வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நல்லுயிர் நீயெனக்கு...நாடியடி நானுனக்கு-கதை திரி

Status
Not open for further replies.

உயிர் : 8

ரஞ்சனோ சற்று நேரம் ஸ்ரீயையே பார்த்து இருந்தவன் பிறகு அவளை கிளாசுக்கு போ என்று சொன்னான்.....


"என்னது....."



"கிளாசுக்கு போன்னு சொன்னேன்...."





"ஆனால் நீங்க ஒன்னும் சொல்லலையே...."






"என்ன சொல்லணும்..."


"அதான் பதில்...."






"என்ன பதில்..."





"நான் உங்களை புடிச்சி இருக்குன்னு சொன்னேன் இல்ல...."





"ஆமா சொன்ன.... அதுக்கு என்ன இப்போ....."





"நீங்க என்னை புடிச்சி இருக்குன்னு சொல்லவே இல்லையே...."







"அதுக்கு எனக்கு உன்னை பிடிக்கனுமே... ஆனால் எனக்கு தான் உன்னை பிடிக்கலையே....",






"பொய் சொல்லாதீங்க ரஞ்சன்.... உங்களுக்கும் என்னை புடிச்சிருக்கு..."





"நான் எப்போ உன்னை எனக்கு புடிச்சிருக்குன்னு சொன்னேன்....."





"நீங்க சொல்லலை... ஆனால் உங்க கண்ணில் பார்த்தேன்..."






"என்ன பார்த்த....."






"அதான்.... என்னை புடிச்சி இருக்குன்னு உங்க கண்ணு என்கிட்ட சொல்லுச்சு...."






"ஆனா நான் உன்கிட்ட சொல்லலையே.... அப்புறம் வேற என்ன சொல்லுச்சு என் கண்...."





"விளையாடாதீங்க.. உண்மையை சொல்லுங்க....." என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிக்க "ஹேய்.... ஸ்டாப் ஸ்டாப்.... எதுக்கு இப்போ அழ ஆரம்பிக்கிற..." என்றான்.....








"நீங்க தான் என்னை புடிச்சிருக்குன்னு இன்னும் சொல்லவே இல்லையே...."






"அதுக்கு போய் அழுவியா...."






"பின்னே என்ன பண்றது...."





"எனக்கு புடிச்ச மாதிரி நீ நடந்துகிட்டு உன்னை எனக்கு புடிக்க வைக்கனும்...."






"உங்களுக்கு நான் எப்படி இருந்தால் உங்களுக்கு பிடிக்கும்..... உங்களுக்கு புடிச்ச மாதிரி நான் எப்படி நடந்துக்குறது..." என்ற ஸ்ரீயை கண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டவன் நீ எப்படி இருந்தாலும் ஐ லவ் யூடி என்று மனதோடு கூறியவன் வெளியே "எனக்கு பிடித்ததை ஒன்னொன்னா கண்டுபிடித்து என்னை இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணு.... நீ பண்றது எல்லாம் எனக்கு பிடித்த மாதிரி இருந்தால் அதுக்கு அப்புறம் உன்னை லவ் பண்ணலாமா வேண்டாமான்னு நான் டிசைட் பண்றேன்..... இப்போ கிளாசுக்கு போ..." என்றதும் தலையை ஆட்டிக் கொண்டு தனது வகுப்பறை நோக்கி நடந்தாள் ஸ்ரீ......



அவள் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் நின்ற இடத்திலேயே மரத்தை பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினான் ரஞ்சன்......




எப்பொழுதும் தனது சந்தோஷத்தை வெளியே காட்டாதவன் முதல் முறையாக மனம் முழுக்க சந்தோசத்துடன் தனியாக கிரவுண்டில் டான்ஸ் ஆடுவதை பார்த்த மற்ற மாணவர்கள் அவன் அருகே வந்து சுற்றி நிற்க யாரையும் கண்டு கொள்ளாமல் ரஞ்சன் ஆடிக் கொண்டிருந்தான்.....




"என்னாச்சு இந்த சீனியருக்கு....."


"இப்படி ஷோலோவா டான்ஸ் ஆடிட்டு இருக்காரு....





"அதுவும் பாட்டே இல்லாமல் டான்ஸ் ஆடுறாரு பாரேன்...." என்று மாணவர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க அவனை தேடி வந்த நண்பன் தீரன் மாணவர்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து உள்ளே சென்றான்.....







அங்கே தனது நண்பன் தனியாக நடனம் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து "டேய் மாப்ள... என்னடா ஆச்சு உனக்கு....." என்று அவன் அருகே சென்று அவன் தோளை பிடித்து நிறுத்தினான்...... ஆனால் ரஞ்சனோ அவனையும் சேர்த்துக் கொண்டு நடனமாட ஆரம்பித்தான்......






"டேய் உன் டான்ஸை நிறுத்த வந்தால் என்னை ஏண்டா டான்ஸ் ஆட வைக்கிற..... டேய் சுத்தி பாருடா.... எல்லாரும் எக்ஸிபிஸனை வேடிக்கை பாக்குற மாதிரி பாத்துட்டு இருக்காங்க....." என்று தீரன் பேசியதை காதில் வாங்காமல் ரஞ்சன் ஆடிக் கொண்டே இருக்க அவன் கையை பிடித்து நிறுத்திய தீரன் அவனை வகுப்பறைக்கு இழுத்துச் சென்றான்......




"டேய் கிரவுண்ட்ல என்னடா பண்ணிட்டு இருந்த...."






"டேய் மாப்ள.... திடீர்னு கடவுள் உன் முன்னாடி வந்து நீ நினைச்சது நடக்கும்... உனக்கு பிடிச்ச எதையாவது கேளுன்னு சொன்னால் நீ என்னடா கேட்ப...."








"இந்த மடையன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வழி சொல்லு இறைவான்னு கேட்பேன் மாப்ள....."







"அப்படி ஒரு வரத்தை கடவுள் என் கண் முன்னாடி வராமலே நான் கேட்க நினைச்ச வரத்தை கொடுத்துட்டு போயிட்டாருடா...."







"அப்படி என்னடா..... கடவுள் நீ கேட்காததை எல்லாம் கொடுத்தார்..."






"உன்னை போல ஞானசூன்யத்துக்கு அதெல்லாம் சொன்னால் புரியாதுடா.... அனுபவிக்கிறவனுக்கு தான் தெரியும்..... இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா...." என்றவனை ஏற இறங்க பார்த்த தீரன் "பார்த்தாலே தெரியுது....." என்றான்......







"திடீர்னு எல்லாமே கலர் கலரா தெரியுதுடா மாப்ள...."








"சுத்திலும் கலர் கலரா இருந்தால் பார்க்க கலர் கலரா தான் தெரியும் மாப்ள...."







"அப்புறம் என்னவோ என் வாழ்க்கையே அழகான மாதிரி தெரியுதுடா...."







"உனக்கு இப்போ அப்படி தான் தெரியும் மாப்ள...."








"நீ கூட ரொம்ப அழகா தெரியுறடா..."






"சுத்தம்... பைத்தியம் பிடிச்சு போச்சு போல இருக்கு....."






"ஏன் நம்ம வாட்ச்மேன்.... அவர் கூட அழகா தெரியிறார் மாப்ள...."





"போச்சு.... நல்லா முத்தி போச்சு.... மாப்ள நீ இங்கே உட்கார்ந்து இரு..... நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்....."






"எங்கடா போற.... நீயும் இங்கேயே உட்கார்...."







"இல்ல மாப்ள.... இதோ இப்போ வந்துடுறேன்...." என்றவன் அவனை விட்டு ரெண்டு பெஞ்ச் தள்ளி போய் உட்கார்ந்து கொண்டான்......




ரஞ்சனோ தலையை கோதி கொண்டும் தனக்குத் தானே எதையோ பேசி சிரித்துக் கொண்டும் அமர்ந்து இருந்தான்......







ஸ்ரீ தனது வகுப்பில் அமர்ந்து நகத்தை கடித்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்..... அருகில் அமர்ந்து இருந்த அவளது தோழி வள்ளி "என்னடி ஆச்சு ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க...." என்றாள்.....





"இல்ல வள்ளி..... நான் அவர் கிட்ட பேசினேன்..... அவர் என்கிட்ட என்ன தெரியுமா சொன்னார்....."





"என்னது அண்ணன் கிட்ட பேசினியா....."







"ஆமா பெரிய அண்ணன்..... ஒரு பொம்பள புள்ள நானே போய் பேசுறேன்..... புடிச்சி இருக்குன்னு சொல்றேன்..... அவர் ஒண்ணும் சொல்லாமல் அவர் பாட்டுல போயிட்டாரு....."






"பசங்க வந்து உங்ககிட்ட புடிச்சி இருக்குன்னு சொன்னால் அது ஈவ்டீசிங்...... அதே பொண்ணுங்க போய் சொன்னால் பசங்க உடனே ஒத்துக்கணும்னு எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு நித்யா.... அதுவும் ரேங்க் ஹோல்டரான அந்த அண்ணன் மாதிரி ஒரு பையன் எல்லாம் உடனே விழுந்துடுவார்னு நீ நினைக்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...."








"எனக்கு என்ன குறைச்சல்... என்னை கட்டிக்க அவருக்கு கசக்குதா.... இல்ல என்னை லவ் பண்ண அவருக்கு கசக்குதா....."








"உன்னை பத்தி ஓவரா உன் வீட்டில் பில்டப் பண்ணி நீ பெரிய இவங்கற மாதிரி உன் மைண்ட்ல செட் பண்ணி வச்சிருக்காங்க..... ஆனா உண்மையிலேயே நீ ஒரு சாதாரண பொண்ணு தான்..... அதுவும் இந்த காலேஜ்ல படிக்கிற ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்..... உன்னை விட அழகான பணக்கார பொண்ணுங்க இங்கே எவ்வளவோ பேர் இருக்காங்க..... அப்படிப்பட்ட பொண்ணுங்களில் அண்ணனுக்கு எத்தனையோ பேர் லெட்டர் குடுத்து இருக்காங்க தெரியுமா..... நேரிலும் லவ் பண்றதா ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க..... ரோஸ் கொடுத்து இருக்காங்க..... அவங்களை எல்லாம் விட்டுட்டு உன் பின்னாடி வரணும்னா உன்கிட்ட ஏதாவது ஸ்பெஷலா இருக்கணும் புரிஞ்சுதா......"




"புரிஞ்சது....."







"என்ன புரிஞ்சது....."


"அவரை என்கிட்ட வர வைக்கனும்னா என்கிட்ட ஏதாவது ஸ்பெஷலா இருக்கணும்னு புரிஞ்சது....."







"இப்ப சொல்லு உன் கிட்ட என்ன ஸ்பெஷலா இருக்கு...."






"அதைத்தான் யோசிக்கிறேன்...." என்ற நித்யஸ்ரீ தீவிர யோசனைக்கு சென்றாள்.....





ஸ்ரீ ரொம்ப நேரமாக யோசனை செய்தவாறு அமர்ந்து இருக்க வள்ளி அவள் தலையில் தட்டி "ஏதாவது யோசனை வந்துச்சா இல்லையா... ரொம்ப நேரமா யோசிக்கிறேன்ற பேர்ல நீ பண்ண அலும்பு போதும்... கிளாஸ்க்கு டைம் ஆச்சு.. வா போலாம்..." என்றாள்....








"ப்ச்... வள்ளி... தாயில்லா பிள்ளை மாதிரி தலையில் அடிக்க கூடாதுன்னு என் அம்மாச்சி சொல்லும்... அதனால் தலையில் அடிக்காதே...."







"இந்த வியாக்கியானம் எல்லாம் நல்லா பேசு... ஆனால் 3வருஷமா லவ் பண்றவரை எப்படி லவ் பண்ண வைக்கனும்னு யோசிக்க சொன்னால் க்ரவுண்டில் இருக்கும் மரத்தோட வேரை நோண்டி வைக்கிற... உன் நகத்தை கடிச்சது பத்தாதுன்னு என் நகம் அந்த அல்டாப்பு கங்கா நகம்னு இங்கே இருக்கும் அத்தனை பேரோட நகத்தையும் கடுச்சு வைக்கிற... உன்னை எல்லாம்...."










"ப்ச்... இருடி... நீயே சொல்லிட்ட... அவர் இந்த காலேஜ் ஹீரோ போல.... நல்லவர்... வல்லவர்... அப்படின்னு.... அவரை லவ் பண்ண வைக்கிறதுன்னா சும்மா அப்படி இப்படி ப்ளான் எல்லாம் பண்ண கூடாது... ஒரே ப்ளான்... அவர் அப்படியே ஓடி வந்து என்னை கட்டி பிடித்து என் கன்னத்தில் முத்தம் கொடுத்து ஐ லவ் யூ ஸ்ரீ... ஐ லவ் யூ ஸ்ரீ... அப்படின்னு சொல்லனும்...."








"இது ஒன்னும் நாம பார்க்கும் சினிமா கிடையாது நித்யா... கொஞ்சமாவது ப்ராக்டிகலா திங்க் பண்ணு... அந்த அண்ணா என்ன ஜாதின்னு தெரியலை... ஒருவேளை நம்மை விட தாழ்ந்த ஜாதியாக இருந்தால் உன் அண்ணன்கள் அவரை வெட்டி தோட்டத்தில் புதைச்சுடுவாங்க... தயவுசெய்து இந்த விஷ பரிட்சை எல்லாம் வேண்டாம் நித்யா.... விட்டுடு.. அந்த அண்ணா வேற யாரையாவது கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கட்டும்..." என்ற வள்ளியின் கண்கள் கலங்கி இருக்க நித்யாவோ அவளை கண்டு கொள்ளாமல் ரஞ்சனுக்கு என்ன பிடிக்கும்னு யாரை கேட்டால் தெரியும்... என்று யோசனை செய்தவளுக்கு கிருஷ்ணாவின் முகம் மின்னி மறைந்தது...







"ஐடியா கிடைச்சுருச்சு...." என்று துள்ளி குதித்து எழுந்தவளை விரக்தி புன்னகையுடன் பார்த்த வள்ளி







"என்ன ஐடியா நித்யா..." என்றாள்....








"அவருக்கு ரொம்ப க்ளோஸா இருக்கும் பிரண்ட் கிருஷ்ணாவும் தீரனும் தான்.... தீரன்கிட்ட நான் பேசியதே இல்லை... ஆனால் கிருஷ்ணா... என் அத்தை பையன் தானே... அவர்கிட்ட ரஞ்சனை பற்றி ஜாடை மாடையா பேசி அவருக்கு நான் எப்படி இருந்தால் பிடிக்கும்... அப்படின்னு கேட்டு தெருஞ்சுக்குவேன்... அப்புறம் அதை பாலோவ் பண்ணி ரஞ்சன் மனதில் இடம் பிடித்து அவரோடு ஓடி போய் கல்யாணம் பண்ணிப்பேன்..."









"அது அவ்வளவு ஈஸி கிடையாது நித்யா... உன் வீட்டு ஆளுங்க ரெண்டு பேரையும் வெட்டி புதைச்சிடுவாங்க.."



"ஏய்... அண்ணன்களை பத்தி தப்பு தப்பா பேசுறதை என்னிக்கு தான் நீ விட போறியோ.... தெரியலை...." என்று சலித்து கொண்டவளை பாவமாக பார்த்து வைத்தாள் வள்ளி...







"என் அக்காவுக்கு நடந்த கொடுமை உனக்கு நடக்க கூடாதுன்னு தான் இவ்வளவு தூரம் உன்னை எச்சரிக்கை பண்றேன் நித்யா... ப்ளீஸ் உன் வீட்டு ஆளுங்களோட உண்மையான முகம் தெரியாமல் அந்த அண்ணா லைப்பில் விளையாடாதே..." என்ற வள்ளி எழுந்து வகுப்புக்கு சென்று விட நித்யாவோ கிருஷ்ணாவை எங்கே பார்க்கலாம் என்று சிந்தித்து கொண்டு இருந்தாள்.....







வள்ளி வகுப்பறையில் அமர்ந்து தன் அக்காவின் போட்டோவை கையில் எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள்.....





மனதிலோ வஞ்சமும் வன்மமும் கொண்டு இருந்த வள்ளி மரத்தடியில் அமர்ந்து இருந்த நித்யாவை பார்த்து வஞ்சத்துடன் புன்னகைத்து கொண்டாள்....





"என் அக்காவை கொன்ன உன் குடும்பத்தை பழி வாங்க எனக்கு கிடைச்ச துருப்பு சீட்டே நீ தாண்டி.... அவளை எதுக்காக என் கண் முன்னாடி வெட்டி கொன்னான் தெரியுமா உன் அண்ணன்.... காதலுக்காக..... அவன் கண் முன்னாடி நீ அந்த ரஞ்சனோட ஊர் சுத்தனும்.... ஜாதி ஜாதின்னு சொன்ன குடும்பம் உன் காதலால் ஊரே காறி துப்புற நிலைமைக்கு வரனும்.... எந்த கௌரவத்தை காப்பாத்த என் அக்காவை கொன்னாங்களோ அதே கௌரவத்தை காப்பாத்த உன்னை பாசமா வளர்த்த அவனுங்க கையாலேயே வெட்டி கொள்ளனும்.... அப்போ தான் என் மனதில் எருஞ்சுகிட்டு இருக்கும் தீ அணையும்.... உன் மேல் அவனுங்க வச்ச அதே பாசத்தை தானே என் அக்கா மேல் நான் வச்சு இருந்தேன்.... எனக்கு இன்னொரு அம்மாவா இருந்தவளை வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ண காரணத்தால் வெட்டி கொன்னு புதைச்ச அவனுங்க கண்ணில் தண்ணீர் வரனும்.... நான் படும் வேதனையை அவனுங்களும் படனும்...." என்று மனதுக்குள் கோபமாக பேசியவள் நித்யா வகுப்பிற்கு வரவும் அக்கா போட்டோவை புத்தக பைக்குள் வைத்து மறைத்தாள்.....







மாலை கல்லூரி முடியும் வரை ரஞ்சன் கொஞ்சம் கூட காதல் மயக்கம் தெளியாமல் இருக்க "எந்த மோகினி வந்து இவனை அடுச்சுதோ தெரியலையே...." என்று புலம்பி கொண்டே தீரன் தன் நண்பனை இழுத்து கொண்டு வகுப்பில் இருந்து வெளியே வந்தான்.....





"இன்னிக்கு இவனை டூவீலரில் கூட்டிட்டு போனால் ஆக்சிடண்ட் கன்பார்ம்..." என்று நினைத்து கொண்டு வண்டியை கல்லூரியில் வைத்து பூட்டியவன் நாளை வந்து எடுத்து கொள்வதாக வாட்ச்மேனிடம் கூறி பத்திரமாக பார்த்து கொள்ள சொல்லி 5ரூபாய் நோட்டு ஒன்றையும் கொடுத்து விட்டு ரஞ்சனுடன் கல்லூரியை விட்டு வெளியே வந்தான்.....







தீரன் நேரமோ என்னமோ தெரியவில்லை... அன்று இந்த வழியில் வரும் பேருந்துகள் மாற்று வழியில் செல்வதாக பஸ் ஸ்டாண்ட்டில் இருந்த கடைகாரர் கூறவும் நொந்து போனான் தீரன்.....







ரஞ்சனோ இன்னும் அதே சந்தோஷ மோடில் பேருந்து நிலையத்தில் நின்று இருக்க நித்யா அந்த வழியில் தான் காரில் வீட்டுக்கு போக வந்தாள்....






தீரனும் ரஞ்சனும் பேருந்து நிலையத்தில் நிற்பதை பார்த்து விட்டு காரை நிறுத்த சொன்னாள்....







கார் நின்றதும் இறங்கி நேராக ரஞ்சன் அருகே சென்றவள் "லிப்ட் வேணுமா...." என்றாள்....






தீரன் வேகமாக நித்யா அருகில் வந்து "அம்மா தாயே... உனக்கு புண்ணியமா போகும்.... எங்களை மெயின் ரோட்டில் இறக்கி விடுமா.." என்றவன் ரஞ்சனின் கையை பிடித்து இழுத்து கொண்டு கார் அருகில் சென்றான்.....
அப்போது சற்று தூரத்தில் டூவீலரில் வந்து கொண்டு இருந்த ராஜேந்திரன் இவர்கள் இருவரும் கார் அருகில் செல்வதை பார்த்து "டேய் அங்கேயே நில்லுங்கடா ரெண்டு பேரும்...." என்று கத்தி கொண்டே இவர்களை நெருங்கி வந்தான்.....







எதற்காக நிற்க சொல்கிறார் என்று தெரியாததால் இருவரும் காரில் ஏறாமல் நின்று கொண்டு இருக்க இவர்களை நெருங்கிய ராஜேந்திரன் முதலாவதாக நின்ற தீரனின் கன்னத்தில் பலமான அறை ஒன்றை வைத்து விட்டு "உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் பாப்பாவோடு காரில் ஏற போவீங்க.... உங்க ஜாதி என்ன.... எங்க ஜாதி என்ன.... போயும் போயும் அந்த ஜாதியில் பிறந்த நீ எல்லாம் எங்களுக்கு சமமா உட்கார்ந்து வர பாக்குறியா..." என்று கேட்டு கொண்டே இன்னும் ஒரு அறை வைக்க போக ராஜேந்திரனின் கையை தடுத்து நிறுத்தினான் ரஞ்சன்....




காலையில் இருந்து காதல் மயக்கத்தில் சுற்றி வந்தவனின் முகத்தில் சூடான வெந்நீர் ஊற்றியதை போல ராஜேந்திரனின் பேச்சு இருக்க முதலில் தீரனை அடித்த போது அதிர்ச்சியில் தடுக்காமல் இருந்தவன் மீண்டும் அடிக்க வந்த போது சுதாரித்து தடுத்து நிறுத்தி இருந்தான்......



 
உயிர் : 9
ராஜேந்திரன் தன் கையை பிடித்து தடுத்து நிறுத்திய ரஞ்சனை கண்டு "உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் ஒரு ***ஜாதிக்கார நாய் என் கையை தொட்டு தடுத்து இருப்ப...." என்றவன் ரஞ்சனை அடிக்க போக ரஞ்சனோ அவன் கைகளை தடுத்து விட்டு ராஜேந்திரன் முகத்தில் ஓங்கி குத்தினான்....





ரஞ்சன் அடித்ததில் ராஜேந்திரனின் முகத்தில் காயமாகி ரத்தம் வர ஆரம்பிக்க "ஐயோ அண்ணா... ரத்தம்..." என்று அருகில் ஓடி வந்த நித்யா தன் அண்ணனுக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தாள்....





தன் கைகுட்டையால் அவன் ரத்தத்தை துடைத்தவள் ரஞ்சனை திரும்பி பாவமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ராஜேந்திரனுடன் காரில் ஏறினாள்....







ராஜேந்திரன் தனது வண்டி சாவியை டிரைவரிடம் கொடுத்து பூட்ட சொல்லி விட்டு மனம் முழுவதும் கோபத்தில் கொந்தளிக்க நித்யாவுடன் காரில் வீட்டை நோக்கி சென்றான்....






"டேய் மாப்ள.. அந்த ஆளை ஏண்டா அடுச்ச... அவிங்க அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ரொம்ப மோசமானவனுங்கடாழ... பணம் இருக்கும் திமிரிலும் இவங்க ஜாதி கட்சி சேர்ந்தவர் எம்எல்ஏவா இருக்கும் அரசியல் செல்வாக்கிலும் ஆணவ கொலைகள் நிறைய பண்ணி இருக்கானுங்க மாப்ள... இவனுங்களை யாராவது எதிர்த்தாலோ இவங்க ஜாதியை சேர்ந்த ஆணையோ பெண்ணையோ வேற ஜாதிக்காரங்க லவ் பண்ணாலோ அவங்க ஜாதிக்காரங்களை விட்டுட்டு அடுத்த ஜாதிக்காரனை கொன்னுடுவானுங்க... இதில் என்ன கொடுமைன்னா போலீஸே இவங்களுக்கு உடந்தையா இருப்பது தான்... ஏன்னா இந்த ஊர் ஸ்டேஷனில் இருக்கும் போலீஸ்காரர்கள் எல்லாருமே அவங்க ஜாதி தான்.... சோ அவனுங்களை எதிர்த்து யாராலையும் எதுவும் பண்ண முடியாது மாப்ள... இப்போ இவனை நீ அடுச்சதுக்கு அம்மாவை கூட்டிட்டு அவனுங்க வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்டுட்டு வந்துடு மாப்ள.... இல்லைனா உன் பேரில் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவானுங்க.." என்ற தீரன் மீண்டும் கல்லூரிக்கு சென்று டூவீலரை எடுத்து வந்தான்....






ரஞ்சன் யோசனையுடன் வண்டியில் வர தீரன் நேராக ரஞ்சன் வீட்டுக்கு சென்று சகுந்தலாவிடம் கல்லூரியில் நடந்ததை கூறி ரஞ்சனுடன் அவர்கள் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்க சொன்னான்....





சகுந்தலா தன் மகனுடன் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்றார்.... அவர்களுக்கு துணையாக தீரனும் சென்றான்...





ராஜேந்திரன் தனது அண்ணனிடம் தன்னை அடித்தவனை பற்றி கோபமாக சொல்லி கொண்டு இருக்கும் போது சகுந்தலா ரஞ்சனுடன் அங்கு சென்றார்....





சகுந்தலாவை பார்த்ததும் ராஜசேகரன் ஒரு இகழ்ச்சி பார்வையை அவரை நோக்கி வீசி விட்டு "என்ன ஏதாவது பிச்சை வேணுமா..." என்றான்....






"உங்கிட்ட பிச்சை எடுக்கும் நிலைமை வந்தால் அதுக்கு நான் நாண்டுகிட்டு செத்துடுவேன்.... நான் இப்போ வந்தது என் பையன் இந்த வீட்டு பையனை அடுச்சுட்டானாம்... அதான் அவன் இருக்கானா.... இல்ல செத்துட்டானான்னு நலம் விசாரிக்க வந்தேன்..."






"ஏய்... என்னடி திமிரா...." என்ற ராஜசேகரனின் வாய் அடுத்த வார்த்தை பேச முடியாமல் ஓங்கி அவன் வாயில் அடித்து இருந்தான் ரஞ்சன்..





அடித்து விட்டு "என் அம்மாவை டி போட்டு பேசின கொன்னுடுவேன்..." என்று ஒற்றை விரலை காட்டி மிரட்டினான் ரஞ்சன்....
அடி வாங்கிய ராஜசேகரனின் வாயில் இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பிக்கவும் சுற்றி இருந்த அவனது வேலைக்காரர்கள் அதிர்ந்து போய் ரஞ்சனை பார்க்க அவனோ "அம்மா வாங்க போலாம்..." என்று சகுந்தலாவை அழைத்து கொண்டு இருந்தான்....







சகுந்தலாவோ ரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டு இருந்த ராஜசேகரனை ஒருவித மன திருப்தியோடு பார்த்தவர் உள்ளிருந்து வந்த அவனது அம்மாவை நக்கல் சிரிப்போடு பார்த்து "என்ன வைதேகி நல்லா இருக்கியா....." என்றார்....







சகுந்தலாவை பார்த்ததும் அதிர்ச்சியான வைதேகி "ஏய் உனக்கு இங்கே என்ன வேலை.... முதலில் என் வீட்டை விட்டு வெளியே போடி...." என்றாள்....






"இதோ இப்போ போயிடுவேன் வைதேகி.... ஆனா அதுக்கு முன்னாடி இதோ என் பையன் அடிச்சு அழுதுட்டு இருக்கான் பார் உன் ரெண்டாவது பையன்.... இல்ல இல்ல ரத்தம் சொட்ட சொட்ட நின்னுட்டு இருக்கான் பாரு உன்னோட முதல் பையன் அவனுக்கு மருந்து போடு.... இப்போ போறேன்.... ஆனால் கூடிய சீக்கிரம் நீ பண்ணுனதை எல்லாம் உனக்கு திருப்பி கொடுக்க திரும்ப வருவேன்.... தயாரா இரு...." என்றவர் தீரன் மற்றும் ரஞ்சன் உடன் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தார்......







வைதேகி ரத்த கறையோடே நின்று கொண்டிருந்த தன் இரு மகன்களுக்கும் முதல் உதவி செய்ய ஆரம்பித்தாள்.....






சகுந்தலாவை தன் வீட்டில் பார்த்ததும் அவர் சவால் விட்டு சென்றதையும் நினைத்து பார்த்த வைதேகிக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் வெளியே தைரியமாக காட்டிக் கொண்டு தனது மகன்களுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.....





"அம்மா யாரும்மா.... அந்த பொம்பளை.... நம்ம வீட்டுக்கு வந்து நம்மளையே மிரட்டிட்டு போறா...."






"ம்.... அவ தான் உங்க அப்பா கூட பொறந்த தங்கச்சி...." என்று இளக்காரமாக சொன்ன வைதேகி "வேற ஜாதிக்காரனை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி அவனுக்கு ஒரு பிள்ளையை பெத்து வச்சுக்கிட்டு ஊருக்குள்ள சுத்திகிட்டு இருக்கா..... அன்னைக்கு உன் அப்பனும் தாத்தனும் அவளை எதுவும் பண்ணலை.... இன்னிக்கு உங்களாலும் அவளையும் அவள் மகனையும் எதுவும் பண்ண முடியாமல் போய்டும் போல....."




"என்ன அப்பாவுக்கு தங்கச்சியா.... இவ்வளவு நாளா இதை ஏம்மா என்கிட்ட சொல்லவே இல்லை...."







"சொல்ற நேரம் அப்போ வரலை.... இப்ப தான் வந்து இருக்கு.... வேற ஜாதி பையனை கட்டிட்டு போன அவளோட கலப்பு ரத்தம் தான் அவன்..... என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது..... அவங்க ரெண்டு பேரும் இனிமேல் உயிரோட இருக்கக் கூடாது. .... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரெண்டு பேரோட கதையையும் முடித்து விடுங்கள்....." என்று கூறிய வைதேகி உள்ளே சென்றுவிட ராஜேந்திரனும் ராஜசேகரனும் அவர்களை கதை முடிப்பதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்கள். ......






நித்யஸ்ரீ உள்ளறையில் இருந்ததால் இவர்கள் பேசியது எதுவும் அவளுக்கு தெரியாமல் போனது....... அவளோ தன் அண்ணன் ரஞ்சனை அடிக்கச் சென்றதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.......
இப்பவே ரெண்டு பேரும் இப்படி அடித்துக் கொள்கிறார்களே நாளைக்கு நான் ரஞ்சனை காதலிப்பதாக சொன்னால் என்ன நடக்கும் என்று அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்......
(அவள் கவலை அவளுக்கு...)







தீரன் வாயடைத்து போய் சகுந்தலாவுடன் நடந்து வர ரஞ்சனோ குழப்பத்துடன் சகுந்தலாவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டு நடந்தான்...
"என்ன சித்து... என்கிட்ட ஏதாவது கேட்கனுமா...."




"உங்களுக்கும் அந்த வீட்டுக்கும் என்னம்மா சம்பந்தம்..."





"அது தான் நான் பிறந்து வளர்ந்த வீடு சித்து...."






"அம்மா... நிஜமாவா சொல்றீங்க... அப்போ அந்த வைதேகி...."






"என் அண்ணன் சிவராமோட பொண்டாட்டி... என் அண்ணனுக்கு பொண்ணு பார்த்த போது வைதேகியை தேர்ந்து எடுத்தது நான் தான்.... என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தப்பும் அது தான்... அவளை என் வீட்டு மருமகளாக்கி என் குடும்பத்துக்கே பெரிய சாபத்தை கொண்டு வந்துட்டேன்....."




"என்னம்மா சொல்றீங்க... புரியிற மாதிரி சொல்லுங்க...."




"வீட்டுக்கு போலாம் சித்து.... அங்கே வந்து சொல்றேன்...." என்றவர் கண்களில் வழிந்த கண்ணீரை தன் முந்தானையால் துடைத்து கொண்டார்....






சகுந்தலா வீட்டுக்கு வந்ததும் நேராக பூஜை அறைக்கு சென்றவர் அங்கு இருந்த ஓவியங்களை பார்த்து அழுது கொண்டிருந்தார்......





அன்னை அழுவதை பார்த்ததும் தாங்கிக் கொள்ள முடியாத ரஞ்சன் "அம்மா ப்ளீஸ் அழாமல் என்ன நடந்ததுன்னு என்கிட்ட சொல்லுங்க.... நான் என்னால் முடிஞ்சதை உங்களுக்கு பண்றேன்...." என்றான்....







"சொல்றேன் சித்து.... கண்டிப்பா உன்கிட்ட சொல்லித் தான் ஆகணும்.... நீ தான் இதை எல்லாம் சரி பண்ணனும்... என் அப்பா அண்ணா ஆசையை நிறைவேத்தனும்..." என்றவர் தன் கடந்த காலத்தை சொல்ல ஆரம்பித்தார்......







சித்து நானும் எங்க அண்ணனும் ரொம்ப சந்தோசமா எங்க வீட்டில் வாழ்ந்துட்டு இருந்தோம்......








நான் பிறந்த போது அம்மா இறந்து போனதால் அப்பா தான் எங்க ரெண்டு பேரையும் வளர்த்து ஆளாக்கினார்.....





என் அண்ணன் அந்த காலத்தில் என்ஜினியருக்கு படிச்சு நல்லா சம்பாதிச்சாரு....








என்னையும் படிக்க வைக்கிறதுக்கு ஆசைப்பட்டாரு... அதனால் நானும் பட்டணத்துல போய் ஓவியம் சம்பந்தப்பட்ட படிப்பை படித்தேன்.... படிச்சு முடிச்சிட்டு ஊருக்கு வந்த போது அண்ணா தன் பிரண்டு அதாவது உன் அப்பாவோடு ஏதோ முக்கியமான வேலை பாத்துட்டு இருந்தார்..... அதனால் உன் அப்பாவும் எங்க கூட தான் தங்கி இருந்தார்.....




அண்ணனோடு பேசி பழகி அப்பாவுக்கு அவரை பிடித்து கடைசியாக எனக்கும் அவரை ரொம்ப பிடித்து இருந்தது..... அதே போல அவருக்கும் என்னை புடிச்சிருந்துச்சு..... இதுக்கு இடையில் அவர் வெளிநாட்டுக்கு போற வேலை வந்ததால் அவர் வெளிநாட்டுக்கு போயிட்டாரு..

வெளிநாட்டிலிருந்து அவர் வந்ததும் எங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிட்டு அண்ணனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருந்தார் அப்பா.....







சிவராமுக்கு பொண்ணு பார்த்த சமயத்தில் வைதேகி போட்டோவை பார்த்ததும் எனக்கும் அண்ணனுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு பொண்ணு பார்க்க போனோம்.....






அவங்க வீட்டில் ஓரளவு வசதி இருந்தாலும் எங்க வசதியை பார்க்கும் போது கம்மி தான்....








இருந்தாலும் அண்ணனுக்கு வைதேகியை புடிச்சு இருந்ததால் அப்பா கல்யாணத்தை பண்ணி வச்சார்....






என் அண்ணன் சிவராம் ரொம்ப நல்லவர்..... வைதேகியும் அண்ணனும் நல்லா தான் வாழ்ந்துட்டு இருந்தாங்க.... அப்போ தான் பெரியவன் ராஜசேகரன்... நீ கூட வீட்டில் அடிச்சியே அவன் பிறந்தான்.... அவன் பிறந்த ஒரு வருஷத்திலே இரண்டாவது பையன் பிறந்தான்..... அந்த சமயத்தில் தான் ரெண்டு வருஷம் முடிநது வரவேண்டிய உன் அப்பா இன்னும் ஒரு வருஷம் வெளிநாட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிடுச்சு....






அதுக்கப்புறம் தான் வைதேகியோட உண்மையான குணமும் அவங்க குடும்பத்தோட அரக்க குணமும் எங்களுக்கு தெரிய வந்துச்சு..... வைதேகி போட்டோவை பார்த்து ரொம்ப நல்ல பொண்ணுனு நினைச்ச என் நினைப்பை பொய்யாக்கினாங்க.... அவளும் பணத்தாசை புடிச்ச அவள் குடும்பமும் சேர்ந்து எனக்கு வைதேகியோட அண்ணனை கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணாங்க.....




ஆனால் என் அப்பாவும் என் அண்ணனும் முடியாதுன்னு மறுத்துட்டு என்னை கந்தசாமிக்கு அதாவது உன்னோட அப்பாவுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுக்கிறதில் உறுதியாக இருந்தாங்க.....




எவ்வளவோ வைதேகி வீட்டு ஆளுங்க சொல்லி பார்த்தும் என் வீட்டில் கேட்காததால் ஆள் வச்சு மிரட்டி என் அப்பாவையும் அண்ணனையும் சம்மதிக்க வைக்க பார்த்தாங்க.....





ஆனால் என் வீட்டில் நாங்கள் உறுதியாக இருந்ததால் கடைசியா வைதேகி மூலமா எங்களை மாத்த முயற்சி பண்ணாங்க.....





அது வரைக்கும் வைதேகியை என்னோட பெஸ்ட் பிரண்டாக தான் நான் பாத்துட்டு இருந்தேன்....




ஆனால் அவளோ அவ அண்ணனுக்காகவும் இந்த சொத்துக்காகவும் அதாவது மொத்த சொத்தையும் அவள் வீட்டு ஆளுங்களே ஆண்டு அனுபவிக்கணும் அப்படிங்குற பேராசையினாலும் உன் அப்பா எங்க ஜாதி இல்லைங்கிறதை ஒரு காரணமா காட்டி எங்க சொந்தக்காரங்க எல்லாத்தையும் பேசி பேசியே எங்களுக்கு எதிரா மாத்திட்டாங்க....




எங்க ஜாதிக்காரனா இருந்த வைதேகியோட அண்ணன் கருப்பனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி சொந்தக்காரங்களும் சொல்ல ஆரம்பிச்சாங்க..... அந்த சமயத்தில் தான் உன் அப்பா திரும்ப வந்தார்..... உன் அப்பா வந்த சந்தோஷத்தை நான் அண்ணன் அப்பா எல்லாரும் கொண்டாடிட்டு இருக்கும் போது வைதேகி மனசில் வஞ்சத்தோடும் நாக்கில் நல்ல வார்த்தையோடும் பழகிட்டு இருந்தாள்..... அது எனக்கு அப்போ தெரியாது... உன் அப்பாவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ண என் அண்ணனும் அப்பாவும் ஏற்பாடு செய்தாங்க....





ஆனால் வைதேகி கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயம் பண்ண சொன்னாள்.... அண்ணனும் அப்பாவும் சரின்னு சொல்லி அதுக்கு திங்ஸ் வாங்க டவுனுக்கு போய்ட்டு லேட்டா வருவோம்னு சொல்லிட்டு போனதால் நான் என் ரூமுக்கு போகாமல்
உன் அப்பா வருவதற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...... அன்னைக்கு உன் அப்பா குடிச்சுட்டு வந்தார்.... அவர் நிதானத்தில் இல்லை..... அதுவும் ஒரு வகையில் நல்லது தான்..... ஏன்னா அவர் நிதானமாக இருந்திருந்தால் அன்னைக்கு அந்த தப்பு நடந்திருக்காது.... நீயும் எனக்கு கிடைத்திருக்க மாட்ட... அது தான் நான் சந்தோசமாக இருந்ததும் உன் அப்பாவை பார்த்ததுமான கடைசி நாள்.....
மறுநாள் எல்லாருக்கும் வைதேகி சாப்பாடு பரிமாற அப்பா அண்ணன் உன் அப்பா எல்லாரும் சாப்பிட்டுட்டு இருந்தாங்க..... நான் அப்புறமா சாப்பிடுகிறேன் என்று சொல்லிட்டு ரூமுக்குள்ள இருந்தேன்.... அப்பாவும் அண்ணனும் சாப்பிட்டு எழுந்து கை கழுவ போகும் போது மூணு பேரும் மாறி மாறி தரையில் விழுந்தாங்க.... நான் யாரோ கீழே விழுந்த சத்தம் கேட்டு ரூமை விட்டு வெளியே வந்து எட்டி பார்த்தால் என் அண்ணன் கழுத்தில் காலை வைத்து வைதேகி நெறிச்சுகிட்டு இருந்தாள்.... பதறி போய் நான் கத்த போனப்போ எங்க வீட்ல வேலை செய்த சமையல்காரம்மா என் வாயை பொத்தி அமைதியா இருக்க சொன்னாங்க... என் அப்பா அண்ணா உன் அப்பா மூணு பேருடைய பொணத்தை நடு வீட்டில் பார்த்தேன்..... அவங்க சாப்பிட்ட சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்ததா வைதேகி சொல்லிகிட்டு இருந்தாள்.... என் கண் முன்னாடி என் குடும்பமே ஒன்னும் இல்லாமல் போகவும் அங்கே இருந்த கத்தியை எடுத்து மணிக்கட்டை அறுத்துக்க போனேன்.... அப்பவும் அதே சமையல்காரம்மா என்னை எதுவும் பண்ண விடாமல் தடுத்துட்டாங்க... நாங்க இங்கே பேசிகிட்டு இருந்த அதே சமயத்தில் வைதேகி அண்ணன் கருப்பன் அங்கே வந்தான்.... அவங்க ரெண்டு பேரும் ஏதோ பேசவும் அமைதியா கவனிச்சு கேட்டேன்.... நான் ரூமில் இருப்பதை கருப்பன்கிட்ட சொன்ன வைதேகி என் கழுத்தில் தாலி கட்டி அவன்கிட்ட என்னை கட்டாய கல்யாணம் பண்ண சொன்னதை கேட்டதும் என் உயிரை விடுறதை விட அந்த கருப்பன் என் கழுத்தில் தாலி கட்டாமல் தடுக்க என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.... கட்டிய புருஷனையே விஷம் வைத்து கொன்ன அந்த வைதேகி.... பணத்துக்காகவும் ஜாதிக்காகவும் எதையும் செய்ய தயங்க மாட்டா..... அதுக்கு பிறகும் அங்கே இருந்தால் என்னை அந்த கருப்பனுக்கு கட்டி வச்சுடுவான்னு பயந்து கையில் கிடைச்சதை எடுத்துக்கிட்டு இந்த ஊரை விட்டு சமையல்கார அம்மா துணையோடு வீட்டை விட்டு ஓடி போனேன்..... கிட்டத்தட்ட ரெண்டு நாள் ஊர் எதுன்னு தெரியாமல் சாப்பிடாமல் ஓடிகிட்டே இருந்தேன்..... கடைசியா ஒரு கோவிலுக்கு பக்கத்தில் பசியில் மயங்கி விழுந்துட்டேன்.... அந்த கோவில் பூசாரி என் மேல் பரிதாபபட்டு சாப்பாடு குடுத்து வேலையும் குடுத்தார்..... கோயிலில் சாப்பிட்டு அங்கேயே வேலை பாத்துட்டு இருந்த எனக்கு ரெண்டு மாதத்தில் வரமா நீ கிடைச்ச..... அந்த ஒரு நாள் உங்க அப்பாவோட சந்தோசமாக நான் வாழ்ந்த காதல் வாழ்க்கைக்கு பேர் சொல்லும் பிள்ளையா நீ கிடைச்ச.... யாரை கொன்னு தன் ஜாதியை வாழ வச்சுட்டுதா வைதேகி நினைச்சாலோ அவரோட வாரிசான உன் மூலமா அவளை பழி வாங்கனும்னு தான் எவ்வளவோ நல்ல நல்ல காலேஜில் இடம் கிடைச்சும் இந்த ஊருக்கு உன்னை கூட்டிட்டு வந்தேன்.... நீ படுச்சு முடுச்சதும் எல்லா உண்மையும் சொல்லி நம்ம குடும்பத்தை அழிச்ச அந்த வைதேகியையும் அவள் அண்ணனையும் பழி வாங்க நினைச்சேன்.... ஆனால் விதி.... நீ படிப்பை முடிக்கிறதுக்குள்ள அவங்களை சந்திக்க வச்சுடுச்சு...." என்று கூறி விட்டு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு பூஜை அறையில் இதுநாள் வரை தான் வரைந்து மறைத்து வைத்து இருந்த ஓவியங்களை ரஞ்சனிடம் காட்டினார் சகுந்தலா....
 
உயிர் : 10

"இதோ இந்த ஓவியத்தில் இருப்பது தான் என் அப்பா.... இந்த ஓவியத்தில் இருப்பது என் அண்ணா சிவராம்..... இந்த ஓவியத்தில் இருப்பது உன் அப்பா.... இதெல்லாம் நானே வரைஞ்சு வச்ச ஓவியங்கள்.... அவங்க போட்டோ ஒன்னு கூட என்கிட்ட இல்லை சித்து..... அதனால் அவங்களை மனதில் நினைத்து ஓவியமாக வரைந்து பூஜை அறையில் வைத்தேன்.... ஒரு அழகான குருவி கூடு போல இருந்த என் குடும்பத்தில் பாம்பு போல உள்ளே வந்து என் குடும்பத்தை அழித்த அந்த வைதேகியையும் அவள் அண்ணனையும் பழி வாங்கனும் சித்து... அவங்க அனுபவிக்கும் சொத்து உனக்கு சேர வேண்டியது... அதை அவங்க கிட்ட இருந்து பறிக்கனும்.... ஜாதி ஜாதின்னு அலையும் அவள் மகன்களுக்கு வேற ஜாதியை சேர்ந்த பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி வைக்கனும்... வைதேகியை அந்த வீட்டை விட்டு துரத்தனும்....." என்று ஆவேசமாக பேசியவரின் தோளில் கை போட்டு "அம்மா நீங்க சொல்றதை எல்லாம் நான் செய்றேன்... நீங்க இவ்வளவு கோபப்படாதீங்க... பிபி ரைஸ் ஆகிட போகுது...." என்றான்....








சகுந்தலா வாய் விட்டு கதற ரஞ்சனோ மனதுக்குள் கதறி கொண்டு இருந்தான்... தன் தகப்பனையும் தன் தாயின் தகப்பன் மற்றும் சகோதரனையும் கொன்றவர்களை பழி வாங்க வேண்டும் என்ற பழி வெறி மனதுக்குள் தீயாக எரிய ஆரம்பித்தது....






பழைய சம்பவங்களை பற்றி பேசியதால் பாரமாகி போன மனதுடன் இருந்த சகுந்தலா ரஞ்சனின் இறுகிய முகத்தை கண்டு தனது கவலையை மறந்து ரஞ்சனை தேற்ற நினைத்தார்....
"சித்து... இந்த வருடத்தோடு உன் படிப்பு முடியுது.... வைதேகியை நான் சீண்டி விட்டுட்டு வந்ததால் அவள் மகன்கள் மூலம் உனக்கு தொல்லை கொடுப்பா... எவ்வளவு பிரச்சினை வந்தாலும் நீ படிப்பை மட்டும் விட்டுடாதே சித்து... நான் வக்கீல் மூலம் அவளுக்கு பிரச்சினை குடுத்து உன் பக்கம் திரும்பாமல் பாத்துக்குறேன்... இப்போ நடக்க போகும் தர்ம யுத்தத்தில் நியாயம் தான் ஜெயிக்கனும்.... ஜெயிக்கும்...." என்றவர் ரஞ்சனின் தலையை வருடி கொடுத்தார்.....








தலையை தடவி கொடுத்த சகுந்தலாவின் மடியில் படுத்து கொண்ட சித்து "அப்பா இல்லாமல் என்னை பெத்து வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டியாம்மா...." என்றான்....


"உனக்கு தெரியாதா சித்து... நம்ம சமுதாயத்தை பத்தி.... கழுத்தில் தாலி இல்லாமல் ஒரு பெண் தாயானால் அவளை இந்த சமுதாயம் விபச்சாரின்னு முத்திரை குத்தி கண்டவன் எல்லாம் கையை பிடிச்சு இழுக்க பார்ப்பான்.... என் விஷயத்தில் மட்டும் மாறிடுமா என்ன.... என் மானத்தை காப்பாத்திகிட்டு உன்னை வளர்க்க நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல சித்து.... என் மனதில் இருந்த வைராக்கியம் தான் உன்னை காலேஜ் வரைக்கும் படிக்க வைக்க காரணம்.... உன்னை வைத்து உன் முலமா அந்த வைதேகியையும் கருப்பனையும் பழி வாங்கனும்...."




"அம்மா... உன் அண்ணனுக்கு ரெண்டு பசங்க தான்னு சொன்ன... ஆனால் அந்த வீட்டில் ஒரு பெண் இருக்காளே... அப்போ அவள் யார்..."



"பொண்ணா...."



"ஆமாம்மா.... அங்கே ஒரு பொண்ணு இருக்கா... வைதேகி மகன்களை அண்ணன்னு கூப்பிடுறா... என் காலேஜில் தான் பர்ஸ்ட் இயர் படிக்கிறா..."



"ம்... அவள் யாராக இருக்கும்..."


"நான் உன்னை கேட்டால் நீ என்னை கேட்குற..."
"விசாரிக்கிறேன்... சித்து... இனிமேல் தான் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்... எப்பவும் உன் நண்பர்களோடவே இரு... தனியா எங்கேயும் போகாதே... ஆமா.. நம்ம கூட வந்தானே தீரன்.. அவன் எங்கே..." என்று சகுந்தலா தேட அந்த அப்பாவி ஜீவனோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கேட்டதால் பேயடித்ததை போல அவர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்து இருந்தான்....





தீரன் தரையில் அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு என்னாச்சு இவனுக்கு என்ற யோசனையுடன் அவன் அருகில் சென்று "தீரா என்னடா ஆச்சு... ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க..." என்றான்.....




"டேய்... மாப்ள... காலையில் உங்கிட்ட என்ன சொன்னேன்..." என்று மெல்லிய குரலில் கேட்டான் தீரன்...



"என்ன சொன்ன...." என்று யோசித்தவனின் தோளில் அடித்த தீரன் "பாவி... பாவி.. நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்.... நீ அந்த எருமை மாட்டு அண்ணன் தம்பிங்க கூட சண்டை போட போறதா ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நான் பேசாமல் என் வீட்டுக்கு போய் இருப்பேன்... என்னையும் கூட்டிட்டு அவன் வீட்டுக்கு போய் அவனையே அடுச்சுட்டு வர்ற... அம்மா அட்ரஸை குடுத்துட்டு வர்றாங்க.... உங்க கூட பழகின பாவத்துக்கு எனக்கு பாடை கட்ட பாக்குறீங்களே... இது நியாயமா...." என்று கேட்ட தீரனை பாசமாக பார்த்து வைத்த சித்து "என்னடா மாப்ள இப்படி பேசுற... உன்னை மாதிரி நல்ல ப்ரண்ட்ஸ் இருக்கும் தைரியத்தில் தான் என் அம்மாவோட ஆசையை நிறைவேத்தலாம்னு இருந்தேன்.... இப்படி என் மனசை உடைச்சுட்டியேடா.... பாருடா... அங்கே பாரு... அம்மா முகத்தை பார்.... எத்தனை நாள் இந்த அம்மா கையால் சாப்பிட்டு இருப்ப... அவங்க ஆசையை நிறைவேத்த எனக்கு ஹெல்ப் பண்ண பாட்டியா..." என்று கேட்டவனின் செண்டிமெண்ட்டான பேச்சில் மயங்கிய தீரன் "மாப்ள... அம்மா ஆசையை நிறைவேத்துறது மட்டும் தான் இனி நம்மோட லட்சியம்... அந்த காணாடமிருகம் குடும்பத்தை பழிவாங்குறோம்... அம்மாவை சந்தோஷப்படுத்துறோம்.... " என்று வீர வசனம் பேசியவனை அணைத்து கொண்ட ரஞ்சன் "உன்னை மாதிரி பிரண்ட் இருந்தால் போதும் மாப்ள..." என்றான்....




"என்னடா நக்கலா சொல்ற மாதிரி இருக்கு...."



"ச்சே... உண்மையா தான் சொல்றேன் மாப்ள.... இனிமேல் தான் நமக்கு நிறைய வேலை இருக்கு மாப்ள... முதல் வேலையா நீ என்ன பண்ற ஸ்ரீ யாரு.... அவளுக்கும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் என்ன உறவு.... எல்லாத்தையும் தெருஞ்சுகிட்டு வா....."



"என்னது... போடா... எனக்கு ஈஸியான வேலையா குடு... இவ்வளவு கஷ்டமான வேலை எல்லாம் என்னால் பண்ண முடியாது..."




"ப்ச்... என்ன மாப்ள... அம்மாவை பாருடா.... அவங்க...." என்று பேச ஆரம்பித்தவனை கையை நீட்டி தடுத்த தீரன் "மாப்ள போதும்.... இப்போ என்ன ஸ்ரீயை பத்தி புல் டீடைல்ஸ் உனக்கு வேணும்.... அவ்வளவு தானே... இன்னும் 4நாளில் எல்லா டீடைல்ஸோடு உன்னை வந்து பாக்குறேன்... அதுவரைக்கும் தயவுசெய்து என்னை தேடாதே..." என்றவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.....




தீரன் இருந்தவரை சற்று இளகி இருந்த சித்துவின் முகம் அவன் சென்ற பிறகு இறுகி போக சகுந்தலா அருகில் சென்றவன் "அம்மா அந்த பொண்ணு முகத்தை பார்த்தால் உன் அண்ணி அந்த வைதேகியோடு ஒத்து போற மாதிரி தான் இருந்தா... ஒருவேளை உன் அண்ணி...."
"இல்ல சித்து... எனக்கு தெருஞ்சு வைதேகிக்கு அந்த மாதிரி எந்த தப்பான உறவும் இருந்தது இல்லை... ஆனால் சில சந்தேகங்கள் மட்டும் இருக்கு சித்து..."


"என்ன மாதிரியான சந்தேகம்... உங்களுக்கு தோணுது...."



"தோணுது இல்ல சித்து.... தோணுச்சு..."



"எப்போ... என்ன தோணுச்சு.... பிட்டு பிட்டா சொல்லாமல் எனக்கு புரியும்படி விளக்கமா சொல்லும்மா...."



"என் அண்ணனுக்கு ரெண்டாவது பையன் பிறந்து வீட்டுக்கு வந்த வைதேகி அந்த சின்ன குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே இல்லை.... சொல்ல போனால் அவனை வளர்த்தது முழுக்க நானும் என் அண்ணனும் தான்.... வைதேகி குணம் மாறியது கூட அந்த சமயத்தில் தான்... எங்கிட்ட ப்ரண்ட் போல பழகின வைதேகி திடீர்னு எதிரி போல பார்க்க ஆரம்பித்தாள்.... இவள் என் ப்ரண்ட் வைதேகியும் இல்லை... என் அண்ணி வைதேகியும் இல்லைன்னு மனதுக்கு தோணிட்டே இருக்கும்... முதல் பையனை மட்டும் எப்பவும் கூட வச்சிப்பா... ரெண்டாவது பையனை திரும்பி கூட பார்க்கமாட்டாள்.... அவள் அம்மா ஊருக்கு ரெண்டாவது பிரசவத்துக்கு போன போது தான் அவளுக்கு ஏதோ நடந்து இருக்கு... அது என்னனு தான் எனக்கு தெரியலை...."




"வைதேகி சொந்த ஊர் எது...."





"இங்கிருந்து 15கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமம் தான் வைதேகி பிறந்து வளர்ந்த ஊர்...."


"சரிம்மா... இனி இந்த பிரச்சனை எல்லாம் நான் பாத்துக்குறேன்... என் படிப்பு கெடாமல் அந்த குடும்பத்தை பழி வாங்குவேன்.... இந்த ஜாதி கெட்டு பிறந்தவன் தான் அந்த வீட்டுக்கு மருமகனாகி அவனுங்க ஆணவ கொலைக்கு முற்று புள்ளி வைப்பேன்.... என் அப்பா சாவுக்கு காரணமான வைதேகியை ஜெயிலுக்கு அனுப்புவேன்.... இது என் அப்பா கந்தசாமி மேல சத்தியம்..." என்று சத்தியம் செய்தான்.....







சத்தியம் செய்த மகனின் கைகளை கண்களில் ஒற்றிக் கொண்ட சகுந்தலாவின் கண்களில் கண்ணீர் வடிய "அம்மா நீ அழுதது எல்லாம் போதும்.... என் தைரியமே நீ தான்... நீயே அழுதால் நான் பலவீனம் ஆகிடுவேன்.... அதனால் இனி நீ எப்போதும் அழவே கூடாது.... இன்னிக்கு மட்டும் இல்லை... ஒருவேளை எனக்கே ஏதாவது..."





"சித்து..." என்று மகனின் வாயை தன் கையால் மூடிய சகுந்தலாவின் கையை எடுத்து விட்டவன் "அம்மா இதுதான் இதுக்காக தான் நான் அப்படி சொன்னது.... நெருப்புன்னு சொன்னால் வாய் வெந்துடாது.... ஒருவேளை இந்த போராட்டத்தில் எனக்கு ஏதாவது நடந்தால் கூட உங்களுக்கு செஞ்சு குடுத்த சத்தியத்தை காப்பாத்த கண்டிப்பா நான் திரும்ப வருவேம்மா...." என்றவன் அறைக்குள் சென்று படிக்க தொடங்கினான்......





சித்து தன் தாயிடம் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் தேவதைகள் "ததாஸ்து..." சொல்லி சென்றதை தாயும் மகனும் அறியாமல் போனார்கள்.....

கல்லூரி மரத்தடியில் சித்து ஸ்ரீக்காக காத்திருந்தான்..... ஸ்ரீ தனது மாமன் மகன் கிருஷ்ணாவிடம் பேச்சு கொடுத்து சித்துவிற்கு என்னென்ன பிடிக்கும்... என்னென்ன பிடிக்காது என்று கேட்டு தெரிந்து கொண்டாள்... அதன்படி உடையில் அவனுக்கு மிகவும் பிடித்தது பாவாடை தாவணியும் சேலையும் தான் என்று தெரிந்து கொண்டவள் 2நாட்கள் லீவில் சித்துவிற்கு பிடித்த வண்ணங்களில் பல பாவாடை தாவணி எடுத்து தைத்து வாங்கியவள் இன்று அவனுக்கு மிகவும் பிடித்த மஞ்சள் வர்ண பட்டு பாவாடையில் அரக்கு வர்ண பார்டரில் ப்ளவுஸூம் தாவணியும் அணிந்து இரட்டை சடை போட்டு ஒருபக்கம் மட்டும் மல்லிகையை சரம் சரமாக தொங்க விட்டு வந்து இருந்தாள்.....




ஸ்ரீ கல்லூரி வாசலில் கால் வைத்ததுமே அவள் கால் முதல் தலை வரை அனைத்தையும் ஒருமுறை நன்றாக பார்த்து கண்களில் நிரப்பி கொண்டவன் அவள் மரத்தடியை நோக்கி வரும் போது அவளை பார்க்காதது போல முகத்தை திருப்பி கொண்டான்...





சித்துவிற்கு முன் வந்து நின்று அவனுக்கு நன்றாக தெரிய வேண்டும் என கையில் போட்டு இருக்கும் கண்ணாடி வளையல்களை ஆட்டி ஆட்டி சத்தம் சித்துவின் காதில் கேட்கும்படி செய்தாள்..... ஆனால் அவனோ அவளை கண்டு கொள்ளாமல் தூரத்தில் தெரியும் மேகங்களையே பார்த்தபடி நின்று இருந்தான்......




"ப்ச்... ரஞ்சன்...." என்று சற்று மெல்லிய குரலில் அவனை அழைத்தாள் ஸ்ரீ....
"சொல்லு ஸ்ரீ...."



"நான் எப்படி இருக்கேன் ரஞ்சன்..."





"நீதான் எப்போதும் அழகா இருப்பியே... இப்போ என்ன புதுசா...."



"ப்ச்.... திரும்பி என்னை பாருங்க...." என்றதும் அப்போது தான் அவளை பார்த்தது போல கண்களில் வியப்பை காட்டி "ஹேய்.... ஸ்ரீ... இது என் பேவரைட் கலர் காம்பினேஷன்.... யெல்லோ வித் மெரூன் மை பேவரைட் கலர்ஸ்ல எனக்கு பிடித்த மாதிரி வந்து இருக்க.... சூப்பர்.."



"வாவ்... நிஜமாவா ரஞ்சன்.... இப்போ உங்களுக்கு என்னை புடிச்சு இருக்கா.... என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா...."



"பர்ஸ்ட் இம்ப்ரஸன் ஓ. கே... பட் அதுக்காக மேரேஜ்... கொஞ்சம் கஷ்டம்.... இன்னும் உங்கிட்ட இருந்து நிறைய பர்பாமன்ஸ் எதிர்பாக்குறேன் ஸ்ரீ... என்னை டிஸ்ஸப்பாயின் பண்ணாமல் நல்லா ப்ளான் போட்டு என்னை இன்னும் பெட்டரா இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணு...." என்றவன் அவள் கன்னத்தில் தட்டி "ஆல்த பெஸ்ட்...." என்று கூறி விட்டு தீரனை நோக்கி சென்று விட்டான்.....




சிறிது நேரம் கன்னத்தை தடவியபடி வெட்கப்பட்ட ஸ்ரீ "நாளைக்கு இன்னும் கொஞ்சம் பெட்டரா பர்பாமன்ஸ் கொடுத்து அவரை இம்ப்ரஸ் பண்ணனும்..." என்று தனக்குள்ளே கூறியவள் மரத்தடியில் அமர்ந்து யோசித்தாள்....




வள்ளி இவர்களின் காதல் விளையாட்டை தூரமாக நின்று கவனித்தவள் ஒரு கேலி புன்னகையுடன் கடந்து செல்ல முயல அவளுக்கு முன் நின்று வழிமறித்தான் தீரன்....




தனக்கு முன் நின்றவனை நிமிர்ந்து பார்த்த வள்ளி அவனை விட்டு விலகி நடக்க முயல மீண்டும் அவளை மறித்து நின்றான்... அவள் மறுபடியும் வேறு பக்கம் செல்ல முயல அவளை எந்த பக்கமும் நகர விடாமல் செய்தான் தீரன்....





வள்ளி குழப்பமாக அவனை நிமிர்ந்து பார்த்து "வழியை விடுங்க சார்..." என்றாள்...




"வழியை விடுறேன்... அதுக்கு முன்னாடி நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லு...."


"யார் நீங்க... உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்லனும்.... முதல்ல வழியை விடுங்க...." என்று தீரனை சுற்றி கொண்டு செல்ல முயல அவளின் கையை இறுக்கமாக பிடித்த தீரன் அவளை செல்ல விடாமல் தடுத்தான்....



"எவ்வளவு தைரியம் இருந்தால் என் கையை பிடிப்ப..." என்று தீரனை அறைய முயன்றவளின் மற்றொரு கையையும் சிறைபிடித்த தீரன் "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் ஆம்பிளையை அடிக்க கை ஓங்குவ...." என்றான்....



"மரியாதையா என் கையை விடுடா... இல்லை சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடுவேன்...." என்று இவர்கள் இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்க அவர்கள் அருகில் வந்தான் சித்தரஞ்சன்....
 
உயிர் : 11


சித்தரஞ்சனை தன் அருகில் பார்த்ததும் வள்ளி அமைதியாகி விட தீரன் தன் நண்பனை பார்த்துவிட்டு "இந்த பொண்ணு உண்மையை சொல்ற மாதிரி தெரியலை மாப்ள....." என்றான்.....




"நீங்க இவரோட பிரண்டா...." என்று கேட்டால் வள்ளி.....





"ஏன் இவன் பிரண்ட் என்று சொல்லி இருந்தால் முன்னாடியே பதில் சொல்லி இருப்பியா என்ன....."





"அப்படி இல்லை.... நீங்க இவரோட பிரண்டுன்னு எனக்கு தெரியாது....."






"இவனை உனக்கு தெரியுமா...." என்று சித்தரஞ்சனை காட்டி கேட்டான் தீரன்...


"தெரியும்....."




"எப்படி தெரியும்...."



"என் பிரண்டோட...."




"ம்...ம்... பிரண்டோட...." என்று கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் கண்களால் தன்னை சுற்றி க்ரவுண்டில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு "இவர் அண்ணன்..... என் அண்ணன்....." என்றாள்....





"உனக்கு அண்ணன்.... உன் பிரண்டுக்கு யாரு..."




"அவளை கல்யாணம் பண்ணிக்க போறவர்...."






"பரவாயில்லை தெளிவா தான் பதில் சொல்ற...."





"ஏன் ப்ரண்டோட லவ்வர்னு சொன்னால் ஆகாதா..." என்று கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த வள்ளி "வெளியே யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.... என்றாள்.....
"ஏன் சொல்லக்கூடாது..." என்று கேட்டான் சித்தரஞ்சன்....






"சொன்னால் அவளோட அண்ணனுங்க உங்களை கொன்னுடுவாங்க...."





"ஓஹோ... அது எப்படி உனக்கு தெரியும்..." என்று சித்து கேட்டதும் தான் வள்ளி தான் தெரியாமல் வாய் விட்டதை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு "கேள்விப்பட்டு இருக்கேன்..."என்று கூறி விட்டு அங்கிருந்து நகர போக மீண்டும் தீரன் வழியை மறைத்தான்......







"அண்ணா இவரை வழி விட சொல்லுங்க... நான் போகணும்...."




"போலாம்... போலாம்.... அதுக்கு முன்னாடி நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு...." என்ற சித்தரஞ்சனை கேள்வியாக பார்த்தாள் வள்ளி.....



"என்ன அப்படி பார்க்குற வள்ளி... எனக்கு சில கேள்விகளுக்கு பதில் தெரியணும்... அந்த பதில் உன்கிட்ட இருக்குன்னு எனக்கு தோணுது....."






"என்ன கேள்வி... கேளுங்க.... எனக்கு தெரிந்தால் நான் பதில் சொல்றேன்...."





"உன் பிரண்டை பத்தி உனக்கு என்ன தெரியும்.... அதை சொல்லு...'








"அவளைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு.... சின்ன வயசுல இருந்து என் கூட படிக்கிறா...."
"அப்படிப்பட்டவள் செத்துப் போனால் பரவாயில்லைன்னு நினைக்கிற அளவுக்கு நீ நடந்துக்குற அப்படித்தானே..."







"அவ செத்துப் போகனும்னு நான் என்னைக்குமே நினைக்க மாட்டேன்...."







"அப்போ என்னை லவ் பண்ணும் போது அவளை நீ ஏன் தடுக்காமல் இருந்த.... என்னை லவ் பண்ணினால் அவள் வீட்டாளுங்க அவள் உயிரை எடுத்துடுவாங்கன்னு உனக்கு தெரியும் தானே.... அப்படி இருந்தும் ஏன் அமைதியா இருந்த...."





"அது வந்து...." என்று இழுத்தவளை கூர்மையாக பார்த்த சித்தரஞ்சன்





"சொல்லு வள்ளி... எதுக்காக அவளை நீ தடுக்காமல் இருந்த...." என்று கேட்டதும் வள்ளியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.....




"ஆமா நான் தான் அவளை துண்டி விட்டு உங்களை லவ் பண்ண வச்சேன்..... ஆனா அவள் சாகணும்னு நான் நினைச்சதே இல்ல..... உங்க கூட சேர்ந்து நல்லபடியா வாழணும்னு தான் நினைச்சேன்.... அவளோட ஆசைப்படி அவளோட காதலும் நிறைவேறனும்னு தான் நினைச்சேன்....."




"ஆனா அதில் ஏதோ ஒரு சுயநலம் இருக்கிற மாதிரி எனக்கு தோணுதே...." என்ற தீரனை அமைதியாக இருக்க சொன்ன சித்து வள்ளியை மேலே சொல்லுமாறு ஜாடை காட்டினான்.....







"ஆமா எனக்கும் ஒரு சுயநலம் இருக்கு... என் அக்கா வேற ஜாதி பையனை லவ் பண்ண ஒரே காரணத்துக்காக என் அக்காவையும் அவள் லவ் பண்ண பையனையும் விஷம் வச்சு கொன்னுட்டாங்க.... நித்யாவோட அண்ணனுங்க ரெண்டு பேரும்.... அதே அவங்க தங்கச்சி லவ் பண்ணினால் என்ன பண்றாங்கன்னு பாக்குறதுக்காக தான் உங்களை லவ் பண்ற அளவுக்கு அவளை மாத்தினேன்... உங்களை பற்றிய நல்ல விஷயங்களை பத்தி பேசியது மட்டும் தான் நான்..... ஆனால் உண்மையிலேயே உங்களை லவ் பண்ணது அவள் தான்.... அதுக்காக நான் எதுவுமே பண்ணலை.... எட்டி நின்னு வேடிக்கை மட்டும் தான் பார்த்தேன்... அவளை தடுக்காதது மட்டும் தான் நான் பண்ண தப்பு.... என் அக்காவை கொன்னவங்க மனசு கஷ்டப்படணும்னு நினைச்சேன்..... எப்படியும் நீங்க அவளை காப்பாத்திருவீங்கன்னு எனக்கு தெரியும்.... அவங்க கண்ணு முன்னாடி அவளோட தங்கச்சி வேற ஜாதிக்கார பையனோட வாழ்றதை நினைச்சு நினைச்சு அவங்க சாகனும்.... என் அக்காவை கொலை பண்ண அவங்களுக்கு தண்டனை அதுதான்னு நான் நினைச்சேன்.... அப்படி ஒரு வேளை என்னையும் மீறி அவளுக்கு ஏதாவது நடந்தால் அடுத்த நிமிஷம் நானும் உயிரோட இருக்க மாட்டேன்...." என்று கூறிய வள்ளியின் நட்பை நினைத்து ஆண்களுக்கு வியப்பாக இருந்தது.....





ஆண்களின் நட்பு தான் சிறந்தது என்று யார் சொன்னார்கள்..... இதோ தனது தோழிக்காக அவள் உயிரை விட்டால் தானும் உயிரை விடுவேன் என்று சொன்ன இவளும் நல்ல தோழி தானே.....






சொந்தங்களே நமக்காக யோசிக்காத போது தோழிக்காக என்று யோசிக்கும் இவளை போன்ற நட்பே போதும் என்று நினைத்த வள்ளியின் நட்பை நினைத்து வியப்பாக இருந்தது தீரனுக்கு.....



"சரி விடுமா.... இனி ஸ்ரீயை நான் பாத்துக்கிறேன்..." என்று கூறிய சித்து அந்த இடத்தை விட்டு நகர போக அவனை தடுத்த வள்ளி "அண்ணா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்...." என்றான்....



"சொல்லு வள்ளி..."





"அது வந்து.... நீங்க நினைக்கிற மாதிரி..... நான் சொல்றதை உங்களால் புரிஞ்சுக்க முடியுமா என்னன்னு தெரியலை.... ஆனா என் வீட்ல இதை பத்தி பேசி இருக்காங்க... அதுவும் என் அப்பாவும் அம்மாவும் தனியா பேசி இருக்காங்க... நான் புரிஞ்சுகிட்ட வரைக்கும் அதை உங்களுக்கு சொல்றேன்.... நம்ம எல்லாரும் நினைச்சுட்டு இருக்க மாதிரி நித்யா வீட்டில் இருப்பது அதாவது நித்யா அம்மா வைதேகியா இருக்குறது அவங்க கிடையாதாம்...."





"என்ன சொல்ற வள்ளி... நீ உண்மையை தான் சொல்றியா...." என்று அதிர்ந்து போய் கேட்டான் சித்தரஞ்சன்....





"ஆமா அண்ணா... அங்கே இருக்குறது வைதேகியோட கூட பிறந்த அக்கா வனஜா... ரெண்டு பேரும் ஒட்டி பிறந்த ரெட்டை பிறவியாம்.... ஏதோ பிரச்சினையால் வைதேகிக்கு பதிலா அந்த வனஜா இந்த வீட்டுக்கு வந்துட்டாங்களாம்... அதோடு நித்யா இவங்களுக்கு பிறந்த பெண்ணாம்.... அந்த வனஜாவுக்கு சொத்து மேல் ஆசை... அதுக்காக மட்டும் தான் இங்கே இருக்காங்களாம்.... வைதேகியோட பசங்களுக்கு சொத்து போயிட கூடாதுன்னு அவங்களை தப்பானவங்களா வளர்த்து அவங்களுக்கு யாரும் பொண்ணு தரக்கூடாதுன்னு மிரட்டி வச்சு இருக்காங்களாம்... இந்த அண்ணன் தம்பி ரெண்டு பேரும் பொண்ணுங்களையே மதிக்காத மாதிரி மாத்திட்டாங்க... நித்யாவை கல்யாணம் பண்ணி குடுத்து அவளுக்கே எல்லா சொத்தும் போய் சேரனும் அப்படிங்குறது தான் அந்த வனஜாவோட எண்ணமாம்.... இதெல்லாம் என் அப்பா அம்மா பேசியதை வச்சு நான் தெருஞ்சுகிட்ட உண்மைகள்...." என்று வள்ளி கூறி முடித்ததும் சித்தரஞ்சன் யோசனையில் ஆழ்ந்தான்.....






சித்தரஞ்சன் சற்று நேரம் யோசித்து விட்டு வள்ளியிடம் திரும்பி "அப்போ உன் அம்மா அப்பாவுக்கு எல்லா விஷயமும் தெரியும் அப்படித்தானே வள்ளி...." என்றான்.....
"ஆமா அண்ணா... கண்டிப்பா அவங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கும்..... ஆனால் ஒன்று அவங்க யார்கிட்டயும் எந்த உண்மையும் சொல்ல மாட்டாங்கன்னு தான் தோணுது..."




"ஏன்..."








"ஏன்னா... அந்த வனஜா என் அம்மா அப்பாவை மிரட்டி இருக்காங்கன்னு நினைக்கிறேன்..... நான் இதை பத்தி கேட்டதுக்கே நிறைய பொய் சொல்லி சமாளிச்சாங்க.... அதனால் தான் நான் அவங்களுக்கே தெரியாமல் ஓட்டு கேட்டு இதை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.... அதுவும் என் அக்கா இறந்ததுக்கு அப்புறம் தான் இதையெல்லாம் நான் தெரிஞ்சுகிட்டேன்.... அக்காவை கொன்னது நித்யா அண்ணனுங்க..... அதாவது வைதேகியோட பசங்கன்னு தெரிஞ்சதும் என் அப்பாவும் அம்மாவும் வனஜாவை போய் மிரட்டி இருக்காங்க..... அது எப்படி என் பொண்ணை கொலை பண்ணலாம்.... உன்னை பத்தி எல்லா உண்மையும் எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன் அப்படின்னு..... அதுக்கு வனஜா திரும்ப என் அம்மா அப்பாவை மிரட்டி இருக்காங்க..... இருக்குற ஒரு பொண்ணாவது உயிரோட இருக்கனும்னா இதை பத்தி மேற்கொண்டு எதுவும் பேசக்கூடாது அப்படின்னு சொல்லி மிரட்டினாங்களாம்..... வீட்டுக்கு வந்த பிறகு அவங்க ரெண்டு பேரும் பேசுனதை வச்சு தான் இப்ப நான் உங்ககிட்ட எல்லா உண்மையும் சொன்னேன்...." என்று வள்ளி கூறினாள்......





"உன் அம்மா அப்பா என்கிட்ட உண்மையை சொல்லலைனாலும் என் அம்மா கிட்ட உண்மையை சொல்லுவாங்கன்னு தான் தோணுது வள்ளி...... நீ என்ன நினைக்கிற தீரா....."




"தெரியலை மாப்ள.... அம்மாவை கூட்டிட்டு போனால் உண்மையை சொல்ல வாய்ப்பு இருக்குன்னு தான் எனக்கும் தோணுது...."






"ஆனா அண்ணா உங்க அம்மாவுக்கும் என் அம்மா அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்...."




'என்ன சம்பந்தம் இருக்குன்னு எனக்கும் தெரியாது.... ஆனால் ஒருவேளை என் அம்மா வந்து கேட்டால் அவங்க எல்லா உண்மையை சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கு...."






"அப்போ நீங்க வேணா உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவை கேட்டு பாருங்க அண்ணா.... ஆனா உங்க அம்மாவுக்கும் என் வீட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு அவங்க கேட்டால் உண்மையை சொல்லுவாங்கன்னு நீங்க எதிர்பார்க்குறீங்க....."









"ஏன்னா என் அம்மா தான் வைதேகியோட நாத்தனார்...... அதாவது வைதேகி வீட்டுக்காரரோட சொந்த தங்கச்சி தான் என் அம்மா....."







"அப்படின்னா நீங்க சகுந்தலா அம்மாவோட பையனா...."







"ஆமா உனக்கு என் அம்மாவை பத்தி தெரியுமா வள்ளி....."





"அண்ணா உங்ககிட்ட..... அதாவது உங்களோட அம்மாவை தான் என் அம்மா பாக்கணும்னு நினைச்சுகிட்டு இருக்காங்க........ உங்க அம்மாவை பார்க்கனும்..... உங்க அம்மாவுக்கு சொந்தமான முக்கியமான ஏதோ ஒன்னு என் அம்மாகிட்ட இருக்கிறதா சொல்லிட்டு இருக்காங்க..... என்கிட்ட கூட அதை பத்தி சொல்லி இருக்காங்க.... சகுந்தலா வந்தால் ஒருவேளை நான் உயிரோடு இல்லை என்றாலும் கூட நீ இந்த பொருளை சகுந்தலா வந்தால் கொடுக்க சொல்லி சொல்லி இருக்காங்க..... நீங்க அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க அண்ணா..... நிச்சியமா உங்களுக்கு எல்லா உண்மையையும் அம்மா சொல்லுவாங்க...."




'சரி நீ கிளாசுக்கு போ வள்ளி.... நான் ஈவினிங் அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு வரேன்.,..."






"சரிங்க அண்ணா.... நான் வரேன்.... அப்புறம் நித்யா....." என்று இழுத்தாள் வள்ளி.....






"இனிமே நித்யா என் பொறுப்பு.... அவளை பத்திரமா பாத்துக்க வேண்டியது நான்..... அவளை பத்தி கவலைப்படாமல் நீ போய் கிளாஸ் அட்டென்ட் பண்ணு....." என்று கூறிய சித்து தீரனை அழைத்துக் கொண்டு தன் வகுப்பிற்கு சென்றான்.......







வகுப்பிற்கு வந்த பிறகும் எதையோ யோசித்துக் கொண்டிருந்த சித்துவை உலுக்கிய தீரன் "என்னடா எப்ப பாரு யோசனையிலேயே இருக்க...." என்று கேட்டான்......




"நித்யா வனஜாவோட பொண்ணு அப்படின்னு வள்ளி சொல்றா..... அப்படி இருந்தால் இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் சந்தேகம் வந்து இருக்கும்ல..... என் மாமா இறந்ததுக்கு அப்புறம் தான் நித்யா பிறந்து இருக்கா.... ஆனா அதை பத்தி யாரும் எதுவும் கேட்டுக்கொண்ட மாதிரியே தெரியலை.... யாருக்கும் தெரிஞ்சாலும் உண்மையை சொல்ற மாதிரி இல்லை...... ஒருவேளை வள்ளியோட அம்மா அப்பா இதை பத்தி எல்லா உண்மையும் சொல்வாங்களா.... என்னனு தெரியலை..... இந்த நித்யாவோட மர்மம் பெரிய தலைவலியா இருக்கும் போல தீரா..,. நித்யா யாருன்னு தேடி தேடியே ஒருவழியாகிடுவேன் போல....."






"மாப்ள நித்யா வனஜா பொண்ணுனு தெருஞ்ச பிறகும் அவளை லவ் பண்றியா...."





"நித்யா யாராக இருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி மாப்ள..... அவளை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்... யாருக்காகவும் அவளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்..... அதுவும் வனஜா பொண்ணுனு தெருஞ்ச பிறகு தான் இன்னும் அதிகமா லவ் பண்றேன்....." என்ற ரஞ்சனை அணைத்துக் கொண்ட தீரன் 'அவள் அம்மா உங்க குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருந்தாலும் அவங்க அம்மாவுக்காக அவளை பத்தி எதுவும் தப்பா நினைக்காமல் அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற பாரு.... உண்மையிலேயே நீ கிரேட்டுடா மாப்ள....." என்று கூறிய தீரனை மர்ம சிரிப்புடன் பார்த்து வைத்தான் சித்தரஞ்சன்......





மாலை வகுப்பு முடிந்ததும் ஸ்ரீயை தேடிச்சென்றான் சித்தரஞ்சன்.....




வகுப்பை விட்டு வெளியே வந்த ஸ்ரீ தனக்காக காத்திருந்த சித்தரஞ்சனிடம் 'எனக்காகவா காத்து இருக்கீங்க....." என்று கேட்டாள்......






'இல்ல இந்த கிளாஸ்ல என்னை வேற யாரோ லவ் பண்றாங்களாம்.... அதான் அவங்களை பாத்துட்டு போகலாம்னு வந்து இருக்கேன்.,.." என்று கூறியவனை முறைத்த ஸ்ரீ "அப்படி எல்லாம் உங்களை யாரும் தூக்கிட்டு போக விட மாட்டேன்.,... நீங்க எனக்கு மட்டும்தான்..... என்னை மட்டும்தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்.... என்னை மட்டும் தான் லவ் பண்ணனும்.., என்னை மட்டும் தான் பாக்கணும்...." என்று கூறினாள் ஸ்ரீ.....






ஸ்ரீயின் பொறாமையுடன் கூடிய காதலை பார்த்து கர்வமாக சிரித்துக் கொண்ட சித்தரஞ்சன் "சரி வா உன்னிடம் கொஞ்சம் தனியா பேசணும் ..... அதுக்காக தான் வெயிட் பண்ணேன் பேசலாமா.,.." என்று கூட்டிக்கொண்டு மரத்தடிக்கு சென்றான்.....







'சொல்லுங்க சொல்லுங்க... ரஞ்சன்.... எதுக்காக என்னை தேடி வந்தீங்க....."






"ஒன்னும் இல்லை.... இன்னும் நீ என்னை லவ் பண்றியா..... என்று கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்......"



'இன்னுமா நான் இப்பவுமே உங்களை தான் லவ் பண்ணிடடு தான் இருக்கேன்.... எப்பவும் லவ் பண்ணுவேன்,..."




"அப்படின்னா என்னை நம்பி ஒரு இடத்துக்கு வர முடியுமா....."



"இப்போவா...."






'இப்போ இல்ல..... நான் சொல்ற நேரம்.... சொல்ற டைம்.,.."






"சரி நான் வரேன் ரஞ்சன்...."







"எங்கேன்னு நீ கேட்கவே இல்லையே...."






"அதெல்லாம் எனக்கு தேவையே இல்லை..... நீங்க கூப்பிட்டால் நான் எங்க வேணாலும் வருவேன்...."







"சந்தோசம் சரி நீ வீட்டுக்கு கிளம்பு....."




"அவ்வளவுதானா...."







"அவ்வளவு தான்.... வேற என்ன..."







'இப்படித் தான் லவ் பண்ற பொண்ணு கிட்ட பேசுவாங்களா?....."







"வேற எப்படி பேசுவாங்க..... ஏய் ஒரு நிமிஷம் நான் தான் உன்னை லவ் பண்ணவே இல்லையே....."






"இப்படித்தான் என்னை ஏமாத்திட்டே இருக்கீங்க.... போங்க நான் உண்மையிலேயே போறேன்...." என்று கூறியவள் கோபத்துடன் நடந்து சென்று காரில் ஏறினாள்......





"சித்துவோ சிறு புன்னகையுடன் தன் நண்பனை தேடிச் சென்றான்......




"தீரா கிளம்புவோமா.... வீட்டுக்கு போகணும்...." என்று கூறியவன் வீட்டை நோக்கி சென்றான்.....






வீட்டிற்கு சென்ற சித்தரஞ்சனும் தீரனும் சகுந்தலாவை அழைத்துக் கொண்டு வள்ளி வீட்டிற்கு சென்றார்கள்.....








வள்ளி அதற்குள் வீட்டிற்கு சென்று சகுந்தலாவை பற்றியும் அவள் பையனை பற்றியும் தன் தாய் தந்தையிடம் எடுத்துக் கூறினாள்.....







சகுந்தலாவை பற்றி பேசியதும் வள்ளியின் தாய் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.....
"அம்மா ஏம்மா அழுவுறீங்க..... அதான் நீங்க நினைச்ச மாதிரி சகுத்தலாவை கண்டுபிடிச்சாச்சே..... அப்புறம் என்ன அவங்ககிட்ட ஒப்படைக்கிறதுக்காக வைத்திருந்த பொருளை அவங்ககிட்ட ஒப்படைச்சிடலாம்....." என்று கூறியவளை கண்டு அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார் வள்ளியின் தந்தை.....



 

உயிர் : 12
சகுந்தலாவை பார்த்த உடன் வள்ளியின் பெற்றோர் முதலில் அதிர்ந்தாலும் பிறகு தெளிந்து மனதில் கடவுளுக்கு நன்றி கூறினார்கள்.....





"என்னை மன்னித்து விடு சகு... அன்னைக்கு உனக்கு உதவி தேவைப்படும் போது என்னால் உதவ முடியலை... என் குடும்பம் என்னை சொந்தக்காரர்கள் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க...... அதனால் தான் என்னால் உனக்கு உதவி பண்ண முடியலை..... ஆனால் நான் திரும்ப வந்த போது உனக்காக ஒரு முக்கியமான பேப்பரை சமையல்காரம்மா என்கிட்ட கொடுத்துட்டு போனாங்க...... சமையல்காரம்மா உன்கிட்ட அதை கொடுக்கிறதுக்கு வந்த போது அவங்களையும் கொன்னுட்டாங்க......" என்ற வள்ளியின் அம்மா சிவகாமி வீட்டின் உள்ளே சென்று ஒரு பழைய பெட்டியில் இருந்து சில கத்தை பேப்பர்களை கொண்டு வந்தார்......







"இதெல்லாம் உனக்கு சொந்தமானது சகு..... உனக்காக உன் வீட்டு ஆளுங்க எழுதி வச்ச சொத்து..... இது உனக்கு மட்டும்தான் சேரனும்..... அப்படின்னு வக்கீல் மூலமா அண்ணாவும் அப்பாவும் எப்பவோ எழுதி வச்சு இருக்காங்க..... இதை வச்சு.... அதாவது இதுக்காக மட்டும் தான் வைதேகி அவள் அண்ணனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைத்தாள்.... இல்ல வைதேகி இல்லை..... அவ அக்கா வனஜா..... சகு அந்த வனஜாவும் கருப்பனும் சேர்ந்து உன் அண்ணி வைதேகியை கொன்னுட்டாங்க..... வைதேகி உன்னை கருப்பனுக்கு கட்டி வைக்கிறதுக்கு சம்மதிக்கலை..... அதனால் வைதேகியை கொன்னுட்டு அந்த இடத்தில் வனஜாவை கொண்டு வந்து வச்சு.... வனஜா மூலமா உன்னை கருப்பனுக்கு கட்டி வைக்க பார்த்தாங்க..... ஆனால் அது நடக்காமல் நீ இந்த ஊரை விட்டு ஓடி போனதுனால கோபத்தில் என்ன பண்றதுன்னு அவங்களுக்கு தெரியலை..... வனஜாவையே கடைசி வரை வைதேகியா நடிக்க வச்சுட்டான் அந்த கருப்பன்....."





"இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்..."





"நாங்க இந்த ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த கருப்பன் எங்களை கூப்பிட்டு அனுப்பினான்..... நாங்களும் அந்த பெரிய வீட்டுக்கு போனோம்.... அதாவது உன் வீட்டுக்கு போனோம்..... அங்க அந்த கருப்பனும் வனஜாவும் எங்களை மிரட்டுனாங்க..... நீ இருக்கும் இடத்தை கேட்டு..... நீ எங்க இருக்கன்னு தெரியாது.... ஆனா நீ வீட்டை விட்டு போன நேரத்தில் நாங்களும் இந்த ஊரை விட்டு போனதுனால எங்க கூட தான் நீ வந்து இருப்பேன்னு அவனுக்கு ஒரு சந்தேகம்.... அதனால் எங்களை கூப்பிட்டு மிரட்டி பார்த்தான்..... எங்களை எவ்வளவோ மிரட்டியும் நாங்க எதுவும் சொல்லலை.... ஏன்னா எனக்கும் எதுவுமே தெரியாது..... நீ எதுக்காக வீட்டை விட்டு போனியோ அதுவும் தெரியாது..... எதுக்காக அவங்க உன்னை தேடுறாங்கன்னும் தெரியாது.... ஆனா ரெண்டு நாள் கழிச்சு சமையல் காரம்மா என்னை தேடி வந்தாங்க..... இந்த சொத்து பத்திரங்களை என் கையில் கொடுத்துட்டு இதெல்லாம் சகுந்தலா அம்மாவுக்கு சேர வேண்டியது எப்படி இருந்தாலும் என்னை அந்த பாவிங்க கொன்னுடுவாங்க.... ஆனா அதுக்குள்ள இதை நான் சகுந்தலா அம்மா கிட்ட குடுக்க முடியுமான்னு தெரியலை... இப்போ இருக்குற நிலைமைல இந்த சொத்து பத்திரம் உங்ககிட்ட பத்திரமா இருக்க வேண்டியது அவசியம்.... என்னைக்காவது சகுந்தலா அம்மாகிட்ட இதை குடுத்துருங்க.... நான் வந்ததோ இதை உங்க கையில் கொடுத்ததோ யாருக்கும் தெரிய வேண்டாம் அப்படின்னு சொல்லி என் கையில் குடுத்துட்டு அவங்க வீட்டை விட்டு வெளியே போனாங்க..... ஆனால் மறுநாள் காலையில் ஏரி பக்கமா அவங்க பிணம் கிடந்ததா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க..... நானும் போய் பார்த்தேன்.... அது சமையல்கார அம்மா தான்..... இந்த பத்திரத்தை என்கிட்ட ஒப்படைச்ச கையோடு வெளியே போனவங்ளை யாரோ கொன்னுட்டாங்க..... யாரோ என்ன யாரோ அந்த வனஜாவும் கருப்பனும் தான்.... அவங்க பண்ண கொடுமையும் அட்டகாசமும் அதோடு முடியலை சகு.... வைதேகியோட பசங்களை அதாவது உன்னோட அண்ணன் பசங்களை படிக்க வைக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுத்த அனுப்பி வச்சா அந்த வனஜா.... இந்த நேரத்தில் தான் வனஜா கர்ப்பமா இருக்கிறதா ஒரு செய்தி காத்து வாக்குல வந்துச்சு..... ஆனா அவள் இல்லைனு சொல்லி மறுத்தாள்..... ஏன்னா உன் அண்ணன் உயிரோடு இல்லாத நேரத்தில் கர்ப்பமா இருந்தால் ஊருக்குள்ள அவளை தப்பா பேசுவாங்கன்னு மறுத்துகிட்டே வந்தாள்..... அதுக்கப்புறம் என்ன ஆச்சோ அதை அப்படியே விட்டுட்டாங்க.... அப்புறம் திரும்ப ஒரு அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு வைதேகி அதாவது வனஜா கர்ப்பமா இருக்கும் செய்தி ஊருக்குள்ள பரவுச்சு... அது உண்மையா பொய்யான்னு தெரியலை.... அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு ஒரு பொம்பள புள்ளையை யாரோ கொண்டு வந்து கொடுத்தாங்கன்னு சொல்லி வளர்க்க ஆரம்பிச்சாள்... அந்த புள்ளை தான் இப்ப இருக்குற பொண்ணு... அது அவள் பெத்த பொண்ணுனு நிறைய பேர் சொல்றாங்க..... சிலர் அந்த பொண்ணை யாரோ வைதேகி வீட்டில் கொண்டு வந்து போட்டுட்டு போனதாக சொல்றாங்க..... ஒன்னும் புரியலை.... மர்மமாகவே இருக்கு... ஆனால் ஒன்னு மட்டும் உண்மை சகு.... அங்கே வீட்டில் இருப்பது வைதேகி கிடையாது..... அவள் வைதேகியோட அக்கா வனஜா..... உன் அண்ணன் பசங்களை தப்பானவனாவே வளர்த்து வச்சிருக்கா..... அவனுங்களை திருத்தவும் முடியாது..... ஒண்ணுமே பண்ண முடியாமல் இந்த ஊர் மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க சகு..... இந்த சொத்து அவனுங்ககிட்ட இருக்கிற திமிரில் தான் அவனுங்க இந்த ஆட்டம் போட்டுட்டு இருக்கானுங்க.... இந்த சொத்தை எல்லாம் உனக்கும் உன் பையனுக்கும் சேர்ந்தது அப்படின்னு நீ நிரூபிச்சால் நிச்சயமா அவனுங்களோட ஆட்டத்தை உன் கைக்குள் கொண்டு வர முடியும்...." என்று கூறிய வள்ளியின் அம்மா "தயவு செய்து என்னை மன்னிச்சிடுடி...." என்றார்.....







"பரவாயில்ல விடு சிவகாமி.... அது எப்பவோ நடந்து முடிஞ்சு போனது.... இதோ இப்போ என் பையன் இருக்கான்..... என் வாழ்க்கையோட அர்த்தமா அவன் இருக்கும் வரைக்கும் நானும் இருப்பேன்.... ஆனா எனக்கு இது மட்டும் பத்தாது என் குடும்பத்தை மொத்தமா அழிச்சவங்களை நான் கொஞ்சம் கொஞ்சமா அழிக்கணும்.... அதுக்கு எனக்கு இந்த சொத்து இப்போதைக்கு அவசியம்....." என்று கூறிய சகுந்தலா வீட்டை விட்டு வெளியேற போக
"சகு இனிமேல் அடிக்கடி வீட்டுக்கு வாடி..." என்ற சிவகாமியிடம் "சரி வரேன்...." என்ற சகுந்தலா தன் மகனுடனும் தீரனுடனும் வள்ளி வீட்டில் இருந்து வெளியேறினார்....





சித்து மற்றும் தீரனுடன் வீட்டை விட்டு வெளியே வந்த சகுந்தலா நேராக வக்கீல் வீட்டிற்கு சென்றார்.....






ஒருகாலத்தில் அவர்களது குடும்ப வக்கீலாக இருந்தவரிடம் சில விஷயங்களை பேசி புரிய வைத்த சகுந்தலா தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை மீட்டுத் தருமாறு கேட்டார்.....
இரு நாட்கள் அவகாசம் கேட்ட வக்கீல் "இன்னைக்கு போய்ட்டு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வாங்க.... நான் உங்களுக்கு நல்ல பதிலா சொல்றேன்...." என்று அனுப்பி வைத்தார்.... அவர்கள் சென்று அடுத்த நிமிடம் வனஜாவின் வீட்டை நோக்கி சென்றார் அந்த வக்கீல்.....








"வனஜா மேடம் வனஜா மேடம்...."






"சொல்லுங்க வக்கீல் சார்...."







"மேடம் இவ்ளோ நாள் நீங்க தேடுன பத்திரம் இப்ப சகுந்தலா கிட்ட இருக்கு.... இப்போ தான் வந்து என்கிட்ட பத்திரத்தை காட்டிட்டு இந்த சொத்தை எல்லாம் என் பேர்ல மாத்தி கொடுங்கன்னு சொல்லி கேட்டுட்டு போறா.... அதோடு இந்த சொத்துக்கு அவள் யைன் பேரில் பவர் ஆஃப் அட்டர்னி எழுதி தர சொல்லி இருக்கா.... இப்ப என்ன பண்றது மேடம்.... அவள் அப்படி மட்டும் சொத்தை மகனுக்கு மாத்திட்டா நீங்க மட்டும் இல்லை.... எல்லாருமே இந்த வீட்டை விட்டு போய் ஆகணும்.... எனக்கும் பங்கு கிடைக்காது...." என்று கையை விரித்தார் வக்கீல்.....





சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்த வனஜா தன் இரு மகன்களை அழைத்தாள்......



ராஜேந்திரனையும் ராஜசேகரனையும் அழைத்த வனஜா "தம்பி நமக்கு தேவையான சொத்து பத்திரம் அந்த சகுந்தலாகிட்ட இருக்கு.... அதை எப்படியாவது எடுத்துட்டு வாங்க.... அவளை கொன்னுட்டாவது எடுத்துட்டு வாங்க..... இல்லைன்னா இந்த சொத்து எதுவும் நம்ம கைக்கு வந்து சேராது.... உங்க அப்பன் சொத்து பூராவையும் அவ பேருக்கு எழுதி வைத்து விட்டு பாத்திரத்தை அவ தோழிகிட்ட குடுத்து வச்சுட்டு போயிருக்கான்.... அவள் தோழி இப்போ தான் சகுந்தலா கையில் பத்திரத்தை கொண்டு போய் கொடுத்திருக்கா.... எப்படியாவது அந்த சொத்து பத்திரத்தை நம்மகிட்ட கொண்டு வரணும்...." என்று கூறினாள்.....






"அம்மா ஏற்கனவே அவன் மேலயும் அந்த பொம்பளை மேலயும் செம கோபத்தில் இருக்கோம்.... நம்ம வீட்டுக்கு வந்து நம்மளையே மிரட்டிட்டு போய் இருக்கான்..... என் தம்பியை வேற அடிச்சிட்டு போயிருக்கான்.... அவன் வீட்டுக்கு போயி அவன் அம்மாவை கொன்னுட்டு அந்த சொத்து பத்திரத்தோட வர்றேன்....." என்று ராஜேந்திரனும் ராஜசேகர்னும் கோபத்தோடு சகுந்தலாவின் வீட்டை நோக்கி சென்றார்கள்......





வீட்டிற்கு வந்த சகுந்தலா சொத்து பத்திரத்தை தன் மகனிடம் கொடுத்துவிட்டு பத்திரப்படுத்த சொல்லிவிட்டு சமையலை கவனிக்க ஆரம்பித்தார்......







தீரனும் சித்துவும் காலேஜ் சம்பந்தமான வேலையை முடிப்பதற்காக வெளியே சென்று இருக்க அந்த நேரம் பார்த்து ராஜேந்திரனும் ராஜசேகரனும் அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.......







அதிரடியாக வீட்டிற்குள் வந்தவர்களை பார்த்த உடனே தன் அண்ணன் சாயலை கண்டு கொண்டு தன் அண்ணன் மகன்களை கண்கள் குளிர பார்த்த சகுந்தலா "எப்படிப்பா இருக்கீங்க..." என்று கேட்டார்......






"நாங்க எப்படி இருந்தா உனக்கு என்ன.... எங்க சொத்து பத்திரம் உன்கிட்ட இருக்காமே..... மரியாதையா அதை எங்ககிட்ட கொடுத்துடு....." என்றான் ராஜசேகரன்.....






"தம்பி நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுப்பா...."





."நீ சொல்றதை நான் ஏண்டி கேட்கணும்....."





"வாடி போடின்னு பேசாதப்பா..... நான் உன்னோட அத்தை...."






"நீ என்னோட அத்தையா.... ஹா ஹா... போயும் போயும்.... கண்ட ஜாதியில் கல்யாணம் பண்ணாமல் ஒருத்தனோடு படுத்து புள்ளை பெத்த ****** எல்லாம் எனக்கு அத்தையாக முடியாது....." என்று கூறியவன் "முதல்ல சொத்து பத்திரத்தை எடுத்துட்டு வா...." என்று சொத்து பத்திரத்தில் குறியாக இருந்தான்.....








தன்னை பற்றி கேவலமாக பேசிய அண்ணன் மகனை எதுவும் சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்த சகுந்தலா "சொத்து பத்திரம் இவன் கைக்கு சென்றால் வனஜாவின் கைக்கு சென்று விடும்...." என்ற பயத்தில் சொத்து பத்திரத்தை பற்றி கூற மறுக்க ராஜேந்திரன் தன்னை அடித்த போது பார்த்துக் கொண்டிருந்த சகுந்தலாவை பழி வாங்க நல்ல நேரமாக கருதி சகுந்தலாவை அடிக்க ஆரம்பித்தான் .....







வயதானதால் ராஜேந்திரனின் ஒருசில அடியில் மயங்கி கீழே சரிந்தார் சகுந்தலா..... அதன் பிறகு அண்ணன் தம்பி இருவரும் வீடு முழுவதும் சொத்து பத்திரத்தை தேட ஆரம்பித்தார்கள்.......
எவ்வளவோ தேடி பார்த்தார்கள்..... வீட்டை சல்லடை போட்டு சலித்து பார்த்தும் சொத்து பத்திரத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..... அதனால் மயங்கி விழுந்த சகுந்தலாவை தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்......






தட்டு தடுமாறி எழுந்து அமர்ந்த சகுந்தலா அப்போதும் சொத்து பத்திரத்தை பற்றி கூற மறுத்தார்..... அதனால் ஆத்திரமடைந்த ராஜசேகரன் சகுந்தலாவை வேகமாக தள்ளிவிட அங்கு இருந்த நிலைப்படியில் இடித்து அவர் பின் மண்டையில் ரத்தம் வர ஆரம்பித்தது.....








இரத்தத்தை பார்த்த பிறகும் கூட அவனுக்கு கொஞ்சமும் இரக்கம் வராமல் மீண்டும் மீண்டும் சகுந்தலாவை அடிக்க ஆரம்பிக்க ரத்தம் அதிகமாக வெளியேறியதாலும் வயதான காரணத்தினாலும் சகுந்தலா கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்கு சென்று தன் உயிரை விட்டுக் கொண்டிருந்தார்..... அப்போதும் கூட சொத்து பத்திரத்தை பற்றி தன் அண்ணன் மகன்களிடம் கூறாமல் இருந்தவர் கடைசியாக அவர்களிடம் "தம்பி வைதேகியை நம்பாதிங்க.... அவள் உங்க அம்மாவே இல்லை.... உங்க அம்மாவை கொன்னுட்டு அந்த இடத்துக்கு வந்த வைதேகியோட அக்கா வனஜா.... அவளால் உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு.... தயவு செய்து உங்க உயிரை காப்பாத்திக்கோங்க...." என்று கூறிவாறு மயங்கி சரிந்தார்......








அண்ணன் தம்பி இருவரும் முட்டாளாக இருந்ததால் சகுந்தலாவின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் வீட்டை திருப்பி போட்டு தேட ஆரம்பித்தார்கள்..... அங்கே ஒருவரின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிவதைப் பற்றி கவலை இல்லாமல் சொத்து பத்திரத்தில் கவனமாக வீடு முழுவதும் தேடினார்கள்......







வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் கிடைக்காததால் கோபத்துடன் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் உடைத்து போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள்.......








மாலை தீரனும் சித்துவும் வீட்டிற்கு வந்த போது வீடே தலைகீழாக இருந்தது..... அனைத்து பொருட்களும் உடைக்கப்பட்டு கீழே கிடக்க சகுந்தலா தலையில் ரத்தம் வடிந்து உறைந்து போய் அரை உயிராக கிடந்தார் .....







தாயின் நிலையைப் பார்த்து கலங்கிப் போன சித்து அவசரமாக அவரை தூக்கி கொண்டு ஹாஸ்பிடல் செல்ல போக ஆனால் அவருக்கு நாடி துடிப்பு இல்லாமல் அமைதியாக இருக்கவும் இதயத்தின் அருகில் காதை வைத்து கேட்டான் சித்து..... அதுவும் துடிக்காமல் நான் செயல் இழந்து விட்டேன் என்று கூற கதறி அழ ஆரம்பித்தான் சித்து.......







சித்து அழுவதை பார்த்து தீரனுக்கும் அழுகை எட்டிப் பார்த்தது..... ஆனால் தற்போது அழுகை மட்டும் போதாது தைரியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் நண்பனை ஆறுதல்படுத்த ஆரம்பித்தான்.....









"சித்து இப்போ தான் நீ தைரியமா இருக்கணும்..... அம்மாவுக்கு செய்ய வேண்டிய காரியத்தை பார்க்கலாமா?...."




"எப்படிடா... அப்போ என் அம்மாவை கொலை பண்ணவங்களை சும்மா விட சொல்றியா....."








"நான் அவனுங்களை சும்மா விட சொல்லலை.... அவங்களை பழி வாங்குவதற்கான நேரம் இது இல்லைன்னு தான் சொல்றேன்.... அம்மாவோட ஆத்மா சாந்தி அடைய வேண்டாமா சித்து.... அவங்க பண்ண நினைச்சதை நீ பண்ணனும்..... எந்த சொத்துக்காக அம்மாவை இப்படி பண்ணினாங்களோ அந்த சொத்தை அவங்களுக்கு கிடைக்க விடாமல் பண்ணி அம்மாவை கொலை பண்ணினவங்களை கோர்ட் கூண்டில் ஏத்தி தண்டனை வாங்கி கொடுக்கணும்.... முதல்ல அம்மாவை அடக்கம் பண்ற வழியை பார்போம்...." என்றான் தீரன்....








நண்பனின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு அதற்கு உரிய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான் சித்து....







சகுந்தலாவின் ஈமச்சடங்குகளை சரியாக செய்து முடித்த சித்துவின் கண்களில் பழிவெறி தாண்டவம் ஆடியது.... இப்போது கொஞ்சம் தெளிவாக சிந்தித்த சித்து இதுவரை சொத்து பத்திரங்கள் தங்களிடம் இருப்பதை பற்றி யாருக்கும் தெரியாது...
வக்கீலிடம் மட்டும் தான் அம்மா உண்மையை சொன்னாங்க.... அப்போ வக்கீல் அந்த வனஜாவோட ஆள்... அதான் எங்ககிட்ட ரெண்டு நாள் டைம் கேட்ட வக்கீல் எங்களை முடிக்க தான் அந்த ரெண்டு நாள் கேட்டு இருக்கான் போல....என்று யோசித்தவன் தீரனிடம் சென்னை வரை சென்று வரலாம் என்று கூறி அவனையும் அழைத்து கொண்டு அவசரமாக சென்னைக்கு சென்றான் சித்தரஞ்சன்....
 
உயிர் : 13
சென்னைக்கு செல்லும் பேருந்தில் தன் நண்பனுடன் பயணித்த சித்து அதிகாலையில் சென்னை வந்தடைந்தான்....







அங்கு இருந்த ஒரு மேன்சனில் அரை எடுத்து தங்கியவன் தீரனை ப்ரஷப்பாக சொல்லி விட்டு தானும் பிரஷ் ஆகி வந்தவன் அவனுடன் வெளியே சென்றான்........



சித்து தீரனுடன் நேராக சென்ற இடம் ரெஜிஸ்டர் ஆபீஸ்.....
"என்னடா இது ரிஜிஸ்டர் ஆபீஸ் கூட்டிட்டு வந்திருக்க..... சொத்து எல்லாம் ஏற்கனவே ரிஜிஸ்டர் பண்ணி தானே இருக்கு...."








" நான் வந்தது சொத்தை ரிஜிஸ்டர் பண்றதுக்கு இல்ல தீரா.... என் மேரேஜை ரிஜிஸ்டர் பண்ண...." என்றவனை அதிர்ந்து போய் பார்த்த தீரன் "என்ன மாப்ள சொல்ற..... நானும் உன் கூட தான் இருக்கேன்.... எனக்கு தெரியாமல் எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்ட...."
"இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை.... இனிமேல் தான் பண்ணிக்க போறோம்...." என்றவன் பயந்து பயந்து அங்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீயை காட்டி "அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்...." என்று கூறினான்.......

இருவரும் அங்கிருந்த மரத்தடியில் நின்று கொண்டிருக்க "எதுக்காக மாப்ள அந்த வள்ளி புள்ளையையும் கூட்டிட்டு வந்து இருக்க.... நமக்கு இருக்கும் பிரச்சனை போதாதுன்னு இப்ப இந்த பொண்ணை வேற கூட்டிட்டு வந்து இருக்க..." என்று வள்ளியை பார்த்து கொண்டே சித்துவை திட்டினான் தீரன்.....



"டேய் மாப்ள நான் கூட்டிட்டு வந்தது ஸ்ரீயை மட்டும் தான்..... ஸ்ரீக்கு துணையா வருவேன்னு அடம் பிடித்து வந்தது வள்ளி தான்.... நான் எவ்வளவோ சொல்லியும் வள்ளி கேட்கவே இல்லை.... நீ வேணா ஒன்னு பண்ணு..... வள்ளியை நீ கல்யாணம் பண்ணிக்கோ.... பிரச்சனை சால்வ் ஆகிடும்......"




"அடப்பாவி இருக்கும் பிரச்சனையை தீர்க்க சொன்னால் புது பிரச்சனையை உருவாக்குற நீ எல்லாம் நல்லா வருவடா.... ஆளை விட்றா சாமி..... நான் இவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனால் வீட்டில் எனக்கு விஷத்தை வச்சே கொன்னுடுவாங்க... சரி அது இருக்கட்டும்..... இப்போ எதுக்காக திடீர்னு நீ அந்த பிள்ளையை கல்யாணம் பண்ற...."







"என் அம்மாவுக்கு நடந்த மாதிரி அவளுக்கும் ஏதாவது ஆகிடோம்னு பயமா இருக்கு மாப்ள.... அதுக்காக தான் நான் அவளை இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன்...." என்று குரலில் ஒரு வித தீவிரத்துடன் கூறிய சித்துவை கலக்கமாக பார்த்து வைத்தான் தீரன்......








தீரணையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற சித்து ஸ்ரீயை பதிவுத் திருமணம் செய்து கொண்டான்...... அவர்களுக்கு சாட்சியாக வள்ளியும் தீரனும் கையெழுத்து போட்டார்கள்.....












திருமணம் முடிந்த பிறகு அதற்கான சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த நால்வரும் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் பசியை உணர்ந்து ஹோட்டலுக்கு சென்றார்கள். . . .









அனைவருக்கும் சாப்பாடு ஆர்டர் செய்த சித்து தன்னவளுக்காக அவளுக்கு பிடித்த டிஷ்ஷை ஆர்டர் செய்தான்......
ஸ்ரீயோ இன்னும் கொஞ்சம் பயத்துடன் தன்னவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.....

முகத்தில் பயம் தெரிந்தாலும் பொழிவுக்கு பஞ்சம் இல்லை.... காதலித்த காதலனை கரம் பிடித்த சந்தோசம் முகத்தில் தாண்டவம் ஆடியது..... ஆனால் இந்த சந்தோஷம் நிலைக்க போவதில்லை என்பதை இருவருமே அறியாமல் போனார்கள்.....

ஸ்ரீயின் வீட்டில் ராஜசேகரனஉம் ராஜேந்திரனும் வைதேகியின் பேரில் இருந்த வனஜாவிடம் "அம்மா பாப்பா எங்கேன்னு நேத்து சாயந்தரத்தில் இருந்து கேட்டுகிட்டு இருக்கேன்.... நீங்க பதிலே சொல்லலை...." என்று மாறி மாறி கேட்டு கொண்டு இருந்தனர்.....
தோழி வீட்டிற்கு சென்று இருப்பதாக பொய் கூறி இவ்வளவு நேரம் சமாளித்து வைத்திருந்த வனஜா தன் மகளை எண்ணி பல்லை கடித்தார்.....
நேற்று மாலை கல்லூரி முடிந்த பிறகு நித்யஸ்ரீ வீட்டிற்கு வரவே இல்லை.... வனஜா பதற்றத்துடன் மகளை பற்றி விசாரிக்க சொல்லி தன் அண்ணன் கருப்பனிடம் கூற அடுத்த இரண்டு மணி நேரத்தில் நித்யா தான் காதலித்த வேறு ஜாதி பையனுடன் ஊரை விட்டு ஓடி போய் விட்டாள் என்ற செய்தி வனஜாவிடம் வந்து சேர்ந்தது.....
இதுவரை முட்டாள்களாக வளர்ந்து வந்த வைதேகியின் பையன்களிடம் உண்மையை சொன்னால் தன் ஒரே மகளை கொன்று விடுவார்கள் என்று நினைத்து நித்யா தோழி வீட்டிற்கு சென்று இருப்பதாக பொய் கூறி இருந்தாள்.... ஆனால் நித்யா இரவு வீட்டிற்கு வராமல் இருந்தது..... விடிந்து இவ்வளவு நேரமாகியும் நித்யா பற்றி அன்னை பேசாதது எல்லாம் சேர்ந்து அண்ணன் தம்பியை கவலை கொள்ள வைக்க திரும்ப திரும்ப நித்யாவை பற்றி அவளிடம் கேட்டு வைத்தார்கள்.....
வனஜா பதில் சொல்ல தடுமாற அந்த நேரம் அவர்கள் வீட்டிற்கு போன் அழைப்பு விடுக்க ரிசீவரை காதில் வைத்து பேச ஆரம்பித்த ராஜேந்திரனுக்கு கோபத்தில் கண்கள் சிவக்க ஆரம்பித்தது.....
"எப்போ நடந்துச்சு...."
"......... "
" எங்கே நடந்துச்சு...."
"--------"
"இப்போ அவங்க எங்கே...." என்ற மூன்று கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொண்டு ரிசீவரை தாங்கியில் பொருத்தியவன் வனஜா பக்கம் திரும்பி அவளை முறைத்தான்.....
"அந்த ஓடுகாலியை பத்தி தெருஞ்சும் எங்ககிட்ட உண்மையை சொல்லாமல் மறைக்க பாத்தீங்களா....." என்று வனஜாவை கேட்டவன் ராஜசேகரன் பக்கம் திரும்பி "அண்ணா அவ அந்த சகுந்தலா பையனோட ஓடி போய் மெட்ராஸ்ல கையெழுத்து போட்டு கல்யாணம் பண்ணிகிட்டாளாம்... இதை பத்தி இவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சு இருக்கு... ஆனால் நம்மகிட்ட சொல்லாமல் மறைச்சு ஏமாத்தி இருக்கு... மவ மேல அம்புட்டு பாசம்...." என்று கூறி பல்லை கடித்தான்....
"ஏம்மா இவன் சொல்றது உண்மையா.... உனக்கு இதை பத்தி முன்னாடியே தெரியுமா...."
"அது வந்து... அது வந்து.... " என்று வனஜா இழுக்க "இப்போ உண்மையை சொல்ல போறியா இல்லையா....." என்ற ராஜசேகரனின் கர்ஜனையான அதட்டலில் பயந்து போய் "ம்ம்... தெரியும்.... நேத்து சாயந்தரம் தான் அண்ணன் வந்து சொன்னார்...." என்றாள்.....
"பாத்தீயா அண்ணே.... நேத்து இந்த உண்மை தெரிஞ்சு இருந்தால் அந்த நாயை அடுச்சு போட்டுட்டு இந்த நாயை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம்... இப்போ அந்த நாய் கையால் தாலி வாங்கி கட்டிகிட்டு ஜோடியா ஹோட்டலில் சாப்பிட போனாங்களாம்.... நம்ம பரமசிவம் அவன் அக்காவை பார்க்க மெட்ராஸ் போய் இருக்கான்.... அவன் தான் நித்யா ஏதோ ஒரு பையனோட கையை புடுச்சு நடக்குறதை பாத்துட்டு அங்கே விசாரித்து இருக்கான்... அங்கே தான் அவங்க கையெழுத்து போட்டு கல்யாணம் பண்ணி இருக்காங்க... விஷயம் தெரிஞ்சு பதறி போய் அவங்க பின்னாடி போய் பாத்துட்டு ஓட்டலில் ஜோடி போட்டதையும் சிருச்சு சிருச்சு ரெண்டு பேரும் பேசிகிட்டதையும் பாத்துட்டு அந்த ஓட்டலில் இருந்து நம்ம வூட்டுக்கு போன் பண்ணி இருக்கான்..." என்று முடித்தான்.....
"சரி விடுடா.... நம்ம வூட்டுக்கும் பொம்பளை புள்ளைக்கும் ராசியே இல்லை.... ஆனால் ஒன்னு நம்ம அப்பனை மாதிரி நம்ம இருக்க கூடாது ராஜேந்திரா.... என்ன பண்ணியாவது அந்த நாய் பொணத்தை கொண்டு வந்து தோட்டத்தில் புதைக்கனும் கிளம்பு நம்மளும் பட்டணத்துக்கு போலாம்...." என்று கூறி விட்டு தன் ஆட்களை அழைக்க வெளியே சென்றான் ராஜசேகரன்.....



சித்து பயத்தில் இருந்த தன்னவளின் கையை ஆறுதலாக தட்டி கொடுத்து விட்டு ஸ்ரீயிடம் சாப்பிட சொல்லி கண்களால் கூறினான்.....
ஸ்ரீயும் தன்னவனின் ஆறுதலான செய்கையில் தனது பயத்தை மறந்து காதல் கணவனுடன் இருக்கும் இனிமையான தருணங்களை ரசிக்க ஆரம்பித்தாள்.......


தனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை வாங்கி கொடுத்த சித்துவை சைட் அடித்தபடி சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தவள் கைகளை கழுவி வர எழுந்தாள்.....

தீரனோ வள்ளியை முறைத்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு அவள் கை கழுவ எழுந்த உடன் அவள் பின்னேயே இவனும் நடந்து சென்றான்.....

கை கழுவும் இடத்தில் ஸ்ரீ முன்பே கையை கழுவி விட்டு வெளியேற அவளுக்கு பின்னே கை கழுவ சென்ற வள்ளியை இடையில் மறித்த தீரன் "உன்னை யார் இங்கே வரச் சொன்னா.... உனக்கு எல்லாம் அறிவே இல்லையா..... நீயே ஏன் உன் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்திக்கிற..." என்று கடிந்து கொண்டான்.....


தன்னைத் திட்டிய தீரனை நிமிர்ந்து பார்த்த வள்ளி "என் அண்ணன் கல்யாணத்துக்கு நான் வராமல் வேற யாரு வருவா...." என்று கேட்டு விட்டு கையை கழுவி கொண்டு விடுவிடுவென வெளியே சென்று விட்டாள்.......

தீரனோ வள்ளி தன்னிடம் பேசியதில் முதலில் சற்று நேரம் திகைத்து போய் நின்றவன் பிறகு சிறு புன்னகையுடன் கை கழுவி விட்டு வெளியே வந்தான்......

வள்ளியோ முதல் முறையாக தீரனிடம் தன்மையாக பேசி விட்டு வந்ததில் படபடப்புடன் நின்று இருக்க அவளுக்கு பின்னே வந்து நின்றான் தீரன்.......



கணவன் மனைவி இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தள்ளி நிற்க வேண்டி வள்ளி இங்கே நிற்க அவளுக்கு பின்னே அவளையும் அறியாமல் தன் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் படுமாறு நெருங்கி நின்ற தீரன் வள்ளி இவன் வந்ததை உணர்ந்து அதிர்ந்து அந்த இடத்தை விட்டு நகரும் வேளையில் கீழே இருந்த மேட் தடுக்கி விழப் போக அவளை இடுப்போடு சேர்த்து அனைத்து கொண்டான் தீரன்......


வள்ளி கீழே விழுந்து இருந்தால் கூட இவ்வளவு அதிர்ச்சி ஏற்பட்டிருக்காதோ என்னவோ ஆனால் தீரன் தாங்கி பிடித்ததில் மிகவும் அதிர்ந்து போனாள் பெண்ணவள்......

சித்துவும் ஸ்ரீயும் ஹோட்டல் பில்லை கட்டி விட்டு இவர்களுக்காக காத்திருக்க இவர்களோ இங்கு தனி உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்........


சற்று நேரத்தில் தங்கள் அருகில் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த தீரன் தங்களை சுற்றிலும் நிறைய ஆட்கள் நின்று எதையோ கோபமாக பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து விட்டு சற்று கூர்ந்து கவனித்து அவர்கள் தங்களை தான் திட்டுகிறார்கள் என்று புரிந்து கொண்டு வள்ளியுடன் அந்த இடத்தை விட்டு நகர போனான்....

ஆனால் அதற்குள் அங்கிருந்து ஒரு பெண்மணியோ 'ஏன்பா உங்களுக்காக தானே பீச்சு. லாட்ஜ் அப்படி இப்படின்னு நிறைய இடங்கள் இருக்கே..... அங்க எல்லாம் போக வேண்டியது தானே.... அதை விட்டுட்டு நாலு பேர் வந்து போயிட்டு இருக்குற ஹோட்டலில் நிற்க வைத்து இப்படித்தான் அசிங்கம் பண்ணுவீங்களா..." என்று கேட்க வள்ளியோ அவமானத்தில் கூடி குறுகி நின்றாள்......

அந்த பெண்மணியின் பேச்சில் தீரன் அதிர்ந்து போய் வள்ளியை பார்க்க அவ்வளவு தான் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது......

வள்ளியின் கண்ணீரை கண்டு துடித்து போன தீரன் "ஏம்மா உனக்கு எல்லாம் அறிவே இல்லையா... எங்களை பார்த்தால் லவ் பண்ற மாதிரியா தெரியுது..... அப்படியே லவ் பண்ணாலும் அது எங்க பிரச்சனை.... நீ ஏன் அதை பத்தி கவலைப்படுற..." என்று கோபமாக கேட்டவன் வள்ளியை சமாதானப்படுத்த முயல அவளோ ஓட்டமும் நடையுமாக சென்று தன் தோளியின் அருகில் நின்று கொண்டாள்.......


சித்துவிடம் கண்களால் கதை பேசிக் கொண்டிருந்த ஸ்ரீக்கோ தன் தோழியின் நிலை அறியாமல் போக வள்ளிக்கும் தனது அழுத கண்களை மறைக்க தேவை இல்லாமல் போனது.....

வள்ளியின் பின்னால் ஓடி வந்த தீரன் நண்பன் மற்றும் நண்பனின் மனைவியின் முன் வள்ளியை சமாதானமும் படுத்த முடியாமல் அமைதியாக நின்றான்..,......


இவர்கள் இருவரும் வந்தவுடன் சித்து ஸ்ரீயின் கையுடன் கை கோர்த்துக் கொண்டு சாலையில் நடக்க ஆரம்பித்தான்...... அதேபோல வள்ளி இறங்கி நடக்க அவள் பின்னால் நடந்து வந்த தீரன் அவள் இருக்கும் மனநிலையில் அவளை தனியாக நடக்க விட மனம் வராமல் அவளது கைகளை தன் கைகளில் திணைத்துக் கொண்டு அவளை பாதுகாப்பாக சாலை ஓரத்தில் நடத்திச் சென்றான்...... இல்லையென்றால் அவள் இருக்கும் மனநிலையில் எங்கே வேண்டுமென்றே சென்று பஸ்ஸிலோ காரிலோ விழுந்து விடுவாளோ என்ற பயத்தில் அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் தீரன்.......

வள்ளியோ அவன் தன் கைகளை பற்றியதை கூட உணர்ந்து கொள்ளாமல் ஏதோ மயக்கத்தில் நடப்பதை போல நடந்து கொண்டிருந்தாள்......


நால்வரும் ஆண்கள் தங்கியிருக்கும் லாட்ஜிற்கு சென்றனர்....... பெண்களை வெளியே காத்திருக்க வைத்து விட்டு ஆண்கள் உள்ளே சென்று தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு லாட்ஜை காலி செய்து விட்டு வெளியே வந்து பெண்களுடன் ஒரு நல்ல உயர்தரமான ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினார்கள்.......

ஆண்கள் இருவரும் ஒரு அறையிலும் பெண்கள் இருவரும் ஒரு அறையிலும் தங்கிக் கொள்ள முடிவு செய்து இரு அறைகளை எடுத்திருந்தார்கள்....... இவர்கள் அந்த பழைய லாட்ஜை விட்டு வெளியேறிய அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்ரீயின் அண்ணன்கள் தனது அடியாட்களுடன் வந்து அந்த லாட்ஜின் ஒவ்வொரு அறையாக தேடி பார்க்க எந்த அறையிலும் இவர்கள் இல்லாததால் கோபத்துடன் பல்லை கடித்துக் கொண்டு தனக்கு போன் செய்தவனுக்கு அழைத்தான்.......
"டேய்.... முட்டாள்.... அவங்க இங்கே இல்லை...... எங்க போய் இருக்காங்கனு உனக்கு தெரியுமா....."
"ஐயோ அண்ணா எனக்கு தெரியாது... நான் வேற வேலை இருக்குன்னு ஆபீஸ் வேலையா வெளிய வந்துட்டேன்.... ஆனால் அவங்க ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்ச உடனே சாப்பிட போனாங்க... அது மட்டும் தெரியும்...." என்று அவர்கள் சாப்பிட சென்ற ஹோட்டலின் பெயரை கூறியவன் "நான் அவங்க பின்னாடி தான் போய்கிட்டு இருந்தேன்.... அவங்க லாட்ஜுக்குள் போனதை பாத்துட்டு அதுக்கு அப்புறம் தான் நான் வேலைக்கே வந்தேன்....." என்று கூறியவன் ரிஸீவரை தாங்கியில் பொருத்தினான்......

லாட்ஜில் இருந்து போனில் பேசியதால் அதற்கான பணத்தை தூக்கி எறிந்து விட்டு அவர்கள் எங்கே சென்றார்கள் என்று விசாரித்தான்........

வெட்டருவாள் வேல் கம்பு..... சிலம்ப குச்சி அடியாட்கள் என்று வந்து நின்ற அண்ணன் தம்பி இருவரையும் பார்த்து பயந்த லாட்ஜ் மேனேஜர் "சார் அவங்க ரெண்டு பேர் மட்டும் தான் உள்ளே வந்தாங்க..... ரூமை காலி பண்றேன்னு சொன்னாங்க..... காலி பண்ணிட்டு அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்கிட்டு கிளம்பிட்டாங்க சார்...... அவ்வளவு தான் சார் எனக்கு தெரியும்...." என்று காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி அவர்களிடம் இருந்து தப்பித்தான் அந்த மேனேஜர்.
 
Last edited:
உயிர் 14

சித்து தன்னவளுடன் வள்ளி தீரனையும் அழைத்து கொண்டு கடற்கரைக்கு வந்து இருந்தான்....
கடற்கரை முழுவதும் ஆங்காங்கே மக்கள் அமர்ந்து பேசி கொண்டு இருக்க அவர்களை சுற்றி சுண்டல் மாங்காய் டீ காபி என வியாபாரமும் நடந்து கொண்டிருந்தது....
"ஸ்ரீ சுண்டல் சாப்பிடுறியா...."
"வாங்குங்க ரஞ்சன்... " என்றவள் மணலில் வெயில் இல்லாத இடத்தில் அமர்ந்து கொண்டாள்....
வள்ளியும் தீரனும் கணவன் மனைவிக்கு தனிமை கொடுக்கும் பொருட்டு சற்று தள்ளி நடந்து வர ஸ்ரீயோ தன்னவனுடன் சந்தோஷமாக ஊர் சுற்றி வருவதில் மற்ற எதுவும் அவள் கவனத்தில் பதியவே இல்லை....
நால்வரும் மிகவும் சந்தோஷமாக அன்றைய பொழுதில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் மெட்ராஸை சுற்றி வந்தார்கள்..... அவர்களை கொல்ல வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கும் ராஜேந்திரன் மற்றும் ராஜசேகரன் அறியாமல் போனார்கள்......

இரவு வரை கடற்கரை சுற்றி கொண்டிருந்த இரு ஜோடிகளும் நேரமானதால் தங்களது ஹோட்டல் அறைக்கு செல்ல பேருந்தில் ஏறினார்கள்......
பேருந்து போகும் வழியில் ஒரு சிக்னலில் நிற்க அதற்கு எதிர்புற சிக்னலில் காரில் இருந்த ராஜேந்திரன் எதேச்சையாக சுற்றிலும் பார்வையில் துழாவ பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த தனது தங்கையை பார்த்து விட்டான்.....
"அண்ணன்... அந்த ஓடுகாலி அந்த பஸ்ல இருக்காண்ணா...." என்று காரில் இருந்து இறங்கி ஓட பார்த்தான்.....
அவனை தடுத்த ராஜசேகரன் தனது கார்ட்டியிடம் பேருந்தை பின்தொடர்ந்து போக சொன்னான்.....
பேருந்தில் இருந்து இறங்கி ஹோட்டல் உள்ளே செல்லும் வரை காரில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் ராஜசேகரன் தனது தம்பி மற்றும் ஜாதிக்காரன் என்ற பெயரில் இருந்த அடியாட்களுடன்......

ஹோட்டல் அறையில் ஸ்ரீ சித்துவை விட்டு தனியாக இருக்க பிடிக்காமல் அவனுடன் சேர்ந்து தங்க அடம் பிடித்தாள்......
என்ன செய்வது என்று புரியாமல் விழித்த சித்து ஹோட்டலில் இன்னொரு அறை கிடைக்குமா என்று ரிசப்ஷனில் விசாரித்தான் .... ஆனால் அங்கு அறை எதுவும் காலியாக இல்லாததால் என்ன செய்வது என்று புரியாமல் நால்வரும் விழித்துக் கொண்டிருக்க வள்ளி தன் தோழியின் மனநிலையை மனதில் கொண்டு தீரனுடன் ஒரே அறையில் தான் தங்கிக் கொள்வதாக சொன்னாள்......
ஆனால் ஒரு திருமணம் ஆகாத பெண்ணை திருமணம் ஆகாத ஆணின் அறையில் தங்க வைக்க சித்துவால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.......
"இல்ல வள்ளி.... இதெல்லாம் சரி வராது..... நீ எப்படி தீரன் கூட தங்க முடியும்..... பரவாயில்ல வள்ளி..... நீ ஸ்ரீ கூட தங்கிக்கோ....., ஸ்ரீ இங்கே பாரு..... என்ன யாரு...... இங்கே பயப்படறதுக்கு எதுவும் இல்ல.... நம்ம இங்கே இருப்பது யாருக்குமே தெரியாது.... புரியுதா...." என்று ஸ்ரீக்கு ஆறுதல் சொல்ல அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சித்துவின் கையை மட்டும் பற்றி கொண்டு பயந்த விழிகளுடன் அமர்ந்திருந்தாள்.......

ஸ்ரீயின் பயந்த இந்த மனநிலையை கண்ட சித்துவுக்கு அவளை தனியாக விடவும் மனம் வராமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்து போனான் சிந்து......


இறுதியாக தீரன் இதற்கு ஒரு முடிவை சொன்னான்......
"மாப்ள என்னை நம்பற தானே.... என் மேல் நம்பிக்கை இருக்கு தானே...."
"உன்னை நம்பாமல் வேற யாரடா..... நான் நம்ப போறேன்....."
"அப்போ வள்ளி என் ரூமில் விட்டுட்டு நீ கவலைப்படாமல் உன் ரூமுக்கு போ..... நான் பால்கனியில் படுத்துக்கிறேன்..... அந்த பொண்ணு உள்ளே தூங்கட்டும்...... என்னால் அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் வராது....." என்று கூறினான்......
சித்துவோ நண்பனை கோபமாக பார்த்து "போடா எருமை உன் மேல நம்பிக்கை இல்லாமல் நான் ஒன்னும் வள்ளி அந்த ரூமில் தங்க மறுப்பு சொல்லலை.... உன்னோடு தங்க வைக்கவும் யோசிக்கலை...... என்னைக்காவது ஒருநாள் உன் கூட தங்கி இருந்ததை வள்ளியை கல்யாணம் பண்ணிக்க போற பையனுக்கு தெரிஞ்சால் என்ன ஆகுமோன்னா தான் நான் யோசிச்சேன்..... வள்ளி வாழ்க்கை வீணா போய்டுமோன்னு தான் நான் கவலைப்பட்டேன்..... மத்தபடி உன் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு....." என்று தீரனை அணைத்துக் கொண்டான் சித்து.....
நண்பன் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து சந்தோஷப்பட்ட தீரன் "அதெல்லாம் வள்ளியை கல்யாணம் பண்ணிக்க போறவன் அப்படி எல்லாம் சந்தேகப்பட மாட்டான்...." என்றான்.....
"அது எப்படி நீ சொல்ற... வள்ளிக்கு மாப்ள பாத்தாச்சா..... அவரை உனக்கு தெரியுமா...."
"பெறுமை நண்பா பொறுமை.... வள்ளியை கல்யாணம் பண்ணிக்க போறதே நான் தான்....."
"என்னடா சொல்ற....."
"ஆமா மாப்ள..... எனக்கு வள்ளியை ரொம்ப புடிச்சிருக்கு... ஐ திங்க் ஐ லவ் ஹேர்...." என்றதும் வள்ளி நிமிர்ந்து பார்க்க தீரனும் அப்போது அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்....... நிமிர்ந்து பார்த்த வள்ளியின் பார்வையும் அவளை பார்த்துக் கொண்டிருந்த தீரனின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டு கவிபாட ஆரம்பிக்க சித்துவும் அப்போது தான் இருவரின் காதல் பார்வைகளை கண்டு கொண்டான்......
" எங்களுக்கு தனிமை கொடுப்பதா சொல்லி எங்கள் விட்டுட்டு நீங்க தனியா காதலை வளர்த்து இருக்கீங்க....." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் "ரொம்ப சந்தோசம் தீரா....." என்று கூறினான். .


வள்ளியோ தீரனையே முறைத்து பார்த்து கொண்டிருந்தாள்.....
"இவளுக்கு முறைக்கிறதை தவிர வேற எதுவும் தெரியாது....."என்று மனதுக்குள் சலித்துக் கொண்ட தீரன் வள்ளியை அதே காதல் பார்வை பார்த்து கொண்டு இருந்தான்...... அதன் பிறகு வள்ளியையும் தீரனையும் அந்த ரூமில் விட்டு விட்டு தங்களது அறைக்கு சென்றார்கள் ஸ்ரீயும் சித்தும்......

ராஜேந்திரன் ராஜசேகரனும் விடியும் தருவாயில் ஸ்ரீயும் சித்துவும் தங்கி இருந்த அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்க முடிவெடுத்து ரிசப்ஷனில் விசாரித்தார்கள்.......

ஆனால் ஒருவாரமாக மெட்ராஸில் முக்கியமான அரசியல் கட்சி மீட்டிங் நடந்து கொண்டிருப்பதால் அறை முழுவதும் புக்காகி இருந்தது.....
எனவே தனது சகாக்களுடன் அந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.... அது ஒரு மாதிரியான ஹோட்டல் என்பதால் அங்கு நடக்கும் இல்லீகல் விஷயத்தை தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் கூறிவிடுவதாக சொல்லி மிரட்டி நான்கு ஐந்து அறையில் தங்கினார்கள் மனசாட்சியை அடகு வைத்த காட்டான்கள்....

தீரன் தன்னை பிடித்து இருப்பதாக சொன்னதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தாள் வள்ளி.....

இதுவரை தன்னிடம் சரியாக கூட பேசாத ஒருவன் தன்னை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாத ஒருவன் எப்படி திடீரென வந்து தன்னைப் பிடித்திருப்பதாக கூறுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்....
வள்ளியின் முகத்தில் வரும் உணர்வுகளை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்த தீரன் அவள் மனதிற்குள் தன்னை பற்றி குழப்பிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு அவளுக்கு எதிரே இருந்த கதிரையில் வந்து அமர்ந்தான்.......
"இப்போ எதுக்காக கண்டதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிகிட்டு இருக்க....."
"என் குழப்பத்துக்கு காரணம் நீங்க தான்...."
"அப்படி நான் என்ன பண்ணேன் வள்ளி...."
"எதுக்காக என்னை புடிச்சு இருக்குன்னு சொன்னீங்க..."
"எதுக்காகன்னா உன்னை எனக்கு உண்மையில் புடிச்சு இருந்துச்சு.... அதனால் தான் சொன்னேன்....."
"எதனால் என்னை உங்களுக்கு புடிச்சி இருக்கு....."
"இது என்ன கேள்வி ஒருத்தரை பிடிக்க ரீசன் தேவையா என்ன..... ஸ்ரீக்கு கூட தான் சித்துவை பிடிச்சிருக்கு... அதுக்கு என்ன காரணம்னு கேட்க முடியுமா என்ன,.... அது போல தான் உன்னை எனக்கு புடிச்சிருக்கு.... காரணம் என்னன்னு கேட்டால் தெரியலை....."
"ஆனா எனக்கு உங்களை பிடிச்சு இருக்கான்னு தெரியலையே....." என்று வள்ளி சொன்னதும் தீரன் மெல்லி புன்னகை சிந்தினான்.......
"தீரன் எதுக்காக சிரிக்கிறீங்க....."
"வள்ளி உனக்கு ஒன்னு தெரியுமா...."
"என்ன...."
"ஒருத்தவங்களை பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு கேட்கும் கேள்விக்கு புடிச்சிருக்கு பிடிக்கலைன்னு இரண்டு பதில் இல்லாமல் தெரியலைன்னு பதில் வந்தாலே......"
"வந்தாலே....."
"அங்கே ஏதோ ஒன்னு இருக்குன்னு அர்த்தம்......"
"ஏதோ ஒன்னுனா....."
'ஆமா பிடிச்சிருக்கு இல்லை பிடிக்கலைன்றதுக்கு நடுவில் ஏதோ ஒன்னு..... அதாவது....."
"போதும் நீங்க என்னை ரொம்ப குழப்புறீங்க....." என்றவள் தீரனின் முகத்தை பார்க்க அவன் முகத்தில் இருந்த புன்னகை வள்ளியின் முகத்திலும் பிரதிபலித்தது......


இருவரும் ஒருவரை ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள "சரி நீ போய் தூங்கு நான் வெளியே போய் படுத்து கொள்கிறேன்...." என்று தீரன் தலையணை மற்றும் பெட்சீட்டுடன் எழுந்தான்......
"வேண்டாம் பால்கனியில் பனி பொழியுது...... அங்கே தூங்க வேண்டாம்.... நீங்க அந்த சோபாவில் படுத்துக்கோங்க...... நான் கட்டிலில் படுத்துக்கிறேன்...." என்று கூறியவள் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டாள்.......
சோபாவில் படுத்து கொண்டான் தீரன்.... அடுத்த கொஞ்ச நேரத்தில் இருவரும் அன்று முழுவதும் அலைந்த அலைச்சலில் களைப்பாக இருந்ததால் உறங்கிப் போனார்கள்......


நடு இரவுக்கு மேல் ராஜேந்திரன் ராஜசேகரனும் தனது அடியாட்களுடன் சித்து தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்தார்கள்....

ரிசப்ஷனில் சித்து மற்றும் ஸ்ரீ தங்கி இருந்த ரூம் நம்பரை கேட்டு அந்த ரூமின் சாவியை வாங்கிக் கொண்டார்கள்...... சாவியை தர மறுத்தவனின் கழுத்தில் கத்தியை வைக்க அடுத்த நிமிடம் சாவியை பெற்றுக் கொண்ட அண்ணன் தம்பி இருவரும் அந்த ரிஷப்ஷனிஸ்ட் சொன்ன அறைக்குச் சென்றார்கள்......


கதவை திறந்து உள்ளே சென்ற அண்ணனும் தம்பியும் கண்டது என்னவோ கட்டிலில் படுத்திருந்த வள்ளியையும் சோபாவில் படுத்திருந்த தீரனையும் தான்......
வள்ளியை பார்த்தவுடன் அடியாட்களில் ஒருவன் பதறிப் போய் "ஐயா இது நம்ம ஜாதி பொண்ணு...... இவளோட அக்கா கூட லவ் பண்ணி வேற ஜாதி பையனை திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிகிட்டதால் ரெண்டு பேரையும் நம்மாளுங்க தான் போட்டாங்க... இதனால் அந்த பையன் வீட்டில் பிரச்சினை வர அவங்களையும் நம்ம தான் கொன்னோம்..... இப்ப இவளும் லவ் பண்றா போல...." என்று கூறினான்..... உடனே ராஜேந்திரன் "அண்ணா இவள் தான் நம்ம பாப்பாவோட கூட்டாளி..... இவ இங்கே இருக்கான்னா பக்கத்தில் தான் நம்ம தங்கச்சியும் இருக்கணும்......"
"இன்னும் என்னடா நம்ம தங்கச்சி..... என்ன நம்ம தங்கச்சின்னு சொல்ற... அந்த ஓடுகாலினு சொல்லு..... அவள் பக்கத்து ரூமில் தான் இருக்கணும்..... அவளை தேடி வந்தால் இவளும் வேற ஜாதிக்காரனோடு சுத்துறா.... இப்படியே விட்டால் நம்ம ஜாதி பெருமை எல்லாம் ஒன்னும் இல்லாமல் போயிடும்.... இவளையும் அவளையும் ஒன்னா சேர்த்து கொன்னுடுவோம்......" என்ற ராஜசேகரன் சற்று யோசித்து விட்டு "ரெண்டு பேரோட கைகாலை வாயை கட்டி தூக்குங்கடா...." என்று சொன்னான்......

வள்ளி மற்றும் தீரன் இருவரையும் வாயை பொத்தி கை கால்களை கட்டி போட்ட அடியாட்கள் தீரன் திமிற திமிற அவனை தூக்கி கொண்டு ரிசப்ஷனில் இருந்த பணியாளை அழைத்து வரச் சொன்னான்..... வரும்போது சித்து தங்கி இருக்கும் அறையின் சாவியையும் எடுத்து வரச் சொன்னான்....... இவர்கள் அறையை தேடி சென்றவுடன் தான் ரிஷப்ஷனிஸ்ட் சித்து மற்றும் ஸ்ரீ தங்கியிருக்கும் அறையின் சாவியை கொடுக்காமல் வேறொரு அறையின் சாவியை கொடுத்தது தெரிந்து கொண்டு அந்த அறையின் சாவியை எடுத்துக் கொண்டு ரிஷப்ஷனிஸ்ட் எதிரில் வந்து கொண்டிருந்தான்......

அடியாட்களை பார்த்தவுடன் சாவியை கையில் கொடுத்து "தப்பான சாவியை கொடுத்துட்டேன்....." என்று சொன்னான்.....
"நீ தப்பான சாவியை எல்லாம் கொடுக்கலை.... அதுவும் சரியான சாவி தான்.... இதுவும் சரியான சாவி தான்....." என்று கூறிய அடியாள் சித்து ரூமின் சாவியுடன் ராஜசேகரனிடம் சென்றான்......
சாவியால் அறையை மெல்ல திறந்து உள்ளே சென்றவர்கள் கண்டது என்னவோ சித்து மற்றும் ஸ்ரீ இருவரும் கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்ததை தான்........
"ஓடுகாலி நாயே.... கண்டவனை கட்டி புடிச்சுகிட்டு படுத்து கிடக்கிறா....." என்று திட்டியவன் அடியாட்களிடம் கண்களை காட்ட இவர்களையும் கையை காலை கட்டி வாயை கட்டி தூக்கி கொண்டு காருக்கு சென்றார்கள்.......

நால்வரையும் தூக்கிக் காரில் கொண்டு போய் ஏற்றியவர்கள் அங்கிருந்து புயல் வேகத்தில் காரை செலுத்த ஆரம்பித்தார்கள்.....

சித்துவும் தீரனும் தங்களை கட்டி இருந்த கட்டுக்களை பிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்,,.. பெண்களோ பயத்தில் உறைந்து போய் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்கள்....
வள்ளியோ இவர்கள் சொந்த தங்கையையே காதலித்த ஒரே காரணத்துக்காக தன் அக்காவை போல இவளையும் பலி கொடுக்கப் போகிறார்களோ என்று நினைத்து பயந்தாள்....... ஆனால் அவளையும் சேர்த்து பலி கொடுக்கப் போவது தெரிந்தால் என்ன செய்வாளோ.... பாவம் நம்ம வள்ளி....,
கார் புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்க ராஜசேகரன் பின்னால் திரும்பி நொடிக்கு ஒருமுறை ஸ்ரீயை பார்த்து கொண்டு இருந்தான்.....
 
Last edited:
UYIR : 15
காரோட்டியிடம் காரை வேகமாக செலுத்த சொல்லி நொடிக்கு ஒருமுறை சொல்லி கொண்டு இருந்தான் ராஜேந்திரன்......
தன்னை அடித்தவனை பழி வாங்க அவ்வளவு வேகம் வெறி அவனுக்கு.....
சிட்டியை விட்டு தள்ளி வந்த பிறகு ஒரு காட்டு பகுதி போல அடர்ந்த மரங்கள் இருந்த இடத்திற்கு நால்வரையும் தூக்கிச் சென்றார்கள்......

தீரனும் சித்துவும் வரும் வழியில் எப்படியோ முயன்று தங்களது கட்டுக்களை விடுவித்து இருந்தார்கள்.......

ஒருவரின் கட்டை மற்றவர் முயன்று விடுவித்து விட்டு கைகளையும் கால்களையும் அசைத்து அசைத்து ஒரு வழியாக கட்டுகளில் இருந்து விடுபட்டாராகள்.......
இருட்டாக இருந்ததால் இவர்கள் கட்டுக்களை அவிழ்த்து கொண்டது மற்றவர்களுக்கு தெரியாமல் போனது......
ராஜசேகரன் அடியாட்களிடம் ஆண்களை தூக்கி வர சொன்னான். ... அடியாட்கள் காரில் இருந்த சித்துவையும் தீரனையும் தூக்க போக தங்களை தூக்க வந்த அடியாட்களை அடிக்க ஆரம்பித்தார்கள் சித்தும் தீரனும்.....

அடியாட்களும் இருவரையும் தாக்க ஆரம்பிக்க அங்கே அந்த நடு இரவில் நிலவொளியில் காட்டின் நடுவே சண்டை நடக்க அடியாட்களை ஒவ்வொருவராக வீழ்த்திக் கொண்டிருந்த இருவரையும் அண்ணன் தம்பி இருவரும் வஞ்சம் வைத்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்......

கிட்டத்தட்ட அனைத்து அடியாட்களையும் அடித்து விழித்த போகும் சமயத்தில் சித்துவை தலையில் கட்டையால் யாரோ அடித்தார்கள்......
அடிபட்ட சித்துவின் தலையில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது..... சித்து மெதுவாக திரும்பிப் பார்த்து யார் அடித்தது என்று முகத்தை பார்க்க அங்கே நின்று கொண்டிருந்தான் அவனது உயிர் தோழன் கிருஷ்ணா......
"நீயாடா கிருஷ்ணா..... ஏண்டா இப்படி பண்ண...." என்று கேட்டான் சித்து.......
"ஏண்டா நான் கட்டிக்க போற பொண்ணை நீ கட்டிக்குவ. ,.... அதை பாத்துட்டு சும்மா இருக்க நான் என்ன *******" என்று கெட்ட வார்த்தை சொல்லி சித்துவை திட்டியவன் "சாவுடா நாயே...." என்று முடித்தான்.......
"ஸ்ரீ உன்னை லவ் பண்ணவே இல்லடா கிருஷ்ணா..... அவ மனதில் நான் தான் இருக்கேன்....."
"அப்படின்னு நீ வேணும்னா சொல்லிக்கலாம்.... ஆனால் ஸ்ரீ மனசுல நான் தான் இருக்கேன்.... சொத்துக்காக அவ மனசை கெடுத்து குட்டி சுவராக்கி நீ அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறியா..... அது மட்டும் நடக்காது..... நித்யா எனக்கு தான்.... எனக்கு மட்டும்தான்..... நான்தான் அவளை கல்யாணம் பண்ணிப்பேன்..... அவள் என்னை தேடி தேடி வீட்டுக்கு வருவா தெரியுமா.... அடிக்கடி என் ஸ்கூல் காலேஜ் பத்தியே பேசுவா.... சின்ன பிள்ளைடா அவ.... அவள் மனசை கெடுத்த நீயெல்லாம் உயிரோடவே இருக்க கூடாது..... போய் தொலை...." என்றவன் அதன் பிறகு கை கால்கள் என்று அனைத்து இடங்களிலும் அடிக்க ஆரம்பித்தான்...... அவனை தடுக்க முயன்ற தீரனை ராஜசேகரன் காலில் கட்டையால் அடித்து நகர விடாமல் செய்ய அண்ணனும் தம்பியும் இருவரையும் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.....

தீரனும் சித்துவும் எவ்வளவோ முயன்றும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை..... உயிரை மட்டும் விட்டு வைத்து விட்டு அனைத்து இடங்களிலும் ரத்த கரைபடிந்து காயங்களுடன் இருந்த இருவரையும் கிருஷ்ணா ஏற்கனவே வெட்டி வைத்திருந்த குழியில் தள்ளினான் ராஜேந்திரன்.......

உயிருடன் குழிக்குள் விழுந்த நண்பர்கள் இருவரும் தங்களது உயிர் நண்பனான கிருஷ்ணாவை கண்களில் வலியோடு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்...... அவனோ இவர்களை வன்மமாக பார்த்து விட்டு "ஏண்டா என் பொண்டாட்டியை இவன் லவ் பண்ணுவான்.... அவனுக்கு நீ உதவி பண்ணுவியா.... நீயும் சாவுடா நாயே...." என்று தீரனை திட்டியவன் மண்ணை அள்ளி அவன் முகத்தில் போட போனான்.....


பெண்கள் இருவரும் தங்களது இணைகளுக்கு நடக்கும் கொடூரத்தை கண்களில் கண்ணீரோடு வாய் விட்டு கதறி அழ கூட இயலாமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.......


பெண்களின் வாயைத் திறக்க முடியாமல் வாயையும் கட்டி இருப்பதால் இருவரும் மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்......

கிருஷ்ணா மண்ணை தள்ளி அவர்கள் இருவரையும் மூட போக "ஒரு நிமிஷம் இரு கிருஷ்ணா....." என்று அவனை தடுத்த ராஜேந்திரன் வள்ளியை இழுத்து வந்து "தீரன் இருந்த குழியில் தள்ளி இப்ப போடு மண்ணை....." என்றான்......

"அதுவும் சரி தான் மச்சான்.... இந்த நாய் உயிரோடு இருந்து உண்மையை சொல்லி தொலைச்சுட்டா நமக்கு தான் பிரச்சனை...." என்ற கிருஷ்ணா வள்ளியையும் உயிரோடு குழிக்குள் தள்ளி தீரனையும் வள்ளியையும் ஒரே குழிக்குள் போட்டு மண்ணை தள்ளி மூடினான்......

தன் தோழியின் அவலத்தை கண் எதிரில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ கண்களில் வலியுடன் கிருஷ்ணாவை ஏறிட்டுப் பார்த்தாள்.....
மனதுக்குள் "ஏன் மாமா இப்படி பண்ணின....." என்றாள்.....


தீரன் குழியை மூடி விட்டு அடுத்ததாக சித்து இருக்கும் குழியை மூட போனான் கிருஷ்ணா..... அதற்குள் யாரோ அந்த இடத்திற்கு வரும் காலடி சத்தம் கேட்டு யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக ராஜேந்திரன் ஒரு பக்கம் ராஜசேகரன் ஒரு பக்கம் செல்ல கிருஷ்ணாவும் மற்றொரு பக்கம் தேடி சென்றான்......

அவர்கள் மூவரும் வெளியே சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட ஸ்ரீ காரில் இருந்து இறங்க முடியாமல் கட்டுப்போட்டு வைத்திருந்ததால் கதவை எப்படியோ திறந்து குதித்தவள் சித்து இருக்கும் குழியை நோக்கி உருண்டாள்......

சித்து உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அறிகுறியாக மூச்சு மட்டும் இருப்பதற்கு அறிகுறியாக இதயம் இருக்கும் இடத்தில் மேலும் கீழுமாக இயங்கிக் கொண்டிருக்க அவன் இருந்த குளிக்குள் உருண்டு விழுந்தாள் ஸ்ரீ.......


சற்று நேரத்தில் சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு மீண்டும் வந்த மூவரும் இருட்டில் ஸ்ரீ குறிக்கோள் விழுந்ததை அறியாமல் இருவரையும் அதே குழியில் உயிருடன் புதைத்து விட்டு ஆங்காங்கே மயங்கி கிடந்த அடியாட்களை எழுப்பி காரில் போட்டுக் கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள்......

இதுவரை சொல்லிக் கொண்டிருந்த பிரியரஞ்சன் மூச்சு முட்டுவதாக கூறி "ஐயோ மூச்சடைக்குது.... மூச்சு விட முடியலை... காப்பாத்துங்க.... காப்பாத்துங்க... என் ஸ்ரீ பாவம் அவளை காப்பாத்துங்க...... நீ போய்டு ஸ்ரீ... நீ போய்டு..." என்று முகத்துக்கு மேலே கைகளால் எதையோ தேடிக் கொண்டிருந்தான்..... அதுவரை அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணு கண்களில் கண்ணீர் வழிந்தது என்றால் டாக்டர் பார்வதியோ "ரிலாக்ஸ் ரிலாக்ஸ் மிஸ்டர் பிரியரஞ்சன் ரிலாக்ஸ்..... யூ ஆர் சேப்.... உங்களால் மூச்சு விட முடியும்.... ப்ரீத்... ப்ரீத்....." என்று அவனை அமைதி படுத்தினார்.....


ரஞ்சன் மெல்ல மெல்ல மூச்சு எடுத்து நிதானத்திற்கு வந்ததும் டாக்டர் பார்வதி "மிஸ்டர் பிரியரஞ்சன்... கேன் யூ ஹியரிங் மீ.... ஓபன் யுவர் ஐஸ்.... ஓபன் யுவர் ஐஸ் மிஸ்டர்.ப்ரியரஞ்சன்...." என்று ரஞ்சனின் கண்களை திறக்கச் சொன்னார்.....

ரஞ்சன் கண்களை திறந்தவுடன் தனக்கு எதிரில் நின்று இருந்த விஷ்ணுவை தான் முதலில் பார்த்தான்.....

விஷ்ணுவை பார்த்த உடன் ஆவேசமாக எழுந்து அவன் சட்டையை பிடித்து "படுபாவி படுபாவி... உன்னால் தாண்டா என் ஸ்ரீ என்னை விட்டு போனாள்.... உன்னை லவ் பண்ணாத பொண்ணு மேல உனக்கு என்னடா அவ்வளவு ******" என்று ஆங்கில கெட்ட வார்த்தையில் திட்டு விட்டு அவனை அடிக்க ஆரம்பித்தான்.....

ரஞ்சனின் வார்த்தைகளில் தான் இப்போது இருக்கும் விஷ்ணு அப்போது கிருஷ்ணாவாக இருந்து அவர்கள் காதலை பிரித்து சித்துவை உயிருடன் குழியில் தள்ளியது என்று புரிந்து கொண்டார் டாக்டர் பார்வதி...
ரஞ்சனை அமைதிப்படுத்த விஷ்ணுவை வெளியே அனுப்பி வைத்தவர் "மிஸ்டர்.ரஞ்சன்.... இப்போ நீங்க சித்தரஞ்சன் கிடையாது... ப்ரியரஞ்சன்.... இப்போ நாம 2023ல் இருக்கோம்.... டூ யூ அண்டர்ஸ்டேண்ட்..." என்று கேட்டார்....
அப்போது தான் தன்னை சுற்றி பார்வையில் துழாவியவன் இருக்கும் இடத்தை பார்த்து விட்டு நிதானத்திற்கு வந்து தனது பழைய நினைவுகளை திருப்பி பார்த்தான்......
21 வயதில் தன்னை உயிருடன் புதைத்தவர்கள் மேல் கொலைவெறி கொண்டான் ரஞ்சன்....
பார்வதியிடம் விஷ்ணுவை உள்ளே வர வைக்க சொன்னான்.... விஷ்ணு அறைக்குள் வந்ததும் "கிருஷ்ணா... இப்போ நான் கேட்கும் கேள்விகளுக்கு நல்லா யோசித்து பதில் சொல்.... உனக்கும் எனக்கும் ஒரே வயசு... அப்படின்னா நான் இறந்து போனதும் உனக்கும் ஏதாவது ஆகி இருக்கும்... இல்லை என்றால் நீ எப்படி என்னை போல மறுபிறவி எடுத்து இருக்க முடியும்... உனக்கு போன ஜென்மத்து நினைவுகள் வர வாய்ப்பு இருக்கா..." என்றான்....
"போன ஜென்மத்து நினைவுகள் வர வைக்க முடியும்... அதுக்கு ஹிப்னாடிஸம் பண்ணனும்..." என்ற விஷ்ணு டாக்டர் பார்வதியை பார்த்தான்...
"சீ மிஸ்டர். ரஞ்சன்... இப்போ தான் உங்களுக்கு ஹிப்னாடிஸ் பண்ணி இருக்கு... உடனே விஷ்ணுவுக்கு பண்ணனும்னா..." என்று அவர் இழுக்க "இட்ஸ் ஓகே டாக்டர்..." என்றவன் விஷ்ணுவை பார்த்து "வேற ஹாஸ்பிடலில் உனக்கு ஹிப்னாடிஸ் பண்ணலாம்... வா..." என்றான்...
"மிஸ்டர்.ரஞ்சன்... நான் சொல்ல வர்றதை கேட்காமல் நீங்களா ஒரு முடிவுக்கு வர்றீங்க.... இப்போ ஈவ்னிங் 4"0 க்ளாக் ஆயிடுச்சு... இன்னும் நம்ம மூணு பேரும் லஞ்ச் சாப்பிடலை.... முதல்ல புட் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு தெம்பா ஸ்டார்ட் பண்ணலாம்..." என்றார்....
"Please understand my situation doctor I want to know the facts about Shri... " என்று கூறி விட்டு தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்து விட்டான்......

ரஞ்சனின் நிலையை நன்றாக புரிந்து கொண்ட விஷ்ணு "டாக்டர் நான் ரெடி.... ஹிப்னாடிஸ் பண்ண நான் ரெடி...." என்றான்.....
"விஷ்ணு உங்கள் ஹெல்த் கண்டிஷன் இருக்க நிலைமையில்.... இப்போ...."
"ப்ளீஸ் டாக்டர்..... இதை நீங்க பண்ணி தான் ஆகணும்.... அது தான் எனக்கு முக்கியம்.... நீங்க ட்ரை பண்ணுங்க.... என்னால் முடியும்...நான் ட்ரை பண்றேன்....." என்றவன் அங்கிருந்த ரோலிங் சேரில் அமர்ந்து கொண்டான்.....
"புரியாமல் பேசாதீங்க விஷ்ணு.... அஸ் எ டாக்டரா உங்க ஹெல்த் இப்போ இருக்கும் நிலையில் ஹிப்னாடிஸ் பண்றது நாட் குட் பார் யுவர் ஹெல்த்...."
"டாக்டர் ஐ நோ.. பட் நான் அப்போ கிருஷ்ணாவா இருந்து என் ப்ரண்டுக்கு பண்ணிய துரோகத்நிற்கு இப்போ விஷ்ணுவா பரிகாரம் பண்ண நினைக்கிறேன்.... ஒருவேளை அப்போ நான் பண்ண பாவத்துக்கு தான் இப்போ எனக்கு கடவுள் பனிஸ் பண்றாரோ என்னவோ.... எப்படியும் சாக போறேன்.... அது என் ப்ரண்டுக்கு ஹெல்ப் பண்ணிட்டு போறேன்.... ஹீ டிஸர்வ் திஸ்... அவன் வாழனும் டாக்டர்... இந்த ஜென்மத்தில் அவன் ஸ்ரீயோடு சேர்ந்து சந்தோஷமா வாழனும்.... அதுக்கு என்னால் மட்டும் தான் அவனுக்கு உதவி பண்ண முடியும்.... அன்னைக்கு என்ன நடந்தது அப்படின்னு எனக்கு தெரியும்... சோ ப்ளீஸ் டாக்டர்.... " என்று கெஞ்சல் குரலில் கேட்டான் விஷ்ணு.....
"மிஸ்டர் விஷ்ணு... அந்த கிருஷ்ணா எதனால் அப்படி பண்ணான்னு எனக்கு தெரியலை... பட் அவன் பண்ண தப்புக்கு நீங்க ஏன்.... "
"டாக்டர் உடலுக்கு தான் அழிவு... ஆன்மா ஒன்னு தான்னு உங்களுக்கு தெரியாதா...."
"நோ விஷ்ணு... நீ என்ன சொன்னாலும் ஐ காண்ட் டூ திஸ்.... "
"டாக்டர் இங்கே நீங்க ட்ரை பண்ணால் என் ஹெல்த் கண்டிசன் நல்லா தெரிந்து அதுக்கு தகுந்தாற் போல பேசி உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்... எப்படியும் உண்மை தெருஞ்சுக்க இருக்கும் ஆர்வத்தில் வேற ஹாஸ்பிடலில் எனக்கு ஹிப்னாடிஸ் பண்ணால் என் உயிர் போனாலும் ஆச்சரியம் இல்லை.. அப்படி ஏதாவது நடந்தால்...."
" சரி ஓகே விஷ்ணு... ஐ டூ..... பட் மணி 5 ஆயிடுச்சு... எனக்கு சாப்பாடு வாங்கி கொடுங்க... அப்போ தான் நான் ஹிப்னாடிஸ் பண்ணுவேன்..... வயசானவன்ற கருணையே இல்லாமல் காலையில் இருந்து ரெண்டு பேரும் வேலை வாங்கிட்டு இருக்கீங்க.... இந்த ஹாஸ்பிடல் ஓனர் கூட எங்கிட்ட மரியாதையா தான் பேசுவார்.... ஆனால் நீங்க ஆர்டர் போடுறீங்க... இட்ஸ் நாட் ஃபேர்...." என்று சலித்துக் கொண்ட டாக்டர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.....
பார்வதியும் விஷ்ணுவும் பேசியதை எல்லாம் கேட்கும் நிலையில் ரஞ்சன் இல்லை.... ஹிப்னாடிஸ் முடிந்த சற்று நேரத்தில் விஷ்ணுவிடம் பேசி விட்டு அமர்ந்தவன் அமர்ந்து இருந்த வாக்கில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்....
டாக்டர் பார்வதி சொன்ன தோரணையில் சிரித்துக் கொண்ட விஷ்ணு கேன்டீனுக்கு சென்று அப்போது இருந்த டிஷ்ஷூல் பார்வதி வயதிற்கு எது சாப்பிட்டால் சரியாக இருக்கும் என்று யோசித்து அதையே வாங்கி வந்து கொடுத்தான்......

பார்வதி ஒரு புன்னகையுடன் சாப்பிட்டு முடித்த அடுத்த நிமிடம் கையை கழுவுவதற்கு கூட டைம் எடுத்து கொள்ளாமல் ஸ்பூனில் சாப்பிட்டதால் வாயையும கையையும் துடைத்து கொண்டு அங்கிருந்த இருக்கையில் விஷ்ணுவை அமர வைத்து டிவி ஸ்கிரீனை காட்டினார்......


விஷ்ணுவின் கண்கள் மெல்ல மெல்ல மூடிக்கொள்ள விஷ்ணு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்...

விஷ்ணுவிடம் டாக்டர் அவனது சிறு வயது வரை கேள்வி கேட்டு அதன் பிறகு அவர் பிறப்பதற்கு முன்பு இருந்த வாழ்க்கையை பற்றி கேட்டார்.....

விஷ்ணுவும் ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் சித்துவை குழியில் தள்ளிய அந்த நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தினான்.....

"சரி சொல்லுங்க விஷ்ணு நீங்க உங்க பிரண்டுன்னு கூட பார்க்காம அந்த பொண்ணுக்காக சித்துவை குழியில் தள்ளிட்டீங்க.... அவங்களும் செத்துப் போயிட்டாங்க....அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு..... "
"நான் கிருஷ்ணா... விஷ்ணு இல்லை...."




 
Status
Not open for further replies.
Top