உயிர் : 2
ப்ரியன் காரை நோக்கி சாதனாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தான்.... காரில் ஏறாமல் அடம் செய்தவளின் இடுப்பை பிடித்து தூக்கி
காரில் அமர வைத்தான்,....
அவனிடமிருந்து விடுபட அவள் முயற்சி செய்ய அதை எல்லாம் தன் ஒற்றை கையால் தடுத்தவன் சீட் பெல்ட் போட்டுவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்......
அரை மணி நேர பயணத்திற்கு பிறகு அரண்மனை போன்ற அழகான வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான்.... வீட்டின் கேட்டில் இருந்து உள்ளே செல்ல கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆனது.....
கேட்டில் இருந்து உள்ளே செல்லும் வழியில் அழகான பூச்செடிகள் பூத்துக் குலுங்கின.... ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த சிலைகளை சுற்றி முயல்கள் ஓடி விளையாடி கொண்டிருந்தன.....
புறாக்கள் கிட்டத்தட்ட 50 ,60க்கும் மேல் அந்த இடத்தை சுற்றி பறந்துகொண்டும் மரங்களில் அமர்ந்து கொண்டும் இருந்தன....
ஐந்தறிவு ஜீவன்களிடம் இவ்வளவு பாசமாக இருப்பவன் ஆறறிவு மனிதர்களிடம் ஏன் கோபமாக இருக்கிறான் என்று எப்போதும் தோன்றும் கேள்வி இன்றும் தோன்றியது அந்த வாட்ச்மேனிற்கு.....
இதுவரை பிரியன் மட்டுமே வந்த இந்த வீட்டிற்கு அழகான பெண் ஒருத்தியை கூட்டி வருவது இதுவே முதல் முறை என்பதால் மீண்டும் மீண்டும் காரையே பார்த்துக் கொண்டிருந்தான் அந்த வாட்ச்மேன்......
எப்போதாவது மட்டுமே இந்த வீட்டிற்கு வருபவன் இன்று ஒரு பெண்ணுடன் இங்கு வரவும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வ மிகுதியில் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.....
ப்ரியன் காரை விட்டு இறங்கிய பின் சாதனாவை இறங்கச் சொன்னான்... அவள் முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்தாள்......
ஒருமுறை கண்களை இறுக மூடி திறந்தவன் சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு அவளை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டான்..... அவன் தோள்களில் தன் கை கொண்டு அடித்தவாறு "என்னை விடுடா.... என்னை விடுடா.... ராட்சசா....." என்று கத்திக் கொண்டிருந்தாள் சாதனா.....
அவள் கத்தியதையோ அடித்ததையோ கண்டு கொள்ளாமல் போர்டிகோவில் இருந்து வாசல் படிக்கு வந்தவன் அக்கா என்று சத்தம் கொடுத்தான்......
வீட்டின் உள்ளே இருந்து 45வயதுள்ள ஒரு பெண்மணி தட்டில் ஆரத்தியுடன் வெளியே வந்தார்......
இருவருக்கும் ஆரத்தி எடுத்தவர் அதை எடுத்து சென்று வெளியில் கொட்டி விட்டு வந்தார்....
ப்ரியனோ ஆரத்தி எடுத்த உடன் வீட்டின் உள்ளே சென்றான்.......
வீட்டின் உள்ளே சென்றும் அவளை இறக்கி விடாமல் மாடிப்படியில் ஏற ஆரம்பித்தான்......
முதல் மாடிக்குச் சென்றவன் அங்கிருந்த ஒரு அறைக்கு அவளை தூக்கி சென்றான்.....
சாதனாவோ அந்த வீட்டின் அழகையோ அங்கிருந்த மற்ற கலை பொருட்களின் அழகையோ கண்டு கொள்ளாமல் ப்ரியனை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவனை அடித்துக் கொண்டிருந்தாள்......
அறைக்குள் சென்று இறக்கி விட்டவன் "இதுதான் நம்ம ரூம்...... எப்படி இருக்கு......" என்றான்...
"நரகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு......"
"ஓஹோ....." என்று ஒரு மாதிரி குரலில் கூறியவன்...
"இதையே நரகம் என்று சொன்னால் இனி நீ அனுபவிக்கப் போவதை என்ன சொல்வ... பேபி....." என்று நக்கலாக கூறியவன் "இது உன் கழுத்தில் இருக்க கூடாது.... இதை சுமக்க உனக்கு தகுதியும் கிடையாது....." என்று கோபமாக கர்ஜித்தவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழற்ற போனான்......
அதுவரை இருந்த தைரியம் காணாமல் போக பயத்தில் அழுது கொண்டிருந்தாள் சாதனா....
மணப்பெண் கோலத்தில் கழுத்தில் மணமாலையோடு புது மஞ்சள் கயிறு மின்ன தன் எதிரில் நின்றிருந்த ப்ரியனை பார்த்தபடி அழுது கொண்டிருந்தாள் சாதனா..... அவள் அழுகை சத்தத்தை கேட்டு காதை குடைந்து கொண்டே வந்த ப்ரியன் "அழுதுகிட்டே இருக்காதடி.... காது அடைக்குது....." என்றான்....
"நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட ப்ரியன்....."
"தேங்க்யூ ... ஐ வாண்ட் மோர் மோர் எமோசன்ஸ் பேபி.... "
"எதுக்குடா என் கழுத்துல தாலியை கட்டின... ஐ ஹேட் யூ... "
என்று கத்தியவளை பார்த்த ப்ரியனுக்கு ஸ்ரீ தன்னிடம் ஐ லவ் யூ என்று சொன்ன நாள் நினைவுக்கு வந்தது.....
தலையை குலுக்கி அந்த நினைவை அகற்றியவன் "எல்லாரும் எதுக்கு தாலி கட்டுவாங்க.... அதுக்காக தான்..." என்று கண்களை சிமிட்டு உதட்டை குவித்து முத்தமிட்டான் ப்ரியன்......
"சீச்சீ... உன்னை பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணுக்கு தாலி கட்டி இருக்கியே உனக்கு எல்லாம் வெக்கமா இல்லை....."
"வெக்கம் மானம் சூடு சொரனை எல்லாம் பார்த்தால் லவ் பண்ண முடியுமா பேபி...."
"நீ பண்றதுக்கு பேரு லவ் கிடையாது...."
"ஓஹோ அப்போ இதுக்கு பேரு என்ன பேபி..... '
"லஸ்ட் ஜஸ்ட் லஸ்ட்.... & என் உடம்பு மேல் இருக்கும் ஆசையில் தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்க ப்ரியன்..... நீ ஒரு சைக்கோ..... என்னை டார்ச்சர் பண்ற......"
" லவ் டார்ச்சர் தானே பேபி.... இருந்துட்டு போகட்டும் பேபி... & எல்லாரும் கல்யாணம் பண்றதே அதுக்காக தானே....." என்றவனை கண்டு அருவறுப்பில் முகம் சுழித்தாள் சாதனா....
"இந்த அருவருப்பு எல்லாம் எத்தனை நாளைக்கு...." என்று கேட்டவன் "இவ்வளவு அருவருப்பா என்னை பார்ப்பவளுக்கு எதற்கு இந்த தாலி .... அதனால் தான் கழற்ற போனேன்.. அதற்கும் அழுது என் உயிரை வாங்குற...." என்றான்.....
"நான் என் வீட்டுக்கு போகனும்..... நீ கட்டிய தாலியை வேண்டும் என்றால் நீயே எடுத்துக்கோ....நான் போறேன்....."
"நான் கட்டிய தாலி உன் கழுத்தில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இது தான் உன் வீடு.... நான் தான் உன் புருஷன்.... பொண்டாட்டிக்கான கடமையை செய்ய தயாராய் இரு...." இதுவரை கேலியாக பேசியவனின் வார்த்தைகளாக இல்லாமல் கோபமாக அழுத்தமாக வெளிப்பட்ட இந்த வார்த்தைகளின் கனம் தாங்காமல் "நான் கூடிய சீக்கிரம் உன்னை விட்டு போயிடுவேன்.... நான் ரஞ்சனை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா......" என்றாள்.....
"ரஞ்சன் முதல்ல நீ லவ் பண்ற ரஞ்சன் அவன் தான்னு உனக்கு தெரியுமா....."
"சித்தி சித்தப்பா தான் சொன்னாங்க...."
"உன் சித்தி சித்தப்பா சொன்னதெல்லாம் உண்மையா? பொய்யான்னு ஒரு தடவையாவது யோசித்து பார்த்திருப்பியா..... உன் மனசு சொல்வதை கேட்டு பாரு.... உன் ரஞ்சன் அவன் தானா இல்லையாங்கிறதை அது சொல்லும்...."
"அவன் பெயர் ரஞ்சன்... அப்போ அவன் என்னுடைய ரஞ்சன் தானே....."
"முட்டாள்.... முட்டாள்.... இந்த உலகத்தில் எத்தனையோ ரஞ்சன் இருக்கலாம்..... அவங்க எல்லாம் உன்னோட ரஞ்சன் ஆகிடுவாங்களா....."
"இப்போ நீ என்ன சொல்ல ட்ரை பண்ற.... அவன் என்னோட ரஞ்சன் கிடையாது.... என் சித்தி சித்தப்பா... எங்கிட்ட பொய் சொல்லி இருக்காங்க... அப்படின்னு சொல்ல வர்றியா......"
"அது எனக்கு தெரியாது... உன் மனசை கேட்டுப்பார்... அது உண்மையை சொல்லும்....." என்று கூறினான்......
சாதனாவோ குழம்பி போய் தலையை கைகளைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள்.... அவள் தலையை கையில் பிடிக்கவும் பதறிப் போன பிரியன் "ஸ்ரீ என்னாச்சு என்னாச்சு...."என்றான்...
"ஸ்ரீயா என் பெயர் சாதனா தானே...."
"ஆமா நீ சாதனா தான்... நான் தான் ஏதோ ஞாபகத்தில் ஸ்ரீன்னு கூப்பிட்டுட்டேன்....."
"ஸ்ரீ யாரு...."
"என் லவ்வர்...." என்று முகத்தில் தோன்றிய சிறு புன்னகையுடன் கூறினான்....
இதுவரை ப்ரியனின் நக்கல் சிரிப்பை கண்டவள் கண்களோடு இணைந்த சிறு புன்னகை அவளை ஏதோ செய்தது....
"இனி இப்படி சிரிக்காதே..."
"ஏன்..."
"எரிச்சலா வருது.... அதோடு உனக்கு லவ்வர் இருக்காளா...."
"ஏன் உனக்கு லவ்வர் இருக்கும்;போது எனக்கு லவ்வர் இருக்க மாட்டாளா என்ன...."
"வேற ஒருத்தியை லவ் பண்ணும் போது எதுக்குடா என் கழுத்தில் தாலியை கட்டுன...."
"இதுக்கு நான் பதில் சொல்லிட்டேன்.... ஒருவேளை மறந்துட்டியா என்ன.... காதலுக்கு அவள்...." என்றவன் அவள் உடலை மேய்ந்தபடி "மத்ததுக்கு எல்லாம் நீ...." என்றான்....
"ச்சீச்சீ நீ எல்லாம் மனுஷனே இல்லை மிருகம்...."
"இருந்துட்டு போறேன்....."
"நீ லவ் பண்ண பொண்ணுக்கு உண்மையா இல்லை..... தாலி கட்டிய....." என்றவளை மேலே பேச விடாமல் "அதை அவள் வந்து சொல்லட்டும்...." என்றவனை கண்டு ஆயாசமாக இருந்தது அவளுக்கு......
"எனக்கு எதற்கு தாலி கட்டின.... தயவு செய்து என்னை விட்டுவிடு..... நான் ரஞ்சனை தேடி போகணும்...." என்றதும் கண்களை இறுக மூடி திறந்தவன் "இந்த ஜென்மத்தில் இதுதான் உன் வீடு..... நான் தான் உன் புருஷன்..... என்னை தாண்டியோ இந்த வீட்டை தாண்டியே போகணும்னு நினைத்தால் உயிரோடு வெளியில் போக மாட்ட...." என்றான்....
"உனக்கும் என் சித்தப்பாக்கும் ஏதாவது பிரச்சனையா...... அவரை பழி வாங்க என்னல யூஸ் பண்றியா.... என் சித்தப்பா ரொம்ப நல்லவர்....."
"எப்போதும் அதிகம் பேசாத என்னையே இவ்வளவு பேச வைக்கிறியேடி..... தயவு செய்து என் கண் முன்னாடி நிக்காதே.... போய் தொலை...." என்று அவளை தள்ளி விட்டவன் கதவை வேகமாக அடித்து சாத்திவிட்டு வெளியேறினான்.....
பிரியன் வேகமாக வெளியேறியதும் ஆரத்தி எடுத்த பெண்மணி அவசரமாக மேலே ஏறி பிரியன் அறைக்குச் சென்றார்..... அங்கு அவர் கண்ட காட்சியில் பதறிப்போய் மருத்துவருக்கு அழைத்தார்...
பிரியன் தள்ளிவிட்டதில் சாதனா அங்கிருந்த கண்ணாடி டீப்பாயில் சென்று மோதி தலையில் அடிபட்டு மயங்கி கிடந்தாள்....
தலையில் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருக்க அதைப் பார்த்து தான் அந்த பெண்மணி பதறிப் போய் இருந்தார்.....
சற்று நேரத்தில் மருத்துவர் வந்து தலையில் கட்டு கட்டி ஊசி போட்டு மாத்திரை கொடுத்து விட்டு சென்றார்.....
"இன்னும் அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளியலையே....."
"ஒரு மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும்.... லக்ஷ்மிமா.... எப்படி அடிபட்டுச்சு அந்த பொண்ணுக்கு...."
"கீழே தண்ணி இருந்ததை பார்க்காமல் வழுக்கி விழுந்துட்டாங்க....."
"பொய் சொல்லாதீங்க.... லக்ஷ்மிமா.... இது அவன் பண்ண வேலை தானே...."
"இல்ல பிருந்தாம்மா.... அப்படியெல்லாம் இல்ல...."
"ஏன் தான் அவன் இப்படி எல்லாம் நடந்துக்குறானோ..... இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கான்..... ஆனா எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை..... அவன் நல்லா இருக்கணும்னு ப்ரண்ட்ஸ் நாங்க எல்லாரும் நினைக்கிறோம்.... ஆனால் எங்ககிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை.... அவனுக்கு என்னதான் பிரச்சனை...... ஏன் இப்படி எல்லாம் மாறிப் போய்ட்டான்....." என்று பிருந்தா ஆதங்கப்பட்டாள்....
லட்சுமியோ பதில் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கவும் 'நீங்களும் அவனுக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க..... என்னவோ பண்ணுங்க.... நான் கிளம்புறேன்...." என்று கூறி விட்டு பிருந்தா வெளியே சென்று விட்டாள்......
லக்ஷ்மியோ பெருமூச்சுடன் கிச்சனுக்கு சென்று ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக்கொண்டு சாதனாவை பார்க்க சென்றார்....
ப்ரியனோ கோபமாக காரை வேகமாக ஓட்டி சென்று கடற்கரையில் நிறுத்தினான்..... ஸ்டியரிங் வீலில் கைகளால் வேகமாக தட்டியவன் "ஏண்டி என்னை விட்டுட்டு போன...." என்று கத்தி கேட்டான்...
"கண்டவனை லவ் பண்றவளை கல்யாணம் பண்ணி... எனக்கு இதெல்லாம் தேவையா ஸ்ரீ.... நீ மட்டும் என் கூட இருந்தால் இதுக்கு அவசியமே இல்லை..... அவள் கழுத்தில் தாலியை பார்க்க பார்க்க அந்த கழுத்தை நெறித்து கொல்லனும் போல இருக்கு ஸ்ரீ..... உன்னால் உனக்காக மட்டும் தான் அவளை விட்டு வச்சு இருக்கேன்... இல்லை என்றால் அவள் பேசும் பேச்சுக்கு அத்தனை பல்லையும் தட்டி கையில் கொடுத்து இருப்பேன்... ஏண்டி என்னை விட்டு போன..... " என்று கேட்டு தான் ஆண்மகன் என்பதையும் மறந்தவனாக கண்ணீர் வடித்தான் ப்ரியன்.....