வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"துரியோதனனின் அருந்ததி(தீ)!!"கதை திரி

Status
Not open for further replies.

தீ-12​

தன் கையில் வைத்திருந்த புகைப்படத்தையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.​

அதில் நாற்காலியில் மரகதம் அமைந்திருக்க அவருக்கு பின்னால் நின்று அவர் கழுத்தை கட்டி பிடித்தபடி அவர் தலை மீது தன் தலையை வைத்திருந்தாள் அருந்ததி.​

அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட ஒரே புகைப்படம் அது மட்டும் தான்.​

அந்த புகைப்படத்தை பார்க்க பார்க்க அவள் கண்களில் கண்ணீர் அதிகமாக வழிந்தது.​

"தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க மரகதம் அம்மா இப்ப நான் இருக்க நிலைமையில நீங்க என் கூட இருந்தா கண்டிப்பா அது உங்களுக்கும் ஆபத்தா கூட மாறும்.. வாழ்க்கையில எல்லாத்தையும் நான் இழந்துட்டேன் இனிமே என்கிட்ட இழக்கறதுக்கு எதுவும் இல்லை அந்த கடவுள் தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு உங்களை கொடுத்திருக்கிறார் எக்காரணம் கொண்டும் உங்களையும் நான் இழக்க விரும்பலை இப்போதைக்கு நீங்க என்னை விட்டு தூரமாய் இருப்பது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது.."என்று வாய் விட்டு புலம்பியவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல், அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.​

அவள் சொன்ன வார்த்தைக்காக மரகதம் அங்கிருந்து போக பிடிக்கவில்லை என்றாலும் அவளுக்காக அந்த வீட்டை விட்டு காலையில் தான் சென்றிருந்தார்.​

எப்பொழுதும் அவர் கொடுக்கும் உணவுகளை மட்டுமே உண்டு பழக்கம் கொண்டவளுக்கு இப்பொழுது யாரும் இல்லாத தனிமை பெரும் துயராக அமைந்து போனது.​

இதுதான் அவள் வாழ்க்கையில் கடைசி வரை இருக்கப் போகும் விதியோ..​

அனைவரும் குடும்பம் குழந்தை தங்கள் தாய் தந்தை அதுவும் பெண்களாக இருந்தால் புகுந்த வீடு பிறந்த வீடு என்று இத்தனை சலுகைகள் உண்டு.​

பல சொந்தங்களுக்கு நடுவில் வாழ்வதை கண்டு எப்போதும் ஒரு புன்னகையுடன் கடந்து போனவளுக்கு இப்போதெல்லாம் அதை யோசிக்க யோசிக்க வேதனை மட்டும் தான் மிஞ்சியது.​

இப்போதெல்லாம் அவளுக்கு எதன் மீதும் எதிர்பார்ப்பு இல்லை. அனைத்தையும் இழந்த ஒரு வெறுமையான மனநிலை.இன்னும் சொல்லப்போனால் தான் ஏன் இந்த உலகில் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று தெரியாமல் உயிர் வாழவே பிடிக்காமல் அனைத்தும் வெறுத்த நிலையில் இருந்தாள்.​

இப்படி தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருக்க காலையும் கடந்து மாலைப்பொழுதும் புலர்ந்தது.​

அவள் வீட்டில் இருந்தால் போதும் ஒரு நேரம் கூட அவள் வயிரை வாட விடாமல் பார்த்துக் கொள்வார் மரகதம்.​

பெற்ற தாயை விட ஒரு படி அதிகமாக பார்த்துக் கொண்டதால் தான் என்னவோ அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று அவள் தன்னை விட்டு அவரை தூரமாக அனுப்பி வைத்ததே!!​

எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.​

'இந்த நேரத்தில் யார் கதவு தட்டுறாங்க?'என்று மனதில் தோன்றிய யோசனையோடு,கண்களில் வழிந்த கண்ணீரை அழுத்தமாக துடைத்து விட்டு புகைப்படம் முன்பு எங்கு இருந்ததோ அதே இடத்தில் மாட்டி வைத்துவிட்டு வெளியில் வந்தவள் கதவை திறக்க அங்கு புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள் பூஜா.​

தங்கையை கண்டவள் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.​

"இப்பதான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அருந்ததி அந்த துரியோதனனுக்கு கண்பார்வை தெரியாமல் போயிடுச்சாமே! எனக்கு கண்டிப்பா தெரியும் அதுக்கு காரணம் நிச்சயம் நீயா தான் இருப்பேன்னு கண்டிப்பா தெரியும் இந்த அக்கா மேல உனக்கு எவ்வளவு அன்பு.."என்று நக்கலாக சொல்ல, அவள் குரலில் இருந்த பேதத்தை நன்றாக உணர்ந்து கொண்டாள் அருந்ததி.​

ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு பெண் தன்னுடைய தன்மானத்தை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பது அருந்ததியின் எண்ணமாக இருந்தது.​

ஆனால் அவள் அக்கா அனைத்திற்கும் விதிவிலக்காக இருக்கும் பெண் என்பது பாவம் அவளுக்கும் தெரியாது அல்லவா!!​

"சொல்லு கண்டிப்பா இதுக்கு காரணம் நீயா தான் இருப்ப என்ன பண்ண?"என்று குதூகலமாக பூஜா கேட்க, அவளை சலிப்பாக பார்த்தாள் அருந்ததி.​

"நான் எதுவும் பண்ணல எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தேவையில்லாத எந்த பிரச்சினையிலும் நான் தலையிடுறதா இல்ல.."​

"பொய் சொல்லாத அருந்ததி கண்டிப்பா இதுக்கு நீ தான் காரணமா இருப்ப.."எனவும் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே இரு என உள்ளே சென்று விட்டாள் அருந்ததி.​

தான் இத்தனை கேட்டும் கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாமல் தன்னையே அலட்சியம் செய்வது போல் உள்ளே சென்ற தங்கையை காணும் பொழுது பூஜாவிற்கு கோபம் வந்துவிட்டது.​

"இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?"​

"நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் ஒன்னே ஒன்னு தான் எனக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தேவையில்லாத விஷயம் எதிலும் நான் தலையிடுவதும் இல்லை தயவு செஞ்சு நீங்க இங்கே இருந்து கிளம்புங்க உங்களுக்கு தான் என் வீட்டுக்கு வர்றது பிடிக்காதே.."​

"ஹான் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அருந்ததி இது உன்னோட வீடு மட்டுமில்லை என்னோட வீடும் கூடத்தான் ஞாபகம் இருக்கு தானே!!"என்று அவள் அந்த வீட்டில் தனக்கும் பங்கு இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு சொல்ல, வெள்ளந்தி மனம் கொண்ட அருந்ததி தங்கள் சொந்த தாய் வீடு என்பதால் அவளுக்கும் அதில் உரிமை இருக்கிறது என்று சொல்கிறாள் என தவறாக எடுத்துக் கொண்டாள்.​

"கண்டிப்பா அக்கா இந்த வீட்டிலயும் உங்களுக்கு உரிமை இருக்குதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா எனக்கு இப்ப வரைக்கும் புரியாது புதிரா ஒன்னே ஒன்னு தான் இருக்கு அதை கேட்கவா?"என்று அவள் கேள்வி கேட்ட தோரணையே பூஜாவிற்கு ஒரு மாதிரியாக இருக்க,"சரி அப்படி என்னதான் என்கிட்ட கேக்க போற கேளு நானும் பார்க்கிறேன்.."என்றாள்.​

"இந்த வீட்ல உரிமை இருக்குன்னு வார்த்தைக்கு வார்த்தையை ஆயிரம் தடவை சொல்ற நீங்க பாட்டி தாத்தா செத்துப்போன போது நீங்க வராம போயிட்டீங்க..அவங்க ரெண்டு பேரும் தான் நம்ம ரெண்டு பேரையும் கஷ்டப்பட்டு தூக்கி வளர்த்தாங்க அவங்க ரெண்டு பேரோட கடைசி நிமிஷத்துக்கு கூட உங்களால வர முடியல அப்படி இருக்க இந்த வீட்ல உங்களுக்கு உரிமை மட்டும் எங்கிருந்து வரும் அக்கா?"என்று அருந்ததியின் கேள்வியில் திகைத்து விட்டாள் பூஜா.​

அவளிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவள் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் "சரி அருந்ததி நான் உமா அம்மாவுக்கு தெரியாம தான் இங்க வந்தேன் அவங்களுக்கு நான் இங்கே இருக்க விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக தேவையில்லாத பிரச்சினை வரும்.. உன்னோட கேள்வி எல்லாத்துக்கும் நான் அப்புறமா பதில் சொல்றேன்.."என்றவள் நைசாக நழுவி சென்றுவிட, அருந்ததி மனதில் குற்ற உணர்வு தலை தூக்கியது.​

'ஒருவேளை நான் தப்பு பண்ணிட்டேனா?' என்று அருந்ததியின் மனசாட்சி அவளிடம் கேள்வி எழுப்ப, அந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை என்பதே உண்மை.​

அவள் அங்கிருந்து சென்றதும் ஒரு பெருமூச்சு விட்ட அருந்ததி வீட்டை சுத்தம் செய்துவிட்டு இரவு அவளுக்கு தேவையான உணவை அவளே தயாரிக்க ஆரம்பித்தாள்.​

உணவுகளை சமைத்து முடிக்கும் தருவாயில் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.​

"இந்த பூஜா அக்காவுக்கு என்ன தான் வேணும் அவங்க கிட்ட தான் எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டேனே அப்புறம் எதுக்கு மறுபடியும் மறுபடியும் தேடி வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல.."என்று வாய்விட்டு புலம்பியவள் கதவை திறக்க, அவளுக்கு முன்பாக கருப்பு நிற தொப்பியும் கண்களில் கருப்பு நிற கண்ணாடியும் கையில் ஸ்டிக் குச்சியின் உதவியோடு ஒருவன் நிற்க, அவனை புரியாமல் பார்த்தாள்.​

"ஹலோ யார் நீங்க? எதுக்காக இப்ப தேவையில்லாம கதவை தட்னீங்க ஏதாவது அட்ரஸ் வேணுமா?"என்று கேட்க,அவளது எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவளை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் அவன்.​

தன்னை தள்ளி கொண்டு ஒருவன் உள்ளே வருவதை அதிர்ச்சியாக பார்த்த அருந்ததி தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய வீட்டிற்குள் வந்தவனை கோபமாக பார்த்தாள்.​

"யார் நீங்க? உங்ககிட்ட தானே கேட்டுகிட்டு இருக்கேன் கொஞ்சம் கூட அடிப்படை நாகரிகம் இல்லாம அடுத்தவங்க வீட்டுக்குள்ள வரீங்க.. மரியாதையா என் வீட்டை விட்டு வெளிய போங்க.."என, அவளை நக்கலாக பார்த்தபடி தன் தலையில் அணிந்திருந்த தொப்பியையும் கண்களில் அணிந்திருந்த கண்ணாடியும் துரியோதனன் கழட்டினான்.​

அது இரண்டும் அவனை விட்டு அகன்ற பிறகு அவன் யார்? என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.​

"நீங்க நீங்க இங்க என்ன பண்றீங்க? எதுக்காக உங்க அடையாளம் எல்லாத்தையும் இப்படி மறைச்சிட்டு வந்து இருக்கீங்க.."என்றாள் தன் மனதுக்குள் தோன்றிய அதிர்ச்சிகள் அனைத்தையும் மறைத்தபடி.​

"உன் வீட்டுக்கு எதுக்கு வந்து இருக்கேன் இன்னும் உனக்கு தெரியாதா உன் கூட குடும்பம் நடத்த தான்!"என்றவன் குச்சியை ஓரமாக வைத்துவிட்டு அங்கிருந்த சுவர்களை தடவி பார்த்தபடி நடந்து சென்றவன் எதிரில் இருந்த சோபாவில் காலை இடித்து கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.​

"அவுச்" என்று வலியில் கத்தியவன் காலை பிடித்தபடி, அமர்ந்துவிட அவன் பக்கத்தில் வேகமாக ஓடி வந்தாள் அருந்ததி.​

"என்னாச்சு ரொம்ப வேகமா இடிச்சிக்கிட்டிங்களா! காலை காட்டுங்க நான் பார்க்கிறேன்.."என்றவள் துரியோதனன் கால்களை பிடிக்க வர அவள் கைகளை தட்டி விட்டான்.​

"தொடாத உன்னை மாதிரி ஒரு புவர் லேடி என்னை தொடுவது கூட எனக்கு ரொம்ப பெரிய அசிங்கம்.. என்னோட கண்ணையும் என்கிட்ட இருந்து பிடிங்கி என்னை ஜெயிலுக்கு அனுப்பி என் கெரியர் மொத்தத்தையும் நாசம் பண்ண உன்ன அப்படியே சும்மா விட்டுடுவேன் மட்டும் நினைக்காதே!!"​

"நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தது ஜஸ்ட் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் நீங்க எவ்வளவுதான் பெரிய ஆளாய் இருந்தாலும் நீங்களும் ஒரு சாதாரண மனுஷன் தான்..இந்த உலகத்துல எவ்வளவு பெரிய ஆளுங்களா இருந்தாலும் ஆம்பள ஆம்பள தான் பொம்பள பொம்பள தான் அதுல எந்த விதமான மாற்றமும் இருக்காது.. இன்னைக்கு இருக்க அந்த பணம் ஒரு நாள் நிச்சயமா உங்கள விட்டுப் போகும் அன்னிக்கு நீங்க என்ன பண்றிங்கன்னு நானும் பாக்குறேன்.."என்றாள் சவாலாக அருந்ததி.​

அவன் சொன்னதை கேட்டு துரியோதனன் இதழ்களில் ஒரு புன்னகை.​

அந்த புன்னகையை பார்க்கும் பொழுது அருந்ததிக்கு மனதில் ஒரு பயத்தை உண்டு பண்ணியது.​

இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் "நீங்கதான் அவ்வளவு பெரிய பணக்காரர் ஆச்சே அப்புறம் எதுக்கு இந்த ஏழை வீட்டுக்கு வந்தீங்க! ஒழுங்கு மரியாதையா என் வீட்டை விட்டு போங்க.."என்றவள் இடையை சுற்றி வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன் அவள் தன்னை விட்டு நகராமல் இருப்பதற்காக உடும்பு பிடியாக ஒரு கையை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன் மற்றொரு கையை வைத்து அவள் முகத்தில் கோலம் போட்டு கொண்டு வந்தவன் கைகள் அவள் இதழில் நிலைத்து நிற்க,அவன் செயலில் அருவருப்பாக உணர்ந்த அருந்ததி அவனிடம் இருந்து போராடினாள்.​

"டேய் என்ன மரியாதையா விடுடா ஒழுங்கா மரியாதையா என் மேல இருந்து கையை எடு இல்ல இதுக்கு அப்புறம் நடக்க போறது எதுக்கும் நான் பொறுப்பு இல்ல விடுடா பொறுக்கி நாயே.."என்று அவன் கைகளில் சிக்கி இருந்த இரு கைகளையும் விடுவிக்கப் போராட, அவளை வன்மாமக பார்த்த துரியோதனன் சற்றும் தாமதிக்காது அவள் இதழ்களோடு தன் இதழ்களை புதைத்துக் கொண்டான்.​

அவன் அதிரடியில் அருந்ததி அதிர்ந்து நிற்க, அவளைப் பற்றி எல்லாம் சிறிதும் கணக்கில் கொள்ளாத துரியோதனன் அவள் இதழ்களுக்குள் முடிந்தவரை தன்னை ஆழமாகப் புதைத்துக் கொள்ள சரியாக அந்த நேரம் அருந்ததி வீட்டு கதவை திறந்து கொண்டு வந்தது பத்திரிக்கை ஊடகம்.​

அவர்கள் இருவரும் அந்த நிலைமையில் இருப்பதை கண்டு வேக வேகமாக அதை தங்கள் கேமராவிற்குள் உள்வாங்கிக் கொள்ள "பளிச் பளிச்" என்னும் பிளாஷ் லைட் சத்தத்தில், துரியோதனன் தான் எதிர்பார்த்தது போலவே வெற்றிகரமாக நடந்ததை எண்ணி அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் அப்படியே தனியே விடாமல் அவள் இடையை சுற்றி கைகளை போட்டு தன் கை வளைவிலேயே நிறுத்திக் கொண்டவன் "ஹூ ஆர் யூ? யார் எங்களை தேவையில்லாமல் தொந்தரவு பண்றது..?"என்று கோபமாக கேட்க, வந்திருந்த ஊடக காரர்களில் ஒருவன் தைரியமாக முன்வந்து துரியோதனன் கேள்விக்கு பதில் அளித்தான்.​

"நாங்க எல்லாம் ரிப்போர்ட்டஸ் சார் எல்லா டிவி சேனல்ஸ்ல இருந்து வந்திருக்கோம்.."​

"ஓ.. யார் வேணாலும் வாங்க அது உங்க விருப்பம் ஆனா இப்படி ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது இரண்டு பேரையும் தொந்தரவு பண்றது மாதிரி வந்தது சரியா! இதுதான் உங்க பத்திரிகை ஊடகத்தின் கொள்கையா?"என்று கேட்டான் சற்று காட்டமாக.​

"இவங்க தானே சார் நீங்க அவங்களை கொலை பண்ண பாத்தீங்கன்னா உங்க மேல கேஸ் கொடுத்து உங்களை ஜெயில்ல தள்ளினார்கள்.. இப்ப அவங்க கூட நீங்க இப்படி ஒண்ணா இருக்கீங்க.."​

"ஹே மேன் அது ஒரு ஆக்சிடென்ட் இந்த பொண்ணு என்னோட காலேஜ்ல தான் படிக்கிறா அப்பப்ப எனக்கு மூடு வரும் போது என்னை வந்து ரொம்ப சந்தோஷப்படுத்திட்டு போவா அப்படி போன தடவை வந்து சந்தோஷப்படுத்தும் போது அவளுக்கு எப்பவும் கொடுக்கிற அமௌண்டை விட கம்மியா கொடுத்தேன் அதனால என் மேல கோவமா இருந்தவ என் கண்ணுல ****மருந்து அடிச்சு என் கண் பார்வையை என்கிட்ட இருந்து பிடிங்கி கிட்டா.. அதை அவ வாயாலேயே ஒத்திக்கிட்டு ஹாஸ்பிட்டல என்கிட்ட வந்து பேசும்போது கேவலம் ஒரு பணத்துக்காக என் பார்வையை என்கிட்டே இருந்து பிடுங்குன இந்த பொண்ண என்னால சும்மா விட முடியுமா.. இதோ இந்த பொண்ணு என்கிட்ட பேசினதுக்கான வீடியோ.."என்றவன் தன் சட்டை பைக்குள் மறைத்து வைத்திருந்த போனை எடுத்து கேள்வி கேட்ட அந்த ஊடக காரனிடமே கொடுத்து ஓபன் செய்ய சொன்னான்.​

அவன் சொன்னது போலவே அந்த ஊடக காரனும் அவன் கையில் இருந்த மொபைலை வாங்கி வீடியோவை ஓபன் செய்ய அவன் சொன்னது போலவே யாருக்கும் தெரியாமல் அந்த அறைக்குள் அருந்ததி உள்ளே வந்தது முதல் அவனிடம் பேசியது வரை முழு வீடியோவாக இருந்தது.​

ஆனால் அவனிடம் அவள் பேசியது அத்தனையும் மாற்றப்பட்டு மார்பில் செய்யப்பட்ட அவளது குரலாக இருந்தது.​

"ஒழுங்கு மரியாதையா நான் பணத்தை கேட்டப்பவே நீ பணத்தை கொடுத்து இருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? நீ கூப்பிட்டப்ப அடிக்கடி வந்து உன் கூட ஜாலியா இருந்து உன்னை சந்தோஷப்படுத்தியது எதுக்கு எல்லாம் உன்கிட்ட இருக்க பணத்தை அடையறதுக்காக தான்.. இந்த பணம் உன்கிட்ட இருக்கதால தானே உன்கிட்ட நான் அடிக்கடி வரேன் அந்த பணத்தை என்கிட்ட நீ கொடுக்காமல் விட்டா உன்னை விட்டுடுவேனா எப்படி உன் கண் பார்வையை உன்கிட்ட இருந்து புடுங்கிட்டேனா.. இனி நீ எந்த பொண்ணை தொட்டாலும் இதுதான் உனக்கு ஞாபகம் வரும் என்னை ரசித்து பார்த்து என் கூட இருந்த அந்த கண்ணு இனிமே வேற யாரையும் பார்க்காது உன்னை இந்த நிலைமையில் ஆளாகியதற்கு காரணம் நான் மட்டும் தான் அது யாருக்கும் கடைசி வரைக்கும் தெரியவே தெரியாது கண்ணு தெரியாத குருட்டு முண்டமே!!" என்று அருந்ததி கோபமாக பேச,அவள் பேசியதை கேட்டு கோபமடைந்த துரியோதனன் அவள் கழுத்தை பிடித்து நெரிக்க வர சரியாக அந்த தாதிப்பெண் உள்ளே நுழைந்ததும் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டது போல் நடிக்க அந்த தாதி பெண்ணும் அவளை வந்து பார்த்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக செல்ல, இறுதியாக அவனிடம் பேசிய வார்த்தைகள் உண்மையாக இருக்க அத்தோடு நிறைவடைந்திருந்தது அந்த வீடியோ.​

 

அந்த வீடியோவை பார்த்த ஊடகாரர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியாக அருந்ததியை பார்த்தார்கள்.​

அந்த போனை துரியோதனனிடமே திருப்பிக் கொடுத்த ஊடக காரனும் "ஏன் சார் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கின இந்த பொண்ணு கூட இப்போ எதுக்காக நீங்க ஒண்ணா இருக்கீங்க இந்த பொண்ணு மேல உங்களுக்கு கோபம் வரலையா?இந்த பொண்ணு பண்ணி வச்சிருக்க வேலையை பார்க்கும் போது எனக்கு கூட அவ்வளவு கோபம் வருது எப்படி சார் நீங்க இந்த பொண்ணு கூட இப்போ இப்படி ஒண்ணா இருக்கீங்க அதுவும் இப்படி அவர்களை உங்க பக்கத்துல வச்சுக்கிட்டு.."​

"பாவம் சின்ன பொண்ணு டாக்டருக்கு படிக்கிற பொண்ணு என்னோட காலேஜை பொறுத்த வரை இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு எல்லாம் அங்கே இடம் கிடையாது.. என்னை பொருத்தவரை மருத்துவம் என்பது ஒரு தொழில் கிடையாது அது அத்தனைக்கும் மேல பல உயிர்களை பிரசவிக்கிற பல உயிர்களை காப்பாற்றக்கூடிய ஒரு இடம்.. அந்த இடத்துல படிக்கிற அத்தனை பேரும் தங்களுடைய உணர்வுகள் அத்தனையும் மறந்து அடுத்தவங்களோட கஷ்ட நஷ்டங்களை புரிஞ்சு அதுக்கு தகுந்தார் போல தங்களை மாத்திக்கணும்.. ஆனா இந்த பொண்ணு அந்த காலேஜ்ல சேர்ந்ததே என்னோட பணத்துக்கு மயங்கி தான்.. என் கூட ரிலேஷன்ஷிப்புக்கு வரும்போது ஃபர்ஸ்ட் டைம் இந்த பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாது அத்தனை ஸ்டுடென்ட்ஸ் படிக்கிற காலேஜ்ல ஒருத்தரை மட்டும் நமக்கு எப்படி தெரியும்? யா எனக்கும் பிசிகல் ரிலேஷன்ஷிப்ல நிறையவே இன்ட்ரஸ்ட் இருக்கு இதை சொல்றதுக்கு நான் எந்த இடத்துலயும் கூச்சப்படல தைரியமா சொல்றேன்.. எனக்கு அந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்..,"​

"பட் இந்த பொண்ணு என் கூட ரெண்டு மூணு தடவை வந்ததுக்கப்புறம் தான் அவ இந்த காலேஜ்ல படிக்கிற உண்மையை சொன்னா.. போயும் போயும் என் காலேஜ்ல படிக்கிற ஸ்டுடென்ட் கிட்ட தப்பா நடந்ததை நினைச்சு ரொம்ப ஷேமா போச்சு.. அந்த பொண்ணு கிட்ட மருத்துவத்தோட உள்ளர்த்தங்கள் எல்லாத்தையும் எடுத்து சொல்லி இனிமே இந்த மாதிரி பண்ணாதன்னு சொல்லி அட்வைஸ் பண்ணி அனுப்புனேன்.. மறுபடியும் ரெண்டு நாள் சென்று இந்த பொண்ணு என்கிட்ட வந்து பணம் கேட்டப்ப கொடுக்க முடியாதுன்னு மறுத்ததற்கு தான் என் கண்ணை குருடாக்கி என் காலேஜ நான் ரன் பண்ண கூடாதுன்னு பொய்யா ஒரு மெசேஜ் கிரியேட் பண்ணி என்னை போலீஸ்ல அரெஸ்ட் பண்ண வச்சு என் காலேஜோட நல்ல பெயர் எல்லாத்தையும் நாசம் பண்ண ட்ரை பண்ணா..இதுக்கெல்லாம் காரணம் என்னோட பாடி லாங்குவேஜ் தானே அது தானே இந்த பொண்ணுக்கு தேவை அதனாலதான் அவ ஆசையை நிறைவேற்ற எல்லாத்தையும் விட்டுட்டு அவ வீட்டுக்கு வந்தேன்.."என்ற துரியோதனன் நடந்த அத்தனையும் ஒன்றுக்கு இரண்டாக மாற்றி முன்னுக்கு பின்னாக முரணாக வைத்து தன் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறிய சந்தோசத்தோடு அருந்ததி இடையிலிருந்த தன் கைகளை எடுத்தவன் அங்கிருந்த ஊடகாரர்களை சற்று பாவமாக பார்த்து வைக்க, அதுவோ லைவில் போய்க்கொண்டிருந்தது.​

ஆம் துரியோதனன் பேசிய அத்தனையும் லைவாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.​

அங்கு நடக்கும் அத்தனை விஷயங்களையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததிக்கு மேலே பேச நா எழும்பவில்லை.​

"அந்த பொண்ணு பத்தி இவ்வளவு தப்பா பேசுற நீங்க மட்டும் எப்படி நல்லவரா இருப்பீங்க! நீங்களும் அந்த பொண்ணு மாதிரி தானே உங்க ரெண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இல்லையே.."என்றாள் ஒரு பெண் குறுக்கே புகுந்து.​

"நான் உங்ககிட்ட இதுவரைக்கும் நல்லவன்னு சொல்லி இருக்கேனா! எனக்கு எப்பவுமே நான் நானா இருக்கத்தான் பிடிக்கும் எனக்கு இப்படி இருக்க தான் பிடிச்சிருக்கு.. ஐ அம் டாக்டர் துரியோதனன் தி பெஸ்ட் ஹாட் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் துரியோதனன் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க.. செய்ற தொழிலில் புனிதம் இருக்கணும்னு எதிர்பார்ப்பவன் நான் நானும் இப்படிப்பட்ட ஒருத்தனா இருப்பதால் தான் இதுவரைக்கும் என்னோட சொந்த ஹாஸ்பிட்டல்ல யாருக்கும் டிரீட்மென்ட் பண்ணது கிடையாது.. நெக்ஸ்ட் என்னோட காலேஜ்லையும் என் ஸ்டூடண்ட்ஸ் கிட்டயும் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு ரெபர் பண்ணது கிடையாது ஜஸ்ட் அது என்னோட காலேஜ் அதோட மெயின்டனன்ஸ் மட்டும் தான் நான் பார்க்கிறது..என்னோட காலேஜ் முழுசா பார்க்கிறது என்னோட நண்பன் அபிமன்யு என்னோட ஹாஸ்பிடல்ல ரன் பண்றது கர்ணன்.. சோ இப்ப சொல்லுங்க இதுல என் மேல எந்த இடத்துலயாவது தப்பு இருக்கா?"என்றவன் கேள்வியில் வாயடைத்துப் போனாள் அந்த கேள்வி கேட்ட பெண்.​

அடுக்கடுக்காக அவன் பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருப்பதை கண்டு சுய உணர்விற்கு வந்த அருந்ததி தப்பும் தவறுமாக பேசிக் கொண்டிருக்கும் அவன் தலை நிமிர்ந்து நிற்கும் பொழுது எந்த தப்பும் செய்யாத தான் மட்டும் என் தலை குனிந்து நிற்க வேண்டும் என்ற அவளுக்கே உரிய கர்வம் தலை தூக்க "எதுக்காக இப்படி பொய் சொல்லி சிம்பதி கிரியேட் பண்ணிட்டு இருக்கீங்க மிஸ்டர் துரியோதனன்? நீங்க சொல்ற அத்தனையும் பொய் அந்த வீடியோ நீங்க காட்டுன அந்த வீடியோ மொத்தமும் பொய் உங்ககிட்ட நான் அங்க பேசின விஷயம் வேற இந்த வீடியோல இருக்க விஷயம் வேற.."என்றாள் கோபமாக.​

"தென் வாட் யூ சே? நான் சொல்ற அத்தனையும் பொய்யா எதுக்காக நீ என்னோட கண்ணுல *** மருந்த ஸ்ப்ரெட் பண்ண? அன்னைக்கு ஹாஸ்ப்பிட்டல் வந்ததுக்கு காரணம் என்ன? நீ அவ்வளவு தைரியமான பொண்ணா இருந்தா எல்லாரும் இருக்கும்போது பட்டப் பகலில் வந்து இருக்கணும்.. யாருமே இல்லாத அர்த்த ராத்திரியில் திருடன் போல நான் இருந்த ரூம்ல உனக்கு என்ன வேலை?" என்றவனின் அடுக்கடுக்கான கேள்வியில் மூச்சு முட்டியது அவளுக்கு.​

"இட்ஸ் இனஃப்"என்று அவனைப் பார்த்து கோபமாக கத்திய அருந்ததி மீடியா பக்கம் திரும்பினாள்.​

"நீங்க நினைக்கிறது போல இவர் ஒண்ணும் நல்லவர் கிடையாது.. இவர் என்னோட அக்கா என்னோட சொந்த அக்கா பூஜா அவளை காலேஜ்ல பாத்துட்டு இவர்தான் இல்லீகள் ரிலேஷன்ஷிப்புக்கு அவளை கூப்பிட்டு இருக்கார்.. எங்க அக்கா முடியாதுன்னு மறுத்து சொன்னதுக்கு ஒருவேளை நீ ஒத்துக்க மாட்டேன்னு சொன்னா நான் உன்னை இந்த காலேஜை விட்டு தூக்கிடுவேன்னு மிரட்டினார்..இதுல ரொம்ப பயந்த எங்க அக்கா விஷயத்தை என்கிட்ட சொன்னா நான் கூட ஃபர்ஸ்ட் அவளை நம்பல ஆனா என் கண்ணு முன்னாடி இவர் எங்க அக்காவ மிரட்டுனாரு அதை பார்த்ததுக்கு அப்புறம் தான் எங்க அக்கா மாதிரி இன்னும் எத்தனை பெண்களோட வாழ்க்கையை இவர் நாசம் பண்ணி இருக்கிறாரோன்னு மனசுல தோணுச்சு! இந்தக் கண்ணு இருக்கிறதால தானே எல்லா பொண்ணுங்களையும் பார்த்து அவருடைய ஆசைக்கு அழைக்கிறார் அந்த கண்ணு இல்லாமல் போயிட்டா அப்ப என்ன பண்ணுவாரு? அந்த கோவத்துல தான் நான் அவரோட கண்ணுல புதுசா கண்டுபிடிச்ச அந்த மருந்த வேணும்னே ஸ்ப்ரெட் பண்ணி விட்டேன்.."என்றாள் கோபமாக.​

"அப்ப எதுக்காக அன்னைக்கு அவரை ஹாஸ்பிடல் பார்க்க மிட்நைட்ல போனீங்க?"என்றான் முதலில் கேள்வி கேட்ட அந்த முதல் ஊடக காரன்.​

"என்னதான் இருந்தாலும் இவர் பண்ணதுக்கு நியாயமா போலீஸ்ல தான் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கணும் அதை விட்டுட்டு இவரை பனிஷ் பண்ண நான் யாரு? என்னோட மனசு ஃபுல்லா ஒரே கில்டி பீலிங்கா இருந்துச்சு.. அதனால்தான் மனசு கேட்காமல் இவரை பார்க்க ஹாஸ்பிடல் போனேன்..பகல்ல நான் இவரை பார்க்க போனதை யாராவது பார்த்தா தேவையில்லாத பிரச்சினை வரும்னு நைட்டு பாக்க வரல.. அந்த இன்சிடென்ட் நடந்ததுல இருந்து என் மனசு என்கிட்ட நீ செஞ்சது தப்புன்னு திரும்பத் திரும்ப சொல்ல என்னால குற்ற உணர்ச்சியை தாங்க முடியாமல் தான் நேரம் காலம் எதையும் பார்க்காமல் நான் இவரை பார்க்க போனேன்..அந்த நிலைமையில கூட இவர் திமிரு குறையாமல் ரொம்ப ஓவரா பேசினாரு தப்பு பண்ண இவரே பெரிய நியாயவாதி மாதிரி பேசுறத பார்த்து எனக்கு கோபம் வந்துடுச்சு அதனால்தான் பதிலுக்கு நானும் கோபமாக பேசினேன்.. அதுக்கு தான் இவர் கோபப்பட்டு என் கழுத்தை பிடித்து நெரித்து என்னை கொலை பண்ண பார்த்தார்..அந்தக் கண்ணு தெரியாத நிலைமையில் கூட அவருடைய கண்ணுல அந்த வன்மம் நிறைய இருந்துச்சு..எங்கே இவரால மறுபடியும் எங்க அக்காவுக்கு பிரச்சனை வந்துடும்னு பயந்து தான் இவரை போலீஸ்ல மாட்டி விட்டேன்.."என்றாள் உண்மையாக..​

"நீ சொன்ன அந்த பொண்ணு அதான் உன்னோட அக்கா அந்த பூஜா தானே?"என்ற துரியோதனனின் கேள்வியில் தனலாக ஜொலித்தது அருந்ததி முகம்.​

"ஆமா அந்த பூஜா தான் என்னோட அக்கா.."​

"இவங்க சொன்ன அந்த பூஜாவை நேரில் கூப்பிட்டு அவங்க கிட்டயே கேட்டுடுவோமா?"என்ற துரியோதனன் கைகளை தட்ட,தன் மகளை குனிந்த தலை நிமிராமல் உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார் உமா.​

தமக்கையின் முகத்தை பார்த்த அருந்ததி மனமெல்லாம் பதற ஆரம்பித்தது.​

கன்னத்தில் பல அறைகள் வாங்கி இருப்பாள் போலும் அத்தனையும் சிவந்து காணப்பட்டது..​

"இங்க பாருங்க தம்பி தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க இந்த அருந்ததி பொண்ணு மேல கூட எந்த தப்பும் இல்லை இது எல்லாத்துக்கும் காரணம் இந்த பூஜா பொண்ணு மட்டும் தான்.. இவள் பண்ண தப்புக்கு நான் உங்ககிட்ட மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன்.."என்ற உமா பூஜாவின் கைகளை பிடித்து கோபமாக இழுத்தவர் "என்னடி வாயை மூடிக்கிட்டு அமைதியா நிக்கிற பொய் சொல்லும்போது எப்படி சரளமாக சொன்னியோ அதே மாதிரி இப்ப மன்னிப்பு கேளு.. அதோட நீ செஞ்ச எல்லாத்தையும் சொல்லு.."என அவரை அழுகையுடன் நிமிர்ந்து பார்த்த பூஜா துரியோதனன் முகத்தை பார்க்காமல் "தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க எல்லா தப்புக்கும் காரணம் நான் தான் எனக்கு சின்ன வயசுல இருந்து என் தங்கச்சியை சுத்தமா பிடிக்காது.. அவளுக்கும் உங்களை பிடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்களும் நானும் சேர்ந்தால் கண்டிப்பா இவளை ஏதாவது ஒன்னு பண்ணலாமுன்னு ஒரு திட்டம் போட்டேன்.. ஆனா உங்களோட பார்வை அது என்ன உங்க பக்கத்துல நெருங்க விடல.. இந்த அருந்ததி சந்தோசம் மொத்தத்தையும் இழக்க உங்களால மட்டும் தான் முடியும்னு உங்ககிட்ட வந்து இவளை பத்தி தப்பா சொல்லியும் நீங்க இவளை எதுவும் பண்ணாம அமைதியா இருப்பதை பார்த்து எனக்கு கோபம் வந்துருச்சு.. அதனாலதான் உங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் என் தங்கச்சி கிட்ட சொன்னேன்..அவ சத்தியமா இப்படி உங்களை பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கல இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.."என சிலையாக சமைந்து விட்டாள் அருந்ததி.​

கூட பிறந்த தமக்கையின் மானத்தை காப்பாற்றுவதற்காக அவள் செய்த செயல் இன்று அவளை களங்கப்படுத்தி விட்டது.​

அதிலும் இப்பொழுது லைவாக போய்க் கொண்டிருக்கும் செய்திகள் மற்றவர்கள் பார்வையில் அவள் எப்பொழுதுமே ஒரு வேசி தான்.​

எப்பொழுதுமே தன் மீது தவறு இல்லை என்று தலை நிமிர்ந்து நடக்கும் அருந்ததி இனி எப்படி அந்த வேசி பட்டத்தை சுமந்து கொண்டு ஊரார் முன்னிலையில் வாழ போகிறாள்??​

 
அத்தியாயம் 13:




"சோ இப்ப உங்க எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் என்னுடைய ரெபிடேஷனை கெடுக்குறதுக்காக இந்த பொண்ணு பிளான் பண்ணி இவ்வளவோ பண்ணி இருக்காங்க அன்னைக்கு இதே மீடியா தான் என்னை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும் போது லைவ் டெலிகாஸ்ட் பண்ணி என்ன பத்தி மை பிஸ்னஸ் மை காலேஜ் அத்தனையும் டோட்டல் டேமேஜ் பண்ணீங்க இப்போ என் மேல எந்த தப்பும் இல்ல உங்க மீடியா என்ன பண்ண போறீங்க?"என்று துரியோதனன் கேட்க,அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.



அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக துரியோதனன் இதழ்கள் ஓரம் துடித்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டவன் "இனிமேலாவது நியூஸ் கலெக்ட் பண்றதுக்கு முன்னாடி அதை டெலிகாஸ்ட் செய்வதற்கு முன்னாடி அது ஒரிஜினல் நியூஸ் தானா? திடீர்னு ஒருத்தர் மேல பழி விழுக காரணம் என்னென்னு நல்லா அனலைஸ் பண்ணிட்டு நியூஸ் போடுங்க.."என்றவன் கண்களில் கருப்பு நிற கண்ணாடியை அணிந்து கொண்டு, தன் குருட்டு விழிகளில் எதுவும் தெரியவில்லை என்றாலும் அத்தனையும் தாண்டி தன் மீது எந்த தவறும் இல்லை என்ற நிமிர்வுடன் முன்பு இருந்ததை விட கம்பீரமாக நடந்து சென்றான்.



அவன் சொல்லிவிட்டு சென்றதை உணர்ந்த அந்த ஊடக காரர்களும் அழுகையுடன் நின்று கொண்டிருந்த அருந்ததியையும் லைவாக காண்பித்து விட்டு வந்த வேலை முடிந்ததும் கிளம்பினார்கள்.



"ஏண்டி உனக்கு என்னடி அப்படி ஒரு ஆத்திரம்.. உன்னோட சொந்த தங்கச்சியை பழிவாங்க இவ்வளவு கீழ்தரமான வேலையை நீ பண்ணுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. எப்படிடி உங்க அம்மாவோட நல்ல குணம் ஒன்னு கூட உன் கிட்ட இல்லாம போச்சு அவளோட அத்தனை அம்சத்தையும் உரிச்சு வச்சு உன் தங்கச்சி பிறந்து இருக்கும்போது உன்னால இப்படியெல்லாம் இருக்க முடியுது? அவ்வளவு கோபம் என்ன அவ உன்னோட தங்கச்சி தானே.."என்ற உமாவின் கேள்விக்கு கண்களில் வழிந்த போலி கண்ணீரை சுண்டி எறிந்த பூஜா "இங்க பாருமா எனக்கு அதெல்லாம் தெரியாது எனக்கும் இவளுக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது.. நீதான் என்னோட அம்மா ஈஸ்வர் தான் என்னோட அப்பா அவ்வளவுதான் இன்னொரு தடவை என்னை பிரிச்சு பேசணும்னு நினைச்சா உனக்கும் எனக்கும் இருக்கும் உறவு மொத்தமா அறுந்து போயிடும்.. இந்த வீணா போன பிசாசு பண்ண வேலையால இப்ப மீடியா மொத்தமும் என்னை பத்தி தப்பு தப்பா எல்லா இடத்துலயும் பிளாஷ் பண்ணி என்னோட லைஃபை ஸ்பாயில் பண்ண போறாங்க அதை பத்தி யோசிங்க.. இந்த நியூஸ் எல்லாம் மாறனும் அதுக்கு ஒரே வழி இதோ இப்ப இவளை மாட்டி விட்டுட்டு போனானே அந்த குருடன் துரியோதனன் அவனை நான் கல்யாணம் பண்ணனும் அதுக்குண்டான ஏற்பாட்ட பண்ணுங்க அவனுக்கு எனக்கும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்கலைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் இது உங்க மேல சத்தியம்.. உங்களுக்கே தெரியும் உங்களை எனக்கு எந்த அளவுக்கு ரொம்ப பிடிக்கும்னு இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகணும் இத்தனை பேருக்கு முன்னாடி என்னை அவமானப்படுத்திட்டு போற அந்த குருடன் வாழ்க்கை முழுக்க என் காலடியிலேயே விழுந்து கிடக்கணும் அவனோட மொத்த சொத்துக்கும் ஒரே ராணி நான் மட்டும்தான் இனிமேல் நான் படிக்கிற காலேஜ் கூட எனக்கு சொந்தமாக போகுது.."என்று தவறு செய்ததற்கான எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் பேசி விட்டு செல்லும் மகளை இயலாமையுடன் பார்த்தார் உமா.



அதிர்ச்சியில் உறைந்து அவமானங்கள் அனைத்தையும் தாங்கி நின்ற அருந்ததியை வேதனையுடன் பார்த்தார் உமா.



பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற பழமொழி அவள் விஷயத்தில் எத்தனை உண்மையானது.



அருந்ததி இருந்த கோலத்தை உமாவால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.



அவளின் அருகில் வந்தவர் கலைந்து போயிருந்த தலைமுடியை மெதுவாக ஒதுக்கி விட்டவர் கண்களில் கண்ணீர் வடிந்தது.

"தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு அருந்ததி உன் அக்காவை நான் வளர்க்க தெரியாம வளர்த்து வச்சிட்டேன்..இனிமே அவளை எப்படி மாத்த போறேன்னு எனக்கு தெரியல அவளால உனக்கு ஏற்பட்ட அவமானம் அதுக்கு என்ன பண்ண போறேன்னு நான் தெரியல.. எல்லாத்துக்கும் மேல இனிமே எல்லாருடைய பார்வையிலும் நீ தப்பா தெரிவ உன்னை எல்லாரும் அசிங்கப்படுத்துவாங்க.. இப்ப வாச்சு நான் சொல்றதை கேளுடா அருந்ததி உங்க அக்கா ஆசைப்பட்டது மாதிரியே அந்த பையன் கூட எப்படியாவது கல்யாணம் பண்ணி வச்சிடுறேன் அதுக்கப்புறம் உன்னை கூட்டிட்டு வெளிநாட்டில் இருக்க அண்ணன் வீட்டுக்கு போறேன்.. நீ இங்க படிக்கணும்னு ஆசைப்பட்ட அந்த படிப்பை அங்கே படிக்கலாம் உனக்கு எல்லா வசதியும் நான் ஏற்பாடு செஞ்சு தரேண்டா தயவு செஞ்சு என் கூட வா.. உன்னை இந்த நிலைமையில என்னால சத்தியமா பாக்க முடியல மனசு அடிச்சுக்குது.."என்றவரை விழிகள் உயர்த்தி பார்த்தவள் இதழ்கள் ஒரு சின்ன புன்னகையை பூத்தது.



"வேண்டாம் மேடம் இப்ப நான் களங்கப்பட்ட பால் மாதிரி என் கூட நீங்க வந்தா உங்களுக்கும் அது அசிங்கம் அந்த களங்கம் உங்களுக்கும் வேண்டாம்.. எல்லாத்துக்கும் மேல எனக்கும் இந்த அசிங்கம் வேணும் ஒரு தடவை எதையாவது பட்டாதான் வாழ்க்கையில ஒன்னை கத்துக்க முடியும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க அது என் விஷயத்துல ரொம்பவே சரி.."



"இல்ல அருந்ததி நீ இப்படி எல்லாம் பேசாத என்னால பாக்க முடியல நான் சொல்றத இப்பவாவது கேளு.."




"இல்ல மேடம் பூஜா அக்காவோட பேச்சை நம்பி அநியாயமா அவருடைய கண்ணை நான் குருடாகிட்டேன்.. அவரிடத்தில் வேற யாராவது ஒருத்தர் இருந்திருந்தால் நியாயமா கண்டிப்பா என்னை உயிரோடவே விட்டு இருக்க மாட்டாங்க.. அவரோட கண்ணையும் புடுங்கி ஜெயிலிலும் தள்ளி ரொம்ப பெரிய அசிங்கத்தை அவருக்கு நான் உண்டு பண்ணிட்டேன் அதுக்கு எனக்கு இந்த தண்டனை கண்டிப்பா தேவைதான் தப்பு செஞ்சவங்க சிலுவையை சுமந்து தான் ஆகணும் அதுதான் நியாயம்.. என்னோட தப்புக்கான சிலுவையை நான் சுமக்க தயாரா இருக்கேன்.."



"ஆனா இதுல எந்த இடத்திலையுமே உன்னோட தப்பு இல்லையே அருந்ததி..எந்த பொண்ணா இருந்தாலும் தன் கூட பிறந்த அக்காவுக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும்போது கண்டிப்பா உன்னிடத்தில் நான் இருந்தா கூட இதேதான் செஞ்சு இருப்பேன்..எல்லா தப்பும் பண்ண உங்க அக்கா சந்தோசமா வெளியில திரியும்போது எந்த தப்பும் பண்ணாத நீ எனக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்.."



"அதான் இப்ப நீங்களே சொல்லிட்டீங்களே மேடம் எந்த தப்பும் செய்யலன்னு எனக்கு யார் என்ன சொன்னாலும் அதை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலை கிடையாது இந்த உலகத்தை பற்றி கவலைப்படுற டைப் நான் கிடையாது.. என்ன பொறுத்த வரைக்கும் போற வழி நேர்மையான பாதையா இருந்தா கண்டிப்பா இதுபோல பல அசிங்கம் எல்லாத்தையும் சந்திக்கணும் தான் ஆனால் இது எல்லாத்தையும் கடந்து கண்டிப்பா ஒரு நாள் வாழ்க்கையில நான் முன்னேறி காட்டுவேன்..அதுவரைக்கும் இது எல்லாத்தையும் நான் அனுபவிச்சு தான் ஆகணும் நீங்க கவலைப்படாமல் போங்க மேடம்.."என்ற அருந்ததியை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் உமா.



அவளிடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நிச்சயம் கத்தி கூச்சல் போட்டு அழுது ஆர்ப்பாட்டம் சேர்ந்திருப்பார்கள்.



அதிலும் துரியோதனன் அவளை தப்பான வேசி என்பது போல் அத்தனை பேர் முன்னிலையில் சொல்லியும் அதைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் வானில் ஜொலிக்கும் அருந்ததி நட்சத்திரம் போல் தன் முன்னே ஜொலித்துக் கொண்டிருந்த அருந்ததியை பார்த்த உமாவின் மனம் நிம்மதி அடைந்தது.



அவள் வாழ்க்கையில் தனியாக இருந்தால்தான் அவள் எதிர்பார்த்தது போலவே ஜொலிக்க முடியும்.



ஏற்கனவே தான் ஒரு பெண்ணை வளர்க்கிறோம் என்று அளவுக்கதிகமாக செல்லம் கொடுத்து அவள் வாழ்க்கையை நாசம் பண்ணியது போல் அருந்ததி வாழ்க்கையையும் நாசம் செய்ய வேண்டாம் என்று எண்ணிய உமா கண்ணீருடன் இரு கைகளையும் கொண்டு அருந்ததியின் முகத்தை தன் அருகே இழுத்தவர் அவள் நெற்றியில் வாஞ்சையாக முத்தமிட்டு தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.



"கண்டிப்பா உன் மொத்த குடும்பத்தோட ஆசிர்வாதமும் உனக்கு இருக்கும் உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் ஆத்மாவா இருந்து நீ இப்படி திடமா பேசுவதை பார்த்து கண்டிப்பாக அவங்க சந்தோஷப்படுவாங்க.. கண்டிப்பா அந்த கடவுள் உன் வாழ்க்கையில் எல்லா சந்தோஷத்தையும் கொடுப்பார் கஷ்டத்துக்கு பின்னாடி ஒரு சந்தோஷம் இருக்குன்னு சொல்லுவாங்க அதே மாதிரி உன்னோட இந்த கஷ்டத்துக்கு பின்னாடி கடலளவு சந்தோஷம் கண்டிப்பா வந்து சேரனும்னு உனக்காக அந்த கடவுள் கிட்ட நானும் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்.. இனிமே பூஜாவால உனக்கு எந்த பிரச்சனையும் வராதுடா அவளை நான் கூட்டிட்டு இங்கிருந்து போறேன்..ஆனால் நான் செய்யுற இந்த ஒரே ஒரு உதவியை மட்டும் நீ மறுக்கக்கூடாது உன்னை கெஞ்சி கேட்கிறேன் உன் பேர்ல ஒரு பத்து லட்சம் பணம் போட்டு விடுகிறேன் தயவு செய்து வேணாம்னு சொல்லாத நீ வேலைக்கு போனதுக்கப்புறம் கண்டிப்பா அதை நான் வாங்கிக்கிறேன்.. இத்தனை நாள் உன் பக்கத்துல இருந்ததால உனக்கு எதுவும் செய்ய பெருசா தோணல இப்ப உன்னை விட்டு தள்ளி போக போறேன் உனக்கு எதுவும் செய்யாமல் போயிட்டா என் மனசாட்சி காலம் முழுக்க நான் சாகுற வரை அதை குத்தி குத்தி காட்டும் என் மனதிருப்திக்காக இதை செய்கிறேன்.."என்ற உமா அங்கிருந்து சென்று விட்டார்.



அத்தனை நேரம் அவரிடம் திடமாக பேசிக் கொண்டிருந்த அருந்ததியின் கால்கள் துவண்டு போய் தரையில் சாய்ந்தது.



அழுதாள். கதறவில்லை, கத்தவில்லை, சத்தம் போடவில்லை.



தான் பட்ட அவப்பெயரை நினைத்து அழுகவில்லை.



தன்னால் ஒருவன் வாழ்க்கையை இழந்து நிற்பதை எண்ணி அழுதாள்.



"என்னதான் இருந்தாலும் நீ இப்படி செஞ்சிருக்கக் கூடாது துரியோதனா என் மனசு கேட்கல.. அந்தப் பொண்ணு ஏதோ அவங்க அக்கா மேல இருக்க அன்பால இப்படி பண்ணிடுச்சு கண்டிப்பா அவ பண்ணதும் தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல அதுக்காக நீ அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையும் கொடுத்திருக்க வேண்டாம் ஒரு பொண்ணுக்கு இந்த உலகத்தில் ரொம்ப முக்கியம் அவங்களோட மானம்தான் அதையே அவ கிட்ட இருந்து பறிச்சிட்ட அதை என்னால ஏத்துக்க முடியல.."என்ற கர்ணனை அபிமன்யு முறைத்து பார்த்தான்.



"நீ ஏன்டா பேச மாட்ட! அன்னைக்கு இவன் வலியில கதறி துடிக்கும் போது பக்கத்துல நீ இருந்திருந்தால் கண்டிப்பா அவன் துடிக்கிறதை பார்த்து அந்த பெண்ணை நீயே ஒரு வழி பண்ணி இருப்ப.. ஆனா எனக்கு ஒரே ஆச்சரியம் என்னன்னா துரியோதனன் அந்த பொண்ண எப்படி இப்படி சாதாரணமா விட்டுட்டான்.."



"உன்னை அடுத்தவங்க ஒரு வார்த்தை சொன்னாலே அவங்க ஏண்டா இந்த வார்த்தையை சொன்னேன்னு அவங்க நிலைமையை மோசமாக்கி ஒன்னும் இல்லாம ஓட விடுற நீ அந்த பொண்ணோட விஷயத்துல இப்படி மேலோட்டமா செஞ்சு முடிச்சதோடு விட்டுட்ட.. நான் மட்டும் உன்னிடத்தில் இருந்திருந்தால் செய்யாத தப்புக்கு என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்க பொண்ணை கண்டிப்பா ஜெயில்ல தள்ளிட்டு தான் வேற வேலை பார்த்து இருப்பேன்.."என்றான் அபிமன்யு.



இவர்கள் இருவரும் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களோ அவனோ தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க, நண்பர்கள் இருவரும் அவனை தொந்தரவு செய்யாமல் அமைதியாகிவிட்டார்கள்.



"வாட் ஆர் யூ டூ சே?"



"ஆமாங்க தம்பி இந்த கல்யாணம் மட்டும் நடக்கலன்னா கண்டிப்பா என் பொண்ணு உண்மையாலுமே உயிரோட இருக்க மாட்டா.."என்றார் உமா.



அவர் சொன்னதை எல்லாம் கேட்டு சற்றும் அசராத துரியோதனன் "உங்க பொண்ணு உயிரோட இருந்தா எனக்கு என்ன செத்தா எனக்கு என்ன? ஐ டோன்ட் கேர்.."என்றவனை கோபமாக பார்த்தார்கள் கண்ணம்மா மூர்த்தி இருவரும்.



"இது பெரியவங்க பேச்சு நீ அமைதியா இரு கிராண்ட் சன்.."என்ற கண்ணம்மா துரியோதனனை அமைதிபடுத்திவிட்டு உமாவிடம் பார்வையைத் திருப்பினார்.



"அப்புறம் நீங்க சொல்லுங்க?எதுக்காக எங்க பேரனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க விருப்பப்படுறீங்க..இவனுக்கு இப்ப கண்ணு தெரியாது இந்த மாதிரி கண்ணு தெரியாத ஒரு குருடனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒரு பொண்ணு ஆசைப்படணும்னா அதுக்கு ஏதாவது ஒரு பெரிய காரணம் இருக்கும்.."



"ஆமாங்க இவர் மேல என் பொண்ணு உயிரை வச்சிருக்கா இவர் மட்டும் இல்லன்னா கண்டிப்பா அவ செத்து போய்டுவா.."



"ஓ இந்த அளவுக்கு உங்க பொண்ணு எங்க பேரனை காதலிக்கிறதை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உங்க பொண்ண நாங்க நேர்ல பாக்கணும்.. அவளை அடுத்த வாரம் இந்த இடத்துக்கு வர சொல்லுங்க.."
என்றதும் உமா அவசரமாக சரி என்று தலையை அசைத்தவர் பார்வை முழுவதும் துரியோதனன் மீதுதான் இருந்தது தயக்கமாக...



அவர் தயக்கமான பார்வையின் பொருளை இன்னதென்று உணர்ந்து வைத்திருந்த கண்ணம்மா "கவலைப்படாதீங்க நாங்க சொன்னா கண்டிப்பா எங்க பேரன் அதை மறுக்காமல் அப்படியே செய்வான்.. நாங்க அப்படி தான் நாங்க வளர்த்து வெச்சிருக்கோம் சோ நீங்க கவலைப்படாம கிளம்பி போங்க.."என்று கண்ணம்மா சொல்ல, தன் மகளின் ஆசைக்காக வந்திருந்த ஈஸ்வர் உமா இருவரும் அவர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த சம்மதம் கிட்டியதும் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.



பெரியவர்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்த துரியோதனனை பார்த்தார்கள்.



"இங்க பாரு துரியோதனா நாங்க எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்கு தான் நாங்கள் செய்வோம் அது உனக்கு நல்லா தெரியும்.."



"கண்டிப்பா கிராணி எனக்கு இந்த உலகத்திலேயே உங்களை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா நீங்க எனக்கு எப்பவுமே நல்லது மட்டும் தான் பண்ணுவீங்க.."என்ற துரியோதனன் தன் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றி கொண்டு நடந்து செல்வதை சந்தோஷமாக பார்த்தார்.



"இவனை இப்படி பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு கமா.. இவனை உன் வழிக்கு கொண்டு வருவதற்கு நீ என்ன பண்ண?வரும்போது நீ ஹாஸ்பிடல் வந்து பார்க்கவில்லை என்று உன்மேல ரொம்ப கோபமா வந்தானே என் மேலயும் கோவமா இருந்தானே?"



"யார் யார என்ன என்ன பண்ணனுமோ அப்படி பண்ணா அவங்க அவங்க தன்னால நம்ம வழிக்கு வந்துடுவாங்க.."என்ற கண்ணம்மா செல்லும் துரியோதனனை வஞ்சகம் மின்ன பார்த்தார்.



அமைதியாக இருந்தான் துரியோதனன்.அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்து விட்டான்.



அவனைப் பற்றி தப்பும் தவறுமாக பேசிக் கொண்டிருக்கும் அனைவரும் அவனைப் பற்றிய நல்ல செய்தியை பேச வேண்டும்.



அப்படி அவர்கள் பேச வேண்டுமானால் அவனிடம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?



அதுதான் அவன் திருமணம்.அவனைப் பொறுத்தவரை இந்த திருமணம் அவனுக்கான ஒரு கேடயம் அவ்வளவே..



நண்பர்கள் இருவரும் இங்கிருந்தால் நிச்சயம் அவர்கள் இருவரும் இந்த திருமணத்தை நடக்க விடமாட்டார்கள் என்று தன் திருமணத்தை ரகசியமாக வைத்தபடி அவர்கள் இருவரையும் ஒரு முக்கியமான விஷயமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டான்.



யாரையும் அழைக்காமல் எளிமையாக வீட்டிலேயே நடந்து முடிந்தது துரியோதனன் திருமணம்.



எளிமையாக நடந்து முடிந்த திருமணத்தில் அவனுடைய நெருங்கிய நண்பர்கள் கூட இல்லை.



பெண் வீட்டு சார்பாக உமா ஈஸ்வர் இருவர் மட்டும் இருக்க மணமகன் வீட்டு சார்பாக கண்ணம்மா மூர்த்தி அவர்களுடைய நெருங்கிய சொந்தம் என்று இருந்தார்கள்.



மகளின் திருமணத்தை கண்டு உமா ஈஸ்வர் இருவரும் புன்னகையோடு அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்ய, கண்ணம்மா மூர்த்தி இருவரும் வேண்டா வெறுப்பாக கடனே என்று போட்டார்கள்.



திருமணம் முடிந்தும் கூட யார் காலிலும் விழுக முடியாது என்று விட்டான் துரியோதனன்.



நிச்சயம் அவன் திருமணத்திலாவது தன் காலில் தன் பேரன் விழுந்து தான் ஆவான் என்ற இறுமாப்புடன் இருந்த கண்ணம்மா அவன் இப்படி சொன்னதும் பெரிதும் அடி வாங்கினார்.



அத்தனைக்கும் சேர்த்து அவனை முறைத்து பார்த்தாலும் தான் தூக்கி வளர்த்த குழந்தையை சபிக்க அவருக்கு மனம் வரவில்லை.



என்னவோ தன் பேரன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு போகட்டும் என்றுதான் நினைத்தார்.


அவரைப் பொறுத்தவரை அவருக்கு தேவை அந்த சொத்துக்கள் மட்டும் தான்.



தாங்கள் அந்த சொத்துக்களை ஆட்சி செய்யும் பொழுது துரியோதனன் எந்த கேள்விகளும் கேட்கக்கூடாது அவ்வளவுதான் அவர்களுக்கு தேவை.



அந்த தேவை நிறைவேறும் பட்சத்தில் நிச்சயமாக அவர்கள் துரியோதனனை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
 
முதலிரவு அறையில் அனைத்தையும் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் துரியோதனன்.



வெளியில் சூரியன் உதயமானாலும் மறைந்து போனாலும் அவனுக்கு தான் தெரியாது அல்லவா??


அவனைப் பொறுத்த வரைக்கும் எப்பொழுதும் அது இருள் மட்டும் தான்.



கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பெண்ணவள் காலில் அணிந்திருந்த கொலுசு சத்தம் அவனை நினைவுலகிற்கு எடுத்து வர, கைகளில் பாலை எடுத்துக்கொண்டு எந்த விதமான அலங்காரமும் செய்யாமல் அவன் பக்கத்தில் வந்தாள் அவள்.



"என்ன விஷயம் துரியோதனன் ரொம்ப யோசனையா இருக்கீங்க போல இருக்கு?அப்படி என்ன யோசிக்கிறீங்கன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா? இதுக்கு அடுத்து இவளை எப்படி பழிவாங்கலாம்னு பிளான் போட்டுட்டு இருக்கீங்களா.."என்று நக்கலாக கேட்டபடி அவன் பக்கத்தில் அமர்ந்தாள் அருந்ததி.



அவளது அந்த பேச்சு அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணினாலும் அமைதியாக இருந்தான்.



"எப்பவுமே நீங்க மட்டும் நினைக்கிறது நடக்கவே நடக்காது.. என் வாழ்க்கையை நீங்க அழிச்சதுக்கு கண்டிப்பா பதில் சொல்லியே தீரணும்.."என்ற அருந்ததியை கொன்று போட வேண்டும் என்று ஆத்திரம் கனன்றது அவனுக்குள்.



"கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு இல்லன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.."



"கண்டிப்பா நீங்க என்ன சொல்றீங்களோ அதுக்கு ஆப்போசிட்டா தான் நான் செய்வேன் என்று உங்களுக்கும் நல்லா தெரியும் அப்புறம் எதுக்கு இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க?"



"வாய மூடிட்டு இரு ரொம்ப ஓவரா பேசுற.."




"உங்களுக்கு பொண்டாட்டியா இருந்து இது கூட பேசலனா எப்படி?"



"ஹா ஹா என்னது பொண்டாட்டியா? எந்த ஜென்மத்துலயும் நீ எனக்கு பொண்டாட்டியா இருக்க முடியாது என்ன பொறுத்தவரை உனக்கு தாலி கட்டுனது இந்த வீட்ல காலம் முழுக்க நீ வேலைக்காரியா இருக்கணும்னு தான்.."




"பழைய படம் எல்லாம் ரொம்ப ஓவரா பாப்பிங்களா?அந்த காலத்துல வில்லன் எல்லாம் பழிவாங்குவதற்கு இப்படித்தான் பேசுவாங்க ஓ நான் மறந்து போயிட்டேன் நீங்களும் வில்லன் தானே!"



"நான் வில்லன் தான் உன்னை பழிவாங்கவே பிறப்பெடுத்து வந்திருக்க வில்லன்.."



"யாரை யாரு பழிவாங்க போறங்கன்னு பொறுத்திருந்து பார்க்கலாம் மை டியர் ஹஸ்பண்ட்.. எந்த வாயால அன்னைக்கு உங்க கூட தப்பான இடத்துக்கு வருவேன்னு என் மேல பழியை போட்டீங்களோ அதே வாயால அத்தனை பேர் முன்னாடியும் என் பொண்டாட்டி நல்லவ நான் சொன்ன அத்தனையும் தப்புன்னு நீங்களே உங்க வாயால சொல்ற காலம் வரும் வர வைப்பேன்.."



"ஓவர் ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீ என்கிட்ட எதிர்பார்க்கிறது எப்பவும் நடக்காது என்று உனக்கே தெரியும் இருந்தாலும் நடக்கணும்னு எதிர்பார்க்கிற உன்னோட விருப்பத்துக்கு ஆல் தி பெஸ்ட்.."


"தேங்க்யூ டியர் ஹஸ்பெண்ட்.."என்ற அருந்ததி கட்டிலில் படுத்துக்கொள்ள, உட்கார்ந்திருந்த கட்டிலில் இருந்து அவசரமாக எழுந்துவிட்டான் துரியோதனன்.



அருந்ததி அவனை ஒரு கணம் ஒன்றும் புரியாமல் பார்த்தவள் அடுத்த கணம் சிரித்து விட்டாள்.



"என்னங்க என் பக்கத்துல படுத்தா உங்களை ரேப் பண்ணிடுவேன் பயந்துகிட்டு வேகமா எந்திரிச்சு நிக்கிறீங்களா? சாரி எனக்கு இப்ப மூடு இல்ல எனக்கு மூடு வரும்போது நான் உங்ககிட்ட தானே வரப் போறேன் நீங்களும் தான் பணம் தருவீங்க அப்புறம் எதுக்கு டென்ஷன்.. என்னமோ உங்க கூட இப்பதான் முதல் முதலா படுக்கிறது மாதிரி எதுக்கு இந்த ஷாக் ரியாக்ஷன்.."என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக கேட்டவள் அவன் முகத்தை பார்க்க கூட பிடிக்காமல் கண்களை மூடிவிட்டாள்.



"யூ டேமிட் நீ செய்ற ஒவ்வொரு வேலைக்கும் கண்டிப்பா உன்னை என்ன பண்றேன்னு பாரு.."என்று கோபமாக சத்தம் போட்டவன் இவளுக்கு பயந்து கொண்டு அதுவும் தன் கட்டிலை விட்டு வேறு ஒரு இடத்தில் சென்று படுக்க வேண்டுமா? என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் ஈகோ தட்டிக் கொடுக்க, அவள் பக்கத்தில் படுத்தான்.



தன் பக்கத்தில் படுத்தவனை நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே திரும்பி கட்டிலில் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.



"கவலைப்படாத எனக்கு எப்பவுமே ரேப் பண்ற மூடு இல்ல அதனால தைரியமா நல்ல கட்டிலுக்கு நடுவுலயே படு.. என்னோட அனுமதி இல்லாம என் சுண்டு விரல் கூட உன் மேல படாது இப்படி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசிகிட்டு இருப்பேன்னு என்கிட்ட எதிர்பார்க்காத.. தோணுச்சுன்னா கண்டிப்பா ரேப் பண்ணுவேன் உனக்கு பயம் இருந்தா ஒழுங்கா எந்திரிச்சு போயிடு.."



"இதுல பயப்பட என்ன இருக்கு? உங்களுக்கும் எனக்கும் நடுவுல எதுவுமே இல்லன்னு உங்களுக்கு தெரிஞ்ச போதும் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எப்படிப்பட்ட ஒரு ரிலேஷன்ஷிப் இருக்குது இந்த ஊர் முன்னாடி இல்ல இந்த உலகத்துக்கு முன்னாடி சொல்லிட்டீங்களே.. இனிமே இந்த உலகத்தோட பார்வையில அர்த்தமே எனக்கு வேற.. இனிமே என்கிட்ட இழக்கறதுக்கு எதுவும் இல்லை கற்பு ஒன்னு மட்டும் தான் இருக்கு ஆனா அதையும் நீங்க எடுக்காமலேயே எடுத்துட்டேன்னு சொல்லிட்டீங்க.. இப்ப நீங்க என் புருஷன் தானே என் பக்கத்தில் வந்தாலும் எனக்கு பிரச்சனை கிடையாது..எப்போ நீங்க அந்த வார்த்தையை சொன்னிங்களோ அன்னைக்கே நான் செத்து போயிட்டேன் இனிமே நீங்க என் பக்கத்துல வந்தா செத்துப்போன பினம் மாதிரி இருப்பேன் தவிர உங்களை தடுக்க மாட்டேன்.."என்றவள் கண்களில் சொட்டு நீர் இறங்கியது.



அவள் சொன்னதை எல்லாம் கேட்டு பெரிதாக வருத்தப்படவில்லை துரியோதனன்.



அவன் தான் துரியோதனன் ஆயிற்றே!



எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவன் எதற்காகவும் கலங்க மாட்டான்.



இதுவரை பெண் வாசம் அறிந்திராத மன்னவனுக்கு தன் அருகில் புதிதாய் ஒரு பெண் இருக்க அதுவும் அவன் மனைவியாய் இருக்க ஏதோ ஒன்று அவனைத் தூண்டி விட்டது.



அவளுக்கே உரிய பிரத்தியேக நறுமணம் அவன் நாசிக்குள் நுழைந்து இதயத்தை தொட்டு மனதை கொள்ளை கொள்ள, மன்னவன் கோபத்தில் அந்த உணர்வுகளை அப்படியே தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டான்.



அவனைப் போல அவளுக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லை போலும் நன்றாக உறங்கி விட்டாள்.



நெடு நாட்களுக்கு பிறகு நன்றாக உறங்கியதால் என்னவோ தூக்கத்திலேயே புரண்டு படுத்தவள் அப்படியே துரியோதனன் மார்பில் தலையை வைத்து அவன் மீது கை கால்களை தூக்கி போட்டு படுத்தாள்.



திறந்திருந்த சாரளம் வழியே தென்றல் காற்று உள்புகந்து அவர்கள் இருவருக்கும் இடையே சரளம் புரிய நினைக்க, வானில் உலா வந்து கொண்டிருந்த நிலாவோ இருவரையும் பார்த்து வெட்கம்கொண்டு மேகம் என்னும் போர்வைக்குள் மறைந்து கொள்ள, துரியோதனன் அவளின் செயலில் ஒரு கணம் சொல்ல முடியாத உணர்விற்கு ஆட்பட்டு வந்தான்.




தூக்கத்திலேயே கை கால்களை தலையணை மீது போட்டபடி தூங்கி பழகிய அருந்ததிக்கு மரகதம் கூட இருந்த நாட்களில் அவருடன் படுத்துக் கொண்டதால் அந்த பழக்கம் அப்படியே தொடர்ந்தது.



முதலில் எல்லாம் அது தெரியாமல் தூங்கியவள் ஒருநாள் இரவில் தூக்கத்திலேயே கண் விழித்தவளுக்கு அப்போதுதான் மரகதத்தின் மீது கை கால்களை போட்டபடி தான் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.



அவரிடம் காலையில் மன்னிப்பு கேட்க,"சின்ன வயசுல இருந்து குழந்தையை என் மேல போட்டு வளர்க்கணும்னு ரொம்ப ஆசை அருந்ததி..குழந்தை வளர்ந்ததுக்கு அப்புறம் அதை கட்டிப்பிடித்து தூங்கணும்னு எவ்வளவோ கனவு எல்லாம் கண்டேன் அது எதுவுமே நிறைவேறாமல் போயிடுச்சு.. இப்ப அத்தனையும் அந்த கடவுள் உன் மூலம் எனக்கு திருப்பிக் கொடுத்திருக்கார்.. தயவு செஞ்சு இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டு என்னை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்காமல் எப்பவும் போல இரு நீ என்னோட பொண்ணு தான் எந்த தப்பும் இல்லை.."என்று சொல்ல, அதன் பிறகு அவர் எந்த தயக்கமும் இல்லாமல் அப்படியே உறங்க ஆரம்பித்து விட்டாள்.



இடைப்பட்ட நாட்களில் மரகதம் இல்லாமல் தனியே படுக்க பழகி இருந்தவளுக்கு அவர் மீது கை கால்களை தூக்கி போட்டு படுத்து உறங்கும் சுகம் இல்லாமல் போக, சில நாட்கள் இரவில் முழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.




தலையணை மீது கை கால்களை போட்டு தூங்குவதை விட, அருகில் இருந்த கணவன் மீது கை கால்களை போட்டுக் கொண்டு தூங்குவது அவளுக்கு இன்னும் வசதியாக போக நன்றாக அசந்து உறங்க ஆரம்பிக்க, துரியோதனன் நிலைதான் பரிதாபத்துக்கு உள்ளானது.



அவனுடைய உணர்வுகள் அவன் வேட்கையை தூண்டிவிட, அவளை நுகர்ந்து பார்க்கும் எண்ணம் நொடிக்கு நொடி அவனுக்கு அதிகமானது.



இதில் அடிக்கடி அவள் அசையும் போது கைகளில் மாட்டியிருந்த வளையலின் சத்தமும் கால் கொலுசின் சத்தமும் வேறு அவனுக்கு ஒரு புதிய பாஷையை கற்றுக் கொடுக்க அனைத்தும் அவனுக்கு புதிதாக இருந்தது.



அவன் தாபம் நொடிக்கு நொடி அதிகமாக இதற்கு மேலும் இப்படி இருந்தால் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்று அவளை விட்டு எழுவதற்கு முயற்சி செய்ய அவனை சிறிதும் விடவில்லை அவள்.



தூக்கத்திலேயே புரண்டு படுத்தவள் அவன் அசைவது போல் இருக்க சற்று தூக்கம் கலைந்தவள் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் தலையை இன்னும் சற்று அழுத்தி அவன் கழுத்துக்கு அருகில் முகத்தை புதைத்துக் கொண்டு கைகளால் அவன் கழுத்தை நன்றாக சுற்றி வளைத்து கால்களை கொண்டு அவன் கால்களை இறுக்கி பிடித்து சர்ப்பம் போல் அவனை துளியும் அசைய விடாமல் நன்றாக உறங்க, அவளை உதறிவிட்டு எழுவதற்கு அவனுக்கு ஒரு நொடி போதும்.



ஆனால் அவனுக்கும் அவளது வாசம் மிகவும் பிடித்து இருந்தது.



இதுவரை வாழ்க்கையில் அவன் அனுபவிக்காத ஒரு இனிமையை அவள் பக்கத்தில் அனுபவிக்க அதை கெடுத்துக் கொள்ளவும் மனம் வராமல் அப்படியே படுத்தவன் விடிய விடிய கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்க அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பெண்ணவள் அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
 
தீ-14



"கடவுளே எல்லார் வாழ்க்கையிலும் சந்தோஷமா எந்த பிரச்சனையும் இல்லாமல் எல்லாரும் நிம்மதியா இருக்கணும்.."என்று வழக்கம் போல் தன் வேண்டுதலை வைத்துவிட்டு இரு கைகளிலும் மகாலட்சுமி குடி இருக்கிறாள் என்பதை நம்பிக்கையாக கொண்டவள் எழுந்ததும் தன் முகத்திற்கு நேராக இரு கைகளையும் விரித்துப் பார்த்தாள்.



கைகளை அப்படியே கீழே இறக்க அவளுக்கு நேரேதிரே தெரிந்த அலங்காரங்களும் சுவர்களும் அவள் இதுவரை பார்க்காதது போல் இருக்க ஒரு நிமிடம் அந்த இடத்தை அப்படியே சுற்றிப் பார்த்தாள்.



'இது என்னோட வீடு இல்லையே என்னோட ரூம் இப்படி எல்லாம் இருக்காதே..' என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பார்வையை தழைக்க அங்கு இவளை முறைத்து பார்த்தபடி படுத்திருந்தான் துரியோதனன்.



அவனை கண்ட பிறகே நேற்று தனக்கு திருமணம் நடந்தது அவளுக்கு நினைவு வந்தது.



என்னதான் அவள் எழுந்திருந்த போதும் அவள் கால்களில் ஒன்று அவன் கால்கள் மீது தான் கிடந்தது.



அவன் கால்கள் மீது தன் கால்கள் இருப்பதை கண்டவள் காலை எடுத்துவிட்டு இரவு என்ன நடந்தது என்பதை யோசிக்க அப்போதுதான் தூக்கத்தில் அவனை கட்டிப்பிடித்தபடி படுத்திருந்தது நினைவுக்கு வந்து அவளை சிவக்க வைத்தது.



அவள் முகம் சிவந்தது கோபத்திலா அல்லது வெட்கத்திலா என்பது அவளுக்கே வெளிச்சம்.



"என்னங்க மாம்ஸ் நைட் ஃபுல்லா நல்லா தூங்கிட்டிங்க போல இருக்கு எப்பவுமே விடிய காலையில் எழுந்துடுவீங்களோ?"என்று அவனை வம்பு இழுத்தாள்.



அவள் கேட்டதும் அவன் முகம் கோபத்தில் செந்தணலாக சிவந்து போயிற்று.




"என்னடி உனக்கு பழசு எல்லாம் மறந்து போச்சா ரொம்ப ஓவரா பேசுற உனக்கும் எனக்கும் எப்படி கல்யாணம் நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா இல்லையா?"



"ஏன் இல்லாம நல்லாவே ஞாபகம் இருக்கு எங்க அக்கா தலையில துப்பாக்கிய வச்சி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.."



"அப்படி மெரட்டி உன்ன கல்யாணம் பண்ணது எதுக்கு உன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்வதற்காக இல்ல வாழும் போதே உனக்கு நரகத்தை காட்ட! இன்னைக்கு என்னோட ஒவ்வொரு வேலைக்கும் அடுத்தவங்களை நான் எதிர்பார்க்கிற நிலைமையை உண்டாக்குன உன்னை சந்தோஷமா இருக்க விட்டுடுவேனா?"



"டயலாக் கொஞ்சமாவது மாத்துங்க பாஸ் எத்தனை தடவைதான் சொல்லிகிட்டே இருப்பீங்க?"




"எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை.."



"என்ன பண்ணப் போறீங்க மாம்ஸ் உங்களுக்கு வர்ற கோபத்துக்கு அப்படியே என்னை இறுக்கமா கட்டிப்புடிச்சு ஒரு முத்தம் கொடுக்க போறீங்களா! எனக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை இந்த சினிமாவுல கதையில எல்லாம் படிக்கும்போது காலையில எந்திரிச்ச உடனே ஹீரோவும் ஹீரோயினும் பல்லு விளக்காம முத்தம் கொடுத்துக்கு வாங்கலாம்..அதைக் கேட்டு முதல்ல எனக்கு ஒரு மாதிரி அருவருப்பா இருந்துச்சு இப்ப உங்க கூட சேர்ந்து ட்ரை பண்ணா அது எப்படி இருக்குன்னு எனக்கும் தெரியும்.."என்றவள் முடியை அள்ளி கொண்டை போட்டபடி அவன் பக்கத்தில் குனிந்தாள்.



தான் என்ன சொன்னாலும் அதை கேலியாக மாற்றி தன்னையும் கேலி செய்பவளை எதுவும் செய்ய முடியாமல் தன்னிலை இழந்த துரியோதனன் அவளை என்ன செய்து கண்ணீர் விட வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவன் முகத்துக்கு அருகே அவள் கற்றை முடிகள் தொங்கி அவனை தீண்டியது.



அதில் அவன் வேகமாக எழுந்து கொள்ள பக்கத்திலிருந்த அவள் இதழ்களோடு அவன் இதழ்கள் ஒரு நிமிடம் மோதி பின் பிரிந்தது.


முதல் தீண்டல் அவர்கள் இருவரையும் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.



அருந்ததியோ தன்னை மறந்து அவன் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க, துரியன் முகம் அருவருப்பை பூசிக் கொண்டது.



அவன் முகத்தில் தோன்றிய அருவருப்பை கண்ட அருந்ததிக்கும் தான் ஏன் அப்படி செய்தோம் என்று தன் மீது கோபம் வந்தது.



"நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க.. இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்னை அனுபவிக்காம விடமாட்டேன்.."என்றான் துரியோதனன்.



"ஐயோ என்ன மாம்ஸ் இது கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இப்பதான் ஒரு லிப் லாக் கொடுத்தீங்க.. அதுக்குள்ள என்ன அனுபவிக்கிறதை பத்தி பேசுறீங்க போங்க எனக்கு ரொம்ப வெக்கமா வருது நான் போறேன்.."என்று அங்கிருந்து ஓடியவளை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டான்.



அவன் அறைக்குள்ளேயே குளியலறைக்கான வசதியும் இருக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அருந்ததி கதவை சாத்திவிட்டு அதன் மேலே சாய்ந்து நின்றாள்.



துடிக்கும் இதயத்தை கைகளைக் கொண்டு கட்டுப்படுத்தியபடி கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தாள்.



"ஏன்? எனக்கு மட்டும் இந்த நிலைமை ஏன் கடவுளே.. நான் அப்படி யாருக்கு என்ன பாவம் பண்ணேன் எதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை?"என்றவள் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக வாயை பொத்தியபடி கதறி அழுக ஆரம்பித்தாள்.




அவளின் அழுகை காண காரணம் தான் என்னவோ பூஜாவுடன் நடக்க வேண்டிய திருமண அருந்ததியோடு நடக்க காரணம்??


இவர்கள் இருவரையும் தவிர துரியோதனின் உயிர் நண்பர்கள் கர்ணன், அபிமன்யு இருவரும் இந்த திருமணம் நடப்பதற்கு அவர்கள் செய்த செயலை நினைத்து கண்களை மூடி திறந்தார்கள்.




"அந்த பொண்ணு ரொம்ப பாவம்டா எதுக்காக அவக் கிட்ட இப்படி ஒரு பொய் சொன்ன?"மனம் தாங்காமல் கேள்வி கேட்டது என்னவோ அபிமன்யு தான்.



"அப்புறம் என்னடா பண்ண சொல்ற?அந்த பிராடு பூஜா இவனை கல்யாணம் பண்ணி இருக்கிற கொஞ்சம் நஞ்சம் வாழ்க்கையையும் இவன் நாசமாக்குறதுக்கா..ஆல்ரெடி அவன் லைஃப் எப்படி போய்கிட்டு இருக்குன்னு நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும் நியாயமா அவங்க தாத்தா பாட்டி ரெண்டு பேரும் செய்ய வேண்டிய வேலையை நம்ம ரெண்டு பேரும் செஞ்சிருக்கோம்.. அந்தப் பொண்ணு காலேஜ் ஓனரோட கண்ண புடுங்குனதுலையே நம்ம தெரிஞ்சுக்க வேண்டாமா!அவளுக்கு எல்லாத்திலேயும் தைரியம் கூட அந்த மாதிரி ஒரு பொண்ணு தான் துரியோதனன் கூட கடைசி வரைக்கும் இருக்கணும்.."




"நீ சொல்றதெல்லாம் சரிதான் மச்சான் இருந்தாலும் அந்த பொண்ணுக்கு ஒரு வேலை உண்மையெல்லாம் தெரிஞ்சிருச்சுன்னா.."



"இப்போதைக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்ல மச்சி கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிடுவாங்க அதுக்கப்புறம் இந்த உண்மை தெரிஞ்சாலும் இரண்டு பேரும் பெருசா கவலைப்படாம அதெல்லாம் விட்டுட்டு அவங்க லைஃப்ல மேல மேல போயிட்டே இருப்பாங்க.."




"என்னவோ நீ சொல்ற போடா எனக்கு மனசே ஒத்துக்கல..சரி நீ பொய் சொன்னேன்னு தான் எனக்கு தெரியும் அப்படி என்ன பொய் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்தி வச்ச.."



"பெருசா ஒன்னும் இல்லடா மச்சான் துரியோதனனுக்கு பிரைன் டியூமர் இருக்குதுன்னு சொன்னேன்.. அவன் இந்த உலகத்துல வாழப் போறது எத்தனை நாட்கள்னு அவனுக்கே தெரியாது.. அவனுக்கு இப்படி ஒரு நோய் இருக்க விஷயம் கூட அவனுக்கு இப்ப வரைக்கும் தெரியாது இந்த நிலைமையில் இருக்க ஒருத்தன தான் இந்த நிலைமைக்கு நீ ஆளாக்கி வச்சிருக்க இதுக்கு நீ என்ன செய்ய போறன்னு கேட்டதும் அந்த பொண்ணு கண்ணுல அப்படி ஒரு தண்ணீர்.. இப்படிப்பட்ட ஒரு நிலைமையில இருக்கிறவறை இந்த மாதிரி பண்ணிட்டேனு நினைச்சு ரொம்ப அழுதுடுச்சு.. அந்த பொண்ணு என்னை பார்க்க இதுதான் வாய்ப்புன்னு உன்னால ஏற்பட்ட பிரச்சனையை நீ தான் சரி பண்ணனும் அவனை கல்யாணம் பண்ணி அவன் இருக்கிற வரை சந்தோசமா இருக்கிற மாதிரி பார்த்துக்கோன்னு சொல்லிட்டேன் அந்த பொண்ணு தன்னுடைய தப்பை ஒத்திகிட்டு கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா.."



"இவ்வளவு பெரிய பொய்யை எதுக்காக சொன்ன?என்னதான் இருந்தாலும் அவன் நம்மளோட பிரண்ட் அவனுக்கு போய் இப்படி ஒரு இல்லாத நோயை இருக்குதுன்னு சொல்லி இருக்க.."



"வாய மூடு மச்சான் இந்த காலத்துல பாவம் புண்ணியம் எல்லாம் பார்த்தா வாழ முடியாது.. அவன் இப்ப இருக்க நிலைமையில யாரையாவது கல்யாணம் பண்ணி ஆகணும்னு தீவிரமா இருக்கான்.. இப்படிப்பட்ட நிலைமையில அவனை அருந்ததியைத் தவிர வேற யாராவது கல்யாணம் பண்ணா வாழும்போதே மச்சானுக்கு அப்புறம் நரகம் தான் அதுக்கப்புறம் அவன நம்ம பார்க்கிறது ரொம்ப கஷ்டம்.."




"உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க மச்சான் எல்லாரும் கெட்டவங்க கிடையாது.."என்ற அபிமன்யுவை முறைத்துப் பார்த்தான் கர்ணன்.



"அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே அப்புறம் எதுக்கு அத பத்தி பேசிகிட்டு இருக்க! நான் சொன்னது போலவே அந்த பூஜாவை பணயமா வச்சு அருந்ததியை பழி வாங்குவதற்காக துரியோதனன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.. சத்தியமா நான் அவன்கிட்ட இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லடா..அவன் அருந்ததியை தான் கல்யாணம் பண்ண போறான்னு தெரிஞ்சிருந்தா தேவையில்லாம எனர்ஜியை வேஸ்ட் பண்ணி அந்த பொண்ணு கிட்ட பொய் சொல்லி இருக்க மாட்டேன்.."



"சரி விடுடா நடந்த எல்லாமே நல்லதுக்கு தான் அவனுக்கு நீ இப்படி இருக்குதுன்னு சொன்னதுக்கப்புறம் நிச்சயம் அவன் அந்த பொண்ண என்ன பண்ணாலும் கண்டிப்பா அவ விட்டுட்டு போக மாட்டா பார்ப்போம்.."என்ற இருவரும் தன் நண்பனின் திருமணத்தை கொண்டாடுவதற்காக அனாதை ஆசிரமத்தில் இருந்த ஆயிரம் மாணவர்களுக்கு உணவு தானம் செய்வதற்காக கிளம்பி விட்டார்கள்.



"நோ என்னால இதை ஏத்துக்கவே முடியாது..ஒவ்வொரு தடவையும் நான் எதிர்பார்க்கிற விஷயம் எல்லாம் அந்த அருந்ததிக்கு மட்டும்தான் கிடைக்குது நான் ஒவ்வொரு தடவையும் அவகிட்ட மூக்குடை பட்டு தோத்து போறேன் என்னால தாங்கிக்கவே முடியல.."என்றழுத பூஜாவை சமாதானபடுத்த, ஈஸ்வர் நெருங்க அவர் கைகளை பிடித்து தடுத்து நிறுத்திய உமா அவரை உக்கிரமாக முறைத்து பார்க்க வேறு வழியில்லாமல் மனைவியின் பார்வையை கண்டு அப்படியே நின்று விட்டார்.



"இங்க பாரு பூஜா உனக்கு ஏத்த தண்டனை தான் இது.. உன்ன மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணி அந்த பையன் வாழ்க்கை முழுக்க கஷ்டப்படணுமா?அவன் வாழ்க்கை நாசமா போகக்கூடாது..நீ செஞ்சு வச்சிருக்க வேலை அவ்வளவுதான் அந்தப் பையன் அருந்ததி அத்தனை பேருக்கும் தேவையில்லாத பிரச்சினை இதே மாதிரி நீ மறுபடியும் அவங்க வாழ்க்கையிலோ இல்ல தேவையில்லாத பிரச்சினை ஏதாவது செஞ்சாலும் எங்களோட மொத்த சொத்தையும் அனாத ஆசிரமத்திற்கு எழுதி வச்சுட்டு உன்ன மாதிரி ஒரு பொண்ணை தத்தெடுத்து வளர்த்த பாவத்துக்காக நாங்க ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிட்டு செத்து போயிடுவோம் அதுக்கப்புறம் நீதான் அனாதையா நடுரோட்டில் நிக்கணும்.."என்ற உமாவின் பேச்சில் அழுகையை நிறுத்திவிட்டு அவரை வெறித்து பார்த்தாள் பூஜா.



"ஏய் உள்ள இன்னும் என்னதான் பண்ணிக்கிட்டு இருக்க சீக்கிரம் வா நான் குளிச்சிட்டு ரெடி ஆகணும்.."என்று குளியலறை கதவை கோபமாக தட்டினான் துரியோதனன்.



உள்ளே அழுது கொண்டிருந்த அருந்ததி இவன் கதவை தட்டும் சத்தம் கேட்கவும் அழுகையை நிறுத்திவிட்டு கண்களை துடைத்தவள் மனதுக்குள் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொண்டாள்.



நிச்சயம் துரியோதனனின் உயிர் நண்பன் த ன்னிடம் பொய் சொல்லி இருக்க மாட்டான் என்று முழுமையாக நம்பி அவனை திருமணம் செய்து கொண்டவள் இப்பொழுது அவனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.




அவளுக்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை என்றாலும் தன்னால் பாதிக்கப்பட்டவனுக்கு தன்னையே கொடுத்து அவனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று திருமணம் செய்து கொண்டவள் அவன் உயிரோடு இருக்கும் வரை எது சொன்னாலும் அமைதியாக இருந்துவிட்டு அவன் உயிரை துறக்கும்போது அவன் மனைவியாகவே தானும் மடிந்து விட வேண்டும் என்று மனதுக்குள் சங்கல்பம் மேற்கொண்டாள்.

 
குளியலறை கதவை திறந்தவள் "அட என்ன மாம்ஸ் நான் இப்பதான் வந்து பத்து நிமிஷம் ஆகுது ஒரு பொண்ணு குளிச்சு முடிச்சுட்டு வெளியே வர அரை மணி நேரம் ஆகும் அதுவரை நீங்கள் கொஞ்சம் பொறுமையா தான் இருக்கனும்.. இல்லன்னா வாங்களே நீங்களும் நானும் சேர்ந்து குளிக்கலாம்.."என்றவள் குரலே ஒரு மாதிரியாக ஒலிக்க, அவனோ செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தான்.



"போயும் போயும் உன்ன மாதிரி ஒரு வேசி கூட சேர்ந்து நான் குளிப்பேன்னு நினைச்சியா? என் வீட்ல வேலை செய்ற வேலைக்காரியா இருக்க தகுதி கூட உன்கிட்ட இல்லடி.. யாருமே இல்லாத அனாதை உனக்கு பணக்காரன் நான் கெடச்சதே பெருசு அதுலயும் என் கூட சேர்ந்து சந்தோஷமா இருக்கலாம்னு வெக்கமே இல்லாம அழைக்கிறாயே இதுக்கு முன்னாடி எத்தனை பேர இந்த மாதிரி கூப்பிட்ட.."என்ற துரியோதனனின் வார்த்தைகள் நெருப்புத் துண்டுகளாய் வந்து விழுந்து அவள் மீது.



தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவளை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொண்டவன் தான் என்ன என்ன செய்தோம் அது எல்லாம் சுக்கு நூறாக உடைத்து தன்னையே அவள் கிண்டல் செய்வது நினைத்து பெரும் கோபம் கொண்டிருந்தவன் இப்பொழுது அவளை எப்படியாவது வதைத்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வார்த்தைகளை கொட்டி விட்டான்.



அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் எதிர்பார்த்தது போலவே சரியாக அவள் மனதை பதம் பார்த்தது.



அவன் சொன்ன வார்த்தைகளை அவளுக்கு கிரகித்துக் கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது.



புரிந்தவுடன் அவன் சொன்ன வார்த்தைகள் யாவும் நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போல் வேதனையில் பெண்ணவள் துடித்து விட்டாள்.



அவள் அழுகை அவனுக்கு திருப்திகரமாக அமைந்ததும் இதழ்களில் ஒரு சின்ன புன்னகை தோன்றியது.



இருப்பினும் அதுவும் போதவில்லை அவனுக்கு பெரிதாக அவள் கண்ணீர் பெரிதாக அந்த அறையை நிறைக்கும் அளவிற்கு சத்தமாக அவள் அழ வேண்டும் என்று மனம் அவள் அழுகையை இன்னும் இன்னும் விரும்பியது.



"என்ன போலி கண்ணீர் வடிச்சுக்கிட்டு இருக்கிறாயா? இதுக்கெல்லாம் அனுதாபப்படுற ஆள் இந்த துரியோதனன் கிடையாது.. என்னோட ஸ்டேட்டஸ் என்னன்னு உனக்கு தெரியுமா? நான் தொடுற பொண்ணுங்களுக்கு கூட ஒரு தகுதி வேணும்.. என்னோட ஒரு நைட் ரேட் எவ்வளவு தெரியுமா? இப்ப என் கண்ணு முன்னாடி இருக்க உன்னை தெரியலனாலும் இதுக்கு முன்னாடி உன்னை பார்த்த ஞாபகம் அப்படியே இருக்கு அதுல ஒரு பர்சன்டேஜ் கூட உனக்கு நான் தரவே முடியாது.. அதுக்கு கூட நீ தகுதி இல்லாத பொண்ணு.. எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே கட்டிப் பிடிச்சுக்கிட்டு நைட்டு தூங்குவ! நீ தொட்ட இந்த உடம்பு எனக்கு ரொம்ப அழுவருப்பா இருக்கு முதல்ல நான் குளிக்கணும் தள்ளிப்போ அங்கிட்டு உன்னை தொடரது கூட எனக்கு அசிங்கம் என் வீட்டு நாயை கூட தொட்டு பாப்பேன் ஆனா நீ அதைவிட கேவலமானவ.."என்று மின்னாமல் முழங்காமல் அவள் தலையில் கூடை நெருப்பை அள்ளிக் கொட்டி விட்டு அவளை தொடாமல் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக் கொண்டு அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டவன் அவள் மீது தன் வாக்கிங் ஸ்டிக் கூட படக்கூடாது என்று ஓரமாக சென்றவன் "ஏய் வெளியில் போடி நான் குளிக்கணும்.. இப்ப சொல்றத நல்லா கேட்டுக்கோ என்னோட ரூமுக்குள்ள நீ வரவே கூடாது இந்த வீட்ல வேலை செய்ற வேலைக்காரங்களுக்குன்னு போனா போகுதுன்னு நான் சில ரூம் ஏற்பாடு பண்ணி கொடுத்து இருக்கேன் அங்கேயே இருந்துக்கோ.."என்றவன் அவள் முகத்திலடிப்பது போல் கதவை வேகமாக அறைந்து சாத்தினான்.



ஏற்கனவே மனம் உடைந்து போயிருந்தவள் அவன் பேசிய வார்த்தைகளை கேட்டு சுக்கு நூறாக உடைந்து போனாள்.



அப்படியே கீழே அமர்ந்தவள் முழங்கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு அதில் முகத்தை புதைத்து அழுக ஆரம்பித்து விட்டாள்.



இந்த ஜென்மத்தில் அவளுக்கே அவள் மட்டும் தான் துணை போலும்!! அவளுக்கென்று வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை.



தன் வேதனைகளை யாரிடம் சொல்லி அழுக முடியும்?




தன் சரி பாதியிடம் தான் தன் துன்பங்களை எல்லாம் எந்த பெண்ணும் சொல்லி அழுக முடியும்.




அவனே அவளுக்கு தீராத வேதனைகளையும் துன்பங்களையும் தரும் பொழுது அவள் யாரை அணுகுவாள்.



"நான் இவ்வளவு சொல்லியும் போகாமல் இங்கேயே உட்கார்ந்து இருக்கியா? என் ரூமை விட்டு ஃபர்ஸ்ட் வெளில போ.. பிரிட்ஜ்ல ரெண்டு ஹாட்டான பீர் பாட்டில் இருக்கும் எடுத்துட்டு வா.."என கண்களை துடைத்துக் கொண்டவள் எழுந்தாள்.




"நீங்க என்னதான் உங்க வீட்டு வேலைக்காரின்னு என்ன சொன்னாலும் நீங்க கட்டின தாலி என் கழுத்துல தூங்கிகிட்டு தான் இருக்கு என் கழுத்தில் இந்த தாலி இருக்கிற வரை நீங்க இல்லை யார் நினைச்சாலும் நான் உங்க மனைவி என்கிற பட்டத்தை அழிக்க முடியாது..நீங்க சொன்ன இந்த வார்த்தை எல்லாம் கேட்டு துவண்டு போயி அப்படியெல்லாம் உங்களை விட்டுட்டு போயிடுவேன்னு நினைக்காதீங்க நீங்க எனக்கு ஒரு மடங்கு கொடுத்தால் நான் உங்களுக்கு திருப்பி ரெண்டு மடங்கு கொடுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது.."




"ஆமா ஆமா எனக்கு நல்லாவே தெரியுமே! அடுத்தவங்க மேல பொய்யான பழியை போட்டு அவங்க வாழ்க்கையை நாசம் பண்ண உன்ன விட யாரால முடியும் சும்மா சொல்ல கூடாதுடி உங்க அக்காவை கூட ஒரு விதத்துல நம்பிடலாம் ஆனா நீ இருக்கியே ஊமை மாதிரி இருந்துகிட்டு ஊரையே கெடுத்துடுவே.."



"ரொம்ப பேசாம வாய மூடுங்க உங்களுக்கு தான் வாய் இருக்குன்னு ரொம்ப ஓவரா பேசாதீங்க எனக்கும் இருக்கு.. என்ன பத்தி பேசுறதுக்கு முதல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நீங்களே பல பொம்பளைங்க கிட்ட போன சாக்கடை நியாயமா நான்தான் உங்களை ஒதுக்கி வைக்கணும் நீங்க என்ன ஒதுக்கி வைக்கவே கூடாது.." அவள் சொன்னதை கேட்டதும் துரியோதனன் கோபம் எல்லையை கடக்க மூர்க்கன் ஆகிவிட்டான்.



"என்னடி சொன்ன? என்னோட தகுதித்தராதரத்தை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு!"என்றவன் கோபத்தில் அவள் கழுத்தைப் பிடித்து விட்டான்.



அவன் அழுத்தி பிடித்த இடத்தில் வலி ஏற்பட்ட போதிலும் அதை தாங்கிக் கொண்டு அருந்ததி சிறிதும் அதை கண்டு அஞ்சவில்லை.



"என்ன தொட்டா தான் உங்களுக்கு ரொம்ப அருவருப்பா இருக்குமே அப்புறம் இப்ப இது மட்டும் எதுக்கு என் கழுத்தை புடிச்சு இருக்கிறீங்க! என்ன தான் நீங்க வெளியில கோபமா பேசினாலும் உங்க மனசுக்குள்ள பொண்டாட்டி மேல பாசம் நிறைய இருக்குதுன்னு தெரியுது மாம்ஸ்.. சரி சரி கைய எடுங்க நான் தமிழ்நாட்டு பொண்டாட்டியாகும் புருஷன் சொன்னதை செஞ்சுட்டு தான் மறு வேலை பார்ப்பேன் நான் போய் உங்களுக்கு குடிக்க சூடா இல்ல ஹாட்டான பீர் எடுத்துட்டு வரேன்.."என்றவள் அவன் கைகளை தன் கழுத்திலிருந்து பிரித்து எடுத்தவள் அங்கிருந்து வெளியில் வந்தாள்.




அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் அவன் கன்னத்திலேயே மாறி மாறி அறைந்து விட்டு இந்த நிமிடமே அவன் கட்டிய தாலியை கழட்டி அவன் முகத்தில் எரிந்து விட்டு செல்லும் அளவிற்கு கோபம் வந்தாலும் அவனுக்கு இருக்கும் நோயை நினைத்து மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள் அருந்ததி.



எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் அனைவரும் சந்தோஷமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பும் பெண் முதன் முதலாக தன்னால் வாழ்க்கையில் ஒருவன் தன் கண்களை இழந்து வாழ்க்கையை இழந்து தன்னால் அவன் சந்தோஷத்தை இழந்து நிற்பதால் அனைத்திற்கும் தான் மட்டுமே காரணம் என்று தன் மீது பழியை போட்டுக் கொண்டாள்.




பிரச்சனைக்கு காரண கர்த்தாவான பூஜா ஒரு பக்கம் இருக்க அருந்ததிக்கு தண்டனை கொடுக்கும் துரியோதனன் மற்ற பக்கம் இருக்க எந்தவிதமான தவறுகளும் செய்யாத அருந்ததி தான் அனைத்து தண்டனைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.



இத்தனை கஷ்டங்களை அவள் தாங்கிய போதிலும் எந்த இடத்திலும் நெறி தவற எண்ணவில்லை.




தவறு செய்யாதவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது தான் மட்டும் ஏன் இப்படி நேர்மையாக இருந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை சந்தித்து தன் சந்தோஷத்தை இழக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் அவள் மனதில் தோன்றினாலும், இயல்பாகவே அவளுக்குள் இருக்கும் நல்ல மனிதம் அவளை அப்படி மாற்றிவிடவில்லை.



அவன் அறையை விட்டு கீழே இறங்கி ஹாலுக்கு வர, அங்கு கண்ணம்மா மூர்த்தி இருவரும் பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு ஆளுக்கு ஒன்றாக அருந்தி கொண்டிருந்தார்கள்.



தன் தாத்தா பாட்டி வயதான காலத்தில் சுத்தபத்தமாக இருந்து இறைவனை வணங்கி எப்படி எல்லாம் வீட்டை வைத்துக் கொண்டார்கள் என்பது அவளுக்கு நினைவு வந்துப் போனது.



இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வீட்டில் இருக்கும் தன் கணவன் இப்படி எல்லாம் பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம்! என்று நினைத்துக் கொண்டவள் அவர்களை கண்டும் காணாதது போல் கடந்துச் செல்ல அவளை விடவில்லை கண்ணம்மா.



"ஏய் இந்த வீட்டு வேலைக்காரி இங்க வாடி.."என்று அவளை அழைக்க அதை கேட்டு அருந்ததிக்கு கோபம் வந்த போதிலும் காதில் வாங்காதது போல் கடந்து செல்ல விடவில்லை கண்ணம்மா.



"ஏண்டி இந்த வீட்டு எஜமானி அம்மா நான் கூப்பிட்டுட்டு இருக்கேன் கூப்பிட கூப்பிட கேட்காமல் போய்க்கிட்டே இருக்கியா?"என்றவர் குடித்திருந்தால் நா குளற, அப்படியே தள்ளாடியபடி எழுந்து அவள் பக்கத்தில் வந்தார்.



அவர் அருகில் வந்ததும் மூக்கை பிடித்துக் கொண்டு அவரை விட்டு ஈரடி பின்னே தள்ளி சென்றாள்.




அதைக் கண்ட கண்ணம்மா மிகவும் கோபம் கொண்டு அவர் பங்குக்கு அவரால் எத்தனை கெட்ட வார்த்தைகளை சொல்ல முடியுமோ அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொல்லி அவளை திட்டினார்.


அவர் பேசிய வார்த்தைகளை கேட்க முடியாமல் தன் காதுகளை பொத்திக் கொண்ட அருந்ததி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாது அவரை விட்டு விறு விறுவென மூர்த்தியிடம் வந்தவள் அங்கு அவர்கள் குடித்து விட்டு வைத்திருந்த காலி சரக்கு பாட்டிலை கையில் எடுத்தவள் சுவற்றில் ஓங்கி அடித்து அதன் ஒரு பாகத்தை உடைத்தவள் அதன் ஒரு பாகத்தை கையில் எடுத்துக் கொண்டு கண்ணம்மாவிடம் வந்தவள் "இன்னும் ஒரு வார்த்தை பேசினீங்க உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை வச்சு பாக்கலாம் மாட்டேன். ஸ்ட்ரைட்டா கழுத்துல இறக்கிடுவேன் இல்ல பேசுற அந்த நாக்கை இழுத்து வச்சு ஒரே சொருகா சொருகிடுவேன்.. அதுக்கு அப்புறம் பேச முடியாது சாப்பிட கூட முடியாது ஜாக்கிரதை.."என்றவளை கண்டு மிரண்டு விட்டார் கண்ணம்மா.




சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள் தான் இப்படி எல்லாம் பேசினால் நிச்சயம் தன்னிடம் பயந்து விடுவாள் என்று தப்பு கணக்கு போட்டவர் இப்பொழுது அவர் தான் அவளிடம் பயந்து நின்றார்.



இங்கு நடப்பதை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி அருந்ததி தன் மனைவியை மிரட்டுவதை கண்டதும் கையில் வைத்திருந்த சரக்கு பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு பயத்தில் எழுந்து நின்று விட்டார்.



கணவன் மனைவி இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் விறு விறுவென சமையல் கட்டுக்கு சென்று அங்கிருந்த சிங்கிள் தன் முகத்தை கழுவி விட்டு பிரிட்ஜை திறக்க அது முழுவதும் நிரம்பி கிடந்தது என்னவோ சரக்கு பாட்டில்கள் மட்டும் தான்.



"என் வாழ்க்கையில் இப்படி ஒரு குடும்பத்தை இங்கே மட்டும்தான் பாத்திருக்கேன்.. என்ன கல்யாணம் பண்ணவன் தான் லூசுன்னு பார்த்தா இங்க இருக்க எல்லாமே லூசா தான் இருக்கு.. நல்ல குடும்பத்தாளுங்க யாராவது வந்து ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தா அதுக்கப்புறம் இந்த வீட்டு பக்கமே தல வெச்சு கூட படுக்க மாட்டாங்க இந்த வீட்டை நிறைய மாத்தணும் போல இருக்கு.."என்று பெருமூச்சு விட்டவள் அந்த சரக்கு பாட்டிலை தொடுவதற்கே அருவருப்பு பட்டு கொண்டு அங்கு கிடந்த ஒரு துணியை பிடித்து ஒரே ஒரு பாட்டிலை மட்டும் ஒரு டிரேயில் வைத்து எடுத்துக்கொண்டு பிரிட்ஜ் கதவை சாத்திவிட்டு சமையல் கட்டை விட்டு வெளியில் வர,அவள் மிரட்டி விட்டு உள்ளே செல்லும் பொழுது எப்படி நின்று கொண்டிருந்தாரோ கண்ணம்மா அப்படியே தான் நின்று கொண்டிருந்தார்.



அவள் வெளியில் வந்ததும் அவள் கைகளில் இருந்த சரக்கு பாட்டிலைக் கண்டு தன் அதிர்ச்சியை மறைத்து வைத்துக் கொண்டு அவளை ஏளனமாக பார்த்தார்.



"ஏண்டி என்னமோ பெரிய உத்தம புத்தினி மாதிரி பேசிட்டு இப்ப சரக்கு பாட்டில எடுத்துக்கிட்டு எங்கே போற!"என்று கேட்க, அன்று கண்ணம்மாவிற்கு நேரம் சரியில்லை போலும்.



ஏற்கனவே மிகவும் மனம் உடைந்து கோபத்தில் இருந்த அருந்ததி தன் கோபத்தை யார் மீது கொட்டலாம் என்று காத்துக் கொண்டிருக்க, அவரிடம் வசமாக சிக்கிக் கொண்டார் கண்ணம்மா.



"ஏய் கிழவி உனக்கு அம்புட்டு தான் மரியாதை எங்க வீட்ல பெரியவங்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி தான் கத்துக் கொடுத்தாங்க.. அதே மாதிரி உன்னை போல பஜாரியை பார்த்தால் எப்படி ஹாண்டில் பண்ணனும்னு நானே கத்துக்கிட்டேன்.. ஒழுங்கு மரியாதையா வாய மூடிட்டு போங்க இருக்கிற ஆத்திரத்தில் பாட்டிலை உங்க வாயிலேயே சொரிகிடுவேன்.."என்றவள் கோபமாக முதலில் உடைத்து எடுத்து வைத்திருந்த அதே கண்ணாடி பாட்டிலை எடுத்து கண்ணம்மா கழுத்து பக்கத்தில் கொண்டுவர, எங்கே அவள் சொன்னதை செய்து விடுவாளோ என்ற பயத்தில் அடித்த சரக்கு மொத்தமும் இறங்க பயத்தில் தன் அறைக்கு ஓடிவிட்டார்.



சோபாவில் அமர்ந்திருந்த மூர்த்தியையும் ருத்ரமாக அருந்ததி முறைத்து பார்க்க,அவள் பார்வையில் பயந்தாங்கோலி மூர்த்தியும் மனைவியின் பின்னே தங்கள் அறைக்குள் ஓடி விட்டார்.



கையில் இருந்த கண்ணாடி துண்டை தூக்கி எறிந்தவள் விறுவிறுவென துரியோதனன் இருந்த அறைக்கு வந்தாள்.



"இந்தாங்க மாம்ஸ் நீங்க கேட்ட சரக்கு.."என்றவள் அவனுக்கு முன்பாக இருந்த மேஜையில் அதை வைக்க, ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்த துரியோதனன் அவள் பேச்சில் தன் சிந்தனை கலைய அவளை முறைத்து பார்த்தான்.



"ஏய் உனக்கு எதுக்கு இவ்வளவு நேரம்?"



"அது ஒன்னும் இல்லை மாம்ஸ் வெளியில் ரெண்டு பெருச்சாளி ரொம்ப பண்ணுச்சு அது இரண்டையும் அடிச்சு துரத்திட்டு வர்றதுக்குள்ள இவட நேரம் ஆயிடுச்சு கோச்சுக்காதீங்க மாம்ஸ்.."



"ஏய் நான் உன்னோட பாஸ் ஒழுங்கு மரியாதையா சார்ன்னு கூப்பிடு அதை விட்டுட்டு மாம்ஸ் அது இதுனு.."



"நீங்க சீரியல் எல்லாம் ரொம்ப பாப்பிங்களோ இப்ப வர்ற சீரியல் எல்லாம் இந்த பொண்ணுங்க அவங்க புருஷனை சார் சாருன்னு தான் கூப்பிடுதுங்க.. அவங்க என்ன புருஷனா இல்ல அவங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரா சார் என்று கூப்பிட.. இவ்வளவு பெரிய பிசினஸ் மேன்.. நல்லா இருக்கே நீங்க நாடகம் பாப்பிங்கன்னு எனக்கு தெரியாம போச்சே!"



"காலையில் பேசினது எல்லாம் உனக்கு மறந்து போச்சா ஒழுங்கு மரியாதையா இரு இல்ல அவ்வளவுதான்.."



"சரி சரி கோச்சுக்காதீங்க மாம்ஸ் ஓ சாரி சாரி நான் புருஷன் சொல்றத கேக்குற தர்ம பத்தினி நீங்க சொல்றது மாதிரி இனிமே உங்கள மாம்ஸ்ன்னு கூப்பிடல..சரி இருடா துரியோதனா நான் போயி இதை தொறக்குறதுக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்த்து எடுத்துட்டு வரேன் அதுவரைக்கும் நீ முன்னாடி மாதிரியே அந்த சோபாவுல சாய்ந்துகிட்டு நல்ல யோசிச்சுகிட்டு இரு ஏன்டா துரியோதனா இதை எப்படி டா திறப்பீங்க? சரி சரி நீ முறைச்சு பாக்காத நான் போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்து எடுத்துட்டு வரேன்.."என்றவள் வெளியில் செல்ல, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் துரியோதனன்.



'ஒழுங்கா மரியாதையா அவள் உன்னை மாமா மாமான்னு தானே கூப்பிட்டு இருந்தா இந்த அசிங்கம் உனக்கு தேவையா?' என்று அவன் மனசாட்சி, அவனை கேலி செய்து கெக்கலித்து சிரித்தது.



 
Status
Not open for further replies.
Top