GG writers
Moderator
பரந்த வீட்டு முற்றத்தில் எப்பொழுதும் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் மகாலட்சுமி இன்று அமைதியாகக் கருமேகத்தோடு மோதல் கொண்ட வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள். அவள் இப்பொழுது தான் நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு தாவி இருந்தாள். ஒரு வயது பெரியவள் ஆகி விட்ட காரணத்தால் என்னமோ தாய், தந்தையை இழந்த போதும் கூடத் தன் வேலையை அவளே பார்த்துக் கொள்கிறாள். இருவரும் அவளை விட்டுப் பிரிந்து இன்றோடு ஆறு மாதம் ஆகிறது. அவர்கள் பிரிந்த இந்த ஆறு மாத காலத்தில் அவளுடைய பாட்டி தான் அவளைப் பார்த்துக்கொள்கிறார். அவரை எதிர் பார்த்துத்தான் வாசலில் அமர்ந்து இருக்கிறாள். அவளுக்கு மழை என்றால் பயம் இல்லை ஆனால் தனிமையில் இருப்பதால் மழை வருவதை பார்த்துப் பயந்தாள். அவளுடைய பயத்தை தூண்டவே இடியோடு மழை வந்தது. சலவை செய்யும் இயந்திரம்போல் கருமேகத்தின் நடுவே சலவை சோப்பு போல் மின்னல் வெட்டக் குழந்தை பயத்தில் உள்ளே ஓடி வந்து பூஜை அறையில் அமர்ந்து கொண்டாள். இதைச் சொல்லிக் கொடுத்தது மகாலட்சுமி அன்னை தான். எப்பொழுது எல்லாம் உனக்குப் பயம் வருகிறதோ அப்பொழுது எல்லாம் பூஜை அறைக்கு வந்து விடு சங்கு சக்கரம் ஏந்திய சங்கரநாராயணன் உனக்கு உறுதுனையாக இருப்பார் என்று அவள் கூறிய ஞாபகம் வரவே மகாலட்சுமி ஓடி வந்து நாராயணன் காலடியை சரணடைந்தாள். அப்பொழுது கூட இடி இன்னும் பலமாக இடிக்கத் தன் பிஞ்சு கரத்தைக் கூப்பி "நாராயணா""நாராயணா" என்று தன் கிள்ளை மொழியில் ஜெபித்தால்.
**********************
வெள்ளை நிற தார் பாய் போர்த்தி ஆங்காங்கே குழந்தை கிறுக்கிய கலைந்த மேகங்களும் பன்னீர் ரோஜா மலர்களும், முத்து, பவளம், வைரம், என்று வீதி எங்கும் மாடகோபுரத்தில் பதித்து இருந்த மரகத கற்களும், பாரிஜாத மலரின் வாசமும், மனதை மயக்கும் நாதங்களும் செவிக்குக் குளிரான இன்னிசை குரலும் பாதத்திற்கு மெத்தையான பஞ்சு மேகங்களும் எட்டுத்திக்கும் "நாராயணா" "நாராயணா" என்று ஓசை எழுப்பும் இந்த அண்டத்தையும் ரசித்துத் தன் கலக பயணத்தைத் தொடங்கி இருந்தார் 'நாரதர்'. வைகுண்ட வாசனின் பக்தர். இந்தப் பரந்த உலகத்தின் மீது அன்பு கொண்ட ஒரே ஒரு ஜீவன். இன்று தன் உள்ளத்தில் எழுந்த நல் எண்ணத்தை நிறைவேற்ற ஒரு பக்தனாகக் கோவிந்தனின் காலடியில் விழச் சென்று கொண்டிருக்கிறார். வாசலிலே அவருடைய சதி திட்டத்தை அறிந்தது போல் ஜயா, விஜயா இருவரும் அவருக்கு வாசலிலே தடுப்பு போட்டு விட்டனர்.
"என்னப்பா எனக்கே தடுப்பா? நான் ஸ்ரீ நாராயணின் பக்தன்"
"அது எங்களுக்குத் தெரியும் ஆனால் நீ கலகம் மூட்டுவதில் கைத்தேர்ந்தவன். உன்னை விசாரிக்காமல் உள்ளே விடக் கூடாது என்பது ஆணை"
"யாருடைய ஆணை?"
"இந்த வைகுண்ட வாசனின் ஆணை"
"அணைக்கே ஆணையா! நாராயணா உம் பக்தனை இப்படி சோதிக்கலாமா" நாரதர் பக்தியால் அவரை அடிக்க
"நீங்கள் அவரைச் சோதித்து விடக் கூடாது என்பதால் தான் இந்த ஆணை"
"எம்மா! நான் இன்று வந்தது அவரையோ இல்லை என்னையோ சோதிக்க வரவில்லை. லட்சுமி தேவிக்கு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இப்பொழுதாவது உள்ளே விடுவீர்களா"
"அன்னை என்றதால் உள்ளே விடுகிறோம். விஜயா! ம்ம்" ஜயா கண் காட்ட வைகுண்டத்தின் கதவு திறக்க நாரதர் இதழில் ஆனந்தத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
நாரதன் தன் இரு கண்ணால் பரந்தாமனின் துயில் கொண்டிருக்கும் எழிலை ரசித்தபடி உள்ளே சென்றார்.
ஆதிசேஷன், அந்தப் பரம தெய்வத்தின் அடித்தளமாக, அடிமையாக, சேவகராக, துணையாக, மூச்சாக, பாதுகாப்பாக, உறைவிடமாக அவரைத் தாங்கிக்கொள்ள.
அவனின் தோல், பளபளப்பான வைடூரியம் போன்ற ஒளி வீச, நெற்றி மீது சந்திரன் போல ஒளிரும் வெள்ளிப் பட்டை. துஷ்டனை கண்டது போல் நாக்கை காட்டி மிரட்டும் ஆதிசேஷன்,
அதிலும் அவனுடைய கண்கள் பச்சை வைரக்கல் போல் பிரகாசிக்கும் இன்று ஏனோ அவரை முறைத்தது. அவனுடைய கண்ணைப் பார்த்துச் சற்றே பயந்த நாரதர்
சேஷன் மேல் துயில் கொண்டிருக்கும் தான் இதய சேஷனை கண்டவன் கண்ணில் அத்தனை மகிழ்ச்சி, ஒரு குழந்தை தாயின் கரத்தில் உறங்குவது போல் அமைதியாக அவன் மடியில் உறங்கினார் இந்தப் பூலோகத்தின் பெருமாள். கணவனின் சேவையிலே பெண்ணிற்கு ஆனந்தம் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் தாமரை மலர் பாதங்களைத் தழுவிக்கொண்டே ஸ்ரீ மகாலட்சுமி மெல்லிய மலரின் மென்னகையை முகத்தில் மலரசெய்து அமர்ந்திருந்தாள்.
நவரத்தினத்தின் ஒளிக்காட்டான முகம்,
நெற்றி சந்தனத் திலகத்தால் பிரகாசிக்கும் முகம், கண்களில் அன்னைக்கே உரிய கருணை வடிவின் ஒளிவீசும் சந்திரனாக வீச, மணிமகுடம் தங்கத்தால் செய்யப்பட்டு, அழகிய முத்துக்களால் அலங்கரிக்கப் சூரியனின் பிரகாசத்தை பரப்ப,
கரங்களில் ஒருவழி அக்ஷய கும்பத்திலிருந்து செல்வம் பொழிய,
மற்றொரு கரம் திருமாலின் பாதங்களைத் தொட்டு சேவகம் செய்து கொண்டிருந்தது.
இந்த வையகத்தை ஆளும் வைகுண்ட பெருமாள் எழில் கொஞ்சும் நந்தவனத்தின் தோற்றமாக உள்ளத்தில் நிரம்பி கண்ணில் ஆனந்த கண்ணீராக வழிந்து இருந்தார்.
"நாராயணா! உன் திருவடியே மோட்சம் நீயே ஜீவன், நீயே வாழ்வு" நாரதர் இரு கைக்கூப்பி வணங்கினார்.
"டேய்! கண்ணா எங்கே இருக்கடா" அத்தனை சாந்தமான இடத்தில் நாராயணின் நாமங்கள் போற்றிக் கொண்டிருக்கும் வைகுண்டத்தில் பெரும் குரல் 'டேய்' என்று வரவே வைகுண்ட வாசனே ஒரு நிமிடம் நாரதரை சந்தேகத்தோடு பார்த்தார்.
"நாராயணா! நான் உங்கள் பக்தன் ஒரு காலமும் இப்படி அழையேன்"
"டேய்! கண்ணா நீ இப்போ இங்கே வரனும்"
"நாரதா! இதென்ன காது கேட்கக் கூசும் வார்த்தைகள்" தேவி காதை மூடிக்கொள்ள
"அன்னையே! உங்கள் பெயர் கொண்டவள் நம் பெருமாளை பாசத்தோடு அழைக்கிறாள்"
"அதற்காக இப்படியா?"
"அன்னையே! பூலோகத்தில் இப்பொழுது இப்படி அழைப்பது தான் வழக்கம்"
"யோவ்! நான் எவ்வளவு நேரம் கூப்பிடுறேன். இப்போ வர மாட்டியா? டுபாக்கூர் சாமி. நான் தான் கடவுள் என்று சொல்லி ஊரை ஏமாற்றிட்டு இருக்கியா" பூலோகத்தில் மகாலட்சுமி கண் முன் இருந்த பெருமாள் விக்ரகத்திடம் பேசிக்கொண்டிருந்தாள்.
"நாரதா! நீ இங்கே வந்தது இதற்காகத் தானே"
"இல்லை ஸ்வாமி"
"எனக்குத் தெரியும் என்னை ஒரு நாளைக்கு ஒராயிம் பக்தர்கள் பக்தியோடு அழைக்கின்றனர். அவர்களின் குரல் இந்த வைகுண்டத்தில் தேனாக ஒளிக்கும்போது இந்தச் சிறுமியின் குரல் ஏன் இவ்வளுவு வேதனையோடு ஒளிக்கிறது"
"அந்தப் பெண்ணிற்கு தாய், தந்தை இல்லை. இந்த ஆறு மாத காலமாக உங்களைத் தான் தந்தையாக நினைத்து வாழ்கிறாள். இன்று மழை பெய்ததில் பயந்து விட்டாள் அதான் உங்களை இப்படி எல்லாம் அழைக்கிறாள்"
"பாவம் குழந்தை" தேவி வருத்தம் கொள்ள
"உலகத்தாய் வருந்தி விட்டாள் இனி நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும். நாரதரே! நீங்கள் நினைத்து வந்த காரியம் என்ன சொல்லுங்கள்?"
"பெருமானே! பெரிய ஆசை இல்லை சிறீ வேண்டுகோள் தான். தாய், தந்தையின்றி வாடும் அந்தச் சிறு பிள்ளைக்குத் தங்களின் தரிசனம் தந்து வேதனையைப் போக்க வேண்டும்"
"ஆமாம் ஐயனே! பாவம் குழந்தை பயத்தில் வாடுகிறாள் நீங்களே சற்று சிந்தித்து பாருங்கள். அவளுடைய அன்னை நமக்கு எத்தனை ஏகாதசி விரதங்கள் இருந்து வெண்ணையோடு உங்களுக்கு உணவளித்து உபசரித்து இருப்பாள் அந்த அன்புக்காகச் சென்று வாருங்களேன்" தேவி உள்ளத்திலிருந்து விண்ணப்பிக்க
"தேவி! உன்னுடைய வேண்டுக்கோள் இணங்கவும் நாரதனின் ஆசைக்காகவும் நான் செல்கிறேன்."
"மிக்க நன்றி நாராயணா"
"எண்ணி வந்த காரியம் உன் சித்தமே நிறைவேறி விட்டது உனக்கு ஆனந்தம் தானே"
"எனக்குப் பேரானந்தம் நாராயணா!" நாரதர் உள்ளம் மகிழ்ந்து சொல்ல. வைகுண்ட வாசன் அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் காண அங்கிருந்து புறப்பட்டார்.
************
"மரியாதையா கூப்பிட்டேன் வரல. டேய்ன்னு கூடக் கூப்ட வரல. அப்போ நீ டுபாக்கூர் சாமியா நீயும் உண்மை இல்லையா. எனக்கு அழுகையா வருது என் பாட்டியும் இன்னும் வரலை நீயும் வர மாட்டியா" மகாலட்சுமி தன் குழந்தை மொழியில் வாயைப் பிதுக்கி அழ ஆரம்பமாக இருந்தாள். பெருமாள் விக்ரகத்தில் தலையில் சூடி இருந்த மலரை எடுத்தவள்.
"நீ என் கண் முன்னாடி வரல இனி உனக்கு இந்தப் பூ இல்லை. நான் தரமாட்டேன் நீ கண்டுபிடிக்காத இடத்தில் மறைச்சு வச்சிடுவேன். அப்பையாச்சு வருவ தானே! ம்ங்கு! அப்பவும் வர மாட்டியா ஏன் வர மாட்ட உனக்கு என்னைப் பிடிக்கலையா. எனக்குத் தெரியும் என் அப்பாக்கு என்னைப் பிடிக்காதுன்னு எப்ப பாரு திட்டிகிட்டே இருப்பார். அவருக்கு என்னைப் பிடிக்கலை அதான் என்னை விட்டுப் போய்ட்டாரு. உனக்கு என்ன பிடிக்கலையா அதான் வராமல் இருக்கியா" மகாலட்சுமி வைகுண்ட நாதனின் மனதை பற்றி அறியாமல் பேசியது
மகாலட்சுமியின் பிஞ்சு மொழியில் வெளிப்பட்ட இந்த வேதனை வைகுண்ட வாசனின் உள்ளத்தையே பிசைந்தது. அந்தச் சிறுமியின் துயரத்தைப் போக்க வேண்டுமென்று மன உறுதியுடன், அவர் மிக்க மென்மையாகப் பூலோகத்தில் அவள் முன் தோன்றினார். ஒரு ஒளி மின்னியது. எதிரில் ஒரு பளிச்சென்ற உருவம் தோன்றியது. தலையில் மின்சார எல்இடி லைட் கட்டிக்கொண்டு வந்திருக்கிறாரோ என்னவோ! அத்தனை பிரகாசம் முகத்தில்.
"கண்ணம்மா! நான் வந்துவிட்டேன்," பிரிந்த தந்தை தன் மகளைக் காண்பது போன்ற உற்சாகத்தோடு நாராயணன் சொல்ல
மகாலட்சுமி திடீரென எழுந்த சத்தத்தைக் கேட்டதும், கண்களை நன்றாகத் திறந்து பார்த்தாள். அவளுக்கு முன், அவள் நம்பிக்கையுடன் கதறி அழைத்த நாராயணனே! அவரது கருணை நிரம்பிய கண்கள் மகாலட்சுமியை நேராக நோக்கின.
"நீ அழாதே! நான் உன்னுடன் இருக்கிறேன்," என்று புன்னகையுடன் சொல்ல
மகாலட்சுமி அதிர்ச்சியில் "நீ. நீ உண்மையா?" என்று கேட்டாள்.
"ஆமாம், என் செல்லம். நீ அழைக்கும்போது நான் வராமல் எப்படி இருப்பேன்"
மகாலட்சுமி வியப்புடன் கண்டு கொண்டே, அப்படியே ஓடிச் சென்று பெருமாளின் பாதங்களைத் தொட்டு பார்த்தாள். அவள் தினமும் காலையில் சாப்பிடும் பண்ணு போல் அத்தனை மென்மையாக இருந்ததை உணர்ந்தாள். "ஐய்யா! கால் பண்ணு மாதிரி இருக்கு"
"என்ன பண்ணா?" கடவுளே அவள் பேசும் வார்த்தை புரியாமல் விழித்தார்.
"ஆமாம்! பண்ணுத்தான். இதோ பாரு" என்று குடு குடுவென உள்ளே ஓடிய மகாலட்சுமி அவள் கட்டிலில் இருந்த பண்ணை எடுத்து வந்து நீட்டினால்.
"இதான் பண்ணு! இதுல உனக்குப் பாதி எனக்குப் பாதி சரியா! இந்தா சாப்பிடு" மகாலட்சுமி அகிலத்துக்கு அளந்து கொடுக்கும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனுக்கு அவள் அளந்து தருகிறாள். நாராயணன் தான் அன்பாக எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்வாரே அதே போல் அவள் கொடுத்த பண்ணையும் வாங்கி கொண்டார்.
( இன்னும் என்ன பண்ண போகுதோ பயபுள்ள

)