார்களோ? என்று பயம் கொண்ட அருந்ததி வேகமாக அவன் பக்கத்தில் வந்தவள் தன் கைகள் கொண்டு அவன் இதழ்களை மூட, துரியோதனனின் இதழ்கள் அவள் கைகளில் மென்மையான முத்தம் ஒன்றையும் பதிக்க அவள் உடல் கூசி சிலிர்த்தது.​

அவனை அந்த நிலைமையில் பார்க்க பார்க்க அவளுக்குள் இருந்த குற்ற உணர்வு அதிகமாக அப்படியே கண்களில் கண்ணீர் வழிய அந்த கண்ணீர் சரியாக அவன் முகத்திலும் பட்டு தெரிந்தது.​

நீர் துளி படவும் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்த துரியோதனன் கைகள் அப்படியே தன் இதழ்களை மூடி இருந்த அருந்ததியின் கைகளை வளைத்து பிடித்தது.​

அவன் இதழ்களோ அவளைக் கண்டு ஏளனமாக வளைந்தது.​

"ஏண்டி என் கண்ணை பறிச்சது பத்தாதுன்னு இப்ப என் உயிரை எடுக்க வந்தியா? ஓ இவன் செத்துப் போய்டுவான்னு எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்த உனக்கு நான் உயிரோட இருக்குது ரொம்ப அதிர்ச்சியா இருக்குது அப்படித்தானே?"என்று முகம் இறுக சினம் தொனிக்கும் குரலில் கேட்க, அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது அவள் வாய் இறுக மூடிக்கொண்டது.​

சுய நினைவு வந்த பிறகு கண்களை விழித்துப் பார்த்த துரியோதனன் பார்வையில் அத்தனையும் இருட்டாக தெரிய, அவன் வாழ்க்கையும் இருளோடு இருளாக மாறிப்போனது.​

அவனது இந்த நிலைமைக்கு காரணமான அருந்ததி என்ன செய்யப் போகிறாள்?​

யுத்தம் ஆரம்பம்..​

 

தீ-11​

"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? சத்தியமா நான் அந்த மாதிரி எல்லாம் நினைக்கவே இல்லை என்னை நம்புங்க.."​

"ஆமா ஆமா நீ ரொம்ப நல்ல பொண்ணு தான் அப்படி எல்லாம் நினைச்சு இருக்கவே மாட்ட அப்படி எல்லாம் நினைக்காம அமைதியா இருந்ததால தானே என் கண்ண இன்னைக்கு என்கிட்ட இருந்து புடுங்கிட்ட.. மத்தவங்கள மாதிரி இந்த உலகத்தை சந்தோசமா என்னால பாக்க முடியாது இனி என் வாழ்க்கை முழுக்க வெறும் இருட்டு மட்டும் தான்..” என்ற துரியோதனன் எதிரில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாமல் வெறித்து பார்த்தான்.​

அவனது இந்த கேள்விக்கு எங்கனம் அவளால் பதில் சொல்ல முடியும்?​

"நா..நான் ஏதோ ஒரு கோபத்தில் அப்படி தெரியாம பண்ணிட்டேன் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.."​

"உன்ன மன்னிக்கிறதா? நெவர் இந்த ஜென்மத்துல என்னோட முதல் எதிரியும் நீதான் கடைசி எதிரியும் நீதான் உன்னை எப்பவும் சந்தோசமா இருக்க விடவே மாட்டேன்.."​

"ஷட்டப் மிஸ்டர் துரியோதனன் உங்க கிட்ட வந்து இப்படி கெஞ்சி மன்னிப்பு எல்லாம் கேட்பேன்னு கனவு கூட காணாதீர்கள் அதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்..நீங்க பண்ண தப்புக்கு உங்களுக்கு தண்டனை கிடைச்சிருக்கு இது உங்களுக்கு தேவையான தண்டனை தான் இத நினைச்சு எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை.."என்ற அருந்ததியின் சொல்லை கேட்டு அவன் ரௌத்திரம் அதிகமாக அவன் கைகளுக்குள் சிக்கியிருந்தால் அவள் கை அவனிடம் படாதபாடு பட ஆரம்பித்தது.​

தன் கைகளை அவன் மேலும் மேலும் இறுக்கிக் கொண்டு போவதை அமைதியாக பார்த்த அருந்ததி இதழ்கள் நக்கல் புன்னகை சிந்தியதை துரியோதனனால் பார்க்க முடியவில்லை.​

"என்ன இப்படி என் கையை பிடிச்சு அமுக்கி கையை உடைக்க போறதா பிளான் போட்டீங்களா? என்னால ஒரு கை இல்லன்னா இன்னொரு கை வச்சி வாழ்க்கையை சமாளிக்க முடியும்.. பாவம் ரெண்டு கண்ணில்லாமல் நீங்கதான் குருடனா காலம் முழுக்க எப்படி இருக்க போறீங்களோ? அத நெனச்சா தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு இப்ச் பாவம்.."என்று சலிப்பு கொட்ட, அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் துரியோதனனின் அகங்காரத்தை பன்மடங்கு அதிகமாக தூண்டி விட்டுக் கொண்டிருப்பதை பெண்ணவள் அறியவில்லை.​

தன் கைகளுக்குள் சிக்கியிருந்த அவள் கைகளை விடுவித்த துரியோதனன் இதழ்கள் அமைதியான ஒரு புன்னகையை சிந்தியது.​

தன் கைகளை விடுவித்தவனை ஆச்சரியமாக பார்த்த அருந்ததி அவன் சிரிக்கவும் ஒன்றும் புரியாமல் குழப்பமாக அவளைப் பார்த்தாள்.​

"இப்ப எதுக்காக இப்படி சிரிச்சுகிட்டு இருக்கீங்க? உங்களுக்கு தகுந்த தண்டனை தான் கிடைச்சிருக்கு கண்ணு போனதில்ல மூளையும் அடிபட்டு வேற ஏதாவது ஆயிடுச்சா?"​

அப்போதும் அவள் நக்கலாக கேட்க, அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் துரியோதனன் இதழ்கள் இன்னும் அதிகமான புன்னகையை சிந்தியது.​

அவனது இந்த புன்னகை எதையோ ஒன்றை பெரிதாக கொண்டு வரப் போவதற்கான ஆரம்பம் என்பதை அருந்ததி மனம் தெளிவாக எடுத்துக் கூற, அதற்கு மேலும் பேச்சை வளர்க்காமல் அமைதியாக விட்டு விட்டாள்.​

"இங்க பாருங்க நான் செஞ்சதுல கண்டிப்பா உங்களுக்கு கோபம் இருக்கும் இல்லாம இருக்காது ஏன்னா தப்பு முழுக்க உங்க மேல மட்டும் தான்.."என்று பேசப்போனவள் முன்பாக ஒற்றை கையை உயர்த்தி நிறுத்து.. என்பது போல் காட்டிய துரியோதனன் அதற்கு மேலும் அவள் பேச்சை கேட்க பிடிக்கவில்லை என்பது போல் சற்று சாய்ந்து படுத்தவன் கண்கள் தானாக மூடிக்கொள்ள, அருந்ததி அமைதியாகிவிட்டாள்.​

'கடவுளே இப்ப நான் செய்யப் போறது சரியா தப்பான்னு எனக்கு தெரியல தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க..'என்று அவன் பக்கத்தில் நெருங்கிய அருந்ததி அவன் காதுக்கருகில் குனிந்து அந்த வார்த்தைகளை முணுமுணுக்க அதிர்ச்சியில் துரியோதனன் கண்கள் தன்னால் திறந்து கொண்டது.​

"ஏய் என்னடி சொன்ன?"என்று கோபமாக சத்தம் போட்டவன் கைகள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது.​

அவன் எதிர்பார்த்தது போலவே அவன் கைகளுக்குள் சிக்கிக் கொண்டது அவள் கழுத்து.​

அவன் இருந்த கோபத்தில் அவள் கழுத்தில் அதிகமாக அழுத்தத்தை கூட்டி நெரிக்க, அதை அப்படியே தன் செல்போனில் படமாக எடுத்துக் கொண்டாள்.​

அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சிறிதும் போராடாமல் மேஜை மீதி இருந்த பொருட்களை பிடித்து தள்ளி விட, அவள் எதிர்பார்த்தது போலவே அது நன்றாக சத்தத்தை உண்டு பண்ணியது.​

அந்த சத்தத்தில் பக்கத்து அறையில் நோயாளியை பார்த்துக் கொள்வதற்காக இருந்த நர்ஸ் சத்தம் கேட்டு இவன் இருந்த அறைக்குள் ஓடி வர, அங்கே அந்த நர்ஸ் கண்ட காட்சி அவள் இதய துடிப்பை நிறுத்தியது.​

துரியோதனன் கைகளில் அருந்ததி சிக்கிக் கொண்டு மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்ட தாதிப் பெண் ஒரு வினாடி என்ன செய்வது என்றே தெரியாமல் அதிர்ச்சியாக நின்று கொண்டிருந்தவள் அருந்ததி மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டவாறு கண்கள் மேலே சொருக நின்றதை கண்டதும் வேகமாக அவனிடம் ஓடி வந்தாள்.​

"சார் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அவங்களால மூச்சு விட முடியல பாருங்க..அவங்க கழுத்துல இருந்து கையை எடுங்க பாவம் அவங்களால மூச்சு விட முடியாமல் ரொம்ப திணறிக்கிட்டு இருக்காங்க.."என்று அந்த தாதிப் பெண் தன் பலம் கொண்டு அவனின் கைகளை பிடித்து இழுக்க அத்தனை பலவீனம் கொண்டவனா அவன்?​

அவனைப் போலவே வாட்ட சாட்டமாக இரு ஆண் மகன்கள் வந்தாலும் அவன் கைகளை பிடித்து இழுப்பது என்பது அசாத்தியமே!!​

சாதாரண நிலையில் அவன் கட்டுப்பாடாக இருப்பது மிகவும் சிரமம்.​

அருந்ததி சொன்ன அந்த வார்த்தையில் மிகவும் கோபமாக இருந்தவனுக்கு புத்தி ஒரு வினாடி மழுங்கி போக,அதன் பிறகு தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தவன் சுய உணர்விற்கு வந்தான்.​

அவளை அப்படியே பிடித்து தள்ளி விட்டவன் "கெட் லாஸ்ட் இனி நீ என் கண்ணு முன்னாடி வந்தா உனக்கு பாரபட்சம் பார்க்காம உன் உயிரை பறிச்சிடுவேன்.."என்று கோபமாக கத்த,தன் கழுத்தை நீவி விட்டவாறு பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்தி கொண்டாள் அருந்ததி.​

அந்த தாதிப் பெண் அவளிடம் ஓடி வந்தவள் "உங்களுக்கு ஒன்னும் இல்லை தானே மூச்சு விட முடியுதா! இல்லாட்டி வாங்க டாக்டர் கிட்ட போகலாம்.."என்று அழைக்க, அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த அருந்ததி கைகளால் வேண்டாம் என்று செய்கை செய்தாள்.​

"குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வரவா!"என்ற தாதிப் பெண் கேள்விக்கு சரி என்று அருந்ததி தலையை அசைக்க அந்தப் பெண் வேகமாக தண்ணீர் எடுப்பதற்காக பக்கத்து அறைக்கு சென்றாள்.​

அருந்ததி இதழ்களில் ஒரு வெற்றி புன்னகை.​

கோபத்தில் முசுமுசுவென மூச்சு விட்டவாறு எழுந்து அமர்ந்திருந்த துரியோதனனை கண்டு "ரொம்ப தேங்க்ஸ் நான் எதிர்பார்த்தது மாதிரியே எல்லாம் செஞ்சிட்டிங்க இதுக்கான பின் விளைவுகளை நீங்க அனுபவிக்க தயாராக இருங்க இருக்கணும்.."என்று புன்னகையோடு சொன்னவள் எழுந்து நிற்க அங்கு ஓடி வந்த தாதி பெண் அவளுக்கு தண்ணீரை கொடுத்துவிட்டு அவள் எழுந்து நிற்கவும் உதவி செய்ய அவளுக்கு நன்றி சொன்ன படி அங்கிருந்து வெளியேறி விட்டாள் அருந்ததி.​

ஒரு வாரத்திற்கு பிறகு,​

அந்த மருத்துவமனை முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.​

"இங்க பாருங்க மிஸ்டர் துரியோதனன் ஒரு பெண்ணை நீங்கள் கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்கீங்க அதுக்காக உங்களை அரெஸ்ட் பண்றோம்.." என்றார் புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டர்.​

அவர் சொன்னதைக் கேட்டு அமைதியாக இருந்தான் துரியோதனன்.​

இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு அபிமன்யு கர்ணன் இருவரும் அவரை முறைத்து பார்த்தார்கள்.​

"கம்பளைண்ட் யார் கொடுத்தா இன்ஸ்பெக்டர்?"என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் நிறுத்தி அதே சமயத்தில் அழுத்தமாக கேட்டான் துரியோதனன்.​

"சாரி சார் அதை நாங்க சொல்ல முடியாது.."​

"சொல்லனுமே சொல்லியே தான் ஆகணும்.."என்று துரியோதனன் சொல்லி முடித்துவிட்டு எப்போதும் போல் இதழ்களில் ஒரு சின்ன புன்னகையை பரவ விட, அந்த புன்னகையை கண்டதும் அபிமன்யு கர்ணன் இருவரும் அவன் ஏதோ ஒரு வியூகம் வகுத்து விட்டான் என்று அமைதியாகி விட்டார்கள்.​

துரியோதனன் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அந்த இன்ஸ்பெக்டர் போன் அலற ஆரம்பித்தது.​

போனில் தெரிந்த கமிஷனர் நம்பரை கண்டதும் பவ்யமாக ஆன் செய்து இன்ஸ்பெக்டர் காதில் வைக்க அந்த பக்கம் கமிஷனர் இவரை பேசக்கூட விடாது "யோவ் ஆள் பார்த்து நடவடிக்கை எல்லாம் எடுக்க மாட்டீங்களா? அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? தேவையில்லாமல் அவர்கிட்ட போயி பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்காமல் பிரச்சினையை முடிக்கிறதுக்கு உள்ள வழியை பாரு.."என இந்த பக்கம் இன்ஸ்பெக்டர் நேர்மையாக இருந்ததால் கமிஷனர் சொன்னதை ஏற்க முடியாது கோபம் அடைந்தார்.​

"மன்னிச்சுடுங்க சார் இவர் மேல கொலை கேஸ் கொடுத்து இருக்காங்க கண்டிப்பா நான் ஆக்சன் எடுத்து தீரணும் இதுக்காக நீங்க என்ன பனிஷ் பண்ணினாலும் பரவாயில்லை.. ஒருவேளை அந்த பொண்ணோட உயிருக்கு ஏதாவது ஆயிருந்தா என்ன பண்றது! இவர் பெரிய பணக்காரரா இருந்தாலும் இப்படி எல்லாம் பண்றது சட்டத்துக்கு முன்னாடி தப்புதான் சட்டத்துக்கு முன்னாடி பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது அது உங்களுக்கும் தெரியும்..சாரி சார் நீங்க சொன்ன மாதிரி இல்லாம நான் ஆக்சன் எடுக்க தான் போறேன் இதுக்காக என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிக்க நான் தயாரா இருக்கேன்.."என்ற இன்ஸ்பெக்டர் கமிஷனர் பதிலுக்காக காத்திருக்காமல் அலைபேசியை துண்டித்து விட, அவர் நேர்மையை பார்த்து ஒரு நொடி துரியோதனன் மனதுக்குள் அவரை பாராட்டி விட்டு வெளியில் அது தெரியாமல் சாதாரணமாக அமர்ந்திருந்தான்.​

"சாரி சார் நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் எனக்கு அத பத்தி கவலை இல்லை கண்டிப்பா கொடுத்த கம்ப்ளைன்ட்க்கு நான் ஆக்சன் எடுத்தே தீருவேன்! இப்ப நீங்க என்னோட கண்டிப்பா போலீஸ் ஸ்டேஷன் வந்து தான் ஆகணும் இல்லனா உங்க கையில விளங்கு மாட்டி வலுக்கட்டாயமா இழுத்துப் போக வேண்டி இருக்கும்.."என அமைதியாக இருந்தான் துரியோதனன்.​

"என்னால வர முடியாது உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணுங்க.."என்ற துரியோதனன் தான் அமர்ந்திருந்த நாற்காலியில் சட்டமாக அமர்ந்தபடி சொல்ல, அவன் செயலில் மிகவும் கோபம் வந்துவிட்டது அந்த இன்ஸ்பெக்டருக்கு.​

"இங்க பாருங்க சார் யாரோ ஒருத்தவங்க கொடுத்த கம்ப்ளைன்ட் காக இப்படி என் பிரண்டை நீங்க அரெஸ்ட் பண்ண முடியாது.."என்றான் அபிமன்யு.​

"ஆதாரம் இருக்குது சார் ஆதாரம் வேற யாரும் இல்லை இங்கேயே இருக்காங்க.."என்ற அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன ஆதாரம் அன்று அருந்ததி கழுத்தை துரியோதனன் நெரிக்கும் பொழுது சரியாக உள்ளே வந்த அந்த தாதி பெண் தான்.​

அந்தப் பெண்ணை தன் பக்கத்தில் அழைத்த இன்ஸ்பெக்டர் "இதனால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது சொல்லுங்க.."என்றிட, கைகளை பிசைந்த அந்த தாதிப் பெண் துரியோதனையை நிமிர்ந்து பார்ப்பதற்கே அச்சம் கொண்டவளாக தலையை தாழ்த்திக் கொண்டு "ஆமாங்க சார் எங்க ஹாஸ்பிடல் ஓனர் துரியோதனன் சார் அன்னைக்கு ஒரு பொண்ணை கழுத்தை பிடித்து நெரிச்சுக்கிட்டு இருந்தாங்க அதை நானே பார்த்தேன் நான் மட்டும் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பா அவங்க செத்துப் போய் இருப்பாங்க.."என்று சொல்ல,அபிமன்யு எதுவும் சொல்ல முடியாது வாயடைத்துப் போக அந்த இன்ஸ்பெக்டர் அவனை மிதப்பாக பார்த்து வைத்தார்.​

"இதுக்கு மேல யாராவது பிரச்சனை பண்ணா அவங்களையும் சேர்த்து அரெஸ்ட் பண்ண வேண்டி இருக்கும்.."என்று கோபமாக சொன்னவர் துரியோதனன் கைகளில் விளங்கை மாட்டி மருத்துவமனையில் அத்தனை பேர் பார்க்க அழைத்துக் கொண்டு செல்ல,தமிழ்நாடு முழுவதும் தலைப்புச் செய்தியாக அது மட்டுமே ஒளிபரப்பப்பட்டது.​

அவனே சரியில்லாத பொழுது அவன் நிர்வகித்துக் கொண்டிருக்கும் மருத்துவமனையும் கல்லூரியும் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று செய்தியில் புதுப்புது புரளிகளை கிளப்பி விட அங்கு படிக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் அதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலை கொள்ளாது தொடர்ந்து தங்கள் வேலையில் ஈடுபட்டு வந்தார்கள்.​

அவர்கள் அனைவருக்கும் தான் தெரியுமே கல்லூரியின் தரம் என்னவென்று?​

அங்கிருக்கும் அத்தனை பேரும் நிச்சயம் துரியோதனன் மீது விழுந்திருப்பது வீண்பழி என்று தெரிந்ததால் அவனுக்காக வருத்தம் கொண்டவர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் படிப்பை நிறுத்தி போராட்டம் செய்யவில்லை.​

வேறு எந்த கல்லூரிகளிலும் கிடைக்காத அத்தனை சலுகைகளும் அந்த கல்லூரியில் கிடைக்கிறது அல்லவா?​

ஒரு அவசரத்திற்கு பீஸ் கட்ட முடியவில்லை என்றால் அதை துரியோதனன் கணக்கிலிருந்து முதலில் கட்டி விடுவார்கள்.பிறகு இவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தை அதில் சேர்த்து இணைத்து விடுவார்கள்.​

சாதாரண கல்லூரியிலேயே பணம் கட்டாது இருந்தால் கல்லூரியை விட்டு துரத்தும் காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியில் தங்கள் பீசை முதலாளியே முன் நின்று கட்டுவது எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை பெரிய விஷயம் தான்.​

சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த துரியோதனன் இதழ்கள் "அருந்ததி"என்று அவள் பெயரை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருந்தது.​

"எதுக்கு அருந்ததி? ஏன் இந்த தேவையில்லாத வேலை உனக்கு! துரியோதனன் நான் இந்த பெயரை இதுக்கு முன்னாடி நிறைய தடவை நியூஸ்ல கேள்விப்பட்டு இருக்கேன்.. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வரிசையில் இருக்கிறவங்களை இவங்களும் ஒருத்தவங்க இவங்க கிட்ட எதுக்காக தேவையில்லாம போய் வம்பு பண்ண?"கோபமாக மரகதம் கத்த, அவரைப் புன்னகையோடு பார்த்தாள் அருந்ததி.​

"பாரதி கண்ட புதுமைப் பெண் தான் நான் மரகதம் அம்மா எந்த இடத்தில் தப்பு நடந்தாலும் கண்டிப்பா அமைதியா போக மாட்டேன் தட்டி கேட்பேன்.."​

"அதுதான் நானும் உன்கிட்ட ஏன்னு கேட்கிறேன்?இந்த உலகத்தில் எல்லாரும் அவங்கவங்க தங்களுடைய பிரச்சினை தான் முக்கியம் அடுத்தவங்க எப்படி போனா எனக்கு என்னன்னு போய்கிட்டு இருக்க காலத்துல எதுக்காக தேவையில்லாம நீ மட்டும் இப்படி பிரச்சனையை வம்பு கொடுத்து வாங்கிட்டு வர்ற?"​

"நீங்க சொல்ற மத்தவங்களுக்கு எல்லாம் குடும்பம் பிள்ளைகள் அப்படி இப்படி என நிறைய இருக்கு ஆனா எனக்கு அப்படி எதுவும் இல்லை.. நான் ஒரு தனி ஆள் எனக்கு எது ஆனாலும் கவலைப்படுவதற்கு யாரும் இல்லை அப்ப நான் தைரியமா துணிந்து கேட்கலாமே?"​

"சத்தியமா உன்கிட்ட இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை அப்ப நான் உனக்கு யாருமே இல்லையா?"​

"தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க மரகதம் அம்மா நான் சொல்றது உங்க மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் இதுதான் உண்மை இதை நம்ம ஏத்திக்கிட்டு தான் ஆகணும்.. எனக்குன்னு நீங்க உங்களுக்கு நான்னு இருக்கலாம் என்கிட்ட இழக்கறதுக்கு எதுவும் இல்ல ஒருவேளை நீங்க என் மேல பாசமா இருந்தா கண்டிப்பா உங்களை இழக்க வேண்டி வரும் அதனால இனிமே நீங்க என்கூட இருக்க வேண்டாம் என்னை விட்டு போயிடுங்க..உங்களுக்கு ஒரு நல்ல ஹோம் நானே பார்த்து வச்சிருக்கேன் உங்களுடைய செலவு எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன் மா.."என்றவளை அதிர்ச்சியாக பார்த்தார் மரகதம்.​

 

"யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவு எடுத்த அருந்ததி?"​

"மன்னிச்சிடுங்க நீங்க மட்டும் இந்த முடிவுக்கு ஒத்துக்கலைன்னா கண்டிப்பா உங்களை விட்டு நான் ரொம்ப தூரம் போயிடுவேன்.. கண்டிப்பா அந்த துரியோதனன் நான் செஞ்சு வச்ச வேலைக்காக என்னை பழிவாங்க நினைப்பார் அதுக்காக அவர் உங்களை என்கிட்ட பணயம் வைக்க கூட தயங்க மாட்டார் அவரைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்.."​

"நான் என்ன சொல்ல வரேன்னு ஒரு நிமிஷம் கேளு.."​

"நீங்க என்ன உங்களுடைய சொந்த பொண்ணா நினைக்கிறது உண்மையா இருந்தா எந்த மறுப்பும் சொல்லாம இதுக்கு ஒத்துக்கோங்க.."என்ற அருந்ததியின் கடைசி வார்த்தையில் எதுவும் பேச முடியாது அமைதியாகிவிட்டார் மரகதம்.​

"என்ன கண்ணம்மா ரொம்ப சந்தோசமா இருக்க போல இருக்கு.."​

"அப்புறம் இருக்க மாட்டேனா மூர்த்தி என்னோட ரொம்ப நாள் கனவு இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு அத நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு.."என்ற கண்ணம்மாவின் கண்கள் தொலைக்காட்சியில் துரியோதனனை போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட அதை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணம்மா.​

"நாம ரெண்டு பேரும் எதிர்பார்த்தது போலவே துரியோதனன் ஜெயிலுக்கு போயிட்டான் அவனை ஜெயிலுக்குள்ளேயே வச்சு போட்டு தள்ளிடலாமா?"என்று மூர்த்தி சந்தோசமாக கேட்க, அவருக்கு வேண்டாம் என்று தலையசைத்தார் கண்ணம்மா.​

அவரது செயலில் குழப்பமாக மனைவியை பார்த்தார் மூர்த்தி.​

"எதுக்காக வேண்டாம்னு சொல்ற கண்ணம்மா இதை விட்டா நமக்கு வேற நல்ல வாய்ப்பு கிடைக்காது!"​

"என்னதான் இருந்தாலும் அவன் என்னோட பேரன் நான் தூக்கி வளர்த்த என்னோட செல்ல பேரன் கண்டிப்பா அவன் உயிருக்கு எதுவும் ஆகக்கூடாது அவன் உயிரோட தான் இருக்கணும்..எப்படியோ நாம செய்யனும் நெனச்சத வேற ஒரு பொண்ணு செஞ்சு முடிச்சிட்டா..அந்த பொண்ணுக்கு நம்ம சார்பில் ஒரு பத்து இருபது தூக்கி போடுங்க.."என்ற கண்ணம்மா கையில் வைத்திருந்த ஒயினை அருந்த, தன் தோள்களை குலுக்கி கொண்டு அங்கிருந்த நகர்ந்து விட்டார் மூர்த்தி.​

"ஐ அம் சாரி துரியோதனா தயவு செஞ்சு என்னை மன்னித்துவிடு டா உன்னை வெளியில் எடுக்க இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.."என்று மன்னிப்பு கேட்ட நண்பனை பார்த்து குறுநகை புரிந்தான் மன்னவன்.​

"இப்ப எதுக்குடா சிரிக்கிற?"என்று கர்ணன் தான் கோபமாக கேட்டான்.​

"நானும் உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் துரியோதனா ஒரு சின்ன சின்ன விஷயத்துக்கு கூட ரொம்ப கோபப்படுற நீ இந்த விஷயத்துல கொஞ்சம் கூட கோபப்படாம இப்படி சிரிக்கிறதுக்கு என்ன காரணம்? எதுக்காகவோ இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க அந்த பொண்ணை கண்டிப்பா நீ சும்மா விட மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அந்த பொண்ணோட ஆதி முதல் அந்தம் வரை எல்லாத்தையும் விசாரிச்சு வச்சுட்டேன் மச்சான்.."​

"இதுக்கு மேல நீ எதுவும் பேச வேண்டாம் அபி என்ன பண்ணனும்னு எனக்கு நல்லா தெரியும் நீ அமைதியா இரு.."என்ற துரியோதனன் கைகளில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்து செல்ல, அவன் அப்படி நடந்து செல்வதை வேதனையுடன் பார்த்தபடி அவனை பின் தொடர்ந்தார்கள் கர்ணன் அபிமன்யு இருவரும்.​

தொலைக்காட்சியில் துரியோதனன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்வதை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள் பூஜா.​

அவள் நினைத்தது என்னவோ துரியோதனனிடம் அருந்ததி சிக்கி படாத பாடு பட்டு தவிக்கப் போகிறாள் என்பதை தான்!​

ஆனால் அதற்கு நேர்மாறாக அருந்ததியிடம் துரியோதனன் படாத பாடு பட்டு சிக்கிக் கொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க அங்கு கோபமாக வந்தார் உமா.​

தொலைக்காட்சியை ஆப் செய்தவர் மகளை கோபமாக முறைத்து பார்க்க, பூஜா அவர் எதற்காக அப்படி பார்க்கிறார் என்று தெரியாமல் அவரை குழப்பமாக பார்க்க "சொல்லு அருந்ததி இப்படி அடுத்தவங்களை வஞ்சிக்கிற பொண்ணு கிடையாது கண்டிப்பா அந்த பொண்ணு ஏதாவது ஒன்னு செஞ்சா அதுல ஒன்னுக்கு 1000 அர்த்தம் இருக்கும் எனக்கு என்னமோ உன் மேல தான் இப்ப சந்தேகமா இருக்கு உண்மைய சொல்லு பூஜா.."என்று சரியாக கண்டுபிடித்து தன்னிடம் கேள்வி கேட்கும் தாயை மனதுக்குள் திட்டியபடி வெளியில் அப்பாவியாக பார்த்த பூஜா "ஏதாவது ஒன்னுனா என்கிட்டே வந்துடுங்க எனக்கு வேற வேலை இல்ல பாருங்க போயி அவளிடம் கேளுங்க எனக்கு ஆயிரம் வேலை இருக்கு.."என்று நைசாக நழுவி விட்டாள்.​

அவள் அப்படி சொன்னாலும் அவளை நம்பாமல் சந்தேகமாக உமா பார்க்க பூஜா அதைக் கண்டும் காணாதது போல் சென்று விட்டாள்.​

"அப்பா கர்ணா என் பேரன் இப்ப எப்படி இருக்கான்?அவனுக்கு கண்ணு தெரியாம போச்சாமே போதாததுக்கு போலீஸ்ல வேற பிடிச்சுட்டு போய்ட்டாங்கலாமே என் பேரனை நான் பார்க்கணும்.."என்று சிறுபிள்ளை போல் அழுது கொண்டிருந்த காயத்ரியை பரிதாபத்துடன் பார்த்தான் கர்ணன்.​

குச்சி போன்று இருந்த அவர் கைகளை மென்மையாக பிடித்த கர்ணன் அவர் கைகளுக்குள் தன் கைகளை வைத்து அழுத்தி "கவலைப்படாதீங்க பாட்டி நானும் அபிமன்யுவும் இருக்கிறவரை உங்க பேரனுக்கு எதுவும் ஆகாது ஆகவும் விடமாட்டோம் நீங்க கவலைப்பட கூடாது.. இப்போதைக்கு நீங்க துரியோதனனை பார்க்க முடியாது அவன் இப்போ கொஞ்சம் கோபமா இருக்கான் அதனால கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் நானே உங்களை கூட்டிட்டு போறேன் அதுவரைக்கும் நீங்க அமைதியா இருங்க.."என்ற கர்ணன் அழும் அவரது முகத்தை பார்க்க பிடிக்காமல் அவரிடம் சொல்லாமல் கூட விடைபெற்று வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த காரை எடுக்க வர அங்கு ஜோடி போட்டுக் கொண்டு வந்தார்கள் கண்ணம்மா மூர்த்தி இருவரும்.​

இருவரும் இவன் அங்கு நிற்பதை பார்த்தாலும் இவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் கடந்த செல்ல அவர்களை அருவருப்பாக பார்த்தான் கர்ணன்.​

60 வயதிலும் குடும்ப பெண்ணுக்கான எந்தவிதமான பாங்கும் இல்லாமல் அரைகுறை உடையுடன் 20 வயது பெண் போல் செல்லும் துரியோதனனின் தந்தையின் தாயையும் அவரது தகப்பனாரையும் கொலை வெறியோடு பார்த்தான்.​

ஆனால் உயிர் நண்பனும் யாரை எங்கு வைக்க வேண்டும் என்று தெரியாமல் அல்லவா வைத்து இருக்கிறான்.​

இவனுக்காக சிறு பிள்ளை போலும் அழுகும் காயத்ரியை எந்த இடத்தில் வைத்திருக்கிறான்?​

அதுவே அவன் எப்படி இருக்கிறான் என்பது கூட தெரியாமல் உல்லாசமாக தெரியும் கண்ணம்மா மூர்த்தி இருவரையும் பணக்கார வீட்டில் சந்தோஷமாக வைத்திருப்பதை நினைத்து கோபமாக அங்கிருந்து தன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான்.​

"இப்ப என்ன பண்ண போற மச்சான்? நீ இத்தனை நாளா எல்லார்கிட்டயும் பிளேபாய்ன்னு மட்டும்தான் பேர் எடுத்து வச்சிருந்த.. இப்ப எல்லாரும் உன்னை கொலைகாரன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க? இதுக்கு நீ என்ன பதில் சொல்ல போற!"என்று கோபமாக கேட்டான் அபிமன்யு.​

"உன் கேள்வி எதுக்கும் இப்ப என்கிட்ட பதில் இல்லை அபி ஆனா அத்தனை கேள்விக்கும் பதில் கூடிய சீக்கிரமே கிடைக்கும்..சரி இப்ப நான் ஒரு முக்கியமான இடத்துக்கு போறேன் என்னை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க நான் எப்ப வேணும்னாலும் திரும்பி வருவேன் அதுவரை என் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் பொறுப்பா இருந்து பாத்துக்கோ என்னோட சிக்னேச்சர் முக்கியமான விஷயம் எதுக்காகவாவது தேவைப்பட்டா நீதான் என்னைவிட பெர்பெக்ட்டா போடுவியே அப்படியே போடு.. இனிமே இந்த கண்ணு தெரியாத குருடனால் எதிலையும் கையெழுத்து போட முடியாது அதனால இனிமே நீயே பார்த்துக்கோ இப்ப எனக்கு தேவை ஒரு பிரைவசி மட்டும்தான்.."என்ற துரியோதனன் அபிமன்யு பதிலுக்காக காத்திருக்காமல், காரில் ஏறி அமர இவனுக்காக புதிதாக ஒரு டிரைவர் காருக்கு போடப்பட்டிருந்தான்.​

அவனும் துரியோதனன் தந்தை ஜனார்த்தன் காலத்தில் இருந்தே அந்த வீட்டுக்கு டிரைவராக வேலை புரிந்து வருபவர்கள்.​

இதற்கு முன்பாக மூர்த்திக்கு டிரைவராக இருந்தவனை கர்ணன் தான் அவன் மீது இருந்த நம்பிக்கையில் துரியோதனனுக்கு டிரைவராக மாற்றி விட்டான்.​

அந்த குடும்பத்தின் மீது விசுவாசம் கொண்ட அந்த டிரைவரும் மூர்த்திக்கு சேவை செய்வது பிடிக்காது தன் எஜமானுக்கு சேவை செய்வதே தன் தலையாயக் கடமை என்று கர்ணன் சொன்னதும் மறுப்பேச்சு இல்லாமல் ஒப்புக்கொண்டான்.​

"சார் எங்க போகணும் சொன்னீங்கன்னா அங்க கூட்டிட்டு போவேன்!"என்று அந்த டிரைவர் பவ்யமாக கேட்க,இருக்கையில் பின்னால் நன்றாக சாய்ந்த அமர்ந்த துரியோதனன் கைகள் இரண்டையும் தலைக்கு பின்னால் கட்டியபடி காரை அண்ணாந்து பார்த்தவன் கண்களில் கருப்பு நிற கண்ணாடி இருந்தது.​

"***** இந்த இடத்துக்கு போ முக்கியமான விஷயம் நீ அந்த இடத்துக்கு என்னை கூட்டிட்டு போறது யாருக்கும் தெரிய கூடாது மீறி தெரிஞ்சா உன்னை மாத்திடுவேன்.."என்ற துரியோதனன் சொல்லுக்கு அடிபணிந்து அந்த டிரைவரும் அவன் சொன்ன இடத்துக்கே அழைத்து சென்றான்.​

துரியோதனன் சொன்ன இடத்திற்கு டிரைவர் காரை கொண்டு வந்து நிறுத்தியவன் "சார் நீங்க சொன்ன மாதிரி அதே இடத்துக்கு வந்தாச்சு இப்ப என்ன பண்ணட்டும்?"என்று பின்னால் திரும்பி கேட்க,காரில் வரும் வரை மனதுக்குள் மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்த துரியோதனன் காரில் இருந்து இறங்கியவன் அதை வேகமாக அடித்து சாத்த அவன் சாத்திய வேகத்தில் கார் ஒரு நிமிடம் குலுங்கி நின்றது.​

அந்த அதிர்ச்சியில் கார் மட்டுமல்ல அதோடு ஒட்டி இருந்த டிரைவரும் ஒரு நிமிடம் உடல் குலுங்க அதிர்ந்து போனான்.​

கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக் உதவியோடு துரியோதனன் நடந்து சென்றவன் எதிரிலிருந்த கல் தடுக்கி அப்படியே குப்புற விழுக, அதை பார்த்து அதிர்ச்சியுடன் ஓடி வந்தான் அந்த டிரைவர்.​

துரியோதனன் கைகளை பிடித்து தூக்கி விட்டவன் "சார் பார்த்து எந்திரிங்க சார் உங்களுக்கு எதுவும் ஆகலை தானே! அடி எதுவும் பெருசா படல தானே!!"என்று கரிசனமாக கேட்க அந்த கரிசனம் கூட, துரியோதனனுக்கு வெறுப்பை தான் கொடுத்தது.​

அவன் கைகளை தட்டி விட்டவன் அப்படியே கால் போன போக்கில் நடக்க ஆரம்பிக்க,அவனது கட்டளைக்கு அடிபணிந்து அவனை பின் தொடராமல் அந்த டிரைவர் அங்கேயே நின்றவன் கர்ணனுக்கு போன் செய்து கேட்க,"இந்த நிலைமையில் அவன் எங்கேயும் தனியா விட வேண்டாம் நீ காரை அதே இடத்தில் விட்டுட்டு அவனுக்கு தெரியாம அவனை ஃபாலோ பண்ணு.. முக்கியமான விஷயம் துரியோதனனுக்கு புத்தி கூர்மை ரொம்ப அதிகம் கண்டிப்பா நீ அவனை தனியா விடாம அவன் பின்னாடி தொடர்ந்து போவேன்னு அவனுக்கு நல்லா தெரியும் அதனால பார்த்து கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணு.."என்று சொல்ல, அவன் பேச்சை கேட்டு அந்த டிரைவரும் காரை அங்கேயே விட்டுவிட்டு துரியோதனனை பின்தொடர்ந்து சென்றான்.​

அந்தோ பரிதாபம்! ஒரு இடத்தில் அவனைத் தவற விட்டுவிட்டான்.​

இப்படி யாருக்கும் தெரியாமல் நடந்து சென்ற துரியோதனன் அப்படி என்று தான் போகப் போகிறான்??​

ஆம். வாசகர்கள் உங்கள் யூகம் சரியாக இருப்பின் அவன் சென்றது என்னவோ அருந்ததி வீட்டிற்குத்தான்.​

எப்படி சரியாக அவளது வீட்டிற்கு சென்றான்? அதுவும் கண்கள் தெரியாத நிலையில் சரியாக அவள் வீட்டிற்கு எப்படி சென்றான்? டிரைவர் அவனை இறக்கி விட்டதோ அருந்ததி வீட்டுக்கு எதிர் திசையில் அவன் சரியான திசையை கண்டுபிடித்து எப்படி அவளது வீட்டிற்கு வந்து சேர்ந்தான்? அவளது வீட்டிற்கு வந்ததன் நோக்கம்தான் என்னவோ!!​

 
Status
Not open for further replies.
Top