வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தேவதந்தை 03

GG writers

Moderator




என்றும் இல்லாத திருநாளாக மகாலட்சுமி இன்று அதிகாலையிலே எழுந்து அதீத குதுகலத்துடன் பள்ளிக்குச் செல்ல ரெடியாகி கொண்டிருந்தாள். இதுவரை அவளைக் குளிக்காமல் கூடப் பள்ளிக்கு அனுப்பிய பாட்டி அவளே எழுந்து குளித்துவிட்டு பள்ளி சீருடை அணிந்து நிற்பவளை பார்த்து ஆச்சரியம்.
அது மட்டுமா! வேண்டா வெறுப்பாக மதிய உணவுக்கு ஒரு சப்பாத்தி எடுத்துச்செல்பவள் இன்று நாலு சப்பாத்தியை எடுத்துக்கொண்டாள். அதைப் பார்த்த பாட்டி சந்தேகத்தில் கேட்டே விட்டாள்.

"மகா குட்டி! நீ என்ன வழக்கத்திற்கு மாறாக மூன்று சப்பாத்தி அதிகமா எடுத்துட்டு போற. அதுவும் இல்லாமல் குதுகலமா பள்ளிக்குப் போற என்ன விஷயம்?"

"பாட்டி! இன்னையிலிருந்து இப்படித்தான். இனி என் கூட என் ப்ரண்டு வருவார்"

"ப்ரண்டா?" பாட்டி சந்தேகமாகக் கேட்க

"ஆமாம்! என் பெஸ்ட் ப்ரண்டு."

"அவனோட பெயர் என்னடா?"

"அவன் பெயர் கண்ணன். ரொம்ப நல்லவன் இனி அவனுக்குச் சேர்த்து தான் சாப்பாடு எடுத்துட்டு போவேன். சாப்பாடு கொடுத்தா தான் தினமும் நான் கூப்ட உடனே என் கூட விளையாட வருவான். இல்லைன்னா நான் தனியா இருக்கனும்"

"அப்போ சரிடா மகா. உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்"

"பாட்டி! ஸ்கூலுக்கு லேட் ஆகுது நான் கிளம்பறேன். போகும்போது கண்ணனை வேற பிக்கப் பண்ணனும்."

"சரி! பார்த்துப் போ" பாட்டி அவள் தலையில் முத்தம் வைத்து அனுப்ப தன் ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு வெளியே வந்தவள். வீட்டு வாசல் முன் நின்றிருந்த அவளுடைய சைக்கிளை எடுத்தாள்.

"ஹலோ! கண்ணன் ப்ரண்ட் ஸ்கூலுக்கு லேட் ஆகுது சீக்கிரம் வாங்க" வானத்தைப் பார்த்து மகாலட்சுமி பெருமாளை அழைக்க அவரோ! திருதிருவென விழித்தார். 'இந்தக் காடுக்கு கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லை' மகாலட்சுமி சொல்லி முடிக்கவில்லை அதற்குள் பெருமாள் அவள் முன்னே வந்து நின்றார்.

"ஹாய்! ப்ரண்ட் வந்து உட்காருங்க போகலாம்" மகாலட்சுமி தன் சைக்கிளில் இருந்த சின்ன இருக்கையைக் காட்டி கூற

"எனக்கு எப்படி அந்த இடம் சரியா இருக்கும்"

"நீங்கக் காட் தானே என் சைசுக்கு சின்னதாகி உட்கார்ந்துடுங்க. இந்த ஜாக்கி ஜானில் வர ஜூலி மாதிரி மாறிடுங்க"

"அதெல்லாம் நான் பண்ணக் கூடாது"

"அப்போ! நீங்க டூப்புலிகேட் காட்டா"


மகாலட்சுமியின் பேச்சுக்குப் பெருமாள் கண்களை மூடித் திறந்தவர். "டூப்புலிகேட் காட்டா? நானா?"

"அப்பறம் சின்னப் பையனாக மாறமாட்டேன்னு சொல்றீங்க. எங்க அம்மா சொல்லி இருக்காங்க நீங்கக் குழந்தையா இருக்கும்போது சுண்டு விரலில் மலையைத் தூக்கி இருக்கீங்கன்னு. அப்போ! மேஜிக் பண்ண நீங்க இப்போ மேஜிக் பண்ண முடியாதா. இல்லை வயசு ஆகிடுச்சா"

'எப்படி வந்து சிக்கி இருக்கேன் பார்த்தீங்களா! எல்லாம் அவனால் வந்தது நாரதா இன்னைக்கு கோதண்டத்தால் அடி இருக்கு உனக்கு'

"ப்ரண்ட்! நேரம் ஆகுது சீக்கிரம் வந்து உட்காருங்க" மகாலட்சுமி அவரை அவசரப்படுத்த

"பாப்பா! நான் உட்காருவேன் ஆனால் உன்னைத் தவிர வேற யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேன். இந்த டீலுக்கு ஓகேவா"

"என்ன ஒரு இங்கிலிஷ்?"

"நல்லா இருக்கா"

"சூப்பரு! எப்போ கத்துகிட்டிங்க"

"தனியா கிளாஸ் போறேன் தெரியுமா"

"இனி எனக்கே டப் தருவீங்க போல"

"ஆமாம்!" என்று பெருமாள் முகம் கூடப் பிரகாசமாக ஒளிர்ந்தது.

"ப்ரண்ட்! வாங்க போகலாம் டைம் ஆகுது" மகாலட்சுமி சொல்ல
அடுத்த வினாடியே, பெருமாள் ஒரு சிறிய பையனாகி மகாலட்சுமியின் சைக்கிளில் பின் இருக்கையில் உட்கார்ந்தார். மகாலட்சுமி உற்சாகமாகச் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். அவளுக்கு அவரிடம் பேச நிறைய கதை இருந்தது. திருட்டு மாங்காய் அடித்துச் சாப்பிட்ட கதையைச் சொல்ல வெண்ணெய் திருடனான அவருக்குக் கூட வாய் ஊர ஆரம்பித்தது.

"பாப்பா!"

"என்ன ப்ரண்ட்?"

"இன்னைக்கு மாங்கா திருடப் போகலாமா"

"ப்ரண்ட் அந்த வீட்டில் மாங்கா திருடினால் நாய் விட்டுக் கடிக்க வைப்பாங்க யார் கடி வாங்கிட்டு வர"

"நான் இருக்க ஏன் பயம். டோன்ட் பீல்"

"அப்போ ஈவ்னிங் போகலாம்."

"பாப்பா! நீ எப்பவும் தனியா தான் ஸ்கூல் போவீயா"

"இல்லை அப்பா இருக்கும்போது அவர் தான் பிக்கப் அன்ட் டிராப் எல்லாம். இப்போ யாரும் இல்லை அதனால் நானே தனியா போய்ட்டுவேன்."

"காட்! நீங்க எப்படி ஸ்கூல் போவீங்க?"

"நானா ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு மாதிரி ஸ்கூல் போனேன்."

"அப்போ உங்களுக்கு நிறைய ப்ரண்டு இருப்பாங்க அப்படித்தானே"

"ஆஹ்! இருக்காங்க"

"சூப்பரு! அப்போ அவங்களையும் ஈவ்னிங் வரச் சொல்லுங்க நாம பூஸ்ட் கேம் விளையாடலாம்"

"அவனுங்க வந்தா விளையாட முடியாது ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி இருப்பானுங்க. வச்சு மேய்க்க முடியுது பாப்பா"

"நம்ம மோட்டு பட்லு மாதிரியா இல்லை கரடி குட்டி மாதிரியா"

"கரடி குட்டி மாதிரி ஒவ்வொரு பக்கம் வீங்கிப் போய் இருப்பானுங்க" அதைக் கேட்ட மகாலட்சுமி வாய் விட்டுச் சிரித்தாள். அதை ரோட்டில் இருந்தவர்கள் எல்லாம் விசித்திரமாகப் பார்த்தனர். இருக்காத பின்னத் தனியே சிரித்து கொண்டு செல்பவளை அப்படித்தான் பார்ப்பார்கள். சைக்கிளில் செல்லும் அவளுடைய மனதில் ஒரே சந்தோஷம்! இனிமேல் தனியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவளுக்கு ஒரு ப்ரண்டு இருக்கிறான் எந்தச் சந்தோஷமோ துக்கமோ அதை அவனிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விட்டது.
மகாலட்சுமி, இன்னும் பூரிப்பில், வேகமாகச் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். அவள் கால்கள் பெடலை நோக்கி உருண்டோடி செல்ல, காற்று அவளது முகத்தை மெல்ல தொட்டுச் சென்றது. அவள் பின்னே அமர்ந்து வந்த பெருமாளுக்கே சந்தோஷம் தாங்கவில்லை.

"ப்ரண்ட்!"

"சொல்லு பாப்பா"

"ப்ரண்ட்! உங்களுக்கு விசில் அடிக்கத் தெரியுமா"

"அதெல்லாம் எனக்கு யாரு சொல்லிக்கொடுத்தா"

"ப்ரண்ட்! நீங்க என்ன காட்? இதுக்கூட தெரியலை."

"காட்னா இதெல்லாம் தெரியனுமா என்ன?"

"ஆமாம்! தெரிந்து இருக்கனும் நான் ஈவ்னிங் வந்து கத்துக்கொடுக்கறேன்"

"சரி!" என்று அவர் தலை அசைக்கக் கொஞ்ச நேரத்தில் பள்ளி உள்ளே வந்து விட்டனர்.

"பாப்பா இதுக்கு மேல் நான் வரனுமா"

"கண்டிப்பா வரனும் வாங்க போவோம்" மகாலட்சுமி துள்ளி குதித்து உள்ளே செல்ல அவள் பின்னே நிழல்போல் பின் தொடர்ந்தார்.

'நம்ம படிக்கும்போது மரத்தடியில் உட்கார வச்சிட்டு இப்போ பில்டிங்கா? இதெல்லாம் அநியாயமா இல்லை' அவர் மனதில் நினைக்க அடுத்த நொடியே அவருடைய மனம் எச்சரித்தது 'ஐய்யோ! நான் என்ன மனுஷங்க மாதிரி புலம்ப ஆரம்பித்து விட்டேன். முதலில் இந்தப் பாப்பா கிட்ட இருந்து எஸ்கேப் ஆகனும் இல்லைன்னா முழுசா என்னை மாற்றிடும்' அவர் யோசனையோடு வந்தவர் முன்னே கல்லில் இடித்துக் கீழே விழுந்து கிடந்த மகாலட்சுமியை பார்த்தார்.

"பாப்பா!" பதட்டத்தோடு அவளருகே சென்றார். அவளைச் சுற்றி குழந்தைகளின் கூட்டம் இருந்தது. தேம்பி தேம்பி அழுதால் அவள் முன்னே சிரிப்போடு நான்கு ஆண்களின் கூட்டம் நின்றிருந்தது.

"மகா! என்னாச்சு?" அவளுடைய தோழி முட்டியை பார்த்துக் கேட்க. "பாப்பா! என்னாச்சு?" பெருமாளும் அதே கேள்வியைக் கேட்க

"இவன் தான் நடக்கும்போது கால் குறுக்கே விட்டு விழ வச்சுட்டான்" வலி தாங்க முடியாமல் எதிரே நின்றிருந்த அவனைக் கைக்காட்டினாள்.

"டேய்! ராகுல் எதுக்கு கீழே தள்ளிவிட்ட?" அவளின் தோழி அதட்டலோடு கேட்க

"பழிக்கு பழி நேத்து என்னை மிஸ்கிட்ட மாட்டி விட்டா இல்லை அதுக்கான தண்டனை" அவன் தெனாவெட்டாகச் சொல்ல

"வளரும் போதே திமிர்" பெருமாள் அவன் தலையிலே ஒன்று போட்டார். ராகுல் வலியில் தலையைத் தேய்த்துக்கொண்டே தன்னருகே இருந்த நண்பனைப் பார்த்தான்.

"எதுக்குடா என்னை அடிச்ச?"

"நான் அடிக்கலைடா"

"நீ அடிக்காமல் வேற யார் அடிச்சா"

"எனக்கு எப்படி தெரியும் நான் அடிக்கலை" அவன் உறுதியாகச் சொல்ல ராகுல் திரும்பினான். இன்னொரு அடி தலையில் விழ வந்ததே கோபம் உடனே தன் நண்பனின் தலையில் அடித்தான்

"நீ அடிச்சுட்டு பொய் சொல்றீயா" ராகுல் அவனை அடிக்க இப்பொழுது இருவரும் சட்டையைப் பற்றி அந்த மண் தரையில் உருண்டனர். மகாலட்சுமி அங்கே நடந்ததை பார்த்துச் சிரித்தாள். இப்பொழுது அழுகை நின்று சிரிப்புத்தான் வந்தது. மகாலட்சுமியை அவளுடைய தோழிகள் வகுப்பறைக்கு அழைத்துச்செல்ல கண்ணனோ அங்கே தான் ஆரம்பித்து வைத்த கலகம் எப்படி நடக்கிறது என்பதை வேடிக்கை பார்த்தபடி நின்றார்.
 
Top