வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தேவதந்தை 04

GG writers

Moderator





பள்ளியில் நடந்த கலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பெருமாள், ராகுலும் அவன் நண்பனும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு உருண்டு போவதை ரசித்தார். "இப்படி போராட்டத்தைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆகுது" கண்ணன் மனதில் நினைத்தபடி மகாலட்சுமி இருக்கும் வகுப்பறைக்குச் சென்றார்.

மகாலட்சுமி, தோழிகளுடன் வகுப்பறைக்குள் சென்று அமரக் கண்ணன் அவளுக்குப் பக்கத்தில் நின்றார். "இதென்ன புத்தகம்? என்ற ஆவலுடன் அவர் அருகில் இருந்த ஒரு புத்தகத்தைக் கழற்றி பார்த்தார்.

"அஆஇஈ புத்தகம்" மகாலட்சுமி சொல்ல

பெருமாளுக்கு சிறிது ஞாபகம் வந்தது. இவர் பாலகனாக இருக்கும்போது படிக்க எவ்வளவோ வித்தை செய்திருக்கிறார். ஆதி யுகத்தில் சந்தோஷமாக மரத்தடியில் உட்கார்ந்து படித்த ஞாபகமெல்லாம் மனதில் ஓடியது. ஆனாலும், அந்தக் காலம் போய் இப்போது பள்ளிக்கூடமாகப் பில்டிங்கில் இருக்கிறது. "இங்க என்ன நடக்குதுனு பார்ப்போமா?" என்ற எண்ணத்துடன் கண்ணன் வகுப்பறையை ஆராயத் தொடங்கினான். இரட்டை ஜடை போட்டுப் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும் ஆண் குழந்தைகள் இன்னொரு பக்கமும் அமர்ந்து இருந்தனர். மகாலட்சுமி தன்னருகே அமர்ந்து இருந்த தோழியைப் பார்த்தாள் அவளோ! தன் தலையில் தானே கொட்டு வைத்துக் கணக்குப் பாடத்தை மனனம் செய்துகொண்டிருந்தாள். அதைப் பார்த்தவள்

"என்ன படிக்கிற?"

"மகா! இன்னைக்கு பர்ஸ்ட் அவரே டெஸ்ட் தான் மேக்ஸ் டிச்சர் வந்துடுவாங்க அதுக்காகத் தான் படிச்சுட்டு இருக்கேன்"


"டெஸ்டா?" மகாலட்சுமி வாயைப் பிளந்தாள் அவள் தான் நேற்று லட்டு திண்ற கண்ணோடு சேர்ந்து இந்தக் கணக்கு டெஸ்டை மறந்து விட்டாலே. தலையிலே அடித்துக்கொண்டு பின்னே சுற்றி வந்த கண்ணனை பார்த்தாள்.
அவரும் என்ன என்பது போல் சைகையில் கைக்காட்ட. அவரைத் தன்னருகே வர வைத்தவள்

"மேக்ஸ் டேஸ்டா! நான் ஒன்னுமே படிக்கலை"

"அதுக்கு"

"நீங்கத் தான் எழுதித் தரனும்"

"என்ன நானா?" பெருமாளுக்கு இப்பவே கண்ணைக் கட்டியது "நான் எல்லாம் யுகம் யுகமா படித்தவன்! இப்பையும் படிக்கச் சொன்னா எப்படி? ஒரு லட்டு கொடுத்துட்டு நீ லோடு கணக்கா எனக்கு வேலை வைக்கிற பாப்பா"

"ப்ரண்ட்! ப்ளிஸ் நீங்க எழுதக்கூட வேண்டாம் நான் எழுதறேன் சரியான்னு பார்த்துச் சொல்லுங்க. நீங்கச் சரியான்னு பார்த்துச் சொன்னா உங்களுக்குச் சப்பாத்தி தருவேன் கூடவே மாங்கா பச்சடி வேற எடுத்துட்டு வந்தேன்"

"மங்கா பச்சடியா"

"ஆமாம்"என்று அவள் தலை அசைக்கக் கண்ணன் அமைதியாக அவளருகே அமர்ந்தான்.

"ப்ரண்ட்! நீங்க மேக்ஸ் டெஸ்ட் எழுதுவீங்க இல்லை?" மகாலட்சுமி கேட்க

"எழுதுவேன்னு நினைக்கல, ஆனா மாங்கா பச்சடி வேணுமே" தன் நாக்கை சுழற்றி பெயரிலே ருசி பார்த்து அவளைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் தனி உலகில் இருக்க
கிளாஸ் மிஸ் உள்ளே வர எல்லோரிடமும் பேச்சுச் சத்தம் அடங்கி அமைதியாக அவர்களின் இருக்கையில் அமர்ந்தனர்.

"ப்ரண்ட்! உங்க மூலமா இந்த டெஸ்ட் பாஸாகணும்!" மகாலட்சுமி கடவுளைக் கோரினார். பெருமாள் அதற்குள் கடினமான கணக்குகளைப் பார்த்து "ஐயோ! நம்மால் இது முடியாது" என்று முகம் சுளிக்க, மகாலட்சுமி "ப்ரண்ட்! நீங்க ஓர் எக்ஸ்பர்ட் நீங்களே இதுக்கு போய்ப் பின் வாங்கலாமா. நீங்க யார் இந்த அகிலத்தோட காட் ஃபாதர்" மகாலட்சுமி இன்னும் நாலு வார்த்தை எடுத்துவிட நினைக்க

"போதும் இப்படி உசுப்பு ஏத்தி விட்டே! ஒவ்வொரு யுகத்திலும் இந்தப் பச்சை மண்ணை நல்லா யூஸ் பண்ணிக்கிறீங்க. நான் யோகத்தில் எக்ஸ்பர்ட் ஆனால் இங்கே வெறும் கண்ணன் தான்" கண்ணன் தன் நிலையை எண்ணிக்கெண்டிருக்க. ஆசிரியர் கேள்வித்தாளை ஒவ்வொரு மாணவர்களுக்கும் விநியோகிக்க, மகாலட்சுமி தன்னுடைய பேனாவை எடுத்தாள். "நண்பன் இருக்கும்போது எனக்கு எதற்குப் பயம்?" என்று எண்ணியவள் அருகே இருந்த கண்ணனின் உதவியை எதிர்பார்த்தாள்.
அவரோ அவள் பதில் எழுதுவதை பார்த்துக்கொண்டிருந்தார். "என்ன இது ஆரம்பத்திலே பதில் அடி வாங்குது?"

மகாலட்சுமி ஒரே மூச்சில் எழுத, பெருமாள் அவள் எழுத்தைக் கவனமாகப் பார்த்தார். பிறகு தான் உணர்ந்தார்.

"பாப்பா! எல்லாம் தப்பு. என்ன முதல் கேள்வியிலே பின்னுக்கு போய்ட்ட" கண்ணன் அதிர்ச்சியாகக் கேட்க அவளோ! 'அப்படி என்ன தப்பா எழுதி இருக்கோம்?' என்ற தோரணையிலே அவரைப் பார்த்தாள்.

மகாலட்சுமியின் கணக்கு முதலுக்கே மோசம் என்ற ரீதியில் தான் இருந்தது. அவள் 2+2 = 22 என்று எழுதியிருந்தாள். கூட்டலுக்கே இந்த நிலையா என்று இருந்தது.

"பாப்பா! இது என்ன?!"

"என்ன ப்ரண்ட்?" அவள் தவறு எது என்பது தெரியாமல் விழித்தாள்.

"2+2 = 22 எப்படிடா வரும்"

மகாலட்சுமி "எப்படி வரும் தெரியுமா? இரண்டு இரண்டாக இரண்டு தடவை, அதனால 22."

'அப்பவே சொன்னேன் பிரம்மாகிட்ட அறிவுக்கொழுந்தை எல்லாம் மேலோகத்தில் வச்சிக்கோன்னு எங்கே கேட்டார். கீழே அனுப்பி என்னைச் சிக்க வச்சிட்டார். அய்யகோ! முடியலை' தன் நிலையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டார்.
கொஞ்ச நேரத்தில் மிஸ் ஒவ்வொரு மேசையாக வந்து கேள்விக்கான பதிலை மாணவர்கள் சரியாக எழுதி இருக்கிறார்களா என்பதை பார்த்துக்கொண்டே வந்தது மட்டுமில்லாமல் அடியும் வெளுத்து வாங்கினார். அதைப் பார்த்த மகாலட்சுமி பயந்தாள்.

"ப்ரண்ட்! தப்பா எழுதி இருக்கேனா"

"ஆமாம்!" முழுக்க தப்பு"

"அப்போ! மிஸ் அடிப்பாங்க போச்சு இன்னைக்கு அடி வாங்குவேன்" அதுவரை மலர்ந்து இருந்த மகாலட்சுமி முகம் சட்டெனக் கருகியது அடி வாங்க வேண்டும் என்ற பயத்தில் முகம் வெளிரி போனது. அதைப் பார்த்த வைகுண்ட வாசனுக்கு மனம் தாங்கவில்லை.
மிஸ் அதற்குள் அருகில் வர அந்த ஆபத்தான நிலைமையை உணர்ந்த கண்ணன் அடுத்த நொடியே, மகாலட்சுமியின் பேப்பரை‌ மாற்றி இருந்தார். எல்லா விடைகளும் சரியாகி, சரியான எண்கள் இடம்பெற்றன.

மிஸ் அதைப் பார்த்து "வாவ்! மகா நீ எல்லாத்தையும் சரியா எழுதி இருக்க. சூப்பர்! ஸ்டூடன்ட் எல்லாரும் மகாலட்சுமிக்கு கைத்தட்டுங்க" கணக்கு டிச்சர் சொல்ல அங்கே இருந்த மாணவர்கள் அவளுக்குக் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
மகாலட்சுமி உடனே தன் ப்ரண்டை நோக்கி "நன்றி ப்ரண்ட்! நீங்கச் சூப்பர்!" என்று கைக்கொடுத்தாள். அவரும் சிரித்தபடியே "அடிப்பாவி! ஓசியில் கிடைத்த பாராட்டைப் பதக்கம் மாதிரி வாங்கிட்டு இருக்க"

"அதெல்லாம் அப்படித்தான் ப்ரண்ட். கூல் ப்ரண்ட் சே டேக் இட் ஈசி" மகாலட்சுமி கண் சிமிட்டி சொல்ல

"எல்லாம் என்னைவிடச் சதிகாரங்களா இருக்காங்க. இதுக்குத் தான் பூலோகம் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை" கண்ணன் முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கே அடி வாங்கும் ராகுலை பார்த்தார்.

மகாலட்சுமி அவருடைய கையைப் பற்றி "ப்ரண்ட்! நீங்க நிஜமா சூப்பர்! நீங்க மட்டும் இன்னைக்கு எனக்கு உதவி செய்யலை கண்டிப்பா நான் அடி வாங்கி இந்நேரம் அழுதுட்டு இருந்து இருப்பேன்"

அந்த நேரம் மிஸ் திடீரென அறிவித்தார்.
"நாளைக்கு அறிவியல் டெஸ்ட்! யாரும் மறக்காதீர்கள்!"

மகாலட்சுமி முகம் சட்டென இருண்டது. "இன்னும் ஒரு டெஸ்டா? அதுவும் அறிவியலா? அய்யய்யோ! இந்த முறையும் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணணும் ப்ரண்ட்!"

கண்ணன் அதிர்ச்சியுடன், "இது லைஃப் லாங் ப்ராஜெக்டா? நாளைக்கு அறிவியல், அடுத்த நாள் ஒன்னு? அதுக்கு‌ அப்புறம் விளையாட்டு பரீட்சைன்னு? இன்னும் எத்தனை தான் வைப்பாங்க?"

மகாலட்சுமி புரியாத முகத்துடன், "விளையாட்டுக்கும் பரீட்சையா?"

"அதையும் நடத்துவாங்க போலயே! ஏனெனில் எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி பண்ணி உங்களை விளையாட்டுக்கு அனுப்புவாங்க போல!"

அவள் வேறு வழி இல்லாமல் "அப்போ நாளைக்கு அறிவியலுக்கான நோட்ஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு வரணும்"

"நோட்ஸ் தானே எடுத்துக்கலாம் விடு பாப்பா"

"ப்ரண்ட்! பேசாமல் எனக்குச் சேர்த்து நீங்களே படிச்சுட்டு வந்துடுங்களே"

"ஏதே! நானா"

"ஆமாம்! நீங்கத் தான் நிலாக்கு எல்லாம் போவீங்களே. நாளைக்கு அது தான் பரீட்சையா இருக்கும். வானத்துல என்னன்ன இருக்குன்னு கேப்பாங்க அப்பறம் எது எங்க இருக்குன்னு கேட்பாங்க. சொல்லப்போனால் உங்களுக்கு நோட்ஸ் தேவையில்லை ஏனென்றால் நீங்கத் தான் வானத்திலே வீடு வாடகைக்குஎடுத்துத் தங்கறீங்களே!"

"என்ன வாடகை வீடா?"

"அப்போ! வாடகை வீடு இல்லையா சொந்த வீடா. அது கட்ட எவ்வளவு செலவு ஆச்சு காட். உங்க தெருப் பெயர் என்ன? எங்கே உங்க ஊர் இருக்கு?"
எப்படி சமாளிக்க என்று தெரியாமல் தலையில் கை வைத்தவர். 'இதுக்கு முன்னாடி யுக யுகமா யுத்தமே பார்த்திருப்பேன். ஆனா இந்தப் பொண்ணை ஒரு நாளைக்கு சமாளிக்க முடியாது போலயே! இப்பவே என் வைகுண்டத்தை கேள்வியிலே காலி பண்ணிடும் போல். நான் வந்து சிக்கி இருக்க இடம் ரொம்ப டேன்ஜர் தான் போல'

"ப்ரண்ட்! என்னாச்சு மௌனவிரதமா?"

"ஆமாம் பாப்பா! கொஞ்ச நேரம் பேசாமல் இரு"

"மௌன விரதம் சொல்லிட்டு பேசிட்டிங்க"

"ஐய்யோ! தெரியாமல் பேசிட்டேன்"

"ஐய்யோ! யாரு?"

"எமனோட ஒய்ஃப்"

"அய்யோ! இப்போ நான் எதுக்கு ஐய்யோ சொன்னேன். இந்தப் பொண்ணுகூட பேசி என்ன பேசறன்னே தெரியலை?"

"ஓகே காட் கூல் கூல் நான் பேசலை" மகாலட்சுமி சிரித்துக்கொண்டே அடுத்த வகுப்பில் கவனத்தை செலுத்தினாள்.
 
Top